இங்கனம் திவ்ய ஆபரணங்களும் திவ்ய ஆயுதங்களும் பிராட்டிக்கே உரியவையே என்றமையால்
திவ்ய தம்பதிகளினுடைய ஆநுரூப்யம் காட்டப்பட்டதாயிற்று –
இவ் வநுரூப்யம் ஏற்கனவே யுள்ள நிலைகளில் மாத்திரம் அன்று –
புதிதாய் எடுக்கும் திரு அவதாரங்களிலும் காணலாம் –
ஆநு ரூப்யத்துடன் பிராட்டியும் கூட திரு வவதரிக்கா விடில் இறைவனது திரு வவதாரம்
விரசமாய் இருக்கும் என்கிறார் –
யதி மநுஜ திரஸ்சாம் லீலயா துல்ய வ்ருத்தே
அநுஜநூர் அநு ரூபா தேவி நாவாதரிஷ்ய
அஸரஸம் அபவிஷ்யன் நர்ம நாதஸ்ய மாத
தரதள தரவிந்தோ தந்த காந்தாயதாஷி -48–
மலருகிற தாமரையின் பேச்சை யுடையதும்
அழகிய நீண்ட திருக் கண் படைத்த
தாயான தேவியே
விளையாட்டினாலே மனிதர்களுக்கும் விலங்கினங்களுக்கும் சமமான செயல்களை யுடைய கணவனது
திருவவதாரம் தோறும் தகுந்தவளாக திரு வவதரிக்காது இருந்திருப்பாய் ஆனால்
நர்ம அஸரஸம் அபவிஷ்யத் -நாயகனது விளையாட்டு விரஸமாக ஆகி இருக்குமே
இன்னாருக்கு விரசமாய் இருக்கும் என்னாதது
இருவருக்கும் -அடியார்களுக்கும் என்றபடி
க்ரீடேயம் கலு நான்யதாசஸய ரசதா ஸ்யாத்-என்றார் பெருமாள்-
ப்ரஹ்மசாரிக் குறளாய் திருவவதரித்த போதும் சிறிய திருமேனியுடன் திரு மார்பில் விளங்கும் இலக்குமியை
மான் தோல் உபவீதத்தால் மறைத்துக் கொண்டான்
பூ மேய செம்மாதை நின் மார்பில் சேர்வித்துப் பாரிடந்த அம்மா -நம்மாழ்வார் —
ஸ்ரீ வராஹாவதாரத்திலும் பிராட்டி திருமார்பில் இருந்தமை தோற்றுகிறது
பரிபாடலிலும் -செய்யோள் சேர்ந்த நின் மாசிலகலம் உள்ளுனர் உருப்போர் உரையொடு சிறந்தன்று –
ராகவத்வே பவத் சீதா ருக்மிணீ கிருஷ்ண ஜன்மனி அன்யேஷூ சாவதரேஷூ விஷ்ணோ ரேஷா நபாயி நீ -ஸ்ரீ பராசரர் –
தேவியைப் பிரிந்த பின்னர் திகைத்தனை போலும் செய்கை -வாலி
துல்ய சீல வயோவ்ருத்தாம் –ராகவோர்ஹதி வைதேஹீம் —
அநு ஜனு ரனுரூப ரூபசேஷ்டா ந எதி சமாகம மின்த்ரா கரிஷ்யத் அசரச மதவாப்ரியம் பவிஷ்ணு த்ருவ
மகாரிஷ்யத ரங்கராஜ நர்ம-ஸ்ரீ ரங்கராஜ ஸ்தவம் –
உபேந்த்ரனாய்-தேவயோநியிலும்
இராம கிருஷ்ணனாய் மனிதப் பிறப்பிலும்
மத்ஸ்யாதியாய் திர்யக் யோனியிலும்
மா மரமாய் -ஸ்தாவரப் பிறப்பிலும்
இஷ்டப்படி திருவவதரித்ததால் -லீலையா -மநுஜ திரஸ்சாம் என்கிறார் –
அவதாரங்களில் மெய்ப்பாடு தோன்ற துல்ய வ்ருத்தே –
மானமிலாப் பன்றியாயின் கோரைக் கிழங்கைப் புசிப்பது துல்ய வ்ருத்தி அன்றோ –
பிராட்டி திருவவதரிப்பது -விளையாடும் இயல்பினாலும் -தேவி
தாய்மை உறவினாலும் -மாதா
நிறைந்த கருணையினாலும் -காந்த ஆயதாஷி –கண்ணுக்கு அணிகலம் -கண்ணோட்டம் -கருணை
இந்தக் கண்ணைக் கண்டதும் போலியான தாமரையின் பேச்சு எழுதலின்
பேச்சை யுடையதாயிற்று இக்கண் -உதந்த -சமாசாரம் பேச்சு
உள் இதழை லஷிக்கும்
உள் இதழ் போன்ற அழகாய் நீண்ட திருக் கண்கள் -என்றபடி –
வேண்டியே விளையாடற்கு விளங்கு மானிடப் பிறப்பைப்
பூண்டிடும் தோறும் ஏற்பப் போந்து நீ தோன்றிடாயேல்
யாண்டு நின்னன்பன் தாயே இன்பனாம் சிறிதலர்ந்து
காண்டகு கமலம் போலும் கவினுறு கண்ணாய் தேவி –48-
————————————————————————
திரு அவதாரம் தோறும் ரசிப்பதற்காக உடன் திரு அவதரிப்பது மாத்ரம் அன்றி
இறைவனது ஸ்ரமத்தை தீர்ப்பதற்காகவும் திரு அவதரிப்பது உண்டு என
திருப் பாற் கடலில் பிராட்டி அவதரித்தத்தை அனுசந்திக்கிறார் –
ஸ்கலித கடக மால்யைர் தோர்பிர் அப்திம் முராரே
பகவதி ததிமாதம் மதந்தச் ஸ்ராந்தி சாந்த்யை
பிரமதம்ருத தரங்கா வர்த்தத பிரர்துராஸீ
ஸ்மித நயன ஸூதாபிஸ் சிஞ்சதீ சந்த்ரிகேவ –49—
ஸ்கலித கடக மால்யைர் -நழுவின -தடங்கலான கை அணி என்ன -மாலைகள் என்ன -இவைகள் யுடைய –
தோர்பி ரப்திம் -கைகளினாலே அப்திம் -கடலை –
பகவதி -நற்குணம் வாய்ந்த இலக்குமியே
ததிமாதம் மதந்தச் -தயிர் கடைவது போலே கடைகின்ற முராரே இறைவனுடைய –
ஸ்ராந்தி சாந்த்யை-களைப்பு நீங்குவதற்காக
ஸ்மித நயன ஸூதாபிஸ் சிஞ்சதீ சந்த்ரிகேவ –புன்னகை என்ன -பார்வை என்ன இவைகளாகிற
அமுதங்களாலே நனைத்துக் கொண்டு சந்த்ரிகை போலே –
பிரமதம்ருத தரங்கா வர்த்தத பிரர்துராஸீ-சுழலும் அமுத அலைகளுடைய சுழியில் இருந்து தோன்றினை-
கடல் கடைவதையும் அலஷ்யமாகக் கருதிக் கடகம் மாலை முதலியவற்றைக் கழற்றாமையின் அவை தடங்கல் ஆயின –
தோர்பி -பஹூ வசனம் -ஆயிரம் தோளால் அலை கடல் கடைந்த பாரிப்பு தோற்றுகிறது –
தயிர் கடைந்தது போலே இருந்தாலும் பரிவின் மிகுதியால் அதுவும் ஸ்ரமமாகத் தோற்றவே
அதனை நீக்கவே சந்த்ரிகை போன்றவள் -என்கிறார் இலக்குமியை –
அமுதத்தின் சாரமே பிராட்டி -அமுதில் வரும் பெண்ணமுது -அன்றோ –
மதுர ரசேந்திரா ஹவஸூதா ஸூந்தர தோ பரிகம் -கூரத் ஆழ்வான்
என்றும் உள்ள பிராட்டி புதிதாக பிறக்க வில்லை
தோற்றம் மாத்ரமே-ப்ராதுராஸீ-என்கிறார் –
கடகமும் தொடையலும் கழலக் கைகளால்
கடையிறை தயிர் எனக் களைப்பு நீங்கிடப்
படு நில வென நகை பார்வையில் பகவதி
கடலமு தலைச் சுழி காண வந்தனை –49-
—————————————————————————-
ஸ்ரீ சீதாவதாரத்தில் விளங்கிய பிராட்டியின் ஈடற்ற பொறுமை மஹாபராதிகளான நம்மை
இன்புறுத்துவதாகக் கூறுகிறார் —
மாதர் மைதிலி ராஷசீஸ் த்வயிததை வார்த்ராபராதாஸ் த்வயா
ரஷந்த்யா பவநாத் மஜால் லகுதரா ராமஸ்ய கோஷ்டி க்ருதா
காகம் தஞ்ச விபீஷணம் சரணமி த்யுக்தி ஷமௌ ரஷத
ஸாநஸ் சாந்த்ர மஹா கஸஸ் ஸூக யது ஷாந்திஸ் தவாகஸ்மிகீ–50-
மாதர் மைதிலி -தாயே -ஜனகன் திருமகளாய் திரு வவதரித்து அருளியவளே –
தாயின் பொறை தகப்பன் பொறையை விட விஞ்சியே இருக்கும் அன்றோ
அவனையும் பெற்ற தாய் நீயே -என்பாரேலும் சிறிது வன்மை உண்டே ஆண் மகனான அவனிடம்
உபசரித்துக் கூறினும் இயல்பான தாயின் தன்மை சிறந்தது அன்றோ –
இயல்பான குணமும் படைத்த குணமும் சேர்ந்து அற விஞ்சியது என்பதால் மைதிலி என விளிக்கிறார்
ராஷசீஸ் த்வயிததை வார்த்ராபராதாஸ் த்வயா -நின் திறத்து அப்பொழுதே
ஆர்த்ராபராதா -குற்றங்கள் புரிந்த வண்ணமாய் யுள்ள -அரக்கியரை –
ரஷந்த்யா பவநாத் மஜால் லகுதரா ராமஸ்ய கோஷ்டி க்ருதா காகம் தஞ்ச விபீஷணம் சரணமி த்யுக்தி ஷமௌ ரஷத
வாயு குமாரனான ஹனுமானிடம் இருந்து காப்பாற்றுகிற உன்னால்
சரணம் இதி -சரணம் என்று– உக்தி ஷமௌ -சொல்லுவதில் தகுதி வாய்ந்த
காகாசுரனையும் பிரசித்தமான விபீஷணனையும் காப்பாற்றுகிற ராமனுடைய கோஷ்டியானது
மிகவும் எளியதாக செய்யப் பட்டு விட்டது –
ததைவ –ராவண வதத்தைச் சொல்ல வருகின்ற அந்த சமயத்திலே -என்றபடி –
அப்பொழுதும் ராஷசிகள் துன்புறுத்திக் கொண்டே இருந்தும் காத்தனளே-
கொண்ட பிடியை விடாத குரங்கின் இடம் இருந்து காப்பது அரிது அன்றோ –
தந்தையான வாயு போலே தடுத்தற்கு அரியவன் -பவ நாத் மஜன் -என்கிறார் –
நேரே ராமனைக் கூற கூசி இராம கோஷ்டியை மிகவும் எளிமைப் படுத்தி விட்டதாகக் கூறுகிறார் –
த்ரீன் லோகன் சம் பரிக்ரம்ய தமேவ சரணம் கதா -என்றும்
த்யக்த்வா புத்ராம்ச்ச தாராம்ச்ச ராகவம் சரணம் கத -என்றும்
சரணம் அடைந்தவர்கள் அன்றோ அவர்கள் –
பலி புஜி–குண லவ சஹவாசாத் த்வத் சாமா சங்கு சந்தி -ஸ்ரீ ரங்கராஜ ஸ்தவம்
உக்தி ஷமௌ -சரணம் என்று சொல்ல தகுதி வாய்ந்தவர்கள் -என்பதால்
காகத்தையும் சேர்த்து என்னலாம்
வித்தகனே இராமாவோ நின்னபயம் என்று அழைப்ப -என்பதால்
சரண் அடைந்ததும் சொன்னதாகவும் கொள்ளலாம் —
நின்னபயம் என்று அடைய சொல்லவில்லை பெரியாழ்வார் அதனாலே உக்தி ஷமௌ இங்கே
அப்பொழுது -உக்த்யா ஷமௌ -ரஷிப்பதற்கு தகுதி உள்ளவர்கள் என்று கொள்ள வேண்டும்
தீங்கு இளைத்த ஜெயந்தனை காகம் என்றே அருளுகிறார் ஆளவந்தாரும்
வாயசமாக இவனைக் குறிப்பிட்டார்
சொல்லை பற்றாசாகக் கொண்டு ரஷித்த பெருமாளை விட
யாதொரு பற்றாசும் இன்றி ரஷித்த பிராட்டியின் ஏற்றம் –
சம்பந்தமே ஹேதுவாக சரண்யை இவள் -கத்ய வியாக்யானத்தில் பெரிய வாச்சான் பிள்ளை –
ஸாநஸ் சாந்த்ர மஹா கஸஸ் ஸூகயது ஷாந்திஸ் தவாகஸ்மிகீ–
அத்தகைய நிர்ஹேதுகமான நினது பொறுமையானது
நெருங்கின மஹத்தான அபராதங்களை யுடைய எம்மை இன்புறுத்துவதாக-
ஆகச்மிகீ நிர்ஹேதுகம் என்றபடி
திரிஜடை சொல்லியும் கேளாத ராஷசிகளை ரஷித்த பெருமை உண்டே
ராஷசர் நால்வரும் சரண் அடையாவிடிலும் விபீஷணன் செய்த சரணாகதி பலித்தது அவர்களுக்கும்
சிஷ்யன் அனுகூலித்து வராவிடில் இவனுக்காக ஆசார்யன் செய்த பிரபத்தியும் பயனில்லதாம்
பிராட்டி வியாஜ்யம் இன்றி காப்பது ஆகிஞ்சன்யம் உடையவர்களையே யாதலின் சர்வ முக்தி பிரசங்கம் வாராது –
அன்னை சீர் மைதிலியே அரக்கியர்கள் அன்றைக்கும் பைங்குற்றம் புரியா நிற்ப
அன்னாரை யளித்த நுமன் அழியா வண்ணம் அழித்தனையால் இராமனது குழுவின் மேன்மை
தந்நாவில் சரணம் எனத் தகுதி வாய்ந்த தசமுகனின் தம்பியொடு காகம் காத்த
தென்னாவது இரும் குற்றம் இழைக்கின்றோமுக்கு இன்பம் உமுனதியல்பான பொறுமை நல்க –50
பைங்குற்றம் -பசுமையான நாள் படாத அப்பொழுதே செய்த குற்றம் –
—————————————————————-
இங்கனம் பொறுமையில் சிறப்பு எய்திடலின் பிராட்டியைச் சேர்ந்தவர்களே நாம்
இறைவனை நாம் வேண்டுவதோ பிராட்டியின் தொடர்பு கொண்டே என்கிறார் –
மாதர் லஷ்மி யதைவ மைதில ஜனஸ் தே நாதவ நாதேவயம்
த்வத் தாஸ்யைக ரஸாபிமான ஸூகைர் பாவை ரிஹா முத்ரச
ஜாமாதா தயிதஸ் தவேதி பவதீ சம்பந்த த்ருஷ்ட்யா ஹரிம்
பஸ்யேம பிரதியாம யாமசபரீ சாரான் ப்ரஹ்ருஷ்யேமச –51-
மாதர் லஷ்மி யதைவ மைதில ஜனஸ் தேநாதவநா தேவயம் –
தாயான லஷ்மி இலக்குமியே
உனக்கு மிதிலை மக்கள் எப்படியோ -அந்த வழியாலேயே நாங்களும் உன்னைச் சேர்ந்தவர்களே –
மிதிலை மக்கள் தங்கள் அரசன் ஜனகன் மருமகன் என்றும் ஜானகியின் கணவன் என்றும் தொடர்பு கொண்டே
இராமனைக் கண்டு உவப்பது போலே யாமும் இலக்குமியின் தொடர்பு கொண்டே இறைவனைக் கண்டு உவப்போம் -என்றவாறு
ப்ரபன்ன ராஜராகிய பெரியாழ்வார் மருமகன் என்றும்
கோதையின் கொழுநன் என்றும் அரங்கனைப் பார்க்கின்றோம் –
பட்டர் பெருமாளுக்கு அடியேனை ஸ்திரீ தனமாகப் பிராட்டிக்கு வந்தவன் என்று திருவுள்ளம் பற்றவும்
நானும் இவர் எங்கள் நாய்ச்சியாருக்கு நல்லவர் என்று அவ் வழியே –
அழகிய மணவாளப் பெருமாள் -என்று நினைத்து இருக்கவும் ஆக வேணும் என்று
வேண்டிக் கொண்டார் –7-2-9-ஈட்டு ஸ்ரீ ஸூக்திகள் அனுசந்தேயம் –
த்வத் தாஸ்யைக ரஸாபிமான ஸூபகைர் பாவை ரிஹா முத்ரச-
உனது அடிமையில் முக்ய ப்ரீதி முக்ய அபிமானங்களாலே
அழகிய அபிப்ராயங்களோடு இங்கும் -லீலா விபூதியிலும் -அங்கும் -பரம பதத்திலும் –
ஜாமாதா தயிதஸ் தவேதி பவதீ சம்பந்த த்ருஷ்ட்யா ஹரிம் -பஸ்யேம பிரதியாம யாமசபரீ சாரான் ப்ரஹ்ருஷ்யேமச
மணமகன் உன் கணவன் -என்று உனது தொடர்பு உணர்ச்சி கொண்டே
இறைவனைப் பார்க்கக் கடவோம் -சரண் அடையக் கடவோம்
பணி விடைகளை பெறவும் கடவோம் -களிக்கவும் கடவோம் –
பவதீ சம்பந்த த்ருஷ்ட்யா -எனபது சிந்திக்கற்பாலது
பவதீ பாதலா ஷார சாங்கம்-ஸ்ரீ ஸ்துதி
பவதீ பிரசாதாத் -தேவி மஹாத்ம்யம்
அந்தப் புரத்தைச் சேர்ந்தவர்கள் பெரும் பிழை புரிந்தாலும் அரசர்கள் ஒரு வியாஜ்யத்தை யிட்டு பொறுப்பது போலே
நம் பெரும் பிழைகளையும் பொறுத்து அருள்வான் –
பிராட்டிக்கு புரிந்த பணி என்றே
ப்ரீதியும் நினைவும் உண்டாக வேண்டும் –
தாஸ்யம் ஒன்றிலுமே ரசமாய் இருக்கும் அபிமானம் கொள்ள வேண்டும்
பிரதியாம -பிரதிபத்தி பண்ணக் கடவோம் -அத்யவசாயம் ஒன்றே -கிட்டக் கடவோம் என்றபடி
பரிசாரான்யாம -பணிவிடை புரியக் கடவோம்
ப்ரஹ்ருஷ்யேமச-பணிவிடை புரிந்ததும் நீ உவக்க வேண்டும் –
அதனைக் கண்டு நாங்கள் இன்புற வேண்டும்
நின் திரு உள்ளம் இடர் கெடும் தோறும் நாங்கள் வியக்க இன்புறுதும்-நம் ஆழ்வார் –
ப்ரஹர்ஷயிஷ்யாமி ஸநாத ஜீவித -ஆளவந்தார் –
தாயாகும் இலக்குமியே சனகனூரில் சனங்கள் என யாமுனையே சார்வோம் ஆவோம்
நீயேற்கும் பணி விடையின் இன்பம் ஒன்றே நினையு மனத் திலகு கருத்தொடு நிலத்தும்
சேயாம் விண் வத்து மணமகன் நினக்குத் திருக் கணவன் என்னவும் உன் தொடர்பில் காண்போம்
மாயோனை வணங்கிடுவோம் இன்னும் ஏவல் புரிந்திடுவோம் மனம் மிகவும் மகிழுவோமே–51
சேயாம் விண் வத்தும்-பரமாகாசத்திலும் -பரம பதத்திலும் என்றபடி -விண் அத்து விண் வத்து –
———————————————————————————-
பிராட்டி சம்பந்தத்தை முன்னிட்டு நாம் இறைவனைப் பற்றுவதற்குக் காரணம்
தாய்மையே என்று அதனை உபபாதிக்கிறார் –
பிதேவ த்வத் ப்ரேயான் ஜனனி பரிபூர்ணாகஸி ஜனே
ஹித ஸ்ரோதோவ்ருத்யா பவதிச கதாசித் கலுஷ தீ
கிமோதன் நிர்தோஷ கஇஹ ஜகதீதி தவ முசிதை
உபாயைர் விஸ்மார்ய ஸ்வ ஜனயசி மாதா ததசி ந– 52-
பிதேவ த்வத் ப்ரேயான் ஜனனி பரிபூர்ணாகஸி ஜனே
தாயே நின் அன்பன்
குற்றம் நிறைந்த ஜனத்தினிடம் தகப்பன் போலே
ஹித ஸ்ரோதோவ்ருத்யா பவதிச கதாசித் கலுஷ தீ –
ஹிதத்தின் தொடர்ச்சியில் இருத்தலால் எப்பொழுதேனும்
கலங்கின திரு உள்ளதனாக ஆகவும் செய்கின்றான் –
கிமோதன் நிர்தோஷ கஇஹ ஜகதீதி தவ முசிதை –
கிம் ஏதத் -என்ன இது -இந்த உலகத்தில் குற்றம் அற்றவன் எவன் என்று தகுந்த –
உபாயைர் விஸ்மார்ய ஸ்வ ஜனயசி மாதா ததசி ந–
உபாயங்களினாலே அவனை அக்குற்றங்களை மறக்கும்படி செய்து
எம்மை தன மக்கள் ஆக்குகின்றாய்
ஆதலால் எமக்கு தாயாக இருக்கிறாய் –
பிரியம் ஒன்றிலே தாய்க்கு நோக்கம்
பிதாவுக்கு ஹிதம் -பாவம் செய்தால் சீறவும் கூடும்
அன்பன் ஆதலால் எளிதில் சீற்றத்தை மாற்ற முடிகிறது -ப்ரேயான் -என்கிறார்
நீரிலே நெருப்புக் கிளருமா போலே ஒரு கால் சீற்றம் பிறந்தாலும் அதனைப் பிராட்டி மாற்றி விடுகின்றாள்
நிர்தோஷ கே இஹ ஜகதி -இருள் தரும் மா ஞாலம் அன்றோ –
உன்னையும் அறிவிலியாக்கும் இந்நிலத்தின் பொல்லாங்கு தெரியாதோ
குற்றம் குறை அற்ற ஒருவனை இங்கே காண முடியுமோ -மணல் சோற்றிலே கல் ஆராய்வார் உண்டோ –
உசிதை உபாயை -கண்ணைக் காட்டல் கச்சை நெகிழ்தல் முதலியன
ஸ்வ ஜன யசி–பிராட்டியை புருஷகாரம் என்பது அவன் தன்னைச் சேர்ந்தவன்
என்று அபிமாநிக்கும் படி செய்வதால் தானே –
அப்பன் போலுன தன்பனாய் குற்றம் ஆர்ந்துள்ள மக்களிதம் தொடர்ந்து நாடி
வெப்புறவே திரு உள்ளம் என்றைக்கேனும் வெகுண்டிடுமேல் அன்றவனை இஃது என் சீற்றம்
தப்பரவே செய்யாதார் சகத்திலார் தான் சாற்றிடுவாய் எனத் தக்க விரகினாலே
அப் பிழைகள் மறக்கச் செய்து அவனோடு எம்மை அணைத்திடலா நீ என்னை யாகின்றாயே –52–
———————————————————–
கீழ் ஸ்லோகத்தில் -கிமேதந் நிர்தோஷ -என்றது –
ந கச்சின் ந அபராத்யதி -என்று
சிறிய திருவடியை நோக்கி பிராட்டி அருளிச் செய்ததை உட்கொண்டதாம் –
திருவடியைப் பொறுப்பிக்குமவள் தன் சொல் வழி வருமவனைப் பொறுப்பிக்கச் சொல்ல வேண்டா விறே-
அங்கனம் பொறுப்பிக்குமவள் கணவனுடன் இந்நாட்டில் பிறந்து படாதன பட்டதெல்லாம் நினைந்து பரிந்து
பிறத்தற்கு ஹேதுவான கருணையும் அளவு கடந்த ஸ்வாதந்த்ர்யத்தையும் வெறுக்கிறார் –
மாதாததஸிந -என்றதற்கு ஏற்ப
கூபத்தில் விழும் குழவியுடன் குதித்து அவ்வாபத்தை நீக்கும்
அவ் வன்னை போலே இவ்வுலகில் வந்து பிறந்ததை நினைந்து பரிந்து பேசுகிறார் ஆகவுமாம் —
நேதுர் நித்ய சஹாயிநீ ஜனனி நஸ் த்ராதும் தவ மத்ராகதா
லோகேத்வன் மகிமாவ போத பதிரே ப்ராப்தா விமர்தம் பஹூ
க்லிஷ்டம் க்ராவஸூ மாலதீம்ருது பதம் விஸ்லிஷ்ய வாஸோ வநே
சாதோ திக் கருணாம் திகஸ்து யுவயோ ஸ்வாதந்த்ர்ய மத் யங்குசம்-53–
நேதுர் நித்ய சஹாயிநீ ஜனனி நஸ் த்ராதும் -தவ மத் ராகதா லோகேத்வன்
மகிமாவ போத பதிரே ப்ராப்தா விமர்தம் பஹூ-
தாயே நீ-நேது – நாயகனுக்கு என்றும் துணைவியாய்
நம்மைக் காப்பதற்கு
உனது மகிமையை அறிவதில் செவிடான இந்த உலகத்தில்
ஆகதா -அவதரித்தவளாகி -வருத்தத்தை அதிகமாக அடைந்தனை-
க்லிஷ்டம் க்ராவஸூ மாலதீம்ருது பதம் விஸ்லிஷ்ய வாஸோ வநே சாதோ திக் கருணாம்
திகஸ்து யுவயோ ஸ்வா தந்த்ர்ய மத் யங்குசம் –
ஜாதிப் பூ போலே மெல்லிய திருவடிகள் பாறை களிலே க்லேசப் பட்டது
கானகத்திலே வசித்தல் -பிரிந்து -வருத்தம் யுண்டாயிற்று –
யுவயோ -உங்கள் இருவருடையவும் கருணையைப் பற்றியும்
அளவு கடந்த ஸ்வாதந்தர்யத்தைப் பற்றியும் நிந்தை உண்டாகுக —
கொன்னவிலும் வெம் கானத்தூடு கொடும் கதிரோன் துன்னு வெயில் வறுத்த
வெம்பரல் மேல் பஞ்சடியால் நடக்க நேர்ந்ததே –
அகலகில்லேன் இறையும் என்ற நிலை மாறி பிரியவும் நேர்ந்ததே
அந்தோ நாட்டில் பிறந்து படாதன படுவதற்கு காரணம் கருணை தானே
அத்தகைய கருணை எதற்கு -அங்கே இருந்தே ரஷிக்கல் ஆகாதோ
அடக்குவார் அற்ற ஸ்வாதந்த்ர்யமே காரணம் –
அவனது ஸ்வா தந்த்ர்யத்தை இவள் மேலும் ஏற்றி அருளுகிறார்
லஷ்ம்யா சஹ ரஷக-என்பதையே நித்ய சஹாயி நீ ஆகதா –
மட உலகம் -என்ன சொன்னாலும் உன் மகிமை காதில் ஏறாதே
கழிந்த துன்பங்களுக்கு இரங்குவதும்
அந்தத் துன்பங்களுக்கு காரணமான குணங்களை நிந்திப்பதும்
பரிவின் பெருக்கினால் கூடுமே –
இறையோனுக்கு எந்நாளும் துணைவி யுந்தன் ஏற்றம் எல்லாம் எடுத்து நான் இயம்பினாலும்
இறையேனும் செவி யேறா இந்த லோகத்தெமை ஏற்க வந்து நீ படும் பாடென்னே
அறை மீது நடந்தடி மெல்லலர்கள் வாட்டம் அடைந்தன கான் பிரிந்து துன்படைந்தாய்
நிறை கருணையொடு தாயே நீவிர் கொண்ட நெறி கடந்த சுதந்திரமும் நிந்தை செய்வாம் –53
அறை மீது -பாறை மேலே-
————————————————————————
இறைவனுக்குத் துணையாய் -அவனைக் கொண்டே
பிராட்டி நம்மை ரஷிக்க வேண்டி இருப்பினும்
அவளுக்காக அவன் அரியனவும் செய்பவன் ஆதலின்
நம்மை ரஷிப்பது ஒரு பெரிய காரியமோ -என்கிறார் —
அதிசயிதவான் அப்திம் நாதோ மமந்த பபந்த தம்
ஹர தநுர சௌ வல்லீ பஞ்ஜம் பபஞ்ஜச மைதிலி
அபி தச முகீம் லூத்வா ரஷக பந்தம நர்த்தயத்
கிமவ நபதி கர்த்தா த்வச்சாடு சுஞ்சு மநோரத –54–
மைதிலி
அசௌ நாத -இந்த ரங்க நாதன்
பிராட்டியே இந்த ரங்கநாதன் -த்வச்சாடு சுஞ்சு-உனக்கு ப்ரியம் செய்தலோடு கூடிய
மநோரத -மநோ ரதத்தை யுடையவனாய்
அப்திம் -கடலில் -அதிசயிதவான் -பள்ளி கொண்டான் -நீ பிறந்த இடம் என்பதால் –
மமந்த -கடையவும் செய்தான் -அமுதினில் வரும் பெண்ணமுதம் கொள்ள கடையவும் செய்தான் –
தம் பபந்த -அதனை அணை கட்டவும் செய்தான் –
இளம் கிழை பொருட்டு விலங்கால் அணை இளம் கிழை பொருட்டு விலங்கால் அணை கட்டினான் –
தவ ப்ரியம் தாம யதீய ஜன்ம பூ யதர்த்த மம்போதி ரமந்தய பந்திச -ஆளவந்தார் -ஸ்ரீ ஸூக்தி-
ஹர தநு வல்லீ பபஞ்ஜம் ச -சிவனது வில்லை கொடியை முறிப்பது போலே முறிக்கவும் செய்தான் –
வில்லிறுத்ததும் மெல்லியல் தோள் தோய்கைக்காக-
தசமுகீம் லூத்வா ரஷக பந்த மநர்த்தயத் அபி -பத்து முகங்களை அறுத்து அரக்கனது முண்டத்தை ஆடவும் செய்தான் –
பொல்லா இராவணன் தலையைக் கிள்ளிக் களைந்ததும் இவளுக்காகவே –
கிமவ ந பதி –நின் கணவன் எதைத் தான் செய்ய மாட்டான் –
யதி ராமஸ் சமுத்ராந்தரம் மேதிநீம் பரிவர்த்தயேத் அஸ்யா ஹேதோர் விசாலாஷ்யா
யுக்த மித்யேவ மே மதி -சிறிய திருவடி வாக்கு –
தடம் கடல் சாய்ந்தான் சேது சமைத்தனன் கடைந்தான் நாதன்
கொடியென வரன் தன் வல்வில் குறைததனன் அரக்கன் பத்து
முடி தடிந்துடல மாட முன்னமர் கண்டான் சீதே
முடிந்திட உன் விருப்பம் முந்து மன் முடியான் என்னோ –54–
முந்தும் மன் -முற்பட்ட கணவன்-
————————————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திரு மலை நல்லான் ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பராசர பட்டர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply