கண்ட இன்பம் துன்பம் கலக்கங்களும் தேற்றமுமாய்த்
தண்டமும் தண்மையும் தழலும் நிழலுமாய்க்
கண்டு கோடற்கரிய பெருமான் என்னை ஆள்வானூர்
தெண்திரைப் புனல் சூழ் திருவிண்ணகர் நன்னகரே.
பொ-ரை :- அநுபவிக்கின்ற இன்பமும் துன்பமுமாகி, கலக்கமும் தேற்றமுமாகி, சீற்றமும் அருளுமாகி. நெருப்பும் நிழலுமாகிக் கண்டு கொள்வதற்கு அரியவனாகிய பெருமானாகி, என்னை ஆள்கின்றவனுடைய ஊரானது, தெளிந்த அலைகளையுடைய புனலால் சூழப்பட்ட திருவிண்ணகரம் என்னும் நல்ல நகரமேயாகும்.
வி-கு :- ஆய் ஆய் கண்டுகோடற்கு அரிய பெருமான். ஊர் திருவிண்ணகராகிய நல் நகர் என்க. தண்டம் – கோபம். தழல் – நெருப்பு.
ஈடு :- இரண்டாம்பாட்டு. 1தங்கள் முயற்சியாலே ஒருவர்க்கும் காண ஒண்ணாத பெருமையையுடையனாய் வைத்து என்னை அடிமை கொண்டவனுடைய ஊரான திருவிண்ணகரம் எல்லா நன்மைகளும் பொருந்திய நகரம் என்கிறார்.
கண்ட இன்பம் – 2“ஐங்கருவி கண்ட இன்பம்”-திருவாய். 4. 9 : 10.- என்னுமாறு போலே, அளவிற்கு உட்பட்ட சுகம். துன்பம் – பெயர் வேறுபாடு மாத்திரமேயாய் அதனோடு ஒத்த துக்கம். கலக்கங்களும் தோற்றமுமாய் – இதர விஷயங்களைப் பெறாமையால் வரும் கலக்கமும், அவற்றைப் பெற்றால் வரும் தேற்றமும். தண்டமும் தண்மையும் – கோபமும் அருளும். தழலும் நிழலுமாய் – வெப்பத்தைச் செய்யக்கூடிய நெருப்பும், குளிர்ச்சியைச் செய்யக்கூடியதான நிழலுமாய், கண்டுகோடற்கு அரியபெருமான் – 3இவை எல்லாவற்றாலும் அவனுடைய அளவு இடற்கு அரிய தன்மையைச் சொன்னபடி. 4இவருடைய ஞானத்தின் தெளிவு இருந்தபடி என்தான்! 5இங்கே சில விசேடணங்களை சொல்லா, “கண்டு கோடற்கு அரிய பெருமான்” என்று அவனைச் சொல்லாநின்றார்; மேலே சிலவற்றைச் சொல்லா, “பல்வகையும் பரந்த பெருமான்” என்னாநின்றார்;
இது என்ன அநுசந்தான முறைதான்! 1இவனை ஒழிந்தது ஒரு வஸ்துவுக்கு சத்பாவம் இன்றிக்கே இருக்கிறபடி அன்றோ.
2நல்லாரும், நம்பி ஸ்ரீசேநாபதிதாசரும் கூடத் திருமலைக்குப் போகாநிற்க, ஸ்ரீசேநாபதிதாசர் ஒரு கோலையிட்டுத் தூற்றை அடிக்க, நல்லார் ‘அர்த்தகாம நிமித்தமான துவேஷம் இதனோடு இன்றிக்கே இருக்க, ஒரு காரணமும் இல்லாமல் ஈசுவரனுடைய விபூதியை நலிவதே!’ என்ற வார்த்தையை நினைப்பது. என்னை ஆள்வான் ஊர் – என்னை இழக்கமாட்டாமல் “மின்னிடை மடவார்” என்ற திருவாய்மொழியில் மிறுக்கு எல்லாம் பட்டு என்னை அடிமை கொண்டவனுடைய ஊர். தெண் திரைப் புனல்சூழ் திருவிண்ணகர் நல்நகரே – தெளிந்த திரைகளையுடைத்தான புனலாலே சூழப்பட்ட திருவிண்ணகராகிற நன்னகர். 3திவ்விய நதியான விரஜைக்குப் போலியான ஆறும் உண்டாகப்பெற்றது என்பார் ‘தெண்திரைப் புனல் சூழ்’ என்கிறார். 4அங்கு இருக்கிறவன் இங்கே வந்து நின்றால் அங்கு உள்ளவை எல்லாம் இங்கு உண்டாகத் தட்டுஇல்லையே. அன்றிக்கே, இவ்வளவில் முகங்காட்டாத ஸ்ரீ வைகுண்டமும் ஒரு தேசமாயிற்றதோ? 6அவன் விரும்பின இடம் பிராப்பிய பூமியாமித்தனையன்றோ.
ஸு யத்னத்தால் முடியாததை திவ்ய தேசமே கொடுத்து அருளும்
கண்ட இன்பம்
இன்பம் துன்பம் -இரண்டுமே துன்பம் தானே
அக்நி
அளவிட முடியாததை சொல்லி
விசேஷணம் சொல்லி
கண்டு கொள்ள அரிய -என்று அவனை சொல்லி
பல் வகையால் பரந்த சொல்லி சோழ முடியாதது என்கிறார்
பிரத்யக் ஸ்திதி -ஒன்றுக்கும் இல்லையே
ஆத்மா உள்ளே இருக்கும் வரை தான் சரீரம்
எம்பெருமானை விட்டு ஒன்றுமே இல்லை ஆனால் போக மாட்டான்
போனால் என்ன ஆகும் காட்ட ஆத்மா சரீரம்
ஒத்திகை -போலே இது
நல்லார் ஒருவரும் -சேனாதிபதி தாசர் திருமலை
தண்டை இட்டு தூற்றை அடிக்க
ஈஸ்வர விபூதியை நலிவதே
செடி கொடி என்ன பண்ணிற்று -அர்த்த காம நிபந்தம்த்வேஷம் இன்றிக்கே
நல்லான் வம்சம் -அனைவருக்கும் நல்லார்
எம்பார் -வார்த்தை முன்பும் பார்த்தோம்
மரம் கூட வெட்டக் கூடாது
என்னை அடிமை கொண்ட தேசம்
விரஜை போலே
காவேரி உண்டே
நாகரிகம் ஜலக்கரையில்
திவ்ய தேசம் நதிக் கரைகளில்
முகம் காட்டாத ஸ்ரீ வைகுண்டமும் தேசமோ
திரு விண்ணகர் ஏற்றம்
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்.
வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.
Leave a Reply