புஷ்பாஞ்சலி பண்ணி தேவர்கள் தொழா நிற்பர்கள்
நாலாம் பாட்டில் தேவர்கள் விபவதில் பணிந்ததை சொல்லி –
ஐந்தாம் பாட்டில் ஷீராப்தி நாதனை ஸ்துதித்தார்கள் என்றும் –
ஆறாம் பாட்டிலே அந்த ஷீராப்தி நாதனே ஹிமாவானில் அர்ச்சாவதாரமாக இருக்கிறான்
என்று அங்கு பிரணாமம் பண்ணினார்கள் என்று அருளிச் செய்து
இதில்
அர்ச்ச்யன் ஆகையாலே அர்ச்சனை பண்ணுகிறார்கள் என்கிறார்-
கார் கொள் வேங்கைகள் கன வரை தழுவிய கறி வளர் கொடி துன்னி
போர் கொள் வேங்கைகள் புன வரை தழுவிய பூம் பொழில் இமயத்துள்
ஏர் கொள் பூஞ்சுனைத் தடம் படிந்து இன மலர் எட்டும் இட்டு இமையோர்கள்
பேர்கள் ஆயிரம் பரவி நின்றடி தொழும் பிரிதி சென்று அடை நெஞ்சே —1-2-7-
மிளகு கொடி -வேங்கை மரத்தை தழுவி -அவை மேகம் வரை உயர்ந்து-
இமையோர் இங்கு உள்ள சுனையில் தீர்த்தமாடி -எண்பகர்-பூக்களை –
ஆயிரம் நாமம் வாயில் வந்தபடி -ஆனந்தத்துக்கு போக்குவீடாக
வியாக்யானம்-
கார் கொள் வேங்கைகள்-
கார் என்று மேகமாய்
கார் கொள் வேங்கைகள் என்று மேக பதத்தளவும் செல்ல வளர்ந்த வேங்கைகள் என்னுதல்
அன்றிக்கே –
நாநா வர்ணமாயிற்று வேங்கைகள் தான் இருப்பது -அத்தாலே நீல வேங்கைகள் என்னுதல் –
கன வரை தழுவிய –
சுற்றில் உண்டான தாழ்வரைகளிலே உண்டான -கறியினுடைய வளர்ந்த கொடியானது –
மிளகினுடைய வளர்ந்த கொடியானது நெருக்க படர்ந்து கிடக்கும் ஆயிற்று –
போர் இத்யாதி –
வெளி நிலங்களிலே சிறு மலைகள் அடைய பெரிய சீற்றத்தை உடைய யுத்தோன்முகமான
வேங்கைப் புலிகள் நெருங்கிக் கிடக்கும் ஆயிற்று –
பூம் பொழில் இமயத்துள்
இது வாயிற்று சோலை இருக்கும்படி
ஏர் இத்யாதி –
தர்சநீயமாம் படி பூத்து இருந்துள்ள தடாகங்களின் கரைகளிலே படிந்து
இன மலர் எட்டும் இட்டு –
அஹிம்ஸாதிகளான புஷ்பங்கள் எட்டும் இட்டு
(அஹிம்சா-பிரதமம் இந்திரிய நிக்ரஹம் சர்வ பூத ஹிதம் ஷமா தானம் தபஸ்
த்யானம் சத்யம் -அஷ்ட விதம் விஷ்ணுவுக்கு பிரிய தர்மம் )
அன்றிக்கே
செங்கழுநீர் செண்பகம் இருவாட்சி பாதிரி புன்னை குறுக்கத்தி கருமுகை தாமரை
என்றாப் போலே
பிரதானமாய் இருப்பன எட்டும் ஆதல்
அஷ்டாங்க பிரணாமத்தை சொல்லுதல் ஆதல் –
மனஸ் புத்தி அஹங்காரம் தலை கால்கள் கைகள்-
அத்தை மலர் என்னும்படி என் –
என்னில்
பூவோபாதி அவனுக்கு ஸ்ப்ருஹா விஷயமாய் இருக்கும் ஆகில் இறே –
சூட்டினேன் சொன் மாலை -என்னுமா போலே –
அன்றிக்கே
கீழில் திரு மொழியில்
திரு மந்த்ரம் பிரஸ்துதம் ஆகையாலே திரு வஷ்டாஷரத்தை சொல்லிற்று ஆதல் –
இமையோர்கள் -இத்யாதி –
ப்ரஹ்மாதிகள் ஆனவர்கள் திரு நாமங்களை அடைவு கெட சொல்லி ஆஸ்ரயியா
நின்று உள்ள
பிரிதி சென்று அடை -நெஞ்சே
கீழ் திரு மந்த்ரம் ஆன போது -பெயர்கள் -ஆயிரம் என்னும்படி எங்கனே என்னில்
பேர் ஆயிரம் கொண்டதோர் பீடு -உடையான் -என்னா –நாராயணா என்றது இறே
இத்தால்
நிரூபித வஸ்துவுக்கு விசேஷணங்களாய் இறே அல்லாதவை இருப்பது
தர்மிக்கு நிரூபகம் இது இறே
மலைத் தாழ் வரைகள் அடங்க மிளகு கொடிகளாலே நெருங்கி கிடக்கும்
வெளி நிலங்களில் சிறு மலைகள் அடங்கலும் பாதக வர்க்கங்கள் நெருங்கிக் கிடக்கும்
உள் எல்லாம் நாட்டுக்கு ஆஸ்ரயணீயராய் இருக்கிறவர்கள் உடைய ஸ்தோத்ர கோஷத்தாலே நெருங்கிக் கிடக்கும்-
பாரதந்தர்யத்தால் ஸ்த்ரீ ப்ராயர் எங்கும் இருக்க
விரோதிகள் வெளியில் இருக்க
துர்மானிகள் ஆஸ்ரயிப்பார்கள்
——————————————————————
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply