திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -6-3-8-ஸ்ரீ M.A V .சுவாமிகள்.

வன்சரண் சுரர்க்காய் அசுரர்க்கு வெங்கூற்றமுமாய்த்
தன்சரண் நிழற்கீழ்உலகம் வைத்தும் வையாதும்
தென்சரண் திசைக்குத் திருவிண்ணகர்ச் சேர்ந்தபிரான்
என்சரண் என்கண்ணன் என்னை ஆளுடை என்னப்பனே.

பொ-ரை :- தேவர்கட்குச் சிறந்த புகலிடமாகியும், அசுரர்கட்குக் கொடிய யமனாகியும், பெரியோர்களைத் தன்திருவடிகளின் நிழலிலேவைத்துக் காப்பாற்றியும், பெரியோர் அல்லாதாரை அங்ஙனம் வைத்துக்காப்பாற்றாமலும், தெற்குத் திசைக்குப் புகலிடமான திருவிண்ணகரம் என்னும் திவ்விய தேசத்திலே எழுந்தருளியிருக்கிற பிரான் என் கண்ணன் என்னை ஆளுடைய என்னப்பன் எம்பெருமான் எனக்குப் புகலிடமாவான்.

வி-கு :- சுரர்க்கு வன்சரண் ஆய் என்க. ஆய் வைத்தும் வையாதும் சேர்ந்த பிரானாகிய கண்ணன் என்க. கண்ணனாகிய என்னப்பன் என் சரண் என்க. என்சரண் – எனக்குச் சரண்.

   ஈடு :- எட்டாம்பாட்டு. 1எனக்குப் புகலான மாத்திரமன்றிக்கே, மற்றும் எல்லாமும் திருவிண்ணகர் சேர்ந்தபிரானே என்கிறார்.

சுரர்க்கு வன்சரண் ஆய் – தேவர்களுக்காகத் தன்னை அம்புக்கு இலக்கு ஆக்கி அவர்களை வலிய ரக்ஷகனாய். அசுரர்க்கு வெம் கூற்றமுமாய் – அசுரத்தன்மை வாய்ந்தவர்களுக்கு 2‘அந்தகன் தண்ணீர்’ என்னும்படி வெவ்விய கூற்றமுமாய் தன்சரண் நிழற்கீழ் உலகம் வைத்தும் வையாதும் – தன்னுடைய பாதங்களின் நிழலிலே, அநுகூலரான அருச்சுனன் முதலாயினோர்களை இட்டுக்கொண்டும். சம்பந்தம் ஒத்திருக்கச்செய்தே, பிரதிகூலரான துரியோதனன் முதலாயினோர்களைப் புறம்பே இட்டும். தென் திசைக்குச் சரண் திருவிண்ணகர்சேர்ந்தபிரான் – 3“புண்ணிய சரித்திரங்களையுடைய எந்த அகத்தியராலே தெற்குத் திக்கானது புகலிடமாகச் செய்யப்பட்டதோ” “தஷிணாதிக் கிருதா யேந ஸண்யா புண்ய கர்மணா”-  என்பது, ஸ்ரீராமா. ஆரண். 11 : 82.

பத்திக்கு வரம்பாகிய பார்த்தன் பலதீர்த்தம்
அத்திக்கினும் எத்திக்கினும் ஆம் என்றவை ஆடிச்
சித்திக்கொரு விதையாகிய தென்னாட்டினை அணுகித்
தத்திச்சொரி அருவித்தட அரவக்கிரி சார்ந்தான்.-என்பது, வில்லிபாரதம்.

என்கிறபடியே, தெற்குத் திக்கிற்குப் புகலிடமான திருவிண்ணகரிலே கிட்டின உபகாரகன். என் சரண் – எனக்குப் புகலிடம். என் கண்ணன் – எனக்குப் பவ்யனானவன். என்னை ஆளுடை என் அப்பன் – என்னை அடிமைகொள்ளுதற்கு உரியவன், எனக்கு உபகாரகன். 4‘உலகம்’ என்பது, உயர்ந்தோர் மாட்டு.

புகல் மட்டும் இல்லை அனைத்தும் இவனே
தேவர்களை நோக்கும் -தன்னை அம்புக்கு இலக்காக்கிக் கொண்டு
அசுரர் இடம் யுத்தம் செய்து
இவனை அனுப்பி
பரிவு இன்றி செய்பவர்
அசுரர்க்கு வெம் கூற்றம் இவன்
அந்தகன் -எமன் -தண்ணீர் போலே -அப்படி கொடியவன் அசுரர்களுக்கு இவன்
வெவ்விய கூற்றம் –
சாஸ்திரம் கட்டுப் படாமல் இருப்பாரை ஹிம்சிக்கை இவன் கடமை
பீஷாத்மா வாயு பவதி ஆஞ்ஞை உண்டே
இருவருக்கும் பொதுவாக இருந்தாலும் தேவர்கள் செய்ய வேண்டிய -கார்யம் செய்ய முடியாமல்
அகிர்த்ய கரணம் கிருத்திய அகர்ணம் இரண்டும் செய்பவர்
பிரார்த்திக்கிறோம் நாம் இரண்டையும் செய்தும் சர்வ ஷமஸ்வ
நிழல் கீழ் அனுகூலரை இட்டுக் கொண்டு
துர் யோதானாதிகளை போக விட்டும்
விராட பர்வதம் -யுதிஷ்ட்ரன் துரி யோதனன் ராஜ்ஜியம் பறிக்க சூதாட போனேன்
நானும்
ரண யுத்தம் பின் வாங்கி கேவலம் போலே சூதாட போகாமலிருப்பது
வனவாசம் தண்டனை இதற்கு
தென் சரண் திசைக்கு
புகலிடம் திரு விண்ணகரம்
அகஸ்த்யர் -ருத்ரன் பார்வதி கல்யாணம் –
பெருமை இத்தால் திசைக்கு
என் சரண் -ஏன் கண்ணன் பவ்யன்
என்னை ஆளுடை அப்பன் உபகாரகன் சேர்த்து கொண்டவன்

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading