நகரமும் நாடுகளும் ஞானமும் மூடமுமாய்
2நிகரில் சூழ்சுடராய் இருளாய் நிலனாய் விசும்பாய்ச்
சிகர மாடங்கள் சூழ் திருவிண்ணகர்ச் சேர்ந்தபிரான்
புகர்கொள் கீர்த்தி அல்லால்இல்லை யாவர்க்கும் புண்ணியமே.
பொ-ரை :- நகரத்திலுள்ளவர்களும் நாட்டிலுள்ளவர்களுமாகி, அறிவும் அறியாமையுமாகி, ஒப்பு இல்லாமல் பரந்திருக்கின்ற ஒளியாகி இருளாகி, நிலமாகி ஆகாசமாகி, சிகரங்களையுடைய மாடங்கள் நிறைந்துள்ள திருவிண்ணகர் என்னும் திவ்வியதேசத்தில் எழுந்தருளியிருக்கின்ற எம்பெருமானுடைய ஒளிபொருந்திய கீர்த்தியேயல்லாமல் எத்தகையார்க்கும் உய்வு பெறுதற்குரிய புண்ணியம் வேறு இல்லை.
வி-கு :- ஆய் ஆய் திருவிண்ணகர் சேர்ந்த பிரான் என்க. பிரானுடைய கீர்த்தியல்லால் யாவர்க்கும் புண்ணியம் இல்லை என்க. புகர் – ஒளி.
ஈடு :- மூன்றாம்பாட்டு. 2திருவிண்ணகர் அப்பனுடைய கல்யாணகுணங்களை ஒழிய ஒருவர்க்கும் பிழைத்தற்குரிய வேறு வழி இல்லை என்கிறார்.
நகரமும் நாடுகளும் – 3போகமே மிக்கிருப்பாராய் இன்பம் நுகர்ந்திருக்கும் நகரத்திலுள்ளார், பயிர்த்தொழில் செய்துகொண்டு தேகயாத்திரையை நடத்திக்கொண்டிருக்கும் நாட்டிலேயுள்ளார். அன்றிக்கே, அளவிற்கு உட்பட்டனவாயுள்ளவையும், அளவிற்கு உட்படாதனவாயுள்ளவையும் என்னலுமாம். ஞானமும் மூடமுமாய் – பொருள்களின் தன்மைகளை உள்ளபடியே அறியக்கடவதான ஞானமும், அதனை மாறுபாடாக எண்ணக்கூடியதான அறியாமையும். நிகர் இல் சூழ் சுடராய் இருளாய் – உபமானம் இல்லாததாய்க்கொண்டு எங்கும் பரந்து நிற்கிற ஒளியாய், அதற்கு எதிர்த்தட்டான இருட்டாய். நிலனாய் விசும்பாய் – 1உருவத்தோடு கூடிய பூமியாய், உருவம் இல்லாத ஆகாசமுமாய். அன்றிக்கே, கடினத் தன்மையையுடைய பூமியும், இலேசான ஆகாசமும் என்னலுமாம். சிகரமாடங்கள் சூழ் திருவிண்ணகர் சேர்ந்த பிரான் – மலைகளின் சிகரங்களைக் கொண்டு வந்து வைத்தாற்போலே இருக்கிற மாடங்களாலே சூழப்பட்ட திருவிண்ணகரிலே பொருந்தி நிற்கிற உபகாரகன்.
புகர் கொள் கீர்த்தி யல்லால் – 2பரமபதத்தில் புகழ் மழுங்கியாகாதே கிடப்பது. 3அங்கு உள்ளாரில் தன்னில் குறைந்தார் இலரே! -மம ஸாதர்மியம் ஆகதா:” என்பது. ஸ்ரீ கீதை, 14 : 2.-4“என்னுடைய உருவம் முதலானவற்றிற்குச் சமானமான உருவம் முதலானவற்றை அடைந்தவர்கள்” என்றும், 5“பூர்ண சாம்யத்தை அடைகிறான்”-நிரஞ்ஜன: பரமம் ஸாம்யம் உபைதி” இது, முண்டகோபநிடதம்.- என்றும், 5“தம்மையே ஒக்க அருள் செய்வார்” -பெரிய திருமொழி, 11. 3 : 5.-என்றும் சொல்லுகிறபடியே, தனக்குச் சமானமாயுள்ளவர்களாய் அன்றோ அங்குள்ளார் இருப்பது. 6குறைவாளர்க்கு முகங் கொடுத்தால் அன்றோ புகழ் நிறம் பெறுவது. யாவர்க்கும் புண்ணியம் இல்லை – 7எல்லார்க்கும் உய்வு பெறுதற்கு வழி அது வல்லது இல்லை. 8தாம்தாம் தேடிக்கொள்ளுமவை எல்லாம் கழுத்துக் கட்டியாமத்தனை. 9“மின்னிடை மடவார்” என்ற திருவாய்மொழியில்
அவன் வர, ‘வேண்டா’ என்று முடிந்து போகப் புக்காரன்றோ. 1இவன் பார்க்கும் உபாயம் இவனுக்கும் கழுத்துக்கட்டியாம். அவன் காட்டும் உபாயம் அவனுக்கும் காற்காட்டாம். இதுவன்றோ உபாயத்தில் அடிப்பாடு.
திருக் கல்யாண குணங்களை அனுசந்திப்பது தவிர
வேறு ஒருவருக்கும் உத்தாராகம் இல்லை
நகரமும் நாடுகளும் -நாடு கிராமம்
போக பிரதானர் -உழவன் தேக யாத்ரை செய்து கொண்டு
சேற்றில் காலை வைத்தால் நாம் சோறில் கை வைக்கலாம்
பரிச்சின்னம் அபரிச்சின்னம்
ஞானம் -அஞ்ஞானம் இரண்டும்
-தேஜஸ் அந்தகாரம்
நிலன் விசும்பு ரூபம் உள்ளவை -அரூபி
பர்வத சிகரம் போலே மாடங்கள் உள்ள திரு விண்ணகரம்
புகர் கொள் கீர்த்தி
அங்கு மழுங்கி இருக்குமே பகல் விளக்கு பட்டு இருக்கும்
பரமம் சாம்யம் தன்னையே ஒக்க அருள் செய்வர்
குறைவாளருக்கு முகம் கொடுத்து புகர் மிக்கு இங்கு
சம்சாரிகளுக்கு அருள் கொடுத்து கொண்டு
சர்வருக்கும் உத்தாரகம்
மின்னிடை மடவாருக்கும் உத்தாரகன்
தாம் தாம் தேடிக் கொள்வது கழுத்துக் கட்டி போலே -ஸு ப்ரத்யனம் -கூடாதே
வர வேண்டாம் முடிந்து போக புக்கு
அவன் காட்டும் உபாயம் அவனுக்கும் கால் கட்டாம்
இதுவே உபாயத்தின் அடிப்பாடு
கட்டி வைக்குமே
உபாயம் கட்டி வைக்குமே
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்.
வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.
Leave a Reply