திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -6-3-4-ஸ்ரீ M.A V .சுவாமிகள்.

புண்ணியம் பாவம் புணர்ச்சி பிரிவென்று இவையாய்
எண்ணமாய் மறப்பாய் 3உண்மையாய் இன்மையாய் அல்லனாய்
திண்ண மாடங்கள் சூழ் திருவிண்ணகர்ச் சேர்ந்தபிரான்
கண்ணன் இன்னருளே கண்டு கொண்மின்கள் கைதவமே.

பொ-ரை :- புண்ணியம் என்ன, பாவம் என்ன; புணர்ச்சி என்ன, பிரிவு என்ன; ஆகிய இவையாகியும், நினைவு ஆகியும், மறப்பு ஆகியும், உண்மையாகியும், இன்மையாகியும், கர்மங்கட்குக் கட்டுப்படாதவனாகியும், திண்ணிய மாடங்கள் சூழ்ந்த திருவிண்ணகரம் என்னும் திவ்வியதேசத்தில் எழுந்தருளியிருக்கின்ற பிரானாகிய ஸ்ரீ கிருஷ்ணனுடைய இனிய திருவருளையே உய்வு பெறுதற்குரிய புண்ணியமாகக் கண்டு கொள்ளுங்கள்; யான் கூறும் இது கைதவம் அன்று.

வி-கு :- ஆய் ஆய் ஆய் ஆய் ஆய் ஆய் சேர்ந்த பிரான் இன்னருளே கண்டுகொண்மின் என்க. ‘கைதவமே’ என்றதிலுள்ள ஏகாரம், எதிர்மறைக்கண் வந்தது. கைதவம் – வஞ்சனை. ஈண்டு, பொய்யைக் காட்டுகிறது.

ஈடு :- நான்காம்பாட்டு. 4புண்ணியம் பாவம் முதலானவைகளாய் எம்பெருமானுக்கு விசேடணமாகத் தோற்றுகிற விபூதிகள் எல்லாம் அவன் கிருபையாலே உண்டாயின என்கிறார்.

புண்ணியம் பாவம் – இன்பத்திற்குக் காரணமான புண்ணியம், துன்பத்திற்குக் காரணமான பாவம். புணர்ச்சி பிரிவு – புண்ணியத்தின் பலமான கலவி, பாவத்தின் பலமான பிரிவு. எண்ணமாய் மறப்பாய் – விருப்பமுள்ள பொருளில் நினைவு, விருப்பம் இல்லாத பொருளில் மறதி. உண்மையாய் இன்மையாய் – 1உள்ளது என்ற சொல்லின் பொருளுமாய், இல்லது என்ற சொல்லின் பொருளுமாய். என்றது, சேதன அசேதனங்களுமாய் என்றபடி. அன்றிக்கே, உண்மை இன்மை என்னுதல். அல்லனாய் – புண்ணிய பாவங்கட்கு நியாமகனாய், அவற்றுக்குக் கட்டுப்பட்டவன் அன்றிக்கே இருப்பவனாய். திண்ண பாடங்கள் சூழ் திருவிண்ணகர் சேர்ந்த பிரான் – 2“ஸ்ரீகிருஷ்ண பகவானுடைய திருமாளிகை ஒன்றனை மாத்திரம் கடல் அழிக்கவில்லை” -“வாசுதேவக்ருஹம் து ஏகம் நப்லாவயதி ஸாகர.”-என்பது, ஸ்ரீ விஷ்ணுபுரா. 5. 38 : 9.-என்கிறபடியே, பிரளயகாலத்துக்கும் அழியாதபடி திண்ணிதான மாடங்களாலே சூழப்பட்ட திருவிண்ணகரிலே சேர்ந்துநிற்கிற உபகாரகனான ஸ்ரீகிருஷ்ணன். இன்னருளே – புண்ணியம் பாவம் முதலாயினவைகளாய்க் கொண்டு அவனுக்கு விபூதிகளாகத் தோற்றுகிறவை யெல்லாம் அவனுடைய கிருபையாலே உண்டாயின. பாவமும் அவன் கிருபையாலேயோ? என்னில், அதுவும் அப்படியே. சேதனனுடைய முற்பிறவியின் கர்மங்களுக்குத் தகுதியாக நடத்துவிக்கின்ற காரணத்தாலே அதுவும் அவன் கிருபையாலேயாமத்தனை. நன்று; எல்லாம் செய்தாலும்3 தீமை அவன் கிருபையாலே வரக்கூடுமோ? என்னில், தீயதனைக் காட்டி வெதுப்பி நல்வழி போக்கு கையினாலே கூடும் அன்றோ. இன் அருள் – காரணம் இல்லாமலே செய்யப்படுகின்ற அருள். கைதவமே – நான் சொல்லுகிற இதில்அர்த்தவாதம் இல்லை. கண்டுகொண்மின்கள் – நீங்களும் எல்லாம் சாஸ்திரங்களிலே கண்டுகொள்ளுங்கோள். அன்றிக்கே, கைதவமே – என்பதற்கு, செய்யப்பட்டவை என்றபடியாய், செய்யப்பட்டவை அடங்கலும் அவனுடைய காரணமில்லாமலே செய்யப்படுகின்ற இனிய திருவருளாலே உண்டாயின என்னுதல்.

புண்ய பாபாதிகள்
புணர்ச்சி பிரிவு -பலம் –
எண்ணம் மறுப்பு
உண்மை இன்மை
அஸ்தி சப்த வாச்யம் நாஸ்தி சப்த வாச்யனாய்
அல்லனாய்
வசயன் அன்றிக்கே இருக்கும்
கண்ணன் இன் அருளே
பிரளய காலத்திலும் அழியாத திண்ணிய மாடங்கள்
விபூதியாக இவை தோன்றுவது அவன் கிருபை
பாபம் அனுபவித்து கழிக்க வேண்டுமே
மாலை நண்ணி பிரவேசம் விஸ்தீரமாக சொல்லுவார்
நல் வழி போக்குகைக்கு தீய வழி புன்மை காட்டி
கைதவம் அர்த்த வாதம் இல்லை
கை தவம் கிருதகம் பண்ணப் பட்ட இடங்களும் அவன் பிரதானம் என்கிறார்

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading