ஸ்ரீ பெரிய திருமொழி-1-3-9-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் –

புலன்கள் நைய மெய்யில் மூத்துப் போந்திருந்த உள்ளம் எள்கி
கலங்க  வைக்கள் போத உந்திக் கண்ட பிதற்றா முன்
அலங்கலாய த்ண் துழாய் கொண்டு ஆயிர நாமம் சொல்லி
வலம் கொள் தொண்டர் பாடி யாடும் வதரி வணங்குதுமே –1-3-9-

—————————————————-

வியாக்யானம்-

புலன் இத்யாதி –
சரீரத்தில் இந்த்ரியங்கள் ஆனவை –
சந்நிவேசமும் கிடக்கச் செய்தே –
தம்தாமுடைய விஷயங்களை பரிக்கிரஹிக்கவும் மாட்டாதே –
சிதிலமாம்படி மூத்து –

போந்திருந்து –
அல்லாதாரோபாதி காண்பன காணவும்
கேட்பன கேட்கவும் பெறாமையாலே –
ஆள் நடம் யாடாத விடம் தேடி போந்திருந்து-

உள்ளம் எள்கி –
நாம் பட்டதோ என்று ஹிருதயமானது ஈடுபட்டு-

கலங்க இத்யாதி –
தோஷ த்ரயமும் -வாத பித்த ஸ்லேஷ விகாரங்கள் -தலை எடுத்தவாறே
ஸ்லேஷ்மாவானது-கபமானது- போரத் தள்ளும் ஆயிற்று –

கண்ட பிதற்றா முன் –
பின்னை பிரதிபந்தங்களை பிதற்றுவதற்கு முன்னே –

அலங்கலாய –
அங்குத்தைக்கு சாத்தி அருளுகைக்கு ஈடான
மாலையான திருத் துழாயைக் கொண்டு –

ஆயிரம் நாமம் சொல்லி
கண்ட பிதற்றாமே-அவ்வழியே இந்த்ரியத்துக்கு அடைத்த திருநாமம் சொல்லி –
நா வாயில் உண்டே -இத்யாதிப் படியே –

வலம் கொள் இத்யாதி –
அநுகூல வ்ருத்திகளை பண்ணா நின்றுள்ள ஸ்ரீ வைஷ்ணவர்கள்
சாத்துகைக்கு ஈடான மாலைகளையும் ஏந்தி
திரு நாமங்களையும் சொல்லி
பாடுவதாக
ஆடுவதாக
நிற்பர்கள்-

அத்திரளிலே புக்கு
அவர்களில் ஒருவராய்
ஆஸ்ரயிப்போம்

————————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading