ஸ்ரீ பெரிய திருமொழி-1-3-5-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் –

பண்டு காமரர் ஆனவாறும் பாவையர் வாய் அமுதம்
உண்டவாறும் வாழ்ந்தவாறும் ஒக்க உரைத்து இருமி
தண்டு காலா ஊன்றி ஊன்றித் தள்ளி நடவா முன்
வண்டு பாடும் தண் துழாயான் வதரி வணங்குதுமே–1-3-5-

————————————————————–

வியாக்யானம் –

பண்டு காமர் இத்யாதி –
தனக்கு என யோக்யதை உள்ள நாள் நிஷித்தங்களையே
முன்னடி தோற்றாதே அனுஷ்டித்துப் போரும் –
பின்பு பகவத் ஆஸ்ரயணம் பண்ணுமாகிலும்
(வணக்கொடு மாள்வது நலம் என்று இல்லாமல்)
சேஷித்த நாள் வ்ருத்த கீர்த்தனம் பண்ணி செத்துப் போம் ஆயிற்று –

பண்டு இத்யாதி –
முன்பு தாம் ஸ்திரீகளுக்கு ப்ரூஹா விஷயமாய் போந்த படியையும்
அவர்கள் உடைய வாக் அம்ர்தத்தை புஜித்த படியையும்
அன்றிக்கே
அவர்கள் தாங்கள் ஆதரித்து மேல் விழத் தான் இருந்த படியையும் –

வாழ்ந்த வாறும் –
இன்னம் கெடுப்பாயோ -என்கிறபடி
இப்பொழுது கேடாக இறே தாம் நினைக்கிறது –
(விபரீத லக்ஷணையாக கெட்டோம் என்றபடி )

ஒக்க உரைத்து இருமி –
இவற்றைச் சொல்லத் துடங்குமே
அநந்தரம் இருமல் வருமே
பின்னையும் சாபலத்தாலே விட்ட குறையிலே சொல்லத் துடங்குமே
ஆக இருமுவதும் சொல்லுவதாகவும் நிற்கும் –

தண்டு காலா
காலால் கொள்ளும் கார்யத்தை ஒரு தண்டாலே ஆயிற்று கொள்வது –

ஊன்றி ஊன்றி –
ஸ்ரீ பிள்ளை அழகிய மணவாள அரையர் இதுக்கு ஸ்ரீ பட்டர்   செய்தாராக சொன்ன படி
ஒரு கால் சரீரம் வர்த்திக்க வேண்டும் அளவும் ஊன்ற மாட்டாதே
கையில் மிடுக்கு இல்லாமையாலே பல கால் இத்தை எடுத்து எடுத்து இடா நிற்கும்  -என்று –

தள்ளி இத்யாதி
தடுமாறி நடப்பதுக்கு முன்னே –

வண்டு இத்யாதி –
அன்று இன்று -என்ன வேண்டாதே
என்றும் ஒக்க அனுபவமே யாத்ரையாக செல்லும் தேசம் –
சில நாள் அனுபவித்து பின்பு இருந்து வ்ருத்த கீர்த்தனம் பண்ண வேண்டா

—————————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading