ஸ்ரீ பெரிய திருமொழி-1-4-1-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் –

பிரவேசம்
ஸ்ரீ பதரி என்றும்
ஸ்ரீ பதரி  காஸ்ரமம் என்றும்
இரண்டு திருப்பதியாய்
அதில் இங்குத்தை இருப்பாகிறது
( இன்று நாம் சேவிக்கும் திவ்ய தேசத்துக்கு மேலே ஓன்று இருக்க வேண்டும் )

பிரஜையினுடைய ரஷணத்துக்கு உறுப்பாக
தாய் குடிநீர் குடிக்குமோ பாதி
இவை தன்னை வழிப்படுத்துகைக்கு உறுப்பாக
தான் தபஸ் பண்ணி
ஹித காமனாய் இருக்கும் இடம்
சென்று ஆஸ்ரயிக்கும் நம் குறையே குறையாக
ஆஸ்ரயணீயானவன் தன் குறை அறுத்துக் கொண்டு
இருக்கிற இடமாய் இருந்தது -ஆனபின்பு நாம் அங்கே  போய்
ஆஸ்ரயிப்போம் என்று திரு உள்ளத்தோடே கூட்டுகிறார் –

இங்கு திரு உள்ளத்தை குறித்து அருளிச் செய்கிற இடம் உண்டோ என்னில்
கீழே –
வதரி வணங்குதுமே -என்றும்
அறிதியாகில் நெஞ்சம் -என்றும் – சொல்லிக் கொடு போந்து
இதிலும்
துணிவு இனி உனக்குச் சொல்லுவன் மனமே -என்று
முடியத் திரு உள்ளத்தை குறித்து சொல்லிற்றாய் இறே இருக்கிறது –
கீழ் தாம் பெற்றதாகச் சொல்லி
அர்த்த அனுசந்தானம் பண்ணிப் போந்த மந்திர பிரதனன நாராயணன் வந்து
இருக்கிற-வர்த்திக்கிற- தேசமாய் இருக்கும் இறே –

கீழ் திரு மொழியிலே -மந்திர பிரதனான ஸ்ரீ நாராயணன் வர்த்திக்கிற
தேசத்தை ஆஸ்ரயிப்போம் என்று திரு உள்ளத்துக்கு சொல்ல –
நமக்கு சச் சிஷ்ய லஷணங்கள் அறிந்து அன்றோ
ஆஸ்ரயிக்க அடுப்பது -என்று ஆறி இருக்க –
அக்குறை தீர்த்தான் எழுந்து அருளி இருக்கும் தேசமான
ஸ்ரீ பத்ரி காஸ்ரமத்தை ஆஸ்ரயிப்போம் என்று
அருளிச் செய்கிறார் என்று சங்கதி
சிஷ்யனாய் இருப்பது நாட்டார்க்கு சிஷ்யனாய் இருக்கும் இருப்பை அறிவித்து சேதனரை வெளிப்படுத்த வாயிற்று
சிஷ்ய லக்ஷணங்கள் பரக்க பேசி ஆச்சார்ய லக்ஷணங்கள் குறைய அருளிச் செய்கிறார்கள் ஸ்ரீ வசன பூஷணத்தில்
கீழே மூன்று திரு மொழிகளிலும் அருளிச் செய்த வற்றை அனுவதித்து
சங்கதி அருளிச் செய்கிறார் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை

——————————————-

(அலகானந்தா- பாகீரதி-இரண்டும் தேவ பிரயாகையில் கலந்து -கங்கை -திரிவேணி சங்கம் -பின்பு சாகரம்-கலந்து
பஹு முகமாக கடலில் கலக்கிறாள் -கங்கை மஹாத்ம்யம் –
கங்கா கீதா கோவிந்தா காயத்ரி
காம் பூ ஆகாசத்தில் இருந்து பூமியை அடைந்தவள் கங்கா -நாம் உஜ்ஜீவிக்க
லோக விக்ராந்த சரணம்-நம்மை புனிதமாக்கி -13000-அடி -கங்கோத்ரி உத்பத்தி ஸ்தானம் பாகீரதி
அலகானந்தா மற்று அலகாபுரி-மகா -ஸ்வர்க்க-ஏழு நாள் நடந்து மேலே -பெரிய பிராட்டி திரு குழல் -போலே
வேறு வேறு நிறம் -த்ரி பாதம் ஓடி -ஸ்வர்க்கம் நாடு லோகம் பூமி -தேவ நதி -விஷ்ணு திருப்பாத தீர்த்தம்
தேவ கங்கை -நாலாக பிரிந்து -துருவ நக்ஷத்ரம் -தலையில் ஓன்று -தரித்து
மூன்று மார்க்கம் -ஸ்வர்க்கம் அந்தரிக்ஷம் பாதாளம்
அந்தரிக்ஷம் -மீண்டும் பிரிந்து-ருத்ரனார் தலையில் தரிக்க -மங்களமாக்கி
ஏழாக பிரிந்து -ஒரு கிளை பூமி நோக்கி வந்தது -சகர சக்ரவர்த்தி பிள்ளைகளுக்கு –
ச கர -விஷங்களுடன் கூடி -அசமஞ்சஸ் -அவன் பிள்ளை -அம்சுமான் -அவன் பிள்ளை திலீபன் –
அவன் பிள்ளை -பகீரதன் -தபஸ் பண்ணும் இடம் இன்றும் சேவிக்கலாம் )

ஏனம் முனாகி யிரு நிலம் இடந்து அன்று இணை யடி யிமையவர் வணங்க
தான வனாகம் தரணியில் புரளத் தடஞ்சிலை குனித்த வென் தலைவன்
தேனமர் சோலைக் கற்பகம் பயந்த தெய்வ நன்னறு மலர் கொணர்ந்து
வானவர் வணங்கும் கங்கையின் கரை மேல் வதரி யாச்சிரமத்துள்ளானே –1-4-1-

(தான வனாகம்-தனுவுக்கு பிறந்த பிள்ளைகள் -ஹிரண்யன் அசுரர் -ராவணன் ராக்ஷசர் –
ஹிரண்யாக்ஷன் கொள்ள வேண்டுமே
சிலை குனித்த -என்பதால் -அம்மா வழியில்-ராவணன் தானவன் என்று சொல்லலாம் )

வியாக்யானம் –
ஏனம் முன் ஆகி -இத்யாதி
முன் ஏனமாகி –
ஸ்ரீ வராஹ கல்பத்தின் உடைய ஆதியிலே -அண்ட பித்தியிலே புக்குச் சேர்ந்து –
பரப்பை உடைத்தான பூமியை –
அத்தை எடுக்கைக்கு ஈடான செருக்கை உடைய மஹா வராஹமாய் எடுத்துக் கொண்டு-
(ஸ்வேத வராஹ கல்பம் -28-மனுவில் நாம் உள்ளோம் -ஒவ் ஒரு மனுவுக்கு -71-சதுர் யுகம் -இதன் ஆதியில் -)

நமஸ்தஸ்மை வராஹாய லீல யோத்த்ரதே மஹம் குர மத்யகதோ யஸ்ய மேரு கணா கணா யதே –
என்கிறபடி வளர்ந்த திரு மேனி யாகையாலே –

அன்று இணை யடி யிமையவர் வணங்க-
அப்போது அந்த உளை மயிர்களிலே-பிடரி மயிர்களிலே – ஒதுங்கிக் கிடந்த ப்ரஹ்மாதிகள்
சேர்த்தி அழகை உடைத்தான -திருவடிகளை ஆஸ்ரயிக்க –
ஸூ கவி கடஸடா ஸங்கமை -என்னக் கடவது இறே-

உத்திஷ்ட தஸ் தஸ்ய ஜலார்த்ரகுஷேர் மஹா வராஹஸ்ய  மஹீம்
ப்ரக்ருஹ்ய விதிர்ந்த்வதோ வேத மயம் சரீரம் ரோமாந்த்ரஸ்தா முநயஸ் ஸ்துவந்தி -என்னக் கடவது இறே –
ஜலார்த்ரகுஷேர்-பாசி தூர்த்த-இத்யாதி என்றபடி

தானவன்  ஆகம் தரணியில் புரள –
இப்பொழுது தானவன் என்கிறது ராவணனை –
தையலாள் மேல் காதல் செய்த தானவன் வாளரக்கன் -என்னக் கடவது இறே
தநுவினுடைய வம்சஜன் என்று தானவன் என்கிறது ஆதல் -தநு வம்சம் ராவணனுக்கு மாத்ரு வம்சம்
ஆசூரமான வியாபாரங்களை உடையவன் என்றாதல் –
ராவணன் உடைய வராதிகளாலே  பூண் கட்டி இருக்கிற சரீரமானது
அம்பு தைச்சு பூமியிலே புரளும் படியாக-

தடஞ்சிலை குனித்த
மஹத் தநு -என்கிறபடியே
அளவுடைத்தான வில்லை வளைத்த –

வென் தலைவன்-
வீர ரசத்தில் பிரதானனான என் -ஆயன்
(பலத்தை காட்டியவர் ஸ்ரீ வராஹம் -சக்தியை காட்டியவர் ஸ்ரீ பெருமாள்)

தேனமர் சோலைக் கற்பகம் பயந்த தெய்வ நன்னறு மலர் கொணர்ந்து
வானவர் வணங்கும் கங்கையின் கரை மேல் வதரி யாச்சிரமத்துள்ளானே –
ராவணன் உடைய மிடுக்காலே
கற்பக வருஷத்தின் உடைய பூவை
பணிப் பூ இட்டு திரிவர்கள் ஆயிற்று தேவர்கள் -முன்பு –

அவன் தலை அறுப்பு உண்டவாறே
அத்தை ப்ராப்த விஷயத்தில் ஆக்கினார்கள் ஆயிற்று –
தேன் மிக்கு சோலை செய்து இருந்துள்ள கல்பகமானது உண்டாக்கின- திவ்யமாய் –
விலஷணமாய் -செவ்வியை உடைத்தான பூக்களைக் கொண்டு தேவர்கள் ஆஸ்ரயிக்கும் படி
ஸ்ரீ கங்கா தீரத்திலே
ஸ்ரீ பதரிகாஸ்ரமத்திலே வந்து சந்நிஹிதன் -ஆனான்

———————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading