திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -5-6-3-ஸ்ரீ M.A V .சுவாமிகள் –

காண்கின்ற நிலமெல்லாம் யானே என்னும்
காண்கின்ற விசும்பெல்லாம் யானே என்னும்
காண்கின்ற வெம் தீஎல்லாம் யானே என்னும்
காண்கின்றஇக் காற்றெல்லாம் யானே என்னும்

காண்கின்ற கடலெல்லாம் யானே என்னும்
காண்கின்ற கடல்வண்ணன் ஏறக் கொலோ?
காண்கின்ற உலகத்தீர்க் கென்சொல் லுகேன்?
காண்கின்ற என்காரிகை செய் கின்றவே.

பொ-ரை :- பார்க்கப்படுகின்ற பூமி முழுதும் யானே என்பாள், பார்க்கப்படுகின்ற ஆகாய முழுதும் யானே என்பாள், பார்க்கப்படுகின்ற கொடிய நெருப்பு முழுதும் யானே என்பாள், பார்க்கப்படுகின்ற இந்தக் காற்று முழுதும் யானே என்பாள், பார்க்கப்படுகின்ற கடல் எல்லாம் யானே என்பாள், காட்சிக்கு இனியதான கடல் போன்ற நிறத்தையுடைய சர்வேச்வரன் ஆவேசித்தானோ? எல்லாவற்றையும் காணவல்ல என்மகள் செய்கின்றவற்றை, காண்கின்ற உலகத்தை ஒழிய வேறு ஒன்றனையும் அறியாத உங்களுக்கு எதைச் சொல்லுவேன்?

ஈடு :- மூன்றாம் பாட்டு. 1காரணமான மண் முதலான பூதங்கள் ஐந்தும் நான் இட்ட வழக்கு என்கிறாள்.

காண்கின்ற நிலம் எல்லாம் யானே என்னும்-2காணப்புக்கால் கண்டதாய்த் தலைக்கட்ட முடியாதபடியான பரப்பையுடைத்தான பூமி எல்லாம் நான் இட்ட வழக்கு என்னாநின்றாள். இப்படி இருக்கிற இதுதான் காரிய உருவமாக இருக்கின்ற மண்ணே அன்றோ, கண்களுக்குத் தோற்றுகிற இது இவ்வளவானால், இதற்குங்கூடக் காரணமாய்த் தான் சாஸ்திரம் கொண்டு அறிய வேண்டும்படி இருக்குமது இவ்வளவு அல்லவே அன்றோ. காண்கின்ற விசும்பு எல்லாம் யானே என்னும்-காணப்புக்கால் கண்டதாய்த் தலைக்கட்ட முடிய ஒண்ணாதபடியாய், இது தனக்குங் கூட இடத்தைக் கொடுக்கிற ஆகாயமும் நான் இட்ட வழக்கு என்னாநின்றாள். காண்கின்ற வெம் தீ எல்லாம் யானே என்னும் – அப்படிப்பட்ட ஒளியுள்ள பொருளும் நான்

இட்ட வழக்கு என்னாநின்றாள். காண்கின்ற 1இக்காற்று எல்லாம் யானே என்னும் – பரிசம்கொண்டு அறியும்படி இருக்கிற காற்றும் நான் இட்ட வழக்கு என்னாநின்றாள். காண்கின்ற கடல் எல்லாம் யானே என்னும்-காண்பார்க்குக் கண்டதாகத் தலைக்கட்ட முடியாதபடியான கடல் எல்லாம் நான் இட்ட வழக்கு என்னாநின்றாள்.

காண்கின்ற கடல்வண்ணன் ஏறக்கொலோ-காணப்புக்கால் கண்டதாக மீள ஒண்ணாதபடியான கடல் போலே சிரமஹரமான வடிவையுடைய சர்வேச்வரன் வந்து ஆவேசித்தானோ? காண்கின்ற உலகத்தீர்க்கு என் சொல்லுகேன் – நீங்களும் என்னைப் போன்று காணாநின்றீர் கோளாகில், உங்களுக்கு நான் என்ன பாசுரமிட்டுச் சொல்லுவது; 2சொல்ல ஒண்ணாமைக்கு உங்களோடு என்னோடு வாசி உண்டோ? 3காண்கின்ற என் காரிகை செய்கின்றவே – “வேத வாக்குகள் மனத்தாலுங்கூட நினைக்க முடியாதபடி எந்தப் பரம்பொருளிடமிருந்து திரும்புகின்றனவோ” என்கின்ற அளவிட்டு அறிய முடியாத விஷயத்தை உட்புக்குப் பேசுகின்ற என் பெண்பிள்ளை செய்கிற இதனை நான் சொல்லுவது என்?

பஞ்ச -பூதங்கள் ஜகத்துக்கும் காரணம் நானே என்கிறாள் பூத பஞ்சகங்கள் -என்பர் நம் சம்ப்ரதாயத்தில்

ஜகத் முதல் பாசுரத்தில் -அருளி அவற்றுக்கு காரணமான பூத பஞ்சகங்கள் இதில் அருளி
காண்கின்ற -நிலம் விசும்பு வெந்தீ காற்று கடல் ஜல -தத்வம்
காண்கின்ற -கண்டு கொண்டே இருக்கின்ற -கண்டு தலைக்கட்ட முடியா விஸ்தீரணம்
500 கோடி சதுர mile பரப்பு -நிலம் எல்லாம் நான் -என்னுடைய அதீனம்
கார்ய ரூபேண பிர்த்வி -கண்ணால் காண முடியுமே
இதுக்கும் கூட காரணம் ஆக இருக்கும் -பஞ்சீ கரணம் முன்பு சாஸ்த்ரத்தால் தானே அறிய முடியும்
அது இத்தை விட விஸ்தீரணம்
விசும்பு -காண புக்கால் -பிரித்விக்கும் இடம் கொடுக்கும் விஸ்தீரணம் -இதுவும் நான் இட்ட வழக்கு
தேஜஸ் தத்வமும் அப்படி
ஸ்பர்சம் கொண்டு அறிய -காண்கின்ற காற்று -காற்றும் –
பிரத்யட்ஷம் ஐந்து இந்த்ரியங்கள் கொண்டு அறிவது
வாயுவும் பிரத்யட்ஷம் தானே இதனால்

கடல் எல்லாம் -இதுவும் கண்டு தலைக்கட்ட முடியாத –
ஸ்ரமஹரமான கடல் -வண்ணன் -சர்வேஸ்வரன்
காண்கின்ற உலகோருக்கு என்ன சொல்வேன்
நீங்களும் என்னோடு ஒக்க காண்கிறீர்கள்
சொல்ல முடியவில்லை இருவருக்கும்
காண்கின்ற -இக்காரிகை உள் புக்கு -பேசுகிற உள்ளபடி அறிந்த
வேதங்களும் காண முடியாமல் திரும்பிய பகவத் விஷயத்தை உள்ளபடி அறிந்த பெண்

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

 நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

 பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply