திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -2-3-11-ஸ்ரீ M.A V .சுவாமிகள் ..

குழாங்கொள் பேர்அரக்கன் குலம்வீய முனிந்தவனைக்
குழாங்கொள் தென்குருகூர்ச் சடகோபன் தெரிந்துஉரைத்த
குழாங்கொள் ஆயிரத்துள் இவைபத்தும் உடன்பாடிக்
குழாங்களாய் அடியீர்! உடன் கூடிநின்று ஆடுமினே.

    பொ- ரை : ‘இராக்கதர்களைக் கூட்டம் கூட்டமாக உடையவனும் எல்லாவற்றாலும் பெருமை பெற்றவனும் ஆன இராவணனுடைய குலமானது முற்றும் அழியுமாறு சீற்றங்கொண்ட இறைவன் விஷயமாக, ஸ்ரீவைஷ்ணவர்கள் கூட்டம் கூட்டமாய்த் தங்கியிருக்கிற அழகிய திருக்குருகூரில் அவதரித்த ஸ்ரீசடகோபர் ஆராய்ந்து அருளிச் செய்த பத்து நூறுகளையுடைய ஆயிரம் பாசுரங்களில், இப்பத்துப் பாசுரங்களையும் அடியவர்களே பொருள் உணர்ச்சியோடே அன்பிற்குப் போக்கு வீடாக வாய் விட்டுப் பாடிக் கூட்டங்கூட்டமாகச் சேர்ந்து நின்று அனுபவியுங்கள்,’ என்றவாறு.

    வி – கு : ‘அடியீர்! குழாங்களாய், இவை பத்தையும் உடன் பாடி உடன் கூடி நின்று ஆடுநின்,’ எனக்கூட்டுக. வீய – வினையெச்சம்; ‘வீ’ என்பது பகுதி; ‘சாக’ என்பது பொருள். முனிந்தவன் -வினையாலணையும் பெயர்.

    ஈடு : முடிவில், ‘இத்திருவாய்மொழியை ‘உனக்கேநாம் ஆட் செய்வோம்’ என்று இருக்கும் அடியவர்கள், 1என்னைப் போன்று தனித்திராமல் திரளாக அனுபவியுங்கள்,’ என்கிறார்.

    குழாம் கொள் பேர் அரக்கன் குலம் வீய முனிந்தவனை – 2’சீதா பிராட்டியின் பொருட்டு, பாணங்களால் இவ்வுலகத்தில் பிசாச சாதி அற்றதாயும், இராக்கத சாதி அற்றதாயும் செய்வேன்’ என்கிற படியே, புத்திரர் பௌத்திரர் முதலானவர்களும் உறவினர்களுமான இவர்களாலே குழாங்கொண்டு வரத்தின் வலிமை தோள் வலிமை என்பனவற்றால் தழைத்து வேர் ஊன்றின இராக்கதனுடைய சாதியினைக் கிழங்கு எடுத்த சக்கரவர்த்தி திருமகனை.

    குழாம் கொள் தென்குருகூர்ச் சடகோபன் – அடியார்கள் கூட்டத்தைக் கொண்ட அழகிய திருக்குருகூரில் அவதரித்தஸ்ரீசடகோபர். ஜனஸ்தானம் அடியறுப்பு உண்ட பின்பு தண்ட காரண்யத்தில் முனிவர்கள் குடி ஏறியது போன்று,‘வாயும் திரையுகளும்’ என்ற திருவாய்மொழியில் உண்டான நிலையினின்றும் தப்பிய ஆழ்வாரைக் காணவேண்டும் என்னும் பேரவாவோடு ஸ்ரீவைஷ்ணவர்கள் அடையத் திரண்டு வந்து சேர்ந்தார்களாதலின், ‘குழாங்கொள் தென்குருகூர்’ என்கிறார். 1‘நல்லார் நவில் குருகூர்’ அன்றோ? சத்துகள் இருந்த இருந்த இடங்களிலே வாய் புலற்றும்படியான தேசமானால், அத்தேசத்திலுள்ளார் திரளச்சொல்லவேண்டா அன்றோ? தெரிந்து உரைத்த குழாம் கொள்ஆயிரத்துள் – உள்ளபடி அநுசந்தித்துச் சொன்ன பத்துப்பாட்டு ஒரு திருவாய் மொழியாய், பத்துத் திருவாய்மொழி ஒரு பத்தாய், இப்படிப் பத்துப் பத்தான ஆயிரம். திரண்ட ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு ஜீவனமாக இவை இருத்தலின், ‘குழாம் கொள் ஆயிரம்’ என்கிறார். ‘ஆயின் திருவாய்மொழி ஜீவனம் ஆகுமோ?’ எனின்,2‘தொண்டர்க்கு அமுது உண்ணச் சொன்மாலைகள் சொன்னேன், அண்டத்து அமரர் பெருமான் அடியேனே’ என்பது இவருடைய திருவாக்கு. இவை பத்தும் உடன் பாடி – இவை பத்தையும் பொருள் உணர்ச்சி நிறைந்த கருத்தோடு பாடி. குழாங்களாய் -என்னைப் போன்று பருகிக் களித்தேனே’ என்று கூறி, குழாம் தேட இராதே, முற்படவே திரளாக இழியப் பாருங்கள். அடியீர் உடன் கூடி நின்று ஆடுமின் – அவன் பக்கலிலே 3நிக்ஷிப்தபரராய் இருக்கிற நீங்கள் 4நால்வர் இருவர் இங்கிருக்குமெ 5நான்கு நாளும் தள்ளத் தக்க அர்த்த காமங்களைப் பற்றிச் ‘சீறு, பாறு’ என்னாதே, நம் பெரிய குழாத்திலே போய்ப் புகுமளவும் ஒரு மிடறாய் அனுபவிக்கப் பாருங்கள்.

 

 

முதற்பாட்டில், திருவுள்ளத்தைக் கொண்டாடினார்; இரண்டாம் பாட்டில், அதனையும் இசைவித்த இறைவனைக் கொண்டாடினார்; மூன்றாம் பாட்டில், தம் நெஞ்சிற்பட்டதோர் உபகாரத்தைக் கூறினார்; நான்காம் பாட்டில், அவ்வுபகாரத்திற்குக் கைம்மாறாக ஆத்தும சமர்ப்பணம் பண்ணி அது தனக்கு வருந்தினார்; ஐந்தாம் பாட்டில், ‘எனக்குப் பிரதம சுகருதமும் நீயேயான பின்பு உன் திருவடிகளைக் கிட்டினேனேயன்றோ?’ என்றார்: ஆறாம் பாட்டில், ‘இன்றோ கிட்டிற்று? தேவரீர் எனக்கு விசேடமான திருவருள் பண்ணின அன்றே பெற்றேனே அல்லேனோ?’ என்றார்; ஆறாம் பாட்டில், ‘இன்றோ கிட்டிற்று? தேவரீர் எனக்கு விசேடமான திருவருள் பண்ணின அன்றே பெற்றேனே அல்லேனோ?’ என்றார்; ஏழாம் பாட்டில் இனிமையை நினைத்து ‘உன்னைப் பிரியில் தரியேன்’ என்றார்; எட்டாம் பாட்டில், யிப்படி எல்லையற்ற இனியனானவனை எளியது ஒரு வரிகாலே அடையப் பெற்றேன்’ என்றார். இனி, ‘பல காலம் கூடிச் செய்து பெறக் கூடிய தவத்தின் பலத்தை அவனைப் பின் சென்று மிக எளிதில் அடைந்தேன் என்கிறார்’ எனலுமாம். ஒன்பதாம் பாட்டில், ‘என்னுடைய எல்லாத் துக்கங்களும் போகும்படி அனுபவித்துக் களிப்பார் திரளிலே போய்ப் புகப்பெறுவது எப்போதோ?’ என்றார்; முடிவில்,’ இத்திருவாய்மொழியைக் கருத்தோடு கூடிக் கற்று, நான்கு நாளும் நால்வர் இருவர் உள்ளார் கூடியிருந்து அனுபவிக்கப்பாருங்கோள்,’ என்றார்.

 

 

அனுகூலர் கிடையாமையாலே ‘நால்வர் இருவர்’ என்கிறார்; நம்பிள்ளை நஞ்சீயரைப்

பார்த்து, ‘இதர உபாயங்களுக்கு அனுஷ்டாதாக்கள் பலராய் இருக்க, இதற்கு
அநுஷ்டாதாக்கள் மிகச் சிலராய் இருத்தற்குக் காரணம் யாது?’ என்று கேட்க, ‘உலகத்தில்
இருந்ததே குடியாக அனைவரும் சமுசாரிகளாக இருக்க, அதில் நாலிரண்டுபேர் உத்தம
ஆஸ்ரமிகளானால் சமுசாரிகளுக்கு ஒரு உத்கர்ஷமும் சந்யாசிகளுக்கு ஒரு அபகர்ஷமுமெ
உண்டோ? சுவர்க்க அனுபவத்துக்கு ஜ்யோதிஷ்டோமமெ முதலிய யாகங்களைச்
சாதனமாகச் சாஸ்திரங்கள் விதிக்கின்றன; ஓர் ஊரில் ஒரவனன்றோ யாகம் செய்தான்
என்று கேள்விப்படுகிறோம்? ஆதலால், இதற்கோ உமக்கு ஆள் பற்றப் போகிறது?’
என்று நம்பிள்ளைக்கு நஞ்சீயர் அருளிச் செய்த விடை இங்கு நினைவு கூர்க.

நிகமத்தில் பகவத் ஏக போதராய் இருப்பார்
என்னைப் போலே தனிப்படாதே திரளாக அனுபவிப்பார் –
குழாம் கொள் பேர் அரக்கன் -அவனும் கோஷ்டியாக தான்
ஆழ்வார் திரு நகரியிலும் கோஷ்டி
ஆயிரம் இதுவும் குழாம்
கோஷ்டி யாக கூடு அனுபவிக்க
வர புஜ பலம் ஜாதியாக கிழங்கு எடுத்த சக்கரவர்த்தி திரு மகன் –
ராஷசன் இல்லாமல் செய்தான் -குலமே நாசம்
விபீஷணன் ராஷசன் இல்லை அஸ்மாகம் -ராஷசாம் பலாபலம் கேட்டார்
தண்ட காரன்யம்குடி ரிஷி எரிந்து போல்
ஊனில் வாழ் வானில் திரை உகளும் ஆழ்வாரை துக்கம் போன
நல்லாவர் நவில்குருகொர்ர்சத்துக்கள் வாய் புலத்தும்
இருந்த இடங்களில் -வாய் புலத்தும்
நல்லவர் சொல்ல கூடிய என்றால் நல்லார் இருப்பார் சொல்ல வேண்டுமே
வந்தவர்களுக்குததீயாராதனை தொண்டர்க்கு அமுது உண்ண
இவை பத்தும் -பத்து பத்தான ஆயிரம்-குழாம் கொண்ட ஆயிரம் –
திரண்ட ஸ்ரீ வைஷ்ணவர்களுக்குஜீவனம் கூறு கூறாக அருளி
உடன் பாடி-அர்த்தத்துடன் பாடி
குழாம் உடன் கூத்தாட –
குழாம் தேட இராதே -முற்படவே திரளாகவே இழியப்பாரும்
அடியீர் உடன் நின்று ஆடுமினோ
நால்வர் இருவர்  -அர்த்த காமம் பாராதே -சீறு பாரு இருக்காமல்
ஒரு மிடராய்-ஒற்றுமையாக இருந்து -பரம பதம் அனுபவிக்க பாரும் கோள்  நியமனம் -பலம் இல்லை
பாட்டு தோறும் சொல்லிய அர்த்தம் அருளி -இங்கு இருக்கும் நாலு நாளும் அனுபவிக்க பாரும் கோள் என்கிறார்

 

திருவாய்மொழி நூற்றாந்தாதி  

        ஊனம்அற வேவந்து உள்கலந்த மால்இனிமை
யானது அனுபவித்தற்கு ஆம்துணையா -வானில்
அடியார் குழாம்கூட ஆசையுற்ற மாறன்
அடியா ருடன்நெஞ்சே! ஆடு.

திண்ணன்வீடு பிராசன்கிகம்
இனிமை அனுபவிக்க துணை வானில் அடியார் குழாமுடன் கூட ஆசை கொண்டார்
ஊனமஅறவே   இன்றி ஏக த்ரவ்யம் போல்களந்த இனிமை
மாறன் அடியார் உடன் நெஞ்சே ஆடு என்கிறார்
திரு தாயார் பாசுரமாக அடுத்த திருவாய்மொழி –

 

நம் ஜீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்

வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading