வாணுதல்இம் மடவரல் உம்மைக்
காணும்ஆசையுள் நைகின் றாள்;விறல்
வாணன்ஆயிரம் தோள்துணித் தீர்!உம்மைக்
காண, நீர்இரக் கம்இலீரே.
பொ – ரை : வெற்றி பொருந்திய வாணாசுரனுடைய ஆயிரம் தோள்களையும் துணித்தவரே! ஒளி பொருந்திய நெற்றியினை உடையளாய் மேன்மேலும் வளர்கின்ற மடப்பத்தினை உடையளாய் உள்ள இப்பெண், உம்மைக் காண வேண்டும் என்னுள் ஆசையுள் அகப்பட்டு வருந்துகிறாள்; உம்மைக் காணுமாறு நீர் இரங்குகின்றீர் இலீர்.
வி-கு : நைதல் – வருந்துதல் ‘வாணன் ஆயிரம் தோள் துணித்தீர்!’ என்ற விளி வாணனுடைய ஆயிரம் தோள்களையும் துணித்து உஷையோடு அநிருத்தனைச் சேர்த்து வைத்தீர்; இப்பொழுது இப்பெண்ணின் திறத்து இரங்காது இருப்பது என்னோ!’ என்ற கருத்தை உட்கொண்டது.
ஈடு : இரண்டாம் பாட்டு. ‘நம்மைக் காணுதற்குத் தடையாக உள்ள விரோதிகள் பல உங்களிடத்தில் இருந்துகொண்டு இருக்க, நடுவே வாடும் இத்தனையேயோ வேண்டுவது?’ என்ன ‘வாணனுடைய தோள்கள் ஆயிரத்திலும், இவள் விரோதி பிரபலமோ?’ என்கிறாள்.
வாணுதல் இம்மடவரல் நைகின்றாள் நீர் இரக்கம் இலீர் இவ்வவயவ சோபை போகத்திற்குக் காரணமாதல் அன்றி நைகைக்கு உறுப்பாவதே! ஐனக மஹாராஜன் பிராட்டியினுடைய பேரழிகினை நினைந்து, 1‘இச்சீதை’ என்று சுட்டிக் கூறியது போன்று, பெற்ற தாயாகிய இவளும் பெண்ணின் பேரழகினை நினைந்து ‘இம்மடவரல்’ என்கிறாள். ‘பெற்ற எனக்கு 2ஆகர்ஷகத்திற்குக் காரணமான இது, கைப்பிடித்த உமக்கு உபேஷைக்குக் காரணம் ஆவதே!’ என்பாள், ‘நீர் இரக்கம் இலீர்’என்கிறாள். மடவரல் – மடப்பம் வந்திருக்கை; அதாவது, மென்மையையுடையவள் ஆகுகை. பிரிந்து கலக்கப் பொறாத சௌகுமார்யத்தையுடையவள் என்றபடி. ஆக, பிராட்டி நிலையைக் கண்ட திருவடியைப் போலே இருக்கிறது காணும், இப்பெண்பிள்ளை நிலையைக்கண்ட திருத்தாயார்க்கு; 1‘இவளைப் பிரிந்து சமாதானம் பண்ணியிருந்த பெருமாள் சால அரிதாகச் செய்தார், இவளைப் பிரிந்து தேகத்தைத் தரித்திருந்தார் என்பது யாது ஒன்று, அதனைச் சாலஅரிதாகச் செய்தார்;2யானை ஏறவும் குதிரை ஏறவும் நாடு ஆளவும் கற்றாரித்தனை; பிரணய தாரையில் புதியது உண்டிலர்,’ என்பது திருவடி வார்த்தை. மால்ய வானில் பெருமாள் இருந்த போது கார் காலத்திலே பட்ட பாட்டைக் கண்டு, ‘வசிஷ்ட சிஷ்யன், ஒரு பெண் நிமித்தமாக இப்படிப் படுவதே!’ என்று பழித்துச் சிரித்திருந்தான் விரக்தன் ஆகையாலே; இப்போது ‘இவளைப் பிரிந்து தேகத்தைத் தரித்துக் கொண்டிருப்பதே!’ என்கிறான் விசேஷஜ்ஞன் ஆகையாலே. ‘இது ஏதேனும் 3இரவல் உடம்போ சுமந்து கொண்டு இருக்கைக்கு? இன்பத்திற்கு நிலைக்களம் அன்றோ? துக்கத்துக்கு நிலைக்களமோ இது? பிரிந்தால் கிரமத்திலே கூடுகிறோம் என்று தரித்திருக்க வல்லள் அல்லளே?’ என்கிறாள் என்றபடி.
உம்மை – இவள்படியன்றோ உமக்கு உபதேசிக்க வேண்டுவது; உம்மை நீர் அறியாமை இல்லையே; ‘நம்மைப் பிரிந்தார்கள் பிழையார்கள்’ என்று இருக்க வேண்டாவோ?’ வாணுதல் இம்மடவரல் உம்மை – 4‘சக்கரவர்த்தி திருமகனுக்குத் தகுந்த சீலம், வயது, ஒழுக்கம், ஒத்த குலம், இராஜ இலக்கணம் இவற்றையுடையளாய் இருக்கிற பிராட்டிக்கு, பெருமாள் தகுந்தவர்; கறுத்த கண்களை உடையளான இப்பிராட்டியும் பெருமாளுக்குத் தகுந்தவர்’ என்னும் படி காணும் இருக்கிறது. உம்மைக் காணும் ஆசையுள் நைகின்றாள் – ‘விஷயத்திற்குத் தகுதியாக அன்றோ ஆசையும் இருப்பது? உம்மை அணைய ஆசைப்பட்டாளோ? காட்சியிலேயும் அருமைப்படுத்து வீரோ?’ என்பாள், ‘காணும் ஆசை’ என்கிறாள். 1‘ஆசை என்னும் கடல்’ என்கிறபடியே,’ ஆசையாகிய கடலிலே அழுந்தாநின்றாள்’ என்பாள், ‘ஆசையுள்’ என்கிறாள். நைகின்றாள்’ என்பதில், 4இவளைத் தரிப்பிக்க வேண்டா; அடியில் நிலையிலே நிறுத்த அமையும்’ என்ற தொனிப்பொருள் தோன்றும். இதனால், ‘வாடுகை தான் தேட்டமாம்படி ஆயிற்று என்கிறாள்’ என்றயடி..
விறல் வாணன் ஆயிரம் தோள் துணித்தீர் -‘நையும் இது வேயோ வேண்டுவது, தடைகள் கிடக்க?’ என்றோ நீர் சொல்லுகிறீர்? வாணனுடைய தோள்களாகிய வனத்தைக் காட்டிலும் பரப்பு உண்டோ இவளுடைய விரோதி வர்க்கம்? உஷையோடு அநிருத்தனைச் சேர்த்தவர் அன்றோ நீர்? பேரனுமாய் ஆணுமாகிலோ உதவலாவது? உம்மோடு கலந்த அபலைக்கு உதவல் ஆகாதோ?’ என்பது தொனிப் பொருள். உம்மைக்காண – உம்மை இவள் காண்கைக்கு ஈடாக.2கருமுகை மாலை தேடுவார் சூடுவதற்காகவே தேடுவது; சும்மாட்டைக் கொள்ள அன்று. அது போன்று, உம்மை ஆசைப்படுவார் படுவது, காட்சிக்காக ஆயிற்று; 3‘அழைப்பன் திருவேங்கடத்தானைக் காண’ என்றார் திருமழிசைப்பிரான். 4‘காரார் திருமேனி காணுமளவும் போய்’ என்றார் திருமங்கைமன்னன். 5‘கண்களால் காண வருங்கொல்?’ என்று இவர்தாமே பின்னரும் அருளிச் செய்வர். நீர் இரக்கம் இலீர் –6‘தன் சரீரத்தின்மேல் தங்கி இருந்த காட்டு ஈக்களையும் கொசுக்களையும் பாம்புகளையும் ஓட்டமாட்டார்’ என்கிறபடியே, பிராட்டியைப் பிரிந்த துன்பத்தால், மற்றைப் பிராணி களால் உண்டாகும் துன்பத்தையும் அறியாதிருந்த நீர், இப்பொழுது நோவுபடுகை தவிர்ந்தால், சாமான்யமான இரக்கமும் போகவேண்டுமோ? ‘ஆயின், நீரே இரங்கல் வேண்டும்; நீர் இரங்கும்படி செய்யத் தக்க சாதனம் இவளிடத்து இன்று என்று கூறுவது போன்று, ‘நீர் இரக்கமிலீர்’ என்று கூறுவது எற்றிற்கு? ‘நைகின்றாள்’ என்று திருத்தாயார் கூறியது, இறைவன் இரக்கத்திற்குச் சாதனம் ஆகாதோ?’ எனின், ‘இவள் நைவு பேற்றுக்கு உபாயமன்று; அவன் இரக்கம் பேற்றுக்குச் சாதனம்,’ என்று காணும் திருத்தாயார் இருக்கிறது. ‘ஆயின், இவள் நைவிற்குப் பலன் தான் யாதோ?’ எனின், ‘இவள் நைவு அவன் இரக்கத்துக்ப் பரிகரம், அவன் இரக்கம் பேற்றுக்குச் சாதனம்; 1‘இப்பரம்பொருள், மனத்தாலும் நிதித்தியாசனத்தாலும் மிகுந்த கேள்வியாலும் அடையத்தக்கவன் அல்லன்; இறைவன் எவனை வரிக்கின்றானோ, அவனால் அடையத் தக்கவன்,’ என்கிறபடியே, தானே காட்டாக காணும் இத்தனையே.
விரோதி கடக்க செய்தே -வாணன் பாஹு பலத்திலும் இவள் விரோதி அதிகமோ
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
Leave a Reply