Archive for August, 2010

ஸ்ரீ திவ்ய பிரபந்தத்தில் ஸ்ரீ திவ்ய ஆயுதங்கள்-ஸ்ரீ திரு பாண் ஆழ்வார் —

August 27, 2010

இலங்கைக்கு இறைவன் தலை பத்து உத்திர வோட்டி ஓர் வெம் கணை யுய்த்தவன் ஓத வண்ணன் -4

கையினார் சுரி சங்கு அனல் ஆழியர் நீள் வரை போல் மெய்யனார் -7

————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திரு பாண் ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ திவ்ய பிரபந்தத்தில் ஸ்ரீ திவ்ய ஆயுதங்கள் -ஸ்ரீ தொண்டர் அடி பொடி ஆழ்வார்–

August 27, 2010

சிலையினால் இலங்கை செற்ற தேவனே தேவன் ஆவான்- ஸ்ரீ திரு மாலை-7

புலை யறமாகி நின்ற புத்தொடு சமணம் எல்லாம்
கலையறக் கற்ற மாந்தர் காண்பரோ கேட்பாரோ தான்
தலை அறுப்புண்டும் சாவேன் சத்தியம் காண்மின் ஐயா
சிலையினால் இலங்கை செற்ற தேவனே தேவன் ஆவான்–7-

ஒரு வில்லால் ஓங்கு முந்நீர் அடைத்து உலகங்கள் உய்யச்
செருவிலே யரக்கர் கோனைச் செற்ற நம் சேவகனார்
மருவிய பெரிய கோயில் மதிள் திருவரங்கம் என்னா
கருவிலே திரு விலாதீர் காலத்தைக் கழிக்கின்றீரே–11-

அடல் ஒளி திகழ் தரு திகிரி அம் தடக்கை  அரங்கத்தம்மா ! பள்ளி எழுந்தருளாயே-ஸ்ரீ திரு பள்ளி எழுச்சி -3

சுடர் ஒளி பரந்தன சூழ் திசை எல்லாம்
துன்னிய தாரகை மின் ஒளி சுருங்கி
படர் ஒளி பசுத்தனன் பனி மதி இவனோ
பாய் இருள் அகன்றது பைம் பொழில் கமுகின்
மடல் இடை கீறி வண் பாளைகள் நாற
வைகறை கூர்ந்தது மாருதம் இதுவோ
அடல் ஒளி திகழ் தரு திகிரி அம் தடக் கை
அரங்கத்தம்மா! பள்ளி எழுந்து அருளாயே-—3 –

——————

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ தொண்டர் அடி பொடி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ திவ்ய பிரபந்தத்தில் ஸ்ரீ திவ்ய ஆயுதங்கள் -ஸ்ரீ திரு மழிசைப்பிரான் —

August 26, 2010

ஸ்ரீ திரு சந்த விருத்தம்

சாம வேத கீதனாய சக்ர பாணி அல்லையே ?-14

சங்க வண்ணம் அன்ன மேனி சக்ர பாணி அல்லையே ?-15

மின் கொள் நேமியாய் ! -19

அம் கை ஆழி சங்கு தண்டு வில்லும் வாளும் ஏந்தினாய் சிங்க மாய தேவ தேவ ! -24

படை கலம் விடுத்த பல் படைத் தடக் கை மாயனே ! -28

வேலை வேவ வில் வளைத்த வெல் சினத்த வீர ! -31

அரக்கர் அங்கர் அங்க வெஞ்சரம் துரந்த ஆதி நீ -32

அரக்கன் வீழ வெஞ்சரம் துரந்து பின் அவற்கு அருள் புரிந்து அரசு அளித்த பெற்றியோய் ! -33

மீனுமாகி ஆமையாகி ஆழியார் தம் பிரானுமாகி மிக்கது அன்பு மிக்கு -35

முன் ஓர் நாள் திண் திரல் சிலை கை வாளி விட்ட வீரர் சேரும் உஊர் –சீர் அரங்கமே -50

சரங்களை துரந்து வில் வளைத்து இலங்கை மன்னன் சிரங்கள் பத்து அறுத்து உதிர்த்த செல்வர் -51

இலைத் தலை சரம் துரந்து இலங்கை கட்டழித்தவன்  -54

அடர்த்து எறிந்த ஆழியான் -57

காலநேமி வக்கரன் கரன் முரன் சிரம் அவை காலனோடு கூட விற் குனித்த விற் கை வீரனே ! -59

குந்தமோடு சூலம் வேல்கள் தோமரங்கள் தண்டு வாள் பந்தமான தேவர்கள் பரந்து  வானகம் உற -70

மரம் பொதச் சரந்துரந்து வாலி வீழ முன்னோர் நாள் உரம் பொதச் சரந்துரந்த உம்பர் ஆளி எம்பிரான் -73

அன்பில் அன்றி ஆழியானை யாவர் காண வல்லரே ? -76

கடைந்து பால் கடல் கிடந்து காலநேமியை கடிந்து உடைந்த வாலி தன் தனக்கு உதவ வந்து இராமனாய்
மிடைந்த வேழ் மரங்களும் அடங்க வெய்து வேங்கடம் அடைந்த மால் பாதமே அடைந்து நாளும் உய்ம்மினோ -81

ஆழியான் தன் திறத்து ஓர் அன்பிலா அறிவிலா நாயினேன் என் திறத்தில் என்கொல் ? எம்பிரான் குறிப்பில் வைத்ததே -84

இரும்பரங்க  வெஞ்சரம் துரந்த வில்லி ராமனே ! -93

வெய்ய வாழி சங்கு தண்டு வில்லும் வாளும் ஏந்து சீர்க் கைய -97

பல்  படைத் தடக்கை மாயனே ! -104

கறுத்து எதிர்ந்த காலநேமி காலனோடு கூட அன்று அறுத்த வாழி சங்கு தண்டு வில்லும் வாளும் ஏந்தினாய் -106-

———-

ஸ்ரீ நான்முகன் திரு வந்தாதி

இலை துணை மற்று என் நெஞ்சே ! ஈசனை வென்ற சிலை கொண்ட செங்கண் மால் -8

மடுக் கிடந்த மா முதலை கோள் விடுப்பான் ஆழி விடற் கிரண்டும் போயிரண்டின் வீடு -12

வெங்கதிரோன் மாயப் பொழில் மறைய தேர் ஆழியால் மறைத்தார் -16

இது விலங்கை தான் ஒடுங்க வில் நுடங்கத் தண் தார் இராவணனை வூன் ஒடுங்க வெய்தான் உகப்பு -28

எல்லாமாய் சார்ந்தவர்க்குத் தன்னாற்றான் நேமியான் மால் வண்ணன் தான் கொடுக்கும் -83

——————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திரு மழிசைப்பிரான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ திவ்ய பிரபந்தத்தில் ஸ்ரீ திவ்ய ஆயுதங்கள் -ஸ்ரீ குலசேகரப்பெருமாள் —

August 26, 2010

கோலார்ந்த நெடுஞ்சார்ங்கம் கூனர்சங்கம் கொலை ஆழி கொடும் தண்டு
கொற்ற ஒள் வாள் ..இவை அனைத்தும் புறம் சூழ் காப்ப 1-8

அம் கை ஆழி அரங்கன் அடி இணை 3-9

கூன் ஏறு சங்கம் இடத்தான் தன் வேங்கடத்து கோனேரி வாழும் குருகாய் பிறப்பேனே 4-1

மின் வட்ட சுடர் ஆழி வேங்கடக்கோன் தான் உமிழும் பொன் வட்டில் பிடித்து உடனே புகழ் பெருவன்  ஆவேனே 4-3

மின்னையே சேர் திகிரி விற்றுவக் கோட்டம்மா ! 5-9

வளைய ஒரு சிலை அதனால் மதிள் இலங்கை அழித்தவனே ! 8-9

குனி  வில் ஏந்தும் மல் அணைந்த  வரை தோளா ! 9-3

முன் ஒரு நாள்  மழு வாளி சிலை வாங்கி அவன் தவத்தை முற்றும் செற்றாய் 9-9

செவ் வரி நல கரு நெடும் கண் சீதைக்காகி சின விடையோன் சிலை இறுத்து மழு வாள் ஏந்தி
வெவ் வரி நல சிலை வாங்கி வென்றி கொண்டு வேல் வேந்தர் பகை தடிந்த வீரன் தன்னை 10-3

வலி வணக்கு வரை நெடும் தோள் விராதை கொன்று வண் தமிழ் மா முனி கொடுத்த வரி வில் வாங்கி …
சிலை வணக்கி மான் மறிய எய்தான்  தன்னை -10-5

குரை கடலை அடல் அம்பால் மறுக வெய்து 10-7-

———–

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ குலசேகரப்பெருமாள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ திரு விருத்தம் -4..

August 26, 2010

(தன் நிகர் அற்ற அத்விதீயமான நெஞ்சு
ஒரே மனஸ்ஸூ -ஒன்றே ஓன்று என்றுமாம்
முன் -அவரது திருவடி -அவனுக்கே சேஷம் -கவர்ந்து சென்றார் –
இனி அவனது குளிர்ந்த -வியர்வை கமழும் திருத்துழாய்க்கு கவர நம்மிடம் நெஞ்சம் இல்லையே
மூன்றாவது மாருதம் -தனியாக வராமல் -துழாய் வாசனையைக் கொண்டு வீச
நேர் சம்பந்தம் உள்ள துழாயுக்கே இல்லையே
நீ குறுக்கே வந்தாயே -கருடன் துழாய் நான் -எங்கள் நடுவே
பூதனா சம்ஹாரம் பண்ணி அருளிய கண்ணன் திருமுடியில் சூடும் திருத்துழாய் -பனி வாசனை கவர்ந்து வந்தாயே –
கவர்ந்து போக ஒன்றும் இல்லையே
உனக்கும் எனக்கும் -உனக்கும் அவனுக்கும் -நேர் தொடர்பு இல்லையே
சஜாதீயர் -ஆவி பிராணன் -மாருதம் -நீ நலிய வரலாமோ
கருடன் துழாய் விஜாதீயர் -நலிவது போல் நீயும் நலிய வேண்டுமோ )

——-

அவதாரிகை
இமையோர் தலைவா -என்னும்படியே
நித்ய விபூதியைக் காட்டிக் கொடுக்கையாலே
அங்குள்ள பதார்த்தங்கள் ஸ்மாரகமாய் நலிகிற படியைச் சொல்லுகிறது –

தனி நெஞ்சம் முன்னவர் புள்ளே கவர்ந்தது தண்ணம் துழாய்க்கு
இனி நெஞ்சம் இங்குக் கவர்வது யாமிலம் நீ நடுவே
முனி வஞ்சப் பேய்ச்சி முலை சுவைத்தான் முடி சூடு துழாய்ப்
பனி நஞ்ச மாருதமே எம்மதாவி பனிப்பியல்வே —-4-

பாசுரம் -4-தனி நெஞ்சம் முன் அவர் -தலைவனைப் பிரிந்த தலைவி வாடைக்கு ஆற்றாது வருந்தி கூறல் -ஓடும் புள்ளேறி -1-8-

பதவுரை

தனி நெஞ்சம்–(என்னோடு) உறவற்று நீங்கிய (என்) மனம் முழுவதையும்
முன்–முன்னமே
அவர் புள்ளே–அப்பெருமானுடைய கருடப் பறவையே
கவர்ந்தது–(பிறர்க்கு மிச்சமில்லாதபடி) கவர்ந்து கொண்டு போயிற்று.
(ஆதலால்,)
தண் அம் துழாய்க்கு–(அப்பெருமானுடைய) குளிர்ந்த அழகிய திருக் குழாய்க்கு
கவர்வது–கவர்ந்து கொண்டு போவதற்கு உரியதான
நெஞ்சம்–வேறொரு நெஞ்சை
இனி இங்கு யாம் இலம்–இனி இவ்விடத்தில் யாம் உடையோ மல்லோர்,
(அப்படியிருக்க.)
முனி–கோவிக்குத் தன்மையுள்ள
வஞ்சம் பேய்ச்சி–வஞ்சனையை யுடைய பேய் மகளான பூதனையினுடைய
முலை–(விஷந்தடவின) முலையை
சுவைத்தான்–(பசையற) உருசி பார்த்து உண்ட கண்ண பிரானுடைய
முடிசூடும் துழாய்–திருமுடியில் சூடப்பட்ட திருத் துழாயினது
பனி நஞ்சம் மருதமே–குளிச்சியை யுடைய விஷம் போன்ற காற்றே!
நீ நடுவே–நீ இடையிலே (புகுந்து)
எம்மது ஆவி பனிப்பு–(ஏற்கனவே நோவு பட்டிருக்கிற) எம்முடைய உயிரை மேலும் நடுங்கச் செய்வது
இயல்பே–(உனக்குத் தக்க) இயற்கையோ? (தகாது.)

——

அப்பிள்ளை உரை

தனி நெஞ்சம் முன்னவர் புள்ளே கவர்ந்தது
விலக்ஷணமான நெஞ்சை முன் அவர் புள்ளே கவர்ந்தது
முன்பு வேறே சிலருக்கு சேஷியாத படி -முழுவதுமாக -பிரித்துக் கொண்டான்

தண்ணம் துழாய்க் கினி நெஞ்சம் இங்குக் கவர்வது யாமிலம்
அவனோடு ஸ்பர்சம் உண்டான திருத்துழாய்க்கு கவர்வதற்கு நெஞ்சு இங்கே இல்லையே

நீ நடுவே
பாத்ய பாதக தொடர்பு இல்லாத நீ
சம்பந்த சத்ருச சம்பந்தம் துழாயுக்கும் திருவடிக்கு போல் காற்றுக்கு இல்லையே
நேர் அடித் தொடர்பு இல்லையே
ததீய சம்பந்த ஏற்றம் எனக்கே என்று காற்று வந்து
பண்டே நோவு பட்டு இருக்கிற எங்கள் பிராணனை நோவு படுத்தாமல் போ

முனி வஞ்சப் பேய்ச்சி முலை சுவைத்தான் முடி சூடு துழாய்ப் பனி நஞ்ச மாருதமே
முனிவை யுடைய பூதனைக்கு பண்பு முன்பு
இங்கு முனிந்து சீறிச் சுவைத்து அவளை முடித்த கண்ணன் திருமுடியில் சூட்டப்பட்ட
குளிர்ச்சி யுடைய பாதகமான திருத்துழாய் தடாவி
ததீய சம்பந்தம்

எம்மதாவி பனிப்பியல்வே —
பாண்டே நோவு பட்டு இருக்கிற ஆழ்வார் -போல்வார்
முன்பே கவரப்பட்ட -மேலும் திருத் துழாயால் நலிவு படுத்தப்பட்ட எம்மை நீயும் நலிய வேண்டுமோ
இது உனக்குத் தக்கதோ -இயல்பு இல்லையே

முனி வஞ்ச –
பூதனை முலையை நஞ்சைக் கலந்து வந்தது போல்
இங்கு திருத்துழாய் உடைய பரிமளம் கலந்த மாருதம்

ஸ்வாபதேசம்
துக்கப் பட்ட மனஸ்ஸுக்கு சர்வம் அஸஹ்யம் எத்தையும் தாங்காதே –
பகவத் விஸ்லேஷத்தாலே சர்வமும் அஸஹ்யமான படியை அருளிச் செய்கிறார் –

——

வியாக்யானம் –

தனி நெஞ்சம் –
பாத்யத்தின் அளவன்றிக்கே பாதகம் இருக்கிற படி –

(இங்கு மூவர் பாதகர் அன்றோ –
ஒவ்வொருவரும் பலிஷ்டம் திருவடி திருத் துழாய் காற்று
நெஞ்சு தனி ஒன்றே -ஸ்தூலம் அன்றோ )

முன்னவர் புள்ளே கவர்ந்தது-
திருவடி மேலே இருக்கிற இருப்பிலே
தோளின் மாலையோடு அணைக்கக் காணும் ஆசைப் படுகிறது –
அவ்வளவும் கிட்டுவதற்கு முன்பே
ஒரு திருவடி வழி பறித்துக் கொண்ட படி

(சாடு -திருவடி -பாதம் -ஸூசகம் கொடுக்கும் இயல்பான உள்ள திருவடி பறித்துப் போவதே )

அவர் புள் –
அங்குத்தைக்கு அசாதாராணம் என்று -தான் ஈடுபட்ட படி

(கோபத்தால் மட்டும் அல்ல -அபகரித்ததும் அவனுக்கு அசாதாரணம்
திருவல்ல வாழ் கோனாரை அடியேன் போல் -அங்கு அநந்யார்ஹம் சொல்ல ஏவகாரம் இல்லை –
இங்கு அவன் புள்ளே
உறங்கா வல்லி தாசர் பொன்னாச்சியார் –காது தோடு -பாகவதர்கள் அபகரித்த வ்ருத்தாந்தம் )

புள்ளே –
சஜாதீயருக்கும் வையாது ஒழிந்த படி
(திருத் துழாய்க்கும் வைக்காத படி )

கவர்ந்தது
தனக்கும் அரை வயிறாய் இருந்த படி

முன்
திருத் துழாய்க்கு முன்னே திருவடி முற்பட்ட படி –

தண்ணம் துழாய்க்கு
குளிர்ந்த திருத் துழாய் க்கு

இனி நெஞ்சம்-
மரம் போலே திமிர்த்து இருந்தாலும் ஆவது உண்டோ
ஓரடி முற்பட பெற்றது இல்லை
ஒப்பூணாக உண்ணலாயிற்று
உங்கள் அபேஷிதம் இல்லை

(ஸாயுஜ்யம் -ஸோ ஸ்னுதே -அங்கு குணம் அனுபவம் சேர்ந்து –
அது போல் இங்கு இல்லையே )

இங்குக் –
விளக்கு ஏற்றிக் காட்டுகிறாள்

கவர்வது யாமிலம் –
திருவடி பாடே போம் இத்தனை
பாவியேன் பல நெஞ்சு படைக்கப் பெற்றிலேன்
தண்ணம் துழாய்க்கு கவர்வதான நெஞ்சுக்கு யாம் இனி இங்கே உடையோம் அல்லோம்

நீ நடுவே –
திருத் துழாய் ஆழ்வார் -மரம் போலே திமிர்த்து இருந்தார் என்று பார்த்து
(திருத்துழாய் ஆழ்வார் ஒன்றும் கிடைக்காமல் மரம் போல் நிற்க )
அவ்வளவிலே
கால் கடுகி வந்து
(கால் காற்று வேகமாக காலால் ஓடி என்றும் சாடு )
அசாதாரணர் பட்டினி விடா நிற்க -உனக்கு என் -என்கிறாள் –

அங்கு சம்பந்தம் உண்டாதல்
இங்கு விஷயம் உண்டாதல்
அன்றியே
நடுவே –

முனி வஞ்சப் பேய்ச்சி-
முனியையும்
க்ரித்ரிமத்தையும் உடைய பூதனை –

முலை சுவைத்தான் –
தன் நாவில் பசை கொடுத்துச் சுவைத்தான்
பெற்ற தாய் போல் வந்த பேய்ச்சி பெரு முலை யூடு உயிரை வற்ற
வாங்கு உண்ட வாயான்(வதரி வணங்குதுமே கலியன் )

(சுவைத்தான் -சுவை மிக்கு இருந்தது போல் அனுபவித்தான் )

முடி சூடு துழாய்ப் –
அத் தலையில் உள்ளத்தைக் கொண்டு வந்து
வாயு பிரேரிக்கிற படி
(அத்தலையில் -அவன் இடத்தில் -அவன் திருமுடியில் சாடு )
சஹ்யத்திலே நீரை ஆகாசத்திலே முகந்து நின்று இறைக்குமா போலே

திருத் துழாயை முடித்து வந்து போலே காணும்
பூதனையை முடித்தது –

திரு அபிஷேகத்திலே திருத் துழாய் என்று அறிந்த படி என் தான்
பனி நஞ்ச மாருதமே-
குளிர்ந்த காற்று அகவாய் நஞ்சாய் இருக்கிற படி

எம்மதாவி-
சென்று அற்று இருக்கிறபடி
பாதகங்களின் கையிலே அகப்பட்டு அவ சேஷித்த பிராணன் –
(நெஞ்சு கிடைக்காததால் மீதம் உள்ள பிராணனை திருத்துழாயும் மருதமும் நலிந்த படி )

பனிப்பியல்வே –
நடுங்குகை ஸ்வ பாவமே
விசஜாதியர் செய்யுமத்தை
சஜாதீயமான நீ செய்யக் கடவையோ-

தாத்பர்யம்

இப் பாசுரத்தில் சர்வேஸ்வரனை ஆழ்வார் முன்பு மாநசமாக அனுபவித்ததால்
அவனோடே சம்பந்தித்த பதார்த்தங்கள் இப்போது ஆழ்வாருக்கு ஸ்ம்ருதி விஷயமாக
அலாபத்தால் பாதகமான படியை
நாயகனைப் பிரிந்த நாயகியை வாடைக் காற்றுக்கு ஆற்றாதவளாய் சொல்லும் பாசுரத்தால்
அருளிச் செய்கிறார்

விஷத்தை கொண்டு வீசுவது போல் எனக்கு அத்யந்த பாதகமாய் குளிர்ந்து வீசுகிற ஓ மாருதமே
சர்வேஸ்வரன் பெரிய திருவடியை நடத்திக்கொண்டு வர சேவித்து
எனக்கு இருந்த ஒரு மனஸும் முன்பே போனது
இனி மேல் பட கொண்டு அவன் சாத்திக் களைந்த திருத்துழாய்க்கு கொண்டு போகைக்கு
வேறே என்னிடம் வேறே மனஸ் ஸூ இல்லை
இப்படி மனசைப் பறி கொடுத்து அவஸ்தை படும் சமயத்தில் நீயும் வந்து
தன்னை முடிக்க நினைத்து சீறிக்கொண்டு கபடத்தால் -தாய் வேஷம் கொண்டு வந்த பூதனையை-
நமக்கு உபகரிக்கைக்காக முடித்த சர்வேஸ்வரன் திருமுடியில் சாத்தின பரிமளம் கொண்டு
நலிய வந்த உனக்கு இது தர்மம் அன்று காண்
தத்துவம் அன்று தகவும் அன்று
ஆகையால் நீ என்னை பாதியாது ஒழிய வேணும் -என்கிறாள் –

———————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம் ஆழ்வார் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ திரு விருத்தம் -3..

August 26, 2010

அவதாரிகை –
கீழில் பாட்டில்-பிரிவின் பிரதம அவதி யாகையாலே-
(முதல் நிலையும் முதிர்ந்த நிலையும் இரண்டு பாட்டுக்கள் )
தன்னுடைய தசையை (வெட்கத்தை) ஸ்த்ரீத்வத்தாலே ஒழித்தாள்
அங்கன் அன்றிக்கே
தோழிக்கு சொல்லித் தரிக்க வேண்டும்படிக்கு ஈடான தசா விபாகத்தாலே
அவன் பின்னே போன நெஞ்சானது வருமோ -அங்கனே போமோ -என்று
தோழியைக் கேட்கிறாள் –

குழற் கோவலர் மடப் பாவையும் மண் மகளும் திருவும்
நிழற் போல்வனர் கண்டு நிற்கும் கொல் மீளும் கொல் தண்ணம் துழாய்
அழற்போல் அடும் சக்கரத் தண்ணல் விண்ணோர் தொழக் கடவும்
தழற் போல் சினத்த அப்புள்ளின் பின் போன தனி நெஞ்சமே—3-

பாசுரம் -3-குழல் கோவலர் மடப் பாவையும் -பிரிவாற்றாத தலைவி நெஞ்சு அழிந்து உரைத்தல் -வெள்ளைச் சுரி சங்கு -7-3-

பதவுரை

தண் அம் துழாய்–குளிர்ந்த அழகிய திருத் துழாயை யுடையவனும்
அழல் போல் அடும் சக்ரத்து–(அஸுர ராக்ஷஸர்களை) நெருப்புப் போல் அழிக்கின்ற திருவாழியை யுடையனுமான
அண்ணல்–எம்பெருமான்
விண்ணோர் தொழ கடவும்–மேலுலகத்தவர் வணங்கும்படி ஏறி நடத்துகிற
தழல்போல் சினத்த–பிள்ளின் பின் போன
(பகைவர் நிறத்தில்) நெருப்புப் போன்ற கடுங்கோபத்தையுடைய அக்கருடாழ்வானது பின்னே சென்ன
தனி நெஞ்சம்–(எனது) தனிப்பட்ட மனமானது
குழல்கோவலர்–புல்லாங்குழலை யுடையரான இடையரது
மடம் பாவையும்–குணவதியான மகளாகிய நப்பின்னைப் பிராட்டியும்
மண் மகளும்–பூமிப் பிராட்டியும்
திருவும்–பெரிய பிராட்டியும்
நிழல் போல்வனர்–(எம்பெருமானுக்கு) நிழல் போலேயிருக்க அவர்களை
கண்டு நிற்கொல்-பார்த்துக் கொண்டு (அவ்விடத்தை விடாதே) நிற்குமோ?
மீளும் கொல்–திரும்பி வருமோ?

(சம்பந்த ஸத்ருச பதார்த்தங்கள் -பாதகம் ஆகும் விஸ்லேஷத்தில்
ராமம் மே அநு கதா த்ருஷ்ட்டி -சக்ரவர்த்தி )

(முதல் இரண்டும் பகவத் சேஷத்வம் -பாகவத சேஷத்வம் இதில் -அப்புள்ளின் பின்னே அன்றோ நெஞ்சு போயிற்று
இருவருக்கும் நிழல் -பெருமானுக்கு நிழல் போல் -நமக்கும் நிழல் –
மானஸ அனுபவம் கிட்டியது -பாஹ்ய அனுபவம் கிட்டுமா திருமலை நம்பி அருளிச் செய்ததாக
பிள்ளை திரு நறையூர் அரையர் அருளிச் செய்வதாக -நம்பிள்ளை ஈடு -இதுக்கு சங்கதி
பிராகிருத பிராகிருத சம்பந்தம் போனது -சாஷாத்காரம் பெற்றது -சாத்மிக்குமா- நிலைக்குமா-
நம்மால் அனுபவிக்க முடியுமா -என்றுமாம் -இப்படி மூன்று சங்கதிகள் இப்பாட்டுக்கு)

அப்பிள்ளை உரை
தோழி இத் தலைவியை அறிவிக்க
அவளைக் குறித்து அவன் பக்கலிலே சென்ற நெஞ்சு
மீண்டு வருமோ அங்கேயே நிற்குமோ என்கிறாள் தலைவி

குழற் கோவலர் மடப் பாவையும்
குழலை–அழகிய மயிர் முடியை யுடைய-கோவலருக்கு உடைய மடப்பத்தை யுடைய –
ஆத்ம குண சம்பன்னையான
எம்பெருமானுக்கு அதி ஸ்லாக்த்யையான நப்பின்னைப் பிராட்டியும்
குழலூதும் கோவலர் என்றுமாம்

மண் மகளும்
ஷமா தத்துவமான பூமிப் பிராட்டியும்

திருவும்
எம்பெருமானுக்கு சம்பத்தான பெரிய பிராட்டியார்

நிழற் போல்வனர் கண்டு
அவனுக்கும் ஒதுங்கும் படி சாயை- ஆஸ்வாச கரம்
ஒருவருக்கு ஒருவர் நிழல்
ஸ்ரீ தேவிக்கு அடங்கி -சாயாம் இவ (பட்டர்)-பவ்யமானவர் -பரதந்த்ரர்
இரண்டு அர்த்தங்களும் உண்டே

நிற்கும் கொல் மீளும் கொல்
அவ்விடத்தே விடாதே நிற்குமோ அல்லது மீண்டும் வருமோ

தண்ணம் துழாய் அழற்போல் அடும் சக்கரத் தண்ணல்
திருத்துழாய் வெப்பம் போல் ஆழியும் சுடும் இவளுக்கு
திருத்துழாய் அனுகூலருக்கு விஸ்லேஷத்தில் சுடுவது போல் சுடும் திருவாழி

விண்ணோர் தொழக் கடவும்
கையையும் திருவாழியையும் கண்டு அயர்வறும் அமரர்கள் தொழும் படிக்கு நடத்தும்

தழற் போல் சினத்த அப் புள்ளின் பின் போன தனி நெஞ்சமே—
நெருப்புப் போலே கோபம் -வெஞ்சினத்த -காய்ச்சின
அவனை இங்கே நின்றும் கொண்டு போன
மெய்ப்பரிவை யுடைய திருவடி -ஜகத் ரக்ஷணம் -ஹேதுவாக அன்றோ கூட்டிச் செல்கிறான் –
க்ரூரரான அக்ரூர பின்னே போனவர் போல்
ஸ்வ தந்திரமான நெஞ்சு
கீழே ஸஹாயம் இல்லாத நெஞ்சு பார்த்தோம் –
தென் திருப்பேரை யில் சேர்வன் -நெஞ்சினாரும் அங்கே ஒழிந்தார் -அங்கும் புள்ளின் போனதே

வெள்ளைச் சுரிசங்கொடு ஆழி ஏந்தித் தாமரைக் கண்ணன் என் நெஞ்சினூடே
புள்ளைக் கடாகின்ற ஆற்றைக் காணீர்! என் சொல்லிச் சொல்லுகேன் அன்னைமீர்காள்!
வெள்ளச் சுகமவன் வீற்றிருந்த வேத ஒலியும் விழாவொலியும்
பிள்ளைக் குழா விளையாட்டொலியும் அறாத்’திருப் பேரெயிற் சேர்வன் நானே- .–7-3-1-

———

ஸ்வாபதேசம்
எம்பெருமானுடைய ஐஸ்வர்யத்தைத் தரித்து நின்று அனுபவிக்கப் போகுமோ
பாஹ்ய சம்ஸ்லேஷம் கிடைக்குமோ கிடைக்காதோ என்றுமாம்

வியாக்யானம் –

குழற் கோவலர்-
குழலை உடைய கோவலர் -என்றபடி-
பிராமணர்க்கு சந்த்யா வந்தாதிகள் போலே இவர்களுக்கு இது ஜாதி பிரயுக்தம் –
அன்றிக்கே
குழலை உடையவளுமாய்

மடப் பாவையும் –
அவர்களுக்கு பவ்யையுமாய் இருந்துள்ள நப்பின்னை பிராட்டி –

மண் மகளும் –
ஸ்ரீ பூமிப் பிராட்டி

திருவும் –
பெரிய பிராட்டியார் –

1-ஆஸ்ரிதர் குற்றத்தை பொறுக்கும் பிராட்டி –
2-குற்றம் காண்பான் என் பொறுப்பான் என்-என்று இருக்கும் ஸ்ரீ பூமிப் பிராட்டி
3-நப்பின்னை பிராட்டி ஷமை தான் ஒரு வடிவாய் இருக்கும் –

1-பெரிய பிராட்டியார் இவனுக்கு சம்பத்தாய் இருக்கும் –
2-ஸ்ரீ பூமிப் பிராட்டி -அது விளையும் தரை
3-நப்பின்னை பிராட்டி அதனை அனுபவிக்கும் போக்தா –

நிழற் போல்வனர்-
1-இவர்கள் மூவரும் அவனுக்கு நிழல் போலே இருப்பவர்கள் –
2-ஒருவருக்கு ஒருவர் நிழல் போலே இருப்பவர்கள் -என்றுமாம்
3-ஆஸ்ரயித்தாருக்கு நிழல் போலே இருப்பவர்கள் -என்றுமாம் –

கண்டு நிற்கும் கொல் மீளும் கொல்-
1-இப் படிகளைக் கண்டு
இதுவே பற்றாசாக தரித்து நிற்குமோ
2-இம் மேன்மையைக் கண்டு
கடலிலே துரும்பு போலே எழ வீசுமோ –

(ஈசன் சம்பத் என்ற எண்ணத்தால் அடங்குக உள்ளே
திருவுக்கும் திருவாகிய செல்வன் -பரத்வம் கண்டு மீளுமோ )

தண்ணம் துழாய் அழற் போல் அடும் சக்கரத் தண்ணல் –
குளிர்ந்து
பரிமளத்தை உடைத்தான
திருத் துழாய் அழற் போலே முடியா நின்றுள்ள
திரு ஆழியை உடைய சர்வேஸ்வரன் –

உபமானம் சொல்லும் போது அவ் வருகு இட்டுச் சொல்லும் படி பகவத் விஷயத்தை அவஹாகித்த படி
அனுகூல பிரதிகூல விபாகம் இல்லை திரு ஆழிக்கு-
அனுகூலர்க்கேயாய் இருக்கும் திருத் துழாய்
(சிதா போல் -சிந்தை யும் -எரியுமே விஸ்லேஷத்திலே )

அண்ணல்
திரு ஆழி பிடிக்கும் போது பேராத படி பிடிக்கும் இச் செயலாலே
என்னை எழுதிக் கொண்டவன் –

தழற் போல் சினத்த-
அஸ்தானே பய சங்கிதனாய்க் கொண்டு அருளுகிறார் –
கத கத என்னா நிற்கும் –
(மங்களா ஸாஸன பரர் –அருளாழி புள்
அங்கு பரிவர் உண்டே என்று விஸ்லேஷத்திலும் மகிழ்கிறாள் இவள்
கத கத என்னும் அவனையும் குளிரப் பண்ணிப் புறப்படுமே இவன் )

விண்ணோர் தொழக் கடவும் –
நித்ய ஸூரிகள் தொழும் படி பெரிய திருவடியை நடத்துக்கிற –
அவர்கள் தொழுது உளராவார்கள்-
அவர்களைத் தொழுவித்துக் கொண்டு உளனாம் அவன் –

அப்புள்ளின் பின் போன –
தன் இழவு பாராதே
அத்தலைக்கு பரிவர் உண்டு என்று கொண்டாடுகிறாள் –
அவனிலும் அவனுக்கு பரிந்த புள்ளின் பின்னே தன் நெஞ்சு போனபடி –

கெண்டை ஒண் கண்ணும் துயிலும் எந்நிறம்
பண்டு பண்டு போல் ஒக்கும் மிக்க சீர்
தொண்டரிட்ட பூம் துளவின் வாசமே
வண்டு கொண்டு வந்தூதும் ஆகிலே –11-1-9-

பண்டு போலே ஒக்கும் என்னாதே பண்டு பண்டு போல் ஒக்கும் –
இப்போது விரஹ அவஸ்தை -முந்திய அவஸ்தை -சம்ச்லேஷ அவஸ்தை –
அதற்கு முந்திய அவஸ்தை பகவத் விஷய வாசனையே தெரியாமல் அந்ய பரமாய் போந்த அவஸ்தை
பண்டு காமரானவரும் இருந்த பண்டு
உண்டு உடுத்து உடம்பு புஷ்கலமாய் இருக்குமே -பகவத் வாசனை பண்ணிப் போந்தது முதலாக –
சம்யோகா விப்ரயோகாந்தா -ஷண கால சம்ச்லேஷமும் பல ஊழி கால விச்லேஷமும் –
எந்நிறம் –பண்டு பண்டு போல் ஒக்கும் -அவன் வாய் புலற்றும் நிறம் -அறப் பண்டு போலேயாம் –
கலக்கை யாகிறது பிரிவுக்கு அங்குரம் இறே –
கலந்து பிரிந்து லாப அலாபங்கள் அறியாதே- பூர்ணையாய் இருக்கிற போதை நிறம் போலே யாம் –
பாணியாது என்னை மருந்து செய்து பண்டு பண்டாக்க யுறுதிராகில்-நாச்சியார்
மிக்க சீர்த் தொண்டர் – ஷூத்திர பலன்களை விரும்பி தொண்டு செய்பவர் -தொண்டர் –
உபயாந்தரங்கள் மூலம் சிறந்த புருஷார்தத்துக்கு அடிமை செய்பவர் -சீர்த் தொண்டர் –
ஒரு பலனும் பேணாதே ஸ்வயம் பிரயோஜனமாக அடிமை செய்பவர் மிக்க சீர்த் தொண்டர் –

கெண்டை ஒண் கண்ணும் -இத்யாதி
உறங்காத கண்களும் உறங்கும்
என் நிறம் கலப்பதுக்கு முன்புத்தை நிறம் போலேயாம் –

மிக்க சீர் இத்யாதி
அநந்ய பிரயோஜனர் இட்ட அழகிய திருத் துழாயின் பரிமளத்தை வண்டு கொண்டு வந்து ஊதுமாகில்
அநந்ய பிரயோஜனர் என்பான் என் என்னில்
அத்தலைக்கு பரிவர் உண்டு என்று தான் தேறுகைக்காக-
பரிமளத்தின் வாசி அல்லாதார் இடும் அதில் காட்டில் அறிகையாலே –

(தொண்டர்-பிரயோஜனாந்தர பிறர் –
சீர் தொண்டர் -உபாயாந்தர பரர்
மிக்க சீர் தொண்டர் -அநந்ய ப்ரயோஜனர் -மங்களா ஸாஸன பரர் )

தனி நெஞ்சமே –
ஸ்வ தந்த்ரமான நெஞ்சு
வேண்டா -என்றால் மீள மாட்டாத நெஞ்சு –

ஸ்வா பதேசம் –
பிராட்டிமாரையும்
நித்ய ஸூரிகளையும்
சொல்லுகையாலே
சர்வ ஸ்மாத் பரனாய்-ஸ்ரீ வைகுண்ட நாதனாய் இருக்கிற இருப்பிலே
தமக்கு பாவ பந்தம் பிறந்தது
என்னும் இடம் சொல்லுகிறது –

———

தாத்பர்யம்

இப் பாசுரத்தில் சர்வேஸ்வரனை முன்பு ஆழ்வார் மாநசமாக அனுபவித்ததால்
திரு உள்ளம் ஸர்வேஸ்வரன் இடம் ப்ராவண்யம் ஆனதை தானே சொல்கிறாள் தோழியிடம்
ஓ தோழி நாயகனைப் பிரிந்த இந்த தசையில் அவன் சாத்திக் களைந்த குளிர்ந்த அழகிய திருத்துழாயும்
அவன் திருக்கையிலே ஆபரணமாக ஸ்ரீ ஸுதர்சன ஆழ்வாரும் -அனுகூலருக்கு ஆயுதம் இல்லை
என் மேல் தீ வீசி -என்னை மிகவும் உபத்திரியா நின்றன
இவ் வஸ்தையிலும் கூட சர்வேஸ்வரன் திருத்துழாய் அணிந்து -திருக்கையும் திருவாழியுமான
சேர்த்தி உடன் சேவை சாதிக்காமல்
நித்ய ஸூரிகள் தன்னை ஆஸ்ரயிப்பித்துக் கொண்டு -விண்ணோர் தொழக் கடவ -(இது தான் அவனுக்கு வேறே முக்கிய வேலை போல் )
தன்னிடத்தில் பரிவால் இலை அசைந்தாலும் விரோதிகளோ என்று -அஸ்தானே பயசங்கை -பண்ணி –
பயந்து சீறி அருளும் திருவடியை வாஹனமாகக் கொண்டு
நடத்தி அருளும் போது என் நெஞ்சு என்னையும் விட்டு விட்டு அந்த திருவடி பின்னே தனியாக போனதே —
(கருடவாஹனான அவன் பின்னே போனது என்னாமல் அப்புள்ளின் பின் போனதே என்பதால்
ததீய சேஷத்வம் அறிந்து சென்றமை தோற்றுமே )
அங்கு போன பின்பு நிறைந்த மயிர் முடி யுடைய நப்பின்னைப் பிராட்டியும் -ஸ்ரீ பூமிப் பிராட்டியும் பெரிய பிராட்டியாரும்
இவர்கள் ஸர்வேஸ்வரனை அனுவர்த்தித்து ஆஸ்ரிதர் குற்றங்களை பொறுப்பிக்க-
தலையெடுக்கும் ஸுலப்யம் கண்டு அங்கே நிற்குமா –
அல்லது ஸ்ரீ பூமி நீலா தேவிமார் ஸேவ்யனான அவன் மேன்மையைக் கண்டு அங்கு தரித்து நிற்க மாட்டாமல்
திரும்ப வருமோ சொல் -தோழி என்று கீழே விளித்து இங்கு சொல் என்று நிகமிக்கிறாள் –

————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம் ஆழ்வார் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Geetha Saasthram..

August 26, 2010

Geethaartha Sangraham Sloham -1.

Svadarma  gjaana vairaakya saathya bakthyeka kosara:

Naaraayana : para brahma geethaa saasthrey sameeritha :

Jeevanukku uriya  Darmankalaalum, gjaanathaalum, matra vishayankalil patrru illaatha nilai yaalum bakthi yokam kai koodukirathu..Ippadikku matttume elakaana para brahmam-sriman naarayanan-geethai yennum saasthrathaal nantraka koora pattu ullaan..

Swami  Vaathi kesari aruli seytha  Bagavath Geethai Vennbaa..

1..Kannaa ! nee paartharkku kaatharkku inithu uraiththa

thinnaar thiram arulum seer geethai -yennaaru

nanporulai yenkadkku naathaa varuluthalaar

pun porulil pokaa pulan..

2.. Maathavanum maa maathu maaranum van poothoor vaal

potha muni yun thantham pon ad kann – meetharula

uchchi mer kondey uyar geethai mey porulai

nachi mel kondu uraippan naan ..

3..Naatha narul puriyum nar geethai in padiyai

vetham vakutha viyan munivan -poothalaththu

baarathathey kaattum pathinettu oththum pakarvon

seer thalaiththa  venpaa therinthu

4..Vetha porulai visayarkku ther meethu

potha pukantra pukal maayan -geethai

porul viriththa  poothoor man pon arulaal  vantha

therul virippanan thamilaal thernthu

5.Theya thor uyya  thirumaal arul geethai

neyathor yenney niraiviththu -thooya

theru noolathey periya deebathai  nenjil

irunnoorave yetruken naan

6.suththiyaar  nenju itran thol karum gjaanathaal

athiyaathu ontrai aram thuranthor -pathiyaal

nannum paramanaa naarananey nargeethaikku

yennum porullaam isainthu..

Geethartha Sangrakam -Slokam -2

Gjaana karmaathmikey nishdey yoka lashyey susamskruthey

aathmaanu boothi siththa yarthey poorva shadkena sothithey

jeevaathma saashath kaaram/athma anubavathukku gjana karma yokankal muthal aaru athyaayankalil koora pattana..

7..Gjanam karma nalam ser nilaiyathanai

yaana mana yokaththu aaraaynthu inku -koonamara

than aar ueir unnarum thanmai inai  nal geethai

mun aaru oth thothum muyantru..

Geethaartha Sangrakam -slokam -3

Mathyamey bagavath thathva yaathaathmya avaapthi siththaye

gjaana karma  abinivarthiyo bakthi yoka : pirakeerthitha :

naduvil ulla 6 athyaayankalil  gjaanathudan koodiya karma yokam moolam undaaka valla bakthi yokam-sarvesvaranin parathvathin unmaiyana anubavam yerpaada uraikka pattathu..

8-Ulla padi iraiyai uttru yeytha mutraram ser

thellarivil vanthu thikal paththi -vella

nadaiyaadum yokathai  naathan arul geethai

idai aaru othothum yeduthu..

Geethaartha Sangrakam -Slokam 4

Pirathaana purusha vyaktha sarvevara vivesanam

karmatheer bakthir ithyaathi : poorva seshaa anthimothitha :

9..Karumam arivu anbu ivatrin kannaar thelivil

varum chit achi eraiyon maadchi -arumai ara

vennaathu antru antha yelil geethai vethaantha

pin aaru oththu othum  peyarnthu.

Geethaa Baashya Mangala Sloham- Emberumaanaar Aruliyathu..

Yath pathaam poruha thyaana vithvastha asesha kalmasha

vasthuthaam ubayatha : aham yaamuneyam namaami tham..

Geethaiyin Saara Porul..

Karumamum gjaanamum kondu yelum kaathalukku or elakku yentru

arumarai uchiyul aathariththu othum arum brahman

thiru makalodu varum thiru maal yentru thaan uraiththaan

tharumam ukantha thananjayanukku avan saarathiyey

ஸ்ரீ திவ்ய பிரபந்தத்தில் ஸ்ரீ திவ்ய ஆயுதங்கள் -ஸ்ரீ ஆண்டாள் ..

August 25, 2010

ஸ்ரீ திருப் பாவை

பாழி அம் தோள் உடை பற்ப நாபன் கையில் ஆழி போல் மின்னி வலம் புரி போல் நின்று அதிர்ந்து
தாழாதே சார்ங்கம் உதைத்த சர மழை போல் வாழ உலகினில்பெய்திடாய் -4

புள் அரையன் கோயில் வெள்ளை விளி சங்கின் பேர் அரவம் கேட்டிலையோ ? -6

செங்கற் பொடிகூறை வெண் பல் தவத்தவர் தங்கள் திரு கோயில் சங்கிடுவான் போதந்தார் …
சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக் கையன் பங்கய கண்ணனை பாடேலோர் எம்பாவாய்.. -14

வென்று பகை கெடுக்கும் நின் கையில் வேல் போற்றி -24

எல்லாம் நடுங்க முரல்வன பால் அன்ன வண்ணத்து உன் பாஞ்ச சன்னியமே போல்வன சங்கங்கள் -26

ஸ்ரீ நாச்சியார் திருமொழி

வெய்யதோர் தழல் உமிழ் சக்கரக் கை வேங்கடவற்கென்னை விதிக்கிற்றியே -1-1

ஊன் இடை ஆழி சங்குத் தமர்க் கென்று உன்னித் தெழுந்த என் தட முலைகள் -1-5

சுடர் சக்கரம் கையில் ஏந்தினாய் ! -2-8

வெள்ளி விளி சங்கு இடங்கையில் கொண்ட விமலன் எனக்கு உரு காட்டான் 5-2

அம குயிலே  ! உனக்கு என்ன மறைந்து உறைவு  ? ஆழியும் சங்கும் ஒண் தண்டும் தங்கிய
கையவனை வர கூவில் நீ சாலத் தருமம் பெறுதி 5-7

சார்ங்கம் வளைய வலிக்கும் தடக் கை சதுரன் பொருத்தம் உடையன் 5-8

சங்கோடு சக்கரத்தான் வரக் கூவுதல் 5-9

கருப் பூரம் நாறுமோ ? கமலப் பூ நாறுமோ ? திருப் பவள செவ்வாய் தான் தித்தித்திருக்குமோ  ?
மருப்பொசித்த மாதவன் தன வாய்ச் சுவையும் நாற்றமும் விருப்புற்று கேட்கின்றேன் சொல் ஆழி வெண் சங்கே 7-1

கடலில் பிறந்து கருதாது பஞ்ச சனன் உடலில் வளர்ந்து போய் ஊழியான் கைத் தலத்திடரில் குடியேறி
தீய வசுரர் நடலைப் படமுழங்கும் தோற்றத்தாய் நற்சங்கே 7-2

தடவரையின் மீதே சரற்கால சந்திரன் இடையுவாவில் வந்து எழுந்தாலே போல நீயும்
வடமதுரையார் மன்னன் வாசுதேவன் கையில் குடியேறி வீற்றிருந்தாய் கோலப் பெரும் சங்கே ! 7-3

சந்திர மண்டலம் போல் தாமோதரன் கையில் அந்தரம் ஓன்று இன்றி ஏறி அவன் செவியில்
மந்திரம் கொள்வாயே போலும் வலம் புரியே ! இந்திரனும் உன்னோடு செல்வத்துக்கு ஏலானே 7-4

உன்னோடு உடனே ஒரு கடலில் வாழ்வாரை இன்னார் இனையார் என்று எண்ணுவார் இல்லை காண்
மன்னாகி நின்ற மது சூதன் வாய் அமுதம் பன்னாளும் உண்கின்றாய் பாஞ்ச சன்னியமே ! 7-5

போய் தீர்த்த மாடாதே நின்ற புணர் மருதம் சாயத் தீர்த்தான் கைத் தலத்தே ஏறி குடி கொண்டு சேய்த்
தீர்த்தமாய் நின்ற செம் கண் மால் தன் உடைய வாய்த் தீர்த்தம் பாய்ந்தாட வல்லாய் வலம் புரியே ! 7-6

செம் கமல நாண மலர் மேல் தேன் உகரும் அன்னம் போல் செம் கண் கருமேனி வாசு தேவன் உடைய
அம் கைத்தலம் ஏறி அன்னவசம் செய்யும் சங்கரையா !உன் செல்வம் சால வழகியதே 7-7

உண்பது சொல்லில் உலகளந்தான் வாய் அமுதம் கண் படை கொள்ளல் கடல் வண்ணன் கைத்தலத்தே
பெண் படையார் உன் மேல் பெரும் பூசல் சாற்றுகின்றார் பண் பல செய்கின்றாய் பாஞ்ச சன்னியமே ! 7-8

பதினாறாம் ஆயிரவர் தேவிமார் பார்த்திருப்ப மதுவாயிற் கொண்டாற்போல் மாதவன் தன் வாயமுதம்
பொதுவாக உண்பதனை புக்கு நீ உண்டக்கால் சிதையாரோ ?உன்னோடு செல்வா பெரும் சங்கே ! 7-9

பாஞ்ச சன்னியத்தை பத்மா நாபனோடும் வாய்ந்த பெரும் சுற்றம் ஆக்கிய வண் புதுவை
ஏய்ந்த புகழ் பட்டர் பிரான் கோதை தமிழ் ஈர் ஐந்தும் ஆய்ந்து ஏத்த வல்லார் அவரும்அணுக்கரே 7-10

பூங் கொள் திரு முகத்து மடுத்தூதிய சங்கொலியும் சார்ங்கவில்  நாண்  ஒலியும் தலைப் பெய்வது எஞ்ஞான்று கொலோ ? 9-9

வேத முதல்வர் வலங்  கையில் மேல் தோன்றும் ஆழியின் வெஞ்சுடர் போல சுடாது 10-2

தாம் உகக்கும் தம் கையில் சங்கமே போலாவோ ?யாம் உகக்கும் எங்கையில் சங்கமும் ஏந்திளையீர்  ! 11-1

அம் கைத்தலத்திடை ஆழி கொண்டான் அவன் முகத்தன்றி விழி யேன் என்று 12-4

தருமம் அறியா குறும்பனை தன் கை சார்ங்கம் அதுவே போல் புருவ வட்ட அழகிய பொருத்தமிலியை கண்டீரே ? 14-6

வெளிய சங்கு ஓன்று உடையானை பீதக வாடை உடையானை அளி நன்குடைய திருமாலை ஆழியானை கண்டீரே ?
களி வண்டு எங்கும் கலந்தாற் போல் கமழ் பூங்குழல்கள் தடம் தோள் மேல் மிளிர நின்று விளையாட விருந்தாவனத்தே கண்டோமே  14-8-

—————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஆண்டாள்  திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ திவ்ய பிரபந்தத்தில் ஸ்ரீ திவ்ய ஆயுதங்கள் -ஸ்ரீ பெரியாழ்வார் ..

August 24, 2010

ஸ்ரீ திருப்  பல்லாண்டு

வடிவார் சோதி வலத்துறையும் சுடர் ஆழியும் பல்லாண்டு படை போர் புக்கு முழங்கும் அப் பாஞ்ச சன்னியமும் பல்லாண்டு -2

தீயிற் பொலிகின்ற செஞ்சுடர் ஆழி திகழ் திருச் சக்கரத்தின் கோயிற் பொறியாலே ஒற்றுண்டு நின்று குடி குடி ஆட செய்கின்றோம் -7

சார்ங்கம் என்னும் வில் ஆண்டான் தன்னை வில்லி புத்தூர் விட்டு சித்தன் விரும்பிய சொல் -12

பெரியாழ்வார்  திரு மொழி

நெய்ததலை  நேமியும் சங்கும் நிலாவிய கைத்தலங்கள் வந்து காணீரே -1-2-12

சங்கின் வலம் புரியும் சேவடி கிண்கிணியும் 1-3-4

சக்கர கையன் தடம் கண்ணால் மலர விழித்து 1-4-4

தண்டோடு சக்கரம் சார்ங்கம் ஏந்தும் தடம் கையன் 1-4-6

ஆழி கொண்டு உன்னை எறியும் ஐயுறவில்லை காண் வாழ உருதியேல் மா மதீ ! மகிந்தோடி வா 1-4-9

தடம் தாள் இணை கொண்டு சார்ங்க பாணி தளர் நடை நடவானோ 1-7-1/1-7-7

ஒரு காலில் சங்கு ஒரு காலில் சக்கரம் உள் அடி பொறித்து அமைந்த இரு காலும் கொண்டு அங்கு எழுதினால் போல் இலச்சினை பட நடந்து 1-7-6

சங்கு வில் வாள் தண்டு சக்கரம் ஏந்திய அம கைகளாலே வந்து அச்சோ அச்சோஆரத் தழுவா வந்து அச்சோ அச்சோ 1-8-2

சுக்கிரன் கண்ணை துரும்பால் கிளறிய சக்கரக் கையனே ! அச்சோ அச்சோ சங்கம் இடத்தானே ! அச்சோ அச்சோ 1-8-7

நாந்தகம் ஏந்திய நம்பி சரண் என்று  தாழ்ந்த தனஞ்சயர்காகி 1-9-4

சத்திரம் ஏந்தி தனி ஒரு மாணியாய்  உத்தர வேதியில் நின்ற ஒருவனை 1-9-6

மெச்சூது சங்கம் இடத்தான் நல்வே யூதி…..அத் தூதன் அப் பூச்சி காட்டுகின்றான் அம்மனே !அப் பூச்சி காட்டுகின்றான்  2-1-1

வல்லாள் இலங்கை மலங்க சரம் துரந்த வில்லாளனை விட்டு சித்தன் விரித்த 2-1-10

சங்கம் பிடிக்கும் தடக் கைக்கு தக்க நல அங்கம் உடையதோர் கோல் கொண்டு வா 2-6-2

சீமாலிகனவனோடு தோழமை கொள்ளவும் வல்லாய் ! சாமாறு அவனை நீ எண்ணி சக்கரத்தால் தலை கொண்டாய் ! 2-7-8

வேழம் துயர் கெட விண்ணோர் பெருமானாய் ஆழி பணி கொண்டான் 2-10-8

பற்றார் நடுங்க முன் பாஞ்ச சன்னியத்தை வாய் வைத்த போர் ஏறே ! 3-3-5

அம சுடர் ஆழி உன் கையகத்தேந்தும் அழகா ! 3-3-6

திண்ணார் வெண் சங்கு உடையாய்  ! 3-3-9

தூ வலம் புரி உடைய திருமால் தூய வாயில் குழல் ஓசை 3-6-1

பொங்கு வெண் மணல் கொண்டு சிற்றிலும் முற்றத் திழைகலுறில் சங்கு சக்கரம் தண்டு வாள் வில்லும் அல்லது இழைக்கலுராள் 3-7-3

ஆழியான் என்னும் ஆழ மோழையில் பாய்ச்சி அகப்படுத்தி 3-7-4

அண்டத் தமரர் பெருமான்  ஆழியான் 3-8-7

என் வில் வலி கொண்டு போவென்று எதிர்வந்தான் தன வில்லினோடும் தவத்தை எதிர் வாங்கி
முன் வில் வலித்து முது பெண் உயிர் உண்டான் தன வில்லின் வன்மையை பாடி பற தாசரதி தன்மையை பாடி பற 3-9-2

பொன்  ஒத்த  மான்  ஓன்று  புகுந்து  இனிது  விளையாட  நின் அன்பின் வழி நின்று சிலை பிடித்து எம்பிரான் ஏக  3-10-7

வில் இறுத்தான் மோதிரம் கண்டு ஒக்குமால் அடையாளம்  அனுமான் ! என்று உச்சி மேல் வைத்து கொண்டு உகந்தனளால் மலர் குழலாள் சீதையுமே 3-10-9

நாந்தகம் சங்கு தண்டு நாண் ஒலி சார்ங்கம் திரு சக்கரம் ஏந்து பெருமை ராமனை இருக்கும் இடம் 4-1-2

வெள்ளை விளி சங்கு வெஞ்சுடர்த் திரு சக்கரம் ஏந்து கையன் உள்ள இடம் 4-1-7

தேவகி தன சிறுவன் ஆழி கொண்டு அன்று இரவி மறைப்ப 4-1-8

எரி சிதறும் சரத்தால் இலங்கையினை தன் உடைய வரி சிலை வாயில் பெய்து வாய்க் கோட்டம்
தவிர்த்து  உகந்து அரையன் அமரும் மலை அமரரோடு கோனும் சென்று திரி சுடர் சூழும் மலை திரு மால் இரும் சோலை அதே 4-3-8

நேமி சேர் தடம் கையினான் 4-4-5

உழுவதோர் படையும் உலக்கையும் வில்லும் ஒண்  சுடர் ஆழியும் சங்கும் மழுவொடு வாளும் படைக்கலம் உடைய மால் புருடோத்தமன் 4-7-5

செரு செய்யும் நாந்தகம் என்னும் ஒரு வாளன்  மறையாளனோடாத படையாளன் விழுக்கை ஆளன் 4-9-10

சாமிடத்து என்னை குறிகொள் கண்டாய் சங்கோடு சக்கரம் ஏந்திநானே !  4-10-2

நேமியும் சங்கமும் ஏந்திநானே !  4-10-3

சழக்கு நாக்கொடு புன் கவி சொன்னேன் சங்கு சக்கரம் ஏந்து கையானே ! 5-1-2

உறகல் உறகல் உறகல் ஒண் சுடர் ஆழியே ! சங்கே ! அறவெறி நாந்தக வாளே ! அழகிய சார்ங்கமே ! தண்டே ! 
இறவு  படாமல் இருந்த எண் மரு லோக பாலீர்காள் ! பறவை அரையா ! உறகல் பள்ளி அறை குறிக்கொண்மின் 5-2-9

சக்கரமும் தடக் கைகளும் கண்களும் பீதக வாடையொடும் செக்கர் நிறத்து சிவப்பு உடையாய் ! திரு மால் இரும் சோலை எந்தாய் 5-3-7

சென்று அங்கு வாணனை ஆயிரம் தோளும்திரு சக்கரம் அதனால் தென்றித் திசை திசை வீழ செற்றாய் திரு மால் இரும் சோலை எந்தாய் 5-3-9

என்னையும் என் உடைமையையும் உன் சக்கர பொறி ஒற்றிக் கொண்டு நின் அருளே புரிந்திருந்தேன் இனி என் திருக் குறிப்பே ? 5-4-1

கொடுமை செய்யும் கூற்றமும் என் கோலாடி குறுக பெறா தடா வரைத் தோள் சக்கர பாணீ !சார்ங்க வில் சேவகனே 5-4-4

உன் உடைய விக்கிரமம் ஓன்று ஒழியாமல் எல்லாம் என் உடைய நெஞ்சகம் பால் சுவர் வழி எழுதிக் கொண்டேன்
மன் அடங்க மழு வலங்கை கொண்ட ராம நம்பீ ! என் இடை வந்து எம்பெருமான் ! இனி எங்குப் போகின்றதே ? 5-4-6-

————

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ திவ்ய பிரபந்தங்களில் ஸ்ரீ பிராட்டி சம்பந்தம்-ஸ்ரீ நம் ஆழ்வார்-

August 24, 2010

ஸ்ரீ திரு விருத்தம்

குழல் கோவலர் மடப் பாவையும் மண் மகளும் திருவும் நிழல் போல் வனர் கண்டு நிற்கும் கொல் மீளும் கொல் ? -3

வானம் இது திருமால் கோலம் சுமந்து -7

கோட்டிடை ஆடினை கூத்து அடலாயர் தம் கொம்பினுக்கே -21

மேகங்களோ ! உரையீர் திருமால் திரு மேனி ஒக்கும் யோகங்கள் எவ்வாறு பெற்றீர் ? -32

திருமால் அவன் கவி யாது கற்றேன் ? 48

மழை கண்ண நீர்  திருமால் கொடியான் என்று வார்கின்றதே 52

இவள் பரமே !பெருமான் மலையோ திரு வேங்கடம் என்று கற்கின்ற வாசகமே 60

கண்ணன் திருமால் திரு முகம் தன்னோடு காதல் செய்தேற்கு எண்ணம் புகுந்து 63

அசுரரை செற்ற மாவி அம் புள் வல்ல மாதவன் கோவிந்தன் 67

வையம் சிலம்பும்படி செய்வதே ? திருமால் இத் திரு வினையே 87

திருமால் உரு ஒக்கும் மேரு அம் மேருவில் செஞ்சுடரோன் திரு மால் திரு கைத் திரு சக்கரம் ஒக்கும்
அன்ன கண்டும் திரு மால் உருவோடு அவன் சின்னமே பிதற்றா நிர்ப்பது ஓர் திருமால் தலைக் கொண்ட
நங்கட்கு எங்கே வரும் தீ வினையே ? -88

பூவினை மேவிய தேவி மணாளனை -89

நல் வீடு செய்யும் மாதாவினை பிதுவை திருமாலை வணங்குவனே -95

நல்லார் நவில் குருகூர் நகரான் திருமால் திரு பேர் வல்லார் அடிக் கண்ணி சூடிய மாறன் விண்ணப்பம் செய்த
சொல்லார் தொடையல் இந் நூறும் வல்லார் அழுந்தார் பிறப்பாம் பொல்லா வருவினை மாய வன் சேற்று அள்ளல் பொய் நிலத்தே -100-

———

ஸ்ரீ திருவாசிரியம்

திருவோடு மருவிய இயற்கை -2

————-

ஸ்ரீ பெரிய திருவந்தாதி

பூ மேய செம் மாதை நின் மார்வில் சேர்வித்து பார் இடந்த அம்மா ! நின் பாதத்தருகு -7

திருமாற்கு  யாமார் ? வணக்கமார்  ? -10

கலந்து நலியும் கடும் துயரை நெஞ்சே ! மலங்க வடித்து மதிப்பான் விலங்கல் போல் தொல் மாலை
கேசவனை நாரணனை மாதவனை சொல்மாலை எப்பொழுதும் சூட்டு -65

திருமால் சீர் கடலை வுள் பொதிந்த சிந்தனையேன் தன்னை ஆர்க்கு ஆடலாம் செவ்வே அடர்த்து ? 69

முதல்வா ! நிகர் இலகு கார் வுருவா ! நின் அகத்த தன்றே   புகர் இலகு தாமரையின் பூ -7

இப்போதும் இன்னும் இனி சிறிது நின்றாலும் எப்போதும் ஈதே சொல் என் நெஞ்சே !
எப்போதும் கை கழலா நேமியான் நம் மேல் வினை கடிவான் மொய் கழலே ஏத்த முயல் -87

———————

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-