ஸ்ரீ திருப் பல்லாண்டு
வடிவார் சோதி வலத்துறையும் சுடர் ஆழியும் பல்லாண்டு படை போர் புக்கு முழங்கும் அப் பாஞ்ச சன்னியமும் பல்லாண்டு -2
தீயிற் பொலிகின்ற செஞ்சுடர் ஆழி திகழ் திருச் சக்கரத்தின் கோயிற் பொறியாலே ஒற்றுண்டு நின்று குடி குடி ஆட செய்கின்றோம் -7
சார்ங்கம் என்னும் வில் ஆண்டான் தன்னை வில்லி புத்தூர் விட்டு சித்தன் விரும்பிய சொல் -12
பெரியாழ்வார் திரு மொழி
நெய்ததலை நேமியும் சங்கும் நிலாவிய கைத்தலங்கள் வந்து காணீரே -1-2-12
சங்கின் வலம் புரியும் சேவடி கிண்கிணியும் 1-3-4
சக்கர கையன் தடம் கண்ணால் மலர விழித்து 1-4-4
தண்டோடு சக்கரம் சார்ங்கம் ஏந்தும் தடம் கையன் 1-4-6
ஆழி கொண்டு உன்னை எறியும் ஐயுறவில்லை காண் வாழ உருதியேல் மா மதீ ! மகிந்தோடி வா 1-4-9
தடம் தாள் இணை கொண்டு சார்ங்க பாணி தளர் நடை நடவானோ 1-7-1/1-7-7
ஒரு காலில் சங்கு ஒரு காலில் சக்கரம் உள் அடி பொறித்து அமைந்த இரு காலும் கொண்டு அங்கு எழுதினால் போல் இலச்சினை பட நடந்து 1-7-6
சங்கு வில் வாள் தண்டு சக்கரம் ஏந்திய அம கைகளாலே வந்து அச்சோ அச்சோஆரத் தழுவா வந்து அச்சோ அச்சோ 1-8-2
சுக்கிரன் கண்ணை துரும்பால் கிளறிய சக்கரக் கையனே ! அச்சோ அச்சோ சங்கம் இடத்தானே ! அச்சோ அச்சோ 1-8-7
நாந்தகம் ஏந்திய நம்பி சரண் என்று தாழ்ந்த தனஞ்சயர்காகி 1-9-4
சத்திரம் ஏந்தி தனி ஒரு மாணியாய் உத்தர வேதியில் நின்ற ஒருவனை 1-9-6
மெச்சூது சங்கம் இடத்தான் நல்வே யூதி…..அத் தூதன் அப் பூச்சி காட்டுகின்றான் அம்மனே !அப் பூச்சி காட்டுகின்றான் 2-1-1
வல்லாள் இலங்கை மலங்க சரம் துரந்த வில்லாளனை விட்டு சித்தன் விரித்த 2-1-10
சங்கம் பிடிக்கும் தடக் கைக்கு தக்க நல அங்கம் உடையதோர் கோல் கொண்டு வா 2-6-2
சீமாலிகனவனோடு தோழமை கொள்ளவும் வல்லாய் ! சாமாறு அவனை நீ எண்ணி சக்கரத்தால் தலை கொண்டாய் ! 2-7-8
வேழம் துயர் கெட விண்ணோர் பெருமானாய் ஆழி பணி கொண்டான் 2-10-8
பற்றார் நடுங்க முன் பாஞ்ச சன்னியத்தை வாய் வைத்த போர் ஏறே ! 3-3-5
அம சுடர் ஆழி உன் கையகத்தேந்தும் அழகா ! 3-3-6
திண்ணார் வெண் சங்கு உடையாய் ! 3-3-9
தூ வலம் புரி உடைய திருமால் தூய வாயில் குழல் ஓசை 3-6-1
பொங்கு வெண் மணல் கொண்டு சிற்றிலும் முற்றத் திழைகலுறில் சங்கு சக்கரம் தண்டு வாள் வில்லும் அல்லது இழைக்கலுராள் 3-7-3
ஆழியான் என்னும் ஆழ மோழையில் பாய்ச்சி அகப்படுத்தி 3-7-4
அண்டத் தமரர் பெருமான் ஆழியான் 3-8-7
என் வில் வலி கொண்டு போவென்று எதிர்வந்தான் தன வில்லினோடும் தவத்தை எதிர் வாங்கி
முன் வில் வலித்து முது பெண் உயிர் உண்டான் தன வில்லின் வன்மையை பாடி பற தாசரதி தன்மையை பாடி பற 3-9-2
பொன் ஒத்த மான் ஓன்று புகுந்து இனிது விளையாட நின் அன்பின் வழி நின்று சிலை பிடித்து எம்பிரான் ஏக 3-10-7
வில் இறுத்தான் மோதிரம் கண்டு ஒக்குமால் அடையாளம் அனுமான் ! என்று உச்சி மேல் வைத்து கொண்டு உகந்தனளால் மலர் குழலாள் சீதையுமே 3-10-9
நாந்தகம் சங்கு தண்டு நாண் ஒலி சார்ங்கம் திரு சக்கரம் ஏந்து பெருமை ராமனை இருக்கும் இடம் 4-1-2
வெள்ளை விளி சங்கு வெஞ்சுடர்த் திரு சக்கரம் ஏந்து கையன் உள்ள இடம் 4-1-7
தேவகி தன சிறுவன் ஆழி கொண்டு அன்று இரவி மறைப்ப 4-1-8
எரி சிதறும் சரத்தால் இலங்கையினை தன் உடைய வரி சிலை வாயில் பெய்து வாய்க் கோட்டம்
தவிர்த்து உகந்து அரையன் அமரும் மலை அமரரோடு கோனும் சென்று திரி சுடர் சூழும் மலை திரு மால் இரும் சோலை அதே 4-3-8
நேமி சேர் தடம் கையினான் 4-4-5
உழுவதோர் படையும் உலக்கையும் வில்லும் ஒண் சுடர் ஆழியும் சங்கும் மழுவொடு வாளும் படைக்கலம் உடைய மால் புருடோத்தமன் 4-7-5
செரு செய்யும் நாந்தகம் என்னும் ஒரு வாளன் மறையாளனோடாத படையாளன் விழுக்கை ஆளன் 4-9-10
சாமிடத்து என்னை குறிகொள் கண்டாய் சங்கோடு சக்கரம் ஏந்திநானே ! 4-10-2
நேமியும் சங்கமும் ஏந்திநானே ! 4-10-3
சழக்கு நாக்கொடு புன் கவி சொன்னேன் சங்கு சக்கரம் ஏந்து கையானே ! 5-1-2
உறகல் உறகல் உறகல் ஒண் சுடர் ஆழியே ! சங்கே ! அறவெறி நாந்தக வாளே ! அழகிய சார்ங்கமே ! தண்டே !
இறவு படாமல் இருந்த எண் மரு லோக பாலீர்காள் ! பறவை அரையா ! உறகல் பள்ளி அறை குறிக்கொண்மின் 5-2-9
சக்கரமும் தடக் கைகளும் கண்களும் பீதக வாடையொடும் செக்கர் நிறத்து சிவப்பு உடையாய் ! திரு மால் இரும் சோலை எந்தாய் 5-3-7
சென்று அங்கு வாணனை ஆயிரம் தோளும்திரு சக்கரம் அதனால் தென்றித் திசை திசை வீழ செற்றாய் திரு மால் இரும் சோலை எந்தாய் 5-3-9
என்னையும் என் உடைமையையும் உன் சக்கர பொறி ஒற்றிக் கொண்டு நின் அருளே புரிந்திருந்தேன் இனி என் திருக் குறிப்பே ? 5-4-1
கொடுமை செய்யும் கூற்றமும் என் கோலாடி குறுக பெறா தடா வரைத் தோள் சக்கர பாணீ !சார்ங்க வில் சேவகனே 5-4-4
உன் உடைய விக்கிரமம் ஓன்று ஒழியாமல் எல்லாம் என் உடைய நெஞ்சகம் பால் சுவர் வழி எழுதிக் கொண்டேன்
மன் அடங்க மழு வலங்கை கொண்ட ராம நம்பீ ! என் இடை வந்து எம்பெருமான் ! இனி எங்குப் போகின்றதே ? 5-4-6-
————
ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply