ஸ்ரீ திரு விருத்தம் -4..

(தன் நிகர் அற்ற அத்விதீயமான நெஞ்சு
ஒரே மனஸ்ஸூ -ஒன்றே ஓன்று என்றுமாம்
முன் -அவரது திருவடி -அவனுக்கே சேஷம் -கவர்ந்து சென்றார் –
இனி அவனது குளிர்ந்த -வியர்வை கமழும் திருத்துழாய்க்கு கவர நம்மிடம் நெஞ்சம் இல்லையே
மூன்றாவது மாருதம் -தனியாக வராமல் -துழாய் வாசனையைக் கொண்டு வீச
நேர் சம்பந்தம் உள்ள துழாயுக்கே இல்லையே
நீ குறுக்கே வந்தாயே -கருடன் துழாய் நான் -எங்கள் நடுவே
பூதனா சம்ஹாரம் பண்ணி அருளிய கண்ணன் திருமுடியில் சூடும் திருத்துழாய் -பனி வாசனை கவர்ந்து வந்தாயே –
கவர்ந்து போக ஒன்றும் இல்லையே
உனக்கும் எனக்கும் -உனக்கும் அவனுக்கும் -நேர் தொடர்பு இல்லையே
சஜாதீயர் -ஆவி பிராணன் -மாருதம் -நீ நலிய வரலாமோ
கருடன் துழாய் விஜாதீயர் -நலிவது போல் நீயும் நலிய வேண்டுமோ )

——-

அவதாரிகை
இமையோர் தலைவா -என்னும்படியே
நித்ய விபூதியைக் காட்டிக் கொடுக்கையாலே
அங்குள்ள பதார்த்தங்கள் ஸ்மாரகமாய் நலிகிற படியைச் சொல்லுகிறது –

தனி நெஞ்சம் முன்னவர் புள்ளே கவர்ந்தது தண்ணம் துழாய்க்கு
இனி நெஞ்சம் இங்குக் கவர்வது யாமிலம் நீ நடுவே
முனி வஞ்சப் பேய்ச்சி முலை சுவைத்தான் முடி சூடு துழாய்ப்
பனி நஞ்ச மாருதமே எம்மதாவி பனிப்பியல்வே —-4-

பாசுரம் -4-தனி நெஞ்சம் முன் அவர் -தலைவனைப் பிரிந்த தலைவி வாடைக்கு ஆற்றாது வருந்தி கூறல் -ஓடும் புள்ளேறி -1-8-

பதவுரை

தனி நெஞ்சம்–(என்னோடு) உறவற்று நீங்கிய (என்) மனம் முழுவதையும்
முன்–முன்னமே
அவர் புள்ளே–அப்பெருமானுடைய கருடப் பறவையே
கவர்ந்தது–(பிறர்க்கு மிச்சமில்லாதபடி) கவர்ந்து கொண்டு போயிற்று.
(ஆதலால்,)
தண் அம் துழாய்க்கு–(அப்பெருமானுடைய) குளிர்ந்த அழகிய திருக் குழாய்க்கு
கவர்வது–கவர்ந்து கொண்டு போவதற்கு உரியதான
நெஞ்சம்–வேறொரு நெஞ்சை
இனி இங்கு யாம் இலம்–இனி இவ்விடத்தில் யாம் உடையோ மல்லோர்,
(அப்படியிருக்க.)
முனி–கோவிக்குத் தன்மையுள்ள
வஞ்சம் பேய்ச்சி–வஞ்சனையை யுடைய பேய் மகளான பூதனையினுடைய
முலை–(விஷந்தடவின) முலையை
சுவைத்தான்–(பசையற) உருசி பார்த்து உண்ட கண்ண பிரானுடைய
முடிசூடும் துழாய்–திருமுடியில் சூடப்பட்ட திருத் துழாயினது
பனி நஞ்சம் மருதமே–குளிச்சியை யுடைய விஷம் போன்ற காற்றே!
நீ நடுவே–நீ இடையிலே (புகுந்து)
எம்மது ஆவி பனிப்பு–(ஏற்கனவே நோவு பட்டிருக்கிற) எம்முடைய உயிரை மேலும் நடுங்கச் செய்வது
இயல்பே–(உனக்குத் தக்க) இயற்கையோ? (தகாது.)

——

அப்பிள்ளை உரை

தனி நெஞ்சம் முன்னவர் புள்ளே கவர்ந்தது
விலக்ஷணமான நெஞ்சை முன் அவர் புள்ளே கவர்ந்தது
முன்பு வேறே சிலருக்கு சேஷியாத படி -முழுவதுமாக -பிரித்துக் கொண்டான்

தண்ணம் துழாய்க் கினி நெஞ்சம் இங்குக் கவர்வது யாமிலம்
அவனோடு ஸ்பர்சம் உண்டான திருத்துழாய்க்கு கவர்வதற்கு நெஞ்சு இங்கே இல்லையே

நீ நடுவே
பாத்ய பாதக தொடர்பு இல்லாத நீ
சம்பந்த சத்ருச சம்பந்தம் துழாயுக்கும் திருவடிக்கு போல் காற்றுக்கு இல்லையே
நேர் அடித் தொடர்பு இல்லையே
ததீய சம்பந்த ஏற்றம் எனக்கே என்று காற்று வந்து
பண்டே நோவு பட்டு இருக்கிற எங்கள் பிராணனை நோவு படுத்தாமல் போ

முனி வஞ்சப் பேய்ச்சி முலை சுவைத்தான் முடி சூடு துழாய்ப் பனி நஞ்ச மாருதமே
முனிவை யுடைய பூதனைக்கு பண்பு முன்பு
இங்கு முனிந்து சீறிச் சுவைத்து அவளை முடித்த கண்ணன் திருமுடியில் சூட்டப்பட்ட
குளிர்ச்சி யுடைய பாதகமான திருத்துழாய் தடாவி
ததீய சம்பந்தம்

எம்மதாவி பனிப்பியல்வே —
பாண்டே நோவு பட்டு இருக்கிற ஆழ்வார் -போல்வார்
முன்பே கவரப்பட்ட -மேலும் திருத் துழாயால் நலிவு படுத்தப்பட்ட எம்மை நீயும் நலிய வேண்டுமோ
இது உனக்குத் தக்கதோ -இயல்பு இல்லையே

முனி வஞ்ச –
பூதனை முலையை நஞ்சைக் கலந்து வந்தது போல்
இங்கு திருத்துழாய் உடைய பரிமளம் கலந்த மாருதம்

ஸ்வாபதேசம்
துக்கப் பட்ட மனஸ்ஸுக்கு சர்வம் அஸஹ்யம் எத்தையும் தாங்காதே –
பகவத் விஸ்லேஷத்தாலே சர்வமும் அஸஹ்யமான படியை அருளிச் செய்கிறார் –

——

வியாக்யானம் –

தனி நெஞ்சம் –
பாத்யத்தின் அளவன்றிக்கே பாதகம் இருக்கிற படி –

(இங்கு மூவர் பாதகர் அன்றோ –
ஒவ்வொருவரும் பலிஷ்டம் திருவடி திருத் துழாய் காற்று
நெஞ்சு தனி ஒன்றே -ஸ்தூலம் அன்றோ )

முன்னவர் புள்ளே கவர்ந்தது-
திருவடி மேலே இருக்கிற இருப்பிலே
தோளின் மாலையோடு அணைக்கக் காணும் ஆசைப் படுகிறது –
அவ்வளவும் கிட்டுவதற்கு முன்பே
ஒரு திருவடி வழி பறித்துக் கொண்ட படி

(சாடு -திருவடி -பாதம் -ஸூசகம் கொடுக்கும் இயல்பான உள்ள திருவடி பறித்துப் போவதே )

அவர் புள் –
அங்குத்தைக்கு அசாதாராணம் என்று -தான் ஈடுபட்ட படி

(கோபத்தால் மட்டும் அல்ல -அபகரித்ததும் அவனுக்கு அசாதாரணம்
திருவல்ல வாழ் கோனாரை அடியேன் போல் -அங்கு அநந்யார்ஹம் சொல்ல ஏவகாரம் இல்லை –
இங்கு அவன் புள்ளே
உறங்கா வல்லி தாசர் பொன்னாச்சியார் –காது தோடு -பாகவதர்கள் அபகரித்த வ்ருத்தாந்தம் )

புள்ளே –
சஜாதீயருக்கும் வையாது ஒழிந்த படி
(திருத் துழாய்க்கும் வைக்காத படி )

கவர்ந்தது
தனக்கும் அரை வயிறாய் இருந்த படி

முன்
திருத் துழாய்க்கு முன்னே திருவடி முற்பட்ட படி –

தண்ணம் துழாய்க்கு
குளிர்ந்த திருத் துழாய் க்கு

இனி நெஞ்சம்-
மரம் போலே திமிர்த்து இருந்தாலும் ஆவது உண்டோ
ஓரடி முற்பட பெற்றது இல்லை
ஒப்பூணாக உண்ணலாயிற்று
உங்கள் அபேஷிதம் இல்லை

(ஸாயுஜ்யம் -ஸோ ஸ்னுதே -அங்கு குணம் அனுபவம் சேர்ந்து –
அது போல் இங்கு இல்லையே )

இங்குக் –
விளக்கு ஏற்றிக் காட்டுகிறாள்

கவர்வது யாமிலம் –
திருவடி பாடே போம் இத்தனை
பாவியேன் பல நெஞ்சு படைக்கப் பெற்றிலேன்
தண்ணம் துழாய்க்கு கவர்வதான நெஞ்சுக்கு யாம் இனி இங்கே உடையோம் அல்லோம்

நீ நடுவே –
திருத் துழாய் ஆழ்வார் -மரம் போலே திமிர்த்து இருந்தார் என்று பார்த்து
(திருத்துழாய் ஆழ்வார் ஒன்றும் கிடைக்காமல் மரம் போல் நிற்க )
அவ்வளவிலே
கால் கடுகி வந்து
(கால் காற்று வேகமாக காலால் ஓடி என்றும் சாடு )
அசாதாரணர் பட்டினி விடா நிற்க -உனக்கு என் -என்கிறாள் –

அங்கு சம்பந்தம் உண்டாதல்
இங்கு விஷயம் உண்டாதல்
அன்றியே
நடுவே –

முனி வஞ்சப் பேய்ச்சி-
முனியையும்
க்ரித்ரிமத்தையும் உடைய பூதனை –

முலை சுவைத்தான் –
தன் நாவில் பசை கொடுத்துச் சுவைத்தான்
பெற்ற தாய் போல் வந்த பேய்ச்சி பெரு முலை யூடு உயிரை வற்ற
வாங்கு உண்ட வாயான்(வதரி வணங்குதுமே கலியன் )

(சுவைத்தான் -சுவை மிக்கு இருந்தது போல் அனுபவித்தான் )

முடி சூடு துழாய்ப் –
அத் தலையில் உள்ளத்தைக் கொண்டு வந்து
வாயு பிரேரிக்கிற படி
(அத்தலையில் -அவன் இடத்தில் -அவன் திருமுடியில் சாடு )
சஹ்யத்திலே நீரை ஆகாசத்திலே முகந்து நின்று இறைக்குமா போலே

திருத் துழாயை முடித்து வந்து போலே காணும்
பூதனையை முடித்தது –

திரு அபிஷேகத்திலே திருத் துழாய் என்று அறிந்த படி என் தான்
பனி நஞ்ச மாருதமே-
குளிர்ந்த காற்று அகவாய் நஞ்சாய் இருக்கிற படி

எம்மதாவி-
சென்று அற்று இருக்கிறபடி
பாதகங்களின் கையிலே அகப்பட்டு அவ சேஷித்த பிராணன் –
(நெஞ்சு கிடைக்காததால் மீதம் உள்ள பிராணனை திருத்துழாயும் மருதமும் நலிந்த படி )

பனிப்பியல்வே –
நடுங்குகை ஸ்வ பாவமே
விசஜாதியர் செய்யுமத்தை
சஜாதீயமான நீ செய்யக் கடவையோ-

தாத்பர்யம்

இப் பாசுரத்தில் சர்வேஸ்வரனை ஆழ்வார் முன்பு மாநசமாக அனுபவித்ததால்
அவனோடே சம்பந்தித்த பதார்த்தங்கள் இப்போது ஆழ்வாருக்கு ஸ்ம்ருதி விஷயமாக
அலாபத்தால் பாதகமான படியை
நாயகனைப் பிரிந்த நாயகியை வாடைக் காற்றுக்கு ஆற்றாதவளாய் சொல்லும் பாசுரத்தால்
அருளிச் செய்கிறார்

விஷத்தை கொண்டு வீசுவது போல் எனக்கு அத்யந்த பாதகமாய் குளிர்ந்து வீசுகிற ஓ மாருதமே
சர்வேஸ்வரன் பெரிய திருவடியை நடத்திக்கொண்டு வர சேவித்து
எனக்கு இருந்த ஒரு மனஸும் முன்பே போனது
இனி மேல் பட கொண்டு அவன் சாத்திக் களைந்த திருத்துழாய்க்கு கொண்டு போகைக்கு
வேறே என்னிடம் வேறே மனஸ் ஸூ இல்லை
இப்படி மனசைப் பறி கொடுத்து அவஸ்தை படும் சமயத்தில் நீயும் வந்து
தன்னை முடிக்க நினைத்து சீறிக்கொண்டு கபடத்தால் -தாய் வேஷம் கொண்டு வந்த பூதனையை-
நமக்கு உபகரிக்கைக்காக முடித்த சர்வேஸ்வரன் திருமுடியில் சாத்தின பரிமளம் கொண்டு
நலிய வந்த உனக்கு இது தர்மம் அன்று காண்
தத்துவம் அன்று தகவும் அன்று
ஆகையால் நீ என்னை பாதியாது ஒழிய வேணும் -என்கிறாள் –

———————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம் ஆழ்வார் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading