அவதாரிகை –
கீழில் பாட்டில்-பிரிவின் பிரதம அவதி யாகையாலே-
(முதல் நிலையும் முதிர்ந்த நிலையும் இரண்டு பாட்டுக்கள் )
தன்னுடைய தசையை (வெட்கத்தை) ஸ்த்ரீத்வத்தாலே ஒழித்தாள்
அங்கன் அன்றிக்கே
தோழிக்கு சொல்லித் தரிக்க வேண்டும்படிக்கு ஈடான தசா விபாகத்தாலே
அவன் பின்னே போன நெஞ்சானது வருமோ -அங்கனே போமோ -என்று
தோழியைக் கேட்கிறாள் –
குழற் கோவலர் மடப் பாவையும் மண் மகளும் திருவும்
நிழற் போல்வனர் கண்டு நிற்கும் கொல் மீளும் கொல் தண்ணம் துழாய்
அழற்போல் அடும் சக்கரத் தண்ணல் விண்ணோர் தொழக் கடவும்
தழற் போல் சினத்த அப்புள்ளின் பின் போன தனி நெஞ்சமே—3-
பாசுரம் -3-குழல் கோவலர் மடப் பாவையும் -பிரிவாற்றாத தலைவி நெஞ்சு அழிந்து உரைத்தல் -வெள்ளைச் சுரி சங்கு -7-3-
பதவுரை
தண் அம் துழாய்–குளிர்ந்த அழகிய திருத் துழாயை யுடையவனும்
அழல் போல் அடும் சக்ரத்து–(அஸுர ராக்ஷஸர்களை) நெருப்புப் போல் அழிக்கின்ற திருவாழியை யுடையனுமான
அண்ணல்–எம்பெருமான்
விண்ணோர் தொழ கடவும்–மேலுலகத்தவர் வணங்கும்படி ஏறி நடத்துகிற
தழல்போல் சினத்த–பிள்ளின் பின் போன
(பகைவர் நிறத்தில்) நெருப்புப் போன்ற கடுங்கோபத்தையுடைய அக்கருடாழ்வானது பின்னே சென்ன
தனி நெஞ்சம்–(எனது) தனிப்பட்ட மனமானது
குழல்கோவலர்–புல்லாங்குழலை யுடையரான இடையரது
மடம் பாவையும்–குணவதியான மகளாகிய நப்பின்னைப் பிராட்டியும்
மண் மகளும்–பூமிப் பிராட்டியும்
திருவும்–பெரிய பிராட்டியும்
நிழல் போல்வனர்–(எம்பெருமானுக்கு) நிழல் போலேயிருக்க அவர்களை
கண்டு நிற்கொல்-பார்த்துக் கொண்டு (அவ்விடத்தை விடாதே) நிற்குமோ?
மீளும் கொல்–திரும்பி வருமோ?
(சம்பந்த ஸத்ருச பதார்த்தங்கள் -பாதகம் ஆகும் விஸ்லேஷத்தில்
ராமம் மே அநு கதா த்ருஷ்ட்டி -சக்ரவர்த்தி )
(முதல் இரண்டும் பகவத் சேஷத்வம் -பாகவத சேஷத்வம் இதில் -அப்புள்ளின் பின்னே அன்றோ நெஞ்சு போயிற்று
இருவருக்கும் நிழல் -பெருமானுக்கு நிழல் போல் -நமக்கும் நிழல் –
மானஸ அனுபவம் கிட்டியது -பாஹ்ய அனுபவம் கிட்டுமா திருமலை நம்பி அருளிச் செய்ததாக
பிள்ளை திரு நறையூர் அரையர் அருளிச் செய்வதாக -நம்பிள்ளை ஈடு -இதுக்கு சங்கதி
பிராகிருத பிராகிருத சம்பந்தம் போனது -சாஷாத்காரம் பெற்றது -சாத்மிக்குமா- நிலைக்குமா-
நம்மால் அனுபவிக்க முடியுமா -என்றுமாம் -இப்படி மூன்று சங்கதிகள் இப்பாட்டுக்கு)
—
அப்பிள்ளை உரை
தோழி இத் தலைவியை அறிவிக்க
அவளைக் குறித்து அவன் பக்கலிலே சென்ற நெஞ்சு
மீண்டு வருமோ அங்கேயே நிற்குமோ என்கிறாள் தலைவி
குழற் கோவலர் மடப் பாவையும்
குழலை–அழகிய மயிர் முடியை யுடைய-கோவலருக்கு உடைய மடப்பத்தை யுடைய –
ஆத்ம குண சம்பன்னையான
எம்பெருமானுக்கு அதி ஸ்லாக்த்யையான நப்பின்னைப் பிராட்டியும்
குழலூதும் கோவலர் என்றுமாம்
மண் மகளும்
ஷமா தத்துவமான பூமிப் பிராட்டியும்
திருவும்
எம்பெருமானுக்கு சம்பத்தான பெரிய பிராட்டியார்
நிழற் போல்வனர் கண்டு
அவனுக்கும் ஒதுங்கும் படி சாயை- ஆஸ்வாச கரம்
ஒருவருக்கு ஒருவர் நிழல்
ஸ்ரீ தேவிக்கு அடங்கி -சாயாம் இவ (பட்டர்)-பவ்யமானவர் -பரதந்த்ரர்
இரண்டு அர்த்தங்களும் உண்டே
நிற்கும் கொல் மீளும் கொல்
அவ்விடத்தே விடாதே நிற்குமோ அல்லது மீண்டும் வருமோ
தண்ணம் துழாய் அழற்போல் அடும் சக்கரத் தண்ணல்
திருத்துழாய் வெப்பம் போல் ஆழியும் சுடும் இவளுக்கு
திருத்துழாய் அனுகூலருக்கு விஸ்லேஷத்தில் சுடுவது போல் சுடும் திருவாழி
விண்ணோர் தொழக் கடவும்
கையையும் திருவாழியையும் கண்டு அயர்வறும் அமரர்கள் தொழும் படிக்கு நடத்தும்
தழற் போல் சினத்த அப் புள்ளின் பின் போன தனி நெஞ்சமே—
நெருப்புப் போலே கோபம் -வெஞ்சினத்த -காய்ச்சின
அவனை இங்கே நின்றும் கொண்டு போன
மெய்ப்பரிவை யுடைய திருவடி -ஜகத் ரக்ஷணம் -ஹேதுவாக அன்றோ கூட்டிச் செல்கிறான் –
க்ரூரரான அக்ரூர பின்னே போனவர் போல்
ஸ்வ தந்திரமான நெஞ்சு
கீழே ஸஹாயம் இல்லாத நெஞ்சு பார்த்தோம் –
தென் திருப்பேரை யில் சேர்வன் -நெஞ்சினாரும் அங்கே ஒழிந்தார் -அங்கும் புள்ளின் போனதே
வெள்ளைச் சுரிசங்கொடு ஆழி ஏந்தித் தாமரைக் கண்ணன் என் நெஞ்சினூடே
புள்ளைக் கடாகின்ற ஆற்றைக் காணீர்! என் சொல்லிச் சொல்லுகேன் அன்னைமீர்காள்!
வெள்ளச் சுகமவன் வீற்றிருந்த வேத ஒலியும் விழாவொலியும்
பிள்ளைக் குழா விளையாட்டொலியும் அறாத்’திருப் பேரெயிற் சேர்வன் நானே- .–7-3-1-
———
ஸ்வாபதேசம்
எம்பெருமானுடைய ஐஸ்வர்யத்தைத் தரித்து நின்று அனுபவிக்கப் போகுமோ
பாஹ்ய சம்ஸ்லேஷம் கிடைக்குமோ கிடைக்காதோ என்றுமாம்
—
வியாக்யானம் –
குழற் கோவலர்-
குழலை உடைய கோவலர் -என்றபடி-
பிராமணர்க்கு சந்த்யா வந்தாதிகள் போலே இவர்களுக்கு இது ஜாதி பிரயுக்தம் –
அன்றிக்கே
குழலை உடையவளுமாய்
மடப் பாவையும் –
அவர்களுக்கு பவ்யையுமாய் இருந்துள்ள நப்பின்னை பிராட்டி –
மண் மகளும் –
ஸ்ரீ பூமிப் பிராட்டி
திருவும் –
பெரிய பிராட்டியார் –
1-ஆஸ்ரிதர் குற்றத்தை பொறுக்கும் பிராட்டி –
2-குற்றம் காண்பான் என் பொறுப்பான் என்-என்று இருக்கும் ஸ்ரீ பூமிப் பிராட்டி
3-நப்பின்னை பிராட்டி ஷமை தான் ஒரு வடிவாய் இருக்கும் –
1-பெரிய பிராட்டியார் இவனுக்கு சம்பத்தாய் இருக்கும் –
2-ஸ்ரீ பூமிப் பிராட்டி -அது விளையும் தரை
3-நப்பின்னை பிராட்டி அதனை அனுபவிக்கும் போக்தா –
நிழற் போல்வனர்-
1-இவர்கள் மூவரும் அவனுக்கு நிழல் போலே இருப்பவர்கள் –
2-ஒருவருக்கு ஒருவர் நிழல் போலே இருப்பவர்கள் -என்றுமாம்
3-ஆஸ்ரயித்தாருக்கு நிழல் போலே இருப்பவர்கள் -என்றுமாம் –
கண்டு நிற்கும் கொல் மீளும் கொல்-
1-இப் படிகளைக் கண்டு
இதுவே பற்றாசாக தரித்து நிற்குமோ
2-இம் மேன்மையைக் கண்டு
கடலிலே துரும்பு போலே எழ வீசுமோ –
(ஈசன் சம்பத் என்ற எண்ணத்தால் அடங்குக உள்ளே
திருவுக்கும் திருவாகிய செல்வன் -பரத்வம் கண்டு மீளுமோ )
தண்ணம் துழாய் அழற் போல் அடும் சக்கரத் தண்ணல் –
குளிர்ந்து
பரிமளத்தை உடைத்தான
திருத் துழாய் அழற் போலே முடியா நின்றுள்ள
திரு ஆழியை உடைய சர்வேஸ்வரன் –
உபமானம் சொல்லும் போது அவ் வருகு இட்டுச் சொல்லும் படி பகவத் விஷயத்தை அவஹாகித்த படி
அனுகூல பிரதிகூல விபாகம் இல்லை திரு ஆழிக்கு-
அனுகூலர்க்கேயாய் இருக்கும் திருத் துழாய்
(சிதா போல் -சிந்தை யும் -எரியுமே விஸ்லேஷத்திலே )
அண்ணல்
திரு ஆழி பிடிக்கும் போது பேராத படி பிடிக்கும் இச் செயலாலே
என்னை எழுதிக் கொண்டவன் –
தழற் போல் சினத்த-
அஸ்தானே பய சங்கிதனாய்க் கொண்டு அருளுகிறார் –
கத கத என்னா நிற்கும் –
(மங்களா ஸாஸன பரர் –அருளாழி புள்
அங்கு பரிவர் உண்டே என்று விஸ்லேஷத்திலும் மகிழ்கிறாள் இவள்
கத கத என்னும் அவனையும் குளிரப் பண்ணிப் புறப்படுமே இவன் )
விண்ணோர் தொழக் கடவும் –
நித்ய ஸூரிகள் தொழும் படி பெரிய திருவடியை நடத்துக்கிற –
அவர்கள் தொழுது உளராவார்கள்-
அவர்களைத் தொழுவித்துக் கொண்டு உளனாம் அவன் –
அப்புள்ளின் பின் போன –
தன் இழவு பாராதே
அத்தலைக்கு பரிவர் உண்டு என்று கொண்டாடுகிறாள் –
அவனிலும் அவனுக்கு பரிந்த புள்ளின் பின்னே தன் நெஞ்சு போனபடி –
கெண்டை ஒண் கண்ணும் துயிலும் எந்நிறம்
பண்டு பண்டு போல் ஒக்கும் மிக்க சீர்
தொண்டரிட்ட பூம் துளவின் வாசமே
வண்டு கொண்டு வந்தூதும் ஆகிலே –11-1-9-
பண்டு போலே ஒக்கும் என்னாதே பண்டு பண்டு போல் ஒக்கும் –
இப்போது விரஹ அவஸ்தை -முந்திய அவஸ்தை -சம்ச்லேஷ அவஸ்தை –
அதற்கு முந்திய அவஸ்தை பகவத் விஷய வாசனையே தெரியாமல் அந்ய பரமாய் போந்த அவஸ்தை
பண்டு காமரானவரும் இருந்த பண்டு
உண்டு உடுத்து உடம்பு புஷ்கலமாய் இருக்குமே -பகவத் வாசனை பண்ணிப் போந்தது முதலாக –
சம்யோகா விப்ரயோகாந்தா -ஷண கால சம்ச்லேஷமும் பல ஊழி கால விச்லேஷமும் –
எந்நிறம் –பண்டு பண்டு போல் ஒக்கும் -அவன் வாய் புலற்றும் நிறம் -அறப் பண்டு போலேயாம் –
கலக்கை யாகிறது பிரிவுக்கு அங்குரம் இறே –
கலந்து பிரிந்து லாப அலாபங்கள் அறியாதே- பூர்ணையாய் இருக்கிற போதை நிறம் போலே யாம் –
பாணியாது என்னை மருந்து செய்து பண்டு பண்டாக்க யுறுதிராகில்-நாச்சியார்
மிக்க சீர்த் தொண்டர் – ஷூத்திர பலன்களை விரும்பி தொண்டு செய்பவர் -தொண்டர் –
உபயாந்தரங்கள் மூலம் சிறந்த புருஷார்தத்துக்கு அடிமை செய்பவர் -சீர்த் தொண்டர் –
ஒரு பலனும் பேணாதே ஸ்வயம் பிரயோஜனமாக அடிமை செய்பவர் மிக்க சீர்த் தொண்டர் –
கெண்டை ஒண் கண்ணும் -இத்யாதி
உறங்காத கண்களும் உறங்கும்
என் நிறம் கலப்பதுக்கு முன்புத்தை நிறம் போலேயாம் –
மிக்க சீர் இத்யாதி
அநந்ய பிரயோஜனர் இட்ட அழகிய திருத் துழாயின் பரிமளத்தை வண்டு கொண்டு வந்து ஊதுமாகில்
அநந்ய பிரயோஜனர் என்பான் என் என்னில்
அத்தலைக்கு பரிவர் உண்டு என்று தான் தேறுகைக்காக-
பரிமளத்தின் வாசி அல்லாதார் இடும் அதில் காட்டில் அறிகையாலே –
(தொண்டர்-பிரயோஜனாந்தர பிறர் –
சீர் தொண்டர் -உபாயாந்தர பரர்
மிக்க சீர் தொண்டர் -அநந்ய ப்ரயோஜனர் -மங்களா ஸாஸன பரர் )
தனி நெஞ்சமே –
ஸ்வ தந்த்ரமான நெஞ்சு
வேண்டா -என்றால் மீள மாட்டாத நெஞ்சு –
ஸ்வா பதேசம் –
பிராட்டிமாரையும்
நித்ய ஸூரிகளையும்
சொல்லுகையாலே
சர்வ ஸ்மாத் பரனாய்-ஸ்ரீ வைகுண்ட நாதனாய் இருக்கிற இருப்பிலே
தமக்கு பாவ பந்தம் பிறந்தது
என்னும் இடம் சொல்லுகிறது –
———
தாத்பர்யம்
இப் பாசுரத்தில் சர்வேஸ்வரனை முன்பு ஆழ்வார் மாநசமாக அனுபவித்ததால்
திரு உள்ளம் ஸர்வேஸ்வரன் இடம் ப்ராவண்யம் ஆனதை தானே சொல்கிறாள் தோழியிடம்
ஓ தோழி நாயகனைப் பிரிந்த இந்த தசையில் அவன் சாத்திக் களைந்த குளிர்ந்த அழகிய திருத்துழாயும்
அவன் திருக்கையிலே ஆபரணமாக ஸ்ரீ ஸுதர்சன ஆழ்வாரும் -அனுகூலருக்கு ஆயுதம் இல்லை
என் மேல் தீ வீசி -என்னை மிகவும் உபத்திரியா நின்றன
இவ் வஸ்தையிலும் கூட சர்வேஸ்வரன் திருத்துழாய் அணிந்து -திருக்கையும் திருவாழியுமான
சேர்த்தி உடன் சேவை சாதிக்காமல்
நித்ய ஸூரிகள் தன்னை ஆஸ்ரயிப்பித்துக் கொண்டு -விண்ணோர் தொழக் கடவ -(இது தான் அவனுக்கு வேறே முக்கிய வேலை போல் )
தன்னிடத்தில் பரிவால் இலை அசைந்தாலும் விரோதிகளோ என்று -அஸ்தானே பயசங்கை -பண்ணி –
பயந்து சீறி அருளும் திருவடியை வாஹனமாகக் கொண்டு
நடத்தி அருளும் போது என் நெஞ்சு என்னையும் விட்டு விட்டு அந்த திருவடி பின்னே தனியாக போனதே —
(கருடவாஹனான அவன் பின்னே போனது என்னாமல் அப்புள்ளின் பின் போனதே என்பதால்
ததீய சேஷத்வம் அறிந்து சென்றமை தோற்றுமே )
அங்கு போன பின்பு நிறைந்த மயிர் முடி யுடைய நப்பின்னைப் பிராட்டியும் -ஸ்ரீ பூமிப் பிராட்டியும் பெரிய பிராட்டியாரும்
இவர்கள் ஸர்வேஸ்வரனை அனுவர்த்தித்து ஆஸ்ரிதர் குற்றங்களை பொறுப்பிக்க-
தலையெடுக்கும் ஸுலப்யம் கண்டு அங்கே நிற்குமா –
அல்லது ஸ்ரீ பூமி நீலா தேவிமார் ஸேவ்யனான அவன் மேன்மையைக் கண்டு அங்கு தரித்து நிற்க மாட்டாமல்
திரும்ப வருமோ சொல் -தோழி என்று கீழே விளித்து இங்கு சொல் என்று நிகமிக்கிறாள் –
————————————————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம் ஆழ்வார் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .
Leave a Reply