Archive for the ‘ubanishads’ Category

ஸ்ரீ ப்ருஹதாரண்ய உபநிஷத்- அத்தியாயம்-3–பகுதி -1- அஸ்வல பிரமாணம்/ஆர்த்தபாக பிரமாணம்/புஜ்ய பிரமாணம்/உஷஸ்த பிரமாணம்/கஹோல பிரமாணம் /கார்கி பிரமாணம் /அந்தர்யாமி பிரமாணம் —

March 23, 2021

இந்த அத்யாயம் ஒன்பது பகுதிகளைக் கொண்டது. முதல் மூன்று பகுதிகள் உபாஸனையைப்பற்றி விவரிப்பதால்
அதாவது கர்மகாண்ட்த்தில் உள்ள ஞானத்தை சோதிக்கின்ற மாதிரி இருக்கும்.
எனவே அதன் சாராம்சத்தை மட்டும் தெரிந்து கொண்டால் போதும். இதனால் அடையும் பலன்களாவது:
தானம் என்ற குணத்தில்தான் சித்தஸுத்தியை அடைய முடியும்
வித்யா ப்ராப்தி சாதனம்தான் தானம். எதையுமே இலவசமாக பெறக் கூடாது. அறிவை தானம்மூலம்தான் பெற வேண்டும்.
வித்வத் சம்யோகஹ பிரக்ஞா விருத்தி – கற்றறிந்தவர்கள், ஞானிகள் இவர்களுடன் சேர்ந்திருப்பது அறிவு வளர்ச்சிக்கு காரணமாக இருக்கும்.
நம்மையே நாம் அங்கீகரித்தல் – நம் அறிவை நாமே அங்கீகரித்தல்

———-
பகுதி-1 : அஸ்வல பிரமாணம்
ஸ்லோகம்-1
விதேஹ நாட்டு அரசரும், தேக அபிமானவற்றவருமான ஜனகர் மிகப் பெரிய யாகத்தை மேற்கொண்டார்.
இந்த யாகத்தில் குரு, பஞ்சால தேசத்தைச் சேர்ந்த பிராமணர்கள் அழைக்கப்பட்டு வந்திருந்தார்கள்.
இவர்கள் அனைவரும் சாஸ்திரங்களை கற்று அறிந்த வேத விற்பன்னர்கள். ஜனகருடைய மனதில் ஒரு ஆசை எழுந்தது.
இங்கு கூடியுள்ள இந்த பிராமணர்களுக்குள் யார் வேதாந்தத்தை நன்குணர்ந்தவர்கள் என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆசை எழுந்தது.
இந்த யாகத்திற்கு ஆயிரம் பசுக்களை கொண்டு வரச் செய்தார், ஒவ்வொரு பசுவின் கொம்பில் ஐந்து தங்க நாணயங்களை கட்டி வைத்திருந்தார்

ஸ்லோகம்-2
பிராமணர்களே உங்களுக்குள் யார் சாஸ்திரங்களை அதிகம் கற்றிருக்கிறீர்களோ, பிரம்ம ஞானத்தில் நிஷ்டையடைந்தவர்களோ
அவர்கள் இந்த பசுக்களை அழைத்து செல்லலாம். யாரும் முன்வரவில்லை.
பிறகு யாக்ஞவல்கியர் என்பவர் தன் சிஷ்யர்களைப் பார்த்து, “இந்த பசுக்களை ஓட்டிச் செல்லுங்கள்” என்று சத்தமாக கூறினார்.
அவர்கள் பசுக்களை அழைத்து செல்ல முற்பட்ட போது அங்குள்ள பிராமணர்களுக்கு கோபம் வந்து விட்டது.
அவர்கள் யாக்ஞவல்கியரை பார்த்து, நாங்கள் இருக்கும்போது எப்படி நீங்கள்தான் பிரம்மஞான நிஷ்டையை அடைந்தவர்(பிரம்மிஷ்டன்)
என்று நினைக்கிறீர்கள் என்று வினவினர். அப்பொழுது ஜனகரின் அரசவையில் அமர்ந்திருந்த அரசவை புரோகிதர் யாக்ஞவல்கியரிடம் வந்து,
“நீதான் எங்களுக்குள் பிரமிஷ்டனாக இருக்கிறாயா?” என்று கேட்டார். அவர் அங்கு கூடியிருந்த பிராமணர்களை பார்த்து,
“இங்கு அமர்ந்திருக்கும் எல்லா பிரமிஷ்டர்களுக்கு என் நமஸ்காரங்கள்,
எனக்கு பசுக்கள் தேவை அதனால்தான் நான் எடுத்துச் செல்கிறேன்.” என்று தெரிவித்தார்.
அப்பொழுது அஸ்வலர் என்பவர் யாக்ஞவல்கியரிடம் கேள்வியைக் கேட்க துணிந்தார்.

ஸ்லோகம் 3 லிருந்து 6 வரை நான்கு கேள்விகள் கேட்கப்படுகிறது.
கேள்வி: 1
யாகத்தை மேற்கொள்ளும் சாதாரண மனிதர்கள் மரணத்தின் பிடியிலிருந்து எப்படி தப்பித்துக் கொள்வது?
ஸ்வாபாவிக கர்மம் – ராக-துவேஷத்தினால் தூண்டப்பட்டு செய்யப்படும் செயல்கள். நம்மிடமிருந்து வெளிப்படும் செயல்கள் இரண்டு விதமாக இருக்கும்.
1. சாஸ்திரம் அனுமதிக்கும் கர்மங்கள் (சாஸ்திரீய கர்மம்)
2. ஸ்வாபாவிக கர்மம் – நம் விருப்பு-வெறுப்புக்களின் தூண்டுதலால் செய்யப்படுவது
ஒவ்வொருவரும் ராக-துவேஷத்தின் தூண்டுதலால் செய்கின்ற கர்மத்தின் பிடியில்தான் இருக்கிறோம்.

பதில்: நம் அபிமானம் சமஷ்டியோடு கலந்து விட்டால் இதிலிருந்து விடுபடுவோம்.
எல்லோருடைய நலமும் என் நலம் என்று நினைப்பதுதான். வியஷ்டியை சமஷ்டியோடு ஐக்கியப்படுத்துதல்.
யாகத்தின்போது ரிக் வேதத்தை சொல்வோம், ஓதுவோர் ஹோதா என்று அழைக்கப்படுவார்.
அதியக்ஞம் – யாகத்தில் உள்ள வியஷ்டி தத்துவம்
அதியாத்மம்- நம்மிடத்தில் உள்ள (எஜமானனிடத்தில் உள்ள ) வியஷ்டி வாக்கு.
அதிதெய்வம் – அக்னி தேவதை – சமஷ்டி
இந்த வியஷ்டிகளை அதி தெய்வமன அக்னி தேவதையான சமஷ்டியுடன் ஐக்கியப்படுத்தி தியானம் செய்ய வேண்டும்.
இப்படிச் செய்யும்போது நம்முடைய வாக் என்னும் வியஷ்டியை அக்னி சமஷ்டியுடன் ஒன்று சேர்ந்து நம்மை ம்ருத்யுவின் பிடியிலிருந்து விடுவித்து விடும்.

ஸ்லோகம்-3
கேள்வி-2
கால பரிசேதம் ( காலத்தினால் கட்டுண்டு இருக்கிறோம்) இதிலிருந்து எப்படி விடுபடுவது?
· சூரியனால் உருவாக்கப்படுகின்ற கால பரிசேதம்
· சந்திரனால் உருவாக்கப்படுகின்ற கால பரிசேதம்
காலத்தினால் நமக்கு ஏற்படுகின்ற விளைவு கண்டு மனம் பாதிக்கப்படுகின்றது. காலத்தினால் வரும் பாதிப்பிலிருந்து எப்படி விடுபடுவது?

ஸ்லோகம்-4
அதியக்ஞம் – யஜுர் வேதத்தை உச்சரிக்கின்றவர், ஓதுபவர்
அதியாத்மம் – கண்
அதிதெய்வம் – சூரியன் – ஆதித்ய தேவனிடத்தில் ஐக்கியபடுத்துதல்

ஸ்லோகம்-5
அதியக்ஞம் – உத்கர்த்த, சாம வேதத்தை உச்சரிக்கின்றவர்
அதியாத்மம் – பிராணன்
அதிதெய்வம் – வாயு தேவனிடத்தில் ஐக்கியபடுத்துதல்

ஸ்லோகம்-6
சுவர்க்க லோகத்திற்கு செல்வதற்கு உபாஸனை ஏதாவது உண்டா?
அதியக்ஞம் – அதர்வன வேதத்தை உச்சரிக்கின்றவர், பிரம்மா
அதியாத்மம் – மனம்
இதையிரண்டையும் சந்திரன் தேவதையிடம் ஐக்கியப்படுத்துதல்

ஸ்லோகம்-7
சம்பத் உபாஸனை என்று ஒரு உபாஸனை இருக்கிறது அதை தியானிப்பதால் நிகிருஷ்ட கர்மணி உக்ருஷ்ட கர்ம தரிசனம்
அதாவது எளிமையான சிறிய கர்மத்தில் பெரிய கர்மத்தின் பலனை அடைதல்.
உதாரணமாக சாதரண நீரை கங்கை நீராக நினைத்து குளிப்பது, சாதாரண கல்லில் மேலான தெய்வத்தை பார்த்தல்.
அதுபோல சாதாரண கர்மத்தை செய்து பெரிய கர்மத்தால் அடையும் பலனை அடைதல்.

யாகங்கள் செய்யும் போது மூன்று இடங்களில் ரிக் வேதம் ஓதப்படும்.
1. ஆஹுதிகளை போடுவதற்கு முன் – புரோனுவாக்யா
2. ஆஹுதிகளை போடும்போது யாஜ்யா
3. ஆஹுதிகளை போட்ட பிறட்கு சஷ்யா
இந்த மூன்று கர்மத்தில் மூன்று விதமான உலகத்தை (பூர், புவ, ஸ்வ) தியானித்தல்.

மூன்று விதமான ஆஹுதிகள் (oblations) போடும்போது, மூன்று நிலைகளாக நெருப்பானது தோன்றும்
1. சுடர்விட்டு எரிவது 2. சப்தத்தை எழுப்புவது 3. கீழே சென்று விடும். இந்த மூன்று உலகத்தை தியானிக்க வேண்டும்.

சாம வேதத்தை ஓதுபவர் – மேலே கூறியபடி தியானிக்க வேண்டும்.
பிரம்மா என்கின்ற ரித்விக் – யாகம் சரியாக நடக்கின்றதா என்று மேற்பார்வையிடுபவர்.
இவர் மனதை அனந்தமான உலகமாக தியானித்தல். நம் மனதில் வரும் எண்ணங்களெல்லாம் ஒரு உலகமாக தியானித்தல்.

—————

பகுதி-2 : ஆர்த்தபாக பிரமாணம்
கேள்வி-1
மனிதனை பிடித்து வைத்திருப்பது எது?
இந்த பிரபஞ்சத்தில் எட்டு கிரகங்கள் (நம்மை பிடித்து வைத்திருப்பது), எட்டு அதிகிரகங்கள் (கிரகத்தையே பிடித்து வைத்திருப்பது) உள்ளன.
இங்கு கிரகங்கள் என்று கூறுவது நம்முடைய இந்திரியங்களை குறிக்கிறது. அதிகிரகங்கள் என்பது இந்திரியங்களின் விஷயங்களை குறிக்கிறது.
நாம் இந்திரியங்களின் வசத்தில் இருக்கிறோம். எனவே இவைகளை கிரகங்கள் என்று கூறுகிறோம்.
இந்திரியங்கள் அதனுடைய விஷயங்களின் வசத்தில் இருக்கின்றது எனவே இதை அதிகிரகம் என்று கூறுகிறோம்.
உதாரணமாக சுவையுணரும் நாக்குக்கு நாம் அடிமையாக இருக்கிறோம். ஆனால் நாக்கோ சுவைதரும் பொருட்களின் வசத்தில் இருக்கிறது.
எனவேதான் நாம் இந்த அதிகிரகத்தால் சுவையான உணவு பண்டத்தை அதிகமாக உட்கொள்கிறோம்.
வெளி சூழ்நிலைகள்தான் இந்திரியங்களை தம் வசப்படுத்துகிறது. எனவே நாம் இந்த சூழ்நிலைகளை விட்டுவிலகி ஓடி விட வேண்டும்.
வெளிசூழ்நிலைகளை இந்திரியங்களை பாதிக்காமல் இருக்க நல்ல சூழ்நிலைகளை நோக்கு சென்றுவிட வேண்டும்.

கிரகம் அதிகிரகம்
பிராணன்(சுவாசிக்கின்ற பிராணன்) வாசனை
வாக் (பேசுகின்ற சக்தி) நாமம், சொற்கள், விஷயங்கள், செய்திகள்
நாக்கு (சுவையுணரும் சக்தி) ரஸஹ – சுவை
கண்கள் (பார்க்கும் சக்தி) ரூபம், உருவம்
காது (கேட்கும் சக்தி) சப்தம் (இனிமையான் சப்தங்கள்)
மனது ஆசை, எண்ணங்கள், சங்கல்பத்தின் வசத்தி இருத்தல்
கைகள் கர்ம, செயல்
தோல் தொட்டு உணரும், இன்பத்தை கொடுக்கும் விஷயங்கள்

கேள்வி-2
ம்ருத்யுவின் சுபாவம் அனைத்தையும் சாப்பிடுவது, அழிப்பது ஆனால் அந்த ம்ருத்யுவை சாப்பிடும் ம்ருத்யு எது? ம்ருத்யுவுடைய ம்ருத்யு எது?
அக்னி என்ற ம்ருத்யுவிற்கு தண்ணீர்தான் ம்ருத்யு அதுபோல ஆத்ம ஞானம்தான் ம்ருத்யுவிற்கு ம்ருத்யுவாக இருக்கிறது.
மரணம் என்பது ஸ்தூல சரீரத்தை அழித்து விடுகிறது. சூட்சும சரீரத்தை பாதிக்கிறது.
நான் என்ற அபிமானம் ஆத்மாவின் வைக்கும்போது மரணம் நம்மை நெருங்குவதில்லை. மரண பயம் ஏற்படுவதில்லை.
ஆத்மஞானம் என்ற நீரைக் கொண்டு சம்சாரம் என்ற தீயை அணைத்து விடலாம்.

கேள்வி-3
ஞானி மரணமடைந்தால் அவனது சூட்சும சரீரங்களின் நிலை என்ன?
ஞானி மரணத்திற்கு பிறட்கு அவனது இந்திரிய சக்திகளெல்லாம் அந்தந்த தேவதைகளோடு கலந்து விடுகின்றது.
சூட்சும சரீரமாக எங்கும் செல்வதில்லை அது அந்தந்த சமஷ்டியுடன் ஐக்கியமாகி விடுகிறது எந்த பயணமும் மேற்கொள்வதில்லை.
அவரது ஸ்தூல உடம்பு உப்பி அழிந்து விடும். அக்ஞானிகளின் ஸ்தூல உடம்பு இவ்வாறுதான் அழியும்.

கேள்வி-4
ஞானி இறந்ததற்கு பிறகு ஏதாவது மீதி இருக்கிறதா?
அவரது பெயர்தான் விட்டுவிட்டு போகமுடியும்.

கேள்வி-5
அக்ஞானிகளுடைய மரணத்திற்கு பிறகு நிலை என்ன?
இந்திரியங்கள் எல்லாம் சூட்சும சரீரத்தில் ஒடுங்கி பயணம் மேற்கொள்கிறது.
அவரவர்களுடைய கர்ம வினைப்படி அடுத்த பிறவி நிர்ணயிக்கப்படுகிறது.

————–

பகுதி-3: புஜ்ய பிரமாணம்
பாரிக்‌ஷதர்கள் (நல்ல கர்மத்தை செய்தவர்கள்) இறந்த பிறகு எங்கு செல்கிறார்கள். இவர்கள் பிரம்ம லோகத்திற்குத்தான் செல்வார்கள்,
ஹிரண்ய கர்ப்ப லோகத்திற்கு செல்வார்கள்.

சங்கரர் பாஷ்ய விசாரம் (கர்மபல விசாரம்)
சம்சாரத்தில் அடையும் அதிகபட்ச பலன் பிரம்மலோகத்தை அடைவதுதான். ஞானிகளுக்கு கர்மம் எதுவும் இல்லாததால்
அவர்கள் மீண்டும் பிறப்பதில்லை. ஆனால் அக்ஞானிகள் பாவகர்மங்களை செய்திருந்தால் கீழான பிறவியைதான் அடைவார்கள்,
அதிலிருந்துகொண்டு துயரத்தைத் தான் அனுபவிப்பார்கள். புண்ணிய கர்மங்களான தமம், யாகம், தவம் போன்ற
நற்காரியங்களைச் செய்வதனால் வைராக்யத்தை அடையலாம்.

தர்மத்தால் சுகமும், ஞானமும் கிடைக்கின்றன. புண்ணியத்தின் வழியேதான் மோக்‌ஷத்தை அடைய முடியும்.
புண்ணியத்தால் மட்டும் மோக்‌ஷத்தை அடைய முடியாது அதிக பட்சமாக ஹிரண்யகர்ப்பலோகத்தைத்தான் அடைய முடியும்.

பிரம்மலக்‌ஷணம் – அவ்யாக்ருதம் (வெளித்தோற்றத்திற்கு வராத), அகாரிய, நித்தியமான பிரம்மத்தை கர்மத்தின் மூலமாக அடைய முடியாது.
வெளித்தோற்றதிற்கு வந்த ஒன்றில் கர்ம்ம் என்பதை செய்ய முடியும். விதைக்குள் உள்ள மரத்தை ஒன்றும் செய்ய முடியாது.
விதையிலிருந்து வெளியே வந்த பிறகுதான் அதனுடல் விவகாரம் செய்ய முடியும்.
கர்மமானது ஆத்ம விசாரத்திற்கு தகுதிபடுத்தும், தகுதியடைந்தவுடன் கர்மத்தை விட்டுவிட வேண்டும்.
பிறகு அறிவையடைந்து ஞானமடைய வேண்டும் அதற்குப்பிறகு அதில் நிலை பெற்று நிற்க வேண்டும்.

கேள்வி: புண்ணிய கர்மத்தின் மூலமாக மோட்சத்தையடையலாம்.
பதில்: பந்தம் என்றால் என்ன? அதற்குக் காரணம் என்ன?
பந்தத்திற்கு காரணம் அறியாமைதான். ஒருவேளை அறியாமையில்லையென்றால் என்னவாகும்.
பூரணமான பிரம்மத்தை உருவாக்க வேண்டிய நிலை ஏற்படும் பிறகு அதை அடைய வேண்டும்.
இது சாத்தியமில்லை எனவே அவித்யா ஒன்றுதான் காரணமாக இருக்க முடியும் இதை நீக்க வித்யாவை தவிர வேறெந்த சாதனமும் இல்லை.
உண்மையில் புருஷார்த்தம் என்பது அவித்யா நீங்கினால் மோட்சம். கயிற்றில் தோன்றிய பாம்பு அவித்யா நீங்கி விட்டால் மறைந்து விடும்,
அதனால் ஏற்பட்ட பயமும் போய் விடும். கர்ம்ம அறியாமையை நீக்கும் சாதனம் கிடையாது.

கர்மத்தால் அடையும் பலன்களில் மோட்சம் என்பது கிடையாது.
1. கர்மத்தால் உற்பத்தி – ஒரு பொருளை உருவாக்கல்லம், பிரம்மன் உருவாக்க-படுவதில்லை எனவே இந்த முறையில் பிரம்மத்தை அடைய முடியாது.
2. ஆப்தி – அடைதல், ஒரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு செல்வது (காலமும், தேசமும் ).
காலத்தால் ஒன்றை அடைவது, இப்படி பிரம்மத்தை அடைய வேண்டிய விஷயமல்ல. இந்த பிரம்மன் ஆத்மாவாக இருப்பதால்
அதை அடைய வேண்டிய அவசியமில்லை. எனவே இந்த முறையிலும் ஆத்மாவை அடைய முடியாது.
3. விகாரியம் – மாற்றம் – கர்மத்தால் சில மாற்றங்களை கொண்டு வருதல்; பிரம்மத்தை ஒரு மாற்றத்தின் மூலம் அடையலாம்
என்ற வழியிலும் அதை அடைய முடியாது. பிரம்மத்திற்கு அவயவங்கள் கிடையாது, அதனால என்றும் மாறாதது(நிர்விகாரம்).
எனவே இந்தப் பாதையிலும் பிரம்மத்தை அடைய முடியாது
4. தூய்மைபடுத்துதல் (ஸம்ஸ்காரியம்) – ஒரு பொருளை தூய்மைப்படுத்துதல் என்பது தீயகுணங்களை நீக்கி
நற்குணங்களை வளர்த்துக் கொள்ளுதல். பிரம்மன் என்றும் சுத்தமாக இருப்பதால், எந்த குணங்களும் இல்லாத்தால் அஸங்கம்.
இந்த வகையினாலும் பிரம்மத்தை அடைய முடியாது.
இதனால் அறிவது கர்மத்தின் மூலம் மோட்சத்தை அடைய முடியாது. அறியாமையை நீக்குவதன் மூலம்தான் அதை அடைய முடியும்.

கேள்வி : கர்மத்தினுடன் உபாஸனையை சேர்த்துக்கொண்டு நிஷ்காம்யமாக செய்தால் இந்த நான்கு பலன்களை தவிர்த்து
வேறு பலன் வரலாம் அல்லவா, அது ஏன் மோட்சமாக இருக்கக் கூடாது
பதில்: உன்னுடைய இந்த கருத்துக்கு எந்தவிதமான பிரமானமும் இல்லை. இது உன் சொந்த கற்பனை.
இது பிரமான அபாவாத். இதற்கு எந்த விதமான ஆதாரமும் இல்லை.

பிரத்யக்‌ஷ பிரமாணம்: கர்மம் செய்தால் அதனுடைய பலன் சாஸ்திரத்தின் மூலம்தான் நாம் அறிகிறோம். நம் அனுபவத்தின் மூலம் இதை நிரூபிக்க முடியாது.
அனுமானம் பிரத்யக்‌ஷத்தால் நிரூபிக்க முடியாததை அனுமானத்தின் மூலமும் நிரூபிக்க முடியாது.
உன்னுடைய உதாரணத்தின் மூலம் தெரிவது என்னவென்றால் எதை செய்கிறாயோ அதற்குள்ளேயேதான் பலன் வரமுடியும்,
அதை விட்டு விட்டு வேறொன்று பலனாக வர முடியாது.

கேள்வி : நித்திய கர்மத்திற்கும், நிஷ்காம கர்மத்திற்கும் பலனாக மோட்சத்தைத்தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.
அர்த்தாபத்தி பிரமாணத்தை உபயோகிக்கலாம். விஷ்வஜித் நியாயமான பலன் சொல்லப்படாத கர்மத்திற்கு
சுவர்க்க லோகம் பிராப்தி என்று எடுத்துக் கொள்வதை போல!!
அர்த்தாபத்தி பிரமாணம் – நித்திய கர்மங்களை பலன் சொல்லி யிருந்தாலும், சொல்லவில்லை யென்றாலும் காம்யமாக
செய்யக்கூடாது என்று நிபந்தனை இருக்கிறது. இதை உயிரோடு இருக்கும் வரை எல்லோராலும் செய்ய வேண்டும்.
எனவே மோட்சம் என்பதை பலனாக இதற்கு சொல்லலாம்
பதில் இப்படி பலனை கற்பனை செய்வதால் விஷ்வஜித் நியாயத்தை உன்னை அறியாமல் நீ பயன்படுத்தி இருக்கிறாய்
கேள்வி மோட்சத்தை பலனாக சொல்லவில்லை, மோட்சம் தன்னிடத்திலே இருப்பதுதானே
பதில் முதலில் கர்மத்தின் பலன் என்று சொன்னாய், இப்பொழுது பலன் இல்லை என்று முரண்பட்டு பேசுகிறாய்.
கேள்வி மோட்சத்தை ஞானத்தின் பலன் என்று சொல்வது போல நானும் அதேமாதி சொல்கிறேன்.
பதில் ஞானத்தின் பலன் அறியாமை நீங்குதல் என்றுதான் பொருள். வெளிச்சம் இருளை நீக்கி பொருட்களை
காட்டிக் கொடுப்பதை போல அறியாமை நீங்கி விட்டால் அதனால் அடைந்த விளைவுகளும் நீங்கி விடும்.
இதைத்தான் ஞானத்தின் பலன் மோட்சம் ஆனால் கர்மத்தின் பலன் அக்ஞான நிவிருத்தி அல்ல, அறியாமையை நீக்க முடியாது.
கேள்வி கர்மத்திற்கு இரண்டு பலன்கள் உண்டு அவைகள் திருஷ்ட பலன், அதிருஷ்ட பலன்.
இதில் அதிருஷ்ட பலன் ஏன் அறியாமையை நீக்கி மோட்சத்தை கொடுக்க முடியாது?
பதில் கர்மங்களில் நிலவற்றிற்கு திருஷ்ட பலனோடு முடிந்து விடுகிறது. சில இடங்களில் அதிருஷ்ட பலனை
கற்பனை செய்தாக வேண்டும், அந்த இடங்களில் திருஷ்ட பலனை சொல்ல முடியாததாக இருக்கும்.
மோட்சம் என்பது திருஷ்ட பலன், ஜீவன் முக்தி. எனவே அதிருஷ்ட ப்லன் என்று கற்பனை செய்தது தவறு.
நித்திய கர்மங்கள், நிஷ்காம கர்மங்கள் சித்தஸுத்தியைத்தான் தரும்.
இது நம்மை ஆத்ம விசாரத்திற்கு தகுதிப்படுத்துகிறது அதன் மூலம் ஞானத்தை அடைந்து மோட்சத்தை அடையலாம்.

———–

பகுதி-4: உஷஸ்த பிரமாணம்
உஷஸ்தர் என்பவர் யாக்ஞவல்கியரிடம் கேளியை கேட்க ஆரம்பித்தார்.
கேள்வி: அனைத்துக்குள்ளும் இருக்கின்ற ஆத்மா அபரோக்‌ஷமாகவும், நேரிடையாகவும், சாக்ஷாத்காரமாகவும்,
மிகத் தெளிவாகவும் உள்ள ஸ்வரூபத்தை விளக்குங்கள்
பொருட்கள் விஷயத்தில்:
பரோக்ஷ ஞானம் தூரத்தில் இருக்கின்ற பொருளை குறிப்பது
அபரோக்ஷ ஞானம் அருகில் இருக்கின்ற பொருளை குறிப்பது
பிரம்மன் விஷயத்தில்:
பரோக்ஷ ஞானம் பிரம்மன் ஒன்று இருக்கிறது என்ற அறிவு
அபரோக்ஷ ஞானம் பிரம்மன் நம்மிட்த்திலே இருக்கிறது என்ற அறிவு அது ஸ்வயம் பிரகாசமாகவும், தானாக விளங்கி கொண்டிருப்பதாகவும் இருக்கிறது
எனவே ஒரு பொருள் தன் இருத்தலையும், பிரகாசிப்பதையும் பிரமாணத்தை சார்ந்திருக்கிறது.
பிரம்மன் மட்டும்தான் பிரமாணம் இல்லாமல் விளங்கிக் கொண்டிருக்கின்றது (ஸ்வயம் பிரகாசம்) நான் அறிவு ஸ்வரூபமாக இருக்கிறேன்
என்பதற்கு எந்த பிரமாணமும் வேண்டாம்.
சாக்ஷாத் அபரோக்‌ஷம்: இது இந்திரியத்திற்கு விஷயமாக வராத ஒரு வஸ்து அன்பதை உறுதியிட்டு கூற இந்தச் சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.
பிரத்யக்‌ஷ பிரமாணத்தால் தெரிந்துக் கொண்டிருக்கும் பொருளை அபரோக்‌ஷம் என்றும் கூறுவர்.
இந்த அர்த்தத்தில் பிரம்மத்தை எடுத்துக்கொள்ளக் கூடாது என்பதற்காகத்தான் சாக்ஷாத் அபரோக்‌ஷம் என்ற சொல் குறிப்பிடப்பட்டுள்ளது.
பதில் एषः आत्मा सर्वन्त्रः இந்த ஆத்மாதான் எல்லா உயிர்களிடத்திலும் உள்ளது, உன்னிடத்திலும் உள்ளது
கேள்வி ஸர்வாந்தர ஆத்மாவை மேலும் விளக்குங்கள்?
பதில் ஆத்மாவின் துணைக் கொண்டு ஜடமான இந்திரியங்கள் அறிவு பெற்று செயல்படுகின்றது.
ஆத்மா செயல்படாதது, அறிவு பூர்வமானது ஜடமான ஒன்று எதனால் சேதனத்தைப் போல செயல்படுகிறதோ
அதுதான் ஆத்மா என்று புரிந்து கொள்ள வேண்டும்.
எந்த ஒன்றினால் ஜடமான பிராணன் சேதனமாக செயல்படுகிறதோ அந்த ஒன்றுதான் ஆத்மா என்று புரிந்து கொள்ள வேண்டும்.
ஆத்மாவின் இருப்பால் அனாத்மாக்கள் அறிவை அடைந்து செயல்படுகிறது.
यः प्राणेन प्राणितः – எந்த ஒரு ஆத்மா இருப்பதனால் சூட்சும சரீரத்தின் துணைக் கொண்டு பிராணன் செயல்படுகிறதோ
அந்த ஒன்று தான் எல்லோருடைய சரீரத்திற்குள்ளும் இருக்கிறது.
இதேமாதிர் அபானன், வியான்ன், உதானன் இவைகளின் செயல் புரியம் தன்மையை புரிந்து கொள்ள வேண்டும்.
உன்னிட்த்தில் இருக்கும் இப்படிபட்ட ஆத்மாதான் எல்லோரிடத்தின்னுள்ளும் இருக்கிறது

ஸ்லோகம்-2
கேள்வி இது பசு, இது குதிரை என்று எப்படி நேரிடையாக குறிப்பிடுகிறோமோ அப்படி ஆத்மாவைப் பற்றி தெளிவாக சொல்ல வேண்டும்.
பதில் द्रुष्दे द्र्ष्टारम – த்ருஷ்டா – மனதில் தோன்றும் எண்ணங்கள், மனோவிருத்தி
த்ருஷ்டே – மனதில் தோன்றும் எண்ணத்தை
த்ரஷ்டா – சாட்சி, த்ரஷ்டாரம் – சாட்சியை
மனதில் எழும் எண்ணத்தைப் பார்க்கும் சாட்சியை பார்க்க முடியாது. உலகை பார்க்கும் எண்ணத்தைப் பார்க்கும் சாட்சியை பார்க்க முடியாது.
சப்தத்தை கேட்கும் எண்ணத்தை கேட்கும் சாட்சியை பார்க்க முடியாது. சுவைக்கின்ற சுவையை உணரும் சாட்சியை பார்க்க முடியாது.

விசாரம் (த்ருஷ்டி, த்ரஷ்டா)
த்ருஷ்டி
1. கரணம்: மனதிலுள்ள எண்ணம். ஒரு அறிவை அடைய வேண்டுமென்றால் அதை கொடுப்பதற்கு கரணம்(கருவி) தேவை,
அதன் உதவியால்தான் நாம் அறிவை அடைய முடியும். இது மாற்றத்திற்குட்பட்டது.
சவிகார விருத்தி: மனதில் தோன்றும் மாற்றத்தை உடைய எண்ணங்கள்
2. சைதன்யம்(அறிவு): இது மனதில் எழும் எண்ணங்களை விளக்குகிறது. மாற்றம் எண்ணத்தில்தான் இருக்கும் அறிவில் அல்ல.
இது நிர்விகார சைதன்யம்- மாற்றமடையாத அறிவு ஸ்வரூபம்.

த்ரஷ்டா
1. பார்ப்பவன்: கர்த்தா, பிரமாதா, போக்தா (பார்த்து, கேட்டு, சுவைத்து) அறிபவன்.
இந்த நிலையில் சவிகார த்ரஷ்டா, சவிகார பிரமாதா – மாற்றத்தை அடைகின்ற போக்தா
2. நிர்விகார சாக்‌ஷி – எந்த மாற்றத்தையும் அடையாத சாட்சி.

சாதாரணமாக நாம் மனதைத்தான் அறிபவன், அனுபவிக்கின்றவன் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றோம்.
இதை அறிவதற்கு எண்ணங்கள்தான் கருவியாக பயன்படுத்துகிறோம். எண்ணங்கள் என்றும் மனதில் தோன்றி மறைவதாக இருக்கின்றது.
மனதை எண்ணங்கள் சார்ந்திருக்கிறது. எண்ணங்களை பதிவு செய்தல், உணர்வுகளை வெளிப்படுத்துதல், எண்ணங்களை எடுத்து
ஆராய்ச்சி செய்வது போன்ற எல்லாமே மனதை ஆதாரமாக வைத்துத்தான் நடக்கிறது. த்ருஷ்யம் – உலகம், த்ருஷ்டி – எண்ணங்கள், த்ரஷ்டா-மனம்.
சாக்‌ஷி – எந்த மாற்றத்தையும் அடையாமல், மாற்றங்களை அடைந்து கொண்டிருக்கும் விஷயங்களை பார்த்துக் கொண்டிருப்பவன்.
சாக்‌ஷியாக இருப்பவனுக்கும் ஒரு த்ருஷ்டி தேவை. இதற்கு கரணமாக இருப்பது நிர்விகார சைதன்யம்,
இது அறிவது எதை என்று நினைத்தோமானால் அது மனதையும், மனதில் தோன்றும் எண்ணங்களை அனுபவித்துக் கொண்டு இருக்கிறது.
த்ருஷ்டி
த்ரஷ்டா
த்ருஷ்யம்
அனாத்மா
எண்ணம்
மனம்
ஜகத்
சாட்சி
மனம்
சைதன்யம்
மனம்
ஜகத்தை மனம் அறிகிறது, மனதை சாட்சி அறிகிறது. சாட்சி உறங்குவதே கிடையாது. மனதை ஜடமாக அறியாததற்கு காரணம்,
சாட்சி எப்பொழுதும் மனதை விளக்கிக் கொண்டிருப்பதனால். ஆழ்ந்த உறக்கத்தில் அனுபவிப்பதை சாட்சி அறிந்து
கொண்டிருப்பதால் நம்மால் விழித்தப்பின் அதை நினைவு கூர்ந்து சொல்ல முடிகிறது.

சாஸ்திரம் இங்கே இந்த உபதேசத்தின் மூலம் சொல்வது நான் அன்பதை சட்சியாக எடுத்துக் கொள்ள வேண்டும். மனதை விட்டுவிட வேண்டும்.
இந்த உலகம் நமக்கு விஷயமாக இருக்காது. அதனால் உலக விஷயங்களில் வரும் துயரங்கள் எதுவும், அனைத்து மாற்றங்களும் நம்மை பாதிக்காது.
இதன் மூலம் மனதை பார்க்கப்படும் பொருளாக மாறி விட்டால் துயரமே வராது. எப்படி சம்சார காலத்தில் துயரம் தானாக வருவது போல
மோட்ச காலத்தின் மனநிறைவு தானாக வரும் என்றாகி விடும்.

உபதேசம் சாட்சியை யாராலும் விளக்க முடியாது
த்ருஷ்டி மனதில் உள்ள எண்ணங்கள்
த்ரஷ்டா சாட்சி
த்ருஷ்டே உலகத்தை பார்க்கும் எண்ணங்கள்
த்ரஷ்டா இதை பார்க்கும் சாட்சியை யாரும் பார்க்க முடியாது, விளக்க முடியாது

சப்தத்தை கேட்கும் எண்ணத்தை அறியும் சாட்சியை அறிய முடியாது
சிந்திக்கின்றதால் வரும் எண்ணத்தை அறியும் சாட்சியை அறிய முடியாது
ஆராய்ந்தறியும் எண்ணத்தை அறியும் சாட்சியை அறிய முடியாது
அதுதான் உன்னுடைய ஆத்மா. அதைத்தான் ஆத்மா என்று புரிந்து கொள்ள வேண்டும். எல்லா ஜீவராசிகளிலும் இதுவேதான் இருக்கிறது.

अतः अन्यत आर्तम – சாட்சியிடமிருந்து, ஆத்மாவிடமிருந்து வேறாக இருக்கின்ற அனைத்தும் (அனாத்மக்களும்) மித்யா, துயரத்தைக் கொடுப்பவைகள்
आर्तँ துயர ஸ்வரூபம், அழிவுக்குட்பட்டது, மித்யா
अन्यत ஜகத், ஜகத்தை கிரகிக்கும் எண்ணங்கள், மனது
மனமும் அதில் எழும் எண்ணங்களும், எண்ணங்களுக்கு விஷயமாக இருக்கும் இந்த ஜகத் அனைத்தும் மித்யா.

सत – அந்தகரணத்வம், असत – மித்யாத்வம்
அதிகரணம் X அந்தகரணம் (ஆதாரம் – அதிஷ்டானம்) அற்றது.
“புத்தகம் மேசை மேல் இருக்கிறது”
இதில் புத்தகம் இருத்தலுக்கு ஆதாரமாக இருக்கிறது. நாம் பார்த்து அனுபவிக்கும் பொருட்கள் இருத்தலுக்கு ஆதாரமாக இருக்கிறது.
ஸத் அதிகரணம். சில பொருட்கள் இல்லாமைக்கும் ஆதாரமாக இருக்கிறது. மேசை மீது மலர் இல்லை.
அதில் மேசையானது மலரின் இல்லாமைக்கு ஆதாரமாக இருக்கிறது.
எந்த ஒன்று ஸத்திற்கும் ( இருத்தலுக்கும்), அஸத்திற்கும் (இல்லாமைக்கும்) ஆதாரமாக இருக்கிறதோ அதுதான் மித்யா.
”கயிற்றில் தோன்றும் பாம்பு”
இதில் பாம்பு ஸத்தின் ஆதாரமில்லை, ஏனெனில் அறிவு வந்தவுடன் பாம்பு மறைந்து விடுகிறது. இல்லாமைக்கும் அதிகரணம் என்று சொல்ல முடியாது.
ஏனென்றால் அது அனுபவித்திற்கு வருகிறது. இதில் பாம்பானது இருத்தலுக்கு அந்திகரணம் இல்லாமைகும் அந்திகரணம். இதுவேதான் மித்யா.

————-

பகுதி-5: கஹோல பிரமாணம்
இந்தப் பகுதியில் கீழ்கண்ட கருத்துக்கள் விளக்கப்படுகிறது.
1. ஆத்மா ஸ்வரூபம் – சம்சாரமற்றது
2. இரண்டு சாதனைகள் – ஞானம், சந்நியாஸம் (தியாகம்)
3. அனாத்மாக்களில் இருக்கின்ற ஆசைகளின் வேற்றுமைகள்
4. சிரவணம், மனனம், நிதித்யாஸனம் இவைகளின் விளக்கம்
5. ஞானியின் லட்சணம்
6. மித்யாத்வம்

சங்கரரின் முகவுரை:
கேள்வி: சென்ற பிராமனத்தில் பேசப்பட்ட ஆத்மா வேறு, இந்த பிராமனத்தில் பேசுகின்ற ஆத்மா
வேறு போல என்பது போல தோன்றுகிறதே. இரண்டும் ஒன்று என்றால் மீண்டும் சொல்கிறாய் என்ற தோஷம் இருக்கிறதே.
அதனால் இந்த பிராமனத்தில் வேறொன்றுத்தான் விளக்கப்படுகிறது.
பதில்: சென்ற பிராமனத்தில் விளக்கப்பட்ட ஆத்மாவைத்தான் இந்த பிராமனத்தில் விளக்கப்படுகிறது.
ஆத்மாவின் வேறு சில விசேஷங்கள் இங்கு பேசப்படுகின்றது. ஆத்மா சம்சாரமற்றது என்ற புதிய கருத்து சொல்லப்பட்டிருக்கிறது.
அதேபோல சில சாதனைகள் விளக்கப்பட்டிருக்கிறது.
கேள்வி நான் என்ற சொல்தான் சம்சாரியாக இருக்கிறது. ஆனால் இங்கு எப்படி ஒரு வஸ்து சம்சாரியாகவும், அசம்சாரியாகவும் இருக்கும்?
பதில் பிராந்தி மாத்திரம். வெறும் குழப்பத்தால் வந்தது. சம்சாரமே மித்யாதான். எங்கே மித்யா வருகிறதோ
அங்கே இரண்டு விஷயங்கள் சம்பவிக்கும். எனவே நான் என்பதில் மித்யாவான சம்சாரமும், சத்யமான ஆத்மாவும் இருக்கலாம்.

மந்திர விளக்கம்: (ஆத்ம ஸ்வரூபம்)
கேள்வி எந்த ஒன்று சாக்‌ஷாத் அபரோக்‌ஷமாக இருக்கின்றதோ, எந்த ஒன்று அனைவருக்குள்ளும் இருக்கின்றதோ அதை விளக்கி சொல்லுங்கள்.
பதில் உன்னுடைய ஆத்ம ஸ்வரூபம்தான் அனைவரிடத்திலும் இருக்கின்றது.
கேள்வி இதை மீண்டும் விளக்கி சொல்லுங்கள்.
பதில் எந்த ஒன்று ஆறு தத்துவங்களான அஸனாய, பிபாஸே, சோகம், மோஹம், ஜராம், ம்ருத்யு என்கின்ற
சம்சாரத்தை கடந்து இருக்கின்றதோ, அதுவே ஆத்மாவாக இருக்கின்றது.
அஸனாய – பசி; பிபாஸே-தாகம்; சோகம் – துயரம்; மோஹம் – ஆசை;
ஜரா – வயோதிகம்; ம்ருத்யு – மரணம்.
அஸனாய, பிபாஸ – பிராணமய கோசம் – இதில் உள்ள அபிமானத்தால்தான் துயரத்தை அனுபவிக்கின்றோம்.
சோகம் – மனோமய கோசம்
மோகம் – விக்ஞானமய கோசம்
ஜரா, ம்ருத்யு – அன்னமய கோசம்
ஆனந்தமய கோசமே சம்சாரத்தை மறந்த நிலை. ஆனால் துயரத்தினுடைய விதை இருந்து கொண்டிருக்கும்.
இவ்வாறு அடைந்த இன்பத்தை திரும்ப திரும்ப எடுக்கும் முயற்சியில் சம்சாரத்தை வீழ்த்தி விடும்.
இதனால் கோபம், மோகம், என்பதை அன்பவிக்க நேரிடும்.

அஸனாய (பசி), பிபாஸ (தாகம்)
எதுவரை பிராணமய கோசத்தில் அபிமானம் இருக்கிறோமோ அதுவரை பசி தாகம் என்ற துன்பத்தை அனுபவித்துக் கொண்டுதான் இருப்போம்.
சோகம்: மனதில் இருக்கும் விகாரம். துயத்தைக் கொடுக்கக்கூடிய அனைத்தையும் எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஆசைப்பட்ட பொருளை அடையாவிட்டால் சோகத்தை அடைவோம். சங்கரர் சோகத்தின் விளைவே ஆசை என்று கூறுகிறார்.
ஸித்த அநவஸ்திதி (அரதி) மன சஞ்சலத்தில் இருத்தல், சித்தம் நிறைவில்லாமல் இருத்தல், இதனுடைய விளைவுதான் ஆசை.
இங்கு சோகம் என்பதற்கு மன நிறைவின்மையால் வரும் ஆசை என்ற பொருள் கொள்கிறார்.
மனநிறைவுடன் இருக்கும்போது மனமானது எதற்கும் ஆசைப்படாது.
மோகம்(விபரீதம்): விக்ஞானமய கோசத்தின் மீது உள்ள அபிமானத்தால் வருவது அநித்ய, தூய்மையற்ற,
துயரத்தைக் கொடுக்கின்ற விஷயங்களில் அனாத்மாவில் நித்ய, தூய்மையான, சுகமானது என்கின்ற புத்தி மோகம்.
இது துக்கத்திற்கு காரணமாக இருப்பது.
ஜரா, ம்ருத்யு: ஸ்தூல சரீரத்திற்கு வருகின்ற மாற்றம். இதிலிருந்து விடுதலை முடியாது.
இதிலிருந்து அபிமானத்தை எடுத்து விட்டால் இதனால் பாதிக்கப்பட மாட்டோம்.

ஐந்து கோசத்தையும் தாண்டியது, மூன்று உடலினையும் தாண்டியது ஆத்மா. சம்சாரமானது ஆத்மாவையும் சார்ந்திருக்காது,
ஜடமாக இருப்பதால் அனாத்மாவையும் சார்ந்திருக்காது. எனவே இது மித்யா.
இப்படிபட்ட மித்யாவான சம்சாரத்தை கடந்து இருப்பது, ஆதாரமாக இருப்பது ஆத்மா என்று அறிந்து கொள்ள வேண்டும்.

பிரஸகதி – செய்யும் வாய்ப்பு உள்ள இடத்தில்தான்
பிரதிசேதம் – செய்யாதே என்று சொல்ல முடியும்.

அத்யாஸத்தினால் அனாத்மாவானது ஆத்மாவில் ஏற்றி வைத்து பார்க்கிறோம். எனவே ஆத்மா இவைகளை கடந்து நிற்கிறது என்று சொல்லப்படுகிறது.

ஸ்லோகம்-2 சாதனைகள் (ஞானம், சந்நியாஸம்)
एतम तँ आत्मानम विदित्वा ब्राह्मणा – இந்த ஆத்மாவை அறிந்த சாதகர்கள்
पुत्र एषनायाः புத்திரன் மீதுள்ள ஆசையிலிருந்தும்;
विथैषयात्: – சொத்தின் மீதுள்ள ஆசையிலிருந்தும்;
लॊकेषयात् உலகத்தின் மீது இருக்கும் ஆசையிலிருந்தும்
वियुत्ताय – விடுபட்டு, भिक्शाचर्यम् – சந்நியாஸம் सरन्ति – எடுத்துக் கொள்கிறார்கள்.

ஆத்மவிசாரம்-1
ஆத்மாவை அடைதல் என்பது என்னையே அடைதலாகும். சம்சாரியான அஹம் அசம்சாரி அஹத்தை அடைய வேண்டும்.
இந்த நிலையை ஞானத்தினால்தான் அடையமுடியும். அடையும் வஸ்து ஏற்கனவே நம்மிட்த்தேதான் இருக்கிறது.
அக்ஞானமும் அதைத் தொடர்ந்து வருகின்ற அத்யாஸத்தினால், சம்சாரத்தை ஆத்மாவில் ஏற்றி வைத்திருக்கிறோம்
இந்த நிலையை நன்கு அறிந்து கொள்ள வேண்டும்.

· ஆத்மாவை அறிந்த பிறகு சந்நியாஸத்தை எடுத்துக் கொள்வது
· சந்நியாஸத்தை எடுத்துக் கொண்ட பிறகு ஆத்மாவை அறிந்து கொள்வது
· ஆத்மாவை அறிந்து கொள்ள விரும்பி எடுத்துக் கொண்ட சந்நியாஸம்.

விவிதிக்ஷா சந்நியாஸம் – புத்ர, வித்தம், லோகம் ஆகியவற்றை விட்டுவிட்டு வைராக்யம் அடைந்து,
ஆத்ம ஞானம் அடைய உதவும் சாதனைகளை செய்து அடைதல்
வித்வத் சந்நியாஸம் வைரக்யமும், ஆத்ம ஞானம் அடைந்தவர்கள் எடுத்துகொள்ளும் சந்நியாஸம்.
இவர்களது லட்சியம் அடைந்த ஞானத்தில் நிலைபெறுவது.

இந்த இரண்டு சந்நியாஸமும் சாதனை ரூபமாக இருக்கின்றது. எனவே இவையிரண்டும் சாதனை ரூப சந்நியாஸம் என்று கூறுவர்.
இந்த சந்நியாஸத்தில் இருக்கும் சாதனைகளை சந்நியாஸ வாழ்க்கையில் இல்லாமல் இருப்பவர்களும் கடைப்பிடித்தால்
அவர்களும் ஞானமும் ஞான நிஷ்டையும் அடையலாம். ஸம்யக் ஞானம் ( ஞான நிஷ்டை) உள்ளவர்களுக்கு
சந்நியாஸம் என்பது லட்சணையாக இருக்கிறது.

ஆத்மவிசாரம்-2
கேள்வி: व्युत्थाय भिक्शचर्यँ चरन्ति – இதை அர்த்தவாதமாக எடுத்துக் கொள்ளலாம். பூதார்த்த வாக்கியம் என்று எடுத்துக் கொள்ளலாம்.
1. பூதார்த்த வாக்கியம் என்பது இந்திரன் கையில் வஜ்ராயுதம் இருக்கிறது என்ற வாக்கியமானது நம்மால்
ஒத்துக் கொள்ளவும் முடியாது மறுக்கவும் முடியாது. எனவே இதை அப்படியே எடுத்துக் கொள்ளலாம்.
இந்திரன் சக்தி வாய்ந்தவன் என்று சொல்வதற்காக இந்த வாக்கியம் பயன்படுத்தப்பட்டுள்ளது போல் இருக்கிறது.
இந்த வாக்கியத்தை அர்த்தவாதமாக எடுத்துக் கொள்ளலாம்.
2. வேதம் சொல்வது போல் வாழாதவன் கீழான நிலைக்கு சென்று விடுவார்கள். சந்நியாஸத்தில் எந்த விதிமுறையும் கிடையாது.
3. சந்நியாஸம் எடுத்துக் கொண்டால் வேதத்தை படிக்கக்கூடாது.
4. இங்கு மூன்று மட்டும் துறக்கப்படும், எல்லாவற்றையும் துறக்க தேவையில்லை.
பதில் வேதாந்தத்தில் உள்ள கர்மகாண்டம் முழுவதையும் சந்நியாஸம் எடுத்துக் கொண்டவர்கள் துறந்து விட வேண்டும்
என்று ஸ்ருதியே விதித்துள்ளது. எந்த அதிகாரிக்கு வேத வாக்கியம் கூறப்படுகிறது என்று பார்த்து பொருள் கொள்ள வேண்டும்.
இங்கே ஆசையுடையவனுக்கு சந்நியாஸம் தேவையில்லை, அனாத்ம விஷயங்களில் பற்றில்லாதவன் சந்நியாஸம் எடுத்துக் கொள்ளலாம்.
ஆசைகளை இரண்டு விதமாக நீக்கலாம். 1. தர்மப்படி அனுபவித்து நீக்கலாம், 2. ஞானத்தாலே நீக்க முடிவது.
எல்லா உபநிஷத்தின் குறிக்கோள் ஆத்மஞானம்தான் அதை அடையும் நேரடி சாதனங்கள் சிரவணம், மனனம், நிதித்யாஸனம்.
இதில் வெற்றி அடைய சந்நியாஸம் உதவி புரிகிறது.

ஆத்மவிசாரம்-3
அனாத்மாவில் இருக்கும் ஆசைகளை ப்ரித்தறிதல். அனைவரும் மூன்று பெரிய ஆசைகளில் விழுந்திருக்கிறார்கள்.
அந்த ஆசைகளின் பிடியில் சிக்காமலிருக்க வேண்டும்.
புத்ர ஏஷணா- இது சாதனை இச்சாவாக கருதப்படுகிறது. தன் மகன மீதுள்ள ஆசை. இங்கு புத்திரன் ஒரு சாதனமாகவும்
அதைக் கொண்டு அடையும் சாத்தியமாக இகலோக, பரலோக சுக ப்ராப்தி. இங்கு புத்திரன் என்பதை உபலக்ஷணமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
எனவே புத்திரன் மட்டுமல்ல மற்றவர்களின் உதவிகளையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். அனைத்து உறவுகளிடமிருந்து விடுபட வேண்டும்.
இந்த உறவுகளால் நமக்கு பாதுகாப்பை பெறுவோம். ஆனால் பாதுகாப்பை கடைசி வரையில் வைத்திருக்க கூடாது.
அதை விட்டுவிட்டு வருவதற்கு நம் மனதை பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும்.
இறந்ததற்கு பிறகு புத்திரன் செய்யும் சிரார்தத்தால் நற்பலன் கிடைக்க உதவும். சாத்தியத்தின் மீதுள்ள பற்றை தியாகம் செய்ய வேண்டும்.
பிறகுதான் சாதனையை விடவேண்டும், முதலில் நம்மிடத்திலுள்ள பாதுகாப்பற்ற நினைப்பை அகற்ற வேண்டும்,
தனிமையில் பயமின்றி இருந்து பழக வேண்டும். அப்புறம்தான் சாதனையை விடவேண்டும்.,

வித்த ஏஷணா- இதுவும் சாதனை இச்சாவாக கருதப்படுகிறது.
· அசையா சொத்து: இதன் மீதுள்ள ஆசையை துறக்க வேண்டும். இதுவும் சாத்தியத்தை துறந்த பிறகுதான், சாதனையை துறக்க வேண்டும்.
· வித்தத்தை பயன்படுத்துதல்: சொத்து இருந்தால் மட்டும் போதாது, அதை பயன்படுத்தி சுகத்தை அடைந்தால்தான் அதனால் பிரயோஜனம் உண்டு.
· உபாஸனம் (அ) வித்யா: நாம் அடையும் வித்யாவுக்கு பொருள் தேவைப்படுகிறது.
நாம் அடையும் வித்யாதான் அதிக சுகத்தை அனுபவிக்கவும், மேலும் சொத்தை பெருக்கவும் உதவி செய்கிறது.
உபாஸனமும் ஒருவிதமான வித்தம்தான் எனவே இதன் மூலம் அடையும் செல்வங்களையும், அஷ்டமா சித்திகளையும் துறக்க வேண்டும்.

லோக ஏஷணா- இது சாத்திய இச்சாவாக கருதப்படுகிறது.
லோகம் என்பது இன்பத்தை நேரிடையாக கொடுக்க கூடிய உலகங்கள். இன்பத்தை தரக்கூடிய சூழ்நிலையில் இருத்தல்.
இந்த சூழ்நிலையை உருவாகும் முயற்சியை துறக்க வேண்டும்.

இதைப்போன்ற இச்சாக்கள் அனைத்தையும் அனாத்மா இச்சா என்று கூறலாம்.
இந்த அனாத்மா இச்சா சாதன இச்சா, சாத்திய இச்சா என இருவகையாக பிரிக்கலாம்.
சாதன இச்சாவானது புத்ர இச்சா, வித்த இச்சா என இருவகையாக பிரிக்கலாம்.
சாத்திய இச்சாவானது இகலோக, பரலோக இன்பங்கள்.

மந்திர விளக்கம்: புத்திரன் மீதுள்ள ஆசையானது வித்தத்தின் மீதிருக்கும் ஆசை, வித்தத்தின் மீதுள்ள ஆசையானது
லோகத்தின் மீதிருக்கும் ஆசை. ஆகவே ஆசை என்பது ஒன்றுதான். இந்த ஆசையை இரண்டாக பிரிக்கலாம், அவைகள் சாதன ஆசை, சாத்ய ஆசை.

சிரவணம், மனனம், நிதித்யாஸனம் ஸ்வரூப விளக்கம்:
तस्मात ब्राह्मणः पाण्डित्यम निर्विद्या –
ब्राह्मणः – சித்தஸுத்தி அடைந்தவர்கள், ஆசையிலிருந்து விடுதலையடைந்தவர்கள், வைராக்யத்தை அடைந்தவர்கள்,
சம, தமாதிகள் மூலம் வைராக்கியத்தில் நிலை பெற்றவர்கள்.
पाण्डित्यम निर्विद्या – பாண்டித்யத்தை முழுமையாக செய்து முடித்து
पाल्यॆन दिस्टासेत – பாலயத்துடன் இருக்க ஆசைப்பட வேண்டும்.
பால்யம், பாண்டித்யம் இவையிரண்டையும் செய்து முடித்த பிறகு मुनिः भभेत முனிவராக இருக்க வேண்டும்.
இவை மூன்றும் செய்து முடித்திருந்தால் அவன் பிராமணனாகி விடுகிறான், முக்தனாகி விடுகிறான், மோட்சத்தை அடைகிறான்.

சொல் விளக்கம்:
பாண்டித்யம்: ஆத்ம ஞானம்; உபநிஷத் சாஸ்திரத்திலிருந்து தோன்றியது பண்டா (पण्डा). இந்த பண்டாவை அடைந்தவன் பண்டிதன்.
பண்டாரம் என்ற சொல் ஆத்மஞானியை குறிக்கிறது. அந்த பண்டிதனாவதற்கு மேற்கொண்ட செயல்களை பாண்டித்யம் என்று கூறுவர்.
அந்த செயல்கள் வேதந்த வாக்ய விசாரம், குருவின் துணைக் கொண்டு செய்வதே சிரவணம்.
பாண்டித்ய நிர்வித்யா என்பது சிரவணத்தை பூர்த்தி செய்தல், முழுமையாக செய்தல் என்று பொருள்.
சிரவணம் எப்பொழுது முடிவடைகிறது என்று எப்படி அறிய முடியும் என்றால், உணவு உட்கொள்ளும்போது
எப்படி வயிறு நிறைந்து விட்டது என்று உணர்கிறோமோ அதேமாதிரி எப்பொழுது சந்தேகமில்லாமல் நான் தெரிந்து கொண்டேன்
என்ற உணர்வு வருகின்றதோ அப்போதுதான் சிரவணம் முடிவடைந்து விட்டது என்று உணரலாம். இந்த கேள்வியே நம் மனதில் எழும்பாது.

சுரேஷ்வராச்சாரியார் நான்கு நிலைகளில் (தத்வமஸி) என்ற ஞானத்தை அடைகிறோம் (சதுர்வித ஞானம்) என்று விவரிக்கிறார். (தத்+த்வம்+அஸி)
1. பதார்த்த அவகதி பூர்வம்: மகாவாக்கியத்திலுள்ள ஒவ்வொரு சொல்லின் அர்த்தத்தை முதலில் புரிந்து கொள்ளுதல்
2. ததஸ்ததி அவி சங்கதிஹி – இரண்டு சொற்களின் பொருள்களுக்கிடையே உள்ள சம்பந்தம்
(தத் என்ற சொல்லுக்கும், த்வம் என்ற சொல்லுக்கும் இடையே உள்ள சம்பந்தத்தை அறிந்து கொள்ளுதல்)
3. விருத்தார்த்த துதி பஷ்சாத் – இந்த சம்பந்த த்தை கேட்ட உடனேயே வேறு விதமான எண்ணங்கள்தான் முதலில் தோன்றும்,.
இப்படி தோன்றும் விருத்தமான அர்த்தத்தை விட்டுவிட வேண்டும்.
4. த்தோ வாக்யார்த்த போதனம் – இறுதியில் நாம் புரிந்து கொள்ள வேண்டியது இரண்டு சொற்களுக்குமிடையே உள்ள ஐக்கியத்தைத்தான்.

पाल्यॆन दिस्टासेत – பால்யத்துடன் இருக்க முயற்சி செய்.
ஞானத்தையே பலமாக கொண்டிரு. அடைந்த ஞானத்தில் உறுதியாக இருக்க வேண்டும். பணமிருந்தால் நமக்கு மனபலம் கிடைக்கும்.
உறவுகள் நிறைய இருப்பதாலும் நமக்கு பலம் கிடைக்கும். இவ்வாறு அனாத்மா விஷயங்கள் நமக்கு பலத்தை கொடுப்பதாக உணர்கிறோம்.
இந்த பலத்தை நாம் தியாகம் செய்து விட வேண்டும். சிரவணத்தை முடித்தவுடன் அடைந்த ஞானமே எனக்கு பலம் என்று உறுதியாக இருக்க வேண்டும்.
அனாத்மாவிலிருக்கிற பலத்தை துறந்து விட்டு, ஞானத்திலிருந்து பலத்தை அடைய உறுதி கொள்ள வேண்டும்.
அப்போதுதான் ஆத்ம ஞானத்தை அடைய முடியும். பணம், புகழ், பதவி, சொத்து இவைகளை வேண்டாம் என்று சொல்கின்ற மன உறுதியே பலம்.

पाल्यॆन भावः- குழந்தையைப் போல் இருக்க வேண்டும்,
1. விருப்பு-வெறுப்புக்களை, மற்ற தீய எண்ணங்களை துறந்த நிலை
2. குழந்தைகளிடத்தில் அகங்காரம் இல்லாத காரணத்தால் தன்னை மற்றவர்கள் முன் பெருமைபடுத்திக் கொள்ளாமல் இருப்பது போன்ற நிலை
3. நான் ஞானத்தை அடைந்தவன் என்று மற்றவர்களிடம் வெளிப்படுத்திக் கொள்ளாதிருத்தல், அதை நிரூபிக்க முயற்சி செய்யாதிருக்கும் நிலை
4. ஞானத்தை அடைந்த்து விட்டேன் என்ற கர்வம் கொள்ளாதிருத்தல், எளிமையாக வாழ்தல்

அடைந்த ஞானத்தை உறுதிப்படுத்த வேண்டும். மனனம் என்ற சாதனை மூலம் இந்த பலத்தை அடைய வேண்டும்.
சந்தேகத்தை நீக்குவதன் மூலம் இந்த பலம் வந்து விடும். ஞானம் உறுதியாக வேண்டுமென்றால் அடைந்த ஞானத்தின் சந்தேகமற்று இருக்க வேண்டும்.
பாண்டித்யம், பால்யம் இவை இரண்டையும் முழுமையாக கடைப்பிடித்து ஒரு முனிவராக இருக்க வேண்டும்.
மௌனமாக இருக்க விரும்ப வேண்டும். அடைந்த ஞானத்துடன் மௌனமாக இருப்பவர்கள், அதைக் கடைபிடிப்பவர்கள் முனிவர் என்று அழைக்கப்படுவர்.

அமௌனம் – சிரவணம், மனனம் இவற்றைக் குறிப்பது
மௌனம் – நிதித்யாஸனத்தைக் குறிக்கிறது, இந்த நேரத்தில் மௌனமாக இருக்க வேண்டும்.

மௌனம்: வாய் திறந்து பேசாதிருத்தல், ஞானத்தை அடையாமல் உபாஸனை காலத்தில் இருக்கும் மௌனம், ஞானத்தை அடைந்த பின் இருக்கும் மௌனம் என்று இருவகையாக இருக்கிறது. உபாஸகர்களின் மௌனம் இரண்டாக உள்ளது. அவைகள்,
1. காஷ்ட மௌனம்: வாய் மட்டும் பேசாதிருத்த;
2. ஆகாஷ்ட மௌனம்: கை, கால் இவைகளினால் எந்த செய்கைகளினாலும் பேசாதிருத்தல்.
இதனால் அடையும் பலன்களாவது, மனதில் இருக்கின்ற சஞ்சலங்கள் நீங்கும், மனமானது ஒரு இடத்தில் குவியும், ஜபம் நன்றாக சித்திக்கும்.
ஸ்வதோஷம் – நம்மிடம் உள்ள குறைகள் எல்லாம் நமக்கே தெரிய வரும். சில பதிவுகள் எல்லாம் ஞானம் வந்தவுடன் சென்று விடாது.
இந்த ஞானத்தின் உதவிக் கொண்டு எல்லாவிதமான விபரீதபாவனைகளான இருமை, நான் கர்த்தா நிதித்யாஸனம் என்ற சாதனையின் மூலம் நீக்குதல்.

நிதித்யாஸனம்: நாம் அடைந்த ஞானத்தில் நின்று பழகுதல். இந்த நேரத்தில் மௌனத்தை கடைப்பிடிக்க வேண்டும்.
அனாத்மா விஷயமான பேச்சை மட்டும் விட்டுவிட வேண்டும். அனாத்ம விஷயத்தைப் பற்றி பேச பேச த்வைத புத்தி மேலும் பெருகும்.
நமக்கு தேவையில்லாத சங்கங்களை ஏற்படுத்தி விடும். இவ்வாறு செய்வதன் மூலம் நமக்கு தனிமை கிடைத்து விடும். மனமானது ஒருமுகப்பட்டு விடும்.

अथ मुनिः மௌனத்தில் ஈடுபட்டு நிதித்யாஸனத்தை கடைப்பிடிக்க வேண்டும்.
வாக் என்கின்ற இந்திரியத்தின் துணைக் கொண்டு தான் சிரவணத்தை மேற்கொள்ள வேண்டும்.
அமௌனம் – சிரவணம், மனனம்; மௌனம்: நிதித்யாஸனம்.
அமௌனத்தையும், மௌனத்தையும் பூர்த்தி செய்ய வேண்டும். இவ்வாறு சொல்லப்பட்ட அனைத்தையும் முழுமையாக
பூர்த்தி செய்தவன் பிரம்மத்தை அடைகின்றான், அவனே ஜீவன் முக்தனாகின்றான்.

सः ब्राह्मः केन सयात्? இப்படிபட்ட ஜீவன் முக்தனை எப்படி அறியலாம்? எந்த நடவடிக்கையின் மூலமாக அவனை கண்டு கொள்வது?
येन स्यात्तेन அவன் எப்படி வேண்டுமானலும் இருப்பான். வெளித்தோற்றத்தைக் கொண்டும்,
அவன் செய்யும் செயல்களை வைத்தும் கண்டுபிடிக்க முடியாது. எனவே அவன் இப்படி இருப்பான் என்று சொல்ல முடியாது.

தொகுப்பு:
ஆத்மாவுக்கு சம்சாரம் இல்லை. இதை அடைதல் என்பது அறிவது என்பதாகும். புத்ரன், வித்தம், லோகம்
இந்த மூன்று பேராசைகளிலிருந்து விடுபட வேண்டும். பாண்டித்யம், பால்யம், முனி என்ற சாதனங்களை கூறி
இதன் மூலம்தான் ஞான பலத்தை அடைய வேண்டும். இப்படி சொல்லியபடி சாதனைகளை கடைபிடித்து
ஞானத்தை அடைந்து அதில் நிலைபெற்றவன் பிரம்மத்தை அடைந்தவனாகிறான். அவனையே ஜீவன்முக்தன் என்று கூறுவர்.
இவனுக்கென்று தனி லக்‌ஷணம் என்று ஒன்றும் கிடையாது. அவன் எப்படி வேண்டுமானாலும் இருப்பான்
அவன் செய்யும் செயல்களிலிருந்து நாம் அவனை அறிய முடியாது.

————

பகுதி-6: கார்கி பிரமாணம்
ஸ்லோகம்-1
இந்தப் பகுதியில் ஸ்தூலமான பிருத்வியிலிருந்து மிக மிக சூட்சுமமான ஹிரண்யகர்ப்பன் வரையில் விசாரம் செய்யப்படுகிறது.
आन्तरः மூலக்காரணமாக இருப்பது:
ஸர்வாந்தரஹ : எல்லாவற்றிற்கும் மூலகாரணமாக இருக்கின்றது, ஆதாரமாக இருக்கின்றது.
ஆந்தர தத்துவ விளக்கம்:
ஆந்தரம்: காரணம்; அபரிச்சின்னம் (வரையறுக்கப்படாதது); சூட்சுமம், சத்யம்.
· எது காரியமாக இருக்கிறதோ அது காரணத்தால் வியாபித்திருப்பதாக இருக்க வேண்டும்.
· எது வரையறுக்கப்பட்டதோ அது வரையறுக்கப்படாத தத்துவத்தினால் வியாபித்திருப்பதாக இருக்க வேண்டும்.
· எது ஸ்தூலமாக இருக்கிறதோ அது சூட்சுமத்தினால் வியாபித்திருப்பதாக இருக்க வேண்டும்
· எது மித்யாவாக இருக்கிறதோ அது சத்யத்தினால் வியாபித்திருப்பதாக இருக்க வேண்டும்
எல்லாவற்றிலும் ஆந்தரமாக இருப்பது எது?

மந்திர விளக்கம்:
பிருத்வியானது நீரினால் வியாபிக்கபட்டிருக்கிறது, நீரானது வாயுவினால் வியாபிக்கப்-பட்டிருக்கிறது.
வாயுவானது ஆகாசத்தினால் வியாபிக்கபட்டிருக்கிறது, ஆகாசமானது கந்தர்வலோகத்தால் வியாபிக்கபட்டிருக்கிறது,
கந்தர்வலோகமானது பிரஜாபதி லோகத்தால் வியாபிக்கபட்டிருக்கிறது, பிரஜாபதிலோகமானது பிரம்மலோகத்தினால் வியாபிக்கப்-பட்டிருக்கிறது,
பிரம்மலோகமானது எதனால் வியாபிக்கபட்டிருக்கிறது என்ற கேள்விக்கு யாக்ஞவல்கியர் பதில் சொல்லவில்லை
ஆனால் எச்சரிக்கை செய்கிறார் இதற்கு மேல் போனால் உன் தலை வெடித்து விடும்.
ஹிரண்யகர்ப்ப தத்துவத்தை அனுமானம் மூலம் விளக்க முடியாது. தர்க்க பிரமானத்திற்கப்பால் உள்ள விளக்கத்தை
தர்க்கத்தில் பெற முயற்சி செய்யாதே என்று எச்சரிக்கிறார் யாக்ஞவல்கியர்.
अनतिप्रश्न्याँ – அனுமான பிரமானத்திற்குப்பாற்பட்ட விஷயத்தை, தர்க்க பிரமானத்திற்குள் வராததை
अतिप्रुच्छसि – தர்க்கத்தால் தெரிந்து கொள்ள விரும்புகிறாய்;
मातिप्राक्षीरिति- அந்த மாதிரி முயற்சிக்காதே.
பிரத்யக்‌ஷம் இல்லாமல் அனுமானம் பண்ண முடியாது. ஹிரண்யகர்ப்ப தத்துவத்தை ஆகாம பிரமானத்தால்தான் அடைய முடியும்.

——–

பகுதி-7: அந்தர்யாமி பிரமாணம்
ஸ்லோகம்-1
உத்தலகா என்பவர் யாக்ஞவல்கியரிடம் கேள்வி கேட்பதற்கு முன் ஒரு கதை சொன்னார்.
மத்ரா என்ற ஊரில் பதஞசலகாப்யம் என்பவர் வீட்டில் யக்ஞங்களை தெரிந்து கொள்ள படித்துக் கொண்டிருந்தோம்.
பதஞ்சலகாப்யாவின் மனைவிக்குள் ஒரு கந்தர்வன் புகுந்து கொண்டான்/ அந்த கந்தர்வனிடம் “”நீ யார்?” என்று கேட்டோம்.
அந்த கந்தர்வன், ‘என் பெயர் கபந்தன்” என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான்.
பிறகு அவன் எங்களை பார்த்து, “எந்தவொரு சூத்ர தத்துவம் இந்த உலகத்திலும், பரலோகத்திலும் உள்ள எல்லா ஜீவராசிகளையும்
சீராக இயங்க வைத்துக் கொண்டிருக்கிறதோ அந்த சூத்ர தத்துவத்தை, ஹிரண்யகர்ப்ப தத்துவத்தை அறிவீர்களா? என்று கேட்டான்.
பதஞ்சலகாப்யர், ‘ஏ பகவான் எனக்கு அந்த தத்துவம் தெரியாது” என்று பதிலளித்தார்.
”அந்தர்யாமி தத்துவத்தைப்பற்றி தெரியுமா? இகலோக, பரலோக ஜீவராசிகளுக்குள்ளும் உள்ளே இருந்து கொண்டு
அவைகளை தன் வசம் வைத்திருக்கும் ஈஸ்வர தத்துவத்தை அறிவீர்களா” என்று மேலும் கந்தர்வன் கேட்டான்.
அதுவும் எங்களுக்கு தெரியாது என்று பதிலளித்தார்.
யார் இந்த சூத்ரத்தையும் அந்தர்யாமி தத்துவத்தயும் அறிந்தவர்களோ அவர்களே பிரம்மத்தை அறிந்தவர்களாவர்கள்.
அவர்கள் அனைத்தையும் அறிந்தவர்களாகிறார்கள்.” என்று கந்தர்வன் கூறினான். பிறகு அங்கிருந்தவர்களுக்கு அந்த தத்துவங்களை உபதேசித்தான்.

எனக்கு இப்போது அந்த தத்துவங்கள் தெரியும், அந்த தத்துவங்களை நீ அறியாமல்
இந்த பசுக்களை எடுத்துச் சென்றால் உன்னுடைய தலை வெடித்து விடும்.

யாக்ஞவல்கியர், “எனக்கு அந்த இரண்டு தத்துவங்களும் தெரியும்” என்று பதிலளித்தார்.
உத்தலகா, ‘எல்லோரும் இப்படிதான் சொல்வார்கள், முதலில் உனக்கு எப்படி தெரியுமோ அப்படியே கூறுவாயாக” என்று கேட்டார்.

ஸ்லோகம்-2
யாக்ஞவல்கியர் பதிலளிக்க ஆரம்பித்தார். ”அந்த சூத்ரமானது வாயுவாகும். ஹிரண்யகர்ப்ப தத்துவமாக இருக்கின்ற
இந்த சூத்ரத்தினால் நாம் அனுபவிக்கும் உடல், இந்த உலகத்திலும், பரலோகத்திலும் உள்ள ஜீவராசிகளும் சீராக செயல்பட்டு கொண்டிருக்கின்றன.
இங்கே வாயு என்பது உடலுக்கு வெளியே இருப்பது, உடலுக்கும் உள்ளெ பிராணனாக இருக்கிறது என்று புரிந்து கொள்ள வேண்டும்.
இறந்த பின் இந்த பிராணனானது வெளியே சென்று விடுகிறது, இதுவே சூட்சும சரீரம் என்றும் கூறுவர்.
இவைகளெல்லாம் சீராக இயங்குவதற்கு ஹிரண்யகர்ப்ப தத்துவம் காரணமாகின்றது. சமஷ்டி, வியஷ்டி இரு அங்கங்களும்
ஒன்று சேர்ந்தால்தான் ஒரு ஜீவன் தோன்றும், மாலையில் பூக்களை ஒன்றாக சேர்த்து கொண்டிருக்கும் நூல் போல அனைத்து
ஜீவராசிகளையும் நன்றாக ஒழுங்காக இயங்கிக் கொண்டிருப்பதற்கு ஹிரண்யகர்ப்ப தத்துவம் காரணமாகிறது.
ஸ்தூல உடலை விட்டு ஹிரண்யகர்ப்ப தத்துவம் சென்று விட்டால் அந்த உடலை பிரேதம் என்று கூறுவர்.
அந்த உடலிலுள்ள எல்லா உறுப்புகளும் அழுகி விடும். இந்த சூத்ர வாயு, ஹிரண்யகர்ப்பமானது அனைத்தும்
சீராக இயங்குவதற்கு காரணமாக இருக்கிறது”. என்று முடித்தார்.
இந்த பதில் சரியென்று ஒத்துக் கொண்ட உத்தாலகா பின்பு அந்தர்யாமியை பற்றி இப்போது சொல்லுங்கள் என்று வினவினார்.

ஸ்லோகம்-3
ஹிரண்யகர்ப்பனுக்கு ஆதாரமாக இருப்பது எல்லா காரண ஸரீரத்தையும் அபிமானிக்கின்ற சேதனமான பிரம்மம் அந்தர்யாமி.
மாயையில் பிரதிபிம்பிக்கின்ற ஆத்மா. சூட்சும சரீரத்திற்கு காரணமாக இருப்பது காரண சரீரம். இதுதான் இங்கே விளக்கப்படுகிறது.
இதுவே ஈஸ்வரன், அந்தர்யாமி என்று அழைக்கப்படுகிறது.

இங்கே அந்தர்யாமி தத்துவத்தை எப்படி விளக்குகிறார் என்றால், இந்தப் படைப்பை மூன்றாக முதலில் பிரிக்கிறார்.
அவைகள்
அதிதெய்வம் – தேவர்கள் போன்ற மேலான பிறவிகள்,
அதிபூதம் – இந்த உலகில் உள்ள எல்லா ஜீவராசிகளும்,
அத்யாத்மா – மனிதனிடத்தில் உள்ள இந்திரியங்கள்.
இந்த மூன்று விதமான ஸ்ருஷ்டிகளுக்குள்ளும் அந்தர்யாமி ஊடுருவி இருக்கிறார்.
மாயையுடன் கூடிய பிரம்மத்தையே அந்தர்யாமி அல்லது ஈஸ்வரன் என்று அறிய வேண்டும்.

· அந்தர்யாமி எங்கு குடியிருக்கிறார் என்றால் ஹிரண்யகர்ப்பனுடைய வீடுதான் இவர் குடி இருக்குமிடம்
· வெளித்தோற்றத்திற்கு வராமல் உள்ளேயிருப்பது
· அவிஷயஹ- விஷயமாக யாராலும் கிரகிக்க முடியாத ஒன்று.
· ஹிரண்யகர்ப்பனுடைய சரீரம்தான் இவருடைய சரீரமாக இருக்கிறது
· ஹிரண்யகர்ப்பனையும் தன் கட்டுக்கும் வைத்திருப்பவர்
· அந்தர்யாமியின் ஸ்வரூபமும் ஜீவனுடைய ஸ்வரூபமும் ஒன்றேதான்.
· அந்தர்யாமி சம்சாரமற்றது

यः प्रुतिव्याम तिष्ट्न – அந்தர்யாகி ப்ருதிவியில் இருந்து கொண்டு
प्रुतिव्या अन्तरः – ப்ருதிவிக்குள்ளே இருக்கிறார்
प्रुथिवि न वेद – ப்ருதிவியே அறியாதவாறு
यस्य प्रुत्वि सरीरँ – ப்ருதிவியானது சரீரமாக இருக்கிறது.
यः प्रुतिवि अन्तरः यमयति – ப்ருதிவிக்குள்ளே இருந்து கொண்டே அதை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கின்றது
एष त आत्मा – இப்படிபட்ட ஸ்வரூபம்தான் அந்தர்யாமி, இதுவே ஜீவனின் ஸ்வரூம்
अम्रुतः – இவர் சம்சாரமற்றவர், நித்தியாமானவராக இருக்கிறார்.

ஸ்லோகம்-4 லிருந்து – ஸ்லோகம்-23 வரை கீழே விளக்கப்பட்டிருக்கிறது

நீர், நெருப்பு, ஆகாயம், வாயு, சுவர்க்கலோகம், சூரியன், திசைகள், சந்திரன், நட்சத்திரங்கள், ஆகாசம், இருள், வெளிச்சம்,
எல்லாவற்றிலும், மூக்கு, வாக் இந்திரியம், கண், காது, மனது, தோல், புத்தி, பிறப்புறுப்புக்கள் போன்ற இவைகளில் முழுவதும் வியாபித்தும்,
உள்ளேயும் இருந்து கொண்டு அதேசமயம் அவைகள் அறியாதவாறும் இருந்து கொண்டு அவைகளை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கின்றது.
இப்படிப்பட்ட ஸ்வருபமாக என்றும் அழியாததாக சம்சாரமற்று இருப்பது அந்தர்யாமி.

அதிருஷ்ட – பார்க்கப்படாதது; திருஷ்ட – பார்க்கின்றவன்
எவையெல்லாம் பார்க்கப்படுகிறதோ அவையெல்லாம் வரையறுக்கப்பட்டது. இது அறியப்படாதது ஆனால் அறிபவனாக இருக்கின்றது.
சிதாபாஸனை ஆதாரமாக கொண்ட மனம்தான் பார்க்கிறது, கேட்கிறது. அதே சமயம் பார்க்கபடுவதாகவும், கேட்கப்படுவதாகவும் இருக்கிறது.
இந்த அறியப்படாதவந்தான் நிர்விகார த்ருஷ்டா. न अन्यः अथः अस्ति द्रुष्ट – அந்தர்யாமியை தவிர வேறொரு அறிபவன் கிடையாது.

சைதன்யமான அந்தர்யாமி ஒன்றுதான் இருக்கிறது; அதைத் தவிர வேறொன்றும் இல்லை
மனதிற்கு அறியும் தன்மை கிடையாது ஏனென்றால் அது ஜடமான வஸ்து.
ஆனால் அதில் பிரதிபலிக்கும் சைதன்யத்தின் (சிதாபாஸத்தின்) துணைக் கொண்டு எல்லாவற்றையும் அறிகிறது.
ஆனால் இதை பிரகாசித்துக் கொண்டிருக்கும் சிதாபாஸனும் மித்யா என்று புரிந்து கொள்ள வேண்டும்.
எனவே ஜீவனும் மித்யா என்று அறிந்து கொள்ளலாம்.
இப்படி கட்டுபடுத்துபவர் என்று புரிந்து கொண்டால், கட்டுபடுத்துபவர் என்ற வேறொன்று இருக்கிறது என்ற த்வைதம் வந்து விடுகிறது.
ஆனால் இங்கு இரண்டுமே ஒன்றுதான் என்று நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். மாயையினால்தான் த்வைதம் தெரிந்து கொண்டிருக்கிறது.
ஜீவ சைதன்யம், ஈஸ்வர சைதன்யம், ஸ்வரூப சைதன்யம் இந்த மூன்றில் உள்ள ஸ்வரூப சைதன்யம் ஒன்றுதான்.
அதுவே மாயை, வியஷ்டி என்ற இரண்டு பெயர்களை கொண்டதாக இருக்கிறது
இப்படிபட்ட அந்தர்யாமிதான் ஆத்மா, அதுவே உன் ஸ்வரூபம், நித்தியமானது.

————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ ப்ருஹதாரண்ய உபநிஷத்–ஸ்ரீ மைத்ரேயி பிராமணம்/மது பிராமணம்/வம்ஸ பிராமணம்–

March 23, 2021

பகுதி-4 : மைத்ரேயி பிராமணம் (பிரம்ம வித்யா, சந்நியாஸ விசாரம், பிரம்ம ஞானத்திற்கான சாதனங்கள்
சங்கரருடைய பொது அறிமுக விசாரம்
ஆத்மாவை அறிதல் – அறிதல் என்றால் அறிவை அடைய வேண்டும். எதைப்பற்றிய அறிவு என்றால்
ஆத்மாவை பற்றிய அறிவை அடைதல், அதன் பலன் மோட்சத்தை அடைதல்.

ஆத்மாவை ஏன் நாட வேண்டும் என்றால் நாம் உண்மையிலே விரும்புவது ஆத்மாவைத்தான் அதாவது நம்மைத்தான்.
நாம் விரும்புவதுதான் சாத்தியமாக இருக்கமுடியும் எனவே ஆத்மாவை அறிய வேண்டும்.
ஆத்மாவை அறீதல் என்பது ஆத்மாவை அடைதல், அனைத்தையும் அடைவதை போன்றதாகும்.
இந்த ஆத்ம ஞானத்தை எப்படி அடைவது என்படைப் பற்றி இந்த பகுதியில் கூறப்படுகிறது.
இதில் வேறெதாவது நிபந்தனைகள் இருக்கிறதா என்றால் சந்நியாஸம் செய்து சிரவணத்தை மேற்கொள்ள வேண்டும்.
அந்த சந்நியாஸத்தைப் பற்றிய விளக்கத்தையும் இந்தப்பகுதியில் பேசப்படுகிறது.

அவித்யா சூத்திரத்தில் விஷயமாக இருப்பது ஆத்மா அக்ஞானம், வேத ஞானம். வேற்றுமைகள் அறிவதே அவித்யாவின் விஷயம்.
இந்த உலகத்தைப் பற்றிய அறிவே அவித்யா. கர்மத்தினால் அடையபடுவதுதான் இந்த உலகம், இதுவே சம்சாரம்,
அவித்யாவின் பலன் சம்சாரம். சம்சாரம் இரண்டு வகையாக பிரிக்கப்படுகிறது அவைகள்,
1. உத்க்ருஷ்ட சம்சாரம் – இன்பத்தை கொடுக்கும் உலகங்கள், காலத்தால் வரையறைக்கப்பட்டது, ஞான கர்மத்தால் இந்த சம்சாரத்தை அடைகிறார்கள்.
2. நிகிருஷ்ட சம்சாரம்: நாம் இயற்கையாக செயல்பட்டால், சுபாவமாக செய்தால்,
அசாஸ்திரீய கர்மங்களினால் வரும் பலன்களை வேண்டாம் என்ற வைராக்கியம் வருகிறதோ
அது அவரை பிரம்மவித்யாவிற்கு தகுதியை கொடுக்கிறது. ஆத்மாவைப்பற்றி பேசும்போது மகிழ்ச்சி இருக்க வேண்டும்.
அனாத்மாவைப் பற்றி பேசும்போது மகிழ்ச்சி இருக்கக்கூடாது. இந்த நிலைதான் வைராக்கியம் என்று அறிந்து கொள்ளலாம்.

சந்நியாஸ விசாரம்:
சந்நியாஸம் சிரவனத்துக்கு ஒரு அங்கம் என்ற எந்த அடிப்படையில் சொல்கிறார். கிரகஸ்தாசிரமம்: வைதீக கர்மம்.
தர்ம-அதர்ம ஞானத்தை கடைப்பிடிக்க வேண்டிய ஆசிரமம். முழு நேர கர்மத்தில் ஈடுபடுவது, பணம் சம்பாதித்தல்,
குடும்பத்தை பராமரித்தல், குழந்தைகளை வளர்த்தல் போன்றவை.
ஆசிரமத்தில் உள்ள கர்மங்கள் காலத்திற்கேற்றவாறு மாறி வருகின்றன.
ஸ்தானமும், கடமையும் சேர்ந்து போக முடியாத நிலை இப்பொழுது இருக்கிறது.

சந்நியாஸம் என்ற ஆசிரமத்திற்கு சென்று அங்கு கடைப்பிடிக்க வேண்டிய சாதனைகளைத் தான்
மோட்சம் அடைய எந்த ஆசிரமத்தில் இருந்தாலும் பின்பற்ற வேண்டும். சந்நியாஸத்தில் கடைப்பிடிக்க வேண்டிய சாதனைகளை
இல்லறத்திலிருக்கின்றவர்கள் பின்பற்றினாலும் அதனுடைய பலன்களை அடையலாம்.
சந்நியாஸத்தினால் மோட்சம் அடையலாம் என்று எங்கும் சொல்லப்படவில்லை.
மோட்சத்திற்கு ஆத்ம ஞானம்தான் அவசியம். ஜீவன் முக்தன் நிலையை அடைந்ததும்
அவன் எந்த ஆசிரமத்தையும் சேர்ந்தவனல்ல, அவன் பிரம்மமாகவே இருக்கிறான்.

யாக்ஞவல்கியர் இல்லரத்திலிருந்தே ஞானத்தை அடைந்தவர், ஞான நிஷ்டைக்காக சந்நியாஸத்திற்கு செல்கிறார்.
ஜனக ராஜா ஞான நிஷ்டையை இல்லறத்திலிருந்தே அடைந்தவர்.

பிரம்ம ஞானத்திற்கு சரியான, நேரிடையான சாதனம் சிரவணம். சந்நியாஸத்தின் ஒரு அங்கமாக சிரவணம் இருக்கிறது.
நோய் குணமடைவதற்கு எடுத்துக் கொள்ளும் மருந்து சரியாக செயல்பட உணவுக்கட்டுபாடு என்ற அங்கம் இருப்பதைப்போல
இந்த சிரவணத்தை சாதன சதுஷ்டயத்துடன் பின்பற்றினால் மோட்சம் அடைய உதவியாக இருக்கிறது.
ஞானம் மோட்சத்தைக் கொடுக்கும், அந்த ஞானத்துக்கு சாதனை சிரவணம்.
அந்த சிரவணத்துக்கு சம, தம வைராக்கியம் போன்றவைகள் உதவியாக இருக்கும்.

கேள்வி: கர்மம் ஏன் சாதனையாக இருக்கக்கூடாது? ஞானம் மட்டும்தான் இருக்க வேண்டும்?
பதில்:
கர்மத்துக்கு பலன் ஏற்கனவே உபநிஷத்தில் நிச்சயம் செய்யப்பட்டிருக்கிறது. மோட்சம் என்பது கர்மத்தின் சாத்தியமாக சொல்லப்படவில்லை.
கர்மத்தின் பலன் அதிகபட்சமாக பிரம்மலோகம் வரை செல்ல லாம். இவ்வாறாக கர்ம பலன் நிச்சயபட்டிருப்பது பிறகு எப்படி இந்த கேள்வி கேட்கிறாய்?
கர்மம் எதிலிருந்து உற்பத்தியாகிறது என்று ஆராய்ந்து பார்த்தால், அது அவித்யாவில் இருந்துதான் ஆரம்பமாகும்.
எனவே அவித்யாவிலிருந்து தோன்றிய கர்மம் அதன் பலன் அவித்யாவை தாண்டிச் செல்லாது.
கர்மம் ஒரு கட்டத்தில் தடையாகவே இருக்கும். விசாரத்தின் பலனாக அடையும் ஞானத்தை கர்மம் செய்து அடைவேன்
என்று முயற்சிப்பது அதை அடைய விடாமல் தடுக்கிறது (பிரதிகூலம்) கர்மம் அனாத்மாவில் அபிமானத்தை வைக்கிறது.
கர்மத்தின் மூலம் சித்தஸுத்தியடைந்து, விசாரம் என்கின்ற சாதனையை பின்பற்றுகிறோம்.
அப்போது கர்மத்தை விட்டுவிட வேண்டும். சந்நியாஸம் என்பது கர்மத்திலும் அதன் பலனிலும் இருக்கும் பற்றை விடுவது

கேள்வி: ஏன் இரண்டையும் ( கர்மத்தையும், ஞானத்தையும் ) வைத்துக் கொள்ளக்கூடாது?
பதில்: அது முடியாது.

கேள்வி: யாராலும் ஆசையை விட முடியாது. வைராக்கியம் என்பது யாரிடமும் ஏற்படாது.
எனவே உலக இன்பங்களையும் அனுபவித்துக்கொண்டு, அதே சமயத்தில் மோட்சத்தையும் அடையலாமே?
பதில்: பிருஹதாரண்ய உபநிஷத் படிக்காததினால் இவ்வாறு கேட்கிறாய். ஒருவனால் எல்லாவிதமான ஆசைகளையும் துறக்க முடியும் என்று உறுதி செய்கிறது.
அனுபவத்தில் இந்த மாதிரி ஆசையை துறந்து வைராக்யத்துடன் இருப்பவர்களை காண்கின்றோம். சாத்வீக எண்ணங்களுடன் இந்த மாதிரி இருக்க முடியும்.
ஸ்ருதி பிரமானம் – இந்த ஸமுச்சாயத்தை ஏற்றுக் கொள்வதில்லை. வைராக்கியம் வந்தவுடன் கர்மத்தை விட்டு விடலாம் என்று சொல்கிறது.
ஸ்மிருதி பிரமானம் – வியாசர் எழுதிய நூலில் வேதம் சொல்கின்ற கர்மத்தை, வைராக்கியம் வந்தவுடன் விட்டுவிடு என்று கூறப்பட்டிருக்கிறது
யுக்தி பிரமானம் – தர்க்க பிரமானம் – அவித்யாவினால் கர்மத்தை செய்து கொண்டிருக்கிறோம்.
அத்யாஸமும், அக்ஞானமும் நீங்கிய நிலை ஞானம் அடைதல், அவித்யா நம்மை விட்டு சென்றால் கர்மத்தையும் விட்டு விடலாம்.
கர்ம ஸ்வரூபம் வேறு, ஞான ஸ்வரூபம் வேறு.
ஸ்ருதி லிங்காத் – ஸ்ருதியில் சொல்லப்பட்ட கதையிலிருந்து நாம் ஏதாவது ஒன்றை அனுமானம் செய்யலாம்.
இதற்கு ஸ்ருதி லிங்கத்தை என்று பெயர். இந்தக் கதையில் யாக்ஞவல்கியர் வீட்டை விட்டு போக எண்ணியவர்,
கர்மத்தையெல்லாம் விட்டு விட்டு செல்கிறார். மனைவிக்கு ஞான உபதேசம், பெண்கள் கர்மத்திற்கு அதிகாரி கிடையாது.
இதனால் கர்மத்தை மோட்சத்திற்கு தேவையில்லை என்று தெரிகிறது.
எவனொருவன் தன்னை பிராமணனுக்கு வேறாக நினைக்கிறானோ, சத்திரியன் அல்ல என்று நினைக்கிறானோ,
அவன் சம்சாரி பரிதாபத்திற்குரியவன். எல்லாமே நான் என்று நினைப்பவன் மோட்சத்தை அடைகிறான்.
இவ்வாறு அபிமானம் இருந்தால்தான் கர்மம் செய்ய முடியும். அபிமானமற்றவன் கர்மத்தை கைவிட்டவனாகிறான்.
எனவே ஞான-கர்ம ஸமுச்சயம் நடக்காது. கர்மம் வேண்டும் என்றால் அனாத்மாவில் அபிமானம் இருக்க வேண்டும்.
மனம் தூய்மையடைந்தவுடன் கர்மத்தை விட்டுவிட வேண்டும்.
இந்த ஸமுச்சயம் இரண்டு வகையாக இருக்கிறது. ஒன்று சம ஸமுச்சயம் மற்றொன்று கிரம ஸமுச்சயம்.
சம ஸமுச்சயம் என்பது ஒரே நேரத்தில் இரண்டையும் செய்தல்.
கிரம ஸமுச்சயம் என்பது படிப்படியாக கர்மத்திலிருந்து விசாரத்திற்கு வருதல்,
அதாவது சித்தஸுத்தி அடையும் வரை கர்மம், அதற்கு பிறகு கர்மத்தை விட்டுவிட வேண்டும், விசாரத்திற்கு செல்ல வேண்டும்.

ஸ்லோகம்:1
உத்யாஸ்யன்வா – உயர்ந்த நிலையான சந்நியாஸ ஆசிரமத்திற்கு செல்ல போகிறேன்.
அரே அஹம் அஸ்மாத் ஸ்தானாத்3 – இந்த இல்லறத்திலிருந்து
தே அன்யா காத்யாயனி அந்தம் – உன்னிடத்திலிருந்தும், காத்யாயனியிடத்திலிருந்தும் இந்த கணவன் என்ற உறவை
முடித்துக் கொள்ளப்போகிறேன். அதற்கு முன் என்னுடைய சொத்துக்களை இரண்டு பேருக்கும் சமமாக பிரித்துக்கொடுக்கிறேன். என்று கூறினார்.

ஒருவன் சந்நியாஸத்திற்கு செல்ல வேண்டுமென்றால் தாய், தந்தை, மனைவி மற்றும் புத்திரர்கள் இவர்களிடம் அனுமதி பெற வேண்டும்.
தம் சுயநலத்திற்காக அனுமதிக் கொடுக்கவில்லயென்றால் சொல்லாமல் சென்று விடலாம்.
இல்லறத்திலிருந்தும் ஞானத்தை அடையலாம். ஆனால் அதன் பலனை ஞான நிஷ்டையின் மூலம்தான் அடைய முடியம்
அதற்காகத்தான் யாக்ஞவல்கியர் சந்நியாஸத்திற்கு செல்கிறார்.

ஸ்லோகம்:2
மைத்ரேயி யாக்ஞவல்கியரை பார்த்து, “இந்த செல்வம் நிறைந்த உலகம் முழுவதும் எனக்கு கிடைப்பதாக இருந்தால்,
அதனால் எனக்கு மனநிறைவும், மரணமற்ற நிலையையும் அடைய முடியுமா?” என்று கேட்டாள்.
அதற்கு முடியாது என்று அவர் பதிலளித்தார். அத்க செல்வங்களையுடையவன் வாழ்க்கை எப்படி இருக்குமோ,
அவ்வாறுதான் உன்னுடைய அந்த வாழ்க்கையும் இருக்கும். செல்வத்தில அம்ருதத்துவத்தை அடையலாம் என்ற
நம்பிக்கையை வைத்திருக்காதே என்று மேலும் கூறினார். அதற்கான வாய்ப்பே கிடையாது என்று உறுதியாக கூறினார்.

விசாரம்: செல்வத்தால் மோட்சத்தை அடையும் வாய்ப்பு கிடையாது:
செல்வத்தால் போக்யத்தை வாங்கலாம். இன்பம் தரும் பொருட்கள் வாங்கலாம். பொருட்கள் மட்டும் இருந்தால் போதாது,
அனுபவிப்பவனாகவும், அனுபவிக்கக்கூடிய கரணமும் இருக்க வேண்டும்.
செல்வம் செயலில் ஈடுபட வைக்கிறது. இந்த செயலின் பலந்தான் நம்மை போக்தாவாக மாற்றும்.
இந்த நிலையில் பாவ-புண்ணியத்தை செலவழித்து போகத்தை அனுபவிக்கலாம்.
செல்வமானது நமது குணத்தையோ, ஸம்ஸ்காரத்தையோ மாற்றாது.
செல்வமானது சம்சாரியாகத்தான் நம்மை வைத்திருக்கும்.
எவனொருவன் இன்பத்தை அனுபவிக்க வேண்டும் என்று வேட்கையுடன் இருக்கிறானோ அவனே போக்தா.
எந்த மனம் இன்பத்தை அனுபவிக்க வேண்டும் என்று நினைக்கிறதோ அது நிறைவான மனதிலிருந்து உருவாகுவதில்லை,
குறையுள்ள மனதிலிருந்துதான் வருகிறது. குறை இருக்கிற இட த்திலிருந்துதான் ஆசைகள் வளர்கின்றது.
போக்தாவாக இருக்க வேண்டும் என்ற எண்ணமே சம்சாரியாகத்தான் வைத்திருக்கும்.
மனதில் இருக்கின்ற அடிப்படை குறைகளான பயம், நிறவின்மை போன்றவைகள் பணத்தால் நீக்க முடியாது.
நமது மனம் பூரணமான வஸ்துவிடம் அபிமானம் வைத்தால்தான் அது மனநிறைவை கொடுக்கும்.

ஸ்லோகம்:3
மைத்ரேயி, ‘எந்த செல்வத்தால் நான் மோட்சத்தை, அம்ருதத்தை அடைய முடியாதோ அதை நான் வைத்துக் கொண்டு
என்ன செய்யப்போகிறேன். எனவே எந்த ஒன்றை அறிந்தால் அதனால் மோட்சத்தை அடைய முடியுமோ
அதை எனக்கு உபதேசம் செய்யுங்கள்” என்று யாக்ஞவல்கியரிடம் கேட்டாள்.

விசாரம்: எந்த அறிவினால் இந்த செல்வத்தையெல்லாம் விட்டு விட்டு செல்கிறீர்களெ அதை உபதேசம் செய்யுங்கள்.
ஒன்றை வேண்டாம் என்று விலக்க முடிவதற்கு காரணம் அதை விட உயர்ந்த மேலான ஒன்றை அடைவதால்தான்.
பிறகு ஒன்றை விடும்போது, அதை விட மேலான வேறொன்றை அடையும் போதுதான் அதை விட முடியும்.
எந்த ஒரு அறிவினால் அனைத்தையும் துறந்து விட்டு செல்கிறீர்களோ அந்த அறிவை யாசிக்கிறாள் மைத்ரேயி.
இந்த கேள்வியை பார்க்கும்போது அவள் வேதாந்த உபதேசத்திற்உ தகுதியானவள் என்று உறுதிபடுத்தப்படுகிறது.
நம் லட்சியத்திற்கு எது சரியான சாதனை என்று அறிந்து கொள்ள வேண்டும்.
அவளது விவேகமும், வைராக்கியமும் அவள் கேட்ட இந்த இரண்டு கேள்விகளில் வெளிப்படையாக தெரிகிறது.
அதே சமயம் அறிவை அடைய வேண்டும் என்ற அவளிடத்தில் உறுதியிருக்க வேண்டும். இது முமுக்‌ஷுத்வத்தை குறிக்கிறது.

ஸ்லோகம்:4
யாக்ஞவல்கியர் அவளைப் பார்த்து, “பிரியமானவளே! இதுவரை என்னிடம் பிரியமாகவே இருந்தாய்,
இப்போதும் எனக்கு பிர்யமானதையே கேட்கிறாய். இங்கு வந்து அமர்ந்து கொள்.
உனக்கு அந்த தத்துவத்தை, உண்மையை விளக்கப் போகின்றேன். என்னுடைய உபதேசத்தை நிதித்யாஸனம் செய்ய வேண்டும்.

விசாரம்: குருவானவர் சிஷ்யனை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
வேதாந்தத்தை கேட்கும் போது சிஷ்யன் சிரத்தையோடு கேட்க வேண்டும்.
குருவும் சிரத்தையோடு கற்றுக் கொடுக்க வேண்டும்.
இங்கே மைத்ரேயி சிரத்தையுடன் யாக்ஞவல்கியரிடம் கேள்வி கேட்டாள். அவரும் அன்புடன் சிஷ்யையாக ஏற்றுக் கொண்டாள்.
ஸ்லோகம்:5
இந்த மந்திரத்தில் நான்கு கருத்துக்கள் கூறப்பட்டிருக்கிறது.
1. ஆபாஸ சாத்திய தரிசனம் – வாழ்க்கையில் அடைய வேண்டிய லட்சியங்கள் என்று நாம் நினைப்பதெல்லாம்
உண்மையில் லட்சியமல்ல என்று எடுத்துக் காட்டுவது
2. சாத்திய தரிசனம்: எது நம்முடைய உண்மையான, பரம லட்சியமாக எடுத்துக் கொள்ள வேண்டியது.
3. சாத்திய பிராப்தி உபாயம்: அந்த சாத்தியத்தை அடையும் வழியை கூறுதல்
4. சாத்தியத்தின் தன்மை, மோட்ச ஸ்வரூபம், சாத்திய ஸ்வரூபம். அதனால் அடையும் பலன்.

ஆபாஸ சாத்திய தரிசனம்
நம்மையறியாமலே நாம் வேண்டாததைதான் உண்மையான லட்சியம் என்று நினைத்துக் கொண்டிருக்கும் நிலையை,
பொய்யான லட்சியம் என்று விலக்கி, பின்பு உண்மையான லட்சியமானது விளக்கப்படுகிறது.

நாம் ஏதோ ஒன்றை எதிர்ப்பார்த்து ஏதோ ஒன்றை லட்சியமாக கொண்டு செயல்படுகிறோம்.
நாம் நிச்சயமாக அடைவோம் என்று கருதும் நினைப்பானது லட்சியமாக தோற்றமளிக்கிறது என்று இங்கு விளக்கப்படுகிறது.
எல்லோரும் செல்வத்தைத்தான் லட்சியமாக்க் கொண்டு செயல்படுகிறார்கள்..
பிறகு இன்பம் தரக் கூடியதும், வசதியை தரக்கூடியதுமான பொருளை அடைவதில் செயல்படுகிறோம்.
இந்த பணத்தை அடைவது லட்சியமாக கொண்டிருப்பதற்கு காரணம்,
இது எனக்கு மகிழ்ச்சியையும், சுகத்தையும் கொடுக்கும் என்ற எதிர்ப்பார்ப்பினால்தான்.
பணம் அதிகம் வந்ததும் உறவினர்களின் அன்பை இழந்து விடுவார்கள்.
தாம் சேர்த்து வைத்த பணத்தை இவர்களும் அனுபவிப்பார்களே என்ற பொறாமை வந்து விடும்.
அதனால் அவர்களின் உறவை துண்டித்துக் கொள்வார்கள். எனவே எவ்வளவுதான் பணம் சம்பாதித்தாலும், நாம் எதிர்ப்பார்ப்பது அன்புதான்.
தன் மீது எப்போதும் அன்பு செலுத்துபவர்கள் இருக்க வேண்டும். தான் அன்பு செலுத்தக்கூடிய மற்றவர்கள் அருகில் இருக்க வேண்டும்.
நாம் வாழ்க்கையில் செய்யும் மிகப்பெரிய தவறு பணத்தை சம்பாதிப்பதையே லட்சியமாக கொண்டு தான் எதிர்ப்பார்க்கும் அன்பை இழக்கிறார்கள்.
அன்பு செலுத்த ஆட்கள் இல்லாமல் நிம்மதியில்லாமல் இருக்கிறார்கள்.
அன்புதான் லட்சியமாக கொள்ள வேண்டும் ஆனால் பணத்தை லட்சியமாக கொண்டு வாழ்க்கையை வீணடிக்கிறார்கள்.
இன்பத்தை பணத்தால் அடையலாம் என்ற நினைப்பை ஒழித்து நம் மீது அன்பு செலுத்தி, நாம் அன்பு செலுத்தக்கூடிய
உறவினர்கள், நண்பர்கள் வேண்டும் என்ற லட்சியத்தை உடையவர்களாக இருப்பவர்களுக்குத் தான் யாக்ஞவல்கியரின் உபதேசம் ஆரம்பமாகிறது.
ஆனாலும் இது நம்மை ஒரு நிலைவரைதான் பக்குவபடுத்தும்.

இந்த அன்பு என்ற உணர்விலும், ஏற்றத்தாழ்வுகள் இருக்கிறது. இதுவும் லட்சியமாக கொள்ளக் கூடாது.
நாம் நேசிக்கும் எந்த உயிரும் அநித்தியமானதுதான், நாமும் நித்தியமானவர்கள் இல்லை.
நாம் செலுத்தும் அன்பும் சில நிபந்தனைகளோடுதான் இருக்கிறது. நல்ல குணம், நமக்கு நெருங்கியவர்கள் போன்ற
நிபந்தனைகளோடுதான் நாம் அன்பு செலுத்திக் கொண்டிருப்போம்.
இந்த அன்பும் நிலையற்றது, முடிவுள்ளது இறுதியில் துயரத்தைக் கொடுக்கும்,
எனவே இதுவும் ஆபாஸ சாத்தியம், சாதனையாக வேண்டுமானால் இருக்கலாம், உண்மையான சாத்தியம் கிடையாது.

இந்த உண்மையை புரிந்து கொண்டால், அந்த அன்பில் நமக்கு வைராக்கியம் ஏற்படும்.
அதாவது அதைச் சார்ந்து இல்லாதவனாக இருப்போம். அன்புக்கு அடிமையாக மாட்டோம்.
ஆகவே நாம் கொடுக்கும் அன்பானாது, வாங்கும் அன்பானது முழுமையானதாக இருக்காது, அப்படி இருக்கவும் முடியவும் முடியாது.
இந்த அறிவினுடைய பலனால் இந்த அன்பானது நமது சாத்தியமாக இருக்க முடியாது என்று அடையும் அறிவுதான்.

உண்மையில் யாரும் யாரையும், எதையும் முழுமையாக நேசிக்க முடியாது.
நாம் யாரையாவது நேசிக்கிறோமென்றால் அவர்களிடமிருந்து நாம் அனுபவிக்கும் அன்பு, மகிழ்ச்சி, மனநிறைவு போன்றவைகளால்தான்.
இவைகள் கிடைக்கவில்லை என்றால் நாம் அவரை நேசிக்க மாட்டோம். ஆகவே நாம நமக்காகத்தான் பிறரை நேசிக்கிறோம்.
நம்முடைய நட்பில், உறவில் மற்றவர்கள் மகிழ்ச்சி அடைவதால்-தான் அவர்களும் நம்மை நேசிக்கிறார்கள்.
யாரும் யாரையும் நிபந்தனையின்றி நேசிக்க முடியாது. இந்த அறிவினால்தான் நமக்கு அடைவது வைராக்கியமல்ல.
நான் யாரையும் நிபந்தனையின்றி நேசிக்க முடியாது, அதே மாதிரி மற்றவர்களாலும் என்னை நிபந்தனையின்றி நேசிக்க முடியாது
என்ற அறிவைத்தான் நாம் அடைய முடியும். இந்த வைராக்கியத்தின் விளைவு அனாத்மாவிலிருந்து நிவிருத்தி.
அனாத்மாவிலிருந்து கிடைக்கும் சிறிய இன்பங்களைத்தான் அடைகிறோம்.
ஆனால் முழுமையான இன்பத்தை அடைவதில்லை இதுவே நம்முடைய லட்சியமாக, சாத்தியமாக இருக்க வேண்டும்.
எனவே ஆத்மாதான் நாம் அடைய வேண்டிய முடிவான சாத்தியமாக இருக்கிறது என்று தெரிய வரும்.

விசாரம்: [யாரும் நம்மை நேசிக்க முடியாது; நாமும் யாரையும் நேசிக்க முடியாது.]
1. எது என்னுடைய விருப்பத்திற்குப்பட்டதோ அதுதான் என் லட்சியமாக இருக்கும். உதாரணம்: உணவு.
2. எதை நாம் உண்மையிலே விரும்புகிறோம்? நாம் விரும்புவது ஆனந்தம், சுகம். இதை இரண்டும் சேர்த்து பார்த்தால்
ஆனந்தத்தை அடைவதுதான் நம் லட்சியமாக, சாத்தியமாகிறது.
3. இந்த ஆனந்தம் எங்கேயிருக்கிறது? அது இருக்குமிடம் ஆத்மா. அதுதான் ஆனந்த ஸ்வரூபம், நாமே ஆனந்த ஸ்வரூபம்.
4. இப்போது நான்தான் அதாவது ஆத்மாதான் சாத்தியமாகிறது.

நான் என்னைத்தான் நேசிக்கிறேன். இது எல்லோரிடத்திலும் இயற்கையாக இருக்கிறது மற்றதெல்லாம் காலத்தால் என்னால் நேசிக்கப்படுகிறது.
எல்லா மனிதர்களும் விதிவிலக்கில்லாமல் தன்னைத்தான் நேசிக்கிறார்கள். இது சாமான்யமாக, இயற்கையாக, நிபந்தனையற்றதாக இருக்கிறது.
நான் என்னைத்தான் விரும்புகிறேன் எனவே நானும் ஆனந்தமும் ஒன்றேதான்.
அதாவது நான் ஆனந்த ஸ்வரூபம் நான் என்பது என்னுள்ளே இருக்கும் ஆத்மாதான்.

சில சமயங்களில் தன் மீது வெறுப்பும் வருகிறது, சிலர் தாங்க முடியாத துயரத்தால் புத்தியின் தவறான முடிவால் துயரத்திலிருந்தோ,
அவமானத்திலிருந்து விடுவித்துக் கொள்வதற்காக தங்கள் உயிரையே மாய்த்துக் கொள்கிறார்கள்.
அதுபோல நம் மீதுள்ள வெறுப்பானது நம் மீதுள்ள பற்றைத்தான் நிலை நாட்டுகிறது.
நாட்டுக்காக உயிரைத் தியாகம் செய்வதும் நம் மீதுள்ள அதீத பற்றுதான் காரணம்.

நாம் உண்மையில் இன்பம் தரும் பொருட்களை விரும்புவதில்லை,
அது கொடுக்கும் இன்பத்தைத்தான் விரும்புகிறோம், அதுவே நமது சாத்தியமாக இருக்கிறது.

மந்திர விளக்கம்:
பர்த்யூ காமாய: கணவனின் பொருட்டு, கணவனின் விருப்பத்திற்குரியவனாக இருப்பதில்லை.
தனக்கு பயன் தருவதாக இருப்பதால் கணவன் விருப்பத்துக்குரிய-வனாகிறான். கணவன் மனைவிக்காக அவளை விரும்புவதில்லை.
தனக்கு இன்பம் தருவதால் மனைவி விருப்பத்திற்குரியவளாக இருக்கிறாள்.
அதேபோல நம்முடைய குழந்தைகளையும், சொத்துக்களையும், நற்பண்புகளுடைய சான்றோர்களையும்,
நாட்டை ஆள்பவர்களையும், அழகிய இடங்களையும், நாட்டையும், வழிபடும் தேவர்களையும், மற்ற உயிர்களையும்,
மற்ற அனைத்தும் நாம் விரும்பும் நோக்கம், அவைகளிடத்திலிருந்து அடையும் இன்பத்திற்காகவும், பயனுக்காகவும்தான்.
பலன் இல்லையென்றால் அவைகளே நமக்கு துயரத்தைக் கொடுப்பதாக இருக்கும்.
இதிலிருந்து நமது சாத்தியம் அனாத்மா அல்ல என்று நன்கு விளங்குகிறது.

ஆத்மாதன் நாம் அடையத்தக்கது, த்ருஷ்டவ்ய – பார்க்கபடவேண்டியது;’
அபரோக்‌ஷா ஏதவ்யஹ – ஆத்மாவை அனுபவப்பூர்வமாக அறியப்பட வேண்டும். அதை ஒரு பொருளாக இல்லாமல் அறிய வேண்டும்.
நானே ஆத்மா என்று அறிய வேண்டும். ஆத்மாதான் நாம் அறிவதற்கு யோக்தையான ஒன்று.
இதுதான் நாம் அடைய வேண்டிய சாத்தியம் என்று குறிப்பிடப்படுகிறது.

இந்த சாத்தியத்தை அடைவதற்கு ஸ்ரோத்ரம் (கேட்டல்), மந்தம் (மனனம்), நிதித்யாஸனம் (சிந்தித்தல்)
ஆகியவைகள் சாதனங்களாக சொல்லப்பட்டு இருக்கின்றது.

आत्मनस्य श्रोतव्यो- சிரவணம்
ஆத்மாவை கேட்க வேண்டும் என்றால் அதை அடையும் அறிவை உபதேசிக்கின்ற வேதாந்தத்தை குருமுகமாக கேட்டறிய வேண்டும்.
உன்னுடைய முகத்தைப் பார் என்றால், முகத்தை நிலைக்கண்ணாடியில் சென்று பார்ப்பார்.
அவர் முகத்தை பார்ப்பதற்கு நிலைக்கண்ணாடி என்ற கருவி தேவைப்படுவதைப் போல ஆத்மாவை அறிய
வேதாந்த பிரமானம் குருமுகமாக கேட்டறிய வேண்டும். ஆத்மாவை அடைதல் பரமானந்தத்தை அடைந்ததைப் போன்றதாகும்.
இதுவே நம் லட்சியமாக இருக்க வேண்டும். மஹா வாக்கியத்தை புரிந்துக் கொள்ளும் வரை வேதாந்தத்தை கேட்க வேண்டும்.
இதனால் அடையும் பலனான அபரோக்‌ஷ ஞானம் (தெளிவான ஞானம்) கிடைத்து விடும்.

आत्मनस्य मन्तव्यो – மனனம்
வேதாந்தத்தை கேட்ட பின்னர் அதை மீண்டும் மீண்டும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
ஆத்ம ஞானத்தை அடைவதற்கு இரண்டு தடைகள் (பிரதிபந்தம்) உண்டு.
அவைகள் சந்தேகம் (சம்ஷயம்), தப்பாக புரிந்து கொள்ளுதல் (விபர்யயம்) என்று கூறுவர்.
அடைந்த அறிவில் சந்தேகம் வந்தால் அது அறிவுக்குரிய தகுதியை இழந்து விடும்.
இந்த சந்தேகத்தை யுக்தியை பயன்படுத்தி நம்முடைய அறிவை பிரதானமாக வைத்து உபநிஷத்தின் உதவியைக் கொண்டு நிவர்த்தி செய்ய வேண்டும்.
சந்தேகம் வரக் காரணம் நம்முடைய அனுபவமேயாகும். நாம் அனுபவிக்கும் இன்ப-துன்பங்கள் அனாத்மாவுக்குத்தானேயன்றி
ஆத்மாவுக்கல்ல என்று உறுதி செய்து கொள்ள வேண்டும். மற்ற மதத்தின் கருத்துக்களால் அடையும் சந்தேகங்களையும் நீக்கி
நம்முடைய அறிவே சரியானது என்று உறுதியக இருக்க வேண்டும்.

आत्मनस्य निदिध्यासितव्यॊ – நிதித்யாஸனம்
நாம் அடைந்த அறிவில் நிலையாக நிற்க முடியாத நிலை ஏற்படும். இந்த அறிவே சுபாவமாக வேண்டும்.
இதற்கு நிதித்யாஸனம் செய்ய வேண்டும். அதாவது அடைந்த அறிவிலே நிலையாக நிற்க பழக வேண்டும்.
இந்த ஞானத்தின் பலனானது பயம், வெறுப்பு, விருப்பு, பொறாமை போன்ற தீய குணங்களெல்லாம் நீங்கி
புதியதாக ஞானத்தை அடைந்ததைப் போல் உணர்வோம்.
அடைந்த ஞானத்தை அடிப்படையாகக் கொண்டு நம்மிடையே உள்ள தீய எண்ணங்களையெல்லாம் நீக்கிட வேண்டும்.

விசாரம்: तव्य – வேண்டும்
ஞான காண்டத்தில் இப்படித்தான் செய்ய வேண்டும் என்ற நிபந்தனை எதுவும் கிடையாது.
ஆனால் கர்ம காண்டத்தில் சொல்லப்பட்டிருப்பதை செய்ய வேண்டும். விதி வாக்கியங்கள் பொதுவாக கிடையாது.
அப்படியிருந்தால் அதை எப்படி எடுத்துக் கொள்ள வேண்டும் அல்லது எப்படி புரிந்து கொள்ள வேண்டுமென்றால்–
आत्मा द्रुष्टव्य : இது விதி வாக்கியம் என்று சொல்ல முடியாது.
இங்கு செயல்படு என்று ஆணையிடவில்லை. ஆத்மாதன் உனது லட்சியம், அறியப்படவேண்டியது என்று சொல்வது விதி வாக்கியமாகாது.
கர்ம விவகாரம் என்பது வேறு, ஞான விவகாரம் என்பது வேறு. ஞான விவகாரத்தில் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பே கிடையாது.
கர்மம் என்று வந்துவிட்டால் கர்த்தாவுக்கு தேர்ந்தெடுக்கும் வாய்ப்புண்டு. விதி எங்கே பிரயோகிக்க முடியுமென்றால்,
எந்த இடத்தில் நமக்கு தேர்ந்தெடுக்க வாய்ப்பு இல்லையோ அந்த இடத்தில் பிரயோகிக்கலாம்.
எனவே ஞான காண்டத்தில் திருஷ்டவ்யா என்ற சொல் விதி வாக்கியம் இல்லை, விதி சாயா என்று கூறலாம்.
ஞானத்தால் அடையும் பலன் அறியாமை விலகல் (அவித்யா நிவிருத்தி). இந்த ஒரே ஒரு பலன்தான் அடைய முடியும்.
கர்ம காண்டத்தில் விளையும் பலனில் வேற்றுமைகள் (தாரதம்யம்) இருக்கலாம்.
அதை செய்பவனின் திறமையை பொறுத்து பலனின் அளவும் இருக்கும்.

மறுப்பு: உபநிஷத் ஆத்மாவை அறிவதற்கு சில சாதனங்களை கூறுகின்றது அவைகள் விதி வாக்கியமாக தோன்றுகிறதே?

பதில்: பசியெடுக்கும் குழந்தை உணவு கேட்டால் அப்போது சாப்பிடு என்ற கட்டளையிட அவசியமில்லை.
அது போல மோட்சமடைய வேண்டும் என்ற ஆவலுடன் வருபவர்களுக்கு சாதனங்களை சொல்வது கட்டளையாகது.

பூர்வ மீமாம்ஸிகளின் மூன்று விதமான விதி வாக்கியங்கள்:-
1-அபூர்வ விதி:
நமக்கு தெரியாத ஒன்றை கட்டளையிட்டு சொல்வது. வேறெதிலும் சொல்லாத்து.
இந்த வாக்கியங்களை வேறெந்த வழியாகவும் அறிந்து கொள்ள முடியாது உதாரணமாக
யாகத்துக்கு பயன்படுத்தும் நெல்லை முதலில் சுத்திகரணம் (ப்ரோக்‌ஷனம்) தூய்மைபடுத்தி உபயோகிப்பார்கள்.
இந்த கட்டளை வேறெங்கும் அறிய முடியாது.
2-நியம விதி:
சூழ்நிலைக்கேற்ப ஒரு செயலை பலவிதமாக செய்யலாம் என்று சொல்லப்பட்டு இருக்கிறது.
இப்படித்தான் செய்ய வேண்டும் என்று சொல்லும் வாக்கியம் நியம விதி.
(உ-ம்) யாகத்திற்கு வைத்திருக்கும் நெல்லிருந்து உமியை பிரித்து அரிசியை எடுக்க வேண்டும்.
அதை உலக்கைக் கொண்டு இடித்துத்தான் பிரித்தெடுக்க வேண்டும் வேறெந்த முறையிலும் பிரித்தெடுக்க கூடாது. இது நியும விதி வாக்கியம்.
3-பரிஸங்க்யா:
ஏகாதசி அன்றைக்கு சாப்பிடக்கூடாது என்ற விதி இருக்கிறது. சில பேருக்கு முழுநாள் உணவு உண்ணாமல் இருக்க முடியாது.
இந்த நேரத்தில் பழத்தை சாப்பிடலாம். பழத்தை தவிர வேறெதையும் உட்கொள்ளக்கூடாது என்று உரைப்பது இந்த விதி.
உண்மை பேசு என்ற வாக்கியம் பொய் பேசாதே என்று உணர்த்துகிறது இதுதான் பரிஸங்க்யா விதி.

சிரவணம், மனனம், நிதித்யாஸனம் இவைகள் என்ன விதி?
இந்த சாதனங்களை பற்றி தெரியாதவர்களுக்கு இது அபூர்வ விதியாக எடுத்துக் கொள்ளலாம்.
மோட்சத்தையடைய வேண்டும் என்ற லட்சியத்தை கொண்டவர்களுக்கு இந்த சாதனங்களை பற்றி தெரிந்திருக்கலாம்.
இதைத் தவிர வேறு முறையிலும் அடைய முயற்சி செய்வார்கள். அதனால் இவைகளை நியம விதிகளாக எடுத்துக் கொள்ளலாம்.
பரிஸங்க்யா விதி இதற்கு பொருந்தாது.

பிரம்ம ஞானத்தின் பலன்:
ஆத்மனஹ தர்ஷணஹ: ஆத்மாவை லட்சியமாக கொண்டு சிரவணம் செய்து முடித்து பிறகு
மனனத்தையும், நிதித்யாஸனத்தையும் முடித்து விட்டவுடன் அடையும் ஆத்ம ஞானத்தின் பலன்
நமக்கு தெரிகின்ற அனைத்தையும் அறியப்பட்டதாகிறது. இது ஆத்மாவே அனைத்துமாக இருக்கிறது என்பதை உணர்த்துகிறது.
எப்படி களிமண்ணை அறிந்தால் அதிலிருந்து உருவான அனைத்து பொருட்களையும் அறிவது போலாகுமோ அது போல
ஆத்மாவே அனைத்துக்கும் காரணமாக இருப்பதால், அதை அறிவது அனைத்தையும் அறிந்ததற்கு சமமாகும்.
ஆத்ம ஞானம் அடைவது என்பது ஆத்மாவை அடைந்ததற்கு சமமாகும்.
ஆத்ம ஞானம் என்பது ஏற்கனவே அடைந்த ஒன்றை பற்றிய அறிவுதான்.

———–

ஸ்லோகம்:6
இது சிரவண பயிற்சியாக இருக்கிறது. சிரவணம் என்றால் உபநிஷத் எந்த கருத்தை நிச்சயப்-படுத்தி சொல்கிறதோ
அதை நாம் நிச்சயம் செய்ய வேண்டும். பேத த்ருஷ்டி நிந்தனை, அத்வைதத்தினுடைய ஸித்தி.
இந்த மந்திரத்தின் சாரம் ஆத்மாதான் அனைத்துமாக இருத்தல். இதை எதிர்மறையாக இங்கு விளக்கப்படுகிறது.

எதை நாம் நமக்கு வேறாக பார்க்கிறோமோ அது நம்மை ஒதுக்கி விடுவதற்கு சமமாகிறது.
பிராமணர்கள் எனக்கு வேறானவர்கள் என்று நினைப்பவர்கள், அவர்களால் நீக்கப்படுகிறார்கள்.
சத்திரியர்கள் எனக்கு வேறானவர்கள் என்று நினைப்பவர்கள், அவர்களால் நீக்கப்படுகிறார்கள்.
இதன் மூலம் அறிவது எதையும் எனக்கு வேறானது என்று நினைத்தால் அவைகளால் நாம் நீக்கப்படுவோம்.
இதனால் நாம் அறிந்து கொள்ள வேண்டியது
பார்க்கும் பொருட்கள் அனைத்தும் நானாக இருக்கிறேன் என்ற மனநிலைய அடைய வேண்டும். இதுவே மோட்சம்.

மந்திர விளக்கம்: யார் தனக்கு வேறாக பிராமணனை நினைக்கிறானோ அவனை பிராமணன் நீக்கி விடுகிறான்.
யார் தனக்கு வேறாக சத்திரியனை நினைக்கிறானோ அவனை சத்திரியன் நீக்கி விடுகிறான்.
இந்த உலகத்தை நீக்கினால், உலகம் நம்மை நீக்கி விடும். தேவர்களை வேறாக நினைத்தால் அவர்கள் நம்மை நீக்கி விடுகிறார்கள்,
மற்ற உயிர்களை வேறாக நினைத்தால் அவைகள் நம்மை நீக்கி விடும், மற்ற அனைத்தையும் நீக்கினால், நாம் அவைகளால் நீக்கப்படுவோம்.
இதிலிருந்து அறிவது பிராமணர்கள், சத்திரியர்கள், தேவர்கள், மற்ற அனைத்து உயிரினங்கள் இவையனைத்தும் ஆத்மாவாகவே இருக்கின்றது.
ஆத்மாவே இவைகளுக்கு ஆதாரமாக இருக்கிறது.

இந்த உலகமே நான் என்ற விசாரம்
ஆத்மா-ஜகத் இவற்றின் ஐக்கியத்தைப் பற்றிய விசாரம்:
1. விசேஷண-விசேஷ்ய பாவம் –
(உ-ம்) வீரனான ராமன், வெண்ணிற ஆடை
இந்த வாக்கியத்திலுள்ள இரண்டு சொற்களும் ஒரே பொருளை குறிக்கிறது. ஆனால் ராமன் எப்படிபட்டவன் என்று விவரிக்கிறது.
இந்த உலகம் ஆத்மாவுக்கு அங்கமாக இருக்கலாம் என்ற கருத்து தவறானது. ஆத்மா சைதன்ய ஸ்வரூபம், அனாத்மா மித்யா.
ஆகவே இரண்டும் ஒன்று சேர முடியாது. நமது லட்சியமான ஆத்மாவை அடைதல் என்பது தேவையில்லாததாகிவிடும்.
ஏனெனில் அதை அடைந்தாலும் உலகம் அங்கும் இருக்கும், அதே சம்சாரம். த்வைதம் இருக்கும் வரை நிறைவின்மை இருக்கும், துயரமும் இருக்கும்.
2. உபாஸனை ஸாமானதி கரண்யம்:
(உ-ம்) மனோ பிரம்மம் – மனதை பிரம்மமாக உபாஸிக்க வேண்டும்.
சிவலிங்கத்தை கல் என்று தெரிந்தே ஈஸ்வரனை தியானித்து வணங்குகிறோம். இதையே உபாஸனம் என்று கூறுவர்.
அதே மாதிரி இந்த உலகத்தை ஆத்மாவென்று தியானிக்க வேண்டும் என்று கருத்துப்பற்றி விசாரம். இது ஏற்றுக் கொள்ள முடியாதது.
இங்கு நாம் பேசிக் கொண்டிருப்பது ஆத்மாவை பற்றிய அறிவை அடைய ஞான பிரகணமாக இருப்பதால்
இது உபாஸனையாக எடுத்துக் கொள்ளக்கூடாது. உபாஸனை மூலம் மனம் ஒருமுகப்படும்,
சித்தஸுத்திதான் அடைய முடியுமே தவிர ஞானத்தை அடையமுடியாது.
3. கௌணம்:
மாணவனை சிங்கம் என்று ஆசிரியர் புகழ்கிறார். இதில் இரண்டு சொற்களையும் ஐக்கியபடுத்தப்பட்டிருக்கிறது.
சிங்கத்தினுடைய உயர்ந்த குணம் இவனிடத்தில் இருக்கிறது என்று சொல்ல விரும்புகின்ற வாக்கியம் இது.
ஆத்மாவுக்கும், அனாத்மாவுக்கும் உள்ள குணங்கள் வெவ்வேறானவை. எனவே இரண்டையும் ஐக்கியபடுத்த முடியாது.
4. ஸ்துதௌ சாமானாதி கரணம்:
நீ இந்திரன் போன்று இருக்கிறாய் என்ற வாக்கியத்தில் உள்ளது போல ஒருவனை புகழ வேண்டுமென்பதற்காக
அவனை வேறொரு உயர்ந்த ஒருவனோடு சேர்த்து சொல்லுவது போல ஆத்மாவோடு உலகத்தை சேர்த்து பேசுவது
இவ்வகையில் எடுத்துக் கொள்ளலாம் அல்லவா?
இவ்வாறு பொருட்கொள்வது ஆத்மாவையே நிந்தனை செய்வது போன்றது.
நித்யமான ஒரு வஸ்துவுடன் அநித்தியமான வஸ்துவை சேர்த்துப் பார்க்க கூடாது.
5. உபசார ஸாமாதிகரண்யம்:
”நீ ராஜா” என்று ஒருவரை பார்த்து சொல்லுவது, அவர் நமக்கு நன்மை தரும்படி ஏதாவது உதவி செய்தால்
அவ்வாறு கூறுவது மாதிரி இதை எடுத்துக் கொள்ளலாம?
ஆத்மா செய்வதெல்லாம் அனாத்மா செய்வதில்லை எனவே இதுவும் தவறு.
6. ஐக்கிய படுத்துதல் – ஆத்மாவும், அனாத்மாவும் இரண்டும் ஒன்றுதான் என்று சொல்லாமே/
அப்படியும் சொல்ல முடியாது, ஏனெனில் இரண்டும் வெவ்வேறு குணங்களை உடையது.
7. பாதாய ஸாமானாதி கரண்யம்:
ஒருவன் பொழுது சாயும் நேரத்தில் வழிகாட்டி மரத்தை திருடன் நிற்பதாக நினைக்கிறான்.
இன்னொருவன் நீ பார்ப்பது திருடன் அல்ல, வழிகாட்டி மரம் என்று சொன்னதும்,
திருடன் நீக்கப்பட்டு வழிகாட்டி மரம் மட்டும் அப்படியே இருக்கிறது.
அது போல இதம் ஸர்வம் à உலகத்திலுள்ள அனைத்தும், அயம் ஆத்மா -நித்ய வஸ்து.
திருடன் என்று நினைத்த எண்ணம் அகற்றப்படுவது போல இந்த உலகம் இருக்கிறது என்ற எண்ணமானது நீக்கப்படுகிறது.
எது ஸத்தாவும் இல்லை, அஸத்தும் இல்லை என்றால் அதற்கு மித்யா என்று பெயர். இதைத்தான் நீக்க முடியும்.
நாமரூப ஸ்வரூபமாக இருப்பது உலகம். ஸத்தானது சித்தாக இருப்பது ஆத்மா. இப்படி பிரித்துவிட வேண்டும்.
கம்பம் இல்லையென்றால் திருடன் தோன்ற மாட்டான். ஆத்மாவை சார்ந்துதான் இந்த உலகம் இருக்கிறது.

·ஆத்ம ஞானத்தால்தான் எல்லா உயிரினங்களையும் நேசிக்க முடியும். ஏனென்றால் நாம் நம்மைத்தான் நேசிக்கிறோம்.
நாம் என்பது அனைத்துமாகிவிட்டால் இது தெளிவாகும்.
·இந்த மந்திரத்தின் மூலமாக சம்சாரம் எது என்னவென்று மறைமுகமாக விளக்கப்படுகிறது.
நம்மை எல்லோரையும் ஏற்றுக்கொள்ள வேண்டும், யாரும் என்னை நிராகரிக்க கூடாது என்றுதான் நினைக்கிறோம்.
அனாத்மாவில் இது கிடைக்காது. ஆனால் ஆத்மாவில் இதை அடைய முடியும். இந்த நினைப்பை ஆத்மா ஞானத்தால் நீக்கப்படும்.
·இந்த ஜகத் மித்யா என்று நன்றாக விளக்கப்படுகிறது
·ஆத்ம ஞானத்தை அடைவதன் பலன் எல்லாமுமாக நானே இருக்கிறேன்.
·அத்வைதம் நிலை நாட்டப்படுகிறது

————

மனனத்தின் விளக்கம்
ஸ்லோகம்-7, ஸ்லோகம்-8, ஸ்லோகம்-9 – ஆத்மா ஸ்திதி காரணம்
ஆத்மாதான் உபாதான காரணம் என்று சில உதாரணங்களுடன் விளக்கப்படுகிறது.
இதன் மூலம்தான் அனைத்தும் வெளிவந்திருக்கிறது. எனவே அனைத்துக்கும் உபாதான காரணமாக இருக்கிறது.
ஸர்வாத்மா தர்சனம் அல்லது பாவம் – எல்லாவற்றிலும் நான் என்ற பாவம், ஆத்மா என்ற பாவம்.

எதை கிரகிக்காமல் இதை கிரகிக்க முடியாதோ அதுதான் ஆத்மா.
தங்கத்தைப் பார்க்காமல் அதில் செய்யப்பட்ட ஆபரணங்களை பார்க்க முடியாது.
எனவே ஆபரணங்களுக்கு தங்கம்தான் ஆத்மா அது போல எல்லா அனாத்மாக்களுக்கும் ஆதாரமாக இருப்பது ஆத்மாதான்.

சப்த சாமான்ய ஞானம்: இந்த சப்தம் எந்த இசைக்கருவியிலிருந்து வருகின்றது என்று கண்டு கொள்வது.
பிறகு இது இப்படிபட்ட ராகம் என்று கண்டு பிடிப்பது விசேஷ ஞானம்.
ஒருவனால் வீணையினுடைய சாமான்ய சப்தத்தையே கிரகிக்க முடியவில்லையென்றால் பிறகு எப்படி விசேஷ சப்தத்தைப் பற்றி கூற முடியும்.
இங்கு சாமான்ய சப்தங்கள் எல்லாம் காரணம், விசேஷ சப்தங்களெல்லாம் காரியங்கள்.
இதன் மூலம் நாம் அனாத்மாவை பார்த்துக் கொண்டிருக்கிறோம் அதற்கு காரணமாக இருக்கின்ற
ஆத்மாவை பார்த்து கொண்டிருப்பதால் என்று விளக்கப்படுகிறது.

மந்திர விளக்கம்:
ஸ்லோகம்-7 – அடித்துக் கொண்டிருக்கிற துந்துபியின் சாமான்ய சப்தத்தை கேட்காமல் அதன் விசேஷ சப்தத்தை கிரகிக்க முடியாது.
துந்துபிலிருந்து வரும் சாமான்ய சப்தத்தை கேட்கும்போதுதான் அதனுடைய விசேஷ சப்தத்தையும் கேட்க முடியும்.

ஸ்லோகம்-8 – ஒலித்துக் கொண்டிருக்கிற சங்கின் சாமான்ய சப்தத்தை கேட்காமல் அதன் விசேஷ சப்தத்தை கிரகிக்க முடியாது.
சங்கிலிருந்து வரும் சாமான்ய சப்தத்தை கேட்கும்போதுதான் அதனுடைய விசேஷ சப்தத்தையும் கேட்க முடியும்.

ஸ்லோகம்-9 – இசைக்கபட்டு கொண்டிருக்கிற வீணையின் சாமான்ய சப்தத்தை கேட்காமல் அதன் விசேஷ சப்தத்தை கிரகிக்க முடியாது.
வீணையிலிருந்து வரும் சாமான்ய சப்தத்தை கேட்கும்போதுதான் அதனுடைய விசேஷ சப்தத்தையும் கேட்க முடியும்.

மேலே கூறப்பட்ட உதாரணத்தின் மூலம் நமக்கு தெரிந்து கொள்வது, நாம் எல்லா நேரத்திலும் ஆத்மாவைத்தான் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
ஆத்மாவின் ஸ்வரூபம் – ஸத் ஸ்வரூபம். எவையெல்லாம் இருக்கிறது என்று சொல்கிறோமோ அங்கேயெல்லாம் ஆத்மா இருக்கிறது என்று அர்த்தம்.
மனனம் என்பது சிரவணத்தில் கேட்டதை தர்க்க மூலம் சிந்தித்து தெளிவாக புரிந்து கொள்ளுதல். சந்தேகமின்றி திடமாக புரிந்து கொள்ளுதல்

ஆத்மா உபாதான காரணமென்றால் நாம் ஆத்மாவைத்தானே பார்க்க வேண்டும்.
அதன் ஸ்வரூபம் ஸத் ஸ்வரூபம், எல்லா பொருட்களும் இருத்தல் என்பதை அனுபவித்துதானாக வேண்டும்.
அது இருக்கிறது என்றுதான் எல்லாவற்றையும் அனுபவத்தில் உணர்கிறோம். இந்த இருத்தல்தான் ஆத்மா.
இதை கிரகிக்க முடிந்தால்தான், விசேஷத்தை புரிந்து கொள்வோம்.
இருத்தலை உறுதி செய்தபின்தான் அதன் விசேஷ குணங்களை அறிய முடியும்.
இந்த இருத்தல்தான் ஆத்மா, இந்த இருத்தலை கவனிக்காமல் நாம-ரூபத்தில் கவனம் சென்று விடுகின்றது.

மரத்தாலான யானை பொம்மையில், மரத்தின் கவனத்தை விட்டுவிட்டு யானை என்ற உருவத்தைப் பார்க்கிறோம்.
நாம-ரூபங்கள் இல்லாமல் இருக்கும் ஆத்மாவை அனுபவிக்க முடியாது, விளக்க முடியாது ஏனென்றால் நாம் அதுவாகத்தான் இருக்கிறோம்.

ஆனந்த ஸ்வரூபம் –
இதை எப்படி புரிந்து கொள்ள வேண்டுமென்றால், எந்த பொருளை பார்க்கிறோமோ அதை பற்றிய ஞானம் நம்மிட த்தில் இருக்கிறது.
விருத்தியில் (எண்ண அலைகள்) மாறாம் இருந்துக் கொண்டேயிருக்கிறது.
பத்து விருத்திகள் வந்து சென்றாலும், அதற்கு ஆதாரமாக ஞானம் இருப்பதால், வந்து சென்ற எண்ணங்களை
திரும்பவும் நினைவு கூர்ந்து சொல்ல முடிகிறது. சித் ஸ்வரூபத்தை பிரதிபிம்பிப்பது சூட்சும சரீரத்தில்தான் முடியும்.
ஆத்மா சைதன்ய ஸ்வரூபம் என்பது அந்தக்கரணத்துடன் புரிந்துக் கொள்ள வேண்டும்.
நித்தியமான ஸத்தையும், சித்தையும் அனுபவிக்க முடியாது, காரணம் நாம் அதுவாகவே இருப்பதால்தான்.
ஆழ்ந்த உறக்கத்தில் அந்தக்கரணம் பிரம்மத்தில் ஒடுங்கி விடுவதால் நித்தியமான ஸத்தையும் அனுபவிக்க முடியாது.
ஞான நிஷ்டையில் உள்ள ஞானிகளின் அந்தக்கரணத்தில் பிரதிபிம்பத்தில் காணலாம். இதுவும் பூரணமாக இருக்கும்.
எப்பொழுதும் ஆத்மாவைத்தான் பார்த்துக் கொண்டிருக்கிறோம், ஞானம் வந்தவுடன் நமக்கு நன்றாக புரிந்து விடும்.
எல்லாமே ஆத்மாவாகத்தான் இருக்கிறது என்று உணர்ந்து கொள்வோம். அப்படித்தான் நாம் விவகாரம் செய்வோம்.

ஸ்லோகம்-10
எவையெல்லாம் தோன்றியுள்ளதோ அவைகளின் தோற்றத்திற்குக் காரணம் ஆத்மாதான்.
ஈஸ்வரன் எல்லா பூதங்களையும், பிரபஞ்சத்தையும் தோற்றுவித்தார். நாம் பதார்த்தங்களை சேர்த்து புரிந்து கொள்ள வேண்டும்.
வேதம் என்பது அனைத்து பத பிரபஞ்சத்தைக் குறிக்கிறது. எனவே வேதத்தின் ஸ்ருஷ்டி என்பது பத ஸ்ருஷ்டி என்று புரிந்து கொள்ளலாம்.
எப்படி நாம் மூச்சு விடுவதைப்போல் ஈஸ்வரனிடமிருந்து வெளி வந்ததுதான் வேதம். இதுவே சப்த பிரபஞ்சம், அர்த்த பிரபஞ்சம்.
இதிலிருந்து எடுத்துக் கொள்ள வேண்டிய கருத்துக்கள். இந்த வேதமானது அநாயசமாக வெளி வந்தது.
அவர் தன்னுடைய சங்கல்பத்தினாலே எல்லாவற்றையும் படைத்தார். எனவே இந்த உலகமும் மித்யா.
எந்தவித உதவியும் இல்லாமல் இதைச் செய்தார். சுதந்திரமாக படைக்கிறார். இந்த ஸ்ருஷ்டியானது பகவானிடமிருந்து வருகிறது.
பிறகு மீண்டும் அவரிடமே சென்று பிறகு மீண்டும் வெளிவரும். இந்த சுழற்சி இருந்துக் கொண்டேயிருக்கும்.
நாம் சுவாசிப்பதைப் போன்று காற்றை இழுக்கிறோம், பிறகு வெளியே விடுகிறோம்,
பிறகு உள்ளே இழுக்கிறோம் என்ற சுழற்சி போல வேதம் அநாதியாக இருக்கிறது என்பதும் இதிலிருந்து புரிந்து கொள்ளலாம்.

மந்திர விளக்கம்:
சாரம் – ஈஸ்வரனிடமிருந்து நான்கு வேதங்களும் தோன்றின.
ஆர்த்ர – நனைந்து, ஏதம் – கட்டை
ஈரமான கட்டையில் நெருப்பில் போட்டால் புகை வருவது போல ஈஸ்வரனின் மூச்சுக் காற்றிலிருந்து ரிக், யஜூர், சாம, அதர்வன வேதங்கள் தோன்றின.
இதிகாசம் – வேதத்தில் வருகின்ற கதைப்பகுதி
புராணம் – வேதத்தில் உள்ள ஸ்ருஷ்டி விசாரம்
வித்யா – வேதத்தில் சொல்லப்பட்டுள்ள தேவர்களிட்த்தில் உள்ள கலை ஞானங்கள்
உபநிஷத் – ரகசியமான வார்த்தைகளில் உள்ள ஆத்ம விஷயங்கள்
ஸ்லோகம் – வேதத்தில் குறிக்கப்படும் வேறிடத்தில் உள்ள பகுதி
சூத்ராணி – மிக மிக சுருக்கமான விஷயம்
அனுவியாக்யானானி – சூத்ர வாக்கியத்தை விளக்குகின்ற வாக்கியங்கள்
வியாக்யானானி – விருத்தி வாக்கியத்தை விவரித்தல்
அவரிடமிருந்துதான் இவைகள் எல்லாமே மூச்சுக்காற்றுப் போல் வெளிவந்தன.

விசாரம்:
* இருக்கின்ற வேதம்தான் வெளி வந்தது.
* எனவே வேதத்தில் சொல்லப்பட்ட வாக்கியங்கள் எல்லாம் ஸ்வ பிரமானம்
* வேதக் கருத்துக்களை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும். அந்த அளவுக்கு அதன் மீது சிரத்தை வேண்டும்.
இதன் உபதேசத்தை வேறெங்கும் சரிபார்க்க முடியாது.
* எனக்கு வேறொன்றாக பார்த்தால் அதையெல்லாம் என்னை நீக்கி விடும்.
வேதத்தை வேறாக நினைத்தால் அது என்னை என்னை நிராகரிக்கும்.
அப்படியென்றால் வேதமும் மித்யாதான் என்றால் மித்யாதான் என்று சங்கரர் கூறுகிறார்.
உதாரணமாக நிலைக் கண்ணாடியில் காட்டும் பிம்பம் பொய்யாக இருந்தாலும் அது நம்முடைய உண்மையான முகத்தைத்தான் காட்டுகிறது.
அதுபோல் வேதம் மித்யாவாக இருந்து நமக்கு உண்மையை எடுத்துக் காட்டுகிறது.

ஈஸ்வரன் எவ்வாறு லய காரணமாக இருக்கிறார் என்று விளக்கப்படுகிறது.
ஸ்லோகம்-11
ஏகாயனம் – லய ஸ்தானம் – ஒடுங்குகின்ற இடம்.
எவ்வாறு ஆறுகள் எல்லாம் கடலை நோக்கி சென்று அதில் கலந்து விடுகின்றனவோ அதுபோல
ஆழ்ந்த உறக்கத்தில் எல்லா வேற்றுமைகளும் இழந்து ஒன்று சேருகின்றன.
இந்த பிரபஞ்சமானது 12விதமாக பிரிக்கப்பட்டுள்ளது அவைகள் ஐந்து ஞானேந்திரிய விஷயங்கள், ஐந்து கர்மேந்திரிய விஷயங்கள்,
மனதினால் கிரகிக்கப்படும் விஷயங்கள், புத்தியினால் கிரகிக்கப்படும் விஷயங்கள்.
லயமானது கிரம மாகத்தான் நடைபெறும் ஆனால் இங்கு வேறுவிதமாக விளக்கப்படுகிறது.
விசேஷங்கள் சாமான்யத்தில் ஒடுங்குதல், விதவிதமான சப்தங்கள் பொதுவான (சாமான்ய) சப்தத்தில் ஒடுங்குகின்றன.
விசேஷமான நீர் சாமான்யமான நீரில் ஒடுங்கும். இந்த சாமான்யத்தை ச்ங்கல்பத்தில் ஒடுக்குதல்.
ஒருவர் பேச்சை சாமான்யமாக மாற்றுதல், பிறகு சங்கல்பத்தில் ஒடுக்க வேண்டும்.
அதாவது மனதை அந்த பேச்சிலிருந்து எடுத்து விட வேண்டும். பிறகு சங்கல்பத்தை காரணத்தில் ஒடுக்க வேண்டும்.
மனித உடல் சாமான்யமாக பார்த்தால் பஞ்சபூதங்களின் சேர்க்கையாகும்
பிறகு சூட்சும பூடங்களாக மாறுகிறது அதன் பிறகு காரண ஸ்வரூபத்திற்கு சென்று விடுகிறது.

இந்த மந்திரத்தில் சொல்லப்பட்ட கருத்து: விசேஷங்கள் சாமான்யத்திற்கு சென்று விடுகிறது.

மந்திர விளக்கம்: விதவிதமான குணங்களை உடைய நீர் நிலைகளில் இருக்கும் நீர் கடலில் ஒன்று சேர்ந்து
விசேஷ தன்மைகளை இழந்து ஒன்றாகி விடுகிறது. விதவிதமான வேற்றுமைகளுடன் வெளியே இருந்து வரும் விஷயங்கள்
நமக்குள் வரும் போது ஒன்றாகி விடுகிறது என்று உணர வேண்டும். விதவிதமான உணர்ச்சிகளை தொடுவதன் மூலம் உணர்கிறோம்.
இந்த எல்லா உணர்ச்சிகளும் தொடுதல் என்ற சாமான்ய ஞானத்தில் ஒடுக்க வேண்டும்.
இதே போன்று மூக்கின் வழியே செல்லும் விசேஷ வாசனைகளும் சாமான்ய வாசனைக்கு ஒடுங்க வேண்டும்.
விசேஷமான காட்சிகள், சாமான்ய காட்சிகளாகவும் ஒடுங்க வேண்டும்.
இவ்வாறு ஞானேந்திரியங்களின் விசேஷமான விஷயங்கள் அதன் சாமான்யத்-துடனும்,
கர்மேந்திரியங்களின் விசேஷமான விஷயங்கள் அதன் சாமான்யத்துடனும் ஒடுங்கும்.
மனம், புத்தியால் கிரகிக்கப்படும் விசேஷ விஷயங்கள் அதன் சாமான்யத்துடனும் ஒடுங்கும்

ஸ்லோகம்-12
இந்த மந்திரத்தில் சிதாபாஸம் என்றால் என்ன என்பதை தெளிவாக விளக்கப்படுகிறது.
இங்கு விதேஹ முக்தியின் லயத்தைப் பற்றி பேசப்படுகிறது. நைமித்திக பிரளயம், ஸ்வாபாவிக பிரளயம், ஆத்யந்திக பிரளயம்
என்று மூன்று விதமான பிரளயங்கள் உண்டு.
நைமித்திக பிரளயம்: ஈஸ்வரன இந்த உலகத்தை படைத்து பிறகு அதை தன்னுள் ஒடுக்கிக் கொள்வது
ஸ்வாபாவிக பிரளயம்: இதை பிராக்ருதிக பிரளயம் என்றும் அழைக்கப்படும். கரணங்கள் எல்லாம் காரணத்தில் ஒடுங்குதல்,
நம்முடைய ஆழ்ந்த உறக்கத்தில் இந்திரியங்களெல்லாம் காரணத்தில் ஒடுங்கி இருத்தல்
ஆத்யந்திக பிரளயம்: முழுமையான பிரளயம். விதேஹ முக்தியடைந்தவர்களுக்கு வருகின்ற பிரளயம்.
இப்படி ஒடுங்கினால் திரும்பவும் வருவதில்லை. ஜீவன் அடையும் விதேஹ முக்தி இந்த வகையை சார்ந்தது.

ஆத்மா, சைதன்யம் உப்பு நீருக்கு உதாரணமாக எடுத்துக் கொண்டால், இந்த நீரானது சூடாக்கும் போது நீர் ஆவியாகி,
உப்புகட்டி மட்டும் தங்கி விடும். உப்பானது நீரோடு கலந்து இருக்கும் போது வேற்றுமைகள் எதுவும் இன்றி இருக்கின்றது
ஆனால் அதுவே தனியாக இருக்கும்போது வேற்றுமைகள் வந்து விடுகின்றது. இதில் வெப்பம்தான் உபாதி என்று அறிந்து கொள்ளலாம்.
அதேபோல வேற்றுமைகளற்ற ஆத்மாவில் சூட்சும சரீரம் வந்தவுடன் சைதன்யத்தின் பிரதிபிம்பம் வந்து விடுகிறது.
இதுவே சிதாபாஸம் என்று கூறப்படுகிறது. எப்படி உப்புகட்டியை மீண்டும் நீரின் போட்டால் அது கரைந்து வேற்றுமைகளெல்லாம் நீங்கி
ஒரே தன்மையாகி விடுகின்றதோ அது போல இந்த சரீரம் அழிந்ததும் சிதாபாஸமும் இல்லாமல் போய் விடுகிறது.

கடல்நீர் ஆத்மாவுக்கு உதாரணமாக சொல்லப்படுகிறது. இந்த கடல் நீரை சூடுபடுத்தினால் உப்புகட்டி உருவாகும்.
அதுவே சிதாபாஸம் என்று கூறப்படுகிறது. கடல் நீரில் உள்ள உப்பில் எந்த வேற்றுமையும் இல்லை ஆனால்
உப்பானது வெவ்வேறு குணங்களைக் கொண்டுள்ளது. உப்பு கட்டியை திரும்பவும் கடல் நீரில் போட்டால்
அது கரைந்து விடுகிறது நீரோடு ஐக்கியமாகி விடுகிறது.
அது போல இந்த ஸ்தூல உடம்பு அழிந்து விட்டால் பிரம்மத்தில் கலந்து விடுகிறது. சரீரத்தின் உபாதியும் உஷ்ணம்தான்,
எப்படி உஷ்ணமானது கடல்நீரை உப்புக்கட்டியாக்கியதோ அது போல நமது உபாதியான உஷ்ணமும்
உண்மையான சைதன்யத்தை பொய்யான சிதாபாஸனாக தோற்றுவிக்கிறது.
உபாதி நாசத்தை அடைந்ததும் ஜீவன் பிரம்மத்துடன் கலந்து விடுகிறது.

மந்திர விளக்கம்:
ஆத்ம சைதன்யம் உபாதியால் பிரதிபிம்பமாக இருப்பதால் அதற்கொன்றும் குறை கிடையாது.
எனவே எவ்வளவு சிதாபாஸங்கள் தோன்றி அழிந்தாலும் அதனால் சுத்த சைதன்யத்திற்கு எந்த குறையும் ஏற்படாது.
அனந்தம் – காரணமற்றது; அபாரம் – காரியமற்றது (ரஹிதம்)
நமது முகம் நிலை கண்ணாடியில் முழுவதுமாக பிரதிபலிக்கும், இதனிடமிருந்து எதுவும் வெளிவரவில்லை,
இந்த பிரதிபிம்பம் அழிந்தாலும் நம் முகத்திற்கு எந்த குறையும் ஏற்படாது. சைதன்யத்திற்கு இணையாக ஒன்றும் வெளிவரவில்லை.
விக்ஞான கணம் – சுத்த சைதன்யம். கணம் – கலப்படமற்றது.
இந்த ஸ்தூல, சூட்சும காரணங்களினால் சிதாபாஸம் தோன்றி பிறகு அந்தகரணங்களுடன் சேர்ந்து அழிவடைகிறது.
ந ப்ரேத்ய ஸம்ஞா அஸ்தி – ஞானியின் ஸ்தூல, சூட்சும சரீரம் அழிவடைந்ததும் சிதாபாஸம் இருப்பதில்லை.
ஸ்தூல சரீரம் பஞ்ச பூதங்களுடன் சேர்ந்து விடுகிறது. சூட்சும சரீரம் அந்தந்த தன்மாத்திரைகளுடன் கலந்து விடுகிறது.
சிதாபாஸமும் மறைந்து விடுகிறது.

ஸ்லோகம்-13
மைத்ரேயின் சந்தேகம்: சைதன்யத்தின் நித்தியத்தையும், அதன் அழிவையும் சொல்கிறீர்கள்.
அத்ர ஏவ : இந்த விஷயத்தில் (சைதன்ய விஷயத்தில்)
மா அமுமுஹத் – நீங்கள் என்னை குழப்புகிறீர்கள்
ந பிரேத்ய சம்ஞா அஸ்தி – இறந்த பிறகும் சைதன்யம் இல்லை என்று கூறுகிறீர்களா?
ந மோஹம் பிரேவி – நான் உன்னை குழப்பவில்லை
அலம் வா அரே இதம் விக்ஞாதாய – நான் உபதேசித்ததை சரியாக புரிந்து கொண்டால் போதும்.

ஸ்லோகம்-14
இதில் இரண்டு அவஸ்தைகள் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. அவைகள் அவித்யா அவஸ்தை, வித்யா அவஸ்தை.
அவித்யா அவஸ்தை – அறியாமையுடன் வாழ்ந்து வருதல்
வித்யா அவஸ்தை – அறிவுடன், ஆத்ம ஞானத்துடன் வாழ்ந்து வருதல்.

அவித்யா (அக்ஞான) அவஸ்தையில் நாம் அனுபவிப்பது த்வைதம். இந்நிலையில் எல்லாம் சத்யமாக தோன்றும்.
அதே மனது அத்வைத ஞானம் வந்தவுடன் அந்த நிலை எப்படி இருக்கும் என்பதை இங்கு விளக்கப்படுகிறது.
முதல் த்வைதம் கர்த்தா-கர்மம் அதாவது நான் கர்த்தா எனவே நமக்கு ஏதாவது ஒன்று செய்து கொண்டிருக்க வேண்டும்
அதை செய்வதற்கு கருவி தேவை. அதனை பயன்படுத்தி கர்ம்ம் செய்து கொண்டிருக்கிறான் இந்த ஜீவன்.

அவித்யா அவஸ்தையில் சம்சாரியாக வாழ்கிறோம். நம்மை சரியாக அறியாமல் வாழ்ந்து கொண்டிருப்பது.
இந்த மந்திரத்தில் குறிக்கப்பட்ட த்வைதம் நாம் பார்த்து அனுபவிக்கும் இந்த உலமேதான்.
சிதாபாஸம், சூட்சும சரீரம், அஹங்காரம் என்று புரிந்து கொள்ள வேண்டும். இதுவே கர்த்தா என்று அழைக்கப்படுகிறது.
கர்த்தா அனுபவிக்கிற விஷயம் இந்த உலகம்தான் அதுவே அனுபவிக்கபடுகின்ற பொருளாக இருக்கிறது.
இது உண்மையா என்று விசாரம் செய்ய வேண்டும். இந்த த்வைதமே உண்மையில்லை என்று அறிய வேண்டும்.
நான் கர்த்தாவாகி விஷயங்களை அனுபவிக்கும் போது நாமே அனுபவிக்கப்படும் பொருளாக மாறுகிறேன்.
இந்த த்வைதம் சத்யமாகவும் இருக்கிறது. நம்மிட்த்தில் உள்ள கருவிகளை உபயோகித்து கிரியைகளை உற்பத்தி செய்கிறோம்.
இந்த கருவிகளுக்கு “காரகம்” என்ற அழைப்பர். கிரியையால் விளைவது பலன்.
அதை அனுபவித்துக் கொண்டிருப்பது சம்சாரம். நமக்கு அவித்யா இருப்பதால் இந்த உலகத்தில்
த்வைத த்தை ஏற்படுத்திக்கொண்டு செயல்களை செய்து சுக-துக்கங்களை அனுபவிக்கிறார்கள்.

மந்திர விளக்கம்:
அவித்யா அவஸ்தை:
அவித்யா அவஸ்தையில் இருமையானது வந்து விடுகிறது. அந்த சமயத்தில் கர்த்தா அறிபவன், செயல்படுபவன்
என்ற எண்ணத்தோடு இருந்து கொண்டு இந்திரியங்களை கருவியாக பயன்படுத்தி வாசனையை நுகர்கின்றான்.,
பார்த்துக் கொண்டிருக்கின்றான், கேட்டுக் கொண்டிருக்கின்றான், பேசிக் கொண்டிருக்கின்றான், சிந்தித்துக் கொண்டிருக்கின்றான்.
இதுதான் அவித்யாவின் அவஸ்தை. இங்கு சிதாபாஸம் ஒன்று இருப்பதனால் சம்சாரியாக இருந்து கொண்டிருக்கிறான்.

வித்யா அவஸ்தை:
अस्य – இவனுக்கு (ஞானிக்கு)
सर्वम – அனைத்தும்
आत्म एव अभुत – ஆத்மாவாகவே ஆகி விட்டாதோ
இந்த நிலையில் இவனிடத்தில் எல்லாவற்றையும் நான் என்று மாறும் போது சம்சாரம் என்பதே கிடையாது.
இந்த நிலையில் நாம் அனுபவிக்கும் வேண்டியது ஒன்றுமேயில்லை.
இந்த நிலையில் கர்த்தா, கரணம், கிரியை, பலன் எதுவுமே இருக்காது. எல்லாமே நானாக மாறி விட்டதால்.
तत्र यस्य – எந்த அவஸ்தையில் எல்லாமே நானாக, ஆத்மாவாகி விட்டால்
तद केन कम पश्यथ् – எந்த கருவியைக் கொண்டு எதை கேட்பான், எதை பார்ப்பான், நுகர்வான், பேசுவான், சிந்திப்பான்
இவ்வாறு எதையுமே அனுபவிக்க முடியாத நிலை உண்டாகும்.

விசாரம்-1 (மைத்ரேயின் கேள்விக்கு பதில்:
வித்யா அவஸ்தையில், விதேஹ முக்தியின் போது சிதாபாஸம் அழிந்து போகிறது.
ஞானியின் மரணத்தின் போது ஸ்தூல, சூட்சும சரீரங்கள் சேர்ந்து அழிகிறது.
சூட்சும சரீரத்தில் உள்ள சிதாபாஸமும் இல்லாமல் போய் விடும். இந்த சிதாபாஸனைத்தான் ஜீவன் என்று அழைக்கிறோம்.
த்வைத அவஸ்தையில் சிதாபாஸத்துடன் சம்சாரத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறான்.
வித்யா அவஸ்தையில் சிதாபாஸம் நாசமடைவதால் சம்சாரமும் நாசமடைந்து பூரணமாகி விடுவான்.

விசாரம்-2
எல்லாமும் ஆத்மாவாகி விட்டால் ஒருவன் எதைத்தான் பார்ப்பான், கேட்பான் என்ற கருத்தில்.
ஜீவன் முக்தனுக்கு இந்த நிலை எப்படி இருக்கும். ஒன்றை தவறாக இரு வகையில் பார்ப்போம்.
அவைகள் ஸோபாதிக பிரமா, நிருபாதிக பிரமா.
நிருபாதிக பிரமா –
தோன்றிக் கொண்டிருக்கும் காட்சியானது அது பொய் என்ற அறிவு வந்ததும் மறைந்து விடும்.
கயிற்றில் தோன்றும் பாம்பு இதற்கு உதாரணம்.
ஸோபாதிக பிரமா –
தோன்றுகின்ற காட்சி வெறும் தோற்றம் என்ற அறிவு வந்தாலும் அது தெரிந்து கொண்டேயிருக்கும்.
கானல் நீர் போல, இது பொய்யான தோற்றம் என்ற அறிவு இருக்கிறது ஆனால் காட்சியளித்துக் கொண்டிருக்கும்.

நமக்கு வரும் துயரங்கள் எல்லாம் நாம் உண்மையென்று ஒன்றை நினக்கும் போதுதான்.
மித்யா என்ற அறிவில் எதுவும் நமக்கு துயரத்தைக் கொடுக்காது, சம்சாரத்தைக் கொடுக்காது.
வித்யா அவஸ்தையில் ஸோபாதிக பிரமையில் வாழ்ந்து கொண்டிருப்பார்கள்.

நித்ய சைதன்யத்தை பற்றி விளக்கம்:
நித்ய சைதன்யத்தால் ஒருவன் இதை அனைத்தும் அறிந்துக் கொண்டிருக்கிறான் ஆனால் அதை எதன் மூலம் அறிய முடியாது. எனவே இது அறியப்படாதது.
सर्वम आत्मा एव अभूति – எல்லாமே ஆத்மாவாகி விடுகிறது. அதாவது அனாத்மாக்கள் எல்லாம் ஆத்மாவில் ஒடுங்கி விடுகிறது.
तम केन विजानीयात – எல்லாவற்றையும் அறிந்துக் கொண்டிருக்கும் சைதன்யத்தை யாரறிவான் என்றால் யாரும் அறிய முடியாது என்பதுதான் பதில்.
विग्ञानातारम – சாட்சி சைதன்யம்
केन विजानीयात – யாரறிய முடியும்?
ஆத்மாவை குரு முகமாகத்தான் உபதேசம் பெற வேண்டும். அவ்வாறு கேட்டதை சிந்திதுப் பார்க்க வேண்டும்.
சிந்திக்கும் போதுதான் கேட்டவற்றில் எழும் சந்தேகங்களை போக்கி சரியாக புரிந்து கொள்ள முடியும்.
அடைந்த ஞானத்தில் நிலைபெறுவதற்கு நிதித்யாஸனம் செய்து அதன் மூலம் ஞான நிஷ்டை அடைவதினால் அதன் பலனை அடைந்ததாகும்
இந்த பலனானது நாம் அனைத்தையும் அடைந்து விட்டதாகி விடும் இனி அடைவதற்கு ஒன்றுமில்லை என்ற மனநிறைவை அடைவோம்.
இதுதான் ஜீவன் முக்தி நிலையாகும்.

————–

பகுதி-5 : மது பிராமணம் – ( प्राप्तम – அடைவது)
முகவுரை:
1. ஜகத் மித்யா என்ற விளக்கம்
2. ஸர்வாத்மா பாவம் – எல்லா உயிர்களிடத்திலும் நம்மையே பார்த்தல், அதாவது எல்லா உயிர்களிடத்திலும் நான் என்கின்ற அபிமானத்தோடு இருத்தல்
3. சத்ய வஸ்துவாக இருக்கிற பிரம்மன் அத்வைதம் (இரண்டற்றது)
4. மஹா வாக்கியம் – அயம் ஆத்ம பிரம்ம

சங்கரருடைய பொது அறிமுக விசாரம்
कर्म निरभेषम – கர்ம நிரபேஷம் – கர்மத்தை சாராத சாதனை. பிரம்மத்தை, மோட்சத்தை, அம்ருதத்துவத்தை அடைய உதவும் சாதனை.
இந்த சாதனையை கூற வேண்டும் என்றுதான் மைத்ரேயி பிராமணம் விளக்கப்பட்டது.
முக்கியமாக சிரவணம், மனனம், நிதித்யாஸனம் இவைகளின் முக்கியத்வம் விளக்கப்படுகிறது.
இந்த ஞானம் சர்வஸங்க சந்நியாச அங்க விஷிஷ்டம், இந்த ஞானத்திற்கும் சந்நியாஸத்திற்கும் சம்பந்தம் உண்டு.
சந்நியாஸம் வெறும் ஆசிரமத்தை மட்டும் குறிப்பிடவில்லை, காலத்தை நம் கையில் எடுத்துக் கொள்வதற்கும்,
ஆத்ம விசாரத்திற்கு பயன்படுத்துவதற்கும், ஞானத்தை அடைய உதவும் சாதனங்களான சிரவணம், மனனம், நிதித்யாஸனம்
ஆகியவற்றை நாம் மேற்கொள்வதற்கும் சேர்த்து குறிப்பிடப்படுகிறது.
கர்ம நிரபேக்‌ஷம்தான் ஆத்ம ஞானம் அதன் மூலம்தான் மோட்சத்தை நேரிடையாக அடைய முடியும்.

ஆத்மஞானம் ஏன் அடைய வேண்டும்?
உண்மையில் நாம் இதை அடையத்தான் ஆசைப்படுகிறோம். பார்க்கும் போது அனுபவத்தில் நாம் அடைய விரும்பும்
சம்சார விஷயங்கள் எல்லாம் மாறக்கூடியது. ஆத்மா ஞானம் மூலம் ஆத்ம பிராப்தியை (ஆத்மாவை அடைவதை) அடையலாம்.
அதற்காக எந்த செயலின் துணை இல்லாமல் நேரிடையாக கொடுத்து விடலாம்.
ஆத்மாவை அடைதல் என்பதும் ஆத்மாவை அறிதல் என்பதும் ஒன்றுதான். இது அனைத்தையும் அடைதல் என்றும் குறிப்பிடலாம்.

மனனம்
1. சுய அறிவை உபயோகித்து தர்க்க மூலம் கேட்டதை நன்றாக, உறுதியாக புரிந்து கொள்ளுதல்.
ஆத்மாவின் சத்யத்தையும், ஜகத் மித்யா என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். ஜகத் மித்யா என்பதை
ஏதாவது ஒரு ஹேதுவை கொடுத்து நிரூபிக்க வேண்டும். இந்த பிரமாணத்தில் புதிய ஹேதுவை (காரணத்தை) சொல்லி
ஜகத் மித்யா என்று நிரூபிக்கப்படுகிறது. எனவே மது பிரமாணத்தை மனனத்திற்கு உதவியாக இருப்பதாகவும் எடுத்துக் கொள்ளலாம்,
2. நிகனார்த்தமாகவும் (முடிவுரையாகவும்) எடுத்துக் கொள்ளலாம், மைத்ரேயி பிரமாணத்தில் எல்லாம் புரிந்து விட்டால்
நிகமனமாக எடுத்துக் கொள்ளலாம். பக்‌ஷம் என்பதற்கு பொருள் எந்த இடத்தில் ஒரு சாத்தியத்தை சொல்லி நிரூப்பது.
இங்கே ஜகத் பக்‌ஷம்; இதில் மித்யா என்பது சாத்தியம். எல்லா அனுமானங்களின் மூலம் இந்த சாத்தியம் நீக்கப்படவில்லை என்று மீண்டும் கூறுதல்
3. நிதித்யாஸனத்திற்கு உதவியாக இருப்பதாகவும் எடுத்துக் கொள்ளலாம்

விசாரம் – ஜகத் மித்யா
ஜகத் மித்யா என்பதற்கு என்ன ஹேது உபயோகப்படுத்தப்பட்டிருக்கிறது என்றால் எது பரஸ்பர உபகாரிய உபகாரகமாக இருக்கிறதோ அது மித்யா.
பரஸ்பரம் – ஒன்றையொன்று;
உபகாரியம் – உதவியை வாங்குபவர்;
உபகாரகம்- உதவி செய்பவர்
ஒருவருக்கொருவர் உதவிக் கொள்வது என்பது இருவரும் இரண்டு நிலைகளாக இருக்கிறார்கள்.
இந்நிலை வேறொன்றை சார்ந்திருக்க வேண்டும் அல்லது மித்யாவாக இருக்க வேண்டும்.

தைஜஸனை சார்ந்து தான் ஸ்வப்ன பதார்த்தங்கள் இருக்கின்றது
அதே போன்று கனவில் வரும் பொருட்கள் இல்லையென்றால் தைஜஸனாக இருக்க மாட்டான்.
எனவே இரண்டும் ஒன்றையொன்று சார்ந்திருப்பதால் இரண்டுமே மித்யா.
தைஜஸனும், கனவில் காணும் உலகமும் மித்யா என்று நிரூபிக்கப்படுகிறது.
விழிப்பு நிலை பிரபஞ்சம் விஸ்வனை சார்ந்திருக்கிறது. விஸ்வன் ஜாக்ரத் பிரபஞ்சத்தை அனுபவிக்கும் பிரமாதாவாக இருக்கிறான்.
ஒரே மனிதனுக்கு விதவிதமான குணங்கள் இருக்கிறது. உதாரணமாக தந்தை, மகன், சகோதரன், என்ற பெயர்கள்.
தான் பிதாவாக இருக்க குழந்தையை பிறந்திருக்க வேண்டும், அதேப்போன்று தந்தையாக தன் பிள்ளைக்கு உதவி செய்கிறார்.
இந்த உதாரணத்தில் பிதா, மகன் சம்பந்தம் உபகாரிய, உபகாரமாக இருப்பதால் இருவருமே மித்யாத்வத்தை அடைகிறார்கள்.
பிதாவாக இருந்து செய்ய வேண்டிய கர்மங்கள் , மகனாக இருந்து செய்ய வேண்டிய கர்மங்கள்
இவைகளிலிருந்து துயரங்கள் நம்மை வந்து அடைகிறது.
நம்மைச் சார்ந்திருக்கும் உறவுகளை நீக்கிவிட்டு நம் நிலையை நினைத்துப் பார்க்க வேண்டும்.
நாம் மனிதன் என்ற நிலையில் பார்த்தால், இந்த உறவுகளிலிருந்து வரும் துயரத்திலிருந்து விடுபட்டு விடுவோம்.
இப்படி எல்லா சம்பந்தத்தையும் நீக்கிவிட்டால் வெறும் அறிபவன் என்ற முடிவுக்குத்தான் வருவோம்.

பிரமாதா என்று சொல்வதற்கு விஷயமான பிரமேயமே காரணமாகும்
ஒரு பொருளானது அறிபவனுக்கு விஷயமாக இருந்தால்தான் அது பிரமேயமாகும்.
என்னால்தான் அறியப்படும் பொருளுக்கு பிரமேயம் என்று சொல்வதற்கு தகுதியாகிறது.
எனவே பிரமாதாவும் பிரமேயமும் ஒன்றையொன்று சார்ந்திருப்பதால் இரண்டுமே மித்யா.
நான் மற்றவர்களின் உடலையும் மனதையும் அனுபவிக்கிறென் அது போல மற்றவர்களும் என்னை அனுபவிப்பதால்,
நான் பிரமேயமாகவும் இருக்கிறேன். ஆனால் உண்மையில் நான் பிரமாதவும் அல்ல, பிரமேயமும் அல்ல.
இதிலிருந்து அறிந்துக் கொள்வது அனுபவிப்பனும், அனுபவிக்கப்படும் பொருளும் மித்யாவாகிறது.
இப்பொழுது நான் இந்த இரண்டுக்கும் ஆதாரமாக இருக்கிறேன். இப்படி புரிந்துக் கொண்டால் ஜகத் மித்யாவாகி விடும்.
பிரம்மனாகிய நான் ஸத்யமாகி விடுவேன், இந்த உலகமே உபகாரியமாக, உபகாரமாக இருக்கிறது என்பதை நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.
ஜாக்ரத் பிரபஞ்சம் இவ்விதமாக நிஷேதம் செய்யப்படுகிறது

மது என்ற சொல் பல பொருளைக் குறிக்கும் அவைகள் காரியம், கர்மபலம், போக்யம் (அனுபவிக்கபடுவது)
ஜீவர்கள் எல்லாம் அனுபவிப்பவர்கள், ஜகத்தானது அனுபவிக்கப்படுவது அதாவது போக்யமாக இருக்கிறது.
இது ஜீவனுக்கு மதுவாகிறது. உதாரணமாக நான் கர்மம் செய்வதற்கு உதவி செய்கிறேன்,
கர்மம்தான் என்னுடைய பிறப்பு-இறப்புக்கு காரணமாகிறது. அனைத்து ஸ்ருஷ்டிகளும் நான்கு வகையாக பிரிக்கப்படுகிறது.
1. எல்லா ஜீவர்கள் ஸர்வ பூதானி
2. அதிபூதம் ஜடப்பிரபஞ்சம் (சூரியன்)
3. அதிதெய்வம் தேவதைகள் (ஆதித்ய தேவன்)
4. அத்யாத்மம் வியஷ்டி கரணம் (கண் போன்ற இந்திரியங்கள்)
5. உபகாரகம் உதவி செய்பவர்
6. உபகாரியம் உதவியை பெறுபவர்

முதலில் ஜீவர்களையும், அதிபூதத்தையும் எடுத்துக் கொண்டு உபகாரிய, உபகாரக் தத்துவத்தை பயன்படுத்தி மித்யாத்வம் நிரூபிக்கப்படுகிறது.
பிறகு ஜீவர்களையும், அதிதெய்வத்தையும் எடுத்துக் கொண்டு உபகாரிய, உபகாரக் தத்துவத்தை பயன்படுத்தி மித்யாத்வம் நிரூபிக்கப்படுகிறது.
கடைசியில் ஜீவர்களையும் வியஷ்டி கரணத்தை எடுத்துக் கொண்டு உபகாரிய, உபகாரக் தத்துவத்தை பயன்படுத்தி மித்யாத்வம் நிரூபிக்கப்படுகிறது

மந்திர விசாரம்:
ப்ருத்வி – இது மது; இந்த உலமானது போக்யமாக இருக்கிறது. இது ஜீவர்களுக்கு அனுபவிக்கப்படும் பொருளாக, மதுவாக இருக்கிறது.
ஜீவர்கள் – போக்தா, உலகம் –போக்யம் பூமியானது – போக்தா; உலகம் – போக்யம்

அதிதெய்வம் – தேவதைகள், மது; ஜீவர்கள் – போக்தா
ஜீவர்கள் – மது; தேவதைகள் – போக்தா

ஜீவர்கள் – போக்தாஅ; வியஷ்டி கரணம் – அதியாத்மம் – மது
ஜீவர்கள் – மது; வியஷ்டி கரணம் – போக்தா

உதாரணம்: நான் கண்ணை அனுபவிக்கிறேன், காதை அனுபவிக்கிறேன்.
அதே மாதிரி கண்ணும், காதும் என்னை (ஜீவனை) அனுபவிக்கிறது, கண் காட்டும் பாதையில் நான் செல்கிறேன்.

விஸ்வன் + தைஜஸன் + பிராக்ஞன் = ஜீவன்
மேலேயுள்ள சம்பந்த த்திலிருந்து தெரிந்து கொள்வது என்னவென்றால், இவை நான்கும் ஒன்றையொன்று சார்ந்திருக்கிறது
ஆகவே இவை நான்கும் மித்யா. மேலும் இவை நான்கும் எதை சார்ந்திருக்கிறதோ அதுதான் பிரம்மம், ஆத்மா.

ஸ்லோகம்-1
इयँ प्रुथिवी – இந்த பூமியானது सर्वेषाँ भूतानाँ मधु – எல்லா உயிரினங்களுக்கும் மதுவாக இருக்கிறது
अस्यै प्रुथिव्यै सर्वानि भूतानि मधु – எல்லா உயிரினங்களும் ப்ருதிவிக்கு மதுவாக இருக்கிறது.

எந்த ஒரு தேவன் இந்த பூமிக்குள் சைதன்ய ஸ்வரூபமாக (தேஜோமய), நீண்ட நாள் வாழக்கூடியவனாக (அம்ருதமய) இருக்கிறானோ
அவன் எல்லா ஜீவராசிகளுக்கும் மதுவாக இருக்கின்றான். அதே மாதி எல்லா ஜீவராசிகளும் இந்த தேவனுக்கு மதுவாக இருக்கின்றன.
ஸ்தூல சரீரத்திலுள்ள பிருத்வியை மட்டும் அனுபவிப்பவன் ஜீவனுக்கு மதுவாக இருக்கின்றான்,
அதே மாதிரி ஜீவன் மதுவாக இருக்கின்றான் இந்த ஸ்தூல சரீரத்திற்கு. அத்யாத்மம் சரீரம் – வியஷ்டி சரீர தத்துவத்தை மட்டும் அனுபவிக்கின்றவன்.
अयम एव सः இந்த பிரபஞ்சமே ஆத்மா à இந்த உலகம் ஆத்மாவைத்தான் சார்ந்திருக்கிறது, அதனிடமிருந்து வெளிப்பட்டு காட்சியளிக்கிறது
यः अयम आत्मा – எந்த நிர்குணம் மைத்ரேயி பிராமனத்தில் கூறப்பட்டுள்ளதோ, அவைகளுக்கு அதிஷ்டானமாக, ஆதாரமாக இருப்பது ஆத்மா.
इदम अम्रुतम – ஆத்ம ஞானம் அம்ருதத்வ சாதனமாக இருக்கிறது. இந்த ஆத்ம ஞானம்தான் அம்ருதத்வ நிலையை அடைவதற்கு சாதனம்.
इदम ब्रह्मँ – அதிஷ்டான தத்துவம் பிரம்மமாக இருக்கின்றது. இந்த ஸ்ருஷ்டிக்கு அதிஷ்டானமாக இருக்கின்றது.
इदम सर्वँ – பிரம்ம ஞானம் அனைத்துமாக மாறுவதற்கு சாதனமாக இருக்கிறது.

ஸ்லோகம் ஒன்றிலிருந்து பதினான்கு வரை ஒரே கருத்தை வெவ்வேறு தத்துவங்களை உபயோகித்து விளக்கபட்டிருக்கிறது.

இதில் ஜீவன் அனைத்தும் (விராட்+ஹிரண்யகர்ப்பன்) அனுபவிக்கின்றான். அதே மாதிரி அனைத்தும் ஜீவனை அனுபவிக்கின்றன.
अयँ आत्मा सर्वेषाँ आत्मानाँ मधुः – விராட்+ஹிரண்யகர்ப்பன் – ஸ்தூல, சூட்சும தத்துவங்கள் ஜீவர்களுக்கு மதுவாக இருக்கின்றது.

ஸ்லோகம்-15
सर्वात्म भावँ – எல்லாமும் நானாக இருக்கின்றேன் என்ற அறிவு.
அனாத்மாவில் அபிமானம் ஏற்பட்டால், நாம் அதுவாகவே மாறி விடுகிறோம்.
பார்க்கும் போது பார்ப்பவன் என்றும், கேட்கும்போது கேட்பவன் என்றும் இருக்கிறோம்.
ஞானியானவன் எதில் நான் என்ற அபிமானம் வைத்திருக்கிறான் என்றால் அவன் பிரம்மத்தில்தான்,
எனவே அவனை பிரம்மன் என்றூதானே கூற வேண்டும்.
அஹம் பிரம்ம அஸ்மி என்ற ஞானத்துடன் இருக்கும் போது அவன் பிரம்மமாகவே இருக்கிறான்.
எனவே பிரம்மத்தினுடைய லட்சணங்கள் எல்லாம் ஞானியின் லட்சணமாகி விடுகிறது. இந்த மந்திரத்தில் இதுதான் விளக்கப்படுகிறது.

மந்திர விளக்கம்:
सः அந்த ஞானி अयँ आत्मा – ஆத்மாவாக இருக்கிறேன்
सर्वॆषाँ भूतानाँ अधिपति – எல்லா ஜீவராசிகளுக்கும் அதிபதியாக இருக்கின்றேன்
सर्वॆषाँ भूतानाँ राजा – எல்லா ஜீவராசிகளுக்கும் ராஜாவாக இருக்கின்றேன் (சைதன்ய ஸ்வரூபம்)
तद्यदा – எவ்விதம்
रथनाभौ- ரதத்திலுள்ள சக்கரத்தின் மையப்பகுதியையும்
रतनेमौ – அதன் வெளிசுற்றிலுள்ள வளையத்தையும்
च आरा வண்டி சக்கர கம்பிகளால் இந்த இணைக்கப்பட்டிருக்கிறதோ
सर्वॆ स्मर्पिता எல்லாம் என்னைச் சுற்றி சார்ந்திருக்கிறது
एवँ एव अस्मिन आत्मनि இந்த ஞானியிட்த்தில்
सर्वानि भूतानि – எல்லா உலகங்களும் ஞானியை சார்ந்திருக்கின்றன.

ஸ்லோகம்-16
மது வித்யாவின் ஸ்துதி கூறப்படுகிறது.
விசாரம்:
த த்யங்க் ஆதர்வன என்ற ரிஷியானவர் இந்த மது வித்யாவை உபதேசித்தவர் ஆவார்.
சிஷ்யர்களாக இருப்பவர்கள் அஸ்வினி குமாரர்கள் இவர்கள் சொர்க்கலோக வைத்தியர்கள்.
வேறொரு ரிஷி இந்த மது வித்யாவை நான் அறிவேன், அதை நான் மற்றவர்களுக்கு உபதேசிக்க போகிறேன் என்று கூறுகிறார்.
சங்கரரின் விளக்கம்:-
1. இந்திரனால் காப்பாற்றப்பட்டது இந்த வித்யா. இதை தகுதியானவர்களுக்குத்தான் உபதேசிக்கப்பட வேண்டும்
என்று ஆவலால்தான் இந்திரன் இதை பாதுகாத்துக் கொண்டிருக்கிறான்.
ஏனென்றால் தகுதியற்றவர்களால் இது விபரீதமாக புரிந்து கொண்டு மேலும் துயரத்திற்குள்ளாவார்கள்.
2. மிக கஷ்டப்பட்டுத்தான் இந்த ஞானத்தை அடைய முடியும்.
3. கர்ம நிரபேக்‌ஷா வித்யா – இந்த ஞானம் அடைவதற்கு பொருள் எதுவும் தேவையில்லை
வைராக்யம், முமுக்‌ஷூத்வம் வைத்துத்தான் அடைய வேண்டும்.
4. ஆத்ம ரதி ஹேது வித்யா – இது நம்மிடத்திலேயே நம்மை திருப்தியுடன் இருக்க வைக்கிறது.
எவ்வளவு சுகமான சூழ்நிலையாலும் ஒருவன் திருப்தியடைய மாட்டான்.
தன்னிடத்திலே சுகம் காண்பதுதான் நம்மை திருப்தியுடன் இருக்க வைக்கும். இது ஞானத்தின் ஒன்றினால்தான் முடியும்.

மந்திர விளக்கம்:
इदँ वै तन्मधु – இந்த மது வித்யா
दध्यङ आथर्वणः अश्विभ्याँ – தத்யங் அதர்வன ரிஷியானவர், அஸ்வின் குமாரர்களுக்கு உபதேசித்தார்
तदेतद रिषि पश्यन अवोचत् – இதையறிந்த ஒரு ரிஷி, இந்த வித்யாவை மற்றவர்களுக்கு சொல்லப்போகிறேன்.
தத் நரா ஸனயே – இதை மனிதர்களே, மது வித்யாவை அடையும் லாபத்துடன் உங்களிடமிருந்து, தம்ஸ – செயல், உக்ரம்-கொடுரமான.
எப்படி மழை கொடுக்கும் மேகங்கள் மழை பெய்யப்போகிறது என்று உணர்த்துகிறதோ அதேபோல உங்களுக்கு சொல்லப்போகிறேன்.
தத்யங் அதர்வன ரிஷியானவர் மதுவித்யாவை குதிரையின் தலைமூலமாக உபதேசம் செய்தார்.
அதையும் நான் உங்களுக்கு சொல்லப்ப்-போகிறேன்.

ஸ்லோகம்-17
அஸ்வின் குமாரர்களே நீங்கள் குருவான தத்யங் ரிஷி அவர்களுக்கு குதிரையின் தலையை வைத்து
அதன் மூலம் மதுவித்யா உபதேசம் பெற்றீர்கள். இரண்டுவித மதுவித்யாவை உபதேசம் செய்தார்.
சூரியனை மையமாக வைத்தும் ஒன்றும், ஜகத் சம்பந்தபட்ட மது வித்யா என்ற மற்றொன்று.

ஸ்லோகம்-18
ஈஸ்வரன் எல்லா சரீரங்களையும் தோற்றுவித்தார். இரண்டு கால்கள் உடைய சரீரங்கள், நான்கு கால்களையுடைய சரீரங்கள் படைத்தார்.
உடலில் நுழைவதற்கு முன்பு சூட்சும சரீரமாக மாறி ஸ்தூல சரீரத்திற்குள் நுழைந்தார்.
பரமாத்வான அந்த புருஷன் எல்லா சரீரத்திற்குள்ளும் இருப்பதால் அவரு புருஷன் என்று அழைக்கப்படுகிறார்.
இவரால் வியாபிக்கப்படாதது(அனாவிருதம்) எதுவும் இல்லை.

ஸ்லோகம்-19
இந்த பரமாத்மா எல்லா சரீரங்களுக்கும் நுழைந்து அந்த சரீரமாகவே காட்சியளிக்கிறார்.
சிதாபாஸமாக ஈஸ்வரன் மனதில் பிரதிபிம்பிப்பதால் நம்மால் சைதன்யத்தை, சித்தை புரிந்து கொள்ள உதவுகிறது.
ஆத்மாவின் நித் அறிவதற்கு சிதாபாஸம் துணை புரிகிறது.
பரமாத்மா மாயையின் மூலமாக பலவிதமான ரூபங்களாக காட்சியளித்து கொண்டிருக்கிறார்.
அந்த பரமாத்விடம் நம்முடைய எண்ணிக்கையற்ற இந்திரியங்கள் எல்லாம் ஏற்றி வைக்கப்பட்டு உள்ளது.

அந்த பரமாத்வேதான் இந்திரியங்கள் -இந்திரியங்கள் என்பது கிடையாது அவையெல்லாம் நாம ரூபங்களேதான் என்று புரிந்து கொள்ள வேண்டும்.
இந்த பிரம்மமானது அபூர்வம், அனந்தம், அனபரம், அபாஹயம் என்பதாக காட்சியளிக்கிறது
அபூர்வம்: காரண ரஹிதம் – காரணமற்றது
அனந்தம்: காரிய ரஹிதம் – இந்த பிரம்மத்திற்கு இணையான வேறொன்று இல்லை
அனபரம்: இதிலிருந்து எதுவும் வரவில்லை
அபாஹயம்: இதற்கு உள்ளே, வெளியே என்பதெல்லாம் கிடையாது.
அயம் ஆத்மா பிரம்மன் – இந்த ஆத்மாதான் இப்படி சொல்லப்பட்ட பிரம்மம்
ஸர்வானுபூஹி – அனைத்தையும் சாட்சியாக பார்த்துக் கொண்டு இருப்பது
இனைத்துமாகவும் இசுந்து கொண்டு அனைத்தையும் சாட்சியாக அனுபவித்துக் கொண்டிருக்கிறது.

——–

பகுதி-6 : வம்ஸ பிராமணம்
இதில் குரு-சிஷ்ய பரம்பரையினுடைய பெயர்கள் கூறப்பட்டுள்ளது. இந்தப்பெயர்களை பாராயணம் செய்யவும், ஜபம் செய்யவும்

வீத-ராக விஷயம் வா சித்தம் – நாம் பற்றற்று ஞானமடைந்தவர்களை மனதில் தியானித்தால்
அவர்களது குணங்கள் நம்மை வந்தடையும். அதனால் சித்தஸுத்தி அடையலாம், மனம் தூய்மையடையலாம்.
வித்யா ஸ்துதியாந்தம் – இந்த வித்யாவின் பெருமையை எடுத்துச் சொல்வது
இவ்வளவு பெரிய மகான்கள் உபதேசித்த கருத்துக்கள் என்ற பெருமை.
இந்த ஞான உபதேசக் கருத்துக்கள், வேதாந்த கருத்துக்கள், இறைவனிடமிருந்து பரம்பரையாக வந்தவைகள் என்ற அறிந்து கொள்ளலாம்.

————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ ப்ருஹதாரண்ய உபநிஷத்- அத்தியாயம்-2 – ஸ்ரீ அபவாத பிரதானம்–அஜாதசத்ரு பிரமாணம் /பிராண பிராமணம் (சிஷு பிராமணம்)/மூர்த்த-அமூர்த்த பிராமணம்–

March 22, 2021

சங்கரரின் முகவுரை
ஆத்மாவை தேடுதல், அறிதல், அடைதல் எல்லாமே ஒன்றேதான். உண்மையிலேயே நாம் நாடிக் கொண்டிருப்பது ஆத்மாவைத்தான்.
ஆனால் அதை அறியாமல் இருக்கிறோம். எதை நான் நிபந்தனையின்றி விரும்புகின்றேனோ அதுதான் ஆத்மா.
ஆத்மாதான் அடைய வேண்டிய லட்சியம், அதை எப்படி அடைவது என்பதைப்பற்றியும், சம்சாரமும் விளக்கப்பட வேண்டியது,
அதிலிருந்து எப்படி விடுபட என்ன வழி என்பதைப் பற்றியும் விளக்குகிறது இந்த அத்தியாயம்.

————-
பகுதி-1 : அஜாதசத்ரு பிரமாணம்
ஸ்லோகம்-1
அஜாத சத்ரு – பகைவனே இல்லாதவன். யாரையுமே பகைவனாக நினைக்காதவன்.
த்ருப்தஹ – கர்வம்; அனுசான – வேதங்களை பயின்றவர்.
காஷ்யம் – காசியை ஆள்பவர்; ப்ரவாணி – உபதேசிக்கிறேன்.
தத்ம – நாங்கள் கொடுக்கிறோம். வாசி – சொல்லுக்கே,
தாவந்தீதி – சொல்கிறார்கள்.

———–

ஸ்லோகம்-2-13
பாலாகியின் உபதேசம்:
ஒரு தேவதையை அறிமுகப்படுத்தி அதன் மீது ஹிரண்யகர்ப்பனை தியானம் செய்ய உபதேசிக்கிறார்.
ஆதித்யதேவனை ஆலம்பனமாக அறிமுகப்படுத்தி சில குணங்களை கூறி தியானம் செய்ய சொல்கிறார்.
ராஜா அஜாதசத்ரு இதற்கும் மேலே சில குணங்கள் எனக்கு தெரியும் என்று கூறுகிறார்.

—————–

ஸ்லோகம்-14
एतावन – இவ்வளவுதான, एतावत् इति-இவ்வளவுதான்
न विदितँ – அறிந்து கொள்ளவில்லை , त्वा – உங்களை , उपयानी – அணுகுகிறேன்
அஜாதசத்ரு பாலாகியிடம் இவ்வளவுதானா? என்று கேட்க அவரும் இவ்வளவுதான் என் உபதேசம் என்ற கூறினார்.
இவ்வளவுதான் அறிந்து கொண்டேன் என்றால் நீ பிரம்மத்தை பூரணமாக அறியவில்லை என்று ராஜா அஜாதசத்ரு கூறினார்.
பாலாகி தலை குனிந்து தான் சிஷ்யனாக உங்களை அணுகுகிறேன். எனக்கு நிர்குண பிரம்மத்தை உபதேசியுங்கள் என்று வேண்டினார்.

—————-

ஸ்லோகம்-15
அஜாதசத்ரு இவ்விதம் கூறுகின்றார்,
இது தலைகீழாக இருக்கிறது (प्रतिलॊमँ), பிராமணன் சத்திரியனிடம் பிரம்ம உபதேசம் செய்யுங்கள் என்று அணுகுவது.
இருந்தாலும் உனக்கு தெளிவாக உபதேசிக்கிறேன் என்ற ராஜா உறுதி கூறினார். ராஜா, பாலாகியின் தோளில் கை போட்டு எழுந்தார்.
இருவரும் உறங்கிக் கொண்டிருந்த மனிதனிடம் சென்று அடைந்தார்கள். அவனை பிராணனுடைய பல பெயர்களை கூறி அழைத்தார்கள்.
அப்பொழுதும் அவன் எழுந்திருக்கவில்லை. ஆகையால் அவனை உலுக்கி எழுப்பினார்கள். அவன் எழுந்து விட்டான்.
இதிலிருந்து ஸ்தூல சரீரமும், பிராணனும் அறிவு ஸ்வரூபம் இல்லை என்று தெரிகின்றது.

சங்கரரின் விளக்கவுரை
சேதன (அறிவு) தத்துவம் எப்பொழுதுமே அறிபவனாக இருக்கின்றது.
அசேதன (ஜடம்) தத்துவம் எப்பொழுதுமே அறியப்படுவதாக இருக்கிறது.
ஆனால் இவையிரண்டும் ஒன்றோடொன்று கலந்திருக்கிறது. இதைப் பிரித்துப் பார்த்துத்தான் அறியத்தான் இந்த விசாரம்.

அறிவு ஸ்வரூபமாக இருப்பது அறிபவன், அனுபவிப்பவன்; ஜடமாக இருப்பது அறியப்படும் பொருளாக, அனுபவிக்கப்படுவதாக இருக்கிறது.

கேள்வி-1: குருவானவர் நிர்குண பிரம்மத்தை உபதேசிப்பதற்கு தூங்கி கொண்டிருப்பவனை
உதாரணமாக எடுத்துக்கொண்டு எப்படி உபதேசிக்க முடியும்.
பதில்-1: ஆழ்ந்த உறக்கம் ஞானத்தை கொடுக்காது, அதை ஆராய்ந்து பார்த்தால்தான் ஞானம் அடைய முடியும்.
எனவே இங்கே அனுபவத்தை ஆராய்வதற்காகத்தான் தூங்கும் மனிதனை உதாரணமாக எடுத்துக் கொண்டார்.
அக்னிக்கு விஷயமான பெட்ரோல், நெய் இவைகளை ஊற்றினால் அது அனுபவிக்க ஆரம்பித்து விடும்.
அப்படி போக்தாவாக இல்லாவிட்டால்ய் அது அக்னி இல்லை என்று உறுதியடையலாம்.
அதுபோல சப்தம் கேட்டவுடன் பிராணன் சேதனமாக இருந்தால் பதிலளித்திருக்கும் .
ஆனால் அமைதியாக இருப்பதால் அது அசேதனம் என்று உறுதியாகிறது.

கேள்வி-2: நாம் அழைத்த போதிலும் அது பிராணனை அடையவில்லையென்றால் அது எப்படி பதிலளிக்கும்?
பதில்-2: பிராணன் தேவதை என்று கர்மகாண்ட்த்தில் ஏற்றுக்கொண்டு, யாகத்தின் போது சத்தமாகவோ
அல்லது மனத்துக்குள்ளே சொன்னாலே அது பிராணனை அடையும் என்று நம்பி செய்வதைப் போல
இங்கே எப்படி கூப்பிட்டிருந்தாலும் அது பிராணனுக்கு நிச்சயம் கேட்டிருக்கும்.

கேள்வி-3: சரி இவ்வாறு அழைத்தும் பிராணன் பதிலளிக்காததால் ஜீவனில் சேதனம் என்று எதுவுமே இல்லையென்றுதானே தோன்றுகிறது.
பதில்-3: உடலிலுள்ள சேதனம் எல்லா அங்கங்களிலும் வியாபித்திருக்கிறது, அபிமானம் வைத்திருக்கிறது.
ஆழ்ந்த உறக்கத்தில் உள்ள ஜீவன் காரணத்தில் லயம் அடைந்து விட்டதால் அது பதிலளிக்காது.

பல பொருட்களை சேர்த்து உருவாக்கிய வண்டியை அதை உருவாக்கியவர்கள் அனுபவிப்பதில்லை,
அதை வாங்கியவர்தான் அனுபவிக்கிறார்.
அதுபோல பல அங்கங்கள் சேர்ந்து உருவாகியிருக்கும் இந்த ஜீவனில் ஒரு அங்கமான பிராணன் போக்தாவாக இருக்க முடியாது.
இங்கு பிராணனுக்கு மேலான ஒன்றை உபதேசிக்க இருப்பதால் பிராணனை ஆத்மா என்று உபதேசிக்கிறார் என்று எடுத்துக் கொள்ளக்கூடாது.
இப்பொழுது ஜீவாத்மா சம்சாரியாக இருக்கிறான். அவனுடைய ஸ்வரூபம் பற்றி உபதேசம் செய்வதற்காக இப்பொழுது ஆரம்பித்திருக்கிறார்.

—————–

ஸ்லோகம்-16
ஜீவாத்மாவின் உண்மையான ஸ்வரூபம் என்ன?
யத்ரேஷ – எப்பொழுது இந்த ஜீவன், ऎतद अभुत – இந்த மாதிரி தூங்கிக்கொண்டிருப்பவன்
விக்ஞானமய புருஷ – புத்தியுடைய மனிதன், कुव – எங்கு ऎव-இவன்; ததா3-அந்த நேரத்தில் अभुत -இருக்கின்றான்

தூங்கும்போது ஒருவன் எங்கிருக்கிறான்?
कुतः ऎतद आगात – எங்கு இருந்து இவன் திரும்பி வருகிறான்?
என்று அஜாதசத்ரு கேட்டார். तद ह न मेने – சிஷ்யர், பாலாகிக்கு தெரியவில்லை.
ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும்போது ஆத்மஸ்வரூபத்திற்கு சென்றிருந்தான். பிரம்ம ஸ்வரூபத்திலிருந்து வருகிறான்.

கேள்வி-1: ஆழ்ந்த உறக்கத்தில் ஆத்மா தன் ஸ்வரூபத்திலிருந்து வேறெங்காவது சென்று திரும்பி வந்ததா?
பதில்-1: ஒருவேளை ஆத்மா வேறெங்காவது சென்று வந்தால், இது உண்மையாகி விடும்.
ஆத்மா வேறெங்கும் செல்லவில்லையென்றால் சென்று வருதல் என்ற விவகாரம் உண்மையற்றதாக இருக்கும்.
கற்பணையாகத்தான் இருக்க முடியும். ஆத்மா வேறெங்கும் செல்வதில்லை, வருவதுமில்லை.
ஆகவே ஆத்மா எப்பொழுதும் தன் ஸ்வரூபத்திலேயே இருக்கிறது.
ஜீவன் ஆழ்ந்த உறக்கத்தில் தன் ஸ்வரூபத்தில் இருந்தால் அதன் தன்மை என்ன?
அதிகரணம் – இருக்குமிடம், அபாதனம் – இடத்திலிருந்து வரும் இடம்.

விக்ஞானமய புருஷஹ – விக்ஞானமயகோசம்.
சைதன்யமய – சைதன்யத்தினுடைய விகாரம் – சைதன்யத்துக்கு விகாரம் கிடையாது.
சைதன்யமய என்பதற்கு பிரம்மத்தின் உறுப்பாகவும் எடுத்துக் கொள்ளக்கூடாது. சரியான பொருள் புத்தியையுடைய ஜீவன்.

—————–

ஸ்லோகம்-17
விழிப்பு நிலையில் நாம் கர்த்தாவாக, போக்தாவாகவும் இருக்கிறோம். ஆனால் அது நம்முடைய ஸ்வரூபமல்ல.
ஏனென்றால் கனவில் நாம் இரண்டுமில்லாத நிலையில் இருப்பதால் அதுதான் சுபாவ ஸ்வரூப நிலை.
எந்த வித குணமுமில்லாத சைதன்யத்துடன் ஒடுங்கியிருக்கிறான்.
மோட்சத்திற்கு ஒரு உதாரணமாக ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பதை எடுத்துக் கொள்ளலாம்.
ஏனென்றால் அந்த நிலையில் சம்சாரம் இல்லை. ஆனால் அக்ஞானம் இருக்கிறது.
எனவே அது மோட்சம் என்று எடுத்துக் கொள்ள முடியாது.
புத்தியில் பிரதிபலிக்கும் ஆத்மா-சிதாபாஸனாக நாம் நான் என்று எடுத்துக் கொள்கிறோம்.

स्वम् अपि इदि – நாம் நம்மிடத்திலேயே இருத்தல்; க்ருஹீதம் – ஒடுங்குதல்
तदा- அப்பொழுது, तेषाँ प्राणानँ – எல்லா இந்திரியங்களின்
आदाय – , விக்ஞானேன – சிதாபாஸத்துடன்
अन्तहम् – மனதில், आकाशा- பரமாத்மா ,तस्मिन छेत् – அந்த இடத்தில் ஒடுங்குகிறான்.

எப்பொழுது இந்திரியங்களிலிருந்து விலகி, சிதாபாஸத்துடன் நிர்குண சைதன்யத்துடன் லயமாகி விடுகிறான்.
இந்த ஜீவனின் ஆழ்ந்த உறக்கத்தில் மூக்கினுடைய செயல்பாடுகள், நாக்கினுடைய செயல்பாடுகள்,
வாயினுடைய செயல்பாடுகள் என எல்லாய் இந்திரியங்களின் செயல்பாடுகளும் ஆத்மாவில் ஒடுங்கி விடுவதால்
எந்த விவகாரமும் நடக்காமல் இருக்கிறது. எல்லா இந்திரியங்களும் சிதாபாஸத்தில் ஒடுங்கி
பிறகு இதயத்தில் உள்ள பரமாத்வாவுடன் லயம் அடைகிறது.

————–

ஸ்லோகம்-18
निगच्छति – அடைகின்றான், उच्छवयँ- மேலான, கீழான, जानपदान् – வேலையாட்கள் ,
जनपदे- நாட்டில், परिवतत- உலாவருகின்றான்
நாம் அனுபவிக்கும் சம்சாரம் வந்து போகிற விஷயம், இந்திரியங்களோடு அபிமனமில்லாத போது சம்சாரம் இல்லை.
எனவே சம்சாரத்திற்கு ஸ்வரூப சம்பந்தம் இல்லை. விழிப்பு நிலைஇல்தான் சம்சாரத்தை அனுபவிக்கிறோம்.
ஆழ்ந்த உறக்கத்தில் இந்த சம்சாரத்தை அனுபவிப்பதில்லை. காரணம் இந்திரியங்களோடு சம்பந்தமில்லை.

கேள்வி-1: கனவு நிலையிலும் இந்திர்யங்களுடன் தொடர்பில்லை ஆனாலும் ஸ்வப்ன பிரபஞ்சத்தை உருவாக்கி
சம்சாரத்தை அனுபவிக்கிறான். எனவே சம்சரத்திற்கு காரணம் இந்திரியங்களோடு உள்ள சம்பந்தம் என்பதில்லை
அது உனது ஸ்வரூபம்தான்.
பதில்-1: விழிப்பு ஸம்ஸ்காரங்கள்தான், கனவில் சம்சாரத்தை அனுபவிக்க காரணமாகிறது.
ஆகவே கனவு என்பது விழிப்பு நிலையில் உள்ள ஸம்ஸ்காரங்கள் உருவாக்கிய உலகத்தைத்தான் நாம் அனுபவிக்கிறோம்.
ஆழ்நிலை உறக்கத்தில் இந்த ஸ்ம்ஸ்காரங்களில் இருந்து விடுதலையடைகிறோம்.

கனவு எப்படி வருகிறது? (சாஸ்திர விளக்கம்)
மனம் நாடிகளின் வழியாகத்தான் கனவுலகில் சஞ்சரிக்கிறது. மனதின் இருப்பிடம் இதயம், இதிலிருந்துதான் பல நாடிகள் செல்கிறது.
மனமானது நாடிகள் வழியே கண், காது போன்ற இந்திரியங்களை அடைகிறது. பிறகு இந்த உலகத்தை அனுபவிக்கிறது.
கனவு நேரத்தில் அந்தக்கரணம் நாடிகள் வழியே சென்று கோளகத்தை அடைகின்றது. நம்முடைய ஸம்ஸ்காரத்திற்கேற்ப
கர்ம வசத்தினால் எதோ ஒரு வாசனையுடன் தொடர்பு கொண்டு நாடிகளுக்குள்ளே ஒரு பிரபஞ்சத்தை உருவாக்கி
அந்த பிரபஞ்சத்தை ஜீவன் அனுபவிக்கிறான். அவனுக்கு தைஜஸன் என்று பெயர்.
கனவில் சம்சாரத்தை அனுபவிக்க காரணம் கர்ம வினை காரணமாக ஏதாவது ஒரு ஸம்ஸ்காரத்துடன் தொடர்பு கொண்டு இருப்பதால்தான்.

மந்திர விளக்கம்:
ஒருவன் எப்பொழுது கனவு நிலையில் இருக்கின்றானோ அந்த நிலையில் அவன் தன்னுடைய கர்ம பலனைத்தான் அனுபவிக்கிறான்.
கனவை தேர்ந்தெடுக்க முடியாது என்பதால் கர்ம பலனை அனுபவிக்கிறோம். கனவுப் பிரபஞ்சமும் மித்யா என்று இந்த மந்திரம் உணர்த்துகிறது.
கனவில் மகாராஜாவாக இருப்பது போல, பெரிய பண்டிதனாக இருப்பது போல, மேலான, கீழான பிறவியை அடைந்து,
மகாராஜா நகர்வலம் வரும்போது எந்தவித தடையும் இல்லாமல் படைகளுடன் அனுபவிக்கிறாரோ
அதுமாதிரி ஜீவனும் தன்னுடைய வாஸனையால் ஒரு தனி உலகத்தை படைத்துக் கொண்டு தன் விருப்பப்படி
தன்னுடைய உடலில் உலா வருகின்றான்.
ஆகவே சம்சாரம் என்பது அனாத்மாவை அபிமானிக்கும் போதுதான் ஏற்படுகிறது என்று புரிந்து கொள்ளலாம்.

———————-

ஸ்லோகம்-19
अथ – அதுவே , यदा सुषुप्तो भवति – எப்பொழுது உறங்கிக்கோண்டு இருக்கின்றானோ,
न कस्यचन वेद – எதையும் அறியவில்லை.
நம் உடலில் 101 பிரதான நாடிகளும், 72,000 நாடிகளும் இருக்கின்றன. இதற்கு ஹிதர என்று பெயர்.
இவைகளனைத்தும் இதயத்திலிருந்து உடல் முழுவதும் வியாபித்து செல்கின்றது.
இந்த நாடிகள் வழியே சென்று இதயத்திற்குள் ஒடுங்கி விடுகின்றான் ஜீவன்.
ताभि – அதே நாடி வழியே திரும்பி , पुरीतति – இதய ஆகசத்துக்குள் உறங்குகின்றான்.
குழந்தையாக இருந்தாலும், மகாராஜாவாக இருந்தாலும், பெரிய பண்டிதனாக இருந்தாலும், எல்லோருமே ஆனந்தத்தினுடைய
எல்லையை அடைந்து உறங்குகின்றான். இதுதான் உறக்கத்தைப்பற்றிய விசாரம். ஜீவனில் ஏற்படும் சம்பந்தத்தால் சம்சாரம் ஏற்படுகிறது.
முதலிரண்டு அவஸ்தைகளிலும் சம்பந்தம் இருக்கிறது.
எனவே சம்பந்தம் நித்யமாக இருப்பதால் சம்சாரமும் நித்யமாக இருப்பது போல் தோன்றுகிறது.
ஆனால் ஆழ்நிலை உறக்கத்தில் எந்தவித சம்பந்தம் இல்லை.

————

ஸ்லோகம்-20
இந்த மந்திரத்தில் பிரம்ம லட்சணம் விளக்கப்படுகிறது. உபநிஷத் இதை முக்கியமானது, ரகசியமானது என்று கூறுகிறது.
1. பிரம்மன் உபாதான காரணமாக இருக்கிறது à ஜகத்துக்கும், ஜீவனுக்கும்
2. எந்தவொரு சைதன்யம் நம்முடைய ஒரு சரீரத்திற்கு ஆதாரமாக இருக்கிறதோ அதுவே இந்த உலகத்துக்கே ஆதாரமாக இருக்கிறது.
3. பிரம்ம – ஆத்ம ஐக்கியத்தை குறிப்பாக உணர்த்தப்படுகிறது.
4. பிரம்மத்தின் புதிய லட்சணம் – (ஜகத் மித்யா, பிரம்ம சத்யம், பிரம்ம அத்வைதம்)
5. ஜீவன் எங்கிருந்து வருகின்றான்

மந்திர விளக்கம்:
சிலந்தி பூச்சி அதன் வலையை அதுவே பின்னிக்கொண்டு அதன் மீது ஊர்ந்து சென்று, வந்து கொண்டிருக்கின்றது.
நெருப்பிலிருந்து சிறிய சிறிய தீப்பொறிகள் தோன்றுகின்றனவோ.
சேதனமான சிலந்தி ஜடமான வலைக்கு உபாதான காரணமாக இருக்கிறது, அதாவது யாருடைய உதவியுமில்லாமல்
தன் வலையை தானெ உருவாக்கிக் கொள்கிறது. அதுபோல பிரம்மன் யாருடைய உதவியுமில்லாமல்
ஜகத் உருவாகுவதற்கு உபாதான காரணமாக இருக்கின்றது. அதுவே நிமித்த காரணமுமாக இருக்கின்றது.
பிரம்மன் ஜீவன் உருவாகுவதற்கு காரணாமாக இருக்கிறது. நெருப்பிலிருந்து தோன்றும் தீப்பொறி ஸ்வரூபத்தில் ஒன்றாக இருக்கிறது
ஆனால் உருவத்தில் மட்டும் வித்தியாசமாக இருக்கிறது. பிரம்மனில்ருந்து தோன்றும் ஜீவனும் ஒரே ஸ்வரூபத்தை உடையது.
இதனால் எந்தவித மாற்றமுடையாமல் பிரம்மன் இருக்கிறது, ஜீவனை தோற்றுவிக்கிறது.

ஏவம் ஏவ – இவ்விதமாகவே, உதாரணத்தைப் போல
அஸ்மாத் ஆத்மனஹ – இந்த உடலுக்கு ஆதாரமாக உள்ள ஆத்மாவிடம் இருந்தே
ஸர்வே பிராணாஹ – எல்லா பிராணன்களும், ஜீவராசிகளுடைய எல்லாய் இந்திரியங்களும்
ஸர்வே லோகாஹ – எல்லா லோகங்களும்,- அனுபவிக்கப்படுகின்ற உலகங்கள் அவரவர் கர்ம பலனுக்கேற்ற உலகத்தை
ஸர்வே தேவாஹ – எல்லா தேவர்களூம் – இந்த உலகத்தினுடைய நியதியை கண்காணிப்பவர்கள்.
ஸர்வானி பூதானி – எல்லாய் உயிரினங்களும் தோன்றியுள்ளன. இதனால் பிரம்மன் என்று சொல்ல வேண்டிய இடங்களில்
ஆத்மா என்ற சொல்லை உபயோகித்திருப்பதால் இரண்டும் ஒன்றே என்று குறிப்பால் உணர்த்துகிறது.
தஸ்ய – பிரம்மத்தினுடைய, உபநிஷத் – ரகசியமான பெயர்.
அது ஸத்யஸ்ய ஸத்யம் – சத்தியத்தினுடைய சத்யம்

இது ரகசியம் என்று கூறுவதற்கு காரணம் இது மிகவும் சூட்சுமமான லட்சணம். இதை புர்ந்துக் கொள்வதற்கு மிகவும் கடினம்.
இது புனிதமான பெயர் என்றும் கூறலாம். இந்தப் பெயரை தகுதியானவர்க்கு மட்டும்தான் சொல்ல வேண்டும்.
”ஸ்த்யஸ்ய” என்ற சொல்லில் உள்ள சத்யமானது பிராணனை குறிக்கும்.
பிராண ஏவ ஸத்யம் – பிராணனுடைய சத்யம், உலகத்தினுடைய சத்யம் என்று இதை பொருள் கொள்ள வேண்டும்.
தேஷாம் ஏவ ஸத்யம் – பிராணன்களுக்கு பிரம்மன் ஸத்யம். உலகத்தை எப்படி சத்தியம் என்றூ கூறமுடியும் என்றால்
சத்தியம் என்ற சொல்லை இரண்டாக பிரித்தால் உருவத்துடன் கூடியது, உருவமில்லாதது அல்லது வியாவகாரிக ஸத்யம் என்றும் இதைக் கூறலாம்.
வியாவஹாரிக சத்தியத்திற்கு பாரமார்த்திக சத்யமாக இருப்பது–

சங்கரரின் விளக்கவுரை (ஸத்யஸ்ய ஸத்யம்)
கேள்வி-1: இரண்டு கேள்விகளையும் ஒரு கேள்வியாகத்தான் எடுத்துக் கொள்ள வேண்டும்?
எங்கிருக்கிறானோ அங்கிருந்துதான் வரவேண்டும். எனவே இரண்டாவது கேள்விக்கு அவசியமிலை.
பதில்-1: குதஹ: எங்கிருந்து, எதனால் என்று இரண்டு பொருள் உள்ளது.
அபாதானத்தை நீக்கி நிமித்தத்தை எடுத்துக்கொண்டால் நீ கேட்ட கேள்வி சரி.
எனவே எதன் காரணமாக திரும்பி வருகிறான் என்று எடுத்துக் கொள்ளலாம்.
கேள்வி-2: பதிலைப் பார்க்கும் போது நிமித்தக்காரண அடிப்படையில் இல்லை. அபாதான அடிப்படையில்தான் இருக்கிறது.
பதில்-2: முதல் கேள்வியில் ஆதாரம், ஆதேயம் என்ற சந்தேகம் வந்து விடும்.
இந்த சந்தேகத்தை நீக்கி அத்வைதத்தை நிலைநாட்ட இந்த இரண்டாவது பதிலும் தேவை.

சங்கரரின் விளக்கம்
விளக்கம் ஏன் தேவை? எங்கு சந்தேகம் இருக்கிறதோ அங்கே விசாரம் செய்யல்லாம்.
பிரயோஜனம் இருக்க வேண்டிய இடத்தில் விசாரம் செய்யல்லாம். இந்த இரண்டுமே இல்லை.
பிறகு ஏன் விளக்கம் தேவை என்று சங்கரர் விளக்குகிறார்.

தஸ்ய உபநிஷத் – அவனுடைய ரகசியம் என்பது ஜீவனுடையதா, பிரம்மத்தினுடையதா? என்ற சந்தேகம் வரலாம்.
தஸ்ய – ஜீவனுடைய லட்ச்ணமாக இருந்தால் சம்சாரத்தைத்தான் புரிந்து கொள்ள வேண்டும்.
தஸ்ய – பிரம்மத்தின் லட்சணமாக இருந்தால் அதன் ஞானத்தைத்தான் அடைவோம்.

ஜீவன் வேறு, பிரம்மன் வேறு என்றால் மஹா வாக்கியமே தவறாகி விடுகிறது.
ஜீவன் அசம்சாரியென்றால் சாஸ்திர உபதேசம் அனர்த்தமாகி விடும்.
ஜீவனும், பிரம்மனும் ஒன்றென்றால் பிறகு சாஸ்திர உபதேசம் தேவையற்றதாகி விடும்.

கேள்வி: குருவானவர் உறங்கிக்கொண்டிருந்தவனிடம் சென்று பிரம்மத்தை உபதேசிக்க அணுகினார்.
ஆகவே ஜீவாத்மாவைத்தான் குறிக்கிறது. இங்கு ஜீவனைப்பற்றித்தான் விசாரிக்கின்றோம்.
“தஸ்ய” என்பது ஜீவனைத்தான் குறிக்கிறது. நம்மால் அறியப்பட வேண்டியது ஜீவனைத்தான்.
ஆத்மாவை இத்யவெ உபாஸீதே என்று உபநிஷத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.
இப்படி பல இடங்களில் ஆத்மாவைத்தான் அறிய வேண்டும் என்று வேதம் சொல்கிறது.
ஈஸ்வரன் ஒருவர் இருந்தால்தானே அவரை குறிப்பதற்கு.
பதில்: ஜீவாத்மாத்தான் என்று நீ சொல்கிறாய், இதை சம்சாரி என்று ஓரிடத்திலும்,
அசம்சாரி என்று வேறிடத்திலும் சொல்லப்பட்டிருக்கிறது. ஜீவனில் இரண்டு அவஸ்தைகள் இருப்படாக வைத்துக் கொள்ளலாம்.
அசம்சாரியாக இருக்கிறது ஜீவனிலிருந்துதான் ஜகத் வந்திருக்கிறது என்று எடுத்துக் கொள்ளலாமே.

கேள்வி: இந்தக் கருத்து ஏற்றுக்கொள்ளதக்கதல்ல. இரண்டு விபரீதமான தர்மத்துடன் ஒரு பொருள் இருக்க முடியாது.
தடஸ்த ஈஸ்வரனை ஏற்றுக்கொள்வேன், ஜீவனிடமிருந்து வேறான தடஸ்த ஈஸ்வரன் மட்டுமே ஏற்றுக் கொள்ளத்தக்கது.
இந்த பிரகரணம் பிரம்மத்தைப்பற்றித்தான் விளக்கப்படுகிறது. 15வது ஸ்லோகத்தில் “பிரம்மத்தே வர்ஷியதே இதி” என்பதிலிருந்து
பிரம்மத்தை உபதேசிக்கிறேன் என்ற குருவின் பதிலிலிருந்து, பிரம்மந்தான் விசாரம் செய்யப்படுகிறது.

ஜீவன் வேறு, ஈஸ்வரன் வேறு, ஜீவன் ஆழ்ந்த உறக்கத்தில் ஈஸ்வரனிடம் தங்குகிறான்.
எனவே அவன் அந்த நிலையிலே ஈஸ்வரனிடத்தில் தங்குவதாலேயே, நாம் ஜீவனை அறிவது ஈஸ்வரனை விசாரிப்பதிலிருந்துதான்.
வேறு சில இடங்களில் ஈஸ்வரனைப்பற்றியும் பேசப்படுகிறது.
அந்த ஈஸ்வரனும் அறியப்பட வேண்டியதுதான் என்று சாஸ்திரம் சொல்லியிருப்பதால்,
ஆத்மாவையும் அறிய வேண்டும், ஈஸ்வரனையும் அறிய வேண்டும்.
எல்லா இட்த்திலும் ஜீவ-ஈஸ்வரனை வேறுபடுத்தி பேசியிருக்கிறது.
“அஹம் பிரஹ்மஸ்மி” என்பதெல்லாம் உபாஸனைக்குத்தான் சொல்லப்பட்டிருக்கிறது.
பதில்: பிரவேச ஸ்ருதிவசாத் – பிரவேச ஸ்ருதியின் அடிப்படையில் ஜீவ-ஈஸ்வரன் ஐக்கியம்தான் உண்மை.
ஜீவனிடமிருந்து வேறுபடாத ஈஸ்வரனைதான் “தஸ்ய” என்ற சொல் குறிக்கிறது.
இந்த உலகத்துக்கே ஆதாரமாக உள்ள ஈஸ்வரந்தான் ஜீவனுக்குள் சென்றிருக்கிறார்.
ஆத்மா என்ற சொல் பிரம்மனிடமிருந்து வேறுபடாத ஒன்று.
ஈஸ்வரனாக இருக்கும்போது ஜீவன் ஈஸ்வரனிடத்தில் ஒடுங்குகிறான் என்பது தவறு.

கேள்வி- ஜீவ-ஈஸ்வர ஐக்கியம் என்று சொன்னால் அதில் இரண்டு தோஷம் உள்ளது.
ஜீவன் சம்சாரி, ஈஸ்வரன் அசம்சாரி. எனவே இந்த ஐக்கியம் இருவரும் சம்சாரியாக இருப்பார்கள்.
முதல் கருத்து ஸ்ருதிக்கு விரோதமாக இருக்கும். இரண்டாவது கருத்தை ஏற்றுக்கொண்டால் சாஸ்திரமும் தேவையில்லை என்றாகி விடும்.

பேதாபதிவாதி — விருத்திகார மதம் – உருவாக்கியவர் பர்த்துரு பிரவஞ்சம்.
விசிஷ்டாவைதம் பேதமும், அபேதமும் சேர்ந்திருப்பதால் இந்தப் பெயர். ஈஸ்வரன் ஒருவர்தான்
ஜீவனை சம்சாரி என்று பல இடங்களிலும் சொல்லப்பட்டிருக்கிறது.
ஈஸ்வரன் அசம்சாரி என்று பல இடங்களிலும் சொல்லப்பட்டிருக்கிறது. ஜீவ-ஈஸ்வர ஐக்கியமும் சொல்லியிருக்கிறது.
ஈஸ்வரன் ஜீவனுக்குள் செல்லும்போது விகாரமடைந்து சென்றிருக்கிறார்.
இப்படி புரிந்து கொண்டால் ஜீவனை ஈஸ்வரனிடமிருந்து வேறாக இருக்கிறாரா, இல்லையா என்ற கேள்விக்கு பதில் சொல்லி விடலாம்.
இந்த பேத, அபேத லட்சணத்தால் எல்லா வேத வாக்கியங்களும் சரியாக பொருந்தி வரும்.

கேள்வி-1: பல பரமாத்மாக்கள் இருக்கிறார்கள் அதில் சில பரமாத்மா ஜீவாத்மாவாக இருக்கிறது.
மற்றவைகள் பரமாத்மாவாகவே இருக்கிறது. உதாரணமாக பல விதைகளில் சில விதைகள் விதைகளாகவே இருக்கிறது,
மற்றவைகள் விதைக்கப்பட்டு மரமாகி விடுகிறது.
பதில்: உபநிஷத் பல பரமாத்வாக்களை பற்றி பேசவில்லை. ஜீவர்களை பலவாக சொல்லியிருக்கிறது. ஆகவே இது தவறு.

கேள்வி-2: ஒரு பரமாத்மா முழுமையாக ஜீவனாக மாறியிருக்கிறது. உதாரணமாக ஒரு லிட்டர் பாலையும் தயிராக மாற்றுவது போல.
பதில்-2: பரமாத்மா ஜீவாத்மாவாக மாறிவிட்டால், பரமாத்வே கிடையாது. எனவே பரமாத்வை அடைய முடியாது.
ஈஸ்வரன் இல்லாத நிலையில் மோட்சம் என்பது கிடையாது.

கேள்வி-3: ஏகதேச விகாரஹ- ஒரு பகுதியில் மட்டும் விகாரம் நடந்திருக்கிறது.
பரமாத்மவுடன் ஒரு பகுதி ஜீவாத்மாவாக மாறியிருக்கிறது.
உதாரணமாக பூமியில் சில பகுதிகள் பாலைவனம், மலைகள், விளை நிலங்கள், விதவிதமாக இருப்பது போல
ஈஸ்வரன் ஜீவாத்மாவாக விதவிதமான மாற்றங்களுடன் ஐக்கியமாகியிருக்கிறார்கள்.
பதில்-3: அங்கங்கள் என்று சொன்னால், அதற்கு வரும் நாசமெல்லாம் அது எதனோடு சேர்ந்திருக்கிறதோ அதற்கும் நாசமேற்படும்.
ஜீவர்கள் ஈஸ்வரனின் அவயவங்கள் என்று கூறினால், ஜீவர்களில் சம்சார குணம், ஈஸ்வரனையும் சம்சாரியாக்கி விடும்.
எனவே சம்சாரியை நாம் ஏன் அடைய வேண்டும் அது நம்முடைய லட்சியமல்ல. ஏற்கனவே நாம்தான் சம்சாரியாக இருக்கிறோம்.

எந்த வாக்கியத்திற்கு பலன் கிடைக்கிறதோ, புருஷார்த்தமாக வைக்க முடியுமோ அதைத்தான் மகாவாக்கியம் என்று கூறமுடியும்.
ஈஸ்வரனை முக்தனாக வைத்து அசம்சாரியாக வைத்திருந்தால்தான் ஜீவர்களும் அந்த நிலையை அடைவதற்கு லட்சியமாக வைத்து கொள்ள முடியும்.
பிரம்மத்தை புரிந்து கொள்வதற்கு எந்த உபமானமும் கிடையாது.
அப்படி கூறப்பட்டிருந்தால் அதை பிரமாணமாக எடுத்துக்கொள்ளாமல் அதைப்புரிந்து கொள்வதற்காக எடுத்துக் கொள்ள வேண்டும்.
உபநிஷத்தில் த்வைதத்தை, பேதத்தை நிந்தித்திருப்பதாலும் ஏற்கனவே ஜீவன் நான் சம்சாரி என்று நன்றாக தெரியும்.
எனவே அசம்சாரியைப்பற்றித்தான் சொல்ல வேண்டும். பேதம்-அபேதம் என்றூ வாதம் சரியாக இல்லை.
ஜீவனும் பிரம்மனும் பக்கத்திலே இருக்கிறதென்றால் அது ஒன்றையொன்று ஒட்டாததாக இருக்க வேண்டும்,
ஜீவன் மித்யாவாக இருப்பதால் அவனால் பிரம்மத்தை தொடமுடியாது.

பூர்வபக்‌ஷம்:
ஜீவ-பிரம்மத்திற்கிடையே நான்கு தோஷங்கள் இருக்கின்றன.
1) ஸ்வார்த்த விரோதம் – உபநிஷத் முரண்பாடாக பேசுகிறது
2) கர்மகாண்ட அபிரமானம் – கர்ம காண்டம் பிரமானம் என்ற தகுதியை இழந்து விடும்.
3) பிரத்யக்‌ஷ விரோதம் – அனுபவத்திலே விரோதம்
4) அனுமான விரோதம் – அனுமானத்திலேயே விரோதம்.

கேள்வி: உபநிஷத் ஜீவனை சம்சாரியாக நன்கு வர்ணித்திருக்கிறது. ஜீவனுக்கு பல சாதனைகளை சொல்லியிருக்கிறது.
சில இடங்களில் ஜீவன் முக்தன், பிரம்மன் என்று ஐக்கியப்படுத்துகிறது.
பதில்: உபநிஷத் ஜீவனை சம்சாரியாக சொல்கிறது அது உபதேசமல்ல அனுவாதம்.
ஆனால் எதைத் தெரிந்துக் கொள்ள வேண்டுமோ அதுதான் உபதேசம் (பிரமானம்).

கேள்வி: ஞான காண்டத்தில் உபநிஷத் எல்லாவற்றையும் நிஷேதம் செய்கிறது. பிரமாணத்தால் அறிய முடியாதது பிரம்மம்.
கர்ம காண்டம் ஜகத்தைத்தான் விஷயமாக வைத்திருக்கிறது அதை நீக்கி விட்டது கர்ம காண்டம் அபிரமானம்;
காரணம் நிர்விஷயமாக இருக்கிறது. ஜீவனை அகர்த்தா, அபோக்தா என்று சொல்கிறாய்,
கர்ம காண்டம் கர்மத்தை செய் என்று சொல்கிறது, இப்படி செய் என்று கர்த்தாவிடம்தான் சொல்ல முடியும்.
ஆனால் அகர்த்தாவிடம் கர்மத்தை கொடுத்து விடுகிறது.
இரண்டாவது காரணம் பிரமாஜனகத்வாத் – கர்ம காண்டமே நமக்கு மோகத்தை கொடுத்து விடுகிறது.
எனவே கர்ம காண்டம் பிரமானமல்ல என்ற நிலை உருவாகி விடும்.
பதில்: கர்ம காண்டம் நிர்விஷயமல்ல, விஷயமிருக்கிறது. இந்த ஜகத்தான் விஷயம். இது சாதனை, இது சாத்தியம்
என்ற ஞானத்தைக் கொடுக்கிறது. இந்த சாத்தியத்திற்கு இந்த சாதனம் என்று கூறுகிறது.
இஷ்ட பிராப்தி, அனிஷ்ட நிவிருத்தி (இஷ்டமில்லாததை நீக்குவது).
இதற்கு கர்ம காண்டமி சாதனையைக் கொடுக்கிறது அதன் பலனையும் சொல்கிறது.

கேள்வி: சாதனை, சாத்தியம் மித்யா என்று தெரிந்து விட்டால், கர்ம காண்டத்திற்கு யாரும் வர மாட்டார்கள்,
அப்பொழுது இது பிரயோஜனமில்லாததாகி விடும்.
பதில்: கர்ம காண்டம் சாதனை, சாத்தியம், அஸத்வம், ஸத்யத்வம் இரண்டுமே பேசவில்லை. கர்ம காண்டம் விஷயம் வேறு,
ஞான காண்டம் விஷயம் வேறு. அதனால் இரண்டையும் சேர்த்துப் பார்க்கக்கூடாது.
கர்ம காண்டம் அக்ஞானிக்கு பிரமானம்; ஞானிக்கு பிரமானமல்ல. கர்ம காண்டம் ஞானிக்கு பிரயோஜனமில்லை.
அதனால் அபிரமாணமாக இருக்கிறது.. பிரமாணமாக இருந்தால் பிரயோஜனத்தை கொடுக்க வேண்டும் என்ற அவசியமில்லை.
கர்மகாண்டம் எல்லோருக்கும் பிரமாணம் தான்.

கேள்வி: நம்மை செயலில் ஈடுபடுத்துவது யார்? தூண்டுவது யார்?
பதில்: நம்மிடத்தேயுள்ள ராக, துவேஷம்தான் நம்மை செயலை செய்யத் தூண்டுகிறது.
வெளி விஷயங்களில் பற்றுடையவனை சாஸ்திரத்திற்கும் கூட அதை நீக்கும் சக்தி கிடையாது.
சாஸ்திரத்தால் பற்றில்லாத ஒருவனை மீண்டும் பற்றுக் கொள்ளும் நிலைக்கு தள்ள முடியாது.
அது இருப்பதைக் காட்டி கொடுக்கும், ஆனால் தூண்டி விட்டு செயலில் ஈடுபடுத்தாது.
அவரவர் புத்திக்கேற்றவாறு சாஸ்திரம் சொல்வதை பின்பற்றுகிறான். அது கர்மகாண்டமாக இருக்கலாம், அல்லது ஞான காண்டமாக இருக்கலாம்,

அனுபவத்தினால் பேதத்தை நிலை நாட்ட முடியாது. அனுபவத்தில் ஆகாசம் பலவாக இருக்கிறது.
ஆனால் ஆகாசம் ஒன்றுதான் என்ற அறிவுடன் இருக்கிறோம்.

கேள்வி: பொருட்கள் விதவிதமான குணங்களுடன் இருக்கிறது. எனவே விதவிதமான ஆதாரம் இருக்க முடியும் அல்லவா?
பதில்: வித விதமான சப்தங்களுக்கு ஆகாசம் ஒன்றுதான் ஆதாரமாக இருக்கிறது.
அதே போல விதவிதமான தர்மங்களுக்கு பிரம்மன் ஒன்றுதான் ஆதாரம்.
ஆத்மா பிரத்யக்ஷத்துக்கு அப்பாற் உள்ளதால், ஆத்மா அப்ரத்யக்‌ஷம். அனுபவத்திற்கு விஷயமாகாது.
எனவே ஆத்மாவை பிரத்யக்‌ஷத்துடன் சேர்க்கவேக்கூடாது.

கேள்வி: ஆத்மா பிளவுபட்டதாக இருக்கிறது. ஆத்மா ஒன்றுதான் என்றால் எல்லோரும் ஒரே அனுபவம்தான் வரவேண்டும்.
ஆனால் அப்படியில்லையே.
பதில்: பிரத்யக்‌ஷ பிரமானம் இருந்தால்தான் அனுமானம் பயன்படுத்த வேண்டும்.
உன்னுடைய ஸ்தூல சரீரம் அனுமானத்தை சொல்கிறதா? ஆத்மா அனுமானம் செய்கிறதா? யாரும் இந்த அனுமானத்தை செய்ய முடியாது

————

பகுதி-2 : பிராண பிராமணம் (சிஷு பிராமணம்)

இந்தப் பகுதியில் சத்தியத்தினுடைய சத்யம் அன்பதை மேலும் விளக்கப்பட்டுள்ளது.
பஞ்ச பிராண தத்துவத்தின் விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

வெளியிலிருக்கும் காற்றுக்கு வாயு என்று பெயர், உடலுக்குள் சென்று வரும் போது அதையே பிராணன்கள் என்று ஐந்து விதமாக அழைக்கப்படுகிறது.
இந்திரியங்களையும் பிராணன் என்றும் அழைக்கப்படுகிறது
சில இடங்களில் ஸ்தூல உடலும், உலகமும் பிராணன் என்று அழைக்கப்படுகிறது.
சூட்சும சரீரமாக பிராணன் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இவ்வாறு பிராணனின் உண்மையான பொருளைத் தவிர வேறு விதமாகவும் அழைக்கப்படுகிறது.
பிராணனுடைய பெருமையைப் பற்றி பேசப்படுகிறது. இவ்வாறு பெருமையாக கூறினாலும் இது மித்யாதான்.
நம்முடைய மனம் ஸத்தியத்தின் ஸத்யம் என்ற வார்த்தையை புரிந்து கொள்ள முடியவில்லையென்றால்,
இதற்கு தடையாக இருப்பது நம்முடைய இந்திரியங்கள், ஏனென்றால்
இந்திரியங்கள் ராக துவேஷங்களால் பலமாக ஆட்கொள்ளபட்டு இவ்வாறு தடையாக இருக்கிறது.
மனதை சஞ்சலபட வைத்து அதை சக்தியற்றதாக மாற்றி விடுகிறது.
எனவே இங்கு ஒரு விதமான உபாஸனை ஒன்று சொல்லப்பட்டிருக்கிறது. இதன் மூலம் இந்திரியத்தை வெல்ல முடியும்.
இந்த கருத்துக்களெல்லாம் இந்தப் பகுதியில் சொல்லப்பட்டிருக்கிறது.

சங்கரரின் முகவுரை
பிராணன் வியாவஹாரிக சத்யமாக இருக்கிறது. இப்படி சொல்வது இது தனக்கு வேறாக உள்ள பாரமார்த்திக
சத்யத்திலிருந்து சத்யத்தை எடுத்துக் கொண்டு ஸத்யமாக தோற்றமளிக்கிறது.
இங்கு பிராணனை இந்த ஜகத்தாகத்தான் எடுத்துக் கொள்ள வேண்டும். இது தானாக இருத்தல் என்ற சக்தியற்று
வேறொன்றின் மூலம் இருத்தலை பெற்றுக் கொண்டு காட்சியளிக்கிறது.
இந்த ஜகத் எதனிடமிருந்து தோன்றி, எது இருப்பதால் தானும் இருந்து கொண்டு பிறகு அதனிடமே ஒடுங்குவதால் பிரம்மம்தான் ஸத்யம்.
ஸத்யம் என்ற சொல்லுக்கு யோக்யதையான பிரம்மத்தை விட்டு ஏன் பிராண தத்துவத்தை ஸத்யம் என்று கூறுகின்றது
என்ற விளக்கத்தை இந்தப் பகுதியில் விளக்கப்பட்டிருக்கிறது.

இந்த உலகம் மூர்த்தம், அமூர்த்தம் என்று பிரிக்கப்படுகிறது. ஸத்யம்=ஸத் + த்யத் = உருவம் + உருவமற்றது.
பிராணனும் மூர்த்த-அமூர்த்தமாக இருக்கிறது. எனவே பிராணன் ஸத்யன் என்று எடுத்துக் கொள்ளலாம்.

மந்திர விளக்கம்
பிராணனுக்கு ரகசியமான பெயர் – சிஷூ – கன்றுக்குட்டியை உதாரணமாக எடுத்துக் கொள்ளப்படுகிறது.
இவையிரண்டும் ராக-துவேஷமற்றது, வெளி விஷயங்களில் பற்றில்லாதது, தூய்மையானது.
இதைத் தியானம் பண்ணுவதால் மனமும் சுத்தமாகிறது. இந்திரிய ஜித் இந்த உபாஸனை:
1. ஆதானம் – இளைப்பாற தங்குமிடம் – பிராணனுக்கு இது சரீரமாக இருக்கிறது.
2. பிரத்யாதானம் – வசிக்குமிடம் – பிராணனுக்கு நம்முடைய தலை
3. ஸ்தூன் – கம்பம் – பிராணனுக்கு கம்பம் – சக்தி
4. தாம் – கயிறு – பிராணனுக்கு கயிறு – உணவு
இவ்வாறு பிராணனை தியானித்தால் எல்லோரையும் பிராணனாக நினைக்கும் மனப்பான்மை வந்து விடும்.

ஸ்லோகம்:2
எல்லா தேவதைகளும் பிராணனை தியானிக்கிறார்கள், கண்ணை ஆலம்பனமாக வைத்துக் கொண்டு
ஹிரண்யகர்ப்பனை தியானிக்கிறார்கள். ருத்ரதேவன் கண்ணிலுள்ள சிவப்பு நிற கோட்டை ஆலம்பமனமாக எடுத்துக் கொள்கிறார்கள்,
வருணபகவான் கண்ணீரை எடுத்துக் கொள்கிறார். சூரியபகவான் கருமையத்தை தியானிக்கிறார்கள்.

ஸ்லோகம்:3
இந்திரியமாக பிராணனை வைத்து தியானிக்கிப்படுகிறது. இப்படி செய்வதால் இந்திரியங்களும் தூய்மையடைகிறது.
இதனால் இந்திரியங்கள் நம்முடைய மேன்மைக்கு காரணமாகிறது.
இரண்டு கண்கள், இரண்டு மூக்குதுவாரங்கள், இரண்டு காது துவாரங்கள், வாய் ஒன்று இவை ஏழும் சப்த ரிஷிகள் என்று குறிக்கப்படுகிறது.
எது அறிகின்றதோ அவைகள் ரிஷிகள். எட்டாவதாக வாக்கை எடுத்துக் கொள்ளப்படுகிறது.

ஸ்லோகம்:4
ஏழு ரிஷிகளின் பெயர்கள் குறிக்கப்பட்டிருக்கிறது.
2 காதுகள் – கோதம, பரத்நாஜன்
2 கண்கள் – விஸ்வாமித்ரர், ஜமதர்னி
2 மூக்கு துவாரங்கள் – வசிஷ்டர், காஷ்யப்பர்
1 வாய் – அதமி

இவ்வாறு பிராணன தியானித்து இந்திரியங்களை சுத்தப்படுத்தி அஹ்டன் மூலம் சித்தஸுத்தி அடையலாம்.

———–

பகுதி-3 : மூர்த்த-அமூர்த்த பிராமணம்
முகவுரை:
பிராண தத்துவத்தின் விளக்கம்: நிஷேதத்தின் மூலம் பிராண தத்துவம் மித்யா என்று சொல்லி, பிரம்மம் ஒன்றே அன்று நிரூபிக்கப்படுகிறது.
பிரபஞ்சம்-மூர்த்தம் (உருவமுடையது), அமூர்த்தம் (உருவமற்றது) என்று பிரிக்கப்படுகிறது.
மூர்த்தம் – சமஷ்டி, வியஷ்டி; அமூர்த்தம் – சமஷ்டி, வியஷ்டி

அதிதெய்வம்: சமஷ்டி மூர்த்தம்- பிருத்வி, நீர், நெருப்பு; வியஷ்டி அமூர்த்தம்- வாயு, ஆகாசம்
அத்யாத்மம்: சமஷ்டி மூர்த்தம்- ஸ்தூல சரீரம்; வியஷ்டி அமூர்த்தம்- சூட்சும சரீரம்.

சங்கரரின் அறிமுகம்:-
சத்தியத்தினடத்தில் உள்ள சத்யமான பிராணன்(ஜகத்) சேதனமா, அசேதனமா. அது திருஷ்யமாக இருப்பதால் அசேதனம்.
ஸ்வரூபம் காரணமா, காரியமா என்றால் இது காரண ஸ்வரூபமல்ல இதன் தோற்றம் பேசப்பட்டதால் இது காரியம்.
எது காரியமோ அது மித்யா. ஆகவே இங்கு ஸத்யஸ்ய என்ற சொல் மித்யாவை குறிக்கிறது.
மித்யாவாக இருப்பதால் ஏன் ஸத்யம் என்று சொல்லப்படுகிறது. மித்யா என்பது புரிந்து கொள்ள வேண்டிய வாக்கியம்.
அதை புரிய வைக்க வேண்டுமென்றால் அந்த வார்த்தையை பயன்படுத்தி பின் புரிய வைக்க கூடாது.
ஆகவே ஸத்தியஸ்ய ஸத்யம் என்பது சரியான வார்த்தைதான். பிரபஞ்சமற்ற, சம்சாரமற்ற ஒன்று அது பிரம்மம் என்று புரிய வைக்க வேண்டும்.

ஸ்லோகம்:1
பிரம்மத்திற்கு இரண்டு ரூபங்கள் இருக்கிறது. இது இரண்டு ரூபமாக தன்னை வெளிப்படுத்தியுள்ளது.
அது மூர்த்தமாகவும், அமூர்த்தமாகவும் வெளிப்படுத்தியுள்ளது.
பிரம்மத்தை சுட்டிக் காட்டுவதற்கு இரண்டு விஷயங்களாக மூர்த்தா, அமூர்த்தா பயன்படுத்தப்பட்டுள்ளது.
மூர்த்தம் – மர்தியா – அழியக்கூடியது. (ஸ்தூல சரீரம்)
அமூர்த்தம் – அம்ருதம் – அழியாதது அல்லது நீண்ட காலம் இருப்பது (சூட்சும சரீரம்)
மூர்த்தம் – ஸ்திதம் – வரையறுக்கபட்டது – (ஸ்தூல சரீரம்)
அமூர்த்தம் – யத்த – வரையறுக்கபடாதது – (சூட்சும சரீரம்)
மூர்த்தம் – ஸத் – பிரத்யக்‌ஷ கோசரம் – இந்திரியங்களால் பார்க்க முடிவது அமூர்த்தம் –
த்யத – இந்திரியங்களால் பார்க்க முடியாதது

ஸ்லோகம்:2
அதிதெய்வமான மூர்த்தம் எது, வாயுவுக்கும் ஆகாசத்துக்கும் வேறாக உள்ளது எதுவோ (நீர், நிலம், நெருப்பு) அதுதான் மூர்த்தம்.
இது மர்த்தயம், இது ஸித்தம், இது சத் என்று குறிக்கப்படுகிறது. சூரியனுடைய சரீரம்தான் மூர்த்தமாக கூறப்படுகிறது.

ஸ்லோகம்:3
வாயுவும், ஆகாசமும் அமூர்த்தம், இது அம்ருதம், த்யத், யத். இதற்கு சாரமாக இருப்பது
சூரிய மண்டல தேவதையின் சூட்சும சரீரம். இது அதிதெய்வதம்.

ஸ்லோகம்:4
அத்யாத்ம மூர்த்தம், அமூர்த்தம் – ஸ்தூல சரீரம், சூட்சும சரீரம். இந்த ஸ்தூல சரீரம்தான் மூர்த்தம், பிராணன்,
ஆகாசத்துக்கு வேறாக உள்ளவைகல் மூர்த்தம். இதை மர்த்யம், ஸித்தம், ஸத் என்ற சொல்லபடுகின்றது,
இதற்கு நம் கண் சாரமாக இருக்கிறது.

ஸ்லோகம்:5
அமூர்த்தமானது ஆகாசம், பிராணன் போன்ற சூட்சும சரீரத்தைக் குறிக்கிறது.
இது அம்ருதம், யத், த்யத் என்று குறிக்கப்படுகிறது. சூட்சும சரீரமே சாரமாக இருக்கிறது.

ஸ்லோகம்:6
நம்முடைய சூட்சும சரீரத்தில் ஸம்ஸ்காரங்களே வாசனைகளாக இருக்கிறது. அதையும் அமூர்த்தத்தில் சேர்க்கப்பட்டிகிறது.
அதையும் நீக்க வேண்டும்.

நிஷேத வாக்கியம்- பிரம்மம் மூர்த்த-அமூர்த்தம் இல்லை என்று நீக்குதல்.
வாசனா க்‌ஷயம் – நமக்குள்ளிருக்கும் வாசனா சக்தியினால் நாம் பெற்ற அறிவு நமக்கு பயன்படாது.
வாசனைகள் சாத்வீகம், ராஜஸ, தாமஸ குணங்களை உடையது.
தவத்தினால் ராஜஸ, தாமஸ வாசனைகளை அடக்கி வைத்து சாத்வீக மனதையடைகிறோம்.
அப்பொழுதும் கூட சில வாசனைகள் செயல்பட்டுக் கொண்டிருக்கும். எவ்வளவு பலமான வாசனை என்று எப்படி அறியமுடியும்?
நம் முயற்சியினாலே வாசனையை அடக்க முடிந்தால் அது பலவீனமான வாசனையாகும்.
எந்த வாசனைகள் செயலுக்கு தள்ளூகிறதோ அது பலமான வாசனை. இந்த பலமான வாசனைகளை அறிவு இருந்தும்
வெளிப்பட்டுக் கொண்டிருக்கிற வாசனைகளை நிதித்யாஸனம் மூலமாக அமைதிபடுத்த வேண்டும்.
இதன் மூலம் எல்லா வாசனைகளும் மித்யா என்ற நிலைக்கு எடுத்துச் செல்ல வேண்டும்.
மனதில் எந்த விருத்திகள் (எண்ணங்கள்) வந்தாலும் இவைகளுக்கெல்லாம் சாட்சியாக பார்த்துக் கொண்டிருக்க வேண்டும்.
அவைகள் மனதை சார்ந்தது என்னைச் சார்ந்தது அல்ல என்ற நிலைக்கு வரவேண்டும்.
மனதில் வாசனைகள் இருக்கும் ஆனால் அவைகளை நிஷேதம் செய்யப்ப்பட்டிருக்க வேண்டும்.
புருஷஸ்ய – சூட்சும சரீரத்தினுடய விதவிதமான வாசனைகளை பிரம்மத்தை வெவ்வேறு விதமாக ஒப்பிடப்படுகிறது.
எப்படி மஞ்சள் வர்ணத்தில் நனைத்த துணியானது மஞ்சள் நிறமாக காணப்படும்.
இதில் துணியானது சூட்சும சரீரமாகவும், மஞ்சள் நிறமானது வாசனைகளை குறிக்கிறது.
வெளிர் மஞ்சள் கம்பளியும், மிகச் சிவப்பான பூச்சியும், நெருப்பின் ஜூவாலையும், தாமரையின் நிறமும்,
மின்னலைப் போன்ற ஹிரண்யகர்ப்பனின் சூட்சும சரீரத்தில் உள்ள வாசனைகள் போல் கலந்து இருக்கின்றன.
உபாஸகர்கள் ஞான நிஷ்டையை தொடராதவர்கள் இவர்களுக்கு எல்லாவித செல்வங்களும் ஒரு நொடியில் கிடைக்கும்.

பாஷ்ய விசாரம்:
புருஷஸ்ய ரூபம் – சூட்சும சரீரத்தில் உள்ள உபாஸனை.
சூட்சும சரீரத்தை நீக்கும் போது வாசனையையும் சேர்ந்து நிஷேதம் செய்யப்படுகிறது.
கானல் நீரை நிஷேதம் செய்தாலும் அது இருந்துக் கொண்டுதான் இருக்கும்.
அதுபோல் வாசனை நிஷேதம் செய்தாலும் அது இருந்து கொண்டிருக்கும்.

கேள்வி: புருஷஸ்ய- ஆத்மாவினுடைய; ரூபம் – ஸ்வரூபம்
வாசனைகள் எல்லாம் ஆத்மாவின் ஸ்வரூபங்கள் வெறும் வாசனா மயமான பிரபஞ்சமாக இருக்கிறது.
அதுதான் ஆத்மாவின் ஸ்வரூபம். அது க்ஷ்ணத்துக்கு க்ஷ்ணம் தோன்றி மறைந்து கொண்டிருக்கிறது.
கனவில் தெரியும் விஷயங்கள் மனதில் இருப்பது போல், விழிப்பு நிலையிலும் தெரியும் விஷயமல்ல, மனதிலுள்ள எண்ணங்கள்தான்.
நேதி நேதி என்பது வெளியே தெரியும் விஷயங்கள் இல்லையென்று சொல்லுகிறது.
பதில்: உன்னுடைய கருத்து ஸ்ருதிக்கு விரோதமாக இருக்கிறது. ஸ்ருதி நிலையான சைதன்யத்தை சொல்லுகிறது,
நீ நிலையற்ற சைதன்யத்தை புருஷார்த்த அபாவாத் பிரஸங்காத்- தோன்றி மறைவது ஆத்மாவென்றால் அது நம்முடைய லட்சியாக இருக்காது.
ஆத்மா க்ஷணிகம் என்றால் நாம் அடைய வேண்டிய புருஷார்த்தம் இருக்காது. விஷயம் இல்லாமல் விருத்தி எழும்பாது.
ஒவ்வொரு எண்ணத்துக்கும் பின்னால் ஒரு விஷயம் நிச்சயம் இருக்கும்.

கேள்வி: புருஷஸ்ய ரூபம் – ஆத்மாவினுடைய குணம். ஆத்மாவினுடைய குணமாக இருப்பது இந்த வாசனைகள்தான்.
பதில்: ஆத்மா நிர்குணம் என்று ஸ்ருதி சொல்வதற்கு எதிராக இருக்கிறது.
குணம் அழிந்தால் அதைச்சார்ந்துள்ள பொருளும் அழிந்து விடும்.
வாஸனைக்கு கெடுதி வந்தால் ஆத்மாவுக்கு பாதிப்பு ஏற்படும். ஆத்மா அப்படிப்பட்டதல்ல.

கேள்வி: வாசனைகள் மனதைச் சார்ந்தது ஆத்மாவை அல்ல. ஆனால் ஆத்மாவும், மனமும் சமமாக ஸத்தாவாக இருக்கிறது.
பதில்: அத்வைத தத்துவத்திற்கு எதிராக இருக்கிறது. ஆத்மாவுக்கு இணையாக வேறொன்று இருந்தால்,
ஆத்மா எங்கும் வியாபித்திருக்கும் என்ற ஸ்ருதியின் வாக்கியத்துக்கு எதிராக இருக்கும்.

கேள்வி: புருஷஸ்ய ரூபம் – ஜீவாத்மாவினுடைய ஸ்வரூபம். பரமாத்மா என்பது வேறு.
பதில்: ஜீவாத்மாவுக்கும் பரம்மத்மாவுக்குள்ள வேற்றுமையில் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா?
உடலின் ஒரு உறுப்பு என்ற சம்பந்தமா அல்லது இரண்டு வெவ்வேறாக இருச்து சம்பந்தம் இருக்கிறதா?
இந்தக் கருத்து மஹாவாக்கிரத்திற்கு விரோதமாக இருக்கிறது. எனவே ஏற்றுக் கொள்ள முடியாது.

தர்மத்தின் துணைக்கொண்டு ராஜஸ, தாமஸ வாசனைகளை நீக்க வேண்டும்.
பிறகு ஞானத்தின் துணைக்கொண்டு சாத்வீக வாஸனைகளை பலவீனப்படுத்த வேண்டும்.

अथ – பிறகு – அத்ரோபத்திற்கு பிறகு (அனந்தரம்) முதல் சத்யத்தை விளக்கியபிறது,
अदः – ஆகவே இரண்லாவது ஸத்யம் விளக்கப்பட வேண்டியதனால், பிரம்மத்தை அதன் ஸ்வரூபத்தை விளக்குவதற்காக;
आदेश – உபதேசம், விளக்க வேண்டும்.
नेति नेति – न + इति – பிரம்மத்தை உபதேசிக்கின்ற விளக்கம்.
இந்த வாக்கியம்தான் பிரம்மத்தை நன்கு விளக்க க்கூடியதாக இருக்கிறது.
இதற்கு மேலாக பிரம்மத்தை உபதேசிக்க முடியாது.
ये तस्मात “நேதி” என்கின்ற சொல்லை காட்டிலும்,
अन्यपरम- வேறு நல்ல உபதேசம் ,
नहि अस्ति – கிடையாது. अत-ஆகவே, नामदयँ – “ஸத்யஸ்ய ஸத்யம்” என்கின்ற பிரம்மத்தை குறிக்கின்ற உயர்வான சொல்லாகும்.
ஸத்யமாக உள்ள பிராணனுக்கும் ஸத்யமாக உள்ளது.

நேதி நேதி விளக்கம்:
न – இல்லை, इति – न வினைச்சொல்லோடு சேரும்போது அப்படியே இருக்கும்.
பெயர் சொல்லோடு சேரும்போது “अ”- अगमणँ. इति – இது, இவ்விதம் என்று மாறுகின்றது,
இந்த மந்திரத்தில் “இது” என்று அர்த்தம் எடுத்துக் கொள்ளப்படுகிறது
न इति – न इदँ अस्ति – இது இல்லை.

விளக்கம்-1 இரண்டு न க்கும், இரண்டு इति க்கும் ஒரே அர்த்தம்
इति – த்ருஷ்யம் (பார்க்கப்படுவது) – சிதாபாஸம் – சைதன்யத்துக்கு விஷயமாக இருக்கும் எல்லா ஜடமான அனாத்மாக்களாக இருப்பது.
பார்க்கப்படும் பொருட்கள் எல்லாம் இல்லை என்று இரண்டு முறை சொல்லப்படுகிறது.
இப்படி தெரிந்தே இரண்டு முறை பயன்படுத்தி இருப்பதனால் எல்லாவற்றையும் எடுத்துக் கொள்வதை உணர்த்துகிறது.
உதாரணமாக அவர் இந்த வட்டத்தில் உள்ள வீடு வீடாக சென்று ஓட்டு கேட்டார். இதற்கு அவர் எல்லா வீட்டிற்கும்
சென்று ஓட்டுக் கேட்டார் என்று அர்த்தமாகிறது. அதேபோல இங்கே எல்லா அனாத்மாக்களையும் எடுத்துக்கொண்டு நிஷேதம் செய்ய வேண்டும்.

விளக்கம்-2
முதல் इति மூர்த்த பிரபஞ்சம், இரண்டாவது इति அமூர்த்த பிரபஞசத்தை குறிப்பதாக எடுத்துக் கொண்டால்,
இந்த வாக்கியம் மூர்த்தத்தையும், அமூர்த்தத்தையும் நிஷேதம் செய்வதாக பொருள் கொள்ளலாம்.

விளக்கம்-3
முதல் इति ஜீவனுடைய உபாதி, இரண்டாவது इति ஈஸ்வரனுடைய உபாதியாக எடுத்துக் கொண்டால்,
இந்த வாக்கியம் ஜீவனுடைய உபாதியையும், ஈஸ்வரனுடைய உபாதியையும் நிஷேதம் செய்வதாக பொருட்கொள்ளலாம்.

விளக்கம்-4
முதல் इति காரிய பிரபஞ்சம், இரண்டாவது इति காரண பிரபஞ்சம் என்று எடுத்துக் கொண்டால்,
காரிய பிரபஞ்சமாக இருக்கின்ற இந்த உலகமானது காரண அவஸ்தையிலிருந்து (மாயையிலிருந்து)
வெளித்தோற்றத்துக்கு வந்துள்ள நாம ரூபங்களே. இதையையும், காரண பிரபஞ்சமான மாயையையும் நிஷேதம் செய்வதாக பொருட்கொள்ளலாம்.

விளக்கம்-5 முதல் इति வியஷ்டி (அத்யாத்மம்), இரண்டாவது इति சமஷ்டி (அதிதெய்வம்)
விளக்கம்-6 முதல் इति சரீர நிஷேதம், இரண்டாவது इति ஜகத் நிஷேதம்
அனாத்மா à சேதனத்துடன் சம்பந்தபட்ட அனாத்மா, ஸ்தூல, சூட்சும சரீரம், ஜடமாக இருக்கும் இந்த ஜகத்.
இந்த இரண்டையும் நிஷேதம் செய்வதாக பொருட்கொள்ளலாம்.

விசாரம்
நேதி, நேதி என்ற லட்சணமே சரியானது, மேலானது. இதைத்தவிர வேறெதுவும் பிரம்மத்தை விளக்க முடியாது.

கேள்வி: இந்த சொல் இல்லாமையை போதிக்கிறதா?
பதில்: இது இல்லாமையை சொல்லவில்லை. இல்லாமையிலிருந்து ஒரு பிரயோஜனமும் அடைய முடியாது (அபாவஸ்ய அக்ருத்யாவாத்).
இது நீக்குதல் என்ற பொருளைத்தன் குறிக்கிறது. நாம் ஒன்றை நீக்குகிறோம் என்றால் வேறு ஏதோ ஒன்றை ஆதாரமாக கொண்டுதான் செய்ய முடியும்.
ஆதாரம் இல்லாமல் எந்த தவறும் நடக்காது. உதாரணமாக கயிற்றில் பாம்பை பார்ப்பதற்கு
கயிறுதான் ஆதாரமாக இருந்தால்தான் பாம்பானது தோன்ற முடியும். இது ஒரு நியதி.
இதில் எது தவறாக பார்க்கப்படுகிறதோ அது நீக்கப்படுகிறது. எனவே இதிலிருந்து नेति என்ற சொல் எதையோ நீக்குகிறது
அதற்கு பிரம்மமே ஆதாரம் என்று புரிந்து கொள்ளலாம். அப்படி இந்த ஜகத்தானது பிரம்மத்தின் மீது இருந்துக் கொண்டு,
தான் இருப்பதாக காட்டிக் கொண்டிருக்கிறது. இந்த சொல்லில் உள்ள
इति இந்த ஜகத்தை நீக்கினால் மீதி இருப்பது பிரம்மம்தான் என்று உணர்த்துகிறது.
பூரணமான பிரம்மன் ஒன்றாகத்தான் இருக்க முடியும். இதற்கு வேறாக ஒன்று உண்டு என்று சொன்னால்
பிரம்மம் பூரணமாக இருக்க முடியாது. எனவே ஜகத்தை இல்லை என்று புரிந்து கொண்டால் பிரம்மத்தை அறிந்து கொண்டது போலாகும்

கேள்வி: நேதி எப்படி மித்யாவை நிலை நாட்டுகிறது?
பதில்: இருப்பதை இல்லை என்று சொல்ல முடியாது. ஏனென்றால் அது மாதிரி ஒரு நிலை ஏற்படாது.
உதாரணமாக மேசை மீது புத்தகம் இருக்கிறது, ஆனால் புத்தகம் இல்லை என்று சொல்லும் நிலையே ஏற்படாது.
மேசை மீது புத்தகம் இல்லை என்பதை நிரூபிக்க தேவையில்லை. மேசை மீது செயற்கை மலர் இருக்கிறது,
அதை நாம் மலரில்லை என்று சொல்லலாம் அதை நிரூபிக்கவும் முடியும்.
அதற்கு இது இயற்கையான மலரை போன்று தோற்றமளிக்கிறது என்ற உண்மையை சொல்லி
அடைந்த தவறான அறிவை நீக்கினால் போதும். மலர் பார்வைக்கு தெரிவதால் அதை நிஷேதம் செய்ய வேண்டியிருக்கிறது.

எது நீக்கப்படுகிறதோ அதற்கு இரண்டு நிலைகள் இருக்க வேண்டும். 1. ஸ்வரூபமாக இருக்க கூடாது, 2. இருக்கிற மாதிரி தோன்ற வேண்டும்.
நம்முடைய அனுபவத்தில் உலகம் தோன்றி கொண்டிருக்கிறது. எனவே நாம் ஸ்ருதி பிரமானத்தை எடுத்துக் கொண்டு
இந்த உலகத்தை நீக்கி பிரம்மத்தை உணர வேண்டும். இதற்கு ஸ்ருதியின் மீது நம்பிக்கை கொண்டிருக்க வேண்டும்.

மித்யா விஷயத்தில்தான் நேதி என்ற சொல்லை பயன்படுத்த முடியும், மற்ற விஷயங்களில் பயன்படுத்தினால்
இரண்டு விதமான குற்றம் வந்து விடும். இல்லாததை இல்லை என்று சொல்ல தேவையில்லை, இருப்பதை இல்லை என்று சொல்ல முடியாது.

நிஷேதம் மூலமாக உபதேசம் செய்வதுதான் சிறந்த வழியாகும். நேரிடையாகவும் உபதேசம் செய்யலாம்.
இதை விதிமுக உபதேசம் என்று கூறுவர். நிஷேதம் மூலமாகத்தான் ஜக்த்தின் மித்யாத்வம் உணர்த்தப்படுகிறது.
பிரம்மத்தை விதிமுகமாக விளக்க முடியாது. ஏனெனில் பிரம்மத்திற்கு குணமும் இல்லை, சப்தங்களாலும் விளக்க முடியாது.
அதிஷ்டான-அத்யாஸ சம்பந்தம் மூலமாகத்தான் உபநிஷத் நேரிடையாக விளக்குகிறது.
மற்றெல்லா இடங்களிலும் நிஷேத முறையில்தான் விளக்கப்பட்டிருக்கிறது.

——–

————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ ப்ருஹதாரண்ய உபநிஷத்-முதல் அத்தியாயத்தின் பகுதி-2

March 22, 2021

ஸ்லோகம்-9
சிஷ்யர்களுக்கிடையே உள்ள உரையாடல். பிரம்ம ஞானத்தை அடைந்தவன் அனைத்துமாகி விடுகிறான்.
ப்3ரஹ்மவித்3யா ஸர்வ ப4விஷ்யந்தஹ – பிரம்மமே எல்லவாகவும் இருக்கின்றது.
அப்படியென்றால் இந்த பிரம்மம் அதையறிந்து எல்லாமுமாக ஆகிறது? பிரம்மம் தன்னையே அறிந்ததனால் எல்லாமுமாக இருக்கிறது.
மனுஷ்யா மன்யந்தே – இப்படி மனிதர்கள் கருதுகிறார்கள்.
கிமு தத்3 ப்3ரஹ்ம ஆவேத்3 – அதை இந்த பிரம்மம் அறிந்து
யஸ்யாத் – எதனால்
தத் ஸர்வம் ப3வத்3 இதி – அனைத்துமாக ஆனது.
கிம் ப்3ரஹ்ம? – அந்த பிரம்மம் வரையறைக்குட்பட்டதா இல்லையா? அது எதை அறிந்தது

1. பிரம்மம் எதையாவது அறிந்து அனைத்துமாக ஆனதா அல்லது எதையும் அறியாமல் எப்படி இருக்கிறது?
2. பின்னர் பிரம்மம் தன்னை அறிந்து அனைத்துமாக ஆனது, அல்லது எதையாவது அறிந்து அப்படியானதா?
பிரம்மம் தன்னை அறிந்தே அனைத்துமானது.

கேள்வி : கர்மாவும், கர்த்தாவும் எப்படி ஒன்றாக இருக்க முடியும்? அது அதையையே எப்படி அறிய முடியும்?

————–

ஸ்லோகம்-10
பகுதி-1 – மஹாவாக்கிய பகுதி

ப்3ரஹ்ம வா இத3ம் அக்3ரே ஆஸீத் – பரமாத்மா இதுவாக (ஜீவாத்மாவாக) அறிவை அடைவதற்கு முன்பு இருந்தது.
பிரம்மன் ஞானத்தை அடைவதற்கு முன்பு ஜீவாத்மாவாக இருந்தது.
தத்3 – அந்த பிரம்மன்;
ஆத்மானமேவம் ஆஸீத் – தன்னையே அறிந்தது;
அஹம் ப்3ரஹ்ம அஸ்மி – நான் பரம்பொருளாக இருக்கிறேன் என்று தன்னை அறிந்தது
தஸ்மாத் – ஆகவே;
தத்3 – அந்த பிரம்மன்;
ஸர்வம் அப4வத் – அனைத்துமாக ஆனது.

விசாரம்:-
கேள்வி: பிரம்மன் ஞானத்திற்கு முன் ஜீவனாக தன்னை அறிகின்றது. இரண்டுக்கும் இடையே உள்ள இடைவெளியே அக்ஞானம்.
இந்த இடைவெளியை ஞானத்தைக் கொண்டுதான் நீக்க முடியும்.
பதில்: அஹம்-நான்; ப்3ரஹ்ம- பிரம்மனாக; அஸ்மி-இருக்கின்றேன்.
நான் என்ற சொல்லுக்கு “உணர்வு” இருக்கிறது. அது மூன்று உடலோடும் கலந்திருக்கிறது.
(உணர்வு + உடல்) இதற்குள்தான் வியாபிக்க முடியும்.
இந்த மூன்று உடல்களுக்கும் “நான்” என்ற சொல்லுக்கு உணர்த்துகிறதா இல்லையா?
இதுதான் ஜீவ விசாரம் – த்ருக், த்ருஷ்ய விவேகம், அவஸ்தாத்ரய விவேகம், பஞ்சகோச விவேகம், மூன்று சரீர விசாரம்.
நான் என்ற சொல் மூன்று உடலையும் குறிக்காது. அது உணர்வையும், சைதன்யத்தையும் மட்டும் குறிக்கிறது.

அஹம் – நான் – அறிவு ஸ்வரூபம்தான் சரியான பொருள்
ப்3ரஹ்ம – பரம்பொருள் – தெரிகின்ற உலகத்துக்கே ஆதாரம் என்று காரிய-காரண விசாரத்தை செய்து,
காரணம்தான் ஸ்த், காரியம் மித்யா என்ற கருத்தை அடைவதுதான் முடிவானது.
அஸ்மி – இருக்கின்றேன். (எல்லா காலத்திலும்)

நான் பிரம்மன் என்று அறிந்து கொள்ளும்போது அனைத்துமாக இருக்கிறேன் என்று உணர்கின்றேன்.

சங்கர பாஷ்ய விசாரம்:
கேள்வி-1: ஜீவாத்மா ஞானம் அடைவதற்கு முன்னும் ஜீவாத்மாவாகத்தான் இருந்தது.
அந்த ஜீவாத்மா தன்னையறிந்து நான் பரமாத்மா என்று அறிந்தது, பரமாத்வாகவே மாறியது.
ஜீவன் உபாஸனை செய்து பிரம்மனாக மாறுகிறான். உபாஸனை என்ற சாதனை மூலம் பிரம்மனின் அங்கமாக மாறிவிடுவான்.
ஜீவன் பிரம்மனாக போகிறான் எனவே அதற்கு முன்பே பிரம்மன் என்று உபநிஷத் சொல்லியிருக்கிறது.

பதில்-1: ஒன்று ஏதோ ஒரு நிமித்தத்தினால் வேறொன்றாக மாறுகிறது.
ஆனால் அந்த நிமித்தம் நீங்கினால் அது மீண்டும் பழைய நிலைக்கே சென்று விடும். தண்ணீர் வெப்பத்தினால் ஆவியாகிறது.
பிறகு வெப்பம் நீங்கினால் மறுபடியும் நீராக மாறி விடுவதை உதாரணமாக் கொள்ளலாம். இந்த வகையான மாற்றம் நிலையானதல்ல.
ஜீவன் உபாஸனையால் பிரம்மனாக மாறியிருந்தால், அந்த உபாஸனை நீங்கினால் மீண்டும் ஜீவனாகி விடுவான்.
எது உருவாக்கப்பட்டதோ அது அழியக் கூடியது என்பது நியதி. ஜீவன் உபாஸனை மூலம் பிரம்மனாக உருவாகினால்,
அது அழியக்கூடியதாகி விடும். இந்த நிலை பிரம்ம நிலை கிடையாது.

ஸ்ருதஹானம் அங்குத கல்பனா – கேட்டதை விட்டு விட்டு கேட்காததை கற்பனை செய்வதை போல இருக்கிறது.
பிரம்ம என்ற சப்தத்தை விட்டுவிட்டு ஜீவன் என்று நீயாக கற்பணை செய்கிறாய்.
ஜீவனாக இருக்கும் நிலை அறியாமையினால் வந்த விளைவு. ஞானத்தினால் பிரம்மன் அறிந்து கொள்ளும் நிலை.

கேள்வி-2 – பிரம்மனிட்த்தில் எப்படி அறியாமை வரும்? சூரியனிட்த்தில் எப்படி இருள் வரும்?
1. நித்தியமான பிரம்மன் எப்படி அறியாமைக்குரிய விஷயமானது?
2. அறியாமைக்குரிய ஆஸ்ரயமாக எப்படி வரும்?
பதில்-2 – 1. உபநிஷத் பிரம்மத்தைப்பற்றீ விளக்குவதால் அதைப்பற்றிய அறியாமைத்தான் நம்மிடம் இருக்கிறது என்று அறிய வேண்டும்.
எந்தப்பொருள் எப்பொழுதும் விளங்கிக் கொண்டிருந்தாலும் அத்யாஸம் காரணமாக மறைக்கப்பட்டிருந்தால் அதை விளக்க வேண்டியதாக இருக்கிறது.
அறியாமை அறிவுள்ள வஸ்துவிடம்தான் இருக்கும். எனவே இதுதன் அறிவுக்கும், அறியாமைக்கும் ஆஸ்ரயமாக இருக்கும்.
சேதன வஸ்துவாக் பிரம்மம் ஒன்றுதான் இருக்கிறது. பிரம்மனுக்கு வேறாக ஒரு அறிவு ஸ்வரூபம் இல்லை, ஆஸ்ரயம் பிரம்மத்துக்குத்தான் போய் சேரும்.

கேள்வி-3 – பிரம்மனே எல்லாவுமாக இருப்பதால் எதற்காக சாஸ்திரத்தை நாம் படிக்க வேண்டும்?
பதில்-3 – இந்த கேள்வி பிரம்மத்தை அறிவதற்கு முன்பாகவா? பிரம்மத்தை அறிவதற்கு பின்பாகவா?
பிரம்மத்தை உணர்ந்தவனுக்கு, புரிந்து கொண்டவனுக்கு சாஸ்திரம் தேவையில்லை, ஆனால் புரியாதவனுக்கு அதை புரிந்து கொள்ள சாஸ்திரம் கட்டாயம் தேவை.

கேள்வி-4 – நான் எப்பொழுதும் பிரம்மனாகவே இருக்கிறேன், பிறகு எதற்கு அதை புரிந்து கொள்ள வேண்டும்?
பதில்-4 – பிரம்மத்தை புரிந்ததற்கு முன் உள்ள அனுபவங்கள், புரிந்தவுடன் அனுபவிக்கும் அனுபவங்கள்
பார்த்தோமேயானால் நமக்கு ஏன் புரிந்து கொள்ள வேண்டும் என்று தெரிய வரும்.
புரிந்தவனுடைய மனநிலையையும், புரியாதவனுடைய மனநிலையும் ஒப்பிட்டுப் பார்த்தோமேயானால் அதன் அவசியம் தெரிய வரும்.
எனவே சாஸ்திரத்தின் உதவியை பயன்படுத்திக் கொண்டால்தான் பிரம்ம ஞானத்தை அடைய முடியும்.

கேள்வி-5 – சாஸ்திரம் பிரம்மன், ஜீவன் என்ற தத்துவத்தை தனித்தனியாக பேசியிருக்கிறது.
அதை நான் எடுத்துக் கொள்ளலாமா? ஜீவன் இறந்தாலும் கர்ம பலன்களை எடுத்துக் கொண்டு செல்கிறான்.
பிரம்மனுக்கு வேறாக ஜீவன் இருக்கிறான் என்று விளக்கப்படுகிறது.
இந்த ஜீவன் ஈஸ்வரனை அடைய வேண்டும்.என்றும் உபதேசிக்கிறது.
இதை வைத்துப் பார்க்கும் போது ஜீவன் வேறு, இரம்மன் வேறு என்று நன்றாக தெரிகிறதல்லவா?
மற்ற சாஸ்திரங்கள் ஜீவன், பிரம்மன் என்று தனித்தனியாக உபதேசிக்கிறது.
பதில்-5 – இங்கு பிரம்மனைப் பற்றி தெரிந்தால்தான் அனைத்துமாக முடியும் என்று சொல்வதால்,
உபநிஷத் பிரம்மனைத்தான் தாத்பர்யமாக சொல்கிறது.
ஜீவனைப் பற்றி சொல்வதெல்லாம் அனுவாதம் வாக்கியம் (தெரிந்ததைச் சொல்வது).
ஆனால் பிரம்மத்தைத்தான் முக்கிய நோக்கமாக, அறியப்பட வேண்டியதாக உள்ளது என்று உபதேசிக்கிறது.

கேள்வி-6 – யார் பிரம்மத்தை தெரிந்துக் கொள்ள விரும்புகிறார்களோ அவர்கள் பிரம்மம் தானே?
அறிவை அடையும்போது மனதில் விகாரம் (மாற்றம்) ஏற்படும். பிரம்மன் மாற்றத்துக்குட்பட்டதா?
பதில்-6 – நீ அறிபவனை அறிபவன் பிரம்மன். இப்படி பதில் சொன்னவுடன், அறிபவன் திரும்ப இருக்கிறான்.
இரண்டு விதமான அறிபவர்கள் இருக்கிறார்கள். பிரமாதா அந்தக்கரணங்களின் மூலமாக அறிபவன் விகாரத்தையுடையவன்.
இன்னொரு அறிபவன் எப்பொழுதும் அறிந்துக் கொண்டேயிருக்கின்றான். இவன் எந்த மாற்றத்தையும் அடைவதில்லை.

கேள்வி-7 – ”அந்த பிரம்மன் தன்னையே அறிந்து, தான் பிரம்மனாக இருக்கிறேன்” என்ற வாக்கியத்தில் சந்தேகம் எழுப்பப்படுகிறது.
பிரம்மன் தன்னையே அறிவதன் பலன் அறிபவன் அறியப்படும் என்ற தோஷம்.
அறிபவன் அறியப்படும் பொருளிலிருந்து வேறுபடுகிறான். அதன்படி பிரம்மன் எப்படி பிரம்மனாகவே அறியும்?
பதில்-7 – பிரம்மத்தை ஒரு விஷயமாகவோ, பொருளாகவோ அறியவில்லை. அது ஏற்கனவே விளங்கிக் கொண்டிருக்கிறது,
ஏற்கனவே பிரம்மன் என்னிட்த்திலே விளங்கிக் கொண்டிருக்கிறது ஆனால் பிரம்மன் என்று விளங்கவில்லை,
எனவே சாஸ்திரத்தின் துணைக்கொண்டு அதன் ஸ்வரூபத்தை மட்டும் தெரிந்துக் கொண்டேன்.
எனக்கு அல்லாததை நீக்கிய்வுடன் நான் அறிந்து கொண்டேன்.
அனாத்மா நிஷேதனம் – பிரம்மம் அறிதல்; என்னையேதான் அறிந்து கொள்ளுதல் – கண்ணாடியில் நம்மை பார்ப்பது போல.

———–

ஸ்லோகம்-10 : பகுதி-2 – அதிகாரியைப் பற்றிய விஷயம்

தேவர்களுக்கெல்லாம் யார் யார் பிரம்மத்தை அறிகிறார்களோ அவர்களும் பிரம்மனாகிறார்கள்.
அது போல ரிஷிகளுக்குள் யாரெல்லாம் பிரம்மத்தை அறிகிறார்களோ அவர்களும் பிரம்மனாகிறார்கள். அது போலவே தான் மனிதர்களுக்கும்.
ப்ரத்யபு3த்4யத் – அறிகிறார்களோ, பர்யுதஸ்த்வம் – விலக்குதல்;

நியமங்கள் – கர்மகாண்டம்
அர்த்தி – செய்யப்போகும் கர்மத்தின் பலனை விரும்புவனாக இருக்க வேண்டும்.
தக்‌ஷ – ஆசைப்பட்டதை அடைவதற்கான சக்தியிருக்க வேண்டும். கர்மம் செய்வதற்கான சக்திக்கிடையாது.
அபர்யுதஸ்த்வம் – சாஸ்திரத்தால் நிஷேதம் செய்யாததாக இருக்க வேண்டும். ஸ்வதர்மமாக இருக்க வேண்டும்.

நியமங்கள் – ஞானகாண்டம்
முமுக்‌ஷுத்வம் – பிரம்மனை அடைய வேண்டும் என்று லட்சியமாக இருத்தல்.
விவேக, வைராக்யம், சமாதானம் (சம, தம, உபரதி, திதிக்‌ஷா, சமாதானம்) – சாதன சதுஷ்டயம்,
மனுஷ்யானாம் – தகுதியுடையவர்கள்.

———-

ஸ்லோகம்-10 : பகுதி-3 – வாமதேவர் விளக்கம்

சாஸ்திரத்தில் சொல்லப்பட்ட விஷயங்களை அடைந்தவர் ஒருவர் இருக்கிறார் என்று அறியும் போதுதான்
நமக்கு இன்னும் சிரத்தை அதிகமாகிறது. இந்த உபதேசத்தில் மிகுந்த விசுவாசம் ஏற்படும்.
தத் ஏத3த் பஷ்யன் – அதை ஆத்மாவாகவே அறிந்த காரணத்தினால்;
ரிஷி வாமதேவர் – ரிஷியான வாமதேவர்
ப்ரதிபேதே3 – இவ்வாறு சொல்கிறார்.
அஹம் மனு அப4வம் – நான் மனிதனாக இருக்கின்றேன்.
சூர்ய – சூரியனாக இருக்கிறேன்., என்று கூறுகிறார்.
இப்படி அவர் கூறுவது, நானே அனைத்துமாக இருக்கிறேன் என்று பொருள் கொள்ள வேண்டும்.

————

ஸ்லோகம்-10 : பகுதி-4 – விக்ன அபாவஹ – தடையில்லை

இந்த ஞானத்தை அடைந்து நிஷ்டை அடைந்து விட்டால் இதை யாரும் பறிக்க முடியாது.
அல்லது யாரும், எதுவும் தடையாக இருக்க மாட்டார்கள். பலனை அனுபவிப்பதில் தடையெதுவும் இருக்காது.
இப்படிபட்ட ஞானத்தை சிறப்பான மனிதர்களால்தான் அடைய முடியும். தேவர்களும் பெரும் தடையாக இருக்கிறார்கள்.
கலிகாலத்தில் இதை அடைவதற்கு பெரும் பிரயத்தனம் செய்ய வேண்டும் என்ற முகவுரையுடன் விளக்கத்தை ஆரம்பிக்கிறார்.

மந்திர விளக்கம்:-
தத்3 இத3ம் அபே த3ர்ஹி – இப்பொழுதும் கூட
ய ஏவம் வேத3 – யார் இப்படி அறிகிறார்களோ
அஹம் ப்3ரஹ்ம அஸ்மி – நான் பிரம்மனாக இருக்கிறேன்.
ஸ இத3ம் ஸர்வம் ப4வதி – அவர் அனைத்துமாக மாறி விடுகிறார்கள்.
தஸ்ய ஹ ந தே3வாஷ்சந – இவரை தேவர்களாலும்
அபூ4த்யா ஈஷதே – ஞானத்தால் அடைந்த பலனை (ஸ்ர்வாத்மபாவம்) தடை செய்ய சக்தியிருக்காது.
ஆத்ம ஏஷம் ப4வதி – அந்த ஞானி அவர்களாகவே மாறி விடுவதால், இந்த தடை நேராது.

எப்பொழுது, யார் நான் பிரம்மன், அனைத்துமாக இருக்கிறேன் என்ற ஞானத்தை அடைந்திருக்கிறார்களோ
அவர்களுக்கு தேவர்களாலும் துன்பத்தை கொடுக்க முடியாது. ஏனென்றால் இந்த ஞானியே தேவர்களின் ஆத்மாவாகவே இருக்கின்றான்.

சங்கர பாஷ்ய விசாரம்:
கேள்வி-1: சாதாரண மனிதர்களால் இதை அடைய முடியுமா?
பதில்-1: முடியும்.
கேள்வி-2: தேவர்களால் இதை அடைய தடை செய்யப்படுமா?
பதில்-2: ஞானம் அடையும் வரை தடையாக இருக்கலாம். ஞானம் அடைந்த பின்னர் அதன் பலனை அனுபவிக்க எதுவும் தடையாக இருக்காது.
தடையாக இருந்தவைகள் எல்லாம் இப்பொழுது நீங்கி விடும்.
கேள்வி-3: பிறந்தவுடன் மூன்று பேருக்கு கடன்பட்டவனாக இருக்கிறோம். நம் ஆயுள் முழுவதற்கும் அதை தீர்க்கவே சரியாக இருக்கும்.
பின் எப்படி ஞானம் அடைவதற்கு நேரம் கிடைக்கும். கடன் கொடுத்தவர்கள் நம்மை அடிமைப்படுத்தி கொண்டிருப்பார்கள்.
1. ரிஷிகளிடம் கடன்பட்டுள்ளோம், இதை அவர்கள் வகுத்துக் கொடுத்த சாஸ்திரங்களை படிப்பது மூலம் தீர்த்து விடலாம்.
2. தேவர்களுக்கு கடன்பட்டுள்ளோம் – இதை யாகங்கள், பூஜைகள் முதலியவைகளால் அடைத்து விடலாம்..
3. பித்ருகளுக்கு கடன்பட்டுள்ளோம். – இதை குழந்தைகள் பெறுவதன் மூலம் அடைக்கப்படுகிறது.
தேவர்களின் கடனும், பெற்றோர்களின் கடனும் அடைப்பதிலே வாழ்நாள் செலவாகி விடும்.
தேவர்கள் மிகவும் சக்தி வாய்ந்தவர்கள், அவர்கள் அனுபவிக்கும் ஆனந்தத்தை விட மேலான
ஆனந்தத்தை அடைவதை விரும்பாமல், அவர்கள தடை செய்து கொண்டிருப்பார்கள்.
பதில்-3: யார் வைராக்கியத்தை அடைந்திருக்கிறார்களோ அவர்கள் இந்த கடனிலிருந்து விடுபடுவார்கள்.
அவர்கள் எந்த ஆஸ்ர்மத்தை சேர்ந்தவர்களாயினும் இது பொருந்தும்.
ஞானம் அடைவதற்கு முன் தேவர்களால் தடை ஏற்படுத்த முடியும்.
ஆனால் ஞான நிஷ்டை அடைந்து அதன் மூலம் அடையும் பலனை அனுபவிக்க யாராலும் எந்த தடையையும் செய்ய முடியாது.

நமக்கும் பிரம்மத்திற்கும் இடையே உள்ள இடைவெளி அவித்யாதான், எனவே வித்யாவை, ஞானத்தை அடைந்ததும் பிரம்மனாகி விடுவோம்.
அதற்குப்பிறகு யாரும் தடையாக இருக்க மாட்டார்கள், இருக்கவும் முடியாது.

செய்த செயலின் விளைவு எதன் அடிப்படையில் வருகிறது? எப்படிப்பட்ட பலன் வரும் என்று எப்படி நிர்ணயிக்கப்படுகிறது?
· ஜோதிஷ்விதக – ஜோதிட சாஸ்திரத்தை பின்பற்றுபவர்கள். இவர்கள் சொல்வது காலத்தின் அடிப்படையில்தான் பலன் வரும்.
· வஸ்து – இது சார்வார்க்கர்களின் மதம், பொருளினுடைய தன்மை- நாம் பயன்படுத்துகின்ற பொருள்தான் பலனை நிர்ணயிக்கிறது.
· கர்ம – நீ எப்படிப்பட்ட செயல் செய்கிறாயோ அதன் அடிப்படையில்தான் பலன் நிர்ணயிக்கப்படுகிறது.
· தேவர்கள் – உபாஸகர்களுடைய நம்பிக்கை – நாம் அடைகின்ற கர்ம பலன்களுக்கு காரணம் தேவர்கள்தான்.

யாருமே நமக்கு தடையாக இருக்க முடியாது. அந்தத் தடைகள் எல்லாம் நாம் உருவாக்குவது தான்.
நாம் எப்படிப்பட்ட செயல் செய்கிறோமோ இவற்றின் பலன்களை காலம், வஸ்து, கர்ம்ம், தேவர்களின் மூலமாக பலன்களை அனுபவிக்கிறோம்.
நமக்கு வரும் தடைகள் எல்லாம் நம்முடைய கர்மபலனின் அடிப்படையில்தான் நிர்ணயிக்கப்படுகிறது.
இப்படி இருக்கும் போது நாம் மோக்‌ஷம் அடைவதற்கு யாருமே தடையாக இருக்க மாட்டார்கள்.
எனவே நற்காரியங்களை செய்து, புண்ணியங்களைச் சேர்த்து தடையை நீக்கி கொள்ள வேண்டும்.

———-

ஸ்லோகம்-10 : பகுதி-5 – அவித்யா சூத்திரம்

अथ य: अन्याँ देवातँ उपस्ते – யாரொருவன் வேறொரு தேவதையை உபாஸிக்கிறானே;
अन्य अहँ – நான் வேறு
अन्य असाव – நான் உபாஸிக்கும் தேவதை வேறு
न स वेद – அவன் உண்மையை அறிந்தவனில்லை.
தன்னை பிரம்மத்தினின்று வேறுபட்டு இருக்கின்றேன் என்று அறிந்து கொண்டிருப்பதுதான்,
நினைத்துக் கொண்டிருப்பதுதான் அவித்யா.

——————

ஸ்லோகம்-10 : பகுதி-6 – அவித்யா சூத்திர விளக்கம்

यथा पशु: – எப்படி விலங்குகள் மனிதனுக்கு உதவி செய்கின்றதோ
एवँ सह – செய்வது போல அக்ஞானிகள்
देवानाम् – தேவர்களுக்கு அடிமைபட்டு சேவை செய்து கொண்டிருக்கிறார்கள்
यथा ह वै बहव: पशवो मनुष्य भुञ्ज्यु – எப்படி விலங்குகள் மனிதர்களுக்கு சேவை செய்வது போல
ऎवमॆकैके पुरुषो देवान् भुनक्ति – மனிதர்களும் தேவர்களுக்கு சேவை செய்து கொண்டிருக்கிறார்கள்.
एकस्मिन्नेव पशवादीयमाने अप्रियँ भवति, किम् बहुषु? – ஒரு விலங்கு குறைந்துப்போனாலே மனிதன் வருத்தப்படுவான்,
இன்னும் பல விலங்குகள் குறைந்தால் என்ன சொல்வது?
तस्मात् तेषाँ तन् अप्रियँ यदॆत् मनुष्या विधुः – அது போல, தேவர்களுக்கு ஒரு மனிதன் ஞானியாகி விட்டால்,
நமக்கு சேவை செய்ய ஒருவர் குறைந்து போய் விடுமே என்று வருத்தப்படுவார்கள்.
இங்கே தேவர்கள் என்பதை, இந்திரியங்களை எடுத்துக் கொள்ளலாம்.

சங்கரரின் விசாரம்:
கேள்வி-1: ஞானம் தொடர்ந்து இருந்துக்கொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான் அது மோட்சமாகும்.
அது தடைப்பட்டு வேறெதாவது எண்ணம் வந்துவிட்டால் நாம் திரும்பவும் சம்சாரத்திற்கு வந்து விடுவோம்.
அறிவு மட்டும் வந்தால் போதாது. ஜீவன் முக்தன் என்பவன் இருக்கவே மாட்டான்.
உயிரை விடும் போது அஹம் ப்ரஹ்ம அஸ்மி என்று நினைத்தால்தான் மோட்சத்தை அடைவான்.
பதில்-1: ஆத்மஞானம் தொடர்ந்து இருந்து கொண்டிருந்தால் காரணம் நீங்குகிறதா அல்லது மரணத்திற்கு முன்
கடைசியாக உள்ள எண்ணம் நீங்குகிறதா? எப்பொழுது சரியான ஞானம் வருகிறதோ அப்பொழுதே அக்ஞானம் நீங்கி முக்தியடைகிறோம்.
எனவே அந்திம காலத்தில் கடைசியாக தோன்றினால்தான் மோக்‌ஷம் கிடைக்கும் என்பது தவறு.
தொடர்ந்து இருந்தால்தான் மோட்சத்தில் இருப்போம் என்பதும் தவறு.
ஞானம் அடைந்த பிறகு வரும் எண்ணங்கள் எல்லாம் மித்யா என்ற உணர்வுடன் இருக்கின்ற நிலையில் எப்படி சம்சாரத்திற்கு திரும்ப முடியும்.
இந்த ஞானம் உலகிலுள்ள விவகாரங்களில் உள்ள மித்யா தன்மையுடன் இருப்பதால் இவனால் திரும்ப சம்சாரியாக முடியாது.

———

ஸ்லோகம்-11,12,13

தேவர்களின் வர்ணாசிரம தர்மத்தைப் பற்றிய கருத்துக்கள் இந்த ஸ்லோகங்களில் கூறப்பட்டுள்ளன

————-

ஸ்லோகம்-14

க்ஷத்ரஸ்ய க்‌ஷத்ரம் – சத்திர்யனுக்கு சத்திரியனாக இருப்பதுதான் தர்மம்
धर्मात्परँ नास्ति – தர்மத்திற்கு மேலானது எதுவும் இல்லை;
अबलीयान – பலமற்றவன் ; बलीयान् – பலமுள்ளவன் – अशम्सते – வெற்றிக்கொள்வான்
தர்மம்தான் ஒருவனுக்கு மிகப்பெரிய பலத்தைக் கொடுக்கிறது. தர்மத்தை கடைப்பிடித்தோமானால்
நாம் எல்லா காரியத்திலும் வெற்றியை கொடுக்கும். தர்மத்துடன் வாழ்ந்தால் யாருக்கும், எதைக்கண்டும் பயப்படத்தேவயில்லை.
சத்தியம்தான் தர்மம், சத்தியத்தைப் பேசுகிறவன் தர்மத்தைக் கடைப்பிடிப்பவனாகிறான்.

சத்தியத்தின் லட்சணங்கள்:
1. சாஸ்திரத்தில் உள்ள கருத்துக்களை சரியாக புரிந்து கொள்ளுதல்
2. புரிந்ததை வாக்கின் வழியே வெளிப்பட வேண்டும்.
3. உடலளவில் செயல்படுத்துவது. இதற்கு கர்மம் அல்லது தர்மம் என்று பெயர்.
உண்மையை பேசுகின்றவனை தர்மத்தைக் கடைபிடிப்பவன் என்று உலகம் சொல்கிறது.
யார் தர்மம் பேசுகிறார்களோ அவர்களை சத்யம் பேசுகிறார்கள் என்று கூறப்படுகிறது.
எனவே சத்தியப்படி நடக்கிறேன், பேசுகிறேன் என்பதும் தர்மப்படி நடக்கிறேன், பேசுகிறேன் என்பதும் ஒன்றுதான் என்று வேதம் உரைக்கிறது.

————

ஸ்லோகம்-15 – மனித வர்ண ஸ்ருஷ்டி, மனித ஜென்மத்தின் மேன்மை

பிராமண மனிதன் முதலில் தோற்றுவிக்கப்படுகிறான், அவனிடமிருந்து சத்திரியனும், சத்திரியனிடமிருந்து வைசியனும்,
வைசியனிடமிருந்து சூத்திரனும் தோன்றினார்கள். இது குணத்தின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகிறது.

ஆத்மாவை புரிந்து கொண்டால் அது நம்மை எல்லாவிதத்திலும் காப்பற்றுகிறது.
புரிந்து கொள்ளாவிட்டால் அதுவும் நம்மை காப்பாற்றாது. ஆத்மாவை புரிந்து கொள்ளாமல் இறந்து போகிறவன் பரிதாபத்திற்குரியவன்.

வர்ணாசிரம தர்மப்படி நடந்து கொண்டால் மேலான உலகத்தை அடைந்து இன்பத்தை அனுபவிக்கலாம்.
கர்மத்தை யோகமாக செய்தால் சித்தஸுத்தி அடைந்து ஞானயோகத்திற்கு தகுதியடைவான்.
தர்மப்படி நடக்காவிட்டால் நரகத்தைத்தான் அடைவான். நம்மை காப்பாற்றி கொள்ள வேண்டுமென்றால்,
ஆத்மாவை புரிந்து கொள்ள வேண்டுமென்றால் இந்த மனித ஜென்மம்தான் தேவை.

நாம் உண்மையில் பாதுகாப்பான இடத்தில்தான் இருக்கின்றோம். ஆனால் அதை உணராமல் இருப்பதால்
எல்லாவற்றுக்கும் பயந்து கொண்டிருக்கின்றோம். எல்லா ஜீவராசிகளுக்கும் ஆத்மா இருக்கிறது,
ஆனால் மனிதனால் மட்டும்தான் முயற்சித்தால் தெரிந்து கொள்ள முடியும்.
எனவே ஆத்மாவை அறிந்துகொண்டால் எல்லாவற்றிலிருந்தும் காப்பாற்றபடுவோம்.

நம்மால் ஆத்மாவை புரிந்து கொள்ளாமல் இருப்பதால் எப்படி நம்மை காப்பாற்ற முடியாத நிலையில் இருக்கிறோம்
என்பதை இரண்டு உதாரணங்கள் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
1. வேதத்தை ஓதாமல் இருந்தால் அதனா,ல் நமக்கு எந்த பலனும் கிடையாது. உச்சரிக்காத வேதம் பலனற்றதாக இருக்கும்.
2. ஆரம்பிக்காத கர்மம் நமக்கு எந்த பலனும் கொடுக்காது.

आत्मानमेव लोकमुपासीतः –
·ஆத்மாவை பிரகாச ஸ்வரூபமாக அறிய வேண்டும்.
·ஆத்மா அனைத்தையும் வியாபித்து எல்லா பொருட்களையும் பிரகாசிக்கிறது. ஆனால் அந்த பொருட்களில் உள்ள தோஷம் இதை பாதிக்காது.
(உ-ம்) சூரிய ஒளியானது சாக்கடையிலும் விழுகிறது, கங்கையிலும் விழுகிறது, ஆனாலும் எந்த தோஷங்களாலும் சூரியன் பாதிக்கப்படுவதில்லை.

————-

ஸ்லோகம்-16 – ஆத்மாவை அறியாதவனின் நிலை

அக்ஞானி தேவர்களுக்கும் அடிமையாக இருக்கிறான், விலங்குகளுக்கும், அடிமையாக இருக்கிறான்.
அதாவது இவன் மற்றவர்களுக்கு போக்யமாக இருக்கிறான்.
आत्मा सर्वेषाँ भूतानाँ लॊकः – இந்த உலகமே பயன்படுத்தி கொள்ளும். உதாரணமாக,
· தியாகம் செய்யும் போது – தேவர்களுக்கு போக்யமாகி விடுகிறோம்.
· வேத சாஸ்திரம் படிக்கும்போது ரிஷிகள் நம்மை அனுபவிக்கின்றார்கள்
· விருந்தினர்களை உபசரிக்கும்போது அவர்கள் நம்மை நன்றாக அனுபவிப்பார்கள்.
· பறவை, விலங்கு, புழுபூச்சிகளும் நம்மை அனுபவிக்கின்றது.
யாரெல்லாம் நமக்கு துயரம் கொடுக்கிறார்கள் என்று நினைக்கிறோமோ அவர்களுக்கு நாம்தான் அந்த சக்தியைக் கொடுத்திருக்கிறோம்.

—————

ஸ்லோகம்-17 – அக்ஞானியின் ஸ்வரூபத்தை விளக்குகிறது

ஏன் எல்லோரும் ஆத்ம ஞானத்தை அறிய விரும்புவதில்லை? ஏனென்றால் ஆசையின் வசப்பட்டு ஏதேதோ
அனாத்மாவை அடைய முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள் என்று சங்கரர் கூறுகிறார்.
जाया मे स्यात् – எனக்கு ஒரு மனைவி வேண்டும்.
अथ प्रजायेय – எனக்கு குழந்தை வேண்டும்
अथ वित्तँ मे स्यात् – எனக்கு நிறைய செல்வம் வேண்டும்
अथ कर्म कुर्वीयेति – கர்மத்தை செய்ய வேண்டும்.
கர்மம் செய்ய இந்த ஐந்து பொருட்களும் தேவை, அதாவது மனைவி, எஜமானன்(கணவன்), புத்திரன், மானுஷம்,
வித்தம் (மற்ற திரவியங்கள், பணம், பொருட்கள், உடலாரோக்கியம், அங்கஹீனமற்றவனாக இருத்தல்)
தெய்வ வித்தம் (உபாஸனம், ஜபம், அறிவு) இந்த ஐந்தும் உடையவன் யாகம் செய்வதற்கு தகுதியானவனாக இருக்கிறான்.

இல்லறத்திலிருப்பவர்களால்தான் இந்த மாதிரி யாகங்களை செய்து சித்தஸூத்தியடைவார்கள்.
இந்த வாய்ப்பை இழந்தவர்கள் சேவையில் ஈடுபட்டு சித்தஸூத்தியடைவார்கள்.
அல்லது இந்த ஐந்தையும் உபாஸனை செய்தால், அதே ஸித்தியடைவார்கள்.
எஜமானனை தன்னுடைய மனதாகவும், வாக் இந்திரியத்தை மனைவியாக, பிராணனை புத்திரனாகவும்,
கண்களை மானுஷ வித்தமாக தியானிக்க வேண்டும். காதுகளை தெய்வ வித்தமாக தியானிக்க வேண்டும்.
இவ்விதம் கர்மத்தில் ஈடுபட்டு விடுவதால், ஆத்ம ஞானத்தை அடைய வருவதில்லை.

——————

பகுதி-5 : ஸப்தான்னம் பிரமாணம் ( ஏழு விதமான அனுபவிக்கப்படும் பொருட்கள்)

இந்த உலகத்தை ஏழு விதமான போக்ய பொருட்களாக பிரிக்கப்பட்டு அதை எப்படி ஜீவன் அனுபவிக்கிறான்
என்பதை விளக்கப்படுகிறது. நாம் ஒரு பொருளை அனுபவிக்கும்போது வேறொன்று நம்மை அனுபவிக்கிறது.

த்வைதம் இரண்டாக பிரிக்கப்படுகிறது. அவைகள்
1. ஈஸ்வர ஸ்ருஷ்டி – நாம் அனுபவிக்கும் பஞ்சபூதங்களாலான எல்லா பொருட்களும்
2. ஜீவ ஸ்ருஷ்டி – ஏற்கனவே ஈஸ்வரனால் படைக்கப்பட்ட பொருட்களின் மீது ஜீவன் ஏற்றி வைக்கும் சில மாற்றங்கள்,
சில பாவனைகள். (உ-ம்) பெண்ணே தாயாகவும், சகோதரியாகவும், மனைவியாகவும், மகளாகவும் இருக்கிறாள்,
இது ஜீவ ஸ்ருஷ்டி. ஈஸ்வர ஸ்ருஷ்டியை போக்யமாக மாற்றினால் அதுவே ஜீவஸ்ருஷ்டி.

ஜீவ ஸ்ருஷ்டியே சம்சாரத்திற்கு காரணம். ஒரு பொருளை சுக சாதனமாக அல்லது துக்க சாதனமாக நினைத்தால் அதுவே ஜீவ ஸ்ருஷ்டி.
சாஸ்திர ஜீவஸ்ருஷ்டி, அசாஸ்திர ஜீவஸ்ருஷ்டி. சாஸ்திர ஜீவ ஸ்ருஷ்டி சாதனமாக எடுத்துக்கொண்டு மோட்சத்தை அடைய வேண்டும்.
பிறகு அதையும் விட்டுவிட வேண்டும். கடைசியில் எப்பொழுதும் சாட்சியாக இருக்க வேண்டும்.
யாரெல்லாம் நமக்கு துயரம் கொடுக்கிறார்கள் என்று நினைக்கிறோமோ அவர்களுக்கு நாம்தான் அந்த சக்தியை கொடுத்திருக்கிறோம்.

ஸ்லோகம்-1 – சப்தான்னத்தின் அறிமுகம்

இந்த சப்த அன்னத்தை படைக்கிறவன் ஜீவன். இவன் எதைக் கொண்டு, எதன் அடிப்படையில்
ஸ்ருஷ்டியை படைக்கிறான் என்றால், அவன் மேற்கொண்ட கர்மத்தின் அடிப்படையிலும்,
அவன் செய்கின்ற தியானத்தின் அடிப்படையிலும் ஸ்ருஷ்டியை உருவாக்குகிறான்.
நாம் எவ்வளவு தர்மத்துடன் வாழ்கிறோமோ, தர்மத்துடன் கர்மத்தை செய்கிறோமோ அதன் அடிப்படையிலே தான்
நம்முடைய ஸ்ருஷ்டி உருவாகிறது. எனவே மற்றவர்கள் நம்மை எப்படி நினைக்கிறார்கள் என்பது பார்ப்பவர்களின் பார்வையை பொறுத்து அமைகிறது.

ஈஸ்வர ஸ்ருஷ்டியில் சுக-துக்கங்கள் உண்டாவதில்லை. நம்முடைய ஸ்ருஷ்டியில்தான் இவைகள் உண்டாகின்றன.

நான்கு வகையான அன்னங்கள் உள்ளன, அவைகள்:-
1. சாதாரண அன்னம் – எதையெல்லாம் நாம் சாதாரணமாக இயற்கையிலிருந்து வருபவைகளை உட்கொள்கிறோமோ அவையெல்லாம் சாதாரண அன்னம்.
2. தேவர்களுக்கு கொடுக்கும் அன்னம் –
3. தேவதைகளிடமிருந்து நமக்கு தேவையான அல்லது நம் ஆசைகளை நிறைவேறுவதற்காக அளிக்கப்படும் பொருட்கள்
4. பால்
சாதனை மூலம் இந்த நான்கு அன்னமும் நமக்கும், மற்றவர்களுக்கு கொடுத்தும் பயன்படுத்திக் கொள்பவைகள்
5. மனம்
6. வாக்கு
7. பிராணன்
இந்த மூன்றும் ஆத்மார்த்தமாக நமக்காக, நம்மிட்த்திலே உள்ள அன்னம், இவைகள் சாத்யமாகவும் உள்ளது.
உடலே போக்யமாக உள்ளது, அதை அனுபவிப்பவன் சிதாபாஸன்.

————–

ஸ்லோகம்-2 – ஏழு அன்னங்களுக்கு காரணம் எது?

मेधा – உபாஸனை, तपँ- கர்மம், இந்த இரண்டும்தான் ஏழு அன்னங்களும் கிடைப்பதற்கு காரணாமாக இருக்கிறது.
அதாவது தியான, கர்மத்தின் பலனாகத்தான் இந்த அன்னங்கள் கிடைக்கின்றன.
1. உணவையே லட்சியமாக கொண்டு வாழக்கூடாது, அதை உயிர் வாழ மட்டும் கருவியாக உபயோகிக்க வேண்டும்,
மற்றவர்களுக்கு பகிர்ந்துண்ண வேண்டும்.
2. காம்ய கர்ம மாக உபயோகிக்க கூடாது
3. சுயநலத்திற்காக பயன்படுத்தாமல், கர்ம யோகமாக செய்ய வேண்டும்.
4. பால்: எல்லா ஜீவராசிகளுக்கும் பிறந்தவுடன் உணவாக கிடைக்கிறது. தேவர்களுக்கு கொடுக்கும் ஆஸுதியில் பாலும், நெய்யும் முக்கியமாக கருதப்படுகிறது.
5. மனதில் ஆத்மாவை அடைந்தேன் என்ற அறிவு ஏற்படுதல்
6. குருவினிடத்தில் சென்று நம்முடைய வாக்கினால் மட்டும் ஆத்மாவை அடையும் வழியை அறிந்துக் கொள்ள வேண்டும்.
7. பிராணன் நன்றாக இருந்தால்தான் வாக்கு நன்றாக செயல்படும்.

—————-

ஸ்லோகம்-3 – மனமானது ஸம்ஸ்காரத்திற்கு ஆதாரமாக இருக்கிறதா?

மனம் ஒரு சூக்‌ஷுமமான அங்கம். இதிலிருந்து உற்பத்தியாவதுதான் எண்ணங்கள்.
இதில் விதவிதமான உணர்வுகள் எழுகின்றது. ஒவ்வொரு உணர்வும் எண்ணங்கள்தான்.
மனமானது உணர்வுமயமானது. சிரத்தை, கோபம், பயம், துணிவு, இன்பம், துன்பம், பொறாமை போன்ற உணர்வுகள் அடங்கியது.
மனத்தின் குணங்கள் ஆத்மாவின் குணங்களாகும்.

மனம் இருக்கிறது என்பதற்கு என்ன பிரமாணம்?
நம்முடைய கண் திறந்து பார்த்துக் கொண்டிருந்த போதிலும் சில விஷயங்கள் நம் கவனத்திற்கு வருவதில்லை,
இதற்கு காரணம் மனமானது கண் பார்த்துக் கொண்டிருக்கும் விஷயத்தில் இல்லை.
இதிலிருந்து நாம் தெரிந்து கொள்வது, மனம்தான் நாம் எந்த ஒரு அறிவையும் அடைவதற்கு காரணமாக இருக்கிறது.

வாக்கு: இது பிரகாச ஸ்வரூபம் – இது நம்முடைய மனதிலிருக்கிற அறிவையும், வெளியிலிருக்கிற பொருட்களையும் பிரகாசிக்கிறது.
இதனால்தான் நாம் இன்ப-துன்பத்தை அடைகிறோம், அனுபவிக்கிறோம்.

பிராணன்: இதுதான் ஸ்தூல உடலுக்கு சக்தியை கொடுக்கும் ஆதாரமாக இருக்கிறது.
அக்ஞானியாக இருப்பவன் தன்னுடைய ஆத்மாவானது, மனம், வாக்கு, பிராணன் இதில் ஏதாவது ஒன்றாகத்தான் கருதுகிறான்.
அதாவது மனதையோ, வாக்கையோ, பிராணனையோ நான் என்ரு நினைத்துக் கொண்டிருக்கிறான்.
இந்த மூன்றையும் நெறிப்படுத்த வேண்டும் ஏனென்றால் இவைகள்தான் மோக்‌ஷத்தை அடைவதற்கு சாதனையாக உள்ளது.

———–

ஸ்லோகம்-4-10

ஒரு ஜீவன் ஆத்மான்னத்தை மூன்று விதமாக அனுபவிக்கிறான்.
1. அத்யாத்மம்: ஜீவனிடமிருக்கின்ற மனம், வாக்கு, பிராணன்
2. அதிபூதம்: இந்த ஜகத் – ஹிரண்யகர்ப்பனாகவும், விராட்டாகவ்வும் இருக்கும்
3. அதிதெய்வம்: பிரஜாபதி – தேவதைகளின் சேர்க்கையாக இருக்கின்ற பொருட்களை அனுபவிக்கிறோம்.
இந்த உலகம் நாம் அனுபவிக்குக் போக்யமாக இருக்கிறது, இது வாக்கு, மனம், பிராணன் என்று பிரிக்கப்படுகிறது.
பூலோகம் வாக்காகவும், புவர் லோகம் – மனமாகவும், ஸ்வலோகம் பிராணனனாகவும் உள்ளது.
வேதம் – ரிக், யஜூர், சாம இவைகளெல்லாம் பிராணனனாக கருதப்படுகிறது
மாதா, பிதா, மக்கள் இவர்களும் பிராணனனாக கருதப்படுகிறது
அறிந்ததெல்லாம் – வாக்கு,
அறியப்போவது – மனம்
அறியாதது – பிராணன்

—————–

ஸ்லோகம்-11-13

அதிதெய்வம் அன்னத்திரையம்:
தேவதைகளின் ஸ்வரூபம் பிரஜாபதி. ஜீவர்களின் கர்ம பலனாக தோன்றியவர்.
பூமி – கோளகம் – அக்னி – இந்திரியம் – வாக்கு வெளிப்படுவதற்கு;
சுவர்க்கம் – கோளகம் – ஆதித்யன் – இந்த்ரியம் – மனது;
ஜலம் – கோளகம் – சந்திரன் – இந்திரியம் – பிராணன்;

————–

ஸ்லோகம்-14

பிரஜாபதியை கால தத்துவமாக சொல்லப்படுகிறது. இவரை நாம் நம்முடைய கர்ம பலத்தால் அவரை அனுபவிக்கிறோம்.
இவரை வாக்கு, மனது, பிராண தத்துவமாக தியானிக்க வேண்டும்.

—————

ஸ்லோகம்-15

அகங்கிரஹ உபாஸனை – பிரஜாபதியை நானாக தியானிக்க வேண்டும்.

——————

ஸ்லோகம்-16

சம்சார உலகத்தில் அடையக் கூடிய சாதனையும், சாத்தியமும் விளக்கப்படுகிறது.
இந்த சம்சார வாழ்வில் அடையக்கூடிய சாத்தியம் – மனுஷ்யலோகம், பித்ருலோகம், பிரம்மலோகம்.
புத்திரனால் மனுஷ்ய லோகத்தையும், காயிக, வாக் கர்மங்களினால் பித்ரு லோகத்தையும்,
மானஸீக உபாஸனைகளால் தேவலோகத்தையும், பிரம்மலோகத்தையும் அடையலாம்.

எனவே உபாஸனைகளால் மிக உயர்ந்ததாக கருதப்படுகிறது.
இந்த மூன்று சாத்னைகளால் மோட்சத்தை அடையமுடியாது என்று தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கிறது.

—————

ஸ்லோகம்-17

கர்மத்தால் மட்டும் மோட்சத்தை அடைய முடியாது என்று இந்த ஸ்லோகம் உணர்த்துகிறது.
புத்திரன் எப்படி மனுஷ்யலோகத்தை அடைவதற்கு உதவி செய்வான்.
பொதுவாக அவரவர் கர்ம வினையை அவர்களேத்தான் அனுபவிக்க வேண்டும்.
சம்பத்தி கர்ம à அப்பா பையனுக்கு தான் செய்து கொண்டிருந்த கர்மத்தை கொடுத்துவிட வேண்டும்.
இறந்து போன தந்தைக்கு சிரார்த்தம் போன்ற கர்மத்தை செய்து, தந்தை மனிதலோகத்துக்கு பிறக்க உதவி செய்கின்றான்.
தந்தைக்கு புண்ணியம் குறைந்திருந்தால் மகன் செய்கின்ற கர்மத்தால் வரும் புண்ணியங்களால்
அவர் மீண்டும் மனித லோகத்துக்கு வந்து பிறக்க உதவி செய்யும்.
ஒரு சமயம் தந்தைக்கு தேவையில்லாமலிருந்தால் வேறொரு தந்தைக்கு செல்லலாம்.
மகனிடமிருந்து புண்ணிய தானம் பெறுவதும் அவரது கர்மவினைப்படிதான் நடக்கும்.

—————–

ஸ்லோகம்-18-20

உபாஸனையின் மூலம் பிரம்மலோகத்தை அடைகிறான். ஹிரண்யகர்ப்பனாக இருந்து அந்த லோகத்தை அனுபவிக்கிறான்.
அவனுடைய மூன்று இந்திரியங்கள் மனம், வாக்கு, பிராணன் தேவதைகளாக மாற்றப்படுகிறது.
தெய்வீக வாக்கு – அவன் சொல்வது நடக்கும். மிகச்சிறப்பாக எல்லா நியமங்களையும் கடைப்பிடித்து செய்த உபாஸனை மூலம் இந்த நிலையை அடையலாம்.
தெய்வமனது – திவ்யமான மனம். மனமானது சில சமயம் இன்பமாக இருக்கிறது.
சில சமயம் துயரத்தையோ, பயத்தையோ கொடுக்கிறது. ஆனால் இந்த உபாஸனுக்கு இன்பத்தை கொடுக்கும் கருவியாக மட்டும் இருக்கிறது.
தெய்வ பிராணன் – உறுதியான பிராணன், உடல் நல்ல ஆரோக்யமாக இருக்கும். நோய், நொடி, வலி உபாதைகளால் பாதிக்கப்படாமல் இருக்கும்.

உபாஸனை மூலம் வாக்கு, மனம், பிராணன் இவைகளெல்லாம் கட்டுப்படுத்தப்படும், நெறிப்படுத்தப்படும், ஒழுங்குபடுத்தப்படும்.

————–
ஸ்லோகம்-21-23

பிராண ஸ்துதி, பிராண உபாஸனை : தேவலோக ப்ராப்தி. கண், காது, வாக்கு போன்ற இந்திரியங்கள்
தத்தம் செயலை தொடர்ந்து செய்து கொண்டிருப்போம் என்ற உறுதியுடன் செயல்பட்டுக்கொண்டு இருந்தது.
ஆனால் இவைகள் சோர்ந்து போய் செயலை நிறுத்தி ஓய்வெடுக்க ஆரம்பித்தது.
ஆனால் பிராணன் மட்டும் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருந்தது.
எனவே இந்தப் பிராணனை தியானிப்பவர்கள் ஹிரண்யகர்ப்பனை அடைவார்கள்.

—————-

பகுதி-6 : உத்த பிராமனம் (3 மந்திரங்கள்)

ஜகத் மித்யா என்று விளக்கப்படுகிறது.
படைக்கப்பட்ட அனைத்தும் மூன்று பிரிவுகளாக பிரிக்கப்படுகிறது. 1. நாமம், 2.ரூபம், 3.கர்மம்.
இவை மூன்றும் ஒன்றாக இணைக்கப்படுகிறது,, அதுவே ஸரீரம், நமது உடல்.
இந்த உடல் மித்யா என்று உணர்ந்து விட்டால், நாம, ரூப, கர்மங்கள் மித்யாவாகி,
இந்த ஜகத்தும் மித்யாவாகிறது. உதாரணமாக களிமண்ணில் நாம, ரூப, கர்மங்களை ஏற்றி வைத்திருப்பதை போன்றது.

ஜகத்திற்கு ஆறு வேறு பெயர்களை சங்கரர் குறிப்பிடுகிறார்.
1. அவித்யா விஷயம்,
2. வியாக்ருத-அவ்யாக்ருத ஆத்மஹம்
3. சாதனா-சாத்தியம்
4. கிரியா-காரக பலம் – செயல், செயல்புரிவதற்கு காரணம், செயலினால் விளைந்த பலன்
5. நாம-ரூப-கர்மாத்மகம் –
6. ஸரீர ஸ்வரூபம்.
நாமம் என்பது சப்தம் அது சாமானியம், விசேஷம் என இருவகையாக உள்ளன. சாமான்ய உபாதானம், விசேஷ உபாதானம்.
“அ” என்கின்ற சாமான்ய சப்தமானது விசேஷ சப்தத்திற்கு உபாதான காரணமாக இருக்கிறது.
எனவே விசேஷ சப்தங்கள் எல்லாம் மித்யா என்று உணர வேண்டும். சாமான்ய ரூபம் – சத்தியம், விசேஷ சப்தம் – மித்யா.

ஒருவருடைய செயல் நம்மை கோபத்தையோ, துன்பத்தையோ கொடுக்கும்போது நாம் அதை அப்படியே எடுத்துக் கொள்ளாமல்,
அவர் ஏதோ கையை அசைத்தார், சப்தம் எழுப்பினார், காலை ஆட்டினார் என்று எடுத்துக் கொண்டால், அது நம்மைப் பாதிக்காது.
ஒருவர் நம்மைப்பார்த்து திட்டினால், பாராட்டினால் அவர் ஏதோ சப்தம் போட்டுவிட்டு செல்கிறார் என்று எடுத்துக் கொள்ள வேண்டும்.

முதல் அத்தியாயத்தின் முடிவுரை
எட்டு விதங்களில் இந்த உலகை அத்யாரோபம் செய்யப்பட்டிருக்கிறது.
1. சாதன பிரபஞ்சம் – விதவிதமான கர்மங்கள், உபாஸனைகள், சப்தான்னத்தில் முதல் நான்கு சாதனையாகின்றது.
2. சாத்ய பிரபஞ்சம் – ஒவ்வொரு உபாஸனைக்கும் சொல்லப்பட்ட கர்மப்பலன்கள்.
சப்தான்னத்தில் கூறபட்ட மனம்-மனிதலோகம், வாக்கு-பித்ருலோகம், பிராணன்-தேவலோகம்.
3. அவ்யாக்ருதம் பிரபஞ்சம் – மாயா
4. ஜீவனுடைய கர்த்ருத்வம் – ஜீவனை கர்த்தா என்று ஏற்றுக்கொள்ளுதல். ஒவ்வொரு ஜீவனும் தனக்கென்று தனி உலகத்தை படைத்துக் கொள்கிறார்கள்.
5. ஜீவனுடைய போக்த்ருத்வம் – ஜீவன் போக்தாவாகவுமிருக்கிறான். செய்த செயல்களின் விளைவை அனுபவிக்கின்றான்.
6. நாம-ரூப-கர்ம – ஸ்ருஷ்டியை இவ்விதமாக ஏற்றுக்கொள்ளுதல்
7. ஸரீரம் – ஸரீரம் இருக்கிறது என்று ஏற்றுக்கொள்ளுதல் ஆனால் உண்மையில் இதுவும் மித்யாதான்
8. சம்சாரம் – ஜீவன் போக்தாவாகவும், போக்யமாகவும் இருக்கும் நிலை.

கர்ம காண்டமும், ஞான காண்டமும் அறிவை அடைவதற்கான பிரமாணம்.
இதில் கர்மகாண்டமானது சாதனையாகவும், ஞான காண்டமாவது சாத்திய்மாகவும் புரிந்து கொள்ள வேண்டும்.
கர்ம காண்டத்தின் மூலமாக ஆத்ம ஞானத்தை, மோட்சத்தை அடைய முடியாது.

————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ ப்ருஹதாரண்யஹ உபநிஷத்–அத்தியாயம்-1 -ஸ்ரீ உபதேச காண்டம்–

March 22, 2021

முகவுரை
ஸத்தா திரய விசாரம்:
மூன்று விதமான இருப்பு, பிராதிபாஸிக ஸத்யம், வியாவஹாரிக ஸத்யம், பாரமார்த்திக ஸத்யம்.
கயிற்றில் தெரியும் பாம்பு பிராதிபாஸிக ஸத்யம். கயிறானது வியாவஹாரிக ஸத்யம், பிரம்மதத்துவத்தை – பாரமார்த்திக ஸத்யம்.

1. பிராதிபாஸிக ஸத்யம்:
a. பிரமாதாஸ்தி யத் பாத்யதே தத் பிராதிபாஸிக ஸத்யம்.
பிரமாதா-ஒரு பொருளை அறிபவன், பாத்யதே – நீக்குதல்,
அறிபவன் இருக்கும் போதே அறியப்படுவது நீக்கப்படுகிறது.
அறிபவனும், அறியப்படும் பொருளும் நீக்கப்படுவது வியாவஹாரிகம்).
அந்த அறியப்படும் பொருளுக்கு பிராதிபாஸிக ஸத்யம் என்று பெயர். (உ-ம்) கயிற்றில் தெரியும் பாம்பு பிராதிபாஸிக ஸத்யம்.
b. அர்த்தகிரிய நாஸ்தி – பிரயோஜனம் கிடையாது, கானல் நீர்- நீர் போல தெரிந்தாலும் பயனற்றது.
c. துஷ்ட பிரமான ஜன்மம்-பிரமானத்தை தவறாக பயன்படுத்தும்போது தோற்றமளிப்பது, பிராதிபாஸிகம்
d. தவறாக புரிந்து கொள்வது
2. வியாவஹாரிக ஸத்யம்:
பிரமாத்ரா ஸ: யத் பத்யதே
a. அறிபடுபவனோடு சேர்ந்து நீக்கப்படுவது வியாவஹாரிக ஸத்யம்.
இந்த உலகத்தை நீக்க வேண்டுமானால் நம்மை நீக்க வேண்டும். கனவுக்குள் போகும்போது இரண்டும் நீக்கப்படுகிறது
b. விவகார காலே அபாத்யமானம்: விவகாரம் செய்யும்போது அதை நீக்க முடியாது.
c. அர்த்தகிரியா அஸ்தி – இதனால் பயன் இருக்கிறது.
d. இது எதிலிருந்து தோன்றுகிறது? பிரத்யக்ஷ பிரமானத்திலிருந்து தோன்றுகிறது.
e. சரியாக புரிந்து கொள்வது
3. பாரமார்த்திக ஸத்யம்:
இந்த ஞானம் வந்த உடனே வியாவஜாரத்தில் உள்ள ஸத்யம் போய் விடும். விஸ்வனாக இருக்கும்போதே துரியனுடைய நிலைக்கு,,
ஆத்ம ஞான நிலைக்கு செல்லும்போது இந்த வியாவஹார ஸத்யம் இல்லாமல் போகும்.
ஞானம் வந்த பிறகு நாம் பார்ப்பதெல்லாம் காட்சிதான், விவகாரத்திற்கு பயன்படாது என்ற அறிவு ஏற்படும்.

வியாவஹாரிகம் இரண்டு வகையாக பிரிக்கப்படுகிறது. ஞ்யாத ஸத்தா, (தெரிந்த ஸத்தா), அக்ஞாத ஸத்தா (தெரியாத ஸத்தா).

ஞ்யாத ஸத்தா: இது பிரத்யக்ஷ பிரமானம்; உ-ம் சென்னை எனக்கு தெரிகிறது.
இது நாம் விவகாரத்தில் அறியப்படும் பொருள் தெரிந்துக் கொண்டிருக்கும்.

அக்ஞாத ஸத்தா (உ-ம் காசி இருக்கிறது ஆனால் எனக்கு தெரியவில்லை, அனுமானம் மூலமாக ஒன்றை தெரிந்து கொள்வது.
நம்மால் அறியப்பட்டிருக்கிறது ஆனால் இப்போது இல்லை.

முதலிலுள்ள இரண்டு ஸத்யங்களும் இதை சார்ந்திருக்கிறது. இது எதையும் சார்ந்திருக்கவில்லை.
எது ஒன்றை சார்ந்திருக்கிறதோ அது மித்யா, தனிப்பட்ட இருப்புடையது ஸத்யம்.

ஆத்மாவின் லக்ஷணம்:
காலத்ரைய அபாத்யத்வம், முக்கலத்திலும் நீக்கப்படாதது, பாதிக்கப்படாதது அதுதான் பாரமார்த்திக ஸத்யம்.
அபாத்யமாக விளங்கிக்கொண்டிருப்பது அஹம் என்கின்ற சுத்த சைதன்யம். இது ஸத்-சித் ஸ்வரூபம்.
இந்த பிரம்மம் தான் பாரமார்த்திக ஸத்யம். இது அறிவு ஸ்வரூபமாகவும் இருக்கிறது. துர்ரம்-அஸ்தி-இல்லாதது.
(உ-ம்) முயற்கொம்பு, ஆகாயத்தாமரை. ஒரு பொருள் காண்பதும் இல்லை; அனுபவிப்பதும் இல்லை.
நம்முடைய அனைத்து சம்சாரத்திற்கு மூலக்காரணம், எந்தப் பொருளுக்கு எந்த அளவு இருப்பு இருக்கிறது என்று தெரியாததுதான்
எப்படிப்பட்ட ஸத்யம் இருக்கிறது என்று தெரியாத காரணத்தினால் ஒன்று ஸத்யத்தில் இருக்கும் போது
இது இப்படிப்பட்ட ஸத் என்ற ஞானம் இல்லையென்றால் அந்த அறியாமை இயற்கையாக பாரமார்த்திக ஸத்யத்தைக் கொடுத்து விடுவோம்.
ஒருவர் நம்மை திட்டினால், அதற்கு எந்த ஸத்யத்தைக் கொடுக்கிறோமோ அந்த அளவுக்கு துயப்படுவோம்.
அந்த வார்த்தையை ப்ராதிபாஸிகம் என்று நினைத்தோமானால் அதற்கு துயரம் கொடுக்கும் சக்தியை இழந்து விடுகிறது.
காலத்ரய விவேகம்தான் துயரத்தை கொடுக்கிறது.
ஒரு பொருளுக்கு அதற்குரிய இருப்பைவிட அதிகமான அளவு இருப்பைக் கொடுத்தால் அதற்கு மோகம் என்று பெயர்
அதை தொடர்ந்து வருவது சோகம். அஸங்கம்-ஒட்டாமல் இருப்பது. உதாரணமாக துணியொரு ஸத்தா,
அழுக்கு ஒரு ஸத்தா எனவே இரண்டிற்குமிடையே ஸங்கம் ஏற்படுகிறது.
நம் நிழல் சாக்கடை தண்ணீரில் விழுந்தால் அதனால் நிழலுக்கு ஒன்றும் ஏற்படுவதில்லை. ஏனெனில் இரண்டும் வெவ்வேறு ஸத்தாகும்.

பிராதிபாஸிகம் – பிரமையில் தோன்றுவது – பிரத்யக்ஷம் பிரமானம் தவறாக பயன்படுத்தும்போது ஏற்படுகிறது.
பாரமார்த்திக ஞானம்: உபநிஷத் – பிரமானமாக இருக்கிறது.

உபநிஷத்: (ஸப்த விசாரம்)- பிரம்ம வித்யா, ஸப்தரூப வாக்கியம். உப+நி+ஷத்
உப : அறிவை அடைய நிபந்தனை
நி : பலனை அடைவதற்கான நிபந்தனையை குறிக்கும்
ஷத் : பிரம்ம வித்யாவை அடைந்த பலன், அவஸாதனம், கதி, விசரணம்

அவஸாதனம் முழுமையாக அழித்தல், சம்சாரத்தை முழுமையாக அழித்து விடுகிறது. துயரத்தை முழுமையாக நீக்குகிறது.
அக்ஞானத்தால் துயரமே ஏற்படுகிறது. எனவே அறியாமையை அழித்தால் அதன் துயரம் இல்லாத நிலை ஏற்படுகிறது.
கதி அடைய வைத்தல், பிரம்மத்தை அடைய வைக்கிறது. பிரம்மத்தை அடைவதால் பரமானந்தம் ஏற்படுகிறது.
விசரணம் தளர்த்தப்படுத்துதல், தளரச்செய்தல், பிரம்ம வித்யா சஞ்சித கர்மத்தையும், ஆகாமி கர்மத்தையும் அழித்து விடும்.
பிராரப்த கர்மத்தை மட்டும் விட்டு விடுகிறது. ஆனால் அதன் விளைவை தளர செய்கிறது, பலவீனமாக்கி விடுகிறது. அதனால் வரும் துயரத்தை அனுபவிப்பதில்லை.
நி பிரம்ம வித்யாவினால் அடையும் பலனை அடைய விதிக்கும் நிபந்தனைகள் – நிச்சய ஞானம் – த்ருட பிரக்ஞா,
உறுதியான அறிவு, ஸ்திர பிரக்ஞா
உப அறிவை ஞானத்தை அடைய நிபந்தனை. குருவிடமும், சாஸ்திரத்தையும் அடைதல், குருமுகமாக சாஸ்திரத்தை கேட்டறிதல்
பிருஹத் பெரியது; அதிகமான மந்திரங்களை உடையது. மந்திரங்களின் அர்த்தமும் பெரியதாக இருக்கிறது.
ஆரண்யகம் வனத்தில் இதை படிப்பதனால், மனத்தூய்மை அடைந்தவர்களால் படிக்கப்படுவது

இது ஆறு அத்தியாயங்களை உடையது. மூன்று காண்டமாக பிரிக்கப்பட்டு இருக்கிறது.
முதல் இரண்டு அத்தியாயங்கள் மதுக்காண்டம் என்றும்,
அடுத்த இரண்டு அத்தியாயங்கள் முனிக்காண்டம் என்றும்
கடைசி இரண்டு அத்தியாயங்கள் கிளக்காண்டம் என்றும் பிரிக்கப்பட்டிருக்கிறது.

மதுக்காண்டம் முதல் இரண்டு அத்தியாயங்கள் அடங்கியது. இது உபதேசக் காண்டம்.
இதில்தான் மஹாவாக்கியத்தின் உபதேசம் இடம் பெற்றிருக்கிறது.
பிரம்மம் ஸத்யா, ஜகத் மித்யா. இதுதான் உபநிஷத்தின் சாரம்-
அஹம் பிரம்ம அஸ்மி, ஜகத் மித்யா என்ற விளக்கமாக உபதேசிக்கப்பட்டிருக்கிறது.
மது என்றால் ஒன்றையொன்று சார்ந்திருத்தல், அனைத்து தத்துவங்களும் ஒன்றையொன்று சார்ந்திருக்கிறது என்பதை எடுத்து உரைக்கிறது.
சம்சார வர்ணனை மிக அழகாக விளக்கப்பட்டிருக்கிறது. எது சார்ந்திருக்கிறதோ அது ஸத்யம் இல்லை, மித்யா.
முதல் இரண்டு அத்தியாயங்களும் சிரவண பிரதானமாக இருக்கிறது.
முனிக்காண்டம் இது 3வது 4வது அத்தியாயங்கள் அடங்கியது. உபபத்திக் காண்டம், யுக்திப்பிரதானம், மனனப்பிரதானம்.
பிரம்மம் ஸத்யா, ஜகத் மித்யா என்பதை நன்றாக விளக்கப்பட்டு இருக்கிறது.
கிளக்காண்டம் கடைசி இரண்டு அத்தியாயங்கள் அடங்கியது. உபாஸனைகளும், கர்ம காண்டங்களும் வருகிறது.

குறிப்புக்கள்:-
பாஷ்யம் உபநிஷத்திலுள்ள மந்திரத்தின் விளக்க உரை. மூலபத வியாக்யானம், ஸ்வ வியாக்யானம்
வார்த்திகம் ஸ்லோகத்தின் மூலமாக சங்கரருடைய விளக்கத்தை விளக்குதல்
உத்தம் சங்கராச்சாரியர் சொல்லியிருப்பதை விளக்குதல்
அநுத்த சங்கராச்சாரியர் விட்டுவிட்டதை எடுத்து விளக்குவது
துருக்தம் சங்கராச்சாரியர் சுருக்கமாக சொல்லியிருப்பதை விரிவாக விளக்குதல்

————-

சாந்தி பாட விசாரம்

பூரணம் முழுமையானது, வரையறுக்கப்படாதது,
அதஹ அது; ஈஸ்வரனை குறிக்கிறது. உபாதியுடன் கூடிய பிரம்மம்
பூரணம் வரையறுக்கப்படாதது
இதம் இது – ஜீவாத்மா
பூர்ணாத் பூரணத்திலிருந்து,பூரணமான ஈஸ்வரனிடமிருந்து,
பூர்ணம் பூரணமான ஜீவன்
உதச்யதே தோன்றியுள்ளான்
பூர்ணஸ்ய பூரணத்தினுடைய – ஜீவனுடைய
பூர்ணம் பூரண ஸ்வரூபத்தை
ஆதாய எடுத்து விட்டால், நீக்கிவிட்டால்
பூர்ணம் வரையறுக்கப்படாதது
ஏவ மட்டும்
அவசிஸ்யதே எஞ்சியிருக்கிறது.

விரிவுரை:-
பூரணம் என்பது ஸர்வதா ஏகம், வரையறுக்கப்படாதது,
தேச, கால, வஸ்து என்கின்ற மூன்றினாலும் வரையறுக்கப்படாதது(அபரிச்சின்னம்)

ஒரு பொருள் எப்படி இருக்கிறதோ அப்படி தெரியாமல் வேறு மாதிரியாக தோன்றுவது நம்முடைய அறியாமயால்தான் நிகழும்.
அதுமாதிரி ஜீவனுடைய உண்மையான ஸ்வரூபம் பிரம்மம், ஆனால் ஜீவன் அப்படி தெரியாவில்லை, சகுணமாக தெரிகிறான்.
உபாதியாக உள்ள சிவப்பு நிற மலரானது அதற்கு முன்னே உள்ள ஸ்படிகத்தின் உண்மை நிறத்தை மறைத்து
தன் நிறத்தை காட்டுவது போல ஜீவனுடைய உபாதி, ஈஸ்வரனுடைய உபாதி சரீரம்,
ஜீவனுடைய உபாதி மாயையின் காரிய சரீரம். எனவே ஜீவன் சரீரம் காரிய உபாதியுடன் கூடிய ஈஸ்வரனுடைய காரண உபாதி(மாயை).

ஒரு பூரணம் இரண்டு உபாதிகளுடன் வெளிப்படுகிறது.
அதஹ பூர்ணம் ; காரண உபாதியுடைய பூரணம் – ஈஸ்வரன்,
இதம் பூர்ணம் காரிய உபாதியுடைய பூரணம் – ஜீவன்
பூர்ணாத் ஈஸ்வரனிடமிருந்து;
பூர்ணமுதச்யதே; ஈஸ்வரனிடமிருந்து ஜீவ பூர்ணம் வெளிப்படுதல் (அத்யாரோபம்)
பூர்ணஸ்ய பூரணத்தினுடைய – ஜீவனுடைய
பூர்ணமாதாய – பூர்ணமான ஜீவனை எடுத்து விட்டால்
பூர்ணமேவ – பூர்ணம் மட்டும்தான்
அவசிஸ்யதே – எஞ்சியிருக்கிறது. அதாவது ஜீவர்கள் இல்லையென்று உணர்த்துகிறது.

சங்கரரின் சம்பந்த பாஷ்யம்: (உபநிஷத் அறிமுகம், பாஷ்ய விசாரம்)
ஈஸ்வரனுக்கும், மற்ற தேவதைகளுக்கும் நமஸ்காரம்!!!
மரபு வழியாக இந்த பிரம்ம வித்யாவை உபதேசித ஆச்சாரியர்களுக்கும் நமஸ்காரம்!!
குருவுக்கு நமஸ்காரம்!!!
உடலால், பணிவான சொல்லால் மனதால் வணக்கம் சொல்லுதல்.

பிரதிக்ஞா பாஷ்யம்: எளிமையான விளக்கமானது ஆரம்பிக்கப்படுகிறது
அதிகாரி பாஷ்யம்: யார் அதிகாரி, யாருக்காக இந்த விளக்கம். இலட்சியம் இருந்தாலும் கர்ம காண்டத்திலுள்ளவர்கள்
அனாத்மாவை அடைவது, ஞானயோகத்திலுள்ளவர்கள் அடையும் லட்சியமான, நித்தியமான வஸ்து,
அதற்கு பெயர் முமுக்ஷுத்வம், அவர்கள்தான் இந்த விளக்கத்துக்கு அதிகாரி, தகுதியானவர்கல். இதனால் வைராக்கியம் நிச்சயம் ஏற்படும்,

பலன்:
சம்சார ஹேது நிவிருத்தி ஸாதனம் – சம்சாரத்தை நீக்குவதற்கு காரணமான சாதனையான,
பிரம்ம-ஜீவன் ஐக்கியத்தை அடைவதற்காக, இந்த விளக்கவுரை. பிரதிபத்யே – அடைவதற்கு

நாம பாஷயம்: இந்த உபநிஷத்திற்கு இந்த பெயர் வரக் காரணம்
சம்பந்த பாஷ்யம் – மூன்று விதமான கருத்துக்களையுடையது.
1. கர்ம காண்டமும், ஞான காண்டமும் பிரமானம்
2. இந்த இரண்டுக்கும் உள்ள சம்பந்தம்
3. கர்ம காண்டத்தினாலேயே மோட்சத்தை அடைய முடியாது.

பிரமானம்: பிரத்யக்ஷ பிரமானம், அனுமானம் இவற்றின் மூலமாக அடைய முடியாத்தை வேதமானது
அதை அடைவதற்கு உதவியாக இருக்கிறது. உபாயத்தை காட்டிக் கொடுக்கிறது.
வேதத்தினால் மட்டும்தான் ஆத்ம ஞானத்தை அடைவதற்கு கருவியாக உபயோகபடுத்த முடியும் என்பதால்
அதைப் பிரமானம் என்றழைக்கப்படுகிறது.

கர்ம காண்டம்தான் பிரமானம், எந்த வாக்கியம் கர்மத்தை போதிக்கிறதோ அதைத்தான் பிரமானமாக எடுத்துக் கொள்ள வேண்டும்
அதில்தான் பிரயோஜனம் இருக்கிறது. வேதாந்தம் எந்த கர்மத்தை போதிக்காமல் அதை நீக்கச்சொல்வதால்
அதைப் பிரமானமாக எடுத்துக் கொள்ள முடியாது.

கர்ம போதக வாக்கியம்: இது செயலை செய்ய தூண்டுவது
ஸித்த போதக வாக்கியம்: இது இருப்பதை தெளிவாக உரைப்பது, செயலில் ஈடுபடுத்தாது.

வேதாந்தத்தில் உள்ள வாக்கியங்கள் ஸித்த போதக வாக்கியமாக இருக்கிறது.
கர்ம காண்டத்திலும் ஸித்த போதக வாக்கியங்கள் இருக்கிறது.
அதை பிரமானமாக ஏற்றுக்கொண்டிருப்பதால், வேதாந்தத்தில் உள்ளதையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

இந்த ஜீவன் இறந்த பிறகும் உயிரோடு இருக்கிறான் அவனது ஸ்தூல உடம்பு அழிந்தாலும் சூட்சும உடலோடு மறுபிறப்பு அடைகிறான்.
இது ஸித்தபோக வாக்கியமாக இருக்கிறது. அதை நீ ஏற்றுக்கொண்டிருக்கிறாய்.

பூர்வபக்‌ஷி:: நான் ப்ரத்யக்‌ஷ பிரமானமக அறிந்து கொண்டேன்.
சங்கரர்: அப்படி ப்ரத்யக்‌ஷ பிரமானமாக இருந்தால் அதில் மக்களிடையே குழப்பம் வராது,
ஆனால் அதைப்பற்றி இன்னும் குழப்பம் இருப்பதால் அது சரியல்ல.
பூர்வபக்‌ஷி கம்பத்தைப்பார்த்தால் திருடன் மாதிரி தோன்றுவது பிரட்யக்‌ஷ விஷயத்தில் சந்தேகம் வருகிறதல்லவா.
சங்கரர் இந்த சந்தேகம் அறிவு வந்தால் தெளிவடைந்து விடுகிறது.
ஆனால் இந்த புனர்ஜென்மம் விஷயத்தில் தெளிவு வரவில்லை. எனவே இரண்டு காண்டமும் பிரமானம்தான்.
கர்ம காண்டத்தின் பலன்கள்:
1. சம்சரத்தைக் கொடுக்கிறடு, இதில் தொடர வைத்திருக்கிறது.
2. சம்சாரத்தை பலவீனப்படுத்தி ஞானகாண்டத்திற்கு தகுதியாக்குகிறது.
கர்மகாண்டத்தில் யாகங்கள், வேள்விகள் மூலமாக சொல்லியிருப்பதை நாம் செய்தால் இகலோக, பரலோக சுகத்தையடையலாம்.
பரலோக பலனையும் அடையலாம். ஸம்ஸ்காரத்தினால் ஆசைகளால் தூண்டபட்டு தீய காரியங்களை செய்து கொண்டே இருப்பார்கள்
அதனால் கீழான லோகத்தை அடைவார்கள். மற்றும் சிலர் தார்மீக செயல்களில் ஈடுபட்டு சொர்க்க-லோகத்தை அடைவார்கள்.
மூன்றாவதாக உள்ளவர்கள் உபாஸனைகளை கவனமாக செய்து பிரம்மலோகத்தை அடைவார்கள்.
இந்த பரலோக இன்பங்கள் அனைத்தும் சம்சாரத்துக்குள்ளே அடங்குகிறது. இப்படி இகலோக பரலோக சுக துக்கங்களைக் கொடுத்து பிறவிச் சூழலிலே வைத்திருக்கும்.

வேதம் சொன்ன கருத்துக்களை சித்த ஸுத்திக்காக செய்பவர்கள் ஞான காண்டத்திற்கு நுழைவார்கள்.
இதற்குள் நுழைந்தவுடன் கர்ம காண்டத்தை விட்டு விட வேண்டும்.

கர்ம காண்டம் இரண்டு விதமான பலன்களை கொடுக்கும்.
1. நமக்குள்ளே இரண்டு விதமான பலன்களை கொடுக்கிறது, ஒன்று விவித்ஷா – முமுக்‌-ஷுத்வம் மற்றொன்று வைராக்கியம் (தர்மப்படி வாழ்தல்)
2. வெளியிலிருந்து வரும் பலன்கள்
a. மோட்சத்தை அடைவதற்கான சாதனைகளை தொடர்ந்து செய்வதற்கு நல்ல சூழ்நிலையை கொடுக்கிறது.
b. மனதையும் நன்றாக வைத்திருக்கும்.
ஞான காண்டத்திற்குள் வந்தவுடன் கர்ம காண்டத்தை விட்டுவிட வேண்டும். ஏனெனில் அதை பலன்படுத்தி கொண்டேயிருந்தால்
அதுவே ஞானமடைய தடையாக இருக்கும். கர்ம காண்டம் நேரிடையாக மோட்சத்தை கொடுக்காது. இதற்கு மூன்று காரணங்கள் உண்டு.
1. வேதத்தில் எங்கும் கர்ம காண்டத்தின் பலனாக மோட்சத்தை அடையலாம் என்று சொல்லவில்லை.
ஆனால் அந்தந்த கர்மத்தின் பலனை மட்டும்தான் கூறுகிறது. பலன் எதுவும் சொல்லாத போது,
இதே மாதிரி செய்யும் வேறொரு கர்மத்தின் பலனை எடுத்துக் கொள்ளலாமே தவிர மோட்சத்தை எடுத்துக் கொள்ள முடியாது.
2. யுக்தி பிரமானத்தினால் இதை தெரிந்து கொள்ளலாம். எது செய்யப்பட்டதோ அது நிலையற்றது.
உருவாக்கப்படுவதெல்லாம் அநித்யம். கர்ம காண்டத்தில் செய்யப்படும் கர்மங்களின் விளையெல்லாம் அநித்யமானது.
எனவே மோட்சத்தையடைய முடியாது. ஏனெனில் மோட்சமானது நித்யமானது.
3. ஒரு செயல் உருவாகுவதற்கு பல பொருட்கள், கருவிகள் துணை புரிய வேண்டும்.
முதலில் கர்த்தா, பிறகு பொருட்கள், கருவிகள் தேவை போன்ற பல காரகங்கள் இருக்கின்றன.
கர்த்தா, போக்தா இருவரும் காரகத்துக்குள் இருப்பதால், இவர்கள் சம்சாரத்துக்குள் வந்து விடுகிறார்கள்.
எனவே கர்மம் சம்சாரியை சார்ந்திருப்பதால், அதனால் மோட்சத்தைக் கொடுக்க முடியாது. கர்மத்தின் ஸ்வரூபமே சம்சாரம்தான்.
4. கர்மம் பந்தத்திற்கு சாதனமாகத்தான் இருக்கிறது. பந்தம் ஏற்படுவதற்கு காரணமாக இருப்பதால் இது பந்த சாதனம்

மேற்கூறிய கருத்துக்கள் நமக்கு மூன்று விஷயங்களை தெளிவாக உரைக்கிறது. அவைகள்
1. கர்மத்தை கண்டிப்பாக பயன்படுத்த வேண்டும்.
2. கர்மத்தை யோகமாக பயன்படுத்த வேண்டும்
3. கர்மத்தை ஒரு நிலையில் விட்டுவிட வேண்டும்.
நம்மிடத்திலிருந்து உருவாகும் செயல் ஞானத்தைத் தவிர வேறெதாவது இருந்தால், அது கர்மத்தில் சேர்ந்து விடும்.
ஞானத்தை அடைய செய்யும் செயல்கள் யாவும் கர்மம் என்று சொல்லக் கூடாது.

அவ்யாக்ருத பிரபஞ்சம் (மாயா) – வெளித்தோற்றத்திற்கு வராத உலகம்
வியாக்ருத பிரபஞ்சம் – நாம் அனுபவிக்கும் உலகம். இது இருவகையாக இருக்கிறது. 1. சாதனா பிரபஞ்சம், 2. சாத்திய பிரபஞ்சம்

இவையிரண்டுமே அத்யாரோபம் என்று அழைக்கப்படுகிறது. சாதனைகள் லௌகீக சாதனை, வைதீக சாதனை என்று
இரண்டாக பிரிக்கப்படுகிறது. லௌகீக சாதனை என்பது வேதத்தின் உதவியில்லாமல் பயன்படுத்துவது,
வைதீக சாதனை என்பது வேதத்தின் உதவியுடன் செய்யப்படுவது.
இதில் காயிகமாக, வாக்காக செய்யும் யாவும் கர்மம் என்றழைக்கப்படுகிறது, மௌனமாக செய்யப்படுவது யாவும் உபாஸனை என்றழைக்கப்படுகிறது

1. இந்த மந்திரம் அஸ்வ பிராமனம் என்று அழைக்கப்படுகிறது. இதில் அஸ்வமேத தியானத்தைப் பற்றி கூறப்பட்டிருக்கிறது.
இது சத்திரியர்களை தவிர்த்து மற்ற வர்ணத்தார்கள் தகுதியுடையவர்களாக இருக்கிறார்கள்.
சத்திரியர்கள் இதை யாகமாக செய்தால்தான் அதன் பயனை அடைய முடியும்.
இந்த தியானத்திற்குரிய ஆலம்பனம் குதிரை; விராட் (ஸ்தூல பிரபஞ்சத்தை உடலாக உடைய ஈஸ்வரன்)
எனவே குதிரையை தியானம் கீழ்கண்டவாறு தியானம் செய்ய வேண்டும்.
குதிரையின் ஒவ்வொரு அங்கங்களையும் இந்த உலகத்தின் பகுதிகளாக நினைத்து தியானம் செய்ய வேண்டும்.
இதனால் மனம் விரிவடையும், உலகமே என்னுடையது என்று நினைக்க வேண்டும்.

குதிரையின் முழு உடலை உலகமாகவும், தலையை அதிகாலையாகவும், கண்ணை சூரியனாகவும்,
பிராணனை வாயுவாகவும், நடு உடலை காலமாகவும், வயிற்றை ஆகாசமாகவும், கால்குளம்பை பிருத்வியாகவும்,
எலும்புகளை நட்சத்திரங்களாகவும், ரோமத்தை தாவரங்களாகவும், யோனியை சமுத்திரமாகவும் தியானிக்க வேண்டும்.

———

2. அக்னி பிராமனம்: ( ஏழு மந்திரங்களை கொண்ட்து)
இதுவும் மனடை விரிவடைய செய்கிறது. இதில் ஆலம்பனம் அக்னி; உபாஸ்யம் விராட்.

அக்னியை புகழ்ந்து தியானித்தால், சுகமும் ஏற்படும், துர்மரணம் ஏற்படாது.

சங்கரரின் விளக்கம்:
ந ஏவ இஹ கிஞ்சின அக்ரே ஆஸித் : சிருஷ்டியெல்லாம் தோன்றுவதற்கு முன் ஒன்றுமேயில்லை.
ஸத்காரியவாதம்- காரணம் ஒன்று இருக்கிறடு. காரண ஸத்தானடு நிரூபிக்கப்படுகிறது.
அனைத்து மித்யாவும் ஒன்றைதான் ஆதாரமாக கொண்டிருக்கிறது.

இரண்டு கேள்விகள் கேட்கப்பட்டு அதற்கு சங்கராச்சாரியார் பதிலளிக்கிறார்.
1. சிருஷ்டிக்கு முன் காரணம் இருந்ததா அல்லது இல்லையா?
2. சிருஷ்டிக்கு முன் காரியம் இருந்ததா அல்லது இல்லையா?
இரண்டும் இருந்தது என்றுதான் அவருடைய பதில்.

பூர்வபக்‌ஷி: ஷணிகவிக்ஞான விதி – தோன்றியவையெல்லாம் நமது எண்ணங்களே அது எதிலிருந்தும் உற்பத்தியாகவில்லை.
எப்படி கனவில் காணும் பொருட்கள் நாம் அனுபவிக்கிறோம், அவைகளெல்லாம் எண்ணங்களே.
அதே போன்று நதியின் நீரோட்ட்த்தில் ஒரே நீர் தோன்றுவது மாதிரி உண்மையில் ஒவ்வொரு க்ஷணமும் அந்த நீர் சென்றுவிடுகிறது.
அதேபோல பொருள் தோன்றி பின் அழிந்து இவ்வாறு தொடர்ந்து நடப்பதால் தொடர்ச்சியாக ஒரு பொருளை பார்க்க முடிகிறது.

பதில்: நம் அனுபவம் மூன்று விதமாக இருக்கிறது.
1. பிரத்யக்‌ஷம் – ஐந்து இந்திரியங்களை கொண்டு முதல்முறையாக அறிதல்.
2. ஸ்மிருதி – நினைத்துப்பார்த்தல்
3. பிரத்யபிக்ஞா – ஏற்கனவே அறிமுகமானவர் என்று பார்ப்போம்.
பிரத்யபிக்ஞா அனுபவத்தால் என்னுடைய தொடர்ச்சி இருக்க வேண்டும், நான் பார்க்கப்படும் பொருளும் தொடர்ச்சியாக இருக்க வேண்டும்.
இவ்வாறாக இந்த மூன்று விதமான அனுபவங்களையும் வைத்து பார்த்தால் ஷணத்தில் தோன்றி மறையும் பொருளுக்கு ஆதாரம் இல்லை.

பூர்வபக்‌ஷி: தோன்றி மறையும் பொருள் பார்ப்பதற்கு ஒரே மாதிரியாக இருப்பதால் உனக்குட் தொடர்ச்சியாக இருக்கிறது.
பதில்: ஒரு பொருள் தொடர்ச்சியாக தெரிய வேண்டுமென்றால், பிரத்யபிக்ஞாதான் காரணம் என்று
இவ்வகையில் காரண ஸத்தாவானது இவ்வகையில் நீருபிக்கப்படுகிறது.

காரிய ஸத்தா நீரூபனம்:
பூர்வபக்‌ஷி: காரியம் காரணத்தில் இருந்து வந்ததா? இல்லையா?
களிமண்ணுக்குள் இல்லாத பானைதான் பின் உருவாகிறது. பானையானது களிமண்ணுக்குள் அவ்யக்தமாக இருந்தது
அதை வெளித்தோற்றத்திற்கு கொண்டு வருவதுதான் ஸ்ருஷ்டி என்று கூறப்படுகிறது.

அபிவியக்திலிங்காத்: அபிவியக்தி (வெளிப்படுதல்) காரணத்தினால்தான் இருக்கின்ற பொருள்தான் வெளித்தோற்றதிற்கு வரமுடியும்.
இருட்டினால் மறைக்கப்பட்டிருக்கும் பொருட்கள் மட்டும்தான் வெளிச்சத்தினால் தெரிய வரும்.
களிமண்ணின் உருவமே பானை வெளிவருவதற்கு தடையாக இருக்கிறது. அதை நீக்கினால் பானை வெளிவந்து விடும்.
அதாவது ஒரு தோற்றமே மற்றொரு தோற்றத்திற்கு தடையாக இருக்கிறது.

அவர் நாளை வருகின்றார், அவர் என்பவர் இருக்கிறார?, இல்லையா? என்று கேள்வியே கேட்க முடியாது.
இத்தொடர் இருப்பவரைத்தான் குறிக்கிறது. எனவே இருக்கின்ற பொருளைத்தான் எதிர்காலத்தில் பேசமுடியும்.

சர்வக்ஞன் ஈஸ்வரன் எல்லாவற்றையும் அறிபவர். மூன்று காலத்திலும் உள்ளதையும், அறிந்தவர்.
இது உண்மையாக வேண்டுமென்றால், வெளிவரப்போகும் பானையைப்பற்றித் தெரியும். இருக்கிறதைத்தான் பகவானுக்கு தெரியும்.
இல்லாததை பகவானுக்கு தெரியும் என்று சொல்ல முடியாது. எனவே ஈஸ்வரன் சர்வக்ஞன் என்று உண்மையானால்
இருப்பதுதான் வெளித்தோற்றத்துக்கு வரும் என்று ஒத்துக்கொள்ள வேண்டும்.

அபாவம் நான்கு வகையாக இருக்கிறது. அபாவம் – இல்லை; பாவம்- இருத்தல்.
1. பிராக் அபாவம் – முன்பு இல்லாத்து; எந்தப்பொருளும் தோன்றுவதற்கு முன் அது இல்லாத நிலை.
2. ப்ரத்வம்ஸ அபாவம் – எல்லா காலத்திலும் இல்லாத நிலை
3. அத்யக்த அபாவம் – எல்லா காலத்திலும் இல்லாத நிலை. (உ.ம்) முயல் கொம்பு, ஆகாயத்தாமரை
4.அன்யோன்ய அபாவம் – பேதம் – வேற்றுமை. இருபொருள்களுக்கும் இடையே உள்ள வேற்றுமை பானையில்
உள்ள குணம் துணியில் இருக்காது அதே போன்று துணியில் உள்ள குணம் பானையில் இருக்காது.

பதில்: பிராக் அபாவமும் – தோன்றாத பொருளின் இருப்பைப் பார்க்கிறோம் எப்படி
அன்யோன்ய அபாவத்தில் இருப்பை பார்க்கிறாயோ அப்படி காரியமும் தோன்றுவதற்கு முன் இருந்த்து.

காரியத்தின் லட்சணம்- காரியம் காரணத்தோடு சம்மந்தம் வைத்து இருப்பை அடைவது
(உ.ம்) பானை உருவாகுவதற்கு களிமண்ணோடு சம்மந்தத்தை வைத்த பிறகுதான் தோன்றியது.
அசத்தான பானை எப்படி இருக்கின்ற ஸத்தான் களிமண்ணோடு சம்பந்தம் வைத்திருக்க முடியும்.

நிஷேத வாக்கியம் – இதை செய்யாதே என்று சொல்கின்ற வாக்கியம்
விதி வாக்கியம் – இதை செய் என்று சொல்லும் வாக்கியம்.

———-

3. உத்கீத ப்ராமனம் ( 28 மந்திரங்களை கொண்டது )
இதில் வருவது பிரான உபாஸனை. ஹிர்ண்யகர்ப்பன் உபாஸனை.
பிராண தத்துவத்திற்கு 6 குணங்கள் கொடுக்கப்பட்டு அதில் தியானம் செய்ய வேண்டும்.

பாஷ்ய விசாரம்:
பூர்வமீமாம்ஸிகள் என்பவர்கள் வேதத்தை பிரமானமாக கொண்டவர்கள், ஆனால் அனைத்து வேதத்தையும்
கர்ம காண்டமாக எடுத்துக் கொள்பவர்கள். இவர்கள் அனுபந்தம் சதுஷ்டயம் என்ற கருத்தை உடையவர்கள்.

1. முழு வேதமும் கர்மபரம் – கர்மத்தையே லட்சியமாக கொண்ட்து. கர்மத்தை போதிப்பதற்குத்தான் வேதம் உருவாக்கப்பட்டது.
2. விதிவாக்கியமும், நிஷேத வாக்கியமும் பிரமானம், மற்றதெல்லாம் பிரமானமல்ல.
விதி வாக்கியம் இதை செய் என்று சொல்லும் வாக்கியம்; நிஷேத வாக்கியம் இதை செய்யாதே என்று சொல்லும் வாக்கியங்கள்.
மற்றதெல்லாம் அர்த்தவாதம் என்று எடுத்துக் கொள்கிறார்கள். அர்த்தவாதம் என்பது பிரமானமில்லாத வாக்கியங்கள்,
அந்த வாக்கியங்களுக்கென்று எந்த பயனும் இல்லை. ஆனால் அத விதி வாக்கியத்தில் சேர்த்துக் கொள்ளலாம்.
3. கர்மமே பலனைத்தரக்கூடியது,ஈஸ்வரன், தேவதைகள் இவர்களெல்லாம் கிடையாது.
4. வேதம் பிரமானமாக இருக்கிறது. ஞானம் அறிவை கொடுக்கும் கருவியாக இருக்கிறது
5. பதம் பிரமானமல்ல; வாக்கியம்தான் பிரமானம்
6. வேத வாக்கியத்திலுள்ள வினைச்சொல்தான் அறிவைக் கொடுக்கிறது.

சங்கரரின் பதில்
ஸித்த போக்ய வாக்கியம்: இருக்கிற உண்மையை சொல்லும் வாக்கியம் பிரமானம்.
வினைச்சொல் செயலைதூண்டுவது மற்றும் இருக்கிறது என்று சொல்லும் சொல்லாகவும் உபயோகப்படுத்தப்படுகிறது.

ஒரு வாக்கியம் அறிவைக் கொடுக்கிறதா இல்லையா என்பதே பிரமாணம். அறிவோடு பயனயும் கொடுக்கத் தேவையில்லை.
கர்மத்தை உபதேசிக்கும் வாக்கியங்களும், பிரம்ம ஞானத்தை உபதேசிக்கும் வாக்கியங்களும் பிரமாணமாகும்.
மற்ற வாக்கியங்கள் எல்லாம் அர்த்தவாதம். இந்த அர்த்தவாதம் மூன்று வகையாக பிரிக்கப்படுகிறது.
1. அனுவாதம்: மற்ற பிரமாணங்களின் மூலமாக அறிந்ததை கூறினால் அதற்கு அனுவாதம் என்று பெயர்
2. குணவாதம்: நம்முடைய அனுபவத்திற்கு வேறாக கூறுவது.
3. பூதார்த்தவாதம்: நமக்கு தெரியாத விஷயம் அதே சமயம் அந்த விஷயமானது அனுபவத்திற்கு வேறாகவும் இல்லாதிருப்பது.
உ-ம். வஜ்ர ஆயுதமுடைய இந்திரன். இதில் இந்திரம் கையில் வஜ்ராயுதம் இருக்கிறதா, இல்லையா என்று நிரூபிக்க முடியாது.
எனவே இந்த பூதார்த்தவாத வாக்கியங்களை பிரமானமாக எடுத்துக் கொள்ளலாம்.
முதல் இரண்டு அர்த்தவாதங்களும் அப்பிரமானமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
பிரமாணம் என்பது வேறெந்த வகையிலும் அறிய முடியாத நிலையில் இது மட்டும்தான் பயன்படுத்த முடியும்
என்றால் அதைத்தான் பிரமாணம் என்று சொல்ல முடியும்.

அனாதிகதம் – வேறொன்றினால் அறிய முடியாதது.
அபாதிதம் – வேறொன்றினால் நீக்க முடியாதது

செயலை தூண்டும் வாக்கியங்கள்தான் பிரமானம் என்றால், நிஷேத வாக்கியங்கள் செய்லை தூண்டவில்லை
அதை மட்டும் ஏன் பிரமானமாக ஏற்றுக்கொள்கிறீர்கள். அதுபோல ஞான காண்ட வாக்கியங்களும் செய்லை தூண்டாவிட்டாலும்
அதை பிரமானமாக ஏற்றுக் கொள்ள வேண்டும்.. வேதத்தை உள்ள வாக்கியங்கள் நான்காக பிரிக்கப்படுகிறது, அவையாவன
1. விதி வாக்கியங்கள் – செயலைத் தூண்டும்
2. நிஷேத வாக்கியங்கள் – செயலொன்றும் கிடையாது
3. பூதார்த்த வாக்கியங்கள் – செயலொன்றும் கிடையாது
4. வேதாந்த வாக்கியங்கள் – செயலொன்றும் கிடையாது
இவை நான்கும் பிரமானம்தான். இவைகளுக்குள் வராத வாக்கியங்கள் அனுவாதம், குணவாதம் இவைகளில் சேர்க்கப்படும்.
இவைகள் பிரமான வாக்கியங்களுக்கு உதவி செய்யும்

உபநிஷத் விளக்கம்:
ஆறு விதமான குணங்களுடன் பிராணனை உபாஸிக்க வேண்டும்.
1. சுத்தத்வம் – தூய்மையாக இருத்தல்.
சாஸ்திரின ஞான கர்ம ஸம்ஸ்காரத் யுக்தம்- தேவர்கள் சாஸ்திரத்தில் கூறிய ஞான, கர்ம ஸம்ஸ்காரங்களுடன் கூடிய
இந்திரியங்கள். இயற்கையாக உள்ள குணங்களுடன் கூடிய இந்திரியங்களை அசுரர்கள் என்று கூறப்படுகிறது.

உலக போகங்களை பார்க்கும்போது, அனுபவிக்க வாய்ப்பு கிடைக்கும்போது அந்த நேரத்தில் உள்ள நல்ல ஸம்ஸ்காரங்களின்
அடிப்படையில் நமது இந்திரியங்களை நற்காரியங்களில் அல்லது தீய காரியங்களில் ஈடுபடுத்தும்.
அதே போன்று இயற்கையிலே அமைந்துள்ள குணங்களுடன் உள்ள ஸம்ஸ்காரங்கள் இந்திரியங்களை செயல்படுத்தும்.
ஆனால் பிராணனை எந்த சக்தியும் அசுத்தபடுத்த முடியாது அதனால் அது எப்பொழுதும் சுத்தமாகவே இருக்கும்.
எனவே இது தூய்மையாக இருக்கிறது என்று தியானிக்க வேண்டும்.

2. தூர்நாமத்வம்
பிராணனானது தீய, சுயநலமான எண்ணங்களை தூரத்திற்கு கொண்டு செல்லும்., விலக்கி வைக்கும்.
இது தம்மை குறித்து தியானம் செய்யும் இந்திரியங்களை அசுர்ர்கள் தாக்கும் போது அதிலிருந்து
காப்பாற்ற சமஷ்டியாக மாற்றிவிடுவதால் அசுர்ர்கள் செயலிழந்து தோல்வியடைகிறார்கள்.
கண்கள் சூரியனாகவும், மனதை சந்திரனாகவும் இதே போன்று மற்ற இந்திரியங்களை தேவதைகளாக மாற்றி விடுகிறது.

3. பர்த்ருத்வம்: தாங்குவது
பிராணனுக்கு பசியெடுக்கும்போது கிடைக்கும் உணவை உடலிலுள்ள எல்லா பகுதிகளுக்கும் சம்மாக பிரித்துக் கொடுக்கும்.

4. ஆங்கிரஸ்த்வம் : உடலிலுள்ள ஒவ்வொரு உறுப்பின் சாரமாக பிராணன் இருக்கிறது
5. வேதாத்கமத்வம்: வேத ஸ்வரூபமாகவும் இருக்கிறது. வேதம் சப்தரூபமாகவும் இருப்பதால்,
இது சப்த ரூபமாகவும் இருக்கிறது. எல்லா ஜீவர்களிடம் சம்மாக இருக்கிறது.
6. உத்கீதத்வம்- ஓம்கார ஸ்வரூபம்.
இந்த ஆறு குணங்களை தியானித்தால் ஹிரண்யகர்ப்பனை அடையலாம்.

சாம வேத்த்தை நன்றாக உச்சரிப்பதற்கு மூன்று விதமான குணங்கள் தேவை.
அவைகள் 1.நல்ல குரல்வளம் 2. சரியாக உச்சரித்தல் 3. சரியான ஸ்தானத்திலிருந்து சொற்கள் வர வேண்டும் (பிரதிஷ்டா)

ஜபத்தில் போது சொல்ல வேண்டியவ் மூன்று வரி மந்திரம்:

அத2: பிராண உபாஸனை எப்படி செய்ய வேண்டும் என்று கூறிய பிறகு
அத: இந்த ஜபத்தினால், நாம் யாரை தியானிக்கிறோமோ அவர் ஸ்வரூபமாக மாறிவிடுவோம்.
பவமானம் – தூய்மைப்படுத்துதல்
அப்யாரோகஹ- ஹிரண்யகர்க்கனுடன் ஒன்றாகி விடுதல், நம்மை நாமே உயர்த்திக் கொள்ளுதல்
அதிகாரி- யாகத்தின் எஜமானன் இந்த மந்திரத்தை ஜபிக்க வேண்டும்.

அஸதோ – இல்லாமையிலிருந்து; மா – என்னை
ஸத்- இருத்தலுக்கு, கமய – அழைத்துச் செல்
தமஸோ – இருட்டிலிருந்து, மா – என்னை
ஜ்யோதிர் – வெளிச்சத்திற்கு, கமய – அழைத்துச் செல்
ம்ருத்யோ – மரணத்திலிருந்து, மா – என்னை
அம்ருதம் – மரணமற்ற நிலைக்கு, கமய – அழைத்துச் செல்

உபநிஷத் விளக்கம்: அஸத்தையும், இருட்டையும் மரணத்திற்கு ஒப்பிட்டு;
ஸத்தையும், வெளிச்சத்தையும் மரணமற்ற நிலைக்கு ஒப்பிடப்படுகிறது.

சங்கரரின் விளக்கம்:-
1. சாஸ்திரத்திற்கு முரண்பட்ட செயல், சிந்தனை இவ்வாறு இருக்கின்ற என்னை, சாஸ்திரம் உரைக்கும் செயலையும்
சிந்தனையை உடையவனாக மாற்றுவாயாக. அஸத் – அதர்மம்; ஸத்-தர்மம்,
அதர்மத்திலிருந்து தர்ம வழிக்கு என்னை எடுத்துச் செல். இங்கே சக்தியை கேட்கிறோம்.
2. தமஸோமா ஜ்யோதிர்கமய – தமஸ்-அறியாமை, அக்ஞானம், இருள்; ஜ்யோதி- ஞானம், உண்மை அறிவு, வெளிச்சம்.
சாஸ்திரம் உரைக்கும் சரியான செயல், சிந்தனை இவைகள் இல்லாதிருக்கும் அறியாமை.
இந்த அறியாமையிலிருந்து என்னை சாஸ்திரம் உரைக்கும் செயலையும், சிந்தனையும் உடையவனாக மாற்றுவாயாக.
அறிவும் உடல்நலமும் மிகவும் அத்தியாவசியமானது. பொய் என்பது தற்காலிக உண்மை நீண்ட நாள் நிலைக்காது.
3. ம்ருத்யு- மரணம்; அம்ருதம் – மரணமற்ற நிலை. ம்ருத்யு=அஸத் + தமஸ், அம்ருதம்- ஹிரன்யகர்ப்பன்.
அறியாமையிலிருந்தும், அதர்ம செயல்களை செய்யாமல் ஹிரண்யகர்ப்பனை அடைய வேண்டும், ஐக்கியமாகி விட வேண்டும்.

வேதாந்த விசாரம்:
· அஸத்-மித்யா; ஸத்-ஸத்யம். மித்யாவிலிருந்து உண்மைக்கு அழைத்துச் செல்.
பொய் தோற்றத்தை உண்மையென்று நம்பி அதைப் பற்றிக் கொண்டிருக்கும் என்னை உண்மையை பற்றிக் கொள்ள அழைத்துச் செல்.
· அறியாமையிலிருந்து விடுவித்து அறிவை அடைவதற்கு அழைத்துச் செல்.
· துயரத்திலிருந்து மோட்சத்திற்கு அழைத்துச் செல்.

————-

பகுதி-4 (புருஷவித பிரமாணம்)

உலகத்திலுள்ள பொருட்கள் யாவும் சாதனையாகவும், சாத்தியமாகவும் இருக்கிறது.
(உ-ம்) பஞ்சு – நூல்; நூல்-துணி, துணி-ஆடைகள்

ஒரு ஜீவன் கர்ம உபாஸனைகள் செய்து அடுத்த ஸ்ருஷ்டியில் ஹிரண்யகர்ப்பனாக பிறக்கிறான்.

1. ஹிரண்யகர்ப்பன் பெருமை: சாத்திய பிரபஞ்சத்தின் பெருமை. அஹம், புருஷ, ஸ்ருஷ்டி இந்த மூன்றும்
ஹிரண்யகர்ப்பனுடைய மறு பெயர்கள். இவர் சுற்றி முற்றும் பார்த்து விட்டு, தனக்கு வேறாக எதையுமே பார்க்கவில்லை.
அவர் வாயிலிருந்து வந்த முதல் சொல் ”நான்” மட்டும் தான் இருக்கிறேன் என்று உச்சரித்தார்.
ஆகவே விராட் ஸ்வருபத்துக்கு நான் என்ற பெயர் வந்தது.
அதனால் அவருக்கு பிறகு வந்த எல்லா ஜீவர்களும் யார் அவர்களை அழைத்தாலும், நான் என்றுதான் முதலில் சொல்கிறார்கள்.
இந்த விராட் தான் செய்த பாவங்களையெல்லாம் எரித்து விட்டதால் அவனுக்கு “புருஷன்” என்று பெயர் வந்துள்ளது..
ஔஷத் – எரித்துவிடுதல், ஹிரண்யகர்ப்பனாக இருந்தாலும் அவனும் சம்சாரிதான்.
2. இந்த மந்திரத்தில் எது சம்சார ஸ்வரூபம், சம்சார ஹேது, எது பந்தம், பந்த நிவிருத்தி உபாயம் இவைகளைப் பற்றி விளக்குகிறது.

பயம்தான் சம்சாரம் என்று சொல்லப்படுகிறது. பயம் என்பது துக்க அனுபவம்.
அரதி-சுகமின்மை (சுக அபிராப்தி). ஹிரண்யகர்ப்பனும் பயத்தால் ஆட்கொள்ளப்படுகிறான்.
சுகமில்லாமலும் இருக்கிறான். பயம் என்பது சம்சார ஸ்வரூபமாக இருக்கிறது. பயத்திற்கு காரணமென்ன?
அதை நீக்குவதற்கு என்ன வழி என்பதை இந்த மந்திரத்தில் சொல்லப்படுகிறது.
அபிபேத்-பயப்பட்டார்; ஏகாகி-தனிமை – நாம் மட்டும் இருந்தால் பயமும் வந்து விடும்.

ஹிரண்யகர்ப்பன் தனியாக இருக்கும் போது பயப்பட்டார். எனவே அவரது அனைத்து ஜீவர்களுக்கும், அனைத்து படைப்புகளும்
தனிமையில் பயத்தை அனுபவிக்கின்றார்கள். பயம் வந்தவுடன் அதைப் போக்குவதற்கான வழியை விசாரம் செய்கிறார்.
அதிலிருந்து ஒரு அறிவை அடைந்தார். ( ஈக்‌ஷா-சிந்தனை, சக்ரே-செய்தார்.)
எனக்கு வேறாக இரண்டாவதாக ஒன்றும் இல்லை என்று உணர்ந்தார். எதனிடமிருந்து நான் பயப்பட வேண்டும் என்று விசாரம் செய்தார்.
இப்படி நினைத்ததும் அவரிடமிருந்து பயம் சென்று விட்டது. எதைக் கண்டு ஒருவன் பயப்பட வேண்டும் என்று வினவினால்
எதனிடத்திலும் நாம் பயப்பட தேவையில்லை என்ற அறிவு வந்து விடும். ஆனால் இருமையிலிருந்தும் பயம் ஏற்படுகிறது.

இருமையிலிருந்து எப்படி பயம் வருகிறது?
இருமை என்னை அழித்து விடும் என்ற நினைப்பதால்தான் பயம் வருகிறது. எது அழிந்து விடும் என்று பயப்படுகிறான்,
சரீரத்திற்கு வருகின்ற அழிவைக் கண்டு பயப்படுகிறோம், அல்லது புகழுக்கு ஏற்படும் அழிவைக் கண்டு பயப்படுகிறோம்.
இப்படி சூட்சும சரீர அழிவைக் கண்டும் பயப்படுகிறோம். நான் சரீரம் என்று நினைப்பது தவறான எண்ணமாகும்,
நான் என்பதை ஆத்மாவாக நினைக்காததால்தான் சரீரத்தை நானாக நினைத்து அதன் அழிவை எண்ணி பயம் கொள்கிறோம்.

சம்சார நிவிருத்தி உபாய விசாரம்:
விசாரம் ஆத்மாவைப்பற்றியதாக இருக்க வேண்டும் அல்லது நான் யார்? என்பதைப் பற்றி இருக்க வேண்டும்.
இதன் பலனாக நாம் அடைவது ஆத்ம ஞானம். எனக்கு வேறாக ஒன்றும் இல்லை அன்ற ஞானத்தை அடைய வேண்டும்.
எந்த அறிவில் இருமை இல்லையோ அதில் சம்சாரம் என்பது கிடையாது. அத்வைதம் – இரண்டற்றது.
தன்னைத் தவிர வேறெதுவும் இல்லை என்று அறியும்போது பயம் நீங்கி விடும்.

ஹிரண்யகர்ப்பன் தனியொரு ஆளாக எந்த உதவியும் இல்லாமல் எப்படி ஆத்ம ஞானத்தை அடைந்தார்?
முக்ய ஹேது, சஹகார் ஹேது என்று இரண்டு வகையான ஹேதுக்கள் உள்ளன.
இதில் முக்ய ஹேது என்பது ஒரு பொருளின் வர்ணத்தை அறிய உதவுவது கண்.
சஹகாரி ஹேது என்பது ஒரு பொருள் நன்றாக தெரிவதற்கு உதவும் மற்ற விஷயங்கள், போதிய வெளிச்சம், அருகில் இருப்பது, போன்றவையாகும்.

அதே போன்று ஆத்ம ஞானம் அடைவதற்கு இரண்டு காரணங்கள் உண்டு.
முக்கிய காரணம் ஆத்ம விசாரம் – குரு-சாஸ்திர உதவியுடன் செய்யப்படுவது. சஹகாரி விசாரம்:
ஞானமடைய அவர்கள் செய்ய வேண்டிய மற்ற தவங்கள். இது ஆளுக்காள் வேறுபடும்.
எனவே நமக்கு எது உகந்ததாக இருக்கிறதோ அதைக் கொண்டு முயற்சி செய்ய வேண்டும்.
இங்கு ஹிரண்யகர்ப்பன் முற்பிறவியில் செய்த ஆத்ம விசாரத்தின் ஸம்ஸ்காரமும்,
சித்த ஸுத்தி இருந்ததாலும் அவரால் எந்த உதவியில்லாமல் ஆத்ம ஞானத்தை அடைந்து விட்டார்.

சஹ: ஹிரண்யகர்ப்பான்; நைவ ரேமே- மகிழ்ச்சியற்று இருந்தார்.
ஹிரண்யகர்ப்பன் தனியாக இருந்ததால் மகிழ்ச்சியில்லாமல் இருந்தார்.
ஆகவே ஜீவர்களும் தனிமையில் மகிழ்ச்சியில்லாமல் இருக்கிறார்கள்.
இந்த நிலையானது அவர் ஞானம் அடைவதற்கு முன் இருந்த நிலையாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
ரதி- விரும்பியப்பொருளோடு இணையும்போது ஏற்படும் மானஸ உல்லாசம்.

தனிமையில் ஏன் துயரம் வருகிறது? சம்சாரம் என்பது கர்த்தாவாகவும், போக்தாவாகவும் இருப்பது.
அனுபவிப்பவனுக்கு அனுபவிக்கும் பொருள் இல்லையென்றால் துயரப் படுவான். இது தனிமையில் இருக்கும்போது ஏற்படும் நிலை.
ஆனால் போக்தா சாட்சியாக இருந்தால் அவனுக்கு தனிமை துயரத்தை தராது.

3. மனுஷ்ய ஸ்ருஷ்டியைப் பற்றி விளக்குகிறது
4. விலங்குகள் ஸ்ருஷ்டியைப் பற்றி விளக்குகிறது
5. ஹிரண்யகர்ப்பனுக்கு ஸ்ருஷ்டி என்று பெயரிடப்பட்டது
6. தேவர்கள், உணவு ஸ்ருஷ்டியைப் பற்றி விளக்குகிறது
7. இதில் 5 கருத்துக்கள் விளக்கப்பட்டிருக்கிறது. அவைகள் பிரம்மத்தில் மாயை ஏற்றி வைக்கப்படுவது,
பிரவேச ஸ்ருதி, ஜீவ-பிரம்ம ஐக்கியம், சம்சார வர்ணனை, வித்யா சூத்திரம், பிரம்ம வித்யாவினால் கிடைக்கும் பலன்.
7.1. அவ்யாக்ருத பிரபஞ்ச அத்யாரோபம்:
சாத்திய, சாதனை பிரபஞ்சம் தோன்றுவதற்கு காரணமான காரண பிரபஞ்சம் ஏற்றி வைக்கப்படுகிறது.
சாதனை உபாஸனை (மனதால் செய்யும் சாதனை) à கர்மம்
நாம் அடையக்கூடிய சாத்தியங்கள் பல உள்ளதால் சாதனைகளும் பலவாக உள்ளன.
அதனால் மோட்சம் என்கின்ற ஒரு சாத்தியத்திற்கு ஒரு சாதனைத்தான் இருக்க முடியும்.
சாத்தியங்கள் வேறாக இருந்தால் சாதனைகளும் வேறாக இருக்கும். மோட்சம் அடைவதற்கு பல நிலைகளை கடந்து வர வேண்டும்.
எனவே ஒவ்வொரு நிலையும் ஒரு சாதனையாக கருதப்படுகிறது. ஸோபான ரூபம்- படிப்படியாக எடுத்துச் செல்வது;
சுதந்திர ரூபம்-தனிப்பட்ட ஒன்று. சம்சாரத்தில் வரும் துயரத்தை மறப்பதற்கு சுகத்தை நாடப்படுகிறது.
ஆனால் துயரத்தின் மூலமானது மாயைதான், அதை நீக்கினால்தான் சம்சாரக் கடலை கடக்க முடியும்.
நம்மிடம் உள்ள அவித்யாவும் சம்சாரத்தின் மூலக் காரணம். சில இடத்தில் பிரம்மமே மூலம் என்று கூறப்படுகிறது.
நாம் அனுபவிக்கின்ற இந்த உலகம் தோன்றுவதற்கு முன் அவ்யாக்ருதமாக (மாயையாக) இருந்தது பின் அதிலிருந்துதான் உலகம் தோன்றியது.

தத் இதம் அவ்யாக்ருதம் ஆஸீத் – இந்த உலகம் தோன்றுவதற்கு முன் வெளித் தோற்றத்திற்கு வராததாக (மாயையாக) இருந்தது.
தத் நாமரூபாத்யம் ஏவ வ்யாக்ரியத் – அது நாமரூபங்களாக வெளிப்படுத்தப்பட்டது.
அசௌனாம் அயம் இதம் ரூபம் இதி – இதுதான் ரூபம், இதுதான் நாமம்
தத் இதம் அபி தார்த் – அதுவே இது என்பது போல
நாமரூபாத்யாமேவ வ்யாக்ரியதே – நாம ரூபங்களாக வெளிப்பட்டது

ஜகத்திற்கு இரண்டு அவஸ்தைகள் இருக்கிறது. பரோக்‌ஷ அவஸ்தா (கண்ணுக்கு தெரியாதது, அனுபவத்திற்கு வராத நிலை),
பிரதிபக்‌ஷம் அவஸ்தா – இந்த நாம ரூபங்கள் ஸத் ஆதாரமாக்க் கொண்டுதான் வெளிப்பட்டது
7.2. பிரவேச ஸ்ருதி: ஈஸ்வரனே எல்லா சரீரத்துக்குள்ளேயும் நுழைந்திருக்கிறார்.
ஸஹ ஏஷ இஹ ப்ரவிஷ்டஹ- ஜீவாத்மா, பரமாத்மா (பிரம்மம்), எல்லா சரீரங்களிலும், நுழைந்தார்.
பரமாத்மாவை ஒவ்வொரு ஜீவனிலும் காணலாம். அந்த ஜீவ சரீரத்தில் விளங்கிக்கொண்டிருக்கிறார்.
உறைக்குள் இருக்கும் கத்திப்போலவும், நெருப்புப் உண்டாக்க உபயோகிக்கும் இரு மரத்துண்டுகளில் இருக்கும்
நெருப்பைப் போலவும் பரமாத்மா நுழைந்திருக்கிறார்.
கனவு, விழிப்பு நிலையில் நாம் பார்ப்பவனாகவும், கேட்பவனாகவும், போக்தாவாகவும் இருப்பதால் இது விசேஷமாக இருக்கிறது,
ஆனால் ஆழ்ந்த உறக்கத்தில் முழுவதும் வியாபித்திருக்கிறது.
சாமான்ய அறிவுடனும் இருக்கிறது, எப்படி நெருப்பானது அந்த மரத்துண்டினில் இருக்கிறதோ.

சங்கரரின் விளக்கம்:

பூர்வ பக்‌ஷி கேள்வி-1
ஸஹ என்ற சொல் மாயையே குறிக்கிறது. இது பரமாத்வாவை குறிக்கவில்லை என்று பூர்வ பக்‌ஷி கேள்வி எழுப்பினான்.
அவன் இரண்டு காரணங்களை கூறி இவ்வாறு கேட்டான்.
முதல் காரணம்: அது நாமரூபங்களாக வெளிப்பட்டது என்று முன்னால் உள்ள வாக்கியத்தில்
நாம ரூபங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது.
இரண்டாவது காரணம்: அது, அவர் என்ற சொல் முன்னால் பேசப்பட்ட விஷயத்தைத்-தான் குறிக்கும்
அதுபோல மாயை பற்றித்தான் பேசப்பட்டது எனவே ஸஹ என்பது மாயைத்தான் குறிக்கும்.

முதல் பதில்: ஒரு செயல் செய்யப்படுகின்றதென்றால் அது அறிவுள்ள ஒருவனால்தான் செய்ய முடியும்,
வெறும் ஜடமாக் இருப்பதெல்லாம் செயலுக்கு காரணமாக இருக்காது.
எனவே இந்த இடத்தில் மாயை நாமரூபங்களாக வெளிப்பட பரமாத்மா தேவை.
2வது பதில்: முதலில் மாயைத்தான் கருத வேண்டும், ஆனால் அது தொடரின் பொருந்தி வருகிறதா என்றும் பார்க்க வேண்டும்.
ஒரு சொல்லுக்கு பல பொருள் இருக்கலாம் எந்த அர்த்தம் அந்த வாக்கியத்திற்கு பொருந்தி வருகிறதோ
அதைத்தான் புரிந்து கொள்ள வேண்டும்.
உதாரணமாக, கிராமம் சுத்தமாக இருக்கிறது என்ற சொல்லில் கிராமம் என்ற இடத்தை பொருட்படுத்துகிறது,
விழாவிற்கு கிராமமே வந்த்து என்ற வாக்கியத்தில் கிராமம் என்ற சொல்லுக்கு அங்கு வசிக்கும் மனிதர்களை குறிக்கிறது,
அந்த கிராமத்திற்கு செல்லாதே என்ற வாக்கியம், இடத்தையும், மனிதர்களையும் குறிக்கிறது.
அது போல அவ்யாக்ருதம் என்ற சொல்லானது மாயை மட்டும், பிரம்மன் மட்டும், மாயையும் பிரம்மத்தையும் குறிக்கின்றது.
எனவே இந்த இடத்தில் அவ்யாக்ருதம் என்ற சொல்லுக்கு இரண்டாவது அர்த்தமான பிரம்மத்தை எடுத்துக்கொள்ள வேண்டும்.

பூர்வ பக்‌ஷி கேள்வி-2
பரமாத்மா வீட்டைக்கட்டி உள்ளே நுழைவது போல ஜீவாத்மாவினுள் நுழைந்தார் என்று எடுத்துக் கொள்ளலாம?
பதில்-2: வரையறுக்கப்படாத பிரம்மன் எப்படி வரையறுக்கப்பட்ட உடலுக்குள் நுழைய முடியும்.
பரமாத்மா எங்கும் நிறைந்திருப்பதால் இப்படியெல்லாம் நுழைய முடியாது.

பூர்வ பக்‌ஷி கேள்வி-3
வீட்டைக்கட்டி முடித்த பிறகு அதற்குள்ளே நுழைவது அதன் எஜமானன்தான் அந்த வீட்டை கட்டியவர்கள் அல்ல

அதேபோல பரமாத்மா இந்த உடலை ஸ்ருஷ்டி செய்தார், ஜீவாத்மா எஜமானன் போல உள்ளே நுழைந்தார்.
பதில்-3: வேதம் பரமாத்மா உடலை ஸ்ருஷ்டி செய்துவிட்டு தானே நுழைந்தார் என்று தெளிவாக சொல்கிறது. எனவே இந்த கருத்தும் ஏற்க முடியாது.

பூர்வ பக்‌ஷி கேள்வி-4
ஒரு பொருள் தோன்றியவுடன் எந்த குணமும் இல்லாமல் இருக்கிறது. பிறகுதான் குணங்களும் வந்து சேருகின்றது.
அதைப்போல சரீரத்திற்குள் பரமாத்மா நுழைந்து விட்டார்.
பதில்-4: அது மாதிரி முடியாது. ஏனெனில் திரவியத்தை சைதன்யம் சார்ந்திருக்கிறது அது மித்யாவாகி விடும்.
ஆனால் பரமாத்மா நித்யமாக ஏற்றுக்கொண்டால் இந்த மாதிரி நுழைவதை ஏற்றுக் கொள்ள முடியாது

பூர்வ பக்‌ஷி கேள்வி-5
பழத்திற்குள் விதையிருக்கிறது அதுபோல இந்த சரீரத்திற்குள் பரமாத்மா நுழைந்துள்ளார்.
பதில்-5: சாஸ்திரம் பரமாத்மாவை நிர்விகாரம், மாற்றத்திற்குட்படாதது

பூர்வ பக்‌ஷி கேள்வி-6
சத்தியமான உடலுக்குள் பரமாத்மா பிரதிபலிப்பாக இருக்கிறார்
பதில்-6: சத்தியமான மனதில் பரமாத்மா பிரதிபலிக்க முடியாது.

வேதாந்த விளக்கம்:
நுழைதல் என்பது செயலாக எடுத்துக் கொண்டால் அர்த்தவாதமாகி விடுகிறது.
இந்த உடலுக்குள் ப்ரமாத்மாவை அறியமுடியும். சரீரத்திற்குள் உள்ள மனம் அந்தகரணம்.

சங்கரரின் விளக்கம்:
ஜீவாத்மா பலவாக இருக்கிறது, பிறகு எப்படி இவையெல்லாம் ஒரு பரமாத்மாவாக் முடியும்?
பல ஜீவாத்மா என்று நீ சொல்வது, பல மனங்களைத்தான் குறிப்பிடுகிறாய், ஆனால் சைதன்யம் ஒன்றுதான்.

ஜீவாத்மா சம்சாரியாக இருக்கிறவன், சம்சாரியில்லாத பரமாத்வோடு ஐக்கிய படுத்தினால் ஈஸ்வரனும் சம்சாரியாகி விடுவான் அல்லவா?
நித்திய, சுத்தமான பரமாத்மாவோடு அசுத்தமான ஜீவாத்மாவை சேர்த்தால் ஜீவாத்மா சுத்தமாகி விடும்.
எந்த கருத்து பயன் தருகிறதோ அதை எடுத்துக்கொள்ளலாம்.
இங்கு பரமாத்மாவோடு சேர்வதால் நான் சுத்தமாகி விடுவேன் என்ற பயன் உண்டு.
வேதாந்தம் எப்பொழுதும் நமக்கு தெரியாத்தை விளக்கி சொல்கிறது.
நமக்கு சுத்தமானவன் என்று தெரியாத்தை எடுத்துச் சொல்வதால் நாம் இப்படி எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஜீவாத்மா சம்சாரி என்பது பிரத்யக்‌ஷ பிரமான சித்தம். இது இப்படி இருக்கும்போது அவன் அசம்சாரி என்றால்
பிரதியக்‌ஷ பிரமானத்துக்கு எதிராக அல்லவா இருக்கிறது? அனுபவத்திற்கு விரோதமாக எப்படி சொல்கிறது?
ஆத்மா ஆன்ந்தஸ்வரூபம் இந்த ஆத்மா எப்பொழுதுமே அனுபவத்திற்கு விஷயமாக வந்ததில்லை, வரவும் வராது.
என்னுடைய அனுபவமான துக்கத்திற்கு காரணம் என்ன? நீ மனதிலுள்ள அனுபவத்தைப் பற்றி பேசிக் கொண்டு இருக்கிறாய்
அதிலுள்ள துக்கத்தை உணர்கிறாய். மனதில் உள்ள சுக துக்கத்தை உன்னுடைய ஸ்வரூபமாக நினைத்து விட்டாய்.
குழந்தைகள் துக்கப் பட்டால் பெற்றோர்களும் துக்கப்படுவதை போல உன்னிடமிருந்து வேறான ஒன்றிலிருந்து
துக்கத்தை உன்னுடையது என்று நினைத்து விட்டாய். உன்னுடைய பிரதிபக்‌ஷ பிரமான அனுபவமானது
மனதில் ஏற்படுவது அதை நீ உன்னுடையது என்றூ ஏற்றுக் கொண்டிருக்கிறாய்.
நீ மட்டும் மனதிலிருந்து பிரிந்து நின்று சாட்சியாக இருக்கிறேன், அறிவு ஸ்வரூபமாக இருந்தால் நீ ஆனந்த ஸ்வரூபமானவன்.
மனதினுடைய அனுபவம் வேறு, ஆத்மா அனுபவிக்கும் விஷயம் அல்ல.

ஆத்மாவைஒரு பொருளாக அனுபவிக்க வேண்டாம், ஆனால் ஆத்மா ஆத்மாவை அனுபவிக்கட்டுமே.
அனுபவிப்பனும், அனுபவிக்கப்படும் பொருளும் ஒன்றாக இருக்க முடியாது.
உதாரணமாக நானும், நான் சாப்பிடும் இட்லியும் ஒன்றாக முடியாது.

ஒரு பகுதியான ஆத்மா அனுபவிப்பவன், இன்னொரு பகுதியான ஆத்மாவை அனுபவிக்கலாமே?
ஆத்மாவனது நிர்விகல்பம் (பிளவுபடுத்த முடியாத்து) எனவே இது சாத்தியமல்ல.
எதற்கு அவயவங்கள் இருக்கிறதொ அவையெல்லாம் அழியக்கூடியவை ஆனல் ஆத்மா அழிவற்றது,
அவயவங்கள் இல்லாதது. ஆத்ம ஞானம், ஆத்மாவை அனுபவிக்க முடியாது,
ஆத்மாவை அறிந்தால் மனதிற்குள் வரும் நம நிறைவை அனுபவிக்கலாம்.

ஆத்மா நித்யம். சில குணங்கள் உண்டு. சுக-துக்கம், இச்சா, துவேஷ போன்ற குணங்களை உடையது.
இதை அனுமான பிரமானத்தால்தான் அறிய முடியும். ஆத்மா ஜடம், மனமும் ஜடம், இவையிரண்டும் சேர்ந்து சைதன்யம் தோன்றுகிறது.
நித்யமான ஆத்மாவில் அநித்யமான குணங்கள் எப்படி வந்து போகும்.
குணத்தையும் அதை கூடியிருப்பவனையும் பிரக்க முடியாது என்று தர்க்கத்தில் சொல்லபட்டிருக்கிறது ஆத்மா நித்யம்,
குணங்கள் அநித்தியம் என்று ஏற்றுக்கொள்ள முடியாது. அநிர்மோட்ச பிரசங்கம்- மோட்சத்தையே அடையமுடியாத நிலை ஏற்பட்டு விடும்.
நித்யமான ஒரு பொருள் அநித்யமான பொருளோடு தொடர்ந்து இணைந்து இருக்க முடியாது.

ஒரு பொருளை கண்ணால் பார்க்க முடியாது, ஆனால் அதன் குணங்களை பார்க்க முடியும்.
குணங்களை பிரத்யக்‌ஷ பிரமானத்தால் பார்க்கலாம். ஆனால் ஆத்மாவை அனுமனத்தினால் அறிய முடியும். என்பது தவறு.

சம்யோகம்-சேர்க்கை- இரண்டு பொருட்கள் ஒன்று சேர வேண்டுமானால் இரண்டும் உருவத்துடன் இருக்க வேண்டும்
என்ற தர்க்கத்தில் கூறப்பட்டிருக்கிறது. ஆனால் ஆத்மாவும், மனதும் உருவமற்றவை எனவே இரண்டும் ஒன்று சேர முடியாது.

ஜைனர்கள், மிகச்சிறிய அணு, மிகப்பெரியது விபு ஆத்மா இடன் இரண்டுக்கும் இடைப்பட்டவை நிலை என்று கூறுகிறார்கள்.
ஆத்மாவின் அளவு ஸ்தூல உடம்பின் அளவைப்பொறுத்திருக்கும்.
எதற்கெல்லாம் உருவமிருக்கிறதோ அவையெல்லாம் அநித்யம்.

7.3 சம்சார வர்ணனை:
மனதில் இருக்கும் நிறைவின்மை சம்சாரம். அதற்கு காரணம் அறியாமை.
மந்திர விளக்கம்:
தே-பிரம்மத்தை; ந பஷ்யந்தி- (மனிதர்கள்) அறிவதில்லை.
அறியாமையின் விளைவாக இந்த ஜீவன் எப்படியிருக்கிறான் என்றால் சம்சாரியாம் இருக்கிறான்.
பிரம்ம மாக இருப்பவன் தான் பிரம்மன் என்று அறியாதவனாக முழுமை பெறாதவனாகிறான்.
எப்படி இவன் நிறைவின்மையுடையவனாம் இருக்கிறான்? எனக்கு தெரிந்து கொண்டிருக்கிற இந்த ஸ்தூல உடம்பு,
சூட்சும சரீரங்களில்தான் என்னால் அபிமானம் வாக முடிகிறது.
அதுவும் ஒரே சமயத்தின் முழுவதையும் உபயோகித்து விஷயங்களை அறிவதோ, இன்ப துன்பங்களை அனுபவிப்பதோ கிடையாது.
கண்ணால் பார்க்கும் விஷயங்களில் கண் மட்டும் அபிமானமாக இருக்கிறது. பிராணனை அபிமானிம்மும் போது பிராணனாக இருக்கிறான்,
பேசும்போது பேசுபவனாக இருக்கிறான், பார்க்கும் போது கண்ணாக மட்டும் இருக்கிறான், கேட்கும்போது காதாக இருக்கிறான்.
நினைக்கும் போது மனதாக இருக்கிறான். இவைகளெல்லாம் செயல்களினால் வந்த தனிமைகள்,
எந்த ஒருவன் தன்னை இவ்வாறு புரிந்து கொண்டிருக்கிறானோ அவன் உண்மையை புரிந்தவனில்லை.
அவன் முழுமையற்றவன், நிறைவற்றவன். அதனால் ஒவ்வொன்றாக பிளவுபட்டவனாக இருக்கின்றான்.
உலகம் எப்பொழுதும் ஒருவனை நிறைவற்றவனாகவே வைத்திருக்கும்
இப்படி நிறவற்றவனாக இருப்பவன் எப்படி நிறைவுள்ளவனாக இருக்க முடியும்?

நாம் மூன்று விதமான உபாதி (எந்த ஒன்று தன்னருகில் உள்ள ஒரு பொருளின் தன்மையை தன்னுடையது போல காட்டுவது)
மலரின் நிறம் ஸ்படிகத்தில் தோன்றி அதன் நிறத்தை பிரதிபலிக்கிறது. அதாவது தோன்றுகிறது.
மூன்று சரீரங்களும் உபாதி, உபஹிதம், பரமாத்மா. ஸ்தூல சரீரம் உபாதி என்பதாலே
அதனுடைய குணத்தை ஆத்மாவில் ஏற்றி வைக்கப்படுகிறது. ஆறு விகாரங்கள் ஆத்மாவில் ஏற்றி வைக்கப்படுகிறது.
(பிறத்தல், வளர்தல், இருத்தல், வயாதாகிறது, முதுமை, மரணம்) சூட்சும சரீர தர்மங்களான மூன்று அவஸ்தைகள்
சத்வ, ராஜஸ, தமஸ் ஆத்மாவில் ஏற்றி வைக்கப்படுகிறது.
காரண சரீரத்தில் இரண்டு நிலை அக்ஞானம், அறிவில் நிறைவின்மை (அனாத்மா விஷயத்தில் இந்த நிலை)
இதுதான் அக்ஞான அவஸ்தை, இன்பத்தை தேடி அலைதல் இவைகள் எல்லாம் ஆத்மாவில் ஏற்றி வைக்கப்படுகிறது.

————–
7.3. வித்யா சூத்திரம்:- ஆத்மா இத்யேவ உபாசீதஹ (முண்டக உநி)
முழுமையில்லாதவனை முழுமையானவனாக மாற்றும் சூத்திரமே வித்யா சூத்திரம் என்று அழைக்கப்படுகிறது.
நிறைவு செய்ய முடியாத மனதை நிறைவு செய்வது. பிரம்மன், ஆத்மா என்றுதான் புரிந்து கொள்ள வேண்டும்.
உதாரணமாக பார்க்கும் விஷயத்தில் பார்க்கும் கருவியான கண்ணை விட்டுவிட்டு அறிவை மட்டும் எடுத்துக்கொண்டு
அதுதான் ஆத்மா என்று புரிந்து கொள்ள வேண்டும். இந்த உலகத்தை பிரகாசித்துக் கொண்டிருக்கிற பிரம்மமும்,
இந்த உலகில் பிரகாசிக்கின்ற ஆத்மாவும் ஒன்றுதான். இப்படி புரிந்து கொண்டால் தனக்குள் இருக்கின்ற
அனைத்தும் ஒன்றாகி பூரணமாகி விடுவான். தன்னகத்தே உள்ள வேற்றுமைகளாக நினைப்பதெல்லாம் ஒன்றாகி விடுகின்றது.

சங்கரரின் விளக்கம்:
முழு வேதமே விதி, நமக்கு ஆணையிட்டு சிலவற்றை சொல்வது, கர்மத்தில் ஈடுபடுத்தும்.
உபாஸனம் என்றால் தியானத்தைக் குறிப்பதால் இதை வைத்துக்கொண்டு சொல்லப்படும் கருத்துக்களாவது:
பூர்வமிமாம்ஸகர்களின் கருத்து:
ஈஸ்வரன் என்ற தத்துவமே தேவையில்லை, வேதத்தில் உள்ள கருத்துக்களே நம்மை ஆணையிட்டு செய்ய வைக்கிற சக்தி உடையவை.
இதை பாவனா – உற்பத்தியாகும் சக்தி என்று அழைப்பர். இந்த பாவனா இருவகையாக பிரிக்கப்பட்டிருக்கிறது.
1. சாப்தி பாவனா – சப்தத்திலே இருக்கிற சக்தி, அந்த வினைச்சொல்லில் இருக்கிற சக்தி.
இது நம்முடைய மனதுக்குள் சொல்லப்பட்ட கர்மத்தை செய்ய வேண்டும் என்ற உந்துதலை, எண்ணத்தை (கர்தவ்ய புத்தி) உற்பத்தி செய்கிறது.
2. ஆர்த்தி பாவனா – மனதுக்குள் இதை செய்ய வேண்டும் என்ற சக்தி உருவாகும் பாவனையை இவ்வாறு அழைக்கின்றனர்.

இந்த உபாஸனைகளும் மூன்று அம்சங்களாக பிரிக்கப்படுகிறது.
ஒரு செயலை செய்யும் போது 1. எதைச் செய்வது, 2. எதனால் செய்வது, 3. எப்படி செய்வது என்ற மூன்று கேள்விகள் பிறக்கும்.
உதாரணமா கொண்டு வா என்ற வினைச்சொல்லானது,
எதைக் கொண்டு வருவது? எதில் வைத்துக் கொண்டு வர வேண்டும்? எப்படி கொண்டு வரவேண்டும்? என்ற மூன்று கேள்விகளைக் கேட்க வைக்கும்.
இதுவே 1. சாத்தியம், 2. சாதனா, 3. செய்முறை என்று பிரயோகிக்கப்படுகிறது.

(உ-ம்) யஜேத : யாகம் செய்ய வேண்டும்.
· எதற்காக செய்ய வேண்டும்? – சுவர்க்கத்தில் ஆசையிருப்பதால்
· என்ன ஸாதனம் செய்ய வேண்டும்? – ஜோதிஷ்டம் யாகத்தை செய்ய வேண்டும்.
· அதை எப்படி செய்ய வேண்டும்? – வேதம் இதையும் விளக்கமாக சொல்லியிருக்கிறது
ஒரு வாக்கியத்தைப் படித்ததும் இந்த மூன்று கேள்விகளுக்குப் பதில் தெரிந்திருக்க வேண்டும்.

சாப்தி பாவனா:- கிம், கேன, கதம் (தூண்டுதல், கட்டளை, முக்கியத்துவம்)
1. ஆர்த்தி பாவனா- மனதுக்குள் இந்த செயலை செய்ய வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுதல்.
2. சொல்லில் உள்ள கட்டளை – சாதனம்
3. கட்டளையை முக்கியமாக எடுத்துக்கொள்ளுதல் – செய்முறை. இதை அர்த்தவாதம் என்றும் கூறப்படுகிறது.
சாத்தியம், சாதனம் இவைகளின் பெருமைகளை உரைத்தல்.
உபாஸித – தியானிக்க வேண்டும்.
புரிந்துக் கொள்ள வேண்டும்.
கிம்-சாத்தியம் – ஆத்மா ஹிரண்யகர்ப்பனாக மாறுதல், ஹிரண்யகர்ப்பனுடன் ஐக்கியமாதல்
கேன – சாதனம் – மனதின் மூலமாக
கதம் – சம, தம, உபரதி, த்திக்‌ஷா,
ஆகவே இது விதி வாக்கியம் – செயலைத் தூண்டும் வாக்கியம்.

பதில்: ஒரு வாக்கியத்தைக் கேட்டவுடன் நம் உள்ளத்தில் எதிர்ப்பார்ப்பு இருந்தால்தான் இந்த பாவனைகள் செயல்படும்,
இல்லையென்றால் தேவையில்லை. உதாரணமாக சும்மா இருப்பவனிடம் சென்று சமையலறையில் நீர் இருக்கிறது என்று சொன்னால்,
அந்த வாக்கியம், “அதற்கு என்ன செய்ய வேண்டும்?” என்ற எதிர்ப்பார்ப்பு வருகிறது.
ஆனால் தாகத்தை தீர்ப்பதற்காக நீரைத்தேடி கொண்டிருப்பவனுக்கு இந்த வாக்கியம் எந்த எதிர்ப்பார்ப்பும் ஏற்படுத்தாது,
அதை தேடியது கிடைத்துவிட்ட திருப்தியில் இருப்பான். அதேப்போல ஆத்மாவைத் தேடிக்கொண்டிருப்பவன்,
நான் நாய் என்று கேள்வியுடன் இருப்பவன், இந்த வாக்கியம் ஆத்மா இத்யதே உபாஸீதஹ தான் தேடியதை அடைந்ததில் திருப்தியடைவான்.
மனநிறைவுடன் இருப்பான். அதைத் தவிர்த்து வேறெந்த செயலையும் செய்யத்தூண்டாது.

சங்கரரின் விளக்கம்:
ஆத்மாவைப்பற்றிய விளக்கத்தை படிக்க வேண்டும். ஏனெனில் இனிமேல் ஆத்மாவைப்பற்றிய விஷயங்கள் இந்த உபநிஷத்தில் வருகின்றது.

ஆத்மாவைப்பற்றிய விளக்கத்தை படிக்க வேண்டும் என்ற அறிவை வேதத்தில் இருந்து அடைவதில்லை,
சம்பிரதாயத்திலிருந்து சொல்லப்பட்டு, அதைக்கேட்டு நாம் வேதத்தின் உதவியை நாட வேண்டும்.

ஆத்மாவை அறிந்துக்கொண்டு அதையே எல்லா நேரத்திலும் நினைத்துக்கொண்டிருக்க வேண்டும் என்று இந்த வாக்கியம் உரைக்கிறது.

ஒரு அறிவை அடைந்த்தும் அது தேவைப்படும்போது வரவேண்டும். எல்லா நேரத்திலும்
இது நினைவில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை.
· ஞானம் அடைந்து விட்டால், அது எப்பொழுதும் நினைவில் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை,
நினைவானது தானாக வரவேண்டும், கட்டளையிட வேண்டிய அவசியமில்லை.
· தவறான அறிவை நீக்கி, சரியான அறிவை புதியதாக அடைந்தது விட வேண்டும்.
அதற்குப் பிறகு இந்தப்புதிய அறிவு தேவைப்படும் போது தானே வரும்.
அதுபோல நான் ஆத்மாஸ்வருபன், பூரணமானவன் என்ற ஞான நிஷ்டையடைந்தவுடனுக்கு
இது எந்த நேரத்திலும் தானாக தேவைப்படும் போது வெளியே வரும்.
எனவே இதை எப்பொழுதும் நினைத்துக் கொண்டேயிருக்க வேண்டுமென்ற அவசியமில்லை.

யோக சூத்திரத்தில் வருகின்ற ஒரு சூத்திரம் “சித்த விருத்தி நிரோதஹ”,
இதற்கு எல்லா எண்ணஞ்களையும் நீக்க வேண்டும் என்று பொருள் கொள்ளலாமே?

யோகிகள் நிரோதஹ என்று சொல்வதற்கு நாசம் செய்தல் என்று பொருள் சொல்வார்கள்.
சிலர் அடக்க வேண்டுமென்றும், வேறு சிலர் ஒடுக்க வேண்டுமென்றும் பொருள் சொல்லுவார்கள்.
ஆனால் வேதாந்தத்தில் இருப்பதை இல்லாததாக சொல்ல முடியாது.எண்ணங்களை நாசம் செய்தால் மனமும் நாசமடைந்து விடும்,
இது முடியாத நிலை. சித்தத்தில் இருக்கின்ற எண்ணங்களை முறைப்படுத்துதல், சாத்வீக எண்ணங்களாக மாற்றுதல்
என்று வேதாந்தம் பொருள் சொல்லுகிறது. இப்படி செய்வதினால் ஞானம் அடைதல், பிறகு குணாதீதனாக மாறுதல் போன்றவை நிகழும்.
யோக சூத்திரத்தில் கூறிய கருத்துக்கள் மோட்சத்திற்கு நேரிடையான காரணம் அல்ல. ஆனால் அது நம்மை தகுதிப்படுத்த உதவும்.

செயலினால் தான் பலன் வருமே தவிர, வெறும் அறிவினால் எப்படி பலன் கிடைக்கும்?
தவறான அறிவினால் துயரப்பட்டிருக்கும்போது சரியான அறிவை அடைந்தால் துயரம் நீங்கி விடுகின்றதே அதுபோலத் தான்.
உதாரணமாக கயிற்றில் தோன்றும் பாம்பானது தவறான அறிவினால் பயத்தைக் கொடுக்கும்,
சரியான அறிவு வந்ததும் பயம் நீங்குகிறது. இங்கே பலன் அடைந்த அறிவினால் மட்டுமே கிடைக்கிறது.
நான் ஆத்மா என்ற அறிவு வரும்போது, என்னை அனாத்மா என்று நினைத்துக்கொண்டு பட்ட துயரங்களெல்லாம் நீங்கி விடும்.
சம்சாரத்தில் மூலக்காரணம் அவித்யா (அறியாமை) இதை நீக்கினால் சம்சாரம் நீங்கிவிடும்.

இலக்கணப்படி உபாஸீதே என்ற சொல் கட்டளையைக் குறிக்கும் சொல்லாக இருக்கிறது.
உப + ஆஸ் = தியானத்திற்கு பயன்படுத்துகின்ற இலக்கணம்
ஆத்மா+இதி – இங்கு இதி என்ற சொல் பொதுவாக மனம், பிரம்மன் என்று வேதாந்தம் கூறுகிறது.
இப்படி கட்டளையாக எடுத்துக்கொண்டால், மனம், பிரம்மன் இவைகள் இல்லாததாக இருக்கிறது.
· ஒரு வினைச்சொல் எந்த இடத்தில் வருகிறதோ அதற்கேற்றாற் போல்தான் பொருள் கொள்ள வேண்டும்.
இது ஞான பிரக்ரணம், இங்கு புரிந்து கொள்ள வேண்டிய அறிவை உபதேசிக்கப்படுகிறது.
எனவே இங்கே புரிந்து கொள்ள வேண்டும் என்றுதான் பொருள் கொள்ள வேண்டும்.
· எப்படி நீங்கள் நிகழ்காலத்தைக் குறிக்கும் சொல்லை கட்டளை சொல்லாக எடுத்துக்கொள்ள வேண்டும்
என்று மாற்றி சொல்கிறீர்களோ அதுபோல இங்கே கட்டளை சொல்லை உபதேச சொல்லாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
· ஆத்மா+இதி – இங்கே “இதி” என்ற சொல் ஆத்மாவை அறிவுக்கு விஷயமாக, அறிவு ஸ்வரூபமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஞானப்பலன்:
பதநீயம்: எந்தவொன்று எல்லோருக்குள் இருக்கிறதோ அதுவே ஆத்மா.
இந்தவொன்றை (ஆத்மாவை) அறிந்தால் அனைத்தையும் அறிந்ததாகின்றது.
யதா ஹவை பதேன அனுவிந்தேத் – பசுவை கண்டுபிடிப்பதற்கு அதனுடைய கால் தடத்தின் மூலமாக அறிகின்றோமோ, அதுபோல
கீதி ஸ்லோகம் விந்ததே – நாம் விரும்பிய உலகத்தின் (உலகத்தில் உள்ள பொருட்கள்) சம்பந்தத்தை அடைகின்றோம். ஆனால் துயரப்படுவதில்லை.

கீர்தா – ஜீவ-பிரம்ம ஐக்கிய ஞானத்தையுடையவன்.
ஸ்லோகம் – மோக்‌ஷம்.
யார் இவ்வாறு புரிந்து கொள்கிறார்களெ அவர்கள் ஜீவ-பிரம்ம ஐக்கியத்துடன் மோக்‌ஷத்தை அடைகிறான்

ஆத்மாவை ஏன் தெரிந்து கொள்ள வேண்டும்? உலகில் எவ்வளவோ விஷயங்கள் இருக்க ஏன் ஆத்மாவை அறிய வேண்டும்?
ஆத்மாவை நாம் மிகவும் நேசிக்கின்றோம், அது நம்மையறியாமலே நாம் மிகவும் விரும்புகின்ற விஷயம்.
நம்முடைய குழந்தைகளை விட அதிகமாகவே நேசிக்கிறோம். நாம் எல்லோரும் சுகத்தைத்தான் மிகவும் விரும்புகின்றோம்.
எவையெல்லாம் சுகத்தைக் கொடுக்கிறதோ அந்த சுகசாதனம் அடுத்ததாக நேசிக்கிறோம்.
அந்த சுகசாதனம் நமக்கு சுகத்தை கொடுக்கும்போது அதை விரும்புகிறோம்,
எப்பொழுது அது துக்க சாதனமாக மாறுகிறதோ அப்போதே அது நமக்கு விரும்பத்தகாததாக மாறி விடுகிறது.
சுகத்தில் பிரியமிருக்கிறது; சுக சாதனத்தின் மீதும் பிரியமிருக்கிறது.
ஆனால் எதில் நிபந்தனையில்லாத பிரியமிருக்கிறது என்றால் அனுபவிக்கும் சுகத்தின் மீதுதான், சுகத்தை கொடுக்கும் சாதனையில் இல்லை.
சுகத்தின் மீது இருக்கும் அன்புதான் சுகசாதனத்தின் மீது ஏற்றி வைக்கப்பட்டிருக்கிறது.
என்மீது கொண்டிருக்கும் அன்பு நிபந்தனையற்றதா அல்லது நிபந்தனையுடன் கூடியதா என்று யோசித்தால்,
நாம் நம்மை நிபந்தனையின்றி நேசிக்கிறோம். இதிலிருந்து அறிவது என்னையும், சுகத்தையும் நிபந்தனையின்றி நேசிக்கிறோம்.
இங்கே நான் என்பது ஆத்மா என்று புரிந்து கொள்ள வேண்டும். அதற்காக அனைத்தையும் தியாகம் செய்வதற்கு தயாராக இருக்க வேண்டும்.

மந்திர விளக்கம்:-
ததே3தத்ப்ரேயஹ புத்ராத் – தனது மகனைக் காட்டிலும் அதிகமாக ஆத்மாவைத்தான் (தன்னைத்தான்) அதிகமாக நேசிக்க வேண்டும்.
ப்ரேயஹ வித்தாத் – பணத்தைக் காட்டிலும் மிகவும் பிரியமானது.
ப்ரேயஹ அன்யசஸ்மாத் ஸர்வஸ்மாத் – மற்ற அனைத்தைக் காட்டிலும் அதிகமாக நேசிப்பது ஆத்மாதான்.
அந்தரதரம் – நமக்கு மிகவும் அருகில் இருப்பது
யத்3 அயம் ஆத்மா – அது நம்முடைய ஆதமா.

நான் என்பது உடல் என்று நினைப்பவன் அந்த உடலுக்காக எதையும் தியாகம் செய்வான்.
நான் என்பது ஆத்மாதன் என்று தான் கொண்ட லட்சியத்தின் மீது பற்று வைத்திருக்கும் போது
அவருக்கு உடல் மீது இருக்கின்ற அபிமானம் சென்று வேறிடத்தில் சென்று விட்டால், உடலழிந்தாலும் கவலைபடமாட்டார்கள்.
ராணுவ வீரர்கள், தேசத்தின் விடுதலைக்காக் போராடுபவர்கள் அவர்களது தேகத்தின் மீதுள்ள பற்றை
தேசத்தின் மீது வைத்து விடுவதால், அவர்கள் உடலின் அழிவை பற்றி கவலை கொள்ள மாட்டார்கள்.
நான் என்பதில் உள்ள பிரியத்தை யாராலும் நீக்க முடியாது, அந்த நான் எதில் இருக்கிறதோ அதைத் தவிர
மற்ற அனைத்தையும் தியாகம் செய்து விடுவோம்.

ஸஹ யஹ அன்யம் ஆத்மனஹ ப்ரிய – எனக்கு வேறாக உள்ள பொருளிடத்தில் பிரியம் இருக்கிறது என்று கூறிய
அக்ஞானியிடம், இவனுக்கு மற்றவர்களுக்கு கொடுப்பதில், உதவுவதில் ஆனந்தமடைவான்.
ப்ரியம் ரோத்ஸ்யதி ஷ்வி – உன்னுடைய இந்த பிரியமும் அழிந்து விடும், பிரியமானப் பொருட்களும் அழியக்கூடியவை.
ஈஷ்வரஹ – ஞானிக்கு இப்படி சொல்வதற்கு தகுதியானவன்.
தஸைவ ஸ்யாத் – அவர் சொற்படித்தான் நடக்கும்.
ஆத்மானம் ஏவ ப்ரியம் உபாஸீத – ஒருவன் ஆத்மாவை (தன்னையே) ஆனந்த ஸ்வரூபமாகவே புரிந்து கொள்ள வேண்டும்.
ப்ரியம் ந ப்ரமாயுகம் ப4வதி – ஆத்ம சுகம் அவனை விட்டு விலகிச் செல்லாது.

————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ சாந்தோக்ய உபநிஷத் –அத்யாயம்-8–(பிரஜாபதி வித்யா – தகர வித்யா)–

March 22, 2021

ஸ்ரீ ஓம் புலன்கள் -வாக் -பிராணன் -கண்கள் -காதுகள் -சப்தாதிகள் அனைத்தும் அருளிய பர ப்ரஹ்மத்துக்கே அர்ப்பணித்து
அவன் விஷயத்திலே செலுத்தி அவன் அருளால் அவனை அடைந்து ஸ்வரூப அனுரூப ப்ரீதி காரித்த கைங்கர்யம் செய்வோம்
நம்முள் புகுந்து பேரேன் என்று இருப்பானே –
ஓம் சாந்தி சாந்தி சாந்தி —

கர்ம ப்ரஹ்ம ஸ்தானபார்த்தம் -வேதங்களையும் வேதாந்தங்களையும் கொடுத்து அருளி –
தர்ம ஸ்தாபனம் -ஸம்ஸ்தானம் -இரண்டையும் -8–பிரபாடகங்கள் -அத்தியாயங்கள் -/
உள்ளே கண்டங்கள் / உள்ளே மந்த்ரங்கள் –13 -கண்டங்கள் -முதல் பிரபாடகத்தில்-
முதல் இரண்டு அத்தியாயங்கள் இந்த லோக வாழ்க்கை பற்றி -/
பிரணவம் -உத்கீத-ஆனந்த சாம கானம் -சாம வேத கீதனான சக்ரபாணி –
சந்தோகா –சாம வேதனே/ருக்கு சாமத்தாலே பரம்பி-

—————

சா²ந்தோ³க்³யோபநிஷத் ॥
॥ அத² சா²ந்தோ³க்³யோபநிஷத் ॥
ௐ ஆப்யாயந்து மமாங்கா³நி வாக்ப்ராணஶ்ச்க்ஷு:
ஶ்ரோத்ரமதோ² ப³லமிந்த்³ரியாணி ச ஸர்வாணி ।
ஸர்வம் ப்³ரஹ்மௌபநிஷத³ம் மாஹம் ப்³ரஹ்ம நிராகுர்யாம் மா மா ப்³ரஹ்ம
நிராகரோத³நிகாரணமஸ்த்வநிகாரணம் மேঽஸ்து
ததா³த்மநி நிரதே ய உபநிஷத்ஸு த⁴ர்மாஸ்தே
மயி ஸந்து தே மயி ஸந்து ॥

॥ ௐ ஶாந்தி:ௐ ஶாந்தி:ௐ ஶாந்தி:

தெரிந்த ஒன்றை புரிய வைக்க -த்ருஷ்ட்டி விதி -ஓம்காரம் ப்ரஹ்மம்
பிராணன் போலே நினைத்து முதலில்
மூன்று எழுத்து அதனை —
வடி கட்டி உத்கீதா உபாசனம் விளக்க
பூதானாம் பிருத்வி -ரசம் -அதுக்குள் தண்ணீர் -மரம் -ஒளஷதம் -அன்னம் -மனிதன் -வாக்கு –
இதுதானே உபகாரம் பண்ணும் அதனால் ரசம்
மௌனமாக இருப்பதே -ரஹஸ்யங்களுக்கும் நான் மௌனமாக இருக்கிறேன்

——-

॥ அஷ்டமோঽத்⁴யாய: ॥
அத² யதி³த³மஸ்மிந்ப்³ரஹ்மபுரே த³ஹரம் புண்ட³ரீகம் வேஶ்ம
த³ஹரோঽஸ்மிந்நந்தராகாஶஸ்தஸ்மிந்யத³ந்தஸ்தத³ந்வேஷ்டவ்யம்
தத்³வாவ விஜிஜ்ஞாஸிதவ்யமிதி ॥ 8.1.1॥

தகர அதிகரணம் / பிரஜாபதி வித்யை –இதில்
ஹிருதய கமலம் தலை கீழ் பிடிக்கப்பட்ட தாமரை -ஹ்ருதய கமலம் கோலம் உண்டே –
அதற்குள் உள்ளதை உபாசிப்பாய் -கல்யாண குணங்களை -தேடி உபாசிப்பாய்
தகர -சிறிய இடைவெளி –

தம் சேத்³ப்³ரூயுர்யதி³த³மஸ்மிந்ப்³ரஹ்மபுரே த³ஹரம் புண்ட³ரீகம் வேஶ்ம
த³ஹரோঽஸ்மிந்நந்தராகாஶ: கிம் தத³த்ர வித்³யதே யத³ந்வேஷ்டவ்யம்
யத்³வாவ விஜிஜ்ஞாஸிதவ்யமிதி ஸ ப்³ரூயாத் ॥ 8.1.2॥

உள்ளே இருப்பதே ஆதாரம் -ஆகாசம் இடம் கொடுக்கும் -ப்ரஹ்மம் தானே இடமாக ஆகாசமாக இருக்கும்

யாவாந்வா அயமாகாஶஸ்தாவாநேஷோঽந்தர்ஹ்ருʼத³ய அகாஶ
உபே⁴ அஸ்மிந்த்³யாவாப்ருʼதி²வீ அந்தரேவ ஸமாஹிதே
உபா⁴வக்³நிஶ்ச வாயுஶ்ச ஸூர்யாசந்த்³ரமஸாவுபௌ⁴
வித்³யுந்நக்ஷத்ராணி யச்சாஸ்யேஹாஸ்தி யச்ச நாஸ்தி ஸர்வம்
தத³ஸ்மிந்ஸமாஹிதமிதி ॥ 8.1.3॥

தம் சேத்³ப்³ரூயுரஸ்மிꣳஶ்சேதி³த³ம் ப்³ரஹ்மபுரே ஸர்வꣳ ஸமாஹிதꣳ
ஸர்வாணி ச பூ⁴தாநி ஸர்வே ச காமா யதை³தஜ்ஜரா வாப்நோதி
ப்ரத்⁴வꣳஸதே வா கிம் ததோঽதிஶிஷ்யத இதி ॥ 8.1.4॥

ஸ ப்³ரூயாத்நாஸ்ய ஜரயைதஜ்ஜீர்யதி ந வதே⁴நாஸ்ய ஹந்யத
ஏதத்ஸத்யம் ப்³ரஹ்மபுரமஸ்மிகாமா: ஸமாஹிதா: ஏஷ
ஆத்மாபஹதபாப்மா விஜரோ விம்ருʼத்யுர்விஶோகோ
விஜிக⁴த்ஸோঽபிபாஸ: ஸத்யகாம: ஸத்யஸங்கல்போ யதா² ஹ்யேவேஹ
ப்ரஜா அந்வாவிஶந்தி யதா²நுஶாஸநம் யம் யமந்தமபி⁴காமா
ப⁴வந்தி யம் ஜநபத³ம் யம் க்ஷேத்ரபா⁴க³ம் தம் தமேவோபஜீவந்தி
॥ 8.1.5॥

அறிந்தவன் அஷ்ட குணங்களில் சாம்யா பத்தி -நீர் பூத்த நெருப்பு போலே இங்கு -ஸ்வரூப ஆவிர்பாவம் -அடைந்து
பாபம் தீண்டாமல் -மூப்பு இல்லாமல் –மரணம் இல்லாமல் -சோகம் இல்லாமல் -பசி இல்லாமல் –
தாகம் இல்லாமல் -நல்ல விருப்பங்கள் கொண்டு -செயல்களை முடிக்கும் சக்தன் -ஆகிய எட்டும்

தத்³யதே²ஹ கர்மஜிதோ லோக: க்ஷீயத ஏவமேவாமுத்ர புண்யஜிதோ
லோக: க்ஷீயதே தத்³ய இஹாத்மாநமநுவித்³ய வ்ரஜந்த்யேதாꣳஶ்ச
ஸத்யாந்காமாꣳஸ்தேஷாꣳ ஸர்வேஷு லோகேஷ்வகாமசாரோ
ப⁴வத்யத² ய இஹாத்மாநமநிவுத்³ய வ்ரஜந்த்யேதꣳஶ்ச
ஸத்யாந்காமாꣳஸ்தேஷாꣳ ஸர்வேஷு லோகேஷு காமசாரோ ப⁴வதி
॥ 8.1.6॥

॥ இதி ப்ரத²ம: க²ண்ட:³ ॥

—————————————————————————————–

காண்டம்-‍1

இதயத்துக்குள் உள்ள சிறிய வெற்றிடம், அதை ஆகாசம் என்று குறிக்கப்படுகிறது (தகராகாசம்)
அந்த ஆகாசத்தில் ஈஸ்வரனை உபாஸிக்க வேண்டும். இது இருவகையாக பிரிக்கப்படுகிறது,
அவை பேத உபாஸனம், அபேத உபாஸனம். இது உயர்ந்ததாக சொல்லப்படுகிறது.
ஏனென்றால் இது பிரம்மத்திற்கு அருகே எடுத்துச்செல்கிறது.
இதில் ஆலம்பனம் தியானிப்பவன் இடத்தே இருக்கிறது. தன்னையே தியானிக்கிறான். சகுண பிரம்மமாக உபாஸிக்கப்படுகிறது.
ஞான யோக அதிகாரத்துவத்தை வளர்ப்பதற்கு இந்த தியானமானது உபதேசிக்கப்படுகிறது. இதை அப்யாஸத்தின் மூலம் வளர்க்க வேண்டும்.
இங்கு ஈஸ்வரனை உபாஸன தேவதையாக உபாஸிக்கப்படுகிறது.
ஈஸ்வரனுக்கு எட்டு வகையான குணங்களை கொடுத்து உபாஸிக்க சொல்கிறது.
இது அதிகாரத்துவத்தை வளர்த்து விட்டால் இங்கேயே ஞானத்தை அடையலாம்,
இல்லையென்றால் “கிரம்முக்தி” மூலமாகத்தான் பிரம்மலோகத்திற்கு சென்று பிறகு மோட்சம் அடையலாம்.

பிரம்மம் வசிக்கும் சிறிய நகரமான நம் உடலில் உள்ள சிறிய தாமரை போன்ற ஒரு அரண்மனை இருக்கிறது அதுதான் இதயம்.
அதற்குள்ளே சிறிய ஆகாசம் இருக்கிறது. அந்த ஆகாசத்துக்குள்ளே ஒன்றை தேட வேண்டும்.
அதையையே அறிய வேண்டும், அதை தியானிக்க வேண்டும். அந்த ஆகாசம் ஈஸ்வரனை குறிக்கிறது.
அப்படி எடுத்துக்கொண்டு நம் இதயத்துக்குள் ஆகாசமாக ஈஸ்வரன் இருக்கிறார், அவரை சகுண பிரம்மமாக தியானிக்க வேண்டும்.

—————

ஸ யதி³ பித்ருʼலோககாமோ ப⁴வதி ஸங்கல்பாதே³வாஸ்ய பிதர:
ஸமுத்திஷ்ட²ந்தி தேந பித்ருʼலோகேந ஸம்பந்நோ மஹீயதே ॥ 8.2.1॥

அத² யதி³ மாத்ருʼலோககாமோ ப⁴வதி ஸங்கல்பாதே³வாஸ்ய மாதர:
ஸமுத்திஷ்ட²ந்தி தேந மாத்ருʼலோகேந ஸம்பந்நோ மஹீயதே ॥ 8.2.2॥

அத² யதி³ ப்⁴ராத்ருʼலோககாமோ ப⁴வதி ஸங்கல்பாதே³வாஸ்ய ப்⁴ராதர:
ஸமுத்திஷ்ட²ந்தி தேந ப்⁴ராத்ருʼலோகேந ஸம்பந்நோ மஹீயதே ॥ 8.2.3॥॥

அத² யதி³ ஸ்வஸ்ருʼலோககாமோ ப⁴வதி ஸங்கல்பாதே³வாஸ்ய ஸ்வஸார:
ஸமுத்திஷ்ட²ந்தி தேந ஸ்வஸ்ருʼலோகேந ஸம்பந்நோ மஹீயதே ॥ 8.2.4॥

அத² யதி³ ஸகி²லோககாமோ ப⁴வதி ஸங்கல்பாதே³வாஸ்ய ஸகா²ய:
ஸமுத்திஷ்ட²ந்தி தேந ஸகி²லோகேந ஸம்பந்நோ மஹீயதே ॥ 8.2.5॥

முக்த ஜீவன் -ஆனந்தத்தில் தாரதம்யம் இல்லை -பித்ரு லோகம் போகும் சக்தியும் உண்டு –
சங்கல்பத்தாலே அனைத்தும்
ஸ்ருஷ்டிக்கும் சக்தி உண்டு -ஆனால் ஸ்ருஷ்டிக்க மாட்டான் -அனைத்தும் அவனாகவே பார்ப்பதால்

அத² யதி³ க³ந்த⁴மால்யலோககாமோ ப⁴வதி ஸங்கல்பாதே³வாஸ்ய
க³ந்த⁴மால்யே ஸமுத்திஷ்ட²தஸ்தேந க³ந்த⁴மால்யலோகேந ஸம்பந்நோ
மஹீயதே ॥ 8.2.6॥

அத² யத்³யந்நபாநலோககாமோ ப⁴வதி ஸங்கல்பாதே³வாஸ்யாந்நபாநே
ஸமுத்திஷ்ட²தஸ்தேநாந்நபாநலோகேந ஸம்பந்நோ மஹீயதே ॥ 8.2.7॥

அத² யதி³ கீ³தவாதி³த்ரலோககாமோ ப⁴வதி ஸங்கல்பாதே³வாஸ்ய
கீ³தவாதி³த்ரே ஸமுத்திஷ்ட²தஸ்தேந கீ³தவாதி³த்ரலோகேந ஸம்பந்நோ
மஹீயதே ॥ 8.2.8॥

அத² யதி³ ஸ்த்ரீலோககாமோ ப⁴வதி ஸங்கல்பாதே³வாஸ்ய ஸ்த்ரிய:
ஸமுத்திஷ்ட²ந்தி தேந ஸ்த்ரீலோகேந ஸம்பந்நோ மஹீயதே ॥ 8.2.9॥

யம் யமந்தமபி⁴காமோ ப⁴வதி யம் காமம் காமயதே ஸோঽஸ்ய
ஸங்கல்பாதே³வ ஸமுத்திஷ்ட²தி தேந ஸம்பந்நோ மஹீயதே ॥ 8.2.10॥

ஹ்ருதி அயம் ஹிருதயத்தில் அமர்ந்து உள்ளான் -அடைந்து உள்ளான் -ஹிருதயம் –

॥ இதி த்³விதீய: க²ண்ட:³ ॥

——————————————-——————————–

காண்டம்-‍2

இந்த சிறிய இதயத்திற்குள் இருக்கும் சிறிய ஆகாசத்தில் எதை தேட வேண்டும்?
அங்கு தேடுவதற்கு என்ன இருக்கிறது? பின்பு எதை தியானிக்க வேண்டும்?

ஆகாசம் என்பது எல்லாவற்றையும் அடக்கிக்கொண்டு இருக்கிறது. ஆகாசம் பிளவுபடாத்து.
வெளியே தெரியும் ஆகாசம் எவ்வளவு பெரியதோ அதேப்போலத்தான் இதயத்துக்குள் இருக்கிற ஆகாசம்.
இதயம் சிறியதாக இருக்கலாம் ஆனால் ஆகாசம் பிளவுப்படாமல் அங்கே இருக்கிறது.
சொர்க்கமும் பூமியும் இந்த ஆகாசத்துக்குள் இருக்கிறது. அந்த ஆகாசம் இதயத்துக்குள் இருக்கிறது.
எனவே அனைத்தும் என்னுள்ளேதான் இருக்கிறது. மூன்று காலத்திலும் தோன்றி அழியும் அனைத்தும் இதனுள் இருக்கிறது.

உடல் அழிந்து விட்டால், அதனுள் இருக்கும் ஆகாசமும் அழிந்து விடும் அல்லவா?
உடல் அழிவால் ஆகாசத்திற்கு அழிவு கிடையாது. அது ஸத்யமானது, எங்கும் வியாபித்திருக்கிறது,
அதுவே ஆத்மா, அதுவே பிரம்மம். உள்ளே இருக்கும் ஈஸ்வரனுக்கு எட்டு வகையான குணங்கள் இருப்பதாக சொல்லப்பட்டிருக்கிறது.
அவைகள் 1. பாவமற்றது, 2. வயதற்றது, 3. மரணமற்றது, 4. துயரமற்றது,
5. பசியற்றது, 6. தாகமற்றது, 7. நிறைவேறுகின்ற ஆசை,8. நிறைவேறுகின்ற சங்கல்பம்

ஆசையானது சங்கல்பத்திலிருந்து உருவாவது. நாம் பலவிதமான சங்கல்பங்கள் (இதை செய்ய வேண்டும்,
அதை செய்ய வேண்டும் என்று நினைப்பது) செய்வோம், ஆனால் அதில் ஒரு சிலதான் ஆசையாக மாறி
அதை அடைய முயற்சி செய்யப்படுகிறது. ஆனால் ஈஸ்வரனது சங்கல்பம் உடனே நிறைவேறுகிறது.
இப்படிப்பட்ட ஈஸ்வரனைத் தான் இதய ஆகாசத்தில் வைத்து தியானிக்க வேண்டும்.
இதை புரிந்து விட்டால் ஞானம் அடைந்து விடலாம்.
இப்படி தியனத்தை செய்யாமலிருந்தால் எல்லாவற்றுக்கும் அடிமையாகி இருக்க வேண்டியதுதான்

இந்த உலகத்தில் நாம் அடையும் எதுவும் அழியக்கூடியது, அதுபோல் சொர்க்கலோகமும் நிலையற்றது.
அதனால் இங்கேயே முயற்சி செய்து ஞானத்தை அடைந்து விட வேண்டும்.
இங்கு கர்மத்தினால் அடையப்பட்ட போகங்கள் அழிந்து விடுகிறது, அதுபோல எல்லா விஷயத்திலும்
புண்ணியத்தினால் அடைந்த லோகங்களும் அழியக்கூடியவை.
இந்த மனித ஜென்மத்தில் ஞானத்தை அடையாமல் இறந்து விட்டால், அவனது பாவ புண்ணியத்திற்கு ஏற்ப
சுக துக்கத்தை அனுபவித்துக்கொண்டிருப்பான். அக்ஞானிக்கு ஆசைகளை பூர்த்தி செய்ய முடியாமல் சோகத்தை அனுபவிக்கிறான்.
ஞானிக்கு ஆசை வந்தாலே அது பூர்த்தியாகி விடும்.

யாரொருவர் இங்கேயே ஆத்மாவை அறிந்து கொள்கிறார்களோ அவர்கள் எல்லா உலகத்திலும் முக்தனாகவே இருப்பார்கள்.
எனவே இந்த மனித ஜென்மத்தை நாம் நன்கு பயன்படுத்திக்கொண்டு ஞானத்தை அடைவதற்கான முயற்சி செய்து அடைந்து விட வேண்டும்.

சங்கல்பம் என்பது ஆழ்மனதில் தோன்றும் ஆசை, அதாவது ஆசையின் விதை. ஈஸ்வரனுக்கு எழும் சங்கல்பங்கள் யாவும் பூர்த்தியாகிவிடும்.
இப்படி ஈஸ்வரனை உபாஸித்தால், நமது சங்கல்பமும் நிறைவேறிவிடும். இதற்கு சத்ய சங்கல்பம் என்று பெயர்.
உதாரணமாக இறந்து போன தந்தையை பார்க்க நினைத்தால் கூட அது நிறைவேறி விடும்.
எந்தப்பொருளை அனுபவிக்க நினைத்தாலும், அந்த ஆசை நிறைவேறி விடும்.

——————–

த இமே ஸத்யா: காமா அந்ருʼதாபிதா⁴நாஸ்தேஷாꣳ ஸத்யாநாꣳ
ஸதாமந்ருʼதமபிதா⁴நம் யோ யோ ஹ்யஸ்யேத: ப்ரைதி ந தமிஹ
த³ர்ஶநாய லப⁴தே ॥ 8.3.1॥

அத² யே சாஸ்யேஹ ஜீவா யே ச ப்ரேதா யச்சாந்யதி³ச்ச²ந்ந
லப⁴தே ஸர்வம் தத³த்ர க³த்வா விந்த³தேঽத்ர ஹ்யஸ்யைதே ஸத்யா:
காமா அந்ருʼதாபிதா⁴நாஸ்தத்³யதா²பி ஹிரண்யநிதி⁴ம் நிஹிதமக்ஷேத்ரஜ்ஞா
உபர்யுபரி ஸஞ்சரந்தோ ந விந்தே³யுரேவமேவேமா: ஸர்வா: ப்ரஜா
அஹரஹர்க³ச்ச²ந்த்ய ஏதம் ப்³ரஹ்மலோகம் ந விந்த³ந்த்யந்ருʼதேந ஹி
ப்ரத்யூடா:⁴ ॥ 8.3.2॥

ஸ வா ஏஷ ஆத்மா ஹ்ருʼதி³ தஸ்யைததே³வ நிருக்தꣳ ஹ்ருʼத்³யயமிதி
தஸ்மாத்³த்⁴ருʼத³யமஹரஹர்வா ஏவம்வித்ஸ்வர்க³ம் லோகமேதி ॥ 8.3.3॥

அத² ய ஏஷ ஸம்ப்ரஸாதோ³ঽஸ்மாச்ச²ரீராத்ஸமுத்தா²ய பரம்
ஜ்யோதிருபஸம்பத்³ய ஸ்வேந ரூபேணாபி⁴நிஷ்பத்³யத ஏஷ ஆத்மேதி
ஹோவாசைதத³ம்ருʼதமப⁴யமேதத்³ப்³ரஹ்மேதி தஸ்ய ஹ வா ஏதஸ்ய
ப்³ரஹ்மணோ நாம ஸத்யமிதி ॥ 8.3.4॥

தாநி ஹ வா ஏதாநி த்ரீண்யக்ஷராணி ஸதீயமிதி
தத்³யத்ஸத்தத³ம்ருʼதமத² யத்தி தந்மர்த்யமத² யத்³யம் தேநோபே⁴
யச்ச²தி யத³நேநோபே⁴ யச்ச²தி தஸ்மாத்³யமஹரஹர்வா
ஏவம்வித்ஸ்வர்க³ம் லோகமேதி ॥ 8.3.5॥

॥ இதி த்ருʼதீய: க²ண்ட:³ ॥

———————————————

காண்டம்-‍3

ஈஸ்வரனின் சத்ய சங்கல்பத்தைப்பற்றிய விளக்கம்:
நாம் அடைய நினைக்கும் அனைத்தையும் பொய்யான மறைப்பால் மறைக்கப்பட்டு இருக்கிறது.
ஆனால் அவை சத்யமாக இருக்கிறது. அந்தப்பொய் திரையை நீக்கினால் சத்ய சங்கல்பம் வந்து விடும்.
உடலுக்கு வெளியே உள்ள பொருட்களின் மீதுள்ள ஆசை, அதை அடைவதில் தீவிர முயற்சி.
இதற்கு மித்யாஞானம்தான் காரணமாக இருக்கிறது. சிறிய ஆசைகளை பெரியதாக்கி அதை அடைவதில் முயற்சி,
இவ்விதம்தான் அல்பமான விஷயங்களை நோக்கி இழுக்கப்பட்டு விடுவதால் நம்முள்ளே உள்ள உயர்ந்த விஷயங்களில் நாட்டமின்றி இருக்கிறோம்.

இந்த பகிர்முகத்துவம்தான் பொய்யான திரை. அன்ருத அபிதானம் – வெளி விஷயங்களை அடைவதில் ஆசை,
மோட்சத்தை அடைய வேண்டும் என்ற இச்சை வராத்தற்கு காரணம் வெளிமுகமாயுள்ள மற்ற அல்ப ஆசையினால் மூடபட்டிருப்பதால்,
உள்முகமாயுள்ள சத்ய சங்கல்பத்தை அடைய முடியவில்லை.

ஈஸ்வரன் ஸ்வரூபம் (பெருமை)
ஹிரண்யநிதி: எல்லா நலனும் வளமும் உடையவர். எல்லாவித ஐஸ்வர்யமும் உடையவர்,
இப்படிப்பட்டவரை இதய ஆகாசத்துக்குள் வைத்து தியானித்தால் எல்லா ஐஸ்வர்யமும் நம்முள்ளே இருப்பதை உணரலாம்.
தங்கப்புதையல் புதைக்கப்பட்டிருக்கும் நிலத்தின் மீது வசிப்பவன் அல்லது அதன் மீது சென்று வந்து கொண்டிருப்பவனால்
அவனுடைய அந்த புதையலைப் பற்றிய அறியாமையினால், அதை அடையாதவனாக இருக்கிறான்.

ஹ்ருதயம்: (ஹ்ருதி-இதயத்திற்குள் + அயம்-வீற்றிருப்பவன்)
ஈஸ்வரன் எல்லா ஜீவர்களின் இதயத்துக்குள்ளும் இருக்கிறார். இந்த உண்மையை உணர்ந்து உபாஸிப்பவர்கள்
ஒவ்வொரு நாளும் அவரை பார்த்துக் கொணடே இருக்கிறார்கள். நிர்குண பிரம்மத்தை அறிந்த ஞானிகள் போல
ஈஸ்வரனை உபாஸித்து அந்த நிலையை அடையலாம். இது ஜீவ-பிரம்ம ஐக்கியத்தை விளக்குகிறது.

ப்ராக்ஞன்-சம்பிரஸாதஹ – அறிவினால் பிரம்மத்துடன் ஒன்றானவன், ஐக்கியமானவன்
அஸ்மாத் சரீராத் ஸமுத்தாய – இந்த உலகத்தின் மீது இருக்கும் அபிமானத்தை விட்டு
பரம் ஜோதிஹி – ஞான ஸ்வரூபமாக
உபஸம்பத்ய – தன்னை தானாகவே உணர்ந்து
ஸ்வேனரூபேன – தன்னுடைய உண்மையான ஸ்வரூபமாகவே
அபினிஸ்வத்யதே – விளங்குகின்றான் (வெளிப்படுகிறான்)
அஸரீர தயாதிஷ்டதி – உடலற்றவனாக இருக்கின்றான், ஆத்மாவாகவே இருக்கின்றான்.

சத்யம் என்ற சொல்லுக்கு உள்ள அர்த்தங்கள்
சத்யம் – உண்மை பேசுதல்
சத்யம் – எல்லா காலத்திலும் இருப்பது – நிர்குண பிரம்மம்
சத்யம் – ஈஸ்வரனை விளக்குகின்ற சொல்

இந்த ஆத்மாதான் பிரம்மம் என்று கூறினார் குருவானவர். இந்த பிரம்மம் அம்ருதமாக (நித்தியமானது) இருக்கின்றது.
எனவே பயமற்றவனாகிறான் (அபயம்). இப்படிபட்ட பிரம்மத்திற்கு ஸத்யம் என்று கூறப்படுகிறது.

சத்யம் – ச+த்+யம் (அம்ருதம்+அழியக்கூடியது+இந்த இரண்டையும் கட்டுப்படுத்துபவன்) மாயாவாகவும்,
அழியக்கூடியதாகவும், பிரம்ம ஸ்வரூபமாகவும் இருப்பவர்.

இவ்விதம் ஈஸ்வரனை யார் உபாஸிக்கிறார்களோ அவர்கள் பிரம்மத்தை யடைகிறார்கள்.

—————-

அத² ய ஆத்மா ஸ ஸேதுர்த்⁴ருʼதிரேஷாம் லோகாநாமஸம்பே⁴தா³ய
நைதꣳ ஸேதுமஹோராத்ரே தரதோ ந ஜரா ந ம்ருʼத்யுர்ந ஶோகோ ந
ஸுக்ருʼதம் ந து³ஷ்க்ருʼதꣳ ஸர்வே பாப்மாநோঽதோ
நிவர்தந்தேঽபஹதபாப்மா ஹ்யேஷ ப்³ரஹ்மலோக: ॥ 8.4.1॥

தஸ்மாத்³வா ஏதꣳ ஸேதும் தீர்த்வாந்த:⁴ ஸந்நநந்தோ⁴ ப⁴வதி
வித்³த:⁴ ஸந்நவித்³தோ⁴ ப⁴வத்யுபதாபீ ஸந்நநுபதாபீ ப⁴வதி
தஸ்மாத்³வா ஏதꣳ ஸேதும் தீர்த்வாபி நக்தமஹரேவாபி⁴நிஷ்பத்³யதே
ஸக்ருʼத்³விபா⁴தோ ஹ்யேவைஷ ப்³ரஹ்மலோக: ॥ 8.4.2॥

தத்³ய ஏவைதம் ப்³ரஹ்மலோகம் ப்³ரஹ்மசர்யேணாநுவிந்த³ந்தி
தேஷாமேவைஷ ப்³ரஹ்மலோகஸ்தேஷாꣳ ஸர்வேஷு லோகேஷு காமசாரோ
ப⁴வதி ॥ 8.4.3॥

சத் தி யம் அடக்கி ஆள்பவன் சித்தியும் அசித்தையும்
ப்ரஹ்மம் சேது -அங்கே கூட்டி செல்பவன்
இரண்டையும் கலக்காமல் பாதுகாப்பவன் –
ப்ரஹ்மசர்யம் -ப்ரஹ்மத்தை நோக்கி போவதில் உள்ள தடைகளை வெட்டி –
அவன் இடம் கூட்டிப்போவர்கள் உடன் தொடர்பு -சம்சாரிகள் இடம் பற்று அற்று

॥ இதி சதுர்த:² க²ண்ட:³ ॥

————————————————–

காண்டம்-‍4
அபஹதபாப்மா – பாபமற்றவர்; ஸேது – பாலம், குளம், வரப்பு

ஹிருதயத்தில் உபாஸிக்கும் ஈஸ்வரன் (ஆத்மா என்று இந்த மந்திரத்தில் குறிப்பிடப் பட்டிருக்கிறது)
ஸேது என்று குறிப்பிடப்பட்டிருக்கிறார். இது நம்மை பாதுகாப்பவர் என்று பொருள் கொள்ள வேண்டும்.
இந்த உலக மக்களுக்கு தீங்கு நேராமல் இருக்க பாதுகாப்பாக இருக்கிறார்.
உலகத்திலுள்ள எந்தப்பொருளுக்கும் நம்மை பாதுகாக்கும் தன்மை கிடையாது அது ஈஸ்வரனிடத்தில் மட்டும்தான் இருக்கிறது.
இப்படி ஈஸ்வரனை வழிபட வேண்டும்.

இந்த ஈஸ்வரனை எதுவும் நெருங்க முடியாது, அழிக்க முடியாது. காலத்தின் அழிவுக்கும் உட்படமாட்டார், வயதற்றவர், மரணமற்றவர்,
துயரமற்றவர், பாவபுண்ணியமற்றவர். எல்லா பாவங்களும் ஈஸ்வரனை கண்டு ஓடி விடுகின்றது.
ஆகவே இந்த ஈஸ்வரன் பாவத்தினால் தீண்டப்படாதவர். நமக்கு பாதுகாப்பளிப்பவர், என்றும் பாவமற்றவர் என்று தியானிக்க வேண்டும்.

இப்படி ஈஸ்வரனை உபாஸித்து அவனை அடைந்தவர்கள், கண் பார்வையற்றவர்களாக இருந்தாலும், பார்வை பெறுவார்கள்,
உடலில் எங்கேயாவது காயமடைந்திருந்தவர்களாக இருந்தால், காயமெல்லாம் நீங்கப்பெறுவார்கள்.
இருளாகிப்போன வாழ்க்கையிலும் ஒளி வீசும். இப்படிப்பட்ட ஈஸ்வரன் என்றும் ஒளி வீசிக்கொண்டிருப்பவர்.

சாதாரணமான மக்கள் இந்த பலனை ஆழ்ந்த உறக்கத்தில் அடைவார்கள். உபாஸகர்கள் இறந்த பின் தான் இந்த பலனை அடைவார்கள்.
ஞானிகள் எல்லா அவஸ்தைகளிலும் இந்த பலனை அடைவார்கள்

இப்படிப்பட்ட ஈஸ்வரனை அடைந்த உபாஸகர்கள் உபயோகித்த சாதனை பிரம்மச்சரியம்.
இந்த சாதனையை பின்பற்றி வெற்றி அடைந்தவர்கள் பிரம்மலோகத்தை அடைவார்கள்.
இவர்கள் எல்லா உலகத்திலும் விரும்பும்படி வாழ்க்கை அமைகிறது.

——————–

அத² யத்³யஜ்ஞ இத்யாசக்ஷதே ப்³ரஹ்மசர்யமேவ தத்³ப்³ரஹ்மசர்யேண
ஹ்யேவ யோ ஜ்ஞாதா தம் விந்த³தேঽத² யதி³ஷ்டமித்யாசக்ஷதே
ப்³ரஹ்மசர்யமேவ தத்³ப்³ரஹ்மசர்யேண ஹ்யேவேஷ்ட்வாத்மாநமநுவிந்த³தே
॥ 8.5.1॥

அத² யத்ஸத்த்ராயணமித்யாசக்ஷதே ப்³ரஹ்மசர்யமேவ தத்³ப்³ரஹ்மசர்யேண
ஹ்யேவ ஸத ஆத்மநஸ்த்ராணம் விந்த³தேঽத² யந்மௌநமித்யாசக்ஷதே
ப்³ரஹ்மசர்யமேவ தப்³ப்³ரஹ்மசர்யேண ஹ்யேவாத்மாநமநுவித்³ய மநுதே ‘॥ 8.5.2॥

அத² யத³நாஶகாயநமித்யாசக்ஷதே ப்³ரஹ்மசர்யமேவ ததே³ஷ
ஹ்யாத்மா ந நஶ்யதி யம் ப்³ரஹ்மசர்யேணாநுவிந்த³தேঽத²
யத³ரண்யாயநமித்யாசக்ஷதே ப்³ரஹ்மசர்யமேவ தத³ரஶ்ச ஹ வை
ண்யஶ்சார்ணவௌ ப்³ரஹ்மலோகே த்ருʼதீயஸ்யாமிதோ தி³வி ததை³ரம்
மதீ³யꣳ ஸரஸ்தத³ஶ்வத்த:² ஸோமஸவநஸ்தத³பராஜிதா
பூர்ப்³ரஹ்மண: ப்ரபு⁴விமிதꣳ ஹிரண்மயம் ॥ 8.5.3॥

தத்³ய ஏவைதவரம் ச ண்யம் சார்ணவௌ ப்³ரஹ்மலோகே
ப்³ரஹ்மசர்யேணாநுவிந்த³ந்தி தேஷாமேவைஷ ப்³ரஹ்மலோகஸ்தேஷாꣳ
ஸர்வேஷு லோகேஷு காமசாரோ ப⁴வதி ॥ 8.5.4॥

॥ இதி பஞ்சம: க²ண்ட:³ ॥

——————————————————

காண்டம்-‍5
பிரம்மசர்ய சாதனையின் பெருமை
குருவுக்கு சேவை செய்தல்
வேதங்களை படித்தல், மனனம் செய்தல்
குருகுலத்தில் உணவு பரிமாறுதல்
எளிமையான வாழ்க்கை வாழ்தல்
சிற்றின்பத்தை துறத்தல்

இறைவனை வழிபடுவதனால் அடையும் பலனை பிரம்மச்சர்ய விரதத்திலேயே அடைந்து விடுகிறான்.
பிறகு இங்கிருந்து பிரம்மலோகத்திற்கு சென்று கிரமமாக முக்தியாக பிரம்மத்தை அடைகிறான்

யக்ஞம் – இறைவனை வழிபடுதல்
இஷ்டம் – பிரம்மசர்யத்திலே அவன் ஆத்மாவை அடைகிறான்
ஸத்ராயண – ஈஸ்வரனுடைய பாதுகாப்பு கிடைக்கிறது.
மௌனம் – இதனால் அடையும் பலன்
அநாஸகாயனம் – உபவாசம்
அரண்யாயனம் – வனத்தில் வாழ்தல்

இந்த ஆறு ஸாதனைகளின் மூலம் அடையும் பலன்கள் யாவும் பிரம்மச்சர்ய விரதத்திலேயே அடைந்து விடுகிறான்

பிரம்மலோகத்தில் அரா, ந்யா என்ற இரண்டு கடல்கள் உள்ளன, அதில் இருக்கும் நீரை குடித்தால் மயக்கத்தை வரும்.
அஸ்வத்தா என்ற மரமானது போதை தரும் விஷயங்களை தரக்கூடியது. யாராலும் வெல்லமுடியாத தங்கத்திலான் நகரத்தில் வசிக்கலாம்.

—————

அத² யா ஏதா ஹ்ருʼத³யஸ்ய நாட்³யஸ்தா: பிங்க³லஸ்யாணிம்நஸ்திஷ்ட²ந்தி
ஶுக்லஸ்ய நீலஸ்ய பீதஸ்ய லோஹிதஸ்யேத்யஸௌ வா ஆதி³த்ய:
பிங்க³ல ஏஷ ஶுக்ல ஏஷ நீல ஏஷ பீத ஏஷ லோஹித:
॥ 8.6.1॥

அபராஜிதா அவித்யை ஸ்ரீ வைகுண்டம் -ப்ரஹ்ம லோகம்
சூர்ய கிரணங்கள் மூலம் போகிறான் –

தத்³யதா² மஹாபத² ஆதத உபௌ⁴ க்³ராமௌ க³ச்ச²தீமம் சாமும்
சைவமேவைதா ஆதி³த்யஸ்ய ரஶ்மய உபௌ⁴ லோகௌ க³ச்ச²ந்தீமம் சாமும்
சாமுஷ்மாதா³தி³த்யாத்ப்ரதாயந்தே தா ஆஸு நாடீ³ஷு ஸ்ருʼப்தா
ஆப்⁴யோ நாடீ³ப்⁴ய: ப்ரதாயந்தே தேঽமுஷ்மிந்நாதி³த்யே ஸ்ருʼப்தா:
॥ 8.6.2॥

தத்³யத்ரைதத்ஸுப்த: ஸமஸ்த்: ஸம்ப்ரஸந்ந: ஸ்வப்நம் ந விஜாநாத்யாஸு
ததா³ நாடீ³ஷு ஸ்ருʼப்தோ ப⁴வதி தம் ந கஶ்சந பாப்மா ஸ்ப்ருʼஶதி
தேஜஸா ஹி ததா³ ஸம்பந்நோ ப⁴வதி ॥ 8.6.3॥

அத² யத்ரைதத³ப³லிமாநம் நீதோ ப⁴வதி தமபி⁴த ஆஸீநா
ஆஹுர்ஜாநாஸி மாம் ஜாநாஸி மாமிதி ஸ
யாவத³ஸ்மாச்ச²ரீராத³நுத்க்ராந்தோ ப⁴வதி தாவஜ்ஜாநாதி
॥ 8.6.4॥

அத² யத்ரைதத³ஸ்மாச்ச²ரீராது³த்க்ராமத்யதை²தைரேவ
ரஶ்மிபி⁴ரூர்த்⁴வமாக்ரமதே ஸ ஓமிதி வா ஹோத்³வா மீயதே
ஸ யாவத்க்ஷிப்யேந்மநஸ்தாவதா³தி³த்யம் க³ச்ச²த்யேதத்³வை க²லு
லோகத்³வாரம் விது³ஷாம் ப்ரபத³நம் நிரோதோ⁴ঽவிது³ஷாம் ॥ 8.6.5॥

ததே³ஷ ஶ்லோக: । ஶதம் சைகா ச ஹ்ருʼத³யஸ்ய நாட்³யஸ்தாஸாம்
மூர்தா⁴நமபி⁴நி:ஸ்ருʼதைகா । தயோர்த்⁴வமாயந்நம்ருʼதத்வமேதி
விஷ்வங்ஙந்யா உத்க்ரமணே ப⁴வந்த்யுத்க்ரமணே ப⁴வந்தி ॥ 8.6.6॥

॥ இதி ஷஷ்ட:² க²ண்ட:³ ॥
————————————–

காண்டம்-‍6
சாதகன் பிரம்மலோகத்தை அடையும் வழி விளக்கப்படுகிறது.

நமது உடலிலுள்ள நாடிகள் வெள்ளை, நீலம், மஞ்சள், சிவப்பு என பல வர்ணங்களில் இருக்கின்றது.
இதே போன்று சூரியனின் கதிர்களிலும் இந்த மாதிரி வர்ணங்கள் இருக்கிறது.
சூரியனில் உள்ள ஒளிக்கதிர்கள் சூரியமண்டலத்திலும் இருக்கிறது. உடலிலுள்ள நாடிகளிலும் பரவி இருக்கிறது.
ஜீவன் ஆழ்ந்த உறக்கத்தில் இந்த நாடி வழியாக போகிறான்.
எல்லாவித்மான இந்திரிய விவகாரங்களிலிருந்து விடுபட்டு ஒன்றாகி அமைதியடைவான். கனவும் இல்லை.
இந்த நாடிக்குள் செல்லும்போது இவனுக்கு கனவுகள் இல்லை, எந்த பாவமும் ஏற்படுவதில்லை.
ஏனென்றால் அப்போது ஈஸ்வரனிடத்தில் ஐக்கியமாகி விடுகிறான்.

இறக்கும் தருவாயில் இருக்கும் ஒருவன் எல்லா சக்தியையும் இழந்திருக்கிறான்.
அவனைச் சுற்றியிருப்பவர்கள் “என்னை தெரிகிறதா?” என்று கேட்கிறார்கள்.
இவன் சரீரத்தை விட்டு போகாதவரை அவர்களை அறிகிறான், அவன் நாடிக்குள் சென்று விட்டால்
யாரையும் அடையாளம் கண்டு கொள்வதில்லை. உடலில் இருந்து உயிர் பிரியும்போது அந்த உபாஸகன்
ஓம் என்று தியானித்துக்கொண்டிருந்தானேயானால் அவனது சூட்சும உடலானது சூரிய கிரணங்கள் வழியே
பிரம்மலோகத்தை அடைந்து கிரம முக்தியடைவான். அப்படி இல்லையென்றால் அவன் எதை தியானித்துக் கொண்டிருந்தானோ
அதற்கு தகுந்த பிறவியையெடுப்பான். இந்த பிரம்மலோகத்தை அடைவதற்கு அகும் நேரமானது ஒரு எண்ணத்திற்கும்
அடுத்து வரும் எண்ணத்திற்கும் இடையே உள்ள நேரமேயாகும். அவ்வளவு விரைவாக சென்றடைந்து விடுவான்.
இவன் போதும் பாதை சூரியனின் ஒளிக்கதிர்கள், ஆனால் உபாஸனை செய்யாதவர்களுக்கு இந்தப்பாதை மூடியிருக்கும்.

நம் இதயத்திலிருந்து 101 நாடிகள் பிரிந்து செல்கின்றன. அதில் சுசும்னா நாடி தலையை பிளந்து சென்று கொண்டு இருக்கிறது.
அதன் வழியாகத்தான் பிரம்மலோகத்தை அடைகிறான்.
மற்ற நாடிகள் வழியே செல்லும் உயிரானது மறுப்பிறப்பை அடைகிறது. இந்த பூமியிலே மறுஜென்மம் எடுக்கிறது.

———————-

ய ஆத்மாபஹதபாப்மா விஜரோ விம்ருʼத்யுர்விஶோகோ
விஜிக⁴த்ஸோঽபிபாஸ: ஸத்யகாம: ஸத்யஸங்கல்ப: ஸோঽந்வேஷ்டவ்ய:
ஸ விஜிஜ்ஞாஸிதவ்ய: ஸ ஸர்வாꣳஶ்ச லோகாநாப்நோதி
ஸர்வாꣳஶ்ச காமாந்யஸ்தமாத்மாநமநுவித்³ய விஜாநாதீதி ஹ
ப்ரஜாபதிருவாச ॥ 8.7.1॥

பிரத்யாகாத்மா வித்யை — பிரஜாபதி வித்யை –நாம் என்கிற ஆத்மாவை பற்றி -ப்ரஹ்ம வித்யைக்கு அங்கம் –
ப்ரஹ்மாவுக்கு சரீரம் சேஷம் பிரகாரம்
விரோசனன் அசுரர் அரசன் -இந்திரன் தேவ அரசன் -இருவருக்கும் அறிய ஆசை கொண்டு

தத்³தோ⁴ப⁴யே தே³வாஸுரா அநுபு³பு³தி⁴ரே தே ஹோசுர்ஹந்த
தமாத்மாநமந்வேச்சா²மோ யமாத்மாநமந்விஷ்ய ஸர்வாꣳஶ்ச
லோகாநாப்நோதி ஸர்வாꣳஶ்ச காமாநிதீந்த்³ரோ ஹைவ
தே³வாநாமபி⁴ப்ரவவ்ராஜ விரோசநோঽஸுராணாம் தௌ
ஹாஸம்விதா³நாவேவ ஸமித்பாணீ ப்ரஜாபதிஸகாஶமாஜக்³மது:
॥ 8.7.2॥

தௌ ஹ த்³வாத்ரிꣳஶதம் வர்ஷாணி ப்³ரஹ்மசர்யமூஷதுஸ்தௌ ஹ
ப்ரஜாபதிருவாச கிமிச்ச²ந்தாவாஸ்தமிதி தௌ ஹோசதுர்ய
ஆத்மாபஹதபாப்மா விஜரோ விம்ருʼத்யுர்விஶோகோ
விஜிக⁴த்ஸோঽபிபாஸ: ஸத்யகாம: ஸத்யஸங்கல்ப: ஸோঽந்வேஷ்டவ்ய:
ஸ விஜிஜ்ஞாஸிதவ்ய: ஸ ஸர்வாꣳஶ்ச லோகாநாப்நோதி ஸர்வாꣳஶ்ச
காமாந்யஸ்தமாத்மாநமநுவித்³ய விஜாநாதீதி ப⁴க³வதோ வசோ
வேத³யந்தே தமிச்ச²ந்தாவவாஸ்தமிதி ॥ 8.7.3॥

தௌ ஹ ப்ரஜாபதிருவாச ய ஏஷோঽக்ஷிணி புருஷோ த்³ருʼஶ்யத
ஏஷ ஆத்மேதி ஹோவாசைதத³ம்ருʼதமப⁴யமேதத்³ப்³ரஹ்மேத்யத² யோঽயம்
ப⁴க³வோঽப்ஸு பரிக்²யாயதே யஶ்சாயமாத³ர்ஶே கதம ஏஷ
இத்யேஷ உ ஏவைஷு ஸர்வேஷ்வந்தேஷு பரிக்²யாயத இதி ஹோவாச
॥ 8.7.4॥

-32-வருஷம் ப்ரஹ்மசர்யம் இருந்து அதிகாரம் சம்பாதித்து கொண்டு வர சொல்ல
கண்ணுக்குள்ளே இருப்பவனே ஆத்மா அஷி புருஷன்
அம்ருதம் -அபயம் -தூக்கமே இல்லாமல் நிரதிசய சோக ரூபம் -வலக்கண்ணில் உள்ளான்

॥ இதி ஸப்தம: க²ண்ட:³ ॥

———————————-

காண்டம்-‍7 (பிரஜாபதி வித்யா)
ஞானி என்பவர் யார்?
எதன் மூலமாக இந்த ஞானம் கிடைக்கின்றது?
ஞானத்துக்கு பொருளான ஆத்ம தத்துவம் என்றால் என்ன?
எப்படி ஆத்மா சரீரமற்றது என்று விளக்கப்படுகிறது?
ஆத்மாவை அறிவதன் மூலம் என்ன பலன் கிடைக்கும்?

ஸ்லோகம்-1
மூன்றுவிதமான கருத்துக்கள் இந்த ஸ்லோகத்தில் கூறப்பட்டிருக்கிறது.

ஆத்ம ஸ்வரூபம்
ஞானத்தை அடையும் வழி
ஆத்ம ஸ்வரூபத்தினை அறிந்தால் அடையும் பலன்
ஆத்மாவானது தர்ம, அதர்மங்களற்றது. கர்மம்தான் தர்ம-அதர்மங்களை உற்பத்தி செய்கிறது.
இங்கே தர்ம-அதர்மம் என்பது பாவ-புண்ணீயத்தை குறிக்கிறது. இந்த பாவ-புண்ணியங்கள் சுக-துக்கத்தை கொடுத்துவிட்டு நீங்குகின்றன.
பல ஜென்மங்களில் சேர்த்த பாவ-புண்ணியங்கள் காரண சரீரத்தில் இருக்கிறது.
அதனால் ஆத்மாவுக்கு காரண சரீரம் இல்லை அல்லது போக்தாவாக இருப்பதில்லை,
சுக துக்கங்களை அனுபவிக்காதது, வயதற்றது, அதாவது ஸ்தூல சரீரமற்றது. உடலுக்கு வரும் ஆறு விகாரங்களும் இல்லாதது.

அபஹதபாப்மா – ஆத்மா காரண சரீரமற்றது
விஜரஹ – ஸ்தூல சரீரமற்றது
விம்ருத்யு – மரணமற்றது, சாசுவதமானது, ஸத் ஸ்வரூபமானது
விஷோகஹ – துயரமற்றது, மனதில்தான் சுக துக்கங்கள் அனுபவிக்கப்படுகிறது. எனவே சூட்சும சரீரமற்றது
விஜிதாத்ய – பசியற்றது, பிராணமய கோசத்தில் நடைபெறுவது
அபிபாக – தாகமுமில்லை.

எனவே ஆத்மா காரண, ஸ்தூல, சூட்சும ஸரீரமற்றது என்று அதன் லட்சணமாக, நிர்குண ஸ்வரூபத்தை குறிக்கிறது.

இந்த ஆத்மாவானது மாயாவின் துணைக்கொண்டு ஈஸ்வரனது குணங்களாக கூறப்படுகிறது.
அவை எட்டு குணங்களாக பிரிக்கப்படுகிறது. இது சகுண ஸ்வரூபத்தைக் குறிக்கிறது.
இதை அடைய இரண்டு வழிகள் கூறப்பட்டுள்ளன. அவைகள்
1. அன்வேஷனம் – ஞானத்வார பிராப்தம் இச்சேத் – அறிவின் மூலம் அடைவதற்கு ஆசைப்பட வேண்டும்.
உபநிஷத் மிகத் தெளிவாக சொல்கிறது, இந்த ஆத்மஞானத்தை கர்மங்களின் மூலமாகவோ, செல்வத்தாலோ,
மற்ற எதனாலும் அடையமுடியாது. எனவே இவைகளெல்லாம் ஸாதனைகள் அல்ல அறிவின் மூலமாகத்தான் அடைய முடியும்.
ஆகவே அறிவின் மூலமாகத்தான் அடைய வேண்டும் என்று ஆசைக்கொள்ள வேண்டும்.
பிறகு சரியான குருவின் துணைக் கொண்டு உபநிஷத் மூலமாக ஞானத்தை அடைய வேண்டும்.

2. விஜிக்ஞாஸிதவ்ய – தனி ஸ்வரூபமாக்க வேண்டும். அதாவது ஞான நிஷ்டையை அடைய வேண்டும்.
சிஷ்ய பிரயத்தனம் – தன் உதவியையே நாட வேண்டும். இதனால் அடையும் பலன்கள் இரண்டு,
ஒன்று அனைத்து உலகங்களிலும், தானே முழுவதுமாக வியாபித்து மனநிறைவை அடைகிறான்.,
இரண்டாவதாக எல்லா ஆசைகளையும் பூர்த்தி செய்து கொள்கிறான்,
எல்லா ஆசைகளும் அவனை விட்டு விலகுகின்றன பிறகு மனநிறைவை அடைகிறான்.

ஸ்லோகம்-2
வித்யா க்ரகணம், வித்யா சம்பிரதான, விநிபிரதஷனார்தம், பிரஜாபதியின் இந்த வார்த்தைகள்
தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் எட்டியது. ஞானத்தின் பலனாக எல்லா உலகங்களையும் அடையலாம்,
ஆசைகளெல்லாம் நிறைவேறும் என்ற பேராசையால் தேவர்களின் தலைவன் இந்திரனும், அசுரர்களின் தலைவனான விரோசனனும்
தஙளுடைய பொறுப்பை மற்றவர்களிடம் ஒப்படைத்துவிட்டு இந்த ஞானத்தை அடைய பிரஜாபதியிடம் சென்று அடைந்தார்கள்.

இவர்கள் இந்த அறிவை அடைய மிகப்பணிவுடன் குருவிடம் சென்றார்கள்.
இதன் மூலம் பணிவும், அறிவும் மற்ற செல்வங்களை விட உயர்ந்தது என்று உணர்த்தப்படுகிறது.
இந்த ராஜாக்களும் மூன்று உலகங்களை ஆள்கின்ற மிகப்பெரிய பதவியும், செல்வாக்கையும், சுகபோக வாழ்க்கையையும்
விட்டுவிட்டு குருவுக்கு சேவை செய்து அறிவை பெற வந்திருக்கிறார்கள்.
இவர்கள் இங்கு வருவதை ஒருத்தருக்கொருவர் தெரிவிக்காமலே வந்தடைந்து இருக்கின்றனர்.
இதற்கு இவர்களிடையே உள்ள பொறாமை குணத்தையே காட்டுகிறது. இருவரும் சமித் கட்டைகளுடன் பிரஜாபதியின் முன் நின்றார்கள்.

இவர்கள் வந்த நோக்கத்தை கேட்டறிந்த குருவானவர் அவர்களை 32 வருடங்கள் இந்த குருகுலத்தில் பிரம்மசாரியாக இருங்கள் என்று பணித்தார்.
பிறகு 32 வருடங்கள் கழிந்த பின்னர் அவர்களிடம், “நீங்கள் எதை அறிவதற்காக என்னிடம் வந்தீர்கள்?” என்று கேட்டார்.
அவர்களும் தாங்கள் கூறிய ஆத்ம தத்துவத்தை அறிய விரும்புகிறோம் என்று பதிலளித்தனர்.

பிரஜாபதி அவர்களுக்கு ஆத்ம தத்துவ உபதேசத்தை கூற ஆரம்பித்தார்.
கண்ணிலிருந்து ஒருவன் பார்த்துக்கொண்டிருக்கிறான் அவனை யாரொருவன் பார்க்கின்றானோ அதுதான்
ஆத்மா, அழிவற்றது, பயமற்றது. அதை அறிந்தவன் எல்லாவற்றையும் அறிந்தவனாவான்

கண், காது போன்ற புலன்கள் அனைத்தும் ஜடம், அவைகளுக்குள்ளே ஆத்மாவானது அறிவு ஸ்வரூபமாக இருந்து கொண்டு
பார்க்கிறது, கேட்கிறது. இந்த சிதாபாஸம் முதலில் அறிய வேண்டும்.
பிறகு இதையும் நீக்கி அதற்கு ஆதாரமாக இருக்கும் பிரம்மத்தை அறிய வேண்டும்.

கண்ணில் தெரியும் உருவமே ஆத்மா என்ற அறிவுடன் இருவரும் ஒருத்தரையொருத்தர் கண்களில் தெரிந்த
தங்கள் உருவத்தை பார்த்து இந்த ஸ்தூல சரீரமே ஆத்மா என்று புரிந்துக் கொண்டார்கள்.
அதையே குருவிடம் கூறி இது சரியா என்று கேட்டார்கள். தெளிவான நீரில் நாம் பார்த்தால் அது காட்டும்
உருவமும், நிலை கண்ணாடியின் முன் நின்று பார்த்தால் அது காட்டும் உருவமும் தன்னையேதான்
எனவே இந்த ஸ்தூல உடலே ஆத்மாவா என்று கேட்டார்கள்.

குருவும் அதை ஆமோதித்தார், ’ஆமாம் அதைத்தான் உபதேசித்தேன், எந்தெந்தப் பொருட்களிலெல்லாம்
உன் உருவத்தின் பிரதிபிம்பத்தை பார்க்கிறீர்களோ அதுதான் ஆத்மா என்று கூறினார்.
இவ்வாறு சிஷ்யர்களின் தவறான கருத்தை கொண்டிருந்தாலும் அதை அனுமதிக்கிறார்.

சங்கராச்சாரியார் இந்த இடத்தில் ஒரு கேள்வியை எழுப்பி அதற்கு பதிலும் கூறுகிறார்.
கேள்வி: குருவானவர் எப்படி தவறான அறிவை சரியென்று கூறி சிஷ்யர்களை அனுப்பலாம்?
பதில்: பொதுவாக யாருமே தான் கொண்ட கருத்துக்கு மறுப்பு சொல்வோர் மீது வெறுப்பு அடைவார்கள்.
மீண்டும் சந்தேகம் வரும்போது அவர்களிடம் செல்லமாட்டார்கள். அதுவும் அந்த இருவரும் நன்கு கற்றுத்தேர்ந்த அறிவாளிகள்.
இவர்களிடம், நீங்கள் நினைத்தது தவறு என்று கூறினால் குருவின் மீது வெறுப்படைந்து சென்று விடுவார்கள் திரும்பவும் வரமாட்டார்கள்.
எனவே அவர்களை இழக்க விரும்பாத பிரஜாபதி முதலில் அவர்கள் சொன்ன கருத்தை சரியென்று கூறிவிட்டார்.
பின்னால் இவர்கள் இதைப்பற்றி மேலும் சிந்தித்து தவறை உணர்ந்து தம்மிடம் வருவார்கள் என்ற
எண்ணத்துடன்தான் தப்பான கருத்தை சரியென்று கூறி அனுப்பி விட்டார்.

——————

உத³ஶராவ ஆத்மாநமவேக்ஷ்ய யதா³த்மநோ ந விஜாநீத²ஸ்தந்மே
ப்ரப்³ரூதமிதி தௌ ஹோத³ஶராவேঽவேக்ஷாஞ்சக்ராதே தௌ ஹ
ப்ரஜாபதிருவாச கிம் பஶ்யத² இதி தௌ ஹோசது:
ஸர்வமேவேத³மாவாம் ப⁴க³வ ஆத்மாநம் பஶ்யாவ ஆ லோமப்⁴ய: ஆ
நகே²ப்⁴ய: ப்ரதிரூபமிதி ॥ 8.8.1॥

பிம்பம் பார்த்து -எத்தை பார்க்கிறாயா ஆத்மா -உடம்பு செய்வதையே பிம்பம் செய்ய –

தௌ ஹ ப்ரஜாபதிருவாச ஸாத்⁴வலங்க்ருʼதௌ ஸுவஸநௌ பரிஷ்க்ருʼதௌ
பூ⁴த்வோத³ஶராவேঽவேக்ஷேதா²மிதி தௌ ஹ ஸாத்⁴வலங்க்ருʼதௌ
ஸுவஸநௌ பரிஷ்க்ருʼதௌ பூ⁴த்வோத³ஶராவேঽவேக்ஷாஞ்சக்ராதே
தௌ ஹ ப்ரஜாபதிருவாச கிம் பஶ்யத² இதி ॥ 8.8.2॥

அசுரன் தேகமே ஆத்மா என்று தப்பாக புரிந்து -செல்ல -அசுரத்தன்மை வளர்ந்து –

தௌ ஹோசதுர்யதை²வேத³மாவாம் ப⁴க³வ: ஸாத்⁴வலங்க்ருʼதௌ ஸுவஸநௌ
பரிஷ்க்ருʼதௌ ஸ்வ ஏவமேவேமௌ ப⁴க³வ: ஸாத்⁴வலங்க்ருʼதௌ ஸுவஸநௌ
பரிஷ்க்ருʼதாவித்யேஷ ஆத்மேதி ஹோவாசைதத³ம்ருʼதமப⁴யமேதத்³ப்³ரஹ்மேதி
தௌ ஹ ஶாந்தஹ்ருʼத³யௌ ப்ரவவ்ரஜது: ॥ 8.8.3॥

தௌ ஹாந்வீக்ஷ்ய ப்ரஜாபதிருவாசாநுபலப்⁴யாத்மாநமநநுவித்³ய
வ்ரஜதோ யதர ஏதது³பநிஷதோ³ ப⁴விஷ்யந்தி தே³வா வாஸுரா வா தே
பராப⁴விஷ்யந்தீதி ஸ ஹ ஶாந்தஹ்ருʼத³ய ஏவ
விரோசநோঽஸுராஞ்ஜகா³ம தேப்⁴யோ ஹைதாமுபநிஷத³ம்
ப்ரோவாசாத்மைவேஹ மஹய்ய ஆத்மா பரிசர்ய ஆத்மாநமேவேஹ
மஹயந்நாத்மாநம் பரிசரந்நுபௌ⁴ லோகாவவாப்நோதீமம் சாமும் சேதி
॥ 8.8.4॥

தஸ்மாத³ப்யத்³யேஹாத³தா³நமஶ்ரத்³த³தா⁴நமயஜமாநமாஹுராஸுரோ
ப³தேத்யஸுராணாꣳ ஹ்யேஷோபநிஷத்ப்ரேதஸ்ய ஶரீரம் பி⁴க்ஷயா
வஸநேநாலங்காரேணேதி ஸꣳஸ்குர்வந்த்யேதேந ஹ்யமும் லோகம்
ஜேஷ்யந்தோ மந்யந்தே ॥ 8.8.5॥

॥ இதி அஷ்டம: க²ண்ட:³ ॥

———————————————–

காண்டம்-‍8
தவறாக ஆத்மாவை புரிந்துக் கொண்டிருக்கிற சிஷ்யர்களுக்கு அவர்களாகவே தங்கள் தவறை உணரச்செய்ய வேண்டும்
என்று ஆதங்கத்துடன் குருவானவர், அவர்கள் இருவரையும் அழைத்து
நீர் நிரப்பப்பட்ட ஒரு பெரிய பாத்திரத்தில் அவர்களை திரும்பவும் பார்க்கச் சொன்னார்.
பிறகு அப்படி பார்க்கும்போது எது புரியவில்லையோ அதை தம்மிடம் வந்து கேளுங்கள் என்று கூறினார்.
இருவரும் பார்த்துவிட்டு வந்து, “நாங்கள் எங்களையே பார்க்கிறோம்,
எங்களுடைய முடியும் நகங்களும் கூட தெளிவாக தெரிகிறது என்று கூறினர்.
குரு திரும்பவும், “உங்கள் உருவத்தை நீரில் பார்க்கும்போது உங்களுக்கு ஏதாவது புரியாமல் இருக்கிறது என்று தோன்றுகிறதா? என்று வினவினார்.
இருவரும் தாங்கள் எடுத்த முடிவில் உறுதியாக நின்று, எதுவும் எங்களுக்கு புரியாமல் இல்லை,
எங்கள் பிரதிபிம்பம்தான் ஆத்மா என்று நாங்கள் உறுதியாக நினைக்கிறோம்,
எனவே தேடி வந்த ஞானம் கிடைத்து விட்டது என்ற திருப்தியுடன் இருந்து விட்டார்கள்.

குருவானவர், இன்னொரு குறிப்புக் கொடுத்து அவர்களின் தவறான முடிவை உணர வைக்க முயன்றார்.
அவர்களிடம், “நீங்கள் உங்களை நன்றாக உடை அலங்காரம் செய்து கொள்ளுங்கள்,
தலைமுடி, நகங்களை வெட்டி அழகு படுத்திக்கொள்ளுங்கள். பிறகு திரும்பவும் உங்களை அந்த நீரில் சென்று பாருங்கள்.
அவர்களும் தங்களை நன்கு அழகுப்படுத்திக்கொண்டு நீரில் சென்று பார்த்தார்கள். இப்பொழுது என்ன பார்க்கிறீர்கள் என்று குரு கேட்டார்.
குரு அதன் மூலம் என்ன உணர்த்த நினைத்தார் என்றால்,
அலங்காரம் செய்வதற்குமுன் தெரியாத ஆபரணங்கள் இப்பொழுது தெரியவரும்,
அதனால் இந்த ஆபரணங்களை உடலில் போடும்போது இதன் உருவமும் நீரில் பிரதிபிம்பமாக தெரிகிறது
அதனால் இந்த உடம்புதான் நீரில் பிரதிபிம்பமாக தெரிகிறது, முடியும், நகமும் நீக்கியப்பின்னர் அவைகள் தெரியவில்லை.
எப்படி நகமும், முடியும் அழியக்கூடியவை, மாற்றதிற்குட்பட்டவையாக இருக்கிறதோ அதே போன்று இந்த உடலும்
மாறுதலுக்குட்பட்டவை அழிவை அடையக்கூடியவை, ஆனால் ஆத்மா நித்தியமானது என்று குரு கூறியிருப்பதை வைத்து
நீரில் தெரியும் தங்கள் உருவம் ஆத்மா அல்ல என்று உணரவேண்டும் என்று குரு நினைத்தார்.
இப்பொழுது என்ன பார்க்கிறீர்கள் என்று கேட்டார்.

இருவரும் முன்பு சொன்னபடியே, நாங்கள் எப்படி இருக்கிறோமோ அப்படியேதான் நீரில் தெரியும்
எங்களது உருவமும் இருக்கிறது என்று கூறினார்கள்.
அவர்கள் கொண்டிருந்த ஆத்மாவைப்பற்றிய தவறான அறிவிலேதான் இருக்கிறார்கள்,
புதியதாக கொடுக்கப்பட்ட குறிப்பினாலும் தங்கள் தவற்றை உணர்ந்து கொள்ளாமல ஆத்மாவை அறிந்துவிட்டோம்
என்ற திருப்தியான மனதுடன் குருவிடம் விடைப்பெற்று சென்று விட்டார்கள்.
இனியும் குறிப்பு கொடுத்து அவர்களை கஷடப்படுத்த விரும்பாத பிரஜாபதி, அவர்கள தானாக தங்களது தவறை
உணர்ந்தால் தான் அவர்களால் முழுமனதுடன் கவனிக்க முடியும் என்று எண்ணி அவர்களுக்கு விடை கொடுத்து அனுப்பினார்.
ஆத்மாவின் முதல் லட்சணத்தையே வைத்துக்கொண்டு முடிவுக்கு வந்து விட்டார்கள்,
மற்ற லட்சணங்களான நித்யமானது, பயமற்றது போன்றவற்றை சோதிக்காமல் விட்டு விட்டார்கள் என்று எண்ணினார்.

அனுபலப்யா – சரியாக புரிந்து கொள்ளாமல்
ப்ரோவாசா – உபதேசம் செய்தல்
பரிசர்ய – காக்கப்படவேண்டும்-

இப்படி தவறாக ஆத்மாவைப் பற்றி புரிந்து கொண்டு செல்கின்ற இருவரையும் பார்த்து, அவர்களில் காதுகளில் விழும்படி,
“ஆத்மாவைப்பற்றி தவறாக புரிந்து கொண்டும், நான் கூறிய ஆத்மாவின் எல்லா லட்சணங்களையும் சோதிக்காமல்,
சரியாக புரிந்து கொள்ளாமல் இருவரும் செல்கின்றனர். இவ்வாறு தவறாக யார் புரிந்து கொண்டாலும் அவர்கள்
ஆத்மாவின் ஸ்வரூபத்தை அறிந்து கொள்ளும் பாதையிலிருந்து விலகிச் செல்கிறார்கள் என்று கூறினார்.
அதை லட்சியம் செய்யாமல் இவர்கள் தங்கள் இருப்பிடத்தை நோக்கி செல்ல ஆரம்பித்தார்கள்.

விரோசனன் தன் இருப்பிடத்தை அடைந்தவுடனே எல்லோருக்கும் தான் புரிந்து கொண்ட தவறான ஆத்ம தத்துவத்தை
உபதேசம் செய்யத் தொடங்கினான். அதாவது ஸரீரம்தான் ஆத்மா, அதைத்தான் வழிபட வேண்டும், நன்கு கவனிக்கப்பட வேண்டும்,
அதைத்தான் வணங்க வேண்டும். இப்படி செய்வதால் நாம் எல்லா உலகங்களையும் அடைந்து விடுவோம்,
எல்லா ஆசைகளையும் நிறைவேற்றிக் கொள்ளலாம் என்று உபதேசித்தான்.

இப்பொழுதும் விரோசனனின் இந்த உபதேசத்தை பின்பற்றுவர்கள் இருக்கின்றார்கள்.
இவர்கள் தான தர்மங்களை செய்ய மாட்டார்கள், நல்ல காரியங்களை செய்ய மாட்டார்கள், இறை வழிபாடு செய்ய மாட்டார்கள்,
எதையும் தியாகம் செய்ய மாட்டார்கள், இவர்களை அசுரர்கள் என்று சொல்லலாம்
அல்லது அந்த பரம்பரையில் வந்தவர்கள் என்றும் சொல்லலாம்.
இந்த அசுரர்கள் பிணமாகப் போகும் இந்த உடலை நன்கு அலங்கரித்துக் கொள்வார்கள்,
நறுமணம் பூசி, ஆபரணங்கள் அணிந்துகொண்டு சுவையான உணவுப் பண்டங்களை உண்டு நன்கு பராமரித்து,
அழகான ஆடைகளை அணிவித்து மகிழ்வார்கள். இப்படி செய்வதால் எல்லா உலகங்களையும் அடைந்து விடலாம் என்று எண்ணுவார்கள்.

————-

அத² ஹேந்த்³ரோঽப்ராப்யைவ தே³வாநேதத்³ப⁴யம் த³த³ர்ஶ யதை²வ
க²ல்வயமஸ்மிஞ்ச²ரீரே ஸாத்⁴வலங்க்ருʼதே ஸாத்⁴வலங்க்ருʼதோ ப⁴வதி
ஸுவஸநே ஸுவஸந: பரிஷ்க்ருʼதே பரிஷ்க்ருʼத
ஏவமேவாயமஸ்மிந்நந்தே⁴ঽந்தோ⁴ ப⁴வதி ஸ்ராமே ஸ்ராம: பரிவ்ருʼக்ணே
பரிவ்ருʼக்ணோঽஸ்யைவ ஶரீரஸ்ய நாஶமந்வேஷ நஶ்யதி
நாஹமத்ர போ⁴க்³யம் பஶ்யாமீதி ॥ 8.9.1॥

ஸ ஸமித்பாணி: புநரேயாய தꣳ ஹ ப்ரஜாபதிருவாச
மக⁴வந்யச்சா²ந்தஹ்ருʼத³ய: ப்ராவ்ராஜீ: ஸார்த⁴ம் விரோசநேந
கிமிச்ச²ந்புநராக³ம இதி ஸ ஹோவாச யதை²வ க²ல்வயம்
ப⁴க³வோঽஸ்மிஞ்ச²ரீரே ஸாத்⁴வலங்க்ருʼதே ஸாத்⁴வலங்க்ருʼதோ ப⁴வதி
ஸுவஸநே ஸுவஸந: பரிஷ்க்ருʼதே பரிஷ்க்ருʼத
ஏவமேவாயமஸ்மிந்நந்தே⁴ঽந்தோ⁴ ப⁴வதி ஸ்ராமே ஸ்ராம:
பரிவ்ருʼக்ணே பரிவ்ருʼக்ணோঽஸ்யைவ ஶரீரஸ்ய நாஶமந்வேஷ
நஶ்யதி நாஹமத்ர போ⁴க்³யம் பஶ்யாமீதி ॥ 8.9.2॥

இந்திரன் -ஆத்மா தேகம் வாசி சங்கை -வந்து திரும்பி வந்து சமித் பாணியாக —
மீண்டும் -32-வருஷம்
ஸ்வப்னத்தில் உன்னை பார்த்தாய் அது தான் ஆத்மா என்று சொல்ல –
கெட்டுப்போகாது உடம்பைக்காட்டி -அவனுக்கு வந்த சங்கை தீர்த்து –

ஏவமேவைஷ மக⁴வந்நிதி ஹோவாசைதம் த்வேவ தே
பூ⁴யோঽநுவ்யாக்²யாஸ்யாமி வஸாபராணி த்³வாத்ரிꣳஶதம் வர்ஷாணீதி
ஸ ஹாபராணி த்³வாத்ரிꣳஶதம் வர்ஷாண்யுவாஸ தஸ்மை ஹோவாச
॥ 8.9.3॥

॥ இதி நவம: க²ண்ட:³ ॥

————————————–

காண்டம்-‍9

ஆனால் தேவர்களின் தலைவன் இந்திரன் தன் இருப்பிடத்தை அடைவதற்கு முன்னே குருவின் உபதேசத்தை
தீவிரமாக சிந்தித்து பார்க்கலானான். இயற்கையிலே அவனிடத்தில் உள்ள தெய்வீக குணங்களால் அவன் மனம் இவ்வாறு சிந்தித்தது.
அவன் தீர்மானித்த ஆத்ம தத்துவத்தில் அதாவது இந்த உடல்தான் ஆத்மா என்று புரிந்து கொண்டதில் ஏதோ குறை இருப்பதாக உணர்ந்தான்.
நீரில் தெரிந்த தன் உருவத்தைப்பற்றி விசாரம் செய்ய சொன்ன குருவின் உபதேசன் அவனுக்கு கொஞ்ச கொஞ்சமாக புரிய ஆரம்பித்தது.
எப்படி நீரில் தெரிந்த தன் உருவம், தன் ஸரீரத்தை எப்படியெல்லாமோ மாற்றுகிறோமோ அப்படியே காட்சியளிக்கிறது.
ஒரு கண் போனாலும் அல்லது கால் போனாலும் அதிலும் அப்படியே காட்சியளிக்கிறது, இந்த உடலே அழிந்து போனாலும்
அந்த உருவமும் அழிந்துதான் போகும் என்று குழம்பிப்போனான். எனவே தான் கொண்ட முடிவில் ஏதோ குறை இருக்கிறது
என்ற முடிவுக்கு வந்தான். ஸ்தூல ஸரீரமே ஆத்மா என்ற விஷயத்தில் குறையைக் கண்டான்.

குண ஆதானம் – நற்குணத்தை சேர்க்கிறோம்
தோஷ அபனயனம் – குறைகளை நீக்குதல்
தோஷ தரிசனம் – குறையைக் கண்டு கொண்டால்
நிஷேதம் ஹேது – அதை நீக்கி விடுவோம்.

ஆத்மாவை மூன்று விதமான திரைகள் மறைத்துக் கொண்டிருக்கின்றன. அவைகள் ஸ்தூல, சூட்சும மற்றும் காரண ஸரீரம்.

மற்றவர்களிடம் குறையைக் காணலாம் ஆனால் அதைப்பற்றி மற்றவர்களிடத்திலே விமர்சிக்கக் கூடாது
அல்லது அவரிடத்திலேயே கூறி அவரை அவமதிக்க கூடாது. எல்லாவற்றிலும் தோஷத்தைக் காண்பதில் தவறில்லை,
குறையை கண்டால்தான் அதை நீக்க முடியும்.

குருவானவர் ஒரு நிலை வரைதான் உபதேசம் செய்வார். சிஷ்யன்தான் முயற்சி செய்து அவர் செய்த உபதேசத்தை
விசாரித்து பின் அறிவை அடைய வேண்டும். குருவிடம் பெற்ற ஞானத்தை தானே சுயமாக மேலும் மேலும் சிந்தித்து
அந்த ஞானத்தில் நிலை பெற வேண்டும்.

ஒவ்வொருவருடைய சித்தசுத்தியும், நற்குணங்களும் அவன் தவறாக ஒன்றை நினைக்கும் போது,
அது தவறு என்று புத்தியைக் கொண்டு சரியான நேரத்தில் எச்சரிக்கும். சரியான அறிவை அடைய வேண்டுமென்றால்
மற்றவர்களை ஹிம்சை பண்ணக்கூடாது. சித்தஸுத்திதான் நம் புத்தியை, ஸ்ம்ருதியை சரியான நேரத்தில் தூண்டுவதற்கு காரணமாக இருக்கும்

இந்திரனின் விசாரங்கள்:
இந்த உடலில் நல்லாடைகளை உடுத்தினால், நீரில் தெரியும் பிம்பத்திலும் அதேமாதிரி இருக்கிறது.
ஆபரணங்களை அணிந்தாலும் அப்படியே காட்டுகிறது. இரண்டு கண்களை இழந்தாலும் அல்லது ஏதாவது
அங்கங்களை இழந்தாலும் அப்படியே அதுவும் காட்டும். முதுகு வளைந்து இருந்தால் அதிலும் அப்படியே இருக்கும்.
இந்த உடல் அழிந்து போனால் அதிலும் அழிந்து போகும். இப்படி விசாரம் செய்து இரண்டு தோஷத்தை அவன் கண்டான்.

தோஷம்-1: இந்த பிரதிபிம்பம் சுதந்திரமாக இல்லை, அது உண்மைப்பொருளை சார்ந்திருக்கிறது.
தோஷம்-2: உடலில் ஏற்படும் மாற்றங்கள் (தேய்மானங்கள்)
தோஷம்-3: உடலின் அழிவையும் உணர்கின்றான்.

நான் இந்த அறிவில் போக்யத்தை பார்க்கவில்லை என்று இந்திரன் சிந்தித்தான்.

இந்த தோஷத்தை நீக்கிக்கொள்ள மீண்டும் சமித்பாணியுடன் குருவை சென்றடைந்தான். குரு அவனைப்பார்த்து,
“நீங்கள் இருவரும் நன்றாக புரிந்து விட்டது என்று சென்று விட்டீர்கள், பின் எதை அறிவதற்காக திரும்பவும் வந்திருக்கிறாய்?” என்று கேட்டார்.
இந்திரன் தான் புரிந்து கொண்டதில் தோஷம் இருப்பதாகவும், அதை நீக்கிக் கொள்வதற்காக வந்திருக்கிறேன் என்று சொல்லிவிட்டு,
தான் யோசித்ததையெல்லாம் அவரிடம் பகிர்ந்து கொண்டான். நான் இப்போது ஸ்தூல ஸரீரம் ஆத்மாவல்ல என்பதை உணர்ந்து கொண்டேன்,
ஆனால் அதை நீக்கும் வழி தெரியாமல் இருப்பதை எடுத்துரைத்தான்.

குருவும் இந்திரன் சொன்னதை சரிதான் என்று ஆமோதித்து, உன்னுடைய சரீரம் ஆத்மா அல்ல என்று நினைத்தது சரிதான்,
உனக்கு மேலும் உபதேசம் செய்கிறேன் ஆனால், “நீ ஸித்தசுத்தி உடையவனாக இருந்திருந்தால் நான் முன்பு உபதேசித்ததை
உடனடியாக புரிந்து கொண்டிருப்பாய். எனவே உன்னிடத்தில் உள்ள குறைகளை நீக்கி மீண்டும் தெளிவான அறிவையடைய
இன்னும் 32 வருஷங்கள் குருகுலத்தில் இருந்து சேவை செய்து கொண்டிரு” என்று கூறினார்.
32 வருஷங்கள் கழிந்தது அவனது குறைகள் எல்லாம் நீங்கப்பெற்றது. குருவானவர் உபதேசத்தை ஆரம்பித்தார்.

————–

ய ஏஷ ஸ்வப்நே மஹீயமாநஶ்சரத்யேஷ ஆத்மேதி
ஹோவாசைதத³ம்ருʼதமப⁴யமேதத்³ப்³ரஹ்மேதி ஸ ஹ ஶாந்தஹ்ருʼத³ய:
ப்ரவவ்ராஜ ஸ ஹாப்ராப்யைவ தே³வாநேதத்³ப⁴யம் த³த³ர்ஶ
தத்³யத்³யபீத³ꣳ ஶரீரமந்த⁴ம் ப⁴வத்யநந்த:⁴ ஸ ப⁴வதி யதி³
ஸ்ராமமஸ்ராமோ நைவைஷோঽஸ்ய தோ³ஷேண து³ஷ்யதி ॥ 8.10.1॥

ந வதே⁴நாஸ்ய ஹந்யதே நாஸ்ய ஸ்ராம்யேண ஸ்ராமோ க்⁴நந்தி த்வேவைநம்
விச்சா²த³யந்தீவாப்ரியவேத்தேவ ப⁴வத்யபி ரோதி³தீவ நாஹமத்ர
போ⁴க்³யம் பஶ்யாமீதி ॥ 8.10.2॥

ஸ ஸமித்பாணி: புநரேயாய தꣳ ஹ ப்ரஜாபதிருவாச
மக⁴வந்யச்சா²ந்தஹ்ருʼத³ய: ப்ராவ்ராஜீ: கிமிச்ச²ந்புநராக³ம
இதி ஸ ஹோவாச தத்³யத்³யபீத³ம் ப⁴க³வ: ஶரீரமந்த⁴ம் ப⁴வத்யநந்த:⁴
ஸ ப⁴வதி யதி³ ஸ்ராமமஸ்ராமோ நைவைஷோঽஸ்ய தோ³ஷேண து³ஷ்யதி
॥ 8.10.3॥

ந வதே⁴நாஸ்ய ஹந்யதே நாஸ்ய ஸ்ராம்யேண ஸ்ராமோ க்⁴நந்தி த்வேவைநம்
விச்சா²த³யந்தீவாப்ரியவேத்தேவ ப⁴வத்யபி ரோதி³தீவ நாஹமத்ர
போ⁴க்³யம் பஶ்யாமீத்யேவமேவைஷ மக⁴வந்நிதி ஹோவாசைதம் த்வேவ தே
பூ⁴யோঽநுவ்யாக்²யாஸ்யாமி வஸாபராணி த்³வாத்ரிꣳஶதம் வர்ஷாணீதி
ஸ ஹாபராணி த்³வாத்ரிꣳஶதம் வர்ஷாண்யுவாஸ தஸ்மை ஹோவாச
॥ 8.10.4॥

அதையும் பாம்பு கடிக்க -சங்கை –மேலும் -32–வருஷம்
ஆழ்ந்த நிலை உறக்கம் -தான் ஆத்மா
நான் தெரியாதே மேலும் சங்கை -5- வருஷம்
ஆக -101-வருஷம் இருந்து ஆத்மாவை அறிந்தான் இந்திரன் –

॥ இதி த³ஶம: க²ண்ட:³ ॥

——————————————

காண்டம்-‍10
எதிலிருந்து துக்கமும், துயரமும் வருகிறது என்று ஆராய்ந்து பார்த்தால், நாம் எந்த கோசத்தில் இருக்கிறோம் என்று தெரிந்து விடும்.
எவனொருவன் கனவில் விவகாரங்களை செய்து கொண்டிருக்கிறானோ அவன்தான் ஆத்மா (தைஜஸன்), இந்த ஆத்மா மரணமற்றது, பயமற்றது.

குரு உபதேசித்த கருத்து : தைஜஸனும், சூட்சும உலகின் அதிபதியாக இருக்கும் ஹிரன்யகர்ப்பனும் ஒன்றே என்று ஐக்கியப்படுத்துதல்.

தைஜஸன் வாக்யார்த்தம்:
அந்தப் பிரக்ஞன் – நம் ம்னதிற்குள் இருக்கும் எண்ணங்களை பார்த்துக்கொண்டிருப்பவன் –
ஆத்மாவுடன் சூட்சும சரீரத்தில் அபிமானம் வைத்து கொண்டு இருப்பவன்.
தைஜஸன் லட்சியார்த்தம்: ஸ்தூல பஞசபூதங்கள் ஜடமானது என்றால், சூட்சும பஞச பூதங்களும் ஜடமானதுதான்.
ஜடமான மனம் எதனால் அறிவை, உணர்வை அடைகிறது? ஜடமான மனதை பிரகாசிக்கச் செய்வது ஆத்மாதான்.
எனவே ஆத்ம வேறு மனம் வேறு. இங்கே அறிபவன் ஆத்மா, அறியப்படுவது மனது.

இந்திரன் புரிந்து கொண்டது: எந்த அறிவு ஸ்வரூபம் என் மனதை பிரகாசிக்கின்றதோ அதுதான் அனைத்து மனங்களையும் பிரகாசிக்கிறது.
கனவில் விளங்கிக்கொண்டிருக்கும் சூட்சும ஸரீரம்தான், அதாவது மனம்தான் ஆத்மா என்று இந்திரன் தவறாக புரிந்து கொண்டான்.
எனவே தனக்கு நன்றாக புரிந்துவிட்டது என்று கூறிவிட்டு திரும்பவும் சென்றுவிட்டான்.

ஆனால் அவன் தேவலோகத்தை அடைவதற்கு முன், தான் புரிந்து கொண்ட ஆத்ம தத்துவத்தில் திரும்பவும் தோஷத்தைக் கண்டான்.
அவன் இவ்வாறாக எண்ணினான். ஸ்தூல சரீரத்தில் கண்கள் இல்லையென்றாலும், சூட்சும சரீரம் பார்வை இழப்பதில்லை.
ஸ்தூல சரீரத்தில் ஒரு கண் இல்லையென்றாலும், சூட்சும சரீரம் ஒரு கண் இழப்பதில்லை.
ஸ்தூல சரீரத்திற்கு எந்த குறை வந்தாலும் அது சூட்சும சரீரத்தை பாதிப்பதில்லை.
இவையெல்லாம் ஸ்தூல சரீரத்தின் மீதுள்ள அபிமானம் நீங்கினால் இப்படி தெரியவரும்.
ஸ்தூல சரீரம் இறந்தாலும் மனம் இறப்பதில்லை. அது வேறு ஜென்மத்தை எடுக்கிறது. இந்த மனமானது துயரப்படுகிறது, துரத்தப்படுகிறது.
இது குருவின் உபதேசத்திற்கு எதிராக இருக்கிறது. எனவே புரிந்து கொண்டதில் எதோ தவறு இருக்கிறது
என்று உணர்ந்த அவன் மீண்டும் சமித் பாணியுடன் குருவை வந்தடைந்தான்.

குரு அவனைப் பார்த்து, எனக்கு புரிந்து விட்டது என்று சென்று விட்டாய், பிறகு திரும்ப ஏன் வந்திருக்கிறாய்? என்று கேட்டார்.
இந்திரன் தான் புரிந்து கொண்ட சூட்சும சரீரத்தில் உள்ள தோஷத்தை சொல்ல ஆரம்பித்தான்.
இந்த ஸ்தூல சரீரம் அழிந்தாலும், சூட்சும சரீரம் அழிவதில்லை,
இதற்கு நோய் வந்தால், அதற்கு வருவதில்லை, சூட்சும சரீரம் தாக்கப்படுகிறது, துயரப்படுகிறது,
கஷ்டங்களை கண்டு அழுகிறது. ஆகவே நான் சூட்சும சரீரமே ஆத்மா என்று நினைத்ததில் குறை இருப்பதாக உணர்கிறேன் என்று கூறினான்.
குருவும் நீ நினைத்தது சரிதான் என்று ஆமோதித்தார். நான் மீண்டும் உனக்கு உபதேசம் செய்கிறேன்
ஆனால் நீ இன்னும் 32 வருஷங்கள் குருகுல வாசத்தில் இருந்து ஸித்தசுத்தி அடைவாயாக என்று கூறினார்.
32 வருஷங்கள் முடிந்ததும் உபதேசத்தை ஆரம்பித்தார்.

——————

தத்³யத்ரைதத்ஸுப்த: ஸமஸ்த: ஸம்ப்ரஸந்ந: ஸ்வப்நம் ந விஜாநாத்யேஷ
ஆத்மேதி ஹோவாசைதத³ம்ருʼதமப⁴யமேதத்³ப்³ரஹ்மேதி ஸ ஹ ஶாந்தஹ்ருʼத³ய:
ப்ரவவ்ராஜ ஸ ஹாப்ராப்யைவ தே³வாநேதத்³ப⁴யம் த³த³ர்ஶ நாஹ
க²ல்வயமேவꣳ ஸம்ப்ரத்யாத்மாநம் ஜாநாத்யயமஹமஸ்மீதி
நோ ஏவேமாநி பூ⁴தாநி விநாஶமேவாபீதோ ப⁴வதி நாஹமத்ர
போ⁴க்³யம் பஶ்யாமீதி ॥ 8.11.1॥

ஸ ஸமித்பாணி: புநரேயாய தꣳ ஹ ப்ரஜாபதிருவாச
மக⁴வந்யச்சா²ந்தஹ்ருʼத³ய: ப்ராவ்ராஜீ: கிமிச்ச²ந்புநராக³ம இதி
ஸ ஹோவாச நாஹ க²ல்வயம் ப⁴க³வ ஏவꣳ ஸம்ப்ரத்யாத்மாநம்
ஜாநாத்யயமஹமஸ்மீதி நோ ஏவேமாநி பூ⁴தாநி
விநாஶமேவாபீதோ ப⁴வதி நாஹமத்ர போ⁴க்³யம் பஶ்யாமீதி
॥ 8.11.2॥

ஏவமேவைஷ மக⁴வந்நிதி ஹோவாசைதம் த்வேவ தே
பூ⁴யோঽநுவ்யாக்²யாஸ்யாமி நோ ஏவாந்யத்ரைதஸ்மாத்³வஸாபராணி
பஞ்ச வர்ஷாணீதி ஸ ஹாபராணி பஞ்ச வர்ஷாண்யுவாஸ
தாந்யேகஶதꣳ ஸம்பேது³ரேதத்தத்³யதா³ஹுரேகஶதꣳ ஹ வை வர்ஷாணி
மக⁴வாந்ப்ரஜாபதௌ ப்³ரஹ்மசர்யமுவாஸ தஸ்மை ஹோவாச ॥ 8.11.3॥

॥ இதி ஏகாத³ஶ: க²ண்ட:³ ॥

———————————————-

காண்டம்-‍11
எவனொருவன் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறானோ, இந்திரியங்களிலிருந்து விலகி இருக்கின்றானோ,
சூட்சும சரீரத்திலிருந்து விலகியிருக்கின்றானோ, எப்பொழுதும் சாந்தமாக இருக்கிறானோ, கனவுகளில்லாதவனாக இருக்கிறானோ,
உள் மற்றும் வெளி விஷயங்களின் சம்பந்தத்தினால் விக்ஷேபங்கள் இல்லாமல் இருக்கிறானோ,
அவன்தான் ஆத்மா என்று அறிந்து கொள், அது நித்தியமானது, பயமற்றது, அதுவே பிரம்மம்.

காரண சரீரத்தை நீக்கி அதை பிரகாசிக்கிற சைதன்யத்தை எடுத்துக்கொண்டு காரண பிரபஞ்சம்,
மாயையே ஆதாரமாக கொண்டிருக்கிற சைதன்யமும் ஒன்று என்று புரிந்து கொண்டால் அது மஹா வாக்கியமாகும்.

இப்பொழுது இந்திரன் காரண சரீரத்தை ஆத்மா என்று புரிந்து கொண்டு திருப்தியாக சென்று விட்டான்.
ஆனால் தேவலோகத்தை அடைவதற்கு முன் தான் கொண்ட முடிவில் திரும்பவும் தோஷத்தைக் கண்டான்.

அறியாமையால் துக்கம் இல்லை, ஆனால் துக்கத்தின் விதை இருக்கிறது.
ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பவன் தன்னையே அறியாதவனாக இருக்கிறான், இந்த உலகத்தையே அறியாதானாக இருக்கிறான்.
எனவே தன்னையே இழந்து விட்டவனாக இருக்கிறான். இவன் நாசத்தையே கொடுப்பது போல இருப்பதால்,
நான் எடுத்த முடிவில் எந்த பயனும் இல்லை.
சங்கரர் கூறுகிறார், “அறிவு இருக்கும்போது அறிபவனுடைய இருப்பு அறியப்படுகிறது,
அறிவற்று இருக்கும்போது அறிபவனுடைய இருப்பை அறிய முடியாது”

இவ்வாறு காரண சரீரத்திலும் குறையைக் கண்டு திரும்பவும் சமித்பாணியுடன் குருவிடம் திரும்பவும் வந்தான்.
குரு அவனைப் பார்த்து, எனக்கு புரிந்து விட்டது என்று சென்று விட்டாய், பிறகு திரும்ப ஏன் வந்திருக்கிறாய்? என்று கேட்டார்.
இந்திரன் தான் தவறாக புரிந்து கொண்டதில் உள்ள குறையைக அவரிடம் கூறினான்.
ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பவன் தன்னையும் அறியவில்லை, தன்னை சுற்றியுள்ள உலகத்தையும் அறியவில்லை.
இந்த அறியாமை அழிவிற்குத்தான் கொண்டு செல்லும் எனவே அவன் எடுத்த முடிவில் குறையிருப்பதாக கூறி மேலும் உபதேசிக்குமாறு வேண்டினான்.

உன்னுடைய சிந்தனை சரிதான், நான் மீண்டும் உனக்கு உபதேசம் செய்கிறேன் ஆனால் உன்னிடத்தில் இன்னும்
கொஞ்சம் குறை இருப்பதால் மறுபடியும் ஐந்து வருடங்கள் குருகுலவாசம் செய்யும்படி பணித்தார்.
ஐந்து வருடங்கள் கழிந்ததும் மீண்டும் அவர் உபதேசத்தை ஆரம்பித்தார்.
இந்திரன் இதைச் சேர்த்து மொத்தம் 101 வருடங்கள் குருகுலத்தில் கழித்தான்.

——————

மக⁴வந்மர்த்யம் வா இத³ꣳ ஶரீரமாத்தம் ம்ருʼத்யுநா
தத³ஸ்யாம்ருʼதஸ்யாஶரீரஸ்யாத்மநோঽதி⁴ஷ்டா²நமாத்தோ வை
ஸஶரீர: ப்ரியாப்ரியாப்⁴யாம் ந வை ஸஶரீரஸ்ய ஸத:
ப்ரியாப்ரியயோரபஹதிரஸ்த்யஶரீரம் வாவ ஸந்தம் ந
ப்ரியாப்ரியே ஸ்ப்ருʼஶத: ॥ 8.12.1॥

அஶரீரோ வாயுரப்⁴ரம் வித்³யுத்ஸ்தநயித்நுரஶரீராண்யேதாநி
தத்³யதை²தாந்யமுஷ்மாதா³காஶாத்ஸமுத்தா²ய பரம் ஜ்யோதிருபஸம்பத்³ய
ஸ்வேந ரூபேணாபி⁴நிஷ்பத்³யந்தே ॥ 8.12.2॥।

ஏவமேவைஷ ஸம்ப்ரஸாதோ³ঽஸ்மாச்ச²ரீராத்ஸமுத்தா²ய பரம்
ஜ்யோதிருபஸம்பத்³ய ஸ்வேந ரூபேணாபி⁴நிஷ்பத்³யதே ஸ உத்தமபுருஷ:
ஸ தத்ர பர்யேதி ஜக்ஷத்க்ரீட³ந்ரமமாண: ஸ்த்ரீபி⁴ர்வா யாநைர்வா
ஜ்ஞாதிபி⁴ர்வா நோபஜநꣳ ஸ்மரந்நித³ꣳ ஶரீரꣳ ஸ யதா²
ப்ரயோக்³ய ஆசரணே யுக்த ஏவமேவாயமஸ்மிஞ்ச²ரீரே
ப்ராணோ யுக்த: ॥ 8.12.3॥

அத² யத்ரைததா³காஶமநுவிஷண்ணம் சக்ஷு: ஸ சாக்ஷுஷ:
புருஷோ த³ர்ஶநாய சக்ஷுரத² யோ வேதே³த³ம் ஜிக்⁴ராணீதி ஸ ஆத்மா
க³ந்தா⁴ய க்⁴ராணமத² யோ வேதே³த³மபி⁴வ்யாஹராணீதி ஸ
ஆத்மாபி⁴வ்யாஹாராய வாக³த² யோ வேதே³த³ꣳ ஶ்ருʼணவாநீதி
ஸ ஆத்மா ஶ்ரவணாய ஶ்ரோத்ரம் ॥ 8.12.4॥

பார்க்கிறான் கண்ணால் அல்ல -அனைத்தும் சங்கல்பத்தால் -சங்கல்ப ரூப ஞானம்

அத² யோ வேதே³த³ம் மந்வாநீதி ஸாத்மா மநோঽஸ்ய தை³வம் சக்ஷு:
ஸ வா ஏஷ ஏதேந தை³வேந சக்ஷுஷா மநஸைதாந்காமாந்பஶ்யந்ரமதே
ய ஏதே ப்³ரஹ்மலோகே ॥ 8.12.5॥

தம் வா ஏதம் தே³வா ஆத்மாநமுபாஸதே தஸ்மாத்தேஷாꣳ ஸர்வே ச
லோகா ஆத்தா: ஸர்வே ச காமா: ஸ ஸர்வாꣳஶ்ச லோகாநாப்நோதி
ஸர்வாꣳஶ்ச காமாந்யஸ்தமாத்மாநமநுவித்³ய விஜாநாதீதி ஹ
ப்ர்ஜாபதிருவாச ப்ரஜாபதிருவாச ॥ 8.12.6॥

தேகம் ஸ்வப்னம் ஆழ் நிலை-எதுவும் இல்லை -உடம்பில் விட்டு கிளம்பினவன் தான் ஆத்மா
செயற்கை கர்மாவால் சிக்கி உள்ளான்

॥ இதி த்³வாத³ஶ: க²ண்ட:³ ॥

காண்டம்-‍12
சரீரமே சம்சாரம்: சம்சார அனுபவம் விஸ்வனுக்கும், தைஜஸனுக்கும் இருக்கிறது.
காரண சரீரத்தில் சம்சாரம் இல்லை, மோட்சமும் இல்லை. ஆனால் சம்சாரத்தின் விதை இருக்கிறது.

இந்த மந்திரத்தில் மூன்று சரீரங்களை நிஷேதம் செய்யப்படுகிறது. அதுவும் நேரிடையாக நீக்குகிறார்.
சரீரமற்ற நிலை மோக்ஷம், சரீரத்துடன் இருப்பது சம்சாரம்.
சரீர ஸ்வரூபம், ஆத்ம ஸ்வரூபம், ஆத்மாவுக்கும் சரீரத்திற்கும் உள்ள சம்பந்தம், சரீர அபிமான பலன்,
எப்பொழுது ஆத்ம சரீரமற்றதாக இருக்கிறது இவைகளெல்லாம் விளக்கப்படுகிறது.

சரீர ஸ்வரூபம்: இந்த உடலானது மரணத்திற்குட்பட்டது. இது மரணத்தால் வியாபிக்கப்பட்டிருக்கிறது.
எல்லா நேரத்திலேயும் மரணம் அடைந்துக்கொண்டே இருக்கிறது. இதைத்தெரிந்து கொண்டால்தான நமக்கு வைராக்யம் வரும்.
பிறகு சரீரத்தின் மேல் உள்ள அபிமானம் சென்று விடும். இறப்பை ஒவ்வொரு க்ஷணமும் அனுபவித்துக் கொண்டிருக்கிறேன்
என்று உணர்ந்துகொண்டால் நாம் மரணத்தைக் கண்டு பயப்படமாட்டோம். சரீரம் மாற்றத்தை அடைந்துக் கொண்டேயிருப்பது,
இதை ஆழ்ந்துணர்ந்து கொண்டால் அதை ஏற்றுக் கொள்ளக்கூடிய மனப்பக்குவம் வரும்.
சரீரம் துயரத்துக்குட்பட்டது, சுக-துக்கங்களுக்கு உட்பட்டது இதன் சுபாவமே அப்படி இருப்பதுதான்.
எனவே சரீர அபிமானம் தான் அதன் இருப்பு. இந்த சரீரத்தின் தோற்றம் நாம் செய்த தர்ம-அதர்மத்தின் மூலமாக அடைவது.

ஆத்ம ஸ்வரூபம்: இது மரணமற்றது, சரீரமற்றது, சரீரத்திற்கு அதிஷ்டானமாக விளங்குவது,
பயமற்றது, துக்கமற்றது, மாற்றத்திற்குட்படாதது, சுக-துக்கங்களுக்கு அப்பாற்பட்டது, நித்தியானந்த ஸ்வரூபம்

ஆத்ம-சரீர சம்பந்தம்:
இது சத்யமான பொருளுக்கும், மித்யாவான பொருளுக்கும் உள்ள உறவை போன்றது. சரீரம் மாற்றத்தையடைந்து பின் அழிகிறது.
ஆனால் ஆத்மா நித்யமானது, மாற்றத்திற்குட்படாதது. இந்த சம்பந்தத்தை அதிஷ்டானம் என்ற சொல்லால் விளக்கப்படுகிறது.
இந்த சொல்லுக்கு மூன்று பொருள்களை சஙராச்சாரியார் கூறியிருக்கிறார்.
1. ஆத்மாவின் போகத்திற்காக இருக்கும் இடமாக சரீரம் உள்ளது. ஸ்தூல சரீரம் ஜடமாக இருப்பதால் அது எதையும் அனுபவிக்காது.
எனவே ஆத்மா சூக்ஷ்ம சரீரத்தையும், ஸ்தூல சரீரத்தையும் உலக விஷயங்களை அனுபவிப்பதற்கு கருவியாக பயன்படுத்திக்கொள்கிறது.
ஆத்மா சிதாபாஸ ரூபத்தில் இருந்து இந்த உலகத்தை அனுபவிக்கின்றது.
2. ஜீவ ரூபமாக இந்த உடலில் பிரவேசித்து தலைவனாக இருக்க இருப்பிடமாக உடலை பயன்படுத்திக்கொள்கிறது.
3. ஆத்மாவிடமிருந்து தோன்றியதுதான் சரீரம். (உ-ம்) கயிற்றில் தோன்றிய பாம்பு போல்.

சரீர அபிமான பலன்:
சரீரத்தில் அபிமானம் வைப்பதால் அடையும் பிரயோஜனம் அல்லது ஏற்படும் விளைவு சம்சாரம்,
சுக-துக்கங்களை அனுபவித்தல். சரீரத்தில் அபிமானம் இல்லாதிருப்பதால் அடையும் விளைவு மோக்ஷம்.
நான், என்னுடையது என்ற சரீர அபிமானத்தை உடையவன் ராக-துவேஷத்தால் ஆட்கொள்ளப்படுகிறான்,
விருப்பு-வெறுப்புக்களால் பிடிபட்டவனாக இருப்பான்.
தேகத்தில் அபிமானம் வைத்துக்கொண்டிருக்கும்வரை விருப்பு-வெறுப்புகளிலிருந்து விடுதலை கிடையாது.

தினமும் நமக்கு சுக-துக்க அனுபவங்கள் வருகிறது. சம்சாரம் எதைக் குறிக்கிறது என்றால்,
உடல் அனுபவிக்கும் இந்த சுக-துக்கங்கள்தான். இதை நீக்கும் உபாயத்தை உபநிஷத் கூறவில்லை.
நாம் இதை அனுபவித்துத்தான் தீர்க்க வேண்டும். வெளியில் இருந்து வரும் துக்கத்திலும் சுகத்தைக்காணலாம்,
சுகத்திலும் துக்கத்தைக் காணலாம். எனவே இந்த சுக-துக்கங்களிலிருந்து விடுதலையடைவது மோக்ஷமல்ல, சம்சாரமும் அல்ல.

நாம்தான் இது எனக்குப்பிடித்தது, பிடிக்காத்து என்று பிரித்து வைக்கிறோம்.
பிடிக்காததை அனுபவிக்கும்போது மனதில் ஏற்படும் தாக்கம்தான் சம்சாரம் என்று கூறப்படுகிறது,
எனவே வெளியில் இருக்கும் சுக-துக்கங்களை கொடுக்கக்கூடிய பொருட்கள் சம்சாரம் இல்லை என்று உறுதியாகிறது.
ஒருவர் நம் மனத்தை புண்படுத்தும் சொற்களைக் கொண்டு திட்டினால் அவைகள் நமக்கு புரியாத விஷயமாக
இருக்கும் போது நமக்கு கோபமோ, வெறுப்போ வருவதில்லை. இந்திரியங்கள் ஒரு விஷயத்தோடு சேர்ந்து சுகத்தை அனுபவிக்கலாம்.
ஆனால் அது துக்கதிற்கான விதை என்று அறிந்து கொள்ள வேண்டும். நாம் அந்தப்பொருளை இழக்கும் போது அதுவே நமக்கு துக்கத்தை கொடுக்கும்.

இந்த விருப்பு-வெறுப்புக்கள் வரக்காரணம் என்ன? அதை எப்படி நீக்குவது?
சரீரத்தில் அபிமானம் வைக்கும்போதுதான் பிரியம்-அபிரியம் நமக்கு தோன்றும். இந்த அபிமானம் நீங்கினால் இதுவும் விலகி விடும்.

கேள்வி-1
ஆழ்ந்த உறக்கத்தில் இந்த விருப்பு-வெறுப்புக்கள் வரவில்லையே, துரியனாக் இருந்து ஏன் இதை அடைய வேண்டும்?
பிரியம் இரண்டு வகையாக பிரிக்கப்படுகிறது, அவைகள் சம்சாரப்பிரியம், ஞானியின்பிரியம்.
சம்சாரம் பிரியமானது விஷயமாகவும் அனுபவிப்பவன் விஷயி என்ற நிலையை உடையவனாகவும் இருக்கிறான்.
இங்கே பிரியம் வஸ்துவாக இருக்கிறது, வந்து போகும் தன்மையுடையது. ஞானியின் பிரியம் பேதமற்றது,
இங்கே அவனே பிரியமாக இருக்கிறான் எனவே பிரியம் நிரந்தரமானது.

கேள்வி-2
ஆத்மாவை அறிந்தால், எல்லா உலகங்களையும் அடையலாம். எல்லா ஆசைகளும் நிறைவேறும் என்று பிரஜாபதி முதலில் கூறினார்,
ஆனால் எல்லா ஸ்தூல வஸ்துவையும் விட்டுவிட வேண்டும் என்பது இந்திரனை ஏமாற்றுவது போல இருக்கிறதே?
குருவானவர் இந்திரனின் சித்தஸுத்தியைப் பார்த்துவிட்டு அவனுக்கு மோட்சத்தை அடைய உதவி செய்வதின்மூலம்
அவனுக்கு மிகப்பெரிய நன்மையை செய்ய நினைத்தார். எனவே அவன் எதிர்பார்த்த ஆசையை நிறைவேற்றவில்லை.
சரீரத்தில் அபிமானம் இல்லாமல் இருந்து கொண்டேயிருப்பவன் இந்த விருப்பும் வெறுப்பும் அவனை தொடுவதில்லை, பாதிக்காது.

வேண்டும், வேண்டாமை இரண்டுமே ஆசையை குறிக்கும். எந்த ஆசையானது பூர்த்தியாக வேண்டும் என்று
நிபந்தனையுள்ளதாக இருக்கிறதோ அதற்கு பந்த ஆசை என்று பெயர்.
மற்றொன்று நிபந்தனையற்ற ஆசை, பந்தமற்ற ஆசை அதுதான் ஞானியின் ஆசை.

அறிவினால் மட்டுமே சரீரத்தின் மீதுள்ள அபிமானத்தை விடமுடியும்.
இந்த நிலையில் நம்மை விருப்பு வெறுப்பு தாக்காது. ஏனென்றால் அது நிபந்தனைக்குட்பட்டதாக இல்லை.

ஆத்மா சரீரத்துடன் சேர்ந்து உருவமற்று இருக்கிறது. பின்பு சரீரத்தை விட்டு பிரிந்தவுடன்
தன் சொந்த ஸ்வரூபத்துடன் ஆகாசத்தில் கலந்து விடுகிறது.
சரீரமற்ற வாயு, ஆகாசம், இடி மின்னல் யாவும் சூரியனின் சக்தியால் தன் சுய ரூபத்துடன் வெளிப்படுகிறது.

விஸ்வன் – வியாக்ருத புருஷ – வெளிதோற்றத்துக்கு வந்து விவகாரத்தில் இருப்பவன்
ப்ராக்ஞன் – அவ்யாக்ருத புருஷ- வெளிதோற்றத்துக்கு வராமல் விவகாரம் இல்லாது இருப்பான்.
இந்த இரண்டு விதமான புருஷர்களை தவிர்த்து, உத்தம புருஷனான சம்சாரமற்றவன் ஞானி என்று அழைக்கப்படுவான்.
இந்த உத்தம புருஷன் உடலில் மீது உள்ள அபிமானத்தை விட்டுவிட்டு பரஞ்சோதியில் கலந்து,தன் சொந்த ஸ்வரூபமாகத் தோன்றுகிறான்.
அவன் மரணமடைவதில்லை, பிராரப்த கர்ம்ம் இருக்கும்வரை இந்த உடலில் இருந்து கொண்டு மகிழ்ச்சியாக இருக்கிறான்.

அக்ஞானி சரீரத்துடன் எல்லாவற்றையும் அனுபவிக்கின்றவனாக இருக்கிறான்.
ஞானியானவன் சரீர அபிமானமேயில்லாமல் அனுபவிப்பான். ஞானி எல்லோரையும் போல விளையாடுவான்,
மகிழ்ச்சியோடு இருப்பான், பெண்கள், குழந்தைகள், வாகனங்கள், உறவினர்கள் இவர்களோடும் விளையாடுவான்
ஆனால் உடல் மீதுள்ள அபிமானம் முழுவதுமாக விட்டுவிட்ட நிலையில் இருப்பான்.
எந்தப் பொருட்களெல்லாம் நமக்கு போகப் பொருட்களாக இருந்ததோ அவைகளெல்லாம் ஞானமடைந்தவுடன் அப்படியிருக்காது.
எப்படி குதிரையானது வண்டியோடு இணைக்கப்பட்டிருக்கிறதோ அதுபோல இந்த ஆத்மா சரீரத்துடன் இணைக்கப்பட்டிருக்கிறது.
ஞானியானவன் தன்னுடல் என்ற அபிமானம் இல்லாமல் உலக விவகாரங்களில் ஈடுபடுகிறான் ஆனால் பந்தப்படுவதில்லை.
இது ஜீவன் முக்தன் நிலையென்று விளக்கியிருக்கிறது உபநிஷத்.

ஆத்மா உடல், உடலிலுள்ள இந்திரியங்களிலிருந்து வேறுபட்டது, அறிபவனை அறிவது,
எது இந்த உலகத்தை அறிந்து கொண்டிருக்கிறதோ அதை அறிவது, இங்கு ஒரு நியதி பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
பல சிறிய விதவிதமான பொருட்களை கொண்டு ஒரு பொருள் உருவாகிறது, இதற்கு சம்ஹதம் என்று பெயர்
அதாவது பல உறுப்புக்களின் சேர்க்கையாலான ஒரு பொருள்.
இந்த முழுப்பொருள் பயன்பாடு அதனை உபயோகப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டது.
அதுபோல உடல் பல அங்கங்களைக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறது இவைகள் இதற்கு வேறான ஆத்மாவுக்காக உருவாக்கப்பட்டிருக்கிறது.

[ஸ்வ-விலக்ஷணம் – தனக்கு வேறான உள்ள ஒன்றுக்காக உருவாக்குவது ]

இந்திரியங்கள் அறிவுடையதாக இருந்தாலும், இந்த இந்திரியங்களை அறிபவன் நான்-ஆத்மா.
இந்திரியங்கள் உலக விஷயங்களை அனுபவிக்கத்தான் படைக்கப்பட்டுள்ளது.
ஒரு பொருளை அறிய மனம் இந்திரியங்கள் வழியாக அந்த பொருளை முழுவதுமாக வியாபித்து
மாறுதலடைந்து அறிவைக்கொடுக்கின்றது. ஆனால், ஆத்மா எந்தவித மாறுதலடையாமல் மனதை அறிகிறது.

கண்கள் என்ற ஆகாசம் வழியாக பார்க்கும் சக்தி, வெளி விஷயங்களை பார்ப்பதறகாக படைக்கப்பட்டிருக்கிறது.
அந்த கண்களை யார் அறிகிறாரோ அதுதான் ஆத்மா என்று கூறப்படுகிறது.
எந்த ஆத்மா சாட்சியாக நின்று நான் வாசனையை நுகர்கிறேன் என்று அறிபவனை அறிகிறது.
இதே போன்று இதை நான் உச்சரிக்கிறேன் என்று யார் நினைக்கிறாரோ அவரை அறிவது ஆத்மா நான் கேட்கிறேன்
என்று சொல்லாமல் அறிபவனை அறிபவன் ஆத்மா…

ஆத்மா – நிர்விகாரவேதா – மாற்றமடையாமல் அறிபவன்
மனது – சவிகாரவேதா – மாற்றமடைந்து அறிபவன்.

யார் நான் இதை நினைக்கிறேன் என்று அறிகிறானோ அவனை அறிபவன் ஆத்மா.
மனமானது தெய்வீக கண் என்று வர்ணிக்கப்படுகிறது. இந்திரியங்கள் இப்பொழுது இருக்கும் பொருளை மட்டும் காட்டும்.
மனமானது மூன்று கால விஷயங்களை மனக்கண் மூலமாக பார்ப்பது இயல்பு. இந்த மனதையும் அறிபவன் ஆத்மா.
இந்த தெய்வீக கண்ணாக விளங்குகின்ற மனதாலே இங்கே இருக்கின்ற பொருட்கள் அனைத்தையும்
பார்த்துக்கொண்டே அனுபவிக்கிறான், மகிழ்ச்சியுடன் இருக்கின்றான்.

பிரஜாபதியின் உபதேசத்தை நன்கு புரிந்து கொண்ட தேவேந்திரன் அந்த ஆத்ம தத்துவத்தை தேவலோகத்திலுள்ள
எல்லா தேவர்களுக்கும் உபதேசித்தான். அனைவரும் ஆத்மாவை தியானித்து உணர்ந்து கொண்டார்கள்.
அதனால் எல்லா உலகத்தையும் அடைந்தாற் போன்றும், எல்லா ஆசைகளையும் அடைந்தாற் போலவும் உணர்ந்து மகிழ்ச்சியுடன் இருக்கிறார்கள்.
நானே எல்லாமுமாக இருக்கிறேன் என்ற உணர்வானது எல்லாவற்றையும் அடைந்ததற்கு ஈடாக கூறப்படுகிறது.
இப்படி யாரொருவர் ஆத்மாவை அறிந்து உணர்கிறார்களோ அவர்களும் இந்திரனைப்போன்று எல்லா உலகத்தையும்
அடைந்தது போலவும் மனதிருப்தியுடன் மகிழ்ச்சியோடு இருப்பார்கள்.
பொதுவாக இது மனிதர்களாகிய நமக்கும் பொருந்தும் என்று பிரஜாபதி முடிக்கிறார்.

————–

ஶ்யாமாச்ச²ப³லம் ப்ரபத்³யே ஶப³லாச்ச்²யாமம் ப்ரபத்³யேঽஶ்வ
இவ ரோமாணி விதூ⁴ய பாபம் சந்த்³ர இவ ராஹோர்முகா²த்ப்ரமுச்ய
தூ⁴த்வா ஶரீரமக்ருʼதம் க்ருʼதாத்மா
ப்³ரஹ்மலோகமபி⁴ஸம்ப⁴வாமீத்யபி⁴ஸம்ப⁴வாமீதி ॥ 8.13.1॥

॥ இதி த்ரயோத³ஶ: க²ண்ட:³ ॥
——————————————–

காண்டம்-‍13 (பிரார்த்தனை)
ஒளிப்பொருந்திய பிரம்மலோகத்திலிருந்து இருளாக உள்ள இதயம் என்கிற பிரம்மலோகத்தை வந்தடைந்து விட்டேன்.
இப்பொழுது நான் இருக்கும் இருள் பொருந்திய இருதய ஆகாசமான பிரம்மலோகத்திலிருந்து மீண்டும்
ஒளி பொருந்திய பிரம்மலோகத்திற்கு செல்ல விரும்புகிறேன். என்னிடத்திலிருக்கிற எல்லா பாவங்களும் நீங்கிவிட வேண்டும்,
களைப்படைந்த குதிரை உடலை குலுக்கும்போது சில ரோமங்கள் உதிர்வதை போல என் பாவங்களும் நீங்கி விட வேண்டும்.
ராகு என்ற பாம்பின் வாயிலிருந்து சந்திரன் விடுதலையடைந்ததை போன்று என் பாவங்களும் நீங்கி விட வேண்டும்.
பிறகு நான் செய்ய வேண்டிய கடமைகள் எல்லாம் செய்து முடித்து விட்டு சரீரத்தை துறந்து பிரம்மலோகத்தை அடைந்து கிரம முக்தி அடைய வேண்டும்.

——————

ஆகாஶோ வை நாம நாமரூபயோர்நிர்வஹிதா தே யத³ந்தரா
தத்³ப்³ரஹ்ம தத³ம்ருʼதꣳ ஸ ஆத்மா ப்ரஜாபதே: ஸபா⁴ம் வேஶ்ம ப்ரபத்³யே
யஶோঽஹம் ப⁴வாமி ப்³ராஹ்மணாநாம் யஶோ ராஜ்ஞாம் யஶோவிஶாம்
யஶோঽஹமநுப்ராபத்ஸி ஸ ஹாஹம் யஶஸாம் யஶ:
ஶ்யேதமத³த்கமத³த்கꣳ ஶ்யேதம் லிந்து³ மாபி⁴கா³ம் லிந்து³
மாபி⁴கா³ம் ॥ 8.14.1॥

கர்மங்களை போக்கி -ஸ்ரீ வைகுண்டம் புகுந்து -யசஸ்வியாக சாம்யா பத்தி -உணர்ந்தவன் பிறப்பது இல்லை

॥ இதி சதுர்த³ஶ: க²ண்ட:³ ॥

காண்டம்-‍14
இந்த பகுதியில் மூன்று விஷயங்களான பிரம்ம லக்ஷணம், எல்லா பெருமைகளையும் அடைதல்,
மீண்டும் பிறவாமை பற்றி பேசப்படுகிறது.

ஆகாசம் என்று அழைக்கப்படுகின்ற பரபிரம்மம் நாம ரூபங்களை (சிருஷ்டியை) தோற்றுவிக்கிறது.
இந்த நாம ரூபங்கள் எதில் இருக்கிறதோ அது பிரம்மம். இது சத்ய ஸ்வரூபம், நித்தியமானது. இதுவே ஆத்மாவாக இருக்கிறது.
பிரம்மன்-ஹிரன்யகர்ப்பன் பிரஜாபதியின் இருப்பிடத்தை அடைவேனாக. பிராமணர்களின் பெருமைகள் எல்லாம் என்னுடையதாகட்டும்.
வைசியர்களின் பெருமைகள் எல்லாம் என்னுடையதாகட்டும். எனக்கு மறுஜென்மம் வேண்டாம். நான் மீண்டும் பிறப்பை அடைய வேண்டாம்.

—————

ததை⁴தத்³ப்³ரஹ்மா ப்ரஜாபதயை உவாச ப்ரஜாபதிர்மநவே மநு:
ப்ரஜாப்⁴ய: ஆசார்யகுலாத்³வேத³மதீ⁴த்ய யதா²விதா⁴நம் கு³ரோ:
கர்மாதிஶேஷேணாபி⁴ஸமாவ்ருʼத்ய குடும்பே³ ஶுசௌ தே³ஶே
ஸ்வாத்⁴யாயமதீ⁴யாநோ த⁴ர்மிகாந்வித³த⁴தா³த்மநி ஸர்வைந்த்³ரியாணி
ஸம்ப்ரதிஷ்டா²ப்யாஹிꣳஸந்ஸர்வ பூ⁴தாந்யந்யத்ர தீர்தே²ப்⁴ய:
ஸ க²ல்வேவம் வர்தயந்யாவதா³யுஷம் ப்³ரஹ்மலோகமபி⁴ஸம்பத்³யதே
ந ச புநராவர்ததே ந ச புநராவர்ததே ॥ 8.15.1॥

॥ இதி பஞ்சத³ஶ: க²ண்ட:³ ॥
॥ இதி அஷ்டமோঽத்⁴யாய: ॥

காண்டம்-‍15
பிரம்மாவானவர் ஆத்ம வித்யாவையும், அதனை அடையும் சாதனத்தையும் பிரஜாபதிக்கும் கற்றுக் கொடுத்தார்.
விசார ஞானம், எந்த மனதினால் இந்த விசாரத்தை செய்ய முடியும் என்ற அறிவையும் கொடுத்தார்.
பிரஜாபதி – விராட் தத்துவத்தை குறிக்கிறது. பிரஜாபதி மனுவுக்கு உபதேசித்தார்,
மனு மற்றவர்களுக்கு உபதேசித்தார். இவ்விதம் இந்த உபதேசம் பரம்பரையாக வந்துள்ளது.

1. ஆசிரியரிடமிருந்து வேதத்தை படித்தல்
2. முறைப்படி ஆசிரியருக்கு செய்ய வேண்டிய சேவைகளை செய்துக் கொண்டே படிக்க வேண்டும்
3. சேவை செய்து விட்டு மீதி இருக்கும் நேரத்தில் வேதத்தை படிக்க வேண்டும்.
4. இல்லறத்திற்கு சென்று படித்தறிந்த தர்ம சாஸ்திரப்படி வாழ்க்கையை நடத்த வேண்டும்.
தூய்மையானதாக வீட்டை வைத்திருக்க வேண்டும். மேலும் சாஸ்திர படிப்பை தொடர வேண்டும்.
தர்மப்படி வாழ்கின்ற குழந்தைகளையும், சிஷ்யர்களையும் உருவாக்க வேண்டும்.
5. அனைத்து இந்திரியங்களை விஷயங்களிலிருந்து விலக்கி (சம, தம போன்ற பண்புகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்)
மனக்கட்டுப்பாடு, புலன்களில் கட்டுப்டுத்தி வாழ வேண்டும். பிறகு மன அமைதிக்கான தியானம் செய்து கொண்டிருக்க வேண்டும்.
6. எந்த ஜீவராசிகளையும் ஹிம்சை செய்யாமல் இருக்க வேண்டும். சாஸ்திரம் அனுமதித்த
ஹிம்சையை தவிர வேறெதுக்காகவும் மற்ற உயிர்களை கஷ்டபடுத்தக் கூடாது.

ஒருவன் இவ்விதம் வாழ்க்கையை அமைத்துக் கொண்டால் அவன் இறந்த பின் பிரம்மலோகத்திற்கு சென்ற பின் அவர்கள் மீண்டும் பிறப்பதில்லை.

ஓம் தத் ஸத்

ௐ ஆப்யாயந்து மமாங்கா³நி வாக்ப்ராணஶ்ச்க்ஷு:
ஶ்ரோத்ரமதோ² ப³லமிந்த்³ரியாணி ச ஸர்வாணி ।
ஸர்வம் ப்³ரஹ்மௌபநிஷத³ம் மாஹம் ப்³ரஹ்ம நிராகுர்யாம் மா மா ப்³ரஹ்ம
நிராகரோத³நிகாரணமஸ்த்வநிகாரணம் மேঽஸ்து ।
ததா³த்மநி நிரதே ய உபநிஷத்ஸு த⁴ர்மாஸ்தே
மயி ஸந்து தே மயி ஸந்து ॥

॥ ௐ ஶாந்தி: ஶாந்தி: ஶாந்தி: ॥

॥ இதி சா²ந்தோ³க்³யோঽபநிஷத்³ ॥

————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ சாந்தோக்ய உபநிஷத் –அத்யாயம்-7–

March 22, 2021

பூம வித்யா

இந்த அத்யாயத்தில் சொல்லப்படும் கருத்துக்களின் சாரம் கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது.
· சாகா சந்திர நியாயம்: மூன்றாம் பிறையை மரக்கிளையைக் காட்டி பிறகு தெரிய வைக்கும் உத்தி
· ஆனந்தம்தான் பிரம்மஸ்வரூபம் என்று எடுத்துக்கொண்டு பிரம்மத்தை உணர வைத்தல்
· பிரம்ம ஞானத்தை அடைய வேண்டுமென்றால் குருவின் உபதேசம் மூலமாகத் தான் முயற்சி செய்ய வேண்டும்.
· நடுநிலை அதிகாரிகளுக்கு சில பண்புகள் தேவை, அதையும் இந்த அத்தியாயத்தில் விளக்கப்படுகிறது.
· குருவிடம் எப்படிப்பட்டவனாக செல்ல வேண்டும் என்பதையும் எடுத்துரைக்கிறது

———-

॥ ஸப்தமோঽத்⁴யாய: ॥
அதீ⁴ஹி ப⁴க³வ இதி ஹோபஸஸாத³ ஸநத்குமாரம் நாரத³ஸ்தꣳ
ஹோவாச யத்³வேத்த² தேந மோபஸீத³ ததஸ்த ஊர்த்⁴வம் வக்ஷ்யாமீதி
ஸ ஹோவாச ॥ 7.1.1॥

மிகச்சிறந்த செழிப்பான அதிகமான தன்னில் வேறு பெரியது இல்லாது பூமா
நாரதர் -சனத் குமாரர் -பேசி –
பூமா எவ்வளவு பெரியது காட்டி -அத்தை பெற செய்ய வேண்டிய படிக்கட்டுக்கள் காட்டி
தெரிந்தது சொல்லும் அப்புறம் மேலே சொல்கிறேன் சனத்குமாரர்-
அறிந்தவற்றில் எது சிறந்தது -ஒவ் ஒன்றாக சொல்லி உயர்த்தி –

ருʼக்³வேத³ம் ப⁴க³வோঽத்⁴யேமி யஜுர்வேத³ꣳ ஸாமவேத³மாத²ர்வணம்
சதுர்த²மிதிஹாஸபுராணம் பஞ்சமம் வேதா³நாம் வேத³ம் பித்ர்யꣳ ராஶிம்
தை³வம் நிதி⁴ம் வாகோவாக்யமேகாயநம் தே³வவித்³யாம் ப்³ரஹ்மவித்³யாம்
பூ⁴தவித்³யாம் க்ஷத்ரவித்³யாம் நக்ஷத்ரவித்³யாꣳ
ஸர்பதே³வஜநவித்³யாமேதத்³ப⁴க³வோঽத்⁴யேமி ॥ 7.1.2॥

தெரிந்தது எல்லாம் நாரதர் விளக்கி -வித்யா ஸ்தானங்கள் அறிந்தவர் –

ஸோঽஹம் ப⁴க³வோ மந்த்ரவிதே³வாஸ்மி நாத்மவிச்ச்²ருதꣳ ஹ்யேவ மே
ப⁴க³வத்³த்³ருʼஶேப்⁴யஸ்தரதி ஶோகமாத்மவிதி³தி ஸோঽஹம் ப⁴க³வ:
ஶோசாமி தம் மா ப⁴க³வாஞ்சோ²கஸ்ய பாரம் தாரயத்விதி
தꣳ ஹோவாச யத்³வை கிஞ்சைதத³த்⁴யகீ³ஷ்டா² நாமைவைதத் ॥ 7.1.3॥

ஆனந்தம் இல்லை-தெரிந்து கொள்ள வேண்டியதை அறியாமல் -சார தமம் அறியாமல் துக்கமாகவே உள்ளேன்

நாம வா ருʼக்³வேதோ³ யஜுர்வேத:³ ஸாமவேத³ ஆத²ர்வணஶ்சதுர்த²
இதிஹாஸபுராண: பஞ்சமோ வேதா³நாம் வேத:³ பித்ர்யோ ராஶிர்தை³வோ
நிதி⁴ர்வாகோவாக்யமேகாயநம் தே³வவித்³யா ப்³ரஹ்மவித்³யா பூ⁴தவித்³யா
க்ஷத்ரவித்³யா நக்ஷத்ரவித்³யா ஸர்பதே³வஜநவித்³யா
நாமைவைதந்நாமோபாஸ்ஸ்வேதி ॥ 7.1.4 ॥

நாம ப்ரஹ்ம உபாசனம் முதலில் -விருப்பம் அடைகிறான் –

ஸ யோ நாம ப்³ரஹ்மேத்யுபாஸ்தே யாவந்நாம்நோ க³தம் தத்ராஸ்ய
யதா²காமசாரோ ப⁴வதி யோ நாம ப்³ரஹ்மேத்யுபாஸ்தேঽஸ்தி
ப⁴க³வோ நாம்நோ பூ⁴ய இதி நாம்நோ வாவ பூ⁴யோঽஸ்தீதி தந்மே
ப⁴க³வாந்ப்³ரவீத்விதி ॥ 7.1.5॥

॥ இதி ப்ரத²ம: க²ண்ட:³ ॥

காண்டம்-‍1
பகுதி 1-15 பிரம்ம பிராப்தி ஸோபானம் – பிரம்மத்தை அடைவதற்கு உதவும் பதினைந்து படிகள் கூறப்படுகிறது.
பகுதி 16-22 அதிகாரத்துவ குணங்கள்
பகுதி 23-26 பூம வித்யா பற்றிய விளக்கம்

1. நாரதர் சனத்குமார் என்கின்ற குருவை அடைந்து,
“பகவானே ஆத்ம ஞானத்தை உபதேசம் செய்யுங்கள்”, என்று வேண்டிக் கேட்டார்.
சனத்குமாரரும் அதற்கு இசைந்து, “முதலில் நீ எதையெல்லாம் அறிந்து வைத்திருக்கிறாயென்று எனக்கு சொல்,
நான் அவையெல்லாம் தவிர்த்து அதற்கு மேலானதையெல்லாம் உபதேசிக்கிறேன்” என்று கூறினார்.
2. நாரதர் அவருக்கு தெரிந்த்தையெல்லாம் கூறத்தொடங்கினார்.
எனக்கு நான்கு வேதங்கள், இதிகாசங்கள், புராணங்கள், மொழி இலக்கணம், கணிதசாஸ்திரம், சகுண அறிவு, தர்க்கம்,
நீதி சாஸ்திரம், வான சாஸ்திரம், சொல் இலக்கணம், வேதத்தை புரிந்து கொள்ளக்கூடிய அங்கங்கள், ஜோதிடம்
மற்றும் ஆய கலைகள் அறுபத்திநான்கு தெரிந்தவன் இவைகளெல்லாம் தெரியும் என்று முடித்தார்
3. இவைகளெல்லாம் வெறும் வார்த்தைகள்தான் என்று அறிந்திருக்கிறேன்.
ஆனால் ஆத்ம ஞானத்தை இன்னும் அடையாதவனாக இருக்கிறேன். உங்களைப் போன்ற ஞானிகளின் மூலமாக
ஆத்மாவை அறிந்தவன் எல்லா துயரங்களையும் வென்றவன். நான் மிகவும் ஆழ்ந்த துயரத்தில் இருக்கிறேன்.
என்னை இந்த துயரத்திலிருந்து காப்பாற்றுவீர்களாக என்று நாரதர் வேண்டினார்.

சனத்குமாரர் கூறத்தொடங்கினார்,
”நீ எதையெல்லாம் அறிந்து வைத்து இருக்கிறாயோ அவையெல்லாம் வெறும் வார்த்தைகள்தான், சப்தங்கள்தான் ஆகும்.

ஆத்ம ஸ்துதி – இநத ஞானத்தை அடைய வேண்டும் என்ற உந்துதல் வேண்டும். நம்மிடம் இருக்கின்ற அறிவினால்
எல்லா துயரங்களையும் நிரந்தரமாக போக்கி ஆனந்தத்தை தர இயலாது என்று மனதார அறிய வேண்டும்.
இவ்வாறே நாரதரின் மனநிலை இருந்தது.
குருவிடம் செல்லும் போது நம்மிடையே உள்ள அறிவை எல்லாம் நீக்கி விட்டு செல்ல வேண்டும்.
ஒருவன் ஒரு பிறவியில் ஒரு விஷயத்தில்தான் நிஷ்டையடைய முடியும்.

ஆத்மாவை அறிந்தவன் துயரத்தை அனுபவிப்பதில்லை. அக்ஞானம்தான் சோகத்திற்கு காரணம்,
தன்னை அறியாதுதான் அக்ஞானம் என்று கூறப்படுகிறது. சோகம் என்பது எதிலும் நிறைவின்மை,
அடைய வேண்டியது நிறைய இருக்கிறது என்று நினைத்தல். ஆத்மாவை அறிந்தவன் இந்த நிறைவின்மையை நீக்கி விடுகிறான்

4. நாமத்தை பிரம்மமாக உபாஸனை செய்ய வேண்டும். நாமத்தின் தாத்பர்யம் அது ஒரு சப்தம்,
அது அர்த்தத்தை கொடுக்கிறது, விவகாரத்திற்குட்பட்டது. விகாரம் என்பது காரியம், காரியம் மித்யா.
நாரதரின் அறிவெல்லாம் வெறும் சப்தமே.
5. யார் நாமத்தை பிரம்மமாக உபாஸனை செய்கிறார்களோ அவர்களுக்கு இரண்டு விதமான பலன்களை அடைவார்கள்.
ஒன்று நிஷ்காம உபாஸனை இது அடுத்த படிக்கு எடுத்துச் செல்லும் அதுதான் முமுக்ஷுத்வம். இரண்டாவது சகாம உபாஸனை –
இது யார் பிரம்மத்தை நாமமாக உபாஸனை செய்கிறார்களோ அவர்களுக்கு எந்த அளவுக்கு செய்தார்களோ அந்த அளவுக்கு பலன் கிடைக்கும்.

நாரதர் : நாமத்தை விட பெரியதாக் ஏதாவது இருக்கிறதா?
குரு இருக்கிறது
நாரதர் அதை எனக்கு உபதேசம் செய்யுங்கள்.
குரு செய்கிறேன்

பூய-பெரியது; ஸத்யம் உத்கிருஷ் – தத்துவம் மேலானது; பிரம்மன ஸாமீப்யம்- பிரம்மத்திற்கு அருகில்

—————

வாக்³வாவ நாம்நோ பூ⁴யஸீ வாக்³வா ருʼக்³வேத³ம் விஜ்ஞாபயதி யஜுர்வேத³ꣳ
ஸாமவேத³மாத²ர்வணம் சதுர்த²மிதிஹாஸபுராணம் பஞ்சமம் வேதா³நாம் வேத³ம்
பித்ர்யꣳராஶிம் தை³வம் நிதி⁴ம் வாகோவாக்யமேகாயநம் தே³வவித்³யாம்
ப்³ரஹ்மவித்³யாம் பூ⁴தவித்³யாம் க்ஷத்ரவித்³யாꣳ ஸர்பதே³வஜநவித்³யாம்
தி³வம் ச ப்ருʼதி²வீம் ச வாயும் சாகாஶம் சாபஶ்ச தேஜஶ்ச
தே³வாꣳஶ்ச மநுஷ்யாꣳஶ்ச பஶூꣳஶ்ச வயாꣳஸி ச
த்ருʼணவநஸ்பதீஞ்ஶ்வாபதா³ந்யாகீடபதங்க³பிபீலகம்
த⁴ர்மம் சாத⁴ர்மம் ச ஸத்யம் சாந்ருʼதம் ச ஸாது⁴ சாஸாது⁴ ச
ஹ்ருʼத³யஜ்ஞம் சாஹ்ருʼத³யஜ்ஞம் ச யத்³வை வாங்நாப⁴விஷ்யந்ந த⁴ர்மோ
நாத⁴ர்மோ வ்யஜ்ஞாபயிஷ்யந்ந ஸத்யம் நாந்ருʼதம் ந ஸாது⁴ நாஸாது⁴
ந ஹ்ருʼத³யஜ்ஞோ நாஹ்ருʼத³யஜ்ஞோ வாகே³வைதத்ஸர்வம் விஜ்ஞாபயதி
வாசமுபாஸ்ஸ்வேதி ॥ 7.2.1॥

வாக் ப்ரஹ்மம் அடுத்து -பேச்சு இருந்தால் தானே சொற்கள் வரும் -நாவினால் நவிற்று இன்பம் எய்தினேன் –
வாக்மீ ஸ்ரீ மான் -வாக் சாதுர்யம் -நாமங்களை விட வாக்கு ஸ்ரேஷ்டம்
நர நார த -மனுஷன் உடைய தொடர்பு உள்ள ஞானம் கொடுப்பவர்– நாரதர்

ஸ யோ வாசம் ப்³ரஹ்மேத்யுபாஸ்தே யாவத்³வாசோ க³தம் தத்ராஸ்ய
யதா²காமசாரோ ப⁴வதி யோ வாசம் ப்³ரஹ்மேத்யுபாஸ்தேঽஸ்தி
ப⁴க³வோ வாசோ பூ⁴ய இதி வாசோ வாவ பூ⁴யோঽஸ்தீதி தந்மே
ப⁴க³வாந்ப்³ரவீத்விதி ॥ 7.2.2॥

॥ இதி த்³விதீய: க²ண்ட:³ ॥

காண்டம்-‍2
1. நாமத்தை விட பெரியதாக இருப்பது வாக்கு (பேச்சு). வாக்கினால் தான் எநத அறிவையும் அடைய முடியும்.
இதன் மூலம் தான் இன்ப துன்பங்களை அடைய முடியும். நாம் அடையும் அறிவானது கீழ்க்கண்டவாறு வகைப்படுத்தப்படுகிறது.
a. வேத, இதிகாச, புராணங்களில் அறிவை அடைதல்
b. பஞச பூதங்களைப்பற்றிய அறிவை அடைதல்
c. தேவ, மனித, விலங்குகள், பறவைகள், மர செடி, கொடிகள், புழு மற்றும் பூச்சிகள் பற்றிய அறிவை அடைதல்
d. தர்ம-அதர்மம், உண்மை-பொய், இன்ப-துன்பம் ஆகியவற்றின் அறிவை அடைதல்
வாக்கு இல்லாமலிருந்தால் இவைகளையெல்லாம் நம்மால் அடைந்திருக்க முடியாது.
வாக்கு தான் இவையனைத்தையும் பற்றிய அறிவை கொடுக்கிறது.
எனவே வாக்கை பிரம்மமாக உபாஸனை செய்வாயாக என்று குரு கூறினார்.
சகாம பலன்: இப்படி செய்வதால் எதையும் சாராதிருக்கும் சக்தியை அடைவார்.

நாரதர் : வாக்கை விட பெரியதாக் ஏதாவது இருக்கிறதா?
குரு இருக்கிறது
நாரதர் அதை எனக்கு உபதேசம் செய்யுங்கள்.
குரு செய்கிறேன்

————-

மநோ வாவ வாசோ பூ⁴யோ யதா² வை த்³வே வாமலகே த்³வே வா கோலே
த்³வௌ வாக்ஷௌ முஷ்டிரநுப⁴வத்யேவம் வாசம் ச நாம ச
மநோঽநுப⁴வதி ஸ யதா³ மநஸா மநஸ்யதி
மந்த்ராநதீ⁴யீயேத்யதா²தீ⁴தே கர்மாணி குர்வீயேத்யத² குருதே
புத்ராꣳஶ்ச பஶூꣳஶ்சேச்சே²யேத்யதே²ச்ச²த இமம் ச
லோகமமும் சேச்சே²யேத்யதே²ச்ச²தே மநோ ஹ்யாத்மா மநோ ஹி லோகோ
மநோ ஹி ப்³ரஹ்ம மந உபாஸ்ஸ்வேதி ॥ 7.3.1 ॥

மனம் அத்தை விட ஸ்ரேஷ்டம் -நினைக்காமல் பேச முடியாதே மனோ பூர்வ வாக் உத்தர –
பேசினால் தானே சொற்கள் நாமம் வரும் –
பந்த மோக்ஷ ஏவ காரணம் மனம் -பற்றுடைய மனம் எதிரி- பற்றில்லா மனம் நண்பன்
மனம் கருவி போலே சிந்திக்க –

ஸ யோ மநோ ப்³ரஹ்மேத்யுபாஸ்தே யாவந்மநஸோ க³தம் தத்ராஸ்ய
யதா²காமசாரோ ப⁴வதி யோ மநோ ப்³ரஹ்மேத்யுபாஸ்தேঽஸ்தி
ப⁴க³வோ மநஸோ பூ⁴ய இதி மநஸோ வாவ பூ⁴யோঽஸ்தீதி
தந்மே ப⁴க³வாந்ப்³ரவீத்விதி ॥ 7.3.2॥

॥ இதி த்ருʼதீய: க²ண்ட:³ ॥

காண்டம்-‍3
வாக்கை காட்டிலும் மேலானது மனம்தான். இதனுடைய லட்சணம் சங்கல்ப, விகல்பம் உடையது.
மனதில் இருக்கின்ற ஒரு குறிப்பிட்ட விருப்பம் அதாவது அதை பேசலாம்,
இதை செய்யலாம் போன்ற விருப்பங்கள். இவைகள் நான்கு நிலைகளாக இருக்காலாம். அவைகள்,
· ஆசையாக மட்டும் இருத்தல்
· சிந்தனையை மட்டும் தூண்டி விட்டுவிட்டு அப்படியே அடங்கி விடுதல்
· வாக்கிலே வெளிபடுதல்
· செயலிலே வெளிப்படுதல்–போன்றவையாகும்.

நமது உள்ளங்கையில் இரண்டு சிறிய பழங்கள் வைத்திருக்க முடிகிறதென்றால் கையானது அதிகமாக.
அதுபோல மனமானது அதிகமாக வியாபித்திருப்பதால், வாக்கையும், நாமத்தையும் மனமானது அனுபவிக்கிறது.
· ஒருவன் மந்திரத்தை உச்சரித்துக்கொண்டிருப்பேன் என்று இச்சைக்கொண்டு அதை செய்து கொண்டிருப்பான்.
· சிலர் அகர்த்தவாகவும், அபோக்தாவாகவும் உள்ள நான் இந்த இச்சா மனதினால் கர்த்தாவாகவும்,
போக்தாவாகவும் இருந்துகொண்டு இன்ப துன்பங்களை அனுபவிக்கிறேன்.
· ஒவ்வொருவருடைய மனதில் எந்த உலகத்தை அடைய வேண்டும் என்ற ஆசை உள்ளதோ
அதை இந்த இச்சா காரணமாக அடைந்தே தீருவோம். இங்கே இச்சை சாதனம், நாம் எதை அடைந்தோமோ அது சாத்யமாக இருக்கிறது.
· நாம் எதை அனுபவித்துக்கொண்டிருக்கிறோமோ அது ஒரு காலத்தில் நம்மால் ஆசைபடப்பட்டது.
சகாம பலன் எவ்வளவு தீவிரமாக உபாஸிக்கிறோமோ அவ்வளவு தூரம் வியாபிக்க முடியும். அதனால் விரும்பியதை அடையலாம்.
நிஷ்காம பலன் அடுத்த நிலைக்கு கொண்டு செல்லும்.

————-

ஸங்கல்போ வாவ மநஸோ பூ⁴யாந்யதா³ வை ஸங்கல்பயதேঽத²
மநஸ்யத்யத² வாசமீரயதி தாமு நாம்நீரயதி நாம்நி
மந்த்ரா ஏகம் ப⁴வந்தி மந்த்ரேஷு கர்மாணி ॥ 7.4.1॥

-சங்கல்பம் -புத்தி-தர்ம பூத ஞானம் – -உறுதியான முடிவு எடுக்கும் -மனத்தை விட ஸ்ரேஷ்டம் –

தாநி ஹ வா ஏதாநி ஸங்கல்பைகாயநாநி ஸங்கல்பாத்மகாநி
ஸங்கல்பே ப்ரதிஷ்டி²தாநி ஸமக்லுʼபதாம் த்³யாவாப்ருʼதி²வீ
ஸமகல்பேதாம் வாயுஶ்சாகாஶம் ச ஸமகல்பந்தாபஶ்ச
தேஜஶ்ச தேஷாꣳ ஸம் க்லுʼப்த்யை வர்ஷꣳ ஸங்கல்பதே
வர்ஷஸ்ய ஸங்க்லுʼப்த்யா அந்நꣳ ஸங்கல்பதேঽந்நஸ்ய ஸம் க்லுʼப்த்யை
ப்ராணா: ஸங்கல்பந்தே ப்ராணாநாꣳ ஸம் க்லுʼப்த்யை மந்த்ரா: ஸங்கல்பந்தே
மந்த்ராணாꣳ ஸம் க்லுʼப்த்யை கர்மாணி ஸங்கல்பந்தே கர்மணாம்
ஸங்க்லுʼப்த்யை லோக: ஸங்கல்பதே லோகஸ்ய ஸம் க்லுʼப்த்யை ஸர்வꣳ
ஸங்கல்பதே ஸ ஏஷ ஸங்கல்ப: ஸங்கல்பமுபாஸ்ஸ்வேதி ॥ 7.4.2 ॥

ஸ ய: ஸங்கல்பம் ப்³ரஹ்மேத்யுபாஸ்தே ஸங்க்லுʼப்தாந்வை ஸ லோகாந்த்⁴ருவாந்த்⁴ருவ:
ப்ரதிஷ்டி²தாந் ப்ரதிஷ்டி²தோঽவ்யத²மாநாநவ்யத²மாநோঽபி⁴ஸித்⁴யதி
யாவத்ஸங்கல்பஸ்ய க³தம் தத்ராஸ்ய யதா²காமசாரோ ப⁴வதி ய:
ஸங்கல்பம் ப்³ரஹ்மேத்யுபாஸ்தேঽஸ்தி ப⁴க³வ: ஸங்கல்பாத்³பூ⁴ய இதி
ஸங்கல்பாத்³வாவ பூ⁴யோঽஸ்தீதி தந்மே ப⁴க³வாந்ப்³ரவீத்விதி ॥ 7.4.3॥

॥ இதி சதுர்த:² க²ண்ட:³ ॥

காண்டம்-‍4
மனதை விட பெரியது சங்கல்பம். இப்படி செய்யலாம் அல்லது செய்ய வேண்டாம் என்று பார்க்கின்ற சக்தியுடைய
மனதிலுள்ள எண்ணம். நல்லது எது கெட்டது எது என்று பிரித்துப்பார்க்கும் சக்தி.
இதன் அடிப்படையில் தான் கிரமமாக பிரவிருத்தியில் ஈடுபடுவோம். எனவே எது செய்ய வேண்டும் என்று
விரும்புகிறோமோ அதை சங்கல்பம் செய்து விட வேண்டும். இதை வைத்துத்தான் மனதானது செயலில் இறங்கும்.

உபசாரம் – கற்பணை செய்து விளக்குதல்

இந்த உலகத்தில் உள்ள பொருட்கள் எல்லாம் நான் இப்படித்தான் இருப்பேன் என்ற ஸங்கல்பத்தினால் தான்
அவைகள் அப்படி தோன்றுகின்றன. மழை நான் இப்படித்தான் நீராக பொழிவேன் என்ற ஸங்கல்பத்தினால்
அது அவ்வாறாக பெய்து கொண்டிருக்கிறது.
அதேபோல பஞச பூதங்கள் அவைகளது ஸங்கல்பத்தினால் தான் அந்தந்த குணங்களைப் பெற்று தோற்றமளிக்கிறது.

எல்லோருக்கும் அறிந்தோ, அறியாமலோ அவர்கள் செய்த ஸங்கல்பத்தினால்தான் அவர்கள் வாழ்க்கை முறை அமைந்திருக்கிறது.
எனவே நாம் உயர்ந்த தர்ம வாழ்க்கை வாழ வேண்டுமென்றால் முதலில் ஸங்கல்பத்தை செய்தாக வேண்டும்.
பிறகு எல்லாமே கிரமமாக நிறைவேற்றப்பட்டு நினைத்த மாதிரி வாழ்க்கை நெறியை அமைத்துக் கொள்ளலாம்.

சகாம பலன் இப்படி ஸங்கல்பத்தை பிரம்மம் என்று எண்ணி தியானித்தால், நாம் ஸங்கல்பம் செய்ததை அடைந்தே தீருவோம்.

—————–

சித்தம் வாவ ஸம் கல்பாத்³பூ⁴யோ யதா³ வை சேதயதேঽத²
ஸங்கல்பயதேঽத² மநஸ்யத்யத² வாசமீரயதி தாமு நாம்நீரயதி
நாம்நி மந்த்ரா ஏகம் ப⁴வந்தி மந்த்ரேஷு கர்மாணி ॥ 7.5.1॥

சமயோஜித சிந்தை ஸ்ரேஷ்டம் -சங்கல்பத்தை விட -சமயத்துக்கு தக்க -அப்பொழுது ஒரு சிந்தை செய்தது போலே –
மனத்தின் வேறே வேறே நிலைப்பாடுகள் இவை

தாநி ஹ வா ஏதாநி சித்தைகாயநாநி சித்தாத்மாநி சித்தே
ப்ரதிஷ்டி²தாநி தஸ்மாத்³யத்³யபி ப³ஹுவித³சித்தோ ப⁴வதி
நாயமஸ்தீத்யேவைநமாஹுர்யத³யம் வேத³ யத்³வா அயம்
வித்³வாந்நேத்த²மசித்த: ஸ்யாதி³த்யத² யத்³யல்பவிச்சித்தவாந்ப⁴வதி
தஸ்மா ஏவோத ஶுஶ்ரூஷந்தே சித்தꣳஹ்யேவைஷாமேகாயநம்
சித்தமாத்மா சித்தம் ப்ரதிஷ்டா² சித்தமுபாஸ்ஸ்வேதி ॥ 7.5.2 ॥

ஸ யஶ்சித்தம் ப்³ரஹ்மேத்யுபாஸ்தே சித்தாந்வை ஸ லோகாந்த்⁴ருவாந்த்⁴ருவ:
ப்ரதிஷ்டி²தாந்ப்ரதிஷ்டி²தோঽவ்யத²மாநாநவ்யத²மாநோঽபி⁴ஸித்⁴யதி
யாவச்சித்தஸ்ய க³தம் தத்ராஸ்ய யதா²காமசாரோ ப⁴வதி யஶ்சித்தம்
ப்³ரஹ்மேத்யுபாஸ்தேঽஸ்தி ப⁴க³வஶ்சித்தாத்³பூ⁴ய இதி சித்தாத்³வாவ
பூ⁴யோঽஸ்தீதி தந்மே ப⁴க³வாந்ப்³ரவீத்விதி ॥ 7.5.3॥

॥ இதி பஞ்சம: க²ண்ட:³ ॥

காண்டம்-‍5
ஸங்கல்பத்தை விட பெரியது சித்தம். சித்தம் என்றால் சரியாக புரிந்து கொள்ளுதல்
நமக்கு துன்பம் வருவது நாம் சரியாக சூழ்நிலையை புரிந்து கொள்ளாததே காரணமாகும்

1. அநத நேரத்தில் அமைந்த சூழ்நிலைக்கேற்றவாறு விஷயங்களை புரிந்து கொள்ளுதல், சூழ்நிலைக்கேற்றவாறு நடந்து கொள்ளுதல்
2. அதீதம், அனாகம விஷய பிரயோஜன நிரூபணஹ.. கடந்தது, வரப்போவது இவைகளின் பயனை உணரும் சக்தி.

ஒருவன் பலநூல்களைக் கற்று வித்வானாக இருந்தாலும், தாம் கற்றதின் சாராம்சத்தை அறியாதவராகவும்,
அதை சூழ்நிலைக்கேற்றவாறு மற்றவர்களுக்கு எடுத்துரைக்க இயலாவிட்டால் அவன் கற்றதினால் ஒன்றும் பயனில்லை.
ஒருவன் கற்றது சிறியதாக இருந்தாலும் அதை சரியாக புரிந்து கொண்டு மற்றவர்களுக்கு தெளிவாக விளக்கும் திறனிருந்தால்
அவனை வித்வானாக ஒப்புக்கொள்ளப்படுகிறது.

சகாம பலன் இப்படி சித்தத்தை பிரம்மமாக தியானித்து கொண்டு இருப்பவர்கள் நிலையான பயமற்ற,
சித்தத்தை நன்கு புரிந்து கொண்டும் அப்படியே வாழ்ந்து கொண்டும் இருப்பவர்கள் உலகத்தை அடைவார்கள்.

————————

த்⁴யாநம் வாவ சித்தாத்³பூ⁴யோ த்⁴யாயதீவ ப்ருʼதி²வீ
த்⁴யாயதீவாந்தரிக்ஷம் த்⁴யாயதீவ த்³யௌர்த்⁴யாயந்தீவாபோ
த்⁴யாயந்தீவ பர்வதா தே³வமநுஷ்யாஸ்தஸ்மாத்³ய இஹ மநுஷ்யாணாம்
மஹத்தாம் ப்ராப்நுவந்தி த்⁴யாநாபாதா³ꣳஶா இவைவ தே ப⁴வந்த்யத²
யேঽல்பா: கலஹிந: பிஶுநா உபவாதி³நஸ்தேঽத² யே ப்ரப⁴வோ
த்⁴யாநாபாதா³ꣳஶா இவைவ தே ப⁴வந்தி த்⁴யாநமுபாஸ்ஸ்வேதி ॥ 7.6.1॥

மேலே உயர்த்தி -தியானம் ஸ்ரேஷ்டம் -இடைவெளி இல்லாமல் – இடையூறு தடங்கல் இல்லாத சிந்தனை –
எடுத்த லஷ்யத்தில் இருந்து மனம் மாறாமல் இருக்க வேண்டுமே –
உணர்வில் உம்பர் ஒருவன் -நினைமின் நெடியானை –

ஸ யோ த்⁴யாநம் ப்³ரஹ்மேத்யுபாஸ்தே யாவத்³த்⁴யாநஸ்ய க³தம் தத்ராஸ்ய
யதா²காமசாரோ ப⁴வதி யோ த்⁴யாநம் ப்³ரஹ்மேத்யுபாஸ்தேঽஸ்தி
ப⁴க³வோ த்⁴யாநாத்³பூ⁴ய இதி த்⁴யாநாத்³வாவ பூ⁴யோঽஸ்தீதி
தந்மே ப⁴க³வாந்ப்³ரவீத்விதி ॥ 7.6.2॥

॥ இதி ஷஷ்ட:² க²ண்ட:³ ॥

காண்டம்-‍6
சித்தத்தை விட மேலானது தியானம். தியானம் என்பது உற்று நோக்கும் திறன், மனதை ஒருமுகப்படுத்துதல்.
ஒருவன் சூழ்நிலையை சரியாக புரிந்து கொள்ள வேண்டுமென்றால் மனம் அமைதியாக இருக்க வேண்டும்.
இந்த மன அமைதி தியானத்தினாலதான் கிடைக்கும். நம் மனதில் அமைதியாக இருக்கும்போது
பார்க்கும் பொருட்களெல்லாம் அமைதியாக இருப்பது போல் தோற்றமளிக்கும்.

பதவி, பொன், பொருளால் புகழுடன் விளங்குபவர்கள் அனுபவிக்கும் இன்பமானது, தியானத்தின் மூலம் அடைகின்ற
பலனில் சிறு துளிதான் என்று உபநிஷத் தியானத்தின் பெருமையை உபதேசிக்கிறது.

தியானம் செய்யாதவர்கள் கலகத்தில் ஈடுபடுவார்கள், சண்டை போடுபவர்களாக இருப்பார்கள்,
மற்றவர்களை குறைக் கூறிக் கொண்டேயிருப்பார்கள். மற்றவர்களிடம் இருக்கும் குறையை அறிவது ஞானம்,
ஆனால் அதைப் பற்றியே பேசி மகிழ்ந்து கொண்டிருப்பவர்கள், பொய் கூறி ஏமாற்றுபவர்களாக அல்லது
மற்றவர்களை துன்பத்தில் ஆழ்த்தி மகிழ்ந்து கொண்டிருப்பவர்களாக இருப்பார்கள்.
எனவே தியானத்தை பிரம்மம் என்று தியானிக்க வேண்டும்.

சகாம பலன் இப்படி தியானிப்பவர்கள் அடையும் பலன், அவர்கள் அறிவும், ஞானமும் உள்ள உலகத்தை அனுபவிப்பார்கள்.
ஞானம் என்பது வேதங்கள் உபதேசிக்கும் தத்துவ ஞானம்

—————

விஜ்ஞாநம் வாவ த்⁴யாநாத்³பூ⁴ய: விஜ்ஞாநேந வா ருʼக்³வேத³ம் விஜாநாதி
யஜுர்வேத³ꣳ ஸாமவேத³மாத²ர்வணம் சதுர்த²மிதிஹாஸபுராணம்
பஞ்சமம் வேதா³நாம் வேத³ம் பித்ர்யꣳராஶிம் தை³வம் நிதி⁴ம்
வாகோவாக்யமேகாயநம் தே³வவித்³யாம் ப்³ரஹ்மவித்³யாம் பூ⁴தவித்³யாம்
க்ஷத்ரவித்³யாம் நக்ஷத்ரவித்³யாꣳஸர்பதே³வஜநவித்³யாம் தி³வம் ச
ப்ருʼதி²வீம் ச வாயும் சாகாஶம் சாபஶ்ச தேஜஶ்ச தே³வாꣳஶ்ச
மநுஷ்யாꣳஶ்ச பஶூꣳஶ்ச வயாꣳஸி ச
த்ருʼணவநஸ்பதீஞ்ச்²வாபதா³ந்யாகீடபதங்க³பிபீலகம்
த⁴ர்மம் சாத⁴ர்மம் ச ஸத்யம் சாந்ருʼதம் ச ஸாது⁴ சாஸாது⁴ ச
ஹ்ருʼத³யஜ்ஞம் சாஹ்ருʼத³யஜ்ஞம் சாந்நம் ச ரஸம் சேமம் ச லோகமமும்
ச விஜ்ஞாநேநைவ விஜாநாதி விஜ்ஞாநமுபாஸ்ஸ்வேதி ॥ 7.7.1 ॥

த்யானம் -பிரமாண ஜன்ய ஞானம் இருந்தால் தானே வரும் -விஞ்ஞானம் ஸ்ரேஷ்டம் தியானத்தை விட
பிரேமா புத்தி அறிவு-ஏற்படும் கருவி பிரமாணம் -பிரத்யக்ஷம் அனுமானம் சப்தம் -சாஸ்திரம் வேதம் –

ஸ யோ விஜ்ஞாநம் ப்³ரஹ்மேத்யுபாஸ்தே விஜ்ஞாநவதோ வை ஸ
லோகாம்ஜ்ஞாநவதோঽபி⁴ஸித்⁴யதி யாவத்³விஜ்ஞாநஸ்ய க³தம் தத்ராஸ்ய
யதா²காமசாரோ ப⁴வதி யோ விஜ்ஞாநம் ப்³ரஹ்மேத்யுபாஸ்தேঽஸ்தி ப⁴க³வோ
விஜ்ஞாநாத்³பூ⁴ய இதி விஜ்ஞாநாத்³வாவ பூ⁴யோঽஸ்தீதி தந்மே
ப⁴க³வாந்ப்³ரவீத்விதி ॥ 7.7.2॥

॥ இதி ஸப்தம: க²ண்ட:³ ॥

காண்டம்-‍7
தியானத்தை காட்டிலும் மேலானது விக்ஞானம்.

விக்ஞானம்: தியானம் போன்றவற்றை எப்படி முறையாக செய்ய வேண்டும் என்ற ஞானம்.
பிறகு அதனால் கிடைக்கும் பலன், கிடைக்காத பலன், எவ்வளவு நாள் செய்ய வேண்டும் என்ற அறிவும் இருக்க வேண்டும்.
எந்த சாதனையை உபயோகிக்க வேண்டுமென்றால், முதலில் அதை சரியாக உபயோகிக்கும் முறையைப் பற்றிய
அறிவை அடைந்த பின்னர்தான் அதை உபயோகிக்க ஆரம்பிக்க வேண்டும்.
இந்த ஞானத்தை அடைந்தவர்கள் அடையும் பலனானது என்னவென்றால், அறிவும்,
வேத ஞானமும் உடைய மனிதர்கள் வாழும் இடத்தில் வசிப்பார்கள்.

————-

ப³லம் வாவ விஜ்ஞாநாத்³பூ⁴யோঽபி ஹ ஶதம் விஜ்ஞாநவதாமேகோ
ப³லவாநாகம்பயதே ஸ யதா³ ப³லீ ப⁴வத்யதோ²த்தா²தா
ப⁴வத்யுத்திஷ்ட²ந்பரிசரிதா ப⁴வதி பரிசரந்நுபஸத்தா
ப⁴வத்யுபஸீத³ந்த்³ரஷ்டா ப⁴வதி ஶ்ரோதா ப⁴வதி மந்தா ப⁴வதி
போ³த்³தா⁴ ப⁴வதி கர்தா ப⁴வதி விஜ்ஞாதா ப⁴வதி ப³லேந வை ப்ருʼதி²வீ
திஷ்ட²தி ப³லேநாந்தரிக்ஷம் ப³லேந த்³யௌர்ப³லேந பர்வதா ப³லேந
தே³வமநுஷ்யா ப³லேந பஶவஶ்ச வயாꣳஸி ச த்ருʼணவநஸ்பதய:
ஶ்வாபதா³ந்யாகீடபதங்க³பிபீலகம் ப³லேந லோகஸ்திஷ்ட²தி
ப³லமுபாஸ்ஸ்வேதி ॥ 7.8.1॥

பலம் -ஞானம் சம்பாதிக்க ஆச்சார்யர் சிசுரூஷை பண்ண வேண்டுமே -குருகுல வாசம் -கைங்கர்யம் –
ஸ்ரவணம் மனனம் த்யானம் அனைத்துக்கும் பலம் வேண்டுமே

ஸ யோ ப³லம் ப்³ரஹ்மேத்யுபாஸ்தே யாவத்³ப³லஸ்ய க³தம் தத்ராஸ்ய
யதா²காமசாரோ ப⁴வதி யோ ப³லம் ப்³ரஹ்மேத்யுபாஸ்தேঽஸ்தி ப⁴க³வோ
ப³லாத்³பூ⁴ய இதி ப³லாத்³வாவ பூ⁴யோঽஸ்தீதி தந்மே
ப⁴க³வாந்ப்³ரவீத்விதி ॥ 7.8.2॥

॥ இதி அஷ்டம: க²ண்ட:³ ॥

காண்டம்-‍8
பரிசரன் – சேவை
உபஸத்த – குருவுக்கு பிரியமானவன்
விக்ஞானத்திற்கு மேலானது சக்தி தான்.

தேகம் சக்தியோடு இருந்தால்தான் உலக விவகாரங்களில் ஈடுபட முடியும்.
மனோ பலம் நம்மை தீய சக்திகளிடமிருந்து காத்துக்கொள்ள உதவுகிறது. புத்தி பலம் சூட்சும விஷயங்களை புரிந்துக்கொள்ள உதவுகிறது.
இந்திரிய பலம், எவையெல்லாம் விக்ஞானத்தை அடைவதற்கு உதவி புரிகின்றதோ அவையெல்லாம் இந்த பலம்தான்.
எல்லா பலத்தையும் உடைய ஒருவன் நூறு அறிவுடையவர்களை பயமுறுத்தும் சக்தியுடையவர்களாக இருப்பார்கள்.
தேகம் பலத்தோடு இருந்தால்தான், குருவைத்தேடி அவரிருக்கும் இடத்தை அடைந்து பணிவிடை செய்ய முடியும்.
குருவுக்கு சேவை செய்வது மூலம் தன்னுடைய பணிவை உணர்த்துவதன் மூலம் அவருடைய பிரியமான சிஷ்யனாகிறான்.

குரு உபதேசிக்கும்போது முழு கவனத்துடன் கேட்க வேண்டும். இப்படி கவனத்துடன் கேட்டவற்றை சிந்தித்துப்பார்த்து அதில் நிலைப்பட வேண்டும்.

மந்தா குருவின் வார்த்தையை மீண்டும் மீண்டும் சிந்தித்தல்
போத்தா சரியாக புரிந்து கொண்டவனாகிறான், மீண்டும் மீண்டும் சிந்திப்பதால் அறிவை அடைதல்
கர்த்தா இவ்விதம் அறிந்த அறிவின் மூலம் அதனை செயல்படுத்த தொடங்குவான்.
விக்ஞாதா செயல் மூலம் பலனை அடைகிறான்.

இவையெல்லாம் கிரமமாக செய்வதற்கு சக்தி வேண்டும்.

————–

அந்நம் வாவ ப³லாத்³பூ⁴யஸ்தஸ்மாத்³யத்³யபி த³ஶ
ராத்ரீர்நாஶ்நீயாத்³யத்³யு ஹ
ஜீவேத³த²வாத்³ரஷ்டாஶ்ரோதாமந்தாபோ³த்³தா⁴கர்தாவிஜ்ஞாதா
ப⁴வத்யதா²ந்நஸ்யாயை த்³ரஷ்டா ப⁴வதி ஶ்ரோதா ப⁴வதி மந்தா
ப⁴வதி போ³த்³தா⁴ ப⁴வதி கர்தா ப⁴வதி விஜ்ஞாதா
ப⁴வத்யந்நமுபாஸ்ஸ்வேதி ॥ 7.9.1॥

அன்னம் -சாப்பிட்டால் தானே பலம் வரும் -புஷ்ட்டி அடைய அன்னம் —

ஸ யோঽந்நம் ப்³ரஹ்மேத்யுபாஸ்தேঽந்நவதோ வை ஸ
லோகாந்பாநவதோঽபி⁴ஸித்⁴யதி யாவத³ந்நஸ்ய க³தம் தத்ராஸ்ய
யதா²காமசாரோ ப⁴வதி யோঽந்நம் ப்³ரஹ்மேத்யுபாஸ்தேঽஸ்தி
ப⁴க³வோঽந்நாத்³பூ⁴ய இத்யந்நாத்³வாவ பூ⁴யோঽஸ்தீதி தந்மே
ப⁴க³வாந்ப்³ரவீத்விதி ॥ 7.9.2॥

॥ இதி நவம: க²ண்ட:³ ॥

காண்டம்-‍9
உணவே சக்தியைக் காட்டிலும் மேலானது. இது எல்லாவகையான சக்திக்கும் காரணமாக இருக்கிறது.
இது பிருத்வி பூதத்தை குறிப்பாக உணர்த்துகிறது. பத்து நாட்களுக்கு உணவு உண்ணாமல் உயிரோடு இருக்கும் ஒருவனால்
பார்க்க முடியாது, கேட்க முடியாது, எதையும் புரிந்துக்கொள்ளும் சக்தியை இழந்திருப்பான்.
ஆனால் உணவை உண்டபின் அவனுக்கு இழந்த சக்தியெல்லாம் திருமப அடைந்தவனாகிறான்.
உணவையே பிரம்மமாக தியானித்து கொண்டு இருப்பவர்கள் நல்ல உணவும், நீர் வகைகள் உள்ள உலகத்தை அடைந்து இன்பமாக இருப்பார்கள்.

————

ஆபோ வாவாந்நாத்³பூ⁴யஸ்தஸ்மாத்³யதா³ ஸுவ்ருʼஷ்டிர்ந ப⁴வதி
வ்யாதீ⁴யந்தே ப்ராணா அந்நம் கநீயோ ப⁴விஷ்யதீத்யத² யதா³
ஸுவ்ருʼஷ்டிர்ப⁴வத்யாநந்தி³ந: ப்ராணா ப⁴வந்த்யந்நம் ப³ஹு
ப⁴விஷ்யதீத்யாப ஏவேமா மூர்தா யேயம் ப்ருʼதி²வீ யத³ந்தரிக்ஷம்
யத்³த்³யௌர்யத்பர்வதா யத்³தே³வமநுஷ்யாயத்பஶவஶ்ச வயாꣳஸி ச
த்ருʼணவநஸ்பதய: ஶ்வாபதா³ந்யாகீடபதங்க³பிபீலகமாப
ஏவேமா மூர்தா அப உபாஸ்ஸ்வேதி ॥ 7.10.1॥

ஆபோ தண்ணீர் -மழை பெய்தால் தானே அன்னம் -ஜெரிக்க தண்ணீர் குடிக்க வேண்டுமே –
மழை -பார்க்கவே ஆனந்தம் -முகில் வண்ணன் -மேக ஸ்யாமளன் –

ஸ யோঽபோ ப்³ரஹ்மேத்யுபாஸ்த ஆப்நோதி ஸர்வாந்காமாꣳஸ்த்ருʼப்திமாந்ப⁴வதி
யாவத³பாம் க³தம் தத்ராஸ்ய யதா²காமசாரோ ப⁴வதி யோঽபோ
ப்³ரஹ்மேத்யுபாஸ்தேঽஸ்தி ப⁴க³வோঽத்³ப்⁴யோ பூ⁴ய இத்யத்³ப்⁴யோ வாவ
பூ⁴யோঽஸ்தீதி தந்மே ப⁴க³வாந்ப்³ரவீத்விதி ॥ 7.10.2॥

॥ இதி த³ஶம: க²ண்ட:³ ॥

காண்டம்-‍10
உணவைக் காட்டிலும் மேலானது நீராகும்.

இது நீர் தத்துவத்தை குறிக்கும். மேலும் நீரானது உணவுக் கிடைப்பதற்கு காரணமாகிறது.
இது உலகத்திலுள்ள அனைத்தும் தோற்றம் உருவாவதற்கு காரணமாகவும் இருக்கிறது.
இப்படிப்பட்ட நீரை பிரம்மமாக தியானித்து கொண்டு இருப்பவர்களுக்கு எல்லா விருப்பங்களும் நிறைவேறும்.

——————-

தேஜோ வாவாத்³ப்⁴யோ பூ⁴யஸ்தத்³வா ஏதத்³வாயுமாக்³ருʼஹ்யாகாஶமபி⁴தபதி
ததா³ஹுர்நிஶோசதி நிதபதி வர்ஷிஷ்யதி வா இதி தேஜ ஏவ
தத்பூர்வம் த³ர்ஶயித்வாதா²ப: ஸ்ருʼஜதே ததே³ததூ³ர்த்⁴வாபி⁴ஶ்ச
திரஶ்சீபி⁴ஶ்ச வித்³யுத்³பி⁴ராஹ்ராதா³ஶ்சரந்தி தஸ்மாதா³ஹுர்வித்³யோததே
ஸ்தநயதி வர்ஷிஷ்யதி வா இதி தேஜ ஏவ தத்பூர்வம் த³ர்ஶயித்வாதா²ப:
ஸ்ருʼஜதே தேஜ உபாஸ்ஸ்வேதி ॥ 7.11.1॥

அக்னி -கொதிப்பாய் இருந்து மழை -தேஜஸ் ஸ்ரேஷ்டம் -ஆகாசம் வாயு அக்னி தண்ணீர் பிருத்வி –

ஸ யஸ்தேஜோ ப்³ரஹ்மேத்யுபாஸ்தே தேஜஸ்வீ வை ஸ தேஜஸ்வதோ
லோகாந்பா⁴ஸ்வதோঽபஹததமஸ்காநபி⁴ஸித்⁴யதி யாவத்தேஜஸோ க³தம்
தத்ராஸ்ய யதா²காமசாரோ ப⁴வதி யஸ்தேஜோ ப்³ரஹ்மேத்யுபாஸ்தேঽஸ்தி
ப⁴க³வஸ்தேஜஸோ பூ⁴ய இதி தேஜஸோ வாவ பூ⁴யோঽஸ்தீதி தந்மே
ப⁴க³வாந்ப்³ரவீத்விதி ॥ 7.11.2॥

॥ இதி ஏகாத³ஶ: க²ண்ட:³ ॥

காண்டம்-‍11
நீரைக் காட்டிலும் மேலானது நெருப்பாகும். இது நீருக்கு காரணமாக இருக்கிறது.
இது வாயுவை சூடாக்குவதால் மக்கள் காற்று மண்டலம் சூடாக இருப்பாதாக உணர்ந்து இன்று மழை வரலாம் என்று கூறுவர்.
மேலும் இடி, மின்னல் உருவாகி மழை வருவதற்கு காரணமாகிறது.
இப்படிப்பட்ட சக்தியை உடைய அக்னியை பிரம்மமாக உபாஸனை செய்தால், அவர்கள் தேஜஸான உடலைப்பெற்று,
தேஜஸான உலகத்தை அடைந்து இன்பமாக இருப்பார்கள்.

—————–

ஆகாஶோ வாவ தேஜஸோ பூ⁴யாநாகாஶே வை ஸூர்யாசந்த்³ரமஸாவுபௌ⁴
வித்³யுந்நக்ஷத்ராண்யக்³நிராகாஶேநாஹ்வயத்யாகாஶேந
ஶ்ருʼணோத்யாகாஶேந ப்ரதிஶ்ருʼணோத்யாகாஶே ரமத ஆகாஶே ந ரமத
ஆகாஶே ஜாயத ஆகாஶமபி⁴ஜாயத ஆகாஶமுபாஸ்ஸ்வேதி
॥ 7.12.1॥

ஆகாசம் மேலே -திட விசும்பு -விண் -அளவிட்டு அறியமுடியாமல் -அனைத்துக்கும் இடம் கொடுக்கும்-
net work -நக்ஷத்திரங்கள் வாழும் இடம்

ஸ ய ஆகாஶம் ப்³ரஹ்மேத்யுபாஸ்த ஆகாஶவதோ வை ஸ
லோகாந்ப்ரகாஶவதோঽஸம்பா³தா⁴நுருகா³யவதோঽபி⁴ஸித்⁴யதி
யாவதா³காஶஸ்ய க³தம் தத்ராஸ்ய யதா²காமசாரோ ப⁴வதி
ய ஆகாஶம் ப்³ரஹ்மேத்யுபாஸ்தேঽஸ்தி ப⁴க³வ ஆகாஶாத்³பூ⁴ய இதி
ஆகாஶாத்³வாவ பூ⁴யோঽஸ்தீதி தந்மே ப⁴க³வாந்ப்³ரவீத்விதி
॥ 7.12.2॥

॥ இதி த்³வாத³ஶ: க²ண்ட:³ ॥

காண்டம்-‍12
அக்னியைக் காட்டிலும் மேலானது ஆகாயம். மற்ற நான்கு பூதங்களும் இதிலிருந்துதான் தோன்றியுள்ளது.
சூரியனும், சந்திரனும் ஆகாசத்தில்தான் காட்சியளிக்கிறது. ஆகாசத்தின் இருப்பினால்தான் நாம் பேசுவது பிறரால் கேட்க முடிகிறது.
நாம் அனுபவிக்கும் சுக, துக்கங்களுக்கும், உயிரினங்கள் தோன்றி மறைவதற்கும் காரணமாக இருப்பதும் இதுவேதான்.
எனவே ஆகாசத்தை பிரம்மமாக உபாஸிக்க வேண்டும். இதை உபாஸிப்பவர்கள் அடையும் பயனாவது
மிகவும் பெரிய இடத்தையும், ஒளியுடன் கூடியதும், எந்த குறைகளும் இல்லாத உலகத்தை அடைந்து இன்பமாக இருப்பார்கள்.

—————-

ஸ்மரோ வாவாகாஶாத்³பூ⁴யஸ்தஸ்மாத்³யத்³யபி ப³ஹவ ஆஸீரந்ந
ஸ்மரந்தோ நைவ தே கஞ்சந ஶ்ருʼணுயுர்ந மந்வீரந்ந விஜாநீரந்யதா³
வாவ தே ஸ்மரேயுரத² ஶ்ருʼணுயுரத² மந்வீரந்நத² விஜாநீரந்ஸ்மரேண
வை புத்ராந்விஜாநாதி ஸ்மரேண பஶூந்ஸ்மரமுபாஸ்ஸ்வேதி ॥ 7.13.1॥

நினைவு ஆகாசத்தை விட ஸ்ரேஷ்டம் -ஹிருதயத்தில் இருந்து ஸ்ம்ருதி ஞானம் என்னால் தான் ஸ்ரீ கீதாச்சார்யன் –
மறந்தேன் உன்னை முன்னம் —

ஸ ய: ஸ்மரம் ப்³ரஹ்மேத்யுபாஸ்தே யாவத்ஸ்மரஸ்ய க³தம் தத்ராஸ்ய
யதா²காமசாரோ ப⁴வதி ய: ஸ்மரம் ப்³ரஹ்மேத்யுபாஸ்தேঽஸ்தி ப⁴க³வ:
ஸ்மராத்³பூ⁴ய இதி ஸ்மராத்³வாவ பூ⁴யோঽஸ்தீதி தந்மே
ப⁴க³வாந்ப்³ரவீத்விதி ॥ 7.13.2॥

॥ இதி த்ரயோத³ஶ: க²ண்ட:³ ॥

காண்டம்-‍13
ஞாபகசக்தி ஆகாசத்தை காட்டிலும் மேலானது.

நம்மைச்சுற்றி நமக்கு நன்கு தெரிந்தவர்கள் இருந்தாலும் நினைவு இல்லையென்றால் அவர்களிடம் உரையாட முடியாது,
யாரென்றும் அறியவும் முடியாது, சிந்திக்க முடியாது. ஆனால் ஞாபகசக்தி வந்துவிட்டால் எல்லாமும் நன்றாக தெரியவரும்.

எனவே ஞாபகசக்தியை பிரம்மமாக உபாஸிக்க வேண்டும். இதை உபாஸிப்பவர்கள் அடையும் பயனாவது
இது எவ்வளவு தூரம் வியாபித்திருக்கிறதோ அவ்வளவு தூரம் வியாபிக்கும் திறனடைவார்கள்.

——————

ஆஶா வாவ ஸ்மராத்³பூ⁴யஸ்யாஶேத்³தோ⁴ வை ஸ்மரோ மந்த்ராநதீ⁴தே
கர்மாணி குருதே புத்ராꣳஶ்ச பஶூꣳஶ்சேச்ச²த இமம் ச
லோகமமும் சேச்ச²த ஆஶாமுபாஸ்ஸ்வேதி ॥ 7.14.1॥

ஆசை இருந்தால் தானே நினைவு வரும் –
பத்னி புத்திரர் பசு இவற்றை விரும்புவது ஆசை
ஆசை யுடையோர்க்கு –பேசி வரம்பு அறுத்தார் –

ஸ ய ஆஶாம் ப்³ரஹ்மேத்யுபாஸ்த ஆஶயாஸ்ய ஸர்வே காமா:
ஸம்ருʼத்⁴யந்த்யமோகா⁴ ஹாஸ்யாஶிஷோ ப⁴வந்தி யாவதா³ஶாயா
க³தம் தத்ராஸ்ய யதா²காமசாரோ ப⁴வதி ய ஆஶாம்
ப்³ரஹ்மேத்யுபாஸ்தேঽஸ்தி ப⁴க³வ ஆஶாயா பூ⁴ய இத்யாஶாயா வாவ
பூ⁴யோঽஸ்தீதி தந்மே ப⁴க³வாந்ப்³ரவீத்விதி ॥ 7.14.2॥

॥ இதி சதுர்த³ஶ: க²ண்ட:³ ॥

காண்டம்-‍14
ஆசையானது ஞாபகசக்தியை காட்டிலும் மேலானது. ஆசையின் தூண்டுதலால்தான் எதுவும் நம் நினைவுக்கு வரும்.
பிறகு அதை நிறைவேற்ற செயலில் இறங்குவோம். அதன் பலனை அடைவோம்.
ஆசையினால் தான் எல்லா விருப்பங்களும் நிறைவேறுகின்றது. ஆசையும் வீண் போகாது.

எனவே ஆசையைப் பிரம்மமாக உபாஸிக்க வேண்டும். இதை உபாஸிப்பவர்கள் அடையும் பயனாவது
இது எவ்வளவு தூரம் வியாபித்திருக்கிறதோ அவ்வளவு தூரம் வியாபிக்கும் திறனடைவார்கள்.

—————

ப்ராணோ வா ஆஶாயா பூ⁴யாந்யதா² வா அரா நாபௌ⁴ ஸமர்பிதா
ஏவமஸ்மிந்ப்ராணே ஸர்வꣳஸமர்பிதம் ப்ராண: ப்ராணேந யாதி
ப்ராண: ப்ராணம் த³தா³தி ப்ராணாய த³தா³தி ப்ராணோ ஹ பிதா ப்ராணோ
மாதா ப்ராணோ ப்⁴ராதா ப்ராண: ஸ்வஸா ப்ராண ஆசார்ய:
ப்ராணோ ப்³ராஹ்மண: ॥ 7.15.1॥

இங்கு பிராண சப்தத்துக்கு பிராணன் உடன் கூடிய ஆத்மா என்றவாறு
ஆசை விட ஆத்மா ஸ்ரேஷ்டம் -இப்படி சிந்தித்து மேலே மேலே போனதே ஆத்மாவால் தானே –
எதனால் ஆத்மா ஸ்ரேஷ்டம் -சரீரம் -பிள்ளை நன்றாக அப்பாவுக்கு கார்யம் -உள்ளே இருக்கும் வரை வேறே –
அழைத்து போய் –எடுத்து வந்து அஃறிணை மாறுமே –

ஸ யதி³ பிதரம் வா மாதரம் வா ப்⁴ராதரம் வா ஸ்வஸாரம் வாசார்யம்
வா ப்³ராஹ்மணம் வா கிஞ்சித்³ப்⁴ருʼஶமிவ ப்ரத்யாஹ
தி⁴க்த்வாஸ்த்வித்யேவைநமாஹு: பித்ருʼஹா வை த்வமஸி மாத்ருʼஹா வை
த்வமஸி ப்⁴ராத்ருʼஹா வை த்வமஸி ஸ்வஸ்ருʼஹா வை த்வமஸ்யாசார்யஹா
வை த்வமஸி ப்³ராஹ்மணஹா வை த்வமஸீதி ॥ 7.15.2॥

அத² யத்³யப்யேநாநுத்க்ராந்தப்ராணாஞ்சூ²லேந ஸமாஸம்
வ்யதிஷந்த³ஹேந்நைவைநம் ப்³ரூயு: பித்ருʼஹாஸீதி ந மாத்ருʼஹாஸீதி
ந ப்⁴ராத்ருʼஹாஸீதி ந ஸ்வஸ்ருʼஹாஸீதி நாசார்யஹாஸீதி
ந ப்³ராஹ்மணஹாஸீதி ॥ 7.15.3॥

ப்ராணோ ஹ்யேவைதாநி ஸர்வாணி ப⁴வதி ஸ வா ஏஷ ஏவம் பஶ்யந்நேவம்
மந்வாந ஏவம் விஜாநந்நதிவாதீ³ ப⁴வதி தம்
சேத்³ப்³ரூயுரதிவாத்³யஸீத்யதிவாத்³யஸ்மீதி ப்³ரூயாந்நாபஹ்நுவீத
॥ 7.15.4॥

அதி வாதி –ஆத்மா ஸ்ரேஷ்டம் என்று இருப்பவன்
இதுவே பூமா -நாரதர் திருப்தியாக இருப்பதை பார்த்து -மேலே சங்கை வந்ததும் மேலே உபதேசிப்போம்

॥ இதி பஞ்சத³ஶ: க²ண்ட:³ ॥

காண்டம்-‍15
ஆசையை காட்டிலும் மேலானது பிராணன். ஹிரண்யகர்ப்பன், அனைத்து சூட்சும பூதங்களுக்கு ஆதாரமாக இருக்கிறார்.
இவரே ஸர்வாத்மாவாக இருக்கிறார். விராட் அனைத்து ஸ்தூல ஆதாரமாக இருக்கிறார்.
இந்த உலகிலுள்ள ஜீவர்கள் அனைவரும் ஹிரண்யகர்ப்பனாகவே பாவிக்கப்படுகிறது.
(உ-ம்) மாதா, பிதா, சகோதரன், போன்றவர்கள் எல்லாமே ஒன்றுதான்.

பெரியவர்களை மரியாதையின்றி பேசுவது அவர்களை கொன்று விடுவதற்கு சமமாக கருதப்படும்.
இப்படிப்பட்டவர்களை சான்றோர்கள் ஒதுக்கி வைப்பார்கள். ஆனால் இறந்து விட்ட தாய், தந்தை இவர்களின் உடலை
தீயிலிட்டு கொளுத்தினால் யாரும் ஒன்றும் சொல்ல மாட்டார்கள். ஏனென்றால் பிராணனானது உடலை விட்டு
சென்று விட்டதால் இறந்த உடலுக்கு அந்த மரியாதை கொடுக்காவிட்டால் குறையேதும் இல்லை.

பார்த்தல், பிறகு சிந்தித்தல் அதனால் நிச்சயம் செய்யப்படுவது, அனைத்து அனாத்மா விஷயங்களை தாண்டி பேசுபவன்
அதிவாதி என்று அழைக்கப்படுவான். யாராவது அதிவாதியைப் பார்த்து,
“நீங்கள் உங்கள் நிலையிலிருந்து எங்கள் நிலைக்கு இறங்கி வந்து பேச வேண்டும்”, என்று கேட்டால்,
நான் இந்த நிலையிலிருந்துதான் பேசுவேன் என்று பதிலளிக்க வேண்டும்.

——————-

ஏஷ து வா அதிவத³தி ய: ஸத்யேநாதிவத³தி ஸோঽஹம் ப⁴க³வ:
ஸத்யேநாதிவதா³நீதி ஸத்யம் த்வேவ விஜிஜ்ஞாஸிதவ்யமிதி ஸத்யம்
ப⁴க³வோ விஜிஜ்ஞாஸ இதி ॥ 7.16.1॥

அதை விட சத்யம் தான் ஸ்ரேஷ்டம் -சத்ய சப்தத்தால் ப்ரஹ்மம் –ப்ரஹ்ம அதிவாதி –
கீழே ஆத்ம அதிவாதி -ஆத்மராமர்/
சரீர அதிவாதி சம்சாரிகள் உண்டியே உடையே -இந்திரிய ராமர்

॥ இதி ஷோட³ஶ: க²ண்ட:³ ॥

காண்டம்-‍16
முமுக்ஷுத்வம் தீவிரமாகி விட்டால்தான் அது செயலுக்கு வருகிறது. எவ்வளவு கஷ்டம் வந்தாலும் பொறுத்துக் கொள்ளுதல்,
எவ்வளவு தடைகள் வந்தாலும் முயற்சி செய்து அதை நீக்கி முன்னேறுதல், இதற்காக தியாகங்களை செய்தல் போன்றவை
பரபிரம்மத்தை அடைவதில் உள்ள தீவிரத்தை காட்டுகிறது. யார் பிரம்மத்தை அறிந்து பேசுகிறாரோ அவரை அதிவாதி என்று அழைப்பர்.
பிரம்மத்தை அடைவதுதான் முடிவான இலட்சியமாக கொண்டிருக்க வேண்டும்.

——————-

யதா³ வை விஜாநாத்யத² ஸத்யம் வத³தி நாவிஜாநந்ஸத்யம் வத³தி
விஜாநந்நேவ ஸத்யம் வத³தி விஜ்ஞாநம் த்வேவ விஜிஜ்ஞாஸிதவ்யமிதி
விஜ்ஞாநம் ப⁴க³வோ விஜிஜ்ஞாஸ இதி ॥ 7.17.1॥

எத்தைக் காண வேண்டுமோ அத்தை காண வேண்டும் -ப்ரஹ்மம் சத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்மம் அடைய என்ன வேணும்
மனனம் தேவை
அதுக்கு ஸ்ரத்தை நம்பிக்கை தேவை
அதுக்கு மனஸ் கட்டுப்பாடு தேவை

॥ இதி ஸப்தத³ஶ: க²ண்ட:³ ॥

காண்டம்-‍17
விஞ்ஞானத்தை அடைய முயற்சி செய்யவேண்டும். விஞ்ஞானம் என்பது பிரம்மத்தைப் பற்றிய அறிவாகும்.
அதை அறிந்தவனால் தான் சத்தியத்தைப் பற்றி பேச முடியும். இதை அடைவது எப்படி? அதற்குரிய சாதனம் என்ன?
என்று கேட்டால், விசாரம் தான் ஞானத்தை அடைய உதவும் சாதனம். ஏன் விசாரம் தேவை? எதை, எப்பொழுது விசாரம் செய்ய வேண்டும்?

——————

யதா³ வை மநுதேঽத² விஜாநாதி நாமத்வா விஜாநாதி மத்வைவ
விஜாநாதி மதிஸ்த்வேவ விஜிஜ்ஞாஸிதவ்யேதி மதிம் ப⁴க³வோ
விஜிஜ்ஞாஸ இதி ॥ 7.18.1॥

॥ இதி அஷ்டாத³ஶ: க²ண்ட:³ ॥

காண்டம்-‍18
விசாரத்தின் தேவை:
நான் சம்சாரியா, அசம்சாரியா என்று சந்தேகம் வந்தால் நம் அனுபவத்தின் அடிப்படையில் அறிந்து கொள்ளலாம்.
வேதம் ஜீவர்களை பூரணமானவர்கள், அழிவற்றவர்கள் என்று உரைக்கிறது.
அதே வேதம் கர்ம காண்டத்தில் சம்சாரி என்ற பாவனையில் சில இடங்களில் போதிக்கிறது. இதைத்தான் விசாரம் செய்தறிய வேண்டும்.
நான் என்னை யார் என்று நினைக்கிறேன். நம் அனுபவம் நம்மை சம்சாரி என்று உணர்த்துகிறது.
எனவே இரண்டு பிரமாணங்கள் இரண்டு விதமான அர்த்தத்தை கொடுக்கும்போது விசாரம் அவசியமாகிறது.

எதை விசாரம் செய்வது:
வாத்யார்த்த விசாரம்: வாக்கியத்தின் அர்த்தத்தை விசாரம் செய்தல். எந்த அடிப்படையில் உபதேசம் செய்கிறது
என்று வேதாந்த வாக்கியத்தை விசாரம் செய்ய வேண்டும். விசாரம் செய்யாமல் ஒருவனுக்கு அறிவு கிடைக்காது.
புத்தியிலுள்ள தமஸானது செய்யவிடாது, புத்திக்கூர்மை விசாரம் செய்ய உதவும்.
ஆனால் அதை செயல்படுத்த மனதானது தமஸாக இருக்கக்கூடாது

—————-

யதா³ வை ஶ்ரத்³த³தா⁴த்யத² மநுதே நாஶ்ரத்³த³த⁴ந்மநுதே
ஶ்ரத்³த³த⁴தே³வ மநுதே ஶ்ரத்³தா⁴ த்வேவ விஜிஜ்ஞாஸிதவ்யேதி
ஶ்ரத்³தா⁴ம் ப⁴க³வோ விஜிஜ்ஞாஸ இதி ॥ 7.19.1॥

॥ இதி ஏகோநவிம்ஶதிதம: க²ண்ட:³ ॥

காண்டம்-‍19
விசாரம் செய்வதற்கு சாதனம் என்ன? அது சிரத்தை (விசுவாசம்) என்கின்ற குணம்.
சிரத்தையானது வேதாந்த வாக்கியத்திலும், குரு வார்த்தையிலும் நம்பிக்கை வைத்தல்.
இதுதான் பயனை அடைவதற்கு முன் அதைத் தரக்கூடிய செயலை செய்ய வைக்கும்.
ஞானம் வந்தவுடன் சிரத்தையின் அவசியம் முடிந்து விடுகிறது. எனவே சிரத்தையுடன் இருக்க வேண்டும்.
எப்பொழுது ஒருவன் வேதாந்த குரு வார்த்தையின் மீது சிரத்தையுடன் இருக்கும்போதுதான் ஞானமடைய விசாரம் செய்து கொண்டிருப்பான்.
சிரத்தையில்லாதவன் விசாரத்தில் ஈடுபடமாட்டான். எனவே சிரத்தைத்தான் நம்மால் அடையப்பட வேண்டும்.

——————-

யதா³ வை நிஸ்திஷ்ட²த்யத² ஶ்ரத்³த³தா⁴தி
நாநிஸ்திஷ்ட²ஞ்ச்²ரத்³த³தா⁴தி நிஸ்திஷ்ட²ந்நேவ ஶ்ரத்³த³தா⁴தி
நிஷ்டா² த்வேவ விஜிஜ்ஞாஸிதவ்யேதி நிஷ்டா²ம் ப⁴க³வோ
விஜிஜ்ஞாஸ இதி ॥ 7.20.1॥

॥ இதி விம்ஶதிதம: க²ண்ட:³ ॥

காண்டம்-‍20
இந்த சிரத்தையை வளர்த்துக்கொள்ள நிஷ்டா என்ற சாதனம் தேவை. குருவுக்கு செய்யும் சேவையில் சிரத்தை வரும்.
ஞானத்தை பலனை அடைந்தவரை நாடினால் சிரத்தைதானாக வரும்.
அவரைத்தான் பிரம்ம நிஷ்டை உள்ள குருவையடைய வேண்டும். அவர் ஸ்ரோத்ரனாகவும் இருக்க வேண்டும்.
அதனால் அப்படிப்பட்ட குருவினுடைய அருகில் செல்ல சேவை (நிஷ்டா) உதவுகிறது.
இந்த சேவை மூலம் பணிவு என்ற குணம் வந்து விடுகிறது. இதனால் விக்ஞானமய கோசத்திலிருந்து விடுபட முடியும்.
எந்தவித பலனும் எதிர்ப்பார்க்காமல், மனம் கோணாமல் தேவைப்படுபவர்களுக்கு உதவி செய்ய வேண்டும்.
இப்படி செய்யும் போது சிரத்தை வந்து விடுகிறது. சேவை செய்யாதவர்களுக்கு சிரத்தை வராது.

—————

யதா³ வை கரோத்யத² நிஸ்திஷ்ட²தி நாக்ருʼத்வா நிஸ்திஷ்ட²தி
க்ருʼத்வைவ நிஸ்திஷ்ட²தி க்ருʼதிஸ்த்வேவ விஜிஜ்ஞாஸிதவ்யேதி
க்ருʼதிம் ப⁴க³வோ விஜிஜ்ஞாஸ இதி ॥ 7.21.1॥

ப்ரஹ்மம் நிரதிசய ஸூக ரூபம் -ஆனந்தோ ப்ரஹ்மம் அறிந்தால் தானே வருவான் –
அள்ள அள்ள குறையாத கோதில் இன்னமுதம் -தேனே பாலே கன்னலே அமுதமே -என்ற ஞானம் வேணுமே –

॥ இதி ஏகவிம்ஶ: க²ண்ட:³ ॥

காண்டம்-‍21
க்ரிதி:- சமஹ, தமஹ – மனக்கட்டுப்பாடு, இந்திரியக் கட்டுப்பாட்டோடு
சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் மட்டும் போதாது மனக்கட்டுப்பாடு, இந்திரியக்கட்டுப்பாடும் தேவை.

————–

யதா³ வை ஸுக²ம் லப⁴தேঽத² கரோதி நாஸுக²ம் லப்³த்⁴வா கரோதி
ஸுக²மேவ லப்³த்⁴வா கரோதி ஸுக²ம் த்வேவ விஜிஜ்ஞாஸிதவ்யமிதி
ஸுக²ம் ப⁴க³வோ விஜிஜ்ஞாஸ இதி ॥ 7.22.1॥

॥ இதி த்³வாவிம்ஶ: க²ண்ட:³ ॥

காண்டம்-‍22
ஒருவன் எந்தவிதமான காரியத்தில் ஈடுபட்டாலும், அதில் சுகம் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தினால் தான் ஈடுபடுவான்.
யோகியும் சுகத்தை நாடித்தான் ஒரு காரியத்தில் ஈடுபடுகிறான்.
மனக்கட்டுப்பாடு, இந்திரியக்கட்டுப்பாட்டினால் அடையும் இன்பம் நூறு மடங்கு இருக்கும்.
எனவே இந்தவகையான இன்பத்தினைத்தான் நாட வேண்டும்.

———–

யோ வை பூ⁴மா தத்ஸுக²ம் நால்பே ஸுக²மஸ்தி பூ⁴மைவ ஸுக²ம்
பூ⁴மா த்வேவ விஜிஜ்ஞாஸிதவ்ய இதி பூ⁴மாநம் ப⁴க³வோ
விஜிஜ்ஞாஸ இதி ॥ 7.23.1॥

॥ இதி த்ரயோவிம்ஶ: க²ண்ட:³ ॥

காண்டம்-‍23
பூமா, மஹத் – பரபிரம்மம், நிரதிஷ்யம் – முழுமையானது, பூர்ணம் – நிறைந்த்து.

எது பூமாவோ அதுதான் சுகம். சுகம் இரண்டு வகையாக பிரிக்கப்படுகிறது. ஒன்று ஆபாஸ சுகம், மற்றொன்று சுபாவமாக உள்ளது.
(உ-ம்) காபியில் இருக்கும் இனிப்பு ஆபாஸ சுகம்,
ஆனால் அதில் இருக்கும் சர்க்கரையில் இருக்கும் இன்ப்பானது சுபாவமானது, இயற்கையானது.

நாம் அனுபவிக்கும் சுகமானது, அனுபவிக்கும் விஷயத்தினுடைய சுபாவமானதல்ல.
அல்பமான அனைத்து விஷயங்களில் அனுபவிக்கும் சுகத்தை நாம் அடைய விரும்புகிறோம், சுகத்தை பார்க்கிறோம்.
உண்மையில் அந்த சுகமானது திருப்தியைக் கொடுக்காமல் மேலும் அதைவிட மேலான சுகத்தை அடைய வேண்டும்
என்ற ஆசையை தூண்டி விடுகிறது. எனவே இதையெல்லாம் தவிர்த்து பூமாவைத்தான் நாட வேண்டும் அதுதான் சுகத்தின் இருப்பிடம்.
பூமாவை அடைந்தால் நீ சுகத்தை அடைவாய். அனாத்மாவில் சுபாவ சுகம் இருக்கிறதென்றால் அதை
எல்லோருக்கும் சுக புத்தியை உண்டு செய்யும். ஆனால் உண்மையில் அப்படி இல்லை.
எனவே அதில் தெரியும் சுகம் தோற்றமே. உதாரணமாக சிலருக்கு சுகம் கொடுக்கும் விஷயமே
மற்றவருக்கு துக்கத்தைக் கொடுக்கும். (ந அல்பே ஸுகம் அஸ்தி)

——————

யத்ர நாந்யத்பஶ்யதி நாந்யச்ச்²ருʼணோதி நாந்யத்³விஜாநாதி ஸ
பூ⁴மாத² யத்ராந்யத்பஶ்யத்யந்யச்ச்²ருʼணோத்யந்யத்³விஜாநாதி
தத³ல்பம் யோ வை பூ⁴மா தத³ம்ருʼதமத² யத³ல்பம் தந்மர்த்ய்ꣳ ஸ
ப⁴க³வ: கஸ்மிந்ப்ரதிஷ்டி²த இதி ஸ்வே மஹிம்நி யதி³ வா
ந மஹிம்நீதி ॥ 7.24.1॥

அதுக்கு அடையாளம் சொல்லி நிகமிக்கிறார் –
பார்த்தால் கண் வேறு ஒன்றில் காணாதோ கேட்டால் காது வேறு ஒன்றை கேட்காதோ —
என் அமுதினைக் கண்ட கண்கள் மற்று ஒன்றினைக் காணாவே —

கோ³அஶ்வமிஹ மஹிமேத்யாசக்ஷதே ஹஸ்திஹிரண்யம் தா³ஸபா⁴ர்யம்
க்ஷேத்ராண்யாயதநாநீதி நாஹமேவம் ப்³ரவீமி ப்³ரவீமீதி
ஹோவாசாந்யோஹ்யந்யஸ்மிந்ப்ரதிஷ்டி²த இதி ॥ 7.24.2॥

சொத்து குதிரை யானை -அல்பம்-ஓன்று கிடைத்தால் மேலே மேலே -ப்ரஹ்மம் அடைந்தபின்பு இரண்டாவது தேட மாட்டோமே –
தர்சனமே பலன் -தரிசனத்துக்கு பலம் வேண்டாமே
உபதேசம் பெறுவதே பலன் -பரீக்ஷித் சுகர் சம்வாதம்

॥ இதி சதுர்விம்ஶ: க²ண்ட:³ ॥

காண்டம்-‍24

நான் என்ற சொல்லில் ஆத்மாவும், அனாத்மாவும் சேர்ந்து குறிக்கிறது.
இங்கே அனாத்மாவை மட்டும் நீக்கி விட்டால் ஆத்மா தானாகவே புரிந்துவிடும்.
ஆத்மாவைப் பற்றி அனுபவம் இருக்கிறது ஆனால் அறிவில்லை.

யத்ர – எதனிடத்தில்;
அன்யத் – வேறொன்றை;
ந பஷ்யதி – பார்க்கவில்லையோ; அதுவே பூமாவாகும்.
வேறொருவன் வேறொரு கருவியைக் கொண்டு வேறொரு விஷயத்தைப் பார்ப்பதில்லையோ
அதாவது எதனிடத்தில் ஒன்றை ஒருவன் ஒன்றினால் பார்ப்பது இல்லையோ அதுவே பூமாவாகும்.
அதேமாதிரி வேறொன்றை அறிவதில்லையோ.
யத்ர நான்ய பஷ்யதி, நான்ய விஜானாதி, நான்ய ஸ்னோதி, தத்ர பூமா.
· நாம ரூபங்களை நிஷேதம் செய்யப்படுகிறது
· எல்லா இந்திரியங்களின் விஷயங்களையும் நிஷேதம் செய்யப்படுகிறது
· பூமா என்பது தெரிவதில்லை, உணரப்பட வேண்டியது.
· அறிபவனொருவன் (சிதாபாஸன்) இந்திரியங்களை பயன்படுத்தி விஷயங்களை அறிந்துக் கொண்டிருக்கிறான்.
· சிதாபாஸன், அந்தக்கரணம், பிரபஞ்சம் இவையெல்லாம் எதில் ஒடுங்குகிறதோ அதுவே சைதன்யம்
· பார்ப்பவன் பார்க்கும் பொருள், பார்க்க உதவும் கருவி இவையெல்லாம் நீக்கி விட்டால் பிறகு உணரப்படுவது பரப்பிரம்மம்
· எது காட்சி மாதிரி தோன்றிக்கொண்டிருக்கிறதோ அதைத்தான் நீக்க முடியும்.
· பூமாவில் ஒருவன் எதைக்கொண்டும் அதையும் அறிவதில்லை.

பிரம்ம லக்ஷணங்கள்:-
1. பிரம்ம ஸ்வரூபம் – விவகாரத்திற்குள் வருவதில்லை. நாம் அனுபவிக்கின்ற பிரபஞ்சம்தான் மித்யா,
இதுதான் விவகாரத்திற்கு வருகிறது. இவை ஞான விவகாரம், கர்ம விவகாரம் என இருவகையாக பிரிக்கப்படுகிறது.
2. நிர்விகல்பம் – பேதமற்றது – பிரம்மத்தில் பேதமற்றது.
3. விகல்பம் – பேதம்
a. ஞான விவகாரத்திற்கு தேவையான விகல்பம். அறிபவன்(பிரமாதா), பிரமானம் (கருவி), பிரமேயம் (அறியப்படும் பொருள்).
இந்த மூன்றும் இருந்தால்தான் ஞானம் ஏற்படும்.
b. கர்ம விவகாரத்திற்கு தேவையான விகல்பம். கர்த்தா, கரணம் கர்ம (பொருள்)

காரக பேதங்கள் : கர்ம விவகாரத்தில் இருக்கும் பேதங்கள் நிர்விகல்பம் என்றால் ஞானபேதமும் இல்லாதது, கர்மபேதமும் இல்லாதது

நிர்விகல்ப விசாரம்
ஆழ்ந்த தூக்கத்திலும், மயக்கமடைந்த நிலையிலும் யோகிகளின் சமாதி நிலை. வேறொன்றையும் பார்ப்பதில்லை அறிவதுமில்லை.
இது பிரம்ம லட்சணைக்கு பொருந்தி இருந்தாலும் இது அநித்யமாக இருப்பதாலும்,
காலவரை யறைக்குட்பட்டதாலும் இது பிரம்ம லக்ஷணையில் சேராது.

அவஸ்தை (காலவரையறைக்குட்பட்ட அனுபவம்) என்பது வேறொரு அவஸ்தையால் நீக்கப்படும் ஆனால்
ஸ்வரூபம் என்பது நிலையானது, நித்தியமானது இதுவே பூமா என்றழைக்கப்படுகிறது.

சவிகல்ப அவஸ்தை, நிர்விகல்ப அவஸ்தை இந்த இரு அவஸ்தைகளுக்கும் இடையே நிலையாக இருப்பது
நிர்விகல்பமாக இருப்பது பூமா என்ற பிரம்மம். இப்படி நிர்விகல்ப ஸ்வரூபமாக இருப்பது நான் என்று
உணர்ந்து விட்டால் பிரம்மஞானியாகி விடுவோம்.

நிர்விகல்ப அவஸ்தை ஒரு லட்சியமில்லை, சாத்தியமுமில்லை சம்சாரத்திலிருந்து தற்காலிகமாக ஓய்வில் இருக்கிற நிலை,
திரும்பவும் சம்சாரத்திற்கு வந்து விடும். இது ஒரு சாதனையுமில்லை, சாத்தியமுமில்லை சவிகல்ப அவஸ்தைதான் ,
நிர்விகல்ப ஸ்வரூபத்தை அடைவதற்கு சாதனையாகும்.

சில பொருட்கள் அனுபவத்தில் இருந்தாலும் அறிவில்லையென்றால் அதையறிய முடியாது.
உதாரணமாக பத்தாவது மனிதனை தேடும் ஒருவன், தன்னை விட்டு விட்டு மற்ற ஒன்பது பேர்களை எண்ணி,
பத்தாவது மனிதன் தொலைந்து விட்டான் என்று கவலைப்படும்போது வேறொருவன் அவனை பார்த்து நீதான்
அந்த பத்தாவது மனிதன் என்று கூறியவுடன் அவன் தன்னை உணர்ந்து கொண்டது போல.
ஜாக்ர அவஸ்தையில் இருந்துதான் ஞானத்தை அடைய வேண்டும்.
இந்த ஞானம் நிர்விகல்ப ஸ்வரூபம் (சாத்தியம்) இதை நிச்சயம் செய்பவர்தான் முமுக்க்ஷு.

கர்ம கர்த்துரு தோஷம்: அறிபவனும் அறியப்படும் பொருளும் எப்போதும் நடக்காது.
தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகள் தெரியும் போதும், அதை அனைத்தப் பிறகு எதுவும் தெரியாது இருந்தாலும்
அது அப்படியேதான் இருக்கும். எவன் ஒன்றை பார்க்கிறானோ, கேட்கிறானோ, அறிகிறானோ அது அனாத்மா, மாயை, சவிகல்ப நிலை.

காரணம்-1 பூமாவை அம்ருதம் என்று சொல்வதால் அது நித்யமானது
காரணம்-2 சவிகல்ப அவஸ்தை நிகழ்காலத்தில் அனுபவிப்பது. அதேமாதிரி பூமாவும் இருந்துக் கொண்டிருக்கும்.
உதாரணமாக, கயிற்றில் பாம்பு பார்ப்பது போல இரண்டும் ஒரே காலத்தில் நிகழ்வது.

வேறொன்றில்லை, பார்க்கவில்லை, கேட்கவில்லை, அறியவில்லை என்ற வார்த்தைகள் அதை மட்டும் பார்க்கிறோம்
என்று பொருள் கொள்ளலாம் அதே போல வேறொன்று இருக்கிறது ஆனால்
இப்பொழுது அது தெரியவில்லை என்றும் பொருள் கொள்ளலாம். இதிலிருந்து பார்ப்பவன், கேட்பவன் என்ற த்வைதம் தெரிகிறது.

1. கர்ம கர்த்திரு தோஷத்தின்படி பார்ப்பவனும், பார்க்கப்படும் பொருளும் எப்பொழுதும் ஒன்றாக இருக்காது
2. அவித்யை அடிப்படையிலெ இந்த மாதிரி சொல்லியிருக்கிறது. பிரம்மத்தில் ஏற்றி வைக்கப்பட்ட விஷயங்களை நீக்குகிறோம்.

அறியாமை இருக்கும்வரை த்வைதம் தெரிந்து கொண்டேயிருக்கும்.
அக்ஞானம் இருக்கும் வரை இந்த உலகம் தெரிந்து கொண்டேயிருக்கும்.
ஞானம் வந்தபின் கயிற்றில் தோன்றிய பாம்பு மறைவதைப்போல மறைந்து விடும்.

ஸ்ருஷ்டி – நாமரூப வெளிப்பாடு
பிரளயம் – நாமரூப ஒடுங்குதல்
நிஷேதம் – நாமரூபம் ஒன்றுமில்லை என்று நீக்குவது
விஜானாதி – மனம் கிரகிக்கக்கூடிய விஷயங்கள், அனுபவமாக ஏற்படுதல்

மனதினால் அடையமுடியாது என்றால், ஒரு பொருளாக அடைய முடியாது. மனதினால் அறிவது என்றால்,
சவிகல்ப அவஸ்தையை சாதனமாக கொண்டு அறிவது. கனவில் பார்க்கும் விஷயங்கள், பொருட்கள் எல்லாம்
அனுபவிக்கும் விஷயங்கள்யாவும் நான்தான். கனவு முடிந்த்தும் எல்லாம் மறைந்து விடுகிறது,
ஆனால் நான் மட்டும் இருக்கிறேன். இது கானல் நீரை பற்றிய அறிவு வந்ததும்,
அதைப்பார்த்தாலும் அதை அனுபவிக்க கூடியதல்ல என்று உதாசீனபடுத்துகிறோம்.

த்வைதம் நீக்கம் என்பது சம்சாரம் அழிவதைக் குறிக்கிறது, மோட்சத்தை அடைவதை காட்டுகிறது.
எது அல்பமோ அது அழிவடையக் கூடியது. பூமாவோ நித்யமானது.

நாரதர்: அந்த பூமா எதில் இருக்கிறது? எது தாங்கிக்கொண்டிருக்கிறது? எதை சார்ந்திருக்கிறது? அதற்கு எது அதிஷ்டானமாக இருக்கிறது?
சனத்: இதற்கு ஆதாரம் எதுவும் கிடையாது. அதன் சக்தியிலே அது இருக்கின்றது.
நாரதர்: அது எப்படி ஒரு பொருளுக்கு ஆதாரமாக அதுவாகவே இருக்க முடியும்?
சனத்: அதற்கு ஆதாரமாக எதுவும் இல்லை.

ஒரு புத்தகம் இருக்கிறது, அதை கிழித்து விட்டால் புத்தகம் போய் விடுகிறது குப்பை என்று அழைக்கப்படுகிறது.
அதை எரித்து விட்டால் குப்பை என்ற நாமரூபம் போய் சாம்பல் என்றாகிறது. இங்கு இருத்தல் எல்லா நிலையிலும் இருக்கிறது.
எனவே இருத்தல் என்பது சுதந்திரமாக இருக்கிறது எதையும் சார்ந்து இல்லை என்று தெளிவாகிறது.

பூமா என்பது அத்வைதம் என்று நிலைநாட்டப்பட்டது. இனி அதை எப்படி வேண்டுமானாலும் அழைக்கலாம்.
ஒருவனுடைய புகழும் பெருமையும் பணத்தால் அல்லது இருக்கும் பதவியால் வந்தவையாக இருக்கும்.
இதிலிருந்து ஒருவன் எதையாவது ஒன்றை சார்ந்துதான் இருக்கிறான்.

————-

ஸ ஏவாத⁴ஸ்தாத்ஸ உபரிஷ்டாத்ஸ பஶ்சாத்ஸ புரஸ்தாத்ஸ
த³க்ஷிணத: ஸ உத்தரத: ஸ ஏவேத³ꣳ ஸர்வமித்யதா²தோঽஹங்காராதே³ஶ
ஏவாஹமேவாத⁴ஸ்தாத³ஹமுபரிஷ்டாத³ஹம் பஶ்சாத³ஹம் புரஸ்தாத³ஹம்
த³க்ஷிணதோঽஹமுத்தரதோঽஹமேவேத³ꣳ ஸர்வமிதி ॥ 7.25.1॥

அதுதான் முன்னும் பின்னும் மேலும் கீழும் -புறமும் உள்ளும் –

அதா²த ஆத்மாதே³ஶ ஏவாத்மைவாத⁴ஸ்தாதா³த்மோபரிஷ்டாதா³த்மா
பஶ்சாதா³த்மா புரஸ்தாதா³த்மா த³க்ஷிணத ஆத்மோத்தரத
ஆத்மைவேத³ꣳ ஸர்வமிதி ஸ வா ஏஷ ஏவம் பஶ்யந்நேவம் மந்வாந ஏவம்
விஜாநந்நாத்மரதிராத்மக்ரீட³ ஆத்மமிது²ந ஆத்மாநந்த:³ ஸ
ஸ்வராட்³ப⁴வதி தஸ்ய ஸர்வேஷு லோகேஷு காமசாரோ ப⁴வதி
அத² யேঽந்யதா²தோ விது³ரந்யராஜாநஸ்தே க்ஷய்யலோகா ப⁴வந்தி
தேஷாꣳ ஸர்வேஷு லோகேஷ்வகாமசாரோ ப⁴வதி ॥ 7.25.2॥

அந்தராத்மாவாய் இருக்கும் ப்ரஹ்மமே எங்கும் -பூமா அறிந்தவன் தன்னிலே தானே மகிழ்ந்து –
அனைத்தும் ப்ரஹ்மம் உணர்ந்து -சாம்யா பத்தி அடைகிறான்

॥ இதி பஞ்சவிம்ஶ: க²ண்ட:³ ॥

காண்டம்-‍25 பரபிரம்ம லக்ஷணம் / பிரயோஜனம்
ஒரு பொருள் பூரணமாக உள்ளது என்று உறுதி செய்ய வேண்டுமென்றால் அதற்கு இணையாக வேறொன்று இருக்கக் கூடாது

பூமாவுக்கு வேறுபட்டதாக இரண்டு தத்துவங்கள் தோன்றிக் கொண்டிருக்கிறது.
ஜகத்தும்,ஜீவனும் வேறாக (விலக்ஷணம்) இருப்பதாக நினைக்கிறோம். ஜகத்தானது ஜடமாக பூமாவுக்கு வேறாக தோன்றுகிறது.
ஜீவன் அறிவு ஸ்வரூபம் இது பூமா போன்றதாக உள்ளது. இது இரண்டும் இல்லையென்று நிரூபிக்க வேண்டும்.
காரிய காரண தத்துவத்தை பயன்படுத்தி நீக்கப்படும். ஜீவனிடத்திலுள்ள மூன்று சரீரங்கள் ஜகத்துடன் சேர்த்து விட்டு
அறிவையும், பிரம்ம ஸ்வரூபத்துடன் ஐக்கியப்படுத்திட வேண்டும்.

ஜகத்தை நிஷேதம் செய்யும் இரண்டாவது உபாயம்
ஒரு சொற்றொடரில் உள்ள எல்லா சொற்களும் பொருளை குறிக்கிறது. வாக்யம் எப்பொழுதும் த்வைதத்தை போதிக்கிறது.
ஆனால் சில வாக்கியங்கள் ஒரே பொருளை மட்டும் குறிக்கலாம்.
(உ-ம்) தயாள குணமுள்ள, தசரத புதல்வன், மனித அவதாரம், தர்மத்தை ரக்ஷிக்கும் ராமபிரான்.
இந்த வாக்கியத்தில் உள்ள எல்லா சொற்களும் ஒரே பொருளான ராமரை மட்டும் குறிக்கிறது.
இதற்கு சாமான அதிகரணம் என்று பெயர். எனவே ஒரு வாக்கியம் சாமானதிகரண்யமாக இருப்பதால் அது இருமையைக் குறிக்காது.

1. ஐக்கிய சாமானாதி கரணம் – ஒரு சொல்லிலுள்ள இரண்டு சொற்களை ஐக்கியப்படுத்தி ஒன்றை சமானப்படுத்துதல்,
உதாரணமாக தத்துவம்-அஸி, மொட்டையுடன் இப்போது காட்சியளிக்கும் இவர், முன்பு தாடி மீசையுடன் இருந்தார்.
2. பாதாய சாமானாதி கரணம் – தூணில் தெரிந்த திருடன் என்ற வாக்கியத்தில்,
திருடன் என்ற சொல்லின் பொருள் நீங்கி தூண் மட்டும் நான் இருக்கிறேன் என்பதைக்காட்டுகிறது.
அது போல ஜகத்தானது பிரம்மம்தான், என்ற சொற்றொடரில் ஜகத்தானது நீக்கப்பட்டு பிரம்மத்திடம் மட்டும் பொருள் கொள்கிறது.

அதிகரணம்: ஒரு சொல் எந்தப்பொருளை குறிக்கிறதோ அதற்கு அதிகரணம் என்று பெயர்.
(உ-ம்) புத்தகம் – இந்தச்சொல் புத்தகத்தை மட்டும் குறிக்கிறது.
சாமானதிகரணம்: ஒரு சொற்றொடரில் உள்ள எல்லாச் சொற்களும் அதற்குரிய அதிகரணத்தை குறிப்பதால்
இது இவ்வாறு அழைக்கப்படுகிறது.

மரத்தினால் செய்யப்பட்ட யானை பொம்மையில், அதன் உருவத்தை பார்க்கும்போது மரம் மறைந்து விடுகிறது.
மரத்தை பார்க்கும்போது யானை உருவம் மறைந்துவிடும். அதேபோல பிரம்மத்தின்மீது ஏற்றி வைக்கப்பட்ட
ஜகத்தை நீக்கி பிரம்மத்தை மட்டும் பார்க்க வேண்டும். அதுவே இவையனைத்துமாக இருக்கிறது.
अहं एव इदं सर्वं – நானே இவையனைத்துமாக இருக்கிறேன் என்று புரிந்து கொள்ள வேண்டும்.
இங்கே நான் என்பது ஆத்மாவை குறிக்கிறது.
आद्माएव इदं सर्वं – ஆத்மா மட்டும்தான் எங்கும் வியாபித்திருக்கிறது

ஆத்மாவிடமிருந்து வேறுபடாத விஷயம்தான் நான் (अहं). பார்க்கிறதெல்லாம் நான்தான் “அது” என்பதை “நான்” என்று
அழைக்கக் காரணம் அனாத்மாவை ஆத்மாவோடு சேர்த்துப்பார்ப்பதால்தான்.
இங்கு அனாத்மாவை நீக்கி ஆத்மாவை நான்தான் என்று உணர வேண்டும். நான் என்பதை அழித்துவிட வேண்டும் என்று யாரும் விரும்ப மாட்டார்கள்.
இவ்வாறு பிரம்மமே நான் என்று அறிந்தவுடன் அதன் உண்மை ஸ்வரூபத்தை அடைகிறோம்.
இதுவே மோட்சத்தை அடைதல் என்று கூறுகிறோம். எந்த ஜீவன் இவ்விதமாக அறிகிறானோ (சிரவணம்),
இவ்விதமாக சிந்திக்கின்றானோ (மனனம்), பிறகு அந்தச் சிந்தனையில் நிலைபெற முயற்சி செய்து கொண்டு
இருக்கிறார்கனோ(நிதித்யாஸனம்) அவன் இந்த மாதிரியான பலனை அடைகிறான். இதுதான் ஜீவன்முக்தி நிலை.
நம் ஆனந்தத்திற்கு வெளியே உள்ள பொருட்களை நாடுதல், நமக்கு நாமே சில நிபந்தனைகளை போட்டுக்கொண்டு
அதன் அடிப்படையில் இன்பத்தை நாடுகிறோம், தேடுகிறோம்.

ஆத்ம மிதுனஹ – தன் ஆனந்தத்தை, பற்றை தேடுதல்
ஆத்மானந்தஹ – ஆனந்தம் தன்னிடத்திலேதான்
ஸ்வராட் – தனக்குத்தானே ராஜாவாக இருக்கிறான்.

ஜீவன் முக்தன் மீதமுள்ள வாழ்நாள் முழுவதும் இப்படியே இருக்கிறான். உயிர் வாழ்வதற்கு பிறவற்றை சார்ந்திருக்க வேண்டும்.
அதாவது அன்னம், நீர், வாயு போன்றவற்றின் உதவி தேவைப்படுகிறது. ஆனால், தன்னிடத்தில் ஆனந்தமாக இருப்பதற்கு
எதையும் சார்ந்திருக்க தேவையில்லை. எல்லா உலகத்திலும் தன் விருப்பப்படி வாழலாம். எந்தவிதமான கட்டுப்பாடும் இல்லை.
உலகத்திலுள்ள எல்லா பொருட்களின் மீது ஆசையில்லாமன் இருக்கிறான்.

அக்ஞானியின் நிலை:
யார் இந்த அறிவை அடையாமல் இருக்கிறார்களோ அவர்கள் மற்றவர்களை சார்ந்திருக்கிறார்கள்.
இவர்கள் அழியக்கூடிய உலகத்தில் அழியக்கூடிய உடலைப்பெற்று வாழ்வார்கள்.
இவர்கள் எல்லா உலகத்திலும் மற்றவர்களுக்கு கட்டுபட்டு இருப்பார்கள். அதாவது ஆசைவசப்பட்டு துன்பத்தில் உழன்று கொண்டிருப்பார்கள்.

————–

தஸ்ய ஹ வா ஏதஸ்யைவம் பஶ்யத ஏவம் மந்வாநஸ்யைவம் விஜாநத
ஆத்மத: ப்ராண ஆத்மத ஆஶாத்மத: ஸ்மர ஆத்மத ஆகாஶ
ஆத்மதஸ்தேஜ ஆத்மத ஆப ஆத்மத
ஆவிர்பா⁴வதிரோபா⁴வாவாத்மதோঽந்நமாத்மதோ ப³லமாத்மதோ
விஜ்ஞாநமாத்மதோ த்⁴யாநமாத்மதஶ்சித்தமாத்மத:
ஸங்கல்ப ஆத்மதோ மந ஆத்மதோ வாகா³த்மதோ நாமாத்மதோ மந்த்ரா
ஆத்மத: கர்மாண்யாத்மத ஏவேத³ꣳஸர்வமிதி ॥ 7.26.1॥

ததே³ஷ ஶ்லோகோ ந பஶ்யோ ம்ருʼத்யும் பஶ்யதி ந ரோக³ம் நோத து:³க²தாꣳ
ஸர்வꣳ ஹ பஶ்ய: பஶ்யதி ஸர்வமாப்நோதி ஸர்வஶ இதி
ஸ ஏகதா⁴ ப⁴வதி த்ரிதா⁴ ப⁴வதி பஞ்சதா⁴
ஸப்ததா⁴ நவதா⁴ சைவ புநஶ்சைகாத³ஶ: ஸ்ம்ருʼத:
ஶதம் ச த³ஶ சைகஶ்ச ஸஹஸ்ராணி ச
விꣳஶதிராஹாரஶுத்³தௌ⁴ ஸத்த்வஶுத்³தௌ⁴ த்⁴ருவா ஸ்ம்ருʼதி:
ஸ்ம்ருʼதிலம்பே⁴ ஸர்வக்³ரந்தீ²நாம் விப்ரமோக்ஷஸ்தஸ்மை
ம்ருʼதி³தகஷாயாய தமஸஸ்பாரம் த³ர்ஶயதி
ப⁴க³வாந்ஸநத்குமாரஸ்தꣳ ஸ்கந்த³ இத்யாசக்ஷதே
தꣳ ஸ்கந்த³ இத்யாசக்ஷதே ॥ 7.26.2॥

அனைத்தும் ஸ்ருஷ்டிக்கப்பட்டு -அந்தர்யாமி -அதிலே லயித்து -அறிந்தவன் முக்தன்
ப்ரஹ்மம் போலே முக்தனும் சஞ்சரித்து -பல திருமேனி எடுத்து பலவித கைங்கர்யம் –
சென்றால் குடையும் இத்யாதி –

ஆகார சுத்தி சத்வ சுத்தி த்ருவா ஸ்ம்ருதி -த்யானம் இடைவிடாமல் – சர்வ கிரந்தி ஐயம் திரிபு தொலைந்து –
காம க்ரோத லாபங்கள் தோலையும் –சனத்குமாரர் நாரதர் அஞ்ஞானம் போக்கி

॥ இதி ஷட்³விம்ஶ: க²ண்ட:³ ॥
॥ இதி ஸப்தமோঽத்⁴யாய: ॥

காண்டம்-‍26
இவ்விதம் படிப்படியாக தாண்டி ஞானத்தையடைந்த ஞானியானவனுக்கு இந்தப்படிகள் எல்லாம் அவன் மீது
ஏற்றி வைத்துப்பார்க்கப்பட்டதுதான். எல்லாமே என்னிடமிருந்துதான் தோற்றுவிக்கப்பட்டது.
அனைத்து ஸ்ருஷ்டியும்,லயமும் என்னிடத்தில் இருந்துதான் வந்தது, ஒடுங்குகிறது.
பார்ப்பவன் பார்ப்பதில்லை – ஆத்மாவை பார்ப்பவன்,மரணத்தைப் பார்ப்பதில்லை. நோயை பார்ப்பதில்லை, துயரத்தை பார்ப்பதில்லை.
இவன் எல்லாவற்றையும் தானாக பார்ப்பான், எல்லாவிதத்திலும் தன்னையே அடைகிறான்.
மனதுக்கு இந்திரியங்கள் மூலம் நல்ல விஷயங்களை கொடுத்தால் சித்த ஸுத்தி ஏற்பட்டு அடைய வேண்டிய ஞானத்தை அடைவதில் வெற்றியடையலம்.

————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ சாந்தோக்ய உபநிஷத் –அத்யாயம்-6–

March 22, 2021

॥ ஷஷ்டோ²ঽத்⁴யாய: ॥
ஶ்வேதகேதுர்ஹாருணேய ஆஸ தꣳ ஹ பிதோவாச ஶ்வேதகேதோ
வஸ ப்³ரஹ்மசர்யம் ந வை ஸோம்யாஸ்மத்குலீநோঽநநூச்ய
ப்³ரஹ்மப³ந்து⁴ரிவ ப⁴வதீதி ॥ 6.1.1॥

ஸ ஹ த்³வாத³ஶவர்ஷ உபேத்ய சதுர்விꣳஶதிவர்ஷ:
ஸர்வாந்வேதா³நதீ⁴த்ய மஹாமநா அநூசாநமாநீ ஸ்தப்³த⁴
ஏயாய தꣳஹ பிதோவாச ॥ 6.1.2॥

ஶ்வேதகேதோ யந்நு ஸோம்யேத³ம் மஹாமநா அநூசாநமாநீ
ஸ்தப்³தோ⁴ঽஸ்யுத தமாதே³ஶமப்ராக்ஷ்ய: யேநாஶ்ருதꣳ ஶ்ருதம்
ப⁴வத்யமதம் மதமவிஜ்ஞாதம் விஜ்ஞாதமிதி கத²ம் நு ப⁴க³வ:
ஸ ஆதே³ஶோ ப⁴வதீதி ॥ 6.1.3॥

சத் வித்யை அடுத்து -சத் -ப்ரஹ்மம்
யாவையும் எவையும் தானாய் -அனைத்தும் சரீரம் தானே –
பிணக்கு இல்லாமல் -ப்ரஹ்மம் அடைவதே இலக்கு
ஸ்வேதகேது –பரிக்ஷை-உரையாடல் -சோம்ய-தட்டிக்கொடுத்து வேளை -அழகிய முகமானவனே –
-12-வருஷம் கற்று -ஒன்றும் அறியாமல் மரம் போலே இருக்க
ஆதேசம் -சொல்லால் சொல்லப்படுபவனை அறிந்தாயா
எத்தைக் கேட்டால் கேட்க்காதது எல்லாம் கேட்டதாகுமோ -புரியாதது எல்லாம் புரிந்தது ஆகுமோ
ஒன்றை அறிந்தால் அனைத்தும் அறிந்தது போலே ஆகுமோ
நீரே சொல்லிக் கொடும் -ஆச்சார்யர் பிரியமானவன் சொல்லிக் கொடுக்க வில்லை
எது ஆணை விடுமோ அது ஆதேசம் -எந்த
நிகில ஜகத் உதய -உதார –

யதா² ஸோம்யைகேந ம்ருʼத்பிண்டே³ந ஸர்வம் ம்ருʼந்மயம் விஜ்ஞாதꣳ
ஸ்யாத்³வாசாரம்ப⁴ணம் விகாரோ நாமதே⁴யம் ம்ருʼத்திகேத்யேவ ஸத்யம்
॥ 6.1.4॥

மண்ணை அறிந்தால் மண்ணால் செய்யப்பட்டவை அனைத்தையும் அறியலாம்
ப்ரதிஜ்ஜைக்கு உதாரணம் -ப்ரதிஜ்ஜா த்ருஷ்டாந்தம் –

யதா² ஸோம்யைகேந லோஹமணிநா ஸர்வம் லோஹமயம் விஜ்ஞாதꣳ
ஸ்யாத்³வாசாரம்ப⁴ணம் விகாரோ நாமதே⁴யம் லோஹமித்யேவ
ஸத்யம் ॥ 6.1.5॥

தங்கத்தால் செய்யப்பட்டவை -அடுத்த த்ருஷ்டாந்தம் சொல்லி
மண் பானை -மண் என்றே சத்யம் -பானை விகாரத்தை குறிக்கும் –
வாக்குக்கு வித்யாசம் காட்ட -பயன் வேறே என்பதால்
ஓங்கி அடித்தால் குடமும் மண் ஆகுமே -வெவ்வேறே தசைகள் இவை –

யதா² ஸோம்யிகேந நக²நிக்ருʼந்தநேந ஸர்வம் கார்ஷ்ணாயஸம் விஜ்ஞாதꣳ
ஸ்யாத்³வாசாரம்ப⁴ணம் விகாரோ நாமதே⁴யம் க்ருʼஷ்ணாயஸமித்யேவ
ஸத்யமேவꣳஸோம்ய ஸ ஆதே³ஶோ ப⁴வதீதி ॥ 6.1.6॥

நகம் வெட்டும் கருவி இரும்பால் -அடுத்த உதாரணம் -காரணம் கார்யம் ஓன்று என்று காட்ட –

ந வை நூநம் ப⁴க³வந்தஸ்த ஏதத³வேதி³ஷுர்யத்³த்⁴யேதத³வேதி³ஷ்யந்கத²ம்
மே நாவக்ஷ்யந்நிதி ப⁴க³வாꣳஸ்த்வேவ மே தத்³ப்³ரவீத்விதி ததா²
ஸோம்யேதி ஹோவாச ॥ 6.1.7॥

மண் தங்கம் இரும்பு பஞ்சு -மூலப் பொருள்கள் அன்றோ –
இவற்றை அறிவது -இதுக்கும் மூலப் பொருள் இருந்தால் அறியலாம்
பிருத்வியா -பார்த்திப பதார்த்தங்கள் -என்று சொல்ல –
தண்ணீர் ஆகாசம் இவற்றுக்கு எப்படி பிள்ளை மேலே கேள்வி –
இன்னும் ஒரு படி மேலே -மூல பிரகிருதி காரணம் இவை காரியம்
நித்ய விபூதி -அப்ராக்ருதம் அன்றோ -மேலே சந்தேகம் –
அப்பொழுது தான் கடைசி படிக்கட்டு -ப்ரஹ்மம் –
ஆதேசம் தான் ப்ரஹ்மம் முடித்து -ஆணைக்கு உட்பட்டு அனைத்தும்
பலவற்றுக்கும் இந்த ஒன்றே காரணம் -பொருந்தும் –

॥ இதி ப்ரத²ம: க²ண்ட:³ ॥

காண்டம்-1
ஸர்வம்கலு இதம் ப்ரஹ்ம தத்ஜலான் (சிருஷ்டி, ஸ்திதி, லயம்)
இதி சாந்தஹ உபாஸிதஹ

பிரம்ம தத்துவத்தையும், ஆத்ம தத்துவத்தையும் (ஆதேஷம்) பற்றி குருவிடம் கேட்டாயா?
எந்த ஒன்றை அறிந்தால் எல்லாமும் அறிந்துக் கொள்ள முடியுமோ அதை அடைந்தாயா?
என்று அருணி, தம் மகன் ஸ்வேதகேதுவிடம் கேட்டார்.

ஒரு விஷயம் புத்தியில் நிலை பெற வேண்டுமென்றால் கீழே கொடுத்துள்ள நான்கு படிகளைத் தாண்டித்தான் வர வேண்டும்.
1. ஸம்ஸயஹ – சந்தேகம்
2. ஸம்பாவனா – இருக்கலாம்
3. நிஸ்சயஹ – சரிதான், நிச்சயமானதுதான்
4. நிஷ்டா – சரியென்பதிலே நிலைபெறுதல்

இதற்கு உதாரணமாக 4,5,6 ஸ்லோகங்கள்.

காரண-காரிய தத்துவத்தில் காரணத்தை யறிந்தால் எல்லா காரியங்களும் அறிந்ததாகும்.
(விக்ஞாதேன – அறியபட்டால்) காரணமும் காரியமும் வேறாக இல்லாத காரணத்தினால் காரணத்தை அறிவதன் மூலம்
எல்லா காரியத்தையும் அறிந்து கொள்ளலாம்.
காரியமும், காரணமும் வேறல்ல என்பது உண்மையானால் விவகாரத்தில் ஏன் வேறு வேறாக உபயோகிக்கிறோம்?
காரணம் என்கின்ற தத்துவத்தில் ஏதோ ஒரு மாற்றத்தை (விகாரம்) செய்வதால் அதன் விளைவாக அது காரியமாக உருவாகிறது.
(உ-ம்) ஒரு களிமண் துண்டானது விதவிதமான பாத்திரங்களை செய்ய உதவுகிறது.

எனவே காரணம்+விகாரம் = காரியம். விகாரத்தின் மூலம் பலவிதமான பெயர்கள் வந்து விட்டது.
இந்த பெயர்கள் (நாமம்) வாக்கிலிருந்து தோன்றுகிறது. எனவே விகாரமே பெயர் (நாமம்) என்றாகிறது.
அதனால் காரணம் + நாமம் = காரியம். காரணத்துடன் சில சொற்கள் இணைவதன் மூலம் காரியங்கள் உண்டாகின்றது.

விகாரஹ = நாமதேயம் – வாக்கிலிருந்து தோன்றிய பெயரே மாற்றமடைகிறது.
வாக்கினுடைய வெளிப்பாடு, வாக்கிலிருந்து உருவாகிய பெயர்தான் மாற்றம் என்றாகிறது,
இது காரணத்துடன் சேரும்போது பல காரியங்களாக வெளிப்படுகிறது.

ம்ருதிகா இத ஏவ சத்யம் – களிமண் மட்டும்தான் சத்யம். காரியத்துக்குள் காரணமும், நாமதேயமும் (ரூபம்) இருக்கிறது.
இதில் காரணம் சத்யமாக இருக்கிறது. ஆனால் நாம் விவகாஅத்தில் நாம ரூபத்தில் ஸத்யத்தை ஏற்றி வைத்திருக்கிறோம்.
நாமதேயம் அஸத்யமாக இருக்கிறது.

————

ஸதே³வ ஸோம்யேத³மக்³ர ஆஸீதே³கமேவாத்³விதீயம் ।
தத்³தை⁴க ஆஹுரஸதே³வேத³மக்³ர ஆஸீதே³கமேவாத்³விதீயம்
தஸ்மாத³ஸத: ஸஜ்ஜாயத ॥ 6.2.1॥

கார்ய ரூபமான ஜகத் -இதம் சர்வம் பார்த்து -பலவாக -இப்பொழுது -காரணம் ஓன்று
சத் ஏவ சோம்ய -மஹா வாக்கியம் இது
இதம் சர்வம் – அக்ர ஆஸீத் -முற்காலத்தில் ஸ்ருஷ்டிக்கு முன்பு
ஒன்றாகவே இருந்தது
மூன்று சப்தங்கள்
சத்காரிய வாதம்
உத்பத்தி -இருப்பதை மாற்றி செய்வதே –
ப்ரஹ்மத்துக்கு சரீரம் பெயர் உருவ மாறுதல் உடன் இப்பொழுது -வேறுபாடு இல்லாமல் முன்பு ஸூஷ்ம ரூபம் முன்பு –
ஸூஷ்ம விசிஷ்ட ப்ரஹ்மம் -ஸ்தூல விசிஷ்ட ப்ரஹ்மம் –
ஓன்று பலவாக மாற பல காரண பொருள்கள் வேண்டாவோ என்னில் ஒன்றே உபாதான காரணம்
ப்ரஹ்மம் நித்ய நிர்விகார தத்வம் -ஒரே மயிர் காலுக்குள் அனைத்து ஜகத்தும்-
அத்விதீயம் -நிமித்த காரணம் குயவன் நெசவாளர் போலே
நான் பல வாக உருவாகப் போகிறேன் — பஹுஸ்யாம்
மண்ணை மாற்றி குடத்தைச் செய்யப் போகிறேன் -குயவன் சொல்ல -சரீரமே மண் இத்யாதி –

குதஸ்து க²லு ஸோம்யைவꣳஸ்யாதி³தி ஹோவாச கத²மஸத:
ஸஜ்ஜாயேதேதி। ஸத்த்வேவ ஸோம்யேத³மக்³ர
ஆஸீதே³கமேவாத்³விதீயம் ॥ 6.2.2॥

ததை³க்ஷத ப³ஹு ஸ்யாம் ப்ரஜாயேயேதி தத்தேஜோঽஸ்ருʼஜத தத்தேஜ
ஐக்ஷத ப³ஹு ஸ்யாம் ப்ரஜாயேயேதி தத³போঽஸ்ருʼஜத ।
தஸ்மாத்³யத்ர க்வச ஶோசதி ஸ்வேத³தே வா புருஷஸ்தேஜஸ ஏவ
தத³த்⁴யாபோ ஜாயந்தே ॥ 6.2.3॥

தத் ஏக யீஷத -முளை விட்டு ஸ்ருஷ்ட்டி -சங்கல்பம் -பிரகிருதி -மஹான் -அஹங்காரம் -மூன்றாக
சாத்விக அஹங்காரம் -கர்மா ஞான -இந்திரியங்கள் -மனஸ்
தாமச அஹங்காரம் பஞ்ச பூதம் தன்மாத்திரைகள்
ப்ரஹ்மம் விட்டுப் பிரியாமல் விசிஷ்ட ப்ரஹ்மம் எல்லா அவஸ்தைகளிலும் –

தா ஆப ஐக்ஷந்த ப³ஹ்வ்ய: ஸ்யாம ப்ரஜாயேமஹீதி தா
அந்நமஸ்ருʼஜந்த தஸ்மாத்³யத்ர க்வ ச வர்ஷதி ததே³வ பூ⁴யிஷ்ட²மந்நம்
ப⁴வத்யத்³ப்⁴ய ஏவ தத³த்⁴யந்நாத்³யம் ஜாயதே ॥ 6.2.4॥

॥ இதி த்³விதீய: க²ண்ட:³ ॥

காண்டம்-2- &lt
சூத்ர வாக்கியம்:
ஸதேவ ஸோம்ய இதம் அக்ரஹ ஆஸீத் ஏகம் ஏவ அத்விதீயம்.

காரியத்தை காரணமாக பார்க்கும்போது இது சத்யம், இதை நாம் நாமரூபமாக பார்க்கும்போது இத் மித்யா.
ஜகத்-ஒரு காரியம்- இது ஸத் பிரம்மமாக இருந்த்து, இப்பவும் ஸத்தாகத்தான் இருக்கிறது ஆனால் நாமரூபத்துடன் இருக்கிறது.
நாமரூபம் எப்படி வந்தது? எங்கிருந்து வந்தது? அதனுடைய இருப்பு என்ன? (நிலையானதா, நிலையற்றதா, வெறும் தோற்றமா?).
எது ஒன்றை சார்ந்து இருக்கிறதோ அது மித்யா. நாமரூபம் வெளித்தோற்றதிற்கு வராத நிலை மாயா.
ஸத் என்பதுடன் நாம ரூபங்களை சேர்த்தவுடன் உலகமாக தெரிகிறது.
களி மண்ணுடன் நாமரூபங்கள் சேர்க்கும்போது பானைகளாக தோற்றமளிக்கிறது.
நாமரூபங்கள் வெளியே இருந்து வருவதில்லை. அவைகள் வெளிதோற்றத்திற்கு வராமல் காரணத்துக்குள்ளே இருக்கிறது.

மாயா – அவ்யக்தம் – வெளிதோற்றத்திற்கு வராத நாமரூபம்
வ்யக்த – ஸ்ருஷ்டி – வெளிதோற்றத்திற்கு வந்த நாமரூபம்

· ஸத்தை மட்டும் பார்க்கும் நிலை – நிர்குண பிரம்மம்
· ஸத்தையும் வெளிதோற்றத்திற்கு வராத நாமரூபத்தையும் சேர்த்து பார்த்தல் – சகுண பிரம்மம் – மாயா
· ஸத்தையும் வெளிதோற்றத்திற்கு வந்த நாமரூபத்தையும் சேர்த்து பார்ப்பது – உலகம்

ஸவிசேஷம் – நாம் அனுபவிக்கும் விஷயங்கள் அஸ்தி மாத்திரமே
ஸத் மட்டும் உள்ள லட்சணங்கள்
· நிர்விசேஷம் – குணங்களற்றது
· ஸர்வகதம் – எல்லாவிடத்திலும் வியாபித்திருக்கிறது, எல்லா இடத்திலும் ஊடுருவி இருக்கிறது
· நிரஞ்சனம் – தூய்மையானது (நாம ரூபம் வெளிவந்தாலும், வெளிவராவிட்டாலும் தூய்மையாகவே இருக்கும்)
· நிர் அவயவம் – அவயவங்களற்றது, பிளவுகளற்றது, பகுதிகளற்றது.

சாஸ்திரம் மூன்று விதமான வேற்றுமைகளை செல்கிறது.
1. ஸ்வகதபேதம் – தனக்குள்ளே இருக்கிற வேற்றுமை, மரம் ஒன்றுதான் ஆனால் அதற்குள்ளே விதவிதமான பகுதிகள் இருக்கிறது.
2. ஸஜாதீய பேதம் – தன்னுடைய ஜாதிக்குள்ளே வேற்றுமை இருத்தல், மரம் என்ற ஒரே ஜாதி, ஆனால் விதவிதமான மரங்கள் இருத்தல்
3. விஜாதீய பேதம் – முற்றிலும் வேறுபட்டது, மரம், விலங்கு, மனிதன்

இந்த மூன்று வேற்றுமைகளும் பிரம்மத்தில் கிடையாது. இது ஒன்றாகவே இருப்பதால் முதல் பேதம் கிடையாது,
இது தவிர வேறொன்று கிடையாது என்பதால், அதனுடைய வேறு ஜாதி கிடையாது.

அத்விதீயம் – இரண்டற்றது.
மித்யா – இல்லாதது ஆனால் இருப்பதுபோல் காட்சியளிக்கிறது.

இல்லாத்திலிருந்து இருத்தல் வராது, இல்லாத்தும் வராது, எனவே இருப்பது போல் தெரிவதெல்லாம் மித்யா.
எனவே இவைகளெல்லாம் தோன்றுவதற்குமுன் ஸத்தாகவே இருந்தது, அது ஏகம் ஏவம் அத்விதீயம்.

விக்ஞேயம் – ஞான யோக்யம் – இந்த உலகில் நாம் அறிவதற்கு யோக்யமானது – ஸத் (பிரஹ்மம்), மற்றதெல்லாம் மித்யாதான்.
அபரா வித்யா என்பது அனைத்தும் அவித்யாதான் என்ற் அறிவது (அயதார்த்தம்). புத்தியில் வருகிற அமைதிதான் மோட்சம்,
மனதில் வருகிற அமைதி சோக நிவிருத்தி.
இந்த பிரதிக்ஞை (ஒன்றை அறிந்தால் அனைத்தையும் அறிந்ததாகும்) காரண, காரிய விசாரத்தின் மூலம் அடையலாம்..

காரண, காரிய விசாரம்:
· காரணம் என்கிற தன்மை ஒரு வஸ்துவிற்கு கொடுக்கப்படுகிறது.
· காரியங்கள் தோன்றுகின்றன (ஸ்ருஷ்டி)
· காரண காரியங்களை ஐக்கியபடுத்துதல் என்ற அறிவை புகட்டுதல்
· காரியம் என்பது ஒன்றில்லை என்று நிச்சயபடுத்துதல்
· காரணமும் கிடையாது
ஸ்ருஷ்டி (படைப்பு)
ஸ்ருஷ்டி என்பது மித்யா என்று நிரூபித்தல்.
ஸகுண பிரம்மனான ஈஸ்வரன், ஸ்ருஷ்டியை ஆரம்பிக்க ஆலோசனை செய்யும்போது மாயா வந்து சேர்ந்து கொள்கிறது.
நான் பலவாக ஆவேனாக, நான் என்னை பலவாக பிறப்பித்துக்கொள்வேனாக என்று ஈஸ்வரன் நினைத்தார்.
ஸத் நிமித்த காரணமாகவும், உபாதான காரணமாகவும் இருக்கிறது.

அது அக்னியாக பிறப்பெடுக்கிறது, அக்னியானது நீராக பிறப்பெடுக்கிறது.

————-

தேஷாம் க²ல்வேஷாம் பூ⁴தாநாம் த்ரீண்யேவ பீ³ஜாநி
ப⁴வந்த்யாண்ட³ஜம் ஜீவஜமுத்³பி⁴ஜ்ஜமிதி ॥ 6.3.1॥

பிருத்வி -மழை -பெய்து மரம் செடி கொடி உத்பிஜ்ஜம்
ஜீவஜம் -கர்ப்பம்
அண்டஜம் முட்டையில் இருந்து மூன்றாக
ஸ்வேதஜம் வியர்வையில் இருந்து உண்டாக்குவதும் உண்டே –

ஸேயம் தே³வதைக்ஷத ஹந்தாஹமிமாஸ்திஸ்ரோ தே³வதா அநேந
ஜீவேநாத்மநாநுப்ரவிஶ்ய நாமரூபே வ்யாகரவாணீதி ॥ 6.3.2॥

தாஸாம் த்ரிவ்ருʼதம் த்ரிவ்ருʼதமேகைகாம் கரவாணீதி ஸேயம்
தே³வதேமாஸ்திஸ்ரோ தே³வதா அநேநைவ ஜீவேநாத்மநாநுப்ரவிஶ்ய
நாமரூபே வ்யாகரோத் ॥ 6.3.3॥

தாஸாம் த்ரிவ்ருʼதம் த்ரிவ்ருʼதமேகைகாமகரோத்³யதா² து க²லு
ஸோம்யேமாஸ்திஸ்ரோ தே³வதாஸ்த்ரிவ்ருʼத்த்ரிவ்ருʼதே³கைகா ப⁴வதி
தந்மே விஜாநீஹீதி ॥ 6.3.4 ॥

ஜீவ சரீரகனாக நான் ஜீவ சரீரத்துக்குள் ஜீவன் மூலம் புகுந்து -ஒரு சொல் மூன்றையும் குறிக்கும் –
அசித்தையும் -அதுக்குள்ளே இருக்கும் ஆத்மாவையும் பரமாத்மாவையும் குறிக்கும் எல்லா சொற்களும் –
சர்வ சப்த வாச்யன் -ஒன்றை அறிந்தால் எல்லாம் அறிந்ததாகும் –
த்ரிவிக்ரணம் -பஞ்சீகரணம் -பாதி பகுதியை நாலாக்கி மற்ற நான்கிலும் கலந்து —
ஒவ் ஒன்றின் குணமும் எல்லாவற்றிலும் வரும் –
ஆகாசம் நீலம் நிறம் -நீலக்கடல் -வினிமயத்தாலே கலந்ததால்
தேஜோபன்னம்- த்ரிவிக்ரமணம்

॥ இதி த்ருʼதீய: க²ண்ட:³ ॥

காண்டம்-3
ஸ்தூல சரீரங்கள் மூன்று வகையாக தோன்றுகிறது. அவைகள் ஒன்று முட்டையில் இருந்து (பறவை, பாம்பு மற்றும் பல),
இரண்டவாது கர்ப்பத்திலிருந்து (மனிதன், விலங்குகள்), மூன்றாவது பூமியிலிருந்து (மரம், செடி, கொடிகள் மற்றும் பல).
இந்த சூட்சும பூதங்களுடன் சித் ஸ்வரூபமாக (அறிவு ஸ்வரூபமாக) சிதாபாஸா ரூபமாக இதற்குள் நுழைவேன்,
பிறகு நாமரூபங்களை தோற்றுவிப்பேனாக என்று ஆலோசனை செய்தது. இவ்வாறாக ஜீவன் பல நாமரூபங்களுடன் தோன்றியது.
அவைகளுடன் மூன்று தன்மைகளையும் சேர்த்துகொண்டது. பிறகு ஸ்தூல பூதமாக மாறுகிறது,

————-

யத³க்³நே ரோஹிதꣳரூபம் தேஜஸஸ்தத்³ரூபம் யச்சு²க்லம் தத³பாம்
யத்க்ருʼஷ்ணம் தத³ந்நஸ்யாபாகா³த³க்³நேரக்³நித்வம் வாசாரம்ப⁴ணம்
விகாரோ நாமதே⁴யம் த்ரீணி ரூபாணீத்யேவ ஸத்யம் ॥ 6.4.1॥

யதா³தி³த்யஸ்ய ரோஹிதꣳரூபம் தேஜஸஸ்தத்³ரூபம் யச்சு²க்லம் தத³பாம்
யத்க்ருʼஷ்ணம் தத³ந்நஸ்யாபாகா³தா³தி³த்யாதா³தி³த்யத்வம் வாசாரம்ப⁴ணம்
விகாரோ நாமதே⁴யம் த்ரீணி ரூபாணீத்யேவ ஸத்யம் ॥ 6.4.2॥

யச்ச²ந்த்³ரமஸோ ரோஹிதꣳரூபம் தேஜஸஸ்தத்³ரூபம் யச்சு²க்லம் தத³பாம்
யத்க்ருʼஷ்ணம் தத³ந்நஸ்யாபாகா³ச்சந்த்³ராச்சந்த்³ரத்வம் வாசாரம்ப⁴ணம்
விகாரோ நாமதே⁴யம் த்ரீணி ரூபாணீத்யேவ ஸத்யம் ॥ 6.4.3॥

யத்³வித்³யுதோ ரோஹிதꣳரூபம் தேஜஸஸ்தத்³ரூபம் யச்சு²க்லம் தத³பாம்
யத்க்ருʼஷ்ணம் தத³ந்நஸ்யாபாகா³த்³வித்³யுதோ வித்³யுத்த்வம் வாசாரம்ப⁴ணம்
விகாரோ நாமதே⁴யம் த்ரீணி ரூபாணீத்யேவ ஸத்யம் ॥ 6.4.4॥

ஏதத்³த⁴ ஸ்ம வை தத்³வித்³வாꣳஸ ஆஹு: பூர்வே மஹாஶாலா
மஹாஶ்ரோத்ரியா ந நோঽத்³ய
கஶ்சநாஶ்ருதமமதமவிஜ்ஞாதமுதா³ஹரிஷ்யதீதி ஹ்யேப்⁴யோ
விதா³ஞ்சக்ரு: ॥ 6.4.5॥

யது³ ரோஹிதமிவாபூ⁴தி³தி தேஜஸஸ்தத்³ரூபமிதி தத்³விதா³ஞ்சக்ருர்யது³
ஶுக்லமிவாபூ⁴தி³த்யபாꣳரூபமிதி தத்³விதா³ஞ்சக்ருர்யது³
க்ருʼஷ்ணமிவாபூ⁴தி³த்யந்நஸ்ய ரூபமிதி தத்³விதா³ஞ்சக்ரு: ॥ 6.4.6॥

யத்³வவிஜ்ஞாதமிவாபூ⁴தி³த்யேதாஸாமேவ தே³வதாநாꣳஸமாஸ இதி
தத்³விதா³ஞ்சக்ருர்யதா² து க²லு ஸோம்யேமாஸ்திஸ்ரோ தே³வதா:
புருஷம் ப்ராப்ய த்ரிவ்ருʼத்த்ரிவ்ருʼதே³கைகா ப⁴வதி தந்மே விஜாநீஹீதி
॥ 6.4.7॥

॥ இதி சதுர்த:² க²ண்ட:³ ॥

காண்டம்-4
எப்படி ஒரு ஸ்தூல பூதத்துக்குள் மற்ற ஸ்தூல பூதங்கள் சேர்ந்துள்ளன.
அபவாதம்- நீக்குதல் (நாம ரூபங்களை நீக்குதல்)

அத்யாரூப அபவாத நியாயம்- ஒரு வஸ்துவானது பலவாக தோன்ற வேண்டும்.
(உ-ம்) பருத்தியிலிருந்து நூல், துணி என்ற பலவாக தோற்றமெடுத்துள்ளது.
உண்மையில் எல்லா நாம ரூபத்திலும் இருப்பாக இருப்பது பருத்திதான்.

அபவாதங்கள்
· பார்க்கின்ற ஸ்தூல விஷயங்கள் அனைத்தும் ஸ்தூல பஞ்ச பூதங்கள் என்று நிச்சயித்துக் கொள்ள வேண்டும்.
· பின்னர் இருக்கின்ற பஞ்ச சூட்சும பூதங்களையும் நீக்க வேண்டும்
· பிருத்வியை நீரிலும், நீரை நெருப்பிலும், நெருப்பை காற்றிலும், காற்றை ஆகாசத்திலும் ஒடுக்க வேண்டும்.
· கடைசியாக ஆகாசத்தை பிரம்மத்தில் ஒடுக்க வேண்டும்.
· ஸ்தூல அக்னியானது மூன்று சூட்சுமமான பூதங்களுடைய சேர்க்கை என்பதால் அதுவே மித்யா.
ஸ்தூல அக்னியில் உள்ள மூன்று சூட்சுமமான பூதங்கள் மூன்று நிறங்களால் குறிக்கப்படுகிறது
· சிவப்பு நிறம் – அக்னி; வெண்மை நிறம் – நீருக்கும்; கருமை நிறம் – நிலத்துக்கும்; உவமையாக்கப்படுகிறது.
· அக்னியில் தோன்றும் மூன்று நிறங்களானது மூன்று சூட்சுமமான பூதங்கள்.
இவைகளெல்லாம் வெறும் நாம ரூபங்களே அதாவது வெறும் வார்த்தைகள்தான்.
ஆகவே ஸத்யமாக இருப்பது மூன்று சூட்சுமமான பூதங்கள்தான்.
· எனவே ஸ்தூல அக்னியானது அறிவினால் நீக்கப்படுகிறது. இவ்விதமாக மற்ற ஸ்தூல பூதங்களையும் நீக்கி விட வேண்டும்.

இந்த மூன்று பூதங்களே திரிவிதகரணம் மூலமாக ஜீவனை அடைந்து ஸ்தூல சரீரத்தை அடைவதைப்பற்றி இனி விளக்கப்படுகிறது.

——————-

அந்நமஶிதம் த்ரேதா⁴ விதீ⁴யதே தஸ்ய ய: ஸ்த²விஷ்டோ²
தா⁴துஸ்தத்புரீஷம் ப⁴வதி யோ மத்⁴யமஸ்தந்மாꣳஸம்
யோঽணிஷ்ட²ஸ்தந்மந: ॥ 6.5.1॥

ஆப: பீதாஸ்த்ரேதா⁴ விதீ⁴யந்தே தாஸாம் ய: ஸ்த²விஷ்டோ²
தா⁴துஸ்தந்மூத்ரம் ப⁴வதி யோ மத்⁴யமஸ்தல்லோஹிதம் யோঽணிஷ்ட:²
ஸ ப்ராண: ॥ 6.5.2॥

தேஜோঽஶிதம் த்ரேதா⁴ விதீ⁴யதே தஸ்ய ய: ஸ்த²விஷ்டோ²
தா⁴துஸ்தத³ஸ்தி² ப⁴வதி யோ மத்⁴யம: ஸ மஜ்ஜா
யோঽணிஷ்ட:² ஸா வாக் ॥ 6.5.3॥

அந்நமயꣳஹி ஸோம்ய மந: ஆபோமய: ப்ராணஸ்தேஜோமயீ
வாகி³தி பூ⁴ய ஏவ மா ப⁴க³வாந்விஜ்ஞாபயத்விதி ததா²
ஸோம்யேதி ஹோவாச ॥ 6.5.4॥

அன்னம் ஸூ சமம் மனசுக்கு
தண்ணீர் -மூத்திரம் ரௌத்ரம் பிராணன்
நெருப்பு -எலும்பு மஜ்ஜை வாக்கு சூஷ்மம்

॥ இதி பஞ்சம: க²ண்ட:³ ॥

காண்டம்-5 (ஸ்தூல, சூட்சும சரீரத்தைப் பற்றி)
· மாயையானது மூன்று குண வடிவானது. இதிலிருந்து ஆகாசம், வாயு, அக்னி, நீர், நிலம் என ஐந்து பூதங்கள் தோன்றியது.
இந்த ஐந்து பூதங்களிலும் மூன்று குணமும் இருக்கிறது.
· சூட்சுமமான பூதங்களிடமிருந்து சத்துவகுணமான மனம் போன்ற ஞானேந்திரியங்கள், ரஜோ குணமான பிராண தத்துவம்,
தமோ குணமான ஸ்தூல சரீரங்கள் தோன்றுகின்றன.
· நாம் உண்ணும் உணவில் மூன்று வகையாக உள்ளது. ஸ்தூலமானவைகள் மலமாக வெளியே போகிறது,
இடையில் உடல் தசைகளாகிறது, சூட்சும நிலை மனதுக்கு போகிறது, அதன் போக்கை மாற்றுகிறது.
இது பிருத்வி தத்துவத்தை உணர்த்துகிறது.
· நாம் நீரை அருந்தும் பொழுது அது மூன்று பாகமாக பிரிகின்றது. அந்த நீரிலிலுள்ள ஸ்தூலமானது சிறுநீராக வெளியேறுகிறது.
மத்தியமாக இருக்கும் பாகமானது ரத்தமாக மாற்றப்படுகிறது. சூட்சுமமான பாகமானது பிராணனாக மாறுகிறது.
· நெய், வெண்ணெய், எண்ணெய் – அக்னி வகையறாவாக கூறப்படுகிறது.

ஸ்தூலமான பாகம் – எலும்புக்கு சக்தியாகிறது
இடைப்பகுதியானது – எலும்புக்குள் உள்ளே திரவம், மஜ்ஜையாகிறது
சூட்சும பாகமானது – நாம் பேசும் சக்தியாகிறது.

—————

த³த்⁴ந: ஸோம்ய மத்²யமாநஸ்ய யோঽணிமா ஸ உர்த்⁴வ: ஸமுதீ³ஷதி
தத்ஸர்பிர்ப⁴வதி ॥ 6.6.1॥

ஏவமேவ க²லு ஸோம்யாந்நஸ்யாஶ்யமாநஸ்ய யோঽணிமா ஸ உர்த்⁴வ:
ஸமுதீ³ஷதி தந்மநோ ப⁴வதி ॥ 6.6.2॥

அபாꣳஸோம்ய பீயமாநாநாம் யோঽணிமா ஸ உர்த்⁴வ: ஸமுதீ³ஷதி
ஸா ப்ராணோ ப⁴வதி ॥ 6.6.3 ॥

தேஜஸ: ஸோம்யாஶ்யமாநஸ்ய யோঽணிமா ஸ உர்த்⁴வ: ஸமுதீ³ஷதி
ஸா வாக்³ப⁴வதி ॥ 6.6.4॥

அந்நமயꣳ ஹி ஸோம்ய மந ஆபோமய: ப்ராணஸ்தேஜோமயீ வாகி³தி
பூ⁴ய ஏவ மா ப⁴க³வாந்விஜ்ஞாபயத்விதி ததா² ஸோம்யேதி ஹோவாச
॥ 6.6.6॥

॥ இதி ஷஷ்ட:² க²ண்ட:³ ॥

காண்டம்-‍6
தயிரிலுள்ள சூட்சும பாகம், கடையும்போது வெண்ணெயாக வெளிப்படுகிறது.
அதேபோல திட உணவு சாப்பிட்ட பிறகு அதை உடலிலிருக்கும் வெப்பமானது வாயுவின் உதவியுடன் ஜீரணித்து
அதிலிருக்கும் சூட்சும்மான பகுதியை மனதுக்கு அனுப்புகிறது, இதனால மனமானது சக்தியை பெறுகிறது.
அதே மாதிரி குடிக்கும் நீரிலிருந்து சூட்சுமமான பகுதியானது வெளிப்பட்டு பிராணனுக்கு செல்கிறது.
சாப்பிடும் உஷ்ணமான பொருட்களிலிருக்குக் சூட்சுமமான பகுதியானது நாம் பேசும் பேச்சாக வெளிப்படுகிறது.
அடுத்த பகுதியில் உணவானது எப்படி மனதுக்குள் செல்கிறது என்பதைப் பற்றி விளக்குகிறது.

——————–

ஷோட³ஶகல: ஸோம்ய புருஷ: பஞ்சத³ஶாஹாநி மாஶீ:
காமமப: பிபா³போமய: ப்ராணோ நபிப³தோ விச்சே²த்ஸ்யத
இதி ॥ 6.7.1॥

தண்ணீர் மட்டும் குடித்து -பிள்ளைக்கு பரிக்ஷை-
அன்னம் -மனஸ் சம்பந்தம் -புரிய வைக்க – ருக் நினைவு இல்லாமல் -தண்ணீர் பிராணன் இருக்கும்

ஸ ஹ பஞ்சத³ஶாஹாநி நஶாத² ஹைநமுபஸஸாத³ கிம் ப்³ரவீமி
போ⁴ இத்ய்ருʼச: ஸோம்ய யஜூꣳஷி ஸாமாநீதி ஸ ஹோவாச ந வை
மா ப்ரதிபா⁴ந்தி போ⁴ இதி ॥ 6.7.2॥

தꣳ ஹோவாச யதா² ஸோம்ய மஹதோঽப்⁴யா ஹிதஸ்யைகோঽங்கா³ர:
க²த்³யோதமாத்ர: பரிஶிஷ்ட: ஸ்யாத்தேந ததோঽபி ந ப³ஹு
த³ஹேதே³வꣳஸோம்ய தே ஷோட³ஶாநாம் கலாநாமேகா கலாதிஶிஷ்டா
ஸ்யாத்தயைதர்ஹி வேதா³ந்நாநுப⁴வஸ்யஶாநாத² மே விஜ்ஞாஸ்யஸீதி
॥ 6.7.3॥

ஸ ஹஶாத² ஹைநமுபஸஸாத³ தꣳ ஹ யத்கிஞ்ச பப்ரச்ச²
ஸர்வꣳஹ ப்ரதிபேதே³ ॥ 6.7.4॥

தꣳ ஹோவாச யதா² ஸோம்ய மஹதோঽப்⁴யாஹிதஸ்யைகமங்கா³ரம்
க²த்³யோதமாத்ரம் பரிஶிஷ்டம் தம் த்ருʼணைருபஸமாதா⁴ய
ப்ராஜ்வலயேத்தேந ததோঽபி ப³ஹு த³ஹேத் ॥ 6.7.5॥

ஏவꣳ ஸோம்ய தே ஷோட³ஶாநாம் கலாநாமேகா
கலாதிஶிஷ்டாபூ⁴த்ஸாந்நேநோபஸமாஹிதா ப்ராஜ்வாலீ
தயைதர்ஹி வேதா³நநுப⁴வஸ்யந்நமயꣳஹி ஸோம்ய மந ஆபோமய:
ப்ராணஸ்தேஜோமயீ வாகி³தி தத்³தா⁴ஸ்ய விஜஜ்ஞாவிதி விஜஜ்ஞாவிதி
॥ 6.7.6॥

॥ இதி ஸப்தம: க²ண்ட:³ ॥

காண்டம்-‍7
1. மனிதர்கள் பதினாறு வகையான சக்திகளை கொண்டவர்கள். அதாவது மனதுக்கு இந்த சக்திகள் உள்ளன.
அவைகள் சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் போன்றவை. பதினைந்து நாட்களுக்கு உணவும் எதுவும் உட்கொள்ளாமல்,
வெறும் நீரை மட்டும் அருந்த வேண்டும் என்று தந்தையான குரு மகனுக்கு கட்டளையிட்டார்.
நீரானது பிராணனுக்கு அத்தியாவசியமானது அது உடலை உயிரோடு வைத்துக்கொண்டிருக்கும்.
2. விரதம் முடித்து வந்த ஸ்வேதகேது, நான் தாங்கள் சொல்லியபடி விரதத்தை முடித்து விட்டேன்,
இப்பொழுது என்ன செய்ய வேண்டும்? என்று கேட்டான்.
“நீ இப்போது மூன்று வேதங்களையும் சொல்.” என்று குரு கூறினார்.
அதைக்கேட்டு அதிர்ந்த ஸ்வேதகேது, “என்னிடத்தில் இப்போது சக்தி எதுவும் இல்லை,
அதனால் ஒன்றும் சொல்ல முடியாது” என்று பதிலளித்தான்.
3. கொழுந்து விட்டு எரியும் தீயில் எது போட்டாலும் பஸபமாகி விடும்,
ஆனால் சிறிய நெருப்பினால் (புல் அளவு) அதைவிட பெரிய பொருட்களை எரிக்க முடியாது.
அதுபோல உன்னுடைய பதினாறு சக்திகளெல்லாம் அடங்கிப் போய் ஒரு சக்திதான் இருக்கிறது,
அதை வைத்துக் கொண்டு உன்னால் வேதங்களையெல்லாம் சொல்ல முடியாது
4. இப்போது சென்று சாப்பிட்டு வா, அப்போது உனக்கு நான் சொன்னதெல்லாம் புரியும் என்று கூறினார்.
உணவை உண்டு விட்டு வந்து அவர் கேட்ட எல்லா வேதங்களை சொன்னான்.
5. சிறிய நெருப்பை பெரிதாக்கினால், அதில் எதைப்போட்டாலும் எரித்து விடும்.
அதுபோல் உன்னிடமிருந்த ஒரு சக்தியை வைத்து உணவை உண்ட பின் உனக்கு எல்லா சக்திகளும்
திரும்ப வந்ததால் தான் உன்னால் வேதங்களை தெளிவாக சொல்ல முடிந்தது.
6. இதிலிருந்து அன்னமானது மனம் செயல்படுவதற்கு அவசியமாகிறது என்று நிரூபிக்கபடுகிறது
7. இதிலிருந்து நீரானது பிராணமயம், அக்னியானது வாக்குமயம் என்பதும் அவனுக்கு புரிந்து விட்டது.

——————

உத்³தா³லகோ ஹாருணி: ஶ்வேதகேதும் புத்ரமுவாச ஸ்வப்நாந்தம் மே ஸோம்ய
விஜாநீஹீதி யத்ரைதத்புருஷ: ஸ்வபிதி நாம ஸதா ஸோம்ய ததா³
ஸம்பந்நோ ப⁴வதி ஸ்வமபீதோ ப⁴வதி தஸ்மாதே³நꣳ
ஸ்வபிதீத்யாசக்ஷதே ஸ்வꣳஹ்யபீதோ ப⁴வதி ॥ 6.8.1॥

ஸ்வப்ன காலத்தில் ஜீவன் ப்ரஹ்மாவிடம் ஒன்றி -சம்பன்நோ பவதி –
ப்ரஹ்மம் உடன் ப்ரஹ்மம் ஒன்றி -ராக த்வேஷம் வாசி இல்லாமல் ஒன்றி –

ஸ யதா² ஶகுநி: ஸூத்ரேண ப்ரப³த்³தோ⁴ தி³ஶம் தி³ஶம்
பதித்வாந்யத்ராயதநமலப்³த்⁴வா ப³ந்த⁴நமேவோபஶ்ரயத
ஏவமேவ க²லு ஸோம்ய தந்மநோ தி³ஶம் தி³ஶம்
பதித்வாந்யத்ராயதநமலப்³த்⁴வா ப்ராணமேவோபஶ்ரயதே
ப்ராணப³ந்த⁴நꣳ ஹி ஸோம்ய மந இதி ॥ 6.8.2 ॥

அஶநாபிபாஸே மே ஸோம்ய விஜாநீஹீதி
யத்ரைதத்புருஷோঽஶிஶிஷதி நாமாப ஏவ தத³ஶிதம் நயந்தே
தத்³யதா² கோ³நாயோঽஶ்வநாய: புருஷநாய இத்யேவம் தத³ப
ஆசக்ஷதேঽஶநாயேதி தத்ரிதச்சு²ங்க³முத்பதிதꣳ ஸோம்ய
விஜாநீஹி நேத³மமூலம் ப⁴விஷ்யதீதி ॥ 6.8.3॥

தஸ்ய க்வ மூலꣳ ஸ்யாத³ந்யத்ராந்நாதே³வமேவ க²லு ஸோம்யாந்நேந
ஶுங்கே³நாபோ மூலமந்விச்சா²த்³பி:⁴ ஸோம்ய ஶுங்கே³ந தேஜோ
மூலமந்விச்ச² தேஜஸா ஸோம்ய ஶுங்கே³ந ஸந்மூலமந்விச்ச²
ஸந்மூலா: ஸோம்யேமா: ஸர்வா: ப்ரஜா: ஸதா³யதநா:
ஸத்ப்ரதிஷ்டா:² ॥ 6.8.4॥

அத² யத்ரைதத்புருஷ: பிபாஸதி நாம தேஜ ஏவ தத்பீதம் நயதே
தத்³யதா² கோ³நாயோঽஶ்வநாய: புருஷநாய இத்யேவம் தத்தேஜ
ஆசஷ்ட உத³ந்யேதி தத்ரைததே³வ ஶுங்க³முத்பதிதꣳ ஸோம்ய
விஜாநீஹி நேத³மமூலம் ப⁴விஷ்யதீதி ॥ 6.8.5॥

தஸ்ய க்வ மூலꣳ ஸ்யாத³ந்யத்ராத்³ப்⁴ய்ঽத்³பி:⁴ ஸோம்ய ஶுங்கே³ந தேஜோ
மூலமந்விச்ச² தேஜஸா ஸோம்ய ஶுங்கே³ந ஸந்மூலமந்விச்ச²
ஸந்மூலா: ஸோம்யேமா: ஸர்வா: ப்ரஜா: ஸதா³யதநா: ஸத்ப்ரதிஷ்டா²
யதா² து க²லு ஸோம்யேமாஸ்திஸ்ரோ தே³வதா: புருஷம் ப்ராப்ய
த்ரிவ்ருʼத்த்ரிவ்ருʼதே³கைகா ப⁴வதி தது³க்தம் புரஸ்தாதே³வ ப⁴வத்யஸ்ய
ஸோம்ய புருஷஸ்ய ப்ரயதோ வாங்மநஸி ஸம்பத்³யதே மந: ப்ராணே
ப்ராணஸ்தேஜஸி தேஜ: பரஸ்யாம் தே³வதாயாம் ॥ 6.8.6॥

சத் ஆயனதா இருப்பிடம் மூலம் லயிக்கும் -புலன்கள் மனசில் ஒன்றி-அவை பிராணனின் ஒன்றி போகும்

ஸ ய ஏஷோঽணிமைததா³த்ம்யமித³ꣳ ஸர்வம் தத்ஸத்யꣳ ஸ
ஆத்மா தத்த்வமஸி ஶ்வேதகேதோ இதி பூ⁴ய ஏவ மா
ப⁴க³வாந்விஜ்ஞாபயத்விதி ததா² ஸோம்யேதி ஹோவாச ॥ 6.8.7॥

தத்த்வமஸி–இது தொடக்கி மேலே மேலே இப்படியே விளக்கி -ஜகத்துக்கும் ஸ்வேதகேதுவுக்கும் ஆத்மாவாக ப்ரஹ்மம் –
அனைத்துக்கும் காரணம் -சர்வமும் ஆத்மகம்-பிரகார த்வயம் -சாமானாதிகரணம்
சங்கைகள் ஒன்பது வர ஒரே பதில் சொல்லி சங்கை போக்குகிறார் –

॥ இதி அஷ்டம: க²ண்ட:³ ॥

காண்டம்-‍8(ஆத்ம விசாரம்)
த்ருக்-திருஷ்ய விவேகம், பஞ்சகோச விவேகம், அவஸ்தாத்திரய விவேகம், தேகத்திரியா விவேகம்
இவைகளெல்லாம் ஆத்ம விசாரத்திற்கு உதவும். ஆழ்ந்த உறக்கத்தின் மூலமாக ஆத்ம தத்துவம் விசாரம் செய்யப்படுகிறது.

1. ஒரு ஜீவன் ஆழ்ந்து உறங்கும்போது காரண சரீரத்திற்கு சென்றுள்ளான் என்று அறிந்து கொள்ள வேண்டும்.
கனவு உறக்கத்திலிருக்கும் போது சூட்சும சரீரத்திற்கு சென்றுள்ளான். அதாவது ஆழ்ந்த உறக்கத்தில் ஜீவனுக்கு பிரம்ம பிராப்தி கிடைக்கிறது,
தன் ஸ்வரூபத்திலே நிலைபெறுகிறான். இதிலிருந்து பிரம்மமும், ஜீவனும் ஒன்றே என்று குறிப்பாக உணர்த்தப்படுகிறது.
காரண சரீரத்தை அடைவதை பிரம்மத்தை அடைகிறான் என்று எப்படி சொல்ல முடியும்.
பிரம்மம் சம்சாரமற்றது, ஆழ்ந்த உறக்கத்திலும் சம்சாரம் கிடையாது, எனவே இது பிரம்மத்தை அடைந்ததற்கு ஒப்பாகும்.
உதாரணமாக நிழலில் நிற்கிறேன் என்று கூறினாலும் அவன் நிலத்தில்தான் நிற்கிறான்,
அதேபோல காரண சரீரத்தை அடைகிறான் என்பது அதனை சார்ந்திருக்கும் பிரம்மத்தைதான் அடைகிறான்.
ஒரு பொருள் காரணத்தில் இருக்கும்பொழுது அதை இல்லையென்றுதான் சொல்லுவோம்.
(உ-ம்) களிமண் இருக்கும்போது பானை இல்லை என்கின்றோம்
2. பறவையை கயிற்றால் நடுக்கடலில் போய்க்கொண்டிருக்கும் கப்பலிலுள்ள ஒரு தூணில் கட்டுகிறோம்.
பறவை பறந்து போக பல தடவை முயற்சி செய்து, பிறகு துவண்டு போய் மீண்டும் கட்டப்பட்ட இடத்திற்கே வந்து அமர்ந்து கொள்ளும்.
அதேபோல ஜீவன் விழிப்பு நிலையிலும், கனவிலும் மனதைக்கொண்டு இன்பமான, துன்பமான அனுபவங்களை தன் விருப்பத்தாலும்,
அறியாமையினாலும் அடைகிறான். பின்பு எதிலும் அமைதியை அடையாமல் திரும்பவும் பிராணனிடமே வந்து விடுகிறான்.
எங்கு சென்றாலும் அமைதியை பெற முடியாது, தன்னிடத்திலேயேதான் நிரந்தரமான அமைதியை அடையலாம், அடையமுடியும்.
ஏனென்றால் அது பிராணனால் கட்டப்பட்டிருக்கிறது. பிராண பந்தனம் – ஜீவன் பிரம்மத்தை சார்ந்து இருப்பவன்.
ஆஸ்ரயம் – கட்டுபடுதல், ஜீவன் விழிப்பு நிலையில், ஸ்வப்னத்தில் அமைதியற்று இருக்கிறான்.
ஆழ்ந்த உறக்கத்தில் பிரம்மத்தில் ஐக்கியமானவுடன் அமைதியாக இருக்கிறான். <>
3. ஜீவனுடைய ஆத்மா – பிரம்மஸ்வரூபம், அஸனாய – பசி, பிபாஷா – தாகம்; பசிக்கு அன்னம் காரியம்,
தண்ணீர் காரணம், தாகத்துக்கு தண்ணீர் காரியம், அக்னி காரணம். பசிக்கும்போது நாம் உண்ணும் உணவானது நீர் தத்வமானது,
ஸ்தூலமான உணவை திரவமாக்கி உடலின் பல பகுதிகளுக்கு அனுப்புகிறது. தாகமானது அக்னியான நீரை வாயுவாக்கி விடுவதால்
தாகம் மீண்டும் எடுக்கிறது. எனவே அக்னி காரணம் என்று உறுதிபடுத்துகிறது.
4. ஸ்தூல சரீரத்திற்கு மூல காரணம் அன்னம்தான், இதைத்தவிர வேறெதுவும் இருக்க முடியாது.
இவ்வாறாக இந்த அனைத்து படைப்புக்களும் ஸத்தை மூலமாக கொண்டுள்ளது.
ஸத்மூலாஹ-ஸத் மூலமாக உள்ளது; ஸத்தாய தனஹ- ஸத்தைச் சார்ந்துள்ளது; ஸத் ப்ரிதிஷ்டா-ஸத்தில் லயம் அடைகிறது.
5. இந்த ஸ்லோகத்தில் நீர் காரியம், தேஜஸ் காரணம். ஜீவன் குடிக்கும் நீரை, உஷ்ணமானது எடுத்துக் கொண்டு
ரத்தம் போன்ற திரவ பொருளாக மாற்றி விடுவதால் அவனுக்கு நீர் குடிக்க வேண்டுமென்ற தாகம் ஏற்படுகிறது.
எனவே அக்னியானது “உதானன்” என்று அழைக்கப்படுகிறது.
6. உயிர் போகும் நிலையிலுள்ள மனிதனுடைய பேச்சானது மனதில் ஒடுங்குகிறது.
மனமானது பிராணனில் ஒடுங்குகிறது. பிராணன் தேஜஸில் ஒடுங்குகிறது, தேஜஸானது ஸத் பிரம்மத்தோடு ஒடுங்குகிறது.
7. சூட்சுமமான இவையனைத்தும் ஸத்தையே ஆதாரமாகக் கொண்டுள்ளது. அதுவே உண்மையாகும், அதுவே ஆத்மாவாகும்.
அதுவே நீயாக இருக்கிறாய். அனிமா: சூட்சுமம் எந்தக்காரணத்தினால் ஸத்தை சூட்சுமம் என்று சொல்லப்படுகிறது.
அதற்கு நான்கு காரணங்கள் உண்டு. அவைகள்
a. நிர்குணவாத – நிர்குணமாக இருப்பதனால் குணங்கள் குறைய குறைய சூட்சுமாகிக் கொண்டே போகும்.
b. அவ்யக்தவாத – வெளித்தோற்றத்திற்கு வராததால்
c. ஆத்மத்வாத், அவிஷயத்வாத் – இந்த ஸத் நானாக இருப்பதால், அல்லது விஷயமாக இல்லாததால்
d. காரணவாத் – அனைத்திற்கும் காரணமாக இருப்பதால் ஸத்தில் ஸ்வரூபம் – அனந்தம், இது பெரிதுமில்லை, சிறியதுமில்லை.

ஐதாத்மியம்- இதையே சாரமாக கொண்டுள்ளது. அதாவது எல்லா ஸ்ருஷ்டிகளும் ஸத்தையே சாரமாக கொண்டுள்ளது.
உதாரணமாக எல்லா தங்க நகைகளுக்கும் தங்கமே ஆதாரமாக இருப்பதைப்போல. தங்கம் இல்லாமல் ஆபரணமில்லை,
ஆனால் ஆபரணமில்லாமல் தங்கம் மட்டும் இருக்கும். இவ்வாறாக பிரம்மம் சத்யம், மற்றதெல்லாம் மித்யா என்றறியலாம்.

ஸத்யம், இதற்கு இரண்டு லக்ஷணங்கள் உண்டு. ஒன்று அபாத்யம்- நீக்க முடியாதது (ஞானத்தால்),
அபாவத் த்ரய சூன்யம்- மூன்று விதமான இல்லாமை அற்றது. மூன்று காலங்களிலும் இருப்பது – நித்யம் என்று பொருள்.

ஆத்மா என்பது சைதன்ய ஸ்வரூபம்; ஸத் – சித் ஸ்வரூபம், ஸத் சித்தாகத்தான் இருக்க வேண்டும், இல்லையென்றால் அது ஜடமாக இருக்கும்.
எதுவெல்லாம் ஜடமாக இருக்கிறதோ அதுவெல்லாம் த்ருஷயம் (பார்க்கப்படுவது). எதையாவது சார்ந்திருக்கும்,
இவையெல்லாம் மித்யாவின் லட்சணமாக் இருப்பதால், ஸத் மித்யாவாகி விடும். எனவே ஸத்தானது சித்தாகத்தான் இருந்தாக வேண்டும்.
இது அறிவு ஸ்வரூபம், சைதன்யம். இந்த சைதன்யத்தை நீக்க முடியாது என்று நிரூபிக்க வேண்டும்.
சைதன்யம் தான் எல்லா-வற்றையும் நீக்க முடியும், இதை எதனாலும் நீக்க முடியாது.
எனவே ஸத்தை நீக்க முடியாததாக இருப்பதால், இது ஸத்தாக இருக்கிறது.

த்வம் – இதுவரை விளக்கப்பட்ட ஸத்துதான் அஹம் என்று புரிந்து கொள்ள வேண்டும்.
நான் அன்று சொல்லும்போது என்ன தோன்றுகிறது? ஏதோ ஒரு அறிவை உணர்த்துகிறது. என்னுடையது, இருக்கிறது
என்பதை பார்க்கிறேன் என்று அறிவினால் நீக்கினால் பின்பு ஸத் மட்டும்தான் இருக்கும் அதுதான் நான் என்று தெளிவடைய வேண்டும்.
இந்த உடல், மனம், புத்தி எல்லாமே த்ருஷ்யம் (பார்க்கப்படுவது) என்று உணர வேண்டும்.

இந்த ஞானத்தின் பலன் ஜீவன் முக்தி அடைதல், அனைத்துவிதமான சம்சார நிவிருத்தி. மனதிலுள்ள குழப்பங்கள் நீங்கி அமையடையலாம்.
பிரயோஜன விசாரம்
நான் ஸத்தாக இருக்கிறேன் என்ற அறிவை அடைவதால் என்ன பயன்?
பிரம்மஞானத்தால் புதியதாக ஒன்றும் அடையபடுவதில்லை. ஆனால் ஏதோ ஒன்று நம்மை விட்டு போய் விடுகிறது.
அவை இரண்டாக இருக்கிறது. ஒன்று கர்த்ருத்வம் மற்றொன்று போக்த்ருத்வம்.

வார்த்தைகள்தான் சம்சாரம், ஏனெனில் வெவ்வேறு வகையில் இந்த வார்த்தைகள் நம்மை கட்டுபடுத்துகின்றன.
ஆனால் தத்வமஸி என்ற வார்த்தை இவ்வகையில் கட்டுபடுத்திக் கொண்டிருக்கும் தளைகளிலிருந்து நம்மை விடுவிக்கின்றன.
நான் எந்தப்பொருளோடும் சங்கமற்றவனாக இருக்கிறேன் என்ற அறிவை அடைகிறோம்.
மற்ற வாக்கியங்கள் நம்மை கர்த்தாவாகவோ அல்லது போக்தாவாகவோ ஆக்கிவிடும்.
நான் பிறரது ஆணைக்கு கட்டுபட்டவன், மாற்றத்திற்கும், அழிவுக்கும் உட்பட்டவன் என்பதிலிருந்து விடுதலை பெற்று விடுவோம்.
பூர்வபக்ஷ விசாரம்
· அதத்வமஸி – நீ ஸத்தாக இல்லை என்றும் பொருட்கொண்டால், நான் பிரம்மம் இல்லையென்று எனக்குத் தெரிகிறது.
அதனால் இது உபதேசமாகாது. நான் ஏற்கனவே சம்சாரி என்று அறிந்துள்ளேன்
அதனால் திரும்பவும் நீ சம்சாரி இல்லையென்று வேதம் சொல்ல வேண்டிய அவசியமில்லை
· தத் த்வம் அஸி- அதனுடையதாக நீ இருக்கிறாய். அந்த ஈஸ்வரனுடைய அங்கமாக நீ இருக்கிறாய் என்று சொல்வதால்,
அங்கம், அங்கி என்ற பந்தம் வந்து விடுகிறது. எனவே ஈஸ்வரன் எல்லா சம்சாரிகளையெல்லாம் அங்கமாக வைத்திருக்கிறார் என்றாகி விடும்.

சூரியனும், யாகத்தில் உள்ள கம்பும் ஒன்றுதான் என்று உபாஸிக்க வேண்டும். மனதையும், பிரம்மமாக பாவித்து உபாஸிக்க வேண்டும்.
உபசாரஹ: நீ அங்கமாக இருக்கிறாய், ஏனெனில் இரண்டுக்கும் சமமான குணமாக இருப்பதால் இப்படி சொல்லலாம்.
அதேபோல ஈஸ்வரனுக்கும், ஜீவனுக்கும் சில சமமான குணங்கள் இருப்பதால் நீ அதுவாக் இருக்கிறாய்.
இந்த உபசாரத்தில் பந்த நிவிருத்தம் கிடைக்காது

· ஸ்துதி வாக்யம் வேதத்தில் சில இடங்களில் நீ இந்திரனாக இருக்கிறாய் என்று புகழாரம் சூட்டுவது போல் இருக்கிறது இந்த வாக்கியம்

பதில்: இது உபாஸன பிரக்ரணம் அல்ல, இது ஞான பிரக்ரணம்.
அதாவது நமக்கு தெரியாத அறிவு நான் பிரம்மமாக இருக்கிறேன் என்று தெரியபடுத்துகிறது.

————

யதா² ஸோம்ய மது⁴ மது⁴க்ருʼதோ நிஸ்திஷ்ட²ந்தி நாநாத்யயாநாம்
வ்ருʼக்ஷாணாꣳரஸாந்ஸமவஹாரமேகதாꣳரஸம் க³மயந்தி ॥ 6.9.1॥

தே யதா² தத்ர ந விவேகம் லப⁴ந்தேঽமுஷ்யாஹம் வ்ருʼக்ஷஸ்ய
ரஸோঽஸ்ம்யமுஷ்யாஹம் வ்ருʼக்ஷஸ்ய ரஸோঽஸ்மீத்யேவமேவ க²லு
ஸோம்யேமா: ஸர்வா: ப்ரஜா: ஸதி ஸம்பத்³ய ந விது:³ ஸதி
ஸம்பத்³யாமஹ இதி ॥ 6.9.2 ॥

த இஹ வ்யக்⁴ரோ வா ஸிꣳஹோ வா வ்ருʼகோ வா வராஹோ வா கீடோ வா
பதங்கோ³ வா த³ꣳஶோ வா மஶகோ வா யத்³யத்³ப⁴வந்தி ததா³ப⁴வந்தி
॥ 6.9.3 ॥

ஸ ய ஏஷோঽணிமைததா³த்ம்யமித³ꣳ ஸர்வம் தத்ஸத்யꣳ ஸ ஆத்மா
தத்த்வமஸி ஶ்வேதகேதோ இதி பூ⁴ய ஏவ மா ப⁴க³வாந்விஜ்ஞாபயத்விதி
ததா² ஸோம்யேதி ஹோவாச ॥ 6.9.4॥

தூங்கும் தசையில் அடைந்தால் -நினைவு இருக்குமா இல்லையா -தேன் கூடு -பூக்கள் பலவற்றில் இருந்து
எங்கு இருந்து வந்தது தெரியுமோ –
தூங்கி எழுந்ததும் அறிகிறோம் வாசிகள் -அனைத்தையும் -தேன் போலே இல்லையே -சிங்கம் புலி -வாசி -தானே நினைந்து வருமே –

॥ இதி நவம: க²ண்ட:³ ॥

காண்டம்-‍9
ஆழ்ந்த உறக்கத்தில் பிரம்மத்தில் ஐக்கியமாதி விடுகிறோம் என்று ஜீவர்களால் எதனால் அறிய முடியவில்லை?
அந்த அக்ஞானத்திற்கு என்ன காரணம்?

தேனியானது விதவிதமான் மலர்களிலிருந்து தேனைக்கொண்டு வந்து தேன் கூட்டில் சேர்க்கிறது.
அப்படி சேர்ந்துள்ள தேனில் எந்த மலரிலிருந்து கொண்டு வந்த தேன் எந்த பகுதியில் இருக்கிறது என்று கண்டுபிடிக்க முடியாது.
அதுபோல ஜீவர்கள் பிரம்மத்தோடு சேரும்போது அவர்களது தனித்தன்மையை இழந்து விடுவதால்
எங்கிருந்து நான் இங்கு வந்தேன் என்ற அறிவு ஏற்படாது.

அவன் எப்படி திரும்பவும் அதே தனித்தன்மையோடு விழித்தெழுகிறேன் என்றால்,
அவனுடைய கர்ம வசத்தாலும், ஆத்ம அக்ஞானத்தாலும் இது சாத்தியமாகிறது.

—————

இமா: ஸோம்ய நத்³ய: புரஸ்தாத்ப்ராச்ய: ஸ்யந்த³ந்தே
பஶ்சாத்ப்ரதீச்யஸ்தா: ஸமுத்³ராத்ஸமுத்³ரமேவாபியந்தி ஸ ஸமுத்³ர
ஏவ ப⁴வதி தா யதா² தத்ர ந விது³ரியமஹமஸ்மீயமஹமஸ்மீதி
॥ 6.10.1॥

ஏவமேவ க²லு ஸோம்யேமா: ஸர்வா: ப்ரஜா: ஸத ஆக³ம்ய ந விது:³
ஸத ஆக³ச்சா²மஹ இதி த இஹ வ்யாக்⁴ரோ வா ஸிꣳஹோ வா
வ்ருʼகோ வா வராஹோ வா கீடோ வா பதங்கோ³ வா த³ꣳஶோ வா மஶகோ வா
யத்³யத்³ப⁴வந்தி ததா³ப⁴வந்தி ॥ 6.10.2॥

ஸ ய ஏஷோঽணிமைததா³த்ம்யமித³ꣳ ஸர்வம் தத்ஸத்யꣳ ஸ ஆத்மா
தத்த்வமஸி ஶ்வேதகேதோ இதி பூ⁴ய ஏவ மா ப⁴க³வாந்விஜ்ஞாபயத்விதி
ததா² ஸோம்யேதி ஹோவாச ॥ 6.10.3॥

எங்கு இருந்து வந்தோம் எதனால் தெரியவில்லை -கடல் நீர் மழை பெய்து நதியாகி -கடலில் சேருகின்றன –
அதே போலே ப்ரஹ்மம் இருந்து உருவாகி
மூன்றாவது தடவை தத்வமஸி சொல்லி விளக்கி

॥ இதி த³ஶம: க²ண்ட:³ ॥

காண்டம்-‍10
நான் பிரம்மத்திலிருந்து வந்தவுடன், ஆழ்ந்த உறக்கத்திலிருந்து விழித்தவுடன்,
ஏன் என்னால் பிரம்மத்திலிருந்து வந்தேன் என்று தெரியவில்லை?

பிரம்மத்தை அடையும்போது நம் தனித்தன்மையை இழந்து விடுவதால், நம்மால் சொல்ல முடியவில்லை.
(உ-ம்) நதிகள் கடல்நீரால்தான் மழையாகி உருவாகின்றன். ஆனால் அவைகள் திரும்பவும் கடலிலே கலந்து விட்ட பிறகு
அதனதன் தனித் தன்மையை இழந்து விடுகின்றது.

———–

அஸ்ய ஸோம்ய மஹதோ வ்ருʼக்ஷஸ்ய யோ மூலேঽப்⁴யாஹந்யாஜ்ஜீவந்ஸ்ரவேத்³யோ
மத்⁴யேঽப்⁴யாஹந்யாஜ்ஜீவந்ஸ்ரவேத்³யோঽக்³ரேঽப்⁴யாஹந்யாஜ்ஜீவந்ஸ்ரவேத்ஸ
ஏஷ ஜீவேநாத்மநாநுப்ரபூ⁴த: பேபீயமாநோ மோத³மாநஸ்திஷ்ட²தி
॥ 6.11.1॥

அஸ்ய யதே³காꣳ ஶாகா²ம் ஜீவோ ஜஹாத்யத² ஸா ஶுஷ்யதி
த்³விதீயாம் ஜஹாத்யத² ஸா ஶுஷ்யதி த்ருʼதீயாம் ஜஹாத்யத² ஸா
ஶுஷ்யதி ஸர்வம் ஜஹாதி ஸர்வ: ஶுஷ்யதி ॥ 6.11.2॥

ஏவமேவ க²லு ஸோம்ய வித்³தீ⁴தி ஹோவாச ஜீவாபேதம் வாவ கிலேத³ம்
ம்ரியதே ந ஜீவோ ம்ரியதே இதி ஸ ய ஏஷோঽணிமைததா³த்ம்யமித³ꣳ
ஸர்வம் தத்ஸத்யꣳ ஸ ஆத்மா தத்த்வமஸி ஶ்வேதகேதோ இதி பூ⁴ய ஏவ
மா ப⁴க³வாந்விஜ்ஞாபயத்விதி ததா² ஸோம்யேதி ஹோவாச ॥ 6.11.3॥

பிறவி நினைவு இல்லையே -ஆத்மா முடிந்து போனதா -சங்கை
மரம் -கோடாரியால் வெட்டி -பால் வழியும் எங்கு வெட்டினாலும்
கிளை பட்டுப்போனால் மரம் அழியாதே –
சரீரம் தான் பட்டுப்போகும் ஆத்மா அழியாது என்று விளக்கி –

॥ இதி ஏகாத³ஶ: க²ண்ட:³ ॥

காண்டம்-‍11
உயிருள்ள மரத்தை எங்கு வெட்டினால், வெட்டிய இடத்திலிருந்து நீர் வருகின்றது.
ஆனால் வெட்டி காய்ந்து கீழே இருக்கும் கிளையை மீண்டும் வெட்டினால், நீர் வருவதில்லை.
ஜீவனுக்கு இநத சரீரம் அவன் சுகத்தையும், துக்கத்தையும் அனுபவிப்பதற்கும், உலக போதங்களை அனுபவித்து
பாவ புண்ணியங்களை தீர்ப்பதற்கும் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் நாம் இந்த உடலையே ஜீவனாக பார்க்கிறோம்.
ஜீவன் இந்த உடலில் இருக்கும்வரை உயிருடன் இருக்கிறது அது வெளியேறியதும் உடல் ஜடமாகி விடுகிறது.

ஜீவன் என்பவன் யார்? மூன்று தத்துவத்தின் சேர்க்கையாக இருப்பவன் ஜீவன்.
அவைகள் அறிவு ஸ்வரூபம் (ஸத்-சித், சுத்த சைதன்யம்), சூட்சும சரீரம் (மனம்), சிதாபாஸம் (மனதில் பிரதிபலிக்கும் ஸத்).
எப்போது ஜீவன் இந்த உடலில் இருக்கிற அபிமானத்தை எடுத்து விடுகிறதோ அப்போது மரணம் சம்பவிக்கின்றது.
எனவே உபநிஷத் கூறுகிறது, இந்த சரீரம் உனக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது,
எனவே இந்த உடல் மரணத்தால் அழிந்தாலும் நீ அழிவதில்லை.
மரமானது வெட்டிய கிளையிலிருந்து அபிமானத்தை எடுத்து விடுவதால் அது காய்ந்து போய் விடுகிறது.
எனவே மரத்திலுள்ள காய்ந்த கிளைகளிலிருந்து அதிலிருக்கும் ஜீவன் தன் அபிமானத்தை எடுத்து விடுவதால் அந்த கிளை அந்த நிலையிலிருக்கிறது.
முழு மரமும் காய்ந்து போயிருந்தால், ஜீவன் அந்த மரத்திலிருந்தே தன் அபிமானத்தை எடுத்து விட்டிருக்கிறான் என்று புரிந்து கொள்ளலாம்.
அதுபோல ஜீவன் உடலிலிருந்து முழுவதுமாக தன் அபிமானத்தை எடுத்து விடுவதால் அது மரணமடைகிறது.

———————

ந்யக்³ரோத⁴ப²லமத ஆஹரேதீத³ம் ப⁴க³வ இதி பி⁴ந்த்³தீ⁴தி பி⁴ந்நம்
ப⁴க³வ இதி கிமத்ர பஶ்யஸீத்யண்வ்ய இவேமா தா⁴நா ப⁴க³வ
இத்யாஸாமங்கை³காம் பி⁴ந்த்³தீ⁴தி பி⁴ந்நா ப⁴க³வ இதி கிமத்ர
பஶ்யஸீதி ந கிஞ்சந ப⁴க³வ இதி ॥ 6.12.1॥

தꣳ ஹோவாச யம் வை ஸோம்யைதமணிமாநம் ந நிபா⁴லயஸ
ஏதஸ்ய வை ஸோம்யைஷோঽணிம்ந ஏவம் மஹாந்யக்³ரோத⁴ஸ்திஷ்ட²தி
ஶ்ரத்³த⁴த்ஸ்வ ஸோம்யேதி ॥ 6.12.2॥

ஸ ய ஏஷோঽணிமைததா³த்ம்யமித³த்³ꣳ ஸர்வம் தத்ஸத்யꣳ ஸ ஆத்மா
தத்த்வமஸி ஶ்வேதகேதோ இதி பூ⁴ய ஏவ மா ப⁴க³வாந்விஜ்ஞாபயத்விதி
ததா² ஸோம்யேதி ஹோவாச ॥ 6.12.3॥

ஸூஷ்மத்தில் இருந்து ஜகத் -விதையில் இருந்து மரம் -பண்புகள் எல்லாம் விதையில் உண்டே -ஐந்தாவது தடவை –

॥ இதி த்³வாத³ஶ: க²ண்ட:³ ॥

காண்டம்-‍12
காரணத்திலுள்ள குணங்கள்தான் காரியத்தில் இருக்கும் என்பது விதி,
ஆனால் நிஷ்கலம், நிர்குணமாக உள்ள பிரம்மத்திலிருந்து வெளிப்பட்ட பிரபஞ்சம் விதவிதமான குணங்களுடன் இருப்பது ஏன்?
சூட்சுமமான பிரம்மத்திலிருந்து ஸ்தூலமான உலகம் எப்படி வந்தது?

ஆல்மரத்தின் பழத்தை உடைத்து பார்த்தால், அதில் சிறிய சிறிய விதைகள் இருக்கும்.
அந்த விதையை உடைத்து பார்த்தால் ஒன்றும் தெரியாது. ஒன்றுமே இல்லாத விதையிலிருந்து எப்படி
இவ்வளவு பெரிய ஆலமரம் வந்ததோ, அதுபோல சூட்சும்மான பிரம்மத்திலிருந்து ஸ்தூலமான பிரபஞசம் தோன்றியது.
விதையில் இல்லாத குணங்களை மரத்தில் பார்க்கிறோம். காரியத்தில் இருக்கும் குணங்கள் காரணத்தில் இருந்தும்,
வெளித்தோற்றதிற்கு வராமலிருக்கலாம். அதாவது எப்படி ஆலமரம் விதையிலிருந்து வளர்ந்து பெரிய மரமாக வளர்ந்திருக்கிறதோ
அதுபோல சூட்சுமமான பிரம்மத்திலிருந்து வெளிவந்த ஸ்தூலமான பிரபஞ்சத்தில் தோன்றும் குணங்கள்
வெளித் தோற்றதிற்கு வராமல் இருந்து இருக்கிறது. அதைத்தான் மாயை என்று அழைக்கிறோம்.
மாயைக்கும் இந்த உலகத்திற்கும் சம்பந்தம் ஆலமர விதைக்கும், ஆலமரத்திற்குமிடையே உள்ள சம்பந்தம் போன்றதுதான்.
பிரம்மத்திற்கும் பிரபஞசத்திற்கும் உள்ள சம்பந்தம் கயிற்றுக்கும் அதில் தோன்றிய பாம்புக்கும் உள்ள சம்பந்தம் போன்றது.
எனவே ஒன்று எதனைச் சார்ந்திருக்கிறதோ அது மித்யா என்று அறியலாம்

————-

லவணமேதது³த³கேঽவதா⁴யாத² மா ப்ராதருபஸீத³தா² இதி
ஸ ஹ ததா² சகார தꣳ ஹோவாச யத்³தோ³ஷா லவணமுத³கேঽவாதா⁴
அங்க³ ததா³ஹரேதி தத்³தா⁴வம்ருʼஶ்ய ந விவேத³ ॥ 6.13.1॥

யதா² விலீநமேவாங்கா³ஸ்யாந்தாதா³சாமேதி கத²மிதி லவணமிதி
மத்⁴யாதா³சாமேதி கத²மிதி லவணமித்யந்தாதா³சாமேதி
கத²மிதி லவணமித்யபி⁴ப்ராஸ்யைதத³த² மோபஸீத³தா² இதி
தத்³த⁴ ததா² சகார தச்ச²ஶ்வத்ஸம்வர்ததே தꣳ ஹோவாசாத்ர
வாவ கில தத்ஸோம்ய ந நிபா⁴லயஸேঽத்ரைவ கிலேதி ॥ 6.13.2॥

ஸ ய ஏஷோঽணிமைததா³த்ம்யமித³ꣳ ஸர்வம் தத்ஸத்யꣳ ஸ ஆத்மா
தத்த்வமஸி ஶ்வேதகேதோ இதி பூ⁴ய ஏவ மா ப⁴க³வாந்விஜ்ஞாபயத்விதி
ததா² ஸோம்யேதி ஹோவாச ॥ 6.13.3॥

உப்புக்கட்டி -கரைந்த நீர் -உப்பை எடுக்க முடியாதே -உப்பு கரிக்கும் -கண்ணுக்கு தெரியாது சுவையால் அறியலாம் -ஆறாவது தடவை
மீனை தொட்ட இடம் எல்லாம் தண்ணீர் போலே ஜகம் முழுவதும் ப்ரஹ்மம்

॥ இதி த்ரயோத³ஶ: க²ண்ட:³ ॥

காண்டம்-‍13
ஒரு பொருள் இருந்தால் அது நமக்கு தெரியவரும். ஒருபொருள் தெரியவில்லை,
அதே சமயம் அது இல்லை என்று உறுதி செய்கின்ற மாதிரி ஏதாவது ஒரு பிரமானம் இருந்தால்
அதை உபயோகித்து உறுதி செய்ய வேண்டும். ஒருபொருள் தெரியவில்லை என்ற ஒரு பிரமானத்தை வைத்து சொல்லிவிடக்கூடாது,
வேறொரு பிரமானத்தையும் உபயோகித்து முடிவுக்கு வரவேண்டும்.

உதாரணமாக நீரில் கரைக்கும் முன் கண் என்ற பிரமானத்தின் மூலம் தெரிந்த உப்பானது,
அதை நீரில் கரைத்ததும் கண் மூலம் அதன் இருப்பை அறிய முடியாது, அதனால் இந்த அந்த ஒரு பிரமானத்தை வைத்து
உப்பு நீரில் இல்லை என்று முடிவுக்கு வரக்கூடாது, சுவையறியக்கூடிய மற்றொரு பிரமானமான நாக்கை கொண்டு
நீரை சுவைத்துப் பார்த்தால் உப்பின் இருப்பை அறிந்து கொள்ளலாம்.
அதுபோல ஸத்தானது எங்கும் உள்ளது அதை சரியான பிரமானத்தில் மூலம் உணர்ந்து கொள்ளமுடியும்.
இதை புலன்களால் அறிய முடியாது வேறொரு பிரமானம் மூலம்தான் அறிந்து கொள்ள முடியும்.

————

யதா² ஸோம்ய புருஷம் க³ந்தா⁴ரேப்⁴யோঽபி⁴நத்³தா⁴க்ஷமாநீய தம்
ததோঽதிஜநே விஸ்ருʼஜேத்ஸ யதா² தத்ர ப்ராங்வோத³ங்வாத⁴ராங்வா
ப்ரத்யங்வா ப்ரத்⁴மாயீதாபி⁴நத்³தா⁴க்ஷ ஆநீதோঽபி⁴நத்³தா⁴க்ஷோ
விஸ்ருʼஷ்ட: ॥ 6.14.1॥

தஸ்ய யதா²பி⁴நஹநம் ப்ரமுச்ய ப்ரப்³ரூயாதே³தாம் தி³ஶம் க³ந்தா⁴ரா
ஏதாம் தி³ஶம் வ்ரஜேதி ஸ க்³ராமாத்³க்³ராமம் ப்ருʼச்ச²ந்பண்டி³தோ மேதா⁴வீ
க³ந்தா⁴ராநேவோபஸம்பத்³யேதைவமேவேஹாசார்யவாந்புருஷோ வேத³
தஸ்ய தாவதே³வ சிரம் யாவந்ந விமோக்ஷ்யேঽத² ஸம்பத்ஸ்ய இதி
॥ 6.14.2॥

ஸ ய ஏஷோঽணிமைததா³த்ம்யமித³ꣳ ஸர்வம் தத்ஸத்யꣳ ஸ ஆத்மா
தத்த்வமஸி ஶ்வேதகேதோ இதி பூ⁴ய ஏவ மா ப⁴க³வாந்விஜ்ஞாபயத்விதி
ததா² ஸோம்யேதி ஹோவாச ॥ 6.14.3॥

சுவையால் அறிவது போலே ப்ரஹ்மத்தை அறிவது எப்படி -கண்ணைக் கட்டி கூட்டி வந்து –
இந்த திசையில் நீ வந்தாய் சொல்லி -காந்தாரம் போய் சேர்ந்தான் –
யோகம் த்யானம் -கண்ணை திறப்பது போலே -ஆச்சார்ய உபதேசம் ப்ரஹ்மம் அறிய வழி –

॥ இதி சதுர்த³ஶ: க²ண்ட:³ ॥

காண்டம்-‍14
ஸத்தை அறிவதற்கு வேதாந்த சாஸ்திரமும், அதை உபதேசிக்கும் குருவுமே சரியான பிரமானமாகும்.

காந்தார தேசத்திலிருந்து ஒருவனை திருடர்கள் கண்ணைக் கட்டி தூக்கிக் கொண்டு வந்து மரங்கள் அடர்ந்த காட்டில் விட்டுவிட்டார்கள்.
அவன் கூக்குரலிட்டு உதவிக்கு யாராவது வாருங்கள் என்று அழைத்தான். யாரோ வருவது போலிருந்ததால் திருடர்கள்
அவனை அப்படியே விட்டுவிட்டு ஓடி விட்டார்கள். அவன் போட்ட சத்தத்தைக் கேட்டு வந்த ஒருவர்,
அவனுடைய கண்ணை கட்டியிருந்த துணியை அவிழ்த்து, அவன் போக வேண்டிய தேசத்தின் வழியையும் கூறினார்.
அவனும் அவர் காட்டிய வழியிலே சென்று தன் நாட்டை அடைந்தான்.

அடர்ந்த காடு – சம்சாரம்
திருடன் – பாவ, புண்ணியங்கள்
கட்டியிழுத்துவரப்பட்டவன் – ஜீவாத்மா
கண் கட்டை அவிழ்த்து விடுபவர் – குரு
காந்தாரம் – அவன் சொந்த ஊர் – பிரம்ம ஸ்வரூபம்

ஒரு ஜீவனை பிரம்மத்திலிருந்து பிரித்தெடுத்துக்கொண்டு வந்து இந்த ஸ்தூல சரீரத்திலுள்ளே விட்டு விட்டார்கள்.
ஜீவன் தான் பிரம்மம் என்றுணராமல் தேகம் என்ற அபிமானத்துடன் இருக்கிறான்.
இந்தக் கதையில் கண்ணை துணியால் கட்டியிருப்பது, விவேகமானது மோகத்தால் (அவித்யாவால்) மூடப்பட்டிருப்பதை குறிக்கிறது.
மோகம் என்பது எது நமக்கு துன்பத்தைக் கொடுக்கும் விஷயத்தை சுகமானது என்று நினைத்து
அதில் ஈடுபட வைக்குமோ அதுதான் மோகம் என்று அறிந்து கொள்ளலாம்.

ஒருவனை சொந்த ஊரிலிருந்து கண்ணைக்கட்டி தூக்கிக்கொண்டு வந்து மரங்கள் அடர்ந்த காட்டில் விட்டுவிடுவது,
ஜீவனை மோகத்தால் விவேகத்தை மறைத்து பிரம்மத்திலிருந்து (சொந்த ஸ்வரூபத்திலிருந்து)
பிரித்தெடுத்துக்கொண்டு வந்து விடப்பட்டிருப்பது போன்றதாகும். கண் கட்டை அவிழ்த்து விடுபவர் குருவுக்கு ஒப்பிடப்படுகிறது.
குருவானவர் மோகத்தை நீக்கி இது ஸத் இது அஸத் என்ற அறிவை கொடுக்கிறார்.
சொந்த ஊருக்கு செல்லும் வழியை கூறுவது – வைராக்யம், சம தம போன்ற தகுதிகளை போதிப்பதற்கு ஒப்பிடலாம்.

பிரவிருத்தி வழி என்பது உள்ளத்திலுள்ள ஆசைகளையெல்லாம் வெறும் அறிவினால் நீக்க முடியாமல் இருக்கும் நிலையில்
இருந்தால் அதை தர்ம வழியில் அதை அனுபவித்தால், விரைவில் சித்தமானது தூய்மையடைந்து பிறகு ஞான வழியை பின்பற்றுவான்.

நிவிருத்தி வழி என்பது ஸம, தம, வைராக்யம் போன்ற தகுதிகளை அடைந்து பிறகு ஞான வழியை பின்பற்றுவான்.

கதையில் வந்த மனிதன் இன்னொருவர் காட்டிய வழியிலே சென்று தன் சொந்த ஊரை அடைந்தான்.
அதேமாதிரி குரு உபதேசத்தைக் கொண்டு நிவிருத்தி மார்க்கத்திலே சென்று ஞானத்தை அடைய வேண்டும்.

அக்ஷம் – கண்;
அபிநதம் – கட்டப்பட்ட;
விஸ்ருஜேதி – விட்டுவிட்டான்
பிரத்மாயீத – சத்தம் போடுகிறான்;
பண்டிதன் – உபதேசத்தை பெற்றவன் (சரியான லட்சியத்தை அடையும் பாதையை தெரிந்து கொண்டவன்)
மேதாவி – உபதேசம் செய்ததை மனதில் பதிய வைத்துக் கொண்டவன்
ஆசார்யவான்- குருவை அடைந்தவன், பிரம்ம ஞானத்தை அடைகிறான்

வேதாந்தம் என்பது அத்யாரோப அபவாதம் என்கின்ற முறையில் ஞானத்தை உபதேசிக்கும்.

அத்யாரோபம் – த்வைதத்தை ஸத்யம் என்ற பாவனையோடு ஏற்றுக் கொள்ளுதல்
அபவாதம்- நீக்குதல்; (எதையெல்லாம் ஸத்யம் என்று ஏற்றுக்கொண்டாரோ, சிஷ்யனுடைய மனதில் ஏராளமான விஷயங்கள்
ஒத்துக் கொண்டு விவகாரம் செய்து கொண்டிருப்பது, அதையெல்லாம் ஒவ்வொன்றாக நீக்கி சரியான அறிவை கொடுத்தல்)

ஞானத்தின் பலன்
குருவையடைந்த சிஷயன் அவரது உபதேச்த்தின் மூலமாக பெறும் ஞானத்தின் பலனை அடகிறான்.
இது ஜீவன் முக்தி, விதேஹ முக்தி என்று இரண்டாக பிரிக்கப்படுகிறது.
விதேஹ முக்தி: ஸரீரத்திலிருந்து பிரிந்த ஜீவன் மீண்டும் பிறவாத நிலை
ஜீவன் முக்தி: ஞானம் அடைந்த பின் மீண்டும் பிறவாத நிலை. ஞானம் அடைந்த பின்னர்
அவன் எதற்காகவும் காத்துக் கொண்டிருக்க மாட்டான். ஆனால் மரணத்திற்காக மட்டும்தான் காத்துக்கொண்டிருப்பான்.
அதுவரை அவன் ஜீவன் முக்தி நிலையிலே இருப்பான். அதாவது மரணத்தில் விருப்பமில்லாதவன்
அதே சமயம் வாழ்வதிலும், விருப்பமில்லாதவன். மனநிறைவுடன் நாட்களை கழித்துக்கொண்டிருப்பான்.
மரணத்திற்கு பின்னர் அவன் பிரம்மத்தில் ஐக்கியமாகிறான்.

————

புருஷꣳ ஸோம்யோதோபதாபிநம் ஜ்ஞாதய: பர்யுபாஸதே ஜாநாஸி
மாம் ஜாநாஸி மாமிதி தஸ்ய யாவந்ந வாங்மநஸி ஸம்பத்³யதே
மந: ப்ராணே ப்ராணஸ்தேஜஸி தேஜ: பரஸ்யாம் தே³வதாயாம்
தாவஜ்ஜாநாதி ॥ 6.15.1॥

அத² யதா³ஸ்ய வாங்மநஸி ஸம்பத்³யதே மந: ப்ராணே ப்ராணஸ்தேஜஸி
தேஜ: பரஸ்யாம் தே³வதாயாமத² ந ஜாநாதி ॥ 6.15.2॥

ஸ ய ஏஷோঽணிமைததா³த்ம்யமித³ꣳ ஸர்வம் தத் ஸத்யꣳ ஸ ஆத்மா
தத்த்வமஸி ஶ்வேதகேதோ இதி பூ⁴ய ஏவ மா ப⁴க³வாந்விஜ்ஞாபயத்விதி
ததா² ஸோம்யேதி ஹோவாச ॥ 6.15.3॥

ஜீவன் -தேவன் -மனுஷ்ய -சரீர அபிமானம் அங்கு இருக்குமா -எப்படி மறைக்கிறான்
மோக்ஷம் -அடைபவனின் பூதங்கள் -இந்திரியங்கள் -மனஸ் -பிராணன் –
எட்டாம் தடவை

॥ இதி பஞ்சத³ஶ: க²ண்ட:³ ॥

காண்டம்-‍15
ஞானியின் மரணத்திற்கும், அக்ஞானியின் மரணத்திற்கும் வித்தியாசம் ஒன்றுமில்லை.
ஆனால் ஞானியானவன் மரணத்திற்குப்பின் பிறப்பதில்லை, அக்ஞானி மரணத்திற்குப் பின்
அவனது பாவ புண்ணியத்திற்கேற்ப மீண்டும் பிறப்பான்.
மரணப்படுக்கையில் இருப்பவனைச் சுற்றி உறவினர்கள் என்னைத் தெரிகிறதா என்று கேட்பார்கள்,
அவனும் தெரிகிறது என்பான். பேச்சானது மனதில் ஒடுங்கும், மனதானது பிராணனில் ஒடுங்கும்,
பிராணன் உஷ்ணத்தில் ஒடுங்கும், உஷ்ணமானது பிரம்மத்தில் ஒடுங்கும்.

—————-

புருஷꣳ ஸோம்யோத
ஹஸ்தக்³ருʼஹீதமாநயந்த்யபஹார்ஷீத்ஸ்தேயமகார்ஷீத்பரஶுமஸ்மை
தபதேதி ஸ யதி³ தஸ்ய கர்தா ப⁴வதி தத ஏவாந்ருʼதமாத்மாநம்
குருதே ஸோঽந்ருʼதாபி⁴ஸந்தோ⁴ঽந்ருʼதேநாத்மாநமந்தர்தா⁴ய
பரஶும் தப்தம் ப்ரதிக்³ருʼஹ்ணாதி ஸ த³ஹ்யதேঽத² ஹந்யதே ॥ 6.16.1॥

அத² யதி³ தஸ்யாகர்தா ப⁴வதி ததேவ ஸத்யமாத்மாநம் குருதே
ஸ ஸத்யாபி⁴ஸந்த:⁴ ஸத்யேநாத்மாநமந்தர்தா⁴ய பரஶும் தப்தம்
ப்ரதிக்³ருʼஹ்ணாதி ஸந த³ஹ்யதேঽத² முச்யதே ॥ 6.16.2॥

ஸ யதா² தத்ர நாதா³ஹ்யேதைததா³த்ம்யமித³ꣳ ஸர்வம் தத்ஸத்யꣳ ஸ
ஆத்மா தத்த்வமஸி ஶ்வேதகேதோ இதி தத்³தா⁴ஸ்ய விஜஜ்ஞாவிதி
விஜஜ்ஞாவிதி ॥ 6.16.3॥

ப்ரஹ்ம பிராப்தி அடைவதை எப்படி நிரூபிப்பது -திருடன் -கோடாலியை பழுக்க காய்ச்சி –
கையில் பிடித்ததும் போய் விடுவான் -திருடன் -lie detector போலே –
சரீரத்தில் சிக்கி -விலகினால் ப்ரஹ்மத்துடன் பெறுவான் -லயிக்கும் பொழுது -அங்கே தானே சேர வேண்டும்
இப்படி ஒன்பது சங்கைகளையும் தீர்த்து அருளி
பூமா தகர வித்யைகள் மேலே பார்ப்போம் –

॥ இதி ஷோட³ஶ: க²ண்ட:³ ॥
॥ இதி ஷஷ்டோ²ঽத்⁴யாய: ॥

காண்டம்-‍16
அந்தக்காலத்தில் திருட்டுக் குற்றம் சாட்டப்பட்டவனிடமிருந்து உண்மையை வரவழைக்க ஒரு சூடான கம்பியை பிடிக்க சொல்லுவார்கள்.
அவன் உண்மையான திருடனாக இருந்தால் அவன் கையானது கம்பியிலுள்ள சூட்டினால் புண்ணாதி விடும்,
அவன் நிரபராதியாக இருந்தால், அவனுடைய கைக்கு ஒன்றும் நேராது.
அதுபோல பிரம்மத்தை அறிந்தவன் உலகபோகங்களில் கட்டுபடாதவன், துயரத்தை அனுபவிக்காமல்
என்றென்றும் அமைதியாக ஆனந்தமாக இருப்பான். ஆனால் அக்ஞானியானவன் இந்த சம்சார பந்தத்தில் சிக்கிக்கொண்டிருப்பான்.
அதனால் இன்ப துன்பத்தை மாறி மாறி அனுபவித்துக் கொண்டிருந்து.
பிறகு இறந்ததும் அவன் செய்த பாவ புண்ணியங்களுக்கு ஏற்றபடி மீண்டும் பிறப்பெடுப்பான்.

————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ கைவல்ய உபநிஷத்

March 22, 2021

வேதாந்தம் என்பது வேத + அந்தம் என்று பிரித்து, வேதத்தின் இறுதி பாகம் என்று அர்த்தம் கொள்ளலாம்.
இது ஞானத்தை கொடுக்ககூடியது. ஒரு பிரமானத்தின் மூலம் அறிந்ததை வேறொரு பிரமானத்தால் அறியவும் முடியாது, நீக்கவும் முடியாது.

ஆறுவிதமான லிங்கங்களை (குறிப்புக்கள், அடையாளங்கள்) வைத்து
உபநிஷத்தின் மையக்கருத்தை (தாத்பர்யம்) கண்டுபிடித்து விடலாம், உறுதி செய்து விடலாம். அவைகள்
1. உபகிரம, உபசம்ஹாரம் – துவக்கம், முடிவு.
சாஸ்திரத்தின் துவக்கமும், முடிவும் அது சொல்ல வருகின்ற மையக்கருத்தை தெரிவிக்கும்,
துவக்கம் என்பது உபதேசம் துவங்கும் இடம், முடியும் இடம் நாம் பார்க்க வேண்டும்.
2. அப்யாஸஹ:
மீண்டும், மீண்டும் கூறுதல். எந்தக் கருத்து திரும்ப திரும்ப சொல்லப்படுகிறதோ,
அதுவே அது கூற விரும்பும் மையக்கருத்து என்று புரிந்து கொள்ளலாம்.
3. அபூர்வதா – புதிய அறிவு
உபநிஷத்தினால் மட்டும் அறியக்கூடிய கருத்துதான் அது கூற விரும்பும் மையக்கருத்து.
4. பிரயோஜனம்: உபநிஷத்தை படிப்பதால் அடையும் பலனை கொண்டு அதன் மையக்கருத்தை என்று புரிந்து கொள்ளலாம்.
5. அர்த்தவாதம்: எந்த அறிவை உபநிஷத் புகழ்கின்றதோ அதுதான் மையக்கருத்தாக் இருக்கும்.
எதை நிந்தனை செய்கின்றதோ அது மையக்கருத்தல்ல என்று புரிந்து கொள்ளலாம்.
6. உபபத்தி: யுக்திபூர்வமான விளக்கத்தை சொல்கின்ற கருத்து.

நாம் உபநிஷத்தை படிப்பதற்கு முன்னர் கீழ்கண்ட மூன்று விதமான கருத்துக்களை வைத்து
உறுதி செய்த பிறகு அதை படித்தால், குழப்பம் இல்லாமல் ஞானத்தை அடையலாம்.
1. ஆத்ம ஞானம் மோட்சத்தை அடைவதற்கு உதவி புரியம் சாதனம்
2. இந்த ஞானத்தை உபநிஷத் மூலம்தான் அடைய முடியும்.
3. உபநிஷத் கொடுக்கின்ற ஞானம் ஜீவ-ஈஸ்வர ஐக்கியம்.

உபநிஷத் என்றால் ரகசியம் என்ற அர்த்தமும் உண்டு. பிரம்ம வித்யா எல்லாவற்றைக் காட்டிலும்
மேலானது, உயர்வானது எனவே ரகசியம் என்று பொருள் கொள்ளப்படுகிறது.
மோட்சத்தை கைவல்யம் என்று இந்த உபநிஷத் அழைப்பதால் இதற்கு கைவல்ய உபநிஷத் என்று அழைக்கப்படுகிறது.
பிரம்மம் ஒன்றாக் இருப்பதை குறிப்பதற்கும் கைவல்யம் என்றும் பொருள் கொள்ளலாம்.
இருமையிலிருந்துதான் பயம் வருகின்றது.
நான் ஒருவன்தான் எங்கும் வியாபித்திருக்கிறேன் என்று உணரும் நிலையை கைவல்யம் என்றும் கூறப்படுகிறது.

——-

சாந்தி பாடம்

நாங்கள் தெய்வீகமான விஷயஙளையே கேட்க வேண்டும், உண்மையை போதிக்கும் விஷயங்களையே கேட்க வேண்டும்,
சாஸ்திரம் உரைக்கும் உபதேசங்களை குரு மூலம் சிரத்தையுடன் கேட்கும் வாய்ப்பை அடைய வேண்டும்.
அந்த உபதேசங்கள் அனைத்தும் புரிய வேண்டும், மனதில் நிற்க வேண்டும்.
இவைகள் மூலம் நாங்கள் இந்த சம்சாரத்திலிருந்து முற்றிலுமாக விடுதலையடைய வேண்டும்.

தேவர்கள் எங்களை சம்சார பந்தத்திலிருந்து காப்பாற்றட்டும்.
(யஜத்ரா என்ற சொல், தம்மை புகழ்பவர்களுக்கு உதவி செய்யும் ஒருவகையான தேவர்கள் என்று குறிக்கிறது.
இது ஈஸ்வரனையும் குறிப்பால் உணர்த்துகிறது.) நாங்கள் மோக்‌ஷத்தை அடைவதற்கு உதவியாக இருப்பனவற்றையே பார்க்க வேண்டும்,
மனத்தூயமையை தரக்கூடிய விஷயங்களையே பார்க்க வேண்டும்.
பார்க்கும் அனைத்திலும் அந்த ஈஸ்வரனையே பார்க்கும் புத்தியை அடைய வேண்டும்.
(வெறும் கண்ணால் பார்க்காமல், புத்தியின் துணை கொண்டு வெளி விஷயங்களை பார்க்க வேண்டும்.)

எங்களுக்கு விதிக்கப்பட்ட வாழ்நாள் முழுவதும் தேவர்களை புகழ்ந்து கொண்டும்,
உறுதியான, நலமான, திடமான உடலுறுப்புகளைக் கொண்டு தேவர்கள் மகிழும் வண்ணம் நல்லதையே செய்து கொண்டும் வாழ வேண்டும்.

போற்றுதலுக்கும், வணங்குதலுக்கும் உரிய தேவர்கள எங்களுக்கு உடல்நலத்தையும், மனநலத்தையும் கொடுக்கட்டும்.
அனைத்தையும் அறிகின்ற சூரியபகவான் எங்களுக்கு நல்லதையே கொடுக்கட்டும்.

———-

ஸ்லோகம்-1
ஆஷ்வலாயன் என்ற சிஷ்யர் கேட்கும் கேள்வியாக இந்த மந்திரம் அமைந்திருக்கிறது.

அத: பிறகு, சாதன சதுஷ்டய சம்பத்தி என்ற தகுதியை அடைந்த பிறகு,
ஆஷ்வலாயன் என்பவர் பகவான் பிரம்மாவை பணிவுடனும், சிரத்தையுடனும் அணுகி
வரிஷ்டாம் : மேலான, உயர்ந்த அறிவான
பிரம்ம வித்யாம் அதீஹி – பிரம்ம ஞானத்தை உபதேசம் செய்யுங்கள் என்று வேண்டினார்.
உயர்ந்த அறிவு என்று சொல்வதற்கு காரணம் அதனால் அடையப்படும் விஷயமும் மிக உயர்ந்ததாக இருக்கிறது.
सदा எப்பொழுதும்
सद्भिः மேலானவர்களால், சத்புருஷர்களால், சான்றோர்களால்
सेव्यमानाँ – தேடப்படுகின்ற, நாடுகின்ற இந்த அறிவானது
निगूदाम् – கிடைத்தற்கரியது, மிகவும் ரகசியமானது
இந்த வித்யாவின் பலனையும் கூறுகிறார்.
ய்யா – அந்த அறிவினால்
அசிராத் – அப்பொழுதே, அறிவை அடைந்த அந்தக்கணமே
ஸர்வ பாபம் – எல்லா பாவ-புண்ணியங்களும், அக்ஞானமும்
வ்யபோஹ்ய – நீங்கி
பராத்பரம் – மேலானவற்றுக்கெல்லாம் மேலான பிரம்மத்தை, மாயையை காட்டிலும் மேலான
புருஷம் – பரம்பொருளை
யாதி வித்வான் – அடைகின்றான் இந்த ஞானத்தை அடைந்தவன்.

————

ஸ்லோகம்-2
தஸ்மை – அவருக்கு (சிஷ்யனுக்கு)
ஸஹ பிதாமஹன் உவாச – குருவான பிரம்மதேவன் உபதேசம் செய்ய ஆரம்பித்தார்.
பிரம்மத்தை அடைவதற்கான வழியை சொல்ல ஆரம்பித்தார்.
ஸ்ரத்தாபக்தித்யானயோகாதவேஹி – சிரத்தை, பக்தி, தியானம் ஆகியவற்றின் உதவியால் அந்த பிரம்மத்தை தெரிந்து கொள்ள வேண்டும்.
இங்கே இவை மூன்றும் சாஸ்திரத்தின் மேலுள்ள நம்பிக்கையும் அதனால் அதை பிரமானமாக் வைத்துக் கொண்டு
பிரம்ம வித்யாவை குருமுகமாக கேட்டல் என்ற சிரவணம் என்ற சாதனத்தையும்,
பக்தி என்பது மனமானது முழுமையாக இதில் ஈடுபடுதல் இது மனனத்தை குறிக்கிறது. தியானம் என்பது நிதித்யாஸனத்தை குறிக்கிறது.
பிறகு எவைகளெல்லாம் பிரம்மத்தை அடைவதற்கு பயன்படாது, சாதனங்களாக இருக்காது என்று விவரிக்கப்படுகிறது.
ந கர்மணா – கர்மத்தினால் அதை அடைய முடியாது
ந ப்ரஜயா – நமது சந்ததிகள் இருந்தாலும் அடைய முடியாது
ந தனேன – செல்வத்தாலும், வேறெந்த பொருட்களினாலும் அடைய முடியாது
த்யாகேன ஏகே – தியாகத்தினால் மட்டும்தான் ( தியாகம் என்பது வைராக்யத்தை குறிக்கிறது)
அம்ருதத்வமானஷு – பிறப்பு-இறப்பற்ற நிலையான மோட்சத்தை சிலர் அடைந்துள்ளார்கள்.
தியாகம் என்ற சாதனத்துடன் சிரவண, மனன, நிதித்யாஸனத்தையும் தொடர்ந்து கடைப்பிடித்து சிலர் மோட்சத்தை அடைந்துள்ளார்கள்.

——–

ஸ்லோகம்-3
பரேன நாகம் – சொர்க்கத்தைக் காட்டிலும் மேலான
நிஹிதம் குஹாய – மனதில் வெளிப்படுகின்ற
யத3யஹ விஷந்தி – இவ்வாறு தியாகத்துடன் முயற்சி செய்பவர்கள்தான் அடைகிறார்கள்.
எந்த தத்துவமானது ஸ்வயம் பிரகாசமாக அவரவர்களின் மனதில் பிரகாசித்துக் கொண்டிருக்கிறதோ
விப்ராஜதே – அதையேதான் அடைகிறார்கள்.

மோட்சத்தை அடையும் சாதனத்தை படிப்படியாக சொல்லப்படுகிறது. மோட்ச லட்சணத்தையும் கூறுகிறது.

வேதாந்த விக்ஞானம் – வேதாந்தத்திலிருந்து பெறும் அறிவிலிருந்து
அர்த்தஹ – அதன் மையக்கருத்தை, தாத்பர்யத்தை
சுனிஷ்சித: – திடமாக புரிந்து கொள்கிறார்கள்.
சுத்3த4 சத்வா: – தூய்மையான மனதை அடைந்து, ( விருப்பு, வெறுப்பில்லாத மனம்.
இந்த நிலையில்தான் தர்மப்படி வாழும் நிலை தானே உருவாகும். இது விவேகத்தை கொடுக்கும்.
எதை அடைந்தால் நிலையான மனநிறைவை கொடுக்கும் என்ற அறிவு.
இதனால் எது நிலையானது, எது நிலையற்றது என்று பிரித்தறியும் அறிவு உண்டாகும்.)
அடுத்து லட்சியத்தை அடைய முயற்சி செய்யும் நிலைக்கு முமுக்‌ஷுத்வம் என்று பெயர்.
சந்நியாஸ யோகாத் யதய: – இந்த முயற்சியை தொடர்ந்து செய்வதற்கு சந்நியாஸ வாழ்க்கையை மேற்கொள்கிறார்கள்.
சந்நியாஸம் என்பது அநித்தியமானவைகளையெல்லம் விட்டுவிடுதல் என்று பொருள் கொள்ள வேண்டும்.

————

ஸ்லோகம்-4
தே பிரஹ்மலோகேஷு பராந்தகாலே பராம்ருதாத் பரிமுச்யந்தி ஸர்வே–
இவர்கள் இறந்த பிறகு பிரம்ம ஸ்வரூபத்தில் ஐக்கியமாகி விடுவார்கள், ஒன்றாகி விடுவார்கள்.
இவர்கள் உயிரோடிருக்கும்போதே பிரம்ம மாகவே மாறி விடுவார்கள், பூரணமான மனநிறைவை அடைந்தவர்களாவார்கள்.
ஜீவன் முக்தனாகி விடுவார்கள். பிராரப்த கர்மபலன் முடியும்வரை இந்த நிலையில் இருப்பார்கள்.
இவர்கள் அடையும் மரணம் இறுதியானதாக இருக்கும்.

————

ஸ்லோகம்-5
இதில் நிதித்யாஸனம் செய்வதற்கான நிபந்தனைகள் சொல்லப்படுகிறது.
விவிக்த தேஷே – தனிமையான, ஆள் அரவமில்லாத, தூய்மையான இடமாக இருக்க வேண்டும்.
·ஸம்ஸ்காரத்தாலான தூய்மை, இடமும் தூயமையாக இருக்க வேண்டும்.
·அமரும் இடம் சமமாகவும், பயமற்றதாகவும் இருக்க வேண்டும்.
ஆசனத்தில் அமரும் விதம்:
·நாம் அமரும் நிலை நமக்கு சௌகரியமாகவும் இருக்க வேண்டும்.
ஷுசிஹி – தூய்மையான சூழ்நிலை, உடலைத் தூய்மையாக இருக்க வேண்டும்.
ஸம, சிர, திரிவ சரீரம் – தலை, கழுத்து, உடல்பாகம் மூன்றும் ஒரே நேர்கோட்டில் இருக்குமாறு அமர வேண்டும்,
அத்யாஸ்ரம் – சந்நியாஸி – எல்லா ஆசிரமங்களை விட மேலானதாக சந்நியாஸ ஆசிரமம் சொல்லப்படுகிறது.
சந்நியாஸம் என்பது யாருடனும் சம்பந்தமில்லாத நிலையில் இருக்க வேண்டும்.
தியானத்தில் அமரும்போது நான் யாரோடும் சம்பந்தமற்றசன் என்ற நினைப்போடு இருக்க வேண்டும்.
சகலேந்திரியானி நிருத்3ய – எல்லா இந்திரியங்களையும் கட்டுபடுத்திய நிலையில் இருக்க வேண்டும்.
பக்தியா – பக்தி என்ற பாவனையுடன் குருவை மானசீகமாக நமஸ்காரம் செய்ய வேண்டும்.

————–

ஸ்லோகம்-6
நிதித்யாஸனத்தில் என்ன செய்ய வேண்டும் என்பதை இந்த மந்திரம் விளக்குகிறது.
சாஸ்திரம் மூலம் பெற்ற அறிவினால் பயனடைய வேண்டுமென்பதற்காகத்தான் இந்த தியான முறை.
இதை எப்படி செய்ய வேண்டும், எந்த இடத்தில் அமர்ந்து செய்ய வேண்டும்,
அந்த நேரத்தில் மனம் எதைப்பற்றி சிந்தித்துக் கொண்டிருக்க வேண்டும் என்பதையெல்லம் இதில் விவரிக்கப்படுகிறது.

விரஜம் – ரஜோ குணத்திலிருந்து விடுதலையடைய வேண்டும். சத்துவ குணத்திற்கு மனதை கொண்டு செல்ல வேண்டும்.
விசித்திய – கவனத்தை திருப்புதல், மனமானது பிரம்மத்தை அறியும் விஷயத்தில் இருக்க வேண்டும்.
அதைக் குறித்து தியானித்து கொண்டிருக்க வேண்டும், விசாரம் செய்து கொண்டிருக்க வேண்டும்.
பிரஹ்ம லக்‌ஷணங்கள்:
1. விஸத்த4ம் – தூய்மையானது, அசுத்தங்கள் எல்லாம் மனதைத்தான் சார்ந்தது, சரீரத்தை சார்ந்ததல்ல. நான் மனமும் அல்ல, உடலும் அல்ல என்ற உணர்வுடன் இருத்தல்
2. விசோகம் – நான் துயரமற்றவன். துயரம் என்பதை அனுபவிப்பது மனமும், சரீரம்தான் நானல்ல என்ற நிலை.
3. அசிந்தியம் – சிந்தனைக்கு அப்பாற்பட்டவனாக இருக்கின்றேன். நான் ஞான ஸ்வரூபமாகவே இருக்கிறேன். எல்லாமும் என் சிந்தனைக்கு அப்பாற்பட்டவைகள்.
4. அவ்யக்தம் – வெளித்தோற்றத்திற்கு வராதது. நான் இந்திரியங்கள் மூலம் அனுபவிக்கப்படுபவன் அல்ல.
5. அனந்த ரூபம் – நான் எண்ணிக்கையிலடங்காத ரூபங்கலாக இருக்கிறேன்.
6. சிவம் – மங்கலம், பாவங்களை போக்குபவர் சிவன். நான் மங்கலம் ஸ்வரூபமாக இருக்கிறேன்.
7. ப்ரசாந்தம் – நான் முழுமையான அமைதி ஸ்வரூபமானவன்
8. அம்ருதம் – நான் மரணமற்றவன்
9. பிரஹ்மயோனி – இந்த பிரபஞ்சத்திற்கு உபாதான காரணமாக இருக்கின்றேன். நான் ஆதியும், அந்தமும் அற்றவன்
10. ஏகம் – நான் ஒன்றாக இருக்கின்றேன்.
11. விபும் – நான் விதவிதமாகவும் தோன்றிக் கொண்டிருக்கின்றேன்.
12. சிதானந்தம் – ஞான ஸ்வரூபமாக இருக்கின்றேன்.
13. ஆனந்தம் – வரையறுக்கப்படாதவனாக, பூரணமாக இருக்கின்றேன்.
14. அரூபம் – உருவமற்றவனாக இருக்கின்றேன்.
15. அற்புதம் – ஆச்சரியமானவன் – தன்னையே ஆச்சரியமாக பார்த்து ஆனந்தமடைவது

——————

ஸ்லோகம்-7
இதில் சகுண பிரம்மத்தை தியானிப்பது பற்றி விளக்கபடுகிறது.

உமாசகாயம் – உமாதேவியுடன் காட்சியளிப்பவர்
பரமேஸ்வரன் – எல்லா தேவதைகளுக்கும் ஈஸ்வரனாக இருப்பவர்
பிரபும் – தலைவன், கர்மபலதாதா
திரிலோச்சனம் – மூன்று கண்களையுடையவனர்
நீலகண்டம் – நீலவர்ண கழுத்தையுடைவர்
பிரசாந்தம் – அமைதி ஸ்வரூபமாக இருப்பவர்
இப்படிபட்ட சிவபெருமானை தியானம் செய்ய வேண்டும். இது மோகஷத்தின் கடைசி படி வரை நம்மை கொண்டு செல்லும்.
இதுதான் சகுண பிரஹ்ம தியானம். இந்த தியானம் நம்மை நிர்குண பிரம்ம தியானத்திற்கு கொண்டு சென்று பிறகு
அதன் மூலம் மோக்‌ஷத்தை அடையச் செய்யும். எல்லா ஜீவராசிகளும் தோன்றுவதற்கு காரணமாக இருக்கின்ற பிரம்மத்தை அடையலாம்.
சமஸ்த சாக்‌ஷிம் – எல்லாவற்றையும் சாட்சியாக பார்த்துக் கொண்டிருக்கும் பிரம்மத்தை அடையலாம்.
தமஸ – அறியாமை, அக்ஞானம்
பரஸ்தா – கடந்து இருக்கின்ற பிரம்மம்.

—————-

ஸ்லோகம்-8
இதில் சகுண பிரம்மம் எல்லாமாக இருக்கின்றது என்பதை விளக்குகிறது.

ஸஹ பிரம்மா – பிரம்மனாக இருக்கின்றார், சிவபெருமானாகவும், இந்திரனாகவும், விஷ்ணுவாகவும் இருக்கின்றார்.
ஜீவனிடத்தில் இருக்கும் பிராண சக்தியாகவும், காலனாகவும் அக்னியாகவும், சந்திரனாகவும் அனைத்து பிரபஞ்சமாகவும் இருக்கிறார் அதுவே ஈஸ்வரன்.
அக்‌ஷரம் – அழிவற்றவராக, பரம் – மேலான ஆனந்தம்
ஸ்வராட் – அறிவு ஸ்வரூபம்,
ஸ்வயம் ஜோதிஹி – ஒளிர்கின்ற ஸ்வரூபம்.

—————

ஸ்லோகம்-9
தேச, காலம் இவைகளுக்கு அப்பாற்பட்டது பிரம்மம். இதை ஞானத்தால் மட்டும்தான் அடைய முடியும்.
அவரே அனைத்துமாக இருக்கின்றார், மூன்று காலங்களிலும் இருக்கின்ற பிரம்மம்.
முன்பு இருந்தது இப்பொழுது இருப்பது, பிற்காலத்தில் இருக்கப்போவது இந்த மூன்று கால வஸ்துக்களிலும் இருப்பது
( ஸனாதானம் – எப்பொழுதும் ) அப்படிபட்ட பிரம்மத்தை அறிந்து மரணத்தை (சம்சாரத்தை) கடந்துவிடுகின்றான்.
விமுக்தயே – இப்படிபட்ட பிரம்மத்தை
ந பந்தயா – வேறு மார்க்கமானது கிடையாது.
பிரம்மத்தை பற்றிய அறிவே அதை அடைதலுக்கு சமமாகும். முக்திக்கு வேறு வழியே கிடையாது.

———————

ஸ்லோகம்-10
ஆத்மஞானம், ஞானப்பலன் என்ற இரு கருத்துக்களை விளக்கப்படுகிறது.
தியானத்தில் அமர்ந்து இதில் சொல்லப்பட்ட கருத்துக்களை சிந்திக்க வேண்டும்.
பானக்குள் உள்ள ஆகாசம்தான் பானைக்கு வெளியிலும் இருக்கிறது. இந்த பானையே ஆகாசத்தில்தான் இருக்கிறது.
ஜீவன் தன்னை எல்லா ஜீவராசிகளின் உடலுக்குள்ளும் இருப்பதாக பார்க்க வேண்டும்.
அதே போன்று எல்லா ஜீவராசிகளும் தன்னிடத்தில் இருப்பதாக பார்க்க வேண்டும்.
இப்படி யார் பார்த்து கொண்டிருக்கின்றார்களோ அவன் தான் மேலான அந்த பிரம்மத்தை அடைகின்றான்.
இதைத்தவிர வேறெந்த அறிவினாலும் பிரம்மத்தை அடையமுடியாது. இந்த மந்திரத்தோடு நிதித்யாஸனம் முடிவடைகிறது.

————-

ஸ்லோகம்-11
இதிலிருந்து 14வது ஸ்லோகம் வரை சிரவணம் பற்றி கூறப்படுகிறது.

இரு மரக்கட்டைகளைக் கொண்டு நெருப்பு உண்டாக்குவதில் நமது மனமானது அசையாத மரக்கட்டை
அதை உரசுகின்ற மேலே இருக்கின்ற மரக்கட்டை உபநிஷத்- வேதாந்த வாக்கியங்கள்,
உரசுவது என்பது விசாரம் செய்வதற்கு ஒப்பிடப்படுகிறது. நெருப்பானது நாம் அடையும் ஆத்ம ஞானம்.
நெருப்பின் குணமானது எதையும் எரிக்கும் தன்மை அதைப்போன்று ஆத்மஞானமானது நமது பாவ-புண்ணியங்களை,
அக்ஞானத்தை, சம்சாரத்தை எரித்து விடுகிறது.
ஆத்மானம் – மனதை,
அரணிம் க்ருத்வா – கீழேயுள்ள கட்டை
ப்ரணவம் ச உத்தராணி – மேலேயுள்ள கட்டை, ஓம்காரம், இதை உபநிஷத் வாக்கியங்களாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஞான நிர்மதன அப்4யாஸ – இரண்டு கட்டைகளையும்
தொடர்ந்து உரசுவதால் – விசாரம் செய்தல்
பாஷம் தஹ்திஹி பண்டிதா – சம்சாரத்தை எரிக்கின்றான்.
பண்டிதன் – ஆத்மஞானத்தை அடைந்தவன்.

————

ஸ்லோகம்-12
எப்படி விசாரம் செய்ய வேண்டும் என்பதை இந்த மந்திரம் விளக்குகிறது.

ஸஹ ஏவ – அந்த பிரம்ம ம்தான் (ஈஸ்வரன் தான்)
மாயா பரிமோகதாத்மா – மாயையினால் வசப்பட்ட மனதினால் மோகத்தினால் விழிப்பு நிலையை அனுபவிக்கின்றோம்.
சரீரம் – உடல், ஆஸ்தாய – அமர்ந்து-அபிமானம் கொண்டு
சர்வம் கரோதி – எல்லா விவகாரங்களையும் செய்கின்றோம்
மாயைக்கு இரண்டு சக்தி இருக்கின்றது. 1. ஆவரணம் (மறைத்தல்) 2. விக்‌ஷேபம் ( பொய் தோற்றம்).
விசித்ர போகைஹி – விதவிதமான போகத்தை அனுபவிக்கின்றோம்.
அன்னபாநாதி – குடிப்பதற்கு பானங்கள்
ஸஹ ஏவ ஜாக்ரத் – அந்த ஜீவன் விழித்துக் கொண்டு
பரிதிருப்திம் ஏதி – வித விதமான பொருட்களின் மூலமாக திருப்தியையும், அதிருப்தியையும் அனுபவிக்கின்றான்.

—————-

ஸ்லோகம்-13
ஸ்வமாயயா – மாய சக்தியினால்
கல்பிதா விஸ்வலோகே – கற்பணை செய்யப்பட்டு உருவான ஜீவலோகம் அதில் சுக-துக்கங்களை கனவு நிலையில் அனுபவிக்கின்றான்.
சுஷூப்தி காலே – ஆழ்நிலை உறக்கத்திலிருக்கும் வேளையில் மனமானது காரண சரீரத்தில் ஒடுங்கி விடுகின்றது
சகலே விலீனே – எல்லா அனுபவங்களும் வேற்றுமைகளும் ஒடுங்கி விடும்போது
தமோ அபிபூதஹ – அக்ஞானத்தால் மறக்கப்பட்டவனாக
சுகரூபமேதி – சுக ரூபமாக இருக்கிறான், ஆனந்தத்துடன் இருக்கின்றான்.

———————

ஸ்லோகம்-14
மூன்று அவஸ்தைகளையும் ஆராய்வதால் அடையும் பலன் இதில் விவரிக்கப்படுகிறது.
மஹா வாக்கிய மந்திரம். நாம் ஒரு பொருளை அனுபவிக்கிறோம் என்றால், நாம் அந்த பொருளிலிருந்து வேற்பட்டிருக்கிறோம் என்பது நியதி.
இதே போல மூன்று நிலைகளிலும் நாம் அனுபவிக்கும் விஷயங்களில் இருந்து நாம் வேறுபட்டவர்கள்.

நான் என்ற ஒருவன் மூன்று நிலைகளிலும் மாறாமல் இருக்கின்றேன்.
(பிரத்யபிக்ஞா) இந்த மூன்று நிலை அனுபவங்களும் நமக்கு நன்றாக நினைவில் இருக்கிறது.
எனவே மாறாமல் ஸ்வரூபமாக நானிருக்கின்றேன். இந்த மூன்று நிலைகளும் மாறிக்கொண்டேயிருக்கின்றது.
எது மாறாமல் இருக்குமோ அது நித்யம்; எவையெல்லாம் வந்து போகின்றதோ அவைகள் அநித்யம், நிலையற்றவைகல், அழியக்கூடியது.
இதிலிருந்து நான் என்றும் இருக்கின்றவன் ஸத் ஸ்வரூபமானவன், இந்த அனுபவங்களையெல்லாம் அனுபவிப்பதால் அறிவு ஸ்வரூப்மானவன்,
அனுபவிக்கும் பொருட்கள் எல்லாம் ஜடம். இந்த மூன்று அவஸ்தைகளும் உனக்குள் இருக்கின்றது,
அனுபவங்கள் எல்லாம் வந்து போவது என்று உபநிஷத் கூறுகின்றது.

விசாரம்:
இந்த உலகம் தோன்றுவதற்கு காரணம் ஈஸ்வரன். அவர் இரண்டு ஸ்வரூபமானவர். இரண்டு தத்துவங்களை உடையவர்.
அவைகள மாயா, பிரம்ம (சத்யம், நித்யம், ஞானம்) எந்த ஜீவன் மூன்று அவஸ்தைகளையும் அனுபவிக்கின்றானோ
அவனிடத்திலேதான் மூன்று அவஸ்தைகளும் ஒடுங்குகின்றது.
ஜீவனின் உண்மையான ஸ்வரூபமும் இந்த பிரபஞ்சத்திற்கு ஆதாரமாக இருக்கின்ற பிரம்ம ஸ்வரூபமும் ஒன்றேதான்.

————

ஸ்லோகம்-15
யே தஸ்மாத் – இதனிடமிருந்து – இந்த ஜீவனிடமிருந்து
உடல் மீது அபிமானம் வைக்கும் போதுதான் ஜீவனாக இருக்கின்றான்.
என்னுடைய உண்மையான ஸ்வரூபம் ஆத்மா என்று நிச்சயிக்கும் போது என்னிடமிருந்துதான் இந்த பிரபஞ்சம் தோன்றியது,
இதனால் ஜீவ-ஈஸ்வர ஐக்கியத்தை புரிந்து கொள்ளலாம்.
ஜாயதே – தோன்றியது
கம் – ஆகாசம்; வாயு, ஜோதி (அக்னி), ஆப(நீர்), ப்ருத்வி (நிலம்)
விஸ்வஸ்ய தாரிணி – அனைத்தையும் தாங்கிக் கொண்டிருக்கின்ற நிலம்.
இந்த சூட்சும பூதங்கள்தான் முதலி தோன்றியது.
பிராணஹ, மனஹ, இந்திரியங்கள் à சூட்சும சரீரங்கள் தோன்றின.
இந்த சூட்சும பூதங்களிலிருந்து ஸ்தூல பூதங்களும், சூட்சும சரீரத்திலிருந்து ஸ்தூல சரீரம் தோன்றியது.
அ. பரிணாமி உபாதான காரணம் – தானே உருமாறி, மாற்றமடைந்து வேறொன்று தோன்றுவதற்கு காரணமாக இருப்பது.
உ-ம்: பால் மாற்றமடைந்து தயிராவது
ஆ. விவர்த்த உபாதான காரணம் – ஒன்று எந்தவித மாற்றமும் அடையாமல் வேறொன்று தோன்றுவதற்கு காரணமாக இருப்பது.

————

ஸ்லோகம்-16 – மஹா வாக்கியம்
யத் பரம்பிரம்ம – எது பூரண ஸ்வரூபமாக இருக்கின்றதோ
ஸர்வாத்மா – எல்லா ஜீவரசிகளுக்குள்ளும் ஆத்மாவாக இருக்கின்றது. அதுவே எல்லாமுமாக இருக்கின்றது.
விஸ்வஸ்ய ஆயதனம் – ஸத் ஸ்வரூபமாகவும், இந்த உலகத்திற்கு ஆதாரமாக இருக்கின்றது
மகத் – மிகப்பெரியது, இதற்கு மேல் வேறொன்றுமில்லை.
சூட்சுமாதி சூட்சுமம்- சூட்சுமமானதைக்காட்டிலும் சூட்சுமமாக இருக்கின்றது
ஆத்மஸ்வருபத் நித்யம் – என் ஸ்வரூபமாக நித்தியமாக இருக்கின்றது.
தத்-த்வம்-ஏவ – இப்படிப்பட்ட பரம்பொருள் நீயாக இருக்கிறாய்
த்வம்-தத்-ஏவ – நீயே அந்த பரம்பொருளாக இருக்கிறாய்.
நிஷ்கலம் – பிளவுபடாதது, பூரணமானது, அவயவங்களற்றது.

—————–

ஸ்லோகம்-17 – மஹா வாக்கியம்
விழிப்பு, கனவு, சுஷூப்தி என்கின்ற இந்த மூன்று நிலைகளிலும் எந்த தத்துவம் பிரபஞ்சத்தை பிரகாசிக்கின்றதோ,
அந்தந்த நிலைகளில் பிரபஞ்சத்தை அனுபவிக்கும் தத்துவமே பிரம்மம் என்று புரிந்து கொள்ள வேண்டும்.
அதுவே நான் என்று அறிந்து கொள்வதால் எல்லாவித பந்தங்களிலிருந்து முழுமையாக விடுதலையடைவோம் (ப்ரமுச்யதே).

பிரம்மனிடமிருந்து வேறுபடாத இந்த ஜீவனிடமிருந்துதான் எல்லாவிதமான அவஸ்தைகளும் தோன்றுகிறது.
தத்ஸ்வ ஜாதம் சகலம் விசித்ரம் – நாமே கனவுலகை சிருஷ்டி செய்துவிட்டு நாமே சுக-துக்கங்களை அனுபவிக்கின்றோம்.
இதுதான் மாயையின் விளையாட்டு. இதேமாதிரிதான் விழிப்பு நிலையிலும் நாம் அனுபவிக்கும் இந்த பிரபஞ்சத்தையும்
அதிலுள்ள ஜீவராசிகளையும் நம்மிடமிருந்தேதான் தோன்றியுள்ளன இருந்தாலும் அறியாமையினால் சுக-துக்கங்களை அனுபவிக்கின்றோம்.
ஆத்மஞானத்தினால்தான் நம்மால் இதுவும் மாயை என்று அறிய முடியும்.

கனவுலக சிருஷ்டிகள் விழித்த தும் எப்படி என்னிடமே லயமடைகின்றதோ
அதேமாதிரி விழிப்பு நிலை சிருஷ்டிகளும் என்னிடமே அழிவிற்குப்பின் லயமடைகிறது.
ஆதாரம் – கயிறானது பாம்பின் மாயத்தோற்றதிற்கு ஆதாரமாக இருப்பது போல,
பாம்பல்ல என்ற ஞானம் வந்தவுடன் அது மறைந்து ஆதாரமான கயிறு தோன்றுகிறது.
ஆனந்தம் – பூரணமான, வரையறுக்குட்பட்டதல்ல (காலத்தால், தேசத்தால்)
அகண்டம் – பிளவுபடாதது, அறிவு ஸ்வரூபம் இந்த ஆத்மா.

எது மூன்று அவஸ்தைகளுக்கும் ஆதாரமாகவும், வரையறுக்கப்படாததாகவும், பிளவுபடாததாகவும்,
மூன்று அவஸ்தகளும் லயமடைவதற்கு இடமாகவும் இருப்பது ஆத்மா.
இந்த மூன்று அவஸ்தகளுக்கும் ஆதாரமாக இருக்கும் நிலை துரியம்.

—————

ஸ்லோகம்-18 – நிதித்யாஸனம்
இந்த மந்திரத்தில் உள்ளதை பற்றி தியானித்து அறிவை அடைந்து அதில் நிலை பெற்றிருக்க வேண்டும்.
த்ரிஷு தா4ம – மூன்று அவஸ்தகளிலும்
யத்3 – எந்த, போ4க்3யம் – அனுபவிக்கப்படும் பொருட்கள் – உலகம்
போ3க்3தா – அனுபவிப்பவன்;
போ4க்3 கரணம் – அனுபவிக்க உதவும் கருவியாக
யத் பவேத் – எது இருக்கின்றதோ
தேப்4ய – அவைகளைக்காட்டிலும்
விலக்‌ஷண – வேறுபட்டவன் நான்
ஸாக்‌ஷி – இவைகளைப் பார்த்து கொண்டிருக்கும் சாட்சியாக இருக்கின்றேன்.
சின்மாத்ர – சைதன்ய ஸ்வரூபமாக மட்டும் நான் இருக்கின்றேன்.
ஸதா3ஷிவஹ – எப்பொழுதும் ஆனந்தஸ்வரூபமானவன்.

————-

ஸ்லோகம்-19
மயி ஏவ – என்னிடத்தில்ருந்துதான்
ஸகலம் ஜாதம் – அனைத்தும் தோன்றியது
மயி ஸர்வம் ப்ரதிஷ்டிதம் – என்னிடத்தில்தான் அனைத்தும் சார்ந்திருக்கின்றது
மயி ஸர்வம் லயம் யாதி – அனைத்தும் என்னிடத்திலேதான் ஒடுங்குகிறது
தத்3 ப்ரஹ்ம அத்வயம் அஸ்மி அஹம் – இரண்டற்ற பூரணமாக நான் இருக்கின்றேன்.

——————-

ஸ்லோகம்-20
அணோஹ அணியான் – அணுவைக் காட்டிலும் அணுவாக இருக்கின்றேன். சிறியதைக் காட்டிலும் சிறியதாக இருக்கின்றேன்.
தத்3வத் மஹான் அஹம் – பெரியதைக்காட்டிலும் பெரியதாக இருக்கின்றேன்.
விசித்ரம் விஸ்வம் அஹம் – இந்த விதவிதமான உலகமாக இருக்கின்றேன்.
புராதனோஹம் – நான் என்றும் இருப்பவன்
புருஷ: அஹம் – பூரணமாக இருப்பவன் நான்
ஈஷஹ அஹம் – நான் எல்லாவற்றையும் ஆள்பவனாக இருக்கின்றேன்
ஹிரண்மய அஹம் – ஞான ஸ்வரூபமாக, சைதன்ய ஸ்வரூபமாக இருக்கின்றேன்
ஷிவரூபம் அஸ்மி – ஆனந்த ஸ்வரூபமாக இருக்கின்றேன்.

—————-

ஸ்லோகம்-21
அசிந்தயம் சக்தி – அளவுக்கதிகமான சக்தியுடையவன்
அபாணிபாதம் அஸம் – எனக்கு கர்மேந்திரியங்கள் கிடையாது
பஷ்யாமி – நான் பார்க்கின்றேன்
அசக்‌ஷுஹு – கண்கள் இல்லாமல் இருந்தாலும்
அகர்ணஹ ஸ்ருனோதி – காது கிடையாது ஆனால் நன்றாக கேட்கின்றேன்.
இவைகள் இந்திரியங்களும் என்னைச் சார்ந்திருக்கின்றது என்பதை உணர்த்துகிறது. நான் தொடர்ந்து இருக்கின்றேன்.
இந்திரியங்கள் வந்து செல்வதால் அவைகள் மித்யா.
விவிக்தரூபஹ – விதவிதமான ரூபத்தில் இருந்து கொண்டு
விஜானாமி – நான் அனைத்தையும் அறிகின்றேன்.
மமவேத்தா – என்னை அற்கின்றவன்
ந ச அஸ்தி – யாரும் இல்லை
ஸதா சித் அஹம் – எப்பொழுதும் ஞான ஸ்வரூபமாகவே இருக்கின்றேன்.

————–

ஸ்லோகம்-22
அனைகைஹி வேதைஹி – எல்லா வேதங்களின் மூலமாக
அஹம் ஏவ வித்யஹ – நான்தான் அறியப்படுபவனாக இருக்கிறேன்.
வேதந்தக்ருத் அஹமேவ – நானேதான் வேதாந்தத்தை உபதேசித்தவன்
வேதவித் அஹம் ஏவ – வேதத்தை அறிபவனும் நானே
ந புண்ய பாபே மம நாஸ்தி – புண்ணியமும் பாவமும் எனக்கு கிடையாது.
மம நாஷ நாஸ்தி – எனக்கு அழிவு என்பதும் கிடையாது.
ந ஜென்ம நாஸ்தி – பிறப்பே கிடையாது
ந தேஹ, புத்தி, இந்திரிய அஸ்தி – ஸ்தூல உடல், இந்திரியங்கள், புத்தி இவைகளும் கிடையாது
ந பூமி அஸ்தி – இந்த நிலமும் நானல்ல
ந ஆப அஸ்தி – இந்த நீரும் நானல்ல
ந ச வன்னிஹி – நெருப்பும் நானல்ல
ந ச அனிலஹ – வாயுவும் நானல்ல
ந ச அம்பரம் – ஆகாசமும் நானல்ல.

————

ஸ்லோகம்-23
ஏவம் – இவ்விதம் (குரு உபதேசித்த விதம் , சிஷ்யன் புரிந்து கொண்டபடி)
ப்ரமாத்மாரூபம் – பரமாத்மாவினுடைய தன்மையை இவ்விதம் புரிந்து கொண்டு, பரமாத்மாவையே அடைகின்றான்.
குஹாஷயம் – புத்தியில் சாட்சியாக இருந்து கொண்டு
நிஷ்கலம் – பிளவுபடாத
அத்விதீயம் – இரண்டற்ற
சமஸ்த சாக்‌ஷி – அனைத்திற்கும் சாட்சியாக இருக்கின்ற
ஸத்-அஸத் விஹீனம் – காரண-காரியத்திற்கு அப்பாற்பட்டது. மாயைக்கும் இந்த பிரபஞ்சத்திற்கும் வேறுபட்டவன்.
ப்ரயாதி சுத்தம் ப்ரமாத்மரூபம் – தூய்மையான பரமாத்ம ஸ்வரூபத்தை அடைகின்றான்.

—————

ஸ்லோகம்-24
யஹ – எவனொருவன்
ஷதருத்ரீயம் அதீயதே – ஸ்ரீருத்ரத்தை ஒதுகின்றவன்
ஸஹ அக்னி பூதஹ – அவன் நெருப்பினால் தூய்மையாக்கபட்டவனாகின்றான்.
சுராபானாதி பூதா பவதி – மது அருந்தியதால் அடைந்த பாவத்திலிருந்து விடுதலை அடைகின்றான்.
ப்ரஹ்மஹத்யாத் – பிராமணனை கொன்ற பாவத்திலிருந்தும் விடுதலையடைகின்றான்
க்ருதயாத் அக்ருத்யாத பூதோ பவதி – செய்யக்கூடாததை செய்து, செய்ய வேண்டியதை செய்யாமல் வரும் பாவத்திலிருந்தும் விடுதலை.
தஸ்மாத் அவிமுக்தாம் ஆஸ்ரிதஹ – இவ்வாறு ஸ்ரீருத்ரத்தை ஓதியதால் சிவபெருமானை சார்ந்தவனாகின்றான்.
அத்யாஸ்ரம் – சந்நியாஸி, ஸர்வதா ஜபேத் – எப்பொழுதும் ஜபம் செய்ய வேண்டும், ஒருமுறையாவது சொல்ல வேண்டும்.,

————–

ஸ்லோகம்-25
அனேன – இவ்விதம் தன்னை தூய்மைபடுத்தி கொண்ட காரணத்தால்
ஞானம் ஆப்னோதி – ஞானத்தை அடைகின்றான்
ஸம்சார அர்ணவ நாஷனம் – சம்சாரமெனும் கடலை கடந்துவிடுகின்றான்
தஸ்மாத் – ஆகவே
ஏவம் – இவ்விதம், இந்த உபநிஷத்தில் சொல்லியதை
ஏனம் – இந்த ஆத்ம தத்துவத்தை அறிந்து
கைவல்யம் பலம் அஸ்னுத – மோட்சம் என்ற பலனை அடைகின்றான்.
கைவல்யம் – அதுவாக மட்டுமே இருக்கின்ற நிலை.

———————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ ஈஸாவாஸ்யம் உபநிஷத்–

March 17, 2021

ஸ்ரீ ஈஸாவாஸ்யம் உபநிஷத்

முகவுரை
மீமாம்ஸ என்கின்ற பூஜ்ய விசாரமானது வணங்கத்தக்கதும், போற்றுதலுக்கு உரியதான மேன்மையான விசாரம்.
வேதத்தை ஜெய்ம்னி மகரிஷியும், .வியாஸ பகவானும் விசாரம் செய்துள்ளார்கள்.
ஜெய்மினி வேதத்தின் முதல் பாகத்தை எடுத்துக் கொண்டு விசாரம் செய்துள்ளார்.
அதற்கு பூர்வமீமாம்ஸம் என்று பெயர். அதை பின்பற்றுபவர்கள் பூர்வமீமாம்ஸகர்கள் என்று கூறுவர்.
வியாஸ பகவான் வேதத்தின் இறுதிபகுதியான வேதாந்தத்தை விசாரம் செய்துள்ளார். வேதாந்தம் என்பதை உபநிஷத் என்று அழைப்பர்.
இதற்கு உத்தர மீமாம்ஸ என்ற பெயரும் பிரம்ம சூத்திரம் என்ற பெயரும் உண்டு.
உபநிஷத்திலுள்ள வாக்கியங்களுக்கு அர்த்தத்தை நிர்ணயம் செய்துள்ளார்.
உபநிஷத் கருத்துக்களுக்கு முரண்பாடாக உள்ள மற்ற மதங்களின் கருத்தை நிராகாரம் செய்துள்ளார்.

நான் மூன்று காரணங்களினால் இந்த விசாரம் செய்கின்றேன் என்று கூறியுள்ளார். அவைகள்.
1.பரமாத்மாவை பற்றிய ஸ்வரூபத்தை உபநிஷத் விளக்குவதாலும்
2.இந்த அறிவினால் மோட்சம் என்று பலன் கிடைப்பதாலும்
3. இந்த அறிவையும், மோட்ச பலனையும் நாடும் சாதகர்களுக்காகவும்
ஆகியவைகளாகும்.

இவைகளெல்லாம் ஏற்கனவே பூர்வ மீமாம்ஸத்திலேயே இருக்கின்றதே என்று கேட்கும் போது
1.பூர்வமீமாம்ஸையில் விதவிதமான கர்மங்கள், யாகங்கள் கூறப்படுகின்றது.
ஏதாவது ஒரு தேவதையைக் குறித்தும், பலனுக்காகவும் யாகங்கள் செய்வதால் ஈஸ்வரனைப் பற்றி ஏற்கனவே பேசப்பட்டுவிட்டது.
2.தியாகம், உபாஸனை,யாகங்கள் மூலமாக சொர்க்கத்திற்கும்,பிரம்ம லோகத்திற்கும் செல்வதே மோட்சத்தை அடைவதாகும்
3.இவைகளை நாடும் சாதகர்கள் எங்களிடத்தில்தான் இருக்கிறார்கள்

இதற்கு வியாஸ பகவான் அளிக்கும் பதில்:
1.ஈஸ்வரன் என்ற சொல்லில் இரண்டு தத்துவங்கள் இருக்கின்றது.
அவரோடு மாயை சேர்ந்திருக்கின்றது. இந்த ஈஸ்வர தத்துவம் விசாரம் செய்யப்படுவதில்லை.
ஈஸ்வர நிர்குண ஸ்வரூபம், ஜீவனின் ஸ்வரூபம் உபநிஷத்தில்தான் பேசப்பட்டிருக்கிறது. எனவே இதை விசாரம் செய்கின்றேன்.
2.சொர்க்கம், பிரம்மலோகம் இறுதி லட்சியமல்ல, இவைகளுக்கு அப்பால் அடைய வேண்டியது ஒன்று இருக்கிறது.
பிரம்மத்தை அடைதலே மோட்சமாகும். பரம்பொருள் ஸ்வரூபமே நான் என்ற அறிவை அடைவதே பிரம்மத்தை அடைவதாகும்.
அதனால் சம்சாரம் முழுவதுமாக நீங்கிவிடும். ஆகவே உபநிஷத்துக்கு விளக்கம் எழுத வேண்டியதாக இருக்கிறது.
ஜீவனும், ஈஸ்வரனும் ஒன்றுதான் என்ற அறிவை அடைந்தவுடன் மனநிறைவை அடைகிறான். துயரங்களிலிருந்து விடுபடுகிறான்.
3.இந்த பயனை அடைவதில் ஆசையுள்ளவர்களும் இருக்கிறார்கள்.
சொர்க்க லோக இன்பங்களில் வைராக்கியம் அடைந்தவர்களுக்காக இந்த விசாரம் செய்யப்படுகிறது.
வைராக்கியமானது இந்த உலகத்தை விசாரம் செய்வதினால் வருவது.

பூர்வமீமாம்ஸாவில் கூறப்பட்டுள்ள விதவிதமான உபாஸனைகள் யாகங்கள் விதவிதமான பலன்களில்
வைராக்கியம் உடையவர்கள். உத்தரமீமாம்ஸாவிற்கு வருவான்.
மோட்சத்தை அடைய உதவும் சாதனம் பிரம்ம ஞானம் அதை அடைய விரும்புகின்றவனே அதிகாரியாக இருக்கின்றான்.
சாதன-சதுஷ்டய சம்பத்தி இந்த ஞானத்தை அடைவதற்கான தகுதிகளாகும்.
ஞானத்தை அடைய விரும்புபவனை முமூக்ஷு என்று அழைப்பர்.

இந்த உபநிஷத் ஶுக்ல யஜுர் வேதத்தில் அமைந்துள்ளது. உபநிஷத் என்ற சொல்லுக்கு பிரம்ம வித்யா என்ற அர்த்தமாகின்றது.
உப – மிக அருகில் இருக்கின்றது – அபே4தம் – வேறில்லாதது
நி – நிச்சயமானது, உறுதியான அறிவு
ஷத் – சம்சாரத்தை நாசம் செய்தல்
உபநிஷத் – ஆத்மாவும், பிரம்மனும் ஒன்றுதான் என்ற உறுதியான அறிவு. இந்த அறிவு சம்சாரத்தை நாசம் செய்கின்றது..
ஶாந்தி – நீங்குதல், நமக்கு வரும் தடைகளிலிருந்து நீங்கி இருத்தல்

சாந்தி பாடம்
ஓம் பூர்ணமத3 பூர்ணமிதம் பூர்ணாத் பூர்ணமுத3ச்யதே |
பூர்ணஸ்ய பூர்ணமாதாய பூர்ணமேவாவஶிஷ்யதே ||
ஓம் ஶாந்தி! ஶாந்தி!! ஶாந்தி!!!

பூர்ணம் அத3:: – ஈஸ்வரன் வரையறுக்கப்படாத பூரண ஸ்வரூபமாக இருக்கிறார்
பூர்ணம் இதம் – இந்த ஜீவன் பூரண ஸ்வரூபமாக இருக்கிறான்
பூர்ணாத் – பூரணமான ஈஸ்வரனிடமிருந்து
பூர்ணமுதச்யதே – பூரணமான ஜீவன் தோன்றுகிறான்
பூர்ணஸ்ய – பூரணமான ஜீவனுடைய
பூர்ணமாதாய – பூரண ஸ்வரூபத்தை எடுத்துவிட்டால்
பூரணமேவ – பூரண ஸ்வரூபம் மட்டும்
அவஶிஷ்யதே – எஞ்சியிருக்கின்றது

விசாரம்
பூரணம் என்றால் வரையறுக்கப்படாதது. கால,தேச,வஸ்து, குணம் இவைகளால் வரையறுக்கப்படாதது.
பூரணம் என்ற சொல் பிரம்மனையும் குறிக்கும். எனவே பிரம்மன் மட்டும்தான் இருக்கிறது என்று குறிப்பிடப்படுகின்றது.
மற்றவைகள் எல்லாம் மித்யா, அபூரணம் என்று புரிந்து கொள்ள வேண்டும்.
நமக்கு ஈஸ்வரன், ஜீவன், ஜகத் என்கின்ற மூன்று தத்துவங்கள் தோன்றுகிறது.
இவைகளின் உண்மையான ஸ்வரூபம் சாந்தி பாடத்தில் கூறப்பட்டுள்ளது.

பூரணமான பிரம்மத்திற்கு பொய்யான “காரணம்” என்ற தன்மையை தற்காலிகமாக கொடுக்கிறது.
காரண பிரம்மன் என்று அழைக்கப்படுகிறது. இதையே ஈஸ்வரன் என்றும் கூறப்படுகிறது.
பிரம்மன் + காரணம் = ஈஸ்வரன். இதிலிருந்து பூரணத்திலிருந்து வந்த ஈஸ்வரன் பூரணமானவர்.
பூரணத்திற்கு காரியம் என்ற தன்மையும் கொடுக்கப்படுகிறது. எனவே பூரணம் + காரியம் = ஜீவன் என்ற சமன்பாடு கிடைக்கின்றது.
காரணத்திலிருந்து வரும் காரியத்திற்கு காரணத்தின் தன்மை நிச்சயமாக இருப்பதைப்போல,
பூரணமான ஈஸ்வரனிடமிருந்து வந்த காரியமான ஜீவன் பூரணமானவனே என்று அறிந்து கொள்ளலாம்.
கடலிலிருந்து அலைகள் தோன்றின என்ற வாக்கியத்தில் அலைகள் வெறும் நாம-ரூபம்தான்.
இரண்டிலும் பொதுவக இருப்பது நீர்தான். நாம-ரூபத்திற்கு வேறொரு பெயர் உபாதி.
அலைகளில் உள்ள நீரை நீக்கிவிட்டால் அலைகள் இருக்காது.
நாம-ரூபத்துடன் கூடிய ஜீவனிடத்தில் உள்ள பூரணத்தை எடுத்து விட்டால் பூரணம் மட்டும் இருக்கும். நாம-ரூபம் இருக்காது.
நாம-ரூபம் வெறும் தோற்றம் பொய் என்று சொன்னால் காரணம் பொய்யாகிவிடும்.
எனவே காரியமும், காரணமும் நீங்கி விட்டதால் எஞ்சியிருப்பது பிரம்மன், பூரணம் மட்டும்தான் என்பது தெளிவாக தெரிகின்றது.

—————

ஈஶா வாஸ்யம் இத3ம் ஸர்வம் யத்கிஞ்ச ஜக3த்யாக் ஜக3த் |
தேன த்யக்தேன பு4ஞ்ஜீதா2 மா க்3ருத4: கஸ்ய ஸ்வித்3த4னம் ||

இத3ம் ஸர்வம் – நம்முடைய அனுபவத்திற்கு வருகின்ற அனைத்தும்
ஈஶா – ஈஸ்வரனால், பரமாத்மாவினால்
வாஸ்யம் – வியாபிக்கப்பட்டுள்ளது
யத்கிஞ்ச ஜகத்யாம் ஜகத் – இந்த பிரபஞ்சத்தில் உலகம் போன்ற எவைகள் உண்டோ அவைகள் அனைத்தும்
ஈஶா – ஈஸ்வரன் என்கின்ற அறிவினால்
வாஶ்யம் – மறைக்கப்பட வேண்டும்
தேன த்யக்தேன – தியாகத்தினால் உன்னை
புஞ்ஜீதா – காப்பாற்றிக் கொள்
கஸ்யவித் – யாருடைய
த4னம் – பொருட்களையும், செல்வத்தையும்
மா க்3ருத4: – அபகரிக்காதே, ஆசைக் கொள்ளாதே

களிமண்ணால் பானைகள் வியாபிக்கப்பட்டிருக்கிறது.
இந்த வாக்கியத்தில் களிமண் பானைகளுக்கு உபாதான காரணமாக இருப்பதைக் காணலாம்.
ஸ்ருஷ்டி, ஸ்திதி, லயம் இவைகளுக்கு காரணமாக இருப்பது உபாதான காரணம் என்று கூறுவர்.
நிமித்த காரணம் ஸ்ருஷ்டிக்கு மாத்திரம் காரணமாக இருப்பது. குயவன் பானை உற்பத்தி செய்வதற்கு நிமித்த காரணமாக இருக்கிறன்.
ஈஸ்வரனால் இந்த உலகம் வியாபிக்கப்பட்டிருக்கிறது என்று சொல்லும்போது அவர் ஜகத்துக்கு உபாதான காரணம் என்று அறிந்து கொள்ளலாம்.

களிமண் பானையை வியாபித்திருக்கிறது என்பது களிமண்ணே வெறும் நாம-ரூபமாக இருக்கும் போது அதற்கு பானை என்று கூறுகிறோம்.
உண்மையில் பானை என்ற ஒன்றுமில்லை. அதேபோல இந்த ஜகத்தை ஈஸ்வரன் வியாபித்திருக்கிறார் என்றால்
அவரேதான் நாம-ரூபங்களாக காட்சியளிக்கிறார் என்று புரிந்து கொள்ளலாம்.
பூரண ஸ்வரூபமான பரமாத்மா நாம-ரூபங்களாக தோன்றும்போது அவரே பரமேஸ்வரனாக உலகமாக காட்சியளிக்கின்றான்.

இந்த பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து படைப்புக்களையும் ஈஸ்வரன் என்ற அறிவைக் கொண்டு மறைத்துவிட வேண்டும் என்று சங்கரர் வலியுறுத்துகிறார்.
பார்த்து அனுபவித்துக் கொண்டிருக்கும் ஜகத் வெறும் நாம-ரூபங்கள்தான் என்ற அறிவுடன் பார்க்கும் போது ஜகத் மறைந்து பரமேஸ்வரன் தெரிவார்.
நாம-ரூபத்தில் திருஷ்டியை வைத்தால் உபாதானம் தெரியாது. அதை மறைத்து விட்டால் உபாதானத்தை உணர முடியும்.
கண் வழியே பார்க்கின்ற அனைத்துமே ஈஸ்வரன் ஸ்ருஷ்டி, மனதால் பார்ப்பவைகள் அனைத்தும் ஜீவன் ஸ்ருஷ்டி.
நாம் மனதிலுள்ள ராக-துவேஷங்களினால் நாம் ஒரு உலகத்தையே படைத்து அதைத்தான் அனுபவித்துக் கொண்டிருக்கின்றோம்.

மனிதனிடம் இருக்கும் ஆசைகளை மூன்று பிரிவுகளாக பிரிக்கலாம்.
அவைகள் மகன், சொத்து, உலகம் அதாவது தன்னுடைய மனைவி, மக்கள், உறவினர்கள், நண்பர்கள்
இவைகளை துறப்பதன் மூலம் உன்னைக் காப்பாற்றிக் கொள். தியாகம் செய்யப்பட்ட பொருட்களிலிருந்து இந்த உலகத்தை
மித்யா என்று புரிந்து கொள்வதுதான் இதை தியாகம் செய்தல் இங்கு குறிப்பிடப்படுகிறது.
நம்மிடம் இருக்கும் செல்வம், பொருட்கள் மீது ஆசைக் கொள்ளாதே. மற்றவர்கள் பொருட்கள் மீது ஏன் ஆசைப்படக்கூடாது
என்ற கேள்வி வரும்போது இவ்வாறு எண்ணிப்பார்த்து கொள்ள வேண்டும். அவைகள் எல்லாமும் ஈஸ்வரனுடையதாக இருக்கும் போது
நானே ஈஸ்வரன் என்ற அறிவுடன் பார்க்கும்போது உலகிலுள்ள அனைத்துப் பொருட்கள் என்னுடையதாக நினைத்துக் கொள்வோம்.
இதுவே ஈஸ்வர திருஷ்டி. அனைத்தும் மித்யா என்ற அறிவுடன் இருத்தல்.

———–

பிரவிருத்தி, நிவிருத்தி என்ற இரண்டுவிதமான வாழ்க்கைப் பாதைகள் உண்டு.
பிரவிருத்தி மார்க்கத்தில் இருப்பவர்களுக்கு தாங்கள் அறியாமையில் இருக்கின்றோம் என்பதே தெரியாது.
நிவிருத்தி மார்க்கத்தில் இருப்பவர்கள் தன்னிடத்தில் இருக்கின்ற அறியாமையை அறிந்து அதை நீக்கும் முயற்சியில் இருப்பவர்கள்.
இந்த ஸ்லோகத்தில் பிரவிருத்தி மார்க்கத்திலிருப்பவர்கள் எப்படி வாழ்ந்தால் நிவிருத்தி மார்க்கத்திற்கு செல்ல முடியாது என்பதை கூறுகிறது.

குர்வன்ன ஏவேஹ கர்மாணி ஜிஜீவிஷேச்ச2தம் ஸமா: |
ஏவம் த்வயி நான்யதே2தோSஸ்தி ந கர்ம லிப்யதே நரே || 2 ||

குரவன் ஏவ இஹ – நாம் உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும்போது
கர்மாணி – வேதத்தில் சொல்லப்பட்டுள்ள கடமைகளை செய்து கொண்டு,
ஶதம் ஸமா: – நூறு வருடங்கள் அதாவது எவ்வளவு வருடங்கள் வாழ்வதற்கு பிராரப்தம் இருக்கின்றதோ அவ்வளவு நாட்கள்
ஜிஜீவிஷேத் – வாழ்வதற்கு விருப்பம் கொள்ள வேண்டும்.
ஏவம் – இப்படி வாழ விரும்புகின்ற
த்வயி நரே – மனிதனாகிய உனக்கு
இதஹ – இவ்விதம் செயல்பட்டு கொண்டிருப்பதை தவிர
அன்யதா ந அஸ்தி – வேறு வழி கிடையாது
கர்ம லிப்யதே – இவ்விதம் செயல் செய்து வாழ்வதினால் அந்த செயல்களினால் பந்தப்படாமல் இருக்கலாம்.
அதாவது கர்மயோகப்படி செயல்களை செய்து கொண்டிருக்க வேண்டும்.

————–

அஸுர்யா நாம தே லோகா அந்தே4ன தமஸாவ்ருதா: |
தாம்ஸ்தே ப்ரேத்யாபி4க3ச்ச2ந்தி யே கே சாத்மஹனோ ஜனா: ||

அஸுர்யா நாம – அஸுர்யா என்ற பெயருடைய
தே லோகோ – எந்த லோகங்கள் உண்டோ அவைகள்
அந்தே4ன தமஸ – ஆத்மஞானம் இல்லாத அறியாமை என்ற அடர்ந்த இருளால்
ஆவ்ருதா – மூடப்பட்டுள்ளது
இங்கே லோகங்கள் என்பதற்கு சரீரங்கள் என்று பொருட் கொள்ளப்படுகிறது.
அக்ஞானிகளுக்கென்று படைக்கப்பட்ட சரீரங்கள். இந்த உடலின் மீது அதிகப்பற்று கொண்டு வாழ்பவர்களே அசுரர்கள் என்று கூறப்படுகின்றனர்.
யே தே ஆத்மனஹ – எந்த மனிதர்கள் ஆத்மாவான தன்னை அழித்துக் கொள்கின்றார்களோ
தான் தே – அவர்கள் மேலே சொல்லப்பட்ட சரீரங்களை
ப்ரேத்ய அபி கச்சந்தி – இந்த சரீரத்தை விட்ட பிறகு அடைகிறார்கள்

ஆத்மாவை அழித்து கொள்வது என்பது அனாத்மாவை அதன் மீது ஏற்றி வைத்துக் கொள்வது என்று பொருட் கொள்ள வேண்டும்.
இதனால் சம்சாரத்தில் சிக்கி தவிப்பதையே ஆத்மாவை அழித்துக் கொள்பவர்கள்,
தன்னையே அழித்துக் கொள்பவர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்.

—————

எப்படிபட்ட அறிவினால் ஒருவன் தன்னை அழித்துக் கொள்வதில்லையோ அப்படிபட்ட அறிவை இங்கு உபநிஷத் கொடுக்கிறது.
இது இந்த ஞானத்தை நேரடியாக விளக்கவில்லை. ஏனென்றால் அது ஒரு பொருளாக இல்லாமல் இருப்பதால்
அதை மறைமுகமாக புகட்டுகிறது. அதாவது அத்யாரோப – அபவாதம் என்ற முறையில் ஆத்ம ஞானத்தை நமக்கு உபதேசிக்கிறது.
அத்யாரோபம் என்பது ஒரு பொருளின் மீது அதற்கப்பாற்பட்ட வேறொரு பொருளை தெரிந்தே ஏற்றி வைத்தலாகும்.
தெரியாமல் ஏற்றி வைத்தால் அதற்கு அத்யாஸம் என்று பெயர். அபவாதம் என்பது ஏற்றி வைத்த தை நீக்கி விடுதலாகும்.

அக்ஞானிகள் உண்மையான வஸ்துவின் மேல் அனாத்மா வஸ்துவை பார்த்துக் கொண்டிருக்கின்ற காரணத்தால்
உபநிஷத் இந்த முறையை கையாண்டு உபதேசிக்கிறது. எனவே முதலில் ஜீவனின் பார்வையை,
அவஸ்துவை இருப்பதாக ஏற்றுக் கொண்டு பிறகு அதனுடைய மித்யா தன்மையை உபதேசிக்கிறது.
அதன் மூலம் அவனிடத்தில் உள்ள அறியாமையை நீக்கி ஆத்ம த்த்துவமானது விளக்கப்படும்போது நன்கு புரிந்து விடுகிறது.
பிரம்மனான ஆத்மாவின் மீது நம்முடைய மூன்று சரீரங்களும் ஏற்றி வைக்கப்படுகிறது.
அறியாமையில் இருப்பவர்கள் இந்த மூன்று சரீரங்களைத் தான் நான் என்று சுபாவமாக புரிந்து கொண்டு இருக்கிறார்கள்.

அனேஜத்3 ஏகம் மனஸோ ஜவீயோ நைனத்3தே3வா ஆப்னுவன்பூர்வமர்ஷத் |
தத்3தா4வதோSன்யானத்யேதி திஷ்ட2த் தஸ்மின்னபோ மாதரிஶ்வா ததா4தி ||

தத்3- அந்த ஆத்மா
அனேஜத் – சலனமற்றது, அசைவற்றது, தன்னுடைய நிலையிலிருந்து என்றும் மாறாமல் இருப்பது
ஏகம் – ஒன்றாகவே இருக்கிறது
மனஸ: ஜவீயஹ – மனதைக் காட்டிலும் வேகமானது.
இவ்விதம் கூறி ஆத்மாவானது எல்லாவிடத்திலும் வியாபித்திருப்பதைக் என்பதை எடுத்துக் காட்டுகிறது.
ஏனத் – இந்த ஆத்ம தத்துவத்தை
தேவா: – நம்முடைய இந்திரியங்களால்
ந ஆபுனுவன் – அடைய முடியாது, அறிந்துக் கொள்ள முடியாது. இது புலன்களுக்கு விஷயமாக இல்லாததால் அவைகளால் கிரகிக்க முடியாது
பூர்வம் அர்ஷத் – மனதுக்கு முன்னாடியே சென்றுவிடுவதால் புலன்களால் அறியப்பட முடியவில்லை. புலன்கள் மனதைச் சார்ந்திருப்பதால்தான் இந்த நிலை
தத்3 – இந்த ஆத்மா
தா4வத் அன்யானதஹ – ஓடுகின்ற மற்றவைகளையும்
அத்யேதி – கடந்து சென்று கொண்டிருக்கின்றது
திஷ்டத் – நின்று கொண்டிருக்கிறது. ஆத்மாவானது எங்கும் வியாபித்திருப்பதால் இதை தாண்டி வேறொன்றும் கிடையாது என்று குறிப்பிடப்படுகிறது
தஸ்மின் – ஆத்மா இருக்கின்ற காரணத்தால்
அபஹ – எல்லா செயல்களையும்
மாதரிஶ்வா ததா4தி – ஹிரண்யகர்ப்பன் பிரித்துக் கொடுக்கிறார்

ஈஸ்வரனே ஹிரண்யகர்ப்பனாக தோன்றி அனைத்து செயல்களையும் விதவிதமான தேவதைகளுக்கு பிரித்துக் கொடுக்கின்றார்.
தானே விதவிதமான தேவதைகளாக தோன்றி கொண்டுமிருக்கிறார்.

———–

இதில் ஆத்மாவை உபாதியுடனும், உபாதியை நீக்கியும் பார்க்கப்படுகிற்து-

தத்3 ஏஜதி தன் நைஜதி தத்3 தூ3ரே தத்3வந்திகே |
தத3 அந்தர அஸ்ய ஸர்வஸ்ய தத்3 உஸர்வஸ்யாஸ்ய பா3ஹ்யத: ||

தத்3 ஏ3ஜதி – இந்த ஆத்மாவானது அசைகின்றது, செயல்படுகின்றது
தத்3 ந ஏஜதி – செயல்படாமலும், அசையாமலும் இருக்கின்றது
ஆத்மாவானது அறிவு ஸ்வரூபமாகவும், உணர்வு ஸ்வரூபமாகவும் இருப்பதால் அசையாது, நகராது.
அனாத்மாவானது ஜட ஸ்வரூபம் எனவே செயல்படும் சக்தி அற்றது, இதுவும் நகராது.
ஆனால் உடலோடு சிதாபாஸனும் இருந்தால் அங்கே செயல்படும் தன்மையை பார்க்கலாம். அசைகின்ற தன்மையுடையதாக இருக்கும்.
நம்முடைய மனமும்,புலன்களும் செயல்படுவதற்கு காரணம் சைதன்ய ஸ்வரூபமான ஆத்மாதான்.
செயல்படும் பொருட்களுக்கு ஆத்மாதான் காரணம். ஆனால் அது செயலெதுவும் செய்யாமல் இருந்து கொண்டிருக்கின்றது
தத3 தூ3ரே – மிகவும் தொலைவில் இருக்கிறது
தத்3 அந்திகே – மிகவும் அருகிலும் இருக்கிறது
ஆத்மாவை பற்றி அறியாதவர்களுக்கு மிகவும் தொலைவில் இருக்கிறது. அறிந்தவர்களுக்கோ மிகவும் அருகில் இருக்கிறது.
பத்தாவது மனிதனான தன்னை தேடுபவனுக்கு மிக தொலைவில் இருக்கிறது.
அவனே தான் தான் அவன் என்று அறிந்த பிறகு மிகவும் அருகில் இருக்கின்றான்.
இதிலிருந்து அவன் தொலைவிலும் கிடையாது, அருகிலும் கிடையாது. ஏனென்றால் அவனே பத்தாவது மனிதான இருக்கின்றான்.
அதுபோல ஆத்மாவையும் புரிந்து கொள்ளலாம்.
தத்3 அந்தரஸ்ய ஸர்வஸ்ய – இது அனைத்திற்கும் உள்ளேயும் இருக்கிறது. அதே சமயம் அனைத்திற்கும் வெளியேயும் இருக்கிறது.
இதிலிருந்து நாம் ஆத்மா எங்கும் இருக்கின்றது என்ற அறிவை அடையலாம்.
பானைக்கு உள்ளேயும் ஆகாசம் இருக்கிறது வெளியேயும் இருக்கிறது என்று சொல்லும் போது பானையை உபாதியாக கொண்டு
ஆகாசம் எங்கும் இருக்கிறது என்று புரிந்து கொள்வது போல ஆத்மாவை புரிந்து கொள்ள வேண்டும்.
நம்முடைய சரீரங்களை உபாதியாகக் கொண்டு உள்ளே, வெளியே என்று கூறப்படுகின்றது.

————-

யஸ்து ஸர்வாணி பூ4தான்ய ஆத்மன்ய ஏவானுபஶ்யதி |
ஸர்வபூ4தேஶு சாத்மானம் ததோ ந விஜுகு3ப்ஸதே ||

யஹ து – யாரொருவன்
ஸர்வாணி பூதானி – எல்லா ஜீவராசிகளையும், பூதங்களையும்
ஆத்மனி ஏவ – தன்னிடத்திலேயும்
ஸர்வ பூ4தேஷு – எல்லா பூதங்களிடத்திலும், ஜீவராசிகளிடத்திலும்
சாத்மானம் – தன்னை பார்க்கின்றானோ
தத3 – இப்படிபட்ட பார்வையினால்
ந விஜுகு3ப்தஸதே – யாரையும் நிந்திக்கவோ, வெறுக்கவோ மாட்டான், யாரிடத்திலும் பரிதாபப்படவோ மாட்டான் கருணையே கொள்வான்

———-

யஸ்மின் ஸர்வாணி பூதான்ய ஆத்மைவாபூ4த்3 விஜானத: |
தத்ர கோ மோஹ:: க: ஶோக ஏகத்வம் அனுபஶ்யத: ||

விஜானத: – ஆத்ம ஞானத்தை அடைந்த ஞானிக்கு
யஸ்மின் – எப்பொழுது, எந்தக் காலத்திலும்
ஸர்வாணி பூதானி – எல்லா ஜீவராசிகளிடத்திலும்
ஏகத்வம் அனுபஶ்யதஹ – ஒன்றையே பார்ப்பவனாக இருப்பதால்
தத்ர – அந்த காலத்தில்
கஹ மோஹ கஹ ஶோக – மோகமும் இல்லை, சோகமும் இல்லை
ஆட்சேப முறையில் சொல்லுதல் கருத்து அதன் இருப்பை ஆழமாக சொல்வதற்காக எடுத்துக் கொள்ள வேண்டும்.
இந்த ஞானமானது அவ்வளவு சுலபமாக மனதில் பதியாது. எனவே எந்த நேரத்தில் இந்த அறிவு மனதில் இருக்கிறதோ
அந்த நேரத்தில் கோபமும், மோகமும் இருக்காது. எந்த ஞானியிடத்தில் எல்லா ஜீவராசிகளிடத்தில்
தானாகவே இருப்பதாக அறிவுடன் இருக்கின்றானோ அவனிடத்தில் சோகமும், மோகமும் இல்லை.
மோகம் – ஆத்ம ஆவரண லட்சணம், ஆத்மாவை மறைக்கும் நிலை
ஶோகம் – விக்ஷேபம் – பொய்யானவை தோற்றுவிக்கும், மனம் கொந்தளிப்பை கொடுப்பது
ஆத்மாவைப்பற்றிய அக்ஞானம் இல்லை, தன்னைக் குறித்து எந்த சோகமும் இருக்காது. மோகத்துக்கும், சோகத்துக்கும் அனுபவங்கள்,
சம்பவங்கள் இருந்து கொண்டிருக்கும். ஆனால் அதை பொருட்படுத்துவதும் விதத்தில் அவைகளில் இல்லாமை உணரப்படும்.
அவைகளால் பாதிக்கப்படாமல் இருப்போம். சோகத்திற்கு காரணம் மோகத்தினால்தான் என்று சொல்லப்படுகிறது.

————

ஸ பர்யகா3ச சு2க்ரம் அகாயம்
அவரணம் அஸ்னாவிரம் ஶுத்3த4ம் அபாபவித்3த4ம் |
கவிர்மனீஷீ பரிபூ4; ஸ்வயம்பூ4ர யாதா2தத்2யதோர்Sதா2ன்
வ்யத3தா4ச்சா2ஶ்வதீப்4ய: ஸமாப்4ய: ||

ஸஹ – மேற்சொன்ன ஆத்ம தத்துவம்
பர்யகாத்3 – எல்லா இடத்திலும் பரவியிருப்பது, வியாபித்திருப்பது
ஶுக்ரம் – பிரகாச ஸ்வரூபமானது, சைதன்ய ஸ்வரூபமானது அறிவு ஸ்வரூபமானது
அகாயம் – சூட்சும சரீரங்களற்றது, மனது, புத்தி இவைகள் கிடையாது
அவரணம் – காயபடுத்த முடியாதது
அஸ்னாவிரம் – நரம்புகள் கிடையாது
இவையிரண்டும் கிடையாது என்று சொல்வதிலிருந்து ஸ்தூல சரீரமும் அற்றது என்று புரிந்து கொள்ளலாம்
ஶுத்தம் – தூய்மையானது, காரண சரீரமற்றது.
மேற்கூறியதிலிருந்து மூன்று சரீரங்களும் கிடையாது என்பதை அறியலாம்.
அபாபவித்3த4ம் – பாவ-புண்ணியங்களற்றது, தர்ம-அதர்மங்கள் இல்லாதது
கவி – அனைத்தையும் அறிந்தவன், எல்லோருடைய மனதிற்குள்ளேயும் இருப்பதால் அனைத்தையும் அறிந்ததாகிறது.
மனீஷீ – மனதை ஆள்பது, மனதை செயல்படுத்துவது
பரிபூ4 – எல்லாவற்றிற்கும் மேலானது, எல்லாமாகவும் இருக்கின்றது
ஸ்வயம்பூ4: – தானாகவே இருக்கிறது, தனக்கு காரணாமாக எதுவும் இல்லாதது
யாதா2தத்2யத: – அவரவர்கள் செய்த கர்ம உபாஸனைகளுக்கு தக்கபடி
அரா2ன் – ஆற்ற வேண்டிய கடமைகளை
ஶாஶ்வதிப்4ய ஸமாப4ய: வ்யத3தாத் – அதிக காலம் இருக்கின்ற தேவதைகளுக்கு, பிரஜாபதிகளுக்கு பிரித்துக் கொடுத்தார்
இயற்கை சக்திகள் நியமப்படி ஒழுங்காக இயங்குவதற்கு காரணமாக யாரோ ஒருவன் ஈஸ்வரன் இருக்கிறான் என்று புரிந்து கொள்ள வேண்டும்.

———–

கர்மங்கள் என்று சொல்வது வைதீக கர்மங்கள். உபாஸனா வேதத்தில் சொல்லப்பட்ட வைதீக தியானங்கள்.
கர்மத்தின் பலனில் ஆசைப்பட்டு செய்வது சகாம கர்மங்கள், இவைகளை செய்வதால் பித்ரு லோகத்தை அடையலாம்.
கர்மம் செய்பவர்களின் மனம் பரபரப்பாகவே இருக்கும். உடலாலும், வாக்காலும் செய்யப்படும் செயல்களையும்,
மனதால் செய்யப்படும் தியானம், போன்றவற்றையும் ஆசைவசப்பட்டு செய்வதால் அதன் பலனாக போகத்தை அனுபவிக்கிறான்.
அசுவமேத யாகத்தை செய்வதால் சொர்க்க லோகத்தை அடைகிறார்கள்.
இதே யாகத்தை பிராமணன் உபாஸனையாக செய்தாலும் அதே பலனை அடைகிறான்.
ஸமுச்சயஹ – சேர்த்தல் – கர்மத்தையும், உபாஸனையும் சேர்த்து செய்பவன் அடையும் பலன் பிரம்மலோகத்தை அடைவது
கர்மத்தை நிஷ்காமமாக செய்தால் மனத்தூய்மை அடையலாம். நிஷ்காம உபாஸனையின் பலனாக அடைவது மன ஓருமுகப்பாடு.

அந்த4ம் தம: ப்ரவிஶந்தி யேSவித்3யாம் உபாஸதே |
ததோ பூ4ய இவ தே தமோ ய உவித்3யாயாம் ரதா: ||

யஹ – எவர்கள்
அவித்யாம் உபாஸதே – கர்மத்தை மட்டும் செய்து கொண்டிருக்கிறார்களோ
அந்தம் தம: – அவர்கள் அடர்ந்த இருளை, சொர்க்கலோகத்தை
பிரவிஶந்தி – அடைகிறார்கள்
சொர்க்கலோகத்கில் ஆத்ம வித்யாவை படிக்க முடியாது. ஆத்ம ஞானத்தை அடைய முடியாத அறியாமையுடன் கூடிய உலகம் நான்,
என்னுடைய என்கின்ற அபிமானம் மட்டும் உடைய இருள் நிறைந்த உலகத்தை அடைகிறார்கள்.
ய உ – யார்
வித்யாயாம் ரதா – உபாஸனையை மட்டும் செய்து கொண்டு மகிழ்ந்திருக்கிறார்களோ
தத்2 பூ4ய இவ தே தம் – அவர்கள் அதைவிட அதிகமான அடர்ந்த இருளை அடைவார்கள்.
அதிகமான சுகத்தையும், மமகார, அகங்காரத்தையும் கொண்ட உலகத்தை அடைகிறார்கள்.

————–

அன்யத்3 ஏவாஹுர் வித்3ய்யான் யத்3 ஆஹுர் அவித்3ய்யா |
இதி ஶுஶ்ரும தீ4ராணாம் யே நஸ் தத்3 விச்சக்ஷிரே ||

அன்யத்3 ஏவ ஆஹு வித்யயா – .உபாஸனை செய்வதினால் ஒரு வகையான பலன் ஏற்படுகிறது என்று கூறுகிறார்கள்
அனய்த்3 ஆஹு: அவித்3யயா – கர்மத்தை செய்வதனால் வேறொரு பலன் கிடைக்கிறது என்றும்கூறுகிறார்கள்
தீராணாம் – கற்றறிந்தவர்களுடைய வார்த்தைகளாக
இதி ஶுஶ்ரும – இவ்விதம் நாங்கள் கேள்விபட்டிருக்கிறோம்
யே தத் விச்சக்ஷிரே – அவர்கள் எங்களுக்கு எடுத்து சொன்னார்கள்

——–

வித்யாம் சாவித்3யாம் ச யஸ்தத்3 வேதோ3ப4யம் ஸஹ |
அவித்3யயா ம்ருத்யும் தீர்த்வா வித்3யயாம்ருதம் அஶ்னுதே ||

யாரொருவன் தியானத்தையும், கர்மாவையும் ஒன்று சேர்ந்து செய்யக்கூடியவை என்று புரிந்து கொள்கின்றானோ
அவன் செயல் செய்வதனாலேயே மரணத்தையும் வென்று தியானத்தினாலேயே அழிவற்ற நிலையை அடைகின்றான்.
இங்கே ம்ருத்யு என்ற சொல்லானது நமக்கு இயல்பாகவே எந்த செயல்களை செய்ய விரும்பி செய்கின்றோமோ அதைக் குறிக்கிறது.
இதையே ஸ்வாபீக கர்மம் என்றும் கூறப்படுகிறது.
நமக்கு என்ன செயல் செய்யலாம் என்பதை தேர்ந்தெடுக்கும் அறிவை இயல்பாகவே இருக்கிறது.
இந்த கர்மத்தின் பலனாக சுபாவமாக செய்யும் நிலையிலிருந்து விடுபட்டு சாஸ்திர தர்மப்படி இயல்பாகவே செயல்பட்டுக் கொண்டிருப்பார்கள்.
உபாஸனையின் மூலம் தேவதையை தியானித்துக் கொண்டிருப்பதால் அந்த ஸ்வரூபமாகவே உயர்ந்து விடுகின்றான்.
இதையே அம்ருதம் என்று கூறப்படுகிறது.

—————-

அந்தம் தம: ப்ரவிஶந்தி யேSஸம்பூ4திம் உபாஸதே |
ததோ பூ4ய இவ தே தமோ ய உ ஸம்பூ4த்யாம் ரதா: ||

எது தோன்றியுள்ளதோ அதை ஸம்பூதி என்று பொருட் கொள்ள வேண்டும்.. எது வெளித்தோற்றத்திற்கு வராமல் இருக்கிறதோ
அதை அஸம்பூதி என்று பொருட்கொள்ள வேண்டும். இங்கே ஸம்பூதி உபாஸனம் என்பது ஹிரண்யகர்ப்ப உபாஸனம் என்று பொருட் கொள்ள வேண்டும்.
அஸம்பூதி என்பதை ப்ரகிருதி உபாஸனம் என்று எடுத்துக் கொள்ள வேண்டும்
யார் பிரகிருதியை மட்டும் உபாஸிக்கிறார்களோ அவர்கள் அடர்ந்த இருளை அடைகிறார்கள்.
யார் ஹிரண்யகர்ப்ப உபாஸனையில் மட்டும் பற்று உள்ளவர்களாக அதை செய்து கொண்டிருக்கிறார்களோ
அவர்கள் மேற்சொன்ன இருளை காட்டிலும் அதிகமான இருளை அடைகிறார்கள்

————-

அன்யத்3 ஏவாஹு: ஸம்ப4வாத்3 அன்யத்3 ஆஹுர் அஸம்ப4வாத் |
இதி ஶுஶ்ரும தீராணாம் யே நஸ் தத3 விச்சக்ஷிரே ||

ஸம்பூதி உபாஸனையை செய்வதால் ஒருவகையான பலன் கிடைக்கின்றது.
அஸம்பூதி உபாஸனை செய்வதால் வேறுவகையான பலன் கிடைக்கின்றது.
இது கற்றறிந்தவர்கள் எங்களுக்கு கூறியதையே நாங்கள் கேட்டிருக்கிறோம்.
இவ்விதம் எங்களுக்கு யார் சொன்னார்களொ அந்த தீரர்களுடைய வார்த்தையை நாங்கள் கேட்டிருக்கிறோம்.
ஸம்பூதி உபாஸனையின் பலன் – அஷ்டமகா சித்திகளை அடைவது
அஸம்பூதி உபாஸ்னையின் பலன் – பிரகிருதியுடன் லயத்தை அடைவது

——————

ஸம்பூ4திம் ச வினாஶம் ச யஸ் தத்3 வேதோ3ப4யம் ஸஹ |
வினாஶேன ம்ருத்யும் தீர்த்வா ஸம்பூ4த்யாம்ருதம் அஶ்னுதே ||

யார் பிரகிருதி உபாஸனையையும், ஹிரண்யகர்ப்ப உபாஸனையும் சேர்த்து செய்கின்றானோ, அனுஷ்டிக்கின்றானோ
அவர் ஹிரண்யகர்ப்ப உபாஸனையின் பலனாக மரணத்தை தாண்டி, பிரகிருதி உபாஸனையின் பலனாக பிரகிருதியுடன் லயமாகின்ற அடைகின்றார்.

—————

இந்த பிரார்த்தனை உபாஸனை செய்பவர்களால் செய்யப்படுகிறது. நல்ல உலகத்தை அடைய வேண்டும் என்பதற்காக செய்வது.
முமூக்ஷூவின் பிரார்த்தனையாகவும் இவைகளை விசாரம் செய்தால் அவன் மோட்சத்தை அடைவதற்காக செய்கின்றான் என்று புரியும்.
முமூக்ஷுவின் பிரார்த்தனை
உலகத்தில் இருக்கின்ற புலனுகர் போகப் பொருட்களால் பரபிரம்மத்தினுடைய உண்மையான இருத்தல் மறைத்திருக்கின்றது.
மாயையின் சக்தியால் மனதை கவர்ந்திழுக்கும்படி தோன்றியிருக்கின்ற பொருட்களின் மாயையில் விழுந்து விடாமல் என்னை பாதுகாப்பீர்களாக.
நற்பண்புகளை பின்பற்றி கொண்டிருக்கும் முமுஷுவான என்னிடத்திலிருந்து மாயையை நீக்கி விடுவீர்களாக.

ஹிரண்மயேன பாத்ரேண ஸத்யஸ்யாபிஹிதம் முக2ம் |
தத். த்வம் பூஷன்ன அபாவ்ருணு ஸத்யத4ர்மாய த்3ருஷ்டயே ||

ஸத்யஸ்ய முக2ம் – ஹிரணயகர்ப்பனுடைய லோகத்தின் வாயில், பிரம்மத்தை அடைவதற்கான நுழைவாசல்
அபிஹிதம் – மூடப்பட்டிருக்கிறது
ஹிரண்மயேன பாத்ரேண – தங்கம் போன்ற ஓளிமயமான மறைப்பானால்
பூஷண் – சூரியதேவரே!
தத் த்வம் – அதை நீங்கள்
அபாவ்ருணு – நீக்கிவிடுங்கள், விலக்கி விடுவீர்களாக
ஸத்யதர்மாய – உண்மையான பிரம்மத்தை உபாஸிக்கின்ற,
திருஷ்டயே – என்னுடைய பார்வைக்காக
பிரம்ம லோகத்திற்கே சுக்லகதியாக செல்லும்போது தடையாக இருக்கும் ஒளிமயமான மறைப்பை எடுத்து வழி விடுவீர்களாக
இது உபாஸனின் பிரார்த்தனை.

—————-

பூஷன்ன ஏகர்ஷே யம ஸூர்ய ப்ராஜாபத்ய
வ்யூஹ ரஶ்மீன் ஸமூஹ தேஜ: |
யத் தே ரூபம் கல்யாணதமம்.தத் தே பஶ்யாமி
யோSஸாவ் அஸௌ புருஷ: ஸோSஹம் அஸ்மி

உபாஸகனின் பிரார்த்தனை ( கர்மத்தையும், உபாஸனையும் சேர்த்து செய்து கொண்டிருப்பவர்கள், பிரம்மலோகத்தை அடைவதற்காக)

பூஷன் – சூரியதேவனே! உலகத்தை போஷிப்பவரே!
ஏகர்ஷே – ஒருவராகவே இருந்து செய்பவரே!
யம – எல்லாவற்றையும் தன்வசம் வைத்துள்ளவரே
ஸூர்ய – சூரிய பகவானே! எல்லாவற்றையும் கிரகித்துக் கொண்டவரே!
ப்ரஜாப்த்ய – பிரஜாபதியின் புதல்வரே
ரஶ்மின் வ்யூஹ – உங்களின் ஒளிக்கதிர்களை விலக்கி கொள்வீர்களாக
தேஜ: ஸமூஹ – உங்களுடைய உஷ்ணமான ஓளியை ஒடுக்கிக் கொள்வீர்களாக
யத் தே கல்யாண தமம் ரூபம் – எந்த உங்களுடைய மங்களகரமான ரூபம் உண்டோ
தத் தே பஶ்யாமி – அதை உங்களுடைய அருளால் பார்க்க விரும்புகிறேன்
ய:: அஸௌ புருஷ: – யார் இந்த புருஷனோ, ஆதித்ய மண்டல தேவதையோ
ஸஹ அஹம் அஸ்மி – அவரே நானாக இருக்கிறேன்
உலகத்தில் மனதை கவர்ந்திழுக்கும் பொருட்களை அவைகளை நீக்கிக் கொள். மோட்சத்தை அறிய வேண்டும்.
அந்த ஆதித்ய மண்டலத்திலிருக்கின்ற பிரம்ம தத்துவம் நானாக இருக்கிறேன். என்ற அறிவை உடையவனாக இருக்கிறேன்

————-

வாயுர் அனிலம் அம்ருதம் அதே2த3ம் ப4ஸ்மாந்தம் ஶரீரம் |
ஓம் க்ரதோ ஸ்மர க்ருதம் ஸ்மர க்ரதோ ஸ்மர க்ருதம் ஸ்மர ||

அக்னிதேவனை குறித்து, மனதிடமே பிரார்த்தனை. இப்பொழுது இறக்கும் தறுவாயில் இருக்கும் எனக்கு பிராணனானது.
அம்ருதம் – என்றும் இருக்கின்ற ஹிரண்யகர்ப்பனான
அனிலம் – சமஷ்டி பிராணனுடன் கலந்து விடட்டும்.
அத இத3ம் – பிறகு இந்த உலகமானது
பஸ்மாந்தம் – அக்னியில் சாம்பலாகட்டும்
ஓம் க்ரதோ = ஹிரண்யகர்ப்பனே, அக்னிதேவனே
ஸ்மர க்ருதம் – நீங்கள் என்னால் செய்யப்பட்ட நற்காரியங்களை நினைத்துப்பார்த்து தகுந்த கதியை அடைய உதவ வேண்டும்
க்ரதோ க்ருதம் ஸ்மர – ஏ மனமே! இதுவரை செய்த நல்ல காரியங்களை, உபாஸனையை நினைத்துப் பார்ப்பாயாக
க்ரதோ ஸ்மர க்ருதம் ஸ்மர – அக்னிதேவன், நான் செய்த உபாஸனைகளை, நற்காரியங்களை வைத்துக் கொண்டு
நற்கதியை அடைய உதவி செய்வீர்களாக. ஏ மனமே நீயும் இதையே நினைப்பாயாக

—————

அக்3னே நய ஸுபதா2 ராயே அஸ்மான் விஶ்வானி தே3வ வயுனானி வித்3வான் |
யுயோட்4ய அஸ்மஜ் ஜுஹுராணம் ஏனோ பூ4யிஷ்டா2ம் தே நம உக்திம் விதேம ||

ஓ அக்னிபகவானே எங்களை நற்கதியை அடையக் கூடிய நல்ல மார்க்கத்தில் அழைத்து செல்ல வேண்டும்.
திரும்பி வராத உலகமான பிரம்மலோகத்திற்கு அழைத்து செல்ல வேண்டும்.
ராயே – செய்த கர்மபலன்களின் போகத்திற்காக
தேவ – அக்னிபகவானே
வஶ்வானி வ்யுனானி – நாங்கள் செய்த அனைத்து கர்மங்களையும், உபாஸ்னைகளையும்
வித்வான் – அறிந்துள்ள நீங்கள்
அஸ்மாத் – எங்களிடமிருந்து
ஜுஹுராணம் ஏனம் – கீழான பாவங்களை
யுயோதி4 – நீக்கிவிடுவீர்களாக
தே பூ4யுஷ்டாம் – உங்களுக்கு பலமுறை
நம: உக்திம் விதே4ம – நமஸ்காரத்தை சமர்ப்பிக்கின்றோம்

—————–

தொகுப்புரை
01-08 வேதாந்த கருத்துக்கள் உடையது
01-01: இதில் வேதாந்தத்தின் மையக்கருத்து கூறப்பட்டுள்ளது. இந்த உலகத்தில் உள்ள படைக்கப்பட்ட
அனைத்திலும் ஈஸ்வரனே வியாபித்திருக்கிறார். இந்த உலகத்திற்கு அவரே உபாதான காரணமாக இருக்கிறார்.
இந்த உலகத்தை ஈஸ்வரனைக் கொண்டு மூடி விடவேண்டும். இருமையை நீக்கி அனைத்திலும் ஈஸ்வர ஸ்வரூபத்தையே பார்க்க வேண்டும்.
இந்த அறிவை தியாகத்தினால் காப்பாற்றிக் கொள்ள வேண்டும்.
தியாகம் என்பது அகங்காரம், மமகாரம் இவைகளை நீக்கிவிடுவதையே குறிக்கின்றது.
யாருடைய பொருளையும் அபகரிக்க கூடாது.
02-02 மேற்சொன்ன அறிவை அடைய தகுதியில்லாதவர்களுக்கு மனதிலுள்ள ராக, துவேஷங்கள் தடையாக இருந்தால்
கர்மயோகத்தை செய்து தகுதிபடுத்தி கொள்ள வேண்டும். சாஸ்திர விதித்த கடமைகளை செய்து கொண்டுதான் வாழ வேண்டும்.
இப்படி வாழ்வதால் கர்மத்தால் பந்தப்படாமல் ராக, துவேஷங்கள் நீங்கி எது உண்மை எது பொய் என்று பிரித்தறியும் அறிவை அடைவோம்.
மேற்சொன்ன அறிவை அடைய தகுதிப்படுத்தும்
03-03 அறியாமையில் உள்ளவர்களை நிந்தனை செய்கின்றது. இத்தகையவர்கள் தன்னைத்தானே கொலை செய்வது
போன்ற நிலைக்கு சமானமாகும் என்று கூறுகிறது
04-05 ஆத்ம தத்துவத்தை அத்யாரோப அபவாதம் முறையில் உபதேசிக்கின்றது. இருப்பதை, அனுபவித்துக் கொண்டிருப்பதால்
அவைகளை முதலில் ஏற்றுக் கொண்டு பிறகு அவைகள் மித்யா என்று நீக்கி பிரம்ம ஞானத்தை உபதேசிக்கிறது.
பிரம்மத்தின் லட்சணங்களான அசைவற்றது, வேகமாக செயல்படக் கூடியது போன்றவற்றை எடுத்துக் கூறி
பிரம்மத்தின் துணைக் கொண்டுதான் பிரபஞ்சம் செயல்படுகின்றது என்பதையும் விவரித்துள்ளது
06-07 இதில் பிரம்ம ஞானத்தினுடைய லட்சணங்களும், பலனும் கூறப்பட்டுள்ளது.
யார் எல்லா ஜீவராசிகளையும் தன்னிடத்திலேயும், அவைகளில் தன்னையும் பார்ப்பதே ஞானபலன் லட்சணம்.
எந்த காலத்தில் இந்த அறிவு நிலைபெறுகின்றதோ அப்போதே அவனிடத்திலிருந்து மோகமும், சோகமும் விடைபெற்று சென்றுவிடும்
09-14 கர்ம-உபாஸனம்

—————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .