Archive for the ‘ubanishads’ Category

ஸ்ரீ நியாய மீமாம்ச வேதாந்த பாடங்கள்–ஸ்ரீ உ .வே. வேளுக்குடி ரெங்கநாதன் ஸ்வாமிகள்–பகுதி -2 –மீமாம்ச சாஸ்த்ரம்– பாடங்கள் -22-30—

March 24, 2021

பாடம் -22
அத்யாயம் -9-ஊகம்
•ஏழாவது அத்யாயத்தில் அதிதேசம் பொதுவாக சொல்லப்பட்டு, எட்டாவது அத்யாயத்தில்
அதி தேசத்தைப் பற்றின சில சிறப்பு விசாரங்கள் செய்யப் பட்டன.
•அதற்கு அடுத்ததாக, ஒன்பதாவது அத்யாயத்தில், ஊஹம் என்பது ஆராயப் படுகிறது.
• ப்ரக்ருதி யாகத்தில் ஒன்றைக் குறித்து செய்யப் பட்ட ஒரு செயல் விக்ருதி யாகத்தில் வேறு ஒன்றைக் குறித்து
செய்யப் படுதலுக்கு ஊஹம் என்று பெயர்.
• ப்ரக்ருதி யாகத்திலிருந்து ஒரு அங்கத்தை விக்ருதி யாகத்துக்கு அதிதேசம் செய்யும் பொழுது, அந்த அங்கம்
விக்ருதியில் வேறே ஒரு பொருளைக் குறித்தும் செய்யப் படலாம். இதற்கு ஊஹம் என்று பெயர்.
•இதுமூன்று சைகைப்படும்
•(1) ஸம்ஸ் காரத்தின் ஊஹம்
•(2) மந்த்ரத்தின் ஊஹம்
•(3) ஸாமத்தின் ஊஹம்

ஸம்ஸ்கார ஊகம்
தர்சபூர்ணமாஸம் என்ற கர்மத்தில் ஒரு யாகமான ஆக்நேய யாகத்தின் விக்ருதி தான்
ஸௌர்ய யாகம் என்று எட்டாவது அத்யாயத்தில் பார்த்தோம்.
• தர்சபூர்ணமாஸத்தில் ’ நெல்லை ப்ரோக்ஷிப்பாய் ’ என்று ஒரு கட்டளை உள்ளது. இந்தக்
கட்டளையில் ப்ரோக்ஷணம் என்ற செயல் எதைக் குறித்து விதிக்கப் படுகிறது, அதாவது,
ப்ரோக்ஷணத்தின் குறிக்கோள் என்ன என்று ஆராய வேண்டும்.
• ப்ரோக்ஷணம் என்பது நெல் உண்டாவதற்காக என்று சொல்ல இயலாது, ப்ரோக்ஷணம்
இல்லாமல் நெல் உண்டாகிற படியால். ஆகவே , ப்ரோ க்ஷணம் என்பது நெல்லில் ஒரு
தகுதியை ஏற்படுத்துவதற்காக என்று கொள்ள வேண்டும்.
• தகுதி ஏற்படுவதாவது – “ப்ரோக்ஷிக்கப் பட்ட நெல்லைக் கொண்டு புரோடாசத்தை சமைத்து
யாகம் செய்தால் தான் அந்த யாகத்திலிருந்து பயன் கிடைக்கும்,இல்லை என்றால் வெறும் நெல்லால்
புரோடாசத்தைச் செய்து யாகம் செய்தால் பயன் கிடைக்காது” என்பது தான்.
• அந்தத் தகுதி ஒரு வகையான அபூர்வம் / அத்ருஷ் டம் / புண்ணியம். ப்ரோக்ஷணம்
செய்வதால் நெல்லில் ஒரு அபூர்வம் உண்டாகிறது.
அது இருந்தால் தான் அந்த நெல்லால் செய்யப்பட யாகத்துக்கு பலன் கிடைக்கும்.

• ஆகவே , ப்ரோக்ஷணம் என்பது நெல் நெல்லாக ஆவதற்காக அல்ல. யாகத்தில்
பயன் படக்கூடிய த்ரவ்யமாக நெல்லை ஆக்குவதற்காகத் தான்.
ஆகையால், “நெல்லை ப்ரோக்ஷிப்பாய் ” என்ற கட்டளைக்கு உண்மையான பொருள் “அரிசி
உண்டாக்குவதன் மூலம் எந்த பொருள் யாகத்துக்கு உதவுகிறதோ , அந்த ப்ரோக்ஷணம்
செய்ய வேண்டும்” என்பதுதான். அது நெல்லா மற்ற ஓன்றா என்பது முக்கியம் அல்ல.
• இப்படி இருக்கிற படியால், இந்த ப்ரோக்ஷணம் என்கிற ஸம்ஸ்காரத்தை ஒரு விக்ருதி
யாகத்துக்கு அதிதேசம் செய்யும் பொழுது, அங்கு நெல் இல்லாமல் வேறே ஓரு
தான்யத்தால் ஹவிஸ் செய்யப்படவிருந்தாலும் அந்த தாந்யத்துக்கு ப்ரோக்ஷணம் செய்ய வேண்டும்.
•ப்ரக்ருதியில் நெல்லுக்கு செய்யப்பட்ட ஸம்ஸ்காரம் விக்ருதியில் ச்யாமாகம் முதலான
த்ரவ்யங்களுக்குச் செய்யப்படுகிறடியால் இது ஊஹம் ஆகும்

மந்த்ர ஊகம்
யாகங்களில் ஒவ்வொரு செயலைச் செய்யும் பொழுதும் மந்த்ரத்தை உச்சரிக்கிறோம்.
அந்த மந்த்ரங்கள் அடுத்தடுத்து செய்ய வேண்டிய செயலை நமக்கு நினைவூட்டுகின்றன.
• ப்ரக்ருதியான ஆக்நேய யாகத்தில் நாலு கைப்பிடி அளவு நெல்லை யாகத்துக்காக எடுக்கும் பொழுது,
’இந்த நெல் அக்நிக்கு பிரியமானதாக ஆகும் படி இதத நிர்வாபம் செய்கிறேன்” என்ற
மந்த்ரம் சொல்ல ப்படுகிறது
• இந்த மந்த்ரத்தை ஸௌர்ய யாகத்துக்கு அதிதேசம் செய்யும் பொழுது, ஸூர்யனுக்காக செய்யப்படும் யாகத்தில் இந்த
மந்த்ரத்தை அப்படியே உச்சரித்தால் அது தவறாகும்,
ஏன் என்றால் இந்த யாகத்தில் ஸூர்யனுக்காக தான் நெல், அக்நிக்காக அல்ல.
• பிரக்ருதியில் அக்நியைப் பற்றி பேசிய மந்த்ரம் விக்ருதியில் ஸூர்யனைப் பற்றப் பேசுகிற டியால் இது மந்த்ரத்தின் ஊஹம் ஆகும்.
•ஆனால், அக்நிக்கு பதிலாக ஸூர்யன் இந்த யாகத்தில் தேவதையாக இருக்கிற படியால், மந்த்ரத்தில் அக்நி என்ற சொல்லை எடுத்துவிட்டு
அவ்விடத்தில் ’ஸூர்யன்’ என்ற சொல்லைச் சேர்த்துக் கொண்டு,
“இந்த நெல் ஸூர்யனுக்கு பிரியமானதாக ஆகும் படி இதை நிர்வாபம் செய்கிறேன் ” என்று தான் சொல்ல வேண்டும்.
• இது தான் மந்த்ரத்தின் ஊஹம்

சாம ஊகம்
•ஸாமம் என்பது இசை . ருக் என்பது ஸாஹித்யம் / பாடல் வரிகள் போல். ஒரு ஸாமத்தோடு சேர்த்து ஒரு ருக் மந்த்ரத்தைப் பாடி,
அதன் மூலம் ஒரு பொருளின் குணங்களைப் புகழ்ந்ததால் அதற்கு ஸ்தோத்ரம் என்று பெயர்.
•ஸாமம் என்ன செய்கிறது என்றால் – ருக்கில் இருக்கும் எழுத்துகளை விஸ்லேஷம் அதாவது விரித்தல் / நீட்டிப்பு செய்கிறது. எடுத்துக்காட்டு
– ருக் மந்த்ரத்தில் ’எ’ என் ற எழுத்து இருந்தால், அதை இசையாகப் பாடும் பொழுது ’ஆஇ’ என்று பிரித்துப் பாட வேண்டும்
• பிரக்ருதியில் ஒரு ருக் மந்த்ரத்தில் மூன்றாவது இடத்தில் ’எ’ என்ற எழுத்து இருந்திருந்தால், அவ்விடத்தில் ’ஆஇ’ என்று பாடி யிருப்போம்.
• அதத ஸாமத்தை வேறே ருக்கில் அதிதேசம் செய்து, அந்த ருக்கோடு சேர்த்து பாடும் பொழுது, அதிலும் மூன்றாவது இடத்தில்
’எ’ என்ற எழுத்து இருக்கும் என்று சொல்ல இயலாது. ஏழாவது இடத்தில் இருக்கலாம்.
• அப்பொழுது, ’ஆஇ’ என்ற இதை ஏழாவது இடத்திலிருக்கும் ’எ’ என்ற எழுத்தை விஸ்லேஷம் செய்யப் பயன் படுகிறது.
•ஆக, பிரக்ருதியில் மூன் றாவது ஸ்தாநத்திலிருந்த எழுத்தை விஸ்லேஷம் செய்யப் பயன் பட்ட ஸாமம் விக்ருதியில் ஏழாவது
இடத்திலிருக்கும் எழுத்தை விஸ்லேஷம் செய்யப் பயன் படுகிற டியால் இது ஸாமத்தின் ஊஹம் ஆகும்.

—————-

பாடம் -23-அத்யாயம் -10-பாதம்
மீமாம்ஸா சாஸ்த்ரத்தில், எட்டாவது அத்யாயத்தில் அதிதேசத்தைப் பற்றிச் சொன்ன பிறகு, ஒன்பதாவது
அத்யாயத்தில் ஊஹமும் பத்தாவது அத்யாயத்தில் பாதமும் சொல்லப்பட்டுள்ளன.
•ப்ரக்ருதி யாகத்தில் ஒன்றைக் குறித்து செய்யப்பட்ட ஒரு செயல் விக்ருதி யாகத்தில் வேறே ஒன்றைக் குறித்து
செய்யப்படுதலுக்கு ஊஹம் என்று பெயர் என்று சென்ற பாடத்தில் பார்த்தோம்.
•ப்ரக்ருதி யாகத்துக்கு அங்கமான ஒரு செயல் விக்ருதி யாகத்துக்கு அங்கமாக இல்லாமல் போவதற்கு பாதம் என்று பெயர்.
•அதிதேசம் செய்யப்படும் செயலை சிறு மாற்றத்தோடு செய்வது ஊஹம். அந்தச் செயலை முழுவதுமாகக்
கை விடுவது பாதம். ஆகையால், அதிதேசத்தைச் சொன்னவுடன், அதில் சிறு மாற்றத்தை மட்டும் சொல்லும்
ஊஹத்தை முதலில் சொல்லிவிட்டு, கை விடுதல் என்ற பெரிய மாற்றத்தைச் சொல்லும் பாதம் பின்னால் சொல்லப்பட்டுள்ளது.

பாதம் ஏன் ஏற்படுகிறது
•விக்ருதி யாகம் நேரடியாக ப்ரக்ருதி யாகத்தின் அங்கங்களை எதிர்ப்பார்க்கவில்லை . ’எனக்கு உதவி வேண்டும்’ என்ற தேவை
முதலில் ஏற்பட்டு, அதன் பின் தான் ’அந்த உதவியைச் செய்யக் கூடிய செயல்கள் / பொருள்கள் எவை ’ என்ற எதிர்பார்ப்பு ஏற்படுகிறது.
•ஆகையால், ப்ரயாஜம் அநுயாஜம் ஆஜ்யபாகம் முதலான அங்கங்களை ஆக்நேய யாகத்திலிருந்து ஸௌர்ய யாகத்துக்கு
அதிதேசம் செய்யும் பொழுதும், அவற்றை மற்றும் அதிதேசம் செய்யக் கூடாது. எனவே , ’ப்ரயாஜம் செய்து, அநுயாஜம் செய்து,
ஆஜ்யபாகம் செய்து ஸௌர்ய யாகம் செய்ய வேண்டும்’ என்று அதிதேசத்தை ஏற்க முடியாது.
• ’ப்ரயாஜத்தால் இந்த உதவியைச் செய்து, அநுயாஜத்தால் இந்த உதவியைச் செய்து, ஆஜ்யபாகத்தால் இந்த உதவியைச் செய்து,
ஸௌர்ய யாகத்தைச் செய்ய வேண்டும்’ என்று உதவிகளின் பின்னால் தான் செயல்கள் வர வேண்டும்.
•ஆகவே , ப்ரக்ருதி யாகமான ஆக்நேய யாகத்தில் தேவைப்பட்ட ஓர் உதவி விக்ருதியான ஸௌர்ய யாகத்தில் தேவைப்படாவிட்டால்,
அந்த உதவியையோ அதைச் செய்யும் செயலையோ அதிதேசம் செய்யத் தேவை இல்லை –
•ஆகவே , ப்ரக்ருதிக்கு அங்கமான ஒன்று விக்ருதிக்கு அங்கமாக இல்லாமல் போனபடியால் அந்தச் செயலுக்கு / பொருளுக்கு பாதம்
ஏற்பட்டுள்ளது என்று சொல்லப்படுகிறது –

அர்த்த லோபத்தால் பாதம் –
• அர்த்தம் என்றால் ப்ரயோஜனம்/ பயன். லோபம் என்றால் மறைதல் .
• தர்சபூர்ணமாஸம் என்ற கர்மத்தில் ஆக்நேய யாகம் உள்ளது. அந்த யாகத்தைச் செய்ய நெல்லை உலக்கையால்
குத்தி, உமியை நீக்கி,அரிசியை எடுக்க வேண்டும்.
• மற்ற ஓரு யாகம் – “நீண் ட ஆயுஸ் வேண்டும் என்று ஆசைப்படுபவன்,ப்ரஜாபதி என்ற தேவதைக்காக நூறு தங்கத்தகடுகளை நெய்யில்
சேர்த்து சரு செய்து யாகம் செய்ய வேண்டும்” என்று விதிக்கப்பட்டுள்ளது. இது ஆக்நேய யாகத்தின் விக்ருதி ஆகும்.
•ஆக்நேய யாகத்திலிருந்து இந்த யாகத்துக்கு அங்கங்களை அதிதேசம் செய்யும் பொழுது, உலக்கையால் குத்துதல் என்ற செயலை
அதிதேசம் செய்வதில் எந்த ப்ரயோஜனமும் இல்லை , ஏன் என்றால் தங்கத் தகடுகளை உலக்கையால் குத்தி உமியை நீக்க முடியாது.
•ஆக, இவ்விடத்தில், ப்ரக்ருதியில் ஒரு செயலால் ஏற்படும் பயன் விக்ருதியில் தேவைப்படாமல் போகிறபடியால்,
ப்ரயோஜனமில்லாதமயால் ’உலக்கையால் குத்துதல்’ என்ற செயலுக்கு அதிதேசம் கிடையாது, அதாவதி, அதற்கு பாதம் ஏற்படுகிறது.
• அதே போல் ஒரு யாகத்தில் ’தானாக வெட்டப்பட்ட தர்பத்தைக் கொண்டு யாகம் செய்ய வேண்டும்’ என்று வேதம் சொல்கிறது.
ஆகையால், தர்மத்தை வெட்டுதல் என்ற செயலை ப்ரக்ருதியிலிருந்து இந்த யாகத்துக்கு அதிதேசம் செய்யத் தேவையில்லை –

பிரதி ஆம்நாநத்தால் பாதம் –
ப்ரதி என்றால் எதிர்மறை என்று பொருள். ஆம்நாநம் என்றால் உபதேசம்.
• ப்ரக்ருதியில் ஒரு அங்கத்தை உபதேசித்துவிட்டு, விக்ருதியில் அதற்கு முறண் பட்ட வேறே ஒரு அங்கத்தை
வேதமே உபதேசித்தால், ப்ரக்ருதியில் சொல்லப்பட்ட அங்கத்தை விக்ருதிக்கு அதிதேசம் செய்யத் தேவையில்லை .
ஆகையால், அந்த அங்கத்துக்கு விக்ருதியில் பாதம் ஏற்படுகிறது.
• எடுத்துக்காட்டு – ப்ரக்ருதி யாகத்தில் ’குசம்’ என்ற புல்லை தர்பமாகப் பயன் படுத்த வேண்டும் என்று வேதம் சொல்கிறது.
ஆனால், ஒரு விக்ருதியில், ’சரம்’ என்ற மற்ற ஓரு புல் வகையை தர்பமாகப் பயன் படுத்தச் சொல்கிறது.
ஆகையால், ப்ரக்ருதியில் சொல்லப்பட்ட குசம் விக்ருதிக்கு அங்கமாக அழைத்து வரப் படக் கூடாது. ஆகையால்,
அந்த ’குசம்’ என்ற புல்லுக்கு விக்ருதி யாகத்தில் பாதம் ஏற்படுகிறது.
• ப்ரக்ருதியில் சொல்லப்பட்ட அங்கத்துக்கும் விக்ருதியில் சொல்லப்பட்ட அங்கத்துக்கும் ஒரே ப்ரயோஜனம் இருந்தால் தான் இப்படி பாதம்
ஏற்படும். நக்ஷத்ர இஷ்டி என்று ஒரு யாகம் உள்ளது. அதற்கு நாரிஷ்ட ஹோமம் என்ற ஒரு ஹோமம் அதிதேசத்தால் வந்து அடைகிறது.
புதிதாக இந்த யாகத்தில் உபஹோமம் என்ற ஒரு ஹோமமும் விதிக்கப்பட்டுள்ளது. இவ்விடத்தில், நாரிஷ் டஹோமம்
உண்டாக்கும் அதே அபூர்வத்தைத் தான் உபஹோமம் உண்டாக்கும் என்பதற்கு எந்த ப்ரமாணமும் இல்லாததால், இரண்டையுமே
செய்ய வேண்டும். ஒன்று மற்ற ஒன்றைப் பாதிக்காது.

பிரதி ஷேதத்தால் பாதம்
ப்ரதிஷேதம் என்றால் ஒன்றைச் செய்யாதே என்ற உபதேசம்.
ஒன்றைத் தவிற மற்றவற்றைச் செய் என்ற கட்டளைக்கு பர்யுதாஸம் என்று பெயர்.
• பொதுவாக யாகங்களின் யஜமாநன் சில ரித்விக்குளை அவனுக்குத் துணையாக அழைத்து, அவர்களை வரிக்க வேண்டும்.
ஆனால், மஹாபித்ரு யஜ்ஞம் என்று அழைக்கப்படும் விக்ருதியில் ’ஹோதா என் ற ரித்விக்கை வரிக்காதே ’ என்று கட்டளை உள்ளது.
• பூர்வபக்ஷம் – ப்ரக்ருதியில் ஹோதாவை வரிக்க வேண்டும் என்ற கட்டளை உள்ளது. எனவே அதிதேசத்தால் ஹோதாவை வரித்தல்
என்ற செயல் இந்த விக்ருதியை வந்து அடையும். ஆனால் விக்ருதியில் ’ஹோதாவை வரிக்காதே ’ என்று ப்ரதிஷேதம் / நிஷேதம் உள்ளது.
ஆகையால், சாஸ் த்ரமே ஹோதாவை வரிக்க வேண்டும் என்றும் வரிக்க வேண்டாம் என்றும் சொல்கிறபடியால் இரண்டுக்கும்
விகல்பம் தான், நம் ஆசைப்படி ஏதோ ஒன்றைச் செய்யலாம்.
• ஸித்தாந்தம் – விகல்பம் ஒப்புக் கொண்டால் பல தோஷங்கள் ஏற்படுகின்றன. ஆகையால், பர்யுதாஸம் சொல்வது தான் சிறந்தது.
பர்யுதாஸம்-இதைத்தவிர வேறே ஒன்றைச் செய்யாதே -சொல்வது தான் சிறந்தது.-
எனவே , இந்த கட்டளைக்கும் நாம் கல்பித்த கட்டளைக்கும் தொடர்பைக் கல்பித்து, ’மஹாபித்ரு யஜ்ஞத்தில் ஹோதாவை
வரித்தலைத் தவிற மற்ற அங்கங்கள் அனைத்தையும் செய்ய வேண்டும்’ என்று பொருள் கொள்ள வேண்டும். ஆகையால்,
இங்கு ஹோதாவை வரித்தல் என்ற செயல் பாதிக்கப்படுகிறது, ஆனால் பர்யுதாஸத்தின் மூலம், ப்ரதிஷேதத்தால் அல்ல.

தர்ச பூர்ண மாஸங்களில் ஆறு ப்ரதான யாகங்கள் சொல்லப் பட்டுள்லன. அவற்றின் அங்கங்களில்
ஆஜ்யபாகங்கள் என்று இரு யாகங்கள் உள்ளன. அவற்றை உபதேசித்துவிட்டு, ’இவற்றை ஒரு விக்ருதி யாகத்தில்
செய்யக்கூடாது’ என்று ஒரு கட்டளை உள்ளது.
• இங்கும் முன் சொன்னது போல் ப்ரதிஷேதம் ஒப்புக் கொண்டால் விகல்பம் ஏற்படும் என்ற காரணத்தால் பர்யுதாஸம் தானா?
’அந்த விக்ருதியில் ஆஜ்யபாகங்கள் தவிற மற்ற அங்கங்களைத்தான் அதிதேசம் செய்ய வேண்டும்’ என்று பொருளா?
என்று பார்த்தால், அல்ல. ஏன் என்றால்,
எங்கோ இருக்கும் விக்ருதியின் அதிதேச வாக்யத்துக்கும் இங்கிருக்கும் வாக்யத்துக்கும் தொடர்வை கல்பிக்க இயலாது.
• ஆகையால், தவறு வழி இல்லாமல் இது ப்ரதிஷேதம் தான். ஆகையால், அந்த விக்ருதி யாகத்தில் ஆஜ்யபாகங்களுக்கு பாதம் ஏற்படுகிறது

————

பாடம் -24- அத்யாயம் -11-
• மீமாம்ஸா சாஸ்த்ரத்தின் பத்தாவது அத்யாயத்தில் பாதம் என்பது விசாரிக்கப்பட்டது.
ஆக பத்து அத்யாயங்களால் ப்ரக்ருதி கர்மங்களிலும் விக்ருதி கர்மங்களிலும் எவை எல்லாம் அங்கங்கள் ஆகின்றன என்பது
முடிவாகியுள்ளது. இப்படி அந்தந்த யாகத்தில் ப்ரயோஜ்யமான அங்கங்கள் முடிவான பிறகு, அவற்றின் ப்ரயோகத்தைப் பற்றின விசாரம்
செய்யப் படுகிறது, தந்த்ரம் என்பதை விசாரிப்பதன் மூலம்.
• தந்த்ரம் என்றால் பலவற்றைக் குறித்து ஒரே முறை அநுஷ்டித்தல்.
• ப்ரயோக விதியானது அங்கங்களையும் ப்ரதாநங்களையும் சேர்த்து விதிக்கிறபடியால் அதிலிருந்து ஒரு சேர்க்கை நமக்குத் தோற்றுகிறது.
அச் சேர்க்கை , ஒரே க்ஷணத்தில் அவை அனைத்தையும் செய்தால் தான் ஏற்படும். ஆனால், எங்கு அது இயலாதோ அங்கு இடை விடாமல்
அடுத்தடுத்து அநுஷ்டானம் செய்ய வேண்டும் என்று வேதமே கூறுகிறது .
• ஆனால், எங்கு எங்கு முடியுமோ அங்கு சேர்த்தே அநுஷ் டிக்க வேண்டும், அதற்கு தான் தந்த்ரம் என்று பெயர்.
• (1) ப்ரதாந யாகங் களில் தந்த்ரம் –
வெவ்வேறு தேவதைகளைக் குறித்து செய்யும் யாகங்களை ஒரே நொடியில் சேர்த்துச் செய்ய முடியாவிட்டாலும்,
ஒரே தேவதைக்காகச் செய்யப் படும் பல யாகங்களை ஒரே க்ஷணத்தில் சேர்த்துச் செய்யலாம்.ஆகையால், இது தந்த்ரம் ஆகும்.
• (2) அங்கங்களுக்குள் தந்த்ரம் –
பல யாகங்களுக்கு அங்கமாக ஒரே செயல் இருக்கும் பொழுது, அவற்றுக்குள் காலத்தாலோ தேசத்தாலோ
எந்த வேறுபாட்டையும் வேதம் காட்டா விட்டால், வேறுபாடு அறியாதபடியாலேயே அந்தச் செயலை ஒரே முறை செய்வதன் மூலம்
அனைத்து யாகங்களுக்கும் உதவலாம். இது அங்கங்களில் தந்த்ரம் ஆகும்

தந்திரம் ஏற்படுமா
• பூர்வபக்ஷம்
• தர்சபூர்ணமாஸம் என்ற கர்மத்தில் உள்ள ஆறு ப்ரதாந யாகங்கள் தனித் தனி விதி வாக்கியங்களால் விதிக்கப்படுகின்றன.
ஆகையால், அவை ஒவ் ஓன்றும் தங்கள் தங்கள் பலனை உண்டாக்க தனித் தனியே ஸாமர்த்யம் படைத்தவை என்று அறிகிறோம்.
• அடுத்து, ஒரு வேத வாக்கியம், இந்த யாகங்களுக்கு எல்லாம் ஸ்வர்கம் தான் பயன் என்று சொல்கிறது.
ஆகையால், தனித்தனியே ஒவ் ஓரு யாகத்தைச் செய்வதாலும் ஸ்வர்கம் பெறலாம்.
• ஆகையால், ஒன்றைச் செய்யும் பொழுது மற்ற ஓரு யாகத்தைச் செய்யும் ஆசை இருக்கத் தேவையில்லை .
எனவே அவற்றினிடையே ஒரு எத்ர்பார்ப்பு இல்லாத படியால் ஒரே ப்ரயோக விதிக்கு அவை இலக்கு ஆக மாட்டா.
• ஆகையால், அவற்றைச் சேர்த்து அநுஷ்டிக்க வேண்டும் என்று வேதம் சொல்லாத படியால், தந்த்ரம் என்பதே கிடையாது.
•ஸித்தாந்தம்
• முதலில் தனித்தனியே யாகங்கள் போதிக்கப் பட்டிருந்தாலும் அவை அனைத்துக்கும் சேர்த்து ஸ்வர்கம் என்ற ஒரே பயன் வேதத்தால்
சொல்லப் பட்டுள்ளது. ஆகையால், அவை ஒவ் ஓன்றும் மற்ற 5 யாகங்களை எதிர்பார்த்து தான் பலத்தைக் கொடுக்கின்றன.
• ஆகையால், பரஸ்பரம் எதிர்பார்ப்பு உள்ளபடியால் அனைத்துக்கும் சேர்த்து ஒரே ப்ரயோக விதி தான் உள்ளது.
ஆகையால், ஆறு ப்ரதாந யாகங்களையும் அவற்றின் அங்கங்கள் அனைத்தையும் சேர்த்தே செய்ய வேண்டும் என்பது வேதத்தின் எண்ணம்.
• ஆகையால், பல ப்ரதாநங்களைக் குறித்து ஒரு செயலை ஒரே முறை செய்யும் தந்த்ரம் என்பது ஏற்படலாம்.

கபிஞ்ஜல அதிகரணம் -உத்தர அதிகரணம்
• கபிஞ்ஜலாதிகரணம்
• வேதத்தில் ’வஸந்தம் என்ற தேவதைக்காக கபிஞ்ஜலங்களைக் கொண்டு யாகம் செய்ய வேண்டும்’
என்று ஒரு வாக்கியம் விதிக்கிறது.
• பூர்வபக்ஷம் –
இங்கு ’கபிஞ்ஜலங்கள்’ என்று பன்மை இருக்கிற படியால், பன்மை யானது மூன்று தொடங்கி இருக்கும் அனைத்து
எண்ணிக்கைகளையும் குறிக்கும் என்பதனால் யஜமாநனின் இஷ்டப்படி இரண்டுக்கு மேற்பட்ட எத்தனை
கபிஞ்ஜலங்களை வேண் டுமானாலும் பயன் படுத்தலாம்
•ஸித்தாந்தம் –
பன்மையைப் பார்த்தவுடன் முதலில் நினைவுக்கு வருவது மும்மை தான். மேலும், நான்கு ஐந்து என்ற
எதை எடுத்தாலும் அதில் மூன்றும் அடங்கும் என்பதனால் மும்மை என்பது தவிர்க்கமுடியாதது.
ஆகையால், மூன்று கபிஞ்ஜலங்களைப் பயன் படுத்தினாலே சாஸ்த்ரம் சொன்னது நிறைவேறி விடும்
என்பதால் பன்மைக்கு மும்மை தான் பொருள்
• உத்தராதிகரணம்
• தர்சபூர்ணமாஸத்திலுள்ள பால் யாகத்துக்காக மாடுகளைக் கறக்கும் போது
’மூன்று மாடுகளைக் கறந்து விட்டு மேலுள்ள மாடுகளைக் கறக்க வேண்டும்’ என்று வேதம் சொல்கிறது.
• பூர்வபக்ஷம் –
இங்கும் பன்மைக்கு மும்மை தான் பொருள். ஆகையால், மேலுள்ள மாடுகளில் மூன்றை மட்டும் கறக்க வேண்டும்.
•ஸித்தாந்தம் –
இங்கு ’அன்று இரவு குழந்தைகளுக்கும் பால் கிடைப்பதில்லை , பாலால் இவன் அக்நி ஹோத்ரமும் செய்ய முடியாது’ என்று
வேதம் சொல்கிற படியால், அந்த யஜமானனிடம் எத்தனை மாடுகள் உள்ளனவோ அவை அனைத்தையும்
கறக்க வேண்டும் என்று தெரிகிறது–மூன்றோடு நிறுத்தக் கூடாது –

ஆதாநம் ஒரு முறை தான்
•ஒரு யாகத்தைச் செய்ய அத்யயநம் செய்து பெற்ற வித்யை ,
ஆதாநம் செய்து பெற்ற அக்நிகள், ஸாமர்த்யம் ஆகியவை தேவை என்று பார்த்தோம்.
•ஒவ்வொரு யாகத்துக்கும் அக்நிகள் தேவைப்படுகிறபடியால், ஒவ்வொரு யாகத்துக்கு
முன்னாலும் ஆதாநம் செய்ய வேண்டுமா என்பது கேள்வி.
•பதில் – ஆதாநத்தால் கிடைக்கும் அக்நிகள் அனைத்து யாகங்களிலும் பயன்பட்டாலும், ஆதாநம் எந்த ஒரு
யாகத்தின் ப்ரகரணத்திலும் சொல்லப் படவில்லை .
அநாரப்யாதீதமாகச் சொல்லப் பட்டபடியால் அனைத்து யாகங்களுக்கும் பொதுவானது. மேலும், ’வஸந்த காலத்தில்
ஆதாநம் செய்ய வேண்டும்’ என்று தனியே ஆதாநத்துக்கு என்று ஒரு காலம் சொல்லப்பட்டபடியால்,
அவனத்து யாகங்களுக்காகவும் சேர்த்து ஒரே முறை ஆதாநம் செய்ய வேண்டும் என்று தெரிகிறது.
•ஆகவே ,ஆதாநம் செய்வதும் தந்த்ரம் தான்

விதிக்கப் பட்டதும் விதிக்கப் படாததும்
• ஸோம யாகத்தில் காலையில் இருந்து தொடங்கி மதியம் ருத்விக்குகளுக்கு தக்ஷிணை கொடுக்கும் வரை
யஜமாநனுக்கு அரிப்பு ஏற்பட்டால், சொரிந்து கொள்வதற்காக ஒரு மான் கொம்பு விதிக்கப்பட்டுள்ளது சாஸ்த்ரத்தால்.
• மதியம் தக்ஷிணை கொடுத்த பிறகு மான் கொம்பை ஒரு குழியில் எறிந்துவிட வேண்டும் என்று வேதம் சொல்கிறது.
ஆகையால், மதியம் யாகத்தைத் தொடரும் போது அரிப்பு ஏற்பட்டால் கையால் தான் சொரிந்து கொள்ள வேண்டும்.
• இந்த யாகத்தின் விக்ருதியாக பல நாட்கள் செய்யும் ஸோம யாகங்கள் உள்ளன.
அவற்றில் ஒவ்வொரு நாளும் மதியும் ருத்விக்குகளுக்கு தக்ஷிணை கொடுக்க வேண்டும்.
• கேள்வி – முதல் நாள் தக்ஷிணை கொடுத்த பின்பு மான் கொம்பை எறிய வேண்டுமா?
கடைசி நாள் தக்ஷிணையைக் கொ டுத்த பின்பு எறிய வேண்டுமா?
• பூர்வபக்ஷம் –
நம் இஷ்டப்படி செய்யலாம். முதல் நாள் மதியம் அதை எறிந்துவிட்டால், இரண்டாம் நாள் தொடங்கி காலையில் யாகம்
செய்யும் பொழுது அரிப்பு ஏற்பட்டால் சொரிந்து கொள்ள மான் கொம்பு இல்லாதபடியால் சாஸ்த்ரத்தை மீறினவராவோம்.
கடைசி நாள் எறிந்தால், முதல் நாள் தொடங்கியே மதியம் கையால் சொரிய வேண்டும் என்று வேதம்
சொன்னதை மீறினராவோம்.ஆகையால், ஒரு வேறுபாடும் இல்லை .
•ஸித்தாந்தம் –
கடைசி நாள் தான் எறிய வேண்டும். தினமும் காலையிலும் மான் கொம்பால் சொரிந்து கொள்ளுதல் என்பது விதிக்கப்பட்டதே
தவிற மதியம் கையால் சொரிந்து கொள்வது வேதத்தில் விதிக்கப்படவில்லை ,
நாமாக அறிந்து கொண்டது தான்.ஆகையால், அதற்கு பாதம் ஏற்பட்டால் தவறில்லை

————

பாடம் -25- அத்யாயம் -12-பிரசங்கம் –
• பதினோராவது அத்யாயத்தில் தந்த்ரம் என்பதை விசாரித்து, கடைசியாக பன்னிரண்டாம்
அத்யாயத்தில் ப்ரஸங்கம் என்பதைப் பற்றி ஆராய்கிறார் மஹர்ஷி ஜைமிநி.
• ப்ரஸங்கம் என்றால் – ஒரு யாகத்துக்குத் தன் அங்கம் ஒன்றிலிருந்து கிடைக்க வேண்டிய உதவியானது
வேறே ஓரு வழியில் கிடைத்து விட்டால் அந்த அங்கத்தைச் செய்யாமல் இருப்பது.
• எடுத்துக்காட்டு –
அக்நீ ஷோமீயம் என்று ஒரு யோகம் உள்ளது. அது தர்ச பூர்ண மாஸத்தில் இந்த்ரனுக்காகச் செய்யப்படும் தயிர் யாகத்தின்
விக்ருதி ஆகும். அந்த அக்நீ ஷோமீய யோகத்துக்கு அங்கமாக புரோடாச யோகம் ஒன்று உள்ளது.
அதுவும் தர்ச பூர்ண மாஸத்தின் விக்ருதிதான் .
தர்ச பூர்ண மாஸங்களுக்கு எல்லாம் ப்ரயாஜங்கள் என்ற அங்கம் இருக்கிற படியால், அதி தேசத்தின் மூலம்,
இந்த அக்நீஷோமீயத்துக்கும் புரோடாச யாகத்துக்கும் கூட ப்ரயாஜங்கள் அங்கம் ஆகின்றன .

பிரசங்கம்
• இந் நிலையில், அக்நீஷோமீயம் என்ற யாகத்தின் பிரயோகம் -அனுஷ்டானம் பெரியது. அதற்கு
அங்கமான புரோடாச யோகத்தின் ப்ரயோகம் (அநுஷ் டானம் ) சிறியது.
ஆகையால், புரோடாச யாகத்தின் அநுஷ்டானம் அக்நீஷோமீய அநுஷ்டானத்துக்குள் அடங்கியது தான் .
• உதாஹரணத்துக்காக,
அக்நீ ஷோமீய யாகத்தின் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை செய்கிறேன் என்று வைத்துக் கொள்வோம் .
அதற்கு அங்கமான ப்ரயாஜங்களை காலை 7 மணிக்கு செய்ய வேண்டும். அதே போல், புரோடாச யாகத்தை
மதியம் 12 மணி முதல் 1 மணி வரை செய்கிறேன் -அதற்கு அங்கமான ப்ரயாஜங்களை மதியம் 12:30 மணிக்கு செய்ய வேண்டும்.

• இந் நிலையில் காலை 7 மணிக்கு அக்நீ ஷோமீயத்துக்கு அங்கமாக நான் ப்ரயாகங்களைச் செய்தவுடன்
அதிலிருந்து அபூர்வம்/ அத்ருஷ்டம்/புண்ணியம் உண் டாகிறது. அந்த அபூர்வம் யோகத்தின் ப்ரயோகம் முழுவதும்
முடிந்து பரம அபூர்வம் உண்டாகும் வரை இருக்க வேண்டும் என்ற படியால் மாலை 6 மணி வரை இருக்கப் போகிறது.
• இந் நிலையில், மதியம் நான் புரோடாச யோகத்தைச் செய்யும் பொழுது, அந்த யாகத்துக்கும் ப்ரயாஜங்களால்
உண்டான உதவி (அபூர்வம்) தேவைப்படும் பொழுது, நான் காலை செய்த ப்ரயாஜங்களால் உண்டான
அபூர்வம் ஸித்தமாக (தயாராக) இருக்கிற படியால் அதுவே புரோடாச யாகத்துக்கும் உதவி செய்து விடும். ஆகையால்,
தனியான புரோடாச யாகத்துக்கு அங்கமான ப்ரயோஜங்களை அநுஷ்டிக்கத் தேவை யில்லாமல் போகிறது –
• அக்நீ ஷோமீய யாகத்துக்கு அங்கமான ப்ரயாஜங்களில் இருந்தே புரோடாச யோகத்துக்கு தேவையான உதவியும்
கிடைத்து விட்ட படியால், புரோடாச யாகத்துக்கு எனத் தனியாக ப்ரயோஜங்களைச் செய்யத் தேவையில்லை
இதுவே ப்ரஸங்கம் ஆகும்.

மற்ற அங்கங்கள்
• ப்ரஸங்கம் ஏற்படும் இடத்தில், ஒரு யாகத்துக்குத் தன் அங்கத்திடம் இருந்து வர வேண்டிய உபகாரம் வேறே ஒன்றிலிருந்து
கிடைக்கிற படியால், அதற்கு என எந்த அங்கங்களும் தேவையில்லை -ஆகையால் அதிதேசமே வேண்டாம் என்று சொல்லக் கூடாது
• அதிதேசம் என்பது நாம் வேதத்தைக் கற்று ஆராயும் போது நாம் மனசால் ஏற்படும் ஒன்று.
அதன் மூலம் புரோடாச யாகத்துக்கும் அங்கமாகப் ப்ரயாஜங்கள் கண்டிப்பாக வந்து சேர்கின்றன
• அதற்குப் பிறகு, எப்பொழுது ப்ரயோக விதியால் ப்ரயோகம் என்ற அனுஷ்டானத்தை விதிக்கிறதோ,
அப்பொழுது தான் இந்த யாகத்துக்குத் தேவையான ஒரு உதவி வேறே ஓரு வழியில் கிடைக்கிற படியால், இதற்கு
அங்கமோ ப்ரயாஜங்களைச் செய்ய வேண்டாம் என்ற காரணத்தால், ப்ரயோக விதி ”ப்ரயாஜங்களைச் செய் ” என்று கட்டளை இடாது
• இப்படி இருக்கும் நிலையில், அக்நீ ஷோமீய யாகத்துக்கு அங்கமாக இல்லாத ஒரு செயல் புரோடாச யாகத்துக்கு அங்கமாக இருந்தால்,
அப்பொழுது ப்ரஸங்கம் ஏற்பட வாய்ப்பே இல்லை . ஆகையால் புரோடாச யாகத்தின் அங்கமாக அந்தச் செயலைச் செய்தே
ஆக வேண்டும்.
• எடுத்துக் காட்டு – அக்நீ ஷோமீயத்தில் ஆஜ்ய பாகங்கள் என்ற அங்கங்கள் கிடையாது
ஆனால் புரோடாச யாகத்தில் அவை அங்கங்கள் தான் . ஆகையால் , ப்ரஸங்கம் ஏற்பட முடியாததால்,
புரோடாச யகத்துக்காக ஆஜ்ய பாகங்களைச் செய்து தான் ஆக வேண்டும் –

பலருக்காக சிலரை விடலாம்
• இந்த அத்யாயத்தில் “பூயஸாம் ஸ்யாத் ஸ்வ தர்மத்வம்” என்று ஒரு ந்யாயம் சொல்லப் படுகிறது.
ஒரு கூட்ட த்தில், சிலருக்கு ஒரு தேவையும் பலருக்கு வேறே ஓரு முரண் பட்ட தேவையும் இருந்தால்,
பலரின் எதிர் பார்ப்பைப் பூர்த்தி செய்வதே சரியானது என்பது தான் அந்த நியாயம் –

• வேதத்தில், கீழ்க் கண்ட ஏழு யாகங்கள் சேர்த்து ஒரு பலனுக்காக விதிக்கப் பட்டுள்ளன .
இவற்றில் ஒவ் வொரு யாகமும் தர்சபூர்ணமாஸத்தில் இருக்கும் 6 யோகங்களுள் ஏதோ ஒன்றின் விக்ருதி ஆகும்.
எந்த யாகத்தின் விக்ருதியாக எந்த யாகம் உள்ளதோ, அது அதன் தன்மைகளைக் கொண்டு இருக்கும்

1-அக்னிக்கு புரோடாசம் -ஆக்னேய யாகத்தின் விக்ருதி
2-இந்திரனுக்கு புரோடாசம் -ஐந்த்ராக்னி யாகத்தின் விக்ருதி
பிரஜாபதி தேவதைக்காக ஐந்து
1-தயிர் -இந்திரனுக்கான தயிர் யாகத்தின் விக்ருதி
2-தேன் -உபாம்சு யாஜத்தின் விக்ருதி
3-நெய் -உபாம்சு யாஜத்தின் விக்ருதி
4-நீர் -உபாம்சு யாஜத்தின் விக்ருதி
5- தான்யம் -ஆக்னேய யாகத்தின் விக்ருதி

தர்ச பூர்ண மாஸத்தில் ஆக்நேய யோகம் அமாவாசையிலும் பௌர்ணமியிலும் செய்யப்படுகிறபடியால்,
அதன் விக்ருதிகளும் (யோகம் 1 மற்றும் யோகம் 7) இரண்டுக்கும் பொது வானவை .
• ஐந்த்ரோக்ந யோகமும் இந்த்ரனுக்கான தயிர் யாகமும் அமாவாஸையில் மட்டும் உள்ளபடியால் அவற்றின்
தன்மைகள் தான் அவற்றின் விக்ருதிகளுக்கும் (யாகம் 2 மற்றும் யாகம் 3)
• உபாம்சு யாஜம் பௌர்ணமியில் செய்யப்படுகிறபடியால், அதன் விக்ருதிகளுக்கு
(யாகம் 4,5,6) பௌர்ணமியின் தன்மைகள் தான் –

சமமானவர்களுள் முதலாவது
பலருக்கு ஒரு விருப்பமும் சிலருக்கு வேறே ஓரு விருப்பமும் இருந்தால் பலரின் விருப்பத்தைச் செய்ய வேண்டும் என்று பார்த்தோம்.
•ஸமமான எண்ணிக்கையக் கொண்ட இரண் டு பக்ஷங்களுக்குள் முரண் பாடு வந்தால் முதலில் சொல்லப் பட்டத்தை
எடுத்துக் கொள்ள வேண்டும். இதை நாம் உபக்ரம ந்யாயம் என்ற விஷயத்திலும் முன்னமே பார்த்தோம் .
• வேதத்தில், புரோடாசத்தை வைத்து செய்யப்படும் ஆக்நா வைஷ்ணவம் என்ற ஒரு யாகமும்
ஸரஸ்வதிக்காக நெய்யைக் கொண்டு செய்யப்படும் யாகமும் சேர்ந்து ஒரே பயனுக்கக விதிக்கப் பட்டுள்ளன .
இதில் முதல் யாகம், தர்ச பூர்ண மாஸத்தில் அமாவாசை யன்று செய்யப்படும் ஐந்த்ராக்ந யாகத்தின் விக்ருதி.
இரண்டாம் யாகம் பவுர்ணமி அன்று செய்யப்படும் உபாம்சு யாஜத்தின் விக்ருதி.
•ஆகையால் முதல் யாகத்துக்கான ஆஜ்ய பாகங்கள் வ்ருதந்வதீ மந்த்ரங்களோடும்
இரண்டாவதற்கான ஆஜ்ய பாகங்கள் வார்த்ரக்நீ மந்த்ரத்தோடும் செய்யப் பட வேண்டியவை –
ஆனால் தந்த்ரமாக ஒரே முறை செய்கிற படியால் ஏதோ ஒன்றைத் தான் செய்ய முடியும்.
•ஸித்தாந்தம் – முதலில் சொல்லப் பட்ட படியால் ஆக்நா வைஷண யாகத்தால் எதிர் பார்க்கப்படும்
வ்ருதந்வதீ மந்த்ரத்தத்தைத் தான் சொல்ல வேண்டும்

காம்ஸ்ய போஜி நியாயம்
• ஒரு கூட்டத்தில் , பலருக்கு எந்த சிறப்பு எதிர்பார்ப்பும் இல்லை , ஆனால் சிலருக்கு ஒரு விசேஷ எதிர்பார்ப்பு
உள்ளது என்றால் , அந்த சிலரின் எதிர் பார்ப்பு தான் செய்யப்பட வேண்டும் –
• வேதத்தில் ஆக்ரயணம் என்ற ஒரு கர்மத்தில் ஐந்த்ராக்நம்,
வைச்வதேவம் , த்யாவா ப்ருதிவ்யம் என்று மூன்று யாகங்கள் சொல்லப் பட்டுள்ளன
. இவற்றில் முதல் இரண்டு யாகங்களில் இந்தப் புல்லைத் தர்பமாகப் பயன்படுத்த வேண்டும் என்ற
எந்த நியமமும் வேதத்தில் சொல்லப்பட வில்லை –
ஆனால் மூன்றாவதில் ப்ரஸூநமயமோ (பூவோடு கூடின / வெட்டப்பட்டு மறுபடியும் வளர்ந்த) புல்லைக் கொண்டு
செய்ய வேண்டும் என்று சொல்லப் பட்டுள்ளது
•ஆகையால், முதல் இரண்டு யாகங்களுக்கும் எந்த விசேஷ எதிர்பார்ப்பும் இல்லாத படி யாகையால் ,
மூன்றாவது யாகத்தின் தேவைப்படியே மூன்றையும் செய்ய வேண்டும்
• இதற்கு அடிப்படை காம்ஸ்ய போஜி ந்யாயம் ஆகும் – குரு என்பவர் சிஷ்யரை விட உயர்ந்தவர்.
குருவிற்கு ’இந்த பாத்திரத்தில் தான் சாப்பிட வேண்டும் என்ற நியமம் இல்லை -.
ஆனால் சிஷ்யன் ’பித்தளை பாத்திரத்தில் மட்டும் தான் உண்பேன் என்ற நியமம் கொண்டவர் –
இந்நிலையில், இருவரும் சேர்ந்து ஒரே பாத்திரத்தில் உண்ணும் பொழுது, குரு உயர்ந்தவராக இருந்தாலும்
சிஷ்ய விஷயத் தேவைக்கு ஏற்பத் தானும் பித்தளை பாத்திரத்தில் தான் உண்ண வேண்டும்.
அதே ந்யாயம் தான் இங்கும் சொல்லப்படுகிறது.

விகல்பமும் சமுச்சயமும் –
ஒரு த்ருஷ்டமான ப்ரயோஜனத்துக்காக்க இரண்டு பொருள்கள் விதிக்கப் பட்டால் அவற்றில்
ஏதோ ஒன்றைத் தான் உபயோகிக்க முடியும் / செய்ய முடியும்.
ஆகையால் அவ்விடத்தில் அவ்விடத்தில் விகல்பம் ஏற்படும். எடுத்துக்காட்டு – புரோடாசத்தை செய்வது என்ற
த்ருஷ்டமான ப்ரயோஜனத்துக்கு நெல் மற்றும் யவம் என்ற இரண்டு தானியங்கள் வேதத்தால் போதிக்கப் பட்டுள்ளன
ஆகையால் அவற்றில் ஒன்றைத் தான் உபயோகிக்க முடியும் என்ற விகல்பம் ஏற்படுகிறது.
• அத்ருஷ்டத்துக்காக -அதாவது -அபூர்வம் என்ற புண்யத்துக்காக சில செயல்கள் விதிக்கப் பட்டால்
அதில் ஒரு செயலில் இருந்து வரும் அபூர்வம் மற்ற ஒன்றில் இருந்து வராது என்பதால்
ஒன்றைச் செய்தால் மற்ற ஓன்று வீணாகாது ஆகையால் அவற்றைச் சேர்த்தே செய்ய வேண்டும் –
இதற்கு சமுச்சயம் என்ற பெயர் -. எடுத்துக்காட்டு –
ப்ரயாஜங்கள் அநுயாஜங்கள் என்ற அங்கங்களுக்கு ஸமுச்சயம் தான் –
•அத்ருஷ்டமான ப்ரயோஜனங்கள் இருந்தால் எந்த இடத்தில் பிரயோஜனம் ஓன்று என்று முடிவு
செய்ய முடியுமோ அங்கு விகல்பம் தான் -எடுத்துக்காட்டு
– தர்ச பூர்ண மாஸம் செய்ய வேண்டிய ஒருவன் அமாவாசை அல்லது பௌர்ணமியைத் தெரியாமல் விட்டு விட்டால்
அதற்கு இரண்டு ப்ராயச்சித்த யாகங்கள் சொல்லப் பட்டுள்ளன .
அவை அத்ருஷ்டமான ப்ரயோஜனத்தை உண்டு செய்தாலும் தர்ச பூர்ணமாஸம் செய்யயாதலால் வந்த ஒரே பாபத்தைப் போக்க
இரு யாகங்களும் என்று நாம் அறிவோம்.ஆகையால் ஒன்றைச் செய்தால் மற்ற ஓன்று தேவையில்லை என்ற விகல்பம் ஏற்படுகிறது –

————–

சங்கர்ஷ தேவதா காண்டம் மேலே நான்கு அத்யாயங்கள்
மேலே மீமாம்ஸா தர்சனம் பார்ப்போம்

பாடம் –26-மீமாம்சையில் பிரமாணங்கள்

மீமாம்ஸா சாஸ்த்ரத்தின் பன்னிரண்டு அத்யாயங்களின் பொருளையும் நாம் படித்தோம்.
அதில் சொல்லப்பட்ட கருத்துக்களைக் கொண்டு தான் வேதத்தின் பொருள் நிச்சயிக்கப்படுகிறது.
இப்படி வேதத்தின் உபாங்கமாக விளங்கும் மீமாம்ளஸ, ஒரு தனி தர்சநமாகவும் வளர்ந்துள்ளது.
அந்த தர்சநத்தின் சிறப்பம்சங்களைத் தான் நாம் மேல் வரும் சில வகுப்புகளில் படிக்கப் போகிறோம்.
• ஒவ்வொரு தர்சநமும் அவர்கள் ஏற்கும் ப்ரமாணங்களையும், அவற்றால் அறியப்படும் விஷயங்களான
ப்ரமேயங்களளயும் நிர்ணயிக்க வேண்டும்.

ப்ரத்யக்ஷம், அநுமானம், சப்தம், உபமாநம், அர்த்தாபத்தி, அநுபலப்தி, ஸம்பவம் ஐதிஹ்யம் என்ற எட்டு ப்ரமாணங்கள் வெவ்வேறு
சாஸ்த்ரங்களில் சொல்லப்பட்டுள்ளன.
அவற்றில் சார்வாகர்கள் முதல் ப்ரமாணத்தை மட்டும் ஒப்புக் கொண்டார்.
பௌத்தர்களும் வைஸேஷிகர்களும் முதலிரண்டு ப்ரமாணங்களை ஏற்றனர்.
பாஸவஜ்ஞர் முதலான சில நையாயிகர்களும், ஸாங்க்ய மதத்தாரும் முதல் மூன்று ப்ரமாணங்களை ஏற்றார்கள்.
நையாயிகர்களில் பலர் முதல் நான்கு ப்ரமாணங்களை ஒப்புக் கொண்டார்கள்.
ப்ராகாரர்கள் என்ற ஒரு வகையான மீமாம்ஸகர்கள் முதல் ஐந்து ப்ரமாணங்களை ஏற்றனர்.
பாட்டர்கள் என்ற மீமாம்ஸகர்களும், அத்வைத தேதாந்திகளும் முதல் ஆறு ப்ரமாணங்களை ஒப்புக் கொண்டார்கள்.
இறுதியாக, பௌராணிகர்கள் என்பவர் எட்டு ப்ரமாணங்களையும் ஆதரித்தார்கள்.

• ந்யாய மதத்தில், ஒரு பொருளை உள்ளபடி காட்டிக்டுக்கும் ஜ்ஞாநம் ப்ரமா (யதார்த்த ஜ்ஞாநம்) என்று சொல்லப்பட்டது.
குமாரில பட்டரின் சிஷ்யர்களான பாட்ட மீமாம்ஸகர்கள் இதை ஏற்க வில்லை
• “முன்னால் அறியப்படாத விஷயத்தை உள்ளபடி காட்டிக் கொடுக்கும் அறிவு தான் ப்ரமா ” என்று அவர்கள் கூறுகிறார்கள்.
• ’முன்னால் அறியப்படாத’ என்று சொன்னபடியால், ஸ்ம்ருதி என்று அழைக்கப்படும் நினைவுக்கு ப்ரமா என்ற பெயர் கிடையாது என்று
அறியலாம், ஏன் என்றால் நிளனவு எப்பொழுதுமே முன்னால் அறியப்பட்ட விஷயத்தைப் பற்றியதாகத் தான் இருக்கும்.

• ’உள்ளபடி’ என்று சொன்னபடியால், ப்ரமம் ஸந்தேகம் முதலானஅறிவுகளுக்கும் ப்ரமா என்று பெயர் கிடையாது என்று தேருகிறது.
• கேள்வி – தாராவாஹிக ஜ்ஞாநம் (அறிவுத் தொடர்) என்று ஒன்று உண்டு. நீண்ட நேரத்துக்கு நான் என் கண்ணால் ஒரு குடத்தைப் பார்த்தால்,
’இது குடம்’, ’இது குடம்’ என் ற அறிவு பல முறை ஏற்படும். இவை அனைத்துமே ப்ரத்யக்ஷம் என்ற அறிவு தான், ஸ்மரணம் அல்ல.
அறிவு என்பது சில வினாடிகள் மட்டுமே இருக்கும் ஒன்று, ஆகையால், நீண்ட காலத்துக்குள் அந்தக் குடத்தைப் பற்றின பல அறிவுகள் ஏற்பட வேண்டும்.
அதில் முதல் அறிவானது, நான் இதுவரை அறியாத குடத்தைக் காட்டிக் கொடுத்தபடியால் ப்ரமா ஆகும்.
அதற்குப் பிறகு, அதே குடத்தைப் பற்றி மறுபடியும் மறுபடியும் ஏற்படும் மற்ற ஜ்ஞாநங்கள் ப்ரமா ஆகுமா?
• பதில் – தாராவாஹிக ஜ்ஞாநத்தில் முதல் அறிவி லேயே குடம் அறியப்பட்டுவிட்டாலும், அது ’அந்தந்த வினாடியில் உள்ளது’ என்ற
புது புது அம்சம் அந்தந்த ஜ்ஞாநத்தில் புதிதாக அறியப்படுகிறபடியால் அவற்றையும் ப்ரமா என்று கூறலாம்.

ப்ராபகர மாதத்தில் ஞானம்
பாட்டர்களின் மதத்தில், கயிற்றை பாம்பு என்றும், கிளிஞ்சலை வெள்ளி என்றும், சங்கத்தை மஞ்சளானது என்றும்
காட்டிக் கொடுக்கும் தவறான அறிவுகள் உண்டு.
ந்யாய மதத்தில் அயதார்த்த ஜ்ஞாநம் எப்படி சொல்லப்பட்டதோ அதே போல்தான் பாட்ட மதத்திலும்.
• ப்ராபாகரர்கள் என்ற ஒரு வகையான மீமாம்ஸகர்களின் மதத்தில் வேறான அறிவு என்று ஒன்றே கிடையாது.
ஜ்ஞாநம் அனைத்துமே சரியானதுதான்.
• கயிற்றைப் பார்த்து பாம்பு என்று அறிகிறோமே , எப்படி அது சரியாக இருக்க முடியும்? அவர்களின் கூற்றைப் பார்ப்போம்.
• கயிற்றைப் பார்த்து ’இது பாம்பு’ என்று அறியும் இடத்தில் தோன்றுவது ஒரு ஜ்ஞாநமே அல்ல, இரண்டு ஜ்ஞாநங்கள்.
கண் முன் இருக்கும் பொருள் நீளாமானது, வளைந்தது , பச்சையானது என்று கண்ணால் அறிகிறேன்.
இது புலன்களால் ஏற்படும் ப்ரத்யக்ஷம் ஆகும்.
கயிற்றிலுருக்கும்’கயிற்றுத் தன்மை ’ என்ற ஸாமாந்யத்தை (ஜாதியை ) மட்டும் க்ரஹிக்க வில்லை .
இல்லாத ஒரு தன்மையை உள்ளது என்று நினைத்தால் தான் ப்ரமம் ஆகும்.
இருக்கும் தன்மையை க்ரஹிக்காதது குற்றமல்ல.ஆகதே, இந்த ஜ்ஞாநம் சரியானது தான்.
• அதே ஸமயத்தில், இதே தன்மைகளை உடைய ஒரு பாம்பை நான் முன் ஓரு நாள் கண்டிருந்தபடியால் பாம்பின் நிளனவு ஏற்படுகிறது.
இதிலும் எந்த பொய்யான தன்மையும் தோற்றவில்லை . இதுவும் சரி தான்.
• நினைவுக்கு வந்த பாம்புக்கும் கண் முன் இருக்கும் பொருளுக்குமுள்ள வேறுபாட்டை அறியாத படியால் அதைக் கண்டு பயந்து விட்டேன்.
• ஆகவே , ஒரு பொருளின் ப்ரத்யக்ஷம், மற்ற ஓரு பொருளின் ஸ்மரணம், அவற்றுக்குள் வேறுபாட்டை அறியாமை
என்ற மூன்று தான் உள்ளன. ப்ரமம் இல்லை

ஞானம் ப்ரத்யக்ஷமா அல்லவா –
ஆத்மாவினுடைய குணமான ஜ்ஞாநம் என்பதை புலன்களால் அறிய முடியுமா முடியாதா என்ற விஷயத்திலும் வாதமுள்ளது.
• ந்யாய மதத்தில், மனது என்ற புலனைக் கொண்டு ஆத்மாவையும், ஆத்மாவின் குணங்களான ஜ்ஞாநம், இச்சை , த்தேஷம், ஸுகம்,
துக்கம் முதலானவற்றை அறியலாம் என்று படித்துள்ளோம்.
• ந்யாய மதத்தில் ஒரு பொருளை நான் பார்த்தவுடன் ’இது குடம்’ என்ற அறிவு ஏற்படுகிறது. இதற்கு வ்யவஸாயம் என்று பெயர்.
அதற்குப் பிறகு, ’நான் குடத்தை அறிகிறேன்’ என்ற ஜ்ஞாநம் உண்டாகிறது. இதற்கு அநுவ்யவஸாயம் என்று பெயர்.
இதுதான் ஜ்ஞாநத்தைப் பற்றின ப்ரத்யக்ஷம்.
• ப்ராபாகர மதத்தில், முதலில் ஏற்படும் ஜ்ஞாமே பொருள், அறிவு, ஆத்மா என்று மூவரையும் காட்டிக் கொடுக்கும்,
அதாவது “நான் குடத்தை அறிகிறேன்” என்று தான் முதலிலேயே ஜ்ஞாநம் உண்டாகும்.
ஆகவே , ஜ்ஞாநம் புலன்களால் அறியக் கூடியது தான்.
• பாட்ட மதத்தில் ஜ்ஞாநம் புலன்களுக்கு அப்பாற்பட்டது. நமக்கு ஒரு ஜ்ஞாநம் ஏற்பட்டாலும், அதை நாம் மனதால் அறிய இயலாது.
நாம் அறிந்த விஷயத்தில் ’அறியப்படுதல்’ என்ற ஒரு தன்மையை முதலில் பார்த்து, இந்தப் பொருளில் அறியப் படுதல் என்ற தன்மை
உள்ளபடியால் நான் என்ற ஆத்மாவிடம் அறிவு இருக்க வேண்டும்’ என்று அநுமானம் செய்து தான் அறிவு உள்ளது என்றே அறிய முடியம்

த்ரிபுட ப்ரத்யக்ஷம் -குடத்தை நான் அறிகிறேன் குடமும் நான் அறிவு மூன்றுமே ப்ரத்யக்ஷம் –
மூன்றுமே அறியலாம் -ப்ராபகரர்கள் -ஞானம் ப்ரத்யக்ஷம்
பாட்ட மதத்தில் அனுமானத்தாலே அறிகிறோம் -குடம் அறியப்பட்டது என்றால் அறிவு இருக்க வேண்டும் என்று அனுமானம் செய்து கொள்ள வேண்டும் –

ஞானம் சரியானது என்று எப்பொழுது அறியலாம் –
ந்யாய மதத்தில் ஒரு ஜ்நாநம் சரியானதா தவறானதா என்பதை உடனடியாக அறிய முடியாது.
’இது ஜலம்’ என் றஅறிவு ஏற்பட்டவுடன் அதை எடுக்க முயற்சி செய்ய வேண்டும்.
குடத்தால் ஜலத்தை எடுக்க முடிந்தால், நமக்கு வந்த ஜ்ஞாநம் சரியானது என்று முடிவு செய்யலாம்.
குடத்தில் நீர் வராமல் மண் மட்டுமே வந்தால், நாம் கண்டது கானல்நீர், ஆகையால் நமக்கு ஏற்பட்ட
அறிவு தவறானது என்று அறியலாம்.
ஆகவே , ஒரு ஜ்ஞாநம் சரியானது என்றோ தவறானது என்றோ முயற்சி செய்த பிறகு தான் அறிய முடியும்.
இதற்கு ’பரத: க்ராஹ் யத்வம் ’ (வேறே ஒன்றின் மூலம் க்ரஹிக்கப் படுதல்) என்று பெயர்.
• மீமாம்ஸையில் (ப்ராபாகர மதத்திலும் பாட்ட மதத்திலும் பொதுவாக ) ஒரு ஜ்ஞாநம் ஏற்படும் பொழுதே அது சரியானது தான்
என்று அறியப்படுகிறது. இதற்கு ஸ்வத: க்ராஹ் யத்வம் (தானாக /இயற்கையாகவே அறியப்படுதல்) என்று பெயர்.
ஆனால், முயற்சி செய்த பிறகு, முயற்சி வீணாகப் போனால், நமக்கு ஏற்பட்ட அறிவு தவறானது என்று மட்டும் பின்னால் அறிகிறோம்.
ஆகையால், ஜ்ஞாநம் சரியானது என்று உடனே அறியலாம், தவறானது என்பதை பிற்காலத்தில் தான் அறியமுடியும்.

—————

பாடம் -27-மீமாம்ஸையில் பிரமாணங்கள்
•பாட்ட மதத்ததச் சசர்ந்த மீமாம்ஸகர்களால் ஆறு ப்ரமாணங்கள் ஒப்புக் கொள்ளப் படுகின் றன. அவையாவன –
1. ப்ரத்யக்ஷம்
2. அநுமானம்
3. சப்தம்
4. உபமாநம்
5. அர்த்தாபத்தி
6. அநுபலப்தி
இதில் முதல் ஐந்து ப்ரமாணங்கள் ப்ராபாகர மதத்தைச் சேர்ந்த மீமாம்ஸகர்களாலும் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளன.

ப்ரத்யக்ஷம்
• புலன்களுக்கும் ஒரு பொருளுக்கும் ஏற்படும் தொடர்பால் உண்டாகும் ஜ்ஞாநம் ப்ரத்யக்ஷம் ஆகும்.
• சக்ஷுஸ் , க்ராணம், ஸ்ரோத்ரம், ரஸநம், த்வக் மற்றும் மனஸ் ஆகியதை ஆறு புலன்களில்.
இதில் முதல் ஐந்தும் வெளிப் புலன்கள் வெளி விஷயங்களைக் க்ரஹிக்க உதவுகின்றன.
மனது உட்புலன். ஆத்மாவையும் அதன் பண்புகளையும் அறிய உதவுகிறது.
• இந்த்ரியத்துக்கும் பொருளுக்கும் ஏற்படும் தொடர்பு ஸந்நிகர்ஷம் என்று அழைக்கப் படுகிறது.
ந்யாய மதத்தில் ஆறு ஸந்நிகர்ஷங்கள் ஏற்கப் பட்டன.
ஆனால், மீமாம்ஸையில் இரண்டே ஸந்நிகர்ஷங்கள் தான் தேவைப் படுகின்றன.
• ந்யாய மதத்தில் ஏற்கப்பட்ட ஸமவாயம் என்ற ஸம்பந்தம் மீமாம்ஸையில் ஏற்கப் படவில்லை .
ஆகையால், குணத்துக்கும் அது இருக்கும் த்ர்வ்யத்துக்கும், செயலுக்கும் அது இருக்கும் த்ரவ்யத்துக்கும்,
ஸாமாந்யத்துக்கும் அது இருக்கும் த்ர்வ்யத்துக்கும் இடையில் ஸமவாயம் கிடையாது,–தாதாத்ம்யம் என்ற ஸம்பந்தம் தான் உண்டு.
• தாதாத்ம்யம் என்றால் ஐக்யம். குணமானது, தானிருக்கும் த்ர்வ்யத்தைக் காட்டிலும் முற்றிலும் வேறுபட்டதே அல்ல
என்பது மீமாம்ஸகர்களின் ஸித்தாந்தம். ஆகையால், கண்ணுக்கும் குடத்துக்கும் உள்ள தொடர்பு ஸம்யோகம்.
கண்ணுக்கும் குடத்திலிருக்கும் நிறத்துக்கும் / செயலுக்கும் / ஸாமாந்யத்துக்கும் உள்ள தொடர்பு ஸம்யுக்த தாதாத்ம்யம்.
நிறத்திலிருக்கும் நிறத் தன்மையும் நிறத்தைக் காட்டிலும் வேறுபட்டதே அல்ல,
ஆகையால் அங்கும் தாதாத்ம்யம் இருப்பதால் ஸம்யுக்த தாதாத்ம்யமே ஸந்நிகர்ஷம்.

• ஒரு பொருளை மற்ற த்ரவ்யம் / குணம் / க்ரியை / ஸாமாந்யம் / பெயர்-ஆகியவற்றோடு சேர்த்து க்ரஹிக்கும்
ஜ்ஞாநத்துக்கு ஸவிகல்பகம் என்று பெயர். விகல்பம் என்றால் வேறுபாடுகள்.
இந்த ஜ்ஞாநத்தில் பல வேறுபாடுகள் தோற்றுகிற படியால் இது ஸ விகல்பகம் ஆகும்.
• கையில் தடி பிடித்த, வெள்ளையான, தேவதத்தன் என்ற பெயரை உடைய மனிதன் நடக்கிறான்” என்ற ஒரு
சொல் தொடரில் த்ரவ்யம் , குணம், பெயர், ஸாமாந்யம், செயல் ஆகிய ஐந்து விகல்பங்களை யுமே நாம் அறியலாம்.
• இந்த ஜ்ஞாநம் ஏற்படுவதற்கு முன்பு,வெறுமனே ஒரு பொருளைப் பற்றின அறிவு ஏற்படும்.
அதற்கு நிர்விகல்பகம் என்று பெயர். அதில் ஸாமாந்யம், குணம், க்ரியை என்று எல்லாம் பிரித்து அறிய முடியாது.
ஸம்முக்தமாக / ஒன்றாகத் தான் அனைத்தும் தோற்றும்.
• ஒரு மாட்டை முதன் முதலில் காணும் பொழுது அதைப் பற்றின நிர்விகல்பக ப்ரத்யக்ஷம் ஏற்படும்.
அப்பொழுது என் கண்ணுக்கும் மாட்டுக்கும் தொடர்பு ஏற்பட்டவுடன், மாடு, அதன் அங்கங்கள், தன்மைகள், குணங்கள்
அனைத்தையும் நாம் க்ரஹிக்கிறோம்.
ஆனால் முதன் முதலில் ஏற்படும் நிர்விகல்பகத்தில் எது அனைத்து மாடுகளுக்கும் பொதுவான அம்சம், எது
இந்த மாட்டின் தனித்தன்மை என்பது எல்லாம் தெரியாது.
அந்த தன்மைகள் மட்டுமே அறியப்படுகின்றன.
• இந்த நிர்விகல்பக ப்ரத்யக்ஷத்துக்கு ஆலோசநா ஜ்ஞாநம் என்றும் பெயர் உண்டு.

அனுமானம்
• ந்யாய மதத்தில் போல் மீமாம்ஸையிலும் அநுமானம் ஏற்கப் படுகிறது.
• ஒரு பொருள் மற்ற ஓரு பொருளை விட்டுப் பிரியாமல் இருந்தால் அதற்கு வியாப்தி என்று பெயர்.
இப்படி வியாப்தி உடைய ஒரு பொருளை நாம் ஓரிடத்தில் கண்டால், மற்ற ஓரு பொருள் இருப்பதை ஊஹம் செய்யலாம்.
இதற்கு தான் அநுமானம் என்று பெயர். எடுத்துக் காட்டு –
புகை என்றுமே நெருப்பைப் பிரிந்து இருக்காது என்பதால் ஒரு மலையின் மேல் புகையைக்
கண்டால், அங்கு நெருப்பு உள்ளது என்று நான் முடிவு செய்யலாம்.
• வியாப்தியை க்ரஹிப்பதற்கு நாம் பல இடங்களில் புகையையும் நெருப்பையும் சேர்த்துப் பார்த்திருக்க வேண்டும்,
ஓரிடத்தில் கூட நெருப்பில்லாமல் புகையைக் கண்டிருக்கக் கூடாது.
• ந்யாய மதத்துக்கும் மீமாம்ஸா மதத்துக்கும் ஒரு முக்கிய வேறுபாடு அநுமானத்தை அடி ஒற்றி உள்ளது.
ந்யாய மதத்தில் பரார்த்த அநுமானம் ( வேறு ஒருவருடைய பயனுக்காகச் செய்யப்படும் அநுமானம்) என்று நாம் படித்தோம்.
அதில் ஐந்து அவயவங்கள் சொல்லப்பட்டன –
“மலையில் நெருப்பு உள்ளது” என்று ப்ரதிஜ்ஞா;
“புகை இருக்கிறபடியால்” என்று ஹேது;
“எங்கு எங்கு புகை உள்ளதோ அங்கு அங்கு நெருப்பு இருக்கும், அடுப்படியில் போல்” என்று உதாஹரணம்;
“அப்படி நெருப்பை விட்டுப் பிரியாத புகை இந்த மலையில் உள்ளது” என்பது உபநயம்;
“ஆகையால் இந்த மலையில் நெருப்பு உள்ளது” என்பது நிகமநம்.
• மீமாம்ஸகர்கள் இதை ஏற்க வில்லை .
இதில் சொன்னதையே சொல்கிறோம் என்று அபிப்ராயப்பட்டு 3 அவயவங்கள் போதும் என்கிறார்கள், அதாவது –
முதல் மூன்று அவயவங்களையோ கடைசி மூன்று அவயவங்களையோ ப்ரயோகம் செய்தாலே போதும் என்பது அவர்கள் கூற்று.

சப்த பிரமாணம்
• ந்யாய மதத்தில் போல் மீமாம்ஸையிலும் சப்த ப்ரமாணம் ஏற்கப் படுகிறது.
• முதலில் நாம் சொற்களுக்கும் அவற்றின் பொருள்களுக்கும் உள்ள தொடர்பை அறிய வேண்டும். இந்தத் தொடர்புக்கு சக்தி என்று பெயர்.
• அடுத்து, நாம் “ராமன் ராவணனைக் கொன்றான்” என்ற ஒரு சொல் தொடரைக் கேட்கிறோம்
. இதைக் கேட்டவுடன், இதிலிருக்கும் ஒவ்வொரு சொல்லின் ஒவ்வொரு பகுதியும் நமக்கு ஒரு பொருளை நினைவு படுத்துகிறது –
ராமன், ராவணன், கொலை , ஒருமை , கடந்த காலம், ஆண் பால் என்பது போல். இது தான் பதார்த்த ஸ்மரணம்
• பிறகு, அந்த பதார்த்தங்கள் (பொருள்கள்) எல்லாம் சேர்ந்து, வாக்யார்த்த ஜ்ஞாநம்
(சொல் தொடரின் பொருளைப் பற்றின அறிவை ) என்பதை உண்டாக்குகின்றன.
• இதில் ஆகாங்க்ஷா (சொற்களுக்கு இடையில் இருக்கும் எதிர்பார்ப்பு), யோக்யதா (சொல்லப் படும் அர்த்தத்தின் ஏற்புடமை ),
ஸந்நிதி (சொற்களை தாமதமில்லாமல் உச்சரித்தல்),
தாத்பர்ய ஜ்ஞாநம் (பேச்சாளர் எந்த எண்ணத்தோடு இந்தச் சொல் தொடரைச் சொன்னார் என்ற அறிவு) ஆகியவை உதவுகின்றன.
• சப்தம் இரண்டு வகைப்படும் – (1) லௌகிக சப்தம் – மனிதர்களால் சொல்லப்பட்டது. இது ப்ரமாணமாகவும் இருக்கலாம், அப்ரமாணமாகவும்
இருக்கலாம். பேச்சாளரின் நம்பகத் தன்மையைப் பொருத்தது அது.
(2) வைதிக சப்தம் – வேதம் என்னும் நூல் எப்பொழுதுமே முழுமையாக ப்ரமாணம் தான். அது
யாராலும் இயற்றப் படாதபடியால் மனிதனின் குறைகளால் ஏற்படும் சொற் குற்றங்ககளோ பொருட்குற்றங்களோ
வேதத்தில் ஏற்பட வாய்ப்பே இல்லை . ஆகையால் அது ப்ரமாணமே
• சொல் தொடரின் பொருளை அறிவதில் இரண்டு வழிகள் உள்ளன –
(1) கலே கபோத ந்யாயம் – அந்தந்த சொற்களால் நினைவு படுத்தப்பட்ட பதார்த்தங்கள்
அனைத்துமே சேர்ந்து ஒரே ஸமயத்தில் ஒரு கூட்டுப் பொருளை உணர்த்துகின்றன
(2) கண்ட வாக்யார்த்த போதம் – ஒரு சொல் தொடரின் சிறு பகுதிகளின் பொருளை
முதலில் அறிந்து, அதற்குப் பிறகு முழு சொல் தொடரின் பொருளை அறிதல்.

உபமானம்
• ந்யாய மதத்தில் சபோல் மீமாம்ஸையிலும் உபமாநம் எனற ப்ரமாணம் ஒப்புக் கொள்ளப் பட்டுள்ளது.
ஆனால், இரண்டு மதங்களிலும் சிறு வேறுபாடும் உள்ளது.
• நகரத்திலிருக்கும் என்னிடம் காட்டிலிருந்து ஒருவர் வந்து “மாட்டைப் போல் இருப்பது கவயம்” என்று கூறினார்.
பிறகு நானே ஒரு முறை காட்டிற்குச் சென்று மாடு போன்ற ஒரு ப்ராணியைப் பார்த்தேன்.
பார்த்தவுடன் அந்த மனிதர் எனக்குச் சொன்ன சொல் தொடரின் பொருள் ஞாபகம் வந்தது.
அதனால் “இது கவயம் என்று அழைக்கப் பட வேண்டும்” என்று அறிந்தேன்.
இப்படி சொல்லுக்கும் பொருளுக்கும் உள்ள தொடர்பைக் காட்டும் அறிவு தான் உபமிதி.
இதற்குக் காரணமாக ஸாத்ருச்யம் என் ற ஒற்றுமையைப் பற்றின ஜ்ஞாநம் தான் உபமாநம் – இது ந்யாய மதத்தின் படி உபமாநத்தின் விளக்கம்.
• மீமாம்ஸையில் சொல்லுக்கும் பொருளுக்கும் உள்ள தொடர்பைப் பற்றின ஜ்ஞாநம் உபமிதி என்று ஏற்கவில்லை .
“மாடு போல் உள்ளது இந்த ப்ராணி” என்று எனக்கு ஏற்பட்ட ஸாத்ருஸ்ய ஜ்ஞாநம் (ஒற்றுமையைப் பற்றின ஜ்ஞாநம்) தான் உபமானம்.
அதிலிருந்து தோன்றக் கூடிய “இந்தப் ப்ராணியைப் போல் தான் என்னுடைய மாடு உள்ளது” என்ற அறிவு தான் உபமிதி ஆகும்.
• அதாவது, கண் முன் இருக்கும் பொருளில் மாட்டின் ஒற்றுமையைக் காண்பது உபமாநம்.
நினைவுக்கு வரும் பொருளில் கண் முன்னாலிருக்கும் பொருளின் ஒற்றுமையைக் காட்டுவது உபமிதி.
• இது அதிதேசம் செய்யும் பொழுது மீமாம்ஸையில் உபயோகப்படும். ஸௌர்ய யாகத்தின் விதி வாக்கியத்ததப் பார்த்ததும்
“இதைப் போல்தான் ஆக்நேய யாகமும் உள்ளது” என்று நாம் அறிந்து உபமாந ப்ரமாணத்தால்.
இதை அறிந்தால் தான் ஆக்நேய யாகத்தின் அங்கங்களை ஸௌர்ய யாகத்திற்கு அதிதேசம் செய்து நம்மால் கொண்டு வர முடியும்.

அர்த்தா பத்தி

• பொருந்தாத இரண்டு ப்ரமாணங்களைப் பொருந்த வைப்பதற்காகக் ஒரு விஷயத்தைக் கல்பிப்பதற்குத் தான் அர்த்தா பத்தி என்று பெயர்.
எது பொருந்தாமலிருக்கிறதோ அதற்கு உபபாத்யம் என்று பெயர்.
அதைப் பொருந்த வைக்க எது கல்பிக்கப்படுகிறதோ அதற்கு உபபாதகம் என்று பெயர்.
• எடுத்துக் காட்டு 1 – தேவதத்தன் பருத்துள்ளான் என்று ஒரு ப்ரமாணத்தால்
அறிந்தேன். ஆகையால், பொதுவாக அவன் சாப்பிடுவான் என்று அறிந்தேன். அதே
ஸமயத்தில், வேறே ஓரு ப்ரமாணத்தால், அவன் பகலில் உண்பதே இல்லை என்று
அறிந்தேன். தேவதத்தன் உண்கிறான் என்னும் ப்ரமாணத்துக்கும், பகலில்
உண்பதில்லை என்னும் ப்ரமாணத்துக்கும் விரோதம் தோற்றி, அதைப் போக்குவதற்காக
“தேவதத்தன் இரவில் உண்கிறான்” என்று கல்பிக்கிறோம்.
• எடுத்துக் காட்டு 2 – ஜ்யோதிஷ சாஸ்த்ரத்தைக் கொண்டு தேவதத்தன் நூறு வயது வரை வாழ்வான் என்று நான் அறிந்தேன்.
ஆகையால், அவன் வீட்டிலோ அல்லது வேறே எங்கோ கண்டிப்பாக இருக்கிறான் என்று அறிவேன்.
அதே ஸமயம், அவன் வீட்டில் பார்த்த பொழுது அவன் காணப் படவில்லை .
இப்பொழுது “வீட்டிலோ வெளியிலோ இருக்கிறார்” என்னும் பொதுவான ப்ரமாணத்துக்கும் “வீட்டில் இல்லை ” என்ற
சிறப்புப் ப்ரமாணத்துக்கும் முறண்பாட்டைப் போக்குவதற்காக, வெளியிலே இருக்கிறான்” என்று கல்பிக்கிறோம். இதுவும் அர்த்தாபத்தி தான்.
• இது இரண்டு வகைப்படும் –
(1) த்ருஷ்ட அர்த்தா பத்தி – நாம் கண்ட ஒரு விஷயத்தைப் பொருந்த வைப்பதற்காக மற்ற ஓன்றைக் கல்பிப்பது
(2) ச்ருத அர்த்தா பத்தி – நான் கேட்ட ஒரு விஷயத்தைப் பொருந்தத வைப்பதற்காக மற்ற ஓன்றைக் கல்பிப்பது.
எடுத்துக்காட்டு – ஸ்ம்ருதி நூல் ப்ரமாணம் ஆவதற்காக ச்ருதியைக் கல்பிப்பது, ப்ரயாஜங்கள் தர்ச பூர்ண மாஸத்தின்
ப்ரகரணத்தில் படிக்கப் பட்டதைப் பொருந்த வைப்பதற்காக ச்ருதியைக் கல்பித்து ப்ரயாஜங்கள் தர்சபூர்ணமாஸத்தின் அங்கம் என்று அறிதல்.

அநுப லப்தி
பாவ பதார்த்தங்களை (இருக்கும் பொருள்களை ) க்ரஹிப்பதற்கு உதவும் ஐந்து ப்ரமாணங்ளைப் பார்த்தோம்.
ஆறாவது ப்ரமாணமான அநுபலப்தி என்பது அபாவத்தை (ஒரு பொருளின் இன்மையை ) க்ரஹிப்பதற்கு உதவுகிறது.
• முதல் ஐந்து ப்ரமாணங்களால் அறியப்பட முடிந்த ஒரு பொருளைப் பற்றின அறிவு ஓரிடத்தில் நமக்கு ஏற்படவில்லை என்றால்,
அவ்விடத்தில் அந்தப் பொருள் இல்லை என்று நாம் அறிகிசறாம்.
உபலப்தி என்றால் அறிவு. அநுபலப்தி என்றால் அறிவு தோன்றாமை -.
ஆகவே , அறியக் கூடிய ஒரு பொருளைப் பற்றின அறிவு தோன்றாமல் இருப்பது தான் அநுபலப்தி ஆகும்.
• இதில் இரண்டு அம்சங்கள் உள்ளன –
(1) பொருள் அறியப்பட முடிந்ததாக இருக்க வேண்டும். பிசாசு முதலானவை ஓரிடத்தில் இருந்தாலும் நம்மால் காண
முடியாது. ஆகையால், காணாமையைக் கொண் டு அது இல்லை என்று முடிவு செய்ய இயலாது
(2) அந்தப் பொருளைப் பற்றின அறிவு தோன்றாமல் இருக்க வேண்டும்.
• இதில் இரண்டாவதாகச் சொல்லப் பட்ட ’அறிவு தோன்றாமை ’ என்பது ஸத்தயா காரணம், அதாவது,
தன் இருப்பாலேயே அது காரணமாகும்.
யோக்யதை / அறியப்படும் தகுதி என்பது அந்தப் பொருளில் இருந்தால் போதாது, நம்மால் அறியப்பட வேண்டும்.
• ஓர் இருட்டு அறையில் மோதிரத்தைத் தொலைத்து விட்டுத் தேடினேன் .
அறை முழுவதும் தேடா விட்டாலும், தேடினேன் என்று நான் நம்பினேன் என்றால், “இங்கு
மோதிரம் இல்லை ” என்ற அறிவு (அபாவத்தைப் பற்றினது) வந்து விடும்.
முழுவதுமாகத் தேடியிருந்தாலும் “சரியாகத் தேடவில்லை ” என்று தோன்றினால்,
அங்கு உண்மையில் மோதிரம் இல்லா விட்டாலும், நமக்கு “இங்கு மோதிரம் இல்லை ”அறிவு ஏற்படாது.

சம்பவம் ஐதிஹ்யம்
• மீமாம்ஸகர்கள் இந்த ஆறு ப்ரமாணங்களைத் தான் ஏற்கிறார்கள். இதற்கு மேல் ப்ரமாணங்கள் இல்லை என்கிறார்கள்.
ஆனால் பௌராணிகர்கள் ஸம்பவம் என்றும் ஐதிஹ்யம் என்றும் இரண்டு அதிகமான ப்ரமாணங்களை ஏற்கிறார்கள்.
அவற்றைப் பற்றி மீமாம்ஸகர்களின் கருத்து இவ்வாறு உள்ளது :
•ஸம்பவம் – நூறு ரூபாய் ஒருவரிடம் உள்ளது என்று அறிந்தால், அவரிடம் ஐம்பது ரூபாய் உள்ளது என்று அறிகிறோம்.
இது தான் ஸம்பவம் என்று பௌராணிகர்கள் சொல்கிறார்கள். ஆனால், இதைத் தனி ப்ரமாணம் என்று சொல்லத் தேவையில்லை .
இதை அநுமானத்திலேயே அடக்கி விடலாம் என்பது மீமாம்ஸகர்களின் அபிப்ராயம்.
எங்கு எல்லாம் நூறு ரூபாய் உள்ளது அங்கு எல்லாம் ஐம்பது ரூபாய் உள்ளது என்ற வியாப்தியைக் க்ரஹித்த ஒருவனுக்கு
இந்த அறிவு அநுமானத்தாலேயே வரக் கூடும்.
• ஐதிஹ்யம் – “’மரம் தோறும் குபேரன் உள்ளார்” போன்ற சொல் தொடர்களை நாம் கேள்விப் படுகிறோம்.
இதை சரியா தவறா என்று சொல்ல எந்த வழியுமில்லை . இது தான் ஐதிஹ்யம் என்று பௌராணிகர்கள் சொல்கிறார்கள்.
ஆனால், இதை சப்த ப்ரமாணத்திலேயே அடக்கலாம் என்பது மீமாம்ஸகர்களின் கூற்று.
சொன்னவர் யார் என்று தெரியாத சொல் தொடர் இது. ஆகவே சப்த ப்ரமாணம் தான்.

————-

பாடம் –28-மீமாம்ஸையில் ப்ரமேயங்கள்

•பாட்ட மீமாம்ஸகர்கள் ஐந்து பதார்த்தங்கைள ஏற்கிறார்கள். அவை யாவன –
1. த்ரவ்யம்
2. ஜாதி / ஸாமாந்யம் என்கிற பொதுத் தன்மை
3. குணம் என்கிற பண்புகள்
4. க்ரிையை என்கிற செயல்
5. அபாவம் என்கிற இன்மை
ந்யாய மதத்தில் ஏற்கப்பட்ட விசேஷம் என்ற பதார்த்தத்தையும் ஸமவாயம் என்ற பதார்த்தத்தையும் இவர்கள் ஏற்க வில்லை –

த்ரவ்யங்கள்
• “பரிமாணம் என்ற குணத்துக்கு ஆதாரமாக எது உள்ளதோ அதுவே த்ரவ்யம் ”
என்று த்ரவ்யங்களின் பொதுவான லக்ஷணம் சொல்லப் படுகிறது.

உண்டாகும் க்ஷணத்தில் குணம் இருக்காதே -நியாய மாதத்தில் ஓன்று மற்ற ஒன்றுக்கு காரணம் -சமவாயம் –
மீமாம்சையில் இத்தை கொள்ளாமல் தாதாத்ம்யம் என்று குணத்தை பிரித்துப் பார்க்க முடியாது
உண்டாகும் பொழுதே குணம் நிறம் பரிமாணம் உண்டு -என்பர் –

• மீமாம்ஸையில் 11 த்ரவ்யங்கள் சொல்லப்படுகின்றன.-அவையாவன –
1. ப்ருதிவீ – மணத்தை உடையது ப்ருதிவீ. மூக்கிலிருக்கும் க்ராண இந்த்ரியம் ப்ருதிவியால் ஆனது.
ப்ருதிவியால் ஆன சரீரம் ஜராயுஜம் (கர்ப்பையிலிருந்து தோன்றியது),
அண்டஜம் (முட்டையிலிருந்து தோன்றியது),
ஸ்வேதஜம் (வியர்வையிலிருந்து வந்தது)
மற்றும் உப்பிஜ்ஜம் (முளையிலிருந்து வந்தது) என்று நான்கு வகைகளில் உள்ளது
2. ஜலம் – இயற்கையான த்ரவத்வம் -நீர்மையை -உடையது –
3. தேஜஸ் – வெப்பத்தை உடையது -. இதன் ரூபமும் ஸ்பர்சமும் உத்பூதம் (வெளிப் பட்டது),
அநுத்பூதம் (வெளிப் படாதது), அபிபூதம் (மறைக்கப் பட்டது) என்று மூன்று நிலைகளில் இருக்கும் .
A. இரும்பைக் காய்ச்சினால் தெரியும் தேஜஸ்ஸின் ரூபமும் ஸ்பர்ஸமும் உத்பூதமாக (வெளிப்பட்டு) இருக்கின்றன.
B. தீபத்தின் ஒளியில் ரூபம் உத்பூதமாகவும் ஸ்பர்ஸம் அநுத்பூதமாகவும் உள்ளது.
C. வெந்நீரிலுள்ள தேஜஸ்ஸில் ஸ்பர்ஸம் உத்பூதமாகவும் ரூபம் அநுத்பூதமாகவும் உள்ளது.
D. சஷுர் இந்த்ரியம் தேஜஸ்ஸால் ஆக்கப் பட்டபடியால் ரூபத்தையும் வெப்பத்தையும் கொண்டது தான்,
ஆனால் அவை இரண்டுமே அதில் அநுத்பூதமாக இருக்கிறபடியால் நமக்குத் தோற்றுவதில்லை .
E. தங்கம் தேஜஸ்ஸால் ஆனது, எனவே வெப்பத்தையும் வெள்ளை நிறத்தையும் உடையது.
ஆனால் அருகிலுள்ள ப்ருதிவீ பாகத்தின் மஞ்சள் நிறத்தாலும் ஸ்பர்சத்தாலும் அவை மறைக்கப் படுகின்றன
4. வாயு – ரூபம் அற்றது ஆனால் ஸ்பர்சம் உடையது . த்வக் இந்த்ரியத்தால் க்ரஹிப்படுவது.
5. தமஸ் –ஸ்பர்சம் அற்ற்து ஆனால் ரூபம் உடையது. இது தனி த்ரவ்யம் அல்ல,-
தேஜஸ்ஸின் அபாவம் தான் தமஸ் என்று ந்யாய மதத்தில் சொல்லப் படுகிறது.
ஆனால் அது சரி அல்ல. கருமை நிறமுடைவதாக தோற்றுகையாலும், செயலுடைய தானபடியாலும்,
’இருட்டு உள்ளது’ என்று பாவ பதார்த்தமாக(இருக்கும் பொருளாக) தோற்றுைகையாலும், தேஜஸ்ஸின் நினைவு இல்லாத பொழுதும்
தமஸ் க்ரஹிக்கப் படுகிறபடியால் அதன் அபாவமாக இது இருக்க முடியாத படியாலும் தமஸ் கருப்பு நிறத்தை உடைய தனி த்ரவ்யம் தான்.

• மேல் சொல்லப்பட்ட ஐந்து த்ரவ்யங்களுக்கும் அவயவங்கள் உண்டு.அவயவங்கள் சேர்ந்து அவயவியை உண்டாக்குகின்றன.
• அவற்றின் கடைசி அவயவம் தான் பரமாணு, அது கண்ணுக்குப் புலப்படாது,
அணுவானது என்று ந்யாய மதத்தில் சொல்லப்படுகிறது. மீமாம்ஸா தர்சனத்தில் ஜன்னல் வழியாக ஸூர்ய ஒளி
வரும் பொழுது கண்ணுக்குத் தெரியும் மிக மிக நுண்ணிய பொருட்கள் தான் பரமாணுக்கள்,
அதை விட சிறிய பொருள் கிடையாது என்று சொல்லப் படுகிறது.
• இப்படி அவயவங்களைச் சேர்த்து உலகத்தைப் படைப்பது ஈச்வரன் என்று ந்யாய மதம்.
எந்த ஒரு உண்டாகும் பொருளுக்கும் உண்டாக்கிய ஒருவர்
தேவைப் படிகிறபடியால் இந்த உலகை உண்டாக்கியவர் ஈஸ்வரன் என்று அநுமானம் செய்கிறார்கள் அவர்கள்.
அது மீமாம்ஸையில் ஏற்கப்படவில்லை .
ஈஸ்வரன் ஒரு உடலோடு படைத்தார் என்றால் நாம் பார்த்திருப்போம், உடல் இல்லாமல் படைக்க முடியாது.
ஆகையால் இந்த உலகம் படைக்கப்படவே இல்லை , எப்பொழுதும் இப்படியே தான் இருந்தது, வருங்காலத்திலும் இருக்கும்.

6. ஆகாசம் – நித்யமானது, அவயவங்கள் அற்றது,விபுவானது, ப்ரத்யக்ஷமானது
7. காலம் – நித்யமானது, அவயவங்கள் அற்றது,விபுவானது, ப்ரத்யக்ஷமானது
8. திக்- நித்யமானது, அவயவங்கள் அற்றது,விபுவானது, ப்ரத்யக்ஷமானது
9. ஆத்மா – ஜ்ஞாநம் உடையவர். மநஸ் என்ற உட்புலனால் க்ரஹிக்கப் படுபவர்.
• உடலையும், இந்த்ரியங்கைளயும் காட்டிலும் வேறு பட்டவர், அவற்றை இயக்குபவர்.
• அறிவு வடிவானவர் அல்ல, அறிவை உடையவர், அறிவாளி.
• ஸுகமே வடிவானவர் அல்ல,ஸுகத்தை உடையவர்,ஸுகீ.
• ஒவ்வொரு சரீரத்திலும் வெவ்வேறு ஆத்மா உள்ளார், அவரவரின் இன் பம்
துன்பம் விருப்பு வெறுப்பு முதலியவை வேறுபடிகிறபடியால்.
• விபுவானவர். நித்யமானவர்.
• போகம் என்று அழைக்கப்படும் இவ்வுலக இன்பத்தையும், ஸ்வர்கம் எனப்படும் இன்பத்தையும்,
முக்தி என்று அழைக்கப்படும் நிகரற்ற இன்பத்தையும் அநுபவிப்பவர்.
• முக்தி என்ற நிலையில் ஆத்மாவின் துக்கங்கள் எல்லாம் நீங்கி, இயற்கையாக ஆத்மாவிடம் இருக்கும் ஸுகத்தை
அவர் அநுபவிக்கிறார்,தன்னுைடய மனதைக் கொண்டு.
10. மநஸ் – ஸுகம் துக்கம் முதலிய குணங்கைள ப்ரத்யக்ஷமாக அறிகைக்கான கருவி. இது மீமாம்ஸா தர்சனத்தில் விபுவானது.
11. சப்தம் – மீமாம்ஸா தர்சனத்தில் சப்தம் என்பது ஆகாசத்தின் குணம் அல்ல. தனி த்ரவ்யம் .
அ, ஆ, இ, ஈ என்ற ஒவ்வொரு சப்தமும் நித்யமானது, விபுவானது (எங்கும் பரந்திருப்பது).
நாம் வாயால் சில வியாபாரங்களைச் செய்தால் நம்மைச் சுற்றி இருக்கும் ஒரு சிறு இடத்தில் மட்டும் அந்த சப்தம் வெளிப் படுகிறது.
வியாபாரம் அழிந்தவுடன் அந்த சப்தத்தின் வெளிப் பாடும் அழிந்து விடும், சப்தம் உண்டாவதும் இல்லை – அழிவதும் இல்லை

ஜாதி சாமான்யம் பொதுத்தன்மை .
• மீமாம்ஸையில் ஏற்கப்பட்ட அடுத்த பதார்த்தம் ஸாமாந்யம் என்று ந்யாய மதத்தில் அழைக்கப் படும் பொதுத் தன்மை .
• அனைத்து குடங்களிலும் குடத் தன்மை என்று ஒரு பொதுத் தன்மை உள்ளது.
அனைத்து மாடுகளிலும் மாட்டுத் தன்மை என்ற ஒரு பொதுத் தன்மை உள்ளது.
• இந்த பொதுத் தன்மை நித்யமானது, விபுவானது. மாடு இருக்கும் இடத்தில் மட்டும் தான் மாட்டுத் தன்மை உள்ளது என்றல்ல.
மாட்டுத் தன்மை உலகு எங்கும் பரந்திருக்கும் ஒன்று.
• எங்கு ஒரு மாடு தோன்றுகிறதோ , அங்கு அந்த மாட்டுக்கும், முன்னமே இருந்த மாட்டுத் தன்மைக்கும் ஒரு தொடர்பு ஏற்படுகிறது.
• மாடு இல்லாத போது ஏன் மாட்டுத் தன்மையை அறிய முடிய வில்லை என்றால், மாட்டுத் தன்மையை வெளிப் படுத்துவது (அபிவ்யங்ஜகம்)
மாடு தான். எப்படி ஒரு விளக்கு இல்லாமல் ஒரு குடம் வெளிப்படாதோ ,அதே போல் மாடு இல்லாத போது
ஓரிடத்தில் மாட்டுத் தன்மை இருந்தாலும் அது வெளிப் படாது.
• ’த்ரவ்யம் உள்ளது’, ’குணம் உள்ளது’, ’க்ரியை உள்ளது’, ’ஜாதி உள்ளது’ என்று இந்த நாலு பதார்த்தங்கைளப் பற்றியும்
’உள்ளது’, ’உள்ளது’ என்ற அறிவு ஏற்படுகிறபடியால், இந்த நான்குக்கும் பொதுவான
’ஸத்தா’ /’இருத்தல்’ என்ற ஒரு பொதுத் தன்மை ஒப்புக் கொள்ளப் படுகிறது –

குணங்கள் –
• மீமாம்ஸா தர்ஸநத்தில் 24 குணங்கள் ஏற்கப்பட்டுள்ளன. அவை –
(1) ரூபம் = நிறம் (2) ரஸம் = சுவை (3) கந்தம் = மணம்
(4) ஸ்பர்சம் = குளிர்ச்சி வெப்பம் இரண்டும் இல்லாமை என்ற தொடு வுணர்ச்சி
(5) ஸம்க்யா = ஒன்று, இரண்டு முதலான எண்ணிக்கை (6) பரிமாணம் = அணு, மஹத், விபு என்ற அளவுகள்
(7) ப்ருதக்த்வம் = வேறுபாடு (8) ஸம்யோகம் = சேர்க்கை (9) விபாகம் = பிரிவு
(10, 11) பரத்வம் அபரத்வம் = தொலைவில் இருத்தல் -அருகில் இருத்தல்-காலத்தால் முதுமை இளமை
(12) குருத்வம் = எடை (13) த்ரவத்வம் =நீர்மை (14)ஸ்நேஹம் = பசை

சப்தம் குணம் இல்லை த்ரவ்யம் இவர்கள் தர்சனத்தில்
தர்மம் அதர்மம் இவற்றையும் கொள்ள வில்லை
த்வநி சக்தி ப்ராகட்யம் இந்த மூன்றும் இவற்றுக்குப் பதில் இங்கு

மேலே ஆத்மாவின் குணங்கள் -ஆறும்
(15) புத்தி = அறிவு. இது ந்யாய மதத்தில் ப்ரத்யக்ஷமானது அதாவது மனதால் அறியப் படுவது.
ஆனால் மீமாம்ஸையில் இதை அநுமானம் தான் செய்யலாம்.
(16) ஸுகம் = ஐஹிகம் (இவ்வுலகத்தது), ஆமுஷ்மிகம் (ஸ்வர்க இன்பம்), அபவர்கம் (மோக் ஷஇன் பம்) என்று மூ வகைப் பட்டது
(17) துக்கம் = ஐஹிகம் (இவ்வுலகத்தது), ஆமுஷ் மிகம் (நரகத் துன்பம்) என்று இரண்டு வகைப் பட்டது
(18) இச்சை = ஆசை (19) த்வேஷம் = வெறுப்பு (20) ப்ரயத்நம் = முயற்சி
(21) ஸம்ஸ்காரம் = இது மூ வகைப்படும் – வேகம், பாவனை , ஸ்திதி ஸ்தாபகம் என்று.

(22) த்வநி = இது வாயுவின் குணம். நம் தொண்டை /வாயின் வியாபாரத்தால்
வாயுவில் இந்த குணம் ஏற்பட்டு, இது தான் சப்தத்தை வெளிப் படுத்துகிறது.
(23) ப்ராகட்யம் = ஒரு பொருளில் உண் டாகும் ’அறியப் படுதல்’ என்ற குணம்.
இதைக் கண்டு தான் நமக்கு அறிவு ஏற்பட்டதை நாம் அநுமானம் செய்யலாம்.
(24) சக்தி = திறமை . இது இரண்டு வகைப்படும்
(1) லௌகிக சக்தி –நெருப்புக்கு எரிக்கும் சக்தி, நீருக்கு நெருப்பை அணைக்கும் சக்தி முதலியவை
(2) வைதிக சக்தி – ஜ்யோதிஷ் டோமம் முதலான வற்றுக்கு ஸ்வர்க்கத்தை ஏற்படுத்தும் சக்தி.
அபூர்வம் என்ற ஒன்றைக் கல்பிக்கிறார்கள்

கர்மம் அபாவம்
• மீமாம்ஸா தர்ஸநத்தில் ஏற்கப்பட்ட அடுத்த பதார்த்தம் கர்மம் எனப்படும் க்ரியை / செயல் ஆகும்.
• இது விபு அல்லாத த்ரவ்யங்களில் மட்டும் இருக்கும், ஏன் என்றால் விபு த்ரவ்யங்களால் நகர இயலாது.
• இது புலன்களால் க்ரஹிக்கக் கூடியது.
• உத்ஷேபநம் (மேலே செல்லுதல்)முதலான வடிவங்களில் இருக்கும்
• ஸம்யோகத்துக்கும் விபாகத்துக்கும் காரணமானது

• மீமாம்ஸா தர்ஸநத்தின் ஏற்கப்பட்ட ஐந்தாவது பதார்த்தம் அபாவம்.
• இது ப்ராபாகரர்கள் என்ற மீமாம்ஸகர்களால் ஏற்கப்பட வில்லை . ஆனால் பாட்டர்களால் ஏற்கப் பட்டுள்ளது.
• ஒது ப்ராகபாவம் (ஒரு பொருள் உண்டாவதற்கு முன்னால் இருக்கும் அதன் அபாவம்),
ப்ரத்வம்ஸா பாவம் (ஒரு பொருளின் அழிவு), அத்யந்தா பாவம் (ஒரு பொருள் இருக்கவே முடியாத இடத்தில் இருக்கும் அதன் அபாவம்) மற்றும்
அந்யோந்யா பாவம் (பொருட்களுக்கு இடையுள் இருக்கும் வேறுபாடு) என்று நான்கு வகைப்படும்.

• ஆறாவது ப்ரமாணமான அநுபலப்தி என்ற ப்ரமாணத்தால் இந்த அபாவம் க்ரஹிக்கப் படுகிறது என்று பாட்ட மீமாம்ஸகர் களின் கூற்று –

————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ .வே. வேளுக்குடி ரெங்கநாதன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கணாதர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ நியாய மீமாம்ச வேதாந்த பாடங்கள்–ஸ்ரீ உ .வே. வேளுக்குடி ரெங்கநாதன் ஸ்வாமிகள்–பகுதி -2 –மீமாம்ச சாஸ்த்ரம்– பாடங்கள் -11-20—

March 24, 2021

பாடம் -11-யாகத்தின் அறிமுகம்

யாகம் என்றால் ஒரு தேவதையைக் குறித்து ஒரு த்ரவ்யத்தை ஸமர்பித்தல் / த்யாகம் செய்தல் .
ஆகையால், எந்த ஒரு யாகத்திற்கும்
அதில் கொடுக்கப்படும் த்ரவ்யமும் வணங்கப்படும் தேவதையும் தான் முக்கியமான பகுதிகள்.
• த்ரவ்யம் – பால் (பயஸ்), தயிர் (ததி), நெய் (ஆஜ்யம்), ப்ருஷதாஜ்யம் (தயிர் கலந்த நெய்),
ஆமிக்ஷா (கொதிக்கும் பாலில் தயிரைச் சேர்த்தால் கிடைக்கும் கெட்டியான த்ரவ்யம்),
வாஜிநம் (அதே செயலில் கிடைக்கும் த்ரவமான த்ரவ்யம்), புரோடாசம் (தோசை போன்றது),
சரு (கஞ்சி வடிக்காத சோறு), யவாகூ (அரிசிக்கஞ்சி), ஸோமம் என்ற கொடியின் ரஸம் என்று
பல த்ரவ்யங்களால் செய்யப்படும் யாகங்கள் வேதத்தில் சொல்லப்பட்டுள்ளன
• தேவதை – அக்நி, இந்த்ரன், ஸோமன், வருணன், வாயு, மித்ரன்,
ருத்ரன், ப்ரஜாபதி, விஷ்ணு போன்ற பல தேவதைகள் வேதங்களில் சொல்லப் பட்டுள்ளனர்.
• சில இடங்களில் இரண்டு தேவதைகள் சேர்ந்து ஒரு த்ரவ்யத்தை ஏற்றுக் கொள்வார்கள்.
எடுத்துக்காட்டு –
இந்த்ராக்நீ (இந்த்ரனும் அக்நியும் சேர்ந்து), அக்நாேிஷ்ணூ (அக்நியும் விஷ்ணுவும் சேர்ந்து), முதலானவை .
• சில யாகங்களில் இரண்டு தேவதைகளுக்கு தனித்தனியே ஆகுதிகளைக் கொடுக்க வேண்டும்.

யாகம் செய்ய யோக்யதை

ஒருவன் யாகம் செய்ய வேண்டும் என்றால் மூன்று தகுதிகள் இருக்க வேண்டும்
• (1) வித்யை – அத்யயநம் செய்து, அதன் மூலம் வேதத்தின் பொருளை அறிந்திருக்க வேண்டும்
• (2) அக்நி – ஆதாநம் என்ற வைதிகச் செயலைச் செய்து, அதன் மூலம் மூன்று அக்நிகளைப் பெற்றிருக்க வேண்டும்
• (3) ஸாமர்த்யம் – யாகத்தைச் செய்வதற்கு வேண்டிய பொருள், பண வசதி, உடல் ஆரோக்யம், உதவிக்கு மக்கள், முதலியவை –

ஆதானம்

ஒருவனுடைய விவாஹத்தில் (கல்யாணத்தில்) உபயோகிக்கப்பட்ட அக்நிக்கு வைவாஹிகாக்நி என்று பெயர்.
அதை விவாஹம் முதல் ரக்ஷித்து வைத்து, அதில் சில ஹோமங்களை
தினமும் செய்ய வேண்டும் என்று சாஸ்த்ரம் கூறுகிறது.
ஸ்மார்த்த அக்னி ஸ்ம்ருதியில் சொல்லிய அக்னி
அத்தை ஸ்ருதியில் சொன்ன அக்னியாக மாற்றி உயர்ந்த ஆதானம் செய்ய வேண்டும்

• அந்த அக்நிக்கே ஆதாநம் என்ற ஒரு ஸம்ஸ்காரத்தைச் செய்தால், அது உயர்வு பெற்று யாகம் செய்வதற்குத்
தகுந்த அக்நியாக ஆகிறது. அந்த அக்நியில் தான் ஒருவன் வேதம் கூறிய யாகங்களைச் செய்ய வேண்டும்.
• ஒருவன் தவறாமல் செய்ய வேண்டிய வைதிகச் செயல்களுள், அக்நி ஹோத்ரம் என்ற ஹோமமும்,
தர்சபூர்ணமாஸம் என்ற யாகமும், அக்நிஷ்டோமம் (வருஷத்துக்கு ஒரு தடவை )என்ற யாகமும் உள்ளன.
• ஆதாநம் செய்துவிட்டு உடனடியாக அக்நிஹோத்ரம் செய்யத் தொடங்கி விட்டால் அதற்கு
ஹோம பூர்வக ஆதாநம் என்று பெயர்.
• ஆதாநம் செய்துவிட்டு உடனடியாக தர்சபூர்ணமாஸம் செய்யத் தொடங்கி விட்டால் அதற்கு
இஷ்டிபூர்வக ஆதாநம் என்று பெயர்.
• ஆதாநம் செய்துவிட்டு உடனடியாக அக்நிஷ்டோமம் என்ற ஸோம யாகத்தைச் செய்யத் தொடங்கி விட்டால் அதற்கு
ஸோம பூர்வக ஆதாநம் என்று பெயர்.

மூன்று அக்நிகள்
ஸ்ரவ்த அக்னி மூன்று -த்ரேத அக்னிகள் -குளித்து மூன்று அனலை ஓம்பும் –

ஆதாநம் செய்வதன் மூலம் ஒருவனுக்கு மூன்று அக்நிகள் ஸித்திக்கின்றன –
கார்ஹ பத்யம், ஆஹவநீயம், தக்ஷிணாக்நி
• (1) கார்ஹபத்யம் – இது மேற்கு திசையில் வட்டமான குண்டத்தில் வைக்கப்பட வேண்டும்.
இதில் தான் யாகத்தில் தேவதைக்குக் கொடுக்கப் போகும் த்ரவ்யத்தை சமையல் செய்ய வேண்டும்.
• (2) ஆஹவநீயம் – இது கிழக்கு திசையில் சதுரமான குண்டத்தில் வைக்கப்பட வேண்டும்.
இதில் தான் அநேகமாக யாகங்களிலும் ஹோமங்களிலும் ஆஹுதிகளைக் கொடுக்க வேண்டும்.
• (3) தக்ஷிணாக்நி – இது தெற்கு திசையில் அர்த்த-சந்த்ரம் வடித்திலுள்ள குண்டத்தில் வைக்கப் பட வேண்டும்.
இதில் தான், யாகத்தில் கலந்துகொள்ள வந்தவர்களுக்கு இடப் போகும் அன்னத்தை ஸமைக்க வேண்டும்.
• இவற்றில், கார்ஹபத்யம் தான் தினமும் வீட்டில் ரக்ஷிக்கப்பட வேண்டும்.
ஆஹவநீயம்-தக்ஷிணாக்நி-இதில் சேர்த்து விடலாம் -பின்பு இதில் இருந்து எடுத்து இவற்றைத் தொடங்கலாம்
அதில் தான் தினமும் செய்ய வேண்டிய அக்நி ஹோத்ரம் என்ற கர்மத்தைச் செய்ய வேண்டும்.
எப்பொழுது வேறு யாகங்களைச் செய்கிறோமோ , அப்பொழுது கார்ஹபத்யத்திலிருந்து
தணல்களை எடுத்துச் சென்று ஆஹவநீயத்தையும் தக்ஷிணாக்நியையும் மூட்டிக் கொள்ள வேண்டும்.

அக்நி ஹோத்ரம்

ஆதாநம் செய்து, மூன்று அக்நிகளை உடைய ஒருவன், தினமும் காலையிலும் மாலையிலும்
அக்நி ஹோத்ரம் என்ற ஹோமத்தைச் செய்ய வேண்டும்.
இன்று மாலையும், நாளை காலையும் செய்யும் ஹோமங்கள் சேர்ந்து ஒரு
அக்நி ஹோத்ரம் என்று அழைக்கப் படுகின்றன.
• அக்நிஹோத்ரத்தை பால், தயிர், நெய், கஞ்சி முதலான பல த்ரவ்யங்களைக் கொண்டு செய்யலாம்.
ஆனால், முதன் முதலில் எந்த த்ரவ்யத்தைத் தேர்ந்தெடுக்கிறோமோ , அதைத் தான் தொடர்ந்து பயன்படுத்த வேண்டும்.
• இந்த அக்நி ஹோத்ரத்தில், மாலைப் பொழுதில், அக்நி தேவதைக்கு மந்த்ரம் சொல்லியும்,
ப்ரஜாபதி தேவதைக்கு மந்த்ரம் இல்லாமல் மௌனமாகவும் ஹோமம் செய்யவேண்டும்.
காலைப் பொழுதில், ஸூர்ய தேவதைக்கு மந்த்ரம் சொல்லியும்,
ப்ரஜாபதி தேவதைக்கு மந்த்ரம் இல்லாமல் மௌனமாகவும் ஹோமம் செய்ய வேண்டும்-

சாயங்காலம் தொடங்கி அடுத்த நாள் காலை செய்வது தான் ஒரு அக்னி ஹோத்ரம் –
காலையில் தானே ஆதாயம் பண்ணி மாலையில் தொடங்குவதால் –

தர்ச பூர்ண மாஸம்

ஆதாநம் செய்து கொண்டு மூன்று அக்நிகளை உடைய ஒவ் வொருவனும், பர்வ காலங்களில்
(பௌர்ணமி மற்றும் அமாவாஸை காலங்களில்) ஒரு கர்மத்தைச் செய்யவேண்டும்.
அதற்கு தான் தர்ச-பூர்ணமாஸம் என்று பெயர்.-தர்சம் என்றால் அமாவாஸை.
• இந்த தர்சபூர்ணமாஸம் என்பது 6 யாகங்களின் கூட்டம். அதில்
• பௌர்ணமியில் செய்யும் யாகங்கள்:
• அஷ்ட கபாலம் (எட்டு கபாலங்களில் சமைக்கப்பட்ட புரோடாசத்தைக்) கொண்டு அக்நி தேவதைக்காகச் செய்யும்
யாகம் – ஆக்நேய யாகம் என்று பெயர்
• நெய்யைக் கொண்டு விஷ்ணுவுக்கோ , ப்ரஜாபதிக்கோ , அக்நீஷோமீயர்களுக்கோ செய்வது – உபாம்சு யஜம் என்று பெயர்
• ஏகாதச கபாலம் (பதினொரு கபாலங்களில் ஸமைக்கப்பட்ட புரோடாசத்தைக்) கொண்டு அக்நீ ஷோமர்கள் என்ற தேவதைக்காகச் செய்யும் யாகம்
• அமாவாஸையில் செய்யும் யாகங்கள்:
• அஷ்ட கபாலம் (எட்டு கபாலங்களில் ஸமைக்கப்பட்ட புரோடாசத்தைக்) கொண்டு அக்நி தேவதைக்காகச் செய்யும்
யாகம் – ஆக்நேய யாகம் என்று பெயர்
• பாலைக் கொண்டு இந்த்ரனுக்குச் செய்யும் யாகம்-ஐந்த்ரம் பய
• தயிரைக் கொண்டு இந்த்ரனுக்குச் செய்யும் யாகம்-ஐந்த்ரம் தயி
• இந்த ஆறு யாகங்களுக்கு ப்ரதான யாகங்கள் என்று பெயர், ஏன் என்றால் அவை தான் நாம் ஆசைப்படும்
பயனைப் பெற்றுத் தரப் போகின்றன.

பவுர்ணமி தொடங்கி பிரதமை காலை பண்ண வேண்டும்
அமாவாசை தொடங்கி இதுவும் பிரதமை காலை பண்ண வேண்டும்

எட்டு கட்டுகள் தர்ப்பம் பரப்பி வைக்க
பரித்ராணாம் -சுற்றி வைப்பது
ஆதார சமித்துகள்
21 சமித்துகள்

நெல்லை எடுத்து ப்ரோக்ஷணம் உலூகலம் குத்தி பத்னி கார்யம்
அம்மியில் அரைப்பது பேஷனம்
வறுத்து தீர்த்தம் வைத்து பிண்டம் கபாலத்தில் வைத்து புரோடாசம் பண்ணும் முறை

அத்வர்யு
ஆக்னீஸ்வரன் உதவி
ஹோதா மந்த்ரம் சொல்லி
ப்ரம்மா மேற்பார்வை அனுமதி
நால்வரும் எஜமானுக்கு வேண்டும்

தர்சபூர்ண மாஸத்தின் அங்கங்கள் –

இந்த தர்சபூர்ணமாஸம் என்ற கர்மத்திற்கு அங்கமாக பல யாகங்களும் ஹோமங்களும் விதிக்கப்பட்டுள்ளன
ப்ரதான யாகங்களைச் செய்வதற்கு முன்னால் செய்யப் பட வேண்டியவை
1. ஆகார ஹோமங்கள் – மந்த்ரம் சொல்லாமல் ப்ரஜாபதி தேவதைக்கும் மந்த்ரம்
சொல்லி இந்த்ரனுக்கும் நெய்யைக் கொண்டு செய்யும் இரண்டு ஹோமங்கள்
2. ப்ரயாஜங்கள் – அக்நி முதலான தேவதைகளுக்காக நெய்யைக் கொண்டு
செய்யும் ஐந்து யாகங்கள். மீதமிருக்கும் நெய்யை ப்ரதான யாகங்களின் ஹவிஸ்ஸூகளில் சேர்க்க வேண்டும்.
3. ஆஜ்ய பாகங்கள் – அக்நி தேவதைக்கும் ஸோமன் என்ற தேவதைக்கும் நெய்யைக் கொண்டு செய்யும் இரண்டு யாகங்கள்

ப்ரதான யாகங்களைச் செய்த பிறகு சேய்யப்பட வேண்டியவை .
1. ஸ்விஷ்டக்ருத் – ப்ரதான யாகத்தின் ஹவிஸ்ஸூகளிலிருந்து சிறு சிறு
துண்டுகஸள எடுத்து, அக்நி தேவதை க்காகச் செய்யப்படும் ஒரு யாகம்
2. அநுயாஜங்கள் – பர்ஹிஸ், நராசம்ஸன், ஸ்விஷ்டக்ருத் என்ற மூன்று தேவதை களுக்காக நெய்யைக் கொண்டு செய்யும் மூன்று யாகங்கள்
3. பத்நீ ஸம்யாஜங்கள் – ஸோமன், த்வஷ்டா, தேவ பத்நிகள், க்ருஹபதி என்ற அக்நி ஆகிய நால்வருக்கும் செய்யப் படும் நான்கு யாகங்கள்
4. பார்வண ஹோமம் – பௌர்ணமி அல்லது அமாவாஸை தேவதைக்காகச் செய்யும் ஒரு ஹோமம்
5. நாரிஷ்ட ஹோமம் – யாகம் செய்பவனின் வயிற்றில் இருக்கும் ஜாடராக்நியும்,
அவனது ப்ராண வாயுவும் சிறப்பாக இருப்பதற்காகச் செய்யும் ஏழு ஹோமங்கள்
6. ஸமிஷ்டயஜு: – ஒரு ஹோமம்
7. ப்ராயச்சித்த ஹோமங்கள் – வ்ரதத்தில் தவறுதல்களுக்காகவோ மந்த்ரங்களில் தவறுகளுக்காகவோ செய்யப்படும் ப்ராயச்சித்தங்கள்

பிரதிபத்தி கர்மங்கள் –

யாகத்தில் பயன்படுத்தப்பட்ட பொருட்களை மீதமில்லாமல் கௌரவத்வதோடு செலழிப்பதற்காக
வேதமே ப்ரதிபத்தி கர்மங்களை விதிக்கிறது.
• ப்ரதான யாகங்களைச் செய்து முடித்தவுடன், அந்த ஹவிஸ்ஸின் மீதமிருக்கும் பகுதியைச் செலழிப்பதற்காக
ஸ்விஷ்டக்ருத் யாகம் – ப்ரதான யாகத்தின் ஹவிஸ்ஸிலிருந்து ஒரு பகுதியை எடுத்து இந்த யாகம் செய்யவேண்டும்.
• ஒவ் வொரு ஹவிஸ்ஸிலிருந்தும் ஒரு துண்டை எடுத்து, அதை ப்ரஹ்மா என்ற ருத்விக் உண்ணவேண்டும்.
இதற்கு ப்ராசித்ரம் என்று பெயர்.
• ஒவ்வொரு ஹவிஸ்ஸிலிருந்தும் இரண்டிரண்டு துண்டுகளை எடுத்து அதை ப்ரஹ்ம, அத்வர்யு, ஹோதா, ஆக்நீத்ரன் என்ற நால்வரும்
உண்ணவேண்டும். இதற்கு இடா பக்ஷணம் என்று பெயர்
• அக்நிக்காக செய்யப்பட்ட புரோடாசத்தை நான்காகப் பிரித்து, நான்கு ரித்விக்குகளும் உண்டு விடவேண்டும்.
• நெல்லிலிருந்து நீக்கப்பட்ட உமியை , கபாலத்தில் வைத்து, ஒரு மூலையில் வைத்து விடவேண்டும். இது ராக்ஷைர்களுக்காக
• நெல்லின் தவிடை நெய்யில் சேர்த்து, கார்ஹபத்யம் என்ற அக்நியில் ஹோமம் செய்யவேண்டும்
• அரிசியை அரைக்கப் பயன்பட்ட அம்மியிலும் குழயியிலும் ஒட்டிக் கொண்டிருக்கும் மாவைச் சுரண்டு, அதை நெய்யில் சேர்த்து,
பிஷ்டலேபம் / பலீகரணம் என்ற ஹோமத்தைச் செய்யவேண்டும்.
• ப்ரஸ்தரம் என்ற தர்பக்கட்டை நெருப்பில் இடகேண்டும்
• அரிசி மாவை பிண்டமாக்கப் பயன்படுத்திய ப்ரணீதா என்ற ஜலத்தைக் கொண்டு யஜமாநன் முகம் துடைக்க வேண்டும்.
இது தான் இந்த யாகத்தின் அவப்ருத ஸ்நானம் ஆகிறது.

எஜமானன் செய்ய வேண்டிய கர்மங்கள்

ஒரு யாகத்தில் யஜமாநன் அவசியம் செய்ய வேண்டிய கர்மங்களுள் சில:
• தேவதைகளை ஸ்வீகரித்து வரவேற்றல்
• ருத்விக்குகளைத் தேர்ந்தெடுத்து, யாகத்திற்கு அழைத்து, வரித்தல்
• வ்ரதமிருத்தல், அதைத் தொடங்கவும் முடிக்கவும் தேவையான கர்மங்களைச் செய்தல்
• யாகத்தின் முக்கியப் பகுதி – தேவதையைக் குறித்து த்ரவ்யத்தைத் த்யாகம் செய்தல்.
சொத்து அவனதானபடியால், யஜமாநன் தான் இதைச் செய்யவேண்டும். ரித்விக்குகளைக் கொண்டு செய்ய முடியாது
• ருத்விக்குகளுக்கு தக்ஷிணையை வழங்குதல்
• இவற்றைத் தவிர்ந்த மற்ற செயல்களை எல்லாம் ருத்விக்குகளைக் கொண்டு யஜமாநன் செய்யலாம்

———————

நான்காம் அத்யாயம் –
பிரமாணங்கள் -பேதங்கள் -அங்கங்கள் கீழே பார்த்தோம்
சேஷ சேஷித்வம் அறிந்து ஏது பிரயோஜனம் எதிர் பார்ப்பு வருமே –
ஒரே செயல் பலவற்றுக்கும் அங்கம் ஆகும் -எது பிரயோஜனம் என்ற கேள்வி வருமே
இதுவே -ப்ரயுக்தம்-இத்தை விவரித்து சொல்லும் இதில் –
இவற்றைப் பார்க்கும் முன்பு அங்கங்களின் வகைகளைப் பற்றி அறிய வேண்டுமே
அவற்றைப் பார்ப்போம்

பாடம் -12-அங்கங்களின் வகைகள்

மூன்றாம் அத்யாயத்தில் ஒரு வைதிக கர்மத்தின் அங்கங்களை எப்படி அறியலாம் என்று பார்த்தோம்.
அந்த அங்கங்கள் இரண்டு வகைகளாக உள்ளன.
• (1) ஸித்த ரூபம் – ஸித்தமாக (தயாராக) இருக்கும் பொருள்கள்.எடுத்துக்காட்டு –
பால், தயிர், நெய், கரண்டி, புரோடாசம், ரித்விக், புரசக்கிளை , தர்பம், காலம், தேசம், முதலானவை ,
• (2) க்ரியா ரூபம் – செயல் வடிவமான அங்கங்கள். எடுத்துக்காட்டு –
ப்ரோக்ஷித்தல், உலக்கையால் குத்துதல், அரைத்தல், சமைத்தல்,
அங்கமான யாகங்கள், அங்கமான ஹோமங்கள், முதலானவை

• க்ரியை வடிமான அங்கங்களை மறுபடியும் இரண்டாகப் பிரிக்கலாம் –
• (1) ஸந்நிபத்ய உபகாரகம் – ஒரு யாகத்தின் அங்கமான த்ரவ்யம் முதலானவற்றுக்கு அங்கமாக இருந்து
உதவி செய்யும் செயல்கள். எடுத்துக்காட்டு –
ப்ரோக்ஷணம், உலக்கையால் குத்துதல் முதலியவை யாகத்தின் அங்கமான நெல்லினுடைய அங்கங்கள்.
ஸ்விஷ்டக்ருத் என்ற அங்க யாகம், ப்ரதான யாகத்திற்கு அங்கமான ஹவிஸ்ஸை சரியாகச் செலவழிப்பதற்காக
உள்ளபடியால் அது அந்த ஹவிஸ்ஸின் அங்கம்.
• (2) ஆராத் உபகாரகம் – த்ரவ்யம் முதலானவை மூலமாக அல்லாமல் நேரடியாக
அத்ருஷ்டம் / அபூவர்ம் / புண்யம் வழியாக ஒரு யாகத்திற்கு உதவி செய்யும் செயல்கள். எடுத்துக்காட்டு –
ப்ரயாஜங்கள் முதலானவை

ஸந்நிபத்ய உபகாரங்களின் வகைகள்
ஸந்நிபத்ய உபகாரகங்களான செயல்கள் மூன்று வகைப்படும் –
• (1) த்ருஷ்டார்த்தம் – த்ருஷ்டமான (இந்த்ரியங்களுக்கு புலப்படும்) ஒரு நன்மையைக் / பயனைக் கொடுக்கக் கூடியவை .
எடுத்துக்காட்டு
– உலக்கையால் குத்துதல் என்பது நெல்லின் அங்கம். அது, உமியை நீக்குதல் என்ற த்ருஷ்டமான ப்ரயோஜனத்திற்காகத் தான்
செய்யப்படுகிறது.
அதே போல் அரிசியை அரைத்தல் என்பதும் த்ருஷ்டார்த்தம்,
அரைக்காவிட்டால் யாகத்திற்குத் தேவையான புரோடாசத்தைச் செய்ய முடியாதே .
• (2) அத்ருஷ்டார்த்தம் – த்ருஷ்டமான பலன்களை ஏற்படுத்தாமல்,
அத்ருஷ்டமான (இந்த்ரியங்களுக்குப் புலப்படாத) அபூவர்ம் / புண்யம் என்ற பயனை ஏற்படுத்தக்கூடியவை .
எடுத்துக்காட்டு –
ப்ரோக்ஷணாம் செய்வதால் நெல்லில் எந்த மாற்றமும் தெரியவில்லை , ஆனால் அதில் ஒரு அத்ருஷ்டம் / அபூர்வம் /
புண்யம் உண்டாகியிருக்கும். அந்த அபூர்வத்வதாடு கூடின நெல்லை அரைத்து, புரோடாசம் செய்து
தேவதைக்குக் கொடுத்தால்தான் பயன் கிடைக்கும்.
ப்ரோக்ஷணத்தால் ஏற்படும் அபூர்வம் இல்லாத நெல்லை யாகத்தில் பயன்படுத்தினால் பயனில்லை
• (3) த்ருஷ்டாத்ருஷ்டார்த்தம் – ஒரே ஸ்விஷ்டக்ருத் யாகம் என்ற செயல், ப்ரதான யாகத்தில்
உபயோகித்த நெல்லை அக்நியில் சேர்த்து ’செலவழித்தல்’ /
’ப்ரதிபத்தி’ என்ற த்ருஷ்டமான ப்ரயோஜனத்தை உடையபடியால் த்ருஷ்டார்த்தமாயும்,
அதை வேறே ஒரு தேவதைக்குக் கொடுக்கிறபடியால் அந்த யாகம் என்ற அம்சம் அத்ருஷ்டார்த்தம் தான்.
ஆகையால், இந்தச் செயல் இரண்டு வகையான பலன்களையும் ஏற்படுத்துகிறது.

யாகத்தில் இருந்து அபூர்வங்கள்
இப்பொழுது நாம் செய்யும் யாகம் தானம் முதலான செயல்கள் அனைத்தும் சில வினாடிகளில்
முடிந்துவிடக்கூடியவை , அழிந்துவிடக்கூடியவை .
ஆனால், ஸ்வர்கம் முதலான பயன்கள் பல காலம் கழித்துக் கிடைக்கின்றன. ஆகையால், யாகம் ஸ்வர்த்துக்குக்
காரணம் என்பதை மெய்ப்பிப்பதற்காக, அபூர்வம் என்று ஒன்றைக் கல்பிக்கிறோம். யாகம் முடிந்துவிட்டாலும், யாகத்திலிருந்து
உண்டான அபூர்வம் நிலைத்திருந்து பயனைக் கொடுக்கும். இதற்கு ப்ரதான அபூர்வம் அல்லது உத்பத்தி அபூர்வம் என்று பெயர்.
• அதே போல் அங்கங்கள் விஷயத்திலும் அபூர்வங்கள் தேவை
ப்ரோக்ஷணம் செய்து பல நேரம் கழித்து தான் ப்ரதான யாகம் செய்யப்படிகிறது. ஆனால், ப்ரோக்ஷணம் என்பது யாகத்திற்கு
உபகாரகம் (உதவி செய்வது) என்று கூறியுள்ளோம். ஆகையால், ப்ரோக்ஷணம் ஒரு அபூர்வத்தை ஏற்படுத்திவிட்டு தான்
முடிந்துவிடும். அந்த அபூர்வம் தான் தேவையான காலம் இருந்து உபகாரத்தைச் செய்துேவிட்டு அழியும்.
இவற்றுக்கு அங்க-அபூர்வங்கள் என்று பெயர்.
• ஸந்நிபத்ய உபகாரகங்கள், ஆராத் உபகாரகங்கள் இரண்டிலிருந்தும் அபூர்வங்கள் தோன்றி ப்ரதான யாகத்திற்குத் துணை புரிகின்றன.
ஆனால், அவை உதவி செய்யும் முறை வேறு

அங்க அபூர்வங்களின் உதவிகள்

பிரதான யாகத்துக்கு முன்னும் பின்னும் செய்ய வேண்டிய ஆராத் உபகாரங்கள் உண்டாக்கும் அபூர்வங்கள்
இவை உண்டாக்குவதால் உதவியால்
பிரதான யாகத்துக்கு முன் செய்ய வேண்டிய ஸந்நிபத்ய உபகாரங்கள் உண்டாக்கும் அபூர்வங்கள் -உதவியால் -பிரதான யாகம்
ப்ரதான யாகம்–உத்பத்தி அபூர்வம் (ப்ரதான யாகம் செய்வதனால் தோன்றுவது )–பரம அபூர்வம் -முழு யாகமும் முடிந்த உடன் ஏற்படுவது –ஸ்வர்க்கம்
பிரதான யாகத்துக்கு பின் செய்ய வேண்டிய ஸந்நிபத்ய உபகாரங்கள் உண்டாக்கும் அபூர்வங்கள் – பாது காத்தலில் உதவும்

———————–

பாடம் -13-ப்ரயோஜகத்வம்

மீமாம்ஸா சாஸ்த்ரத்தின் முதல் அத்யாயத்தின் தர்மத்தை போதிக்கும் ப்ரமாணங்களும்,
இரண்டாவது அத்யாயத்தில் தர்மங்களுக்குள் வேறுபாட்டை அறியும் முறைகளையும்
மூன்றாவது அத்யாயத்தில் எந்த கர்மம் எந்த கர்மத்துக்கு அங்கம் என்பதையும் கூறினார் ஜைமிநி மஹரிஷி.
ஸ்ரீ ஜைமினி நியாய மாலை -அத்யாய சங்கதி –

• அடுத்ததாக நான்காவது அத்யாயத்தில் ப்ரயோஜகத்வம் என்ற விஷயம் கூறப்படுகிறது.
• ஒரே செயல் / பொருள் பலவற்றுக்கு அங்கமாக இருக்கலாம்.
ஆனால் அந்த அங்கிகளுக்குள் ஏதோ ஒன்று தான் அந்த கர்மத்துக்கு ப்ரயோஜகமாக இருக்கும்,
அதாவது அநுஷ்டாபகமாக இருக்கும்.
• ஒருவர் பல செயல்களில் ஈடுபட்டிருந்தாலும், அவரது முக்கியமான கடமை என்று ஒன்று இருக்கும்.
அதைச் செய்வதற்காகத் தான் அவர் இருக்கிறார், அவர் அதிகப்படியாக வேறு பொருப்புகளையும் பார்க்கலாம்
ஆனால் அந்த முக்கிய காரியம் இல்லை என்றால் அவர் இருக்கமாட்டார்.
• அதே போல் தான், யாகங்களில் ஒரே பொருள் / செயல் பலவற்றுக்கு அங்கமாக இருக்கலாம்
ஆனால் அவற்றுள் ஒன்று தான் அதற்கு ப்ரயோஜகமாக (செய்விப்பதாக) இருக்கும்.
அதற்கு தான் ப்ரயோஜகம் என்று பெயர். இந்த கர்மத்துக்கு ப்ரயோஜ்யம் என்று பெயர்

• எடுத்துக் காட்டு –
தர்ச பூர்ணமாஸம் என்ற யாகத்தில் புரோடாசம் (தோசை ) என்ற த்ரவ்யத்தை தேவதைக்கு ஸமர்பிக்க வேண்டும்.
அதற்காக அதை சமைப்பதற்கு கபாலம் என்ற சுட்ட மண் தகடுகளைப் பயன்படுத்த வேண்டும்.
இஸத வேதம் “கபாலங்களில் புரோடாசத்தை சமைக்கவேண்டும்” என்ற விதியில் சொல்லுகிறது.
• அதே கபாலங்களைக் கொண்டுதான், நெல்லிலிருந்து பிரிந்து விழுந்த உமியை நீக்கவேண்டும் என்றும் கூறுகிறது வேதம்,
“புரோடாசத்திற்கான கபாலத்தால் துஷங்களை நீக்க வேண்டும்” என்ற கட்டளையால்.
• கபாலத்தைச் செய்வது புரோடாசத்தைச் சமைக்கத் தான்.
அதே கபாலம் உமியை நீக்கவும் பயன்படுத்தப்படுகிறது, அவ்வளவே. ஆகையால்,
புரோடாசம் செய்வது ப்ரயோஜகம் + அங்கி,
கபாலம் ப்ரயோஜ்யம் + அங்கம்.
கபாலத்துக்கு உமியை நீக்குதல் என்ற செயல் அங்கி ஆகுமே தவிற ப்ரயோஜகம் ஆகாது.
• இதன் விளைவு என்ன வென்றால், ஒரு யாகத்தில் புரோடாசம் இல்லை என்றால், அந்த யாகத்தில்
கபாலங்களைச் செய்யத் தேவையில்லை
. அந்த யாகத்தில் சரு (கஞ்சி வடிக்காத அரிசிச் சோறு), யவாகு (அரிசிக் கஞ்சி) முதலானவற்றுக்காக நெல்லைக் குத்தி உமி
உண்டாகியிருந்தாலும், அது நீக்கப்பட் வேண்டும் என்றால் வேறே ஓரு முறையில் தான் நீக்க வேண்டும்,
கபாலங்களை உபயோகிக்க முடியாது

க்ரத்வர்த்தமும் புருஷார்த்தம்
க்ரது -வைதிக கர்மங்களுக்காக செய்பவை க்ரத் அர்த்தம்
புருஷனுக்காக செய்பவை புருஷார்த்தம்
பலம் இச்சா -அடைவிக்கும் வழி -அதில் இச்சை –
புருஷார்த்தம் -க்ரத் அர்த்தம் -இரண்டும் உண்டே

அங்கங்கள் இரண்டு வகைப்பட்டுள்ளன – க்ரத்வர்தம் என்றும் புருஷார்தம் என்றும்.
• புருஷனுடைய ஒரு பயனுக்காக எந்தச் செயல் செய்யப்படுகிறதோ , அது புருஷார்த்தம் என்று
அழைக்கப்படுகிறது, எடுத்துக்காட்டு –
ஸ்வர்கத்துக்காக ஜ்யோதிஷ்டோமம் என்ற யாகம் செய்யப்படுகிறது,
மழைக்காக காரீரீ என்ற யாகம் செய்யப்படுகிறது.-இவை புருஷார்த்தங்கள்.
தானாக எந்த ஒரு பொருளில் ஆசை ஏற்படுமோ , அதற்கு ஸாதநமாக (உபாயமாக /
வழியாக) விதிக்கப்பட்ட செயல் புருஷார்த்தம் ஆகும்.
• க்ரது என்றால் யாகம் முதலான வைதிகச் செயல்கள்.
அந்த க்ரதுவின் பூர்த்திக்காகச் (முழுமைக்காகச்) செய்யப்படுவது க்ரத்வர்த்தம் ஆகும். எடுத்துக்காட்டு –
ப்ரயாஜங்கள், அநுயாஜங்கள் போன்ற பல யாகங்கள் தர்சபூர்ணமாஸத்தின் அங்கமாகச் செய்யப்படுகின்றன.
அவற்றுக்குத் தனியாகப் பலம் எதுவும் கிடையாது. தர்சபூர்ணமாஸத்தின் பூர்த்தி தான் பலம்.
இந்த அங்கங்களைச் செய்யா விட்டால் தர்சபூர்ணமாஸம் என்ற யாகம் முழுமை பெறாது, அதாவது,
அது தன் பலத்தைக் கொடுக்கும் சக்தி உடையதாக ஆகாது.

கோதோஹநம் புருஷார்த்தம்
தர்சபூர்ணமாஸ யாகம் ஒருவனுக்கு நித்ய கர்மமாக (தவறாமல் செய்ய வேண்டிய கர்மமாக) விதிக்கப்பட்டுள்ைது.
அதில், தண்ணீரை ப்ரணயனம் செய்ய (ஓரிடத்திலிருந்து மற்ற ஓரிடத்திற்கு எடுத்துச் செல்ல) சமஸம் என்ற பாத்திரம்
பயன் படுத்தப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
யாகத்துக்கு ப்ரணயனம் அங்கம், ப்ரணயனத்துக்கு சமஸம் என்ற பாத்திரம் அங்கம்.
ஆகையால், சமஸம் க்ரத்வர்த்தம் அதாவது யாகத்தின் முழுமைக்காகப் பயன்படும் பொருள் தான்.
• அதே யாகத்தைச் செய்பவன், பசுக்களைப் பெற ஆசைப்பட்டால், சமஸத்திற்கு பதிலாக கோதோஹநம் என்ற
(மாட்டைக் கறப்பதற்கான) பாத்திரத்தால் ப்ரணயனம் செய்ய வேண்டும் என்றும் வேதம் கூறுகிறது.
ஆனால், அந்த கோதோஹநம் என்ற பாத்திரம் யாகத்தின் அங்கம் அல்ல.
பசுவிற்காகச் செய்யப்படும் முயற்சியில் ஒரு கருவியாக விதிக்கப்பட்டபடியால்
கோதோஹநம் நேரடியாக பசு என்ற பலத்துக்கு தான் அங்கம். ஆகையால், அது புருஷார்த்தம் ஆகும்.
• ஆகையால், பசுவை அடைய யாகம் ஸாதநம் அல்ல, பாத்திரம் தான் ஸாதநம்.
ஆனால், தனியாக இருக்கும் பாத்திரம் எந்தப் பயனையும் ஏற்படுத்த முடியாது என்பதால் அதை
தர்சபூர்ணமாஸத்தில் ப்ரணயனத்தில் பயன்படுத்தினால் பசுமாடு கிடைக்கும்.
இத்தை-கோதோஹநத்தை- உபயோகித்தால் நித்ய கர்மம் ஆகாரம் மாறி காம்ய கர்மம் ஆகுமே –

உதிக்கும் ஸூர்யனைக் காணாமை -புருஷார்த்தம்
• வேதத்தில், குருகுலத்தில் வேத அத்யயநம் முடித்துப் புறப்படும் மாணவனின் வ்ரதங்களைச் சொல்லுகிறது.
அதில் “ந ஈவேத உத்யந்தம் ஆதித்யம்” என்று ஒரு கட்டளை உள்ளது.
• பூர்வ பக்ஷம் –
“உதிக்கும் ஸூர்யனைக் காணுதல் என்ற செயலைச் செய்யாதே ” என்று இந்த வாக்கியம் கூறுகிறது.
செய்யாதே என்று சொல்கிறபடியால் இது நிஷேதம் (மறுப்பு) ஆகும்.
ஒரு செயல் நடக்கும் வாய்ப்பு இருந்தால் தான் அதை மறுக்க முடியும்.
ஆகையால், எந்த யாகத்தில் ஸூர்யனைக் காண வேண்டும் என்று விதிக்கப்பட்டுள்ளதோ , அதே யாகத்தில் ஸூர்யனைக் காணாதே
என்று இந்த விதி கூறுகிறது. வேதமே ஒரு செயலைச் செய் என்றும் செய்யாதே என்றும் கூறினால்,
இரண்டு வேத வாக்கியங்களும் தவறாக இருக்க முடியாதபடியால், இரண்டு அநுஷ்டானமுமே சரி தான்.
காண்பதோ காணாமலிருப்பதோ நம் விருப்பத்தைப் பொருத்தது என்று புரிந்து கொள்ளலாம்.
இதற்கு விகல்பம் என்று பெயர். இந்த மறுப்பு (நிஷேதம்) யாகத்தின் அடிப்படையில் சொல்லப் பட்டபடியால் க்ரத்வர்த்தம் ஆகும்.
• ஸித்தாந்தம் –
இந்த ப்ரகரணம் வ்ரதத்தைச் சொல்ல வந்த்து. வ்ரதம் என்றால் கடைப்பிடிக்க வேண்டிய செயல்கள் தான்.
ஆகையால், அந்த ஸந்தர்பத்தில், ஒரு மறுப்பைச் செய்து, “இதைச் செய்யாமலிரு” என்று வேதம் சொல்வது ஒட்டாது.
ஆகையால், இங்கும் ஒரு விதி (கட்டளை ) தான் இருக்க வேண்டும், நிஷேதம் (மறுப்பு) அல்ல.
• ஆகையால், “உதிக்கும் ஆதித்யனைக் காணாதே ” என்று பொருள் அல்ல.
“உதிக்கும் ஆதித்யனைக் காணாமையைச் செய்” என்று தான் பொருள் கொள்ள வேண்டும்.
ஆனால், காணாமையை எப்படி ஒருவர் செய்ய முடியும்?
அதனால், “ஆதித்யனைக் காணாமையை ஸங்கல்பம் செய்” என்று பொருள் கிடைக்கிறது.
• அப்படிச் செய்யும் ஸங்கல்பமும், யாகத்துக்காகச் செய்யும் க்ரத்வர்த்தம் அல்ல.
அருகிலிருக்கும் அர்த்தவாதத்தில் ஆதித்யனைக் கண்டால் பாபம் ஏற்படும் என்று சொல்லப்பட்டபடியால்,
பாபம் விலகுவது தான் இதற்கு ப்ரயோஜநம் ஆகும்.
ஆகையால், ஆதித்யனைக் காணாமலிருக்கும் ஸங்கல்பம் புருஷார்த்தம் தான்.

ப்ரபத்தியைக் காட்டிலும் ஸம்ஸ்காரம் சிறந்தது
• ஸோம யாகத்தில் யஜமாநன் சில நியமங்களைக் கடைப்பிடிப்பதாக தீஷை எடுத்துக் கொள்ள வேண்டும்.
அப்பொழுது யஜமாநனிடம் ஒரு தண்டம் (தடி) கொடுக்கப்படும். ஸோம லதையை வாங்கிய உடன் அந்த
தண்டத்தை அவர் மைத்ராேருணன் என்ற ரித்விக்கிடம் கொடுக்க வேண்டும் என்றும்.
அந்த ஸமத்ராேருணர், தண்டத்தைக் கையில் வைத்துக் கொண்டு தான் யாகத்தில்
அவரது கார்யங்களைச் செய்ய வேண்டும் என்றும் வேதம் சொல்கிறது
• ஸந்தேஹம் – யஜமாநன் தான் உபயோகித்த தண்டத்தை ஸமத்ராேருணனுக்கு தானம் செய்தல் என்பது,
உபயோகிக்கப்பட்ட தண்டத்திற்கு ப்ரதிபத்தி கர்மம் (நல் வழியில் செலவழிக்கும் கர்மம்) ஆகுமா?
அல்லது தண்டத்துக்கு ஸம்ஸ்காரமா?
• பூர்வபக்ஷம் – யஜமாநனுக்கு தண்டத்தின் பயன் முடிந்து விட்டபடியால், அந்த தண்டம் சிறந்த வகையில்
செலவழிக்கப் பட வேண்டும் என்ற தேவை உள்ள படியால், தானம் செய்வது ப்ரதிபத்தி கர்மம் தான்.
ஆகையால்,எத்தனை யஜமாநர்கள் உள்ளார்களோ , அத்தனை தண்டங்களை தானம் செய்ய வேண்டும்
• ஸித்தாந்தம் – சம்ஸ்காரம் காரியத்துக்கு யோக்யம் தர பரிஷ்காரம் செய்வது தானே –
ஸம்ஸ்காரம் என்றாலே , மேலே நடக்க இருக்கும் ஒரு செயலுக்குத் தகுதி உடையதாக
ஒரு பொருளை ஆக்குவது தான். ஆகையால், யஜமாநனால் உபயோகப் படுத்தப்பட்ட தண்டத்துக்கு
தானம் ப்ரதிபத்தி வடிவமான ஸம்ஸ்காரம் என்று சொல்வதைக் காட்டிலும்,
ஸமத்ராவருன் உபயோகப் படுத்தப்போகிற தண்டத்திற்கு தானம் என்பது ஸம்ஸ்காரம் என்று கொள்ளுதல் சிறந்தது.
ஆகையால், எத்தனை யஜமாநர்களிடம் எத்தனை தண்டங்கள் இருந்தாலும், ஸமத்ராவருணன்
ஒருவனானபடியால் ஒரு தண்டத்தை அவருக்கு தானம் செய்தால் போதும்.

அத்ருஷ்டார்த்தமான கர்மத்தைக் காட்டிலும் பிரதிபத்தி உயர்ந்தது
ஜ்யோதிஷ்டோமம் என்ற ஸோம யாகத்தில் ரித்விக்குகளுக்கு தக்ஷிணையைக் கொடுத்த பிறகு,
மான் கொம்பை சாத்வாலம் என்ற குழியில் எரிய வேண்டும் என்று வேதம் கூறுகிறது.
• ஸந்தேஹம் – இப்படி மான் கொம்பை எரிவது ப்ரயாஜங்கள் போல் அபூர்வத்துக்காக மட்டும் செய்யப்படும் கர்மமா,
அல்லது மான் கொம்பின் ப்ரதிபத்தி கர்மமா?
பிரதிபத்தி கர்மா என்பது யாகத்தில் உபயோகிக்கப் பட்டவற்றை சரியாக பயன்படுத்த செய்வது
• பூர்வபக்ஷம் – இது அபூர்வத்துக்காகச் செய்யப்படும் கர்மம் தான்.
இப்படி எரிவதன் மூலம் அபூர்வம் உண்டாகி, யாகத்திலிருந்து புத்ரன், பசு போன்ற பலன்கள் உண்டாக உதவும்.
இல்லை எனில், இந்தச் செயல் பயனற்றதாகப் போகும்.
• ஸித்தாந்தம் – இது ப்ரதிபத்தி கர்மம் தான். யஜமாநனுக்கு யாகத்தின் போது அரிப்பு ஏற்பட்டால்
சொறிந்து கொள்ளவே மான் கொம்பைப் பயன்படுத்த வேண்டும் என்று வேதம் கூறுகிறது.
ஆகையால், யாகத்தில் உபயோகிக்கப்பட்ட அந்த மான் கொம்பு, தான் நல்ல முறையில் செலவழிக்கப் பட வேண்டும்
என்று எதிர்பார்க்கும், அதாவாது, அதற்கு ஒரு ப்ரதிபத்தி கர்மம் தேவைப்படுகிறது.
ஆகையால், மான் கொம்பைக் குழியில் எரிவது அபூர்வத்துக்காக மட்டும் செய்யப்படும் கர்மம் அல்ல,
ப்ரதிபத்தியாகச் செய்யும் கர்மம் தான்.
அத்ருஷ்டார்த்தமான கர்மத்தைக் காட்டிலும் ப்ரதிபத்தி உயர்ந்த்து-
சம்ஸ்காரம் பிரதிபத்தியை விட உயர்ந்தது

சமமான இடத்தில் யாகம் செய் -பவ்ர்ணமி அன்று செய் -இவற்றை உண்டாக்கி செய்ய வேண்டாம் –
இவை சித்தம் அன்றோ –
முதல் இரண்டு பாத அர்த்தம் பார்த்தோம்

—————

பாடம் -14-

அங்கம் அங்கி சம்பந்தம் -மூன்றாவது அத்யாயம்
பிரயோஜகத்வம் விசாரம் நான்காவது அத்யாயம் –
அனுஷ்டாபகத்வம் -செய்வித்தல் -கீழே பார்த்தோம் -கபாலம் உண்டு செய்விப்பது புரோடாசம் செய்வதுக்காகவே –
தண்ட தானம் -பிரபத்தி காரியமா -ஸம்ஸ்கார காரியமா -எஜமானன் கொடுத்த தண்டத்தை வைத்துக் கொண்டே
மைத்ரா வருணன் யாகம் இத்தை வைத்து செய்வதால் ஸம்ஸ்காரமே பிரதானம் –
அபூர்வம் இப்பொழுது தான் வரும் -கார்யம் ச பலமாகும் –
விஷயம் விசயம் பூர்வ பக்ஷம் சித்தாந்தம் பலம் ஐந்தையும் அதிகரணத்துக்கு உண்டே –

மூன்றாவது பாகம் -பல சிந்தனை –
தர்ச பூர்ண மாசத்தால் சுவர்க்கம்-பலனைச் சொல்லி -யார் உபகாரம் எதிர் பார்ப்பு -இருப்பதால்
ப்ரயாஜா யாகங்கள் ஐந்தும் இதுக்கு அங்கம்
பிரதான கர்மமே அங்கீ -மற்றவை அங்கம் –

அங்கங்களுக்கு தனி பலன் கிடையாது

• வேதங்களில் ஸ்வர்கம், புத்ரன், பசு, மழை , செழிப்பு போன்ற பல பலன்களை நமக்கு அளிக்கக்கூடிய
பல கர்மங்கள் சொல்லப்பட்டுள்ளன.அவற்றுக்குப் ப்ரதான கர்மங்கள் என்று பெயர்.
அந்த கர்மங்களுக்கு அங்கமாகவும் பல கர்மங்கள் சொல்லப்பட்டுள்ளன.
• அங்கம் என்பது, ப்ரதான கர்மம் முழுமை பெரிவதற்காக மட்டுமே இருக்கும் ஒன்று.
ஆகையால், ப்ரதான கர்மத்தின் பூர்த்தியைத் தவிர்ந்த வேறோரு பலன் அங்கத்துக்கு இருக்க முடியாது.
• ஆனால் வேதத்தில் சில அங்கங்கஸள உபதேசித்து விட்டு, அவற்றுக்குப் பலனும் சொல்லப்படுகிறது.
எடுத்துக்காட்டு – “பர்ண மரத்தால் ஜுஹூ என்ற பாத்திரத்தைச் செய். எவன் ஒருவன் பர்ண மரத்தால்
ஜுஹூவைச் செய்கிறானோ அவன் இழிவான -வசைப் பேச்சை கேட்க வில்லை போன்ற வாக்கியங்கள்.
• பூர்வ பக்ஷம் – தனியாகப் பலன் இருக்கிறபடியால் இவை அங்கங்கள் அல்ல-
•ஸித்தாந்தம் – “பர்ண மரத்தால் ஜுஹூவைச் செய்” என்பது விதி (கட்டளை ). அதில் “வாக்யம்” என்ற
ப்ரமாணத்தால் பர்ண மரம் ஜுஹூவிற்கு அங்கம் என்று உடனடியாகத் தெரிந்து விடுகிறது.
ஆகையால், அடுத்து இருக்கும் வாக்கியம் பலத்தைச் சொல்ல முடியாது, தேவை இல்லாதபடியால்.
எனவே அது வெறும் அர்த்தவாதம் தான், பர்ண மரத்தைப் புகழ்ந்து பேசுகிறது.
மேலும், “வசைச் சொல் கேட்க மாட்டான்” என்று வருங்காலத்தில் சொன்னால் தான் அது பலம்
ஆகும், “கேட்கவில்லை” என்று நிகழ் காலத்தில் வேதம் சொல்லி யுள்ள படியால் அது பலம் ஆகாது –

விநியோக ப்ருதக்த்வம் நியாயம்

உத்பத்தி வாக்கியம் -அக்னி ஹோத்ரம் செய்
பலம் -சுவர்க்கத்தில் ஆசை இருந்தால் இத்தைச் செய்
சுவர்க்கம் -பலம் -கரணம்-அக்னி ஹோத்ரம் – –
எதற்க்கா எப்படி எத்தைக் கொண்டு -மூன்றும் உண்டே
தயிரைக் கொண்டு செய் பாலைக் கொண்டு செய் இதி கர்தவ்யம் -விகல்பம் -தனித்தனி வாக்கியம் –
ஆசைப்படி ஏதாவது ஒன்றை வைத்து செய்யலாம்
எதை வைத்து செய்கிறோமோ வாழ் நாள் முழுவதும் செய்ய வேண்டும்
இந்திரியங்கள் நன்றாக இருக்க ஆசை கொண்டவன் தயிரைக் கொண்டு ஹோமம் -இதுவும் ஒரு வாக்கியம் உண்டே

தர்ச பூர்ண மாச யோகம் சமஸம் கொண்டு நித்ய பிரயோகம்
காம்ய -கோதோஹனம் கொண்டு -இப்படி இருப்து வேறே அங்கே
ஆனால் இங்கு தயிரை வைத்தே நித்ய காம்ய இரண்டுக்கும் சொல்கிறது
சன்யோக ப்ருதக்த்வம்-விநியோக ப்ருதக்த்வம் -இதுவே

அங்கம் என்று போதித்தலுக்கு விநியோகம் செய்தல் என்று பெயர்.
ஒரே செயல் அல்லது பொருள் பல விதி வாக்கியங்களால் பலவற்றுக்கு அங்கமாக விதிக்கப்படலாம்.
இதற்கு விநியோக ப்ருதக்த்வம் என்று பெயர்.
அந்தப் பொருள் அவை அனைத்துக்கும் உதவும் ஸாமர்த்யம் உடையதாக ஆகும்.
• எடுத்துக் காட்டு – அக்நி ஹோத்ரம் என்பது நித்ய கர்மம்.
அதைச் செய்ய தயிர் என்ற த்ரவ்யத்ஸத அங்கமாக விதிக்கிறது வேதம்
“தயிரால் ஹோமம் செய்” என்ற கட்டளையால். ஆகவே, எந்த பலத்திலும் ஆசை இல்லாத போதும்,
நித்ய கர்மமாக அக்நி ஹோத்ரத்தை ஒருவன் செய்யும் போது, தயிர் அந்த ஹோமத்திற்கு அங்கம் ஆகும்.
• அதே சமயம், “அக்நி ஹோத்ரத்தில் உபயோகிக்கப்பட்ட தயிரால் இந்த்ரியங்களின் நலனை அடையலாம்” என்று
மற்ற ஓரு வேத வாக்கியம் கூறுகிறது. இதில், இந்த்ரியங்களின் நலனைக் குறித்துச் செய்யும் முயற்சியில்
தயிர் கருவியாக விதிக்கப்பட்டபடியால், தயிர் அந்த பலனுக்கு அங்கம் ஆகிறது.
இங்கு அக்நி ஹோத்ரம் பலத்தைக் கொடுக்கவில்லை , தயிர் தான் பலத்தைக் கொடுக்கும் கருவி ,
ஆனால் வெறும் தயிருக்கு அது ஒட்டாத காரணத்தால் அக்நி ஹோத்ர ஹோமம் அதன் வ்யாபாரமாக / ஆச்ரயமாக உள்ளது.
• இங்கு, இந்த்ரியங்களுக்காக ஒருவன் தயிரால் ஹோமம் செய்தால், தனியாக நித்ய கர்மமாக மறுபடியும்
ஹோமம் செய்யத் தேவையில்லை . சங்கல்பத்தில் தான் வேறு பாடு உண்டு இதில் –
இந்த்ரியங்களுக்கு அங்கமான தயிரே ஹோமத்துக்கும் அங்கமானபடியால் அதற்கும் உதவி விடும்.

அக்னி ஹோத்ரம் நித்யம் செய்து பாபங்களை போக்கி கொள்ளலாம்
பக்தி ஆரம்ப விரோதிகள் போக்க இவை உதவும்
ஒரே கார்யம் பாப ஷயத்துக்கும் பக்தி வளர்க்கவும் -விநியோக பிருத்தக்த்வம் இதுவே –
அதுவே ஸ்வர்க்கத்துக்கும் செய்தால் காம்ய கர்மா ஆகும்
வேதாந்த விசாரத்திலும் அங்க அங்கி பாவங்கள் -விநியோக பிருதக்த்வம் போன்றவை உபயோகிப்போம்
ஆகவே இது அடிப்படையான-தேவையான – ஞானம் தான் –

விஸ்வஜித் நியாயம்

வேதத்திலிருக்கும் விதிகள் (கட்டளைகள்) மனிதனின் முயற்சியை விதிக்கின்றன என்று பார்த்தோம்.
முயற்சி என்றால் அதற்கு மூன்று அம்சங்கள் இருக்கவேண்டும் –
இலக்கு (பலம்), கருவி (கரணம்), செயல்முறை (இதி கர்தவ்யதா).
வேதத்திலும் ஸ்வர்கம் முதலான பயன்களுக்குக் கருவியாக ஜ்யோதிஷ்டோமம் முதலான
யாகங்களையும், அவற்றின் செயல்முறையான அங்கங்களையும் விதிக்கிறது.
• ஆனால், சில இடங்களில், வேதம் ஒரு கர்மத்தைச் சொல்லி விட்டு, எந்த பலனையும் சொல்லாமல் விட்டுள்ளது.
அந்த கர்மங்களுக்கு எந்த பயன் இருக்கும் என்று மீமாம்ஸையில் சிந்திக்கப்படுகிறது.
• எடுத்துக்காட்டு – “விஸ்வஜித் யாகத்தைச் செய்” என்று கட்டளை உள்ளது.
ஆனால் இந்த யாகத்துக்கு எந்தப் பலமும் சொல்லப்பட வில்லை
• அந்த கர்மத்துக்கு புத்ரன், பசு, அந்நம், ஆரோக்யம் போன்ற எந்த பலத்தைக் கல்பித்தாலும் அதை
ஆசைப்படுபவர்கள் குறைவான படியால் இந்த யாகத்தைச் செய்யும் அதிகாரிகள் சிலரே ஆவர்.
• ஸ்வர்கம் தான் பலம் என்று கல்பித்தால் அதிகமாக அதிகாரிகள் கிடைக்கிறபடியால் யாகம் உயர்ந்தாகும்.
• ஆகையால், பயன் சொல்லப்படாத வைதிக கர்மங்களுக்கு எல்லாம் ஸ்வர்கம் தான் பலம் என்று முடிவாகிறது.
• இதற்கு விஸ்வஜித் ந்யாயம் என்று பெயர்.

ராத்ரி ஸத்ர நியாயம்

முன் சொன்ன விஸ்வஜித் ந்யாயத்துக்கு ஓர் அபவாதம் (விதி விலக்கு) இங்கு கூறப்படுகிறது.
• விதி வாக்கியத்தில் பலம் சொல்லப்படா விட்டாலும், அருகிலுள்ள அர்த்தவாதத்தில் ஒரு பலன்
பேசப்பட்டிருந்தால், அது வெறும் புகழ்ச்சிச் சொல்லாக இருந்தாலும் அந்த பலத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
இது தான் இந்த விதி விலக்கு.
• எடுத்துக்காட்டு – ஜ்யோ தி:, கௌ:, ஆயு: என்ற முன்று யாகங்கஸள வேதம் விதிக்கிறது.
இவற்றுக்கு ராத்ரி சத்ரம் என்று பெயர்.
ஆனால், அவற்றுக்குப் பலத்தைச் சொல்லும் எந்த விதி வாக்கியமும் காணப்படவில்லை .
ஆனால், இந்த யாகங்களைப் புகழ்ந்து பேசும் அர்த்த வாதத்தில் “யார் எல்லாம் இந்த ராத்ரி சத்ர யாகத்தைச்
செய்கிறார்களோ அவர்கள் நிலை பெறுவார்கள்-ப்ரதிஷ்டிந்தி ” என்ற கூறப்படுகிறது.
ஆகையால், ராத்ரி சத்ர யாகத்திர்கு நிலை பெறுவது தான் பயன் என்று ஏற்கப்படுகிறது.
• இதற்கு தான் ராத்ரி சத்ர ந்யாயம் என்று பெயர்

விதி வாக்கியத்தில் பலனைச் சொல்லா விட்டாலும் அர்த்தவாதத்தில் சொல்லப்பட்ட பலனை
ஏற்றுக் கொள்வது தான் இந்த நியாயம்
அர்த்த வாதத்திலும் சொல்லப்படா விட்டால் சுவர்க்கம் பலன் என்று முந்திய விஸ்வஜித் நியாயம் படி கொள்ள வேண்டும்
பர்ண மரம் -அர்த்தவாதம் பலனைப் புறக்கணித்தோமே -யாகம் முழுமை பெறவே என்றோம்
அங்கு அங்கத்தவத்தைப் போதிக்கும் பிரமாணம் உண்டே -பர்ணம் ஜுஹுவுக்கு அங்கம்
இங்கே இப்படி இல்லாமல் மூன்று யாகங்களைச் செய் என்றதே

யோக சித்தி நியாயம்

தர்சபூர்ணமாஸம் என்பது ஆறு யாகங்களின் கூட்டம். அது நித்ய கர்மமாக விதிக்கப்படுகிறது –
“உயிரிருக்கும் வரை தர்சபூர்ண மாஸங்களைச் செய்” என்ற கட்டளையால்.
• அதே தர்சபூர்ண மாஸம், ஸ்வர்கத்திற்கு ஸாதநமாகவும் (வழியாகவும்) விதிக்கப்படுகிறது –
“ஸ்வர்கத்தில் ஆசை யிருப்பவன் தர்ச பூர்ண மாஸத்தைச் செய்யக்கடவன்” என்ற கட்டளையால்.
• அதே தர்சபூர்ண மாஸத்தைப் பற்றி மற்ற ஓரு விதி கூறுகிறது –
“தர்சபூர்ணமாஸம் ஆசைப்பட்ட பலன்கள் அனைத்துக்கும் ஸாதநம்” என்று.
இதனால், புத்ரன் பசு மழை ஆரோக்யம் போன்ற எந்த பலனுக்காகவும் தர்சபூர்ண மாஸம் செய்யலாம் என்று அறிகிறோம்.
இப்படி மூன்று வேத வாக்கியங்கள் இருப்பதால் சங்கை எழுமே –
• கேள்வி – பொதுவாக, ஒரு பொருள் பலவற்றுக்குக் காரணாமாக இருந்தால், அது அவை அனைத்தையும்
ஒரே காலத்தில் ஏற்படுத்தும். எடுத்துக்காட்டு –
ஒரு செடி இலைக்கும் பூவுக்கும் காரணமான படியால் இரண்டையுமே ஒரே காலத்தில் ஏற்படுத்தலாம்.
அதைப்போல், ஒரு முறை தர்சபூர்ண மாஸங்களைச் செய்தால் புத்ரன், பசு போன்ற பலன்கள் அனைத்தையும் பெறலாமா?
• பதில் – ஒரு முறை தர்சபூர்ண மாஸம் செய்த்தற்காக, புத்ரன் பசு என்ற அனைத்துப் பலன்களையும் பெற்றுவிட முடியாது.
வேதம் “ஆசைப்பட்ட பயனுக்கு ஸாதநம்” என்று சொன்னபடியால், எதை ஆசைப்பட்டு அம் முறை
தர்சபூர்ண மாஸத்தைச் செய்கிறோமா அந்த பலன் மட்டும் தான் கிடைக்கும்.
• இதற்கு தான் யோக ஸித்தி ந்யாயம் என்று பெயர்.

தர்ச பூர்ண மாஸங்கள் எவை -நான்காம் பாதம் -12 அதிகரணம் விஷயம் இது –

வேதம் “தர்சபூர்ண மாஸங்களால் ஸ்வர்கத்தை அடை யலாம்” என்று கூறி யுள்ளது.
இதில், தர்சபூர்ண மாஸம் என்ற சொல் எவற்றைக் குறிக்கிறது என்று சிந்திக்கப்படுகிறது.
• பூர்வபக்ஷம் – தர்சம் என்றால் அமாவாஸை , பூர்ணமாஸம் என்றால் பௌர்ணமி. அந்தந்தக் காலங்களில்
செய்யப்படும் அனைத்து யாகங்களையும் அந்தந்தச் சொல் குறிக்கிறது,
அவற்றுக்குள் வேறுபாடு ஒன்றும் இல்லாதபடியால். ஆகையால், அக்நிக்கான புரோடாச யாகங்கள் இரண்டு,
இந்த்ரனுக்கான தயிர் யாகம், இந்த்ரனுக்கான பால் யாகம், உபாம்சுயாஜம், அக்நீஷோமர்களுக்கான
புரோடாசயாகம் என்ற ஆறு மட்டுமல்ல, ப்ரயாஜங்கள் அநுயாகங்கள் ஆஜ்யபாகங்கள் என்று எவை எல்லாம்
அமாவாஸை அல்லது பௌர்ணமியன்று செய்யப்படுகின்றனவோ அவை அனைத்துமே தர்சபூர்ணமாஸம்
என்று அழைக்கப் படுகின்றன. -ஆகையால், இவை அனைத்தும் சேர்ந்து தான் ஸ்வர்கத்தைக் கொடுக்கின்றன.
இதில் உள்ள 17 யாகங்களும் அங்கி அங்க பாவம் இல்லை -அனைத்தும் சம ப்ராதான்யம் என்பர் பூர்வ பக்ஷி –
• ஸித்தாந்தம் – தர்சம் பூர்ணமாஸம் என்ற சொற்களைக் கேட்டவுடன், அந்தந்த காலங்கள் நினைவுக்கு வருகின்றன.
அதிலிருந்து, எந்த எந்த கர்மங்களுக்கு உத்பத்தி விதியிலேயே அமாவாஸை பௌர்ணமி என்ற காலம் சொல்லப்பட்டுள்ளதோ
அவை தான் உடனடியாக நினைவுக்கு வருகின்றன. அவை எவை எனில் – முன் சொன்ன ஆறு ப்ரதாந யாகங்கள் தான்.
ப்ரயாஜங்கள் முதலானவற்றை விதிக்கும் வாக்கியங்களில் காலம் சொல்லப்பட வில்லை .
ஆகையால், ஆறு யாகங்கள் தான் ஸ்வர்கத்தைக் கொடுக்கின்றன. மற்றவை அவற்றுக்கு உதவி செய்கின்றன
ஆறு தான் புருஷார்த்தம் -சுவர்க்கம் பலன்
மற்ற 11 க்ருத்யர்த்தம் யாகம் முழுமை பெறவே -அங்கங்களே என்று சித்தாந்தம் –

————-

பாடம் -15-
க்ரமத்தைப் போதிக்க அடுத்த ஐந்தாவது அத்யாயம் –

தர்மத்தைப் பற்றிக் கூறும் மீமாம்ஸா சாஸ்த்ரத்தில், முதல் அத்யாயத்தில்
தர்மத்தைப் போதிக்கும் ப்ரமாணங்கள் சொல்லப்பட்டன. அதற்குப் பிறகு, மூன்று அத்யாயங்களால்
ஜைமிநி மஹரிஷி தர்மத்தைப் பற்றி விளக்கினார்.
இரண்டாவது அத்யாயத்தில் கர்மங்களின் வேறுபாடு என்னும் பேதத்தையும்,
மூன்றாம் அத்யாயத்தில் அங்கத்வம் என்பதையும்,
நான்காவது அத்யாயத்தில் ப்ரயுக்தி என்பதையும் கூறுவதன் மூலம்,
அநுஷ்டேயம் அதாவது செய்யப்பட வேண்டிய செயல்களைக் கூறினார்.
• இனி, அநுஷ்டிக்கப் பட வேண்டிய செயல்கள் தெரிந்தவுடன், அடுத்து ஏற்படும் எதிர்பார்ப்பு –
“இவற்றை எந்த வரிசையில் செய்ய வேண்டும்?” என்பது தான்.
ஆகையால், அடுத்திருக்கும் ஐந்தாம் அத்யாயத்தில், அந்தச் செயல்களை எந்த க்ரமத்தில்
(வரிசையில்) செய்ய வேண்டும் என்பதை விளக்குகிறார்.

• ஒவ்வொரு வைதிகச் செயலிலும் க்ரமத்தைச் சொல்லித் தலைக் கட்ட முடியாதபடியாலும்,
அப்படிச் செய்வதன் மூலம் மாணவர்களுக்குத் தானாகச் சிந்திக்கும் திறமை ஏற்படாது என்பதாலும் ,
ஜைமிநி மஹரிஷி நேரடியாக செயல்களின் வரிசையைத் தெரிவிக்காமல்,
க்ரமத்தைக் காட்டிக் கொடுக்கும் ஆறு ப்ரமாணங்களையும்,
அவற்றின் வலிமைகளையும் காட்டுகிறார் இந்த அத்யாயத்தில்.

பிரயோக விதி –

• கீழ் பாடங்களில் உத்பத்தி விதி, அதிகார விதி, விநியோக விதி மற்றும் ப்ரயோக விதி என்று
நான்கு வகையான விதிகளைப் பார்த்தோம்.
அதிகார விதி, -ப்ரயோஜனங்களைச் சொல்லும் இது மேல் ஆறாம் அத்தியாயத்தில் பார்ப்போம்
விநியோக விதி -அங்கங்களைப் போதிக்கும் –
• அதில் முதல் மூன்று வகையான விதிகள் புதிதான கர்மங்களையும்,
அவற்றின் பயன்களையும், அவற்றின் அங்கங்களையும் அறிவிக்கின்றன, ஆனால் செய்விப்பதில்லை .
நான்காவதான ப்ரயோக விதி தான் “அனைத்து அங்கங்களோடும் கூடின ப்ரதான கர்மத்தைச் செய்” என்று நமக்கு
விதிப்பதன் மூலம் ப்ரயோகம் என்று அழைக்கப்படும் அநுஷ் டானத்தை ஏற்படுத்துகிறது.
ஆகையால் இதற்குப் ப்ரயோக விதி என்று பெயர்.
• ப்ரயோக விதி என்று ஒன்று தனியாகக் கிடையாது. அங்கங்களைப் போதிக்கும் அனைத்து வாக்கியங்களோடும்
சேர்ந்த ப்ரதான வாக்கியம் தான் ஒரு மஹா வாக்கியமாக ஆகி ப்ரயோக விதி என்று அழைக்கப் படுகிறது.
• தர்சபூர்ணமாஸம் என்ற ப்ரதானத்தை விதிக்கும் வாக்கியம் – “ஸ்வர்கத்தில் ஆசை இருப்பவன்
தர்சபூர்ணமாஸத்தைச் செய்யக்கடவன்” என்பது.
அதன் அங்கங்களான ப்ரயாஜங்கள், அநுயாஜங்கள், ஸ்விஷ்டக்ருத்,
முதலானவற்றை விதிக்கும் வாக்கியங்கள் தனித்தனியாக உள்ளன.
• இவை அனைத்தும் சேர்ந்து, “ப்ரயாஜங்களைச் செய்து, அநுயாஜங்களைச் செய்து
ஸ்விஷ்டக்ருத் செய்து, ப்ராசித்ர பக்ஷணம் செய்து, இடா பக்ஷணம் செய்து, பலீகரண ஹோமம் செய்து,
ப்ராயச்சித்த ஹோமங்கள் செய்து, இவ்வாறு தர்சபூர்ணமாஸங்களைச் செய்து ஸ்வர்கத்தை அடைவாய்” என்ற
மஹாவாக்யம் தான் அங்களோடு கூடின ப்ரதானத்தைச் செய்யும்படி விதிக்கிறபடியால் ப்ரயோக விதி ஆகிறது.

க்ரமம் என்றால் என்ன

• இப்படி அங்கங்களோடு கூடின ப்ரதானத்தைச் செய்ய வேண்டும் என்று சொல்லும்போது,
அந்த கூட்டு / சேர்க்கை என்பது ஒரே காலத்தில் அவை அனைத்தையும் அநுஷ்டித்தால் தான் ஏற்படும்,
தனித்தனியாகச் செய்யப்பட்ட செயல்களைச் சேர்ந்து செய்யப்பட்டன’ என்று உலகில் சொல்லாதபடியால்.
ஆகையால், அங்கங்களையும் ப்ரதானங்களையும் ஒரே நொடியில் செய்ய வேண்டும் என்று ஆகிறது.
•ஆனால் இது அஸாத்யமான செயல் ஆகும். ஆகையால், சற்று தளர்த்தி, “இடைவிடாமல் செய்யவேண் டும்”
என்று இந்த ப்ரயோக விதி நமக்குக் காட்டுகிறது.
ஆகையால், வைதிக கார்யங்களைச் செய்யும்போது இடையில் லௌகிக கார்யங்களைச் செய்வது தவறு.
• இடைவிடாமல், தாமதமில்லாமல் செயல்களை அடுத்தடுத்துச் செய்யவேண்டும் என்றால்,
அவற்றைச் செய்யவேண்டிய வரிசையை நாம் முன்னமே முடிவு செய்திருக்க வேண்டும்,
இல்லை என்றால் ஸந்தேகத்தால் தாமதம் ஏற்படும். ஆகையால் தான் ப்ரயோக விதி க்ரமத்தையும் விதிக்கிறது.
• க்ரமம் என் றால் பௌர்வாபர்யம் – முன் பின் தன்மை . “இந்தச் செயலுக்கு அடுத்து இந்தச் செயல்
செய்யப்பட வேண்டும்” என் பது தான் க்ரமம்/ வரிசை என்று அதழக்கப்படுகிறது.
• க்ரமத்தை போதிக்கும் ப்ரமாணங்கள் ஆறு –
(1) ச்ருதி (2) அர்த்தம் (3) பாடம் (4) ஸ் தாநம் (5) முக்யம் (6) ப்ரவ்ருத்தி என்பவை தான் அவை

ஸ்ருதி க்ரமம்

க்ரமத்தை நேரடியாகக் கூறும் சொற்கள் தான் க்ரமத்தை போதிக்கும் முதல் ப்ரமாணமான
’ச்ருதி’ என்று அழைக்கப்படுகின்றன.
’இது முதலாவது’, ’இது பத்தாவது’ என்று தனிச் சொற்களாலும் க்ரமம் சொல்லப் படலாம்.
அல்லது, “இதைச் செய்துவிட்டு இதைச் செய்” என்பது போல் ’விட்டு’ என்ற ஒரு விகுதியாலும் கூறப்படலாம்.
ஏதோ ஒரு வகையில் ஒரு வரிசையைக் காட்டும் எந்தச் சொல்லும் ச்ருதி ப்ரமாணம் ஆகும்.
• இந்த ச்ருதி இரண்டு வகைப்படும் –
• (1) முன்னமே தெரிந்த செயல்களின் க்ரமத்தை மட்டும் போதிப்பவை –
வேதம் என்ற தர்ப்ப-கட்டைச் செய்ய வேண்டும் என்பதும்,
கார்ஹபத்யத்துக்கும் ஆஹவநீ யத்துக்கும் இடையிலுள்ள்ள வேதி என் ற
பூமியைத் தயார் செய்ய வேண்டும் என்பதும் தனித்தன வாக்கியங்களால் விதிக்கப்பட்டுள்ளன.
ஆகையால் அவை நமக்குத் தெரிந்த செயல்கள். இப்படி இருக்க, “வேதத்ததச் செய்துவிட்டு வேதியைச் செய்”
என்ற வேத வாக்கியம் அவற்றுக்குள் இருக்கும் க்ரமத்தை மட்டும் போதிக்கிறது.
• (2) க்ரமத்தோடு கூடின ஒரு புதுச் செயலை போதிக்குமவை –
ஸோம யாகத்தில் யாகம் முடிந்தவுடன் மீதமிருக்கும் ஸோம ரஸத்தை ரித்விக்குகள் பருக வேண்டும்.
அதில், யாகம் செய்யும் போது யார் ’வௌஷட்’ என்று வஷட்காரம் சொன்னாரோ , அவரும் அந்த ரஸத்தைப்
பருக வேண்டும் என்றும், அவர்தான் முதலில் பருக வேண் டும் என்றும் ஒரே வாக்கியம் கூறுகிறது
“வஷட்காரம் செய்தவருக்கு முதல் பக்ஷணம்” என்று.
• இந்த ச்ருதி ப்ரமாணம் மற்றவற்றைக் காட்டிலும் வலியை யுடையது, அவற்றை
எதிர்பார்க்காமல் க்ரமத்தை போதிக்கிறபடியால்

அர்த்த க்ரமம்

அர்த்தம் என்றால் ப்ரயோஜநம் என்று பொருள். ஒரு செயலின் ப்ரயோஜநத்தைக் கருதி அதன் க்ரமத்தை
முடிவு செய்தால் அதற்கு அர்த்தக்ரமம் என்று பெயர்.
• “அக்நி ஹோத்ர ஹோமத்தைச் செய்” என்று ஒரு வேத வாக்கியம் விதிக்கிறது. அதற்குப் பிறகு உள்ள ஒரு வாக்கியம்
“அரிசிக்கஞ்சியை சமைப்பாய்” என்று கூறுகிறது. “அரிசிக் கஞ்சியால் அக்நி ஹோத்ரம் செய்ய வேண் டும்” என்ற
வேறு ஓரு வாக்கியம், அக்நிஹோத்ரத்தில் கஞ்சியைப் பயன் படுத்த வேண் டும் என்று கூறுகிறது.
• வாக்கியங்களின் வரிசையைப் பார்த்தால், அக்நி ஹோத்ரத்தைச் செய்து விட்டு தான் கஞ்சியைச் சமைக்கவேண் டும்.
ஆனால் அப்படிச் செய்தால், கஞ்சியால் அக்நிஹோத்ரத்துக்கு எந்த ஒரு த்ருஷ் டமான பயனும் இருக்க முடியாதபடியால்,
கஞ்சி சமைப்பதால் ஏற்படும் புண்ணியம் அக்நி ஹோத்ரத்துக்கு உதவுகிறது என்று அத்ருஷ்டத்தை
/ அபூர்வத்தை / புண்ணியத்தைக் கல்பித்தே ஆக வேண்டும்.
• கஞ்சியை முன்னால் சமைத்து, அக்நிஹோத்ரத்தைப் பின்னால் செய்தால், அக்நிஹோத்ரம் செய்ய ஒரு த்ரவ்யம்
தேவைப்படும் போது இந்தக் கஞ்சியையே பயன் படுத்தலாம் ஆகையால் த்ருஷ் டமான
ப்ரபயோஜநம் கிடைக்கும் கஞ்சிக்கு. இதுதான் சிறந்தது.
• ஆகையால், கஞ்சியின் ப்ரயோஜநத்தை மனதில் கொண் டு,
“கஞ்சியைச் சமைத்த பிறகு அக்நிஹோத்ரம் செய்ய வேண் டும்” என்று க்ரமத்தை முடிவு செய்கிறபடியால்
இதற்கு அர்த்த க்ரமம் என்று பெயர்.

பாட க்ரமம்

பாடம் என்றால் படித்தல். செயல்களைப் பபோதிக்கும் வாக்கியங்கள் வேதத்தில் எந்த வரிசையில் படிக்கப் பட்டுள்ளனவோ
அதே வரிசையில் அந்தச் செயல்களைச் செய்வதற்கு பாட க்ரமம் என்று பெயர்.
• இது இரண்டு வகைப்படும் – (1) ப்ராஹ் மண பாட க்ரமம் (2) மந்த்ர பாட க்ரமம்.
வேதத்தை ப்ராஹ் மணம் என்றும் மந்த்ரம் என்றும் இரண்டாகப் பிரிப்பர்.
ப்ராஹ்மணம் என்றால் “இத்தைச் செய்” என்று கட்டளையிடும் வாக்கியம்.
மந்த்ரம் என்றால், ப்ராஹ் மணத்தால் விதிக்கப்பட்ட கர்மத்தைச் செய்யும் போது நாம் உச்சரிக் வேண்டிய வாக்கியம்.
• (1) ப்ராஹ் மண பாட க்ரமம் – எந்த வரிசையில் ப்ராஹ்மண வாக்கியங்களால் செயல்கள் விதிக்கப்பட்டுள்ளனவோ ,
அதே வரிசையில் அவற்றைச் செய்தல்.
• எடுத்துக்காட்டு – “ஸமித் யாகத்தைச் செய்”, “தநூநபாத் யாகத்தைச் செய்”, “இட் யாகத்தைச் செய்”, “பர்ஹிஸ் யாகத்தைச் செய்”,
“ஸ் வாஹாகார யாகத்தைச் செய்” என்ற ஐந்து ப்ராஹ் மண வாக்கியங்கள் (கட்டளைகள்) ப்ரயாஜங்கள் என்று அழைக்கப்படும்
ஐந்து யாகங்களை விதிக்கின்றன. அவற்றை எந்த க்ரமத்தில் செய்ய வேண் டும் என்ற கேள்வி எழும் போது, எந்த வரிசையில்
கட்டளைகள் படிக்கப்பட்டுள்ளனவோ அதே வரிசையில் செய்வது உசிதமானபடியால், ஸமித் தநூநபாத் இட் பர்ஹிஸ் ஸ்வாஹாகாரம்
என்ற இந்த வரிசையில் தான் யாகங்கள் செய்யப்பட வேண்டும்.-இதற்கு ப்ராஹ் மண பாட க்ரமம் என்று பெயர்.

மந்த்ர பாட க்ரமம்

(2) மந்த்ர பாட க்ரமம் – ப்ராஹ்மண வாக்கியங்களைக் காட்டிலும் மந்த்ரங்கள் அநுஷ்டானத்துக்கு
நெருக்கமானவை – (அந்தரங்கமானவை ).
• ப்ராஹ்மண வாக்கியங்கள் “இத்தைச் செய் ” என்று கட்டளை இட்டுவிட்டு விலகி விடுகின்றன.
அநுஷ்டான வேளையில் அவற்றுக்கு உபயோகம் இல்லை –
ஆனால் மந்த்ரங்கள்தான் அநுஷ்டானம் செய்யும் போது எப்பொழுதும் உச்சரிக்கப்படுகிறபடியால் மிகவும் நெருக்கமானவை .
• ஆகையால், ப்ராஹ்மண வாக்கியங்களில் செயல்கள் கட்டளை யிடப்பட்ட வரிசைக்கும்,
அந்தச் செயல்களுக்கான மந்த்ரங்கள் படிக்கப்பட்டுள்ள வரிசைக்கும் விரோதம் இருந்தால்,
அநுஷ்டானத்துக்கு நெருக்கமான மந்த்ரங்களின் வரிசையில் (க்ரமத்தில்) தான் செயல்களைச் செய்ய வேண்டும்.
இதற்கு தான் மந்த்ர பாட க்ரமம் என்று பெயர்.
• எடுத்துக்காட்டு – தர்சபூர்ணமாஸம் என்ற கர்மத்தில் பௌர்ணமி அன்று ஆக்நேயம், உபாம்சுயாஜம், அக்நீ ஷோமீயம்
என்று மூன்று யாகங்கள் செய்யப்பட வேண் டும்.
அதில், வேதம் கட்டளையிடும் போது, முதலில் “அக்நீ ஷோமீயத்தைச் செய்” என்றும்
பின்னால் ஒரு வாக்கியத்தில் “ஆக்நேயத்தைச் செய்” என்றும் சொல்லியுள்ளது.
ஆனால், அந்தந்த யாகத்தைச் செய்யும் போது சொல்ல வேண்டிய மந்த்ரங்களைச் சொல்லும் போது,
முதலில் ஆக்நேய யாகத்தின் மந்த்ரமும் பிறகு அக்நீ ஷோமீயத்தின் மந்த்ரமும் படிக்கப்பட்டபடியால்
ஆக்நேயம் செய்த பிறகு தான் அக்நீஷோமீயம்.

————

பாடம் -16-ஸ்தான க்ரமம் –

ஐந்தாம் அத்யாயத்தில்
முதல் பாதத்தில் ஆறு பிரமாணங்கள் க்ரமத்தைப் போதிக்கும்
இரண்டாம் பாதம் -அவற்றின் சிறப்பு விசேஷங்கள் -சங்கை போக்க –
மூன்றாம் பாதம் -வ்ருத்தி அவர்த்தனம் -செயல் வளர்ச்சி குறைவு பற்றி –
நான்காம் -பலம் பொருந்தியவை எவை என்று சொல்லும்

க்ரமத்தைப் போதிக்கும் பிரமாணங்களுக்குள் நான்காவது ஸ்தாநம்–
ஸ்தாநம் என்றால் உபஸ்திதி / நினைவு என்று பொருள். பல செயல்களை ஒரே காலத்தில் செய்ய வேண்டிய போது,
எது தவறாமல் முதலில் நினைவுக்கு வருகிறதோ அதை முதலில் செய்வதற்குத் தான் ஸ்தாந க்ரமம் என்று பெயர்.
• எடுத்துக்காட்டு – ஸோம யோகம் ஐந்து நாட்கள் செய்யப் படுவது.
அதில் தைக்ஷம் என்ற யோகம் நான்காவது நாளிலும், ஸவநீயம் என்ற யாகம் ஐந்தாவது நாள் நடுவிலும்,
ஆநு பந்த்யம் என்ற யாகம் ஐந்தாம் நாள் இறுதியிலும் செய்யப்பட வேண்டும்.
• மற்ற ஓரு ஸோம யாகத்தில் இந்த மூன்று யாகங்களையும் சேர்த்து ஒரே காலத்தில் செய்ய வேண்டும் என்று சொல்கிறது.
அப்பொழுது எந்த யாகத்தின் இடத்தில் மூன்றையும் செய்யலாம் என்று பார்த்தால், பிரதாந யாகமான ஸோம யோகத்துக்கு
அருகிலுள்ள படியாலும், ஸ்தாந அதிக்ரமம் (தங்கள் தங்கள் இடத்தை விட்டு நகருதல்) குறைவாக உள்ள படியாலும்,
நடுவான ஸவநீயம் என்ற யாகத்தின் இடத்தில் தான் செய்ய வேண்டும்.
• அப்படி ஸவநீய யாகத்தின் இடத்தில் மூன்று யாகங்களையும் செய்யும் போது எதை முதலில் செய்ய வேண் டும்
என்ற கேள்வி எழும் பொழுது, அவ்விடத்தில் முதலில் ஸவநீயம் தான் நினைவுக்கு வரும் –
ஆகையால் அதைச் செய்து விட்டு, பிறகு தைக்ஷத்தையும் ஆநு பந்த்யத்தையும் செய்ய வேண்டும்.
இது தான் ஸ்தாந க்ரமம் –

முக்ய க்ரமம் –
•முக்யம் என்றால் பிரதாநம் என்று பொருள் .
சேர்த்து செய்யப்படும் பிரதாந யாகங்களின் வரிசையில் அவற்றின் அங்கங்களைச் செய்வதற்கு முக்ய க்ரமம் என்று பெயர்.
•பிரயோக விதியில் ’அங்கங்களோடு கூட பிரதாந யாகத்தைச் செய் ’ என்று சொன்ன படியால்
அங்கங்களையும் பிரதாநத்தையும் சேர்த்துச் செய்ய வேண்டும். அது முடியாத படியால் இடைவிடாமல் செய்ய வேண்டும்.
அதுவும் முடியா விட்டால் ஸமமான ஆனால் குறைவான இடைவெளி விட்டுச் செய்ய வேண்டும்.
அதற்காகத் தான் முக்ய க்ரமம் பின் பற்றப் படுகிறது.
• பிரதாநம் 1 பிரதாநம் 2 என்று இரண்டு பிரதாநங்களும், அவற்றுக்கு அங்கம் 1 அங்கம் 2 என்று இரண்டு அங்கங்களும் இருந்தால்,
அங்கம் 1 – அங்கம் 2 – பிரதாநம் 1 – பிரதாநம் 2 என்ற வரிசையில் செய்தால் தான் ஒவ்வொரு அங்கத்துக்கும் அதன் பிரதாநத்துக்கும்
ஸமமான இடைவெளி இருக்கும். இது தான் முக்ய க்ரமம்.
• இதை மாற்றி, அங்கம் 2 – அங்கம் 1 – பிரதாநம் 1 – பிரதாநம் 2 என்று செய்தால் ,
முதல் அங்கத்துக்கும் முதல் பிரதாநத்துக்கும் இடைவெளியே இல்லாமலும், இரண்டாம் அங்கத்துக்கும் இரண்டாம் பிரதாநத்துக்கும்
அதிக இடைவெளியும் உள்ள படியால், பிரயோக விதியில் சொல்லப் பட்ட இடைவிடாமையைத் தகர்த்த தாகும்–
எடுத்துக்காட்டு –
தர்ஸ பூர்ணமாஸத்தில் பிரயாஜங்கள் செய்து மீதமிருக்கும் நெய்யை மூன்று பிரதாந யாகங்களின்
ஹவிஸ்ஸுகளிலும் சேர்க்கும் போது, அந்த பிரதாந யோகங்களைச் செய்யப் போகும் க்ரமம் எதுவோ
அதே க்ரமத்தில் செய்ய வேண்டும்.
• இந்த முக்ய க்ரமத்தில், பிரதாநங்களின் க்ரமத்தை அறிந்தால் தான் அங்கங்களின் க்ரமத்தை அறியலாம் என்பதால்
இது நேரடியாக அங்கங்களின் க்ரமத்தைச் சொல்லும் பாட க்ரமத்தைக் காட்டிலும் துர் பலமானது.
• எடுத்துக்காட்டு –
தர்ஸ பூர்ண மாஸத்தில் பவ்ர்ணமி அன்று ஆக்நேயம், உபாம்சுயாஜம், அக்நீ ஷோமீயம் என்ற மூன்று
யாகங்கள் இதே வரிசையில் செய்யப் படுகின்றன. ஆகையால்,முக்ய க்ரமத்தின் படி பார்த்தால் இதே வரிசையில் தான்
அந்தந்த யாகத்துக்கு வேண்டிய த்ரவ்யத்தை (நெல், நெய், நெல்) நிர்வாபம் செய்ய வேண்டும்
(மூட்டை / பாத்திரத்திலிருந்து யாகத்துக்குத் தேவையான அளவை மட்டும் எடுத்து வைத்தல்) நிர்வாபம் ஆகும்).
ஆனால், மந்த்ரங்களைப் படிக்கும்பொழுது ஆக்நேயத்துக்கும் அக்நீ ஷோமீயத்துக்கும் நிர்வாபம் செய்வதை அடுத்தடுத்து
வேதம் சொல்லியுள்ள படியால், பாட க்ரமத்தால் ஆக்நேயத்துக்கு, பிறகு அக்நீ பஷோமீயத்துக்கு, பிறகு உபாம்சுயாஜத்துக்கு
என்று தான் நிர்வாபம் செய்யவேண்டும்.

ப்ரவ்ருத்தி க்ரமம்
ஒரே காலத்தில் பல யாகங்கள் செய்யப்படும் போது அனைத்து ஹவிஸ்ஸுகளுக்கும் ஒரே ஸம்ஸ்காரங்களைச்
செய்யும் பொழுது, முதல் ஸம்ஸ்காரத்தை த்ரவ்யங்களின் எந்த க்ரமத்தில் செய்தோமோ அதே
க்ரமத்தில் தான் இரண்டாவது முதலான ஸம்ஸ் காரங்களையும் செய்யவேண்டும். இதுவே பிரவ்ருத்தி க்ரமம்.
• எடுத்துக்காட்டு – பிரஜா பத்யம் என்ற கர்மத்தில் பிரஜாபதி என்ற தேவதைக்கு
ஒரே ஸமயத்தில் 17 யாகங்கள் செய்யப் பட வேண் டும்.
ஒவ்வொரு யாகத்திற்கும் தனித்தனியாக ஒரு த்ரவ்யத்தை தயார் செய்யவேண்டும்.
அவற்றுக்குச் செய்யும் ஸம்ஸ் காரங்களையும் தனித்தனியாக செய்யவேண்டும்.
• அதில், முதல் த்ரவ்யத்துக்கு அனைத்து ஸம்ஸ் காரங்களையும் முடித்துவிட்டு பிறகு அடுத்ததுக்கு அனைத்ததையும்
செய்தால் சில அங்கங்கள் தங்கள் பிரதாநங்களிலிருந்து வெகு தொலைவிலும் ,
சில வெகு அருகிலும் இருக்குமாகையாலே அப்படி செய்யாமல், முதல் ஸம்ஸ்காரத்தை அனைத்து த்ரவ்யங்களுக்கும்
செய்துவிட்டு, பிறகு இரண்டாவது ஸம்ஸ்காரத்தைத் தொடங்க வேண்டும்.

இது முக்ய க்ரமம் விட துர்லபம்
தயிர் தயார் பண்ண முன்பே தொடங்க வேண்டும்
ப்ரவ்ருத்தி க்ரமம் படி தயிருக்கு உள்ளவற்றை எல்லாம் பண்ணி தோசை பால் செய்யாமல் இல்லாமல்
தயிர் உண்டு செய்ய வேண்டியதை மட்டுமே செய்து விட்டு
அக்னிக்கு தோசை -இந்திரனுக்கு தயிர் -இந்திரனுக்கு பால் -இந்த க்ரமத்திலே செய்ய வேண்டும்

• அப்படி இரண்டாவது ஸம்ஸ்காரம் செய்யும் பொழுது, ஏதோ ஒரு வரிசையில் 17 த்ரவ்யங்களுக்கு அதைச் செய்தால்,
மறுபடியும் அந்தந்த த்ரவ்யத்தின் அடுத்தடுத்த ஸம்ஸ்காரங்களுக்குல்ள் உள்ள இடைவெளி மாறிவிடும்.
ஆகையால், த்ரவ்யங்களின் எந்த வரிசையில் முதல் ஸம்ஸ்காரம் செய்யப் பட்டதோ அதே வரிசையில் தான்
இரண்டாவதையும் செய்ய வேண்டும். இது தான் பிரவ்ருத்தி க்ரமம் ஆகும்

உத்கர்ஷம் அபகர்ஷம்
வேதத்தில் சில இடங்களில், ஒரு காலத்தில் செய்யப்பட வேண்டிய செயலை சற்று
தாமதித்து, பின் ஒரு காலத்தில் செய்யச் சொல்கிறது. இதற்கு உத்கர்ஷம் என்று பெயர்.
•அதே போல் , ஒரு காலத்தில் செய்யப்பட வேண்டிய செயலை முன்னால் இழுத்து,
முன் ஒரு காலத்திலேயே செய்யச் சொல்கிறது – இதற்கு அப கர்ஷம் என்று பெயர் –

பதார்த்த அநு சமயம் -காண்ட அநு சமயம்
பல த்ரவ்யங்களுக்கு ஒரே ஸம்ஸ்காரத்தைச் செய்யும் இடத்தில், முதல் ஸம்ஸ்காரத்தை அனைத்துக்கும்
செய்துவிட்டு, பிறகு அடுத்த ஸம்ஸ்காரத்தைத் தொடங்க வேண்டும் என்று பார்த்தோம்.
• பவ்ர்ணமி அன்று இரண்டு புரோடாசங்கள் தேவைப்படுகின்றன .
முதலுக்கு நெல்லை எடுத்தல், இரண்டாவதுக்கு நெல்லை எடுத்தல், முதலுக்கு நெல்லை ப்ரோக்ஷித்தல்,
இரண்டாவதுக்கு நெல்லை ப்ரோக்ஷித்தல், முதலுக்கு நெல்லைக் குத்துதல், இரண்டாவதுக்கு
நெல்லைக் குத்துதல் என்ற வரிசையில் தான் செய்யவேண் டும்.
இதற்கு பதார்த்த அநுஸமயம் என்று பெயர்.
பதார்த்தம் என்று அழைக்கப்படும் ஒவ்வொரு செயலையும் அனைத்துக்கும்
செய்துவிட்டு அடுத்த செயலைச் செய்கிற படியால்.

• நெல்லைக் குத்துதல் என்ற ஒரு செயலுக்குள் மான் தோலை விரித்தல் -உரலை வைத்தல் நெல்லைச் சேர்த்தல்
என்று பல கார்யங்கள் உள்ளன. அவற்றையும் பதார்த்த அநுஸமயமாகச் செய்ய வேண்டுமோ? என்றால் – அல்ல.
நெல்லைக் குத்துவது என்ற ஒரு முழுமையான செயல் ஸாஸ்த்ரத்தில் விதிக்கப்பட்டுள்ளது,
ஆகையால் அதத முழுவதுமாக ஒரு த்ரவ்யத்துக்கு முடித்துவிட்டு தான் அடுத்ததுக்குச் செல்லலாம்.
இதற்கு காண்ட அநுஸமயம் என்று பெயர்.
ஒரு காண் டத்தில் சொல்லப் பட்டது போலே ஒரே செயலின் பகுதிகளான அங்கங்கள் அனைத்தையும்
சேர்த்துத் தான் செய்யவேண்டும்.

விவ்ருத்தி
• சில இடங்களில் கர்மங்களை வளர்க்க வேண்டும் என்று வேதம் சொல்லும்.
வளர்ப்பது மீண் டும் மீண் டும் அநுஷ்டிப்பதால் தான்.இதற்கு ஆவ்ருத்தி என்று பெயர்.
• தர்ச பூர்ண மாஸங்களில் 5 பிரயாஜங்கள் சொல்லப்பட்டு உள்ளன –
வேறே ஒரு . யாகத்தில் 11 பிரயாஜங்கள் செய்ய வேண்டும் என்று சொல்லப் படுகிறது
ஐந்தை வைத்துக் கொண்டு பதினொன்று என்ற எண்ணை எப்படிச் செய்வது என்றால் ஒவ்வொரு
பிரயாஜத்தையும் இரு முறை செய்து, கடைசி பிரயாஜத்தை மட்டும் மும்முறை செய்தால் 11 முறை
பிரயாஜம் செய்ததாக ஆகும்
• அப்படி செயல்களை ஆவ்ருத்தி செய்யும் பொழுது, ஒரு முறை ஐந்தையும் முடித்துவிட்டு, பிறகு
ஐந்தையும் செய்தால் அதற்கு தண்ட-கலிதவத்-ஆவ்ருத்தி என்று பெயர்.
அதோவது 1 2 3 4 5 1 2 3 4 5 5 என்ற வரிசையில் பிரயாஜங்களைச் செய்தல்.
•ஆனால் இப்படிச் செய்தால் ’முதல் பிரயாஜத்துக்கு அடுத்து இரண்டாவது பிரயாஜம்’ என்ற க்ரமம் பாதிக்கப்படும்.
ஆகையால், இப்படிச் செய்யாமல் தன் தன் இடத்திலேயே அந்தந்த பிரயாஜத்தை ஆவ்ருத்தி செய்ய வேண்டும்.
அதாவது 1 1 2 2 3 3 4 4 5 5 5 என்ற வரிசையில் செய்ய வேண்டும்.
இதற்கு ஸ்வ-ஸ்தாந விவ்ருத்தி என்று பெயர்.

——–

பாடம் –17-ஆறாம் அத்யாயம் -அதிகாரம்

கீழ் ஐந்து அத்யாயங்களில் அநுஷ் டிக்கப்படவேண்டிய கர்மங்ள் எல்லாம் சொல்லப்பட்டன,
அவற்றைச் செய்யவேண்டிய வரிசையும் சொல்லப்பட்டன. அடுத்து இயற்கையாக ஏற்படும் எதிர்பார்ப்பு –
“இவற்றைச் செய்யப்போகுமவர்(அநுஷ் டாதா) யார்?” என்ற கேள்வி எழுகிறபடியால், அதிகாரம்
என்பதை அடுத்திருக்கும் ஆறாவது அத்யாயத்தில் கூறுகிறார் மஹர்ஷி ஜைமிநி
• அதிகாரம் என்றால் பல-ஸ் வாம்யம் அதாேது பலத்தை அநுபவித்தல் என்று பொருள்.
ஒரு யாகத்தின் பலத்தை அநுபவிப்பவன் தானே அதைச் செய்ய முயற்சிப்பான்.
ஆகையால், பலத்தை அநுபவிப்பது தான் அதிகாரம் ஆகும்.
•ஆனால் இப்படிச் சொன்னால் , மகன் செய்யும் ஸ்ரார்தத்தின் பலத்தை அநுபவிக்கும் பித்ருக்களுக்கு
அதிகாரம் கிடைத்து விடும், மகனுக்குக் கிடைக்காது. ஆகையால், பலத்தின் அநுபவமும், யாகம்
என்கிற செயலும் எவரிடம் உள்ளதோ அவரே அதிகாரி என்று மாற்றிக் கொள்ள வேண் டும்.
•ஆனால், அப்படிக் கொண்டாலும், மகனின் நலனுக்காக செய்யப்படும் ஜாதேஷ்டி என்ற யாகத்தில்
தந்தைக்கு அதிகாரம் இல்லாமல் போகும், அவர் பலத்தை அநுபவிக்காதபடியால்.
ஆகையால், யாகத்தில் முயற்சிக்குக் காரணமான பலத்தைப் பற்றின ஆசையும்,
யாகம் என்கிற செயலும் எவரிடத்திலுள்ளனவோ அவரே அதிகாரி ஆவார்.

சொல்லப் படாத அதிகாரங்கள்

யாகம் முதலான வைதிக கர்மங்ளைச் செய்ய, மூன்று அடிப்படையான தேவைகள் உள்ளன.
இவை நேரடியாக விதி வாக்கியங்களில் சொல்லப்படாத போதும், இவை இல்லாமல்
கர்மங்களைச் செய்ய முடியாதபடியால் இவை அதிகாரத்தில் சேர்கின்றன
1. வித்யை – அத்யயநம் செய்து, வேதங்களையும் அவற்றின் பொருளையும் கற்றிருக்க வேண்டும்.
இது இருந்தால் தான், அடுத்தடுத்து என்ன செயல்கள் செய்யவேண்டும் என்பதையும்,
சொல்லவேண்டிய மந்த்ரங்களையும் அறிய முடியும்.
2. அக்நி – யாகம் ஹோமம் முதலானவற்றில், ஒரு த்ரவ்யத்தை அக்நியில் சேர்க்க வேண்டும் என்பதால்,
அதற்காக ஆதாநம் என்ற கர்மத்தைச் செய்து கார்ஹபத்யம் ஆஹவநீயம் தக்ஷிணாக்நி
என்ற மூன்று அக்நிகளும் ஒருவனிடத்தில் இருந்தால் தான், அவன் யாகம் முதலானவற்றைச் செ ய்ய முடியும்
3. ஸாமர்த்யம் – யாகம் முதலானவற்றைச் செய்யும் திறமையும், பண வசதியும், உடல் ஆரோக்யமும்,
நன்கு செயல்படக்கூடிய புலன் களும் இருந்தால்தான் ஒருவனால் யாகம் செய்ய முடியும்.
ஆகையால், பார்க்கமுடியாதவர்கள், பேச முடியாதவர்கள், நடக்க முடியாதவர்கள் ஆகியவர்களுக்கு
யாகம் முதலானவற்றில் அதிகாரம் கிடையாது.

பெண்ணின் அதிகாரம்

• பூர்வபக்ஷம் – யாகம் முதலான வைதிக கர்மங்களில் பெண்களுக்கு அதிகாரம் கிடையாது, ஏன் என்றால்
1. யாகங்களைச் சொல்லும் விதிகளில் “இந்த பலத்தில் ஆசை யிருப்பவன் இந்தக் கர்மத்தைச் செய்ய வேண்டும்”
என்று ஆண்பால் தான் உபயோகப்படுத்தப்பட்டுள்ளது.
2. பெண்களுக்கு அத்யயநம் மூலம் பெற்ற ஞாநம் இல்லை , அதாநம் மூலம் பெற்ற அக்நிகள் இல்லை, சொத்து
இல்லாதபடியால் ஸாமர்த்யமும் இல்லை -அதனால்
• ஸித்தாந்தம் – பெண் களுக்கும் யாகம் முதலானவற்றில் அதிகாரம் உண்டு.
1. “தர்மத்திலும், செல்வத்திலும் விஷய அநுபவத்தில் மனைவியைக் கணவன் மீறக்கூடாது” என்றும்
“பாணிக்ரஹணம் செயததால் தர்ம கார்யங்களிலும் அவற்றின் பலன்களிலும் சேர்ந்து தான் பங்கு உள்ளது”
என்றும் ஸ்ம்ருதிகள் சொல்கிறபடியால் அதிகாரம் நிச்சயம் உண்டு. இரண்டு பால்களில் ஏதோ
ஒன்றைச் சொல்ல வேண் டியபடியால் வேதம் ஆண் பாலால் சொன்னது.
2. பெண் களுக்குத் தனியாக வேத ஞாநமோ அக்நிகளோ தேவையில்லை -கணவனின் ஞாநமும் அக்நிகளும் போதும்.
கணவனின் செல்வமும் அவனது மட்டுமல்ல, மனைவிக்கும் சொந்தமானது என்று வேதம் சொல்கிற படியால் அவளிடம் பணமும் உள்ளது

தம்பதியின் அதிகாரம்

ஆணுக்கும் யாகம் முதலானவற்றில் அதிகாரம் உண்டு, பெண்ணுக்கும் உண்டு என்று பார்த்தோம்.
ஆனால், அவர்களுக்குத் தனித்தனியே யாகம் செய்யும் உரிமை கிடையாது.
• வேதம், ஒரே யாகத்தில் கணவன் செய்யவேண்டிய சில செயல்களையும், அவனுடைய மனைவி செய்ய வேண்டிய
செயல்களையும் சொல்கிறது. கணேவனோ மனைவியோ தனியாக யாகம் செய்தால், மற்ற ஒருவர் செய்ய வேண் டிய செயல்களைச்
செய்ய முடியாதபடியால், யாகத்தின் சில அங்கங்களைச் செய்யாதபடியால் யாகம் நிறைவு பெற முடியாது, பலம் கிடைக்காது.
• ஆகையால், இருவரும் சேர்ந்து தான் ஒரு யாகத்தைச் செய்ய வேண் டும்.
• ஒருவருக்கு உடல் நலம் சரியில்லாத போதோ , வேறு சில ஸந்தர்பங்களிலோ மட்டும், கணவன் அல்லது மனைவியின்
ஸ்தாநத்தில் வே றே ஒருவரை வைத்து யாகம் செய்யலாம் என்று வேதம் அநுமதிக்கிறது.
• யாகம் செய்யும் புருஷனுக்கு ’யஐமாநன்’ என்ற பெயரையும், யாகம் செய்யும் மனைவிக்கு ’பத்நீ’ என்ற பெயரையும் வேதம்
கொடுத்துள்ளது. ஆகையால், பத்நீ என்ற சொல்லில் இருந்தே அறியலாம் – பெண்களுக்கு யாகம் முதலானவற்றில் அதிகாரம் உண்டு என்று.

அத்யாயம் -6- பாதம் -2-
தொடங்கியதை முடித்தல்

•ஒரு பலத்தில் ஆசையால் ஒரு கர்மத்தைத் துவங்கிவிட்டு, அந்த கர்மம் முடிவதற்குள் அந்த ஆசை விலகிவிட்டால்,
தொடங்கப்பட்ட கர்மத்தை முடிக்க வேண்டுமா, அப்படியே நிருத்த வேண்டுமா என்று கேள்வி.
•முயற்சிக்குக் காரணம் ஆசை , அது இல்லாதபடியால் யாகத்தைத் தொடர்ந்து செய்யத் தேவையில்லை என்பது பூர்வ பக்ஷம்.
•முதலில் இருந்த ஆசையால் யாகத்தைத் தொடங்கி விட்டபடியால், அழைக்கப்பட்ட தேவதைகளுக்கு
ஹவிஸ்ஸை அளிக்காமல் அனுப்புவது தவறாகும்.
ஆகையால், மீதமிருக்கும் யாகத்தை ஆசை இல்லாவிட்டாலும் செய்து முடிக்க வேண்டும் என்பது ஸித்தாந்தம்.
•அப்படி ஒருவன் யாகத்தை முடிக்கத் தவறினால், அவன் தேவதைகளிடம் அபசாரம் செய்தவன் ஆவான் , ஆகையால்
த்ரைதாதவீயம் என்ற யாகத்தை ப்ராயச்சித்தமாகச் செய்ய வேண்டும் என்று வேதமே கூறுகிறது.

அங்க குண விரோத நியாயம்
இது ஐந்தாவது அத்தியாயத்தில் சொல்லப்பட்டு உள்ளது

ஒரு ப்ரதாந கர்மத்துக்குப் பல அங்கங்கள் இருக்கலாம். அந்த அங்கங்களுக்கும் எத்தனையோ குணங்கள் / அங்கங்கள் இருக்கலாம்.
ஒரு ப்ரதானத்தின் அங்கத்துக்கும், ஒரு அங்கத்தின் அங்கத்துக்கும் முரண்பாடு ஏற்பட்டால் எதைச் செய்ய வேண்டும்?
•ஜ்யோதிஷ்டோமம் என்ற ஸோம யாகம் ஐந்து நாட்கள் செய்யப்படுவது.
அதில் ஐந்தாவது நாளில் தான் ஸோம ரஸத்தை வைத்து ப்ரதாந யாகத்தைச் செய்யவேண்டும்.
அதற்கு முன் இருக்கும் நான்கு நாட்களில் வேறு சில அங்க யாகங்கள் விதிக்கப்பட்டுள்ளன, எடுத்துக்காட்டுக்கு
முதல் நாள் தீக்ஷணீயா என்ற ஒரு யாகம் சொல்லப்பட்டுள்ளது.
• வேதத்தில் ஒரு விதி வாக்கியம் “எந்த யாகத்தைச் செய்தாலும் அதை பர்வ காலத்தில்
(பௌர்ணமி அன்றோ அமாவாஸை அன்றோ ) செய்ய வேண்டும்” என்றுவிதிக்கிறது.
• ஆகையால், ஜ்யோதிஷ்டோமம் என்ற ப்ரதாந யாகமும், தீக்ஷணீயா என்ற அங்க யாகமும் பர்வ காலத்தில்
செயப்படவேண்டும். ஆனால் இது அஸாத்யமானது. தீக்ஷணீயா யாகத்தை பர்வ காலத்தில் செய்தால்,
ஜ்யோஷ்டோம யாகத்தைச் சதுர்த்தி அன்று தான் செய்ய முடியும். ஸோம யாகத்தை பர்வ காலத்தில் செய்ய வேண்டும்
என்றால் தீக்ஷணீயா யாகத்தை ஏகாதசி அன்று தான் செய்ய வேண்டும்.
• இப்படி ப்ரதாந கர்மத்தின் ஒரு குணத்துக்கும் அங்கத்தின் குணத்துக்கும் விரோதம் ஏற்பட்டால், ப்ரதாநத்தின் குணத்தைத் தான்
செய்ய வேண்டும், அங்கத்தின் குணத்தை விட்டுவிட வேண்டும், ஏன் என்றால் அங்கம் இருப்பதே ப்ரதாநத்துக்காகத் தான்,
அங்கத்தைக் குறைவில்லாமல் செய்து, ப்ரதாநத்தைக் குறையோடு செய்தால் எந்தப் பலனும் கிட்டாது.

அத்யாயம் -6- பாதம் -3-
யதா சக்தி நியாயம்

• ஒரு யாகத்தைச் செய்யும் பொழுது அனைத்து அங்கங்களையும் செய்து தான் ஆக வேண்டுமா என்று கேள்வி.
• ஒரு பலனில் ஆசையால் செய்யப்படும் கர்மங்களுக்கு காம்ய கர்மங்கள் என்று பெயர்.
• அப்படிப்பட்டவையை விதிக்கும் ஸாஸ் த்ரம் “இந்த கர்மத்தால் இந்த பலனை அடையலாம்” என்று சொல்லும் பொழுது,
தனியாக அந்த யாகத்துக்கு மட்டும் அந்தப் பலனை ஏற்படுத்தும் சக்தி இல்லாதபடியால், அனைத்து அங்கங்களோடு கூடிய இந்த
யாகத்தால் இந்த பலனை அடையலாம் என்று தான் கூறவேண்டும்.
ஆகையால், காம்ய கர்மங்கள் ஒரு அங்கத்தில் குறை ஏற்பட்டாலும் பலன் கிடைக்காது.
• வேறு சில கர்மங்களை ஒருவன் கண்டிப்பாகச் செய்தே ஆக வேண்டும் என்று வேதங்கள் சொல்கின்றன.
அவற்றுக்கு நித்ய கர்மங்கள் என்று பெயர்.
• அவ்விடங்களில், அனைத்து அங்கங்களோடும் கூடின ப்ரதாந கர்மத்தைக் கண்டிப்பாக செய்ய வேண்டும் என்று வேதம் சொல்ல
முடியாது, ஒருவனுக்கு அப்படி செய்ய சக்தி இல்லாமல் போகலாம் ஆகையால்.
ஆகையால், ப்ரதாநங்களைக் கண்டிப்பாகச் செய்யவேண்டும், அங்கங்களை அவரவர் சக்திக்கு ஏற்பச் செய்ய வேண்டும்
என்று தான் வேதம் கூறுகிறது. இதற்கு தான் யதா சக்தி ந்யாயம் என்று பெயர் –

யாவத் ஜீவன் அக்னி ஹோமம்
ஸ்வர்க்க காம ஜோயிதிஷ்டோமேன யஜேதே ஸ்ருதி வாக்கியங்கள் -இந்த வேறுபாட்டை உணர்த்தும்
மூன்றாம் வேற்றுமை -ஆல் -என்றாலே உப கரணங்கள் தானாகவே சேரும் –
ஆகவே எல்லா அங்கங்களும் சேர்ந்து செய்தால் தான் பலன் கிட்டும்
விட்டால் பிராயச்சித்தங்கள் செய்து பூர்த்தி செய்ய வேண்டும்

பிரதிநிதி நியாயம்

யாகம் என்றால் ஒரு தேவதைக்கு ஒரு த்ரயத்தை த்யாகம் செய்வது .
ஆகையால், யாகம் என் றாலே ஏதோ ஒரு த்ரவ்யம் வேண்டும் என்று நாம் அறிந்தபடியால், ஒரு யாகத்தின்
விதியைப் பார்த்தவுடன் தானாகவே நாம் அதில் உபயோகிக்கக்கூடிய அனைத்து த்ரவ்யங்களையும் நினைப்போம்.
அப்பொழுது, வேறே எந்த த்ரயத்தையும் உபயோகப்படுத்தக் கூடாது
என்பதற்காக வேதமே ஒரு த்ரவ்யத்தை விதிக்கும் “நெல்லால் யாகத்தைச் செய் ” என்பது போல்.
• ஆனால், ஒரு வேளை அந்த த்ரவ்யம் நமக்குக் கிடைக்காவிட்டால், அதற்காக யாகத்தையே செய்யாமல் இருப்பது சரி அல்ல –
ஓர் அங்கம் இல்லாததுக்காக ப்ரதாநத்தை விடுவது சரியல்ல. ஆகையால், அதற்கு பதிலாக உபயோகிக்கூடிய த்ரவ்யங்களையும் வேதமே சொல்லும்.
அவற்றுக்குப் ப்ரதிநிதி என்று பெயர்.
• எடுத்துக்காட்டு – தர்பூர்ணமாஸத்தில் நெல் கிடைக்காவிட்டால் நீ வாரம் என்ற காட்டு அரிசியைப் பயன் படுத்தலாம் என்று வேதம் சொல்கிறது.
• விதிவிலக்கு –
ஒரு தேவதைக்குப் பதிலாக மற்ற ஓரு தேவதையையோ ,
கார்ஹபத்யம் முதலான மூன்று அக்நிகளுக்கு பதிலாக ஸாதாரண அக்நியையோ ,
வேதம் அந்த யாகத்துக்காகச் சொன்ன மந்த்ரத்தை விட்டு வேறே ஓரு மந்த்ரத்தையோ ,
ப்ரயாஜம் முதலான ஆராதுபகாரகங்களுக்கு பதிலாக வேறு ஆராதுபகாரகங்களையோ செய்ய இயலாது,
அதாவது அவற்றுக்குப் ப்ரதிநிதி கிடையாது. ஏன் என்றால்,
இவற்றால் வரும் பயன் மற்ற வற்றைச் செய்தால் ஏற்படும் என்பதற்கு எந்தப் ப்ரமாணமும் இல்லை ,
இவை அனைத்தும் அத்ருஷ்டம் / அபூர்வம் / புண்ணியம் மூலம் யாகத்திற்கு உதவுகின்றன.
ஆனால், நெல் இல்லாவிட்டால் நீ வாரம் அதே போல் பயன் படுத்தலாம் என்பது தெரிந்தது.
• ஒரு த்ரவ்யம் கிடைக்காவிட்டால், அதற்கு பதிலாக வேறு எந்த த்ரவ்யத்தை வேண்டுமானாலும் பயன் படுத்தலாம்
என்பது கிடையாது. அந்த த்ரவ்யத்துக்கு ஒப்பான வேறே ஒன்றைத் தான் உபயோகிக்க வேண்டும்.
• “நெல்லால் யாகம் செய்” என்ற கட்டளையில் நெல் தன்மை என்ற ஸாமாந்யம், நெல் மணி என்ற அவயவி,
அதன் அவயவங்கள் என்ற மூன்றுக்கும் யாகத்தைக் குறித்து ஸாதநத்வம் (காரணத்வம்) தெரிகிறது.
• ஒரு வேளை நெல் கிடைக்காமல் போனால், சாமான்யத்தையோ அவயவியையோ யாகத்தில் உபயோகிக்க முடியாமல் போனாலும்,
நெல்லின் அவயங்களை மட்டுமாவது பயன் படுத்த வேண்டும்.
• நெல் இல்லாமல் நெல் அவயவங்களை எப்படி உபயோகிப்பது? நெல்லை போன்ற வேறே ஒரு தானியத்தை எடுப்பதன் மூலம் தான் –
ஸத்ருஸமான அதாவது ஒப்பான பொருட்களில் பொதுவான அவயவங்கள் இருக்கவேண்டும்.
ஆகையால், நீவாரம் போன்ற தான்யங்களில் நெல்லின் சிறு அவயவங்கள் இருக்கும்.
•ஆகையால், நாம் நீவாரத்தை உபயோகித்தால் அதிலிருக்கும் நெல் அவயவங்களை உபயோகித்ததாக ஆகிறபடியால்,
“நெல்லால் யாகம் செய்” என்ற விதியை குறைந்த பக்ஷம் கடைப்பிடித்து விட்டோம் என்று ஆகும்.
•ஆகையால், ஒரு த்ரவ்யம் கிடைக்காத போது, அதற்கு ஸத்ரு ஸமான (ஒப்பான) வேறே ஓரு த்ரவ்யத்தைத் தான் பயன் படுத்தவேண்டும்

————–

பாடம் -18–

ஆறாம் அத்யாயத்தின் எட்டு பாதங்களில் சொல்லப்பட்ட அர்த்தங்கள் –
•(1) அதிகாரீ– யாகத்தைச் செய்யத் தகுதி உடையவன் யார் என்பது
•(2) தர்மா: – அந்த அதிகாரியின் சில தர்மங்கள்
•(3) ப்ரதிநிதி: – ஒரு அங்கம் இல்லாதபோது அதற்கு ப்ரதிநிதியை உபயோகித்தல்
•(4) அர்த்தலோபநம் – சில யாகங்களில் சில கர்மங்கள் இல்லாமல் போகுதல்
•(5) தீக்ஷா – ஸோம யாகத்தில் செய்யப்பட வேண்டிய தீஷை யைப்பற்றி
•(6) ஸத்ரம் – பலர் சேர்ந்து செய்யும் சத்ரம் என் ற ஒரு யாகத்தில் அதிகாரத்தைப்பற்றி
•(7) தேயம் – யஜமாநன் ரித்விக்குகளுக்குக் கொடுக்கும் தக்ஷிணையைப்பற்றி
•(8) வஹ்நி – கார்ஹபத்யம் முதலான அக்நிகளைப்பற்றி சில விசாரங்கள்-

அத்யாயம் -6- பாதம் -4-

யாகத்திற்காகச் செய்யப்பட்ட ஹவிஸ்ஸிலிருந்து இரண்டு துண்டுகளை எடுக்க வேண்டும். இதற்கு அவதாநம் என்று
பெயர். அவதாநம் செய்யப்பட்ட துண்டுகளில் நெய் சேர்த்து அக்நியில் போட வேண்டும். ஒரு வேளை அவதாநம்
செய்யப்பட்ட துண்டுகள் அழிந்துவிட்டாலோ , தொலைந்து விட்டாலோ , கெட்டுவிட்டாலோ , அந்த த்ரவ்யத்துக்கு
ப்ரதிநிதியாக நெய்யைப் பயன் படுத்த வேண்டும்
அவத்த ஹவிஸ்ஸூ -அவதானம் செய்யப்பட்டது –
• த்ரவ்யம் என்பது யாகத்துக்கு அங்கம், அங்கம் இல்லாததற்காகப் ப்ரதாந கர்மமான யாகத்தை விடக்கூடாது.
ஆகையால், நெய்யால் செய்ய வேண்டும்
• நேர் மாறாக, யாகத்தில் உபபயாகப்படுத்திய ஹவிஸ்ஸின் மீதத்தை செலவழிப்பதற்காக இடாமக்ஷணம்
ப்ராசித்ரபக்ஷணம் முதலான உண்ணும் செயல்கள் சொல்லப்பட்டுள்ளன. அவற்றுக்கான த்ரவ்யம் ஒரு வேளை
அழிந்துவிட்டால், வேறே ஒரு த்ரவ்யத்தை உண்ண வேண்டும் என்ற தேவை இல்லை .
•இந்த செலவழிக்கும் கர்மங்கள் தான் ஹவிஸ்ஸில் மீதமிருக்கும் பகுதிக்கு அங்கங்கள், ஆகையால் ப்ரதாநமான
அந்த த்ரவ்யமே இல்லாதபோது இவற்றைச் செய்யத் தேவையில்லை

ஹவிரார்த்தி நியாயம்

• தர்ஸ பூர்ணமா ஸத்தில் அமாவாஸை அன்று பாலாலும் தயிராலும் இந்த்ரனுக்கு யாகம் செய்ய வேண்டும்.
அப்பொழுது, பால் கெட்டுவிட்டால் ஒரு ப்ராயச் சித்தத்தையும், தயிர் கெட்டுவிட்டால் ஒரு ப்ராயச் சித்தத்தையும்
செய்ய வேண்டும் என்று சொல்லிவிட்டு “யாருக்கு இரண்டு ஹவிஸ் ஸூகளும் கெட்டுவிடுகின்றனவோ அவன்
இந்த்ரனுக்காக ஐந்து பாத்திரங்கள் அளவுள்ள அரிசிச் சோறால் யாகம் செய்ய வேண்டும்”
என்று ப்ராயச் சித்தம் சொல்கிறது வேதம்.
•ஹவிஸ்ஸின் அழிவு என்ற நிமித்தம் ஏற்பட்டால், இந்த ப்ராயச் சித்தம் என்ற நைமித்திக கர்மத்தைச் செய்ய வேண்டும்.
• இங்கு நிமித்தம் என்ன என்று விசாரிக்கப்படுகிறது.
இரண்டு ஹவிஸ் ஸூகளும் அழிதல் தான் நிமித்தம் என்று பூர்வ பக்ஷம்.
•ஸித்தாந்தம் – குறைந்த பஷமான நிமித்தம் கிடைத்தவுடன், அதற்கு மேலும் சிறப்பிக்கக்கூடாது.
• வெறும் ’அழிவு’ நிமித்தம் ஆக முடியாது, ஏன் என்றால் ஏதோ ஒரு பொருள் எப்பொழுதுமே உலகில் அழிந்து
கொண்டுதான் இருக்கும், ஆனால் நிமித்தம் என் பது அவ்வப்போது ஏற்படும் ஒன்றாக இருக்க வேண்டும்.
• ’ஹவிஸ்ஸின் அழிவு’ என்று கொண்டால் அது அவ்வப்போது ஏற்படுவதுதான், ஆதகயால் அது தான் நிமித்தம்.
அதற்கு ஒரு படி மேல் சென்று ’இரண்டு ஹவிஸ் ஸூகளின் அழிவு’ என்று கொள்ளுதல் சரி அல்ல.
ஆகையால், இரண்டு ஹவிஸ்ஸூகளில் எது அழிந்தாலும் இந்த ப்ராயச் சித்தத்தைச் செய்ய வேண்டும்.

மூன்றாம் அத்யாயம்
கிரஹம் சோமா யாகத்துக்கு கொண்ட பாத்திரம் –
கிரஹம் தொடைக்க வேதம்
பூர்வ பக்ஷம் ஒரு பாத்திரம்
சித்தாந்தம் -ஒன்றை மட்டும் அல்ல -ஒருமையை கணிசிக்காமல் அனைத்தையும் என்றே கொள்ள வேண்டும்
அதே போல் இங்கு ஹவிஸ்ஸூ அழிவு -ஏதோ ஓன்று அழிந்தாலும் செய்ய வேண்டும்

ஹவிரார்த்தி நியாயத்தின் விதி விலக்கு

யாருக்கு மூன்று அக்நிகளும் அழிந்து விடுகின்றனவோ ,அவன் மறுபடியும் ஆதாநம் செய்து கொள்ளுதல்
ப்ராயச் சித்தம்’ என்று வேதம் கூறுகிறது.
•முன் சொன்ன ஹவிரார்தி ந்யாயத்தின் படி பார்த்தால், ’மூன்று’ என்ற சொல்லைக் கணிசிக்கக் கூடாது,
கார்ஹபத்யம் ஆஹவநீயம் தக்ஷிணாக்தி என்ற மூன்று அக்நிகளில் ஏதோ ஒன்று அழிந்தாலும் மறுபடியும்
ஆதாநம் செய்து கொள்ள வேண்டும் என்று தோன்றும்.
•ஆனால், விதிக்கப்படும் ஆதாநத்தின் தன்மை யாதெனில் – மூன்று அக்நிகளையும் உருவாக்குவது. ஆகையால், ஒரு
அக்நி அழிந்தவுடன் இதைச் செய்தால், தேவையில்லாமல் மற்ற இரண்டு அக்நிகளும் புதிதாக உருவாக்கப்படுகின்றன.
•ஆகையால், விதிக்கப்படும் ஆதாநத்தின் தன்மையைப் பார்த்து, ஹவிரார்தி ந்யாயத்ததயும் மீறி, மூன்று என்ற
சொல்லையும் சேர்த்து தான் நிமித்தத்தை நிர்ணயம் செய்ய வேண்டும். ஆகையால், மூன்று அக்நிகளும்
அழிந்தால்தான் மறுபடியும் ஒருவன் ஆதாநம் செய்து கொள்ள வேண்டும்.

உபக்ரம நியாயம் –

மூன்றாம் அத்யாயத்தின் மூன்றாம் பாதத்தில் சொல்லப்பட்ட ஒரு ந்யாயம் – உபக்ரம ந்யாயம்.
உபக்ரமம் என்றால் தொடக்கும்.உப ஸம்ஹாரம் என்றால் முடிவு.
• வேதத்தில் ஓரிடத்தில், “அக்நியிடமிருந்து ரிக்வேதம் தோன்றியது” என்ற ஒரு அர்த்தவாதமும்,
அதற்குப் பிறகு “உரத்த குரலில் ரிக்கால் செய்ய வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.
• தொடக்கத்தில் ரிக்வேதம் சொல்லப்பட்டபடியால் முடிவிலிருக்கும் ரிக் என்ற சொல்லுக்கு ரிக்வேதம்
என்று பொருளா? அல்லது முடிவில் ரிக் மந்த்ரம் சொல்லப்பட்டபடியால் தொடக்கத்திலும் ரிக்வேதம் என்ற சொல்
ரிக் மந்த்ரத்தைத் தான் சொல்லுகிறதா?
• பூர்வபக்ஷம் – தொடக்கத்திலிருப்பது அர்த்தவாதம், முடிவில் இருப்பது விதி. அர்த்தவாதத்தைக் காட்டிலும்
விதி முக்கியமானது. ஆகையால், விதியில் ரிக் என்ற சொல் உள்ளபடியால், தொடக்கத்திலும் ரிக்வேதம்
என்ற சொல் ரிக்மந்த்ரத்தைத் தான் குறிக்கிறது.
•ஸித்தாந்தம் – தொடக்கத்தில் இருப்பது அர்த்தவாதமாக இருந்தாலும், அது தான் முதலில் படிக்கப்படுகிறது.
அதைப் பார்த்தவுடன் ஏற்படும் அறிவுக்கு முரண்பட்ட எந்த அறிவும் நம்மிடம் இல்லை .
பின்னாலிருக்கும் வாக்கியம் விதியாக இருந்தாலும், அதைப் படிக்கும் பொழுது,
அர்த்தவாதத்தால் முன் ஏற்பட்ட அறிவுக்கு முரண்படாத
பொருளாகத்தான் அதற்குக் கொள்ள வேண்டும்.
ஆகையால், அஸஞ்சாத விரோதம் வராமைக்காக -இறுதியில் இருக்கும் ரிக் என்ற சொல்லுக்கு ரிக்வேதம் என்று பொருள்.
• முதலில் இருப்பது அதிக பலமுடையது என்பது தான் உபக்ரம ந்யாயம்-

சேஸ்வர மீமாம்ஸை
தேவதை ஒத்துக் கொள்ளாதவர்களும் உண்டு
அக்னி என்ற சொல்லையே வேதம் சொல்லும் -தேவதையை அல்ல என்பர்
ஜைமினி சேஸ்வர மீமாம்சகர் என்றும் பின்னால் வந்தவர் மாற்றினார்கள் என்பாரும் உண்டு
இதன் விசாரம் ஒன்பதாம் அத்தியாயத்தில் பார்ப்போம்

அபச்சேத நியாயம் –
இது ஸ்ரீ பாஷ்ய காரர் முதலிலே எடுத்து காட்டிய நியாயம் –
மூன்றாம் அத்யாயத்தில் சொல்லப் பட்ட உபக்ரம ந்யாயத்திற்கு விதிவிலக்காக அபச்சேத ந்யாயம் என்ற
மற்ற ஓரு ந்யாயம் சொல்லப் படுகிறது–ஆறாம் அத்யாயத்தில்
• ஸோம யாகத்தில் பஹிஷ் பவமாநம் என்ற ஸ்தோத்ரம் பாடும் பொழுது, உத்காதா ப்ரஸ் தோதா ப்ரதிஹர்தா
ஆகியவர்கள் மண்டபத்தைச் சுற்றி நடந்து வர வேண்டும். அப்பொழுது, முன்னால் செல்பவரின் கச்சத்தைப்
பின்னால் செல்பவர் பிடித்துக் கொள்ள வேண்டும். ஒரு வேளை நடக்கும் பொழுது ஒருவர்
அந்த கச்சத்தை விட்டு விட்டால், அதற்கு ப்ராயச் சித்தம் சொல்லப்படுகிறது.
• உத்காதா கச்சத்தை விட்டால் – அந்த யாகத்தை முடித்து, ரித்விக்குகளுக்கு எந்த தக்ஷிணையும் கொடுக்காமல்,
மறுபடியும் அதே யாகத்தைச் செய்து, அது முடியும் பொழுது முன் கொடுக்க இருந்த தக்ஷிணையைக் கொடுக்க வேண்டும்.
• ப்ரதிஹர்தா கச்சத்தை விட்டால் – யஜமாநன் தன்னிடமிருக்கு செல்வம் அனைத்தையும் ரித்விக்குகளுக்குக் கொடுத்து விட வேண்டும்.
• இருவரும் ஒரே ஸமயத்தில் கச்சத்தை விட்டால் – இரண்டு நிமித்தங்களும் உள்ளபடியால், இரண்டு ப்ராயச்சித்தங்கதளயும்
செய்ய வேண்டும். ஆனால், (1) செய்து கொண்டிருக்கும் யாகத்தில் தக்ஷிணை கொடுக்காமலிருப்பது
(2) தன்னிடமிருக்கும் அனைத்தையும் கொடுப்பது என்ற இரண்டையும் சேர்த்து செய்யவே முடியாது.
ஆகையால், விகல்பம் ஏற்படுகிறது – இரண்டு ப்ராயச்சித்தங்களில் ஏதோ ஒன்றை நம் இஷ்டப்படி செய்து கொள்ளலாம்

ஒரே யாகத்தில் வரிசையாக இருவரும் கச்சத்தை விட்டால் என்ன செய்ய வேண்டும் என்று விசாரம் செய்யப்படுகிறது.
• பூர்வபக்ஷம் –
உபக்ரம ந்யாயத்தின் படி பார்த்தால், முதலில் எதை அறிகிறோமோ அது ப்ரபலமானது,
ஏன் என்றால் அப்பொழுது அதற்கு முரணாக நம்மிடம் எந்த அறிவும் இல்லை . ஆகையால், முதலில் ஒருவர்
கச்சத்தை விட்டவுடன், அதற்காக விதிக்கப்பட்ட ப்ராயச்சித்தத்தை நாம் அறிந்து விடுகிறோம்.
அது முதலில் ஏற்படுகிறது. அதற்குப் பிறகு இரண்டாவதாக ஒருவர் கச்சத்தை விட்டால், அப்பொழுது முன் அறிவுக்கு
முரண் இல்லாதபடி தான் நடக்க வேண்டும் என்பதால், முன் ப்ராயச் சித்தத்தை விட்டு இரண்டாவது ப்ராயச் சித்தத்தைச்
செய்ய முடியாது. ஆகையால், முதலில் யார் கச்சத்தை விடுகிறாரோ , அவருக்காக விதிக்கப்பட்ட
ப்ராயச் சித்தத்தைத்தான் செய்ய வேண்டும்.
• ஸித்தாந்தம் –
உபக்ரம ந்யாயம் என்பது முன்னும் பின்னும் உள்ள வாக்கியங்கள் ஒன்றை ஒன்று எதிர்பார்த்து அறிவை உண்டு
செய்யும்போது மட்டும் தான் செயல்படும். விதியும் அர்த்தவாதமும் அப்படிப்பட்டவை
ஆனால் இங்கு, முதல் ப்ராயச் சித்தத்தைச் சொல்லும் வாக்கியமும் இரண்டாம் ப்ராயச் சித்தத்தைச் சொல்லும் வாக்கியமும்
ஒன்றை ஒன்று எதிர்பார்க்க வில்லை .ஆகையால், உபக்ரம ந்யாயம் இங்கு செயல்படாது.
• முதலில் ஒருவர் கச்சத்தை விட்டவுடன் , அதற்கான ப்ராயச் சித்தத்தைச் செய்ய வேண்டும் என்று நமக்குத் தோன்றும்.
பிறகு, இரண்டவதாக ஒருவர் கச்சத்தை விடும் பொழுது அதற்கான ப்ராயச் சித்தத்தைப் பற்றின அறிவு
ஏற்படும் பொழுது, முன் ஏற்பட்ட ஜ்ஞாநத்தைத் தவறாக்கிக் கொண்டு தான் உண்டாக முடியும்.
ஆகையால், பின்னால் ஏற்படும் அறிவு தான் ப்ரபலமானது என்பது அபச்சேத ந்யாயம்

அத்யாயம் -6- பாதம் -6-

ஆறாம் அத்யாயத்தின் ஆறாவது பாதத்தில் சத்ரம் என்ற ஒரு வகையான யாகத்தைப் பற்றி விசாரம் செய்யப் படுகிறது.
• சத்ரம் என் பது பல யஜமாநர்கள் சேர்ந்து செய்யும் ஒரு யாகம். இந்த யாகத்தில் ரித்விக்குகள் கிடையாது.
யஜமாநர்களே தான் ரித்விக்குகளின் கார்யங்களைச் செய்ய வேண்டும்.
• அந்த சத்ரம் என்ற கர்மத்தில் அங்கமாக ப்ரயாக்ஜங்கள் செய்யப் படுகின்றன.
ப்ரயாஜங்கள் என்பவை தர்ஸ பூர்ணமாஸம் என்ற கர்மத்தில் உபதேசிக்கப்பட்டுள்ளன.
ஸமித், தநூநமாத், இடா, பர்ஹி ஸ் , ஸ்வாஹாகாரம் என்ற ஐந்து தேவதைகளுக்காகச் செய்யப்படும் ஐந்து
யாகங்கள் தான் ப்ரயாஜங்கள்.
• ஸத்ரத்தைப்பற்றிச் சொல்லும் பொழுது வேதம், “வாஸிஷ்ட கோத்ரத்தைச் சேர்ந்தவர்கள் நாராஸம்ஸம் என்பது
இரண்டாவது ப்ரயாஜகமாகச் செய்ய வேண்டும். மற்றவர்கள் தநூநபாத் என்பதைச் செய்ய வேண்டும்” என்று.
• ஸத்ரத்தில் சில யஜமாநர்கள் வாஸிஷ்ட கோத்ரத்தைச் சேர்ந்தவராகவும், சிலர் மற்றவராகவும் இருந்தால்,
சிலருக்காக நாராஸம்ஸத்தைச் செய்தால் மற்றவரால் செய்யப்பட வேண்டிய அங்கம் விட்டுப்பபோகும்.
பலருக்காக தநூநபாத் ப்ரயாஜத்தைச் செய்தால், சிலருக்காகச் செய்யப்பட வேண்டிய
தநூநபாத் ப்ர்பயாஜம் செய்யப் படாமல் போகும்.
• ஆகையால், துல்யமான கல்பத்தில் இருப்பவர்களுக்கு தான் ஸத்ரத்தில் அதிகாரம் உண்டு. அதாவது,
அனைவரும் வாஸிஷ்ட கோத்ரத்தைச் சேர்ந்தவர்களாகவோ அல்லது மற்ற கோத்ரத்தைச் சேர்ந்தவராகவோ தான்
இருக்க வேண்டும்.

அத்யாயம் -6- பாதம் -7-
• விஸ்வஜித் என் ற யாகத்தில் யஜமாநன் தன்னிடமிருக்கும் சொத்து அனைத்தையும் ரித்விக்குகளுக்கு தக்ஷிணையாகக் கொடுக்க வேண்டும்
என்று வேதம் கூறுகிறது. சொத்து என்னும் சொல் எவற்றைக் குறிக்கிறது என்று விசாரம் செய்யப் படுகிறது
• ’யஜமானம் தன்னுடையது அனைத்தையும் கொடுக்க வேண்டும்’ என்று கட்டளை உள்ளது.
’தன்னுடையது’ என்ற சொல் யஜமாநனான தன்னையும், தனது தந்தை முதலானவர்களையும், பங்காளிகளையும், தன்னுடைய
சொத்தையும் குறிக்கக்கூடிய சொல். ஆகையால், இவை அனைத்தையும் கொடுக்க வேண்டுமா? அல்ல. ஒரு சொல்லுக்கு பல பொருள்கள் இருந்தால்,
ஒரு முறை உச்சரிக்கப்பட்ட போது ஒரு பொருளைத்தான் அது குறிக்கும். ஆகையால், இங்கு தக்ஷிணை கொடுப்பதைப் பற்றிப் பேசுகிறபடியால்,
தக்ஷிணை பொதுவாக சொல்வத்தைக் கொண்டு கொடுக்கப் படுகிறபடியால், இங்கு யஜமாநன் தன் செல்வத்தைத் தான் கொடுக்க வேண்டும்.
• ராஜா யாகம் செய்தால், தன் சொத்தான ராஜ்யத்தைக் கொடுக்க வேண்டுமா? இல்லை . ராஜ்யம் என்ற பரந்து பூமி
ராஜாவினுடைய சொத்து அல்ல, அவரிடம் காப்பதற்காகக் கொடுக்கப் பட்டுள்ளது. ஆகையால், அதைக் கொடுக்கக் கூடாது
• கடந்த காலத்திலிருந்த சொத்தையோ வருங்காலத்தில் வரப் போகும் சொத்தையோ கொடுக்கத் தேவையில்லை ,
யாகம் முடிந்து தக்ஷிணை கொடுக்கும் சமயத்தில் என்ன உள்ளதோ , அதைக் கொடுக்க வேண்டும்.
• யாகம் தொடங்கும் பொழுது, யஜமாநன் தன் சொத்தை (1) தன் வாழ்கைக்காக (2) யாகத்துக்காக (3) தக்ஷிணைக்காக
என்று மூன்றாகப் பிரிக்க வேண்டும். ஸர்வ ஸ்வ தாநம் என்றால் தக்ஷிணைக்காக வைக்கப் பட்ட
செல்வம் முழுவதையும் கொடுப்பது தான். அனைத்தையும் அல்ல.

அத்யாயம் -6- பாதம் -8-

இந்த பாதத்தில் இருக்கும் ந்யாயங்களில் முக்கியமானது – ஸாமாந்ய விசேஷ ந்யாயம் என்றும்
ஸாக-பசு-ந்யாயம் என்றும் சொல்லப் படுகிறது.
• ஒரு பொதுச் சொல்லை உபயோகித்து விட்டு, பின் ஒரு சிறப்புச் சொல்லை உபயோகித்தால், அந்தப் பொது சொல்லுக்கும்
அந்த சிறப்புச் சொல்லின் பொருள் மட்டும் தான் பொருள் ஆகும்.
• எடுத்துக்காட்டு – “அந்த விலங்கை அழைத்து வா” என்று சொல்லி விட்டு, பிறகு “பசுவை அழைத்து வா”
என்று சொன்னால், முதலில் ’விலங்கு’ என்று சொல்லப்பட்டது வேறொரு விலங்கு,
இப்பொழுது பசு சொல்லப்படுகிறது என்று பொருள் அல்ல.
பொதுவாக உள்ள விலங்கு என்று சொல்லும் இவ்விடத்தில் பசுதவத் தான் குறிக்கிறது. இதற்கு
தான் ஸாமாந்ய விபஷ ந்யாயம் என்று பெயர் –

சத் -ப்ரஹ்மம் -ஆத்மா-சிறப்புச் சொற்கள் -சொல்வதையே -நாராயண பொதுச் சொல் குறிக்கும்
உபதேச ஷட்கம் பார்த்தோம்
அதி தேச ஷட்கம் -மேல் ஆறும் –

————–

பாடம் -19-அத்யாயம் -7

•மீமாம்ஸா சாஸ்த்ரத்தின் முதல் ஆறு அத்யாயங்களால் தர்மத்தின் ப்ரமாணங்கள், தர்மங்களுக்குள் வேறுபாடு,
அங்கத்வம், ப்ரயுக்தி, க்ரமம், அதிகாரம் ஆகிய ஆறு விசாரங்களின் மூலம் தர்மங்களளப் பற்றி வேதத்தில்
இருக்கும் உபதேசங்கள் (நேரடியான கூற்றுகள்) காண் பிக்கப்பட்டன.
இனி, அதிதேசம் என்பது ஏழாவது அத்யாயம் தொடங்கி கூறப்படுகிறது.
•அதிதேசம் என்றால் ஓரிடத்தில் சொல்லப்பட்ட விஷயங்களை ஒற்றுமை யுடைய மற்ற இடங்களில்
தருவித்துக் கொள்ளுதல். ஆகையால், உபதேசம் செய்யப்பட்டதை தான் அதிதேசம் செய்ய இயலும்
என்றபடியால் அதிதேசம் என்றுமே உபதேசத்தை நம்பியே இருக்கக் கூடியது.

ப்ரக்ருதி விக்ருதி
• வேதத்தில் நூற்றுக்கணக்கான யாகங்கள் சொல்லப்பட்டுள்ளன.
ஆனால், அவை அனைத்துக்கும் உள்ள அங்கங்கள் ஒவ்வொன்றையும் வேதம் தனித்தனியாக மறுபடியும் மறுபடியும்
சொல்லவில்லை . ஓரிடத்தில் அனைத்து அங்கங்களளயும் உபதேசம் செய்துவிட்டு, மற்ற யாகங்களிலும்
இதே போல் செய்யவேண்டும் என்று சொல்லி நிருத்தியுள்ளது.
• எந்த கர்மங்களினுடைய அங்கங்கள் அனைத்தும் விரிவாக நேரடியாக வேதத்தால் போதிக்கப்பட்டுள்ளனவோ, அவற்றுக்கு
ப்ரக்ருதி என்று பெயர். எடுத்துக்காட்டு – அக்நி ஹோத்ரம் என்ற ஹோமம், தர்சபூர்ணமாஸம் என் ற யாகம், ஜ்யோதிஷ்டோமம்
என்று அழைக்கப்படும் ஒரு ஸோம யாகம் ஆகிய மூன்று யாகங்களுக்குமுள்ள அங்கங்களை வேதமே நேரடியாக
உபதேசிக்கிறது.ஆகையால் இவை ப்ரக்ருதிகள்.
• எந்த கர்மங்களின் அங்கங்கள் அனைத்தையும் வேதம் உபதேசிக்காமல், “முன்னால் சொல்லப் பட்ட கர்மத்தைப் போல்
இதுவும் செய்யப்படவேண்டும்” என்று வேதம் சொல்கிறதோ , அவை விக்ருதிகள் ஆகின்றன. எடுத்துக்காட்டு – ஸூர்யனுக்காக சருவை
(வடிக்காத அரிசிச் சோற்றை) கொடுக்கும் யாகமானது, தர்சபூர்ணமாஸத்தில் செய்யப்படும் எட்டு கபாலங்களில்
சமைக்கப்பட்ட புரோடாசத்ளத அக்நிக்கு தானம் செய்யும் யாகத்தின் விக்ருதி ஆகும்.

அதிதேசம்
அதி என்றால் மீதூர்ந்து / கடந்து / தாண்டி என்று பொருள்.
தேசம் என்றால் போதித்தல் / அறிவித்தல்.
ஆகையால், அதிதேசம் என்ற சொல், “கடந்து போதித்தல்” என்ற பொருளைக் குறிக்கிறது.
• ப்ரக்ருதிக்கு அங்கமாக விதிக்கப்பட்ட ஒரு கர்மத்தை , அதைக் கடந்து, மற்ற விக்ருதி யாகங்களுக்கும்
அங்கமாக போதிக்கும் சொல் தொடருக்குத் தான் அதிதேசம் என்று பெயர்.
• வேறு ஓரு இடத்தில் சொல்லப்பட்ட காரியக்கூட்டம் (இதி கர்தவ்யதா / செயல்முறை ) தான் செய்யும் உபகாரத்தின்
வயிலாக வேறு இடங்களளச் சென்று அடைவது தான் அதிதேசம் ஆகும்
• எந்த ஒரு சொல் தொடரால் ப்ரக்ருதி என்று அழைக்கப்படும் கர்மத்தில் இருந்து அதோடு ஒத்த (ஸத்ருசமான /
ஒற்றுமையுடைய) மற்ற கர்மங்களுக்கு அங்கங்கள் சென்று அடைகின்றனவோ அந்தச் சொல் தொடர்
அதிதேசம் என்று அழைக்கப்படுகிறது.

ப்ரக்ருதியும் விக்ருதியும் அங்கத்தை ஏற்கும் முறை
முதலில் ப்ரக்ருதி யாகம் வேதத்தால் விதிக்கப்படுகிறது.
• அதே யாகத்துக்கு தனக்கு உதவக்கூடிய அங்கங்ளின் தேவை ஏற்படுகிறது
• அப்பொழுது அருகிலேயே ப்ரயாஜம் முதலானவை உபதேசிக்கப்பட்டு, தங்களுக்கு ஒரு பயனை எதிர்பார்க்கின் றன.
•ஆகையால், ஒன்றுக்கு ஓன்று எதிர்பார்ப்பு இருப்பதால், இதே ப்ரக்ருதி யாகத்துக்கு ப்ரயாஜம் முதலானவை அங்கங்கள் ஆகின் றன.
• அடுத்து, விக்ருதி யாகம் ஒன்று விதிக்கப்படுகிறது. அதற்கும் தனக்கு உதவக்கூடிய அங்கங்களின் தேவை ஏற்படுகிறது
• அதே விக்ருதிக்கு அருகிலேயே சில அங்கங்கள் உபதேசிக்கப்பட்டு இருந்தாலும், அந்த வாக்யங்களை நாம் இன்னும்
அடையாதபடியால் அவை எந்த வகையில் உதவக்கூடியவை என்று நமக்குத் தெரியாது.
ஆகையால், முன்னமே உதவியாளர்கள் என்று பெயர் எடுத்த ப்ரக்ருதியின் அங்கங்கள் தான்
முதலில் விக்ருதி யாகத்தால் க்ரஹிக்கப்படுகின்றன.
அப்பொழுதும், ப்ரயாஜம் முதலானவைக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லாதபடியால், ஒரு பக்ஷமான எதிர்பார்ப்பால் தான் ப்ரயாஜம்
முதலானவை விக்ருதி யாகத்துக்கு அங்கங்கள் ஆகின்றன. இதுதான் அதிதேசம் ஆகும்
• இறுதியாக, விக்ருதிக்கு அருகில் படிக்கப்பட்ட அங்கங்கள், தாங்கள் பயனை எதிர்பார்க்கிற படியால், விக்ருதிக்கு
அங்கங்கள் ஆகின்றன.இப்பொழுது அந்த விக்ருதிக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லை –

அதிதேசம் இரண்டு வகைப்படும் – வசன அதிதேசம் என்றும் நாம அதிதேசம் என்றும்.
அதில் வசன அதிதேசமானது ப்ரத்யக்ஷ வசன அதிதேசம் என்றும்
கல்பித வசன அதிதேசம் என்றும் மேலும் இரண்டு வகைப்படும்

ஏழாம் அத்யாயத்தின் நான்கு பாதங்களில் சொல்லப்படும் விஷயங்கள்:
•முதல் பாதம் – ப்ரத்யக்ஷ வசன அதிதேசம்
•இரண்டாம் பாதம் – ப்ரத்யக்ஷ வசன அதிதேசத்தின் ஒரு வகையான ஸாம அதிதேசம்
• மூன்றாம் பாதம் – நாம அதிதேசம்
•நான்காம் பாதம் – கல்பித வசன அதிதேசம்

ப்ரத்யக்ஷ வசநம் என்றால் நாம் வேதத்தில் காணக்கூடிய / படிக்கக்கூடிய சொல் தொடர். அப்படிப்பட்ட சொல் தொடர்
நேரடியாக ஒரு யாகத்தின் அங்கத்தை மற்ற ஓரு யாகத்துக்கும் அங்கமாக்க வேண்டும் என்று
அதிதேசத்தை போதித்தால் அதற்கு ப்ரத்யக்ஷ வசன அதிதேசம் என்று பெயர்
• எடுத்துக்காட்டு – ஜ்யோதிஷ் டோமம் என் ற யாகம் தான் அனைத்து ஸோம யாகங்களுக்கும் ப்ரக்ருதியானது.
ச்யேநம் என்ற ஒரு யாகமும் இஷு என்ற மற்ற ஓரு யாகமும் அதன் விக்ருதிகள். ஆகையால்,
ஜ்யோதிஷ் டோமத்தின் அங்கங்கள் அனைத்தும் ச்யேநத்தையும் இஷுவையும் சென்று அடைகின்றன.
• அப்படி ப்ரக்ருதியிலிருந்து அங்கங்களைப் பெற்ற பிறகு, ச்யேந யாகத்தில் சில சிறப்பு அங்கங்களும் விதிக்கப்படுகின்றன –
ரித்விக்குகள் சிவப்பு நிற தலைப்பாகை அணிந்து கொண்டு கார்யம் செய்யவேண்டும், முதலானவை .
• அதே போல் இஷு என்ற யாகத்திலும் ப்ரக்ருதியில் இருந்து அங்கங்கள் வந்து அடைந்த
பிறகு சில சிறப்பு அங்கங்கள் விதிக்கப்பட்டுள்ளன.
• அதற்குப் பிறகு – “மற்றவை ச்யேந யாகத்தோடு ஒக்கும்” என்று ஒரு வேத வாக்கியம் உள்ளது. இதன்மூலம்,
இஷு என் ற யாகத்தில் விதிக்கப்பட்ட சிறப்பு அங்கங்களளத் தவிற, ச்யேந யாகத்தில் விதிக்கப்பட்ட சிறப்பு
அங்கங்களும் இஷு யாகத்தில் சேர்த்துக் கொள்ளப் பட வேண் டும் என்று தெரிகிறது.
• ஆக, “மற்றவை ச்யேந யாகத்வதாடு ஒக்கும்” என்ற சொல் தொடர் , ச்யேந யாகத்தின் அங்கங்களள இஷு யாகத்தில்
சென்று சேர்க்கிற படியால் ப்ரத்யஷ வசந அதிதேசம் ஆகும் –

ஸாமத்தின் அதிதேசம்
ப்ரத்யக்ஷ வசன அதி தேசத்தில் மற்ற ஓரு வகை தான் ஸாமங்களின் அதிதேசம்.
•ஸாமம் என் பது இசை வடிவ மானது. ஸாம வேதத்தில் ஸாமங்கள் படிக்கும் பொழுது, வெறும் இசையைப் படிக்க முடியாத படியால்,
ருக் என்ற ஸாஹித்யத்தோடு சேர்த்து தான் படிக்கப்பட்டுள்ளன. ஒரு ஸாமம் முதன்முதலில் வேதத்தில் உபதேசிக்கப் படும் பொழுது எந்த
ருக்கோடு சேர்த்துப் படிக்கப்பட்டுள்ளதோ அது யோனி ருக் என்று அழைக்கப் படுகிறது –
• அதற்குப் பிறகு, இதே ஸாமத்தை மற்ற ருக்குகளோடும் சேர்த்து பாட வேண்டும் என்று வேதம் சொல்கிறது, ஆனால் மறுபடியும்
மறுபடியும் இதே ஸாமத்தை அந்தந்த ருக்கோடு சேர்த்து பாடிக்காட்டு வதில்லை .
• “கவதி என் ற ருக்குகளில் ரதந்தரம் என் ற ஸாமத்தைப் பாடவேண்டும்” என் ற கட்டளையின்மூலம், ஒரு ருக்கோடு
படிக்கப்பட்ட ஸாமத்தை மற்ற ஓரு ருக்கோடு சேர்க்கிறது. ஆகையால், இதற்கு ஸாமத்தின் அதிதேசம் என்று பெயர்.
• அதே போல், “யோநி ருக்கில் படிக்கப்பட்ட ஸாமத்ளத உத்தரா என்ற பெயருளடய இரண் டு ருக்குகளோடும் சேர்த்தும் படிக்க வேண்டும்”
என்று ஒரு வேத வாக்கியம் உள்ளது. இவை எல்லாம் ஸாமத்தின் அதிதேசத்தைக் கூறுகின் றன

நாமத்தால் அதிதேசம்

பெயரைக் கொண்டும் அதிதேசம் ஏற்படுவதுண்டு. பொதுவாக , ஒருவருக்குப் ப்ரபலமாக இருக்கும் பெயரை இட்டு மற்ற ஓருவரை
அழைத்தால், அவருக்கும் இவருக்கும் ஏதோ ஒற்றுமை உள்ளது என்று நாம்அறிந்து கொள் வோம்.
• எடுத்துக்காட்டு – ஒருவரைப் பார்த்து, “இவர் ஹநுமான்” என்று சொன்னால், அவர் ஹநுமானைப் போல் மிகுந்த் ராம பக்தி உடையவர்
என்று பொருள். ஆகையால், நாம் ஒருவருக்கு இடும் பெயரை வைத்து , அவரது தன்மை களை அறியலாம்.
• அதே போல் தான் வேதத்திலும் ஒரு கர்மத்தின் பெயரை வைத்து அது எந்த கர்மத்தோடு ஒற்றது என்று அறியலாம்.
• எடுத்துக்காட்டு – நாம் தினமும் செய்யவேண் டிய ஒரு ஹோமத்துக்கு அக்நி ஹோத்ரம் என்று பெயர்
என்று முன்னால் படித்தோம். அதே பெயரை உடைய வேறே ஒரு கர்மமும் விதிக்கப்படுகிறது –
“ஒரு மாதத்திற்கு அக்நி ஹோத்ரம் செய்யவேண்டும்” என்று. ஆகையால், ப்ரஸித்தமான அக்நி ஹோத்ரத்தின் பெயரால் இந்த புது
ஹோமம் குறிக்கப்படுவதால் நாம் அறியலாம் – “ப்ரஸித்தமான அக்நி ஹோத்ரத்தைப் போன்ற தன்மைகளை உடையது இந்த
ஹோமம்” என்று. ஒரு வைதிக கர்மத்தின் தன்மைகள் என்ன ? அதன் அங்கங்கள் தான். ஆகையால், இந்த புது கர்மமானது ப்ரஸித்தமான
அக்நி ஹோத்ரத்தின் அங்கங்களையே அங்கங்களாக உடையது என்று இந்தப் பெயரைக் கொண் டு அறிகிறோம். இதுவே நாம அதிதேசம் –

கல்பித வசன அதிதேசம்
இப்படி ப்ரக்ருதி யாகத்தின் அங்கங்களைக் கொண்டு வந்து விக்ருதி யாகத்தில் சேர்க்கக்கூடிய
ஒரு கட்டளை ஒருவேளை ஒரு விக்ருதி யாகத்தில் இல்லை என்றால்,நாமாக அப்படி ஒரு வசனதைக்
கல்பிக்க வேண்டும். ஏன் என்றால், இதி கர்தவ்யதா / செயல் முறை / உதவியாளர்கள் /
அங்கங்கள் இல்லாமல் ஒரு யாகத்தால் மட்டும் எந்த பயனயும் கொடுக்க முடியாது.
•இப்படி கல்பிக்கப்படும் வாக்யத்துக்கு கல்பித வசன அதிதேசம் என்று பெயர்.
•“ஆக்நேய யாகத்தைப் போல் ஸௌர்ய யாகத்தைச் செய்ய வேண்டும்”, “ப்ரக்ருதி யாகத்தைப் போல்
விக்ருதி யாகத்தைச் செய்ய வேண்டும்”என்பது போல் இந்த வசனம் கல்பிக்கப்படுகிறது-

————–
பாடம் -20-
•ஏழாவது அத்யாயத்தில் கடைசி பாதத்தில் கல்பித வசந அதிதேசம் என்பது அறிமுகப்படுத்தப்பட்டது –
பொதுவாக விவரிக்கப் பட்டது. அதைப் பற்றிச் சொல்ல வேண்டிய சிறப்பு அம்சங்கள் இந்த எட்டாவது அத்யாயத்தில்
சொல்லப்படுகின்றன.
•அதிலும் நான்கு பாதங்களில் –
•முதல் பாதம் – ஸ்பஷ்டமான அறிகுறியை வைத்து கல்பிக்கப்படும் வசநத்தால் ஏற்படும் அதி தேசத்தையும்
•இரண்டாவது பாதம் – ஸ் பஷ்டம் அல்லாத அறிகுறியை வைத்து கல்பிக்கப்படும் வசநத்தால் ஏற்படும் அதி தேசத்தையும்
•மூன்றாவது பாதம் – பல அறிகுறிகள் இருந்தால் அவற்றில் எதைக் காட்டிலும் எது பலம் பொருந்தியது என்பதையும்
•நான்காவது பாதம் – அதிதேசம் ஏற்படாது விதி விலக்குகளையும் கூறுகின்றன

கல்பித வசன அதிதேசத்தின் முறை –
• ஸூர்யனுக்காக சரு என்று அழைக்கப்படும் கஞ்சி வடிக்காத அரிசி சோற்றைக் கொண்டு யாகம் செய்ய வேண்டும்
என்று ஒரு வேத வாக்கியம் கூறுகிறது. இதற்கு ஸௌர்ய யாகம் என்று பெயர்
• இந்த யாகத்தின் செயல்முறை முழுமையாக சொல்லப் படவில்லை , ஆகையால் இந்த யாகம் அங்கங்களை
எதிர்பார்க்கிற படியால் அதிதேசம் கல்பித்து அங்கங்களைக் கொண்டு வர வேண்டும்.
• ஒரு நியதி இல்லாமல் ஏதோ ஒரு யாகத்திலிருந்து ஏதோ ஒரு யாகத்துக்கு அங்கங்களை அதிதேசம் செய்யலாம் என்பது சரியல்லை .
சாஸ்த்ரத்தின் பொருள் என்பது ஒரு ந்யாயத்தோடும் நியமத்தோடும் தான் இருக்க வேண்டும்.
ஆகையால், ஏதோ ஒரு யாகத்தின் அங்கங்கள் தான் இங்கு கொண்டு வரப்பட வேண்டும்.
அந்த யாகம் ஸௌர்ய யாகத்ததாடு ஒற்றுமை யுடையதாக இருந்தால் எளிது.
• ஸௌர்ய யாகத்தை விதிக்கும் வேத வாக்கியத்தைப் பார்த்தவுைன் நமக்குத் தெரியும் விஷயங்கள்:
• இதில் ஒரு தேவதை தான்
• இது நெல்லைக் கொண் டு செய்யப் படுகிறது
• இதில் தத்திதம் என்ற ப்ரத்யயம் உபயோகப் படுத்தப் பட்டுள்ளது
(தாசாரதி -தசரதன் தொடர்பு -ஜனகன் -ஜானகி -இவை தத்வித ப்ரத்யயங்கள் )
• இதில் நிர்வாபம் என்ற செயல் உள்ளது
• இவற்றைப் பார்த்தவுடன் நமக்கு சடக்கென முதலில் நினைவுக்கு வரக் கூடியது தர்சபூர்ணமாஸத்தில் செய்யப்படும் ஆக்நேய யாகம் தான்.
ஏன் என்றால் மேற் சொன்ன நான்கு தன்மைகளும் அதற்கும் உள்ளன.
• ஆகையால், ஸௌர்ய வாக்கியத்தைப் பார்த்தவுடன் முதலில் நினைவுக்கு வரும் ஆக்நேய யாகத்தின் அங்கங்களையே தான்
ஸௌர்ய யாகத்திலும் செய்ய வேண்டும் என்று ஒரு விதியை கல்பிக்கிறோம். இது தான் கல்பித வசந அதிதேசம் ஆகும் –

தர்ச பூர்ண மாச ஆறு யாகங்களை இஷ்டிகள் என்றும் அழைப்பர் –

ஸோம யாகங்கள்
ஸோம யாகங்கள் அனைத்துக்கும் ஜ்யோதிஷ் டோமம் என்ற ஸோம யாகம் தான் ப்ரக்ருதி,
அதிலிருந்து தான் அனைத்து ஸோம யாகங்களுக்கும் அங்கங்கள் சென்று அடைகின்றன.
• “விச்வஜித் யாகத்தைச் சேய்”,”அபிஜித் யாகத்தைச் செய்”, “எதிரிகளைக் கொலை செய்பவன் ச்யேந யாகத்தைச்
செய்ய வேண்டும்” என்று பல விதிகளால் பல யாகங்கள் விதிக்கப்பட்டுள்ளன. இவற்றுக்கு எல்லாம் எங்கிருந்து
அங்கங்களைக் கொண்டு வர வேண்டும் என்று யோசிக்க வேண்டும்.
• இவற்றின் விதி வாக்கியத்தைப் பார்த்தால் ஒன்று தெரியும் – எந்த தேவதைக்காக இந்த யாகம் செய்யப்படுகிறது என்று இந்த
வாக்கியத்தில் இல்லை .-அதே போல் வேறே யாகம் உள்ளதா என்று பார்த்தால் – “ஸோமேந யஜேத” / “ஸோம லதையைக் கொண்டு
யாகம் செய்” என்று ஜ்யோதிஷ் டோமம் என் ற யாகத்தை விதிக்கும் வாக்கியத்திலும் தேவதை சொல்லப்டவில்லை , ஆனால்
ஜ்யோதிஷ் டோமத்தின் அனைத்து அங்கங்களும் விவரிக்கப் பட்டுள்ளன.
•ஆகையால், உத்பத்தி வாக்கியத்தில் தேவதை சொல்லப்படாமை என்ற ஒற்றுமையைக் கொண்டு விச்வஜித், அபிஜித், ச்யேநம்
முதலான யாகங்கள் ஜ்யோதிஷ் டோமத்தின் விக்ருதிகள் தான் என்று முடிவு செய்து, அதன் அங்கங்களை இங்கு கொண்டு வந்து சேர்க்கும்
அதிதேச வாக்கியத்தைக் கல்பிக்கலாம். ஆகையால், இவையும் ஸோம ரஸத்தால் செய்யும் யாகங்கள் ஆகின்றன

அதி தேசம் ஆகாதவை
• ஒரு யாகத்திலிருந்து மற்ற ஓரு யாகத்துக்கு அங்கங்களை அதிதேசம் செய்யும் பொழுது,
கீழ்க் கண்டவற்றை அதிதேசம் செய்யக் கூடாது :
• (1) பலம் – ப்ரக்ருதி யாகத்துக்கு என்ன பலம் வேதத்தால் சொல்லப் பட்டதோ , அதையும் விக்ருதிக்கு எடுத்துச் சென்று,
விக்ருதிக்கும் அதே பலம் தான் என்று சொல்லக் கூடாது, ஏன் என்றால் விக்ருதியை போதிக்கும் வாக்கியத்திலேயே
அதற்குத் தனியாக பலம் சொல்லப்பட்டுள்ளது.
ஆகையால், ஆக்நேயம் என்ற ப்ரக்ருதி யாகம் ஸ்வர்கத்துக்காக செய்யப்பட்டாலும், அதன் விக்ருதியான
ஸௌர்ய யாகத்துக்கு ப்ரஹ்ம வர்சஸம் என்ற பலம் இருக்கலாம்
• (2) நியமம் – தர்சபூர்ணமாஸம் என் ற கர்மம் வாழ்நாள் முழுவதும் செய்யப்பட வேண் டும் என்று வேதம் உபதேசிப்பதால்
அது நித்ய கர்மம் ஆகிறது. ஆனால், அதிலிருந்து ஸௌர்ய யாகத்துக்கு அதிதேசம் செய்யும் பொழுது,
’வாழ்நாள் முழுவதும் செய்தல் வேண்டும்’ என்ற நியமத்தை எடுத்துச் செல்லக் கூடாது. ஸௌர்ய யாகத்தை ஒரு முறை செய்தாலே
ப்ரஹ் மவர்சஸம் என்ற பலம் கிட்டும்.
• (3) கர்த்தா – தர்சபூர்ணமாஸத்தைச் செய்பவன் ஸ்வர்ககாமன், அதாவது ஸ்வர்கத்தில் ஆசை இருப்பவன் என்று வேதம் கூறுகிறது.
அந்த கர்த்தாவை அதிதேசம் செய்து, ஸௌர்ய யாகத்தையும் ஸ் வர்கத்தில் ஆசை இருப்பவன் தான் செய்ய வேண் டும் என்று கூற முடியாது.
ஸௌர்ய யாகத்தின் பலத்தில் ஆசை இருப்பவன்,அந்த யாகத்தின் கர்த்தா ஆவான்.
• (4) ஸங்கம் – ஸங்கம் என் றால் சேர்க்கை என்று பபாருள். ஆக்நேய யாகம் தனியாக ஸ்வர்கத்தைக் கொடுக்காது,
தர்சபூர்ணமாஸத்தில் இருக்கும் மற்ற ஐந்ததோடு சேர்ந்து தான் கொடுக்கும். ஆனால் அதே போல் அதன் விக்ருதியான
ஸௌர்ய யாகமும் வேறு ஐந்து யாகங்களை எதிர்பார்க்க வேண்டும் என்று தேவை இல்லை
, அதாவது ப்ரக்ருதி யாகத்துக்கு இருக்கும் சேர்க்கைகளை அதிதேசம் செய்யக்கூடாது.

அதே போல் ப்ரக்ருதியில் காம்யமாக விதிக்கப்பட்ட குணங்களுக்கும் அதிதேசம் கிடையாது.
• தர்சபூர்ணமாஸ யாகத்தை நித்ய கர்மமாகச் செய்யும் பொழுது, தீர்த்தத்தை ஓர் இடத்திலிருந்து மற்ற ஓர் இடத்திற்கு
மாற்றும் ப்ரணயநம் என்ற கார்யத்துக்காக சமஸம் என்ற பாத்திரத்தை உபயோகிக்க வேண்டும்.
ஆனால், நித்ய கர்மமாக இல்லாமல், பசுக்கள் வேண்டும் என்ற ஆசை இருந்தால், அதத ப்ரணயநத்தை கோதோஹநம்
என் ற பாத்திரத்தால் செய்ய வேண்டும் என்று பார்த்திருக்கிறோம்.
இதில் சமஸம் என்பது தர்சபூர்ணமாஸ யாகத்தின் அங்கம், அதற்கு உதவுகிறபடியால். கோதோஹநம் என்பது நேரடியாக
பசு என்ற பலத்தின் அங்கம், தர்சபூர்ணமாஸத்தின் அங்கம்அல்ல.
• அதிதேசம் என் பது, ஒரு விக்ருதி யாகத்துக்கு அங்கங்களின் எதிர்பார்ப்பு, அதைத் தீர்ப்பதற்காக வேறே ஒரு ப்ரக்ருதி
யாகத்திலிருந்து அங்கங்களைக் கொண் டுவந்து சேர்ப்பது தான்.
ஆகையால், ப்ரக்ருதி யாகத்தின் அங்கங்களை மட்டும் தான் அதிதேசம் செய்யமுடியும்.
• கோதோஹநம் என்பது தர்சபூர்ணமாஸத்தின் அங்கமே அல்ல, பசு என்ற பலத்தின் அங்கம். ஆகையால், கோதோஹநத்தை
ஸௌர்ய யாகத்திற்கு அதிதேசம் செய்ய முடியாது. சமஸத்தை மட்டும் தான் அதிதேசம் செய்ய முடியும்.
• ஆகையால், ஸௌர்ய யாகத்தில் சமஸத்தால் மட்டும் தான் ப்ரணயநம் செய்யலாம்.
ஸௌர்ய யாகத்தில் கோதோஹநத்தால் ப்ரணயநம் செய்தால் பசுக்களைப் பெற முடியாது

எது எதற்கு விக்ருதி
பதிதனாரு கபாலங்களில் சமைக்கப்பட்ட புரோடாசத்தைக் கொண்டு இந்த்ரனுக்கு யாகம் செய்ய வேண்டும் என்று வேதம் விதிக்கிறது.
இப்பொழுது இந்த யாகம் எந்த யாகத்தின் விக்ருதி, அதாவது, எந்த யாகத்தின் அங்கங்களை இதில்
கொண்டு வந்து சேர்க்க வேண்டும் என்ற ஸந்தேஹம் எழுகிறது.
• நேரடியாக அதிதேசத்தைப் போதிக்கும் எந்த வாக்கியமும் இல்லாதபடியால், இந்த யாகத்துக்கு வேறு எந்த யாகத்ததாடு
ஒற்றுமை உள்ளது என்று பார்த்து தான் அதிதேசம் செய்ய வேண்டும்.
• (1) இந்தனுக்காகச் செய்யப்படுதல் என்ற ஒற்றுமையை வைத்து தர்சபூர்ணமாஸத்தில் இந்த்ரனுக்காகச் செய்யப்படும்
பால் அல்லது தயிர் யாகத்தின் அங்கங்களைக் கொண்டுவரலாம்
• (2) பதினொரு கபாலங்களில் சமைக்கப்பட்ட புரோடாசத்தைக் கொண்டு செய்யப் படுதல் என்ற ஓற்றுமையை வைத்துப் பார்த்தால்,
தர்சபூர்ணமாஸத்தில் பதினொரு கபாலங்களில் சமைக்கப் பட்ட புரோடாசத்தைக் கொண்டு
செய்யப்படும் அக்நீ ஷோமீயம் என் ற யாகத்தின் அங்கங்களைக் கொண்டுவரலாம்
• பூர்வ பக்ஷம் –
யாகத்தில் ப்ரதானமானது தேவதை தான், அவருக்காக யாகம் செய்கிறபடியால். ஆகையால், தேவதையில் ஒற்றுமையைக் கொண்டு தான்
அதிதேசம் செய்ய வேண்டும்.
• ஸித்தாந்தம் –
யாகம் என் றால் ஒரு தேவதையைக் குறித்து ஒரு த்ரவ்யத்தைத் த்யாகம் செய்வது. த்ரவ்யம் கண் முன் உள்ளது,
த்யாகத்துக்கு மிகவும் தேவையானதாக இருக்கிறது. தேவதையோ மனதால் நினைக்கப் படுகிறார்,
அவ்வளவுதான், ஆகையால் த்யாகத்திற்கு நெருக்கமானவர் அல்ல. ஆகையால், த்யாகம் என்ற யாகத்துக்கு தேவதையைக் காட்டிலும்
அந்தரங்கமானது த்ரவ்யம் தான். ஆகையால், மேற் பசொன்ன இரண் டாவது பக்ஷத்தைத் தான் பின் பற்ற வேண்டும்

வேதத்தில் “தயிர், தேன், நெய், நீர் , சோளம், அரிசி, இவற்றால்
ப்ரஜாபதிக்கு யாகம் செய்ய வேண்டும்” என்ற வாக்கியம் 6 யாகங்களை விதிக்கிறது.
• இதில் தயிர் யாகம் தர்ச பூர்ண மாஸத்திலிருக்கும் இந்த்ரனுக்கான தயிர் யாகத்தின் விக்ருதி என்பதையும்,
நெய் யாகம் தர்சபூர்ணமாஸத்தில் பௌர்ணமி அன்று நெய்யை வைத்து செய்யப் படும்
உபாம்சுயாஜத்தின் விக்ருதி என்பதையும், சோளம் மற்றும் அரிசியை வைத்துச் செய்யும் யாகங்கள் தர்சபூர்ணமாஸத்திலிருக்கும்
ஆக்நேய யாகத்தின் விக்ருதிகள் என்பதையும் எளிதில் அறியலாம்.
• ஆனால் தேன் யாகமும் நீ ர் யாகமும் எவற்றின் விக்ருதிகள் என்று ஆராய வேண்டும்.
• பூர்வபக்ஷம் –
த்ரவமான த்ரவ்யத்தைக் கொண்ட து என்ற ஒற்றுமையைக் கொண் டு தர்சபூர்ணமாஸத்தில் இந்த்ரனுக்காகச்
செய்யப் படும் பால் அல்லது தயிர் யாகத்தின் விக்ருதிகள் தான் இவை
•ஸித்தாந்தம் –
நெய்யும் நெருப்பின் ஸம்பந்தத்தால் த்ரவமாக ஆகக் கூடியதான படியால் அதோடும் இவை இரண் டுக்கும் ஒற்றுமை
உள்ளது. மேலும், நெய்யோடு மற்ற ஓரு ஒற்றுமையும் உள்ளது -தேனுக்கு நீருக்கும் – அவற்றின் வழியே ஒளி புக முடியும் என்பது.
ஆகையால், மிகுந்த ஒற்றுமை இருக்கிறபடியால், தேன் யாகமும் நீ ர் யாகமும்,
தர்சபூர்ணமாஸத்தில் நெய்யால் செய்யப்படும் உபாம்சுயாஜத்தின் விக்ருதிகள் தான்.

• வேதத்தில் ஆமிக்ஷா என் ற த்ரவ்யத்தைக் கொண்டு செய்ய வேண்டிய யாகம் விதிக்கப்பட்டுள்ளது. அது எதன் விக்ருதி?
எந்த யாகத்தின் அங்கங்களை இதில் கொண்டு வர வேண்டும் என்று ஸந்தேஹம் ஏற்படுகிறது.
• ஆமிக்ஷா என்ற த்ரவ்யம் எந்த த்ரவ்யத்தோடு தொடர்பு / ஒற்றுமை உடையதோ , அந்த த்ரவ்யத்தால் செய்யப்படும் யாகத்தின்
விக்ருதியாகத் தான் இந்த ஆமிக்ஷா யாகம் இருக்க வேண்டும்.
• கொதிக்கும் பாலில் தயிரை சேர்த்து அதைத் திரிய வைத்தால் கிடைக்கும் கெட்டிப் பகுதிக்கு தான் ஆமிக்ஷா என்று பெயர்.
• பூர்வ பக்ஷம் 1 –
பால் தயிர் இரண் டிலிருந்தும் ஆமிக்ஷா தோன்றுகிற படியால், தர்சபூர்ணமாஸத்தில் இந்த்ரனைக் குறித்து
தயிராலும் பாலாலும் செய்யப் படும் யாகங்களின் அங்கங்களைத் தான் இந்த ஆமிக்ஷா யாகத்தில் சேர்க்க வேண்டும்
• பூர்வ பக்ஷம் 2 –
ஆமிக்ஷா என் பது தயிர் பால் என் ற இரண் டிலிருந்தும் தோன்றியிருந்தாலும், ஆமிக்ஷா கெட்டியாக இருக்கிறபடியால் அதற்கும்
தயிருக்கும் தான் மிகுந்த ஒற்றுமை உள்ளது. ஆகையால், தர்சபூர்ணமாஸத்தில் இந்த்ரனுக்காக செய்யப்படும் தயிர் யாகத்தும் விக்ருதி தான் இது
•ஸித்தாந்தம் –
ஆமிக்ஷா தயிர் பால் என் ற இரண் டிலிருந்தும் தோன்றியிருந்தாலும், பால் தான் முக்கியமானது. கெட்டி பாகம் த்ரவமான
பாகம் என்ற பிரிவை ஏற்படுத்த மட்டுமே தயிர் உதவுகிறது. ஆகையால் ஆமிக்ஷா யாகத்தில் பால் யாகத்தின் செயல் முறையைத்தான்
பின் பற்ற வேண்டும்-

அக்நாவிஷ்ணு என்ற தேவதைக்கு பதினொரு கபாலங்களில் சமைக்கப் பட்ட புரோடசத்தாலும் , ஸரஸ்வதி என்ற
தேவதைக்கு சரு என்ற த்ரவ்யத்தாலும், ப்ருஹஸ்பதி என்ற தேவதைக்கு சரு என் ற த்ரவ்யத்தாலும்
யாகம் செய்ய வேண்டும் என்று வேதம் சொல்கிறது .
• பூர்வ பக்ஷம் –
இங்கு மூன்று யாகங்கள் உள்ளன.
தர்சபூர்ணமாஸத்தில் பௌர்ணமி அன்றும் மூன்று யாகங்கள் உள்ளன. ஆகையால், இங்கிருக்கும் முதல் யாகம்
தர்சபூர்ணமாஸத்தில் முதல் யாகமான ஆக்நேய யாகத்தின் விக்ருதி தான்
•ஸித்தாந்தம் –
யாகங்களின் இடத்தில் ஒற்றுமையைக் காட்டிலும் அவற்றின் தேவதைகளின் ஒற்று மையைப் பார்ப்பது முக்கியம்.
இவ்விடத்தில் முதல் யாகம் அக்நி விஷ்ணு என்பவர்களைச் சேர்த்து ஒரு தேவதையாக உடையது. தர்சபூர்ணமாஸத்தில் முதல் யாகமான
ஆக்நேய யாகம் ஒரே ஒரு அக்நியை மட்டும் தேவதையாக உடையது.
ஆகையால் தேவதைப் பொருத்தம் இல்லை . தர்சபூர்ணமாஸத்தில் மூன் றாவது யாகம் ஆக்நீ ஷோமீயம், அதாவது அக்நி ஸோமன்
என்பவர்களைச் சேர்த்து ஒரு தேவதையாகவே உடையது. ஆகையால், அது தான் இங்கு சொல்லப்பட்ட யாகத்ததாடு அதிகமான ஒற்றுமை
உடையது. ஆகையால் இந்த முதல் யாகம் அங்கிருக்கும் மூன்றாவது யாகத்தின் விக்ருதி தான்

யாகம் -தேவதையைக் குறித்து த்ரவ்யம் தியாகம் -அதுக்கு அங்கமாக -அக்னியில் ஒரு பகுதியை சேர்ப்பது
ஹோமம் -அங்க அங்கி பாவம் இல்லை -மூன்றுக்கும் சமமான ப்ராதான்யம்

தர்வி ஹோமங்கள்
இது வரை அதிதேசம் ஏற்படும் இடங்களைப் பார்த்தோம். எட்டாவது அத்யாயத்தின் கடைசி பாதத்தில்
அதிதேசமே இல்லாத இடமான தர்வி ஹோமங்களைப் பற்றிச் சொல்லப் படுகிறது
• ‘ஜுஹோதி’ / ’ஹோமம் செய்ய வேண்டும்’ என்ற சொல்லால் விதிக்கப்படுபவை தர்வி ஹோமங்கள்.
பல தர்வி ஹோமங்கள் ஸ்ம்ருதி நூல்களிலும் ச்ருதி என்ற வேதத்திலும் சொல்லப் பட்டுள்ளன.
• பூர்வ பக்ஷம் –
தர்விஹோமங்களை விதிக்கும் வாக்கியங்களிலும் தேவதை சொல்லப் படாதபடியால், இவை ஸோம யாகத்தின் விக்ருதிகள்
•ஸித்தாந்தம் –
விதி வாக்கியத்தில் தேவதை சொல்லப்படாமை என் ற ஒற்றுமை இருந்தாலும், ஸோம யாகங்கள் யாகங்கள், இவை ஹோமங்கள்.
யாகங்களுக்கும் ஹோமங்களுக்கும் மிகுந்த வேறுபாடு உள்ளது.
யாகங்களில் “வௌஷட் ” என்று சொல்ல வேண்டும், ஹோமங்களில் ஸ்வாஹா என்று சொல்ல வேண்டும். மேலும், தர்வி ஹோமங்களில்
“ப்ருதிவிக்கு ஸ்வாஹா அந்தரிக்ஷத்துக்கு ஸ்வாஹா” போன்ற மந்த்ரங்கள் சொல்லப் படுகிறபடியால், இவற்றில் தேவதைகள் உள்ளன, ஆகையால்
ஸோம யாகத்ததாடு ஒற்றுமையும் இல்லை .
• ஆகையால், ஒற்றுமையைக் காட்டிலும் வேற்றுமைகள் அதிகமாக உள்ளபடியால் எந்த யாகத்தின் செயல்முறையையும் இவற்றில் அதிதேசம்
செய்ய முடியாது.
• ஆகையால், தர்வி ஹோமங்களில் அதி தேசமே செய்ய முடியாது.
அவ்விடத்தில் எந்த அங்கங்கள் சொல்லப் பட்டுள்ளனவோ அவற்றை மட்டும் தான் செய்ய வேண்டும்.

————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ .வே. வேளுக்குடி ரெங்கநாதன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கணாதர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ நியாய மீமாம்ச வேதாந்த பாடங்கள்–ஸ்ரீ உ .வே. வேளுக்குடி ரெங்கநாதன் ஸ்வாமிகள்–பகுதி -2 –மீமாம்ச சாஸ்த்ரம்– பாடங்கள் -1-10—

March 24, 2021

பாடம் -1-மீமாம்சைக்கு அறிமுகம்
தர்மம்
உலகத்தைத் தாங்குகிற படியால் தர்மம்
யாகம் ஹோமம் தானம் மரம் வெட்டுதல் குளம் வெட்டுதல் போன்ற நற் செயல்கள் தான் உலகத்தைத் தாங்குகின்றன
அந்த தர்மத்தைப் போதிக்கும் பிரமாணம் வேதங்கள் ஸ்ம்ருதிகள் முன்னோர் நடந்த வழிகள் ஆச்சாரங்கள்
மஹான்களின் திரு உள்ளங்கள் போன்றவை -ஸ்ம்ருதி ஸீலாம் தத் விதாம் –
வேதம் தர்மத்துக்கு மூலம்-வேதம் அகிலம் தர்மம் மூலம்-மனு

தர்மம் அர்த்தம் காமம் வீடு நான்கு புருஷார்த்தங்கள் -அர்த்தம் மூலம் தர்மம் -இதன் மூலம் காமம் வீடு
உலகம் தர்மத்தில் ப்ரதிஷ்டை யாய் இருக்கும் –
வித்யா -ததாதி விநயம் -விநயத்தால் யோக்யதை -தனம் தானே வரும் -ஸூகம் -தர்மம் கார்யம் செய்ய ஸூகத்தை பெறலாம் –
தாரணாத் தர்மம் -வேதா அகில தர்ம மூலம் —
உலகத்தை தாங்குவதால் தர்மம் -பண்டிதர்களால் தாங்கப் படுவதும் தர்மம் –
ஜபம் செய்யச் செய்ய பலம் –
மூலமும் அறிந்து அர்த்தமும் அறிந்து அனுஷ்ட்டித்து பலன் –
வேதவதி இதி வேதா -விஷயங்களைப் போதிப்பதால் வேதம் –
ஸாஸனாத் இதி ஸாஸ்த்ரம் –
வேதம் ஓதி -அர்த்தம் அறியாமல் இருந்தவன் சுமை தங்கி களுக்கு சமம் –

படித்தால் புண்யம் என்றது அல்ல -கற்றால் மட்டும் போதாது -அவற்றின் பொருளை அறிய வேண்டும்
அதை அறியவே 4-வேதங்களும்-6-அங்கங்களும்-8- உப அங்கங்களும் -18 வித்யா ஸ்தானங்கள் –
உப அங்கங்களில் ஒன்றே மீமாம்ஸா

வேதம் அசன்னிகர்ஷ்ட -அர்த்தம் போதிக்கும்
உலகத்தால் அறியப்படும் விஷயம் போதிக்காது -விபர்யமாகவும் போதிக்காது
உலகம் எப்படிப் பட்டது அறிய நியாய சாஸ்திரம் தேவை

மீமாம்ஸா -ஞாதும் இச்சா-அறிய வேண்டும் என்ற ஆசை -அதற்கு செய்யும் ஆராய்ச்சி -விசாரம்
மீமாம்ஸா என்ற சொல்லுக்கு விசாரம் என்றே பொருள் –
சாதாரணமான விசாரம் அல்ல
பூஜ்யமான-வணங்கத் தக்க வேதத்தைப் பற்றிய விசாரம் -வேதார்த்த விசாரமே மீமாம்சை –
தர்ம ஞானத்தைப் பெற செயல் முறை -இதி கர்தவ்யதா —
வேதம் என்ற கருவியைக் கொண்டு தர்ம ஞானம் அறிய மீமாம்சை என்கிற சாஸ்திரம் தேவை
வேதத்தைக் கொண்டு மீமாம்சை என்கிற ஆராய்ச்சி செய்தால் தர்ம ஞானம் கிடைக்கும் என்றவாறு

வாக்ய சாஸ்திரம் -மீமாம்சை -விசார சாஸ்திரம் -பூஜ்ய விஷய விசாரம் –
வியாகரண சாஸ்திரம் -பத சாஸ்திரம்
வேதத்திலே மீமாம்சம் வார்த்தை -விசாரம் செய்கிறார்கள் –
மறை -அர்த்தங்களை மறைக்கும் -ஸ்ரத்தை பக்தி உடன் அறிந்தால் தான் அறிய முடியும் –

மீமாம்சையின் பரம்பரை
பகவான் பிரம்மாவுக்கு உபதேசம்
ப்ரம்மா -பிரஜாபதி -இந்திரன் -ஸூர்யன் -வசிஷ்டர் -பராசரர் -வியாசர் –
வியாசர் -மகரிஷி – ஜைமினி -மீமாம்ஸா ஸூத்ரங்கள் -சபரர் -சாபர பாஷ்யம் –
சபரர் -சாபர பாஷ்யம்-போதாயனர் -உப வர்ஷர் -தேவ ஸ்வாமி -பவ தாசர் -பர்த்ரு மித்ரர் –

சாம வேதம் கற்றவர் ஜைமினி -பூர்வ மீமாம்ஸா -2700-ஸூத்ரங்கள் இயற்றி அருளி உள்ளார்-கர்ம காண்டம் -கர்ம மீமாம்ஸா –
ப்ரஹ்ம காண்டம் -உத்தர பாகம் -ஆராதன ரூபமான கர்மம் -கைங்கர்யமாக –
வேதாந்தம் -உப நிஷத் -வியாஸரே ஸூத்ரங்கள் இயற்றி அருளி உள்ளார் -ப்ரஹ்ம மீமாம்ஸா -உத்தர மீமாம்ஸா –
மீமாம்ஸா -வேதாந்தம் என்று இவற்றை பிரித்தும் சொல்வர்
போதாயனர் இரண்டுக்கும் விருத்தி எழுதி உள்ளார் –

சபரர் -சாபர பாஷ்யம்-இதே மூன்றாக பிரிந்து –
1-குமாரில பட்டர் -பத்தாம் நூற்றாண்டு-பாட்ட மதம் -ஸ்லோக வார்த்திதம் -தந்த்ர வார்திகம்-கத்யமாக -டுப்டீகா -ஸங்க்ரஹமாக-நூல்கள்
2-பிரபாகரர் -ப்ராபகர மதம் -குரு மதம்-லக்வீ-ப்ருஹதீ -நூல்கள்
(அங்கும் சொல்லப்பட வில்லை இங்கும் சொல்லப் பட வில்லை இரண்டு இடத்திலும்
அபி து அதிர அபி நா யுக்தம் பிரித்து -நீயே குரு என்று இவரை சொல்ல குரு மதம்)
3-முராரி மிஸ்ரர் -மிஸ்ரா மதம் -அங்கத்துவ நிருத்தி

பாட்ட மதஸ்தர்கள்
1-பார்த்த சாரதி மிஸ்ரர் நூல்கள் -நியாய ரத்ன மாலை -நியாய ரத்நாகாரம் -ஸாஸ்த்ர தீபிகை –
2-கண்ட தேவர் நூல்கள் -பாட்ட கௌஸ்துபம் -பாட்ட தீபிகை –பாட்ட ரஹஸ்யம் –

பிரபாகரர் மதஸ்தர் -சாலிகா நாதர் -பிரகரண பஞ்சிகை –

பிரகரண கிரந்தங்கள்
1-பவ நாதர் -நியாய விவேகம் –
2-காகா பட்டர் -பாட்ட சிந்தாமணி –
3-ஆப தேவர் -மீமாம்ஸா நியாய பிரகாசம் –
4-சங்கர பட்டர் -மீமாம்ஸா பால பிரகாசம்
5-லௌகாஷி பாஸ்கரன் -அர்த்த ஸங்க்ரஹம்
6-கிருஷ்ண யஜ்வா –மீமாம்ஸா பரிபாஷை
சேஸ்வர மீமாம்சை தேசிகர் கிரந்தமும் உண்டே –
12 அத்தியாயங்கள் -2700-ஸூத்ரங்கள்-ஜைமினி -சபரி ஸ்வாமி வியாக்யானம் –
ஒரு வாரம் ஒரு அத்யாயம் பார்ப்போம் –

—————-

பாடம் -2-மீமாம்ஸ ஸாஸ்த்ர சுருக்கம்

பிரகரண கிரந்தங்கள்
அர்த்த ஸங்க்ரஹம்
நியாய பிரகாசம்
மான மேய உதேயம்
நியாய கௌதம ஸூத்ர -மூல கிரந்தம்
வைசேஷிகர் கணாதர் ஸூத்ர -மூல கிரந்தம்
மீமாம்ஸ -ஜைமினி ஸூத்ர -மூல கிரந்தம்
வேதாந்தம் -பாதாயனர் வேத வியாசர் ஸூத்ர -மூல கிரந்தம்
வியாகரணம் -பாணினி -ஸூத்ர -மூல கிரந்தம் –
பூஜ்யமான வேத விசாரம் மீமாம்ஸா முன்பே பார்த்தோம்
விசாரம் செய்து வேதார்த்த ஞானம் பெறுவோம்
தொடுத்து வைக்கும் கயிறு நூல் போல் ஸூத்ரம் -அர்த்தங்களைக் கோவையாக கோத்து கொடுக்கும் –

ஸூத்ரம் -அதிகரணம்

அல்ப அக்ஷரம் -எண்ணிக்கையில் குறைந்து
அசங்விப்தம் -ஸ்பஷ்டமாக காட்டும்
சாரவத் -ஆழ்ந்த கருத்துகளைச் சொல்லும்
விஸ்வதோ முகம்-appilcable every where
அஸ்தோபம் -வியர்த்த அக்ஷரங்கள் இல்லாமல் -சாரியை போல் ஸ்தோத்ரங்களில் ஸ்தோப அக்ஷரங்கள் இருக்குமே
சந்தஸ்ஸுக்களை பூர்த்தி பண்ண –
அநவத்யம்-அவத்யம் குறைகள் இல்லாமல் இருக்கும்

குறைந்த எழுத்துக்களைக் கொண்டதாயும்
சந்தேகத்துக்கு இடம் இல்லாததாயும்
ஆழ்ந்த பொருள்களை உடையதாயும்
பல இடங்களில் பயன் படுத்துவதாயும்
பயன் அற்ற எழுத்துக்கள் இல்லாததாயும்
பிழை இல்லாததாயும் -இருப்பது ஸூத்ரம்

லகு -சிறியது -எளிமை
பூஜிதார்த்தா நி –பூஜ்யமான கருத்துக்களை
ஸ்வல்ப அக்ஷரா பதாநி –
ஸர்வதா சாரா பூதா நி

எளிதாகவும்
பல பொருள்களைக் கோடி காட்டுவதாகவும்
குறைந்த எழுத்துக்களையும் சொற்களையும் உடையதாகவும்
ரஸமாகவும் இருப்பதே ஸூத்ரங்கள்

அதிகரணம்
ஒரே விஷயத்தை ஆராயும் ஸூத்ரங்களின் கூட்டத்திற்கு ஓரு அதிகரணம் என்று பெயர்.
அதிகரணம் என்பதற்கு ஐந்து பகுதிகள் உண்டு:

1. விஷயம் – ஆராயப்படும் வேத வாக்யம்
2. விசயம் – அந்த வாக்யத்தின் பொருளில் உள்ள சந்தேகம்
3. பூர்வ பக்ஷம் – எதிராளி கூறும் யுக்திகள்
4. உத்தரம் -ஸித்தாந்தம் –நாம் சொல்லும் யுக்திகளும் முடிவும்
5. ஸங்கதி –முன் அதிகரணத்தோடு இந்த அதிகரணத்துக்கு உள்ள தொடர்பு.-906-ஸங்கதிகள் உண்டு-907 அதிகரணங்கள் –

மஹர்ஷி ஜைமினி தன் ஆசார்யர்கள் இடம் கற்ற மீமாம்ஸ
சாஸ்த்ரத்தை பிற்காலத்தவர் களின் நன்மைக்காக ஸூத்ரங்களாக எழுதி வைத்தார்.
• மீமாம்ஸா சாஸ்த்ரத்தில் 12 அத்யாயங்கள் உள்ளன.
• ஒவ் ஓரு அத்யாயத்திலும் 4 பாதங்கள் இருக்கும் (பாதம் என்றால் கால் பகுதி என்று பொருள்).
3ஆவது 6ஆவது மற்றும் 10ஆவது அத்யாயங்களில் மட்டும் 8 பாதங்கள் உண்டு.
ஆகையால் மொத்தத்தில் மீமாம்ஸா சாஸ்த்ரத்தில் 60 பாதங்கள் உள்ளன.
• இந்த 60 பாதங்கைிலும் சேர்த்து 907 அதிகரணங்கள் உள்ளன,–
எனவே 1000 நியாயங்கள் கொண்டது மீமாம்ஸா சாஸ்திரம் என்பர்
• அவர் எழுதிய ஸூத்ரங்களின் எண்ணிக்கை 2745–சில மாறுதல்களும் உண்டு இந்த எண்ணிக்கையில் –

1 -அத்யாயம் -8 4 10 20–பாதம் தோறும் உள்ள அதிகரணங்கள் –ஆக மொத்தம் -42-அதிகரணங்கள்
2-அத்யாயம் – 18 13 14 2–பாதம் தோறும் உள்ள அதிகரணங்கள் –ஆக மொத்தம் –47–அதிகரணங்கள்
3 -அத்யாயம் -15 19 20 21 20 16 23 23–பாதம் தோறும் உள்ள அதிகரணங்கள் –ஆக மொத்தம் -157-அதிகரணங்கள்
4 -அத்யாயம் -17 13 20 12-பாதம் தோறும் உள்ள அதிகரணங்கள் –ஆக மொத்தம் -62-அதிகரணங்கள்
5 -அத்யாயம் -18 12 15 9–பாதம் தோறும் உள்ள அதிகரணங்கள் –ஆக மொத்தம் -54-அதிகரணங்கள்
6 -அத்யாயம் -13 11 21 14 21 7 13 9–பாதம் தோறும் உள்ள அதிகரணங்கள் -ஆக மொத்தம் -99-அதிகரணங்கள்
7 -அத்யாயம் -5 1 14 3-பாதம் தோறும் உள்ள அதிகரணங்கள் –ஆக மொத்தம் -23-அதிகரணங்கள்
8 -அத்யாயம் -19 6 6 4–பாதம் தோறும் உள்ள அதிகரணங்கள் –ஆக மொத்தம் -37-அதிகரணங்கள்
9 -அத்யாயம் -18 20 14 15–பாதம் தோறும் உள்ள அதிகரணங்கள் –ஆக மொத்தம் -67-அதிகரணங்கள்
10 -அத்யாயம் -11 34 20 27 26 22 20 19-பாதம் தோறும் உள்ள அதிகரணங்கள் –ஆக மொத்தம் -179-அதிகரணங்கள்
11 -அத்யாயம் -11 16 16 21–பாதம் தோறும் உள்ள அதிகரணங்கள் –ஆக மொத்தம் -64-அதிகரணங்கள்
12 -அத்யாயம் -21 15 16 16–பாதம் தோறும் உள்ள அதிகரணங்கள் –ஆக மொத்தம் -68-அதிகரணங்கள்-

12-அத்தியாயங்களின் பொருள் -த்வாதஸ லக்ஷணீ -அத்தியாயங்கள் மீமாம்ஸையில் உண்டே –
மீமாம்ஸா சாஸ்த்ரத்தின் ஒரே பொருள் – ’தர்மம்’.
அதிலும்
1. ப்ரமாணம் – தர்மத்தை அறியும் ப்ரமாணங்களைப் பற்றி
2. பேதம் – தர்மங்களுக்குள் வேறுபாட்டை அறியும் முறைகள்
3. சேஷத்வம் – ஒரு செயல் மற்ற ஓன்றுக்கு அங்கமாக /துணையாக / உறுப்பாக ஆகுதல்
4. ப்ரயுக்தி – பல இடங்களில் உபயோகப்படும் ஒரு பொருளின் முக்கியமான கார்யம் எது என்று நிரூபித்தல்
5. க்ரமம் – வைதிகச் செயல்களைச் செய்யும் வரிசை
6. அதிகாரம் – வைதிகச் செயலைச் செய்யும் தகுதிகள்
7. ஸாமாந்ய அதிதேசம் – ஓரிடத்தில் உபதேசிக்கப்பட்ட செயல் முறையை மற்ற ஒரு இடத்தில் ஏறிடுதல்
8. விசேஷ அதிதேசம் – எங்கிருந்து எங்கு ஏறிட வேண்டும்?
9. ஊஹம் – ஏறிடும் போது செய்ய வேண்டிய சிறு மாற்றங்கள்
10. பாதம்– ஏறிடும் பொழுது தவிற்க வேண்டியவை / நிருத்தப்பட வேண்டியவை
11. தந்த்ரம் – பல வற்றுக்கு உப யோயாகப்படும் ஒரு செயலை அனைத்துக்காகவும் ஒரு முறை செய்தல்
12. ப்ரஸங்கம் – ஒன்றுக்காகச் செய்யப்பட்ட செயலால் மற்ற ஓன்று பயன் பெற்றபடியால் அதற்காகத் தனியாகச் செய்ய வேண்டாமை

நியாயமத –அதிகரண ஸ்லோகம் -பூர்வ பக்ஷம் உத்தரம் விளக்கி ஒரு ஸ்லோகம்
ஸங்க்ரஹ ஸ்லோகம்
தர்மோ துவாதச லக்ஷன்யாம் உத்பாத்யா -தர்மம் அறியவே –
மீமாம்ஸா நியாயம் -ஒரு கருத்து ஒரு அதிகரணத்துக்கு -907 நியாயங்கள் உண்டே
பிரமாணம் -மாணா தீனா மேய ஸித்தி -தர்மம் அறியும் கருவி -போதிக்கும் உபகரணம் –
வேதம் அகில தர்ம மூலம் -அஷ்ட பிரமாணங்கள் தர்மம் அறிய

அடுத்து பேதம் -வேறுபாடு
கர்மாக்களைச் செய்யும் முறைகள் வேதம் போதிக்கும் -செய்யக் கூடாதவற்றையும் சொல்லும் –
ஆறு வழிகள் சொல்லி வேறுபாட்டை உணர்த்தும்
அங்கமாகவும் ஸ்வ தந்த்ரமாகவும் இருக்குமே கர்மாக்கள்

அடுத்து -அங்கத்வம் -சேஷத்வம்
பிரதான யாகம் -தேவதையைக் குறித்து த்ரவ்யம் தியாகம் தானம் பண்ணுவதே யாகம் -முன் செய்வது எல்லாம் அங்கங்கள்
ஆவாஹனம் -செய்து -பிரசாதம் செய்ய பல கர்மாக்கள் –
பின்பு செய்யும் அங்கங்களும் உண்டே -அனைத்தும் யாக பிரயோகங்கள்

அங்க வஸ்திரம் க்ரஹஸ்தனுக்கு
தூசியும் தட்டலாம் -முகமூடியாகவும்
பிரதானம் ஒன்றே
phone -பலவற்றுக்கும் -உபயோகம்
கபாலம் -ப்ரோடாஸம் பண்ண -உமி நகற்றவும் உபயோகம் -ப்ரயோஜம் ஒன்றே -இத்தை நான்காவது அத்யாயம் சொல்லும்

அடுத்து எந்த வரிசையில் -க்ரமம் -சொல்லவே அடுத்த அத்யாயம் -வேத வாக்கியங்கள் கொண்டு அறிவோம்
வைதிக கர்ம க்ரமம்

அடுத்து -அதிகாரம் -யோக்யதை –
சுவர்க்கம் அடைய ஒரு யாகம் –
ராஜா பெரிய அரசு கிடைக்க யாகம் –
சில இடங்களில் சொல்லப்படாத யோக்யதை இருக்கும்
பலராக செய்யும் யாகங்களும் உண்டு -அவற்றுக்கும் அதிகாரம்

அதி தேசம் -அடுத்து -சோறு பொங்கல் -கொஞ்சம் மாற்றம் -அது மட்டும் சொல்வது போல்
யாக அங்கங்கள் விவரணம் சொல்லப்பட்டதை உபயோகித்து -மாற்றங்களை சொல்வது போல்
இது தான் ஏழாவது அத்யாயம் –

விசேஷ அதி தேசம்
கீழே பொதுவானவை –
இதில் விசேஷங்கள்

ஊஹம்-மிளகாய் -இல்லாமல் மிளகு போல் மந்த்ர மாற்றங்கள்
அக்னிக்கு இந்த மந்த்ரம்
சூரியனுக்கு சொல்லும் மந்த்ரம் செயல் முறைகளில் கொஞ்சம் மாற்றம் -தகுந்தாற் போல்

செய்யாமல் விட வேண்டியவையும் உண்டே -இத்தை அடுத்த அத்யாயம் சொல்லும் -பாதம்
அரிசி -ஓர் இடத்தில்
தங்க தூள்கள் -வேறே இடத்தில்
உரலில் போட்டு இடிக்க வேண்டாமே –
இவற்றைச் சொல்லுவதே பாகம் –
அரச மரம் -ஓர் யாகம் -பனை மரம் வேறே இடத்தில் இருக்குமே

தந்த்ரம் -ஒரே செயல் பலவற்றுக்கும் அங்கமாக –
அநேக உத்தேச்யமாக ஸக்ருத் செய்வது

பிரசங்கம் -அடுத்து
ஒருவருக்காக போகும் பொழுது நடுவில் ஒருவரை இறக்கி விடுவது
ஒரே கார்யம் -பலரும் பெறலாம் -இதுவே பிரசங்கம் –
ஒரு யாகத்துக்கு செய்த செயலே மற்ற ஒன்றுக்கும் உபயோகப்பட்டால் அதுவே பிரசங்கம் –

————–

பாடம் -3-மீமாம்ஸா சாஸ்திரத்தின் தேவை
தர்மத்தின் பிரமாணங்கள்

• மீமாம்ஸா சாஸ்த்ரம் வேதத்தின் பொருளைப் பற்றி விசாரம் செய்வதன் மூலம் தர்மத்தைப் பற்றி அறிவிக்கிறது
• ஒரு பொருளைப் பற்றி ஆராய்வதற்கு முன், அதை நாம் அறியப் பயன்படுத்தும் ப்ரமாணம் எது என்று
முடிவு செய்ய வேண்டும். அதற்காகத் தான் ஜைமிநி மஹரிஷி முதல் அத்யாயத்தில் தர்மத்தை
அறிவிக்கும் ப்ரமாணங்களைப் பற்றிக் கூறுகிறார்.
• தர்மத்தை போதிக்கும் ப்ரமாணங்கள் எட்டு. அவை
முதல் அத்யாயத்திலிருக்கும் நான்கு பாதங்களால் சொல்லப்படுகின்றன.
• முதல் பாதத்தில் – (1) விதி
• இரண்டாம் பாதத்தில் – (2) அர்த்த வாதம், (3) மந்த்ரம்
• மூன்றாம் பாதத்தில் – (4) ஸ்ம்ருதி, (5) ஆசாரம் (சான்றோர் நடத்தை )
• நான்காம் பாதத்தில் – (6) நாமதேயம், (7) வாக்ய சேஷம், (8) ஸாமர்த்யம் –

• முதல் அத்யாயத்தின் முதல் பாதத்தில், ’விதி’ என்ற ப்ரமாணத்தைப் பற்றி விசாரம் செய்யப்படுகிறது.
• ’விதி’ என்றால் ’கட்டளை ’ என்று பொருள்–பர்யாய சொற்கள் -கட்டளை –
உதாஹரணம் – ஆசார்யன் சிஷ்யனைப் பார்த்து ’மாட்டை ஓட்டிக் கொண்டு வா ’ என்று சொல்லும் வாக்யம்
• சோதநா, உபதேசம், விதி என்ற சொற்கள் எல்லாம் ஒரே பொருளை உடையவை தான்
• விதி என்பது இரண்டு செயல்களைச் செய்ய வேண்டும் –
• (1) அஜ்ஞாத ஜ்ஞாபநம் – அறியப்படாத ஒரு விஷயத்தை அறிவித்தல்
• (2) அப்ரவ்ருத்த ப்ரவர்தநம் – ஒரு செயலில் ஈடுபடாத ஒருவரை அந்தச் செயலில் மூட்டுதல் / தூண்டுதல்
• எடுத்துக் காட்டு – “மாட்டை ஓட்டிக் கொண்டு வா ” என்று ஆசார்யன் சொல்லும் வார்த்தை -(விதி),
சிஷ்யன் இதற்கு முன் அறியாத ’மாட்டை அழைத்து வர வேண்டும்’ என்பதை அறிவிக்கிறது.
மாட்டை அழைத்து வருதல் என்ற செயலில் அவனைத் தூண்டுகிறது.

வேதம் –
1-மந்த்ரம் பாகம் -கார்யம் சொல்லும் பொழுது சொல்ல வேண்டியவை
2-ப்ராஹ்மண பாகம் -இதில் ஓன்று விதி
ஜ்யோதிஷ்டோமம் யாகம் செய்வாய் ஸ்வர்க்கம் போக வேண்டுமானால் – விதி வாக்கியம் –
கட்டளைகளால் தர்மம் காட்டிக் கொடுக்கும் இந்த விதி வாக்கியங்கள் –

ஸ்லோக வார்த்திகம் குமாரில பட்டர் எழுதியது –

விதியின் வகைகள்
விதி மூன்று வகைப்படும் – 1-அபூர்வ விதி -2- நியம விதி, 3-பரிசங்க்யா விதி

• (1) அபூர்வ விதி – நாமாக அறிய முடியாத புதிதான விஷயத்தை அறிவிக்கும் விதி அபூர்வ விதி ஆகும்.
எடுத்துக் காட்டு –
யாகத்திற்கு அரிசியை சேகரிக்க நெல்லை எடுத்து, உலக்கையால் இடிக்க வேண்டும்.
அதற்கு முன் -க்ரீஹீ ப்ரோஷதி ’நெல்லை ப்ரோக்ஷிக்க வேண்டும்’ என்று ஒரு வேத வாக்யம் சொல்லுகிறது.
ப்ரோக்ஷணம் செய்வது லௌகிகத்தில் இல்லையே -இத்தை வேதம் சொல்வதால் அபூர்வ விதி –
இந்த வாக்யம் இல்லா விட்டால், ப்ரோக்ஷணம் செய்ய வேண்டும் என்று நாம் அறியவே முடியாது.
ஆகையால், அபூர்வமான இந்த விஷயத்தைச் சொல்லும் இந்த விதி அபூர்வ விதி ஆகும்

• (2) நியம விதி – ஒரு பயனை அடைய பல வழிகள் நமக்குத் தெரிந்திருந்தால், நம் இஷ்டத்துக்கு
ஏதோ வழியில் செய்யக்கூடாது என்பதற்காக அந்த வழிகளுக்குள் ஒரு வழியை வேதமே உபதேசிக்கும்.
இப்படி ஒரு நியமத்தைச் செய்து தருகிறபடியால் இதற்கு நியம விதி என்று பெயர்.
எடுத்துக் காட்டு –
நெல்லிலிருந்து அரிசியை சேகரிக்க உலக்கையால் அடித்தல், நகத்தால் கிழித்தல் போன்ற
பல வழிகள் உண்டு என்று நாமே அறிவோம். -அதை வேதம் சொல்லத் தேவையில்லை .
ஆனால், -அவஹந்தி -’நெல்லை இடிக்க வேண்டும்’ என்ற விதி உள்ளது. இது எதற்கு என்றால்,
நாமாக இஷ்டப்பட்டு நகத்தால் கிழித்து அரிசியை எடுக்க் கூடாது,
உலக்கையால் இடித்துத் தான் ஆக வேண்டும் என்ற நியமத்தை போதிப்பதற்காக –
ஆகையால் -இடித்துத் தான் -என்பதால் – இது நியம விதி.
மற்ற வழிகளால் கூடாது என்பதை அர்த்தமாக அறிகிறோம் இதில் –

• (3) பரிஸங்க்யா விதி – ஒரே சமயத்தில் பல செயல்களைச் செய்ய வாய்ப்பு இருக்கும் பொழுது,
அவற்றில் சில வற்றை வேதமே தள்ளத் தக்காத உபதேசிக்கும்.
தள்ள வேண்டியவை தள்ளப் பட்டால் செய்ய வேண்டியவை எவை என்று தானாகவே நாம் அறியலாம்.
இந்த ’நீக்குதல் / தவிர்த்தல்’ என்பதற்கு தான் பரி சமக்யா என்று ஸம்ஸ்க்ருதத்தில் பெயர்.
ஆகையால் இந்த விதி பரிசம்க்யா விதி என்று அழைக்கப்படுகிறது.
• எடுத்துக்காட்டு – ஒரு இடத்தில் பொய்யோ உண்மையோ பேச வாய்ப்பிருக்கும் பொழுது,
வேதம்-ந அநிருத்தம் வத – ’பொய்யைப் பேசக் கூடாது’ என்று நமக்கு உபதேசிக்கிறது.
இப்படி ஒரு வழியைத் தவிர்த்து விட்டால், தானாகவே உண்மையைத் தான் பேச வேண்டும்
என்று நமக்குத் தெரிந்து விடும். -ஆகையால் இதி பரிசம்க்யா விதி.
• இந்த இடத்தில், ’சத்யம் தான் பேச வேண்டும்’ என்று வேதம் சொல்லியிருந்தால் அது நியம விதி,
ஏன் என்றால் செய்ய வேண்டிய ஒன்றை வேதம் சொல்லி யுள்ளது.
’பொய் பேசாதே ’ என்று சொன்னபடியால் இது பரிசம்க்யா விதி, -ஒரு பொருளைத் தவிர்ப்பதைப் பற்றிச் சொல்லுகிறபடியால்.
சத்யம் தான் சொல்ல வேண்டும் என்று ஆர்த்தமாக அறிகிறோம் –

மீமாம்ஸா சாஸ்த்ரத்தில் முதல் அதிகரணம் –
ஜிஜ்ஞாஸா அதிகரணம்-

முதல் பாதத்தால் விதி கட்டளை கொண்டு தர்மம் அறியலாம்
இது தர்க்க பாதம் -இதில் விதி வாக்கியங்கள் இருக்காது
விஷயம் -விஷயம் -பூர்வ பக்ஷம் -சித்தாந்தம் சங்கதி க்கு பதில் பிரயோஜனம்
முதல் அதிகரணம் -ஒரே ஸூத்ரம் -ப்ரதிஜ்ஜா -ஸூத்ரம்
அது அத தர்ம ஜிஜ்ஞாசா –
அடுத்து ஆகையால் தர்மத்தை பற்றி விசாரம் செய்ய வேண்டும்
வேத அத்யயனத்து அடுத்து
வேத அத்யயனம் செய்ததால்
தர்ம விசாரம் -ஜிஜ்ஞாசா -ஞாதும் இச்சா -விசாரம் -லக்ஷணை யால்

இந்த அதிகரணத்தில் மீமாம்ஸா சாஸ்த்ரம் ஆரம்பிக்கப்பட வேண்டுமா அல்லவா எனறு விசாரிக்கப்படுகிறது.
• விஷய வாக்யம் -ஸ்வ அத்யாயம் அத்யே தவ்ய-தன்னுடைய வேத பாகம் -கற்க வேண்டும் –
’ஒருவன், அவனவன் முன்னோர்கள் பயின்ற வேதத்தை , அத்யயநம் செய்ய வேண்டும்’ என்று வேதம் சொல்லுகிறது.
• அத்யயநம் என்றால் வேதத்தை ஒரு ஆசார்யன் சொல்லச் சொல்ல, மாணவன் அத்தை திரும்பச் சொல்லுதல்.
• ஸந்தேகம் – இந்த விதி வாக்யம் வேதத்தை அத்யயநம் செய்தால்
புண்ணியம் பெற்று ஸ்வர்கத்தை அடையலாம் என்று சொல்கிறதா? அல்லது
வேதத்தை அத்யயநம் செய்தால் அதன் பொருளை அறியலாம்,
அதாவது, அர்த்த ஜ்ஞாநத்தைப் பெறலாம் என்று சொல்கிறதா? –
அத்யயநம் செய்ததன் பயன் ஸ்வர்கமா? அர்த்த ஜ்ஞாநமா?
• அத்யயநம் செய்யப்படுவது ஸ்வர்கத்துக்காக என்றால், வேதத்தின் மூலத்தைக் கற்றால் போதும்,
பொருள் அறியத் தேவையில்லை என்பதால் மீமாம்ஸா சாஸ்த்ரம் தேவையில்லை
. அத்யயநம் செய்வது வேதத்தின் பொருளை அறிந்து கொள்வதற்காக என்றால், சந்தேகங்கள் இல்லாமல்
வேத்த்தின் பொருளை அறிய மீமாம்ஸை என்கிற விசாரம் கண்டிப்பாகத் தேவைப் படுகிறது.

பூர்வ பக்ஷம் –
அத்யயநம் செய்வது அர்த்த ஜ்ஞாநத்துக்காக என்று சொல்ல முடியாது.
’அர்த்த ஜ்ஞாநத்துக்காக அத்யயநம் செய்ய வேண்டும்’ என்று சொல்லும் இந்த விதி அபூர்வ விதியா? நியம விதியா?
• அபூர்வ விதி என்று சொல்ல இயலாது – ஏன் என்றால் இதில் அபூர்வமான விஷயம் ஒன்றும் இல்ஸல.
ஒரு நூலை அத்யயநம் செய்தால் அதன் பொருளை அறியலாம் என்று உலகத்தில் நாம் அறிந்தது தான்.
• நியம விதி என்றும் சொல்ல முடியாது, ஏன் என்றால் நியம விதிகளில்
நியமத்தை மீறினால் என்ன சங்கடம் நேறிடும் என்று சொல்ல வேண்டும்.
• எடுத்துக் காட்டு –
நாம் முன்னால் பார்த்த எடுத்துக் காட்டில், நெல்லை உலக்கையால் குத்தி, உமியை நீக்கி,
அரிசியை எடுத்து, சோறு சமைத்து, தேவதைக்கு சமர்பித்தால் தான் புண்ணியம் ஏற்படும்,
அதன் மூலம் தான் நாம் ஆசைப்படும் பயன் கிட்டும்,
நகத்தால் கீறி அரிசியை எடுத்து சோறு சமைத்து தேவதைக்குக் கொடுத்தால்
புண்ணியம் ஏற்படாது, பயனும் கிட்டாது என்று சொல்லலாம்.
• அதைப் போல் இவ்விடத்தில் சொல்ல இயலாது. அர்த்த ஜ்ஞாநம் என்பது அநுஷ்டானத்திற்காக.
அத்யயநம் செய்து அர்த்த ஜ்ஞாநம் பெற்றாலும் சரி, நாமாகப் படித்துப் பெற்றாலும் சரி, அநுஷ்டானத்தைக்
குறையின்றி செய்யலாமே .ஆகையால் இது நியம விதி ஆக முடியாது,
• ஆகையால், அத்யயநம் செய்வது ஸ்வர்கத்துக்காக என்று தான் சொல்ல வேண்டும்.
பயன் சொல்லப்படாத செயல்கள் அனைத்துக்குமே ஸ்வர்கம் தான் பலன் என்பது மீமாம்ஸையில் கோட்பாடு.

அதீத்ய ஸ்நாயாத் -ஸ்ம்ருதி -சமா வர்த்தநம்-ஹோமம் பண்ணி பூர்த்தி -அத்யயனம் செய்த உடன் செய்ய வேண்டும் –
அர்த்தத்துக்கு நடுவில் மீமாம்ஸா படி- சொல்ல வில்லை
எனவே வேதம் அத்யயனம் அர்த்தத்துக்கு இல்லை-ஸ்வர்க்கத்துக்காகவே என்பர் பூர்வ பக்ஷி

• ஸித்தாந்தம் –
அத்யயநம் செய்வது அர்த்த ஜ்ஞாநத்திற்காகத் தான்.
• இது நியம விதி தான். எந்தக் குறையும் இல்லை.
• நியமத்தை மீறினால் ஏற்படும் குறையை இப்படிச் சொல்ல வேண்டும்
அத்யயநத்தின் மூலம் சம்பாதிக்கப்பட்ட அர்த்த ஜ்ஞாநத்தைக் கொண்டு அநுஷ்டானம் செய்தால் தான்,
செய்யப்பட்ட வைதிக கர்மா புண்ணியத்தைக் கொடுத்து அதன் மூலம் நாம் ஆசைப்பட்ட பலனைக் கொடுக்கும்.
நாமாக புத்தகத்தைப் படித்து அர்த்த ஜ்ஞாநம் பெற்று, அதன் மூலம் அநுஷ்டானம் செய்தால்,
அந்தச் செயல் எந்த புண்ணியத்தையும் கொடுக்காது.
• அத்யயநத்துக்கு ஸ்வர்கம் தான் பலம் என்று சொல்லக் கூடாது.
ஒரு செயலுக்கு த்ருஷ்டமான (கண்ணுக்குப் / புலன்களுக்குப் புலப்படும்) பயன் இருக்கும் பொழுது,
பாபம் புண்யம் போன்ற அத்ருஷ்டமான ஒன்றை பலன் என்று சொல்லக் கூடாது.
• நாம் உண்ணும் ஒரு மருந்து, த்ருஷ்டமான முறையில் ஏதோ ரஸாயனங்களை உடலில் புகுத்தி,
நோயைப் போக்குகிறது என்று சொல்ல முடியும் பொழுது, மருந்து உண்டதால் புண்ணியம் கிடைத்தது
அதனால் நோய் நீங்கியது என்று சொல்லக் கூடாது
• அதே போல் தான் அத்யயநத்தினால் அர்த்த ஜ்ஞாநம் என்ற த்ருஷ்டமான பலன் இருக்கும் பொழுது,
அத்ருஷ்டமான புண்ணியம், ஸ்வர்கம் முதலானவற்றைப் பலனாகக் கல்பிக்கக் கூடாது.
• ஆகையால், அத்யயநம் செய்த பிறகு மீமாம்ஸை என்ற விசாரம்
செய்தால் தான் ஸந்தேஹங்கள் இல்லாமல் வேதத்தின் அர்த்தத்தை
அறிய முடியும் என்பதால் மீமாம்ஸா சாஸ்த்ரம் தேவை யானது தான்,

ப்ரயோஜநம்
• ஒவ்வொரு அதிகரணத்திலும் ஒரு பிரயோஜனம் சொல்லப்படும்.
பூர்வ பக்ஷி சொன்ன கருத்தை ஏற்றுக் கொண்டால் கர்மங்களில் அநுஷ்டானம் எப்படி ஏற்படும்.
ஸித்தாந்தி வேறு கருத்தை நிர்ணயம் செய்ததால் அநுஷ்டானத்தில் என்ன மாற்றம் ஏற்படுகிறது
என்பது தான் ஓர் அதிகரணத்தின் பிரயோஜனம் என்று சொல்லப்படுகிறது.
• ஸ்ம்ருதிகளில் ’அத்யயநம் செய்து ஸமாவர்தநம் என்ற கர்மத்தைச் செய்ய வேண்டும்’ என்று சொல்கிறது.
• பூர்வ பக்ஷத்தில் அத்யயநம் ஸ்வர்கத்துக்காக என்பதால் வேதத்தின் மூலத்தை அறிந்து கொண்டால் போதும்,
மீமாம்ஸா சாஸ்த்ரத்தைப் படிக்கத் தேவையில்லை
ஆகையால், அத்யயநம் செய்து முடித்தவுடன் உடனே அடுத்து ஸமா வர்தநம் செய்து விட்டு
குருகுலத்திலிருந்து மாணவன் புறப்படலாம்.
• ஸித்தாந்தத்தில் அத்யயநம் செய்வது அர்த்த ஜ்ஞாநத்துக்காக. ஆகையால், வேதத்தின் மூலத்தை மட்டும்
கற்றால் போதாது,-பொருளையும் அறியவேண்டும். அதற்காக மீமாம்ஸா சாஸ்த்ரத்தை ஆசார்யனிடம் பயில வேண்டும்.
ஆகவே, அத்யயநம் முடித்துே விட்டு, குருகுலத்திலேயே தங்கியிருந்து மீமாம்ஸையும் பயின்ற பிறகு தான்
ஸமா வர்தநம் செய்து விட்டு மாணவன் குருகுலத்திலிருந்து புறப்படலாம்

வேத அத்யயனத்துக்கு பிறகு
வேத அத்யயனத்தால் த்ருஷ்ட பலமான அர்த்தம் ஞானம் வருவதால் -தர்மம் அறிந்து
அனுஷ்டானம் செய்து -புண்ணியம்
சமா வர்த்தநம்–அத்யயனம் செய்த பிறகு -என்பதால் -அத்யயனம் செய்து மீமாம்ஸா மூலம்
அர்த்த ஞானம் பெற்று பின் காலத்தில் சமா வர்த்தநம்
அத்யயனத்துக்கு அடுத்து சமா வர்த்தநம் இல்லை பின்பே என்றதாயிற்று
ஆகவே விசாரம் செய்ய வேண்டும் என்று நிரூபணம் –

————–

பாடம் -4-விதி அர்த்தவாதம் மந்த்ரம்

1-1-2-தர்மத்தின் லக்ஷணம் –

மீமாம்ஸா சாஸ்த்ரத்தின் முதல் அத்யாயத்தின் முதல் பாதத்தின் முதல் அதிகரணத்தில் (1.1.1)
மீமாம்ஸா சாஸ்த்ரம் ஏன் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்று நிரூபித்தார் ஸைமிநி மஹரிஷி
• அடுத்து, இரண்டாவது அதிகரணத்தில், தர்மத்தின் லக்ஷணம் என்ன?
தர்மத்தை போதிக்கும் ப்ரமாணம் எது? என்ற இரண்டு கேள்விகளுக்கு பதில் கூறுகிறார்.
விதி உபதேசம் சோதனா -பர்யாயம்
• “(ஸோதநா லக்ஷண:) ஸோதநா என்று அழைக்கப்படும் வைதிக விதியால் (கட்டளையால்) அறியப்படுவதாகவும்,
(அர்த:) நமக்கு நன்மையைக் கொடுப்பதாகவும் இருப்பது தான் (தர்ம:) தர்மம்.”
• அநர்தம் என்பது நரகம் போன்ற தீங்குகளை ஏற்படுத்தும் செயல்.
அர்தம் என்றால், அப்படி இல்லாமல், நன்மையைக் கொடுப்பது.-ஸ்ரேயஸ் கரம் –
வேத போதித இஷ்ட சாதனத்வம் தர்மம் –
• இந்த லக்ஷணத்தில், ’அர்தம்’ = ’நன்மையைக் கொடுப்பது’ என்று சொல்லாமல் போனால் அதி வ்யாப்தி ஏற்படும்.
நமது எதிரிகளைப் போக்குவதற்கான சில யாகங்கள் வேதத்திலேயே சொல்லப்பட்டுள்ளன.
ஆனால், அந்த கர்மங்களைச் செய்பவனுக்கு நரகம் ஏற்படும் என்றும் வேதமே சொல்கிறது.
ஆகையால், அவற்றுக்கு தர்மம் என்ற பெயர் கிடையாது.
ஆனால், அவையும் விதி வாக்யத்தாலே போதிக்கப்படுமவை தான்.
அதனால் அவற்றில் அதி வ்யாப்தி ஏற்படும்.
• மற்ற ஓரு வகையில் சொன்னால், “நாம் ஆசைப்படும் ஒரு பயனைப் பெற்றுக் கொடுக்கும் வழியாலே
வேதத்தாலே போதிக்கப்படுவது தான் தர்மம்” என்று சொல்லலாம்.

இரண்டு நியமங்கள்
• லக்ஷணம் என்ற சொல்லுக்கு பல பொருள்கள் உண்டு.
• (1) லக்ஷணம் = அஸாதாரண தர்மம் / இலக்கணம்
• (2) லக்ஷணம் = பன்னிரண்டு அத்யாயங்களைக் கொண்ட இந்த மீமாம்ஸா சாஸ்த்ரத்துக்கு
த்வாதச லக்ஷணீ என்று பெயர்
• (3) லக்ஷணம் = ப்ரமாணம். ஸோதநா என்கிற வேத விதிகளைப் ப்ரமாணமாகக் கொண்டவை தர்மங்கள்,
அதாவது அவற்றால் அறியப்படுபவை தான் தர்மங்கள். அதனால் தான் ஸோதநா லக்ஷண: என்று கூறுகிறார் ஸைமிநி.
• இதை லக்ஷணா என்ற சொல்லோடு குழப்பிக் கொள்ள வேண்டாம்.
ஒரு சொல், தனது முக்கியமான அர்த்தத்தைக் குறிக்க முடியாத போது, அதனோடு தொடர்புடைய
வேறு ஓரு அர்த்தத்தைக் குறிப்பதற்கு லக்ஷணா என்று பெயர் என்ற கற்றுள்ளோம்.
• பொதுவாக ஒரு சொல் தொடரில் வலியுறுத்தல் இல்லா விட்டாலும், அதை நாம் வைத்துக் கொள்ளலாம்.
’அர்ஜுனன் வில்லாளி என்று சொன்னால் “அர்ஜுனன் தான் வில்லாளி மற்றவர்கள் அல்ல” என்றும்
“அர்ஜுனன் வில்லாளி தான் ” என்றும் இரண்டு கருத்துகள் வலியுறுத்தப்படலாம்.
• அதே போல் “விதி வாக்யங்களைப் ப்ரமாணமாகக் கொண்டது தர்மம்” என்று கூறும் இந்த ஸூத்ரத்தில்
இரண்டு வலியுறுத்தல்கள் கூறப்படுகின்றன –
“விதிகள் தான் தர்மத்தின் ப்ரமாணங்கள், வேறு ப்ரமாணங்கள் இல்லை ” என்றும்
“விதிகள் தர்மத்தின் ப்ரமாணம் தான், அப்ரமாணங்கள் அல்ல” என்றும்.

1-1-3-விசார சாஸ்திரம்

கீழ் ஸூத்ரங்களில்,
வேத அத்யயநத்துக்குப் பிறகு தர்மத்தைப் பற்றின விசாரம் செய்யப்பட வேண்டும்-என்றும்,
தர்மத்தின் லக்ஷணம் என்ன என்றும்,
தர்மத்தை போதிக்கும் ப்ரமாணம் எது என்றும் கூறினார் ஜைமிநி மஹரிஷி.
• இந்த சாஸ்த்ரம் உபதேசம் மட்டுமே செய்யும்,-சொல்வதைக் கேட்டு ஏற்றுக் கொள்ள வேண்டியது தான்
என்ற எண்ணம் படிப்பவர்களுக்கு வரக் கூடாது என்பதற்காக, முற் கூறிய கருத்துகளை தானே விசாரம்
செய்யப் பாேவதாகப் ப்ரதிஜ்ஜை செய்கிறார் அடுத்த ஸூத்ரத்தில்

• “ (தஸ்ய) அந்த தர்மத்தின் (நிமித்த-) நிமித்தம்/ப்ரமாணம் (-பரீஷ்டி:) ஆராயப்பட வேண்டும்”
என்று இந்த ஸூத்ரத்தின் பொருள்.
• இப்படி உபதேசமாக இல்லாமல் விசாரம் செய்யும் நூலாக இருக்கிறபடியால் தான் இந்த மீமாம்ஸா
சாஸ்த்ரத்துக்கு ’விசார சாஸ்த்ரம்’ என்ற பெயர் ஏற்பட்டது.

1-1-4-தர்மத்திற்கு வேறு ப்ரமாணம் கிடையாது

• கீழ் சொல்லப்பட்ட இரண்டு நியமங்களுள் (வலியுறுத்தல்களுள்)
“வேதம் தான் தர்மத்துக்குப் ப்ரமாணம், வேறு ப்ரமாணம் கிடையாது” என்பதை நிரூபிப்பதற்காக வந்தது அடுத்த ஸூத்ரம்.
• “ஸத் ஸம் ப்ரயோகே புருஷஸ்ய இந்த்ரியாணாம் புத்தி ஜந்ம தத் ப்ரத்யக்ஷம்” –
இந்த்ரியத்துக்கும் ஒரு பொருளுக்கும் தொடர்பு (ஸந் நிகர்ஷம் / ஸம் ப்ரயோகம்) ஏற்பட்டால் தான்
ப்ரத்யக்ஷம் என்று சொல்லப்படும் ஜ்ஞாநம் தோன்றும்.
• தொடர்பு ஏற்படவேண்டுமானால் அந்தப் பொருள் தற்போது இருக்க வேண்டும்.
கடந்த காலத்தில் இருந்த / வருங் காலத்தில் உண்டாகப் போகிற பொருளோடு இப்போது இந்த்ரியம் தொடர்பு பட முடியாது.
ஸ்ரீ ராமனைத் தற்போது கண்ணால் பார்க்க இயலாதே .
• “வித்ய மாநே உபலம்ப நத்வாத்” – ஆகையால், ப்ரத்யக்ஷம் என்பது தற்போது இருக்கும் பொருள்களை மட்டும் தான் க்ரஹிக்கும்.
• “அநிமித்தம்” – ஆகையால் தர்மத்தை போதிக்கும் ப்ரமாணமாக ப்ரத்யக்ஷம் ஆகாது, ஏன் என்றால்
தர்மம் என்பது இப்போது இருக்கும் பொருள் அல்ல.
• நாம் ஆசைப்படும் ஒரு பயனைப் பெற்றுக் கொடுக்கும் கருவி தர்மம். ஆசைப்படும் பயன் தற்போது ஏற்படாது,
பல வருடங்களுக்குப் பின் ஏற்படும். ஆகையால், “இந்தச் செயல் அந்தப் பயனைக் கொடுக்கும்” என்பது
தற்போது இருக்கும் ஒரு பொருள் அல்ல, பிற்காலத்தில் தான் தெறியும். ஆகையால் இதை ப்ரத்யக்ஷத்தால் அறிய முடியாது.
• ப்ரத்யக்ஷத்தின் அடிப்படையில் தான் அநுமானம் முதலானவையும் செயல்படும்.
ஆகையால் அவையும் தர்மத்துக்குப் ப்ரமாணங்கள் அல்ல.

வேதம் பிரமாணம் ஆகாது என்ற ஆஷேபம் –

• கீழ் சொல்லப்பட்ட இரண்டு நியமங்களுள் (வலியுறுத்தல்களுள்) “வேதம் தர்மத்துக்கு ப்ரமாணம் தான்,
அப்ரமாணம் அல்ல” என்பதை இனி நிரூபிக்க வேண்டும்.
அதில் இவ்வாறு ஆஷேபம் எழுகிறது –
• வேதம் என்பது நூல் வடிவத்தில் உள்ளது.
ஒரு நூல் ப்ரமாணமா அல்லவா என்பது அதை இயற்றின மனிசரைப் பொருத்தது.
இயற்றினவரிடம் குற்றங்கள் இருந்தால், அந்த நூலும் ப்ரமாணம் ஆகாது.

• மனிதர்கள் என்றாலே , அவர்களுக்கு நான்கு குற்றங்கள் இருக்கலாம் –
• ப்ரமம் – தவறான புரிதல்
• ப்ரமோதம் – கவனக் குறைவு
• அ சக்தி – நினைப்பதை எடுத்துச் சோல்லும் வலிமை இன்மை
• விப்ரலிப்ஸோ – ஏமாற்றுத்தன்ஸம

• இப்படி குற்றங்களை உஸடய மனிதர்கள், மூன்று இடங்களில் ஒரு நூலோடு தொடர்பு படுகிறார்கள்:
1. ஒரு சொல்லுக்கும் அதன் பொருளுக்கும் உள்ள தொடர்பு மனிதர்களால் ஏற்படுத்தப் படவேண்டும்.
உலகில் ஒரு குழந்தைக்குப் புதிதாகப் பெயர் வைப்பது கூட தாய் தந்தை முதலானவர்கள் தான்.
2. தனித் தனியாக சொற்களுக்குப் பொருள் தெரிந்த பிறகும், ஒரு சொல் தொடருக்கும்
அது கூறும் பொருளுக்கும் தொடர்பு மனிதர்களால் தான் ஏற்படுத்தப்பட வேண்டும்
3. சொற்களைச் சேர்த்து, ஒரு சொல் தொடராக ஆக்குவதும் மனிதன் தான்
• ஆக இதே போல் வேதத்திலும் மூன்று முறைகளிலே மனிதர்களின் பங்கு இருப்பதால், மனிதர்கள்
குற்றமிருக்க வாய்ப்புடை யவர்கள் என்பதால், வேதத்தைப் ப்ரமாணமாக ஏற்க முடியாது என்று கேள்வி எழுகிறது –

1-1-5- சொல்லுக்கும் பொருளுக்கும் தொடர்பு நித்தியமானது –

• முதல் கேள்விக்குப் பதிலை அடுத்த அதிகரணத்தில் கூறுகிறார் ஜைமிநி
• ஔத்பத்தி கஸ்து சப்தஸ்ய அர்தேந ஸம்பந்த: – சொல்லுக்கும் பொருளுக்கும் உள்ள தொடர்பு
ஔத்பத்திகம் (இயற்கையானது,நித்யமானது). ஆகையால் அந்த இடத்தில் மனிதனின் பங்கு இல்ஸல
• தஸ்ய ஜ்ஞாநம் உபதேச : – அப்படிப்பட்ட நித்யமான தொடர்பு தான் தர்மத்தைப் பற்றின அறிவுக்கு ஸாதநம் (வழி )
• அவ்யதிரேக ச : – உலகில் எங்குமே மனிதனால் இயற்றப்பட்ட வேற ஓரு சம்பந்தம் காணப்பட வில்லை —
மனிதனால் செய்யவும் இயலாது
• அர்தே அநுபலப்தே – வேதத்தால் சொல்லப்படும் பொருட்கள் புலன்களுக்கே எட்டாதவையான படியால்
அவற்றோடு சொற்களுக்கு உள்ள தொடர்பை மனிதன் எப்படிச் செய்ய முடியும்?
• தத் ப்ரமாணம் பாதராயணஸ்ய அநபேக்ஷத்வாத் – ஆக, இயற்கையாகவே சொல்லுக்கும் பொருளுக்கும்
தொடர்பு இருக்கிறபடியால், மனிதனை எதிர்பார்க்காமலேயே வேதம் தர்மத்தை போதிக்கும் ப்ரமாணம் ஆகும்
என்று பாதராயணர் (வேத வ்யாஸர்) கூறுகிறார்.
• ஒரு ஜ்ஞாநம் தவறானது என்று முடிவு செய்ய இரண்டு காரணமுண்டு:
• அதற்கு முரண்பட்ட வேற ஓரு ஜ்ஞாநம் ஏற்படுவது
• அதை ஏற்படுத்தின கருவியில் தோஷம் உள்ளது என்ற அறிவு
• வேதத்தில் சொல்லப்பட்ட பொருள் தவறு என்று நமக்கு ப்ரத்யக்ஷம் முதலானவற்றால் தெரிவது இல்லை .
வேதத்துக்கு உத்பத்தியே இல்லாதபடியால் அதில் தோஷமும் இருக்க முடியாது.
ஆகையால், வேதத்திலிருந்து உண்டாகும் ஜ்ஞாநம் சரியானதே .

1-1-6- சொற்களும் நித்யமானவை —

முன் அதிகரணத்தில் சொன்ன பதிலில் செய்யப்பட்ட ஓர் ஆஷேபம்
அடுத்த அதிகரணத்தில் நீக்கப்படுகிறது.
• பூர்வ பக்ஷம் –
சொல்லுக்கும் பொருளுக்கும் உள்ள தொடர்பு நித்யமானது என்று சொன்னீர்கள் ,
சொற்களே அநித்யமானவை (அழியக் கூடியவை ).
பிறகு எப்படி சொற்களுக்கும் பொருட்களுக்கும் தொடர்பு நித்யம் ஆகும்?
• யுக்தி (1) – கர்ம ஏச தத்ர தர்ஸ நாத் –
நாம் வாய் / தொண்டை யால் ஒரு முயற்சி செய்த பிறகு தான் சப்தத்தைக் கேட்கிறோம். ஆகையால்,
அந்த முயற்சியால் சப்தம் உண்டாகிறது என்று ஒப்புக் கொள்ள வேண்டும்.
• யுக்தி (2) – அஸ்தாநாத் –
வாய் / தொண்டையின் முயற்சி நின்றவுடன் சப்தம் தோற்று வதில்லை . ஆகையால், சப்தம் அழிந்திருக்க வேண்டும்.
• ஸித்தாந்தம் –
நித்யஸ்து ஸ்யாத் தர்ஸ நஸ்ய பரார்தத்வாத் –
சப்தம் நித்யமானது தான், இல்லை எனில் சொற்கள் மாறிக் கொண்டே இருக்கிற படியால் அதைக் கொண்டு
ஒருவர் மற்ற ஒருவருக்கு ஒரு பொருளை அறிவிக்கவே முடியாமல் போய் விடும்.
• பதில் (1) – ஸமம் து தத்ர தர்ஸநம் –
முயற்சிக்குப் பிறகு தோற்றுகிற படியால், சப்தம் உண்டாகி யிருக்க வேண்டும் என்ற தேவை இல்லை
முன்னமே இருக்கும் ஒரு பொருள் நாம் செய்யும் முயற்சியால் வெளிப் படுகிறது என்றும் கூறலாம்.
இதற்கு அபிவ்யக்தி என்று பெயர்.
முன்னமே பூமியில் இருக்கக் கூடிய ஆகாசம், பள்ளம் தோண்டின பிறகு வெளிப்படுகிறது போலே
• பதில் (2) – ஸத: பரம் அவிஜ்ஞாநம் விஷயா நாகமாத் –
முயற்சி முடிந்த பின் சப்தம் தோற்றாததும் சப்தம் அழிந்து விட்டபடியால் அல்ல,
அபி வ்யக்தியைச் செய்யும் காரணம் இல்லாதபடியால் தான்-

மீமாம்ஸா தர்ஸநத்தில் சப்தம் —

ந்யாய மதத்தின் படி சப்தம் என்பது ஒரு குணம். அது ஆகாசத்தினுடைய குணம்.
ஆனால், மீமாம்ஸையில் அப்படி ஒப்புக் கொள்ளப் படவில்லை .
• மீமாம்ஸா மதத்தில் பதம் (எழுத்து) என்பது ஒரு வகையான த்ரவ்யம்.
• ’அ’ என்ற எழுத்து (ஒலி) ஒரு த்ரவ்யம். ’இ’ என்ற எழுத்து ஒரு த்ரவ்யம். ’க்’ என்ற எழுத்து ஒரு த்ரவ்யம்.
• இந்த ஒவ்வொரு த்ரவ்யமும் விபு வானது (உலகு எங்கும் பரந்து உள்ளது).
• நாம் தொண்டை வாய் முதலான வற்றால் ஒரு வகையான முயற்சியைச் செய்தால், நாம் இருக்கும் ப்ரதேசத்தில்
இருக்கும் ’அ’ என்ற எழுத்து வெளிப்படுகிறது (அபி வ்யக்தி அடைகிறது, தோற்றம் பெருகிறது-உத்பத்தி இல்லை ).
• வேறு ஓரு வகையான முயற்சியைச் செய்தால், ’க்’ என்ற எழுத்து வெளிப்படுகிறது.
• ஒரே ’அ’ என்ற எழுத்து நான் இருக்கும் இடத்தில் என் முயற்சியால் வெளிப்படுமே தவிர
உலகு எங்கும் வெளிப்படாது . அதனால் தான் தொலைவில் உள்ள வர்களுக்கு அது கேட்பதில்லை .
• சப்தம் (சொல்) என்பது தனியான ஒரு பொருள் அல்ல.
எழுத்துக் களின் ஒரு வரிசை தான் சொல் ஆகும். ஆக, எழுத்துக்கள் நித்யமானபடியால்,
அவற்றின் கோர்வையான சப்தமும் நித்யமானது தான்.
• ஆகையால், சப்தத்துக்கும் அதன் பொருளுக்கும் உள்ள தொடர்பு
நித்யமானது என்று முன் அதிகரணத்தில் சொன்னது சரி தான்.

இரண்டாது கேள்விக்கு பதில் அடுத்த அதிகரணம் –1-1-7-

அடுத்த அதிகரணத்தில், முன்னால் கேட்கப்பட்ட மூன்று கேள்விகளுக்குள்
இரண்டாவது கேள்விக்கு பதில் கூறப்படுகிறது.
• கேள்வி – சொற்களுக்கும் அவற்றின் பொருள்களுக்கும் தொடர்பு நித்யமாக இருந்தாலும்,
ஒரு சொல் தொடரின் பொருள் என்பது புதிதானது. ஆகையால், ஒரு சொல் தொடருக்கும் அதன் பொருளுக்கும்
உள்ள தொடர்பு மனிதனால் ஏற்படுத்தப்பட வேண்டும்
• எடுத்துக் காட்டு – ராமன், மாரீசன், கொலை முதலான சொற்களுக்கான பொருள் நமக்கு முன்னமே தெரிந்திருந்தாலும்,
“ராமன் மாரீசனைக் கொன்றான்” என்ற சொல் தொடரைக் கேட்டால் நமக்கு ஏற்படும் அறிவு புதிதானது.
அதற்கும் இந்த சொல் தொடருக்கும் உள்ள தொடர்பு மனிதனால் செய்யப் பட்டிருக்க வேண்டும்.
• பதில் – அந்த அந்தச் சொல் அதன் அதன் பொருளை நினைவு படுத்தும்.
அதற்குப் பிறகு, ஆகாங்ஷை யோக்யதை ஸந்நிதி போன்ற அனைத்துத் தேவைகளும் இருக்குமானால்,
அந்த நினைவு படுத்தப்பட்ட பதார்த்தங்களே (பொருள்களே ) சேர்ந்து,
“ராமன் மாரீசனைக் கொன்றான்” என்ற அறிவை ஏற்படுத்து கின்றன .
• ஆகையால், இந்த நிலையிலும் மனிதனின் பங்கு இல்லை -வேதத்தில்.

மூன்றாவது கேள்விக்குப் பதில் –1-1-8-

அடுத்த அதிகரணத்தில், முன்னால் கேட்கப்பட்ட மூன்று
கேள்விக்குள் மூன்றாவது கேள்விக்கு பதில் கூறப்படுகிறது.
• பூர்வ பக்ஷம்
• யுக்தி 1 – வேதமும் வாக்யங்களால் ஆக்கப்பட்ட ஒரு நூல் தான்.
ஆகையால், சொற்களைச் சேர்த்து ஒரு சொல் தொடராக அமைக்கும் செயலில் மனிதன் பங்கு கண்டிப்பாக
இருக்க வேண்டும். அதில் தவறுகள் இருக்க வாய்ப்புள்ள படியால் வேதம் ப்ரமாணம் ஆகாது. அதாவது –
ஒரு அநு மானத்தைச் சொல்கிறார் பூர்வ பக்ஷீ –
“வேதம் பௌருவஷேயம் (ஒரு புருஷனால் செய்யப்பட்டது),-வாக்யத்வாத் பாரதம் போல்
வாக்ய வடிவத்தில் இருக்கிறபடியால், மஹாபாரதம் முதலானவை போலே .”
• யுக்தி 2 – வேதாம்ஸ் ச ஏகே ச ஸந்நிகர்ஷம் புருஷாக்யா : –
வேதங்களில் சில பகுதிகளுக்கு ’காடகம்’, ’காபாலகம்’, ’பைப்பலாதகம்’, ’ஸதத்திரீயம்’ என்று ரிஷிகளின் பெயரை
வைத்துப் பெயர் வழங்கப்படுகிறது. ஆகையால், அந்தந்தப் பகுதிகள் அந்தந்த ரிஷியால் இயற்றப்பட்ட வையாகத் தான்
இருக்க வேண்டும். இல்லை எனில் அந்தப் பெயர் ஒட்டாது.
• யுக்தி 3 – அநித்ய தர்ஸநாச் ச – சில வேத வாக்யங்களில் அநித்யமான (ஒரு காலத்தில் உண்டாகி ஒரு காலத்தில்
அழியக்கூடிய-முனிவர் பிள்ளையின் பெயர் போன்றவற்றையும் பேசும் ) சிலவற்றைப் பற்றி பேசப்படுகிறது.
ஆகையால், அந்தப் பொருள் உண்டான பிறகு தான் அந்த வேத வாக்யம்
இயற்றப் பட்டிருக்க வேண்டும். ஆகவே வேதம் பௌருவஷேயமே –

ஸித்தோந்தம்
• பதில் 1 – உக்தம் து சப்த பூர்வத்வம் –
பூர்வ பக்ஷிகள் சொன்ன அநுமானத்தில் பாதகம் உள்ளது.
ஒரு நூலின் நம்பகத் தன்மை அதன் ஆசிரியரின் நம்பகத் தன்மையைப் பொருத்தது தான்.
எனவே, ஒரு நூலுக்கு ஒரு நூலாசிரியர் இன்றியமையாதவர் ஆகிறார். (அவஸ்யம் ஸ்மர்த்வயம் -)
ஒரு கிணற்றைக் கட்டியவர் யார் என்று தெரியா விட்டாலும் அதைப் பயன்படுத்தலாம். ஆனால்,
ஒரு நூலின் ஆசிரியரை மறந்து விட்டால் அதை உப யோகிக்கவே முடியாது.
அப்படி ஆசிரியர் முக்கியமாக இருக்கும் பொழுதும், “வேதத்தை இவர் இயற்றினார்” என்று ஒருவர் கூட
நினைவு கூறாமலிருப்பது (’ஸ்மர்தவ்ய அஸ்மரணம்’) நூலாசிரியரே இல்லை என்பதைத் தான் காட்டும்.

அநுமானம் – வேதத்தின் அத்யயநம் அனைத்துமே அதற்கு முன் நடந்த அத்யயனத்தினால் வந்தது,
வேத அத்யயநமான படியால், இன்றிருக்கும் அத்யயனம் போல் –

• பதில் 2 – ஆக்யோ ப்ரவ ச நாத் –
வேதப் பகுதிகளுக்கு ரிஷிகளின் பெயர் இருப்பது அவர்களால் இயற்றப்பட்ட படியால் தான் என்று கூற முடியாது.
முன் சொன்ன பதிலால் இயற்றியவர் இல்ஸல என்று தெரிந்து விட்டால்,
விசேஷமாக ஒரு ரிஷி அந்த வேதப் பகுதியைக் கற்று பலருக்கும் போதித்தபடியால் தான்
அந்தப் பெயர் ஏற்பட்டது என்று முடிவு செய்யலாம்.

• பதில் 3 – பரம் து ச்ருதி ஸாமாந்யம் –
அநித்யமான பொருட்களைப் பற்றி வேதம் பேசாது. அப்படித் தோற்றும் இடங்கைில்
அதற்கு வேறே ஓரு பொருள் தான் கொள்ள வேண்டும்.
(பிரவாகர் புத்திரர் பிரவாஹினி -சொல்வது வாயு பகவானையே சொல்லும் –
அநித்யமான புத்திரர் பெயரைச் சொல்ல வில்லை )

• ஆகையால், வேதம் அபௌருவஷேயமானபடியால் இவ் விதத்திலும்
மனிதனின் பங்கு இல்லாதபடியால் வேதம் ப்ரமாணம் தான்.

ஜ்யோதிஷடஹோமம் சுவர்க்கம் ஆசைப்படுபவன் செய்யட்டும் -தர்ம லக்ஷணம் –
இஷ்ட சாதனத்வம் வேதத்தால் போதிக்கப் படுவதால் இது தர்மம்
வேதமும் சில தாழ்ந்த கர்மாக்களை உண்டே
செய்யக் கூடாது -எதிரிக்கு மரணம் -உனக்கு நரகம் -நன்மையைக் கொடுத்தால் தானே தர்மம்
ஆகவே வேதத்தால் போதிக்கப்பட்டு நமக்கு நன்மையைக் கொடுப்பதே தர்மம் என்று லக்ஷணம் வாக்கியம்
விதி பிரமாணம் என்று காட்டினார் முதல் பாதத்தால்

—————–

அர்த்த வாதங்கள் –1-2-1-

மீமாம்ஸா சாஸ்த்ரத்தின் முதல் அத்யாயத்தின் முதல் பாதத்தில் பொதுவாக வேதமும், சிறப்பாக அதிலிருக்கும்
விதிகளும் (கட்டளைகளும்) தர்மத்தை போதிக்கும் ப்ரமாணங்கள் தான் என்று நிரூபிக்கப்பட்டது.
• அடுத்து, முதல் அத்யாயத்தின் இரண்டாவது பாதத்தில்,
அர்த்த வாதங்கள் மந்த்ரங்கள் என்ற இரண்டு வகையான வேதச் சொல் தொடர்களைப் பற்றி விசாரம் செய்யப்படுகிறது.
• அதில் முதல் அதிகரணம் அர்த்தவாத-அதிகரணம் ஆகும்.
• வேதத்தில், ’செழிப்பு வேண்டுமானால் வாயு தேவதைக்காக இந்த யாகத்தைச் செய்’ என்று ஒரு விதி (கட்டளை ) உள்ளது.
அதற்குப் பிறகு வேதம் கூறுகிறது –
“வாயு மிகவும் வேகமாகச் செல்லும் தேவதை -அவரைத் தான் இந்த யாகத்தில் பூஜிக்கிறோம்.
அவர், இவன் ஆசைப்படும் பயனைக் கண்டிப்பாகக் கொடுப்பார்” என்று.
இந்த சொல் தொடர்களுக்கு தான் அர்த்த வாதம் என்று பெயர்.

• பூர்வ பக்ஷம் – இந்தச அர்த்த வாதம் எதையும் விதிக்க வில்லையே?
விதி வாக்யம் தானாகவே ஒரு யாகத்தை விதிக்கிறது. இந்த அர்த்த வாதம் தானாகவே மஹாபாரதம் முதலானவை
போல் முன்னால் நடந்த ஏதோ ஒரு கதையைக் கூறுகின்றது. செய்யப்பட வேண்டிய ஒரு செயலையும் போதிக்க வில்லை .
ஆகையால், அர்த்த வாதம் தர்மத்தைப் போதிக்கும் ப்ரமாணம் அல்ல.

ஸித்தாந்தம்
• ஒருவர் மற்ற ஓருவரிடம் “இந்த மாட்டை விலைக்கு வாங்கிக் கொள்” என்று கூறினார்.
இது கட்டளையாக இருந்தாலும், கேட்டவர் சில ஸந்தேகங்கள் காரணமாக உடனே வாங்காமல் இருக்கலாம்.
இதை தினமும் பாதுகாக்க வேண்டுமே , புல் இட வேண்டுமே , பணம் செலவு ஆகுமே
என்று எல்லாம் யோசிக்கலாம்.
• அப்படி யோசிக்கும் ஒருவரை , அந்தச் செயலில் ஈடுபட வைப்பதற்காகத் தான் ’இந்த மாடு அதிகமாகப் பால் கொடுக்கும்,
இதற்கு ஒரு பெண் கன்றும் உள்ளது’ என்று எல்லாம் அதைப் புகழ்ந்து பேசுவதன் மூலம் அவரை உற்சாகப்படுத்துகிறார்கள்.
• ஆகவே, ஒரு விதி கட்டளை மட்டும் இடும். அதற்கு மேல் செய்யப்ப்பட வேண்டிய செயலில் உற்சாகத்தை ஏற்படுத்த, சில
புகழ்ச்சிப் பேச்சுக்கள் தேவைப்படுகின்றன – அதே சமயத்தில் இந்த அர்த்த வாதம் ஏதோ ஒரு கடந்த கால நிகழ்சியைப்
பற்றிப் பேசுவதனால் எந்தப் பயனும் இல்லாதபடியால் தனக்கு ஏதோ ஒரு பயனைத் தேடுகிறது.
• இப்படி பரஸ்பரம் தேவை இருக்கிற படியால், அர்த்த வாதம் விதியோடு சேர்ந்து கொண்டு, விதிக்கப் பட்ட செயலைப்
புகழ்ந்து பேசுகிறது என்று கொள்ள வேண்டும்.
• “வேகமாகச் செல்லும் வாயுவிற்காக யாகம் செய்கிறபடியால் உனக்குப் பலன் விரைவில் கிட்டும்” என்பது போல் பொருள்.

நஷ்ட அஸ்வ -ரத -ஒருவன் இடம் ரதம் உடைய ஒருவன் இடம் குதிரை மாய இருவரும் சேர்ந்து உபயோகப்படுத்தலாம்
இந்த நியாயம் போல் பரஸ்பர ஆங்கஷை விதி வாக்யத்துக்கும் அர்த்த வாதத்துக்கும் –

அர்த்த வாதத்தின் வகைகள் –
• அர்த்த வாதங்கள் மூன்று வகைப் படுகின்றன
• (1) குண வாதம் –
ப்ரத்யக்ஷம் முதலான வற்றுக்கு முரண்பட்ட ஒரு பொருளை வேதம் சொல்வது போல்
தோற்றம் அளித்தால் அவ்விடத்தில் குணத்தை வைத்து ஒப்பிடுகிறது என்று பொருள்.
எடுத்துக் காட்டு –
ஒரு யாகத்தில், நடுவில் ஒரு மரத் தூணை பூமியில் நட வேண்டும். அந்தத் தூணைப் பற்றி “ஸூர்யன் தான்
இந்தத் தூண்” என்று வேதம் சொல்கிறது. ஸூர்யன் தூண் ஆக முடியாது. ஆஸகயால்,
“ஸூர்யன் போல் ப்ரகாசமாக உள்ளது இந்தத் தூண்” என்று தான் இதற்குப் பொருள்
• (2) அநு வாதம் –
நமக்கு முன்னமே தெரிந்த விஷயத்தைச் சொல்லும் அர்த்த வாதம் அநு வாதம் ஆகும்.
எடுத்துக் காட்டு –
“நெருப்பு தான் குளிருக்கு மருந்து” என்று வேதம் சொல்கிறது.
• (3) பூதார்த்த வாதம் –
ப்ரத்யக்ஷம் முதலான வற்றோடு முரண்பாடும் இல்லாமல், ஆனால் முன்னால் அறியப்படாத
ஒரு பொருளைச் சொல்லும் அர்த்த வாதத்திற்கு பூதார்த்த வாதம் என்று பெயர்.
எடுத்துக் காட்டு –
“இந்த்ரன் வ்ருத்ரன் என்ற அஸூரனைக் கொன்றார்” என்று அர்த்த வாதம் சொல்கிறது. இது
தவறு என்று நம்மால் ப்ரத்யக்ஷம் முதலான வற்றால் சொல்லவும் முடியாது,
முன்னமே நமக்குத் தெரிந்த விஷயமும் அல்ல. ஆகையால் இது பூதார்த்த வாதம்.

—————

1-2-4-மந்த்ரங்கள்
முதல் அத்யாயத்தின் இரண்டாவது பாதத்தில் விசாரிக்கப்படும் மற்ற ஓரு விஷயம் – மந்த்ரங்கள்.
• வேதத்தில் இருக்கும் விதி வாக்யங்கள், நாம் செய்ய வேண்டிய செயல்களைக் கட்டளை இடுகின்றன.
• அதற்குப் பிறகு, நாம் அந்த செயல்களைச் செய்யும் பொழுது உச்சரிக்க வேண்டிய மந்த்ரங்களையும் வேதமே கூறுகிறது.
• அந்தந்த மந்த்ரம் அவ்வப் போது செய்யப்படும் செயலைப் பற்றிப் பேசக்கூடியதாகத்தான் இருக்கும் என்பது நிலை .
• பூர்வபக்ஷம் –
அடுத்தடுத்து என்ன என்ன செய்ய வேண்டும் என்பதை விதி வாக்யங்களே சொல்லி விட்டபடியால்,
அவற்றைச் செய்யும் பொழுது மந்த்ரங்களை உச்சரிப்பது அத்ருஷ்டத்துக்காக (புண்யத்துக்காக) மட்டும் தான்.
• ஸித்தாந்தம் –
ஒரு செயலுக்கு த்ருஷ்டமான ஒரு ப்ர யோஜனம் இருக்கும் பொழுது, அதைப் புறக்கணித்து,
அத்ருஷ்டத்தை மட்டும் ப்ர யோஜனம் என்று சொல்லக் கூடாது.
• ஒரு மந்த்ரத்தைச் சொன்னால் அதன் பொருள் நினைவுக்கு வரும் என்பது அனைவரும் காணும் உண்மை .
ஆகையால், அடுத்தடுத்து செய்யப்பட வேண்டிய செயலை நினைவு படுத்திக் கொள்ளத் தான் மந்த்ரங்கள் உள்ளன.
பிரயோக சமவேத அர்த்த ஸ்மரகங்கள் -வரிசை கிரமம் அறிய மந்த்ரங்கள் வேணுமே

• கேள்வி –
அடுத்தடுத்து செய்யப்பட வேண்டிய செயலை நியாபகப் படுத்திக்க கொள்ள பல வழிகள் இருக்கின்றனவே?
ஏன் மந்த்ரங்களைக் கொண்டு தான் நினைவு படுத்திக் கொள்ள வேண்டும்?
• பதில் –
உண்மை . பல வழிகள் உள்ளன. ஆனால், வேதம் மந்த்ரங்களை உபதேசிக்கிற படியால், “மந்த்ரங்களைச் சொல்லிச்
சொல்லித் தான் அடுத்தடுத்த செய்யப்பட வேண்டிய செயலை நினைவு படுத்திக் கொள்ள வேண்டும்” என்ற ஒரு நியமத்தை
ஏற்க வேண்டும். இல்லை என்றால், வேதத்தில் உபதேசிக்கப்பட்ட மந்த்ரங்கள் அனைத்தும் வீணாகப் போய் விடும்
• அந்த நியமத்தை நாம் கடைப்பிடித்தால் ஒரு அத்ருஷ்டம் கிடைக்கும். அது இருந்தால் தான் நாம் செய்யும் யாகம் பயன்
கொடுக்கும் என்று ஏற்கப் படுகிறது.
• மந்த்ரங்களின் பயனே அத்ருஷ்டம் என்று ஏற்காமல், மந்த்ரங்களின் பயன் நினைவு படுத்துதல், மந்த்ரங்களால் தான்
நினைவு படுத்திக் கொள்ள வேண்டும் என்ற நியமத்தின் பயன் அத்ருஷ்டம் என்று ஸித்தாந்தம்.

கீழே நியம விதி பார்த்தோமே -நினைவு படுத்த பல வழிகள் இருந்தாலும் மந்த்ரம் கொண்டே செய்ய வேண்டும்
இந்த நியம விதி புண்ணியத்துக்காக -மந்திரத்துக்கு த்ருஷ்ட பலன் தான் –

——————–

பாடம் -5- ஸ்ம்ருதி மற்றும் ஆசாரம்

ஸ்ம்ருதி பாதம் மூன்றாவது பாதத்துக்கு பெயர் –
ஸ்ம்ருதிகள் ப்ரமாணமா –1-3-1-
முதல் அத்யாயத்தின் முதல் இரண்டு பாதங்களில் விதி, அர்த்தவாதம், மந்த்ரம் என்ற மூன்று
ப்ரமாணங்கள் சொல்லப்பட்டன.
அடுத்து மூன்றாவது பாதத்தில் ஸ்ம்ருதிகள், சான்றோர்களின் ஆசாரம் (நடத்தை ) ஆகிய இரண்டும்
தர்மத்தைப் போதிக்கும் ப்ரமாணங்கள் தான் என்று நிரூபிக்கப்படுகிறது.
• அதில் முதல் அதிகரணம் – ஸ்ம்ருத் யதிகரணம்
• வேதம் காதால் கேட்டுக் கேட்டே பரப்பப்பட்டபடியால் ’ச்ருதி’ என்று அழைக்கப்படுகிறது.
வேத்த்தின் பொருளை நினைத்து நினைத்து (ஸ்மரித்து ஸ்மரித்து) எழுதப்பட்டபடியால்,
சில நூல்களுக்கு ’ஸ்ம்ருதி’ என்று பெயர் ஏற்பட்டது.
• மநு போன்ற பலரும் ஸ்ம்ருதிகஸள இயற்றி யுள்ளார்கள். அவற்றில் சில விஷயங்கள்
வேதத்திலேயே காணப்படும் விஷயங்களாக இருக்கும். சில விஷயங்கள் வேதத்தில் எங்குமே
கிடைக்காமலும் இருக்கும். அவற்றைப் போதிக்கும் இந்த ஸ்ம்ருதிகள் ப்ரமாணமா அல்லவா என்று
விசாரம் செய்யப்படுகிறது

பூர்வ பக்ஷம் –
ஸ்ம்ருதிகள் ப்ரமாணம் ஆக முடியாது. அவை பௌருஷேயங்கள் (ஒரு புருஷனால் இயற்றப்பட்டவை )தான்.
ஒருவன் ஒரு நூலை எழுதும் பொழுது, வேறே ஓரு ப்ரமாணத்தின் மூலம் தான் அறிந்த விஷயங்களைத் தான் எழுதுவான்.
ஆனால், இந்த ஸ்ம்ருதிகளில் சொல்லப்பட்ட விஷயங்களுக்கு அப்படி ஒரு மூலமான ப்ரமாணம் காணப்படவில்லை .
ஆகையால் அவை ப்ரமாணங்கள் அல்ல.
• கேள்வி – வேதங்கள் தான் ஸ்ம்ருதிகளுக்கு மூலம். வேதத்திலிருந்து தாங்கள் கற்ற விஷயங்களைத் தான் மநு
முதலானேர்கள் தங்கள் தங்கம் ஸ்ம்ருதி நூல்களில் எழுதினார்கள் என்று கொண்டால் என்ன?
• பதில் – வேதத்தில் இருக்கும் விஷயங்களைச் சொல்லத் தான் வேதமே உள்ளதே ? அந்த அந்த வேதப் பகுதிளையே
பலருக்கு போதித்து விஷயங்கஸளத் தெரிவித்து இருக்கலாமே ?
எதற்காகத் தனியாக ஒரு ஸ்ம்ருதி க்ரந்தத்தை எழுத வேண்டும்?
• ஆகையால், வேதம் தான் ஸ்ம்ருதிகளுக்கு மூலம் என்றால், ஸ்ம்ருதிகள் ப்ரமாணம் ஆக முடியாது.
ப்ரமாணம் என்பது புதிதாக ஒரு விஷயத்ஸத அறிவிக்கவேண்டும்.
இந்த ஸ்ம்ருதிகள், வேதங்களில் சொல்லப்பட்ட விஷயங்களையே பின் மொழிகின்றன.
ஆகையால், அநுவாதம் (பின் மொழிதல்) தான் ஆகுமே தவிற ப்ரமாணம் ஆகாது.

ஸித்தாந்தம் –
“ஸ்ம்ருதிகளுக்கு வேதம் தான் மூலம், வேதம் சொன்னதை மட்டுமே செய்யக்கூடிய மநு முதலானேர்களால்
இயற்றப்பட்டபடியால், உபநயனத்ஸதப் பற்றிச் சொல்லும் ஸ்ம்ருதி போல்” என்கிற அநுமானத்தால்,
ஸ்ம்ருதிகளுக்கு வேதம் தான் மூலம் என்று முடிவு செய்யலாம்.
• வேதத்தை மூலமாகக் கொண்ட போதிலும், ஸ்ம்ருதிகளே தேவை இல்லையே என்ற கேள்வி எழாது .
ஏன் என்றால், மநு முதலானேர்கள் மிகவும் அதிகமான ஜ்ஞாநம், சக்தி உடையவர்களானபடியால்,
வெவ்வேறு வேதஙகளிலோ வெவ்வேறு , சூழ்நிலைகளிலோ , நாம் காணாத வேதங்களிலோ ,
மறைமுகமாகவோ சொல்லப்பட்ட ஆழ்ந்த தர்மங்களையும் கூட அறியும் திறமை உடையவர்களாய் இருந்தபடியால்,
சாமாந்ய மனிதனால் அறிய முடியாத தர்மங்களைத் தாங்கள் அறிந்து, தொகுத்து, தங்கள் நூல்களில் எழுதினார்கள்.
ஆகையால் பயனற்றவை அல்ல ஸ்ம்ருதிகள்.
• ஆனால், ஸ்ம்ருதி நேரே ப்ரமாணம் ஆகாது. ஒரு ஸ்ம்ருதியைக் கண்டால், இதற்கு மூலமான ஒரு வேத
வாக்யம் இருக்க வேண்டும் என்று அநுமானம் செய்து கொண்டு, அந்த வேத வாக்யத்தின் அடிப்படையில் தான் நாம்
அநுஷ்டானம் செய்ய இயலும்.

1-3-2- ஸ்ருதி ஸ்ம்ருதி எது பிரபலம்

அடுத்த அதிகரணம் விரோத-அதிகரணம்.
ச்ருதிக்கும் ஸ்ம்ருதிக்கும் விரோதம் இருந்தால் எதை ஆதரிக்க வேண்டும் என்று இதில் நிரூபிக்கப்படுகிறது.
• விஷயம் – ஒரு யாகத்தில் ஔதும்பரீ என்று ஒரு மரக் கிழையை நடுவில் பூமியில் நடவேண்டும்.
“அந்த மரத்தைத் தொட்டுக் கொண்டு காநம் (பாடல்) பாடவேண்டும்” என்று வேதம் சொல்லுகிறது.
“அந்த மரத்தை முழுவதுமாகத் துணியில் மூடவேண்டும்” என்று ஒரு ஸ்ம்ருதி சொல்கிறது.
தொட்டுக்கொண்டால் முட இயலாது, மூடினால், தொட இயலாது.
ஆகையால் ச்ருதிக்கும் ஸ்ம்ருதிக்கும் விரோதம் உள்ளது

• பூர்வ பக்ஷம் –
ஸ்ம்ருதிகள் அனைத்துமே வேதத்தை மூலமாகக் கொண்டதே என்று முன் அதிகரணத்தில்
நிரூபித்தபடியால், ஔதும்பரீ மரத்தைத் துணியால் மூடவேண்டும் என்று சொல்லும் ஸ்ம்ருதிக்கும் மூலமாக ஒரு
ச்ருதி வாக்யம் இருக்கவேண்டும். ஆகையால், வேதமே மூட வேண்டும் என்றும், தொட வேண்டும் என்றும் முரண்பட்ட
இரு பக்ஷங்கஸளச் சொல்லுகிறபடியால், இந்த இரண்டு வாக்யங்களும் ஸமமானபடியால்,
இரண்டில் ஏதாவது ஒன்றைத் தேர்ந்து எடுத்து அநுஷ்டிக்கலாம். இரண்டுமே சரிதான்

ஸித்தாந்தம்
• ஒரு விஷயத்தில் ஸ்ம்ருதி இருப்பதைக் கண்டு, அதைக் கூறும் ச்ருதி இருக்க வேண்டும் என்று அநுமானம்
செய்யும் பொழுது, அந்த விஷயத்துக்கு நேர் எதிரான கருத்தைச் சொல்லும் ச்ருதி வாக்யம் இருந்தால் பாதம்
என்கிற தோஷம் ஏற்படும், அநுமானமே செய்ய இயலாது.
• எடுத்துக் காட்டு –
“நெருப்பு சூடானது அல்ல” என்று ஒருவன் அநுமானம் செய்யப் பார்த்தால், நேரே தொட்டுப் பார்த்தால்
நெருப்பு சுடுகிறபடியால் இதில் பாதம் என்ற தோஷம் உள்ளது.
ஆகையால், நெருப்பு சுடாது என்ற அநுமிதி ஒரு நாளும் ஏற்பட முடியாது.
• அதே போல் தான், “ஔதும்பரியைத் துணியால் மூடவேண்டும்” என்ற ஸ்ம்ருதிக்கு மூலமாக ஒரு வேத வாக்யம்
இருக்க வேண்டும் என்று அநுமானம் செய்ய நாம் முயற்சிக்கும் பொழுதே , அதற்கு நேர் முரணாக
“ஔதிம்பரியைத் தொட்டுக் கொண்டு பாட வேண்டும்” என்ற வேத வாக்யம் இருப்பதால்,
“ஔதும்பரியைத் துணியால் மூட வேண்டும்” என்று ஒரு வேத வாக்யம் இருப்பதாக
அநுமானம் செய்யவே முடியாது,
பாதம் என்ற தோஷம் இருக்கிறபடியால்.
• ஆகையால், ஸ்ம்ருதியைக் காட்டிலும் ச்ருதி பலமானது.

1-3-3-சில இடங்களில் ஸ்ம்ருதி பலம் –

அடுத்த அதிகரணத்தில், ச்ருதியைக் காட்டிலும் ஸ்ம்ருதி பலம் பொருந்தியதாக இருக்கும்
இடங்களும் உண்டு என்று தெரிவிக்கிறார்.
• ஒரு ச்ருதி வாக்யம் “வேத்தைச் செய்து விட்டு வேதியைச் செய்ய வேண்டும்” என்று கூறுகிறது.
இவ்விடத்தில், வேதம் என்ற சொல் தர்பப் புல் கட்டு ஒன்றைக் குறிக்கும்.
வேதி என்பது யாகம் செய்யும் ஒரு இடம். ஆகையால், வேதம் செய்வதற்கும் வேதி செய்வதற்கும்
உள்ள வரிசை இதில் தெரிகிறது.
• ஒரு ஸ்ம்ருதி “ஒரு வைதிக காரியத்தைச் செய்யும் பொழுது, இருமல் தும்மல் அழுகை முதலானவை
ஏற்பட்டால், ஆசமநம் என்று ஒரு செயலைச் செய்த பிறகு தான் அந்த கர்மத்தைத் தொடரலாம் என்று கூறுகிறது.
• ஸந்தேகம் –
வேதம் செய்தவுடன் இருமல் ஏற்பட்டால், ச்ருதி சொன்ன வரிசையிலிருந்து மாறாமல் அடுத்து
உடனே வேதியைச் செய்ய வேண்டுமா?
அல்லது ஸ்ம்ருதி சொன்னபடி ஆசமநம் செய்த பிறகு தான் வேதியைச் செய்ய வேண்டுமா?

பூர்வ பக்ஷம் –
முன் அதிகரணத்தில் ஸ்ம்ருதியைக் காட்டிலும் ச்ருதி பலம் பொருந்தியது என்று முடிவு செய்தபடியால்,
இங்கும் ஆசமனம் செய்ய வேண்டும் என்ற ஸ்ம்ருதியைப் புறக்கணித்து விட்டு, ச்ருதி சொன்ன
வரிசையிலிருந்து மாறாமல், வேதியைத் தான் அடுத்து செய்ய வேண்டும்
• ஸித்தாந்தம் –
பொதுவாக ஸ்ம்ருதியைக் காட்டிலும் ச்ருதி பலமானது என்பது உண்மை.
ஆனால், சமமான பொருள்களைப் பற்றிப் பேசும் போது தான் இந்த நியமம் பொருந்தும்.
இவ்விடத்தில் சமமாந பொருள்கள் பேசப்பட வில்லை .
• இங்கு ஸ்ம்ருதியால் சொல்லப்படுவது ஆசமநம் என்ற ஒரு செயல். செயல் என்பது முக்யமானது.
• இங்கு ச்ருதியால் சொல்லப்படுவது செயல்களுக்கு இடையில் இருக்கும் வரிசை தான்.
செய்தலைக் காட்டிலும் வரிசை என்பது இரண்டாம் பக்ஷம் தான்.
• ஆகையால், அநுஷ்டிக்கப்பட வேண்டிய செயலைச் சொல்லும் ஸ்ம்ருதி தான் பலமானது,
செயல்களுக்கு இடையில் இருக்கவேண்டிய வரிசையை மட்டும் சொல்லும் ச்ருதி இங்கு
துர்பலமானது என்பது தான் ஸித்தாந்தம்.
• ஆகையால், வேதம் செய்த பிறகு இருமல் வந்தால், ஸ்ம்ருதி சொன்னபடி ஆசமநம் செய்து விட்டு
தான் வேதிஸயச் செய்ய வேண்டும்

சான்றோர்களின் ஆசாரமும் -நடத்தையும்-பிரமாணம் தான் –

அடுத்து, சான்றோர்களின் ஆசாரம் என்று சொல்லப்படும் நடத்தையும் தர்மத்தை போதிக்கும்
ப்ரமாணம் தான் என்று நிரூபிக்கிறார் ஜைமிநி மஹரிஷி
• வேதமே பல தர்மங்கஸள உபதேசிக்கிறது. வேதத்தில் காணப்படாத சில தர்மங்கள் கூட
ஸ்ம்ருதிகளில் உள்ளன என்றும் பார்த்தோம்.
வேதத்திலோ ஸ்ம்ருதிகளிலோ இல்லாத சில செயல்கள் நம் முன்றோர்களின்
வழக்கத்தில்/நடத்தையில் காணப்படுகின்றன . அவை தர்மங்கள் தானா?
அவை தர்மம் என்று முடிவு செய்ய முன்னோர்களின் ஆசாரம் போதுமானதா?
அல்லது அவர்கள் நடத்தையைக் கொண்டு தர்மத்தை அறிய இயலாதா? என்ற கேள்வி எழுகிறது.
• பூர்வ பக்ஷம் –
முன் சொன்ன படி, முன்னோர்களின் சில வழக்கங்கள் வேதத்திலோ ஸ்ம்ருதிகளிலோ
காணப்படாதபடியால் அவற்றுக்கு மூலமே கிடையாது. அவை தர்ம்மாக இருந்தால், ஏதோ ஒரு மூலத்திலிருந்து
அவற்றை அறிந்து தானே முன்னோர்கள் செய்திருக்க வேண்டும்?
அப்படி ஒரு மூலம் கிடைக்கவே இல்லை . ஆகையால், அவர்கள் தானாகவே ஏதோ செய்திருக்கிறார்களே தவிற,
அவர்கள் வழக்கத்தைக் கொண்டு அந்த செயல்கள் எல்லாம் தர்மங்கள் என்று முடிவு செய்ய இயலாது-

ஸித்தாந்தம் –
நம் முன்னோர்கள் வேதங்களையும் ஸ்ம்ருதிகளையும் கற்று, அவற்றில் சொன்ன தர்ம
கார்யங்களை மட்டுமே செய்பவர்களாக இருந்தபடியால்,அப்படிப்பட்ட சான்றோர்களால்
செய்யப்பட்ட ஒன்று தர்மமாகத் தான் இருக்க வேண்டும் என்று அநுமானம் செய்யலாம்.
ஆகையால், அவர்களின் ஆசாரமும் ப்ரமாணம் தான்.
• கேள்வி – முன்னோர்கள் செய்த அந்தக் காரியங்கள் ஏன் மநு முதலியோர்களால் ஸ்ம்ருதியில்
எழுதப்பட வில்லை ?
• பதில் – அனைத்து தர்மங்களையும் ஒரு நூலில் எழுதினால் அது வேதம் போல் மிகவும் பெரிதாகி விடும்
என்ற அச்சத்தால் தான் மநு முதலானேர்கள் சில தர்மங்களை மட்டும் எழுதி, சிலவற்றை எழுதாமல் விட்டனர்.
ஆனால், அவற்றையும் சிஷ்யர்கள் அறிய வேண்டும் என்பதற்காகத் தான் மநு பகவான்
“சான்றோர்களின் நடத்தையும் தர்மத்தின் ப்ரமாணம்” என்று பொதுவாகச் சொல்லி விட்டார்.

ஆசாரத்தை எப்போது பிரமாணமாக ஏற்கலாம் —

ஸ்ம்ருதி என்பது நேரே ப்ரமாணம் ஆகாது,
ச்ருதியை அநுமானம் செய்ய வைப்பதன் மூலம் தான் ப்ரமாணம் ஆகும் என்று பார்த்தோம்.
• அதே போல் , ஆசாரமும் நேரே ப்ரமாணம் ஆகாது.
அது ஸ்ம்ருதிக்கு சமமாகக் கூட ஆகாது.மூன்றாவது படி தான்.
• மநு தன் ஸ்ம்ருதியில் ஒரு செயலைச் சொல்லியிருந்தால் அதைக் கண்டிப்பாக வேதத்திலிருந்து
அறிந்திருப்பார் என்று சொல்லலாம்,
ஏன் என்றால் மநு அனைத்து வேதங்களையும் அறியும் திறமை உடையவர்.
• நம் முன்னோர்கள் ஒரு செயலைச் செய்வதைப் பார்த்தால், அது ஏதோ ஒரு வேதத்தில் சொல்லப்பட்டிருக்க
வேண்டும் என்று நேரே அநுமானம் செய்ய இயலாது, ஏன் என்றால் நம் முன்னோர்கள் அனைத்து
வேதங்களையும் அறியும் அளவுக்கு ஜ்ஞாநம் மிகுந்தவர்கள் அல்லர்.
• ஆகையால், அவர்கள் மநு முதலானவர்களால் எழுதப்பட்ட ஸ்ம்ருதிகளைப் படித்து, அதிலிருந்து தான்
அந்த செயலைப் பற்றி அறிந்திருக்க முடியும்.
• ஆகையால், ஒரு செயலை முன்னோர்களின் வழக்கத்தில் கண்டு, அந்தச் செயலை போதிக்கும் ஸ்ம்ருதி
இருக்க வேண்டும் என்று முதலில் அநுமானம் செய்து, அந்த ஸ்ம்ருதிஸய எழுதிய மநு முதலானவர்கள்
அந்தச் செயலை வேதத்திலிருந்து தான் அறிந்திருக்க வேண்டும் என்பதால் வேதத்தைப்
பின்னர் தான் அநுமானம் செய்ய முடியும்.
• ஆகவே, வேதத்தைக் காட்டிலும் ஸ்ம்ருதி துர்பலமானது, ஸ்ம்ருதியைக் காட்டிலும் ஆசாரம் துர்பலமானது.
• ஆகையால், ஸ்ம்ருதி / வேதத்தோடு முரண்படாத ஆசாரத்தை மட்டும் தான் ப்ரமாணமாக ஏற்க முடியும்..
ஆச்சார்யாத் ஸ்ம்ருதி -அதனால் -சுருதி -இதுவே நேராக பிரமாணம் —

வ்யவஹாரம் என்ற ஆசாரம் உலகமா ஆசாரமா

வராஹம் -பன்றி -காக்கை –
சைந்தவம் உப்பையும் குதிரையும் குறிக்கும்
யவம் -பார்லி -வால் கோதுமை -இரண்டையும் குறிக்கும்
இது போல் ஒரே பொருளுக்கு பல அர்த்தங்கள் இருக்குமே

முன்னோர்களின் ஆசாரத்தில் (நடத்தையில்) ஒரு வகை தான்
அவர்களது பேச்சு / சொல்லாடல் என்ற வ்யவஹாரம்.
அது எப்போது ப்ரமாணம் ஆகும், எப்போது ஆகாது என்று விசாரிக்கப் படுகிறது.
• விஷயம் மற்றும் ஸந்தேகம் –
ஒரு விதி வாக்யம் ’வராஹம்’ என்ற சொல்லை உபயோகிக்கிறது. பிறகு, வேதமே ஒரு
அர்த்தவாதத்தில், “வராஹத்தின் பின்னால் மாடுகள் ஓடுகின்றன” என்று கூறுகிறது.
ஆகையால் வராஹம் என்பது பன்றி என்று தெரிகிறது. அதே சமயம், உலகத்தில் வராஹம் என்ற சொல்
காக்கை -கிருஷ்ண சகுனி – என்ற பொருளில் பயன்படுத்தப்படுகிறது.
இப்பொழுது விதி வாக்யத்தில் இருக்கும் வராஹம் என்ற சொல்லுக்கு
பன்றி என்று பொருளா? காக்கை என்று பொருளா என்று சந்தேகம் .
• பூர்வ பக்ஷம் –
தர்மத்தை போதிப்பதில் வேதம் தான் ப்ரமாணம் என்றாலும், சொற்களுக்கும் அவற்றின் பொருள்களுக்கும்
உள்ள தொடர்பைப் போதிப்பதில் வேதமும் உலகமும் ஸமமானவை தான். ஆகையால், ஒரே சொல்லுக்கு
வேதத்தில் ஒரு பொருளும் உலகத்தில் ஒரு பொருளும் வழக்கத்திலிருந்தால், எதை வேண்டுமானால் எடுத்துக் கொள்ளலாம்,
இரண்டுமே ஸமமானவை தான்.
ஆகையால், இங்கு விதி வாக்யத்தில் இருக்கும் வராஹம் என்ற சொல்லுக்குக் பன்றி என்றும் பொருள் கொள்ளலாம்,
காக்கை என்றும் பொருள் கொள்ளலாம்.

ஸித்தாந்தம் –
எந்தச் சொல்லுக்கு எந்தப் பொருள் என்ற விஷயத்தில் வேதத்துக்கும் உலகத்துக்கும் முரண்பாடு
ஏற்பட்டால், வேதம் தான் ஏற்கப்பட வேண்டும்.
• அர்த்தவாத அதிகரணத்தில், அர்த்த வாதங்களுக்குத் தனித்து ஒரு பயனும் இல்லாதபடியால்,
விதி வாக்யத்தால் விதிக்கப்பட்ட ஒரு பொருளை புகழ்வது தான் அர்த்த வாதங்களின்
உபயோகம் என்று பார்த்தோம்.
• அது நிலைக்க வேண்டும் என்றால், விதியும் அர்த்தவாதமும் ஒரே பொருளைப் பற்றிப் பேச வேண்டும்.
• நாம் பார்த்த எடுத்துக் காட்டில், “வராஹத்திற்குப் பின்னால் மாடுகள் ஓடுகின்றன” என்ற அர்த்த வாதத்தில்
’வராஹம்’ என்ற சொல் பன்றியைத்தான் குறிக்கிறது என்று தெளிவாகத் தெரிகிறது –
• விதி வாக்யத்தில் இருக்கும் ’வராஹம்’ என்ற சொல்லுக்கு மட்டும், உலக வழக்கின்படி, காக்கை என்ற
பொருளைக் கொண்டோம் என்றால் விதி வேறு ஒன்றை விதிக்க,
அர்த்தவாதம் வேறே ஒன்றைப் புகழ்கிற து என்றாகிவிடும். அது ஒட்டாது.
• ஆகையால், உலக வழக்குக்கும் வேத வழக்குக்கும் விரோதம் இருந்தால்,
வேத வழக்கு ப்ரபலமானது, அது தான் ஆதரிக்கப்படவேண்டும்-

வ்யவஹாரம்-என்ற ஆசாரம் கற்றோரா -கல்லாதாரா –
விஷயம் –
அடுத்து, வேதத்தில் ஒரு சொல்லுக்குப் பொருள் கூறப்படாத பொழுது, அச் சொல்லிற்கு
குரு விடமிருந்து வேதம் முதலானவற்றைப் படித்த வைதிகர்கள் ஒரு பொருளையும் ,
அவற்றைக் கல்லாத லௌகிகர்கள் ஒரு பொருளையும் கூறினால்,
எது ஏற்கப்பட வேண்டும் என்ற கேள்வி எழுகிறது.
• ஸந்தேகம் –
வேதத்தில் ’பீலு’ என்ற சொல் காணப்படுகிறது.அதற்கு வைதிகர்கள் ’ஒரு வகையான மரம்’ என்று
பொருள் கூறுகின்றனர். லௌகிகர்கள் ’யானை ’ என்று பொருள் கூறுகின்றனர். எதை ஏற்க வேண்டும்?
• பூர்வ பக்ஷம் –
தினசரி வழக்கத்தில் ஒன்றான சொல்-பொருள் தொடர்பு என்பதில் வைதிகர்களுக்கு எவ்வளவு பரிசயம் / திறமை
உண்டோ , அதே அளவுக்கு லௌகிகர்களுக்கும் உண்டு. ஆகையால், இரண்டில் எதை வேண்டுமானாலும் கொள்ளலாம்.
• ஸித்தாந்தம் –
உலகப் பேச்சு வழக்கில் இருவரும் சமமாக இருந்தாலும், வைதிகர்கள் வேதத்தையும் அதன் பொருளையும்
காப்பதை மிக முக்கியமாகக் கருதுகிறபடியால், அதுவும் வேதத்தின் பொருள் புலன்களுக்கு அப்பாற்பட்டதான படியால்,
ஒரு சொல்லோ அதன் பொருளோ மாறு படாமல் கவனமாக இருப்பார்கள்.
லௌகிகர்கள் பேசுவது த்ருஷ்டமா (புலன்களுக்கு எட்டும்) விஷயங்களைப் பற்றி தான்.
ஆகையால் அவர்களுக்கு அதில் கவனம் இருக்காது.
ஆகையால், வைதிகர்கள் கூறும் பொருள் தான் பலமானது.
பிரமாதம் -கவனக்குறைவு -ஆனால் நன்றாக என்று லௌகிகர் –

வ்யவஹாரம் என்ற ஆசாரம் பொது மக்களா -அங்கங்களா –
விஷயம் –
அடுத்து, ஒரு சொல்லுக்கு வேதமோ வைதிகர்களோ எந்தப் பொருளும் கூறாத போது, லௌகிகர்களின் வழக்கத்தில்
இருக்கும் பொருளை எடுத்துக் கொள்ளலாமா? அல்லது நிருக்தம் முதலான வேதத்தின் அங்கங்களாக் கொண்டு புதிய பொருள்
கண்டு பிடிக்கப்பட வேண்டுமா?
நிருக்தம் என்பது கடினமான சொற்களுக்குப் பொருள் கூறும் ஒரு நூல். வேதத்தின் அங்கம்.
• ஸந்தேகம் –
வேதத்தில் ’பிகம்’ என்ற சொல் உள்ளது. அதற்கு உலக வழக்கில் ’கொக்கு’ என்ற பொருள் உள்ளது. அதை
ஏற்கலாமா? அல்லது, நிருக்தம் முதலியவற்றைக் கொண்டு புது பொருள் சொல்ல வேண்டுமா?
• பூர்வபக்ஷம் –
நிருக்தம் முதலான வற்றைக் கொண்டு அறிய வேண்டும். இல்லை எனில் அவை இருப்பதே வீண் என்று
ஆகிவிடும். மேலும், வேதத்தின் அங்கம் தானே உலக வழக்கை விட பலமானதாக இருக்க வேண்டும்.
• ஸித்தாந்தம் –
நிருக்தம் என்பது ஒரு சொல்லிற்குப் புது பொருளை கண்டு பிடிப்பதற்காக அல்ல. ஒரு சொல்,
வழக்கத்திலிருக்கும் ஒரு பொருளை ஏன் கூறுகிறது என்ற காரணத்தைச் சொல்லத் தான்.
ஆகையால், முன்னமே அனை வரும் அறிந்த உலக வழக்கைப் புறக்கணித்து விட்டு, புதிதாக நிருக்தத்தைக் கொண்டு
ஒரு பொருள் கூறுவது என்பது சரி அல்ல.
• எந்தச் சொல்லுக்கு வேதமோ , வைதிகர்களோ , லௌகிகர்களோ எந்தப் பொருளும் கூற வில்லையோ ,
அந்தச் சொல்லின் பொருளைக் கூறுவது தான் நிருக்தத்தின் பயன். அது வீண் அல்ல.

1-3-10- வேதத்திலும் உலக வழக்கிலும் இருக்கும் சொற்கள் ஒன்றா வெவ்வேறா –

இந்த பாதத்தின் இறுதியில், உலகில் பயன்படுத்தும் சொற்களும், அவற்றின் பொருள்களும்,
வேதத்திலிருக்கும் சொற்களும் பொருள்களும் ஒன்றா வெவ்வேறா? என்று விசாரிக்கப்படுகிறது.
• பூர்வ பக்ஷம்
• உலகில் ஆத்மா, ப்ராஹ்மணன் முதலான சொற்கள் வழக்கத்தில் உள்ளன.
வேதத்தில் ’ஆ’ என்ற எழுத்ஸத விட்டு விட்டு ’த்மா’ என்றும், ’ஸ ’ என்ற எழுத்தைக் கூட்டி
’ப்ராஹ்மணாஸ:’ என்றும் காணப்படுகிறது.
ஆகையால், சொல்லின் வடிவத்தில் வேறுபாடு உள்ளபடியால், சொற்கள் வெவ்வேறு தான்.
• வேதத்தில் ’தேவ லோகத்தில் மாடுகள் தலை கீழாக நடக்கின்றன’ என்று கூறப்படுகிறது. ஆகையால்,
நாம் மாடு என்று அழைக்கும் பொருள் இங்கு சொல்லப்பட வில்லை . ஆகையால், வேதத்தில்
இருக்கும் சொற்களின் பொருளும் வேறு வேறு தான்.
• ஸித்தாந்தம் –
வேதத்திலும் உலகத்திலும் சொற்கள் ஒன்று தான். ’ஆத்மா என்கிற சொல் தான் த்மா என்று சொல்லப் பட்டுள்ளது’
என்ற ப்ரத்யபிஜ்ஜை ஏற்படுகிறபடியால்.பொருளும் ஒன்று தான்,
தேவ லோகத்தைப் புகழ்வதற்காக வேதம் அப்படிக் கூறுகிறது.
ப்ரத்யபிஜ்ஜை-சோயம் தேவதத்தா -அவரே இவர் நினைவும் ப்ரத்யக்ஷமும் சேர்த்து recognition
• வேதச் சொற்களுக்கு வேறு பொருள் என்று கொண்டால் ஒருவரும் அதை அறியவே முடியாது.
உலக வழக்கிலிருந்து சொற்களின் பொருள்களைக் கற்றுக் கொண்டு வேதத்தைப் படித்தால் தான் அதன்
பொருள் புரியும். வேதச் சொற்களுக்கு வேற ஓரு பொருள் என்றால், அதை எப்படி அறிய முடியும்?
ஆகையால் ஒன்று தான் –

——————-

பாடம் 6- -நாம தேயம் -வாக்ய சேஷம்-மற்றும் சாமர்த்தியம்

கட்டளையின் அம்சங்கள் –

உலகத்திலோ வேதத்திலோ ஒரு கட்டளை இருந்தால் அதில் ஒருவராலே மற்ற ஓருவரின்
முயற்சி கட்டளை யிடப்படுகிறது.
• ’அவன் கோடாரியாலே மரத்தை வெட்டுகிறான்’ என்பதற்கும் ’நீ கோடாரியாலே மரத்தை வெட்டு’
என்பதற்கும் உள்ள வேறுபாடு, இரண்டாவது சொல் தொடரில் சொல்பவர் இடமிருக்கும் ஒரு ஆசை உள்ளது –
’இவன் அந்த மரத்தை வெட்ட வேண்டும்’ என்று. அதற்கு தான் ’விதி’ என்று பெயர்
• கேட்பவரில் முயற்சியில் மூன்று பகுதிகள் உள்ளன –
பயன் (பலம்), கருவி (கரணம்), செயல் முறை (இதி கர்தவ்யதா) என்று.
மரம் பிளவு படுதல் தான் பயன். கோடரி தான் கருவி . ஓங்கி அடிப்பது தான் செயல் முறை
முயற்சி -பாவனா- பிரவிருத்தி-
எதைக் கொண்டு -கருவி -கரணம் –
எப்படிச் செய்ய வேண்டும் -இதி கர்தவ்யதா -செயல் முறை procedure
செய்யும் பொழுது சொல்ல வேண்டிய மந்திரங்களும் இதில் சேரும் –
எதனால் -பாவ்யம் -பிரயோஜனம் –
காரீரி யாகத்தால் மழை -இதில் யாகம் கருவி
தியாகம் -நம் பொருளை நமக்கு என்று கொள்ளாமல் -தேவதைக்கு சமர்ப்பித்தது தான் யாகம் –
ஹோமத்தில் போடுவது ஒரு அங்கமே
• அதே போல் , வேதத்திலும் ’ஸ்வர்கத்துக்காக ஜ்யோதிஷ்டோம யாகத்தைச் செய்’ என்ற கட்டளையில்
ஸ்வர்கம் பயன், யாகம் கருவி -செயல் முறை பெரிது – பல அங்கங்களை வேதமே உபதேசிக்கிறது. –
அவற்றைச் செய்து கொண்டு ஒரு யாகத்தைச் செய்தால் தான் பயன் கிடைக்கும் –

கட்டளையின் வகைகள்

மற்ற ஓரு வகையில் பிரித்துப் பார்த்தால் விதிகளை இப்படியும் பிரிக்கலாம்
• (1) கர்ம விதி – நாம் இது வரை அறியாத ஒரு கர்மத்தை விதிப்பது
• (2) குண விதி – முன்னமே வேதத்தால் விதிக்கப்பட்ட ஒரு கர்மத்தினுடைய அங்கத்தை போதிக்கக் கூடிய விதி.
ஒரு யாகத்தின் அங்கம் என்பது ஒரு லௌகிகச் செயலாகவோ, ஒரு பொருளாகவோ
யாகம் ஹோமம் முதலான வைதிகச் செயல்களாகவோ இருக்கலாம்.
எடுத்துக் காட்டு –
யாகம் செய்யத் தேவைப்படும் நெல் யாகத்தின் அங்கம்.
அந்த நெல்லிலிருந்து உமியை நீக்க அதை உலக்கையால் குத்துவது என்ற லௌகிகச் செயலும் யாகத்தின் அங்கம்.
அந்த நெல்லை ப்ரோக்ஷிப்பது / வேற ஓரு யாகம் செய்வது என்பதும் யாகத்தின் அங்கம்.
இவை அனைத்துமே ’குணம்’ என்றே அழைக்கப்படுகின்றன.
• (3) விசிஷ்ட விதி – நாம் அறியாத ஒரு கர்மத்தையும், அதில் பயன்படும் ஒரு குணத்தையும் சேர்ந்தே
விதிக்கக் கூடிய ஒரு விதி-
சோமேநே யஜதே-ஸோம ரசம் கொண்டு யாகம் -போல்வன
சோமத்தால் யோகத்தால் சுவர்க்கம் அடையலாம்
சோமா லத்தியால் இந்த யாகம் செய்து சுவர்க்கம்
சோமம் என்கிற யோகத்தால் என்றும் அர்த்தம் கொள்ளலாமே -ஆனால் சோமம் என்கிற யாகம் இல்லையே
ஆகவே லதையையே சொன்னவாறு

நான்காவது பாகத்தின் விஷயம் -நாம தேய பாதம் என்றே இதற்குப் பெயர் –

முதல் அத்யாயத்தின் நான்காவது பாதம், தர்மத்தைப் போதிக்கும் கடைசி மூன்று ப்ரமாணங்களை போதிக்கிறது –
நாம தேயம்,
வாக்ய சேஷம் மற்றும்
சாமர்த்யம் என்று.

• நாம தேயம் என்றால் பெயர்.
விதி வாக்கியங்களில் இருக்கும் சில பெயர்ச் சொற்கள் , அந்த யாகத்தில்
பயன் படுத்தப்பட வேண்டிய ஒரு பொருளைக் குறிக்கின்றனவா ?
அல்லது அந்த யாகத்தின் பெயர் தானா? என்று விசாரம் செய்யப்படுகிறது.
• நாம் தமிழில் ’உயரமான ராமனால் ராவணன் கொல்லப்பட்டான்’ என்று சொல்வதை
’உயரமானவனால் ராமனால் ராவணன் கொல்லப்பட்டான்’ என்று தான் ஸம்ஸ்க்ருதத்தில் சொல்ல வேண்டும்.
உயரமானவன், ராமன் என்ற இரண்டு சொற்களுக்குப் பிறகும் மூன்றாம் வேற்றுமை உறுப்பு இருப்பதைக் காண்க.
அந்த உயரமானவன் தான் ராமன் என்று பின்னர் அறிகிறோம்.
• ’ராமனால் அம்பால் ராவணன் கொல்லப்பட்டான்’ என்று சொன்னால், வேற்றுமை உறுபு ஒன்றாக இருந்தாலும்,
ராமன் வேறு, அம்பு வேறு என்று நாம் அறிவோம்.
• வேதத்தில் ’சோமத்தால் யாகத்தால் ஸ்வர்கத்தைப் பெறலாம்’,
’அக்நி ஹோத்ரத்தால் சோமத்தால் ஸ்வர்கம் பெறலாம்’ என்று கூறுகிறது.
இங்கு, சோமம், அக்நி ஹோத்ரம் போன்ற சொற்கள் ஒரு அங்கத்தைச் சொல்லுகின்றனவா ?
அல்லது யாகத்தின் பெயர்களா ? என்று சந்தேகம் ஏற்படலாம் –

குணமா பெயரா -முடிவுகள் –

1-ஒரு பெயர்ச் சொல் இடுகுறிப் பெயராக இருந்து, உலகில் அதற்குப் ப்ரபலமாக ஒரு பொருள் இருந்தால்,
அந்தச் சொல் யாகத்தின் பெயர் ஆகாது. குணத்தைத் தான் காட்டுகிறது.
எடுத்துக் காட்டு –
“சோமத்தால் யாகத்தால் ஸ்வர்கம் பெறலாம்”. இங்கு சோமம் என்ற சொல் இடுகுறிப் பெயராகவும்
உலகில் ஒரு கொடியைக் குறிப்பதாகவும் இருக்கிறபடியால் அது யாகத்தின் பெயர் ஆகாது

2. ஒரு சொல் காரணப் பெயராக இருந்து, அது உலகில் எந்த ஒரு பொருளையும் குறிப்பதாக வழக்கத்தில் இல்லா விட்டால்,
அது யாகத்தின் பெயர் ஆகலாம். ஒரு குணத்தோடு கூடிய ஒரு செயலை விதித்தால் அந்த விதி வாக்யத்துக்கு கௌரவம்
(கார்ய மிகுதி) ஏற்படும். ஆகையால், இந்தச் சொல் குணத்தைச் சொல்லவில்லை
யாகத்தின் பெயர் தான்.
எடுத்துக் காட்டு –
உத்பிதா யஜதே பசு காம -“உத்பித்தால் யாகத்தால் பசுவைப் பெறலாம்”.
இங்கு உத்பித் என்ற சொல் பொதுவாக உலக வழக்கத்தில் இல்லை . இது காரணப் பெயர் தான்.
’உத்’ –மேல் போக்கி – ’பித்’ – பிளத்தல் என்று பொருள் கொண்டு
உத்பித் என்றால் மண் வெட்டி (கணித்ரம்-சமஸ்க்ருதம் ) –என்று பூர்வ பக்ஷம்.
இல்லை ,
’உத்பித்’ – உத்பத்தி என்று கொண்டு -மேல் நோக்கி உண்டாக்குவது என்ற அர்த்தத்தால்
பசு என்ற பலத்தை உத்பத்தி செய்யும் யாகத்தைத் தான் சொல்லுகிறது என்று ஸித்தாந்தம்.

உத்பித் அதிகரணமே முதல் அதிகரணம் –

3–இடுகுறிப் பெயர் பொதுவாக குணத்தைத் தான் சொல்லும், யாகத்தை அல்ல என்று சொல்லி யிருந்தாலும்,
அந்தச் சொல்லால் குறிக்கப்படும் குணம் (அங்கம்) முன்னமே வேறே ஓரு வழியால் போதிக்கப் பட்டதாக இருந்தால்,
இந்த வாக்யத்தில் அதை விதிப்பதில் எந்தப் ப்ரயோஜனமும் இல்லை .
ஆகையால், அது யாகத்தின் பெயராகத் தான் இருக்க வேண்டும்.
• எடுத்துக் காட்டு –
“அக்நி ஹோத்ரத்தால் சோமத்தால் ஸ்வர்கம் பெறலாம்”.
• இங்கு அக்நி ஹோத்ரம் என்ற சொல்லுக்கு, “அக்நிக்காக செய்யப் படும் ஹோமம்” என்று பொருள்.
ஆகையால், இந்தச் சொல்லால், அக்நி என்ற தேவதை (கடவுள்) தான் இந்த யாகத்தின் அங்கமாக விதிக்கப் படுகிறார்
என்று சொல்ல வேண்டும்.
• ஆனால், இந்த ஹோமத்தில் அக்நி தேவதை என்பது முன்னமே அக்நியைப் பற்றின ஒரு மந்த்ரத்தினால் நாம் அறிந்ததே தான் .
ஆகையால், மறுபடியும் அக்நி என்ற தேவதையை விதிப்பதால் எந்தப் ப்ரயோஜனமும் இல்லை
• ஆகையால், இந்தச் சொல் யாகத்தின் பெயராகத் தான் இருக்க வேண்டும்.

4–ஓர் இடுகுறிப் பெயரால் குணத்தை விதிக்க முயலும் பொழுது, அந்தப் பொருளுக்கு ஒட்டாத ஓர் உவமாநம் வேதத்தில்
சொல்லப் பட்டிருந்தால், அதை விதிக்க முடியாது.
• எடுத்துக் காட்டு – “
ச்யேநத்தால் யாகத்தால் எதிரிகள் மரணம் அடைவார்கள் ”.
• இங்கு ச்யேநம் என்ற சொல் உலகில் கழுகைக் குறிக்கும்.
ஆகையால், இந்தச் சொல்லால், கழுகு தான் இந்த யாகத்தின் அங்கமாக விதிக்கப்படுகிறார் என்று சொல்ல வேண்டும்.
• ஆனால், இந்த இடத்தில் ஓர் உவமானம் சொல்லப் பட்டுள்ளது –
“கழுகு எப்படி எதிரிகளைக் கொத்திக் கொல்லுமோ அதே போல் இதுவும் எதிரிகளைக் கொத்திக் கொல்லும் ” என்று,
• ’இது’ என்று குறிக்கப்படுவதும் கழுகாக இருந்தால், தானே தனக்கு உவமை என்று சொல்வது பொருத்தமாக இருக்காது.
• ஆகையால், இந்தச் சொல் யாகத்தின் பெயராகத் தான் இருக்க வேண்டும்.
• “எப்படி கழுகு எதிரிகளைக் கொத்திக் கொல்லுமோ அதே போல் இந்த யாகமும் எதிரிகளைக் கொத்திக் கொல்லும் ”
என்று யாகத்தைப் புகழ்வது தான் இந்த உவமையின் கருத்து –

கௌணீ வ்ருத்தி

ந்யாய சாஸ்த்ரம் படிக்கும் பொழுது, சக்தி லக்ஷணா என்ற இரண்டு வ்ருத்திகளைப் பற்றிப் பார்த்தோம்.
சக்தி வ்ருத்தி என்பது தான் ஒரு பொருளுக்கும் அதன் முக்கியமான பொருளுக்குமுள்ள தொடர்பு.
எந்த இடத்தில் அந்தப் பொருளைக் குறிக்க இயலாதோ , அங்கு அதோடு தொடர்புடைய மற்ற ஓரு பொருளைக்
குறிப்பிடப் பயன்படுவது தான் லக்ஷணா என்ற வ்ருத்தி.-சக்தி சம்பந்தா லக்ஷணா –
• லக்ஷணா என்ற வ்ருத்தியால் அறிவு ஏற்படும் பொழுது,
ஸிம்ஹா தேவ தத்தன் -இரண்டும் வேறே வேறே -சக்தியால் கொண்ட அர்த்தங்கள் கொள்ள முடியாதே இதில்
பலத்துக்காக சொன்னால் லக்ஷணா விருத்தி ஆகும்
’மாணவன் அக்நி’ என்ற சொல் தொடரில் , அக்நி என்ற சொல் அக்நியிடமிருக்கும் தேஜஸ்ஸைக் குறிக்கிறபடியால்,
’தேஜஸ்ஸை உடையவன் மாணவன்” என்ற அறிவு தான் ஏற்படும்.
• சில நேரத்தில், அக்நி என்ற சொல், தேஜஸ்ஸை மட்டும் குறிக்காமல், “அக்நியிடமிருக்கும் தேஜஸ்ஸைப் போன்ற
தேஜஸ்ஸை உடையவன் மாணவன்” என்ற அறிவை ஏற்படுத்தும். அதுதான் கௌணீ வ்ருத்தி என்று சொல்லப் படுகிறது.
• ஒரு குணத்தின் அடிப்படையில் ஒரு சொல் தன் பொருளை விட்டு, வேறே ஒரு பொருளைக் குறிக்கிற படியால்,
இந்த வ்ருத்திக்கு கௌணீ வ்ருத்தி -என்ற பெயர் –
லக்ஷணா விருத்தி போல் முக்கிய அர்த்தம் விடாமல் இந்த விருத்தி

பல அதிகரணங்களைக் கொண்டு ஒரே விஷயத்தை காட்டி விளக்க கௌணீ வ்ருத்தி –

கௌணீ விருத்தியின் வகைகள் –

1. தத் ஸித்தி – ஒரு செயலைச் செய்து முடிக்கும் திறமை .
“யஜமாநன் ப்ரஸ்தரம்” என்ற வேத வாக்யத்துக்கு
’யஜமாநன் போல் தன் கார்யத்தை முடிப்பது ப்ரஸ்தரம் என்ற தர்பக் கட்டு” என்று பொருள்
2. ஜாதி – ஒரே இடத்திலிருந்து பிறப்பு.
“அக்நி ப்ராஹ்மணன்” என்ற வேத வாக்யத்துக்கு
“அக்நியைப் பிறப்பித்த ப்ரஜாபதியிடமிருந்து பிறந்தவன் ப்ராஹ்மணன்” என்று பொருள்.
3. ஸாரூப்யம் – உருவ ஒற்றுமை .
“ஆதித்யன் யூபம்” என்ற வேத வாக்யத்துக்கு
“ஆதித்யனிடம் இருக்கும் ஒளி போல் ஒளி பொருந்தியது யூபம் என்ற மரத் தூண்” என்று பொருள்
4. ப்ரசம்ஸை – புகழ்ச்சி. ஒன்றைப் புகழ்வதற்காக மற்ற ஓன்றைக் குறைத்துச் சொல்லுதல்.
“பசுவும் குதிரையும் தான் விலங்குகள், மற்றவை விலங்குகள் அல்ல” என்ற வேத வாக்யத்துக்கு
(இவை இரண்டுமே பசு மற்றவை அபசு என்று வேதம் சொல்லும் -பசு சப்தத்தால் விலங்கு )
“மற்ற விலங்குகள் பசு / குதிரை போல் உயர்ந்த விலங்குகள் அல்ல” என்று பொருள்
5. பூமா – மிகுதி – ஒரு கூட்டத்தில் இருப்பவர்கள் இடம் பெரும்பாலும் ஒரு
தன்மை இருந்தால், அதை இட்டு அவர்கள் அனைவரையும் குறிக்கலாம்.
“ஸ்ருஷ்டி மந்த்ரங்கள்” என்ற சொல்லால், வேதம் ’ஸ்ருஶ்டி’ என்ற சொல்
ஸ்ருஷ்டி என்ற சொல் இருக்கும் பல மந்த்ரங்களையும், அது இல்லாத சில மந்த்ரங்களையும் சேர்த்துக் குறிக்கிறது
6. லிங்க ஸமவாயம் – குறைவு – ஒரு கூட்டத்தில் இருப்பவர்கள் இடம் சிலரிடமே உள்ள் ஒரு தன்மை இருந்தால்,
அதை இட்டு அவர்கள் அனைவரையும் குறிக்கலாம். “ப்ராண ப்ருத் மந்த்ரங்கள்” என்ற சொல்லால்,
வேதம் ’ப்ராணன்’ என்ற சொல் இல்லாத பல மந்த்ரங்களையும்,
அது இருக்கும் வேறு சில மந்த்ரங்களையும் சேர்த்துக் குறிக்கிறது –

வாக்ய சேஷம்

• தர்மத்தைப் போதிக்கும் ஏழாவது ப்ரமாணம் வாக்ய சேஷம்.
சேஷம் என்றால் மீதம் / பின்புள்ள பகுதி. ஒரு விதிக்கு உதவி செய்வதன் மூலம் அதற்கு சேஷமாக இருக்கும்
அர்த்த வாதங்களும் அவ்வப்போது தர்மத்தின் ப்ரமாணம் ஆகலாம்.
• எடுத்துக் காட்டு –
“பூசப்பட்ட சிறு கற்களை அடுக்க வேண்டும்” என்ற வேத வாக்யத்தில், கற்கள்
பூசப்பட வேண்டும் என்று உள்ளதே தவிற, நெய்யாலாலேயா எண்ணையாலேயா என்று தெளிவாக இல்லை .
• பூர்வ பக்ஷம் –
எந்த பொருளையும் குறிப்பிடாதபடியால், நம் இஷ்டப்படி ஒன்றைப் பூசலாம்
• ஸித்தாந்தம் –
விதி வாக்யத்தில் எந்த த்ரவ்யமும் குறிப்பிடப்படாத போதும், அடுத்து வரும் அர்த்தவாதத்தில் நெய்யைப் புகழ்ந்து
பாடியுள்ள படியால், இங்கு நெய்யைக் கொண்டு தான் கற்களைப் பூச வேண்டும்.(நெய் -க்ருதம் – சமஸ்க்ருத சொல் )
• விதி வாக்யத்துக்கு அர்த்தவாதம் உதவியாக மட்டும் இருந்தாலும், விதி வாக்யத்தில் ஒரு சந்தேகம்
இருந்தால் அர்த்த வாதம் அதைத் தீர்த்துக் கொடுக்கலாம்.

சாமர்த்தியம்

தர்மத்தைப் போதிக்கும் எட்டாவது ப்ரமாணம் சாமர்த்யம் என்று சொல்லப்படும் திறமை .
• வேதத்தில் “ஸ்ருவத்தால் அவதானம் செய்”, “கையால் அவதானம் செய்” என்று சொல்கிறது.
ஸ்ருவம் என்பது ஒரு கரண்டி. அவதாநம் என்றால், ஒரு பொருளில் இருந்து ஒரு பகுதியைப் பிரித்து எடுத்தல்.
யாகத்தில், தேவதைக்காகக் கொடுக்கப்பட்ட த்ரவ்யத்தின் ஒரு பகுதியை எடுத்து அக்நியில் சேர்க்க வேண்டும்.
அந்த த்ரவ்யம் பால், தயிர், நெய், கஞ்ஜி (சரு), தோசை (புரோடாசம்) என்று பல வகைப்படும்.
• பூர்வ பக்ஷம் –
இந்த விதிகளில் எந்த ஒரு வகையையும் குறிப்பிடாதபடியால், எந்த த்ரவ்யத்தை வேண்டுமானாலும்
ஸ்ருவத்தாலோ கையாலோ அவதானம் செய்யலாம்
• ஸித்தாந்தம் –
விதிகளில் வெளிப்படையாகச் சொல்லப்படா விட்டாலும் -ஸ்ருவம் என்ற கரண்டிக்கு த்ரவ்யமாக
இருக்கும் நெய் பால் போன்ற பொருள்களை அவதாநம் செய்வதில் தான் திறமை உண்டு.
கெட்டியாக இருக்கும் தோசை முதலான வற்றை விண்டு எடுக்க இயலாது-
கைக்கு, புவரோடாசத்தை அவதாநம் செய்யத் தான் திறமை உண்டு.
த்ரவமான பொருள்களைக் கையால் பிரித்து எடுக்க முடியாதே .
• ஆகையால் த்ரவமான பொருள்களை ஸ்ருவத்தால் தான் அவதாநம் செய்ய வேண்டும் என்ற தர்மத்தின்
நுணுக்கம் அந்தப் பொருளின் ஸாமர்த்யத்தால் தான் நமக்குத் தெரிகிறது.

தரையில் பாத்திரத்தில் உண்கிறான் -இரண்டிலும் ஏழாம் வேற்றுமை இருந்தாலும்
தரையில் அமர்ந்து உணவை பாத்திரத்தில் போட்டு உண்கிறான் -சாமர்த்தியத்தால் இப்படித்தானே அர்த்தம் –
சாமர்த்தியமும் தர்மத்துக்கு பிரமாணம் –

விதிகளின் வகைகள்
1-உத்பத்தி விதி – ஒரு கர்மத்தை முதன் முதலில் போதிக்கும் விதி.
யாகம் என்பது ஒரு தேவதையைக் குறித்து ஒரு த்ரவ்யத்தை த்யாகம் செய்வது
ஆகையால், த்ரவ்யத்தையும் தேவதையையும் வைத்துத் தான் ஒரு யாகத்தை நாம் அறியவே முடியும்.
ஆகையால், த்ரவ்யம் அல்லது தேவதையை உபதேசிக்கும் விதி தான் அனேகமாக ஒரு யாகத்தின் உத்பத்தி விதியாக இருக்கும்
2. அதிகார விதி – ஒரு கர்மத்தின் பலத்தை (பயனை ) போதிக்கும் விதி அதிகார விதி
3. விநியோக விதி – ஒரு கர்மத்தின் அங்கங்களை போதிக்கும் விதிக்கு விநியோக விதி என்று பெயர்
இதி கர்தவ்யங்களும் அங்கங்களே –
4. ப்ரயோக விதி – ப்ரயோகம் என்றால் அநுஷ்டானம்.
ப்ரதானமான கர்மும், அதன் அங்கங்களும் அறிவிக்கப்பட்ட பிறகு,
“அனைத்து அங்கங்களோடும் கூடின ப்ரதான கர்மத்தைச் செய்” என்று அநுஷ்டானத்தை போதிக்கும்
விதிக்கு ப்ரயோக விதி என்று பெயர் –

———

பாடம் -7- -அத்யாயம் -2-கர்ம பேதம் -தர்ம பேதம்

கீழே தர்ம விளக்கம் முதல் அத்யாயம் –
மேலே தர்ம ஸ்வரூபம் –

மீமாம்ஸா சாஸ்த்ரத்தின் முதல் அத்யாயத்தில் தர்மத்தைப் போதிக்கும் ப்ரமாணங்களைப் பார்த்தோம்.
அடுத்து, இரண்டாவது அத்யாயத்தில் கர்மங்களைப் பிரித்து அறிவதற்கான வழிகள் சொல்லப்படுகின்றன .
• பேதம் என்றால் வேறுபாடு. ஒரு கர்மத்துக்கும் மற்ற ஓரு கர்மத்துக்குமுள்ள வேறுபாடு தெரிந்தால்
தான் நாம் ஒன்றை அநுஷ்டானம் செய்ய முடியும்.
ஆகையால், இந்த அத்யாயமே கர்மங்களுக்குள் இருக்கும் வேறுபாட்டை (பேதத்தை ) போதிக்கிறது.
• இந்த அத்யாயத்தின் முதல் பாதத்தில் கர்ம பேதத்தை போதிப்பதற்குத் தேவையான முன்னுரை
அமைக்கப்பட்டுள்ளது.
அடுத்து இரண்டாவது பாதத்தில் கர்மங்களைப் பிரித்து அறியும் வழிகளும்,
மூன்றாவது பாதத்தில் கர்மபேதம் இல்லாத விதி விலக்குகளும், -தஸ்ய அபவாத கீதி -விதி விலக்கே அபவாதம் –
நான்காவது பாதத்தில் ஒரே கர்மத்தின் வெவ்வேறு ப்ரயோகங்களும் (வெவ்வேறு பலனுக்காக
அநுஷ்டானங்களும்) சொல்லப்படுகின்றன .-பிரயோக அனுஷ்டான வேதங்கள் –

பிரதி பத அதிகரணம்
முன் பாடங்களில் ஒரு விதி வாக்யத்தால் ஒரு முயற்சி விதிக்கப்படுகிறது,
அந்த முயற்சிக்கு பயன், கருவி , செயல் முறை என்று மூன்று பகுதிகளுண்டு என்று பார்த்தோம்.
அதில் எது கருவியோ அதுதான் பலத்தைக் கொடுக்கப் போகிறது.
கருவி மாறினால், பயனும் மாறிவிடும். தர்மமே மாறிவிடும். ஆகையால், ஒரு வேத வாக்யத்தைக்
கண்டால், அதில் சொல்லப்படும் கருவி எது என்று அறிவது மிகவும் முக்கியமானது.
• ஸந்தேஹம் –
ஒரு பலனுக்கு ஒரு கருவி தானா ? அல்லது பல கருவிகளா ? என்ற விசாரம் செய்யப்படுகிறது ப்ரதிபத-அதிகரணத்தில்.
• பூர்வபக்ஷம் –
’ஸோமத்தால் யாகத்தால் ஸ்வர்கம் அடையலாம்’ என்ற வேத வாக்யத்தில்,
ஸோமம் யாகம் என்ற இரண்டுக்குமே மூன்றாவது வேற்றுமை உறுபு உள்ள படியால், இரண்டுமே கரணம் தான்
• ஸித்தாந்தம் –
யாகம் இன்று செய்யப்படுகிறது. அதன் பயனான ஸ்வர்கம் பற்பல ஆண்டுகளுக்குப் பிறகு ஏற்படப் போகிறது.
அது வரை ஸோமம் என்ற கொடியும் இருக்கப் பாேவதில்லை , யாகம் என்ற செயலும் தொடரப் பாேவதில்லை .
ஆகையால், இடையில் ’அபூர்வம்’ /’அத்ருஷ்டம்’ / புண் யம் என்று ஒன்றை ஏற்றே ஆக வேண்டும்.
இந்த யாகத்தால் ஏற்பட்ட புண்யம் பல காலம் நம்மிடம் இருந்து, ஸ்வர்கத்தைக் கொடுக்கிறது என்றால் தான் பொருந்தும்.
• சோமம் யாகம் என்ற இரண்டுமே கரணமாக (கருவி யாக) இருந்தால்,
இரண்டு அபூர்வங்கள் ஏற்படுகின்றன என்று ஒப்புக் கொள்ள வேண்டும்.
அதைக் காட்டிலும், ஒன்று தான் கருவி, அதிலிருந்து தான் அபூர்வம் ஏற்படும், மற்ற ஓன்று அதற்கு
த்ருஷ்டமான (புலன்களுக்கு எட்டின ) உதவியை மட்டும் செய்யும் என்று கொள்வது தான் எளிதானது –

பாவார்த்த அதிகரணம்

சரி ஒன்று தான் கருவி என்று கொண்டாலும்,
ஸோமம் கருவியா? யாகம் கருவியா? என்ற கேள்வி எழும்.
அதன் பதில் சொல்லப் படுகிறது அடுத்த அதிகரணத்தில்
• பூர்வ பக்ஷம் –
முன்னமே ஸித்தமாக (தயாராக) இருக்கும் ஒரு பொருளைக் கொண்டு தான் வேறே ஒரு பொருளை உண்டாக்க முடியும்.
ஸோமம் என்பது தயாரான த்ரவ்யம். யாகமோ இனி செய்யப்பட வேண்டியது. ஆகையால், சோமம் தான் கருவி
ஸ்வர்கத்தை அடைய. ஸோமக் கொடியை வெறுமனே வைத்திருந்தால் ஸ்வர்கம் கிடைக்காது,
ஆகையால் ஸோமத்தால் செய்யப்படும் செயல் ஒன்று தேவைப்படுகிறது. அதுதான் யாகம்.
• ஸித்தாந்தம் –
’ஸோமத்தால் யஜிப்பாய்’ என்ற வேத வாக்யத்திற்குத் தான் நாம் ’ஸோமத்தால் யாகத்தால் பயனை அடையலாம்’ என்று
பொருள் கூறுகிறோம். அந்த வாக்யத்தைப் பார்த்தால் கட்டளை இடும் ’யஜிப்பாய்’ என்ற சொல்லிலேயே கூறப்படுவது
யாகம் தான். ஸோமம் அல்ல. ஆகையால், ’யஜிப்பாய்’ என்ற சொல்லால் எந்த முயற்சி விதிக்கப் படுகிறதோ ,
அதற்குக் கருவியின் ஏற்படும் பொழுது, மிக அருகிலிருக்கும் யாகம் தான் சடக்கென நினைவுக்கு
வருகிற படியால், யாகம் தான் கருவி .
• யாகத்தைச் செய்ய ஏதோ ஒரு த்ரவ்யம் சேண்டுமே என்று யோசிக்கும் பொழுது தான் ஸோமம் என்ற கொடி வந்து அடைகிறது .
ஆகவே, ஸோமத்திலிருந்து அபூர்வம் கிடையாது, யாகம் தான் கருவி , அதிலிருந்து தான் அபூர்வம் ஏற்பட்டு ஸ்வர்கம் பெருகிறோம்.
• ஆகையால், பொதுவாக வினைச் சொல்லால் சொல்லப்படும் செயல் தான் கருவி ஆகும்

ருக் யஜுஸ் சாமம்

வேதம் இரண்டாகப் பிரிக்கப்படுகிறது –
மந்த்ரம் என்றும்
ப்ராஹ்மணம் என்றும்.
ப்ராஹ்மணம் என்றால் நாம் செய்ய வேண்டிய செயல்களைக் கட்டளையிடும்
வேதப் பகுதிகள்.
மந்த்ரம் என்றால், ஒரு செயலைச் செய்யும் பொழுது உச்சரிக்கப்படவேண்டிய சொல் தொடர்கள் -.
• மந்த்ரங்களை மூன்றாகப் பிரிக்கலாம் – ருக், ஸாமம், யஜுஸ் என்று.
• ருக் – எந்த மந்த்ரத்தில் ஒரு அடியின் அளவு எழுத்துக்களின் எண்ணிக்கையால் இல்லாமல்,
சொல்லப்படும் கருத்தின் அடிப்படையில் வகுக்கப் படுகிறவதா, அது ருக் மந்த்ரம் ஆகும்
• ஸாமம் – இசை வடிவில் இருக்கக்கூடிய மந்த்ரங்களுக்கு ஸாமம் என்று பெயர்.
ஸாமம் என்ற இசையோடு சேர்த்து, ருக் என்ற மந்த்ரத்தைப் பாடினால் , அதற்கு தான் ஸ்தோத்ரம் என்று பெயர்.
• யஜுஸ் – ருக் ஸாமம் என்ற இரண்டையும் தவிர இருக்கக்கூடிய மந்த்ரங்கள் அனைத்தும் யஜுஸ் என்று
அழைக்கப்படுகின்றன .

அநு ஷங்கம்

வேதத்தில் ஒரு சொல் தொடரில் பகுதியாகப் படிக்கப்பட்ட ஒன்றை ,அதோடு தொடர்பு கொண்ட ,
அடுத்தடுத்து இருக்கும் மற்ற சொல் தொடர்களோடும் சேர்த்துக் கொள்ளலாம். இதற்கு அநுஷங்கம் என்று பெயர்.
• வேதத்தில் அடுத்தடுத்து மூன்று மந்த்ரங்கள் உள்ளன –
“மனிதன் தலைவன் உன்னை புனிதம் ஆக்கட்டும்,
பேச்சின் தலைவன் உன்னைப் புனிதமாக்கட்டும்,
ஸூர்யக் கடவுள் உன்னைப் புனிதமாக்கட்டும்” என்று.
• மூன்றாவது மந்த்ரத்தின் இறுதியில் மட்டும், எப்படி அவர் நம்மைப் புனிதமாக்கவேண்டும் என்று சொல்லப் பட்டுள்ளது.
முதல் இரண்டு மந்த்ரங்களின் இறுதியில் சொல்லப்பட வில்லை .
• ஆனால், அந்த இரண்டு மந்த்ரங்களுக்கும்கூட ’எப்படிப் புனித்தப்படுத்துேவார்?’ என்ற எதிர்பார்ப்பு இருக்கும்.
ஆகையால் ஆகாங்க்ஷா உள்ளது. அவற்றோடு சேர்த்துப் பார்த்தால், இந்த சொல் தொடரின் பொருளும் ஒட்டி வரும் –
ஆகையால் யோக்யதா உள்ளது. அடுத்தடுத்து படிக்கப்பட்டபடியால் ஸந்நிதியும் உள்ளது.
• ஆகவே, சாப்த போதத்துக்கு தேவையான அனைத்தும் இந்த சொல் தொடருக்கு மூன்றாவது மந்த்ரத்தோடு மட்டுமல்ல,
முதல் இரண்டு மந்த்ரங்களோடும் கூட உண்டு .
• ஆகையால், இந்தச் சொல் தொடரை மூன்று மந்த்ரங்களோடும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
• இடையில் இந்த சொல் தொடரோடு சம்பந்தமில்லாத வேறே ஓன்று பேசப்பட்டிருந்தால், அப்போது
ஸந்நிதி தடைப்பட்டபடியால், அதற்குப் பின் இருக்கும் மந்த்ரங்களோடு இந்த சொல் தொடர் சேராது .

கர்ம பேதத்தைக் காட்டும் பிரமாணங்கள்

கர்மங்களுக்குள் இருக்கும் வேறுபாட்டைக் காட்ட ஆறு ப்ரமாணங்கள் உள்ளன –
1. சப்தாந்தரம் – வெவ்வேறு வினைச் சொற்களால் குறிக்கப்படும் செயல்கள் வெவ்வேறு கர்மங்கள் தான்.
எடுத்துக் காட்டு –
யஜிப்பாய்(யாகம் செய்வாய் ), ஹோமம் செய்வாய், தானம் செய்வாய் என்ற கட்டளைகளில்
யாகம் தானம் ஹோமம் என்ற வெவ்வேறு சொற்களால் சொல்லப்படுகிறபடியால் அந்தக் கர்மங்கள்
வெவ்வேறுதான். யாகமே ஹோமம் ஆகாது, ஹோமமே தானம் ஆகாதபடியால்

2. அப்யாஸம் – ஒரே கட்டளையை , வேறு எந்தப் பிரயோஜனமும் இல்லா விட்டாலும், திரும்பத் திரும்ப
வேதம் சொன்னால் , அது வெவ்வேறு கர்மங்களை விதிக்கிறது என்று தான் கொள்ள வேண்டும்.
விதிப்பது என்றால் அறியப்படாத ஒன்ஸற அறிவிப்பது. அது ஒரு கர்மத்தைப் பற்றி ஒரு முறை தான் செய்ய முடியும்.
பலமுறை செய்தால் அது வேறு ஒரு கர்மத்தின் விதி தான்.
• ’அக்நி ஹோத்ரம் என்ற ஹோமம் செய்’, ’தயிரால் ஹோமம் செய்’ என்ற இரண்டு விதிகளிலும்
ஹோமம் செய் என்று இருந்தாலும்,பிரயோஜனம் வெவ்வேறு. முதல் கட்டளை கர்மத்தை விதிக்கிறது,
இரண்டாவது அதில் பயன்படுத்தப்படவேண்டிய த்ரவ்யத்தை விதிக்கிறது.
ஆகையால், வேறு பிரயோஜனம் உள்ள படியால் இது அப்யாஸம் ஆகாது.
• எந்த விதியில் வேறு பிரயோஜனம் இல்லாமல், கர்மம் மட்டும்
கட்டளை யிடப்படுகிறதோ , அங்கு கர்மங்கள் வெவ்வேறு தான்,

3. ஸம்க்யா – வேதமே சில கர்மங்களின் எண்ணிக் கையைச் சொல்லி விடும்
. அப்பொழுது தெளிவாக அறியலாம், இவை வெவ்வேறு கர்மங்கள் என்று.
எடுத்துக் காட்டு – ’மூன்று ஆஹுதிகளைச் செய்கிறான்’என்று வேதம் சொல்வதால்
ஆமந ஹோமங்கள் என்ற பெயர் கொண்ட ஹோமங்கள் மூன்று வெவ்வேறு ஹோமங்கள் என்று அறியலாம்

4. ஸம்ஜ்ஞா – பெயர் மாறினால் கர்மம் மாறும். பெயர் (நாமதேயம்) என்பது ஒரு யாகத்தை ஸூலபமாகக்
குறிப்பிடுவதற்காக என்று பார்த்தோம். ஆகையால், ஒரு கர்மத்துக்கு ஒரு பெயர் போதுமானது –
ஆகையால், பல பெயர்கள் ஓரிடத்தில் சோல்லப்பட்டாலும் அவை வெவ்வேறு கர்மங்களைத் தான் குறிக்கும்.
எடுத்துக்காட்டு – ’ஜ்யோதிஷ்டோமம்’ என்ற யாகத்தைப் பற்றிச் சொல்லி விட்டு,
’அடுத்து ஜ்யோதிஸ், அடுத்து விஸ்வ ஜ்யோதிஸ், அடுத்து ஸர்வ ஜ்யோதிஸ் ’ என்று வேதம் சொல்கிறது.
இங்கு ஒவ் வொரு பெயரும் ஒவ்சோரு கர்மத்தைக் குறிக்காது-ஜ்யோதிஷ்டோமம் என்ற யாகத்தை அல்ல.

5. குணம் – ஒரு யாகத்தில் ஒரு த்ரவ்யம் தான் உபயோகிக்கப்பட முடியும்.
ஆகையால், முன்னமே த்ரவ்யம் விதிக்கப்பட்ட ஒரு யாகத்தில் மற்ற ஓரு த்ரவ்யத்தை நுழைக்க இயலாதபடியால்
அது வேற ஓரு யாகத்தில் தான் பயன்படுத்தப்பட வேண்டும்.
ஆகையால் , கர்மங்களுக்குள் வேறுபாடு- த்ரவ்யங்களைக் கொண்டும் ஏற்படலாம்.
எடுத்துக்காட்டு –
விச்வே தேவர்களுக்காக ஆமிக்ஷா என்ற த்ரவ்யத்தைக் கொண்டு யாகம் செய் என்று சொல்லி விட்டு,
வேதமே வாஜிநம் என்ற த்ரவ்யத்தை மற்ற ஓரு வாக்யத்தால் விதிக்கிறது.
அது கண்டிப்பாக வேற ஓரு யாகத்தைத் தான் காட்டிக் கொடுக்கும்

6-ப்ரகரணாந்தரம் – ஒரு கர்மத்தை ஒரு ப்ரகரணத்தில் (நூலின் பகுதியில்) விதித்து விட்டு, மற்ற ஓரு
ப்ரகரணத்தில் அதே பெயரை உடைய ஒரு கர்மத்ஸத விதித்தாலும், அவை ஒன்றாக மாட்டா.
ஏன் என்றால்,
ப்ரகரணம் மாறிவிட்டபடியால் முன் கர்மத்தின் நினைவு சடக்கென ஏற்படாது.
• மேலும், அநுஷ்டானம் செய்யப்பட முடியாத சில குணங்களும் (தேசம், கலம், நிமித்தம், பலம்,
ஸம்ஸ்கார்யம் ஆகியவையும்) இவ்விடங்களில் சொல்லப் பட்டிருக்கிற படியால், அவற்றை அநுஷ்டானம்
செய் என்று விதியால் விதிக்க முடியாதபடியால் வேறு வழி இல்லாமல் அந்தக் கர்மம் தான் விதிக்கப்படுகிறது
அந்தச் சொல் தொடரில் என்று சொல்லவேண்டும்.
• ஆகவே, அந்தக் கர்மம் தற்போது புதிதாக உபதேசிக்கப்படுகிறது என்றும் கொள்ளலாம்.
ஆகையால், அது ஒரு புது கர்மமாகத்தான் இருக்க வேண்டும்.

பிரயோக பேதம்

சில இடங்கைில் ஒரே கர்மமே வெவ்வேறு ப்ரயோகங்களை (அநுஷ்டானங்களை ) உடையதாக இருக்கும்
• அக்நி ஹோத்ரம் என்ற ஒரு ஹோமத்தை உபதேசித்து விட்டு, வேதம்
“அக்நி ஹோத்ரத்தால் ஸ்வர்கத்தை அடையலாம்” என்றும்
“வாழ் நாள் முழுவதும் அக்நி ஹோத்ரம் செய்யப் பட வேண்டும்” என்றும் கூறுகிறது.
• பூர்வ பக்ஷம் –
ஸ்வர்கத்துக்காக செய்யப்படும் அக்நி ஹோத்ரத்தை தான், வாழ் நாள் முழுவதும் செய்ய வேண்டும் என்று இந்த வாக்யம்
சொல்லுகிறது. ஆகவே, வாழ் நாள் முழுவதும் ஒருவன் அக்நி ஹோத்ரம் செய்தால் தான் ஸ்வர்கம் கிடைக்கும்.
• ஸித்தாந்தம் –
இங்கு ஸ்வர்கத்துக்காகச் செய்யப்படும் அக்நி ஹோத்ர ஹோமத்தில், வாழ் நாள் முழுவதும் என்ற காலம்
விதிக்கப்பட வில்லை . ஜீவனத்தைக் காரணமாகக் கொண்டு,
அக்நி ஹோத்ரத்தில் வேற ஓரு ப்ரயோகம் (அநுஷ்டானம்) விதிக்கப்படுகிறது.
• ஒருவனுஸடய ஜீவனமே காரணமாக இது விதிக்கப்பட்டபடியால், இதைத் தவறாமல் செய்யவேண்டும்
என்று ஆகிறது. அதனால் இதற்கு நித்ய கர்மம் என்று பெயர்.
• அதாவது, அக்நி ஹோத்ரம் என்ற ஒரே ஹோமம், ஸ்வர்கத்தில் ஆசை இருப்பவர்களால்
அதற்காகச் செய்யப்பட வேண்டும்.
அதில் ஆசை இல்லாதவர்களாலும் கூட அது வாழ்க்கை முழுவதும் செய்யப்பட வேண்டும்.
அப்படிச் செய்தால், அதன் பயனாக நமது பாபங்கள் நிங்குகின்றன என்று பொருள்.
ஆகவே, இங்கு கர்ம ஒன்று தான், ஆனால் ப்ரயோகம் மட்டும் வேறு.
நித்ய கர்மங்களை செய்து பாப்பம் போக்குவது பயன்
இதையே காம்ய பிரயோகம் -அனுஷ்டானம் செய்து -ஸ்வர்க்கம் பயன் -காம்ய கர்மம்
ஒரே அக்னி ஹோத்ரம் -இப்படி இரண்டு வித பயணிகளுக்குத் தான்
ஒரு தடவை செய்தால் ஸ்வர்க்கம் கிட்டும்
நித்தியமாக செய்வதால் பாபங்கள் போகும் –

நான்காம் பாதத்தில் இரண்டு அதிகரணங்கள்
இது இரண்டாவது சாகாந்தர அதிகரணம்

ஒவ்வொரு வேதத்துக்கும் காடகம், காண்வம், மாத்யந்தினம், தைத்திரீயம் என்று பல சாகைகள் உண்டு.
ஒரே வேதமே , சிறு சிறு மாறுதல் களோடு ஒவ்வொரு சாகை என்று வழங்கப்படுகிறது.
• அதில் வெவ்வேறு சாகைகளில் ஒரே கர்மத்தை விதிக்கும் வாக்யங்கள் இருந்தால்,
அவை ஒரே கர்மத்தை விதிக்கின்றனவா ? அல்லது வெவ்வேறு கர்மங்களையா? என்ற
சந்தேகம் தீர்க்கப்படுகிறது இந்த அதிகரணத்தில்
• பூர்வபக்ஷம் –
ஒரே கர்மத்தை , வேறு பிரயோஜனம் எதுவுமின்றி மறுபடியும் மறுபடியும் விதித்தால், அது ’அப்யாஸம்’ ஆகும்.
அப்யாஸம் என்பது கர்மங்களுக்குள் வேறுபாட்டைக் காட்டும்.
முன்னமே விதிக்கப்பட்ட கர்மத்தை மறுபடியும் விதிக்க முடியாதபடியால் புதிதான ஒரு கர்மம்
தான் விதிக்கப்படுகிறாது மற்ற ஓரு சாகையில்
• ஸித்தாந்தம் –
ஒருவன் ஒவ்வொரு வேதத்திலிருந்து ஒவ்வொரு சாகையைப் படிக்க வேண்டும் என்று தான்
சாஸ்த்ரம் சொல்கிறது.
ஆகையால், ஒரே வேதத்தின் இரண்டு சாகைகளை ஒரே மனிதன் படிக்கப் பாேவதில்லை .
ஒருவனுக்கே பல முறை உபதேசித்தால்தான் ’அப்யாஸம்’ஆகும்.
வெவ்வேறு மனிதர்களுக்காக இங்கு சொல்லப்படுகிறபடியால், ஒரே கர்மம் தான் இது,
அவற்றுக்குள் பேதம் இல்லை .

—————

சேஷத்வம் அங்க அங்கி பாவம் -கர்மங்களுக்குள் பிரித்து அறிந்த பின்பு –
மூன்றாம் அத்தியாயத்தில் பார்ப்போம்
பாடம் -8-அத்யாயம் -3- அங்கத்வமும் அதன் பிரமாணங்களும் –

மூன்றாம் அத்தியாயத்தின் சங்கதி –

மீமாம்ஸா சாஸ்த்ரத்தில் வேத வாக்யங்களின் பொருளான தர்மத்தைப் பற்றி விசாரம் செய்யப்படுகிறது என்று
ப்ரதிஜ்ஜை செய்தார் ஜைமிநி மஹரிஷி.
• தர்மத்தைப் பற்றி விசாரம் செய்வதற்கு முன்னால்,
தர்மத்தைப் போதிக்கும் ப்ரமாணங்கள் எவை என்று முடிவு செய்வது அவஸ்யமானபடியால் முதல் அத்யாயத்தில்
தர்மத்தைப் போதிக்கும் 8 ப்ரமாணங்களைப் பற்றி ஆலோசனை செய்தார்.valid cognition-
நியாயம் சாஸ்திரம் பார்த்த ஆறு உடன் இதில் கூட இரண்டையும் சேர்த்து இதில் 8 பிரமாணங்கள் அர்த்தப்பத்தி அநுதாலப்தி
இதன் விவரம் மேல் பார்ப்போம் –
• வேதம் தான் தர்மத்தின் ப்ரமாணம் என்று முடிவான உடன்,
வேதத்தில் எத்தனையோ கட்டளைகள் உள்ளபடியால், அவற்றில் எவை புதிதான கர்மத்தைக் குறிக்கின்றன,
எவை முன்னமே போதிக்கப்பட்ட ஒரு கர்மத்தைப் பற்றி அதிகப்படியாக உபதேசிக்கின்றன என்று அறிவதற்காக
இரண்டாவது அத்யாயத்தில் கர்மங்களுக்குள் வேறுபாட்டை (பேதத்தை ) போதிக்கும் ஆறு ப்ரமாணங்களைக் காட்டினார்.
• அடுத்து, கர்மங்களுக்குள் வேறுபாடு தெரிந்தவுடன் இயற்கையாக அடுத்து ஏற்படும் ஆசை – அவற்றுக்குள்
இருக்கும் தொடர்பை அறியத்தான். ஆகையால் தான், அடுத்து உள்ள மூன்றாவது அத்யாயத்தில் எந்தக் கர்ம எந்தக்
கர்மத்துக்கு அங்கம் ஆகும் என்று நிரூபிக்கிறார்.

அங்கம் என்றால் என்ன -(சேஷ சேஷி பாவம் -அங்கம் -அங்கி -அப்ரதானம் -பிரதானம் )
சேஷா பராரார்த்யம் -பர உத்தேச்ய முயற்சி பாவனா -ப்ரவ்ருத்தன் க்ருதி -செயல் யத்னம் -காரகம் -கிரியா ஹேது

பரம் = ’வேறு ஓன்று’,
உத்தேசம் = ’நோக்கம்’ / ’குறி’.
ப்ரவ்ருத்தன்= முயல்பேன்,
க்ருதி – முயற்சி,
காரகம் = முயற்சியை உண்டாக்கும் பொருள்,
விஹிதம் = விதிக்கப்பட்டது
• காரகம் – முயற்சியை உண்டாக்கும் பொருள். எடுத்துக் காட்டு –
“தேவதத்தன் கட்டைகைளால் பாத்திரத்தில் அரிசியை குடும்பத்திற்காகச் சமைத்தான்” என்ற சொல் தொடரில் ,
எல்லா வேற்றுமை உருபுகள் வியக்திகள் உள்ள வாக்கியம் –
இந்த முயற்சி ஏற்பட தேவதத்தன் கர்தாவாகவும், அரிசி கர்மமாகவும், விரகுகள் கருவியாகவும்,
குடும்பம் ஸம் ப்ரதானமாகவும் (பயனாளி யாகவும்), பாத்திரம் அதிகரணமாகவும் இருந்து
முயற்சியை உண்டாக்குகிறார்கள். ஆகையால், இவை அனைத்துமே காரகங்கள்.
• வேறு ஓரு குறிக்காக முயற்சிக்கும் மனிதனின் முயற்சியில் காரகமாக விதிக்கப்பட்டது அங்கம், அதாவது,
வேறே ஒரு பொருளைக் குறித்த முயற்சியில் காரகமாக விதிக்கப்பட்டது அங்கம்.
• “ஜ்யோதிஷ்டோம யாகத்தால் ஸ்வர்கத்தை அடைய முயற்சி” என்று வேதம் கட்டளையிடுகிறபடியால்,
ஸ்வர்க்கத்தைக் குறித்த முயற்சியில் கருவியாக (கரணமாக) யாகம் விதிக்கப்பட்டபடியால்
யாகம் ஸ்வர்கத்துக்கு அங்கம்
• “அக்நிஹோத்ர ஹோமத்தைத் தயிரால் செய்” என்ற வேத வாக்யத்தில் ஹோமத்தைக் குறித்த முயற்சியில்
தயிர் கருவியாக விதிக்கப்பட்ட படியால், தயிர் ஹோமத்தின் அங்கம் ஆகும்.

அங்கத்தவத்தைக் காட்டும் பிரமாணங்கள்

அங்கத்வத்தைக் காட்டும் ப்ரமாணங்கள் ஆறு –
1-ச்ருதி,
2-லிங்கம்,
3-வாக்யம்,
4-ப்ரகரணம்,
5-ஸ்தாநம்,
6-ஸமாக்யா என்று.

• ச்ருதி –
“நிர பேஷா ரவ : ச்ருதி:” – வேறே எதையும் எதிர்ப்பார்க்காத சொல் ச்ருதி ஆகும்.
• ச்ருதி மூன்று வகைப்படும் –
(1) அபிதாத்ரீ – பெயர்ச் சொல்
(2)விநியோக்த்ரீ – அங்கத்வத்தை அறிவிக்கும் சொல் -அங்கத்துவ போதனம் –
(3) விதாத்ரீ –கட்டளையிடும் சொல்
• எடுத்துக்காட்டு – “ நெற்களால் யாகத்தைச் செய்” என்ற வேத வாக்யத்தில்,
நெல் யாகம் என்ற இரண்டும் பெயர்ச் சொற்கள்(அபிதாத்ரீ). ’
ஆல்’ என்ற முன்றாவது வேற்றுஸம உருபும், ’ஐ’ என்ற இரண்டாம் வேற்றுஸம உருபும் விநியோக்த்ரீ.
’செய்’ என்ற சொல் கட்டளையிடுகிறபடியால் அது விதாத்ரீ.
• ’ஐ’ என்ற உருபு, யாகம் தான் உத்தேச்யம் (இலக்கு) என்று காட்டுகிறது.
’ஆல்’ என்ற உருபு, நெல் தான் கருவி (கரணம்) என்ற காரகம் என்று காட்டுகிறது.
ஆகையால் யாகத்தைக் குறித்துச் செய்யும் முயற்சியில் கருவியாக (காரகமாக) விதிக்கப்பட்டுள்ளது நெல்.
ஆகையால், நெல் யாகத்துக்கு அங்கம் என்று அறிகிறோம்.
• இதே போல் , “நெல்லை ப்ரோக்ஷணத்தால் ஸம்ஸ்கரிப்பாய்” என்ற கட்டளையில்,
’ஐ’ உருபால் நெல் உத்தேச்யம் என்றும், ’ஆல்’ உருபால் ப்ரோஷணம் கருவி என்றும் அறிகிறபடியால்
நெல்லுக்கு ப்ரோஷணம் அங்கம் ஆகும்.
• ஆகையால், இலக்கில் இருக்கும் உத்தேஸ்வத்தையோ கருவியில் இருக்கும் காரகத் தன்மையையோ
நேரடியாக இங்கு வேற்றுமை உருபு காட்டுகிறபடியால், இது ச்ருதி ப்ரமாணம் ஆகும்.

லிங்கம் – “சப்த-சாமர்த்யம்” –
ஒரு சொல்லின் திறமை தான் லிங்கம் / ஸாமர்த்யம் என்று சொல் ப்படுகிறது.
• குடத்துக்கு ஜலத்தைத் தாங்கும் சாமர்த்யம் உண்டு.
துணிக்கு, ஒரு பொருளை மறைக்கும் சாமர்த்யம் உண்டு.
சொல்லுக்கு இருக்கும் சாமர்த்யம் – தன் பொருளை அறிவிக்கும் சாமர்த்யம்
• யாகத்தில் தர்பம் பயன்படுத்த வேண்டும் என்றும்,
அந்த தர்பங்களை சமமாக வெட்டவேண்டும் என்றும் வேதம் கட்டளை யிடுகிறது.
• அதைத் தவிர , “தேவர்களின் இருப்பிடமான தர்பத்தை வெட்டுகிறேன்” என்று சொல்லும் ஒரு மந்த்ரம் உள்ளது.
இந்த மந்த்ரத்தைப் பார்த்தாலே , இது தர்பத்தை வெட்டுதல் என்ற செயலை அறிவிக்கிறது என்று அறியலாம்.
ஆனால், இந்த மந்த்ரத்தைச் சொல்லிக் கொண்டு தான் தர்பத்தை வெட்ட வேண்டும் என்ற ஒரு கட்டளை வேதத்தில் இல்லை
• ஆனாலும், இந்த மந்த்ரத்துக்கு ’தர்பத்தை வெட்டுதல்’ என்ற செயலை அறிவிக்கும் சாமர்த்யம் இருப்பதைப் பார்த்து,
நாமாக “இந்த மந்த்ரத்தைச் சொல்லிக் கொண்டு தர்பத்தை வெட்டவேண்டும்” என்றோ ,
“இந்த மந்த்ரத்தால் தர்பத்தை வெட்டுதல் என்ற செயலை அறிவிக்கவேண்டும்” என்றோ ச்ருதியைக் கல்பிக்க வேண்டும்.
அந்த ச்ருதி, இந்த மந்த்ரம் தர்பத்தை வெட்டுதல் என்ற செயலுக்கு அங்கம் என்று அறிவிக்கும்
• ஆகையால், சாமர்த்யம் என்ற லிங்கம் ச்ருதியைக்
கல்பிப்பதன் மூலம் அங்கத்வத்தைப் போதிக்கும் ப்ரமாணம் ஆகும்.

வாக்யம் – “சமபி வ்யாஹார:” –
இரண்டாம் வேற்றுமை முதலான ச்ருதி ப்ரமாணம் இல்லாத போது, இரண்டு பொருட்களுக்கிருக்கும் சேர்ந்த உச்சரிப்பு
• “பர்ண மயமான ஜுஹூ” என்ற ஒரு வேத வாக்யம் உள்ளது.
இங்கு ”பர்ண மரத்தால் ஜூஹூ என்ற பாத்திரத்தைச் செய்” என்று நேரடியாகக் கட்டளை இல்தை.
பர்ண மரத்தால் ஜூஹூ என்ற பாத்திரத்தைச் செய்ய முடியும் என்ற ஸாமர்த்யமும் உலகில் நாம் அறியாத ஒன்று,
ஏன் என்றால் ஜூஹூ என்பது யாகத்தில் மட்டுமே இருக்கும் ஒரு பொருள், உலகில் கிடையாது.
ஆகையால் ச்ருதியோ லிங்கமோ இல்லை .
• ‘பர்ணம்’, ‘ஜூஹூ’ என்ற இரண்டு சொற்களும் சேர்த்துப் படிக்கப்பட்டுள்ளன, அவ்வளவு தான்.
இதுதான் வாக்யம் என்று சொல்ப்படுகிறது.
• இந்த வாக்யத்தைக் கொண்டு, “இப்படி சேர்த்து உச்சரிக்கப்பட்டபடியால், பர்ணம் ஜுஹூ வைச் செய்யும்
ஸாமர்த்யம் உடையதாக இருக்க வேண்டும்” என்று முதலில் லிங்கத்தைக் கல்பிக்கவேண்டும்.
• அடுத்து, சாமர்த்யத்தை அறிந்துவிட்டபடியால், “பர்ண மரத்தால் ஜுஹூ என்ற பாத்திரத்தைச் செய்” என்ற
வெளிப்படையான கட்டளையை (ச்ருதி ப்ரமாணத்தை ) கல்பிக்கவேண்டும்.
அந்த ச்ருதி ப்ரமாணம் தானாக பர்ணமரம் ஜூஹூவுக்கு அங்கம் என்று அறிவிக்கும்.
• ஆகையால் , வாக்யம் என்ற ப்ரமாணம் லிங்கத்தைக் கல்பித்து,
அதன் மூலம் ச்ருதியைக் கல்பித்து, அங்கத்வத்தைப் போதிக்கும்.

ப்ரகரணம் – “உபய-ஆகாங்ஷா” –
இரண்டு கர்மங்களுக்கு இடையில் பரஸ்பரம் (ஒன்றுக்கொன்று) இருக்கும் எதிர்பார்ப்பு
இடை -தேர் அஸ்வ நியாயம் போல் –
• “தர்ச-பூர்ணமாஸ யாகத்தால் ஸ்வர்கத்தைச் செய்” என்ற வாக்யம்,
ஸ்வர்கத்தை இலக்காகக் கொண்ட முயற்சியில் யாகம் கருவி என்று சொல்கிறது,
ஆகையால் தர்ச-பூர்ணமாச யாகம் ஸ்வர்கத்துக்கு அங்கம்.
• ஆனால், இந்த யாகத்தால் ஸ்வர்கத்தை எப்படி அடைய வேண்டும்? செயல்முறை என்ன? என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது,
இதற்கு தான் இதி கர்தவ்யதா-ஆகாங்க்ஷா / உபகாரக-ஆகாங்க்ஷா என்று பெயர்.
தர்ச-பூர்ணமாச யாகம் தனக்கு உதவுபவர்களைத் தேடுகிறது.
• அதே சமயத்தில், வேறு ஓரு இடத்தில், ப்ரயாஜங்கள் என்ற ஐந்து யாகங்களைச் செய் என்று விதிக்கும்
வாக்யங்கள் உள்ளன. அங்கு, ப்ரயாஜங்களை எதற்காகச் செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
இதற்கு ப்ரயோஜன-ஆகாங்க்ஷா / உபகார்ய-ஆகாங்க்ஷா என்று பெயர்.
• ஆகவே, ஒருவர் உதவி யாளரையும், ஒருவர் பிரயோஜனத்தையும் எதிர்பார்க்கிறபடியால், பரஸ்பர-எதிர்பார்ப்பு
என்று சொல் ப்படும் ப்ரகரணம் உள்ளது. ச்ருதி, லிங்கம், வாக்யம் இல்லை .
• இந்த எதிர்பார்ப்பு என்ற ப்ரகரணத்தைக் கொண்டு, இந்த இரண்டு வாக்யங்களுக்கும் தொடர்பு இருக்கவேண்டும்
என்று வாக்யத்தைக் கல்பித்து, அதன் மூலம்
“ப்ரயாஜங்கள் தர்ச-பூர்ணமாச யாகத்துக்கு உதவும் சாமர்த்யம்” என்று லிங்கத்தைக் கல்பித்து,
அதன் மூலம், “ப்ரயாஜங்களைச் செய்வதால் தர்சபூர்ணமாச யாகத்துக்கு உபகாரம் செய்ய வேண்டும்” என்ற
ச்ருதியைக் கல்பிக்க வேண்டும். –
ஆகையால் ப்ரயாஜங்கள் தர்ச-பூர்ணமாச யாகத்தின் அங்கங்கள் என்று அறியலாம்,

ஸ்தாநம் – தேச -சாமாந்யம் – இடத்தில் ஒற்றுமை -similar location-
• இது இரண்டு வகைப்படும் –
(1) வேதத்தில் (நூலில்) ஒரே இடத்தில் இருத்தல் என்கிற பாட சா தேச்யம்
(2) அநுஷ்டானத்தில் ஒரே இடத்தில் இருத்தல்
• அதிலும் பாட சா தேச்யம் இரண்டு வகைப்படும் –
(1)யதா சங்க்ய-பாடம்
(2) ஸந்நிதி பாடம்
• யதா ஸங்க்ய பாடம் –
பல யாகங்களை வரிசையாகச் சொல்லி விட்டு, வேதம் பல மந்த்ரங்களை வரிசையாக உபதேசிக்கிறது.
அவற்றுள், முதல் மந்த்ரம் முதல் யாகத்துக்கு அங்கம், இரண்டாவது மந்த்ரம் இரண்டாவது யாகத்துக்கு அங்கம்
என்று நாம் அறிவது யதா சங்க்ய பாடத்தால்.
• ஸந்நிதி பாடம் – proximity
சாதாரணாமாக ஒரு கர்மத்துக்கு அருகில் படிக்கப்பட்ட மற்ற ஓன்று, அந்தக் கர்மத்தின் அங்கம் ஆகும்.

• அநுஷ்டான ஸாதேச்யம் –
ஒரு பொருளை அநுஷ்டானம் செய்யும் அதே சமயத்தில் அநுஷ்டானம் செய்யப்படும்
வேற ஓன்று அதற்கு அங்கமாகும்
• ஒரே இடத்தில் இருத்தல் என்ற ஸ்தாநத்தால், பரஸ்பரம் எதிர்பார்ப்பு என்ற ப்ரகரணத்தைக் கல்பித்து,
அதன் மூலம் சேர்ந்த உச்சரிப்பு என்ற வாக்யத்தைக் கல்பித்து,
அதன் மூலம் சாமர்த்யம் என்ற லிங்கத்தைக் கல்பித்து,
அதன் மூலம் ச்ருதியைக் கல்பித்து,
ஒரு பொருள் மற்ற ஓன்றுக்கு அங்கம் என்று போதிக்கக் கூடியது ஸ்தாநம் என்ற ப்ரமாணம்.

ஸமாக்யா – “யௌகிக: சப்த:” – காரணப் பெயர்
• ஸோம யாகத்தில் ஸோமக் கொடியைப் பிழிந்து, அதிலிருந்து வரும் ரஸத்தால் யாகம் செய்ய வேண்டும்.
• ஸோம யாகத்தில் 16 ரித்விக்குகள் சேர்ந்து யாகத்தைச் செய்வார்கள்.
அதில் பத்து ரித்விக்களுக்கு சமஸம் என்ற பாத்திரம் கொடுக்கப்படும்.
அதில் தான் ஸோம ரஸத்தை வைத்து அவர்கள் ஆஹுதியைக் கொடுத்து விட்டு, அவரவர் பாத்திரத்தில்
மீதமிருக்கும் ஸோம ரஸத்தை அவரவர் உண்ண வேண்டும்.
• ஆனால், அந்த உண்ணுதலை விதிக்கும் வேத வாக்யம் எதுவும் இல்லை .
அது, சமாக்யா என்ற ப்ரமாணத்தால் தான் தெரிகிறது.
• ’ஹோத்ரு சமஸம்’ என்று ஒரு பாத்திரத்திற்குப் பெயர்.
ஹோதா என்ற ரித்விக்கினுடைய சமஸம் என்று அதற்குப் பொருள்.
• சமஸம் என்ற சொல்லுக்கே “உண்ணும் பாத்திரம்” என்று தான் ஸம்ஸ்க்ருதத்தில் பொருள்.
ஆகையால், “ஹோதா உண்ணும் பாத்திரம்” என்று தான் ஹோத்ரு சமஸம் என்ற பெயரின் பொருள்.
• ஹோதா அதி லிருக்கும் ஸோம ரஸத்தின் மீதியை உண்ணவில்லை என்றால், அந்தப் பெயர் ஒட்டாது.
ஆகையால், அந்த சமாக்யா (காரணப் பெயர்) என்ற ப்ரமணத்தைக் கொண்டு தான்,
ஸ்தாநம் ப்ரகரணம் வாக்யம் லிங்கம் ஆகியவற்றைக் கல்பித்து, இறுதியில்
“ஹோதா ஸோம ரஸத்தைப் பருக வேண்டும்” என்று விதிக்கும் ச்ருதியைக் கல்பிக்கிறோம்,

சுருதி ஒன்றே நிரபேஷ பிரமாணம் -வேறே ஒன்றையும் கல்பிக்க வேண்டாத ஸ்வதா பிரமாணம் –

———-

பாடம் -9-ப்ரமாணங்களுக்குள் விரோதம்
மூன்றாம் அத்யாய எட்டு பாதங்கள்

மூன்றாவது அத்யாயத்தில் அங்கத்வம் / சேஷ–சேஷி- பாவம் என்பதை நிரூபிக்கப்படுகிறது.
இந்த அத்யாயத்தில் 8 பாதங்கள் உள்ளன. அவற்றில் –
• முதல் பாதத்தில் ச்ருதி என்ற ப்ரமாணத்தையும்
• இரண்டாம் பாதத்தில் லிங்கம் என்ற ப்ரமாணத்தையும்
• மூன்றாம் பாதம் வாக்யம் ப்ரகரணம் ஸ்தாநம் ஸமாக்யா என்ற 4 ப்ரமாணங்களையும்
• நான்காவது பாதத்தில் ப்ரமாணங்களுக்குள் விரோதம் ஏற்பட்டால் அவற்றுள் ஒன்றோடு ஒன்றுக்குள்ள வலிமையையும்
• ஐந்தாவது பாதத்தில் ப்ரதிபத்த கர்மங்களைப் பற்றியும்
• ஆறாவது பாதத்தில் அநாரப்யோக்தமான தர்மங்களையும்-(எதையும் தொடங்காமல் உள்ளது பற்றிய யுக்தி )
• ஏழாவது பாதத்தில் ஒரே தர்மம் பலவற்றுக்கு அங்கமாகும் இடங்களையும் (பஹு அர்த்தமாக செய்வது )
• எட்டாவது பாதத்தில் ஸ்வாமி என்று அழைக்கப்படும் யஜமாநனுக்காகச் செய்யப்படும் கர்மங்களையும்
(எஜமானன் -யாகம் செய்யும் அதிகாரி -பத்னி -யாகத்துக்கு சஹகரிக்கும் பெண் )
நிரூபிக்கிறார் ஸஜமிநி மஹரிஷி-

பலபாலதிகாரணம் -சமவாயே -ஒரே வஸ்துவை வேறே வேறே அங்கமாக சொல்லும் பொழுது -முரண்பாடை போக்க வந்த அதிகரணம்
பார தைரபல்யம் -பின் பின் பிரமாணங்கள் துர்லபம் -முன் முன் பிரமாணங்கள் பிரபலம் -அர்த்தம் விப்ரகர்ஷம் இருப்பதால் –
பிரபலம் -popular -அர்த்தம் இல்லை -வலிமை உள்ள பலம் உள்ள பிரமாணம் என்றபடி –
கல்பனா மூல உச்சேதம் இருப்பதால் பின்னால் வரும் பிரமாணம் கொள்ள முடியாது -கற்பனைக்கு மூலமே எதிர்பார்ப்பு இருப்பதால் தானே
சுருதி முதலிலே சொன்னதும் எதிர்பார்ப்பு இருக்க முடியாதே –
அப்ராப்த பாதம் என்றும் இத்தைச் சொல்லுவார்கள் –
3-3-14-
மூன்றாவது அத்யாயத்தின் மூன்றாவது பாதத்தில் ஸஜமிநி மஹரிஷி கூறுகிறார் –
ச்ருதி லிங்கம் வாக்யம் ப்ரகரணம் ஸ்தாநம் ஸமாக்யா என்ற ஆறு ப்ரமாணங்களுள் (ஸமவாயே ) ஒன்றுக்கு ஓன்று
முரண்பாடு ஏற்பட்டால், (பார தௌர்பல்யம்) பின்னாலிருக்கும் ப்ரமாணங்கள் முன்னாலிருக்கும்
ப்ரமாணங்களைக் காட்டிலும் வலிமை குறைந்தவை (அர்த்த விப்ரகர்ஷாத்)
பின் பின் ப்ரமாணங்கள் முன் முன் ப்ரமாணங்களைக் கல்பிப்பதன் மூலம் தான் தங்கள் விஷயத்தைக் காட்டுகிறபடியால்
• பின் பின் ப்ரமாணங்கள், “இந்த கர்மம் எதற்காகச் செய்யப்பட வேண்டும்?” என்ற எதிர்பார்ப்பு (ஆகாங்ஷை )
இருப்பதால், முன் முன் ப்ரமாணங்களைக் கல்பிப்பதன் மூலம் அங்கத்வத்தை போதிக்கின்றன.
அது நடப்பதற்குள், முன் ப்ரமாணம் ஒன்று இருந்தால், அது வேகமாக தான் அந்த எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்துவிடும்.
ஆகையால், பின் ப்ரமாணம் தான் வேலை செய்வதை நிருத்தி விடும், வேலை செய்வதற்குத் தேவையான
எதிர்பார்ப்பு (ஆகங்ஷை ) இல்லாதபடியால்.
• ஆக, கல்பநா மூல உச்சேதத்தால் ஏற்படும் அப்ராப்த பாதம் (ஒன்று வந்து அடை வதற்கு முன்னே ஏற்படும் பாதம்)
என்று இது அழைக்கப்படுகிறது.

1-ஸ்ருதிக்கும் லிங்கத்துக்கு விரோதம் –

வேதத்தில் “ஐந்த்ரீ” என்ற பெயர் ஒரு மந்த்ரத்துக்கு இடப்பட்டுள்ளது. இந்த மந்த்ரம் இந்த்ரனைப் பற்றிப் புகழ்ந்து பாடுகிறது.
அதனால், இந்த்ரனோடு ஸம்பந்தப்பட்டபடியால் இதற்கு ’ஐந்த்ரீ’ என்று பெயர்.
ஜானகி ஜனகன் பெண் -தாசாரதி -தசரதன் பிள்ளை சொல்வது போல் ஐந்த்ரீ இந்த்ரனைப பற்றிய மந்த்ரம்
• ஆகவே, இந்த மந்த்ரத்தின் லிங்கம் (ஸாமர்த்யம்) என்ன என்று பார்த்தால் – “இந்த்ரனைப் பற்றி போதித்தல்” தான்.
ஆகவே, லிங்கத்தைப் பார்த்து இந்த மந்த்ரத்தை விநியோகம் செய்தால் (ஒரு செயலுக்கு அங்கமாக ஆக்கினால்),
அது இந்த்ரனுக்காகச் செய்யப்படும் கர்மமாக இருக்கவேண்டும் என்று தெரிகிறது.
• ஆனால், ஒரு வேத வாக்யம் உள்ளது – “ஐந்த்ரீ மந்த்ரத்தால் கார்ஹபத்யம் என்று அழைக்கப்படும் அக்நியைப் புகழ்ந்து பாடுவாய்”
என்று. இந்த கட்டளையில், ’ஐ’ உருபால் கார்ஹபத்யம் உத்தேச்யம் என்றும், ’ஆல்’ உருபால் மந்த்ரம் கருவி என்றும் ஸ்பஷ்டமாகத்
தெரிகிறபடியால், இது ச்ருதி ப்ரமாணம் ஆகும்.
• ஆகவே, அக்நியை போதிப்பதற்கு இந்த மந்த்ரம் அங்கம் என்று சொல்லும் ச்ருதிக்கும், இந்த்ரனை போதிப்பதற்கு இந்த மந்த்ரம்
அங்கம் என்று சொல்லும் லிங்கத்துக்கும் முரண்பாடு உள்ளது.
• லிங்கம் என்பது தானாக அங்கத்வத்தை போதிக்காது, ச்ருதியைக் கல்பிப்பதன் மூலம் தான். அந்த கல்பனை நடப்பதற்குள் ஸித்தமாக
இருக்கும் ச்ருதி இந்த மந்த்ரத்ஸத “அக்நியை போதித்தல்” என்ற கர்மத்துக்கு அங்கமாக ஆக்கிவிடும்.
சக்தியால் லக்ஷணையால் கௌணீ விருத்தி மூன்றாலும் அர்த்தம் கொள்ளலாம் ஆகவே அக்னிக்கே என்று கொள்வதில் தப்பில்லையே –
• ஆகையால், மந்த்ரத்தின் ப்ரயோஜனத்திற்காக எதிர்பார்ப்பு முடிந்து விட்டபடியால், இனி அந்த லிங்கம் ஒரு ச்ருதியைக்
கல்பிக்கவே முயலாது.ப்ரத்யக்ஷ ஸ்ருதி இருக்க கல்பித்த ஸ்ருதி வேண்டாமே
• ஆகவே, ச்ருதி என்பது லிங்கத்தைக் காட்டிலும் ப்ரபலமானது –

2-லிங்கத்துக்கு வாக்யத்துக்கும் விரோதம் –

வைதிகச் செயல்களில் தேவதைக்குக் கொடுக்கப்படும் உணவுப் பொருளுக்கு ’ஹவிஸ்’ என்று பெயர்.
அந்த ஹவிஸ்ஸை பூமியில் வைப்பதற்கு ’ஸதநம்’ என்ற இடத்தைத் தயார் செய்ய வேண்டும்.
அடுத்து, அந்த ஹவிஸ்ஸை அந்த இடத்தில் வைப்பதற்கு ’ஸாதநம்’ என்று பெயர்.
• வேதத்தில் ஒரு மந்த்ரம், தனது இரண்டு பகுதிகளால் ஸதநம் செய்வதையும் ஸாதனம் செய்வதையும் கூறுகிறது.
ஹவிஸ்ஸைப் பார்த்தே சொல்லும் மந்த்ரம் -அதில் நீ அமர்வாய்-தஸ்மின் ஸீதே –
வாக்கியம் விநியோகமா லிங்கத்தால் விநியோகமா -சங்கை வருமே
ஆகையால், அந்தந்தப் பகுதியின் லிங்கத்தைப் (ஸாமர்த்யத்தைப்) பார்த்தால்,
முதல் பகுதி ஸதநம் செய்தலுக்கு அங்கமாகவும்,
இரண்டாவது பகுதி ஸாதநம் செய்வதற்கு அங்கமாகவும் இருக்க வேண்டும்.
• ஆனால், இவை இரண்டும் ஒரே வாக்யமாக (மந்த்ரமாக) இருக்கிறபடியால், வாக்ய ப்ரமாணத்தின் படி இரண்டு பாகங்களும்
சேர்ந்து தான், ஸதநம் செய்வதற்கோ ஸாதநம் செய்வதற்கோ அங்கமாக ஆக முடியும்.
• ஆகையால், லிங்கத்துக்கும் வாக்யத்துக்கும் முரண்பாடு உள்ளது.
• ஆனால் லிங்கம் தான் வாக்யத்தைக் காட்டிலும் ப்ரபலமானது,
ச்ருதியை மட்டும் கல்பிப்பதன் மூலம் வேகமாக அங்கத்வத்தை போதிக்கிற படியால். வாக்யம் என்பது லிங்கம், ச்ருதி என்று
இரண்டைக் கல்பித்து அங்கத்வத்தை போதிக்க வேண்டும், ஆகையால் துர்பலமானது.
• எனவே, இந்த எடுத்துக் காட்டில் மந்த்ரத்தை இரண்டாகப் பிரித்து,
முதல் பகுதி ஸதநம் செய்வதற்கு அங்கம் என்றும்,
இரண்டாவது பகுதி ஸாதநம் செய்வதற்கு அங்கம் என்றும் கொள்ள வேண்டும்.

3-வாக்யத்துக்கும் பிரகரணத்துக்கும் விரோதம் –

வேதத்தில் ஒரு கட்டளை உள்ளது –
“பௌர்ணமாஸீ என்ற கர்மத்தை முடித்துவிட்டு வைம்ருதம் என்ற யாகத்தைச் செய்ய வேண்டும்” என்று.
• இக் கட்டளை , தர்ச பூர்ண மாஸம் என்ற கர்மத்தின் ப்ரகரணத்திலுள்ளது
• தர்ச-பூர்ணமாஸம் என்று ஒரு வைதிக கர்மம் உள்ளது.
தர்சம் என்பது அமாவாஸ்யை யன்று செய்யப்படும் மூன்று யாகங்கள்.
பூர்ணமாஸம் என்பது பௌர்ணமி அன்று செய்யப்படும் மூன்று யாகங்கள்.
இந்த ஆறு யாகங்களுக்கும் சேர்த்து ஸ்வர்கம் தான் பலம் என்று வேதம் சொல்கிறது.
• ஆறு யாகங்களுக்கும் பொதுவாக ஒரே ப்ரகரணம் தான் உள்ளபடியால், ப்ரகரணம் என்ற ப்ரமாணத்தால் அங்கத்வத்தை
நிர்ணயித்தால், இந்த வைம்ருதம் என்ற யாகம் தர்சபூர்ணமாஸம் என்ற ஆறு யாகங்களுக்கும் அங்கம் ஆகும்.
• ஆனால், நாம் பார்த்த கட்டளையில், பூர்ணமாஸம் என்ற கர்மத்தை மட்டும் குறிக்கும் சொல் உள்ளபடியால்,
ஸமபி வ்யாஹாரம் (சேர்த்து படிக்கப்படுதல்) என்ற வாக்ய ப்ரமாணம் வைம்ருத்த்துக்கும்
பூர்ணமாஸம் என்ற கர்மத்துக்கும் மட்டும் தான் உள்ளது.
ஆகையால், வாக்ய ப்ரமாணத்தால் அங்கத்வத்தை அறிந்தால், வைம்ருதம் என்ற யாகம் பூர்ணமாஸம் என்ற
மூன்று யாகங்களுக்கு மட்டும்தான் அங்கம்.
• ஆகவே, வாக்யத்துக்கும் ப்ரகரணத்துக்கும் முரண்பாடு உள்ளது.
• ப்ரகரணத்ஸதக் காட்டிலும் வாக்ய ப்ரமாணம் வேகமாக அங்கத்வத்தை போதிக்கிறபடியால் ப்ரபலமானது.
ஆகையால், வைம்ருதம் என்ற யாகம் பூர்ணமாஸம் என்ற மூன்று யாகங்களுக்கு மட்டும்தான் அங்கம்.

4-பிரகரணத்துக்கும் ஸ்தானத்துக்கும் விரோதம்

வேதம் “ராஜாவாய் இருப்பவன் பெரிய ராஜ்யத்தை அடைய விருமிப்னால் ராஜ ஸூயம் என்ற
கர்மத்தைச் செய்ய வேண்டும்” என்று சொல்கிறது. ராட் விராட் சூராட் சாம்ராட் -மேல் மேல் உண்டே –
ராஜ ஸூயம் என்பது ஒரு யாகம் அல்ல, பற்பல யாகங்களின் கூட்டம்.
• அந்த ராஜஸூயத்தின் ப்ரகரணத்தில் தான் “பகடையைக் கொண்டு சூதாட வேண்டும்” என்ற கட்டளை உள்ளது.
• ராஜஸூயம், தனக்கு உதவி செய்யும் அங்கங்களைத் தேடுகிறது.
சூதாட்டம், தனது ப்ரயோஜநம் என்ன என்று எதிர்பார்க்கிறது.
ஆகையால், பரஸ்பர எதிர்பார்ப்பு என்கிற ப்ரகரண ப்ரமாணத்தின்படி பார்த்தால், சூதாடுதல் என்ற செயல்
ராஜஸூயம் என்ற யாகக் கூட்டத்திற்கு அங்கம்.
• ஆனால், ஸ்தாநம் என்ற ப்ரமாணத்தைப் பார்த்தால், இந்த சூதாட்டத்தை விதிக்கும் கட்டளை ,
“அபிஷேச நீயம்” என்ற யாகத்திற்கு அருகில் படிக்கப் பட்டுள்ளபடியால், அந்த யாகத்துக்கு
ஒரே சோம யாகம் அங்கம் -தான் அங்கம் என்று தோன்றுகிறது.
• ஆகவே, ப்ரகரணத்துக்கும் ஸ்தாநத்துக்கும் முரண்பாடு உள்ளது.
• ப்ரகரணம் என்பது வேகமாக வாக்யம், லிங்கம், ச்ருதி என்ற மூன்றை மட்டும் கல்பித்து,
சூதாட்டல் ராஜ ஸூயத்தின் அங்கம் என்று போதித்து விடும்.
ஸ்தாநமோ , ப்ரகரணம் வாக்யம் லிங்கம் ச்ருதி என்ற நான்கையும் கல்பித்து தான் அங்கத்வத்தை
போதிக்கவேண்டும். ஆகையால், அது பலம் குறைந்தது.
• ஆகையால், சூதாட்டம் என்ற செயல் ராஜ ஸூயம்
என்று அழைக்கப் படும் அனைத்து யாகங்களுக்கும் தான் அங்கம்.

5-ஸ்தானத்துக்கும் சமாக்யாவுக்கும் விரோதம் –

தர்சபூர்ணமாஸம் என்ற கர்மம் ஆறு யாகங்களின் கூட்டம் என்று பார்த்தோம்.
அதில் 3 யாகங்கள் தோசை போன்ற புரோடாசத்தாலும் ,
ஒன்று தயிராலும், ஒன்று பாலாலும் ஒன்று நெய்யாலும் செய்யப்பட வேண்டும்.
• அந்த தர்சபூர்ணமாஸத்தின் ப்ரகரணத்தில் தான் ஒரு மந்த்ரம் படிக்கப்பட்டுள்ளது –
“சுந்தத்வம் தைவ்யாய கர்மணே …” என்று. இது பாத்திரங்களைச் சுத்தம் செய்வதைப் பற்றி பேசுகிறது.
• இந்த மந்த்ரம் இருக்கும் வேதப் பகுதிக்கு “பௌரோடாசிக காண்டம்” (புரோடாசத்தோடு ஸம்பந்தப் பட்ட காண்டம்)
என்ற பெயர். ஆகையால்,ஸமாக்யா என்ற பெயரைக் கொண்டு பார்த்து அங்கத்வத்தை முடிவு செய்தால்,
இந்த மந்த்ரம் புரோடாசத்தால் செய்யப்படும் 3 யாகங்களின் பாத்திரங்களை சுத்தம் செய்யும் செயலுக்கு மட்டும் தான்
அங்கம் ஆகும். தயிர் பால் நெய் யாகங்களின் பாத்திரங்களுக்கு அல்ல.
• ஆனால், ஸ்தாநம் என்ற ப்ரமாணத்தைப் பார்த்தால், இந்த மந்த்ரம் தயிர் மற்றும் பாலால் செய்யப்பட வேண்டிய
யாகங்களுக்கு அருகில் தான் படிக்கப்பட்டுள்ளது. ஆகையால், ஸ்தாந ப்ரமாணத்தின் அடிப்படையில் பார்த்தால்
இந்த மந்த்ரம் தயிர் பால் யாகங்களின் பாத்திரங்களைச் சுத்தம் செய்வதற்கு தான் அங்கம்.
• ஆகையால், ஸ்தாநத்துக்கும் ஸ்மாக்யாவுக்கும் முரண்பாடு உள்ளது.
• ஸ்தாநம் தான் ஸமாக்யாவைக் காட்டிலும் பலம் பொருந்தியது,வேகமாக அங்கத்வத்தை போதிக்கிறபடியால்.
ஆகையால் இந்த மந்த்ரம் தயிர் பால் யாகங்களின் பாத்திரங்களை சுத்தம் செய்வதற்கு தான் அங்கம் –

நான்காவது பாதம் தொடங்கி எட்டாேது பாதம் முடியும் வரை முன் சொன்ன 6 ப்ரமாணங்களுக்குள்
எந்த இடங்களில் முரண்பாடு உள்ளது, எங்கு இல்லை என்று விசாரிக்கப்படுகிறது.
எந்த உக்திகளைக் கொண்டு விசாரம் என்பதில் தான் வேறுபாடு இவற்றுக்குள் –

நான்காவது பாதத்தின் சுருக்கம்

• இந்த இடத்தில், சில தர்மங்கள் புருஷார்த்தங்கள் என்றும், சில தர்மங்கள் க்ரத்வர்த்தங்கள் என்றும்
கூறுகிறார் ஸஜமிநி மஹரிஷி.
க்ரத்வர்த்தங்கள்–க்ரது -வைதிக கர்மம் யாகம் என்று அர்த்தம் -இது யாகத்துக்கு பயன்படும்
• எந்தச் செயல் புருஷனுக்கு நன்மையையோ தீமையையோ விளைக்கிறவதா, அது புருஷார்த்தம் ஆகும்.
• எந்தச் செயல் ஒரு யாகத்திற்கு (க்ரதுவுக்கு) தீங்கை / குறைபாட்டை விளைவிக்குமோ அது க்ரத்வர்த்தம் ஆகும்.
• வேதத்தில் பொதுவாக ஒரு கட்டளை உள்ளது – “பொய் சொல்லக் கூடாது” என்று. இதை மீறினால்,
அவனுக்குப் பாவம் ஏற்படும்.
• அதைத் தவிற, யாகத்தின் ப்ரகரணத்திலும் ஒரு கட்டளை உள்ளது – “பொய் சொல்லக் கூடாது” என்று.
இந்தக் கட்டளையை மீறினால், செய்யப்படும் யாகத்துக்கே குறை பாடு ஏற்பட்டு பலம் கிடைக்காமல் போகும்.
• ஆகையால், யாகம் செய்யும் போது பொய் சொன்னால், யாகமும் பயன் கொடுக்காது, செய்பவனுக்கும் பாபம் ஏற்டும்.

ஐந்தாவது பாதத்தின் சுருக்கம்

இந்தப் பாதத்தில் ப்ரதிபத்தி கர்மங்கள் சொல்லப் படுகின்றன.
• யாகத்தில் உபயோகிக்கப்பட்ட பொருட்களை அலட்சியமாகப் போடாமல் மதிப்போடு உபயோகப்படுத்தி முடிக்க வேண்டும்.
அப்படி யாகத்தில் உபயோகிப்பட்ட பொருட்களை அப்புறப்படுத்தும் செயல்கள் ப்ரதிபத்தி கர்மங்கள் எனப்படுகின்றன.
• நெல்லிலிருந்து எடுக்கப்பட்ட உமி, ரித்விக்குகள் சொரிந்து கொள்ள உபயோகிக்கும் மான் கொம்பு போன்ற அனைத்து
த்ரவ்யங்களையும் எப்படி அப்புறப்படுத்த வேண்டும் என்று வேதமே சொல்கிறது.
• தர்ச பூர்ண மாஸத்தில் உபயோகிக்கப்பட்ட புரோடாசத்தை நான்காகப் பிரித்து, ப்ரஹ்மா அத்வர்யு ஹோதா ஆக்நீத் என்கிற
நான்கு ரித்விக்குகளும் பிரித்து உண்ண வேண்டும். இது அவர்களின் நலனுக்காக அல்ல,
புரோடாசத்தை ப்ரதிபத்தி செய்வதற்காகத்தான்.
• ஸோம யாகத்தில், ஸோம ரஸத்தை வைத்து யாகம் செய்த பிறகு, மீதமிருக்கும் ரஸத்தை ரித்விக்குகள் உண்ண வேண்டும்.
சேஷம் உண்டு -வமனம்-வாயல் எடுத்தாலும் அதுக்கு பிராயச்சித்த மந்த்ரமும் உண்டு வேதத்தில்
• ’சமஸம்’ (உண்ணும் பாத்திரம்) என்ற பெயர் உள்ளபடியாலேயே அதில் ரித்விக்குகள் உண்ண வேண்டும் என்று தெரிகிறது.
ஹாரியோஜநம் என்ற பாத்திரத்தில் இருக்கும் ரஸத்தை அனைத்து ரித்விக்குகளும் பருக வேண்டும். ஒரே பாத்திரத்தில் பலர்
அருந்தினால் எந்த வரிசை , ஒருவரே பல முறை அருந்தினால் எதற்காக முதலில் அருந்த வேண்டும் என்று
எல்லாம் பல நியமங்கள் விசாரிக்கப்பட்டுள்ளன இந்த பாதத்தில் –
வஷட் மந்த்ரம் சொன்னவன் வஷட் காரன் முதலில் உண்ண வேண்டும்
ஆஹ்வானம் -அழைத்து அழைத்து முறைப்படி உண்ண வேண்டும்
இப்படி regulation உண்டு

ஆறாம் பாதத்தின் சுருக்கம் –

இந்தப் பாதத்தில் அநாரப்யோக்தி என்ற விஷயம் விசாரிக்கப்படுகிறது.
• வேதத்தில் பல யாகங்கள் சொல்லப்பட்டுள்ளன. ஒவ்வொரு யாகத்தையும் பற்றிப் பேசும்
வேதப் பகுதிகள் (ப்ரகரணங்கள்) உள்ளன.
அந்தந்த ப்ரகரணத்தில் சொல்லப்பட்ட அங்கங்கள் அந்தந்த யாகத்துக்கு அங்கம்.
• அப்படி எந்த ஒரு யாகத்தைப் பற்றின பேச்சையும் தொடங்காமல்,பொதுவாகவும் சில கட்டளைகள் உள்ளன.
அவற்றுக்கு தான் அநாரப்ய (யாகத்தைத் தொடங்காமல்) உக்தி (சொல்லப்பட்டது) என்று பெயர்.
• அப்படி விதிக்கப்பட்ட அங்கங்கள் அனைத்து யாகங்களுக்கும் அங்கங்களாக வேண்டும்.
ஆனால், அனைத்தையும் குறித்து விதிக்கத் தேவையில்லை . ப்ரக்ருதி யாகத்தில் மட்டும் விதித்தால் போதும்.

ஆஹவனீயம் ஹோமத்தில் தானே எல்லா ஹோமமும் பண்ண வேண்டும்
சமிந்தனம் -அக்னி வளர்க்க -இதற்கு –11மந்த்ரங்கள் உண்டு –
மூன்று தடவை முதல் மந்த்ரம் -கடைசி மந்த்ரம் மூன்று தடவை -இப்படி ஆவ்ருத்தி -15 ஆக பெருக்கி சொல்ல வேண்டும்
சப்த தச –17 -தடவை சொல்ல வேண்டும் என்று ஒரு யாகத்துக்கு விதிக்கும்
இப்படி மாறுவதை மட்டும் சொல்லும்

• வேதம் அனைத்து யாகங்களுக்கும் மறுபடியும் மறுபடியும் அங்கங்களைச் சொல்லாது.
ஒரு யாகத்திற்குத் தான் சொல்லும். அந்த யாகத்திற்கு ப்ரக்ருதி யாகம் என்று பெயர்.
மற்ற யாகங்களைச் சொல்லிவிட்டு, “முன் யாகத்தில் சொன்னது போல் செய்ய வேண்டும்” என்று சொல்லி விடும்.
ஏதாவது மாற்றங்கள் இருந்தால் அதை மட்டும் கூறிவிடும். அந்த யாகங்களுக்கு விக்ருதி யாகங்கள் என்று பெயர்.
• ஆகவே, அநாரப்யோக்தியான கட்டளைகள் ப்ரக்ருதி யாகத்திற்கு அங்கமாக ஒரு பொருளை
போதித்து விட்டால், அது தானாகவே மற்ற யாகங்களுக்கும் அங்கம் ஆகிவிடும்.

ஏழாம் பாதத்தின் சுருக்கம் –

ஏழாவது பாதத்தில் பல யாகங்களுக்குப் பொதுவாக உதவி செய்யும் அங்கங்கள் சொல்லப் படுகின்றன.
• எடுத்துக் காட்டுக்கு, தர்சபூர்ண மாஸத்தில் ஆறு யாகங்கள் உள்ளன.
அவற்றை ஸமமான பூமியில் வைத்துச் செய்யவேண்டும் என்று வேதம் கட்டளை யிடுகிறது.
அதற்கு வேதி என்ற ஒரு பூமியைத் தயார் செய்ய வேண்டும் என்றும் கூறுகிறது
• அந்த பூமி அனைத்து யாகங்களுக்கும் பொதுவானது . தனித்தனியாக ஆறு வேதிகளைச் செய்யத் தேவையில்லை –
• யஜமாநன் தானாகத்தான் யாகத்தில் அனைத்துச் செயல்களையும் செய்ய வேண்டும் என்பதில்லை .
அதற்காகச் சிலரை அழைத்துக் கொண்டு அவர்களுக்கு தக்ஷிணை கொடுக்க வேண்டும்.
அவர்களுக்கு தான் ரித்விக்குகள் என்று பெயர்.
• தர்சபூர்ணமாஸத்தைச் செய்ய ப்ரஹ்மா, அத்வர்யு, ஹோதா, அக்நீத் என்று நான்கு ரித்விக்குகள் தேவை
• ஸோம யாகத்ஸதச் செய்ய 16 ரித்விக்குகள் தேவை . அவர்களை நான்கு குழுமங்களாகப் பிரிக்கலம்
1. ப்ரஹ்மாவின் கூட்டம் – ப்ரஹ்மா, ப்ராஹ்மணாச்சம்ஸி , ஆக்நீத்ரன்,போதா
2. அத்வர்யுவின் கூட்டம் – அத்வர்யு, ப்ரதிப்ரஸ்தாதா, நேஷ்டா, உந்நேதா
3. ஹோதாவின் கூட்டம் – ஹோதா, ஸமத்ராவருணன், அச்சாவாகன்,க்ராவஸ்துத்
4. உத்காதாவின் கூட்டம் – உத்காதா, ப்ரஸ்தோதா, ப்ரதிஹர்தா,ஸூ ப்ரஹ்மண்யன்

எட்டாவது பாதத்தின் சுருக்கம்

எட்டாவது பாதத்தில், ஸ்வாமிக்காகச் செய்யப்படும் கர்மங்கள் சொல்லப்படுகின்றன.
• ஸ்வாமீ என்பது யஜமாநன் தான். யாகத்தைச் செய்கிறபடியால் யஜமாநன் என்று பெயர். யாகத்தின் பயனை
அடைந்து அநுபவிக்கிறபடியால் அவருக்கே ஸ்வாமீ என்று பெயர்.
• அவர் யாகம் செய்யத் தேவையான தகுதிகள் சில. அவற்றைத் தவிற வேதம் வேறு சில ஸம்ஸ்காரங்களையும்
சொல்லுகிறது –ஷவரம் செய்தல், பட்டு உடுத்துதல், ஆபரணங்களை அணிதல், முதலானவை .
• இவை எல்லாம் போக்த்ரு -ஸம்ஸ்காரங்கள் என்று சொல்லப்படுகின்றன. யாகத்தின் பயனை அநுபவிக்கும்
போக்தா தான் யஜமாநன். அவன் யாகத்தின் பயனைப் பெறவேண்டும் என்றால், இந்த ஸம்ஸ்காரங்களை அவனுக்குச்
செய்ய வேண்டும் என்று வேதம் கூறுகிறது.
• இந்த ஸம்ஸாரங்கள் யஜமாநன் தானே செய்து கொள்பவை ,
மற்ற ரித்விக்குகள் அவருக்காகச் செய்து கொடுப்பவை என்று பல வகைகள் உள்ளன.
• இவை எல்லாம் முன்றாவது அத்யாயத்தின் இறுதியான எட்டாவது பாதத்தில் விசாரிக்கப் பட்டுள்ளன.

————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ .வே. வேளுக்குடி ரெங்கநாதன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கணாதர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ நியாய மீமாம்ச வேதாந்த பாடங்கள்–ஸ்ரீ உ .வே. வேளுக்குடி ரெங்கநாதன் ஸ்வாமிகள்–பகுதி 1 : ந்யாய சாஸ்த்ரம்– பாடங்கள் -25-32—

March 24, 2021

ஒன்பது த்ரவ்யங்கள்
24 குணம்
சப்த பதார்த்தங்கள்
லக்ஷணம் பரீஷை பார்த்தோம்
ப்ரமேயம்
பிரமாணம்
ஞானம் எப்படி ஏற்படும் -வகைகள் என்ன -ப்ரத்யக்ஷம் இத்யாதி -இவற்றின் தன்மைகள்-சரியான அறிவு என்ன
ப்ராசீன நவீன நியாயம் -இவற்றைப் பார்ப்போம் –

————–

பாடம் –25-பிரமாணம்

ப்ரமேயம் பிரமாணம் பிரமாதா மூவரும் சாத்விக -கூடி என்றும் எப்பொழுதும் ஜெயிக்க வேண்டும்
மாண மேய சித்தி -பிரமாணம் கொண்டே ப்ரமேயம் சித்திக்கும் –

ஞானம் என்னும் ஆத்மாவின் குணம் ஸ்ம்ருதி -அனுபவம் -என்ற இரண்டு வகை –
அனுபவம் -யதார்த்த அனுபவம் என்றும் அயதார்த்த அனுபவம் என்று இரண்டு வகை
யதார்த்த அனுபவத்துக்கு ப்ரமா என்ற மற்ற ஒரு பெயரும்
அயதார்த்த அனுபவத்துக்கு அப்ரமா -அல்லது பிரமம் -என்ற மற்ற ஒரு பெயரும் உண்டு

அப்படிப்பட்ட ப்ரமா என்னும் உண்மை அறிவுக்கு விஷயமாக -அறியப்படும் பொருளாக இருக்கும்
பொருளுக்கு ப்ரமேயம் என்று பெயர்
அந்த ப்ரமா என்னும் ஞானத்தை உடைய ஆத்மாவுக்கு ப்ரமாதா என்று பெயர்
அந்த ப்ரமா வை உண்டு செய்யும் கருவிக்கு ப்ரமாணம் என்று பெயர்
ப்ரமா-யின் கரணம் தான் ப்ரமாணம் என்ற முறையில் இந்தச் சொல் ஏற்படுகிறது

ப்ரமேயங்கள் பதார்த்தங்கள் த்ரவ்யம் இத்யாதி பிரமாதா முன்பு பார்த்தோம்
இனி பிரமாணம் பார்ப்போம்
விக்ரஹ வாக்கியம் -பிரித்துப் பொருள்
நான்கு கால்களை உடையது நாற்காலி
லோக நாதன் -லோகங்களுக்கு நாதன் -லோகம் எதுக்கு நாதனோ
ராம தாசன் இப்படி
ப்ரமாவின் கரணம் -பிரமாணம் –

கரணம் என்றால் என்ன என்று அறிய
காரணம் என்றால் என்ன என்று அறிய வேண்டும்
காரணம் என்றால் என்ன என்று அறிய காரியம் என்றால் என்ன என்று அறிய வேண்டும்

காரியம்
எந்தப் பொருள் உண்டாகிறதோ அதுக்குக் காரியம் என்று பெயர்
ஆகாசம் திக் ஆத்மா இவற்றைக் கார்யம் என்று சொல்ல முடியாதே நித்தியமான படியால் -அநாதி யான படியால் –
ஒரு காலத்தில் இல்லாமல் இருந்து பிறகு உண்டாகக் கூடிய பொருளை காரியம் என்று அழைக்கிறோம்
ஒரு பொருளின் தோற்றம் -உத்பத்திக்கு -முன்பு அந்தப் பொருளின் அபாவம் தான் இருக்கும் –
இதுக்கு ப்ராக் அபாவம் என்று பெயர்
ஆகவே காரியம் என்று அழைக்கப்படும் பொருள்கள் அனைத்துக்கும் ப்ராக் அபாவம் கண்டிப்பாக இருக்கும்
ப்ராக் அபாவம் இல்லாத பொருள்கள் ஆகாசம் காலம் ஆத்மா போன்ற தோன்றாத நித்யமான பொருள்கள் தான்

எந்த ஒரு பொருளுக்கு ப்ராக் அபாவம் உள்ளவையே கார்யம் ஆகும் -இதுவே லக்ஷணம்
எந்தப் பொருளின் அபாவத்தைச் சொல்லுகிறோமோ அதற்கு பிரதியோகி என்று பெயர்
இருக்கும் இடம் அநு யோகி பிரதியோகியின் எதிர்மறை –
அந்தத் தன்மைக்கு பிரதியோகித்வம் என்று பெயர்
கார்யம் என்று சொல்லும் பொருளுக்கு ப்ராக் அபாவம் உண்டு என்று பார்த்தோம்
அதாவது ப்ராக் அபாவத்தின் பிரதியோகியாய் இருக்கும் பொருள் தான் காரியம் என்றும்
அழைக்கப்படுகிறது என்றும் சொல்லலாம்
ப்ராக பாவத்துக்கு பிரதி யோகி யாக உள்ளதே கார்யத்வம் லக்ஷணம் என்றது ஆயிற்று –

காரணம்
காரியம் என்று ஓன்று இருந்தால் அதற்கு காரணம் என்ற ஓன்று கண்டிப்பாக இருக்க வேண்டும்
காரணம் என்றால் என்ன என்று பார்ப்போம்
ஒரு வஸ்து உண்டாவதற்கு முன் வினாடியில் எந்தப் பொருள் தவறாமல் இருக்கிறதோ
அந்த வஸ்துவுக்கு அந்தப் பொருள் காரணம் என்று சொல்லப் படுகிறது
ஒரு பொருள் உண்டாவதற்கு முன் வினாடியில் அதன் காரணம் இருந்து இருக்க வேண்டும்
ஒரு காரணம் தானே இல்லாத போது தன்னுடைய காரியத்தை ஏற்படுத்த முடியாது
ஆகையால் முன் வினாடியில் இருப்பது என்பது அவசியம்
பூர்வ வ்ருத்தி –முன் க்ஷணத்தில் இருப்பவை எல்லாம் காரணம் ஆக மாட்டாதே –
ஏதோ ஒரு குடம் உண்டாகும் போது அருகில் ஒரு கழுதையோ இருந்து இருக்கலாம்
ஆனால் தவறாமல் அனைத்து குடங்கள் உண்டாவதற்கு முன்பும் அவ்விடத்தில் சுவரோ கழுதையோ
இருக்கும் என்று சொல்ல இயலாது
ஆகையால் அவை குடத்துக்கு காரணங்கள் ஆக மாட்டாதவை ஆகும்
நியத பூர்வ வ்ருத்தி -தவறாமல் முன் க்ஷணத்தில் இருப்பதே காரணத்தின் -லக்ஷணம் –

கரணம்
எவை தவறாமல் இருக்கும் என்றால்
மண் -கபாலங்கள் -குயவன் -சக்கரம் -தடி -ஈஸ்வரன் -காலம் -திக் -அத்ருஷ்டம் -முதலியவை
அவற்றுள் ஈஸ்வரன் தொடக்கமானவர்கள் அனைத்து கார்யங்கள் உண்டாவதற்கு முன் வினாடியில் தவறாமல் இருப்பார்கள்
ஆகையால் அவை உலகில் உள்ள அனைத்துப் பொருள்களுக்கும் காரணம்
ஆகையால் சாதாரண காரணம்-Common Causes- என்று அழைக்கப் படுகின்றன

மண் குயவன் முதலியவை குடம் உண்டாவதற்கு முன் வினாடியில் மட்டும் தான் இருக்கும்
ஆகையால் குடத்துக்கு மட்டுமே காரணம் ஆகும்
ஒரு புடவைக்கோ நாற்காலிக்கோ குயவனும் மண்ணும் தேவை இல்லை
ஆகையால் அவற்றுக்கு அசாதாரண காரணங்கள் -Special Causes-என்று பெயர்
அந்த அசாதாரண காரணத்துக்குத் தான் கரணம் என்ற மற்ற ஒரு பெயர் கொடுக்கப் பட்டு உள்ளது
நெசவாளி குடத்துக்கு காரணம் ஆக மாட்டார் போன்ற வியவஸ்தை உண்டே –

நியத பூர்வ வ்ருத்தி -காரணம் என்றவாறு –
கார்யத்துக்கு பிரதி யோகியாக இருப்பதே காரணம்
ஞானத்துக்கு ப்ராக் அபாயம் -ஞானம் இல்லாமல் இருக்க படிக்க போகிறோம்
ஞானம் கார்யம் -ப்ரமா-யதார்த்த ஞானம்
இதுக்குத் தனிப்பட்ட காரணமே கரணம் –

ப்ரமா கரணம் -ப்ரமா என்ற கார்யம் உண்டாவதுக்குத் தனிப்பட்ட காரணம் பிரமாணம்
ப்ரத்யக்ஷம் -அநு மிதி உபமிதி சாப்த போதம் -நான்குக்கும்
நான்கு பிரமாணங்கள் -உண்டே
ப்ரத்யக்ஷம் -அனுமானம் -உபமானம் -சாப்தம் இவை நான்கும் அந்த நான்குக்கும்
ப்ரத்யக்ஷம் என்பது ஞானத்துக்கும் இந்த்ரியங்களுக்கும் ஒரே சொல்

லக்ஷண ஞானமும் வேண்டும் பிரமாணமும் வேண்டும் பிரமேயங்களை அறிய –
இவற்றின் விவரணம் பின்பு பார்ப்போம்

காரணம் மூன்று வகைப்படும்
சமவாயி காரணம் -Inherent Cause-material cause-
அசமவாயி காரணம்
நிமித்த காரணம் -Efficient or Instrumental Cause

சமவாயி காரணம்
ஒரு பொருள் உண்டாகும் பொழுது எந்த வஸ்துவில் சமவாயம் என்கிற சம்பந்தத்தால் இருந்து கொண்டு உண்டாகுமோ –
அந்தப் பொருளுக்கு அந்த வஸ்து சமவாயி காரணம் -என்று சொல்லப் படுகிறது
துணி -என்ற கார்யம் உண்டாகும் பொழுது
துணி என்கிற அவயவி -நூல்கள் என்கிற அவயவங்களில் சமவாய சம்பந்தத்தால் இருந்து கொண்டு தான் தோன்றும்
அவயவிக்கும் அவயவங்களுக்கும் இடையில் சமவாயம் என்கிற சம்பந்தம் இருக்கிறபடியால் –
ஆகையால் நூல்கள் தான் துணியின் சமவாயி காரணம்

அதே போல் அந்தத் துணியில் இருக்கும் நிறம் சுவை மணம் போன்ற குணங்களும்
உத்க்ஷேபணம் முதலான செயல்களும் அந்தத் துணியில் சமவாய சம்பந்தத்தால் இருந்து கொண்டு தான் உண்டாகின்றன
குணங்களுக்கும் கிரியைகளுக்கும் அவற்றின் இருப்பிடங்களுக்கு இடையில் சமவாயம் என்கிற சம்பந்தம் உள்ளபடியால்
ஆகையால் குணங்களுக்கும் கிரியைகளுக்கும் அவை இருக்கும் பொருள் தான் சமவாயி காரணம்

ஆத்மாவில் ஞானம் சுகம் இச்சை இத்யாதி
ஞானம் குணம் ஆஸ்ரயமான ஆத்மா இடத்தில் சமவாய காரணம்
சமயாவ சம்பந்தத்தால் ஏற்படுவது –

அசமவாயி காரணம் -இரண்டு வகைப்படும்
ஒரு கார்யப் பொருள் தன்னுடைய சமவாயி காரணத்தில் இருந்து உண்டாகும் பொழுது அந்த சமவாயி காரணத்தில்
சமவாய சம்பந்தத்தால் இருந்து கொண்டு இந்தக் காரியத்தை உண்டாக்கும் ஒரு வஸ்துவுக்கு அசமவாயி காரணம் என்று பெயர்
துணி உண்டாக நூல்கள் மட்டும் இருந்தால் போதாது
அவற்றுள் சம்யோகம்- சேர்க்கை -ஏற்பட வேண்டும் –
ஆகையால் நூல்களின் சேர்க்கையும் -அவயவங்கள் சம்யோகமும் -துணி -அவயவி -உண்டாக ஒரு காரணம்
நூல்கள் என்கிற சமவாயி காரணத்தில் இருந்து துணி என்ற கார்யம் உண்டாகும் பொழுது அந்த நூல்கள்
சமவாயி காரணத்தில் சமவாய சம்பந்தத்தால் இருக்கக் கூடிய சம்யோகமும் சேர்க்கையும் -துணிக்குக் காரணம் ஆகிறது
ஆகையால் நூல்களின் சேர்க்கை துணிக்கு அசமவாயி காரணம் என்று சொல்லப்படுகிறது –

குருத்வம்
கிரியை -கிரியாவான் -இடையில் சமவாய சம்பந்தம்
பந்து விழுவது
பந்தில் எடை குருத்வம் -பந்தின் இடத்தில் சமவாயம் சம்பந்தம்
எடை விழுவதும்- கிரியைக்கு அசமவாய காரணம் போல்
முன் க்ஷணத்தில் கட்டாயம் இருப்பதால் காரணம்
விழுவதுக்கு பந்து சமவாய சம்பந்தம்
குருத்வம் விழுவதும் அசமவாயி காரணம்

துணி போன்ற ஒரு அவயவி
நூல்கள் போன்ற தனது அவயவங்களில் இருந்து உண்டாகும் பொழுது அந்தத் துணியில்
எந்த நிறம் சுவை மணம் வெப்பம் அளவு ஆகியவை இருக்க வேண்டும் என்பது அந்த அவயவங்களில் இருக்கும்
நிறம் சுவை மணம் ஆகியவற்றைப் பொறுத்தது
ஆகவே நூல் என்ற சமவாயி காரணத்தில் இருந்து துணி என்ற கார்யப் பொருள் உண்டாகும் பொழுது
அந்த சமவாயி காரணத்தில் இருக்கும் ரூபம் ரசம் முதலியவை கார்யப் பொருளில் இருக்கும் ரூபம் ரசம்
முதலியவற்றுக்கு அசமவாயி காரணம் ஆகின்றன
இது மற்ற ஒரு வகையான அசமவாயி காரணம்

நிமித்த காரணம்
ஒரு பொருள் உண்டாகத் தேவைப்படும் காரணங்களுக்குள் சமவாயி காரணமாகவோ
அசமவாயி காரணமாகவோ இல்லாமல்
ஆனால் அந்தக் காரியப் பொருளைக் குறித்துக் காரணமாக இருக்கும் அனைத்துமே
நிமித்த காரணம் என்று அழைக்கப் படுகின்றன
குடத்துக்கு சமவாயி காரணம் அதன் அவயவங்களான கபாலங்கள் மண்
அசமவாயி காரணம் -அந்தக் கபாலங்களின் -அவயவங்கள் -சேர்க்கை -சம்யோகம்
ஆகவே இவ் விரண்டையும் தவிர்ந்த குயவன் சக்கரம் கடவுள் காலம் திசை அதிருஷ்டம் போன்றவை அனைத்தும்
குடத்தின் நிமித்த காரணங்கள் தான் –

————–

பாடம் –26-ப்ரத்யக்ஷ பிரமாணம்

ப்ரமா என்று அழைக்கப்படும் யதார்த்த அனுபவம் -நான்கு வகைகள்
ப்ரத்யக்ஷம் முதல் வகை
அக்ஷம் -என்றால் இந்திரியம் -ப்ரதி என்றால் முன்னால்-இந்திரியங்களுக்கு முன்னால் இருக்கும் பொருள்களைப்
பற்றிய யதார்த்த அனுபவம் தான் ப்ரத்யக்ஷம் என்னப்படும் –
ப்ரத்யக்ஷ ப்ரமா-புலன்களால் ஏற்படும் எதார்த்த அனுபவம்
அறிவுக்கும் அறிவுக்கு கருவியாக உள்ள புலன்களுக்கும் ப்ரத்யக்ஷம் –
இந்திரிய அர்த்த சந்நிகர்ஷ ஜன்ய ஞானம் ப்ரத்யக்ஷம் –பொருளுக்கும் இந்திரியங்களுக்கு தொடர்பு இருந்தால் தானே அறிவு ஏற்படும் –
இந்த்ரியத்துக்கும் கிரஹிக்கப்படும் பொருளுக்கும் அர்த்தத்துக்கும் இடையில் உள்ள தொடர்பால் ஏற்படக்கூடிய ஞானம்
என்பது தான் ப்ரத்யக்ஷ ப்ரமாவின் லக்ஷணம்
அப்படிப்பட்ட ப்ரத்யக்ஷம் என்னும் ப்ரமாவிக்குக் காரணமாக இருக்கக் கூடியவை இந்திரியங்கள்
அவற்றுக்கும் பிரத்யக்ஷம்-ப்ரத்யக்ஷ பிரமாணம் என்று பெயர் –

ப்ரத்யக்ஷம் இரண்டு வகைப்படும்
ச விகல்பகம் என்றும் நிர் விகல்பகம்

ச விகல்பகம்
விகல்பம் என்றால் பிரிவு -விகல்பங்களோடே பிரிவுகளோடே கூடிய ப்ரத்யக்ஷம் ச விகல்பகம் எனப்படும்
ஞானம் என்கிற குணத்தில் பகுதிகளோ இருக்க முடியாதே
ஆகவே ஞானத்தின் பிரிவுகள் என்றால் ஞானத்தால் அறியப்படும் விஷயங்களின் பிரிவுகளே ஆகும்
விசேஷயத்தில் பிரிவுகள் என்றால்
விசேஷ்யம்
பிரகாரம்
சம்சர்க்கம் –போன்ற பாகுபாடுகள்

எந்த ஒரு ஞானமும் தன்மைகளுடன் கூடிய விஷயத்தையே கிரகிக்கும்
சிவப்பான குடம் என்ற அறிவு-சிவப்பு நிறம் என்ற குடத்தோடே கூடிய குடமாகிய த்ரவ்யம் என்பதையே கிரகிக்கும்
இது குடம் என்ற அறிவு கூட குடத்தன்மை என்கிற சாமான்யத்தோடு கூடினதாக கண் முன்னே இருக்கும் த்ரவ்யத்தை க்ரஹிக்கிறது
அப்படி ஞானத்தால் கிரஹிக்கப்படும் தன்மைக்கு -பண்புக்கு -சிவப்பு நிறத்துக்கு -தர்மம் பிரகாரம் விசேஷணம் என்ற பெயர்
அந்தப் பண்பை உடைத்தாய் இருக்கும் கிரஹிக்கப்படும் பொருளுக்கு -குடத்துக்கு -தர்மீ -விசேஷ்யம் -என்று பெயர்
அந்தக் குடத்துக்கும் சிவப்பு நிறத்துக்கும் இடையில் இருக்கும் சமவாயம் என்கிற சம்பந்தத்துக்கு சம் சர்க்கம் என்று பெயர்
இப்படி இந்தப் பகுதி பிரகாரம்
இந்தப் பகுதி விசேஷ்யம்
இது சம் சர்க்கம்
என்று எந்த ஞானத்தில் பிரித்து அறிய முடிகிறதோ அது ச விகல்பக ப்ரத்யக்ஷம் ஆகும்

நிர் விகல்பகம்
எந்த ஒரு ப்ரத்யக்ஷத்தால் அதில் கிரஹிக்கப்படும் பொருளை பிரகாரம் விசேஷ்யம் சம் சர்க்கம் என்று
பிரித்து அறிய முடியாதோ அந்த ப்ரத்யக்ஷம் நிர் விகல்பகம் எனப்படும்
இப்படி ஒரு ப்ரத்யக்ஷம் ஏற்படுவதை நம்மால் நேராக அறிய முடியாது
ச விகல்பகம் ஏற்பட்டால் மட்டும் தான் -நான் குடத்தை அறிந்தேன் -என்பதைப் போன்ற அறிவு ஏற்படும்
நிர் விகல்பகம் ஏற்பட்டால் இப்படி அறிவு ஏற்படாதே
ஆனால் நிர் விகல்பகம் என்ற ஒரு ப்ரத்யக்ஷம் இருக்க வேண்டும் என்று அனுமானத்தாலே அறியலாம்
தடியை உடைய மனிதன் -என்ற ஒரு அறிவு ஏற்படுகிறது
தடி பிரகாரம்
மனிதன் விசேஷ்யம்
ஸம்யோகம் தான் ஸம் சர்க்கம்
இப்படிப்பட்ட அறிவு ஏற்பட வேண்டும் என்றால் அதற்கு முன்னால் பிரகாரம் -தடியைப் பற்றிய அறிவு
இருந்து இருக்க வேண்டும் என்று உலகத்தில் காண்கிறோம்
ஆகையால் பிரகாரத்தைப் பற்றின அறிவு ஏற்பட்ட பிறகு தான் அந்த பிரகாரத்தோடே கூடின பொருளைப்
பற்றின அறிவு ஏற்பட முடியும் என்று தெரிகிறது
அந்த நியாயத்தைக் கொண்டு பார்த்தால் இது குடம் என்ற அறிவு ஏற்படுவதற்கு முன்பு பிரகாரமான
குடத் தன்மையைப் பற்றிய ஒரு அறிவு ஏற்பட்டு இருக்க வேண்டும்
அப்படி ஏற்படுவதாக நமக்குத் தெரியாத போதும் அனுமானத்தால் அது சித்திக்கிறது
அது தான் நிர் விகல்பகம்
அதில் பிரகாரம் விசேஷ்யம் போன்ற பிரிவுகள் கிடையாது

சந்நிஹர்ஷங்கள்
ப்ரத்யக்ஷ ப்ரமாவை உண்டாக்குவது இந்த்ரியத்துக்கும் அர்த்தத்துக்கும் ஏற்படக் கூடிய தொடர்பே என்று பார்த்தோம்
அந்த தொடர்பு தான் -சந்நிஹர்ஷம் -என்று அழைக்கப் படுகிறது
ஆறு வகையான -சந்நிஹர்ஷங்கள்-நமக்கு உபயோகப்படுகின்றன

கண்ணால் ஏற்படக் கூடிய -சிவப்பான குடம் விழுகிறது -என்ற ஒரு ஞானத்தைக் கொண்டு ஆராய்வோம்
இது ஓரு ப்ரத்யக்ஷ ப்ரமா -இந்த ஞானத்தில்
1-குடம் -என்கிற த்ரவ்யம் –
2-குடத்தில் இருக்கும் கடத்வம் -குடத்தன்மை என்ற சாமான்யம்
3-குடத்தில் இருக்கும் சிவப்பு நிறம் -ரக்த ரூபம் -என்ற குணம்
4-அந்த ரூபத்தில் இருக்கும் ரூபத்வம் நிறத்தன்மை என்ற சாமான்யம்
5-குடத்தில் இருக்கும் விழுதல் என்ற கர்ம-கிரியை -செயல்
6-அதில் இருக்கும் கர்மத்வம் -செயல் தன்மை என்கிற சாமான்யம்
என்கிற ஆறு விஷயங்கள் கிரஹிக்கப் படுகின்றன
ஒரு ப்ரத்யக்ஷ ப்ரமாவில் ஒரு பொருள் விஷயம் ஆக வேண்டும் என்றால் அந்த ப்ரமாவை உண்டு செய்யும்
புலனுக்கும் அந்தப் பொருளுக்கும் கண்டிப்பாக ஏதோ ஒரு தொடர்பு இருக்க வேண்டும்

சிவப்பான குடம் விழுகிறது
குடம் முதல் நிலை -த்ரவ்யம் சஷுஸால் கிரகிக்கும் இந்திரியம் சென்று விரிந்து குடம் தொட்டு –
த்ரவ்யம் தொட்டால் சம்யோகம் தானே -குடத்தையும் குடத்தன்மையும்
ரூபமும் ரூபத்வம் -குணம் குணத்தன்மை -சமவாயம் சம்பந்தம் இவற்றுக்கும் -குடத்துக்கும் குணத்துக்கும் சமவாய சமவாயம்
கிரியை -செயல் தன்மை -இங்கும் சமவாயம்
இந்திரிய அர்த்த ஸந்நிகர்ஷம் -சம்யோக சம்பந்தத்தால்
சமயோகப்பட்டது சம்யுக்த சமவாயம் – -தொடர்பு உள்ளவை-

சந்நிஹர்ஷங்கள்-
1-சம்யோகம்
நாம் இந்த்ரியத்தைக் கொண்டு ஒரு த்ரவ்யத்தை க்ரஹிக்கத் தேவைப்படும் ஸந்நிகர்ஷம் -சம்யோகம் –
ஏன் என்றால்
இந்த்ரியமும் ஒரு த்ரவ்யம்
குடமும் ஒரு த்ரவ்யம்
த்ரவ்யங்களுக்கு இடையில் ஏற்படும் சேர்க்கை சம்யோகம் தான் ஆகும்

2-ஸம்யுக்த சமவாயம்
நாம் இந்த்ரியத்தைக் கொண்டு ஒரு குடத்தில் இருக்கும் குடத்தன்மை என்ற சாமான்யத்தையோ
சிவப்பு நிறம் என்ற குணத்தையோ
விழுதல் என்ற கிரியையோ
கிரஹிக்கத் தேவைப்படும் ஸந்நிகர்ஷம் -ஸம்யுக்த சமவாயம்
ஸம்யுக்தம் என்றால் சமயோகப்பட்டது
கண்ணோடு சம்யோகப் பட்ட குடத்தில் சமவாய சம்பந்தத்தால் குணம் கிரியை சாமான்யம் ஆகியவை இருக்கிற படியால்
கண்ணுக்கும் அவற்றுக்கும் நேரடித் தொடர்பு இல்லா விட்டாலும் பரம்பரத் தொடர்பு உண்டு
ஆகவே இங்கு சம்யுக்த சமவாயமே ஸந்நிகர்ஷம் ஆகிறது

3-ஸம்யுக்த சமவேத சமவாயம்
நாம் இந்த்ரியத்தைக் கொண்டு ஒரு குணத்தில் இருக்கும் சாமான்யத்தையோ
ஒரு கிரியையில் இருக்கும் சாமான்யத்தையோ
கிரஹிப்பதற்கு உபயோகப்படும் சந்நிகர்ஷம் ஸம்யுக்த சமவேத சமவாயம் என்று சொல்லப் படுகிறது
ஏன் என்றால்
கண்ணோடு சம்யுக்தமான தொட்டுக் கொண்டு இருக்கும் குடத்தில் சமவேதமான-சமவாய சம்பந்தத்தால் இருக்கக் கூடிய
குணத்திலோ கர்மத்திலோ சமவாய சம்பந்தத்தால் அந்த சாமான்யம் உள்ளது

கண்ணும் தோலும் தான் த்ரவ்யத்தை -புஷ்பத்தை கிரகிக்கும் -மூன்று சன்னிகர்ஷங்களும் இவற்றுக்கு

மூக்கு மணத்தையும் மணத்தன்மையும் தான் கிரகிக்கும்
ரசன இந்த்ரியமும் இப்படி –
நேரடியாகத் தொட்டு வந்த சமவாயம் இல்லையே இவற்றுக்கு
இரண்டு ஸந்நிகர்ஷங்கள் தான் இவற்றுக்கு

4-சமவாயம்
சப்தம் என்பது ஆகாசத்தில் குணம்
ஆகையால் தொலைவில் உண்டாகும் ஒரு சப்தமானது அடுத்து அடுத்து ஆகாசப் பகுதியில் மற்ற
ஒரு சப்தத்தை உண்டு செய்து நம் காது வரை வந்து அடைகின்றது
ஸ்ரோத்ர இந்திரியம் என்பது நம் காதுக்குள் இருக்கும் ஆகாசமே தான்
ஆகவே கடைசியாக ஸ்ரோத்ர இந்திரியம் என்கிற ஆகாசப் பகுதியிலேயே ஒரு சப்தம் உண்டாகிறது
அந்த சப்தத்தை கிரகிக்கத் தேவைப்படும் ஸந்நிகர்ஷம் சமவாயம் தான் –
ஏன் என்னில் ஸ்ரோத்ர இந்திரியம் என்பது ஆகாசம் தான்
சப்தம் என்பது ஆகாசத்தில் குணம் தான்
குணத்திற்கும் அது இருக்கும் இடத்துக்கும் இருக்கும் தொடர்பு சமவாயம் தான்
சம்யோகம் இங்கு வேண்டாமே –

5-சமவேத சமவாயம்
ஸ்ரோத்ர இந்திரியம் என்கிற ஆகாசப் பகுதியில் சமவாய சம்பந்தத்தால் இருக்கும் சப்தத்தில்
சமவாய சம்பந்தத்தால் சப்தத்வம் என்ற சாமான்யம் உள்ளது
ஆகையால் அதை க்ரஹிக்கத் தேவைப்படும் சன்னிகர்ஷம் சமவேத சமவாயம்
சப்தத்வம் சாமான்யம் கிரகிக்க இது வேண்டும்

6-விசேஷண விசேஷ்ய பாவம்
எந்த ஒரு இந்த்ரியமும் ஒரு அபாவத்தைக் கிரஹிக்கப் பயன்படும் ஸந்நிகர்ஷம்
விசேஷண விசேஷ்ய பாவம் என்று சொல்லப் படுகிறது
குடத்தின் அபாவத்தை உடையது பூமி என்ற அறிவில்
குடத்தின் அபாவம் விசேஷணம் ஆகிறது
பூமி விசேஷ்யம் ஆகிறது
கண்ணுக்கும் பூமிக்கும் இடையில் சம்யோகம் உள்ளது
ஆகையால் கண்ணோடு சமயோகப்பட்ட பூமிக்கு விசேஷணமாக அபாவம் இருக்கிற படியால்
அந்த விசேஷண விசேஷ்ய பாவம் தான் ஸந்நிகர்ஷம் என்று சொல்லப் படுகிறது

பூமியையும் குடத்தின் அபாவத்தையும் கண்ணால் பார்க்கிறோம் -இரண்டு உடன் தொடர்பு இந்த ஸந்நிகர்ஷம்
அபாவத்துக்கும் அது இருக்கும் இடத்துக்கும் சமவாய சம்பந்தம் இல்லை
குடத்தின் அபாவம் உடைய பூமி -விசேஷணம் உடன் கூடிய விசேஷ்யம் தானே இது –
கல்லில் மணம் இல்லை -கந்த அபாவம் -மூக்குக்கும் இதே போல் –

முதல் மூன்று சன்னிகர்ஷங்களைக் கொண்டு தான் சஷூஸ் த்வக் மனஸ் என்ற மூன்று இந்திரியங்களும்
த்ரவ்யங்களையும் -அதில் இருக்கும் குணம் முதலியவற்றையும்
அவற்றில் இருக்கும் சாமான்யங்களையும் கிரஹிக்கின்றன

க்ரண இந்த்ரியமும் ரசன இந்த்ரியமும் -இரண்டாவது மற்றும் மூன்றாவது சன்னிகர்ஷங்களைக் கொண்டு
குணங்களையும் அவற்றில் இருக்கும் சாமான்யங்களையும் கிரஹிக்கின்றன
அவை இரண்டும் த்ரவ்யத்தை கிரஹித்தும் சக்தி அற்றவை
ஆகையால் சம்யோகம் ஸந்நிகர்ஷத்தைக் கொண்டு எதையும் கிரஹிக்க மாட்டா

ஸ்ரோத்ர இந்த்ரியமும் சப்தத்தைக் கிரஹிப்பதற்கு சமவாயம் என்கிற சன்னிகர்ஷமும்
சப்தத்வம் என்கிற சாமான்யத்தை கிரகிக்க சமவேத சமவாயம் என்கிற சன்னிகர்ஷமும் உபயோகப் படுகின்றன

அனைத்து இந்த்ரியங்களாலும் அபாவத்தைக் கிரஹிப்பதற்கு தேவையான ஸந்நிகர்ஷம்
விசேஷண விசேஷ்ய பாவம் என்பது –

ஆறாவது-ஆந்திர இந்திரியம் -ஆத்மா த்ரவ்யம்- மனஸ்ஸூ -சம்யோகம்
ஆத்மத்வம் ஞானத்தவம் -சம்யுக்த சமயோக சன்னிகர்ஷம்
ஸூகம் துக்கம் இச்சை -ஆசையத்வம் சாமான்யம் காட்டிக் கொடுக்கும் -சம்யுக்த சமவேத சமவாயம்
சஷூஸ் த்வக் போல் மனஸ்ஸூ ஆறையும் பயன்படுத்தும்
என்னிடம் அறிவு இல்லை ஞானம் இல்லாதா ஆத்மா-விசேஷணம் விசேஷ்ய சன்னிகர்ஷம்

—————————–

பாடம் 27-அனுமானம் -அறிமுகம்

நியாய ஸாஸ்த்ரம் அனைத்துக்கும் தேவை -ஆன் வீஷிதி-அனுமானம் முக்கியமாகக் கொண்டதால் –
இதுவும் நியாய ஸாஸ்த்ரத்தையே சொல்லும்
ஈஷணம் -ப்ரத்யக்ஷம் சாஸ்திரம் கொண்டு முதன் முதலில் அறிவது –
அனுமானம் முன்னமே அறியப்பட்ட ஒரு பொருளை மீண்டும் நோக்குதல் -ஆராய்தல்
அனுமானம் தான் பிரதான விஷயம் இதுக்கு -நவீன நியாய சாஸ்திரம் அனுமானத்தை நுட்பமாக ஆராய்ந்து உள்ளார்கள்

நான்கு பிரமானங்களில் இரண்டாவது அனுமானம்
அநு -பின் தொடர்வது
மானம் – உண்டாக்கும் கருவி
ப்ரத்யக்ஷத்தாலோ சாஸ்திரத்தாலோ முன்னமே அறியப்பட்ட ஒரு பொருளை மீண்டும் நோக்குதல் -ஆராய்தல்
நான்கு வகை யதார்த்த அனுபவங்களில் -பிரமாக்களுக்குள் இரண்டாவது அநு மிதி என்று பார்த்தோம்
ப்ரத்யக்ஷம் என்றது ஞானத்துக்கும் கருவிக்கும் ஒரே பெயர் அது போல் இங்கு இல்லை
அனுமானம் வேறே அநுமிதி வேறே

அந்த அநுமிதிக்கு கருவியாக -கரணமாக- அசாதாரண காரணமாக இருப்பதே அனுமானம் என்று அழைக்கப் படுகிறது
ஆகையால் அநுமிதிக்குக் கரணமாக இருத்தல் தான் அனுமானத்துக்கு லக்ஷணம்
அநுமிதியின் லக்ஷணம் யாது என்னில்
பராமர்ச ஜன்ய ஞானம் அநுமிதி –
ஒரு ஞானம் வேறே ஒரு ஞானத்துக்கு காரணம்
இந்திரியங்கள் பொருள்கள் ப்ரத்யக்ஷ ஞானத்துக்கு காரணம் பார்த்தோம்
பராமர்சம் என்ற ஞானத்தில் இருந்து உண்டாகக் கூடிய ஞானம் தான் அநுமிதி
வியாப்தி விஸிஷ்ட பக்ஷ தர்மதா ஞானம் பராமர்ச
பராமர்சம் வியாப்தியைப் பற்றியும் பக்ஷ தர்மதா என்பதைப் பற்றியும் ஏற்படக் கூடிய ஞானம்
இப்படி அபேஷா -ஆசை உருவாக- லக்ஷணம் சொல்லி ஒன்றை அறிய வேறே ஒன்றைச் சொல்லி
பலவற்றையும் அறிய ஆசை வர -விளக்கும்

அநுமானம் செய்யும் முறை
முதலில் அடுப்பு விளக்கு போன்ற இடங்களில் புகை யையும் நெருப்பையும் சேர்ந்தே பார்ப்பதனால்
எங்கு எங்கு புகை இருக்கிறதோ அங்கு அங்கு நெருப்பு இருக்கும் என்று அறிந்து கொள் கிறோம்
அடுத்து ஒரு சமயம் மலையைப் பார்க்கிறோம் –
அந்த மலையின் மேல் ஒரு நெருப்பு உள்ளதோ இல்லையோ என்கிற சங்கை ஏற்படுகிறது
பிறகு மலையில் தொடர்ந்து புகை வருவதைக் கண்ணால் காண்கிறோம்
புகையைப் பார்த்த உடன் நாம் முன்னமே இருந்து வைத்த தகவல் நினைவுக்கு வருகிறது –
எங்கு எங்கு புகை உள்ளதோ அங்கு அங்கு நெருப்பு இருக்கும் என்று
முன் ஏற்பட்ட இரண்டு அறிவுகளையும் சேர்த்து நெருப்பு விட்டுப் பிரியாத புகையை உடையது
இந்த மலை என்ற அறிவு ஏற்படுகிறது
இது தான் பராமர்சம்
கடைசியாக -ஆகையால் -இந்த மலையில் கண்டிப்பாக நெருப்பு இருக்கிறது என்று அறிகிறோம்
இதுவே அநுமிதி ஆகும்

வியாப்தி
வியாபித்தல் -பரந்து இருத்தல் –
கடவுள் உலகு அனைத்தும் வியாபித்து இருக்கிறார் -அனைத்து இடங்களிலும் இருக்கிறார் என்றபடி –
சாஹசர்ய நியமம் வியாப்தி -என்று சொல்கிறார்கள் -அதாவது -தவறாமல் சேர்த்து இருத்தல்
நியத சாஹசர்யம் வியாப்தி

புகை எப்பொழுதுமே நெருப்பை விட்டு இருக்காது -அதாவது நெருப்பு இல்லாத இடத்தில் புகை ஒரு நாளும் இருக்காது –
புகை இருக்கும் இடங்களில் எல்லாம் நெருப்பு கண்டிப்பாக இருக்கும்
ஆகையால் நெருப்பின் வியாப்தி புகையில் உள்ளது என்று கூறுகிறோம்
நெருப்பு இருக்கும் இடங்களோ -புகை இருக்கும் இடங்களும் காய்ச்சின இரும்பு போன்ற சில இடங்களிலும் அன்றோ
எந்தப் பொருள் மற்ற ஒரு பொருளை விட்டு இருக்காதோ அந்தப் பொருள் தான் வியாப்தி என்ற தன்மையைக் கொண்டது –
அதற்கு வியாப்யம் என்று பெயர்
அந்த மற்ற ஒரு பொருளுக்கு வியாபகம் என்று பெயர்
புகை நெருப்பை விட்டு இருக்காது -ஆகையால் புகைக்கு வியாப்தி உள்ளது -புகைக்கு வியாப்யம் என்று பெயர்
நெருப்புக்கு வியாபகம் என்று பெயர்
நாம் உபயோகிக்கும் ஹேது புகை
ஸாத்யத்தை -நெருப்பை -விட்டுப் பிரியாததாகத் தான் இருக்க வேண்டும்
இல்லை என்றால் அனுமானம் செய்ய இயலாது –

பக்ஷ தர்மதா
அநுமிதி infer பண்ண -பக்ஷம் -சாத்தியம் -ஹேது -இவை மூன்றும் தேவை –
மலையில் புகை இருக்கிற படியால் நெருப்பு இருக்கிறது என்று அநுமானம் செய்கிறோம்
இதில் எந்தப் பொருளைப் பற்றி அனுமானம் செய்கிறோமோ அதற்குப் பக்ஷம் என்று பெயர்
இவ்விடத்தில் மலை தான் பக்ஷம்
அதில் தான் நெருப்பு உள்ளது என்று அநுமானம் செய்கிறோம்
அடுத்து அந்த பக்ஷத்தில் -எந்த ஒரு பொருள் -தன்மை இருப்பதாக அநுமானம் செய்கிறோமோ அதற்கு
ஸாத்யம் -சாதிக்கப் பட வேண்டியது என்று பெயர்
கீழ் உள்ள எடுத்துக் காட்டில் நெருப்பு தான் ஸாத்யம்
அதைத் தான் மலை என்னும் பக்ஷத்தில் இருப்பதாக அனுமானிக்கிறோம்
எந்தக் காரணத்தைக் கொண்டு நெருப்பு இருப்பதாக அனுமானம் செய்கிறோமோ
அந்தப் பொருளுக்கோ தன்மைக்கோ ஹேது -லிங்கம் -ஸாதநம்-என்று பெயர் –
ஆகவே ஏதோ ஒரு ஹேதுவைக் கொண்டு ஏதோ ஒரு பக்ஷத்தில் ஏதோ ஒரு சாத்யம் உள்ளது
என்று அறிவது தான் அனுமானம்
பக்ஷ தர்மதா என்றால்
பக்ஷத்தில் இருத்தல்
ஹேது என்று நாம் எதைச் சொல்கிறோமோ அது பக்ஷத்தில் இருக்க வேண்டும்
இல்லை என்னில் அதைக் கொண்டு ஸாத்யத்தை அறிய முடியாது
பக்ஷ தர்மதா என்றால் -பக்ஷத்தில் இருக்கும் தன்மை உடைய பொருளாக இருத்தல்

பராமர்சம்
பராமர்சம் என்றால் வியாப்தியையும் பக்ஷ தர்மதா என்ற தன்மையையும் பற்றிய அறிவு
நாம் அனுமானம் செய்யும் பொழுது ஒரு ஹேதுவைக் கொண்டு ஒரு ஸாத்யம் ஒரு பக்ஷத்தில் இருக்கிறது என்று அறிகிறோம்
இது சரியாக நடக்க அந்த ஹேதுவுக்கு இரண்டு தன்மைகள் அவசியமாகும்
அந்த ஹேது அந்த சாத்யத்தில் இருந்து பிரியாததாக -வியாப்யமாக – இருக்க வேண்டும் -அதாவது
அந்த ஸாத்யத்தினுடைய வியாப்தி அந்த ஹேதுவில் இருக்க வேண்டும்
இல்லை என்னில் இந்த ஹேது இருக்கிற படியால் இந்த சாத்தியமும் கண்டிப்பாக இருக்கும் என்று சொல்ல முடியாதே
அந்த ஹேது நமது பக்ஷத்தில் இருக்க வேண்டும்
இல்லை எனில் அதைக் கொண்டு எப்படி பக்ஷத்தில் சாத்தியம் உள்ளது என்று அறிய முடியும்
ஆகவே ஹேதுவுக்கு இருக்க வேண்டிய இரண்டு தன்மைகள் தான் வியாப்தியும் பக்ஷ தர்மதாவும்
இவ்விரண்டையும் உடையதாக ஹேதுவை அறியும் அறிவை தான் பராமர்சம் ஆகும்
நெருப்பை விட்டுப் பிரியாத புகையை உடையது இந்த மலை என்பது தான் பாரமர்சம் என்ற ஞானத்தின் வடிவம்
பொதுவாகச் சொன்னால்
இந்த சாத்யத்துக்கு வியாப்யமான இந்த ஹேதுவை உடையது இந்த பக்ஷம் என்பது தான் அதன் வடிவம்
இந்த அறிவு ஏற்பட்டு விட்டால் அடுத்து இந்த மலையில் நெருப்பு உள்ளது என்ற அநுமிதி ஏற்பட்டு விடும்
பராமர்சம் தான் அனுமானத்துக்கு கரணம் கருவி-

அனுமானம் இரண்டு வகைப்படும்
ஸ்வார்த்த அனுமானம் -பரார்த்த அனுமானம்

ஸ்வார்த்த அனுமானம்
ஒருவன் தன்னுடைய பயனுக்காகச் செய்யும் அனுமானம் ஸ்வார்த்த அனுமானம்-இதன் படிகள்
தானே அடுப்படி போன்ற இடங்களில் நெருப்புக்கும் புகைக்கும் உள்ள வியாப்தியை கிரஹித்து
பின்பு வேறு ஒரு நாள் பிரயாணிக்கும் பொழுது மலையைக் கண்டு
மலையில் நெருப்பு உள்ளதா இல்லையா என்ற சங்கை கொண்டு
மலையில் புகை இருப்பதைக் கண்டு
உடனே எங்கு எங்கு புகை இருக்கிறதோ அங்கு அங்கு நெருப்பு இருக்கும் என்கிற வியாப்தியை நினைவு படுத்திக் கொண்டு
கண்ணால் கண்டதையும் நினைவுக்கு வந்ததையும் சேர்த்து
நெருப்புக்கு வியாப்யமான புகையை உடையது இந்த மலை என்ற பராமர்சத்தை அடைந்து
அதில் இருந்து இந்த மலையில் நெருப்பு இருக்கிறது என்ற அநுமிதியை அடைந்தால்
அது ஸ்வார்த்த அனுமானம் ஆகும்

பரார்த்த அனுமானம்
மற்றவரின் பயனுக்காச் செய்யும் அனுமானம்
ஒருவன் முன் சொன்ன வகையில் தான் நெருப்பை அனுமானம் செய்து விட்டு அது மற்றவருக்குப் புரிவதற்காகச் செய்யும்
போதனையில் இருந்து மற்றவருக்கும் மலையில் நெருப்பு உள்ளது என்ற அறிவு வருகிறதோ
அதுவே பரார்த்த அனுமானம்
ஆத்மாவின் நித்யத்வம் அர்ஜுனனுக்கு சொல்ல பல சொல்லி புரிய வைத்தது போல்-

நியாயமும் அதன் ஐந்து அங்கங்களும்
பரார்த்த அனுமானத்துக்காக ஒருவன் மற்ற ஒருவனுக்குச் செய்யும் போதனைக்கு நியாயம் -என்று பெயர்
நியாயம் என்பதில்
ஐந்து அவயவங்கள் கண்டிப்பாக இருக்க வேணும் என்பர்

1-ப்ரதிஜ்ஜை-வாக்யம்-அந்த மலையில் நெருப்பு உள்ளது -thesis-
2-ஹேது-வாக்யம்-புகை இருக்கிற படியால் -reason-
3-உதாஹரணம்-வாக்யம்-எங்கு எங்கு புகை இருக்கிறதோ அங்கு அங்கு நெருப்பு இருக்கும் -அடிப்படியைப் போல் -ex amble
4-உபநயம்-வாக்யம்-அப்படி நெருப்பை விட்டுப் பிரியாத-நெருப்புக்கு வியாப்யமான புகையை உடையது தான் இந்த மலை -co relation
5-நிகமனம்-வாக்யம்-ஆகையால் நெருப்பை உடையது இந்த மலை -conclusion

இப்படி ஐந்து சொல் தொடர்களைப் பயன்படுத்தித் தான் மற்றவருக்கு மலையில் நெருப்பு இருப்பதைப் போதிக்க வேண்டும்

ஸ்வார்த்த அனுமானத்திலும் பரார்த்த அனுமானத்திலும் அநுமிதி என்ற ஞானம் ஏற்படுவதற்கு
கரணமாக-அசாதாரண காரணமாக -இருப்பது பராமர்சம் தான்
அநுமிதிக்கு கரணம் எதுவோ அது தான் அனுமானம் என்றும் பார்த்தோம்
ஆகையால் அனுமானம் என்னும் சொல் பராமர்சத்தைத் தான் குறிக்கிறது –
வியாப்தி ஞானத்துக்கே அனுமானம் என்பர் சிலர்-

————

பாடம் -28-அனுமானத்தின் வகைகளும் தோஷங்களும்

தத்வ சிந்தாமணி மங்கள ஸ்லோகம் –

அனுமானம் என்பது ஒரு ஹேதுவைக் கொண்டு ஒரு பக்ஷத்தில் ஒரு சாத்தியம் இருப்பதை அறிவது
ஹேது என்பதற்கு இரண்டு தன்மைகள் தேவை
1-வியாப்தியும்
2-பக்ஷதர்மதா வும்

வியாப்தியில் இரண்டு வகை உண்டு
1-அந்வய வியாப்தி
2-வியதிரேக வியாப்தி

அந்வய வியாப்தி
எங்கு எங்கு ஹேது உள்ளதோ அங்கு அங்கு சாத்தியம் உள்ளது என்று இரண்டு பொருள்களின்
இருப்புகளுக்கு இடையில் உள்ள வியாப்தி அந்வய வியாப்தி என்று சொல்லப்படும்

வியதிரேக வியாப்தி
எங்கு எங்கு சாத்தியம் இல்லையோ அங்கு அங்கு ஹேது இருக்காது என்று இரண்டு பொருள்களின்
அபாவங்களுக்கு இடையிலே உள்ள வியாப்தி வியதிரேக வியாப்தி ஆகும்

வியாப்தியின் தன்மையைக் கொண்டு ஹேதுக்கள் மூன்றாகப் பிரிக்கப்படும்
1-அந்வய வியதிரேகி –அந்வய வியாப்தி -வியதிரேக வியாப்தி இரண்டையும் உடையது
2-கேவல அந்வயி -அந்வய வியாப்தி மட்டுமே உடையது
3-கேவல வியதிரேகி -வியதிரேக வியாப்தி மட்டுமே உடையது –

அந்வய வியதிரேகி
அந்வயத்திலும் வியதிரேகத்திலும் வியாப்தியை ஹேது அந்வய வியதிரேகி என்று அழைக்கப் படுகிறது
நெருப்பு சாத்யமாக இருக்கும் பொழுது புகை போல் -புகைக்கும் நெருப்புக்கும் இடையில்
இரண்டு வகையான வியாப்தியும் உண்டே
எங்கு எங்கு புகை உள்ளதோ அங்கு அங்கு நெருப்பு உள்ளது -அடுப்பு விளக்கு போல் -என்று
வியாப்தியைச் சொல்லலாம் -எனவே அந்வய வியாப்தி உண்டு
எங்கு எங்கு நெருப்பு இல்லையோ அங்கு அங்கு புகை இல்லை -கடலில் போல் என்று எதிர்மறையிலும் கூறலாம் –
ஆகவே வியதிரேக வியாப்தியும் உண்டு
இப்படி இரண்டு வகையான வியாப்தியும் உடைய ஹேதுவுக்கு அந்வய வியதிரேகி -என்று பெயர் –

கேவல அந்வயி
அந்வய வியாப்தியை மட்டும் உடைய ஹேது கேவல அந்வயி -என்று அழைக்கப் படுகிறது –
த்ரவ்யத்வம் என்ற சாமான்யத்தை ஹேதுவாகக் கொண்டு
குடம் என்ற பக்ஷத்திலே பெயராலே குறிக்கப் படுதல் என்ற தன்மை உள்ளது என்று சாதிக்கும் பொழுது
எங்கு எங்கு த்ரவ்யம் உள்ளதோ அங்கு அங்கு பெயராலே குறிக்கப் படுதல் உள்ளது –
துணியைப் போலே கண்ணாடியைப் போலே என்று வியாப்தியை அறிய இயலும்
ஆகையால் பெயராலே குறிக்கப் படுதல் என்ற தன்மைக்கும் த்ரவ்யத்வம் என்ற சாமான்யத்துக்கும் இடையில்
அந்வய வியாப்தி உண்டு
எங்கு எங்கு பெயராலே குறிக்கப்படுதல் இல்லையோ அங்கு அங்கு த்ரவ்யத்வம் இல்லை –போலே
எதிர்மறையில் வியாப்தியை அறியவே முடியாது
உலகில் இருக்கும் பொருள்கள் அனைத்துமே பெயராலே குறிக்கப்படுவது தான்
ஆகையால் பெயராலே குறிக்கப்படுதல் இல்லா இடம் ஒன்றே உலகில் அறியப்படாதது -ஆகையால்
வியதிரேக வியாப்தியை கிரஹிக்க வழியே இல்லை
இப்படி அந்வய வியாப்தியை மட்டும் உடைய ஹேதுவுக்கு கேவல அந்வயி என்று பெயர்
உலகில் இருக்கும் அனைத்துப் பொருள்களிலும் இருக்கும் ஒரு தன்மையை சாத்யமாகக் கொண்டால் மட்டும் தான்
ஒரு ஹேது கேவல அந்வயி ஆகும்
இதே த்ரவ்யத்வம் என்ற ஹேதுவைக் கொண்டு வேறு ஒரு சாத்யத்தை சாதிக்க முயற்சித்தால் அப்பொழுது
இதே ஹேது அந்வய வியதிரேகியாக இருக்கலாம் –

கேவல வியதி ரேகி
வியதி ரேக வியாப்தியை மட்டும் உடைய ஹேது -கேவல வியதி ரேகி -என்று அழைக்கப் படுகிறது
கந்தம் -மணம் -என்ற ஹேதுவைக் கொண்டு பிருத்வீ என்ற பக்ஷத்தில் -மற்ற எட்டு த்ரவ்யங்களில் நின்றும் வேறுபாடு –
என்ற சாத்தியத்தை அனுமானம் செய்யும் பொழுது
எங்கு எங்கு மற்ற எட்டு த்ரவ்யங்களில் காட்டிலும் வேறுபாடு என்ற சாத்தியம் இல்லையோ
அங்கு அங்கு மணம் இருக்காது என்று சொல்லலாம்
ஜலம் முதலான எட்டு த்ரவ்யங்களில் காட்டிலும் வேறுபாடு இல்லாத இடம் ஜலம் முதலான எட்டு த்ரவ்யங்கள் தான்
அவற்றிலே எதற்கும் மணம் கிடையாதே
ஆகையால் வியதி ரேக வியாப்தி உண்டு
எங்கு எங்கு மணம் இருக்கிறதோ அங்கு அங்கு ஜலம் முதலான எட்டு த்ரவ்யங்களில் காட்டில் வேறுபாடு இருக்கும்
என்ற அந்வய வியாப்தியை நம்மால் அறியவே முடியாது
ஏன் எனில் ப்ருத்வீ முழுவதுமே பக்ஷமாகி விட்டது -அதைத் தவிர்ந்த எந்த இடத்திலும் மணம் என்ற ஹேது இருக்காது –
ஆகையால் ஹேதுவுக்கும் வியாப்தியை அறிய இடமே இல்லை
இப்படி வியதி ரேக வியாப்தியை மட்டும் உடைய ஹேதுவுக்கு கேவல வியதி ரேகி என்று பெயர்
ஒரு ஹேது இருக்கும் அனைத்து இடங்களையுமே ஆக்கினால் மட்டும் தான் அந்த ஹேது கேவல வியதி ரேகி ஆகும்
இதே மணம் என்ற ஹேதுவைக் கொண்டு ஒரு குடம் என்ற பக்ஷம் ஜலம் முதலிய எட்டு த்ரவ்யங்களில் காட்டில்
வேறுபட்டது என்ற அனுமானம் செய்யப் பார்த்தால் மற்ற பிருத்வீ பொருள்களில் அந்வய வியாப்தியை கிரஹிக்க முடியும்
ஆகையால் இதே ஹேது அந்வய வியதி ரேகி ஆகும்

பக்ஷம் -ச பக்ஷம் -வி பக்ஷம்
பக்ஷம் -எந்த ஒரு பொருளில் சாத்யம் உள்ளதா இல்லையா என்று சந்தேகிக்கப் படுகிறதோ அது பக்ஷம் ஆகும்
ச பக்ஷம் -எந்த ஒரு இடத்தில் சாத்தியம் உள்ளது என்று நிச்சயிக்கப் பட்டுள்ளதோ அது ச பக்ஷம்
வி பக்ஷம் -எந்த ஒரு இடத்தில் சாத்தியம் இல்லை என்று நிச்சயிக்கப் பட்டுள்ளதோ அது வி பக்ஷம்

எடுத்துக் காட்டு
குடம் மணத்தை உடையது -பிருத்வீ யானபடியால் -என்ற அனுமானத்தை எடுத்துக் கொள்வோம்
சாத்யம் -மணம்
ஹேது -பிருத்வீயாய் இருத்தல் -பிருத்வீத்வம் என்ற சாமான்யம் -நிலத் தன்மை
இந்த அனு மானத்துக்கு முன் குடத்தில் மணம் உள்ளதா இல்லையா என்ற சந்தேகம் உள்ளது –
ஆக இப்படிப்பட்ட சந்தேகத்துக்கு விஷயமான குடம் தான் பக்ஷம் ஆகும்

மணம் என்ற சாத்யம் துணி மரம் போன்றவற்றில் உள்ளது என்ற நிச்சயம் நமக்கு உள்ளது
குடத்தில் மட்டும் தான் சந்தேகிக்கப் படுகிறது
ஆகையால் துணி மரம் ஆகியவை ச பக்ஷங்கள்

மணம் என்ற ஸாத்யம் ஜலம் தேஜஸ் வாயு ஆகாசம் போன்ற மற்றத் த்ரவ்யங்களில் இல்லை
என்ற நிச்சயம் நமக்கு உள்ளது -ஆகவே அவை வி பக்ஷங்கள்

ஹேத்வ ஆபாசங்கள்
சரியான ஹேதுக்களின் வகைகளையும் தன்மைகளையும் பார்த்தோம்
இனி தவறான பயன் இல்லாத ஹேதுக்களைப் பார்ப்போம்
அவற்றைக் கொண்டு நாம் விரும்பும் சாத்யத்தை நாம் தேர்ந்து எடுத்த பக்ஷத்தில் சாதிக்க முடியாது
இரண்டு கருத்தாளர்களுக்கு இடையில் வாதம் நடக்கும் போது நமது தத்வத்தை நிலைநாட்ட ஹேதுக்களைச் சொன்னால் மட்டும் போதாது
எதிர் கருத்திலும் அதை நிலை நாட்ட உபயோகப்படுத்தப்படும் ஹேதுக்களையும் தவறானவை என்றும் காண்பிக்க வேண்டும்
ஆகையால் நியாய சாஸ்திரம் பயில்வார்களுக்கு தவறான ஹேதுக்களையும் கண்டு அறியும் திறமையும் தேவை
இந்த தவறான ஹேதுக்களே ஹேது ஆபாசங்கள் என்று பெயர்
ஆபாசம் என்றால் தோற்றம்
இந்த ஹேதுக்கள் சரியான ஹேதுக்கள் போலே தோற்றம் அளித்தாலும் சரியானவை அல்ல –
ஆகவே ஹேது ஆபாசங்கள் -ஹேது போலே தோற்றம் அளிப்பவை -என்று அவற்றுக்குப் பெயர்
ஐந்து ஹேது ஆபாசங்கள் உள்ளன
1-ஸ வியபிசாரம் -straying reason
2-விருத்தம்
3-ஸத் ப்ரதிபக்ஷம்
4-அஸித்தம்
5-பாதிதம் -என்ற இந்த ஐந்தும்

ஸ வியபிசாரம்
வியபிசாரம் என்றால் வியாப்தி இல்லாமை
வியாப்தி என்பது ஒரு பொருள் இல்லாத இடத்தில் தானும் இல்லாமல் இருத்தல் என்று பார்த்தோம்
அப்படி ஒரு பொருளோடு மாறாத -தவறாத -தொடர்பைக் கொள்ளாமை தான் வியபிசாரம் ஆகும்
இதற்கு அனைகாந்திகம் -பல் முனைப்பட்டது -என்றும் பெயர்
அதாவது சாத்தியம் என்ற ஒரு பொருளோடு முனையோடே மட்டும் சம்பந்தப்படாமல் பல பொருள்களோடு முனைகளோடே இருத்தல்
இது மூன்று வகைப்படும்
1-A –சாதாரணம்
1-B –அசாதாரணம்
1-C –அநுப ஸம்ஹாரீ-non conclusive

1-A –சாதாரணம்
சரியான ஹேதுவானது சாத்யம் இல்லாத இடத்தில் இருக்கக் கூடாது -அது தான் வியாப்தி என்று பார்த்தோம்
எந்த ஒரு ஹேது சாத்யம் இல்லாத இடங்களிலும் இருக்குமோ அது சாதாரணம் ஆகும்
சாத்யத்தின் இருப்புக்கும் சாத்யத்தின் இல்லாமைக்கும் பொதுவான படியால் இது
சாதாரணம் -பொதுவானது -என்று அழைக்கப் படுகிறது
எடுத்துக்காட்டு மலை நெருப்பை உடையது -ஞானத்தால் அறியப் படுகிறபடியால் -என்று அனுமானம்
பக்ஷம் –மலை
சாத்யம் –நெருப்பு
ஹேது -ஞானத்தால் அறியப்படுதல்
இங்கு நாம் சொன்ன ஹேதுவானது நெருப்பு இருக்கும் இடங்களில் அடுப்பு விளக்கு போன்றவற்றிலும் இருக்கும்
நெருப்பு இல்லாத கடல் குளம் போன்றவற்றிலும் இருக்கும்
அடுப்பும் விளக்கும் எப்படி ஞானத்துக்கு விஷயம் ஆகின்றனவோ அதே போலே தானே கடலும் குளமும் ஆகின்றன –
ஆகையால் ஞானத்துக்கு விஷயமாய் இருத்தல் -ஞானத்தால் அறியப்படுதல் என்பது
சாத்யம் இருக்கும் இடங்களிலும் இருக்கும் -சாத்தியமான நெருப்பு இல்லாத இடங்களிலும் இருக்கும்
ஆகையால் இந்த ஹேது சாதாரணம் ஆகிறது –

1-B –அசாதாரணம்
சரியான ஹேதுவானது -ச பக்ஷங்களில் -சாத்யம் இருப்பதாக நிச்சயிக்கப் பட்ட இடங்களில்
சிலவற்றிலாவது இருக்க வேண்டும்
வி பக்ஷங்களில் -சாத்யம் இல்லாததாக நிச்சயிக்கப் பட்ட இடங்களில் -இருக்கக் கூடாது
அப்பொழுது தான் வியாப்தியை அறிய முடியும்
எந்த ஒரு ஹேது ச பக்ஷத்திலும் இல்லாமல் எந்த வி பக்ஷத்திலும் இல்லாமல்
பக்ஷத்தில் மட்டும் உள்ளதோ அதற்கு அசாதாரணம் என்று பெயர் –
அசாதாரணம் என்றால் தனித்தன்மை
இந்த ஹேது பக்ஷத்துக்கு மட்டும் தனித்தன்மையாக இருக்கிறபடியால் அசாதாரணம் என்று அழைக்கப் படுகிறது
எடுத்துக்காட்டு
சப்தம் நித்யமானது சப்தத்வம் என்ற சாமான்யத்தை உடைய படியால் -என்ற அனுமானம்
பக்ஷம் -சப்தம்
சாத்யம் -நித்யத்வம் -அழியாமை
ஹேது -சப்தத்வம் என்ற சாமான்யம்
இங்கு நாம் சொன்ன சப்தத்வம் என்ற ஹேதுவானது சப்தம் என்ற பக்ஷத்தில் மட்டுமே இருக்கும் ஒரு சாமான்யம் ஆகும் –
ஆகையால் அழியாமை நிச்சயிக்கப்பட்ட ஆகாசம் காலம் முதலான ச பக்ஷங்களிலும் சப்தத்வம் இல்லை
அழியாமையின் அபாவம் நிச்சயிக்கப்பட்ட குடம் புத்தகம் போன்ற வி பஷங்களிலும் இல்லை
ஆகையால் வியாப்தி அறியவே வழி இல்லாமல் போகிறது –

1-C –அநுப ஸம்ஹாரீ
ஒரு ஹேதுவுக்கு சாத்யத்தோடே உள்ள வியாப்தியை கிரஹிக்க வேண்டுமானால் அது சாத்யத்தோடு சேர்ந்து
சில இடங்களில் பார்க்க வேண்டும்
சாத்யம் இல்லாத இடங்களில் பார்க்காமல் இருக்கவும் வேண்டும்
ஆகவே அந்வய த்ருஷ்டாந்தம் -ஹேதுவும் சாத்யமும் சேர்ந்து இருக்கும் இடங்கள் –
வியதி ரேக த்ருஷ்டாந்தம் -ஹேது சாத்யம் இரண்டுமே சேர்ந்து இல்லாத இடங்கள் -என்ற
இரண்டு த்ருஷ்டாந்தங்களும் ஒரு ஹேதுவுக்குத் தேவை
அப்படிப்பட்ட அந்வய த்ருஷ்டாந்தமும் வியதி ரேக த்ருஷ்டாந்தமும் அற்றது தான் அநுப ஸம்ஹாரீ என்று சொல்லப் படுகிறது
எடுத்துக்காட்டு
உலகில் இருக்கும் அனைத்துமே அழியக் கூடியது -ஞானத்துக்கு விஷயமான படியால் -என்ற அனுமானத்தை எடுத்துக் கொள்வோம்
பக்ஷம் -உலகில் இருக்கும் அனைத்தும்
சாத்யம் -அழிவு
ஹேது –ஞானத்துக்கு விஷயம் ஆகுதல் -அறியப்படுதல்
உலகில் இருக்கும் அனைத்துமே பக்ஷமான படியால் அதைத் தவிர்ந்த ஒன்றை அந்வய த்ருஷ்டாந்தம் என்றோ
வியதி ரேக த்ருஷ்டாந்தம் என்றோ காட்டவே இயலாது
ஆகவே வியாப்தியை நம்மால் கிரஹிக்க முடியாது –

2-விருத்தம் -adverse reason
விருத்தம் என்றால் எதிர்மறையானது என்று பொருள் -அதாவது கொடுக்கப்பட்ட காரியத்துக்கு எதிர்மறையான
ஒரு காரியத்தைச் செய்யும் பொருளை விருத்தம் என்று சொல்கிறோம்
எந்த ஒரு ஹேது சாத்யத்தை சாதிப்பதற்காக பயன்படுத்தப் பட்டுள்ளதோ அதே ஹேது சாத்யத்தின் அபாவத்தை
சாதித்து விட்டால் அந்த ஹேது விருத்தம் என்று சொல்லப்படுகிறது
எடுத்துக் காட்டு
சப்தம் அழியாதது உண்டாகிற படியால் -என்ற அனுமானத்தை எடுத்துக் கொள்வோம்
பக்ஷம் -சப்தம்
சாத்யம் -அழியாமை
ஹேது -உண்டாகுதல் உத்பத்தி
இங்கு உண்டாகுதல் என்கிற ஹேது அழியாமை என்கிற சாத்யத்தை சாதிக்கப் பிரயோகிக்கப் பட்டுள்ளது
ஆனால் உண்மையில் உலகில் உண்டாகும் பொருள்கள் எல்லாமே அழியக் கூடியவை தான்
ஆகையால் இந்த ஹேது அழியாமை என்ற நம் சாதனத்துக்கு வியாப்யமானதே அல்ல –
அதுக்கு நேர் மாறான அழிவு என்பதுக்கு வியாப்யமானது -அதைத் தான் நிலை நாட்டி விடும்
ஆகையால் இது விருத்தம் என்று சொல்லப் படுகிறது –

3- ஸத் ப்ரதிபக்ஷம் -opposable reason
பிரதி பக்ஷம் என்றால் எதிர் கட்சி
பக்ஷத்தில் சாத்யத்தின் இருப்பை நிலை நாட்ட பிரயோகிக்கப் பட்ட எந்த ஒரு ஹேதுவுக்கு எதிரான பக்ஷத்தில்
சாத்யத்தின் – அபாவத்தை -இல்லாமையை -நிலை நாட்டக் கூடிய மற்ற ஒரு ஹேது காண்பிக்கப் படுகிறதோ
அந்த ஹேது எதிர் கட்சியோடு கூடிய படியால் ஸத் பிரதிபக்ஷம் ஆகும்
எடுத்துக் காட்டு
சப்தம் அழியாதது -காதால் கேட்க்கிறபடியால் -சப்தத்வம் என்ற சாமான்யத்தைப் போலே என்று நாம் ஒரு அனுமானத்தைச் சொல்ல
அதற்கு எதிராக -சப்தம் அழியக் கூடியது -உண்டாகிற படியால் -குடத்தைப் போலே -என்று முரண் பட்ட ஹேதுவைச் சொல்ல முடியும்
இப்படி எதிர் ஹேது பிரயோகிக்கப் பட்டால் எது சரி என்று தெரியாமல் எந்த ஹேதுவிலும் குற்றங்களே தெரியாமல் போனால்
இரண்டு ஹேதுக்களில் இருந்தும் அநு மிதியே ஏற்படாது
ஆகையால் நாம் சொன்ன கேட்கப்படுதல் என்கிற ஹேது ஸப்ரதிபக்ஷம் ஆகிறது

4-அஸித்தம் -un established
அஸித்தி என்ற தோஷத்தை உடைய ஹேது அஸித்தம் என்று அழைக்கப் படுகிறது
அஸித்தி என்றால் இல்லாமை -அறியாமை –
இது மூன்று வகைப்படும்
4-A–ஆஸ்ரய அஸித்தம்
4-B ஸ்வரூப அஸித்தம்
4-C-வியாப்யத்வ அஸித்தம்

4-A–ஆஸ்ரய அஸித்தம் pasham un established
ஆஸ்ரயம் என்று அழைக்கப் படும் பஷமே அஸித்தமாக -அறியப் படாததாக இருக்கும் ஒரு ஹேது
எடுத்துக் காட்டு
ஆகாயத் தாமரை மணமானது தாமரை யானபடியால் -குளத்துத் தாமரை போலே என்ற அனுமானத்தின்
ஆகாயத் தாமரை என்ற ஒன்றே உலகில் இல்லாதது அறியாதது

4-B ஸ்வரூப அஸித்தம் hethu un established
நாம் சொல்லும் ஹேது நமது பக்ஷத்தில் இல்லாமை –
எடுத்துக் காட்டு
சப்தம் ஒரு குணம் கண்ணால் காணப் படுகிற படியால் என்ற அனுமானத்தின்
சப்தம் என்கிற பக்ஷத்தில் கண்ணால் காணப்படுதல் என்கிற ஹேதுவே கிடையாது -சப்தம் காதால் கேட்கிற படியால்

4-C-வியாப்யத்வ அஸித்தம்
நாம் சொன்ன ஹேதுவில் சாத்யத்தோடு வியாப்தி இல்லாமை
உபாதியோடு கூடிய ஹேது வியாப்யத்வ அஸித்தம் ஆகும்
இதை ஆழமாகப் பார்ப்போம்

உபாதி என்றால்
ஸாத்யத்துக்கு வியாபகமாகவும் ஹேதுவுக்கு அவ்யாபகமாகவும் இருக்கும் ஓன்று
எடுத்துக் காட்டு
மலை புகையை உடையது -நெருப்பு உடைய படியால் என்ற தவறான அனுமானத்தை எடுத்துக் கொள்வோம்
பக்ஷம் -மலை
ஸாத்யம் -புகை
ஹேது -நெருப்பு
இங்கு நெருப்பு என்ற ஹேதுவுக்கு உபாதி உள்ளது
அந்த உபாதி -ஈரமான எரி பொருளோடு தொடர்பு -ஆர்த்ர இந்த்ன ஸம்யோகம் –
உபாதியின் முதல் தேவை -ஸாத்யத்துக்கு வியாபகமாய் இருத்தல்
எங்கு எங்கு புகை என்ற சாத்தியம் உள்ளதோ அங்கு அங்கு ஈரமான பொருளோடு தொடர்பு உள்ளது -அடுப்பு போலே என்று கூறலாம்
ஆகையால் சாத்யத்துக்கு வியாபகம் தான் இந்த உபாதி
அடுத்து எங்கு எங்கு நெருப்பு உள்ளதோ அங்கு அங்கு ஈரமான எரி பொருளோடு தொடர்பு உள்ளது என்று சொல்ல இயலாது
நன்கு காய்ச்சப்பட்ட இரும்பில் ஈரமான எரி பொருளோடு தொடர்பு இல்லா விட்டாலும் நெருப்பு இருக்கிற படியால்
ஆகையால் ஹேதுவுக்கு அவ்யாபகம் தான் இந்த உபாதி
இப்படி இரண்டு தன்மைகளையும் கொண்ட ஒரு உபாதியை இந்த அனுமானத்தின் கண்டு பிடித்து விட்ட படியால்
இந்த ஹேது ஸோ பாதிகம் -உபாதியோடு கூடியது என்றும் வியாப்யத்வ அஸித்தம் என்றும் பெயர்

உபாதி என்று ஓன்று இருந்தால் ஹேது ஏன் தவறானது என்று பார்ப்போம்
சாத்யத்துக்கு வியாபகம் உபாதி -அதாவது சாத்யம் இருக்கும் இடத்தில் எல்லாம் உபாதி இருக்கும்
ஹேதுவுக்கு வியாபகம் அல்ல உபாதி -அதாவது உபாதி இல்லாத இடங்களிலும் ஹேது இருக்கும்
ஸாத்யத்துக்கு வியாபகமான உபாதியே இல்லாத இடம் என்பது கண்டிப்பாக சாத்தியம் இல்லாத இடமாகத் தான் இருக்கும்
ஆகையால் உபாதி இல்லாத இடத்திலும் ஹேது இருக்கும் என்பதைக் கொண்டு
சாத்யம் இல்லாத இடத்திலும் ஹேது இருக்கும் என்று தாராளமாக அறியலாம்
ஒரு மாணவனை அறிபவர் அனைவரும் அவனது குருவை அறிவார்கள் என்று வைத்துக் கொள்வோம்
வேறு சிலரும் குருவை அறிந்து இருக்கலாம் குரு மாணவனுக்கு வியாபகம் ஆகிறார்
ஒருவருக்கு குருவையே தெரியாது என்று சொன்னால் சிஷ்யனையும் தெரியாது என்று என்று தானாகவே கிடைக்கும்
ஆக சாத்யம் இல்லாத இடத்தில் ஒரு ஹேது இருந்தால் அந்த ஹேது சாத்யத்துக்கு வியாப்யமே அல்ல என்றதாகும்
ஆகையால் ஹேது வியாப்யத்வ அஸித்தம் ஆகிறது

5-பாதிதம் –
பாதம் என்றால் எதிர்மறை நிச்சயம்
ஆக எந்த ஒரு ஹேதுவுக்கு எதிரான விஷயம் வேறு ஒரு பிரமாணத்தால் நிச்சயிக்கப் பட்டுள்ளதோ
அந்த ஹேது பாதிதம் என்று சொல்லப் படுகிறது
எடுத்துக் காட்டு
நெருப்பு சுடாதது -த்ரவ்யமான படியால் -என்ற அனுமானம்
பக்ஷம் -நெருப்பு
சாத்யம் –சுடாமை
ஹேது -த்ரவ்யத்வம் என்கிற சாமான்யம்
இந்த அனுமானத்தைக் கொண்டு நாம் நெருப்பு சுடாது என்று சாதிக்கப் பார்க்கும் போது
ப்ரத்யக்ஷம் -புலன்கள் -என்கிற வேறே ஒரு பிரமாணத்தால் நெருப்பு சுடும் என்ற அறிவு ஏற்படுகிறது
நெருப்பைத் தொட்டதும் த்வக் இந்த்ரியத்தால் அதில் இருக்கும் சூட்டை உணர்கிற படியால்
ஆகவே நாம் இந்த ஹேதுவைக் கொண்டு எந்த சாத்யத்தை சாதிக்க நினைத்தோமோ அந்த சாத்யத்தை
இந்த பக்ஷத்தில் இல்லை என்று வேறே ஒரு பிரமாணத்தால் முடிவாகி விட்டது
ஆகையால் இனி நெருப்பு சுடாது என்கிற அநுமிதி ஏற்பட முடியாது
ஆகையால் இந்த ஹேது பாதிதம் என்று சொல்லப் படுகிறது –

வாயு ரூபவான் ஸ்நேஹம் உள்ள படியால்-என்னும் அனுமானத்தில் ஐந்து ஹேது ஆபாசங்களும் உண்டு

————————

பாடம் -29-உபமானமும் சப்தமும்

யதார்த்த அனுபவத்தில் மூன்றாவது வகை உபமிதி
அந்த உபமிதிக்குக் கரணமான -அசாதாரண காரணமாக இருப்பதற்கு -உபமானம் -என்று பெயர்
உபமிதி என்றால் ஸம்ஜ்ஞா ஸம்ஜ்ஞி சம்பந்த ஞானம் -வாசக வாத்ஸ்ய சம்பந்த ஞானம் –
ஸம்ஜ்ஞா -என்றால் பெயர்
ஸம்ஜ்ஞி-என்றால் பெயரை உடைய பொருள் -வஸ்து –
இரண்டுக்கும் உள்ள தொடர்பு -சம்பந்தம் -பற்றிய ஞானமே உப மிதி
இந்தச் சொல் இந்தப் பொருளைக் குறிக்கலாம் என்று பல-எட்டு – வழிகளாலே அறியலாம்
அவற்றை மேலே சப்த பிரமாணம் பார்க்கும் பொழுது பார்ப்போம்
அதில் ஒரு வகையான அறிவு உப மிதி
அதுக்குக் கரணம் உபமானம் -அது சாத்ருஸ்ய ஞானம் -அதாவது ஒற்றுமையைப் பற்றின அறிவு

நகரத்தில் உள்ள ஒருவன் மாடு -கோ -என்ற விலங்கைப் பார்த்து இருக்கிறான்
ஆனால் காட்டில் உள்ள கவ்யம் என்ற விலங்கைப் பார்த்தது இல்லை
காட்டில் இருந்து வந்த ஒருவர் அவன் இடத்தில் கோ என்ற மாட்டைப் போல் இருப்பது தான் கவ்யம்
என்று அழைக்கப் படுகிறது என்று கூறினார்
அவர் கூறிய சொல் தொடரில் இருந்து மாட்டைப் போல் இருப்பது கவ்யம் என்று அழைக்கப் படுகிறது
என்று அறிந்து கொண்டான் இவன்
வேறே ஒரு காலத்தில் இவனே காட்டுக்குப் போகும் பொழுது சில விலங்குகளை பார்த்தான் –
அவை மாட்டைப் போலவே இருந்தன -similar-
மாட்டுக்கும் இந்த விலங்குகளுக்கும் உள்ள ஒற்றுமைகளை சாத்ருசத்தை அவன் கண்ணால் கண்டான் –
இது தான் உபமானம்
உடனே அந்த மனிதர் சொன்னது நினைவுக்கு வந்தது-வாக்யார்த்த ஸ்மரணம் –
மாட்டைப் போலவே இருப்பது தான் கவ்யம் என்று அழைக்கப் படுகிறது -என்று அடுத்து
இந்த விலங்குகள் தான் கவ்யம் என்ற சொல்லால் அழைக்கப் படுகின்றன
என்ற ஞானம் ஏற்பட்டது
இதுவே உபமிதி
அதுக்கு கரணமாக இருப்பது உபமானம் என்று சொல்லப் படுவது அந்த விலங்கிற்கும் மாட்டுக்கும் உள்ள
ஒற்றுமையைப் பற்றின அறிவே ஆகும்
பிரத்யஷத்துக்கு இந்திரியங்கள் கரணம்
இந்த பிரத்யக்ஷ ஞானமே கரணமாக நினைவு வர உபமிதி –
சப்தத்துக்கும் வஸ்துவுக்கும் உள்ள சம்பந்தம் கிரஹிக்க ஒரு வழி உபமானம் –
பராமர்ச ஞானம் அநுமிதி முன்பே பார்த்தோம்

சப்த பிரமாணம் –
யதார்த்த அனுபவத்தின் நான்காவது வகை -சாப்த போதம் –
போதம் என்றால் அறிவு
சாப்தம் -சப்தத்தில் இருந்து உண்டானது -தாசாரதி -தசரதி திருக்குமாரர் போல் –
அதுக்கு கரணம் சப்தம் என்னும் பிரமாணம்
சப்தம் என்றால் சொல் என்பது பொதுவான வழக்கு -ஆனால் இங்கு அப்படி அல்ல
இங்கு சொல் தொடர் -வாக்கியம் என்று பொருள்
சப்தம் பற்றிய அறிவே -வாக்யார்த்த ஞானம் -சாப்த போதம் -verbal cognition –

யதார்த்த அனுபவத்தை ஏற்படுத்தக் கூடிய ஒலியை சப்தம் என்று முன்பு பார்த்தோம் –
ஒரு சொல்லுக்கு அர்த்தத்தைப் பற்றிய ஸ்ம்ருதியை ஏற்படுத்தும் வலிமை உண்டே தவிற
ஒரு அனுபவத்தை ஏற்படுத்தும் வலிமை கிடையாது
அனுபவம் என்றால் அறியாத விஷயத்தைப் பற்றின அறிவு –
ஒரு சொல் எந்த புதிதான அறிவையும் ஏற்படுத்த முடியாது
முன்னமே இன்ன சொல்லுக்கு இன்ன பொருள் என்று அறிந்து வைத்தாய் நினைவு தான் படுத்தும்
ஒரு சொல் தொடர் தான் நமக்குத் தெரியாத விஷயத்தை நமக்கு அறிவிக்க முடியும்
எனவே சப்தம் இங்கு சொல் தொடர் வாக்கியம் என்றே பொருள்

ஆகையால் சப்த பிரமாணத்தை லக்ஷணம் என்ன என்றால் –
ஆப்த வாக்கியம் சப்த -ஆப்தனாலே சொல்லப்பட்ட சொல் தொடர் தான் சப்த பிரமாணம் ஆகும்
ஆப்தன் -நம்பத் தக்கவர் -நலன் விரும்பி -ஒன்றை உள்ளபடி அறிந்தது நமக்கு அப்படியே சொல்ல வல்லவர்
அறியாதவர் நமக்கு நன்மையை செய்ய முடியாது -அறிந்து இருந்தாலும் வஞ்சனை உள்ளம் கொண்டவர் நன்மை செய்ய மாட்டார்

வாக்கியம் என்றால் பத ஸமூஹம் -இதுவே சொல் தொடர்
பதம் என்றால் என்ன -சக்தம் பதம் -சத்தியை உடைய ஓன்று சக்தம்
ஒரு பொருளைப் போதிக்கும் சக்தியை -திறமையை – உடைய சொல்லுக்கு பதம் என்று பெயர்
சக்தி என்றால் என்ன –
ஏழு பதார்த்தங்களைப் பார்க்கும் பொழுது சக்தி என்ற ஒன்றைப் பார்க்க வில்லையே -எதனால் என்ற கேள்வி எழும்
உலகில் இந்த சொல்லுக்கு இந்த பொருள் இருக்கட்டும் என்று விளையாட்டாகவோ கேலியாகவோ செய்வது ஸங்கேதம்
பாணினியும் அ ஏ ஓ எழுத்துக்களுக்கு குணம் என்றும்
ஆ ஐ ஒவ் எழுத்துக்களுக்கு வ்ருத்தம் என்றும் வியாகரண ஸூத்ரங்களைச் சொல்லும் பொழுது சொன்னதும் ஸங்கேதம் தான்
இதே போல் அனைத்து சொற்களைப் பற்றியும் பகவான் முடிவு செய்கிறார் -குடம் என்ற சொல் குடத்தைக் குறிக்கட்டும் –
நதி என்ற சொல் நதியைக் குறிக்கட்டும்
இவை தான் ஈசுவரனுடைய ஸங்கேதம் -இது தான் சக்தி என்று அழைக்கப்படுகிறது
ஸங்கேதம் என்றால் அதை செய்பவர்களின் இச்சை ஆசை தான் -ஆகவே ஈஸ்வரனின் இச்சையே சக்தி
நாம் செய்யும் ஸங்கேதங்கள் அநித்யங்கள்
ஈசுவரனுடைய ஆசை ஸங்கேதம் என்னும் சக்தி நித்யம்
ஸ்ருஷ்டி பிரளயங்கள் மாறி மாறி வந்தாலும் இது மாறாது -இது தான் வேறுபாடு
உத்பன்னன் -உத்பத்தி அறிந்தவன் –

சக்தியை அறியும் வழிகள்
1–வியாகரணம்
சமஸ்கரதத்தில் பூ சைத்தாயாம் இருத்தல் / லட் என்று நிகழ் காலம்
2-உபமானம்
முன்பே பார்த்தால் போல் கவயம் என்ற சொல் எந்த பிராணியைக் குறிக்கும் என்று உபமானத்தாலே அறிகிறோம்
3-கோசம்
அமரர்கள் நிர்ஜரர்கள் தேவர்கள் த்ரிசதர்கள் விபுதர்கள் ஸூரர்கள் -பர்யாய சொற்களை
சொல் களஞ்சியம் கோசம் மூலம் அறிகிறோம்
4-ஆப்த வாக்யம்
ஆப்தர் தேஜஸ் என்றால் நெருப்பு என்று சொல்ல அறிகிறோம்
5-வியவஹாரம்
ஒரு பெரியவர் ஏவ மற்ற ஒரு பெரியவர் வேலை செய்ய இதைப் பார்க்கும் சிறுவன் எடுத்தல் கழித்தல் என்ற
முறையால் எந்தச் சொல்லுக்கு எந்த அர்த்தம் என்று அறிகிறான்
6-வாக்ய சேஷம்
வேதத்தில் ஒரு சொல்லின் பொருளில் சந்தேகம் இருக்கும் பொழுது பின் வரும் பகுதிகளில் -வாக்ய சேஷத்தில்
சொல்லப்பட்ட அந்த தன்மைகளைக் கொண்டு முடிவு செய்தல்
7-விவரணம்
சமைக்கிறான் என்று சமையல் செய்வதை விவரித்தல் -ஒவ் ஒரு பகுதியின் பொருளையும் அறிவது
பஸதி -சமைக்கிறான் -பாகம் கரோதி -சமையல் செய்கிறான் -விவரணம் –
8-பிரசித்தமான சொற்களோடு சேர்க்கை -சித்த பத ஸாந்நித்யம் –
ஒரு சொல் தொடரில் ஒரு சொல்லைத் தவிற மற்றவற்றில் பொருள்களை அறிந்தால்
வசந்த காலத்தில் மரத்தில் அமர்ந்து பிகம் அழகாகப் பாடும் என்றால் பிகம் குயிலைக் குறிக்கிறது
என்று அறிவது போலே
பிகம் குயில் என்று நேராக சொல்லிக் கொடுத்தால் அது ஆப்த வாக்கியம் ஆகும்

சக்தி இரண்டு வகைப்படும்
1-அவயவ சக்தி
2-சமுதாய சக்தி

அவயவ சக்தி -அவயவம் என்றால் பகுதி-சக்தி என்றால் போதிக்கும் திறமை –
ஒரு சொல்லை பகுதிகளாகப் பிரித்து ஒவ் ஒரு பகுதியின் அர்த்தத்தைக் கொண்டு முழு சொல் தொடரின்
பொருளை அறிய முடியும் என்றால் அந்தபி பொருளைப் போதிக்கும் திறமைக்கு அவயவ சக்தி என்று பெயர்
நாற்காலி -நான்கு பகுதியால் எண்ணையும் கால் என்ற பகுதியால் தாங்கும் உறுப்பையும் அறிவது போல்
இதற்கு யோக சக்தி என்ற மற்ற ஒரு பெயரும் உண்டு

சமுதாய சக்தி
சமுதாயம் -கூட்டம் -சொல் என்பதே எழுத்துக்களின் கூட்டம் வரிசை தானே
ஒரு சொல்லை பகுதிகளாகப் பிரிக்க முடியாமல் இந்த எழுத்துக்களின் வரிசைக்கு இது பொருள் என்று
உலகில் வழக்கத்தில் இருந்தால் அந்த சொல்லினுடைய அந்தப் பொருளைப் போதிக்கும் திறமைக்கு
சமுதாயசக்தி என்று பெயர்
குடம் குளம் நீர் புத்தகம் -இந்த சொற்களைப் பிரித்து பகுதியின் பொருளை அறிய முடியாது
இந்த சொல்லுக்கு இது பொருள் என்று தான் அறிந்து கொள்ள வேண்டும்
இதற்கு ரூடி சக்தி என்ற மற்ற ஒரு பெயரும் உண்டு

பதங்களின் வகைகள்
தங்களுக்கு இருக்கும் சக்தியைக் கொண்டு நான்கு வகை
1– யவ் கிகம்
அவயவ சக்தியால் மட்டும் ஒரு பொருளைக் குறிப்பது
நாற்காலி -காலணி -தலையணை போலே
2-ரூடம்
சமுதாய சக்தியால் மட்டும் ஒரு பொருளைக் குறிப்பது
புத்தகம் -ஆடு -மாடு -போலே
3- யோக ரூடம்
அவயவ சக்தியாலும் ரூடி சக்தியாலும் ஒரு பொருளைக் குறிப்பது
பங்கஜம் -பங்கம் – சேறு / ஜம் – தோன்றியது –அவயவ சக்தியால் சேற்றிலே தோன்றின பொருளைக் குறிக்கும்
தாமரை குமுதம் கிருமிகள் -பலவற்றையும் குறித்தாலும் பங்கஜம் தாமரையை குறிக்கப் பயன்படும்
ஆகையால் இந்த சொல்லுக்கு தாமரை என்ற பொருளில் சமுதாய சக்தி ரூடி சக்தியும் உண்டு
இரண்டு சக்திகளாலும் ஒரே பொருள் போதிக்கப் படுகிறது
4- யவ்கிக ரூடம்
அவயவ சக்தியால் ஒரு பொருளையும் சமுதாய சக்தியால் வேறே ஒரு பொருளையும் போதிப்பது
உத்பித் என்ற சமஸ்க்ருத சொல்
உத் மேலே / பித் -பிளந்து கொண்டு வருவது
எனவே அவயவ சக்தியால் மரங்களையும் செடிகளையும் குறிக்கும்
வேதத்தில் இதே சொல் யாகத்தைக் குறிக்கும் –
ஆகையால் அந்த யாகம் என்னும் பொருள் சமுதாய சக்தியால் போதிக்கப் பட வேண்டும்

—————-

பாடம் –30-
சப்தம் பிரமாணம் தேவைகள் -வகைகள்

உலகில் வாக்கியங்கள் இரண்டு வகை –
லௌகிகம் -வைதிகம் –
லௌகிக வாக்கியங்களில் ஆப்தராலே சொல்லப் பிற்பட்டவையே பிரமாணம்
வைதிக வாக்கியங்கள் அனைத்தும் பிரமாணம் -ஈஸ்வரனாலே சொல்லப் பட்ட படியால்
மீமாம்சத்திலும் வேதாந்தத்திலும் வேதம் யாராலும் இயற்றப்பட வில்லை -அவை நித்யம் –
அவை தானாகவே பிரமாணம் -வேதத்தால் போதிக்கப் படுவதால் ஈஸ்வரனும் உளன் ஆகிறான்
நியாய மாதத்தில் ஈஸ்வரனை அறிய வேதம் தேவை இல்லை -அனுமானத்தாலேயே அவரை அறியலாம் –
அவராலே இயற்றப்பட்ட படியால் வேதம் பிரமாணம் என்பர்

லக்ஷணா வ்ருத்தி
ஒரு சொல்லுக்கும் அதனால் போதிக்கப்படும் அர்த்தத்துக்கும் உள்ள தொடர்பு -வ்ருத்தி -எனப்படும் –
வ்ருத்தி -இரண்டு வகை – சக்தி -லக்ஷணா –
சக்தி என்பது பரமாத்மாவால் ஏற்படுத்தப் பட்ட நித்தியமான தொடர்பு என்பதை முன்பே பார்த்தோம்
அது தான் முக்கியமான வ்ருத்தி
முடிந்தவரை அதைக் கொண்டே சொற்களுக்குப் பொருள் சொல்ல வேண்டும்
ஒரு சொல் சக்தி என்கிற வ்ருத்தி மூலம் எந்தப் பொருளை உணர்த்துகிறது
அதற்கு சக்யம் அல்லது ஸக்ய அர்த்தம் என்று பெயர்

சில இடங்களில் சக்தியால் போதிக்கும் படும் பொருளை எடுத்துக் கொள்ள முடியாமல் போகும்
அந்த இடங்களில் வேறு வழி இல்லாமல் சக்யம் என்பதை -சக்தியால் போதிக்கப்படும் அர்த்தத்தை விட்டு
அதோடு தொடர்பு உள்ள வேறே ஒரு அர்த்தத்தை அந்தச் சொல்லுக்கு கொள்ள வேண்டும்
அப்பொழுது பயன்படும் விருத்திக்கு லக்ஷணா என்று பெயர்
லக்ஷணா -என்றால் ஸக்ய சம்பந்தம் -அதாவது ஒரு சொல்லின் ஸக்யமான அர்த்தத்தோடு
இருக்கக் கூடிய தொடர்பு தான் லக்ஷணா ஆகும் –
லக்ஷணம் வேறே லக்ஷணா வேறே

லக்ஷணா -எடுத்துக்காட்டு
கங்கையில் கிராமம் -இடைச்சேரி- கோசா -அஸ்தி
கங்கை -சக்தியால் நதியை பிரவாஹத்தைத் தான் குறிக்கும்
நதியில் கிராமம் இருக்க சாத்தியம் இல்லையே
நதி உடன் தொடர்பு உள்ள நதிக்கரையைத் தான் கொள்ள வேண்டும்
கங்கைக்கரையில் கிராமம் என்ற ஞானத்துக்கு குற்றம் ஒன்றும் இல்லையே
கங்கை -சக்தியால் உணர்த்தப்படும் அர்த்தமான -சக்யார்த்தம்-பரம்பரா சம்பந்தம் –
சங்கிலித் தொடர் தான் -ஸக்ய சம்பந்தம் தான்
லக்ஷணா விருத்தியால் கங்கை சொல் கங்கைக் கரையைத் தான் குறிக்கும் என்றவாறு
கங்கையில் மீன்கள் என்று சக்தி வ்ருத்தியால் நதி அர்த்தத்தையே தான் குறிக்கும்

லக்ஷணாவின் வகைகள்
1-ஜஹல் லக்ஷணா-
ஜஹத் என்றால் கை விடுதல் -தனது சக்யார்த்தத்தைக் கை விட்டு வேறு ஒரு அர்த்தத்தை மட்டும்
போதிக்கும் லக்ஷணா ஜஹல் லக்ஷணா-ஆகும்
கங்கையில் கிராமம் -நதிக்கரையில் கிராமம் -நதிக்கும் கிராமத்துக்கும் சம்பந்தம் இல்லையே
இதுவே ஜஹல் லக்ஷணா-ஆகும்

2-அ ஜஹல் லக்ஷணா-
தனது சக்யார்த்தத்தை கை விடாமல் லேயே வேறு அர்த்தங்களையும் போதிக்கும் லக்ஷணா –
அ ஜஹல் லக்ஷணா–ஆகும்
காக்கையிடம் இருந்து தயிரைக் காப்பாற்று
தயிரை உண்ணும் காக்கை பூனை நாய் போன்ற அனைத்தையும் குறிக்குமே
இங்கு காக்கை என்னும் சொல் -அ ஜஹல் லக்ஷணா-ஆகும்

3-ஜஹத ஜஹல் லக்ஷணா-
சோயம் தேவ தத்தன் -அன்று காசியில் பார்த்த மனிதனே இவன் -என்ற அறிவில்
மனிதன் என்பதை மட்டும் கைக் கொண்டு -மற்றவற்றை கை விட்டு இருவரும் ஒருவரே என்று போதிக்கிறது
ஒரு பகுதியைக் கைக்கொண்டு ஒரு பகுதியைக் கை விட்டதால் இது -ஜஹத ஜஹல் லக்ஷணா-ஆகும்

(மஞ்சா க்ரோசி -மெத்தையில் இருக்கும் குழந்தைகள் சப்தம் இடுகின்றன
அன்வய அனு பபத்தி ஒவ்வாமை -தொடர்பு உள்ள
தாத்பர்ய அனுப பத்தி -ஒவ்வாமை -)

சாப்த போதம் ஏற்படும் முறை
1-ஒருவர் ராமன் மாரீசனைக் கொன்றார் -என்ற சொல் தொடரை உச்சரிக்க -ஒலிகளின் வரிசை –
2- இந்த ஒலிகளின் வரிசை ஆகாசம் மூலமாகப் பரவி நம் காதை வந்து அடைகின்றன
3- காது என்ற இந்திரியம் புலன் -ஒலியைக் கிரகிக்கும் -இந்த அறிவு இந்த்ரியத்தில் இருந்து
ஏற்படுகிற படியால் ப்ரத்யக்ஷம் ஆகும்
4- ஒவ் ஒரு சொல்லின் பொருளைப் பற்றிய நினைவு ஸ்மரணம் -ஸ்ம்ருதி ஏற்படும்
இந்த நினைவு ஏற்படுவதற்குத் தான் நாம் முன்னமே சப்தத்துக்கும் அர்த்தத்துக்கும் உள்ள தொடர்பை —
சக்தியை அறிந்து இருக்க வேண்டும் -இல்லை என்றால் நினைவு ஏற்படாது
5- கடைசியாக அந்த பொருள்களையும் அவற்றுக்குள் ஒன்றோடும் ஒன்றுக்கும் உள்ள சம்பந்தத்தையும்
பற்றியும் அறிவு ஏற்படும்
ஒருவனான ஆண் மகனான ராமன் மாரீசனைக் கொன்றான் –
சொல் தொடரின் பொருளை பற்றிய அறிவு –வாக்யார்த்த ஞானம் -சாப்த போதம்

சாப்த போதத்துக்கு வேண்டியவை –அர்த்தம் புரிய சில தேவைகள் உள்ளன
1-ஆ காங்ஷா –என்பதைப் பற்றின அறிவு -verbal expectancy –
2-யோக்யதா -என்பதைப் பற்றின அறிவு -அர்த்த அபாதம் -யோக்யம் -பாதிதம் இல்லாமல் இருக்க வேண்டுமே –
3-ஸந்நிதி -என்பதின் அறிவு
4-தாத்பர்யம் -என்பதின் அறிவு

1-ஆ காங்ஷா –என்பதைப் பற்றின அறிவு
ஒரு பதத்துக்கும் மற்ற ஒரு பதத்துக்கும் இடையில் இருக்கும் எதிர் பார்ப்பு தான் -ஆகாங்ஷை
ஒரு வினைச் சொல் தனியாக இருக்க முடியாது -ஒரு பெயர்ச் சொல்லை எதிர்பார்க்கும் –
பெயர்ச் சொல்லும் வினைச் சொல்லை எதிர்பார்க்கும் -இது ஒரு வகையான
ஆகாங்ஷா –தனித்தனியாக வினைச் சொல்லையோ பெயர்ச் சொல்லையோ உபயோகித்தால் சாப்த போதமே ஏற்படாது
அதே போல் ஒரு சொல்லுக்கு உள்ளேயே பகுதி என்பது விகுதியை எதிர்பார்க்கும் -விகுதி பகுதி இல்லாமல் இருக்காதே
நடக்கிறான் என்று சேர்ந்தே பிரயோகம் -கிறான் ஆன் தனியாக உச்சரித்தால் சாப்த போதம் ஏற்படாது
கிறு ஆன் என்பதைத் தான் பகுதி எதிர்பார்க்கும்
அதே அர்த்தத்தை உடைய நிகழ் காலம் என்ற சொல்லைச் சேர்த்து –
நடத்தல் நிகழ் காலம் ஒருமை ஆண்பால்-என்று சொன்னால் சாப்த போதம் ஏற்படாது
ஆகவே எந்த பதங்களோடு சேர்ந்தால் மட்டுமே ஒரு பதம் விஷயத்தைப் போதிக்குமோ
அந்த ஆங்ஷையை நாம் அறிந்தால் தான் சாப்த போதம் ஏற்படும்

2-யோக்யதா -என்பதைப் பற்றின அறிவு
சொல் தொடரின் அர்த்தம் ஸாத்யமான ஒன்றாக இருக்க வேண்டும்
நெருப்பால் நனைக்கிறான் -என்கிற சொல் தொடரால் சாப்த போதம் ஏற்படாதே
நனைத்தல் என்ற செயலில் கருவியாக ஜலம் தானே இருக்க முடியும் -நெருப்பு இருக்க முடியாதே
அப்படி இல்லாமல்
இந்த சொல் தொடரின் பொருள் ஸாத்யமானது தான் என்ற புரிதல் நம்மிடம் இருந்தால் தான் சாப்த போதம் ஏற்படும்

3-ஸந்நிதி -என்பதின் அறிவு
சொற்களின் இடை வெளி இல்லாத உச்சரிப்பு
இப்பொழுது ராமனை என்று சொல்லி சில மணி நேரம் கழித்து ராவணனை என்று சொல்லி பின்பு
பல மணி நேரம் கழித்து கொன்றான் என்று சொன்னால் கேட்பவருக்கு சாப்த போதம் ஏற்படாதே
சொற்கள் அடுத்து அடுத்து உச்சரிக்கப்பட்டு ஒரே சமயத்தில் கேட்பவரின் மனத்தில் இருக்க வேண்டும்
இது தான் ஸந்நிதியைப் பற்றிய ஞானம் ஆகும்

4-தாத்பர்யம் -என்பதின் அறிவு
தாத்பர்யம் என்றால் -வக்து இச்சா -அதாவது பேசுபவரின் இச்சா -கருத்து –
அதை அறிந்தால் தான் சரியான புரிதல் ஏற்படும்
சைந்தவம் -என்றால் குதிரை என்றும் உப்பு என்றும் இரண்டு பொருள்களும் உண்டு
சாப்பிடும் பொழுது சைந்தவம் கொண்டு வா என்றால் உப்பைக் கொண்டு வா என்றும்
பிரயாணத்தின் பொழுது சைந்தவம் கொண்டு வா என்றால் குதிரையை அழைத்து வா என்றும் பொருள்
ஆகவே பேசுபவரின் சூழ்நிலையை வைத்து அவருடைய தாத்பர்யத்தை அறிந்தால் தான்
சரியான சாப்த போதத்தை அறிய முடியும் –

கூஜந்தம் ராம ஸ்லோக ஆலாபனை பண்ணி -சந்நிதி -இடை வெளி இல்லாமல் –
ஆனாலும் சிலருக்கு ஞானம் ஏற்படலாம் -மனசில் சேர்க்க தெரிந்தவர்
சந்நிதி ஞானம் இருக்க வேண்டும்
சந்நிதி இருக்கா இல்லையா என்பது இல்லை -இருப்பதை அறிவதே முக்கியம்
பாத ஞானம்
பதார்த்த ஸ்மரணம்
வாக்யார்த்த ஞானம் -சாப்த போதம்
ப்ரத்யக்ஷம் மட்டும் இந்திரிய -த்ரவ்ய ஜென்ம ஞானம்
மற்றவை மூன்றுமே ஞானத்தில் இருந்து ஞானம் உண்டாவது –

———

பாடம் -31-சம்சாரமும் முக்தியும் –

தத்வ ஞானத்தால் மோக்ஷம் அஞ்ஞானத்தால் சம்சாரம் -எல்லா தர்சனங்களிலும் உண்டே –
ஞானம் -அனுபவம் ஸ்ம்ருதி -யதார்த்தம் அயதார்த்தம் -இரண்டும் உண்டே

ப்ரத்யக்ஷம் என்று அழைக்கப்படும் இந்த்ரியங்களோ
அனுமானம் என்று சொல்லப்படும் பாரமர்சம் என்கிற ஞானமோ
உப மானம் என்று சொல்லப்படும் ஸாத்ருஸ்ய ஞானமும்
சப்த பிரமாணம் என்று சொல்லப்படும் வாக்கியங்களை பற்றிய ஞானமோ
இவை சரியாக வேலை செய்தால் பிரமா -எனப்படும் ஞானம் ஏற்படும்
இவற்றில் ஏதாவது ஒரு குற்றம் ஏற்பட்டு தவறாக செயல்பட்டால் -அயதார்த்த ஞானம் -பிரமம் -ஏற்படும் –
ஒரு பொருளில் இல்லாத தன்மையை அதில் இருப்பதாகக் காட்டிக் கொடுக்கும் அனுபவமே –
அயதார்த்த அனுபவ லக்ஷணம் –
அந்த அயதார்த்த அனுபவம் மூன்று வகைப்படும்
1-சம்சயம்
2-விபர்யயம்
3-தர்க்கம்

சம்சயம்
ஒரு தர்மியில் முரண் பட்ட பல தர்மங்களைக் கிரஹிக்கும் ஞானம் -சம்சயத்தின் லக்ஷணம்
மூன்று தளங்கள் -ஒரு தர்மி – தர்மங்கள் – விருத்த நா நா தர்ம – முரண்பட்ட-இப்படி மூன்றும் வேண்டும் –
விரோதம் -சேர்ந்து இல்லாமை -ஸஹ -அந வஸ் தானம்
கயிற்றைப் பார்த்து இது கயிறா பாம்பா என்கிற சந்தேகம்
கயிற்றுத் தன்மை பாம்புத் தன்மை முரண்பட்ட தர்மங்கள் ஒன்றில் கிரஹிக்கும் ஞானம் -யதார்த்த ஞானம்
ஒரு தர்மியில் -என்று சொல்லாமல் போனால் குடமும் துணியும் என்ற சமூக அலம்பந ஞானத்தில் அதி வியாப்தி ஏற்படும் –
குடத்தன்மை துபித்தன்மை இரண்டு வேறே வேறே முரண் பட்ட தர்மங்கள் இரண்டு வேறே வேறே பொருளில் கிரஹிக்கிற படியால்
முரண்பட்ட என்று சொல்லாமல் போனால் -சிவப்பு குடம் -சிவப்புத்தன்மையும் குடத்தன்மையும் முரண் படாத
இரண்டு தர்மங்கள் ஒரு தர்மியில் கிரஹிக்கிற படியால் அதி வியாப்தி ஏற்படும் –

விபர்யயம்
ஒரு பொருளில் இல்லாத தன்மையை அதில் இருப்பதாக முடிவு செய்து விட்டால் அந்த முடிவு நிச்சம் தான் என்ற விபர்யயம் ஏற்படும் –
ஒரு கயிற்றைப் பார்த்து இது கயிறு -இதில் கயிற்றுத் தன்மை உள்ளது என்று நிச்சயித்தால் அது யதார்த்த அனுபவ ம்
கயிறா பாம்பா சங்கித்தால் சம்சயம்
இது பாம்பு -இதில் பாம்புத் தன்மை உள்ளது என்று நிச்சயித்தால் அது விபர்யயம்
விபர்யயம் -மித்யா ஞானம் -தவறான ஞானம் என்ற மற்ற ஒரு பெயரும் உண்டே
இந்த மித்யா ஞானமே அஞ்ஞானம் -இதனாலே நான் சம்சாரத்தில் இருந்து துன்பம் அனுபவிக்கிறோம்
மித்யா ஞானம் நீங்கி விட்டால் சம்சாரத்தில் இருந்து விடுபடலாம் –

தர்க்கம்
இது வாதத்துக்கு உபயோகிக்கப் படும் கருவி -தர்க சாஸ்திரம் அன்றோ -இதனாலே பெயர் –
மலையில் புகையைப் பார்த்து நெருப்பு உள்ளதாக அனுமானம் செய்து மற்ற ஒருவர் இடம் சொல்ல
புகை இருக்கட்டும் நெருப்பு எதனால் இருக்க வேண்டும் –
அப்ரயோஜகதா சங்கா -இது தான்
அதற்கு பதிலாக நான் -நெருப்பு இல்லை என்றால் புகையும் இல்லாமல் இருக்க வேண்டுமே என்றேன்
நெருப்பின் அபாவம் வியாப்யம்-
புகையின் அபாவம் வியாபகம் –
மலையில் நெருப்பின் அபாவத்தை ஏறிட்டு அதன் மூலம் புகையின் அபாவத்தை ஏறிட்டு
புகையின் அபாவம் இல்லை என்று எதிராளி மறுக்க இயலாதே
இதுவே தர்க்கம் ஆகும் –

16 பதார்த்தங்கள் உண்மையான அறிவாலேயே முக்தி
வைசேஷிக தர்சனம் 7 பதார்த்தங்கள்
நியாய சாஸ்திரம் 16 பதார்த்தங்கள் கௌதமர்
ஏழும் -16 ஆகப் பிரித்து சொல்வர்
1-பிரமாணம்
2-பிரமேயம்
3-சம்சயம்
4-பிரயோஜனம்
5-த்ருஷ்டாந்தம்
6-சித்தாந்தம்
7-அவயவ
8-தர்க்க
9-நிர்ணய
10-வாதம் -தத்வம் அறியும் ஆசையால் செய்யும் debate –
11-ஜல்பம் -வெற்றி அடைய debate
12-விதண்டா வாதம் -ஸ்வ பக்ஷம் சொல்லாமல் பிறர் பக்ஷ கண்டனம்
13-ஹேது ஆபாசங்கள்
14-சலம் -சாதுர்யத்தால் வேறே அர்த்தம் -நவ ஒன்பது புதிய துணி உடையவன் தேவ தத்தன் –
15-ஜாதி -தனது பக்ஷம் தோற்கும் படி வாதம்
16-நிக்ரஹ ஸ்தானம் -சாதிக்க முடியாமல் ப்ரதிஜ்ஜை மாற்றுவது —

முக்தி
நியாய ஸாஸ்த்ரம் படி முக்தி துக்கம் நீங்குதல்
ஆத்யந்த்திக துக்க நிவ்ருத்தியே மோக்ஷம் -அந்தம் -முடிவு அத்யந்தம் எல்லையைத் தாண்டியது –
முக்தி நிலையில் ஆத்மா
சுகம் துக்கம் விருப்பு வெறுப்பு முயற்சி பாபம் புண்ணியம் பதிவுகள் -முதலிய
எந்தக் குணங்களும் இல்லாமல் கல்லைப் போலே இருப்பதே முக்தி ஆகும் என்பர்

துக்கம் –21- வகைகள் என்பர்
ஆறு இந்திரியங்கள் -மனஸ் -ஞான இந்திரியங்கள்
அவற்றில் இருந்து தோன்றும் ஆறு அறிவுகள் -சப்தாதிகள்
அறிவுக்கு விஷயமான ஆறு பொருள்கள்
சரீரம்
சுகம் என்கிற குணம் (ஸ்வர்க்கம்-தள்ளும் பொழுது பார்க்க துக்கம் வருமே )
துக்கம் என்கிற குணம் –ஆகிய இவையே
இவை அனைத்தும் நீங்கி மீண்டு வராதபடி அழிவதே முக்தி என்பர்

துக்க ஜென்ம பிரவிருத்தி தோஷம் மித்யா ஞானம் -உத்தர உத்தரம் வர முன் உள்ளவை போகுமே
தோஷம் ராக த்வேஷங்கள் சொன்னவாறு
ப்ரவ்ருத்தி தர்ம அதர்மங்கள் சொன்னவாறு

தத்வ ஞானம் ஏற்பட்டு தவறான புரிதல் மித்யா ஞானம் போகும்
அஞ்ஞானம் நீங்க விருப்பு வெறுப்பு ராகம் த்வேஷம் போகும் -இவை இரண்டுமே தோஷம்
இவை நீங்கினால் புண்ய பாப செயல்களில் பிரவிருத்தி இல்லாமல் போகும்
இவை இல்லா விடில் அடுத்த பிறவி கிட்டாது
மீதம் இருக்கும் புண்ய பாபங்களைக் கழித்து சரீரம் துறந்து கல்லைப் போலே ஆன பின்பு முக்தி அடைகிறான்
இதுவே முக்தி என்பர் நியாய சாஸ்திரத்தில் –

———————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ .வே. வேளுக்குடி ரெங்கநாதன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கணாதர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ நியாய மீமாம்ச வேதாந்த பாடங்கள்–ஸ்ரீ உ .வே. வேளுக்குடி ரெங்கநாதன் ஸ்வாமிகள்–பகுதி 1 : ந்யாய சாஸ்த்ரம்– பாடங்கள் -13-22—

March 24, 2021

கீழே உத்தேச கிரந்தம் பார்த்தோம் -விபாகம் உட் பிரிவுகளையும் பார்த்தோம் –
இனி லக்ஷணம் பரீஷை பார்ப்போம் –

பாடம் -13-

த்ரவ்யங்கள் –

த்ரவ்யம் –
குணாஸ்ரயம்-குணத்தை இருப்பிடமாகக் கொண்டதாகவே இருக்கும் -குணாஸ்ரயத்வம் –
இதுவே லக்ஷணம்

ப்ருத்வீ –
நிலம் மட்டும் இல்லை -செடி கொடிகள் துணி சரீரம் அனைத்துமே குறிக்கும் –
கந்தவதி கந்தத்துக்கு உடையவள் -ப்ருத்வீ பெண் பால் சமஸ்க்ருதம் -சொல்லுக்குத் தான் பால் -விஷயத்துக்கு இல்லை

லக்ஷணம் -மணம் என்றால்
அசம்பவ தோஷம் உள்ளதா -இல்லை
மண் மரம் துணி போன்றவற்றில் மணம் இருக்கிறது

அவ்யாப்தி தோஷம் உள்ளதா -இல்லை –
பாஷாணம் -கல்லில் தெரியா விட்டாலும்-பஸ்மம் – உடைத்த துகள்களில் மணம் இருக்கிறதே
கல்லில் மணம் நமக்கு புலப்பட வில்லை -ப்ரத்யக்ஷம் இல்லா விட்டாலும் அனுமானம் கொண்டு
யத் த்ரவ்யம் த்வம்ச ஜன்யம் தத் தது உபாதானம் உபாதேயம் நியாயம் –பரமாணுக்கள் சேர்ந்த கல் -அதே சேர்ந்த துகள்
இதில் கந்தம் இருப்பதால் அதிலும் உண்டு அனுமானிக்கலாம் -உத்பூதம் இல்லை -அநுத்பூதமாக-விளங்காமல் உள்ளது

அதி வியாப்தி தோஷம் உள்ளதா -இல்லை –
நீரிலும் காற்றிலும் திண்ணிய ப்ருத்வீ பொருள்கள் கலந்து இருப்பதாலேயே மணம் தோற்றுகிறது
ஸூத்த ஜலத்துக்கும் காற்றுக்கும் மணம் இல்லை
ஏலக்காய் தீர்த்தம் மணம் போலே –
பூவில் இருந்து மணத்தை பிரிக்க முடியாதே -சிறு அவயவங்கள் நுண்ணியதாக உள்ளவற்றைக் கவர்ந்து
வாயு மணம் வீசுகிறது

ஆக லக்ஷணம் பரீஷை பார்த்தோம்
இனி விபாகம் பார்ப்போம்

ப்ருத்வீயின் வகைகள் இரண்டு-
நித்யமான ப்ருத்வீ –
அநித்யமான ப்ருத்வீ –

நித்யமான ப்ருத்வீ பரமாணு வடிவத்தில் இருக்கும் -உத்பத்தியோ அழிவோ இல்லையே
அநித்யமான ப்ருத்வீ கார்யங்கள் அனைத்தும் -பரமாணுக்கள் சேர்ந்து கல் மண் மரம் துணி போன்ற அனைத்தும்

எந்தப்பொருளின் அபாவம் சொல்லப்படுகிறதா அது பிரதியோகி
எந்த இடத்தில் அந்த அபாவம் இருப்பதாகச் சொல்லுகிறமோ அது அநு யோகி
பூமியில் குடமில்லை என்று சொன்னால்
குடம் பிரதியோகி
பூமி அநு யோகி
இல்லை -அத்யந்த பாவம் -குடம் பிரதியோகி -எங்கு இருக்கு பூமி -அநு யோகி -இத்தை முன்னமே பார்த்தோம்
த்வம்சம் -துணி கிழிந்து விட்டது -ப்ரத்வம்சா பாவம் -துணியின் துவம்சம் நூலில் உள்ளது நூல் தானே அதிகரணம்
இங்கு -துணி பிரதியோகி -இத்தை நூல்களை பார்த்து அறிந்தோம் –

அநித்யமாக இருத்தல் ஆவது
ஒரு நாள் அழிவுக்கு உட்படுதல் -அதாவது அந்தப் பொருளுக்கு ஒரு நாள் அழிவு உண்டு
அழிவு என்றால் ப்ரத்வம்ச அபாவம்
ஆகையால் இந்தப் பொருளை பிரதியோகியாகக் கொண்ட துவம்சம் ஒரு நாள் ஏற்படும் என்றதாயிற்று
அழிவு என்று அழைக்கப்படும் த்வம்சத்துக்கு ப்ரதியோகியாக அந்தப் பொருள் இருக்கும்
த்வம்சத்துக்கு ப்ரதியோகியாய் இருத்தல் தான் அநித்யத்வம் -அநித்யமாக இருத்தல்
அநித்யத்வம் என்றால் த்வம்சத்துக்கு பிரதி யோகியாய் இருக்கும் தன்மை-

நித்யமாக இருத்தல்-ஒரு நாளும் அழியாமல் இருத்தல் –
அதாவது எந்த த்வம்சத்துக்கும் பிரதி யோகியாய் ஆகாமை –

ப்ருத்வீ -பரமாணுக்கள்–இவை சேர்ந்து உண்டான பொருள்கள் -இரண்டாக பிரித்து
பரமாணு -காரணம் என்றும் -நித்யம்
கார்யம்-உண்டாகும் பொருள் -அநித்யம் என்று இரண்டு வகை என்றபடி
நித்யா பரமாணு ரூபம் அநித்யா கார்ய ரூபம் -என்றவாறு

தர்க்க ஸங்க்ரஹம் இன்னும் ஒரு வகையாகவும் பிரித்து அருளுகிறார்
அறிவு -ஞானம் ஆத்மாவுக்கே -இதுக்கு ப்ருத்வீ எப்படி உபயோகம்
புந த்ரிவித -சரீர இந்திரிய விஷய பேதாத்

ஆத்மாவுக்கு ஞானம் ஏற்பட ப்ருத்வீ எப்படி உதவுகிறது என்ற கண் நோட்டத்தில் பார்த்தால்
ப்ருத்வீயை மூன்றாகப் பிரிக்கலாம்
1-சரீரம்
2-இந்திரியம்
3-விஷயம்

சரீரத்துக்கு இரண்டு வகையில் லக்ஷணம் சொல்லலாம் –
1-அதன் கார்யத்தைக் கொண்டும் –
2-அதன் தன்மையைக் கொண்டும்
ஜன்மாத்யத்ய அஸ்ய யத -ப்ரஹ்ம லக்ஷணம் -கார்யம் கொண்டு தனித்து அறிகிறோம்

கார்யத்தைக் கொண்டு லக்ஷணம்
போகம் -ஸூக துக்கங்கள் -இவற்றை வரையறைப் படுத்துவது
ஆத்மா விபுவாய் இருக்கும்
குறிப்பிடட இடத்தில் தான் ஸூ கத்தையும் துக்கத்தையும் அனுபவிக்க முடியும் என்று வரையறைப் படுத்துவது சரீரம்
ஆத்மா எங்கும் பரவி இருந்தாலும் இந்த உடல் இருக்கும் இடத்தில் தான் இன்ப துன்பங்களை அனுபவிக்க முடியும் –

போக ஆயதனம் சரீரம்–ஸூக துக்க
சந்தனம் பற்றிய ஞானம்- அறிந்து–இச்சை ஆசை -பிரயத்தனம் -முயற்சி -ஸூகம் -சுகமாக இருக்கிறேன் ஞானம் -அனுபவம்
இதே போலே முள்ளில் கால் வைத்து அஹம் துக்கி
இதுவே போகம்
சோக துக்க சாஷாத்காரம் போகம்
போக ஆயதனம் -சரீரம்
இவர் தர்சனம் ஆத்மா விபு -நம் தர்சனம் அணு

தன்மையைக் கொண்டு
சேஷ்டைக்கு இருப்பிடமானது சரீரம்
கை கால்களைத் தனித்தனியே சரீரம் என்று குறிப்பிடக் கூடாது
சேஷ்டையை உடைய இறுதியான -அந்த்ய -அவயவி தான் சரீரம்
இறுதியான அவயவி என்றால் மற்ற ஒரு அவயவியைத் தோற்றுவிக்காது என்று பொருள்
கை கால்கள் இறுதியான அவயவி ஆகாது -உடல் என்னும் அவயவியைத் தோற்றுவிக்கும் படியால்

சேஷ்டாஸ்ரயத்யம் -முயற்சி வேறே –ஆத்மாவின் குணம் -செயல் வேறே -கர்மம் -சரீரம் செய்வது -ஐந்து வகை பார்த்தோம் –
கீழே மேலே செல்ல கையயை நகர்த்த ஆத்மா முயர்சசி
மரம் கூட சரீரம் தான் -வெட்டினால் வளரும் -பிராண சஞ்சாரம் உண்டே –

போக ஆயதனம் சரீரம்-சேஷ்ட ஆஸ்ரயமாகவும் –அந்த்ய அவயவியாகவும் இருக்க வேண்டும் -இதுவே சரீர லக்ஷணம் –

இந்திரியம் மற்றும் விஷயம்
ப்ரத்யக்ஷம் என்று அழைக்கப்படும் ஏற்படக் கருவியாக இருக்கும் நம் புலன்கள் தான் இந்திரியங்கள்

ஞானத்தால் அறியப்படும் பொருள்கள் அனைத்துமே விஷயங்கள் என்று அழைக்கப் படுகின்றன –

ப்ருத்வியாலான சரீரம்
இவ்வுலகில் வாழும் மனிதர்கள் விலங்குகள் செடிகள் முதலானவற்றின் சரீரம்
நம் சரீரம்-பாஞ்ச பவ்திகம் – ஐந்து பூதங்களாலும் ஆக்கப்பட்டது என்று சொல்லப்பட்டாலும்
முக்கியமாக ப்ருத்வியால் தான் ஆக்கப் பட்டுள்ளது –
நீர் நெருப்பு முதலியவை உதவுகின்றன

ப்ருத்வியாலான இந்திரியம் -கிராணம் -என்ற பெயர் பெற்ற முகர் புலன்
அது மணத்தைக் காட்டிக் கொடுக்கும் -மூக்கின் நுனியில் இருக்கும்
பார்த்திவ இந்திரியம் -கிராண இந்திரியம் -நாச அக்ர வர்த்தி

ப்ருத்வியாலான விஷயங்கள் மண் கல் மரம் போன்றவை -ம்ருத் பாஷாணாதிகள் –

இந்த விபாகத்தில்
பரமாணுக்களை -எங்கே -என்றால்
சரீரம் இந்திரியம் -இவற்றுள் இல்லை
விஷயத்துக்குள்ளே உண்டு

——————

பாடம்-14-ஜலம் -தேஜஸ் -வாயு –

அன் வீஷா-அனுமானம் -ஆன்வீஷீகா -அனுமானம் கொண்டு நியாய சாஸ்திரம் –
தர்க்க ஸங்க்ரஹம் அன்னம் பட்டர் எழுதியவற்றைக் கொண்டு பார்க்கிறோம்

ப்ருத்வியினால் ஆன சரீரம்
1-யோனிஜம் -கருவில் இருந்து உண்டானது
2-அயோனிஜம் -கருவில் இருந்து உண்டாகாதது

யோனிஜம்
1-ஜராயுஜம் -கர்ப்பையில் இருந்து தோன்றியவை -மனிதர்கள் விலங்குகள் போலே -ஜராயு -கர்ப்பப்பை –
2-அண்டஜம் -முட்டையில் இருந்து தோன்றியவை -பறவைகள் பாம்புகள் போலே

அயோனிஜம்
1-ஸ்வேதஜம் -வியர்வையில் இருந்து தோன்றியவை -கிருமிகள் போல்வன -கிருமி கீடாதிகள்-
2-உத்பிஜ்ஜம் -முளையில் இருந்து தோன்றுபவை -மரம் செடி கொடி போல்வன
3-ஸ்வர்க்கத்திலும் நரகத்திலும் எடுத்துக் கொள்ளும் சரீரங்கள்

க்ராணம் என்று அழைக்கப்படும் முகர் புலன் பிருத்வியால் ஆனது என்று எப்படி அறிவது
அனுமானத்தால் தான்
குங்குமத்தில் நிறம் ரூபம் மணம் சுவை போன்ற பல பண்புகள் இருந்தாலும் அவற்றுள் மணத்தை மட்டும்
அபி வியஞ்சனம் – வெளிப்படுத்தும் பசும் நெய்-அது பிருத்வி
அதே போலே ஒரு பொருளில் எத்தனை பண்புகள் இருந்தாலும் அதில் இருக்கும் மணத்தை மட்டும்
வெளிப்படுத்துகிறது முகர் புலன்
ஆகையால் இதுவும் பிருத்வியாகத் தான் இருக்க வேண்டும்

——–

ஜலம்
குளிர்ந்த ஸ்பர்சத்தை உடையது நீர்
குளிர்ந்த ஸ்பர்சம் தான் அதனுடைய லக்ஷணம்
அப்பு -சீதா ஸ்பர்சவத் யா ஆப -பன்மையில் பிரயோகம் எப்பொழுதும் –

தண்ணீர் -அசம்பவ தோஷம் இல்லை
வெந்நீர்-தண்ணீர் ஸ்வ பாவம் இல்லை அக்னி -தேஜஸ் அவயவங்கள் சேர்ந்து வெந்நீர் -அவ்யாப்தி தோஷம் இல்லை
அதி வியாப்தி தோஷமும் இல்லை –காலையில் தரை குளிர்ந்து உள்ளதே -பனி நீர் அவயவங்கள் இருப்பதால் தான் –
பனிக் கட்டிகள்-பிருத்வி என்று சொல்லலாமோ என்னில் எது த்ரவ்யம் த்வம்ஸ உபாதான உபாதேய -உருக்கினால் த்ரவ்யம் வருமே –

விபாகம் முன்பு போலவே பார்ப்போம்
நீர் இரண்டு வகை
பரமாணு வடிவில் இருக்கும் நீர் -நித்யமானது
பரமாணுவில் இருந்து உருவாகும் நீர் -அநித்யமானது

மற்ற ஒரு விபாகம்
சரீரம் -வருண லோகத்தில் இருப்பவர்களுடையது -அங்கும் பிருத்வி உண்டு -பிரதானம் ஜலம்
இந்திரியம் -சுவை -ரஸம் -என்னும் பண்பைக் க்ரஹிக்கும் ரஸந இந்திரியம் -நாக்கின் நுனியில் இருப்பது –
ஜிஹ்வா அக்ர வர்த்தி -சுவையைப் பற்றின ஞானத்தை ஆத்மாவுக்கு காட்டும் ரசந இந்திரியம் –

ரஸந இந்திரியம் நீராலே ஆனது என்பதற்கு அனுமானம்
மாவு பொடியில் இருக்கும் சுவையை மட்டும் வெளிப்படுத்தும் நீர் -அது ஜலம் தான்
அதே போல் பொருள்களில் இருக்கும் சுவையை மட்டும் -அபி வியஞ்சனம் -வெளிப்படுத்துவது ரஸந இந்திரியம்
ஆகையால் இதுவும் ஜலத்தாலே ஆக்கப் பட்டதாகவே இருக்க வேண்டும்

விஷயம் -நதி கடல் முதலியவை

——–

தேஜஸ்
உஷ்ணமான ஸ்பர்சத்தை உடையது தேஜஸ்
உஷ்ணமான ஸ்பர்சம் தான் தேஜஸ்ஸின் லக்ஷணம்
உஷ்ண ஸ்பர்சவத் தேஜஸ்ஸூ -ந பும்ஸ லிங்கம் இது

அசம்பவத் தோஷம் இல்லை
சந்த்ர கிரணங்கள் ஆஹ்லாதமாக இருக்க -உள்ளே நீர் அவயவங்கள் இருப்பதால் -அவ்யாப்தி தோஷம் இல்லை
ரத்னம் தேஜஸ்ஸூ -கூட பிருத்வி இருப்பதால் தேஜஸ் வெப்பம் அடி பட்டுப் போகுமே –
அபிபவம் ஆகுமே-அமுக்கி விடும் -அவ்யாப்தி இல்லை
வெந்நீர் -வெப்பம் -அதி வியாப்தி இல்லை நீர் தேஜஸ் சேர்ந்ததால் தானே

நித்யமான தேஜஸ்ஸூ -பரமாணு வடிவில் இருப்பது
அநித்யமான தேஜஸ்ஸூ -பரமாணுவில் இருந்து உருவான கார்யங்கள்

வேறு ஒரு வகை விபாகம்
சரீரம் –ஆதித்ய லோகத்தில் இருப்பவர்களுடையவை -பிரசித்தம் -தேஜஸ் பிரதானம் என்றவாறு-

இந்த்ரியம் -நிறம் -ரூபம் -என்னும் பண்பைக் க்ரஹிக்கும் சஷுஸ்ஸூ இந்த்ரியம் -கரு விழியின் நுனியில் இருப்பது
கிருஷ்ண தாரா அக்ர வர்த்தி

சஷுஸ்ஸூ என்னும் இந்திரியம் தேஜஸ்ஸாலே ஆனது என்பதற்கு அனுமானம்
ஒரு விளக்கு தன் முன் இருக்கும் பொருளின் ஸ்பர்சம் முதலியவற்றை வெளிப்படுத்தாமல்
நிறத்தை மட்டும் வெளிப்படுத்துகிறது –
அது தேஜஸ்ஸால் ஆனது –
அதே போல் சஷுஸ்ஸூம் தன் முன் இருக்கும் மற்ற பண்புகளை விட்டு நிறத்தை மட்டும் வெளிப்படுத்துகிறது
ஆகையால் இதுவும் தேஜஸ்ஸூ தான்

விஷயம் –
1-பவ்மம்-பொதுவான நெருப்பு முதலியவை -பவ்மம்-பூமி உடன் தொடர்பு –
இந்தநம் -எரி பொருள் பூமி உடன் சம்பந்தம் –
2-திவ்யம்-வானத்தில் இருக்கும் மின்னல் போன்றவை –
த்யு லோகம் -வானம்- அபிந்தனம் வித்யுதாதிகள் -மேகத்தில் உள்ள ஆப அப்பு இந்தனமாகக் கொண்டது
3-உதர்யம்-வயிற்றில் இருந்து ஜெரிமானம் செய்யும் அக்னி -ஜாடராக்னி-
4-ஆகரஜம்–சுரங்கங்களில் கிடைக்கும் தங்கம் முதலியவை -தேஜஸ் மழுங்க அடிப்பட்டு -பிருத்வியால்

———–

வாயு
நிறம் இல்லாமலும் ஸ்பர்சம் உடையதாயும் இருப்பது வாயு
நிறத்தின் இன்மையோடு -அபாவத்தோடு -கூடிய ஸ்பர்சம் தான் வாயுவின் லக்ஷணம்
ரூப ரஹித சூன்ய ஸ்பர்சவான் –ரூப அபாவ ஸ்பர்சவான் –

பிருத்வி அப்பு தேஜஸ் மூன்றுக்கும் ரூபம் -இவற்றைக் கழிக்க ரூப ரஹிதம்
மீதி ஆறு -இவற்றில் ஐந்தும்
ஆகாசம் காலம் திக்கு மனஸ் ஆத்மா இவற்றுக்கு ஸ்பர்சம் இல்லையே
அசம்பவ -அவ்யாப்தி அதி வியாப்தி தோஷங்கள் இல்லாத லக்ஷணம் இதுவே –

நித்யமானது –பரமாணு வடிவில் இருக்கும் வாயு
அநித்யம் -பரமாணுவில் இருந்து உருவாகும் கார்யங்கள்

வேறே விபாகம்
சரீரம் -வாயு லோகத்தில் இருப்பவர்களுடையவை

இந்த்ரியம் -ஸ்பர்சம் என்னும் பண்பைக் க்ரஹிக்கும் த்வக் இந்த்ரியம் -உடல் முழுவதும் பரவி தோலில் இருக்கும்
த்வக் -சர்வ சரீர வர்த்தி –
நாக்கு இனிமையும் ரஸத்தையும் உஷ்ணத்வமும் காட்டும்–நாக்கின் நுனியில் ரஸந இந்த்ரியமும் த்வக் இந்த்ரியமும் உள்ளதே –

த்வக் இந்திரியம் வாயுவினால் ஆனது என்பதற்கு அனுமானம்
விசிறியில் இருந்து வரும் காற்று நம் உடலில் இருக்கும் நீரில் இருக்கும் குளிர்ச்சியை மட்டும்
வெளிப்படுத்துகிறது அது வாயுவினால் ஆக்கப் பட்டது
அதே போல் த்வக் இந்த்ரியமும் ஒரு பொருளின் ஸ்பர்சத்தை மட்டும் வெளிப்படுத்துகிற படியால்
அதுவும் வாயுவால் ஆனது தான் –

விஷயம் -மரம் முதலியவற்றை அசைக்கும் காற்று

பிருத்வி அப்பு தேஜஸ் கண்ணால் பார்க்கலாம்
மத பேதம் ப்ராசீன வாயுவை -ஸ்பர்சம் -குணம் -மட்டும் கிரஹிக்கிறது -பொருள் இருக்க வேண்டும்
வாயுவை அனுமானம் செய்கிறார்
நவீனம் -காற்றும் அறியப்படுகிறது என்பர் –காற்றைத் தொடுகிறேன் பிரத்யக்ஷம் என்பர்

—————

பாடம் –15-அவயவம் -அவயவி –

வேதங்களுக்கு விருத்தமான தர்க்கம் ஒத்துக் கொள்ள ஒண்ணாது -மனு பகவான் –

ரூப ரஹித ஸ்பர்ஸவான் வாயு லக்ஷணம் பார்த்தோம்
ப்ராண வாயு
வாயுவை சரீரம் -இந்திரியம் -விஷயம் -என்று பிரித்தோம்
அதில் விஷயம் என்பதற்குள் ப்ராண வாயுவும் அடங்கும்
நம் உடலுக்குள் சஞ்சரிக்கும் வாயு ப்ராண வாயு
இது நம் உடலில் வெல்வேறு பகுதிகளில் இருந்து வெவ்வேறு செயல்களைச் செய்வதால்
ப்ராணம் -அபானம் -வ்யானம்-உதானம் -சமானம் -என்று ஐந்து வாயுக்களாகப் பிரித்து அழைக்கப்படுகிறது

ப்ராண வாயு ஹ்ருதயத்திலும்-மேல் நோக்கி சஞ்சரிக்கும் –
அபான வாயு குடலிலும்
சமான வாயு நாபியிலும்
உதான வாயு தொண்டையிலும்
வ்யான வாயு சரீரம் முழுவதிலும் இருக்கும்
காரியம் வேறே இருக்கும் இடங்கள் வேறே என்பதால் ஐந்தாக பிரித்து சொல்வர்

——–

பிருத்வி அப்பு தேஜஸ் வாயு நான்குக்கும் பரமாணுக்கள் உண்டு என்று பார்த்தோம் –
பரமாணுக்கள் என்றால் என்ன -அத்தை எதற்கு ஒத்துக் கொள்ள வேண்டும் –
இவை சேர்ந்து -சேர்க்கை -பொருள்கள் வேறே வேறே என்பதைப் பார்ப்போம் –

உலகில் உண்டாக்க கூடிய பொருள்கள் எல்லாம் வெவ்வேறு அளவுகளில் உள்ளன
ஒரு பொருள் பகுதிகளால் -அவயவங்களால் -ஆக்கப் பட்டு இருந்தால் தான் அளவு மாறுபட முடியும்
ஆக ஒரு பொருளை உடைத்தால் அதன் அவயவங்கள் கிடைக்கும்
எவ்வளவு தூரம் உடைக்க முடியும் -எவ்வளவு அவயவங்கள் இருக்க முடியும்
முடிவில்லாமல் உடைக்கலாம் -அநந்தமான அவயவங்கள் உண்டு என்றால் -மலைக்கும் கடுகுக்கும் வேறுபாடு இருக்க முடியாது –
இரண்டுக்கும் எண்ணற்ற அவயவங்கள் உண்டு என்கிற பக்ஷத்தில்
ஆகையால் அவயவங்களுக்கு முடிவு உண்டு-அதாவது கடைசி அவயவம் ஓன்று இருந்தே ஆக வேண்டும்
அந்த கடைசி அவயவத்திற்கு அவயவங்கள் இருக்க முடியாது
அவயவங்கள் அற்ற ஒரு பொருள் உண்டாகவோ அழியவோ முடியாது
ஆகவே அது நித்யமாக இருக்கும்
அப்படிப்பட்ட அவயவங்கள் குறைவாக சேர்ந்தால் கடுகு பிறக்கும் -அதிகமான எண்ணிக்கையில் சேர்ந்தால் மலை பிறக்கும்

நியாய மாதத்தில் கடைசி அவயவத்தை இப்படி அறிகிறார்கள்
உலகில் நுண்ணிய பொருள்களை எடுத்துக் கொள்வோம் -ஜன்னல் வழியே வரும் ஸூர்ய ஒளி கற்றை –
அதில் கண்ணுக்குத் தெரியும் பொருள் -த்ரி யணுகம் என்று பெயர் வைத்தார்கள்
கண்ணுக்குத் தெரியும் எந்தப் பொருள்களும் பகுதிகளாக ஆக்கப்பட்டுள்ளது என்று முன்பே பார்த்துள்ளோம் –
குடம் துணி போன்றவை
மிக நுண்ணிய த்ரி யணுகம் நம் கன்னுக்குத் தெரிவதால் அதுக்கும் கூட அவயவங்கள் இருக்க வேண்டும் –
அவை நம் கண்ணுக்குத் தெரிய மாட்டா
அவற்றுக்குத் த்வி யணுகம் என்று பெயர்
உலகில் கண்ணுக்குத் தெரியும் ஒரு பொருளை உருவாக்கக் கூடிய எந்த அவயவத்துக்கும் தனக்கே
அவயவங்கள் உண்டு என்று பார்த்து இருக்கிறோம்
துணியை உருவாக்கும் நூல் பஞ்சின் அவயவங்களால் ஆக்கப்பட்டுள்ளது போல்
அதே போலே கண்ணுக்குத் தெரியும் இந்த த்ரி யணுகத்தை உருவாக்கும் இந்த த்வி யணுகமும்
அவயவங்களைக் கொண்டதாகவே தான் இருக்க வேண்டும்
அவற்றுக்கு பரமாணுக்கள் என்று பெயர் -அவையே கடைசி அவயவம்
இதே போல் பரமாணுவையும் பிரித்தால் முடிவு இல்லாமல் பிரிக்க வேண்டி வரும்
அதாவது அநவஸ்தா தோஷம் வரும்–infinite regression -ஆகையால் பரமாணுவோடே நிறுத்திக் கொள்கிறார்கள்

பரிமாணம் ஏற்றத் தாழ்வு -தார தம்யம்-இருந்தாலே ஏதோ ஒரு இடத்தில் முடிய வேண்டும்
மேல் எல்லை பரம மஹத்வம் -விபு பதார்த்தங்கள் ஆகாசம் காலம், திக்கு ஆத்மா -எங்கும் பரவி உள்ளவை
பரம பதம் என்கிறோமே
அதே போல் கீழ் எல்லை -அணுக்களிலும் இதுக்கு கீழ் எல்லையும் இருக்க வேண்டுமே –
இதுவே பரமாணு -இது இரண்டாவது காரணம் -பரம அணுத்வம் உள்ளது பரமாணு –

ப்ராசீன நியாயம் இப்படி நிர்வாகம்
த்ரி அணுகம் அளவிலே நின்று இருக்கலாமே
எதுக்கு த்வி அணுகம் -பரமாணு -கல்பிக்க வேண்டும் –
நவீன நையாயிகம்-

பொருள்கள் உருவாக்குவதில் இரண்டு கண்ணோட்டங்கள் உண்டு –
ஸத் கார்ய வாதம் –இருக்கும் ஒரு பொருள் மற்ற ஒரு பொருள் ஆகும்
அ ஸத் கார்ய வாதம் –புதிதாக பொருள்கள் உண்டாகும்

ஸத் கார்ய வாதமே வேதாந்திகள் ஒப்புக் கொள்வது
இதில் ஒரு பொருள் வெவ்வேறே நிலைகளை அடைந்தால் வெவ்வேறு பெயர்களால் அழைக்கப் படுகின்றன
ஆனால் பொருள் ஓன்று தான்
பிருத்வியால் ஆக்கப்பட்ட பஞ்சு–,முதலில் பந்துக்களாக இருக்கும் -பின்பு நூல் ஆகும் -பின் துணி ஆகும் –
கிழிந்து நூல் ஆகும் -கொளுத்தி விட்டால் சாம்பல் ஆகும்
ஆக அந்த அந்த நிலை உண்டாகி அழிந்தது என்று தானே சொல்ல வேண்டுமது ஒழிய
பொருள் உண்டாயிற்று அழிந்தது என்று சொல்ல ஒண்ணாது
ஆகவே அவயவியும் அவயவமும் வெவ்வேறு பொருள் அல்ல
பிருத்வி பரமாணுவே -பஞ்சாகவும் -நூலாகவும் -துணி யாகவும் -சாம்பலாகவும் ஆகிறது –

நியாய மதம் சொல்லும் அ ஸத் கார்ய வாதம்
இந்த வாதத்தில்
அவயவங்கள் சேரும் பொழுது அவயவி என்ற புதிய த்ரவ்யம் உண்டாகும் –
அந்தப் பொருள் இதற்கு முன்னால் இல்லவே இல்லை -அதனால் தான் ப்ராகபாவம் என்பதைச் சொல்கிறார்கள் –
ஒரு பொருள் அழியும் பொழுது அது மற்ற ஒரு பொருளாகாது -முழுவதாகவே அழிந்து விடும் –
அதன் அவயவங்கள் மட்டும் தான் மீதம் இருக்கும்-அதனால் தான் ப்ரத்வம்சாபாவம் என்று ஓன்று உள்ளது –
ஆக ஒவ் ஒரு அவயவியும் அதன் அவயவங்களைக் காட்டிலும் வேறு பட்ட ஒரு த்ரவ்யமான படியால்
ஒரே கோட்டில் அவற்றைக் காட்ட முடியாது
ஒவ் ஒரு பொருள்களுக்கும் தனித் தனி கோடுகள் வேண்டும்
நூலில் இருந்து துணி என்ற புதிய பொருள் உண்டாகும்
அப்போது நூலும் அப்படியே இருக்கும்
துணி அழிந்த பின்பு துணி என்பது இருக்கவே இருக்காது –
நூல் என்ற பழைய பொருள் மட்டுமே இருக்கும் –
இப்படி இரண்டு வெவ்வேறு பொருள்களான அவயவத்துக்கும் அவயவிக்கும் இடையில்
சமவாயம் என்னும் சம்பந்தம் இருக்கும்
துணி -சமவாயம் –நூல்
நூல் -சமவாயம் -பஞ்சு பந்துக்கள்
பஞ்சு பந்துக்கள் -சமவாயம் -பிருத்வீ பரமாணு

அவயவி -அவயவங்கள் -இவற்றுக்கும் சமவாயம் சம்பந்தம் –
குணம் ஆஸ்ரயத்தில்
கிரியை ஆச்ரயத்தில்
சாமான்யம் ஆஸ்ரயத்தில்
நித்ய -பரமாணு -இவற்றில் உள்ள விசேஷம் ஆஸ்ரயம் போலே இங்கும்
அவயவி அவயவங்களில் உள்ளவையும் சமவாயம் சம்பந்தம் –

மேஜைக்கும் குடத்துக்கும் -சம்யோக சம்பந்தம் -ஆதாரமாக கொண்டதால்
கபாலங்கள் -கடம் -இதுவும் ஆதாரம் -சம்பந்தம் வேறே
அது சம்யோகம் -இது சமவாயம்
கபாலம் அண்டியே குடம் இருக்கும் -பிரிக்க முடியாத சம்பந்தம்
குடத்தை மேஜையில் இருந்து பிரிக்கலாம் -எடுத்து தரையில் வைக்கலாம் –
ப்ராக் அபாவம் சொல்வதால் த்ரவ்யங்கள் வேறே வேறே -தொடர்பு சமவாயம் –
ப்ராக் அபாவம் த்வம்ச அபாவம் சொல்வதால் அஸத் கார்ய வாதிகள்

சிலர் செய்யும் ஆஷேபம்
அவயவி என்று தனியே ஓன்று தேவை இல்லை
பரமாணுக்களின் கூட்டங்களே தான் குடம் என்றும் துணி என்றும் அழைக்கப் படுகின்றன –
நம் கேள்வி –
பரமாணுவை நாம் கண்ணால் காண முடியாத படியால் அதன் கூட்டமான குடத்தையும் நம்மால் காண முடியாமல் போகுமே
இதுக்கு அவர்கள் பதில்
ஒரு மயிரைப் பார்க்க முடியா விடிலும் மயிர்க் கற்றையைப் பார்க்கிறோமே
ஒரு பெரிய குடம் -குடம்–என்று எல்லாம் சொல்கிறோமே -குடம் பல பரமாணுக்களின் கூட்டம் என்றால்
ஓன்று என்றோ பெரியது என்றோ எப்படி அழைக்கலாம்
ஒருமை -சங்க்யை -சிறிய பெரிய -பரிமாணம்

பல சிறிய நெல் குவியலைப் பார்த்து ஒரு பெரிய நெல் குவியல் என்று சொல்வதைப் போல் சொல்லலாமே
இதுக்கு -அவர்கள் பதில் –
ஒரு தலை முடி கண்ணுக்குத் தெரியும் பொருள் தான் அருகில் இருந்தால் தெரியும்-தொலைவில் இருந்தால் தெரியாது –
ஆகவே தலை முடிக் கற்றை கண்ணுக்குத் தெரிவதில் தப்பில்லை
பரமாணு கண்ணுக்குத் தெரியாத பொருள் -அதன் கூட்டமும் கண்ணுக்குப் புலப்பட முடியாதே –
எங்கள் மதத்தில் பரமாணுக்கள் சேர்ந்து த்வி அணுகம் -த்ரி அணுகம் -குடம் -என்று வெவ்வேறு பொருள்கள் உண்டாகின்றன –
அவற்றில் ஒவ் ஒன்றும் முன்புள்ள பொருள்களைக் காட்டிலும் பெரியது -ஆகவே கண்ணுக்குத் தெரிவதில் தவறு இல்லை –

பரமாணு த்வி அணுகம் -கண்ணுக்குத் தெரியாதவை
த்ரி அணுகம் கண்ணுக்குத் தெரியும் –
இவைகள் சேர்ந்து அவயவி-

————

காரிகா வளி -ஒன்பது த்ரவ்யங்கள் தேஹி ஆத்மா குணி குணம் உடையவன் போல் –

பாடம் -16-ஆகாசம் –காலம் –திக்கு –

ஆகாசம்
சப்தத்தைக் குணமாகக் கொண்டது -ஆகாசம் -லக்ஷணம்
சப்தம் குணத்தைக் காதாலே க்ரஹிக்கிறோம்
குணம் த்ரவ்யத்தை ஆஸ்ரயித்துத் தான் இருக்க முடியும் -சமவாய சம்பந்தம்-
ஆகவே சப்தத்துக்கு ஆஸ்ரயமாக ஆகாசம் இருப்பதை அனுமானிக்கிறோம் –
சப்த குணகம் ஆகாசம் –சப்தம் என்னும் ஒரே குணத்தைக் கொண்டது ஆகாசம் -பஹு வ்ரீஹி சமாசம் –
உலகில் பல ஆகாசங்கள் இருந்தாலும் லகுவாக ஆகாசம் ஒன்றே என்பதே எளிதாகும் –
குடம் வகை பல குடங்கள் போல் இல்லாமல் ஒரே ஆகாசம் -ஏகம் –
உலகம் முழுவதும் சப்தம் கேட்பதால் ஆகாசம் விபு -உலகம் எங்கும் பரந்துள்ளது என்று அறியலாம் –
ஆகாசத்துக்கு அவயவங்கள் என்று கொண்டால் -அவை சேர்ந்து பெரிய ஆகாசம் என்று கடினமாக கொள்ள வேண்டி வரும்
ஆகவே ஆகாசம் பகுதிகள் இல்லாமல் நித்யம் என்றும் அறிகிறோம்

விபாகம்
முன்பு ஒவ் ஒரு த்ரவ்யத்தையும் சரீரம் இந்திரியம் விஷயம் என்று மூன்றாகப் பிரித்துப் பார்த்தோம்
ஆகாசத்தாலான சரீரம் கிடையாது –
ஆகாசத்தாலான இந்திரியம் உண்டு -சப்தத்தைக் கிரஹிக்கும் ஸ்ரோத்ரம் -ஸ்ரோத்ர இந்திரியம்
ஆனால் ஆகாசம் ஓன்று என்று பார்த்தோம் –
ஸ்ரோத்ர இந்திரியம் ஒவ் ஒருவருக்கும் தனித்தனியாக உள்ளதே
எப்படி ஆகாசமே ஸ்ரோத்ரம் ஆகும்
பகுதிகள் இல்லாத ஆகாசத்தைக் கூட பொருள்களின் சேர்த்தியைக் கொண்டு உலகில் பிரித்துப் பார்க்கிறோம்
இந்திய வான் வெளி -அமெரிக்க வான் வெளி-air space-flying space -குட ஆகாசம் -என்று பிரித்துப் பார்ப்பது போல்
ஒவ் ஒருவரின் காதால் வரையறுக்கப் பட்ட ஆகாசம் வெவ்வேறு தானே –
அதுவே ஸ்ரோத்ரம் எனப்படுகிறது –
ஆகாசத்தால் ஆக்கப் பட்டது என்று சொல்லாமல் ஆகாசமே ஸ்ரோத்ரம் இந்திரியம்
கரண சஸ்குளிக்கு உள்ளே-வரையறுக்கப் பட்ட ஆகாசம் -அவச்சின்னம் –

——–

காலத்தை நிலை நாட்டுதல்
இப்பொழுது குடம் உள்ளது என்று சொல்லும் பொழுது -இப்பொழுது என்ற சொல்லில் இருந்து
ஸூர்யனின் கிரியைக்கும் குடத்துக்கும் உள்ள சம்பந்தம் தோற்றுவதால்
இந்த ஸூர்ய கிரியை உடன் கூடிய குடம் என்றே இதற்குப் பொருள் என்பர் நியாய தரிசனத்தில்
இதில் ஒரு கேள்வி வரும் -ஸூர்யன் கிரியை பூமியில் உள்ள குடத்துடன் எப்படி சம்பந்தம் உண்டாகும் என்றால்
அந்த கிரியை உடைய ஸூர்யன் ஒரு த்ரவ்யத்தைத் தொட்டுக் கொண்டு உள்ளது -சமயோக சம்பந்தம் கொண்டுள்ளது
அதே த்ரவ்யத்தை இந்தக் குடம் தொட்டுக் கொண்டு உள்ளது
கிரியைக்கு இருப்பிடமான ஸூர்யன் தொட்டுக் கொண்டு இருக்கும் த்ரவ்யத்தைத் தொட்டுக் கொண்டு இருக்கும் குடம்
பரம்பரா சம்பந்தத்தால் அந்தக் கிரியை உடன் கூடிய குடம்
அந்த இடையில் உள்ள த்ரவ்யத்தை காலம் என்று அனுமானிக்கிறார்கள்
கிரியை கிரியாவான் -இரண்டுக்கும் சமவாய சம்பந்தம் -விட்டுப் பிரிக்க முடியாத -சமவாய சம்யோக சம்பந்தம் இல்லாமல்
பரம்பரயா சம்பந்தம் -இப்பொழுது -இதானி -ஞானம் -ஸூர்யன் -கிரியைக்கும் பொருளுக்கும் சம்பந்தம் -காலம்

காலத்தை நிரூபிக்க மற்ற ஒரு வழி
குணங்களின் வகைகள் –24-இவற்றில்
பரத்வம் அபரத்வம் பார்த்தோம்
தேசத்தாலும் காலத்தாலும் பரத்வம் அபரத்வம் பார்த்தோம் முன்பு
பழையவை பரத்வம் புதிதானவை அபரத்வம் –
இவை தானாக உண்டாக மாட்டாதே -ஏதோ காரணம் இருக்க வேண்டும் –
அதுவே காலம் என்னும் த்ரவ்யத்துடன் சம்யோக சம்பந்தம்
சம்யோகத்துக்கு இருப்பிடமான த்ரவ்யம் காலம் என்றவாறு
பல காலங்களுடன் தொடர்பு உள்ள பொருள் முதிர்ந்து பரத்வம் என்ற குணம் உள்ளது என்றும்
குறைவான காலங்கள் உடன் தொடர்பு -சம்யோகம் -உள்ள பொருள் இளையது -அபரத்வம் என்ற குணம் உள்ளது என்கிறோம்

காலத்தின் தன்மைகள்
இப்படி அனுமானிக்கும் காலமும் ஆகாசம் போல் லகுவாக உலகம் முழுவதும் ஒன்றாகவே கொள்ள வேண்டும் –
ஒவ் ஒரு இடத்தில் ஒவ் ஒரு காலம் என்பது இல்லை
காலம் ஓன்று -எங்கும் காணப்படுகிறது என்பதால் விபு
லாகவத்தைப் பற்றி ஆகாசம் போலவே இதுக்கும் அவயவங்கள் இல்லை இதுவும் நித்யம் என்றே கொள்ள வேண்டும்
காலம் ஏகம் -விபு -நித்யம் -அதீத வியவகார ஹேது காலம் –

காலம் என்பது மாம்பழம் பழுக்கவும் பூக்கள் பூக்கவும் போன்ற செயல்களுக்கு காரணமாக இருப்பதை பார்க்கிறோம்
உலகில் உண்டாகும் அனைத்துப் பொருள்களுக்கும் காலமும் ஒரு காரணம் என்பது நியாய மதக் கொள்கை —
பூமியில் குடம் உள்ளது போல் காலையில் குடம் உள்ளது என்று சொல்வதால் பூமி போலே
காலமும் உலகில் உள்ள அனைத்துப் பொருள்களுக்கும் இருப்பிடம்- ஆஸ்ரயம் ஆகிறது

காலம் ஒன்றே என்றால் வினாடி நிமிஷம் முஹூர்த்தம் பகல் பக்ஷம் மாதம் வருஷம் யுகம் போன்ற பிரிவுகள் எப்படி
மஹா காலம் நித்தியமாக இருந்தாலும் ஒவ் ஒரு பொருளுடன் தொடர்பு பட்ட -சம்யோகம் பட்ட -காலம்
அளவுபட்டதாகவே இருக்கும் –அந்தப் பொருள் அளவு பட்டதாக இருப்பதால்
நான் 30 வயசுடன் இருந்தாலும் காதில் கடுக்கனுடன் ஐந்து வருஷம் இருந்தேன் என்பது போல்
அதே போல் காலம் நித்யமாக இருந்தாலும் குடத்தால் வரையறுக்கப்பட்ட காலம் -இமைத்தல் என்கிற செயலால்
வரையறுக்கப் பட்ட காலம் அளவுபட்டதாகவே இருக்குமே

ஒரு க்ஷணம் -வினாடி -என்பதை எவ்வாறு வரையறுப்பது
இதை அறிய -கர்மம் -கிரியை -செயல் -என்பதைப் பற்றி புரிந்து கொள்ள வேண்டும் –

எந்த ஒரு செயலை எடுத்துக் கொண்டாலும் அதில் என்ன நடக்கும்?
ஒரு பொருள் ஓர் இடத்திலிருந்து மற்ற ஓர் இடத்திற்குச் செல்லும்.
அந்தப் பொருள், செயலுக்கு முன்னால் எந்த இடத்தில் இருந்ததோ அதற்கு“முன் இடம் (பூர்வ தேசம்) என்று பெயர்.
அந்தப் பொருளுக்கும் பூர்வ தேசம் என்று சொல்லப்படும் மு்ன்னிடத்துக்கும் ஸம்யோகம் இருந்தது.
அந்தப் பொருளில் க்ரியை ஏற்பட்டால், அது முதலில் மு்ன்னிடத்திலிருந்து பிரிந்து விடும்,
அதாவது, அந்தப் பொருளுக்கும் பூர்வ தேசத்துக்கும் இருந்த ஸம்யோகம் அழிந்து விடும்.

க்ரியையானது நேரடியாக சம்யோகத்தை அழிக்காது.
இடையில் அந்தப் பொருளில் விபாகம் (பிரிவு) என்ற குணம் உண்டாகும்,
அதற்குப் பி்ன் தான் முன் தேசத்தோடு இருந்த சம் யோகம் அழியும் –.
அடுத்து, அந்தப் பொருள், க்ரியையி்ன் காரணமாக எந்த இடத்தை அடைகிறதோ,
அதற்கு “அடுத்த இடம் (உத்தர தேசம்) என்று பெயர்.
ஆக, அந்த உத்தர தேசத்துக்கும் இந்தப் பொருளுக்கும் இடையே ஸம்யோகம் ஏற்படுகிறது என்று பொருள்.

உத்தர தேசத்தோடே சம்யோகம் ஏற்பட்ட பிறகு அந்தச் செயல் முடிந்துவிடும்.
ஆக, கீழுள்ள க்ரமத்தில் தான் இது நடக்கிறது
1-க்ரியை உண்டாகும்-
2-விபாகம் உண்டாகும்
3-பூர்வ தேச சம்யோகம் அழியும்
4-உத்தர தேச சம்யோகம் ஏற்படும்
5-க்ரியை அழிந்து விடும்

இப்படி ஒரு செயலிலிருந்து அடுத்தடுத்து ஏற்படும் மாற்றங்களைப்
பயன் படுத்தித் தான் நாம் ’ஒரு வினாடி’ என்பதை வரையறுக்கப் போகிறோம்
மனதில் கொள்க
ஒரு பொருள் உண்டாவதற்கு முன் வினாடி வரை தொடக்கமே இல்லாததான அதன் ப்ராக அபாவம் இருக்கும்.
ஒரு பொருள் அழியும் வினாடி தொடங்கி , முடிவில்லாத காலம் வரை அதன் ப்ரத்வம்ச அபாவம் இருக்கும்

ஆக, கீழே உள்ளவை ஒவ் ஒன்றும் ஒவ் ஒரு வினாடி மட்டுமே இருக்கக் கூடியவை
விபாகத்தின் ப்ராக் அபாவத்தினுடன் கூடிய கிரியை
பூர்வ தேச சம்யோகத்துடன் கூடிய விபாகம்
உத்தர தேச சம்யோகத்தின் ப்ராக் அபாவத்துடன் கூடிய பூர்வ தேச சம்யோக நாசம்
உத்தர தேச சம்யோகத்துடன் கூடிய கிரியை

கால உபாதிகள் இவை – இப்படி ஒவ் ஒரு கிரியைக்கும் நான்கு க்ஷணங்கள் இருக்குமே
ஆக -ஒரு விநாடி என்றால்
கிரியை ஏற்பட்டு ஆனால் அதில் இருந்து விபாகம் ஏற்படாத காலம்
விபாகமும் பூர்வ தேச சம்யோகமும் சேர்ந்து இருக்கும் காலம்
பூர்வ தேச சம்யோகத்தின் அழிவும் உத்தர தேச சம்யோகத்தின் ப்ராக் அபாவமும் சேர்ந்து இருக்கும் காலம்
கிரியை இடம் உத்தர தேச சம்யோகமும் சேர்ந்து இருக்கும் காலம்

———-

24 குணங்களுக்குள் பரத்வம் அபரத்வம் என்று இரண்டு குணங்களைப் பார்த்தோம்.
தொலைவில் இருக்கும் பொருளிடம் பரத்வமும், அருகிலிருக்கும் பொருளிடம் அபரத்வமும் இருக்கும் என்றும் பார்த்தோம்.
இந்த குணங்கள் தானாக உண்டாக முடியாது, ஏதோ ஒரு காரணம் வேண்டும். அது என்ன என்றால் –
“திக் என்ற த்ரவ்யத்தோடு இருக்கும் தொடர்பு (சம்யோகம்)” என்கிறது ந்யாய மதம்.
ஆகையால், “இருக்குமிடத்தை வைத்து வரக் கூடிய பரத்வம் மற்றும் அபரத்வத்துக்குக் காரணமான சம்யோகத்துக்கு
இருப்பிடமான த்ரவ்யம்” என்கிற முறையில் திக் என்று ஒரு த்ரவ்யம் உள்ளது என்று நாம் நிரூபிக்கலாம்

ஆகாசத்துக்கும் காலத்துக்கும் சொன்னது போல் லாவகம் என்கிற கொள்கையைப் பின் பற்றிப் பார்த்தால்
திக் என்பதும் ஒன்று தான், விபு (எங்கும் பரந்து இருப்பது), அவயவங்கள் அற்றது, நித்யமானது
காலத்தைப் போலவே திசையும் உலகில் உண்டாகும் அனைத்துப் பொருட்களுக்கும் காரணமானது,
அனைத்துப் பொருட்களையும் தாங்கக் கூடியது

திசை என்னும் த்ரவ்யம் ஒன்றாக இருந்தாலும் அந்த அந்த இடத்தில் இருக்கும் பொருள்களைக் கொண்டு
அதை வரையறுத்துப் பார்க்க முடியும்
அப்படிச் செய்யும் போது தான் கிழக்கு மேற்கு போன்ற பிரிவுகள் ஏற்படுகின்றன
அஸ்தாசலம்–மாடு -மேரு மலை -ஆடு -உதயாசலம்
ஆடு மாட்டுடன் ஒப்பிட்டால் கிழக்கு
அஸ்தாசல மலைக்கு அருகில் மேற்கு
மேரு மலையில் அருகில் வடக்கு
தொலைவில் தெற்கு என்று பிரித்துச் சொல்கிறோம்

உதயாசலம் அஸ்தாசலம் மேரு பர்வம் மூன்றையும் வைத்து நான்கு திக்குகள்

காலம் திக்கு இவை சர்வ ஆதாரம் -அனைத்தையும் தாங்கிக் கொண்டு இருக்கும் -அனைத்துக்கும் காரணம்
பூதலே – பூமியில் ஏழாம் வேற்றுமை -காலையில் பூமியில் குடம் உள்ளது இங்கும் ஏழாம் வேற்றுமை
அதிகரணம் -தாங்கும்

ஆத்மா மனஸ் இவற்றைப் பற்றி மேல் பார்ப்போம்

——————-

பாடம் –17-ஆத்மா

ஆச்சர்யம் உடைய ஜீவாத்மா–ஆயிரக்கணக்கான மக்களில் யாரோ ஒருவன் காண்கிறான் –
அதில் சொல்லி புரிய வைப்பவர் மிக சிலர் -கேட்பதற்கும் சுலபத்தில் ஆள் இல்லை -உள்ளபடி அறிபவர் துர்லபம் கீதை
குணத்துக்கு ஆஸ்ரயம் த்ரவ்யம் -ஆகவே ஆத்மா த்ரவ்யம்
சிகப்பு நிறத்துக்கு மணம் இல்லை –
அறிவு உடையவன் புத்திக்கு இருப்பிடம் தான் ஆத்மா சைதன்யன் ஞானம் உடையவன் –
ஞானாதிகரணம் ஞானத்துக்கு இருப்பிடம் ஆத்மா -குணம் த்ரவ்யம் சமவாயம் சம்பந்தம் –
த்ரவ்யங்களுக்குள் தானே சம்யோக சம்பந்தம் இருக்கும்

ஞானத்தின் இருப்பிடம் ஆத்மா -அதாவது ஞானம் தான் ஆத்மாவின் லக்ஷணம் –
அதுவே மற்ற பொருள்களின் இடத்தும் ஆத்மாவை வேறு படுத்துகிறது –
ஞானம் -என்பது ஒரு குணம் –
அதன் இருப்பிடம் ஆத்மா என்று அழைக்கப்படும் த்ரவ்யம்
தொடர்பு -சமவாயம் -சம்பந்தம் –
சமவாய சம்பந்தத்தால் ஞானத்தைக் கொண்டு இருக்கும் த்ரவ்யம் ஆத்மா -இதுவே லக்ஷணம்

ஆத்மா இரண்டு வகைப்படும்
ஜீவாத்மா
பரமாத்மா
ஆத்மா என்னும் சொல் வேதாந்தத்தில் “ஆத்மா வா அரே த்ரஷ்டவ்ய: ஸ்ரோதவ்ய: மந்தவ்ய: நிதித்யாஸி தவ்ய:” போன்ற
இடங்களில் பரமாத்மாவைக் குறிப்பதாகவும் காணப்படுகிறது.
ஜ்ஞாநத்தை உடையவன் ஆத்மா என்னும் லக்ஷணம் பரமாத்மாவுக்கும் பொருந்துவது தான் -ஆகையால் குறையில்ஸல.

பரமாத்மா –ஈஸ்வரன்
தத்ர ஈஸ்வர –சர்வஞ்ஞன்– ஏக ஏவ -உலகை ஆள்பவன் –
பரமாத்மா என்பவர் “ஈஸ்வரர் ” என்று அழைக்கப்படுகிறார்.
இதற்கு “உலகத்தைப் படைத்து ஆள்பவர்” என்று பொருள்.
ஈஸ்வரனாக இருப்பதால் சர்வஞ்ஞனாகவே இருக்க வேண்டும் –
ஈர் அரசு கூடாதே –
ஒரு குடம் மண்ணைக் கொண்டு குயவனாலே செய்யப்படுகிறது. குடத்துக்குக் கார்யம் என்று பெயர்.
மண்ணுக்கு உபாதாந காரணம் என்று பெயர்.
குயவனுக்கு நிமித்த காரணம் என்று பெயர். அந்தக் குயவனுக்கே “கர்த்தா”-செய்பவன் – என்று மற்ற ஓரு பெயரும் உண்டு.
கர்த்தா என்றால், ஒரு பொருளை உருவாக்கத் தேவைப்படும் உபாதாந காரணத்ஸத முதலில் அறிந்து கொண்டு,
பி்ன் அந்தக் கார்யத்ஸத உண்டாக்க ஆசைப்பட்டு, அதற்கான முயற்சியை எடுப்பவர்.

கர்த்தா -உபாதான கோசர -அபரோக்ஷ ஞானம்–ஆசை -இச்சை – அடைய பிரயத்தனம் -மூன்று படிகள்
கார்த்தாவுக்கு இச்சா ஸூகீரிஷா-கிருதி -புத்தி-ஞானம் ஆசை கிரியை மூன்றையும் ஆத்மா குணமாகவே முன்பே பார்த்தோம்

ஒரு குயவன் , குடத்தை உருவாக்கத் தேவையான மண்ணை முதலில் காண்கிறார்,
அடுத்து இந்த மண்ணிலிருந்து குடத்தை உருவாக்க ஆசைப்படுகிறார்,
பி்ன் குடத்தை உருவாக்க முயற்சி செய்கிறார்.
ஆகையால் தான் அவர் குடத்தி்ன் கர்த்தா என்று அழைக்கப்படுகிறார்.

அதே போல் பரமாத்மா இந்த உலகத்தை உண்டாக்கத் தேவையான பரமாணுக்களை முதலில் அறிகிறார்,
பி்ன் உலகை உருவாக்க ஆசைப்படுகிறார்,
பி்ன் அதற்கான முயற்சியை எடுக்கிறார்.
ஆகையால் பரமாத்மா இந்த உலகத்தி்ன் கர்த்தா ஆகிறார்.

பரமாத்மா சர்வஞ்ஞன் -ஒருவன்
ஆக, நம் புலன்களுக்கு எட்டாதவையான நுண்ணிய பரமாணுக்கள் அனைத்தையும் பரமாத்மா காண்கிறார்,
நுண்ணிய பரமாணுக்களையே பார்க்க முடிந்தவரால் நிச்சயமாக குடம், துணி, வளையல் போன்ற பெரிய
பொருட்களையும் பார்க்க முடியும். ஆகையால், உலகிலிருக்கும் அனைத்துப் பொருள்களையும் அவர்
காண்கிறபடியால், அவர் ஸர்வஜ்ஞன் (அனைத்னையும் அறிந்தவர்) என்று கொண்டாடப்படுகிறார்.

நாம் ஒரு சமயத்தில் ஒன்றை அறிகிறோம், பிறகு மறந்து விடுகிறோம்.
ஈஸ்வரனுக்கு அப்படி எந்த குறைபாடுகளும் கிடையாது. ஆகையால், ஈஸ்வரர் எப்படி நித்யமோ , அதே போல்
அவரிடத்திலிருக்கும் ’அனைத்துப் பொருள்களைப் பற்றின ஜ்ஞாநமும்’ நித்யமானது என்று சொன்னால் ஒரு தவறும் இல்லை .
ஆகவே, “நித்யமான அறிவைக் கொண்டிருப்பவர் பரமாத்மா” என்று பரமாத்மாவுக்கு லக்ஷணம் சொல்லலாம்.
நித்தியமான ஞானம் உடையவர் சர்வேஸ்வரன் —
ஜீவாத்மாவுக்கு ஜ்ஞாநம் இருந்தாலும், நித்யமான ஜ்ஞாநம் கிடையாது. நம் ஜ்ஞானம் உருவாகும் அழியும்.
உலகுக்கு இரண்டு ஆள்பவர்கள் இருந்தால் குழப்பம் தான் ஏற்படும். ஆகையால், ஈஸ்வரராக இருக்கும் பரமாத்மா
ஒருவர் தான் உள்ளார். இரண்டாவது ஈஸ்வரர் தேவை இல்லை

ஜீவாத்மா
ஜீவாத்மாவின் லக்ஷணம்
ஸூகம், துக்கம், த்வேஷம், தர்மம், அதர்மம் என்ற குணங்களி்ன் இருப்பிடமாயிருத்தல்.
பரமாத்மாவுக்கு ஜ்ஞாநம், இச்சை , ப்ரயத்நம் இருந்தாலும்,ஸூகம் துக்கம் முதலாைனவை கிடையாது.
ஆகவே இது ஜீவனுக்கு மட்டுமிருக்கும் தனித்தன்மை யாகும் –

ஸூகாதிகள் ஆஸ்ரயத்வம் ஜீவாத்மா –பரமாத்மாவுக்கு இல்லை -இதுவே லஷ்ணம்
ஆசை உண்டு ஞானம் உண்டு ப்ரயத்தனம் உண்டு பரமாத்மாவுக்கு
ராக த்வேஷம் ஸூகம் துக்கம் பாபம் புண்ணியம் இல்லையே –பரமாத்மாவுக்கு -ஜீவாத்மாவுக்கே உண்டு

இந்த ஜீவாத்மா ஒவ் ஓரு உடலிலும் வேறாக உள்ளார்.
ஒரு உடலில் இருப்பவர் ஸூகப்படும் போதே மற்றொரு உடலில் இருப்பவர் துக்கப்படு வதைக் காண்கிறோம்.
ஆகையால், அந்த இரண்டு சரீரங்கிளிலும் ஒரே ஆத்மா இருக்க முடியாது, ஒவ் ஓரு சரீரத்தில் ஒவ் ஓரு ஆத்மா
தான் இருக்கவேண்டும்.
பிரதி சரீரம் பின்னமாகவே ஆத்மா இருக்க வேண்டும்
சரீரங்கள் எண்ணிலடங்காதபடியால் ஆத்மாக்களும் எண்ணிலடங்காதவையே –

கேள்வி – ந்யாய மதத்தி்ன்படி நம் சரீரம் ஒவ் ஓரு நொடியும் மாறுகிறதே . அப்பொழுது ஆத்மா மாறி விடுமா?
பதில் – இல்லை -. ஒரே காலத்தில் இரண்டு சரீரங்களில் ஒரு ஆத்மா இருக்க முடியாதே
தவிர வேவ்வேறு காலங்களில் இருக்கலாம்.

கேள்வி – ரிஷிகள் ஒரே காலத்தில் பல உடல்களை எடுத்துக் கொள்கிறார்களே ? அவர்கள் ஆத்மா மாறுமா?
பதில் – இல்லை . யோகத்தி்ன் பலத்தால் ஒரே காலத்தில் பல சரீரங்கள் எடுக்கலாம். மற்றவரால் முடியாது-

ஆத்மாவின் அளவு என்ன
பொருட்களை அவற்றி்ன் அளவை வைத்து அணு (நுண்ணியது),
மத்யம பரிமாணம் (நடுத்தர அளவு),
விபு (எங்கும் பரந்திருப்பது) என்று மூன்றாகப் பிரிக்கலாம். -ஆகாசம் போல் –
அவற்றில் ஆத்மா எந்தப் பிரிவில் அடங்கும் என்று பார்ப்போம் .

ஆத்மா அணுவாக இருக்க முடியாது. ஏன் என்றால் –
இரண்டு காரணங்கள் சொல்கிறார்கள்
ஓன்று
அணுவான பொருள்களையும், அவற்றிலிருக்கும் குணங்களையும் நம் புலன்களால் அறிய முடியாது.
பரமாணுவாக உள்ளவற்றையும் அவற்றின் குணங்களையும் இந்த்ரியங்களால் அறிய முடியாதே –
ஆனால் நான் என்று ஆத்மாவையையும் அதிலிருக்கும் ஜ்ஞாநம் ஸூகம் முதலான குணங்களையும் நாம் அறிகிறோம் –
இரண்டு
“நான் குடத்தை அறிகிறேன் , “நான் ஸூகமாக உள்ளேன் ” என்று ஒரே சமயத்தில் உடலில் இரு பகுதிகளில் ஸூகத்தையும்
துக்கத்தையும் நாம் அநுபவிக்கிறோம் – “காலுக்கு ஸூகமாக உள்ளது ஆனால் தலை வலிக்கிறது” என்று.
ஆத்மா அணுவாக இருந்தால் அவர் ஒரு காலத்தில் காலிலும் தலையிலும் இருக்க முடியாது.

ஆத்மா நடுத்தர அளவை உடையது என்றும் சொல்ல முடியாது,
ஏன் என்றால் உலகில் “எந்தப் பொருள் நடுத்தர அளவில் உடையதோ அது நிச்சயமாக ஒருநாள் அழியும்” என்ற நியமம் உள்ளது.
ஆத்மாவுக்கு அழிவை ஒப்புக் கொள்ள முடியாது என்று அடுத்து பார்க்கப் போகிறோம்.

ஆகையால் ஆத்மா விபுவாகத் தான் (உலகு எங்கும் பரந்து விரிந்து இருக்கும் பொருளாகத்) தான் இருக்க வேண்டும்.
பல ஆத்மாக்கள் உண்டே அவை எல்லாம் விபுவாக இருக்க முடியுமா
ஸூஷ்ம வஸ்து ஆகாசம் ஆத்மா திக்குக்கள் விபுவாக இருந்தாலும் ஒன்றுடன் ஓன்று முட்டிக் கொள்ளாதே
ஒளி எவ்வளவும் நுழையலாம்

ஆகையால் ஆத்மா விபு என்பர் நியாய வாதிகள்
வேதாந்த சித்தம் ஆத்மா அணு

ஆத்மா நித்யமானதா அல்லவா ?
ஆத்மா அநித்யமானது, அதாவது ஒரு நாள் உண்டாகி ஒரு நாள் அழியக்கூடியது என்று ஒப்புக் கொண்டால் பல சிக்கல்கள் ஏற்படும்

அக்ருத அப்யாகமம் –
நாம் இந்தப் பிறவியை எடுப்பதற்கும், இந்தப் பிறவியில் அநுபவிக்கும் ஸூக துக்கங்களுக்கு ஏதோ
ஒரு காரணம் இருக்க வேண்டும். காரணமில்லாமல் எதுவும் நடக்காது.
ஆனால் இந்த ஆத்மா இப் பொழுது தான் உண்டான படியால் இவன் இதற்கு முன்னால் எந்தச் செயலும் செய்திருக்க முடியாது.
ஆகவே, செய்யாத செயல்களுக்கான பலனை நாம் அநுபவிக்கிறோம் என்பதாகும்.
இது ஒப்புக் கொள்ள முடியாத ஒரு கண்ணோட்டம்

க்ருத ஹாநம் –க்ருத நாசம்
நாம் அடுத்தடுத்த பிறவிகளில் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக இந்தப் பிறவியில் செய்யும் செயல்கள் எல்லாம் வீணாகப் போகும்,
ஆத்மா இந்த பிறவியி்ன் முடிவில் அழிந்து விடுவார் என்றால். அந்தச் செயல்களை போதித்த வேதங்களும் தவறானவை ஆகி விடும்

ஐஹிக பலன்கள் இங்கேயே இந்தப்பிறவியில் அடையும் பலன்கள்–ஸ்வர்க்காதி பலன்கள் கிடைக்க
வேதங்கள் சொல்லுவது செய்து நாசம் ஆகுமே கர்மங்களும் சாஸ்திரங்களும் வியர்த்தமாகும்

மேலும் மூன்றாவது காரணம் -ஸ்தன்ய பாந ப்ரவ்ருத்தி –
ஆத்மா இந்த உடலோடு பிறக்கும் போது தான் உருவாகிறது என்றால்,
முதன் முதலில் பசியைப் போக்கிக் கொள்ளப் பால் குடிக்க வேண்டும்,
அதையும் இப்படித் தான் குடிக்க வேண்டும் என்று எப்படி ஒரு குழந்தை அறிகிறது?
பிறந்தவுடன் இதை அறிந்து கொள்ளும் ஆற்றல் இல்லா விட்டாலும் பால் குடிக்க அதற்குத் தெரிந்துள்ளது.
ஆகவே முன் பிறவிகளி்ன் பழக்கதால்-பதிவினால் -ஸம்ஸ்காரங்களால் – மட்டும் தான் இதை ந்யாயப்படுத்த முடியும்.

ஆகையால் ஆத்மா நித்யமானது என்று ஒப்புக் கொள்ள வேண்டும்

1-பிரதி சரீர பின்னம்
2-விபு
3-நித்யஸ் ச ஆத்மா என்றபடி –

———

பாடம் –18-த்ரவ்யங்கள் –ஆத்மா மனஸ் —

மனா ஏக மனுஷ்யானாம் காரணம் பந்த மோஷாயா
பந்தாயா விஷயா சங்கீ
மனசும் ஆந்திர புலன் -ப்ரத்யக்ஷம் -இந்த்ரியங்களால் அறிய படும் -என்னும் பொழுது மனசும் சேரும் –

ஆத்மாவை ஏன் ஏற்க வேண்டும் -இதற்கு பிரமாணம் -சான்று -என்பதைப் பார்ப்போம் –
முதலில் நம் அனுபவத்தில் இருந்தே ஆத்மாவை அறிய முடியும்
நான் அறிகிறேன் -நான் பார்க்கிறேன் -போன்ற அனுபவங்களில் அறிவை உடையவனாக நான் என்னும் ஆத்மா அறியப்படுகிறது அன்றோ –
மேலும் இது என் உடல் என்று நாம் சொல்லுகிறபடியால் நான் என்பவன் உடலைக் காட்டிலும் வேறுபட்டவன் என்றும் அறிந்து விடலாம்
ஆகவே ப்ரத்யக்ஷம் -புலன்களால் ஏற்படும் அறிவு தான் ஆத்மாவை அறிய முதல் பிரமாணம்

ஆத்மா இந்த்ரியானாம் -மனஸ் புத்தி பிராண இவற்றைத் தாண்டி ஞான ஆச்ரயமான ஓன்று
இந்திரியங்கள் கருவி -பயன் படுத்தி -அறிகிறோம்
நான் கண்ணாலே பார்க்கிறேன் என்பது கோடாலியால் வெட்டுகிறேன் போல் கருவி வேறே கர்த்தா வேறே
ஆத்மாவை அனுமானம் செய்தும் அறியலாம் -நான் கத்தியால் வெட்டுகிறேன் என்று சொல்லும் பொழுது
அறிவற்ற அசேதனப் பொருளான கத்தி தானாகவே எதையும் வெட்டாது
அத்தை இயக்க அறிவுள்ள ஒருவர் வேண்டும்
அதே போலே கண்ணால் பார்க்கிறேன் நாக்கால் சுவைக்கிறேன் என்னும் பொழுது இந்திரியங்களும்
அறிவற்ற பொருள்களான படியால் அவற்றை இயக்க அறிவுள்ள ஒருவர் தேவை -அவர் தான் ஆத்மா

இந்த உடலே தான் ஆத்மாவா
சாருவாக மதத்தில் சரீரமே தான் ஆத்மா என்று சொல்கிறார்கள்
நான் மனுஷ்யன் நான் உயரமானவன் என்று எல்லாம் நமக்கு அறிவு ஏற்படுகிற படியால்
மனிதத்தன்மை உயரம் இவை எல்லாம் சரீரத்தின் தன்மைகள் ஆகிறபடியால்
நான் என்பது சரீரமாகத் தான் இருக்க வேண்டும் என்பது அவர்கள் வாதம்
மனுஷ்ய சரீரத்தை உடைய நான் என்று சொல்லாமல் நான் மனுஷ்யன் என்பதால் உடலே ஞானம் உடைய
ஆத்மா என்பர் லோகாயுத சாருவாகர்

ஆனால், அப்படி ஒப்புக் கொண்டால் பல.தோஷங்கள் ஏற்படுகி்றன
1-சரீரம் என்பது கை கால் முதலான பல அயவங்களி்ன் சேர்க்கையால் உருவான ஒரு அவயவி –
ந்யாய மதத்தி்ன் படி, ஒரு அவயவம் குஸறந்தாலும், அதிலிருந்து உருவான அவயவி மாறி விடும்.
ஆகவே ஒரு கையோ காலோ குறைந்தாலும் இந்த சரீரம் மாறி விடுகிறது.
சரீரமே ஆத்மா என்று ஒப்புக் கொண்டால், கை வெட்டுப் பட்டால் ஆத்மாவே அழிந்து விடும் என்று ஒரு தோஷம் –
2-ந்யாய மதத்தி்ன்படி நமது சரீரம் ஒவ் ஓரு விநாடியும் மாறிக் கொண்டே இருக்கிறது,
பல அவயவங்கள் சேருகிறபடியாலும் பிரிந்து போகிறபடியாலும்.
ஆகவே சிறு வயதில் நமக்கு இருந்த சரீரமும் இப்போது இருக்கும் சரீரமும் வேவ்வேறு.
சரீரமே தான் ஆத்மா என்றால் வயதாகும் போது ஆத்மாவே மாறி விடுகிறது என்பதாகும்.
ஆகவே சிறு வயதில் பார்த்த ஒரு பொருளை இப் பொழுது நினைத்துப் பார்க்க முடியாமல் போகும்,
அன்று பார்த்த ஆத்மா இ்ன்று இல்லாதபடியால்.
3-பார்த்தவர் வேறே நினைப்பவர் என்றாலும் பதிவு சம்ஸ்காரம் -அனுபவித்ததால் வந்த பதிவு என்று கொண்டு சாமதானம் செய்பவர் –
இதை விட லாகவமாக ஆத்மா வேறே தேகம் சரீரம் வேறே என்று கொள்ளலாமே –
4-ஸ்தன்ய பாநம் – சரீரமே ஆத்மா என்றால், சரீரம் இப் பொழுது தான் உண்டானபடியால் அதற்குப் பால் குடிக்கும் முறை
தெரிந்திருக்க வாய்ப்பில்லை-

இந்த்ரியங்களே ஆத்மா என்று சொல்லலாமா
கண் பார்க்கிறது”, “காது கேட்கிறது”போன்ற வ்யவஹாரங்கஸளக் கொண்டு கண், காது முதலான
இந்த்ரியங்களே தா்ன் ஆத்மா என்று சொல்லலாம் என்று சிலர் கூறுகி்றனர். ஆனால், இந்த மதமும் ஒவ்வாது.
i. கண் என்ற இந்த்ரியம் தான் ஆத்மா என்று கொண்டால், ஒருவருக்கு கண் மட்டும் அழிந்தால் ஆத்மாவே
அழிந்து விட்டது என்று ஆகும். ஆனால் உலகில் அப்படி நாம் காண்பதில்ஸல.
கண் இழந்தவர்களும் மற்றப் புலன்களைக் கொண்டு வாழ்கின்றனர்
ii. ஒருவர் கண்ணிருக்கும் போது ஒரு பூவைப் பார்த்திருந்தால், ஏதோ காரணத்தால் அவர் கண்ணை இழந்தாலும்,
பிற் காலத்தில் அந்தப் பூவை நினைத்துப் பார்க்க முடிகிறது உலகில்.
ஆனால், கண் தான் ஆத்மா என்று கொண்டால், கண் அழிந்து விட்டால், அந்தப் பூவை அறிந்த ஆத்மாவே
அழிந்து விட்டபடியால் பிற்காலத்தில் எப்படி நினைவு வரும்?
iii. இந்த்ரியமே தான் ஆத்மா என்றால், கண் என்பது ஒரு ஆத்மா, தோல் என்பது வேறே ஓரு ஆத்மா என்பதாகும்.
அப்படி இருந்தால், நேற்று இந்தக் குடத்தைப் பார்த்த நானே இ்ன்று கண்ணை மூடி அதைத் தொடுகிறவன் என்கிற ஜ்ஞாநம் ஏற்படவே முடியாது.
ஏன் என்றால், குடத்தைப் பார்த்த கண் வேறே ஓரு ஆத்மா, இப்பொழுது தொடும் தோல் வேறே ஒரு ஆத்மா.

மனது தான் ஆத்மா என்றும் கொள்ளலாமா
சரீரமோ இந்த்ரியமோ அழியக் கூடிய பொருள்கள் -ஆகையால் அவை தான் ஆத்மா என்று கொண்டால்
முன்னால் சொன்ன தோஷங்கள் வரும்
மனதோ நித்தியமானது -அதையே ஆத்மா என்று கொண்டால் என்ன என்று சிலர் ஆக்ஷேபிக்கின்றனர்
ஆனால் அதுவும் சரியில்லை
நியாய மதத்தின் படி அணுவாக நுண்ணியதாக இருக்கும் பொருள்களையும் அவற்றில் இருக்கும் குணங்களையும்
இந்த்ரியங்களைக் கொண்டு அறிய முடியாது
மனது என்பதோ நுண்ணிய பொருள் -அதனால் தான் மனதை நம்மால் காண முடிவது இல்லை
மனது தான் ஆத்மா என்று கொண்டால் ஆத்மாவையும் ஆத்மாவின் இடத்தில் இருக்கும் ஞானம் ஸூகம் துக்கம்
முதலான குணங்களையும் நம்மால் அறிய முடியாமல் போகும்
இது உலகிற்குப் புறம்பானது -நமக்கு நான் அறிகிறேன் நான் ஸூகமாக உள்ளேன் நான் துக்கமாக உள்ளேன் என்று
ஆத்மாவையும் ஆத்மாவின் குணங்களையும் பற்றின அறிவு கண்டிப்பாக ஏற்படுகிறது
இது ஏற்பட முடியாது மனது தான் ஆத்மா என்று கொண்டால்-

தேகாத்ம பிரமம் தவிர்த்தால் தானே வேறே லோகம் என்று கைங்கர்யம் பண்ண வேண்டும் என்ற எண்ணம் வரும்
இனி ஆத்மாவின் குணங்கள் பார்ப்போம்

ஜீவாத்மாவின் குணங்கள்
ஞானம் -அறிவு
சம்ஸ்காரம் -பதிவு
ஞானம் -இச்சை -ஆசை என்றும் த்வேஷம் வெறுப்பு -என்றும் தூண்டி
பிரயத்தனம் -முயற்சி மூலம்
தர்மம் -புண்யம் / அதர்மம் -பாபம் -செய்து
ஸூகம் -துக்கம் ஏற்பட்டு
ஞானம் சம்ஸ்காரம்
இப்படி சுழன்று சுழன்று இருக்குமே

1-ஞானம் -புத்தி
2-ஆசை -இச்சா
3-த்வேஷம்
4-பிரயத்தனம் –க்ருதி
5-சுகம்
6-துக்கம்
ஏற்பட்டு சுகம் உடையவன் என்ற ஞானம் ஏற்படும்
7-தர்மம் -புண்யம்
8-அதர்மம் -பாபம் –
9-சம்ஸ்காரம் -ஞானம் முதலில் பின்பும் வந்து இது சம்ஸ்காரம் -பதிவு

இனி மனஸ்-ஒன்பதாவது த்ரவ்யம் பார்ப்போம்
சுகாதி உபலப்தி சாதனம்-இந்திரியம் -வழியாகவும் -கருவியாகவும் இருப்பது லக்ஷணம்
காரணமாக சாதனம் மட்டும் என்றால் ஆத்மாவும் காலமும் திக்குக்கும் சேரும் -அதி வியாப்தி தோஷம் வரும்

ஸூகம் -துக்கம் முதலான ஆத்மாவின் குணங்களை நாம் அறிவதற்கு காரணமாக இருக்கும் இந்திரியம் மனது
என்று மனதின் லக்ஷணம் சொல்லப்படுகிறது

மற்ற ஒரு லக்ஷணம் –
ஸ்பர்சம் அற்றதாகாவும் -செயல் உடையதாகவும் இருப்பது மனஸ்ஸூ –
ஸ்பர்சம் ரஹித -ஆகாசம் திக்கு காலம் ஆத்மா மனஸ் ஐந்துக்கும் உண்டு –
முதல் நான்கும் விபு -பரவி இருப்பதால் நகர முடியாதே -செயல் இருக்காதே –
செயல் உடையதாகவும் -கிரியாவத்வம்-மனசுக்கே
கண்ணால் பார்க்கிறோம் -ஒரு ஞானத்துக்கு ஒரு கருவி
நினைவு -ஸ்ம்ருதிக்கு கருவி மனசு –

நாம் பார்ப்பதுக்குக் கண் கருவியாக இருப்பது போல் நாம் சிந்திப்பதற்கு கருவியாக மனஸ்ஸூ உள்ளது
இரண்டு ஆத்மாக்களுக்குப் பொதுவாக ஒரே மனஸ்ஸூ இருந்தால் ஒருவர் நினைப்பதுவே மற்ற ஒருவரும்
நினைக்க வேண்டும் -அப்படி உலகில் காண்பது இல்லை
ஆகையால் ஒவ் ஒரு ஆத்மாவுக்கும் தனித்தனியாக ஒரு மனது உள்ளது
ஆத்மாக்கள் அனந்தமாக எண்ணில் அடங்காததாக இருக்கிறபடியால் மனசுக்களும் உலகில் அனந்தங்கள்
ப்ரத்யாத்ம நியதத்வாத் அனந்தம் –

மனத்தின் அளவு என்ன
இந்த்ரியத்தில் இருந்து ஒரு ஞானம் உண்டாவதற்கு
ஆத்மா –மனஸ் – இந்திரியம் -விஷயம் -என்கிற வரிசையில் சம்யோகம் ஏற்பட வேண்டும்
மனது விபுவாக இருந்தால் விபுவான மனதுக்கும் விபுவான ஆத்மாவுக்கும் சம்யோகம் ஏற்படவே முடியாது –
இரண்டு இடத்திலும் கிரியை ஏற்பட முடியாதபடியால் –
சம்யோகம் உண்டாகத் தானே கிரியை வேண்டும் நித்தியமான சம்யோகமாய் இருக்கட்டுமே என்றால் அதுவும் ஒவ்வாது

ஆத்மா மனசா சம்யுக்த-மனசா இந்திரியம் -அது விஷயம் இப்படி சங்கிலி தொடர்பால் ஞானம் –
இது இல்லாமல் தூங்கும் பொழுது விஷயமோ இந்த்ரியங்களோ இல்லாமல் -மனசு நினைத்தே சம்யோகம்
ஆழ்ந்த உறக்கத்தில் ஸூஷுப்தி -நிலையில் இந்த சம்யோகம் போகும்
ஆத்மாவுக்கும் மனசுக்கும் சம்யோகம் இல்லா விட்டால் தான் ஆத்மா ஆழ்ந்த தூக்கத்தை அடைய முடியும்
ஆத்மாவுக்கும் மனசுக்கும் நித்தியமான சம்யோகம் இருந்தால் சம்யோகம் இல்லாத காலமே இல்லாமல் போகும் —
ஆத்மாவுக்கு தூக்கமே ஏற்படாமல் போய் விடும் –
ஆகையால் மனஸ்ஸூ விபுவாக இருக்க முடியாது –

மனது நடுத்தர அளவை -மத்யம -பரிணாமத்தை -உடையதாக இருந்தால் அதுக்கு அழிவு நிச்சயம் ஏற்பட வேண்டும்
அதுவும் ஒப்புக் கொள்ள முடியாது
ஆகையால் மனஸ்ஸூ அணுவான நுண்ணியதாக த்ரவ்யமாகவே தான் இருக்க வேண்டும்
ஆத்மாவும் மனசும் அணு என்றால் மனஸ் ஸ்பிருதத் நாடிக்குள் போகும் -ஸ்ப்ருதத் குகைக்குள் மனசு இருந்தால் ஞானம் ஏற்படாது

மனசுக்கு மூன்று நிலை
இந்திரியங்கள் தொடர்பால் -ஞானம் –
ஸ்வப்னம் நிலையில் நினைவால் ஞானம் –
ஸ்ப்ருத்தத் உள்ளே போய் ஞானம் வராதே

அணுவாக இருப்பதால் அதை அழிப்பதற்கு வேறு ஒரு பொருள் உலகில் இல்லை
ஆகையால் மனஸ்ஸூ நித்யமாகத் தான் இருக்க வேண்டும் –
மோக்ஷம் -எப்படி நித்யம் என்றால் –
நியாய படி முக்தி -ஆத்மாவும் மனசும் தொட்டுண்டே இருந்தாலும் இயக்க மாட்டார் -சிந்திக்க மாட்டார்
நான் புஸ்தகத்தை தொட்டுக் கொண்டு இருக்கிறேன் போல் முக்தியிலும் அழியாமல் நினைக்க கருவியாக இல்லாமல்
மனசால் பாதிக்கப் பட மாட்டார்

இதுவரை ஒன்பது த்ரவ்யங்களைப் பார்த்தோம்
இனி -24-குணங்களைப் பார்த்து எந்த குணங்கள் எந்த த்ரவ்யங்களில் உள்ளன என்பதைப் பார்ப்போம்

————–

பாடம் –19-குணங்கள் -ரூபம் முதல் –சங்க்யா வரை –

ரூபம்
வடிவம் அல்ல நிறம் என்பதையே இங்கு ரூபம் என்கிறது
சஷூர் மாத்ர க்ராஹ்யம் குண -என்பது லக்ஷணம் -மூன்று தன்மைகள் -தலங்கள் –
சஷுர் இந்த்ரியத்தால் மட்டும் கிரஹிக்கப்படும் குணம் ரூபம் என்று அழைக்கப் படுகிறது
சஷுர் இந்த்ரியத்தால் கிரஹிக்கப்படுதல்
மற்ற இந்த்ரியங்களால் கிரஹிக்கப்படாமல் இருத்தல்
குணமாய் இருத்தல்
ஆகிய மூன்று பண்புகளின் சேர்க்கை தான் ரூபத்தின் லக்ஷணம் ஆகும்

இதில் முதலாவதான தலத்தை விட்டால் -எந்த இந்த்ரியத்தாலும் கிரஹிக்கப் படாத குருத்வம் -அதி வியாப்தி ஏற்படும் –
(பாரம் -எடை -புலன்களுக்கு எட்டாதது அனுமானித்துத் தான் அறியலாம் நியாய மதம் )
ஆகவே தலம் தேவை
இரண்டாவது தலத்தை விட்டால் -சம்யோகம் சங்க்யா முதலிய குணங்களில் அதி வியாப்தி உண்டாகும் –
அவையும் சஷுர் இந்த்ரியத்தால் கிரஹிக்கப்படும் குணங்கள் தான்
ஆகவே இரண்டாவது தலமும் தேவை
சம்யோகம் சங்க்யா முதலிய குணங்கள் த்வக் இந்த்ரியத்தாலும் கிரஹிக்கப்படுபவை
ஆகையால் மற்ற இந்த்ரியத்தால் கிரஹிக்கப்படாமல் இருக்கும் பண்பு அவற்றுக்கு இல்லை
(இது குடம் ஒரு குடம் என்பதை கண்ணை மூடி தொட்டு அறியலாமே )
மூன்றாவது தலத்தை விட்டால் ரூபத்வம் என்ற சாமான்யத்தில் அதி வியாப்தி வரும்
ஒரு குணம் எந்த இந்த்ரியத்தால் கிரஹிக்கப் படுகிறதோ அதே இந்திரியம் தான் அந்த குணத்தில் இருக்கும்
சாமான்யத்தையும் அந்த குணத்தின் அபாவத்தையும் கிரகிக்கும் என்ற நியமம் உள்ளது
ஆகையால் சஷுஸ்ஸால் கிரஹிக்கப் படுதல் -மற்ற இந்த்ரியங்களால் கிரஹிக்கப்படாமை என்ற இரண்டும்
ரூபத்வம் -நிறத்தன்மை –என்கிற சாமான்யத்துக்கும் உண்டு -ஆகையால் அதி வியாப்தி –
(ரூபத்வத்தின் அபாத்வமும்-இல்லாமையும் கண்ணாலே கிரஹிக்கிறோம்
ரூபத்வம் சாமான்யமாகத் தானே இருக்கும் குணம் ஆகாதே )
அத்தைப் போக்க மூன்றாவது தலத்தைச் சேர்க்க வேண்டும் ரூபத்வம் சாமான்யமே ஒழிய குணம் ஆகாது

இப்படி லக்ஷணம் பரீஷை பண்ணி அறிந்தால் மற்ற வித்யைகளுக்கு பழக்கம்- கை விளக்காக இருக்கும்

ரூபத்தின் வகைகள்
வெளுப்பு கருப்பு மஞ்சள் பச்சை சிவப்பு பழுப்பு சித்ரம்-கலவை இப்படி ஏழு வகை
White, Black, Yellow, Green, Red, Brown and Mixed.

ரூபம் என்கிற குணம் பிருத்வீ ஜலம் தேஜஸ்-ஆகிய மூன்று த்ரவ்யங்களில் உண்டு
பிருத்வியில் ஏழு வகை ரூபங்களும் உண்டு
ஜலத்தில் அபாஸ்வர சுக்லம் ஒளி விடாத வெண்மை -transparent என்ற நிறம் உள்ளது –
ஒரு பொருளில் நிறம் இருந்தால் தான் அது கண்ணுக்குப் புலப்படும் என்கிற நியமம் உண்டே –
(ஆகாசம் இதனால் தான் கண்ணுக்குத் தெரிய வில்லை என்கிறார் )
ஆகையால் ஜலத்திலும் ரூபம் உண்டு
தேஜஸ்ஸிலே பாஸ்வர சுக்லம்-ஒளி விடும் வெள்ளை -என்ற நிறம் உள்ளது
நெருப்பில் மஞ்சள் போன்ற நிறங்கள் அதில் சேர்க்கப்பட்ட பிருத்வியாலான எரி பொருள்களின் நிறங்கள்

வெவ்வேறு நிறங்களைக் கொண்ட அவயவங்களில் இருந்து -நூல்களில் இருந்து -ஒரு அவயவி -துணி -உண்டானால்
அது கண்ணுக்குப் புலப்படுகிற படியால் அதில் ரூபம் இல்லை என்று சொல்ல முடியாது —
(துணி ரூபம் தெரிகிறது அவயவங்கள் நிறம் தான் என்று சொல்ல முடியாதே –
ரூபம் வியாப்த்த விருத்தி ஒன்றாகவே இருக்கும் என்பர் )
ஒரு பொருளில் எங்கும் ஓக்க ஒரு நிறம் தான் இருக்க முடியும் என்கிறபடியால்
ஒவ் ஒரு பகுதியில் ஒவ் ஒரு நிறம் உள்ளது என்று சொல்ல முடியாது
ஆகையால் புதிதான சித்ர -ரூபம் -கலவை -கலந்த ரூபம் என்ற ஓன்று அந்த துணியில் இருப்பதாக
ஒப்புக் கொள்ளப் படுகிறது

————–

ரஸம் -சுவை
ரசன இந்த்ரியத்தால் கிரஹிக்கப்படும் குணம் -என்று ரஸத்தின் லக்ஷணம்
இங்கு மாத்ர விசேஷணம் இல்லை -இரண்டு தலங்கள் தான் –
ரஸத்வம் -சாமான்யம் -சாமான்யத்துக்கும் உண்டே அதி வியாப்தி -வரும் ஆகவே குணம் விசேஷணம் –

அது ஆறு வகைப்படும்
மதுரம் -இனிமை -அம்லம் புளிப்பு -ஆசிட் -லவணம்-உவர்ப்பு -கடு-கார்ப்பு -கஷாயம் -துவர்ப்பு -மற்றும் திக்தம் -கசப்பு
ரஸம் என்பது பிருத்வீ ஜலம்-இரண்டு த்ரவ்யங்களிலும் இருக்கும்
பிருத்வீயில் ஆறு வகைகளான சுவைகளும் இருக்க முடியும்
ஜலத்தில் மதுர ரசம் இனிப்பு மட்டும் தான் உண்டு -பொதுவாக இது நமக்குத் தெரியா விட்டாலும்
கசப்பான நெல்லிக்காயை உண்ட பின்பு ஜலத்தைப் பருகினால் அதில் இருக்கும் இனிப்பு நமக்குத் தெரிய வரும்

—————-

கந்தம்–மணம்
க்ராண இந்த்ரியத்தால் கிரஹிக்கப்படும் குணம் -கந்தத்தின் லக்ஷணம்
அது ஸூரபி -நறு மணம் என்றும்
அஸூரபி-துர் நாற்றம் என்று இருவகைப்படும்
கந்தம் என்பது பிருத்வியில் மட்டும் தான் உண்டு –
பிருத்வியில் இரண்டு வகையான கந்தங்களும் இருக்க முடியும்

சித்ர ரூபத்தை ஒப்புக் கொண்டதைப் போல்
சித்ர ரஸம் சித்ர கந்தம் என்பதை ஒப்புக் கொள்வது இல்லை
வெவ்வேறு நிறங்களைக் கொண்ட நூல்களில் இருந்து உண்டான துணியில் சித்ர ரூபம் என்ற ஓன்று இல்லாவிடில்
அந்தத் துணி கண்ணுக்குத் தெரியாமல் போய் விடும் -ஆகையால் அத்தை ஒப்புக் கொண்டோம்
இங்கு வெவ்வேறு ரசங்களைக் கொண்ட பகுதிகளில் இருந்து ஒரு த்ரவ்யம் உண்டானால்
அதில் ரஸம் இல்லாவிட்டாலும் குறை இல்லை
கண்ணும் தோலும் தான் த்ரவ்யத்தை அறியும்
க்ராண இந்திரியம் மணம் மட்டுமே கிரகிக்கும்
பச்சிடியில் சித்ர ரசம் இருக்கு என்று கொள்ள வேண்டாம் அதில் உள்ள அவயவங்கள் சுவைகள் ரசம் அறிகிறோம்

————–

ஸ்பர்சம் –தொடு உணர்ச்சி
த்வக் இந்த்ரியத்தால் மட்டும் கிரஹிக்கப்படும் குணம் என்று ஸ்பர்சத்தின் லக்ஷணம்
இங்கும் மாத்ர விசேஷணம் உண்டு –
அது மூன்று வகைப்படும் -சீதம் -குளிர்ச்சி -உஷ்ணம் -வெப்பம் -அனுஷ்ணா சீதம்-
ஸ்பர்சம் என்பது – பிருத்வீ ஜலம் தேஜஸ் வாயு -என்ற நான்கு த்ரவ்யங்களிலும் இருக்கும்
குளிர்ந்த ஸ்பர்சம் ஜலத்தில் இருக்கும்
வெப்பமான ஸ்பர்சம் தேஜஸ்ஸிலே இருக்கும்
பிருத்வியிலும் வாயுவிலும் மிதமான ஸ்பர்சம் இருக்கும்

வாயுவில் ஸ்பர்சம் மட்டும்
தேஜஸ்ஸில் ரூபமும் ஸ்பர்சமும் இரண்டும்
ஜலத்தில் ரூபம் ரஸம் ஸ்பர்சம் மூன்றும்
பிருத்வியில் ரூபம் ரஸம் கந்தம் ஸ்பர்சம் நான்கும் உண்டு

ரூபம் ரஸம் கந்தம் ஸ்பர்சம் -இவற்றின் நித்யத்வமும் அநித்யத்வமும்
பிருத்வீ ஜலம் தேஜஸ் மற்றும் வாயுவின் கார்யங்கள் அநித்யமான படியால்
அவற்றில் இருக்கும் ரூபங்கள் முதலானவை அநித்யங்கள்

ஜலம் தேஜஸ் மற்றும் வாயுவின் பரமாணுக்கள் நித்தியமான படியால்
அவற்றில் இருக்கும் ரூபம் முதலானவைகளை நித்யங்கள்

பிருத்வீ பரமாணுக்கள் நித்தியமாய் இருந்தாலும் அவற்றில் இருக்கும் ரூபம் முதலானவை நித்யங்கள் அல்ல
ஏன் என்றால் பிருத்வியில் பாகம் -ஒருவகை சமையல் -ஒரு விதமான வெப்பத்தின் சேர்க்கை ஏற்பட்டால்
மாங்காய் மாம்பழம் ஆகுதல் பால் தயிர் ஆகுதல் போன்ற இடத்தில் பரமாணு முதல் மாங்காய் பால் வரை உள்ள
அனைத்து த்ரவ்யங்களிலும் நிறம் சுவை மணம் இவை மாறுகின்றன
ஆகையால் பிருத்வீ பரமாணுக்களில் இருக்கும் ரூபம் முதலியவை நித்தியமாக இருக்க முடியாது

——————-

சங்க்யா–எண்ணிக்கை
ஏகாத்வாத் வியவஹார ஹேது சங்க்யா –
ஓன்று இரண்டு போன்ற சொல்லாடலுக்குக் காரணமாக இருப்பது சங்க்யா–என்று சொல்லப்படும் -எண்ணிக்கை
ஒரு பொருளில் இருக்கும் ஒருமை இருமை முதலியவையை இட்டுத்தான்
இது ஓன்று இவை இரண்டு போன்ற வார்த்தைப்பாடுகள் வருகின்றன

எண்ணிக்கை என்பது ஒன்பது த்ரவ்யங்களுக்கும் உண்டு
ஆகாசம் காலம் திக்கு ஒன்றே ஆகவே சங்க்யா இவற்றுக்கும் உண்டே –
ஓன்று இரண்டு மூன்று நான்கு –பத்து நூறு ஆயிரம் பதினாயிரம்–என்று தொடங்கி பரார்த்தம் வரை எண்ணிக்கை உள்ளது

ஒவ் ஒரு த்ரவ்யத்திலும் இயற்கையாக ஒருமை மட்டும் இருக்கும்
எண்ணிக்கை த்ரவ்யங்களை ஆஸ்ரயித்தே இருக்கும்
ஏகத்துவம்-பரமாணு நித்யம் -அதில் உள்ள ஏகத்துவம் நித்யம்
குடமே உண்டாகும் பொழுது அதில் உள்ள ஏகத்வமும் உண்டாகும்
அது நித்தியமான வஸ்துவாக இருந்தால் அதில் இருக்கும் ஒருமையும் நித்யமாகவே இருக்கும்
அது அநித்யமாக இருந்தால் அதில் இருக்கும் ஒருமையும் அநித்யம்

இருமை மும்மை முதலானவை அனைத்துப் பொருள்களிலும் அநித்யமானது தான்
அபேஷா புத்தி -தெரிந்து கொள்ளும் புத்தி வந்தால் தானே இருமை போன்றவை ஆகியவை தோன்றும் –
எப்பொழுது ஒருவனுக்கு இவை இரண்டு இவை மூன்று என்ற ஞானம் ஏற்படுகிறதோ
அப்பொழுது மட்டும் இருமை மும்மை ஆகியவை தோன்றும் –
அந்த ஞானம் அழிந்த உடன் அந்த எண்ணிக்கையும் அழிந்து விடும்

——————

பாடம் –20-
குணங்கள் –பரிமாணம் முதல் சப்தம் வரை –

6-வது குணம் -பரிமாணம் -அளவு
ஒரு பொருளைப் பற்றி ’இது சிறியது’, ’இது பெரியது’ போன்ற சப்த ப்ரயோகங்களுக்கு
(சொல்லாடல்களுக்குக்) காரணமாக இருப்பது பரிமாணம் என்று அழைக்கப்படுகிறது.
’சிறியது’ என்று ஒரு பொருளைச் சொல்ல, அதைப் பற்றிச் ’சிறியது’ என்ற ஜ்ஞாநம் இருக்க வேண்டும்.
’சிறியது’ என்ற ஜ்ஞாநம் ஏற்படுவதற்கு அந்தப் பொருளில் சிறுமை என்ற ஒரு அளவு (பரிமாணம்) இருக்க வேண்டும்,
சிறுமை இல்லாமல் சிறியது என்ற ஜ்ஞாநம் ஏற்பட முடியாது என்பது ந்யாய மதம்.

• பரிமாணம் -அளவு -என்பது ஒன்பது த்ரவ்யங்களிலும் உண்டு
நவ த்ரவ்ய வ்ருத்தி -ஸங்க்யை போல்

• அளவு -பரிமாணம்) நான்கு வகைப்படும் –
அணு (நுண்ணியதாயிருக்கும் தன்மை —
மஹத் (பெரியதாயிருக்கும் தன்மை )
தீர்க்கம் (நீண்டதாயிருக்கும் தன்மை ) மற்றும்
ஹ்ரஸ்சம் (குள்ளமாயிருக்கும் தன்மை ).

• ப்ருத்வி ஜலம் தேஜஸ் வாயு ஆகிய நான்கு பூதங்களின் பரமாணுக்களும் த்வ்யணுகங்களும்,
(இதுவும் கண்ணுக்குத் தெரியாது முன்பே பார்த்தோம் )
மனது (மனஸ்) என்ற த்ரவ்யமும் நுண்ணியவை — நம் கண்களுக்குப் புலப்பட மாட்டா.
ஆகையால் அவற்றுக்கு அணு பரிமாணம் உள்ளது.

ப்ருத்வீ ஜலம் தேஜஸ் வாயு ஆகியவற்றில் த்ர்யணுகம் தொடங்கி
நாம் பார்க்கும் குடம், மரம், துணி, புத்தகம், நம் உடல், யானையின்
உடல், கடல், மஸல, சூறாவளி ஆகியவை அனைத்துமே மஹத்
(பெரியதாயிருக்கும் தன்மையை உடையவை )

• ஆகாசம் காலம் திக் ஆத்மா ஆகிய நான்கும் விபு (எங்கும் பரந்து
இருப்பவை ). இவற்றின் பரிமாணம் பரம மஹத்வம் (பெரியதாய்
இருப்பதன் மேல் எல்லை ) என்று சொல்லப்படுகிறது.

———

7-வது குணம் -ப்ருதக்த்வம்–வேறுபாடு –

இதி அஸ்மாத் ப்ருதக்

• “இந்தப் பொருள் அந்தப் பொருளிடம் இருந்து தனிப்பட்டது / வேறுபட்டது” என்ற வ்யவஹாரத்திற்கு
(சப்த ப்ரயோகத்திற்கு / வார்த்தைப் பாட்டிற்குக்) காரணம் ப்ருதக்த்வம் என்று சொல்லப்படுகிறது.
• இது ஒன்பது த்ரவ்யங்களிலும் இருக்கும்.
ஒரு ப்ருத்வீ பரமாணு மற்ற ஒரு ப்ருத்வீ பரமாணுவைக் காட்டிலும் தனியானது,
ஜல பரமாணுவைக் காட்டிலும் கூடத் தனியானது,
ஆகாசம் காலம் ஆத்மா முதலியவற்றைக் காட்டிலும் கூடத் தனியானது.
அதே போல் , ஆகாசம் என்பது காலம், திக், ஆத்மா, மனது, ப்ருத்வீ ஜலம் முதலானவற்றைக் காட்டிலும் தனியானது.
ஆகையால், ப்ருதக்த்வம் என்பது அனைத்து த்ரவ்யங்களிலும் உண்டு

———

8-வது குணம் -சம்யோகம் –சேர்க்கை –

அவயவி அவயவங்கள் சம்பந்தம் நூல்கள் துணி சமவாயம் முன்பு பார்த்தோம்
அவயவி இரண்டும் தொட்டுக் கொண்டு இருக்கும் -மேஜை கை -வெறுமனே தொட்டுக் கொண்டே இருக்கும் -சம்யோகம்

• “இந்தப் பொருட்கள் சேர்ந்துள்ளன / தொட்டுக் கொண்டுள்ளன” என்ற வ்யவஹாரத்திற்குக்
காரணம் சம்யோகம் என்று சொல்லப்படுகிறது. இருபொருள்களுக்கிடையே சம்யோகம் -சேர்க்கை –
இருப்பதால் தான் அவற்றை நாம் சம்யுக்தங்கள்-சேர்ந்தவை – என்று சொல்கிறோம்.
• இது ஒன்பது த்ரவ்யங்களிலும் இருக்கும்
• குடம் பூமியைத் தொட்டுக் கொண்டிருக்கும், துணி நம் உடலைத் தொட்டுக் கொண்டிருக்கும்,
ஆகாசம் உலகிலிருக்கும் அனைத்தையும் தொட்டுக் கொண்டிருக்கும்.
இதே போல் எந்த த்ரவ்யத்தை எடுத்துக் கொண்டாலும் அது எதாவது ஒரு த்ரவ்யத்தைத் தொட்டுக் கொண்டு தான் இருக்கும்

கபாலம் குடம் பூமியில் இருக்கும் பொழுது
கபாலத்துக்கும் குடத்துக்கும் சமவாயம் குடத்துக்கும் பூமிக்கும் சம்யோக சம்பந்தம்
சம்யுக்த வ்யவகார ஹேது சம்யோகம்

———-

9-வது குணம் -விபாகம் –பிரிவு

• சம்யோகத்தை அழிக்கும் குணத்திற்கு விபாகம் என்று பெயர்.
• விபாகம் ஒன்பது த்ரவ்யங்களிலும் ஏற்பட முடியும்.
• இரண்டு பொருட்கள் தொட்டுக் கொண்டிருக்கும் போது, ஏதாேது ஒரு பொருளிலோ இரண்டு பொருள்களிலுமோ
க்ரியை ஏற்பட்டால், முதலில் விபாகம் என்ற குணம் இரண்டு பொருள்களிலும் ஏற்படும்.
அந்த விபாகம், அந்தப் பொருட்களுக்கு இடையில் இருக்கும் சம்யோகத்தை அழிக்கும் .
சம்யோகம் அழிந்த பிறகு தான் அந்தப் பொருட்கள் விலகிச் செல்கி்ன்றன

தேர் நகர -க்ஷணம் தோறும் -சம்யோகம் அழிந்து பூர்வ தேசம் சம்யோக நாசம் -உத்தர தேசம் –
கிரியை -விபாகம் -காலம் முன்பே பார்த்தோம்
கிரியை விபாகம் நாசம் சம்யோகம் இப்படி நான்கும் முன்பே பார்த்தோம்

———–

10/11-வது குணம் -பரத்வம் -அபரத்வம் —

• ’பரம்’, ’அபரம்’ போன்ற வ்யவஹாரங்களுக்குக் காரணமாக இருக்கும் குணங்கள் பரத்வமும் அபரத்வமும்.
• இவை ப்ருத்வீ ஜலம் தேஜஸ் வாயு மற்றும் மனஸ் என்ற ஐந்து த்ரவ்யங்களில் இருக்கும்,
ஏன் என்றால் இவை தான் தேசத்தாலோ காலத்தாலோ அளவு பட்டவையாக இருக்க முடியும்.
எங்கும் பரந்து இருக்கும் ஆகாசத்ஸதப் பார்த்து, ஆகாசம் குடத்தைக் காட்டிலும் அருகில் உள்ளது என்று சொல்ல முடியாது
• பரத்வமும் அபரத்வமும் இரண்டிரண்டு வகைப்படும் –
திசையால் ஏற்பட்ட பரத்வம் அபரத்வம், காலத்தால் ஏற்பட்ட பரத்வம் அபரத்வம் என்று.
• தொலைவில் இருக்கும் பொருளில் திசையால் ஏற்பட்ட பரத்வம்
• அருகிலிருக்கும் பொருளில் திசையால் ஏற்பட்ட அபரத்வம்
• பழையதான பொருளில் காலத்தால் ஏற்பட்ட பரத்வம்
• புதியதான பொருளில் காலத்தால் ஏற்பட்ட அபரத்வம்-

ப்ராசீன நியாய மதஸ்தர் இந்த நான்கையும்-ப்ருதக்த்வம் -விபாகம்-பரத்வம் -அபரத்வம் –ஒத்துக் கொள்கிறார்கள்
நவீனர் ஒத்துக் கொள்வது இல்லை -சம்யோகங்கள் மூலமே இவற்றைச் சொல்லலாமே -என்பர் –

———————–

12-வது குணம் -குருத்வம் –எடை —

ஆத்ய பதன முதலில் விழுவதற்கு -அசமவாய காரணம்-குருத்வம்
• ஒரு பொருள் முதன் முதலில் விழுவதற்குக் காரணமான குணம் குருத்வம் என்று அழைக்கப் படுகிறது.
• நாம் கையில் ஒரு பந்தைப் பிடித்துக் கொண்டிருந்து, அதை விடுவித்தால், அந்தப் பந்து விழுகிறது.
விழுதல் என்பது அபேக்ஷணம் –பதநம் என்ற ஒரு வகையான செயல் (கர்ம / க்ரியை ).
10 அடி உயரத்திலிருந்து பூமிக்கு அந்தப் பந்து விழுவதற்குள் அந்தப் பந்தில் எத்தனையோ க்ரியைகள் அடுத்தடுத்து ஏற்படுகி்றன.
• அதில் முதல் விழுதல் மட்டும் குருத்வம் என்று அழைக்கப் படும் -பொருளின் எடை காரணமாக ஏற்படுகிறது,
•விழத் தொடங்கியதும், அந்தப் பந்தில் ’வேகம்’ என்று ஒரு வகையான சம்ஸ்காரம் ஏற்படும்.
சம்ஸ்காரம் கடைசி குணம் -அதன் உள் பிரிவு தான் வேகம் —
ஆகையால், இரண்டாவது விழுதல் தொடங்கி அனைத்து க்ரியைகளும் வேகத்தி்ன் காரணமாகத் தான் உண்டாகி்றன,
குருத்வம் என்ற எடையால் அல்ல.
• ஆகவே, குருத்வத்துக்கு லக்ஷணம் சொல்லும் போது ’முதல் விழுதலுக்குக் காரணமானது’ என்று தான் சொல்ல வேண்டும்

• குருத்வம் (எடை ) என்னும் குணம் ப்ருத்வீ ஜலம் என்ற இரண்டு த்ரவ்யங்களில் மட்டும் தான் உண்டு

——————-

13-வது குணம் -த்ரவத்வம் –நீர்மை

ஆத்ய ஸ்யந்தன அசமவாய காரணம் இது

• ஒரு பொருள் முதன் முதலில் ஓடுவதற்குக் (ப்ரவஹிப்பதற்குக்) காரணமான குணம்
த்ரவத்வம் என்று அழைக்கப் படுகிறது.
• ஓர் அணையில் நீரைத் தேக்கி வைத்து, அணையின் மதகைத் திறந்தால், நீர் ஓடுகிறது.
விழுதல் என்பது ஸ்யந்தனம் என்ற ஒரு வகையான செயல் (கர்ம / க்ரியை ).
நீர் ஒரு அடி தூரம் ஓடுவதற்குள் அந்த நீரில் எத்தனையோ க்ரியைகள் அடுத்தடுத்து ஏற்படுகி்றன.
• அதில் முதல் ஓடுதல் மட்டும் த்ரவத்வம் என்று அழைக்கப்படும்–
பொருளின் நீர்மை காரணமாக ஏற்படுகிறது,
• ஓடத் தொடங்கியதும், அந்த நீரில் ’வேகம்’ என்று ஒரு வகையான சம்ஸ்காரம் ஏற்படும்.
ஆகையால், இரண்டாவது ஓடுதல் தொடங்கி அனைத்து க்ரியைகளும் வேகத்தி்ன் காரணமாகத் தான் உண்டாகி்றன,
த்ரவத்வம் என்ற நீர்மையால் அல்ல.
• ஆகவே, த்ரவத்வத்துக்கு லக்ஷணம் சொல்லும் போது
’முதல் ஓடுதலுக்குக் காரணமானது’ என்று தான் சொல்ல வேண்டும்

• த்ரவத்வம் (நீர்மை) என்னும் குணம் ப்ருத்வீ ஜலம் தேஜஸ் ஆகிய மூன்று த்ரவ்யங்களில் மட்டும் தான் உண்டு

த்ரவத்வதின் வகைகள்

• த்ரவத்வம் இரண்டு வகைப்படும்–
சாம் சித்திக (இயற்கையான) த்ரவத்வம்,
ஸந மித்திக (செயற்கையான ) த்ரவத்வம் என்று.
• இயற்கையான த்ரவத்வம் ஜலத்திற்கு மட்டும் தான் உண்டு.
• செயற்கையான த்ரவத்வம் ப்ருத்வீயிலும் தேஜஸ்ஸிலும் ஏற்படும்.
• ப்ருத்வீ யாலான அனைத்து த்ரவ்யங்களிலும் த்ரவத்வம் செயற்கையாகக் கூட ஏற்படுவதில்லை . உதாஹரணத்திற்கு,
ஒரு குடமோ துணியோ எப்போதும் த்ரவமாக ஆகாது.
ஆனால், நெய் மெழுகு , அரக்கு போன்ற ப்ருத்வீ பொருட்கள், நெருப்பி்ன் வெப்பம் பட்டால், தனது கெட்டிப்பட்ட நிலையை
விட்டு, த்ரவமாக ஆவதைக் காண்கிறோம். ஆகையால், ப்ருத்வீயாலான சில பொருட்களில் த்ரவத்வம் உண்டு.
• அதே போல், தங்கம்,வெள்ளி இரும்பு போன்ற தேஜஸ்ஸாலான பொருட்களுக்கும் நெருப்பி்ன் தொடர்பால்
த்ரவத்வம் ஏற்படுவதைக் காண்கிறோம்.
• ஆகையால், ப்ருத்வீ யாலான சில பொருட்களுக்கும் தேஜஸ்ஸாலான சில பொருட்களுக்கும் த்ரவத்வம் செயற்கையாக ஏற்படுவதுண்டு.

—————-

14-வது குணம் -ஸ்நேஹம்–பசை

• சூர்ணம் (பொடி) முதலியவை பிண்டமாக (கட்டியாக) ஆகுவதற்குக் காரணமான குணம் தான் –
ஸ்நேஹம்–பசை- என்று அழைக்கப்படுகிறது.
• ஸ்நேஹம்– என்பது ஜலத்தில் மட்டும் தான் உண்டு.
• நெய் எண்ணெய் , முதலியவற்றில் நாம் காணும் ஸ்நேஹம்–பசை கூட, அதிலிருக்கும் ஜலத்தினுடையது தான்

————

15-வது குணம் -சப்தம் –ஒலி

ஸ்ரோத்ர இந்த்ரியத்தால் க்ரஹிப்படும் குணம் தான் சப்தம் என்று அழைக்கப் படுகிறது.
• ஆக, (i) ஸ்ரோத்ர இந்த்ரியத்தால் க்ரகிக்கப்படுதல்
(ii) குணமாக இருத்தல் ஆகிய இரண்டு பண்புகளும் சேர்ந்து தா்ன் சப்தத்தி்ன் லக்ஷணம் ஆகி்றன.
• இதி முதல் தலத்தை விட்டு விட்டால்
குணமாய் இருப்பது சப்தத்தி்ன் லக்ஷணம் என்று ஆகும்.
இந்த லக்ஷணத்திற்கு மற்ற அனைத்து குணங்களிலும் அதி வ்யாப்தி சேரும்.
அதைப் போக்குவதற்குத் தான் முதல் பண்பு சேர்க்கப்படுகிறது
• இரண்டாவது தலத்தைச் சேர்க்காமல் போனால், ஸ்ரோத்ர இந்த்ரியத்தால் க்ரஹிக்கப்படுதல் என்ற பண்பு
சப்தத்தில் இருப்பது போல் , சப்தத்வம் என்ற சாமாந்யத்திலும் இருக்கும்படியால் அதி வ்யாப்தி ஏற்படும்.
அதைப் போக்கத் தான் இரண்டாேது தலம் சேர்க்கப்படுகிறது.

• சப்தம் என்னும் குணம் ஆகாசத்தில் மட்டும் தான் இருக்கும்
வாயு இவற்றை எடுத்து வரும் –

• சப்தம் இரண்டு வகைப்படும் – (i) த்வநி (ii) வர்ணம்
• த்வநி என்பது ம்ருதங்கம், பேரீ முதலானவற்றிலிருந்து வருவது
• வர்ணம் (எழுத்து) என்பது தமிழ், சம்ஸ்க்ருதம் முதலான மொழிகளின் வடிவமாக இருக்கும் ஒலிகள்

சப்தம் உண்டாகும் முறைகள்

• சப்தம் மூன்று வழிகளில் உண்டாகிறது
• (i) சம்யோகத்திலிருந்து – நம் கையால் ஒரு ம்ருதங்கத்தை அடிக்கும் போது ஏற்படும் சப்தம்,
நம் கைக்கும் அந்த வாத்தியத்துக்கும் ஏற்பட்ட சம்யோகத்தால் ஏற்படுகிறது
• (ii)விபாகத்திலிருந்து – ஒரு மூங்கிலை எடுத்து, கையால் இரண்டாக முறித்தால், ஒரு ஒலி ஏற்படும்.
அந்த ஒலி, மூங்கிலி்ன் இரு பகுதிகளுக்குள் ஏற்படும் விபாகம் என்ற குணத்திலிருந்து உண்டாகிறது
• (iii) சப்தத்திலிருந்து – ம்ருதங்கத்தை அடிப்பதால்,
வாத்தியம் இருக்கும் இடத்தில் உள்ள ஆகாசப் பகுதியில் சப்தம் உண்டாகும்.
அந்த சப்தம் தனக்கு அருகிலிருக்கும் தேசத்திலுள்ள ஆகாசப் பகுதியில் தன்னைப் போன்ற வேறு ஒரு சப்தத்தை உண்டாக்கும்.
இதே போல் தொடர்ந்து அடுத் தடுத்த ஆகாசப் பகுதியில் ஒரு சப்தம் அடுத்த சப்தத்தை உண்டு செய்வதால் தான்
சப்தம் நம் காது வரையில் வந்து அடைகிறது-
தண்ணீரில் ஒரு கல்லை போட்டால் எப்படி சிறு சிறு அலைகள் நடுவில் தொடங்கி கரை வரை வந்து சேருமோ
அதே போல் தான் -வீஸீ தரங்க நியாயம்

மேலே புத்தி தொடங்கி மீதம் உள்ள ஒன்பது ஆத்ம குணங்களைப் பார்ப்போம்

———————-

பாடம் –21-குணங்கள் –புத்தி -அறிவு –

16th குணம் -சர்வ வியவஹார ஹேது ஞானம் புத்தி –

தத்வ ஞானத்தால் மோக்ஷம் -அஞ்ஞானத்தால் சம்சார சூழலில் அழுந்துகிறோம் -எல்லா தர்சனங்களிலும் இது உண்டே –

புத்தி என்கிற சொல்லுக்கு சில இடங்களில் அந்த:கரணம் (உள்-இந்த்ரியம் / உட் புலன் ) அதாவது
மனது என்ற பொருள் உண்டு.
அதே போல் புத்தி என்றால் ’உறுதி’ என்ற அர்த்தமும் உண்டு.
ஆனால் இங்கு இவை குறிக்கப் படுவது இல்லை —
புத்தி என்ற சொல் ஜ்ஞாநம் (அறிவு) என்பதைத்தான் இங்கு சொல்லுகிறது.
’புத்தி’, ’ஜ்ஞாநம்’, ’உபலப்தி’ என்ற சொற்கள் எல்லாம் ஒரே அர்த்தத்தைத் உடையவையே
-அநர்த்தாந்தரம்-என்று கௌதமர் அவரது ஸூத்ரத்தில் கூறுகிறார்.

• கீழே ப்ருதக்த்வம், சம்யோகம், பரிமாணம் ஆகியவற்றுக்கு இலக்கணம் சொல்லும் போது
(i) “இவை தொட்டுக் கொண்டுள்ளன என்கிற வ்யவஹாரத்திற்குக் (சொல்லாடலுக்குக்) காரணமானது ஸம்யோகம்
(ii) ’இது தனி யாயது” என்கிற வ்யவஹாரத்துக்குக் காரணமானது ப்ருதக்த்வம்
(iii) ’இது சிறிது”, ’இது பெரிது” என்கி்ற வ்யவஹாரங்களுக்குக் காரணமானது பரிமாணம் (அளவு)
என்று எல்லாம் இலக்கணம் சொன்னோம் —
ஆக, ஒரு பொருளைப் பற்றின ஒவ் ஒரு குறிப்பிட்ட வ்யவஹாரத்திற்கு,
அந்தப் பொருளிலிருக்கும் ஒவ் ஓரு குணம் அறியப் பட்டிருக்க வேண்டும்.

• இப்பொழுது புத்தியி்ன் இலக்கணம் யாது எனில் –
“அனைத்து வ்யவஹாரங்களுக்கும் ( சப்த ப்ரயோகங்களுக்கும்) காரணமானது புத்தி” என்பது தான் .
சர்வ வியவஹார ஹேதுவே புத்தி
• ’அர்த்தம் புத்த்வா சப்த ரசநா (ஒரு பொருளை அறிந்து கொண்ட பிறகு தான் அதைப் பற்றிப் பேச முடியும்’ என்கிற
ந்யாயத்தி்ன் படி எந்த ஒரு வ்யவஹாரத்திற்கும் முன்னால் பேசப்படும் பொருளைப் பற்றின ஜ்ஞாநம் இன்றியமையாதது —
ஆகையால் அனைத்து வ்யவஹாரங்களுக்கும் காரணமானது புத்தி என்கிற அறிவு தான் –

ஞானத்தின் வகைகள் –
• அந்த புத்தி (அறிவு) இரண்டு வகைப்படும்
(i) ஸ்ம்ருதி – நினைவு
(ii) அநுபவம்

• ஸ்ம்ருதியி்ன் இலக்கணம் – “ஸம்ஸ்காரத்திலிருந்து மட்டுமே உண்டாகக் கூடிய ஜ்ஞாநம் தான் ஸ்ம்ருதி” என்று சொல்லப் படுகிறது.
• நாம் ஒரு பொருளை பார்க்கும் பொழுதோ கேட்க்கும் பொழுதோ அந்த அறிவு சில விநாடிகள் தான் இருக்கும்.
ஆனால், அது ஆத்மாவில் ஒரு பதிவை (ஸம்ஸ்காரத்தை ) ஏற்படுத்தி விட்டுச் செல்கிறது.
பிற்காலத்தில், இந்தப் பொருளோடு தொடர்பு பட்ட வேறு ஒரு பொருளை நாம் கண்டால், இந்த சம்ஸ்காரம் தூண்டப்பட்டு இந்தப்
பொருளைப் பற்றின நினைவு நமக்கு ஏற்படுகிறது.
ஸம்ஸ்கார ஜன்ய ஞானம் -உத்போதகம் -சம்ஸ்காரம் தானே எழுப்பும் –
யானைப் பாகனைப் பார்த்து யானை உடன் சேர்ந்து பார்த்த அனுபவத்தின் பதிவு -தொடர்பு பட்ட சம்ஸ்காரம்
ஆக, ஸ்ம்ருதி என்பது சம்ஸ்காரத்திலிருந்து மட்டும் தான் தோன்றுகிறது ,
அதற்கு புலன்கள் (இந்த்ரியங்கள்) தேவையில்லை . அதனால், நாம் சொன்ன இலக்கணம் பொருந்தும்.

• ’சம்ஸ்காரத்திலிருந்து மட்டுமே ’ என்று சொல்லாமல் போனால் , ப்ரத்ய பிஜ்ஞா என்ற ஒரு வகையான அநுபவத்தில் அதி வ்யாப்தி ஏற்படும்.
ப்ரத்யபிஜ்ஞா என்பது,recognition-அவனே தேவதத்தன் – முன்னால் பார்த்த ஒருவரை இன்று மறுபடியும் காணும் போது
“அன்று நான் பார்த்தவரே தான் இவர் என்று நமக்கு ஏற்படும் அறிவு. கண் முன் இருப்பவரைக் காண்பதற்கு இந்த்ரியங்கள் தேவை ,
கடந்த காலத்தில் இவரைத் தான் பார்த்தேன் என்று அறிய சம்ஸ்காரம் தேவை –
ஆக இந்த்ரியமும் ஸ்ம்ஸ்காரமும் சேர்ந்து இந்த ஜ்ஞாநத்தை உண்டு செய்கி்ன்றன.
ஆகவே, “மட்டும்” என்று சொல்லாமல், ’சம்ஸ்காரத்திலிருந்து ஏற்படுவது ஸ்ம்ருதி’என்று சொன்னால் , ப்ரத்யபிஜ்ஜையில் அதிவ்யாப்தி ஏற்படும்

• “ஸ்ம்ருதியைத் தவிர்ந்த ஜ்ஞாநம் அனைத்துமே அனுபவம் தான் என்று அநுபவத்திற்கு இலக்கணம்

யதார்த்த அனுபவம்
• அநுபவம் என்பதும் இரண்டு வகைப்படும் – (i) யதார்த்தம் – சரியான அறிவு (ii) அ யதார்த்தம் – தவறான அறிவு.
• யதார்த்த அநுபவம் என்றால் –
“ஒரு தன்மையை உண்மையாக உடைய ஒரு பொருளை அந்தத் தன்மையை உடையதாக அறியும் அநுபவம்”.
நான் ஒரு குடத்தைப் பார்த்து ’இது குடம்’ என்று அறிகிறேன் , அதாவது
“(இது) என் கண் முன் இருக்கும் பொருள் (குடம்) குடத் தன்மை என்னும் சாமாந்யத்தைக் கொண்டது’ என்று அறிகிறவன்
என் கண் முன் இருக்கும் அந்தப் பொருள் உண்மையாகவே குடமானபடியால், அதில் உண்மையாகவே
குடத்தன்மை இருக்கிறது. -ஆகவே என்னுடைய அறிவு யதார்த்தம் (சரியான அறிவு) ஆகிறது.

• அறியப்படும் பொருளுக்கு ’விசேஷ்யம் / தர்மி’ என்று பெயர்.
அந்தப் பொருளில் இருப்பதாக அறியப்படும் தன்மைக்குப் ’ப்ரகாரம் / தர்மம்’ என்று பெயர்.
• ஒரு அறிவில் ப்ரகாரமாக (தர்மமாக) எந்த ஒரு தன்மை ஆகிறதோ அந்தத் தன்மை , அந்த அறிவுக்கு விசேஷ்யமாய் இருக்கும்
பொருளில் உண்மையாகவே இருந்தால், அந்த ஜ்ஞாநம் யதார்த்த ஜ்ஞாநம் என்று சொல்லப்படுகிறது.
• ’இது குடம்’ = “என் கண் முன் இருக்கும் பொருள் குடத் தன்மையை உடையது’ என்ற அறிவில்,
கண் முன் இருக்கும் பொருள் விசேஷ்யம், குடத் தன்மை ப்ரகாரம் ஆகிறது.
நீலமான குடம் -விசேஷணம் -தன்மை தர்மம் நீலம் பண்பு -விசேஷ்யம் த்ரவ்யம் தர்மி -குடம் -பண்பை உடையது –
இவற்றையே பிரகாரம் பிரகாரி என்பர் -குடத்தன்மை கடத்தவம் potness சாமான்யம் உடையது –
அறிவுக்கு விசேஷ்யமான கண் மு்ன் இருக்கும் பொருளில், அறிவுக்கு ப்ரகாரமான குடத்தன்மை
உண்மை யாகவே உள்ளபடியால், இது சரியான ஜ்ஞாநம்.

அயதார்த்த அநுபவம்-
அயதார்த்த அநுபவம் என்றால் –
“ஒரு தன்மை இல்லாத ஒரு பொருளை அந்தத் தன்மையை உடையதாக அறியும் அநுபவம்”.
நான் ஒரு கயிற்றைப் பார்த்து ’இது பாம்பு’ என்று அறிகிறேன்
அதாவது “(இது) என் கண்முன் இருக்கும் பொருள் (பாம்பு)
பாம்புத் தன்மை என்னும் சாமான்யத்தைக் கொண்டது’ என்று அறிகிறேன் —
என் கண் முன் இருக்கும் அந்தப் பொருள் உண்மையாகவே பாம்பு அல்ல, கயிறு தான் , அதில்
உண்மையாகவே பாம்புத் தன்மை இல்லை , கயிற்றுத் தன்மை தான் உள்ளது.
ஆகவே என்னுடைய அறிவு அயதார்த்தம் (தவறான அறிவு) ஆகிறது.

• அறியப்படும் பொருளுக்கு ’விசேஷ்யம் / தர்மி’ என்று பெயர். அந்தப்
பொருளில் இருப்பதாக அறியப்படும் தன்மைக்குப் ’ப்ரகாரம் / தர்மம்’என்று பெயர்.
• ஒரு அறிவில் ப்ரகாரமாக (தர்மமாக) எந்த ஒரு தன்மை ஆகிறதோ அந்தத் தன்மை , அந்த அறிவுக்கு விசேஷ்யமாய் இருக்கும்
பொருளில் உண்மையில் இல்லை என்றால், அந்த ஜ்ஞாநம் அயதார்த்த ஜ்ஞாநம் என்று சொல்லப்படுகிறது.
• ’இது பாம்பு’ = “என் கண் முன் இருக்கும் பொருள் பாம்புத் தன்மையை உடையது’ என்ற அறிவில்,
கண் முன் இருக்கும் பொருள் விசேஷ்யம்,
பாம்புத் தன்மை தான் ப்ரகாரம் ஆகிறது.
அறிவுக்கு விசேஷ்யமான கண் மு்ன் இருக்கும் பொருளில் (கயிற்றில்), அறிவுக்கு ப்ரகாரமான பாம்புத் தன்மை உண்மையில்
இல்லாதபடியால், இது தவறான ஜ்ஞாநம்.

யதார்த்த அனுபவத்தின் வகைகள்
யதார்த்த அனுபவம் நான்கு வகைப்படும்
1-ப்ரத்யக்ஷம் –
நம் புலன்களால் ஏற்படும் அறிவு -கண்ணால் காண்கிறோம் -காட்சி ஒருவகை ப்ரத்யக்ஷம்
மூக்கால் மணத்தை முகர்கிறோம் -அந்த மணத்தைப் பற்றின ஞானம் ஒரு வகை ப்ரத்யக்ஷம்
2- அநு மிதி –
சமையல் அறையில் புகையையும் நெருப்பையும் சேர்த்தே பார்த்து இருக்கிற படியால்
நெருப்பை விட்டுப் பிரிந்து புகை இருக்காது என்று அறிந்து கொண்டு
பிரயாணம் பொழுது ஒரு மலையின் மேல் புகையைப் பார்த்த உடன் அங்கு நெருப்பு கண்டிப்பாக இருக்க வேண்டும் என்று ஊகிக்கிறோம்
அந்த ஊகத்தால் ஏற்பட்ட ஞானத்துக்குத் தான் அநுமிதி என்று பெயர்
3-உபமிதி –
இந்தச் சொல் இந்தப் பொருளைக் குறிக்கும் என்று சொல்லுக்கும் பொருளுக்கும் உள்ள தொடர்பை க்ரஹிக்கும் ஞானம் உபமிதி ஆகும்
4–சாப்த போதம்
ஒரு சொல் தொடரைக் கேட்டவுடன் அதன் பொருளைப் பற்றின அறிவு நமக்கு ஏற்படுகிறது -அதுவே சாப்த போதம் -என்று சொல்லப்படுகிறது

இவற்றின் விளக்கம் மேலே பார்ப்போம்

அயதார்த்த அனுபவம் மூன்று வகைப்படும்
1-சம்சயம்
சந்தேகம் -ஒரு பொருளைப் பார்த்து இது கயிறா அல்லது பாம்பா -இது கிளிஞ்சலோ அல்லது வெள்ளியோ என்று
ஏற்படும் சந்தேகத்துக்கு சம்சயம் என்று பெயர்
2-விபர்யயம்
தவறான நிச்சயம் -வெள்ளையான சங்கைப் பார்த்து -எனக்கு மஞ்சக் காமாலை நோய் இருக்கிறபடியால் –
இது மஞ்சளான சங்கு என்ற அறிவு எனக்குப் பிறக்கிறது
வெள்ளையா மஞ்சுளா என்று சந்தேகப்பட வில்லை -மஞ்சள் தான் என்று தவறாக முடிவு செய்து விட்டேன் -இதுவே விபர்யயம்
3–தர்க்கம்
ஒரு பொருளின் தன்மைகளை பார்த்து இப்பொருள் இப்படிப்பட்டதாக இருந்தால் கண்டிப்பாக அதற்கு அந்தத் தன்மையும்
இருக்க வேண்டும் என்று வாதம் செய்வதே தர்க்கம் என்கிறோம்

இவற்றின் விளக்கம் மேலே பார்ப்போம் –

ஞானம் -புத்தி என்பதை இரண்டாக –
அதாவது -ஸ்ம்ருதி நினைவு -அனுபவம்
இந்த ஸ்ம்ருதி அனுபவம் இவற்றை யதார்த்தம் அயதார்த்தம் என்று இரண்டு வகை
யதார்த்தம் ப்ரத்யக்ஷம் அநு மிதி உபமிதி சாப்த போகம் என்று நான்கு வகை என்றும்
அயதார்த்தம் -சம்சயம் விபர்யயம் தர்க்கம் என்று மூன்று வகை என்று பார்த்தோம்

———-

பாடம் -22-ஸூகம் –முதல் அபாவம் வரை-

ஏழு த்ரவ்யங்கள் –24-குணங்கள் -7 பதார்த்தங்கள்

17th குணம்-ஸூகம் –

ஸர்வேஷா அனுகூல தயா வேதநீயம் ஸூகம்
ஸர்வேஷா பிரதிகூல தயா வேத நீயம் துக்கம்

அனைவராலும் -அனுகூலமாக -அறியப்படும் பொருள் தான் ஸூகம் என்று சொல்லப்படுகிறது
ஸூகம் ஏற்படுத்தும் கருவிகளில் ஒவ் ஒருவருக்கு ஓன்று ஓன்று பிடித்து இருக்கலாம் -பிடிக்காமலும் இருக்கலாம்
ஒருவருக்கு குளிர் பிடித்து இருக்கலாம் மற்று ஒருவருக்கு பிடிக்காமலும் இருக்கலாம்
ஒருவருக்கு இனிப்பு பிடித்து இருக்கலாம் -மற்ற ஒருவருக்கு அது பிடிக்காமல் கசப்பான ஓன்று பிடித்து இருக்கலாம்
ஆனால் அந்த கருவியின் மூலம் இறுதியில் ஒரு ஆனந்தம் ஏற்படுகிறதே -அது அனைவருக்கும் பிடித்தே இருக்கும்
அந்த ஸூகத்தை அடையும் வழிகளில் தான் மனிதருக்குள் விருப்பு வெறுப்புக்கள் மாறுபட்டு இருக்கும்
ஆகையால் அனைவராலும் விரும்பத்தக்க அறியப்படும் பொருள் என்ன என்றால்-ஸூகம் ஓன்று தான் –
ஆக அதுவே ஸூகத்தின் லக்ஷணம் ஆகும்

18th குணம்–துக்கம்

ஸர்வேஷா அனுகூல தயா வேதநீயம் ஸூகம்
ஸர்வேஷா பிரதிகூல தயா வேத நீயம் துக்கம்

அனைவராலும் பிரதிகூலமாக அறியப்படும் பொருள் தான் துக்கம் என்று சொல்லப்படுகிறது
ஒருவருக்குத் துக்கத்தை ஏற்படும் பொருள் தானே மற்ற ஒருவருக்கு துக்கத்தைக் கொடுக்காமல் இருக்கலாம்
ஆகையால் அவர் அத்தை வெறுக்க வேமாட்டார்
ஆனால் அவருக்கு துக்கம் தரும் பொருள் வேறு சில இருக்கலாம்
ஆகையால் துக்கம் ஏற்படுத்தும் பொருள்கள் தான் மனிதனுக்கு மனிதன் வேறுபட்டு இருக்கலாமே ஒழிய
துக்கம் என்பது அனைவருக்குமே வெறுக்கத் தக்கதாய் இருக்கும் ஒரு பொருளாகத் தான் உள்ளது
ஆகையால் அனைவருக்கும் வெறுக்கத் தக்கதாக அறியப்படும் பொருள் என்ன என்றால் துக்கம் தானே –
ஆக அதுவே துக்கத்தின் லட்ஷணம் ஆகும்

ஆத்மாவின் மற்ற குணங்கள்
19th குணம்–இச்சை –ஆசை
20th குணம்-த்வேஷம் – வெறுப்பு -கோபம்
21st குணம்-பிரயத்தனம் -முயற்சி -உடலில் செயலை உண்டு செய்வது
22nd குணம்–தர்மம் -புண்யம் -வேத விஹித கர்ம க்ருத்யத்தால் வருமவை -விஹித கர்ம ஜெனிதம் தர்மம் –
நித்ய கர்ம -நைமித்திக கர்ம -காம்ய கர்ம —
23rd குணம்–அதர்மம் -பாபம் -வேத நிஷேதித்த கர்ம க்ருத்யத்தால் வருமவை -நிஷித்த கர்ம ஜெனிதம் அதர்மம் –
24th குணம்–ஸம்ஸ்காரம் -பதிவு –

சம்ஸ்காரம் -மூன்று வகைப்படும்
1-வேகம் -ஒரு பொருளில் ஏற்படும் செயலால் -கர்மத்தால் -அதில் வேகம் என்ற குணம் ஏற்படுகிறது –
மேற்கொண்டு அந்தப்பொருள் நகருவதற்காக காரணம் இந்த வேகம் உள்ளது –
இது செயலினுடைய அனைத்துப் பதார்த்தங்களிலும் இருக்கும்
ஆகையால் இது பிருத்வீ ஜலம் தேஜஸ் வாயு மற்றும் மனம் ஆகிய ஐந்து த்ரவ்யங்களிலும் உண்டு
2- பாவனா -பதிவு
ஒரு அனுபவித்தில் இருந்து உண்டாகி பின்பு நினைவு ஏற்படக் காரணமாக இருப்பதுவே இந்த சம்ஸ்காரம்
இது ஆத்மாவில் மட்டுமே இருக்கும்
அனுபவ ஜனித ஸ்ம்ருதி ஹேது பாவனா -ஆத்மாவுக்கு மட்டும் ஏற்படும் சம்ஸ்காரம்
ஒரு விஷயத்தைப் பற்றி ஒரு சம்ஸ்காரம்
நினைவும் ஒரு வகையான ஞானம் -பலமான சம்ஸ்காரம் பலம் இழந்த சம்ஸ்காரம் -இரண்டு வகை –
திரும்பி திரும்பி நினைக்க பதிவு அழுத்தமாக -உரு சொல்லச் சொல்ல திடமான சம்ஸ்காரம் –
ஒரே விஷயத்தைப் பற்றி பலவித சம்ஸ்காரம் இப்படி இரண்டு விதம் என்பர்
3-ஸ்த்தி ஸ்தாபக
ஒரு பொருளின் வடிவை மாற்றினால் அது மீண்டும் பழைய வடிவைக் கொள்வது –(Elasticity) –
சுத்தி வைத்துள்ள பாயை விரித்தால் மீண்டும் அது தானே சுருண்டு கொள்வது போல்
சில வகை பிருத்வியில் தான் இது இருக்கும்

த்ரவ்யங்களும் அவற்றின் குணங்களும்-
சங்க்ய -பரிமாண -பிருதக்த்வ -சம்யோக -விபாக=எல்லா த்ரவ்யங்களிலும் உண்டு

1-பிருத்வீயில் உள்ள குணங்கள்
ரூப -ரஸ -கந்த -ஸ்பர்ச -சங்க்ய -பரிமாண -பிருதக்த்வ -சம்யோக -விபாக -பரத்வ -அபரத்வ -குருத்வ -த்ரவத்வ –
ஸம்ஸ்காரத்தில் வேகமும் ஸ்த்திஸ்தாபகமும் –ஆகிய -14-குணங்கள்

2-ஜலத்தில் உள்ள குணங்கள்
ரூப -ரஸ –ஸ்பர்ச -சங்க்ய -பரிமாண -பிருதக்த்வ -சம்யோக -விபாக -பரத்வ -அபரத்வ -குருத்வ -த்ரவத்வ -ஸ்நேகம்
ஸம்ஸ்காரத்தில் வேகம் –ஆகிய -14-குணங்கள்

3-தேஜஸ்ஸில் உள்ள குணங்கள்
ரூப-ஸ்பர்ச -சங்க்ய -பரிமாண -பிருதக்த்வ -சம்யோக -விபாக -பரத்வ -அபரத்வ –த்ரவத்வ –
ஸம்ஸ்காரத்தில் வேகம் –ஆகிய -11-குணங்கள்

4-வாயுவில் உள்ள குணங்கள்
ஸ்பர்ச -சங்க்ய -பரிமாண -பிருதக்த்வ -சம்யோக -விபாக -பரத்வ -அபரத்வ -ஸம்ஸ்காரத்தில் வேகம் –ஆகிய -9-குணங்கள்

5-ஆகாசத்தில் உள்ள குணங்கள்
சங்க்ய -பரிமாண -பிருதக்த்வ -சம்யோக -விபாக –சப்த –ஆகிய -6-குணங்கள்

6-காலத்தில் உள்ள குணங்கள்
சங்க்ய -பரிமாண -பிருதக்த்வ -சம்யோக -விபாக -ஆகிய -5-குணங்கள்

7-திசையில் உள்ள குணங்கள்
சங்க்ய -பரிமாண -பிருதக்த்வ -சம்யோக -விபாக –ஆகிய -5-குணங்கள்

8-ஜீவாத்மாவின் உள்ள குணங்கள்
சங்க்ய -பரிமாண -பிருதக்த்வ -சம்யோக -விபாக –புத்தி -ஸூகம் –துக்கம் -இச்சை -த்வேஷம் -ப்ரயத்ன –
தர்மம் -அதர்மம் -ஸம்ஸ்காரத்தில் -பாவனா -ஆகிய -14-குணங்கள்

9-பரமாத்மாவின் உள்ள குணங்கள்
சங்க்ய -பரிமாண -பிருதக்த்வ -சம்யோக -விபாக -புத்தி–இச்சை -ப்ரயத்ன–ஆகிய -8-குணங்கள்

10-மனசில் உள்ள குணங்கள்
சங்க்ய -பரிமாண -பிருதக்த்வ -சம்யோக -விபாக -பரத்வ-அபரத்வ -ஸம்ஸ்காரத்தில் -வேகம் -ஆகிய -8-குணங்கள்

————

கர்ம –செயல்
எந்த ஒரு அசைவும் கிரியை -கர்ம -என்று சொல்லப் படுகிறது

இது ஐந்து வகைப்படும்
1-உத்க்ஷேபணம் -(Upward Motion)-இப்பொழுது உள்ள இடத்தில் இருந்தும் மேல் உள்ள இடத்துக்கு தொடர்பு ஏற்படக் காரணம்
ஊர்த்வ தேச சம்யோக ஹேது-
2- அபஷேபணம் -(Downward Motion)இப்பொழுது உள்ள இடத்தில் இருந்தும் கீழ் உள்ள இடத்துக்கு தொடர்பு ஏற்படக் காரணம்
3- ஆகுஞ்சனம் (Folding) –உடலுக்கு அருகில் உள்ள பொருளோடு தொடர்பு ஏற்படக் காரணமான செயல் -மடித்தல்
சரீர சன்னிகிருஷ்ட சம்யோக ஹேது
4-ப்ரசாரணம் -(Stretching)-உடலில் இருந்து தள்ளி இருக்கும் பொருளோடு தொடர்பு ஏற்படக் காரணமான செயல் -விரித்தல்
சரீர விப்ரக்ருஷ்ட சம்யோக ஹேது
5–கமனம் -மற்ற அனைத்து செயல்களும் இதில் அடங்கும் like linear motion, circular motion, rotation, etc

———–

சாமான்யம் –பொதுத் தன்மை
நித்யமாகவும் ஒன்றுக்கு மேற்பட்ட பொருள்களில் சமவாயம் என்கிற சம்பந்தத்தால் இருப்பதாகவும் உள்ள
பொருள் சாமான்யம் எனப்படுகிறது

ஆகவே
1-நித்தியமாக இருப்பதாயும்
2-ஒன்றுக்கு மேற்பட்ட பொருள்களில் இருப்பதாயும்
3-அதுவும் சமவாயம் என்ற சம்பந்தத்தால் இருப்பதாயும்
ஆகிய மூன்று தன்மைகளையும் கூட்டி தான் சாமான்யத்தின் லக்ஷணம் ஆகும்

நித்யம் -அநேகம்-அநேக பொருள்களில் சமவாய சம்பந்தத்தால் இருப்பதே லக்ஷணம் -மாட்டுத் தன்மை போல்

இதில் முதல் தலத்தை விட்டால் -சம்யோகம் -என்ற குணத்தில் அதி வியாப்தி வரும்
சம்யோகம் என்பதும் தொடர்வு ஏற்படும் பொருள்களில் சமவாய சம்பந்தத்தால் இருப்பது தான் –
ஆனால் நித்தியமாக இருக்காது
இரண்டாவது தலத்தை விட்டால் -நித்தியமாக இருத்தலும் சமவாய சம்பந்தத்தால் இருத்தலும்
ஜலம் தேஜஸ்ஸூ ஆகியவற்றின் பரமாணுக்களில் இருக்கும் ரூபம் ரசம் முதலானவற்றிலும் இருக்கிற படியாலும்
அதி வியாப்தி உண்டாகும்
மூன்றாவது தலத்தை விட்டால் அபாவத்தில் அதி வியாப்தி வரும் -மாட்டைக் காட்டிலும் வேறுபாடு என்கிற
அந்யோன்ய அபாவம் சிங்கத்தின் இடமும் குதிரையின் இடமும் உள்ளபடியால்
ஆனால் அபாவம் அதின் இருப்பிடத்தில் சமவாய சம்பந்தத்தால் இருக்காது

சாமான்யம் த்ரவ்யம் குணம் செயல் மூன்றிலும் இருக்கும்

————-

விசேஷமும் சமவாயமும்
நித்தியமான த்ரவ்யங்களில் -பிருத்வீ -ஜலம் -தேஜஸ்ஸூ -வாயு -என்கிற நான்கின் பரமாணுக்கள் –
ஆகாசம் காலம் திக்கு ஆத்மாக்கள் மனஸ்ஸூக்கள்-இவற்றில் இருந்து கொண்டு –
அவற்றை மற்ற அனைத்துப் பொருள்களில் இருந்தும் வேறுபடுத்திக் காட்டுபவை தான் விசேஷங்கள்

சமவாயம் -என்பது ஒரு நித்தியமான தொடர்பு–
இந்தத் தொடர்பு -அயுத சித்தங்களான -பிரிக்க முடியாதவையாக –பொருள்களின் இடையில் இருக்கும்
எந்த இரண்டு பொருள்களுக்குள் ஓன்று தான் இருக்கும் வரை மற்ற ஒன்றை ஆஸ்ரயித்து -அண்டி தான் இருக்குமோ
அந்த இரண்டு பொருள்களும்-அயுத சித்தங்கள் -பிரிக்க முடியாதவை -என்று கூறப்படுகின்றன

அவையாவன
அவயவியும் அவயவங்களும் -நூல் துணி –
ஒரு குணமும் அதன் இருப்பிடமும் -குடமும் சிகப்பு நிறமும்
ஒரு செயலும் அதன் இருப்பிடமும் -ராமர் நடக்கிறார் -நடத்தல் செயல் அண்டியே இருக்கும்
ஒரு சாமான்யமும் அதன் இருப்பிடம்
ஒரு விசேஷமும் அதன் இருப்பிடமான நித்ய த்ரவ்யமும்

———————

அபாவம் -இன்மை -a (Non-Existence)
1-ப்ராக் அபாவம்
ஒரு பொருள் உண்டாவதற்கு முன் க்ஷணம் வரை அந்தப் பொருளின் ப்ராக் அபாவம் இருக்கும்
ஆகவே -ப்ராக் அபாவம் -என்பது -தொடக்கம் அற்றது -முடிவு உடையது -அநாதி -ச அந்த-
2-ப்ரத்வம்ச அபாவம்
ஒரு பொருள் அழிந்த பிறகு அந்தப் பொருளின் -ப்ரத்வம்ச அபாவம் -அழிவு -இருக்கும்
ஆகவே -ப்ரத்வம்ச அபாவம் -என்பது தொடக்கம் உடையது முடிவு அற்றது -ச ஆதி -அநந்தம் –
3- அத்யந்த அபாவம்
முக்காலத்திலும் இருக்கும் அபாவம் இது
வாயுவில் நிறம் இல்லை -வெல்லத்தில் கசப்பு இல்லை என்பது போன்ற அபாவங்கள்
4- அந்யோன்ய அபாவம்
ஒரு பொருளில் மற்ற பொருள்களில் காட்டிலும் வேறு பாடு இருக்கும்
இந்த வேறுபாடு தான் அந்யோன்ய அபாவம் -என்று சொல்லப்படுகிறது
குடம் புடவை இல்லை மாடு ஆடு அல்ல போல்வன

———–

ஒன்பது த்ரவ்யங்கள்
24 குணம்
சப்த பதார்த்தங்கள்
லக்ஷணம் பரீஷை பார்த்தோம்
ப்ரமேயம்
பிரமாணம்
ஞானம் எப்படி ஏற்படும் -வகைகள் என்ன -ப்ரத்யக்ஷம் இத்யாதி -இவற்றின் தன்மைகள்-சரியான அறிவு என்ன
ப்ராசீன நவீன நியாயம் -இவற்றைப் பார்ப்போம்
கேள்வி பதில்கள் -self exams paarppom –

———-

பாடம் –23-கேள்வி பதில்கள் –

பிருத்வீ -பூவின் மணம் நுகரும் பொழுது -பூவின் துகள் -அணுக்கள் -பகுதிகள் பிருத்வீயாகவே இருக்க வேண்டும்
ரூபம் உண்டே -கண்ணுக்கு தெரியாமல் இருப்பது எதனால்
அணு பரிமாணம் -தெரியாதே -மிக சிறிய த்வி யணுகங்கள்-வரை தெரியாதே
பூக்கள் துகள்கள் அணு என்று சொல்ல முடியாது
அணுவாக இருந்து இருந்தால் அதில் உள்ள மணத்தை கிரகிக்க முடியாமல் இருக்குமே
த்ரி அணுகமோ பெரியதாகவோ தான் இருக்க வேண்டும்
ரூபம் எதனால் தெரியவில்லை
உத்பூதம்-நன்றாக விளங்கும் /manifest ஆகாமல் அநு பூதமாய் இருக்கும் -வெளிப்படாமல் அடங்கி இருக்கும்
தங்கக்கட்டி -தேஜஸ் உடன் -பாஸ்வர ஸூக்லம் -உடன் பிருத்வீ பகுதியும் சேர்ந்த கூட்டு போல்
தேஜஸ் உஷ்ண -இருந்தாலும் தொட்டால் சுடாமல் இருப்பது பிருத்வி பகுதி கலசி இருப்பதால் அநுபூதமாய் இருப்பது போல்
இப்படி இரண்டு விதமாக அநுபூதமாய் இருக்கும்
ஆகவே அணு அல்ல மஹத் தான் ரூபம் அனுபூதம்

சரீரம் இந்திரியம் விஷயம் மூன்றாக பிரித்து பார்த்தோம்
விஷயத்துக்குள் இந்திரியங்களும் சரீரமும் அடங்கும்
ஞானத்தால் அறியப்படும் தன்மை பொது தான்
அனைத்துமே விஷயம் என்றாலும் நமக்குத் பிரித்து அறிவதற்காக
இந்திரியங்கள் ஞானத்தை உண்டு பண்ணுதல் என்ற கோணத்தில் தனி ஸ்தானம்
அதே போல் சரீரமும் தனி ஸ்தானம்
எனவே பிரித்துப் பார்க்கிறோம்

காலம்
லக்ஷணம் அதீதாதி வியவகார ஹேது -கடந்த காலப் பொருள் போன்ற சப்த பிரயோகம் –
அநாகதம் -இன்னும் வராதது
வர்த்தமானம் -நிகழ் காலம் -verbal expression

திக்கு
லக்ஷணம் -இது கிழக்கில் இருக்கும் பொருள்-வடக்கத்திக்காரன் – போன்ற வார்த்தைப் பாடுகளுக்கு காரணம்
திக்கு என்ற ஓன்று இருப்பதால் தானே

ஆத்மா
விபு -பலர் -என்றால் எப்படி பொருந்தும்
ஓன்று விபுவாக இருக்க மற்ற ஓன்று எப்படி
tangible -ஸ்பர்சம் இல்லாமல் இருந்தால் இருக்கலாம்
ஆகாசமும் பிருத்வியும் -குடம் இருக்கும் இடத்தில் ஆகாசமும் உண்டே
space எங்கும் -உண்டே தனக்குள் இடம் அளிக்கும் ஸூஷ்மம் பெரியதாக இருந்தாலும்
ஒரு இடத்தில் பல வெளிச்சம் வருமா போல்
subtle ஆக இருப்பதால் பொருந்தும்

ஒரு ஆத்மாவுக்கு ஒரு சரீரம் ஒரு மனஸ்ஸூ -ஆத்மாவுக்கும் சரீரத்துக்கு சம்யோகம்
விபுவாக இருக்க நான் ஆத்மா அனைவரையும் தொட்டுக் கொண்டு இருக்க வேண்டுமே
அனைத்து சரீரங்களையும் மனசுக்களையும் சம்யோகம்
அதிஷ்டானம் -என்று -என்னுடைய உடலை சம்யோகமும் தரித்தும் கொண்டு இருப்பதால்
மற்றவற்றை அதிஷ்டானம் பண்ணாதே

ஆத்மாக்களை எப்படி பிரித்து அறிவது
ஒருவருக்கு சுகம் மற்ற ஒருவருக்கு துக்கம்
இத்தை வைத்து அறியலாம்
ஸூஷ்ப்தி தசையில் மனஸ் வேறுபாடு
முக்தி -வேறுபாடு -விசேஷம் என்ற பதார்த்தம் ஒன்றால் வேறுபாடு காணலாம்

மூளை -வைதிக தரிசனத்தில் தனியாக இல்லை -ஒரு மாமிச பிண்டம் தான்
புத்தி ஞானம் -மனஸ் கருவி -ஆத்மா தான் சிந்திக்கும்

மனஸ் அணு -பார்த்தோம் -சம்யோகம் வைத்தே ஞானம் –
மத்யம பரிமாணம் -நடுத்தர அளவாக இருந்தால் அழியும்
அணுவான படியால் நித்யம்

ஆத்மா மனஸ் தொட்டு -மனஸ் இந்திரியம் தொட்டு -இந்திரியம் விஷயம் தொட்டு -ஞானம் என்றால்
ஒரே காலத்தில் பல புலன்கள் வேலை செய்வதைக் காண்கிறோம்
மனஸுக்கு மிக வேகமாக நகரும் சக்தி உண்டே
அடுத்து அடுத்த ஞானம் வந்தாலும் இடைவெளி தெரியாமல் ஒரே சமயத்தில் அறிகிறோம்
ஒரே காலத்தில் ருசித்துக் கொண்டே காண்கிறோம் என்று அறியும் படி –

கனவு -என்ன
ஸ்ம்ருதி -அனுபவம் -யதார்த்தம் -அயதார்த்தம்
கனவு –ஸ்மரணம் தான் -பார்த்த விஷயங்களை சேர்த்து -ஆட்டின் தலை வெட்டப்பட்டது என்னுடைய தலை -அயதார்த்தம்

இந்திரியங்கள் அணுவா மஹத்தா –
அணுவாக இருந்தால் அதன் குணங்களை அறிய முடியாது
அவயவங்களைக் கொண்டே இருக்கும் -ஆகாசம் ஸ்ரோத்ரம் இந்திரியம் மட்டும் இதுக்கு விதி விலக்கு
அணுவாக இருந்தால் அவயவங்கள் இருக்காதே
ஆனால் இந்திரியங்கள் கண்ணுக்கு எதனால் புலப்பட வில்லை –
அநுத் பூதம் -வெளிப்படாமல் இருப்பதால் புலப்பட வில்லை -manifest ஆகாமல் இருப்பதால்

இச்சா த்வேஷா -நடுவில் உதாசீனம் –indifferent தனி குணமா
இரண்டின் அபாவமே

சம்ஸ்காரம் -பதிவு -முன் பிறவிகள் பதிவு எதனால் ஸ்மரிக்க முடியவில்லை
பதிவு -இந்தப்பிறவியிலே கீழ் உள்ளதை மறக்கிறோம்
வியாதி -காலம் ஆனால் அழியலாம்
பெரிய துக்கம் மரணம் வந்தால் பதிவுகளை அழிக்கலாம்
சில ரிஷிகள் தான் அறிவார்கள்

திடமான சம்ஸ்காரம் ஆக்க அத்தை மீண்டும் மீண்டும் நினைக்க வேண்டும் அப்பியாசம் வேண்டும்

சத்தா –சாமான்யம்
மாடு -மாட்டுத்தன்மை -பொதுத்தன்மை
பரம் அபரம்-இரண்டு வகை -அதிகமான இடங்களில் உள்ள சாமான்யம்
குடத்தன்மை -பிருத்வித்வம் இதற்குள் குடத்தன்மை ஒரு வகை தானே
குடத்தன்மை அபரம்–பிருத்வித்வம் பரம்
த்ரவ்யத்வம் -ஒன்பது வகை த்ரவ்யங்களிலும் உண்டு -பிருத்வித்வம் இதற்குள் ஓன்று தானே
சத்தா -exisடீence -இருத்தல் -அஸ்தி -அனைத்துக்கும் மேலே -சாமான்யம் -த்ரவ்யங்களிலும் குணங்களுலும் கிரியைகளில் இருக்கும்
இதற்குள் ஓன்று ஓன்று
இதுவே பரத்வம்

சாமான்யம் விசேஷயம் சமவாயம் உள்ளது என்று சொல்லாமல் இந்த மூன்றில் மட்டும் சத்தா என்பது ஏன்
ஜாதி -சாமான்யம் -இந்த மூன்றில் தான் இருக்க முடியும்
அங்கு எல்லாம் சாமான்யம் இல்லையே
சாமான்யத்வம் விசேஷத்வம் சமவாயத்வம் போன்றவை இல்லையே

—————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ .வே. வேளுக்குடி ரெங்கநாதன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கணாதர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ நியாய மீமாம்ச வேதாந்த பாடங்கள்–ஸ்ரீ உ .வே. வேளுக்குடி ரெங்கநாதன் ஸ்வாமிகள்–பகுதி 1 –ந்யாய சாஸ்த்ரம்–முதல் பத்து பாடங்கள் —

March 24, 2021

பகுதி 1 : ந்யாய சாஸ்த்ரம்

——————

பாடம் 1 : வேதமும் அதன் அங்கங்களும்-

ஸ்ரீ ஹயக்ரீவர் -ஸ்ரீ ஞானப்பிரான் -ஸ்ரீ நம்மாழ்வார் -நம் பூர்வாச்சார்யர்கள் -நம் ஆச்சார்யர் –
கிருபையால் இந்த விஷயங்கள் நம் நெஞ்சில் படியட்டும்

ஆசீர்வாதம் -நமஸ்காரம் -வஸ்து நிர்த்தேசம் –மூன்று வகை மங்களா சாசனம்

சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்புஜம் |
ப்ரசன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்நோப சாந்தயே ||–ஆசீர்வாதம்

வ்யாசம் வசிஷ்ட நப்தாரம் சக்தே பௌத்ரம் அகல்மஷம் |
பராசராத்மஜம் வந்தே சுக தாதம் தபோ நிதிம் ||–நமஸ்காரம்

முன் சொன்ன இரண்டு ஸ்லோகங்களிலும் பல மங்களமான பெருமைகள் பொருந்திய
விஷ்ணுவையும் வ்யாஸரையும் உரைத்ததே வஸ்து நிர்தேசமும் ஆகும்

1131-சாகைகள் -21-ரிக் -101-யஜுர் -1000-சாமம் -9-அதர்வணம் -அநந்தாவை வேதா

வேதங்களைக் கண்டவர்கள் ரிஷிகள் -சிலருக்கு உபதேசம் -கேட்டு அறியும் சக்தர்கள் –
அங்கங்கள் கொண்டு ரக்ஷணம் -பலருக்கும் உபயோகப்பட –
சொற்களை -பொருளை -அனுஷ்டானம் -மூன்றையும் ரக்ஷிக்க வேண்டும் –
ஸ்வரூப ரக்ஷணம் சொற்கள் ரக்ஷணம் இரண்டு -அர்த்தம் ரக்ஷணம் இரண்டு -அனுஷ்டானம் பிரயோகம் ரக்ஷணம் இரண்டு
சிஷா -சந்தஸ் –சொற்கள் ரக்ஷணம்
வியாகரணம் நிருத்தம் -பொருள் ரக்ஷணம்
கல்பங்கள் ஜ்யோதிஷம் -அனுஷ்டானம் ரக்ஷணம்

சிஷா எழுத்துக்கள் பற்றிய -வர்ணங்கள் -உச்சரிப்பு
சந்தஸ் -விருத்தம் -அக்ஷரங்கள் சேர்க்கை -அனுஷ்டுப் -32-அக்ஷரங்கள் -குறில் நெடில் வரிசைகள் –
வியாகரணம் -பிரித்து பிரித்து -பகுதி விகுதிகள் -ஒருமை பன்மை -இறந்த நிகழ் எதிர் காலம் -ஆண் பால் பெண் பால் –
ந்ருத்தம்-நிஹி நிச்சயமாக -ப்ரஹ்மம் -ப்ருஹத்வாத் –இத்யாதி -தான் பெரியதாகி தன்னை ஆஸ்ரயித்தவர்களை பெரியவர்களாக்கும்
கல்பம் -பிரயோகம் செய்யும் பொழுது இதுக்கு அடுத்து அடுத்து –
மந்த்ரங்கள் ஒரு இடத்தில் கட்டளைகள் வேறே இடத்தில் இருப்பதை-க்ருத்ய ஸூத்ரங்கள்-
ஜ்யோதிஷம் -astronamy–astrology –நித்ய நைமித்திக கர்மங்களை செய்யும் காலம் –

1. சிஷா – எழுத்துக்களின் உருவாக்கம் மற்றும் உச்சரிப்பைக் கற்க
2. சந்தஸ் -செய்யுள்களி்ல் எழுத்துக்களின் அளவு மற்றும் தன்ஸமகளைப் பயில
3. வ்யாகரணம்- ஒரு சொல்லின் பகுதிகளையும் அவற்றின் பொருள்களையும் அறிய
4. நிருக்தம் -வேதத்திலிருக்கும் கடினமான பதங்களுக்குப் பொருள்கள் தெரிய
5. கல்பம்–வைதிக வேதிக கர்மங்களைச் செய்யும் முறை புரிய
6. ஜ்யோதிஷம்–வைதிக கர்மங்கஸளச் செய்ய வேண்டிய காலத்தை நிர்ணயிக்க

—

பாடம் -2-வித்யா ஸ்தானங்கள்-

வேத அந்தம் -உபநிஷத் -அர்த்தம் முடிவு -செய்யும் ஞான காண்டம் ப்ரஹ்ம காண்டம்
பார்த்து கேட்டு சிந்தனை மனனம்-த்யானம் -நான்கு நிலைகள் -சாஷாத்காரம் பார்ப்பது கடைசி நிலை
கேட்டு –ஸ்ரவணம் அத்தை மனனம் சிந்தனை–ஆலோசனை பண்ணுதல் – -நிதித்யாஸம் -த்யானம் –
அப்புறம் பார்ப்பது -நான்கும் அனைத்துக்கும் இவை உண்டே –

வேதமும் அங்கங்களும் -ஸ்ரவணத்துக்கு உபயோகம் -ஆச்சார்யர் உபதேசிக்க கேட்டு –
மந்தவ்ய -அடுத்து –தூணை அசைத்து பார்க்கும் நியாயம் -விஷயம் உண்மை விசுவாசம் நம்பி -யுக்திகளைக் கொண்டு பரீஷை
நான் -ஆத்மா -தான் உடல் இல்லை -என்னுடைய கண் சொல்கிறோம் -நான் மனுஷ்யன் சொல்கிறோம் -இதை ஆலோசனை பண்ணி –
இதுக்கு பல சாஸ்திரங்கள் உண்டே -உப அங்கங்கள் இவற்றுக்கு
புராணம் நியாயம் மீமாம்சை தர்ம சாஸ்திரம் ஆயுர் வேதம் தனுர் வேதம்
காந்தர்வ வேதம் அர்த்த சாஸ்திரம் -இவை எட்டும் உப அங்கங்கள்

வேதங்களுக்கு எட்டு உபாங்கங்கள் உள்ளன
1. புராணங்கள் – நற்பண்புகளை வளர்க்க
2. ந்யாயம் – பொருள்களின் தன்மைகளை அறிய
3. மீமாம்ஸை – வேதங்கஸை ஆராய
4. தர்ம சாஸ்த்ரம் –ஆசாரம் கடைப்பிடிக்க
5. ஆயுர்வேதம் – உடலைப் பராமரிக்க
6. தநுர்வேதம் – அரசர்கள் நாட்டைக் காக்க
7. காந்தர்வ வேதம் – மனசை சாந்தமாக்க
8. அர்த்த சாஸ்த்ரம் – அரசர்கள் ராஜ்யம் செய்ய

புராணம் -புரா-அபி -நவம் -சர்க்கம் இத்யாதி – -பஞ்ச லக்ஷணம் -ஸ்ருஷ்டி -வம்சம் -பிரளயம் -மன்வந்தரம் -14-மனுக்கள் நான்முகனுக்கு உதவ –
நியாயம் -யுக்தி சாஸ்திரம் -logic-தீபம் -திரி எண்ணெய் குறைய -ஜ்வாலை ப்ரவாஹ நித்யம் -அனுமானம் கொண்டு பிரத்யக்ஷம் சரியாக புரிகிறோம்
மீமாம்சை -உயர்ந்த விஷய விசாரம் -பூர்வ உத்தர மீமாம்சை -கர்ம ப்ரஹ்ம மீமாம்சை இவை இரண்டும் உண்டு
தர்ம சாஸ்திரம் -கர்மம் -ஆசாரம் -யாகாதிகளை வேதம் சொல்லும் -நித்ய வாழ்க்கை தர்மம் இவை சொல்லும்
ஆயுர் வேதம்
தனுர் வேதம்
அர்த்த சாஸ்திரம்
காந்தர்வ சாஸ்திரம் -சங்கீதம் -மனசை சாந்தமாக வைத்துக் கொள்ள

ந வேதாந்தாத் சாஸ்திரம் ந மது மத நாத் சாத்விக பதம் ந சத்வாத் ஆரோக்யம் ந புத பஜனாத் போத ஜனகம்
ந முக்தே ஸுக்யம் ந த்வய வஸனாத் ஷேம கரணம் -என்றார் இறே ஸ்ரீ மன் நிகமாந்த மஹா தேசிகன் –

வேத -வேதவித் -அவ்யங்க- வேதாங்க -வேத வித்–ஐந்து திரு நாமங்கள்
வேதத்தை கொடுப்பவன் -கம்பனை படித்தாயா -வேதம் கொடுத்தவனை வேத
வேத வித் -முழுவதுமாக அறிந்தவன்
அவ்யங்க –அங்கங்கள் கீழே பார்த்தோம் -அவற்றுடன் கூடியவன் -வி அங்க–அங்கங்களில் நின்றும் நழுவி -அ வி அங்க-நழுவாமல் –
வ்யாசயா விஷ்ணு ரூபாயா -பல ரிஷிகளுக்குள் அந்தர்யாமியாக வெளிப்படுத்தினவன் என்றவாறு –
யுகம் -த்யானம் -யாகம் -அர்ச்சனை -நாம சங்கீர்த்தனம் -கலி யுகம்
வேதாங்க -வேதத்தை சரீரமாக கொண்டவன் – இவனைக் காட்டிக் கொடுக்கும் வேதம்
வேத வித் -மறுபடியும் -அர்த்த மான தர்மம் -அறிந்து-நம்மையும் மூட்டி அருளுபவர்

அங்காநி வேதா: சத்வார: மீமாம்ஸா ந்யாய விஸ் தர: |
புராணம் தர்ம சாஸ் த்ரம் ச வித்யா ஹ் ஏதா : சதுர்தச ||(ஸ்ரீ விஷ் ணு புராணம் 3-6-27)

ஆயுர்வேத: தநுர்வேத: காந்தர்வஸ் சைவ தே த்ரய: |
அர்தசாஸ் த்ரம் சதுர்தம் து வித்யா ஹ்யஷ்டாத சைவ தா: || (விஷ் ணு புராணம் 3-6-28)

கற்குங் கல்விக்கும் எல்லை இலனே என்னும்
கற்கும் கல்வி ஆவேனும் யானே என்னும்
கற்கும் கல்வி செய்வேனும் யானே என்னும்
கற்கும் கல்வி தீர்ப்பேனும் யானே என்னும்
கற்கும் கல்விச் சாரமும் யானே என்னும்
கற்கும் கல்வி நாதன் வந்து ஏறக்கொலோ?
கற்கும் கல்வி யீர்க்கு இவை என் சொல்லுகேன்?–5-6-2-

நம்மாழ்வார் அநு கரித்து -கற்கும் கல்வி –வேதங்கள் அங்கங்கள் உப அங்கங்கள் எல்லாம் நாதன் வந்து ஏறக் கொலோ
எல்லை இல்லாதவன் –வித்யைகள் -கற்கும் கல்வி -ஆவேனும் யானே என்னும் – –
செய்வேனும் யானே -உபதேசம்-அந்தர்யாமியாய் இருந்து –
தீர்ப்பேனும் நானே -பிரளயம் -அழிந்து -ஸ்ருஷ்ட்டி -வரை காத்து -சங்கைகளை போக்கி சித்தாந்தம் ஸ்தாபனம்
சாரமும் நானே -பயன் நானே -ப்ரஹ்மம் அடைவதே லஷ்யம்

பண்டை நான் மடையும் வேள்வியும் கேள்விப் பதங்களும் பதங்களின் பொருளும் *
பிண்டமாய் விரிந்த பிறங்கு ஓளி அலனும் பெருகிய புலனொடு நிலனும்
கொண்டல் மருதமும் குரை கடல் ஏழும் ஏழு மா மலைகளும் விசும்பும் *
அண்டமும் தானாய் நின்ற எம் பெருமான் அரங்க மா நகர் அமர்ந்தானே -5-7-2-

வேள்வி -கேள்விப் பதங்கள்-வியாகரண சாஸ்திரம் -பதங்களின் பொருள்களும் –
பஞ்ச பூதங்களும் இவனே -சப்த மலைகள் அண்டமும் தானேயாய் நிற்கிறான் –

சாமான்ய சாஸ்திரங்கள் நியாயம் மீமாம்சை வியாகரணம் மூன்றும்-

—————-

பாடம் -3-நியாயத்தின் முக்யத்வம்-

த்யாஜ்ய உபாதேயங்களை சாஸ்திரம் சொல்லும் -பிரவ்ருத்தி செயலையும் நிவ்ருத்தி செய்யக் கூடாதவை
நித்ய நூல் -வேதம் -சுருதி -க்ருத்ய நூல் -இன்னாரால் செய்யப்பட்டவை -ஸ்ம்ருதிகள்
வேதங்களை நினைத்து மனு போல்வரால்-செய்யப்பட்டவை
செய்யும் கிரிசைகளில் -செய்யாதன செய்யோமும் உண்டே -ஆண்டாள் –

ஸ்ரீ ரெங்க ராஜ ஸ்தவம்
ஹர்த்தும் தமஸ் சத் அஸதீ விவேக்தும்
ஈச மாநம் ப்ரதீபம் இவ காருணிகா ததாதி
தேந அவ லோக்ய க்ருதிநஸ் பரி புஞ்ஜதே
தம் தத்ர ஏவ கேபி சபலா ஸலபீ பவந்தி–-உத்தர சதகம்-1-

காருணிகா ஈச-பேர் அருளாளனான எம் பெருமான் -கிருபா விஸிஷ்ட ஸ்வ தந்த்ரன் –
கிருபாவாளனாகிலும் ஸ்வ தந்த்ரன் இல்லாத அன்று நினைத்தபடி கார்யம் செய்யப் போகாது –
கேவலம் ஸ்வ தந்த்ரனாக இருந்தாலும்-சம்சார மோஷங்கள் இரண்டுக்கும் பொதுவாக இருப்பதால்
சேதன உஜ்ஜீவன அர்த்தமான கிருஷிக்கு உறுப்பாக்காதே –
ஆன பின்பு கிருபையும் ஸ்வ தந்த்ரமுமான வேஷமே கிருஷிக்கு ஹேதுவாகும் –
அன்றிக்கே
ஈசன் -என்று ஸ்வாமியைச் சொல்லி பிராப்தம் -நம்முடையவன் என்று அபிமானதுடன் கூடி
பர துக்க அஸஹிஷ்ணுத்வ கிருபையும் சேர்ந்தே கிருஷிக்கு ஹேதுவாகும் –
ஹர்த்தும் தமஸ் -அஞ்ஞானம் ஆகிற இருளை நீக்கிக் கொள்ளவும்
சத் அஸதீ விவேக்தும் ச -உள்ளது இல்லது என்னும்படியான நன்மை தீமைகளை ஆராய்ந்து உணர்வதற்கும்
மாநம் ப்ரதீபம் இவ ததாதி-திரு விளக்கு போன்ற ஸாஸ்த்ர பிரமாணத்தை கொடுத்து அருளுகின்றார் –
மாநம் -பிரமாணம் -வேதம் என்றபடி –
மறையாய் விரிந்த விளக்கு -துளக்கமில் விளக்கு -அகாரம் வாசக வாஸ்ய சம்பந்தத்தால் எம்பெருமானைச் சொல்லும்
கலைகளும் வேதமும் நீதி நூலும் கற்பகமும் சொல் பொருள் தானும் மற்றை நிலைகளும் வானவருக்கும்
பிறருக்கும் நீர்மையினால் அருள் செய்து அருளினான்
தேந அவ லோக்ய க்ருதிநஸ் -பாக்கியசாலிகள் அந்த திரு விளக்கைக் கொண்டு அந்த எம்பெருமானை கண்டு அறிந்து
நாத யமுனா யதிவராதிகள்
பரி புஞ்ஜதே -அனுபவிக்கப் பெறுகிறார்கள்
தம் தத்ர ஏவ கேபி சபலா ஸலபீ பவந்தி–கருவிலே திருவில்லாத சில அவிவிகேகிகளோ என்றால்
அந்தத் திரு விளக்கில் வீட்டில் பூச்சிகள் போலே விழுந்து சாகிறார்கள் –

காருணிகா-தயாளுவான
ஈச மாநம்-சர்வ ஸ்வாமியான ஸ்ரீ பெரிய பெருமாள்
ஹர்த்தும் தமஸ்-அஞ்ஞான அந்தகாரத்தை போக்குவதற்கும்
சத் அஸதீ விவேக்தும்-நல்லதும் தீயதும் அறிகைக்கும்
ப்ரதீபம் இவ ததாதி-பெரு விளக்குப் போலே இருக்கிற பிரமாணத்தை பிரகாசிக்கிறார் –
தேந அவ லோக்ய க்ருதிநஸ் பரி புஞ்ஜதே–பாக்யாதிகர் அந்த ஈசனை அந்த பிரமாணத்தாலே நன்றாக அறிந்து
ததீய பர்யந்தமாக அனுபவிக்கின்றார்கள்
தம் தத்ர ஏவ கேபி சபலா ஸலபீ பவந்தி-சஞ்சல ஹ்ருதயராவார் அந்த பிராமண விஷயத்தில்
வீட்டில் பூச்சிகள் போலே விழுந்து நசிக்கிறார்கள் –

வேதம் -மறை -விசுவாசம் ஸ்ரத்தை இல்லாதாருக்கு மறைக்கும்
அங்கங்கள் உப அங்கங்கள் கொண்டு ரக்ஷணம்
சப்த -அர்த்த -அனுஷ்டானம் ரக்ஷணங்கள்
முன்பே பார்த்தோம்

சிஷா சந்தஸ்ஸூ -சொற்களைக் காக்கவும்
வியாகரணம் நிருக்தம் -பொருளைக் காக்கவும்
கல்பம் ஜ்யோதிஷம் -வைதிக கர்மங்களின் பிரயோகம் காக்கவும்

உப அங்கங்கள்
புராணங்கள்
ந்யாயம்
மீமாம்ஸை
தர்மசாஸ்த்ரம்
ஆயுர்வேதம்
தநுர்வேதம்
காந்தர்வ வேதம்
அர்த்த சாஸ்த்ரம்

—————–

சீஷாயாம் வர்ண சிஷா பதசமதிகம வியாக்ரியா நிர்வசோப்யாம்
சந்தஸ் சந்தஸ்திதவ் ஸ்யாத் கமயதி சமயம் ஜ்யவ்திஷம் ரங்க நாத
கல்பே அனுஷ்டானம் யுக்தம் ஹி உசிதகமிதயோ நியாய மீமாம்சயோ ஸ்யாத்
அர்த்த வ்யக்தி புராண ஸ்ம்ருதி ஷு தத் அனுகா த்வாம் விசின் வந்தி வேதா –18-

ஹே ரங்க நாத
சீஷாயாம் –சீஷாய் என்கிற வேத அங்கத்தில்
வர்ண சிஷா –அக்ஷரங்கள் உச்சாரண க்ரமாதிகள் சிஷை செய்யப்பட்டுள்ளது –
பதசமதிகம வியாக்ரியா நிர்வசோப்யாம்–வியாகரணம் நிருத்தி என்கிற வேதங்களில் பாதங்களின்
ப்ரக்ருதி ப்ரத்யய விபாகம் அர்த்த சிஷை முதலானது செய்யப்படுகிறது –
சந்தஸ் சந்தஸ்திதவ் –சந்தஸ் ஸ்யாத்–சாஸ்திரத்தில் காயத்ரி உஷ்ணிக் அனுஷ்டுப் த்ருஷ்டுப் பிருஹதி பங்க்தி ஜெகதீ
முதலான சப்த சந்தஸ் ஸூக்கள் சொல்லப்பட்டதாய் இருக்கும்
கமயதி சமயம் ஜ்யவ்திஷம் -ஜ்யோதிஷ சாஸ்திரமானது வைதிக கர்மங்களின் அனுஷ்டானத்துக்கு உரிய காலத்தை தெரிவிக்கின்றது –
கல்பே அனுஷ்டானம் யுக்தம் –கல்ப ஸூத்ரத்திலே வைதிக கர்மங்களை அனுஷ்ட்டிக்க வேண்டிய முறைமை சொல்லப் பட்டது
ஹி உசிதகமிதயோ –வைதிக சித்தாந்தத்துக்கு அநு குணமாக நயிப்பிக்கப் பட்ட
நியாய மீமாம்சயோ ஸ்யாத்-நியாய மீமாம்சைகளிலும்
அர்த்த வ்யக்தி புராண ஸ்ம்ருதி ஷு –புராண ஸ்ம்ருதிகளிலும் அர்த்த விவேசனம் உண்டாகும்
புராண சப்தம் இதிஹாசங்களுக்கும் உப லக்ஷணம்
தர்ம சாஸ்திரம் பூர்வ கர்ம பாக உப ப்ரும்ஹமணமாயும் இதிஹாச புராணங்கள் உத்தர ப்ரஹ்ம பாக உப ப்ரும்ஹணமாயும் இருக்குமே
தத் அனுகா த்வாம் விசின் வந்தி வேதா-கீழ் சொன்னவற்றால் அநு சரிக்கப் பட்ட வேதங்கள் தேவரீரை தேடுகின்றன –
விசாரிக்கின்றன -என்றவாறு
பேச முயலுமே ஒழிய பேசி முடிக்க வல்லவை அன்றே
நான்மறைகள் தேடி ஓடும் செல்வன் அன்றோ -பெரிய திருமொழி —-

ஸீஷா–அக்ஷரங்கள் உச்சரிப்பு போன்றவை /வ்யாக்ரணம் -இலக்கணம் /ந்ருக்தி -அர்த்த பிரயோகம்
சந்தஸ் -காயத்ரீ உஷ்ணிக் அனுஷ்டுப் த்ரிஷ்டுப் ப்ருஹதீ பங்க்தி ஜெகதீ -சப்தம்
ஜ்யோதிஷம் -அனுஷ்டான கால நிர்ணயம் / கல்பம் -அனுஷ்டான விதி முறைகள்
நியாயம் மீமாம்சை புராணங்கள் ஸ்ம்ருதி –இவை போன்ற அங்கங்கள் கூடிய அங்கி யான வேதம்
உன்னையே தேடியபடி இருக்கும்
வேதங்கள் உப ப்ரும்ஹணங்களான இதிஹாச புராணங்கள் -நியாய மீமாம்சைகளை அனைத்தும்
தேவரீரையே விசாரித்து நிஷ்கர்ஷிக்கிறது

—————-

இனி நியாய சாஸ்திரம் பார்ப்போம்

காணாதம் பாணிநீயம் ச ஸர்வ சாஸ்த்ர உபகாரகம் – ந்யாயமும் வ்யாகரணமும் அனைத்து
சாஸ்த்ரங்களுக்கும் உதவுகின்றன

காணாதம் -காணாதர் கௌதமர் ரிஷிகள்
பாணினி -வ்யாக்ரணம்
சர்வ ஸாஸ்த்ர உபகாரம் பண்ணும் இவை இரண்டும்

ஸ்ருஷ்ட்டி சாந்தோக்யம் ஆறாவது பிரகடனம் ஸத்வித்யை – உத்காலகர் ஸ்வேதகேதுவுக்கு உபதேசம்
அநேந ஜீவநே ஆத்மந அநு ப்ரவேஸ்ய நாம ரூபே வ்யாகரிக்க -ப்ரஹ்மம் சங்கல்பம்
ஸ்ருஷ்ட்டி அறிய இந்த இரண்டு சாஸ்திரங்களும் வேண்டும்
பெயர்களை அறிய வியாகரண சாஸ்திரம்
பதார்த்த விஸ்லேஷ அப்பியாசம் நியாய சாஸ்திரம் பிரயோஜனம்
பிரித்து அறியும் அப்பியாசம் ப்ரஹ்மம் பற்றி கற்க உபயோகம் ஆகுமே

இலக்கண சாஸ்திரங்கள் இவை –
பத சாஸ்திரம் -சொற்களை -வியாகரணம்
வாக்ய சாஸ்திரம் -சொல் தொடர் மீமாம்சம்
பிராமண சாஸ்திரம் -நியாயம்

ப்ரதீப: சர்வ வித்யாநாம் உபாய: சர்வ கர்மணாம் | ஆச்ரய:சர்வ தர்மாணாம் சச்வத்
ஆந்வீஷிகோ மதா || (அர்த்தசாஸ்த்ரத்தில் -கௌடில்யர்)

நியாயம் என்றால்; பிரமாணம் -கருவிகளைக் கொண்டு பரீஷை நியாயம்
ஈஷணம்-பார்ப்பது
அநு ஈஷணம் -பின் தொடர்ந்து -யுக்திகளை கொண்டு புலன்களாலோ சாஸ்திரதத்தாலோ அறிந்தவற்றை ஆலோசனம்

இந்த ந்யாயம் தான் என்ன ?
ப்ரமாணங்களைக் கொண்டு பொருள்களைச் சோதித்தல் ந்யாயம். ப்ரத்யஷத்தையும் புலன்களையும் ஆகமத்தையும்
(வேதத்தையும்) தழுவியது அநுமானம், அதுதான் அந்வீஷா என்று சொல்லப்படுகிறது.
புலன்களாலும் வேதத்தாலும் முதலில் பார்க்கப்பட்ட–ஈஷிதம் – பொருள்களைத் திரும்பவும் (அநு) சோதித்தல் (ஈஷணம் ) அந்வீஷா
அதைக் கொண்டு சொல்லும் படியால் ஆந்வீஷீகீ என்பது ந்யாய வித்யா எனப்படும் ந்யாய சாஸ்த்ரம் .
எந்த அநுமானம் புலன்களாலோ வேதத்தாலோ ஏற்பட்ட அறிவுக்கு புறம்பாக உள்ளதோ அது ந்யாயம் போல்
தோற்றம் அளித்தாலும் சரியான நியாயம் அல்ல- வாத்ஸ்யாயனனர் ந்யாய பாஷ்யத்தில

அனுமானம் ப்ரத்யக்ஷ வேத விரோதம் -யுக்தி நியாய ஆபாசம் -தோற்றம் அளிக்கும்

ஆர்ஷம் தர்மோபதேசம் ச வேத ஸாஸ்த்ர விரோதிநா |
யஸ் தர்கேண அநு சந்தத்தே ச தர்மம் வேத நேதர: ||(மநுஸ்ம்ருதி: 2-106)

ஆர்ஷம் என்னும் வேதத்ஸதயும், தர்ம உபதேசம் என்னும் ஸ்ம்ருதிகஸையும்
வேதத்தோடு முரண்படாத தர்கத்தைக் கொண்டு எவன் ஆராய்கிறானோ அவன் தான்
தர்மத்தை அறிகிறான், மற்றவன் அறிவ தில்லை .

மனு -தர்க்க ஸாஸ்த்ர பெருமை
ஆர்ஷம் ரிஷிகளால் பார்க்கப்பட்ட
தர்ம உபதேசம்
இரண்டையும் யுக்தி கொண்டு பரீஷை -தர்க்கம் கொண்டு
வேத சாஸ்திரம் அவிரோதமாக இருக்க வேண்டும் –

அங்கம் வேதத்துக்கு விருத்தமாக கூடுமோ என்னில் -நியாய மீமாம்ச வியாகரணம் இவையே தர்சனமும் ஆகுமே
பரதத்வம் அறிய தர்சனம் –
எதுக்கு பிறந்தோம் -எது மோக்ஷம் -போன்றவற்றையும் காட்டும்
உப அங்கங்களுமாக மட்டும் இல்லாமல் இருக்கும்

கண்ணால் பார்க்க ஒரே தீபம் -திரி எண்ணெய் குறைந்து வருமே –
புதிதாக ஜ்வாலை -அனுமானம் கொண்டு -inference-புகை நெருப்பு -உதாரணம்

கண்ணால் வித்யாசம் கிரகிக்க முடியாமல் இருக்க -பிரமாணங்களை பரீஷை பண்ண இது உதாரணம் –
அர்த்த பரீஷை -இது நல்லதுக்கு உதாரணம்
வேதத்துக்கு முரண் -2-4-1-களி மண்-குடம் -ஒரு பகுதி -ப்ரஹ்மம் -உலகமாக மாறி –
பகுதிகள் இல்லாத படியால் -ஜகத்
சுருதி சப்த மூலத்வாத்-விகாரம் இல்லா ப்ரஹ்மம்
உலக விஷயம் கொண்டு ப்ரஹ்மம் அறிய முடியாது
உண்மை பொருள்களை அறிய ஆஸ்திக தர்சனம் -நாஸ்திக தர்சனம்

அஸ்தி மதி உள்ளவன் ஆஸ்திகன்
நாஸ்தி புத்தி உள்ளவன் -நாஸ்திகன்
திஷ்டம் முன்னால் முடிவு செய்யப்பட்டது -தைஷ்டிகன்

வேறு உலகம் உண்டு -இல்லை
ஈஸ்வரன் ஒருவன் உண்டு இல்லை உண்டு
வேதம் பிரமாணம் என்பவன் ஆஸ்திகன்

ஆஸ்திக தரிசனங்கள் ஆறு
1-சாங்க்யம்
2-யோகம்
3-4-வைசேஷிகம்-கணாதர் -நியாயம் -கௌதமர் அஷ பாதர்-இரண்டும் தர்க்க சாஸ்திரம்
5-மீமாம்சம் -பூர்வ பாக
6-வேதாந்த தர்சனம் –

நாஸ்திக தரிசனங்கள்
புத்த ஜைன சாருவாக மதங்கள் மூன்றும் பிரபலம்

காணாதம் ஆஷபாதம் வா காபிலம் தந்த்ரமேவ வா | தந்த்ராண் ஏதாதாநி சர்வாணி ந தந்த்ராணி ஆத்மநிர்ணவய ||
(கணாத ரிஷியின் வைசேஷிகமோ அஷபாதரின் ந்யாயமோ , கபிலரின் சாங்க்யமோ தர்சநங்களாகுமே தவிர ஆத்மாவை
உள்ளபடி அறிய அவை வழிகள் ஆகமாட்டா

காணாதம் அஷ பாதம் தந்திரங்கள் ஆத்மாவின் உண்மையான தன்மை அறிய இவை கூடாதே

நைஷா தர்கேண மதி: ஆபநேய ப்ரோக்தா அந்யே நைவ ஸூஜ்ஞாநாய ப்ரேஷ்ட (கட உபநிஷத் 2-9)
ஆத்மாவைப் பற்றிய அறிவு தர்கத்தால் மட்டும் அடையப்படக் கூடாது.
ஆச்சார்யராலே உபதேசிக்கப் பட்டது தான் மோக்ஷத்துக்கு வழி வகுக்கும்

கட உபநிக்ஷத் நசிகேத -நைஷா தர்க்கம் யமன் உபதேசம் -ஆச்சார்யர் மூலமே அறிய வேண்டும்

———-

பாடம் -4-

ஆதவ் வேதா பிரமாணம் ஸ்ம்ருதி உப குருதே ச இதிஹாஸை புராணை
ந்யாயை சார்த்தம் த்வத் அர்ச்சா விதம் உபரி பரி ஷீயதே பூர்வ பாக
ஊர்த்வ பாக த்வத் ஈஹா குண விபவ பரிஞாபநை த்வத் பத ஆப்தவ்
வேத்ய வேதை ச சர்வை அஹம் இதி பகவந் ஸ்வேந ச வ்யாஸ கர்த்த –19-

ஹே பகவந்
ஆதவ் வேதா-வேதங்கள் முதலிலே வேறு ஒரு பிரமாணத்தை அபேஷியாமல் ஸ்வயமாகவே
பிரமாணம்-பிரமாணம் ஆகின்றதே
ஸ்ம்ருதி –மந் வாதி ஸ்ம்ருதி யானது –
மனு அத்ரி விஷ்ணு ஹாரீதர் யாஜ்ஜ்வல்க்யர் போன்ற மஹரிஷிகளால் இயற்றப்பட்ட தர்ம சாஸ்திரங்கள் –
ச இதிஹாஸை புராணை-இதிஹாசங்களோடு புராணங்களோடும்
ந்யாயை சார்த்தம் -பூர்வ உத்தர மீமாம்சைகளோடே
உப குருதேத்வத்-அந்த வேதங்களுக்கு அர்த்த விவரணம் பண்ணுகை யாகிற உபகாரத்தை
பண்ணுகை யாகிற உபகாரத்தை செய்கின்றன
அந்த வேதத்தில்
பூர்வ பாக-பூர்வ பாகமான கர்ம காண்டம்
அர்ச்சா விதம் உபரி -தேவரீருடைய திருவாராதனம் பண்ணும் முறையைச் சொல்லும் வகையாலே
வாயு இந்திரன் வருணன் அக்னி இவர்கள் யாவரும் ப்ரஹ்ம சரீர பூதர்களே
பரி ஷீயதே -தலைக் கட்டுகின்றது
ஊர்த்வ பாக –ப்ரஹ்ம காண்டம் ஆகிற உபநிஷத் பாகமோ என்னில்
த்வத் ஈஹா குண விபவ பரிஞாபநை–தேவரீருடைய ஸ்வரூப ரூப குண சேஷ்டிதங்கள் ஆகியவற்றைத்
தெளிய விளங்க தெரிவிப்பதனால்
த்வத் பத ஆப்தவ்-தேவரீருடைய திருவடிகளைச் சேர்வதில்
பரி ஷீயதே -தலைக் கட்டுகின்றது
வேதை ச சர்வை-கர்ம ப்ரஹ்ம காண்ட ரூபமான சகல வேதங்களும்
வேத்ய அஹம் இதி–நானே அறியக் கூடுவேன் என்று
ஸ்வேந ச வ்யாஸ கர்த்த–தேவரீர் தாமே சோதி வாய் திறந்து அருளிச் செய்ததும் உண்டு அன்றோ –

வேதங்கள் மூல பிரமாணம்–வேறு ஒன்றை அபேஷியாமல் ஸ்வத பிரமாணம் —
அதுகளுக்கு இதிஹாச புராண நியாய மீமாம்சைகளோடு கூடி ஸ்ம்ருதி உபகாரிகை ஆகிறது –
கர்ம ப்ரதிபாதிதமான பூர்வ பாகம்- ஸ்ம்ருதி விசேஷ பூர்வ மீமாம்சைகளோடே ஆராதன விதியில் பர்யவசிக்கும்
உத்தர பாகமான உபநிஷத் இதிஹாச புராண ப்ரஹ்ம மீமாம்சைகளோடே கூடி ஸ்வரூப ரூப குண சேஷ்டிதைகளைத்
தெரியப்படுத்தி தேவரீர் திருவடிகளில் சேர்க்கையில் பக்தியில் பர்யவசிக்கிறது-
இவ்வர்த்தத்தை தேவரீரே ஸ்ரீ கீதையில் வெளியிட்டு அருளினீர்-

ஸர்வஸ்ய சாஹம் ஹ்ருதி ஸந்நிவிஷ்டோ–மத்த ஸ்ம்ருதிர் ஜ்ஞாந மபோஹநம் ச–
வேதைஸ்ச ஸர்வைரஹமேவ வேத்யோ-வேதாந்த க்ருத் வேத விதேவ சாஹம்–৷৷15.15৷৷

ஸர்வஸ்ய = அனைத்திலும்
ச = மேலும்
அஹம் = நான்
ஹ்ருதி = இதயமாக
ஸந்நிவிஷ்டோ = அமர்ந்து இருக்கிறேன்
மத்த: = என்னில் இருந்து
ஸ்ம்ருதிர் = வேதங்கள்
ஜ்ஞாநம் = ஞானம்
அபோஹநம் = எடுத்துச் செல்வது, மறப்பது
ச = மேலும்
வேதை³ஸ் = வேதங்களும்
ச = மேலும்
ஸர்வை = அனைத்திலும்
அஹம் = நான்
ஏவ = நிச்சயமாக
வேத்யோ = அறிந்து கொள்ள , புரிந்து கொள்ள
வேதாந்த க்ருத் = வேதாந்தங்களை செய்பவன்
வேத விதே = வேதாந்தங்களை அறிந்து கொள்பவன்
ஏவ = நிச்சயமாக
ச = மேலும்
அஹம் = நான்

நான் எல்லா ஜீவர்களுடையவும் ஹ்ருதயத்தில் ஆத்மாவாக நுழைந்து இருக்கிறேன்
அனைவருடைய நினைவும் வஸ்து நிர்ணயமும் மறதியும் என்னிடமிருந்தே உண்டாகின்றன
எல்லா வேதங்களாலும் நானே அறியப் படுகிறேன் –
வேத விதிகளின் பலனை அளிப்பவனும் வேதத்தை அறிந்தவனுக்கு நானே
ஆச்சர்யமான ஸ்லோகம் -நிறைய இடங்களில் காட்டி வியாக்யானம் உண்டே —
கீழே சாமானாதிகரண்யம்-அனைத்தும் இவனே
அந்தராத்மாவாக இருந்து -சரீராத்மா நிபந்தனம்-பின்ன பிரவ்ருத்தி நிவ்ருத்தி ஏகஸ்மின் -விசேஷணங்கள் ஒன்றுக்கே –
விலை பெற்ற நீல வாயும் வயிறுமான மண் குடம் போலே -வேறு வேறு பிரயோஜனத்துக்காக
வேறே வேறே விசேஷணங்கள் -பிரதம விபக்தி -முதல் வேற்றுமையில் படிக்கலாம் –
ஹிருதயத்தில் ஆத்மாவாக நுழைந்து இருக்கிறேன் அனைத்துக்குள்ளும் -அந்த ப்ரவிஷ்டா சாஸ்தா நியாந்தா
ஸ்ம்ருதியும் – ஞானம் மறதி எல்லாம் என் ஆதீனம் –
வேதங்கள் -சொல்லப் படுகிறேன் -நானே -ஏவ காரம் மூன்று இடங்களிலும் -வேதங்களினால் நானே -அறியப் படுகிறேன்
வேதங்களினாலே சொல்லப் படுகிறேன் -வேறே ஒன்றும் சொல்லாதே -வேதம் என்னை சொல்லி அல்லால் நில்லாது
வேதம் எத்தை சொல்லப் போனாலும் -இவனது சரீரமே
வேதங்களின் படி செய்யும் கர்மங்களுக்கும் பலம் கொடுப்பவனும் நானே

ஸ்வத பிரமாணம் -நிரபேஷ பிரமாணம் வேதம்

——————-

பாடம் 4 : ந்யாயத்தின் வரலாறு

வைசேஷிக தர்சனம்
கணாத மகரிஷி -வைசேஷிக ஸூத்ரங்கள்–
பிரசஸ்த பாதர் -பதார்த்த தர்ம ஸங்க்ரஹம் –
ஸ்ரீ தரர்-நியாய கந்தலி
வ்யோமசிவர்-வ்யோமவதீ
உதயனர்-கிரணாவலீ
ஜெகதீசர் -ஸூக்தி
வல்லபாச்சார்யர் -நியாய லீலாவதி
உதயனர் -லக்ஷணா வலீ
சிவாதித்யர் -சப்த பதார்த்தீ
விஸ்வநாதர் -பாஷா பரிச்சேதம்
லௌகாஷி பாஸ்கரர் -தர்க கௌமுதீ

மஹர்ஷி கணாதர் – உலூகர்
த்வாந்தஸ்ய வா மோரு விசாரணாயாம் வைசேஷிகம் சாரு மதம் மதம் மே |
ஔலூகமாஹு: கலு தர்சநம் தத் க்ஷமம் தமஸ் தத்த்வ நிரூபணாய ||–(ஶ்ரீஹர்ஷர் – ஸநஷத சரிதம் 22.35)

கணங்கள் தான்ய மணிகளை புஜிப்பவர் -காணாதர் -வைராக்ய பூதர்
கணங்கள் அணுக்கள் சேர்ந்து வஸ்து இவர் மதம் என்றுமாம்
த்வாந்தஸ்ய வா மோரு விசாரணாயாம் வைசேஷிகம் சாரு மதம் மதம் மே |
ஔலூகமாஹு: கலு தர்சநம் தத் க்ஷமம் தமஸ் தத்த்வ நிரூபணாய |
தமஸ்ஸைப் பற்றி நிரூபணம் -இதுக்கு சிறந்த மதம் வைசேஷிகம் -அழகான பொருந்திய –
ஔலூக-ஆந்தைக்கு இருட்டைப் பார்க்கும் சக்தி போலே இதுக்கும்

சூத்ரம் -பாஷ்யம் -விருத்தி -பலவும் உண்டே தரிசனத்துக்கு-
பத்து அத்தியாயங்கள் இதுக்கு -ஒவ் ஒன்றுக்கும் இரண்டு பாகங்கள்
இதுக்கு வியாக்யானம் -பதார்த்த தர்ம ஸங்க்ரஹம்-பிரசஸ்த பாதர்-
அதுக்கு மேலே வியாக்கியானங்கள்-

ப்ராசீன நியாய தர்சனம்
கௌதம மகரிஷி நியாய ஸூத்ரங்கள்
ஜயந்த பட்டர் -நியாய மஞ்சரி
வாத்ஸ்யாயனர் –நியாய பாஷ்யம்
உத்யோதகரர் -நியாய வார்த்திகம் –
வாசஸ்பதி மிஸ்ரரின் நூல்கள் -நியாய வார்திக தாத்பர்ய டீகா –
உதயநாச்சார்யரின் நூல்கள்–லக்ஷணா வலீ -கிரணா வலீ -வைசேஷிக-பரமான நூல்கள்
லக்ஷண மாலா நியாய வார்திக தாத்பர்ய டீகா பரிசுத்தி -நையாயிக நிரசன பரமான நூல்கள்
ஆத்ம தத்வ விவேகம் -நியாய குஸூ மாஞ்ஜலி-நியாய பரிசிஷ்டம்

கௌதமர் – அக்ஷபாதர் – மேதாதிதி
அக்ஷபாதோ மஹாயோகீ கௌதமாக்ய: அபவந் முநி: |
கோதாவரீ சமாநேதா அஹல்யாயா: பதி: ப்ரபு: || (ஸ்கந்தபுராணம் 55.5)–அகலிகையின் பதியே இவர்-
காலிலே கண்ணை உடையவர் -ஆஷ பாதம் -இந்த தரிசனத்துக்கும் பெயர் உண்டே –

மேதாதிதி: மஹாப்ராஜ்ஞ: கௌதம: தமஸி ஸ்தித: |
விம்ருச்ய தேந காலேந பத்ந்யா:ஸம்ஸ்தா வ்யதிக்ரமம் ||-(மஹாபாரதம் சாந்தி பர்வம் 265.45)–
மேதாதிதி-பெயர் இவருக்கும் உண்டே –
ஐந்து அத்தியாயங்கள் இதற்கு உண்டு-
நியாய -புத்த வாதங்கள் பல -இதனால் பல கிரந்தங்கள் வளர்ந்தன –
வாசஸ்பதி மிஸ்ரரின் நூல்கள்-பல தர்சனத்துக்கும் உண்டே –

உதயநாச்சார்யரின் நூல்கள்-புத்தர்கள் உடன் வாதம் -ஆஸ்திகன் நாஸ்திகன் மலை மேல் தள்ளி –
பூரி ஜகந்நாதர் பக்தர் -ஐஸ்வர்யம் மதம் -மாம் ந ஜானாதி கேசவ -உன்னை புத்தர்கள் அவமானம் பண்ண பார்த்தால் –
நானே ரக்ஷிக்க வேண்டும்
உன் இருப்பே எனது அதீனம் -என்று ஸ்லோகம் -காட்சி கொடுத்த கதை உண்டே -11-நூற்றாண்டு

நவீன நியாய தர்சனம் 12-நூற்றாண்டு-
கண்டனங்கள் ப்ராசீனத்தில் -புத்தர்களை நோக்கி –
பின்பு உட் கட்சி பூசல் -சாங்க்ய-வைசேஷிக -மீமாம்ச -ஆஸ்திக தர்சனங்களில் போட்டி
அறியப்படும் வஸ்து ப்ரமேயம் -அறிய பிரமாணங்கள் -கருவிகள்
ப்ராசீனத்தில் பிரமேயம் பற்றி அநேகமாக விசாரங்கள்
நவீன நியாயம் பிரமாணம் பற்றி அநேகமாக விசாரங்கள் –

நவீன நியாய தர்சனம்
கங்கேச உபாத்யாயர்–தத்வ சிந்தாமணி
பக்ஷதர மிஸ்ரர்–ஆலோகம்
ருசிதத்த மிஸ்ரர் –பிரகாசம்
வாஸூ தேவர் –தத்வ சிந்தாமணி வியாக்யானம்
ரகுநாத சிரோமணி -தத்வ சிந்தாமணி தீதிதி
ஜெகதீச தர்கா லங்காரர் -ஜாகதீசீ
கதாதர பட்டாச்சார்யர்–தீதிதி பிரகாசிகை

பிரகரண கிரந்தங்கள் –
அன்னம் பட்டர் -தர்க ஸங்க்ரஹம்-தர்க ஸங்க்ரஹ தீபிகை
விஸ்வநாதர் -பாஷா பரிச்சேதம்–நியாய முக்தா வலீ

கங்கேச உபாத்யாயர்–தத்வ சிந்தாமணி

அந்வீக்ஷாநயம் ஆகலய்ய குருபி: ஜ்ஞாத்வா குரூணாம் மதம்
சிந்தா திவ்ய வி லோசநேந ச தயா: சாரம் விலோக்ய அகிலம் |
தந்த்ரே தோஷ கணேந துர்கமதரே ஸித்தாந்த தீக்ஷாகுரு:
கங்கேச : தநுதே மதேந வசசா ஶ்ரீதத்வ சிந்தாமணிம் || (தத்வ சிந்தாமணி ப்ரத்யக்ஷகண்டம் மங்கள ஸ்லோகம்)

அந்வீக்ஷாநயம் ஆகலய்ய குருபி–நியாய சாஸ்திரம் குருவின் இடம் கற்று :
ஜ்ஞாத்வா குரூணாம் மதம்-ப்ராபகர் மதம் அறிந்து -மீமாம்சகர்
சிந்தா திவ்ய வி லோசநேந ச தயா: சாரம் விலோக்ய அகிலம் |-சிந்தனை -என்னும் உள் கண் கொண்டு சாரம் அறிந்து
தந்த்ரே தோஷ கணேந துர்கமதரே ஸித்தாந்த தீக்ஷாகுரு:-நியாய சாஸ்திரம் அறிய கடினம் -சுருக்கமாக இருக்கும்
சித்தாந்தம் உபதேசிக்க குரு நானே
கங்கேச : தநுதே மதேந வசசா ஶ்ரீ தத்வ சிந்தாமணிம் ||-மிதமான வாக்கால் இந்த கிரந்தம் என்கிறார்-

ரகுநாத சிரோமணி –15-நூற்றாண்டு – தத்வ சிந்தாமணி தீதிதி
(சந்த்ர கிரணங்கள் போலே தீதிதி -சிறு வயசில் தந்தையை இழந்தவர் –
வாஸூ தேவர் இடம் படித்தார் மிதிலையில் சென்றும் கற்றார்

ந்யாயம் அதீதே சர்வ தநுதே குதுகாத் நிபந்தமப்யத்ர |
அஸ்ய து கிமபி ரஹஸ்யம் கேசந விஜ்ஞாதும் ஈசதே ஸூதிய: ||
(தத்வ சிந்தாமணி-தீதிதி ப்ரத்யக்ஷகண்டம் மங்கள ஸ்லோகம்)

ந்யாயம் அதீதே சர்வ தநுதே குதுகாத் நிபந்தமப்யத்ர |-நியாய சாஸ்திரம் பலரும் படிக்கிறார்கள் -கிரந்தங்களை உண்டு
அஸ்ய து கிமபி ரஹஸ்யம் கேசந விஜ்ஞாதும் ஈசதே ஸூதிய:-ரஹஸ்யம் சிலருக்கே –

கதாதர பட்டாசார்யர் –17-நூற்றாண்டு-– தீதிதி ப்ரகாசிகை
தரித்ரராக இருந்தார் -;படகு சென்று -ராஜா -நீர் கதாதரா என்று கேட்ட விருத்தாந்தம் -நியாய சாஸ்திரம் பிரசித்தம்

நத்வா நந்த் தநூஜ ஸூந்தரபதத் வந்த்வம் குரோராதராத்
உர்வீ மண்டல மண்ட நாயிதய சோராசே : அவசேஷா கிர: |
ஸங்க்ஷிப் தோக்த்யதி தஷ தீதிதி க்ருத: ப்ரத்யக்ஷ சிந்தாமணே :
வ்யாக்யாம் வ்யாகுருதே கதாதரபுத: மோதாய வித்யா வதாம் ||
(தத்வ சிந்தாமணி-தீதிதி-ப்ரகாச: ப்ரத்யக்ஷகண்டம் மங்கள ஸ்லோகம்)

நத்வா நந்த் தநூஜ ஸூந்தரபதத் வந்த்வம் குரோராதராத்-நந்தகோபாலன் குமரன் திருவடி வணங்கி
உர்வீ மண்டல மண்ட நாயிதய சோராசே : அவசேஷா கிர: |-பூமிக்கு ஆபரணமாக தனக்கு குரு -ஆதாரத்துடன் ஸ்மரித்து
ஸங்க்ஷிப் தோக்த்யதி தஷ தீதிதி க்ருத: ப்ரத்யக்ஷ சிந்தாமணே :-சுருக்கமாக சொல்வதில் சாதுர்யம் -உள்ளவர்
ரகுநாத சிரோமணி -அதுக்கு நான் வியாக்யானம்
வ்யாக்யாம் வ்யாகுருதே கதாதரபுத: மோதாய வித்யா வதாம் |-கதாதரனான நான் சாஸ்திரம் அறிந்தவர் இது கண்டு மகிழ்வர்

உபகார ஸ்ம்ருதிக்காக நாம் இவற்றை அறிய வேண்டும் –

—————-

பாடம் 5 : ந்யாயத்தின் செயல் முறை –

ப்ரணம்ய ஹேதும் ஈஸ்வரம் முநிம் கணாதம் அந்வத: |
பதார்த்த தர்ம சங்க்ரஹ: ப்ரவக்ஷ்யதே மவோதய: || (ப்ரசஸ்தபாத பாஷ்யம் – மங்கள ஸ்லோகம்)
காணாதர் ஸூத்ரங்களுக்கு பாஷ்யம் செய்தவர்-ப்ரசஸ்தபாதர்

பொருள் – உலகிற்குக் காரணமான பகவானை வணங்கி, அதற்குப் பின் கணாத முநிவரை வணங்கி, மிகுந்த
ஜ்ஞாத்தை உண்டாக்கக் கூடிய, உலகப் பொருட்களின் தன்மைகளைச் சுருக்கமாகச் சோல்லும்
பதார்த்த-தர்ம-சங்க்ரஹம் என்னும் நூல் மேலே சொல்லப்படப் போகிறது–

ந்யாய சாஸ்த்ரத்தின் நோக்கம்
பதார்த்தாநாம் சா தர்ம்ய வை தர்ம்யாப்யாம் தத்வ ஜ்ஞாநாத் நிஸ் ஸ்ரேயஸம் (மஹரிஷி கணாதர் –வைசேஷிக ஸூத்ரம் 1-1-3)
பொருள் –பொதுத் தன்மைகளாலும் தனித் தன்மைகளாலும் பொருட்களின் உண்மையான அறிவிலிருந்து முக்தி உண்டாகிறது–

ந்யாய சாஸ்த்ரத்தின் செயல் முறை –
அதன் படிகள்

1—உத்தேச்யம் –பெயராலே பொருள்களைக் கூப்பிடுதலின் -பட்டியல் இடுதல்
2–பொருள்களின் இலக்கணத்தை -தனித்தன்மையை – அசாதாரண தர்மத்தை-உரைத்தல்
3—பரீஷா–பொருளையும் அதன் தனித் தன்மையையும் சோதித்து நிலை நாட்டுதல்

உதாரணம் –

1—உத்தேச்யம் –பெயராலே பொருள்களைக் கூப்பிடுதலின் -பட்டியல் இடுதல்
உலகத்தைப் படைத்தவர் ஸ்ரீ நாராயணன்
2–பொருள்களின் இலக்கணத்தை -தனித் தன்மையை -உரைத்தல் -definition –
ஸ்ரீ நாராயணன் ஸ்ரீ மஹா லஷ்மீ தாயாரின் கணவர் –
திரு மகள் கேள்வன் -கருடா ருடன்–அரவணைப் பள்ளியான் –
3—பரீஷா–பொருளையும் அதன் தனித் தன்மையையும் சோதித்து நிலை நாட்டுதல் –
ஸ்ரீ நாராயணன் என்று ஒருவர் உள்ளாரா
ஆம். “ஏகோ ஹ வை நாராயண ஆஸீத்” என்று வேதம் சொல்லுகிறது
• ஸ்ரீ நாராயணன் தனிப் பொருள் தானா? ஆம். நாராயணன்
மற்றப் பொருள்களைக் காட்டிலும் வேறுபட்டவன் என்று
வேதம் சொல்லுகிறது.
• ஸ்ரீ நாராயணன் ஸ்ரீ மஹா லக்ஷ்மியின் கணவர் தானா? ஆம்.
“ஹ்ரீஶ்ச தே லக்ஷ்மீஶ்ச பத்ந்யௌ” என்று வேதம் சொல்லுகிறது
• இந்தத் தன்மை மற்றேர்களுக்கும் உண்டா? இல்லை
ஸ்ரீ நாராயணன் ஒருவருக்கே உள்ளது இது

இந்த மூன்றுக்கும் மேலே நான்காவதாக -விபாகம் -classification
நியாய சாஸ்திரத்தில் பொருட்களின் பொதுத் தன்மைகளையும் தனித் தன்மைகளையும் கொண்டு
அவற்றை வர்க்கங்களாக வகுத்தலும் செய்யப்படுகிறது
விபாகம் என்றால்
ஒரு பொருளின் அனைத்து முரண்பட்ட உட்ப் பொருள்களையும் பட்டியல் இடுவது

ஸ்ரீ மந் நாராயணனுக்கு ஐந்து நிலைகள் உண்டே
பர ரூபம் -வ்யூஹ ரூபம் -விபவங்கள்-அந்தர்யாமி -அந்தப்ரவிஷ்டா சாஸ்தா -ஹார்த்த ரூபம் -அர்ச்சா ரூபம் –
இப்படி பிரித்து அறிதல்
இந்த ஐந்துக்கும் லக்ஷணம் பரீஷை செய்து விபாகம் பண்ண வேண்டும் –

வஸ்திரம்
பல நூல்கள் சேர்ந்து உருவானது
துணிகள் பருத்தி பட்டு கதர் போன்ற விபாகங்கள்
அனைத்து விபாகங்களையும் சொல்ல வேண்டும் –
உள் பிரிவுகள் ஒன்றுக்கு ஓன்று முரண் பட்டு இருக்க வேண்டும்
பட்டு -வேஷ்ட்டி புடவை போன்ற விபாகங்கள் உண்டே
பிருத்வி குடம் என்று வகைகள் சொல்லாமல் பிருத்வி நீர் இத்யாதி சொல்ல வேண்டும்

லக்ஷணம் -அசாதாரண தர்மம்-
ஒரு பொருளின் தனித் தன்மையே அதன் லக்ஷணம் -அடையாளம் -ஆகிறது
லக்ஷணத்துக்கு இரண்டு பயன்கள்
1–வ்யாவ்ருத்தி–மற்ற பொருள்களைக் காட்டிலும் வேறு பட்டதாக அறிதல்
2–வ்யவஹாரம் -ஒரு சொல்லால் அந்தப் பொருளைக் குறிப்பிடுதல் -designation

வ்யூஹம் -லீலா விபூதியில் உள்ள தன்மை சொல்லாமல் பாற் கடல் சயனம் என்பதே அசாதாரணம்-

லக்ஷணம் மூன்று தோஷங்கள் இல்லாமல் இருக்க வேண்டும்
1–அ சம்பவம்
2–அ வியாப்தி
3–அதி வியாப்தி

1–அ சம்பவம் -applicability
ஒரு பொருளின் லக்ஷணமாக நாம் சொல்லும் பண்பானது அந்தப் பொருளிலேயே இல்லா விட்டால்
அது லக்ஷணமாக முடியாது. இந்த தோஷத்திற்கு அ சம்பவம் என்று பெயர்
மாட்டுக்கு ஒரு குளம்பைக் கொண்டு இருத்தல் லக்ஷணம் என்றால் அ சம்பவம் தோஷம் வரும்
குதிரைக்கு தான் ஒரு குளம்பு-மாட்டுக்கு இரண்டு குளம்புகள் உண்டே

2–அ வியாப்தி -partial applicability
ஒரு பொருளின் லக்ஷணமாக நாம் சொல்லும் பண்பானது -அந்தப் பொருளின் சில எடுத்துக் காட்டுகளில் இருந்து
சிலவற்றில் இல்லாமல் போனால் அந்த தோஷத்துக்கு அ வியாப்தி என்று பெயர்
மாட்டுக்கு கருமை நிறம் லக்ஷணம் என்றால் அ வ்யாப்தி தோஷம் வருமே
வெள்ளையான பழுப்பான பசுக்களும் இருப்பதால் இது பொதுவான லக்ஷணம் ஆக முடியாதே

3–அதி வியாப்தி -over applicability
ஒரு பொருளின் லக்ஷணமாக நாம் சொல்லும் பண்பானது அந்த பொருளில் மட்டும் இல்லாமல்
வேறு பொருள்களிலும் இருந்தால் அது எப்படி இந்த பொருளின் தனித் தன்மையாகும்
இந்த தோஷத்துக்கு அதி வியாப்தி என்று பெயர்
மாட்டுக்கு கொம்பு தான் லக்ஷணம் என்று சொன்னால் அதி வியாப்தி தோஷம் வரும்
கொம்பு மாட்டுக்கு இருப்பது போலே ஆட்டுக்கும் மானுக்கும் கூட இருக்கிறதே
ஆகவே இது மாட்டின் தனித்தன்மை அல்ல -ஆகவே இது மாட்டின் லக்ஷணம் ஆக முடியாதே

தோஷ த்ரய ரஹிதமாய் லக்ஷணம் இருக்க வேண்டும்
நாம் நாம் பதார்த்த ஸங்க்ரஹம் -உத்தேச்யம்
அனைத்தையும் குறிப்பிடும் சொல் தானே பதார்த்தம்
பதஸ்ய அர்த்தம் -சொல்லாலே குறிக்கப்படும் பொருள் என்றவாறு
சொல்லால் குறிக்கப்படாத வஸ்துவே இல்லையே உலகில் –
பொருள்கள் எல்லாம் ஞானத்துக்கு விஷயமாகவே இருக்கும்-

உலகில் இருக்கும் அனைத்தும் –
நியாய சாஸ்திரத்தில் உலகில் இருக்கும் அனைத்துக்கும் லக்ஷணம் சொல்லி –
அதை பரீஷை செய்து -பின் அதன் உள் பொருள்களைக் காட்ட வேண்டும்
அதற்கு முதலிலே உலகில் உள்ள அனைத்தையும் உத்தேச்யம் -பெயராலே குறிப்பிடுதல் -செய்ய வேண்டுமே
எந்தச் சொல்லாலே அத்தைச் செய்வது –
பதார்த்தம் என்ற சொல் உலகில் உள்ள அனைத்தையும் கூறும்
சரி -அனைத்துக்கும் பொதுவான லக்ஷணம் என்ன
அதையும் அந்த சொல்லே காட்டிக் கொடுக்கிறது
ஒரு சொல்லின் பொருளாக இருத்தல் -ஒரு சொல்லாலே குறிப்பிடுதல் -தான் உலகில் உள்ள
அனைத்து பொருள்களுக்கும் லக்ஷணம்
பதார்த்தம் சொல்லே லக்ஷணம்
நாற்காலி -அதே சொல் லக்ஷணம் நான்கு கால்கள் உள்ளது என்பது போலே –
சொல்லால் குறிக்கப்படும் பொருள் பதார்த்தம் என்பதில் மூன்று தோஷங்களும் இல்லையே –

—————–

பாடம் -6-
பதார்த்தங்கள் ஏழு வகைகள் –
1-த்ரவ்யம் -வஸ்து
2-குணம் -பண்பு
3-கர்மம் -செயல்
4-சாமான்யம் -பொதுத் தன்மை
5-விசேஷம் -தனித் தன்மை
அநு கதமான ப்ரதீதி -தொடர்ந்து வரும் ஞானம் -6-சமவாயம் -Inherence
7-அபாவம்-இன்மை -Non-Existence

சாமான்யம் -பொதுத் தன்மை
கருப்பு மாடு -கருப்பு ஆடு -மாடு வேறு ஆடு வேறு ஆனாலும் நிறம் கருமை என்பதால் ஒரே மாதிரி புத்தி ஏற்படுமே
கருப்பு மாடு -வெள்ளை மாடு -மாட்டுத் தன்மை சாமான்யம் -கோத்வம்-பொதுத் தன்மை
நிறம் சுவை அளவு இவற்றாலும் வேறு பட்டாலும்
இது மாடு -அதுவும் மாடு
இது குடம் –அது மற்றொரு குடம்
இப்படி ஒரே மாதிரியான புத்தி ஏற்படுவது சாமான்யம் –

அநு கதமான ப்ரதீதி -தொடர்ந்து வரும் ஞானம் –
மனுஷ்யத்வம் -ஸிம்ஹத்வம்-கடத்வம்-கோத்வம்-கோ வாக இருக்கும் தன்மை
ஆகிருதி -வடிவு பார்த்து -கடத்வம்-ஜாதி -க்ரஹிக்கிறோம் -உயரமனான வெள்ளையான குடம் -என்றால்
உயரத்தையும் -வெண்மையையும் -கடத்துவத்தையும் க்ரஹிக்கிறோம்
ஜங்கத்வம்-எல்லா விலங்குகளுக்கும்
ஸ்தாவரத்வம்-
அநு கதமான ப்ரதீதி நியாமகம் -ஒருங்கு இணைத்து பேசுவது

விசேஷம் -தனித் தன்மை
விசேஷம் -பரமாணுக்கள் -ஒவ் ஒன்றுக்கும் வேறுபடும்

விசேஷம் -அறிந்து -வை சேஷிக மதம் -தனித்தன்மை அறிந்து பிரித்து அறிவது
சர்வ ஈஸ்வரன் -தனித்தன்மை அவனுக்கு -நியமிக்கிற படியால் வேறுபட்டவன்
குடம் வேறே புஸ்தகம் வேற ஜாதி பேதம் -குடத்வம் -புஸ்தகத்தவம் கொண்டு அறிகிறோம்
சின்ன குடம் பெரிய குடம் -அளவு கொண்டு வேறுபாடு அறிகிறோம்
நிறம் -அளவு -எல்லா பண்புகளிலும் ஒன்றாக இருக்க -வேறு படுத்த –
உருவாக்கப்பட்ட அவயவங்கள் பகுதிகள் வேறே
நூல் வாசி கொண்டு வஸ்திரம் வேறே
காரணம் வேறாக- என்றால் காரியமும் வேறாகவே இருக்கும்
அனுமானித்து -கண்ணால் தெரியாமல் இருக்க –
அவயவங்கள் வேறு பட்டன என்று எப்படி அறிவது -அதனுடைய அவயவங்கள் வாசி கொண்டு அறிய வேண்டும்

பரமாணு கார்ய வாதிகள் இவர்கள் மதம்-
பரமாணுக்கு அவயவங்கள் கிடையாது
அணுக்கள் நித்யம் இவர்கள் சித்தாந்தம்
பிரளய காலத்திலும் இவை இருக்கும்
இவற்றை வேறு படுத்த -விசேஷம் -சிறப்பு -தன்மை ஒப்புக் கொள்கிறார்கள்
தேவைப்பட்ட இடங்களில் மட்டும் விசேஷம் கல்பித்து -லாகவம்- – அவயவம் இல்லாத பரமாணு –
நித்ய த்ரவ்யங்களில் அனைத்திலும் விசேஷம் என்ற தன்மை உள்ளது கல்பிக்கப் பட்டது

சமவாயம்
த்ரவ்யம் -குணம் -கர்மம் -சாமான்யம் -விசேஷம் -ஐந்துக்கும்
தன் தன் ஆச்ரயத்தோடே இருக்கும் தொடர்பே -சமவாயம் எனப்படும்

விசேஷம் சமவாயம் -இரண்டையும் சாஸ்திரம் கொண்டே அறிய வேண்டும்
காற்றில் மணம் -பூக்களில் இருந்து நுகர்ந்து -குணம் த்ரவ்யத்தை அண்டியே இருக்கும்
செயலும் த்ரவ்யத்தையே அண்டியே இருக்கும்
இப்படி சாமான்யமும் விசேஷமும் த்ரவ்யத்தில் இருக்கும்
துணி நூல் வேறே ஆகவே த்ரவ்யத்திலும் த்ரவ்யத்திலும் இருக்கும்
அசத் கார்ய வாதிகள் இவர்கள்
அவயவி -அவயவங்களை அண்டியே இருக்கும்
இந்த சம்பந்தத்துக்கு -சமவாயம் -என்கிறார்கள்-

அ பாவம் -ஏழாவது –
இங்கு இல்லை -இப்பொழுது இல்லை -இவ்விடத்தில் இல்லை-இல்லவே இல்லை -போல்வன

—————–

லஷ்யம் -இலக்கு –goal-அறிய வேண்டிய பொருள்
லக்ஷணம் -அடையாளம் -தனித்தன்மை -அசாதாரண தன்மை -definition –specific-attribute-
அ சம்பவம்-அ வ்யாப்தி -அதி வ்யாப்தி -மூன்று தோஷங்கள் இல்லாமல் இருக்க வேண்டும்
லஷ்யத்தை -வஸ்துவை -பெயரை இட்டுக் குறிப்பது -உத்தேச்யம்
பரிஷா –investigation-
விபாகம் -உள் பிரிவுகள்
பதார்த்தங்கள் -அனைத்தையும் சொல்லும் -அவற்றில் -ஏழு வகைகள் முன்பு பார்த்தோம
த்ரவ்யம் -குணம் -கர்ம -சாமான்யம் -விசேஷம் -சமவாயம் -அ பாவம்
இதுக்கு லக்ஷணமும் பதார்த்தம் -ஒரு சொல்லாலே குறிப்பிடப் படும் பொருள் –
பரமாணுக்கள் -அவயவம் இல்லாதவை -ஒவ் ஒன்றுக்கும் -விசேஷம் என்று கல்பித்தார்கள் – வேறு படுத்திக் காட்ட
இதனாலே வை சேஷிக தர்சனம்-சமவாயம் -என்பதும் இவர்கள் சொல்வதே –
நையாயிகர் -நியாய ஸாஸ்த்ர காரர்-
முன்பு இவற்றைப் பார்த்தோம்-

பாடம் 7 : பதார்த்தங்களின் உட்பிரிவுகள் – பகுதி 1–த்ரவ்யம், குணம் மற்றும் கர்ம-

த்ரவ்யங்களின் வகைகள் -9-
1-ப்ருத்வீ
2-அப்பு
3-தேஜஸ்ஸூ
4-ஆகாசம்
5-வாயு
6-காலம்
7-திக்கு
8-ஆத்மா
9-மனஸ்ஸூ

ஜாதி மாறாது -குணம்-மாறும்
குணம் பல ஜாதிகளில் இருக்குமே –

குணங்களின் வகைகள் -24-
1-ரூபம் -நிறம்
2-ரசம் -சுவை
3-கந்தம் -மணம்
4-ஸ்பர்சம் -தொடு உணர்வு
5-சமக்யா-எண்ணிக்கை

6-பரிமாணம் -அளவு
7-ப்ருதக்த்வம்-வேறுபாடு
8-சம்யோகம் -சேர்க்கை
9-விபாகம் -பிரிவு
10-பரத்வம் -தொலைவு

11-அ பரத்வம் -அருகாமை

இங்கு பரத்வம்–அ பரத்வம்-உயர்வை தாழ்வை சொல்லாமல் -தொலைவையும் அருகாமையும் சொல்கிறது

12-குருத்வம் -எடை
13-த்ரவத்வம்-த்ரவத்தன்மை
14-ஸ்நேஹம்-பசை
15-சப்தம் -ஒலி

இனி மேல் உள்ள எட்டு குணங்களும் ஆத்மாவுக்கே உள்ளவை-

16-புத்தி -அறிவு
17-ஸூகம் -இன்பம்
18-துக்கம் -துன்பம்
19-இச்சா -ஆசை
20-த்வேஷம் -வெறுப்பு

21-பிரயத்தனம் -முயற்சி
22-தர்மம் -நல் வினை
23-அதர்மம் -தீ வினை
23-சம்ஸ்காரம் -பதிவு

கர்மங்களின் வகைகள் -காயிக வியாபாரங்கள் –சேஷ்டைகள் -ஐந்து
1-உத் ஷேபணம்–மேலே செல்லுதல்
2-அப ஷேபணம் -கீழே செல்லுதல்
3-ஆ குஞ்சனம் -மடித்தல்-contraction
4-ப்ரசாரணம் -விரித்தல் -expansion
5-கமனம்–பக்கவாட்டில் செல்லுதல் -கீழே சொல்லாதவை அனைத்துக்கும்-

———–

பாடம் -8-சாமான்யம் –பொதுத் தன்மை
கருப்பான ஆடு -கருப்பான மாடு -கருமை-பொதுவான தன்மை இல்லா விட்டால் ஏற்படாதே –
இங்கு குணம் -பண்பை வைத்து –
இதே போலே கருப்பான ஆடு கருப்பான மாடு -இங்கு ஜாதியை வைத்து
வெண்மை நூல் -வெண்மை வஸ்திரம் -வெண்மையான புத்தகம் -வெண்மையான பால் –
இப்படி பல விதமாக வெண்மை த்ரவ்யங்களில் இருக்கும்

நிறம் மணம் சுவை மாறினாலும் ஜாதி -பொதுத் தன்மை -கோத்வம்-மாட்டுத் தன்மை -சாமான்யம்

இப்படிக் கல்பிக்கப்படும் சாமான்யம்
ஒரே மாதிரியான அனைத்து மாடுகளிலும் உள்ள மாட்டுத் தன்மையாகிற சாமான்யம்
வஸ்து உருவாகும் பொழுது உருவாகி அழியும் பொழுது அழியும் என்று கொண்டால்
கடினமாக -கௌரவமாக -கல்பிக்க வேண்டும்

எளிமையாக -லாகவமாக -மாட்டுத்தன்மை -நித்யம் -மாடு அழியும் பொழுதும் அழியாமல் நித்யம் என்று கல்பிக்கலாம்
ஆகவே சாமான்யம்
ஒன்றே என்றும்
நித்யம் என்றும் கொள்ள-கல்பிக்க – வேண்டும்

சாமான்யம் இருக்கும் இடங்கள்
த்ரவ்யங்களிலும்
குணங்களிலும்
செயல்களிலும் -இருக்கும்
வெள்ளை மாடு ஓடுகிறது -வெள்ளை மாடு நடக்கிறது -வெள்ளை ஆடு நடக்கிறது

த்ரவ்யத்வம் -த்ரவ்யத் தன்மை -அதிக இடங்களிலும்
ப்ருத்வீத்வம் -நிலத்தன்மை–மரம் -மணல் -துணி -குடம் -இப்படி குறைந்த இடங்களிலும் இருப்பதால்
த்ரவ்யத்வம் -பர சாமான்யம் என்றும்
பிருத்வீத்வம்-அ பர சாமான்யம் -என்றும் சொல்லப்படும் -இப்படி இரு வகை சாமான்யம்

ஆனால் அதே ப்ருத்வீத்வம் கடத்துவத்தைக் காட்டிலும் அதிக இடங்களில் இருப்பதால்
அது பர சாமான்யம் என்றும் கடத்வம் அபர சாமான்யம் ஆகும்

இப்படி ஒன்றை ஒன்றை ஒப்பிட்டு பர அபர சாமான்யங்களை அறிய வேண்டும்

பண்புகள் வேறே வேறே வஸ்துக்களில் ஒன்றாக –same -வேறே -similar-வேறே
வெள்ளை நிறம் கருப்பு நிறம் -நிறத்தன்மை சாமான்யம்
குணம் ரூபம் செயல் இவை ஆஸ்ரயமாக த்ரவ்யம் கொண்டே இருக்கும் -தனியாக இருக்க முடியாதே
கர்ம -செயல்தனம் -கர்மத்வம் -activitiness- ஆடு மாடு பொதுவான சாமான்யத்வம் விலங்கத்வம்
வெள்ளை கருப்பு -நிறத்தனம் பொதுவான தன்மை ரூபத்வம் இதுவே
பதார்த்தம் -த்ரவ்யங்களுக்கும் சாமான்யம்
குடத்வம் -பிருத்வீத்வம்–ஒப்பீடு
பொதுவான சாமான்யம் -சத்தா -த்ரவ்யத்வம் -குணத்வம் -கர்மத்வம் -இவை மூன்றுக்கும்
இது எப்பொழுதுமே பர சாமான்யமாகவே இருக்கும் –

ஆத்மாவும் த்ரவ்யம் -நாமும் உலகில் ஒரு சிறு பகுதி -என்று அறிந்து இயற்கையுடன் நாமும் ஒன்றி இருக்க வேண்டும்
ஞானம் இருப்பதால் மற்ற எட்டு த்ரவ்யங்களையும் சரியாகப் பார்த்துக் கொள்ளும் பொறுப்பு வேண்டும்

——-

பாடம் -9–

கணாத -கௌதம -நியாய மதம் -சிறுவர்களுக்கும் -அன்னம் பட்டர் -தர்ம ஸங்க்ரஹம் -நூலை இயற்றி அருளுகிறார்

ஒரே பதார்த்தத்தில் பல சாமான்யங்கள் இருக்கலாமே –சிகப்புத்தன்மை -குணத்தன்மை,-ரூபத்தன்மை
மாட்டுத்தனம் -விலங்குத்தனம்-த்ரவ்யத்வம்
கடத்தவம் -ப்ருத்விதனம் -த்ரவ்யத்வம்
நிறம் -சிவப்புத் தனம் -redness-ரூபம் -வர்ணங்கள் வகைகளில் ஒரு வகை -பலவகை சாமான்யங்கள்

இனி விசேஷம்
பரமாணு போன்று எந்த த்ரவ்யத்துக்கு -அவயவங்கள் பகுதிகள் இல்லையோ -அதை மற்ற த்ரவ்யங்களில் இருந்து
வேறுபடுத்த வேறே வழி இல்லாததால் விசேஷம் என்று ஒரு பதார்த்தம் கல்பிக்கப் படுகிறது
அவ்வாறு அவயவங்கள் இல்லாத த்ரவ்யங்கள் -நித்யம் -என்றும் இருப்பது -உண்டாக்குவதும் அழிவும் இல்லாமல் இருப்பவை
அவயவங்கள் உள்ள த்ரவ்யம் அவற்றின் சேர்க்கையால் உண்டாகி அவற்றின் பிரிவால் அழியும்
எனவே விசேஷம் நித்ய த்ரவ்யங்களில் தானே இருக்க வேண்டும் என்று அறியலாம்

நிலம் -நீர் -நெருப்பு -காற்று -இவை போன்ற பெரிய பொருள்களுக்கு அவயவங்கள் உண்டு -நித்யம் அல்ல
இவற்றின் பரமாணுக்களுக்கு அவயவம் அல்ல -அவை நித்யம்

ஆகாயம் -காலம் -திசை -இவை உலகில் ஓன்று தானே -அவயவங்கள் இல்லாதவை -இவை நித்யம்

ஆத்மா -மனஸ்ஸூ-இவை கணக்கற்றவை -அவயவங்கள் இல்லாதவை -இவையும் நித்யம்

ஒவ் ஒரு நித்ய த்ரவ்யத்திலும் ஒரு விசேஷம் உண்டு

குடம் -நதி -நெருப்பு -காற்று -இவை போன்ற பெரிய பொருள்களில் விசேஷம் இல்லை
நித்ய த்ரவ்ய வ்ருத்தமே விசேஷம்-குடத்திலில்லை -ஆனால் பரமாணுவில் உண்டு -இது நித்யம் இவர்கள் பக்ஷத்தில்-
நித்ய த்ரவ்யங்களில் இருப்பதே விசேஷம்
ஐந்தில் முழுவதிலும் உண்டு
நான்கில் பரமாணுவுக்கு மட்டும்
இவை அநந்தம்
நித்ய வஸ்துக்களில்/பதார்த்தங்களில் இருப்பது விசேஷம் என்று சொல்லாமல்
நித்ய த்ரவ்யங்களில் -என்பதால் குணம்-கிரியைகள்- போன்றவற்றில் இல்லை என்றபடி-

விசேஷம் த்ரவ்யங்களில் மட்டும் தான் இருக்க வேண்டுமா -குணங்களில் இருக்க வேண்டாமா என்னில்
ஒரு பரமாணுவில் உள்ள ஒரு குணத்தை மற்ற குணங்களில் இருந்து வேறுபடுத்த விசேஷம் கல்பிக்க வேண்டாமோ என்னில்
பரமாணுவில் இருக்கும் விசேஷத்தைக் கொண்டு பரமாணுக்களில் உள்ள வேறுபாட்டை அறிந்து விட்டால்
ஆஸ்ரயம்-இருப்பிடம் வேறுபட்ட படியால் அவற்றில் உள்ள குணங்களையும் நாம் வேறுபடுத்தி விடலாமே
இரண்டு வெவ்வேறு பொருள்களின் இருக்கும் குணம் ஒன்றாக இருக்க மூடியாத படியால்
ஆகையால் குணங்களுக்கு தனியாக ஒரு விசேஷம் தேவை இல்லை

விசேஷங்களைக் கொண்டு இரண்டு பரமாணுக்களின் வேறுபாட்டை அறிந்தோம் –
விசேஷங்களை எப்படி வேறுபடுத்துவது-அதற்கு இன்னும் ஒரு விசேஷம் வேண்டுமா
இப்படி விசேஷத்தில் ஒரு விசேஷத்தை கலப்பித்தோம் ஆகில் –
அதற்கும் இன்னும் ஒரு விசேஷம் கல்பிக்க வேண்டி வரும்
எனவே இப்படி முடிவு இல்லாத படி கல்பித்தால் அநவஸ்தை தோஷம்-infinte regress- வரும் –
இங்கு ஆஸ்ரயம் இருப்பிடம் வேறு பாட்டால் விசேஷங்களில் வேறுபாடு அறியலாம் என்றால்
அந்யோந்ய ஆஸ்ரய தோஷம் உண்டாகும்
ஆகவே விசேஷங்கள் ஸ்வத வ்யாவருத்தமாக-இயற்கையாகவே வேறாக- தான் அறியப் படுகின்றன
அவற்றின் வேறுபாட்டை அறிய வேறே ஒன்றின் தேவை இல்லை என்பதே நியாய மதம் –

———–

பாடம் -10-
சமவாயம் -அபாவம் விளக்கம்

சமவாயம் – விளக்கம்
பதார்த்தங்களின் சேர்க்கை -சம்பந்தம்
தண்டீ புருஷா -தண்டம் வைத்துள்ளவன்
கை என்ற த்ரவ்யத்துக்கும் தடி என்ற த்ரவ்யத்துக்கும் சம்பந்தம் –
சம்யோகம் -24 -குணங்களின் பட்டியலில் -8-வதாக முன்பே சம்யோகம் பார்த்தோம்

சம்யோகம் வேறே சமவாயம் வேறே
அது காண்கிறோம் -இது கல்பிக்கப்படுகிறது
ஒளி உடைய ரத்னம் -மணம் உடைய பூ –சமவாயம் –
புடவை கையில் வைத்த -இது சம்யோகம் -கண்ணால் பார்க்கிறோம்

பரமாணுக்கள் சேர்ந்து த்வி–த்ரி -என்பதால் சமவாயம் த்ரவ்யங்களுக்குள் இருக்கும் என்பர் இவர்கள்
நூல்களை ஆஸ்ரயித்தே துணி -அதுவே சமவாயம்
அவயவங்கள் இருந்தால் தானே அவயவி இருக்க முடியும் –

த்ரவ்யங்கள் குணங்கள் செயல்கள் சாமான்யங்கள் விசேஷங்கள் -இவற்றுடன் சேர்ந்ததாக பல த்ரவ்யங்களைப் பார்க்கிறோம்
கருப்பான மாடு நடக்கிறது -கருமைத்தனம்-மாட்டுத்தனம் -நடத்தல்
துணி த்ரவ்யம் நூல்களான த்ரவ்யங்களுடன் சேர்ந்து பார்க்கிறோம்
பரமாணுக்களில் விசேஷங்கள் சேர்க்கை பார்க்கிறோம்
த்ரவ்யத்துக்கும் -அதில் இருக்கும் த்ரவ்யம் குணம் செயல் சாமான்யம் விசேஷம் இவற்றுடன் உள்ள சம்பந்தம்
சம்யோகமாக இருக்க முடியாது ஏன் எனில் த்ரவ்யங்களுக்கு இடையில் மட்டுமே சம்யோகம் இருக்கிற படியால்

மேலும் சம்யோகத்தால் சேர்ந்த இரு பொருள்களை நம்மால் பிரிக்க முடியும்
ஆனால் குணமோ செயலோ சாமான்யமோ விசேஷமோ அதன் ஆஸ்ரயமான -இருப்பிடமான -த்ரவ்யத்தை விட்டுப் பிரிவதே இல்லை
ஆகவே சாமான்யம்-சமவாயம் – என்கிற புதிய தொடர்பை கல்பிக்கிறோம்

சமவாயம் என்னும் சம்பந்தம் அயுத சித்தர்கள் என்னும் பொருள்களுக்கு இடையே இருக்கும் –
அயுத சித்தம் -பிரிக்க முடியாதவை –
தான் இருக்கும் வரை மற்ற ஒன்றை அண்டியே தான் இருக்குமோ -இவ்விரண்டு பதார்த்தங்களும்
அயுத சித்தர்கள் என்று அழைக்கப் படுகின்றன
1-குணம் -குணத்தை உடைய த்ரவ்யம்
2-க்ரியா -செயல் -செயலை உடைய த்ரவ்யம்
3-சாமான்யம் -அது இருக்கும் இடம் குணமோ செயலோ த்ரவ்யமோ
4-விசேஷம் -அது இருக்கும் நித்ய த்ரவ்யம்
5-அவயவி -த்ரவ்யங்களும் -அதில் இருக்கும் அங்கங்களும் (நூல்கள் துணி போலே பிரிக்க முடியாத த்ரவ்யங்கள்)
ஆகிய ஐந்து இரட்டைகள்
(மேசை மேலே குடம் -சமவாயம் இல்லையே -தொட்டுக் கொண்டு உள்ளது -காரண கார்ய பாவம் இல்லையே
பிரிந்தும் ஸ்திதி உண்டே–பிரிக்க முடியாத சம்பந்தம் -விசிஷ்டம் -சமவாயம் -என்று கல்பிக்கிறார்கள்-)

அபாவம்
1-இங்கு குடம் இல்லை -த்ரவ்யத்தின் இன்மை
2-இது சிவப்பாக இல்லை -குணத்தின் இன்மை
3-இது நகரவில்லை -செயலின் இன்மை
4-இது மாட்டுத்தன்மை இல்லை -சாமான்யத்தின் இன்மை
5-குடத்தில் விசேஷம் இல்லை -விசேஷம் இன்மை
6-இரு த்ரவ்யங்களுக்கும் சமவாயம் இல்லை -சமவாயத்தின் இன்மை
ஆகவே அபாவம் என்னும் ஏழாவது பதார்த்தமும் கண்டிப்பாக ஏற்கப் பட வேண்டியதே

அபாவத்தின் வகைகள்
1-ப்ராக் அபாவம்
2-ப்ரத்வம்ச அபாவம்
3-அத்யந்த அபாவம்
4-அந்யோந்ய அபாவம்

1-ப்ராக் அபாவம்
ஒரு பொருள் உண்டாவதற்கு முன்னால் காணப்படும் அதன் இன்மை தான் ப்ராக் அபாவம்
ப்ராக் -முன்னால்
நூல்களைப் பார்த்து -இங்கு துணி உண்டாகப் போகிறது -என்று நினைக்கிறோம்
இதனால் இப்பொழுது இல்லை என்று தெரிகிறது

2-ப்ரத்வம்ச அபாவம்
ஒரு பொருளின் அழிவால் -அழிவால் ஏற்படும் இன்மை -த்வம்ச -அழிவு
குடம் அழிந்து விட்டது என்று நமக்குப் புத்தி ஏற்படுகிறது
இது ப்ரத்வம்ச அபாவத்தைக் காட்டுகிறது
குடம் உத்பத்திக்கு முன்புள்ள அனைத்து காலங்களிலும் ப்ராக் அபாவம் உண்டே
குடம் உத்பத்தி
குடம் அழிவுக்குப் பின்புள்ள அனைத்து காலங்களிலும் ப்ரத்வம்ச அபாவம் உண்டே

3-அத்யந்த அபாவம்
முக்காலத்திலும் இருக்கும் அபாவம்
எல்லை அற்ற அபாவம்
எந்த இடத்தில் ஒரு பொருள் எக்காலத்திலும் இருக்கவே முடியாதோ அங்கு அதன் அத்யந்த அபாவம் இருக்கிறது
காற்றில் நிறம் இல்லை (பூக்களின் மணத்தை தானே கொண்டு வரும் )
வெல்லக்கட்டியில் கசப்பு இல்லை போல்வன

4-அந்யோந்ய அபாவம்
பொருள்களுக்கு இடையே பரஸ்பர வேறுபாடு
இது குடம் துணி இல்லை -அல்ல-
இது மாடு குதிரை இல்லை-அல்ல- போன்றவை
அந்யோந்யம் -ஒன்றுக்கு ஓன்று

இல்லை -என்னும் சொல் எப்போதும் அத்யந்த அபாவத்தைத் தான் குறிக்கும்
என்னிடத்தில் இல்லை
அல்ல -என்னும் சொல் எப்போதும் அந்யோந்ய அபாவத்தைத் தான் குறிக்கும்
பேதம் -மாடு ஆடு அல்ல-

——-

பாடம்–11-கேள்வி பதில்கள் சுருக்கம்

ஸ்ருதி ஸ்ம்ருதி -ஸ்வத பிரமாணம் –
வித்யா ஸ்தானங்கள் -18-பார்த்தோம் –
இதிகாசங்கள் -ஸ்ம்ருதிகள் -ஆகமங்கள் -புராணங்களில் சேரும் -உப லக்ஷணம் முறையில் –
அங்கங்கள் உப அங்கங்கள் கொண்டு வேத அர்த்தங்கள்
மென்மை -கடினம் -இப்படியும் சம்யோகம் காட்டும்
அறிகிறோம்
தரிசனங்கள் -உப அங்கங்கள் ஆகும் பொழுது வேத முரண்பாடு இருந்தால் -கொள்ளக் கூடாதே
நியாய சாஸ்திரம் ஆலோசனை பண்ண உதவும்

உத்தேசம் -லக்ஷணம் -பரிக்ஷை -வியாவ்ருத்தம் -வியவஹாரம் -பெயரால் குறிப்பிடுவது –
அறிந்த பொருள்களை குறிப்பிடுவது உத்தேசம் -லக்ஷணம் சொல்வதற்கு முன்னால் –

பதார்த்தத்வம் -பதஸ்ய அர்த்தம் -சொல்லின் பொருள் –
ஆகாச தாமரை -சொல் இருக்கு -பொருள் இல்லையே -பொதுவான லக்ஷணம் -என்று சொல்ல முடியாதே
ஆகாச தாமரை என்று ஓன்று இல்லை என்று தானே சொல்வோம்
ஆகாசத்தில் தாமரை இல்லை என்றே சொன்ன படி –முயல் கொம்பு -இப்படியே –

அதி வியாப்தி அவ் வியாப்தி -தோஷம் வருமே
நக்ஷத்ரம் பின்பு கண்டு அறிந்து -பெயரால் பின்பு -அவ் வியாப்தி -இன்றும் உள்ளது –
ரூபம் -நிறம் -வடிவம் இரண்டையும் சொல்லும்
நியாய சாஸ்திரம் -வடிவம் தனியாக இல்லை –
அவயவங்கள் சேர்க்கை -வடிவம் -சம்யோகம் -தனியாக குணம் சொல்லிய பின்பு –

பர அபர -சமவாயம் -சொல்லும் பொழுது அதிகம் குறைய என்றும்
குணம் சொல்லும் பொழுது தூரம் அருகில் என்றும் பொருள்களில் வரும்

அபாவம் -அந்யோகி -இடம் -பிரதியோகி –எதன் அபாவம் -எங்கு உள்ளது -இரண்டும் வரும் –
இந்த குடம் -ப்ராக் அபாவம் -த்வம்ச அபாவம் -தனித்தன்மை -பொதுத்தன்மை இல்லை
அத்யந்த அபாவம் -பொதுத்தன்மை —
அந்யோன்ய அபாவம் -பொதுத்தன்மை-

———————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ .வே. வேளுக்குடி ரெங்கநாதன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கணாதர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ ப்ருஹதாரண்ய உபநிஷத்- அத்யாயம்-5–/ அத்யாயம்-6–

March 23, 2021

முகவுரை (சங்கரரின் விசாரம்)
இதில் 15 பகுதிகள் உள்ளது. அவற்றில் 11 பகுதிகள் உபாஸனைகளைப் பற்றி விளக்கப்படுகின்றது.
முதல் பகுதி ஓம்கார உபாஸனை, பிறகு 10 பகுதிகள் ஹிரண்யகர்ப்பனைக் குறித்த உபாஸனைகள்.
ஒரு பகுதி நற்பண்புகள், தவம் இவற்றைப்பற்றி விளக்குகிறது மற்றவைகள் பிரார்த்தனைப்பற்றி பேசுகின்றது.

விசாரம்:
அத பூர்ணம், இத பூர்ணம் என்று சொல்வதனால் பிரம்மமானது இரண்டு விதமான இருக்கின்றது.
ஒன்று காரிய பூரணம் மற்றொன்று காரண பூரணம்.
எனவே த்வைத, அத்வைத ரூபமாக இருக்கின்றது எப்படி கடலில் அலைகளும் இருக்கின்றதோ அது மாதிரி.

கேள்வி: ஒரே பொருள் எப்படி இருவேறு நிலைகளாக இருக்க முடியும். அவஸ்தாத் பேதாத் என்ற காரணமாக,
எப்படி பாம்பு ஒரு நிலையில் நீண்டிருக்கும் வேறொரு நிலையில் சுருண்டு வட்டமாக காட்சியளிக்கின்றதோ
அது போலவா அல்லது திருஷ்டி பேதாத்: எந்த நோக்கிலே பார்க்கிறாயோ அந்த நிலையில் தென்படும் காட்சிப் போலவா?.
உதாரணமாக மரம் ஒன்று அதிலுள்ள கிளைகள் பலவாக இருப்பது போல பிரம்ம மானது இரண்டு ரூபமாகவும் தெரிகின்றது.

பதில்: அவஸ்தாத் பேதாத் அடிப்படையில் பார்த்தால், எந்த அவஸ்தையிலும் விகாரத்துடன் கூடியது என்ற நிலை ஏற்படும்.
எது விகாரத்திற்கு உட்பட்டதோ அது அநித்யம். எது அநித்யமோ அது பிரம்ம மல்ல, அது நமது புருஷார்த்தமல்ல.
த்ருஷ்டி பேதாத் இந்தநிலையில் அவயவத்துடன் கூடியதாகி விடும். ஆனால் பிரம்மம் அவயவங்களற்றது.

ஸ்ருதி விரோதாத் – உபநிஷத் தெளிவாக நிஷ்கலம், நிர்விகாரம், அஜஹ அத்வைதம் என்ற லட்சணங்களை
கூறியிருப்பதற்கு விரோதமாக இருக்கின்றது.
தியானத்தில் விகல்பம் உண்டு. திருஷ்டியில் விகல்பம் உண்டு. அறிவில் விகல்பம் இருக்க முடியாது.
பிரம்ம ஞான விஷயத்தில் விகல்பம் கிடையாது. பிரம்மத்தை எப்படி இருக்கிறதோ அப்படித்தான் புரிந்து கொள்ள வேண்டும்.
த்வைதமானது ஸ்ருதியினால் நிந்திக்கப்பட்டுள்ளது, நிஷேதம் செய்யப்பட்டுள்ளது, ஆனால் அத்வைதம் எங்கும் நிஷேதம் செய்யப்படவில்லை
த்வைதத்தை சுபாவமாக பார்த்துக் கொண்டிருக்கிறார்கள், வேதத்தின் கர்ம காண்டம் த்வைதத்தை உபதேசிக்கவில்லை.
அதை லட்சியமாக கொண்டு சில சாதனங்களை கூறியிருக்கிறது. இந்த இடத்தில் சத்யமா, மித்யாவா என்று பேசவில்லை.
த்வைத த்தை நீக்க முடியாதவர்களுக்கு கர்ம காண்டம் சொல்லப்பட்டுள்ளவற்றை கடைப்பிடிப்பதன் மூலம் ஞானத்திற்கு
தகுதியடைந்து பிறகு ஞானகாண்டம் மூலமாக சென்று அதை அடையலாம்.

——–

பகுதி-1 : ஆகாச, ஓம்கார தியானம்
ஸ்லோகம்-1
கம் – ஆகாசம்; சிதாகாசம் (என்றும் இருப்பது), பூதாகாசம் (பஞசபூதங்களில் உள்ள ஒரு பூதம்)
வாயுரம்: எதில் வாயு சஞ்சரிக்கின்றதோ அது சிதாகாசத்தை குறிக்கின்றது.
அது நானாக இருக்கின்றேன் என்று நிதித்யாஸனம் செய்ய வேண்டும்.
இது முடியாவிட்டால் விரிந்து பரந்து இருக்கும் ஆகாசத்தையே தியானித்து சகுண உபாஸனை செய்யலாம்.

வேதஹ அயம் பிராமனஹ விதுஹு: இந்த ஒம்காரமே வேதமாக இருக்கின்றது என்று ரிஷிகள் அறிந்திருக்கின்றார்கள்.
வேத ஏனேன யத் வேதித்வயம்: இதன் துணைக் கொண்டும் எதை அறிந்து கொள்ள வேண்டுமோ அதை அறிந்துக் கொள்ளலாம்.
ஒம் என்ற சப்தத்தை நிர்குண ஆகாசத்தை அல்லது வாயு சஞ்சரிக்கின்ற ஆகாசத்தை தியானிக்கலாம்.

———
.
பகுதி-2 : மூன்று பண்புகள்
இதில் மூன்று பண்புகள் சொல்லப்பட்டிருக்கின்றது.
தமஹ; தானம்; தயா. பிரஜாபதியின் மகன்கள் தந்தையிடமே குருகுலவாசம் செய்தார்கள்.
அவர்கள் தேவர், மனிதட், அசுரர் என்ற மூன்று குணங்களை கொண்டவர்களாக எடுத்துக் கொள்ளலாம்.
குருகுல வாசம் முடிந்ததும் எங்களுக்கு ஏதாவது உபதேசம் செய்யுங்கள் என்று வேண்டினர்.
அவர்கள் வேண்டுகோளை ஏற்றுக் கொண்டு ஒவ்வொருத்தருக்கும் தனித்தனியாக உபதேசம் செய்ய ஆரம்பித்தார்.
முதலில் தேவ குணமுடையவனுக்கு ” द “ என்று உபதேசித்துவிட்டு புரிந்ததா என்று கேட்க, அவர்களும் எங்களுக்கு புரிந்தது என்று கூறினர்.
என்ன புரிந்து கொண்டீர்கள் என்று கேட்ட போது தமத்தை பின்பற்ற வேண்டும் என்று உபதேசித்தீர்கள் என்று பதில் கூறினார்கள்.
குருவும் ஆமோதித்தார், இவர்கள் சத்துவ குணம் பிரதானமுடையவர்கள் ஆதலால் இந்த உபதேசம் இவர்களுக்கு பொருத்தமானது.

அடுத்ததாக மனித குணமுடையவர்களுக்கும் அதே அக்‌ஷரத்தை (” द “) உபதேசித்துவிட்டு, புரிந்ததா என்று வினவ,
அவர்களும் புரிந்தது என்று பதிலளித்து, எங்களை தானம் செய்யுங்கள் என்று அறிவுறுத்தினீர்கள் என்று கூற,
நீங்கள் சரியாக புரிந்து கொண்டீர்கள் என்று குருவும் ஆமோதித்தார்.

அடுத்ததாக அசுர குணமுடையவர்களுக்கும் அதே அக்‌ஷரத்தை (” द “) உபதேசித்துவிட்டு, புரிந்ததா என்று வினவ,
அவர்களும் புரிந்தது என்று பதிலளித்து, எங்களை தயாவுடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தினீர்கள் என்று கூற,
நீங்கள் சரியாக புரிந்து கொண்டீர்கள் என்று குருவும் ஆமோதித்தார்.

இந்த உபதேசத்தைத்தான் இடியானது (தெய்வீக வாக்கு) द-द-द என்று சத்தத்துடன் இடித்துக் காட்டுகின்றது
இதிலிருந்து நாம் தமத்துடன், தானத்தையும், தயவையும் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.
தமம் என்பது இந்திரியகட்டுபாட்டையும், தானம் என்பது பகிர்ந்துண்டு வாழும் பண்பையும்,
தயை என்பது கருணை காட்டும் குணத்துடனும் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகின்றது.
இந்த மூன்றையும் மனிதன்தான் உறுதியாக கடைப்பிடிக்க வேண்டும்,
ஏனென்றால் மனிதன்தான் இந்த மூன்று குணங்களும் மாறிமாறி இருந்து கொண்டிருக்கும்.
.
பகுதி-3 : ஹிரண்யகர்ப்ப உபாஸனை-1
ஹ்ருதயத்தை ஆலம்பனமாக வைத்துகொண்டு ஹிரண்யகர்ப்பனை தியானம் செய்ய வேண்டும்.
நமது மனமானது மூன்று விதமான செயல்படுகிறது. இந்திரியங்கள் மூலமாக வெளி விஷயங்களை கிரகிக்கிறது,
அதன் மூலம் ஜீவனுக்கு அனுபவத்தை தருகிறது, வேறு உலகத்திற்கு செல்வதற்கும் உதவுகிறது.
அப்படிப்பட்ட ஹிரண்யகர்ப்பனை தியானம் செய்ய வேண்டும்.

பகுதி-4 : ஹிரண்யகர்ப்ப உபாஸனை-2
ஹிரண்யகர்ப்பனுக்கு மூன்று குணங்கள் கொடுத்து உபாஸனம் செய்தல். அவைகள்
1. சத்தியம் – மூர்த்த-அமூர்த்தமாக தியானித்தல்
2. மஹத் – மிகப்பெரியது என்று தியானித்தல்
3. யக்‌ஷம் – பூஜிக்கத்தகுந்தவன் என்று தியானித்தல்.

பகுதி-5 : ஹிரண்யகர்ப்ப உபாஸனை-3
ஹிரண்யகர்ப்பனை சூரியனிலும், நமது வலது கண்ணிலும் வைத்து உபாஸனை செய்ய வேண்டும்.

பகுதி-6 : ஹிரண்யகர்ப்ப உபாஸனை-4
ஹிரண்யகர்ப்பனுக்கு ஐந்து குணங்கள் கொடுத்து உபாஸனம் செய்தல். அவைகள்
1. மனோமய
2. பாஸதீய – பிரகாச ரூபமாக
3. ஸம்வஸ்ய ஈசானஹ
4. ஸர்வஸ்ய அதிபதி
5. ஸர்வஸ்ய பிராதாஸ்ய – எல்லாவற்றையும் ஆள்பவர்.

பகுதி-7 : ஹிரண்யகர்ப்ப உபாஸனை-5
ஹிரண்யகர்ப்பனை மின்னலாக தியானித்தல். இப்படி தியானம் செய்வதால் நம்முடைய அறிவு பிரகாசமடையும்.

பகுதி-8 : ஹிரண்யகர்ப்ப உபாஸனை-6
ஹிரண்யகர்ப்பனை வேதரூபமாகவே தியானித்தல்

பகுதி-9 : ஹிரண்யகர்ப்ப உபாஸனை-7
ஹிரண்யகர்ப்பனை நம் வயிற்றிலிருக்கின்ற வைஸ்வாநரன் என்று அழைக்கப்படுகின்ற அக்னியாக தியானித்தல்.
இதனால் உடல் வலிமை, உணவு ஜீரணிக்கும் சக்தி பெருகும்.

பகுதி-10 : உபாஸகர்களின் கதி
இப்படி ஹிரண்யகர்ப்பனை உபாஸனை செய்பவர்களின் கதியானது விவரிக்கப்படுகின்றது.
இவர்கள் பிரம்மலோகத்திற்கு செல்யவார்கள். சில தேவதைகளை கடந்து செல்ல வேண்டும்,
அந்தந்த தேவதைகள் நமக்கு வழிகாட்டுவார்கள். அவர்கள் துணைக் கொண்டு பிரம்மலோகம் அடையலாம்.

பகுதி-11 : தவமாக பாவிக்க வேண்டியவை
நமக்கு வருகின்ற நோய்களை தவமாக பாவிப்பதே மிகப்பெரிய தவமாகும். இது வினைப்பயனை அனுபவிப்பதை உணர்த்துகிறது.
இந்த நோய் வேண்டாம் என்று நினைப்பது இறைவனின் நியதியை அவமதிப்பது போன்றதாகும்.
எனவே அந்த நோயை இறைவனின் பிரசாதமாக நினைத்து தவமாக அனுபவிக்க வேண்டும்.
தவம் என்பது கஷ்டத்தை எடுத்துக் கொள்வது என்று பொருள் கொண்டால், இது இறைவனால் எனக்கு கொடுக்கப்பட்டிருக்கும்
ஒரு வாய்ப்பு என்று எடுத்துக் கொள்ள வேண்டும்.
நாம் இறந்த பின் நமது உடலை இடுகாட்டிற்கு எடுத்துச் செல்வது போல தியானிக்க வேண்டும், இது மிக மேலான தவமாகும்.
இறந்த பிறகு நம்முடலை, தகனம் செய்வது போலவும் நாம் தியானிக்க வேண்டும்.
அது சாம்பலாகும் வரை தியானத்தை தொடர வேண்டும். இவ்வாறு தியானிப்பவர்கள் மேலான உலகத்தை அடைகிறார்கள்.
இதனால் இந்த தேகத்தை இன்பத்தைக் கொடுக்கும் விஷயங்களிலிருந்து விடுவிக்க வேண்டும்.

பகுதி-12 : ஹிரண்யகர்ப்ப உபாஸனை-8
ஹிரண்யகர்ப்பனை அன்னரூபமாகவே தியானித்தல், பிராணரூபமாகவும் தியானித்தல்.
இப்படி தியானம் செய்வதால் நல்ல உணவு கிடைக்கும், பிராணன் நன்கு வேலை செய்யும்.

பகுதி-13 : ஹிரண்யகர்ப்ப உபாஸனை-9
ஹிரண்யகர்ப்பனை பிராணரூபமாக நான்கு விதமாக தியானித்தல். அவைகள்
உக்தம் – நம்மை தாங்கி பிடித்துக் கொண்டிருப்பவராக
யஜு – இந்த பிராணன் இருப்பதால்தான் மற்றவர்களுடன் விவகாரம் செய்ய முடிகிறது
சாம – சமத்துவ குணத்துடன் இருக்கிறது
க்‌ஷத்ரம் – நம்மை காப்பாற்றி கொண்டிருக்கிறது

பகுதி-14 : ஹிரண்யகர்ப்ப உபாஸனை-10
ஹிரண்யகர்ப்பனை காயத்திரி மந்திரத்திலுள்ள பதங்களை வைத்துக்கொண்டு தியானித்தல்.

பகுதி-15 : பிரார்த்தனை
ஈஸாவாஸ்ய உபநிஷத்திலுள்ள கடைசி நான்கு மந்திரங்களின் விளக்கத்தை படித்து தெரிந்து கொள்ள வேண்டும்.
சத்யத்தின் முகமானது தங்கமயமான பாத்திரத்தில் மூடப்பட்டுள்ளது.
இந்த உலகம் கொடுக்கும் இன்பங்களில் மூழ்கி இறைவனை மறந்து விடுகிறார்கள்

5வது அத்யாயம் முடிவுற்றது

—————

அத்யாயம்-6
விளக்கவுரை
பகுதி-1 இதில் பதினாறு மந்திரங்கள் உள்ளது.
இதில் ஹிரண்யகர்ப்பனை பிராண ரூபமாகவே தியானிக்க வேண்டும் என்று மீண்டும் கூறப்பட்டுள்ளது.
இதனுடைய விளக்கம் சாந்தோக்ய உபநிஷத் – அத்யாயம்-5, பகுதி-1 உள்ளது.
பகுதி-2 இதிலும் பதினாறு மந்திரங்கள் உள்ளது.
இதனுடைய விளக்கங்கள் சாந்தோக்ய உபநிஷத் – அத்யாயம்-5, பகுதி-3 உள்ளது.
பகுதி-3 ஹோமங்கள், யக்ஞங்கள் இவைகளைப் பற்றி விரிவாக கூறப்பட்டுள்ளது.
பகுதி-4 கிரகஸ்த ஆசிரமத்திலுள்ள ஸம்ஸ்காரங்கள் விளக்கப்பட்டுள்ளது.
பிறந்ததிலிருந்து இறக்கும் வரை உள்ள ஸம்ஸ்காரங்கள் விளக்கப்பட்டுள்ளது.

————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ ப்ருஹதாரண்ய உபநிஷத்- அத்தியாயம்-4-பகுதி -2-ஸ்வயம் ஜோதி பிரமாணம்-பகுதி -2 /சப்தான்ன பிராமணம்/உக்தம் பிரமாணம்/சாரீரக பிரமாணம்/வம்ச பிரமாணம்–

March 23, 2021

ஸ்லோகம்-21
ஆழ்நிலை உறக்கம் என்பது ஒரு காலவரையறைக்குட்பட்டது. மோக்‌ஷம் என்பது ஞான நிஷ்டைக்கு பிறகு
காலவரையறைக்குட்பட்டு அனுபவிக்கும் விஷயம் இல்லை. இந்நிலையில் அக்ஞானம் உண்டு.
மோக்‌ஷ ஜாக்ரத் நிலையில் அனுபவிப்பது, அக்ஞான நீங்கி ஞானத்துடன் இருக்கும் நிலை.
உறக்கம் என்பது ஞானிக்கும் அக்ஞானிக்கும் ஒரே மாதிரிதான் இருக்கும். ஆழ்நிலை உறக்கத்தில் சம்சார விதை இருக்கும்.
மோக்‌ஷத்தில் சம்சாரமும் இல்லை அதன் விதையும் இல்லை.

இந்த மந்திரம் மோக்‌ஷ லக்ஷணத்திற்கு பொருந்தும். ஆழ்நிலை உறக்கத்தை மோக்ஷத்திற்கு உதாரணமாக கொடுக்கலாம்
ஆனால் அதுவே மோக்ஷமாகாது. ஒன்பது லக்ஷணைகள் இந்த மந்திரத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.
மோக்ஷத்தை அடைந்த பிறகு எப்படி இருப்போம் என்பதையும் விளக்குகிறது.

तद्वा अस्य – இந்த ஞான நிலையில் ஞானிக்கும், சுஷுப்தி நிலையில் பிராக்ஞனுக்கும் கீழே குறிப்பிட்ட லக்ஷணைகளுடன் இருப்பான்.

अतिच्छन्दः – காமத்தை கடந்தவன்; ஆசையிலிருந்து விடுபட்டவன். ஞானிக்கும் ஆசை வரும் ஆனால் அது ஒரு விளைவையும் ஏற்படுத்தாது.
அதனால் இவன் பாதிக்கப்படுவதில்லை, துயரமோ, மகிழ்ச்சியோ ஏற்படுத்தாது.
இதை எப்படி நிதித்யாஸனம் செய்வது என்றால், நான் இப்போது இந்த லக்ஷணத்தில் இருக்கிறேன் என்று தியானிக்க வேண்டும்.
தியானத்தில் ஒவ்வொரு லக்ஷணமாக நான் இருக்கிறேன் என்று தியானிக்க வேண்டும்,
अपहतपाप्मा – பாவத்திலிருந்து விடுதலையடைந்தவன். பாவத்தின் விளைவு துயரம். ஆழ்நிலை உறக்கத்தில் ஒருவனுக்கு துயரம் இல்லை.
எனவே பாவ-புண்ணியம் என்ற கர்ம பலனை அனுபவிக்காமல் இருக்கிறான்.
முக்தனும் என்றென்றும் மனநிறைவுடன் துயரம் எதுவும் இல்லாமல் இருக்கிறான். பாவ-புண்ணியங்கள் மொத்தமாக இவனை விட்டு சென்று விட்டது

தியானமுறை: நான் எல்லா பாவங்களிலிருந்து விடுபட்டவன் என்று தியானிக்க வேண்டும்
अभयँ रूपम् : நான் பயமற்ற ஸ்வரூபமாக இருக்கிறேன். நமக்கு வேறாக உள்ள ஒன்றூ என்னை தாக்கி விடும், அழித்து விடும்
என்ற பயம் எல்லோருக்கும் இருக்கும். ஞானி அனைத்துமே நானாக இருக்கிறேன் என்ற அறிவால் பயம் முற்றிலுமாக நீங்கியவனாக இருக்கிறான்,
அந்த உணர்வேயில்லாதவனாக இருக்கிறான்.

விசேஷ ஞான அபாவாத் – தனிப்பட்ட ஞானம் இல்லை, விதவிதமான ஞானங்களும் இல்லை.
விழிப்பு நிலையில் ஒவ்வொரு க்ஷணம் விதவிதமான ஞானத்தை அடைந்து கொண்டிருக்கிறோம், கனவு நிலையிலும் இதே மாதிரிதான்.
ஆழ்நிலை உறக்கத்தில் எல்லா நேரமும் ஒரே மாதிரியான அனுபவம்.
ஒரே ஞானமான அவித்யாவின் ஒரே மாதிரியான விருத்தியைத்தான் அனுபவிக்கிறோம். விசேஷ ஞானம் இந்த நிலையில் இல்லை.
ஜாக்ரத் நிலையில் ஒருவன் இன்பத்தை அனுபவிக்கும்போது, அந்தக் காலத்தில் அதைத்தவிர வேறெதையும் நினைப்பதில்லை.
உள்ளேயும், வெளியேயும் உள்ள எல்லாவற்றையும் மறந்த நிலையில் அனுபவிப்பான்.

மோட்சம்: ஞானி எல்லா வேற்றுமைகளுக்கும் ஒரு பரமாத்வை ஆதாரமாக பார்க்கிறான்.
எல்லா பானைகளை பார்க்கும் போது ஆதாரமாக உள்ள களிமண்ணை மட்டும் பார்ப்பது போல
எல்லா வேற்றுமைகளிலும் நாம ரூபங்களினால் பாதிக்கப்படாமல் அவைகளை நீக்கி விட்டு
அவைகளுக்கு ஆதரமாக உள்ள பிரம்மத்தின் மீது இருக்கிறது.
சமதிருஷ்டி, சர்வாத்மபாவம். ஞானிக்கு சுபாவமாக இருக்கிறது. விசேஷங்கள் எல்லாம் நிர்விஷயம்.

சைதன்ய ஸ்வரூபம்: ஞானி சைதன்ய ஸ்வரூபமாக இருக்கின்றான் ஜீவன் ஆழ்நிலை உறக்கத்திலும் சேதனமாக இருக்கின்றான்,
ஞானத்துடன் இருக்கின்றான் சைதன்யம் அவித்யை பிரகாசித்துக் கொண்டிருக்கின்றது. சாமான்ய ஞானத்துடன் இருக்கின்றான்.
ஞானிக்கு அனைத்துமே பிரம்ம ஸ்வரூபம் என்றா சாமான்ய ஞானமாக இருக்கின்றது.
சைதன்யம் அனைத்துமே மித்யா என்று விளக்கிக் கொண்டிருக்கின்றது.

आप्त कामँ – அனைத்து ஆசைகளும் அடையப்பட்டு விட்டது. ஆழ்நிலை உறக்கத்தில் உள்ளவர்களுக்கும் அனைத்து ஆசைகளும்
அடையப்பட்டது போன்ற நிலை. ஞானிகளுக்கு எல்லா விஷயங்களும் நீக்கப்பட்டு விட்ட நிலையில் இருப்பான்.
आत्म कामँ – எல்லா பொருட்களும் ஆத்மாவாகி விட்டது, நானேயாகி விட்டது. எப்பொழுது அடைய நினைக்கிற பொருட்களெல்லாம்
வேறாக இருக்கிறதோ அது வரையில் ஆசை இருந்து கொண்டுதான் இருக்கும்.
ஆனால் அவைகள் எல்லாம் நானேதான் என்று நினைக்கும் போது ஆசைகளே வராது.
अकामँ रूपँ – காமத்துக்கு ஆதாரமாக இல்லாதது, ஆசைக்கு இருப்பிடமாக இல்லாதது. ஆசை எப்போதும் மனதைத்தான் சார்ந்திருக்கிறது.
शोकान्तरँ – சோகம் முற்றிலும் இல்லாதது, மனதில் காரணமில்லாமல் ஏற்படும் துன்பம், துயரம், வெற்றிடம் ஆகியவைகளால் பாதிக்கப்படாமல் இருத்தல்

ஸ்லோகம்-22
अत्रः पिता अपिता भवति माता अमाता भवति– ஆழ்நிலை உறக்கத்தில் / முக்தி நிலையில் தந்தையாக இருந்தும் அப்படி இருப்பதில்லை,
தாயாக இருந்தும் அப்படி இருப்பதில்லை. எந்த உறவுமற்று இருத்தல், நான் தனியானவன் என்ற மனப்பான்மை ஒழிந்து
எல்லாமே நான் என்ற பாவம். வியக்தி அபிமானம், ஜீவ-ஜீவ சம்பந்த நிமித்தமாக சம்சாரத்தை அனுபவிக்கிறோம்.
ஞானிக்கு தன் தாய், தந்தையாக இருந்து செய்யும் கடமைகளை செய்தாலும் செய்யாவிட்டாலும் அதனால் வரும் பாவ-புண்ணியங்கள் வந்து சேராது.
ஆழ்நிலை உறக்கத்தில் இருப்பவனுக்கு எந்த உறவுகளும் அவனுக்கில்லை.

लोकाः अलोकाः – கர்மபல பூதம் – கர்மத்தின் பலனாக் கிடைத்த லோகத்திலுள்ள வாழ்க்கை சூழ்நிலையில் வாழ்கிறார்கள்.
பெரிய செல்வந்தனும், ஏழையும் தூங்கியவுடன் ஒரே அனுபவம்தான் இருக்கும். ஞானி எல்லா சூழ்நிலைகளிலும் ஒரே மாதிரியாகத்தான் இருப்பான்.
எந்த சூழ்நிலையும் அவனுக்கு எந்தப் பாதிப்பும் கொடுக்க முடியாது. நாம் உருவாக்கியிருக்கும் பிராரப்த கர்மத்தினால்
அடைந்த சூழ்நிலைகளால் பாதிக்கப்படுகிறோம்.
देवाः अदेवाः – தேவர்கள் நமக்கு அனுக்கிரகம் செய்பவர்கள் அவர்களும் நமக்கு உறக்கத்தில் அனுகிரகம் செய்வதில்லை.
ஞானிக்கு எந்த தேவதைகளுடைய அனுக்கிரகமும் தேவையில்லை. எந்தவித பிரார்த்தனையும் செய்வதில்லை,
எந்த கர்மமும் செய்வதில்லை, தேவதைகளுக்கு ஆஹுதிகளும் கொடுப்பதில்லை. தேவதைகளின் உதவியையும் எதிர்ப்பார்க்க மாட்டான்.
वेदाः अवेदाः – உறக்கத்தில் வேதமானது அப்பிரமாதாவாக மாறிவிடுகிறான். ஞானி எப்பொழுதும் அப்பிரமாதாவாக இருக்கிறான்.
கர்ம காண்டமும், ஞான காண்டமும் வெறும் ஆத்மாவாகத்தான் இருக்கிறான்.

ஆழ்நிலை உறக்கமானது மோட்ச நிலைக்கு ஒரு உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம்.
ஞானிக்கும், ஆழ்நிலை உறக்கத்தில் இருப்பவர்களும் தந்தை என்ற உறவின் மீதுள்ள அபிமானம் துறக்கப்படுகிறது.
பிதா என்ற அபிமானம் இல்லாததால், குற்ற உணர்வும், கர்த்ருத்வம் கிடையாது. பித்ரு சம்பந்த சம்சாரங்கள் கிடையாது.
ஒவ்வொரு உறவுமுறைக்கு சில கடமைகள் அதனால் அடையும் சுக-துக்கங்கள் இருக்கிறது.
இவைகளின் மீதுள்ள அபிமானமற்றவன் ஞானி, ஆழ்நிலை உறக்கத்தில் இருப்பவன் அறியாமையால் அவ்யக்தத்தில் இருப்பான்.

லோகஹ: கர்மபலன், சூழ்நிலையில் இருத்தல்
தேவாஹ: சக்தியை கொடுக்கும் தேவர்களின் சக்தி இழக்கப்படுகிறது
வேதா: வேதங்களின் சப்த பிரமானத்திற்கு பிரமாதாவாக இல்லாத நிலை

अत्रः மேலும் ; स्तेनः अस्तेनः भवति – ; திருடன் திருடனாக இருப்பதில்லை
भ्रूणह अभ्रूणह भवति: கொலைகாரன் கொலையாளியாக இருப்பதில்லை
चाण्डाल अचाण्डालः भवति: சண்டாளன் சண்டாளனாக இருப்பதில்லை
पौल्कस अपौल्कसः भवति பண்பாடற்றவன், கொடூரமானவன் அது மாதிரி இருப்பதில்லை
श्रुमणः अश्रुमणः भवति சந்நியாசி சந்நியாசியாக இருப்பதில்லை
तापसः अतापसः भवति தவம் செய்து கொண்டிருப்பவன் அதை செய்யாமல் இருத்தல்

இவைகளெல்லாம் செய்யும் கர்மத்தை பொறுத்து அமைந்துள்ள குணங்கள். கர்ம நிமித்தமான அபிமானங்கள் எல்லாம் சென்று விடுகின்றன.
ஞானி தவம் செய்யும் போது நான் தபஸ்வி என்ற அபிமானமற்று இருப்பான். சந்நியாசியாக கர்மம் செய்து கொண்டிருக்கும் போது
சந்நியாசி என்ற அபிமானமற்றிருப்பான். ஞானி என்பவந்தான் ஞானி என்று தெரியாத நிலையில் இருப்பான்.
(குழந்தைகளின் செய்கைகள் மகிழ்ச்சி தருவதற்கு காரணம், தான் செய்வது மகிழ்ச்சியை தருகிறது என்று அபிமானம் கொள்ளாமல் இருப்பதனால்தான்.

अनन्वागतँ – ஒட்டிக்கொள்ளாது ; अन्वागतँ – ஒட்டிக்கொள்ளுதல்
अनन्वागतँ पुण्येन; अनन्वागतँ पापेन: பாவ புண்ணியத்தினால் தீண்டப்படாதவனாகிறான்.
புண்ணியத்திலிருந்து விடுதலையடைதல் – புருஷார்த்தம்
புண்ணியம் சித்தஸுத்தி; சுகமும், மனநிறைவும் அடைந்த ஞானிக்கு புண்ணியம் தேவையில்ல்லை, அதன் பலனையும் அனுபவிப்பதில்லை.
அவன் ஞானத்தாலே என்றும் மனநிறைவுடனும், சுகமாகவும் இருக்கின்றான். இவனுக்கு சஞ்சித கர்மத்திலுள்ள பாவங்களும்,
ஆகாம கர்மத்தில் உள்ள பாவங்களும் அழிந்து விடுகின்றன. பிராரப்தத்தில் அனுபவிக்கும் பாவங்களாலும் தீண்டப்படாதவனாக இருக்கிறான்.
பிராரப்தம் பலனை கொடுக்கும் சக்தியை இழந்துவிடுகிறது. இவன் உடலுக்கு வரும் இன்ப-துன்பங்களால் பாதிக்கப்படாதவனாக இருப்பான்.
ஆழ்நிலை உறக்கத்திலிருப்பவனுக்கும் இந்த இரண்டும் தொடுவதில்லை

तीर्णो तदा सर्वान शोकान ह्रुदयस्य भवति – இந்த நிலையில், ஆசையின் விளைவாக வரும் எல்லா துன்பங்களிலிருந்தும் கடந்தவனாக இருக்கிறான்.

நிதித்யாஸனம் செய்ய வேண்டிய கருத்துக்கள்:
· நமக்கு எந்த உறவிலிருந்து துன்பம் வருகின்றதோ அதிலிருந்து அபிமானத்தை நீக்கி விட வேண்டும்
· நம்மிடையே இருக்கும் தீய குணங்களையும் உதாசீனப்படுத்த வேண்டும்
· பாவ-புண்ணியங்களால் பாதிக்கப்படாதவனாக இருக்க வேண்டும்
· இதயத்திலுள்ள ஆசைகளையும், இன்ப-துன்பங்களையும் கடந்தவன் என்ற மனப்பாங்கோடு இருக்க வேண்டும்.

விசாரம்:
கேள்வி ஆசைகளும், துயரங்களும் ஆத்மாவை சார்ந்திருக்கின்றன?
திரவ்ய ஆஸ்ரயஹ குணஹ – எல்லா உணர்வுகளும் குணத்தை சார்ந்து இருக்கிறது.
மனமானது அவைகளை வெளிப்படுத்துவதற்கு கரணமாக, உதவியாக இருக்கிறது.
ஆஸ்ரயம் – ஆத்மா; கரணம் – மனம்,சூட்சுமசரீரம்.
இதயத்தை சார்ந்திருக்கும் ஆசைகளெல்லம் போய் விடுகிறது? வலது கண்ணால் பார்த்தேன் என்று சொன்னாலும்
இடது கண்ணும் சேர்ந்துதான் பார்க்கிறது என்று அறிந்து கொள்ளலாம்.
பதில் இங்கு ஹ்ருதஸ்ய சொல்வதற்கு காரணம்; ஆத்மாவை பற்றி தெரியாதவர்களுக்காக இங்கு இந்த ஸ்ருதஸ்ய என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகிறது
ஆஸ்ரயமும், கரணமும் – அந்தக்கரணம் (மனம், சித்தம், புத்தி)
சித்தம்: எண்ணங்களின் நினைவகம். கர்மபலன்கள் பதிவாகி இருக்கும் இடம்
மனம்: சித்தத்திலிருந்து எண்ணத்தையோ, கர்மபலனையோ எடுத்துக் கொண்டு ஸ்தூல உடம்பை அனுபவிக்க வைக்கிறது.
ஆத்ம த்ருக் ஸ்வரூபம்; த்ருஷ்ய ஸ்வரூபம் அல்ல.
எல்லா சுக-துக்கங்களும், ஸம்ஸ்காரங்களும், காம-க்ரோதாதிகள் சூட்சும சரீரத்தை சாரிந்திருக்கின்றன.
எனவே சூட்சும சரீரம் உறங்கும்போது சம்சாரம் இல்லாத நிலை, அதுவும் உறங்குகின்றது.
இது விழிக்கும்போது அக்ஞானி சம்சாரத்தை அனுபவிக்கின்றான். ஞானி விழிப்பு நிலையிலே சம்சாரத்தை நீக்குகிறான்.
இது அடைந்த ஞானத்தின் பலனாக விளைகின்றது.

ஸ்லோகம்-23-30
மந்திரம் 23லிருந்து 30வரை ஒரே மாதிரியாகத்தான் இருப்பதால் ஒரு மந்திரம்-23 மட்டும் விளக்கப்படுகிறது.
மற்றதெல்லாம் இதை வைத்து புரிந்து கொள்ள வேண்டும்.

சாராம்சம்: ஏற்கனவே அறிந்த கருத்துக்கள் வேறுவிதமாக உபதேசிக்கப்படுகிறது.
சுஷுப்தி அவஸ்தா விசாரம்: இந்த நிலையில் உபதேசிக்கப்படும் கருத்துக்கள்
· ஆத்மா சைதன்ய ஸ்வரூபம்: இந்த நிலையில் நாம் ஜடமாக இருக்கின்றன.
· ஆத்மா நித்ய ஸ்வரூபம்: ஆத்மா வந்து போகின்ற மாதிரியாக எண்ணம் தோன்றலாம்
· நிர்விகார ஸ்வரூபம்: நித்யமான பொருள் மாற்றமடையாததாகத்தான் இருக்கும்
· ஏகம்: இது ஒன்றுதான்
· அத்வைதம்: இரண்டற்றது. இது ஒன்றுதான், தனக்கு நிகராக வேறொன்றில்லாமலும் இருக்கின்றது
· பாவ-அபாவ சாக்ஷி – இருக்கும் பொருளையும், இல்லாமையையும் காட்டுகிறது. கண் எப்படி வெளிச்சத்தையும் இருட்டையும் காண்பிப்பது போல

ஆத்மா சைதன்ய ஸ்வரூபம்
यद्वै – நினப்பது தவறு ; तत्रः – அங்கு (சுஷுப்தி அவஸ்தையில்) ;
न पश्यति – ஆத்மா எதையும் பார்ப்பதில்லை, உணர்வற்று ஜடமாக இருக்கிறது என்று
पश्यन्वे – அங்கு பார்த்துக் கொண்டுதான், அறிவு ஸ்வரூபமாக இருந்து கொண்டு, விழித்து கொண்டு;
ब पश्यति – பார்க்காமலும் இருக்கிரது.
சுஷுப்தியில் அது பார்த்துக் கொண்டுமிருக்கிறது, பார்க்காமலும் இருக்கிறது.
ते पश्यन – பார்த்துக் கொண்டிருப்பது எப்படி? (உறக்கத்தில்) அதனுடைய ஸ்வரூபத்தின் திருஷ்டிப்படி

द्रुष्टिः ஸ்வரூப சைதன்யத்திற்கு
द्रष्टः பார்ப்பவனுடைய, அனுபவிப்பனுடைய
नहि विपरिलोपः – தன்மை மாறுதலடைவதில்லை. அறிபவனுடைய அறிவுக்கும் எந்த மாற்றமும் இல்லை, ஜடமாவதில்லை, அழிந்து விடுவதுமில்லை.

ஆகவே ஆத்மா பார்த்துக் கொண்டிருக்கிறது என்று புரிந்து கொள்ள வேண்டும். காரணம்
अविनाशित्वात् – தனுடைய ஸ்வரூபமே அழியாத தாக இருப்பதால் அது நாசத்தை அடையாத ஸ்வரூபமாக இருக்கிறது.

கேள்வி எப்படி பார்க்காமலும் இருக்கிறது?
பதில் சாமான்ய சைதன்யம் இருக்கிறது; விசேஷ சைதன்யமாக இல்லை. அது விதவிதமான் பொருட்களை பார்க்காமல் இருக்கிறது.
விழிப்பு நிலையில் கண் மூடிக் கொண்டால், ஒன்றுமே தெரியவில்லை என்பது விசேஷமானவற்றை பார்க்கவில்லை, சாமான்ய இருப்பத்தான் பார்க்கிறோம்.

விசேஷ தரிசனம் பெற மூன்று விஷயங்கள் தேவை. அவைகள்,
1. த்வீதயம்: பிரமாதா என்ற ஒருவன், சிதாபாஸன் இரண்டாவது சைதன்யம் ஒடுங்கிய நிலையில் இருக்கிறது
2. அனயது: கண், காது போன்ற இந்திரியங்களும் கிடையாது. இது பிரமானம்
3. விபக்தம்: பிரமேயம். அறியப்படுகின்ற பொருட்களும் கிடையாது
இவைகள் இருந்தால்தான் அவன் பார்க்க முடியும், இல்லாமல் எப்படி பார்க்க முடியும்

இதேப் போன்று கேட்டல் (24), தொட்டுணர்தல் (25), நுகர்தல் (26), பேசுதல் (27), அறிதல்(28), சுவைத்தல்(29),சிந்தித்தல்(30),
ஆகிய செயல்களை மேலே கூறிய கருத்துக்களோடு சேர்த்து பார்த்து புரிந்து கொள்ள வேண்டும்.

ஸ்லோகம்-31
இதில் ஜாக்ரத-ஸ்வப்ன அவஸ்தை விசாரமாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. சம்சாரத்தை விளக்க உதாரணமும்,
உதாரிக்கப்படுவதும் ஜாக்ரத் அவஸ்தை எடுத்துக் கொள்ளப்படுகிறது. த்வைதத்தினுடைய மித்யாத்வம் நிரூபிக்கப்படுகிறது.
சுஷுப்தியில் த்வதம் வெளிப்படாமல் இருக்கிறது ஆகவே அது வெளிப்படும் ஜாக்ரத், கனவு நிலயை எடுத்துக் கொள்ளப்படுகிறது.
एव என்ற சொல் கொடுக்கும் ”போல” என்ற அர்த்தம் மித்யாவை குறிக்கிறது. “போல” என்ற அனுபவத்தில் இருப்பது ஆனால் அறிவுக்கு இல்லாதது

கேள்வி ஆத்மா என்ற சைதன்ய ஸ்வரூபம் விசேஷமானதா அல்லது சாமான்யமானதா?
விசேஷமானதென்றால் சுஷுப்தி அவஸ்தையே வராது. சாமான்யமென்றால் ஜாக்ரத், கனவு நிலையில் விளக்க முடியாது.
எனவே ஆத்மா விசேஷ, சவிசேஷ சைதன்யமாக இருக்கலாமல்லவா? ஆத்மா நிர்விசேஷமாக இருப்பதால் ஜாக்ரட், ஸ்வப்ன அவஸ்தை எப்படி தோன்றுகிறது?
பதில் இரண்டு ஸ்வரூபம் ஒரு பொருளுக்கு இருக்கலாம் அவையிரண்டும் ஒத்துப்போனால்.
இங்கு உன்னால் இரண்டு விருத்தமான தன்மையை ஸ்வரூபமாக கொண்டிருப்பதாக சொல்லப்படுகிறது இது நடக்காது, கற்பிக்க முடியாது.
கேள்வி ஆனால் அனுபவத்தில் அப்படி இருப்பதாக தெரிகிறது?
பதில் இரண்டு விருத்தமான தர்மங்கள் ஒரெ பொருளில் காணலாம். அவைகள் ஒன்று சத்யமாகவும் மற்றொன்று மித்யாகவும் இருக்குமேயானால்.
இங்கே த்வைதம் இருக்கின்ற இடத்தில்தான் மித்யா என்ற குறிக்கும் சொல் एव (போல) என்று பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
சாமான்ய சைதன்யத்தை சத்யமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

एत्र – ஜாக்ரத், ஸ்வப்ன அவஸ்தையில்
अन्यत इव स्यात् – ஆத்மாவுக்கு வேறாக ஒன்று (பிரமாத, பிரமானம், பிரமேயம் (அறியப்படும் பொருள்)
இப்படி ஒரு கற்பணையாக தோன்றுகிறதோ, பொய்யான விஷயங்கள் தோன்றுகிறதோ
तत्र – அந்த வேளையில்
अन्यः – பிரமாதா என்ற ஒருவன் ஆத்மாவுக்கு வேறாக
अनयति – தனக்கு வேறாக
கண்கள் என்ற பிரமானத்தால் அறியப்படும் பொருள் தோன்றிவிட்டால் அவன் அனுபவிக்கின்றான்.
இதேமாதிரி கேட்டல், சுவைத்தல், சிந்தித்தல் போன்ற செயல்களை அனுபவிக்கின்றான். ஆத்மா உண்மையில் நிர்விசேஷம் மற்றதெல்லாம் மித்யா.

ஸ்லோகம்-32
இந்த மந்திரத்தில் ஆத்மாவின் ஸ்வரூபம், மோக்‌ஷத்தின் ஸ்வரூபம் கூறப்படுகிறது. ஆனந்த்த்தின் ஸ்வரூபம் அறிமுகப்படுத்தபடுகிறது. ஆத்மாவானது அனைத்து விதமான வேற்றுமைகளும் அற்றதாக இருக்கிறது. இதை அறிந்தவன் அனைத்து செல்வங்களையும் அடைந்தவனாகிறான்.

सलिलः – (நீர்) – நீரைப்போல தூய்மையானது. ஒரு பொருள் அசுத்தத்தை அடைவதற்கு காரணம் தனக்கு வேறாக ஒன்று
வந்து அதனிடல் சேரும்போதுதான். ஆத்மாவுக்கு (விஜாதீய பேதம்) முரணான, வேறாக ஒன்றும் இல்லை.
எனவே அது என்றும் தூய்மையானது. பொதுவாக அந்தக்கரணத்தோடு சம்பந்தம் ஏற்பட்டு அதனால்தான் அசுத்தம் வரும்.
அந்தக்கரணத்திற்கு ஆத்மாவுக்கு நிகராக இல்லாததால் அதனால் அசுத்தபடுத்த முடியாது.
एकः – ஒவ்வொரு ஜீவனிடத்திலும் ஒவ்வொரு ஆத்மா இருக்கிறது என்று எடுத்துக் கொள்ளக் கூடாது.
எவ்வளவு அந்தகரணங்கள் இருந்தாலும் ஆத்மா ஒன்றுதான். ஆகாசம் பலவாக அறியப்பட்டாலும்
(குட ஆகாசம், ஜலாகாசம், மஹா ஆகாசம்) ஆகாசம் என்பது ஒன்றுதான் அதுபோலதான் ஆத்மாவும் இருக்கிறது.
द्रष्टाः – அந்தக்கரணத்தில் மூலம் இந்த பார்ப்பவன்
अद्रष्टाः – தன்னுடைய ஸ்வரூபத்தில் எந்த மாற்றமும் அடைவதில்லை, எதையும் பார்ப்பதில்லை
अद्वैतः – இந்த ஆத்மா இரண்டற்றதாக இருக்கிறது. தான் ஒன்றாக இருக்கிறது அதே சமயத்தில் தனக்குள்ளே எந்த வேற்றுமைகளும் இல்லாமல் இருக்கிறது.
இதுவரை சொல்லப்பட்டது ஆத்மாவின் ஸ்வரூபம்.

एषः ब्रह्म लोकः – ஜீவாத்மாவும், பரமாத்மாவும் ஒன்றாக இருத்தலே மோக்ஷமாகும், பிரம்மனாக இருத்தலே மோக்ஷம்
யாக்ஞவல்கியர் இவ்விதம் ஜனகருக்கு உபதேசம் செய்து கொண்டிருக்கிறார்.
अनुशशानँ – உபதேசம் செய்தல்

एषः अस्य परमागतिः –. ஒருவனுடைய இறுதி லட்சியமானது என்னவென்றால் மோக்ஷத்தை அடைவதுதான்.
एषः अस्य परमासँपतः – இதுதான் ஒருவன் அடையக்கூடிய இறுதியான மிகமேலான செல்வம், மற்ற செல்வங்களெல்லாம்
காலவரையறைக்குட்பட்டது, அழியக்கூடியது. இதுதான் அழிவில்லாத சுகத்தை கொடுக்க முடியும்.
एषः अस्य परमालोकः – இதுதான் ஒருவன் அடையக்கூடிய மிக மேலான இடம்
एषः अस्य परमानन्दः .இதுதான் ஒருவன் அடையக்கூடிய பரமானந்தம். இதற்கு மேலானது வேறெதுவும் கிடையாது.
வேறொருவன் சுகமாக இருக்கிறான் என்று பார்க்கும்போதுதான் பொறாமை என்பதே வருகிறது.
இந்த பரமானந்தத்தை அடைந்தவனுக்கு வேறெந்த ஆனந்தமும் ஒரு துளிதான் அதனால் இவனுக்கு பொறாமை என்பது வரவே வராது.
एतस्य एव आनन्द्स्य – மோக்‌ஷத்திலிருக்கின்றா ஆனந்தமானது
अन्यानि भुतानि – ஞானியை தவிர்த்து மற்ற ஜீவராசிகள்
मात्राम उपजीवन्ति – அதில் ஒரு சிறு துளியைத்தான் அனுபவிக்கிறார்கள்.

ஸ்லோகம்-33 – ஆனந்தத்தைப் பற்றிய விசாரம்
பூர்வமீமாஸிகளின் சித்தாந்தம்:
1. பிரம்மானந்தத்தின் பிரதிபிம்பம்: நாம் ஒரு விஷயத்தினால் இந்திரியங்கள் மூலமாக அனுபவிக்கும் ஆனந்தம் விஷயானந்தம்.
விஷயானந்தம் பிரம்மானந்தத்திற்கு வேறானதும் அல்ல. ஏனென்றால் அது பிரம்மானந்தத்தின் பிரதிபிம்பம்.
2. இந்த விஷயானந்தம் வேற்றுமைகளுடன் (தாரதம்யத்துடன்) கூடியது. ஏற்றத்தாழ்வுகளை உடையது. ஆனந்தத்தின் அளவு வேறுபாடுடையது.
3. இது எதன் நிமித்தமாக வருகின்றது. மேலோட்டமாக பார்க்கும்போது விஷயமே நிமித்தமாக இருக்கிறது
ஆனால் விஷயம் சூட்சுமமாக ஆக சுகமும் அதிகமாகிறது. நம்முடைய உபாதிகள் (இந்திரியங்கள்) உண்மையான காரணமாக இருக்கிறது.
ஒரே விஷயம் ஒருவனுக்கு இன்பத்தை கொடுக்கும் மற்றொருவனுக்கு துன்பத்தை கொடுக்கும்.
இதற்கு நம்முடைய இந்திரியங்களிடத்திலிருக்கும் ஏற்றத்தாழ்வுதான் உண்மையான காரணம்.
இசையை மனிதன் ரசிக்கின்றான், நாய்கள் அனுபவிப்பதில்லை. விருத்தியானது சூட்சுமாகும் போது ஆனந்தமும் அதிகமாகின்றது.
அவரவர்களிடையே ஏற்படும் விருத்தியைப் பொறுத்துத்தான் ஆனந்தத்தின் அளவும் இருக்கின்றது.

எண்ணங்களுக்கு தடை வரும்போது ஆனந்த த்தின் அளவு குறைகின்றது. எப்படி விருத்தியை சூட்சுமபடுத்தி ஆனந்தத்தை அதிகரிக்க செய்வது?
எந்த விஷயத்தில் ஆனந்தத்தை அடைகிறாயோ அந்த விஷயத்தில் வைராக்யம் வந்து விட்டால் அதைவிட நூறு மடங்கு ஆனந்தத்தை அடையலாம்.
காரணம் அந்தப் பொருள் நிமித்தமாக ஆசை வந்து அடையும்போது சுகத்தை அனுபவிக்கிறோம்.
அந்தப் பொருள் மீது வைராக்யம் வந்து விட்டால் அதைவிட நூறு மடங்கு சுகத்தை அனுபவிப்போம்.
ஒரு விஷயத்தில் உள்ள ஆனந்தமானது எதையாவது இழக்க வைத்து விடும். போகத்தை விக்ஷேபத்துடன் (எதிர்ப்பார்ப்புடன்) அனுபவிப்போம்.
இங்கு விருத்தியானது அதி சூட்சுமமாகி விடுகிறது எனவே ஆனந்தமும் அதிகரிக்கிறது.
வைராக்யம் விவேகம் மூலமாக வந்தால்தான் வைராக்யம் நிரந்தரமாக இருக்கும்.
अकाम हतः – ஆசையினால் தாக்கப்படாமல்;
श्रोत्रियँ: சாஸ்திரத்தின் மூலம் விவேகத்தை அடைந்தவன், சாஸ்திர விசாரம் செய்து அதன் மூலம் விவேகத்தை அடைந்தவன்.
अव्रुजिनः – பாவமற்றவன், பாவத்தை போக்கியவன்.
இந்த மூன்றும் உடையவன் அதிக அளவு ஆனந்தத்தை அடைகிறான்.

· பிரதிபிம்ப ஆனந்தத்தை பயன்படுத்தி அதற்கு பிரதிபிம்பமாக இருப்பது பிரம்மானந்த ஸ்வரூபம்.
· வைராக்யத்தால் பிரதிபிம்ப ஆனந்தத்தை அதிகரிக்கச் செய்யும்.

பாவத்தை தவத்தினால் நீக்க முடியும், விவேகமும் தவமும், சேர்ந்திருந்தால்தான் வைராக்யத்தை அடைய முடியும்.

மந்திர விளக்கம்:
सः यः मनुष्याणाँ राद्धः सम्रुद्धोः எந்த மனிதன் போகத்திற்கு தேவையான எல்லா அவயவங்களும் உடையவனாகவும்,
அனைவருக்கும் அதிபதியாகவும் இருப்பான், மனிதனால் அனுபவிக்கப்-படுகின்ற அனைத்து இன்பங்களை
கொடுக்கக்கூடிய பொருட்களை உடையவன் உடையவன். இதுதான் மனிதன் அனுபவிக்கும் அதிகபட்ச இன்பம்.
பித்ருலோகத்தில் இருப்பவர்கள் மனிதலோக அதிகபட்ச இன்பத்தை விட நூறு மடங்கு இன்பத்தை அனுபவிக்கிறார்கள்.
கந்தர்வ லோகத்தில் இருப்பவர்கள் பித்ருலோக அதிகபட்ச இன்பத்தை விட நூறு மடங்கு இன்பத்தை அனுபவிக்கிறார்கள்.
கர்மத்தினால் தேவலோகத்தை அடைந்தவர்கள் கந்தர்வலோக அதிகபட்ச இன்பத்தை விட நூறு மடங்கு இன்பத்தை அனுபவிக்கிறார்கள்.
பிறப்பால் தேவலோகத்தை அடைந்தவர்கள் கர்மதேவலோக அதிகபட்ச இன்பத்தை விட நூறு மடங்கு இன்பத்தை அனுபவிக்கிறார்கள்.
யாரொருவன் श्रोत्रियँ (சாஸ்திரங்களை கற்றவன்), अकामहत (ஆசைகளற்றவன்), अव्रुजिनः (பாவமற்றவன்) இவைகளையுடையவன்
பிரஜாபதி லோகத்தை அடைவான். இது விராட் இருக்கின்ற லோகம். இங்கிருப்பவர்கள் தேவலோக அதிகபட்ச இன்பத்தை விட
நூறு மடங்கு இன்பத்தை அனுபவிக்கிறார்கள். யாரொருவன் श्रोत्रियँ (சாஸ்திரங்களை கற்றவன்),
अकामहत (ஆசைகளற்றவன்), अव्रुजिनः (பாவமற்றவன்) இவைகளையுடையவன் பிரம்ம லோகத்தை அடைவான்.
இது ஹிரண்யகர்ப்பன் இருக்கின்ற லோகம். இங்கிருப்பவர்கள் தேவலோக அதிகபட்ச இன்பத்தை விட நூறு மடங்கு இன்பத்தை அனுபவிக்கிறார்கள்.

பிரதிபிம்ப ஆனந்தத்தை வைத்து பிம்ப ஆனந்த ஸ்வரூபத்தை அறிந்துக்கொள்ள வேண்டும். ஆனந்தத்தை நாடுதல் சம்சாரம்,
அதன் ஸ்வரூபமே நாந்தான் என்று அறிந்து கொள்வது மோட்சம். சாஸ்திர ஞானத்தின் மூலம் வைராக்யத்தை அடைய வேண்டும்.
வைராக்யத்தின் மூலம் பிரதிபிம்பானந்தத்தின் அளவு அதிகமாகி தவத்தின் மூலம் பாவத்தையெல்லாம் நீக்கி பிம்பானந்தத்தை அடைய வேண்டும்.
ஆத்ம ஞானத்தை அடைய வேண்டும்.

ஆத்மஞானத்தை அடைவதனால் என்ன பலன்?
एषः एव परम आनन्दः – பிரம்மன் என்கிற பிரம்ம ஸ்வரூபம் மிகவும் மேலான, உயர்வான, முழுமையான ஆனந்தமுடையது.
இது ஏற்றத்தாழ்வு அற்ற ஆனந்தம். இவ்விதம் யாக்ஞவல்கியர் ஜனக மன்னருக்கு விளக்கினார்.
மேலும் எனக்கு விளக்குங்கள் என்று ஜனகர் கேட்டுக்கொண்டார். அவருக்கு ஜனகரின் வேண்டுகோள் ஆச்சரியமாகவும் அதிசயமாகவும் இருந்தது.
அறிவாளியான ஜனகர் என்னிட்த்திலிருந்து எல்லாம் அறிவை முழுமையாக அறிந்துக் கொள்ள விரும்புகிறார்.

ஸ்லோகம்-34
வைராக்யத்திற்காக மரண வர்ணனை, சம்சார வர்ணனை
சுஷுப்தி அவஸ்தை மோக்ஷத்திற்கு உதாரணமாக கூறப்படுகிறது. ஜாக்ரத்-கனவு சம்சாரத்திற்கு உதாரணமாக கூறப்படுகிறது.
எந்த ஒரு அவஸ்தையிலும் நிலையாக இருப்பதில்லை. அதில் அவனுக்கு சோர்வு, சலிப்பு ஏற்படுகிறது.
ஏனென்றால் கனவுகள் முழுமையாக, நிபந்தனையற்ற இருப்பதில்லை. உண்மையான ஸ்வரூபமல்ல.
ஒரே அவஸ்தையில் தொடர்ந்து இருக்க முடியவில்லை. எனவே அது சம்சாரத்தை குறிக்கிறது.

ஸ்லோகம்-35
கிராமங்களில் இரட்டை மாட்டு வண்டியின் சக்கரத்தை வெளி சுற்றில், பட்டையான இரும்பு அடிக்கப்பட்டிருக்கும்.
இதனால் இந்த வண்டி மிகவும் சப்தம் போட்டுக்கொண்டு செல்கிறதோ.

असमाहिदम्: வண்டி நிறைய பொருட்கள்
उत्सर्जद्यायात्: ஒலியை எழுப்பிக் கொண்டு செல்லும்

அதே போல இந்த ஜீவன் இறக்கும்போது புலம்பிக்கொண்டே, சத்தம் போட்டுக்கொண்டே செல்கின்றான்.
மிகவும் வேதனையோடு துடிக்கின்றான அதன்பிறகு இறக்கின்றான்.
अयँ शरीरः आत्मा à இந்த சரீரத்தில் இருக்கின்ற ஜீவாத்மா
பிராக்ஞேன ஆத்மனா – ஈஸ்வரனால் (கர்மபல தாதா) ஸ்வயம் ஜோதியாக இருக்கின்ற முக்கிய ஆத்மாவை அதிஷ்டானமாக கொண்ட இந்த ஜீவாத்மா.
अन्वारूढः – அழைத்துச் செல்கிறார்
उत्सर्जनः – வித விதமாக புலம்பிக்கொண்டே
ऊर्ध्वाच्छासि: – எப்பொழுது உதானன் தயாராகிறதோ
उदाणन् – உதாணன் உயிரோடிருக்கும்போது உதவி செய்து கொண்டிருப்பது, இறக்கும்போது
எல்லா இந்திரியங்களையும் எடுத்துக் கொண்டு வெளியேற உதவி செய்யும்

ஸ்லோகம்-36
· எப்பொழுது உதானன் தயாராகிறது?
· எதனால் தயாராகிறது?
· எப்படி ஒருவன் இறக்கின்றான்? ஏன் உதானன் வெளியே செல்கிறது?
· எதற்காக ஜீவன் இறக்கின்றான்?

எப்பொழுது இந்த ஸ்தூல சரீரம் எல்லா சக்திகளையும் இழந்து பலவீனமாகிறதோ ( अणिमानँ ),
வயோதிகத்தினாலும், நோயினாலும் உடல் இளைத்து, சக்தியற்றதாகி விடும்போது
நம்முடைய சூட்சும சரீரமானது ஸ்தூல சரீரத்தை விட்டு நீங்குகிறது அதுவே மரணம். எப்படி பழுத்த பழமோ, காய்ந்த இலைகளோ
மரத்தை விட்டு தானே விழுந்து விடுவது போல ஜீவாத்மா இந்த ஸ்தூல உடலை விட்டு வெளியே செல்கிறது.
பிறகு மீண்டும் வேறொரு சரீரத்தை எடுக்கிறது.

ஸ்லோகம்-37
ஒருவன் பிறக்கும்போது எப்படி வரவேற்கப்படுகிறான்?
எவ்விதம் ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு ராஜா பயணம் செய்யும் போது, அங்கே இருப்பவர்கள் அவருக்காக எல்லா வசதிகளையும்
செய்து விட்டு அவர் நன்கு வறவேற்பதற்காக காத்துக் கொண்டிருப்பார்களோ அது மாதிரி மற்ற ஜீவராசிகள்
புதிய ஜீவாத்மாவின் வரவுக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள். பாவ புண்ணியங்களின்படி பிறக்கப்போகும் இடம்,
சூழ்நிலைகளை தயாரானவுடன் அவன் வரவை எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

ஸ்லோகம்-38
ராஜா தாம் தங்கியிருந்த இட்த்திலிருந்து அரண்மனைக்கு செல்லும்போது அவர் வரும்போது வரவேற்று
எல்லா வசதிகளையும் செய்து கொடுத்தவர்கள், அவரை மகிழ்ச்சியாக வழியனுப்ப எல்லா ஏற்பாடுகளையும் செய்து அனுப்புகிறார்கள்.
அதுபோல இறக்கப்போகும் உடலிலுள்ள பிராணன்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து உதாணனுடன் வெளியே செல்ல தயாராக உள்ளது.

பகுதி தொகுப்பு
இந்த உடலுக்கு ஜோதியாக இருப்பது எது? இந்த ஜீவனுடைய விவகாரத்திற்கு காரணம் எது? இந்த ஜீவன் ஜடமாக இருப்பதால்,
அதனால் சுயமாக எதுவும் செய்ய முடியாது. ஜடமான பொருட்கள் வேறொன்றை சார்ந்துதான் விவகாரம் செய்ய முடியும்.
பானை நகர்கிறது என்றால் அதை நகர்த்துவதற்கு ஏதோ ஒன்று காரணாமாக இருக்க வேண்டும்.
அது போல இந்த உடலுக்கு ஜோதியாக சூரியன் என்று ஆரம்பித்து பின் சந்திரன், அக்னி, சப்தம் இறுதியில் ஆத்மாதான் என்று பதிலளிக்கிறார்.

ஆத்மா உடலுக்கப்பாலும் இருந்து கொண்டு பிரகாசிக்கிறது. உள்ளேயும் இருந்து கொண்டும் பிரகாசிக்கிறது.
இதன் ஸ்வரூபம் ஸ்வயம் ஜோதி – தானாக பிரகாசித்துக் கொண்டும் மற்றவற்றால் விளக்க முடியாததாகவும் இருக்கிறது.
இது அப்பிரமேயம். எந்தப் பிரமானத்தினாலும் நேரிடையாக விளக்க முடியாது. இது அபௌதிகம் – பூதங்களால் உருவானதில்லை.

ஆத்மாவின் ஸ்வரூபம் என்ன?
அது சைதன்ய ஸ்வரூபம், சேதனமாக இருப்பது ஆத்மா. இந்த ஆத்மா எப்படி தன்னை வெளிப்படுகிறது,
இவ்வாறு வெளிப்படுத்துகின்ற ஆத்மா தன்னை புத்தியில் பிரதிபலிக்க செய்து சிதாபாஸனாக செயல்படுகிறது.

தியாயதி இவ, லேலாயதி இவ
ஞான விவகாரம் – சூட்சும சரீரம்; கர்ம விவகாரம்- இந்திரியங்களின் உதவியோடு செய்வது
இவைகளை ஆத்மா செய்வதில்லை. பொதுவாக நாம் ‘நான்’ என்று சூட்சும சரீரத்தையும், ஸ்தூல சரீரத்தையும் நினைப்பதால்,
இந்த கர்ம, ஞான விவகாரங்களை நான் செய்கிறேன் என்று நினைக்கிறோம் அஹ்டனால் சஞ்சலம், துக்கம் அடைகிறோம்.

சரீரத்தில் அபிமானம் வைக்கும்போது இவன் பிறக்கின்றான். பிறகு இந்திரியங்களின் சம்பந்தத்தால் பாவ-புண்ணியங்களை சம்பாதிக்கின்றான்.
ஒரு பொருளை தியாகம் செய்யும் போது அந்தப்பொருள் இறந்ததற்கு சமமாகிறது. அதேமாதிரி ஒரு பொருளின்மீது
ஆசை வைக்கும்போது அந்த பொருள் பிறப்பதற்கு சமமாகிறது.

தர்ம-அதர்மங்களின் இருப்பிடமாக இருப்பது சரீரம். கனவு பிறவிகளை உறுதிப்படுத்துகிறது.
அத்ர அயம் புருஷஹ ஸ்வயம் ஜோதி. கனவு நிலையில் இந்த புருஷன் ஸ்வயம் ஜோதியாக இருப்பதை உணரலாம்.
ஜாக்ரத் அவஸ்தையில் ஆத்மாவும், மனமும் அறியும் ஜோதியாக இருக்கிறது.
ஆழ்நிலை உறக்கத்தில் எதுவும் நடக்காததால் அங்கே ஆத்மா உணரமுடியாமல் இருக்கிறது.
கனவுகள் மனதினுடைய விகாரங்கள், மனம் பார்க்கப்படும் பொருளாக இருக்கிறது.
இதைப்பார்ப்பவனாக ஆத்மா இருக்கிறது என்பதை அறியலாம்.

கனவு வாஸனாமயம், ஜாக்ரத் நிலையின் தொடர்ச்சியல்ல, உருவாக்குவதும் உபாதான காரணமாகவும் இருப்பது வாஸனைகள்,
நிமித்த காரணம் கர்மபலன்.

ஹிரண்மயஹ புருஷஹ (கரணங்களை வியாபித்துள்ளவன்) ஏக அம்ஸஹ சிதாபாஸ ரூபமாக இருக்கின்ற ஒருவன் சைதன்ய ஸ்வரூபம்.
எல்லோரும் பொய்யைதான் நாடுகிறார்கள். அவஸ்தாதிரய விவேகம், ஆத்மா அஸங்கஹ என்று கூறுதல்-
அஸங்கோஹ அயம் புருஷஹ- எந்த அவஸ்தையோடும் சம்பந்தம் வைக்காதவன்.
மீன் ஒரு கரையிலிருந்து மறு கரைக்கு சென்று வருவது போன்ற சம்பந்தத்தை உடையது ஆத்மா ஒரு அவஸ்தையிலிருந்து
மறு அவஸ்தைக்கு சென்று வருவது. சுஷுப்தி அவஸ்தையில் அனுபவிப்பது மோக்ஷ நிலைக்கு ஒரு உதாரணமாக கருதலாம்.

அத்ர பிதா-அபிதா, மாதா-அமாதா ஒருவன் தந்தையாகவும் இருக்கின்றான், ஆனால் தந்தையாக இல்லாமலும் இருக்கின்றான்,
தாயாகவும் இருக்கின்றாள், இல்லாமலும் இருக்கின்றாள். பாவத்தாலும் புண்ணியத்தாலும் பாதிக்கப்படாதவனாக இருக்கிறான்.
ஜாக்ரத் அவஸ்தையில் பார்க்கும் பொருட்களெல்லாம் மித்யா என்று புரிந்து கொள்ள வேண்டும்.
வேற்றுமை பார்க்கும்போதுதான் த்வைதம் வந்து விடுகிறது. பிரதிபிம்ப ஆனந்தத்தை கொண்டு பிம்ப ஆனந்தத்தை அறிந்து கொள்ள வேண்டும்.

அத்யாய தொகுப்புரை
குணவாதம்: பிரத்யக்ஷ பிரமாணத்தில் வராதது. அனுபவத்திற்கு எதிரானது
பூதார்த்தவாதம்: இந்திரன் கையில் வஜ்ராயுதம் என்ற வாக்கியத்தில் வஜ்ராயுதம் இருந்ததா இல்லையா என்று முடிவு செய்ய முடியாதது,
நிரூபிக்க முடியாது ஆனால் ஏற்றுக் கொள்கிறோம்.

புருஷவித பிரமாணம்: ஒருவன் அடையும் மேலான பதவி ஹிரண்யகர்ப்பன் என்ற பதவிதான்.
பயம் நீங்காத, தன்னிறைவு இல்லாமல் இருத்தல், உலகத்தில் உள்ள எந்தப்பொருளும் பயத்தைப் போக்காது.
எதை அடைந்தாலும் தன்னிறைவுடன் இருக்க முடியாது. மந்திரங்கள் 7லிருந்து 10வரை வேதாந்தத்தை விளக்குகிறது.
சம்சாரம் வரையறுக்கப்பட்டது, வித்யா சூத்திரம், பிரம்மத்தை ஆத்மா என்று விளக்கப்பட்டிருக்கிறது.
ப்ரவேஸ ஸ்ருதி விசாரம். சரீரத்திற்குள் சென்றவர் யார்? பரமாத்வாவா அல்லது ஜீவாத்மாவா என்று விசாரம் செய்தல்.
இறுதியில் பரமாத்மாதான் என்று நிரூபிக்கப்படுகிறது. பிரவேசம் என்பதற்கு இருக்கிறது என்பதுதான் தாத்பர்யம்.
ஆத்மா இத்யேவ உபாஸீத – யார் சொல்லியும் நாம் எந்தக் காரியமும் செய்வதில்லை.
நாம் எதை செய்ய வேண்டுமென்று நினக்கிறோமோ அதைத்தான் செய்கிறோம்.
நாம் ஆத்மாவைத்தான் உண்மையாக நேசிப்பதால் அதை அடைவதைத்தான் லக்ஷியமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பிரம்மன் அனைத்துமாக இருக்கிறது. அது தன்னையே தெரிந்து கொண்ட அதிகாரித்வம் பேசப்பட்டது.
விக்ன அபாவம் விசாரம். யாரும் நாம் ஞானத்தை அடைவதற்கு தடையாக இருக்க முடியாது.
ஆனால் நம் கர்மபலன்கள்தான் தடைகளைக் கொடுக்க முடியும். அவித்யா சூத்திரம் பற்றிய விளக்கம்.

————–

பகுதி-5- சப்தான்ன பிராமணம்:
இதில் ஜீவன் கர்த்தவாகவும், போக்தாவாகவும் இருக்கின்றான் என்று விளக்கப்பட்டது. சாதன-சாத்திய விளக்கயிருக்கிறது.
புத்திரனால் பித்ருலோகமும், கர்மத்தால் பிரம்மலோகமும், ஞானத்தால் மோக்ஷமும் அடையலாம் என்று கூறப்பட்டிருக்கிறது.
ஜீவனுடைய போக்த்ருத்வம்- ஜீவன் அனுபவிப்பவன், செயலின் விளைவை அனுபவிப்பவன்.
ஸ்ருஷ்டியை நாம-ரூப-கர்ம என்று மூன்று விதமாக ஏற்றுக் கொள்ளுதல்.
சம்சாரத்தில் ஜீவன் போக்தாவாகவும், போக்யமாகவும் இருக்கின்றான். நாம் இந்த உலகத்தை அனுபவிக்கும்போது போக்தா,
இந்த உலகம் நம்மை அனுபவிக்கும்போது போக்யமாகவும் இருக்கிறோம்.

சம்பந்தபாஷ்ய விசாரம்: கர்ம காண்டமும், ஞானகாண்டமும் பிரமானமே. கர்மகாண்டம்-சாதனம்,
ஞான காண்டம் – சாத்தியம்; கர்மமே மோக்ஷத்தை கொடுக்காது.

பகுதி-1 அஸ்வ ப்ராமனம்: சத்திரியன் அஸ்வமேத யாகத்தின் மூலம் சொர்க்கத்தை அடையலாம்.
பிராமணன் இந்த யாகத்தை தியானம் செய்து அதே சொர்க்கத்தை அடையலாம்.
குதிரையை ஆலம்பனமாக வைத்து இந்த பிரபஞ்சத்தை பார்த்து தியானித்தல்.
இதன் மூலம் சித்தஸுத்தி அடையலாம். உபாஸனை-அத்யாரோபம்; சாதனம்-பிரபஞ்சம்

பகுதி-2 அக்னி பிராமனம்: அக்னியை ஆலம்பனமாக வைத்து, விராட் தத்துவத்தை உபாஸனை செய்தல்.
ஸ்ருஷ்டிக்கு முன்பு காரணம் இருந்ததா, காரியம் இருந்ததா என்ற கேள்விக்கு காரணமும் இருந்தது, காரியமும் இருந்தது என்று நிரூபித்தல்

பகுதி-3 உத்கீத பிராமனம்: பிராண உபாஸனை விளக்கப்பட்டது. இதனுடைய சுத்தஸ்வரூபம் விளக்கப்பட்டது.
இந்திரியங்கள் நல்லது, கெட்டதை இரண்டையும் அனுபவிக்கும். பிராணன் எப்பொழுதுமே தூய்மையாக இருக்கிறது.

பாஷ்ய விசாரம்: விதி வாக்கியமும், நிஷேத வாக்கியமும், வேத வாக்கியமும் பிரமானம்.
வேதத்தில் உள்ள சில வாக்கியங்கள் அர்த்தவதமாக எடுத்துக் கொள்ளலாம். அனுவாதம்: தெரிந்ததை சொல்லுதல்.

—————

பகுதி-6 உக்தம் பிரமாணம் —
அனைத்து நாமங்களுக்கும் சாமான்யமான சப்தமாக எடுத்துக் கொண்டு வாக் என்று அழைக்கப்படுகிறது.
அதுதான் உபாதான கரணமாக இருக்கிறது. அதில் விதவிதமான சப்தங்கள் ஏற்றி வைக்கப்படுகிறது.
இவையனைத்தும் நாமத்தில் ஒடுக்கப்படுகிறது. சாமான்யமான ரூபம் சத்யம், விதவிதமான ரூபங்கள் மித்யா.
சரீரம் சாமான்யம். இதிலிருந்து தோன்றும் கர்மங்கள் அனைத்துக்கும் ஆதாரம் சரீரம்.
இந்த மூன்றையும் சரீரத்தில் ஒடுக்கி, சரீரத்தை நீக்கிவிட்டால் உலகத்தையும் நீக்குவது போல் ஆகும்.
நாம-ரூபம் ஒன்றையொன்று சார்ந்திருக்கிறது -இதரேத்ர ஆஸ்ரயம்.
ஒன்று அழிந்தால் மற்றொன்றும் அழிந்துவிடும் — இதரேத்ர பிரளயம்
அதனால் இவைகளும் மித்யா.

அத்யாரோபம்-ஏற்றி வைத்தல்; அபவாதம்-நீக்குதல்
அத்யாரோபம் – அனாத்மாவை ஏற்றுக்கொள்ளுதல்; திருஷ்ய பிரபஞ்சம் நாம் பார்த்து அனுபவிக்கும் அனாத்மா அஸத்.
அபவாதம் – ஏற்றுக்கொண்ட அனாத்மாவை நீக்குதல். எனவே இதை ஸத் என்றும் கூற முடியாது.
அனாத்மா ஸத்தும் அல்ல; அஸத்தும் அல்ல; எனவே மித்யா என்று உணரலாம்.
எட்டு விதமாக உலகத்தின் மீது அத்யாரோபம் செய்யப்பட்டிருக்கிறது.
1. சாதன பிரபஞ்சம்: சிலவற்றை சாதனமாக பயன்படுத்தி வேறொன்றை அடைகின்றோம்.
விதவிதமான கர்மங்கள், உபாஸனைகள் சாதனமாக, கர்மரூபமாக கூறப்பட்டுள்ளது.
சப்தான்னத்தில் இருக்கும் முதல் நான்கும் சாதனங்களாக இருக்கின்றன.
2. சாத்தியபரபஞ்சம்: ஒவ்வொரு உபாஸனைக்கும் சொல்லப்பட்ட பலன்கள் எல்லாமே சாத்திய பிரபஞ்சம்.
மனிதலோகம், பித்ருலோகம், தேவலோகம், சாத்தியமாக ஏற்றுக் கொள்ளப்படுகிறது.
3. அவ்யாக்ருத பிரபஞ்சம் (மாயா)- மேலே சொன்ன இரண்டு அத்யாரோபங்களுக்கு காரணமாக இருப்பது.
4. ஜீவனுடைய கர்த்ருத்வம் – ஜீவன் கர்த்தா என்று ஏற்றுக்கொள்ளுதல்.. இப்படி ஏற்றுக் கொண்டால்தான் கர்ம காண்டமே பயன்படும்.
ஜீவ ஸ்ருஷ்டியும் இருக்கிறது

—————

பகுதி-4 : சாரீரக பிரமாணம்
ஜீவாத்மாவினுடைய தன்மையை விளக்கும் பிரமாணம் – ஜீவன் மேற்கொள்ள வேண்டிய சாதனங்களைக் கூறி
ஜீவ-ஈஸ்வர ஐக்கியமும் விளக்கப்படுகிறது. ஜீவன் எந்தவிதத்தில் சம்சாரியாக இருக்கிறான்,
பிரம்ம ஸ்வரூபமாக இருக்கும் நிலை இவைகளையும் விளக்குகிறது

ஸ்லோகம்-1 (மரண அவஸ்தையில் உள்ளவனின் நிலை)
सः – ஜீவாத்மா ; यत्र् – மரணத்தறுவாயில்; अबल्यँ न्येत्य – அனைத்து பலத்தையும் இழந்து ;
सँमोहँ इव न्येति – புத்தியில் எதுவும் செயல்படாத நிலை
अथ एनँ एते प्राणाः – இந்நிலையில் இந்திரியங்கள் காரண சரீரத்தை நோக்கி செல்கின்றன.
सः एताः तेजो मात्रा –
समभ्याददानः அந்தந்த இந்திரியங்கள் தத்தம் ஸ்தானத்திலிருந்து விலகி
ह्रुदयम एव अन्व – காரண சரீரத்தில் ஒடுங்குகிறது.
स यत्र् – एष चाक्षुः पुरुष – இந்த உலகத்தை பார்த்துக் கொண்டிருக்கின்ற தேவதையானது
पराङ पर्यावर्तते – வந்த வழியே திரும்பி சென்று விடுகின்றது.
अथ रूपाञाने – பார்க்கும் சக்தியை இழந்து விடுகிறது.

ஸ்லோகம்-2
ஜீவாத்மாவில் உள்ள இந்திரியங்கள் காரண சரீரத்தில் ஒடுங்கி அந்தந்த தேவதைகளுடன் ஐக்கியமாகின்றது.
பார்க்கும் சக்தியானது காரண சரீரத்தில் ஒடுங்குவடால் மற்றவர்கள் இவனால் பார்க்க முடியவில்லை, வாசனைகளை நுகர முடியவில்லை.
சுவைப்பதில்லை, பேச முடியவில்லை, கேட்கும் சக்தியை இழந்து விட்டான், வலியை உணரும் சக்தியையும்,
தொட்டுணரும் சக்தியையும், சிந்திக்கும் திறனும் இழந்து விட்டான்.

அக்ஞானியுடைய ஜீவன் ஸ்தூல சரீரத்திலிருந்து எப்படி வெளியேறுகிறது?
ஜீவன் வெளியேறுகின்ற அந்த நாடி மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும். அதன் வழியே சென்று பிறகு உடலிலிருந்து வெளியேறுகிறது.
கண் வழியாகவோ, தலை உச்சியின் வழியாகவோ, சரீரத்திலிருக்கும் ஒன்பது துவாரங்களிலிருந்து
ஏதாவது ஒரு துவாரத்தின் வழியாகவோ வெளியேறுகின்றது. இப்படி வெளியேறும்போது பிராணனனுடன்
எல்லா இந்திரியங்களும் தொடர்ந்து செல்கின்றன. இந்த ஜீவன் வெளியே செல்லும்போது வேறெந்த ஞானமும் இல்லை.
உடலிலிருந்து வெளியே செல்லும் நிலை மட்டும்தான் தெரிகின்றது.
இந்த ஜீவனத் தொடர்ந்து செல்பவைகள் அவன் செய்த பாவ-புண்ணியங்கள், ஸம்ஸ்காரங்கள் (வாஸனைகள்) ஆகியவைகளாகும்.

ஸ்லோகம்-3
ஜீவன் சரீரத்தை விடும் போது, வேறொரு சரீரத்தைப் பிடித்துக் கொண்டுதான் இந்த சரீரத்தை விடுகின்றான்.
எப்படி ஒரு புழுவானது ஒரு இலையிலிருந்து மற்றொரு இலைக்கு போகும் போது அந்த இலையை பிடித்த பிறகுதான்
முந்தைய இலையிலிருந்து தன் கால்களை எடுக்கும். இந்த ஸ்தூல சரீரத்தை விடுவதற்கு முன்
வாஸனாமய சரீரத்தை பற்றிக் கொண்டுதான் இதை விட்டு விடுகின்றான்.

ஸ்லோகம்-4
ஜீவனுக்கு இந்த சரீரம் பழையதாகி விட்டதால் புதிய சரீரம் எடுக்கும் அவசியம் ஏற்படுகிறது.
எப்படி தங்கநகை விற்கும் வியாபாரி பழைய நகைகளை எடுத்துக் கொண்டு புதிய நகைகளை கொடுக்கிறானோ
அது போல ஜீவன் எந்த உலகத்திற்கு செல்கின்றானோ அதற்கேற்ற ஒரு சரீரத்தை அடைகிறான்.
இந்த சரீரத்தை ஜடமாக்கி விட்டு, பித்ரு லோம, கந்தர்வ லோகம், தேவலோகம், பிரஜாபதிலோகம், பிரம்மலோகம்
இதைப்போன்ற எந்த லோகத்திற்கு செல்கின்றானோ அந்த லோகத்திற்கேற்ற சரீரத்தை அடைகிறான்.

ஸ்லோகம்-5
இந்த ஜீவாத்மா ஸ்வயம் பிரகாசமாகவும், நமக்கு மிக அருகில் இருக்கின்ற தத்துவாமாகவும் இருக்கின்றது
அதுவே பிரம்மம் என்று அழைக்கப்படுகிறது. இந்த சமஷ்டிக்கு ஆதாரமாக இருக்கின்ற தத்துவம்.
இந்த ஜீவாத்மா அவித்யாவால் சம்சாரத்தை அனுபவிக்கின்றான். இந்த சம்சார அவஸ்தைதான் இதில் விளக்கப்படுகிறது.
அந்தந்த உபாதியில் அபிமானம் வைக்கும் போது அதற்குதகுந்த சம்சாரத்தை அனுபவிக்கிறான்.
புத்தியில் அபிமானிக்கும்போது விக்ஞானமய சம்சாரத்தையும், மனோமய கோசத்தில் அபிமானிக்கும்போது சுக-துக்கங்களை,
பிராணனில் அபிமானிக்கும்போது அதுவாகவே மாறி உணவின் மீது பற்று போன்றவைகளை,
கண்ணில் அபிமானிக்கும்போது அதனையொட்டி வரும் சம்சாரத்தையும், கேட்கும் திறனில் அபிமானிக்கும்போது
அதனையொட்டி வரும் சம்சாரத்தையும், ஸ்தூல சரீரத்தில் அபிமானிக்கும் போது அதனையொட்டி வரும் சம்சாரத்தையும் அனுபவிக்கின்றான்.

நீர் பிரதான, வாயு பிரதான,அ ஆகாசப்பிரதான, தேஜோ பிரதான, அதேஜோமய (பிசாசாக இருத்தல்),
காம-மய, அகாம-மய, க்ரோதமய-அக்ரோதமய, தர்மமய-அதர்மமய இப்படி எல்லாமுமாம இருந்து சம்சாரத்தையும் அனுபவிக்கின்றான்.
இவன் எப்படிபட்ட செயலை செய்கின்றானோ, எப்படிபட்ட நடத்தையுடையவனாக இருக்கின்றானோ அப்படிபட்டவனாக இருக்கின்றான்.
நல்லதை செய்பவன் நல்லவனாக இருக்கின்றான், அதர்மமான செயல்களை செய்பவன் கெட்டவனாகின்றான்.
புண்ணியத்தை தரக்கூடிய செயல்களை செய்பவன் அதை அடைகின்றான். பாவத்தை தரக்கூடிய செயல்களை செய்பவன் அதையே அடைகின்றான்.
எப்படிபட்ட ஆசையுடையவனாக இருக்கிறானோ அப்படிப்பட்டவனாகவே இருக்கின்றான்.
நமக்குள்ளே இருக்கிற ஆசைகளின் அடிப்படையில்தான் நம்முடைய செயல்கள் வெளிப்படுகின்றன.
ஒருவனுக்கு எப்படிப்பட்ட ஆசையானது ஆழ்மனதில் இருக்கின்றதோ அதை அடைய வேண்டும் என்ற எண்ணம் ஆழ்மனதில் உறுதியடையும்,
அதற்கேற்ற சூழ்நிலைகளை உருவாக்கிக் கொள்வான். அந்த ஆசையை அடையக் கூடிய செயலை செய்கின்றான்.
இவன் எந்தக் கர்மத்தை செய்கின்றானோ அதன் பலனை அனுபவிக்கின்றான். எனவே தர்மப்படி வாழ்ந்தால்
புண்ணியத்தை அடைந்து அதன்மூலம் சித்தஸுத்தி அடைந்து அதைத் தொடர்ந்து மோக்ஷத்தையடைவான்.
அதர்மப்படி வாழ்ந்தால் சம்சாரத்தில்தான் இருந்து துன்பத்தை அனுபவிப்போம்.

ஸ்லோகம்-6
எந்தப்பொருள் மீது அளவற்ற ஆசையுடன் இந்த சூட்சுமசரீரம் இருக்கிறதோ அதே பொருட்கள் உள்ள சுழ்நிலையில்தான்
அடுத்த பிறவியில் பிறக்கின்றான். இந்த ஜீவன் செய்கின்ற அனைத்து செயலகளினுடைய பலனை அன்பவித்து
அந்த லோகத்திலிருந்து மீண்டும் திரும்புகின்றான். இதே லோகத்திற்கு வந்து கர்மத்தை தொடர்கின்றான்.
இவையெல்லாம் யார் ஆசையுடன் இருக்கிறார்களோ அவர்களுக்குத்தான் இந்த கதி.

இனி முக்திக்கு வருபவனைப்பற்றிய விளக்கம்:
अकामन மனதிலிருக்கும் ஆசைகளால் செயலில் ஈடுபடாது இருத்தல்
निष्कामन மனதிலிருக்கின்ற வாஸனையான ஆசைகளை நீங்கிவிட்டவன்
आप्तकामन நிறைவேறிய ஆசையை உடையவன்
இப்படிபட்ட ஜீவனுடைய சூட்சும சரீரம் எந்தப்பயணத்தையும் மேற்கொள்வதில்லை.
பிரம்மனாக வாழ்ந்து (ब्रह्म एवसन्) கொண்டு ப்ராரப்தம் முடிந்தவுடன் பிரம்மத்தை அடைகிறான் (ब्रह्म अप्येति)
अत्म कामह – ஆத்மாவை அடைய வேண்டும் என்ற ஆசையுடையவன் முதலில் ஆத்ம காமனாக இருக்க வேண்டும்.
அனாத்மா கானமாக இருக்கின்ற நிலையிலிருந்து நீங்கி ஆத்மாவைத்தான் அடைய வேண்டும் என்ற லட்சியமாக கொள்ள வேண்டும்.
இதைத்தான் முமுக்ஷுத்வம், ஜிக்னாஸு என்று கூறுவர். அநித்ய வஸ்து மீது இருக்கின்ற காமம் அனாத்மா காமம்.
அனாத்மாவான பொருளை ஆசைப்பட்டு அடைந்தாலும் அது அடையாதது போல்தான் ஏனென்றால் அது அழியும் தன்மையுடையது.
நித்தியமான பொருளை அடைந்தால்தான் அவன் ஆத்மகாமனாக இருப்பவன்தான் ஆப்தகாமனாக மாறுகின்றான்.
இவன் ஆசைப்பட்ட்த்தை அடைந்தவந்தான் ஆப்தகாமன் என்றழைக்கப்படுகின்றான். இவன் ஆத்மாவை அடைந்துவிட்டான்.
தன்னையடைந்து விட்டான். மனதிலிருக்கின்ற வாஸனையாக இருக்கின்ற ஆசைகள் நீங்கிய நிலையை உடையவன்தான் நிஷ்காமன்.
எந்த ஸம்ஸ்காரத்திற்கும் சம்சாரத்தை கொடுக்கும் அளவுக்கு சக்தியற்ற நிலையில் உள்ளவன்தான் நிஷ்காமன்.
அனாத்மா ஆசைகளெல்லாம் வறுக்கப்பட்ட விதைப்போன்று எரிக்கப்பட்டுவிட்டது. நமக்குள் இருக்கும் பல ஆசைகளால்
நம்மை செயல்படுத்தும் அளவுக்கு சக்தி இருக்காது. இவன் எந்தச் செயல் செய்தாலும் அதனால் பாதிக்கப்படாமல் இருக்கின்றான்,
பாவ –புண்ணியங்களும் வந்து சேராது. ஆசைகள் எல்லாம் பொய்யாகிவிட்டிருக்கும். ஆசை நிறைவேறினாலும், நிறைவேறாவிட்டாலும்
அதனால் பதிக்கப்படாமல் இருப்பான். நிதித்யாஸனத்தால் உள்ளிருக்கும் வாஸனைகளெல்லாம் சக்தியற்றதாகி விடும்.
எனவே அனாத்மாவிலிருக்கும் ஆசைகளை நீக்கிவிட்டு ஆத்மாவை அடைய வேண்டும் என்ற ஆசையை அடையவேண்டும்,
ஆத்ம ஞானத்தை அடைந்தவனுக்கு எதையும் செய்ய வேண்டியதில்லை என்று சாஸ்திரமும் அங்கீகாரம் கொடுத்து விடுகிறது.

சங்கரர் விசாரம்:
கேள்வி: கர்ம காண்ட்த்தை இவன் விடமுடியாது, நித்திய கர்மத்தை செய்ய வேண்டாம், இல்லையென்றால் பிரத்யஹாரம் பாவம் வந்து விடும்.
பதில் யாருக்கு பிராப்தி-பரிகாரம்-இதை அடைய வேண்டும், இதை விட வேண்டும் என்ற இந்த இரண்டு ஆசைகளும்
இல்லையென்றல் அவன் எந்த கர்மமும் செய்ய வேண்டியதில்லை. ஞானிக்கு இந்த இரண்டு ஆசைகளும் இல்லை.
மேலும் அவன் பிரம்மத்தை அடைந்துவிட்ட்தால்ய்ம் அவன் எந்தக் கர்மமும் செய்ய தேவை இல்லை. ( अप्येति – அடைகின்றான்)
கேள்வி देशान्द्रः अप्येति मोक्षः – ஒரு தேசத்திலிருந்து வேறொரு தேசத்திற்கு செல்வது போல இந்த லோகத்தில் இருக்க்ன் வரை மோக்ஷம் இல்லை,
வேறு உலகத்துக்கு செல்வதுதான் மோக்ஷம். வேதத்தில் க்ருஷ்ணகதி, சுக்லகதி என்ற விதவிதமான கதிகள் விளக்கப்பட்டிருக்கின்றது.
பிரம்மத்தை அடைகின்றான் என்ற வாக்கியம் வேறொரு இடத்தை அடைதல் என்றுதான் பொருள் கொடுக்கிறது.
பதில் இது ஸ்ருதி விரோதாத் – ஸ்ருதியின் கருத்துக்கு எதிரானது. அப்யேதி என்ற சொல்லின் முன்னால்
சொல்லப்பட்ட வாக்கியத்தில் ஞானிகளுக்கு இந்த கதிகள் கிடையாது என்று வேதமே சொல்லியிருக்கிறது.
ஆகவே மோக்ஷத்தை எங்கு வேண்டுமானாலும் அடையலாம்.
கேள்வி बावन्त्रा अप्येति मोक्षः – ஜீவன் பாவத்திலிருந்து பிரம்ம பாவத்திற்கு மாறுவதே மோட்சம்.
உதாரணமாக புழுவானது பட்டாம்பூச்சியாக மாறுவது போல. விசேஷமான சர்மத்தாலும், உபாஸனையாலும் பிரம்ம நிலைக்கு மாறுவது.
பதில் இதனால் மோட்சமானது கர்மத்தின் பலனாகி மாறிவிடும். ஞானத்தால் மட்டும்தான் மோக்ஷத்தை அடையும் நிலை ஏற்படாது.
எது கர்மத்தால் அடையப்படுகிறதோ அது அழிந்துவிடும் எனவே மோக்ஷமானது அநித்தியமானது என்றாகிவிடும்.
இல்லாத ஒன்றை அடைவதற்கு கர்மம் தேவை ஆனால் என்றும் நித்தியமாக இருக்கின்ற பிரம்மத்தை ஞானத்தினால் மட்டும்தான் அடைய முடியும்.
இந்த உபாஸனைகள் கர்மங்கள் எல்லாம் சித்தத்தின் தூய்மைகளாக பயன்படும். பாவந்திரபத்தி மனதுக்குத்தான் பொருந்தும் ஆத்மாவுக்கல்ல.
கேள்வி செயலினால் ஒன்று உருவாகி அது நித்யமாக இருக்கும் தன்மை உடையதானால்,
உதாரணமாக பானையை உடைத்து விட்டால் அது அழிந்து விடும். இந்த கர்மத்தால் அடைந்த அழிவு நித்யமானது அல்லவாம்
பதில் இந்த உதாரணம் வெறும் கற்பணையில்தான் இருக்கிறது. அது விவகாரத்தில் உபயோகப்படுத்த முடியாது.
அந்த இடத்தில்தான் உன்னுடைய தர்க்கம் ஒத்து வரும்
கேள்வி பிரம்மம் என்பது எப்பொழுதும் இருக்கிறதென்றால் கர்மத்தால், தியானத்தினாலும் ஏன் வெளிப்படக்கூடாது.
நெருப்பை ஏதாவது ஒரு செயலால் வெளிக்கொண்டு வருவதுபோல்
பதில் கர்மத்தினால் நெருப்பை தோற்றுவிக்கவில்லை. அது இருப்பதை வெளிக்காட்டுகிறது.
சரியான உதாரணம் எப்படி வெளிச்சம் இருட்டில் இருக்கும் பொருளை காட்டிக் கொடுக்கிறதோ அது போல
கேள்வி பந்தநிவிருத்தி மோட்சம் என்றால், மோட்சம் என்பது அபாவ ரூபம் அதாவது துயரம், பந்தம் இல்லாமை என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும்,
பதில் பிரம்மனாக இருத்தல் என்றுதான் உபநிஷத் கூறுகின்றது. மோக்ஷம் என்பது பாவரூபம், அதாவது பிரம்ம ஸ்வரூபமாக ஆனந்த ஸ்வரூபமாக இருத்தல்
கேள்வி நாம் விஷயானந்தத்தை அனுபவிக்கிறோம் இதற்கு வேறான ஒரு புதிய ஆனந்த அனுபவம் மோக்ஷம்.
பதில் புதிய ஆனந்தம் தோன்றுகிறதா அல்லது ஏற்கனவே இருக்கிறதா? தோன்றுவது எல்லாம் அழியக்கூடியது/
கேள்வி ஆனந்த ஸ்வருபமாயுள்ள பிரம்மானந்தம் அதர்மவினால் மறைக்கப்பட்டிருக்கிறது. இதை நீக்கினால் பிரம்மானந்தத்தை அடையலாம்.
பதில் நீ சொல்வது பிரதிபிம்ப ஆனந்த த்திற்கு சரியாக இருக்கும் ஆனால் பிம்பானந்தம் என்று நம்மிடத்திலிருப்பது
எனவே அது புதிய அனுபவம் இல்லை. இது நமது சுபாவமாக இருப்பதால் உன்னுடைய கருத்து சரியில்லை.
அவித்யையினுடைய காம-க்ரோதிகள் நீங்கி இவன் பிரம்மனாகி இருப்பது, பிராரப்தம் கர்ம நீங்கியவுடன் பிரம்மமாகவே மாறி விடுகின்றான், கலந்து விடுகின்றான்.

ஸ்லோகம்-7
காம நிவிருத்தி (ஆசைகளை விடுதல்), அம்ருதத்வ பாவம் (மரணமற்ற நிலை) பிரம்ம பிராப்தி (பிரம்மத்தை அடைதல்).
சரீரத்தில் நான் என்கின்ற ஆத்ம புத்தியை விடுதல்.
यदा – அறிவானது எப்பொழுது பழுத்து விட்டதோ, முதிர்ந்த நிலையில்
सर्वे कामाः – எல்லா ஆசைகளும்
प्रमुच्यन्ते – தன்னிடத்திலிருந்து நீங்கி விடுகிறதோ, ஆசைக்கு காரணமாக உள்ளதும் நீங்கி இருத்தல்.
ये अस्य ह्रुदि श्रिताः – மனதைச் சார்ந்திருக்கும் ஆசைகள் (இகலோக, பரலோக ஆசைகள், பார்க்கும் பொருட்களின் மீதுள்ள ஆசை,
காதில் கேட்ட பொருட்களின் மீதுள்ள ஆசை, நம்மை கர்மத்தில் ஈடுபடுத்திக் கொண்டிருக்கும் ஆசைகள்
வாஸனை ஸ்வரூபமாக இருப்பவைகள் புத்திரன், வித்தம், லோகம் இவைகளிலுள்ள ஆசைகள் எல்லா அனாத்மாக்களும் ஆசைகள்தான்.
இவைகளெல்லாம் நம்மை விட்டு சென்று விட்டால்.
अथ मर्त्यः பிறகு மரணத்திற்குட்பட்டவன்
अम्रुतः भवति – மரணமற்றவனாகிறான், அழிவற்றவனாக இருக்கிறேன் என்று
अत यत्र् ब्रह्म समश्नुतः इति – இங்கேயே, இப்பொழுதே பிரம்மத்தை அடைகின்றான்.
तद्यथा अहिनिल्वयनि – எவ்விதம் பாம்பின் தோல் சட்டை
वल्मीक – எறும்பு புற்றின் மீது; म्रुता – உணர்வற்ற ஜடமான பாம்புசட்டை
प्रतियस्ता सयीत इथि – பாம்பால் உரித்துபோடப்பட்டு இருக்கின்றதோ
एवम एतम इदम शरीरँ – அதுபோல ஞானிக்கு இந்த சரீரம் இருக்கின்றது.
நகமும் தலைமுடியும் இருக்குமிடத்தில் இருந்தால்தான் மதிப்பு அது கீழே விழுந்து விட்டால் அருவெறுப்பை தருபவைகளாக இருக்கும்.
अथ अयम असरीरः अम्रुतः प्राणः ஆகவே ஞானி சரீரமிருந்தும் சரீரமற்றவனாகவும், மரணமற்றவனாகவும், சாக்ஷி ஸ்வரூபமாகவாகவும் இருக்கின்றான்.
ब्रह्म एव तेजः एव : அதுவே பிரம்மனாகவும், சைதன்ய ஸ்வரூபமாகவும் இருக்கின்றது
वैदेह – தேகத்தின் மீது அபிமானமற்றவன்.

நம் மனதிலிருக்கும் ஆசைகளனைத்தும் நீங்கி விட்டால் மரணமற்ற நிலையை அடைந்து விடலாம் அதனால் பிரம்மத்தை அடைந்து விடலாம்.
இந்த நிலையில் உடம்பானது, உதிர்ந்து விட்ட பாம்பு சட்டையை போல போன்று ஜடமாக தோன்றும்,
ஆகவே ஞானி சரீரமிருந்தும் சரீரமற்றவனாகவும், மரணமற்றவனாகவும், சாக்ஷி ஸ்வரூபமாகவாகவும் இருக்கின்றான்.
அதுவே பிரம்மனாகவும், சைதன்ய ஸ்வரூபமாகவும் இருக்கின்றது.

ஸ்லோகம்-8 – ஞானமார்க ஸ்துதி – மோக்ஷத்திற்கான வழியின் பெருமை
வித்வத் அனுபவ பிரமானம்- ஞானியடைந்த அனுபவமே பிரமானம்
ஞானியின் கூற்று – எனக்கு யாருக்கும் கிடைக்காத பாதையில் பயணம் செய்வது.
अणुः पन्था माँ स्प्रुष्टो – சூக்ஷும மான ( இதுதான் சரியான பாதையென்று புரிந்து கொள்வதே கடினமானதாக இருப்பது ) மோட்சப் பாதை என்னை வந்தடைந்தது.
विततः पन्थाः – இந்த பாதை வெகுதூரம் செல்லும், நீண்ட நேரம் பயணம் செய்ய வேண்டிய பாதை அதிகமான காலம், பொறுமை, முயற்சி தேவைப்படுகின்ற பாதை
पुराणः – குரு-சிஷ்ய பரம்பரையாக வந்த ஞானம்.
अनुवित्तः मया – இந்தப்பாதையில் பயணம் செய்தால் அடையும் பலனானது என்னால் அடையப்பட்டுவிட்டது
तेन धीराः अपियन्ति ब्रह्मविदः – இந்த பாதையில் யாரெல்லாம் பயணம் செய்கின்றார்களோ அவர்கள் பிரம்மத்தை அறிந்தவர்களாக ஆகிறார்கள்.
स्वर्ग लॊकम अपियन्ति – சுவர்க்க லோகத்தை அடைகிறார்கள்.
इतः ऊर्ध्वँ विमुक्ताः भवन्ति – அவர்கள் சரீரத்தை விட்டபிறகு விதேக முக்தனாகிறார்கள்.

ஸ்லோகம்-9 – ஞானமார்க ஸ்துதி – மோக்ஷத்திற்கான வழியின் பெருமை
இந்த மோட்ச மார்க்கத்தில் நிறைய குழப்பங்கள் இருக்கின்றது.
तस्मिन – இந்த மோட்ச மார்க்கத்தில் இப்படிபட்ட
छुक्लँ – வெண்மையான நாடியின் வழியாக பயணம் செய்து
पिङ्गलम – சாம்பல் வர்ண நாடியின் வழியாக பயணம் செய்து
नील – நீல வர்ண நாடியின் வழியாக பயணம் செய்து
हरितँ – பச்சை வர்ண நாடியின் வழியாக பயணம் செய்து
लोहितँ – சிவப்பு வர்ண நாடியின் வழியாக பயணம் செய்து
அந்தந்த தேவதையை அடைந்து பிறகு மோக்ஷத்தை அடைகிறார்கள் என்று பலர் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
एषः पन्था இந்தப்பாதையானது
ब्रह्मणा हानुवित्तः தகுதியுடையவர்களுக்குத்தான் (சித்தஸுத்தி உடையவர்களுக்குத்தான்) இந்த பாதை புலப்படும்
तेन ऐति पुण्यक्रुत இந்த மார்க்கத்தில் வருபவர்கள் முதலில் கர்மயோகத்தினால் புண்ணியத்தை அடைகிறார்கள்,
தர்மத்தை கடைப்பிடித்து உயர்வடைகிறார்கள். இதுதான் முதல்படி
तैजसन ஒருமுகப்படுத்தப்பட்ட தூய்மையான, ஒளி பொருந்திய மனதை அடைகிறார்கள். இது இரண்டாவது படி.
ब्रह्मवित ஞானயோகத்தின் மூலமாக மூன்றாவதுப்படியான ஞானத்தை அடைகிறான்.
ऐति இறுதியாக பிரம்மத்தை அடைகிறான். பாதையின் முடிவை அடைகின்றான்.

ஸ்லோகம்-10
மோக்ஷத்தை அடைய வேண்டும் என்று நினைத்து தவறான பாதையில் செல்வோரிகளின் நிலைய விவரிக்கிறது.
யாரெல்லாம் அவித்யை வழியாக (அவித்ய உபாஸதே) செல்கின்றார்களோ அவர்கள் அடர்ந்த இருளைத்தான் அடைகிறார்கள்.
மோக்ஷம் அடையும் என்று நினைத்து தவறான அறிவை அடைந்தவர்கள் இதைவிட மோசமான இருளை அடைகிறார்கள்.
யாரெல்லாம் காம்ய கர்மத்தில் ஈடுபட்டு எந்த லோகத்தை அடைந்தாலும் அங்கே குறைவான சுகத்தைத்தான் அடைவார்கள்.
அதனால் வைராக்யம் அடையும் வாய்ப்பு அதிகம். உபாஸனையில் கிடைக்கும் பலனில் அதிக சுகம் கிடைக்கும்
ஆனால் வைராக்யத்தை அடையும் வாய்ப்பு குறைவு.

இந்த மந்திரத்தில் உள்ள அவித்யா என்ற சொல் காம்ய கர்மம், தியானம் செய்தல் போன்றவற்றை குறிக்கிறது.
வித்யா என்ற சொல் அபரா வித்யா அதாவது மோட்சத்தை அடையும் அறிவைத் தவிர மற்ற அறிவை அடைவது என்று பொருள் கொள்ள வேண்டும்.
அடர்ந்த இருள் என்பது கீழ்மையான பிறவியை அடைந்து துன்பத்தை அடைதல், ஆத்ம ஞானத்தை அடைய முடியாத நிலையை அடைதல்.

ஸ்லோகம்-11
अनन्दा नाम ते लोका – மகிழ்ச்சியற்ற உலகத்தையோ, சரீரத்தையோ அடைகின்றான் ( புழு, பூச்சி மற்றும் விலங்குகளாக பிறத்தல்)
तमस आव्रुतः – அறியாமையால் மூடப்பட்டவனாக , ஆத்மஞானம் அடையும் வாய்ப்பே இல்லாமல் இருத்தல்
अविद्वाँसः अबुधो – ஆத்மாவை அறியாதவர்கள், ஆத்மாவை அடையும் பாதையை அறியாதவர்கள், கீழான லோகத்தை அடைகிறார்கள்.

ஸ்லோகம்-12
இந்த மந்திரத்தின் விளக்கத்தை வித்யாரண்யர் அவர்கள் தனது பஞ்சதசி என்னும் நூலில்
திருப்தி தீபம் என்னும் அத்யாயத்தில் 290 ஸ்லோகங்களில் எழுதியிருக்கிறார்..
पुरुषः – சாதகன்; अयँ – அந்த பரமாத்மா; अस्मि इति – நானாக இருக்கிறேன்
आत्मानँ विजानीयात चेदि – தன்னை அறிவானே என்றால்
किमिच्छन् कस्य कामाय – எதை விரும்புவான், யாருடைய விருப்பத்திற்காக
शरीरम् अनुसँज्वरेत् – தன் சரீரத்தை துயரப்படுத்தி கொள்வான்?

ஒருவன் தன்னை பரமாத்மாவாக என்று அறிந்துகொண்டால் அவன் எதை விரும்புவான்,
யாருடைய விருப்பத்திற்காக தன் சரீரத்தை துயரப்படுத்தி கொள்வான்?
சொல் விளக்கம்
1. புருஷஹ – ஜீவாத்மா / மனிதன் / சாதகன்
ஜீவன் என்ற சொல்லில் மூன்று தத்துவங்கள் உள்ளது. அவைகள் 1.கூடஸ்தன் – மாறாத சைதன்யம்,
2. சிதாபாஸன் – பிரதிபிம்ப சைதன்யம் (மாற்றத்திற்குட்பட்ட பொய்யான சைதன்யம்), 3. சூட்சும சரீரம் – அந்தக்கரணம்.

கூடஸ்தனை ஏன் ஜீவனுடன் சேர்க்க வேண்டுமென்றால் சிதாபாஸன் இருக்கும்போது அதற்கு ஆதாரமான கூடஸ்தையும் எடுத்துக் கொள்ள வேண்டும்.
கூடஸ்தனை சேர்க்கவில்லை என்றால் மோட்சம் என்பது தன்னையே அழித்துக் கொள்கின்றா மாதிரி இருக்கும்.
இப்போது நம் கண்ணுக்கு தெரியாமல் இருந்தாலும் அதை சேர்த்துக் கொண்டால்தான்
இரண்டும் அழிந்தாலும் கூடஸ்தன் இருந்து கொண்டிருக்கும். ஜீவன் முக்தி நிலைவரை ஜீவாத்மாவை புருஷன் என்று எடுத்துக் கொள்ளலாம்.

2. சேத்: இங்கு இந்த சொல் ஆத்மாவை அதிக அறியும் வாய்ப்பு மிகவும் குறைவு என்பதைக் குறிக்கிறது
3. ஆத்மானம்: தன்னை என்று பொருள். நான் என்ற சொல்லுக்கு மூன்று விதமான பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
a. வாச்யார்த்தம்: முக்கிய அர்த்தம், எல்லோராலும் பயன்படுத்தப்படுகின்ற அர்த்தம் அகங்காரம் அதாவது சரீரத்தில் நான் என்ற எண்ணம்.
b. ஞானியின் அகங்காரம்: ஞானத்தை அடைந்தவனுக்கு நன்றாக தெரியும் நான என்பது கூடஸ்தனை குறிக்கின்றது.
ஆனால் விவகாரம் செய்யும் போது அகங்காரத்தைத்தான் பயன்படுத்துவான். இவனது அகங்காரம் பொய்யாக கோபப்படுவது போன்றதுதான்.
சாதாரண மனிதர்களிடத்தில் இது காண்பது மிகவும் துர்லபம் (அரிது)
c. ஞானி பயன்படுத்துவது: மஹாவாக்கிய உபதேசம் செய்து கொண்டிருக்கும்போது நான் என்ற சொல்லுக்கு கூடஸ்தனைத்தான் எடுத்துக் கொள்வார்.
பிறகு தன்னுடைய நிதித்யாஸனத்தின் போதும் நான் என்பதை தன் ஆத்மாவாகத்தான் எடுத்துக் கொள்வார்.
4. விஜானீயத்: நான் பிரம்மன் என்று அறிபவன் யார்? கூடஸ்தனா, சிதாபாஸனா, சூட்சும சரீரமா. பிரம்மன் நான் என்று
அறிந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை. சூட்சும சரீரமோ ஜடம் அதனால் அறிய முடியாது.
எனவே சிதாபாஸனோ அல்லது ஜீவனோதான் அறிபவன் என்று சொல்லலாம். அஹம் பிரம்மாஸ்மி என்று அறிபவன் சிதாபாஸன்.
பிரதிபிம்பமானது நிஜமான பொருளை விட வேறொன்றா அல்லது இரண்டுமே ஒன்றுதானா? என்று ஆராயும்போது எப்படி
பிரதிபிம்ப சூரியன் முழுமையாக வேறும் அல்ல முழுமையாக ஒன்றும் அல்ல அதேபோல புத்தியில் பிரதிபிம்பிக்கும் சைதன்யமான சிதாபாஸன்.
இவன் தன் மூலமான பிரம்மத்தில் அபிமானிக்கும் போது அறிபவனாகிறான்.
5. அயம்: பிரம்மன் என்னிடத்தில் நன்றாக பிரகாசிக்கின்றது, பிரம்மமே என்னுடைய ஆத்மாதான்.
இந்த மாதிரி புரிந்து கொள்கிறான் இதுவே அபரோக்ஷ ஞானம் (அயம்) இது அபரோக்ஷ வஸ்து – அருகில் இருக்கின்ற ஒரு பொருள்.
6. கிமிச்சன்: அனுபவிக்கப்படும் பொருள் இல்லை அதனால் ஆசை இல்லை. இவன் எதை அடைய ஆசைப்படுவான்?
இவனுக்கு ஆசைப்படும் விஷயங்கள், பொருட்கள் எதுவுமே இல்லை ஏனென்றால் எல்லாமும் மித்யாவாக தெரிவதால்,
அனுபவிக்க வேண்டிய பொருளோ, விஷயமோ இல்லை. ஜகத் மித்யா என்ற ஞானத்தினால் இவன் இவ்வாறு நினைக்கின்றான்.
7. கஸ்ய காமாய: யாருடைய பயனுக்காக இவன் துயரப்படுவான்? போக்த்ரு நிஷேதம் – அனுபவிப்பவன் இல்லை என்று தீர்மானித்தல்.
இந்த அறிவு ஆத்மாவினுடைய அஸங்கத்தை அறிந்து கொள்வதனால் வருகிறது. நான் யாருடனும் சங்கம் வைத்து கொள்ள மாட்டேன்
அனுபவிக்கப்படும் பொருளோடு உள்ள இந்திரியங்களின் சங்கத்தை விட்டு விடுவதால். நான் அஸங்கம், ஆத்மா அஸங்கம் என்ற
அறிவால் அனுபவிப்பவன் இல்லாமல் போய் விடுகிறான். தன்னுடைய இன்பம் அனுபவிப்பதற்குத்தான் உலகம் படைக்கப்பட்டிருக்கிறது
என்று அத்யாரோபம் செய்து பிறகு அதை நீக்கி விடுகிறது.
8. சரீரம் அனுசம்ஜ்வரேத்: ஸ்தூல சரீரத்தில் எண்ணற்ற நோய்களால் தாக்கப்படுகிறது.
சூட்சும சரீரத்தில் காம-க்ரோதங்களினால் அனுபவிக்கும் சம்சாரம், சம-தமாதிகளை அடையாத நிலையில் ஏற்படும் சம்சாரம்.
காரண சரீரம்- துக்கத்டிற்கு விதையாக இருக்கிறது. நோயை நீக்க வேண்டுமென்றால் சரீரத்தைத்தான் நீக்க வேண்டும்.
சம்சாரம் போக வேண்டுமானால் மூன்று சரீரத்தையும் நீக்க வேண்டும். அதில் உள்ள அபிமானத்தை நீக்க வேண்டும்.
இப்படிபட்ட நிலையில் துயரம் நீங்கி மனநிறைவு வந்தடையும்.

வித்யாரண்யரின் விளக்கம்:
சம்சாரத்திலிருந்து மோக்ஷம வரை ஏழு படிகள் உள்ளதாக விளக்கியுள்ளார். அவைகள்
1. அக்ஞானம் – அறியாமை
2. ஆவரணம் – அக்ஞானத்தை வெளிப்படுத்துதல், இது எனது அறியாமை என்று தெரிந்து கொள்ளுதல்
3. விக்க்ஷேபம் – சோகரூபம் – துயரப்படுதல்
4. பரோக்ஷ ஞானம்
5. அபரோக்ஷ ஞானம்
6. சோகநிவிருத்தி
7. திருப்தி – மனநிறைவு
பத்தாவது மனிதன் கதையில் இந்த ஏழு சொற்களின் விளக்கத்தைப் பொருத்தி காட்டுகிறார்.
1. அக்ஞானம் – பத்தாவது மனிதன் காணவில்லை
2. ஆவரணம் – எண்ணியவுடன் பத்தாவது மனிதன் இல்லையென்று அறிதல்
3. விக்க்ஷேபம் – பத்தாவது மனிதன் தொலைந்து விட்டான் என்ற துயரம்
4. பரோக்ஷ ஞானம் – வேறொருவன் பத்தாவது மனிதன் இருக்கின்றான் என்று சொல்லும்போது அறிந்து கொள்வது
5. அபரோக்ஷ ஞானம்- அவனை வரிசையில் நிற்க வைத்து எண்ணியவுடன், தான்தான் பத்தாவது மனிதன் என்று அறிந்து கொள்கின்றான்.
6. சோகநிவிருத்தி – மனதிலடைந்த சோகம் நீங்குதல்
7. திருப்தி – அதனால் மனநிறைவு அடைதல்
இதேபோல எல்லோருக்கும் ஆத்மாவை அறியாமல் இருக்கின்றார்கள். இதே ஜீவன் நான் யார் என்று தெரியவில்லை என்று குழம்புகின்றான்.
இதுவே விக்ஷேபம். சம்சாரம் என்பது விக்ஷேபம், பரோக்ஷ ஞானத்தினால் நித்தியமான பிரம்ம இருக்கின்றது என்று அறிகின்றான்.
பிரம்மனாக நான் இருக்கின்றேன் என்ற ஞானம் அபரோக்ஷ ஞானம் அதனால் துயரங்கள் நீங்கி மனநிறைவை அடைகின்றான்.
இதில் முதல் மூன்று நிலைகள் சம்சாரத்தை விளக்குகின்றது. 4 & 5 நிலைகள் மோக்ஷ சாதனமாகவும், 6 & 7 மோக்ஷ பலனையும் விளக்குகிறது.

பரோக்ஷ ஞானம் – உபநிஷத்தினுடைய உபதேசத்திலிருந்து கிடைக்கின்றது. பிரம்மத்தைப் பற்றி இருப்பை சொல்கின்ற வாக்கியத்திலிருந்து கிடைக்கிறது.
அபரோக்ஷ ஞானம் – மஹா வாக்கியத்திலிருந்து இந்த அறிவை அடைகிறோம். பதார்த்த ஞானம் : தத்வமஸி என்ற வாக்கியத்தில்
உள்ள பதங்களின் உண்மையான பொருளை தெரிந்து கொள்ளுதல்.
லட்சியார்த்தம் – த்வம் – இரண்டு அர்த்தம் – அனாத்மாவை நீக்கி புரிந்து கொள்வது.
தத் பதத்தில் உலகத்தை நீக்கி அதற்கு ஆதாரமான பிரம்மத்தை எடுத்துக் கொள்ளுதல். அஸி – இரண்டையும் ஐக்கியப்படுத்தி ஞானம் பெறுவது.

ஸ்லோகம்-13
अस्मिन सँदॆह्यॆ – இந்த உலகமானது அக்னியால், வாயுவால், நீரால், ப்ருதிவியால் துயரப்படுத்தப்படுகிறது.
गहनँ – அனர்தத்தை கொடுக்கின்ற, விவேகத்திற்கு எதிராக இருக்கின்ற, துயரத்தை அடையும் நிலையிலுள்ள சரீரம்
आत्मा प्रविष्टः – ஆத்மா இந்த சரீரத்தில் நுழைந்து தங்கியுள்ளது.
यस्य – இந்த அதிகாரி
अनुवित्तः – கஷ்டமான இந்த உடலில் நுழைந்த ஆத்மாவுக்குள் இவன் நுழைந்து விட்டான். அதை அடைந்தும் விட்டான். ஞானத்தால் ஆத்மாவை அடைந்து விட்டான்.
प्रतिबुद्धः – மனதில் எழும் எண்ணங்களுக்கு எல்லாம் ஆத்மாவே சாட்சியாக இருப்பதை அறிந்துள்ளான்.
இப்படிபட்ட சரீரத்திற்குள் இருக்கும் ஆத்மாவை இப்படியாக அறிந்து கொண்டவன்.
सः विश्वक्रुत् – அவன் அனைத்தும் செய்து முடித்தவனாகிறான்
सः सर्वस्य कर्ता – இந்த ஞானியே பரமாத்வாகின்றான். அனைத்துக்கும் கர்த்தாவாகிய ஈஸ்வரனேதான் நான் என்ற நிலையை அடைகிறான்.
तस्य लोकः – அவனுடைய உலகம் பிரம்மமேதான். இந்த பொய்யான உலகம் அவனுடைய-தாக இருக்காது. அவன் தன்னை பிரம்மாகவே நினக்கின்றான்
स उ लॊक एव – அவனே உலகம், அவனே அனைத்துமாக இருக்கின்றான்.

ஸ்லோகம்-14
மனித ஜென்மத்தின் உயர்வை இந்த மந்திரம் உரைக்கிறது. ஞானி நான் அடைய வேண்டியதை அடைந்து விட்டேன் என்ற மனநிறைவுடன் இருக்கின்றான்.
इह एव सन्तः – இந்த பிறவியில் இந்த சரீரத்தில் இருந்துக் கொண்டு
अथ विद्मः – எப்படியோ அறிந்துகொண்டும்
तद वयँ – அந்த பிரம்மத்தை நாங்கள்
न चेद् अवेदिः – ஒருவேளை நாங்கள் அறியாமல் இருந்திருந்தால்
महति विनष्टि – அதனால் அடையும் இழப்பு மிகப்பெரியது.
ये तद् विदुः – யாரெல்லாம் இந்த ஆத்மாவை அறிகிறார்களோ
ते अम्रुतस्य भवन्ति – அவர்கள் மரணமற்ற நிலையை அடைவார்கள்
अत तत्रे दुःखमेव अपियन्ति – அதை அறியாதவர்கள் துயரத்தைத்தான் அடைகின்றார்கள், சம்சார வலைக்குள் இருப்பவர்கள் பிறவி சக்கரத்தில் உழன்று கொண்டிருப்பார்கள்.

ஸ்லோகம்-15
यदा एतम आत्मानँ – எப்பொழுது இந்த ஆத்மாவை
देवँ अनुपश्यति – ஈஸ்வரனாக அறிகின்றார்களோ குருவினுடைய துணைக்கொண்டும், பிரமானத்தின் மூலமாக வந்த ஞானம்
अञ्जसा – அபரோக்ஷமாக, நேரிடையாக சந்தேகமில்லாமல் அறிந்து
ईशानँ – ஈஸ்வரனாக இருக்கின்ற தேவன்
भुतभव्यस्य – மூன்று காலத்திலும் அனுபவிக்கும் விஷயங்களை தருகின்ற ஈஸ்வரன்
न ततो विजुगुप्सते – இப்படிபட்ட ஈஸ்வரனிடமிருந்து தன்னை காத்துக் கொள்ள விரும்பமாட்டான்.
அவரிடம் பயம் கொள்ள மாட்டான். காரணம் அவர் தன்னிடமிருந்து வேறுபட்டவர் என்று நினைக்காததினால் இவனுக்கு இந்த நிலை.
न ततो विजुगुप्सते – யாரையும், தன்னையும் சேர்த்து நிந்திக்க மாட்டான். யாரையும் குறைக்கூற மாட்டான். யார் மீதும் வெறுப்புக் கொள்ள மாட்டான்.

ஸ்லோகம்-16
இதில் ஈஸ்வர ஸ்வரூபம் விளக்கப்படுகிறது. காலத்தை வென்றவர். காலமே அவரின் ஆணைக்கு கட்டுபட்டு இருக்கிறது. அவருக்கு கட்டுபட்டு செயல்படுகிறது.
यस्माद् – எந்த ஈஸ்வரனுக்கு; अर्वाक् – கீழே பணிந்து, கட்டுபட்டு
सँवस्तरः परिवर्तते – கால தத்துவம் செயல்பட்டு வருகின்றது
ज्योतिषाँ ज्योतिः – ஒளிகளுக்கெல்லாம் ஒளியாக இருக்கின்றார்
अम्रुत्वँ – நித்தியமானவராக இருப்பவர்
तद दॆवाः – இப்படிபட்ட ஈஸ்வரனை தேவர்கள்
आयुहो उपासते – ஆயுள் என்று உபாஸிக்கிறார்கள்.
ஈஸ்வரனை ஆயுள் கொடுப்பவர் என்று உபாஸனை செய்தால் நீண்டநாள் வாழலாம்.

ஸ்லோகம்-17

அனைத்திற்கும் ஆதாரமாக இருப்பது ஆத்மா, நான் அதுவாக இருக்கிறேன்.
யஸ்மின் – எந்த பிரம்மனிடத்தில்;
பிரதிஷ்டிதா – தாங்கியிருப்பது; சார்ந்திருப்பது;
ஆகாஷஹ – அந்த மாயா, அவ்யாக்ருதம். வெளித்தோற்றத்டிற்கு வராத பிரபஞ்சம்.
பஞ்ச, பஞ்ச ஜனாஹ – வெளித்தோற்றதிற்கு வந்தவைகள், இது ஐந்து வகையாக பிரிக்கப்படுகிறது. அவைகள்,
1. ஆதித்ய முதலிய ஜோதிகள்.
2. பிராண தத்துவம்
3. கண்
4. ஸ்ரோத்ரம்
5. மனம்
வித்துவான் – இப்படி என்னை நான் அறிந்து காரணத்டினால்
அம்ருதஹ _ நான் மரணமற்றவனாக இருக்கிறேன், நித்தியமான பிரம்மனாக இருக்கின்றேன்.

ஸ்லோகம்-18
தே – யார், நிசித்யுஹ – நிச்சயம் செய்கிறார்களோ, புராணம் – அனந்தம், நித்தியம், ஸனாதனம்;
அக்ரியம் – அநாதி, ஆதி-அந்தம் இல்லாத பிர்ம்மத்தை பிராணனுக்கு பிராணனாக, கண்ணுக்கு கண்ணாக, காதுக்கு காதாக,
மனதுக்கு மனதாக யார் அறிகிறார்களோ அவர்கள் பிரம்மத்தை நிச்சயமாக உறுதியாக அடைந்தவகளாகிறார்கள்.
இந்திரியங்கள், மனம் சுபாவமாக ஜடம், ஆனால் இவைகளிட்த்தில் சேதனதன்மை இருப்படை பார்க்கிறோம்.
எனவே இவைகள் செயலுக்கு இவைகளுக்கும் வேறாக ஒன்று இருப்பதை அறிய முடிகிறது அதுவே ஆத்மா என்று அறிந்து கொள்ளலாம்,
இதுவே இவைகளுக்கு ஆதாரமாகவும் இருக்கிறது.

ஸ்லோகம்-19
ஆத்மஞானத்துக்கு பொதுவாக இருக்கின்ற கரணம் எது? \
ஜகத் மித்யா, இந்த மித்யாத்வ ஞானம் இல்லையென்றால் சம்சாரத்தைத்தான் அனுபவித்துக் கொண்டிருக்க வேண்டும்.
மனஸா ஏவ அனுத்ரஷ்டவ்யம் – இந்த ஆத்மாவானது மனதால்தான் அறிய முடியும். எனவே இதுதான் பொதுவாக கரணமாக இருக்கிறது.
ஆத்மா ஞானமும், அனாத்மா ஞானமும் மனதினாலேதான் அடைவதால் இது பொதுவாக இருக்கிறது.
இந்த மனதை தூய்மையாக்க வேண்டும். அதற்கு சாதன சதுஷ்டய சம்பத்தியை அடைந்திருக்க வேண்டும்.
சாஸ்திரம், குரு பிரமானம் மூலம் ஆத்மாவை மனதினால்தான் அடைய முடியும்.
நேஹ நாநா அஸ்தி கிஞ்சன – த்வைத (வேற்றுமைகள்) கொஞ்சமும் இல்லாமலிருக்கின்ற
இஹ – இந்த பிரம்மனிடத்தில்

பிரத்யக்‌ஷ பிரமானம் ஒரு பொருளினுடைய தோற்றத்தை மட்டும்தான் காட்டுகிறது. மனதுதான் இது சத்யமா இல்லையா என்று தீர்மானிக்கும்.
பிரத்யக்‌ஷ பிரமானம் இருப்பைக் காட்டுகிறது. சாஸ்திரம் அந்தப்பொருளின் சத்யத்வத்தை உபதேசிக்கிறது.

யார் இந்த பிரம்மனிடத்தில் விதவிதமான வேற்றுமைகளை பார்க்கிறார்களோ அவர்கள் மரணத்திலிருந்து விடுதலையடைவதில்லை,
பிறப்பு-இறப்பு சுழலில் சிக்கிக் கொண்டு சம்சாரத்தை அனுபவிப்பார்கள்.

ஸ்லோகம்-20
ஏகதா – அத்வைத (இரண்டற்ற) தன்மையுடையதாக ஆத்மாவை அறிய வேண்டும்.
ஏவ அனுதிரஷ்டவ்யம் – இதற்குள்ளும் வேற்றுமையில்லை.
ஏதத் அப்ரமேயம் – இதை அளவிடமுடியாது. குணங்களைத்தான் அளக்க முடியும். ஆத்மா குணங்களற்றது. எந்தப்பிரமானத்தினாலும் அறிய முடியாது.
த்ருவம் – என்றும் இருப்பது; நித்தியமானது
விரஜஹ – தூய்மையானது (ரஜஹ – அசுத்தமானது) தர்மமும்-அதர்மமும் அற்றது.
பரஹ-ஆகாஸாத் – வெளித்தோற்றதிற்கு வராத மாயைக்கு அப்பாற்பட்டது.
அஜஹ – பிறப்பற்றது; மாற்றங்களற்றது.
மஹான் – பரிணாம வளர்ச்சியற்றது.
த்ருவஹ – மரணமற்றது.
இப்படிப்பட்ட லட்சணங்களையுடையது என்று ஆத்மாவை அறிய வேண்டும்.

ஸ்லோகம்-21
தீரஹ – சத்துவகுண பிரதானமாக கொண்ட சாதகன்’
தம் ஏவ – முன்னால் சொல்லப்பட்ட அந்த ஆத்மாவை
விக்ஞாய – சந்தேகமில்லாமல், தெளிவாக அறிந்து (சிரவணம், மனனம்)
ப்ரக்ஞாம் குர்வீத – நிதித்யாஸனத்தில் ஈடுபட்டு உறுதியான ஞானத்தை அடைய வேண்டும்,
ப்ராஹமணன் – பிரம்மத்தை அறிந்தவன்
ஜிக்ஞாஸா – ஞானத்தை அடைய வேண்டும் என்ற வேட்கை
பரிஸமாப்தி – அந்த ஆசையை நிறைவேற்றி விட வேண்டும்,
குர்வீத – ஈடுபட வேண்டும்,
நிதித்தியாஸத்தினால் பிரம்மத்தை அடைய வேண்டும் என்ற ஆசையும் நீங்கி விட வேண்டும். ஆத்மா வெளிப்பட்டுள்ள நிலையை அடைய வேண்டும்.
ந அனுத்யாயாதி பஹூஞ்சப்தான் – மற்ற சாஸ்திரங்களை, த்வைதத்தை பற்றி பேசுகின்ற சாஸ்திரங்களை தியானித்துக்கொண்டோ,
ஆழ்ந்து படித்துக்கொண்டோ இருக்க கூடாது. அப்படி செய்து கொண்டிருந்தால் ஜகத் மித்யா என்ற அறிவு ஏற்படாது.
மற்ற சாஸ்திரங்களை அளவாக படிக்கலாம் என்று எடுத்துக் கொள்ள வேண்டும். மற்ற சப்தங்களை கேட்பதை நிறுத்தி விட வேண்டும்,
வாச்ஷ் விக்லாபனம்(சிரமம்) – அப்படி செய்யாவிட்டால், உன்னுடைய வாக்கு இந்திரியத்திற்கு
கஷ்டத்தைத்தான் கொடுத்து சோர்வை ஏற்படுத்தி விடும், காலமும் வீணாகி விடும்.

ஸ்லோகம்-22
இந்த மந்திரத்தில் 5 வகையான கருத்துக்கள் அடங்கியுள்ளது.
1. ஜீவ-பிரம்ம ஐக்கியம்.
2. ஈஸ்வரனுடைய, ஞானியுடைய பெருமை,
3. சாதனங்கள்
4. நிஷேதத்தின் மூலமாக பிரம்ம ஸ்வரூப விளக்கம்
5. ஜீவன் முக்தி
சங்கரரின் அறிமுகம்
பந்தமும், மோக்‌ஷமும் ஹேதுவுடன் விளக்கப்படுகிறது. பந்தமும் அதற்குக் காரணமும்,
மோக்‌ஷமும் அதற்கு காரணமும் விளக்கப்பட்டுள்ளது.
பந்த த்திற்கு காரணம் அவித்யா இதுவே ஆசையை தூண்டிவிட்டு அதை அடையும் செயலிலும் ஈடுபடுத்துவதால்
அதனால் விளையும் சுக-துக்கங்களை அனுபவிப்பதுதான் சம்சாரம் எனப்படும்.
மோக்‌ஷத்திற்கு காரணமாக இருப்பது ஜீவ-பிரம்ம ஐக்கிய அறிவும், ஜகத் மித்யா என்ற அறிவும்தான்.

விசாரம்:
முழு வேதமே ஜீவ-பிரம்ம ஐக்கியம் என்ற ஞானத்தை (மோக்‌ஷம்) அடைவதற்கு உருவாக்கப்பட்டது. விஜியுக்தஹ – உருவாக்கப்பட்டது.

பூ.ப – உபநிஷத் வேண்டுமானால் அப்படி இருக்கலாம். ஆனால் கர்ம காண்டம் அப்படி இல்லை.
பதில் கர்ம காண்டத்தைப்பற்றி விளக்கும்போது அதன் உள்நோக்கத்தை பார்த்தால் மோட்சத்தை உபதேசிக்க வேண்டும் என்பதில்லை.
கர்ம காண்டம் ஒரு சாதனமாக பாதையாக சொல்லப்பட்டுள்ளது. மோட்சம் என்ற ஒன்றுதான் புருஷார்த்தம், மற்றதெல்லாம் இதை அடைவதற்கான படிகள்

மந்திர விளக்கம்:
ஸ்ஹவா – அவனே; ஏஷ – இவன், பிரம்மமே இந்த ஜீவன்.
மஹான், அஜஹ – பூர்ணமானவன், பரிச்சேதமற்றவன் (தேச காலத்தால் வரையறுக்கப்-படாதவன்), பிறப்பு-இறப்பற்ற, எந்தவிதமாற்றமுமடையாதவன்
ஆத்மா – நித்தியமான, சத்ய வஸ்து
யோ அயம் விக்ஞானமய – இது சைதன்ய மயம் – சைதன்ய ஸ்வரூபம்.
பிரானேஷு- இந்திரியங்களுக்கு அருகிலிருந்துக் கொண்டு பிரகாசித்துக்கொண்டிருப்பது.
யஹ ஏஷஹ அந்தக் ஹ்ருதய – நம்முடைய சூட்சும சரீரத்திற்குள் எந்த ஆகாசம் (எல்லா இடத்திலும் வியாபித்து,
ஒளிந்து கொண்டிருப்பவன்) இருக்கிறதோ அதனுள்ளே ஒடுங்கி உறங்குகின்றான்.

ஸர்வஸ்ய வஷி – எல்லாவற்றையும் தன் வசத்தில் வைத்திருப்பவன்.
ஸர்வஸ்ய ஈஷனா – எல்லாவற்றையும் இவனே ஆள்பவன்.
ஸர்வஸ்ய அதிபதி – எல்லோரையும் விட சக்திமானாக, பலசாலியாக இருக்கிறான்.
ஸஹ ந ஸாதுநா கர்மனா – இப்படிபட்ட ஞானியானவன் புண்ணிய கர்மத்தினால் புதியதாக வேறெந்த பலனும் தேவையில்லை.
இப்போது இவன் உயர்ந்த நிலையில் இருப்பதால்.
அஸாதுனா- பாவ கர்மத்தினர்; கன்னியான – கீழான நிலைக்கும் வருவதில்லை
மேலே கூறிய குணங்களனைத்தும் ஈஸ்வரனுக்கும், ஞானிக்கும் பொருந்தும்.
ஏஷஹ சர்வேஸ்வரன் – ஞானியும், ஈஸ்வரனும் ஸர்வம் சக்தியுடையவர்கள்
ஏஷஹ பூதாதிபதி – அனைத்து பூதங்களுக்கும் தலைவனாக இருக்கின்றான், எல்லோருக்கும் இருப்பக் கொடுத்தவராகிறார் ஈஸ்வரன்.
பூதபாலஹ – அனைத்து ஜீவராசிகளையும் பாதுகாப்பவனாக இருக்கிறான். இவன் தன்னையும் துயரப்படுத்தப்படுத்தமாட்டான்;
மற்றவர்களுக்கும் துயரத்தைக் கொடுக்கமாட்டான். ஈஸ்வரன் எல்லா ஜீவர்களுக்கும் சைதன்யத்தைக் கொடுப்பவர்.
ஏஷ ஸேது (பாலம், அணைக்கட்டு, வரப்பு ) – விதரனஹ – பாதுகாத்தல்
லோகானாம் அஸம்பேதாய – இந்த உலகத்தில் எந்த குழப்பமும் இல்லாமல் தத்தம் நியதிகளை பின்பற்றி வாழச்செய்வது,
உலகம் சீராக இயங்குவதற்கு பாலமாக இருப்பவர்.

சாதன சதுஷ்ட சம்பத்தியை உபதேசிக்கும் மந்திரப்பகுதி.
ஸ்வதர்ம அனுஷ்டானம் (கர்மயோகம்) – கர்ம அனுஷ்டானம், கர்மத்தை சரியான பாவனையுடன் அனுஷ்டிக்க வேண்டும்.
பிராமணாஹா – பிராமணர்கள், சான்றோர்கள், மனத்தூய்மையுடையவர்கள், தர்மப்படி வாழ்பவர்கள்.
விவிதி3ஷந்தி – அறிய ஆசைப்படுக்கின்றார்கள்.
தம் ஏதம் – அந்த இந்த – பரமாத்வான ஜீவாத்மாவை
ஆத்மாவை அறிய வேண்டும் என்ற ஆசை திடமாகும் போது நம்மை செயலுக்கு தூண்டி விடும்.
சாமான்யமக இருக்கின்ற ஆசைய விசேஷமானதாக உறுதிப்ப்டுத்த வேண்டும். இதற்கு எது சாதனம்?
வேதிதம் – அறிய வேண்டும்; இச்சா – ஆசை
அறிவதற்கு எது சாதனம்? ஆசைக்கு எது சாதனம்?
இந்த ஆசையே அறிவதற்கு முக்கிய சாதனமாக இருக்கிறது. குருவும் சாதனமாகின்றார். சாஸ்திரமும் சாதனமாகிறது.
சூழ்நிலைகளும் சாதனமாகின்றது. ஆத்ம தத்துவத்தை அறிய வேண்டும் என்ற ஆசைய வளர்த்துக் கொள்ள உதவும் சாதனங்கள்
வேத அனுவசனம், யக்ஞம், தானம், தபஹ.
வேத அனுவசனம் : பிரம்மாச்சர்ய ஆசிரமத்தில் உள்ளவர்களின்
ஸ்வதர்மம் : வேத சாஸ்திரத்தை படிக்க வேண்டும் (ஸ்வாத்யாயம்)
படிப்பது மாணவனது ஸ்வதர்மம். வேத சாஸ்திரத்தை குருவின் உபதேசம் மூலம் அறிந்து கொண்டு அந்த ஆசையை வளர்த்துக் கொள்ளுதல்,
தர்ம மீமாம்சம் என்று அறிந்து கொள்ளுதல். வேதத்தை படித்தல், ஓதுதல் வேதம் உரைக்கும் தர்மத்தை விசாரம் செய்தல்.
யக்ஞம், தானம் – இல்லறத்தில் இருப்பவர்களுக்கு பிரம்மத்தை பூரணமாக அறிய வேண்டும் என்ற ஆசையா நிலைநிறுத்த வேண்டுமானால்
யக்ஞம், தானம் செய்ய வேண்டும்.
வானபிரஸ்தாசிரமம் – அவர்கள் தவத்தினால் அதை அடைய முயற்சி செய்ய வேண்டும்.
கிரகஸ்த ஆசிரமத்தில் இருப்பவர்களுக்கு யக்ஞம், தானம் இவைகள் முக்கிய சாதனங்களாக இருக்கின்றது.
யக்ஞம் – இஷ்டா, பூர்த்தம், தத்தம்.
இஷ்டா – வைதிக கர்மங்கள் – யாகம், ஸ்மார்த்தம் (ஸ்மிருதியில் கூறப்பட்ட கர்மங்கள்), ஸ்ரௌத்தம் (ஸ்ருதியில் கூறப்பட்ட கர்மங்கள்).
பூர்த்தம் – சமுதாய சேவை
தத்தம் – மற்றவர்களுக்கு உதவி செய்தல் (அபயம் கொடுத்தல்)
யக்ஞமானது தேவயக்ஞம், ரிஷியக்ஞம், பித்ருயக்ஞம், மனிதயக்ஞம், விலங்குகளுக்கு செய்யும் யக்ஞம் என்று ஐந்து வகையாக உள்ளது.
தானம் – தன்னிடம் இருக்கும் பொருளை பகிர்ந்து கொடுத்தல் (லோபம் நீங்கிவிடும்)
கர்மயோகப்படி வாழ்வது
இவைகள் யாவும் கிரகஸ்த ஆசிரமத்தினருடைய கடமைகள்.

வானபிரஸ்த ஆசிரமத்தில் உள்ளவர்களின் பிரதான கடமை தவம் செய்து கொண்டிருப்பது-தான்.
அநாஸ கேன – நம்மை அழிக்காது செய்யும் தவம். தவத்தின் முடிவில் சக்தி அதிகமாக வேண்டுமேயொழிய குறையக்கூடாது.
எளிமையான வாழ்க்கை வாழ வேண்டும் அதிக காலம் தவத்தில் ஈடுபட வேண்டும்.
இந்த கடமைகள் மூலம் மோட்சத்தை அடைய என்ற ஆசையை வளர்த்துக் கொள்ளவேண்டும்.
யக்ஞ, தானம், தவம் நிதித்தியாஸனம் வரை நம்மை கொண்டு செல்லும்.
ஏதம் ஏவ விதி3த்வா – இந்த ஆத்ம தத்துவ ஞானத்தை அறிந்தவன்
முனிஹி பவதி – முனிவனாக உயர்வடைகிறான்.
ந கர்மி – செயலில் செய்வதிலிருந்து அமைதியடைகின்றான்.
ஏதம் ஏவ – இதை அறிய விரும்புபவர்கள்; ப்ரவ்ரஜினஹ – தியாகத்திற்கு தயாரானவர்கள்
லோகம் – ஆத்ம தத்துவத்தை; இச்சந்தி – அதையே லட்சியமாக கொண்டவர்களாக,
ப்ரவ்ராஜினஹ – தியாகத்திற்கு தயாராக இருப்பவர்கள்,
ப்ரவிரஜந்தி – சந்நியாஸ ஆசிரமத்திற்கு சென்று விடுவார்கள்.
சந்நியாஸத்தை இரண்டு வகையாக அடைகின்றனர்.
1. கிரம சந்நியாஸம் – பிரம்மச்சர்யம் à இல்லறம் à வானபிரஸ்தம் à சந்நியாஸம் என்ற படிகளின் வழியே அடைவது.
2. அகிரம சந்நியாஸம் – பிரம்மச்சர்யம் à இல்லறம் à சந்நியாஸம் அல்லது பிரம்மச்சர்யம் சந்நியாஸம் என்று
இருவகையாக சந்நியாஸத்தை அடைவார்கள்

சந்நியாஸம் இரண்டு வகையாக இருக்கிறது. அவைகள் 1. விவிதிஷா சந்நியாஸம், 2. வித்வத் சந்நியாஸம்.
விவிதிஷா சந்நியாஸம் – விவேகம், வைராக்கியம் போன்ற ஞானத்திற்கான தகுதியை வளர்த்துக் கொள்வதற்காக எடுத்துக்கொள்வது.
வித்வத் சந்நியாஸம் – சிரவண, மனனத்தை முடித்தப்பிறகு எடுத்துக்கொள்வது/ இவர்கள் பிரதான கடமை நிதித்தியாஸனம் செய்வதுதான்.
நிதித்தியாஸனத்தை முடிந்து ஞானத்தை அடைந்தாலும் பிராரப்த கர்மத்தை கழிப்பதற்காக எடுத்துக் கொள்வது.

ஏதத்தஸ்ம வை பூர்வே விதிவாம்ஸ – இதற்கு முன் வாழ்ந்த ஞானத்தில் ஆசை கொண்டவர்கள், உலகத்தின் நிலையற்ற
தன்மை தெரிந்து கொண்டவர்கள், உணர்ந்தவர்கள்.
பிரஜாம் எ காமயந்தே – இல்லறத்தை விரும்புவதில்லை,
கிம் ப்ரஜயா கரிஷ்யாமே – இவர்கள் ஆசையற்றவர்கள், இந்த பிரஜைகள் என்ன செய்யப் போகிறார்கள் என்று நினைக்கிறார்கள்.
யேஷாம் நோ அயம் ஆத்மானாம் லோக இதி – நமக்கு இந்த ஆத்மாதான் லட்சியம், அதை அடைவதுதான் பரம் லட்சியம்
என்று நினைத்து சந்நியாஸ ஆசிரமத்திற்கு செல்கிறார்கள். அனாத்மா ஆசைகளான புத்திரன், சொத்து, உலகம்
போன்றவைகளிலிருந்து விட்டு விலகி சந்நியாஸ வாழ்க்கையை மேற்கொள்கிறார்கள். புத்திரன் மீதுள்ள ஆசையானது
சொத்தை அடைய வேண்டும் என்ற ஆசையை தூண்டிவிடுகிறது, பிறது உலகத்திலிருகின்ற இன்பத்தை தருகின்ற பொருட்களை
அடைய வேண்டும் என்று செல்கிறது, இவ்வாறு சாத்தியத்தின் மீதுள்ள ஆசை, சாதனத்தின் மீதுள்ள ஆசை என்று இரண்டாக பிரிக்கப்படுகிறது.

ஸஹ ஏவ ஆத்மா நேதி நேதி – அனைத்து அனாத்மாக்களும் நீக்கப்பட்டு, நீக்கமுடியாமல் மீதி இருப்பதுதான் ஆத்மா.
இந்திரியங்களால் கிரகிக்கமுடியாதது, எதனோடும் ஒட்டாது, அழிக்க முடியாததாக இருப்பது.

ஞானியானவன் ப்ராரப்தம் இருக்கின்றவரை இந்த உலகில் வாழ்ந்து கொண்டிருப்பான்.
இரண்டுவிதமான எண்ணங்கள் அவனை பாதிப்பதில்லை. இதனால் தூண்டப்பட்டு தேகத்தின் அபிமானத்தால்
நான் பாவத்தை செய்தேன் என்கின்ற எண்ணமே வருவதில்லை. நான் புண்ணியத்தை செய்தேன் என்றும் நினைப்பதில்லை.
இவன் புண்ணிய-பாவங்களிலிருந்து விடுபட்டு இருக்கின்றான். இவனால் செய்யப்பட்டதும், செய்யப்படாததும் அவனை பாதிக்காது.
சாஸ்திரம் விதித் த நித்ய கர்மங்களை செய்யாமல், செய்து கொண்டிருப்பதாலும் அவனுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுத்தாது.
பிரம்மவிதி அகர்ம சம்பந்தி – பிரம்மத்தை அடைந்தவனுக்கு எந்த கர்மத்தில்லும் சம்பந்தமில்லை.
கர்மபலனிலும் சம்பந்தமில்லை. எந்தவித குற்ற உணர்வும் இல்லாதிருப்பான். ந தபத் – வாட்டுவதில்லை.

ஸ்லோகம்-23
ஏஷஹ மஹிமா – இந்த பெருமையானது அவன் முக்தியுடன் இருப்பதே. இது ஆசையற்றது, அழிவில்லாதது, என்றும் நிலையாக இருப்பதுதான்.
ந வர்ததே கர்மனா – இந்த பெருமையானது செயலினால் மேலும் பெருகுவதில்லை, ஏனெனில் அவன் அடைந்திருப்பது
மிகவும் உயர்ந்த நிலை அதற்கு மேலே ஒன்றும் இல்லை.
நே கனியான் – அது செயல் செய்வதினாலும் குறைவதில்லை. அவன் அடைந்திருக்கின்ற நிலை ஜீவன் முக்தநிலை,
அதுவே அவனது சுபாவமாகவே மாறியிருக்கிறது. இதுவே ஒருவன் அடைய வேண்டிய செல்வம், தனது ஸ்வரூபத்திலிருப்பதுதான், அதுதான் நிலையானது.
தஸ்ய ஏவ – மேற்கூறிய பெருமையுடைய முமுக்‌
நமக்கு லட்சியத்தில் பெருமை தெரிந்தால்தான் அதை அடைய வேண்டுமென்ற ஆசை, உற்சாகம் உண்டாகும்.
தம் விதித்வா – இந்தப்பெருமையை உணர்ந்த நிலையானது நம்மை அந்த லட்சியத்தை அடையும் முயற்சியில் ஈடுபடுத்தும்.
எஸிப்யதே கர்மணா பாபகேன – அவனும் பாவ-புண்ணியங்களை கொடுக்க கூடிய கர்மங்களிலிருந்து விடுபடுவான்.

சாதனப்பகுதி:
தஸ்மாத் ஏதம் விது3: எந்தக்காரணத்தால் இங்கு சொல்லப்பட்ட பெருமையை அடைய வேண்டுமோ அதை உணர்ந்து
முமுக்‌ஷுயுடையவன் விவேகம், வையாக்கியம், முமுக்‌ஷுத்வத்தை அடைவான்.
சாந்தஹ – மனக்கட்டுப்பாடு, அந்தக்கரண கட்டுப்பாடு. அந்தக்கரணத்தை அமைதிபடுத்த வேண்டும். சஞ்சலங்களை நீக்கி அமைதியுடன் வைத்திருக்க வேண்டும்.
தாந்தஹ பத்து இந்திரியங்களையும் கட்டுப்பாட்டுடன் வைத்திருக்க வேண்டும்.
உபரதஹ தேவையற்ற செயல்களிலிருந்து விலகுதல், பொறுப்புக்களிலிருந்து விலகுதல், முறைப்படி
சந்நியாஸம் எடுத்துக்கொள்ளுதல், ஸ்வதர்ம அனுஷ்டானம்.
திதிக்‌ஷா இருமையை சகித்துக்கொள்ளுதல், இருமையினால் நாம் தாக்கப்படாதவனாக் இருத்தல், அதை ஒரே மனநிலையோடு ஏற்றுக்கொள்ளுதல்.
சமாஹித: எடுத்துக் கொண்ட லட்சியத்தில் நிலையாக நிற்றல், அதில் பொருந்தி செயல் படுதல்,
இதற்கு தடையாக இருப்பவைகள் சோம்பல், உறக்கம், செய்வதறியாது இருத்தம் (மனோரதம்)
பூத்வா இவ்விதமான இருப்பவனாக செயல்பட்டு
ஸ்ரத்தா வித்தா – சிரத்தையுடைய்வனாக இருக்க வேண்டும்,. குரு, வேதாந்த வாக்கியங்களில் உள்ள நம்பிக்கை.
ஆத்மனி ஏவ ஆத்மானாம் பஷ்யதி: தன்னுடைய ஸ்தூல சூட்சும சரீரத்திற்குள்ளேதான் சைதன்ய ஸ்வரூபத்தை ஞானி பார்க்கின்றான்.
ஸர்வம் ஆத்மானம் பஷ்யதி: தன்னையே அனைத்துமாக பார்க்கின்றான். தன்னிலே அனைத்து ஜீவராசிகளையும் பார்க்கின்றான்
நைனம் பாப்மா ந தரதி ஆப்னோதி:. இந்த ஞானியை பாவ-புண்ணியங்கள் வந்தடையாது. இந்த ஞானியை பிராரப்தம், சஞ்சிதம்
ஆகியவற்றில் உள்ள கர்மபலன்களான பாவ-புண்ணியங்கள் ஒன்றும் செய்யாத நிலையை அடைந்து விடும்.
இவன் அடைந்த ஞானத்தால் பாவ-புண்ணியத்தினால் விளையும் இன்ப-துன்பங்களை எரித்து விடுகின்றான்.
விபாபஹ: அனைத்து பாவங்களும் புண்ணியங்களும் சென்று விடுகின்றன.’
ஸர்வம் பாப்மான தரதி: அனைத்து பாவ-புண்ணியங்களையும் கடந்து விடுகின்றான். இங்கே பாப்மானம் என்ற சொல் பாவத்தையும், புண்ணியத்தையும் சேர்த்து கூறப்படுகின்றது.
விரஜஹ: அசுத்தத்திலிருந்து வெளி வந்தவன்; அறியாமையிலிருந்து வெளியே வந்தவனாக இருக்கின்றான்.
அவிசிகித்ஸஹ: அனத்து விதமான சந்தேகங்களும் நீங்கியவனாக இருக்கின்றான்.

இப்படிபட்ட லட்சணங்களை உடையவனாக இருப்பவன் பிரஹ்மனாக, முக்தனாக இருக்கின்றான். இதுதான் பிரஹ்மத்தின் ஸ்வரூபம்.

ஏனம் பிராபிதஹ அஸீத் என் உபதேசங்களின் பலனை நீ அடைந்து விட்டாய். அந்த பிரஹ்மத்தை அடைந்து விட்டாய்
என்று ஜனகரை பார்த்து, யாக்ஞவல்கியர் கூறினார்.

ஜனகர், “பகவானே! சம்சாரியாக இருந்த நான் முக்தனாகி விட்டேன். இதற்கு கைம்மாறாக இந்த விதேஹ நாட்டையே
தங்களுக்கு காணிக்கையாகி கொடுக்கிறேன். என்னையும் இந்த நாட்டுடன் தங்களுக்கு சேவை புரியும் சேவகனாக கொடுக்கிறேன்.
இவ்வாறு கூறியதின் மூலமாக அவர் ஞானத்தை அடைந்து விட்டார் என்று குறிப்பால் உணர்ந்து கொள்ளலாம்.

ஸ்லோகம்-24
ஸஹ வை ஏஷஹ : அந்த நிர்குண பிரம்மமே இந்த ஜீவாத்மா
மஹான் அஜஹ : பூரணமானது, பிறப்பற்றது
நானே பிரம்மன் என்பதை கிரகிக்க முடியவில்லையென்றால் சகுண பிரம்மத்தை தியானத்தை பரிந்துரை செய்யப்படுகிறது.
அனாதஹ: அந்த பரமாத்மாவே எல்லா ஜீவராசிகளுக்குள் இருந்து கொண்டு உணவை உட்கொண்டு இருக்கிறது.
நானே அனத்து ஜீவராசிகளுக்குளிருந்து கொண்டு உணவை உண்ணுகிறேன்.
வஸ்தானஹ: கர்ம பலனை தருபவர் ஈஸ்வரந்தான் என்று தியானிக்க வேண்டும்.
ய ஏவம் வேத: யார் இவ்வாறு ஈஸ்வரனை உபாஸனை செய்கிறார்களோ
விந்ததே வஸீ : அவர்கள் செல்வம், பொருள், ஐஸ்வர்யம் அனைத்தும் கிடைக்கப்பெறுவார்கள்.
வஸ யோக்யதா – அருட்செல்வம், மனத்தூய்மையடைவார்கள்..
மோக்‌ஷத்தை லட்சியமாக கொண்டவர்கள் ஞானத்திற்கு தகுதியடைகிறார்கள்.

ஸ்லோகம்-25
இந்த மந்திரத்தில் பிரம்ம ஸ்வரூத்தைக் கூறி பிரம்மத்தை அடைதல், மோட்சத்தை அடைதல் என்ற இரண்டுமே ஒன்றுதான் என்று கூறப்படுகிறது.
ஸஹ வை ஏஷஹ: அந்த பரமாத்மாவே இந்த ஜீவாத்மா
அஜரஹ: மாற்றமில்லாதது;
அமரஹ: மரணமற்றது,
அம்ருதஹ: என்றும் உள்ளது;
அபயஹ: பயமற்றது
வர்ஜிதஹ: இப்படிபட்ட ஆத்ம ஸ்வரூபம்தான் பிரம்மம்.
அபயம் வை பிரஹ்மா: சம்சாரமற்றது பிரம்மம், பயம்தான் தலையாய சம்சாரம்; பயமற்ற நிலையான ஸ்வரூபம்.
பகவான் எப்பொழுதும் ஐஸ்வர்யத்துடன் பயத்தையும் சேர்த்துக் கொடுப்பார். இதிலிருந்து நாம் அறிந்து கொள்வது
எந்த வகையான ஐஸ்வர்யத்தையும் அடைந்தாலும் அதனுடன் பயத்தையும் சேர்த்துதான் அடைகிறோம்.
ய ஏவன் வேத: யார் இந்த ஞானத்தை அடைகிறார்களோ
அபயம் வை பிரம்ம பவதி: அவர்கள் அபயமான பிரம்மத்தையே அடைகிறார்கள்.

பகுதி-5 :மைத்ரேயி பிராமனம்
இந்தப்பகுதியானது மிகமுக்கியமானது எனவே ஏற்கனவே இது விளக்கப்பட்டாலும் மீண்டும் இந்தப் பகுதியில் விவரிக்கப்படுகிறது.
இதில் கூறப்படுகின்ற கருத்துக்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
1. நமக்கு சாத்தியம் போல் தெரிவதெல்லாம் பொய் என்று விளக்கப்படுகின்றது.
2. சாத்திய தரிசனம் – ஆத்மாதான் நாம், எனவே நம்மைத்தான் அடைய வேண்டும்.
3. சாதனம்: ஆத்மாவை அறிவதற்கு உதவும் வழிகளான, சிரவணம், மனனம், நிதித்யாஸனம் இவைகளைக் கொண்டு ஆத்மாவை அடையலாம்.
4. மோட்ச ஸ்வரூப விளக்கம்
5. ஈஸ்வரன் ஸ்ருஷ்டி, ஸ்திதி, லயம் இவைகளுக்கு காரணமாக இருப்பவர்
6. ஆத்மாவே அனைத்துமாக இருக்கிறது
7. சிதாபாஸத்தினுடைய ஸ்வரூப விளக்கம்
8. சித் நித்யம், சிதாபாஸன் வெறும் தோற்றம் (பிரதிபிம்பம்) என்று விளக்கப்பட்டு இருமை நீக்கப்படுகிறது

சந்நியாஸ விசாரத்தின் சாரம்.
* சந்நியாசத்தை அந்தரங்க சாதனமாக கூறப்படுகிறது. ஆத்மாவிற்கு மிக அருகில் இருக்கின்ற சாதனம்.
இதன் மூலம் ஞான நிஷ்டை அடைவதற்கும், ஞானத்தை அடைவதற்கும் உதவியாக இருப்பது.
* கர்மயோக பகிரங்க சாதனம் – மனதை தூய்மையாக்கி ஞானத்தை அடைவதற்கு தகுதிப்படுத்துகிறது
* மோட்சத்திற்கு ஞானமானது சாக்‌ஷாத் சாதனம். நேரிடையான சாதனம்
* வேதங்கள் சில கர்மங்கள் விதித்துள்ளது. சந்நியாஸத்தில் இவைகளை விடவேண்டிய நிலை வரும்போது
குற்ற உணர்வு வரும் போது வேதமே இவ்வாறு சொல்லி இருப்பதால் நாம் அந்த உணர்வு அடைய தேவையில்லை என்று சமாதானம் சொல்லிக் கொள்ளலாம்.

விசாரம்:
கேள்வி: உயிரோடு இருக்கும்வரை அக்னிஹோத்ர யாகம் செய்து கொண்டிருக்க வேண்டும். இவன் இறந்து புதைக்கும்போது
அவன் பயன்படுத்திய யாக பாத்திரங்கள் அந்த உடலோடு சேர்த்து புதைக்க வேண்டும்.
எனவே ஒரேயொரு ஆஸ்ரமம்தான் இருப்பதுபோல் தோன்றுகிறது. சந்நியாஸ ஆஸிரமத்தை விட்டுவிடலாம்.
பதில்: அவ்வாறு செய்ய முடியாது. சந்நியாஸ ஆசிரமத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருப்பதால் இரண்டும் சமமாக இருக்கட்டும்
கேள்வி: யாருக்கு கர்ம்ம் செய்ய தகுதியில்லையோ அவர்கள் சந்நியாஸத்திற்கு செல்லலாம்.
பதில்: யார் மோட்சம் என்ற லட்சியத்தை அடைய உறுதி உடையவர்களாக இருக்கிறார்களோ அவர்களுக்குத்தான் இந்த ஆசிரமம்.
கர்மத்தை விட்டுவிடுபவர்களுக்கு அல்ல, அதிக சாதனையை செய்ய வேண்டிய ஆசிரமம் இது.
கர்மத்தை செய்ய தகுதியுடையவர்கள்தான் சந்நியாசி ஆகின்றான். கர்மகாண்டம் அவித்யாவில் ஆசை உடையவர்களுக்காக விதிக்கப்பட்டிருக்கிறது.
வைராக்யம் வந்தவுடன் சந்நியாசத்தை எடுத்துக் கொள்ளலாம். சந்நியாசத்தையும், இல்லறத்தையும் ஒன்றாக சேர்க்க முடியாது.
இரண்டும் வெவ்வேறு தர்மத்தை பிரதானமாக உடையது. சந்நியாஸம் யம பிரதானமானது, இல்லறம் நியம பிரதானமானது.

இரண்டு வகையான சந்நியாசம் இருக்கின்றது. அவைகள் வித்வத் சந்நியாசம், விவிதிஷா சந்நியாசம்.
முதல் வகையானது அபரோக்‌ஷ ஞானமுடையவர்களுக்கு, அடுத்த வகையானது பரோக்‌ஷ ஞானமுடையவர்களுக்கு என்று கூறப்பட்டிருக்கிறது.

————

பகுதி-6 : வம்ச பிரமாணம்
இதில் மூன்று மந்திரங்கள் இருக்கிறது. இவைகள் குரு-சிஷ்ய பரம்பரையில் வந்தவர்களின் பெயர்களை கூறுகிறது.
இந்த பெயர்களை உச்சரிப்பதாலே நல்ல பலன்கள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ ப்ருஹதாரண்ய உபநிஷத்- அத்தியாயம்-4-பகுதி -1—ஷடாச்சார்ய பிரமாணம் /கூர்ச பிரமாணம் /ஸ்வயம் ஜோதி பிரமாணம்-பகுதி -1 /

March 23, 2021

அத்யாயம்-4
இந்த அத்யாயம் ஆறு பகுதிகளைக் கொண்டது.
முதல் பகுதியில் உபாஸனையைப் பற்றியும், சில பண்புகளையும் விளக்கப்பட்டிருக்கிறது.
அடுத்த ஐந்து பகுதிகளும் பிரம்ம வித்யாவை போதிக்கிறது.

இதில் ஜனகர் என்கின்ற பேரரசர் ஞானத்தை பெறுவதற்கு தகுதியை அடைந்துள்ளவர்,
யாக்ஞவல்கியரிடமிருந்து பிரம்ம ஞானத்தை பெறுவதாக அமைந்துள்ளது.

பகுதி-1 : ஷடாச்சார்ய பிரமாணம்
ஸ்லோகம்-1
விதேஹ நாட்டு அரசரும், தேக அபிமானவற்றவருமான ஜனகர் ஆசனத்தில் அமர்ந்திருக்கிறார்.
அப்போது யாக்ஞவல்கியர் அந்த அரசவைக்கு வந்தார். ஜனகர் அவரை வரவேற்று எது உங்களை இங்கே அழைத்து வந்திருக்கிறது?
பசுக்களை தானம் பெற வந்தீர்களா அல்லது சூட்சுமமான விஷயங்களை விசாரம் செய்வதற்கா!! என்று கேட்டார்.
அவர் அதற்கு இரண்டுக்குமேதான் என்று பதிலளித்தார்.

ஸ்லோகம்-2
எதை மற்ற ஆசிரியர்களிடமிருந்து எதை உபதேசமாக பெற்றீர்களோ அதை எனக்கு கூறுவாயாக என்று யாக்ஞவல்கியர் கேட்டார்.
ஜனகர் கூறலானார். ஜித்வான் என்ற ஆசிரியரிடமிருந்து கற்றவை, எப்படி வாக் (அக்னி) தேவதையை உபாஸனை செய்ய வேண்டும்.
இதைக் கேட்ட யாக்ஞவல்கியர், “யார் நம்மை சுத்தப்படுத்தும் மூன்று விதமான ஆதாரங்களான தாய், தந்தை, குரு உடையவர்களோ
அவர்களிடமிருந்து வரும் உபதேசங்கள் பிரமானத்திற்கு முரணாக இருக்காது, உண்மையானதாக இருக்கும்.

மாத்ருமான் (தாய்) – இவரிடமிருந்து பெற வேண்டிய அன்பை முழுமையாக பெற்றவர்கள்.
தாயிடத்தில் அடையும் தூய்மை – அபிநிவேஷம் – பிறந்த குழந்தைக்கு அன்பும், ஆதரவையும் கொடுத்து அரவணைத்து வளர்க்க வேண்டும்.
இதன் மூலம் உடல்பலத்தையும் மன பலத்தையும் பெறுவோம். இவ்வாறு வளர்ந்த குழந்தைகளால் தான்
அதை மற்றவர்களுக்கு கொடுக்க முடியும். குழந்தைகள் தாயை தெய்வமாக பாவிக்கும், அவள்தான் எல்லாமே என்று நினைக்கும்.

பித்ருமான் (தந்தை) – இவரிடமிருந்து பெற வேண்டிய பலனை அடைந்தவர்கள், இவர் குழந்தையை கல்வி கற்க ஆசிரியரிடம் அறிமுகப்படுத்துகிறார்.
நல்லொழுக்கமும், பண்பும் வளர்வதற்கு உதவி புரிபவர்.

ஆசார்யவான் (குரு) – ஆசாரியடமிருந்து பெற வேண்டிய அறிவையும், பண்பையும் முழுமையாக பெற்றவர்கள்.
இவர் விதவிதாமன சாஸ்திரங்களை அறிந்தவர், நம்மை ஆசாரத்தில்(ஒழுக்கத்தில்) நிலை நிறுத்துபவர் தானும் அதுபோல் வாழ்ந்து வருபவர்.

இவ்வாறு இந்த மூன்று பேர்களிடமிருந்து அடைய வேண்டியதை முழுமையாக அடைய பெற்றவர்களின் உபதேசங்கள்தான் முழு பலனை தரும்.

* நாம் எதை அனுபவித்திருக்கிறோமோ அதைத்தான் மற்றவர்களுக்கு கொடுக்க முடியும்.
* நமக்கு நல்ல ஆசிரியரை தேர்ந்தெடுக்கும் உரிமையிருக்கிறது
* ஈஸ்வரனிடமிருந்து இதுவரை நமக்கு கிடைக்காததையெல்லாம் பெறலாம்
ஜனகர் மேலும் அவர் பெற்ற வாக் உபதேசத்தை விவரித்தார். வாக் என்ற தத்துவத்தை பிரம்மமாக உபாஸிக்க வேண்டும்.
அக்னியை பிரம்மமாக தியானிக்க வேண்டும் என்று அந்த குருவிடம் உபதேசம் பெற்றேன். யாக்ஞவல்கியர் இதை அங்கீகரித்தார்.
வாக்கைப் பற்றி இவ்வளவுதான் கூறினாரா? வாக் எங்கே தங்கியிருக்கிறது (ஆயதனம்), இதற்கு ஆதாரமாக இருப்பது எது?
இவைகளையெல்லாம் பற்றி கூறினாரா? என்று கேட்க, ஜனகர் இல்லை என்று பதிலளித்தார்.
அப்படியென்றால் நீ வாக்கைப்பற்றி நாலில் ஒரு பங்குதான் அறிந்திருக்கிறாய் இப்படி உபாஸிப்பதனால் ஒரு பயனும் கிடைக்காது.
எனவே நீ நான்கையும் சேர்த்து தியானிக்க வேண்டும் என்று யாக்ஞவல்கியர் கூறினார். ஜனகர் மீதி மூன்றையும் தனக்கு உபதேசிக்குமாறு வேண்டினார்.

வாக்கின் இருப்பிடம் வாக் என்ற இந்திரியம்தான், அதற்கு ஆதாரமாக இருப்பது ஆகாசம்
இதை பிரக்ஞா (ஞானம், அறிவு) என்ற பெயரால் உபாஸிக்க வேண்டும்.
இந்த பெயர் வரக்காரணம் ஞானமானது வாக் இந்திரியத்தின் அடிப்படையில்தான் கிடைக்கிறது.
நாம் யார், எவ்வளவு திறமையுடையவன் என்பது நம் பேச்சிலிருந்துதான் மற்றவர்கள் தெரிந்து கொள்வார்கள். வாக்கினால் அடையும் பலன்கள்:
1. எல்லா உறவுகளையும் அடைதல்
2. அனைத்து வேதங்களையும் அறிதல்
3. சாஸ்திர ஞானத்தை அடைதல்
4. இதிகாச, புராணங்களைப் பற்றிய அறிவை அடைதல்
இந்த வாக்கை பிரக்ஞா என்று தியானித்தால் நம்முடைய பேச்சுத் திறமை வளரும். எப்படி பேசுவது, எந்த நேரத்தில் எதை பேசுவது
போன்ற நுணுக்கங்களையெல்லாம் அடையப் பெறலாம். இதனால் வாக்கானது நம்மை மீறி போகாது, நம்முடைய கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்.
துயரத்தை கொண்டு வராது, பகைமையையும் ஏற்படுத்தாது. இகலோக, பரலோக பலன்களையும் அடையலாம், வாழும் போது தேவனாகவும்,
இறந்த பிறகு அந்த தேவதையுடன் ஒன்றாக கலந்து விடுவோம். எனவே இவன் எது சொன்னாலும் அது பலிக்கும்.
இதை கேட்ட ஜனகர் மகிழ்ந்து இந்த உபதேசத்தை பெற்றதற்காக உங்களுக்கு ஆயிரம் பசுக்களையும், காளைகளையும் உங்களுக்கு வழங்குகிறேன் என்று கூறினார். யாக்ஞவல்கியர் அதை வாங்க மறுத்து, “உபதேசத்தை முழுமையாக முடிக்காமல் எதையும் வாங்காதே என்று
என் தந்தை கூறியிருக்கிறார், நானும் அதை பின்பற்றி வருகிறேன்” என்று கூறினார்.

ஸ்லோகம்-3 லிருந்து 12 வரை
ஆசிரியர்
இருப்பிடம்
தேவதை
பெயர்
பிரதிஷ்டா
குறிப்பு
உதங்கா
பிராணன்
வாயு
பிரியம்
ஆகாசம்
பிரியமாக தியானிக்க வேண்டும்
பர்கு
கண்கள்
சூரியன்
சத்யம்
ஆகாசம்
இப்படி தியானிக்க வேண்டும்
பரத்வாஜ
காது
திசைகள்
அனந்தம்
ஆகாசம்
இப்படி தியானிக்க வேண்டும்
சத்யகாம
மனம்
சந்திரன்
ஆனந்தம்
ஆகாசம்
மனதை சந்திரனாக தியானித்தல்
ஸாகல்ய
இதயம்
பிரஜாபதி
ஸ்திதி
ஆகாசம்
இதயத்தை தியானித்தல்

———————

பகுதி-2 : கூர்ச பிரமாணம்
ஸ்லோகம்-1
ஜனகர் தன் இருக்கையிலிருந்து எழுந்து சென்று குருவை அணுகினார் பிறகு அவரை வணங்கி எனக்கு உபதேசம் செய்யுங்கள் என்று வேண்டினார்.
குருவானவர் “ஞானத்தையும், ஞான சாதனத்தையும் கொடுக்க வேண்டும்” என்ற சங்கரர் கூற்றுபடி யாக்ஞவல்கியர்
தன்னை குருவாக அணுகிய ஜனகருக்கு உபதேசத்தை ஆரம்பித்தார்.

நாம் நீண்ட தூரம் செல்ல வேண்டுமென்றால் அதற்கு தேவையான வாகனத்தை எடுத்துக் கொண்டுதான் செல்ல வேண்டும்.
அதே போல மோக்‌ஷத்தை அடைய வேண்டுமானால் சில சாதனங்களை எடுத்துக் கொண்டு பயன்படுத்த வேண்டும்.
ஜனகரை உத்தம சிஷ்யனாக, ஞான சாதனத்தைக் கடைபிடிக்கிறாந் என்று அங்கீகரித்ததுடன்,
அவர் ஞான உபதேசத்திற்கு தகுதியானவர் என்றும் சொல்கிறார். நீ உபாஸனைகளை மேற்கொண்டவனாகவும்,
அதன் பலனாய் மனம் ஒருமுகப்படுத்தப்பட்டு அமைதியாந் இருக்கிறாய். நல்லொழுக்கத்துடனும், சித்தஸுத்தியுடையவனாகவும் இருக்கிறாய்,
செல்வந்தனாக இருந்தபோதிலும் இவ்வாறாக இருக்கிறாய். வேத சாஸ்திரத்தை படித்தவனாகவும் தேவதைகளை சரியானபடி
உபாஸனை செய்கின்றவனாக இருக்கிறாய். இவ்வாறாக ஜனகருடைய தகுதியை அங்கீகரித்தார்.
இப்படிபட்ட குணங்களை உடைய நீ மரணத்திற்குப்பிறகு எங்கு செல்வாய் என்று தெரியுமா?” என்று யாக்ஞவல்கியர் கேட்டார்.
ஜனகர் தனக்கு தெரியாது என்றும், தான் எப்படிபட்டவனாக மாறுவேன் என்றும் தெரியவில்லை என்று பதில் கூறினார்.
அதற்கு குருவானவர் “நான் அதைக் குறித்து உனக்கு உபதேசம் செய்யப்போகிறேன், நீ எங்கு செல்வாய் என்று கூறுகிறேன்.
நான் கொடுக்கும் ஞானத்தால் நீ எப்படிப்பட்ட நிலையை அடைவாய் என்றும் உபதேசிக்கிறேன் என்று மேலும் கூறினார்.
ஜனகரும் அதைச் உபதேசியுங்கள் பகவானே என்று பணிவுடன் வேண்டினார்.

ஸ்லோகம்-2
இந்த மந்திரத்தில் விஸ்வன் அறிமுகப்படுத்தப்படுகிறான். சமஷ்டி, வியஷ்டி ஐக்கியமும் விளக்கப்படுகிறது.
விராட் என்றழைக்கப்படுகின்ற வைஷ்வானரனிடமிருந்து பிரியாத விஸ்வனுக்கு இந்தஹ என்று பெயர்.
இந்த சொல்லுக்கு எல்லாவற்றையும் பிரகாசப்-படுத்துபவன் என்றும் பொருள் கொள்ளலாம்.
எந்தவொரு அறிவு தத்துவம் விராட் ஸ்தூல உலகங்களனைத்தும் பிரகாசப்படுத்திக் கொண்டிருக்கிறதோ
அவனேதான் நம் வலது கண்ணில் அமர்ந்திருக்கின்றான். தேவர்களெல்லாம் தன்னைக் காட்டிக் கொள்ள விரும்புவதில்லை.
இந்த உலகத்திலுள்ள சில நியதிகளையும் மறைத்து வைத்திருப்பார்கள். வைஸ்வானரன் தன்னை மறைத்து வைத்துக் கொண்டிருக்கின்றான்.
இந்திரன் என்று பெயரை மாற்றி வெளிப்படுத்தி கொண்டு பிரகாசித்துக் கொண்டு இருக்கிறார்.
தேவர்களெல்லாம் தன்னை பரோக்ஷமாக இருப்பதையே விரும்புகிறார்கள். தன்னை நேரிடையாக பார்ப்பதை விரும்ப மாட்டார்கள்.

ஸ்லோகம்-3
விஸ்வன் விராட்டை அனுபவிக்கின்றான், ஜீவன் இந்த உலகத்தை அனுபவிக்கிறான் என்றால் ஈஸ்வரனையே அனுபவிக்கிறான்
என்று எடுத்துக் கொள்ளலாம். தைஜஸனும் ஹிரண்யகர்ப்பனும் ஒன்றாக எடுத்துக் கொண்டு சில கருத்துக்கள் சொல்லப்பட்டிருக்கிறது.
1. தைஜஸனுடைய இருப்பிடம் – இதயத்தினுள் இருக்கின்ற ஆகாசம்
2. தைஜஸனுடைய உணவு – நாம் உட்கொள்ளும் உணவினுடைய அதி சூட்சுமமான பகுதி
3. தைஜஸனை மூடியிருப்பது – நமது இதயம்
4. தைஜஸன் சஞசரிக்கின்ற இடம் – ஹிதா என்று அழைக்கப்படுகின்ற நாடி,

இந்த நாடியானது இதயத்தின் மேல் பகுதியிலிருந்து உடம்பின் பல பகுதிகளுக்கு செல்கிறது. இதன் விட்டம் நம் தலைமுடியின்
விட்டத்தின் ஆயிரத்தில் ஒரு பங்காகும். ஜீவனை சுகமாக வைத்திருப்பதால் இதற்கு இந்த பெயர் வந்திருக்கிறது.
அவன் நாடிக்குள் செல்லும் போது அனுபவிக்கும் உலகம் ஸம்ஸ்காரங்களை பொறுத்து அமைகிறது.
ஸ்தூல சரீரத்திற்கு வேறான ஒன்றை அனுபவிக்கின்றான், அதாவது தைஜஸன் ஹிரண்யகர்ப்பனை அனுபவிக்கின்றான்.

ஸ்லோகம்-4- பிராஞ்ச விசாரம் – பிராஞ்ச – காரண ஸ்வரூபம்
ஹிரண்யகர்ப்பனின் எல்லா அங்கங்களும் காரணத்தில் லயம் அடைந்துள்ளது. சூட்சும சரீர அங்கங்கள் காரணத்தில் ஒடுங்கி விடுகின்றது.
ஒவ்வொரு அங்கங்களும் அந்தந்த இடங்களில் ஒடுங்கி விடுகின்றது. ஒவ்வொரு திசையிலும் உள்ள பிராணனனாது
தன்னுடைய காரண ஸ்வரூபத்தில் ஒடுங்கி விடுகின்றது. கிழக்கிலுள்ள பிராணனனாது கிழக்கிலுள்ள காரண ஸ்வரூபத்தில் ஒடுங்கி விடுகின்றது.
இவ்வாறு எல்லா திசைகளிலும் உள்ள பிராணனன்களானது அந்தந்த திசைகளின் காரண ஸ்வரூபத்தில் ஒடுங்கி விடுகின்றது.
நாம் ஆத்மாவாக எதை புரிந்து கொள்ள வேண்டும் என்றால் இந்த மூன்று உபாதிகளும் நீக்கப்பட்டு ஸ்ருஷ்டிக்கு ஆதாரமாக இருப்பதைத்தான்.
யாருமேயில்லாத நிலையில் நான் மட்டும் எஞ்சியிருப்பதுதான் ஆத்மா. இது எந்தப் பிரமானத்தின் மூலமாகவும் கிரகிக்க முடியாது.
யாராலும் அழிக்க முடியாதது, என்றும் அழியாதது எதனோடும் சேர்வதுமில்லை அதேபோல எதுவும் இதனோடு சேர முடியாதது.
இது எந்தவிதமான மாற்றமுமடையாதது. இவ்வாறாக உபதேசித்த பின்னர் ஜனகரை பார்த்து,
அரசே நீங்கள் இப்போது பயமற்றவராக உயர்ந்து விட்டீர்கள், என்னுடைய உபதேசத்தை நன்கு புரிந்து கொண்டீர்கள்,
அப்படி புரிந்து கொள்ளும் போதே அபயத்தை அடைந்து விட்டீர்கள். பிரம்மத்திற்கு இன்னொரு பெயர் அபயம்.
நம் மனதினுடைய தர்மம் பயந்து கொண்டிருத்தல், இந்த தர்மமுமற்ற பிரம்மத்தை அடைந்து விட்டாய்.
பிரம்ம ஞானத்தின் பலனாக மோக்‌ஷத்தையும் அடைந்துள்ளாய். பயம் என்பது சம்சாரத்தின் பெரிய விஷயம்.
ஜனகர் குருவை பார்த்து குருவான் அபயத்தை அடைந்தேன். பகவானே உங்கள் உபதேசம் என்னை அபயத்தை அடையச் செய்துவிட்டது.
உங்களுக்கு என்னுடைய நமஸ்காரம், இதற்கு பரிசாக இந்த நாட்டையும், என்னையும் உங்களுக்கு தருகிறேன். என்று கூறினார்.
நாம் எதை அதிகமாக விரும்புகிறோமோ, எதை அதிகமாக மதிக்கிறோமோ அதைத்தான் பிறருக்கு பரிசாக கொடுக்க வேண்டும்.
குருவிடம் பெற்ற உபதேசத்தின் பலனாக இதைக் கூறலாம். நமக்கு பயன்படாத பொருளை பரிசாக கொடுக்க நினைப்பது
நாம் பெற்ற உபதேசத்தின் பலனை அடையவில்லை என்பதை குறிக்கும்.

குறிப்புக்கள்:
· பிரம்மத்தை உபதேசிப்பது எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் கருணையின் காரணமாக செய்ய வேண்டும்.
· ஞானத்தை அடைந்த பலனால் வரும் தியாகம், எந்தப் பொருள் மீதும் பற்றில்லாமல் இருப்பார்கள்.
· ஜனகர் தம் நாட்டை தானமாக்க் கொடுப்பது அவரடைந்த ஞானப்பலனை நாட்டுகிறது.
· தன்னையே கொடுத்தல் என்பது, தன் அகங்காரத்தை ஒழித்த நிலை.

—————–

பகுதி-3 : ஸ்வயம் ஜோதி பிரமாணம்
முகவுரை
ஆத்மா ஸ்வயம் ஜோதி என்பதுதான் மையக் கருத்து. ஜோதி என்பது சுய பிரகாசம் சைதன்யம்.
எங்கிருந்து ஆத்மாவுக்கு சைதன்யம் வந்தது என்றால், தானே அறிவு ஸ்வருபமாக இருக்கிறது, எதனிடமிருந்தும் எங்கிருந்தும் வரவில்லை.

அவஸ்தா த்ரய விசாரத்தின் மூலம் தர்க்க ரீதியாக ஆத்மாவை விளக்கப்படுகிறது. எட்டுவித ஸ்வரூபங்கள் மூலம் இது விளக்கப்படுகிறது.
1. சரீர வியதிரிகம் – ஸ்தூல, சூட்சும சரீரத்திற்கு வேறானது
2. சுத்தத்வம் – தூய்மையானது, உடலானது அசுத்தமடைவதற்கு வாய்ப்பிருக்கிறது
3. ஸ்வயம்ஜோதி ஸ்வரூபம் – தானே ஒளிர்வது
4. அலுப்தசக்திமத்வம் – நிலையான சக்தி ஸ்வரூபம், வந்துபோகும் சக்தி, நிலையற்ற சக்தி
5. அஸங்கத்வம் – எதனோடும் சம்பந்தப்படாதது
6. நிரஸிதய ஆனந்த ஸ்வரூபம் – அளவிட முடியாத ஆனந்த ஸ்வரூபம்
7. அத்வைத்வம் – இரண்டற்றது
8. த்ருஷ்டி அலோபம் – சைதன்யம் என்றும் தொடர்ந்து விழித்துக் கொண்டிருக்கும்

முதல் ஐந்து தத்துவங்களையும் கனவு நிலையில் நிரூபிக்கப்படுகிறது,
கடைசி மூன்று தத்துவங்கள் ஆழ்ந்த உறக்கத்தை கொண்டு நிரூபிக்கப்படுகிறது.

ஸ்லோகம்-1
ஜனகரை யாக்ஞவல்கியர் மீண்டும் பார்க்க சென்றார் அப்போது நான் இன்றைக்கு ஒன்றும் பேசப்போவதில்லை என்று கூறினார்.
ஒரு சமயம் அவர் ஜனகரின் அக்னிஹோத்ர அறிவை வியந்து பாராட்டி ஒரு வரத்தை கொடுத்தார் அதை நினைவுப்படுத்திய ஜனகர்
நான் சில கேள்விகளை கேட்க போகிறேன் அதை வரமாக ஏற்றுக் கொள்ளுங்கள் என்று சொன்னார்.
அவரும் அதை ஏற்றுக் கொண்டு அனுமதித்தார். ஜனகர் கேள்வி கேட்க ஆரம்பித்தார்.

ஸ்லோகம்-2
இந்த ஜீவாத்மா எந்த ஜோதியினால் செயல்படுகிறான்? ஜீவாத்மா செயல்படுவதற்கு ஜோதியாக இருப்பது எது?
என்ற கேள்வியை ஜனகர் கேட்டார். அதற்கு சூரியனுடைய ஜோதியினால்தான் நாம் செயல்படுகிறோம்.

இந்த ஸரீரம் விவகாரத்திற்கு யோக்யதை அல்ல, ஆனால் தேகத்தின் விவகாரம் நடப்பதை பார்க்கிறோம்.
இதற்கு ஜோதியாக இருப்பது எது? இந்த கேள்வியானது மூன்று வகையில் விசாரம் செய்யப்படுகிறது. அவைகள்:
1. எது நம்முடைய செயல்பாடுகளுக்கு காரணமாக இருப்பது அதே சமயம் சரீரத்திற்கு வேறுபட்டும் இருக்கிறது
2. சரீரத்திற்குள்ளே அந்த ஜோதி இருக்கின்றது
3. சில சமயம் இந்த உடல் ஜோதியை பயன்படுத்துகிறது, அது சில சமயம் இல்லாமலும் செயல்படுகிறது.
மூன்றாவது விகல்பம் சரியாக இருக்காது ஏனென்றால் ஜோதி இப்படி இருந்தால் எந்த விவகாரமும் நிச்சயமாக நடக்கும் என்று சொல்ல முடியாது.
ஜோதி இருக்கும்போதும், இல்லாத போதும் விவகாரம் நடக்கலாம்.

இரண்டாவது விகல்பமும் சரியாக இருக்காது ஏனென்றால் சரீரத்தின் ஒரு அங்கமாக இருந்தால்
சரீரமே ஆத்மாவாக இருக்கும் அதனால் அழிவிருக்காது. ஆனால் இயற்கையில் இந்த சரீரம் அழியும் தன்மையுடையது

முதல் விகல்பம்தான் சரியானது. சரீரத்திலிருந்து வேறுபட்ட ஒன்றினால்தான் இது செயல்படுவதற்கு உதவியாக இருக்க வேண்டும்.

ஜனகரே இதை தர்க்க ரீதியாக சிந்தித்து அறியக்கூடிய தகுதியுடையவராக இருந்தாலும் ஏன் இந்த கேள்வியை கேட்கிறார்
என்றால் இந்த தர்க்கம் வெகு சூட்சுமமாக இருக்கிறது இதை குருவின் துணைக் கொண்டுதான் அறிய முடியும் என்று தெரிந்து வைத்திருக்கிறார்.

எந்தவொரு உடலிலிருந்து விவகாரம் நடக்கிறதோ அந்த விவகாரமானது அதனிடமிருந்து வேறுபட்ட ஜோதியினால் சாத்தியமாகிறது.
ஒரு ஜட வஸ்து நகர்வதற்கு காரணமாக இருப்பது அதற்கும் வேறான ஒன்றின் உதவியால்தான் முடியும்.
யாக்ஞவல்கியர் சூரியன்தான் ஜோதியாக இருக்கிறது என்று பதில் கூறினார்.
சூரியன் என்கின்ற ஜோதியினால் இந்த மனிதன் அமர்கின்றான், நடக்கின்றான், போகிறான் ஏதாவது செயல் செய்கின்றான்
பின்பு திரும்பி வருகின்றான் என்று விவரித்தார். ஜனகர் தனக்கு புரிந்து விட்டது என்று அவரது உபதேசத்தை ஏற்றுக் கொண்டார்.

ஸ்லோகம்-3
சூரியன் மறைந்த பிறகு எது ஜோதியாக இருக்கும்? என்று ஜனகர் திரும்பவும் கேட்டார்.
அதற்கு யாக்ஞவல்கியர் சந்திரன் ஜோதியாக இருக்கும். சந்திரன் என்கின்ற ஜோதியினால் இந்த மனிதன் அமர்கின்றான்,
நடக்கின்றான், போகிறான் ஏதாவது செயல் செய்கின்றான் பின்பு திரும்பி வருகின்றான் என்று விவரித்தார்.
ஜனகர் தனக்கு புரிந்து விட்டது என்று அவரது உபதேசத்தை ஏற்றுக் கொண்டார்.

ஸ்லோகம்-4
சூரியனும், சந்திரனும் மறைந்த பிறகு எது ஜோதியாக இருக்கும்? என்று ஜனகர் திரும்பவும் கேட்டார்.
அதற்கு யாக்ஞவல்கியர் அக்னிதான் ஜோதியாக இருக்கும் என்று பதிலளித்தார்,

ஸ்லோகம்-5
சூரியனும், சந்திரனும், அக்னியும் இல்லாத போது எது ஜோதியாக இருக்கும்? என்று ஜனகர் கேட்டார்.
அதற்கு யாக்ஞவல்கியர் வாக்கானது (சப்தம்) ஜோதியாக இருக்கும் என்று பதிலளித்தார்,
இதன் உதவியால்தான் ஜீவன் செயல்பட முடிகிறது. வாக் என்ற சொல்லுக்கு எல்லா இந்திரிய விஷயங்களையும் சேர்த்துகொள்ள வேண்டும்.
இந்த விஷயங்கள்தான் இந்திரியங்களை செயல்பட வைக்கிறது. ஒருவன் தன் கையையே பார்க்க முடியாத இருட்டாக இருந்தாலும்
சப்தம் வரும் திசை நோக்கி போகிறோம், தடைகளை அறிந்து விலகி செல்கிறோம்.

ஸ்லோகம்-6
சூரியனும், சந்திரனும், அக்னியும், வாக்கும், இந்திரிய விஷயங்களும் இல்லாத போது எது ஜோதியாக இருக்கும்? என்று ஜனகர் கேட்டார்.
அதற்கு யாக்ஞவல்கியர் ஆத்மாதான் ஜோதியாக இருக்கும் என்று சொன்னார். .
ஆத்மா என்கின்ற ஜோதியினால் இந்த மனிதன் அமர்கின்றான், நடக்கின்றான், போகிறான் ஏதாவது செயல் செய்கின்றான்
பின்பு திரும்பி வருகின்றான் என்று விவரித்தார்.

விசாரம்:
இந்த நான்கும் இல்லாத போது எந்த விவகாரம் நடக்கிறது என்று கேள்வி எழுகிறது. இந்த விவகாரம் கனவில்தான் நடக்க முடியும்.
கனவில் இந்த நான்கும் இல்லை ஆனால் விவகாரம் நடந்து கொண்டிருக்கும். விழிப்பு நிலையில் யாருமே இல்லாத இட்த்தில்
இந்த நான்கும் இல்லாத நிலையில் கற்பணையான நிலையில் நடக்கும் விவகாரங்களுக்கு உதவும் ஜோதி எது?
சமாதி, தியானத்தில் இருக்கும்போதும் விவகாரங்கள் நடப்பதற்கு ஜோதியாக இருப்பது எது?

சங்கரரின் விளக்கம்:
எந்தவொரு விவகாரமும் செய்வதற்கு உதவியாக இருப்பது இந்த உடல், இந்திரியங்களை தவிர்த்து வேறொன்றாக இருக்கிறது.
கனவிலும் வேறொன்றினால்தான் விவகாரம் செய்ய முடியும். இங்கு ஐந்து விதமான ஸ்வரூபங்களை கூறுகின்றார்.
1. காரிய-காரண வியதிரிக்தம் – காரிய காரண அவபாஸகம். காரியமானது இந்த ஸ்தூல உடல்,
காரணமாக இருப்பது சூட்சும உலகமும், மனமும் தான். அவபாஸகம் – ஒளிர்விப்பது; வியதிரிக்தம் – வேறானது.
உடலுக்கும் மனதுக்கும் வேறானதாக இருந்து கொண்டு ஆனால் அவைகளை பிரகாசப்படுத்திக் கொண்டிருக்கிறது.
2. ஸ்வயம் ஜோதி – இந்த ஆத்மா வேறெதைக்கொண்டும் விளக்க முடியாது, தானே விளங்கிக் கொண்டிருப்பது
3. அந்தஸ்தம் – உடலுக்கும் மனதிற்கும் வேறுபட்ட்தாக இருந்தாலும் அதற்குள்ளே இருப்பது.
நமக்குள்ளே இருந்து கொண்டு உடலையும் மனதையும் பிரகாசப்படுத்தின் கொண்டிருப்பது.
4. அப்பிரமேயம் – எந்தக் கரணங்களாலும் கிரகிக்க முடியாதது
5. அபௌதிகம் – எந்தப் பூதங்களினாலும் உருவாக்கப்பட்டதில்லை.

விசாரம்-2
கேள்வி: ஆத்மாவுக்கு சொன்ன ஸ்வரூபங்கள் ஏற்றுக் கொள்ள முடியாது. இந்த ஜடமான ஸ்தூல சரீரத்தை இயக்குவதற்கு
அறிவுள்ள ஏதோ ஒன்று இருக்க வேண்டும் இந்த அனுமானத்தை பயன்படுத்தி அறிவை அடைகிறோம்.
இந்த சரீரமே சேதனமாக இருக்கிறது என்று அனுபவம் சொல்கிறது. அதாவது என் பிரதியக்‌ஷ பிரமானத்தை வைத்து பார்த்தால்
உங்களுடைய அனுமானங்களை வைத்து சொல்கின்ற உடலுக்கு வேறான ஒரு அறிவு ஸ்வரூபம் கிடையாது.
உடலானது உணர்வு மயமாக இருப்பதால் வேறொன்று தேவையில்லை.

இரண்டாவது உதவி பெறுவது, உதவி செய்வது இந்த இரண்டும் ஒரே நிலையில்தான் இருக்க முடியும்.
எனவே சமான ஸத்தால்தான் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ள முடியும்.
அப்படியிருக்கும் போது எப்படு இந்த உடலுக்கு வேறான ஆத்மா உதவி செய்ய முடியும்?

பதில் உன்னுடைய கருத்துப்படி ஸ்தூல உடம்புதான் ஆத்மா என்று வைத்துக்கொண்டால் மரணம் என்பது சம்பவிக்காது.
இந்த உடலே சேதனம் என்றால் அதற்கு அழிவே கிடையாது. இது பிரதியக்‌ஷ பிரமாணம் தான்.
ஏதோ ஒன்று உடலில் இருந்தால்தான் அது உயிர் வாழும், அது சென்றுவிட்டால் இந்த உடல் ஜடமாகி பின்பு அழிந்து விடும்.
மரணமடைந்தவுடன் அவன் உணர்வுடன் இருப்பான். இதிலிருந்து தெரிவது இயற்கையாகவே உணர்வு என்பதே கிடையாது.
உடலே உணர்வு ரூபமாக இருந்தால் கனவு என்ற அனுபவமே இருக்காது. உண்மையில் கனவு நிலையில் உணர்வுடன் இருக்கிறான்.
ஸ்தூல உடம்பு ஜடமாக படுத்துக் கொண்டிருக்கிறது. இதிலிருந்து உடலுக்கு வேறாக உள்ள ஒன்றுதான் விவகாரத்திற்கு உதவ முடியும்

இரண்டாவது காரணமான சமான ஸத்தில்தான் விவகாரம் நடக்க முடியும். இந்த ஹேது சில சமயங்களில் அது மாதிரி இருக்காது.
உதாரணமாக தீயை வளர்ப்பதற்கு அதற்கு வேறான நெய், பெட்ரோல் போன்றவைகள்தான்.
மனிதனுக்கு குதிரைகள், மாடுகள் உதவுவது போல். கண்ணாடியில் தெரியும் நம் முகம் பொய்யானது,
ஆனால் நம் முகத்திலுள்ள குறைகளிருந்தால் அந்த உண்மையை காட்டும். இவைகள் வெவ்வேறு ஸத்தாவான இரண்டு வஸ்துக்கள்.
இதிலிருந்து நாம் நிரூபிப்பது இந்த உடல் சேதனமல்ல, உணர்வு ஸ்வரூபமுடையது அல்ல என்பதைத்தான்.

கேள்வி இந்தியங்களை ஆத்மா என்று எடுத்துக் கொள்ளலாமே?
பதில் கனவில் எந்த இந்திரியமும் பயன்படவில்லை ஆனாலும் கனவில் பார்க்கிறோம், கேட்கிறோம், உணர்வுடன் இருக்கிறோம்.
கேள்வி ஜனகர் கேட்டா கேள்விக்கு நேரிடையாக ஆத்மா என்று சொல்லியிருக்கலாமே?
பதில் இந்தௌடல் செயல்பட ஒரு ஜோதி தேவை அது உடலுக்கு வேறான ஒன்று என்பதை சிஷ்யன் புரிந்து கொள்ள வேண்டும்
என்று நினைத்து முதலில் சூரியனிலிருந்து ஆரம்பித்து பிறகு கடைசியில் ஆத்மாதான் என்று முடித்தார்.
எந்தவொரு தேக விவகாரமும் அதற்கு வேறான ஒன்றால் நடக்க முடியும். இந்த விஷயத்தை சிஷ்யன் முதலில் உணரவேண்டும்.
சரீர வியதிரிக்த அனுமானம் சூரியனிடமிருந்து ஆரம்பித்து ஆத்மாவில் வந்து முடிவடைகிறது.

ஸ்லோகம்-7
ஆத்மாவினுடைய ஸ்வரூபம் என்ன? அதன் தன்மை என்ன? என்பதை விளக்குகிறது. அது புருஷனாக இருக்கிறது.
पुरुषः எந்த ஒன்று பூரணமாக இருந்து கொண்டு எதனாலும் விளக்கப்படாமல் தானே பிரகாசித்துக் கொண்டிருக்கிறதோ அதுதான் ஆத்மா.
மனதை ஜடமாக யூகத்தால்தான் அறிந்து கொள்ள முடியும்.
यॊSयँ ज्योति पुरुषः இந்த ஜோதி புருஷன்.
விக்ஞானமய: இருக்கின்ற எண்ணங்களைக் கொண்டு தீர்மானிக்கும் கரணம் புத்தி.
எதனால் அறிவை அடைய முடியும் என்றால் அது புத்தியினால்தான். எதனால் இந்த புத்திக்கு அறிவைக் கொடுக்கும்
சக்தியை அடைந்திருக்கிறது என்றால் அதில் பிரதிபலிக்கும் ஆத்மாவினால்தான் அதுவே சிதாபாஸன் என்று அழைக்கப்படுகிறது.
சிதாபாஸனை லிங்கமாக கொண்டு அறியப்படுவது ஆத்மா. இது ஆத்மாவை புரிந்து கொள்ள உதவுகிறது.
இந்த உபாதியை எடுத்துக் கொண்டு விசாரம் செய்து இதை உறுதி செய்ய வேண்டும்.
புத்தியாகவும் அதில் பிரதிபலித்து கொண்டிருக்கின்ற சிதாபாஸனாகவும் ஆத்மா வெளிப்பட்டு கொண்டிருக்கிறது.

प्रानेष आत्मा स्थितः பிராணன்களுக்குள் ஆத்மா இருக்கின்றது. இங்கே பிராணன்கள் என்று குறிப்பிடுவது
ஐந்து பிராணன்கள், ஐந்து ஞானேந்திரியங்கள், ஐந்து கர்மேந்திரியங்கள்.

மரங்களுக்கிடையே உள்ள பாறை என்பது அவைகளுக்கு அருகில் உள்ள பாறை என்று எடுத்துக் கொள்ள வேண்டும்,
ஆத்மா பிராணன்களுக்குள் இந்திரியங்களுக்கு அருகில் இருக்கின்றது என்று எடுத்துக் கொள்ள வேண்டும்.
இதிலிருந்து ஆத்மா இவைகளுக்கு வேறானதாக இருப்பதை அறியலாம்.
அது தான் இவைகள் செயல்படுவதற்கு ஆதாரமாக (ஜோதியாக) இருந்து கொண்டிருக்கிறது.

ह्रूद्यन्तः புத்தியில் இருக்கின்ற எண்ணங்களுக்கு அப்பாற்பட்டுள்ளது.
सः समानः सनुभौ लोकावनुसँचरति: இதே ஆத்மாதான் சம்சாரியாக செயல்படுகிறது. இது அன்யோன்ய அத்யாஸத்தினால் நமக்கு இவ்வாறாக நினைக்கத்தோன்றுகிறது.
सः – அந்த ஆத்மா
समानसन् – புத்தியுடன் அத்யாஸத்தால் ஒன்றாகியதற்குப்பிறகு
उभौ लोकाव – இரண்டு லோகங்களுக்கிடையே (இகலோகம், பரலோகம்)
अनुसँचरति: – புண்ணிய, பாவ பலன்களினால் சென்று வந்து கொண்டிருக்கின்றது.
ध्यायति इव – தியானிக்கின்றான்; மனனம், நிதித்யாஸனம் செய்கின்றான்.
लेलायति इव – அங்கும் இங்கும் அலைபவன்
இந்த இரண்டு சொற்களால் (த்யாயதி இவ, லேலாயதி இவ) ஆத்மாவின் ஸ்வரூபம் விளக்கப்படுகிறது.
” इव ” என்ற சொல் பயன்படுத்த வேண்டுமென்றால், அனுபவத்தில் இருக்க வேண்டும். ஆனால் ஆராயும் போது அது இருக்கக்கூடாது.
“மித்யா” என்ற சொல் அனுபவத்தில் இருக்கிறது ஆனால் ஆராய்ந்து பார்க்கும் போது அதன் இல்லாமை தெரிய வரும்.
ஜீவனாகிய நாம் செய்யும் விவகாரங்களை இரண்டாக பிரிக்கிறோம் அவைகள் ஞான விவகாரம், கர்ம விவகாரம்.
ஞான விவகாரத்திற்கு காரணமாக இருப்பது மூன்று விஷயங்கள் அவைகள் பிரமாதா(அறிபவன்), பிரமாணம் (அறிய உதவும் கருவி),
பிரமேயம் (அறியப்படும் பொருள்) இந்த மூன்றும் இருந்தால்தான் ஞான விவகார நடைபெறும்.
இதை திரிபுடீ என்றும் அழைப்பர். த்ரிபுடீ என்பது மூன்று விஷயங்கள் ஒன்றையொன்று பிரிக்க முடியாததாக இருப்பது.

सः ध्यायति – ஞான விவகாரத்துடன் கூடியவன், எல்லாவித அறிவு சம்பந்தமான விவகாரத்தில் ஈடுபட்டு கொண்டிருப்பவன்.
सः लेलायति – எல்லாவிதமான கர்ம விவகாரம்; கர்மேந்திரியங்கள் கரணம், இந்திரியங்களை கர்த்தா, கர்மம்-எதைச் செய்ய வேண்டும் என்ற குறிக்கோள்.
ஜகத்தானது அதற்கேற்ற சூழ்நிலைகளை கொடுக்கிறது.

நான் ஞான விவகாரம் செய்வது போல் இருக்கிறது, கர்ம விவகாரம் செய்வது போல் இருக்கிறது
ஆனால் உண்மையில் நான் ஒரு விவகாரமும் செய்வதில்லை சரீரம்தான் இதை செய்கிறது.

ஒருவன் ஸ்தூல சரீரத்திலிருந்து அபிமானத்தை விட்டுவிட்டு சூட்சும சரீரத்தில் அபிமானம் வைக்கும்போது கனவில் சஞ்சரிக்கின்றான்.
எனவே சரீரங்கள்தான் விவகாரஙளை செய்கிறது. ஆத்மா அறிவு ஸ்வரூபமாக இருக்கின்றது.

म्रुत्यो रूपाणि – ம்ருத்யோ என்பது அக்ஞானத்தை குறிக்கிறது, ரூபாணி என்பது சுட்டிக்காட்டுதல் என்று பொருள் கொள்ள வேண்டும்.
நம்முடைய ஸ்தூல சரீரம் அக்ஞானத்தை காட்டிக் கொடுக்கிறது.. ஒருவருடைய பேச்சு, செயல்கள் அவருடைய அக்ஞானத்தைக் காட்டிக் கொடுத்து விடும்.

சங்கரரின் விளக்கம்:
புத்தமதக் கொள்கை: நாம் பார்க்கும் உலகம் சத்யம், இதை பிரத்யக்‌ஷ பிரமாணம் மூலம் அறியலாம்.
அனுமானத்தின் மூலமும் அறியலாம். ஷணிகவாதிகல் சூன்யவாத கொ:ள்கையுடையவர்கள்,
இவர்களது கொள்கை இந்த உலகம் அஸத், உண்மையல்ல என்பதுதான். இதில் மூன்று பிரிவுகள்.
நம்முடைய அறிவில் ஒவ்வொரு க்ஷணமும் எண்ணங்கள் தோன்றி மறையும் அதுவே ஆத்மா அதுவே சத்யம்.
ஒவ்வொரு எண்ணமும் நான் என்று நினைப்பதால்தான் நாம் அது கொடுக்கும் இன்பதுன்பத்தை அனுபவிக்க நேரிடுகிறது.
அந்த எண்ணங்களுக்கும் எனக்கும் சம்பந்தமில்லை என்று நினைத்தால் அதன் விளைவிலிருந்து பாதிக்காமல் இருக்கலாம்.

கேள்வி: புத்தமத கொள்கை: ஷணிக விக்ஞானம்தான் ஆத்மா, அதற்கு மேல் ஒன்றும் கிடைப்பது.
அனுமானம் நம்முடைய புத்தி என்பது தன்னையும் மற்ற பொருட்களையும் விளக்குகின்றது.
ஏனென்றால் அது என்றுமே பிரகாசமாக இருப்பதால்தான் உணர்வுடன் இருப்பதால்தான்.
புத்தி தீபத்தைப்போல. புத்தி பானைப் போல் ஜடம் என்றால் அதை எனக்கு காட்டு என்று கேட்கிறான்.
பதில் தீபம் தன்னையே விளக்கவில்லை. அதற்கு கர்ம-கர்த்ரு விரோதம் என்ற தோஷத்தின்படி அது அதையையே விளக்க முடியாது.
Subject, Object இரண்டுமே ஒன்றாக இருக்க முடியாது.

எப்பொழுது ஒன்று செய்கிறது என்று சொல்ல முடியும் என்றால், அது எப்போதாவது அந்த செயலை செய்யாமல் இருந்திருக்க வேண்டும்.
எனவே தீபம் தன்னைத்தானே விளக்குகிறது என்று சொல்ல வேண்டுமானால் முன்பு அது தன்னையே
விளக்கிக் கொள்ளாமல் இருந்திருக்க வேண்டும். எனவே புத்தி தன்னைத்தானே விளக்கிக் கொள்ள முடியாது.

இந்த தீபம் கண்ணை சார்ந்திருக்கிறது. எனவே உன்னுடைய உதாரணம் தவறு.
புத்தியை பிரகாசபடுத்துவது ஆத்மா, அதுதான் நித்ய ஜோதி. நாம் ஆத்மாவை விளக்க வேறொன்றும் தேவையில்லை.
அது தன்னையே விளக்கவில்லை என்று சொல்லவில்லை.

கேள்வி நாங்கல் இதை எற்றுக்கொள்ளமாட்டோம். ஷணிக விக்ஞானம்தான் சரியானது.
தோன்றி மறைந்து கொண்டிருக்கும் பிரவாகம்தான் பரம்பொருள், அறிவுதான் பிரவாக ஸ்வரூபம்.
பதில் இப்படி இருந்தால் सर्व विवकारम लोपः எந்த விவகாரமும் ஒழுங்காக நடக்காது. சாதனம், சாத்தியம் என்பதே இருக்காது.
காரண-காரியமே இருக்காது. உதாரணமாக கனவில் நடக்கும் விவகாரங்கள் எதுவுமே ஒழுங்காக இருக்காது, தொடர்ச்சியாக இருக்காது.
எது எப்படி வேண்டுமானாலும் திடீரென்று மறையும், தோன்றும்,உருமாறும். ப்ரத்யபிக்ஞா அஸம்பவாத் – பிரத்யபிக்ஞாவே நடக்காது.
பிரத்யக்‌ஷம் – முதன் முறையாக பார்க்கும்போது கிடைக்கும் அனுபவம்
ஸ்மிருதி – வீட்டிற்கு சென்று நினைப்பது
பிரத்யபிக்ஞா – மீண்டும் பார்க்கும் அந்த அனுபவம், இவரை ஏற்கனவே எனக்கு தெரியும் என்று
அடையாளம் கண்டு கொள்ளுதல் இவைகள் ஒரு பொருளினுடைய தொடர்ச்சியை உறுதி செய்கிறது.
விருத்தி ஞானம் ஸத்யமென்றால், வஸ்துவிடமும் ஸத்யமாக, தொடர்ந்து இருக்கின்றது.
ஆகவே உன்னுடைய க்ஷணிக விக்ஞானப்படி மனதில் தோன்றும் எண்ணங்களும் மித்யாதான்.

கேள்வி பிரத்யபிக்ஞா என்பதே கிடையாது. ஏற்கனவே பார்த்தப் பொருளையே பார்க்கும் போது உனக்கு அப்படி தோன்றுகிறது.
உண்மையில் நீ பார்க்கும் ஒவ்வொரு பொருளும் நீ பார்க்கும் போது நேரத்தில் தோன்றும் தோற்றம்.
ஒரே மாதிரியாக இருப்பதால் உனக்கு தொடர்ச்சியாக இருப்பதுபோல் தோன்றுகிறது.
பதில் सा द्रुष्टँ உன்னுடைய இந்த கருத்து உன்னுடைய கொள்கைக்கே விரோதமாக இருப்பதால் இது நிராகரிக்கப்படுகிறது.
உன்னுடைய கையில் வைத்திருக்கும் பொருள் யாருடையது? என்று ஒருவன் கேட்க அதற்கு அவன் என்னுடையது என்று சொல்கிறான்.
என்னுடையது என்கின்ற விவகாரம் நடக்காது. ஏனென்றால் உன்னுடைய கொள்கைப்படி ஒவ்வொரு க்ஷணத்தில் விஷயம் தோன்றி மறைகிறது.
என்னுடையது என்பதில் உன்னுடைய விருத்தி வேறாக இருக்கிறது, பொருள் வேறாக இருக்கிறது. எனவே இதுவும் உன்னுடைய கொள்கைக்கு வேறாகிறது.

நீ எந்தப் பொருளுக்கும் பெயர் வைக்க முடியாது. க்ஷணத்தில் தோன்றி மறைவதால், பெயர் கொடுத்தாலும் அது மறைந்து விடுகிறது.
க்ருத நாசம் தோஷம்: கர்ம செய்தவன் அழிந்து விடுகிறான் அதன் பலனை வேறொருவன் அனுபவிக்கின்ற நிலை ஏற்படும்.
விக்ஞானம் சத்யமென்றால், விதவிதமான விஷயங்கள் இருக்கிறதே? அவன் சொல்கிறான்,
விஷயங்கள் எல்லாம் விக்ஞானத்திற்கு அடைமொழியாக எடுத்துக் கொள்ள வேண்டும். இதனால் விருத்த அம்ச தோஷம் வந்துவிடும்.
இரண்டு விருத்தமான குணங்கள் ஒரே விஷயத்தில் இருக்க முடியாது. மென்மையான, கடினமான பாறை என்று சொல்ல முடியாது.

இந்த அடைமொழிகள் எல்லாம், விக்ஞானத்திற்கு அசுத்தியாக உள்ளது. க்ஷணிக விக்ஞானம் சத்யம்.
இப்படி சொல்வதால் உன்னை அறியாமல் அசுத்தி என்ற வேறொன்றை ஒத்துக் கொள்வது போல இருக்கிறது.
இந்த அசுத்திதான் அதன் தன்மையாக இருக்கிறது என்று சொன்னால் மோக்‌ஷம் என்பதே அடையவே முடியாது.
அசுத்தியை நீக்க முடியாது. எனவே உன்னுடைய கருத்துப்படி மோக்‌ஷம் என்பதை அடையவே முடியாது

ஸ்லோகம்-8
ஆத்மா வருகிறது, போகிறது என்பதெல்லாம் உண்மையில் கிடையாது. ஜென்ம லக்‌ஷணம், மரண லக்‌ஷணம், சரீரத்தின் ஸ்வரூபம் என்ன?

1. காரிய-காரணாத்மகம் – சரீரம் காரிய ஸ்வரூபமாகவும், காரண ஸ்வரூபமாகவும் இருக்கிறது.
ஒரிடத்தில் இருந்து செயல்படுவதற்கு சரீரம் உதவுகிறது. செயல்படுவதற்கு உதவியாக இருப்பதும்,
செயல்படுவதற்கு உதவியாக இருக்கும் கருவிகள் இருக்கும் இடமாகவும் சரீரம் இருக்கிறது.
2. தர்ம-அதர்ம ஆஸ்ரயம் – பாவ-புண்ணியங்களுக்கு உறைவிடமாக இருக்கிறது
3. தர்ம-அதர்ம ஜனகம் – பாவ-புண்ணியத்தை தோற்றுவிக்கிறது, உற்பத்தி செய்கிறது
4. சரீரம்தான் இகலோக, பரலோகத்திற்கு சென்று வருகிறது
5. எப்பொழுது ஒரு பொருள் மீது நாம் அபிமானம் வைக்கிறோமோ அப்பொழுதே அது பிறந்து விடுகிறது
6. எந்த நேரத்தில் ஒரு பொருளின் மீது பற்றுவிட்டு போகிறதோ அது அப்போதே மரணத்தை அடைந்து விடுகிறது.

மந்திரவிளக்கம்:
सः वै – அந்த अयँ पुरुषः – இந்த புருஷன் செயலற்றவன், எதனோடும் ஒட்டாதவன்,
जायमानः பிறக்கின்றான், शरीरम अभिसँपद्यमानः சரீரத்தில் அபிமானம் வைக்கிறான்
पाप्मभिः பாவ-புண்ணியங்களுடன், தர்ம-அதர்மங்களுடன்; பாவ-புண்ணியங்களை தாங்கிக் கொண்டிருக்கின்ற
மனம், புத்தி, இந்திரியங்களுடன் சம்பந்தம் ஏற்பட்டிருக்கிறது
सँस्रुज्यते சம்பந்தம் ஏற்பட்டு விடுகிறது.
सः उत्क्रामन – சரீரத்திலிருந்து அபிமானத்தை விடுதல்
म्रियमान – மரணமடைதல்
पाप्मनः विजहाति – பாவ-புண்ணியங்கள் விட்டு விலகுகிறது.
தேகம் முதலியவைகள் ஆத்மாவின் சுபாவமல்ல. காரணம் சம்யோக, வியோக என்பதாக இருக்கிறது அதாவது பிறத்தல், இறத்தல் என்ற நிலை இருப்பதால்.

ஸ்லோகம்-9
இதில் ஸ்வப்ன அவஸ்தையை விளக்கப்படுகிறது
· ஆத்மா ஸ்வயம் ஜோதி
· பரலோக அஸ்தித்வம் – நமக்கு மறுபிறவி இருப்பதை உறுதி செய்கிறது
· ஆத்மாவுக்கு சரீரத்தோடு சம்பந்தம் வைக்கும்போதுதான் சம்சாரம். ஆனால் உண்மையில் அதற்கு சம்சாரமில்லை.
· நாம் அனுபவிக்கக்கூடிய அவஸ்தைகளுடைய இருப்பிடம் மனதுதான். அவஸ்தைகளுடைய சாட்சியாக இருப்பது ஆத்மா.
மறுஜென்மம் உண்டு என்பதை கனவு நிலையை வைத்து உறுதி செய்யப்படுகிரது.

கனவு நிலை-1: நான் ஸ்தூல சரீரத்திலிருந்து வேறுபட்டவன்
கனவு நிலை-2: கனவில் காண்பதெல்லாம் மித்யா என்ற அறிதல், உறுதி செய்தல்

இங்கு ஜீவனுக்கு இரண்டு உலகங்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றன.
ஒரு லோகம் இந்த ஜென்மத்தில் அனுபவிக்கும் இந்த லோகம் இரண்டாவது பரலோகம்,
இது முற்பிறவியில் இருந்த லோகம் அல்லது மறு பிறவியில் இருக்கப்போகும் லோகம்.
நாம் குழந்தையாக இருக்கும்போது முதல் மூன்று கண்ணுக்கு பார்க்கும் சக்தி கிடையாது.
குழந்தை திடீரென்று அழும், சிரிக்கும், இதற்கெல்லாம் காரணம் பூர்வ ஜென்மத்தின் அனுபவங்கள், வாஸனைகள்,
விஷயங்கள் கனவில் வருவதால். குழந்தைக்கு இகலோக அனுபவம் கிடையாது.
பிறகு மரணமடைவதற்கு முன் இந்த ஜென்மத்தில் தோன்றிய ஸம்ஸ்காரங்களைத்தான் கனவில் அனுபவிப்பான்.
மரண படுக்கையில் இருக்கும்போது இகலோக எல்லா இந்திரியங்களும் சக்திகளை இழந்து விட்டிருக்கும்,
இகலோக ஸம்ஸ்காரங்கள் செயல்படாது. அடுத்த ஜென்மம் பற்றிய விஷயம் ஆரம்பமாகி விடும்.
அவர்களுடைய கனவில் வரப்போகும் ஜென்மத்தின் ஸம்ஸ்காரங்களை அனுபவிக்க ஆரம்பித்து விடுவான்.
ஸம்ஸ்காரங்கள் இல்லாமல் கனவு வராது குழந்தை பூர்வ ஜென்ம ஸம்ஸ்காரங்களையும், மரண நிலையில் வரப்போகும்
ஜென்மத்தில் ஸம்ஸ்காரங்களையும் அனுபவிக்கிறோம். எனவே கனவு நிலை என்பது நம்முடைய மறு ஜென்மம் இருப்பதை நிரூபிக்கிறது.

மந்திரவிளக்கம்:
ஜீவனுக்கு இரண்டு இடங்கள் அனுபவிப்பதற்கு இருக்கிறது. அவைகள் இகலோகம்-இப்பொழுது அனுபவித்து கொண்டிருக்கும் உலகம்,
பரலோகம்-முற்பிறவியிலும், அடுத்த பிறவியிலும் அனுபவிக்கப்போகும் உலகம்.
சந்த்யம் த்ருதீயம் ஸ்வப்ன ஸ்தானம் – இந்த கனவு நிலையில் இருந்து கொண்டு இரண்டு உலகங்களை அனுபவிக்கின்றான்.
குழந்தையாக இருக்கும்போது முற்பிறவி லோகத்தையும், மரணதறுவாயிலிருக்கும்போது பரலோகத்தையும் அனுபவிக்கின்றான்.
தஸ்மின் ஸந்த்யே ஸ்தானே- இந்த இடைவெளியில் கனவு நிலையில்
திஷ்டன் ஏதே உபே ஸ்தானே பஷ்யதி: இந்த இடைவெளியில் ( முற்பிறவி உலக விஷயங்கள் அனுபவிக்கும் உலகம்,
அடுத்த பிறவி உலகத்தை அனுபவிக்கும்) இப்போது இருந்து கொண்டே இந்த் இரண்டு உலகங்களையும் அனுபவிக்கின்றான்.

எதன் அடிப்படையில் இந்த ஜீவனுக்கு அடுத்த ஜென்மம்.
அத4 யதா4 ஆக்3ரம அயம்- நம்மிட்த்தே வெளிப்படுகின்ற பாவ-புண்ணியங்களை பொறுத்து அடுத்த பிறவி நிர்ணயிக்கப்படுகிறது.
இது சஞ்சித கர்மத்திலிருந்து வெளிப்படுகிறது. அங்கிருந்து ஒரு பகுதியை எடுத்துக் கொண்டு அந்த பிராரப்த்தை அனுபவிகின்றான்.
ஆக்கிரமஹ à தர்ம-அதர்ம அல்லது பாவ-புண்ணியங்கள்
இவன் எப்படிப்பட்ட பாவ-புண்ணியத்தை சஞ்சிதகர்மத்திலிருந்து எடுக்கிறானோ அதன் அடிப்படையில் சுக-துக்கங்களை
அடுத்த பிறவியில் அனுபவிக்கிறான். இதிலிருந்து மறுபிறவி உறுதி செய்யப்படுகிறது.

ஆத்மா ஸ்வயம் ஜோதி விசாரம்:
விழிப்பு நிலையில் சாக்ஷி சைதன்யம் மனதை பிரகாசிக்கிறது. மனம் பிரகாசப்படுத்தப்பட்ட உடன் அது இந்திரியங்கள்,
உலகம் இவைகளை பிரகாசிக்கிறது. இந்த நிலையில் சைதன்யம், மனம் என்ற இரண்டு ஜோதிகள் இருக்கின்றன.
நம்முடைய அனுபவத்தில் மதால்தான் எல்லாவற்றையும் அறிகிறோம். மனம் உறங்கியதும் உலகம் கிடையாது.
இந்த நிலையில் சைதன்யம் என்பது ஒன்று இருக்கிறது என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.
இதை புரிந்து கொள்ள மனமே தடையாக இருக்கிறது. ஆழ்ந்த உறக்கத்தில் ஒன்றுமே இல்லை.
அந்த நிலையில் புரிந்து கொள்ளக்கூடிய ஒன்றும் நமக்கு தெரியவில்லை, கனவு நிலையில் சாக்ஷி சைதன்யம் மனதை பிரகாசிக்கிறது.
ஆனால் மனம் அது பார்க்கப்படும் பொருளாக இருக்கிறது. விழிப்பு நிலையில் உடலையும், உலகையும் விளக்கிக்கொண்டிருக்கின்ற
மனம் கனவு நிலையில் வெறும் அனுபவிக்கப்படும் பொருளாக மட்டும் இருக்கின்றது.
இந்த நிலையில் வாஸனா மயமாக மனமானது பரிணாமத்தை அடைந்து, அதுவே கரணமாக மாறியிருக்கிறது.
பார்ப்பவனாகவும் பார்க்கப்படும் பொருளாகவும் மாறியிருக்கிறது. இதைப்பார்க்கும் பொருள் எது? அதை யார் விளக்குகிறது?
மனதிற்கும் வேறாக அதை பிரகாசிக்கக்கூடிய ஒன்று இருக்க வேண்டும்.
எனவே கனவில் ஆத்மா தானாக ஒளிர்ந்து கொண்டு மனதையும் விளக்குகின்றது.
இவ்விதம் ஆத்மா ஸ்வயம் ஜோதி என்று சந்தேகமில்லாமல் விளங்குகின்ரது. கனவு நிலை இதை உறுதிப்படுத்துவதற்கு உதவியாக இருக்கிறது.

கேள்வி மனமே ஸ்வயம் ஜோதியாக எண் இருக்கக்கூடாது?
பதில் இதை ஏற்றுக் கொண்டால் ஐந்து வகையான குறைகள் தெரிய வரும். மனதை ஜடமாக பார்க்கும் வாய்ப்பே
நமக்கு கிடைக்கவில்லை அதனால்தான் மனதை ஜடமாக எற்றுக் கொள்ள முடியவில்லை.
1. அநித்யத்துவ பிரசங்கம்: மனம் விகாரமடையும் (மாற்றம்) என்ற தன்மையுடன் இருக்கிறது. எது விகாரத்துடன் கூடியுள்ளதோ
அதற்கு அழிவும் இருக்கிறது. இப்படி மனமானது அநித்யமாக இருப்பதால் சைதன்யமே இல்லாததாகி விடும்
எனவே மனதை ஸ்வயம் ஜோதி என்று சொல்ல முடியாது. .
2. மனஸஹ அஸம்பவாதி: மனதிற்கு லய அவஸ்தையே சம்பவிக்கிறது
3. மனம் என்ற சூட்சும ஸரீரம் எந்தவொரு அறிவை அடைய வேண்டுமென்றாலும் மனதில் எண்ணங்கள் வரவேண்டும்.
அந்த எண்ணங்களாக மனமே மாறி, அறிவை அடைகின்றோம் அப்படி எண்ணங்கள் வரவில்லையென்றால் அறிவு கிடைக்காது.
மனதால் இதை அறிகிறேன் என்பதை அறிய செய்ய முடியாது வேறொன்றுதான் அதை செய்ய முடியும்.
ஒரே க்ஷணத்தில் மனம் உலகத்தை விளக்கும்போது அதை வேறொன்று விளக்கிக் கொண்டிருக்கிறது என்பது தெரிய வருகிறது
அதுதான் என்றும் சாக்ஷியாக இருக்கும் ஆத்மாவாகத்தான் இருக்க வேண்டும்.
4. ஸ்ருதி விரோதாத்: ஸ்ருதி மனம் ஜடம் என்று கூறியிருக்கிறது. பஞ்ச சூட்சும பூதங்களிலிருந்து உருவாகியதுதான்
மனம் என்பதால் அது ஜடம் என்று அறிந்து கொள்ள முடிகிறது.
5. அநிர்மோக்ஷம் பிரசங்கஹ: மோக்‌ஷம் என்ற ஒன்றே இருக்க முடியாது. சம்சாரியாக விகாரத்துடனிருக்கும்
மனதை ஏற்கனவே அடைந்து விட்டோம். எனவே மோக்ஷம் என்பது சம்பவிக்காது
மேற்கூறிய கருத்துக்களிலிருந்து மனமானது ஸ்வயம் ஜோதியாக இருக்க முடியாது என்று நிரூபணமாகிறது.

மனமே சாக்ஷி சைதன்யத்துக்கு பார்க்கப்படும் விஷயமாகவும், கரணமாகவும், பார்ப்பவன் என்ற மூன்று நிலைகளாக மாறி
நமக்கு கனவு அனுபவம் ஏற்படுகிறது.
ஸஹ யத்ர ப்ரச்வமிதி – ஜீவன் எப்பொழுது கனவை அனுபவிக்கின்றானோ;
அஸ்ய லோகஸ்ய ஸர்வாவதஹ – ஸ்தூல சரீர அபிமானியாக இருக்கிற விஸ்வனே அனைத்தும் உடையவனாக (ஸர்வாவதஹ) இருக்கிறான். ஐந்து தத்துவங்களை உடையவனாக இருக்கிறான். இந்த ஐந்தும் இருந்தால்தான் ஜாக்ரத் அவஸ்தையில் உலகத்தை அனுபவிக்க முடியும். அவைகள் ஸ்தூல சரீரம், கரணம், கரண தேவதா, விஷயம், வாஸனா (பார்த்த, செய்தது பதிவாகியிருக்கும் நினைவகம்)
மாத்ராம் அபாதாய – வாசனையை மட்டும் எடுத்துக் கொண்டு, தைஜஸன் விஸ்வனிட-மிருந்து வாஸனையை மட்டும் எடுத்துக் கொண்டு
ஸ்வயம் விஹிதிய – ஸ்தூல சரீரத்தை தியாகம் செய்து விட்டு
ஸ்வயம் நிர்மாய – தானே ஒரு உலகத்தை உருவாக்கி
ஸ்வேன பாஸா – விருத்தி ரூபமாக அனத்தும் உருவாகி
ஸ்வேன ஜோதிஷா– சாக்ஷி சைதன்யத்தின் ஜோதியினால்
ப்ரஸ்வமிதி – அவன் தூங்குகிறான், கனவை காண்கின்றான்.
அத்ர அயம் புருஷ இந்த ஸ்வப்ன அவஸ்தையில், இந்த சாக்ஷியானவன்
ஸ்வயம் ஜோதி பவதி – சுய ஜோதியாக விளங்கிக்கொண்டிருக்கிறது.

ஸ்லோகம்-10
ஸ்வப்ன பிரபஞ்சம் மித்யா என்று விளக்குதல்.
கயிற்றில் தோன்றும் பாம்பும் வாஸனையிலிருந்து வந்த விருத்தி கனவில் பிரபஞ்சமாக உருவாகிறது

கேள்வி: கனவு பிரபஞ்சம், விழிப்பு நிலையின் தொடர்ச்சிதான். எனவே ஜாக்ரத் அவஸ்தை எவ்வளவு சத்தியமோ
அதே அளவு சத்தியம்தான் கனவும். காரணம் விழிப்பு நிலையில் எப்படி அனுபவிக்கிறோமோ அதே மாதிரிதான் கனவு நிலையிலும் கர்த்தா, கரணம், விஷயம் என்று இருக்கிறது. எனவே கனவு மித்யா என்று எப்படி சொல்வாய்?
பதில் கனவில் பார்ப்பதெல்லாம் வாஸனையிலிருந்து உருவாக்கப்பட்டவை, பஞ்ச பூதங்களால் உருவாக்கப்பட்டதில்லை.

மந்திரவிளக்கம்:
தத்ர: அங்கு (கனவு நிலையில்) ந ரதஹ – ரதங்கள் கிடையாது.
ந ரதயோஹ – ரத்த்தை ஒட்டும் குதிரைகள் கிடையாது; ந பந்தானஹ – பாதைகள் கிடையாது
நாம் பார்க்கும் இவைகள் உண்மையில் இல்லை எனவே மித்யா என்பது நிரூபணமாகிறது.
ஆனால் இவைகளெல்லாம் வாஸனையிலிருந்து தோற்றுவிக்கப்பட்டிருக்கிறது.
ந தத்ர ஆனந்தாஹா, முதஹ, பிரமுதஹ – பிரியம், மோதம், பிரமோதம் என்ற மூன்று நிலைகளும் கனவில் இல்லை.
இது விஷயத்தின் காரியமான ஆனந்தம் கிடையாது. விஷய நிமித்த சுகமும் கிடையாது.
இவையும் வாஸனையிலிருந்துதான் உருவாக்கப்படுகிறது. கனவில் பார்க்கும் பொருட்களும் பொய்யானது
அதிலிருந்து அனுபவிக்கும் சுகமும்-துக்கமும் பொய்யானது. இவைகள் வாஸனையிலிருந்துதான் தோன்றியுள்ளது.
அதுபோல கனவில் பார்க்கும் குளம், குட்டை, ஆறு, ஏரி இவைகளெல்லாம் உண்மையில் தோற்றுவிக்கப்பட-வில்லை.
இவைகளையெல்லாம் உருவாக்குபவன் கனவு காண்பவந்தான். இந்த ஜீவாத்மாதான் கர்த்தாவாக இருக்கின்றான்.
விழிப்பு நிலையிலுள்ள வஸ்துவிற்கு கர்த்தா ஈஸ்வரன்.

ஸ்லோகம்-11
இந்த விஷயத்தை விளக்கும் ஸ்லோகங்கள் எடுத்துக்காட்டாக கொடுக்கப்பட்டு இருக்கிறது.
ஹிரண்யமயஹ; புருஷஹ; ஏக ஹம்ஸஹ – இவைகள் ஆத்மாவின் ஸ்வரூபங்கள்
ஹிரண்யமயஹ – சைதன்ய ஜோதி ஸ்வபாவஹ – சைதன்யத்தை ஜோதியாக, ஸ்வரூபமாக கொண்டது.
புருஷஹ: காரியம்-கரணாதி ஸர்வம் பூரயதி இதி புருஷஹ: ஆத்மா என்ற தத்துவம் நம்முடைய சரீரத்தை முழுவதுமாக வியாபித்திருக்கிறது.
ஏகஹம்ஷஹ: உண்மையில் நிலையாக இருந்து கொண்டு, சிதாபாஸ ரூபமாக தன்னை மாற்றிக் கொண்டு
ஒரு லோகத்திலிருந்து இன்னொரு லோகத்திற்கும், சரீரத்திற்குள்ளே ஒரு அவஸ்தையிலிருந்து வேறொரு அவஸ்தைக்கு சென்று வந்து கொண்டிருக்கிறது
ஸ்வப்னே வாஸனா மாத்ர லோகேன பாவனயா – கனவு மயமான உலகத்தை உருவாக்கி அதில் அபிமானிக்கும் போது
ஸாரீரம் அபிப்ரஹதியா – ஸ்தூல சரீரத்தை, செயலற்றதாக, ஜடமாக மாற்றி
அஸுப்தஹ – நிர்குண ஆத்மா, சாக்ஷி சைதன்யம், எப்பொழுதும் உறங்காதவன்
அலுப்த த்ருக் – இடைவிடாமல் பார்த்துக் கொண்டிருப்பவன்.
ஸுப்தான் – வாஸனா பிரபஞ்சத்தை
அபிசாகஸீதி – சாக்ஷியாக பார்த்துக் கொண்டிருப்பது; எந்தவித செயலும் செய்யாமல் பார்த்துக் கொண்டிருப்பவன்.
தைஜஸன் உருவான பின் விஸ்வன் உறங்கி விட்டான் அவனையும், அவன் உருவாக்கிய கனவு உலகத்தையும் சாக்ஷியாக பார்த்துக் கொண்டிருக்கும்
புனஹ: விழிப்பு நிலை வாசனை செயல்பட ஆரம்பிக்கும்போது சரீரம் தன்னுடைய இந்திரியங்களை எடுத்துக் கொண்டு மீண்டும் விழிப்பு நிலைக்கு வருகின்றான்.

ஸ்லோகம்-12
பிராணேன ரக்‌ஷன் அஹம் குலாயம் – ஐந்து பிராணன் மூலமாக இந்த ஸ்தூல சரீரமானது பாதுகாக்கப்படுகிறது.
இந்த ஸ்தூல சரீரமானது பூமியோடு கலந்து உறங்கப்போகிறது.
பஹவுகுலாயாத்- இந்த சரீரத்திலிருந்து அபிமானத்தை விட்டு வெளியே சென்று
சரித்வா – கனவுலகை அனுபவித்துக் கொண்டு
சஹ ஈயதே யத்ர காம்ம் – எப்படிப்பட்ட ஆசையானது மனதிற்குள் திடமாக இருந்து எண்ணங்களாக வெளிபட்டு அதை கனவில் அடைகிறான்.

ஸ்லோகம்-13
இந்த மந்திரத்தில் கனவுக்கு வாசனையிலிருந்துதான் வெளிப்படுகிறது. எந்த வாசனை வெளிப்படும் என்றால்
நமது கர்மவினை, திடமான ஆசை இவைகளின் அடிப்படையில்தான் கனவு நிலையிலும் நாm பிராரப்த கர்மத்தை அனுபவித்து கழிக்கிறோம்.
ஸ்வனாந்த – கனவு அவஸ்தையில்; உச்சா அவச்சாம் – மேலான, கீழான,
ஈயமான – அடைந்து, தேஹ பஹுனி ரூபானி – நமக்குள் இருக்கும் சைதன்ய ஸ்வரூபம் பலவிதமான தோற்றங்களை,
வாஸனைகளின் அடிப்படையில் உருவாக்குகிறது.
கனவுக்கு உபாதானகாரணம் கர்மவினை, நிமித்தக் காரணம் வாஸனை அதிஷ்டான காரணமாக
இருந்து கொண்டிருப்பது சைதன்ய ஸ்வரூபம். கனவை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு நமக்கு கிடையாது.
உத ஏவ – இவையெல்லாம் மித்யாவான பொருட்களை
சஹ மோதமானே- இவைகளையெல்லாம் அனுபவித்து இன்புறுகிறான்’
ஜக்வித் உதே ஏவ – மகிழ்ந்து கொண்டு
பயானி பஷ்யன் – பயத்தைக் கொடுக்கின்ற, துயரத்தைக் கொடுக்கின்ற காட்சிகளை உருவாக்குகிறான்

ஸ்லோகம்-14
அஸ்ய-இந்த ஜீவன்கள்;
ஆராமம் – கனவில் உருவாக்கிய பொய்யான உலகத்தை
பஷ்யந்தி – அதுதான் உண்மையென்று மனிதர்கள் பார்த்து கொண்டிருப்பார்கள்
தம் ந பஷ்யதி கஷ்சன – யாரும் உண்மையை பார்ப்பதில்லை
தம் ஆயதம் ந போத்யேத் – ஆழ்ந்து உறங்கிக்கொண்டிருக்கின்றவர்களை அவசரமாக எழுப்பிடக் கூடாது.
இதி ஆஹுஹு – மருத்துவர்கள் இவ்வாறு எச்சரிப்பார்கள்
துர் விஷ்ஜம் – இவ்வாறு எழுப்பியவர்களுக்கு ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால் சிகிச்சை அளிப்பதற்கு மிகவும் கடினம்.
யம் ஏஷ ந பிரதிபத்யதே – இந்திரியங்கள் தத்தம் நிலையிலிருந்து கனவுலகிற்கு சென்றிருக்கும். ஒடுங்கிய நிலக்கு சென்றிருக்கும்,
ஸம்ஸ்காரங்களும் செயல்பட்டு கொண்டிருக்கும். திடீரென்று எழுப்பினால் இந்திரியங்கள் அதனது கோளகத்திற்கு வந்து சேர வேண்டும்,
ஸம்ஸ்காரங்களும் ஒடுங்கிய நிலைக்கு செல்ல வேண்டும். இது நடைபெறுவதில் சிக்கல் ஏற்படலாம்.
அதோகலு அஹுஹு – அய்யய்யோ இப்படி கூறுகிறார்கள் அக்ஞானிகள்
ஜாகரிட்தேஷ ஏவ அஸ்ய ஏஷ இதி – கனவும், ஜாக்ரத் அவஸ்தையின் ஒரு அங்கமாக இருக்கிறது.
யானி ஹ்யேவ ஜாக்ரத் பஷ்யதி – அதை இவன் விழிப்பு நிலையில் எதை பார்க்கிறானோ
தானி சுப்த இதி – அதைத் தான் கனவிலும் காண்கிறான். அதனால் கனவு விழிப்பு நிலையின் ஒரு அங்கமாக இருக்கிறது
அத்ர அயம் புருஷஹ ஸ்வயம் ஜ்யோதிர் பவதி – கனவு நிலையில் அந்த புருஷன் ஸ்வயம் ஜோதியாக இருக்கின்றான்.
ஜனகர் இதுவரை பெற்ற உபதேசத்திற்காக மேலும் ஆயிரம் பசுக்களை குரு காணிக்கையாக தருகிறேன் என்று கூறி
மோக்‌ஷத்தை பற்றி மேலும் விளக்குங்கள் என்று வேண்டினார்.
மீண்டும் அதையே உபதேசம் செய்ய சொல்வதற்கு காரணம் ஜனகருக்கு இன்னும் முழுமையாக நிர்குண பிரம்மத்தை புரிந்து கொள்ளாததால்தான்.

ஸ்லோகம்-15
ஆத்மா அஸங்கம்தான் என்று நிலை நாட்டப்படுகிறது. கர்மத்திலிருந்தும் அஸங்கம், அனாத்மாவிலுருந்தும் சம்பந்தமற்றவன்.
· கரணங்கள் இல்லையென்றால் கர்மம் பண்ண முடியாது
· கர்மம் செய்து விட்டால் பலனை அனுபவித்துத்தான் தீர வேண்டும்.
கனவில் ஒருவன் ஏதோ ஒரு பாவ காரியம் பண்ணியிருக்கின்றான். அதன் பலனை அனுபவிக்க வேண்டும்
ஆனால் விழித்தவுடன் அவன் அதற்கான பலனை அனுபவிக்க மாட்டான். கர்மம் பண்ணியது தைஜஸன் அவன் மறைந்த பிறகு
விஸ்வன் அனுபவிக்க வேண்டியத்தில்லை. எனவே ஆத்மா மூன்று நிலையிலும் இருக்கிறான்
ஆனால் எந்த கர்மத்திற்கும் சம்பந்தம் இல்லை. இதனால் ம்ருத்யூ ரூபங்களில் மட்டும் தாண்டி செல்லவில்லை,ம்ருத்யூவையும் கடந்து செல்கின்றான்.

மந்திரவிளக்கம்:
सः वै ऎशः அவனே ஆத்மா. அவன் என்பது விஸ்வனாகவோ, தைஜஸனாகவோ, பிராக்ஞனாகவோ இருக்கலாம்
एतस्मिन सँप्रसादः – இந்த சூழ்நிலை உறக்கத்தில் தற்காலிகமாக சம்சாரத்தை கடந்து விடுகிறான்.
ப்ரஸாதம் : அமைதியாக இருத்தல்;
ஸ்ம்ப்ரஸாதம்: முழுமையாக மகிழ்ச்சியாக அமைதியாக இருத்தல்.
रत्वा चरित्वा, द्रुष्टवा एव पुण्यँ च पापँ च : கனவு நிலையில் மகிழ்ச்சியாக அங்குமிங்குமாக அலைகிறான்,
புண்ணியத்தையும் பாவத்தையும் அனுபவிக்கின்றான். அதாவது சுக-துக்கத்தை அனுபவிக்கின்றான்.
पुनः மீண்டும், प्रतिन्यायँ – போன வழியில் கனவு-ஆழ்நிலை உறக்கத்திருந்து திரும்பி வருகின்றான்; प्रतियोनि आद्रवति – கனவு நிலைக்கு வந்து விடுகின்றான்
स्वप्नाय एव – கனவை அனுபவிப்பதற்கு
सः तत्र – எது இவ்வாறு இங்கும் அங்கும் சென்று வரும்போது
यत किँचित पष्यति – எதையெல்லாம் பார்க்கின்றானே, அனுபவிக்கின்றானோ
अनन्वा कतस्तेन भवति – அவன் பார்க்கப்படும் பொருட்களால் தாக்கப்படாதவன், பாதிக்கப்படாதவன்
असङ्ग ह अयम पुरुष इति – அவனுடைய ஸ்வப்னமே அஸங்கமாக இருக்கிறது
எனக்கு யாரோடும் சம்பந்தமற்றவன் என்ற நிலையில் வந்து விட்டால், நாம் யாராலும் தாக்கப்படாமல் இருப்போம்.
एवँ एव एतद – இப்படியே எற்றுக்கொள்கிறேன்
என்று கூறிய ஜனகர் அதற்கு காணிக்கையாக மேலும் ஆயிரம் பசுக்காள் குருதட்சிணையாக தருகிறேன் என்றும் கூறினார்.
மேலும் எனக்கு மோக்‌ஷத்தைப் பற்றி உபதேசியுங்கள் என்று கேட்டுக் கொண்டார்.

ஸ்லோகம்-16
சுக-துக்கங்களை ஸ்வப்னத்தில் அனுபவித்து விட்டு மீண்டும் விழிப்பு நிலைக்கு வந்து விடுகின்றான்.
இந்த விஸ்வன் விழிப்பு நிலையில் எதையெல்லாம் பார்க்கின்றானோ அதனால் தாக்கப்படவில்லை ஏனென்றால் அவன் அஸங்கமாக இருக்கின்றான்.
एवँ एव एतद – இப்படியே எற்றுக்கொள்கிறேன்
என்று கூறிய ஜனகர் அதற்கு காணிக்கையாக மேலும் ஆயிரம் பசுக்காள் குருதட்சிணையாக தருகிறேன் என்றும் கூறினார்.
மேலும் எனக்கு மோக்‌ஷத்தைப் பற்றி உபதேசியுங்கள் என்று கேட்டுக் கொண்டார்

ஸ்லோகம்-17
இவன் விழிப்பு நிலையில் எல்லாவற்றையும் அனுபவித்து விட்டு மீண்டும் கனவு நிலக்கு சென்று விடுகிறான்.
இதனால் அஸங்கத்வம் நிரூபிக்கப்படுகிறது. விழிப்பு நிலையில் அனுபவிக்கப்படும் எந்தப்பொருளும் எனக்கும் சம்பந்தமில்லை
என்று புரிந்து கொண்டோமே-யானால் இதனால் பாதிக்கப்படாமலிருப்போம். கனவு நிலைக்கு செல்லும்போது
நாம் விழிப்பு நிலையில் அனுபவித்ததையெல்லாம் விட்டுவிட்டு செல்கின்றான்.
எனவே நாம் எந்தப் பொருளின் காரணமாக பாதிக்கப்பட்டோமானால் அதனோடு சம்பந்தம் வைத்திருக்கிறோம் என்று புரிந்து கொள்ள வேண்டும்,

ஸ்லோகம்-18
எப்படி பெரிய மீனானது நதியின் இரண்டு கரைகளுக்கும் சென்று வந்து கொண்டிருக்கிறதோ அதே போல
இந்த ஜீவன் இந்த இரண்டு அவஸ்தைகளுகும் சென்று வந்து கொண்டிருக்கின்றான்.
अनुसँचरति – சென்று வந்து கொண்டிருக்கின்றான் ; अयँ पुरुषः – இந்த புருஷன்; स्वप्नः अन्तँ – கனவு நிலை ; बुभान्तँ – விழிப்பு நிலை
இந்த இரு அவஸ்தைகளிலும் சம்சாரத்தை அனுபவித்துக் கொண்டிருக்கின்றான்

ஸ்லோகம்-19 – 30 முகவுரை
1. சம்சார உபாதி நிமித்தஹ – உபாதியின் மூலம்தான் சம்சாரம். நீரானது உஷ்ணமாக அனுபவிக்கும்போது
நெருப்பினால்தான் அது சூடாக இருக்கிறது. ஜாக்ரத், ஸ்வப்ன நிலையில் ஸ்தூல, சூட்சும சரீரம் என்ற உபாதி இருப்பதனால்தான்
நாம் சம்சாரத்தை அனுபவிக்கிறோம். ஆழ்நிலை உறக்கத்தில் உபாதிகள் இல்லாததால் சம்சாரத்தை அனுபவிப்பதில்லை.
2. சம்சாரம் சம்பந்தம் நிமித்தம்: சம்சாரம் என்பது வேறொன்றினிடத்தில் சம்பந்தம் வைக்கும் பொழுது ஏற்படுவது.
சம்சாரம் அகங்கார நிமித்தத்தினால் வருவது. ஆழ்நிலை உறக்கத்தில் எந்த சம்பந்தமும் இல்லாததால் சம்சாரம் இல்லை
3. ஆத்மனஹ அஹங்கத்வம்: ஆத்மா அஸங்க ஸ்வரூபம் என்பது இந்த ஆழ்நிலை உறக்கத்தில் அறிந்து கொள்ளலாம்.
பொருட்களின் மீது வைக்கும் சம்பந்தம் நமது சுபாவமல்ல.
4. அனாத்மாவான ஸ்தூல, சூட்சும சரீரமும் ஆத்மாவின் ஸ்வரூபமல்ல. நான் என்ற ஸ்வரூபமல்ல.
நம்முடைய அனுபவம் ஸ்தூல, சூட்சும சரீரங்களில் இருக்கிறது. இந்தக் கருத்து ஆழ்நிலை உறக்கத்தில் சரியாக இருக்கும்.
இவையிரண்டும் நமது சுபாவமாக இருந்தால் நமக்கு களைப்போ, சலிப்போ வரக்கூடாது.
ஆனால் நாம் இந்த சரீரங்களால் களைப்பு, சலிப்பு ஏற்படுகிறது. சைதன்ய ஸ்வரூபமான நான் இவையிரண்டு சரீரங்கள்
ஸ்வரூபமாக இருப்பதால் நமக்கு களைப்போ சலிப்போ இருக்கக்கூடாது. ஆனால் உண்மையில் அப்படியில்லை.
அதனால் நாம் அடிக்கடி உறங்கச் செல்கின்றோம்.
5. ஆழ்நிலை உறக்கத்தை மோக்‌ஷத்திற்கு உதாரணமாக சொல்லப்படுகிறது.

ஸ்லோகம்-19
तद्यथा अस्मिन आकाशे – எவ்விதம் இந்த ஆகாயத்தில்
श्येनः பெரிய உடல் கொண்ட கழுகு, மெதுவாக பறக்கக்கூடிய பறவை
सुपर्णो சிறிய உடல், வேகமாக பறக்கக்கூடிய கழுகு
विपरिपत्य – விதவிதமான திசைகளில் பறந்து கொண்டு
श्रान्तः களைப்பு ஏற்படுகிறது
सँहत्यः पक्षो – இறகுகளை சுருக்கிக் கொண்டு
सँलयाय ध्रियते கூட்டை நோக்கி ஓய்வெடுக்க சென்றது
एवँ एव- அது போல; अयँ पुरुषः – ஜீவனாகிய நாம்
एतस्मा अन्ताय धावति – ஆழ்நிலை உறக்கத்திற்கு செல்கின்றான்.
நாம் ஜாக்ரத், ஸ்வப்ன அவஸ்தகளில் ஏற்பட்ட கஷ்ட-நஷ்டங்களால் அடைந்த களைப்பினால்
நம்முடைய கூடாக வர்ணிக்கப்படும் ஆழ்நிலை உறக்கத்திற்கு செல்கிறோம்.
यत्रः स्प्तो – எந்த நிலையில் ஆழ்நிலை உறக்கத்தில்
न कँचन कामँ कामयते – எந்தப் பொருளுக்கும் ஆசைப்படாத நிலை
न स्वप्नँ पश्यति – எந்தக் கனவும் காண்பதில்லை.
ஆகாயத்தில் பறந்து கொண்டிருக்கும் கழுகுக்கு களைப்பு ஏற்பட்டால் அது ஓய்வெடுக்க தன் கூட்டிற்கு செல்வது போல,
ஜீவனாகிய நாம் விழிப்பு நிலையிலும், கனவிலும் உடலாலும், மனதாலும், இந்திரியங்களாலும் செய்த செயல்களினால்
ஏற்படுக் களைப்பை போக்க நமது கூடாகிய ஆழ்நிலை உறக்கத்திற்கு செல்கிறோம்.

ஸ்லோகம்-20
ஆழ்நிலை உறக்கத்தில் இருக்கும் நமக்கு அவித்யா நமது சுபாவமா, இல்லையா? எந்தவிதமான சம்பந்தம்? என்று விளக்கப்படுகிறது.

அவித்யா எதிராக வித்யா இருப்பதால், அது வந்தவுடன் அவித்யா சென்று விடும். எனவே அதை நம்மிடமிருந்து
நீக்க முடியுமோ அது நம்முடைய சுபாவமல்ல. ஸ்தூல, சூட்சும சரீரத்தை நீக்கி ஆழ்நிலை
உறக்கத்திற்கு போக முடிவது போல, அவித்யாவை நீக்க்கி ஆத்ம ஞானம் அடையலாம்.

ஒவ்வொரு ஜீவர்களிடம் ஹிதா என்ற பெயருடைய நாடி இருக்கிறது. இது தலைமுடியில் ஆயிரத்தில் ஒரு பங்கு விட்டமுடையது
அதன் வழியாகத்தான் ஜீவன் ஆழ்நிலை உறக்கத்திற்கு செல்கிறான். இதனால் களைப்பு நீங்கி இதமாக இருக்கிறான்.
அந்த நாடிக்குள் விதவிதமான ரஸங்கள் இருக்கின்றது. நம்முடைய வாஸனைகள் அந்த நாடிக்குள்தான் இருக்கின்றது.
அப்படி போகும்போது நாடிக்குள் இருக்கும் வாஸனைகளிலிருந்து பிராரப்த கர்ம பலன்படி சிலவற்றை எடுத்துக் கொண்டு கனவுக்கு செல்கின்றான்.
இவன் பார்ப்பவை-களெல்லாம் வெறும் தோற்றமே அது இவனிடத்தில் இருக்கும் அவித்யாவினால்தான் இந்த கனவு தோற்றங்கள் உருவாகின்றன.
இவனுக்கு எப்பொழுது அனைத்தும் நான் என்று உணரும் ஞானம் வரும்போது அவனிடத்திலிருந்து அவித்யா நீங்கி
ஆனந்தமயமான மோக்‌ஷத்தை அடைகிறான். ஆகவே ஆத்மாவுக்கு அவித்யாவும் எப்போதும் சம்பந்தம் இல்லை.

மந்திரவிளக்கம்:
ஸ்தூல உடம்பில் ஹிதா என்ற நாடி செல்கிறது. வெண்மையான, நீலமான, சிவப்பான, பச்சையான
இப்படிப்பட்ட வர்ணங்களையுடைய ரஸங்கள் நாடியில் இருக்கின்றது.
अथ यत्रः ऎनँ घ्नन्ति एव – யாரோ கொல்ல வருகிறார்கள்
जिनन्ति एव, हस्ति एव, विच्छायय एव गर्तम एव पतति – அடிமையாக இருப்பது போல, யானை துரத்துவது போல, குழியில் விழுவது போல பாவ-கர்ம வசத்தினால் கனவில் அனுபவிக்கிறோம்.
यदेव जाग्रद भयम पश्यति – ஜாக்ரத் அவஸ்தையில் எப்படி பயந்து கொண்டு சில விஷயங்களை அனுபவிக்கிறோமோ அதே போல கனவிலும் பயந்து கொண்டு சிலவற்றை அனுபவிக்கிறான்.
கனவில் தேவர்களைப் போலவும், ராஜாவை போலவும், கடவுளாகவும் நினத்துக் கொண்டு இதுதான் என் உலகம் என்று மகிழ்ந்து கொண்டிருக்கின்றான்.

இவ்விதமான ஞானத்தினால் அவித்யாவானது நீக்கப்படுகிறது.
அஹம் அஸ்மி இதம் ஸர்வஹ – நானே பார்க்கப்படும் அனைத்துமாக இருக்கிறேன் என்று ஒருவன் எப்பொழுது அறிகின்றானோ
அவன் அவித்யா நீங்கப்பெற்று முக்தனாகிறான்.
ஸஹ அஸ்ய பரமோ லோகஹ – இந்த ஞானிக்கு அவன் அடைந்த இந்த நிலையானது மிகவும் மேலானது

————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ ப்ருஹதாரண்ய உபநிஷத்- அத்தியாயம்-3–பகுதி -2-அக்‌ஷரம் பிரமாணம் /ஹிரண்யகர்ப்ப உபாஸனைகள்–

March 23, 2021

பகுதி-8-
அக்‌ஷரம் பிரமாணம்
ஸ்லோகம்-1
வணக்கத்துக்குரிய பிரமாணர்களே யாக்ஞவல்கியரிடம் நான் இரண்டு கேள்வியை கேட்கப்-போகிறேன்.
அவர் பதில் சொல்லிவிட்டால், யாராலும் அவரை வெல்ல முடியாது. அந்த பிராமணர்கள் அனுமதி அளித்தார்கள்.

ஸ்லோகம்-2
கார்கி, யாக்ஞவல்கியரை பார்த்து, “நான் உங்களிடம் இரண்டு கேள்விகள் கேட்கப் போகிறேன்.
காசி, விதேஹ நாட்டை சேர்ந்த வீர்ர்கள் வில்லில் எடுத்து அதில் இரண்டு சக்தி வாய்ந்த இரண்டு வில்லை வைத்து
பகைவர்களை பயந்தோட செய்வார்கள். அதேபோல இரண்டு கேள்விகளை உன்னிடம் கேட்கப் போகிறேன்” என்று கூறினாள்.
அவரும் நீ கேள் என்று கூறினார்.

ஸ்லோகம்-3
சுவர்க்கத்திற்கும் மேலாகவும், பூமிக்கும் கீழேயும் எது வியாபித்துள்ளதோ, இந்த இரண்டிற்கும் இடையேயும் வியாபித்துள்ளது
(எல்லா உலகத்திலேயும் வியாபித்துள்ளதோ) முன்பும் இருந்து, இப்பொழுதும் இருந்து கொண்டு,
என்றும் இருக்கப் போவதும் ரிஷிகள் அந்த சூத்ரத்தை இவ்வாறு சொல்கிறார்கள். இப்படிபட்ட தத்துவத்தை எது வியாபித்திருக்கிறது.

ஸ்லோகம்-4,5
ஆகாசம் (ஈஸ்வரன், அந்தர்யாமி) இந்த தத்துவத்தை வியாபித்திருக்கிறது. யாக்ஞவல்கியரின் சரியான பதிலுக்கு
கார்கி நமஸ்கரித்து விட்டு என்னுடைய இரண்டாவது கேள்விக்கு தயாராக இருங்கள் என்று கூறினாள். அவரும் ”கேள்” என்று அனுமத்தித்தார்.

ஸ்லோகம்-6, 7
எல்லா இடங்களிலும், எல்லா காலங்களிலும் இருக்கும் த த்துவம் ஆகாசம் என்று கூறினீர்கள் இந்த ஆகாசத்தை எது வியாபித்திருக்கிறது?

ஸ்லோகம்-8
ஹே கார்கி, “அக்ஷரம்தான் (நிர்குண பிரம்மந்தான்) என்று பிரம்மத்தை அறிந்தவர்கள் கூறுகிறார்கள்.
பிறகு இந்த அக்‌ஷரத்தின் லக்‌ஷணத்தை நிஷேத முகமாக விளக்க ஆரம்பித்தார்.

ஞானத்தையடைந்த ரிஷிகள் அக்‌ஷரம் தான் ஆகாசத்தையும் வியாபித்திருக்கிறது என்று கூறுகிறார்கள்.
அஸ்தூலம்- மிகப்பெரியதுமில்லை;
அநஹ – மிகச்சிறியதுமில்லை;
அக்ரஸ்வம் – குட்டையுமல்ல;
அதீர்கம் – உயரமானதுமில்லை.
மேலும் இது ஒரு பொருளுமில்லை, இதற்கு அவயவங்களுமில்லை (நிர் அவயவம்), வர்ணமற்றது;
எதனோடும் ஒட்டுவதுமில்லை (அஸ்தேகம்), குணமற்றது. இது நிழலுமல்ல, இருளுமல்ல, வாயு ஸ்வரூபமல்ல,
பஞ்சபூதங்களின் ஸ்வரூபமுமல்ல, ஆகாச ஸ்வரூபமுமல்ல (அனாகாசம்),
அஸங்கம் (எதனோடும் சம்பந்தமற்றது), இந்திரியங்களற்றது என்று புரிந்து கொள்ள வேண்டும்.
அரஸம் – சுவையற்றது, சுவைக்கும் இந்திரியங்களற்றது;
அகந்தம் – வாசணையற்றது, வாசணையை அறியும் இந்திரியங்களற்றது.
அசக்‌ஷும் – கண்களால் எதையும் கிரகிக்க முடியாது, கண்கள் இல்லாதது
கர்மேந்திரியங்களும், ஞானேந்திரியங்களும் இல்லாதது இவ்வாறாக இதை புரிந்து கொள்ள வேண்டும்.
அதேஸம் – விருத்தி ரூப ஞான ரஹிதம் – எண்ண விருத்திக்கள் இல்லை
அவாத் அமனஹ – அந்தக்கரணமற்றது
அபிராணன் – பிராணன் இல்லாதது, சூட்சும சரீரமற்றது.
அமுகம் – நுழைவாயில் கிடையாது.
அமாத்திரம் – எதைக் கொண்டும் அளக்க முடியாது, எடையற்றது
அனந்தரம் – முடிவற்றது.
அபாக்யம் – உள்ளே, வெளியே என்பதெல்லாம் கிடையாது
இவ்வாறு எல்லவற்றையும் நீக்கியப்பிறகு எது எஞ்சியிருக்கிறதுதான் பிரம்மம்.

தத்- அந்த பிரம்மன், கிஞ்சன – எதையுமே, ந அஸ்னாதே – சாப்பிடாது, கஷ்சன – எதுவும்
தத் – அந்த பிரம்மத்தை ந அஸ்னாதே – சாப்பிடாது.

இது அகர்த்தாவாக இருக்கிறது, அபோக்தாவாகவும் இருக்கிறது. அது எந்த செயலையும் செய்யாது,
அதனால் எந்த பலனையும் அனுபவிக்காத்து. இது போக்யாவும் அல்ல. அனுபவிக்கப்படும் பொருளாகவும் இல்லை,
அனுபவிப்பனாகவும் இல்லை. போக்தாவாக இருக்கும்வரை சம்சாரமும் இருக்கும்

அது கர்ம பலனை அனுபவிப்பதுமில்லை, கொடுப்பதுமில்லை. ஜீவன் கர்த்தாவாக இருக்கும் போது எந்தச் செயலையும்
செய்யும் சுதந்திரம் இருப்பதனால், பாவ புண்ணியத்தை உற்பத்தி செய்து, குழப்பத்துடன் இருக்கின்றான்.
சுக-துக்கங்களில் சிக்கிக் கொண்டு துயரமடைகிறான்.

ஸ்லோகம்-9
ஈஸ்வர ஸ்வரூபத்தை விளக்குகிறது இந்த மந்திரம்; பிரம்ம மானது ஜகத்துக்கு உபாதன காரணமாகவும்,
நிமித்த காரணமாகவும் இருக்கிறது. நிமித்தக் காரணம் சைதன்யமுடையது, உபாதான காரணம் ஜடமாக இருப்பது.
இந்த உலகத்திலுள்ள அனைத்தும் ஈஸ்வரனால் சீராக இயங்குகிறது.
அக்‌ஷரம் என்ற தத்துவத்திடம் காரணம் என்ற தன்மையை ஏற்றி வைத்ததால் அது ஈஸ்வரனாகிறது.

இந்த ஈஸ்வரனுடைய ஆணையினால் (प्रशासने) சூரியனும், சந்திரனும் தத்தம் நிலையில் சீராக செயல்பட்டு கொண்டிருக்கிறது.
இந்த பூமியும், அந்த சுவர்க்க லோகமும் தத்தம் நிலையில் சீராக செயல்பட்டு கொண்டிருக்கிறது.
கிழக்கிலிருந்து பாயும் நதிகள், மலையிலிருந்து உற்பத்தியாகும் நதிகள் அனைத்தும் இறைவன் அருளால் ஒழுங்காக ஓடிக் கொண்டிருக்கின்றன.
எல்லா திசைகளிலிருந்து பாயும் நதிகள் அனைத்தும் அவனது ஆணையால் ஒடுகின்றன.
யார் தானம் செய்கிறார்களோ அவர்களை மற்றவர்கள் புகழ்வார்கள். தானத்திற்கு இரண்டு பலன் அவைகள் கொடுக்கும்போது
கிடைக்கும் மகிழ்ச்சி, பிறகு அதனால் அடையும் புண்ணியப்பலன். இதையெல்லாம் ஈஸ்வரனால் கிடைக்கிறது.
தேவர்களும் கூட யாகம் செய்கின்ற மனிதர்களைச் சார்ந்து வாழ்கிறார்கள். பித்ருக்களும் நாம் செய்யும் சிரார்தத்தைச் சார்ந்திருக்கிறார்கள்.

ஸ்லோகம்-10
இதில் பிரம்ம ஞானத்தின் பெருமை, மனித ஜென்மத்தின் பெருமையும், காலத்தின் பெருமையும் விளக்கப்பட்டிருக்கிறது.
பிரம்ம ஞானத்தை விட்டு விட்டு வேறெதுவும் செய்தாலும் அது வீணாக போய்விடும்.
“ஹே கார்கி, யாரொருவன் இங்கு விளக்கப்பட்ட ஆத்மாவாக இருக்கின்ற அக்‌ஷரத்தை அறிந்து கொள்ளாமல்
இந்த உலகத்தின் யாகங்கள் செய்கின்றனர், தவத்தை செய்கின்றனர் அதுவும் பல்லாயிரம் வருடங்களாக செய்கின்றார்கள்
இதற்கு கிடைக்கின்ற ப்லன் ஒரு எல்லைக்குள்தான் இருக்கும். இது மோக்‌ஷ பலனைக் கொடுக்காது. தவத்தினால் பாவங்களை நீங்கும்,
புண்ணியம் அதிகமாகலாம் அதனால் அதிக சுகத்தை அடையலாம் ஆனால் செய்த தவத்தின் பலன் முடிந்ததும்
மீண்டும் பழைய நிலைக்கு திரும்பி வந்து விட வேண்டியதுதான். ஆத்மஞானம் அகங்காரத்தை நீக்கி விடுவதால்
மனதால் ஏற்படும் தடைகளை நீக்கும், அடைந்த ஞானத்தை நிலைநிறுத்துவதற்கு உதவியாக இருக்கும்,
அதாவது ஞான நிஷ்டைக்கு உதவி புரியும். எல்லா செல்வங்களும் ஞானம் இல்லையென்றால் அகங்காரத்தைத்தான் அதிகரிக்கும்,
[ யாரொருவன் இந்த அக்‌ஷரத்தை அறிந்து கொள்ளாமல், இந்த உலகத்திலிருந்து, சரீரத்திலிருந்து வெளியேறினால்,
அவன் பரிதாபத்துக்குரியவன், தோல்வியடைந்தவன் (க்ருபணன்) என்றும், அதை அறிந்து வெளியேறுபவன் பிராமணன் என்றும் அழைக்கப்படுவான்.
இவன் பிரம்மனாகவே மாறியவன், முக்தியை அடைந்தவன், தன்னை அடைந்தவன்.
இந்த மனித சரீரத்தால் அடைய வேண்டியது பிரம்ம ஞானம் இதைத்தான் லக்ஷியமாக கொள்ள வேண்டும்.
இந்த ஞானத்தை அடைவதும் மனிதனாக பிறந்ததின் சரியான பலனை அடைந்தது போன்றது.

ஸ்லோகம்-11 – அக்‌ஷரத்தின் லக்ஷணம்
இந்த அக்ஷரமானது கண்ணால் பார்க்க முடியாது அதனால்தான் கண்ணால் பார்க்க முடிகிறது. இதை கேட்க முடியாது,
அதனால்தான் கேட்க முடிகிறது. இதை சிந்திக்க முடியாது ஆனால் அதனால்தான் சிந்திக்க முடிகிறது;
இதை அறிய முடியாது ஆனால் அதனால்தான் எல்லாவற்றையும் அறிய முடிகிறது, இதற்கு வேறாக ஒன்றை பார்க்க முடியாது. இந்த அக்ஷரத்தில் ஆகாசமானது சேர்க்கப்படுகிறது, இந்த ஆகாசத்தையும் வியாபித்திருக்கிறது அக்‌ஷரம்.

ஸ்லோகம்-12
கார்கி பிராமணர்களை பார்த்து, “மதிப்பிற்குரிய பிராமணர்களே யாக்ஞவல்கியர் சரியாக பதிலளித்து விட்டார்,
எனவே நமக்கு உகந்தது எதுவென்றால் அவர்க்கு நமஸ்காரம் செய்து விட்டு விலகிவிட வேண்டும்.
உங்களில் யாரும் இவரை வெற்றி கொள்ள முடியாது”, என்று கூறிவிட்டு அமைதியானாள்.

—————

பகுதி-9: அக்‌ஷரம் பிரமாணம்
ஸ்லோகம்-1 லிருந்து 9 வரை சாரம் மட்டும்
ஹிரண்யகர்ப்பனுடைய பெருமை:
இவரே விதவிதமான தேவதைகளாக வெளிப்பட்டிருப்பதுதான் இவருடைய தன்மை.
நிவித் – வேதம் பேசுகின்ற தேவதைகள் எண்ணிக்கையை பற்றி பேசுவது
சத்ரம் – ரிக் வேதத்தில் ஸ்தோத்ரங்கள் உள்ள பகுதிக்கு இந்த பெயர்.

ஸ்லோகம்-10 லிருந்து 17 வரை சாரம் மட்டும்
ஹிரண்யகர்ப்ப உபாஸனைகள்:
இரண்டு விதமான உபாஸனைகள் சொல்லப்பட்டிருக்கிறது. அஷ்டவித ஹிரண்யகர்ப்பனை உபாஸனை செய்தல்.
நாமே பார்க்கும் காட்சிகள், நம் மனதை பாதிக்கின்ற, உணர்வுகளை பாதிக்கிறது. நமக்கு எது உண்மையென்றால் பார்த்து
சம்பவம் இல்லை அதனால் அடைந்த மன பாதிப்புதான். இதே மாதிரி உபாஸனையின் மூலம், நம் மனதை தூய்மைபடுத்தலாம்,
அமைதியடையலாம், விசாலமடையலாம். உபாஸனை கற்பணைதான் ஆனால் அடையும் பலன் நிச்சயம்.
1. ஸாரீர புருஷ – ஹிரண்யகர்ப்பன் நம் சரீரத்தில் வெளிப்படுதல், நான்கு த்த்துவங்களை சேர்த்து பார்த்தல்
a. ஆயுதனம் – வெளிப்படுகின்ற இடம் – பிருத்வி
b. லோகஹ – அவருடைய லோகம்; அதன் மூலம் பார்க்கிறார் – அக்னி
c. ஜோதிஹி – எந்தக்கருவியின் மூலமாக சிந்திக்கின்றான் – மனம்
d. தேவதா – வெளிப்படக் காரணம் – அன்னம்

ஸ்லோகம்-18 லிருந்து 24 வரை சாரம் மட்டும்
பஞ்சவித ஹிரண்யகர்ப்ப உபாஸனம்: நான்கு திசைகளிலும், மேலேயும் அவர் இருக்கின்றார் என்று உபாஸிக்க வேண்டும்.

ஸ்லோகம்-25
மனதிற்கு ஆதாரம் என்ன? அது இருக்கும் இடம் ஸ்தூல சரீரம். மனம், சரீரம், பிராணன் ஒன்றையொன்றை சார்ந்திருக்கிறது.
மனம் உடலில் இல்லையென்றால் சரீரம் ஜடமாகி விடும், நாய்களுக்கும், பறவைகளுக்கும் உணவாகிவிடும்.
மனதை இந்த உலகை அனுபவிக்க வேண்டுமானால், இந்தௌடல் தேவைப்படுகிறது. பிராணன் செயல்பட உடலிருக்க வேண்டும்.

ஸ்லோகம்-26
1. இந்த உடல் எதனால் தாக்கப்படுகிறது? ஐந்து பிராணன்கள்தான் இந்த உடலை காப்பாற்றிக் கொண்டிருக்கிறது.
2. நேதி, நேதி என்று ஆத்ம தத்துவத்தை விளக்கப்பட்டிருக்கிறது
3. இந்த ஆத்மா அழிக்கப்படுவத்தில்ல, எதையும் அழிக்காது
க்ருஹ்யம் – கிரகிக்கப்படுவது; அக்ருஹ்யதே – கிரகிக்கபடாதது, அப்பிரமேயம்-எந்தப்பிரமானங்களாலும் விளக்க முடியாது.
அஷீர்ய-அழுகாமல் இருப்பது, ஆத்மா அழுகிப்போகும் தன்மையில்லாததால் அது அழுகிப் போவதில்லை, நிர்குண, நிர் அவயவமாக இருப்பதால்;
அஸங்கஹ- எத்னோடும் சம்பந்தம் இல்லாத சுபாவம் உடையது, அதனால்
नहि सज्यते – எதனோடும் ஒட்டுவதில்லை. எதுவும் அதை தாக்க முடியாததினால், அதை அழிக்க முடியாது.

பிரம்மனுடைய இருப்பை அறிவது எவ்வாறு?
இதை உபநிஷத் என்ற பிரமானத்தின் மூலமாக அடையக்கூடியது. இது அறிவின் மூலமாகத்தான் அடைய முடியும்.
பிரம்மத்தை அறிதல் என்பது அடைதல் என்பதாகும். நம்முடைய அறியாமையால் நாம் பிரம்மத்திலிருந்து விலகி இருக்கிறோம்.

ஸ்லோகம்-27
யாக்ஞவல்கியர் அங்குள்ள பிராமணர்களை பார்த்து, “உங்களில் யாராவது கேள்வி கேட்க வேண்டுமென்றால் கேட்கலாம்” என்று அழைத்தார்.
யாரும் முன்வராததால், தானே ஒரு கேள்வியைக் கேட்கிறார்.

ஸ்லோகம்-28
மரத்தையும், ஜீவனையும் ஒப்பிட்டு விவரிக்கிறார்.
மரத்தை வேரோடு பிடுங்கி எறிந்து விட்டால் அது மீண்டும் முளைக்காது. மரணத்திற்கு பிறகு இந்த ஜீவன் மீண்டும்
பிறப்பதற்கு எது காரணமாக இருக்கிறது. அவன் பிறந்து பிறந்து இறக்கிறான் என்றால் அது தவறு.
அவன் மீண்டும் பிறப்பதில்லை. இந்த சரீரம்தான் பிறக்கிறது பின் இறக்கிறது. பிரம்மத்தை யாரும் பிறப்பிக்கவில்லை
அது எப்பொழுதும் ஞான ஸ்வரூபமாக இருக்கின்றது. இதுதான் ஜீவனின் மூலம்.
இது ஆனந்த ஸ்வரூபம், சாந்தம், சிவம், எதைக் கொண்டும் அளக்க முடியாது.
இந்த நிர்குண பிரம்மமே சகுண பிரம்மமாகவும் தோன்றுகிறது. அனைத்துக்கும் இதுவே ஆதாரமாக இருக்கிறது.

மனிதர்கள் அக்ஞானிகள், ஞானிகள் என்று இருவகையாக பிரித்தால் செல்வத்தை தானம் போன்ற கர்மத்தை
செய்கின்றவர்களுக்கு பிரம்மன் பலன் தரும் இருப்பிடமாக இருக்கிறது. நாம் செய்யும் செயல்களுக்கேற்ற பலன்களை இது வழங்குகிறது.
செல்வத்தை தியாகம் செய்பவர்களுக்கு நிர்குண பிரம்மன் ஆதாரமாக இருக்கும். ஆசையை விடுபவர்களுக்கு இதுவ கதியாக, ஆதாரமாக இருக்கிறது.

சங்கரரின் விசாரம்: ஆனந்தம் (Bliss) என்ற சொல்லப்படுகிற பிரம்மத்தைப் பற்றி
ஆனந்தம் என்ற வார்த்தை இன்பத்தை அனுபவிக்கும் விஷயத்தைக் குறிப்பிடுகிறது. உபநிஷத்தில் பிரம்மத்தை ஆனந்த ஸ்வரூபமாக கூறப்படுகிறது.
பிரம்மத்தின் லக்ஷணமாக இந்த ஆனந்தம் சொல்லால் குறிப்பிடப்படுகிறது. இந்த பிரம்மானந்தமானது:
ஸம்வேத்ய சுகம் – அனுபவிக்கப்படும் இன்பமா?
அஸம்வேத்ய சுகம் – அனுபவிக்க முடியாத இன்பமா?
என்ற சந்தேகத்தை சங்கர்ரே எழுப்புகிறார்.

இங்கு எதனால் அனுபவிக்க முடியாத இன்பம் என்று சந்தேகம் வருகிறது என்றால் வேதத்தில் கூறப்பட்டுள்ள வார்த்தைகளை
வைத்தே இந்த சந்தேகம் எழுகிறது. பிரம்மத்தை யாரும் அனுபவிக்க முடியாததாக இருக்கிறது என்றூ வேதம் உரைக்கிறது

கேள்வி பிரம்மனிடம் இருக்கும் ஆனந்தம் அனுபவிக்க முடியும். ஞானி எப்பொழுதும் மகிழ்ச்சியாகவே இருக்கிறான்.
பதில் பிரம்மத்தை அனுபவிக்க முடியும் என்று சொன்னால் அத்வைத ஸ்ருதி விரோதம், பிரம்மம் அறியப்படுவதில்லை
என்ற ஸ்ருதியின் வாக்கியத்திற்கு முரண்பாடாக இருக்கும். பிரம்மானந்தத்தை அனுபவிக்கும்போதே அது முடிந்து விடும்
என்ற வருத்தத்துடன் இருப்பார்கள். பிரம்மம், ஞானி, அக்ஞானி இவர்களில் யார் இந்த ஆனந்தத்தை அனுபவிக்கிறார்கள்?

1. கர்ம, கர்த்திரு விரோதம் – அனுபவிப்பவனும், அனுபவிக்கப்படும் பொருளும் ஒன்றாக இருக்க முடியாது.
எனவே பிரம்மம் ஆனந்தத்தை அனுபவிக்க முடியாது.
2. அக்ஞானியும் பிரம்மானந்தத்தை அனுபவிக்க முடியாது ஏனென்றால் அவன் பிரம்மத்தையே அறியவில்லை, அடையவில்லை
3. ஞானி பிரம்மானந்தத்தை அனுபவிக்கிறான். முக்தன் பிரம்மத்திற்கு வேறுபடாதவன் என்றால்
அவனால் ஆனந்தத்தை அனுபவிக்க முடியாது எனெனில் இவனே பிரம்மனாக இருத்தலால்.
அவன் வேறுபட்டவன் என்றால் பிரம்மத்தை அடையவில்லை, அறியவில்லை என்றாகி விடும்.
ஜீவன் முக்தனாக இருக்கும்போது வேண்டுமானல் பிரம்மானந்தத்தை அனுபவிக்கலாம்,
ஏனெனில் இந்த சரீரத்தை வைத்துக் கொண்டு வேண்டுமானாலும் அனுபவிக்கலாம்.
இறந்த பிறகு விதேஹ முக்தியில் எந்த உபாதியும் இல்லாததால் இவனால் ஆனந்தத்தை அனுபவிக்க முடியாது.
பிரம்மானந்தத்தை அனுபவிப்பது தான் மோக்ஷம் என்றால். விதேஹ முக்தியில் அவனால் அனுபவிக்கவே முடியாது.

பிரம்மத்தைப் பற்றிய ஞானத்தை நாம் அடைகின்றோம். பிரம்மம் நம்மிடத்திலே இருக்கிறது. பிரம்ம ஞானம் நமக்கில்லை.
எனவே இதை அடைந்தால் பிரம்ம-மாகவே ஆகிவிடுவோம். பிரம்மத்தை அறிவதால் நமக்கு மனநிறைவும், சுகமும், இன்பமும் கொடுக்கிறது.
அது அனுபவத்திற்கு வருகிறது.
பிரம்ம ஸ்வரூவ சுகம் – அது அனுபவத்திற்கு உட்படாதது
பிரம்ம ஞான சுகம் – இது அனுபவத்திற்குட்பட்டது
ஞான நிஷ்டையின் போது இன்பமும், சுகமும், மனநிறைவும் இயல்பான விஷயமாகிவிடுகிறது.
விஷய சுக-துக்கத்தை அனுபவிப்பவன் அக்ஞானி, பிரம்ம ஞான ஆனந்தத்தை அனுபவிப்பவன் ஜீவன் முக்தன்.

—————–

தொகுப்புரை:
முதல் மூன்று பகுதிகள் உபாஸனையாகளையும், சில பண்புகளையும் விளக்குகிறது.
கடைசி ஆறு பகுதிகள் – வேதாந்த விசாரமும், பிரம்ம வித்யாவையும் விளக்குகிறது.

பகுதி-1
சில உபாஸனைகள், சில பண்புகள். ஜீவன் மரணத்தின் பிடியில் இருக்கிறான். இதிலிருந்து விடுபடுவதற்கான உபாயம்.
ஸ்பாவிக உபாஸனை, நம் விருப்பப்படி செய்யும் செயல்கள். நம்முடைய கரணங்களை அந்தந்த தேவதைகளோடு ஒப்பிட்டு
தியானம் செய்வதால் அவைகள் தூய்மையடைகிறது அதன் மூலம் சித்தஸுத்தியை அடைகிறோம்.
சம்பத் உபாஸனை – சிறிய தியானத்தின் ஒன்றில் பெரிய தியானத்தின் பலனை அடையலாம்.

பகுதி-2
இரண்டு விதமான ம்ருத்யு அறிமுகப்படுத்தப்பட்டது. அவைகள் கிரகம், அதிகிரகம். கிரகம் என்பதற்கு நம்மை
பிடித்துக் கொள்ளுதல் என்று பொருள், அதிகிரகம் என்பதற்கு கிரகத்தை தன் வசத்தின் வைத்துக் கொள்வது என்று பொருள்.
ஜீவன் இந்த இரண்டின் வசத்தில் இருக்கின்றான். நாம் இந்திரியத்தின் வசத்தில் இருக்கின்றோம்.
விஷயங்கள் இந்திரி-யங்களை தன் வசத்தில் வைத்திருக்கிறது

மிருத்யுவுக்கு ம்ருத்யு இருக்கிறதா என்றால் இருக்கிறது அதுதான் ஆத்மஞானம். நெருப்பு மிருத்யு என்றால்
அதை அணைக்கும் நீர் அதனுடைய ம்ருத்யு. ஞானியின் இறப்பிற்கு பின் என்ன நிலையை அடைகின்றான்.
ஸ்தூல, சூட்சும சரீரங்கள் அந்தந்த ஸ்தூல,சூட்சும சரீரங்களுடன் கலந்து விடுகிறது.
ஆனால் அவரது பெயர் மட்டும் பலகாலம் நிலைத்து இருக்கும். அக்ஞானி இறந்த பின் தேவதைகளுடன் ஒடுங்கி மீண்டும் பிறப்பெடுக்கிறான்.
அவன் பிறப்பு அவன் செய்த பாவ, புண்ணியங்களின் அடிப்படையில் நிச்சயிக்கப்படுகிறது.

பகுதி-3
ஹிரண்யகர்ப்பலோகம் வரை அனாத்மாதான், சம்சாரம்தான். கர்மபல விசாரம் செய்யப்பட்டது.
புண்ணியத்தினால் மோக்‌ஷத்தை அடையமுடியாது. எனவே பாவத்தையும் விட்டுவிட வேண்டும், புண்ணியத்தையும் விட்டுவிட வேண்டும்.
அறியாமையால் அனுபவிக்கும் துயரங்களை போக்க அறிவைத்தான் அடைய வேண்டும். கர்மங்கள் சாதனமாக இருக்க முடியாது.

பகுதி-4
எது சாக்ஷாத் அபரோக்ஷாத் பிரம்மமோ அதை உபதேசம் செய்யுங்கள் என்ற கேள்விக்கு அது உன்னுடைய ஆத்மாதன்.
அது எந்தவித பிரமானமில்லாமல் தானே பிரகாசித்துக்கொண்டு இருக்கிறது. நான் இருக்கிறேன் இன்பதற்கு எந்த பிரமானமும் தேவையில்லை.
அதுபோல ஆத்மாவும் விளங்கிக்கொண்டிருக்கிறது. திருஷ்டி, திரஷ்டா என்ற சொற்களின் பொருள் விளக்கம் சொல்லப்பட்டது.
திரஷ்டா – சவிகார உலகம், நிர்விகார ஆத்மா. மனம் இந்த உலகத்தை அனுபவிக்கிறது;
ஆத்மாவுக்கு இது திரஷ்டாவாக இருக்கிறது ஆனால் இதை பார்க்க முடியாது

பகுதி-5
பாண்டித்யம்-பாலயம், மௌனம்-அமௌனம், ஆத்மஸ்வரூபம்-ஆத்மா என்பது துயரமற்ற ஸ்வரூபம்.
பசி,தாகம், சோகம், மோகம், ஜரா, ம்ருத்யு, இப்படிபட்ட துயரங்களற்றது ஆத்மா. இரண்டு சாதனங்கள் கூறப்பட்டது
அவைகள் ஞானம், சந்நியாஸம். ஞானம் அடைவதுதான் உண்மையான லட்சியம். இந்த ஞானத்தை அடைய உதவி செய்வது சந்நியாஸம்.
ஞான நிஷ்டைக்கு சந்நியாஸம் உதவி செய்யும். சாதனங்களான சிரவணம், மனனம், நிதித்யாஸனம் இவைகளை பயன்படுத்தி
ஞான நிஷ்டையடைய சந்நியாஸம் உபயோகப்படுகிறது. அனாத்மா இச்சா, ஆத்மா இச்சா. புத்திரன், செல்வம், உலகம்
இவைகளின் மீதுள்ள ஆசையை விட்டொழிய வேண்டும், சாத்திய இச்சையை விட வேண்டும், பிறகுதான் சாதன இச்சையை விட வேண்டும்.

பாண்டித்யம் – சிரவணத்தை முழுமையாக முடித்து விட்டு ஞான பலத்துடன் இருக்க வேண்டும். குழந்தையைப் போல் இருக்க வேண்டும்.
தன்னைப்பற்றிய தம்பட்டம் அடித்துக் கொள்ளாதிருக்க வேண்டும். ஆத்ம ஞானத்தை மனனம் என்ற சாதனத்தின் துணைக் கொண்டு
அடைந்த ஞானத்தை நிலை நிறுத்த வேண்டும். பிறகு நிதித்யாஸத்தின் மூலம் ஞான நிஷ்டை அடைய வேண்டும்,
அப்போதுதான் பிரம்மனாகிறான். ஜீவன் முக்தன் எப்படி இருப்பான் என்று சொல்ல முடியாது,
அவன் எப்படியிருக்கிறானோ அதுதன் அவனுடைய லட்சணம். இது நிதித்யாஸனத்திற்கு உதவியாக இருக்கும்

பகுதி-6 :. அனைத்துக்கும் சத்யமாக இருப்பது, அதி சூட்சுமமாக இருப்பது
பகுதி-7 : அந்தர்யாமி பிரமாணத்தில் விராட் ஆந்தரமாக இருப்பது, ஹிரண்யகர்ப்ப தத்துவம்
இது எல்லா தேவதைகளும், பூதங்களும் நம் உடலில் உள்ள சூட்சும சரீரத்தை குறிக்கிறது
பகுதி-8 அக்ஷர பிரமாணம் : அந்தர்யாமிக்கும் ஆதாரமாக இருப்பது ஆகாசம்-ஈஸ்வரன்.
அக்ஷர ஸ்வரூபத்தை, அனாத்மாக்கள் அனைத்தையும் நீக்கி விளக்கப்படுகிறது
பகுதி-9 ஹிரண்யகர்ப்ப உபாஸனைகள், மகிமைகளை விளக்கப்பட்டது. மரத்தையும், மனிதனையும் ஒப்பிட்டு சில கருத்துக்கள் சொல்லப்பட்டது.
பிரம்மானந்தத்தின் பலனை அனுபவிக்கிறோம்; ஸ்வரூபானந்தம் அனுபவிக்க முடியாது காரணம் அதுவாக அவன் இருப்பதால்.

————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –