Archive for the ‘Thiruppaan Aazlvaar’ Category

ஸ்ரீ அமலனாதி பிரான் –ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை அருளிய-ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் அருளிய–ஸ்ரீ வேதாந்த தேசிகர் அருளிய முநி வாஹன போகம் -வியாக்யானம் -பரியனாகி வந்த அவுணன் உடல் கீண்ட அமரர்க்கு –

May 23, 2013

ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை அருளிய-அவதாரிகை –
திருக் கண்கள் என்னை அறிவு கெடுத்தது என்கிறார்

————–

ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் அருளிய-அவதாரிகை –
திருக் கண்கள் என்னை அறிவு கெடுத்தது என்கிறார்-கீழில்  பாட்டில் –
செய்யவாய் ஐயோ என்னை சிந்தை கவர்ந்தது-என்று திருப் பவளத்திலே இவர்
அப்ஹ்ருத ஹ்ருதயர் ஆகிற படியைக் கடைக் கணித்து கொண்டு கிடக்கிற
திருக் கண்கள் ஆனவை –
செய்ய வாய் ஐயோ -என்று இவர் தாமே சொன்னார் –
அப்படியே சிவப்பால் வந்த அழகு ஒன்றுமே யன்றோ அந்த திரு அதரத்துக்கு உள்ளது
சிவப்பும் கருப்பும் வெளுப்புமான பரபாகத்தால் உள்ள அழகு உடையோமாம் இருப்போமும்
நாம் அல்லோமோ –

மித்ர பாவேன சம்ப்ராப்தம் ந த்யஜேயம் -என்றாப் போலே சொல்லுகிற
வார்த்தைகள் எல்லாம் ஜீவிக்கை யாகிறது -ஜாயமாநம் ஹி புருஷம் யம் பச்யேத் -என்று
ஜாயமான தசையிலே நாம் கடாஷித்த பின்பு -சாத்விகனாய் -முமுஷுவான அளவிலே அன்றோ

அது கிடக்க -அந்த வார்த்தை தான் -ஆயுதம் எடேன் -என்று ஆயுதம் எடுத்தால் போலே
அன்றிக்கே -மெய்ம்மை பெரு வார்த்தை -என்று விஸ்வசித்து இருக்கலாம்படி வாத்சல்யம்
அடியாக பிறந்த வார்த்தை என்று அந்த அகவாயில் வாத்சல்யத்துக்கு பிரகாசமாய்
இருப்போமும் நாமும் அல்லோமோ -அது கிடக்க
யதா கப்யாசம் புண்டரீகம் ஏவம் அஷிணீ -என்றும்
அனைத்து உலகும் உடைய அரவிந்த லோசனன் -என்றும் சொல்லுகிறபடியே மேன்மைக்கு
பிரகாசமாய் இருப்போமும் நானும் அல்லோமோ –
அதுக்கு மேலே

புண்டரீகாஷா ரஷ மாம் -என்றும் -புண்டரீகாஷா ந ஜாநே சரணம் பரம் -என்றும் சொல்லுகிறபடியே
தம்தாமுடைய ஆபன் நிவாரணத்துக்கு உபாயமாகப் பற்றுவதும் நம்மை புரஸ்கரிக்கையாலே
உபாய பாவத்தை பூரிக்கிறோமும் நாமும் அன்றோ –

தாமரைக் கண்ணனை விண்ணோர் பரவும் தலைமகனை -என்று அவனுக்கு போக்யதா பிரகர்ஷம் உண்டாகிறது
நம்மோட்டை சேர்தியால் யன்றோ -என்றால் போலே தங்களுடைய ஏற்றத்தை காட்டி –
அவ்வாய் யன்றி அறியேன் -என்று இருக்கிற தம்மை -தாமரைக் கண்களுக்கு அற்றுத் தீர்ந்து –
என்னும்படி பண்ணிக் கொண்ட படியைச் சொல்லுகிறார் –

செங்கனி வாயின் திறத்தாயும் செஞ்சுடர் நீண் முடித் தாழ்ந்தாயும் சங்கொடு சக்கரம் கண்டு உகந்தும் –
என்ற அளவும் சொன்னார் கீழ் -தாமரைக் கண்களுக்கு அற்றுத் தீர்ந்த படி சொல்லுகிறார் இதில்-

பாரமாய பழ வினை பற்று அறுத்து -என்று
தம்முடைய அஜ்ஞ்ஞாந ஆசாத் கர்மாதி  நிகர்ஷம் பாராதே -பெரிய பெருமாள் -பெரிய பிராட்டியார் புருஷகாரமாக –
தாம் அநாதி கால்ம் அர்ஜித்த பாபங்களை அடைய போக்கினபடியைச் சொன்னாராய்
அது கூடுமோ என்கிற அபேஷையிலே
கூடும் என்னும் இடத்துக்கு ருத்ரனை த்ருஷ்டாந்தமாகச் சொன்னாராய் –

அநந்தரம்
விஷம த்ருஷ்டாந்தம் என்று சில ஹேதுக்களை சொல்ல –
அதுக்கு அடைவே உத்தரம் சொன்னார் கீழ் -பாட்டில்

இதில் அந்த -பாரமாய -என்கிற பாட்டைப் பற்றி ஓர் அபேஷை எழும்ப அதுக்கு உத்தரமாய் இருக்கிறது –
அதாவது அநாதி கால ஆர்ஜிதமான உம்முடைய பாபங்களை அடையப் போக்கினார் என்றீர்
அது மறு கிளை எழாதபடி போய்த்தாவது –
அவித்யா சஞ்சித கர்மம் என்றும் –
அநாத்ய வித்யா சஞ்சித புண்ய பாப கர்ம ப்ரவாஹ ப்ரவ்ருத்தம் என்றும் -சொல்லுகிறபடியே
அந்த கர்மத்துக்கு ஹேது பூதையான அவித்யை போனால் அன்றோ அது போய்த்தாவது –
அது போய்த்ததுவோ என்கிற அபேஷையில் –
அந்த அவித்யைவாது தன்னோடு அனுபந்தித்தாரை பகவத் பிரவணர் ஆக ஒட்டாதே
விபரீதங்களை அனுஷ்டிப்பிக்குமது இறே –

அப்படியே தன்னோடு அனுபந்தித பிரஹ்லாதனை பகவத் பிரவணன் ஆக ஒட்டாதே விபரீதங்களை அனுஷ்டிப்பிக்கத் தேடின
ஹிரண்யனை தமோ ஹிரண்ய ரூபேண பரிணாம முபாகதம் -என்கிறபடியே
தமோ குணம் ஹிரண்யன் என்று ஒரு வடிவு கொண்டதாய் இறே -இருப்பது

அப்படியே இருக்கிறவனை –
அங்கு அப்பொழுதே அவன் வீயத் தோன்றிய -என்கிறபடியே ந்ருசிம்ஹ ரூபியாய் வந்து தன் திருக்கையில்
உகிராலே கிழித்துப் பொகட்டாப் போலே –
ஞானக் கையாலே என்னுடைய அவித்யையை கிழித்துப் பொகட்டான் என்கிறார்

——————

ஸ்ரீ வேதாந்த தேசிகர் அருளிய முநி வாஹன போகம் -அவதாரிகை –

தன்னை ஜிதந்த புண்டரீகாஷ -இத்யாதிகளில் படியே தோற்பித்து -திருவடிகளிலே
விழப் பண்ணி மேன் மேல் அனுபவத்தை உண்டாக்கின -தாமரைக் கண்களுக்கு
தாம் அற்றுத் தீர்ந்த படியை -ஆஸ்ரீத விரோதி நிராகரண வ்ருத்தாந்த பூர்வகமாக அநுபவிக்கிறார்-

——————-

பரியனாகி வந்த அவுணன் உடல் கீண்ட அமரர்க்கு
அரிய வாதிப் பிரான் அரங்கத்து அமலன் முகத்துக்
கரிய வாகிப் புடை பரந்து மிளிர்ந்து செவ்வரி யோடி நீண்ட வப்
பெரிய வாய கண்கள் என்னைப் பேதைமை செய்தனவே —-8–

பதவுரை

பரியன் ஆகி–மிகவும் ஸ்தூலமான வடிவை யுடையனாய்க் கொண்டு
வந்த–(ப்ரஹ்லாதனை நலிய) வந்த
அவுணன்–அஸூரனான இரணியனுடைய
உடல்–சரீரத்தை
கீண்ட-கிழித்துப் பொகட்டவனும்,
அமரர்க்கு–பிரமன் முதலிய தேவர்கட்கும்
அரிய-அணுக முடியாதவனும்
ஆதி–ஜகத் காரண பூதனும்
பிரான்-மஹோபகாரகனும்
அரங்கத்து-கோயிலில் எழுந்தருளியிருக்கிற
அமலன்-பரமபாலநனுமாகிய எம்பெருமானுடைய
முகத்து–திருமுக மண்டலத்தில்
கரிய ஆகி–கறுத்த நிறமுடையவையாய்
புடை பரந்து–விசாலங்களாய்
மிளிர்ந்து–பிரகாசமுடையவையாய்
செவ்வரி ஓடி–செவ்வரி படர்ந்திருப்பனவாய்
நீண்ட–(காது வரை) நீண்டிருப்பவனாய்
பெரிய ஆய-பெருமை பொருந்தியவையுமான
அக் கண்கள்–அந்தத் திருக் கண்களானவை
என்னை-அடியேனை
பேதைமை செய்தன–உந்மத்தனாகச் செய்து விட்டன.

—————————————————

ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை அருளிய-வியாக்யானம்-

பரியனாகி வந்து –
பகவத்  குணங்களை அனுசந்தித்து நைந்து இராமே சேஷத்வத்தை அறிந்து
மெலிந்து இராமே -சர்வேஸ்வரனை ஆசைப்பட்டு தளர்ந்த உடம்பாய் ஒசிந்து இராமே –

பரிய –
நரசிம்ஹத்துக்கும் பிற்காலிக்க வேண்டும் படி இருக்கை -ஊட்டி இட்டு வளர்த்த
பன்றி போலே உடம்பை வளர்த்தான் இறே -வந்த -இப்போது தாம் வயிறு பிடிக்கிறார்-

அவுணன் உடல் கீண்ட –
நரசிம்ஹத்தினுடைய மொறாந்த முகமும்-நா மடிக்கொண்ட உதடும் -செறுத்து நோக்கின நோக்கும் –
குத்த முறுக்கின கையும் கண்ட போதே பொசிக்கின
பன்றி போலே மங்கு நாரைக் கிழிக்குமா போலே கிழித்த படி-

அமரர்க்கு அரிய ஆதிப் பிரான் –
தேவர்களுக்கு உத்பாதகனான மாத்ரமே -கையாளனாய் நிற்பது ஆஸ்ரிதர்க்கு
சிருக்கனுக்கு உதவி நிற்கிற நிலை தன்னிலே ப்ரஹ்மாதிகளுக்கு பரிச்சேதிக்க ஒண்ணாதபடி நிற்கிற ப்ரதாநன் –

க்வாஹம் ராஜா ப்ரக்ருதிர்ஸ தமோதி கேச்மின் ஜாதஸ் ஸூரே தர குலே த்வ தவாநுகம்பா
ந ப்ரஹ்மணோ  ந ச பவச்ய ந வை ரமாயா யோ மோப பிதச் ஸிரசி பத்ம கரப்ரசாத –

ஆதிப் பிரான் –
தான் முற்கோலி உபகரிக்குமவன்

பிரான் –
ப்ரஹ்லாதனுக்கு எளியனான நிலையும் ப்ரஹ்மாதிகளுக்கு அரியனான நிலையும்
இரண்டும் தமக்கு உபகாரமாய் இருக்கிறது-

அரங்கத்தமலன் –
எல்லார்க்கும் உதவும்படி கோயிலிலே வந்து கண் வளர்ந்து அருளுகையாலே
வந்த சுத்தி –ஒரு கால் தோற்றிப் போதல் -அவதாரம் போலே தீர்த்தம் பிரசாதித்துப் போதல்
செய்யாமையாலே வந்த ஸூத்தி ஆகவுமாம்

முகத்து –
அவனுடைய முகத்து

கரியவாகி –
விடாய்த்தார் முகத்திலே நீர் வெள்ளத்தை வெட்டி விட்டாப் போலே இருக்கை-

புடை பரந்து –
கடலைத் தடாகம் ஆக்கினாப் போலே இடம் உடைத்தாய் இருக்கை

மிளிர்ந்து –
திரை வீசிக் கரையாலும் வழி போக ஒண்ணாது இருக்கை

செவ்வரி யோடி –
ஸ்ரீயபதித்வத்தாலும் வாத்சல்யத்தாலும் சிவந்து இருக்கை

நீண்ட –
செவி யளவும் அலை எறிகை

அப் பெரிய வாய கண்கள் –
பின்னையும் போக்தாவின் அளவன்றிக்கே இருக்கையாலே
அப் பெரிய வாய கண்கள் -என்கிறார் -இது என்ன ஒண்ணாதே பரோஷ நிர்த்தேசம் பண்ண
வேண்டும்படி இருக்கை –

என்னை –
பெரிய மனிச்சன் கிடீர் நான் -என் வைதக்த்யத்தைப் பறித்துப் பொகட்டு
மௌக்த்யத்தைத் தந்தன -ஒருவன் எய்தத்தை மற்றவனும் எய்யுமா போலே –

பேதைமை செய்தனவே –
ராம சரம் போலே முடிந்து பிழைக்க வொட்டுகிறன வில்லை –

இத்தால் நரசிம்ஹ அவதாரத்தின் படியும் இங்கே வுண்டு என்கிறார் –

————————————————————————————————-

ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் அருளிய-வியாக்யானம்-

பரியனாகி வந்து –
பகவத்  குணங்களை அனுசந்தித்து நைந்து இராமே
சேஷத்வத்தை அறிந்து மெலிந்து இராமே –
சர்வேஸ்வரனை ஆசைப்பட்டு தளர்ந்த உடம்பாய் ஒசிந்து இராமே –

பரிய –
நரசிம்ஹத்துக்கும் பிற்காலிக்க வேண்டும் படி இருக்கை-

ஆத்மா வஸ்து என்று ஓன்று உள்ளது -அதுக்கு அவன் சேஷியாய் இருக்கையாலே
அந்த சேஷியானவனை நம்முடைய சேஷத்வம் ஆகிற ஸ்வரூபத்தின் சித்திக்காகப் பெற வேணும் என்று –
நினைந்து நைந்து உள் கரைந்து உருகி உடம்பை இளைக்கப் பண்ணுகிறான் இறே

அங்கன் அன்றியிலே பரமாத்மாவை அநுபவிக்க ஆசைப்பட்டு பெறாமையாலே பக்தி தலை மண்டை இட்டு –
நின்பால் அன்பையே அடியேன் உடலம் நீராய் அலைந்து கரைய வுருக்குகின்ற நெடுமாலே – என்கிறபடியே
சரீரத்தை இளைப்பித்து மெலிந்து இருக்கிறான் அன்றே –

பரமேஸ்வர சம்ஜ்ஜோஸ் ஜ்ஞ கிமந்யோ மய்ய வஸ்திதே -என்கிறபடியே தன்னுடைய
அஹங்கார மமகாரங்களாலே பூண் கட்டி -பலவான் ப்ரஹ்ம ராஷஸ -என்னுமா போலே
பருக்கப் பண்ணின சரீரம் இறே

ராஜாக்களுக்கு சிலர் ஊட்டி இட்டு சில  காவல் பன்றி வளர்த்து வைக்குமா போலே
நரசிம்ஹத்தின் உகிருக்கு இரை போரும்படி தேவர்கள் வரங்களால் யூட்டி யிட்டு வளர்த்து வைத்தார்கள் –
மேல் இத்தால் வரும் அநர்த்தமும் அறியாமையாலே வரம் கொடுத்து பருக்க வளர்த்தார்கள் –
இது தானே தாம் அழிக்கைக்கு உறுப்பாய்த்து –

வந்த –
இப்போது தாம் வயிறு பிடிக்கிறார் -இன்றும் வருகிறானாகக் காணும் இவர்க்கு தோற்றுகிறது
அனுகூலனாய் வருகை அன்றிக்கே -பகவத் தத்வம் இல்லை என்றும் -உண்டு என்கிறவனை
நலிகைக்கு என்றும் வந்த க்ரௌர்யத்தை நினைத்து பயப்படுகிறார்-

அவுணன் –
இப்படி பகவத் பாகவத விஷயம் என்றால் அவன் சிவட்க்கு என்கைக்கு
ஹேது என் என்னில் -ஆசூரீம் யோ நிமா பன்னனாய் மூடன் ஆகையாலே -என்கிறார் –

உடல் கீண்ட –
திருவாழி யாழ்வானுக்கும் பிற்காலிக்க வேண்டும்படி இறே -ஊன் மல்கி
மோடி பருத்து இருக்கிறபடி -அப்படி இருக்கிற ஹிரண்ய சரீரமானது நர சிம்ஹத்தின் உடைய
மொறாந்த முகமும் -நா மடிக்கொண்ட வுதடும் -இறுத்து நோக்கின நோக்கும் -குத்த முறுக்கின
கையும் கண்ட போதே பொசுக்கு என பன்றி போலே உலர்ந்த தாழை நாரைக் கிழித்தாப் போலே கிழித்த படி

உடல் கீண்ட –
தன்னதான ஆத்ம வஸ்துவுக்கு அழிவு வாராமல் கிள்ளிக் களைந்தான் -என்னுமா போலே
அஹங்கார ஹேதுவான தேஹத்தைக் கிழித்துப் பொகட்டான்-

அமரர்க்கு அரிய –
இப்படி ப்ரஹ்லாதனுக்கு எளியனாய் நிற்கிற அவ்வளவு தன்னிலே
ப்ரஹ்ம ருத்ராதிகளுக்கு கிட்ட அரியனாய் இருக்கும்
க்வாஹம் ராஜா ப்ரக்ருதிர்ஸ தமோதி கேச்மின் ஜாதஸ் ஸூரே தர குலே த்வ தவாநுகம்பா
ந ப்ரஹ்மணோ  ந ச பவச்ய ந வை ரமாயா யோ மோப பிதச் ஸிரசி பத்ம கரப்ரசாத -ஸ்வ சாமர்த்தியம்
கொண்டு கிட்ட நினைப்பார்க்கு தயை பண்ணும் அளவிலும் கிட்ட வரிதாய் இருக்கும்
அநந்ய பிரயோஜனர்க்குச் சீற்றத்திலும் கிட்டலாய் இருக்கும் -அங்கன் இன்றியிலே –
தேவர்களுக்கு அரியனாய் இருக்கிறவன் தமக்கு எளியனாய் இருக்கறபடியைச் சொல்லுகிறார்

அதாவது -தம்முடைய நிகர்ஷம் பாராதே தம்மையே விஷயீ கரித்து தம்முடைய
துஷ்கர்மங்களை யடைய ஸ வாசனமாகப் போக்கி தம்மை முழுக்க அனுபவித்துக் கொண்டு
இருக்கிறபடியைச் சொல்லுகிறார் –

இப்படி தேவர்களுக்கு அரியனாய் இருக்கிறவன் உமக்கு எளியனாய் இருக்கைக்கு அடி என் என்னில் –
ஆதி –
காரண பூதன் -பஹூ புத்ரனானவன் விகல கரணனான புத்திரன் பக்கலிலே போர
வத்சல்யனாய் இருக்குமா போலே -இவனும் ஜகத் காரணனாய் இருக்கச் செய்தேயும்
என்னுடைய அஞ்ஞான அசக்திகளை திரு உள்ளம் பற்றி என்னளவிலே போர வத்சல்யனாய் இருக்கும் –

ஆதி –
தான் முற்கோலி உபகரிக்குமவன்-

அமரர்க்கு அரிய ஆதிப் பிரான் –
தமக்கு உபகரித்த படியை நினைத்து பிரான் என்கிறார் அல்லர்
தேவர்களுக்கு கிட்ட அரியனாய் இருக்கச் செய்தே ப்ரஹ்லாதனுடைய விரோதியை முற் பாடனாய்ச்
சென்று போக்கின உபகாரத்தை நினைத்துச் சொல்லுகிறார்

ஆதிப் பிரான் –
ப்ரஹ்லாதன் -சர்வ காரணம் -என்ன ஹிரண்யன் அதுக்கு பொறாமல் –
இந்தத் தூணில் உண்டோ அந்த காரண பூதன் -என்று துணைத் தட்டி கேட்க –
ப்ரஹ்லாதனும் சர்வ அந்தராத்மான் காண் அவன் -ஆகையால் இதிலும் உண்டு -என்ன –

அங்கு அப்பொழுதே -என்கிறபடியே அவன் தட்டின தூணிலே வந்து நரசிம்ஹ ரூபியாய் தோன்றி
அவன் தட்டின கையைப் பிடித்து -பொன் பெயரோன் வாய் தகர்த்து மார்பிடந்தான் -என்கிறபடியே
அவனைக் கதுப்பிலே அடித்து -அவன் மார்பைக் கிழித்து ப்ரஹ்லாதனுடைய ப்ரதிஜ்ஞா வாக்யத்தை
க்ரயம் செலுத்தி தன்னுடைய காரணத்வத்தையும்
ஈஸ்வரத்வத்தையும் நிலை நிறுத்தின உபகாரத்தைப் பற்றி சொல்லுகிறார் ஆகவுமாம் –

அரங்கத்தம்மான் –
நரசிம்ஹ வ்யாவ்ருத்தி -அதாவது -ஒரு கால விசேஷத்திலே -ஒரு தூணின்
நடுவே வந்து தோன்றி ப்ரஹ்லாதன் ஒருவனுக்கு வந்த விரோதியைப் போக்கின வளவு இறே அங்கு உள்ளது –
இங்குக் கிடக்கிற கிடை-எல்லாக் காலத்திலும் எல்லாருடைய விரோதிகளையும் போக்குகைக்கு
அணித்தாக வந்து இரண்டு தூணுக்கும் நடுவே கிடக்கிற கிடையாகையாலே வ்யாவ்ருத்தமாய் இருக்கும் இறே-

அரங்கத்தமலன் –
ப்ரஹ்லாதன் ஆகிறான் பகவத் சந்நிதி உண்டான வளவிலே –
யா ப்ரீதிர விவேகாநாம் -என்று பகவத் விஷய பிரேமத்தை யபேஷிக்கை யாகையாலும் –
மலைகளாலே கடலிலே யமுக்கு உண்டு போது ஸ்தோத்ரங்களைப் பண்ணுகை யாலும்
மயி பக்திஸ் தவாஸ் த்யேவ -என்கிற அனந்தரமே ஜ்ஞான பக்திகளை உடையவன் ஆகையாலே
அவன் அளவில் பண்ணின உபகாரம் அப்படி யாகையாலே வருவதொரு மாலின்யம் உண்டு அங்கு –

இங்கு –
ஏழை யேதலன் கீழ் மகன் என்னாது இரங்கி -என்கிறபடியே நிகர்ஷ அனுசந்தானம் பண்ணி
பிற்காலிப்பார் அளவிலும் அந்த நிகர்ஷம் பாராதே மேல் விழுந்து விஷயீ கரித்து விரோதிகளையும்
போக்கிப் பரம புருஷார்த்தத்தை கொடுக்கையாலே கீழ்ச் சொன்ன மாலின்யம்
பெரிய பெருமாளுக்கு இல்லை என்று இட்டு -அரங்கத்தமலன் -என்கிறார் –

அஸ்மத் தாதிகளும் திரு முகத்திலே விழித்து அவித்யா சௌசம போய் சுத்தராம் படியான அமலத்வம்
என்னையும் ஆளாம்படி லோக சாரங்க மஹா முநி களோடே கூட்டின அமலத்வம்
எல்லார்க்கும் உதவும் படி கோயிலிலே கண் வளர்ந்து அருளுகையால் வந்த ஸூத்தி –
சிட்டனே செழு நீர்த் திருவரங்கத்தாய் -என்னக் கடவது இறே

ஒரு கால் தோற்றிப் போதல் -அவதாரம் போலே தீர்த்தம் பிரசாதித்தல் -செய்யாமையால் வந்த ஸூத்தியுமாம்
விரோத்யம்சம் கழித்து ஸூத்தரானால் அநுபவ விஷயம் சொல்லுகிறது மேல் –

அரங்கத்தமலன் இத்யாதி –
இவை ஓர் ஒன்றே யமையும் என்னைப் பேதைமை செய்ய -என்கிறார்
வண்டினம் குரலும் இத்யாதிப் படியே -அண்டர்கோனும் பரமபதம் முதலான வாஸ ஸ்தானங்களையும் விட்டுப்
படுகாடு கிடக்கும்படியாய் யாய்த்து -இவ் வூரின் போக்யதை இருப்பது –
அதுக்கு மேலே கண் வளருகிறவருடைய அமலத்வம் –

மித்ர பாவேந சம்ப்ராப்தம் ந த்யஜேயம் கதஞ்சந –
என்று விபீஷண விஷயமான வார்த்தையை க்ரயம் செலுத்துகைக்காக –
செல்வ விபீடணற்கு வேறாக நல்லானாய்
சர்வ பிரகார நிக்ருஷ்டனான என் போல்வாரையும் ஸூத்தராக்குகைக்கு ஆகவாகையால்
கிடக்கிற சௌலப்யம் –

அதுக்கு மேலே ஓன்று இறே திரு முகம் –

முகத்து –
சக்ய பஸ்யத க்ருஷ்ணஸ்ய முகம் -என்றும் –
உன் முகம் மாய மந்திரம் தான் கொலோ -என்றும்
சொல்லுகிறபடியே வெறும் முகம் தானே ஆகர்ஷகமாய் யிறே இருப்பது –

கீழ் -தாம்
அநுபவித்த திருப் பவளத்தின் வைலஷண்யம் பின்னாட்டுகையாலே அந்த திரு வதரத்தை உடைத்தான
திரு முகத்தைப் பிரித்துச் சொல்கிறார் –

அதுக்கு மேலே –
அத்யருனேஷணம்  -என்கிறபடியே
இரண்டு ஆழங்காலாய்த்து -சந்திர மண்டலத்திலே இரண்டு தாமரை பூத்தாப் போலேயும்-
ஒரு தாமரையிலே இரண்டு தாமரை பூத்தாப் போலேயும் இருக்கிற திருக் கண்கள்

கரியவாகி –
புண்டரீகம் போலே வெளுத்து இருக்கிற திருக் கண்களுக்கு பரபாகமாம்படி
இரண்டு கரு விழியை வுடைத்தாய் -அங்கன் அன்றிக்கே -அஞ்சனத்தாலே கறுத்து இருத்தல் –
கண்களைக் கண்ட போதே தாபத் த்ரயம் அடைய சகல தாபங்களும் போம்படி குளிர்ந்து
இருக்கும் என்னுதல் -விடாய்த்தார் முகத்திலே நீர் வெள்ளத்தை வெட்டி விட்டாப் போலே இருக்கை –

புடை பரந்து –
கடலைத் தடாகம் ஆக்கினாப் போலே இடமுடைத்தாய் இருக்கை -ஸ்வதஸ்
காண்கிற அளவுக்கு அவ்வருகே இரண்டு பார்ஸ்வமும் இடுங்கி யிராதே -பரந்து -இடம் உடைத்தாய்
அவித்யாதிகளைப் போக்கி அனுபவிப்பிக்கும் கார்யங்களைப் பற்றி வருகிற பரப்பு-

மிளிர்ந்து –
க்ருபா பரிதமாய் இருக்கையாலே கரை யருகும் வழி போக ஒண்ணாத படி
அலை எறிந்து திரை வீசுகை –
காண வேணும் என்கிற இவருடைய த்வரையில் காட்டிலும்
இவரை விஷயீ கரிக்கையில் உண்டான கண்களின் த்வரையைச் சொல்லுகிறது

செவ்வரி யோடி –
ஸ்ரீ யபதித்வத்தாலும் வாத்சல்யத்தாலும் சிவந்து இருக்கை –
ஐஸ்வர்யத்தாலும் வாத்சல்யத்தாலும் சிவந்து இருக்கும் என்னவுமாம் –

நீண்ட –
ஒழுகு நீண்டு இருக்கையும் தம்மளவும் கடாஷம் வந்து விஷயீ கரித்த படியும் –
க்ருபயா பரயா கரிஷ்ய மானே சகலாங்கம் கில சர்வ தோஷி நேத்ரே
ப்ரதமம் ஸ்ரவஸீ சமாஸ்த்ருணாதே இதி தைர்க்யேண விதந்தி ரங்க நேது –
பெரிய பெருமாளுடைய திருக் கண்கள் ஆனவை திருச் செவி யளவும் செல்ல நீண்டு
இருக்கிறபடிக்கு ஒரு நினைவு உண்டு என்கிறார் பட்டர் –

அதாவது –
பெரிய பெருமாள் உடைய திருக் கண்கள் ஆனவை
மீனுக்குத் தண்ணீர் வார்ப்பாரைப் போலே நித்ய ஸூரிகளுக்கு
முகம் கொடுத்து கொண்டு இருக்கிற ஸ்ரீ வைகுண்ட நாதனுக்கும் கண்கள் இரண்டாய்
ராம க்ருஷ்ணாத்யவதாரம் பண்ணி குஹாதிகள் விதுராதிகள் தொடக்கமானார் சிலர்க்கு அல்ப காலம்
முகம் கொடுத்து விஷயீ கரித்து வந்தாப் போலே வெறும் கையோடே போனவர்களுக்கும் கண்
இரண்டாய்-சம்சாரம் கிழங்கு எடுத்தால் அல்லது எழுந்திரேன் என்று கோயிலிலே அர்ச்சா ரூபியாய்
அவ்வவர் நிகர்ஷங்களைப் பாராதே முகம் கொடுத்துக் கொண்டு இருக்கிற பெரிய பெருமாளுக்கும்
கண் இரண்டாய் இருக்கவோ -இவருடைய க்ருபையை பார்த்தால் உடம்பு எல்லாம் கண்ணாக
வேண்டாவோ என்று பார்த்து -எல்லா மண்டலங்களும் தங்களுக்கே ஆக வேணும் என்று
இருக்கிற ராஜாக்கள் முற்படத் தங்களுக்கு ப்ரத்யாசன்னரான வன்னியரை அழியச் செய்யுமா போலே
பெரிய பெருமாளுடைய அவயவாந்தரங்கள் அடைய நாமேயாக வேணும் என்று பார்ஸ்வ
ஸ்தங்களாய் இருக்கிறன திருச் செவிகள் ஆகையாலே அவற்றை வென்று அவ்வருகே
போவதாக முற்பட அவற்றுடனே அலை எறிகிறாப் போலே யாய்த்து திருக் கண்கள் செவிகள்
அளவும் நீண்டு இருக்கிறபடி –

அப் பெரியவாய கண்கள் –
பின்னையும் போக்தாவின் அளவன்றிகே இருக்கையாலே
அப் பெரியவாய கண்கள் -என்கிறார் –
இது என்ன ஒண்ணாதே பரோஷ நிர்த்தேசம் பண்ண வேண்டும்படி யிருக்கை –

கீழ் பரந்து நீண்டு –
என்று ஆயாம விஸ்தாரங்களை சொல்லுகையாலே இங்கு போக்யதா பிரகர்ஷத்தை சொல்லுகிறது –
போக்யதா அதிசயத்தாலே -அப் பாஞ்ச சன்னியம் -என்னுமா போலே
முகத்தை திரிய வைத்து சொல்லுகிறார் –

என்னை –
அறப் பெரிய மனிச்சன் கிடீர் நான் -என் வைதக்யத்தை பறித்துப் பொகட்டு மௌக்யத்தைத் தந்தன –
ஒருவன் எய்ய அதனை மற்றை யவனும் எய்யுமா போலே –

பேதைமை செய்தனவே –
ராம சரம் போலே முடிந்து பிழைக்க ஒட்டுகிறன வில்லை-

என்னைப் பேதைமை செய்தனவே –
கீழ்ப் பாட்டில் என்னைச் சிந்தை கவர்ந்ததுவே -என்று
ஜ்ஞான ப்ரரைத்வாரத்தை அபஹரித்த படியைச் சொல்லிற்று –

இங்கு ஞானத்தை அபகரித்த படியைச் சொல்லுகிறது -ஜ்ஞான அபஹாரம் ஆவது -அழகிலே அலமருகை –
மாதரார் கயல் கண் என்னும் வலையுள் பட்டு அழுந்துவேனை தன் பக்கலிலே ஆதரத்தைப் பிறப்பித்து –
மதி எல்லாம் உள் கலங்கும்படி பண்ணிற்று –

என்னைப் பேதைமை செய்தனவே –
அவன் அக் கண்களாலே -அமலங்களாக விழிக்கும் –
என்று இருந்த கடாஷங்களுக்கு இலக்கானார்க்குத் தெளிவைப் பிறப்பிக்க கடவதாய்  இருக்க
எனக்குள்ள அறிவு தன்னையும் அழித்தது -இனி தாமரைக் கண்களால் நோக்காய் -என்பார்க்கு
எல்லாம் அழகிதாக ப்ரார்த்திக்கலாம்-

இப் பாட்டில் -நரசிம்ஹ அவதாரத்தின் படியும் இங்கே உண்டு என்கிறார் –

———————————————————————————————

ஸ்ரீ வேதாந்த தேசிகர் அருளிய முநி வாஹன போகம் -வியாக்யானம் –

பரியனாகி வந்த அவுணன் உடல் கீண்ட –
சர்வ லோகத்தில் உள்ள தமஸ் எல்லாம் திரண்டு
ஒரு வடிவு கொண்டாப் போலே அதி ஸ்தூலனாய் -மஹா மேரு நடந்தாப் போலே எதிர்த்து வந்த
திரண்ட தோள் இரணியன் சினம் கொள் ஆழம் ஒன்றையும் ஒரு வாழை மடலைக் கிழிக்குமா
போலே இரண்டு கூறு செய்தவனாய்

அமரர்க்கு அரிய ஆதிப் பிரான் –
தன்னாலே ஸ்ருஷ்டருமாய்  உபக்ருதருமான தேவர்கள் -தான் காரண பூதனாய்  -உபாகாரகனாய் நிற்கிற நிலை
அறிய மாட்டாமையாலே அவர்களுக்கு ப்ரஹ்லாதன்
அனுபவித்தாப் போலே அணுகவும் அநுபவிக்கவும் அரியனாய் இருக்கிற

அரங்கத்தமலன் முகத்து –
ஹேய பிரசுரமான சம்சாரத்துக்கு உள்ளே கோயில் ஆழ்வார் உடன் எழுந்தருளி வந்து –
அணியார் பொழில் சூழ் அரங்க நகர் அப்பா துணியேன் இனி நின் அருள் அல்லது எனக்கு -என்று இருப்பார்
தம்முடைய திருவடிகளை அடைந்து அடி சூடி உய்யும் படி அவர்களுடைய
ஐயப்பாடு முதலான ஹேயங்களை அறுத்துத் தோன்றும் அழகை வுடையரான
பெரிய பெருமாள் உடைய கோள் இழைத் தாமரை -இத்யாதிகளால் பேசப்பட்ட
பேர் அழகை வுடைத்தே சந்திரனும் தாமரையும் ஒன்றினால் போலே இருக்கிற திரு முகத்தில்-

கரியவாகிப் புடை படர்ந்து மிளிர்ந்து செவ்வரி யோடி நீண்ட வப் பெரியவாய கண்கள் –
நிகர் இல்லாத நீல ரத்னம் போலே இருக்கிற தாரைகையின் நிறத்தாலே நீலோத்பல வர்ணங்களாய் –
ஆஸ்ரீத தர்சன ப்ரீதியாலே அன்று அலர்ந்த தாமரைப் பூ போலே அதி விகசிதங்களாய் –
ஆசன்னர் எல்லாம் பக்கலிலும் ஆதரம் தோன்றும்படியான உல்லாசத்தை வுடையவையாய் –
அனந்யர் பக்கல் அநு ராகத்துக்குக் கீற்று எடுக்கலாம் படியான சிவந்த வரிகளாலே வ்யாப்தங்களாய் –
ஸ்வபாவ சித்தங்களானஆயாம விச்தாரங்கள வுடையவான திருக் கண்கள் –

அப்பெரிய -என்றதுக்கு
இப்போது காண்கிற வளவன்றிக்கே சாஸ்திர வேத்யமாய் அநவச் சின்னமான போக்யதா ப்ரகர்ஷத்தையும்
மஹாத்ம்யத்தையும் உடைய என்று தாத்பர்யமாக்கவுமாம்

என்னைப் பேதைமை செய்தனவே –
இவ் வநுபவ ரசத்திலே அமிழ்ந்த என்னை அல்லாததொரு
ஜ்ஞான அனுஷ்டானங்களுக்கு அநர்ஹனாம் பண்ணிற்றன –

—————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேதாந்த தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருப்பாண் ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ அமலனாதி பிரான் –ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை அருளிய-ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் அருளிய–ஸ்ரீ வேதாந்த தேசிகர்அருளிய முநி வாஹன போகம் -வியாக்யானம் -கையினார் சுரி சங்கனலாழியர் நீள் வரை போல் –

May 23, 2013

ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளைஅருளிய-அவதாரிகை –
திரு வதரத்திலே அகப்பட்ட படி சொல்லுகிறார் –
நீஞ்சாப் புக்குத் தெப்பத்தை இழந்தேன் என்னுமா போலே

————

ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் அருளிய-அவதாரிகை –
திரு வதரத்திலே அகப்பட்ட படி சொல்லுகிறார் –
நீஞ்சாப் புக்குத் தெப்பத்தை இழந்தேன் என்னுமா போலே-

கீழ்ப் பாட்டில் -முற்றும் உண்ட கண்டம் கண்டீர் அடியேனை உய்யக் கொண்டது -என்று திருக் கழுத்தானது
தன்னுடைய ஆபத் சகத்வாதிகளைக் காட்டி தம்மை எழுதிக் கொண்ட படியை இறே சொல்லிற்று –

இதுக்கு மேலான -திருப் பவள செவ்வாயானது -உலகமுண்ட பெரு வாயன் -என்கிறபடியே
ஆபத் சகத்வத்திலும் முற்பாடர் நாம் அல்லோமோ -ஆஸ்ரித ரஷணத்துக்கு உறுப்பாக
சர்வ பூதேப்யோ ததாம் ஏதத் வ்ரதம் மம -என்றும் –
மித்ர பாவேன சம்ப்ராப்தம் ந த்யஜேயம் கதஞ்சந -என்றும் –
சர்வ பாபேப்யோ மோஷ யிஷ்யாமி -என்றாப் போலே -சொல்லுகிற மெய்ம்மைப் பெரு வார்த்தைக்கு
எல்லாம் ப்ரதான கரணம் நாம் அல்லோமோ –

ஓர் ஆபரணத்தால் இடு சிவப்பன்றிக்கே ஸ்வாபாவிக சௌந்தர்யம் உடையோமும் நாம் அல்லோமோ –
கருப்பூரம் நாறுமோ -கமலப் பூ நாறுமோ திருப்பவளச் செவ்வாய் தான் தித்தித்து இருக்குமோ
என்று தேசிகரைக் கேட்கும்படியான சௌகந்தய சாரச்யம் உள்ளிட்ட போக்யதையை
உடையோமும் நாம் அல்லோமோ -என்றாப் போலே தம்முடைய ஏற்றத்தைக் காட்டி
தம்முடைய திரு உள்ளத்தை அந்தக் கழுத்தின் நின்றும் தன் பக்கலிலே வர இசித்து துவக்க

செவ்வாய் முறுவலோடு எனது உள்ளத்து இருந்த அவ்வாய் யன்றி யான் அறியேன் -என்கிறபடியே
அந்த திருப் பவளச் செவ்வாயிலே தாம் அபஹ்ருதராய் அகப்பட்ட படியைச் சொல்லுகிறார்

ஆனால் -செய்ய வாயையோ என்னைச் சிந்தை கவர்ந்தது -என்ன அமைந்து இருக்க -கீழில்
விசேஷணங்களால் செய்கிறது என் என்பது என்னில் –
கீழ் -அஞ்சாம் பாட்டில் –
பாரமாயபழ வினை பற்று அறுத்து என்னைத் தன் வாரமாக்கி வைத்தான் -என்று அநேக ஜன்மார்ஜிதமான
பாபராசியை அடைய இத்தலையில் ஒரு ஹேது இன்றிக்கே இருக்கச் செய்தே -என்னுடைய
நிகர்ஷம் பாராதே ஸவாசனமாகப் போக்கினான் என்று சொல்லி -அது கூடுமோ என்கிற
அபேஷையிலே -ஈஸ்வர அபிமாநியாய் துர்மாநியாய் ருத்ரனுடைய துயரை அவன் தண்மை
பாராதே போக்கினாப் போலே -என்னுடைய நிகர்ஷம் பாராதே பாபங்களையும் போக்கினான்
என்று ருத்ரனை த்ருஷ்டாந்தமாக சொன்னாராய் இறே கீழ்ப்பாட்டில் நின்றது –

இத்தைக் கேட்டவர்கள் இது விஷம உதாஹரணம் காணும் -அந்த ருத்ரன் -ஆகிறான்
ததாதர்சித பந்தாநௌ ஸ்ருஷ்டி சம்ஹார கார கௌ -என்கிறபடியே சம்ஹார தொழிலிலே
புருஷோத்தமனாலே நியுக்தன் ஆகையாலே அதிகாரி புருஷனுமாய் -அவனுக்கு
ப்ரஹ்ம சிரஸ் க்ருந்த நத்தாலே வந்த ஆபத்து தானும் ப்ராமாதிகமாக ஒருகால்
பிறந்தது ஆகையாலே -தன் அலங்கல் மார்பில் வாசநீர் மாத்ரத்தாலே போக்கலாம் –

நீராகிறீர் -ச்ருதிஸ் ஸ்மருதிர் ம்மை வாஜ்ஞா -என்கிறபடியே பகவத ஆஜ்ஞா ரூபமான
வேத வைதிக மர்யாதையை அதிக்ரமித்தவருமாய் அதுக்கு மேலே அக்ருத்ய கரண
க்ருத்ய அகரண ரூபமான பாபங்களை அநாதி காலம் கூடு பூரித்தவருமாய் அன்றோ -இருப்பது

ஆன பின்பு உம்முடைய பக்கல் ஒரு கைம்முதல் இன்றிக்கே இருக்க உம்முடைய பாபங்களை அப்படிப் போக்க போமோ
அது கிடக்க -அந்த ருத்ரன் தானே தேவர்களுக்கு மேலாய் இருக்கையாலே ஆனை மேல்
இருந்தார் ஆனை மேல் இருந்தாருக்கு சுண்ணாம்பு இடுமோபாதி அவன் கார்யம் செய்யக் கூடும்
மனுஷ்யர்களுக்கும் கீழாய் இருக்கிற உம்முடைய பாபங்களை போக்கக் கூடுமோ -அது கிடக்க –
ப்ரஹ்மண புத்ராய ஜ்யேஷ்டாயா -என்கிறபடியே ப்ரஹ்மாவுக்கு ஜ்யேஷ்ட புத்ரனான படியாலே
தனக்கு பௌத்ரன் என்று இட்டு அவன் கார்யம் செய்யலாம் -அப்படி இருப்பதொரு பந்த விசேஷம்
உமக்கு இல்லையே –

அதுவும் கிடக்க அந்த ருத்ரன் தான் மூ வுலகும் பலி -திரிவோன்
என்கிறபடியே திருப்பாற் கடலிலே செல்ல பின்பன்றோ அவன் துயரைப் போக்கிற்று -நீரும் அப்படிப்
போனீரோ -என்ன அதற்க்கு அடைவே உத்தரமாய் இருக்கிறது

——————

ஸ்ரீ வேதாந்த தேசிகர் அருளிய முநி வாஹன போகம் -அவதாரிகை-

மேல் நாலு பாட்டாலே ப்ரார்த்த நீயமான கைங்கர்யத்துக்கு ப்ரசாதகமான அநுபவம்
தம்மை இப்போது பரவசம் ஆக்கின படியைப் பேசுகிறார் –

அதில் -கையினார் -என்கிற பாட்டில் –
ஆழ்வார்களோடு பொருந்தின திருக் கையை அவலம்பநமாகக் கொண்டு
திரு முடி யளவும் சென்று மீண்ட சிந்தையை தூ முறுவல் தொண்டை வாய்ப் பிரானுடைய
கோலம் திரள் பவளக் கொளுந்துண்டம் கொல் -என்னும்படியான திருப் பவளத்தில் அழகு
தன் வசம் ஆக்கிற்று என்கிறார்

———-

கையினார் சுரி சங்கனலாழியர் நீள் வரை போல்
மெய்யினார் துளப விரையார் கமழ் நீண் முடி யெம்
ஐயனார் அணி யரங்கனார் அரவின் அணை மிசை மேயனார்
செய்யவாய் ஐயோ என்னைச் சிந்தை கவர்ந்ததுவே ——-7–

பதவுரை

கையின்–திருக் கைகளில்
ஆர்-பொருந்தி யிருக்கிற
சுரி சங்கு-சுரியை யுடைய திருச் சங்கையும்
அனல் ஆழியர்-தீ வீசுகின்ற திருவாழியையும் உடையராய்,
நீள் வரை போல்-பெரியதொரு மலை போன்ற
மெய்யனார்-திருமேனியை யுடையராய்
துளபம் விரை ஆர்-திருத் துழாயின் பரிமளம் மிகப்பெற்று (அதனால்)
கமழ்-பரிமளியா நின்றுள்ள
நீள் முடி–உயர்ந்த திரு வபிஷேகத்தை யுடையராய்
எம் ஐயனார்–எமக்கு ஸ்வாமியாய்
அணி அரங்கனார்-அழகு பொருந்திய திருவரங்கத்திற் கண் வளர்ந்தருள்பவராய்
அரவு இன் அணை மிசை மேய–திருவனந்தாழ்வானாகிற இனிய திருப் பள்ளியின் மீது பொருந்திய
மாயனார்–ஆச்சரியச் செய்கைகளை யுடையரான ஸ்ரீ ரங்கநாதருடைய
செய்ய வாய்–சிவந்த திருப் பவளமானது
என்னை-என்னுடைய
சிந்தை-நெஞ்சை
கவர்ந்தது-கொள்ளை கொண்டது;
ஐயோ–(ஆநந்தாதிசயக் குறிப்பு.)

——————————————————————-

ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளைஅருளிய-வியாக்யானம் –

கையினார் -இத்யாதி வெறும் புறத்திலே -படவடிக்க வல்ல -ஆலத்தி வழிக்க வல்ல -கையிலே
அழகு நிறைந்து -சுரியை வுடைத்தான ஸ்ரீ பாஞ்ச ஜன்யம் -ப்ரதி பஷத்தின் மேலே அனலை
வுமிழா நின்றுள்ள திரு வாழி -இவற்றை வுடையராய் இருக்கை –

ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்துக்கு சுரி ஸ்வபாவமானாப் போலே திரு வாழி யாழ்வானுக்கும் ப்ரதி
பஷத்தின் மேலே அனல் உமிழுகை ஸ்வபாவம் –

திருக் கோட்டியூரிலே அனந்தாழ்வான் பட்டரை
ஸ்ரீ வைகுண்ட நாதன் த்வி புஜனோ சதுர் புஜனோ -என்ன -இருபடிகளும் அடுக்கும் என்ன
இரண்டிலும் அழகிது ஏது என்ன –
த்வி புஜனாகில் பெரிய பெருமாளைப் போலே இருக்கிறது -சதுர் புஜனாகில் நம் பெருமாளைப்
போலே இருக்கிறது -என்றார்

நீள் வரை –
மலையை கடலை ஒப்பாகச் சொல்லும் இத்தனை இறே
நீட்சி போக்யதா ப்ரகர்ஷம் -பச்சை மா மலை போல் மேனி -அதுக்கு மேலே ஒப்பனை அழகு –

துளப விரையார் கமழ் நீண் முடி –
பரிமளம் மிக்கு இருந்துள்ள திருத் துழாய் மாலையாலே
அலங்க்ருதமாய் ஆதி ராஜ்ய ஸூசகமான திரு அபிஷேகத்தை உடையருமாய்

எம்மையனார் –
உறவு தோற்றுகை -எனக்கு ஜனகரானவர்

அணி அரங்கனார் –
ப்ராப்த விஷயமாய் இருக்கக் கடக்க விராதே சம்சாரத்துக்கு ஆபரணமான
கோயிலிலே வந்து அண்ணியருமாய் இருக்கிற படி-

அரவின் அணை மிசை –
ரத்னங்களை எல்லாம் தங்கத்திலே புதைத்துக் காட்டுமா போலே
தன் அழகு தெரிய திருவநந்தாழ்வான் மேல் சாய்ந்து காட்டுகிற படி

மேய மாயனார் –
மின் மினி பறக்கிற படி –
ஸ மயா போதித ஸ்ரீ மான் -எல்லாருக்கும் ஒன்றிலே சாய்ந்தவாறே பொல்லாங்குகள் தெரியும்
இங்கு பழைய வழகுகளும் நிறம் பெறும்

செய்ய வாய் –
ஸ்திரீகளுடைய  பொய்ச் சிரிப்பிலே துவக்குண்டார்க்கு இச் சிரிப்பு
கண்டால் பொறுக்க ஒண்ணுமோ

ஐயோ –
திருவதரமும் -சிவப்பும் அநுபவிக்க அரிதாய் -ஐயோ –என்கிறார்

என்னை –
பண்டே நெஞ்சு பரி கொடுத்த என்னை அந்யாயம் செய்வதே -என்று கூப்பிடுகிறார்

என்னை –
கல்லை நீராக்கி -நீரையும் தானே கொண்டது
இப் பாட்டில் ஸ்ரீ வைகுண்ட நாதன் படியும் இங்கே காணலாம் என்கிறார் –

——————————————————————–

ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் அருளிய-வியாக்யானம் –

கையினார் சுரி சங்கு அனல் ஆழியர் –
கரி முனிந்த கைத்தலம் என்றும் -பரிகோபமா -என்றும் வெறும் புறத்திலே விரோதிகளை
நிரசிக்க நிரசிக்க வற்றாய் இருக்கச் செய்தே -அசிந்த்ய சக்திகளான திவ்ய ஆயுதங்களை
தரித்துக் கொண்டு -எப்போதும் கை கழலா நேமியானாய் இருக்கிறது -நம் மேல் வினை கடிகைக்கு அன்றோ -என்கிறார்

ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்துக்கு சுரி ஸ்வபாவமானாப் போலே திரு வாழி யாழ்வானுக்கும் ப்ரதி
பஷத்தின் மேலே அனல் உமிழுகை ஸ்வபாவம் -இறே

வெறும் புறத்திலே -படவடிக்க வல்ல -ஆலத்தி வழிக்க வல்ல -கையிலே
அழகு நிறைந்து -சுரியை வுடைத்தான ஸ்ரீ பாஞ்ச ஜன்யம் -ப்ரதி பஷத்தின் மேலே அனலை
வுமிழா நின்றுள்ள திரு வாழி -இவற்றை வுடையராய் இருக்கை –

ஸ கோஷோ தார்த்தராஷ்ட்ராணாம் ஹ்ருதயா நிவ்ய தாரயத் -என்றும் –
தீய அசுரர் நடலைப்பட -முழங்கும் என்றும் சொல்லுகிறபடியே விரோதி வர்க்கத்தை
தன் த்வநியாலே தானே நிரசிக்க வல்ல ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தையும்
கருதுமிடம் பொருது -என்கிறபடியே விரோதி வர்க்கத்தை -கூறாய் நீறாய் நிலனாகி –
என்கிறபடியே அழியச் செய்யும் திரு வாழியையும் தரித்துக் கொண்டு இருக்கிறது
என்னுடைய அறுக்கலறாப் பாபங்களை போக்குகைக்கு அன்றோ –

பட்டர் திருக் கோட்டியூரிலே எழுந்து அருளி இருக்கிற காலத்திலேயே ஒரு விசேஷ
திவசத்தின் அன்று கோளரி ஆழ்வானைப் பார்த்து தெற்காழ்வார் சொன்ன வார்த்தையை ஸ்மரிப்பது –

திருக் கோட்டியூரிலே எழுந்து அருளி இருக்க அனந்தாழ்வான் பட்டரை
ஸ்ரீ வைகுண்ட நாதன் த்வி புஜனோ சதுர் புஜனோ -என்ன -இருபடிகளும் அடுக்கும் என்ன
இரண்டிலும் அழகிது ஏது என்ன –
த்வி புஜனாகில் பெரிய பெருமாளைப் போலே இருக்கிறது -சதுர் புஜனாகில் நம் பெருமாளைப்
போலே இருக்கிறது -என்றார்-

கையினார் சுரி சங்கு அனல் ஆழியர் -நம்மைப் போல் அன்றிக்கே தெளியக் கண்டவர்கள்
பெரிய பெருமாளையும் சதுர்ப் புஜராய் யிறே அநுபவிப்பது –

நீள் வரை போல் மெய்யினார் -திவ்யாயுதங்கள் தானும் மிகை என்னும்படி மேரு மந்தர மாத்ரமான
என்னுடைய பாப ராசிகளை மலையை இட்டு நெரித்தாப் போலே நெரிக்க வற்றான பெரிய
மலை போலே திண்ணிதான வடிவை வுடையவர் -மலையை கடலுக்கு ஒப்பாக சொல்லும் இத்தனை

நீட்சி -போக்யதா ப்ரகர்ஷம் -பச்சை மா மலை போல் மேனி -இந்த வடிவை அனுபவிப்பார்க்கு
பிரகாஸ ரூபமாய்த்து இவர்கள் இருப்பது -அதுக்கு மேலே ஒப்பனை அழகு

துளப விரையார் கமழ் நீண் முடி –
பெரியவர்கள் கார்யம் செய்தவன் உம்முடைய கார்யம் செய்யப் புகுகிறானோ என்ன –
வெறும் ப்ரஹ்ம ருத்ராதி களுக்கே சேஷி என்று அன்றே அவன்
முடி கவித்து இருக்கிறது –

பிசு நயந் கில மௌளளி -பதிம் விச்வச்ய -என்றும் சொல்லுகிறபடியே
உபய விபூதி நாதன் அன்றோ –

துளப விரையார் கமழ்-
சர்வ கந்த வஸ்துவுக்கு தன் கந்தத்தாலே மணம் கொடுக்க வற்றாய்
மேன்மைக்கு உடலாய் இருக்கிறபடி –
நீண் முடி -என்னளவும் வந்து என்னை விஷயீ கரித்த முடி –

எம்மையனார் –
ருத்ரனனுக்கு பௌத்ரனாய் இருப்பதொரு பந்த விசேஷம் உண்டே -உமக்கு அது
இல்லையே என்று சொன்னதுக்கு உத்தரம் சொல்லுகிறார் -அவனுக்கு பௌத்ரத்வ நிபந்தநம்
ஒன்றுமே யன்றோ உள்ளது -மாதா பிதா ப்ராதா -இத்யாதிப் படியே சர்வவித பந்துத்வமும்
உள்ளது எனக்கே யன்றோ –

எம்மையனார் –
என்னைப் பெற்ற தமப்பனார்
பிதேவ புத்ரச்ய -இத்யாதிப் படியே இத்தலையில் குற்றங்களைப் பொறுக்க வேண்டும்படியான
பந்தம் உடையவன் அன்றோ –

அணி யரங்கனார் –
அந்த ருத்ரன் ஷீராப்தி யளவும் போய் அன்றோ கார்யம் கொண்டது -நீர் அவ்வளவும்
போந்திலீரே என்ன-அதுக்கு உத்தரமாக அவன் -மூ வுலகும் பலி திரிவோன் ஆகையாலே போய்க்
கார்யம் கொள்ள சக்தனானான் -அழும் குழவியாய் இருக்கிற என் போல்வாரை ரஷிக்கைக்கு அன்றோ

பிரஜை கிணற்றிலே விழுந்தால் கூடக் குதிக்கும் தாயைப் போலே இங்கு வந்து சாய்ந்து அருளிற்று
மாதா பிதா ப்ராதா நிவாஸச் சரணம் ஸூஹ்ருத் கதிர் நாராயண -என்கிற பொது வன்று
திரு வரங்கத்துள் ஓங்கும் -இத்யாதிப் படியே பெரிய பெருமாள் தாமே என்கிறார்
அணி அரங்கனார் -அலங்காரமான கோயிலிலே வந்து சாய்ந்தவர்
ஆபரணம் ஆனது பூண்டவனுக்கு நிறம் கொடுக்கிறது -இவ் ஊரும் ரஷகனுக்கு நிறம்
கொடுக்கிறது ஆகையாலே சொல்லுகிறது

அணி அரங்கனார் –
ப்ராப்த விஷயமாய் இருக்கக் கடக்க விராதே சம்சாரத்துக்கு ஆபரணமான
கோயிலிலே வந்து அண்ணியருமாய் இருக்கிற படி-

அரவின் அணை மிசை மேய மாயனார் –
இவ்வளவேயோ உள்ளது –
யத்ர ராம ஸ லஷ்மண-என்றும் –
நாகணை மிசை நம்பிரான் சரணே சரண் நமக்கு -என்றும்
சொல்லுகிறபடியே புருஷகார பலமும் உண்டு என்கிறார்

அரவின் அணை மிசை மேய –
ரத்னங்களை சாடியிலே பதித்துக் காட்டுமா  போலே
தன் அழகு தெரியாதார்க்கு திருவந்தாழ்வான் மேல் சாய்ந்து காட்டின படி
அரவின் அணை மிசை மேய -தான் புருஷகாரமாக சிலரைக் காட்டிக் கொடுத்தால்
அவர்களை அவன் ரஷியாதே விடில் தானும் அவனை எடுத்து உதறிப் போக்கும்

அரவின் அணை மிசை மேய மாயனார் –
ஸ மயா போதிதா ஸ்ரீ மான் ஸூக ஸூப்த பரந்தப
என்கிறபடியே தான் எழுந்து இருந்து ஒரு வ்யாபாரம் பண்ண வேணுமோ

புலி கிடந்த தூறு என்றால் மிருகங்கள் எல்லாம் காடு பாய்ந்து போமா போலே
ஆஸ்ரிதர் உடைய விரோதி வர்க்கம் அடைய தான் கிடக்கிற படியைக் கண்ட போதே
கானோ ஒருங்கிற்று கண்டிலமால் -என்னும்படி கிடக்கிற ஆச்சர்ய பூதன் –
மாயனார் -மின் மினி பறக்கிறபடி

ஸ மயா போதித ஸ்ரீ மான் -எல்லாருக்கும் ஒன்றிலே சாய்ந்தவாறே பொல்லாங்குகள் தெரியும்
இங்கு பழைய வழகுகளும் நிறம் பெறும்

மாயனார் –
அங்கன் அன்றிக்கே கிடந்ததோர் கிடைக்கை கண்டும் -என்கிறபடியே இன்று
நாமும் சென்று அனுபவிக்கப் பார்த்தாலும் -ஒருக்கடித்து என்ன ஒண்ணாதே -மல்லாந்து
என்ன ஒண்ணாதே யிருக்கிற ஆச்சர்யத்தை சொல்லிற்று ஆகவுமாம்

மாயனார் செய்ய வாயையோ என்னை சிந்தை கவர்ந்ததுவே
ஸ்வ நிகர்ஷ அனுசந்தானத்தாலே பிற்காலிக்கிற என்னை -ஸ்வா பாவிக சௌந்தர்யத்தையும்
போக்யதையும் உடைய திருப்பவளமானது தன்னுடைய் ஸ்மிதத்தைக் காட்டி
அருகே சேர்த்துக் கொண்டு என்னுடைய மனஸ்ஸை அபஹரித்தது

என்னை சிந்தை கவர்ந்ததுவே –
உழக்கைக் கொண்டு கடலின் நீரை யளக்கப் புக்கு
அது தன்னையும் பறி  கொடுத்தேன்

என்னை சிந்தை கவர்ந்தது-
துவர்த்த செவ்வாயினார்க்கே துவக்கறத் துரிசனான
என்னைக் கிடீர் இப்படி அகப்படுத்திற்று என்கிறார் –

செய்ய வாய் –
ஸ்திரீகள் உடைய பொய்ச் சிரிப்பிலே துவக்கு உண்டார்க்கு இச் சிரிப்புக்
கண்டால் பொறுக்க ஒண்ணுமோ –

ஐயோ –
திருவதரமும் சிவப்பும் அனுபவிக்க அரிதாய் ஐயோ என்கிறார்

ஐயோ –
அவரும் தம்மை முழுக்க அனுபவிக்கப் பார்த்தார் -நானும் முழுக்க அனுபவிப்பேனாக
பாரித்தேன் -இத்தை திருவதரம் ஒட்டாதே இடையிலே இறாஞ்சிக் கொள்வதே ஐயோ என்கிறார் –

என்னை –
கல்லை நீராக்கி நீரையும் தானே கொண்டது -சித்த அபஹாரத்தைப் பண்ணி ஆத்ம
அபஹாரத்தை அழித்தது –
ப்ரதான சேஷியைக் கண்டவாறே த்வார சேஷி யளவில் நில்லாது இறே

இப் பாட்டில் ஸ்ரீ வைகுண்ட நாதன் படியும் இங்கே காணலாம் என்கிறார்

———————————————————–

ஸ்ரீ வேதாந்த தேசிகர் அருளிய முநி வாஹன போகம் -வியாக்யானம் –

கையினார் சுரி சங்கு அனல் ஆழியர் –
திருக் கைக்கு ஆயுதமாகைக்கும் ஆபரணம் ஆகைக்கும்
போரும் என்னும்படி ஆர்ந்த சந்நிவேசத்தை உடைத்தாய் -அவலம்புரியான வடிவாலே ப்ரணவ் சந்நிவேசமாய்
சப்த ப்ரஹ்ம மயமாய் -நிரதிசய ஆநந்த ஹேதுவான ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தையும் -தாநவ வநதா
வக்னியாய் -மனஸ் தத்வ அபிமானியான திருவாழி யாழ்வானையும் உடையராய் –

இத்தால் -மந்தரத்தையும் மனசையும் அநுகூல  சிந்தைக்கு அனுகுணம் ஆக்கவில்ல
உப கரணங்களை உடையவர் என்றது ஆய்த்து –

திவ்யாயுத ஆழ்வார்கள் பெரிய பெருமாள் உடைய திருக் கைகளில் ரேகையில் ஒதுங்கிக் கிடந்தது –
பெருமாள் திரு மேனியிலே தோன்றி நிற்பர்கள்

நீள் வரை போல் மெய்யனார் –
ஸ்வரூபம் போலே ஸூஷ்ம த்ருஷ்டிகள் காணும் அளவன்றிக்கே
மாம்ச சஷூஸ்ஸூக்களும் காணலாம் படி மலை இலக்கான திருமேனியை வுடையவர்

துளப விரையார் கமழ் நீண் முடி எம் ஐயனார் –
சர்வாதிகத்வ ஸூசகமான திருத் துளாயின் பரிமளத்தைப் பரி பூர்ணம் ஆக்கும்படி
கமழ்ந்து -விபூதி த்வய சாம்ராஜ்ய வ்யஞ்சகமான திவ்ய கிரீடத்தை வுடைய சர்வ லோக பிதாவானவர்

அணி அரங்கனார் –
பரம வ்யோம ஷீரார்ண வாதிகளைக் காட்டில் குணா திசயத்தாலே
ஆஸ்ரீதற்கு ஹ்ருத்ய தமமான படியாலே விபூதி இரண்டுக்கும் ஏக ஆபரணம் என்னலாய்
சௌலப்ய அதிசயம் உண்டாம் படியான ஸ்ரீ ரெங்க விமாநத்தை சயன ஸ்தானமாக உடையவர்
அணிமையாலே அணி அரங்கனார் -என்கிறது ஆகவுமாம்

அரவின் அணை மிசை மேய மாயனார் –
தம்முடைய ஜ்ஞான பலங்கள் வடிவு கொண்டால் போல
இருக்கிற திருவனந்தாழ்வான் ஆகிற ஆநுகூலதிவ்ய பர்யங்கத்தின் மேலே அளவறத்
தேங்கின அம்ருத தடாகம் போலே ஆஸ்ரீதர்கு அனுபவிக்கலாய் –
சிந்தாமணி வோத்வாந்த முத்சங்ககேஸ் அநந்த போகிந -என்னும்படி அத்ய ஆச்சர்ய பூதரானவருடைய
வாலியதோர் கனி கொல் -என்னலாம் படி வர்ண மாதர் யாதிகளை வுடைத்தாய்
வையம் ஏழும் உள்ளே காணலாம் படியான செய்ய வாய் என் சிந்தையைப் பறித்துக் கொண்டது

ஐயோ என்று ஆச்சர்யத்தை யாதல்
அனுபவித்து ஆற்ற அரிதான படியை யாதல்
அநுபவ ரசத்தை யாதல் -காட்டுகிறது

————————————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேதாந்த தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருப்பாண் ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ அமலனாதி பிரான் –ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளைஅருளிய-ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார்அருளிய–ஸ்ரீ வேதாந்த தேசிகர்அருளிய முநி வாஹன போகம் -வியாக்யானம் -துண்ட வெண் பிறையன் துயர் தீர்த்தவன் அஞ்சிறைய –

May 22, 2013

ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை அருளிய-அவதாரிகை-

சர்வ லோகத்தையும் அமுது செய்து அருளின கண்டத்தின் அழகு என்னை
உண்டாக்கிற்று -என்கிறார் –
திரு மார்பின் அழகு திருக் கழுத்திலே ஏறிட்டது -என்னவுமாம்

——-

ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் அருளிய–அவதாரிகை-

சர்வ லோகத்தையும் அமுது செய்து அருளின கண்டத்தின் அழகு என்னை
உண்டாக்கிற்று -என்கிறார் –
திரு மார்பின் அழகு திருக் கழுத்திலே ஏறிட்டது -என்னவுமாம்-

கீழ்ப் பாட்டில் திரு மார்பானது ஹராத்ய ஆபரண சோபையையும் –
பெரிய பிராட்டியாருக்கு கோயில் கட்டணமாய் இருக்கிற மேன்மையையும் காட்டி
தம்மை திரு வயிற்றின் நின்றும் வர வீரத்துக் கொண்டு எழுதிக் கொண்ட படி யிறே சொல்லிற்று –

இதில் -அந்த திரு மார்புக்கு மேலாய் –
ரமயது ஸ மாம் கண்ட ஸ்ரீ ரங்க நே துரு தஞ்சி தக்ரமுக தருண க்ரீவாகம் புப்ர லம்பமலிம்லுச
ப்ரணய விலகல்  லஷ்மீ விச்வம் பராகர கந்தளீ கநக வலய க்ரீடா சங்கராந்த ரேக இவோல்ல சன் –
என்கிறபடியே கமுகுக் கன்றின் கழுத்துப் போலே பசுகு பசுகு என்று இருப்பதாய் -ரேகாத்ரயாங்கிதமாய் –
இரண்டருகும் நெருங்கி நடுவு பெருத்து இருக்கையாலும் -ஸ்ரீ பாஞ்ச ஜன்யம் போலே இருக்கிற திருக் கழுத்தானது-

இந்த திரு மார்புக்கு உள்ளது -அலர்மேல் மங்கை யுறை மார்பா -என்கிறபடியே
பெரிய பிராட்டியாருக்கு கோயில் கட்டணமாய் இருக்கிற -ஆகாரமும்
திருவாரத்தாலே அலங்க்ருதமான ஆகாரமுமே யன்றோ –

இவளைப் போலே -சங்கு தங்கு முன்கை நங்கையாய் இருப்பார் அநேகம் நய்ச்சிமார்
ஸாபரணமான தங்கள் கைகளால் அணைக்கை யாலே -அவ் வாபரணங்கள் அழுத்த
அவற்றாலே முத்ரிதராய் இருப்போமும் நாம் அல்லோமோ –
பிரளய ஆபத்து வர சகல அண்டங்களையும் தத் அந்தர்வர்த்திகளையும் ரஷித்தோமும்
நாம் அல்லோமோ -அதுவும் கிடக்க பாண்டவர்கள் தூது விடுகிற போது கட்டிவிட்ட
மடக்கோலை இன்றும் நம் பக்கலிலே அன்றோ கிடக்கிறது –
அந்த ஹாரம் தனக்கும் தாரகம் நாம் அல்லோமோ –
என்றாப் போலே தன்னுடைய ஆபரண சோபையையும் -யௌவனத்தையும் -ஆபன் நிவாரகத்வத்தையும்
காட்டி என்னை சம்சாரம் ஆகிற பிரளயத்தின் நின்றும் எடுத்து உஜ்ஜீவிப்பித்தது என்கிறார் –

—————

ஸ்ரீ வேதாந்த தேசிகர் அருளிய முநி வாஹன போகம் -அவதாரிகை –

கீழ்ப் பாட்டில் கைங்கர்ய அர்த்தியான தம்முடைய கைங்கர்ய விரோதிகளான
நிருபாதிக ஸ்வாமித்வ அபிமான மூலங்களை எல்லாம் நிராகரித்த படியை
அருளிச் செய்தார் –

இப் பாட்டில் ஐஸ்வர்யார்த்திகளாருடைய ஐஸ்வர்ய விரோதியான
பிஷூ தசையை கழிக்கும் படியை உதாஹரிக்கிறார்-

—————–

துண்ட வெண் பிறையன் துயர் தீர்த்தவன் அஞ்சிறைய
வண்டு வாழ் பொழில் சூழ் அரங்க நகர் மேய வப்பன்
அண்ட ரண்ட பகிரண்டத் தொரு மாநிலம் எழுமால் வரை முற்றும்
உண்ட கண்டம் கண்டீர் அடியேனை யுய்யக் கொண்டதே —-6–

பதவுரை

துண்டம்–ஒரு துண்டாயிருக்கிற (கலா மாத்ரமான)
வெண் பிறையன்–வெளுத்த சந்திரனை (முடியிலே) உடையனான சிவனுடைய
துயர்-(பிச்சை யெடுத்துத் திரிந்த) பாதகத்தை
தீர்த்தவன்–போக்கினவனும்
அம் சிறைய வண்டு–அழகிய சிறகை யுடைய வண்டுகள்
வாழ்–வாழ்தற்கிடமான
பொழில் சூழ்–சோலைகள் சூழப் பெற்ற
அரங்கம் நகர்-திருவரங்கப் பெரு நகரிலே
மேய-பொருந்தி யிரா நின்ற
அப்பன்-ஸ்வாமியுமான ஸ்ரீரங்கநாதனுடைய
அண்டர்-அண்டத்துக்குட்பட்ட தேவாதி வர்க்கங்களையும்
அண்டம்–அண்டங்களையும்
பகிரண்டம்-அண்டாவரணங்களையும்
ஒரு மா நிலம்-ஒப்பற்ற மஹா ப்ருதிவியையும்
எழு மால் வரை-ஏழு குல பர்வதங்களையும்
முற்றும்-சொல்லிச் சொல்லாத மற்றெல்லாவற்றையும்
உண்ட-அமுது செய்த
கண்டம் கண்டீர்-திருக் கழுத்துக் கிடீர்
அடியேனை-தாஸனான என்னை
உய்யக் கொண்டது-உஜ்ஜீவிப்பித்தது

—————————————————-

ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை அருளிய-வியாக்யானம் –

துண்டம் -இத்யாதி
கலா மாத்ரமாய் வெளுத்து இருந்துள்ள பிறையை -ஜடையிலே உடையனான –
ருத்ரன் தனக்கு பிதாவுமாய் லோக குருவுமாய் இருந்துள்ள ப்ரஹ்மா உடைய
தலையை அறுக்கையால் வந்த பாபத்தை போக்கினவன் –
சுமையராய் இருப்பார் சும்மாட்டுக்கு உள்ளே தாழை மடலை செருகுமா போலே
சாதகனாய் இருக்கச் செய்தே -ஸூக ப்ரதானாக அபிமானித்து இருக்குமாய்த்து –
ஆனாலும் ஆபத்து வந்தால் அவன் அல்லது புகல் இல்லையே –

சந்த்ரனுடைய ஷயத்தைப் போக்கினான் என்றுமாம்
அவனுடைய் துரிதத்தைப் போக்கினாப் போலே தம்முடைய துரிதத்தையும் போக்கும் என்று கருத்து-

அஞ்சிறைய வண்டு வாழ் பொழில் சூழ் அரங்க நகர் மேய வப்பன்-
லோகத்தில் பிரதாநர் ஆனவர்கள் ப்ரஹ்ம ஹத்தியைப் பண்ணி அலைந்து கொடு கிடக்கப்
புக்கவாறே -தான் கடக்க நிற்க ஒண்ணாது என்று -இவர்களுடைய ரஷண அர்த்தமாக
கிட்ட வந்து கண் வளர்ந்து அருளுகிற உபகாரகன் –

அழகிய சிறகை உடைத்தான வண்டுகள் வாழா நின்ற சோலை சூழ்ந்த பெரிய கோயிலிலே
கண் வளர்ந்து அருளுகிற பிதாவானவன்

வண்டு வாழ் பொழில் –
வண்டுகள் அவன் பக்கல் செல்லாது –
திருச் சோலையின் போக்யதையிலே இள மணல் பாய்ந்து கால் வாங்க மாட்டாதே நிற்கும் –
அவ் வண்டுகளைப் போலே தம்மை அனுபவித்து விடாய் கெடுத்தான் -என்கிறார் –

அண்ட ரண்டம் இத்யாதி –
அண்டாந்தர வர்த்திகள் உடைய அண்டம் –
பகிரண்டம் -புற வண்டம்
அத்விதீயமான மஹா ப்ருதிவி
பூமிக்கு ஆணி யடித்தால் போலே இருக்கிற ஏழு வகைப்பட்ட குல கிரிகள்
ஓன்று ஒழியாமே ஆடிக் காற்றில் பூளை போலே பறந்து திரு வயிற்றிலே புகும்படி
யுண்ட கழுத்து கிடீர்

இவற்றைத் தனித் தனியே சொல்லுவான் என் என்னில்
தனியே சொல்லுகை போக்யமாய் இருக்கையாலே
பெரிய பெருமாள் திருக் கழுத்தைக் கண்டால் பிரளய ஆபத்தில் ஜகத்தை எடுத்துத்
திரு வயிற்றிலே வைத்தமை தோற்றா நின்றது ஆய்த்து –

அடியேனை உய்யக் கொண்டதே
முன்பு பெற்ற கைங்கர்யத்துக்கு விச்சேதம் பிறவாதபடி நோக்கிற்று
என்னை சம்சாரத்தில் ஒரு நாளும் அகப்படாதபடி பண்ணிற்று –

இப் பாட்டால்
ஆபத் ஸகனான சர்வேஸ்வரன் படியும் இங்கே உண்டு என்கிறார் –

———————————————————

ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் அருளிய–வியாக்யானம் –

துண்ட வெண் பிறையன்றுயர் தீர்த்தவன் –
கீழ்ப் பாட்டிலே என்னுடைய அஜ்ஞானத்தாலே -என்னாலும்  பிறராலும் பரிஹரிக்க
ஒண்ணாதபடி -அநாதி காலார்ஜிதமாய் -அவசியம் அனுபோக்ய தவ்யமாய் -பிடரியைப்
பிடித்து கொடு நிற்கிற துஷ் கர்மங்களை பெரிய பிராட்டியார் புருஷகாரமாக –
தத் ஷணா தேவ நச்யதி -என்கிறபடியே பெரிய பெருமாள் நசிப்பித்தார் என்று இறே சொல்லிற்று –

இத்தைக் கேட்டவர்கள் -பாரமாய பழ வினை யடைய அவள் புருஷகாரமாக போக்கினார்
என்னும் -இடம் ஆச்சர்யமாய் இருந்ததீ -இது உபபன்னம் என்று நாங்கள் அறியும் படி என் என்ன –

என்னைப் போலே தன்னுடைய அஜ்ஞ்ஞானத்தாலே ஈஸ்வர அபிமானியான ருத்ரன் ஆனவன்
லோக குருவுமாய் தனக்குப் பிதாவுமான ப்ரஹ்மா வினுடைய சிரஸை நகத்தாலே அறுத்து
இப்படி தன்னாலும் பிறராலும் பரிஹரிக்க ஒண்ணாத படியான துயரை சம்பாதித்து
அது போகைக்காக ஷீராப்தி நாதன் பாடேற வர -அவ்விடத்தே தானும் பெரிய ப்ராட்டியாருமாய் தோன்றி
ஸ்ரீமான் மயா  பிஷாம் ப்ரயாசித -என்கிறபடியே அபேஷ அநு குணமாக அவள் புருஷகாரமாக
அவனுடைய பிரமஹத்தையால் வந்த துயரைத் தீர்த்தாப் போலே -ஸ கலு ப்ரஹ்மஹா பவேத்
என்கிற என்னுடைய ப்ரஹ்மஹத்தையையும் போக்கினான் -என்கிறார்

இந்தச் சேவகன் -மஹா பாதகாதி பாபங்களைப் பண்ணி மஹா ரௌரவாதி நரகங்களிலே
யம படர் கையிளைத்து விடுமளவும் அசித் கல்பனாய் கிடந்தது அனுபவித்து -அவர்கள் விட்டடித்தவாறே
முற்பட -ஸ்தாவர க்ரிமயோப் ஜாச்ச பஷிணச்ச ஸரீஸ்ருபா -என்கிறபடியே முற்பட
ஸ்தாவராதி யோநிகளிலே பிறந்து -மாநுஷ்யம் ப்ராப்ய லோகேஸ்மின் ந மூகோ பதிரோபி வா –
நா பக்ராமதி சம்சாராத் ஸ கலு ப்ரஹ் மஹா பவேத் -என்கிறபடியே மநுஷ்ய ஜன்மத்திலே
பிறக்கவும் பெற்று -ஸ்ரோத்ராதி கரணங்களும் விதேயமாகப் பெற்று வைத்து -இவற்றைக் கொண்டு
ஈஸ்வரனைப் பற்றி திரு நாம சங்கீர்த்தன முகத்தாலே இந்த சம்சாரத்தை கடவானாகில்
அவனை ப்ரஹ்ம -என்றது இறே -புழு நெருடுகிறவனுக்கும் -ப்ராஹ்மண சரீரத்தை
வதிக்கிறவனுக்கும் ஹிம்சை ஒத்து இருக்கச் செய்தே ப்ரஹ்மண வதம் ப்ரஹ்மஹத்யை
என்கிறது –
அவனுடைய ஜன்ம வ்ருத்த ஜ்ஞானங்களால் வந்த க்ரௌரவம் பற்ற விறே –
அப்படியே யஸ்யாத்மா சரீரம் -என்கிறபடியே பகவத் சரீர பூதமான ஆத்மாவை அபஹரித்து
நாராயணத்வத்தை ஒருவாய்ப் போக்குகிறவனை ப்ரஹ்ம என்னத் தட்டில்லை இறே-

துண்ட வெண் பிறையன் துயர் தீர்த்தவன் –
சலம் கலந்த செஞ்சடைக் கறுத்த கண்டன் வாச நீர் கொடுத்தவன் -என்கிறபடியே
தீர்த்த சேவையாலும் -தன் தபசாலும் -தன் சக்தி மத்தையாலும் போக்க ஒண்ணாத வலிய துயரை
பிராட்டி புருஷாகாரமாக தன் மார்பில் வாச நீரால் போக்கினது -தம்முடைய துயரை போக்கினதுக்கு
நிதர்சநமாய் இருக்கையாலே அவனை உதாஹரணம் ஆக்குகிறார் –

தாழை மடலை சூடி
வருவாரைப் போலே ஒரு கலா மாத்ரமான வெளுத்த சந்த்ரனை சடையிலே வுடையனான
ருத்ரன் உடைய பாபத்தைப் போக்கினவன் -கலா மாத்ரமான சந்த்ரனை ஜடையிலே சூடி
வந்தான் ஆகில் இப்படி ஆபன்னனாய் வருகிற விடத்திலும் அலங்காரத்தோடே த்ருப்தனாய் வந்தான் என்கை –

வெண்மையாலே சிவந்த ஜடைக்கு பரபாகமாய் இருக்கிறபடி –
சுமையரராய் இருப்பவர் சும்மாட்டுக்குள் தாழை மடல் சொருகுமா போலே சாதகனாய் இருக்கச் செய்தே
ஸூக பிரதானாய் அபிமாநிதது இருக்குமாய்த்து -ஆனாலும் ஆபத்து வந்தால் அவன் அல்லது புகல்
இல்லை யிறே -இத்தால் ஒரு தேவதையை ஆபரணமாக உடையவன் ஆகையாலே வந்த மதிப்பும்
போக ப்ரதானன் என்னும் இடமும் முமுஷு வல்லன் என்னும் இடமும் சொல்லுகிறது —

வெண் பிறையன் துயர் –
தனக்கு தக்க வாதம் இறே
லோகத்துக்கு சங்கரனாய் இருக்கிறவனுக்கு வந்த துக்கம் இறே
இவன் தன்னுடைய கர்வத்தாலே ப்ரஹ்ம ஸிர க்ருந்தநம் பண்ணின வனந்தரம்
இவன் புத்ரத்வம் குலைந்தாலும் தான் பிதாவான படியாலே இவனை அழியாதே செருக்கு
வாட்டுகைக்காக –
கபாலீ த்வம் பவிஷ்யசி என்று ப்ரஹ்மா சபிக்க -இவன் கையிலே -முடை யடர்த்த
சிரம் ஏந்தி மூவுலகும் பலி திரிவோன் -என்கிறபடியே -கபாலத்தைக் கொண்டு பலி புக்கான
ஜெயந்தனைப் போலே த்ரீன் லோகான் சம்பரிக்ரம்ய -பண்ணிக் கொண்டு திருப் பாற் கடலிலே
சென்ற அளவிலே -இடர் கெடுத்த திருவாளன் -என்கிறபடியே -பிராட்டியும் தானுமாய் வந்து
துயரைத் தீர்த்தான் இறே –

ஸ பித்ரா ச பரித்யக்த ஸ ஸூரைச்ச ஸ மஹர் ஷிபி
த்ரீன் லோகன் சம்பரிக்ரம்ய தமேவ சரணம் கத
ஸ -பெருமாள் திரு உள்ளத்திலே தீரக் கழிய அபராதத்தைப் பண்ண -அவர் குபிதராய்
ப்ரஹ்மாஸ்த்ரத்தை விட -அது பின் தொடர்ந்து கொடு திரிய -ஆவாரார் துணை -என்கிறபடியே
ரஷக அபேஷை உடைய காகமானது
பித்ரா ச பரித்யக்த-பெற்றவர்களுக்கு பரமன்றோ ரஷிக்கை-என்று பார்த்து இந்த்ரன் பாடே சென்றான் –

இந்த்ரோ மகேந்த்ரஸ் ஸூர நாயகோ வா த்ராதும் ந சக்தா யுதி ராமவத்யம் -என்கிறபடியே
எட்டுக் கதிரும் விட்டு எரிகிற பெரிய மதிப்பும் தானும் ஆனாலும் ராவத்யனை ரஷிக்கை
அரிதாகையாலே பூதாநாம் யோவ்யய பிதா -என்கிறபடியே -நிருபாதிகன்- தாய்க்கும் தகப்பனுக்கும் ஆகாதே
சர்வ பூத ஸூஹ்ருதான அவர் அளவிலே பிரதிகூல்யம் பண்ணி அவர்க்கு அவத்யன் ஆனவன் அன்றோ –

இவன் இங்கு புகுருகை யாவது என் -சேந்த்ராய -எண்ணிலோ என்று பயப்பட்டு
புத்ர மித்ர களத்ரங்களோடே எல்லோரும் காண நாற் சந்தியிலே குட நீர் வழித்து விட்டான் –

ஸூ ரைச்ச-
மாதா பிதாக்கள் கை விட்ட வளவிலும் இவர்களுக்குஉபாத்யர்த்தமாக
பந்து வர்க்கமான தேவதைகள் கொடு போய் சீராட்டக் கண்டு போருமே
அந்த வாசனையாலே அவர்கள் பாடே சென்றான் -கஸ்ய பிப்யதி தேவாச்ச ஜாத ரோஷச்ய சம்யுகே –
என்கிறபடியே அபராதம் அதுவாகையாலும் -பெருமாளுக்கு அஞ்சுகையாலும் -மாதா பிதாக்கள்
நேராக கை விட்டார்கள் என்று அறிகையாலும் அவர்களும் தள்ளிக் கதவடைத்தார்கள்

ச மஹர்ஷிபி –
இந்த்ரன் கை விட்ட த்ரிசங்குவையும் அகப்படத் தங்கள் தபஸை அழிய
மாறி ரஷித்து -ஆன்ரு சம்ச்ய பிரதாநராய் இருக்கும் ருஷிகள் பாடே சென்றான் -அவர்களும்
சத்ய ஹிம்சையிலே பண்ணுவதோர் ஆன்ரு சம்சயம் உண்டோ என்று கை விட்டார்கள்-

த்ரீன் லோகன் சம்பரிக்ரம்ய-
தமப்பனுக்கு செல்லும் தேசம் ஆகையாலே ஆரேனும் ஒருத்தர் ஒரு காலாகிலும் புத்தி பேதம் பிறந்து
பரிக்ரஹிக்கக் கூடுமோ என்று த்ரைலோக்யத்திலும் தச்சன் கட்டின வாசல்கள் தோறும்
ஒருகால் புக்கப் போலே ஒன்பதின் கால் புகுந்து திரிந்தான் -அங்கு ரஷகர் ஆவாரைப் பெற்றிலன் –

தமேவ சரணம் கத-
கோபித்தாரே யாகிலும் நாராயணத்வ ப்ரயுக்தமான குடல் தொடக்கு உண்டாகையாலே
அவர்கள் முகத்தில் காட்டில் அம்பு விட்டவர் முகமே குளிர்ந்து இருக்கையாலும்
சக்ருதேவ பிரபன்னாய -ஏதத் வ்ரதம் மம -என்று அருளிச் செய்து வைக்கையாலும்
அந்த சீறின பெருமாளே அமையும் என்று அவரையே தனக்கு உபாயமாகப் பற்றினான் –

சர்வ பூதேப்ய –
என்கிறவிடத்தில் -சர்வ சப்தம் அசங்குசித உக்தி யாகையாலே
பிறரால் வரும் பயத்தையும் -தன்னால் வரும் பயத்தையும் ரஷகனான என்னால் வரும்
பயத்தையும் போக்கி ரஷிக்க கடவேன் என்றபடி-இப்படி இக்காகம் பட்டது பட்டு
த்ரீன் லோகன் சம்பரிக்ரம்ய -பண்ணித் திரிந்தான் இறே-

லோகத்துக்காக சம்ஹர்த்தாவாய் பெரிய மதிப்போடே கும்பீடு கொண்டு திரிந்து
ததாதர்சித பந்தாவாய்க் கொண்டு தன் புத்யா ஒருவனை சம்ஹரிக்கப் புக்குப் பட்டபாடு இறே இது-

தத்ர நாராயணஸ ஸ்ரீ மான் மயா பிஷாம் ப்ரயாசித
விஷ்ணு பிரசாதாத் ஸூ ஸ்ரோணி கபாலம் தத் சஹஸ்ரதா
ஸ்புடிதம் பஹூதா யாதம் ஸ்வப்ந லப்த தனம் யதா –என்று துர்மாநியான தானே
தன் அபிமத விஷயத்தைப் பார்த்து சொல்லும்படி யிறே அவனுடைய துயரைப் போக்கின படி

தத்ர –
அந்த பரம பதத்திலே -நாராயண -அபராதம் பாராமல் ரஷிக்கைக்கு அடியான பந்த
விசேஷத்தைச் சொல்லுகிறது –

ஸ்ரீ மான் –
அந்த பந்த விசேஷம் கிடக்கச் செய்தேயும் – ஷிபாமி -என்றால் பொறுப்பிக்கும் அவள் –

மயா பிஷாம் ப்ரயாசித –
நாட்டை யடைய கும்பீடு கொண்டு அபேஷித பல ப்ரதனை நான் இரந்தேன் –

விஷ்ணு பிரசாதாத் –
அக வாயில் இருந்து என் அலமாப்பை அடைய அனுசந்திதுக் கொண்டு போருகிறவனுடைய பிரசாதம் அடியாக

ஸூஸ்ரோணி-
உன்னுடைய சௌபாக்ய விசேஷம் இறே –

தத் கபாலம் –
ஒரு காலும் நிரம்பாதே விடாதே கிடந்தது –

சஹஸ்ரதா –
காண ஒண்ணாத படி யாய்த்து காண் -விரோதி போக்கும் இடத்தில்
புகுந்து போய்த்து என்று தெரியாதபடி வாசனையோடே போக்கும் இடத்துக்கு நிதர்சனம் இறே-

துண்ட வெண் பிறையன் துயர் தீர்த்தவன் -சந்த்ரனுடைய ஷயத்தைப் போக்கினான் என்றுமாம் –
அவனுடைய துயரத்தைப் போக்கினாப் போலே என்னுடைய துரிதத்தையும் போக்கும் என்று கருத்து-

அஞ்சிறைய -இத்யாதி -லோகத்திலே பிரதாநர் ஆனவர்கள் ப்ரஹ்மஹத்யை பண்ணி அலைந்து
கொடு கிடக்கப் புக்கவாறே -நாம் கிடக்க ஒண்ணாது -என்று அவர்களுடைய ரஷண அர்த்தமாக
கிட்ட வந்து கண்  வளர்ந்து அருளுகிற உபகாரகன் -அழகிய சிறகை உடைத்தான வண்டு வாழா
நின்றுள்ள சோலை சூழ்ந்த பெரிய கோயிலிலே கண் வளர்ந்து அருளுகிற பிதாவானவன் –

அந்த ருத்ரன் -அலங்கல் மார்பில் வாச நீர் பெற்றுக் களித்தாப் போலே யாய்த்து இந்த வண்டுகளும்
அந்த சோலையிலே மது பானம் பண்ணினத்தால் பிறந்த ஹர்ஷம் சிறகிலே தொடை
கொள்ளலாம் படி களித்து வாழுகிறபடி-

வண்டு வாழ் பொழில் –
வண்டுகள் அவன் பக்கல் செல்லாது –
திருச் சோலையின் போக்யதையிலே இள மணல் பாய்ந்து கால் வாங்க மாட்டாதே நிற்கும் –
அவ் வண்டுகளைப் போலே தம்மை அனுபவித்து விடாய் கெடுத்தான் -என்கிறார் –

அங்கன் அன்றிக்கே -உபாப்யாமேவ பஷாப்யா மாகாஸே பஷிணாம் கதி -ததைவ
ஜ்ஞான கர்மப்யாம் ப்ராப்யதே புருஷோத்தம -என்கிறபடியே –
வண்டுகளோ வம்மின் -என்கிற முமுஷுக்களான சாத்விகர் சமயக் ஜ்ஞான
சத் கர்மங்கள் ஆகிற மோஷ பரிகரங்களைக் கொண்டு வாழுகிற படியை சொல்லிற்று ஆகவுமாம்-

பெரிய பெருமாளுக்கு ஆபரணமாய் ஊருக்கும் ஆபரணமாய் இருக்கும் சோலை
சோலைக்கு ஆபரணமாய் இருக்கும் வண்டுகள் –
வண்டுகளுக்கு ஆபரணமாய் இருக்கும் அழகிய சிறகு -என்கை

ருத்ரனானவன் வந்து அபேஷிக்க அவன் ஒருவனுக்கு உதவின படியை சொல்லிற்று -கீழ்
அபேஷா நிரபேஷமாக அநேக ஜனத்தினுடைய ஆபத்தைப் போக்கிற்று அன்றோ திருக் கழுத்து என்கிறார் மேல் –

அண்ட ரண்டம் –
அண்டாந்தர வர்த்திகளான சேதனரை உடைத்தான இந்த அண்டம்
பகிர் அண்டத்து -பஹி உண்டான அண்டங்கள்
ஈத்ரு சங்களான பறம்பில் உண்டான அண்டங்கள்
ஒரு மாநிலம் -ஈத்ரு சமான அண்டங்களை தரித்து கொண்டு இருக்கையாலே
அத்விதீயமான மஹா ப்ருதிவி
எழு மால் வரை -இவ் வண்டங்களையும் பூமியும் பாதாளத்தில் விழாதபடி சங்கு ஸ்தாபனம்
பண்ணினாப் போலே இந்த பூமியை ஊடுவிக்கிற குல பர்வதங்கள் ஏழும்-

முற்றும் உண்ட கண்டம் கண்டீர் –
இவற்றைத் தனித் தனியே சொல்லுவான் என் என்னில்
தனித் தனியே சொல்லுகை தான் போக்யமாய் இருக்கையாலே -பெரிய பெருமாள்
திருக் கழுத்தைக் கண்டவாறே ஜகத்தை எடுத்துத் திரு வயிற்றிலே வைத்தமை
தோன்றா நின்றதாய்த்து

உண்ட கண்டம் –
விடு காது தோடிட்டு வளர்ந்தது என்று தெரியுமா போலே

முற்றும்  உண்ட கண்டம் –
பஹிர் அண்டாந்த வர்த்தி சேதனரும் பாதாளாதிகளும்
உண்ட கண்டம் –
சேஷ பூதனுக்கு கைங்கர்யம் தாரகமாய் இருக்குமா போலே
இவற்றின் உடைய ரஷணம் தனக்கு தாரகமாய் இருக்கிறபடி

அத்தா சராசர க்ரஹணாத் –
யஸ்ய ப்ரஹ்ம ச ஷத்ரஞ்ச உபே பவத ஓதந -என்னக் கடவது இறே
அடியேனை உய்யக் கொண்ட — பிறப்பித்து -சம்சார ஆர்ணவத்தின் நின்றும் எடுத்து அக்கரை ஏற்றி
சந்த மேகம் என்னும்படி பண்ணிற்று இப்படிப் பட்ட திருக் கழுத்து அன்றோ

இப் பாட்டில்
ஆபத் சகனான சர்வேஸ்வரன் படியும் இங்கே உண்டு என்கிறார்

———————————————

ஸ்ரீ வேதாந்த தேசிகர் அருளிய முநி வாஹன போகம் -வியாக்யானம் –

துண்ட வெண் பிறையன் துயர் தீர்த்தவன் –
ஈஸ்வரன் என்று பேரைச் சுமந்த தனக்கும் பூரணத்வம் இல்லை என்கைக்கு ஜ்ஞாபகம் போலே
சகல மாத்ரமாய்க் கொண்டு பிரகாசிக்கிற சந்திர கலையை தரிக்கிற ருத்ரன் ப்ரஹ்மாவினுடைய புத்ரனாய் வைத்து –
பிதாவின் திறத்திலே அபராதம் பண்ணி -அத்தாலே மஹா பாதகா க்ராந்தனாய் –
இப் பாதகத்தை தீர்க்க வல்லார் ஆர் -என்று கரகலித கபாலனாய்க்
கொண்டு திரிந்து -ஓர் அளவிலே கெடு மரக்கலம் கரை சேர்ந்தாப் போலே காருணிகனான
சர்வேஸ்வரனை வந்து கண்டு -என்னெந்தாய் சாபம் தீர் -என்ன-இவனுடைய சாபத்தைத் தீர்க்க -வல்லவன் –

இத்தால் ஈஸ்வரன் என்று பேருடைய ருத்ரன் கர்ம வஸ்யன் என்னும் இடமும்
தன்னைத் தான் ரஷித்துக் கொள்ள மாட்டாத இவன் வேறு ஒருத்தருக்கு நிரபேஷை
ரஷகனாக மாட்டான் என்னும்  இடமும் சர்வேஸ்வரனே சர்வ அநிஷ்ட நிவர்த்தகன் என்னும்
இடமும் சொல்லிற்று ஆயிற்று-

அஞ்சிறைய வண்டு வாழ் பொழில் சூழ் அரங்க நகர் மேய வப்பன் –
ஆர்த்தி வுடையார் அபேஷித்தால் அவர்களுக்கு தூத க்ருத்யம் பண்ணுகைக்கும்
மாசில் மலரடிக் கீழ் அவர்களை சேர்க்கைக்கும் ஹேதுவான கதிக்கு சாதனங்களாய் –
அபி ரூபங்களான சிறகுகளை உடைத்தான வண்டுகள்
அபிமத போகத்தோடே வாழுகிற திவ்ய உத்யானங்களாலே சூழப்பட்ட ஸ்ரீ ரெங்க நகரத்திலே
நித்ய வாஸம் பண்ணுகிற சேவை லோக பிதாவானவன் –

இத்தால்-காரண பூதனாய் -கரண களேபரங்களை கொடுத்து உபகரித்தவன் கண்ணுக்கு
இலக்காய் வந்து கண் வளர்ந்து -கரணங்கள் பட்டி புகுராதபடி காக்கிற உபகார
அதிசயத்தை உதாஹரிக்கிறது -ஆகிறது –

ந ராஜ் ஜாதாநி தத்வான் -இத்யாதிகளின் அர்த்தமும்-இங்கே அனுசந்தேயம்

காரண அவஸ்தையில் எல்லாக் கார்யங்களையும் தன் பக்கலிலே உப சம்ஹரித்து
பின்பு ஸ்ருஷ்டிக்கும் படிக்கு உதாஹரணமாக -வெற்றிப் போர்க் கடலைரையன் விழுங்காமல்
தான் விழுங்கி உய்யக் கொண்ட உபகாரத்தைக் காட்டி -நெற்றி மேல் கண்ணானும் நான் முகனும் –
முதலாக -எம்பெருமான் உண்டு உமிழ்ந்த எச்சில் தேவர் அல்லாதார் தாமுளரே -என்னும்
அர்த்தத்தை பேசிக் கொண்டு தம்மை இப்போது சம்சார ஆர்ணவம் விழுங்காதபடி
உய்யக் கொண்ட படியை உபாலாளிக்கிறார்-

அண்ட ரண்ட பகிரண்டத் தொரு மாநிலம் எழுமால் வரை முற்றும்
உண்ட கண்டம் கண்டீர் அடியேனை யுய்யக் கொண்டதே-
அண்டாந்த வர்த்திகளான தேவாதி வர்க்கங்களையும் -அண்டங்கள் தன்னையும் –
அண்ட ஆவரணங்களையும் -அண்டங்களுக்கு உள்ளே பஞ்ச சத கோடி விஸ்தீரணையான
மஹா ப்ருதிவியாலும் குல பர்வதங்களாலும் உப லஷிதங்களான சர்வ கார்யங்களையும்
எல்லாம் திரு வயிற்றிலே வைத்து ரஷிக்கைக்காக விழுங்கின திருக் கழுத்து கண்டீர் –

ஸ்வரூபத்தை -உணர்த்தி என்னை ஸ்வ அனுபவத்தில் உஜ்ஜீவிப்பித்தது –
அண்டாதிகளைப் பற்ற சிறியலான குல பர்வதங்களை பிறியப் பேசுகையாலே
அவ்வளவு விழுங்குகையும் ஆச்சர்யம் என்று தோன்றுகிறது

———————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேதாந்த தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருப்பாண் ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ அமலனாதி பிரான் –ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை அருளிய-ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் அருளிய–ஸ்ரீ வேதாந்த தேசிகர் அருளிய முநி வாஹன போகம் -வியாக்யானம் -பாரமாய பழ வினை பற்றறுத்து என்னைத்தன் –

May 20, 2013

ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை அருளிய–அவதாரிகை-
எனக்கு பற்றாசான பெரிய பிராட்டியார் இருக்கிற திரு மார்பு கிடீர் என்னை
ஸ்வரூப அநுரூபமான கைங்கர்யம் கொண்டது என்கிறார் –

————

ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் அருளிய–அவதாரிகை-

எனக்கு பற்றாசான பெரிய பிராட்டியார் உடனே -திருவார மார்பானது என்னை ஸ்வரூப அநுரூபமான
கைங்கர்யத்தைக் கொண்டது என்கிறார் –

மூன்றாம் பாட்டிலே திரு நாபீ கமலம் ப்ரஹ்மாவை
தரித்துக் கொண்டு இருக்கிற தன் மதிப்பையும் அழகையும் காட்டி -தம்முடைய திரு உள்ளத்தை
திருப் பீதாம்பரத்தின் நின்றும் தன் பக்கலிலே இழுத்துக் கொள்ள -அங்கே  அது சுழி யாறு
பட்ட படி இறே சொல்லிற்று

கீழில் -பாட்டில் இத்தைக் கண்ட திரு வயிறானது
சகல சேதன அசெதனங்களையும் தானே தரித்துக் கொண்டு இருக்கிற மதிப்பையும் –
யசோதைப் பிராட்டி கட்டக் கட்டுண்ட தழும்பைக் காட்டி -தன்னுடைய  சௌலப்யத்தையும் -சிற்றிடையான அழகையும் காட்டி –
அத் திரு நாபீ கமலத்தின் நின்றும் திரு உள்ளத்தைத் தன் பக்கலிலே யிசிக்க
அங்குப் போக ஒட்டாதே அப்படிக்கு பட்டம் கட்டி இருக்கிறாப் போலே இருக்கிற
திரு உதர பந்தனம் மேலிட்டு நின்று ஸ்வைர சஞ்சாரம் பண்ணுகிற படியை இறே சொல்லிற்று –

அந்த திரு வயிற்ருக்கு ஒரு கால விசேஷத்திலே காதா சித்கமாக சகல அண்டங்களையும்
வைத்ததால் உண்டான மதிப்பும் -ஒரு கால் யசோதைப் பிராட்டி கட்ட அத்தால் வந்த
சௌலப்யமும் இறே இருப்பது -அப்படி யன்றே திரு மார்பு –

ஸ்ரீ வத்ஸ ஸம்ஸ்தாந தரமநந்தேச சமாச்ரிதம் -ப்ரதாநம் –என்றும்
ஆத்மாநமஸ்ய ஜகதோ நிர்லேபம குணா மலம்
பிபர்த்தி கௌச்துப மணி ஸ்வரூபம் பகவான் ஹரி -என்றும் சொல்லுகிறபடியே
சர்வ காலமும் சேதன அசேதனங்களை ஸ்ரீ வத்ஸ கௌச்துப முகத்தாலே தரித்துக் கொண்டு இருக்கிற
பெரிய மதிப்பையும் -அவனுடைய ஸ்வரூபாதிகளுக்கு நிரூபக பூதையாய் -நீர்மைக்கு
எல்லை நிலமாய் இருக்கிற பெரிய பிராட்டியாருக்கு கோயில் கட்டணமாய் இருக்கிற
ஏற்றத்தையும் உபய விபூதி நாதன் என்று இட்ட தனி மாலையை தரித்துக் கொண்டு இருக்கிற
ஆகாரத்தையும் உடைத்தாய் –
அக்கு வடமுடுத் தாமைத்தாலி பூண்ட வனந்த சயனன் -என்கிறபடியே யசோதை பிராட்டி
பூட்டின ஆபரணங்களையும் உடைத்தாய் இறே இருப்பது-

ஆகையாலே –
அந்த திரு மார்பானது -திரு வயிற்றில் காட்டில் தனக்கு உண்டான ஆதிக்யத்தையும்
சௌலப்யத்தையும் திருவாரம் உள்ளிட்ட ஆபரண சேர்த்தியால் வந்த அழகையும் உடையோம் நாம் அன்றோ –
ஆன பின்பு பேரகலமான நமக்கு சிற்றிடையான தான் நிகரோ -என்று தன் இறுமாப்பைக் காட்டி –
அத் திரு உதிர பந்தனத்தின் நின்றும்
தன் பக்கலிலே யிசித்துக் கொள்ள -தம்முடைய நெஞ்சு அளவன்றிக்கே -கரணியதான
தம்மையும் ஸ்வரூப ஜ்ஞாநாதிகளை பிறப்பித்து அடிமை கொண்ட படியை சொல்லுகிறார்

—————-

ஸ்ரீ வேதாந்த தேசிகர் அருளிய முநி வாஹன போகம் – அவதாரிகை-

மேல் இரண்டு பாட்டில் –
நாராயண சப்தார்தம் உள்ளீடாகப்
பெரிய பிராட்டியார் உடைய நிவாஸத்தால் நிகரில்லாத திரு மார்பையும்
திருக் கழுத்தையும் அனுபவிக்கிறார் –

—————–

பாரமாய பழ வினை பற்றறுத்து என்னைத் தன்
வாரமாக்கி வைத்தான் வைத்த தன்றி யென்னுள் புகுந்தான்
கோர மா தவம் செய்தனன் கொல் அறியேன் அரங்கத் தம்மான் திரு
ஆர மார்பதன்றோ அடியேனை யாட் கொண்டதே —–5-

பதவுரை
பாரம் ஆய–பொறுக்க முடியாத சுமையாயிராநின்ற
பழ வினை–அநாதியான பாபங்களின்
பற்று அறுத்து–சம்பந்தத்தைத் தொலைத்து
என்னை-(அதனால் பாபம் நீங்கப் பெற்ற) அடியேனை
தன் வாரம் ஆக்கி வைத்தான்-தன்னிடத்தில் அன்பு உடையவனாகப் பண்ணி வைத்தான் (ரங்கநாதன்);
வைத்தது அன்றி–இப்படி செய்து வைத்ததுமல்லாமல்
என்னுள் புகுந்தான்–என் ஹ்ருதயத்திலும் ப்ரவேசித்து விட்டான்
(இப்படிப்பட்ட பாக்கியத்தைப் பெறுதற்கு உறுப்பாக, நான்)
கோரம் மா தவம்-உக்ரமான பெரியதொரு தபஸ்ஸை
செய்தனன் கொல்–(முற் பிறவியில்) செய்திருப்பேனோ என்னவோ?
அறியேன்-அறிகிறேனில்லை;
அரங்கத்து அம்மான்-ஸ்ரீ ரங்கநாதனுடைய
திரு ஆரம்-பிராட்டியையும் முக்தாஹரத்தையும் உடைத்தான
மார்பு அது அன்றோ-அத் திரு மார்பன்றோ
அடியேனை-தாஸனான என்னை
ஆள் கொண்டது-அடிமைப் படுத்திக் கொண்டது

————————————————-

ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை அருளிய-வியாக்யானம்-
பாரமாய –
சர்வ சக்தியான சர்வேஸ்வரனே தள்ளும் இடத்திலும் ஒரு நிலை நின்று தள்ள வேண்டும்படி யிருக்கை –
சம்ஹரிப்பதும் நரகத்திலேயாய் -ஸ்ருஷ்டிப்பதும் நரகத்திலேயாய் இருக்கை-

பழ வினை –
காலம் அநாதி –
ஆத்மாவோ நித்யன்
அசித் சம்சர்க்கமும் உண்டு இறே –
இக் காலம் எல்லாம் கூடக் கூடு பூரித்தாதாய் இருக்கும் இறே –
சர்வ பாபேப்யோ மோஷ யிஷ்யாமி -என்று அவன் தானே தள்ள வேண்டும்படி இருக்கை-

பற்றறுத்து –
விரகராய் இருப்பார் அடி யறுத்து நெடுஞ்சுவர் தள்ளுமா போலே ஸவாசனமாகப் போக்கி –
நித்ய ஸூரிகளுக்கு பாப சங்கை உண்டாகிலும் இவர்க்கு இல்லாத படி பண்ணி –

என்னை –
பாபத்துக்கு போக்கடி யறியாத என்னை –
பாபம் படும் ஆகரமான என்னை –என்றுமாம்
அக மஹோததி –

தன் வாரமாக்கி வைத்தான் –
தான் -என்றால் பஷ பதிக்கும்படி பண்ணினான் –
என் கார்யம் தனக்கு கூறாக என் பேரிலே தனக்கு இருப்பென்று தன் பேரிலே
எனக்கு இருப்பாக்கின படி –

அன்றியே –
விஷயாந்தரங்களை விட்டு தன்னையே கூறாகப் பற்றும்படி பண்ணினான் –
வைத்தான் –
இச் சந்தானச் சாபம் வைத்தான்-

வைத்த தன்றி –
இந்த நன்மைகளுக்கு மேலே –
என்னுள் புகுந்தான் –
பின்னையும் தன் ஆற்றாமையாலே விடாய்த்தவன் தடாகத்தை நீக்கி உள்ளே
முழுகுமா போலே -என் உள்ளம் புகுந்தான் –
வாலி புக்க விடத்தே மலை இட்டு அடைத்து மஹா ராஜர் இருந்து குறும்பு செலுத்தினால்
போலேயாக ஒண்ணாது என்று என் ஸ்வரூப ஜ்ஞானம் குலையாதபடி என் நெஞ்சிலே வந்து புகுந்தான்
அநச்நன்நன்ய -என்கிறபடியே -இத்தோடு ஒட்டு அற்று இருக்குமவனுக்கும் இத்தால் அல்லது
செல்லுகிறது இல்லை என்கிறது-

கோர மா தவம் -இத்யாதி –
இப் பேற்றுக்கு அடி என் என்று பார்த்தார் —
இந்திரியங்களை ஒறுத்து மஹா தபஸை பண்ணினேனோ அறிகிறிலேன் –
நான் அறிய ஒன்றும் இல்லை –
இப்படி சங்கிப்பான் என் என்னில் –
பெற்ற பேறு அப்படிப்பட்டாருக்கு கிடைக்குமது யாகையாலே –
அவன் தானே நதீ தீரத்திலே கிடந்து தபஸ்ஸூ பண்ணினானோ அறிகிறிலேன் —
கோரமான தபஸ்ஸூ ஆகிறது –
அத் தலையாக தம்மை அழிய மாறின பெரிய வுடையாரைப் போலே இருக்கை
எந் நன்றி செய்தேனா என்னெஞ்சில் திகழ்வதுவே -என்னுமா போலே-

அரங்கத்தம்மான் –
இப் பேற்றுக்கு ஆற்றங்கரையைப் பற்றிக் கிடந்தது தபஸ்ஸூ பண்ணினானும் அவனாய் இருந்தது
இச் சீரிய பேற்றுக்கு வேறு உபாயம் உண்டாக மாட்டாதே-

திரு வார மார்ப தன்றோ –
பெரிய பிராட்டியாரையும் ஹாரத்தையும் உடைத்தான -மார்வன்றோ
தமக்கு பற்றாசாகத் தாய் நிழலிலே ஒதுங்குகிறார்

இவனைக் குறித்து -தே மைத்ரீ -பவது என்றும் –
அவனைக் குறித்து -ந கச்சின் ந அபராத்யதி -என்றும் –
சிறையில் இருந்தே சேர விடப் பார்க்கிறவள்
மார்பிலே இருந்தால் சேர விடச் சொல்ல வேணுமோ

அழகிய மார்வில் ஆரம்
ஆரத்துக்கு அழகு கொடுக்க வற்றாய் இருக்கை
ஆரம் அழகை  மறைக்கைக்கு உடலாம் இத்தனை இறே –
சர்வ பூஷண பூஷார்ஹா -என்னுமா போலே-

அடியேனை –
முன்பு எல்லாம் கூலிச் சேவகரைப் போலே –
அழகுக்கு தோற்ற அடிமை –
இது பிறந்து உடைய அடிமை –
முந்துற தூதோ ராமஸ்ய -என்றவன் -பிராட்டி கடாஷம் பெற்றவாறே –
தாசோஹம் கோசலேந்த்ரஸ்ய -என்றான் இறே-

ஆள் கொண்டது –
இழந்த சேஷத்வத்தை தந்தது –

அடியேனை ஆள் கொண்டதே –
ராஜ்யம் இழந்த ராஜ புத்ரனை அழைத்து முடி சூட்டுமா போலே –
அழகிலே அழுந்தின என்னை -அவன் குணம் கிடீர் பிழைப்பிததது -என்கிறார் –

அழகிலே அழுந்தினாரை குணத்தைக் காட்டிப் பிழைப்பிக்கலாம் –
குணத்திலே அழுந்தினார்க்கு குணமே வேணும் –
நீரிலே அழுந்தினார்க்கு நீரை இட்டுப் பிழைப்பிக்க விடும் இத்தனை யன்றோ உள்ளது

இப் பாட்டால் –
அந்தர்யாமி ப்ராஹ்மணத்தில் சொல்லுகிறபடியே சர்வ வ்யாபகத்வ சக்தியும் உண்டு என்கிறார் –

—————————————————–

ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் அருளிய–வியாக்யானம்-

பாரமாய பழ வினை பற்றறுத்து என்னைத் தன் வாரமாக்கி வைத்தான்

கீழ்ப்பாட்டில்-
ராகாதி தோஷங்களுக்கு அந்தர்பூதகமான மநோ ரஜ நீசரனைப் பெரிய பெருமாள்
விவேக சர ஜாலத்தாலே சமிப்பித்த படி இறே சொல்லிற்று –அதிலே ஓர் அபேஷையோடே
அதுக்கு உத்தரமாய் இருக்கிறது இப் பாட்டு –

அவர் தந்த விவேக சர ஜாலத்தாலே மநோ ரஜ நீசரனை வென்றோம் என்றீர் -அந்த விவேக ஜ்ஞானம் ஆகிறது –
சத்வாத் சஞ்சாயதே ஜ்ஞானம் -என்கிறபடியே சத்வ அபிவ்ருத்தியாலே உண்டாமது அன்றோ –

(த்யாயதோ விஷயாந் பும்ஸஸ் ஸங்கஸ் தேஷூபஜாயதே.—
ஸங்காத் ஸம் ஜாயதே காம-காமாத் க்ரோதோபி ஜாயதே—৷৷2.62৷৷)

(சப்தம் முதலான ஐந்து புலன்களையும் சிந்திப்பவனாய் -என்னை த்யானிக்காத அதிகாரிக்கு
அப்புலன்களில் பற்று வளர்கிறது -அப் பற்றினால் காமம் ஏற்படுகிறது –
விஷயங்களில் பற்று -கொண்டு -சங்கம்
முதிர்ந்த பழுத்த ஆசையே காமம்
இது இல்லாமல் தரிக்காத தசை ஆபன்னன் அடைந்தவன்
காமத்தினால் கோபம் பரவலாக உண்டாகிறது)

அந்த சத்வம் தானே ரஜஸ் தமஸ்ஸூக்கள் தலை சாய்ந்தால் பிறக்குமது இறே –
அந்த ரஜஸ் தமஸ்ஸூக்கள் தான் –
கர்ம வச்யா குணா ஹ்யேதே -என்கிறபடியே நிவ்ருத்தி கர்ம அனுஷ்டானத்தாலே போக்குமவை யன்றோ –
அந்த கர்ம அனுஷ்டானத்துக்கு யோக்யமான ஜன்மமே பிடித்தில்லாத உமக்கு அந்த துஷ் கர்மங்கள்
போன படி என் என்ன -அநுஷ்டேயமான சாத்ய கர்மங்களாலே போக்கில்
அன்றோ யோக்யதையே பிடித்தின்றியிலே யொழிவது –
கிருஷ்ணம் தர்மம் சநாதனம் –என்றும்
ராமோ விக்ரஹவான் தர்ம -என்றும் –
அறம் சுவராகி நின்ற வரங்கனார் -என்கிறபடியே
சித்த ஸ்வரூபனான அவன் தானே கைத் தொடனாய்ப் போக்கினான் என்கிறார் –

பாரமாய –
வானக் கோனை கவி சொல்ல -வல்லேன் என்கிறபடியே –
மலக்கு நா வுடைய நம்மாழ்வாரும் வகை சொல்ல மாட்டாதே -தொன் மா வல் வினைத் தொடர் -என்று
திரளச் சொன்னாப் போலே -இவரும் பாரமாய -என்கிறார் –

கர்மத்தின் உடைய கனத்தினாலே அல்ப சக்தனான தான் சமபாதித்ததாய் இருக்கச் செய்தேயும் –
வகை சொல்லப் போகாதபடி இறே இருப்பது –

சர்வ சக்தியான அவன் போக்கும் போதும் வகையில் போக்கப் போகாது -தொகையில் போக்கும் -இத்தனை
வகையான தான் சதுர்வித தேக ப்ரேவேசத்துக்கு ஹேதுவாய் இருப்பனவும் –
பரிக்ரஹ தேகத்தில் பிறக்கிற ருசிக்கு அடியாய் இருப்பனவும் –
விஷய ப்ராவண்யத்துக்கு அடியாய் இருப்பனவும் –
தேவதாந்தரங்களுக்கு உத்தேச்யம் என்று இருக்கும் புத்திக்கு அடியாய் இருப்பனவும் –
ஈஸ்வரனைப் பற்றி நிற்க பிரயோஜனாந்தரன்களைப் கொண்டு அகலுகைக்கு
ஹேதுவாய் இருப்பனவுமாக ஒரு சுமையாய் இறே இருப்பது-

அதுக்கு மேலே விஹித அனுஷ்டானத்தாலும் நிஷித்த அசரணத்தாலும் பாப கர்மாக்களோட்டை
சஹவாசத்தாலுமாக த்ரி விதமாய் இறே இருப்பது –
அவை தான் மானஸ வாசிக காயிக ரூபேண த்ரி விதமாய் இறே இருப்பது –

யத் ப்ரஹ்ம கல்ப நியுதா நுபவேப்ய நாச்யம் தத் கில்பிஷம் ஸ்ருஜதி ஜந்துரிஹ ஷணார்த்தே
என்கிறபடியே பல அநந்தயத்தை -பாரமாய -என்கிறதாகவுமாம் –

சம்ஹரிப்பதும் நரகத்திலேயாய் சிருஷ்டிப்பதும் நரகத்திலேயாய் இருக்கை –
இப்படி பாரமாகைக்கு ஹேது சொல்லுகிறது மேல் –

பழ வினை –
காலம் அநாதி –
ஆத்மாவோ நித்யன்
அசித் சம்சர்க்கமும் உண்டு இறே –
இக் காலம் எல்லாம் கூடக் கூடு பூரித்தாதாய் இருக்கும் இறே –
சர்வ பாபேப்யோ மோஷ யிஷ்யாமி -என்று அவன் தானே தள்ள வேண்டும்படி இருக்கை-

பற்றறுத்து –
விரகராய் இருப்பார் அடி யறுத்து நெடுஞ்சுவர் தள்ளுமா போலே ஸவாசனமாகப் போக்கி –
நித்ய ஸூரிகளுக்கு பாப சங்கை உண்டாகிலும் இவர்க்கு இல்லாத படி பண்ணி –
அஜ்ஞானமும் தத் க்ருதமான கர்மமும் அதடியான தேக சம்பந்தமும் என்று -மூன்றாய்
இவற்றை வாஸநா ருசியோடே போக்கி –

அதாவது அஞ்ஞானமும் -அஞ்ஞான வாசனையும் -அஞ்ஞான -ருசியும்
கர்மமும் -கர்ம வாசனையும் -கர்ம ருசியும் —
தேகமும் தேக வாசனையும் -தேக ருசியும் -அறுத்து –
க்ரமத்தில் அனுஷ்டிக்கும் சாத்ய கர்மம் ஆகில் இறே அடைவே -போக்குவது

சித்த ரூபன் ஆகையாலே வாசனையோடே கடுகப் போக்கினான் –
அநாதி காலார்ஜிதமான கர்மங்களை ஸவாஸநமாகப் போக விட்ட -வளவேயோ

என்னை தன் வாரமாக்கி -வைத்தான்
என் பாபம் தனக்கு கூறாக என் பேரிலே அவனுக்கு இருப்பு என்று தன் பேரில் எனக்கு இருப்பாக்கினபடி
அன்றியிலே –
விஷயாந்தரங்களை விட்டு தன்னை கூறாக பற்றும்படி பண்ணினான் வைத்தான் –
தம்முடைய நினைவன்றியிலே அத்தலையாலே வந்தது என்று தோற்ற வைத்தான் -என்கிறார்-

மாறு செய்த வாளரக்கன் நாளுலப்ப -இறந்த குற்றம் எண்ண வல்லனே –
ராவணனை சபரிகரமாக கொன்று வெற்றி கொண்ட பின்னை என்னைத் தம்மோடே
ஒரு பேராக கூட்டுகையாலே யமாதிகளால் நினைக்க ஒண்ணாதபடி யானேன்

வைத்தான் –
இச் சந்தானச் சாபம் வைத்தான்
வைத்த தன்றி என்னுள் -புகுந்தான் –
என்னுடைய துஷ் கர்மங்களை ச்வாசநமாகப் போக்கி -தான் அறிந்த -மதி நலத்துக்கு
தன்னையே விஷயமாக்கி வைத்ததுக்கு மேலே -நாம் சந்நிஹிதரா வுதோமாகில்
முன்புத்தை ருசி வாசநைகள் மேலிட்டு பழையபடி துஷ் கர்மங்களைப் பண்ணி நான்
அகலக் கூடுமோ என்று பார்த்து -அவை மேலிடாதபடி என் நெஞ்சில் புகுந்து தன்னுடைய
வாஸநா பலத்தாலே அவை தேயும்படி பண்ணி இருந்தான் –

என்னுள் புகுந்தான் –
அடியேன் உள்ளான் உடல் உள்ளான் -என்றும்
பேரேன் என்று என் நெஞ்சு நிறையப் புகுந்தான் -என்றும் சொல்லுகிறபடியே
எத்தைனையேனும் அளவுடையவர்களுக்கு செய்யுமத்தை என் நிகர்ஷம் பாராதே
வசிஷ்டன் சண்டாள க்ருஹத்திலே புகுமா போலே புகுந்தான் –

என்னுள் புகுந்தான் –
அநச்நன் நன்ய -என்கிறபடியே இத்தோடு ஒட்டு அற்று இருக்கும் அவனுக்கு இத்தால் அல்லது
செல்லுகிறது இல்லை -என்கிறது

கோர மாதவம் செய்தனன் கொல் –
முன்பே கனத்து இருந்தது இப்போது சித்திக்கும் போது –
தபஸா விந்ததே மஹத் -என்கிறபடியே நெடும் காலம் அதி கோரமான பெரிய தபஸ்ஸூக்களை
பண்ணினேனோ -மஹதா தபஸா ராம மஹதா சாபி கர்மணா -என்றும் –
தே தம் சோமமி வோத்யந்தம் -என்னும் அவனைப் பெறும் போது அதி கோரமான
தபஸை பண்ண வேணும் இறே

அறியேன் –
அறிகிறிலேன் -நான் அறிய ஒன்றும் இல்லை -இப்படி சங்கிப்பான் என் என்னில் –
பெற்ற பேறு அப்படிப் பட்டாருக்கு கிடைக்குமதாகையாலே -அவன் தான் நதீ
தீரத்திலே கிடந்தது தபசி பண்ணினானோ அறிகிறிலேன் –
கோரமான யுத்தத்திலே தம்மை அழிய மாறின பெரிய வுடையாரைப் போலே இருக்கை –

எந்நன்றி செய்தேனோ என் நெஞ்சில் திகழ்வதுவே -என்று தம் பக்கல் ஒரு நன்மை காணாமையாலே
சம்சயிக்கிறார் -நிர்ஹேதுகமாக இப்படி உபகரிப்பதே -என்று இறே இவர் வித்தர் ஆகிறது –

இத்தால் -நிர்ஹேதுகமாக விஷயீ கரித்தான் என்றபடி –
தம்மையையும் தம் உடைமையையும் நமக்கு ஆக்கினவர்க்கு
நம்மையையும் நம் உடைமையையும் அவர்க்கு ஆக்கின முறை
முதுகு தோய்த்தோம் இத்தனை யன்றோ என்று எல்லாம் செய்தும் தான் ஒன்றும் செய்திலனாய்
இறே அவன் இருப்பது –

அடியார்க்கு என் செய்வன் என்றே இருத்தி  நீ -என்னக் கடவது இறே –
அறியேன் -என்றவர் தாமே சர்வதா இக் கனத்த பேற்றுக்கு ஒரு ஹேது வுண்டாக வேணும் என்று விசாரித்து
அறிந்தேன் என்கிறார் மேல் –
அரங்கத்தம்மான் திரு வார மார்பதன்றோ வடியேனை யாட் கொண்டதே –
இவருடைய விரோதியைப் போக்கி
உஜ்ஜீவிப்பைக்கைக்காக வாய்த்து இங்கு வந்து சாய்ந்து அருளிற்று –
இவருடைய பேறு தன்னதாம்படி தாம் பண்ணுகைக்கு உண்டான ப்ராப்தியைச் சொல்லுகிறது
இப் பேற்றுக்கு ஆற்றங்கரையைப் பற்றிக் கிடந்து தபஸ் பண்ணினானும் அவனாய் இருந்தது –
இல்லையாகில் எனக்கு இக் கனவிய பேற்றுக்கு வேறு உபாயம் உண்டாக மாட்டாதே-

திருவார மார்பதன்றோ –
பெரிய பிராட்டியாரையும் ஹாரத்தையும் உடைத்தான மார்வன்றோ –
பெரிய பெருமாள் தாம் அன்றோ -ஹிரண்ய வர்ணாம் -ஹிரன்ய -ப்ராகாராம் -என்கிற
பெரிய பிராட்டியாருக்கு கோயில் கட்டணமாய் -அதுக்கு ஹிரண்ய மயமான திரு மதிள்
போலே இருக்கிற திரு வாரத்தை உடைத்தாய் இறே திரு மார்பு இருப்பது -அந்த திரு மார்பன்றோ –

இத்தால் தமக்கு பற்றாசாக தாய் நிழலிலே ஒதுங்குகிறார் –
இவனைக் -குறித்து -தேந மைத்ரீ பவது -என்றும் –
அவனைக் குறித்து -ந கச்சின்நா பராத்யதி -என்றும் சிறையிலே இருந்தே சேர விடப் பார்க்குமவள் –
மார்பிலே இருந்தால் சேர விடச் சொல்ல வேணுமோ –

அழகிய மார்பில் ஆரம்
ஆரத்துக்கு அழகு கொடுக்கவற்றாய் இருக்கை
ஆரம் அழகை மறைக்கைக்கு உடலாய் இருக்கும் இத்தனை –
சர்வ பூஷண பூஷார்ஹா -என்னுமா போலே-

அடியேனை –
முன்பு எல்லாம் கூலிச் சேவகரைப் போலே –
அழகுக்கு தோற்ற அடிமை –
இது பிறந்து உடைய அடிமை –
முந்துற தூதோ ராமஸ்ய -என்றவன் -பிராட்டி கடாஷம் பெற்றவாறே –
தாசோஹம் கோசலேந்த்ரஸ்ய -என்றான் இறே-

அடியேனை —
ஞான ஆனந்தங்களுக்கு முன்னே சேஷத்வம் பிரதம நிரூபகமான என்னை யன்றோ-

ஆள் கொண்டது –
இழந்த சேஷத்வத்தை தந்தது –
முடிக்கு உரியவனை முடி சூட்டுமா போலே -என்னுடைய
ஸ்வரூப -விரோதியையும் ஆஸ்ரயண விரோதியையும் -உபாய விரோதியையும்
உபேய விரோதியையும் -போக விரோதியையும் -போக்கி
ஸ்வரூப அநுரூபமான கைங்கர்யத்தைக் கொண்டது –

தன்னுடைய மேன்மையையும் அழகையும் -காட்டி -என்னை அநந்யார்ஹமாம் படி பண்ணி
பெரிய பிராட்டியாரை இடுவித்து -ந கச்சின் நா பராத்யதி -எண்ணப் பண்ணி
பெரிய பெருமாளை யிடுவித்து -என்னுடைய விரோதி பாபங்களை சவாசனமாகப் போக்குவித்து –
அவர் தம்முடைய போக்யதையை என் நெஞ்சிலே பிரகாசிப்பித்துக் கொண்டு
புகுரும்படி பண்ணி என்னுடைய ஸ்வரூப அநு ரூபமான கைங்கர்யத்தைக் கொண்டது
அந்தத் திரு மார்பு அன்றோ

அடியேனை ஆட் கொண்டது அந்தத் திரு மார்பன்றோ –
என்னைப் போலே இருப்பார் -வேறே சிலரைத் திருத்தி அடிமை கொள்ளுகைக்கு
பாயும் நீர் அரங்கம் தன்னுள் பாம்பணைப் பள்ளி கொண்ட மாயனார் திரு நன் மார்வும்
மரகத வுருவும் தோளும் தூய தாமரைக் கண்களும் துவர் இதழ்ப் பவள வாயும் ஆய சீர்
முடியும் தேசும் -என்று தாம் கிடக்கிற ஊருக்கு அலங்காரமான ஆற்றழகு தொடங்கி
காட்ட வேண்டிற்று –
எனக்கு மார்பு ஒன்றுமே யமைந்தது –

அழகிலே அழுந்தின என்னை -அவன் குணம் கிடீர் பிழைப்பிததது -என்கிறார் –
அழகிலே அழுந்தினாரை குணத்தைக் காட்டிப் பிழைப்பிக்கலாம் –
குணத்திலே அழுந்தினார்க்கு குணமே வேணும் –
நீரிலே அழுந்தினார்க்கு நீரை இட்டுப் பிழைப்பிக்க விடும் இத்தனையிறே-

இப்பாட்டில் –
அந்தர்யாமி ப்ராஹ்மணத்தில் சொல்லுகிறபடியே சர்வ வ்யாபி சக்தியும் இங்கே  உண்டு என்கிறார் –

———————————————————

ஸ்ரீ வேதாந்த தேசிகர் அருளிய முநி வாஹன போகம் -வியாக்யானம்-
பாரமாய பழ வினை பற்று அறுத்து –
கால தத்வம் உள்ளதனையும் ப்ராயாச்சித்தம் பண்ணினாலும் கழிக்க ஒண்ணாத படி
உபசிதமாய்க் கொண்டு அநாதி காலம் நடக்கிற சம்சாரிக கர்ம கலாபத்தை
சவாசனமாக என்னுடன் துவக்கு அறுத்து

என்னைத் தன் வாரமாக்கி வைத்தான் –
இப்படி கர்ம பரவசனாய் இந்த்ரிய கிங்கரனாய் தாத்ருசரான இந்த்ராதிகளை எடுத்துச்
சுமந்து தனிசு தீராதே பொலிசை இறுத்துத் திரிகிற என்னை –
அபஹத பாப்மாவாய் ஸ்வாமி பாவத்துக்கு எல்லை நிலமாய் ஸூரி போக்யனான
தன்னுடைய அந்தபுர ஸ்திரீகளைப் போலே அன்யர்க்கு கூறு இல்லாதபடி பண்ணி
அசாதாரண கைங்கர்ய ரசத்தை -தந்து இது மேல் ஒரு காலத்திலும் மாறாதபடி வைத்தான் –

வைத்த தன்றி என்னுள் புகுந்தான் –
அநந்யனாக்கி வைத்த வளவன்றிக்கே முன்பு பிரயோஜ  நாந்தர ப்ரவணனான
என்னுடைய ஹ்ருதயத்தில் அநந்ய பிரயோஜன அநுபவ விஷயமாக்கிக் கொண்டு –
தஸ்யு பரிக்ருஹீதமான தன் படை வீட்டிலே தஸ்யுக்களை ஒட்டி புகுருமா போலே புகுந்தான் –

கோர மா தவம் செய்தனன் கொல் அறியேன் –
அநாதி காலம் இழந்த வஸ்துவைப் பெறுகைக்கு அகர்ம வச்யனான ஈஸ்வரன் தானே –

அவதார ஷேத்ரமான அயோத்யையும் விட்டு –
ஆஸ்ரீதன் இருப்பிடமான லங்கையிலும் போகாதே –
கங்கையில் புனிதமாய காவிரி  நடுவு பாட்டிலே –
அதி கோரமாய் -அதி மஹத்தாய்  இருப்பதொரு தபஸை பண்ணினானோ -அறிகிலேன்

இது அதிவாத கர்ப்பமாக உத்ப்ரேஷித்த படி -(காஞ்சி ஸ்வாமிகள் இது இடைச் செருகல் என்பர் -அதிவாதம் என்று சொல்வார் இல்லையே )

சர்வ சம்சார நிவர்தகமாய்-அமோகமாய்
இருப்பதொரு –
மோஷ யிஷ்யாமி -என்கிற சங்கல்ப ரூபமான தபசி பண்ணினான் என்று தாத்பர்யம் –

அங்கன் அன்றிக்கே –
இப் பெரிய பேறு பெறுகைக்கு அயோயனான நான் இதுக்கு அநு ரூபமாய் அமோகமாய்
இருப்பதொரு மகா தபசி பண்ணிப் பெற்றேன் அல்லேன் –
இதுக்கு -த்வயி நிஹித பரோஸ்ஸ்மி சோஸ்ஹம் யத -என்றும் –
தவ பரோஸ் ஹம காரிஷி தார்மிகை -என்றும் -சொல்லுகிறபடியே –
இப்போது நானும் பிறரும் அறியலாவது எனக்கொரு தபஸ் காண்கிறிலேன் -என்று ஈஸ்வரன் உடைய
இரக்கத்தின் ப்ராதான்யத்திலே தாத் பர்யமாகவுமாம்

இப்படி ஷூத்ரனான என் திறத்தில் இறங்கினவன் தான் –
தேற ஒண்ணாத -திருவில்லாத் தேவரில் ஒருவன் அல்லன் –
அகலகில்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கை யுறை மார்பன் -என்னும் -இடத்தையும் –
சேஷபூதரான தமக்கு -ஸ்ரீ தரனே கைங்கர்ய பிரதிசம்பந்தி என்னும் இடத்தையும்
திறம்பாத சிந்தைக்கு சிக்கெனக் காட்டிக் கொடுக்கிறார் –

அரங்கத்தம்மான் திரு வார மார்பதன்றோ அடியேனை யாட் கொண்டதே –
சர்வருக்கும் அனுபவிக்கலாம்படி -சர்வ சாஹிஷ்ணுவாய்க் கொண்டு -கோயில் ஆழ்வாருக்கு
உள்ளே சௌலப்ய காஷ்டையோடு விரோதியாத ஸ்வாமித்வ காஷ்டையை உடையரான
பெருமாளுடைய சேஷித்வ பூர்த்திக்கு லஷணமான திருவையும்
அழகு வெள்ளத்துக்கு அணை கோலினால் போலே இருக்கிற ஹாரத்தையும் உடைத்தான
திரு மார்வன்றோ ஸ்வா பாவிக சேஷித்வ அநுபவ ரசிகனாய்
அதுக்கு மேலே குணைர் தாஸ்ய முபாகதனுமான என்னை ஸ்வரூப அநு ரூபமான
ஸ்தோத்ராதி சேஷ வ்ருத்தியிலே மூட்டி அதுக்கு இலக்காய்  நின்றது –

இப்பாட்டில்
பதங்களின் அடைவே
1-நாராயண சப்தத்தில் விவஷிதமான அநிஷ்ட நிவர்த்தகத்வமும்
2-இஷ்ட -ப்ராபகத்வமும் –
3-உள்ளும் புறமும் வியாபித்து நிற்கும் -படியும்
4-நித்ய -கிருபையும்
5-உபாயத்துக்கு பிரதானமான சௌலப்யமும்
6-ப்ராப்யத்துக்கு பிரதானமான ஸ்வாமித்வமும்
7-சர்வ அநு குணமான ஸ்ரீ ய பதித்வமும்
8-பூஷண அஸ்த்ர ரூபங்களாக புவனங்களை தரிக்கிற போக்ய தமமான விக்ரஹ யோகமும்
9-நார சப்தார்த்தமான தாஸ பூதன் ஸ்வரூபமும்
19-தாஸ்ய பலமாக பிரார்த்திக்கப்படும் கைங்கர்யமும்
அனுசந்தேயம்

———————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேதாந்த தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருப்பாண் ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ அமலனாதி பிரான் –ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை அருளிய-ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் அருளிய–ஸ்ரீ வேதாந்த தேசிகர் அருளிய முநி வாஹன போகம் -வியாக்யானம் -சதுரமா மதிள் சூழ் இலங்கைக்கு இறைவன் தலை பத்து –

May 19, 2013

ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை அருளிய அவதாரிகை –

திரு நாபீ கமலத்தோடே சேர்ந்த திரு வுதர பந்தத்தை அனுபவிக்கிறார்

————-

ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் அருளிய அவதாரிகை –

திரு நாபீ கமலத்தோடே சேர்ந்த திரு வுதர பந்தத்தை அனுபவிக்கிறார்-

முதல் பாட்டில்
ஜகத் காரண பூதனானவன் -தம்முடைய அபேஷா நிரபேஷமாக தம்மை விஷயீ கரித்து –
தம்முடைய திரு உள்ளத்தில் திருவடிகள் தானே வந்து பிரகாசித்த படியை சொன்னாராய் –
நிரபேஷமாக செய்யக் கூடுமோ என்கிற அபேஷையிலே சோதாஹரணமாகச் சொல்லா நின்று கொண்டு
தம் திரு உள்ளம் திரு வரையும் திரு பீதாம்பரமுமான சேர்த்தியிலே மேல் விழுந்து நசை
பண்ணுகிற படியைச் சொன்னார் இரண்டாம் பாட்டில்

அவ் விரண்டாம் பாட்டில் சொன்ன த்ரைவிக்ர அபதானம் பிரமாண உபபத்திகளாலே
திருவேங்கடமுடையானுக்கே சேருமதன்றோ என்கிற அபேஷையிலே திருமலையில் நின்றும்
திரு உலகு அளந்தருளினாரும் பெரிய பெருமாளே -என்று கொண்டு -முதல் பாட்டில் -ஆதி -என்று
சொன்ன அவனுடைய காரணத்வத்தை -திரு நாபீ -கமலத்திலே ப்ரஹ்மாவை  உண்டாக்கி
அம் முகத்தாலே வெளி இடா நின்று கொண்டு -அந்த திரு நாபீ கமலம் தானே
திருப் பீதாம்பரத்திலே துவக்கு உண்கிற தம் திரு உள்ளத்தை -ப்ரஹ்ம உத்பாதகமான
தன்மையையும் அழகையும் காட்டி தன் பக்கலிலே இழுத்துக் -கொள்ள -அதிலே சுழி யாறு
படுகிற படிடை யிறே மூன்றாம் பாட்டில் சொல்லி நின்றது-

தம் திரு உள்ளம் திரு நாபீ கமலத்தில் சுழியாறு படுகிற படியைக் கண்டு
திரு நாபீ கமலத்துக்கு ஆஸ்ரயமான திரு வயிறும் -இந்த திரு நாபீ கமலத்துக்கு
வெறும் ப்ரஹ்மா ஒருவனுக்கு இருப்பிடமான மேன்மையும் அழகும் அன்றோ உள்ளது –
இதுக்கு ஆஸ்ரயமான நம்மைப் பார்த்தால் –
த்ரிவித சித் அசித் ப்ருந்தம் துந்தா வலம்பி வலி த்ரயம் கணயதி தவைஸ்வர்யம் வ்யாக்யாதி
ரங்கமஹே ஸிது
ப்ரணதவசதாம் ப்ரூதே தாமோத மத்வக்ர கிணஸ் ததுபய குணாவிஷ்டம் பட்டம் கிலோதர பந்தநம் –
என்கிறபடியே -பகத் முக்த நித்ய ரூபமான த்ரிவித சேதனருக்கும்
த்ரி குணாத் மகமாயும் சுத்த சத்வாத்மகமாயும் -சத்வ ஸூன்யமுமாயும் உள்ள அசேதன வர்க்கத்துக்கும்
ஆஸ்ரயமான மேன்மையும் -ஆஸ்ரிதர்க்கு கட்டவும் அடிக்க்கவுமாம் படி எளியோமான
சௌலப்ய நீர்மையையும் உடையோமான ஏற்றத்தாலே பட்டம் கட்டி அன்றோ நாம் இருப்பது
என்று தனக்கு திரு நாபீ கமலத்தில் உண்டான ஏற்றத்தையும் காட்டி –
திரு நாபீ கமலத்தில் ஆழங்கால் படுகிற் என் நெஞ்சை தன் பக்கலிலே வர இசிக்க –
அத் திரு வயிற்றை ஆஸ்ரயமாகப்
பற்றி நிற்கிற திரு உதர பந்தநம் தன் பக்கலிலே வர ஈர்த்து மேலிட்டு நின்று தம் திரு உள்ளத்திலே
ஸ்வரை சஞ்சாரம் பண்ணுகிற படியைச் சொல்லுகிறார்

———

ஸ்ரீ வேதாந்த தேசிகர் அருளிய முநி வாஹன போகம் அவதாரிகை –

இரண்டாம் பாட்டாலும் மூன்றாம் பாட்டாலும்
ப்ரஹ்ம ருத்ராதிகள் உடைய கர்ம அதிகாரித்வமும்
கர்ம மூல ஜந்மாதிகளும் சொல்லிற்று ஆயிற்று –

நாலாம் பாட்டாலே -ப்ரஹ்ம ருத்ராதிகள்
வரம் கொடுத்து வாழ்வித்த  ராவணனை நிராகரித்த வ்ருத்தாந்தத்தாலும்
தேவதாந்தரங்கள் உடைய ஷூத்ரத்வத்தையும் –
ப்ரஹ்மா  ஸ்வயம் பூச் சதுராநநோ வா
ருத்ரஸ்  த்ரினேத்ரஸ் த்ரிபுராந்தகோ வா
இந்த்ரோ மகேந்த்ரஸ் சூர நாயகோ வா
த்ராதும் ந சக்தா யுதி ராமவத்யம் -இத்யாதிகள் படியே அவர்கள் உடைய அல்ப சக்தித்வதையும்
அனுசந்திதுக் கொண்டு ப்ரஹ்மாதிகளை எல்லாம் அகம்படியிலே ஏக தேசத்திலே
வைத்து உய்யக் கொண்ட ஸ்ரீமத்தையை உடைத்தான திரு வயிற்றின் உடைய
சிறுமை பெருமைகளால் உண்டான அகதி தகடநா சக்திகளுக்கு அடையவளைந்தான் போலே
யிருக்கிற உதர பந்தம் தம்முடைய சிறிய திரு உள்ளத்துக்கு உள்ளே வெளியில் போலே
இடம் கொண்டு உலவா நின்றது -இது ஒரு ஆச்சர்யம் என்கிறார் –

கீழ் மூன்று பாட்டாலும் -ப்ரதம பதார்த்தம் ப்ரதிஷ்டிதமாய் –
நாலாம் பாட்டாலே
ந நமேயம் து கஸ்ய சித் -என்ற வணங்கல் இலாக்கனைத் தலை சாய்த்து -தசேந்த்ரியா நநம் கோரம் -என்கிறபடியே
முமுஷுக்களுடைய மனசு அஹங்கார மமகார தூஷிதமாகாத படி பண்ணிக் கொடுக்கிற
சக்கரவர்த்தி திருமகனுடைய சரித்ரத்தை முன்னிட்டு -நானும் என்னுடையது அன்று –
மற்றும் என்னுடையதாவன ஒன்றும் இல்லை -என்கிற
நமஸ் ஸில் அர்த்தத்தை மறை பொருளாக அனுசந்திகிறார் ஆகவுமாம்

—————–

சதுரமா மதிள் சூழ் இலங்கைக்கு இறைவன் தலை பத்து
உதிர வோட்டி ஓர் வெங்கணை வுய்த்தவன் ஓத வண்ணன்
மதுர மா வண்டு பாட மா மயிலாட அரங்கத்தம்மான் திரு வயிற்று
உதர பந்தம் என்னுள்ளத்துள் நின்றுலாகின்றதே —-4-

பதவுரை

சதுரம்–நாற்சதுரமாய்
மா–உயர்ந்திருக்கிற
மதிள்சூழ்–மதிள்களாலே சூழப்பட்ட
இலங்கைக்கு–லங்கா நகரத்திற்கு
இறைவன்–நாதனான இராவணனை
ஓட்டி–(முதல் நாள் யுத்தத்தில்) தோற்று ஓடும்படி செய்து
(மறுநாட்போரில்)
தலை பத்து–(அவனது) தலைபத்தும்
உதிர–(பனங்காய்போல்) உதிரும்படி
ஓர்–ஒப்பற்ற
வெம் கணை–கூர்மையான அஸ்த்ரத்தை
உய்த்தவன்–ப்ரயோகித்தவனும்
ஓதம் வண்ணன்–கடல் போன்ற (குளிர்ந்த) வடிவை யுடையவனும்
வண்டு–வண்டுகளானவை
மதுரமா–மதுரமாக
பாட–இசைபாட
(அதற்குத் தகுதியாக)
மா மயில் ஆடு–சிறந்த மயில்கள் கூத்தாடப் பெற்ற
அரங்கத்து அம்மான்–திருவரங்கத்தில் எழுந்தருளியிருக்கும் ஸ்வாமியுமான ஸ்ரீ ரங்கநாதனுடைய
திரு வயிறு உதர பந்தம்–திருவயிற்றில். சாத்தியுள்ள ‘உதரபந்த’ மென்னும் திருவாபரணமானது
என் உள்ளத்துள் நின்று–என் நெஞ்சினுள் நிலைத்து நின்று
உலாகின்றது–உலாவுகின்றது-

———————————————

ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை அருளிய வியாக்யானம் —

சதுர மா மதிள் -இத்யாதி
கட்டளைப் பட்டு இருக்கை
மா மதிள் –
துர்க்க த்ரயம்
ஈஸ்வரன் என்று அறியச் செய்தே எதிர்க்கப் பண்ணின மதிள்

இலங்கைக்கு இறைவன் –
முழஞ்சிலே சிம்ஹம் கிடந்தது என்னுமா போலே -லங்காம் ராவண பாலிதாம் –

இலங்கைக்கு இறைவன் –
சர்வேஸ்வரன் ஸ்ரீ வைகுண்டத்தை கலவிருக்கையாக கொண்டு வீற்று  இருந்தாப் போலே காணும்
இவனும் இலங்கைக்கு ஈஸ்வரன் என்று இருந்தபடி

விரக்தனான திருவடியும் கூட மதித்த ஐஸ்வர்யம் இறே
யத்ய தர்மோ ந பலவான் ஸ்யாதாயம் ராஷசேஸ்வர
ஸ்யாதயம் ஸூர லோகஸ்ய சக்ரஸ் யாபி ச ரஷிதா -என்றான் இறே

யாவன் ஒருவனுக்காக இவனை அழியச் செய்ய நினைக்கிறார் -அவன் தன்னையே
இவ் வரணுக்கு காவலாக வைப்பர் கிடீர் அல்பம் அனுகூலிததான் ஆகில் –

தலை பத்து உதிர –
பனங்குலை உதிர்ந்தாப் போலே உதிர -அறுக்க அறுக்க முளைத்த சடக்கு
ஒட்டி –
அனுகூலிக்குமாகில் அழியச் செய்ய

ஓர் வெங்கணை வுய்த்தவன் –
பிற்றை நாளில் பூசலிலே ஜய அபஜயங்கள் அவ்யவஸ்திதம் அன்றோ என்று ப்ரஹ்மாதிகள் கருதினவாறே –
அத் தலைகளுக்கு வேர் பற்றான நெஞ்சிலே அத்விதீயமான ப்ரஹ்மாஸ்த்ரத்தை விட்டவன் –
அவன் பிரதி கூல்யத்தில் நிலை நின்றான் என்று அறிந்த பின்பு ப்ரஹ்மாஸ்த்ரத்தை விட்டபடி –

ஓத வண்ணன் –
ராவண வதம் பண்ணி -ஸ்ரீ விபீஷண ஆழ்வானுக்கு முடி கொடுத்து -க்ருத க்ருத்யனாய்
ப்ரஹ்மாதிகள் புஷ்ப வ்ருஷ்டியும் ஸ்தோத்ரமும் பண்ண -வீர ஸ்ரீ தோற்ற ஸ்ரமஹரமான வடிவோடே நின்ற நிலை

மதுர மா வண்டு பாட –
வினை அற்றவாறே ஆடல் பாடலுக்கு இடம் கொடுத்த படி
சிலர் பாடினால் ஆடுவாரும் வேணுமே
மயில்கள் ஆடப் புக்கன

மா மயில் –
ஒரு மயில் தோகை விரித்தால் அத் திருச் சோலைக்கு அணுக்கன் இட்டாப் போலே இருக்கை
ருஷிகள் கொண்டைக் கோல் கொண்டு ஆடுகை தவிர்ந்து மயில்கள் ஆடப் புக்கன
குரங்குகள் கூத்தாட்டாதல் இவற்றின் கூத்தாட்டாதல் என்றும் திர்யக் யோநிகளுக்கு நிலமாகை-

வண்டு பாட மா மயில் ஆடு
ஸ்ரீ வைகுண்ட நாதன் பெரிய பெருமாள் ஆனவாறே
நித்ய ஸூரிகளும் வண்டுகளும் மா மயில்களும் ஆனபடி
சர்வை பரி வ்ருதோ தேவைர் வாநரத்வ முபாகதை -என்னக் கடவது இறே
ராஜா வெள்ளைச் சட்டை இட்டால் அடியார் கறுப்புச் சட்டை இடும் இத்தனை இறே-

———————————————————–

ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் அருளிய வியாக்யானம் –

சதுரமா மதிள் சூழ் இலங்கைக்கு இறைவன் தலை பத்து உதிர வோட்டி ஓர் வெங்கணை வுய்த்தவன்-
இரண்டாம் பாட்டில் உக்தமான அபதானங்கள் இரண்டில் பூர்வ அபதானதைப் பற்ற
ஓர் அபேஷையோடே -அதுக்கு உத்தரம் சொல்லிற்றாய் நின்றது மூன்றாம் பாட்டில் முற் கூறு
அதிலே அநந்தர அபதானதைப் பற்ற ஓர் அபேஷையோடே அதுக்கு உத்தரமாய் இருக்கிறது இதில் முற் கூறு

அன்று நேர்ந்த நிசாசரரை கவர்ந்த வெங்கணை காகுத்தன் -என்று ஜன ஸ்தானத்திலே
பெருமாளும் பிராட்டியும் இளைய பெருமாளுமாய் போய் புக்கு -அங்குத்தை ரிஷிகளை
ஆவா சந்த்வஹம் இச்சாமி -என்று அபேஷித்து -அவர்கள் அனுமதியோடே இருக்கிற காலத்தில்
அவ்விருப்புக்கு விரோதிகளாய் வந்த ஜனஸ்தான வாசிகளான கராதிகளை நிரசித்தாப் போலே
உம்முடைய ஹ்ருதயத்திலே இருப்பேன் என்று அநுமதி பெற்று வந்து புகுந்து
அங்கு விரோதிகளான ராகாதிகளை நிரசித்தான் என்று சொன்னீர்
அந்த ராகாதிகள் ஆகிறன சப்தாதி விஷய ப்ராவண்யம் அடியாக வருவது ஓன்று

அந்த ப்ராவண்யம் -தனக்கடி -அஹங்கார மமகாரங்கள் ஆகிற மதிளை இட்டுக் கொண்டு
நவ த்வாரமான புரத்திலே வர்த்திக்கிற -இந்த்ரியாணாம் ஹி சரதாம் யன் மநோ நுவிதீயதே –
என்கிறபடியே சஷூராதி கரணங்களோடு கூடின மனஸ் அன்றோ –

இந்த தீ மனம் கெட்டால் அன்றோ ராகாதிகள் போவது
அவை போனால் அன்றோ அவன் பேரேன் என்று இருப்பது

அது கிடக்கிடீர் –
அவன் தானே வந்து மேல் விழுந்து கிடக்கச் செய்தே –
சென்றதாம் என் சிந்தனை -என்றும் –
உந்தி மேலதன்றோ அடியேன் உள்ளத்து இன்னுயிர் -என்றும் உம்முடைய
திரு உள்ளம் தானே மேல் விழா நின்றது என்று சொன்னீர் -இது இப்படி மேல் விழும் போது
அவ்வரண் அழிந்தாக வேணும் -அழித்தார் யார் என்ன –

அந்த ஜன ஸ்தான வாசிகளான கராதிகளுக்கு குடி இருப்பாய் -அரணோடு கூடின இலங்கையை
ராவணனை அழிப்பதற்கு முன்னே -நேய மஸ்தி புரீ லங்கா -என்கிறபடியே அசத் கல்ப்பமாக்கி
இவர்களுக்கு அதிஷ்டான பூதனான ராவணனையும் சபரிகரமாக ஓர் அம்பாலே உருட்டின
சக்கரவர்த்தி திருமகனே இவ் வரணை அழித்தது –
மநோ ரஜ நீசரனை விவேக சர ஜாலத்தாலே சமிப்பித்தான் என்கிறார் –

சதுர மா மதிள் சூழ் –
சதுர ஸ்ரமாய் கட்டளைப்பட்டு அரணாகப் போரும்படி ஒக்கத்தை வுடைத்தான மதிள்களாலே
சூழப் பட்டு இருக்கும் -கட்டளைப் பட்டு இருக்கை யாகிறது –
வேலை சூழ் வெற்பெடுத்த விஞ்சி சூழ் இலங்கை – என்கிறபடியே கடலை அகழாக உடைத்தாய் அநந்தரம்
காடாய் பர்வதமாய் அதின் மேலே மதிளாய் இறே இருப்பது

(வெற்பெடுத்து வேலை நீர் கலக்கினாய் அதன்றியும்
வெற்பெடுத்து வேலை நீர் வரம்பு கட்டி வேலை சூழ்
வெற்பெடுத்த இஞ்சி சூழ் இலங்கை கட்டழித்த நீ
வெற்பெடுத்து மாரி காத்த மேக வண்ணன் அல்லையே திருச்சந்த விருத்தம் -39-)

மா மதிள்
சந்த்ராதித்யர்களும் பின்னாட்டியே வரும்படியான ஒக்கத்தை வுடைத்து
பீஷோ தேதி -என்னும்படி இறே இருப்பது –
ஈஸ்வரன் நேர் நிற்கவும் எதிரிடப் பண்ணின மதிள் இறே
இவ்வழகையும் அரணையும் விஸ்வசித்து இறே பையல் பெருமாளோடே எதிரிட்டது
இது தானிட்ட மதிள் என்று அறிந்திலன்
அரணுக்கு உள்ளே இருக்கச் செய்தே பெருமாளோடே எதிர்க்கையாலே இது தான் அழிகைக்கு
உடல் ஆய்த்து -அவ் வரணை விட்டுப் பெருமாள் தோளையே அரணாகப் பற்றின ஸ்ரீ விபீஷண ஆழ்வான்
கச்த ஏவ வ்யதிஷ்டத -என்று ஆகாசத்திலே நிலை பெற்று நின்றான் இறே-

இலங்கை-
குளவிக் கூடு போலே பிறரை நலிந்து புக்கு ஒதுங்குமிடம் -சத்துக்களுக்கு பிரவேசிக்க
ஒண்ணாதபடி இருக்கும் அரணும் மதிளும் -என்கை

இஹ சந்தோ ந வா ஸந்தி சதோ வா நாநு வர்த்தசே
ததாஹி விபரீதா தே புத்திரா சார வர்ஜிதா -என்றும் –
சதோ வா நாநு வர்த்தசே-என்னவே –
இஹ சந்தோ ந வா ஸந்தி-என்னும் அர்த்தம் சொல்லிற்றாய் இறே இருப்பது

ஆனால் இது சொல்லிற்று என் என்னில் -மனைக் கேடர் இல்லாமையோ
நீ உனக்கு இல்லாமையோ -என்கை -நல் வார்த்தை சொல்லுவான் ஒருவன் உண்டாக –
த்வாந்துதிக் குல பாம்ஸநம் -என்று புறப்பட விட்டான் இறே -கல்லாதவர் இலங்கை இறே
திருவடி வர -ராஷசர் வருவதற்கு முன்னே இலங்கை இறே கண்டு எதிர்த்தது
ஒரு கைம் பெண்டாட்டிக்கும் அடைத்துக் கொண்டு இருக்கலாம்படி இறே ஊரும் அரணும் இருப்பது –

இலங்கைக்கு இறைவன் –
முழஞ்சிலே சிம்ஹம் கிடந்தது என்னுமா போலே
அதுக்கு மேலே -லங்காம் ராவண பாலிதாம் -என்கிறபடி புலி கிடந்த தூறு என்று அஞ்சுமா போலே
அஞ்ச வேண்டும் படி இறே இதுக்கு நிர்வாஹகனான ராவணன் படி

இறைவன் –
சர்வேஸ்வரன் ஸ்ரீ வைகுண்டத்தை கலவிருக்கையாக கொண்டு வீற்று  இருந்தாப் போலே காணும்
இவனும் இலங்கைக்கு ஈஸ்வரன் என்று இருந்தபடி விரக்தனான திருவடியும் கூட மதித்த ஐஸ்வர்யம் இறே

யத்ய தர்மோ ந பலவான் ஸ்யாதாயம் ராஷசேஸ்வர
ஸ்யாதயம் ஸூர லோகஸ்ய சக்ரஸ் யாபி ச ரஷிதா –

இறைவன் –
துர் வர்க்கங்கள் அடைய ஒதுங்க நிழலாய் இருக்குமவன் –
ஒருவன் சாத்விகன் ஆனால் அவன் பக்கலில் சத்துக்கள் அடைய ஒதுங்கும் இறே
அப்படி இறே எதிர்தலையும் -யாவன் ஒருவனைக் கொலை செய்ய நினைக்கிறார்
அவன் தன்னையே அவ் வரணுக்கு காவலாக வைப்பார் கிடீர் அல்பம் அனுகூலித்தான் ஆகில்
தாயையும் தகப்பனையும் சேர இருக்க ஒட்டாதே பிரித்த பையல் இறே இவன் –
தேந ஸீதா ஜனஸ்தாநாத் ஹ்ருதா ஹத்வா ஜடா யுஷம் -ஹரணத்துக்கு பரிஹாரம் உண்டு
ஹநநத்துக்கு பரிஹாரம் இல்லை இறே
இவர் திரு உள்ளமும் பரிஹாரம் இல்லை என்று புண் பட்டு இருக்கும் இறே யிது

தலை பத்து உதிர ஒட்டி –
இப்படி பகவத அபசார பாகவத அபசார அசஹ்யா அபசாரங்களுக்கு எல்லை நிலமான பையலுடைய –
வர பலத்தாலே பூண் கட்டின தலைகளை பனம் பழங்களை காற்று உதிர்க்குமா போலே –
முளைக்கிற தலைகள் விழுகிற தலைகளைக் காணும்படி
நெடும் போது லீலா ரசம் அநுபவிக்க –
இத்தைக் கண்ட தேவர்கள் -இங்கனே முடிய நடத்துமாகில் செய்வது என் -என்று அஞ்ச –
இவனைக் கொல்ல வென்று வைத்த அம்பு தன்னை வாங்கி உதிரும்படியாக ஒட்டி –
அனுகூலிக்குமவன் ப்ரதிகூலித்தால் சொல்ல வேண்டா விறே
பூசலிலே இளைப்பித்து வைத்து ஓட வடிந்தபடி -கச்சா நு ஜா நாமி -என்கிறபடியே –
ஓர் வெங்கணை வுய்த்தவன்
அமோகமாய் இருக்கையும் -நிரசித்து அல்லது மீளாது இருக்கையும்
உய்த்தவன் -பிரயோகித்தவன்

பிற்றை நாளில் பூசலிலே ஜய அபஜயங்கள் அவ்யவஸ்திதம் அன்றோ என்று ப்ரஹ்மாதிகள் கருதினவாறே –
அத் தலைகளுக்கு வேர் பற்றான நெஞ்சிலே அத்விதீயமான ப்ரஹ்மாஸ்த்ரத்தை விட்டவன் –
அவன் பிரதிகூல்யத்தில் நிலை நின்றான் என்று அறிந்த பின்பு ப்ரஹ்மாஸ்த்ரத்தை விட்டபடி –

ஓத வண்ணன் –
ராவண வத அநந்தரம் -மஹா ராஜ ப்ரப்ருதிகளுடைய யுத்த ஸ்ரமம் அடையப் போம் படி
ஒரு கடல் கரையிலே நின்றாப் போலே இருக்கை -ராவணனை நிரசித்தான் இத்தனை போக்கி
இலங்கையில் ஒன்றும் குறி அழியாமல் இலங்கை ஐஸ்வர்யம் அடைய தன்ன தாக்கினான் இறே
அத்தை விபீஷண விதேயமாக்கின ஔதார்யத்துக்கு உதார ஸ்வபாவமான கடல் போலே இருந்துள்ள
ஸ்வபாவத்தை உடையவன் என்று -ஓத வண்ணன் -என்கிறார் ஆகவுமாம் –
அன்றிக்கே -ஓத வண்ணன் -என்று பெரிய பெருமாளை சொல்லுகிறது ஆகவுமாம் –

இத்தால் பிரதிகூலரை அம்பாலே அழிக்கும் –
அநுகூலரை அழகாலே அழிக்கும் -என்கை-

மதுர மா வண்டு பாட –
வினை அற்றவாறே ஆடல் பாடலுக்கு இடம் கொடுத்த படி
சிலர் பாடினால் ஆடுவாரும் வேணுமே
மயில்கள் ஆடப் புக்கன
மா மயில் –
ஒரு மயில் தோகை விரித்தால் அத் திருச் சோலைக்கு அணுக்கன் இட்டாப் போலே இருக்கை-

மாதலி தேர் முன்பு கோல் கொள்ள –
தொடுத்த தலைவன் வர வெங்கும் காணேன் -என்று
என்னோட்டையாள் ஒருத்தி உடைய விரோதியான ராவணனுடையதாய் தலை யற்று யற்று
விழும்படி சர வர்ஷத்தை உண்டாக்கின அந்த வீரன் என்னுடைய விரோதியையும் போக்கி
கொடு வரக் காண்கிறிலேன் என்று கண் மறையப் பார்த்து கொண்டு இருந்தாள் இறே ஒருத்தி

அப்படி இருக்க வேண்டாதபடி –
செருவிலே அரக்கர் கோனை செற்ற நம் சேவகனார் மருவிய பெரிய கோயில் –
என்கிறபடியே அந்த சேவகனார் தாமே ராவண வத அநந்தரம் -அந்த யுத்த சரமம் ஆறும்படி –
தெற்கு திரு வாசலாலே புகுந்து சாய்ந்து அருளினார்

கோயிலிலே சோலைகள் நித்ய வசந்தமாய் மது ஸ்பீதமாய் இருக்கையாலே
அந்த மதுவே கழுத்தே கட்டளையாக பானம் பண்ணி
அந்த ஹர்ஷத்துக்கு போக்கு வீடாக வண்டுகள் ஆனவை கல்வியால் வரும் அருமை இல்லாமையாலே
பாட்டை மதுரமாம் படியாக -தென்னா தெனா -என்று முரலா நிற்க
சிந்துக்கு ஆடுவாரைப் போலே ஸ்லாக்யமான மயில்கள் ஆனவை -இவ் ஊரில் சோலை
கொண்டல் மீது அணவும் சோலை யாகையாலே ஆலித்து ஆடா நிற்கும்
இவ் ஊரில் வர்த்திக்குமவர்களுக்கு சாரஸ்யமும் செருக்குமேயாய் யிருக்கும் யத்தனை-

பராவஸ்தனான போது நித்ய முக்தரும் தன்னை அனுபவித்து ஹாவு ஹாவு ஹாவு என்று களிப்பார்கள்
அவதீர்ணன் ஆனபோது காயந்தி கேசித் க்ருத்யந்தி கேசித் -என்று முதலிகள் ஆடுவது பாடுவது ஆவார்கள்
அர்ச்சா ரூபியாக கோயிலிலே கண் வளர்ந்து அருளப் புக்கவாறே வண்டுகளும் மயில்களும்
பாடுவது ஆடுவதாக நிற்கும்
ராஜா வெள்ளைச் சட்டை யிட்டால் அடியார் கறுப்புச் சட்டை இடும் இத்தனை இறே

அரங்கதம்மான் –
சம்சாரிகளுக்காக கோயிலிலே சாய்ந்து அருளி -தன்னுடைய ஸ்வாமித்வத்தை உதறிப் படுத்தவனுடைய
அங்கன் அன்றிக்கே -அம்மான் -என்று சௌலப்ய காஷ்டையால் வந்த மஹத்தை
சொல்லுகிறார் ஆகவுமாம்-

திரு வயிற்று உதர பந்தம் –
பண்டே திரு வயிறு தான் –
சிற்றிடையும் என்கிறபடியே வெறும் புறத்திலே ஆலத்தி வழிக்க வேண்டும்படி யாய்த்து இருப்பது –
அதுக்கு மேலே இறே ஆபரண ஸ்யாபரணமான திரு உதர பந்தம்
பெற்ற வயிற்ருக்கு பட்டம் கட்டின படி

என் உள்ளத்துள் நின்று உலாகின்றதே
அந்த திருப் பீதாம்பரத்திலும் செல்ல ஒட்டாதே -திரு நாபீ கமலத்தின் நின்றும் வர வீர்த்து
இதுக்கு ஆஸ்ரயமான திரு வயிற்றிலும் போக ஒட்டாதே தான் மேலே விழுந்து ரஷித்து
தன் ஏற்றம் அடைய தோற்றும்படி -மத்த கஜம் போலே செருக்காலே பிசகி நின்று உலவா நின்றது –

விஸ்வ ஸ்யாயதனம் மஹத் -என்றும் -நெஞ்ச நாடு -என்றும் சொல்லுகிற படியே என்னுடைய பெரிய
ஹ்ருதயத்தில் நின்று அழகு செண்டேறா நின்றது

———————————————————

ஸ்ரீ வேதாந்த தேசிகர் அருளிய முநி வாஹன போகம் வியாக்யானம் –

சதுர மா மதிள் சூழ் இலங்கைக்கு இறைவன் தலை பத்து உதிர-
குல பர்வதங்களை சேர்த்து இசைத்தாப் போலே -செறிவும் திண்மையும் உயர்த்தியும் உடைத்தாய்
எட்டு திக்குகளில் உள்ள திக் பாலர்களுக்கும் எட்டிப் பார்க்க ஒண்ணாது இருக்கிற
மதிள்களாலே இற்ற விடம் முறிந்த விடம் இல்லாதபடி எங்கும் ஒக்க சூழப்பட்டு
ஜல துர்க்க கிரி துர்க்க வன துர்க்கங்களாலே -துர்கங்களுக்கு எல்லாம்
உபமானம் ஆம்படி பிரசித்தமான இலங்கைக்கு ஈஸ்வரனாய்
துர்க்க பல வர பல புஜ பல சைன்ய பலங்களாலே செருக்கனாய்
மால்யவான் அகம்பனன் மாரீசன் முதலான ராஷசர்களோடு
ஹனுமான் விபீஷணன் முதலான சத்வ பிரக்ருதிகளோடு வாசியற
அவகீதமாகப் பேசப்பட்ட பெருமாள் பெருமையை அறிந்து வைத்தும் கண்டும்
மதி கேட்டான் படியே -தேந மைத்ரீ பவது தே யதி ஜீவிதும் இச்சசி என்ற தாய் வாய் சொல்லும் கேளாதே

அராஷசமிமம் லோகம் கர்த்தாஸ்மி நிசிதைசரை
ந சேச் சரண மப்யேஷி மாமுபாதாய மைதிலீம் -என்று பெருமாள் அருளிச் செய்து விட்ட
பரம ஹிதமான பாசுரத்தையும் அநாதரித்து -அடைகோட்டைப் பட்டவளவிலும்
பூசலுக்கு புறப்பட்டு விட்ட மகா பலரான படை முதலிகள் எல்லாரையும் படக் கொடுத்து
தான் ஏறிப் பொருதவன்று ரிபூணா மபி வத்சலரான பெருமாள் சரச் செருக்கு வாட்டி -நம்முடனே பொரும்படி
இளைப்பாறி நாளை வா -என்று விட -நாணாதே போய் மண்டோதரி முதலான பெண்டுகள்
முகத்திலே விழித்து -தன்னில் பெரிய தம்பியையும் மகனையும் படக் கொடுத்து தான் சாவேறாக
வந்து ப்ரதிஹத சர்வ அச்தரனான பின்பும் சினம் தீராதே சேவகப் பிச்சேறி  நின்ற ராவணனை
இனித் தலை யறுக்குமது ஒழிய வேறு ஒரு பரிஹாரம் இல்லை என்று திரு உள்ளம் பற்றி

ஒரு தலை விழ வேறு ஒரு தலை கிளைக்க முன்பு பண்ணின சித்ர வத ப்ரகாரம் அன்றிக்கே
ஒரு காலே பத்துத் தலையும் உதிரும்படியாக ஒட்டி யோர் வெங்கணை வுய்த்தவன்
தானே போய் ராவணன் தலை பத்தும் கைக் கொள்ள வேணும் -என்று சினம் உடைத்தாய் –
அத்விதீயமாய் இருப்பதொரு திருச் சரத்தை -தகையதே ஓட விட்டு -இரை போந்த இலக்கு
பெறுகையாலே அத் திருச் சரத்தை உய்யப் பண்ணினவன் –
சரத்தினுடைய ஆஸூகாரித்வத்தாலும்
ராவணனுடைய தைர்யத்தாலும் தலை பத்தும் உதிர்ந்த பின்னும் அவன் உடல் கட்டைப் பனை போலே
சிறிது போது இருந்து நிற்கும்படியாய் -இருந்தது
தலை பத்து உதிர ஒட்டி -என்றது முன்னில் பூசலில் ராவணனைத் தலை சாய்த்து –
கச்ச அநுஜா நாமி -என்று துரத்தி விட்ட படியாய்
ஓர் வெங்கணை வுய்த்தவன் -என்றது பின்பு அவனுடைய வத அர்த்தமாக அத்விதீயமான அஸ்த்ரத்தை
விட்டவன் என்னவுமாம்

ஓத வண்ணன் –
கண்டவர்களுடைய பாபத்தையும் தாபத்தையும் கழிக்க வற்றாம் சமுத்ரம் போலே ஸ்யாமளமான
திருமேனியை உடையவன் –

மதுர மா வண்டு பாட மா மயில் ஆட அரங்கத்தம்மான் –
ராவண வதம் பண்ணின வீர லஷ்மி யுடனே நின்ற அழகைக் கண்டு
ப்ரஹ்மாதிகள் ஸ்தோத்ரம் பண்ண -அப்சரஸ்ஸூக்கள் மங்கள ந்ருத்தம் பணணினாப் போலே  –
ஆத்மாநாம் மாநுஷம் மன்யே -என்கிற பெருமாளுடைய பூமிகைக்கு அநுரூபமாக
முக்தரும் நித்தியரும் கூடி -ரூபாந்தரம் -கொண்டு வந்தார்கள் என்னலாம்படி
அதி மதுரங்களாய் -ஜஞாநாதி குண மகாத்தையும் உடையவையான வண்டுகள் காலப் பண்கள் பாட –
பாட்டுக்கு அநுகுணமாக குணாதிகங்களான நீல கண்டங்கள் ந்ருத்தம் பண்ண –
இக் கீத ந்ருத்தங்களாலே மங்களோத்தரமான கோயில் ஆழ்வாருக்கு
உள்ளே சர்வாதிபதியான படி தோற்றக் கண் வளருகிற பெரிய பெருமாள் உடைய

திரு வயிற்று உதர பந்தம் -என் உள்ளத்துள் உலாகின்றதே –
தாமோதரம் பந்த கதம் -என்கிறபடியே பந்தகதருக்கு மோஷ ஹேதுவான தாமோதரத்வத்தை
வெளி இடா நின்ற திரு வயிற்றில் -திரு உதர பந்தம் -என்று திரு நாமத்தை உடைத்தான
திரு வாபரணம் அதி ஷூத்ரனான என்னுடைய அதி ராக தூஷிதமான ஹ்ருதயதினுள்ளே
அதுவே நிவாஸ பூமி என்னும்படி நின்று -அளவற்ற போக்யதா ப்ரகாசக வ்யாபாரங்களைப்
பண்ணா நின்றது

இது திரு மந்த்ரத்திலும் திரு மேனியிலும் மத்யத்திலே வரும் அனுபவம் –

———————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேதாந்த தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருப்பாண் ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ அமலனாதி பிரான் –ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை அருளிய-ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் அருளிய–ஸ்ரீ வேதாந்த தேசிகர் முநி வாஹன போகம் -வியாக்யானம் -மந்தி பாய் வட வேங்கட மாமலை–

May 18, 2013

ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை அருளிய அவதாரிகை –
மூன்றாம் பாட்டு –
திருப் பீதாம்பரத்தின் அழகு திரு நாபீ  கமலத்திலே வீசிற்று –

———–

ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் அருளிய-அவதாரிகை –

மூன்றாம் பாட்டு -மந்தி பாய் –

திருப் பீதாம்பரத்தின் அழகு திரு நாபீ  கமலத்திலே வீசிற்று –

முதல் பாட்டில் -ஆதி -பிரான் என்று ஜகத் காரண பூதனாய் -சர்வ ஸ்மாத் பரனாய் இருக்கும் என்று
சொல்லக் கேட்டவர்கள் -ப்ரஹ்ம விஷ்ணு ஸிவாத்மிகாம் -என்று மூவர் ஜகத் காரண பூதர்
என்று பிரசித்தமாய் இருக்க -இவனே ஜகத் காரண பூதன் என்று அறியும்படி என் என்ன –
சாஸ்திர முகத்தாலே நம்முடைய காரணத்வத்தை பிரகாசிப்பித்தோம் ஆகில்
அது கர்மாதீநமான ருஸ்யநுகூலமாக -கமுகின் நிரை போலே -அயதாவாக பிரகாசிக்கும் என்று பார்த்தருளி-

த்ரயோ தேவாஸ் துல்யாஸ் த்ரி தயமித மத்வை தமதிகம் த்ரிகா தஸ்மாத் தத்வம் பரமிதி விதர்க்கான் விகடயன்
விபோர் நாபீ பத்மோ விதி ஸிவ நிதாநம் பகவதஸ்த தன்யத் ப்ரூ பங்கீ பரவதிதி ஸித்தான்யதி ந -என்றும் –
முதலாம் திரு உருவம் மூன்று என்பார் ஒன்றே முதலாகும் மூன்றுக்கும் என்பர்
முதல்வா நிகரில் அலகு கார் உருவா நின்னகத்தன்றே புகரில் இலகு தாமரையின் பூ -என்றும்
சொல்லுகிறபடியே
தன் திரு நாபீ கமலத்திலே -ஜகத் காரண பூதராக பிரசித்தரான ப்ரஹ்ம ருத்ரர்களை சிருஷ்டித்துக் காட்ட
அந்த நாபீ கமலம் அம் முகத்தாலே தன்னுடைய மேன்மையையும் அழகையும் காட்டி
திருப் பீதாம்பரத்திலே துவக்கு உண்கிற என்னுடைய மனஸை தன் பக்கலில் இழுத்துக்
கொள்ளா நின்றது -என்கிறார்

அனுபாவ்யத்தை எல்லை கண்டு மீளுதல்
தம்முடைய ஆதரம் மட்டமாய் மீளுதல் செய்கிறார் அல்லரே
தம்முடைய சாபல்யம் அடியாக இழுப்பு உண்கிறார் இத்தனை இறே-

————-

ஸ்ரீ வேதாந்த தேசிகர் அருளிய முநி வாஹன போகம்-அவதாரிகை –
இப்படி இரண்டு பாட்டாலே
பகவத் சேஷத்வ பர்யவஸாநத்தையும் –
அந்ய சேஷத்வ நிவ்ருதியையும் அனுசந்தித்து -அநந்தரம் –
சேஷ பூதமான சேதன அசேதன வர்க்க
பிரதிபாதகமான த்ருதீய அஷரம் முதலான த்ருதீய காதையாலே –
சேஷத்வ ஞான ஹீனராயும் -விச்சேதம் இல்லாத சேஷத்வ ஞானம் உடையாராயும் -காதா சித்த சேஷத்வ ஞானம்
உள்ளவர்களையும் உள்ள ஜீவர்கள் எல்லாம் தம் தாமுடைய ஞான அநுரூபமாக
பிரதிகூல அநுகூல உபயவித பிரவ்ருதிகளில் நிற்கிற நிலையை உதாஹரித்துக் கொண்டு
பகவத் அனுபவத்தில் தமக்கு இடையிலே பெற்றதொரு ப்ராவண்யத்தை அனுசந்தித்து ப்ரீதர் ஆகிறார் –

———————–

மந்தி பாய் வட வேங்கட மாமலை வானவர்கள்
சந்தி செய்ய நின்றான் அரங்கத்து அரவின் அணையான்
அந்தி போல் நிறத் தாடையும் அதன் மேல் அயனைப் படைத்த தோர் எழில்
உந்தி மேல தன்றோ அடியேன் உள்ளத்து இன்னுயிரே–3–

பதவுரை

மந்தி–குரங்குகளானவை
பாய்-(ஒரு கிளையில் நின்றும் மற்றொரு கிளையில்) பாயப் பெற்ற
வடவேங்கடம் மா மலை–வடதிசையிலுள்ள திருவேங்கடமென்னும் திருமலையிலே
வானவர்கள்-நித்ய ஸூரிகள்
சந்தி செய்ய நின்றான்–பூக்களைக் கொண்டு ஆராதிக்கும்படி நிற்பவனாய்
அரங்கத்து–கோயிலிலே
அரவு இன் அணையான்-திருவனந்தாழ்வானாகிற போக்யமான படுக்கையை யுடையனான அழகிய மணவாளனுடைய
அந்தி போல் நிறத்து ஆடையும்–செவ் வானம் போன்ற நிறத்தையுடைய திருப் பீதாம்பரமும்
அதன் மேல்–அப் பீதாம்பரத்தின் மேலே
அயனை படைத்தது ஓர் எழில் உந்திமேலது அன்றோ–பிரமனைப் படைத்த ஒப்பற்ற அழகை யுடைய திருநாபிக் கமலமும் ஆகிய இவற்றின் மேற்படிந்ததன்றோ
அடியேன் உள்ளத்து இன் உயிரே-என்னுடைய மனஸ்ஸிலே விளங்குகிற இனிதான ஆத்ம ஸ்வரூபம்.

————————————————

ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை அருளிய வியாக்யானம் —

மந்திபாய் –
ஸ்ரீ திருமலையில் பலாக்கள் வேரே  பிடித்துத் தலை யளவும் பழுத்துக் கிடக்கையாலே
அங்குத்தை குரங்குகள் ஜாத் உசித சாபலத்தாலே ஒரு பழத்தை புஜிக்கப் புக -மற்றை
மேல் பழத்திலே கண்ணை யோட்டி -இத்தை விட்டு -அதிலே பாய்ந்து தாவா நிற்கும் அத்தனை யாய்த்து –
ஸ்ரீ பெரிய பெருமாளுடைய திவ்ய அவயவங்களிலே தாம் ஆழங்கால் படுகிறாப் போலே யாய்த்து அவைகளும்
கானமும் வானரமும் வேடுமுடை வேங்கடம் இறே

மந்தி பாய் –
ஒன்றை ஒன்றை பற்றி மாலையாக நாலா நிற்கும் –
திருச் சின்ன குரல் கேட்டவாறே பாய்ந்தோடா நிற்கும் -என்றுமாம்
பரம பதமும் திருமலையும் கோயிலும் திரு வயோத்யையும் திருச் சோலையும் ஒரு
போகியாய் இருக்கிறபடி -எங்கும் மாறி மாறி தங்குகை

மந்திபாய் –
பலாக்கள் வேரோடு பனையோடு வாசியறப் பழுத்துக் கிடைக்கையாலே
ஒன்றிலே வாய் வைக்கப் பெறாதே தான் வேண்டினபடியே திரியும்படி யாய்த்து –

வட வேங்கடம் –
தமிழ் தேசத்துக்கு எல்லை நிலம் –
போக்யதை அளவற்று இருக்கை –
உபய விபூதியும் ஒரு மூலையிலே அடங்கும் என்றுமாம் –

வானவர்கள் சந்தி செய்ய நின்றான் –
எத்தனையேனும் தண்ணியார்க்கும் முகம் கொடுத்து நிற்கிற இந் நீர்மையை
அனுசந்தித்து நித்ய ஸூரிகள் வந்து படுகாடு கிடப்பது இங்கே யாய்த்து
மேன்மையை அநுபவிக்கும் அத்தனை இறே -அங்கு –
சீல அநுபவம் பண்ணலாவது -இங்கே இறே
நித்ய ஸூரிகள் திரு மலையிலே நிற்கிற சீலவத்தையிலே ஈடுபட்டு வந்து ஆஸ்ரயிக்க
குருடருக்கு வைத்த அறச் சாலையிலே விழி கண்ணர் புகுரலாமோ என்று -தான் –
ஆனைக்குப் பாடுவாரைப் போலே -மந்திகள் பக்கலிலே திரு உள்ளத்தை வைத்தான் -என்றுமாம் –

அரங்கத்து அரவின் அணையான் –
அங்கு நின்றும் இங்கே சாய்ந்தபடி –
பரம பதத்தின் நின்றும் அடி ஒற்றினான்
திருமலை அளவும் பயணம் உண்டாய் இருந்தது –
அங்கு நின்றும் வடக்குத் திருவாசலாலே கோயிலே சாய்ந்தான் –
ராமாவதாரத்தே பிடித்து அடி ஒற்றினான் –
ராவண வதம் பண்ணித் தெற்கு திரு வாசலாலே வந்து சாய்ந்த வித்தனை -என்றுமாம் –

அரவின் அணையான்
திரிகிறவன் சாய்ந்து அருளினால் உள்ள அழகு
அரவு
நாற்றம் குளிர்த்தி மென்மையும்

அரங்கத்து அரவின் அணையான்
சேஷ்யே புரஸ் தாச்சாலாயாம் -ஸ்ரீ பரத ஆழ்வானை வளைப்பு கிடக்க விட்டுப் போந்து –
கடல் கரையிலே வளைப்புக் கிடந்தால் போலே -சம்சாரிகளைப் பெற்றால் அல்லது போகேன்
என்று வளைப்புக் கிடக்கிறான்
சக்கரவர்த்தி திருமகனைப் போலே முதலில் சரணம் புக்கு முகம் காட்டா விட்டவாறே
சாபமா நய என்று சீறுமவர் அல்லர்
ஆற்றாமையைக் காட்டி சரணம் புக்குக் கிடக்குமவர் இறே இவர்-

அந்தி போல் நிறத்தாடையும்
சந்த்யா ராகம் போலே இருந்துள்ள திருப் பீதாம்பரம்
அரைச் சிவந்த வாடை -பின்னாட்டுகிற படி
அதன் மேல் –
இவ் வழகின் நின்றும் கால் வாங்க மாட்டுகிறிலர்-

அயன் -இத்யாதி –
சதுர தச புவன ஸ்ரஷ்டாவான ப்ரஹ்மாவுக்கு உத்பத்தி ஸ்தானமான திரு நாபீ கமலத்தின்
மேலதன்றோ -சதுர்முகன் ஸ்ருஷ்டி பூர்வ காலத்திலே யாகிலும் இப்போது ப்ரஹ்மாவுக்கு
உத்பத்தி ஸ்தானம் என்று கோள் சொல்லித் தரா நின்றது –
திரு நாபீ கமலம் -எழில் உந்தி இளகிப் பதிக்கை -ப்ரஸவாந்தஞ்ச யௌவனம் -என்கிறபடி
அன்றிக்கே இருக்கை

அடியேன்
பதிம் விஸ்வஸ்ய -யஸ்யாஸ்மி-என்கிற பிரமாணத்தாலே அடியேன் -என்கிறார் அல்லர்
அழகுக்கு தோற்று அடியேன் என்கிறார்

அடியேன் உள்ளத்து இன்னுயிரே
என்னுடைய நல் ஜீவனானது திரு நாபீ கமலத்தது அன்றோ -என்கிறார்
விடாமைக்கு பற்றாசு -மருடியேலும் விடேல் கண்டாய் -என்னுமா போலே –

இப் பாட்டில்
பெரிய பெருமாள் பக்கலில் திருவேம்கடமுடையான் தன்மையும் உண்டு என்கிறார்-

—————————————————

ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் அருளிய-வியாக்யானம் –

மந்தி பாய் வட வேங்கட மாமலை வானவர்கள்-சந்தி செய்ய நின்றான் அரங்கத்து அரவின் அணையான்-

கீழ்ப் பாட்டில் -உலகம் அளந்து அண்டமுற நிவர்ந்த நீண் முடியன் -கடியார் பொழில் அரங்கத்தம்மான் -என்றது –
இந்த லோகங்களை அடைய தன் திருவடிகளாலே அளந்து கொண்டார் பெரிய பெருமாள்
என்றாரே -அங்கனே சொல்லாமோ –
அன்று ஞாலம் அளந்த பிரான் சென்று சேர் திருவேம்கடம் -என்று அன்றோ நம் ஆழ்வார் வார்த்தை –
திருவேம்கடமுடையான் திருவடிகளைக் காண வேண்டும் என்று -வழிபாடு
செய்யும் ஸூரிகளும் எந்நாளோ நாம் மண் அளந்த இணைத் தாமரைகள் காண்பதற்கு -என்று
அன்றோ பிரார்த்தித்தது -ஆகையாலே இந்த பூமியை அடைய திருவடிகளால் ஆக்கிரமித்து
அடிக்கீழ் அமர்ந்து புகுந்து அடியீர் வாழ்மின் -என்று தன் திருக் கையாலே -உலகம் அளந்த
பொன்னடியைக் காட்டிக் கொடு நிற்கிறமவனுமாய் -தான் ஓங்கி நிற்கின்றான் தண்ணருவி வேங்கடம் –
என்கிறபடியே அண்டமுற நிவர்ந்த நீண் முடியனுமாய் நிற்கின்றான் திருவேங்கடமுடையான் அன்றோ என்ன –
அந்த திருவேங்கடமுடையான் ஆகிறானும் இங்குக் கண் வளர்ந்து அருளுகிற பெரிய பெருமாளே -என்கிறார்-

மந்திபாய் வடவேங்கட மாமலை –
திருப் பீதாம்பரத்தின் அழகை அனுபவிக்கச் செய்தே -திரு நாபீ கமலத்தின் அழகிலே
தாம் இழுப்பு உண்ட சாபலத்துக்கு போலியாய் இருக்கையாலே குரங்குகளை
நிதர்சனமாக சொல்லுகிறார் –

மந்தி பாய் –
திருமலையிலே பலாக்கள் வேரே பிடித்துத் தலை யளவும் பழுத்துக் கிடைக்கையாலே
அங்குத்தை குரங்குகள் ஜாத் உசித சாபல்யத்தாலே ஒரு பழத்தை புஜிக்கப் புகுகிறவை
மற்றைக் கொம்பில் பழத்தில் கண்ணை யோட்ட -இத்தை விட்டு அதிலே தாவப் பாய்ந்து திரியா
நிற்கும் ஆய்த்து -பெரிய பெருமாளுடைய திவ்ய அவயவங்களிலே தாம் ஆழங்கால் படுகிறாப் போலே
கானமும் வானரமும் வேடுமுடை வேங்கடம் இறே

மந்தி பாய் –
ஒன்றை ஓன்று பற்றி நாலா நிற்கும்
திருச் சின்னம் கேட்டவாறே பாய்ந்து ஓடா நிற்கும் என்றுமாம்-

பரம பதமும் திருமலையும் கோயிலும் திரு வயோத்யையும் திருச் சோலையும் ஒரு
போகியாய் இருக்கிறபடி -எங்கும் மாறி மாறி தங்குகை-

வடவேங்கடம் –
திருமலை என்னாதே வடவேங்கடம் -என்கிறது தமிழுக்கு எல்லை நிலம் அதுவாக சொல்லுகையாலே
வேத சப்த உப ப்ரும்ஹண சப்தங்களால் அன்றிக்கே தம்முடைய ஜந்ம அனுரூபமாக
தாம் கவி பாடுகிற சப்தம் நடையாடுகைக்கு எல்லை அதுவாகையாலே சொல்லுகிறார் –

மா மலை –
1-போக்யதையின் மிகுதியைச் சொல்லுகிறது ஆதல் –
2-பரன் சென்று சேர் -என்றும் -முன்னம் அடைமினோ -என்றும் சொல்லுகிறபடியே
சேஷியானவன் தன்னுடைய ரஷகத்வ சித்திக்காகவும்
3-சேஷ பூதரானவர்கள் தங்கள் ஸ்வரூப சித்திக்காகவும் வந்து சேருகையாலே வந்த
ஸ்லாக்யதையை சொல்லுகிறது ஆதல் –
4-ஸூரிகள் பரம பதத்தின் நின்றும் திருவேங்கடமுடையானை அநுபவிக்க வரும் போது
தன் சிகரத்தில் இளைப்பாறி வரலாம்படி யிருக்கிற உயர்த்தியைச் சொல்லுகிறது ஆதல் –
அன்றிக்கே –
5-உபய விபூதியும் ஒரு மூலையிலே அடங்கும் என்றுமாம்-

வானவர்கள் சந்தி  செய்ய –
நித்ய ஸூரிகள் -சிந்து பூக் கொண்டு போக ரூபமான சமாராதநத்தைப் பண்ண –
அவன் பரம் பதத்தின் நின்றும் தன் நீர்மை பிரகாசிக்கைக்காக ஆதியான தான் திருமலையிலே வந்தவாறே –
விண்ணவர் கோனான தன்னுடைய மேன்மையை அனுபவித்துக் கொண்டு போந்த ஸூரிகள்
விரையார் பொழில் வேங்கடவனான நீர்மையை அனுபவிக்கைக்காக திருமலையிலே வருவார்கள் –
அந் நீர்மைக்கு அடியான மேன்மையை அனுபவிக்கைக்காக திருமலையில் நின்றும் பரம பதத்து ஏறப் போவர்கள் –

நின்றான் –
இந் நிலையாலே ஒரு உத்தியோகம் உண்டு என்று தோற்றும்படி நின்றான் –
பெருமாள் ருச்யமூக பர்வதத்திலே மஹாராஜர் தொடக்கமான வானர சேனைக்கும் இளைய பெருமாளுக்கும் ஒக்க
முகம் கொடுத்துக் கொண்டு நிற்கிற நிலையும்
வானராணாம் நராணாஞ்ச கதமாஸீத் சமாகம -என்று -திருவடியை பிராட்டி -இங்கித
ஆகாரங்கள் அறியாத குரங்குகளுக்கும் விலஷணமான மனுஷ்யர்களுக்கும் கூட்டுறவு உண்டான படி எங்கனே –
கத மாசீத் சமாகம -தன் கடாஷ பாதமும் ஆபரண பாதமும் உண்டு என்று அறியாதே
நான் சேர விட -பின்பு -தோழன் நீ -என்ன ப்ராப்தமாய் இருக்க -நான் பிரிந்து
இங்கே இருக்கக் கூட்டரவு உண்டான படி என் என்று கேட்க –
ராம ஸூக்ரீவ யோரைக்யம் தேவ்யேவம் சம ஜாயதே -என்று அவர்கள் சேர்ந்த பிரகாரம் அறிந்திலேன் –
அஹம் சர்வம் கரிஷ்யாமி -என்கிற இளைய பெருமாளும் அருகே நிற்க அவர் பரிகரமான நான் இன்று வந்து
அந்தபுர பரிகரமாம்படி கூடினார்கள் -என்றான் இறே-

நின்றான் –
நித்ய ஸூரிகள் திரு மலையிலே நிற்கிற சீலவத்தையிலே ஈடுபட்டு வந்து ஆஸ்ரயிக்க
குருடருக்கு வைத்த அறச் சாலையிலே விழி கண்ணர் புகுரலாமோ என்று -தான் –
ஆனைக்குப் பாடுவாரைப் போலே -மந்திகள் பக்கலிலே திரு உள்ளத்தை வைத்தான் -என்றுமாம் –

நின்றான்-
மங்குல் தோய் சென்னி வடவேங்கடத்தானைக் கங்குல் புகுந்தார்கள் காப்பணிவான்
திங்கள் சடையேற வைத்தானும் தாமரை மேலானும் குடியேறத் தாங்குவித்துக் கொண்டு –
என்கிறபடியே ப்ரஹ்ம ருத்ராதிகள் சந்த்யா காலத்திலே வந்து சமாராதனம் பண்ணப்
பெரிய மேன்மையோடே  நின்ற நிலையைச் சொல்லுகிறதாகவுமாம் –

நின்றான் –
இந் நிலையிலே ஒரு உத்யோகம் உண்டு என்று தோற்றும்படி நின்றான் –
ஸூரிகள் அந்த உத்தியோகத்தை அடி ஒற்றினவாறே -வடக்குத் திரு வாசலாலே வந்து புகுந்து –
கோயிலிலே படுக்கையிலே சாய்ந்தவனாய் இருந்தான் –

இவன் கிடக்கிறபடியைக் கண்டு -நடந்த கால்கள் நொந்தவோ -என்று வயிறு பிடிக்க வேண்டாதபடி
நின்று இருந்து வெக்கணைக் கிடந்தது என்ன நீர்மை -என்கிறதிலே போர ப்ரீதராய்
இனி சம்சாரக் கிழங்கு எடுத்தால் அல்லது கிளம்பான் என்று மீண்டு போனார்கள்-

ஆஸ்தாந்தே குண ராசிவத் குண பரீவா ஹாத்ம நாம் ஜங்கநாம் சங்க்யா
பௌமநிகேத நேஷ்வபி குடீ குஞ்ஷே ஷூ ரங்கேச்வர
அர்ச்ய சர்வ சஹிஷ்ணு  ரர்ச்சக பராதீநா கிலாத்மஸ்திதி
ப்ரீணீ ஷே ஹ்ருதயாளு பிஸ்தவ தத சீலாஜ் ஜடீ பூயதே -ஸ்ரீ ரெங்கராஜ ஸ்தவம் -2-–74-

(ஹே ரெங்கேஸ்வர–தே குண ராசிவத் குண பரீவாஹ ஆத்மாநம் –தேவரீருடைய குண சமூகங்களுக்குப் போலே
ஆத்ம குணங்களுக்கு பரிவாக ரூபமான

ஜன்மனாம் சங்க்யா ஆஸ்தாம்–அவதாரங்களும் எண்ணிக்கை யானது கிடக்கட்டும்

ஆஸ்தாம் – அநாதார யுக்தி–எண்ணிறந்த வித்துவான்கள் சேஷ்டிதங்கள் இருந்தாலும்

அர்ச்சாவதாரங்களைப் பார்த்தால் பரத்வ ஸ்தானமே

பவ்ம நிகேத நேஷு அபி குடீ குஞ்சேஷு -இப் பூ மண்டலத்தில் உள்ள ஆலயங்களிலும் க்ருஹங்களிலும் ஆஸ்ரயங்களிலும்

அர்ச்சயஸ் –ஆராதிக்க அரியவராயும்

சர்வ ஸஹிஷ்ணு –எதையும் சகிப்பவராயும்

அர்ச்சக பராதீன அகில ஆத்ம ஸ்திதி–அர்ச்சகர்களுக்கு பரவசப்பட்ட சகல நிலைமைகளையும் உடையராய்

ப்ரீணீஷே –உகந்து அருளா நின்றீர்-

ஹ்ருதயாலுபி தவ ததச் சீலாத் ஐடீ பூயதே–அப்படிப்பட்ட தேவருடைய சீல குணத்தினால்

ச ஹ்ருதயர்–ஆழ்வாராதிகள் – மோஹிக்கிறார்கள்

குணங்களும் அவதாரங்களும் எண்ணிறந்தவையாய் இருந்தும் ஸ்ரீ கோயில்கள் வீடுகள் ஆசிரமங்களில்
அர்ச்சக பராதீனமாக மகிழ்ந்து இருக்கும் ஸுவ்சீல்யம் என்னே-

பின்னானார் வணங்கும் ஜோதி -நம் போல்வாருக்கு அன்றோ
ஸ்ரீ ரெங்கா-நீ உன் கடாக்ஷ வீக்ஷணங்களை வழங்கி யோக நித்திரை பன்னி அருள்கிறாய்-

அர்ச்சாவதார பரமான ஸ்லோகம் -தேவருடைய ஞான சக்த்யாதி கல்யாண குணங்கள் போலே
அவற்றுக்கு பிரகாசகங்களான வ்யூஹ விபவ அவதாரங்களும் அசங்க்யாதங்கள் ஆகையால் பேச முடியாது–

குணங்களைப் போலவே ப்ரவாஹ ரூபமான அவதாரங்களும் எண்ணிறந்தவை அன்றோ –
அது இருக்கட்டும் –

தேவர் பூமியில் உண்டான ஸ்ரீ கோயில்களிலும்
மாளிகைகளும்
ஆஸ்ரமங்களிலும் அஞ்ஞாபிஞ்ஞ வர்ணாஸ்ரம விபாகமற
எல்லாராலும் பாஞ்சராத்ர விதிப்படி ஆராத நீயனாய் –
மத்யே சம்பாவிதங்களான அபராதங்களையும் பொறுத்து
ஆசன போஜன சயனாதிகள் அவர்கள் இட்ட வழக்காய்-அவர்கள் இட்டது கொண்டு திருப்தராகிறது –

அப்படிக்கொத்த அந்யாத்ருசமான தேவர் சில குணத்தால் சஹ்ருதயர் எல்லாம் ஈடுபடும்படி யாய்த்து என்கிறார் –

மத்துறு கடை வெண்ணெய் எத்திறம் என்று ஈடுபடுவபர்கள் இதில் ஈடுபடச் சொல்ல வேணுமோ -என்றபடி –)

அரவின் அனையான் –
புஷ்பஹாச சுகுமாரமான அவ்வடிவுக்கு போறாத படி காடுகளிலும் கரைகளிலும்
திருவடிகளைக் கொண்டு உலாவின விடாய் எல்லாம் தீரும்படி –
சைத்ய மார்த்தவ சௌ ரப்யங்களை உடைய திருவநந்த ஆழ்வான் மேலே கண் வளர்ந்து அருளினான் –
அரங்கத்து அரவின் அணையான் -என்று சீலத்தையும் மேன்மையும் அழகையும் அனுபவிக்கிறார்

அரங்கத்து அரவின் அணையான் –
சேஷ்யே புரஸ் தாச்சாலாயாம் யாவநமே ந ப்ரஸீததி -என்று ஸ்ரீ பரத ஆழ்வானை வளைப்பு
கிடக்க விட்டு போந்து -கடல் கரையிலே வளைப்பு கிடந்தால் போலே
சம்சாரிகளைப் பெற்றால் அல்லது போகேன் என்று வளைப்பு கிடக்கிறான்-
சக்கரவர்த்தி திருமகனைப் போலே முதலில் சரணம் புக்கு முகம் காட்டா விட்டவாறே
சாபமா நய என்று சீறுமவர் அல்லர்
ஆற்றாமையைக் காட்டி சரணம் புக்குக் கிடக்குமவர் இறே இவர்-

அந்தி போல் நிறத்தாடையும்
கீழ்ச் சொன்ன சிவந்த வாடை -ஆபரண கோடியிலேயாய் கழற்றவுமாய் இருக்கும்
இது சஹஜம் என்கைக்கு உடலாக -அந்தி போல் நிறத்தாடையும்-என்கிறார்
சந்த்யா ராக ரஞ்சிதமான மேகம் போலே யாய்த்து திருவரையும் திருப் பீதாம்பரமும் இருக்கிறபடி
திருமேனிமயில் கழுத்து சாயலாயே இறே இருப்பது -அத்தோடு சேர்ந்த திருப் பீதாம்பரம்
சந்த்யா ராக ரஞ்சிதமான காளமேகம் போலே ஆகர்ஷமாய் இறே இருப்பது
அரைச் சிவந்தவாடை -பின்னாட்டுகிறது -என்றுமாம்-

அதன் மேலே –
அவ்வழகுக்கு மேலே
அயனை இத்யாதி –
ஜகத் காரண பூதனான பிரசித்தனான சதுர் முகனை தன் பக்கலிலே உண்டாக்கி
அதடியாக வந்த மேன்மையால் உண்டான அத்வதீயமான அழகை உடைத்தாய்த்து திரு நாபீ கமலம் இருப்பது –
லோகத்தில் உத்பாதகருடைய அழகு பிரசவாந்தமாய் இருக்கும் –
இவனை உண்டாக்கிய பின்பு ஒளியும் அழகும் மிக்கது அத்தனை-
யோ ப்ரஹ்மாணம் விததாதி தம் ஹதேவம் என்கிறபடியே இவனை சிருஷ்டித்த பின் இறே த்யோதமனாய் ஆயிற்று –

ஓர் எழில் உந்தி –
சௌந்தர்யாக்யா சரிதுரசி விச்தீர்ய மத்யா வருத்தா ஸ்தானால்பத்வாத் விஷமகதி ஜாவர்த்த கர்த்தாபநாபி
ப்ராப்ய ப்ராப்த பிரதி மஜகநம் விஸ்ருதா ஹஸ்தி நாத ஸ்ரோதா பேதம் பஜதி பவதபாததே ஸாபதேஸாத் –
என்கிறபடியே -சௌந்தர்யம் ஆகிற பெரிய ஆறு திரு முடி யாகிற மலைத் தலையின் நின்றும்
அகன்ற திருமார்பு ஆகிற தாழ்வரையிலே வந்து குதி கொண்டு -அங்கே பரந்து கீழ் நோக்கி யிழிந்து
சிற்றிடை யாகையாலே அங்கே இட்டளப்பட்டு பின்பு திரு நாபி யாய்ச் சுழி யாறு பட்டது என்னக் கடவது இறே-

அடியேன் உள்ளத்தின் இன்னுயிரே –
அடியேனான என்னுடைய அகவாயில் வர்த்திக்கிற ஹ்ருதயமானது –

உந்தி மேலதன்றோ –
அடியேன் என்று இப்போது இவர் ஸ்வரூப ஞானம் பிறந்து
பதிம் விஸ்வஸ்ய -யஸ் யாஸ்மி -பரவாநஸ்மி -தாஸ பூதாஸ் ஸ்வதஸ் சர்வே ஹ்யாத்மாந பரமாத்மந -என்கிற
பிரமாணங்களாலே -அடியேன் -என்கிறார் அல்லர் –
குணைர்த் தாஸ்ய முபாகதராய்ச் சொல்லுகிறாரும் அன்று -அழகுக்கு தோற்று -அடியேன் -என்கிறார் –

அதிலும் வடிவழகின் சாமாந்யத்தைப் பற்றி சொல்லுகிற வார்த்தையும் அன்று
ஓர் அவயவத்தின் அழகுக்கு தோற்று சொல்லுகிற வார்த்தை
உயிர் -என்கிறது மனஸ்ஸை –
ஊனில் வாழ் உயிர் -என்று கொண்டாடினாப் போலே
வடிவழகு தமக்கு ரசித்து போக்யமாம்படி இருக்கையாலே இன்னுயிர் என்கிறது
சிலரை உண்டாக்குகிறது கிடீர் என்னை அழிக்கிறது-

அந்த திரு நாபி கமலம்
அதிகாரி புருஷர்களான ப்ரஹ்மாதிகளை உண்டாக்கும்
அடியேன் -என்று இருப்பாரை அழிக்கும்

பிள்ளை யழகிய மணவாள அரையர் பெருமாள் திருவடிகளில் புக்கு -நாயந்தே அடியேன்
திருவேங்கடமுடையானை திருவடி தொழுது வர வேணும் என்று நினையா நின்றேன் -என்று விண்ணப்பம் செய்ய –
வாரீர் அமலனாதிபிரானை ஒருகால் இசை சொல்லி காணீர் -என்று திரு உள்ளமாக
பிள்ளையும் ஒரு கால் இசையை விண்ணப்பம் செய்யக் கேட்டருளி –
இனிப் போகிலும் போம் இருக்கிலும் இரும் என்று திரு உள்ளமாயினார் –
முதலில் கண் படுவது திரு நாபீ கமலம் இறே

இப் பாட்டில் -பெரிய பெருமாள் பக்கலிலே திருவேங்கடமுடையான் ஆன தன்மையும் உண்டு என்கிறது-

——————————————————–

ஸ்ரீ வேதாந்த தேசிகர் அருளிய முநி வாஹன போகம்-வியாக்யானம் –

மந்திபாய் வடவேங்கட மாமலை
சபலரான சம்சாரிகளுக்கு நிதர்சனமான வானர வர்க்கம் -நாநா சாகைகளில் உள்ள
ஷூத்ர பலங்களை புஜிப்பதாக -கதாகதம் காமகாமா லபந்தே -என்கிறபடியே -ஒன்றை விட்டு
ஒன்றிலே பாய்ந்து திரிகைக்கு நிலமாய் -கலி யுகத்திலே பகவத் சம்பாவனை உடைத்ததாக
புராண சித்தம் ஆகையாலே ஆழ்வார்கள் அவதரிக்க பெற்ற அகஸ்ய பாஷா தேசத்துக்கு உத்தர அவதியாய் இருக்கிறது
புராண சித்தமாய் -ஈஸ்வரன் தன்னைப் போலே ஸ்வரூப ரூப குண விபூதி ப்ரபாவங்களால்
உண்டான மஹத்வத்தை உடைத்தான திருமலையிலே

வானவர்கள் சந்தி செய்ய நின்றான் –
பரம பதத்தில் கைங்கர்ய சாம்ராஜ்யத்துக்கு அதி க்ருதரான முக்தரும் நித்தியரும் தேச
உசிதமான தேஹங்களைக் கொண்டு உசிதமான கைங்கர்யத்தைப் பண்ணி இவர்கள்
ஆஸ்ரயிக்கைக்கு உத்தேச்யனாய் நின்றான் –

அரங்கத்தரவின் அணையான்
ஏற்றம் உள்ள அளவும் ஏற வேண்டும்படியான திருமலை ஆழ்வாரும் பரம பத ஸ்தாநீயம்
என்னும்படி எளிதாக கிட்டலாம்படியான கோயில் ஆழ்வாருக்கு உள்ளே –
ஒழிவில் காலம் எல்லாம் உடனாய் மன்னி வழு விலா வடிமை செய்யும் வானவர்களுக்கு
படிமாவாய் நிச்சேஷ ஜகத் ஆதார குருவான தன்னைத் தரிக்கைக்கு ஈடான
ஞான பல ப்ரகர்ஷத்தை உடையனாய் -ஸூரபி ஸூகுமார ஸீதளமான திரு அரவு அணையிலே
கண் வளர்ந்து அருளுகிற பெரிய பெருமாள் உடைய-

அந்தி போல் நிறத்தாடையும்
ஆஸ்ரீதருடைய அஞ்ஞான அந்தகாரத்தை கழிக்க வல்ல சமயக் ஞான ஸூர்யோதததுக்கு
பூர்வ சந்த்யை போலேயும் புகர்த்த நிறத்தை உடைதான -செவ்வரத்த உடை யாடையும் –
இது மேலில் அனுபாவ்யத்தை அவலம்பிக்கைக்கு அனுபூதாம்சத்தை அனுவதித்த படி –

மேல் அநுபாவ்யம் ஏது -என்ன –
அதன் மேல் அயனைப் படைத்த தோர் எழில் உந்தி –
அநுபூதமான திருப் பீதாம்பரத்துக்கு மேலாய் -இதன் நிறத்துக்கு நிகரான சிவந்த
தாமரைப் பூவை உடைத்தாய் -அதின் மேல் வ்யஷ்டி ஸ்ருஷ்டி சமயத்தில் முற்பட
அயோநிஜனான ப்ரஹ்மாவை ஸ்ருஷ்டித்த அத்விதீயமான அழகை உடைத்தான திரு வுந்தி

ப்ரஹ்மாவுடைய ஸ்ருஜ்யத்வம் சொல்ல -கைமுதிக ந்யாயத்தாலே ருத்ர இந்த்ராதிகள்
உடைய ஸ்ருஜ்யத்வம் சொல்லிற்றாம்

இத்தால் ப்ரதிபுத்தர்க்கு ஸ்ரீயபதி ஒழிய சரண்யாந்தரமும் ப்ராப்யாந்தர்மும் இல்லை என்றது ஆயிற்று

இங்கு ப்ரஹ்மாவை சொன்னது முமுஷுக்களை ஸ்ருஷ்டித்த உபகாரத்துக்கு உதாஹரணமுமாகிறது

மேலதன்றோ –
என்றது இந்த திரு வுந்தியையே அனுபாவ்யமாகக் கொண்டன்றோ இருக்கிறது என்னவுமாம்
இதனுடைய அனுபவம் இட்ட வழக்காய் இருக்கிறது என்னவுமாம்

அடியேன் உள்ளத்து இன்னுயிரே –
ஆத்ம தாஸ்யம் ஹரே ஸ்வாம்யம் ஸ்வபாவஞ்ச சதா ஸ்மர -என்கிறபடியே
பரம காருணிக கடாஷத்தாலே ஸ்வபாவ தாஸ்ய ப்ரதிபோதம் உடையேனான என்னுடைய
சத்வோத்தரமான மனசிலே பிரகாசிக்கிற ஸ்வாதுதமமான என் ஆத்ம ஸ்வரூபம்
உள்ளம்-என்று ஹிருதய பிரதேசத்தைச் சொல்லவுமாம் –

இன்னுயிர் என்று பகவத் அனுபவத்துக்கு அநுரூபம் ஆகையாலே இனிதான ப்ராணாதிகளைச் சொல்லவுமாம் –

ஜ்ஞாநீது பரமை காந்தீ பராயத் தாத்ம ஜீவந -மச் சித்தா மத்கத ப்ராணா -இத்யாதிகளை இங்கே அனுசந்திப்பது

——————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேதாந்த தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருப்பாண் ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ அமலனாதி பிரான் –ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளைஅருளிய-ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார்அருளிய–ஸ்ரீ வேதாந்த தேசிகர் முநி வாஹன போகம் -வியாக்யானம் -உவந்த உள்ளத்த்னாய் உலகம அளந்து அண்டமுற –

May 17, 2013

ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை அருளிய அவதாரிகை –

இரண்டாம் பாட்டு –
முதல் பாட்டில் அவன் தொடர்ந்து வந்தபடி சொன்னார்
இப் பாட்டில் தாம் மேல் விழுந்த படி சொல்லுகிறார்-

—-

ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் அருளிய-அவதாரிகை-

இரண்டாம்பாட்டு –
உவந்த -கீழில் பாட்டில்

அரங்கத்தம்மான் திருக்கமலபாதம் வந்து என் கண்ணினுள்ளன
ஒக்கின்றனவே -என்று திருவடிகள் தானே தம்மை விஷயீ கரித்துத் தம் திரு உள்ளத்திலே
பிரகாசித்தபடியைச் சொன்னார்

இப்பாட்டில் -திருவடிகளில் தொடர்ந்த திரு உள்ளம் திருப்
பரியட்டதின் மேல் சேர்ந்தபடி எங்கனே என்னில் –
தான் அறிந்து சேரில் விஷயத்தின் போக்யதைக்குக் குற்றமாம்
ஆகையாலே போக்யதை அளவுபட்டதும் அல்ல
ஆசை தலை மடிந்ததும் அல்ல
கடலோதம் கிளர்ந்தலைக்ப் புக்கால் உள்ளே கிடந்த தொரு துரும்பு கடலை அளவிட்ட வல்லவே
கரை ஏறுவது -ஒரு திரை ஒரு திரையிலே ஏற வீசும் அத்தனை இறே –

———–

ஸ்ரீ வேதாந்த தேசிகர் முநி வாஹன போகம் -அவதாரிகை –
இவன் திருவடிகளில் சிவப்புக்கு நிகரான திருப் பீதாம்பரம் தன் சிந்தைக்கு விஷயம் ஆகிறது என்கிறார் –

—————-

உவந்த உள்ளத்த்னாய் உலகம அளந்து அண்டமுற
நிவர்ந்த நீண் முடியன் அன்று நேர்ந்த நிசாசரரைக்
கவர்ந்த வெங்கணைக் காகுத்தன் கடியார் பொழில் அரங்கத்தம்மான் அரைச்
சிவந்த வாடையின் மேல் சென்றதாம் என சிந்தைனையே —-2-

பதவுரை

உவந்த உள்ளத்தன் ஆய்–மகிழ்ச்சியோடு கூடிய மனத்தை யுடையவனாய்க் கொண்டு
உலகம் அளந்து–மூவுலகங்களையும் அளந்து
அண்டம் உற–அண்ட கடாஹத்தளவுஞ் சென்று முட்டும்படி
நிவந்த–உயர்த்தியை அடைந்த
நீள் முடியன்–பெரிய திருமுடியை யுடையவனாய்
அன்று–முற்காலத்தில்
நேர்ந்த–எதிர்த்து வந்த
நிசரசரரை–ராக்ஷஸர்களை
கவர்ந்த–உயிர் வாங்கின
வெம் கணை–கொடிய அம்புகளை யுடைய
காகுத்தன்–இராம பிரானாய்,
கடி ஆர்–மணம் மிக்க
பொழில்–சோலைகளை யுடைய
அரங்கத்து-ஸ்ரீரங்கத்தில் எழுந்தருளியிருப்பவனான
அம்மான்-எம்பிரானுடைய
அரை-திருவரையில் (சாத்திய)
சிவந்த ஆடையின் மேல்-பீதாம்பரத்தின் மேல்
என சிந்தனை-என்னுடைய நினைவானது
சென்றது ஆம் பதிந்ததாம்

————————————————————

ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை அருளிய வியாக்யானம் –

உவந்த உள்ளத்தனாய் –
ஆழ்வாரை அகப்படுத்துகையால் வந்த ப்ரீதி -சர்வேஸ்வரனாய் -ஸ்ரீ ய பதியாய் –
அவாப்த சமஸ்த காமனாய் இருக்கிறவன் -அர்த்தியாய் வந்து -தன் திருவடிகளை
தலையிலே வையா நின்றால் -மதீய மூர்த்தாந மலங்கரிஷ்யதி -என்று உகக்க வேண்டி இருக்க –
அவை அறியாது ஒழிய –
பிரஜை பால் குடிக்கக் கண்டு உகக்கும் மாதாவைப் போலே உகந்த திரு உள்ளதை உடையவனாய் –
இவற்றை பிரிந்தால் வ்யசனமும் தன்னதே இறே
வ்யசநேஷூ மனுஷ்யாணாம் ப்ருசம் பவதி -என்கிறபடியே-

உலகம் அளந்து –
வகுத்த திருவடிகள் தலையிலே வந்து இருந்தாலும் உகக்க அறியாத லோகத்தை
கிடீர் தானும் விடாதே அளந்தது –
உகக்க அறியாமைக்கு -வன் மா வையம் இறே
குணாகுணம் நிரூபணம் பண்ணாதே எல்லார் தலையிலும் ஒக்கத் திருவடிகளை வைத்த
படியாலே பக்திமான்களும் பாதகிகளும் ஒக்க வாழ்ந்து போய்த்து-

அண்டமுற நிவர்ந்த நீண் முடியன் –
அண்ட கடாஹத்திலே சென்று சேர்ந்த திரு வபிஷேகத்தை யுடையவன்
அண்ட கடாஹம் வெடித்து அடி பிடிக்க வேண்டும் படி இறே அபேஷிதம் பெற்று வளர்ந்த படி

அண்டமுற –
அண்டம் மோழை எழ

நிவர்ந்த –
நிமிர்ந்த பூ அலர்ந்தாப் போலே

நீண் முடியன் –
உபய விபூதிக்கும் நிர்வாஹகன் என்று தோற்றும்படி இருக்கிற திரு வபிஷேகத்தை யுடையவன் –
ரஷ்ய வர்க்கத்தை நோக்கினால் இறே ரஷகன் முடி தரிப்பது-

அன்று –இத்யாதி
கண்ட காட்சியிலே ஜிதம் என்ன வேண்டும்படி இருக்குமவன் இறே
எதிரிட்ட பையல்களை முடிக்கைக்கு வெவ்விய சரத்தை உடைய சக்கரவர்த்தி திருமகன் –

அன்று –
ரஷகனானவன் ரஷ்யதை நோக்கக் கடவராக வந்து நின்ற அன்று –

நேர்ந்த நிசாசரரை
எதிரிட்ட நிசாசரரை

நேர்ந்த நிசாசரர் -என்கிறது திருப்பல்லாண்டு பாட வேண்டும் அழகைக் கண்டும்
எதிர் அம்பு கோப்பதே என்று

நிசாசரர் -வெளியில் முகம் கண்டு அறியாத பையல்கள்

கவர்ந்த
புறப்படும் போது வினயத்தோடு புறப்பட்டு வேட்டை நாய்கள் ஓடி மேல் விழுமா போலே விழுகை

வெங்கணை
விடும் போது அம்பாய் படும் போது காலாக்நி போலே இருக்கை

தீப்த பாவக சங்காசைத்தரை -என்கிறபடியே பெருமாள் கண் பார்க்கிலும் முடித்து அல்லது நில்லாத வெம்மை

காகுத்தன் –
குடிப் பிறப்பால் தரம் பாராதே விஷயீ கரித்தபடியும் வீரவாதியும்-

கடியார் பொழில் –
திரு உலகு அளந்து அருளின இடமே பிடித்து அடி யொற்றி
ராவண வதம் பண்ணி
தெற்கு வாசலாலே புகுந்து சாய்ந்து அருளினான் –
இன்னமும் வேர்ப்பு அடங்கிற்று இல்லை
திருச் சோலையில் பரிமளம் விடாய்க்கு சிசிரோபசாரமானபடி –

அரங்கத்தம்மான் –
அவதாரத்துக்கு பிற்பாடருக்கும் இழவு தீர கோயிலிலே வந்து கண் வளர்ந்து அருளுகிற படி –

அம்மான்
இங்கே வந்த பிறகு ஈஸ்வரத்வம் நிலை நிற்கை-

அரைச் சிவந்த வாடை –
உடையார்ந்த வாடை
செக்கர் மா முகில்
திரு மேனிக்கு பரபாகமான திருப் பீதாம்பரம்

சிவந்த வாடையின் மேல் சென்றதாம் –
சோற்றின் மேலே எனக்கு மனம் சென்றது -என்னுமா போலே ஆச்சர்யப் படுகிறார் –

என் சிந்தனை –
ஆருடைய கூறை யுடையைக் கண்டு உகக்கக் கடவ நெஞ்சு இதிலே யகப்பட்டது

என் சிந்தனை –
திருவடிகளின் சுவடு அறிந்த பின்பு புறம்பு போக மாட்டாத நெஞ்சு
தீர்த்தமாடா நிற்க துறையிலே பிள்ளையை கெடுத்து திரு வோலக்கத்திலே காண்பாரைப்
போலே திருவடிகளில் நின்றும் திருப் பீதாம்பரத்திலே திரு உள்ளத்தைக் கண்டபடி –

இத்தால் –
திரு உலகு அளந்து அருளினவற்றையும் ராமாவதாரத்தையும் பெரிய பெருமாள் பக்கலிலே
ஒரோ வகைகளிலே காண்கிறார்

———————————————————————

ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் அருளிய-வியாக்யானம் –

உவந்த உள்ளத்தனாய் –
ஆழ்வாரை அகப்படுதுகையால் வந்த ப்ரீதி –
சர்வேஸ்வரனாய் -ஸ்ரீ ய பதியாய் -அவாப்த சமஸ்த காமனாய் -அவாக்ய அநாதர -என்கிறபடியே
பரிபூர்ணனான தான் –
கதாபுநச் சங்க ரதாங்க கல்பக த்வஜார விந்தாங்குச வஜ்ர லாஞ்சநம்
த்ரி விக்ரம தவச் சரணாம் புஜ த்வயம் மதீய மூர்த்தாந மலங்கரிஷ்யதி -என்றும் –
படிக்களவாக நிமிர்த்த நின் பாத பங்கயமே தலைக்கணியாய் -என்றும் சிலர் அபேஷியாது இருக்க –

பாதா ருந்துத மேவ பங்கஜா ஜ -என்னும் சௌகுமார்யத்தை யுடைத்தாய் –
பெரிய பிராட்டியார் திருக் கைகளால் வருடவும் பொறாத அந்த திருவடிகளை
காடு மேடுகள் என்று பாராதே -சேதன அசேதன விபாகம் பாராதே பரப்பினால்
இப்படி உபகரிப்பதே -என்று இவர்கள் உகக்க ப்ராப்தமாய் இருக்க
இவர்கள் அறிவு கேடே ஹேதுவாக விலக்காது ஒழியப் பெற்றோமே என்று
இரட்டிக்க புகுந்த திரு உள்ளத்தை உடையனாய் –

க்ருதக்ருத்யஸ் ததா ராமோ விஜ்வர ப்ரமுமோத ஹ -என்று
தம்மோடும் தம்பியாரோடும் உண்டான வாசனையாலே முடியை விலக்குகிறான் என்று
வெறுத்து இருந்த பெருமாள் -இவன் இசைந்து முடியை வைத்த பின்பு உகந்தாப் போலே
இத்தலையில் அத்வேஷமே ஹேதுவாக திருவடிகளை வைக்கப் பெறுகையாலே
மிகவும் ப்ரீதனாய் –
எதிர்த்தலை அறியாது இருக்க தானே உகக்கிற இது வாத்சல்யம் இறே
உறங்குகிற பிரஜையை தாய் கட்டிக் கொண்டு கிடக்கிறது வாத்சல்யம் அன்றோ –
இவற்றை பிரிந்தால் வ்யசனமும் தன்னதே இறே
வ்யசநேஷூ மனுஷ்யாணாம்

உலகம் அளந்து –
வசிஷ்ட சண்டாள விபாகம் -ஸ்த்ரி பும்ஸ விபாகம் -ஜ்ஞான அஜ்ஞ்ஞான விபாகம் –
என்றவற்றைப் பாராதே எல்லார் தலைகளிலும் திருவடிகளை வைத்த படி –

உலகம் அளந்து –
வைத்த திருவடிகள் தலையிலே வந்து இருந்தாலும் உகக்க அறியாத லோகத்தை
கிடீர் தான் விடாதே யளந்தது
உகக்க அறியாமைக்கு வன்  மா வையம் இறே

வன்மா வையம் அளந்த எம் வாமனா!நின்
பன் மா மாயப் பல்nபிறவியில் படிகின்ற யான்,
தொன் மா வல்வினைத் தொடர்களை முதல் அரிந்து,
நின் மா தாள் சேர்ந்து நிற்பது எஞ் ஞான்று கொலோ?-3-2-2-

குணாகுணம் நிரூபணம் பண்ணாதே எல்லார் தலையிலும் ஒக்கத் திருவடிகளை வைத்த
படியாலே பக்திமான்களும் பாதகிகளும் ஒக்க வாழ்ந்து போய்த்து-

அண்டமுற நிவர்ந்த நீண் முடியன் –
அண்ட கடாஹத்திலே சென்று சேர்ந்த திரு வபிஷேகத்தை யுடையவன்
அண்ட கடாஹம் வெடித்து அடி பிடிக்க வேண்டும் படி இறே அபேஷிதம் பெற்று வளர்ந்த படி

அண்டமுற –
அண்டம் மோழை எழ

நிவர்ந்த –
நிமிர்ந்த பூ அலர்ந்தாப் போலே

நீண் முடியன் –
முடிக்கு நீட்சி யாவது -உபய விபூதிக்கும் தரித்த முடி என்று தோற்றும்படி யாய் இருக்கை
ஆதி ராஜ்யம் அதிகம் புவநாநா மீசதே பி ஸூ நயந் கில மௌளி -என்னுமா போலே
ரஷ்ய வர்க்கத்தை நோக்கினால் இறே ரஷகன் முடி நல் தரிப்பது-

ஒரு காலும் காமரு சீர் அவுணன் உள்ளத்து எண் மதியும் கடந்து -என்று திருவடிகளுக்கு வளர்த்தி
சொல்லப் ப்ராப்தமாய் இருக்க திருமுடிக்கு வளர்த்தி சொல்லுகிறது -இத் திருவடிகள்
அப்ராப்தமான திருவடிகள் அன்று -ப்ராப்தமான திருவடிகள் என்று தோற்றுகைகாக –
தான் அர்த்தியாய் சென்று -அர்த்தித்வத்தை மாறாதே அவன் கொடுத்த படியாலே உவந்த
உள்ளத்தனாய் –
அவன் தான் அறிய உகக்க ஒண்ணாதே
உலகம் இத்யாதி –
திருக்கையில் நீர் விழுந்த அளவிலே அந் நீரே பற்றாசாகக் கொண்டு வளர்ந்து அளந்து கொண்டான்-

ஆக  இப்படி அர்த்தித்வ நிரபேஷமாக லோகத்தை இருந்ததே குடியாக திருவடிகளாலே
விஷயீ கரித்தால் போலே –
உம்முடைய நிகர்ஷம் பாராதே
அரவிந்தப் பாவையும் தானும் அகம்படி வந்து புகுந்து -என்று நெஞ்சிலே வந்து புகுந்தானே
யாகிலும் -உம்முடைய சித்தமானது ராகாதி தூஷிதமாய் இருக்கையாலே
நாஸ்பதீ -என்கிறபடியே அங்கு கால் பொருந்தி இருக்க மாட்டானே
ஆகையால் அத்தை நீர் போக்கப் பாரீர் என்ன
அன்று நேர்ந்த நிசாசரரை கவர்ந்த வெங்கணை காகுத்தன் –
கண்ட காட்சியிலே ஜிதந்தே என்ன வேண்டி இருக்கிறவன் இறே
எதிர்த்த பையல்களை முடிக்கைக்கு வெவ்விய சரத்தை உடையவன் –

பெருமாளும் -ஸ்ரியா ஸார்த்தம் -என்கிறபடியே பிராட்டியும் நித்ய ஸூரிகளோபாதி
சுற்றம் எல்லாமான இளைய பெருமாளுமாக தண்ட காரண்யத்திலே போய் புக்கு
பரதன் அங்கு வந்து பின்னாட்டுகையாலே அங்கு இருக்க மாட்டாதே ஜன ஸ்தானத்திலே
போய் புக்கு அங்கு வர்த்திக்கிற ரிஷிகள் பாடே சென்று -ஆவாசம் த்வஹ மிச்சாமி ப்ரதிஷ்ட மிஹ காநநே –
என்று உங்கள் சாகாசத்திலே இருக்கப் பாரா நின்றோம் என்று இடம் தர வேணும் என்ன
அவர்களும் அங்கே இருக்க அனுமதி பண்ணி -நன்றாக பர்ண சாலை அமைத்து
வாஸ்து பலிகளும் இட்டு -அங்கே எழுந்து அருளி நிற்க –

அவ் விருப்புக்கு விரோதிகளாய் கர தூஷணாதிகள் எதிர்க்க
அவர்களை நோக்கி அந்த ரிஷிகள் கோத்த ஓர் அம்பு உண்டோ
அவர்கள் ஏஹி பஸ்ய சரீராணி -என்னும்படி உரு மாய்ந்த அந்த ராஷசரை
தம்முடைய திருக் கை திருச் சரங்களால் -உருக்கெட வாளி பொழிந்த சக்கரவர்த்தி திரு மகன்
என்னுடைய ராகாதி தோஷங்களை -விவேக சர ஜாலத்தாலே சமிப்பித்து
அரவத் தமளியினோடும் அரவந்தப் பாவை தன்னோடும்
பேரேன் என்று என் நெஞ்சு நிறையும் படி புகுந்து இருக்கிறவன் -என்கிறார்-

அன்று –
ஜன ஸ்தானத்திலே இருக்கிற வன்று
ரஷகனாவன் ரஷ்யத்தை நோக்கக் கடவதாக வந்து நின்ற அன்று –

நேர்ந்த நிசாசரரை –
அக வாயில் இருட்சியே யன்றிக்கே -சர்ப்பம் உணர்த்தி யற்று ராத்ரியிலே புறப்படுமா போலே
பர ஹிம்சைக்கு ஏகாந்தமான காலத்திலேயே வந்து எதிர்ந்த கர தூஷணாதி ராஷசரை
நேர்ந்த நிராசரர் என்கையாலே விபீஷணாதிகளை வ்யாவர்த்திக்கிறது

அன்று நேர்ந்த நிசாசரர் –
தே தம் சோம மிவோத்யந்தம் த்ருஷ்ட்வா வை தர்ம சாரிண
மங்களாநி பிரயுஜ்ஞாநா ப்ரத்ய க்ருஹ்ணன் த்ருடவ்ரதா -என்றும் –
ராமோ ராமோ ராம இதி ப்ரஜா நாம பவன் கதா
ராம பூதம் ஜகத் பூத் ராமே ராஜ்யம் ப்ரஸா சதி -என்றும்
அநுகூல ப்ரதிகூல விபாகம் அற இவனைக் கண்ட மனுஷ்யர் மங்களா சாசனம் பண்ணுவார்-

அடைவு  கெட வாய் புலத்துவார் ஆகிற காலத்திலே -இவர்கள் இங்கனே சிலர் எதிர்த்து
நசித்துப் போவதே என்று வருந்துகிறார் இவர் –
ராமோ ராமோ ராம இதி -பாதம் தலைக் கட்டுகையாலே மீளுகிறது இத்தனை என்று இறே நிர்வஹிப்பது –
இத் த்ரைவியத்துக்கு பொருள் –
ரூப ஔதார்ய குணங்களை வென்ற வடிவழகும் –
அத்தை அநுபவிக்கக் கொடுக்கையும் –
கொடா நின்றால் இறுமாப்பு அற்று இருக்கையும் –
பும்ஸாம் தாருண் யஞ்ச -என்று ஸ்த்ரி பும்ஸ விபாகம் அற ப்ரவணராம் ஆகாரம்
உண்டாய் இருக்கையாலே வீத ராகரைச் சொல்லுகிறது
ப்ராப்த விஷய ப்ராவண்யம் இறே ஜிதேந்த்ரியத்வம் ஆகிறது-

ப்ரஜாநாம் -மாதா பிதாக்கள் அன்று -வசிஷ்டாதிகள் அன்று -ஜனி தர்மாக்காளுக்கு

கதா -லோக யாத்ரைக்கு உறுப்பாம் வார்த்தைகளும் பெருமாளைப் பற்றி அல்லாது இராதே
ராம பூதம் ஜகத் பூத் -ஜகம் அடைய ராமாத்வைதம் ஆய்த்து
ஜகதா தம்யமிதம் சர்வம் என்கிற பொது அல்ல
ராம பூதம் -என்று ராமாத்வைதம் ஆய்த்து -ப்ரஹ்ம அத்வதைத்தை வ்யாவர்த்திக்கிறது
பெருமாள் சுண்டு விரல் கொண்டு லீலா ரசம் அனுபவிக்கிற காலத்திலேயோ -என்னில்
ராமே ராஜ்யம் ப்ரஸாஸ தி -தஹ பச -என்கிற காலத்தில்-

அன்று –
இப்படி எல்லாரும் ஒக்க ப்ரவணர் ஆகிற அன்று –

நேர்ந்த நிசாசரரை
இவ்வடிவழகிலே தோற்று விழாதே -சர சச்த்ரங்களைக் தூவிக் கொண்டு வந்து எதிர்ந்த ராஷசரை

கவர்ந்த –
மாரீச சுபாஹூ த்வத்துக்கு அப்பால் ஓர் இரை பெறாதே கிடக்கிறது ஆகையாலே இரை
பெறாத சர்ப்பம் போலே எதிரிகள் மேல் விழுந்து க்ரசித்த படி-

வெங்கணை
அவன் தன்னைப் போலே யாய்த்து அம்புகளும் -இருப்பது –
தீப்த பாவக சங்காசை சிதை காஞ்சன பூஷணை -என்கிறபடியே தொடுக்கிற போது
அம்பாய் -எதிரிகள் மேலே போய் விழும் போது எரிகிற காலாக்நி போலே யாய்த்து விழுவது-

நத்வாம் இச்சாம் யஹம் த்ரண்டும் ராமேண நிஹதம் சரை -என்று
தயரதன் பெற்ற மரகத மணித் தடத்திலே புக்கு ஸ்ரமம் தீர மாட்டாதே சாவை காண
மாட்டு கிறிலேன் -சரங்கள் ஆண்ட தண் தாமரைக் கண்ணனுக்கு அன்றி என் மனம் தாழ்ந்து
நில்லாதே -என்கிறபடியே
நீயும் நானும் கூடி -இலங்கை பாழாளாக படை பொருதானுக்கு பல்லாண்டு கூறுவாராய்
ஆள் படப் போகாதே -என்றான் இறே விபீஷணன்

வெங்கணை –
வெஞ்சிலை யினின்றும் புறப்படுகிறவை ஆகையாலே வெங்கணை யாய் இருக்கும் இறே
அவன் அனுகூலருக்கு -புனலுருவாய்-பிரதி கூலருக்கு அனலுருவாய் -இருக்குமா போலே
பொன் எழுதின பகழிகளும் தானுமாய் இருக்கையாலே பிரதிகூலருக்கு பயங்கரமாய்த்து இருப்பது -இச் சரங்களும்

ஆக -உவந்த உள்ளத்தனாய் உலகம் அளந்து அண்டமுற நிவர்ந்த நீண் முடியன் -என்று
கோ குணவான் -என்று பிரதம ப்ரஸ்னமாய் -ஆஸ்ரயணீயமான சீல குணத்தை சொன்னாராய்
அன்று நேர்ந்த நிசாசரரை கவர்ந்த வெங்கணை காகுத்தன் -என்று -அநந்தரமாக –
கச்ச வீர்யவான் -என்று சொன்ன விரோதி நிரசனத்துக்கு உறுப்பான வீர குணங்களைச் சொல்லுகிறார் –

ஆக -மாம் -அஹம் -என்கிற இரண்டின் உடைய அர்த்தமும் அனுசந்தித்தாராய் விட்டது –

உலகம் அளந்து -என்று திருவடிகள் விக்ரமித்தபடியை சொல்லி
கவர்ந்த வெங்கணை காகுத்தன் -என்று திருத் தோள்கள் பராக்ரமித்தபடி சொன்னார் –

காகுத்தன் -இந்த இரண்டு குணமும் உபய விபூதி நாதத்வ ப்ரயுக்தம் அன்று –
ககுஸ்த வம்சத்திலே பிறந்து படைத்தான் ஆகையாலே ஔத்பத்திகம் என்றபடி –

ஆக -கர தூஷணாதிகளை -சிலையால் வாளி பொழிந்த படி சொல்லிற்று –

கடியார் பொழில் அரங்கத்தம்மான் –
திரு உலகு அளந்து அருளினதால் வந்த ஸ்ரமமும் -ஜனஸ்தானத்தில் ராஷச வதம்
செய்து அருளின ஸ்ரமமும் ஆறுகைகாக -பரிமள பரிதமான சோலையை உடைத்தாய் –
கோயிலிலே வந்து -அந்த திருவடிகளையும் திருத் தோள்களையும் நீட்டிக் கொண்டு சாய்ந்தான் –

பரிவராய் இருப்பர் -கொடியார் மாடக் கோளூர் அகத்தும் புளிங்குடியும் மடியாது இன்னே
நீ துயில் மேவி மகிழ்ந்தது தான் -அடியார் அல்லல் தவிர்த்த வசைவோ அன்றேல்
இப்படி தான் நீண்டு தாவிய வசைவோ பணியாயே -என்று நீ இங்கு வந்து ஹிரண்ய ராவணாதிகளை
நிரசித்ததால் வந்த ஸ்ரமம் தீரவோ -த்ரை லோகத்தையும் அளந்து கொண்ட ஆயாசத்தால்
வந்த ஸ்ரமம் தீரவோ -பணியாய் -உன் ஸ்வரம் கொண்டு நாங்கள் அறியும்படி சொல்லாய்
என்றார்கள் இறே

பிள்ளாய் -கிடக்கும் போது ஒரு மூலையில் ஒருவரும் அறியாதே கண் வளர்ந்து அருளினால் ஆகாதோ
இன்னமும் அவர்கள் மறு கிளை கிளைத்து அவன் எங்கே என்று தேடிக் கொடு வரிலும்
கொடி கட்டிக் கொண்டு கிடக்க வேணுமோ -என்று வயிறு பிடித்தார் இறே
அது போலும் அல்ல கிடீர் இவன் கண் வளர்ந்து அருளுகிறபடி என்கிறார் இவர்-

கொடிகள் த்ருஷடி கோசரம் ஆனால் இறே அவன் கிடக்கிறபடி அறியல் ஆவது
இது அங்கன் அன்றே -தூராத் கந்தோ வாதி -என்கிறபடியே தூரஸ்தரையும் அழைக்குமது இறே
சர்வ கந்த வஸ்து கண் வளர்ந்து அருளுகையாலே -கடியார் பொழிலாய் இருக்கும் இறே
திருச் சோலையில் பரிமளம் விடாயருக்கு சிசிரோபசாரம் ஆம்படி

அரங்கத்தம்மான்
அவதாரத்துக்கு பிற்பாடார் ஆனாரும் இழவாதபடி இங்கு வந்து கண் வளர்ந்து அருளுகிறது
ப்ராப்தி யாலே இறே –
ஆக -இத்தால் போக்யதை சொல்லிற்று-

அரைச் சிவந்த வாடையின் மேல் –
மேக ஸ்யாமமான திருவரைக்கும் பரபாக ரஸ அவஹமான திருப் பீதாம்பரத்தின் மேல்
சிவந்த வாடையின் மேல் சென்றதாம் –
சோற்றிலே எனக்கு மனம் சென்றது -என்னுமா போலே ஆச்சர்யப் படுகிறார்

என் சிந்தனையே –
ஆருடைய கூறை வுடை கண்டு உகக்கக் கடவ நெஞ்சு இதிலே யகப்பட்டது –
த்ருஷ்டத்திலே லோக கர்ஹிதமாய் -அத்ருஷ்டத்திலே வென் நரகிலே தள்ளவும் கடவதான
உடைகளிலே பிரவணமான என் மனஸ் -த்ருஷ்டத்தில் ஆகர்ஷகமாய் -அத்ருஷ்டத்தில் சதா
பஸ்யந்திக்கு விஷயமான திருப் பீதாம்பரத்திலே விழுந்து நசை பண்ணா நின்றது –

என் சிந்தனை –
திருவடிகளின் சுவடு அறிந்து பின்பு புறம்பு போக மாட்டாத நெஞ்சு
தீர்த்த மாடா நிற்க துறையிலே பிள்ளையைக் கெடுத்து திரு ஒலக்கத்திலே காண்பாரைப் போலே
திருவடிகளில் நின்றும் திருப் பீதாம்பரத்திலே கண்டபடி
மனஸ் -என்னாதே சிந்தனை -என்றது சிந்தா விசேஷத்தை பற்ற-

இத்தால் –
திரு உலகு அளந்து அருளினவற்றையும் ராமாவதாரத்தையும் பெரிய பெருமாள் பக்கலிலே
ஒரோ வகைகளிலே காண்கிறார்-

ஆக -கீழ் -கமலபாதம் வந்து என் கண்ணினுள்ளன -என்று தானே முற்பாடனாய் வந்து
விஷயீ கரித்த படியாலே சாதன பாவம் சொல்லிற்று –
சென்றதாம் -என்று தம் திரு உள்ளம் மேல் விழுந்ததாகச் சொல்லுகையாலே அதிகாரி ஸ்வரூபம் சொல்லுகிறது -இங்கு
கீழ் -நீண் மதிள் அரங்கம் -என்று ரஷகத்வம் சொல்லிற்று –
கடியார் பொழில் அரங்கம் -என்று போக்யதை சொல்லுகிறது -இங்கு
ஆக இப்பாட்டால் -முதல் பாட்டில் -நிமலன் நின்மலன் -என்று அபேஷா நிரபேஷமாக
உபகரிக்கும் சுத்தியை உடையவன் என்றதாய்த்து சொன்ன அர்த்தம் கூடுமோ என்ன
கூடும் என்னும் இடத்துக்கு உதாஹரணம் சொன்னாராய் நின்றது –

—————————————————

ஸ்ரீ வேதாந்த தேசிகர் முநி வாஹன போகம் -வியாக்யானம் –

உவந்த உள்ளத்தனாய் –
மஹா பலியால் அபஹ்ருதமான ராஜ்யத்தை மீட்டுத் தர வேண்டும் என்று இந்த்ராதிகள் இரக்க –
உதாரா சர்வ எவைதே -என்கிறபடி -இவர்கள் பக்கலிலே ப்ரீதமான திரு உள்ளத்தை உடையனாய்
அசுரனே யாகிலும் ப்ரஹ்லாதனோடு உண்டான குடல் துவக்கும் பாவித்து
ஆநுகூல்ய மிஸ்ரனான மஹா பலியை அழியச் செய்ய நினையாதே அவனுடைய ஔதார்யத்துக்கு
அநுகூலமாக தான் இரப்பாளானாக சென்று -அவன் கொடுக்க வாங்கு கையாலே
அவன் அளவிலும் அனுக்ரஹ உக்தனாய் அபேஷா நிரபேஷமாக எல்லார் தலையிலும்
தன் திருவடிகளை வைக்க விலக்காத அளவாலும் சர்வ விஷயத்திலும் உவந்த உள்ளத்தனாய்

உலகம் அளந்து –
அளவு பட்டுக் கொடுத்தோம் என்று இருக்கிற அசுரன் முன்னே எல்லா லோகங்களையும்
தன் திருவடிகளாலே அளவு படுத்தி –

அண்டமுற நிவர்ந்த நீண் முடியன் –
மேலே கவித்த கநக சத்ரம் போலே இருக்கிற ப்ரஹ்மாண்டத்திலே கிட்டும்படி
விஜ்ரும்பித்த பெரிய திரு அபிஷேகத்தை உடையவன் -அவன் தன்னைப் போலே
திரு அபிஷேகத்துக்கும் அவனோடு ஒக்க வளருகைக்கு ஈடான மஹிமாவும் உண்டு
கர்ம வஸ்யதை தோற்றும்படி பிறவி தொடக்கமாக சடையும் குண்டிகையும் சுமந்து திரிகிற
பரிச்சின்நேஸ்வரர் பார்த்து நிற்க இப்படி முடி சூடி நிற்கையாலே உபய விபூதி நிர்வாஹகத்வமும் அபிவ்யக்தமாய் ஆகிறது

இத் த்ரி விக்ரம அபதானம் சொன்ன இத்தாலே ஈஸ்வர சங்கா விஷயமான
இந்த்ராதிகள் இரப்பாளரான படியும் -குறை கொண்டு நான்முகன் -இத்யாதிகளில் படியே ப்ரஹ்மா
திருவடி விளக்கி ஆராதனானபடியும் -ருத்ரன் தீர்த்த பிரசாதம் பெற்றுப் பூதனான படியும் சொல்லிற்று ஆயிற்று

இத்தால் முன் பாட்டில் சொன்ன இஷ்ட ப்ராபகத்வத்தையும் உதாஹரித்ததாய் -இனி –
அநிஷ்ட நிவர்த்தகத்வத்தையும் உதாஹரிக்கிறார் –

அன்று நேர்ந்த நிசாசரரை கவர்ந்த வெங்கணை காகுத்தன் –
தேவர்களுக்கும் ரிஷிகளுக்கும் குடி இருக்க ஒண்ணாத படி த்ரைலோக்ய ஷோபம் பிறந்து –
தேவர்கள் சரணாகதராக ஆன அன்று -சக்கரவர்த்தி திருமகனாய் அவதரித்து தாடகா தாடகேய
விரோத கபந்த கர தூஷணாதிகளை நிராகரித்து இலங்கைக்கு பரிகையான லாவணார்ணவத்தை
பர்வதங்களாலே பண்பு செய்து கொம்பிலே தத்தித் திரியும் குரங்குப் படையைக் கொண்டு
இலங்கையை அடை மதிள் படுத்தின அன்றும்
பெருமாளுடைய பிரபாவம் அறியாதே விளக்கு விட்டில் போலே வந்து எதிர்ந்த பகல் போது
அறியாத கூட யோநிகளை எல்லாம் எனக்கு எனக்கு என்று இரையாக கைக் கொண்ட-
தீப்த பாவக சங்காசங்களான திருச் சரங்களை உடையவனாய்
வெங்கதிரோன் குலத்துக்கோர் விளக்காய் நின்றவன் –

காகுத்தன் –
மாயாவிகளான ராஷசரும் கூட மோஹிக்கும்படி மனுஷ்ய பாவத்தை முன்னிட்டு நின்றவன்

காகுத்தன் –
கடியார் பொழில் அரங்கத்தம்மான்
ஸூ ரிகள் முதலாக ஸ்தாவர ரூபங்களைக் கொண்டு நித்ய ஆமோதராய் நிற்கிற
ஆராமங்களாலே சூழப்பட்ட கோயில் ஆழ்வாருக்குள்ளே பிரஹ்மாதிகள் ஆராதிக்க
சர்வ ஸ்வாமித்வம் தோற்றக் கண் வளர்ந்து அருளுகிற பெரிய பெருமாளுடைய –

அரைச் சிவந்த வாடையின் மேல் –
படிச் சோதி யாடையொடும் பல்கலனாய் நின் பைம் பொற் கடிச் சோதி கலந்ததுவோ
என்னும்படி திகழா நின்ற திரு வரையிலே -மது கைடப ருதிர படலத்தாலே போலே
பாடலமாய் மரகத கிரி மேகலையில் பாலாதபம் பரந்தாப் போலே இருக்கிற திருப் பீதாம்பர விஷயமாக

சென்றதாம் என் சிந்தனையே –
அநாதி காலம் அநு சித விஷயங்களில் ஓடி-அவர்கள் ஆடையிலே கட்டுண்ட என் சிந்தை
இவன் திருவடிகளைப் பற்றி என்னாலும் மீட்க ஒண்ணாதபடி திருப் பீதாம்பரத்திலே சென்று-துவக்குண்டது
என் சிந்தனை சென்றதாம் -என்கையாலே ஆச்சர்யம் தோற்றுகிறது

சென்றது –
நாம் ப்ரேரிக்க போந்த தன்று
விஷய வைலஷண்யத்தாலே ஆக்ருஷ்டமாயிற்று –

———————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேதாந்த தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருப்பாண் ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ அமலனாதி பிரான் –ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை அருளிய-ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் அருளிய–ஸ்ரீ வேதாந்த தேசிகர் முநி வாஹன போகம் -வியாக்யானம் -அமலனாதிபிரான் அடியார்க்கு என்னை ஆட்படுத்த விமலன் –

May 16, 2013

அமலனாதிபிரான் அடியார்க்கு என்னை ஆட்படுத்த
விமலன் விண்ணவர் கோன்  விரையார் பொழில் வேங்கடவன்
நிமலன் நின்மலன் நீதி வானவன் நீண் மதிள் அரங்கத்தம்மான் திருக்
கமல பாதம் வந்து என் கண்ணினுள்ளன ஒக்கின்றதே ——1-

பதவுரை

அமலன்–பரிசுத்தனாய்
ஆதி–ஜகத்கார பூதனாய்
பிரான்–உபகாரகனாய்
என்னை–(இழி குலத்தவனான) என்னை
அடியார்க்கு–(தனது) அடியவர்களான பாகவதர்களுக்கு
ஆள்படுத்த–ஆட்படுத்துகையாலே வந்த
விமலன்–சிறந்த புகரை யுடையனாய்
விண்ணவர் கோன்–நித்யஸூரிகட்குத் தலைவனாயிருந்து வைத்து
(ஆஸ்ரிதர்கட்காக)
விரை ஆர் பொழில்–பரிமளம் மிக்க சோலைகளை யுடைய
வேங்கடவன்–திருவேங்கடமலையில் வந்து தங்குமவனாய்
நிமலன்–ஆஸ்ரயிப்பார்க்கு அரியனாயிருக்கையாகிற குற்றமற்று, ஆஸ்ரித பாரதக்திரியத்தை வெளியிட்டு நிற்குமவனாய்
நின்மலன்–அடியாருடைய குற்றத்தைக் காண்கையாகிற தோஷமில்லாத வத்ஸலனாய்
நீதி வானவன்–சேஷ சேஷி முறை வழுவாதபடி நியாயமே செல்லும் நிலமான பரமபதத்துக்கு நிர்வாஹகனாய்
நீள் மதிள்–உயர்ந்த மதிள்களை யுடைய
அரங்கத்து–கோயிலிலே (கண் வளர்ந்தருளுகிற)
அம்மான்–ஸ்வாமியான அழகிய மணவாளனுடைய
திருக் கமல பாதம்–திருவடித் தாமரைகளானவை
வந்து–தானே வந்து
என் கண்ணின் உள்ளன ஒக்கின்றதே–என் கண்ணுக்குள்ளே புகுந்தன போலிரா நின்றனவே

———

ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை அருளிய அவதாரிகை —

பெரிய பெருமாள் திருவடிகளில் அழகு மேல் விழுந்து தம்மை அடிமை கொண்டது என்கிறார் –

ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் அருளிய-அவதாரிகை –
முதல் பாட்டில் –
பெரிய பெருமாள் திருவடிகளின் அழகு தம்மை ஆட்கொண்டது என்கிறார் –

ஆகாசத்தின் நின்றும் சஹ்யத்திலே வர்ஷித்து
அங்கு நின்றும் காவேரி யாறாய்ப் போய் இழிந்து
கால்களாய்ப் புகுந்து போய்
நாட்டாருக்கு உப உக்தமாமா போலே

பரமபதம் ஆகிற பரம வ்யோமத்தின் நின்றும்
திருமலையிலே வந்து இழிந்து
தெற்கு நோக்கி வந்து
பள்ளநாலியான கோயிலிலே தேங்கி
கீழ் மேலாக கண் வளர்ந்து அருளுகிற பெரிய பெருமாள் ஆகிற
மதுரவாற்றின் இடைப் புகுந்து ஓடுகிற காலை அனுபவிக்கிறார் –

———

ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை அருளிய-வியாக்யானம்-

அமலன் –
ஸூத்தன் -என்றபடி
இவன் ஸூத்தனாகை -யாவது -தான் ஒருவன் ஸூத்தனாகை யன்று -தன்னோடு சம்பந்தித்தாரையும்
ஸூத்தராக்க வல்ல அடிவுடைமை –
துயரறு சுடரடி இறே
பாவநஸ் சர்வ லோகானாம் த்வமேவ ரகு நந்தன -என்னுமா போலே-

அமலன் -என்கிறது
ஜன்ம வ்ருத்தாதிகளால் குறைய நின்ற தம்மை விஷயீ கரித்த பின்பு தன் பக்கல்
தோஷம் தட்டாதே -அநச் நன்ந நயோ அபிசாக ஸீத -என்கிறபடி விளங்குகிறபடி
பரமாத்மா அக்னியை உண்ணாமலேயே -பிரகாசிக்கிறது –
என் கண் பாசம் வாய்த்த பரஞ்சுடர் சோதிக்கே-

ஆதி –
ஆதியத இதி ஆதி -ஸ்ப்ருஹணீயன் -என்றபடி –
தம்மை விஷயீ கரிக்கைக்கு அடியானான் -என்று -ஆதி –என்னவுமாம் –
ஜகத் காரணத் வாதிகளைச் சொல்லவுமாம் –
ஆக இரண்டு -பதத்தாலும் -ஹேய ப்ரத்யநீகத்வமும் கல்யாண குண யோகமும் சொல்லுகிறது –

பிரான் –
இவ்வோ நிலைகளை எனக்கு அறிவித்த உபகாரகன்

பிரான் –
உபகாரத்தைச் சொல்லி -சொல்லப் பற்றாமே -எத்திறம் -என்கிறார்

அடியார்க்கு-
சத்நஹாரீ ச பார்த்தவ -என்கிறபடியே -இவ் வஸ்துவின் சீர்மையாலே இது நம்மளவில் அடங்காது-
நம் அடியார்க்கு ஆம் இத்தனை -என்று அவர்களுக்காக்கினான் என்கிறார் –
அடியார் -தம் பக்கலிலே சேஷி ப்ரதாரராய் இருக்குமவர்கள் –

என்னை யாள்படுத்த விமலன் –
தன்னிடை யாட்டமும் யறியாத என்னை -தன் அடியார்க்கு சேஷ பூதன் ஆக்கின
ஸூத்தன் -என்கிறார் –

என்னை –
ப்ரக்ருதிக்கு அடிமை செய்து போந்த என்னை –
தந்தத்தின் சீர்மை அறியாத என்னை –
தேஹாத்ம அபிமாநிகள் தீண்டாத என்னை –
நன்மைக்கு தனக்கு அவ்வருகு இல்லாதது போலே தீமைக்கு எனக்கு அவ்வருகு இல்லாத என்னை –

ஆள் படுத்த –
அவர்களோடு ஒப்பூண் உண்ண வைத்திலன்
அவர்களுக்கு சேஷம் ஆக்கினான்
பகவத் சேஷத்து அளவில்  நின்றால் மீள சங்கை உண்டு –
பாகவத் சேஷத்தளவும் சென்றால் மீளப் போகாதே
உகப்பாலே வருமது ஆகையாலே -ஒரு ஷேத்ரம் பத்து எட்டு க்ரயம் சென்றால் மீள விரகு இல்லை –

ஸ்ரீ விபீஷண ஆழ்வானுக்கு முதலிகள் உடைய விஷயீ காரம் பெருமாளுடைய விஷயீ
காரத்துக்கு முற்பட்டாப் போலே இவருக்கு ததீய விஷயீ காரம் முற்ப்பட்ட படி –

ஆநயை நம் ஹரிச் ரேஷ்ட -அங்கு
இங்கு லோக சாரங்க மஹா முநிகளை போய் ஆழ்வாரை அழைத்துக் கொண்டு வாரும் என்றான்-

அடியார்க்கு என்னை ஆட்படுத்த –
தான் சேஷித்வதினுடைய எல்லையில் நின்றால்  போலே -சேஷத்வத்தின்
எல்லையில் என்னை வைத்தான் –

விமலன் –
என் சிறுமை பாராதே ததீயர்க்கு சேஷம் ஆக்குகையால் வந்த ஔஜ்வல்யம்
எதிரிகள் தரம் பாராதே சீரியர் தாம் தாம் அளவிலே இறே கொடுப்பது-

விண்ணவர் கோன் –
ஆள் இல்லாதவன் அல்லன் கிடீர் இப்படி விஷயீ கரித்தான் –
நித்ய ஸூரிகள் எடுத்து கை நீட்டும் படி இருக்கிறவன் கிடீர் -கதிர் பொறுக்கி ஜீவிப்பாரை போலே
நித்ய சம்சாரியாய் இருக்கிற என்னை நித்ய முக்தரோடு ஒக்க விஷயீ கரித்தான்
இவ் ஔதார்யம் கற்றதும் அவர்களோடே கிடீர் என்றுமாம்
அஸ்மாபிஸ் துவ்யோ பவதி -விபீஷணன் நம்மோடு ஒருவனாக ஆகட்டும் -என்றார்கள் இறே

விண்ணவர் கோன்
இங்குத்தை குழாத்தை ஒழிய அங்குத்தை குழாத்தையும் காட்டிக் கொடுத்தான்
உடன் கூடுவது என்று கொலோ -என்று இவர் ஆசைப்பட வேண்டியது இல்லை

கோன்
அவர்களாலும் எல்லை காண முடியாது-

விரையார் பொழில் வேங்கடவன் –
பரிமளம் நிறைந்து இருந்துள்ள சோலையை உடைய திரு வேங்கட மலையை உடையவன் –
பெரிய பெருமாளை பாடா நிற்க்க திருமலையிலே போவான் என் என்னில்
ஒருவனைக் கவி பாடும் போது அவனுடைய வரத்து சொல்லி இ றே கவி பாடுவது –
பரம பதத்தில் -நின்றும் ஸ்ரீ மதுரையிலே தங்கி -திருவாய்ப்பாடிக்கு வந்தால் போலே –
ஸ்ரீ வைகுண்டத்தின் நின்றும் -திருமலையிலே தங்கிக் காணும் கோயிலுக்கு வந்தது –
என்று பட்டர் அருளிச் செய்யும் படி

அன்றியே –
கோயில் போக்யதை தமக்கு நிலம் அல்லாமையாலே திருமலையிலே போய் தரிக்கப்
பார்க்கிறார் -என்றுமாம் –

விரையார் –
நித்ய ஸூரிகளை உடையவன் ஆவதுக்கு மேல் ஓர் ஐஸ்வர்யம்

விண்ணவர் கோன் விரையார் பொழில் வேங்கடவன் –
ஆற்றிலே அழுந்துவார் -ஆழம்காலிலே இளைப்பாறத் தேடுமா போலே அவர்களும்
வந்து அடிமை செய்யும் இடம்

வேங்கடவன் –
அர்ச்சாவதாரத்துக்கு பொற் கால் பொலிய விட்ட இடம் –

நிமலன்
இத் தலையை பெறுகைக்கு பச்சை இட்டவனும் தானே
இத் தலையில் அர்த்தித்வம்  இன்றிக்கே இருக்க இப்படி உபகரிக்கையால் வந்த ஔஜ்வல்யம்
இவனும் ஓர் அடி இடப் பார்த்து இராது ஒழிகை
பத்ப் யாமபிக மாச்சைவ ஸ்நேக சந்தர்சநேந ச-

நீதி -வானவன்
சேஷ சேஷித்வங்கள் முறை மாறாத நித்ய விபூதியில் உள்ளவன்
ஈஸ்வரோஹம்  -என்று எதிரிட்டு இருக்கும் இடம் இ றே இவ்விடம் –
அங்கு கலக்குவாரும் இல்லை கலங்குவாரும் இல்லை
இங்கு கலக்குவாரும் உண்டு கலங்குவாரும் உண்டு –

நீள் மதிள்  அரங்கத்தம்மான் –
நீதி வானவன் -என்னா -நீள் மதிள்  அரங்கத்தம்மான் –என்கிறார் –
அளப்பரிய ஆரமுதை அரங்கமேய அந்தணனை -என்னுமா போலே

நீள் மதிள்-
ரஷகத்துவதுக்கு போரும்படியான மதிளை உடைய பெரிய கோயிலிலே கண் வளர்ந்து
அருளுகிற பரம சேஷி –

அம்மான் –
ஈரரசு தவிர்ந்தால் இ றே சேஷித்வம் பூர்ணம் ஆவது
திரு மலையிலே போக்யதை நிலம் இல்லாமையாலே மீளவும் கோயிலிலே புகுகிறார்
வெள்ளத்தை கள்ளமடையாலே பள்ளத்தே விடுமா போலே
திருவேம்கடமுடையான் வடக்குத் திருவாசலாலே வந்து புகுந்தான் அத்தனை -என்றுமாம்

திருக் கமல பாதம் –
செவ்வி குளிர்த்தி  விகாசம் பரிமளம் தொடக்கமானவை
ஆதித்யனைக் கண்டால் இறே  தாமரை அலருவது –
இத்தாமரைக்கு ஆதித்யன் இவர் –
பிராட்டி திருமுலைத் தடங்களிலும் திருக் கண்களிலும் ஒற்றிக் கொள்ளும் திருவடிகள்
இவருடைய தளிர் புரையும் திருவடிகள் இருக்கிற படி
அம்மான் திருக் கமல பாதம் –
தொடர்ந்து வருகைக்கு ப்ராப்தி –

வந்து –
த்விபாந்தரத்தில் சரக்கு சேர வேண்டினால் பாதிப் பாதி வழி யாகிலும் –
வருதல் -ஒருதலைப் பற்றுதல் செய்ய வேணும் இறே -அங்கன் இன்றியே –
வந்து உனது அடியேன் மனம் புகுந்தாய் -என்கிறபடி
வழி வந்தானும் -தானே பற்றினானும் தானே -என்கிறது-

என் கண்ணினுள்ளன
எத்தைக் கண்ட கண்களுக்கு இவை விஷயம் ஆகின்றன

நீதி வானவன் -கமலபாதம் -என் கண்ணினுள்ளன-
சதா தர்சனம் பண்ணுகிறவர்கள் உடைய கண்ணுக்கு இலக்கானது கிடீர் என் கண்ணுக்கு இலக்கு ஆய்த்து –
வல்லதனை நாளும் விரோதம் பண்ணினேன்
போக்கற்றவாறே என் கண்ணை செம்பளித்தேன்
தொடர்ந்து வந்து செம்பளித்த கண்ணை யுறுத்து உள்ளே புகுந்து நிற்கையாலே என் கண்ணினுள்ளன-என்கிறார்

அன்றியே
தம் கண்ணாலே பார்க்கை அவத்யம் என்று கண்ணைச் செம்பளித்தார்
கண்ணினுள்ளே பிரகாசிக்கத் தொடங்கிற்று-

ஒக்கின்ற –
பிரயோஜனம் இரண்டுக்கும் ஒத்திரா –
நின்றது அங்குதைக்கு சீல ஸித்தி -இங்குத்தைக்கு ஸ்வரூப ஸித்தி

ஒக்கின்ற –
ப்ரத்யஷ சாமாநகாரமாய் -இருத்தது -என்னுதல்
என் கண்ணுக்கு இலக்கான இடத்திலும் பழைய நிலை குலையாது -இருந்தது என்னுதல்
சம்சாரிகளைப் பார்த்து உங்களுக்கும் ஒக்குமோ என்கிறார் ஆதல்
இந்த லாபம் அத் தலைக்கு ஒக்குமோ என்கிறார் ஆதல் –

அமலன் -உயர்வற உயர்நலம் உடையவன்
ஆதி –யவன்
பிரான் மயர்வற மதி நலம் அருளினன்
அடியார்க்கு -பயிலும் சுடர் ஒளி
விண்ணவர் கோன் -அயர்வறும் அமரர்கள் அதிபதி
வந்து -அவர் தொழுது எழு -என்றார் -இவர்க்கு அவை தானே -வந்தன-

——————————————————————-

ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் அருளிய வியாக்யானம்-

அமலன் –
ஸ்ரீ வால்மீகி பகவான் -கோ குணவான் -என்று ப்ரஸ்நம் பண்ண -இஷ்வாகு வம்ஸ ப்ரபவ –
என்று சீல குணத்தை முந்துறச் சொன்னாப் போலேயும் –
நம் ஆழ்வார் ஆநந்த வல்லியில் ஆநந்த குணத்தை -உயர்வற உயர்நலம் உடையவன் –
என்று ப்ரதமத்திலே அநுபவித்தாப் போலேயும் –
இவரும் தம்முடைய நிஹீநதையைப் பாராதே மேல் விழுந்தபடியைக் கண்டு
அவனுடைய ஹேய ப்ரத்யநீகதையைப் முற்பட அனுபவிக்கிறார் –

தம்முடைய ஜன்மாதிகளால் உண்டான நிகர்ஷ அனுசந்தாநத்தாலே அகல –
அது தானே பற்றாசாக -திரு உள்ளம் புண்பட்டு மேல் விழுந்த இடத்திலும்
அத் தலைக்கு அவத்யம் இன்றியிலே நிர்மலனாய் இருக்கிற படியைக் கண்டு -அமலன் -என்கிறார் –
என் கண் பாசம் வைத்த பரஞ்சுடர் சோதி –

அமலன் –
அபஹத பாப்மத்வாதி குணங்கள் ஆத்மாவுக்கு உண்டாய் இருக்கச் செய்தேயும்
ஹேய சம்பந்த அவஹமாய் பகவத் ப்ரசாதத்தாலே உண்டாக வேண்டி இருக்கும் –
இவன் அங்கன் அன்றியே இருக்கும் –

அமலன் –
ஸூத்தன் என்றபடி -இவன் ஸூத்தனாகை -யாவது -தான் ஒருவன் ஸூத்தனாகை யன்று -தன்னோடு சம்பந்தித்தாரையும்
ஸூத்தராக்க வல்ல அடிவுடைமை –
துயரறு சுடரடி இறே-
பாவநஸ் சர்வ லோகானாம் த்வமேவ ரகு நந்தன -என்னுமா போலே-

அமலன் –
அகில ஹேய ப்ரத்ய நீகன் –
அசித் கதமான பரிணாமம் -தத் சம்ஸ்ருஷ்ட சேதன கதமான -அஞ்ஞான துக்கங்கள் –
முக்த கதமான ஜ்ஞான சங்கோச விகாசங்கள் –
நித்ய சித்த கதமான பாரதந்த்ர்யம்
இவையாகிய ஹேயங்களுக்கு ப்ரத்ய நீகனாய் இருக்கும்

பாரதந்த்ர்யத்துக்கு குறை என் என்னில் –
தனக்கு அவ்வருகு ஒருவன் உளனானால் வருமதே பாரதந்த்ர்யம் -அது ஈஸ்வரனுக்கு
அவத்யம் இறே -பரதந்த்ரனுக்கு சேஷித்வம் அவத்யமா போலே
புருஷனுக்கு ஸ்தநோத் பேதமும் ஸ்திரீகளுக்கு சமச் குணம் யோகமும் காணும் அந்த
மாறாட்டத்தாலே வரும் அவத்யம் –

ப்ரத்ய நீகனாகையாவது -உக்த அவத்யங்கள் தன்னை ஸ்பர்சியாமல் இருக்கும் அளவன்றிக்கே
புறம்புள்ள அவத்யங்களையும் அறுத்துக் கொடுக்க வல்லவனாகை
தேஜஸ் திமிரங்கள் போலே ஹேய ப்ரத்யநீகன் -என்கை –
ஆகை  இறே இவனை ஒழிந்தாருக்கு அடைய இவனே சுபாஸ்ரயமாய் இருக்கிறது –

ஆதி –
இப்படி நிஹீநரான உம்மை மேல் விழுந்து அங்கீகரிக்கைக்கு அடி என் என்ன
பெற்ற பாவிக்கு விடப்போமோ -என்கிறார் –

ஆதி –
ஆதி யத இதி ஆதி -ஸ்வரூப ரூபாதிகளைக் கண்டு எல்லாரும் மேல் விழும்படி இருக்கிற தான்
இத் தலையில் நிஹீநதை பாராதே மேல் விழுந்தான் -என்கை
ஆதி யத இதி ஆதி-தன்னை அனுபவித்தால் வேறு ஒன்றில் போக ஒட்டாதபடியாய் இருக்கும் –

ஆதி –
பூர்வஜ -என்னுமாபோலே -என்னுடைய நிகர்ஷத்தைப் போக்கி தன் பக்கலில் சேர்த்துக் கொள்ளுகையாலே
என் பேற்றுக்கு முற்பாடன் ஆனவன் –

ஆதி –
அடியில் அழிந்த ஜகத்தை உண்டாக்கினாப் போலே -நான் அழித்துக் கொண்ட ஸ்வரூபத்தை
உண்டாக்கினவன் –
இத்தால் -கல்யாண குண யோகத்தை சொல்லிற்று –

ஆக இரண்டு -பதத்தாலும் -ஹேய ப்ரத்யநீகத்வமும் கல்யாண குண யோகமும் சொல்லிற்று –

பிரான் –
கீழ்ப் பண்ணின உபகாரத்தை நினைத்து -பிரான் -என்கிறது ஆதல் –
மேல் பண்ணப் புகுகிற உபகாரத்தை நினைத்து பிரான் -என்கிறது ஆதல் –

பிரான் –
என் நிகர்ஷம் பாராதே என்னை விஷயீ கரித்த உபகாரகன்-

அடியார்க்கு என்னை ஆட்படுத்த விமலன் –
எனக்கு -என்றும் -பிறர்க்கு -என்றும் திரிந்த என்னை –
தனக்கும் தன் அடியார்க்கும் ஆக்கின பரிசுத்த ஸ்வபாவன்
தலையைப் பிடித்து கால் கீழே இட்டுக் கொண்டான் –
ரத்ன ஹாரீ ச பார்த்திவ என்னுமா போலே நல்லது கண்டால் -அவர்களுக்கு -என்று இறே –

ஸ்வ விஷய சேஷத்வத்தை உண்டாக்கின அளவு அன்றிக்கே
ததீய சேஷத்வ பர்யந்தமாக்கி
ததீய சேஷத்வம் நிலை நிற்கும்படி பண்ணினான்
ஆத்மாவுக்கு நிலை நின்ற வேஷம் சேஷத்வம் ஆகையாலே -அடியார்க்கு -என்கிறார்-

அடியார்க்கு –
இவர்களுக்கு -ஊரும் பேரும் தாருமாகிறது சேஷத்வம் ஆய்த்து –
சேஷத்வம் இறே இவ் வாத்மாவுக்கு பிரதம நிரூபகம்

என்னை –
தேஹாத்ம அபிமாநிகளும் தீண்டாத என்னை –
ப்ரக்ருதிக்கு அடிமை செய்து போந்த என்னை –
தந்த பதத்தின் சீர்மை யறியாத வென்னை –
நன்மைக்கு தனக்கு அவ் வருகு இல்லாதாப் போலே தீமைக்கு எனக்கு அவ் வருகு இல்லாத வென்னை

ஆட் படுத்த –
பகவத் சேஷத்து அளவில்  நின்றால் மீள சங்கை உண்டு –
பாகவத் சேஷத்த்ளவும் சென்றால் மீளப் போகாதே
உகப்பாலே வருமது ஆகையாலே -ஒரு ஷேத்ரம் பத்து எட்டு க்ரயம் சென்றால் மீள விரகு இல்லை –
ஸ்ரீ விபீஷண ஆழ்வானுக்கு முதலிகள் உடைய விஷயீ காரம் பெருமாளுடைய விஷயீ
காரத்துக்கு முற்பட்டாப் போலே இவருக்கு ததீய விஷயீ காரம் முற்ப்பட்ட படி –
ஆநயை நம் ஹரிச் ரேஷ்ட –

ஆட் படுத்த –
தான் சேஷித்வதினுடைய எல்லையில் நின்றால்  போலே -சேஷத்வத்தின்
எல்லையில் என்னை வைத்தான் –

அடியார்க்கு என்னை ஆட்படுத்த விமலன் –
அவர்களோடு சம புத்தி பண்ணித் தராமே -அவர்களுக்கு சேஷ பூதன் ஆக்கின பரிசுத்த ஸ்வபாவன் –
ஐஸ்வர்யார்த்திகளும் ஆத்ம ப்ராப்தி  காமரும் தன்னைப் பற்றுவர்கள் இறே –
இவ்வளவு புகுர நிறுதுகைக்கு அதிகாரிகள் அல்லர்களே யவர்கள்
அநந்ய பிரயோஜனர் இறே இவர்க்கு ஆவார்
தாமும் அநந்ய பிரயோஜனர் ஆகையாலே -விசேஷித்து லோக சாரங்க மஹா முனிகளை
இட்டு தம்மை விஷயீ கரித்ததை சொல்லுகிறார்
தம்மை வஹித்த அளவில் தாம் சேஷ பூதர்  ஆனபடி என் என்னில்
திருத்துழாய் திரு அபிஷேகத்தில் இருந்தது என்னா சேஷத்வம் குலையாதே-

மயி ப்ருத்யே ஸ்திதே தேவா நா ஜ்ஞாபயத கிம்ன் ருபை -என்றாம் என்னா
அவனுடைய சேஷித்வம் குலையாதாப் போலே

(மயி ப்ருத்யே ஸ்திதே தேவா நா ஜ்ஞாபயத கிம் ந்ருபை -ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-21-12-என்றும்
கிங்க ரௌ சமுபஸ்தி தௌ -பால -31-4-என்றும் சொல்லக் கடவது இறே-

சர்வ நியந்தா வானவன் ஒரு சம்சாரிக்கு புத்திரன் ஆனான் இறே –
இது இறே ஆஸ்ரித அர்த்தமான ஸ்வரூப அந்யதா பாவம் –)

விமலன் –
என் சிறுமை பாராதே ததீயர்க்கு சேஷம் ஆக்குகையால் வந்த ஔஜ்வல்யம்
எதிரிகள் தரம் பாராதே சீரியர் தம் தாம் அளவிலே இறே கொடுப்பது-

விண்ணவர் கோன் –
நிஹீ நரான உம்மை இப்படி விஷயீ கரித்தது ஆள் இல்லாமையாலேயோ என்னில் –
ஒரு த்ரிபாத் விபூதியாக தன்னை தாலாட்ட இருக்கிறவன் கிடீர் என்னை விஷயீ கரித்தான் -என்கை
இவ் ஔதார்யம் கற்றது அவர்களோடே கிடீர் என்றுமாம் –
அஸ்மாபிஸ் துவ்யோ பவதி -விபீஷணன் நம்மோடு ஒருவனாக ஆகட்டும் -என்றார்கள் இறே

விண்ணவர் கோன்
இங்குத்தை குழாத்தை ஒழிய அங்குத்தை குழாத்தையும் காட்டிக் கொடுத்தான்
உடன் கூடுவது என்று கொலோ -என்று இவர் ஆசைப்பட வேண்டியது இல்லை

கோன்
அவர்களாலும் எல்லை காண முடியாது-

விரையார் பொழில் வேங்கடவன் –
பரிமளம் நிறைந்து இருந்துள்ள சோலையை உடைய திரு வேங்கட மலையை உடையவன்
சர்வ கந்த என்கிற வஸ்து வாகையாலே போலியான பரிமளம் கண்டு கால் தாழ்ந்தது இத்தனை
குஸஸ்தலே நிவஸத் -என்னுமா போலே
பரம பதத்தில் நின்றும் கோயிலிலே ஏற வருகைக்கு என்று தங்குகிற தேசம் திருமலை

பிள்ளை திரு நறையூர் அரையரை சிலர் -பெரிய பெருமாளை அனுபவிக்க இழிந்தவர்
திருவேம்கடமுடையானைப் பாடப் போவது என் என்ன –
ஆற்றிலே அமிழ்ந்துகிறவன் ஒரு காலை  தரையிலே ஊன்றினால் பிழைக்கலாமோ
என்று கால்
தாழ்க்குமா போலே இவரும் பெரிய பெருமாள் அழகிலே அழுந்துகிறவர் ஆகையாலே
திருமலையிலே கால் தாழ்ந்தார்-

அது மடுவாகிறது அறிகிறிலர் -வேறு சிலர்
பெரிய பெருமாளை பாடா நிற்க்க திருமலையிலே போவான் என் -என்று அவரைக் கேட்க
ஒருவனைக் கவி பாடும் போது அவனுடைய வரத்து சொல்லி இறே கவி பாடுவது –
பரம பதத்தில் -நின்றும் ஸ்ரீ மதுரையிலே தங்கி -திருவாய்ப்பாடிக்கு வந்தால் போலே –
ஸ்ரீ வைகுண்டத்தின் நின்றும் -திருமலையிலே தங்கிக் காணும் கோயிலுக்கு வந்தது –
நித்ய சூரிகளை உடையவன் ஆவதுக்கு மேல் ஓர் ஐஸ்வர்யம்

விண்ணவர் கோன் விரையார் பொழில் வேங்கடவன் –
ஆற்றிலே அழுந்துவார் -ஆழம்காலிலே இளைப்பாறத் தேடுமா போலே அவர்களும்
வந்து அடிமை செய்யும் இடம்

வேங்கடவன் –
அர்ச்சாவதாரத்துக்கு பொற் கால் பொலிய விட்ட இடம் –

நிமலன்
நிர்ஹேதுகமாக விஷயீ கரித்த ஸூத்தி யோகத்தை உடையவன் –
இத்தலையை பெறுகைக்கு பச்சை இட்டவனும் தானே
இத்தலையில் அர்த்தித்வம்  இன்றிக்கே இருக்க இப்படி உபகரிக்கையால் வந்த ஔஜ்வல்யம்
இவனும் ஓர் அடி இடப்பார்த்து இராது ஒழிகை
ஓர் அடி இட்டார் உண்டாகில் -பத்ப் யாமபிக மாச்சைவ ஸ்நேக சந்தர்சநேந ச -ஆபிமுக்யம்
அடியாக அங்கீகரித்து ஓர் அஞ்சலி மாதரமும் கூட உண்டு அறுக்க மாட்டாதான் ஒருவன்

நிமலன் –
இத்தலைக்கு உபகரித்தானாய் இருக்கை அன்றிக்கே தன பேறாக இருக்கை

அமலன் -என்றது இவரைத் தனக்கு ஆக்கினபடி –
விமலன்-என்றது தன் அடியார்க்கு ஆக்கினபடி –
நிமலன் -என்றது நான் பச்சை இடா நிற்க என் கார்யம் செய்தான் -என்கை

நிமலன் –
இது தன் பேறாக செய்தான் -என்கிறார் –
க்ருத க்ருத்யஸ்த தாராம -என்கிறபடியே

நின் மலன் –
தான் உபகரித்தானாய் இத்தலை -உதவிக் கைம்மாறு என்னுயிர் -என்றால் போலே
பிரத்யுபகாரம் தேடித் தடுமாறாத படி -ப்ரணஷ் டஸ்ய யதா லாப என்கிறபடியே
உடையவன் உடைமையைப் பெற்றான் ஆகில் நமக்கு என் என்று –
ஆத்ம லாபம் தன்னதாம்படி இருக்கிற ஸூத்தியை உடையவன் –

நீதி -வானவன்
இப்படி புகுர நிறுத்துகைக்கு அடி -சேஷ சேஷித்வங்கள் முறை மாறாத நித்ய விபூதி-வாசனை என்கை
ஈஸ்வரோஹம்  -என்று எதிரிட்டு இருக்கும் இடம் இறே இவ்விடம் –

அங்கு கலக்குவாரும் இல்லை கலங்குவாரும் இல்லை
இங்கு கலக்குவாரும் உண்டு கலங்குவாரும் உண்டு –

நீள் மதிள்  அரங்கத்தம்மான் –
நீதி வானவன் -என்னா -நீள் மதிள்  அரங்கத்தம்மான் –என்கிறார் –
அளப்பரிய ஆரமுதை அரங்கமேய அந்தணனை -என்னுமா போலே
நீள் மதிள் அரங்கம் –

ரஷகத்துவதுக்கு போரும்படியான மதிளை உடைய பெரிய கோயிலிலே கண் வளர்ந்து
அருளுகிற பரம சேஷி –
இப் பாசுரம் கேட்டுப் போலே காணும் திருமங்கை ஆழ்வார் திரு மதிள் செய்தது
அழகிய வாயாலே இது அருளிச் செய்த பின்பாகாதே திரு மாளிகைகளும் திருக்
கோபுரங்களும் கனத்தது-

அம்மான் –
அங்குள்ளோரோடு ஒத்த ப்ராப்தி இங்கு உள்ளோரோடும் உண்டாகையாலே இங்கு வந்து சாய்ந்து அருளிற்று

அம்மான் –
ஈரரசு தவிர்ந்தால் இறே சேஷித்வம் பூர்ணம் ஆவது
திரு மலையிலே போக்யதை நிலம் இல்லாமையாலே மீளவும் கோயிலிலே புகுகிறார்
வெள்ளத்தை கள்ளமடையாலே பள்ளத்தே விடுமா போலே
திருவேம்கடமுடையான் வடக்குத் திருவாசலாலே வந்து புகுந்தான் அத்தனை -என்றுமாம்-

திருக் கமல பாதம் –
பெரும் காற்றிலே யிழிவார் தெப்பம் கொண்டு இழியுமா போலே -ஒரு தாமரைப் -பூவை
திருஷ்டாந்தம் -ஆக்குகிறார் -செவ்வி குளிர்த்தி நாற்றம் விகாசம் -இவை தாமரைப் பூவைப் போலே இருக்கையாலே –
ஆதித்ய சன்னதியிலே அலறும் தாமரை போலே ஆஸ்ரித சன்னதியிலே அலறும் தாமரை யாயத்து -திருவடிகள்-

பிராட்டி திருமுலைத் தடங்களிலும் திருக் கண்களிலும் ஒற்றிக் கொள்ளும் திருவடிகள்
இவருடைய தளிர் புரையும் திருவடிகள் இருக்கிற படி
அம்மான் திருக் கமல பாதம் –

என்கையாலே ப்ராப்தமுமாய் ப்ராப்யமுமாய் ஆன திருவடிகள் -என்கை
நாராயண சரணங்கள் –என்றபடி

வந்து –
என்று அவனுடைய உபாய பூர்த்தி -சொல்லுகிறது
விதிஸி வசனகாத் யைர்தத் யாது மத்யந்த தூரமான திருவடிகள் கிடீர் என்னளவும் வந்து
விஷயீ கரித்தது

த்விபாந்தரத்தில் சரக்கு சேர வேண்டினால் பாதிப் பாதி வழி யாகிலும் –
வருதல் -ஒருதலைப் பற்றுதல் செய்ய வேணும் இறே -அங்கன் இன்றியே –
வந்து உனது அடியேன் மனம் புகுந்தாய் -என்கிறபடி
வழி வந்தானும் -தானே பற்றினானும் தானே -என்கிறது-

என் கண்ணினுள்ளன
எத்தைக் கண்ட கண்ககளுக்கு இவை விஷயம் ஆகின்றன
நீதிவானவன் -கமலபாதம் -என் கண்ணினுள்ளன-
சதா தர்சனம் பண்ணுகிறவர்கள் உடைய கண்ணுக்கு இலக்கானது கிடீர் என் கண்ணுக்கு இலக்கு ஆய்த்து –
வல்லதனை நாளும் விரோதம் பண்ணினேன்
போக்கற்றவாறே என் கண்ணை செம்பளித்தேன்
தொடர்ந்து வந்து செம்பளித்த கண்ணை யுறுத்து உள்ளே புகுந்து நிற்கையாலே என் கண்ணினுள்ளன-என்கிறார்
அன்றியே
தம் கண்ணாலே பார்க்கை அவத்யம் என்று கண்ணைச் செம்பளித்தார்
கண்ணினுள்ளே பிரகாசிக்கத் தொடங்கிற்று-

ஒக்கின்ற –
பிரயோஜனம் இரண்டுக்கும் ஒத்திரா –
நின்றது அங்குதைக்கு சீல ஸித்தி -இங்குத்தைக்கு ஸ்வரூப ஸித்தி

ஒக்கின்ற –
என் கண்ணுக்கு இலக்கான உங்களுக்கும் ஒக்கும் என்கிறார் –ஆதல்
கண்ணினுள்ளன ஒக்கின்றவே -என்று ஒரு பதமாய்
என் கண்ணினுள்ளன வானாப் போலே இரா நின்றது -என்றபடி –

ஒன்பது பாட்டு வழியிலே அனுசந்தித்து பத்தாம் பாட்டிலே திருவடி தொழுதார் என்கிற
ஐதிகத்தின் படியே மானஸ சாஷாத்காரம் தான் கண்ணிட்டுக் கண்டால் போலே இருக்கை
அங்கன் இன்றிக்கே –
மானஸ சாஷாத்காரத்தோடு சேர்ந்து இருந்ததீ -சஷூர் விஷயமான திருவடிகள் என்றுமாம் –

அமலன் -உயர்வற உயர்நலம் உடையவன்
ஆதி –யவன்
பிரான் மயர்வற மதி நலம் அருளினன்
அடியார்க்கு -பயிலும் சுடர் ஒளி
விண்ணவர் கோன் -அயர்வறும் அமரர்கள் அதிபதி
வந்து -அவர் தொழுது எழு -என்றார் -இவர்க்கு அவை தானே -வந்தன –

———————————————————————-

ஸ்ரீ வேதாந்த தேசிகர் முநி வாஹன போகம் -அவதாரிகை
இதில் முதல் பாட்டு -திரு மந்த்ரத்திலும் த்வயத்திலும் முமுஷுவுக்கு அவஸ்ய
அனுசந்தேயங்களான அர்த்தங்களை ஸூசிப்பிக்கிறது

வியாக்யானம்
அமலன் -என்கிறது மலப்ரதிபடன் -என்றபடி -இத்தால் மோஷ ப்ரதத்வம் சொல்லிற்று ஆய்த்து –
இது பிரதானமான ரஷகத்வம் ஆகையாலே பிரியப் பேசப்படுகிறது

ஆதி –
ஏஷ கர்த்தா ந க்ரியதே -இத்யாதிகளில் படியே சர்வ ஜநதேக காரண பூதன்

இத்தால் -காரணமே சரண்யம் என்கிறபடியே முமுஷுவுக்கு சரணமாக பற்றப்படுமவன் என்று பலிதம்

இக் காரணத்வமும் மோஷ பிரதத்வமும் சத்ர சாமரங்கள் போலே சர்வ லோக
சரண்யனுக்கு விசேஷ சிஹ்னங்கள்-

பிரான் –
கருணா க்வாபி புருஷே இத்யாதிகளில் படியே சர்வ உபகாரகன்
இங்கு ஆத்மாக்கள் உடைய சத்தாதி ஸ்தாபனம் முதலாக பரிபூர்ண கைங்கர்ய ப்ரதான
பர்யந்தமாக -ப்ரத்யுபகாராதி நிரபேஷனாவனனுடைய
அநுகம்பா அக்ருத்யங்கள் எல்லாம் சாமான்யேந -சொல்லப்படுகிறது
இது எல்லாம் பிரதம அஷரார்தமான ரஷண -பேதம்
இவை தம்மளவில் பர்யவசித படியிலே இம் மூன்று பதத்துக்கும் தாத்பர்யம்
இது மேல் பாசுரங்களிலும் காணலாம்-

அடியார்க்கு என்னை -ஆட்படுத்த -என்கிற இடத்தில் –
அடியார்-என்கிற இத்தால் -த்ருதீய அஷரத்திலே சொன்ன ஜீவ வர்க்கமும்
ஜீவனில் ஈஸ்வரனைக் காட்டில் வேறுபாடும் அந்யோந்யம் பிரிவும் -காட்டப்படுகிறது –

அடியார் -என்றால்
சர்வ சாதாரணமாக சதுர்த்தியில் சொன்ன தாதர்த்யவான்களை எல்லாம்
காட்டிற்றே யாகிலும் -இங்கு அடியார் -என்கிறது –
யோ ஹ்யேநம் புருஷம் வேத தேவா அபி ந தம் விது –
என்னும்படி அபரிச்சேத்ய மகாத்யம்யரான சேஷத்வ ஜ்ஞான ரசிகரை –

இப்படி அடியார்க்கு -என்று விசேஷ உபாதானம் பண்ணுகையாலே –
மத்யம அஷரத்தின் படியே நிருபாதிக சேஷிகள் வேறு இல்லாத -படியும்
கர்ம உபாதிக சேஷிகளோடு தமக்கு துவக்கு அற்ற படியும் சொல்லிற்று ஆயிற்று –

சர்வ சேஷி யாகையாலே சர்வத்தையும் யதேஷ்டமாக விநியோகிக்க ப்ராப்தனாய் –
நிரந்குச ஸ்வதந்த்ரன் ஆகையாலே சர்வத்தையும் யதேஷ்டமாக விநியோகிக்க சக்தனுமான
சர்வேஸ்வரன் -அநந்ய பிரயோஜனரான ஆஸ்ரீ தர்க்கு சர்வமும் சேஷமாகக் கடவது -என்று
விநியோக விசேஷத்தால் சர்வருக்கும் பாகவத சேஷத்வம் நித்ய சித்தமானால்
அநந்ய பிரயோஜனரான ஆஸ்ரீதர்க்கு பகவத சேஷத்வம் ஈஸ்வரன் தன்னையும் பாகவதரையும் ஒழிந்த
அந்யரைப் பற்ற சேஷத்வம் இல்லாதபடி-வருகிறதே இதின் பலமான -கைங்கர்யமும் இப்படி
வருகிறது ஆகையாலே -என்னை அடியார்க்கே ஆட்படுதினான் -என்ற அவதாரணமும்
இங்கே விவஷிதம்

மற்றுமோர் தெய்வம் உளது என்று இருப்பரோடு உற்றிலேன் -என்று இறே இவர்களுடைய -பாசுரம்-

என்னை ஆட் படுத்த –
யூயமிந்த்ரிய கிங்கரா -என்னும்படி இந்திரிய கிங்கரனாய் வைத்து -அதுக்கு மேலே –
ஈஸ்வரோஹம் -என்று இருக்கக் கடவ -என்னை -அதோஸஹமபி தே தாஸ -என்னப்
பண்ணின உபகாரத்தில் காட்டிலும் -உற்றதும் உன் அடியார்க்கு -அடிமை என்னப்
பண்ணின இதுக்கு மேலே ஒரு உபகாரம் உண்டோ என்று -இப் பரம உபகாரத்தையும்
பிரித்து -பேசுகிறார்
இது நமஸில் தாத்பர்யம்
கீழ்ச் சொன்ன க்ர்த்ருத்வாதிகளாலே -எருத்துக் கொடி யுடையான் -முதலான ஆத்மாந்தரங்களுக்கு
போலே அஜ்ஞாநாதி தோஷங்கள் இவனுக்கு உண்டாகில் இவன் முன்பு சொன்ன
சாஷான் மோஷ ப்ரதானம் பண்ண வல்லனோ -என்ன –

விமலன்
நித்ய நிர்தோஷன் -இத்தால் பத்த முக்த விலஷணன் -என்றது ஆயிற்று –

இவ்வளவு ஸூரிகளுக்கும் இல்லையோ என்ன –
விண்ணவர் கோன் –
பராதீன ஸூத்தி யோகத்தை உடையரான ஸூரிகளைக் காட்டில் வேறு பட்டவன் –
இத்தாலே ஸூரி சேவ்யமான பர ரூபமும் தோன்றுகிறது
இப்படி எட்டா நிலத்திலே இருக்கும் இருப்பு இங்கு உள்ளாருக்கு நிலம் அன்றே -என்ன-

விரையார் பொழில் -வேம்கடவன்
பரிமளம் வடிவு கொண்டால் போலே இருக்கிற திருச் சோலைகளை உடைய திரு மலையிலே
கண்ணாவான் என்றும் மண்ணோர் விண்ணோர்க்கு -என்கிறபடியே எல்லாருக்கும்
ஆஸ்ரயிக்கவும் அநுபவிக்குமாம்படி -இருள் தரும் மா ஞாலத்துள் குன்றத்து இட்ட விளக்காய் -நிற்கிறவன்
எம்பெருமான் பொன் மலை மேல் ஏதேனும் -ஆவேனே என்னும்படி பிறந்த ஸ்தாவரங்களுடைய
ஆமோதம் அதிசயமாய் இருக்கும் –

இப்படி சர்வ ஸூலபன் ஆனாலும்
அவ் வண்ணத்தவர் நிலைமை கண்டும் தோழி அவரை நாம் தேவர் என்று அஞ்சினோமே
என்னும்படி -நிற்குமோ -என்ன

நிமலன்
ப்ரஹ்ம ருத்ராதிகளும் அஞ்சி அருளப்பாடு முன்னாக அணுக வேண்டும்படியான
ஐஸ்வர்யத்திலே குறும்பற்ற நம்பிக்கு கூசாதே நிரந்தர சம்ஸ்லேஷம் பண்ணலாம்படி
தன்  ஈஸ்வர சுணை யாகிற ஆஸ்ரயண விரோதி தோஷத்தை -மறைத்து
அர்ச்சக பராதீன அகிலாத்ம ஸ்திதி -என்கிறபடியே ஆஸ்ரீத பாரதந்த்ர்யத்தை வெளி இட்டு நிற்குமவன்
இப்படி சௌலப்ய சௌசீல்யங்கள் உண்டானாலும் ஆஸ்ரீத தோஷத்தைக் காணும் ஆகில்
அணுகக் கூசார்களோ –என்னில்

நின்மலன் –
அவிஜ்ஞாதா -என்றும் -என் அடியார் அது -செய்யார் என்றும் சொல்லுகிறபடியே
ஆஸ்ரீதருடைய தோஷ தர்சனம் ஆகிற சரண்ய தோஷம் இல்லாதவன்
சர்வஜ்ஞனாய் இருக்கச் செய்தே ஆஸ்ரீத தோஷத்தை காணான் என்றது –
காணும் அதுவும் இவர்கள் உடைய தோஷத்தைக் கழிக்க உறுப்பாம் -என்றபடி –

விமலன் -என்று தொடங்கி -இவ் வஞ்சு பதங்களாலே நாராயண சப்தத்தில்
உபாயத்வ ப்ராப்யத்வங்களுக்கு உபயுக்தமான உபய லிங்கத்வமும்
உபய விபூதி நிர்வாஹகத்வமும் சொல்லிற்று ஆயிற்று

மேல் -இவன் ஸ்வரூப ப்ராப்த கைங்கர்ய ரூபமான நீதியிலே நிரதரான நித்ய ஸூரிகளுக்கு
சேவ்யனானாப் போலே நமக்கும் சேவ்யனாம் என்று -சதுர்த்தியில் கருத்தான
கைங்கர்ய பிரதி சம்பந்தித்வத்தை அனுசந்திக்கிறார்

நீதி -வானவன்
இங்கு வான் -என்கிற சப்தம் ஸூரி சஹிதமான பரம பதத்தை சொல்லுகிறது
நீதியை நடத்துவிக்கும் வானிலே வர்த்திக்குமவன் -என்னவுமாம் –

தேன வஞ்சயதே லோகன் மாயா யோ கேந கேசவ -என்கிறபடியே –கலக்குவாரும்
அவசா நந்தி மாம் மூடா -என்கிறபடியே கலந்குவாரும் இல்லாத தேசம் ஆகையாலே
தாஸ்யம் ஐஸ்வர்ய யோகேன ஜ்ஞாதீ நாஞ்ச கரோம் யஹம் –என்றும்
பரம ஈஸ்வர சம்ஜ்ஞோஸ்ஜ்ஞா கிமந்யோ மய்ய வஸ்திதே -என்றும்
இங்கு பிறக்கும் ஈசேசி தவ்யத்தின் மாறாட்டம் இல்லாத பரம பதத்தில் நித்ய வாஸம்
பண்ணுகிறவன் என்றது ஆய்த்து-

இப்படி சர்வ சேவ்யனான சர்வ சேஷி -விபீடணற்கு வேறாக நல்லான் -என்கிறபடியே
தமக்கு இப்போது விசேஷித்து அனுபவிகலாம்படியைப் பேசுகிறார் –

நீள் மதிள் அரங்கத்தம்மான் –
அயோத்யை -என்றும் அபராஜிதை -என்றும் சொல்லுகிற கலங்கா பெரு நகரத்தின் படியைக்
கொடி யணி நெடு மதிள்களாலே -ஸூ ரஷிதமான ஸ்தல விசேஷத்தாலே காட்டி –
அயர்வறும் அமரர்கள் அதிபதியான -தன் படியை -செங்கோல் உடைய திருவரங்க செல்வனார் ஆன
ஆகார விசேஷத்தாலே அறிவித்துக் கொண்டு சேஷித்வத்தின் எல்லையிலே தான் நின்றால் போலே
சேஷத்வத்தின் எல்லையில் என்னை நிறுத்தின ஸ்வ தந்திர ஸ்வாமி

அரங்கத்தம்மான் –
நீர்மைக்கும் மேன்மைக்கும் எல்லை யானவன்
இவனுடைய உபாயத்வ ப்ராப்யத்வங்களில் உறைப்பு உண்டான திருவடிகளை அனுபவிக்கிறார்

திருக் -கமலபாதம்
பாவநத்வ போக்யத்வங்களாலே சுபாஸ்ரயமான திருவடிகள் –
திருவுக்கு லீலா கமலம் போலே இருக்கிற பாதம் -என்னவுமாம்-

வந்து
வந்து என்கிற இத்தால் ஓடின தம்மை துடர்ந்த படியும்
அயத்ந லப்தங்களான படியும் -தோன்றுகிறது -இத்திருவடிகளில் வைத்த கண்
வாங்க ஒண்ணாத படியான போக்ய அதிசயத்தை ஓர் உத்ப்ரேஷையாலே அருளிச் செய்கிறார்

என் கண்ணினுள்ளன ஒக்கின்றதே
தேவாதிகளில் தலைவரான ப்ரஹ்மாதிகள் அடையவும்
சனகாதிகளான யோகிகள் அடையவும்
திவ்ய சஷூஸ் ஸுக்களுக்கும் கூட தூயமாய் இருக்கக் கடவ அவை –
மனுஷ்ய மாத்ரமான என்னுடைய மாம்ஸ சஷூஸ் ஸுக்களுக்கும்
அத்ய அசன்னமாய் இரா நின்றன -என்று ஆச்சர்யப் படுகிறார் –
நீள் மதிள் அரங்கத்தம்மான் திருக்கமல பாதம் -என்று
த்வயத்தில் பூர்வ உத்தர நாராயண சப்தார்த்தையும் -சரண சப்தார்த்தையும் அனுசந்தித்த படி –

இப்பாட்டால் –
1-மோஷ -பிரதத்வத்தையும்
2-ஜகத் -காரணத்வத்தையும்
3-மற்றும் சர்வப்ரகார உபகாரத்வத்தையும்
4-அவற்றில் சார தமமான உபகார விசேஷத்வத்தையும்
5-நித்ய நிர்தோஷத்வத்தையும்
6-நித்ய ஸூரி நிர்வாஹத்வத்தையும்
7-நித்ய விக்ரஹவத்தையும்
8-சர்வ ஸூலபத்வத்தையும்
9-சௌசீல்யத்தையும்
10-வாத்சல்யத்தையும்
11-கைங்கர்ய உத்தேஸ்யத்வத்தையும்
12-கைங்கர்ய ஸ்தான விசேஷத்வத்தையும்
13-சர்வ ஸ்வாமித்வத்தையும்
14-15-திருவடிகளினுடைய பாவனத்வத்தையும் போக்யத்வத்தையும்
16-அவற்றை தான் அநாயாசமாக அநந்ய த்ருஷ்டிகளாகக் கொண்டு அனுபவிக்கப் பெற்ற படியையும்
முன்னிட்டு ஸ்ரீ ய பதியினுடைய பராகாஷ்டாப்ராப்த குண ப்ரகர்ஷங்களை அனுசந்தித்தார்-

அவற்றில்
1-சம்சார நிவர்தக காஷ்டை யாவது -களை யற்ற கைங்கர்யத்தை கொடுக்கை –
2-காரணத்வ காஷ்டை யாவது -காரணாந்தரங்கள் எல்லாம் தான் இட்ட வழக்காய் –
தனக்காதல் -தன்னுடைய ஜ்ஞான சக்திகளுக்கு ஆதல் -ஒரு காரண சம்பாவனை இன்றிக்கே இருக்கை –
3-சரண்யத்வ காஷ்டை யாவது -தன்னை ரஷகனாக பற்றினவர்களுக்கு தன்னை ஒழிய
மற்றவரை ரஷகராகப் பற்ற வேண்டாதபடி இருக்கை
4-உபகாரத்வ காஷ்டை யாவது -ஒரு ஷூத்ர வ்யாஜத்தை அவலம்பித்து உபய விபூதி
விசிஷ்டனான தன்னை அனுபாவ்யனகக் கொடுத்தும் -அதுக்கு மேல் கொடுக்க லாவது
இல்லாமையாலே நித்யருணியாய் இருக்கை

5-க்ருபா காஷ்டை யாவது -சத்ருவினுடைய சம்பந்திகளும் கூட த்யாஜ்யர் என்ற பரிவர் முன்னே
சத்ரு தானும் இசையில் ஸ்வீகரிப்பேன் -என்று எதிர் பேசும்படியான இரக்கத்தை உடையனாய்
அவர்கள் தாங்களும் இவனை கைக் கொள்ளும்படி பண்ணுகை –
6-ஸ்வா தந்திர காஷ்டை யாவது -தன்னையும் பிறரையும் தான் நிறுத்தின நிலைகளிலே
நிறுத்தும் போது விலக்க வல்லார் இன்றிக்கே இருக்கை
7-நிர்தோஷத்வ காஷ்டை யாவது -தோஷ யுக்தங்களான பதார்த்தங்களோடு உண்டான
சம்சர்க்கத்தாலும் -பிறர்க்குஅஞ்ஞான துக்க ஹேதுக்கள் ஆனவற்றை தான் அனுஷ்டித்தாலும்
தனக்கு அஞ்ஞான துக்கங்கள் வராது இருக்கை
8-ஸ்வாமித்வ காஷ்டை யாவது -விபூதிமான்களை எல்லாம் தனக்கு விபூதியாக உடையவனாய் இருக்கை
9-சௌலப்ய காஷ்டை  யாவது -அகல நினைப்பாருக்கும் அகல ஒண்ணாத படி அணுக நிற்கை

10-சௌசீல்ய காஷ்டை யாவது -தன் பக்கல் ஈச்வரத்தை சந்கிப்பாருக்கும் வெளி இடுவாருக்கும்
தானே மறு மாற்றம் சொல்லி மேலும் தன்னை தாழ விட்டு பரிமாறா நிற்கை
11-வாத்சல்ய காஷ்டை யாவது -அந்தரங்கராய் இருப்பாரும் ஆஸ்ரீத விஷயத்தில்
ஆயிரம் கோடி  குற்றம் காட்டிலும் அநாதரம் பிறப்பிக்க ஒண்ணாது இருக்கை –
12-ப்ராப்யத்வ காஷ்டை யாவது -தன் விசேஷணம் ஆக அல்லது மற்று ஒரு ப்ராப்யம் இல்லாது இருக்கை
13-ஆஸ்ரீத பஷ பாதித்வ காஷ்டை யாவது -சர்வ வர்ண சமனான தான் ஆஸ்ரீத சங்கல்பத்தோடே

விரோதித்த தன் சாமான்ய சங்கல்பத்தைஅசத் கல்பமாக்கி அநிதர சுலபமான ஆபிமுக்யதைப் பண்ணுகை
14-போக்யத்வ காஷ்டை யாவது -தன் ஸ்வரூபத்தை அனுசந்தித்தால் தன் விசேஷணமாக
சர்வத்தையும் அனுபவிக்குமது அதின் திவலையோடு ஒத்து இருக்கை
15-அயத்ந போக்யத்வ காஷ்டை யாவது -போகார்தமாக கரண பிரேரணமும் வேண்டாதபடி
தென்றலும் பரிமளமும் வந்தாப் போலே -வந்தது விலக்க ஒண்ணாத படி அனுபாவ்யனாய் இருக்கை
16-இவை எல்லாம் இப்பதங்களில் அடைவே ஆழ்வார் அனுபவித்த படியை அனுசந்திப்பது-

—————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேதாந்த தேசிகர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருப்பாண் ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ அமலனாதி பிரான் –ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை அருளிய-ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் அருளிய–ஸ்ரீ வேதாந்த தேசிகர் முநி வாஹன போகம் -வியாக்யானம் -அவதாரிகை –

May 15, 2013

ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை-அருளிய-வியாக்யானம் –அவதாரிகை –

பிரணவம் போலே -அதி சங்குதிமாய் இருத்தல் –
வேதமும் வேத உபப்ரும்ஹணமான மஹா பாரதமும் போலே பரந்து துறுப்புக் கூடாய் இருத்தல் -செய்யாதே –
பத்துப் பாட்டாய் -ஸூக்ரஹமாய் -சர்வாதிகாரமுமாய் இருக்கும் –

வேத அநத்யாபயாமாஸ மஹா பாரத பஞ்சமான் -என்றும் சொல்லுகிறபடியே
வேத உப ப்ருஹணமான -மஹா பாரத ராமாயணங்களும்
நாராயண கதாம் இமாம் -இத்யாதிகளைச் சொல்லி வைத்து
பகவத் கதை அல்லாவற்றையும் சொல்லி வைத்தது-

திருவாய் -மொழியும்
அமர்சுவை -யாயிரம் -என்றும்
பாலோடு அமுதன்ன ஆயிரம் -என்றும் –
உரை கொள் இன் மொழி -என்றும் –
ஏதமிலா ஆயிரமாய் இருந்ததே யாகிலும் –
அந்ய உபதேச ஸ்வா பதேசம் -என்ன
ஸாமாநாதி கரண்ய நிர்ணயகம் -என்ன –
த்ரி மூர்த்தி சாம்ய தத் உத்தீர்ண தத்வ நிஷேதம் -என்ன –
இவை தொடக்கமான அருமைகளை உடைத்தாய் இருக்கும் –

திரு நெடும் -தாண்டகமும்
பரப்பற்று முப்பது பாட்டாய் இருந்ததே யாகிலும்
அதுக்கும் அவ் வருமைகள் உண்டு –

திருமாலைக்கு
அவ் வருமைகள் இல்லையே யாகிலும்
தம்முடைய லாப அலாப ரூபமான ப்ரிய அப்ரியங்களை
ப்ரதிபாதியா -நிற்கும்-

திருப் பல்லாண்டுக்கு இக்குற்றங்கள் இல்லையே யாகிலும் –
அதுக்கும் ஒரு குற்றம் உண்டு –
த்ரிவித அதிகாரிகளுடைய குணாகுணங்களைப் ப்ரதி பாலிக்கையாலே-

பிரணவம் போலே அதி சங்குசிதிமாய் -துர் ஞேயமாய் -இராமையாலே –
யதி ஹாஸ்தி ததத் அந்யத்ர யன்நே ஹாஸ்தி நத்க் வசிக் -என்கிறபடியே
ஆயிரத்தில் ஒன்றும் கடலில் குளப்படியும் போலே
புறம்பு இல்லாதவை எல்லாம் இதிலே உண்டாய்
இதில் இல்லாதது ஒன்றும் புறம்பு இன்றியே இருக்கும் –

பர வியூஹ விபவங்களை பிரதிபாதிக்கை அன்றிக்கே –
அர்ச்சாவதார ரூபேண வந்து அவதரித்து
திருவரங்கப் பெரு நகருள் தெண்ணீர் பொன்னி திரைக் கையால் அடி வருட
பள்ளி கொள்ளும் கருமணியை கோமளத்தை கண்டு கொண்டு
மணத் தூணே பற்றி நின்று வாயார வாழ்த்துகிற பிரபந்தம் ஆகையாலே
எல்லா பிரபந்தகளிலும் இதுக்கு வை லஷண்யம் உண்டு –

மற்றை ஆழ்வார்களைக் காட்டில் இவர்க்கு நெடு வாசி உண்டு –
பல்லாண்டு -போற்றி -என்று பாவிக்க வேண்டிற்று அவர்களுக்கு –
அது வேண்டாதே -ஜந்ம சித்தமாய்த்து இவர்க்கு –

குலங்களாய வீரிரண்டில் ஒன்றிலும் பிறந்திலேன் -என்கிறபடியே இவர் தம்மை
நாலு வர்ணத்திலும் புறம்பாக நினைத்து இருப்பர் –

பெரிய பெருமாளும் அப்படியே நினைத்து இருப்பர் –
நித்ய ஸூரிகள் நாலு வர்ணத்தில் உள்ளார் அல்லரே –

ஆழ்வார்கள் இரு கரையர் -என்னும்படி இறே ஸ்ரீ தொண்டர் அடிப் பொடி யாழ்வார்  ஐகாந்த்யம்
அவரிலும் இவர்
பரோபதேசமும்
இதர நிரசனமும்
அனுபவ விரோதி என்று
வெறும் பெரிய பெருமாளையே அடித்தலை செவ்விதாக வநுபவிக்கிறார்

ஸ்நேஹே மே பரம –
என்றன் வளவன்றால் யானுடைய வன்பு –
ராஜம் ஸ்த்வயி –
இது தானும் என்னால் வந்தது அன்று -அதுவும் அவனது இன்னருளே –
நித்யம் பிரதிஷ்டித-
இன்றன்றாகில் மற்றொரு தர்மியைப் பற்றி வருகிறதாகையாலே –
நின்னலால் இலேன் காண் -என்னுமா போலே

பக்திஸ்ச நியதா

ஸ்நேஹம் ஆவது என் -பக்தி ஆவது என்
பக்தி ஆவது என் என்னில் -பெருமாளை ஒழியச் செல்லாமை பிறந்து வ்யதிரேகத்தில்
முடிந்த சக்கரவர்த்தி நிலை -ஸ்நேஹம் –
பக்தி -யாவது நில் -என்ன -குருஷ்வ -என்னும்படியாய் முறை அறிந்து பற்றின
இளைய பெருமாள் நிலை –

வீர -தன்னைத் தோற்பித்த துறை
உம்முடைய வீரம் கொண்டு புறம்பே வென்றீர் என்று இங்கு வெல்ல முடியாது –
தானும் வீரன் ஆகையாலே தோற்பித்த துறையைப் பிடித்துப் -பேசுகிறான்

பாவோ நாந்யத்ர கச்சதி -என்று என்னை மீட்டீராகிலும் என்னுடைய நெஞ்சை மீட்க்கப் போகாது

அந்யத்ர-என்கிறது –
மற்று ஆரானும் உண்டு -என்பார் என்னுமா போலே
கொடு போக நினைத்த தேசத்தின் பேரும் கூட தனக்கு அசஹ்யமாய் இருக்கிறபடி –
இப்படி ராமாவதாரம் அல்லது அறியாத திருவடியைப் போலே ஆய்த்து இவரும்
இவர் தேவாரமான பெரிய பெருமாளை அல்லது பர வ்யூஹ விபவங்களை-அறியாதபடியும்

(ஸ்நேஹோ மே பரமோ ராஜந் த்வயி நித்யம் ப்ரதிஷ்டித:
பக்திஸ்ச நியதா வீர பாவோ ந அந்யத்ர கச்சதி’-என்பது, ஸ்ரீராமா. உத். 40 : 16. இது திருவடி கூற்று.

மற்றுங் கற்பரோ’ என்கிறார்.
ஸ்நேஹ: மே பரம:-
எழுந்தருளுகிற போது ‘என் வழியே போந்தாலோ?’ என்ன,
‘அவ்வளவு அன்று காணும் எனக்கு ஸ்நேஹம்’, என்கிறான்.
‘மாலே நெடியானே கண்ணனே விண்ணவர்க்கு
மேலா வியன் துழாய்க் கண்ணியனே -மேலாய்
விளவின் காய் கன்றினால் வீழ்த்தவனே என்தன்
அளவன்றால் யானுடைய வன்பு –100-’-(இரண்டாம் 100 )என்றும்,
‘உருகுமால் நெஞ்சம் உயிரின் பரம் அன்றி
பெருகுமால் வேட்கையும் என் செய்கேன் தொண்டனேன்
தெருவு எல்லாம் காவி கமழ் திருக் காட்கரை
மருவிய மாயன் தன் மாயம் நினைதொறே–9-6-1- என்றும் சொல்லுமாறு போலே

ராஜந் த்வயி-
இது தானும் என்னால் வந்தது அன்று.-‘ரஞ்ஜயதீதி ராஜா’ ஆகையாலே.

நித்யம் ப்ரிதிஷ்டித; –
‘இப்போது ஒண்ணாதாகில், மற்றொரு போது கொள்ளுகிறோம்’, என்றால், அது செய்ய ஒண்ணாது,
தர்மியைப் பற்றிக் கிடப்பது ஒன்று ஆகையாலே .

பக்திஸ்சநியதா –
பெருமாளை ஒழியச் செல்லாமை பிறந்து பிரிவில் முடிந்த சக்கரவர்த்தியின் நிலை சினேகம்;
பத்தியாவது, ‘நில்’ என்ன, ‘குருஷ்வ – கொள்க’ என்னும் படியாய், முறை அறிந்து பற்றின இளைய பெருமாள் நிலை.

வீர –
உம்முடைய வீரம் கொண்டு புறம்பே வென்றீர் என்னா, இங்கும் வெல்ல முடியாது.
தானும் அவன் ஆகையாலே ( நீயும் வீரன் நானும் வீரன் )தோற்பித்த துறையைப் பிடித்துச் சொல்லுகிறான்,

பாவோ ந அந்யத்ர கச்சதி –
என்னை மீட்டீராகிலும் என்னுடைய நெஞ்சினை மீட்கப் போகாது,
‘என்னுடை நல் நெஞ்சந்தன்னை அகல்விக்கத் தானும் கில்லான் இனி’ திருவாய். 1. 7 : 8.என்னுமாறு போலே.
‘சர்வ சத்தியான அவனாலும் மீட்கப் போகாது,’ என்கை.
கண்ட கண்கள் மற்று ஒன்றினைக் காணோவே’ என்னுமாறு போலே, ‘அந்யத்ர ந கச்சதி’ என்கிறது.

‘அந்யத்ர’ என்கிறது,
போகிற இடத்தின் பேரும் சொல்லுகை பொறாதபடி;
‘மற்று ஆரானும் உண்டு என்பார்’( திரு மடல் ) என்னமாறு போலே,
இவரும், ‘மற்றுங் கற்பரோ?’ என்கிறார்.)

ஸ்ரீ வைகுண்டம் திருப்பாற் கடல் திருவவதார ஸ்தலம் உகந்து அருளின திருப்பதிகள்
இவை எல்லாம் -பெரிய பெருமாளே யானாப் போலே -அவ்வோ இடங்களில் உண்டான
சௌந்தர்ய குண சேஷ்டிதங்கள் எல்லாம் பெரிய பெருமாள் பக்கலிலே காணலாம் –
பெரிய பெருமாள் அழகும் ஐஸ்வர்யம் எல்லாம் பரமபதத்திலே முகிளிதமாய் இருக்கும் –
அவதாரத்திலே ஈரிலை போரும் –

இங்கே வந்த பின்பு தழைத்தது -எங்கனே என்னில் –
பொங்கோதம் சூழ்ந்த புவனியும் விண்ணுலகும்
அங்காதும்  சோராமே ஆள்கின்ற எம்பெருமான்
செங்கோலுடைய திருவரங்கச் செல்வனார் ஆகையாலே
அவ்வோ இடங்களிலே சங்குசிதமாய் இருந்தது இறே

தன்னை உகந்தாரை அனுபவிக்கை இன்றியே -தான்-என்றால் விமுகராய் இருப்பாரும் கூட அநுபவிக்கலாம் படி
இருக்கையாலே நீர்மையினால் வந்த ஏற்றமும் இங்கே உண்டு –
குணாதிக்யத்தாலே இறே வஸ்துவுக்கு உத்கர்ஷம் –
குணம் விலை பெறுவது இங்கே இறே –

குணத்தில் அகப்பட்டார் இவ்விஷயம் போக்கி அறியார்கள் இறே –
யதோ வாசோ நிவர்த்தந்தே -என்று வேதங்களுக்கு எட்டாத சர்வேஸ்வரனை
ஆற்றில் தண்ணீரோபாதி -ஆற்றுக்குள்ளே கண்டு அநுபவிக்கலாம் படி இருக்கிற இடம் இறே –
மழைக்கு அன்று வரை முன்னேந்தும் மைந்தன் மதுரவாறான அவ்வாறு இவ்வாறு -ஆய்த்து காணும் –

இவர் தமக்கு
ப்ராப்யரும்
ப்ராபகரும்
ருசி ஜனகரும்
விரோதி நிவர்தகரும்
எல்லாம் பெரிய பெருமாளே என்கிறார் –

பல போக்த்ருத்வம் தம்மதாய் இருக்க -எல்லாம் அவரே -என்கிறபடி எங்கனே என்னில் –
பிரதம ஸூஹ்ருதமும் தானேயாய் –
இப்பேற்றுக்கு வேண்டியன நிர்வஹித்துப் போந்த சௌஹார்த்தமும் அத்தலையிலே கிடைக்கையாலே –
பேற்றுக்கு இத்தலையில் உள்ளது சொல்லப் பாத்தம் போதாது இறே –
உள்ளது உண்டாகில் அவன் அனுக்ரஹத்தாலேயாம் இத்தனை –

இதர விஷயங்களில் அருசியும் -பகவத் விஷயத்தில் அப்ரதிஷேதமும் விளைந்த
மாத்ரத்திலே பெரிய பெருமாள் தம்முடைய -ஸ்வரூப ரூப குண விபூதிகளைக் காட்டக் கண்டு அநுபவித்து ப்ரீதர் ஆகிறார் –

ஆநயைநம் ஹரிஸ்ரேஷ்ட -என்று மஹா ராஜரை இட்டு -ஸ்ரீ விபீஷண ஆழ்வானை
அருள் பாடிட்டாப் போலே –
தாழ்ச்சி மற்று எங்கும் தவிர்ந்து –
கடைத்தலை இருந்து வாழும் சோம்பரான லோக சாரங்க மஹா முநிகளை யருள் பாடிட்டு –
நம்பாடுவானை அழைத்துக் கொண்டு வாரும் -என்ன –

அவரும் -அருள்பாடு அருள் பாடு -என்று சொல்ல –

இவரும் -அடியேன் அடிப் பாணன் அடிப் பாணன் -என்று இறாய்க்க –

அவரும் விடாதே தோள் மேலே எழுந்து அருளப் பண்ணுவித்து கொண்டு போக
வழியிலே ஒன்பது பாட்டுப் பாடித்
திருப் பிரம்புக்குள்ளே நின்று பத்தாம் பாட்டுப் பாடித் தலைக் கட்டுகிறார் –

—————————————————————-

ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார்-அருளிய-வியாக்யானம் -அவதாரிகை —

வேதம் போலே முதல் ஆழ்வார்கள் மூவரும் பரத்வத்திலே மண்டி –
அர்ச்சையையும் தொட்டுக் கொண்டு -போந்தார்கள் –

ஸ்ரீ வால்மீகி பகவானைப் போலே -ஸ்ரீ குலசேகர பெருமாள் ராமாவதாரத்தில்
ப்ரவணராய் -அர்ச்சாவதாரத்தையும் அநுபவித்தார் –

ஸ்ரீ பராசர பகவானையும் ஸ்ரீ வேத வியாச பகவானையும் போலே –
நம்மாழ்வாரும் பெரியாழ்வாரும் ஆழ்வார் திருமகளாரும்
கிருஷ்ணாவதாரத்தில் மண்டி அர்ச்சாவதாரைத்தை அநுபவித்தார்கள் –

திரு மழிசைப் -பிரான் -நான்முகனை நாராயணன் படைத்தான் -என்று தொடங்கி
இனி அறிந்தேன் ஈசற்க்கும் நான்முகற்கும் -தெய்வம் -என்று
தேவதாந்திர பரத்வ நிரசநத்திலே தத் பரராய் இருந்தார் –

திருமங்கை ஆழ்வார் –
தேரோர் நிறை கதிரோன் மண்டலத்தை கீண்டு புக்கு ஆராவமுதம் அங்கு எய்தி
அதில் நின்றும் வாரா ஒழிவது ஓன்று உண்டே -அது நிற்க
ஏரார் முயல் விட்டு காக்கை பின் -போவதே
என்று -பரத்வத்தை காற் கடைக் கொண்டு
அர்ச்சாவதாரத்திலே இழிந்து
அது தன்னிலும் ஓர் இடத்தில் இரண்டு இடத்தில் அன்றிக்கே
நெருநற் கண்டது நீர்மலை இன்று போய் கரு நெல் சூழ் கண்ண மங்கையுள் காண்டும் –
என்று இப்படி
தான் உகந்த ஊர் எல்லாம் தன் தாள் பாடி பரபரப்பாய் திரிந்தார் –

பெரிய -பெருமாளையும் அல்லாத திருப்பதிகளோ பாதி
கண்டியூர் யரங்கம் மெய்யம் கச்சி பேர் மல்லை -என்று
கோல் தேனாக வநுபவித்தார் இத்தனை இறே

அது -தானும்
என்ற சொற்கள் வந்து அடியேன் மனத்து இருந்திட -என்கிற படியே
பெரிய பெருமாளுடைய விபவ தசையில் பாசுரங்கள் உபதேசமாய்க் கொண்டு
தம் திரு உள்ளத்திலே ஊற்றி இருக்க –
நின்னடி இணை -அடைந்தேன் -என்று
திருவடிகளை அனுபவித்த அளவு இறே -உள்ளது

ஸ்ரீ தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் -பெரிய பெருமாளை அநுபவியா நிற்கச் செய்தே
தம்மை உணர்ந்து அனுபவிப்பது
பரோபதேசம் பண்ணுவது
சப்த பூர்வகமாக பெரிய பெருமாளுடைய பரத்வ ஸ்தாபனம் பண்ணுவதாய் –
அந்ய பரராய் போந்தார் –

இவர் அங்கன் அன்றியே
இதம் பூர்ணம் என்று சொல்லுகிறபடியே பரத்வாதிகளாலே பூர்ணரான
பெரிய பெருமாளை அநுபவிக்கிறார் –

நம் ஆழ்வார் தொடக்கமான ஆழ்வார்களுக்கு பகவத் அனுபவம் நடவா நிற்கச் செய்தே –
முன்புள்ள ஜன்ம பரம்பரைகளில் உண்டான துக்க அநுபவ ஸ்மரணத்தாலும் –
ஸ்வரூப அநுரூபமான பகவத் போகத்தினுடைய அலாபத்தாலும்
க்லேச அநுபவம் கலசி நடவா -நின்றது

ஜாத்யந்தனுக்கு கண்ணைக் கொடுத்து கடலை இலக்காக்குமா போலேயும்
அர்ஜுனனுக்கு திவ்ய சஷூசை கொடுத்து வைஸ்வரூப்யத்தைக் காட்டி
அநுபவித்தாற் போலேயும்
அக்ரூர மாலாகாராதிகளுக்கு -சௌந்தர்ய சௌசீல்யாதி குணாவிஷ்காரத்தாலே
அநுபவித்தாப் போலேயும்-

ஏகைகஸ்மின் பரமவயவேநந்த சௌந்தர்ய மக்நம் சர்வம் த்ரஷ்யதே கதமிதி முதமாமதாமந்தசஷூ –
த்வாம் சௌ ப்ராத்ர வ்யதி கரகரம் ரங்க ராஜாங்க காநாம் தல் லாவண்யம் பரிணமயித விஸ்வ பாரீண வ்ருத்தி –
என்கிறபடியே
இவருடைய சத்யதையாலே பெரிய பெருமாள் அர்ச்சா ரூபமாய் இருக்கச் செய்தேயும்
தம்முடைய சௌந்தர்யத்தை ஆவிஷ்கரிக்க
அந்த சௌந்தர்ய சாகரத்தை
லாவண்யம் ஆகிற மரக் கலத்தாலே
எங்கும் ஒக்க அநுபவிக்கிறார்-

இன்னம் மற்றை ஆழ்வார்களைக் காட்டில் இவர்க்கு வாசி –
பல்லாண்டு -போற்றி -என்று பாவிக்க வேண்டிற்று அவர்களுக்கு
அது வேண்டாதே இது இவர்க்கு ஜன்ம சித்தமாய்த்து

குலங்களாய வீரிரண்டில் ஒன்றிலும் பிறந்திலேன் -என்கிறபடியே இவர் தம்மை
நாலு வர்ணத்திலும் புறம்பாக நினைத்து இருப்பர் –
பெரிய பெருமாளும் அப்படியே நினைத்து இருப்பர் –
நித்ய ஸூரிகள் நாலு வர்ணத்தில் உள்ளார் அல்லரே –
ஆழ்வார்கள் இரு கரையர் -என்னும்படி இறே ஸ்ரீ தொண்டர் அடிப் பொடி யாழ்வார்  ஐகாந்த்யம்
அவரிலும் இவர்
பரோபதேசமும்
இதர நிரசனமும் அநுபவ விரோதி என்று –
வெறும் பெருமாளையே அடிக்கும் தலைக்கும் செவ்விதாக அநுபவிக்கிறார்

ஸ்நேஹே மே பரம –
என்றன் வளவன்றால் யானுடைய வன்பு –
ராஜம் ஸ்த்வயி –
இது தானும் என்னால் வந்தது அன்று -அதுவும் அவனது இன்னருளே –
நித்யம் பிரதிஷ்டித-
இன்றன்றாகில் மற்றொரு தர்மியைப் பற்றி வருகிறதாகையாலே –
நின்னலால் இலேன் காண் -என்னுமா போலே பக்திஸ்சநியதா
ஸ்நேஹம் ஆவது என் -பக்தி ஆவது என் என்னில் –
பெருமாளை ஒழியச் செல்லாமை பிறந்து வ்யதிரேகத்தில் முடிந்த சக்கரவர்த்தி நிலை -ஸ்நேஹம் –
பக்தி -யாவது நில் -என்ன -குருஷ்வ -என்னும்படியாய் முறை அறிந்து பற்றின இளைய பெருமாள் நிலை –
வீர -தன்னைத் தோற்பித்த துறையைப் பிடித்துப் -பேசுகிறான்
பாவோ நாந்யத்ர கச்சதி -என்று என்னை மீட்டீராகிலும் என்னுடைய நெஞ்சை மீட்க்கப் போகாது
அந்யத்ர-என்கிறது –
மற்று ஆரானும் உண்டு -என்பார் என்னுமாபோலே
கொடு போக நினைத்த தேசத்தின் பேரும் கூட தனக்கு அசஹ்யமாய் இருக்கிறபடி –
இப்படி ராமாவதாரம் அல்லது அறியாத திருவடியைப் போலே ஆய்த்து இவரும்
இவர் தேவாரமான பெரிய பெருமாளை அல்லது பர வ்யூஹ விபவங்களை-அறியாதபடியும்

அனுபாவ்யரான பெரிய பெருமாள் தம்மைப் பார்த்தாலும் –
பரத்வம் போலே தேச விப்ரக்ருஷ்டமாய் இருத்தல் –
வ்யூஹம் போலே தத் ப்ராயமால் இருத்தல் –
விபவம் போலே கால விப்ரக்ருஷ்டமாய் இருத்தல் –
அந்தர்யாமித்வம் போலே அசஷூர் விஷயமாய் இருத்தல் –
அர்ச்சாவதாரங்கள் போலே -தெய்வம் அல்லால் செல்ல ஒண்ணாது இருத்தல் –
அங்கு வர்த்திக்கும் பேர் -சிலைக்கை வேடரேயாய் பயங்கரராய் இருத்தல் –
பெரிய ஏற்றமேற வேண்டி இருத்தல் –
வருந்தி பெரும் கூட்டத்தோடு போய் ஏறினால் -கானமும் வானரமும் வேடுமே யாய்
மேலை வானவர் இன்றிக்கே இருத்தல் –
செய்கை அன்றிக்கே
இத்தேசத்தில் -இக்காலத்தில் -எல்லார் கண்ணுக்கும் விஷயமாய்க் கொண்டு
பத்தர்களும் பகவர்களும் பழ மொழி வாய் முனிவர்களும் பரந்த நாடும்
சித்தர்களும் தொழுது இறைஞ்ச திசை விளக்காய் நின்ற திருவரங்கம் –
என்கிறபடியே
எல்லார்க்கும் நின்ற நின்ற நிலைகளிலேயே ஆஸ்ரயிக்கலாம் படி
சர்வ ஸூலபருமாய்
வன் பெரு வானகம் -இத்யாதிப் படி -உபய விபூதியையும் நிர்வஹித்துக் கொண்டு
போருகிற மேன்மையை உடையராய் -இப்படி
சர்வாதிகாருமாய் -சர்வ சேஷியுமாய் -சர்வ ரஷகருமாய் -சர்வ சமாஸ்ரயணீ யருமாய் –
நிரதிசய போக்ய பூதருமாய் -இருப்பவர் –

சேஷ்யே புரஸ்தாச் சாலாயாம் யாவந்மே ந ப்ரசீததீ -என்று
ஸ்ரீ பரதாழ்வான் என் தலையில் சுமை வாங்கினால் அல்லது எழுந்திரேன் என்று கிடந்தாப் போலே –
உங்கள் சுமைகளை என் தலையில் வைத்தால் அல்லது எழுந்திரேன்-
யோஹ ஷேமம் வஹாம் யஹம் -என்று கிடக்கிறவர் இறே-

ஸ்ரீ வைகுண்டம் திருப்பாற் கடல் திருவவதார ஸ்தலம் உகந்து அருளின திருப்பதிகள்
இவை எல்லாம் -பெரிய பெருமாளே யானாப் போலே -அவ்வோ இடங்களில் உண்டான
சௌந்தர்ய குண சேஷ்டிதங்கள் எல்லாம் பெரிய பெருமாள் பக்கலிலே காணலாம் –
பெரிய பெருமாள் அழகும் ஐஸ்வர்யம் எல்லாம் பரமபததிலே முகிளிதமாய் இருக்கும் –
அவதாரத்திலே ஈரிலை போரும் -இங்கே வந்த பின்பு தழைத்தது -எங்கனே என்னில் –
பொங்கோதம் சூழ்ந்த புவனியும் விண்ணுலகும்
அங்காதும்  சோராமே ஆள்கின்ற எம்பெருமான்
செங்கோலுடைய திருவரங்கச் செல்வனார் ஆகையாலே
அவ்வோ இடங்களிலே சங்குசிதமாய் இருந்தது இறே
தன்னை உகந்தாரை அனுபவிக்கை இன்றியே -தான்-என்றால் விமுகராய் இருப்பாரும் கூட அநுபவிக்கலாம் படி
இருக்கையாலே நீர்மையினால் வந்த ஏற்றமும் இங்கே உண்டு –
குணாதிக்யத்தாலே இறே வஸ்துவுக்கு உத்கர்ஷம் –
குணம் விலை பெறுவது இங்கே இறே –
குணத்தில் அகப்பட்டார் இவ்விஷயம் போக்கி அறியார்கள் இறே –
யதோ வாசோ நிவர்த்தந்தே -என்று வேதங்களுக்கு எட்டாத சர்வேஸ்வரனை
ஆற்றில் தண்ணீரோபாதி -ஆற்றுக்குள்ளே கண்டு அநுபவிக்கலாம் படி இருக்கிற இடம் இறே –
மழைக்கு அன்று வரை முன்னேந்தும் மைந்தன் மதுரவாறான அவ்வாறு இவ்வாறு -ஆய்த்து காணும் –

ஆஸ்ரயணீயர் ஆகையாலே மேன்மையும் –
நீர்மையாலே உபாய பாவத்தையும் –
வீர்யாதிகளாலே விரோதி நிரசநத்தையும்
சௌந்தர்யத்தையும் சொல்லுகையாலே போக்யதையும் சொல்லிற்று ஆகிறது –

பிராபக ஸ்வரூபம் அநுபவத்திலே மறைந்து போய்த்து –
இப் ப்ரபந்தம் தான் பிரணவம் போல் அதி சங்குசிதமாய் இருத்தல்

வேதமும் வேத உபப்ரும்ஹணமான மஹா பாரதமும் போலே பரந்து துறுப்புக் கூடாய் இருத்தல் -செய்யாதே –
பத்துப் பாட்டாய் -ஸூக்ரஹமாய் -சர்வாதிகாரமுமாய்
ப்ராப்யஸ்ய -இத்யாதிப்படியே அர்த்த பஞ்சக ப்ரதிபாத்யமுமாய் இருக்கும்

வேதோ உப ப்ரும்ஹணார்த்தா யதா வக்ராஹ்ய தப்ரபு -என்றும்
வேத அநத்யாபயாமாஸ மஹா பாரத பஞ்சமான் -என்றும் சொல்லுகிறபடியே
வேத உப ப்ருஹணமான -மஹா பாரத ராமாயணங்களும்
நாராயண கதாம் இமாம் -இத்யாதிகளைச் சொல்லி வைத்து
பகவத் கதை அல்லாவற்றையும் சொல்லி வைத்தது-

திருவாய் -மொழியும்
அமர்சுவை -யாயிரம் -என்றும்
பாலோடு அமுதன்ன ஆயிரம் -என்றும் –
உரை கொள் இன் மொழி -என்றும் –
ஏதமிலா ஆயிரமாய் இருந்ததே யாகிலும் –
அந்ய உபதேச ஸ்வா பதேசம் -என்ன
ஸாமாநாதி கரண்ய நிர்ணயகம் -என்ன –
த்ரி மூர்த்தி சாம்ய தத் உத்தீர்ண தத்வ நிஷேதம் -என்ன –
இவை தொடக்கமான அருமைகளை உடைத்தாய் இருக்கும் –

திரு நெடும் -தாண்டகமும்
பரப்பற்று முப்பது பாட்டாய் இருந்ததே யாகிலும்
அதுக்கும் அவ்வருமைகள் உண்டு –

திருமாலைக்கு
அவ்வருமைகள் இல்லையே யாகிலும்
தம்முடைய லாப அலாப ரூபமான ப்ரிய அப்ரியங்களை
ப்ரதிபாதியா -நிற்கும்-

திருப் பல்லாண்டுக்கு இக்குற்றங்கள் இல்லையே யாகிலும் –
அதுக்கும் ஒரு குற்றம் உண்டு –
த்ரிவித அதிகாரிகளுடைய குணாகுணங்களைப் ப்ரதி பாலிக்கையாலே-

பிரணவம் போலே அதி சங்குசிதிமாய் -துர் ஞேயமாய் -இராமையாலே –
யதி ஹாஸ்தி ததத் அந்யத்ர யன்நே ஹாஸ்தி நத்க் வசிக் -என்கிறபடியே
ஆயிரத்தில் ஒன்றும் கடலில் குளப்படியும் போலே
புறம்பு இல்லாதவை எல்லாம் இதிலே உண்டாய்
இதில் இல்லாதது ஒன்றும் புறம்பு இன்றியே இருக்கும் –

பர வியூஹ விபவங்களை பிரதிபாதிக்கை அன்றிக்கே –
அர்ச்சாவதார ரூபேண வந்து அவதரித்து
திருவரங்கப் பெரு நகருள் தெண்ணீர் பொன்னி திரைக் கையால் அடிவருட
பள்ளி கொள்ளும் கருமணியை கோமளத்தை கண்டு கொண்டு
மணத் தூணே பற்றி நின்று வாயார வாழ்த்துகிற பிரபந்தம் ஆகையாலே
எல்லா பிரபந்தகளிலும் இதுக்கு வை லஷண்யம் உண்டு –

இவர் தமக்கு ப்ராப்யரும் ப்ராபகரும் ருசி ஜனகரும் விரோதி நிவர்தகரும்
எல்லாம் பெரிய பெருமாளே என்கிறார் –
பல போக்த்ருத்வம் தம்மதாய் இருக்க -எல்லாம் அவரே -என்கிறபடி எங்கனே என்னில் –
பிரதம ஸூக்ருதமும் தானேயாய் –
இப் பேற்றுக்கு வேண்டியன நிர்வஹித்துப் போந்த சௌஹார்த்தமும் அத் தலையிலே
கிடைக்கையாலே -பேற்றுக்கு இத்தலையில் உள்ளது சொல்லப் பாத்தம் போதாது இறே –
உள்ளது உண்டாகில் அவன் அனுக்ரஹத்தாலே யாம் இத்தனை –

இதர விஷயங்களில் அருசியும் -பகவத் விஷயத்தில் அப்ரதிஷேதமும் விளைந்த
மாத்ரத்திலே பெரிய பெருமாள் தம்முடைய -ஸ்வரூப ரூப குண விபூதிகளைக்
காட்டக் கண்டு அநுபவித்து ப்ரீதர் ஆகிறார் –
ஆநயைநம் ஹரிஸ்ரேஷ்ட -என்று மஹா ராஜரை இட்டு -ஸ்ரீ விபீஷண ஆழ்வானை
அருள் பாடிட்டாப் போலே –
தாழ்ச்சி மற்று எங்கும் தவிர்ந்து –
கடைத்தலை இருந்து வாழும் சோம்பரான லோக சாரங்க மஹா முநிகளை யருள் பாடிட்டு –
நம்பாடுவானை அழைத்துக் கொண்டு வாரும் -என்ன -அவரும் -அருள் பாடு அருள் பாடு -என்று சொல்ல –
இவரும் -அடியேன் அடிப் பாணன் அடிப் பாணன் -என்று இறாய்க்க –
அவரும் விடாதே தோள் மேலே எழுந்து அருளப் பண்ணுவித்து கொண்டு போக
வழியிலே ஒன்பது பாட்டுப் பாடித் திருப் பிரம்புக்குள்ளே நின்று பத்தாம் பாட்டுப் பாடித்
தலைக் கட்டுகிறார் –

————————————————————-

வ்யாசிக் யாசத பக்த்யா விரக்த தோஷாயா  வேங்கடேச கவி
முகுந்த விலோகந முதித முநி வாஹந  ஸூக்தி பங்க்தி மிமாம் –

பாவளரும் தமிழ் மறையின் பயனே கொண்ட
பாண் பெருமாள் பாடியதோர் பாடல் பத்தில்
காவலனும் கணவனுமாய் கலந்து நின்ற
காரணனைக் கருத்துற நான் கண்ட பின்பு
கோவலனும் கோமானுமான வந்நாள்
குரவை பணர் கோவியர் தம் குறிப்பே கொண்டு
சேவலுடன் பிரியாத பெடை போற் சேர்ந்து
தீ வினையோர் தனிமை யெலாம் தீர்ந்தோம் நாமே

காரண விசேஷம் இன்னது என்று அறுதி இட அரிதாய் இருப்பதொரு பகவத் கடாஷத்தாலே
அயத்ந லப்தமான பர தத்வ -பரம ஹித -பரம புருஷார்த்த -விவேகத்தை உடையவராய் –
அநாதி கால பிரவ்ருதங்களான ஷூத்ர புருஷார்த்தராதிகளையும் –
ஷூத்ர புருஷ ஸ்தோத்ராதிகளையும் -ஷூத்ர புருஷார்த்த பிரவ்ருத்திகளையும்
தப்பின தம்முடைய கரண த்ரவ்யமும் இப்போது ப்ராப்தமான
ஏக விஷயத்திலே -அநந்ய பிரயோஜன அநுகூல வ்ருத்தியை உடைத்தான படியைக் கண்டு
சந்தோஷ யுக்தரான திருப்பாண் ஆழ்வார் -பின்பு பரம பதத்திலே பெரும் பேற்றை இங்கே
பெரிய பெருமாள் திருவருளாலே பெற்று –

இப் பேற்றை அடி தொடங்கி –
அமலனாதி பிரான் முதலான பத்துப் பாட்டாலே அநுபவ ப்ரீவாஹமாக அருளிச் செய்கிறார்-
இப் ப்ரபந்தம் அதி விஸ்தரம்  அதி சங்கோசம் அதி க்ருதாதிகாரத்வம் துர்க்ரஹத்வம்
துரவபோதார்த்த்வம் சம்ச்யாஸி ஜநகத்வம் விரஹ க்லேசம் தூத ப்ரேஷணம்
பரோபதேசம் பர மத நிரசனம் என்றாற் போலே
மற்றுள்ள அத்யாத்ம பிரபந்தங்களில் உள்ளவை ஒன்றும் இன்றிக்கே
அநுபவ கந ரசமாய் இருக்கிறது –
முதல் பாட்டான அமலனாதிபிரான் தொடங்கி
கொண்டல் வண்ணனை என்கிற தலைக் கட்டுப் பாட்டளவும்

இதில் முதல் பட்ட மூன்று பாட்டுக்கு முதல் அஷரம்
மூலமாகிய ஒற்றை எழுத்தின் முதல் -நடு -இறுதி யானவை-

—————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேதாந்த தேசிகர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருப்பாண் ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ அமலனாதி பிரான் -தனியன் -ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிய-வியாக்யானம் –

May 12, 2013

ஸ்ரீ பெரிய நம்பிகள் அருளிச் செய்த தனியன் –

ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிய வியாக்யானம் –
அவதாரிகை –

ஆபாத சூட-மித்யாதி –
இதில்
கருட வாஹனனும் நிற்க –என்றும்
அஞ்சிறை புட் பாகனை யாம் கண்டது தென் அரங்கத்தே -என்றும்
சொல்லுகிறபடியே பெரிய பெருமாளை சேவித்து அனுபவித்த முநி வாஹநரை மனஸாலே
அநுபவிக்கும் படி சொல்லுகிறது –

கருட வாஹநத்வமும் -சேஷ சாயித்வமும் -ஸ்ரீய பதித்வமும் இறே
சர்வாதிக வஸ்துவுக்கு லஷணம்

இப்படி சர்வாதிக வஸ்துவினுடைய திவ்ய அங்கங்களை திருப் பாதம் தொடங்கி அனுபவித்த க்ரமம் சொல்லுகிறது –

ஆபாத சூடம் அநுபூய ஹரிம் சயாநாம்
மத்யே கவேரே துஹிதுர் முதித அந்தராத்மா
அத்ருஷ்ட் ருதாம் நயநயோர் விஷயாந்த்ராணாம் –
யோநிஸ் சிகாயா மநவை முநி வாஹநம் தம் –

ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிய வியாக்யானம் –

ஆபாத சூடம் –
திருப் பாத கேசத்தை-
அநுபூய
அமலனாதி பிரான் அடைவே அனுபவித்து
ஸூக்ஸூப்த பரந்தப -என்னும்படியாய் கிடைக்கை –

கிடந்ததோர் கிடைக்கை கண்டும் எங்கனம் மறந்து வாழ்கேன் -என்றும் –
ஏரார் கோலம் திகழக் கிடந்தாய் கண்டேன் -என்னும்படி
தாபஹர் ஆனவரை –

அவர் தாம் –
அரவினணை மிசை மேய மாயனாரான முகில் வண்ணன் இறே –
இப்படி அநுகூல பிரதிகூல ரஷண ஸிஷணங்களை பண்ணுமவரானவரை-

கவேரே துஹிதுர் மத்யே –
கவேரே கந்யையான காவேரி மத்யே –
கங்கையிற் புனிதமாய காவேரி நடுவு பாட்டிலே இறே படுகாடு கிடக்கிறது –

வண் பொன்னி -திரைக் கையால் அடிவருட –
திருவாளன் இனிதாக வாய்த்து -திருக் கண்கள் வளருகிறது

குடதிசை முடியை வைத்து குண திசை பாதம் நீட்டி
வடதிசை பின்பு காட்டி தென் திசை இலங்கை நோக்கி
கடல் நிறக் கடவுள் எந்தை அரவணைத் துயிலுமா கண்டு -அநுபவித்தார் -என்கை-

முதிதாந்தராத்மா –
இப்படி அநுபவித்து ஹ்ருஷ்ட மநாவானவர் –
அக மகிழப் பெற்றார் –

உவந்த உள்ளத்தார் ஆனார் –
சந்துஷ்ட சித்த சமாஹிதரானார் –
மகிழ்ந்தது -சிந்தை என்னக் கடவது இறே-

இனி அவ்வளவிலே நில்லாதே
அத்ருஷ்ட்ருதாம் நயநயோர் விஷயாந்த்ராணாம் –
என்னும்படி-காணாக் கண் உடையவர் ஆனார் –
அணி அரங்கன் என் அமுதினைக் கண்ட கண்கள் மற்று ஒன்றைக் காணாவே –
என்றாய்த்து இவர் இவ் விஷயத்திலே –
அஸ்தமித அந்ய பாவராய் இருப்பது –
ஏத தேவாம்ருதம் த்ருஷ்ட்வா த்ரருப்யந்தி –

அரங்க மா கோயில் கொண்ட கரும்பினைக் கண்டு கொண்டு என் கண் இணை களிக்குமாறே –
ராமம் மே அநுகதா த்ருஷ்டி –
நத்வா பஸ்யாமி -இறே –
சௌந்தர்ய சாகரத்திலே மக்நர் ஆனார்
இவருக்கு அழகு அஞ்ஞானத்தை விளைத்தது ஆய்த்து
அத்ருஷ்டம் த்ருஷ்டம் ஆகையாலே த்ருஷ்டம் அத்ருஷ்டம் ஆய்த்து –

அன்றிக்கே –
சிந்தை மற்று ஒன்றின்  திறத்து அல்லா –
பாவோ நான்யத்ர -கச்சதி என்னும்படி
பரத்வாதிகளை ஆய்த்து பரோஷ விஷயம் ஆகிறது என்னுதல்

கட்கிலி -என்னும் வடிவை இறே
கண்ணால் கண்டு அனுபவித்தது

காணாதவையும் கண்ட வஸ்துவில் உண்டு இறே
இப்படி மைப்படி மேனியை அனுபவித்து -மற்ற விஷயங்களை காணாக் கண்ணாய்
இருக்குமவரைச் சொல்லுகிறது-

யோநிஸ்சிகாயா மநவை முநி வாஹநம் தம் –
என்று யாவர் ஒருவர் -கண்ட கண்கள் மற்று ஒன்றினைக் காணாவே -என்று அறுதி இட்டார்
அப்படிப்பட்ட -அந்த முநி வாஹநரை

மநவை –
மனஸ்ஸாலே -பிரதிபத்தி பண்ணுகிறேன் என்றபடி –
அயன் அலர் கொடு தொழுதேத்த -என்னும்படி -ஹம்ச வாஹனான சதுர்முகன்
பஹு முகமாக அநுபவித்தால் போலே
முநி வாஹநாரான இவரும் ஏக முகமாக இரண்டு கண்ணாலும் கண்டு அனுபவித்தார்-

கிரீட கேயூரக ரத்ந குண்டலம் ப்ரலம்ப முக்தாமணி ஹேம பூஷிதம் –
விஸால வஷ்ஸ் ஸ்தல ஸோபி கௌஸ்துபம்
ஸ்ரீ யாச தேவ்யாத் யுஷி தோரு விக்ரஹம்
ப்ரதப்த சாமீகர  சாரு வாஸஸம்
ஸூ மேகலா நூபுர ஸோபி தாங்க்ரிகம்
ஸூ பந்து நீ ஜாதாம்ருணள கோமளம் ததா நமச்சச்ச வியஜ்ஞ ஸூத்ரகம்
புஜோ பதாநாம் ப்ரஸருதான்ய ஹஸ்தம் நி குஞ்சிதோ ததா நித பாத யுக்மம்
ஸூ தீர்க்க முர்வம்ஸ முதக்ர வேஷம் புஜங்க தல்பம் புருஷம் ததர்ஸ -என்று
ப்ரஹ்மா வானவன் அபிமானி ஆகையாலே முடியே தொடங்கி அனுபவித்தான் –

இவர் -அடியார் ஆகையாலே -அடியே தொடங்கி அநுபவித்தார்

அவன் கண்ட அநந்தரம் விஷயங்களைக் கண்டான் –
இவர் விஷயங்களைக் கண்டிலர்

திருக்கமல பாதம் வந்து என் கண்ணினுள் உள்ளன –
கண்ட கண்கள் மற்று ஒன்றினைக் காணாவே -என்றார் –

வீணையும் கையுமாய் சேவிக்கிற இவர்க்கு -சேமமுடை நாரதநாரும் ஒரு வகைக்கு
ஒப்பாகார் –
பெரியாழ்வார் அவதாரத்தில் அனுபவம் இவர்க்கு அர்ச்சாவதாரத்திலே

அவர் -பாத  கமலம் -என்றதை -திருக் கமல பாதம் -என்றார் –
பீதகச் சிற்றாடை யொடும் -என்றதை -அரைச் சிவந்த ஆடையின் மேல் -என்றும்
அழகிய -உந்தியை – அயனைப் படைத்தோர் எழில் உந்தி -என்றும் –
பழம் தாம்பால் ஆர்த்த வுதரத்தை -திரு வயிற்று உதர பந்தம் -என்றும் –
குருமா மணிப் பூண் குலாவித் திகழும் திரு மார்பை -திரு வார -மார்வென்றும்
அண்டமும் நாடும் அடங்க விழுங்கிய -கண்டத்தை முற்றும் உண்ட கண்டம் -என்றும் –
நெய்த்தலை நேமியும் சங்கும் நிலாவிய கைத் தலத்தை -கையினார் சுரி சங்கு அனல் ஆழியர் என்றும் –
செந்தொண்டை வாயை -செய்ய வாய் -என்றும் –
கண்கள் இருந்தவா –என்றத்தை அப்பெரிய வாய கண்கள் -என்றும் –
உருவு கரிய ஒளி மணி வண்ணன் -என்றத்தை -எழில் நீல மேனி -என்றும் –
குழல்கள் இருந்தவா -என்றதை -துளவ விரையார் கமழ் நீண் முடி -என்று
அருளிச் செய்தார் –

கோவலனாய் வெண்ணெய் உண்ட வாயன் இறே பெரிய பெருமாள் –
ஆகையால் -அனுபவத்தில் இருவரும் ஸ கோத்ரிகளாய் யாய்த்து இருப்பது –
இப்படி மந ப்ரீதி பிறக்கும்படி அநுபவித்த ஆழ்வாரை
இங்கு மந ப்ரீதி பிறக்கும்படி -மனஸாலே சேவிக்கும்படி -சொல்லிற்று-

———————————————————————————————-

திருமலை நம்பி அருளிச் செய்த தனியன் –

அவதாரிகை –
பெரிய பெருமாளை பதாதி கேச அந்தமாக அநுபவிக்கப் பெற்ற
பாண் பெருமாளை
ஸ்தோத்ரம் பண்ணி
ஹர்ஷிக்கும் படி சொல்லுகிறது –

காட்டவே கண்ட பாத கமல நல்லாடை உந்தி
தேட்டரும் உதரபந்தம் திரு மார்வு கண்டம் செவ்வாய்
வாட்டமில் கண்கள் மேனி முனியேறித் தனி புகுந்து
பாட்டினால் கண்டு வாழும் பாணர் தாள் பரவினோமே –

வியாக்யானம் –
காட்டவே கண்ட பாத கமலம் –
அரங்கத் தம்மான் திருக் கமல பாதம் என் கண்ணினுள்ளன ஒக்கின்றவே -என்று

நல்லாடை –
அரங்கத்தம்மான் அரைச் சிவந்த வாடை -என்று ரெங்க துரந்தரனுடைய பீதாம்பரதைச் சொல்லுகிறது

உந்தி –
அரங்கத் தரவின் அணையான் -அயனைப் படைத்ததோர் எழில் உந்தி -என்று
விதி சிவ நிதானமான நாபீ பத்மத்தைச் சொல்லுகிறது –

தேட்டரும் உதர பந்தம் –
தேட்டரும் திறல் தேனான தென் அரங்கன் உடைய தேடற்கு அரிய உதர பந்தம் –
அரங்கத்தம்மான் திரு வயிற்று உதர பந்தம் –
என்றும் பட்டம் கிலேதர பந்தநம் -என்றதை சொல்லுகிறது –

திரு மார்வு –
அரங்கத்தம்மான் திரு வார மார்வு -என்று லஷ்மீ லலித க்ருஹமான
வஷஸ் ஸ்தலத்தைச் சொல்லுகிறது –

கண்டம் –
அரங்க நகர் மேய வப்பன் முற்றும் உண்ட கண்டம் -என்று
ஸ்ரீ ரெங்க நேதாவின் கண்டத்தைச் சொல்லுகிறது –

செவ்வாய்
அணி அரங்கனார் செய்ய வாய் -என்று –
அதர மதுராம் போஜம் -என்று அருணா தர பல்லவத்தைச் சொல்லுகிறது

வாட்டமில் கண்கள் –
ஷணோஜ் வலமாய்
அழலானியை உடைய தாமரைப் பூவில் வ்யாவ்ருத்தமாய்
சதைக ரூபமாய
அரங்கத் தமலன் முகத்து கரியவாகிப் புடை பரந்து மிளிர்ந்து செவ்வரி யோடி
நீண்ட அப்பெரியவாய கண்கள் -என்று
விஸால ஸ்பீதாய த்ருசி ஸி ஸிரா தாம்ர தவளமான
ஸ்ரீ ரெங்க ப்ரணயி நயநாப்ஜங்களை சொல்லுகிறது

மேனி
ஏவம் விதமான திவ்ய மங்கள விக்ரஹத்தை
முனியேறி
முனி வாஹநராய்
தனி புகுந்து
இந்த மஹா போகத்திலே தாம் ஏகராய் உள் புகுந்து-

பாட்டினால் –
அநுபவத்துக்கு பாசுரம் இட்டுப் பேசின -அமலனாதிபிரான் -என்கிற
பிரபந்தத்தின் பாட்டுக்களாலே –
அண்டர் கோன் அணி அரங்கனைக் கண்டு வாழுமவர் யாய்த்து -இவர் –
பின்பு இவ் வநுபவத்துக்கு பட்டர் தேசிகர் ஆனார்-

கண்டு வாழும்
காட்சியே வாழ்ச்சியாக வாழுகிற

பாணர் தாள்
வீணா பாணியாய் பெரிய பெருமாள் திருவடிக் கீழே
நிரந்தர சேவை பண்ணிக் கொண்டு நிற்கிற திருப்பாண் ஆழ்வார்
திருவடிகளை

பரவினோம்
ஸ்தோத்ரம் பண்ணினோம்
அலாப்ய லாபமானது லபிக்கவும் பெற்றோம்
இனி ஒரு குறைகளும் இல்லை -என்கிறது-

————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருப்பாண் ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .