ஸ்ரீ பெரிய நம்பிகள் அருளிச் செய்த தனியன் –
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிய வியாக்யானம் –
அவதாரிகை –
ஆபாத சூட-மித்யாதி –
இதில்
கருட வாஹனனும் நிற்க –என்றும்
அஞ்சிறை புட் பாகனை யாம் கண்டது தென் அரங்கத்தே -என்றும்
சொல்லுகிறபடியே பெரிய பெருமாளை சேவித்து அனுபவித்த முநி வாஹநரை மனஸாலே
அநுபவிக்கும் படி சொல்லுகிறது –
கருட வாஹநத்வமும் -சேஷ சாயித்வமும் -ஸ்ரீய பதித்வமும் இறே
சர்வாதிக வஸ்துவுக்கு லஷணம்
இப்படி சர்வாதிக வஸ்துவினுடைய திவ்ய அங்கங்களை திருப் பாதம் தொடங்கி அனுபவித்த க்ரமம் சொல்லுகிறது –
ஆபாத சூடம் அநுபூய ஹரிம் சயாநாம்
மத்யே கவேரே துஹிதுர் முதித அந்தராத்மா
அத்ருஷ்ட் ருதாம் நயநயோர் விஷயாந்த்ராணாம் –
யோநிஸ் சிகாயா மநவை முநி வாஹநம் தம் –
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிய வியாக்யானம் –
ஆபாத சூடம் –
திருப் பாத கேசத்தை-
அநுபூய
அமலனாதி பிரான் அடைவே அனுபவித்து
ஸூக்ஸூப்த பரந்தப -என்னும்படியாய் கிடைக்கை –
கிடந்ததோர் கிடைக்கை கண்டும் எங்கனம் மறந்து வாழ்கேன் -என்றும் –
ஏரார் கோலம் திகழக் கிடந்தாய் கண்டேன் -என்னும்படி
தாபஹர் ஆனவரை –
அவர் தாம் –
அரவினணை மிசை மேய மாயனாரான முகில் வண்ணன் இறே –
இப்படி அநுகூல பிரதிகூல ரஷண ஸிஷணங்களை பண்ணுமவரானவரை-
கவேரே துஹிதுர் மத்யே –
கவேரே கந்யையான காவேரி மத்யே –
கங்கையிற் புனிதமாய காவேரி நடுவு பாட்டிலே இறே படுகாடு கிடக்கிறது –
வண் பொன்னி -திரைக் கையால் அடிவருட –
திருவாளன் இனிதாக வாய்த்து -திருக் கண்கள் வளருகிறது
குடதிசை முடியை வைத்து குண திசை பாதம் நீட்டி
வடதிசை பின்பு காட்டி தென் திசை இலங்கை நோக்கி
கடல் நிறக் கடவுள் எந்தை அரவணைத் துயிலுமா கண்டு -அநுபவித்தார் -என்கை-
முதிதாந்தராத்மா –
இப்படி அநுபவித்து ஹ்ருஷ்ட மநாவானவர் –
அக மகிழப் பெற்றார் –
உவந்த உள்ளத்தார் ஆனார் –
சந்துஷ்ட சித்த சமாஹிதரானார் –
மகிழ்ந்தது -சிந்தை என்னக் கடவது இறே-
இனி அவ்வளவிலே நில்லாதே
அத்ருஷ்ட்ருதாம் நயநயோர் விஷயாந்த்ராணாம் –
என்னும்படி-காணாக் கண் உடையவர் ஆனார் –
அணி அரங்கன் என் அமுதினைக் கண்ட கண்கள் மற்று ஒன்றைக் காணாவே –
என்றாய்த்து இவர் இவ் விஷயத்திலே –
அஸ்தமித அந்ய பாவராய் இருப்பது –
ஏத தேவாம்ருதம் த்ருஷ்ட்வா த்ரருப்யந்தி –
அரங்க மா கோயில் கொண்ட கரும்பினைக் கண்டு கொண்டு என் கண் இணை களிக்குமாறே –
ராமம் மே அநுகதா த்ருஷ்டி –
நத்வா பஸ்யாமி -இறே –
சௌந்தர்ய சாகரத்திலே மக்நர் ஆனார்
இவருக்கு அழகு அஞ்ஞானத்தை விளைத்தது ஆய்த்து
அத்ருஷ்டம் த்ருஷ்டம் ஆகையாலே த்ருஷ்டம் அத்ருஷ்டம் ஆய்த்து –
அன்றிக்கே –
சிந்தை மற்று ஒன்றின் திறத்து அல்லா –
பாவோ நான்யத்ர -கச்சதி என்னும்படி
பரத்வாதிகளை ஆய்த்து பரோஷ விஷயம் ஆகிறது என்னுதல்
கட்கிலி -என்னும் வடிவை இறே
கண்ணால் கண்டு அனுபவித்தது
காணாதவையும் கண்ட வஸ்துவில் உண்டு இறே
இப்படி மைப்படி மேனியை அனுபவித்து -மற்ற விஷயங்களை காணாக் கண்ணாய்
இருக்குமவரைச் சொல்லுகிறது-
யோநிஸ்சிகாயா மநவை முநி வாஹநம் தம் –
என்று யாவர் ஒருவர் -கண்ட கண்கள் மற்று ஒன்றினைக் காணாவே -என்று அறுதி இட்டார்
அப்படிப்பட்ட -அந்த முநி வாஹநரை
மநவை –
மனஸ்ஸாலே -பிரதிபத்தி பண்ணுகிறேன் என்றபடி –
அயன் அலர் கொடு தொழுதேத்த -என்னும்படி -ஹம்ச வாஹனான சதுர்முகன்
பஹு முகமாக அநுபவித்தால் போலே
முநி வாஹநாரான இவரும் ஏக முகமாக இரண்டு கண்ணாலும் கண்டு அனுபவித்தார்-
கிரீட கேயூரக ரத்ந குண்டலம் ப்ரலம்ப முக்தாமணி ஹேம பூஷிதம் –
விஸால வஷ்ஸ் ஸ்தல ஸோபி கௌஸ்துபம்
ஸ்ரீ யாச தேவ்யாத் யுஷி தோரு விக்ரஹம்
ப்ரதப்த சாமீகர சாரு வாஸஸம்
ஸூ மேகலா நூபுர ஸோபி தாங்க்ரிகம்
ஸூ பந்து நீ ஜாதாம்ருணள கோமளம் ததா நமச்சச்ச வியஜ்ஞ ஸூத்ரகம்
புஜோ பதாநாம் ப்ரஸருதான்ய ஹஸ்தம் நி குஞ்சிதோ ததா நித பாத யுக்மம்
ஸூ தீர்க்க முர்வம்ஸ முதக்ர வேஷம் புஜங்க தல்பம் புருஷம் ததர்ஸ -என்று
ப்ரஹ்மா வானவன் அபிமானி ஆகையாலே முடியே தொடங்கி அனுபவித்தான் –
இவர் -அடியார் ஆகையாலே -அடியே தொடங்கி அநுபவித்தார்
அவன் கண்ட அநந்தரம் விஷயங்களைக் கண்டான் –
இவர் விஷயங்களைக் கண்டிலர்
திருக்கமல பாதம் வந்து என் கண்ணினுள் உள்ளன –
கண்ட கண்கள் மற்று ஒன்றினைக் காணாவே -என்றார் –
வீணையும் கையுமாய் சேவிக்கிற இவர்க்கு -சேமமுடை நாரதநாரும் ஒரு வகைக்கு
ஒப்பாகார் –
பெரியாழ்வார் அவதாரத்தில் அனுபவம் இவர்க்கு அர்ச்சாவதாரத்திலே
அவர் -பாத கமலம் -என்றதை -திருக் கமல பாதம் -என்றார் –
பீதகச் சிற்றாடை யொடும் -என்றதை -அரைச் சிவந்த ஆடையின் மேல் -என்றும்
அழகிய -உந்தியை – அயனைப் படைத்தோர் எழில் உந்தி -என்றும் –
பழம் தாம்பால் ஆர்த்த வுதரத்தை -திரு வயிற்று உதர பந்தம் -என்றும் –
குருமா மணிப் பூண் குலாவித் திகழும் திரு மார்பை -திரு வார -மார்வென்றும்
அண்டமும் நாடும் அடங்க விழுங்கிய -கண்டத்தை முற்றும் உண்ட கண்டம் -என்றும் –
நெய்த்தலை நேமியும் சங்கும் நிலாவிய கைத் தலத்தை -கையினார் சுரி சங்கு அனல் ஆழியர் என்றும் –
செந்தொண்டை வாயை -செய்ய வாய் -என்றும் –
கண்கள் இருந்தவா –என்றத்தை அப்பெரிய வாய கண்கள் -என்றும் –
உருவு கரிய ஒளி மணி வண்ணன் -என்றத்தை -எழில் நீல மேனி -என்றும் –
குழல்கள் இருந்தவா -என்றதை -துளவ விரையார் கமழ் நீண் முடி -என்று
அருளிச் செய்தார் –
கோவலனாய் வெண்ணெய் உண்ட வாயன் இறே பெரிய பெருமாள் –
ஆகையால் -அனுபவத்தில் இருவரும் ஸ கோத்ரிகளாய் யாய்த்து இருப்பது –
இப்படி மந ப்ரீதி பிறக்கும்படி அநுபவித்த ஆழ்வாரை
இங்கு மந ப்ரீதி பிறக்கும்படி -மனஸாலே சேவிக்கும்படி -சொல்லிற்று-
———————————————————————————————-
திருமலை நம்பி அருளிச் செய்த தனியன் –
அவதாரிகை –
பெரிய பெருமாளை பதாதி கேச அந்தமாக அநுபவிக்கப் பெற்ற
பாண் பெருமாளை
ஸ்தோத்ரம் பண்ணி
ஹர்ஷிக்கும் படி சொல்லுகிறது –
காட்டவே கண்ட பாத கமல நல்லாடை உந்தி
தேட்டரும் உதரபந்தம் திரு மார்வு கண்டம் செவ்வாய்
வாட்டமில் கண்கள் மேனி முனியேறித் தனி புகுந்து
பாட்டினால் கண்டு வாழும் பாணர் தாள் பரவினோமே –
வியாக்யானம் –
காட்டவே கண்ட பாத கமலம் –
அரங்கத் தம்மான் திருக் கமல பாதம் என் கண்ணினுள்ளன ஒக்கின்றவே -என்று
நல்லாடை –
அரங்கத்தம்மான் அரைச் சிவந்த வாடை -என்று ரெங்க துரந்தரனுடைய பீதாம்பரதைச் சொல்லுகிறது
உந்தி –
அரங்கத் தரவின் அணையான் -அயனைப் படைத்ததோர் எழில் உந்தி -என்று
விதி சிவ நிதானமான நாபீ பத்மத்தைச் சொல்லுகிறது –
தேட்டரும் உதர பந்தம் –
தேட்டரும் திறல் தேனான தென் அரங்கன் உடைய தேடற்கு அரிய உதர பந்தம் –
அரங்கத்தம்மான் திரு வயிற்று உதர பந்தம் –
என்றும் பட்டம் கிலேதர பந்தநம் -என்றதை சொல்லுகிறது –
திரு மார்வு –
அரங்கத்தம்மான் திரு வார மார்வு -என்று லஷ்மீ லலித க்ருஹமான
வஷஸ் ஸ்தலத்தைச் சொல்லுகிறது –
கண்டம் –
அரங்க நகர் மேய வப்பன் முற்றும் உண்ட கண்டம் -என்று
ஸ்ரீ ரெங்க நேதாவின் கண்டத்தைச் சொல்லுகிறது –
செவ்வாய்
அணி அரங்கனார் செய்ய வாய் -என்று –
அதர மதுராம் போஜம் -என்று அருணா தர பல்லவத்தைச் சொல்லுகிறது
வாட்டமில் கண்கள் –
ஷணோஜ் வலமாய்
அழலானியை உடைய தாமரைப் பூவில் வ்யாவ்ருத்தமாய்
சதைக ரூபமாய
அரங்கத் தமலன் முகத்து கரியவாகிப் புடை பரந்து மிளிர்ந்து செவ்வரி யோடி
நீண்ட அப்பெரியவாய கண்கள் -என்று
விஸால ஸ்பீதாய த்ருசி ஸி ஸிரா தாம்ர தவளமான
ஸ்ரீ ரெங்க ப்ரணயி நயநாப்ஜங்களை சொல்லுகிறது
மேனி
ஏவம் விதமான திவ்ய மங்கள விக்ரஹத்தை
முனியேறி
முனி வாஹநராய்
தனி புகுந்து
இந்த மஹா போகத்திலே தாம் ஏகராய் உள் புகுந்து-
பாட்டினால் –
அநுபவத்துக்கு பாசுரம் இட்டுப் பேசின -அமலனாதிபிரான் -என்கிற
பிரபந்தத்தின் பாட்டுக்களாலே –
அண்டர் கோன் அணி அரங்கனைக் கண்டு வாழுமவர் யாய்த்து -இவர் –
பின்பு இவ் வநுபவத்துக்கு பட்டர் தேசிகர் ஆனார்-
கண்டு வாழும்
காட்சியே வாழ்ச்சியாக வாழுகிற
பாணர் தாள்
வீணா பாணியாய் பெரிய பெருமாள் திருவடிக் கீழே
நிரந்தர சேவை பண்ணிக் கொண்டு நிற்கிற திருப்பாண் ஆழ்வார்
திருவடிகளை
பரவினோம்
ஸ்தோத்ரம் பண்ணினோம்
அலாப்ய லாபமானது லபிக்கவும் பெற்றோம்
இனி ஒரு குறைகளும் இல்லை -என்கிறது-
————————————————————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருப்பாண் ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .
Leave a Reply