ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை-அருளிய-வியாக்யானம் –அவதாரிகை –
பிரணவம் போலே -அதி சங்குதிமாய் இருத்தல் –
வேதமும் வேத உபப்ரும்ஹணமான மஹா பாரதமும் போலே பரந்து துறுப்புக் கூடாய் இருத்தல் -செய்யாதே –
பத்துப் பாட்டாய் -ஸூக்ரஹமாய் -சர்வாதிகாரமுமாய் இருக்கும் –
வேத அநத்யாபயாமாஸ மஹா பாரத பஞ்சமான் -என்றும் சொல்லுகிறபடியே
வேத உப ப்ருஹணமான -மஹா பாரத ராமாயணங்களும்
நாராயண கதாம் இமாம் -இத்யாதிகளைச் சொல்லி வைத்து
பகவத் கதை அல்லாவற்றையும் சொல்லி வைத்தது-
திருவாய் -மொழியும்
அமர்சுவை -யாயிரம் -என்றும்
பாலோடு அமுதன்ன ஆயிரம் -என்றும் –
உரை கொள் இன் மொழி -என்றும் –
ஏதமிலா ஆயிரமாய் இருந்ததே யாகிலும் –
அந்ய உபதேச ஸ்வா பதேசம் -என்ன
ஸாமாநாதி கரண்ய நிர்ணயகம் -என்ன –
த்ரி மூர்த்தி சாம்ய தத் உத்தீர்ண தத்வ நிஷேதம் -என்ன –
இவை தொடக்கமான அருமைகளை உடைத்தாய் இருக்கும் –
திரு நெடும் -தாண்டகமும்
பரப்பற்று முப்பது பாட்டாய் இருந்ததே யாகிலும்
அதுக்கும் அவ் வருமைகள் உண்டு –
திருமாலைக்கு
அவ் வருமைகள் இல்லையே யாகிலும்
தம்முடைய லாப அலாப ரூபமான ப்ரிய அப்ரியங்களை
ப்ரதிபாதியா -நிற்கும்-
திருப் பல்லாண்டுக்கு இக்குற்றங்கள் இல்லையே யாகிலும் –
அதுக்கும் ஒரு குற்றம் உண்டு –
த்ரிவித அதிகாரிகளுடைய குணாகுணங்களைப் ப்ரதி பாலிக்கையாலே-
பிரணவம் போலே அதி சங்குசிதிமாய் -துர் ஞேயமாய் -இராமையாலே –
யதி ஹாஸ்தி ததத் அந்யத்ர யன்நே ஹாஸ்தி நத்க் வசிக் -என்கிறபடியே
ஆயிரத்தில் ஒன்றும் கடலில் குளப்படியும் போலே
புறம்பு இல்லாதவை எல்லாம் இதிலே உண்டாய்
இதில் இல்லாதது ஒன்றும் புறம்பு இன்றியே இருக்கும் –
பர வியூஹ விபவங்களை பிரதிபாதிக்கை அன்றிக்கே –
அர்ச்சாவதார ரூபேண வந்து அவதரித்து
திருவரங்கப் பெரு நகருள் தெண்ணீர் பொன்னி திரைக் கையால் அடி வருட
பள்ளி கொள்ளும் கருமணியை கோமளத்தை கண்டு கொண்டு
மணத் தூணே பற்றி நின்று வாயார வாழ்த்துகிற பிரபந்தம் ஆகையாலே
எல்லா பிரபந்தகளிலும் இதுக்கு வை லஷண்யம் உண்டு –
மற்றை ஆழ்வார்களைக் காட்டில் இவர்க்கு நெடு வாசி உண்டு –
பல்லாண்டு -போற்றி -என்று பாவிக்க வேண்டிற்று அவர்களுக்கு –
அது வேண்டாதே -ஜந்ம சித்தமாய்த்து இவர்க்கு –
குலங்களாய வீரிரண்டில் ஒன்றிலும் பிறந்திலேன் -என்கிறபடியே இவர் தம்மை
நாலு வர்ணத்திலும் புறம்பாக நினைத்து இருப்பர் –
பெரிய பெருமாளும் அப்படியே நினைத்து இருப்பர் –
நித்ய ஸூரிகள் நாலு வர்ணத்தில் உள்ளார் அல்லரே –
ஆழ்வார்கள் இரு கரையர் -என்னும்படி இறே ஸ்ரீ தொண்டர் அடிப் பொடி யாழ்வார் ஐகாந்த்யம்
அவரிலும் இவர்
பரோபதேசமும்
இதர நிரசனமும்
அனுபவ விரோதி என்று
வெறும் பெரிய பெருமாளையே அடித்தலை செவ்விதாக வநுபவிக்கிறார்
ஸ்நேஹே மே பரம –
என்றன் வளவன்றால் யானுடைய வன்பு –
ராஜம் ஸ்த்வயி –
இது தானும் என்னால் வந்தது அன்று -அதுவும் அவனது இன்னருளே –
நித்யம் பிரதிஷ்டித-
இன்றன்றாகில் மற்றொரு தர்மியைப் பற்றி வருகிறதாகையாலே –
நின்னலால் இலேன் காண் -என்னுமா போலே
பக்திஸ்ச நியதா
ஸ்நேஹம் ஆவது என் -பக்தி ஆவது என்
பக்தி ஆவது என் என்னில் -பெருமாளை ஒழியச் செல்லாமை பிறந்து வ்யதிரேகத்தில்
முடிந்த சக்கரவர்த்தி நிலை -ஸ்நேஹம் –
பக்தி -யாவது நில் -என்ன -குருஷ்வ -என்னும்படியாய் முறை அறிந்து பற்றின
இளைய பெருமாள் நிலை –
வீர -தன்னைத் தோற்பித்த துறை
உம்முடைய வீரம் கொண்டு புறம்பே வென்றீர் என்று இங்கு வெல்ல முடியாது –
தானும் வீரன் ஆகையாலே தோற்பித்த துறையைப் பிடித்துப் -பேசுகிறான்
பாவோ நாந்யத்ர கச்சதி -என்று என்னை மீட்டீராகிலும் என்னுடைய நெஞ்சை மீட்க்கப் போகாது
அந்யத்ர-என்கிறது –
மற்று ஆரானும் உண்டு -என்பார் என்னுமா போலே
கொடு போக நினைத்த தேசத்தின் பேரும் கூட தனக்கு அசஹ்யமாய் இருக்கிறபடி –
இப்படி ராமாவதாரம் அல்லது அறியாத திருவடியைப் போலே ஆய்த்து இவரும்
இவர் தேவாரமான பெரிய பெருமாளை அல்லது பர வ்யூஹ விபவங்களை-அறியாதபடியும்
(ஸ்நேஹோ மே பரமோ ராஜந் த்வயி நித்யம் ப்ரதிஷ்டித:
பக்திஸ்ச நியதா வீர பாவோ ந அந்யத்ர கச்சதி’-என்பது, ஸ்ரீராமா. உத். 40 : 16. இது திருவடி கூற்று.
மற்றுங் கற்பரோ’ என்கிறார்.
ஸ்நேஹ: மே பரம:-
எழுந்தருளுகிற போது ‘என் வழியே போந்தாலோ?’ என்ன,
‘அவ்வளவு அன்று காணும் எனக்கு ஸ்நேஹம்’, என்கிறான்.
‘மாலே நெடியானே கண்ணனே விண்ணவர்க்கு
மேலா வியன் துழாய்க் கண்ணியனே -மேலாய்
விளவின் காய் கன்றினால் வீழ்த்தவனே என்தன்
அளவன்றால் யானுடைய வன்பு –100-’-(இரண்டாம் 100 )என்றும்,
‘உருகுமால் நெஞ்சம் உயிரின் பரம் அன்றி
பெருகுமால் வேட்கையும் என் செய்கேன் தொண்டனேன்
தெருவு எல்லாம் காவி கமழ் திருக் காட்கரை
மருவிய மாயன் தன் மாயம் நினைதொறே–9-6-1- என்றும் சொல்லுமாறு போலே
ராஜந் த்வயி-
இது தானும் என்னால் வந்தது அன்று.-‘ரஞ்ஜயதீதி ராஜா’ ஆகையாலே.
நித்யம் ப்ரிதிஷ்டித; –
‘இப்போது ஒண்ணாதாகில், மற்றொரு போது கொள்ளுகிறோம்’, என்றால், அது செய்ய ஒண்ணாது,
தர்மியைப் பற்றிக் கிடப்பது ஒன்று ஆகையாலே .
பக்திஸ்சநியதா –
பெருமாளை ஒழியச் செல்லாமை பிறந்து பிரிவில் முடிந்த சக்கரவர்த்தியின் நிலை சினேகம்;
பத்தியாவது, ‘நில்’ என்ன, ‘குருஷ்வ – கொள்க’ என்னும் படியாய், முறை அறிந்து பற்றின இளைய பெருமாள் நிலை.
வீர –
உம்முடைய வீரம் கொண்டு புறம்பே வென்றீர் என்னா, இங்கும் வெல்ல முடியாது.
தானும் அவன் ஆகையாலே ( நீயும் வீரன் நானும் வீரன் )தோற்பித்த துறையைப் பிடித்துச் சொல்லுகிறான்,
பாவோ ந அந்யத்ர கச்சதி –
என்னை மீட்டீராகிலும் என்னுடைய நெஞ்சினை மீட்கப் போகாது,
‘என்னுடை நல் நெஞ்சந்தன்னை அகல்விக்கத் தானும் கில்லான் இனி’ திருவாய். 1. 7 : 8.என்னுமாறு போலே.
‘சர்வ சத்தியான அவனாலும் மீட்கப் போகாது,’ என்கை.
கண்ட கண்கள் மற்று ஒன்றினைக் காணோவே’ என்னுமாறு போலே, ‘அந்யத்ர ந கச்சதி’ என்கிறது.
‘அந்யத்ர’ என்கிறது,
போகிற இடத்தின் பேரும் சொல்லுகை பொறாதபடி;
‘மற்று ஆரானும் உண்டு என்பார்’( திரு மடல் ) என்னமாறு போலே,
இவரும், ‘மற்றுங் கற்பரோ?’ என்கிறார்.)
ஸ்ரீ வைகுண்டம் திருப்பாற் கடல் திருவவதார ஸ்தலம் உகந்து அருளின திருப்பதிகள்
இவை எல்லாம் -பெரிய பெருமாளே யானாப் போலே -அவ்வோ இடங்களில் உண்டான
சௌந்தர்ய குண சேஷ்டிதங்கள் எல்லாம் பெரிய பெருமாள் பக்கலிலே காணலாம் –
பெரிய பெருமாள் அழகும் ஐஸ்வர்யம் எல்லாம் பரமபதத்திலே முகிளிதமாய் இருக்கும் –
அவதாரத்திலே ஈரிலை போரும் –
இங்கே வந்த பின்பு தழைத்தது -எங்கனே என்னில் –
பொங்கோதம் சூழ்ந்த புவனியும் விண்ணுலகும்
அங்காதும் சோராமே ஆள்கின்ற எம்பெருமான்
செங்கோலுடைய திருவரங்கச் செல்வனார் ஆகையாலே
அவ்வோ இடங்களிலே சங்குசிதமாய் இருந்தது இறே
தன்னை உகந்தாரை அனுபவிக்கை இன்றியே -தான்-என்றால் விமுகராய் இருப்பாரும் கூட அநுபவிக்கலாம் படி
இருக்கையாலே நீர்மையினால் வந்த ஏற்றமும் இங்கே உண்டு –
குணாதிக்யத்தாலே இறே வஸ்துவுக்கு உத்கர்ஷம் –
குணம் விலை பெறுவது இங்கே இறே –
குணத்தில் அகப்பட்டார் இவ்விஷயம் போக்கி அறியார்கள் இறே –
யதோ வாசோ நிவர்த்தந்தே -என்று வேதங்களுக்கு எட்டாத சர்வேஸ்வரனை
ஆற்றில் தண்ணீரோபாதி -ஆற்றுக்குள்ளே கண்டு அநுபவிக்கலாம் படி இருக்கிற இடம் இறே –
மழைக்கு அன்று வரை முன்னேந்தும் மைந்தன் மதுரவாறான அவ்வாறு இவ்வாறு -ஆய்த்து காணும் –
இவர் தமக்கு
ப்ராப்யரும்
ப்ராபகரும்
ருசி ஜனகரும்
விரோதி நிவர்தகரும்
எல்லாம் பெரிய பெருமாளே என்கிறார் –
பல போக்த்ருத்வம் தம்மதாய் இருக்க -எல்லாம் அவரே -என்கிறபடி எங்கனே என்னில் –
பிரதம ஸூஹ்ருதமும் தானேயாய் –
இப்பேற்றுக்கு வேண்டியன நிர்வஹித்துப் போந்த சௌஹார்த்தமும் அத்தலையிலே கிடைக்கையாலே –
பேற்றுக்கு இத்தலையில் உள்ளது சொல்லப் பாத்தம் போதாது இறே –
உள்ளது உண்டாகில் அவன் அனுக்ரஹத்தாலேயாம் இத்தனை –
இதர விஷயங்களில் அருசியும் -பகவத் விஷயத்தில் அப்ரதிஷேதமும் விளைந்த
மாத்ரத்திலே பெரிய பெருமாள் தம்முடைய -ஸ்வரூப ரூப குண விபூதிகளைக் காட்டக் கண்டு அநுபவித்து ப்ரீதர் ஆகிறார் –
ஆநயைநம் ஹரிஸ்ரேஷ்ட -என்று மஹா ராஜரை இட்டு -ஸ்ரீ விபீஷண ஆழ்வானை
அருள் பாடிட்டாப் போலே –
தாழ்ச்சி மற்று எங்கும் தவிர்ந்து –
கடைத்தலை இருந்து வாழும் சோம்பரான லோக சாரங்க மஹா முநிகளை யருள் பாடிட்டு –
நம்பாடுவானை அழைத்துக் கொண்டு வாரும் -என்ன –
அவரும் -அருள்பாடு அருள் பாடு -என்று சொல்ல –
இவரும் -அடியேன் அடிப் பாணன் அடிப் பாணன் -என்று இறாய்க்க –
அவரும் விடாதே தோள் மேலே எழுந்து அருளப் பண்ணுவித்து கொண்டு போக
வழியிலே ஒன்பது பாட்டுப் பாடித்
திருப் பிரம்புக்குள்ளே நின்று பத்தாம் பாட்டுப் பாடித் தலைக் கட்டுகிறார் –
—————————————————————-
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார்-அருளிய-வியாக்யானம் -அவதாரிகை —
வேதம் போலே முதல் ஆழ்வார்கள் மூவரும் பரத்வத்திலே மண்டி –
அர்ச்சையையும் தொட்டுக் கொண்டு -போந்தார்கள் –
ஸ்ரீ வால்மீகி பகவானைப் போலே -ஸ்ரீ குலசேகர பெருமாள் ராமாவதாரத்தில்
ப்ரவணராய் -அர்ச்சாவதாரத்தையும் அநுபவித்தார் –
ஸ்ரீ பராசர பகவானையும் ஸ்ரீ வேத வியாச பகவானையும் போலே –
நம்மாழ்வாரும் பெரியாழ்வாரும் ஆழ்வார் திருமகளாரும்
கிருஷ்ணாவதாரத்தில் மண்டி அர்ச்சாவதாரைத்தை அநுபவித்தார்கள் –
திரு மழிசைப் -பிரான் -நான்முகனை நாராயணன் படைத்தான் -என்று தொடங்கி
இனி அறிந்தேன் ஈசற்க்கும் நான்முகற்கும் -தெய்வம் -என்று
தேவதாந்திர பரத்வ நிரசநத்திலே தத் பரராய் இருந்தார் –
திருமங்கை ஆழ்வார் –
தேரோர் நிறை கதிரோன் மண்டலத்தை கீண்டு புக்கு ஆராவமுதம் அங்கு எய்தி
அதில் நின்றும் வாரா ஒழிவது ஓன்று உண்டே -அது நிற்க
ஏரார் முயல் விட்டு காக்கை பின் -போவதே
என்று -பரத்வத்தை காற் கடைக் கொண்டு
அர்ச்சாவதாரத்திலே இழிந்து
அது தன்னிலும் ஓர் இடத்தில் இரண்டு இடத்தில் அன்றிக்கே
நெருநற் கண்டது நீர்மலை இன்று போய் கரு நெல் சூழ் கண்ண மங்கையுள் காண்டும் –
என்று இப்படி
தான் உகந்த ஊர் எல்லாம் தன் தாள் பாடி பரபரப்பாய் திரிந்தார் –
பெரிய -பெருமாளையும் அல்லாத திருப்பதிகளோ பாதி
கண்டியூர் யரங்கம் மெய்யம் கச்சி பேர் மல்லை -என்று
கோல் தேனாக வநுபவித்தார் இத்தனை இறே
அது -தானும்
என்ற சொற்கள் வந்து அடியேன் மனத்து இருந்திட -என்கிற படியே
பெரிய பெருமாளுடைய விபவ தசையில் பாசுரங்கள் உபதேசமாய்க் கொண்டு
தம் திரு உள்ளத்திலே ஊற்றி இருக்க –
நின்னடி இணை -அடைந்தேன் -என்று
திருவடிகளை அனுபவித்த அளவு இறே -உள்ளது
ஸ்ரீ தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் -பெரிய பெருமாளை அநுபவியா நிற்கச் செய்தே
தம்மை உணர்ந்து அனுபவிப்பது
பரோபதேசம் பண்ணுவது
சப்த பூர்வகமாக பெரிய பெருமாளுடைய பரத்வ ஸ்தாபனம் பண்ணுவதாய் –
அந்ய பரராய் போந்தார் –
இவர் அங்கன் அன்றியே
இதம் பூர்ணம் என்று சொல்லுகிறபடியே பரத்வாதிகளாலே பூர்ணரான
பெரிய பெருமாளை அநுபவிக்கிறார் –
நம் ஆழ்வார் தொடக்கமான ஆழ்வார்களுக்கு பகவத் அனுபவம் நடவா நிற்கச் செய்தே –
முன்புள்ள ஜன்ம பரம்பரைகளில் உண்டான துக்க அநுபவ ஸ்மரணத்தாலும் –
ஸ்வரூப அநுரூபமான பகவத் போகத்தினுடைய அலாபத்தாலும்
க்லேச அநுபவம் கலசி நடவா -நின்றது
ஜாத்யந்தனுக்கு கண்ணைக் கொடுத்து கடலை இலக்காக்குமா போலேயும்
அர்ஜுனனுக்கு திவ்ய சஷூசை கொடுத்து வைஸ்வரூப்யத்தைக் காட்டி
அநுபவித்தாற் போலேயும்
அக்ரூர மாலாகாராதிகளுக்கு -சௌந்தர்ய சௌசீல்யாதி குணாவிஷ்காரத்தாலே
அநுபவித்தாப் போலேயும்-
ஏகைகஸ்மின் பரமவயவேநந்த சௌந்தர்ய மக்நம் சர்வம் த்ரஷ்யதே கதமிதி முதமாமதாமந்தசஷூ –
த்வாம் சௌ ப்ராத்ர வ்யதி கரகரம் ரங்க ராஜாங்க காநாம் தல் லாவண்யம் பரிணமயித விஸ்வ பாரீண வ்ருத்தி –
என்கிறபடியே
இவருடைய சத்யதையாலே பெரிய பெருமாள் அர்ச்சா ரூபமாய் இருக்கச் செய்தேயும்
தம்முடைய சௌந்தர்யத்தை ஆவிஷ்கரிக்க
அந்த சௌந்தர்ய சாகரத்தை
லாவண்யம் ஆகிற மரக் கலத்தாலே
எங்கும் ஒக்க அநுபவிக்கிறார்-
இன்னம் மற்றை ஆழ்வார்களைக் காட்டில் இவர்க்கு வாசி –
பல்லாண்டு -போற்றி -என்று பாவிக்க வேண்டிற்று அவர்களுக்கு
அது வேண்டாதே இது இவர்க்கு ஜன்ம சித்தமாய்த்து
குலங்களாய வீரிரண்டில் ஒன்றிலும் பிறந்திலேன் -என்கிறபடியே இவர் தம்மை
நாலு வர்ணத்திலும் புறம்பாக நினைத்து இருப்பர் –
பெரிய பெருமாளும் அப்படியே நினைத்து இருப்பர் –
நித்ய ஸூரிகள் நாலு வர்ணத்தில் உள்ளார் அல்லரே –
ஆழ்வார்கள் இரு கரையர் -என்னும்படி இறே ஸ்ரீ தொண்டர் அடிப் பொடி யாழ்வார் ஐகாந்த்யம்
அவரிலும் இவர்
பரோபதேசமும்
இதர நிரசனமும் அநுபவ விரோதி என்று –
வெறும் பெருமாளையே அடிக்கும் தலைக்கும் செவ்விதாக அநுபவிக்கிறார்
ஸ்நேஹே மே பரம –
என்றன் வளவன்றால் யானுடைய வன்பு –
ராஜம் ஸ்த்வயி –
இது தானும் என்னால் வந்தது அன்று -அதுவும் அவனது இன்னருளே –
நித்யம் பிரதிஷ்டித-
இன்றன்றாகில் மற்றொரு தர்மியைப் பற்றி வருகிறதாகையாலே –
நின்னலால் இலேன் காண் -என்னுமா போலே பக்திஸ்சநியதா
ஸ்நேஹம் ஆவது என் -பக்தி ஆவது என் என்னில் –
பெருமாளை ஒழியச் செல்லாமை பிறந்து வ்யதிரேகத்தில் முடிந்த சக்கரவர்த்தி நிலை -ஸ்நேஹம் –
பக்தி -யாவது நில் -என்ன -குருஷ்வ -என்னும்படியாய் முறை அறிந்து பற்றின இளைய பெருமாள் நிலை –
வீர -தன்னைத் தோற்பித்த துறையைப் பிடித்துப் -பேசுகிறான்
பாவோ நாந்யத்ர கச்சதி -என்று என்னை மீட்டீராகிலும் என்னுடைய நெஞ்சை மீட்க்கப் போகாது
அந்யத்ர-என்கிறது –
மற்று ஆரானும் உண்டு -என்பார் என்னுமாபோலே
கொடு போக நினைத்த தேசத்தின் பேரும் கூட தனக்கு அசஹ்யமாய் இருக்கிறபடி –
இப்படி ராமாவதாரம் அல்லது அறியாத திருவடியைப் போலே ஆய்த்து இவரும்
இவர் தேவாரமான பெரிய பெருமாளை அல்லது பர வ்யூஹ விபவங்களை-அறியாதபடியும்
அனுபாவ்யரான பெரிய பெருமாள் தம்மைப் பார்த்தாலும் –
பரத்வம் போலே தேச விப்ரக்ருஷ்டமாய் இருத்தல் –
வ்யூஹம் போலே தத் ப்ராயமால் இருத்தல் –
விபவம் போலே கால விப்ரக்ருஷ்டமாய் இருத்தல் –
அந்தர்யாமித்வம் போலே அசஷூர் விஷயமாய் இருத்தல் –
அர்ச்சாவதாரங்கள் போலே -தெய்வம் அல்லால் செல்ல ஒண்ணாது இருத்தல் –
அங்கு வர்த்திக்கும் பேர் -சிலைக்கை வேடரேயாய் பயங்கரராய் இருத்தல் –
பெரிய ஏற்றமேற வேண்டி இருத்தல் –
வருந்தி பெரும் கூட்டத்தோடு போய் ஏறினால் -கானமும் வானரமும் வேடுமே யாய்
மேலை வானவர் இன்றிக்கே இருத்தல் –
செய்கை அன்றிக்கே
இத்தேசத்தில் -இக்காலத்தில் -எல்லார் கண்ணுக்கும் விஷயமாய்க் கொண்டு
பத்தர்களும் பகவர்களும் பழ மொழி வாய் முனிவர்களும் பரந்த நாடும்
சித்தர்களும் தொழுது இறைஞ்ச திசை விளக்காய் நின்ற திருவரங்கம் –
என்கிறபடியே
எல்லார்க்கும் நின்ற நின்ற நிலைகளிலேயே ஆஸ்ரயிக்கலாம் படி
சர்வ ஸூலபருமாய்
வன் பெரு வானகம் -இத்யாதிப் படி -உபய விபூதியையும் நிர்வஹித்துக் கொண்டு
போருகிற மேன்மையை உடையராய் -இப்படி
சர்வாதிகாருமாய் -சர்வ சேஷியுமாய் -சர்வ ரஷகருமாய் -சர்வ சமாஸ்ரயணீ யருமாய் –
நிரதிசய போக்ய பூதருமாய் -இருப்பவர் –
சேஷ்யே புரஸ்தாச் சாலாயாம் யாவந்மே ந ப்ரசீததீ -என்று
ஸ்ரீ பரதாழ்வான் என் தலையில் சுமை வாங்கினால் அல்லது எழுந்திரேன் என்று கிடந்தாப் போலே –
உங்கள் சுமைகளை என் தலையில் வைத்தால் அல்லது எழுந்திரேன்-
யோஹ ஷேமம் வஹாம் யஹம் -என்று கிடக்கிறவர் இறே-
ஸ்ரீ வைகுண்டம் திருப்பாற் கடல் திருவவதார ஸ்தலம் உகந்து அருளின திருப்பதிகள்
இவை எல்லாம் -பெரிய பெருமாளே யானாப் போலே -அவ்வோ இடங்களில் உண்டான
சௌந்தர்ய குண சேஷ்டிதங்கள் எல்லாம் பெரிய பெருமாள் பக்கலிலே காணலாம் –
பெரிய பெருமாள் அழகும் ஐஸ்வர்யம் எல்லாம் பரமபததிலே முகிளிதமாய் இருக்கும் –
அவதாரத்திலே ஈரிலை போரும் -இங்கே வந்த பின்பு தழைத்தது -எங்கனே என்னில் –
பொங்கோதம் சூழ்ந்த புவனியும் விண்ணுலகும்
அங்காதும் சோராமே ஆள்கின்ற எம்பெருமான்
செங்கோலுடைய திருவரங்கச் செல்வனார் ஆகையாலே
அவ்வோ இடங்களிலே சங்குசிதமாய் இருந்தது இறே
தன்னை உகந்தாரை அனுபவிக்கை இன்றியே -தான்-என்றால் விமுகராய் இருப்பாரும் கூட அநுபவிக்கலாம் படி
இருக்கையாலே நீர்மையினால் வந்த ஏற்றமும் இங்கே உண்டு –
குணாதிக்யத்தாலே இறே வஸ்துவுக்கு உத்கர்ஷம் –
குணம் விலை பெறுவது இங்கே இறே –
குணத்தில் அகப்பட்டார் இவ்விஷயம் போக்கி அறியார்கள் இறே –
யதோ வாசோ நிவர்த்தந்தே -என்று வேதங்களுக்கு எட்டாத சர்வேஸ்வரனை
ஆற்றில் தண்ணீரோபாதி -ஆற்றுக்குள்ளே கண்டு அநுபவிக்கலாம் படி இருக்கிற இடம் இறே –
மழைக்கு அன்று வரை முன்னேந்தும் மைந்தன் மதுரவாறான அவ்வாறு இவ்வாறு -ஆய்த்து காணும் –
ஆஸ்ரயணீயர் ஆகையாலே மேன்மையும் –
நீர்மையாலே உபாய பாவத்தையும் –
வீர்யாதிகளாலே விரோதி நிரசநத்தையும்
சௌந்தர்யத்தையும் சொல்லுகையாலே போக்யதையும் சொல்லிற்று ஆகிறது –
பிராபக ஸ்வரூபம் அநுபவத்திலே மறைந்து போய்த்து –
இப் ப்ரபந்தம் தான் பிரணவம் போல் அதி சங்குசிதமாய் இருத்தல்
வேதமும் வேத உபப்ரும்ஹணமான மஹா பாரதமும் போலே பரந்து துறுப்புக் கூடாய் இருத்தல் -செய்யாதே –
பத்துப் பாட்டாய் -ஸூக்ரஹமாய் -சர்வாதிகாரமுமாய்
ப்ராப்யஸ்ய -இத்யாதிப்படியே அர்த்த பஞ்சக ப்ரதிபாத்யமுமாய் இருக்கும்
வேதோ உப ப்ரும்ஹணார்த்தா யதா வக்ராஹ்ய தப்ரபு -என்றும்
வேத அநத்யாபயாமாஸ மஹா பாரத பஞ்சமான் -என்றும் சொல்லுகிறபடியே
வேத உப ப்ருஹணமான -மஹா பாரத ராமாயணங்களும்
நாராயண கதாம் இமாம் -இத்யாதிகளைச் சொல்லி வைத்து
பகவத் கதை அல்லாவற்றையும் சொல்லி வைத்தது-
திருவாய் -மொழியும்
அமர்சுவை -யாயிரம் -என்றும்
பாலோடு அமுதன்ன ஆயிரம் -என்றும் –
உரை கொள் இன் மொழி -என்றும் –
ஏதமிலா ஆயிரமாய் இருந்ததே யாகிலும் –
அந்ய உபதேச ஸ்வா பதேசம் -என்ன
ஸாமாநாதி கரண்ய நிர்ணயகம் -என்ன –
த்ரி மூர்த்தி சாம்ய தத் உத்தீர்ண தத்வ நிஷேதம் -என்ன –
இவை தொடக்கமான அருமைகளை உடைத்தாய் இருக்கும் –
திரு நெடும் -தாண்டகமும்
பரப்பற்று முப்பது பாட்டாய் இருந்ததே யாகிலும்
அதுக்கும் அவ்வருமைகள் உண்டு –
திருமாலைக்கு
அவ்வருமைகள் இல்லையே யாகிலும்
தம்முடைய லாப அலாப ரூபமான ப்ரிய அப்ரியங்களை
ப்ரதிபாதியா -நிற்கும்-
திருப் பல்லாண்டுக்கு இக்குற்றங்கள் இல்லையே யாகிலும் –
அதுக்கும் ஒரு குற்றம் உண்டு –
த்ரிவித அதிகாரிகளுடைய குணாகுணங்களைப் ப்ரதி பாலிக்கையாலே-
பிரணவம் போலே அதி சங்குசிதிமாய் -துர் ஞேயமாய் -இராமையாலே –
யதி ஹாஸ்தி ததத் அந்யத்ர யன்நே ஹாஸ்தி நத்க் வசிக் -என்கிறபடியே
ஆயிரத்தில் ஒன்றும் கடலில் குளப்படியும் போலே
புறம்பு இல்லாதவை எல்லாம் இதிலே உண்டாய்
இதில் இல்லாதது ஒன்றும் புறம்பு இன்றியே இருக்கும் –
பர வியூஹ விபவங்களை பிரதிபாதிக்கை அன்றிக்கே –
அர்ச்சாவதார ரூபேண வந்து அவதரித்து
திருவரங்கப் பெரு நகருள் தெண்ணீர் பொன்னி திரைக் கையால் அடிவருட
பள்ளி கொள்ளும் கருமணியை கோமளத்தை கண்டு கொண்டு
மணத் தூணே பற்றி நின்று வாயார வாழ்த்துகிற பிரபந்தம் ஆகையாலே
எல்லா பிரபந்தகளிலும் இதுக்கு வை லஷண்யம் உண்டு –
இவர் தமக்கு ப்ராப்யரும் ப்ராபகரும் ருசி ஜனகரும் விரோதி நிவர்தகரும்
எல்லாம் பெரிய பெருமாளே என்கிறார் –
பல போக்த்ருத்வம் தம்மதாய் இருக்க -எல்லாம் அவரே -என்கிறபடி எங்கனே என்னில் –
பிரதம ஸூக்ருதமும் தானேயாய் –
இப் பேற்றுக்கு வேண்டியன நிர்வஹித்துப் போந்த சௌஹார்த்தமும் அத் தலையிலே
கிடைக்கையாலே -பேற்றுக்கு இத்தலையில் உள்ளது சொல்லப் பாத்தம் போதாது இறே –
உள்ளது உண்டாகில் அவன் அனுக்ரஹத்தாலே யாம் இத்தனை –
இதர விஷயங்களில் அருசியும் -பகவத் விஷயத்தில் அப்ரதிஷேதமும் விளைந்த
மாத்ரத்திலே பெரிய பெருமாள் தம்முடைய -ஸ்வரூப ரூப குண விபூதிகளைக்
காட்டக் கண்டு அநுபவித்து ப்ரீதர் ஆகிறார் –
ஆநயைநம் ஹரிஸ்ரேஷ்ட -என்று மஹா ராஜரை இட்டு -ஸ்ரீ விபீஷண ஆழ்வானை
அருள் பாடிட்டாப் போலே –
தாழ்ச்சி மற்று எங்கும் தவிர்ந்து –
கடைத்தலை இருந்து வாழும் சோம்பரான லோக சாரங்க மஹா முநிகளை யருள் பாடிட்டு –
நம்பாடுவானை அழைத்துக் கொண்டு வாரும் -என்ன -அவரும் -அருள் பாடு அருள் பாடு -என்று சொல்ல –
இவரும் -அடியேன் அடிப் பாணன் அடிப் பாணன் -என்று இறாய்க்க –
அவரும் விடாதே தோள் மேலே எழுந்து அருளப் பண்ணுவித்து கொண்டு போக
வழியிலே ஒன்பது பாட்டுப் பாடித் திருப் பிரம்புக்குள்ளே நின்று பத்தாம் பாட்டுப் பாடித்
தலைக் கட்டுகிறார் –
————————————————————-
வ்யாசிக் யாசத பக்த்யா விரக்த தோஷாயா வேங்கடேச கவி
முகுந்த விலோகந முதித முநி வாஹந ஸூக்தி பங்க்தி மிமாம் –
பாவளரும் தமிழ் மறையின் பயனே கொண்ட
பாண் பெருமாள் பாடியதோர் பாடல் பத்தில்
காவலனும் கணவனுமாய் கலந்து நின்ற
காரணனைக் கருத்துற நான் கண்ட பின்பு
கோவலனும் கோமானுமான வந்நாள்
குரவை பணர் கோவியர் தம் குறிப்பே கொண்டு
சேவலுடன் பிரியாத பெடை போற் சேர்ந்து
தீ வினையோர் தனிமை யெலாம் தீர்ந்தோம் நாமே
காரண விசேஷம் இன்னது என்று அறுதி இட அரிதாய் இருப்பதொரு பகவத் கடாஷத்தாலே
அயத்ந லப்தமான பர தத்வ -பரம ஹித -பரம புருஷார்த்த -விவேகத்தை உடையவராய் –
அநாதி கால பிரவ்ருதங்களான ஷூத்ர புருஷார்த்தராதிகளையும் –
ஷூத்ர புருஷ ஸ்தோத்ராதிகளையும் -ஷூத்ர புருஷார்த்த பிரவ்ருத்திகளையும்
தப்பின தம்முடைய கரண த்ரவ்யமும் இப்போது ப்ராப்தமான
ஏக விஷயத்திலே -அநந்ய பிரயோஜன அநுகூல வ்ருத்தியை உடைத்தான படியைக் கண்டு
சந்தோஷ யுக்தரான திருப்பாண் ஆழ்வார் -பின்பு பரம பதத்திலே பெரும் பேற்றை இங்கே
பெரிய பெருமாள் திருவருளாலே பெற்று –
இப் பேற்றை அடி தொடங்கி –
அமலனாதி பிரான் முதலான பத்துப் பாட்டாலே அநுபவ ப்ரீவாஹமாக அருளிச் செய்கிறார்-
இப் ப்ரபந்தம் அதி விஸ்தரம் அதி சங்கோசம் அதி க்ருதாதிகாரத்வம் துர்க்ரஹத்வம்
துரவபோதார்த்த்வம் சம்ச்யாஸி ஜநகத்வம் விரஹ க்லேசம் தூத ப்ரேஷணம்
பரோபதேசம் பர மத நிரசனம் என்றாற் போலே
மற்றுள்ள அத்யாத்ம பிரபந்தங்களில் உள்ளவை ஒன்றும் இன்றிக்கே
அநுபவ கந ரசமாய் இருக்கிறது –
முதல் பாட்டான அமலனாதிபிரான் தொடங்கி
கொண்டல் வண்ணனை என்கிற தலைக் கட்டுப் பாட்டளவும்
இதில் முதல் பட்ட மூன்று பாட்டுக்கு முதல் அஷரம்
மூலமாகிய ஒற்றை எழுத்தின் முதல் -நடு -இறுதி யானவை-
—————————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேதாந்த தேசிகர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருப்பாண் ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .
Leave a Reply