Archive for the ‘Stotrams/Slokams’ Category

பிரசித்தமான பிரமாணங்கள் –

February 26, 2023

ஸ்ரீமந் நாத முநிகள் நம்மாழ்வாரைப் பற்றி இந்த ஸ்லோகத்தை அருளியுள்ளார்:

யத்கோ ஸஹஸ்ரமபஹந்தி தமாம்ஸி பும்ஸாம், நாராயணோ வஸதி யத்ர ஸசங்கசக்ர | யந் மண்டலம் ஸ்ருதி கதம் ப்ரணமந்தி விப்ரா: தஸ்மை நமோ வகுள பூஷண பாஸ்கராய|| “

யாவருடைய ஆயிரம் கிரணங்கள் (ஆயிரம் திருவாய்மொழி பாசுரங்கள்) மனிதர்களின் அறியாமையை அகற்றுகிறதோ,
யாவருடைய திருமேனியில் நாராயணன் தன்னுடைய சங்குடனும் சக்கரத்துடனும் விளங்குகிறானோ,
யாவருடைய வசிப்பிடத்தின் பெருமையை சாஸ்த்ரங்கள் கூறுவதால் நன்கு படித்தவர்களால் வணங்கப்படுகிறதோ,
வகுள மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அந்த நம்மாழ்வாராகிற சூரியனை நான் வணங்குகிறேன்-

“த்யேயஸ் ஸதா ஸவித்ரு மண்டல மத்ய வர்த்தீ நாராயண: ஸரஸிஜாஸந ஸந்நிவிஷ்ட: கேயூரவாந் மகர குண்டலவாந் கிரீடீ ஹாரீ ஹிரண்மய வபு: த்ருத சங்க சக்ர: “

இந்த ஸ்லோகத்தில் சொல்லப்படுவது, அழகாக அலங்கரிக்கப்பட்ட நாராயணன் சங்க சக்கரங்களை தரித்துக் கொண்டு
ஸவித்ர மண்டலத்தில் எழுந்தருளியுள்ளான். அவனே எப்பொழுதும் த்யானிக்கத் தகுந்தவன்.
நாதமுநிகள் இங்கே நம்மாழ்வாரை எம்பெருமான் ஆனந்தத்துடன் எழுன்தருளியிருக்கும் ஸவித்ரு மண்டலமாகவும் சூரியனாகவும் சொல்கிறார்.
ஆழ்வாரின் ஆயிரம் பாசுரங்களை ஆயிரம் கிரணங்களாக விளாக்குகிறார்.
ஆழ்வார் தன்னுடைய ஒளியால் (பாசுரங்களால்) மதுரகவி ஆழ்வாரை வடக்கிலிருந்து ஈர்த்து திருக்குருகூருக்கு வரவழைத்தார்.
ஸவித்ரு மண்டலத்திலிருந்து வரும் கிரணங்களுக்கு ஸாவித்ரம் என்று பெயர் –
ஆதலால் திருவாய்மொழிக்கு இங்கே ஸாவித்ரம் என்ற பெயர் ஏற்பட்டுள்ளது

“ஆதித்ய ராம திவாகர அச்யுத பாநுக்களுக்குப் போகாத வுள்ளிருள் நீங்கி ஶோஷியாத பிறவிக் கடல் வற்றி
விகஸியாத போதிற் கமல மலர்ந்தது வகுள பூஷண பாஸ்கரோதயத்திலே”–ஆசார்ய ஹிருதய சூத்ரம் இங்கு கவனிக்கத்தக்கது:

————–

வ்ருஷார்த்தம் அஷ்டவ் ப்ரயதேத மாசான் நிஸார்த்த மர்த்தம் திவசம் யதேத வார்த்தக்ய ஹேதோர் வயஸா நவேந
பரத்ர ஹேதோர் இஹ ஜந்மனா ச —
எட்டு மாதங்கள் உழைத்து மழைக்காலம் நான்கு மாதங்கள் நிம்மதியாகவும்
பகலில் உழைத்து இரவில் நிம்மதியாகவும்
இளமையில் உழைத்து முதுமையில் நிம்மதியாகவும் இருப்பது போலே
அவ்வுலக நிம்மதிக்கு இஹ லோகத்தில் பிரயத்தனம் செய்ய வேண்டுமே

————–

யத்ராஷ்டாக்ஷரஸம் ஸித்தோ மஹா பாகோ மஹீயதே –
ந தத்ர ஸஞ்சரிஷ்யந்தி வ்யாதி துர்ப்பிக்ஷ தஸ்கரா; என்று
திருவெட்டெழுத்து வல்லனொருவனிருந்த நாடு ஸம்ருத்தமாயிருக்கும்

——-

தஸ்மை ராமானுஜார்யாய நம பரமயோகிநே
யஸ்ஸ்ருதிஸ்ம்ருதி ஸுத்ராநாம் அந்தர்ஜ்வர அஸீஸமது

ஸ்ரீமாதாவ்ங்க்ரி ஜலஜத்வய நித்யசேவா
ப்ரேமா விலாசய பராங்குச பாதபக்தம்
காமாதி தோஷகரம் ஆத்ம பதாஸ்ருதாநாம்
ராமாநுஜம் யதிபதிம் ப்ரணமாமி மூர்த்நா – (யதிராஜவிம்சதி – ஸ்ரீமணவாள மாமுனிகள்)

இதிகாச புராணாப்யாம் வேதம் செளபப்ரம்மயேது
விபேத்யல்பத் ஸ்ருதாத் வேதஹா மாமயம் ப்ரதரிஷ்யதி-

பாராசர்ய வசஸ்ஸுதாம் உபநிஷத் துக்தாத்பி மத்யோத்ருதாம்
சம்சாராக்னி விதீபனப் வியபகதப் ப்ராணாத்ம சஞ்சீவனி
பூர்வாச்சார்ய ஸுரக்ஸிதாம் பகுமதி வ்யாகாத தூரஸ்திதாம்
ஆநீதாந்து நிஜாச்ஷரைஹி சுமனசஹா பெளமாஃப் பிமவ்துன்வகம்

வியாசம் வஷிஷ்ட நப்தாரம் சக்தே பெளத்ரம கல்மஸம்
பராசராத்மஜம் வந்தே சுகதாந்த தபோநிதிம்

சம்யங் ஞாய கலாபேந மகதா பாரதேநச
உபப்ரம்மித வேதாய நமோ வியாசாய விஷ்ணவே

எதிகாஸ்தீத தன்யத்ர எந்நேகாஸ்தீ நதக்கொஸிது தர்மேச அர்த்தேச காமேச மோக்ஷ்சேச பரத ரிஷப,

அமுனா தபநாதிசாயு பூம்னா எதிராஜேன நிபக்த நாயகஸ்ரீஹி
மஹதி குருபந்திஹாரயட்டிஹி விபுதானாம் ஹ்ருதயங்கமா விபாதி

ஸ்வஸ்திஹஸ்திகிரி மஸ்தசேகரஹா சந்ததோது மயிசந்ததம் பரிஹி
நிஸ்சவாப்யதிக மப்யதத்தயந்தேவம் ஒளபநிஷதீ சரஸ்வதீ
ஸ்ரீநிதிம் நிதிமபார மர்த்தினாம் அர்த்திதார்த்த பரிதான தீக்ஷ்சிதம்
சர்வபூத ஸுர்தம் தயாநிதிம் தேவராஜ மதிராஜ மாஸ்ரயே

ஸ்ரீரங்கம், கரிசைலம் அஞ்சனகிரிம் தார்க்‌ஷாத்திரிசிம்மாசலவ்
ஸ்ரீகூர்மம் புருஷோத்தமஞ்ச பதரீ நாராயணம் நைமிசம்
ஸ்ரீமத்த்வாரவதி ப்ரயாக் மதுரா அயோத்தியா கயா புஷ்கரம்
சாளக்ராமகிரிம் நிஷேவ்ய ரமதே இராமானுஜோயம் முநிஹி

ஸத்யம் ஸத்யம் புனஸ்ஸத்யம் உத்ருச்சபுதமுச்சதே எதிராஜோ ஜகத்குருஹு
நாத்ர சம்சயஹா சயேவ சமுத்ரத்தா நாத்ர சம்சயஹா

———————-

வேதம் -வேதயதி -தர்ம அதர்மங்களை அறிவிக்கின்றதால் வேதம்
ப்ரத்யக்ஷ அநுமித்யா வா யஸ்து உபாயோ ந வித்யதே
ஏநம் விதந்தி வேதோ தஸ்மாத் வேதஸ்ய வேத தா

—–

ஸம்யக் ந்யாய கலாபேன மஹதா பாரதேன ச
உபப்ருஹ்ம்ஹித வேதாய நமோ வ்யாஸாய விஷ்ணவே ||

இது ஶ்ருதப்ரகாஶிகையில் ஸ்வாமி ஸுதர்சன ஸூரியினால் அனுக்ரஹிக்கப்பட்ட ஶ்லோகமாகும்.
நன்றாகச் செய்யப்பட்ட ந்யாய கலாபத்தினாலும் (ப்ரஹ்ம மீமாம்ஸையினாலும்),
பெரியதான (அல்லது) வைபவத்தையுடையதான பாரத்தினாலும், யாவர் விஷ்ணுவினுடைய ஆவேசாவதாரமான
வேதவ்யாஸ பகவான், வேதத்திற்க்கு உபப்ருஹ்மணங்களைச் செய்தாரோ
அவரின் பொருட்டு நம: என்பது இந்த ஶ்லோகத்தின் அர்த்தம்.

உபப்ருஹ்மணங்கள் உதவி கொண்டு வேதார்த்தங்கள் நிஶ்சயிக்கப்படாத பொழுது, அவை சரியாக இருப்பதில்லை
என்பது * இதிஹாஸபுராணப்யாம் வேதம் ஸமுமபப்ருஹ்மயேத் * என்ற ப்ரமாண வசனத்தினால் தோற்றும்.

———–

சாரீரக மீமாம்ஸா 4 அத்யாயங்களைக் கொண்டது. ஒவ்வொரு அத்யாயத்திற்கும் 4 பாதங்கள்.
அதனால் மொத்தம் 16 பாதங்கள். ஒவ்வொரு பாதம் தன்னிலும் ஒரு குணம் ப்ரதிபாதிக்கப்படுகிறது.
எனவே * ஶ்ருதிஸிரஸி விதீப்தனான * எம்பெருமானுக்கு மொத்தம் 16 திருக்குணங்கள்
சாரீரக மீமாம்ஸையினால் ப்ரதிபாதிக்கப்பட்டுள்ளன.
அதனை அடைவே ஸ்வாமி தேஶிகன் * ஸாராவளியில் * ஶ்லோகமாக அருளிச் செய்தார்.

ஸ்ரஷ்டா தேஹீ ஸ்வநிஷ்ட: நிரவதிகமஹிமாபாஸ்தபாத: ஶ்ரிதாப்த:
காத்மாதே: இந்த்ரியாதே: உசிதஜநநக்ருத்ஸம்ஸ்ருதௌ தந்த்ரவாஹீ |
நிர்த்தோஷத்வாதிரம்ய: பஹுபஜநபதம் ஸ்வார்ஹகர்மப்ரஸாத்ய:
பாபச்சித் ப்ரஹ்மநாடீகதிக்ருததிவஹந் ஸாம்யதஶ்ச அத்ரவேத்ய: || (19)

ஸ்ரஷ்டா – உலகைப் படப்பவன்(1-1), தேஹீ – தன்னையொழிந்த அனைத்தையும் தனக்குச் சரீரமாகக் கொண்டவன் (1-2);
ஸ்வநிஷ்ட: – தன்னையே ஆச்ரயமாகக் கொண்டவன் (1-3); நிரவதிமஹிமா – எல்லையற்ற பெருமைகளை உடையவன் (1-4);
அபாதஸப்தபாத: – ஸாங்க்யாதி ஸ்ம்ருதிகளால் கலக்கமுடியாதவன் (2-1); ச்ரிதாப்த: – அண்டியவர்களுக்கு நண்பன் (2-2);
காத்மாதே: உசிதஜநநக்ருத் (2-3) – ஆகாசம் ஆத்மா முதலியவற்றினுடையவும் தக்கபடி படைப்பவன் – இந்திரியாதே: உசிதஜநநக்ருத் (2-4)-
இந்த்ரியம் முதலியவற்றினுடையவும் தக்கபடி படைப்பவன்; ஸம்ஸ்ருதௌ தந்த்ரவாஹீ – ஜாக்ரத் ஸ்வப்ந ஸுஷூப்திமூர்ச்சா மரணம் ஆகியவைகளை நிர்வஹிப்பவன் (3-1); நிர்தோஷத்வாதி ரம்ய: (3-2) – தோஷங்கள் தட்டாதவன் ரம்யன்; பஹுபஜனபதம் (3-3) –
பல உபாஸநத்திற்கு இருப்பிடமாக அறியத்தக்கவன்; ஸ்வார்ஹகர்மப்ரஸாத்ய: (3-4) –
ஜீவர்கள் தம் தம் ஆச்ரமங்களுடன் அநுஷ்டிக்கப்படும் கர்மாக்களால் ஸந்தோஷப்படுத்தப்படுபவன்; பாபச்சித் (4-1) –
பாபங்களை நீக்குபவன்; ப்ரஹ்மநாடீகதிக்ருத் (4-2)- மோக்ஷத்தை அடைவிப்பவன்; அதிவஹந் (4-3) –
அழைத்துச் செல்பவன்; ஸாம்யத: (4-4)- தனக்கு ஸமமான யோகத்தைத் தருபவன்.
இப்படி மொத்தம் 16 திருக்குணங்கள் சொல்லப்பட்டுள்ளன.

* வேத வேத்ய * ந்யாயத்தால் வேத்யனான எம்பெருமான் பெருமாளாக (ஸ்ரீ ராமபிரானாக) திருவவதாரம் செய்தருளின பொழுது,
வேதமும் ஸ்ரீராமாயணமாக அவதாரம் செய்தது. ஸ்ரீராமாயணமும் பெருமாளுக்கு * குணவாந் கச்ச வீர்யவாந் * என்று
16 திருக்குணங்களே இருப்பதாகப் ப்ரதிபாதித்தது!

———-

ப்ரபத்யே ப்ரணாவாகரம் பாஷ்யம் ரங்கமிவாபரம் –
ப்ரஸ்ய ப்ரஹ்மணோ யத்ர சேஷித்வம் ஸ்புடமீக்ஷ்யதே –

இது ஸுதர்ஸன ஸூரியினாலே அருளிச் செய்யப்பட்டது. ஸ்ரீரங்கவிமாநமான ப்ரணவாகார விமானத்தைப் போல்
ஸ்ரீபாஷ்யம் விளங்குகிறது என்கிறார்.

———-

காஸார ஸம்யமி முகா: கமலா ஸஹாய
பக்தா: ப்ரபத்தி பதவீ நியதா மஹாந்த: |
யஸ்யாபவந் அவயவா இவ பாரநந்த்ர்யாத்
தஸ்மை நமோ வகுளபூஷண தேசிகாய ||

பொய்கையாழ்வார் முதலான ஶ்ரிய:பதியின் பக்தர்களும், ப்ரபத்தி மார்க்கத்தில் நிலைநின்றவர்களுமான மகான்களும்,
பாரதந்த்ர்யத்தாலே யாவர் நம்மாழ்வாருக்கு அவயவங்கள் போன்று இருந்தார்களோ,
அந்த மகிழ்மாலை மார்பினரான சடகோபனுக்கே நான் உரியேனாவேன். (பராங்குச பஞ்ச விம்சதி – 2)

———————

வேதவேத்யே பரே பும்ஸி ஜாதே தஶரதாத்மஜே |
வேத: ப்ராசதேஸாதாஸீத் ஸாக்ஷாத் ராமாயணாத்மநா||–இது ஸ்காந்த புராணத்தில் உள்ள வசனம்

———-

ப்ரஹ்மஸூத்ரமும் திருவாய்மொழியும்

“புரா ஸூத்ரைர் வியாஸ: ஶ்ருதிஶதசஶிரோர்த்தம் க்ரதிதவாந்
விவவ்ரே தத் ஶ்ராவ்யம் வகுளதரதாமேத்ய ஸ புந: |
உபாவேதௌ க்ரந்தௌ கடயிதுமலம் யுக்திபிரஸௌ
புநர் ஜஜ்ஞே ராமாவரஜ இதி ஸ ப்ரஹ்மமுகுர: ||”

வேதாபஹாரிணம் தைத்யம் மீனரூபி நிராகரோத் |
ததர்தஹாரிணஸ்ஸர்வாந் வ்யாஸரூபி மஹேஶ்வர: ||

வேதங்களை அபஹரித்த பொழுது மீனாகத் திருவவதாரம் செய்து மீட்டருளின ஸர்வேச்வரனே,
அவ்வேதங்களுக்கு அபார்த்தங்களைச் சொன்ன பொழுது வ்யாஸராகத் திருவவதாரம் செய்து
உண்மையான அர்த்தங்களை நிலைநாட்டியருளினான் . என்பது இந்த ஶ்லோகத்தின் திரண்ட பொருள்.
அப்படி நிலைநாட்டியது சாரீரக மீமாம்ஸையான உத்தரமீமாம்ஸையைக் கொண்டேயாகும்.

அந்த வ்யாஸரே நம்மாழ்வாரகத் திருவவதாரம் பண்ணியருளி திருவாய்மொழி மூலமாக சாரீரக மீமாம்ஸா ஶாஸ்த்ரத்தை விவரித்து அருளினார்.

பின்பு அவரே எம்பெருமானார் மூலம் இரண்டையும் ஸமன்வயப்படுத்தி அருளினார் – என்பது
கீழ் உதாஹரித்த *புரா ஸூத்ரைர் * என்கிற ஶ்லோகத்தின் அர்த்தமாகும்.
இதனை * பாஷ்யகாரர் இது கொண்டு ஸூத்ரவாக்யங்கள் ஒருங்கவிடுவர் * (65) என்று காட்டியருளினார்
ஆசார்யஹ்ருதயத்திலே அழகியமணவாளப்பெருமாள் நாயனார்.

————–

7-வது காண்டத்தில், 5-வது ப்ரஸ்நத்தில் மேற்கண்டவற்றைக் காண்கிறோம்.
இங்கு, வேதேப்யஸ்ஸ்வாஹா) என்று வருகிறது. உடனே, காதாப்யஸ்ஸ்வாஹா) என்கிறது.
ஸம்ஸ்க்ருத வேதத்தையும், த்ராவிட வேதமான திவ்ய ப்ரபந்தத்தையும் முறையே வேத மற்றும் காதா என்கிற சொற்கள் குறிக்கின்றன.
ஸ்வாமி தேசிகன் காதா இவ்வார்த்தையை த்ரமிடோபநிஷத் தாத்பர்ய ரத்னாவளியில் பலமுறை
திவ்ய ப்ரபந்தத்தைக் குறித்து உபயோகப் படுத்தியிருப்பது தெரிகிறது.
உதாரணமாக, தாத்பர்ய ரத்னாவளியின் இரண்டாவது பாசுரம் காண்க:

ப்ரஜ்ஞாக்யே மந்தசைலே ப்ரதிதகுணருசிம் நேத்ரயந் ஸம்ப்ரதாயம்
தத்தல்லப்தி-ப்ரஸக்தை: அநுபதி-விபுதை: அர்த்திதோ வேங்கடேச: |
கல்பாந்தயூந: சடஜிதுபநிசத்-துக்த-ஸிந்தும் விமத்நந்
க்ரத்நாதி ஸ்வாது-காதா-லஹரி-தச-சதீ-நிர்கதம் ரத்நஜாதம்)||

பொருள் –
காலத்தைக் கடந்த இளமையுடையரான ஸ்ரீமந்நாராயணின் திருக்கல்யாண குணங்களாகிற ரத்தினங்களைத்
தன்னில் கொண்டதாய், அவன் துயிலும் பாற்கடல் போன்றதாய், ஆயிரம் அலைகள் போல் எழும் இனிமையான
ஆயிரம் பாடல்(காதா)களைக் கொண்டதாய், சடகோபரின் திருவாயிலிருந்து புறப்பட்ட மொழிக்கடலை,
வேங்கடேசனாகிய நான், இதில் அடங்கியுள்ள அமுதப் பொருள்களை அநுபவிக்க வேண்டும் என்று ஆசையுற்ற
அடியார்களால் வேண்டப்பட்டு, பெரியோர்கள் வழிவந்த அறிவின் மத்தைக்கொண்டு கடைகிறேன்.
இத்துடன் த்ராவிட வேதாந்தத்தின் பெருமைகளை ஸம்ஸ்க்ருத வேதத்தின் மூலம் கண்டறியும் விசாரம் முற்றிற்று.

—————–

எம்பெருமானார் ப்ரஹ்மம் எனும் சொல்லை ஆழ்வார் வழியில் விளக்குவதாவது:
உயர்வற=அநவதிகாதிசய
உயர்=அஸங்க்யேய
நலம் உடையவன்=கல்யாண குண கண
யவனவன்=புருஷோத்தமன்

—————-

பகவந் –
“மைத்ரேய! பகவச் சப்தஸ் ஸர்வகாரண காரணே! ஸம்பார்த்தேதி ததா பர்த்தா பகாரோர்த்த்வயாந்வித:
நேதாகமயிதா ஸ்ரஷ்டா ககாரார்த்தஸ் ததாமுநே. ஐச்வர்யஸ்ய ஸமக்ரஸ்ய வீர்யஸ்ய யசஸச்ஸ்ரீய:
ஜ்ஞாநவைராக்ய யோச்சைவ, ஷண்ணாம் பக இதீரணா. வஸந்தி தத்ர பூதாநி பூதாத்மந்யகிலாத்மநி,
ஸச பூதேஷ்வசேஷேஷு வகாரார்த்தஸ் ததோவ்யய:ஜ்ஞாந சக்தி பலைச்வர்ய வீர்ய தேஜாம்ஸ்ய சேஷத:
பகவத்சப்தவாச்யாநி விநா ஹேயைர் குணாதிபி: ஏவமேஷ மஹாசப்தோ மைத்ரேய! பகவாநிதி,
பரப்ரஹ்ம பூதஸ்ய வாஸுதேவஸ்ய நாந்யக: தத்ர பூஜ்ய பதார்த்தோக்தி பரிபாஷா ஸமந்வித:
சப்தோயம் நோபசாரேண த்வந்யத்ர ஹ்யுபசாரத:” (விஷ்ணுபுராணம் 6-5-72)

[ மைத்ரேயரே! ‘பகவான்’ என்னும் சப்தம் ஸர்வ காரணங்களுக்கும் காரண பூதனான ஸர்வேச்வரன்
விஷயத்தில் சொல்லப் பெறுகிறது. ‘(ப்ரக்ருதியை) கார்யதசை அடையச்செய்பவன்,
‘ஸ்வாமி’ என்னும் இரண்டு அர்த்தங்களுடன் கூடியது பகாரம்; முனிவரே!
அவ்வாறே ‘ரக்ஷிப்பவன், ஸம்ஹரிப்பவன், ஸ்ருஷ்டிப்பவன்’ என்பது ககாரத்தின் அர்த்தம்.
ஸம்பூர்ணமான ஐச்வர்யம், வீர்யம், யசஸ், ஜ்ஞாநம், வைராக்யம் என்னும் இந்த ஆறு குணங்களுக்கும்
‘பக’ என்னும் பதம் வாசகமாயிருக்கிறது.
பூதங்களை சரீரமாகக்கொண்டவனும், எல்லாவற்றுக்கும் ஆத்மாவாயிருப்பவனுமான அவனிடத்தில் பூதங்கள் வஸிக்கின்றன.
அவனும் அகில பூதங்களிலும் வஸிக்கின்றான். ஆகையால் அழிவற்றவனான பகவான் வகராத்துக்கு அர்த்தமாகிறான்.
கீழானவையான முக்குணங்கள் முதலியவற்றுடன் சேராத
‘ஜ்ஞாநம், சக்தி, பலம், ஐச்வர்யம், வீர்யம், தேஜஸ் என்னும் எல்லா குணங்களும்
‘பகவாந்’ என்னும் சப்தத்தினால் சொல்லப்படுகின்றன. மைத்ரேயரே! இம்மாதிரியாக பகவான் என்னும்
இந்த மஹாசப்தம் பரப்ரஹ்மமான வாஸுதேவனுக்கே உரித்தானது. வேறொருவரையும் குறிக்காது.
‘பூஜிக்கத்தக்க பொருளைக் குறிப்பது’ என்னும் பரிபாஷையுடன் கூடிய இந்த சப்தம் அவன் விஷயத்தில்
ஔபசாரிகமாகச் சொல்லப் பெறுவதில்லை. மற்ற விஷயங்களில் ஔபசாரிகமாக அமுக்யமாகச் சொல்லப் பெறுகிறது.]

————-

பசுர் மனுஷ்யப் பக்ஷிர்வா ஏ ச வைஷ்ணவ ஸமாச்ரயா:
தேநைவ தே ப்ரயாஸ்யந்தி தத்விஷ்ணோ: பரமம் பதம்

ஒரு விலங்கோ, மனிதனோ, பறவையோ ஒரு வைஷ்ணவனிடம் புகல் பெற்றால்
அந்தத் தொடர்பினாலேயே அவ்வுயிர் மிக உயர்ந்த பரமபதம் அடைகிறது-

பிடித்தார் பிடித்தார் வீற்றிருந்து பெரியவானுள் நிலாவுவரே” (திருவாய்மொழி 6-10-11)
“எமர் கீழ் மேல் எழுபிறப்பும் விடியா வெந்நரகத்து என்றும் சேர்தல் மாறினரே”

———————-

அகில-புவந-ஜந்ம-ஸ்தேம-பங்காதிலீலே
விநத-விவித -பூத-வ்ராத-ரக்ஷைக-தீக்ஷே
ச்ருதி -சிரஸி-விதீப்தே ப்ரஹ்மணி ஸ்ரீநிவாஸே
பவது மம பரஸ்மின் சேமுஷீ பக்திரூபா

“அகில-புவந-ஜந்ம-ஸ்தேம-பங்காதிலீலே” எனும் சொற்கள் ப்ரஹ்ம ஸூத்ரத்தில்
இரண்டாவதான “ஜன்மாத்யஸ்ய யத:” என்பதும்,
அந்த ஸூத்ரமே “யதோ வா இமாநி பூதாநி ஜாயந்தே” என்கிற உபநிஷத் வாக்யம் அடியானது

ஸ்ருதப் பிரகாசிகா பட்டரும்,“ஜகதுத்பவ-ஸ்திதி-பிரணாச-ஸம்ஸார விமோசன” என ஆளவந்தாரை உதாஹரிக்கிறார்.

விநத விவித வ்ராத ரக்ஷைக தீக்ஷே” என்றதில் ரக்ஷணம் என்பது பொதுவானதன்று
மோக்ஷ ப்ரதத்வத்தை அடக்கியது என்று தெரிகிறது
அணைவதரவணை மேல்”லில் மோக்ஷ ப்ரதத்வத்தை அனுபவிக்கிறார்-

——————-

எம்பெருமானார் கிரீட, மகுட, சூடாவதம்ச என்ற மூன்று சொற்களால்
எம்பெருமானின் பரதவ, சௌலப்ய, பிரணயித்வமாகிற மூன்று அரசு நிலைகளைக் காட்டியருளுகிறார்.
பாரளந்த பேரரசே என்பதில் சௌலப்யத்தில் அரசன் என்றபடி.த்ரிவிக்ரம அவதாரம் எடுத்தபோது
அவன் தன் திருவடியை ஒவ்வொருவர் தலையிலும் வைத்தருளினான்.
எம் விசும்பரசே என்றதில் பரத்வம் சொன்னபடி. அவன் ஸ்ரீவைகுண்டத்தில் நித்யசூரிகளின் தலைவனைத் திகழ்கிறான்.
எம்மை நீத்து வஞ்சித்த ஓரரசே என்றதில் அவன் கலப்பதும் பிரிவதுமாக ஆழ்வார் பால் பூண்ட பிரணயித்வம் தெரிகிறது.

————————

தஸ்ய யதா கப்யாசம் புண்டரீகமேவமக்ஷிணீ”–

”கம்பீராம்பஸ்சமுத்பூத சம்ருஷ்ட நாள ரவிகரவிகசித புண்டரீக தலாமலாயதேக்ஷண”–வேதார்த்த சங்க்ரஹம்

(i)கம் பிபதி இதி கபி:=ஆதித்ய: தேன அஸ்யதே க்ஷிப்யதே விகாஸ்யதே இதி கப்யாசம்-சூரியனால் மலர்த்தப்பட்ட தாமரை

(ii)கம் பிபதி இதி கபி:=நாளம்,தஸ்மின் அஸ்தே இதி கப்யாசம்-கொழுத்த தண்டுகளுடன் கூடிய தாமரைகள்

(iii)கம் ஜலம் ஆச உபவேசனேஇதி ஜலேபி ஆஸ்தே இதி கப்யாசம் -[ தண்ணீரால் தாங்கப்படும் தாமரை ]

கம்பீராம்பஸ்ஸமுத்பூத புண்டரீக – தாமரை ஜலஜம், அல்லது அம்புஜம் அல்லது நீரசம் எனப்படும்
தாமரையை அலர்த்தக் கடவ ஆதித்யன் தானே நீரைப் பிரிந்தால் அத்தை உலர்த்துமாபோலே” என்கிறார்
சிறிய திருமடலில், திருமங்கை மன்னன், ”நீரார் கமலம்போல் செங்கண் மால் என்றொருவன்” என்கிறார்.
எம்பெருமானின் சிவந்த கண்கள் அழகியநீர்த் தாமரை போலுள்ளன.
மேலும் திருவிருத்தத்தில் ஆழ்வார் “அழலலர் தாமரைக் கண்ணன்” என்கிறார் இதே பொருளில்.
இவ்விடத்து வ்யாக்யானத்தில் ஸ்வாமி நம்பிள்ளை கப்யாச ஸ்ருதியை நன்கு மேற்கோள் காட்டி விளக்குகிறார்.
இதில் முதற்பதம் “கம்பீர” எனும் அடைமொழி நீரின் விரிவைக் குறிப்பது ஆழ்வாரின் திருவாய்மொழியில்
“தண் பெருநீர் தடந்தாமரை மலர்ந்தால் ஒக்கும் கண் பெருங்கண்ணன்” என வருகிறது.
தாமரை பெரிய குளிர்ந்த தடாகத்தில் பூத்துள்ளது, எம்பெருமானின் திருக் கண்களும் அவ்வாறுள்ளன.
”ஸம்ர்ஷ்ட நால புண்டரீக” – தாமரை எவ்வாறு நீரைச் சார்ந்தே உள்ளதோ அதே அளவு தன் தடித்த செவ்விய தண்டையும் சார்ந்துள்ளது
தண்டு பற்றிய குறிப்பும் ஆழ்வார் பாசுரங்களிளிருந்தே கிடைக்கிறது.
திருவிருத்தத்தில் ஆழ்வார், “எம்பிரான் தடங்கண்கள் மென்கால் கமலத் தடம்போல் பொலிந்தன”
எம்பெருமானின் அழகிய திருக் கண்கள் எழிலார்ந்த தண்டின்மீது துலங்கும் தாமரைபோல் பொலிந்தன.

”ரவிகர விகசித” – நீரில் தண்டால் தாங்கப்படும் தாமரை மலர்வது சூரியனின் கிரணங்களால் சொல்லமுடியாத
பேரழகுள்ள பெருமானின் திருக்கண்களோடு ஓரளவாகிலும் ஒப்பு சொல்லக் கூடியது தண்டோடு அழகாய்
நீரில் நிற்கும் மலர்ந்த தாமரையே ஆகும். சூரியனின் கிரணங்களே அவனது கைகள்.
”செஞ்சுடர்த் தாமரை” எனும் ஆழ்வார் பாசுரத்தில் இவ்வுவமை கிடைக்கிறது.
பெருமானின் கணங்களுக்கும் தாமரைக்குமுள்ள சம்பந்தம் கூறப் படாவிடினும்,
குலசேகரப் பெருமாள் சூரியனுக்கும் தாமரைக்குமுள்ள தொடர்பைத் தம் பெருமாள் திருமொழியில்
“செங்கமலம் அந்தரம் சேர் வெங்கதிரோர்க்கல்லால் அலராவால்” என்று அருளிச் செய்கிறார்.

புண்டரீக தளாமலா யதேக்ஷணா – மூலத்தில் “புண்டரீகமேவமக்ஷிணீ “என்று இவ்வளவே உள்ளதை
எளிதாகத் தாமரைபோலும் கண்களை உடையவன் என்றோ புண்டரீகேக்ஷணன் என்றோ சொல்லி விடலாம்.
ஆனால் ஸ்வாமி தள, ஆமல, ஆயத எனும் மூன்று சொற்களை
புண்டரீக மற்றும் ஈக்ஷண எனும் இரண்டு சொற்களின் நடுவில் சேர்த்துள்ளார்.
இது ஆழ்வார்களின் பாசுரங்களின் தாக்கத்தாலேயே ஆகும்.

ஆழ்வார்கள் “தாமரைத் தடங்கண்ணன்”, “கமலத் தடம் பெருங்கண்ணன்” என்பன போன்ற சொற்களைப் பயன்படுத்துகின்றனர்.
தமிழில் “தட”வும் வடமொழியில் “தள”வும் ஒன்றே.
வடமொழியின் “ள” தமிழில் “ட” ஆகிறது. ள, ட இரண்டுக்கும் வேறுபாடு இல்லை.
இக்கொள்கையைத் தமிழ்ப்புலவோர் “எழுத்துப்போலி” என்பர்.
பூர்வாசார்யர்கள் தம் வியாக்யானங்களில் “தடம்” எனும் சொல்லை, “பெரிய”, ”குளம்”, ”இதழ்” என்று விளக்குகிறார்கள்.
இவ்விடத்தில் இதழ் எனும் பொருள் பொருந்துவதாகும்.

ஆழ்வாரின் “கமலக் கண்ணன்…அமலங்களாக விழிக்கும்” – எம்பெருமானின் கருணை நோக்கு
எல்லாப் பாவங்களையும் நீக்கும். எம்பெருமானின் நோக்கின் தன்மை “அமல” என்பதால் தெரிய வருகிறது
ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு “ஆயத “ என்ற சொல் எங்கிருந்து வருகிறது எனக்காண்பது எளிது.
திருப்பாணாழ்வாரின் “கரியவாகிப் புடை பரந்து மிளிர்ந்து செவ்வரியோடி நீண்டவப் பெரியவாய கண்கள்” எனும்
அவர் சொற்கள் நம் நினைவில் உடனே தோன்றும்.

————–

உக்த்லக்ஷண-தர்மசீலா வைஷ்ணவாக்ரேஸர: மத் ஸமாச்ரயேண ப்ரவ்ருத்தா:
மந்நாமகர்ம-ஸ்வரூபாணாம் வாங்மநஸாகோசாரதயா மத்தர்சநேந விநா ஸ்வாத்மதாரணபோஷநாதிகமலபமாநா:
க்ஷண மாத்ர காலம் கல்ப ஸஹஸ்ரம் மந்வாநா ப்ரசிதில-ஸர்வ-காத்ரா பவேயுரிதி
மத்ஸ்வரூப சேஷ்டிதாவலோகநாலாபாதிதாநேந தேஷாம் பரித்ராணாய”

தர்மசீலா: =அவர்கள் நியமிக்கப்பட்ட தர்மத்தைத் தங்கள் தகுதியாக உடையவர்கள்.
“தர்மம்” என்ற சொல் பொதுப்படையான தர்மத்தைக் குறிப்பதாகவும் கொள்ளலாம்,
அல்லது விசேஷமாக வைஷ்ணவ தர்மத்தைக் குறிப்பதாகவும் கொள்ளலாம்.
முன் ஸ்லோகத்தில் “யதா யதாஹி தர்மஸ்ய” என்றிருப்பதால் முதலில் சொன்ன பொருளும்,
இவ்வுரையில் அடுத்த சொல் “வைஷ்ணவாக்ரேசரா:” என்றுள்ளதால் பின் சொன்ன பொருளும் ஒக்கும்.

வைஷ்ணவாக்ரேசரா: – இவர்கள் வைஷ்ணவர்களில் முதன்மையானோர். இதுதான் இங்கு மிக முக்யமான குறிப்பு.
ஸ்வாமி இராமானுசரின் சம்ப்ரதாயத்தில் ஆழ்வார்களே உயர்ந்த ஸ்ரீவைஷ்ணவர்களாகக் கருதப்படுகிறார்கள்.
வைஷ்ணவாக்ரேசரா: என்கிற சொல் அவர்களின் உயர்ந்த ஸ்தானத்தைக் காட்டுகிறது.

மத் ஸமாஸ்ரயேண பவித்ரா: – என்னையே அடைக்கலமாகக் கொண்டவர்கள்.
இக் குறிப்பு, “துயரறு சுடரடி தொழுது”,
“ஆழிவண்ண நின் அடியினை அடைந்தேன்” போன்ற ஆழ்வார்களின் திருவாக்குகளால் கிளர்த் தப்பட்டது.

மந்நாம கர்ம ஸ்வரூபாணாம் வாங் மனஸாகோசாரதயா –
“என் சொல்லிச்சொல்லுகேன்?”
“நெஞ்சால் நினைப்பரிதால் வெண்ணெய் ஊண் என்னும் ஈனச்சொல்லே” என்று ஆழ்வார்கள் எம்பெருமானின்
திவ்ய நாமங்கள், திவ்ய சேஷ்டிதங்கள் முதலானவை நினைவையும் சொல்லையும் கடந்தவை என்று உணர்ந்தவர்கள்.

மத் தர்சநேன வினா ஸ்வாத்ம தாரணபோஷணாதிகம் அலபமாநா: –
ஆழ்வார்களால் எம்பெருமானைக் காணாமலும் உணராமலும் நிற்கவோ தரிக்கவோ இயலாது.
“தொல்லை மாலைக் கண்ணாரக் கண்டு கழிவதோர் காதலுற்றார்க்கும் உண்டோ கண்கள் துஞ்சுதலே”,
“காண வாராய் என்றென்று கண்ணும் வாயும் துவர்ந்து” போன்ற பாசுரங்களில் இது தெளிவு.

க்ஷண மாத்ர காலம் கல்ப சஹச்ரம் மன்வானா: – எம்பெருமானோடு ஒரு நொடிப் பிரிவும்கூட ஆழ்வார்களால்
ஆயிரம் ஊழிக் காலப் பிரிவாகவே உணரப்படுகிறது. இதை அவர்கள் சொற்களிலேயே காணலாம்.
“ஒரு பகல் ஆயிரம் ஊழியாலோ”,
“ஊழியில் பெரிதாய் நாழிகை என்னும்”,
“ஓயும் பொழுதின்றி ஊழியாய் நீண்டதால்” போல்வன,

ப்ரசிதில-சர்வ-காத்ரா: –
எம்பெருமானோடு பிரிந்தபோதும், சேர்ந்தபோதும் ஆழ்வார்களின் திருமேனி களைத்தும் இளைத்துமே போந்தன.
கூடலில், சேர்த்தி இன்பத்தால் களைப்பு. பிரிவில், துயரத்தால் களைப்பு.
“காலாழும் நெஞ்சழியும் கண் சுழலும்”,
“காலும் எழா கண்ண நீரும் நில்லா உடல் சோர்ந்து நடுங்கிக் குரல் மேலுமெழா மயிர்க் கூச்சமறா”,
“உள்ளெலாம் உருகிக் குரல் தழுத்தொழிந்தேன்”,
மற்றும் “உரோம கூபங்களாய்க் கண்ண நீர்கள் துள்ளஞ் சோரத் துயிலணை கொள்ளேன்” என்பன போல்வன.

சுருங்கச் சொல்லில், “ஒரு ஸாது வைஷ்ணவர்களில் தலைவராய் இருப்பார், தர்ம ஒழுக்கத்தில் நிலை நிற்பவர்,
கண்ணனான என்னையே புகலாய் நினைத்திருப்பார், என் நாமங்களும் சேஷ்டிதங்களும் திவ்யமானவை,
மனதையும் சொல்லையும் கடந்தவை என்றிருப்பார், இவற்றின் அனுபவமின்றித் தரித்திலராவார்,
என் காட்சியும் உனர்வுமின்றித் தரித்திலர், என் பிரிவு ஒரு கணமும் ஓர் ஊழியாய் நினைப்பார்”
ஒரு சாது எம்பெருமானோடு கொண்டுள்ள உறவு இப்படி நெருக்கமும் நுட்பமும் கொண்டது .

————

மன்மனா பவ மத பக்தோ மத்யாஜி மாம் நமஸ்குரு
மாமேவைஷ்யசி யுக்த்வைவமாத்மானம் மத்பராயணா:

மன் மனா பவ – மயி ஸர்வேச்வரே நிகில ஹேயப்ரத்யநீக கல்யாணைகதாந ஸர்வஞ்ஞே ஸத்யஸங்கல்பே
நிகிலஜதேககாரணே பரஸ்மிந் ப்ரம்மணி பு௫ஷோத்தமே புண்டரீகதலாமலாயதேக்ஷணே ஸ்வச்சநீலஜீமுதஸங்காக்ஷே
யுகபதுதிததினகரஸஹஸ்ர ஸத்ருசதேஜஸி லாவண்யாம்௫தமஹோததே உதாரபீவரசதுர்பாஹோ அத்யுஜ்ஜவலபீதாம்பரே
அமலகிரீடமகரகுண்டலஹாரகேயுரகடகபூஷிதே அபரகா௫ண்யஸெளசீல்யஸெளந்தர்யமாதுர்ய காம்பீர்ய ஔதார்ய
வாத்ஸல்யஜலதௌ அநாலோசித விசேஷ அசேஷ லோக சரண்யே ஸர்வஸ்வாமினி தைலதாராவதவிச்சேதேன நிவிஷ்டமநா பவ)

ஸர்வேச்வரேச்வரனான என் மேல் மனதை வை, என் மேல் = ஒரு குறையுமில்லாத, எல்லா மங்கலங்களும்
விரும்பத்தக்க கல்யாண குணங்களும் மிக்க, ஸர்வ வியாபி ஸத்ய சங்கல்பன், ஸர்வ காரணன், பரப்ரம்மம்,
அப்போதலர்ந்த அரவிந்தம் போன்ற செந்தாமரைக்கண்ணன், காள மேகம்போலும் கவின் மிகு கருணைத் தோற்றமுள்ளவன் ,
கதிராயிரம் இரவி கலந்தெரித் தாற் போல் தேஜோமயன், வண்ணப் பீதகவாடை தரித்தவன், பலபலவே ஆபரணமும் முடியும்
குண்டலமும் ஆரமும் கங்கணமும் தோள்வளையும் பூண்டு கருணையும் அன்பும் உடையனாய் எளிவரும் இயல்வினனாய்
சுலபனாய் எவர்க்கும் புகலாய் உள்ள என் மேல் அர்ஜுனா உன் அன்பை இடையீடின்றி வை என்கிறான்.

பண்டருமாறன் பசுந்தமிழ்ஆனந்தம் பாய் மதமாய் விண்டிட எங்களிராமானுசமுனி வேழம் ….என்றும்

கலிமிக்க செந்நெற்கழனிக்குறையல் கலைப்பெருமான் ஒலிமிக்க பாடலையுண்டு தன்னுள்ளம் தடித்து
அதனால் வலிமிக்க சீயம் இராமானுசன் ….என்றும் போற்றினார்

————-

ஸ்ரீ யாமுநாரயஸமோ வித்வான் ந பூதோ ந பவிஷ்யதி என்று உறுதியாகக் கூறுவர்.
ஸ்வாமியைப் போன்று ஒரு மஹாவித்வான் பிறந்ததும் இல்லை இனி பிறக்கப் போவதும் இல்லை.
திருவரங்கத்தமுதனாரும் ஸ்வாமியை ‘யதிகட்கிறைவன் யமுனைத்துறைவன்’ என்று இவரை
யதிகளுக்கு, அதாவது ஸந்யாஸிகளுக்கு இறைவன் என்றே போற்றுகிறார்.

ந வயம் கவ்யஸ்து கேவலம்,ந வயம் கேவல-தந்த்ர-பாரகா:, அபிது ப்ரதிவாதிவாரண-ப்ரகடாடோப-விபாடந-க்ஷமா:)

“நாம் வெறும் கவி மட்டும் அல்ல; வெறும் ஆகம தந்த்ரங்கள் அறிந்த வித்வான்கள் மட்டும் அல்ல;
நாம் அதற்கும் மேல், யானை போன்ற ப்ரதிவாதிகளின் ஆணவப் பிளிறல்களை அடக்கும் வல்லமைப் பெற்றவர்கள்” என்றார்.

வேத வேதாந்தத்தின் ரஹஸ்யமான மறைபொருளின் அர்த்தத்தை ஸ்ரீ பராசர மஹரிஷியை விட
ஸ்வாமி நம்மாழ்வார் நன்றாக விளக்கியுள்ளார். மேலும், ஆழ்வாரின் இனிமையான பாசுரங்கள்
எம்பெருமானுக்கு மிகவும் உகப்பாகவும், உலகுய்ய வைப்பதாகவும் உள்ளது. ஆழ்வார் பரம க்ருபையால்
நமக்கருளிச்செய்த பகவத் விஷயத்தை மனத்திற்கொண்டு, ஸ்வாமி ஆளவந்தார் ஆழ்வாரையும்,
கோடானுகோடி ஜீவன்களுக்கு தன்னுடைய நிர்ஹேதுக க்ருபையால் அருளிய எம்பெருமானையும் சமநிலையில் காண்கிறார்.
எப்படி வேதாந்தமானது, பரம்பொருள் ஸ்ரீமந்நாராயணனை எல்லோருக்கும் தாய், தந்தை, எல்லாம் என்று சொல்கிறதோ,
அதேபோல், ஸ்வாமி ஆளவந்தார் வகுள மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ஸ்வாமி நம்மாழ்வாரின் திருவடியே
தமக்கு எல்லாம் என்று சரணடைந்தார்” – வகுளாபிராமம் ஸ்ரீமத் ததங்க்ரியுகளம் மூர்த்நா ப்ரணமாமி

—————————

விஷ்ணோர் தேஹானுரூபாம் வை கரோத் யேஷாத் மநஸ்தநூம்–
எம்பெருமான் திவ்ய மங்கள விக்கிரகத்துக்கு அனுரூப திருமேனி கொள்கிறாள் பிராட்டியும் –
ராகவத்வே பவத் சீதா ருக்மிணீ கிருஷ்ண ஜன்மனி-அன்யேஷூ சாவதாரேஷூ விஷ்ணோ ரேஷா அநபாயநீ –

காவேரீ விராஜா சேயம் வைகுண்டம் ரங்க மந்திரம் -ச வாஸூ தேவோ பகவான் ப்ரத்யக்ஷம் பரமம் பதம் –
ப்ரபத்யே ப்ரணவாகாரம் பாஷ்யம் ரங்க மிவா பரம்

பரஸ்ய ப்ரஹ்மானோ யத்ர சேஷித்வம் ஸ்ப்புடம் ஈஷ்யதே-ஸ்ருதி பிரகாசிகாகாரர் ஸ்ரீ ஸூக்தி
திங்நாகை ரர்ச்சிதஸ் தத்ர புரா விஷ்ணுஸ் சநாதன-ததோ ஹஸ்தி கிரீர் நாமக்க்யாதி ராசீன் மஹா கிரே-புராண பிரமாணம்-
திக்கஜங்களால் பூஜிக்கப் பட்டதால் ஹஸ்திகிரி
ராமோ விக்ரஹவான் தர்ம –கிருஷ்ணம் தர்மம் சனாதனம் —

தஸ்மை ராமாநுஜார்ய நாம பரம யோகிநே யா ஸ்ருதி ஸ்ம்ருதி சூத்ராணாம் அந்தர் ஜுரம் அஸீஸமத் —

சத்யம் சத்யம் புனஸ் சத்யம் யதிராஜோ ஜகத் குரு-ச ஏவ சர்வ லோகாநா முத்தர்த்தா நாத்ர சம்சய -ஸ்ரீ கூரத் தாழ்வான்-

நசேத் ராமாநுஜத் யேஷா சதுரா சதுரஷரீ காவஸ்தாம் பிரபத்யந்தே ஜந்தவோ ஹந்த மாத்ருஸ –
தஸ்மிந் ராமாநுஜார்யே குருரிதி பதம் பாதி நான்யத்ர –ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை –

இராமானுஜம் லஷ்மண பூர்வஜம் ச –
தேவதாயா குரோஸ்ஸாபி மந்த்ரஸ்யாபி ப்ரகீர்த்த நாத் ஐஹிக ஆமுஷ்மிகீ சித்தி த்விஜஸ் யாஸ் தே ந சம்சய —
தேவதை குரு மந்த்ரம் இவற்றை கீர்த்தனம் செய்வதால் இம்மை மறுமை பயன்கள் உண்டு -ஐயம் இல்லையே –

குரோர் நாம சதா ஜபேத் –
பவபயாபி தப்த ஜன பாகதேய வைபவ பாவிதா வதரணேந பகவதா பாஷ்ய காரேண–ஸ்ருத பிரகாசிகை ஸ்ரீ ஸூக்தி-
சம்சார பயத்தால் தவித்து கொண்டு இருக்கும் மக்களின் பாக்கியத்தின் வைபவத்தினால் நேர்ந்தது ஸ்ரீ பாஷ்யகாரர் திருவவதாரம் –
சாஷான் நாராயணோ தேவ க்ருத்வா மர்த்யமயீம் தநூம் மக்நான் உத்தரதே லோகான் காருண்யாச் சாஸ்த்ர பாணிநா-
விஷ்ணுச் சேஷீ ததீயச்சுப குணநிலயோ விக்ரஹ ஸ்ரீ சடாரி –
ஸ்ரீ மான் ராமாநுஜார்ய பாத கமல யுகம் பாதி ரம்யம் ததீயம் – -மாறன் அடி பணிந்து உய்ந்தவர் அன்றோ –

ஸ்ரீ ராமாநுஜாய முநயே நம யுக்தி மாத்ரம் காமா துரோ அபி குமதி கலயன் நபீஷ்ணம் –
யாமாமநந்தி யமினாம் பகவஜ் ஜனாநாம் தாமேவ விந்ததி கதிம் தமஸ பரஸ்தாத் –
புத்தி கேட்டு காமத்தால் பீடிக்கப் பட்டவனாக இருப்பினும் ஸ்ரீ ராமாநுஜாய நாம என்று சொல்லுமவன் மோக்ஷம் அடைகின்றனர் –

உத்யத்தி நேச நிப முல்லச தூர்த்த்வ புண்ட்ரம் ரூபம் தவாஸ்து யதிராஜ த்ருசோர் மமாக்ரே –உதய சூர்யன் ஒத்து
திருமண் காப்பு துலங்கும் ஸ்வாமி உமது அழகிய திருமேனி காட்டி அருளுவாய் –
சரீர ஆத்ம லஷணம் ஆவது-யஸ்ய – சேதனஸ்ய- யஸ்ய த்ரவ்யம் -சர்வாத்மனா ஸ்வார்த்தே -நியந்தும் தாரயிதும் சக்யம்-
தத் சேஷை தைக ஸ்வரூப பஞ்ச தஸ்ய சரீரம் -சர்வாத்மனா –

லஷ்மீ நாதாக்கய சிந்தவ் சடரிபு ஜலத ப்ராப்ய காருண்ய நீரம் -நாத அத்ரவ் அப்யஷிஞ்சத் ததநு ரகுவராம் போஜ சஷூர்ஜ் ஜராப்யாம்
கத்வா தாம் யாமு நாக்க்யாம் சரிதம் அத யதீந்த்ராக்க்ய பத்மா கரேந்த்ரம் சம்பூர்ய ப்ராணிச ஸயீ ப்ரவஹதி சததம் தேசிகேந்த்ர ப்ரமவ்கை —

ஸ்வ ஜ்ஞானம் ப்ராபக ஜ்ஞானம் முமுஷூபி ஜ்ஞான த்ரயம் உபாதேயம் ஏதத் அந்யத் ந கிஞ்சன –
ஆசிநோதிஹி சாஸ்த்ரார்த்தாந் ஆஸாரே ஸ்த்தாபயத்யபி ஸ்வயம் ஆசரதே யஸ்மாத் தமாசார்யம் ப்ரசக்ஷதே –ஆச்சார்ய லக்ஷணம் –

ந்ருதேஹ மாத்யம் ப்ரதிலப்ய துர்லபம் ப்லவம் ஸூ கல்யம் குரு கர்ண தாரம் -மயாநுகூலேன நபஸ்வதேரித புமான் பவாப்திம் நதரேத்ச ஆத்மஹா —
முதன்மை வாய்ந்த -கிடைத்தற்கு அரிய -திறமை வாய்ந்த -குருவை ஓட காரனாக கொண்டதுமான மானிட உடல் ஆகிய ஓடத்தை பெற்று –
அனுகூலமாய் இருக்கும் என்னை – ஈஸ்வரனான -காற்றினால் தூண்டப்பட்டு சம்சாரக் கடலை தாண்டாதவன் தற்கொலை செய்து கொண்டவன் ஆவான் –

ஸக்ருத் ஸ்ம்ருதோபி கோவிந்த ந்ருணாம் ஜன்ம சதைச் சிதம்-பாபராசிம் தஹத்யாச தூலராசி மிவாநல–கோவிந்தனை ஒருகால் நினைத்தாலும்
சேதனர் நூறு பிறவிகளில் சேர்த்த பாப குவியலை நெருப்பு பஞ்சு குவியலை போலே உடனே கொளுத்தி விடுகிறான் –

வரம் ஹூதவஹ ஜ்வாலா பஞ்ச ராந்தர் வ்யவஸ்த்திதி -ந ஸவ்ரி சிந்தா திமுக ஜன சம்வாச சைவசம் —
கண்ணன் பால் சிந்தனை இல்லா மனுஷர் உடன் வாசம் செய்யும் கொடுமை கொழுந்து விட்டு எரியும் நெருப்பு கூண்டுக்களுள் இருப்பதை விட கொடியது

மன ஏவ மனுஷ்யானாம் காரணம் பந்த மோக்ஷயோ –
ஆரியன் -சமதி சர்வ சாஸ்த்ரரர் –அதத்வேப்யோ தூராத்யாதா புத்தி யேஷாம் தே ஆர்யா —
சாஸ்திரங்கள் அனைத்தும் அறிந்தவர் -தத்வம் அல்லாதவற்றவைகள் நின்றும் தூரஸ்தர்
யஸ்மாத் தாதுபதேஷடாசவ் தஸ்மாத் குருத்ரோ குரு –உபதேசம் பண்ணும் ஆச்சார்யன் உபதேசிக்கப் படும் எம்பெருமானை விட மேம்பட்டவர்
நாராயணோ அபி விக்ருதிம் யாதி குரோ ப்ரஸியு தஸ்ய துர்புத்தே கமலம் ஜலாத பேதம் சோஷயதி ரவிர் ந போஷயதி –

தத்தேரங்கீ நிஜமபி பதம் தேசிகா தேச காங்ஷி-வ்யாஸ திலகம் -அரங்கன் தன் பாதத்தை ஆச்சார்யர் கட்டளையை எதிர்பார்த்து அளிக்கிறான்
த்ருணீக்ருத விரிஞ்யாதி நிரங்குச விபூதய ராமானுஜ பதாம் போஜ ஸமாச்ரயண சாலிந
மஹதோ வேத வ்ருஷஸ்ய மூல பூதஸ் சனாதன ஸ்கந்த பூதா ருகாத் யாஸித்தே சாகா பூதாஸ் ததாபரே —
கிருதயுகம் வேதம் மரம் -தர்மம் வேர் -ருகாதிகள் தண்டு -மற்றவை கிளைகள் –
விஷ்ணோர் பூதாநி லோகாநாம் பாவநாய சரந்திஹி–ஸ்ரீமத் பாகவதம் –1–2–28-திரிந்து புனிதமாக்கும் முதல் ஆழ்வார்கள்
சிர நிர்வ்ருத்தம் அப்யேதத் ப்ரத்யக்ஷம் இவ தர்சிதம் -பால காண்டம் -முன்பே நிகழ்ந்து இருந்தும் நேரில் நிகழ்வது போல் காட்டப்பட்டது –
யாவன் சரனவ் ப்ராது பார்த்திவ வ்யஞ்ஜ நான்விதவ் சிரஸா தாரயிஷ்யாமி ந மே சாந்திர் பவிஷ்யதி —
ஸ்ரீ பரதன் அரசு அமர்ந்தான் அடி சூடும் அரசன் மேல் அவா –

நைவ சப்தே ஸ்வதோ தோஷா ப்ராமாண்ய பரிபந்தின–சந்தி கிந்து ஸ்வதஸ் தஸ்ய ப்ரமாணத்வமிதிஸ்த்திதி –
வக்து ராசய தோஷேண கேஷூ சித்ததபோத்யதே–
சப்தத்தில் பிரமாணம் ஆவதற்கு தடங்கலான குற்றங்கள் இயல்பாக இல்லை -பின்னையோ எனில் பிரமாணம் ஆகும் தன்மையே –
அதன் இடத்தில் இயல்பாய் அமைந்து
உள்ளது என்பது தான் உண்மை நிலை -இயல்பான அந்த பிராமணத் தன்மை சொல்லுகிறவனுடைய கருத்தில் உள்ள குற்றத்தால்
சில இடங்களில் வேறுபடுகிறது -ஆகம ப்ராமாண்யம் –ஆளவந்தார் –

ததாஸ்துதே மதுபித ஸ்துதி லேசவச்யாத் கர்ணாம்ருதை ஸ்து திசதை ரநவாப்தா பூர்வம் த்வன் மௌலி கந்த ஸூபகா முபஹ்ருத்ய மாலாம் லேபே மஹத் தர
பதாநுகுணம் பிரசாதம் –ஸ்ரீதேசிகன் -பெரியாழ்வார் என்ற பெயர் பெற்றது சூடிக் கொடுத்த இவள் திரு மாலை சமர்ப்பித்ததாலே என்றவாறு –

பரம ஸூஹ்ருதி பாந்தவே களத்ரே ஸூததநயா பித்ரு மாத்ருப் ருத்ய வர்க்கே சடமதி ருபயாதியோ அர்த்த த்ருஷ்ணாம்
தமதமசேஷ்ட மவேஹி நாஸ்ய பக்தம் –ஸ்ரீ விஷ்ணு புராணம் -3-7–30–சடமதி உடன் உள்ளவன் ஸ்ரீ விஷ்ணு பக்தன் அல்லன் –

அசேஷ ஜகத்திதா நுஸாசந ஸ்ருதி நிகர சிர –உலகு அனைத்துக்கும் ஹிதம் கற்பிக்கும் வேதாந்தம் -வேதாந்த சங்க்ரஹம் –
மாதா பித்ரு ஸஹஸ்ரேப்யோ வத்சல தரம் ஹி சாஸ்திரம்

கிருஷ்ண கிருஷ்ண மஹா பாஹோ ஜாநேத்வாம் புருஷோத்தமன் –சிவன் வாணனை ரஷித்து அளிக்க பெருமாளை வேண்டிக் கொண்டான் –
உன்னை புருஷோத்தமனாக அறிகிறேன் என்றபடி -கிருஷ்ண கிருஷ்ண ஜகந்நாத –தற்கால பாடம்

தேஜஸ் -துர்ஜனை அநபிபவ நீயத்வம்–ஸ்ரீ கீதா பாஷ்யம் -தீயோரால் அடர்க்கப் படாமை –
கலவ் ஜகத் பதிம் விஷ்ணும் சர்வ ஸ்ரஷ்டாரம் ஈஸ்வரம் நார்ச்சயிஷ்யந்தி மைத்ரேய பாஷாண்டோ பஹாதா ஜநா –
கலிகாலம் பாஷாண்டிகள் மலிந்து இருப்பார்களே –
யத் ப்ரஹ்ம கல்ப நியதா அநுபவேப்ய நாஸ்யம் தத் கில்பிஷம் ஸ்ருஜதி ஐந்துரிஹா க்ஷணார்த்தே–
அரை நொடியில் -பதினாயிரம் ப்ரஹ்ம கர்ப்ப காலம் அனுபவித்தாலும் தீராத பாபங்களை சம்பாதிக்கிறோம் –
வாஸூ தேவம் பரித்யஜ்ய யோந்யம் தேவ முபாஸதே த்ருஷிதோ ஜாஹ்நவீ தீரே கூபம் கநதி துர்மதி –
-விடாய் தீர கங்கை கரையில் கிணறு வெட்டுவது போலே தேவதாந்த்ர பஜனம் –

வால்மீகி கிரி ஸம்பூதா ராம சாகரகாமிநீ புநாதி புவனம் புண்யா ராமாயண மஹாநதீ –
-வால்மீகி மலையில் தோன்றி -பெருமாள் என்னும் கடலை நோக்கிச் செல்லும் புண்ய நதி ஸ்ரீ ராமாயணம் –
ஸ்லோக சார சமாகீர்ணம் சர்க்க கல்லோல சங்குலம் காண்டக்ராஹ மஹாமீநம் வந்தே ராமாயனார்ணவம் — –
ஸ்லோகங்கள் -சார நீர் -சர்க்கம் அலைகள் -காண்டம் -முதலை / பெரிய மீன்கள் / ஸ்ரீ ராமாயணம் கடல் –
ய பிபன் சததம் ராம சரிதாம்ருத சாகரம் அதிருப்தஸ்தம் முனிம் வந்தே ப்ராசேதசம கல்மஷம் — ஸ்ரீ ராம சரிதம் அமுத கடலை பருகி
போதும் என்று திருப்தி அடையாத குற்றம் அற்ற வால்மீகி -பக்தி வெள்ளம் குடி கொண்ட கோயில் இராமானுசன் போலே –

சம்யக் நியாய கலாபேந மஹா பாரதேநச உப ப்ரும்ஹித வேதாய நமோ வியாஸாய விஷ்ணவே
-ஸ்ரீ சுருதி பிரகாசர் -ஸ்ரீ வேத வியாசர் மஹா பாரதத்தையும் பரம கிருபையால் அருளிச் செய்கிறார்

சீல க ஏஷ தவ ஹந்த தயைகஸிந்தோ ஷூத்ரே ப்ருதக் ஜநபதே ஜகதண்ட மத்யே ஷோதீய ஸோபிஹி ஜனஸ்ய க்ருதே
க்ருதீத்வ மத்ராவதீர்ய நநு லோசந கோசரோ பூ —
அதிமானுஷ ஸ்தவம் -அருளே நிறைந்த கடலே –அற்ப சகல மனுஷ நயன விஷயமாகும் படி திரு அவதரித்து
அருளும் உன் ஷீலா குணத்தை என் என்பது –
ஜடரா குஹரே தேவஸ் திஷ்டன் நிஷ்தவர தீர்க்கா நிபதித நிஜா பாத்யாதித் சாவ தீர்ண பித்ருக்ரமாத் -ரஹஸ்ய த்ரயசாரம் –
அளற்று ஓடையில் விழுந்த குழந்தை எடுக்கவே –
கம்சத்தவமே நம் சரணம் சரண்யம் புருஷர்ஷபா -என்று மார்க்கண்டேயன் உபதேசிக்க -திரௌபத்யா சஹிதாஸ் சர்வே நமஸ் சக்ருர் ஜனார்த்தனம் –

அநதிகத பத வாக்ய ஸ்வரூப ததர்த்த யாதாத்ம்ய ப்ரத்யஷாதி சகல பிராமண ததிதி கர்த்தவ்யதா ரூப சமீசி
நந்யாய மார்காணாம்–ஸ்ரீ பாஷ்யம் மஹா சித்தாந்தம் –
சொல் வாக்கியங்களின் ஸ்வரூபம் பொருளின் உண்மை கருத்து ப்ரத்யக்ஷம் முதலிய பிரமாணங்களை உணர்த்துவது
அதற்கு உறுப்பான நேரிய யுக்தி வலிகள் இவற்றை அறியாதவர்கள் -பேதையர் –

கலவ் ஜகத் பதிம் விஷ்ணும் சர்வ ஸ்ரேஷ்டாரம் ஈஸ்வரம் -நார்ச்சயிஷ்யந்தி மைத்ரேய பாஷண்டோ பஹதா ஜநா –
ஸ்வ ஜ்ஞானம் ப்ராபக ஜ்ஞானம் ப்ராப்ய ஜ்ஞானம் முமுஷூபி ஜ்ஞான த்ரயம் உபாதேயம் ஏதத் அந்நிய ந கிஞ்சன –
யஸ் த்வயா ஸஹ ச ஸ்வர்க்கோ நிரயோ யஸ் த்வயா விநா –பெருமாள் உடன் கூடி சுவர்க்கம் பிரிந்தால் நரகம் -பிராட்டி –
நலம் என நினைமின் நரகு அழுந்தாதே –திருவாய் -2–10-7-
பசவ பாசிதா பூர்வம் பரமேண ஸ்வலீலயா தேநைவ மோசநீயாஸ்தே நாநயைர் மோசயிதும் ஷமா –
கன்ம பாசக்கயிற்றால் கட்டப்பட்டு -அவனாலே விடுவிக்கப் படத் தக்கவர்கள் -பிறரால் அல்ல –
யா ப்ரீதிர விவேகா நாம் விஷயேஷ்வ நபாயிநீ -த்வம் அநு ஸ்மரத்தாஸ் சாமே ஹ்ருதயா ந்நாபசர்ப்பது -ஸ்ரீ விஷ்ணு புராணம் –1–20–13-
சம்சாரிகள் விஷயாந்தரங்களில் ப்ரீதி நீங்காது இருப்பது போலே உன்னை தொடர்ந்து நினைந்த வண்ணம் இருக்கும்
என் இருதயத்தின் நின்றும் நீங்காது நிலைத்து இருந்து அருள்வாய் –
கிருஷ்ண ஏவஹி லோகா நாம் உத்பத்திர் அபிசாப்யய—

பஹி ரந்தஸ் தமச்சேதி ஜ்யோதிர் வந்தே ஸூ தர்சனம் யேநாவ் யாஹத சங்கல்பம் கஸ்து லஷ்மீ தரம் விது –மாயவனுக்கு மஹிமை ஸூ தர்சனம்
சர்வ பாபாநி வேம் ப்ராஹூ கடஸ் தத்தாஹ உச்யதே –பிரமாணம் – வேம் -பாபங்களை -அவற்றை கொளுத்துவதால் கட–எனவே வேங்கடம் –
யேநைவ குருணா யஸ்ய ந்யாஸ வித்யா பிரதீயதே -தஸ்ய வைகுண்ட துக்தாப்தி த்வாரகாஸ் சர்வ ஏவ ச –சரணாகதி வித்யை அளித்த ஆச்சார்யனே
ஸ்ரீ வைகுண்டமும் திருப் பாற் கடலும் ஸ்ரீ மத் த்வாரகையும் எல்லாம் வகுத்த இடமே –
யோந்யதா சாந்த மாத்மாநம் அந்யதா பிரதிபத்யதே கிம் தேந நக்ருதம் பாபம் சோரேணாத் மாப ஹாரிணா–ஆத்ம அபஹாரமே மிக பெரிய பாபம் –
அநாத்மன் யாத்மா புத்திர்யா அஸ்வே ஸ்வமிதி யாமதி –அவித்யாதரு சம்பூதி பீஜ மேதத் த்விதாஸ்த்திதம் –சம்சார வ்ருஷத்துக்கு வித்து-
சதுர் வேததாரோ விப்ரோ வாஸூ தேவம் ந விந்ததி வேதபார பராக்ரஅந்த ச வை ப்ராஹ்மண கர்தபா — வாஸூ தேவனை அறியாமல் குங்குமம் சுமந்த கழுதை –
அந்நியம் தேஹி வரம் தேவ பிரசித்தம் சர்வ ஜந்துஷூ மர்த்யோ பூத்வா பவாநேவ மாமாராதய கேசவ –
மாம் வஹவா ச தேவேச வரம் மத்தோ க்ருஹாணாச யேநாஹம் சர்வ பூதா நாம் பூஜ்யாத் பூஜ்யத்ரோஸ் பவம் –
கேசவன் அனைவரும் அறியும்படி நீ வரம் வாங்கி கொள்ள வேண்டும் -அனைவரும் பூஜிக்க உரியவனாக ஆகும் படி அருள வேணும் -என்றதும்
த்வம்ச ருத்ர மஹா பாஹோ சாஸ்த்ராணி காரயா -மோஹ சாஸ்திரங்களை செய்விக்க வேண்டும் -மருள் சுரந்த பசுபதி ஆகமம் –

சதேவ சோம்யே இதம் அக்ர ஆஸீத் ஏகமேவ அத்விதீயம் –
த்வயோர்பாவ–த்விதா- த்விதைவ- த்வைதம்- நத்வைதம் அத்வைதம் –
இதம் சர்வம் யத் அயமாத்மா -ப்ருஹ–6–5–7-
ம்ருத்யோஸ் சம்ருத்யும் ஆப்நோதி ய இஹ நாநேவ பஸ்யதி –ப்ருஹ –6–4–19-
சத்யம் ஞானம் அனந்தம் ப்ரஹ்ம –தைத்ய -ஆனந்த வல்லி -1–1-
நிஷ்களம் நிஷ்க்ரியம் –
ப்ரஹ்ம வேத ப்ரஹ்மய்வ பவதி -முண்டகம் –3–2–6-
தத் ஸ்ருஷ்ட்வா -ததேவ அநு ப்ராவிசத் தத் அநு பிரவிச்ய சச்ச த்யச்சா பவேத் –
ஏதஸ்ய வா அக்ஷரஸ்ய பிரசாசநே கார்க்கி ஸூர்யா சந்தமசவ் வித்ருதவ் திஷ்டத–ப்ருஹ –5-8–8–நியமனம் ஆதாரம்
ஐததாத்ம் யமிதம் சர்வம்–சாந்தோக்யம் –6–8-7-
தத்வமஸி —
நித்யோ நித்யானாம் சேதனச் சேதனானாம் ஏகோ பஹு நாம் யோவிததாதி காமான் –கட-2–5–12- / ஸ்வேதா -6-13-
அஹமாத்மா குடாகேச சர்வ பூதாசய ஸ்த்தித—ஸ்ரீ கீதை –18-20-
சர்வம் ஸமாப்நோஷி ததோ அஸி சர்வ –ஸ்ரீ கீதை –11–40-
ஏஷ சம்பிரசாதோ அஸ்மத் சரீராத் சமுத்தாய பரம் ஜ்யோதி ரூப சம்பத்ய ஸ்வேந ரூபேண அபி நிஸ்பத்யதே –
ய ஆத்மாநம் அந்தரோ யமயதி–ப்ருஹதாரண்யகம் –
தத பூத பவ்ய ஈஸ்வரத்வா தேவ வாத்சல்யா திசயாத் தேகதா நபி தோஷான் போக்யதயா பஸ்ய தீத்யர்த்த –வாத்சல்ய குணத்தால்
தோஷங்களை போக்யமாக ஈஸ்வரன் கொள்கிறான் –
யதோ வா இமானி பூதானி ஜாயந்தே -யேன ஜாதானி ஜீவநதி -யத் பிரத்யந்த்யபி சம்விசந்தி தத் விஜிஞ்ஞாச ஸ்வ தத் ப்ரஹ்ம -தைத்ரியம் பிருகு வல்லி –
சதேவ சோம்ய இதமக்ர ஆஸீத் –ததைஷத பஹூஸ்யாம் பிரஜா யே யே தி –சாந்தோக்யம் -6-2-1-
சந்மூலாஸ் சோம்யே மா பிரஜா –என்று தொடங்கி-ச ஆத்மா -6-8-6-
தஸ்ய தாவதேவ சிரம் யாவன் ந விமோஷ்யதே அத சம்பத்ஸ்யே —6-14-2-
தமேவம் வித்வான் அம்ருத இஹ பவதி நான்ய பந்தா வித்யதே அயனாய -என்பதாலும் இவ்வர்த்தமே நிலை நாட்டப் படுகிறது
ஏஷ ஹேவ அனந்யாதி-என்கிற சுருதி வாக்யத்தில் அந்வய முகனே தெரிவிக்கப் பட்ட அர்த்தமே நான்ய பந்தா வித்யதே அனயனாய
-ஸ்ருதியில் வ்யதிரேக முகேன தெரிவிக்கப் படுகிறது
ச யச்சாயம் புருஷே யச்சாசா வாதித்யே ச ஏக -என்று ஆதித்ய மண்டலத்தில் உள்ள புண்டரீ காஷனே ஆனந்த மயன் என்கிறது –
யதோ வாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய மனசா சஹ-ஆனந்தம் ப்ரஹ்மணோ வித்வான் நபிபேதி குதச்சன-
அபஹத பாப்மா-விஜரோ-விம்ருத்யூர் -விசோக–விபாஸ -சத்யகாம -ஸத்யஸங்கல்ப –
தஸ்மாத்வா ஏதச்மாத் விஞ்ஞான மயாத்-அந்யோந்தர ஆத்மா ஆனந்தமய—சைஷா ஆனந்தச்ய மீமாம்ச பவதி–
தே யே சதம் பிரஜாபதேர் ஆனந்தா ச ஏகோ ப்ரஹ்மண ஆனந்த ச்ரோத்ரியச்ய சாகா மகாதச்ய —
கோஹ்யேவான்யாத் கே ப்ராண்யாத் யதேஷ ஆகாச ஆனந்தோ ந ஸ்யாத் ஏஷஹயேவா நந்தயாதி —
என்று ஒதப்படுகிறது -கோ வா அன்யாத்-எந்த ஜந்து தான் ப்ராக்ருதமான ஆனந்தத்தை அடைய முடியும் –
கோ வான் ப்ராண்யாத் -எந்த ஜந்து தான் மோஷ ஆனந்தத்தை அடைய முடியும் -ஏஷ ஏவ ஹி -இந்த ஆனந்தமயமான ஆத்மாவே அன்றோ-
அத யா ஏஷோந்தர் ஆதித்யே ஹிரண்மய புருஷோ த்ருச்யதே -சாந்தோக்யம் -என்று தொடங்கும் அந்தராதித்ய வித்தை-
அதில் -ஹிரண்யமஸ்ரூர் ஹிரண்யகேச ஆப்ரணகாத் சர்வ ஏவ ஸூ வர்ண தஸ்ய யதா கப்யாசம் புண்டரீக மேவ அஷீணீ
தஸ்ய உதிதி நாம ச ஏஷ சர்வேப்ய பாப்மப்ய உதித உதேதி ஹ வை வர்வேப்ய பாப்மப்யோ யா ஏவம் வேத –
–ஏஷ சர்வ பூத அந்தராத்மா அபஹதபாப்மா திவ்யோ தேவ எகோ நாராயண -ஸூ பால உபநிஷத் –
-தமேவம் வித்வான் அம்ருத இஹ பவதி -புருஷ சூக்தம்-
யத் ஊர்த்வம் கார்க்கிதிவோ யதர்வாக் ப்ருதிவ்யா –ப்ரு-3–8–6-மூன்று காலங்களில் உண்டாக்கப்பட்ட அனைத்தும் அவற்றுக்கு
காரண பூதமான ஆகாசத்தில் சேர்க்கப்பட்டு அதனையே ஆதாரமாக கொண்டு உள்ளன –
கஸ்மின் நு கல்வாகச ஒதச்ச ப்ரோதச்ச –ப்ரு–5–8–7-இந்த ஆகாசத்துக்கு காரண பூதம் எது என்னில்-
ஏதஸ்மிந் து கல் வஷரே கார்க்கி ஆகச ஒதச்ச ப்ரோதச்ச–ப்ரு –3–8–7- அக்ஷரமே ஆதாரம் -இதுவே பிரதானம் –

ந தஸ்ய பிராணா உத்க்ராமந்தி –ஸ்ரீ ப்ரஹ்ம ஸூ த்ரம் -4–4–6-

—————-

கறந்த பாலுள் நெய்யே போல் இவற்றுள் எங்கும் கண்டு கொள் இறந்து நின்ற பெருமாயா-8-5-10-
கண்களால் காண்கிற பாலினுள்ளே நெய் உண்டாய் இருக்க காண அரிதானாப் போலே-
கடைந்த பால் இல்லை -கறந்த பால் என்கிறார் –
எல்லா பொருள்களிலும் நின்று வைத்து காண ஒண்ணாதபடி-நிற்கிற மிக்க ஆச்சர்யத்தை உடையவனே-
பலவகைப்பட்ட நிறங்களை உடைய பசுக்கள் உடைய பாலோ என்னில் –ஒரே நிறம் உடையது –
அது போலே ஞான ஸ்வரூபமான ஆத்துமா பார்க்கத் தக்கது
தேவர்கள் முதலான சரீர பேதங்கள் பசுக்களைப் போன்றவை –
எப்படி பாலில் நெய் மறைந்து இருக்கிறதோ–அது போன்று கடவுள் எல்லா பொருள்களிலும் வசிக்கிறார் –
மனம் என்னும் மத்தினால் எப்போதும் கடைய வேண்டும் –

கவாம் அநேன வர்ணானாம் ஷீரச்யது ஏக வர்ணதா–ஷீரவத் பஸ்யதி ஜ்ஞானம் லிங்கி நஸ்து கவாம் யதா
க்ருதமிவ பயஸி நிகூடம் பூதே பூதே ச வசதி விஜ்ஞ்ஞானம்–சத்தம் மந்தே தவ்யம் மனஸா மந்தாந பூதேன
சர்வ பூதாதி வாசம் யத் பூதேஷு ச வசத்யபி–சர்வா நுஹ்ரஹகத்வேன தத் அஸ்மி அஹம் வாசுதேவ இதி -பிரமவித் உபநிஷதம்

எந்தப் பொருளானது எல்லாப் பிராணிகளுக்கும் இருப்பிடமோ-எல்லா பூதங்களிலும் எந்தப் பொருள் வசிக்கின்றதோ
அந்தப் பொருள் எல்லாவற்றுக்கும் சத்தியை உண்டாக்குகிறது-அந்த வாசுதேவன் நான் ஆகிறேன் -எனபது உபநிடதம் –

காலத்தாலும்
கடைதல் முதலிய செயல்களாலும்–மதன பூர்வ பாவி தோய்ப்பதை சொல்லும் -முதலிய என்பதால் –
தோற்றுகிற நெய் -கறந்த காலத்தில் தோற்றாதே அன்றோ –
ஆதலால் கறந்த பால் -என்று விசேடிக்கிறார் -என்கை
உன் பக்கல் பாரத்தை வைத்தவன் ஆகிற செயலால் –ரஷாபாரத்தை அவன் பக்கலில் வைக்கும் சம்ஸ்காரம் –அல்லது-காண அரியை -என்றவாறு-

—————

எல்லியும் பிரவேசம் –
மாயக் கூத்தா -திருவாய்மொழி யிலே
ஆழ்வார் தமக்கு ஓடின விடாய் பேச்சுக்கு நிலம் ஆகையாலே பேசினார் –
சர்வேஸ்வரனுக்கு ஓடின விடாய் பேச்சுக்கு நிலம் அல்லாமையாலே பேசிற்று இல்லை-
ஒரு மாதத்துக்கு மேல் உயிர் வாழ மாட்டேன் -என்கிறபடியே-
இத் தலையில் விடாய்-ஒரு கண நேரத்துக்கு மேல் உயிர் வாழேன் நான் -என்று அன்றோ அத்தலையில் விடாய் இருப்பது-
ஜீவிதம் தாரயிஷ்யாமி மாசம் தசரராத்மஜா-ஊர்த்த்வம் மாசாத் ந ஜீவிஷ்யே சத்யேன அஹம் ப்ரவீமி தே -சுந்த -38-68-
சிரம் ஜீவதி வைதேஹீ யதி மாசம் தரிஷ்யதி-ந ஜீவேயம் ஷணமபி விநாதாம் அஸி தேஷணம்-66-10-

————

“மத்‌பக்தம்‌ ங்வபசம்‌ வாபி நிரந்தரம்‌ குர்வந்தி யே நரா: | பத்வகோடிர௱தேநாபி ௩ க்ஷமாமி வஸுந்த,ரே |” [பூகேவியே! சண்டாளனாயிருக்கபோதிலும்‌ என்னுடைய பக்தனை எந்த ஜனங்கள்‌ நிந்தை செய்கிறார்களோ,
அவர்‌களைக்‌ கோடிக்கணக்கான பத்மகாலங்களானாலும்‌ பொறுக்க மாட்டேன்‌.

| ஸ்ம்ருதிர்‌ மமைவாஜ்ஞா யஸ்தாமுல்லங்க்‌,ய வர்த்ததே | ஆஜ்ஞாச்சசே,தீ, மம த்‌,ரோஹீ (05२11456 509 ந த வைஷ்ணவ: || [ ஸ்ருதியும்‌, ஸ்ம்ருதிகளும்‌ என்னுடைய ஆஜ்ஞைகளே. அவற்றை எவன்‌ மீறி ஈடக்கறுனோ அவன்‌ என்‌ ஆணையை மீறி நடக்கிறவனாகையால்‌ எனக்கு த்ரோஹம்‌ செய்தவ னாதறான்‌. என்னுடைய பக்தனாயிருந்தபோதிலும்‌ அவன்‌ வைஷ்னவனல்லன்‌. ] “மநீஷீ வைதி,காசாரம்‌ மஸா5$5பி ௩ லங்க,யேத்‌” [ ஈல்ல மனத்தையுடையவன்‌ வேததர்மத்தை மனத்தினாலேயும்‌ மீறக்கூடாது. ]

“ய: மாஸ்த்ரவிதி,முத்ஸ்ருஜ்ய வர்த்ததே காமகாரத: | ® नण ஸித்‌;திமவாப்நோதி ௩ ஸாுகழம்‌ ௩ பராங்க;திம்‌’ [ எவனொருவன்‌ சாஸ்திரவிதியை வீட்டுத்‌ தன்‌ இஷ்டப்படி நடக்கறானோ அவன்‌ சித்தியையும்‌, ஸுகத்தையும்‌ மேலான கதியையும்‌ அடைவதில்லை. ] “தாகஹம்‌ த்‌,விஷத: க்ரூராம்‌ ஸம்ஸாரேஷு நராதழமார்‌| க்ஷிபாம்யஜஸ்ரமமரப,ாநா ஸாரீஷ்வேவ யோ நிஷா ||” [என்னை த்‌வேஷிப்பவர்களும்‌, கொடூரமானவர்களும்‌, மனிதர்களுள்‌ இழ்மையானவர்களும்‌, சபமற்றவர்களுமான அவர்களை ஸம்ஸாரத்தில்‌ ௮ திலும்‌ அஸுரயோனிகளில்‌ (ஏப்போதும்‌ தள்ளுகிறேன்‌.]

“யதபராத,ஸஹஸ்ரமஜஸ்ர ஜம்‌ த்வயி முரண்ய ஹிரண்ய உபாவஹத்‌ | வரக, தேர சிரம்‌ த்வமவிக்ரியோ விக்ருதிம்‌ அர்ப்ப,க நிர்பஜநாத,க;ா: 1″ [சரண்யனே! உன்‌ வீஜயத்தில்‌ ஹிரண்யன்‌ இடைவீடா து செய்த ஆயிரக்கணக்கான அபரா தங்களினாலும்‌ வெகுநாள்‌ விகாரமடையாத நீ; சிறவனான ப்ரஹ்லாதனைத்‌ தன்‌ புறத்தியதால்‌ விகாரமடைந்தாய்‌] என்‌ று பாகவதாபசாரம்‌ செய்தவர்களில்‌ தலைவனாக எண்ணப்படும்‌ ஹிரண்யனே.

“வர்ணாஸ்ரமா சாரவதா புருஷேண பர: புமாந்‌ | விஷ்ணுராராத்‌,யதே பந்தள நரந்யஸ்‌ தத்‌ தோஷகாரக: ॥” ‘[வர்ணாங்ரம தர்மப்படி நடக்கும்‌ புருஷனா லேயே பரம புருஷனான விஷ்ணு ஆரா திக்கப்படுகிறான்‌ . அவனை உ௨௧ப்‌ பிப்பது வேறொன்றுமன்று.] என்று ஸ்ரீவீஷ்ணுபுராணத்‌ தில்‌ சொல்லப்பட்ட தன்றோ. (தவ தர்மா) உன்னை அடைவ தற்கு ஸாதனமாகச்‌ சொல்லப்பட்ட தர்மங்களை *யஜ்ஞோ த,நேக தபஸா ऽना ८०७९ விவிதி,ஷந்தி ப்ராஹ்மணா:” , [யஜ்ஞத்தினாலும்‌. தானத்தினாலும்‌. சீபஸ்ஸினாலும்‌ ப்ராஹ்‌ மணர்கள்‌ பரமா ப்மாவை அறிய விரும்புகிறோர்கள்‌.] என்று சொல்லப்பட்ட கன்றோ. (தவ தர்மா) “யஜ்ஞதாநதப: கர்ம ௩ த்யாஜ்யம்‌ கார்யமேவ தத்‌” [யஜ்ஞம்‌, தானம்‌. தபஸ்‌ | ஆகிய கர்மங்கள்‌ வீடத்தக்கவையல்ல; செய்யத்தக்கவையே. | என்‌ ¢ உன்‌ னாலேயே விதிக்கப்பட்ட தர்மங்களை. (தர்மா) தர்மாணி’ என்னும்‌ பதத்தின்‌ சளந்தஸரூபம்‌. (யத்‌ யுபேோ பிம) யாகொரு சாரணத்தினால்‌ லோபம்‌ செய்தோமோ “ ம்ருத்யோ: பதம்‌ யோபயந்த: “ என்றவீடத்திற்போலே “யோபயதி’ என்னும்‌ தாது லோபம்‌ செய்வது என்னும்‌ பொருளிலே வந்துள்ளது. (தேவ ) வாஸுகேவனே! (தஸ்மாத்‌ ஏநஸ;) அந்த அந்தப்‌ பாபங்களினால்‌. (மா ந ரீரிஷ:) எங்களை ஹிம்ஸிக்கவேண்டாம்‌. ரிஷதி’ தாது ஹிம்ஸை என்னும்‌ பொருளையுடையது. (ஏஈஸ:) “ஏதி கர்த்தாரம்‌ இதி ஏஈ:” [தன்னைச்‌ செய்பவனை வந்து அடைகிற தாகையால்‌ “कः என்று பாபம்‌ சொல்லப்படுகிறது. ] என்று வ்யுத்பத்தி,

“யத தே,நுஸஹஸ்ரேஷு வத்ஸோ விந்த,தி மாதரம்‌ | தத பூர்வக்ருதம்‌ கர்ம கர்த்தாரமதி,க,ச்ச,தி ॥” [ ஆயிரக்கணக்கான பசுக்களில்‌ எப்படிக்‌ கன்றுக்குட்டி தாயை அடைகிறதோ, அப்படியே முன்‌ செய்யப்பட்ட கர்மமும்‌ செய்தவனை அடைறெது

“ய ஏஷோ அந்தராதி,த்யே ஹிரண்மய: புருஷோ த்‌,ருங்யதே…. தஸ்ய யதா கப்யாஸம்‌ புண்ட கமேவமக்ஷிணீ”’ [ ஆதித்யமண்டலத்தின்‌ நடுவில்‌ யாவனொரு ஸுவர்ண மயனான புருஷன்‌ காணப்படுகிறொனோ, அவனுக்கு ஸூர்ய னல்‌ ८०००१८५ தாமரைபோன்ற இரு கண்கள்‌ உள.]

“ஏஷ நாராயண: ஸ்ரீமாந்‌ க்ஷீரார்ணவ நிகேதந: | , நாக, பர்யங்கமுத்ஸ்ருஜ்ய ஹ்யாக,தோ மது,ராம்‌ புரீம்‌ | [பாற்கடலில்‌ பையத்தயின்ற பரமனான இந்த ஸ்ரீமந்‌ நாராயணனேசேஷயயனத்தைவீட்டு மதராபுரிக்குக்‌கண்ணனாய்‌ வந்துள்ளான்‌.]

“தத்‌, விப்ராஸோ விபந்யவோ ஜாக்‌,ருவாம்ஸஸ்‌ ஸமிந்த,தே” [ஸர்வஜ்ஞர்களாய்‌, அதிப்பதையே தொழிலாகக்‌ கொண்ட வர்களாயுள்ள நித்யஸூரிகள்‌ அப்பரமபதத்தில்‌ (எப்போ அம்‌) வீழிப்புடன்‌ வீளங்குகறார்கள்‌.]

“தத்‌, யதள இவஷீகதூலமக்‌ரெள ப்ரோதம்‌ ப்ரதூ,யேத | ஏவம்‌ ஹாஸ்ய ஸர்வே பாப்மா௩: ப்ரதூ,யந்தே |”
[அக்னியில்‌ இட்ட டஞ்சு எப்படிக்‌ கொளுத்தப்படு கிறதோ அப்படியே இவனுடைய எல்லாப்‌ பாபங்களும்‌ தஹிக்கப்படுகின்‌ றன. ]
தத்‌, யதள புஷ்கரபலாரய ஆபோ ए ங்லிஷ்யந்தே | ஏவம்‌ ஏவம்விதி, பாபம்‌ கர்ம ® ங்லிஷ்யதே || `
[எப்படித்‌ தாமரை யிலையில்‌ தண்ணீர்‌ ஓட்டுவதில்லையோ: அப்படியே இம்மாதிரி ௮றிபவனீடத்தில்‌ பாபகர்மம்‌ ஓட்டாது..] என்று வேதங்களிலும்‌.
“ தத.தி,கம உத்தர பூர்வாக,யோரமங்லேஷவிகாமொள ”
[ப்ரஹ்ம வித்யையைத்‌ தொடங்கியவுடன்‌ உத்தராகங்கள்‌ ஓட்டமாட்டா; பூர்வாகங்‌ கள்‌ நசித்துவிடும்‌.] என்று பாதராயணராலும்‌.

நீலதோயத, மத்யஸ்தஎ வித்வுல்லேகேவ பளஸ்வரா ‘ ^” ப்ரஸந்நாதி,த்ய வர்ச்சஸம்‌” -சந்த்பூ,ாஸ்கர வர்ச்சஸம்‌” [குளிர்ச்சியிலே சந்திரன்‌ போன்‌ றதாய்‌, ஒளியிலே ஸூர்யன்‌. போன்றதான காந்தியை உடையவல்‌ ]

“க்ருஷ்ண க்ருஷ்ணேதி க்ருஷ்ணேதி யோ மாம்‌ ஸ்மரதி நித்யமா: | ஜலம்‌ பி,த்வா யதஏ பத்மம்‌ ஈரகாது,த்‌,தராம்யஹம்‌ |” [க்ருஷ்ணா! க்ருஷ்ணா! என்று எவனொருவன்‌ . என்னை எப்போதும்‌ நினைக்கறொனோ அவனை, ஜலத்தைப்‌ பிளந்து கொண்டு தாமரையை எடுப்பதுபேரல்‌ நான்‌ ` நரகத்தி லிருந்து தூக்கிவிழுகிறேன்‌.] என்று ஸ்ரீ விஷணுதர்மத்தி லும்‌ சொல்லப்படுகின்‌ றது.

“ தே,வதிர்யங்மநுஷ்யேஷு புந்நாமா ப,க,வாந்‌ ஹரி: | ஸ்த்ரீாம்நீ லக்ஷமீர்‌ மைத்ரேம ஈாநயோர்‌ வித்‌,யதே பரம்‌ ॥ ग [மைத்ரேயரே ! தேவர்‌, திர்யக்‌, மநுஷ்யர்‌ ஆகிய இவற்றில்‌, ஆணாயிருப்பது பகவான்‌ ஹரியாகவும்‌, டெண்ணாயிருப்ப.து லக்ஷ்மீ தவியாகவும்‌ உள்ளனர்‌. இவ்விருவர்க்கும்‌ மேலான தொன்றுமில்லை.]

நாயமாத்மா ப்ரவசநேந லப்‌,யோ ந மேதயா ௩ பூஹுநா ங்ருதேந | யமேவைஷ வ்ருணுதே தே௩ லப்‌,யஸ்‌ தஸ்யைஷ ஆத்மா விவ்ருணுதே தநூம்‌ ஸ்வாம்‌ ||” [இப்பரமாத்மா (பக்தியற்ற) ங்ரவண (0/5 தியானங்களால்‌ அடையத்தக்கவனல்லன்‌ ; எவனை இப்பரமபுருஷன்‌ வரிக்‌ கிரறானோ அவனாலேயே அடையத்தக்கவன்‌; அவனுக்கு இப்பரமாத்மா தன்‌ திவ்யரூத்கை-(ஸ்வரூபத்தை )-காட்டு கிறான்‌.] என்று சுடர்மிகுசருதியில்‌ சொல்லப்பட்டது.

“ஆபோ நாரா இதி ப்ரோக்தா ஆபோ வை நரஸ௩்வ: | தா யதஸ்யாய௩ம்‌ பூர்வம்‌ தேக நாராயண: ஸ்ம்ருத: ॥ ‘ [ஜலம்‌ ஈரனாகிற பகவானால்‌ ஸ்ருஷ்டி. செய்யப்பட்ட தாகை. யால்‌ நாரமெனப்படுகிறது அது ப்ரளயகாலத்தில்‌: இவ னுக்கு இருப்பீடமாயிருக்கையால்‌ இவன்‌ நாராயணனெனப்‌ படுகிறான்‌ ] என்று மனுஸ்ம்ருதி

“ ப்ருஹத்த்வாத்‌; ப்‌ரும்ஹணத்வாச்ச தத்‌; ப்‌;ரஹ்மேத்யபி,தி,யதே [பெரியதாயிருக்கையாலும்‌, பிறரைப்‌ பெரியவர்களாகச்‌ செய்வதாலும்‌ ப்ரஹ்மமென்று அப்பரம்பொருள்‌ சொல்லப்‌ படுகிறது.] என்று ப்ரஹ்ம சப்தார்த்தம்‌ சாஸ்திரங்களில்‌ சொல்லப்பட்டது

தத்வம் ஹிதம் புருஷார்த்தம்—“நாராயண பரம் ப்ரஹ்ம தத்துவம் நாராயண பர
நாராயண பரோ ஜ்யோதி ராத்மா நாராயண பர-4
யச்ச கிஞ்சித் ஜகத் யஸ்மின் த்ருச்யதே ஸ்ரூய தேபி வா
அந்தர் பஹிச்ச தத் சர்வம் வ்யாப்ய நாராயணஸ் ஸ்தித-5”

இவனே பரஞ்சோதி –பர தத்வம் -பரமாத்மா பர ப்ரஹ்மம் –
கிருஷ்ண கிருஷ்ண மஹா பாஹோ ஜாநே த்வாம் புருஷோத்தமம்-பரேசம் பரமாத்மநாம் அநாதி நிதானம் பரம் –
த்வம் ஹி ப்ரஹ்ம பரம் ஜ்யோதி கூடம் ப்ரஹ்மணி வாங்மயே-

“க இதி ப்‌,ரஹ்மணோ நாம ஈமேரா5ஹம்‌ ஸர்வதே,ஹிநாம்‌ | . ஆவாம்‌ தவாங்கே, ஸம்பூ,தெள தஸ்மாத்‌ கேமுவநாமவார்‌ ||” [‘க:’ என்று ப்ரஹ்மாவுக்குப்பெயர்‌; தேஹத்தில்‌ அபிமான முள்ள எல்லாருக்கும்‌ நான்‌ ஈசன்‌; ப்ரஹ்மருக்ரர்களாகய நாங்கள்‌ இருவரும்‌ உன்னுடைய சரீரத்தனின்‌ றும்‌ பிறந்‌ தாம்‌; ஆகையால்‌ நீ கேசவன்‌ என்னும்‌ திருநாமத்தை உடையவனாயிருக்கிறாய்‌. ] என்‌ று ஹரிவம்ச த்தில்‌ பேசநின்ற சிவனாலும்‌ பேசப்பட்டது.

————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ ராகவ யாத வீயம்–ஸ்ரீ ராமாயணம் ஸ்ரீ மஹா பாரதம் மகிமைகள் –

February 24, 2023

வைணவன் என்ற சொல்லிற்கு அர்த்தம் ஐந்து குறள் பாக்களில் சொல்லப் படுகிறது )
1. தைவத்துள் தைவம் பர தெய்வம் நாராயணனையே தெய்வம் எனப் போற்றுபவன் வைணவன்
2. எல்லா உயிர்களையும் தன்னுயிர் போலே பேணுபவனே எல்லோரிலும் சாலச் சிறந்த வைணவன் .
3. உடுக்கை இழந்தவன் கை போல் மற்றவர்களின் இடுக்கண் களைபவனே வைணவன் .
4. மது, புலால் நீக்கி ஸாத்விக உணவினைத் தவிர வேறு எதுவும் விரும்பாதவன் வைணவன் .
5. தெய்வத்திலும் மேலானவன் நம் ஆச்சார்யரே என்று மெய்யாக வாழ்பவனே வைணவன் .

————-

இன்றைய ஆய்வறிஞர்கள் வேதம், ஸூக்தம், ஸாஸ்த்ரம் முதலிய நூல்களை நன்கு ஆய்ந்து, விஸ்வ கர்ம குலம் ப்ருகு குலம் என தெளிந்துள்ளனர். வாயு புராணத்தின் நான்காவது அத்தியாயத்தில், இந்த நெடிய பரம்பரை சிறப்பாக சித்தரிக்கப்பட்டுள்ளது. இதில் குறிப்பிட்ட சில பகுதிகள் மட்டும் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

த்ரிஷிரா விஸ்வரூபஸ்து த்வஸ்டு: புத்ராவ பவதாம்|
விஷ்வரூபானுஜஸ்சாபி விஸ்வகர்மா ப்ரஜாபதி:||

விஸ்வகர்ம மஹத்பூதம் விஷ்வகர்மானாம் மதங்கேஷூ ச ஸம்பூதா|
புத்ரா பஞ்ச ஜடாதரா:ஹஸ்ய கெளசல ஸம்பஔர்ணா பஞ்ச பிரண்மரதா ஸதா||

இவ்வழியிலான மரபுப்படம் தரப்பட்டுள்ளது:

தரன், துருவன், சோமன், அஹன், அனிலன், அனலன், ப்ரத்யுஸன், பிரபாசன் ஆகியோரே அஷ்ட வசுக்கள் ஆவர். இவர்கள் பிரஜாபதியின் புத்திரர்கள் ஆவார்கள்.

பஞ்ச கர்ம குலங்களின் வம்சாவளி:

1) மனு :

விஸ்வகர்மாவின் தலைமகன். அங்கீரஸ் என்ற முனிவரின் மகளாகிய காஞ்சனையை மணந்தவர். மனித குலத்தின் சிருஷ்டிகர்த்தா. பிற்காலத்தில் மனுவின் பெயரினால் அறியப்பட்ட அரசன் நீதிபரி பாலனையில் தன்னிகரில்லாது திகழ்ந்ததனால் நீதிக்கே இலக்கணம் வகுத்து, மனுநீதி என்னும் பெரும் நூலை சிருஷ்டித்தார்.

2) மயன் :

விஸ்வகர்மாவின் இரண்டாம் மகன் இந்திரஜால சிருஷ்டி கர்த்தா என்று புகழப்படுபவர். பராசர முனிவரின் மகளாகிய சுசனை இவரது மனைவி.

3) த்வஷ்டா:

விஸ்வகர்மாவின் மூன்றாவது மகன். கெளசிக மஹரிஷியின் மகளான ‘ஜெயந்தி’யை மணந்தார்.

4) சில்பி :         ப்ருஹூ முனிவரின் புத்ரி கருணாவை மணந்தவர்.

5) தைவக்ஞர் (அ) விஷ்வக்ஞர் :

ஜைமினி முனிவரின் மகளான சந்திரிகா இவரது மனைவி. இவரது வழித்தோன்றலான ஸூபர்ண ரிஷி, விநதையின் மகனான கருடனுக்கு பொன்னொளியை வழங்கி, ஸ்ரீமந் மஹாவிஷ்ணுவின் வாஹனமாகும்படி அனுக்ரஹம் செய்தார். கருடன் அங்கிரஸ குலத்தில் உதித்த கன்வ முனிவரின் மகனாவார்.

இந்துமதத்திற்கு அடிப்படையாகவும், ஆதாரமாகவும் கொள்ளப்படும் ரிக், யஜூர், சாம, அதர்வண வேதங்களில் விஸ்வகர்மாவினைப் பற்றி ஏராளமான விஷயங்கள், சுலோகங்கள் காணப்படுகின்றன. இவற்றிலெல்லாம் விஸ்வகர்மா முழுமுதற் பிரம்மனாகவும், அனைத்துலகத்தையும் வடிவமைத்த சிறந்த கலைஞனாகவும், வித்தையின் (கல்வி) வடிவமாகவும், அனைத்துத் திறன்களிலும் நிபுணனாகவும், கலைகளின் தலைவனாகவும், எல்லா இடங்களிலும் நிறைந்தவராகவும், சிறந்த கலைஞர்களின் மனத்திலும், அவர்கள் உருவாக்கும் கலைப்பொருட்களில் வாஸம் செய்பவராகவும், யாரையும்-எவற்றையும் சாராது விளங்கும் தனிப்பெரும் பொருளாகவும், பூர்ணத்வமுடையவராகவும், ஸூர்ய ஒளி பொருந்தியவராகவும், ஸத்வ குணமுடைவராகவும் இன்னும் பலப்பல புகழொலிகளால் அலங்கரித்துப் போற்றப்படுகிறார். எப்போது ஆதியில் நீரும், நெருப்பும், காலநிலையும், அறிவும் (ஞானமும்), மணமும், உணர்வும், ப்ரம்மனும், விஷ்ணுவும், ருத்ரனும் இல்லையோ, வெற்றிடம் மட்டுமே இருந்தபோது தானே தோன்றியவர் விஸ்வகர்மா என்றும் விஸ்வகர்மா தோன்றிய விதத்தை வேதம் விவரிக்கின்றது.

கோத்திரங்கள்பஞ்ச கம்ஸலர்கள் எனவும் கம்மாளர்கள் எனவும் விஸ்வகர்ம பெருமக்கள் எனவும் அழைக்கப்படுகின்ற குலத்தினருக்கு ஐந்துவித கோத்திரங்கள் (பூர்வீக ரிஷிகள்) உள்ளன. இன்று பலருக்கும் தங்களின் கோத்திரம் தெரியாது. தங்கள் செய்யும் தொழிலைப்பொருத்து தங்கள் கோத்திரத்தை அவர்கள் தெரிந்து கொள்ளலாம்.

1) மனுவின் வழித்தோன்றல்கள் (இரும்பு தொடர்பான வேலையில் ஈடுபடும் கலைஞர்கள்) – சானக ரிஷி கோத்திரம் – ரிக் வேதம்

2) மயன் வழித்தோன்றல்கள் (மர வேலைக் கலைஞர்கள்) – ஸநாதன ரிஷி கோத்திரம் – சாம வேதம்

3) த்வஷ்டா வழித்தோன்றல்கள் – (உலோகத்தில் தேர்ந்த கலைஞர்களுக்கு) – அபுவனஸ ரிஷி கோத்திரம் – யஜூர் வேதம்

4) சில்பி வழித்தோன்றல்கள் (கல்லில் கலைவண்ணம் காண்போருக்கு) – ப்ரத்னஸ ரிஷி கோத்திரம் – அதர்வ வேதம்

5) விஷ்வக்ஞர் வழித்தோன்றல்கள் – (பொன்னில் எண்ணத்தைப் பொறிப்போருக்கு) – ஸூபர்ணஸ ரிஷி கோத்திரம் – ப்ரணவ வேதம்

வாஸ்த்து சாஸ்திரம் (கலை) தொடர்பான விதிமுறைகளையும், அக்கலையினது நுணுக்கங்களையும் சாக்ஷாத் சிவபெருமானே பராசர ரிஷிக்கு உபேதசம் செய்தருளினார். பராசரர் ப்ருஹத்ரதனுக்கும், ப்ருஹத்ரதன் தேவசில்பியான விஸ்வகர்மாவிற்கும் உபதேசம் செய்தனர். விஸ்வகர்ம பரப்ரஹ்மனே இன்றளவும் இக்கலையை காத்து, வளர்த்து வருவதாய் ஐதிஹம்.

ஆர்ஷபாரத கலாச்சாரத்துடன் தொடர்புடையவர்கள் விஸ்வகர்மாக்கள். இவர்களே முன்பு சிந்து நதி தீரத்தில் மொஹஞ்சதாரோ, ஹரப்பன் நகரங்களை நிர்மாணித்து, வாழ்ந்து சிந்துச் சமவெளி எனும் சீரிய நாகரிகத்தை உருவாக்கினார்கள். சிந்துச்சமவெளி நாகரிகமே பின்னாட்களில் மருவி இந்து என்னும் மதமாகியது.

வாயுபுராணத்தின் நான்காம் அத்யாயம், மத்ஸ்ய புராணத்தின் 252ஆம் அத்யாயம், மஹாபாரதம் அனுசாஷன பர்வம் 85ஆம் அத்யாயம் முதலியவற்றில் ஸ்ரீ விராட் விஸ்வகர்ம வம்சாவளியின் குலங்கள் விளக்கப்பெற்றுள்ளன.இரும்பு, மரம், கல், உலோகம், தங்கம் முதலிய பொருட்களைக் கொண்டு படைக்கும் தொழிலைச் செய்யும் கைவினைஞர்கள் “விஸ்வகர்மா” என பொதுப்பெயர் கொண்டுள்ளனர். உலகம் முழுவதிலும் இக்குலத்தோர் பரவி இருந்தாலும் ஆசியா கண்டத்தில் இவர்களின் பரவல் அதிகம் என புள்ளி – விவரங்கள் கூறுகின்றன. இந்தியாவில் வாழும் விஸ்வகர்மாக்கள் குறித்து அறிவோம்.

1) தமிழகம் :

தமிழ்நாட்டில் எல்லா மாவட்டங்களிலும் விஸ்வகர்மாக்கள் வாழ்கின்றார்கள், தச்சர், பொற்கொல்லர், ஆச்சாரி, விஸ்வபிராமணர், சில்பி, கன்னார், தட்டார், கம்மாளர் என பலவகையாக அழைக்கப்படுகின்றனர், பெரும்பான்மையோர் தமிழும், சிலர் தெலுங்கையும் தாய்மொழியாகக் கொண்டுள்ளனர்.

2) ஆந்திர மாநிலம் :

விஸ்வபிராமணர்கள் என்றும், கம்ஸலர்கள் என்றும் ஆந்திராவில் பொதுவாய் அழைக்கப்படும் இவர்கள் கம்சாலி, முசாரி, வத்ராங்கி, காசி, சில்பி என உட்பிரிவுகள் பலவற்றைக் கொண்டுள்ளனர்.

3) கேரளம் :

கேரள தேசத்தில் ஆச்சாரிகள் எனவும், விஸ்வ பிராமணர்கள் எனவும் அழைக்கப்படுகின்றனர்.

4)கர்நாடகம்:

கர்நாடக மாநிலத்தில் விஸ்வகர்மா என பொதுப் பெயரினையும், குசாலர், சிவாச்சார், சத்தராதி என உட்பிரிவுகளையும் கொண்ட இவர்களின் சிலர் அசைவ உணவு வகைகளை உண்ணும் பழக்கம் கொண்டவர்கள். வட கர்நாடகத்தில் உள்ளவர்கள் சிலர் ‘லிங்காயத்’ என்னும் வழிபாட்டு முறையைப் பின்பற்றி வருகிறார்கள்.

5) கோவா:

கோவாவில் விஸ்வகர்மாக்கள் ‘சாரி’கள் என அழைக்கப்படுகிறார்கள், மனு மய பிராமணர்கள் எனவும் இவர்கள் அறியப்படுகிறார்கள், போர்ச்சுகீசியர்களின் காலத்தில் இவ்வினத்தினர் சிலர் கிறிஸ்தவ மதத்தினைத் தழுவியுள்ளனர்.

6) ராஜஸ்தான்:

ராஜஸ்தானத்தில் ஜங்கித் பிராமணர்கள் என அழைக்கப்படும் இவர்கள் இன்றளவும் இறைவனின் உருவங்களையும் ரதங்களையும் வடிவமைத்துப் புகழ் சேர்க்கிறார்கள்.பெரும்பாலும் இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் வாழும் இவர்கள் உயர் பொருளாதார நிலை முதல் மிகவும் ஏழ்மையான நிலைவரை தங்களது வாழ்க்கை நிலையைக் கொண்டுள்ளார்கள். பொதுவாக இந்திய சமூகத்தில் இவர்கள் குறிப்பிடக்கூடிய சமுதாய-பொருளாதார நிலையினை பெற்றுள்ளனர்.

சமூக-பொருளாதார நிலைகளில் உயர்ந்தும் தாழ்ந்தும் விளங்கும் இவர்கள் கிராமப்புற பொருளாதாரத்தில் சிறப்பான பங்கினை வகிக்கின்றனர். தற்போது தொழிற்புரட்சி மற்றும் தானியங்கி இயந்திரப்புரட்சி ஆகியவற்றின் ஆதிக்கத்தினால் வேலைவாய்ப்பை இழக்கும் இவர்கள் தங்களது குலத்தொழில்களை விடுத்து மற்ற வேலைகளுக்கும் செல்கின்றனர்.

எழுத்தாளர் ஆனந்த் கே.குமாரசாமி ஹிந்து மற்றும் புத்தமதத்தினரின் தொன்மங்கள் (ஆங்கிலம்) என்ற தனது புத்தகத்தில் கம்மாளர்கள் விஸ்வபிராமணர்கள் எனவும், வேதகம்மாளர்கள் எனவும் அறியப்படுகிறார்கள். அவர்கள் தெற்கு நோக்கிப் புலம் பெயர்ந்து, சிலோன், பர்மா, ஜாவா தீவுகள் போன்ற இடங்களில் வாழ்கிறார்கள். ஆன்மீகத்திலும், கல்வியிலும் தங்களை முன்னோடிகளாகக் கருதுகிறார்கள். இவர்கள் தங்களின் சடங்குகளைத் தாங்களே நடத்துகிறார்கள். பிராமர்களைச் சார்ந்து நிற்பதில்லை. என்று பதிவு செய்து இருக்கிறார்.

டாக்டர் கிருஷ்ணராவ் தனது நூலில், உயர்ந்த தொழில் நிலையையும், சமூக அந்தஸ்தையும் பெற்றவர்களாக இரும்பு வேலை, மரவேலை செய்வோரும், கைவினைஞர்களும் இருந்தனர். எட்டு மற்றும் ஒன்பதாம் நூற்றாண்டுகளில் இவர்கள் மிகச் சிறப்பானதொரு சமூக-பொருளாதார நிலையைப் பெற்றிருந்தனர். பவித்ரமான பூநூல் அணிந்தும், தங்களை விஸ்வகர்ம பிராமணர்கள் என பிரகடனப்படுத்தியும் வாழ்ந்தனர். இவர்களின் புகழும் பெருமையும் வளர மிக முக்கிய காரணம், இவர்கள் தங்களது கலைத் திறமைகளின் மூலம் இந்தியப் பண்பாட்டினை, குறிப்பாக இந்து மத கலாச்சாரத்தை உலகினுக்கு உணர்த்தி, உணர்த்தியதுதான் என்று ஆய்ந்து கூறியிருக்கிறார்.

மறைக்கப்பட்ட வரலாறு:

சமுதாயத்திற்கான பெரும்பாலானத் தேவைகளை நிறைவேற்றியும், சமுதாயத்திற்குக் குருமார்களாய் இருந்து வழிகாட்டியும் வந்த விஸ்வகர்ம இனம் பேஷ்வாக்கள் ஆட்சிக்காலத்தில் ஒரு மிகப்பெரும் கொடுமைக்கு ஆளானது. இந்த வரலாறு பெரும்பாலும் ஆய்வறிஞர்கள் கூட அறியாதது. வரலாற்றின் ஆழ்ந்த ஏடுகளித் தேடிப்பார்த்தால் கிடைக்கும் இந்த அவலத்தின் சில துளிகள் இதோ…

பாஞ்சாலர்கள் என அழைக்கப்பட்ட விஸ்வகர்ம இனத்தவர்களின் சமூக முக்கியத்துவத்தையும், அபார வளர்ச்சியையும் கண்ட பிராமணர்கள் இவர்களை சமுதாயத்தினின்றும் ஒதுக்க ஆவல் கொண்டவர்களாய், பொறாமை மேலிட, இவர்கள் விஸ்வகர்மாக்கள். பிராமணத் தகுதியுடையவர்கள் அல்ல என்று கூறி பிராமணர்களாக ஏற்க மறுத்தனர்.இதனால் பிராமண-விஸ்வபிராமணர்களிடையே பல காலங்களாக விரோத மனப்பான்மை இருந்து வந்தது.

பேஷ்வாக்கள் எனப்படும் ஒரு இனத்தவர் மன்னர்களாக அரசாண்ட காலத்தில், விஸ்வகர்மாக்கள் பல வகையிலும் கொடுமைப்படுத்தப்பட்டனர். ஏனெனில், பேஷ்வாக்கள் பிராமண சமுதாயத்தைத் தழுவியவர்கள். இவர்கள் பாஞ்சாலர்களை இடுப்பில் வேட்டி கட்ட அனுமதிக்க வில்லை. வேறுசில காலத்தில் பஞ்ச கச்சம் போன்ற ஆடைகளை (பிராமணர்களுக்கு உரியது) அணிய தடை செய்தனர். சிகையை பாரம்பரிய வழக்கப்படி (மரபுப்படி) வளர்க்கவோ, கட்டவோ அனுமதிக்கவில்லை. இன்னும் நாம் அறியாத பல கொடுமைகளும் நடந்திருக்க வாய்ப்புள்ளது.

வேதகால நாகரிகத்தின் தோற்றுவாய்களாய் திகழ்ந்த இனம் ஒடுக்கப்பட்ட இந்த வரலாறு இன்று பெரும்பாலும் தேய்ந்து, மறைந்து வெளியில் தெரியாமல் போய்விட்டது.

——————

ராமாயண, மஹாபாரதம்
ஹிந்து தர்மத்தின் அற்புதமான இதிஹாஸங்களாக இலங்குபவை ராமாயணமும் மஹாபாரதமும். வேதத்தின் சுருக்கமே ராமாயணம் என்றும் ஐந்தாவது வேதம் தான் மஹாபாரதம் என்றும் தொன்று தொட்டு இந்த நாட்டில் போற்றப்பட்டு வருகிறது.உலகில் முதல் முதல் எழுந்த காவியம் என்பதால் ஆதி காவியம் என ராமாயணம் கருதப்படுகிறது. 644 ஸர்க்கங்களில் 24000 சுலோகங்களில் ஏழு காண்டங்களில் தர்மத்தின் திரு உருவான ராமனின் கதையை சம்ஸ்கிருதத்தில் மஹரிஷி வால்மீகி தருகிறார்.

18 பர்வங்களில் (100 உப பர்வங்களில்) ஒரு லட்சம் சுலோகங்களில் 2314 அத்தியாயங்களில் மஹரிஷி வேத வியாஸரால் மஹா பாரதம் இயற்றப்பட்டுள்ளது.

காலம் காலமாக இந்த இரு இதிஹாஸங்களும் உலகின் எல்லாப் பகுதிகளிலும் ஏராளமானோரை பல்லாயிரக்கணக்கில் கட்டுரைகள், நூல்கள் மற்றும் காவியங்களை வெவ்வேறு மொழிகளில் இயற்ற ஊக்குவித்திருப்பதை உலகமே அறியும்.

———————-

தைவக்ஞர் சூரிய கவி-கவி வேங்கடாத்வரி -ஸ்ரீ ராம யாத வீயம் -ஸ்ரீ ராம கிருஷ்ண விலோம காவ்யம்
ஆனால் பாரதத்தைச் சேர்ந்த மூன்று அதிசயக் கவிஞர்கள் இந்த இரு இதிஹாஸங்களை வைத்து ஒரு அற்புதமான அதிசயமான செயலை சம்ஸ்கிருத மொழியில் சாதித்துள்ளனர்.
தைவக்ஞர் சூரிய கவி என்பவர் பெரும் சம்ஸ்கிருத விற்பன்னர், கவிஞர்! அவர் 36 ஸ்லோகங்கள் அடங்கிய ராமகிருஷ்ண விலோம காவ்யம் என்று ஒரு காவியத்தை இயற்றியுள்ளார். இதில் ஸ்லோகத்தை முதலிலிருந்து படித்துக் கொண்டு போனால் ராமாயணக் கதையைக் காணலாம். ஸ்லோகத்தின் பின்னாலிலிருந்து திருப்பிப் படித்துக் கொண்டு போனால் வருவது இன்னொரு ஸ்லோகம். அதில் மஹாபாரதக் கதையைக் காணலாம். விகடகவி, தேருவருதே போன்ற சொற்களில் வரும் எழுத்துக்களைத் தலைகீழாகத் திருப்பிப் போட்டாலும் அதே சொற்கள் வருவது ஒரு சொல் அலங்காரம். இதை ஆங்கிலத்தில் Palindrome என்கிறோம்.

ஒரு ஸ்லோகம் அல்ல, பல ஸ்லோகங்கள் அடங்கிய ஒரு காவியமே இப்படி அமைக்கப்பட்டுள்ளது என்றால்..! வியக்க வைக்கும் இந்தக் காவியத்திலிருந்து உதாரணத்திற்கு இரு பாடல்களை இங்கு காணலாம்.

கௌசிகே த்ரிதபஸி ஷ்ரவ்ரதி யோத்ததாத் த்விதநயஸ்வமாதுரம் I
ரந்துமாஸ்வயன தத்தித்தாதயோ தீவ்ர ரக்ஷஸி பதத்ரிகேஷிகௌ II -ஆறாவது ஸ்லோகம்

இதன் பொருள் : எல்லா உயிரினங்களின் ஆசைகளை நிறைவேற்ற உறுதி பூண்ட தசரத மன்னர், (மனோ வாக்கு காயம் ஆகிய )மூன்று விதத்திலும் தவம் செய்த ரிஷி விஸ்வாமித்திரருக்குத் தன் செல்வங்களான ராமர், லக்ஷ்மணரைத் தந்தார்.

இதே ஸ்லோகத்தை திருப்பிப் போட்டுப் படித்தால் பொருள் மாறி விடும் இப்படி:- புண்ணியச் செயல்களைச் செய்த ஓ, பரீட்சித்து மன்னனே, ராக்ஷஸ குணத்தில் வேறு யாரையும் ஒப்பிடமுடியாத பூதனையையும் பறவையின் உருவில் இருந்த பகனையும் குதிரையின் உருவில் இருந்த கேசினையும் விளையாட்டு லீலையாக எல்லையற்ற ஞானம் உடைய ஸ்ரீ கிருஷ்ணர் அவர்கள் உடலிலிருந்து (உயிரை நீக்கி) முக்தி அளித்தார்.

ராம மாநா ஸதா கேத பாவே தயா வான்
அதாபி இந தேஜா ரிபவ் அநதே
காதி மோதா சஹாதா ஸ்வ பாஸா
ரஸாமே ஸூக ரேணுகா த்ரஜே பூருமே –7-

இடர் உற்றவருக்கு அருளும் காருண்ய சீலன்
கரு ஞாயிறு போன்றவன் இந்தேஜோ -ஸூர்யன் போல் பிரகாசிக்ப்பவன்
ஆனாலும் அருகில் செல்ல ஸுலப்யன் உடையவன்
அப்படிப்பட்ட ராமன் பூமி முழுவதும் சுற்றி அதைச் செல்வமாக யுடைய
ரேணுகையான புதல்வனான பரசுராமன் விரோதத்துடன் தோன்றி
பின் அவனைப் பணிந்ததும் ஸ்ரீ ராமசந்திரன் கருணையுடன் திகழ்ந்தான்

கதம் மிகுந்து இரைத்துப் பொங்கும் கனை கடல் உலகம் எல்லாம்
புதைவு செய் இருளின் பொங்கும் அரக்கர் தம் புரமும் பொற்பும்
சிதைவு செய் குறியைக் காட்டி வட திசைச் சிகரக் குன்றின்
உதயம் அது ஒழித்துத் தோன்றும் ஒரு கரு ஞாயிறு ஓத்தான் -கம்பர் –

கட்டார் சிலைக் கரு ஞாயிறு புரைவான்
கண் தாமரை போல் கரு ஞாயிறு என
செந் தண் கமலக்கண் சிவந்த வாய் ஒரு கரு ஞாயிறு
அந்த மில்லாக் கதிர் பரப்பி வளர்ந்தது ஒக்கும் அம்மானே -திருவாய் -8-5-7-

‘பூதலத்து அரசை எல்லாம் பொன்றுவித்தனை; என்றாலும்,
வேத வித்து ஆய மேலோன் மைந்தன் நீ, விரதம் பூண்டாய்,
ஆதலின் கொல்லல் ஆகாது; அம்பு இது பிழைப்பது அன்றால்;
யாது இதற்கு இலக்கம் ஆவது? இயம்புதி விரைவின்!’ என்றான்.–பரசுராம படலம் 36-

‘எண்ணிய பொருள் எலாம் இனிது முற்றுக!
மண்ணிய மணி நிற வண்ண! வண் துழாய்க்
கண்ணிய! யாவர்க்கும் களைகண் ஆகிய
புண்ணிய! விடை’ எனத் தொழுது போயினான். 40-

மேரு பூ ஜேத் ரகா காணுரே கோ ஸூமே ஸா அரஸா
பாஸ்வதா ஹா ஸதா மோதிகா
தேந வா பாரிஜாதே ந பீதா நவா யாதவே அபாத் அகேதோ
ஸமாநாமரா —ஸ்லோகம் 7 -ப்ரதிலோமம்

எப்படி ரைவதக பர்வதமானது கிருஷ்ணனின் இருப்பாள் மேருவை விஞ்சியதோ
அதே போல் பாரிஜாத மலரை அடைந்த உடன் ருக்மிணி பிராட்டி சிறிதே மணம் நிறைந்த பூ லோகத்து மலர்களை எல்லாம் அறவே விட்டாள்
அத்தைச் சூடிய பின் அவள் அம் மலரைப் போலவே வெண்மை நிறம் வீசக்கூடிய திவ்ய மேனி பெற்று
தேவ லோக மங்கையரைப் போல் கவலை அற்று மகிழ்ச்சியுடன் விளங்கினாள்
ரைவதக பர்வம் த்வாராகை ஒட்டி இருக்கும் மலை-கிர் நார் இப்பொழுது உள்ள பெயர் -ஹரி வம்சம்

————-

ஸாரஸ அஸம தாத அஷி பூம்நா தாம அசவ் ஸீதயா
ஸாது அசவ் இஹ ரேம ஷேமே அரம் ஆஸூர ஸாரஹா –ஸ்லோகம் -8-

இவையா பில வாய் திறந்து எரி கான்ற
இவையா எரி வட்டக் கண்கள் -இவையா
எரி பொங்கிக் காட்டும் இமையோர் பெருமான்
அரி பொங்கிக் காட்டும் அழகு -திருமழிசைப் பிரான் பாசுரம் போலவே இங்கு கவி வேங்கடாத்ரி அருளிச் செய்கிறார்

ஹார ஸார ஸூமா ரம்யா ஷேமேர இஹ விஸாத் வஸா
யா அதஸீ ஸூ மதாம் நா பூஷிதா தாம ஸ ஸார ஸா –ஸ்லோகம் -8-ப்ரதி லோமம் 

அழகிய முத்தினாலான மாலையைப் போல் ஒளிர்ந்ததும்
செல்வத்துக்கு எல்லாம் அணி கலனாய் திகழ்ந்ததுமான
அந்த பாரிஜாத மலரைச் சூடின ருக்மிணி பிராட்டி அதஸி புஷ்ப மாலையை சூடின கண்ணனுடன்
மற்ற மனைவியரைக் கண்டு பயம் அற்றவளாய் அவன் திரு மாளிகைக்கு சென்றாள்

————-

ஸாகஸா பர தாய இபமா பாதா மந்யு மத்தயா
ஸா அத்ர மத்யமா தாபே போதாய அதி கதா ரஸா –ஸ்லோகம் -9- அநு லோபம்

ராஜ்ய லஷ்மியின் வைபவத்தால் பிரகாசிக்கும் அயோத்தியை நகரை கைகேயி யானவள்
ராமனுக்கு முடி சூட்டும் வைபவம் பற்றிக் கேள்விப்பட்ட வுடன் கோபத்தாலும் வருத்தத்தாலும்
உன்மத்த நிலையை அடைந்தவளாய் பரதனுக்காக நிலை நிறுத்தினாள் –

தாவில் மாமணிக்கலம் மற்றும் தனித்தனிச் சிதறி,
நாவி ஓதியை நானிலம் தைவரப் பரப்பிக்
காவி உண்டகண் அஞ்சனம் கன்றிடக் கலுழாப்
பூ உதிர்ந்தது ஓர் கொம்பு எனப் புவி மிசைப் புரண்டாள். –கைகேயி சூழ்ச்சிப் படலம் –3-

ஸாரதா கதியா தபோ பேதா யா மத்யம த்ரஸா
யாத்த மந்யு மதா பாமா பயேதா ரபஸா ஆகஸா –ஸ்லோகம் -9-ப்ரதி லோமம்

தன் சீலத்தால் பெரும் புகழை யுடைய யோசித்த இடை யுடையளான -மத்ய மா -ஸத்ய பாமை
கண்ணன் பாரிஜாத மலரை ருக்மிணியிடம் அளித்த செய்தி அறிந்து கோபமும்
கண்ணனின் அன்பு தன்னிடத்தில் குறைந்ததோ என்ற பயமும் அடைந்தாள்

மேல் உள்ள இரண்டு ஸ்லோகங்களும் இரு மனைவியரின் துக்கத்தையும் கோபத்தையும் காட்டுகிறது
கைகேயி -கௌசல்யை
ஸத்ய பாமை -ருக்மிணி பிராட்டி
முன்னுரிமை பறிக்கப் பட்டு தங்களை மத்யமா -secondary -என்று கணவர் எண்ணுகிறார்கள் என்ற நினைவு

————–

தாநவாத் அபகா உமாபா ராமே கானனத ஆஸ ஸா
யா லதா அவ்ருத்த ஸேவாகா கைகேயீ மஹத அஹஹ –ஸ்லோகம் -10- அநு லோமம்

ராமனுக்கு முடி சூட்டப் போகும் விஷயம் அறிந்த கைகேயி துயரத்தால் நலிவுற்று வெளுத்தவளாய்
அறுந்த கொடி போல் தரையிலே விழுந்து தயரதனுக்கு செய்யும் அனைத்து பணிவிடைகளையும் மறந்தவளாய்
முடி சூட்டுதலை எதிர்த்து ரானைக் காட்டுக்கு அனுப்பினாள்

கூன் உருவில் கொடும் தொழுத்தை தன் சொற் கேட்ட கொடியவள் தன் சொற் கொண்டு இன்று
கானகமே மிக விரும்பி நீ துறந்த வள நகர் –பெருமாள் திரு மொழி

‘ஏய வரங்கள் இரண்டின், ஒன்றினால், என்
சேய் அரசு ஆள்வது; சீதை கேள்வன் ஒன்றால்
போய் வனம் ஆள்வது’ எனப் புகன்று, நின்றாள் –
தீயவை யாவையினும் சிறந்த தீயாள்.–கைகேயி சூழ்ச்சிப் படலம்– 14-

நாகம் எனும்கொடியாள், தன் நாவின் வந்த
சோக விடம் தொடர, துணுக்கம் எய்தா,
ஆகம் அடங்கலும், வெந்து அழிந்து, அராவின்
வேகம் அடங்கிய வேழம் என்ன வீழ்ந்தான். 15-

ஹஹ தாஹ மயீ கோகைகா வாஸோத் தா வ்ருதாலயா
ஸா ஸத் ஆந நகா அமேரா பாமா கோபத வா நதா –ஸ்லோகம் -10- ப்ரதி லோமம்

அழகிய முகம் கொண்டவளான பாமா இப்பொழுது கொழுந்து விட்டு எரியும் காட்டுத்தீ போன்ற கோபத்தால்
முகம் எல்லாம் ஜ்வலிக்க கலக்கமுற்ற மனத்தளாகி அழகிய மயில்கள் நடமாடும் தனது வீட்டினுள்
பணிப்பெண்கள் நுழையா வண்ணம் தாள் இட்டாள்

அநு வ்ரதா காம கலா ஸ்வ தீதி நீ விசித்ர சஸ்த்ராஸ்த்ர விஹார வேதி நீ
பஹு ப்ரிய ஸ்யாபி ஹரேர் அதீவ ஸா பபூவ தேவீ பஹு மாந கோசர –யாதவாப்யுதம் -14-72-ஸத்ய பாமா வர்ணனம்

பர்த்தாவின் திரு உள்ளபடி நடப்பவள்=காம சாஸ்திரம் கற்றவள்
அம்பு அஸ்த்ரங்களின் பிரயோகம் அறிந்தவள்
ஆகையால் பல மனைவியர்களிலும் இவளே கண்ணனின் அன்புக்கு பூர்ண பாத்ரமானவள்

கைகேயி யாருடன் பேசாமல் தன்னையே வருத்திக் கொள்ள
ஸத்ய பாமையோ கோபத்தால் பணிப் பெண்களை தவிர்த்தாள்

————————-

இதே காவியத்திலிருந்து இன்னொரு பாடலைப் பார்ப்போம்.
க்ஷதாய மா யத்ர ரகோரிதாயுர் அங்கானுகானன்யதயோயனானி I
நிநாய யோ வன்யனகானுகாரம் யுதாரிகோரத்ரயமாயதாக்ஷ: II– 34வது ஸ்லோகம்

இதன் பொருள் : சுக்ரீவனும் இதர குரங்குகளும் யுத்தகளத்தில் நுழைந்தவுடன் அழியப் போகும் வாழ்வை உடையவனான ராவணனால் ராமருக்கு எந்தக் காயத்தையும் விளைவிக்க முடியவில்லை.
இதையே பின்னாலிலிருந்து படித்தால் வரும் பொருள் இது: நீண்ட கண்களையுடைய ஸ்ரீ கிருஷ்ணர் மலை போன்ற உருவத்தை ஒத்த (அகாசுரன், கேசின், பூதனா ஆகிய) மூன்று பயங்கரமான அசுரர்களை வதம் செய்தான்.

இது போன்ற விலோம காவியத்தின் ஆதிகர்த்தா சூர்யகவியே என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். அவர் பார்த்தபுரத்தில் (அஹ்மத் நகர்) 1580ஆம் ஆண்டு வாக்கில் வாழ்ந்த அற்புதமான கவிஞர். இதற்கு அவரே ஒரு உரையையும் எழுதி இருக்கிறார். அதில் இப்படிப்பட்ட ஒரு காவியம் செய்வது எவ்வளவு கஷ்டமானது என்பதையும் விளக்கியுள்ளார்.

—————-

சிதம்பர கவியின் அற்புத காவியங்கள்
அடுத்து 1600ஆம் ஆண்டில் தஞ்சாவூரில் வாழ்ந்த சிதம்பர கவி என்பவர் சப்தார்த்த சிந்தாமணி என்ற நூலை இயற்றியுள்ளார். இதிலும் முதலிலிருந்து படித்தால் ராமாயணமும் பின்னாலிலிருந்து படித்தால் மஹாபாரதக் கதையும் மிளிரும். தஞ்சை சரஸ்வதி மஹாலில் சுவடி வடிவில் உள்ள இந்த அற்புத நூல் இன்னும் அச்சிடப்படவில்லை எனத் தெரிகிறது. ஆனால் இதன் பெருமை உலகெங்கும் பரவி விட்டிருக்கிறது.இவர் இன்னும் ஒரு படி மேலே போய் கதா த்ரயம் என்ற காவியத்தையும் இயற்றி இருக்கிறார். இதில் ஸ்லோகத்தைப் பிரித்துப் படித்துப் பார்த்தால் ராமாயணம், மஹாபாரதம் ஆகியவற்றோடு பாகவதக் கதையையும் படிக்கலாம், ஒரே பாடலில் மூன்று பிரம்மாண்டமான நூல்கள்! அதிசயம், ஆனால் உண்மை! உலகில் இது போல எந்த ஒரு மொழியிலும் நினைத்துக் கூடப் பார்க்க முடியாத சாதனையாக இது கருதப்படுகிறது!

கவிஞர் வேங்கடாத்வரி
சிதம்பர கவியை அடுத்து அதிசயமான மூன்றாவது கவிஞராகத் திகழ்பவர் வேங்கடாத்வரி என்பவர். 1650ஆம் ஆண்டு வாக்கில் காஞ்சிபுரத்தில் வாழ்ந்த மாபெரும் கவிஞர் இவர். இவரது ராகவ யாதவீயம் என்பது 30 ஸ்லோகங்களைக் கொண்ட ஒரு அரிய நூல். ஸ்லோகத்தை நேரடியாகப் படித்தால் ராமாயணக் கதையையும் தலைகீழாகப் படித்தால் மஹாபாரத கதையையும் இதில் படிக்க முடிகிறது.இதில் இரு ஸ்லோகங்களைப் பார்க்கலாம்.

ராமநாமா சதா கேதபாவே தயாவான் அதாபீனதேஜா: ரிபௌ ஆனதே I
காதிமோதாஸஹாதா ஸ்வபாஸா ரஸாமே சுக: ரேணுகாகாத்ரஜே பூருமே II -ஸ்லோகம் 7
அனுலோமமாக அதாவது முதலிலிருந்து கடைசி வரை வரிசைக்கிரம்மாகப் பார்த்தால் இதன் பொருள் : துயரப்படுவோரிடம் எப்போதும் சதா கருணையுடன் திகழும் ராமபிரான், சூரியனைப் போலப் பிரகாசிப்பவரும் சுலபமாக அணுகக்கூடியவரும் முனிவர்களைத் துன்புறுத்திய ராக்ஷஸர்களை அழித்தவருமான அவர் ரேணுகாவின் புத்திரரும் பூமி அனைத்தையும் தனது செல்வமாகக் கொண்டு சுற்றித் திரிந்தவருமான பரசுராமரைப் பார்த்த போது குளிர்ந்த ஒளியுடன் அடக்கமுடன் திகழ்ந்தார்.
இதையே திருப்பிப் போட்டால் வரும் ஸ்லோகம்:

மேருபூஜேத்ரகா காணுரே கோஸுமே சா அரஸா பாஸ்வதா ஹா சதா மோதிகா I
தேன வா பாரிஜாதேன பீதா நவா யாதவே அபாத் அஸ்வேதா சமானாமரா II

பிரதிலோமமாக அதாவது கடைசியிலிருந்து முதல் வரை (மேலே உள்ள ஸ்லோகப்படி பார்த்தால்) இதன் பொருள் : மேருவையும் வெல்லும் ரைவர்த்தக மலையில் இருந்தபோது பாரிஜாத மலரை அடைந்த ருக்மிணி பூமியில் உள்ள குறைந்த வாசனையே உள்ள எந்த புஷ்பங்களின் மீதும் ஆசையின்றிப் போனதோடு ஒரு புதிய மேனியை அடைந்தவள் போலத் திகழ்ந்தாள்.
ஆக அனுலோமமாகவும் பிரதிலோமமாகவும் உள்ள இந்த விலோம காவியத்தின் அனைத்துப் பாடல்களையும் வார்த்தை வார்த்தையாக எடுத்து அர்த்தத்தைக் கூறப் போனால் கவிதையின் அழகும் ஆழமும் நன்கு புரிவதோடு பிரமிப்பும் வியப்பும் வரும்.

இன்னும் ஒரு பாடல்:
தாம் ஸ: கோரமதோஷ்ரீத: விக்ராம் அஸதர: அதத I
வைரம் ஆஸ பலாஹாரா வினாஸா ரவிவம்சகே II – ஸ்லோகம்18

அனுலோமமாக இதன் பொருள்: ராமனின் வலதுகரமாகத் திகழ்ந்த பயமே அறியாத லக்ஷ்மணனால் மூக்கு அறுபட்டவுடன் சூர்ப்பணகை ராமன் மேல் பழி வாங்கத் துடித்தாள்.
இந்த ஸ்லோகத்தை பிரதிலோமமாக கடைசியிலிருந்து தலைகீழாக எழுதிப் பார்த்தால் வருவது இந்த ஸ்லோகம்:-

கேசவம் விரஸானாவி: ஆஹ ஆலாபஸமாரவை: I
ததரோதஸம் அக்ராவித: அஷ்ரித: அமரக: அஸதாம் II

இதன் பொருள்:-மலைகளின் கொட்டமழிப்பவனும், தேவர்களின் தலைவனும், அசுரர்களை அழிப்பவனுமான இந்திரன் தனது சந்தோஷம், பலம், ஒளி ஆகியவற்றை இழந்தான். வானையும் பூமியையும் படைத்த கிருஷ்ணனிடம் சமாதானப்படுத்தும் சொற்களைப் பேசினான்.
காவியம் படிப்போம்; பரப்புவோம்!

(சம்ஸ்கிருத) இலக்கணத்திற்குட்பட்டு பொருள் பொதிந்த சொற்களை இப்படி அமைப்பதென்பது இறை அருளினால் மட்டுமே வரும் என சூரிய கவியே மனம் நெகிழ்ந்து சொல்லியுள்ளார்.
இப்படிப்பட்ட தெய்வீகக் கவிஞர்கள் இந்த நாட்டில் தோன்றி இதிஹாஸ மேன்மையையும் சம்ஸ்கிருத அருமையையும் நிலை நாட்டி இருப்பது சனாதன தர்மத்தின் ஏராளமான அதிசயங்களுள் இன்னும் ஒரு அதிசயமே!

ராமகிருஷ்ண விலோம காவ்யத்தை சம்ஸ்கிருதத்தில் படிக்க விரும்புபவர்கள் கீழ்க்கண்ட இணையதளத்தில் http://sanskritdocuments.org/all_pdf/raamakrshhna.pdf என்ற தொடுப்பிலிருந்து இலவசமாக டவுன்லோட் செய்து கொள்ளலாம்.

ராகவ யாதவீயம் காவியத்திற்கு ஆங்கிலத்தில் விரிவான அழகான உரை ஒன்றை எழுதி இருப்பவர் டாக்டர் சரோஜா ராமானுஜம்.இந்த சம்ஸ்கிருத ஸ்லோகத்திற்கான ஆங்கில விரிவுரை நூலையும் இணையதளத்தில் காணலாம்.

அருமையான காவியங்களை உலகிற்குத் தரும் இணைய தளங்களுக்கும் உரை எழுதிய சம்ஸ்கிருத விற்பன்னர்களுக்கும் நமது நன்றிகளை உரித்தாக்கி இக் காவியங்களின் பெருமையை உலகில் பரப்புவோம்!.ராம கிருஷ்ணரின் அருளுக்குப் பாத்திரராவோம்!!
******************

உலகில் ராமாயணம் போல தொடர்ந்து எழுதப்பட்ட இதிஹாசம் வேறு எதுவும் கிடையாது. சுமார் 3000 ராமாயணங்கள் இருப்பதால் எண்ணிக்கை விஷயத்திலும் இதற்கே முதலிடம்.

சுமார் 2200 ஆண்டுகளுக்கு முன் வால்மீகி ராமாயணம் எழுதப்பட்டதாக வெளிநாட்டு ஆராய்ச்சியளர் செப்புவர். ஆனால் இதுதான் ஆதி காவியம், “சோகத்திலிருந்து பிறந்ததே ஸ்லோகம்” என்று இந்துக்கள் பகர்வர். காதல் புரியும் பறவைகளில் ஒன்றை, ஒரு வேடன் அடித்து வீழ்த்த, அதைப் பார்த்த வால்மீகியின் உணர்ச்சி கொந்தளிக்க, அந்த சோகத்தில் உருவானது ஸ்லோகம் (செய்யுள்).

ராஜதரங்கிணி என்ற வரலாற்று நூலில் கல்ஹணர் என்ற புலவர் ஒரு சுவையான விஷயத்தைச் சொல்கிறார். அசோகனுக்குப் பின்னர் காஷ்மீரை ஆண்ட இரண்டாவது தாமோதரன், திவச தினத்தன்று குளிக்கப் போனபோது பசியுடன் இருந்த சில பிராமணர்கள் உணவு படைத்துவிட்டுச் செல்லும்படி கோரினராம். விடஸ்தா நதியில் குளித்த பின்னரே அவ்வாறு செய்வேன் என்று அரசன் சொல்லவும், பிராமணர்கள், விதஸ்தா நதியை அவனுக்கு முன்னால் கொண்டு வந்தனராம். அதனை அவன் மாயத் தோற்றம், உண்மயல்ல என்று சொல்லி நிராகரிக்கவே, பிரமணர்கள் அவனைப் பாம்பாகப் போகும் படி சபித்தனர். அவன் வருந்தவே, ஒரே நாளில் ராமாயணம் முழுவதையும் கேட்டால் இந்த சாபத்திலிருந்து விமோசனம் பெறலாம் என்று அவர்கள் சாப விமோசனம் கொடுத்தனர். இந்த தாமோதரன் ஹுஸ்கர், ஜுஸ்கர், கனிஷ்கர் முதலிய மன்னர்களுக்கு முன் — 2200 ஆண்டுகளுக்கு முன் —வாழ்ந்தவன்..

2500 ஆண்டுகளுக்கு முன்னரே ராமாயணம் தென் குமரி வரை பரவிவிட்டது. புத்தமத்த ஜாதகக் கதைகளில் தசரத ஜாதகம் முதலியன    இருப்பதும் , சங்கத் தமிழ் நூலான புறநானூற்றில் வால்மீகி சொல்லாத 2 கதைகள் இருப்பதும்,  காதா சபத சதியில் கோதவரி நதிக்கரையில் ஒரு வீட்டில் ராமாயண  ஓவியம் இருப்பதாகப் பாடி இருப்பதும் இதன் பழமைக்கு சான்று பகரும். ஆழ்வார் பாடல்களில் பல புதிய விஷயங்கள் உள்ளன. வால்மீகி என்ற பெயரில் புறநானூற்றுக் கவிஞர், 2000 ஆண்டுகளுக்கு முன்னரே இருந்துள்ளார்!

ராமாயணம் பற்றிய மற்றொரு அதிசயம் சமண ராமாயணம், பௌத்த ராமாயணமென்று எல்லோரும் ராமன் கதை பாடி மகிழ்ந்தனர்.

ராமாயணம் பற்றிய மற்றொரு அதிசயம், நிறைய மொழிகளில் இதை இயற்றி இருப்பதாகும்.தென்கிழக்கு ஆசிய மொழிகளிலும் கூட ராமன் கதை உண்டு.

பல ராமாயணங்கள் நமக்குக் கிடைக்கவில்லை. ஆயினும் அது பற்றிய குறிப்புகள் உள. மஹா ராமாயணம் மூன்றரை லட்சம் ஸ்லோகங்கள் உடையது. இப்போதுள்ள இதிஹாசங்களில், நூல்களில் உலகில் மிகப் பெரியது மஹாபாரதம்- அதில்கூட ஒரு லட்சம் ஸ்லோகம்தான்!

நாரதர் எழுதிய சம்வ்ரத ராமாயணம் 24,000, லோமசர் எழுதிய லோமச ராமாயணம் 32,000 ஸ்லோகங்களைக் கொண்டவை. 60, 000 ஸ்லோகங்களுக்கு மேலக உடைய இரண்டு ராமாயணங்கள் இருந்தனவாம்..

சமண ராமாயணம் பிராக்ருத மொழியிலும், பௌத்த ராமாயணங்கள் பாலி மொழியிலும், இந்து ராமாயணங்கள் சம்ஸ்கிருத, தமிழ் மொழிகளிலும் இருந்தன.

ப உ ம சரிய (பதும சரிதம்) என்ற சமண ராமாயண த்தை விமல சூரி என்பவர் சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன் எழுதியதாக ச் சொல்லுவர்– அதில் 118 பருவங்கள் உள்ளன. ராவணனின் 10 தலை, கும்பகர்ணனின் ஆறுமாத தூக்கம் முதலியன பொய் என்று இதன் ஆசிரியர் அப்போதே எழுதியுள்ளார்

பௌத்தர்களின் ஜாதக் கதையான தசரத ஜாதகத்திலும், வால்மீகி ராமாயணத்திலும் ஒரே மாதிரியான பல ஸ்லோகங்கள் இருக்கின்றன. அக்காலத்திலேயே ராமன் கதை பற்றிப் பல பொதுவான விஷயங்கள் உலவி வந்தது இதனால் தெரிகிறது

பழமைக்கு உவமைச்  சான்று

சம்ஸ்கிருதத்தில் உவமைகள் இல்லாத காவியங்கள் குறைவு. வால்மீகி  ராமாயணத்தில் 3462 உவமைகள் இருப்பதாக அந்த உவமைகளைத் தொகுத்தளித்த ஆராய்ச்சியாளர் எம்.எம்.பாடக் கூறுகிறார்.

சீதையை விஷப் பாம்புக்கு ஒப்பிடுவது, இந்திர த்வஜம் போல அவன் வீழ்ந்தான் என்று உவமிப்பது முதலியன வால்மீகியின் பழமையை காட்டுகிறது ஏனெனில் பிற்காலத்தில் பாம்பை தீய விஷயங்களுக்கு மட்டுமே உவமை கூறினர்; இந்திர விழாவில் இந்திர த்வஜ கம்பத்தை அடித்துச் சாய்க்கும் உவமை எல்லாம் பிற்காலத்தில் பயன்படுத்தப்படவில்லை.

சுந்தர காண்டத்தில் 19 ஆவது அத்தியாயத்தில் தொடர்ந்து 30 உவமைகள் வருகின்றன. இது ஒரு புதுமை.

உவமைகள் பற்றி ஆராய்ந்த அறிஞர் இதில் குறைந்தது 13 வகை உவமைகள் இருப்பதாகப் பட்டியல் தருகிறார்.

3462 உவமைகளில்

2240 பூர்ண வாக்யா ச்ரௌதி

548 தர்மலுப்தா சமாசக

257 சமாசக பூர்ண ஆர்த்தி

174 தர்ம வசக லுப்தா பூர்ணா உவமை வகைகள் என்பார்.

வால்மீகி குறைந்தது 200 வகை தாவரங்களையும், 135 வகை ஆயுதங்களையும் குறிப்பிடுகிறார்.

ராமாயணத்தைப் போற்றும் பல பாடல்கள் உண்டு. அதில் ஒரு பாடல், இந்தப் பூமியில் சூரிய சந்திரர்கள் பிரகாசிக்கும் வரை ராமாயணத்துக்கு – ராம கதைக்கு –அழிவே  கிடையாது  என்று கூறும்

காரணம் என்ன?

காம, க்ரோத, லோபம் என்ற மூன்று தீய குணங்கள் உடைய எவரும் எப்படி முடிவெடுப்பரோ அதற்கு நேர் மாறாக முடிவு எடுக்கின்றனர் ராமாயண கதாபாத்திரங்கள். இதைவிட ஒரு நல்ல குடும்பம் இருக்கவே முடியாது என்னும் அளவுக்குச் செயல்படும்  பல கட்டங்களைக் காண்கிறோம்.

இந்தப்  பூவுலகில் எல்லா நல்ல குணங்களும் நிரம்பிய நல்ல மனிதர்  எவரேனும் உண்டா?  என்று நாரதரிடம் வால்மீகி முனிவர் கேட்டபோது, நாரதர் ராமரின் குணாதிசயங்களை விவரித்து நீண்ட பதில் தருகிறார். பலரும் கேட்ட விஷயங்களே அவைகள் . பின்னர் நாரதர் விடைபெற்றுச் செல்கிறார். வால்மீகி முனிவர் தமஸா நதிக்கரையை நோக்கிச் செல்கிறார். அங்கு தினசரி நடை பெறும்  காட்சிதான் நடக்கிறது அதாவது ஒரு வேடன் பறவைகளை நோக்கி அம்பு எய்கிறான். அவை செத்து விழுகின்றன. அதைப்  பார்த்த வால்மீகிக்கு சோகம் மிக்க  உணர்ச்சிக் கொந்தளிப்பு ஏற்படுகிறது. அதன் வாயிலாக நமக்கு ராமாயணம் கிடைக்கிறது. ஆனால் அதற்கு முன்னர் ஒரு அற்புதமான வருணனை வருகிறது.

இதோ சில அரிய எடுத்துக் காட்டுகள்:-

வால்மீகி முனிவர் தமஸா நதியைச் சுற்றுமுற்றும்  பார்க்கிறார் . அற்புதமான, அமைதியான அழகுமிக்க பரத்வாஜ  ஆஸ்ரமம் தெரிகிறது .அதைச்சொற்களில் வடிக்கும் போது நாம் சித்திரத்தில் கண்ட காட்சி போல அமைகிறது  அந்தச் சொற்சித்திரம் :-

(1)

அகர்தமமிதம் தீர்த்தம் பரத்வாஜ நிசாமய

ரமணீயம் ப்ரசன்னாம்பு ஸன்மனுஷ்ய மனோ ததா

பொருள்

பரத்வாஜரே  இந்த தண்ணீரைப் பாருங்கள் ! ஸ்படிகம் போல தெள்ளத் தெளிவாக இருக்கிறது; பார்க்கவே மனதிற்கு இன்பம் தருகிறது; நேர்மையான மனிதனின் மனதுபோல களங்கமற்று இருக்கிறது.

நேர்மையான மனிதனின் மனதுபோல தெளிந்த நீரோட்டம் உடையது அந்த ஆறு. நல்ல உவமை. ரமணீயம் ப்ரசன்ன , சன் மனுஷ்ய மனஹ  (நல்ல மனிதனின் மனது) என்ற சொற்கள் கவனிக்க வேண்டிய சொற்கள்.

இப்படிப்பட்ட நல்ல மனிதர்களின் மனதுதான் அற்புதங்களைச்  செய்யும். முத்து சுவாமி தீக்ஷிதர்  அமிர்த வர்ஷனி ராகம் பாடினால் மழை  பெய்யும் ; ஆதிசங்கரர் கனக தாரா தோத்திரம் பாடினால் தங்க நெல்லிக்காய் மழை  பெய்யும். ஞான சம்பந்தர் தேவாரம் பாடினால் அஸ்திச்  சாம்பலிலிருந்து  பூம்பாவை உயிர்பெற்று எழுவாள்; கூன் பாண்டியன் நின்ற சீர் நெடுமாறனாகக்  காட்சி தருவார். இதெல்லாம் தெளிந்த நீரோடை போன்ற மனது உடையோர் சாதிக்கக் கூடிய காரியம். நமக்கும் அப்படி இருக்குமானால் அற்புதங்களை சாதிக்கலாம்.

(2)

சீதா தேவி ஓராண்டுக் காலத்துக்கு ராவணனால் சிறைவைக்கப்பட்டு அசோக வனத்தில் வாடுகிறாள். உயிர்விட எண்ணிய தருணத்தில் ராமனின் கணையாழியுடன் வந்து காட்சி தருகிறான் அனுமன். இருண்ட  வானத்தில் ஒரு ஒளிக்கீற்று தோன்றுகிறது.  ராம- ராவண யுத்தம் முடிந்த பின்னர் மீண்டும் வெற்றிச் செய்தியுடன் சீதையை சந்திக்க அனுமன் வருகிறான்.

“தாயே உங்களுக்குத் தீங்கு விளைவித்த அசோக வன ராட்சச , ராட்சசிக்களை ஒழித்துக்கட்டவா?” என்று கேட்கிறான் . பகைவனுக்கும் அருள்வாய் நன்நெஞ்சே என்ற பாரதியின் வாக்கிற்கு இணங்க கருணையே வடிவான  ஸீதை சொல்கிறாள் :-

பாபானாம் வா சுபானாம் வா வதார்ஹானாம் ப்லவங்கம

கார்யம் கருணமார்யேண ந கஸ்சின்னா பராத்யதி

சீதை சொல்கிறாள் –

“இது போன்ற சிறியோர் மீது நாம் பழிவாங்குதல் அழகல்ல. அவர்களுடைய அரசர் சொன்னதையே அவர்கள் செய்தார்கள். உலக மக்கள் அனைவருக்கும் பொருந்தும் குணம் கருணையே ; அவர்கள் நல்லவர்களா கெட்டவர்களோ,  தீய குணங்களை உடையோரை தண்டித்தல் சரியாக இருக்கலாம்; ஆயினும் எப்படி ஒரு மனிதன், மற்றொரு மனிதனை எடைபோட முடியும் முடியும்?”

(3)

வால்மீகி , மனிதர்களை வருணிப்பதோடு இயற்கையையும் அற்புதமாக வருணிக்கிறார். காட்டில் இரவு நேரம் எப்படி இருக்கும்?

“மரங்கள் எல்லாம் அசைவற்று நிற்கின்றன. பிராணிகளும் பறவைகளும் அங்கே மறைந்து நிற்கின்றன. மெதுவாக மாலை நேரம் விடை பெற்றுப்  புறப்படுகிறது . வானத்தில் கண்கள்  (நட்சத்திரங்கள்)  முளைக்கின்றன. எங்கு நோக்கினும் நட்சத்திரங்களும் ராசி மண்டங்களும் பிரகாசிக்கின்றன அப்போது குளிர்ந்த கிரணங்களை வீசும் சந்திரன் உதயமாகி இருளை விரட்டுகிறான். பூமியில் வாழும் உயிரிங்களின் உள்ளங்களில் மகிழ்ச்சி பொங்குகிறது. இரவுநேரத்தில் வலம் வரும் ஜந்துக்கள் நகரத் துவங்குகின்றன. பிற பிராணிகள் கொன்ற எச்ச  சொச்சங்களைத் தின்னும் நரிகளும் யக்ஷ ராக்ஷசர்களும் நடைபோடுகின்றன”.

இது பாலகாண்டத்தில் வரும் வர்ணனை ; ராமனுக்குச் சொல்லப்படும் விஷயம். ஒரு சிறுவனுக்கு எவ்வளவு திகிலும், பின்னர் அச்சம் நீங்கிய உணர்வும் ஏற்பட்ட வேண்டுமோ அப்படி வால்மீகி அமைத்துள்ள சொற்றொடர்கள் இங்கே உள்ளன

இப்படி நிறைய செய்திகளை நாம் பல்வேறு கோணங்களில் காணலாம் . அப்போதுதான் வால்மீகியின் பெருமையை நாம் உணரமுடியும். இவைதான் எத்தனை முறை படித்தாலும் எத்தனை முறை கேட்டாலும் ராமாயணத்தை அலுக்காமல் கேட்க வைக்கிறது.

நாகப்பட்டினம் மாவட்டம் திருத்துறைப்பூண்டிக்கு அருகில் உள்ள திருத்தலம் தில்லை விளாகம். இங்கு பஞ்சலோகத்திலான ஸ்ரீகோதண்ட ராமர், சீதாபிராட்டியார்,
இலக்குவன், அனுமன் ஆகியோருடன் நின்ற கோலத்தில் அற்புதமாக காட்சி தருகிறார். இந்த விக்கிரகங்களின் கையிலும், காலிலும் உள்ள பச்சை நிற நரம்புகள்,
விரலில் உள்ள ரேகைகள், கை, கால்களில் உள்ள நகங்கள் மற்றும் அனுமனின் திருமேனியில் மண்டிக் கிடக்கும் உரோமங்கள், தத்ரூபமாக வடிக்கப்பட்டுள்ளன.
மேலும் ஸ்ரீராமர் கானகம் செல்லும் போது அவருடைய அன்னை கௌசலை இடது மணிக்கட்டில் கட்டிய ரட்சா பந்தன், இடது முட்டியின் கீழே கட்டப்பட்டுள்ள
ரட்சை, எழுத்துக்களுடன் கூடிய தனுசு போன்றவையும் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

ராமரின் முன்னோர்கள்–

1. பிரம்மாவின் மகன் -மரீசீ
2. மரீசீயின் மகன்- கஷ்யபர்
3. கஷ்யபரின் மகன் -விவஸ்வான்
4. விவஸ்வானின் மகன்- மனு
5. மனுவின் மகன் -இஷ்வாகு

6. இஷ்வாகுவின் மகன் -விகுக்ஷி
7. விகுக்ஷியின் மகன்- புரண்ஜயா
8. புரண்ஜயாவின் மகன் -அணரன்யா
9. அணரன்யாவின் மகன் -ப்ருது
10. ப்ருதுவின் மகன்- விஷ்வாகஷா

11. விஷ்வாகஷாவின் மகன் -ஆர்தரா
12. ஆர்தராவின் மகன் யுவான்ஷ்வா-1
13. யுவான்ஷ்வாவின் மகன் ஷ்ரவஷ்ட்
14. ஷ்ரவஷ்டின் மகன் -வ்ரதஷ்வா
15. வ்ரதஷ்வாவின் மகன் -குவலஷ்வா

16. குவலஷ்வாவின் மகன் – த்ருதஷ்வா
17. த்ருதஷ்வாவின் மகன் -ப்ரோமத்
18. ப்ரோமத்தின் மகன்- ஹர்யஷ்வா
19. ஹர்யஷ்வாவின் மகன் -நிகும்ப்
20. நிகும்பின் மகன் -சன்டஷ்வா

21. சன்டஷ்வாவின் மகன் க்ருஷஸ்வா
22. க்ருஷஸ்வாவின் மகன் ப்ரஸன்ஜீத்
23. ப்ரஸன்ஜீத்தின் மகன் யுவான்ஷ்வா-2
24. யுவான்ஷ்வாவின் மகன் மன்தாத்தா
25. மன்தாத்தாவின் மகன் அம்பரீஷா

26. அம்பரீஷாவின் மகன் ஹரிதா
27. ஹரிதாவின் மகன் த்ரதஸ்யு
28. த்ரதஸ்யுவின் மகன் -ஷம்பூத்
29. ஷம்பூத்தின் மகன்- அனரண்யா-2
30. அனரண்யாவின் மகன் – த்ரஷஸ்தஸ்வா

31. த்ரஷஸ்தஸ்வாவின் மகன் ஹர்யஷ்வா 2
32. ஹர்யஷ்வாவின் மகன் -வஸுமான்
33. வஸுமாவின் மகன்- த்ரிதன்வா
34. த்ரிதன்வாவின் மகன் த்ரிஅருணா
35. த்ரிஅருணாவின் மகன் -திரிசங்கு

36. திரிசங்கு வின் மகன் ஹரிசந்திரன்
37. ஹரிசந்திரநநின் மகன் ரோஹிதாஷ்வா
38. ரோஹிதாஷ்வாவின் மகன் ஹரித்
39. ஹரித்தின் மகன் -சன்சு
40. சன்சுவின் மகன் -விஜய்

41. விஜயின் மகன் -ருருக்
42. ருருக்கின் மகன் -வ்ருகா
43. வ்ருகாவின் மகன் -பாஹு
44. பாஹுவின் மகன்- சாஹாரா
45. சாஹாராவின் மகன் -அசமஞ்சன்

46. அசமஞ்சனின் மகன் -அன்ஷுமன்
47. அன்ஷுமனின் மகன் -திலீபன்
48. திலீபனின் மகன்- பகீரதன்
49. பகீரதனின் மகன் -ஷ்ருத்
50. ஷ்ருத்தின் மகன் -நபக்

51. நபக்கின் மகன்- அம்பரீஷ்
52. அம்பரீஷனின் மகன் -சிந்து த்வீப்
53. சிந்து த்வீப்பின் மகன்- ப்ரதயு
54. ப்ரதயுவின் மகன் -ஸ்ருது பர்ணா
55. ஸ்ருது பர்ணாவின் மகன் சர்வகாமா

56. சர்வகாமாவின் மகன்- ஸுதஸ்
57. ஸூதஸின் மகன் -மித்ரஷா
58. மித்ராஷாவின் மகன்- சர்வகாமா 2
59. சர்வகாமாவின் மகன் அனன்ரண்யா3
60. அனன்ரண்யாவின் மகன் -நிக்னா

61. நிக்னாவின் மகன்- ரகு
62. ரகுவின் மகன் -துலிது
63. துலிதுவின் மகன் – கட்வாங் திலீபன்
64. கட்வாங் திலீபனின் மகன் – ரகு2
65. ரகுவின் மகன் – அஜன்

66. அஜனின் மகன் – தசரதன்
67. தசரதனின் மகன்
68. ஸ்ரீ ராமன் அவர் பரம்பரையில் 68வது அரசன்.

இஷுவாகு தொடங்கி ராமர் வரை நான்கு சதுர்யுகம் காலம்

———————–

ஸ்ரீராமம் ரகுகுல திலகம்
சிவதனுசாக் ருஹீத சீதாஹஸ்தகரம்
அங்குல்யாபரண சோபிதம்
சூடாமணி தர்ஸன கரம்
ஆஞ்சநேய மாஸ்ரயம்
வைதேகி மனோகரம்
வானர தைன்ய சேவிதம்
சர்வ மங்கள கார்யானுகூலம்
சத்தம் ஸ்ரீராம சந்த்ர பாலய மாம்.

ஏக ஸ்லோக ராமாயணம்

 ஆதௌ ராம தபோவனாதி கமனம், ஹத்வா ம்ருகம் காஞ்சனம்,

வைதேஹி ஹரணம், ஜடாயு மரணம், சுக்ரீவ சம்பாஷணம்,

வாலி நிக்ரஹணம், சமுத்ர தரணம், லங்காபுரீ தாஹனம்,

பஸ்சாத் ராவண கும்பகர்ண ஹனனம், சைதத்தி ராமாயணம்

ஆதியில் ராமன் காடு செல்லல்

பொன் மானைக் கொல்லல்

சீதா தேவி கடத்தல்

ஜடாயு இறத்தல்

சுக்ரீவன் சந்திப்பு/உரையாடல்

வாலீ அழிவு,

கடல் தாண்டல்

இலங்கை எரிப்பு

பின்னர் ராவணன், கும்பகர்ணன் மரணம்

இதுவே ராமாயணம்

ஸ்ரீ ஸுந்தர காண்ட மஹிமை ஸ்லோகம் –

ஸுந்தரே ஸுந்தரோ ராம:
ஸுந்தரே ஸுந்தரி கதா
ஸுந்தரே ஸுந்தரி ஸீதா
ஸுந்தரே ஸுந்தரம் வநம்
ஸுந்தரே ஸுந்தரம் காவ்யம்
ஸுந்தரே ஸுந்தரோ கபி:
ஸுந்தரே ஸுந்தரம் மந்த்ரம்
ஸுந்தரே கிம் ந ஸுந்தரம்

—————-

ஏக ஸ்லோக பாகவதம்

 ஆதௌ தேவகி தேவ கர்ப்ப ஜனனம், கோபி க்ருஹே வர்த்தனம்,

மாயா பூதன ஜீவிதாபஹரணம், கோவர்தன உத்தாரணம்,

 கம்சச் சேதன கௌரவாதி ஹரணம், குந்தீ சுதா பாலனம்

சைதத் பாகவதம்  புராண கதிதம் ஸ்ரீ க்ருஷ்ண லீலாம்ருதம்

ஆதியில் தேவகியின் கர்ப்பத்தில் இறைவன் பிறப்பு

கோபியர் வீட்டில் வளர்ப்பு

மாயா உருவ பூதனையின் அழிவு

கோவர்த்தன மலையின் உயர்வு

கம்ச, கௌரவர்கள் அழிவு

குந்தீ மகன் காப்பு

இதுவே பாகவத புராணக் கதை; ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவின் அற்புத லீலைகள்

ஏக ஸ்லோக மஹாபாரதம்

ஆதௌ பாண்டவ தார்தராஷ்ட்ர ஜனனம், லாக்ஷா க்ருஹம் தாஹனம்

த்யூதே ஸ்ரீஹரணம், வனே விசரணம், மாத்சாலயே வர்த்தனம்,

லீலாகோஹ்ரஹணம், ரணே விஹரணம், சந்திக்ரியா ஜ்ரும்பணம்,

பஸ்சாத் பீஷ்மசுயோதனாதி நிதனம்,   ஹ்யேதன் மஹா பாரதம்

 ஆதியில் பாண்டவர், திருதராஷ்ட்ரர் பிறப்பு

அரக்கு மாளிகை எரிப்பு

சூதாட்டத்தில் நாடு இழப்பு

காட்டில் சுற்றல்

மத்ஸ்ய நாட்டில் (விராடன்) வசிப்பு

ஆநிரை கவர்தல்

போரில் அழிவு

சமாதான உடன்படிக்கை மீறல்

பின்னர் பீஷ்மர், துர்யோதண வகையறா மரணம்

இதுவே மஹா பாரதம்

ஸ்ரீ ப்ரஹ்லாத க்ருதம் ஸ்ரீ ஹரி அஷ்டகம்–ஶ்ரீ வேங்கடேஶ அஷ்டகம்–ஶ்ரீ ஶ்ரீனிவாஸ க³த்³யம் –ஸ்ரீ ஹநுமத் அஷ்டகம்–ஸ்ரீ ஹநுமத் அஷ்டோத்தர சதநாம ஸ்தோத்ரம்–

February 23, 2023

ஹரிர் ஹரதி பாபாநி துஷ்ட சித்தைர் அபி ஸ்ம்ருத
அநிச்சயா அபி ஸம் ஸ்ப்ருஷ்டோ தஹத்யேவ ஹி பாவக || 1 ||

ஹரி திருநாம உச்சாரணம் -தானே பாப மலையை பற்றி தூள் தூளாக்குமே
நாம் மன ஸஹாயம் இல்லாமலே -இச்சையும் இல்லாமலே-துஷ்டமான சிந்தனை இருந்து கொண்டே சொன்னாலும் பலன் கிட்டும் என்றால்
ஆசையுடன் ஆனந்தமாக சொல்லுவாருக்கு பலன் நிச்சயம் கைமுதிக நியாயம் அன்றோ

அழுக்கு உடன் கங்கையில் நீராடினாலும் பாபங்களை போக்கும் அன்றோ
விரும்பாமல் நெருப்பைத் தொட்டாலும் சுடுமே

பஸ்யதே ஹரத்வம் -ஆத்ம ஸ்வரூபம் திருடப்படுகிறது
இவனோ நமது பாபங்களை அபஹரிக்கிறான் –
இது ஒன்றே நாம் சேமித்து வைத்தது
தூங்கும் பொழுதும் ஸ்வப்னம் மூலம் பாபங்களை போக்கி அருளுகிறானே

———

ஸ கங்கா ஸ கயா சேது ஸ காசி ஸ ச புஷ்கரம்
ஜிஹ்வாக்ரே வர்த்ததே யஸ்ய ஹரிர் இத் யஷர த்வயம் || 2 ||

ஹரி த்வய அக்ஷரம் ஸக்ருத் உச்சாரணம்
கங்கையில் நீராடிய புண்யமும்-சேது நீராடிய புண்யமும்
கயாவில் செய்யும் ஸ்ரார்த்த புண்யமும்
காசி புஷ்காரம் போன்ற தீர்த்த யாத்திரைகள் புண்யமும்–கிட்டும்

கங்கா கயா சேது காசி -இவையும் த்வய அக்ஷரங்கள்-பாவானத்வம்

———-

வாரண ஸ்யாம் குரு க்ஷேத்ரே நைமி சாரண்ய ஏவ ச
யத் க்ருதம் தேந யத் ப்ரோக்தம் ஹரிர் இத் யஷர த்வயம் || 3 ||

ஸ்ரீ வாரணாசி ஸ்ரீ குறு க்ஷேத்ரம் ஸ்ரீ நைமிசாரண்யம்
இவற்றில் செய்யும் புண்ய காரியங்களின் பலன்கள் எல்லாமே
ஹரி நாம சங்கீர்த்தனம் நித்தியமாக செய்வதாலேயே கிட்டுமே
ஹரி நாம சங்கீர்த்தனம் தானே அனைத்து புண்ய ஸ்தலங்களில் செய்யும் புண்ய பலன்கள் அனைத்தையுமே அளித்து அருளுமே

————–

ப்ருதிவ்யாம் யாநி தீர்தாநி புண்யான் யாயதனாநி ச
தாநி ஸர்வாண்ய சேஷாணி ஹரிர் இத் யஷர த்வயம் || 4 ||

உலகில் உள்ள அனைத்து திவ்ய தேச தீர்த்தயாத்ரைகளால் பெறும் பலன்களையும்
ஹரி நாம சங்கீர்த்தனம் கொடுத்து அருளும் அன்றோ

————–

கவாம் கோடி ஸஹஸ்ராணி ஹேம கன்யா ஸஹஸ்ரகம்
தத்தம் ஸ்யாத்தேந யேந யுக்தம் ஹரிர் இத் யஷர த்வயம்|| 5 ||

ஆயிரம் ஆயிரம் கோ தான பலன்களும்
ஆயிரம் ஆயிரமான கன்யா தானம் செய்யும் பலன்களும்
ஹரி நாம சங்கீர்த்தனம் கொடுத்து அருளும் அன்றோ

————

ருக் வேதோ அத யஜுர் வேத ஸாம வேதோ யப் யதர்வண
அதீதஸ் தேந யேந யுக்தம் ஹரிர் இத் யஷர த்வயம் || 6 ||

ரிக் வேத யஜுர் வேத சாம வேத அதர்வண வேத
அனைத்து வேத பாராயண பலன்களும்
ஹரி நாம சங்கீர்த்தனம் கொடுத்து அருளும் அன்றோ

———–

அஸ்வ மேதைர் மஹா யஜ்ஜைர் னரமேதைஸ் தவைவ ச
இஷ்டம் ஸ்யாத்தேந யேந யுக்தம் ஹரிர் இத் யஷர த்வயம் || 7 ||

அஸ்வமேத யாகங்கள்
மற்றும் அனைத்து யாகங்கள் செய்தால் கிடைக்கும் பலன்கள் அனைத்தும்
ஹரி நாம சங்கீர்த்தனம் கொடுத்து அருளும் அன்றோ

———–

ப்ராண ப்ரயாண பாதேயம் ஸம்ஸார வ்யாதி நாஸனம்
துக்காத் யந்த பரித்ராணம் ஹரிர் இத் யஷர த்வயம் || 8 ||

ஸ்ரீ ஹரி நாம ஸங்கீர்த்தனமே
அர்ச்சிராதி கதிக்கும் பாதேயம் புண்டரீகாக்ஷ திருமணம் அன்றோ
இதுவே ஸம்ஸார மாயக்கூட்டை அறுத்து முடித்து
பேற்றையும் பெற்றுக் கொடுத்து
நித்ய பரம புருஷார்த்தமான ப்ரீதி காரித கைங்கர்யங்களையும் அளிக்குமே

————

பக்த பரிகரஸ் தேந மோஷாய கமனம் ப்ரதி
ஸக்ருத் உச்சாரிதம் யேந ஹரிர் இத் யஷர த்வயம் || 9 ||

ஸ்ரீ ஹரி நாம ஸக்ருத் ஸங்கீர்த்தனம் ஒன்றே
ஸம்ஸார தளைகளை போக்கி அளிக்கும்
இத்தைத் தவிர வேறே ஒன்றுமே வேண்டாமே

————–

ஹர் அஷ்டகம் இதம் புண்யம் ப்ராத ருத்தாய ய படேத்
ஆயுஷ்யம் பலம் ஆரோக்யம் யஸோ வ்ருத்திஸ் ஸ்ரயா வஹம் || 10 ||

இந்த ஸ்ரீ ஹரி அஷ்டக ஸ்தோத்ரம் நித்தியமாக அநுஸந்திக்க
ஆயுஸ்ஸு ஐஸ்வர்யம் ஆரோக்யம் செல்வம் கீர்த்தி
அனைத்தையும் பெற்று
பூ ஸூரர்களாக இருக்கப் பெறுவர் -என்று பலன் அருளிச் செய்கிறார் –

———————

ப்ரஹ்லாதேந க்ருதம் ஸ்தோத்ரம் துக்க சாகர சோஷணம்
ய படேத்ஸ நரோ யாதி தத் விஷ்ணோ பரமம் பதம் || 11 ||

அனந்த கிலேச பாஜனமான கொடிய வெந்நரகமான ஸம்ஸாரத்திலேயே
அனைத்தும் பெற்று நிலத்தேவர்களாக இருந்து
அந்தமில் பேர் இன்பம் பெற ஸ்ரீ வைகுண்டம் சென்று
நித்ய ஸூ ரிகள் உடன் ஒரே கோர்வையாக இருக்கப் பெறுவர்
என்று பலன் சொல்லித் தலைக் கட்டி அருளுகிறார் –

——–

இதி ப்ரஹ்லாத க்ருதம் ஸ்ரீ ஹரி அஷ்டகம் ஸம் பூர்ணம்

————————————————————————–

ஸ்ரீ வேங்கடேஶ அஷ்டகம் 

வேங்கடேஶோ வாஸுதே³வ꞉ ப்ரத்³யும்நோ(அ)மிதவிக்ரம꞉ ।
ஸங்கர்ஷணோ(அ)நிருத்³த⁴ஶ்ச ஶேஷாத்³ரிபதிரேவ ச ॥ 1 ॥

ஜநார்த³ந꞉ பத்³மநாபோ⁴ வேங்கடாசல வாஸிந꞉ ।
ஸ்ருஷ்டி கர்தா ஜக³ந்நாதோ² மாத⁴வோ ப⁴க்த வத்ஸல꞉ ॥ 2 ॥

கோ³விந்தோ³ கோ³பதி꞉ க்ருஷ்ண꞉ கேஶவோ க³ருட³த்⁴வஜ꞉ ।
வராஹோ வாமநஶ்சைவ நாராயண அதோ⁴க்ஷஜ꞉ ॥ 3 ॥

ஶ்ரீத⁴ர꞉ புண்ட³ரீகாக்ஷ꞉ ஸர்வதே³வஸ்துதோ ஹரி꞉ ।
ஶ்ரீந்ருஸிம்ஹோ மஹா ஸிம்ஹ꞉ ஸூத்ராகார꞉ புராதந꞉ ॥ 4 ॥

ரமா நாதோ² மஹீ ப⁴ர்தா பூ⁴த⁴ர꞉ புருஷோத்தம꞉ ।
சோல புத்ர ப்ரிய꞉ ஶாந்தோ ப்³ரஹ்மாதீ³நாம் வரப்ரத³꞉ ॥ 5 ॥

ஶ்ரீநிதி⁴꞉ ஸர்வ பூ⁴தாநாம் ப⁴ய க்ருத்³ப⁴ய நாஶந꞉ ।
ஶ்ரீராமோ ராமப⁴த்³ரஶ்ச ப⁴வப³ந்தை⁴கமோசக꞉ ॥ 6 ॥

பூ⁴தா வாஸோ கி³ரி வாஸ꞉ ஶ்ரீநிவாஸ꞉ ஶ்ரிய꞉ பதி꞉ ।
அச்யுதாநந்த கோ³விந்தோ³ விஷ்ணுர் வேங்கட நாயக꞉ ॥ 7 ॥

ஸர்வ தே³வைகஶரணம் ஸர்வ தே³வைக தை³வதம் ।
ஸமஸ்ததே³வகவசம் ஸர்வ தே³வஶிகா²மணி꞉ ॥ 8 ॥

இதீத³ம் கீர்திதம் யஸ்ய விஷ்ணோரமிததேஜஸ꞉ ।
த்ரிகாலே ய꞉ படே²ந்நித்யம் பாபம் தஸ்ய ந வித்³யதே ॥ 9 ॥

ராஜத்³வாரே படே²த்³கோ⁴ரே ஸங்க்³ராமே ரிபுஸங்கடே ।
பூ⁴தஸர்பபிஶாசாதி³ப⁴யம் நாஸ்தி கதா³சந ॥ 10 ॥

அபுத்ரோ லப⁴தே புத்ராந் நிர்த⁴நோ த⁴நவாந் ப⁴வேத் ।
ரோகா³ர்தோ முச்யதே ரோகா³த்³ப³த்³தோ⁴ முச்யேத ப³ந்த⁴நாத் ॥ 11 ॥

யத்³யதி³ஷ்டதமம் லோகே தத்தத் ப்ராப்நோத்யஸம்ஶய꞉ ।
ஐஶ்வர்யம் ராஜ ஸம்மாநம் பு⁴க்தி முக்தி ப²ல ப்ரத³ம் ॥ 12 ॥

விஷ்ணோர் லோகைகஸோபாநம் ஸர்வ து³꞉கை²கநாஶநம் ।
ஸர்வைஶ்வர்ய ப்ரத³ம் ந்ரூணாம் ஸர்வ மங்க³ளகாரகம் ॥ 13 ॥

மாயாவீ பரமாநந்த³ம் த்யக்த்வா வைகுண்ட²முத்தமம் ।
ஸ்வாமி புஷ்கரிணீ தீரே ரமயா ஸஹ மோத³தே ॥ 14 ॥

கல்யாணாத்³பு⁴தகா³த்ராய காமிதார்த²ப்ரதா³யிநே ।
ஶ்ரீமத்³வேங்கடநாதா²ய ஶ்ரீநிவாஸாய தே நம꞉ ॥ 15 ॥

இதி ஶ்ரீ ப்³ரஹ்மாண்ட³புராணே ப்³ரஹ்மநாரத³ஸம்வாதே³ வேங்கடகி³ரிமாஹாத்ம்யே ஶ்ரீ வேங்கடேஶ அஷ்டகம் ।

——————–

ஶ்ரீ ஶ்ரீனிவாஸ க³த்³யம் 

ஶ்ரீமத³கி²லமஹீமண்ட³லமண்ட³னத⁴ரணீத⁴ர மண்ட³லாக²ண்ட³லஸ்ய,
நிகி²லஸுராஸுரவன்தி³த வராஹக்ஷேத்ர விபூ⁴ஷணஸ்ய,
ஶேஷாசல க³ருடா³சல ஸிம்ஹாசல வ்ருஷபா⁴சல நாராயணாசலாஞ்ஜனாசலாதி³ ஶிக²ரிமாலாகுலஸ்ய,
நாத²முக² போ³த⁴னிதி⁴வீதி²கு³ணஸாப⁴ரண ஸத்த்வனிதி⁴ தத்த்வனிதி⁴ ப⁴க்திகு³ணபூர்ண ஶ்ரீஶைலபூர்ண
கு³ணவஶம்வத³ பரமபுருஷக்ருபாபூர விப்⁴ரமத³துங்க³ஶ்ருங்க³
க³லத்³க³க³னக³ங்கா³ஸமாலிங்கி³தஸ்ய, ஸீமாதிக³ கு³ண ராமானுஜமுனி நாமாங்கித ப³ஹு பூ⁴மாஶ்ரய
ஸுரதா⁴மாலய வனராமாயத வனஸீமாபரிவ்ருத விஶங்கடதட நிரன்தர விஜ்ரும்பி⁴த ப⁴க்திரஸ
நிர்க⁴ரானந்தார்யாஹார்ய ப்ரஸ்ரவணதா⁴ராபூர விப்⁴ரமத³ ஸலிலப⁴ரப⁴ரித மஹாதடாக மண்டி³தஸ்ய, கலிகர்த³ம
மலமர்த³ன கலிதோத்³யம விலஸத்³யம நியமாதி³ம முனிக³ணனிஷேவ்யமாண ப்ரத்யக்ஷீப⁴வன்னிஜஸலில
ஸமஜ்ஜன நமஜ்ஜன நிகி²லபாபனாஶனா பாபனாஶன தீர்தா²த்⁴யாஸிதஸ்ய, முராரிஸேவக ஜராதி³பீடி³த
நிரார்திஜீவன நிராஶ பூ⁴ஸுர வராதிஸுன்த³ர ஸுராங்க³னாரதி கராங்க³ஸௌஷ்ட²வ குமாரதாக்ருதி
குமாரதாரக ஸமாபனோத³ய த³னூனபாதக மஹாபதா³மய விஹாபனோதி³த ஸகலபு⁴வன விதி³த
குமாரதா⁴ராபி⁴தா⁴ன தீர்தா²தி⁴ஷ்டி²தஸ்ய, த⁴ரணிதல க³தஸகல ஹதகலில ஶுப⁴ஸலில க³தப³ஹுல்த³
விவித⁴மல ஹதிசதுர ருசிரதர விலோகனமாத்ர வித³ல்தி³த விவித⁴ மஹாபாதக ஸ்வாமிபுஷ்கரிணீ ஸமேதஸ்ய,
ப³ஹுஸங்கட நரகாவட பதது³த்கட கலிகங்கட கலுஷோத்³ப⁴ட ஜனபாதக வினிபாதக ருசினாடக
கரஹாடக கலஶாஹ்ருத கமலாரத ஶுப⁴மஞ்ஜன ஜலஸஜ்ஜன ப⁴ரப⁴ரித நிஜது³ரித ஹதினிரத ஜனஸதத
நிரஸ்தனிரர்க³ல்த³ பேபீயமான ஸலில ஸம்ப்⁴ருத விஶங்கட கடாஹதீர்த² விபூ⁴ஷிதஸ்ய, ஏவமாதி³ம
பூ⁴ரிமஞ்ஜிம ஸர்வபாதக க³ர்வஹாபக ஸின்து⁴ட³ம்ப³ர ஹாரிஶம்ப³ர விவித⁴விபுல புண்யதீர்த²னிவஹ
நிவாஸஸ்ய, ஶ்ரீமதோ வேங்கடாசலஸ்ய ஶிக²ரஶேக²ரமஹாகல்பஶாகீ², க²ர்வீப⁴வத³தி க³ர்வீக்ருத
கு³ருமேர்வீஶகி³ரி முகோ²ர்வீத⁴ர குலத³ர்வீகர த³யிதோர்வீத⁴ர ஶிக²ரோர்வீ ஸதத ஸதூ³ர்வீக்ருதி
சரணக⁴ன க³ர்வசர்வணனிபுண தனுகிரணமஸ்ருணித கி³ரிஶிக²ர ஶேக²ரதருனிகர திமிர:, வாணீபதிஶர்வாணீ
த³யிதேன்த்³ராணிஶ்வர முக² நாணீயோரஸவேணீ நிப⁴ஶுப⁴வாணீ நுதமஹிமாணீ ய ஸ்தன கோணீ
ப⁴வத³கி²ல பு⁴வனப⁴வனோத³ர:, வைமானிககு³ரு பூ⁴மாதி⁴க கு³ண ராமானுஜ க்ருததா⁴மாகர கரதா⁴மாரி
த³ரலலாமாச்ச²கனக தா³மாயித நிஜராமாலய நவகிஸலயமய தோரணமாலாயித வனமாலாத⁴ர:,
காலாம்பு³த³ மாலானிப⁴ நீலாலக ஜாலாவ்ருத பா³லாப்³ஜ ஸலீலாமல பா²லாங்கஸமூலாம்ருத தா⁴ராத்³வயாவதீ⁴ரண
தீ⁴ரலலிததர விஶத³தர க⁴ன க⁴னஸார மயோர்த்⁴வபுண்ட்³ர ரேகா²த்³வயருசிர:, ஸுவிகஸ்வர த³ல்த³பா⁴ஸ்வர
கமலோத³ர க³தமேது³ர நவகேஸர ததிபா⁴ஸுர பரிபிஞ்ஜர கனகாம்ப³ர கலிதாத³ர லலிதோத³ர ததா³லம்ப³ ஜம்ப⁴ரிபு
மணிஸ்தம்ப⁴ க³ம்பீ⁴ரிமத³ம்ப⁴ஸ்தம்ப⁴ ஸமுஜ்ஜ்ரும்ப⁴மாண பீவரோருயுக³ல்த³ ததா³லம்ப³
ப்ருது²ல கத³லீ முகுல மத³ஹரணஜங்கா⁴ல ஜங்கா⁴யுக³ல்த:³, நவ்யத³ல ப⁴வ்யமல பீதமல
ஶோணிமலஸன்ம்ருது³ல ஸத்கிஸலயாஶ்ருஜலகாரி ப³ல ஶோணதல பத³கமல நிஜாஶ்ரய ப³லப³ன்தீ³க்ருத
ஶரதி³ன்து³மண்ட³லீ விப்⁴ரமதா³த³ப்⁴ர ஶுப்⁴ர புனர்ப⁴வாதி⁴ஷ்டி²தாங்கு³ல்தீ³கா³ட⁴ நிபீடி³த பத்³மாவன:,
ஜானுதலாவதி⁴ லம்ப³ விட³ம்பி³த வாரண ஶுண்டா³த³ண்ட³ விஜ்ரும்பி⁴த நீலமணிமய கல்பகஶாகா² விப்⁴ரமதா³யி ம்ருணால்த³லதாயித ஸமுஜ்ஜ்வலதர
கனகவலய வேல்லிதைகதர பா³ஹுத³ண்ட³யுக³ல்த:³, யுக³பது³தி³த கோடி க²ரகர ஹிமகர மண்ட³ல
ஜாஜ்வல்யமான ஸுத³ர்ஶன பாஞ்சஜன்ய ஸமுத்துங்கி³த ஶ்ருங்கா³பர பா³ஹுயுக³ல்த:³, அபி⁴னவஶாண
ஸமுத்தேஜித மஹாமஹா நீலக²ண்ட³ மத³க²ண்ட³ன நிபுண நவீன பரிதப்த கார்தஸ்வர கவசித மஹனீய
ப்ருது²ல ஸாலக்³ராம பரம்பரா கு³ம்பி⁴த நாபி⁴மண்ட³ல பர்யன்த லம்ப³மான ப்ராலம்ப³தீ³ப்தி ஸமாலம்பி³த விஶால
வக்ஷ:ஸ்த²ல:, க³ங்கா³ஜ²ர துங்கா³க்ருதி ப⁴ங்கா³வல்தி³ ப⁴ங்கா³வஹ ஸௌதா⁴வல்தி³ பா³தா⁴வஹ தா⁴ரானிப⁴
ஹாராவல்தி³ தூ³ராஹத கே³ஹான்தர மோஹாவஹ மஹிம மஸ்ருணித மஹாதிமிர:, பிங்கா³க்ருதி ப்⁴ருங்கா³ர
நிபா⁴ங்கா³ர த³ல்தா³ங்கா³மல நிஷ்காஸித து³ஷ்கார்யக⁴ நிஷ்காவல்தி³ தீ³பப்ரப⁴ நீபச்ச²வி தாபப்ரத³ கனகமாலிகா
பிஶங்கி³த ஸர்வாங்க:³, நவத³ல்தி³த த³ல்த³வலித ம்ருது³லலித கமலததி மத³விஹதி சதுரதர ப்ருது²லதர
ஸரஸதர கனகஸரமய ருசிரகண்டி²கா கமனீயகண்ட:², வாதாஶனாதி⁴பதி ஶயன கமன பரிசரண ரதிஸமேதாகி²ல
ப²ணத⁴ரததி மதிகரவர கனகமய நாகா³ப⁴ரண பரிவீதாகி²லாங்கா³ வக³மித ஶயன பூ⁴தாஹிராஜ
ஜாதாதிஶய:, ரவிகோடீ பரிபாடீ த⁴ரகோடீ ரவராடீ கிதவீடீ ரஸதா⁴டீ த⁴ரமணிக³ணகிரண விஸரண ஸததவிது⁴த
திமிரமோஹ கா³ர்ப⁴கே³ஹ:, அபரிமித விவித⁴பு⁴வன ப⁴ரிதாக²ண்ட³ ப்³ரஹ்மாண்ட³மண்ட³ல பிசண்டி³ல:,
ஆர்யது⁴ர்யானந்தார்ய பவித்ர க²னித்ரபாத பாத்ரீக்ருத நிஜசுபு³க க³தவ்ரணகிண விபூ⁴ஷண வஹனஸூசித
ஶ்ரிதஜன வத்ஸலதாதிஶய:, மட்³டு³டி³ண்டி³ம ட⁴மரு ஜர்க⁴ர காஹல்தீ³ படஹாவல்தீ³ ம்ருது³மத்³த³லாதி³ ம்ருத³ங்க³
து³ன்து³பி⁴ ட⁴க்கிகாமுக² ஹ்ருத்³ய வாத்³யக மது⁴ரமங்க³ல்த³ நாத³மேது³ர நாடாரபி⁴ பூ⁴பால்த³ பி³லஹரி மாயாமால்த³வ கௌ³ல்த³ அஸாவேரீ ஸாவேரீ
ஶுத்³த⁴ஸாவேரீ தே³வகா³ன்தா⁴ரீ த⁴ன்யாஸீ பே³க³ட³ ஹின்து³ஸ்தானீ காபீ தோடி³ நாடகுருஞ்ஜீ ஶ்ரீராக³ ஸஹன
அடா²ண ஸாரங்கீ³ த³ர்பா³ரு பன்துவரால்தீ³ வரால்தீ³ கல்த்³யாணீ பூ⁴ரிகல்த்³யாணீ யமுனாகல்த்³யாணீ
ஹுஶேனீ ஜஞ்ஜோ²டீ² கௌமாரீ கன்னட³ க²ரஹரப்ரியா கலஹம்ஸ நாத³னாமக்ரியா முகா²ரீ தோடீ³
புன்னாக³வரால்தீ³ காம்போ⁴ஜீ பை⁴ரவீ யது³குலகாம்போ⁴ஜீ ஆனந்த³பை⁴ரவீ ஶங்கராப⁴ரண
மோஹன ரேகு³ப்தீ ஸௌராஷ்ட்ரீ நீலாம்ப³ரீ கு³ணக்ரியா மேக⁴க³ர்ஜனீ ஹம்ஸத்⁴வனி ஶோகவரால்தீ³ மத்⁴யமாவதீ
ஜேஞ்ஜுருடீ ஸுரடீ த்³விஜாவன்தீ மலயாம்ப³ரீ காபீபரஶு த⁴னாஸிரீ தே³ஶிகதோடீ³ ஆஹிரீ வஸன்தகௌ³ல்தீ³
ஸன்து கேதா³ரகௌ³ல்த³ கனகாங்கீ³ ரத்னாங்கீ³ கா³னமூர்தீ வனஸ்பதீ வாசஸ்பதீ தா³னவதீ மானரூபீ
ஸேனாபதீ ஹனுமத்தோடீ³ தே⁴னுகா நாடகப்ரியா கோகிலப்ரியா ரூபவதீ கா³யகப்ரியா வகுல்தா³ப⁴ரண
சக்ரவாக ஸூர்யகான்த ஹாடகாம்ப³ரீ ஜ²ங்காரத்⁴வனீ நடபை⁴ரவீ கீரவாணீ ஹரிகாம்போ⁴தீ³ தீ⁴ரஶங்கராப⁴ரண
நாகா³னந்தி³னீ யாக³ப்ரியாதி³ விஸ்ருமர ஸரஸ கா³னருசிர ஸன்தத ஸன்தன்யமான நித்யோத்ஸவ
பக்ஷோத்ஸவ மாஸோத்ஸவ ஸம்வத்ஸரோத்ஸவாதி³ விவிதோ⁴த்ஸவ க்ருதானந்த:³ ஶ்ரீமதா³னந்த³னிலய
விமானவாஸ:, ஸதத பத்³மாலயா பத³பத்³மரேணு ஸஞ்சிதவக்ஷஸ்தல படவாஸ:, ஶ்ரீஶ்ரீனிவாஸ:
ஸுப்ரஸன்னோ விஜயதாம். ஶ்ரீ​அலர்மேல்மங்கா³ நாயிகாஸமேத: ஶ்ரீஶ்ரீனிவாஸ ஸ்வாமீ ஸுப்ரீத:
ஸுப்ரஸன்னோ வரதோ³ பூ⁴த்வா, பவன பாடலீ பாலாஶ பி³ல்வ புன்னாக³ சூத கத³ல்தீ³ சன்த³ன சம்பக மஞ்ஜுல்த³
மன்தா³ர ஹிஞ்ஜுலாதி³ திலக மாதுலுங்க³ நாரிகேல்த³ க்ரௌஞ்சாஶோக மாதூ⁴காமலக ஹின்து³க நாக³கேதக
பூர்ணகுன்த³ பூர்ணக³ன்த⁴ ரஸ கன்த³ வன வஞ்ஜுல்த³ க²ர்ஜூர ஸால கோவிதா³ர ஹின்தால பனஸ விகட
வைகஸவருண தருக⁴மரண விசுல்த³ங்காஶ்வத்த² யக்ஷ வஸுத⁴ வர்மாத⁴ மன்த்ரிணீ தின்த்ரிணீ போ³த⁴
ந்யக்³ரோத⁴ க⁴டவடல ஜம்பூ³மதல்லீ வீரதசுல்லீ வஸதி வாஸதீ ஜீவனீ போஷணீ ப்ரமுக² நிகி²ல ஸன்தோ³ஹ
தமால மாலா மஹித விராஜமான சஷக மயூர ஹம்ஸ பா⁴ரத்³வாஜ கோகில சக்ரவாக கபோத க³ருட³ நாராயண
நானாவித⁴ பக்ஷிஜாதி ஸமூஹ ப்³ரஹ்ம க்ஷத்ரிய வைஶ்ய ஶூத்³ர நானாஜாத்யுத்³ப⁴வ தே³வதா நிர்மாண மாணிக்ய
வஜ்ர வைடூ⁴ர்ய கோ³மேதி⁴க புஷ்யராக³ பத்³மராகே³ன்த்³ர நீல ப்ரவால்த³மௌக்திக ஸ்ப²டிக ஹேம ரத்னக²சித
த⁴க³த்³த⁴கா³யமான ரத² கஜ³ துரக³ பதா³தி ஸேனா ஸமூஹ பே⁴ரீ மத்³த³ல்த³ முரவக ஜ²ல்லரீ ஶங்க³ காஹல்த³
ந்ருத்யகீ³த தால்த³வாத்³ய கும்ப⁴வாத்³ய பஞ்சமுக²வாத்³ய அஹமீமார்க³ன்னடீவாத்³ய கிடிகுன்தலவாத்³ய
ஸுரடீசௌண்டோ³வாத்³ய திமிலகவிதால்த³வாத்³ய தக்கராக்³ரவாத்³ய க⁴ண்டாதாட³ன ப்³ரஹ்மதால்த³
ஸமதால்த³ கொட்டரீதால்த³ ட⁴க்கரீதால்த³ எக்கால்த³ தா⁴ராவாத்³ய படஹகாம்ஸ்யவாத்³ய ப⁴ரதனாட்யாலங்கார
கின்னெர கிம்புருஷ ருத்³ரவீணா முக²வீணா வாயுவீணா தும்பு³ருவீணா கா³ன்த⁴ர்வவீணா நாரத³வீணா ஸ்வரமண்ட³ல
ராவணஹஸ்தவீணாஸ்தக்ரியாலங்க்ரியாலங்க்ருதானேகவித⁴வாத்³ய வாபீகூபதடாகாதி³ க³ங்கா³யமுனா
ரேவாவருணா ஶோணனதீ³ஶோப⁴னதீ³ ஸுவர்ணமுகீ² வேக³வதீ வேத்ரவதீ க்ஷீரனதீ³ பா³ஹுனதீ³ க³ருட³னதீ³
காவேரீ தாம்ரபர்ணீ ப்ரமுகா²: மஹாபுண்யனத்³ய: ஸஜலதீர்தை²: ஸஹோப⁴யகூலங்க³த ஸதா³ப்ரவாஹ
ருக்³யஜுஸ்ஸாமாத²ர்வண வேத³ஶாஸ்த்ரேதிஹாஸ புராண ஸகலவித்³யாகோ⁴ஷ பா⁴னுகோடிப்ரகாஶ
சன்த்³ரகோடி ஸமான நித்யகல்த்³யாண பரம்பரோத்தரோத்தராபி⁴வ்ருத்³தி⁴ர்பூ⁴யாதி³தி ப⁴வன்தோ
மஹான்தோzனுக்³ருஹ்ணன்து, ப்³ரஹ்மண்யோ ராஜா தா⁴ர்மிகோzஸ்து, தே³ஶோயம் நிருபத்³ரவோzஸ்து, ஸர்வே
ஸாது⁴ஜனாஸ்ஸுகி²னோ விலஸன்து, ஸமஸ்தஸன்மங்க³ல்தா³னி ஸன்து,
உத்தரோத்தராபி⁴வ்ருத்³தி⁴ரஸ்து, ஸகலகல்த்³யாண ஸம்ருத்³தி⁴ரஸ்து ॥

 

ஸ்ரீ ஹரி: ஓம் ॥

————————————–

ஸ்ரீ ஹநுமத் அஷ்டகம்

வைகாஸ மாஸ க்ருஷ்ணாயாம் தஸமி மந்த மாஸேரே
பூர்வ பத்ராஸு ஜாதாய மங்களம் ஸ்ரீ ஹநுமதே

குரு கௌரவ பூர்ணாய பலாபூப ப்ரியாய
நாநா மாணிக்ய ஹஸ்தாய மங்களம் ஸ்ரீ ஹநுமதே

ஸுவர்சலா களத்ராய சதுர்புஜ தராய ச
உஷ்ட் ராருடாய வீராய மங்களம் ஸ்ரீ ஹநுமதே

திவ்ய மங்கள தேஹாய பீதாம்பர தராய
தப்த காஞ்சன வர்ணாய மங்களம் ஸ்ரீ ஹநுமதே

பக்த ரக்ஷண சீலாய ஜாநகீ சோகஹாரணே
ஜகத் பாவக நேத்ராய மங்களம் ஸ்ரீ ஹ்நுமதே

பம்பாதீர விஹாராய சௌமித்ரி ப்ராண தாயிணே
ஸ்ருஷ்டி காரண பூதாய மங்களம் ஸ்ரீ ஹநுமதே

ரம்பாவ.ந விஹாராய ஸுஹத்மாதட வாஸிநே
ஸர்வ லோகைக கண்ட்டாய மங்களம் ஸ்ரீ ஹநுமதே

பஞ்சாநநாய பீமாய கால/நேமி ஹராய ச
கௌண்டிந்ய கோத்ராய ஜாதாய மங்களம் ஸ்ரீ ஹநுமதே

———–

ஸ்ரீ ஹநுமத் அஷ்டோத்தர சதநாம ஸ்தோத்ரம்

1. ஆஞ்ஜநேயோ மஹாவீரோ ஹநூமாந் மாருதா மஜ:
தத்வ ஜ்ஞாத ப்ரத: ஸீதா தேவீ முத்ரா ப்ரதாயக:

2. அஸோக வநிகாச் சேத்தா ஸர்வ மாயா விபஞ்ஜந:
ஸர்வ பந்த விமோக்தாச ர÷க்ஷõ வித்வம்ஸ காரக:

3. பரவித்யா பரீஹார: பரஸெளர்ய விநாஸந:
பரமந்த்ர நிராகர்த்தா பரயந்த்ர ப்ரபேதந:

4. ஸர்வக்ரஹ விநாசீச பீமஸேந ஸஹாயக்ருத்:
ஸர்வது:க ஹர:ஸர்வ லோகசாரீ மநோஜவ:

5. பாரிஜாத த்ருமூலஸ்த: ஸர்வமந்த்ர ஸ்வரூபவாந்
ஸர்வதந்த்ர ஸ்வரூபிச ஸர்வ மந்த்ராத்மகஸ் ததா

6. கபீச்வரோ மஹாகாய: ஸர்வரோக ஸர:ப்ரபு
பலஸீத்தி கர: ஸர்வ வித்யா ஸம்பத் ப்ரதாயக:

7. கபிஸேநா நாயகச்ச பவிஷ்யச் சதுராநந
குமார ப்ரஹ்மசாரீச ரத் நகுண்டல தீபதிமாந்:

8. ஸஞ்சலத் வால ஸந்நத்த லம்பமாநஸிகோஜ் ஜ்வல:
கந்தர்வ வித்யா தத்வஜ்ஞோ மஹாபல பராக்ரம:

9. காராக்ருஹ விமோக்தாச ச்ருங்கலா யந்தமோசக:
ஸாகரோத்தாரக: ப்ராஜ்ஞோ ராமதூத: ப்ரதாபவாந்:

10. வாநர: கேஸரி ஸுத: ஸீதாஸோகா நிவாரண:
அஞ்ஜநாகர் பஸம்பூதோ பாலார்க்க ஸத்ருசாநந:

11. விபீஷண ப்ரிய கரோ தசக்ரீவ குலாந்தக:
லக்ஷ்மண ப்ராண தாதாச வஜ்ரகாயோ மஹாத்யுதி:

12. சிரஞ்சீவி ராம பக்தோ தைத்ய கார்ய விகாதக:
அக் ஷஹந்தா காஞ்சநாப: பஞ்ச வக்ரோ மஹாதபா:

13. லஞ்கிணீ பஞ்ஜந: ஸ்ரீமாந் ஸிமஹிகா ப்ராண பஞ்ஜந:
கந்தமாதந சைலஸதோ லங்காபுர விதாஹக:

14. ஸுக்ரீவ ஸசிவோ பீம: ஸுரோதைத்ய குலாந்தக:
ஸுரார்ச்சதோ மஹாதேஜா ராமசூடாமணி ப்ரத:

15. காமரூபி பிங்களா÷க்ஷõ வார்த்தி மைநாகபூஜீத:
கபலீக்ருத மார்த்தாண்ட மண்டலோவிஜிதேந்த்ரிய:

16. ராமஸுக்ரீவ ஸந்தாதா மஹாராவண மந்தந:
ஸ்படி காபோ வாகதீசோ நவவ்யாருதி பண்டித:

17. சதுர்பாஹுர் தீநபந்துர் மஹாத்மா பக்தவக்ஸல
ஸஞ்ஜீவந நகாஹர்தா ஸசீர் வாக்மீ த்ருடவ்ரத:

18. காலநேமி ப்ரமதநோ ஹரிமர்கட மர்கட:
தாந்த: சாந்த: ப்ரஸந்நாத்மா தஸகண்ட மதாபஹ்ருத்

19. யோகீராமகதாலோல: ஸீதாத்வேஷண பண்டித
வஜ்ரதஷ்ட்ரோ வஜ்ரநகோ ருத்ரவீர்ய ஸமுத்பவ:

20. இந்த்ரஜித் ப்ரஹிதாமோக ப்ரஹ்மாஸ்த்ர விநிவாரக:
பார்த்த த்வஜாக்ரே ஸம்வாஸீ ச்ரஞ்ஜர பேதக:

21. தசபாஹுர் லோகபூஜ்யோ ஜாம்பவத் ப்ரீதிவர்த்தந:
ஸீதாஸமேத ஸ்ரீராம பாதஸேவா துரந்தர:

22. இச்யேவம் ஸ்ரீஹநுமதோ நாம்நா மஷ்டோத்தரம் சதம்
ய: படேச் ச்ருண்யாநநித்யம் ஸர்வாந் காமா நவாப்நுயாத்

இதி காளிகாரஹஸ்யே ஹநுமதஷ்டோத்தர ஸதநாம ஸ்தோத்ரம் ஸம்பூர்ணம்

————-

ஸ்ரீ ஆஞ்ஜநேய த்யான ஸ்லோகங்கள்

புத்திர் பலம் யசோ தைர்யம் நிர்ப்பயத்வம் ஆரோகதா |
அஜாட்யம் வாக்படுத்வம் ச ஹனுமத் ஸ்மரணாத் பவேத் ||

ஸர்வ கல்யாண தாதாரம் ஸர்வாபத் கன மாருதம் |
அபார கருணாமூர்த்திம் ஆஞ்ஜநேயம் நமாம்யஹம் ||

அஞ்ஜநா நந்தனம் வீரம் ஜானகீ சோ’கநாசனம் |
கபீச’மக்ஷ ஹந்தாரம் வந்தே லங்கா பயங்கரம் ||

ஆஞ்சநேயமதி பாடலாநநம் காஞ்சநாத்ரி கமநீய விக்ரஹம் |
பாரிஜாத தருமூலவாஸிநம் பாவயாமி பவமான நந்தனம் ||

யத்ர யத்ர ரகு நாத கீர்த்தனம் தத்ர தத்ர க்ருதமஸ்தகாஞ்ஜலிம் |
பாஷ்பவாரி பரிபூர்ணலோசனம் மாருதிம் நமத ராக்ஷஸாந்தகம் ||

மனோஜவம் மாருத துல்ய வேகம் ஜிதேந்த்ரியம் புத்திமதாம் வரிஷ்டம் |
வாதாத்மஜம் வானரயூத முக்யம் ஸ்ரீ ராமதூதம் சி’ரஸா நமாமி ||

அஸாத்ய ஸாதக ஸ்வாமின் அஸாத்யம் தவ கிம்வத |
ராம தூத க்ருபாஸிந்தோ மத் கார்யம் ஸாதயப்ரபோ ||

உத்ய தாதித்ய ஸங்காஸம் உதார புஜ விக்ரமம் |
கந்தர்ப்ப கோடிலாவண்யம் ஸர்வவித்யா விஸாரதம் ||

ஸ்ரீராம ஹ்ருதயா நந்தம் பக்தகல்ப மஹீருஹம் |
அபயம் வரதம் தோர்ப்யாம் கலயே மாருதாத்மஜம் ||

ராமதூத மஹாதீர ருத்ரவீர்ய ஸமுத்பவ |
அஞ்ஜநா கர்ப்ப ஸம்பூத வாயுபுத்ர நமோஸ்து தே ||

நாமாம் யஹம் மாருதஸுநு மாநிலம் ஸ்ரீஜானகி ஜீவத ஜீவத ப்ரியம் |
ஸௌமித்ரி மித்ரம் கபிராஜ வல்லபம் ஸ்ரீராமதூதம் ஸிரஸா நமாமி ||

———————-

அஞ்சிலே ஒன்று பெற்றான்,
அஞ்சிலே ஒன்றை தாவி,
அஞ்சிலே ஒன்றராகி , ஆர்யார்க்காக ஏகி
அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டு அயலார் ஊரில்
அஞ்சிலே ஒன்றை வைத்தான்
அவன் நன்மை அளித்து காப்பான்!!!

——————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ ஆதித்ய ஹ்ருதய ஸ்லோகங்கள்

February 23, 2023

ஸ்ரீ ராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே
சஹஸ்ர நாம தத்துல்யம் ராம நாம வரானனே

“ஸ்ரீ ராம்” என்று ஒரு முறை சொல்லப்படும் நாமம் ஸ்ரீ மஹாவிஷ்ணுவின் ஆயிரம் நாமங்களுக்கு நிகரானது.
எனவே ஒவ்வொரு நாளும் “ஸ்ரீ ராம்” என்று நாம் பாராயாணம் செய்யும் போது
அது முழு விஷ்ணு சஹஸ்ர நாமத்தையும் பாராயாணம் செய்வதற்கு நிகரானது.

————–

9 வரிகளை கொண்ட ஶ்ரீ ராமாயணம் ஸ்லோகம்

ஸ்ரீ ராமம் ரகுகுல திலகம்
சிவதனு சாக்ரிஹத சீதா ஹஸ்தகரம்
அங்குல்யா பரண சோபிதம்
சூடாமணி தர்சன கரம்
ஆஞ்சநேய மாஸ்ரயம்
வைதேஹி மனோ கரம்
வானர சைன்ய சேவிதம்
சர்வ மங்கள கார்யானுகூலம்
சததம் ஸ்ரீ ராமச் சந்திர பாலயமாம்

———————

ஏக ஸ்லோக ஶ்ரீ ராமாயணம்

ஆதெள ராம தபோ வனாதிகமனம்
ஹத்வா ம்ருகம் காஞ்சனம்
வைதேஹி ஹரணம் ஜடாயு மரணம் சுக்ரீவ சம்பாஷனம்
வாலீநிர்தலனம் சமுத்ர தரணம் லங்காபுரீ தாஹனம்
பஸ்சாத் ராவண கும்பகர்ண ஹனனம் ஏதத்தி ராமாயணம்

—————–

ஸ்ரீ ஆதித்ய ஹ்ருதய ஸ்லோகங்கள்

ஆதித்ய ஹ்ருதய சர்க்கத்தின் முதல் 2 ஸ்லோகங்கள் அகத்தியர் இராமபிரானை அணுகுதல்.
மூன்றாவது ஸ்லோகம் அகத்தியர் இராமபிரானை விளித்துக் கூறுவதாக அமைந்திருக்கிறது.
ஆதித்ய ஹ்ருதய மந்திரம் 4வது ஸ்லோகம் முதல் 26 வரை வெளிப்படுத்த பட்டுள்ளது.
ஸ்லோகங்கள் 4,5 ஆதித்யஹ்ருதயத்தின் பெருமைகள்.
ஸ்லோகங்கள் 6-15 சூரியனின் பெருமைகள், ஆத்ம போதம், உள்ளிருப்பதும் வெளியிலிருப்பதும் ஒன்றே என நிறுவுதல்
ஸ்லோகங்கள் 16-20 மந்திர ஜபம்
ஸ்லோகங்கள் 21-24 சூரிய போற்றிகள்
ஸ்லோகங்கள் 25, 26 பலன்கள், ஜபிக்கும் முறை
27-30 ஸ்லோகங்கள் ராமர் ஜபித்த முறையை கூறுகிறது.
முப்பத்தி ஒன்றாம் ஸ்லோகம் இந்தத் துதியால் மகிழ்ந்த சூரியன்
இராமனை வாழ்த்துவதைக் கூறுவதாக அமைந்திருக்கிறது.

———

ஓம் அஸ்யஸ்ரீ, ஆதித்ய ஹ்ருதய ஸ்தோத்ர மஹா மந்த்ரஸ்ய,
அகஸ்த்யோ பகவான் ரிஷிஹி, அனுஷ்டுப் சந்தஹ:
ஸ்ரீ ஆதி ஆத்மா சூர்ய நாராயணோ தேவதா, நிரஸ்தா சேஷ விக்நதயா
பிரம்ம வித்யாதி ஸித்யர்த்தே, ஸர்வத்ர ஜெய ஸித்யர்த்தே ஜபே விதியோகஹ

—————-

பூர்வாங்க ஸ்தோத்ரம் / தியானம்
ஜயது ஜயது ஸூர்யம் சப்த லோகைக தீபம் |
கிரண ஷமித (ம்ருதித )பாப ஸர்வ துக்கஸ்ய ஹர்தா (க்லேஷ துக்கஸ்ய நாஷம் )||
அருண கிரண கம்யம் ஆதிம் ஆதித்ய மூர்த்திம் |
பரம பரம திவ்யம் (சகல புவன வந்த்யம்) பாஸ்கரம் தம் நமாமி ||

சப்த லோகைக தீபம் |–ஏழு உலகங்களுக்கும் முக்ய தீபம் போன்றவரும்
கிரண (ம்ருதித )ஷமித பாப-கிரணங்களால் போக்கடிக்கப்பட்ட தாபத்தை யுடையவரும்
ஸர்வ துக்கஸ்ய ஹர்தா (க்லேஷ துக்கஸ்ய நாஷம்) ||-எல்லாவித துக்கத்தைப் போக்கடிப்பவரும்
அருண கிரண கம்யம் –அருணனுடைய கிரணங்களால் அறியப்படுபவரும்
ஆதிம் –முதன்மை யானவரும்
பரம பரம திவ்யம் (சகல புவன வந்த்யம்) -ரொம்ப மிகவும் பிரகாசிப்பவரும்
பாஸ்கரம் –ஒளியை பரவச் செய்பவருமான
ஸூர்யம் -யாதொரு ஸூர்யன்
ஆதித்ய மூர்த்திம் |–ஸூர்ய நாராயண மூர்த்தியாக
ஜயது ஜயது -விளங்குகிறாரோ
தம் நமாமி ||-அந்த பகவானை நமஸ்காரம் செய்கிறேன்

வெற்றி வெற்றி (தரும்) கர்ம வீரமே (ஸூர்யம்), ஏழு உலகங்களின் தீபமே
ஒளிக்கதிர்களால் பாபங்களையும், கவலைகளையும் (உடல்வலி பற்றிய எண்ணங்களையும்), துக்கங்களையும் போக்குபவனே.
கிரணங்களால் ஆட் கொள்பவனே. ஆதி முதல்வனே. பரமாத்மனே
ஸகல உலகங்களாலும் வணங்க படுபவனே. ஒளி வீசுபவனே உனக்கு நமஸ்காரம்.

ஏழு உலகங்கள்- பூலோகம், புவர், ஸ்வர், மஹர, ஜனர், தபோ, ஸத்ய லோகம்

———

ததோ (ரணம் )யுத்த பரிஷ்ராந்தம் ஸமரே சிந்தயா ஸ்திதம் |
ராவணம்ச-அக்ரதோ த்ருஷ்ட்வா யுத்தாய ஸமுபஸ்திதம் || 1

தெய்வ-தைஷ்ச ஸமாகம்ய த்ருஷ்டுமப்யாக தோரணம் |
உபாகம்ய-அப்ரவீத் ராமம் அகஸ்த்யோ பகவான் ர்ஷி(ஹி): || 2

ததோ –பிறகு
(ரணம் )யுத்த –யுத்தத்தை
த்ருஷ்ட்வா–பார்ப்பதற்கு
தெய்வ-தைஷ்ச –தேவதைகளோடு
ஸமாகம்ய –சேர்ந்து
அப்யாகத –வந்த
பகவான்-ஷாட் குண்ய பரிபூர்ணனான
அகஸ்த்யோ ர்ஷி–அகஸ்திய ரிஷி
யுத்த பரிஷ்ராந்தம் –யுத்தத்தில் களைப்பு அடைந்தவனாயும்
யுத்தாய -யுத்தம் செய்வதற்காக
அக்ரதோ -முன்னே
ஸமுபஸ்திதம் |-சமீபத்தில் இருப்பவனுமான
ராவாணாஞ்ச –ராவணனையும்
ஸமரே -யுத்தத்தில்
சிந்தய – கவலையுடன்
ஸ்திதம் |–இருக்கிற
ராமம் த்ருஷ்ட்வா -ராமரையும் பார்த்து
உபாகம்ய-அப்ரவீத் (ஹி)-அடைந்து சொன்னார்

போர்க்களத்தில் போரினால் களைப்படைந்து,
போர் குறித்த ஆழ்ந்த சிந்தனைகளுடன் இராமன் நின்றார்
இராவணன் தயாராகி களத்தில் முன்னிலையில் நின்று பலமுடையவனாக தோன்றினான்.

தேவர்கள் அணைவரும் ஒன்று கூடி போரைப் பார்க்க இருந்தனர்
தேவர்களுடன் இருந்த அகஸ்த்ய பகவான்,
போருக்கு முயன்று நிற்கும் ராமரை அருகில் அணுகி சொன்னார்.

———

ராம ராம மஹா பாஹோ ஷ்ருணு குஹ்யம் ஸனாதனம் |
யேன-சர்வான்-நரீன், வத்ஸ, ஸமரே விஜயி-ஷ்யஸி || 3

மஹா பாஹோ–நீண்ட கைகளை யுடையவனே
வத்ஸ,-குழந்தாய்
ராம ராம -ஹே ராமா ராமா
யேன-எதனால்
சமரே -போரில்
சர்வான்-நரீன், -எல்லா சத்ருக்களையும்
விஜயி-ஷ்யஸி-ஜெயிப்பாயோ
ஸநா தனம் |-புராதனமான -அப்போருக்கு ஒத்த
குஹ்யம்-ரஹஸ்யத்தை
ஷ்ருணு -கேள்

இராமா, இராமா! பெரும் தோள் வலிமை கொண்டவனே! கேள் இரகசியத்தை,
(அது) காலம் காலமாக என்றுமுள்ளது
எல்லா மக்களும் விரும்பி பயன்படுத்துவது.
குழந்தாய், அது போரில் வெற்றி தருவது

————

ஆதித்ய ஹ்ருதய ஸ்லோஹ மஹிமையை இரண்டு ஸ்லோகங்களால் அருளிச் செய்கிறார்

ஆதித்ய ஹ்ருதயம்
ஸூ ர்யன் மனஸ்ஸை திருப்தி செய்யும் ஸ்தோத்ரம் என்றும்
ஸூர்ய மண்டல மத்ய வர்தியான ஸ்ரீ மன் நாராயணன் என்றும் கொள்ளலாம்

ஆதித்யஹ்ருதயம் புண்யம் ஸர்வசத்ரு விநாசனம் |
ஜயா-வஹம் ஜபே-ந்நித்யம் அக்ஷய்யம் பரமம் சிவம்|| 4

ஸர்வ மங்கல மாங்கல்யம், ஸர்வ-பாப-ப்ரணாசனம் |
சிந்தா-சோக-ப்ரசமனம் ஆயுsர்-வர்தனம் உத்தமம் || 5

ஆதித்யஹ்ருதயம் புண்யம்- ஆதி பரமனின் ஹிருதயம் – மந்திரம் நல் வினைகளைத் தருவது
ஸர்வசத்ரு விநாசனம் – உட்பகை, வெளிப்பகை என் அனைத்து எதிரிகளையும் நசிக்க-அழிக்க வல்லது
ஜயாவஹம்-வெற்றி தருவது
ஜபே ந்நித்யம் – எப்போதும் ஜபிக்க கூடியது
அக்ஷய்யம்- வேதம் போலவே -பொங்கி பெருகி கொண்டே இருப்பது (அழிவற்றது)
பரமம் – மிகப் பெருமை கொண்டது
சிவம் – மங்களம் தருவது. விடுதலையை தருவது
ஸர்வ மங்கள மாங்கல்யம் – அனைத்து நலன்களுகெல்லாம் நலன்களையும் தருவது. நிலையான பேரின்பம் தருவது
ஸர்வ பாப ப்ரணாஸனம் – அனைத்து பாவங்களையும் போக்குவது
சிந்தா சோக ப்ரஸமனம் – மனக் கவலைகளையும் குழப்பங்களையும் நீக்குவது
ஆயுர்வர்த்தனம் – நீண்ட ஆயுளைத் தர வல்லது
உத்தமம் – சிறந்தது

———–

ஆதித்யரின் தன்மைகள் – பெருமைகள்

ரஷ்மி-மந்தம் ஸமுத்யந்தம் தேவாசுர நமஸ்க்ருதம் |
பூஜையஸ்வ-விவஸ்வந்தம் பாஸ்கரம் புவனேஸ்வரம் || 6 ||

ரஷ்மி-மந்தம் -ஞான ரூபமும் (இதமான) பொன்னிறக் கதிர்களை பிரதிபலிப்பவர்.
ஸமுத்யந்தம் – பிரபஞசத்தின் எல்லையாக விளங்குபவர்-புது புதிதாய் உதிக்கின்றவர் -ஸ்ருஷ்டியாதிகளில் சங்கல்பித்து மீண்டும் மீண்டும் உபகரிப்பவர்
தேவாசுர நமஸ்க்ருதம்- தேவர்களாலும், அசுரர்களாலும், (நன்மை, தீமை செய்பவர்கள்) வணங்கப் படுபவர்.
பூஜயஸ்வ-வணங்கத் தகுந்தவர்.
விவஸ்வந்தம் – பரஞ்சோதி ரூபம் -காந்தியால் மற்றவரை மறுப்பவர்
பாஸ்கரம் – எல்லா ஞானத்தையும்- ஒளியையும் (மதி, அக்னி உள்பட) உருவாக்குவது.
புவனேஸ்வரம் – புவனத்தின் தலைமை.-பூஜ யஸ்வ -பூஜை செய்

இரகசியம்-3 ஒளி-சுயம்/ஆத்மன்/பிரமம், இருட்டு-மாயை/சுய அறிவின்மை.
கட உபநிசத் (II.ii.15) சூரியனோ சந்திரனோ, நட்சத்திரங்களோ ஒளிர்பவையல்ல.
பராமத்மனே அந்தர்யாமியாய் அணைத்திலும் ஒளிர்கிறான்.
எந்தவித வேறுபாடும் இல்லாமல் எல்லோருக்கும் சமமாக ஒளி தருபவர்.
(அதனால்) தேவர்களாலும் அசுரர்களாலும், எல்லோராலும் வணங்கப் படுபவர்.
பூஜயஸ்வ-கடமைக்கு நேரடி எடுத்துக்காட்டாக இருப்பதால் வணங்கத் தகுந்தவர்.

————–

ஸர்வ தேவாத் மகோஹி ஏஷ ஹ: தேஜஸ்வீ ரஸ்மி பாவனஹ: |
ஏஷ தேவாசுர கணான் லோகான் பாதி-கபஸ்திபி ஹி:|| 7

ஏஷ–இந்த ஸூர்ய பகவான் -ஸூர்ய மண்டல அந்தர் வர்த்தி யான ஸ்ரீ மன் நாராயணன்
ஸர்வ தேவாத் மக-ஸமஸ்த தேவர்களின் ஆத்மாவாக ஸ்வரூபம் உள்ளவர்
தேஜஸ்வீ–தேஜஸ்ஸு மிக்கவர்
ரஸ்மி பாவனஹ: |-கிரணங்களால் ஸ்லாகிக்கத் தக்கவர் -ஞான ரஸ்மியால் யோகிகளை ப்ரஹ்ம லோகம் அடையச் செய்பவர்
தேவாசுர கணான் –தேவ ஸூரக் கூட்டங்களையும்
லோகான் –எல்லா உலகங்களையும்
கபஸ்திபி -கிரணங்களால்
பாதி-ரக்ஷிக்கிறார்

எல்லா தேவர்களின் வடிவம்
ப்ரகாசங்க்களிலும் ப்ரகாசமானது. அதே நேரத்தில் இதமானப் பொன்னிறக் கதிர்களை வெளிப்படுத்துவது.
இவரே தேவர்களும் அசுரர்களும் எல்லா உலகங்களையும் கதிர் கரங்களால் காப்பாற்றுபவர்.

—————-

ஏஷ ப்ரஹ்மா ச விஷ்ணு ச சிவ-ஸ்கந்த: ப்ரஜாபதிஹி:|
மஹேந்த்ரோ-தனத: காலோ யம-ஸோமோஹ் அபாம்பதி ஹி:||8

ஏஷ-இவர் -ஸூர்ய பகவானே பிரும்மா(ஆக்குபவர்- ப்ரஹம என்றால் பெரிதிலும் பெரிதானவனும்),
விஷ்ணு(காப்பவர் விஷ்ணு என்றால் எங்கும் நிறைந்தது ),
சிவன் (அழிப்பவர் சிவ என்றால் மங்கலம்),
ஸ்கந்தன் (ஸ்கந்த என்றால் இணைப்பு & ஊற்று=, அன்பிற்கும் அறிவிற்கும் அணைத்திற்கும் ஊற்றாக இருப்பவனும்),
ப்ரஜாபதி-ஜீவ ராசிகளின் தலைவர்,-நவ ப்ரஜாபதியாகவும்
இந்திரன் (புலங்களின் அதிபதி),
தனத – குபேரன் (செல்வத்தின் அதிபதி),
காலோ – காலத்தை (நேரத்தை) உண்டாக்குவன்,
யமன்(இறப்பின் அதிபதி, தண்டிப்பவன், நல்வழிபடுத்துபவன்),
ஸோமோ -சந்திரன்(ஊட்டத்தின் அதிபதி),
அபாம் பதிஹி – தண்ணீருக்கு அதிபதி (வருணன்).

————-

பிதரோ வஸவ: ஸாத்யா ஹ அஷ்வினௌ மருதோ மனுஹு: |
வாயு அஹ்னி: ப்ரஜா ப்ராணஹ: ர்துகர்த்தா ப்ரபாகரஹ: || 9

பிதரோ -மூதாதை(முன்னோர்கள், வம்சம், குலம்),
வஸவ-எல்லா செல்வங்களும் ஆன அஷ்டவசுக்கள்,
சாத்யர்கள்-கரும வசப்படாத நித்யர்களும்,
அச்வினி தேவர்கள் (தேவ லோக வைத்தியர்கள்),
மருத்துக்கள் (காற்றின் துணைவர்களான மருத் தேவர்களும்- தென்றல், புயல்),
மனு (மனிதர்களின் தந்தை),
வாயு-காற்று, அக்னி-நெருப்பு,
ப்ரஜா ப்ராணன்-மக்களின் உயிர்க் காற்று,
ர்துகர்த்தா- பருவங்களை (மாற்றங்களை) உண்டாக்குபவர்.
ப்ரபாகர: – உதயத்தை ஏற்படுத்துகிரார்; புகழைத் தருபவர்

எட்டு வசுக்கள் – அபன், துருவன், சோமன், தரன், அனிலன், அனலன், ப்ரத்யுஷா, ப்ரபாசா
சாத்யா – அனந்தன், கருடன், விஸ்வக்சேனன், பாஞ்சஜன்யன், சுதர்சனன் போன்றவர்கள்
ஆறு பருவங்கள், கோடை, மழை, முன்பனி, கடும்பனி, இலையுதிர், வசந்தம்

—————-

ஆதித்ய ஸவிதா ஸூர்யஹ: கக: பூஷா கபஸ்திமான் |
ஸூ வர்ண ஸத்ர்சோ பானு: ஹிரண்யரெதா திவாகரஹ:|| 10

ஆதித்ய–, மூலப் பரம் பொருள்-அதிதியின் புத்ரன் –
ஸவிதா – உயிரை உருவாக்குபவர்
ஸூர்ய-செயல் வீரர் செயலாற்றத் தூண்டுபவனும்
கக-வானத்துப் பறவை வானவெளியில் நடமாடுபவனும்
பூஷா -வளர்ப்பவனும்-மழையால் வளர்ச்சி தருபவர் அனைவருக்கும் உணவளித்து வளர்ப்பவனும்
கபஸ்திமான் -ஒளிக் கதிரோன்
ஸூ வர்ண ஸத்ருசோ- பொன்னிறத்தோன்
பானு- ஒளிக் காந்தியுள்ளவன்
ஹிரண்யரேதோ – அனைத்தையும் படைக்கும் திறன் கொண்டவனும்
திவாகர – பிரகாசமான பகலொளியை தோற்றுவிப்பவர்-அறிவை உண்டு பண்ணுபவர்

————–

ஹரித்-அஸ்வ ஸஹஸ்ரார்சிஹி: ஸப்த ஸப்திர் மரீசிமான் |
திமிரோன்மதன: ஷம்பு த்வஷ்டா மார்தாண்ட அம்ஷுமான்|| 11-

ஹரித் அஸ்வ – வெற்றியை வாகனமாக உடையவர்–பச்சைக் குதிரையுடையவர் (பச்சை வெற்றியின் சின்னம்).-திக்குகளில் எங்கும் வியாபிப்பவர்
பச்சைப் பயிர்களை வளர்ப்பவன்
ஸஹ்ஸ்ரார்ச்சி – ஆயிரம் கரங்களால் எல்லா செயல்களையும் செய்பவர்-
ஆயிரம் கிரணங்களை (தீ நாக்குகள்) கொண்டு இந்த உலகத்தின் அனைத்துச் செயல்களையும் நடத்துகிறான்
ஸப்த ஸப்தி-ஏழு குதிரைகள் – உலகங்கள் – நிறங்கள் – நாட்கள் உடையவர்
மரீசிமான் -ஓளிக் கிரணங்கள் கொண்டவர்.உலக இயக்கங்களுக்கெல்லாம் மூலகாரணம் இவனது கதிர்கள் தானே.-சத்ருக்களை வெல்லும் சக்ராயுதத்தை யுடையவர்
திமிரோன் மதன – இருளை – அறியாமையையை போக்குவர்
ஷம்பு -மங்களம் அளிப்பவர்.அனைத்தையும் குறைப்பவன்.
ஸ்த்வஷ்ட துரத்ரிஷ்டத்தை விரட்டுகிறவர்–இறந்த உடல்களையும் தாவரங்களையும் மங்கச் செய்வதன் மூலம் அடுத்த சுழற்சிக்கு வழி வகுக்கிறான்.
மார்தாண்ட – மிகுந்த வலிமை உடையவன். உலகத்தில் எல்லா பொருட்களும் உயிர்களும் இவனிடமிருந்தே வலிமையைப் பெறுகின்றன.-உண்டு மீண்டும் உமிழ்ந்தவன்
அம்சுமான் -மேகம் மறைத்து நிற்கும் போதும் தன் உருவத்தை உயிர்கள் பார்க்க இயலாத போதும்
தன் கதிர்களால் எங்கும் பரவி உலக இயக்கத்தை நடத்துபவன்.-எங்கும் வியாபித்து இருக்கும் தேஜஸ்ஸு படைத்தவன்

———–

ஹிரண்யகர்ப்ப ஷிஷிர தபனோ, பாஸ்கரோ ரவி(ஹி): |
அக்னிகர்ப்பா அதிதிபுத்ர-(ஹ): ஷன்க ஷிஷிர நாஷன (ஹ): || 12

ஹிரண்ய கர்ப்ப-சூக்ஷ்ம ஸரீரமுள்ளவர் ஞானத்திற்கும், வளர்ச்சிக்கும் காரணமானவர்.
பொன்மயமான கருப்பையை உடையவன்.-ஸ்வர்ண மயமான ப்ரஹ்மாண்டத்தில் இருப்பவன்
உலகத் தோற்றம் ஹிரண்யகர்ப்பம் என்ற பொன்முட்டையிலிருந்து நிகழ்ந்ததாக சொல்வது மரபு.
ஷிஷிர- கடுங்குளிரை உருவாக்குபவர். கதிர்கள் குறைவாக இருக்கும் நிலையே குளிர் நிலை.
அதனால் இவனே குளிரைத் தருபவனாகவும் இருக்கிறான்.-ஸூக ஸ்வ பாவத்தை யுடையவர் –
ஸ்தாபனோ-சூடாகவும், நெருப்பாய் எரிபவர்.–ஸ்வயமாக ஐஸ்வர்யம் படைத்தவர் –
பாஸ்கரோ -ஒளியானவர்-ஞானமானவர். உலகத்தில் இருக்கும் எல்லா பொருட்களும் ஒளிர்வது இவனது கதிர்களால் தான்.
ரவி- எல்லாவற்றையும் உருவாக்குபவன். எல்லோராலும் புகழ்ப்படுபவர்.
அக்னி கர்ப்போ தீயை தன்னுடலாகக் கொண்டவன்.
அதிதே: புத்ர அதிதியின் புதல்வர்
ஷன்க- ஆனந்த மயமானவன் மறையும் போது குளிர்ச்சியாக தோற்றமளிப்பவர்-தானாகவே சமன் அடைபவர் -பரமானந்த ஸ்வரூபி -விபு –
ஷிஷிர நாஷன- குளிரை விலக்குபவர்

————–

வ்யோம நாதஸ் தமோ பேதீ, ருக் யஜு ஸ்ஸாம பாரக ஹ: |
கனவ்ரிஷ்டிர் அபாம் மித்ரோ: விந்த்யவீதீ ப்லவங்கமஹ: || 13-

வ்யோம நாதஸ் -ஆகாசத்தைப் படைப்பவர் -ஆகாசத்துக்கும் அரசன் ஸ்வாமி
தமோ பேதீ, -இருளை -அஞ்ஞானத்தைப் போக்கடிப்பவர்
ருக் யஜு ஸ்ஸாம பாரக ஹ: |-வேதங்களின் கரையை அடைந்தவர்
கனவ்ரிஷ்டிர் -அதிக மழையைப் பெய்யும்படி செய்பவர்
அபாம் மித்ரோ: -ஜனங்களுக்கு மித்ரர் –சமுத்திரத்தில் சயனிப்பவர்
விந்த்யவீதீ ப்லவங்கமஹ:-தஷிணா யானத்தில் விந்திய மலை வழியாகச் செல்பவர்

ஸூர்ய பகவான் ஸூர்ய பகவான் அண்ட வெளியின் தலைவன்.
அஞ்ஞான இருளை அகற்றி தீமைகளையும் மரண பயத்தையும் போக்குகிறார். வேதங்களை கரை கண்டவர்.
கதிர்கள் ஏற்படுத்தும் வெப்ப நிலை மாற்றங்களால் பெரும் மழையை பொழிவிக்கிறார்.
அபாம் மித்ர – நீர் நிலைகளை நேசிக்கிறார்.
விந்த்ய வீதி ப்லவங்கம- விந்த்ய மலைகளை தெய்வீகமாக – விரைவாக கடக்கிறார்.
(ருக், யஜுர், சாமம் எனப்படும் மூன்று வேதங்களையும் கண்டு உலகிற்குச் சொன்னவன்.
வேதங்கள் யாராலும் உருவாக்கப்படவில்லை; அதனால் அதனை அபௌருஷேயம் என்று சொல்வார்கள்.
அவை என்றும் இருப்பவை. ரிஷிகள் அவற்றைக் கண்டு சொன்னார்கள்.
அதனால் அவர்களுக்கு மந்த்ர த்ரஷ்டா (மந்திரத்தைக் கண்டவர்கள்) என்று பெயர்.)

—————

ஆதபீ மண்டலீ ம்ருத்யு ஹு: பிங்கல: ஸர்வ தாபன ஹ: |
கவிர் விஷ்வா மஹாதேஜா ஹ: ரக்த: ஸர்வ-பவோத்பவ ஹ: || 14

அவரே வெப்பத்தை கொடுக்கிறார். உயிர்களின் முதலும் முடிவும் அவரே. அவரே அகிலத்தை இயக்குகிறார்.
எங்கும் நிறைந்து இருக்கிறார். அவரது செங்கதிர்கள் உலகத்தை உயிரினங்களை வாழ வைக்கின்றன.

ஆதபீ -வெப்பத்தை உருவாக்குபவர் கொளுத்துபவன்
மண்டலீ – வட்ட வடிவானவர்
ம்ருத்யு- மரணவடிவானவன்-விரோதிகளை வெல்பவர்
பிங்கல-பொன் நிறத்தோன்
ஸர்வதாபன- எல்லாவற்றையும் எரிப்பவர்
கவி அனைத்தையும் அறிந்தவன்.-ஸாஸ்த்ர பிரதானம் செய்து அருளியவர்
விஷ்வோ- அண்ட வடிவானவன்.-தானே ஸ்ருஷ்டித்து அந்தர்பவித்து ஸமஸ்த நியந்தா
மஹா தேஜா- மிகப்பெரும் ஒளிவடிவானவன்.-சிவந்த வண்ணம் கொண்டவன்.
ரக்த-எல்லோரிடத்தும் அன்பானவர்
ஸர்வபவோத்பவ- எல்லா உயிர்களும் பொருட்களும் தோன்றுமிடமானவன்.

———

ஆதித்யருக்கு நமஸ்காரங்கள் — ஸுரிய துதி

நக்ஷத்ர-க்ரஹ தாராணாம் அதிபோ விஷ்வ பாவன ஹ: |
தேஜஸாம் அபிதேஜஸ்வீ த்வாதசாத்மன் நமோஸ்து தே || 15

நக்ஷத்ர-க்ரஹ தாராணாம் -அஸ்வினி போன்ற நக்ஷத்ரங்கள்-கிரஹங்கள் -சாதாரண நக்ஷத்திரங்கள்
அதிபோ -ஸ்வாமி
விஷ்வ பாவன -உலகத்தை ஸ்தாபித்து போஷிப்பவர்
தேஜஸாம் அபி-அக்னி போன்ற தேஜஸ்ஸு பதார்த்தங்களுக்குள்
தேஜஸ்வீ –மிக்க பரஞ்சோதி யானவனே
த்வாதசாத்மன் -பன்னிரண்டு மூர்த்தி யுடையவன்
நமோஸ்து தே-உமக்கு நமஸ்காரம்

வானில் ஒளிவீசும் பொருட்களுக்கெல்லாம் பால் வெளிக்கும் தலைவர். அவரே அண்டத்தின் வடிவம்.
ஒளி வீசுபவர்களுக்கெல்லாம் ஒளியானவன் பன்னிரெண்டு உருவில் ஒளி மயமானவரே நமஸ்காரம்.

பன்னிரண்டு மூர்த்திகளின் பெயர்கள்
இந்திரன், தாதா , பகன், பூஷா, மித்ரன், வருணண் அர்யமான், அர்சிஸ், விவஸ்வான், த்வஷ்டா, சவிதா – விஷ்ணு.

————–

நம: பூர்வாய கிரயே பச்சி-மா-த்ரயே நம ஹ: |
ஜ்யோதிர் கணாணாம் பதயே தினாதிபதயே நம ஹ: || 16-

பூர்வாய–கிழக்குத் திக்கில் உள்ள
நம: கிரயே -மலையில்-உதய கிரியில் = இருக்கும் உமக்கு நமஸ் காரம்
பச்சி-மா-த்ரயே நம ஹ: |-மேற்குத் திக்கில் உள்ள மலையில் -அஸ்தமந கிரியில் -இருக்கும் உமக்கு நமஸ் காரம்
ஜ்யோதிர் கணாணாம் பதயே -ஒளி களின் கூட்டங்களுக்குத் தலைவராயும்
தினாதிபதயே நம–பகலுக்கு அதிபதி யுமான உமக்கு நமஸ்காரம்

வணங்குகிறேன் உதிப்பவரே உதயத்தை தருபவரே மறைபவரே நிறைவை தருபவரே வணக்கம்.
ஓளிர் தன்மை படைத்தவர்களுக்கு அதிபதியே
ஒவ்வொரு நாளின் அதிபதியே வணக்கம்.
வணங்குகிறேன் கிழக்கு மலையில் உதிப்பவரே மேற்கு திசையில் மறைபவரே வணக்கம்.

———–

ஜயாய ஜய பத்ராய ஹர்யஷ்வாய நமோ நம ஹ: |
நமோ நம-ஸஹஸ்ராம்சோ ஆதித்யாய நமோ நம ஹ: || 17

ஜயாய -ஜய சீலரும்
ஜய பத்ராய -ஜயம் மங்களம் இவற்றை அளிப்பவராயும்
ஹர்யஷ்வாய -பச்சை குதிரை யுடைய வராயும்
நமோ நம ஹ: |-உமக்கு நமஸ்காரம்
நமோ நம-ஸஹஸ்ராம்சோ –ஆயிரம் கிரணங்களை யுடையவரான உமக்கு நமஸ்காரம்
ஆதித்யாய நமோ நம ஹ:-அதிதியின் புதல்வரான உமக்கு நமஸ்காரம்
மீ மிசை ஆதார அதி சயம்

வெற்றி வடிவானவருக்கு, வெற்றியின் மங்களங்களை தருபவருக்கு நமஸ்காரம்.
பச்சை குதிரையை -வெற்றியை – வளத்தை உடையவருக்கு மீண்டும் மீண்டும் வணக்கங்கள்
ஆயிரம் கதிர்களினால் அணைப்பவருக்கு எல்லை யில்லா அம்சமுள்ளவர் நமஸ்காரம் நமஸ்காரம்.
ஆதி முதல்வனுக்கு நமஸ்காரம் நமஸ்காரம்

————-

நம உக்ராய வீராய சாரங்காய நமோ நம ஹ: |
நம-பத்ம-ப்ரபோதாய மார்த்தண்டாய நமோ நம ஹ: || 18-

நம
உக்ராய -பயங்கரர்
வீராய -பராக்ரமம் யுடையவர்
சாரங்காய -வேகமாக செல்பவர் -அரை நிமிஷத்தில் -2000 யோஜனை தூரம் –வில்லாண டான் -கால சக்ரத்தாய்
நமோ நம ஹ: |
நம-
பத்ம-ப்ரபோதாய –தாமரையை மலரச் செய்கிற
மார்த்தண்டாய -எல்லா வற்றை யும் அழித்து மீண்டும் உண்டு பண்ணுகிற
நமோ நம ஹ

கடுமையானவருக்கு (உக்ரம்) வீரருக்கு வணக்கம். சீரானவர்க்கும் தடைகளற்றவனுக்கு நமஸ்காரம்
பல வண்ண கதிர்கள் ஏவும் வில்லை உடையவருக்கு வணக்கம்.
தாமரைகளை மலரச் செய்பவனுக்கு நமஸ்காரம்
மிக்க வலிமை பொருந்தியவருக்கு – அழிக்கவும் பின் அவற்றை உருவாக்கவும் வல்லமை கொண்ட ஸூர்யனுக்கு நமஸ்காரம்.

————

ப்ரஹ்ம்-ஈஷான்-அச்யுத்-ஈஷாய ஸூர்யாய ஆதித்ய வர்சஸே |
பாஸ்வதே ஸ்ர்வ பக்ஷாய ரௌத்ராய-வபுஷே நம ஹ: || 19 ||

ப்ரஹ்ம்-ஈஷான்-அச்யுத்-ஈஷாய -ப்ரஹ்மாதிகளுக்கும் விஷ்ணு வுக்கும் அதிபதி-அஸ வாதித்யோ ப்ரஹ்மம் -ஸ்ருதி
ஆதித்ய வர்சஸே |-ஆதித்ய ரூப தேஜஸ் உடையவர்
ஸூர்யாய -சர்வருக்கும் ப்ரவ்ருத்திக்கு ஹேது
பாஸ்வதே -பரஞ்சோதி
ஸ்ர்வ பக்ஷாய -ஸர்வ ஸம் ஹர்த்தா -ஆகவே
ரௌத்ராய-அப்பொழுது பயங்கர மான வர்
வபுஷே -திவ்ய ரூபம் உடையவர்
நம ஹ:

ப்ரம்மா, ஷிவன், விஷ்ணு மூவருக்கும் தலைவரே
செயல் வீரனே, ஆதி முதல்வனே எங்கும் வியாபித்து இருக்கும் பேரெழிலானவருக்கு நமஸ்காரம்.
மிகுந்த ஒளி – காந்தி படைத்தவனுக்கு,
எல்லாவாற்றையும் விழுங்குபவனுக்கு – கால உருவானவருக்கு,
ருத்ரனின் உருவங்கொண்டவனுக்கு நமஸ்காரம்.

—————

தமோக்னாய ஹிமக்னாய ஷத்ருக்னாய அமிதாத்மனே |
க்ருதக்னக்னாய தேவாய ஜ்யோதிஷாம்-பதயே நம ஹ: || 20-

தமோக்னாய -இருளை -அஞ்ஞானம் போக்கடிப்பவர்
ஹிமக்னாய -பனியை போக்கடிப்பவர்
ஷத்ருக்னாய –சத்ருக்களை வெல்பவர்
அமிதாத்மனே |-அளவிட முடியாத மஹிமை யுடையவர்
க்ருதக்னக்னாய -செய் நன்றி மறந்தாரைக் கொல்பவர்
தேவாய -ஸ்வயம் ப்ரகாஸம் உடையவர்
ஜ்யோதிஷாம்-பதயே -ஒளி தேஜோ பதார்த்தங்களுக்கு ஸ்வாமி
நம ஹ

இருளை (அறியாமை) அழிப்பவருக்கு
குளிரை அழிப்பவருக்கு, எதிரிகளை அழிப்பவருக்கு, எல்லா உயிர்களுக்கும் ஆத்மாவாய் இருப்பவருக்கு
செய்நன்றி மறந்தவர்களை அழிப்பவருக்கு
ஒளி வீசுபவரே
பிரபஞ்சத்தின் மூலம் – ஒளிகளுக்கெல்லாம் தலைவருக்கு நமஸ்காரம்

————-

தப்த சாமி கராபாய வஹ்னயே விஷ்வகர்மனே |
நம(ஸ்) தமோ-(அ)பினிக்னாய ருசயே லோக ஸாக்ஷினே || 21 ||

தப்த சாமி கராபாய -உருக்கப்பட்ட தங்கம் போல் ஒளிப்பிழம்பானவர்க்கு,
வஹ்னயே -அக்னி ஸ்வரூபம்-ஹவிஸை வஹிப்பவர்
விஷ்வகர்மனே |-உலகம் படைப்பவர்
நம(ஸ்)
தமோ-(அ)பினிக்னாய -இருள் அஞ்ஞானம் போக்கடிப்பவர்
ருசயே -பிரகாசிப்பவர்
லோக ஸாக்ஷினே-உலகோர் கர்மாக்களு க்கு ஸாஷி பூதர்

உருக்கப்பட்ட தங்கம் போல் ஒளிப்பிழம்பானவர்க்கு,
தீ வடிவானவருக்கு -அணைத்தையும் எரிப்பவர்,
உலகத்தை படைத்தவருக்கு- அதன் அணைத்து செயல்களுக்கும் காரகர்,
இருளை நீக்குபவருக்கு,
உலகத்தில் ஒளியை எல்லாம் உடையவருக்கு, உலக சாட்சியானவருக்கு நமஸ்காரம்.

————-

நாச-யத்யேஷ வை-பூதம் ததேவ-ஸ்ருஜதி ப்ரபு ஹு: |
பாயத்யேஷ தபத்யேஷ வர்ஷத்யேஷ கபஸ்திபி ஹி: || 22

யேஷ வை–இவரே
பூதம் -உலகத்தை
நாச-யத்-அழிக்கிறார்
ப்ரபுர் ஏவ -ஸர்வ நியா மகர்
மீண்டும்
ததேவ-ஸ்ருஜதி -படைக்கிறார்
கபஸ்திபி-கிரணங்களால்
ஹு: |
பாயதி -யேஷ -இவரே உலர்த்து கிறார்
தபத்யேஷ -இவரே தபிக்கச் செய்கிறார்
வர்ஷத்யேஷ ஹி:-இவரே மழை பெய்யச் செய் கிறார்

உயிர்களை எல்லாம் அழிக்க வல்லவரும் அவரே. அவருக்கு நமஸ்காரம்.
அவரது அவற்றை இவனே பிறப்பிக்கிறான் இறைவன் இவனே
இவனே காக்கிறான்
தன்னுடைய ஒளி பொருந்திய கதிர்களால் இவனே வெயிலாக காய்கிறான். மழையாகப் பொழிகிறான்

————-

ஏஷ-ஸுப்தேஷு ஜாகர்த்தி பூதேஷு பரிநிஷ்தித ஹ: |
ஏஷ-ஷேவாக்னி-ஹோத்ரம் ச பலம் சைவாக்னி ஹோத்ரிணாம் || 23-

ஏஷ-
ஸர்வே ஷு
பூதேஷு-பிராணி கள்
ஸுப்தேஷு –தூங்கும் போதும்
ஜாகர்த்தி
பரிநிஷ்தித ஹ: |-எங்கும் வியாபித்து விழித்துக் கொண்டும்
ஏஷ-ஷேவாக்னி-ஹோத்ரம் -இவரே அக்னி ஹோத்ர ரூபி யாகவும்
ச பலம் சைவாக்னி ஹோத்ரிணாம்-அக்னி ஹோத்ரம் செய்பவர்களுக்கு பல மாகவும் -பலம் கொடுப்பவர் ஆகவும்

ஸூர்ய பகவான் உலகத்து எல்லா உயிர்களின் இருதயத்தில்-ஜீவனாக இருந்து விழிப்பாக நிலை நிற்கிறான்.
இவர் தான் வேள்வித் தீ. தீ வழிபாட்டின் வடிவம் – வேள்வியின் நிவேதனமும் பலனும் அவரே.

———-

வேதாஸ்-ச க்ரத-வஷ்சைவ க்ர்தூனாம் பலம்-ஏவ ச |
யானி-க்ருத்யானி லோகேஷு ஸர்வ ஏஷ ரவி: ப்ரபு ஹு: || 24-

வேதாஸ்-ச -33 கோடி -யாக தேவதை களாகவும்
க்ரத-வஷ்சைவ -ஸோமம்-அஸ்வ மேதம் முதலிய யாகாதி களாகவும்
க்ர்தூனாம் பலம்-ஏவ ச |-யாகங்களின் பலம் ஆகவும்
லோகேஷு- எல்லா உலகங்களிலும்
யானி -எந்த எந்த
க்ருத்யானி –கார்ங்கள் இருக்கின்றன -ரித்விக் யஜமான் சமித்து ஆஜ்யம் பசு போன்ற -அவை களுக்கு
ஸர்வ ஏஷ ரவி: -ஸர்வ ஆத்மா வான இந்த
ரவி ப்ரபு ஹு–ஸூர்ய பகவானே நியாமகனாய் இருக்கிறார்

வேதங்களின் சாரத்தில் இருக்கிறார்.
தத்தம் கடமைகளாகவும் – சடங்குகளாகவும்
உண்மையுடன் செய்பவர்களுக்கு,சடங்குகளின் கடமையின் பலனாக இருக்கிறார்.
என்ன என்ன செயல்கள் செய்யப்படுகின்றனவோ இவ்வுலகத்தில்
அவை எல்லாமும் ஒளி படைத்தவன் அவரே இறைவன்-தலைவன்

——————-

ஆதித்ய ஹ்ருதய ஸ்தோத்ரத்தின் பெருமைகள்: பலஸ்ருதி

ஏனம் ஆபத்ஸு க்ருச்ரேஷு காந்தாரேஷு பயேஷு ச |
கீர்த்தயன் புருஷ: கச்சிந்-நாவ-ஸீததி ராகவ || 25-

ராகவ
புருஷ: கச்சிந்-ஒரு புருஷன்
ஆபத்ஸு-ஆபத்து களிலும்
க்ருச்ரேஷு -கஷ்டங்களிலும்
காந்தாரேஷு –காடுகளிலும்
பயேஷு ச |-பயங்களிம்
ஏனம் -இந்த ஸ்தோத்ரத்தை
கீர்த்தயன் – கீர்த்தநம் பண்ணுவானோ -அவன்
நாவ-ஸீததி -வருத்தம் அடைய மாட்டான்

ராகவா ரவி, எல்லாவித ஆபத்து நேரங்களிலும்(உடல், மன, ஆன்மீக காரணிகளால்), அவமானத்திலோ,
பயமுறுத்தும் நேரங்களிலும், துன்பங்களிலும் வழிபடுவோரை எப்போதும் கைவிடமாட்டான்.
இந்த ஸ்தோத்திரத்தை ஜபித்தால், நிச்சயமாக அவற்றிலிருந்து மீண்டு வருவார்கள்.

————–

பூஜ-யஸ்-வைனம் ஏகாக்ரோ: தேவதேவம் ஜகத்பதிம் |
ஏதத் த்ரிகுணிதம் ஜப்த்வா யுத்தேஷு விஜயி ஷ்யஸி || 26-

ஏகாக்ரோ:ஒரே விஷயத்தில் மனப் பற்று உடையவனாய்
தேவதேவம் -தேவர் களுக்கு எல்லாம் தேவனான வனாய்
ஜகத்பதிம் |-எல்லா உலகங்களுக்கும் பிரபு ஸ்வாமி யானவனாய்
ஏனம் -இந்த பகவானை
பூஜ யஸ்ய -பூஜை செய் வாயாக
ஏதத் -இந்த ஸ்தோத்ரத்தை
த்ரிகுணிதம் –மூன்று தடவை
ஜப்த்வா -ஜபித்து
யுத்தேஷு -யுத்தங்களிலே
விஜயி ஷ்யஸி-ஜெயிக்கப் போகிறாய்

ஒருமிக்க மனதுடன் வணங்குவாய்
தேவர்களுக்கும் தெய்வமானவனை உலகத்தின் நாதரை
இந்த ஆதித்ய ஹ்ருதயத்தை மும் முறை ஜபித்து
போரில் கண்டிப்பாக வெற்றி அடைவாய்.

——————–

இராமர் மந்திரம் ஓதி மனத் தெளிவு பெறுதல்

அஸ்மின் க்ஷணே மஹா பாஹோ ராவணம் த்வம் வதிஷ்யஸி|
ஏவம் உக்த்வா ததா அகஸ்த்யோ ஜகாம-ச-யதா-கதம் || 27

மஹா பாஹோ-நீண்ட தடக்கையனே
த்வம் -நீர்
அஸ்மின் -இந்த
க்ஷணே -நேரத்திலேயே -நிமிஷத்திலேயே
ராவணம் வதிஷ்யஸி|–ராவணனைக் கொல்லுவாய்
ததா -அப்போது
அகஸ்த்யோ
ஏவம் உக்த்வா -சொல்லி
ஜகாம-ச-யதா-கதம்-வந்த வழியே போனார்

இந்த நொடியிலேயே, வலிமையான தோள்கள் உள்ளவனே,
இராவணனை நீ வதைப்பாய்
என்று கூறி அங்கிருந்த அக்ஸ்த்ய முனிவர்
எப்படி வந்தாரோ அப்படியே சென்றார்

————–

ஏதஸ் ஸ்ருத்வா மஹா தேஜா நஷ்ட சோகோ-பவத்-ததா |
தாரயாமாஸ- ஸுப்ரிதோ ராகவ: ப்ரய-தாத்மவான்(உ) || 28-

ததா |– அப் பொழுது
மஹா தேஜா-அதிக தேஜஸ் ஸூ யுடைய
ராகவ:
ஏதஸ் -இந்த வார்த்தையை
ஸ்ருத்வா –கேட்டு
நஷ்ட சோகோ-ஒழிந்த மனக் கவலையை யுடையராய்
அ பவத்-ஆனார்
ஸுப்ரிதோ-மிகவும் ஸந்தோஷம் கொண்டு
ப்ரய-தாத்மவான்(உ)-தெளிந்த மனம் உடையவராய்
தாரயாமாஸ- தரித்தார்

அருள் மொழிகளைக் கேட்ட, மிகுந்த தேஜஸ்வி ராகவன்
அப்போதே கவலைகள் எல்லாம் நீங்கியவன் ஆனான்
நோக்கத்தில் உறுதியுள்ளவனும், மிகவும் மகிழ்ந்தவனும் ஆனான் -முயற்சிகளில் சிறந்தவன் ஆன இராகவன்

—————

ஆதித்யம் ப்ரேக்ஷ்ய ஜப்த்வா து பரம் ஹர்ஷ-மவாப்தவான் (உ) |
த்ரிர்-ஆசம்ய ஷுசிர்பூத்வா தனுராதயாய வீர்யவான் (உ) || 29-

வீர்யவான் (உ)-வீர தீர பராக்ரமம் யுடைய ராமர்
த்ரிர்-ஆசம்ய–மூன்று தடவை ஆசமனம் செய்து
ஷுசிர்-பரிஸூத்தராக
பூத்வா-ஆதி
ஆதித்யம் ப்ரேக்ஷ்ய -ஸூர்யனைப் பார்த்து
த்ரி ஜப்த்வா –மூன்று தடவை ஜபித்து
தனுராதயாய-வில்லை எடுத்து
பரம் ஹர்ஷம் -அ வாப்தவான் (உ) |மிகவும் ஸந்தோஷம் அடைந்தார்

ஆதித்யனைப் பார்த்துக் கொண்டே (ஸ்தோத்ரத்தை) ஜபித்து
மிகவும் மேலான மகிழ்ச்சியை அடைந்தான்
மும்முறை ஆசமனீயம் செய்து உடலை பரிசுத்தம் செய்துகொண்டு, வில்லை ஏந்தினான் வீரத்தில் சிறந்தவன்

————-

ராவணம் ப்ரேக்ஷ்ய ஹ்ருஷ்டாத்மா யுத்தாய ஸமுபா-கமத் (உ) |
ஸர்வ யத்னேன-மஹதா வதே-தஸ்ய த்ருதோ-பவது || 30

ராவணம் ப்ரேக்ஷ்ய -ராவணனைப் பார்த்து
ஹ்ருஷ்டாத்மா -ஸந்தோஷம் கொண்ட திரு உள்ளம் யுடையவராய்
யுத்தாய ஸமுபா-கமத் (உ) |யுத்தத்தின் பொருட்டு கிட்டே நெருங்கினார்
மஹதா-மிகுந்த
ஸர்வ யத்னேன-எல்லாவித முயற்சியாலும்
தஸ்ய-அந்த ராவணனுடைய
வதே- ஸம்ஹாரத்தில்
த்ருதோ-பவது-நிச்சயம் கொண்டவராக ஆனார்

இராவணன் போர் செய்யும் நோக்கத்துடன் வருவதை பார்த்து
மேலான எல்லா முயற்சிகளுடனும்
அவனை (இராவணனை) வதைப்பதற்கான உறுதியைக் கொண்டான் (இராகவன்).

—————–

சூரியன் ஆசி வழங்குதல்

அத-ரவி: ரவதத் நிரீக்ஷ்ய ராமம் முதித மனா: பரமம் ப்ரஹ்ருஷ்யமான ஹ: |
நிசி-சரபதி ஸம்க்ஷயம் அன்கி-விதித்வா ஸுர கண மத்ய கதோ வசஸ்த்-வ்ரேதி || 31

அத-ரவி: –பிறகு ஸூர்யன்
நிரீக்ஷ்ய ராமம் –ராமரைப் பார்த்து
முதித மனா: -ஸந்தோஷம் கொண்ட மனமுடையவராய்
பரமம் ப்ரஹ்ருஷ்யமான : |மிகவும் களிப்புற்று
நிசி-சரபதி ஸம்க்ஷயம் -ராக்ஷஸ அதிபதியான ராவணனை ஸம்ஹரிப்பதை
அன்கி-விதித்வா -தெரிவித்து -அனுக்ரஹித்து
ஸுர கண மத்ய கதோ -தேவ கணங்களின் நடுவே இருந்து கொண்டு
த்வர -ராவண வதத்தைக் குறித்து துரிதப்படும்
இதி வசஸ் அப்ரவீத் -என்ற வார்த்தையைச் சொன்னார்

அப்போது ரவி ‘விரைவில் நடத்துவாய் இராமா’ என்று மிகவும் மகிழ்ந்த மனத்துடன்,
மிக உயர்ந்த திருப்தியை அடைந்தவனாக, இருட்டில் உழல்பவர்களின் முதல்வனின்
அழிவு நேரம் நெருங்கியதை அறிந்து, தேவர்களின் மையத்திலிருந்து அருளினார்.

———-

முடிவு துதி

பானோ பாஸ்கர மார்தாண்ட ச் சண்ட ரஸ்மை திவாகர
ஆயுர் ஆரோக்யம் ஐஸ்வர்யம் வித்யாம் தேஹி நமஸ்துதே

ராமாயணத்தில் சர்க்க முடிவு

இத்யார்ஷே ஸ்ரீமத் ராமாயணே வால்மீகீயே ஆதிகாவ்யே யுத்த காண்டே
ஆதித்ய ஹ்ருதயம் நாம சப்தோத்தரசததம: சர்க்க: ||

இவ்வாறு வால்மீகியின் ஆதிகாவியம் ஸ்ரீமத் ராமாயணத்தில் யுத்த காண்டத்தில்
ஆதித்ய ஹிருதயம் எனப்படும் நூற்றேழாவது சர்க்கம் நிறைவடைந்தது.

——————

ஸ்ரீ ராம மங்களம் -ஸ்ரீ மா முனிகள் —

ஸ்ரீ ராமர் மந்திரம்

ஆபதாமபஹர்த்தாரம் தாதாரம் ஸர்வஸம்பதாம்
லோகாபிராமம் ஸ்ரீராமம் பூயோ பூயோ நமாம்யஹம்

ஆர்த்தா நாமார்த்தி ஹந்தாரம் பீதானாம் பீதநாசனம்
த்விஷதாம் காலதண்டம் தம் ராமச்சந்த்ரம் நமாம்யஹம்

ராமாய ராமபத்ராய ராமசந்த்ராய வேதஸே ரகுநாதாய நாதாய ஸீதாய பதயே நம:

———

ஸ்ரீ ராம மங்கள ஸ்தோத்ரம்-ஸ்ரீ மா முனிகளே அருளிச் செய்த மங்கள ஸ்லோகங்கள் என்பர்

ஸ்ரீ ராம நாமமே தாரக மந்திரம் . ஸகல சௌபாக்கியங்களையும் அளிக்கும் மந்திரம்.
மோட்சத்திற்கு வழி காட்டி. இதை சொல்லும் போதெல்லாம் மங்களமே உண்டாகும்.

——-

மங்களம் கோசலேந்த்ராய மஹ.நீய குணாப்தயே
சக்ரவர்த்தி த.நுஜாய ஸார்வ பௌமாய ம்ங்களம் –1-

மங்களம்
கோசலேந்த்ராய -கோசல தேச அரசருக்கு
மஹ.நீய குணாப்தயே -கல்யாண குணக்கடலான பெருமாளுக்கு
சக்ரவர்த்தி த.நுஜாய -சக்ரவர்த்தி திருமகனுக்கு
ஸார்வ பௌமாய -ஸார்வ பவ்மனுக்கு
மங்களம்

வேத வேதாந்த வேத்யாய மேக ஸ்யாமல மூர்த்தயே
பும்ஸாம் மோஹந ரூபாய புண்ய ஸ்லோகாய மங்களம் -2-

வேத வேதாந்த வேத்யாய -வேதங்களாலும் உபநிஷத்துக்களாலும் அறியப்படத் தக்கவனாயும்
மேக ஸ்யாமல மூர்த்தயே -நீல மேக ஸ்யாமள திவ்ய மங்கள விக்ரஹ யுக்தனுக்கு
பும்ஸாம் மோஹந ரூபாய -கண்டவர் தம் மனம் வழங்கும் படி -ஸித்த அபஹாரியான வனுக்கு
புண்ய ஸ்லோகாய -புண்யம் அளிக்கும் ஸ்தோத்ர வாசயனுக்கு
மங்களம் –

———

விஸ்வாமித்ராங்காய மிதிலா நகரீபதே:
பாக்யாநாம் பரிபாகாய பவ்ய ரூபாய மங்களம் –3-

விஸ்வாமித்ராங்காய -விச்வாமித்ர மகரிஷிக்கு அந்தரங்க சிஷ்யனுக்கு
மிதிலா நகரீபதே: பாக்யாநாம் பரிபாகாய -மிதிலா தேச ஜனக மஹாராஜருக்கு பரிபாக பாக்யமானவருக்கு
பவ்ய ரூபாய -பவ்ய திவ்ய மங்கள விக்ரஹ யுக்தனுக்கு
மங்களம்

—————

பித்ரு பக்தாய ஸததம் ப்ராத்ருபி: ஸஹ ஸீதயா
நந்திதாகில லோகாய ராம பத்ராய மங்களம் –4-

பித்ரு பக்தாய ஸததம் -எப்பொழுதுமே சக்கரவர்த்திக்கு உகப்பாக நடப்பவனும்
ப்ராத்ருபி: ஸஹ ஸீதயா நந்திதாகில லோகாய -அகில உலகில் உள்ளோரையும் தனது
ஸஹோதர்களுடனும் பத்னியுடனும் ஆனந்திப்பவனுமான
ராம பத்ராய மங்களம் –

—————-

த்யக்த ஸாகேத வாஸாய சித்ர கூட விஹாரிணே
ஸேவ்யாய ஸர்வயமி நாம் தீரோதராய மங்களம் –5-

த்யக்த ஸாகேத வாஸாய -அயோத்யா வாஸத்தையே துறந்து
சித்ர கூட விஹாரிணே -மநோ ஹராமான சித்ரகூடத்திலே இஷ்டமாகத் திரிந்து
ஸேவ்யாய ஸர்வயமி நாம் -ஸர்வ ரிஷிகளுக்கும் ஸேவை புரிந்து மகிழ்பவனாயும்
தீரோதராய -உதார தீர ஸ்திரமாய் இருப்பவனுக்கு
மங்களம்

————

சௌமித்ரிணா ச ஜாநக்யா சாப பாணாஸி தாரிணே
ஸம் ஸேவ்யாய ஸதா பக்தாய ஸ்வாமிநே மம மங்களம் –6-

சௌமித்ரிணா ச ஜாநக்யா -இளைய பெருமாள் ஜானகிப்பிராட்டி யுடன்
சாப பாணாஸி தாரிணே -சார்ங்க பாணியாயும் -அஸி -என்னும் கட்கத்தையும் தரித்து உள்ளவனாயும்
ஸம் ஸேவ்யாய ஸதா பக்தாய -அகில ஜகத்தும் பக்தி செய்யும் ஸ்வாமியுமான
ஸ்வாமிநே மம -அஸ்மத் ஸ்வாமியுமான பெருமாளுக்கு
மங்களம்

———-

தண்ட காரண்ய வாஸாய கண்டிதாம் அமர சத்ரவே
க்ருத்ர ராஜாய பக்தாய முக்தி தாயாஸ்து மங்களம் –7-

தண்ட காரண்ய வாஸாய – தண்டகாரண்யத்தில் உகந்து வாஸம் செய்து அருளினவனாயும்
கண்டிதாமர சத்ரவே -தேவ சத்ருக்களை நிரஸித்து அருளினவனாயும்
க்ருத்ர ராஜாய பக்தாய முக்தி தாயாஸ்து -ஜடாயு பெரிய உடையோருக்கு கச்ச என்று மோக்ஷம் அருளினவனாயும்
மங்களம்

———–

ஸாதரம் சபரீ தத்த பல மூலாபிலாஷிணே
ஸௌலப்ய பரிபூர்ணாய ஸத்வோத்ரிக்தாய மங்களம் –8-

ஸாதரம் சபரீ தத்த பல மூலாபிலாஷிணே -சபரி தந்த கனிகளை ஆதாரம் அபிலாஷை யுடன்
அமுது செய்து அருளினவனாயும்
ஸௌலப்ய பரிபூர்ணாய -பரிபூர்ண சவ் சீலவானாயும்
ஸத்வோத்ரிக்தாய -உத்க்ருஷ்ட ஸூத்த ஸத்வ மயனானவனாயும்
மங்களம் –

—————-

ஹநுமத் ஸமவேதாய ஹரீசா பீஷ்டதாயிநே
வாலி ப்ரமதநாயாஸ்து மஹா தீராய மங்களம் –9-

ஹநுமத் ஸமவேதாய -திருவடியுடன் ஒன்றறக் கலந்து மகிழ்ந்தவனாயும்
ஹரீசா பீஷ்டதாயிநே-ஸூக்ரீவ மஹா ராஜருக்கு தயை அருளி அபீஷ்ட பல பிரதனானவனாயும்
வாலி ப்ரமதநாயாஸ்து -வாலிக்கு வீட்டு அரசு அருளியவனாயும்
மஹா தீராய -மஹா வீர தீர பலாக்ரமனாயும் உள்ள பெருமாளுக்கு
மங்களம் —

———-

ஸ்ரீமதே ரகுவீராய ஸேதுல்லங்கித ஸிந்தவே
ஜித ராக்ஷஸ ராஜாய ரண தீராய மங்களம் –10-

ஸ்ரீமதே ரகுவீராய -ரகுகுலச் செல்வனாயும்
ஸேதுல்லங்கித ஸிந்தவே -சேது கட்டச் செய்து அருளி கடலைக் கடந்தவனாயும்
ஜித ராக்ஷஸ ராஜாய -ராக்ஷஸ அரசனை வென்றவனாயும்
ரண தீராய-பாட் வீரனாயுமான பெருமாளுக்கு
மங்களம்

———–

ஆஸாத்ய நக்ரீம் திவ்யா மபிஷிக்தாய ஸீதயா
ராஜாதி ராஜ ராஜாய ராம பத்ராய மங்களம் –11-

ஆஸாத்ய நகரீம் திவ்யம் -திரு அயோத்யைக்கு மீண்டு எழுந்து அருளி
அபிஷிக்தாய ஸீதயா -பிராட்டி யுடன் திருமுடி சூடி
ராஜாதி ராஜ ராஜாய -ராஜாதி ராஜனான பெருமாளுக்கு
ராம பத்ராய
மங்களம்

————–

மங்களாசாஸந பரைர் மதாசார்ய புரோகமை:
ஸர்வைச்ச பூர்வைராசார்யை: ஸத்க்ருதாயாஸ்து மங்களம்–12-

மங்களாசாஸந பரைர் -மங்களா ஸாஸன பரர்களான பூர்வர்களாலும்
மதாசார்ய புரோகமை:-அஸ்மத் ஆச்சார்யர் தொடக்கமானவர்களாலும்
ஸர்வைச்ச பூர்வைராசார்யை: -ஸர்வ பூர்வர்களாலும்
ஸத்க்ருதாயாஸ்து மங்களம்-ஸர்வ ஸத் கிருத்துக்களாலும்
மங்களா சாஸனமே பரம புருஷார்த்தம் என்று கொள்ளப்பட்டு
அடியேனுக்கும் அவ்வாறே மங்களா சாசனம் செய்யப் பணித்தார்களே

————

ஸ்ரீ ராம மங்களம்

ஸகல சௌபாக்கியங்களையும் அளிக்கும் மந்திரம்.

ஸ்ரீமத் வால்மீகி ராமாயண பாராயணத்தின் மங்கள ஸ்லோகங்கள் —

ஸ்வஸ்தி ப்ரஜாப்⁴ய꞉ பரிபாலயந்தாம்ʼ ந்யாய்யேன மார்கே³ண மஹீம்ʼ மஹீஶா꞉ .
கோ³ப்³ராஹ்மணேப்⁴ய꞉ ஶுப⁴மஸ்து நித்யம்ʼ லோகா꞉ ஸமஸ்தா꞉ ஸுகி²னோ ப⁴வந்து .. 1 ..

காலே வர்ஷது பர்ஜன்ய꞉ ப்ருʼத்²வீ ஸஸ்யஶாலினீ .
தே³ஶோ(அ)யம்ʼ க்ஷோப⁴ரஹிதோ ப்³ராஹ்மணா꞉ ஸந்து நிர்ப⁴யா꞉ .. 2 ..

அபுத்ரா꞉ புத்ரிண꞉ ஸந்து புத்ரிண꞉ ஸந்து பௌத்ரிண꞉ .
அத⁴னா꞉ ஸத⁴னா꞉ ஸந்து ஜீவந்து ஶரதா³ம்ʼ ஶதம் .. 3 ..

சரிதம்ʼ ரகு⁴நாத²ஸ்ய ஶதகோடிப்ரவிஸ்தரம் .
ஏகைகமக்ஷரம்ʼ ப்ரோக்தம்ʼ மஹாபாதகனாஶனம் .. 4 ..

ஶ்ருʼண்வன் ராமாயணம்ʼ ப⁴க்த்யா ய꞉ பாத³ம்ʼ பத³மேவ வா .
ஸ யாதி ப்³ரஹ்மண꞉ ஸ்தா²னம்ʼ ப்³ரஹ்மணா பூஜ்யதே ஸதா³ .. 5 ..

ராமாய ராமப⁴த்³ராய ராமசந்த்³ராய வேத⁴ஸே .
ரகு⁴நாதா²ய நாதா²ய ஸீதாயா꞉ பதயே நம꞉ .. 6 ..

யன்மங்க³லம்ʼ ஸஹஸ்ராக்ஷே ஸர்வதே³வநமஸ்க்ருʼதே .
வ்ருʼத்ரநாஶே ஸமப⁴வத்தத்தே ப⁴வது மங்க³ளம் .. 7 ..

யன்மங்க³லம்ʼ ஸுபர்ணஸ்ய வினதா அகல்பயத் புரா .
அம்ருʼதம்ʼ ப்ரார்த²யானஸ்ய தத்தே ப⁴வது மங்க³ளம் .. 8 ..

மங்க³லம்ʼ கோஸலேந்த்³ராய மஹனீயகு³ணாப்³த⁴யே .
சக்ரவர்திதனூஜாய ஸார்வபௌ⁴மாய மங்க³ளம் .. 9 ..

அம்ருʼதோத்பாத³னே தை³த்யான் க்⁴னதோ வஜ்ரத⁴ரஸ்ய யத் .
அதி³திர்மங்க³லம்ʼ ப்ராதா³த்தத்தே ப⁴வது மங்க³ளம் .. 10 ..

த்ரீன் விக்ரமான் ப்ரக்ரமதோ விஷ்ணோரமிததேஜஸ꞉ .
யதா³ஸீன்மங்க³லம்ʼ ராம தத்தே ப⁴வது மங்க³ளம் .. 11 ..

ருʼதவ꞉ ஸாக³ரா த்³வீபா வேதா³ லோகா தி³ஶஶ்ச தே .
மங்க³லானி மஹாபா³ஹோ தி³ஶந்து ஶுப⁴மங்க³ளா: .. 12 ..

காயேன வாசா மனஸேந்த்³ரியைர்வா பு³த்³த்⁴யாத்மனா வா ப்ரக்ருʼதே꞉ ஸ்வபா⁴வாத் .
கரோமி யத்³யத் ஸகலம்ʼ பரஸ்மை நாராயணாயேதி ஸமர்பயாமி .. 13 ..

———————————-

மங்களம் கோஸலேந்த்ராய மஹநீய குணாப்தயே
சக்ரவர்த்தி தநூஜாய ஸார்வபௌமாய மங்களம்

வேதவேதாந்தவேத்யாய மேகஸ்யாமல மூர்த்தயே
பும்ஸாம் மோஹநரூபாய புண்யஸ்லோகாய மங்களம்

விஸ்வாமித்ராந்தரங்காய மிதிலா நகரீபதே:
பாக்யாநாம் பரிபாகாய பவ்யரூபாய மங்களம்

பித்ருபக்தாய ஸததம் ப்ராத்ருபி: ஸஹ ஸீதயா
நந்திதாகில லோகாய ராமபத்ராய மங்களம்

த்யக்த ஸாகேதவாஸாய சித்ரகூட விஹாரிணே
ஸேவ்யாய ஸர்வயமிநாம் தீரோதாராய மங்களம்

ஸௌமித்ரிணா ச ஜாநக்யா சாபபாணாஸி தாரிணே
ஸம்ஸேவ்யாய ஸதா பக்த்யா ஸ்வாமிநே மம மங்களம்

தண்டகாரண்ய வாஸாய கண்டிதாமர ஶத்ரவே
க்ருத்ரராஜாய பக்தாய முக்திதாயாஸ்(அ)ஸ்து மங்களம்

ஸாதரம் ஸபரீதத்த பலமூலாபிலாஷிணே
ஸௌலப்ய பரிபூர்ணாய ஸத்வோத்ரிக்தாய மங்களம்

ஹநூமத் ஸமவேதாய ஹரீஶாபீஷ்டதாயிநே
வாலிப்ரமதநாயா (அ)ஸ்து மஹாதீராய மங்களம்

ஸ்ரீமதே ரகுவீராய ஸேதூலங்கித ஸிந்தவே
ஜிதராக்ஷஸ ராஜாய ரணதீராய மங்களம்

ஆஸாத்ய நகரீம் திவ்யா மபிஷிக்தாய ஸீதயா
ராஜாதிராஜ ராஜாய ராமபத்ராய மங்களம்

மங்களாஶாஸந பரைர் மதாசார்ய புரோகமை:
ஸர்வைஸ்ச பூர்வைராசார்யை: ஸத்க்ருதாயாஸ்து மங்களம்

———–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ அகஸ்திய மகரிஷி திருவடிகளே சரணம்
ஸ்ரீ சீதாப் பிராட்டி லஷ்மண பரத சத்ருக்ந திருவடி சமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ எறும்பி அப்பா அருளிச் செய்த -ஸ்ரீ அம்ருத பலா வளி என்னும் ஸ்ரீ கடிகாசல ந்ருஸிம்ம ஸ்தோத்ரம் —

February 14, 2023

ஸ்ரீ எறும்பியப்பாவின் தனியன் :

ஸௌம்ய ஜாமாத்ரு யோகீந்த்ர சரணாம்புஜ ஷட்பதம் |
தேவராஜ குரும் வந்தே திவ்ய ஜ்ஞான ப்ரதம் சுபம் ||

ஸெளம்ய ஜாமாத்ரு யோகீந்த்ர – அழகிய மணவாளமாமுனிகளின்‌, சரணாம் புஜ ஷட்பதம்‌ – திருவடித்‌ தாமரைகளில்‌ வண்டு போல்‌ படிந்து ரஸாநுபவம்‌ செய்பவரும்‌, திவ்ய ஜ்ஞாந ப்ரதம்‌ – தம்மை யண்டினவர்க்கு உயர்ந்த ப்ரஹ்ம ஜ்ஞாநத்தை அளிப்பவரும்‌, சுபம்‌ – அறிவினாலும்‌ அனுஷ்டாநத்தாலும்‌ சோபிப்பவருமான, தேவராஜ குரும்‌ – தேவராஜ குருவென்னும்‌ எறும்பி யப்பாவை.

இவர் சர்வலோக சரண்யரின் திருக்குமாரர் -தேவராஜன் இயல் பெயர் –

ஆராதன பெருமாள் சக்ரவர்த்தி திரு மகன்

இப்பொழுது நம் கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருமாளிகையில் சேவிக்கலாம்

திருநக்ஷத்ரம்: ஐப்பசி ரேவதி

அவதார ஸ்தலம்: எறும்பி

ஆசார்யன்: அழகிய மணவாள மாமுனிகள்

சிஷ்யர்கள்: (திருமகனார்) பெரிய அப்பா, சேனாபதி ஆழ்வான்

நூல்கள்: பூர்வ தினசர்யா, உத்தர தின சர்யா, வரவரமுநி சதகம், விலக்ஷண  மோக்ஷ அதிகாரி நிர்ணயம், உபதேச ரத்ன மாலையில் கடைசிப் பாசுரம்

கனு அன்று இன்றும் பக்தலோசனன் எறும்பி க்ராமத்துக்கு எழுந்து அருளி சேவை சாதிக்கிறார்
மா முனிகள் இங்கே எழுந்து அருளி இருந்து கால ஷேபம்செய்து அருளினார்
எறும்பி க்ராமத்தையே வட திருவரங்கம் என்றும்
இங்கு உள்ள ஸ்ரீ வைஷ்ணவர்களை -அழகிய மணவாள தாசர்கள் என்றும் திரு நாமம் சாத்தி அருளினார்

இவ் வெறும்பியப்பா மணவாள மா முனிகளின்‌ சிஷ்யாக்ர கண்யர்களான அஷ்டதிக்கஜாசார்யர்களில்‌ ஒருவராவர்‌. இவர்‌ ‘ “தேவராஜகுரு ‘வென்றும்‌ ‘வரதராஜ கவி” என்றும்‌ வழங்கப்படுகிறார்‌. வானமாமலைஜீயர்‌ திருவேங்கடஜீயர்‌, பரவஸ்துபட்டர்பிரான்‌ ஜீயர்‌, கோயில்‌ கந்தாடையண்ணன்‌, எறும்பியப்பா , அப்பிள்ளை, அப்பிள்ளார்‌, ப்ரதிவாதி பயங்கரமண்ணா ஆகிய இவர்கள்‌ “அஷ்டதிக்கஜங்கள்‌ ‘ என்று ப்ரஸித்தர்களாயிருப்பர்‌. “பாராரு மங்கை திருவேங்கடமுனி பட்டர்பிரான்‌ ஆராமம்‌ சூழ் கோயிற்‌ கந்தாடையண்ணன்‌ எறும்பியப்பா ஏராருமப்பிள்ளை அப்பிள்ளார்‌ வாதீபயங்கரரென்‌ பேரார்ந்த திக் கஜஞ் சூழ்‌ வர யோகியைச்‌ சிந்தியுமே‘ – யதீந்த்ர ப்ரவண ப்ரபாவம்

(“முனி என்பதனை முன்னும்‌ பின்னும்‌ கூடக்கூட்டி, பாராரு மங்கை (சிரீவரமங்கல) முனி, திருவேங்கட முனி, பட்டர்பிரான்முனி என்று கூட்டிப்‌ பொருள்‌ கொள்க. “எறும்பியப்பா (எம்பெருமானா।:ககு) வடுக நம்பியைப்‌ போலே தேவுமற்றறியாதே, ஜீயருக்கு (மணவாளமாமுனிகளுக்கு) அத்யந்தம்‌ அபிமதராயிருப்பர்‌” என்று யதீந்த்ர ப்ரவண ப்ரபாவ க்ரந்தம்‌ இவர் பற்றிக் கூறுவது காண்க.
இவர்‌ தாமும்‌, தாம்‌ மணவாளமா, . னிகளின்‌ சிஷ்யரென்பதை, இந்த அம்ருதபலாவளி என்ற ஸ்தோத்திரத்தின்‌ இறுதியான ஸ்லோகத்தில்‌ “பக்த்யா சவ்ம்ய வர கிங்கரோ பஹிதாம்‌ அம்ருதபலாவளிம்‌” (பக்‌தியுடன்‌ மணவாள மாமுனிகளின்‌ தாஸனான அடியேனால்‌ ஸமர்ப்பிக்கப்பட்ட அம்ருதபலாவளி என்ற ஸ்தோத்ரத்தை) என்று அருளிச் செய்துள்ளார் –

————

ஸ்ரீ அம்ருத பலா வளி என்னும் ஸ்ரீ கடிகாசல ந்ருஸிம்ம ஸ்தோத்ரம்-

ஸ்ரீ வேங்கடேச சரணவ் சிரஸீ கரோமி ஸ்மிதாப்ஜ ஸூஹ்ருதவ் தவ்
ப்ருது தரம் அபி பவ ஜலதிம் பிப்தி தராம் யத் ப்ராக ப்ரமாணு–1-மங்கள ஸ்லோகத்துடன் உபக்ரமிக்கிறார்

யத் பராக பரமாணு:- எந்தத் திருவடிகளால்‌ ஒட்டிக்‌ கொண்டிருக்கிற ஒரு சிறு மண் துகள்‌ கூட, ப்ருதுதரம்‌ – மிகப்பெரிதான-. பவ ஜலதிம்‌ – பிறவிக்‌ கடலையும்‌, பிபதிதராம்‌ – அடியோடு குடிக்க (வற்றச்‌ செய்ய) வல்லதோ, தெள – அத்தகைய, ஸ்மிதாப்ஜ ஸுஹ்ருதெள – மலர்ந்த தாமரைகளோடு ஒத்த- ஸ்ரீவேங்கடேச சரணெள திருவேங்கடமுடையானுடைய திருவடிகளை, சிரஸி – (எனது) தலையில்‌, கரோமி வைத்துக்‌ கொள்ளுகிறேன்-

ம முனிகள் திரு உள்ள உகப்புக்காக அவர் கைங்கர்யம் செய்த திரு வேங்கடத்தானையே –
இவர் தான் மா முனிகள் திரு நாமம் கேட்டுக்கொண்டே திருக்கண் விழித்து அருளுகிறார் நித்யமாகவே –

எறும்பியப்பா தாம்‌ இயற்ற நினைத்த “அம்ருதபலாவளி” என்ற கடிகாசல நரஸிம்ஹ ஸ்தோத்ரம்‌ இடையூறேதுமின்றி இனிதே முடிவடைவதற்காகத்‌ தமக்கு இஷ்ட தெய்வமான திருவேங்கடமுடையானுக்கு மங்கள ஸ்லோகமாக முதல்‌ ஸ்லோகத்தை அமைக்கிறார்‌.
நீரைத்‌ தூர்ப்பதற்கு நீரைவிட அதிகமான அளவுடைய மண்‌ தேவைப்படுவது உலகவியல்பு. திருவடியிலுள்ள மிகச்சிறிய மண்துகள்‌ தனது மகிமையினால்‌ ஸம்ஸாரமென்னும்‌ பெருங்கடலையும்‌ தூர்த்து விடுஃன்றதென்பது மிக ஆச்சரியமாகும்‌.

—–

ஸ்ரீத கடிகாசல ஸ்ருங்கம் ஸ்ரீ தல கருணா தரங்கித அபாங்கம்
மனஸி மம உல்லஸ தங்கம் வஸதி மஹ கிமபி வாஸஸா பிங்கம்–2-

ஸ்ரிதகடிகாசலஸ்ருங்கம்‌ – திருக்‌ கடிகைமலையின்‌ சிகரத்தை அடைந்ததும்‌, சீதள கருணாதரங்கித – அபாங்கம்‌ குளிர்ந்த கருணை யலை யெறிகிற கடைக்‌ கண்ணோக்கத்தை யுடையதும்‌, வாஸஸாபிங்கம்‌ – வஸ்த்ரத்தினால்‌ பொன்னிறங்‌ கொண்டதும்‌, உல்லஸத்‌ அங்கம்‌ – மிகவும்‌ விளங்குந்‌ திருமேனியைப்‌ பெற்றதுமான, கிமபி மஹ: – ஒப்பற்ற தேஜஸ்ஸானது, மம மநஸி வஸதி – எனது மனதில்‌ உறைகின்றது.

திருக்கடிகை யெம்பெருமானாகிய ஒளி எனது மனதில்‌ உறைவதனால்‌ அஜ்ஞானமெனும்‌ இருள்‌ அகலப் பெற்றேன்‌. நன் ஞானமும்‌ பெற்றேன்‌. இனி அப்பெருமானை உள்ளபடி அறிந்து இந்த ஸ்தோத்ரத்தைச்‌ செய்து முடிக்க என்னால்‌ முடியுமென்று தமது ஆற்றலைக்‌ குறிப்பிட்டாராயிற்று இதனால்

—————-

வ்யத்யஸ்த சரண கமலாம் விநிஹித புஜ யுகல மித்ர ஜாநு யுகாம்
விலஸித ரதாங்க சங்காம் வ்யக்திம் உபாஸே விருத்தி ஜாதி மதீம்–3-

வ்யத்யஸ்தசரண கமலாம்‌ – -யோக நிலையில் அமர்ந்த திருக்கோலம்-(வீற்‌று இருந்த திருக்கோலத்தில்‌ இடது திருவடியை வலப் பக்கமாகவும்‌ வலது திருவடடியை இடப்பக்கமாகவும்‌) மாறுபட அமைத்த திருவடித் தாமரைகளை யுடையதும்‌, விநிஹீத புஜயுகள மித்ர ஜாநுயுகாம்‌ – வைக்கபட்ட இரண்டு திருக் கைகளுக்குத்‌ தோழர்களாக இரண்டு முழுந்தாள்களைக்‌ கொண்டதும்‌ (இரண்டு முழந்தாள்களின்‌ மேல்‌ சார வைக்கப்பட்ட இரண்டு திருக்கைகளைக்‌ கொண்டதும்‌)-திருக்கரங்கள் முழங்கால் பர்யந்தம் நீண்டு -, விலஸித ரதாங்க சங்காம்‌ – மிகவும்‌ விளங்கும்‌ சக்கர சங்குகளைப்‌ பெற்றதும்‌,-திருவாழி பாஞ்ச ஜன்ய ஆழ்வார்களுடன் விளங்கி -ஆழி யம் கை பிரான் அச்சோ ஒரு அழிகிய வா –விருத்த ஜாதிமதீம்‌ – ஒன்றோறு ஓன்று முரண்பட்ட “நரத்வம்‌ ஸிம்ஹத்வம்‌” என்னும்‌ இரண்டு ஜாதிகளை ஒருங்‌கே கொண்டதுமான, வ்யக்திம்‌ – வ்யக்தியை (தோன்றும்‌ ஓர்‌ உருவத்தை) உபாஸே -த்யானம் செய்கிறேன்-அழகியான தானே அரி உருவான தானே -அவனையே உபாஸிப்போம்

கடிகைத்தடங்குன்றின்‌ மிசையிருந்த அக்காரக்கனி யெனப்படும்‌ யோக நரஸிம்ஹ மூர்த்தியை நம்‌ கண்ணெதிரே கொண்டு வந்து நிறுத்துகிறது இந்த ஸ்லோக ரத்னம்

——————–

கலித தநு தநய பங்கம் கர கமலா ப்ரண வாரிஜ ரதாங்கம்
க்ருத கடிகாசல சங்கம் கிமபி மஹோ ஜயதி கேதந விஹங்கம் –4-

கலித தநு தநய பங்கம்‌ – தநுவின் தனயனா இரணியனைப் பிளந்ததும்‌, கர கமல ஆபரண – திருக்கைத்‌ தாமரைகளுக்கு ஆபரணமாகிய, வாரிஜரதாங்கம்‌ – -திரு சங்கு ஆழி ஆழ்வார்கள்-சங்கு சக்கரங்களை யேந்தியதும்‌, க்ருத கடிகாசல ஸங்கம்‌ – திருக் கடிகை மலையில்‌ பற்று வைத்துள்ளதும்‌, கேதந விஹங்கம்‌ – கொடியில்‌ கருடனைக்‌ கொண்டதுமான,-விநதா ஸூதனுக்கும் பல்லாண்டு பாடுகிறார் கிமபிமஹ: – ஒப்பற்ற தேஜஸ்ஸூ , ஜயதி – மேம்பட்‌டு விளங்குகிறது.-ஜய கோஷம் —கை வண்ணம் தாமரை -வடிவார் சோதி வலத்துறையும் ஆழியும் பல்லாண்டு-தேஜஸ் நிறைந்த திவ்ய தேசம்

கச்யப ப்ரஜாபதியின்‌ மனைவிகளில்‌ “தநு ” என்பவளுக்குப்‌ பிறந்த பிள்ளைகள்‌ தநுஜர்கள்‌ ( தானவர்கள்‌), “திதி” என்பவளுக்குப் பிறந்தவர்கள்‌ தைத்யர்கள்‌. இவர்கள்‌ இரு திறத்தாரும்‌ அசுரர்கள்‌. திதியின்‌ பிள்ளையான இரணியனை இங்கு தநுஜனாகக்‌ குறிப்பிட்டது அசுரத்துவம்‌ என்ற பொதுச்‌ தன்மையானது இரணியனுக்கும்‌ பொருந்துகையால்‌ ஆகும்‌. இங்ஙனம்‌ நூல்கள்‌, தைத்யர்களை தானவர்களாகவும்‌, தானவர்களை தைத்யர்களாகவும்‌ பல விடங்களில்‌. கூறப்பட்டுள்ளமை காணத் தக்கது

——————-

ஸர்வ ரஸ கந்த பரிதம் சங்க தமே கமபி ஸகல ஸாகாஸூ
அம்ருத பலம் அகில பும்ஸாம் ஆஸ் வாத்யம் சித்ர மஸ்தி கடிகாத்ரவ் –5-

ஏகமபி – ஒன்றே யாயினும்‌, ஸர்வ ரஸ கந்த பரிதம்‌ – எல்லா வகையான சுவைகளாலும்‌ எல்லாவித நறு மணங்களாலும்‌ நிறையப் பெற்றது –ஸகல சாகாஸு ஸங்கதம்‌ – பல கிளைகளில்‌ தொடர்பு கொண்டதும்‌, அகில பும்ஸாம்‌ – ஆத்மாக்களனைவர்க்கும்‌, ஆஸ்வாத்யம்‌ – சுவைத்து உண்ணத் தக்கதுமாய்‌. சித்ரம்‌ – (இங்ஙனம்‌) விசித்திரமான, அம்ருத் பலம்‌ – அம்ருதம் போல்‌ தித்திக்கும்‌ பழம்‌ ஒன்‌று –கடிகாத்ரெள அஸ்தி – திருக்கடிகை மலையில்‌ உள்ளது.
இங்கு ஒரே பழம்‌ பலவகைச் சுவை நறு மணங்கள்‌ நிறையப் பெற்றதும்‌, பல கிளைகளில்‌ தொடர்பு கொண்டதும்‌, அனைவரும் சுவைத்துண்ண வுரியதுமாக இராதாகையால்‌ முரண்பாடு தோன்றும்‌. இதில்‌ அம்ருதம் போல்‌ தித்திக்கும்‌ பழமாக உருவகித்துக் கூறப்பட்ட கடிகை நரஸிம்ஹப் பெருமானாகிய திருமால்‌ ஒருவனே – சாந்தோக்யோபநிஷத்தில்‌ ஸர்வகந்த: ஸர்வரஸ: என்று எல்லா நறு மணங்களும்‌ எல்லா நற் சுவைகளும்‌ அமையப் பெற்றவனாகக்‌ குறிக்கப்‌ பட்டுள்ளமையினாலும்‌, வேதமாகிய மரத்தின்‌ கிளைகளாகிய ருக்‌ யஜுஸ்‌ ஸாம அதர்‌வணங்களென்னும்‌ எல்லாப் பிரிவுகளிலும்‌ பரம் பொருளாகக்‌ கூறப்படுவதனாலும் எல்லாரும்‌ தஞ்சம்‌ பற்றி அநுபவிக்கலாம்படி இருக்கையாலும்‌ முன்‌ தோன்றிய முரண்பாடு நீங்குதல்‌ காண்க. அதாவது உலகிலுள்ள எப்பழமும்‌ முற் கூறியபடி இராதாகிலும்‌ நரஸிம்ஹனாகிய பழம்‌ அப்படி யிருப்பதில்‌ தடை யொன்றுமில்லை என்றபடி.
இந்த ஸ்லோகத்தில்‌ அமுதம்‌ போல் இனிக்கும்‌ பழமென்று திருக் கடிகை யெம்பெருமான்‌ குறிக்கப்பட்டுள்ளான்‌. ஆழ்வார்கள்‌ இப் பெருமானை – அக்காரக்கனி என்று அழைத்துள்ளார்கள்‌. எறும்பியப்பா அம்‌ருதபலம்‌ என்று பணித்தருளுகிறார்‌. அக்காரக்கனி என்பதற்கு இரண்டு பொருள்கள்‌. 1. –ஸஹகாரக்‌ (ஒட்டு மாங்கனி, ஸஹகார மென்னும்‌ ஸம்ஸ்க்ருத பதம்‌ தமிழில்‌ அக்காரமென்‌று ஆகும்‌. ஸந்த்யா என்பது அந்தியென்று ஆனது போல்‌ இதைக் கொள்க. 2. அக்காரம்‌ – சர்க்கரை. இது தமிழ்ச் சொல்‌. சர்க்கரையே மரமாக முளைத்து அம்மரம்‌ முதன்‌ முதலாகப்‌ பழுத்த பழத்தை அக்காரக்கனி என்பர்‌ வ்யாக்யான சக்ரவர்த்தியான பெரியவாச்சான்‌ பிள்ளை. இவ் விரண்டு வகையிலும்‌, கடிகை யெம்பெருமான்‌ ஒட்டு மாங்கனி போன்றும்‌ சர்க்கரை மரக்கனி போன்றும்‌ மிகமிக இனியவனாகையால்‌ – அம்ருதம்‌ போல் தித்திக்கும்‌ பழம்‌ என்றும் அருளிச் செய்தது மிகவும்‌ பொருந்தும்‌.

ஸர்வ ரஸ கந்த பரிதம்-ஸர்வ கந்த ஸர்வ ரஸ  -குழந்தைகளுக்கு ஏற்ற தம்மை அமைத்து அனுபவிக்குமவன் அன்றோ-ஏகமபி –ஓத்தார் மிக்கார் இலையாய மா மாயன் ஏக மேவ அத்விதீயம்
சங்க தம் ஸகல ஸாகா ஸூ-ஸகல உபநிஷத்துக்கள் சாகைகளும் இவ்வாறே கோஷிக்குமே
அம்ருத பலம் -அக்கார கனி என்றவாறு –ஸ்வயம் ப்ரயோஜன பக்தர்களுக்கு இருக்கும் இருப்பு-கறந்த பால் நெய்யே- நெய்யின் இன் சுவையே -கடலினுள் அமுதமே -அமுதினில் பிறந்த இன் சுவையே – பேர் ஆயன்
ஸ்ரீ ருக்மிணி பிராட்டியும் காலே ஸ்ரீ நரஸிம்ஹா -நர லோக மநோபிராமம் என்றாளே
அங்கே அப்பொழுதே அவன் வீயத் தோன்றியவனையே முதலில் கூப்பிடுகிறார்கள்
அகில பும்ஸாம் ஆஸ் வாத்யம் சித்ர மஸ்தி –நல்லை நெஞ்சே –நாம் தொழும் நம் பெருமான் அன்றோ இவன்

கறந்தபால் நெய்யே! நெய்யின் சுவையே. கடலினுள் அமுதமே, அமுதில்

பிறந்தவின் சுவையே! சுவையது பயனே! பின்னைதோள் மணந்தபே ராயா!–8-1-7-

கறந்தபால்! என்பது தனிப்பட்ட விளி. கறந்தபோதே இயற்கையான ரஸத்தையுடைத்தான பால்போல் பரமபோக்யனே! என்றபடி.பாலின் ஸாரமான நெய்யே! நெய்யினுடைய இனி சுவைதானே வடிவெடுத்த தென்னலாம்படி. யுள்ளவனே!,கடலிடைத் தோன்றிய அமுதமே! அவ்வமுதத்தின் இனிமைதானே வடிவெடுத்ததென்னலாம்படியள்ளவனே! என்று இத்தனை சொல்லியம் த்ருப்தி பிறவாமையாலே பின்னைதோள் மணந்த பேராயா! என்று அவன் தன்னையே சொல்லித் தலைக்கட்டுகிறார்.

நப்பின்னைப் பிராட்டியும் நீயுமான சேர்த்திதானே ஸ்வயம் போக்யமன்றோ? இந்த போக்ய வமையிட்டுக் கூறவேணுமோ? என்றவாறு.நப்பின்னையை மணந்ததுபோல என்னையும் மணக்க ப்ராப்தியில்லையோ வுனக்கு என்ற கருத்துக் கொள்ளலாம்.

——————-

ஆரண்யக அவாப்த வாக்யைர் அவகம்யோ க்ராம்ய ஜன த்ருஸாமப்தம்
ஸ்புரிதி கடிகாசல அக்ரே புருஷ ம்ருக கோபி புண்ய க்ருது உபேய –6-

ஆரண்யக ஆப்த வாக்யை: – ஆ.ண்யகமென்கிற நம்பத் தக்க வேத புருஷனுடைய வாக்கியங்களால்‌, அவகம்ய: – உண்டென்று அறியப் படுவதும்‌, க்ராம்ய ஜந த்ருசாம்‌ (கிராம) பாமர மக்களின்‌ பார்வைகளுக்கு , அபதம்‌ – இலக்காகாததும்‌, புண்ய க்ருத்‌ உபேய: – புண்ணியம்‌ செய்தவர்களால்‌ அடையத் தக்கதுமான கோஃபி- ஒரு, பூருஷ ம்ருக: நர ம்ருகமானது (நரஸிம்ஹமானது). கடிகாசல அக்ரே – கடிகை மலையின்‌ உச்சியில்‌, ஸ்புரதி – பளபளவென்று விளங்குகிறது -இதிலிருந்து – கிராம மக்களால்‌ க்ராமத்தில்‌ காண முடியாத காட்டில் திரிகிற நம்பத் தக்க வேடர்‌ முதலியோர்களின்‌ பேச்சுக்களைக்‌ கொண்டு காட்டிலிருக்கிறதென்று அறிய வெளிய – புண்ணியம்‌ செய்தவர்களுக்குப்‌ பிடிபட்டு அடைய-தக்கதொரு ஆண்‌ சிங்கம்‌ கடிகை மலைச்‌ சிகரத்தில்‌ விளங்குகிறதென்று சாதாரணமானதோர் பொருளும்‌ அறிய இயலும்

ஆரண்யக அவாப்த வாக்யைர் அவகம்யோ க்ராம்ய ஜன த்ருஸாமப்தம் -வேடர்கள் க்ராம மக்களைப் பார்த்து சொன்னதாகவும்-பாமர மக்களுக்கு வேத புருஷன் காட்டிக் கொடுத்ததாகவும் கொள்ளலாம்
ஸ்புரிதி கடிகாசல அக்ரே புருஷ ம்ருக –ஸ்ரீ நரஸிம்ஹ பெருமாள் ஒளி விஞ்சி உள்ளாரே
கோபி புண்ய க்ருது உபேய —புண்யம் யாம் உடையோம் என்று ஆய்ச்சிகள் மகிழ்வார்கள் அன்றோ

———–

மஹதி கடிகாத்ரி விஷயே மஹதா ஸ்நேஹேந நிர்மல தஸாயாம்
தே தீப்யதே ஸ்திரோ அயம் திவ்யைர் முனிபி ப்ரவர்த்தித்தோ தீப –7-

மஹதி – பெரிய, கடிகாத்ரி விஷயே – கடிகை மலையாகிய இடத்தில்‌(அகலில்‌) மஹதா ஸ்நேஹேந – அதிகமான பக்தியுடன்‌ (நெய்யுடன்‌)… நிர்மல தசாயாம்‌ – மிகவும்‌ சுத்தமான ஸமயத்தில்‌ (அழுக்கற்ற திரியில்‌), திவ்யை: முநிபி: -மிகவுயர்ந்த ஸப்தருஷிகளால்‌, ப்ரவத்தித: – தோற்றுவிக்கப்‌ பட்டதாய்க்‌ (ஏற்றப்பட்டதாய்க்) கொண்டு, அயம்‌ தீப: – இந்த நரஸிம்ஹப்‌ பெருமானாகிய விளக்கு, ஸ்திர:தேதீப்யதே – நிலையாக ஜ்வலித்துக்‌ கொண்டிருக்கிறது.-சாதாரணவிளக்கு ஒரு மனிதனால்‌ அளவு பட்டதோர்‌ அகலில்‌ அளவான நெய்யிட்டுச் சில சாணளவுள்ள திரியில்‌ ஏற்றப்‌பட்டு நெய்யும்‌ திரியும்‌ மாண்டு போனால்‌ அணைந்து விடும்‌. அங்ஙனல்லாமல்‌, ஆற்றல்‌ மிக்க அத்திரி முதலிய முனிவர்களால்‌; கடிகை மலையாகில்‌ பெரிய அகலில்‌ மாளாத தமது பக்தியாகிய நெய்யை இட்டு, தமது நல்ல மனநிலையில்‌ அல்லது நல்ல நேரத்தில்‌ ஏற்றப்டட  நரஸிம்ஹப் பெருமானாகிய விளக்கு அணையாமல்‌ நிலை பெற்று எப்போதும்‌ ஜ்வலித்துக்‌ கொண்டிருக்கிறதென்க. ஸ்நேகம்‌ பக்தியும்‌ நெய்யும்‌, தசா – நேரமும்‌ திரியும்‌

மஹதி கடிகாத்ரி விஷயே –கடிகைத்தடம் குன்றமே அகலாக-மஹதா ஸ்நேஹேந நிர்மல தஸாயாம் —ஆர்வமே நெய்யாக -பக்தி -நீராய் அலைந்து உடலையும் உருக்குமே –
ஸூத்தமான மனஸே த்ரியாகவும்-திவ்யைர் முனிபி –ஆழ்வார்கள் தானே திவ்ய முனிகள்
தே தீப்யதே ஸ்திரோ அயம் -ஏற்றி வைத்த தீபத்தாலே-ப்ரவர்த்தித்தோ அயம் தீப–ஸ்ரீ அக்காரக்கனியே ஒளி விஞ்சி காட்சி தந்து அருளுகிறார்

———–

முஷ்ணம் ஸ்தமோ ஜநாநாம் மூர்தநி கடிகாலஸ்ய ஸம் பூத
ஆலோகதோ அகிலார்தன் அவகமயதி நித்யம் அச்யுதோ தீப –8-

கடிகாசலஸ்ய மூர்த்தி – கடிகை மலையின்‌ உச்சியில்‌, ஸம்பூத: – உண்டான, அச்யுத:தீப: – அச்யுதனென்று சொல்லப்பட்ட – அணையாத விளக்கானது, ஆலோகத: – தன்‌ பார்வையாலே – தன்‌ வெளிச்சத்தினாலே, ஜநாநாம்‌- மக்களுடைய, தம:– அஜ்ஞானத்தை-இருட்டை, முஷ்ணந்‌ – போக்குவதாய்க் கெண்டு, அகில அர்த்தாந்‌ -எல்லாப் புருஷார்த்தங்களையும்‌, நித்யம்‌ — போதும்‌, அவகமயதி – அனுபவிப்பிக்கிறது அறிவிக்கிறது.
விளக்கு தன் வெளிச்சத்தாலே புற விருளைப்‌ போக்கித்‌ தானிருக்குமிடத்திலுள்ள பொருள்களை நம்‌ கண்களுக்கு அறிவிக்கிறது. எம்பெருமானகிய விளக்கு தன்‌ கடாக்ஷத்தாலே தமோ குணம்‌ முதல்‌ அக விருளைப்‌ போக்கி (தன்னை தஞ்சமடையச்‌ செய்து) நமக்கு வேண்டிய ஸகல புருஷார்த்தங்களையும்‌ அனுபவிப்பிக்கிறது. தம: அக விருளும்‌ புறவிருளும்‌. அர்த்த:.புருஷார்த்தமும்‌ பொருளும்‌, ஸ்வயம்‌ ப்ரகாச ஸ்வரூபனான பகவான்‌ இவ்விரண்டு ஸ்லோகங்‌களிலும்‌ விளக்காக உருவகிக்கப்பட்டான்‌ என்கை. ‘நந்தா விளக்கே” என்றார்‌ கலியன்‌-

முஷ்ணம் ஸ்தமோ ஜநாநாம் -அஞ்ஞானம் போக்கி அருளி-மூர்தநி கடிகாலஸ்ய ஸம் பூத -நித்தியமாக எழுந்து அருளிய-ஆலோகதோ -கடாக்ஷ மஹிமையாலே-அகிலார்தன் அவகமயதி –வேண்டிய புருஷார்த்தங்களையும் அருளி நித்யம் -எப்பொழுதுமாக நிலை நிற்கும் படி அச்யுதோ தீப –நந்தா விளக்கு

———

ரஸ்யம் ஸக்ருது பஸேவ்யம் லப்யம் அபத்ய ஸஹம் அஸூஹித மமோகம்
த்வரிதம் ஹரதி பவார்த்திம் ஸூத்தம் கடிகாத்ரி மௌலிஜம் மூலம் –9-

கடிகாத்ரி மெளளிஜம்‌ – கடிக மலைச்‌ சிகரத்தில்‌ உண்டான, ஸூத்தம்‌ மூலம்‌ நரஸிம்ஹப்‌ பெருமானாகிய தூய்மையான மூலிகையானது. ரஸ்யம்‌ – சுவைக்கத் தக்கது. லப்யம்‌ – கிடைக்கத்‌ தக்கது. அபத்யஸஹம்‌ – பாபமாகிய அபத்யம்‌ எவ்வளவு செய்தாலும்‌ பொறுத்துக் கொள்வது, அஸுஹிதம்‌ – எவ்வளவு உட் கொண்டாலும்‌ போது மென்று தோன்றாதபடி மேன்‌ மேலும்‌ உட் கொள்ளத்‌ தக்கது. அமோகம்‌ – வ்யர்த்தமாகாதது. ( பயனை யளித்தே தீருமது). ஸக்ருத்‌ உப ஸேவ்யம்ஸத்‌ – ஒரு தடவை மட்டுமே உட்கொள்ளப் பட்டதாய்க்‌ கொண்டு . பவார்த்திம்‌ – பிறவி யென்னும்‌ நோயை, த்வரிதம்‌ ஸரதி- விரைவில்‌ போக்குகிறது சாதாரணமாய்‌ மூலிகை – சுவை யுடையதன்று, எளிதில்‌ கிடைக்காது, அபத்யம்‌ செய்தால்‌ வேலை செய்யாது. ஒரு தடவை யுட்கொண்டால்‌ போதும்‌ போதுமென்ற எண்ணத்தை யுண்டாக்குமது. சில சமயத்தில்‌ பயனளிக்காமலும்‌ போமது. பல நாட்கள்‌ உட் கொண்டால் தான்‌ நோயைத்‌ தீர்க்குமது. எம்பெருமானாகிற மூலிகை இதற்கு நேர்‌ முரணானதென்று இதனால்‌ காட்டப்‌ பட்டதாயிற்று.ஸுஹிதம்‌த்ருப்தம்‌, அஸூஹிம்‌ – அத்ருப்தம்‌ – த்ருப்திக்கு விஷயமாகாதது. மூலம்‌-மூலிகை, மருந்து. “மருந்தும்‌ பொருளும்‌ அமுதமும்‌ தானே” என்று பேயாழ்வார்‌ அமுதமென்று ரஸ்யமாகவும்‌, மருந்தென்று மூலிகையாகவும்‌ எம்பெருமானைக்‌ குறித்தருளினார்‌.

ஸூத்தம்-ஸூத்த ஸத்வ மயம்-கடிகாத்ரி மௌலிஜம் மூலம் ரஸ்யம் –மருத்துவனாய் நின்ற மா மணி -பேஷஜம் பிஜக் –விருந்தாகவும் போக்யமாகவும்-ஸக்ருது பஸேவ்யம் -ஒரே தடவை கிருபா கடாக்ஷம் பட்டாலே போதுமே-லப்யம் -எளிதாகவே லபிக்குமே
அபத்ய ஸஹம் -பாபங்களை பாற்றி உரு மாய்ந்து போக வைக்கும்
அஸூஹித மமோகம் –ஆராவமுதம்
த்வரிதம் ஹரதி பவார்த்திம் –ஸம்ஸாரம் உடனே அறுக்குமே

————-

ஸ்திர சோக ஸல்ய வ்யஹரணம் ஜகதாம் விச்சின்ன குசல சந்தானம்
ஸஞ்ஜீவனம் அபி கடிகாசைலஜ மூலம் கரோதி ஸாரூப்யம் –10-

கடிகாசைலஜ மூலம்‌ – கடிகைமலை யிலுண்டாகிய நரஸிம்மனென்னும்‌ மூலிகையானது, ஜகதாம்‌ – உலகிலுள்ளவர்களுக்கு, ஸ்திர சோகசல்யஹரணம்‌ நிலைநின்ற துன்பமாகிய – அம்பு தைத்த விரணத்தை ஆற்றுமதாய்‌, விச்சிந்நகுசல ஸந்தானம்‌ – முறிந்து போன க்ஷேமமாகிய எலும்‌பை ஒட்ட வைக்குமதாய்‌, ஸஞ்ஜீவநம்‌ நசிக்க விருக்கும்‌ ஆத்ம ஸ்வரூபமாகிய உயிரை நசியாமல்‌ பாதுகாக்குமதாய்‌ இருந்து, ஸாரூப்யம்‌ அபி கரோதி – (இறந்த பிறகு) பரம பதத்தில்‌ தன்னோடு ஒத்த திருமேனியை யுடைமையாகிய அழகிய உருவத்தையும்‌ உண்டாக்குகிறது.
சில மூலிகை அம்புபட்ட புண்ணை மட்டும்‌ மாற்றும்‌. இன்னும்‌ சில முறிந்து போன எலும்பைச்‌ சேர்த்து வைக்கும்‌. மற்றும்‌ சில போகுமுயிரை மீட்டுத் தரும்‌. வேறு சில அழகில்லாத உடலை அழகுடையதாக்கும்‌. அக்காரக் கனி யென்னும்‌ ஒரே மூலிகை இவை யெல்லாவற்றையும்‌ செய்யுமென்றார்‌ இதனால்‌. இவை முறையே “விசல்ய கரணீ ஸந்தாந கரணீ ஸஞ்ஜீவ கரணீ ஸாரூப்ய கரணீ’ எனப்படும்‌. இவ்விரண்டு ஸ்லோகங்களாலும்‌ எம்பெருமான்‌ மிக மிக வுயர்ந்த மூலிகையாக உருவகிக்கப் பட்டான்

விகல்ய கரணி -சாதாரண நோய்களுக்கு மருந்து
சந்தான கரணி -எலும்பு முறிவு போன்றவற்றுக்கு மருந்து
சஞ்ஜீவ கரணி -உயிர் போவதையும் மீட்டுக் கொடுக்கும் மருந்து
சாரூப்ய கரணி -கோர ரூபம் மாற்றி -அழகு ரூபம் கொடுக்கும் மருந்து
ஆயுர் வேதத்தில் லோகத்தில் நான்கு விதங்கள் உண்டு

ஸ்திர சோக ஸல்ய வ்யஹரணம் ஜகதாம் -சோகம் ஆகிய அம்பால் துன்புறும் லோக மக்களின் அனிஷ்டங்களைப் போக்கி அருளும்
விச்சின்ன குசல சந்தானம் -எலும்பு முறிந்த மக்கள் -செல்வம் இழந்த மக்களைக் காத்து அளிக்கும்
ஸஞ்ஜீவனம் அபி -உயர் போகும் நிலையில் நுகர்ந்தால் -ஆத்ம ஸ்வரூபம் நசிந்தாலும் -மீட்டுக் கொடுக்கும்
கடிகாசைலஜ மூலம்
கரோதி ஸாரூப்யம் —ஸாம்யாபத்தி -சாரூப்யம் சாலோக்யம் சாமீப்யம் ஸாயுஜ்யம் அளிக்கும்

————————–

அதி பல பவாஹி தஷ்டான் அபிலாஷ விஷாக்னி மூர்ச்சநா நஷ்டான்
கடிகா சிகரி நரேந்த்ர கடயத்ய ஸூபி கடாக்ஷ மாத்ரேண –11-

கடிகா சிகரி நரேந்த்ர: – கடிகை மலையிலுள்ள நரஸிம்ஹனென்னும்‌ விஷ வைத்தியன்‌, அதிபல பவ அஹி தஷ்டாந்‌ வலிமைமிக்க – ஸம்ஸாராமாகிய பாம்பினால்‌ கடிக்கப் பட்டவர்களாய்‌, அபிலாஷ விஷ அக்நி மூர்ச்சநா நஷ்டாந்‌ ஆசை யென்னும்‌ நெருப்புப்‌ போன்ற விஷம்‌ ஏறியதனால்‌ மாய்ந்தவர்‌களான மனிதர்களை, கடாக்ஷ மாத்ரேண – தனது கடாக்ஷ மாத்திரத்தினால் , அஸுபி : – பிராணன்களோடு, கடயதி – சேர்த்து விடுகிறான்‌ (பிழைக்கச்‌ செய்கிறான்‌).
உலகில்‌ பிரசித்தரான விஷ வைத்தியர்கள்‌ பாம்பு கடித்து விஷமேறி மாயவிருக்கும்‌ அவர்களை, கடித்த விடத்தில்‌ மருந்து தடவியும்‌ உள்ளுக்கும்‌ மருந்து கொடுத்தும் உயிர்ப்பிக்கிறார்கள்‌. எம்பெருமானோ எனில்‌ பிறவி யென்னும்‌ பாம்பு தீண்டி ஆசையாகிய விஷமேறி ஆத்ம நாசமடையுமவர்களை மருந்தொன்றுமின்றித்‌ தன்‌ திருக் கண்‌ நோக்கத்தினால்‌ மட்டும்‌, உயிர்களுக்கு ப்ராணனாகிய தன்னோடும்‌, தனக்கு ப்ராணன்களாகிய நித்ய ஸுரிகளோம்‌ சேர்த்து உஜ்ஜீவிப்பிக்கிறான்‌. லெளகிக விஷ வைத்தியனுக்கும்‌ எம்பெருமானுக்‌கும்‌ இதுவே வாசி. நரேந்த்ர: – விஷ வைத்தியன் –

அதி பல பவாஹி தஷ்டான் -மிக்க பலமுள்ள ஸம்ஸார சர்ப்பம் கடியில் ஆழ்ந்த நம்மை
அபிலாஷ விஷாக்னி மூர்ச்சநா நஷ்டான் -அதுக்கும் மேல் விஷயாந்தர அபிநிவேச அக்னியாலும் தவிக்கும் நம்மை காமம் அடிப்படை -க்ரோதம் லோபம் போல் மேல் மாறுமே
கடிகா சிகரி நரேந்த்ர -இங்குள்ள அக்காரக்கனி எம்பெருமான்-கடயத்ய ஸூபி கடாக்ஷ மாத்ரேண -கடாக்ஷ லேசத்தாலேயே போக்கி அருளி நித்யர்களுடன் ஒரு கோவை யாக்கியும் அருளுகிறார் அன்றோ

நஷத்ர மாலிகை ஜீயர் நாயனார் ஆழ்வாரையும் இதே போல் ஸ்துதிக்கிறார் அன்றோ

நமஜ்ஜனஸ்ய சித்த பித்தி, பக்தி சித்ர தூலிகா
பவார்ஹி வீர்ய பஞ்சநே, நரேந்த்ர மந்த்ர யந்த்ரனா |
ப்ரபன்ன லோக கைரவ, ப்ரஸந்ந சாரு சந்த்ரிகா
சடாரி ஹஸ்த முத்ரிகா, ஹடாத்கரோதுமே தம: | |–ஸ்ரீ பராங்குச அஷ்டகம் கடைசி ஸ்லோகம் 8

தம்மை வணங்குபவர்களுடைய ஹ்ருதயம் ஆகிற சுவரிலே பக்தியாகிற சித்திரத்தை எழுதும் கருவியாகவும் –காலை மாலை கமல மலர் இட்டு -இத்யாதி உபதேசித்து சம்சாரம் ஆகிற சர்ப்பத்தின் உடைய வீர்யத்தைத் தணிக்கும்-விஷயத்தில் விஷ வைத்தியனுடைய (நரேந்திர -விஷ வைத்தியன்) மந்திர பிரயோகச் சிடிகை போன்றதையும்
நரகத்தை நகு நெஞ்சே -மாறன் சொல் நேராகவே விளையும் வீடு –
வழி நின்ற வல்வினை மாள்வித்து அழிவின்று ஆக்கம் தரும்.

பிரபன்ன ஜனங்கள் ஆகிற ஆம்பல் மலர்களை விகசிப்பிக்க வல்ல அழகிய நிலாப் போன்றதாயும் இருக்கிற ஸ்ரீ நம்மாழ்வாருடைய திருக் கைத்தல முத்ரையானது (உபதேச முத்திரை) என்னுடைய அகவிருளை எப்படியாவது தொலைத்து போக்கி அருள வேணும்.

—————-

சோரம் ஸ்வதஸ் ச்யுதம் மாம் ஸ்வாமீ கடிகாத்ரிபோ விசின்வான
த்ருஷ்ட்வா குதோ அப்யுபாயாத த்ருப்தம் அபத்நாத் தயா குணேந த்ருடம் –12-

ஸ்வாமீ கடிகாத்ரிப: – தலைவரான கடிகை மலை யரசன்‌, சோரம்‌ – தனது சொத்தான என்னை, எனது சொத்‌தென்று நினைத்துத்‌ திருடியவனாய்‌, த்ருப்தம்‌ கொழுப்புடையவனாய்‌, ஸ்வத:ச்யுதம்‌ தன்னிடமிருந்து நழுவிய, மாம்‌ – என்னை, விசிந்வாந: ஸந்‌ – ஒயாமல்‌ தேடிக்கொண்டே யிருந்து, குதோ5பி உபாயாத்‌ – ஏதோவொரு தந்திரத்தினால்‌, த்ருஷ்ட்வா – கண்‌டு கொண்டு, தயா குணேந – தயை யென்னும்‌ நற்பண்பாகிய கயிற்றால்‌, த்ருடம்‌ அபத்நாத்‌ – இறுக்கிக்‌ கட்டி விட்டான்‌.
அரசன்‌ தன்‌ சொத்தைத்‌ திருடிக்‌ கொண்டு ஓடியவனை ஏதோவொரு சூழ்ச்சி செய்து கண்டு பிடித்துக்‌ கயிற்றால்‌ கம்பத்தில் கட்டுவான்‌. எம்பெருமான்‌, ஸ்வதந்த்ரனாய்த்‌ தன்னை விட்டு அகன்ற கொழுத்த திருடனான ஜீவாத்மாவை, அஜ்ஞாத ஸுஹ்ருதமாகிய ஒரு தந்திரத்தைக்‌ கற்பித்து அவனைக் கடாக்ஷித்து, தனது தயையாகிய கயிற்றால்‌ தன்னோடு சேர்த்துக்‌ கட்டிக் கொண்‌டு விடுகிறான்‌. அவனைப்‌ பின்பு ஒரு காலும்‌ விடுவதில்லை.
அஜ்ஞாத ஸுஹ்ருதமாவது – பொல்லாத ஜீவாத்மா ஒருவன்‌ தனக்கும்‌ தெரியாமல்‌ செய்த நல்ல காரியம்‌. அதாவது பசுவைக் கொல்லுவதற்காக அதனைத்‌ துரத்திக் கொண்டு போய்‌, அப்பசு ஒரு கோயிலை வலம்‌ செய்‌து கொண்டு ஓடிப் போக, அதனைப்‌ பிடிக்கத் தானும்‌ அக் கோயிலை வலம்‌ செய்து கொண்டு செல்லுதல்‌ முதலியவை. எம்பெருமான்‌ இவனை இப்படியே விட்டு விட்டால்‌ மேலும்‌ இப்படியே கொடுந்தொழில்‌ புரிந்து கொண்டு தானும்‌ கெட்டு உலகையும்‌ அழித்து விடுவானென்று நினைத்துத்‌ தனது அபார கருணையினால்‌, இவன்‌ அக் கோயிலை வலம்‌ செய்ததை நல்ல காரியமாக – புண்ணியமாகக்‌ கணக்கிட்டு இவனைக்‌ கடாக்ஷித்து இவனுக்கு மோக்ஷம் அளித்துத்‌ தன்னோடு சேர்த்துக்‌ கொண்டு மறுபடியும்‌ அவனை இப்பூமண்டலத்தில் ஒரு நாளும்‌ திருப்பி யனுப்புவதில்லை என்னும்‌ விஷயம்‌ இந்த ஸ்லோகத்தில்‌ நூலாசிரியரால்‌ அருளிச் செய்யப்பட்டிருத்தல்‌ நோக்கத் தக்கது

சோரம் ஸ்வதஸ்ச்யுதம் மாம் த்ருபதம் -கள்வன் நானே அன்றோ -பிறர் நன் பொருளை அபகரித்தவன்-ஸ்வாமீ கடிகாத்ரி போ விசின்வான –உடையவன் அக்காரக்கனி -ஸர்வஞ்ஞன் அன்றோ
த்ருஷ்ட்வா குதோ அப்யுபாயாத –அப்போது ஒரு சிந்தை செய்து -என்னுள் புகுந்தான் –
ஆச்சார்யர்களைக் காட்டிக்கொடுத்து திருத்திப் பணி கொண்டு அருளினானே
அபத்நாத் தயா குணேந த்ருடம் —தயை என்னும் குணத்தாலே நன்றாக அவன் இடம் விலகாமல் கட்டி வைத்து-கைங்கர்யமும் கொண்டு அருளினானே-

——————

விமல கபி ஸேவ்ய மாநா விலஸித சந்நிஹித சங்கு ஸக்ராப்ஜா
கா அபி கடிகாத்ரி சிகரே கருணா ரஸ பூர நிர்பரா ஸரஸீ –13-

விமல கபி ஸேவ்யமாநா – (கிழக்கில்‌) அழுக்கற்ற மனமுடைய ஆஞ்ஜநேயனென்னும்‌ குரங்காகிய – பளிச் சென்ற ஸூரியனாலே ஸேவிக்கப்‌ பெற்றதாய்‌ – (ஒளி வீசப் பெற்றதாய்‌) அதனாலே, விலஸித ஸந்நிஹித சங்க சக்ர அப்ஜா – மலர்ச்சி யடைந்த, தன்னிடமுள்ள சங்கு சக்கரங்களென்னும்‌ தாமரை மலர்களை யுடையதாய்‌, கருணா ரஸ பூர நிர்ப்பரா கருணை யென்னும்‌ நீர் வெள்ளம்‌ நிறையப்பெற்றதுமான, கா$பி ஸரஸீ – ஒரு குளம்‌, கடிகாத்ரி சிகரே – கடிகை மலைச்‌ சிகரத்தில்‌, அஸ்தி – இருக்கிறது.
குளத்தில்‌ நீர்‌ நிறைந்திருக்கும்‌ ஸூரிய க்‌ரணம்‌ பட்டு அதன்‌ கண்‌ உள்ள தாமரை மலரும்‌. எம்பெருமானிடம்‌ தயை நிறைந்திருக்கும் கிழக்கே சிறிய மலையில்‌ விளங்குகிற அனுமானாலே ஸேவிக்கப் பட்டு, எம்பெருமான்‌ கையில்‌ விளங்குகின்ற சங்கு சக்கரங்கள்‌ புத்துயிர்‌ பெற்று ஜ்வலிக்கும்‌ என்றபடி. இதில்‌ சிங்கப் பெருமான்‌ தாமரைத் தடாகமாக உருவகிக்கப்பட்டான்‌. கபி: – குரங்கும்‌, ஸூரியனும்

விமல கபி ஸேவ்ய மாநா —ஆச்சார்யர் போன்ற திருவடி யோக ரூப ஆஞ்சநேயர் -ஸேவை –
கிழக்கு புறம் இருந்து நரஸிம்ஹனை மங்களா ஸாஸனம் செய்து கொண்டே ஸேவை ஸாதித்து அருளுகிறார்
விலஸித சந்நிஹித சங்கு ஸக்ராப்ஜா –அதனாலேயே மலர்ந்த ஆழ்வாராதிகள் இவர் திருக்கரங்களில்
கா அபி கடிகாத்ரி சிகரே –அக்காரக்கனி எம்பெருமானே
கருணா ரஸ பூர நிர்பரா ஸரஸீ –கருணை வெள்ளம் தடாகம்-நீர்ப்பண்டமாக வருகிறதே
கபி -ஸூர்யன் என்று கொண்டு-கதிரவன் கிழக்கு திசையில் ஸேவிக்க வர தாமரைகள் மலரும் -சங்கு சக்கர ஆழ்வார்கள் விகசிதம் அடைந்தன என்றுமாம் –

————-

நிர் முக்த போக ஸூத்தான் நித்ய மஹீநாந் வஹந் நிஜா சக்தான்
பாதி கடிகாத்ரி சிகரே பத்ர ஸ்ரீ கோ அபி பரிமளீ ஸாகீ –14-

கடிகாத்ரி சிகரே – கடிகை மலையின்‌ சிகரத்தில்‌, (1) பரிமளீ – நறுமணம்‌ நிறைந்து, பத்ர ஸ்ரீ: – மங்கள கரையான ஸ்ரீமஹாலக்ஷமியை உடைய, ஸாகீ – வேத சாகைகளை ப்ரமாணமாகக்‌ கொண்ட, கோரூபி – ஒப்பற்ற எம்பெருமானாகிற, (2) பரிமளீ பரிமளம் மிக்கு, பத்ரஸ்ரீ: – சந்தன மரமாகிய கோபி ஸாகீ – ஒரு மரமானது (1) நிர்முக்த போக சுத்தாந்‌ – இஹுலோக பரலோக ஸூகங்களை விட்டதனால்‌ பரிசுத்தர்களாம்‌, நிஜஆஸக்தாந்‌ – தன்னிடம்‌ மிக்கபற்றுள்ளவர்களாய்‌, அஹீநாந்‌ – அவ்விரண்டும்‌ காரணமாகத்‌ தன்னால்‌ விடப்படாத பக்தர்களாகிய – (2) நிர்முக்த போக சுத்தாந்‌ தோலை யுரித்ததனால்‌ அழுக்கற்ற உடலைக்‌ . கொண்டவைகளாய்‌, நிஜ ஆஸக்தாந்‌ -தன்னோடு சேர்ந்தே யிருக்கிற (தன்னைச்‌ சுற்றிக்‌ கொண்டிருக்கிற) அஹி இநாந்‌ ஸர்ப்ப ஸ்ரேஷ்டங்களை, நித்யம்‌ வஹந பாதி – (1) எப்போதும்‌ பரம பதத்துக்கு அனுப்பிக்‌ கொண்டே விளங்குகிறது. (2) எப்பே தும்‌ சுமந்து கொண்டே விளங்குகிறது.
எம்பெருமானாகிய ஒரு மரம்‌ பக்தர்களாகிய ஸர்ப்ப ஸ்ரேஷ்டங்களை வஹித்துக் கொண்டே விளங்குகிறதென்று அந்வயித்துக்‌ கொள்க. எம்பெருமானுக்கும்‌ மரத்துக்கும்‌ பொதுவாக இடப்பட்ட விஸேஷணங்கள்‌ சிலேடை வகையில்‌ அமைந்துள்ளமை காண்க. போகம்‌ – அனுபவமும்‌ பாம்பின் உடலும்‌, அஹீநா: – தன்னால்‌ விடப் படாதவர்களும்‌ உயர்ந்த பாம்புகளும்‌, வஹந்‌ – அனுப்புபவனும்‌ சுமப்பதும்‌, பத்ரஸ்ரீ: – மங்களமான லக்ஷ்மியை உடையவனும்‌, சந்தன மரமும்‌, ஸாகீ – வேதத்தின்‌ பிரிவுகளாகிய ருக்‌ முதலியவைகளை ப்ரமாணமாகக்‌ கொண்டவனும்‌, கிளைகளையுடைய மரமும்‌. மற்றவை விளங்குமவையே –

நிர் முக்த போக ஸூத்தான் -போகி -அநந்தன் -போகீந்த்ர ஸாயி -அவன் -தோலை உரித்த பாம்புகள் -ஆச்சாரம் மிக்கு உள்ளன ப்ரபன்னர்கள் -ஸம்ஸார போகம் நீங்கினவர்கள் உள்ளார்கள்
நித்ய மஹீநாந் வஹந் -நிறைய பாம்பு இனங்கள் உள்ளன
நிஜா சக்தான் பாதி கடிகாத்ரி சிகரே பத்ர ஸ்ரீ –அக்காரக்கனி மேல் பற்றுதலை வைத்துள்ளார்கள் -இங்கு உள்ளார் அனைவருமே ப்ரபன்னர்கள்
அனைவரையும் வாழ வல்ல தாயார் -பத்ர ஸ்ரீ எழுந்து அருளி ஸேவை சாதிக்கிறாள்
கோ அபி பரிமலீ ஸாகீ –நறுமணம் மிக்க சந்தன மரங்களும் உள்ளன –அனைத்து கலைகளுமே மங்களா ஸாஸனம் பண்ணுமே -என்றவாறு –

—————-

கருண அம்ருத ரஸ வர்ஷைர் கடிகாசல கடித க்ருஷ்ண மேகை நிஜைர்
ஸம் சரணி தரணி தப்தம் ஸஞ்ஜீவய விநதஸஸ்ய ஜால மிதம் –15-

ஹே! கடிகாசல கடித க்ருஷ்ண மேக – வாராய்‌ கடிகை மலையில்‌ (வந்த) சேர்ந்த அல்லது ஸப்த ரிஷிகளால்‌ (கொண்டு) ஈர்க்கப்பட்ட கார் மேகமாகிய பெருமானே ! நிஜை: உனக்கு இயற்கையாக அமைந்த கருணா அம்ருத வர்ஷை: – கருணையாகிய அமுத மழையினால்‌ – ஸம்ஸரண தரணி தப்தம்‌ – ஸம்ஸாரமாகிய ஸூரியனால்‌ கொளுந்திச்‌ சாவியாகப் போன, இதம்‌ – இந்த, விநதஸஸ்யஜாலம்‌- (உனது) பக்தர்களாகிய பயிர்களின்‌ தொகுதியை, ஸஞ்ஜீவய – உயிர்ப்பிக்‌க வேண்டும்‌.
இதில்‌ எம்பெருமானை மேகமாவும்‌ அவனது கருணையை அமுத மழையாகவும்‌ பிறவித்‌ தொடர்ச்சியாகிய ஸம்ஸாரத்தை ஸூரியனாகவும்‌ பக்தர்களைப்‌ பயிராகவும்‌ உருவகித்துள்ளார்‌. ஸூரியன்‌ பயிர்களை வாட்ட, அப்போது அவை சாவியாகப்‌ போகாமல்‌ மேகம்‌ வந்து தோன்றி ஒரு பாட்டம் மழையைச்‌ சொரிந்து அப் பயிர்களை நனைத்து உயிர்ப்பிக்குமாப் போலே, எம்பெருமானே உன்னை வணங்கிய பக்தர்களாகிய அடியேன்‌ போன்றவர்கள்‌ ஸம்ஸாரத்தினால்‌ தபிக்கப் பெற்று ஸ்வரூப நாசமடையா நிற்க, நீ வந்து தோன்றி உனது இயற்கையான கருணை மழையைப்‌ பெய்வித்து உன்‌ பக்தர்களை உஜ்ஜீவிப்பித்தருள வேண்டும்‌ என்ற இதனால்‌ ப்ரார்த்தித்த படி

கருண அம்ருத ரஸ வர்ஷைர் –கருணா ரஸ பொய்கை கீழ் இங்கு மழை -கருணை பொங்கிய கண்ணினை வாழியே -இவர் மூலமே மா முனிகளுக்கு-கடிகாசல கடித க்ருஷ்ண மேகை நிஜைர்-அக்காரக்கனி கறுத்த மேகம்-ஸம் சரணி தரணி தப்தம் –தாபத்ரயங்களால் தபிக்கும் -ஸம்ஸார ஸூர்யன்-ஸஞ்ஜீவய விநதஸஸ்ய ஜால மிதம் —வாடி வதங்கி இருக்கும் பயிர் போல்வாரை இவற்றில் இருந்து காத்து அருளும் –

————

விமல தர பக்தி பூரே வ்யபகத பங்கே விகஸ்வராம்புருஹே
மாநஸ ஸரஸி முநீநாம் ரமதே கடிகாத்ரி ராஜ ஹம்ஸ பவாந் –16-

ஹே! கடிகாத்ரி ராஜஹம்ஸ – கடிகை மலையிலுள்ள ராஜ ஹம்ஸமாகிய எம்பெருமானே ! பவாந்‌ – தேவரீர்‌, வ்யபகத பங்கே காமம்‌ குரோதம்‌ (ஆசை, கோபம்‌) முதலிய அழுக்காகிய சேறு நீங்கப் பெற்றதும்‌, விமலதர பக்திபூரே – மிகவும்‌ நிர்மலமான பக்தியாகிய நீர்‌ வெள்ளத்துக்கு இடமானதும்‌, விகஸ்வர அம்புருஹே – மலர்ந்த ஹ்ருதய கமலமாகிய தாமரை மலரை யுடையதுமாகிய, முநீநாம்‌ மானஸ ஸரஸி – முனிவர்களுடைய மனஸ்ஸாகிய மாநஸ ஸரஸ்ஸில்‌, ரமதே – விளையாடுகிறீர்‌.
ஹம்ஸம்‌, சேற்றுத்‌ தூய நீரை யுடையதாய் தாமரைகள்‌ மலரப் பெற்றதான மாநஸ ஸரஸ்ஸில்‌ விளையாடும்‌. எம்பெருமான்‌ காம க்ரோதாதிகள்‌ நீங்கப் பெற்றுத்‌ தூய்மையான பக்தியை யுடையதாம்‌ – ஹ்ருதய கமலம் மலரப் பெற்ற – முனிவர்களுடைய மனஸ்ஸில்‌ ஆசையோடு இருப்பான்‌ என்றதாயிற்று-மாநஸ ஸரஸ்: – (1) மனமாகிய ஸரஸ்ஸு (தடாகம்‌) (2) ஹிமய மலையிலுள்ள மாநஸ மென்கிற ஸரஸ்ஸூ , ராஜ ஹம்ஸம்‌- ஹம்ஸ ராஜம்‌ உயர்ந்த ஜாதி ஹம்ஸம்‌. அதன்‌ மூக்கும்‌ கால்களும்‌ சிவந்து உடல்‌ வெளுத்திருக்குமாம்

விமல தர பக்தி பூரே –நீராய் அலைந்து கரைய உருக்கும் பக்தி -உடல் எனக்கு உருகுமாலோ
வ்யபகத பங்கே -காமக்ரோதாதிகள் சேறு நீங்கப்பெற்ற-விகஸ்வராம்புருஹே -மலர்ந்த தாமரை-மாநஸ ஸரஸி முநீநாம் ரமதே –ஹ்ருதய ஸரோவரத்திலே கடிகாத்ரி ராஜ ஹம்ஸ பவாந் —அக்காரக் கனியே ஹம்ஸ ராஜா -தேவரீர் விளையாடுகிறீர்

—————–

ஸ்தம்போஹி விக்ந காரீ சந்த்ருஷ்டோ ஜகதி ஸர்வ கார்யேஷு
தாநவ விதாரணே தே தஸ்யைவ ஹரே கதம் நு ஸாசிவ்யம் –17

ஹரே ! – சிங்கப்பிரானே ! ஜகதி – உலகில்‌, ஸ்தம்ப: – கம்பமானது, ஸர்வ கார்யேஷு – எல்லாக்‌ காரியங்களிலும்‌, விக்நகாரீ ஹி – தடை செய்யுமதாக அல்லவா, ஸந்த்ருஷ்ட: காணப் பட்டுள்ளது. தே – உனக்கு, தாநவ விதாரணே – தானவனான ஹிரணியனைப்‌ பிளக்கும்‌ காரியத்தில்‌, தஸ்ய ஏவ – எல்லோருக்கும்‌ தடை செய்யும்‌ கம்பத்திற்கே, ஸாசிவ்யம்‌ – ஸஹாயமாக இருக்கும்‌ தன்மை, கதம்‌ நு ஜாதம்‌ – ௭ப்படித்தான்‌ உண்டாயிற்று.
எல்லோருக்கும்‌ தடை செய்யும்‌ கம்பம்‌ நரசிங்கப்பெருமாளுக்கு ஹிரண்யனைக்‌ கொல்வதற்காக முன்பே ஒளிந்துகொள்ளும்படி இடங்கொடுத்து உதவி செய்ததே அது எப்படி என்று கேட்டாராயிற்று. “ஸ்தம்ப்‌ – ப்ரதிகாசே ‘ என்ற தாதுவிலிருந்து உண்டான “ஸ்தம்பம்‌ என்ற சொல்‌, தடை செய்வது என்ற பொருளைத்‌ தெரிவிக்கும்

ஜகதி ஸர்வ கார்யேஷு ஸ்தம்போஹி விக்ந காரீ -உலகில் அனைத்து கார்யங்களையுமே தடைப்படுத்தும் -ஸ்தம்பம் -கம்பம் -என்று ப்ரஸித்தம்-சந்த்ருஷ்டோ–எங்கும் உளன் கண்ணன் -அடியேன் உள்ளான் உடல் உள்ளான் -கரந்து எங்கும் பரந்துளன்
-நன்றாகக் கண்டான் ப்ரஹ்லாதாழ்வான்
தாநவ விதாரணே தே -ஹிரண்யனை நிரசிக்கவே நீர் திரு அவதரித்தீர் –ஜய தபாவர பாலகன் அன்றோ –பக்தனுடைய அனைத்துமே என்னைச் சேர்ந்ததே என்று காட்டி அருளவே உனது மடியில் அவனைப் போட்டுக் கொண்டாய்-அந்தியம் போதில் அழிக்கவே அரி யுருவாய் காத்துக் கொண்டு இருந்தாய் போலும் அந்தத் தூணில்
தஸ்யைவ ஹரே கதம் நு ஸா சிவ்யம் —தடையாகி உள்ள தூணே உனக்கு சஹாயம் பண்ணிற்றே -எவ்வாறு –

—————-

தேவத்வமாக மாத்தே ஸித்தம் திர்யக்த்வம் அபி நரத்வேந
ஸஹ த்ருஷ்டமத்ய கடிகா ஸ்தாவர ஸர்வாத்ம கஸ்ய கிமயுக்தம் –18-

கடிகா ஸ்தாவர – கடிகைமலையில் ஸ்தாவரமாய்‌ அசையாது உறையும்‌ பெருமானே ! தே – உனக்கு, தேவத்வம்‌ – தேவராக இருக்கும்‌ தன்மை, ஆகமாத்‌ ஸித்தம்‌ வேதத்திலிருந்து அறியப்பட்டுள்ள; நரத்வேந ஸஹ திர்யக்த்வம்‌ அபி மனிதத் தன்மையோடு விலங்கின்‌ (சிங்கத்தின்‌) தன்மையும்‌, அத்ய – இப்போது, (உனது உருவத்தில்‌) த்ருஷ்டம்‌ – காணப் பட்டிருககிறது. ஸர்வாத்மகஸ்ய – தேவர்‌ விலங்கு மனிதர்‌ தாவரம்‌ ஆகிய எல்லாமுமாக (எல்லாவற்றையும்‌ சரீரமாகக்‌ கொண்டு) இருக்கிற, தே உனக்கு, கிம்‌அயுக்தம்‌– எது தான்‌ பொருந்தாதது.
இவ் வண்டத்திலுள்ள தேவ திர்யகே மநுஷ்ய ஸ்தாவரங்களெல்லாவற்றிலும்‌ உட்புகுந்து நின்று அவை யெல்லாம்‌ தானே என்னும் படியுள்ள திவ்யாத்ம ஸ்வரூபத்தை யுடைமையாகிய ஆச்சரியமான தன்மையை யுடைய நர சிங்கப் பெருமானுக்குத்‌ தன்‌ திருமேனி யொன்றில்‌ மட்டும்‌ முற்கூறிய நான்கு விதமான தன்மைகளைக்‌ காட்டிக்‌ கொண்டிருப்பது ஆச்சரியமானதன்று, பொருத்தமுடையதே என்றாராயிற்று

தேவத்வமாக மாத்தே ஸித்தம் -தேவாதி தேவனாக இருப்பது ஸித்தம் -ஆகமம் வேதங்கள் காட்டி அருளும்-திர்யக்த்வம் அபி நரத்வேந -அப்படிப்பட்டவர் திர்யக்க்காகவும் நர ஸிம்ஹமாகவும் உள்ளீர்-ஸஹ த்ருஷ்டமத்ய கடிகா ஸ்தாவர -ஸ்திரமாக இங்கேயே ஸேவை சாதித்து அருளுகிறீர்-ஸர்வாத்ம கஸ்ய கிமயுக்தம் —-அனைத்துக்குள்ளும் இருந்து அனைத்துமாகவும் உள்ளீரே -மிகவும் பொருந்துமே

————

பஞ்சாஸ்ய ஏவஹி த்வம் ப்ரதிதோ பகவன் கதம் ஸஹஸ்ராஸ்ய
கடிகாத்ரி பக்ஷ பாதீ க்யாதோ அஸி கதஞ்ச விஸ்வ சாஷீதி –19-

பகவந்‌ – பரமபூஜ்யனான எம்பெருமானே, த்வம்‌ – தேவரீர்‌, பஞ்சாஸ்ய: ஏவ ஹி– ஐந்து முகமுடையவராகவே யன்றோ, ப்ரதித: – பிரசித்தராயிருப்பது, (அப்படி யிருக்க) ஸஹஸ்ர ஆஸ்ய: (இதி ஏதத்‌) ஆயிரமுகமுடையவர்‌ என்னுமிது, கதம்‌ – எப்படி ? – மேலும்‌, கடிகாத்ரி பக்ஷபாதீ த்வம்‌ – கடிகைமலையின் கண்‌ பக்ஷபாதம்‌ (ஒரு தலையில்‌ மட்டும்‌ வைக்கும்‌ அன்பு) உடைய தேவரீர்‌, விஸ்வஸாக்ஷீ இதி ஏதத்‌ – எல்லோரிடமும்‌ ஸமமான அன்பு வைத்து ஸாக்ஷி சொல்லுமவர்‌ என்னுமிது, கதம்‌ – எப்படி பொருந்தும்
ஐம்முக முடையவன்‌ ஆயிரமுக முடையனாவதில்‌ முரண்பாடு தோன்றும்‌. பஞ்சாஸ்ய: என்பதற்கு விசாலமான முகமுடைய ஸிம்ஹம்‌ என்று பொருள்‌. ஸிம்ஹமாக அவதரித்த விஷ்ணு ஆயிரமுக முடையவராக இருப்பதில்‌ முரண்பாடு ஏதுமில்லையென்று பரிஹாரம் -கடிகாசலத்தில்‌ பக்ஷபாதமுடையவன்‌, அதற்கு மட்டுமன்றோ ஸாக்ஷியாக இருக்க வேண்டும்‌ ? எல்லோருக்கும்‌ ஸாக்ஷியாக இருப்பது எங்கனமென்று விரோதம்‌ தோன்றும்‌, விஸ்வஸாக்ஷி என்பதற்கு எல்லாவற்றையும்‌ நேராகப்‌ பார்ப்பவர்‌ என்று பொருள்‌. கடிகை மலையில்‌ மட்டும்‌ பற்றுடைய பெருமான்‌ எல்லாவற்றையும்‌ நேராகப்‌ பார்க்க முடியுமாகையால்‌ விரோத பரிஹாரம்‌. சிலேடையுள்‌ள சொற்களை யமைத்து வேடிக்கையாகக்‌ கேள்வி கேட்டபடி இது

பஞ்சாஸ்ய ஏவஹி த்வம் ப்ரதிதோ -ஐந்து தலைகளைக் கொண்ட தேவரீர் -விசாலமான திருமுகம் கொண்ட நீர் –பகவன் கதம் ஸஹஸ்ராஸ்ய -ஆயிரம் தலைகளாகக் கொண்டவராக வேதம் எவ்வாறு சொல்ல முடியும்-ஆயிரம் தலைகள் வேண்டுமோ உமக்கு
கடிகாத்ரி பக்ஷ பாதீ க்யாதோ -இங்கு அக்காரக் கனியாக ஒரு தலைப் பக்ஷ பாதம் செய்து
அஸி கதம் ச விஸ்வ சாஷீதி –லோகங்களுக்கு பதியாக இருப்பது எவ்வாறு -ஜகன் நிர்வாஹம் பண்ணுகிறீர்-ஸங்கல்ப மாத்திரத்திலே அனைத்தும் செய்து அருளி இங்கு பிரியமாக உகந்து அருளி இருக்கிறீர் என்றவாறு –

————-

பஹு தேசம் அல்ப தேசாம் அபி ஸிம்ஹத் வாத் அத ஸ்திதம் பும்ஸ்த்வம்
மூர்த்தெள தாவத்ர ந்ரூ ஹரே முக்ய கோ வா அவகம்யதே அந்யேந–20-

ந்ருஹரே – நரசிங்கப் பெருமானே ! தவ அத்ர மூர்த்தெள – தேவரீருடைய இந்தத்‌ திருமேனியில்‌, அல்ப தேசாத்‌ – குறைந்த இடத்தில்‌ (தலையில்‌ மட்டும்‌) உள்ள, ஸிம்ஹத்வாத்‌ அபி – சிங்கத்தின்‌ தன்மையை விடவும்‌, அத:ஸ்திதம்‌ – தலையின்‌ கீழ்‌ (உடல்‌ முழுதும்‌) உள்ள, பும்ஸ்த்வம்‌ – புருஷனது தன்மை, பஹு தேசம்‌ – அதிகமான இடத்தில்‌ உள்ளது. (இப்படியிருக்க) அந்யேந – வேறொருவனால்‌, அத்‌ – இவ் விரண்டு தன்மைகளில்‌, கோ வா – எது தான்‌, முக்ய: – முக்கியமென்று அவகம்யதே -. – அறியப் படுகின்றது.
இக்கேள்விக்கு விடை:- தலையில்‌ மட்டும்‌ உள்ள ஸிம்ஹத்வத்தை விட உடல்‌ முழுதுமுள்ள புருஷத்வமே முக்கியமென்று தோன்றும்‌. ஆனால்‌ முக்யம்‌ என்பது முகத்திலுள்ளது என்று பொருள் பட்டு, முகத்திலுள்ளது ஸிம்ஹத்வமே யன்றிப்‌ புருஷத்வமன்று. அதனால்‌ ஸிம்ஹத்வமே முக்யம் என்று ஆராய்ந்தால்‌ தோன்றும்‌. மேலுள்ள ஸ்லோகத்தில்‌ இது தலைகீழாவது காணலாம் –

பஹு தேசம் அல்ப தேசாம் அபி ஸிம்ஹத் வாதத ஸ்திதம் பும்ஸ்த்வம் -ஸிம்ஹ தன்மை அல்பம் -மிக பெரிய பகுதி பும்ஸத்வம்-மூர்த்தவ் தாவத்ர -நேராகப் பார்க்கும் திவ்ய மங்கள விக்ரஹம் ந்ரூ ஹரே முக்ய கோவா அவகம்யதே அந்யேந -முக்கியம் எது என்று யாரால் அறிய முடியும்-பதிலும் இதிலேயே உள்ளதே-ஹிரண்யன் -பயந்தது ஸிம்ஹம் என்பதால் அன்றோ –

———–

பும் ஸூக்த பூர்வகைஸ்தை புருஷத்வம் முக்யமேவ தே விதிதம்
கதமியம் அமுக்யதா அஸ்மின் கடிகாத்ரி மனுஜ ம்ருக ராஜ -21-

கடிகாத்ரி மநுஜ ம்ருகராஜ – கடிகை மலை யிலுள்ள நரசிங்கப்‌ பெருமானே ! தை: -பிரசித்தமான, பும் ஸூக்த பூர்வகை: – புருஷ ஸூக்தி முதலிய வேத பாகங்களாலே, தே புருஷத்வம்‌ – தேவரீருடைய புருஷத்வமானது. முக்யமேவ – முக்கியமானதாகவே அறியப்பட்டுள்ளது. (இப்படியிருக்க) அஸ்மிந்‌ – இந்தப்‌ புருஷத்வத்தில்‌, இயம்‌ அமுக்யதா – இந்த அமுக்யத்வமானது, கதம்‌ – எப்‌படி, கடதே – பொருந்தும்‌ ?
முக்யத்வமானது – பிரதானமாயிருக்குந்‌ தன்மையென்றும்‌, முகத்திலுள்ளமை என்றும்‌ இரு வகைப்படும்‌. கீழ் ஸ்லோகத்தில்‌ முகத்திலுள்ளமை என்ற பொருளைக்‌ கொண்டு ஸிம்ஹத்வமே முகத்திலுள்ள படியால்‌ அதுவே முக்யமாயிருக்கத்‌ தகுமென்று குறிப்பாகக்‌ காட்டினார்‌. இந்த ஸ்லோகத்தில்‌ ப்ரதானத்வம்‌ என்ற பொருளை கைக் கொண்டு, புருஷ ஸூத்தாதிகளில்‌ கூறியபடியினால்‌ புருஷத்வமே முக்கியமென்று ஸ்பஷ்டமாகக்‌ காட்டினார்‌. ப்ரதானமான புருஷத்வமாவது – பக்த – முக்த – நித்யர்களிடமுள்ள புருஷத்வத்தைக்‌ காட்டிலும்‌ உயர்ந்த புருஷத்வம்‌ என்றபடி, புருஷோத்தமனிறே எம்பெருமான்‌. புருஷத்வத்திற்குப்‌ புருஷ ஸூக்தாதிகளில்‌ ப்ரதானத்வ ரூபமான முக்யத்வம்‌ கூறப்பட்ட போதிலும்‌ முகத்திலுள்ளமையாகிய முக்யத்வம்‌ ஸிம்ஹத்வத்திற்கே என்பதை இங்குக்‌ குறிப்பாகக்‌ காட்டியபடி. இவ்விரண்‌டு ஸ்லோகங்களிலும்‌ கவியின்‌ சமத்காராதிசயம்‌ தோன்றுவது காணலாம் –

பும் ஸூக்த பூர்வகைஸ்தை -புருஷ ஸூக்தாதிகள் புகழும்
புருஷத்வம் முக்யமேவ தே விதிதம் –பரத்வம் தானே முக்யம்-கதமியம் அமுக்யதா அஸ்மின் -புருஷத்வம் முக்கியம் அல்ல என்று எப்படி சொல்ல முடியும்
கடிகாத்ரி மனுஜ ம்ருக ராஜ – நீரே அருளிச் செய்ய வேண்டும்
நல்லை நெஞ்சே நாம் தொழுதும் -நம்முடைய எம்பெருமான் -ஸர்வமும் முக்கியம் அன்றோ –

—————

விதததி ந பாஹ்ய லஷ்மீ விரஹ விலா ஸாத்த விக்ரியா மநுஜா
ஸ்ரவண அம்ருதேஷு கடிகாஸைல வந ப்ரிய வசஸ்ஸூ தே ஸ்ரத்தாம் –22-

கடிகாசைல வன ப்ரிய – கடிகை மலைக்‌ காட்டை விரும்பி யுறையும்‌ பெருமானே ! பாக்ய லக்ஷ்மீ விரஹ – அத்ருவடமென்னும்‌ செல்வமில்லாமையின்‌, விலாஸ ஆத்த விக்ரியா: மநுஜா: – திருவிளை யாடலால்‌ மன வேறுபாடு கொண்ட மனிதர்கள்‌, ஸ்ரவண அம்ருதேஷு – செவிக்கு அமுதம்‌ போல்‌ இனிய, தே வசஸ்ஸு – தேவரீருடைய ஸ்ரீ ஸூக்திகளில்‌, ஸ்ரத்தாம்‌ – நம்பிக்‌கயை, ந விதததி – வைப்பதில்லை.
பாக்யமற்றவர்கள்‌ மேன்மேலும் ஸம்ஸாரத்திலேயே வருந்துவதற்கு உறுப்பாகக்‌ காமம்‌ குரோதம்‌ முதலிய மாறுபட்ட எண்ணங்களையே எண்ணி நசித்துப் போகிறார்கள்‌. நரசிம்மப்‌ பெருமாளுடைய சரம ஸ்லோககத்தில்‌ நம்பிக்கை வைத்து அதன்படி நடந்து மோக்ஷம்‌ பெறுகிறார்களில்லை என்று கவி தம்முடைய வருத்தத்தைத்‌ தெரிவிக்கிறார்‌. இதனால்‌ “ஸத்யம்‌ ப்ரவீமி மநுஜா: ஸ்வய மூர்த்வ பாஹு: | யோ மாம்‌ முகுந்த நரஸிம்ஹ ஜநார்த்தநேதி, ஜீவந்‌ ஜபத்யநுதிநம மரணே ருணீவ | பாஷாணகாஷ்ட ஸத்ருயாய ததாமி முக்திம்‌” என்பது நரஸிம்ஹப் பெருமானருளிய சரம ஸ்லோகம்‌.
மனிதர்களே ! நான்‌ கையை உயர்த்தித் தூக்கி ஸத்யமாகச்‌ சொல்லுகிறேன்‌. (ஊக்கமாகக்‌ கேளுங்கள்‌) யாவனொருவன்‌ ஜீவித்திருக்கும்‌ போது, என்னை – முகுந்த நரஸிம்ஹ ஜநார்த்தந (மோக்ஷ பூமியைத்‌ தருமவனே, நரஸிம்ஹனை, துஷ்ட ஜநங்களை யழிப்பவனே) என்று, தினந்தோறும்‌ ஜபம்‌ செய்கிறானோ அவன்‌ திறத்தில்‌ நான்‌ கடன்‌ பட்டவன்‌ போல்‌ இருந்து, அவன்‌ மரணமடையும் போது, கல்லைப்‌ போன்றும்‌ கட்டையைப்‌ போன்றும்‌ நினைவற்றுக்‌ கிடக்கிற அவனுக்கு மோக்ஷத்தை அளிக்கிறேன்‌, என்பது இதன்‌ பொருள்‌. வசஸ்ஸு என்ற பஹு வசனத்தினால்‌ வராஹ சரம ஸ்லோகம்‌, ஸ்ரீராமசரம ஸ்லோகம்‌, ஸ்ரீக்ருஷ்ண சரம ஸ்லோகம்‌ ஆகியவற்றையும்‌ கொள்ளக்‌ குறையில்லை –

விதததி ந பாஹ்ய லஷ்மீ விரஹ விலாஸ -விசுவாசம் இல்லாமல் ஸந்தான லஷ்மி ஸுபாக்யம் கிட்டாமல் இழந்தே போகிறார்களே
ஆத்த விக்ரியா மநுஜா -அவனைப் பற்றிய த்யானம் இல்லாமல் ப்ரயோஜனாந்தர பரர்களாக
ஸ்ரவண அம்ருதேஷு -செவிக்கு இனிய செஞ்சொல்லாக
கடிகாஸைல வந ப்ரிய -தேவரீரே
வசஸ்ஸூ தே ஸ்ரத்தாம் –தேவரீரே அருளிச் செய்த சரம ஸ்லோகத்தில் நம்பிக்கை கொள்ளாமல்
சத்யம் ப்ரவீத் மனுஷா ஸ்வயம் மூர்த்த பாஹு -திருக்கைகளை மேலே தூக்கி சத்யம் பண்ணினீரே
தே யோ மாம் முகுந்த ஜனார்த்தன அபி -இவ்வாறு திரு நாம சங்கீர்த்தனம் செய்து கொண்டு
புத்தி சுவாதீனம் இருக்கும் பொழுதே -அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன் -அனுதினம் யாவதாத்மா பாவி சொல்லிக் கொண்டு இருந்தால்
பாஷாண காஷ்டாம் ஸத்ருசாயா தாதாமி முக்திம் -பிராண பிரயாண சமயம் -கட்டை போல் கிடைக்கும் பொழுது முக்தி அளிக்கிறேன் என்று அருளிச் செய்தீரே-

———–

கார்யம் ஹிரண்ய ஹரணம் கடிகாசல லுப்த கம்ஸ ஹரணம் வா
அஹரஸ் த்வம் ஆஸ்ரிதாநாம் ஹந்த கிம கிலாந்ய நர்த்த ஜாலாநி–23-

கடிகாசல லுப்த – கடிகை மலையில்‌ பற்றுள்ள பெருமானே ! கார்யம்‌ – உன்‌ காரியம்‌, ஹிரண்ய ஹரணம்‌ – ஹிரண்யனை அழிப்பது. அதவா – அல்லது, கம்ஸ ஹரணம்‌ கம்ஸனை மாய்ப்பது, இங்ஙனமிருக்க, த்வம்‌ – நீ, ஆஸ்ரிதாநாம்‌ – உன்‌னைத்‌ தஞ்ச மடைந்தவர்களுடைய, அநர்த்த ஜாலாநி அகிலாநி – துக்க ஸமூஹங்கள்‌ அனைத்தையும்‌, கிம்‌அஹர: – ஏன்‌ போக்கினாய்‌. ஹந்த – கஷ்டம்‌. ஹரணம்‌ – அழித்தல்‌.
உருவமுடைய அசுரரை மாய்ப்பது தகுதியுடையது. உருவற்ற துக்கத்தை மாய்ப்பது தகுதி யுடையதன்றே என்பது கேள்வி. உருவமுடையது உருவமற்றது என்பதில்‌ வாசியில்லை எம்பெருமானுக்கு, தன்னை யடைந்தவர்களுக்கு விரோதியான கம்ஸ ஹிரண்யாதிகளை அழித்தாப்‌ போல்‌, அவர்களுக்கு விரோதியான ஸம்ஸார துக்கத்தையும்‌ அழித்தானென்பது விடை. தஞ்சம்‌ பற்றிய பக்தர்களை மோஷமடைய வோட்டாமல்‌ தடை செய்கின்றதன்றோ அவர்கள்‌ அனுபவிக்கிற ஸம்ஸார துக்கம்‌.
இங்கு, லுப்தன்‌ – பேராசை கொண்டவன்‌, ஹிரண்யன்‌ – பொன்‌, கம்ஸம்‌ – வெண்கலம்‌, ஹரணம்‌ – திருடுதல்‌ என்று பொருள்‌ கொண்டால்‌. அடே பேராசை கொண்டவனே ! உன்‌ வேலை பொன்னைத்‌ திருடுதல்‌ அல்லது வெண்கலத்தைத்‌ திருடுதலாயிருக்க, ஐயோ துக்கத்தை ஏனப்பா திருடுனாய்‌ அதனால்‌ உனக்கு ஒரு லாபமுமில்லையே என்று வேடிக்கையாக மற்றொரு பொருளும்‌ தோன்றுதல்‌ காணலாம்

கார்யம் ஹிரண்ய ஹரணம் கடிகாசல லுப்த -இங்கே இருக்கவே பேராசை கொண்டு
தங்கம் வெங்கலம் -உயர்ந்த ரிஷிகளுக்கு மட்டும் அனுக்ரஹம் செய்வதற்கா மட்டும் அல்ல
காலே நரஸிம்ஹ -ருக்மிணித் தாயார் ஸந்தேஸம் – இவனே கண்ணன்-ஹரி -அரித்தல் –
கடிகாசல லுப்த -இங்கே இருக்கவே பேராசை கொண்டு கம்ஸ ஹரணம் வா
அஹரஸ்த்வம் ஆஸ்ரிதாநாம் ஹந்த கிம் அகிலாந் யநர்த்த ஜாலாநி -ஆஸ்ரிதர்களுடைய அனைத்து துக்க ஸமூஹங்களையும் போக்கி அருளி-கண்ணுக்கு தெரிந்தே அசுரர்களை போக்கிய மாத்திரம் அல்ல -ஆஸ்ரிதர் ஹிம்ஸை பண்ணும் பிராக்ருதியையும் போக்கி அருளினீர்-நீசனேன் நிறை ஒன்றும் இலேன் போன்ற அடியேன் போல்‌வாரையும் ரக்ஷித்து உனது திருவடிகளிலே சேர்த்துக் கொள்ளவே அன்றோ இங்கு நித்ய வாஸம் உகந்து செய்து அருளுகிறீர் -என்றவாறு

——–

தோஷா மமாந்த ரஹித ஸ்வாமின் கடிகேந்த்ர தாவகாஸ் ச குணா
ததபி குணைஸ் த்வது பக ஸ்தாநே ஹீநாஸ்ரிதா ஜிதா தோஷா –24-

கடிகேந்த்ர – கடிகை மலை யரசனான, ஸ்வாமிந்‌ – ஸ்வாமியே, மம தோஷா: என்னுடைய குற்றங்கள்‌, அந்தரஹிதா – எல்லை யில்லாதவை. தாவகா: குணா: ச உன்னுடையவைகளான குணங்களும்‌ அந்த ரஹிதா: – எல்லை யில்லாதவை. தத்‌அபி ஆயினும்‌, த்வத்‌ உபகதை: – பெரியவனான உன்னை யடைந்த, குணை: – குணங்களால்‌, ஹீந ஆஸ்ரிதா: – தாழ்ந்தவனான ௭ன்னை யடைந்த, தோஷா: – குற்றங்கள்‌, ஜிதா:வெல்லப்பட்டன. ஸ்தாநே – இது யுக்தம்‌ தான்‌.
குணங்களும்‌ குற்றங்களும்‌ ௭ல்லை யற்றவை யென்றால்‌ ஒன்றை மற்றொன்று வெல்ல முடியாது. ஆயினும்‌ குணங்கள்‌ உன்னை அண்டை கொண்ட வலிமையால்‌ என்‌ தோஷங்களை வென்றன என்றபடி, அல்‌லது குணங்கள்‌ குற்றங்கள்‌ என்று சாதாரணமாக எடுத்துக்‌ கொண்டால்‌ குணங்களைக்‌ குற்றங்களே வலிமையுடையன. ஆகிலும்‌ குணங்கள்‌ உன்னைப்‌ பற்றி யிருக்கிற பெருமையினாலே வலிமை பெற்று, என்னைப்‌ பற்றி யிருக்கிற சிறுமையினாலே வலிவிழந்த குற்றங்களை வென்று விட்டன என்றும்‌ கொள்ளலாம்‌.

தோஷா மம அந்த ரஹித -எல்லை இல்லா தோஷங்கள் கொண்ட அடியேன்
அந்த ரஹித ஸ்வாமின் கடிகேந்த்ர தாவகாஸ் ச குணா –ஸகல குண பரிபூர்ண ஸம்பன்னன்

அடியேனின் ஸ்வாமி -சொத்து நான் என்று உணர்ந்து கொண்டேன்
ததபி -இப்படி இருந்தாலும்-குணைஸ் த்வது பகை ஸ்தாநே ஹீநா ஸ்ரிதா ஜிதா தோஷா —குணங்கள் போட்டி போட்டிக் கொண்டு உம்மை அணுகி ஆஸ்ரயம் பண்ண அனைத்து தோஷங்களும் தன்னடையே போயினவே

———–

பாதாம் புஜேந லஸதா ப்ரஸ்ருமர மதுநா ப்ரார்த்ய கந்தேந
ஸ்ரயதாம் சமயஸி கடிகா ஸைலப விபரீத வாஸநாஸ் ஸகலா–25-

கடிகாசைலப – கடிகை மலைத் தலைவனே ! ப்ரஸ்ருமர மதுநா – பெருகுகின்ற தேனை யுடையதும்‌,  பரார்த்ய கந்தேந – சிறந்த நறுமணமுடையதும்‌ ஆகி, லஸதா விளங்குகிற, பாதஅம்புஜேந – திருவடித்‌ தாமரையினால்‌, ஸ்ரயதாம்‌ – உன்னைத்‌ தஞ்சமாகப்‌ பற்றியிருப்பவருடைய, ஸகலா: விபரீத வாஸநாஸ்– எல்லா வகையான – மாறுபட்ட விஷயப்‌ பற்றுகளையும்‌, சமயஸி– தணியச் செய்கிறாய்‌.
எம்பெருமான்‌, தேன்‌ வெள்ளமிடுவதும்‌ கம கம வென்று பரிமளிப்பதுமான தனது திருவடியை பக்தர்கள்‌ அனுபவிக்கும்படி செய்து அதில்‌ பற்றை யுண்டாக்கி, அப்பற்றுக்கு விரோதியாய்‌ இதற்கு முன்பிருந்த அவர்களுடைய துர் விஷயப்‌ பற்றாகிய துர்க் கந்தத்தைத்‌ தணிக்கிறான்‌ என்றபடி

பாதாம் புஜேந -திருவடித்தாமரைகளிலே-லஸதா ப்ரஸ்ருமர மதுநா ப்ரார்த்ய கந்தேந -நறு மணம் மிக்க தேன் பிரவஹிக்க-ஸ்ரயதாம் -ஆஸ்ரிதர்களுடைய-சமயஸி கடிகா ஸைலப விபரீத வாஸநா ஸகலா –காம க்ரோதாதிகள் துர்கந்தங்களைப் போக்கி அருளி
தன்னிடமே வைத்து அனுபவிப்பிக்கிறான் அன்றோ

—————

ப்ரகுண உதயம் ப்ரஸாதம் ப்ராப்தா நிபுணே ந பதவிதா க்ரதிதா
ஸூதராம் த்வயைவ கடிகா நாயக ஸோபேத ஸூக்தி ஹாரலதா –26-

கடிகா நாயக – கடிகை மலையில்‌ எழுந்தருளியுள்ள நாயகனே ! (தலைவனே )!) ப்ரகுண உதயம்‌ – சிறந்த (1) மென்மை, செவிக்கினிமை முதலிய (2) குளிர்த்தி, பளபளப்பு முதலிய – குணங்களின்‌ தோற்றத்தைப்‌ பெற்று: ப்ரஸாதம்‌ – (1) எளிமையாகப்‌ பொருள்‌ புரிதலை (2) அழுக்கற்றுத்‌ தெளிவாயிருத்தலை. ப்ராப்தா – அடைந்ததும்‌, நிபுணேந ஸமர்த்தனான, பதவிதா – (1) வ்யாகரண சாஸ்த்ர மறிந்தவனாலே (2) கோக்குமிடமறிந்தவனாலே, க்ரதிதா – (1) சொல்லோடு சொல்‌ (2) முத்தோடு முத்து சேர்க்கப்பட்டதுமான, ஸக்தி ஹாரலதா – அடியேனுடைய (நல் வார்த்தைகள்‌ பொருந்திய) (1) ஸ்லோக வரிசையாகிய (2) முத்து மாலையானது. த்வயா ஏவ – உன்னாலேயே, சோபேத – ஒளி பெறுவதாகும்‌.
கவி தாம்‌ இயற்றும்‌ ஸ்லோக வரிசையை முத்து மாலையாக உருவகம்‌ செய்கிறார்‌ இதனில்‌. இரண்டிற்கும்‌ உரிய அடைமொழிகளை சிலேடை வகையில்‌ அமைத்திருக்கிறார்‌. பதவுரையில்‌ (1) என்று குறித்தவற்றை ஸ்லோகங்களுக்கும்‌, (2) என்று குறித்தவற்றை முத்து மாலைக்கும்‌ தொடர்பு படுத்துக. ஸ்லோகத்திற்கு குண மாவன – கடகட வென்றிராமல்‌ மெத்தென்றிருத்தலும்‌ இனிமையும்‌ சப்தாலங்காரமும்‌ அர்த்தாலங்காரமும்‌ பிறவும்‌ ஆம்‌. முத்துக்குக்‌ குளிர்த்தியும்‌ அணியுமவர்‌ கழுத்தில்‌ உறுத்தாமல்‌ ம்ருதுவாயிருத்தலும்‌ பிறவும்‌ ஆம்‌. ப்ரஸாதமாவது தெளிவு. அது *லோகத்திற்கு எளிதில்‌ பொருள்‌ புரிந்து கொள்ளும்படி அமைந்திருத்தலும்‌, முத்துக்கு அழுக்கின்மையும்‌ ஆம்‌. அவை யிரண்டும்‌ பதவிதாக்ரதிதமாயிருக்கும்‌. ஸ்லோகம்‌ வியாகரண சாஸ்த்ர மறிந்தவனால்‌ தொகுக்கப்பட்டிருக்கும்‌. பதம்‌ வ்யாகரண சாஸ்த்ரம்‌. இனி முத்து மாலை கோக்குமிடமறிந்தவனாலே கோக்கப்பட்டதாய இருக்கும்‌. அதாவது முத்துக்களில்‌ சில பெரிதாயும்‌ சில சிறிதாயும்‌ சில நடுத்தரமாயும்‌ இருக்கும்‌. மாலையிலும்‌ முதல்‌ முடிவு நடு முதலிய சில இடங்கள்‌ இருக்குமல்லவா ? அதில்‌ எத்தகைய முத்தை எந்த இடத்தில்‌ வைத்துக் கோத்தால்‌ மாலை சோபையைப்‌ பெறுமோ அந்த இட மறிந்தவனாலே கோக்கப்பட்டதாயிருக்கு மென்றபடி. பதம்‌ – காக்குமிடம்‌. ஸூக்தி: நல் வார்த்தைகள்‌ அமைந்த ஸ்லோகம்‌. ஹாரலதா – முத்து மாலை. ஹாரம்‌ – முத்து. முத்து மாலை மெல்லியதாக லதை (கொடி) போன்றிருத்தலால்‌ “ஹாரலச ” எனப்பட்டது. இங்கு நாயக சப்தம்‌ பாட்டுடைத்‌ தலைவனையும்‌, ஹாரத்தில்‌ பத்ய மணியையும்‌ குறிக்கும்‌. சிறந்த பாட்டுத் தலைவனாகிய நரசிங்கப்‌ பெருமாளாலே இவ் வம்ருத பலாவளி என்னும்‌ ஸ்தோத்ரம்‌ சோபிக்கிறது. உயர்ந்த – நடுவில்‌ பதித்த மணியினால்‌ முத்து மாலை சோபிக்கிறது-

கடிகா நாயக-ப்ரகுண உதயம் ப்ரஸாதம் ப்ராப்தா -மென்மை பொருந்திய பா மாலை -எளிமையாக பொருள் சொல்லும் ஸ்ரீ ஸூக்திகள்-குளிர்த்தி -பள பளத்து -ஸூத்தியையும் அளிக்கும்-மா முனிகள் ஆச்சார்யர் ஆணையால் செய்யப்பட்டதால் தாமே மங்களா ஸாஸனம் பண்ணி அருளுகிறார்-நிபுணேந பதவிதா க்ரதிதா-வியாகரண சாஸ்திரத்தில் நிபுணரான தன்னால் சேர்க்கப்பட்ட முத்து மாலை போல் கோக்க ஸாமர்த்யம் மிக்கவரால் செய்யப்பட்டதே ஸூதராம் த்வயைவ -உம்மைப் பற்றிய இது உம்மாலேயே
ஸோபேத ஸூக்தி ஹாரலதா —சோபனம் ஒளி மிக்கு விளங்குகிறதே -அப்படியே விளங்கட்டும் நாயகனாய் -நடு நாயக எம்பெருமானாரே கடிகா நாயகர் என்றுமாம் –
இவரையே திரு உள்ளத்தில் வைத்து குரு பரம்பரா ஹாரத்துக்கு மங்களா ஸாஸனம் என்றுமாம் –

—————

ஸரஸ ஸூமநோ அபி ராமோ ஸாது ச ஸம்ஸ்கார ஸம் ப்ருதோல் லாஸா
ஸமுபைதி ஸூக்தி லதிகா சங்கா தம்ருத பல தவ ஹி ஸாபல்யம் –27-

அம்ருதபல – அம்ருதம் போல்‌ இனிக்கும்‌, அழியாத பழமாகிய அக்காரக் கனிப்‌ பெருமானே ! தவ ஸங்காத்‌ – உன்னுடைய ஸம்பந்தத்தாலே, ஸூக்தி லதிகா அடியேனுடைய (1) ஸூக்தியாகிற (2) கொடியானது, ஸாது – நன்றாக, ஸம்ஸ்கார ஸம்ப்ருத உல்லாஸா – (1) அடிக்கடி கவித்வம்‌ செய்வதால்‌ உண்டான பழக்கத்தாலே நிறைந்த ப்ரகாசத்தை யுடையதாகவும்‌ (2) நீர் விடுதல்‌ எருஇடுதல்‌ முதலிய சீர்படுத்துதலாலே நிறைந்த விளக்கத்தை யுடையதாகவும்‌, ஸரஸஸுமந:அபிராமா ச – (1) ரஸிகர்களான வித்வான்‌௧ளுக்கு இன்ப மூட்டுவதாகவும்‌ (2) தேனோடு கூடிய புஷ்பங்களாலே, பார்ப்பவர்க்கு இன்ப மூட்டுவதாகவும்‌ இருந்து, ஸாபல்யம்‌ – (1) மோக்ஷமாகிய பலத்தோடு புருஷார்த்தத்தோடு கூடியிருத்தலையும் (2) இனிமையான பழத்தோடு கூடியிருத்தலையும்‌, ஸமுபைதி ஹி – அடைகின்றதல்லவா ?
இது தன்னில்‌ தம்முடைய ஸ்ரீஸூக்தியை ஒரு கொடியாக உருவகப் படுத்துகிறார்‌. ஸ்ரீஸூக்தியானது கவித்வம்‌ செய்து பழகிய ஒரு கவியால்‌ செய்யப்பட்டதாகில்‌ மிகவும்‌ விளக்கம்‌ பெற்று ரஸிகர்களான வித்வான்களுக்கு உகப்பை யூட்டி, இறுதியில்‌ எம்பெருமானுடைய ஸம்பந்தத்தாலே, கவித்வம்‌ செய்தவனுக்கும்‌, அதைப் படிப்பவர்க்கும்‌ மோக்ஷமாகிய பலத்தைப்‌ பெறுவிக்கும் கொடியானது நீர்‌ விட்டு எருவிட்டுத்‌ திருத்தம்‌ செய்யப்பட்டால்‌ தேன்‌ நிறைந்த மலர்களோடு கூடியிருந்து கடைசியில்‌ நல்ல பழங்களையும்‌ நமக்குத்‌ தருமென்றபடி. இங்கும்‌ (1) என்று குறிப்பிட்டவற்றை ஸ்ரீஸூக்திக்கும்‌ (2) என்று குறிப்பிட்டவற்றைக்‌ கொடிக்கும்‌ பொருத்திக் கொள்க. இதிலும்‌ சிலேடையுள்ளமை காணலாம்

ஸரஸ ஸூ மநோ அபி ராமோ ஸாது ச –மனங்களை ஈர்க்கும் வண்ணமாயும் -லலிதமான பதங்களைக் கொண்டும் -ஸம்ஸ்கார ஸம் ப்ருதோல் லாஸூ –அர்த்த கௌரவமும் உல்லாஸமாக ஸ்துதி பண்ணவும்-ஸமுபைதி ஸூக்தி லதிகா -இந்த ஸ்லோகமும்
சங்கா தம்ருத பல தவ ஹி ஸாபல்யம் —-அக்காரக் கனியே -உமது சம்பந்தத்தால் இந்த ஸ்ரீ ஸூக்தியும் அம்ருதமானதே-அனுசந்திப்போர்க்கு உமது திருவடி இணைகளையே கொடுக்கும் என்பது திண்ணம் என்றவாற-சம்ஸ்காரம் -கொடி போல் படரும் –நீர் உரம் போல்-சேர்த்து ஆகர்ஷகமாக இருக்கும் -அம்ருத கனிகளையும் கொடுக்கும் அன்றோ -பொதுவான அர்த்தமும் உண்டே

————–

ஸத் பக்ஷ பாத ஸூபகம் ஸந் மாநஸ ஸரஸிகாம்புஜா ஸக்தம்
புவநாஸ்ரயம் விஸூத்தம் புத்யே கடிகா வநெள ஸம் ஹம்ஸம் –28-

ஸத்பக்ஷபாத ஸுபகம்‌ – (1) நல்லோர்களிடம்‌ பக்ஷபாதம்‌ – ஒரு தலையில்‌ பற்று உள்ளமையினால்‌ மனத்தைக்‌ கவருமவனும்‌, (2) அழகிய சிறகடித்தலாலே மனத்தைக் கவருமதும்‌, ஸந்மாநஸ ஸரஸிகா அம்புஜ ஆஸக்தம்‌ (1) நல்ல மனமுடையவர்களென்னும்‌ தடாகத்தில்‌ உள்ள ஹ்ருதய கமலத்தில்‌ மிக்க பற்றுடையவனும்‌ (2) நல்ல மானஸ ஸரஸ்ஸில்‌ முளைத்த தாமரை மலர்களிடம்‌ மிக்க பற்றுடையதும்‌, புவந ஆஸ்ரயம்‌- (1) பூமியை ஆதாரமாக உடையவனும்‌. (2) நீரை ஆதாரமாகவுடையதும்‌, விசுத்தம்‌ – (1) மிகவும்‌ பரிசுத்தனானவனும்‌, (2) மிகவும்‌ வெண்மை நிறமுடையதுமான, கடிகாவந ஓகஸம்‌ – (1) கடிகை மலைக் காட்டை இருப்பிடமாகவுடையவனுமான எம்பெருமானை, ஹம்ஸம்‌ – (2) ஹம்ஸமாக, புத்யே – கருதுகிறேன்‌.
இதில்‌ கடிகை மலை நாயகனை ஹம்ஸமாக உருவகிக்கிறார்‌. விசேஷணங்களை முன்பு போல்‌ எம்பெருமானுக்கும்‌ ஹம்ஸத்துக்கும்‌ பொருந்தும்படி அந்வயித்துக்‌ கொள்க. இது தன்னிலும்‌ சிலேடை காணத்தக்கது. புவனம்‌ – பூமி ஜலம்

ஸத் பக்ஷ பாத ஸூபகம் -நீர் நிலையைக் கண்டதும் சிறகு அடித்து மகிழ-அத்தைக் கண்டவர் மனம் வழங்குவார்கள் அன்றோ –ஆஸ்ரிதர் பக்கல் பக்ஷ பாதி எம்பெருமான் -மனத்தைக் கொள்ளை கொள்வான் -ஸந் மாநஸ ஸரஸி ஜாம்பு ஜா ஸக்தம் –நீர் நிலையில் தாமரை மேல் அபி நிவேசத்துடன் –நீராய் அலைந்து கரைந்து உருக்கும் மானஸ தாமரையில் மகிழ்ந்து இருப்பான்-புவநாஸ்ரயம் வி ஸூத்தம் புத்யே –நீரையே ஆச்ரயமாகக் கொண்டு வெண்மையாக –ஸம்ஸார கந்தமே இல்லாமல் -அமலன் ஆதி பிரான் -இச்சா க்ருஹீத திவ்ய மங்கள விக்ரஹம் -கடிகா வநவ் ஸம் ஹம்ஸம் –இந்த ஹம்சத்தையே ப்ரத்யஷிக்கிறோமே இங்கு –

—————

ஸூ மநோ ரஸ க்ருத சங்கம் ஸ்வரண விசேஷண தோஷிதா நந்கம்
கமலாலய யாந்தரங்கம் கலய கடிகாத்ரி கல்ப தரு ப்ருங்கம் –29-

ஸுமநஸ்‌ ரஸ க்ருத ஸங்கம்‌ – (1) ஞானிகளுடைய பக்தியாகிற ரஸத்தில்‌ பற்று வைத்தவனும்‌, (2) புஷ்பத்தின்‌ ரஸமான தேனில்‌ பற்று வைத்துள்ளதும்‌. ஸ்வரண விசேஷேண – (1) தனது பேச்சாகிய ஒலியினாலே (2) தனது ரீங்காரமாகிய ஒலியினாலே, தோஷித அநங்கம்‌ – (1) மகிழ்விக்கப்பட்ட – ப்ராக்‌ருத சரீரமற்ற முக்தர்களை யுடையவனும்‌, (2) மகிழ்விக்கப்பட்ட மந்மதனை யுடையதும்‌, கமலாலயா அந்த ரங்கம்‌ – தாமரையை இருப்பிடமாகவுடைய பிராட்டியிடம்‌ மனத்தைச்‌ செலுத்துமவனுமான. கமல ஆலய அந்த: அங்கம்‌ – தாமரை மலராகிய வீட்டினுள்ளே தனது உடலை வைத்துள்ளதுமான, கடிகாத்ரி கல்ப தரு ப்ருங்கம்‌ – கடிகை மலையில்‌ முளைத்த கற்பகத் தரு போன்று அனைத்தையும்‌ அனைவர்க்கும்‌ வழங்கும்‌ (1) பெருமானாகிய (2) வண்டை, கலயே – த்யானம்‌ செய்கிறேன்‌.
இதில்‌ கடிகைக் கற்பகமரமாக எம்பெருமானைக்‌ குறிப்பிட்டு அப்பெருமானையே வண்டாக உருவகித்துள்ளார்‌ அல்லது கடிகை மலையையே கற்பக மரமாகவும்‌ எம்பெருமானை அதில்‌ படிந்த வண்டாகவும்‌ உருவகிக்கிறாரென்றலும்‌ பொருந்தும்‌.
ஸுமநஸ: (1) புஷ்பங்கள்‌ (2) ஞாநிகள்‌. உலகிலுள்ள மக்களுக்குக்‌ காமத்தை யுண்டு பண்ணும்‌ மந்மதனுக்கு வண்டுகளின்‌ ரீங்காரவொலி உதவுகின்றமையால்‌, வண்டுகள்‌ மன்மதனுக்கு மகிழ்ச்சி யூட்டுவனவாம்‌. பரம பதத்தில்‌ எம்பெருமானுடைய பேச்சுக்கள்‌ முக்தி பெற்றவர்களுக்கு ஸந்தோஷத்தை விளைவிக்கும்‌. கதா மாம்‌ பகவாந்‌ ஸ்வகீயயா ஸ்நிக்த கம்பீர மதுரயா கிரா பரிசர்யாயாம்‌ ஆஜஞாபயிஷ்யதி (எப்போது அடியேனை)-பகவான்‌ தன்னுடையதான – அன்‌பு ததும்பி, கம்பீரமாய்‌ இனிமையான பேச்சாலே கைங்கர்யங்களில்‌ ஆணை யிடப்‌ போகிறார்‌ என்கிற ஸ்ரீவைகுண்ட கத்யம்‌ (சூர்‌ 4) காணத்தக்கது. அநங்க: (1) சிவனால் உடலழியப்‌ பெற்ற-மந்மதன்‌ (2) இந்த ஊன வுடல்‌ கழியப்பெற்ற முக்தன்‌. கமலாலயா – அந்தரங்கம்‌ என்று எம்பெருமான்‌ விஷயத்தில்‌ பிரிக்க. வண்டு விஷயத்தில்‌ கமலாலய – அந்த அங்கம்‌ என்று பிரிக்க –

ஸூ மநோ ரஸ க்ருத சங்கம் –ஆஸ்ரித ஹ்ருதயத்தில் பக்தி வெள்ள ரசத்தில் ஆழ்ந்து
வண்டு மதுகரம் -ரீங்காரம் -ஹரி சப்தம் -ஆச்சார்ய புருஷர்கள் –
ஸ்வரண விசேஷண தோஷிதா நந்கம் -இருப்பதையே கேட்டு -சரீரம் கழித்து
மன்மதன் அநங்கன் -உடல் அழிந்து -கரும்பு வில் மலர் பாணம்-அவனுக்கும் ஆனந்தம் கொடுக்கும்
கமலாலய யாந்தரங்கம் கலய –ஸ்ரீ அந்தரங்க பரிகரமாக தியானித்து அடைவோம்
வந்து தாமரையையே இருப்பிடமாக கொள்ளுமே-வண்டை த்யானம் பண்ணுவோம்
இவரே வண்டு -மா முனிகள் திருவடித் தாமரைகளையே பற்றி இருப்பாரே –
கடிகாத்ரி கல்ப தரு ப்ருங்கம்-நம்மை ஆக்கி தன்னையே தரும் கற்பகம்-

——————

துர்கதி துக்கித சித்தா துஷ் கர யோகாந் விமுச்ய ஸூக ஸே வ்யாம்
பிராஜ்ஞா ப்ரயாந்தி நித்யாம் பூதிம் கடிகாத்ரி பூப்ம ஆலம்ப்ய–30-

துர்கதி து:கித சித்தா: (1) ஸம்‌ஸாரமென்னும்‌ நரகத்தில்‌ வசிப்பதனால்‌ துன்புற்ற மனத்தையுடைய (2) வறுமையினால்‌ இன்புற்ற மனத்தை யுடைய, ப்ராஜ்ஞா: – (1) ஞானிகள்‌ (2) புத்தி சாலிகள்‌, துஷ்கர யோகாந்‌ – வருந்திச்‌ செய்ய வேண்டிய (1) கரும யோகம்‌ ஞான யோகம்‌ பக்தி யோகம்‌ முதலிய மோக்ஷோபாயங்களை, (2) உடலுழைப்பு வாணிபம்‌ முதலான பணம்‌ சம்பாதிக்கும்‌ ௨பாயங்களை, விமுச்ய – அறவே விட்டு விட்டு, கடிகாத்ரி பூபம்‌ – கடிகை மலை யரசனை, ஆலம்ப்ய – தஞ்சமாகப் பற்றி, ஸுகஸேவ்யம்‌ வருத்தமின்றி அனுபவித்தற்கு உறிய நித்யாம்‌ பூதிம்‌ – (1) நித்ய விபூதி யென்னும்‌ பரமபதத்தை (2) அழியாத செல்வத்தை. ப்ரயாந்தி– அடைகின்றனர்‌.
வறுமையினால்‌ வாடியவர்கள்‌ பணமீட்டும்‌ – வாணிபம்‌ முதலிய வருத்தந்தரும்‌ வழிகளை விட்டு கடிகைமலை யரஸை த்‌ தஞ்சமாகப் பற்றி நீண்ட நாள்‌ நீடித்திருக்கக் கூடிய செல்வத்தைப்‌ பெறுகிறார்கள்‌-இறப்பிறப்புத் தொடர்ச்சி யென்னும்‌ இவ் வுலக வாழ்க்கையினால்‌ வருந்தியவர்கள்‌ மோக்ஷத்திற்கு உரிய வருத்தம்‌ தருகின்ற கரும யோகாதிகளான உபாயங்களை விட்டு ஸித்தோபாயமான கடிகை மலை யரசனைச்‌ சரணமாகப் பற்றி, வருத்தமே யில்லாத ஸுகமே வடிவமான பரம பதத்தை அடைகிறார்கள்‌. இதனால்‌ கடிகை யெம்பெருமான்‌ ஐஸ்வர்யார்த்திகளாலும்‌, மோக்ஷார்த்திகளாலும்‌ சேவிக்கப் படுகிறான்‌ என்று, இரண்டு வகைப்பட்ட கருத்துக்களும்‌ ஒரே வகைச்‌ சொற்களால்‌ சிலேடை வகையில்‌ காட்‌டப்பட்டுள்ளமை காணத் தக்கது.
இங்கு ஸுக ஸேவ்யம்‌ என்று பாடமிருந்தால்‌ அது கடிகாத்ரி பூபம்‌ என்பதற்கு விசேஷணமாய்‌, கஷ்டமான உபாயங்களை விட்டு ஸுக ஸேவ்யனான எம்பெருமானைப்‌ பற்றி என்று பொருள்‌ தந்து சிறப்பைப்‌ பெறும்‌. மற்றை உபாயம்‌ கஷ்ட ஸாத்யம் எம்பெருமானாகிய உபாயம்‌ ஸுக ஸாத்யம்‌ என்‌றதன்றோ ஆசிரியருக்குக்‌ கருத்தாக இருக்க அடுப்பது. ப்ராஜ்ஞா:– (1) ஸுஃலபமான உபாயத்தை யறிந்த புத்திசாலிகள்‌ (2) ஞானிகள்

பிராஜ்ஞா துர்கதி துக்கித சித்தா –-நந்தா நரகம் -வெந்நரகம் -ஸம்ஸாரம் வெறுத்து இருக்கும் ஞானிகள்-ஐஸ்வர்யம் இழந்த துக்கம்-துஷ் கர யோகாந் விமுச்ய ஸூக ஸேவ்யாம்–உபயாந்தரங்கள் துஷ்கரம் –அப்ராப்யம் -என்று விட்டு —ப்ரீதி காரித கைங்கர்யம் செய்ய வழியாக ப்ரயாந்தி நித்யாம் பூதிம் -நித்ய விபூதி அளிக்கும்
புத்தியாசாலியாக இருந்தவர் செல்லும் வழியான பிரபத்தி மூலம் பெறலாமே
கடிகாத்ரி பூப்ம ஆலம்ப்ய–பூ பாலன் இங்கே நித்ய வாஸம் செய்ய -அவனை ஆஸ்ரயித்து –

—————–

கலயந்தி நைவ சந்தஸ் கா புருக்ஷத்வாரி காரணாத் கதநம்
கடிகா ஸிகரி முகுந்தம் கமபி நிதம் ஸூலபம் அநவதிம் லப்தவா –31-

ஸந்த: – எம்பெருமானுடைய பெருவள்ளல்‌ தன்மையை அறிந்த புத்திசாலிகள்‌. கடிகா ஸிகரி முகுந்தம்‌ – கடிகைமலையில்‌ எழுந்தருளியுள்ள முகுந்தனென்கிற, ஸுலபம்‌ எளிதில்‌ கிடைக்கத் தக்க, அநவதிம்‌ – எடுக்க எடுக்கக் குறையாத, கமபி – ஒப்பற்ற, நிதிம்‌ நிதியை – புதையலை, லப்த்வா – அடைந்து. (அதன் பிறகு) காபுருஷ த்வாரி இழிந்தவனுடைய வீட்டு வாசலில்‌, காரணாத்‌ – செல்வம்‌ காரணமாக, கதனம்‌ – (அவனைப்‌ பற்றிக் )கவி சொல்லுவதை, நைவ கலயந்தி – எண்ணவே மாட்டார்கள்‌.
முன்‌ ஸ்லோகத்தில்‌ – துஷ்கர யோகமென்னும்‌ – வருந்திச்‌ செய்யும்‌ உபாயத்தைக்‌ கூறியபடியால்‌ அதில்‌ சேர்ந்த உபாயமான – நீசர் தம் வாசல்‌ பற்றித் துதி சொல்லுதலையும்‌ புத்திமான்கள்‌ விட்டுவிட்டார்கள்‌ – எம்பெருமானைப்‌ பற்றிய பிறகு என்று இது தன்னில்‌ கூறி யருளினார்‌. முகுந்த:- (முஞ்ச, குஞ்ச, ததா )-மோக்ஷத்தையும்‌ இவ் வுலக வாழ்வையும்‌ கொடுப்பவன்‌ என்று பொருள்படும் –

கலயந்தி நைவ சந்தஸ் -நல்ல புத்தி சாலிகள் -அவனே உபாயம் உபேயம் என்று அறிந்தவர்கள்-கா புருக்ஷத்வாரி காரணாத் கத நம் -செல்வத்துக்கு கா புருஷன் வாசலில் நிற்காதவர் -விரும்பாவதவர்-கடிகாதி ஸிகரி முகுந்தம் -இவனே முக்தி தருபவன் -மோக்ஷமும் இஹ லோக பலன்களையும் அளிப்பவன்-கமபி நிதம் ஸூலபம் அநவதிம் லப்தவா –ஆராதனைக்கு எளியவன் –அள்ள அள்ள குறையா வைத்த மா நிதி இவனே –
இவனே நவ நிதி என்று மேல் ஸ்லோகம்

காரா காரே வரவரமுநே வர்த்தமானஸ் சரீரே |
தாபைரேஷத்ரிபிரபி சிரம் துஸ்தரைஸ் தப்யமாந: ||
இச்சந் போக்தும் ததபி விஷயானேவ லோக: க்ஷுதார்த்தோ |
ஹித்வைவ த்வாம் விலுடதி பஹிர்த்வாரி ப்ருத்வீ பதீநாம் ||-வர வர முனி சதகம் 68–மறந்தும் அஸேவ்ய ஸேவை செய்யேன் –மானிடம் கவி பாட வந்தேன் அல்லேன் –

ஹே வரவரமுநியே! உடல் என்னும் சிறையில் இருந்து கொண்டு தாண்ட முடியாத மூவகையான தாபங்களால் வெகு காலமாகத் தடுக்கப்பட்டவனாக இருந்தபோதிலும் இந்த ஜனம் விஷயங்களை அநுபவிப்பதிலே ஆசை கொண்டு பசியால் பீடிக்கப் பட்டவனாக உம்மை விட்டு அரசர்களுடைய வெளி வாயிற்படிகளில் புரளுகிறான்.

————————-

மகரமத கூர்ம ரூபம் வர சங்கம் பத்ம மபி மஹா பத்மம்
குந்தம் அஸிதம் முகுந்தம் கோவா கடிகாத்ரி நவ நிதிம் நப ஜேத் -32–

மகரம்‌ – மீனாக அவதரித்தவனும்‌, அத – மேலும்‌, கூர்ம ரூபம்‌ – ஆமை யுருவம்‌ கொண்டவனும்‌, வர சங்கம்‌ – உயர்ந்த சங்கை யுடையவனும்‌, பத்மம்‌ – தாமரை மலரைக்‌ கையிலேந்தியவனும்‌, மஹா பத்மம்‌ – பூஜிக்கத் தக்க ஸ்ரீமஹா லஷ்மியை (மனைவியாக) உடையவனும்‌, குந்தம்‌ – பாபத்தைப்‌ போக்குமவனும்‌, அஸிதம்‌ – நீல வர்ணமுடையவனும்‌, முகுந்தம்‌ – மோக்ஷ பூமியைத் தருமவனுமாகிய, கடிகாத்ரி நவநிதிம்‌ – கடிகாத்ரி எம்பெருமானென்னும்‌ – (மகரமும்‌ கூர்மமும்‌ உயர்ந்த சங்கமும்‌ பத்மமும்‌ மஹா பத்மமும்‌ குந்தமும்‌ அஸிதமும்‌ (நீலமும்‌) முகுந்தமும்‌ கர்வமுமாகிய) புதிய – அபூர்வமான நிதியை, கோ வா – எவன் தான்‌, ந பஜேத்‌ – அடையமாட்‌டான்‌.
இந்த ஸ்லோகத்தில்‌ எம்பெருமானை ஒன்பது வகையான நிதியாக அருளிச் செய்கிறார்‌. மஹா பத்மம்‌, சங்கம்‌, மகரம்‌, கச்சபம்‌, முகுந்கம்‌. குந்தம்‌, நீலம்‌, கர்வம்‌ என்று நிதிகள்‌ ஒன்பது. இவற்றில்‌ ஒன்று மற்றொன்றாக இராது. இவை யெல்லாமாகவும்‌ எம்பெருமானிருக்கிறானென்று அவனை நவநிதி (புதிய – எங்கும்‌ காணாத நிதி) என்கிறார்‌. ஒன்பது வகைப்பட்ட நிதியால்‌ கிடைக்கும்‌ பயனெல்லாம்‌ எம்பெருமானொருவனால்‌ கிடைக்குமென்றபடி. இந்த இரண்டு ஸ்லோகங்களிலும்‌ கடிகை மலை யரசனை நிதியாகக்‌ குறிப்பிடுகின்றமை காணத்தக்கது. இந்த ஸ்லோகத்தில்‌ எட்டு வகை நிதிகளையே குறித்துள்ளார்‌ அபி என்றதனால்‌, கர்வம்‌ என்ற நிதியையும்‌ சேர்த்துக்கொள்க. எம்பெருமான்‌ பக்ஷத்தில்‌ கர்வமென்பது வாமனனுக்கு வாசகமாகும் –

மகரமத கூர்ம ரூபம் வர சங்கம் -மீன் =மத்ஸ்ய மேல் கூர்மமாகவும் -உயர்ந்த சங்கு ஆழ்வானைக் கொண்டவனும்-பத்ம மபி மஹா பத்மம் -தாமரை மலரைக் கொண்டவனும்
திருவையும் திரு மார்பில் கொண்டவனும்
குந்தம் -பாபம் போக்கும் -பரசுராமன்-அஸிதம் -நீல மேக ஸ்யாமளன்
முகுந்தம் -மோக்ஷம் அளிக்கும் -ஸாஷாத் ஸ்ரீ மன் நாராயணன்
கோவா கடிகாத்ரி நவ நிதிம் நப ஜேத் -புதியதாக அப்பொழுதைக்கு அப்பொழுது ஆராவமுதமும்-மஹா பத்ம பத்ம சங்க மகர சத்கப முகுந்த குந்த நீளா கர்வ –நவ நதிகள் புராணங்கள் சொல்லும்=ஒன்றுடன் வேறே நிதியைச் சேர்க்க முடியாது
இந்த தசாவதாரங்களை சேர்த்தாலும் அக்காரக்கனிக்கு ஒப்பு ஆகாதே இவனே சீரிய நிதி என்றவாறு –

———-

காஞ்சன மயே ஸ்புரந்தம் கஞ்சன கடிகா மஹீ ப்ருத ஸிகரே
கிருஷ்ண மணி மர்க ரஹிதம் கேவா ந விதந்தி க்ருத்ஸ்நதஸ் ஸ்லாக்யம் –33-

கடிகா மஹீப்ருத: – கடிகை யென்னும்‌ மலையினுடைய, காஞ்சந மயே பொன் மயமான, ஸிகரே – கொடு முடியில்‌, ஸ்புரந்தம்‌ – விளங்குகின்றதும்‌, அர்க்க ரஹிதம்‌– விலை மதிப்பற்றதுமான, ஞ்சந – ஒரு க்ருஷ்ணமணிம்‌ – கரு மணியை, க்ருத்ஸ்நத: எல்லா மணிகளைக்‌ காட்டிலும்‌, ஸ்லாக்யம்‌ – உயர்ந்ததாக, கே வா – அறிவு படைத்த யார் தான்‌, ந விதந்தி – அறிய மாட்டார்கள்‌.
இதில்‌ எம்பெருமானை நீல மணியாக வருணிக்கிறார்‌. தங்கத்தில்‌ அழுத்திய நீல மணி மிகவும்‌ சோபிக்கும்‌. அது போல தங்க மயமான கடிகைக் கொடு முடியில்‌ எழுந்தருளியுள்ள நீல மணி வண்ணனான எம்பெருமானும்‌ சோபிக்கிறான்‌. க்ருத்ஸ்நத: என்பதற்கு ஜாதியாலும்‌ ப்ரகாசத்தாலும்‌ பொன்னோடு சேர்ந்திருப்பதனாலும்‌ – என்றும்‌ பொருள்‌ கொள்ளல்‌ தகும்

காஞ்சன மயே -பொன் வண்ணமாக-ஸ்புரந்தம் -விளங்கும் கஞ்சன கடிகா மஹீ ப்ருத ஸிகரே -கனக கிரியில் காள மேகம்-கிருஷ்ண மணி மர்க ரஹிதம் -நீல மேக ஸ்யாமள ரத்ன மணி-கேவா ந விதந்தி க்ருத்ஸ் நதஸ் ஸ்லாக்யம் –உயர்ந்த ஒப்பற்ற இந்த செல்வத்தை அறிவாளிகள் யார் தான் அறிய மாட்டார்கள்
கீழ் நவ நிதி -இங்கு ஒப்பார் மிக்கார் இலையாய நீல மணி

சங்கம், பதுமம், மகாபதுமம், மகரம், கச்சபம், முகுந்தம், குந்தம், நீலம், வரம் ஆகியனவே நவநிதிகள் ஆகும்.-குபேர சம்பத்துக்களாக அவனருகில் இந்த நவநிதிகளும் திகழ்வதாகச் சொல்கின்றன புராணங்கள்-அரிசி, கோதுமை துவரை, பயறு, கொள்ளு, உளுந்து, எள், காராமணி, கடலை என்பவை நவ தானியங்கள் எனப்படும்.-கங்கை, யமுனை, நர்மதை, சரஸ்வதி, கோதாவரி, காவிரி, சரயூ, குமாரி, பயோஷ்னி என்பவை நவ நதிகள் எனப்படும்.-சூரியன் சந்திரன், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி, ராகு கேது என்னும் நவக்கிரகங்களும் முறையே சிவன் உமை முருகன், திருமால், பிரம்மா, குரு, இந்திரன், எமன், பத்திரகாளி சித்திரகுப்தன் ஆகியோரே நவக்கிரகங்களின் நவ சக்தியாக இருப்பதாக ஜோதிட சாஸ்திரங்கள் கூறுகின்றன.-கோமேதகம், நீலம், பவளம், முத்து, புஷ்பராகம், மரகதம், மாணிக்கம், வைடூரியும் என்பவை நவ மணிகள் எனப்படும்.

—————-

ஸம் ஸரண ஸரணி பாந்தா தாப த்ரய தரணி கிரண சந்தப்தா
ஆஸ் வாஸிதா கடிகாத்ரவ் ஹரி சந்தந மேத்ய ஸீதளச்சாயம் –34-

ஸம் ஸரண ஸரணி பாந்தா:- ஸம்ஸாரமாகிய வழியில்‌ எப்போதும்‌ திரியும்‌ வழிப் போக்கர்களாய்‌, தாப த்ரய தரணி கிரண ஸந்தப்தா: – தாபத்ரய மென்கிற ஸூர்ய கிரணங்களினால்‌ மிகவும்‌ தபிக்கப்பெற்ற மனிதர்கள்‌, கடிகாத்ரெள – கடிகை மலையில்‌ (உள்ள), ஸீதளச்சாயம்‌ – குளிர்ந்த நிழலை யுடைய, ஹரி சந்தனம்‌ – ஹரி சந்தன மென்கிற தேவ லோக வ்ருக்ஷத்தை (எம்பெருமானை) ஏத்ய – அடைந்து, ஆஸ்வஸிதா:பவந்தி இளைப்பாறுகின்றனர்‌.
தாப த்ரயம்‌- ஆத்யாத்மிகம்‌ ஆதிபெளதிகம ஆதிதைவிகம்‌ என்ற மூன்று தாபங்கள்‌. மன வருத்தமும்‌ உடல்‌ நோயும்‌ ஆத்யாத்மிகம் . தேள்‌ பாம்பு புலி சிங்கம்‌ மனிதன்‌ ஆகியவற்றால்‌ உண்டாகும்‌ கஷ்டம்‌ ஆதி பெளதிகம்‌. மழை வெயில்‌ காற்று முதலியவற்றால்‌ பிறக்கும்‌ வருத்தம்‌ ஆதிதைவிகம்‌. இவற்றை ஸம்ஸாரமாகிற வழியில்‌ செல்லும்‌ வழிப் போக்கர்களுக்குத்‌ தாபமாகச்‌ சொன்னார்‌. ஸூரிய வெப்பத்தினால்‌ துக்கமடைந்தவன்‌, நிழல்‌ செய்யும்‌ மரத்தை அணுகித்‌ தாபந்தீரப்‌ பெறுவது போல்‌, இம்மூவகைத்‌ தாபங்களினால்‌ வருந்துமவன்‌ “வாஸுதேவ தரு” என்று ப்ரஸித்தமான எம்பெருமானை யடைந்து தாபந்தீரப்பெற்று மகிழ்கிறான்‌ என்கிறார்

ஸம் ஸரண ஸரணி பாந்தா –ஸம்ஸார சாகரம் பாலை வனம் -கொடு வெந்நரகம்
தாப த்ரய தரணி கிரண சந்தப்தா –தாபத்ரயங்களால் -ஆத்யாத்மிகம் -ஆதி பவ்திகம் -ஆதி தெய்விகம் -இவற்றால் நன்றாக தவிக்கும் நமக்கு-ஆஸ் வாஸிதா கடிகாத்ரவ் ஹரி சந்தந மேத்ய ஸீத லச்சாயம் –ஆஸ்வாஸம்-குளிர்ந்த சாயை -இங்கு தானே —ஹரி சந்தன வ்ருஷம் போல் கடிகாத்ரி அக்காரக்கனி எம்பெருமான்

—————-

முக்தம் நிஜ ஜநப் பத்தம் மூலம் ஜகதாம் பலம் சகடி காத்ரவ்
ஆகலய தாத்புதம் மஹதா கண்டம் மநுஜ மாநநே ஸிம்ஹம்-35-

முக்தம்‌ – இயற்கையாகவே ஸம்ஸாரத்த்லிருந்து விடுபட்டதும்‌, நிஜ ஜந பத்தம்‌ தன்னுடைய பக்த ஜனங்களுக்குக்‌ கட்டுப்பட்டதும்‌, ஜகதாம்‌ – உலகங்களுக்கு, மூலம்‌ வேரானதும்‌ (காரணமானதும்‌) பலம்‌ ச – பழமானதும்‌ – பயனான புருஷார்த்தமானதும்‌, ஆகண்டம்‌ மநுஜம்‌ – காலிலிருந்து கழுத்த வரையிலும்‌ மனிதவுருப்‌ பெற்றதும்‌, ஆநநே ஸிம்ஹம்‌ – முகத்தில்‌ சிங்கமுமாகிய, மஹத்‌ அத்புதம்‌ – பெரிய ஆச்சரியமானதொரு பொருளை, கடிகாத்ரெள – கடிகைமலையில்‌, ஆகலயத– (சென்று) கைப் பற்றுங்கள்‌ அல்லது தியானியுங்கள்‌.
உலகில்‌ ஒரே சமயத்தில்‌ ஒரே வஸ்து, விடுபட்டதும்‌ கட்டுப்பட்டதுமாக இராது. ஒன்றே வேராகவும்‌ பழமாகவும்‌ இராது. ஒரே பொருள்‌ மனிதனாகவும்‌ சிங்கமாகவும்‌ இராது. அப்படி இங்கு அமைந்துள்ளதனால்‌ எம்பெருமானை மஹத்‌ அத்புதம்‌ என்றார்‌.

முக்தம் நிஜ ஜநப் பத்தம் மூலம் ஜகதாம் பலம் –வேர் பழம் முக்தன் பத்தன்
கண்ணி நுண் சிறுதாம்பினால் கட்டுண்ணப் பண்ணிய பெரு மாயன்
மூலம் காரணமாகவும் -அக்காரக்கனி யாகவும் உள்ளாயே
சகடி காத்ரவ் ஆகலய தாத்புதம் மஹதா கண்டம் மநுஜ மாநநே ஸிம்ஹம் -நர ஸிம்ஹ ரூபம்
அகடி கடநா சமர்த்தன் வழியாகவும் ப்ராப்யமாகவும் உள்ளாயே

——————–

பஸ்யந்தி நயந ஹரிணா ஸ்பஷ்டம் கடிகாத்ரி லுப்தகம் யாவத்
பரிசர சரைஸ்து தாவத் பாதக பதகை பலாயிதம் க்வாபி –36-

நயன ஹரிணா: – (அடியேனுடைய ) கண்களென்னும்‌ மான்கள்‌, கடிகாத்ரி லுப்தகம்‌ – கடிகை மலையிலுள்ள எம்பெருமானாகிய வேடனை, யாவத்‌ – எது வரையிலும்‌, ஸ்பஷ்டம்‌ – தெளிவாக, பஸ்யந்தி – பார்க்கின்‌றவோ, தாவத்‌ – அதுவரையிலும்‌, பரிஸர சரை: (அடியேனுடைய) பக்கத்தில்‌ திரிந்து . கொண்டிருந்த, பாகத பதகைஸ்து – பாவங்களாகிய பறவைகளாலோ எனின்‌, க்வாபி -எங்கேயோ, பலாயிதம்‌ – ஒடிப் போதல்‌ ஆயிற்று. மஹத்‌ அத்புதம்‌ – (இது) பெரிய ஆச்சர்யம்‌.
முன்‌ ஸ்லோகத்திலிருந்து மஹத்‌ அத்புதம்‌ என்ற சொற்களை வருவித்துக்‌ கொள்க. எம்பெருமானை ஸேவித்தேன்‌, பாவங்கள்‌ பறந்தோடின – என்பதனை ஒரு சமத்காரமாகக்‌ கூறுகிறார்‌. வேடனை மான்கள்‌ பார்‌த்துக்‌ கொண்டிருந்தனவாம்‌. பறவைகள்‌ ஒடினவாம்‌. பார்த்த மான்கள்‌ ஓடவில்லை, பாராதவைகள்‌ ஓடின – என்பது பெரிய ஆச்சரியமன்றோ –

பஸ்யந்தி நயந ஹரிணா -மான்கள் -அடியேன் கண்கள்-ஸ்பஷ்டம் கடிகாத்ரி லுப்த கம் யாவத்-ஸ்பஷ்டமாக கண்டு-பரி சர சரைஸ்து தாவத் பாதகப்தகை பலாயிதம் கவாபி — பாபங்கள் ஆகிய பறவைகள் ஓடியே போயினவே-வேடுவனைப் பார்த்து மான் ஓடாது -பறவைகளோ ஓடுமே -அதே போல் இங்கு –-ஆனால் இவன் வேடுவன் போல் கொடியவன் அல்லவே என்று அடுத்த ஸ்லோகம்-

————

விமல மணி ஹேம கடகம் விலஸித வநமால யோல்ல சந் மௌலிம்
கடிகாத்ரி ஸூஹ்ருத மீடே காஞ்சந பீதாம் ஸூகா வ்ருதம் ப்ராம் ஸூம் –37-

விமலமணி ஹேமகடகம்‌ குற்றமற்ற ரத்தினங்கள்‌ அழுத்தப்பெற்ற பொன் வளையல்களை அணிந்தவனும்‌, விலஸித வநமாலயா – விளங்குகின்ற வனமாலையினால்‌, உல்லஸத்‌ மௌலிம் – ப்ரகாசிக்கின்ற திருமுடியை யுடையவனும்‌, காஞ்சந பீதாம்சுக ஆவ்ருதம்‌ – பொன் மயமான பீதாம்பர மணிந்தவனும்‌, ப்ராம் ஸூம்‌ உயரமானவனுமாகிய, கடிகாத்ரி ஸூஹ்ருதம்‌ – கடிகை மலையிலுள்ள நன் மனம்‌ படைத்த தோழனை, ஈடே – ஸ்தோத்ரம்‌ செய்கிறேன்‌.
முன் ஸ்லோகத்தில்‌ எம்பெருமானை வேடனென்றார்‌. வேடனாகில்‌ கொடியவனாக
இருப்பானோ என்று ஐயமெழ , கொடியவனல்லன்‌, நன் மனம்‌ படைத்த தோழனாகி யிருப்பவனென்று இதனால் ஐயத்தைப்‌ போக்கினாராயிற்று. ஸுஹ்ருத்‌ சோபநா சம் ஸிஹ்ருதயவாந்‌ –நன்மையை வேண்டும்‌ மனம்‌ படைத்தவன்‌-எம்பெருமானுடைய அகத்தின்‌ அழகை ஸுஹ்ருதம்‌ என்பதனாலும்‌, திருமேனியழகை மற்றுள்ள எல்லாப்‌ பதங்களாலும்‌ குறிப்பிட்டருளினார்‌. ஆபாதபத்மம்‌ யா மாலா வனமாலேதி ஸா மதா (தோளிலிருந்து பாதகமலம் வரை தொங்குகின்ற மாலை வனமாலையென்று கருதப்பட்டது) என்ற களிங்கரின் வாக்கின்படி வனமாலையாவது திருமேனியில்‌ சாத்தும்‌ மாலையாகக்‌ கூறியதற்குக்‌ காரணம்‌ அறிய முடியவில்லை. கண்டு கொள்வது. இவரிப்படி அருளுகின்றமையால்‌ இங்ஙனமும்‌ இருக்கத் தகும் –

விமல மணி ஹேம கடகம் -நிர்மல -தூ மணி பொன் வளையல்கள் அணிந்து
விலஸித வந மால-யோல்ல சந் மௌலிம் -ஜ்வலிக்கும் திரு அபிஷேகம்
காஞ்சந பீதாம் ஸூக ஆவ்ருதம் ப்ராம் ஸூகம் —முடிச் சோதி -கடிச் சோதி -அடிச் சோதி -பரஞ்சோதி மயம்-பும்ஸாம் த்ருஷ்டி ஸித்த அபஹாரிணாம் -கண்டவர் தம் மனம் வழங்கும் பெருமாள் கடிகாத்ரி ஸூஹ்ருத மீடே -ஸூஹ்ருத தேவரை சரணம் அடைந்து ஸ்தோத்ரம் பண்ணுவோம்-

—————–

ஸத்பி பரிகதம மலை ஸம் ஸ்ரித ஸர்வம் ஸஹம் ஹிரண்ய க்ருதம்
கடிகாத்ர் யுபரி ஸூமேரும் கலயே ஸத் வோத்தரம் ஸூரைஸ் ஸேவ்யம் –38-

அமலை: குற்றமற்ற, ஸத்பி: – முனிவர்கள்‌ முதலிய நல்லோர்களாலே, பரிகதம்‌ சூழப் பெற்றதும்‌, ஸம்ஸ்ரித ஸர்வம் ஸஹம்‌ – (1) அடைய பட்ட பூமியை உடையதும்‌ (பூமியில்‌ இருப்பதும்‌) (2) தன்னை யடைந்தவரின்‌ குற்றமெல்‌லாவற்றையும்‌ பொறுக்க வல்லதும்‌, ஹிரண்ய க்ருதம்‌ – (1) பொன்னால்‌ செய்யப்பட்டதும் (2) ஹிரண்யனைக்‌ கிழித்ததும்‌, ஸத்த்வ உத்தரம்‌ – அதிகமான ஸத்துவ குணம்‌ படைத்ததும்‌, ஸூரை: ஸேவ்யம்‌ – (1) தேவதைகளால்‌ ஸேவிக்கப்பட்டதும்‌, (2) தேவதைகளால் வசிக்கப் பெற்றதுமான, ஸுமேரும்‌ – மேரு மலையை, கடிகாத்ரி உபரி – கடிகை மலையின்‌ மேலே, கலயே – காண்கிறேன்‌.
இதில்‌ கடிகை யெம்பெருமானை மேரு மலையாக ரூபணம்‌ செய்கிறார்‌. மேருமலைக்கு இடப்பட்ட ஐந்து விசேஷணங்களில்‌ மூன்று சிலேடையினால்‌ இரண்டு பொருள்களைத் தருவன. மற்ற இரண்டும்‌ ஒரே பொருள் தந்து பிரசித்தமான மேருவுக்கும்‌ எம்பெருமானாகிய மேருவுக்கும்‌ பொதுவாய்‌ நிற்பன. ஸம்‌ஸ் ரிதா – ஸர்வம்‌ ஸஹா யேந ஸ: – என்கிற வ்யுத்பத்தியால்‌ பூமியில்‌ இருக்கும்‌ : மேருமலையைக்‌ குறிப்பிடுகிறது ஸம்ச்ரிதஸர்வம்‌ ஸஹ: என்பது. அதுவே – ஸம்‌ ச்ரிதாநாம்‌ ஸர்வம்‌ (தோஷம்‌) ஸஹதே என்னும்‌ வ்யுத்பத்தியாலே ஆஸ்ரிதர்களுடைய குற்றங்கள்‌ அனைத்தையும்‌ பொறுத்துக்‌ கொள்ளுகிற எம்பெருமானாகிய மேருமலையைக்‌ குறிக்கிறது. ஹிரண்ய க்ருதம்‌ என்பது ஹிரண்யேந க்ருத: என்ற வ்யுத்பத்தியாலே பொன்னாலான மேருவைக்‌ குறிக்கிறது. ஹிரண்யம்‌ க்ருந்ததி இதி – ஹிரண்யக்ருத்தம்‌, ஹிரண்ய க்ருதம்‌ என்ற வ்யுத்பத்தியால்‌ ஹிரணியனைக்‌ கிழித்த எம்பெருமானாகிய மேருமலையைக்‌ குறிக்கிறது; க்ருதீ – ஸ்சேதநே என்பது தாது.-ஸுரைஸ்ஸேவ்யம்‌ என்பதில்‌ “ஸேவ்யம்‌” என்பது வசிக்கத்தக்கது என்ற பொருளைத் தந்து மேருவைக்‌ காடடிகிறது. தேவர்கள்‌ மேருமலையில்‌ வசிப்பதனால்‌. அதுவே ஸேவிக்கத்தக்கது என்னும்‌ பொருளைக்‌ காட்டி தேவர்களால்‌ ஸேவிக்க (வணங்கத்தக்க எம்பெருமானைக்‌ காட்டுகிறது. பிரசித்தமான மேரு பூமியில்‌ இருக்கிறது. எம்பெருமானாகிய மேரு கடிகைமலையில்‌ விளங்குகின்றது என்பது இரண்டு மேருக்களுக்கும்‌ வாசி

ஸத்பி பரிகதம் அமலை –சாத்விகர் களால் சூழப்பட்ட
ஸம் ஸ்ரித ஸர்வம் ஸஹம் -பூமியை அடைந்து -நன்றாக ஆஸ்ரயம் அடைந்தவர்கள் அகம் பொறுத்து
ஹிரண்ய க்ருதம் -பொன் மயமான -ஹிரண்ய அசுரனைக் பாக்கியவான்
கடிகாத்ர் யுபரி -கடிகாத்ரி மலைக்கு மேல் உள்ள அக்காரக்கனியை –
ஸூ மேரும் கலயே -காண்கின்றேன்
ஸத் வோத்தரம் -ஸாத்விக குணம் மிக்கு
ஸூ ரைஸ் ஸேவ்யம் –தேவர்கள் இருப்பிடம் -ஸாத்விக குணம் உள்ள மலை –
சமன் கொள் வீடு தரும் தடம் குன்றமே
அடுத்த ஸ்லோகத்தில் திருப் பாற் கடலுடன் ஸாம்யம் அருளிச் செய்கிறார் –

———–

ஸரஸம் ஸம்ப்லுத வேலம் சந்த்ருத மணி ராஜ சரசிஜா சங்கம்
கம்பீரம் அமிதம் அமலம் காஹே கடிகாசலேஸ கலஸாப்திம் –39-

ஸரஸம்‌ – (1) ஆனந்தத்தோடு கூடியவனும்‌ (2) சுவையோடு கூடியதும்‌, ஸம்ப்லுத வேலம்‌ – (1) கரை போல்‌ மேட்டு மடையான நீசர்களிடமும்‌ (அருள்‌ செய்வதற்காக) செல்லுமவனும்‌ (2) கரையையும்‌ மூழ்கடிப்பதும்‌, ஸந்த்ருத மணிராஜ ஸரஸிஜா சங்கம்‌ (1) நன்றாக தரிக்கப்பட்ட கெளஸ்து மணி, ஸ்ரீமஹாலக்ஷ்மி, சங்கு இவற்றை உடையவனும்‌ (2) இவற்றை யுடையதும்‌, கம்பீரம்‌ (1) ஆழமான திருவுள்ளமுடையவனும்‌, (2) ஆழமுடையதும்‌, அமிதம்‌ – (1) தேச கால வஸ்துக்களால்‌ அளவுபடாதவனும்‌ (எல்லா தேசத்திலும்‌ எல்லாக்‌ காலத்திலும்‌ எல்லாப்‌ பொருளாகவும்‌ இருப்பவனும்‌) (2) பரந்ததும்‌ (விசாலமானதும்‌) அமலம்‌ – (1) குற்றமற்றவனும்‌, (2) அழுக்கற்றதும்‌ ஆகிய, கடிகாசலேச கலசாப்திம்‌ (1) கடிகைமலைத் தலைவனாகிய (2) திருப்பாற்‌ கடலை, காஹே – (1) அனுபவிக்கிறேன்‌ (2) குடைந்தாடுகிறேன்‌.
இதில்‌ எம்பெருமானைத்‌ திருப் பாற்கடலாக அருளிச் செய்கிறார்‌. ஸந்த்ருதமணிராஜ ஸரஸிஜா சங்கம்‌ என்பது, பாற்கடலைக்‌ கடைந்து கெளஸ்துபத்தையும்‌ ஸ்ரீமஹா லக்ஷ்மியையும்‌ எம்பெருமான்‌ கைப்பற்றியதனால்‌ கடைவதற்கு முன்பு பாற்கடலிலும்‌, கடைந்த பின்பு எம்பெருமானிடமும்‌ அவையிரண்டு முள்ளமையும்‌, எம்பெருமானிடமும்‌ பாஞ்சஜந்யமாகிய சங்கு உள்ளமையினாலும்‌, பாற்கடலில்‌ சங்குகள்‌ இருப்பதனாலும்‌, சங்குள்ளமையும்‌ எம்பெருமானிடமும்‌ பாற்கடலிலும்‌ பொருந்தும்‌. மற்றவை ஸ்பஷ்டம்

ஸ ரஸம் ஸம் ப்லுத வேலம் -பாற் கடல் -ரஸம் மிக்கு -கரை இருக்குமே
ஆனந்த ப்ரஹ்மம் -ஸம்ஸாரிகளுக்கும் ஆஸ்ரயிக்கும் படி
சந்த்ருத மணி ராஜ சரசிஜா சங்கம் -கௌஸ்துப -ஸிந்து கன்யா சங்கங்கள் தரித்து
கௌஸ்துப மணியையும் திருவையும் மார்பில் கொண்டவன் சங்கு ஆழ்வான் அனைத்தையும் தரித்து
கம்பீரம் -தேஜஸ் மிக்கு
அமிதம் -எல்லை அற்ற -கல்யாண குண ஏக ஸ்தானம்
அமலம் -நிர்மலம்
காஹே கடிகாசலேஸ கலஸாப்திம் —குடைந்து நீராடும் படி அக்காரக்கனி பாற் கடல் போல் உள்ளானே –

————-

விகத தமோ க்ரஹம் அசலம் வ்ருத்தி க்ஷய ரஹிதம் அநு தயாஸ்த மயம்
விலஸித மாநஸ கமலம் வீஷே கடிகாத்ரி விதும் அஹோ விமலம் -40-

விகத தமோ க்ரஹம்‌- (1) தமோ குணத்தினால் பிடிக்கப்படாதவனும்‌ (2) ராகுவினால்‌ உண்டாகும்‌ கிரஹணமில்லாதவனும்‌, அசலம்‌ (1) அழி வற்றவனும்‌ (2) அசைவில்லாதவனும்‌, வ்ருத்தி க்ஷய ரஹிதம்‌ – (1,2) வளர்வும்‌ தேய்வும்‌ இல்லாதவனும்‌, அநுதயாஸ்தமயம்‌ – (1,2) பிறப்பும்‌ இறப்புமற்றவனும்‌, விலஸித மாநஸ கமலம்‌ (யோகிகளின்‌) ஹ்ருதய கமலத்தை மலரச்‌ செய்பவனும்‌ (2) மாநஸ ஸரஸ்ஸிலுள்ள தாமரை மலரை மலரச் செய்பவனும்‌, விமலம்‌ – (1) குற்றமற்றவனும்‌ (2) களங்கமற்றவனுமாகிய. கடிகாத்ரி விதும்‌- கடிகை மலையிலுள்ள (1) (எம்பெருமானாகிய) (2) சந்திரனை, வீக்ஷே – ஸேவிக்கிறேன்‌. அஹோ – ஆச்சரியம்‌.
எம்பெருமானாகிய சந்திரன்‌ உலகிலுள்‌- சந்திரனுக்கு முரண்பட்டவனாக இருப்பதனால்‌, இப்படிப்பட்ட சந்திரனைக்‌ காண்‌பதில்‌ ஆச்சரியமடைகிறார்‌.
சந்திரனுக்கு – ராஹுக்ரஹணமும்‌ வளர்வும்‌, தேய்வும்‌, பிறப்பும்‌, இறப்பும்‌, களங்கமும்‌, தாமரை மலரைக்‌ கூம்பச்‌ செய்தலும் உண்டு. இவையில்லாத சந்திரன்‌ கடிகைமலை யெம்பெருமான்‌. எம்பெருமான்‌ பத்தில்‌ விசேஷணங்களுக்கு வேறு பொருளும்‌ காட்டப்பட்டமை காணத்தக்கது

விகத தமோ க்ரஹம் -தமோ குணங்கள் கிட்டாவே
அசலம் -ஸ்திரமாக
வ்ருத்தி க்ஷய ரஹிதம் -வளருதல் தேய்தல் இல்லையே
அநு தயாஸ்த மயம்-பிறப்பு மறைவு இல்லையே
விலஸித மாநஸ கமலம் வீஷே -ஹ்ருதய கமலத்தை விகஸிக்கும்
கடிகாத்ரி விதும் –அக்காரக்கனி சந்திரன் களங்கம் தீர்க்கும் -துண்ட வெண் பிறையன் துயர் தீர்த்தவன்
அஹோ விமலம் –

————

நிரவதிக நித்ய மஹஸா நிர்மல முக்த அநு பந்த ஸூப கேந
கடிகாத்ரி மகுட பாஜா மணிநா மம மநஸி வாரிதம் திமிரம்–41-

நிரவதிக நித்ய மஹஸா – எல்லை யற்ற அழியாத ஒளியை உடையதும்‌, நிர்மல முக்தா அநுபந்த ஸுபகேந – சுத்தமான முத்துக்களே சேர்ந்ததனால்‌ அழகுடையதும்‌, கடிகாத்ரிமகுடபாஜா – கடிகை மலையின்‌ சிகரத்தை அடைந்ததுமான, மணிநா எம்பெருமானாகிய ரத்தினத்தினொளியினால்‌. மம மநஸி – எனது மனஸ்ஸில்‌, திமிரம்‌ அறியாமையாகிய இருள்‌, வாரிதம்‌ – போக்கடிக்கப்பட்டது.
ரத்தினத்தினொளியினால்‌ புறவிருள்‌ நீங்கும் எம்பெருமானாகிய ரத்தினத்தினால்‌ அகவிருளாகிய அஜ்ஞானம்‌ நீங்கும்‌ ஜ்ஞானம்‌ உண்டாகும்‌. “மயர்வற மதிநலமருளினன்‌”, என்றாரிறே ஆழ்வார்‌. நிரவதிக நித்ய மஹஸா நிர்மல முக்த அநுபந்த ஸுபகேந என்ற இரண்டு விசேஷணங்களாலே – எல்லை யில்லாத நித்ய ஸூரிகளாலே ஒளிபெறுபவன்‌ என்றும்‌, ஸம்ஸார ஸம்பந்தமாகிய மலமறப்பெற்று முக்தியடைந்தவர்களோடு தொடர்பினால்‌ அழகுடையவன்‌ என்றும்‌ எம்பெருமான்‌ கூறப்படும்‌ பாங்கும்‌ அறியத் தக்கது –

நிரவதிக நித்ய மஹஸா –எல்லை அற்ற மஹத்வ தேஜஸ் -நித்ய ஸூரிகள் ஸமூஹம்
நிர்மல முக்த அநு பந்த ஸூப கேந –அழகிய முத்துக்கள் -முக்தாத்மாக்கள் சேர்ந்து
கடிகாத்ரி மகுட பாஜா மணிநா –அக்காரக்கனி யான ரத்ன தேஜஸ் ஸூ
மம மநஸி வாரிதம் திமிரம் -அஞ்ஞானம் போக்கி அருளட்டும் –சாஷாத்காரம் பெற்று அனுபவிக்கிறார்-அடுத்த ஸ்லோகம் மரகத அனுபவம் –

————–

அவிரள விஸ்ருமர க்ருணிநா ஹரி மணிநா சதத மாஹித ஒவ்ஜ்வல்ய
கநக நக கல்பிதோயம் கடகோ கடிகா மஹீ ப்ருதோ பாதி –42-

அவிரள விஸ்ருமர க்ருணிநா – இடைவிடாமல்‌ பரவுகிற ஒளியை யுடைய, ஹரிமணிநா – பச்சைநிறமுள்ள மரகத ரத்தினத்தினால்‌, ஸததம்‌ – எப்பொழுதும்‌, ஆஹித ஒளஜ்ஜ்வல்ய: – உண்டு பண்ணப்பட்ட பிரகாசத்தை யுடையதாக, கநகநக கல்பித: கட்டிப் பொன்னால்‌ செய்யப்பட்ட, அயம்‌ – இந்த, கடிகாமஹீப்ருத: கடக: – கடிகை மலை யரசனுடைய கை வளையல்‌, பாதி – விளங்குகிறது.
அவிரள விஸ்ருமர க்ருணிநா – நெருக்கமாகப்‌ பரவுகிற ஒளியை யுடைய, ஹரிமணிநா – ஹரியாகிற எம்பெருமானாகிற ரத்தினத்தினால்‌, ஸததம்‌ ஆஹித ஒளஜ்ஜ்வல்ய: – எப்போதும்‌ உண்டாக்கப்‌பட்ட பளபளப்பை யுடையதாக, கநகநக கல்பித: கட்டிப் பொன்னால்‌ செய்யப் பெற்ற (பொன் வர்ணமுள்ள) அயம்‌ – இந்த, கடிகாமஹீப்ருத: – கடிகையென்னும்‌ மலையினுடைய, கடக. – தாழ்வரை, பாதி – விளங்குகிறது.
ஹரி: – (1) எம்பெருமான்‌ (2) பச்சைநிறமுள்ளது. கடக: – (1) வளையல்‌ (2) தாழ்வரை. மஹீப்ருத்‌ – (1) அரசன்‌ (2) மலை.

அவி ரல விஸ்ரு மர க்ருணிநா –இடைவிடாத ஒளி பரவி-ஹரி மணிநா -மரகத ரத்னம் –நெருக்கமான ஒளி-சதத மாஹித ஒவ்ஜ்வல்ய —எப்பொழுதும் தேஜஸ் மின்னி
கிருபை கடாக்ஷம் வர்ஷம் பொழிந்து கொண்டே உள்ளான்
கநக நக கல்பிதோயம் கடகோ –தங்க -மயமான கட்டிப் பொன்னால் செய்த வளையல்
தாழ்வரை எங்கும் பரவி மின்னிக்கொண்டு உள்ளதே
கடிகா மஹீ ப்ருதோ பாதி —எம்பெருமானது -அக்காரக்கனி யுடைய திருக் கரங்களில் சாத்தி அருளுகிறார்

————–

ஸூ மநோ வ்ருதேந மதுநா ஸூதராம் மதுரேண ஸூத்தி குண பாஜா
மம கடிகாசல ஜநுஷா மாநஸ நாமா ஸமுத் ஸூகோ ப்ருங்க –43-

ஸுமநஸ்‌ வ்ருதேந – (1) மலர்களிலிருந்து ஸ்வீகரிக்கப்பட்டதும்‌ (2) பண்டிதர்களாலே உபாயமாகவும்‌ உபேயமாகவும்‌ வரிக்கப் பட்டதும்‌, ஸுதராம்‌ மதுரேண – மிகவும்‌ இனிமை யானதும்‌, சுத்தி குண பாஜா – (1) கசண்டற்றுத்‌ தூய்மையானதும்‌ (2) பரிசுத்தமானதும்‌, கடிகாசல ஜநுஷா – கடிகை மலையில்‌ தோன்றியதுமான, மதுநா (எம்பெருமானாகிய) தேனாலே, மம அடியேனுடைய, மாநஸ நாமா ப்ருங்க: மனமென்னும்‌ வண்டானது, ஸமுத் ஸுக: ‘பவதி) மிகவும்‌ ஆசை யுடையதாகிறது. அந்தத்‌ தேனைப் பருக என்‌ மனம்‌ ஆசைப் படுகிறது என்றபடி.
தமது மனதை வண்டாகவும்‌ எம்பெருமானைத்‌ தேனாகவும்‌ வருணித்தாராயிற்று.
முதற் பொருள்‌ தேனுக்கும்‌ இரண்டாம்‌ பொருள்‌ எம்பெருமானுக்கும்‌ இயையும்‌. ஸுமநஸ: — மலர்களும்‌ பண்டிதர்களும்‌. ஆழ்வார்கள்‌ இப் பெருமானை அக்காரக்கனி என்றார்கள்‌. இவர்‌ அம்ருத பலம்‌ என்றும்‌ திருப்பாற்கடல்‌ என்றும்‌ தேனென்றும்‌ கூறுகிறார்‌. இவையனைத்தும்‌ மதுர தமமான வஸ்துக்களிறே

ஸூ மநோ வ்ருதேந மதுநா –சாத்விகர்களுக்கு- -உபாய உபேயம் இவனே அறிந்தவர்களுக்கு தேன்-ஸூதராம் மதுரேண ஸூத்தி குண பாஜா -மிகவும் இனிமையான -ஸூத்தமான -ஸாத்விக குணம்-கடிகாசல ஜநுஷா -இங்கு தான் உத்பத்தி ஆகிறது
மம மாநஸ நாமா ஸமுத் ஸூகோ ப்ருங்க —மனசாகிய வண்டு மிகவும் அபி நிவேசம் மிக்கு உள்ளதே-நம்மாழ்வார் தீர்க்க சிந்தயந்தி —எறும்பி அப்பா ஸ்வாமியோ பரம தீர்க்க சிந்தயந்தி -மா முனிகள் விஸ்லேஷத்தில் தரியாமல் திருவடித் தாமரையில் படியும் ப்ருங்கம் இவர் தானே-

———-

தீனே பூர்ணாம் பவதநுசரே தேஹி த்ருஷ்டிம் தயார்த்ராம் |
பக்த்யுத்கர்ஷம் வரவரமுநே தாத்ருசம் பாவயந்தீம் ||
யேந ஸ்ரீமந் த்ருத மஹமித: ப்ராப்ய யுஷ்மத் பதாப்ஜம் |
த்வத் விஶ்லேஷே தநு விரஹித: தத்ர லீனோ பவேயம் ||–ஸ்ரீ வர வர முனி சதகம் – 75

ஹே வரவரமுநியே உமது கருணை தோய்ந்த கடாக்ஷத்தைப் பூர்ணமாக எளியவனான
உமது பணியாளனான அடியேனிடத்தில் வைப்பீராக. அந்தக் கடாக்ஷமே உம்மிடத்தில் மேலான பக்தியைத் தரவல்லது.
அந்தக் கடாக்ஷத்தாலேயே இங்கிருந்து உமது திருவடித் தாமரையை அடைந்து
உமது பிரிவு ஏற்படும்போது சரீரமற்றவனாக அங்கேயே மறைந்தவனாவேன்.

—————

அணு தரம் அபி ஸ்வம் அந்யாந் அர்ப்பயத சததம் ஆப்து காமேந
கடிகாசல பிரணயிநா விபுலம் விஹிதம் ஹிரண்ய தாநம் அஹோ–44-

அணுதரமபி – மிகச் சிறியதாயிருந்த போதிலும்‌, ஸ்வம்‌ – பொருளை ( பணத்தை) அர்ப்பயத: – தனக்குக்‌ கொடுக்கிற, அந்யாந்‌ மற்றவர்களை, ஸததம்‌ – எப்போதும்‌, ஆப்துகாமேந – அடைய விரும்பித்‌ தேடுகிற. கடிகாசல ப்ரணயிநா – கடிகை மலையில்‌ அன்பு மிக்க எம்பெருமானாகிற யாசகனாலே, விபுலம்‌ – மிகப் பெரிதான, ஹிரண்ய தாநம்‌ – ஸ்வர்ண தாநமானது, விஹிதம்‌ – செய்யப்பட்டது. அஹோ – ஆச்சரியம்‌.
தனக்குச்‌ சிறிதாவது பொருள்‌ கொடுப்பாருண்டா என்று தேடித் திரியுமவன்‌ ஸ்வர்ண தாநம்‌ செய்தானென்பது முரண்‌பட்ட விஷயம்‌. இதற்குப்‌ பரிஹாரம்‌ ஹிரண்ய தானமாவது -ஸ்வர்ணதானமன்று. ஹிரண்யனைப்‌ பிளத்தலே யாகும்‌ என்று பொருள்படுதலால்‌ காண்க. தாநம்‌ என்னும்‌ சொல்‌ தாஞ்‌- தாநே- என்ற தாதுவிலிருந்தும்‌, தோ – அவகண்டநே – என்ற தாதுவிலிருந்தும்‌ உண்டாகக்‌ கூடியது. முதலது கொடுத்தலென்னும்‌ பொருளையும்‌, பின்னது பிளத்தலென்னும்‌ பொருளையும்‌ குறிப்பதாகும்‌.

அணு தரம் அபி ஸ்வம் அந்யாந் அர்ப்பயத -கிஞ்சித் சமர்ப்பித்தாலும் –பத்ரம் பலம் தோயம்
சததம் ஆப்து காமேந -எப்போதும் எதிர்பார்த்து இருக்கும்
அவாப்த ஸமஸ்த காமனும் நமது ஆபி முக்யம் எதிர்பார்த்து இருப்பானே
கடிகாசல பிரணயிநா -ஆசையுடன் உகந்து
விபுலம் விஹிதம் ஹிரண்ய தாநம் அஹோ –ஸ்வர்ண தானம் -ஸ்லேடை -ஹிரண்யனைப் பிளந்த –நமது அஹங்காராதிகளைப் போக்கித் தன் தாளிணைக் கீழ் -இசைவித்து -இருத்தும் அம்மான் அன்றோ –

————–

அநநு குண விஷய தீஷாம் அநிதம் ப்ரதமா ஸரஸ்வதீ முக்த்வா
கடிகாசல ப்ரணயிநா கடயதி த்ருஷ்டிம் கந அநுராக மயம் –45-

அநிதம்‌ ப்ரதமா – அநாதியான. ஸரஸ்வதீ – வேத வாக்கானது,-அநநுகுண விஷய தீக்ஷாம்‌ – (பகவத் சேஷமாகிய ஆத்ம ஸ்வரூபத்துக்குத்‌) தகாத சப்தாதி விஷய(அநுபவதித்தில்‌ உள்ள விரதத்தை (நான் சப்தாதி விஷயங்களை யனுபவிப்பேனே தவிர எம்பெருமானை அனுபவிக்க மாட்டே( னென்னும்‌ ப்ரதிஜ்ஞையை) முக்த்வா -விடுவித்து, கடிகாசல ப்ரணயிதா – கடிகைமலையில்‌ பற்றுமிக்க எம்பெருமானோடே, கன அநுராகமமீம்‌ த்ருஷ்டிம்‌ – நிறைந்த பக்தி மயமான எண்ணத்தை, கடயதி – சேர்ப்பிக்கிறது
வேத வாக்கியங்களை அர்த்தத்தோடு தெரிந்து கொண்டால்‌, விஷயாநுபவத்தில்‌ ஆசை நசிக்கப் பெற்றுப்‌ பரம புருஷனிடத்தில்‌ பக்தி ரூபமான ஞானமுண்டாகி பகவதனுபவம்‌ கிடைக்குமென்றபடி. அநிதம்ப்‌ரதமா இது தான்‌ வேதம்‌ தோன்றிய முதற்காலம்‌ என்பதில்லாதது – அதாவது எப்டோது வேத வாக்குக்குமுள்ள வேறுபாடு. முக்த்வா அந்தர்ப்பாவிதணிஜந்தம்‌- 

அநநு குண விஷய தீஷாம் – –யாதானும் பற்றி நீங்கி விரதம் –
அநிதம் ப்ரதமா ஸரஸ்வதீ முக்த்வா –வேத புருஷன் வேத மாதா -திரு உள்ளத்தில் வந்ததும் அநாதி
ஸரஸ்வதி -வேத வாக்கு என்றபடி -முக்த்வா விடுதலை தருகிறாள்
கடிகாசல ப்ரணயிநா –இங்கு உகந்து இருந்து அருளும் அக்காரக்கனியின் மேல்
கடயதி த்ருஷ்டிம் கந அநுராக மயம் —நிறைந்த அபி நிவேசம் -பக்தியை யுண்டாக்க்கும் அன்றோ –

———–

த்ருஸ்யேந தைவ யோகாத் த்ருப்யன் மனஸா ஜராத்யதீ தேந
ஸாதயதி ஸித்திம் அகிலாம் ஸங்கோ கடிகாத்ரி யோகி புருஷேண –46-

ஜராஆதிஅதீதேந – கிழத்தனம்‌ மரணம்‌ முதலியவற்றைக்‌ கடந்தவனும்‌, த்ருப்யந் மநஸா – அது காரணமாக மகிழ்ச்சி மிக்க மனமுடையவனும்‌, தைவ யோகாத்‌ த்ருஸ்யேந – அதிர்ஷ்ட யோகத்தினால்‌ காணத் தக்கவனுமான, கடிகாத்ரி யோகி புருஷேணே – கடிகை மலையிலுள்ள – யோக ஸித்தி பெற்ற பரம புருஷனோடு, ஸங்க: – ஸம்பந்தமானது, அகிலாம்‌ ஸித்திம்‌ – எல்லாவிதமான செல்வங்களையும்‌, ஸாதயதி – சாதித்துக்‌ கொடுக்கும்‌.
செல்வங்களாவன – இவ் வுலகிலும்‌, ஸ்வர்க்கம்‌ முதலிய உலகங்களிலும்‌ அனுபவிக்கும்‌ இன்பமும்‌, பரம பதத்கில்‌ அநுபவித்தற்குரிய பகவதனுபவ கைங்கரியங்களும்‌ ஆகும்‌. பகவானோடு ஸம்பந்தம்‌ பகவத் க்ருபையினால்‌ கிடைக்கும்‌. அந்த பகவத்‌ க்ருபை தான்‌ இங்கு அத்ருஷ்ட மெனப்பட்டது. அத்ருஷ்டமும்‌ விதியும்‌ ஒன்றே, விதி வாய்க்கின்று காப்பாரார்‌ பகவத்‌ க்ருபை பலிக்கும்போது தடுப்பார்‌ ஆர்‌ (திருவாய்‌ 5.1.1) என்றவிடத்தில்‌ விதி சப்தம்‌ பகவத் க்ருபா வாசகமாக ப்ரஸித்தமிறே. பகவத்‌ க்ருபையினால்‌ பகவத்‌ ஸம்பந்த மேற்பட்ட பிறகு, அகில ஸித்திகளும்‌ அந்த பகவத் க்ருபையினால்‌ தான்‌ உண்‌டாகும்‌. ஆக பகவத் க்ருபையினால்‌ பகவத் ஸம்பந்த முண்டாகி, அதனால்‌ பகவத் க்ருபை மேன்மேலும்‌ பெருகி அதன்‌ பிறகு ஸகல ஸித்திகளும்‌ ஏற்படுமென்றபடி. ஸங்கம்‌ – ஸம்பந்தம்‌- அன்பு என்றபடி “அன்புக் கடியானதுவே – (பகவத்‌ க்ருபையே) அடி சேருகைக்கும்‌ (பலத்திற்கும்‌ ஸாதனம்‌” என்றாரிறே -.நலமருளினன்‌ என்கொல்‌ என்று ஆமூலசூட.ம்‌ அருளால்‌ மன்னுமிவர்க்கு அன்புக்கடியானதுவே அடி சேருகைக்கு ஸாதநம்‌.-அழகியமணவாளப்பெருமாள்‌ நாயனார்‌ (ஆசார்ய ஹ்ருதயம்‌ 114)-“அறியாக் காலத்துள்ளே அடிமைக் கணன்பு செய்வித்து’” (திருவா. 2- 3 – 3) என்று அறிவு நடையாடுகைக்கு யோக்யதை யில்லாத அதி பால்யததிலே அன்பை விளைத்தானென்றும்‌, ““ஆராவன்பிலடியேனுன்னடி சேர்‌ வண்ணமருளாயே” (திருவா. 6 – 10 – 2) என்கையாலே அந்த பக்திக்கடியான கிருபையே பகவத் ப்ராப்திக்கு சாதநம் என்கிறார் –

த்ருஸ்யேந தைவ யோகாத் த்ருப்யன் மனஸா ஜராத்யதீ தேந -ஜரா கொடியது –கிளர் ஒளி கிளமை கெடுவதன் முன்னம்-இவற்றை அதீதேந -கடந்து -மகிழ்ந்த திரு உள்ளத்துடன் இருக்க-அவன் தர்சனம் பெறுவதற்கும் திரு உள்ளத்தில் ஸங்கல்பிக்க வேண்டுமே
ஸாதயதி ஸித்திம் அகிலாம் ஸங்கோ கடிகாத்ரி யோகி புருஷேண –அவன் உடன் ஸம்ஸ்லேஷித்து-யோக நரஸிம்ஹன் அன்றோ –ஸகல பல பிரதன் -அந்தமில் பேர் இன்பம் பர்யந்தம் அருளுவான் அன்றோ

———-

பிரபலைர் மம இந்த்ரியாஸ் வை பரிக்ருஷ்டா விஷம விஷய காந்தாரே
பதவீம் மநோ ரத அக்ரயாம் ப்ராப்தோ கடிகாத்ரி பார்த சாரதி நா –47-

மம – அடியேனுடைய, மந: – மனமென்கிற, ரத: – தேரானது, (முதலில்‌) ப்ரபலை: அதிக பலமுள்ள, இந்த்ரிய அஸ்வை: – செவி வாய்‌ கண்‌ முதலிய இந்த்ரியங்களாகிற குதிரைகளினால்‌, விஷம விஷய காந்தாரே – கொடிய சப்தாதி விஷயங்களாகிற காட்டு வழியில்‌, பரிக்ருஷ்ட: – நன்றாக இழுத்து” செல்லப்பட்டதாய்‌, (பின்பு) கடிகாத்ரி பார்த்த ஸாரதிநா – கடிகைமலையிலுள்ள நரஸிம்மப் பெருமாளாகிற பார்த்த ஸாரதியினால்‌, அக்ர்யாம்‌ பதவீம்‌ – உயர்ந்த பகவத்‌ பாகவதாசார்யர்களாகிற வழியை, ப்ராப்த: – அடைந்தது.
ஸாரதி யில்லாத தேரைப்‌ பொல்லாத குதிரைகள்‌ கல்லும்‌ முள்ளும்‌ மிக்க காட்டு வழியில்‌ இழுத்துச்‌ சென்றன-ஸமர்த்தனான ஸாரதி தேருள்ள இடமறிந்து சென்று அதின் கண்‌ ஏறிக் கொண்டு குதிரைகளை அடக்கி, அக் குதிரைகளின்‌ வாயிலாகவே உயர்ந்த வழியில்‌ இழுத்துச்‌ செல்லுவது உலகவியல்பு. அது போன்று பகவத்‌ க்ருபை யில்லாத போது பொல்லாத இந்த்ரியங்களால்‌ கொடிய விஷயங்களில்‌ இழுத்துச்‌ செல்லப்பட்ட மனமானது பகவானால்‌ க்ருபையோடு அவ்விந்த்ரியங்களின்‌ மூலமாகவே நல்ல வழியை அடைவிக்கப்‌ படுகிறதென்றபடி. நரஸிம்மப்‌ பெருமாளே பார்த்த ஸாரதி யாகையால்‌ கடிகாத்ரி பார்த்தஸாரதி என்று நரஸிம்மப்‌ பெருமாளைக்‌ குறிப்பிட் டருளினார்‌. மனம்‌ ஏதாவதொரு விஷயத்தைப்‌ பற்றியே நிற்கும்‌. இது வரையில்‌ நிக்ருஷ்ட விஷயத்தை பற்றிக்‌ கொண்டு அலைந்த மனஸ்ஸு பகவத்‌ க்ருபையினால்‌ உத்க்ருஷ்ட விஷயத்தைப்‌ பற்றி நிலைத்து நின்றதென்றார்‌ இதனால் –

பிரபலைர் மம இந்த்ரிய அஸ்வை -நமது பிரபல இந்த்ரியங்களே குதிரை-பரிக்ருஷ்டா விஷம விஷய காந்தாரே -விஷயாந்தரங்களை நோக்கி -காட்டு வழி -நன்று இழுத்துச் செல்ல-பதவீம் மநோ ரத அக்ரயாம் ப்ராப்தோ -அவற்றை அடக்கி தனது பக்கம் இழுத்துச் செல்லும்-அக்ர -உயர்ந்த நிலைக்குக் கூட்டிச் செல்கிறார் -என்றபடி-கடிகாத்ரி பார்த சாரதி நா —அக்காரக்கனியே பார்த்த சாரதி – நக்ஷத்ர மாலிகை முதல் ஸ்லோகம் -ஞான முத்திரை காட்டி அடக்கி ஆளும் -ஆழ்வார் ஜீயாத் –

————

அதி வேல விலஸிதோர்மே அவகாஹவதாம் அதோ நயந ஹேதோ
ப்ராப்தோ அஸ்மி பவ பயோதே பாரம் கடிகா நியாமகே நாஹம் –48-

அதிவேல விலஸித ஊர்மே: – கரையைக்‌ கடந்து வீசுகிற அலைகளை யுடையதும்‌,
(அதனால்‌) அவகாஹவதாம்‌ – மூழ்கியவர்களை . அத:நயனஹேதோ: – அடியில்‌ இழுத்துச்‌ செல்வதற்குக்‌ காரணமானதுமான, பவ பயோதே: – ஸம்ஸாரமாகிற கடலினுடைய-பாரம் –– அக்கரையை, கடிகாநியாமகேந – கடிகை மலை யரசனாகிய படகோட்டியினாலே, அஹம்‌ ப்ராப்த: அஸ்மி – அடியேன்‌ அடைந்‌தவனானேன்‌.
நீச விஷயங்களை அனுபவித்து அனுபவித்து ஸம்ஸாரமாகிற கடலில்‌ மூழ்கிக்‌ கொண்டிருந்த அடியேனை, எம்பெருமான்‌ படகோட்டியாக எழுந்தருளி க்ருபை செய்து அக் கடலின்‌ அந்தண்டைக்‌ கரைய அடைவித்தானென்றார்‌. நியாமக: – (1) ஆணையிடுமரசன்‌ (2) படகோட்டி –

அதி வேல விலஸிதோர் மே -அளவு கடந்த -கடலின் அலைகள் -ஸம்ஸார சாகர அலைகள்
அவகாஹவதாம் அதோ நயந ஹேதோ -மூழ்கினவர்களை-ப்ராப்தோ அஸ்மி பவ பயோ தே பாரம் -அக்கரைப்படுத்தி அடைய வைத்து அருளும்-கடிகா நியாமகே நாஹம் –கடத்தடம் குன்றின் அரசன் என்னும் படகோட்டி -நாவாய் முகுந்தன் அன்றோ -இவனும்

——–

கடிகா யதி குண கடிதா கடிகாசல சக்ரி கல்பிதா நஸ்யு
பவ கூபதோ ஜடாநாம் பவ்ய கோ வா ஸமுத்தரண ஹேது -49-

கடிகா: – (அறிவிலிகளின்‌ வாழ் நாட்களில்‌) சில நாழிகைகள்‌-குணகடிதா-தன்னுடைய க்ருபை முதலிய குணங்களோடு சேர்க்கப் பட்டவைகளாக, கடிகாசல சக்ரி கல்பிதா: ந ஸ்யு யதி – கடிகை மலையிலுள்ள சக்ர தாரியான எம்பெருமானால்‌ ஆக்கப் படாவிட்‌டால் , ஜடாநாம்‌ – அறிவற்ற ஜனங்களை, பவ கூபத: -ஸம்ஸாரமாகிற கிணற்றிலிருந்து. பவ்ய:ஸமுத்தரண ஹேது: – நல்லதான – மேலே தூக்குவதற்குக்‌ காரணம்‌, கோ வா .அஸ்தி – என்ன இருக்கிறது.
அறிவும்‌ ஆற்றலுமுடையவர்கள்‌ பக்தி யோகம்‌ முதலியவற்றை அநுஷ்டித்து ஸம்ஸாரமென்னும்‌ கிணற்றிலிருந்து மேல்‌ செல்லுகிறார்கள்‌. அறிவாற்றல்‌ இல்லாதவர்களுக்கு பகவானுடைய கிருபை முதலிய குணங்களே அக் கிணற்றிலிருந்து மேலெழுவதற்குக்‌ காரணம்‌ என்ற படியாம்‌. “நாஸெள புருஷகாரேண நசாப்யந்யேந ஹேதுநா, கேவலம்‌ க்ருபயைவாஹம்‌ ப்ரேக்ஷே கஞ்சித்‌ கதாசந” (முற்கூறப்பட்ட நான்‌ புருஷகாரமான பிராட்டி காரணமாகவோ , பக்தி ப்ரபத்தி முதலிய வேறு காரணமாகவோ ஒருவனைக்‌ கடாக்ஷிப்பதில்லை; ௭ன்னுடைய நிர்ஹேதுகமான க்ருபையினால்‌ மட்டுமே யாரோவொருவனை ஏதோவொரு காலத்தில்‌ கடாக்ஷிக்கிறேன்‌ – லக்ஷமீ தந்த்ரம்‌) என்று பகவான்‌ கூறியபடி – அறிவற்ற வர்களை ஏதோவொரு காலத்தில்‌ க்ருபையால்‌ கடாக்ஷிக்கிறேன்‌ என்ற பொருளையே கடிகா: குணகடிதா: சக்ரி கல்பிதா: (சில நாழிகைகளில்‌ சக்ர தாரியானவன் அறிவிலிகள்‌ விஷயத்தில்‌ தனது க்ருபையை உபயோகப் படுத்துகிறான்‌) என்றார்‌. எம்பெருமான்‌ அறிவிலிகள்‌ வாழ்நாளில்‌ ஏதோவொரு ஸமயத்தில்‌ தன்‌ க்ருபையை ௨பயோகிக்காதிருந்தால்‌, அவர்கள்‌ ஸம்ஸாரமாகிய அக்கிணற்றிலிருந்து மேலே வருவதற்கு மோக்ஷம்‌ பெறுவதற்கு வேறொரு உபாயமில்லை என்பது கருத்து. இங்கு வேறொரு பொருளும்‌ தோன்றுகிறது.
சக்ரி கல்பிதா: கடிகா: குணகடிதா: யதி நஸ்யு: ஜட(லா)நாம்‌ கூபத: ஸமுத்தரண ஹேது: கோ வா அஸ்தி? என்று அந்வயித்தால்‌, குயவனால்‌ செய்யப்பட்ட பானைகள்‌ தாம்புக் கயிறோடு சேர்க்கப்படாவிட்டால்‌ கிணற்றிலிருந்து ஜலத்தை மேலே தூக்குவதற்கு வேறு உபாயம்‌ என்ன இருக்கிறது – என்பதே அப்பொருள்‌. டலயோ; அபேத: – (ட, ல என்ற இரண்டும்‌ ஒன்றே) என்ற ந்யாயத்தைக்‌ கொண்டு, ஜடாநாம்‌ என்பது இப்பொருளில்‌ ஜலாநாம்‌ பானைகள்‌. சக்ரீ – (1) சக்ரதாரியான எம்பெருமான்‌, (2) பானை செய்வதற்காகச்‌ சுழற்றப்படும்‌ சக்கரத்தையுடைய குயவன்‌. குண: -(1) நல்லகுணம்‌, (2) கயிறு-முன்‌ ஸ்லோகத்தில்‌ ஸம்ஸாரத்தைக்‌ கடலென்றார்‌. இதில்‌ கிணறென்றார்‌. நீஞ்சத்‌ தெரியாதவனுக்கு இவை யிரண்டும்‌ உயிரை மாய்ப்பனவே யாகும்

கடிகா யதி குண கடிதா நஸ்யு-கருணாதி குணங்களால் சில நாழிகை காட்டா விடில்
கடிகா சல சக்ரி கல்பிதா -சக்ரம் ஏந்திய அக்காரக்கனி என்றும் குயவன் என்றும்
பவ கூபதோ ஜடா நாம் பவ்ய -அறிவிலிகள் ஸம்ஸார பவக்கடலில் இருந்து
கடா நாம் -என்று கொண்டு குடாதிகள் கொண்டு கிணறு முதலியவற்றில் எடுக்க முடியாதே
கோவா ஸமுத்தரண ஹேது -உஜ்ஜீவனம் ஹேது ஒன்றுமே இல்லையே

கூபத்தில் வீழும் குழவியுடன் குதித்து அவ்
வாபத்தை நீக்கும் அந்த வன்னை போல் -பாபத்தால்
யான் பிறப்பனேலும் இனி எந்தை எதிராசன்
தான் பிறக்கும் என்னை யுய்ப்பதா —ஆர்த்தி பிரபந்தம் -9-

———

கலயந்தி யே ஸ்வாத் யாத்ராம் கடிகாசல வைத்ய கல்பிதேந பதா
பவ ரோகதோ அசிராத் தே முக்தா ஸ்நாநம் சரந்தி விரஜாயாம் -50-

யே- யார்‌, ஸ்வயாத்ராம்‌ – தமது தேஹ யாத்ரையை (ஜீவ தசையை) கடிகாசல வைத்ய கல்பிதேந பதா – கடிகை மலையிலுள்ள வைத்‌யனாகிற எம்பெருமானால்‌ கற்பிக்கப்பட்ட வழியாலே, கலயந்தி– செய்கிறார்களோ (நடத்துகிறார்களோ) தே- அவர்கள்‌, பவரோகத: – ஸம்ஸாரமாகிய வியாதியிலிருந்து, அசிராத்‌ – விரைவிலேயே, முக்தா: விடுபட்ட வர்களாய்க்‌ கொண்டு, விரஜாயாம்‌ – விரஜா நதியில்‌, ஸ்நாநம்‌ சரந்தி – ஸ்நாநம்‌ செய்கிறார்கள்‌.
மனிதர்‌ தம்‌ வாழ்நாள்களில்‌ எம்பெருமான்‌ கீதை முதலிய நூற்களில்‌ மோக்ஷ உபாயமாக விதித்த – தன்னையே ௨பாயமாகப்‌ பற்றும்படி விதித்த வழியில்‌ செல்வார்களாகில்‌ விரைவிலேயே (இப்பிறவியின்‌ இறுதியிலேயே) ஸம்ஸாரமென்னும்‌ நோயிலிருந்து விடுபட்டுச்‌ சென்று விரஜையாற்றில்‌ நீராடித்‌ தூய்மை பெற்றுப்‌ பரமபதம்‌ செல்லுகிறார்கள்‌ என்றபடி. ஸம்ஸாரத்தை இதில்‌ வியாதியாகக்‌ குறிப்பிட்டார்‌.
வைத்யன்‌ சொல்லும்‌ வழியில்‌ நடப்பவர்கள் வியாதி தீரப் பெற்று – இத்தனை நாட்கள்‌ ஸ்நாநம்‌ செய்யாத குறை தீரும்படி ஸ்நாநம்‌ செயகிறார்ளென்பதும்‌ காண்க-

கலயந்தி யே ஸ்வாத் யாத்ராம் கடிகாசல வைதய கல்பிதேந பதா -தேக யாத்ரையை இவன் வழி நடத்தி-உபதேசங்கள் பலவும் அருளிச் செய்தானே-பவ ரோகதோ அசிராத் தே முக்தா -சம்சார ரோகம் அதி சீக்கிரமாகத் தீர பெற்று-ஸ்நாநம் சாந்தி விரஜாயாம் -குள்ளக் குளிர்ந்து விரஜையிலே நீராடலாம் அமானவன் கர ஸ்பர்சம் கிட்டும்-மருத்துவனாய் நின்ற மா மணி வண்ணன்-கீழே 22 ஸ்லோகம் நரஸிம்ஹ சரம ஸ்லோகம் பார்த்தோம்
மஹா விஸ்வாசமே வேண்டும்-வடிவாய மா மகளும் நில மகளும் நடுவாக வீற்று இருந்த அவனைக் கிட்டி அனுபவித்து -அனுபவ ஜனித கைங்கர்யமும் செய்யப்பெற்று நித்யர்கள் உடன் ஒரு கோவையாகப் பெறுவோமே

———–

தததோ ஜகத் யுதாரான் ஸ்வ அபேக்ஷிதம் அர்த்தம் அர்த்திந ப்ரா ஹு
ஆதத்த புநர் அர்த்தான் உக்தா கடிகாசல அர்த்திந உதாரா –51-

ஜகதி – உலகில்‌, அர்த்திந: – யாசகர்கள்‌, ஸ்வாபேக்ஷிதம்‌ அர்த்தம்‌ – தமக்கு வேண்டிய பொருளை, ததத: – கொடுப்பவர்களை, உதாராந்‌ – கொடையாளிகளாக, ப்ராஹு: – சொல்லுகிறார்கள்‌. கடிகாசலார்த்திநா புந: – கடிகை மலையிலுள்ள எம்பெருமானாகிற யாசகனாலோ வெனறால்‌, (இதற்கு மாறாக) (தன்னிடமிருந்து) அர்த்தாந்‌ – பொருளை (புருஷார்த்தங்களை) ஆததத: – யாசித்துப்‌ பெறுமவர்கள்‌ உதாரா: கொடையாளிகளாக, உக்தா: – சொல்‌லப்பட்டார்கள்‌.
உலகில்‌ கொடுப்பவர்களே கொடையாளிகளாகச்‌ சொல்லப் படுகின்றனர்‌. “ஆர்த்தோ ஜிஜ்ஞாஸுரர்த்தார்த்தீ ஜஞாநீ ச பரதர்ஷப’, “உதாரா: ஸர்வ ஏவைதே’ (கீதை – அத்‌. 7.16) இழந்த செல்வத்தை விரும்பும்‌ அர்த்தார்த்தியும்‌, ஆத்மாநுபவரூபமான கைவல்யத்தை விரும்பும்‌ ஜிஜ்ஞாஸூம்‌. என்னுடைய அநுபவத்தை விரும்பும்‌ ஜ்ஞாநியும்‌ ஆகிய இவர்களனைவரும்‌ (இவற்றை என்னிடமிருந்து யாசித்துப்‌ பெற்றாலும்‌ யாசகர்களல்லர்‌, பின்னையோ வென்றால்‌) கொடையாளிகளே யாகிறார்கள்‌ என்று எம்பெருமான்‌ யாசகர்களைக்‌ கொடையாளிகளென்றது காணத் தக்கது. பொருளைக்‌ கொடுப்பவர்கள்‌ கொடையாளிகள் அல்லர்‌, பொருளைக்‌ கொடுப்பவர்களுக்குக்‌ கொடையாளியாகுந் தன்மையைக்‌ கொடுப்பவர்களே (யாசகர்களே) கொடையாளிகள்‌ என்பது பரமோதாரனான எம்பெருமானுடைய திருவுள்ளம்‌. கர்ணனிடம்‌ பிறர் யாசித்துப்‌ பெற்ற பொருள்‌ அப்பொழுதே அழிந்து விட்டது. கர்ணனுடைய கொடையாளியாகுந்‌ தன்மை (கொடையாளி என்னும்‌ பெயர்‌) என்றும்‌ அழியாமல்‌ நிற்கிறது என்பது ஈண்டு நினைக்கத் தக்கது. பொருள்‌ அநித்யம் – புகழ்‌ நித்யமிறே –

தததோ ஜகத் யுதாரான் -கொடுப்பவர்களை உலகம் உதாரர் என்பர் -கர்ணன் பெற்ற பெயர்
ஸ்வ அபேக்ஷிதம் அர்த்தம் அர்த்திந ப்ராஹு -கேட்டதைக் கொடுப்பவர் களுக்கு முன்பு இவ்வாறு உலக வழக்கு-ஆதத்த புநர் அர்த்தான் உக்தா கடிகாசல அர்த்திந உதாரா –இங்கு அக்காரக்கனியே யாசகன்-தன்னைக் கொடையாளியாக்கும் அனைவருமே உதாரர்
உதார -ஸர்வ கீதையில் அனைவரையும் -கொடையாளி யாக்கியவர்கள் –
அனைத்தையும் அருளி இன்னும் ஒன்றுமே செய்யாதவனாகவே ருணம் ப்ரவர்த்தம் என்று சென்றவன் அன்றோ-அந்தமில் பேர் இன்பம் கேட்டு இருப்பார்களே மம ஆத்மா என்பான் -அன்றோ –

————

தாதே ஹிதாதி கார்த்தான் ஸ்வ வ்யதிரிக்தான் ததாதி நாத்மாநம்
ஸ்வோ அபி ஸ்வ ஸம்ஸ்ரி தேப்யோ தத்தோ கடிகாத்ரி ந்ரு ஹரிணா தாத்ரா –52-

(உலகில்‌) தாதா – கொடையாளி ஸ்வ ஸம்ஸ்ரிதேப்ய: – தன்னை யண்டினவர்களுக்கு, ஸ்வ வ்யதிரிக்தாந்‌ – தன்னைவிட வேறான, ஈஹித அதிக அர்த்தாந்‌ – (அவர்கள் )விரும்பியதைக்‌ காட்டிலும்‌ அதிகமான பொருள்களை, ததாதி – கொடுக்கிறான்‌. கடிகாத்ரி ந்ரு ஹரிணா தாத்ரா(து) – கடிகை மலை நரசிங்கப்‌ பெருமானாகிற கொடையாளியாலோ வென்றால்‌, ஸ்வஸம்‌ஸ்ரிதேப்ய: – தன்னை யடைந்தவர்களுக்கு,ஸ்வ:அபி – தானும்‌, தத்த: – கொடுக்கப்பட்‌டான்‌.

‘யாசகர்களே உதாரர்கள்‌, கொடுப்பவர்கள்‌ உதாரரல்லர்‌” என்பது எம்பெருமான்‌ திருவுள்ளமானாலும்‌, உண்மையை ஆராய்ந்தால்‌ எம்பெருமானே உதாரன்‌ என்பது இக் கவியின்‌ திருவுள்ளமென்பது இந்த ஸ்லோகத்தில்‌ விளங்குகிறது. உலகில்‌ கொடையாளிகள்‌, யாசிப்பவர்‌ விரும்பியவற்றையோ அவற்றைக்‌ காட்டிலும்‌ அதிகமாகவோ கொடுப்பார்களே யன்றித்‌ தன்னைக்‌ கொடுக்க மாட்டார்கள்‌. எம்பெருமான்‌ தன்னையும்‌ கொடுப்பான்‌. ஆகையால் எம்பெருமானாகிய கொடையாளியே உயர்ந்தவ னென்றதாயிற்று.
எம்பெருமான்‌ யாசிப்பவர்களுக்குத்‌ தன்‌னைக்‌ கொடுப்பதாவது, அவர்கள்‌ சொன்ன காரியத்தையெல்லாம்‌ தான்‌ செய்யுமளவுக்கு அவர்களுக்குத்‌ தன்னை இட்ட வழக்காக்கி வைப்பது. கண்ணபிரான்‌ அர்ச்சுநனுக்குத்‌ தேரோட்டியதும்‌ தூது நடந்ததும்‌, யதோக்தகாரி யெம்பெருமான்‌ திருமழிசைபிரான்‌ பின்னே சென்றதும்‌ திரும்பி வந்ததும்‌, திருக் குடந்தை ஆராவமுதாழ்வார்‌ திருமழிசை பிரானுக்கு எழுந்திருந்து பேசியதும்‌ முதலிய சரித்திரங்களே, பக்தர்களுக்கு எம்பெருமான்‌ தன்னைக்‌ கொடுத்தற்குப்‌ போதுமான சான்றுகளாகும்‌. “ஸோ5பி” என்று பாடம்‌ காணகிறது. அதைவிட ஸ்வோ$பி என்ற பாடமே சிறக்கும்‌. எம்பெருமானால்‌ அவனும்‌ கொடுக்கப்பட்டான்‌ என்பதை விட, எம்பெருமானால்‌ தானும்‌ கொடுக்கப் பட்டானென்பதன்‌றோ ஸ்வரஸமாவது. பூர்வார்த்தத்தில்‌ “தத்வ்யதிரிக்தாந்‌” என்னாமல்‌, “ஸ்வவ்யதிரிக்தாந்‌’ என்றது இதை வலியுறுத்தும்

தாதே ஹிதாதி கார்த்தான் -தாதா -கொடையாளி கேட்டதைக் கொடுப்பான்-ஸ்வ வ்யதிரிக்தான் ததாதி நாத்மாநம் –-என்னையும் ஆக்கி தன்னையும் தரும் கற்பகம் அன்றோ
ஸ்வோ அபி ஸ்வ ஸம்ஸ்ரி தேப்யோ தத்தோ கடிகாத்ரி ந்ரு ஹரிணா தாத்ரா —நன்றாக ஆஸ்ரயிப்பவர்களுக்கு-தன்னையே தனது பேறாகக் கொடுக்குமவன் அன்றோ

—————-

ஹிம்ஸித தாநவ கரிணே ஹ்ருதய குஹா விஹித பஹுவிஹாராய
விக்ரமவதே ஸபர்யாம் விததே கடிகாத்ரி வீர ஸிம்ஹாய –53-

விக்ரமவதே- பராக்ரமமுடையதாய்‌, ஹிமஸித தாநவ கரிணே – ஹிரண்யாஸுரனாகிய யானையைக்‌ கொன்றதும்‌, ஹ்ருதய குஹா விஹித பஹு விஹாராய – (ஞானிகளின்‌) ஹிருதயங்களாகிய குகைகளில்‌ பல விதமான விஹாரங்களைச்‌ செய்வதுமான, கடிகாத்ரி வீரஸிம்ஹாய – கடிகைமலையிலுள்ள வீரசிங்கத்திற்கு ஸபர்யாம்‌ விததே பணி விடைகளைச்‌ செய்கிறேன் –
பக்தர்களுக்குத்‌ தன்னையே கொடுப்பவனுக்கு, நீர்‌ என்ன செய்யப் போகிறீர்‌ என்ன, நான்‌ என்னையே அவனுக்குக்‌ கொடுககிறேனென்கிறார்‌. இதனால்‌ இவர்‌ தம்மையே அவனுக்குக்‌ கொடுத்தலாவது – தமது மனத்தையும்‌ வாக்கையும்‌ உடலையும்‌ அவனுக்கு ஸ்வாதீனமாக்கி, அவனை த்யானம்‌ செய்வதும்‌ அவனைப்‌ புகழ்வதும்‌, அவனை வணங்குவதுமாய்‌ அவனுக்குத்‌ தொண்‌டு செய்வதேயாகும்‌.
சிங்கம்‌ பராக்ரமமுடையது – யானைகளைக்‌ கொல்லுமது – குகையில்‌ ஸஞ்சரிப்பது. அது போல்‌ கடிகை மலை வீர சிங்கமும்‌ உள்ளமை காண்க. எம்பெருமான்‌ ஞானிகளின்‌ ஹிருதய குகையில்‌ விஹாரம்‌ செய்வது “நின்றதும்‌ இருந்ததும்‌ கிடந்ததும்‌ என்நெஞ்சுளே” (திருச்சந்தவிருத்தம்‌ 54) “தாமரைக்கண்ணன்‌ என்‌ நெஞ்சினூடே புள்ளைக் கடாகின்ற வாற்றைக்‌ காணீர்‌” (திருவாய்‌ 7.3.1) முதலிய விடங்களில்‌ காணத் தக்கது.

ஹிம்ஸித தாநவ கரிணே -ஹிரண்ய கசிபு யாகிய யானையை நிரஸித்து-ஹ்ருதய குஹா விஹித -ஹ்ருதய விசால குஹையில் மன்னி-பஹுவிஹாராய -நிறைய அனுபவம் கொடுத்துக் கொண்டு அருளி-விக்ரமவதே -வீர தீர பராக்ரமங்கையும் காட்டி அருளி பரிவர் இல்லை என்ற அதிசங்கை போக்கி அருளி-ஸபர்யாம் விததே கடிகாத்ரி வீர ஸிம்ஹாய —இந்த அக்காரக் கனிக்கு அனைத்து வித கைங்கர்யங்களும் செய்யப் பெறுவேனாக வேண்டும்

—————

ஸ்ருதி பாரகாய வித்யா ஸூதி க்ருஹாய ஸ்வ தர்ம நிரதாய
ஸ்வம் ஸ்வ உசிதம் ப்ரதாஸ்யே ஸூதீயே கடிகாத்ரி பூமி தேவாய –54-

ஸ்ருதிபாரகாய – வேதங்களைச்‌ கரை கண்டவனும்‌, வித்யா ஸூதி க்ருஹாய சாஸ்திர ஜ்ஞானத்திற்குப்‌ பிறப்பிடமானவனும்‌, ஸ்வ தர்ம நிரதாய – தனது வர்ணாஸ்ரம தருமங்களில்‌ ஊன்றியவனும்‌, ஸூதியே (இச் செயற்கை யறிவேயன்றி) இயற்கையாகவே நல்லறிவு படைத்தவனுமாகிய, கடிகாத்ரி பூமிதேவாய – கடிகை மலையிலுள்ள ப்ராஹ்மணனுக்கு, ஸ்வ உசிதம்‌ – எனக்குத்‌ தகுந்த, ஸ்வம்‌ – சொத்தை, ப்ரதாஸ்யே கொடுக்கக் கடவேன்‌
ப்ராஹ்மணனுக்குத்‌ தானம்‌ செய்ய வேண்டுமென்று சாஸ்த்ரம்‌ சொல்லுகிறது. “வேங்கட வேதியனை?” (பெரியதிருமொழி – 1.10.10) என்றும்‌, “உலகளப்பான்‌ அடி நிமிர்த்த அந்தணனை” (பெரிய திருமொழி 5.6 7) என்றும்‌ எம்பெருமானை ப்ராஹ்மணனாக ஆழ்வார்கள்‌ அருளியது காண்க. ப்ராஹ்மணன்‌ – வேதத்தைக்‌ கண்டவன்‌, சாஸ்த்ர அறிவுக்குப்‌ பிறப்பிடமானவன்‌, தனது தருமங்களில்‌ ஊன்றியவன்‌, புத்திமான்‌ இவை யெல்லாம்‌ எம்பெருமானுக்கும்‌ ஒக்கும்‌. மேலும்‌ எம்பெருமான்‌ தனது தருமமான ஆஸ்ரித ஸம்ரக்ஷணத்தில்‌ ஊன்றியவனென்பதும்‌ இங்குக்‌ கருதுக. கவிக்குத்‌ தனக்குரிய சொத்தாவது ஸ்லோகங்களேயாகும்‌. இதுமேல்‌ ஸ்லோகத்தில்‌ விளங்கும்

ஸ்ருதி பாரகாய –-வேதம் வெளியிட்டு அருளிகரை காண அரிதான வேதக்கடலை அன்னமாய் அங்கு அரு மறை பயந்து அருளி-வித்யா ஸூதி க்ருஹாய -ஸாஸ்த்ர ஞானம் -ப்ரஹ்ம வித்யைகளை அருளிச் செய்து-ஸ்வ தர்ம நிரதாய –-சரணாகத வத்ஸலன் -ஆஸ்ரித பரதந்த்ரன் -பக்த உசிதன் -ரக்ஷணத்தில் நிலை நின்று-ஸ்வம் ஸ்வ உசிதம் ப்ரதாஸ்யே ஸூதீயே -தீ -ஞானம் -கடிகாத்ரி பூமி தேவாய –ப்ரஹ்மணோத்தமனாக –ஸகல மனுஷ நயன விஷய தாங்கனாக அவனுக்கு கைங்கர்யம் -இந்த ஸ்ரீ ஸூ கத்தியை கன்னிகா தானமாக அருளி

மஹநீய வ்ருத்த வர்ணா மஹிதான்வய வத்ஸ லங்க்ருதா க்ருதிநா
ஸூக்தி ஸூதநு ப்ரதேயா ஸூத்தா கடிகாத்ரி பூ ஸூர வராய –55-

மஹநீய வ்ருத்த வர்ணா – (1) பூஜிக்கத்தக்க சந்தஸ்ஸும்‌ எழுத்துக்களும்‌ உடையதும்‌, (2) பூஜிக்கத்தக்க நடத்தையும்‌ மேனி நிறமும்‌ உடையவளும்‌, மஹித அந்வயவதீ – (1) உயர்ந்த – சொற்களின்‌ அந்வமுடையதும்‌, (க்லிஷ்டாந்வயமில்லாமல்‌ ஸுலபாந்வயமுடையதும்‌, (2) உயர்ந்த குடிபிறப்பை யுடையவளும்‌, அலங்க்ருதா – (1) சப்தாலங்காரங்களும்‌ அர்த்தாலங்காரங்களும்‌ உடையதும்‌. (2) வஸ்த்ராபரணங்களால்‌ அலங்கரிக்கப்பட்டவளும்‌, ஸூத்தா – (1) காவியக் குற்றமின்றி சுத்தமாயும்‌, (2) நாண் மடம்‌ அச்சம்‌ முதலிய குணங்களினால்‌ சுத்தையாயும்‌ இருக்கிற, ஸூக்தி ஸுதநு: ஸ்ரீஸூக்திகள்‌ (ஸ்லோகங்கள்‌) என்கிற கந்யகை யானவள்‌, கடிகாத்ரி பூஸுரவராய- கடிகை மலையிலுள்ள ப்ராஹ்மணோத்தமனான எம்பெருமானுக்கு, க்ருதிநா – (1) பண்டிதனாலே (2) புண்ணியம்‌ செய்தவனாலே, ப்ரதேயா – கொடுக்கத் தக்கவளாகிறாள்‌.
தம்முடைய ஸ்ரீஸூக்தியைக்‌ கந்யகையாகக் கூறி, கடிகை மலை யெம்பெருமானை ப்ராஹ்மண உத்தமனாகக்‌ குறிப்பிட்டு, அவனுக்குத்‌ தம்‌ காவியமாகிய பெண்ணைத்‌ தானம்‌ செய்வது உசிதமென்கிறார்‌ இதனால்

மஹநீய வ்ருத்த வர்ணா -உயர்ந்த சந்தஸ் ஸூக்களைக் கொண்ட -பூஜிக்கப்பட்ட நல்ல நடத்தை யுடைய கன்னிகை போல்-மஹிதான்வய வத்ஸ லங்க்ருதா க்ருதிநா –உயர்ந்த அந்வயங்கள் -ஸப்த அலங்காரங்களைக் கொண்டும்-உயர்ந்த ஆபி ஜாதியம் -அலங்காரம்
ஸூக்தி ஸூத அநு ப்ரதேயா ஸூத்தா -பரிசுத்தம் -தீர்த்தம் -கன்னிகையை
கடிகாத்ரி பூ ஸூர வராய –இந்த அக்காரக்கனி அழகிய மணவாளனுக்கு தகுதியாக
வேதியர் கோன் -விளக்கு – தனது குழந்தையான பா மாலையை சூட்டி -பெரியாழ்வார் போல் மாமனார் ஆகிறார் எறும்பி அப்பா ஸ்வாமியும்

———-

காம்யோ ததாதி ஸார்த்தம் தவளம மதி ப்ரேம தாரயா ஸஹிதம்
கடிகாசல பிரணயிநே கடிதே கிம் தஸ்ய காங்ஷிதம் ந பலம் –56-

கடிகாசலப்ரணயிநே – கடிகை மலையில்‌ பற்றுவைத்த யாசகனுக்கு, ஸார்த்தாம்‌ – (1) பொன்னோடு கூடிய (கொம்புக்கும்‌ குளம்புக்கும்‌ பொன்‌ கட்டு கட்டிய) (2) நல்ல அர்த்தத்தோடு கூடிய, காம்‌ – (1) பசுவை (2) ஸ்ரீ ஸூக்தியை (ஸ்லோகங்களை), தவள மதி ப்ரேம தாரயா ஸஹிதாம்‌ – (1! சுத்தமான எண்ணமும்‌ ப்ரதீயுமாகிற நீர்த் தாரையோடு கூடியதாக, (2) சுத்த ஜான ஞானமும்‌ பக்தியுமாகிறவற்றின்‌ தொடர்ச்சியோடு கூடியதாக, ய: – எவன்‌, ததாதி – கொடுக்கிறானோ, தஸ்ய – அவனுக்கு, காங்க்ஷிதம் பலம்‌ – விரும்பிய பயன்‌, கிம்‌ ந கடதே – எதுதான்‌ கை கூடாது
இதில்‌ தனது ஸ்ரீஸக்தியைப்‌ பசுவாகக்‌ கூறி அதனை எம்பெருமானுக்குத்‌ தானம்‌ செய்தால்‌ எல்லா விருப்பங்‌களும்‌ நிறைவேறுமென்று கூறினாராயிற்று. இவ்விரண்டு ஸ்லோகங்களினாலும்‌,-கீழ் ஸ்லோகத்தில்‌ தனக்குரிய சொத்து என்றதை விவரித்து அத்தகைய சொத்தான ஸ்ரீ ஸூக்தியை எம்பெருமானுக்குக்‌ கொடுக்கக்‌ கடவதாகவும்‌, கொடுத்தால்‌ எல்லா விருப்பமும்‌ நிறைவேறுவதாகவும்‌ அருளிச்‌ செய்தாராயிற்று. ப்ரணயீ – (1) பற்றுடையாவன்‌ (2) யாசகன்

காம்யோ ததாதி ஸார்த்தம் –பொன் கட்டிய பசு தானம் பண்ணுகிறார் இதில்
அர்த்தங்கள் பொதிந்த ஸ்ரீ ஸூ க்திகள் என்றுமாம்-தவல மதி ப்ரேம தாரயா ஸஹிதம் -ஸூத்தமான -வெண்மை -பிரேமை மிக்கு –நீராய் அலைந்து கரைந்து உருகும் திரு உள்ளம்
அனுபவ ஜெனித ப்ரீதி உள் அடங்காமல் வெளிவந்தவை அன்றோ
கடிகாசல பிரணயிநே -உகந்து அருளி நித்ய வாஸம் செய்து அருளும் அக்காரக்கனி எம்பெருமானுக்கு ஸமர்ப்பிக்க-கடிதே கிம் தஸ்ய காங்ஷிதம் ந பலம் —கோ தானம் -வாக்கு -தானம் செய்த பின்பு அபீஷ்டங்கள் அனைத்துமே அருளுவான் அன்றோ
இந்த ஸ்துதியை நாவினால் நவிலவே நமக்கும் அருளிச் செய்வான் அன்றோ

————

கலு ஷாதி கடித வாக்யை ஷாலித வைமுக்ய கல்மஷா திஷணா
ப்ருது குண வதீ மதீயா ஸ்ப்ருஹயதி கடிகாசல ப்ரியாய ப்ருசம் –57-

கலுஷ ஆதி கடித வாக்யை – மனத்தின் கண்‌ (உள்ள) அழுக்கைப்‌ போக்கடிப் பவைகளாகத்‌ தானே சேர்ந்த வேத வாக்கியங்களாலே, அல்லது மஹர்ஷிகளாலே சேர்க்கப்பட்ட இதிஹாஸ புராண வாக்கியங்களாலே, க்ஷாளிதவைமுக்யகல்மஷா கழுவப்பட்ட – எம்பெருமானிடம்‌ பராமுகமா யிருத்தலாகிற அழுக்கை யுடைய, மதீயா திஷணா – என்னுடைய புத்தியானது. ப்ருது குணவதீ – அதிகமான – எம்பெருமானுக்கு நேர்‌ முகமாக இருத்தலென்னும்‌ குணத்தை யுடையதாய்க்‌ கொண்டு, கடிகாசலப்ரியாய கடிகைமலைநாயகன்‌ பொருட்டு, ப்ருசம்‌ மிகவும்‌, ஸ்ப்ருஹயதி – ஆசைப் படுகிறது.
மனதின்கண்‌ உள்ள அழுக்காவன – நான்‌ ஸ்வதந்த்ரன்‌ என்னும்‌ அஹங்காரமும்‌, உலகிலுள்ள பொருள்கள்‌ யாவும்‌ என்னுடையவையே என்னும்‌ மமகாரமுமாகும்‌. இப்படிப்பட்ட அழுக்குக்களை – எம்பெருமானொருவனே ஸ்வதந்த்ரன்‌, மற்ற ஜீவாத்மாக்கள்‌ மற்றுமுள்ள ஜடப் பொருள்களனைத்துமே அப் பெருமானுக்குப்‌ பரதந்திரமானவையே என்ற கருத்துக்களைக்‌ கொண்ட வேத வாக்கியங்கள்‌ அல்லது இதிஹாஸ புராண வாக்கியங்கள்‌ போக்கடிக்கின்றன. இக்கருத்து மனதின்‌ கண்‌ ஊறவூற மனிதர்களின்‌ எண்ணத்தில்‌ பகவத்‌ வைமுக்யம்‌ நசிக்கப் பெற்று செவ்முக்யமென்னும்‌ குணம்‌ அதிகமாக உண்டாகும்‌. அக் குணமுண்டாகவே பகவானிடம்‌ மிக்க ஆசை உண்டாகும்‌ என்பதைக்‌ கவி தம்மோடு தொடர்பு படுத்திக் கூறினாராயிற்று. இகனால்‌ வைமுக்யம்‌- எம்பெருமானிடம்‌ பாரமுகமாக இருத்தல்‌. ஸெளமுக்யம்‌ – நேர்முகமாக இருத்தல்‌. அதாவது சிறிது ஆசை யுண்டாகப்‌ பெறுதல்‌. அந்நிலமை நீடிக்கப் பெற்றால்‌ சில நாட்களில்‌ அதிகமான ஆசையாகிய பக்தி உண்டாகு மென்றபடி. கலுஷம்‌ – காலுஷ்யம்‌ – அழுக்கு. கலுஷம்‌ அதந்தீதி – கலுஷாநீதி கடிதாநி – கடிதாநிச தாநி வாக்யாநிச என்று விக்ரஹவாக்யம்‌. அத பக்ஷணே என்ற தாதுவின்‌ மேல்‌ ணிநிப்ரத்யயம்‌ சேர்ந்தால்‌ ஆதி என்ற ரூபம்‌ நிஷ்பந்நமாகும்‌. இதுநபும்ஸகலிங்க சப்தம்‌. நாசம்‌ பண்ணுமது என்பது அதன்‌ பொருள்‌. கடித வாக்யாநி – தாமே சேர்ந்த வேத வாக்கியங்கள்‌ – வேதம்‌ அபவ் ருஷேயமாகையாலே, கடித வாக்யாநி மஹர்ஷிகளாலே சேர்க்கப்பட்ட இதிஹாஸ புராண வாக்யங்கள்‌-கடிதமென்பதில்‌ முந்தின பக்ஷத்தில்‌ கர்த்தரியிலும்‌ பிந்தின பக்ஷத்தில்‌ கர்பணியிலும்‌ “க்த” ப்ரத்யயம்‌ வந்துள்ளது

கலு ஷாதி கடித வாக்யை ஷாலித -அஹங்கார மமகாரா தூஷித
வைமுக்ய கல் மஷாதிஷ ணா -பாராமுகமாக அடியேன் திரு உள்ளம்
ப்ருது குண வதீ மதீயா ஸ் ப்ருஹயதி -அவன் மேலே இழுத்துக் கொண்டு
கடிகாசல ப்ரியாய ப்ருசம் -அக்காரக்கனி உகந்து அருளின திவ்ய தேச மஹாத்ம்யத்தாலேயே நாம் அனுசந்திக்க தாம் நைச்ய அனுசந்தானம் செய்து அருளுகிறார்

—————

அந் விஷ்யதாம் ஸ்வம் அதவா தூஷ்ணீ மாத்வம் ஸூரர்ஷி பித்ரு முக்யா
தத் கிங்கரோ அர்ப்பிதோ அஹம் தஜ்ஜஜை கடிகாத்ரி பூபுஜே ச சிவை –58

ஸுர ருஷி பித்ருமுக்யா: – தேவதைகள்‌ ருஷிகள்‌ பித்ருக்கள்‌ முதலியவர்களே ! ஸ்வம்‌ அந்விஷ்யதாம்‌ – உங்களுடைய சொத்து தேடப்படட்டும்‌, அதவா – அல்லது (சொத்தே வேண்டா மென்றால்‌) தூஷ்ணீம்‌ ஆத்வம்‌ – : வெறுமனே இருங்கள்‌. (எங்களுடைய சொத்தாக நீ இருக்க நாங்கள்‌ தேடுவதும்‌, வேண்‌டா விடில்‌ வெறுமனே இருப்பதும்‌ எதற்கு என்றால்‌ பதில்‌ கூறுகிறார்‌ – நான்‌ பகவானுடைய சொத்தாக ஆகிவிட்டேனென்று) அஹம்‌ – நான்‌, கடிகாத்ரிபூபுஜே – கடிகைமலை யரசரான எம்பெருமானுக்கு, தத்ஜ்தை;: அவனைப்‌ பற்றி அறிந்த – தத்வ ஜ்ஞாநிகளான , ஸசிவை: – மந்த்ரிகளாலே பாகவதர்களாலும்‌ ஆசார்யர்களாலும்‌, தத் கிங்கர: – அவ்வெம்பெருமானுடைய தொண்டனாக, அர்ப்பித: -ஸமர்ப்பிக்கப்பட்டேன் –
53ம்‌ ஸ்லோகத்தில்‌ – பகவானுக்குக்‌ கைங்கர்யம்‌ செய்வேனென்றார்‌. 54,55,56ம்‌ ஸ்லோகங்களில்‌ வாசிக கைங்கர்யம்‌ செய்வதா௧க் கூறினார்‌. 57ல்‌ இங்ஙனம்‌ கைங்கர்யம்‌ செய்வதற்குக்‌ காரணமான பக்தி தமக்கு எம்‌பெருமானிடம்‌ உண்டானதாகச்‌ சொன்னார்‌. இதைக்‌ கேட்ட தேவர் ரிஷி பித்ருக்கள்‌ – இது வரையில்‌ எங்களுக்குத்‌ தொண்டு செய்து கொண்டிருந்த நீ எப்பொழுது இப்படி மாறிவிட்டாய் என்று கேட்க விடை யிறுக்கிறார்‌ இதனால்‌. பகவத்‌ க்ருபையால்‌ பாகவதர்களோடு ஸஹ வாஸம்‌ உண்டாக, இவர்கள்‌ என்னை ஸதாசார்யனோடு சேர்க்க, அவ்வாசார்யர்‌ என்னை பகவத் தாஸனாகச்‌ சேர்த்து விட்டார்‌. இனி உங்களுக்கும்‌ எனக்கும் ஒரு ஸம்பந்தமுமில்லை. உங்களுக்கு சொத்து வேண்டுமென்றால்‌ வேறுயாரையாவது தேடிப் பிடித்துக்‌ கொள்ளுங்கள்‌, இல்லையேல்‌ வாளா விருங்களென்று அவர்களிடம் அறை கூவுகிறார்‌ இதனால்‌ என்க.
தேவர்ஷிபூதாப்த ந்ருணாம்‌ பித்ரூணாம்‌ ந கிங்கரோ நாயம்ருணீச ராஜந்‌ | ஸர்வாத்மநா ய: ஸரணம்‌ ஸரண்யம்‌ நாராயணம்‌ லோக குரும்‌ ப்ரபந்ந: |!-(ஸ்ரீ பாகவதம்‌ 11.5.41) – அரசே எவனொருவன்‌ சரணமடையத் தக்கவனாய்‌ (க்ருபையும்‌ சக்தியுமுடையவனாய்‌) லோக பிதாவான நாராயணனை எல்லா விதத்தாலும்‌ சரணமடைந்தானோ, அவன்‌ – தேவர்களுக்கும்‌ ரிஷிகளுக்கும்‌ பூதங்களுக்கும்‌ பந்துக்களுக்கும்‌ பித்ருக்களுக்கும்‌ அடிமைப்பட்டவனல்லன்‌, கடன்பட்டவனுமல்லன்‌ என்ற ஸ்லோகம்‌ இங்கு நினைக்கத் தக்கது . இது கரபாஜந முனிவர்‌ நிமியரசனுக்கு உபதேசித்தது.

உங்கள் சொத்து தொலைந்து போனதே என்கிறார்-ஸூரர்ஷி பித்ரு முக்யா -ஸூரர் ரிஷிகள் பித்ருக்கள் முதலியவர்அந் விஷ்யதாம் ஸ்வம் -உங்கள் சொத்து தொலைந்து போனதே என்கிறார்-அதவா தூஷ்ணீ மாத்வம் -வெறுமனே உட்க்கார்ந்து இருங்கள்
கடிகாத்ரி பூபுஜே ச சிவை –அக்காரக்கனி -கடிகாத்ரி அரசன் பற்றிய பூர்ண ஞானம் கொண்ட மந்திரிகள் –மாச முனிகளை ஆஸ்ரயித்த பின்பு-தத் கிங்கரோ அர்ப்பிதோ அஹம் தஜ்ஜஜை -கைங்கர்ய பரனாக அடியேன் சமர்ப்பிக்கப் பட்டேன்-ஆச்சார்யர்கள் நம்மை விற்கவும் பெறுவார்கள் அன்றோ-சூடகம் -கங்கணம் -தோள் வளை சங்கு சக்கர லாஞ்சனை தோடே செவிப்பூவே -மந்த்ர உபதேசம் -பாடகம் கால் கட்டு -பஞ்ச ஸம்ஸ்காரம்-சாஷாத் பல ஏக லஷ்யம் -மங்களா ஸாஸனம் -ஆஸாசித்தல் –

———-

ந்ருத்யந்த்ய நர்த்த கம்யே கோப்த்ரே கடிகா மஹீ ப்ருதோ ஹரயே
மன்யே மந்த தீயஸ் தான் மாதங்கா நேவ மத ஜூஷ கலுஷான் –59-

கடிகாமஹீப்ருத: கோப்த்ரே – கடிகைமலையின்‌ அரசனாகிய, ஹரயே (நர)ஸிம்ஹத்தின்‌ பொருட்டு, யே– யார்‌. அநர்த்தகம்‌– வ்யர்த்தமாக – (பயனின்றி) ந்ருத்யந்தி – கூத்தாடுகின்றார்களோ, தாந்‌ – அத்தகைய, மந்ததிய: – புத்தி குறையப் பெற்றவர்களை, கலுஷாந்‌ – அறிவு கலங்கிய, மதஜுஷ: மதம் பிடித்த, மாதங்காந்‌ ஏவ – யானைகளாகவே, மந்யே – கருதுகிறேன்‌.
கடிகைமலை யெம்பெருமானுக்குத் தொண்டராகிய தமக்கு விபரீதரானவர்களை பகவத்‌ த்வேஷிகளை நிந்திக்கிறார்‌ இதனால்‌, மதம்‌ பிடிக்காத யானை சிங்கத்தின்‌ எதிரில்‌ செல்லவே செல்லாது. மதம்‌ பிடித்த யானை அறிவு கலங்கிச்‌ சிங்கத்தின்‌ எதிரே சென்று
ஆடுவதும்‌ பிளிறுவதுமாக இருந்தால்‌ அது சிங்கத்தினால்‌ கொல்லப்படுவது உறுதி. அது போலவே நரசிங்கப்‌ பெருமானெதிரி. வந்து அவனை மதியாமல்‌ கூத்தாடுவர்களேல்‌ அவர்கள்‌ ஸ்வரூப நாசம்‌ பெறுவது உறுதி என்று இதனால்‌ குறித்து அருளினார் –

ந்ருத்யந்த்ய நர்த்த கம்யே -அநர்த்த நாட்டியம் –ஈஸ்வரோஹம் -அகங்கார மமக தூஷித்தராய் ஆட –கோப்த்ரே கடிகா மஹீ ப்ருதோ ஹரயே –அக்காரக்கனி அரசே-மன்யே மந்த தீ யஸ்தான் -அஞ்ஞானம் தலை எடுத்து-மாதங்கா நேவ மத ஜூஷ் கலுஷான் –கலங்கிய அறிவால் மதம் பிடித்த யானை போல் – காட்டில் ஸிம்ஹ அரசன் முன் ஆடும் யானை மாள்வது போல் அன்றோ இவர்கள் –

———

துஷ்டான் நிக்ருஹ்ய தரஸா ஸிஷ்டாந் அகிலாம் ஸ் சிரேண பாலயதே
ஸ்வஸ்தி ஸூஹ்ருதே குணாநாம் பூத்யை கடிகாத்ரி பூபுஜே பூயாத் –60-

துஷ்டாந்‌ – துஷ்டர்களை, தரஸா விரைவிலேயே, நிக்ருஹ்ய – தண்டித்து, சிஷ்டாந்‌ அகிலாந்‌ – நல்லோர்கள்‌ அனைவரையும்‌. சிரேண – வெகு நாட்களாகவே, பாலயதே காப்பாற்றி வருமவனும்‌, ஸுஹ்ருதே நல்ல மனமுடையவனும்‌, குணாநாம்‌ பூத்யை நற்குணங்களுக்கு இருப்பிடமானவனுமான-கடிகாத்ரி பூபுஜே – கடிகைமலை யரசனுக்கு, ஸ்வஸ்தி பூயாத்‌ – க்ஷேமம்‌ உண்டாயிடுக.
58ம்‌ ஸ்லோகத்தில்‌ தாம்‌ பகவத் கிங்கரரானமையத்‌ தெரிவித்து மகிழ்ந்து, 59ல்‌ பகவத்‌ த்வேஷிகளை நிந்தித்து, இப்படி துஷ்டர்களை யழித்தலையும்‌ சிஷ்டர்களைக்‌ காத்தலையும்‌ தொழிலாகக்‌ கொண்ட எம்பெருமான்‌ தன்மைக்குத்‌ தோற்று, அவனுக்குப்‌ பல்லாண்டு பாடினாராயிற்று இதனால்

துஷ்டான் நிக்ருஹ்ய தரஸா -அனிஷ்டங்களைப் போக்கி அருளி –தரஸா-விரைவில்
ஸிஷ்டாந் அகிலாம் ஸ் சிரேண பாலயதே-ஸமஸ்த இஷ்ட ஸூஹ்ருதே குணாநாம் பூத்யை -நல்ல குணங்கள் அனைத்துக்கும் இருப்பிடம்-ப்ரதானங்களையும் எப்பொழுதும் அருளி
ஸ்வஸ்தி கடிகாத்ரி பூ பஜே பூயாத் –அக்காரக்கனி தெய்வத்துக்கு அரசுக்கு பல்லாண்டு பாடுவோம்

————

ம்ருதுளம் பவாக்நி பாகாத் வ்யாப்தம் குணதோ வி ஸூத்தம் அஹம் அன்னம்
போஜ்யம் ஸமர்ப்பயே ஸ்வம் போக்த்ரே கடிகாசலஸ்ய ஸஸ் நேஹம் –61

பவஅக்நி பாகாத்‌ – ஸம்ஸாரமென்னும்‌ அக்நியால்‌ சமைக்கப்பட்டதனால்‌, ம்ருதுளம்‌ – (1 மெத்தென்றிருப்பதும்‌ (2) மனம்‌ கனியப் பெற்றவனும்‌, குணத: – (1) சுவையாகிற குணத்தினால்‌ நிறைந்ததும்‌ (2) சம தமாதி குணங்களினால்‌ நிறைந்தவனும்‌, விசுத்தம்‌ – (1) மிகவும்‌ சுத்தமானதும்‌ (2) மிகவும்‌ பரிசுத்தமான வனும்‌, போஜ்யம்‌ – உண்ணத் தக்கதுமான, அந்தம்‌ – அந்நமாக, போஜ்யம்‌ ஸ்வம்‌ – அனுபவிக்கத் தக்கவனுமான தன்னை (என்னை) கடிகாசலஸ்ய போக்த்ரே – கடிகை மலையில் வுள்ள (1) உண்ணுமவன்‌ பொருட்டு (2) அனுபவிப்பவன்‌ பொருட்டு, ஸஸ்நேஹம்‌ – (1) நெய்யோடு கூட (2) பக்தியோடு கூட, ஸமர்ப்பயே – ஸமர்ப்பிக்கிறேன்‌.
இதில்‌ எறும்பியப்பா கடிகை மலை யெம்பெருமானுக்குத்‌ தம்மை அந்நமாக ஸமர்ப்பிக்கிறார்‌. (1) என்று குறிக்கப்பட்ட விசேஷணங்கள்‌ அந்நத்துக்கும்‌, (2) என்று குறிக்கப்பட்ட விசேஷணங்கள்‌ – ஸ்வம்‌ என்‌பதனால்‌ சொல்லப்பட்ட தமக்கும்‌ (எறும்பி அப்பாவுக்கும்‌) பொருத்துக.
அந்நம்‌ சமைக்கப்பட்டு மெத்தென்றிருக்கும, சுவைக் குணம்‌ நிறைந்திருக்கும்‌, தூய்மை பெற்றிருக்கும்‌, நெய் சேர்ந்திருக்கும்‌. இப்படிப்பட்ட அந்நமே உண்பவனுக்கு உண்ணத் தக்கது. அங்ஙனமே அப்பாவும்‌ ஸம்ஸாராக்நியினால்‌ சமைக்கப்பட்டு முரட்டுத்தனம்‌ நீங்கி மெத்தென்றிருப்பர்‌. மனவடக்கம்‌ பொறியடக்கம்‌ முதலிய குணங்கள்‌ நிறையப் பெற்றிருப்பர்‌. அதனால்‌ தூய்மை பெற்றிருப்பர்‌. பகவானிடம்‌ பக்தியுடனிருப்பர்‌. இப்படிப்பட்ட இவர்‌ அனுபவிக்கின்ற பகவானுக்கு அனுபவிக்கத் தக்கவராயிருப்பர்‌ என்றபடி.

மருதலம் -வெந்து குழைந்து –நீராய் அலைந்து கரைந்து உருக்குகின்ற
பவாக்நி பாகாத் -அக்னியால் பக்குவப்பட்டு -சம்சார பாவாக்னி
வ்யாப்தம் குணதோ -ருசி மிக்கு சமதமாதி குணங்கள் நிறைந்து
வி ஸூத்தம் -பரி ஸூத்தம் –நெய் சமஸ்க்ருதம் அன்ன ஸூத்தி நிறைந்து
அஹம் அன்னம் போஜ்யம் ஸமர்ப்பயே ஸ்வம் -அடியேனை சமர்ப்பிக்கிறேன் -சொத்து தானே-போக்த்ரே கடிகாசலஸ்ய ஸஸ் நேஹம் –இஷ்டமாக அனுபவித்து -ஸ்வாமி சொத்தை -நெய் -மிகுந்த பக்தி -நிறைந்த அன்னம் -அடியேன் பல்லாண்டு கீழே அருளி –அம்மம் உண்ண இதில் -பெரியாழ்வார் போல் இவரும் இதில்

————–

நித்ய ஸ்ரீ யே குணா நாம் நிதயே நிஷ்ட யூத நிகில தோஷாய
ப்ரஞ்ஞா அர்ப்பிதா மயைஷா பர்த்ரே கடிகாசலஸ்ய பாக்ய வஸாத் –62-

நித்ய ஸ்ரியே – பிராட்டியோடு எப்போதும்‌ கூடியிருப்பவனும்‌, (அது காரணமாக) நிஷ்ட்யூத நிகில தோஷாய – காரி யுமிழப்பட்ட எல்லாக்‌ குற்றங்களை யுமுடையவனும்‌, குணாநாம்‌ நிதயே – நற்குணங்களுக்கு நிதி போன்றவனுமான, கடிகாசலஸ்ய பர்த்ரே கடிகாசலத்தில்‌ வாழும்‌ எம்பெருமானாகிய கணவனுக்கு, பாக்ய வசாத்‌ – (என்னுடைய) அத்ருஷ்ட வசத்தில்‌, மயா – என்னால்‌. எஷா ப்ரஜ்ஞா – இந்த ப்ரஜ்ஞை என்னும்‌ கன்னிகை, அர்ப்பிதா – ஸமர்ப்பிக்கப் பட்டாள்‌.
இங்கு ப்ரஜ்ஞையாவது இடையறாமல்‌ எம்பெருமானை நினைத்தலாகிய ஜ்ஞான விசேஷம்‌. இதுவே பக்தி யெனப்படும் -இது தன்னை அவனுக்குக் கொடுத்தலாவது அவனையே எப்போதும்‌ நினைத்தல்‌ என்றபடி -அல்லது தத்வ ஹித புருஷார்த்த விஷயமான புத்தியும்‌ ப்ரஜ்ஞையாகலாம்‌. இதை நாயகனுக்கு ஸமர்ப்பித்தலாவது எம்பெருமானையே பர தத்துவமாகவும்‌ மோஷ உபாய ரூபமான ஹிதமாகவும்‌ புருஷார்த்தமாகவும்‌ அறுதி யிட்டிருக்கையாகும்‌. எம்பெருமானை பர்த்தா என்று குறித்துள்ளதற்கேற்ப, ப்ரஜ்ஞை கன்னிகையாகக்‌ கருதப்பட்டது. ஆக “ பிராட்டியின்‌ நித்ய யோகத்தினால்‌ குற்றமாகிய ஸ்வாதந்த்ரியம்‌ தலை மடிந்து, அதனால் தலை யெடுத்த வாத்ஸல்யாதி குணங்களை யுடைய எம்பெருமானாகிய மணவாளப்‌ பிள்ளைக்கு தமது ப்ரஜ்ஞையாம்‌ கன்னிகையைக்‌ கைப்பிடிக்கும்படி ஸமர்ப்பித்தார் ஆயிற்று -இதனால்‌. “ஓண் தாமரையாள்‌ கேள்வ னொருவனையே நோக்குமுணர்வு’ தான்‌ உணர்வாவது அதுவே இங்கு ப்ரஜ்ஞையாகக்‌ குறிப்பிடப்பட்டது என்க –

நித்ய ஸ்ரீ யே –கூடவே பிரியாமல் -ஸ்ரீ யபதி புருஷார்த்தம் இருப்பதால் பயப்படவே வேண்டாமே-காகாசுரன் இவள் சந்நிதியால் உஜ்ஜீவித்தான் -ராவணன் இவள் அஸந்நிதியால் மாண்டான்
குணா நாம் நிதயே-அதுக்கும் மேல் குணக்கடலாகவும்
என்னடியார் அது செய்யார் என்பவனும் ந கச்சின் ந அபராதயதி என்பாளும் உண்டே
நிஷ்ட யூத நிகில தோஷாய-காரி உமிழும் படி தோஷங்கள் அனைத்துக்கும் இருப்பிடமான நம் போல்வாரும்-ப்ரஞ்ஞா அர்ப்பிதா மயைஷா பர்த்ரே -ப்ரஞ்ஞா -தத்வம் ஹிதம் புருஷார்த்தங்கள்-இவற்றை உணர்ந்து -ஸமர்ப்பிக்கப் பட்டாள்
கடிகாசலஸ்ய பாக்ய வஸாத் –அதிர்ஷ்ட வசமாகப் பெற்ற மணவாளன் அக்காரக்கனி அன்றோ -திரிபுவன -உபய விபூதி நாயகன் அன்றோ
தத்வம் ஹிதம் புருஷார்த்தம் -பிரதம மத்யம சரம பர்வதங்கள் -பெருமாள் -ஸ்ரீ வைஷ்ணவ பாகவதர் -ஆச்சார்யர் —கன்னிகையாக உருவகம் –தாயார் கூடவே இருப்பதால் பெற்ற பலன் அன்றோ –

—————

பாத்ரே ஸமாஸ்ரிதாநாம் சாத்ரே ஸத் புருஷ வித் விஷாம் ஸததம்
தாத்ரே ஸகல பலா நாம் நேத்ரே ஜகதாம் நமோ ந்ருஸிம்ஹாய –63-

ஸததம்‌ – எப்போதும்‌, ஸமாஸ்ரிதாநாம்‌ – தன்னை யடைந்தவர்களை, பாத்ரே காப்பவனும்‌, ஸத் புருஷ வித்விஷாம்‌ – தன்னை யடைந்த ஸத்புருஷர்களின்‌ பகைவர்களை, சாத்ரே – மெலிவுறச்‌ செய்பவனும்‌-அழிப்பவனும்‌, ஸகல பலாநாம்‌ – எல்லா விதமான பலன்களையும்‌, தாத்ரே – (தன்னை யடைந்தவர்களுக்குத்‌, தருமவனும்‌ (இங்ஙனமாக) ஜகதாம்‌ – உலகத்திலுள்ளோர்க்கு, நேத்ரே – நாயானாகிய, ந்ருஸிம்ஹாய – நரஸிம்ஹப்‌ பெருமாளுக்கு, நம: – நமஸ்காரம்‌.
முன்‌ ஸ்லோகத்தில்‌ எம்பெருமானே தத்வமும்‌ ஹிதமும்‌ புருஷார்த்தமும்‌ என்றறுதி யிடுதற்குரிய ப்ரஜ்ஞையை உடையவராகத்‌ தம்மைக்‌ குறிப்பிட்டவர்‌, அந்த ப்ரஜ்ஞைக்குத்‌ தக்கபடி எம்பெருமானுக்கு நமஸ்காரம் செய்கிறார்‌ இது தன்னில்‌. அவனே பர தத்துவம்‌ (சேஷி) என்றறிந்தாலும்‌, அவனே ஹிதம்‌ (மோக்ஷோபாயம்‌) என்றறிந்தாலும்‌, அவனே புருஷார்த்தம்‌ (ப்ராப்யம்‌) என்றறிந்தாலும்‌ அவனுக்கு நமஸ்காரம்‌ செய்யவேணுமிறே. அதனாலன்றோ திருமந்‌திரத்தில்‌ நடுவிலுள்ள நம: பதத்தை ஆவ்ருத்தி செய்து- சேஷியைச்‌ சொல்லும்‌ ப்ரணவத்தோடும்‌ உபாயத்தைச்‌ சொல்லும்‌ ‘நம:” பதத்தோடும்‌, ப்ராப்யத்தைச்‌ சொல்லும்‌ நாராயணாய என்னும்‌ பதத்தோடும்‌ ஆசார்யர்கள்‌ கூட்டி அர்த்தம்‌ அருளிச் செய்வது.

பாத்ரே ஸமாஸ்ரிதாநாம் -ஆஸ்ரிதர் அனைவரையும் கை விடாமல் காத்து அருளி
சாத்ரே ஸத் புருஷ வித்விஷாம் ஸததம் –ஸத் புருஷர் -ஸாத்விகர் -ஆக்கி அருளி -தமோ ரஜோ குணம் தலை தூக்க விடாமல் பண்ணி அருளி
தாத்ரே ஸகல பலா நாம் -ஸமஸ்த அபீஷ்டங்களையும் அருளி
நேத்ரே ஜகதாம்அனைவருக்கும் கண்ணாவான் -நாயகன் ஆவான் –
நமோ ந்ருஸிம்ஹாய-அடியேன் உம்மை நமஸ்கரிக்கிறேன்
மந்த்ர ராஜ -திருமந்திரம் -திரு அஷ்டாக்ஷரம் -அநந்யார்ஹ சேஷத்வம் -அநந்ய சரண்யத்வம் -அநந்ய போக்யத்வம் அவனே தத்வம் -அவனே உபாயம் -அவனே உபேயம்
தத்வம் ஹிதம் புருஷார்த்தம்
பர கத ஸ்வீ கார நிஷ்டர் -இசைவித்து தாளிணைக் கீழ் இருத்தும் அம்மான்
பொருள் அல்லாத அடியேனை பொருளாக்கி அடிமை கொள்வான்
ஓம் நம -ஸ்வரூப விரோதி அஹங்கார மமகாரங்களைப் போக்கி அருளி
நமோ நம -உபாய விரோதி கழித்து அருளி
நாராயணாயா நம -ப்ராப்ய விரோதி கழித்து அருளி
நரஸிம்ஹ -நாராயணா போல் சதுர் அக்ஷரீ தானே –

———–

ஸூ மனஸ் ஸமூஹ பவ்யாத் ஸூக முக ஸேவ்யாத் ஸூ ஸீதலச் சாயாத் –
கடிகாத்ரி தட நிரூடாத் கல்பகத கஸ்யா காங்ஷிதம் ந பலம்–64-

ஸுமநஸ் ஸமூஹ பவ்யாத்‌ – (1) தேவதா ஸமுஹத்திற்கு க்ஷேமமளிப்பவனும்‌, (2) புஷ்ப ஸமூஹத்தினால்‌ மங்களமானதும்‌, சுக முக ஸேவ்யாத்‌ – (1) சுக முனிவர்‌ முதலியவர்களாலே ஸேவிக்கத் தக்கவனும்‌, 2) கிளி முதலிய பஷிகளாலே அடையப் பெற்றதும்‌, ஸுசீதள ச்சாயாத்‌ – மிகக்‌ குளிர்ந்த காந்தியை உடையவனும்‌ (2) மிகக்‌ குளிர்ந்த நிழலை யுடையதும்‌, கடிகாத்ரி தட நிசநடாத்‌ – கடிகைமலைத் தாழ்வரையில்‌ (1) தோன்றியவனுமான (2) முளைத்ததுமான. கல்பகத: – (1) எம்பெருமானாகிய (2) கற்பக மரத்தினிடமிருந்து, கஸ்ய – யாருக்கு, காங்க்ஷிதம்‌ பலம்‌ (1) விரும்பிய பலன்‌ (2) விரும்பிய பழம்‌, ந(லப்யதே) கிடைக்காது.
முன்‌ ஸ்லோகத்தில்‌ எல்லாப்‌ பலன்களையும்‌ தருமவன்‌ என்று அந்வயத்தினால்‌ (உடன்‌ பாட்டினால்‌) அருளிச்‌ செய்தவர்‌, அது தன்னை திடப் படுத்துவதற்காக இந்த ஸ்லோகத்தில்‌, யாருக்கு என்ன பலன்‌ கிடைக்காது என்று “வ்யதி ரேகத்தினால்‌” (எதிர் மறையினால்‌) அருளிச் செய்கிறார்‌. மேலும்‌ எம்பெருமானை எல்லாப் பயன்களையும்‌ எல்லாப்‌ பழங்களையும்‌ கொடுக்கும்‌ கற்பக மரமாக ரூபணம்‌ செய்கிறார் இதில் எம்பெருமானுக்கும்‌ கற்பகத்‌ தருவுக்கும்‌ பொருந்தும்படி சிலேடையில்‌ விசேஷணங்களை யமைத்துள்ளமை காண்க-

ஸூ மனஸ் ஸமூஹ பவ்யாத் –வ்ருக்ஷத்தில் புஷ்ப ஸமூஹம் இருக்குமே-தேவதா ஸமூஹங்களுக்கு-ஸூக முக ஸேவ்யாத் -கிளி போன்றவை தங்கும் இடம்-ஸூக பிரமுகர்கள் பலரால் ஸேவிக்கப் பட்டவர்-ஸூ ஸீதலச் சாயாத் –குளிர்ந்த நிழல் பரவி இருக்குமே00சம்சார தாப த்ரயங்களைப் போக்கி அருளி-கடிகாத்ரி தட நிரூடாத் கல்பகத -தாழ்வரையில் -கற்பக வ்ருக்ஷம்-கஸ்யா காங்ஷிதம் ந பலம் –யாருக்குத் தான் ஆசைப்பட்டவை கிடைக்காமல் போகும்-வியதிரேகத்தில் என்ன பலம் தான் கிட்டாது என்று இதில் திடமாக புத்திக்கு உபதேசம் –எனக்கே தந்தைத் தந்த கல்பகம் அன்றோ அக்காரக்கனி எம்பெருமான்

————–

அவிரத ஹித ப்ரவ்ருத்தே ஆபதி ஸஹிதாத் அக்ருத்ரிம ஸ்நேஹாத்
மம கடிகாசல பந்தோ மான்யா தன்யேந கேந கிம் கார்யம் –65-

அவிரதஹித ப்ரவ்ருத்தே – இடைவிடாமல்‌ நமக்கு நன்மை செய்வதில்‌ முயலுமவனும்‌, ஆபதி – ஆபத்து வரும் போது, ஸஹிதாத்‌ – நம்மை விடாமல்‌ கூடவே இருப்பவனும்‌, (அவ்விரண்டிற்கும்‌ உதவியாக) அக்ருத்ரிம ஸ்நேஹாத்‌ – இயற்கையான (கபடமற்ற) நட்புடையவனும்‌, மாந்யாத்‌ – (அதனால்‌) கெளரவிக்கத் தக்கவனுமாகிய கடிகாசல பந்தோ: – கடிகை மலைபிலுள்ள பந்துவான எம்பெருமானை விட, அந்யேந வேறான, கேந – யாராலே, மம – எனக்கு, கிம்‌ கார்யம்‌ – எந்த காரியம்‌ (ப்ரயோஜனம்‌), பவேத்‌ உண்டாகக்‌ கடவது.
உண்மையான பந்துவுக்கு லக்ஷணம்‌ – கபடமற்ற நட்பும்‌, எப்போதும்‌ தன்‌ நண்பனுக்கு நன்மை செய்யும்‌ முயற்சி யுடைமையும்‌, ஆபத்து வந்தால்‌ கூடவே இருந்து உதவி செய்வதுமாகும்‌. அத்தகைய லக்ஷணம்‌ எம்பெருமான்‌ தவிர வேறு யாரிடமும்‌ இல்லாமையால்‌ அவனைத்‌ தவிர்ந்த யாரால்‌ எனகக என்ன காரியம்‌ ஆக வேண்டியிருக்கிறதென்றார்‌ இதனால்‌. எம்பிரானெந்தை என்னுடைச்‌ சுற்றம்‌ (பெரியதிருமொழி 1.1.6) என்று தொடங்கிக்‌ கலியன்‌, ஸர்வேஸ்வானே எல்லா வித பந்துவுமாவான்‌ என்றருளிச்‌ செய்தார் இறே –

அவிரத ஹித ப்ரவ்ருத்தே -நன்மையே செய்யும்-ஆபதி ஸஹிதாத் –ஆபத்துக்களில் துணையாக-அக்ருத்ரிம ஸ்நேஹாத் -இயற்கையாகவே நண்பன்-ஸக்யம் நவ வித பகுதிகளில் ஸ்நேஹ பாவமும் உண்டே-மம கடிகாசல பந்தோ –உற்ற நண்பனே விளிச் சொல்-மான்யாத் –மதிக்க வேண்டுமே-அன்யேந கேந கிம் கார்யம்--இவரை விட வேறே யாரால் என்ன வேண்டும்

—————

கந கருண அம்ருத பூரை கடிகாசல கிருஷ்ண மேகதோ ஜநி தை
பாப அடாவீ ப்ரதக்தா பஜதே சித்ரம் பவ அம்புதி ஸோஷம் –66-

கடிகசால க்ருஷ்ண மேகத. – கடிகை மலையிலுள்ள எம்பெருமானாகிய கறுத்த மேகத்தாலே, ஜநிதை: – உணடு பண்ணப்பட்ட, கந கருணா அம்ருதபூரை: பெருங் கருணையாகிற அம்ருத ப்ரவாஹங்களினால்‌, பாப அடவீ – எனது பாவங்களாகிய காடு, ப்ரதக்தா – நன்றாகக்‌ கொளுத்தப்பட்டது; பவஅம்புதி:- (எனது) ஸம்ஸாரமாகிய கடல்‌, சோஷம்‌ பஜதே – வற்றுதலை அடைகிறது. சித்ரம்‌ – இது ஆச்சரியம்‌.
கொளுத்தும்‌ சக்தியும்‌ வற்றச்‌ செய்யுமாற்றலும்‌ நெருப்புக்கிருக்க, இதில்‌ கருணாம்ருத ப்ரவாஹத்திற்குப்‌ பாவங்கொளுத்து மாற்றலும்‌, பிறவிக் கடலை வற்றச்‌ செய்யும்‌ சக்தியும்‌ உண்டானதாகச்‌ சொல்லியதனால்‌ இது ஆச்சரியமென்றார்‌. குளிர்ந்த கருணையை
நெருப்பென்ன மாட்டாமல்‌ அம்ருத ப்ரவாஹம் என்றார்‌ என்க. இதில்‌ எம்பெருமானை கைம்மாறு கருதாமல்‌ மழை பொழியும்‌ கார்மேகம் என்றார்

கந கருண அம்ருத பூரை –அடியார்க்கு என் செய்வன் என்றே இருத்தி –
அம்ருத ப்ரவாஹம் பொழிந்து
கடிகாசல கிருஷ்ண மேகதோ ஜநிதை -இன்னும் கார் வண்ணனே
பாப அடாவீ ப்ரதக்தா -காட்டுத்தீயையும் அணைக்க வல்ல மேகம் அன்றோ
பவ அம்புதி ஸோஷம் –சம்சாரக்கடலை வற்ற வைக்கும் மேகம் அன்றோ
சித்ரம் பஜதே –என்ன ஆச்சர்யம் -ஆஸ்ரயிக்க வேண்டாவோ

————

கோபி பிரகாசி தார்த்தாத் கோத்ரே கடிகாபிதா நவத் யுதிதாத்
ஜாகர்தி ஸதத நித்ரம் ஸ விதுர் ஜகதாம் மனஸ் ஸரோஜம் மே –67-

கோபி: (1) தனது கிரணங்களினால்‌ (2) (கீதை சரமச்லோகம்‌ முதலிய) தனது ஸ்ரீஸூக்திகளினால்‌, ப்ரகாசித அர்த்தாச்‌ – (1) உலகிலுள்ள பொருள்களைக்‌ கண்களுக்குக்‌ காட்டுபவனும்‌ (2) சாஸ்த்‌ரார்த்தங்களை விளங்கச் செய்பவனும்‌, கடிகாஅபிதாநவதி கோத்ரே – கடிகை யென்னும்‌ பெயர்‌ பெற்ற மலையில்‌, உதிதாத்‌ தோன்றியவனுமான, ஜகதாம்‌ ஸவிது: – (1) உலகங்கட்கு ஸூர்யனானவனிடமிருந்து, ஸதத நித்ரம்‌ (1) எப்போதும்‌ கூம்பியே இருக்கிற (2) எப்போதும்‌ அறியாமையாகிய தூக்கங் கொண்டிருக்கிற, மே – என்னுடைய, மந: ஸரோஜம்‌ – தாமரை போன்ற மனஸ்ஸானது, ஜாகர்த்தி – (1) மலர்ச்சியை அடைகிறது (2) அறிவாகிய மலர்ச்சியைப்‌ பெறுகிறது.
கெள: – கிரணமும்‌ வாக்கும்‌. கோத்ரம்‌ – மலை. ஸவிதா – ஸூர்யனும்‌,-உலகங்களைப்‌ பெற்ற எம்பெருமானும்‌. இதில்‌ எம்பெருமானை ஸூரியனாகப்‌ பேசி யனுபவித்தார்‌

கோபி பிரகாசி தார்த்தாத் -தனது கிரணங்களால் பொருள்களை விளக்கும் ஆதித்யன்
கருணை ப்ரவாஹ -ஸ்ரீ ஸூக்திகளால் -சரம ஸ்லோஹாதிகள் -இவற்றால் ஸாஸ்த்ர சாரங்களை அருளிச் செய்து விளக்கி
கோத்ரே கடிகாபிதா நவத் யுதிதாத் –மலையிலே -உதித்து –
கீழே 13 ஸ்லோகம் கபி சூர்யன் உதித்து அக்காரக்கனியை ஸேவித்து பார்த்தோம்
எம்பெருமான் தானே உகந்து அருளி நித்யவாஸம் செய்து அருளி
ஜாகர்தி சதத நித்ரம் ஸ விது ஜகதாம் -உறக்கத்தில் இருந்து எழுப்பி
ஆதித்ய உதயம் முன்பே எழும் சாத்விகர் -காணாமல் கண்டு கொண்டு திரிகால சந்த்யா வந்தனம்
அஞ்ஞானம் அந்தகாரம் -உழன்று இருக்கும் சம்சாரிகள் விடுபட்டு ஞான மலர்த்தியை
மனஸ் ஸரோஜம் மே -மானஸ தாமரையை அலர்த்தும் அக்காரக்கனியே
தானே புகுந்து அகற்றி-விகஸித்து அருளுகிறார் -என்று ஸ்லாகிக்கிறார்

————

ருஷ்டேந யேந ருத்ரோ ருக்ணோ தரணீம் ஜகாம சரபோ அபி
கந துரித தந்திநோ அஸ்மாத் கடிகாத்ரி ஹரே கதம் ந பிப்யது மே –68-

ருஷ்டேந யேந – கோபமடைந்த எம் பெருமானாலே, ருத்ர: – சிவபெருமான்‌, சரப:அபி – சரப வுருக்‌ கொண்ட போதிலும்‌, ருக்ண: – தோற்றுப்போய்‌, தரணீம்‌ ஜகாம – பூமிக்குள்ளே புகுந்து கொண்டானோ, அஸ்மாத்‌ கடிகாத்ரிவரே: – அத்தகைய இந்த கடிகாசலச் சிங்கப்‌ பெருமானிடமிருந்து, மே – என்னுடைய. கந துரித தந்திந: – மஹா பாதங்களாகிய யானைகள்‌, கதம்‌ – எப்படி, ந பிப்யது – அஞ்ச மாட்டா,
இக் கடிகை மலைச்சிங்கம்‌ சரபத்தை.. அச்சுறுத்துவதாக இருக்க, இதனிடம்‌ யானைகள்‌ அஞ்சுவதைப்‌ பற்றித்‌ தனியே சொல்ல வேண்டுமா ? என்றபடி
சரபம்‌ – இரண்டு தலைகளையும்‌ சிறகுகளையும்‌ கூரிய நகமுள்ள எட்டுக் கால்களையும்‌ மேல்‌ நோக்கி. கண்களை யுமுடைய மிருக விசேடம்‌. இதனைப்‌ பறவை யென்றலுமுண்டு. இது சிங்கத்தை எளிதிற்‌ கொல்லுந்‌ திறமுடையது. வெறுஞ்சிங்கமன்றி நரசிங்கமாதலாலும்‌, ஸாமாந்ய ஸிம்ஹமன்றி வரம்பிலாற்றலுடைய புருஷோத்தமனது அவதாரமான திவ்ய ஸிம்ஹமாதலாலும்‌ இது சரபத்தைக்‌ கொன்று விட்டது-
ஹே! மர்த்ய ஸிம்ஹவ புஷஸ்தவ தேஜஸோஃம்ம ஸம்புர்‌ பவந்ஹி ஸரப: ஸலபோ பபூவ” சரப வுருக்‌ கொண்ட சிவன்‌ நரஸிம்ஹ ரூபங்கொண்ட உனது தேஜஸ்ஸில்‌ ஒரு மூலையில்‌ விட்டில்‌ பூச்சி போலே அகப்பட்டு மாண்டானன்றோ ? இது ஆச்சரியம்‌ – என்று கூரத் தாழ்வான்‌” (அதிமாநுஷ ஸ்தவ ‘ – 12) அருளிச் செய்தது ஸேவிக்கத் தக்கது –

ருஷ்டேந யேந -கொண்ட சீற்றம் ஓன்று இருக்க
ருத்ரோ ருக்ணோ தரணீம் ஜகாம சரபோ அபி –சரப உருவாக வந்த பொழுதும் கூட
தோற்று கீழே ஒளிந்து போகப் பண்ணினாய் அன்றோ-
இவ்வளவு வைபவம் கொண்ட அக்காரக்கனி அழகிய ஸிம்ஹர் முன்னால்
பாப மூட்டையாகிய பெரிய யானைகள் பயந்து நடுங்கச் சொல்லவும் வேணுமோ

கிரீடா விதேஸ் பரிகரஸ் தவ யா து மாயா சா மோஹிநீ ந கதமஸ்ய து ஹந்த ஐந்தோ ஹை மர்த்ய ஸிம்ஹ வபுஷஸ் தவ தேஜஸ் சா அம்சே சம்புர் பவந் ஹி சரபச் சலபோ பபூவ –12-யாதொரு மாயையானது-தேவரீருடைய லீலா வியாபாரத்துக்கு ஸாமக்ரியையாய் இருக்கிறதோ அந்த மாயை யானது எந்தப் பிராணிக்குத் தான் அவி விவேகத்தை உண்டு பண்ணுகிறது இல்லை சரப உருக் கொண்ட சிவனானவன் நரஸிம்ஹ வடிவு கொண்ட தேவரீருடைய தேஜஸ்ஸின் ஏக தேசத்திலே வீட்டில் பூச்சி போலே பட்டு ஒழிந்தான் இறே–என்ன ஆச்சர்யம் –சலபோ பபூவ-லகாரம் -ரகாரம் -சரபம் சலபம் ஆனதே என்ன ஆச்சர்யம் –ஸ்ரீ நரஸிம்ஹ பிரதாபா அக்னிஸ் புலிங்கத்திலே வீட்டில் பூச்சி பட்டது பட்டான் என்பது மாயையின் காரியமே-இத்தை கண்ட ருத்ரன் உனது பரத்வம் அறிந்து போனான் வாழ் குமரன் மேல் கனக வஞ்சகன் மேல் ஓர் முகத்தே சூழ் கருணையும் முனிவும் தோன்றினவால் கேழ் கிளரும் அங்கவேள் குன்ற அழல் சாபத்தைப் பிளந்த சிங்கவேள் குன்றத்தினார்க்கு –சிங்க வேள் குன்றம் நூற்று எட்டு அந்தாதி -97-பிள்ளைப் பெருமாள் ஐயங்கார்-சரபத்தை பிளந்தாயே -மன்மதனை எரித்த சிவனையே பிளந்தாயே

————–

அவ்யாஹத ப்ரஸாராத் அபஹத மந்த்ர ஒவ்ஷதாத் ஸஹஸ்ராஸ்யாத்
பாதக மூஷிக நிவஹாத் பாயாத் கடிகாத்ரி போகிந கோஹி –-69-

அவ்யாஹத ப்ரசாராத்‌ – தடை யற்ற ஸஞ்சாரத்தை யுடையதும்‌, அபஹத மந்த்ர ஒளஷதாத்‌ – தூரத்தில்‌ துரத்தப்பட்ட மந்த்ரமென்ன மருந்தென்ன இவற்றை யுடையதும்‌ (மந்திரத்திற்கும் மருந்துக்கும்‌ கட்டுப்படாததும்‌), ஸஹஸ்ரஆஸ்யாத்‌ ஆயி ரவாய்களுடையதுமான, கடிகாத்ரி போகிந: – கடிகை மலையிலுள்ள போக மனுபவிக்கும்‌ எம்பெருமானாகிய ஸர்ப்பத்தைக்‌ காட்டிலும்‌, கோ ஹி – வேறு யார் தான்‌, பாதக மூஷிக நிவஹாத்‌ – பாபமாகிய எலிக் கூட்டத்திலிருந்து, பாயாத்‌ (நம்மைக்‌) காப்பாற்றக் கடவர்‌.
இதில்‌ எம்பெருமானை ஸர்பமாக “ரூபணம்‌” செய்தார்‌. ஆயிர முகமுடைய எம்பெருமானாகிற ஸர்ப்பம் தான்‌ நம்முடைய எண்ணற்ற பாதகமாகிய எலிகளை விழுங்க வல்ல தென்றபடி. போகீ – பாம்பும்‌, போகமனுவிப்பவனும்‌, மந்திரமும்‌ மருந்தும்‌ தானிட்ட வழக்காகப்‌ பெற்ற எம்‌பெருமானாகிற பாம்பு, மந்திர – மருந்துகளுக்குக்‌ கட்டுப்படாமல்‌ தடையற்று பக்தர்களுள்ள விடந்தோறும்‌ திரிந்து அவர்களுடைய பாதக மூஷிகங்களை விழுங்குமென்பது கருத்து –

அவ்யாஹத ப்ரஸாராத் -தனக்கு தடை இல்லாமல் எங்கும் புகுந்து -சஞ்சரிக்கும் அரவம்
ஸர்வ வ்யாபி -அண்டம் அகத்தும் புறத்தும் உள்ளான்
அபஹத மந்த்ர ஒவ்ஷதாத் -மந்த்ரத்துக்கும் ஒவ்ஷதத்துக்கும் கட்டுப்படாமல்
வேதமோ தபஸோ ஹோமமோ -கட்டுப்படுத்த முடியாமல் -பக்தி ஒன்றாலே –
கட்டுண்ணப் பண்ணிய பெரு மாயன் அன்றோ
ஸஹஸ்ராஸ்யாத் -ஆயிரம் தலை கொண்ட –ஸஹஸ்ரம் பல பலவே ஸர்வேஸ்வரேஸ்வரனையே சொன்னவாறு
பாதக மூஷிக நிவஹாத் பாயாத் –எலி பயல்கள் போல் -துஷ்ட பாபங்களையே எலி கூட்டமாக –கடிகாத்ரி போகி ந கோஹி -அக்காரக் கனியைத் தவிர வேறே யாரால் போக்க முடியும்

———–

கலித புருஷார்த்த ஸார்தாத் கடிகா கடிதாத் ஸநாதநாத் தர்மாத்
கிம் வா பிரமாத் யதாம் ஸ்யாத் க்ஷேமம் ஹ்யத்ர ஹ்ய முத்ர வா பும்ஸாம் –70 –

கலித புருஷார்த்த ஸார்த்தாத்‌ – உண்டு பண்ணப்பட்ட புருஷார்த்த ஸமூஹத்தை யுடைய உபாயமாயும்‌, கடிகா கடிதாத்‌ – கடிகை மலையில்‌ (மஹிரிஷிகளால்‌) சேர்க்கப் பட்டதுமான, ஸநாதநாத்‌ தர்மாத்‌ . நம்மால்‌ முயன்று உண்டாக்கப்படுகின்ற கரும யோகாதி தருமங்கள்‌ போலன்றிககே) நித்ய ஸித்தமான தருமமாகிய கடிகை யெம்பெருமானிடமிருந்து, ப்ரமாத்யதாம்‌ – தவறின, பும்ஸாம்‌ – புருஷர்களுக்கு, அத்ர அமுத்ர வா – இம்மையிலோ மறுமையிலோ, கிம்‌ வா க்ஷேமம்‌ ஸ்யாத்‌ – எந்த நன்மை தான்‌ உண்டாகும்‌ ?
புருஷார்த்தங்கள்‌ – இம்மை மறுமைகளல்‌ இன்பமும்‌, கைவல்ய மோக்ஷ ஸூகமும்‌ பரம பதத்தில்‌ பகவதநுபவ ஸூகமுமாம்‌, தருமம்‌ – ஸூகத்தைச்‌ சாதித்துத்‌ தரும்‌ உபாயம்‌ – முன்‌ ஸ்லோகத்தில்‌ ஸுகாநுபவத்திற்குத்‌ தடையாக வுள்ள பாவங்களை நீக்குதலாகிய அநிஷ்ட பரிஹாரம்‌ கூறினார்‌. இதில்‌ (இஷ்டமாகிய) ஸூகத்தைத்‌ தருவதாகிய இஷ்ட ப்ராபணம்‌ கூறினார்‌. இவை யிரண்டுமன்றோ உபாயத்தின காரியம்‌; ஹி ஹி – பாத பூரணம்‌.

கலித புருஷார்த்த ஸார்தாத் -அனுபவ ஜெனித ப்ரீதி காரித கைங்கர்யம் -இங்கும் அங்கும் -தந்து அருளும்
கடிகா கடிதாத் ஸநாத நாத் தர்மாத் -அக்காரக்கனி -தர்ம நிஷ்டையில் -ததாமி ஏதத் விரதம் மம -என்னுமவன் அன்றோ
அநாதி தர்மம் ராமாவதாரத்தில் வெளிப்படுத்தி அருளி -அவனைப் போல் அநாதி
கிம் வா பிரமாத் யதாம் ஸ்யாத் க்ஷேமம் ஹ்யத்ர ஹ்ய முத்ர வா பும்ஸாம் –இவ்வாறு இருந்தும் நாம் இடறி விழுகிறோமே
பும்ஸாம் -மானிடர்கள் –
அத்ர அமுத்ர-இங்கும் அங்கும்
க்ஷேமம் பெறாமல் இழப்பது ஆச்சார்யம் அன்றோ -ஹி –

———

கந ஸமய நிர் வ்யபேஷாத் மேகாத் கடிகாத்ரி பர்த்ரு ருத்பூதா
ஷாள யதி கலுஷ மலிநம் காசந கருணா தரங்கிணீ புவநம் –71-

கந ஸமய நிர் வ்யபேக்ஷாத்‌ – கார் காலததை எதிர் பார்க்காத, கடிகாத்ரி பர்த்து: கடிகைமலைத் தலைவன்‌ என்கிற, மேகாத்‌ – மேகத்தினிடமிருந்து, உத்பூதா – உண்டான, காசந – ஒப்பற்ற, கருணா தரங்கிணீ – கருணையாகிய ஆறானது, கலுஷ மலிநம்‌ பாபத்தினால்‌ அழுக்கடைந்த, புவநம்‌ – உலகத்தை (உலகிலுள்ளோரை) க்ஷாளயதி சுத்தி செய்கிறது.
இதில்‌ எம்பெருமானை மேகமாகவும்‌, அவனிடமிருந்து பெருகுகிற கருணையை
நதியாகவும்‌ வருணிக்கிறார்‌. உலகில்‌ வெளி யழுக்கைக் கழுவித்‌ தூய்மை யாக்கும்‌ ஆறானது கார் காலத்திலுண்டாகும்‌ மேகத்தை எதிர் பார்க்கும்‌. உள்ளழுக்காகிய பாபத்தைக் கழுவிச் சுத்தமாக்கும்‌ கருணை யென்னும்‌ ஆறு கார் காலத்தை எதிர்பாராமல்‌ எப்போதும்‌ பெருகும்‌. எம்பெருமான்‌ நித்யனாகையால்‌ அவனது கருணையும்‌ நித்யமாய்ப்‌ பாபிகளுக்கு உபயோகப் படுகிறது. அதை நாம்‌ உபயோகித்துக்‌ கொள்ள வேணுமென்றபடி. தரங்கிணீ அலைகளை உடைய ஆறு.

கந ஸமய நிர் வ்யபேஷாத் -நதி தேவதை -மழை கால ருதுவை விரும்புமே -அசுத்தங்களை தள்ளிக் கொண்டு போகும் அன்றோ –ஆனால் சரத்காலம் அபேக்ஷை இல்லாத அக்காரக்கனி காள மேகம்
மேகாத் கடிகாத்ரி பர்த்ரு –தலைவன் -கணவன் -இவனே மேகம்
ருத்பூதா -உத்பத்தி செய்து அருளும்
ஷாள யதி கலுஷ மலிநம் காசந கருணா தரங்கிணீ புவநம் –பாப அழுக்கு கூட்டங்களை உடனே சுத்தம் பண்ணும் –கருணை அலைகள் மிக்கு உள்ள நதி-எப்பொழுதுமே -எத்தையும் எதிர்பார்க்காமலேயே செய்து அருளும் அன்றோ

————–

ஸந் நிஹித சங்க பத்மாத் ஸர்வ ஸகாத் ஸகல புண்ய ஜன ஸேவ்யாத்
கடிகாத்ரி ராஜ ராஜாத் கா வா ந ஸ்யாத் ஸமாஸ்ரிதாத் ஸம்பத் –72-

ஸமாஸ்ரிதாத்‌ – (நம்மால்‌) தஞ்சமடையப்‌ பெற்றவனாய்க்‌ கொண்டு, ஸந்நிஹித சங்க பத்மாத்‌ – (1) தன்னருகில்‌ இருக்கப்‌ பெற்ற சங்கையும்‌ தாமரை மலரையும்‌ அல்லது பிராட்டியையும்‌ உடையவனும்‌ (2) தன்னிடமுள்ள சங்க நிதி பத்ம நிதிகளை யுடையவனும்‌, ஸர்வ ஸகாத்‌ – (1) எல்லோருக்‌கும்‌ தோழனானவனும்‌, (2) சிவ பெருமானுக்குத்‌ தோழனானவனும்‌, ஸகல புண்ய ஜந ஸேவ்யாத்‌ – (1) எல்லாப் புண்யசாலி ஜனங்களாலும்‌ ஸேவிக்கத் தக்கவனுமான, (2) எல்ல புருக்ஷர்களாலும்‌ ஸேவிக்கத் தக்கவனுமான, கடிகாத்ரி ராஜ ராஜாத்‌ – கடிகை மலையிலுஎஃள குபேரனிடமிருந்து, கா வா ஸம்பத்‌ – எந்தச்‌ செல்வந்தான்‌, ந ஸ்யாத்‌ – உண்டாகாது.
இதில்‌ எம்பெருமானைக்‌ குபேரனாக வருணிக்கிறார்‌. பிரசித்தனான குபேரன்‌ – தநத: என்று பேர் பெற்றவனாய்ப்‌ பணமென்னும்‌ செல்வத்தை மட்டுமே அளிக்க வல்லவன்‌. இக் கடிகை மலைக்‌ குபேரனோ வன்னில்‌ – இப் பணமாகிய செல்வத்தோடு கூட ஆயுட் செல்வம்‌ மக்கட் செல்வம்‌ முதல்‌ இம்மைச்‌ செல்வமும்‌, சொர்க்க போகமாகிய மறுமைச்‌ செல்வமும்‌ மோக் ஷபோகமாகிய அழியாச் செல்வமும்‌ ஆகிய எல்லாவற்றையும்‌ கொடுக்குமாற்றல்‌ படைத்தவனென்பார்‌ – கா வா ஸம்பத்‌ ந ஸ்யாத்‌ – செல்வமென்று பெயர்‌ பெற்றவற்றில்‌ எது தான்‌ (இவனிடமிருந்து) உண்டாகாது என்றார்‌.
ஸந்நிஹிதெள சங்க; பத்ம: ச . அல்லது ஸந்நிஹிதே சங்க: பத்மா ச யேந ஸ: ஸந்நிஹித சங்க பத்ம: தஸ்மாத்‌ ௭-று பஹு வ்ரீஹி ஸமாஸம்‌ கொள்க. ஸர்வஸ்ய ஸகா – ஸர்வ ஸக: – ஸர்வ:- என்பது எல்லாரும்‌ என்ற பொருளையும்‌, சிவனையும்‌ குறிக்கும்‌. எல்லோருக்கும்‌ தோழன்‌ எம்பெருமான்‌, சிவனுக்குத்‌ தோழன்‌ குபேரன்‌, குபேரஸ்‌ த்ர்யம்பகஸக: என்பது அமர கோச… – குபேரன்‌ முக் கண்ணனுக்குத்‌ தோழன்‌ என்பது அதன்‌ பொருள்‌. புண்ய ஜந: – புண்யம் செய்தவனும்‌, யக்ஷனும்‌. ராஜ ராஜ: யக்ஷராஜனாகிய குபேரன்-

ஸந் நிஹித சங்க பத்மாத் -சங்க நிதி பத்ம நிதிகளைக் கொண்ட குபேரன்
சங்கம் தாமரை -அம்ருத பல வல்லித் தாயார் விட்டுப் பிரியாமல்
ஸர்வ ஸகாத் -ஸர்வேஸ்வரன் ஒருவனே -அனைவருக்கும் தோழன் -மங்களகரம் –
வைஷ்ணவானாம் யதா ஸம்பத் -அதுவே சம்பு சிவனுக்கு மங்களம் –
கீழே 68 ஸ்லோகம் சகாவாக முன்பே அருளிச் செய்தார் -ஆபத்து ரக்ஷகன்
அநந்யார்ஹம் இருக்க வேண்டியதாலும் -மற்றவரை வெறுக்கக் கூடாதே –
ஸகல புண்ய ஜன ஸேவ்யாத் -அனைவரும் ஆஸ்ரியத் தக்கவர்
கடிகாத்ரி ராஜ ராஜாத் -ராஜாதி ராஜன் -அக்காரக்கனி –
காவா நஸ்யாத் ஸமாஸ்ரிதாத் ஸம்பத்-எந்த செல்வம் தான் கிட்டப் பெறார்கள் -எல்லா செல்வங்களும்-அதுக்கும் மேலே பரம புருஷார்த்தமும் கிடைக்கப் பெறுவார்கள் அன்றோ –

————-

ப்ரஐந விஷாநல மூர்ச்சா விமுஷித சித்தான் பவோரக க்ரஸ்தான்
குர்வீத லப்த சத்தான் கோ வா கடிகாத்ரி காருடி கதோ அந்ய –73-

பவ உரக க்ரஸ்தாந்‌ – ஸம்ஸாரமென்னும்‌ சபர்ப்பத்தினால்‌ விழுங்கப்பட்டவர்களாய்‌, ப்ரஜந விஷாநல மூர்ச்சா விமுஷித சித்தாந்‌ பெண் கலவி யாகிற விஷக் காற்றின்‌ வளர்ச்சியினால்‌ கவரப்பட்ட மனத்தை யுடையவர்களை, கடிகாத்ரி காருடிகத: கடிகை மலையிலுள்ள விஷ வைத்தியனாகிய எம்பெருமானைத்‌ தவிர, அந்ய: கோ வா வேறு யார்‌ தான்‌, லப்த ஸத்தாந்‌ – ப்ராணனை யுடைபவர்களாக – ஸத்தை பெற்றவர்களாக ஸத்தையின்‌ பயனான மோக்ஷத்தை யடைந்தவர்களாக, குர்வீத – ஆக்க வல்லார்‌.
இதில்‌ எம்பெருமானை விஷம் போக்கும்‌ வைத்தியனாக வருணிக்கிறார்‌. பாம்பு தீண்டி விஷமேறிச்‌ சாகக் கிடக்கிறவனை விஷ வைத்தியன்‌ பிழைக்க வைப்பான்‌. இவ் வுலக வாழ்க்கை யென்னும்‌ அரவம்‌ தீண்டி விஷய போகமாகிய விஷமேறித்‌ தன்‌ பிறப்பிற்குப்‌ பயனாகிய மோக்ஷமென்னும்‌ உயர்ந்த ஜீவனத்தை (பிராணனை)ப் பெறாமல்‌ ஸத்தா நாசமடைய விருக்கும்‌ மனிதனை. எம்பெருமானாகிய விஷ வைத்தியன்‌ மோக்ஷமளித்துப்‌ பிராணனை உண்டு பண்ணுகிறான்‌ என்றபடி. காருடிக:– விஷ வைத்தியன் –

ப்ரஐந விஷா நல -காம மோஹத்தால் –
மூர்ச்சா விமுஷித சித்தான் -சித்தம் முழுவதும் மூழ்கி
பவோ ரக க்ரஸ்தான் -ஸம்ஸார –உரக-க்ரஸ்தான் –நம்மை விழுங்கும் சர்ப்பம் –
கீழ் 11 ஸ்லோகத்திலும் நரேந்திரன் விஷ வைத்யனாக அருளிச் செய்தார்
குர்வீத லப்த சத்தான் கோவா -அத்தை மீட்டு உஜ்ஜவிப்பிக்க வல்லவன்
கடிகாத்ரி காருடி கதோ அந்ய –அக்காரக்கனி மருத்துவனாய் நின்ற மா மணி வண்ணனை விட வேறே யார்-நல்ல பிராணன் –அம்ருத பலமான தன்னையே அளிப்பவர் அன்றோ –
வாடினேன் வாடி –ஓடினேன் ஓடி –நாடினேன் நாடி நான் கண்டு கொண்டேன் -என்றாரே –

——-

நித்யாந் நிரஸ்த தோஷாத் நியதபதாத் புண்ய கீர்தன ஸ்ரவணாத்
விநதோ சிதாபி தாநாத் ப்ரஹ்மண ஏவாதி கம்யதே சகலம் –74-

நித்யாத்‌ – எக்காலத்திலும்‌ அழியாமல்‌ நூலை பெற்றிருப்பவனும்‌, நியதபதாத்‌ நித்யமான பரமபதமென்னும்‌ ஸ்தானத்தையுடை பவனும்‌, நிரஸ்த தோஷாத்‌- துரத்தப்பட்ட குற்றங்களை யுடையவனும்‌, புண்ய கீர்த்தன ஸ்ரவணாத்‌ – புண்ணியத்தை உண்டாக்குகின்ற – தன்னைப்‌ பற்றிய கீர்த்தனத்தையும்‌ ஸ்ரவணத்தைமுடையவனும்‌ (எவனைத்‌ ஸ்துதித்தாலும்‌, பிறர் ஸ்துதிக்கக் கேட்டாலும்‌ அவை புண்ணியத்தை யுண்டாக்குமோ அப்படிப்பட்டவனும்‌) விநதோசித அபிதாநாத்‌ (தன்னை வணங்கிய பக்தர்களுக்குக்‌ கருணை செய்யத் தக்கவன்‌ என்று பொருள்‌ படுகின்ற) பக்தோசிதன்‌ என்ற திருநாமமுடையவனுமான, ப்ரஹ்மண: ஏவ – ப்ர ப்ரஹ்ம மமாகிய ஸ்ரீமந்‌ நாராயணனிடமிருந்தே, ஸகலம்‌ – விரும்பிய எல்லாப் பயனும்‌, அதிகம்யதே – அடையப்படுகிறது

கீழ்‌ 72ம்‌ ச்லோகத்தில்‌ கடிசை.॥லைக்‌ குபேரனிடத்தில்‌ எல்லாச்‌ செல்வங்களும்‌ கிடைக்குமென்றார்‌. அவனை வெற ॥ குபேரனென்று நினைக்க வேண்டாம்‌. அவன்‌ பரப்ரஹ்ம மென்னும்‌ ஸாக்ஷாத்‌ விஷ்ணுவேயாவான்‌. அவனிடமிருந்து எல்லாப்‌ புருஷார்த்தங்களையும்‌ பெறலாம்‌ என்கிறார்‌ இதனால்‌. ஸகல பல ப்ரதோ ஹி விஷ்ணு: (விஷ்ணு எல்லாப்‌ பலன்களையும்‌ _உளிக்கவல்லவரல்லவா) என்றாரிறே வேதவ்யாஸ பகவான்‌ விஷ்ணு தர்மத்தில்‌ (43-47: விநத சப்தமும்‌, பக்த சப்தமும்‌ பரியாயமாகையால்‌, ‘பக்தோசிதன்‌” என்பதை “விரதோசிதன்‌

நித்யாந் –-ஸ நாதன் -நித்தியமாக –
நிரஸ்த தோஷாத் -அகில ஹேய ப்ரத்ய நீகன் அன்றோ
நியதபதாத் –பரமபதமும் நித்யம் அன்றோ
புண்ய கீர்தன ஸ்ரவணாத்-அது இது உது என்னாலாவது என கேனா அபி -அனைத்தும் புண்யம்
விநதோ சிதாபி தாநாத் -பக்தி பிரிய மாதவன் -பக்தி உசிதன் -கருணை பொழிபவன்
ப்ரஹ்மண ஏவ–சதேவ -ஏகமேவ அத்விதீயம் -ஓத்தார் மிக்கார் இலையாய மா மாயன் –
அதி கம்யதே சகலம் –சகல அபீஷ்டங்களையும் பெற்று மகிழ்வார்கள் அன்றோ
கரந்து எங்கும் பரந்துளன் -தான் ஏற நாள் பார்த்து உள்ளானே

————–

ஸூத்திம் உப ஜநயதோ அக்ர்யாம் ஸ்வ ஆலோகேந ஏவ வ சஷுஷோ ஜகதாம்
கடிகாத்ர மித்ரதோ அந்யம் கலயே அகில லோக பாந்தவம் நாஹம் –75-

ஸ்வ ஆலோ கேந ஏவ – (1) தன்னுடைய ஒளியினாலேயே (2) தனது கடாக்ஷத்தாலேயே, அக்ர்யாம்‌ சுத்திம்‌ – உயர்ந்த தூய்மையை, உபஜநயத: – உண்டாக்குமவனும்‌, ஜகதாம் சக்ஷுஷ: – உலகங்களுக்குக் கண்‌ போன்றவனுமான, கடிகாத்ரி மித்ரத: – கடிகை மலையிலிருக்கும்‌ ஸூரியனைக் காட்‌டிலும்‌, அந்யம்‌ – வேறொருவனை, அஹம்‌ – நான்‌, அகிலலோக பாந்தவம்‌ – எல்லா வுலகங்களுக்கும்‌ பந்துவான ஸூரியனாக, ந கலயே எண்ண மாட்டேன்‌.
இதில்‌ எம்பெருமானை ஸூரியனாக ரூபணம்‌ செய்கிறார்‌. எம்பெருமானென்கிற ஸூரியனை விட – வேறான ஆகாயத்தில் தோன்றும்‌ ஸூரியனை ஸூரியனாகக்‌ கருத மாட்டேன்‌ என்கிறார் இதனால்‌.

ஸூத்திம் உப ஜநயதோ அக்ர்யாம் -முதன்மை -பவித்ரம்-சரீரத்துக்கு ஆத்ம உஜ்ஜீவனத்துக்கும் –
ஸ்வ ஆலோகேந ஏவ – சஷுஷோ ஜகதாம் -கண் போன்ற ஸூர்யன் -புற இருள் போக்க –கண்ணாவான் -ரக்ஷகன் அவனே-தன்னையே காட்டக் காணலாம்
கடிகாத்ர மித்ரதோ -மித்ரன் ஸூர்யன் –
அந்யம் கலயே அகில லோக பாந்தவம் நாஹம் –ந கலயே-ஸூர்ய நமஸ்காரம் செய்யாமல்
அவனுக்கும் அந்தர்யாமியான அக்காரக்கனியையே தொழுவேன்

——–

அம்ருத ப்ரவாஹ ஸஹஜை ஆலோகைர் அம்ருத ஸீதலை ஸ்நபிதா
விவிதான் பவ தவ தாஹான் விஜஹதி கடிகாத்ரி விலஸி தஸ்ய விதோ –76-

அம்ருத ப்ரவாஹ ஸஹஜை: – அமுத வெள்ளத்தோடு ஸமானமானவைகளும்‌, அம்ருத சீதளை: – அமுதம் போல்‌ குளிர்ந்தவைகளுமான, கடிகாத்ரி விலஸிதஸ்ய விதோ: ஆலோகை: – கடிகை மலையில்‌ மிகவும்‌ விளங்குகிற சந்திரனுடைய நிலவினாலே கடாக்ஷங்களாலே, ஸ்நபிதா: – நனைக்கப்ட்டவர்கள்‌, விவிதாந்‌ பவ தவ தாஹாந்‌ பலவகைப்பட்ட – ஸம்ஸாரமாகிய காட்டுத் தீயனால்‌ உண்டான எரிச்சல்களை, விஜஹதி விட்டு விடுகிறார்கள்‌.
முன்‌ ஸ்லோகத்தில்‌ எம்பெருமானை ஸூரியனாக வருணித்தவர்‌, இதில்‌ சந்திரனாக வருணிக்கிறார்‌. காட்டுத் தீயினால்‌ உடம்புக்கு உண்டாகும்‌ எரிச்சல்‌ சந்திரனுடைய குளிர்ந்த நிலவு உடம்பின்‌ மேல்‌ பட்டால்‌ நீங்கும்‌. எம்பெருமானாகிற சந்திரனுடைய நிலவு – அதாவது குளிர்ந்த கடாக்ஷங்கள்‌ நம்‌ மேல்‌ பட்டால்‌ ஆத்மாவுக்கு ஏற்படும்‌ ஸம்ஸார தாபங்கள்‌ நீங்கி விடுமென்றபடி. ஆத்யாத்மிகம்‌ ஆதிபெளதிகம்‌ ஆதிதைவிகம்‌ என்று ஸம்ஸார தாபங்கள்‌ மூன்று. தவ:- காட்டுத் தீ

அம்ருத ப்ரவாஹ ஸஹஜை –அம்ருத வெள்ளம் -இயற்கையாகவே –கீழே ஸூர்ய துல்ய -இங்கு சந்த்ர துல்ய-ஆலோகைர் அம்ருத ஸீதலை -குளிர்ந்து-ஸ்நபிதா -நனைக்கும்
விவிதான் பவ தவ தாஹான் விஜஹதி -சம்சார காட்டுத்தீயில் இருந்து விடுவித்து அருளும்
கடிகாத்ரி விலஸி தஸ்ய விதோ –அக்காரக்கனி சந்திரனே

——————

தர்மோத்தரம்‌ த்விபாத்ரே: ஸங்கே கடிகாத்ரி மத்பத விவாதம்‌ | கேநாப காரிணாரூஸ்மிந்‌ க்ருஷ்ண ம்ருக வரஸ்ய நியத ஸம்வாஸ-77-

த்விபாத்ரே: – ஹஸ்தி கிரிக்கு, கடிகாத்ரி மத்பத விவாதம்‌ – கடிகைமலை யென்கிற நான்‌ வசிக்கும்‌ இடத்தோடு (உண்டான) வாய்ப் போரை – சண்டையை, தர்மோத்ரம்‌ உயர்ந்த தருமமுடையதாக (மிகவும்‌ நியாயமானதாக) ங்கே – ஊஹிக்கிறேன்‌. (அச் சண்டை எப்படிப்பட்ட தென்றால்‌) கேந அப காரிணா – எந்த அபகாரியினால்‌, அஸ்மிந்‌ – இங்கு (நானிருக்கும்‌ இடத்தில்‌) க்ருஷ்ண ம்ருக வரஸ்ய – கிருஷ்ணனாய்‌ அவதரித்த ம்ருக ராஜனான ஸிம்ஹத்திற்கு, நியத ஸம்வாஸ: – என்னோடு கூட நித்ய வாஸமானது. கல்பித: – ஏற்படுத்தப்பட்டது ? (என்பதேயாகும் )
கடிகைமலை தன்னிடம்‌ எழுந்தருளிடள்ள ஸிம்ஹத்தை ஹஸ்தி கிரிக்கு அனுப்பி அதனை நித்யம்‌ வஸிக்கும்படி செய்து விட்டதனால்‌, ஹஸ்தியான (யானையான) தனக்கு ஆபத்து நேரிட்டதென்று நினைத்து, ஹஸ்திகிரி – கடிகை மலையோடு சண்டை போடுவதாக, இக் கவி தாம்‌ கல்பித்து, அந்த சண்டையைத்‌ தாம்‌ மிகவும்‌ நியாயமாகக்‌ கருதுவதாகவும்‌ கூறுகிறாரிது தன்னால்‌. “எந்தத்‌ துரோஹி நானிருக்குமிடத்தில்‌ ஸிம்ஹத்தை ஸ்திர வாஸமாக இருக்கும்படிச்‌ செய்திருப்பான்‌. நீயே அப்படிச்‌ செய்திருப்பாய்‌” என்பது ஹஸ்திகிரி கடிகைமலையோடு புரிந்த வாய்ப்போரின்‌ அனுவாதமாகும்‌. இத்தகைய சண்டையை மிகவும்‌ நியாயமனதாகத்‌ தாம்‌ கருதுகிறாராம்‌ கவி. கடிகைமலைசெய்த காரியத்தினால்‌ ஹஸ்திகிரிக்கு ஆபத்து வந்து விட்டதனால்‌ ஆபத்தை யடைந்தவர்கள்‌ ஆபத்துக்குக்‌ காரணமாயிருப்பவர்‌ மேல்‌ கோபித்துச்‌ சண்டை யிடுவது நியாயந்தானே என்பது இக் கவியின்‌ கருத்தாகும்‌. கடிகாத்ரிக்கு மத்பத (என்னுடைய வாஸஸ்தானம்‌) என்று அடைமொழி யிட்டதற்கு- கடிகைமலை எனது மலையாயிருந்தாலும்‌, அது செய்த காரியத்தை நான்‌ நியாயமுடையதாகக்‌ கருத மாட்டேன் – அது செய்த துரோஹத்திற்காக, ஹஸ்திகிரி (வேறுமலை) அது தன்னோடு புரிந்த போரையே நான்‌ நியாயம்‌ மிக்கதாகக்‌ கருதுவேன்‌ என்பது கருத்து.
இங்ஙனமன்றி, பூர்வார்த்தத்தின்‌ இறுதியிலுள்ள மத்பதவிவாதம்‌ என்பதை மத்பதவிவாஸம்‌ என்பதாகக்‌ கொண்டும்‌. கேநாபகாரிணா என்ற விடத்திற்கு – வேறொரு பிரதியில்‌ “கேநாபிகாருணா” என்றுள்ள பாட பேதத்தை ஏற்றுக்‌ கொண்டும்‌, சுவை மிக்க பொருளொன்றும் உண்டு
த்விபாத்ரே: – ஹஸ்திகிரியினுடைய. க்ருஷ்ணம்ருக வரஸ்ய – க்ருஷ்ணனாகிய ஸிம்ஹத்திற்கு, அஸ்மிந்‌ – இந்த ஹஸ்திகிரியில்‌, நியத வாஸ: – நித்ய வாஸமானது. காருணா – லோகசிற்பியான, கேந – நான்முகக்‌ கடவுளினால்‌, ஆபி – அடைவிக்கப்பட்டது. (அது தருமமுடையதுதாள்‌) த்விபாத்ரே: – அந்த ஹஸ்திகிரியைவிட (ஹஸ்திகிரியில்‌ அப்பெருமான்‌ வாஸம்‌ செய்வதைவிட) க்ருஷ்ணம்ருகவரஸ்ய – அந்த க்ருஷ்ணனாகிய ஸிம்ஹத்திற்கு (உண்டான), (1) கடிகாத்ரி மத்பத விவாஸம்‌ – கடிகைமலையென்னும்‌ நானிருக்குமிடத்தில்‌ விசேஷ வாஸத்தை. தர்மோத்தரம்‌ – என்னுடைய உயர்ந்த தருமத்தின்‌ (புண்யத்தின்‌) பயனாக, சங்கே – கருதகிறேன்‌. அல்லது – (2) கடிகாத்ரி – மத்‌ – பத விவாஸம்‌ – கடிகை மலையையும்‌ என்னையும்‌ ஸ்தானமாகக்‌ கொண்டு செய்த விசேஷ வாஸத்தை, தர்மோத்தரம்‌ – “ஆந்ருசம்ஸ்யம்‌ பரோ தர்ம: (ராமாயணம்‌, ஸுந்தரகாண்டம்‌ 38.41) கருணையே உயர்ந்த தருமம்‌ – என்கிறபடியே அப்பெருமானுடைய உயர்ந்த கருணையின்‌ பயனாகவே, சங்கே – கருதுகிறேன்‌. என்றும்‌ கொள்ளலாம்‌

தர்மோத்தரம் த்வி பாத்ரே சங்கே -ஹஸ்திகிரிக்கும் கடிகாத்ரிக்கும் போட்டி -ஹஸ்திகிரிக்கே நியாயம்
கடிகாத்ரி மத்பத விவாதம்-அடியேன் வசிக்கும் கடிகாத்ரி யாக இருந்தாலும்
இரண்டு கிரிக்கும் பெருமாளையே தாங்கி இருந்தாலும்
கேநாப் காரிணா அஸ்மின் கிருஷ்ண ம்ருக வரஸ்ய நியத ஸம் வாஸ–கரும் தெய்வங்கள் இருவரும் -முகில் வண்ணன் -கரிய கோலத் திரு உரு
தன்னிடம் இருந்த ஸிம்ஹம் ஹஸ்திகிரிக்கு அனுப்பி -அஸ்மின் நான் இருக்கும் இடத்தில் –
யார் அபவாதம் செய்தார் -நன் தர்மம் வழியே முடிவு -நீயே தப்பு செய்தாய்
கவி சாதுர்யம் -அபூத கற்பனை -இல் பொருள் உவமை -சண்டையை கல்பிதம் செய்து அருளிய ஸ்லோகம்

————–

அம்ருதார்ப்பணம் ஸ்ரிதாநாம் அபி துர ரஸநத்வம் ஆர்ஜவம் கமநே
கதமிவ ச கருட ஸக்யம் கடிகாசல கிருஷ்ண போகிநோ கடதே –78-

கடிகாசல க்ருஷ்ண போகிந: – கடிகை மலையில்‌ உள்ள க்ருஷ்ண ஸர்ப்பத்திற்கு, ஸ்ரிதாநாம்‌ அம்ருதார்ப்பணம்‌ – தன்னைக் கிட்டுபவர்க்கு அம்ருதத்தைக்‌ கொடுப்பதும்‌ அபிதுர ரஸநத்வம்‌ – பிளவு படாத நாக்குடைமையும்‌, கமநே – செல்லும் போது, ஆர்ஜவம்‌ நேர்மையும்‌, கருடஸக்யம்‌ ச – கருடனோடு தோழமையும்‌, கதமிவ கடதே – எப்படித் தான்‌ பொருந்துகிறது.
இதில்‌ வேடிக்கையாக – எம்பெருமானைக்‌ கரு நாகமாகக்‌ கூறி, அதற்கு விஷங்கொடுப்பதும்‌, பிளவு பட்ட நாக்குடைமையும்‌, செல்லும் போது வளைந்து வளைந்து கோணலாய்ச்‌ செல்லுவதும்‌, கருடனோடு பகைமையுமே இயற்கை யாகையால்‌, அதனோடு முரண்பட்ட -பதவுரையில்‌ கூறிய -தன்மைகள்‌ எங்ஙனம்‌ பொருந்துமென்று விரோதத்தைத்‌ தோன்ற வைத்தார்‌. க்ருஷ்ண போகீ – கருநாகம்
அவ் விரோதத்திற்குப்‌ பரிஹாரம்‌ வருமாறு க்ருஷண போகீ என்றால்‌ கருநாகமன்று, க்ருஷ்ண போகீ – க்ருஷ்ணனாய்‌ அவதரிததுப்‌ பல போகங்களை அனுபவித்த எம்பெருமானாகிய நரஸிம்ஹப் பெருமாள்‌. அவனுக்கு ஆஸ்ரிதர்‌ பொருட்டுக்‌ கடல்‌ கடைந்து அம்ருதம்‌ கொடுப்பதும்‌, முன்னுக்குப் பின்‌ முரணாகப்‌ பேசுகை யாகிற பிளவு பட்ட நாக்கில்லாமையும்‌, தனது நடத்தையில்‌ கோணல் இல்லாமையும்‌, கருடனோடு தோழமையும்‌ பொருந்தாமை யில்லை, மிகவும்‌ அவை பொருந்துமென்று விரோதத்திற்குப்‌ பரிஹாரம்‌ காண்க.

அம்ருதார்ப்பணம் ஸ்ரிதாநாம் -ஆஸ்ரிதற்கு ஆரா அமுதம் அன்றோ அக்காரக்கனி எம்பெருமான் -தன்னையே கொடுக்கும் கற்பகம்
அபி துர ரஸநத்வம் -பிளவு படாத ஜிஹ்வா -நாக்கு –ஸத்ய வாக்யன் அன்றோ –இரட்டை நாக்கு இல்லாமல்-ஆர்ஜவம் கமநே –நேர்மையாக நடந்து -நடப்பித்து
கதமிவ ச கருட ஸக்யம் –கீழே 4 ஸ்லோகம் கருடக்கொடி -மின்னி விளங்கியதை அருளினார் அன்றோ –கடிகாசல கிருஷ்ண போகிநோ கடதே —அக்காரக்கனியை -உகந்து கைங்கர்யம் செய்ய தானே வந்தார் அன்றோ பெரிய திருவடி

———

ஆகஸ்ஸூ ஸம்ஸ்ரிதாநாம் அநபிஜ்ஞஸ் யாத்மநோ அம்ருதஸ் யாஹம்
நியமேந ஸேவக ஸ்யாம் நித்யம் கடிகாத்ரி பூமி பாலஸ்ய –79-

ஸம்ஸ்ரிதாநாம்‌ ஆகஸ்ஸு – தன்னை யடைந்த பக்தர்களின்‌ குற்றங்களின்‌ திறத்தில்‌, அநபிஜ்ஞஸ்ய – அறியாமையை யுடையவனும்‌. அம்ருதஸ்ய ஆத்மந: – மரணம்‌ முதலிய விகாரங்கள்‌ இல்லாத பரமாத்மாவுமான கடிகாத்ரி பூமிபாலஸ்ய – கடிகை மலை யரசனான நரஸிம்ஹப்‌ பெருமானுக்கு, அஹம்‌ – அடியேன்‌, நித்யம்‌ – எப்பொழுதும்‌, நியமேந – எல்லா நிலைகளிலும்‌ தவறாமல்‌, ஸேவக: ஸ்யாம்‌ – தொண்டு செய்பவனாக ஆகக் கடவேன்‌.
எம்பெருமான்‌ அடியார்கள்‌ செய்த குற்றங்களைக்‌ காணாக்‌ கண்ணிட்டிருப்பவன்‌. ‘அவிஜ்ஞாதா” (விஷ்ணு ஸஹஸ்ர நாமம்‌ 483) என்பது காண்க. “ஸ தே ஆத்மா அந்தர்யாமீ அம்ருத:” (ப்ருஹ தா-ண்யகம்‌ 5.7.22) என்று, அந்தர்யாமியான எம்பெருமானை அம்ருத: ஆத்மா என்பதும்‌ நோக்கத் தக்கது. இப்படிப்பட்ட எம்பெருமானுக்கு “ஒழிவில்‌ காலமெல்லா முடனாய் மன்னி வழுவிலா வடிமை” செய்யக்‌ கடவேனென்றாராயிற்று இதனால்

ஆகஸ்ஸூ ஸம்ஸ்ரிதாநாம் அநபிஜ்ஞ ஸ்யாத் -ஆஸ்ரிதர்கள் குற்றம் பாராமுகமாகவே இருந்து அருளி-யாத்மநோ அம்ருதஸ் யாஹம் –அக்காரக்கனி -ஆராவமுதம்
நியமேந ஸேவக ஸ்யாம் நித்யம் -ஒழிவில் காலம் எல்லாம் உடனாய் மன்னி வழு விலா அடிமை கொண்டு அருள வேண்டும்-கடிகாத்ரி பூமி பாலஸ்ய –பூ பரிபாலனம் செய்து அருளும்

———–

ஸத் வோத்தர ஸ்வ தாநம் ஸத்ப்போ கடிகாத்ரி பூப்ருதோ யுக்தம்
ஸூதராம் பாப்ரதாநாம் யுஜ்யேத கதம் ஸூரத் விஷாம் தாநம் –80

கடிகாத்ரி பூப்ருத: – கடிகை மலையரசனான எம்பெருமானுக்கு, ஸத்ப்ய: ஸத்துவ குணமுள்ள புண்யசாலிகளான நல்லோர்களுக்காக, ஸத்த்வோத்தர ஸ்வதாநாம்‌ – ஸத்துவ குணம்‌ அதிகமாகப்‌ பெற்ற தன்னை அனுபவிக்கும்படி கொடுப்பதென்பது, ஸுதராம்‌ யுக்தம்‌ – மிகவும்‌ தகுந்த செயலாகும்‌. பாபரதாநாம்‌ ஸுர த்விஷாம்‌ – பாபம்‌ செய்வதிலேயே பற்றுடைய அஸுரர்கள்‌ பொருட்டு, தாநம்‌- தன்னைக்‌ கொடுப்பதென்பது, கதம்‌ யுஜ்யேத்‌ – எப்படிப்‌ பொருந்தும்‌. ஸத்துவ குணமுடையவர்களுக்கு ஸத்துவ குணமுடைய தன்னைக்‌ கொடுப்பது தகுந்தது. ரஜோ குணமும்‌ தமோ குணமுடைய அசுரர்களுக்குத்‌ தன்னைத்‌ தருவது பொருந்தாது. ஆகையால் தான்‌ எம்பெருமான்‌ அவர்களுக்குத்‌ தன்னை யனுபவிக்கத்‌ தருவதில்லை என்றபடி.

ஸத் வோத்தர ஸ்வ தாநம் ஸத்ப்போ —ஸாத்விகர் அனைவரைக்கும் தன்னையே கொடுத்து அருளும்-வேங்கடேச பிரபத்தி ஸ்தோத்ரம் -இதே போல் உண்டே –திருவேங்கடத்தானை சொல்லியே இந்த ஸ்தோத்ரம் உபக்ரமித்தார்
கடிகாத்ரி பூப்ருதோ –அக்காரக்கனி அரசன்
யுக்தம் -இதுவே தகுந்த செயல்
ஸூதராம் பாப்ரதாநாம் -நாநா விதம் பாபமே செய்து உள்ள அசுரர்களுக்கு
யுஜ்யேத கதம் ஸூரத் விஷாம் தாநம் –-இவ்வாறு அருள முடியாதே –

————-

கடிகாத்ரி காம ஸூரபே காங்ஷாபத ஸகல பல மஹோ ஜகதாம்
மாதுர் கவாம் மயி ஸ்யாத் வத்ஸே பஹுலம் கதம் ந வாத்ஸல்யம் –81-

கவாம்‌ மாது: – பசுக்களுக்குத் தாயாரான, கடிகாத்ரி காமஸுரபே: கடிகை மலையிலுள்ள எம்பெருமானாகிற காமதேனு வினிடமிருந்து, ஜகதாம்‌ உலகிலுள்ளவர்களுடைய, காங்க்ஷாபத ஸகல பலம்‌ – விருப்பத்திற்கு இலக்கான எல்லாப் பலன்களும்‌, மயி – என்னொருவனிடத்தில்‌, ஸ்யாத்‌ – உண்டாகும்‌. அஹோ ஆச்சரியம்‌. வத்ஸே – தன் கன்றினிடத்தில்‌, மாது: – தாய்ப் பசுவுக்கு, வாத்ஸல்யம்‌ – மிக்க அன்பு, கதம்‌ ந ஸ்யாத்‌ – ஏன்‌ இராது ?
காமதேனு அவரவர்கள்‌ ஆசைப்பட்டுக்‌ கேட்டவற்றை மட்டும்‌ அவரவர்களுக்குக்‌ கொடுக்கும்‌, தன் கன்றுக்கோ வெனில்‌ கேட்காமலேயே எல்லாவற்றையும்‌ கொடுக்கும்‌. பிறரை விடக்‌ காமதேனுவுக்குத்‌ தன் கன்றினிடம்‌ மிக்க வாத்ஸல்யம்‌ இருப்பது இயற்கை யன்றோ என்றபடி. இதனால்‌ முன்‌ ஸ்லோகத்தில்‌ கூறியபடியே தன்‌ கன்று போன்று அடியேனுக்குத்‌ தன்னையும்‌ கொடுக்கும்படியான வாத்ஸல்ய மிகுதி கூறியபடி

கடிகாத்ரி காம ஸூரபே -அக்காரக்கனி தன்னையே தரும் -காமதேனு –
மாதுர் கவாம்-ஈன்ற கன்றுக்கு கொடுக்கச் சொல்ல வேண்டுமோ
காங்ஷாபத ஸகல பல மஹோ ஜகதாம் – ஸமஸ்த லோக மக்களுக்கும் ஸமஸ்த அபீஷ்டங்களை அளிக்கும் அவன்-மாதுர் கவாம் வத்ஸே பஹுலம் கதம் ந வாத்ஸல்யம் –அஹோ –என்ன ஆச்சர்யம் இவன் ஈன்று எடுத்த குழந்தையான அடியேனுக்கு கிருபை பண்ணுவதில் என்ன ஆச்சர்யம்

————

ஹந்த ந ஜகத் யமோகம் ஆஸிஷம் ஆப்ய ஸ்ரியம் ப்ரயுஞ்ஜாநா
கடிகாசல ஹரி சந்தன பார்ஸ்வம் அஹீநா ஸூபாவந ஆஹாரா —-82-

ஹந்த ந ஐஹத்ய மோகாமா ஸிஷமாப்ய ஸ்ரியம்‌ ப்ரயுஞ்ஜாநா: | கடிகாசல ஹரி சந்தந பார்ஸ்வ மஹீநா: ஸுபாவநா ஹாரா: |! 82

அஹீநா: – ஸர்ப்ப ஸ்ரேஷ்டங்கள்‌, ஸுபாவந ஆஹாரா: – நல்ல காற்றை ஆஹாரமாக உடையவைகளாய்‌, அமோகாம்‌ ஆசிஷம்‌ ஆப்ய – வ்யர்த்தமாகாத விஷப்‌ பற்களை யுடையவைகளாய்‌, ஸ்ரியம்‌ ப்ரயுஞ்ஜாநா: – விஷத்தைக்‌ கக்குகின்றவைகளாய்‌, கடிகாசல ஹரி சந்நத பார்ஸ்வம்‌ – கடிகைமலையிலுள்ள எம்பெருமானாகிற, சந்தன மரத்தின்‌ ஸமீபத்தை, ந ஜஹதி – விட்டுப்போகிறதில்லை. ஹந்த – கஷ்டம்‌.
இப்பொருளின்படி கடிகை மலையிலுள்ள எம்பெருமானாகிற சந்தன மரத்தை விட்டு அகலாமல்‌ விஷப் பாம்புகள்‌ இருப்பதனால்‌ அவற்றுக்கு அஞ்சி எம்பெருமானை நாம்‌ அணுகி வணங்க முடியாமலிருக்கிறது. ஐயோ கஷ்ட! – என்ற கருத்துத்‌ தோன்றும்‌. இதற்குப்‌ பரிஹாரம்‌ மேலே காண்க.
அஹீநா: – மிகவும்‌ உயர்ந்த மஹரிஷிகள்‌ ஸுபாவந ஆஹாரா: – நல்ல காற்றையே ஆஹாரமாக வுடையவர்களாய்த்‌ (தவஞ்செய்து), அமோகாம்‌ ஆசிஷம்‌ ஆப்ய வ்யர்த்தமாகாத தமது விருப்பத்தை யுடையவர்களாய்‌ (தமது விருப்பம்‌ நிறைவேறப்‌ பெற்றவர்களாய்‌) ஸ்ரியம்‌ ப்ரயுஞ்ஜாநா: – தம்மை யண்டினவர்களுக்குச்‌ செல்வத்தை அளிப்பவர்களாய்க்‌ கொண்டு, கடிகாசல ஹரி சந்தன பார்ஸ்வம்‌ ந விஜஹதி – கடிகை மலை யிலுள்ள எம்பெருமானாகிற ஹரி சந்தன (கற்பக) வ்ருக்ஷத்தின்‌ பக்கத்தை விடாமலிருக்கிறார்கள்‌. ஹந்த – ஆச்சர்யம்‌.
இப்பொருளின்படி மகரிஷிகள்‌ தவஞ்செய்து எம்பெருமானிடம்‌ தாம்‌ விரும்பிய வரங்களைப்‌ பெற்று, அதனால்‌ எம்‌பெருமானையும்‌ தம்மையும்‌ அணுகினவர்களுக்கு வேண்டிய செல்வத்தை யளித்துக்‌ கொணடு பகவானை விடாமலிருக்கிறார்கள்‌. எல்லோரும்‌ எம்பெருமானையும்‌ அவனடியார்களான அம் மகரிஷிகளையும்‌ ஸேவிக்கக்‌ கடிகை மலைக்குச்‌ செல்லலாம்‌ என்று முன்‌ கூறிய விரோதத்திற்குப்‌ பரிஹாரம்‌ காண்க.
ஆசீ: – (1) விஷப்பல்‌ (2) விருப்பம் –ஸ்ரீ: (1) விஷம்‌ (2) செல்வம்‌ (1) அஹீநாம்‌ இநா: அஹீநா: – ஸர்ப்பங்களின்‌ ஸ்ரேஷ்‌டங்கள்‌. (2) நஹீநா: – அஹீநா: – நீசர்களுக்கு முரண்பட்ட உத்க்ருஷ்டர்கள்‌. பவநஏவ பாவந:- சோபந: பாவந: – ஸுபாவந: ஸுபாவந:ஆஹார: யேஷாம்‌ தே – ஸுபாவநாஹாரா

ஹந்த ந ஜகத் யமோகம் ஆஸிஷம் ஆப்ய ஸ்ரியம் ப்ரயுஞ்ஜாநா -அமோகமான விஷப் பற்கள் கொண்டு இருந்தாலும்-மஹரிஷிகள் புருஷகாரமாக இருந்து நம்மையும் அவன் இடம் சேர்த்து அருளுகிறார்கள்-இதுவே அவர்கள் விரும்பும் கைங்கர்யம் -அது அமோகமாக நிறைவேறும் படி அருளிச் செய்கிறான் —பரம பக்தியுடன் இருந்து -தீங்கு விளைக்காமல்-கடிகாசல ஹரி சந்தன பார்ஸ்வம் அஹீநா ஸூபாவந ஆஹாரா —-பக்கம் -சுற்றி என்றும் கொண்டு –அருகில் உள்ள பாம்புகளும் காற்றையே ஆகாரமாகக் கொண்டு இவனையே உண்ணும் சோறு என்று இருக்கும் மகரிஷிகளையும் சொன்னவாறு காற்றையே ஆகாரமாகக் கொண்டு மனனம் பண்ணி இருப்பவர்

 
—————-
 
சத அம்ருத பலஸ்ய கடிகா ஸைல ரஸா லஸ்ய ஸவித கஸ்யாபி
ஸப்தாதி நிம்ப ஸேவாம் ஸந்த்ய ஜதி ந ஹந்த ஹ்ருதய காகோ மே –83-
 
ஸத்‌ அம்ருத பலஸ்ய – நல்ல அம்‌ருதம் போல்‌ தித்திக்கும்‌ மோக்ஷமாகிய பழத்தை யுடைய, கடிகாசைல ரஸாலஸ்ய – கடிகை மலையிலுள்ள எம்பெருமானாகிற ஒட்டு மா மரமானது, ஸவிதகஸ்ய அபி – என் பக்கத்தை அடைந்திருக்கச்‌ செய்தேயும்‌ அதனை விட்டுவிட்டு, மே – என்னுடைய, ஹ்ருதய காக: – மனமாகிய காக்கை யானது, சப்தாதி நிம்ப ஸேவாம்‌ சப்தாதி விஷயங்களாகிற வேப்பம்‌ பழத்தை உண்ணுதலை, ந ஸந்த்யஜதி விடுவதே யில்லை. ஹந்த – கஷ்டம்‌.
இதில்‌ கடிகை யெம்பெருமானை ஓட்டு மா மரமாகவும்‌ அவன்‌ கொடுக்கும்‌ அம்ருதத்தை – மோக்ஷத்தை அதில்‌ பழுத்த பழமாகவும்‌ பணம்‌ செய்து, அம் மரம்‌ கடிகை மலையில்‌ எனக்கு அண்மையில்‌ இருக்கச்‌ செய்தேயும்‌ அதை விட்டு விட்டு, என்‌ மனமாகிய காக்கை தான்‌ உண்டு பழகிய வேப்பம்‌ பழமாகி சப்தாதி விஷயத்தையே அனுபவிக்க எண்ணி, வெகு தூரம்‌ வருந்திச்‌ செல்கிற- ஐயோ கஷ்டம்‌ என்று கவி தம்மைப் பற்றி நைச்யாநுஸந்தானம்‌ செய்கிறார்‌. அதனால்‌ அவருடைய நைச்யாநுஸந்தானம்‌ நமக்குப்‌ பாடம்‌ கற்பிக்கிறது – நீச விஷயாநுபவத்தைவிட்டு மோக்ஷமாகிய பலம்‌ கிடைக்க கடிகை மலை எம்பெருமானைச்‌ சேவிக்கச்‌ செல்லுங்கள் என்பதாக –
 
சத அம்ருத பலஸ்ய –ஸாத்விக அம்ருத பலம் –அந்தமில் பேர் இன்பம் பர்யந்தம் அருளும்
கடிகா ஸைல ரஸா லஸ்ய —அக்காரக்கனி -கட்டடங்க அம்ருத ரஸம் மிக்கு -அன்றோ -தன்னையே அளித்து அருளும் –
ஸவித கஸ்யாபி -கூப்பிடு தூரத்தில் இருக்க
ஸப்தாதி நிம்ப ஸேவாம் -ஸப்தாதி -வேம்பை விரும்பிப் போகுவதே –
நெஞ்சம் உனது தாள் ஒழிந்தவற்றையே உகக்க -மா முனிகள் போல் இங்கு இவரும் நைச்யம் பாவிக்கிறார்
நாம் அனுசந்திக்கவே இருவரும் இவ்வாறு அருளிச் செய்கிறார்கள்
ஸந்த்ய ஜதி ந –ஐந்தில் அறியாதார் ஐம்பதிலும் அறியாரே -இதுவே தேஹ யாத்திரை ஆவதே –
ஹந்த -என்ன ஆச்சர்யம் -ஐயோ
ஹ்ருதய காகோ மே -காகம் போல் –பறந்து கண்டதையும் கவ்விப் போவதே -ஏரார் முயல் விட்டுக் காக்கைப் பின் போவதே
 
—————
 
அமல அநு ராக ஸலிலை அபிலாஷ மலாந்ய போஹ்ய சகலாநி
குஸூமைர் அஹிம்ஸந ஆத்யை குர்யாம் கடிகாத்ரி தைவதைஸ் யார்ச்சாம் –84-
 
அமல அநுராக ஸலிலை: – நிர்மலமான. அன்பென்கிற (பகவத் பக்தி யென்கிற) தீர்த்தத்தினாலே, அபிலாஷ மலாநி ஸகலாநி – நீசமான சப்தாதி விஷயங்களில்‌ ஆசையாகிற அழுக்குகள்‌ அனைத்தையும்‌, அபோஹ்ய – என்‌ மனத்திலிருந்து அகற்றி, அஹிம்ஸந ஆத்யை: புஷ்பை: – அஹிம்ஸை முதலிய எட்டுப்‌ புஷ்பங்களாலே, கடிகாத்ரி தைவதஸ்ய – கடிகை மலைத்‌ தேவதையாகிய நரஸிம்ஹப்‌ பெருமானுக்கு, அர்ச்சாம்‌ பூஜையை, குர்யாம்‌ – செய்யக் கடவேன் –
பகவானைப்‌ பற்றிய நிர்மலமான பக்தி உண்டானால்‌ நீச விஷயங்களில்‌ ஆசை அகன்று விடும்‌. அவை அகன்றால்‌ மனத்தில்‌ எட்டு வகையான எண்ணங்கள்‌ பிறக்கும்‌ அவற்றால்‌ எம்பெருமானுக்கு ஸந்தோஷமுண்டாகும்படி அவனுக்குப்‌ பூஜை செய்கிறேனென்கிறார்‌. முன்‌ ஸ்லோகத்தில்‌ கூறிய மோக்ஷத்திற்கு எம்பெருமானிடம்‌ பக்தி யுண்டாக வேணும்‌. அதனால்‌ கெட்ட ஆசைகள்‌ அகலும்‌. நல்லெண்ணங்கள்‌ உண்டாகும்‌. அவை பகவானுக்கு உகப்பை யுண்‌டு பண்ணுவன என்பது கருத்து.
பகவானை அர்ச்சிக்கும்‌ புஷ்பங்கள்‌ எட்‌டு -வெளிப் புஷ்பங்கள்‌ “ஆனிரை மேய்க்க நீ போதி” என்று தொடங்கும்‌ திருமொழியில்‌ பெரியாழ்வார்‌ அருளுகின்ற செண்பகம்‌, மல்லிகை, பாதிரி, செங்கழுநீர்‌, புன்னைப் பூ, குருக்கத்தி, இருவாட்சி, கருமுகை – என்பவை எட்டு. உள்ளத்தில்‌ உண்டாகும்‌ புஷ்பங்களாவன – அஹிம்ஸை, பொறியடக்கம்‌, தயை, பொறுமை, தத்துவ ஜ்ஞானம்‌, தவம்‌, த்யானம்‌, ஸத்யம்‌ என்பவை. இவை யெட்டும்‌ விஷ்ணுவுக்கு ப்ரீதியை உண்டாக்குவனவாம் –
 
அமல அநு ராக ஸலிலை –குற்றங்கள் அற்ற ப்ரேமை -பக்தி -விரும்பி -நீர்ப் பண்டமாக உருகும் படி-பக்திக்கும் அமல –நீர்ப்பண்டத்துக்கும் அமல விசேஷணம்
பர கத ஸ்வீ காரம் -உதாராஸ் ஸர்வை என்னுமவன் அன்றோ
அபிலாஷ மலாந்ய போஹ்ய சகலாநி -ஆசை காமம் -ஆறு பகைவர்கள் -காமம் க்ரோதம் இத்யாதிகளைபப் போக்கி-மதம் அபிமானம் அற்ற அந்திம உபாய நிஷ்டர்கள் அன்றோ மா முனிகள் ப்ருத்யைர்கள் -அவர்களில் ஸ்ரேஷ்டர் அன்றோ இவர்
நமக்காகவே இவ்வாறு அருளிச் செய்கிறார் -நிர்மலமான பக்தி நீர் கொண்டு அகற்றி அருள வேண்டும்
குஸூமைர் அஹிம்ஸந ஆத்யை குர்யாம்--ஸாத்விக அஷ்ட புஷ்பங்களைக் கொண்டு
கடிகாத்ரி தைவதைஸ் யார்ச்சாம் –அக்காரக்கனி அர்ச்சனை செய்யும் அருள வேண்டும்

அஹிம்ஸா பிரதமம் புஷ்பம் புஷ்பம் இந்த்ரிய நிக்ரஹ:-சர்வபூத தயா புஷ்பம் க்ஷமா புஷ்பம் விசேஷத: சாந்தி: புஷ்பம் தப: புஷ்பம் ஞானம் புஷ்பம் ததைவ ச சத்யம் அஷ்டவிதம் புஷ்பம் விஷ்ணோ: ப்ரீதிகரம் பவேத்

அபகத மத மாநைர் அந்திமோபாய நிஷ்டை-அதி கத பரமார்த்தைர் அர்த்த காம அநபேஷை –நிகில ஜன ஸூஹ்ருத்பிர் நிர்ஜித க்ரோதா லோபை வர வர முனி ப்ருத்யைர் அஸ்து மே நித்ய யோக –10-

விஷய போகக் களிப்பும் செருக்கும் அற்றவர்களாயும் -ஆச்சார்ய அபிமானம் உத்தாரகம் என்று ஸ்ரீ வசன பூஷணத்தில் சரம உபாயமாக நிஷ்கர்ஷிக்கப் பட்ட அந்திம உபாயத்தில் ஊற்றம் உடையவர்களாயும் சகல சாஸ்த்ர சாரார்த்தங்களும் கை வந்தவர்களாயும் -தர்ம மோக்ஷங்கள் தவிர அர்த்த காமங்களில் விருப்பம் அற்றவர்களாயும் -ஒருவர் இடத்திலும் மாத்சர்யம் கொள்ளாதே சர்வ பூத ஸூஹ்ருத்துக்களாயும் க்ரோதம் லோபம் இரண்டையும் வென்றவர்களாயும் இருக்கின்ற மா முனிகளின் அடியாரோடு அடியேனுக்கு நித்ய சகவாசம் உண்டாகக் கடவது -என்று விஞ்ஞாபனம் செய்வார் சில பக்தர்கள்-

—————

தந தாத்யைர் அபி ந பரஸை ஸாத்யம் ஸூ மஹத் ஹிரண்ய தாநம் தத்
ஸூகரேண க்ருதமத ஸ்யாத் துல்யோ கடிகாத்ரி பூ ப்ருத கோ வா |!—85-

(கடிகைமலையரசனான எம்பெருமானாலே ) பரை: – பிறராகிய, தந தாத்யைரபி குபேரன்‌ முதலியவர்களாலும்‌, யத்‌ ந ஸாத்யம்‌ – எது ஸாதிக்க முடியாததோ –தத் -அத்தகைய -ஸுமஹத்‌ – மிகப் பெரியதான, ஹிரண்ய தாநம்‌ – (1) ஸ்வர்ண தானமானது -(2)ஹிரண்யனைப்‌ பிளத்தலானது(தாநம்‌ – கொடுத்தலும்‌ பிளத்தலும்‌) ஸு+கரேண – நல்ல கையினால்‌, க்ருதம்‌ – செய்யப் பட்டது. அத: – அக் காரணத்தினால்‌, கடிகாத்ரி பூப்ருத: – கடிகை மலையரசனுக்கு, கோ வா துல்ய: ஸ்யாத்‌ – எவன்‌ தான்‌ ஸமாநமாக ஆக முடியும்‌ ?

தந தாத்யைர் அபி –குபேரன் முதல் கொண்டு –
ந பரஸை ஸாத்யம் -வேறே எவராலும் செய்ய முடியாததாய்
ஸூ மஹத் ஹிரண்ய தாநம் தத் -பெரிய-மஹாத்ம்யம் மிக்க இரண்ய தானம் -ஹிரண்ய வதம் -மோக்ஷ பிராப்தி என்றுமாம்
ஸூகரேண க்ருதமத ஸ்யாத் -ஸூ குமாரமான திருக் கரங்களால் செய்து அருளிய
துல்யோ கடிகாத்ரி பூ ப்ருதகோ –அக்காரக்கனி எம்பெருமானுக்கு ஓத்தார் மிக்கார் இல்லையே-மோக்ஷ பிரதன் இவன் ஒருவனே -என்றவாறு –

———–

ஐநயத்வதி ச சகலாந் ஞாப்யதி ச யோ ஹிதாஹிதே சாஸ்த்ராத்
நாத்யேதி தஸ்ய கோவா ஞானீ கடிகாத்ரி ஸர்வ ஐநகஸ்ய –86-

ய: – எவன்‌, ஸகலாந்‌- எல்லோரையும்‌, ஜநயதி அவதி ச – பிறப்பிக்கிறானோ, மேலும்‌ காப்பாற்றுகிறானோ, சாஸ்த்ராத்‌ – வேதாதி சாஸ்த்ரங்களின்‌ வாயிலாக, ஹிதஅஹிதே நன்மையையும்‌ தீமையையும்‌, ஜ்ஞாபயதி ச – அறிவிக்கின்றானோ, தஸ்ய – அந்த, கடிகாத்ரி ஸர்வஜநகஸ்ய – கடிகை மலையிலுள்ள -எல்லோர்க்கும்‌ தந்தையான எம்பெருமானை, கோ வா ஜ்ஞாநீ – எந்த அறிவாளிதான்‌, ந அத்யேதி – கற்றறிய மாட்டான்‌.
இத்தனை யுபகாரங்களைச்‌ செய்த எம்பெருமானை எல்லோரும்‌ வேதாதி சாஸ்த்ரங்களின்‌ மூலமாகக்‌ கற்றறிவார்கள்‌ என்றபடி. அத்யேதி தஸ்ய கோ வா என்று பாடமானால்‌ அவன்‌ சொல்லை யார் தான் மீறுவார்கள்‌ என்று பொருள்‌ கொள்க. பித்ரு வாக்ய பரிபாலனம்‌ பிள்ளைகளுக்குப் பணி யன்றோ ? பித்ரு வாக்யமானது ஸ்ருதி ஸ்ம்ருதீ மமைவாஜ்ஞா (விஷ்ணு தர்மம்‌ 76-31) என்கிறபடியே பகவதாஜ்ஞா ரூபமான ஸ்ருதிகளும்‌ ஸ்ம்ருதிகளுமாகும்

ஐநயத்வதி ச சகலாந் -ஸமஸ்த சேதனங்களையும் ஸ்ருஷ்டித்து ரக்ஷித்து அருளி
ஞாபயதி ச யோஹிதாஹிதே சாஸ்த்ராத் ஹிதமாக ஸாஸ்த்ர பிரதானங்களையும் அருளி
கோவிந்தா நாமம் வாயாலே சொல்வாருக்கும் ரக்ஷித்து அருளும் தீஷையும் கொண்டு அருளி-நாத்யேதி தஸ்ய கோவா ஞானீ கடிகாத்ரி ஸர்வ ஐநகஸ்ய -ஜனிக்கும் காரணம் —அகில லோக தந்தை அன்றோ அக்காரக்கனி-இவற்றை அறிந்து -அத்யயனம் பண்ணி -கற்று அறிந்து தேறி -யார் தான் செய்ய மாட்டார்கள் –

———–

தோஷா கரே வி ராகம் ஸூர்யா லோகே விகாஸ மா மோதம்
பத்ம்யாக்யாம் அபி வஹதோ யுக்தா கடிகாத்ரி பஸ்ய கேஸரிதா –87-

தோஷாகரே – (1) இரவை விளங்கச் செய்யும்‌ சந்திரனிடத்தில்‌ (2) குற்றங்களுக்கு நிதியான மனிதனிடத்தில்‌, விராகம்‌ ஆசை யில்லாமையையும்‌ (வெறுப்பையும்‌), ஸூர்ய ஆலோகே (1) ஸூர்யனைப்‌ பார்க்கும் போதும் , ஸூரி ஆலோகே (2) தத்வ ஜ்ஞானியான பண்டிதனைக்‌ காணும்‌ போது, விகாஸம்‌ ஆமோதம்‌ – (1) மலர்ச்சியையும்‌ நறு மணத்தையும் (2) முகம் மலர்தலையும்‌ ஸந்தோஷத்தையும்‌, பத்ம ஆக்யாம்‌ அபி (1) (2) பத்ம: என்கிற பெயரையும்‌, வஹத: – வகிக்கிற, கடிகாத்ரியஸ்ய – கடிகை மலையரசனுக்கு, கேஸரிதா (7) பூந் துகளை யுடைமை (2) பிடரி மயிருடைமை, யுக்தா – பொருந்தியதேயாகும்‌.
இதில்‌ எம்பெருமானை – பூந் துகளையுடை . தாமரை மலராந் தன்மையையும்‌, பிடரி மயிருடைய ஸிம்ஹமாம்‌ தன்மையையும்‌, அவை யிரண்டு தன்மைகளுக்கும்‌ ஏற்கும்‌ விசேஷணங்களை சிலேடை வகையில்‌ அமைத்துச்‌ சமத்காரமாகப்‌ பேசுகிறார்‌.
தோஷாம்‌ கரோதி – இரவை அலங்கரிப்பதால்‌ சந்திரனுக்கும்‌, தோஷாணாம்‌ ஆகர: – குற்றங்களுக்கு இருப்பிடமாகையால்‌ துஷ்டனுக்கும்‌, தோஷாகரனாந்‌ தன்மை ஒக்கும்‌. பத்ம: என்பது தாமரை மலருக்கும்‌, பத்ம: அஸ்மிந்‌ அஸ்த, பத்மா அஸ்மிந்‌ அஸ்தி என்ற வ்யுத்பத்திகளால்‌ – தாமரை மலரைக் கையிலுடைமையாலும்‌, தாமரையாளான பிராட்டியைத்‌ திருமார்பில்‌ உடைமையாலும்‌ பெருமாளுக்கும்‌ பெயராகும்‌.

தோஷா கரே வி ராகம் -தோஷம் கரோதி –சந்திரனுக்கு தோஷாகரன் -அவனைப் பார்த்து கூம்பிப் போகுமே-குற்றங்களையே பண்ணிக் கொண்டு இருக்கும் ஸம்ஸாரிகளை பார்த்து திருமுகம் வாடுமே
ஸூர்ய ஆலோஸி விகாஸ மா மோதம் -கதிரவனைப் பார்த்ததும் விகசிக்கும்
ஸூரி ஆலோக்ய-நித்ய ஸூரிகளை -அவர்களிலும்  பிரதானரான ஆதி சேஷனைப் பார்க்கும் க்ஷணம் தோறும் அதி விகாஸம் அடையுமே
பத்ம்யாக்யாம் அபி வஹதோ -பத்மம் தாமரை -பத்மம் திருக் கையில் வைத்து இருப்பதால் பிராட்டிக்கும் அக்காரக்கனிக்கும் பத்மக யுக்தா கடிகாத்ரி பஸ்ய கேஸரிதா –கேஸரி -மகரந்த சுவை இருப்பதால் தாமரைக்கும் ஸிம்ஹ பிடரிக்கும்-இவ்வளவு ஒற்றுமைகள் உண்டே –நீரே தாமரை -என்கிறார்

நித்யாநாம் யத் ப்ரதம கணநாம் நீயஸே ஷாஸ்த்ர முக்யை: |
க்ருத்யாSSக்ருத்யா பவஸி கமலா பர்துரேகாந்த மித்ரம் ||
தேவ:ஸ்வாமீ ஸ்வயமிஹ பவந் ஸௌம்யஜாமாத்ரு யோகீ |
போகீஷத்வத் விமுகமபிமாம் பூயஸா பஷ்யசி த்வம் ||-ஸ்ரீ வர வர முனி சதகம் –24

எந்த நீர் சாஸ்த்ரமறிந்தவர்களால் நித்யர்களுக்குள் முதல்வராக எண்ணப் படுகிறீர்,
செய்கையாலும் உருவத்தாலும் கமலாபதியின் ரஹஸ்யத் தோழனாகிறீர் —
தேவனாகவும் உடையவனாகவும் உள்ள தாமே இங்கு வரவர முநியாகி ஹே அநந்தனே!
உம்மைப் பாராதிருந்தும் என்னை நிறையக் கடாக்ஷிக்கிறீர்.

————————

தந்வீ மயா அத்ய லப்தா தபஸா விபுலேந பக்தி கந்யேயம்
பஜதாம் அவ்யபிசாரம் பாவம் கடிகாத்ரி பர்த்தரி ப்ரவ்டா–88–

மயா – என்னாலே, விபுலேந தபஸா – பெரிய தபஸ்ஸின்‌ மூலமாக, அத்ய லப்தா இப்போது அடையப்பட்ட, இயம்‌ – இந்த, தந்வீ – சிறிய அளவுள்ள (2) மெல்லிய மேனியை உடைய, பக்தி கந்யா – (1) பக்தியாகிற (2) கன்‌னிகையானவள்‌, ப்ரெளடா ஸதீ – (1) பரிபக்குவமடைந்ததாய்‌ (2) ருதுவானவளாய்க்‌ கொண்டு, கடிகாத்ரி பர்த்தரி – (1) கடிகை மலை யரசனான, (2) கணவனிடத்தில்‌, அவ்யபிசாரம பாவம்‌ – (1) வேறொரு தேவதையிடம்‌ பிளவுபடாத தன்மையை (2) வேறொரு புருடனிடத்தில்‌ செல்லாத மனதை, பஜதாம்‌ அடைந்திடுக.

இதில்‌ எம்பெருமானிடம்‌ பக்தியானது தமக்கு நீண்ட காலம்‌ தவம்‌ செய்து உண்டானதாகவும்‌, அது நாளடைவில்‌ வளர்ந்து பெருகி எம்பெருமானை விட்டு மற்றோர்‌ வ்யக்தியில்‌ அகலாதிருக்க வேணுமென்பதாவும்‌ பேசுகிறார்‌. இந்த பக்தியின்‌ நிலைமைக்கேற்ப, ஒரு பெண்ணின்‌ பருவத்தையும் குறித்திருப்பது அநுபவிக்கத் தக்கது. இப்படிபட்ட பக்திக்கு ப்ரயோஜநம்‌ மோக்ஷமடையத்‌ தகுதி பெறுதலாகும்‌. மாஞ்‌ ச யோஃவ்யபி சாரேண பக்தியோகேந ஸேவதே, ஸ குணாந்‌ ஸமதீத்யைதாந்‌ ப்ரஹ்ம பூயாய கல்பதே (கீதை 14-26) (என்னை எவனொருவன்‌ அவ்யபிசரிதமான-பிறரிடத்தில்‌ பிளவு பட்டுச்‌ செல்லாத பக்தி யோகத்தினால்‌ ஸேவிக்கிறானோ, அவன்‌ முற்கூறிய ஸத்த்வ ரஜஸ்‌ தமோ குணங்களைக் கடந்து, ப்ரஹ்ம ஸாம்யமாகிற மோக்ஷத்தை யடைவதற்குத்‌ தகுதி பெறுகிறான்‌ என்று கண்ணபிரான்‌, அருளியது காண்க. அல்லது உணவுக்கு அவச்யம்‌ முன்பு வேண்டிய பசி போலே, எம்பெருமானை அனுபவிக்கைக்கும்‌ அவனுக்குத்‌ தொண்டு செய்வதற்கும்‌ முன்பு உண்டாக வேண்டிய ஸ்வயம் ப்ரயோஜனமாகிய பக்தியை இங்குச்‌ சொல்லிற்றாகவும்‌ கொள்ளலாம்

தந்வீ மயா அத்ய லப்தா தபஸா விபுலேந பக்தி கந்யேயம்-அடியேனால் விபுலமான தபஸ்ஸாலே இப்பொழுது அடையப்பெற்ற -பக்தி -என்னும் கன்னிகை -தந்வீ-இப்பாலையை –பஜதாம் அவ்யபிசாரம் பாவம் கடிகாத்ரி பர்த்தரி ப்ரவ்டா—பிஞ்சிலே பழுத்து ஆசை விஞ்சி -பிரவிடாகி-அக்காரக்கனி எம்பருமானையே வரித்து-செய்த்தலை நாற்று போல் செய்வன செய்து கொள்ளட்டும் என்று அவனுக்கே அநந்யார்ஹை ஆகி-மற்று ஒரு தெய்வத்துக்கு ஆளாவதையும் -பேச்சும் கூட பொறுக்க மாட்டாமல் ஆனாள்-இந்த ஸ்தோத்ரம் ஸ்வாமியுடைய தபஸ்ஸாகும்-இதன் பலமாகவே பெற்ற பரம பக்தி நிலை என்று அருளிச் செய்கிறார்

—————-

பாஸ்வதி ஸூராஸூர குரவ் போகிநி வந்தாரு சவும்ய மந்தாரே
கடிதாத்மகாய கடதே கடிகாத்ரி விதவ் கதம் க்ரஹை பீடா –89-

ஹே கடித ஆத்மகாய – வாராய்‌!, பொருந்தாத – ஸிம்ஹத்தின்‌ தலையையும்‌ மனிதனின்‌ உடலையும்‌ பொருத்தித் தனது திருமேனியாகக்‌ கொண்ட எம்பெருமானே, பாஸ்வதி – விளங்குமவனும்‌, ஸூர அஸுர குரெள – தேவர்களுக்கும்‌ அசுரர்களுக்கும்‌ பூஜிக்கத் தக்கவனும்‌, போகிநி போகங்களை அனுபவிக்கின்றவனும்‌, வந்தாரு ஸெளம்ய மந்தாரே – துதிப்பவர்க்கு நல்ல கற்பகம்‌ போல்‌ எல்லாவற்றையும்‌ அளிப்பவனும்‌ ஆகிய, கடிகாத்ரி விதெள – கடிகை மலையிலுள்ள எம்பெருமாளாகிய சந்திரனாகிய, த்வயி – உன்னிடத்தில்‌, க்ரகை: பீடா – க்ரஹங்களால்‌ உண்டாகும்‌ துக்கமானது, கதம்‌ எப்படி, கடதே – பொருந்தும்‌.

பாஸ்வதி –ஸூர்யன் -ஆச்சார்யமான தேஜஸ்
ஸூராஸூர குரவ் -ப்ருஹஸ்பதி சுக்ரன் -தேவாசுரர்களும் பூஜிக்கும்
போகிநி -ராகு கேது -போகங்களை அனுபவிக்கும் -பாற் கடல் எம்பெருமான்
வந்தாரு சவும்ய -புதன் -வாங்கியவர்களுக்கு கற்பகம்
மந்தாரே -அனைத்துக்கும் அந்தர்யாமி
கடிதாத்மகாய கடதே கடிகாத்ரி –அக்காரக்கனி -சேராச் சேர்க்கை ந்ருஸிம்ஹம்
விதவ் கதம் க்ரஹை பீடா ––க்ரஹங்களால் என்ன பீடை வரும் –ஸந்த்ரன் விட ஆஹ்லாத கரம்-நீரே குளிரச் செய்து அருளிய பின்பு -ஆச்சார்யர் அநு க்ரஹமே -பலிக்கும் ‘
க்ரஹங்களால் அணுகவும் ஒண்ணாதே

இதில்‌ எம்பெருமானைச்‌ சந்திரனாகக்‌ குறிப்பிட்டு, சந்திரனுக்கு இயல்பாக உண்டாகும்‌ க்ரஹ பீடைகள்‌ உண்டாகாதென்கிறார்‌ – உண்டாகாமைக்குக்‌ காரணம்‌ – அவன்‌ வெறும்‌ சாதாரண சந்திரன்‌ அல்லால்‌ பற் பல பெருமைகளைப்‌ பெற்ற சந்திரன்‌ ஆகையாலே ஆகும்‌. அப் பெருமைகளே – பாஸ்வதி முதலிய விசேஷணங்களினால்‌ சொல்லப்பட்டனவாகும்‌-மேலும்‌ இந்த சந்திரன்‌ எல்லா க்ரஹங்களாகவும்‌ உள்ளமையால்‌ – க்ரஹங்களால்‌ உண்டாகும்‌ துக்கம்‌ இவனுக்கு உண்டாகாதென்கிறார்‌. எல்லா க்ரஹங்களுக்கும்‌ இவ்வெம்பெருமான்‌ அந்தர்யாமியாகையால்‌ எல்லா க்ரஹங்களாகவும்‌ இவனே யாகைக்குத்‌ தட்டில்லையாகையால்‌, க்ரஹ பீடை இவனுக்கு உண்டாகைக்கு இடமேயில்லை. தன்னால்‌ தனக்குப்‌ பீடை உண்டோ ?
(1) பாஸ்வாந்‌ – சூரியன்‌ (2) ஸுரஅஸுரகுரு (1) ஸுர குருவான ப்ருஹஸ்பதி (3) அஸூர குருவான சுக்ரன்‌ (4) ஸெம்யன்‌ – புதன்‌ (5) விது: – சந்திரன்‌, போகீ – பாம்பு (6)பாம்புத் தலையுடைய கேது, (7) பாம்பு உடலையுடைய ராகு. அங்காரகனும்‌ சனியுமாகிய மற்றுமுள்ள இரண்டு க்ரஹங்களையும்‌ உபலக்ஷண வகையால்‌ கூட்டிக்‌ கொள்க. ஆக இந்த க்ரஹங்களுக்குகெல்லாம்‌ அந்தர்யாமியாகை காரணமாக இந்த கிரஹங்களுக்கெல்லாம்‌ இவனுக்குச்‌ சரீரமாகையால்‌, இவ்வெம்பெருமானாகிற சந்திரனுக்கு இவனிட்ட வழக்காக இருக்கும்‌ க்ரஹங்களால்‌ உண்டாகும்‌ பீடை இல்‌லை யென்றாராயிற்று.
கடிதாத்மகாய: – கடிதெள – ஆத்மகாயெள யேந ஸ:- கடிதாத்மகாய: என்று விக்ரஹம்‌. காய சப்தம்‌ சரீரத்தைக்‌ குறிப்பதாய்‌ – இங்கு சரீர அவயவங்களாகிய தலையையும்‌ மற்றுமுள்ள கீழுடலையும்‌ குறிப்பிடுகின்றது. பொருந்தாத – சிங்கத்தின்‌ தலையையும்‌ மனிதனது உடலையும்‌ நன்றாகப்‌ பொருத்திக்‌ கொண்டானே எம்பெருமான்‌. ஸிதாக்ஷீரந்யா யேந ஸங்கமிதாங்கம்‌ _. ரங்கேந்த்ர ஸிம்ஹ முபாஸ்‌ மகே (ஸ்ரீரங்க உத்தர – 64) சர்க்கரையையும்‌ பாலையும்‌ சேர்க்கிற கணக்கிலே – ஸிம்ஹத்தம்‌ தலை மனிதனின்‌ உடல்‌ ஆகிய இரு திருவுருவங்களைச்‌ சேர்த்துக்‌ கொண்ட (பரம போக்யமாக) ஸ்ரீரங்கநாதனாகிய நரஸிம்ஹப்‌ பெருமாளைச்‌ சிந்திக்கிறோம்‌ என்று அருளிச்‌ செய்தாரிறே ஸ்ரீபராசரபட்டர்‌. பட்டர்‌ ஸங்கமிதாங்கக: என்றதனையே இவர்‌ இங்க கடிதாத்மகாய: என்ற சொல்லால்‌ குறிப்பிட்டருளுகிறார்-அழகியான் தானே அரி யுருவன் தானே

ந்ருஹரி தசயோ பஸ்யன் ஓவ்பத்திகம் கடநா அத்புதம்
நரம் உத ஹரிம் த்ருஷ்ட்வா ஏகைகம் சமுத்விஜதே ஜந
இதி கில சிதாஷீர ந்யாயேந சங்கமித அங்கம்
ஸ்புட சட மஹா தம்ஷ்ட்ரம் ரங்கேந்திர சிம்மம் உபாஸ்மஹே —64-

நரத்வ ஸிம்ஹத்வ அவஸ்தைகளுடைய உத்பத்தி ஸித்தமான விசித்திரமான ஸுவ் கட்யத்தை அனுபவித்து பிரத்யேக நரனையும் சிம்மத்தையும் பார்த்து பயப்படுக என்று போலே பாலும் கண்ட சக்கரையும் கலந்தால் போல் சேர்க்கப்பட்ட அவயவங்களை உடையவராய் ஸ்பஷ்டங்களான பிடரி மயிரையும் பெரிதான கோரப் பல்லையும் உடையரான ஸ்ரீ பெரிய பெருமாளாகிற ஸ்ரீ நரசிம்மத்தை அந்த அழகுக்குத் தோற்று எப்போதும் அனுபவிக்கிறோம்

—————–

ஸம வர்த்திநி புவநேஸே புண்ய ஜநே பாவகே ஜகத் ப்ராணே
ஸ்ரீதே ஸிவே அபி கடிகா ஸைல ஹரவ் சதி கிமன்ய திக் பாலை –90-

கடிகாசைல ஹரெள – கடிகை மலையிலுள்‌ள நரஸிம்ஹப் பெருமான்‌, ஸமவர்த்திநி (1) எல்லோரிடம்‌ ஸமமாக நடந்து கொள்பவனாகவும்‌ (2) யமனாகவும்‌, புவநேசே – (1) உலகங்கட்குத்‌ தலைவனாகவும்‌, (2) அத்தகைய இந்கிரனாகவும்‌, (3) நீருக்குத்‌ தலைவனான வருணனாகவும்‌, புண்யஜநே – (1) புண்யர்களாகிய பக்த ஜனங்களை யுடையவனாகவும்‌ (2) நிர்ருதி என்கிற ராக்ஷஸனாகவும்‌, பாவகே- (1) பத்தியை உண்டு பண்ணுகிறவனாகவும்‌ (2) அக்நியாகவும்‌, ஜகத் ப்ராணே – (1) உலகுக்கெல்லாம்‌ உயிராகவும்‌ (2) ப்ராணனான வாயுவாகவும்‌, ஸ்ரீதே – (1) செல்வத்தையளிப்பவனாகவும்‌ (2) குபேரனாகவும்‌, சிவேஃபி (1) மங்களத்தை உண்டு பண்ணுமவனாகவும் (2) சிவ பெருமானாகவும்‌, ஸதி இருக்கும் போது, அந்ய திக்‌ பாலை:- வேறான யமா: இந்திரன்‌ முதலிய திக் பாலகர்களாலே, கிம்‌- எனக்கு என்ன பயன்‌ ?

ஸம வர்த்திநி -யம தேவன் –தர்ம ராஜன் –
புவநேஸே-இந்த்ரன் -வருணனையும் சொல்வார் -வர்ஷித்து ரக்ஷணம்
புண்ய ஜநே -நிருதி –
பாவகே –அக்னி தேவன் -பரம பாவனன்
ஜகத் ப்ராணே -வாயு பகவான்
ஸ்ரீதே -சுவையான திருவின் மணாளன் -குபேரன்
ஸிவே அபி -சிவன் உட்பட -பரம சிவன் –வைஷ்ணவாணாம் யதா சம்பு அன்றோ
இயற்கையான மங்களம் இவன் திருவடி தீர்த்தம் தாங்கி
கடிகா ஸைல ஹரவ் சதி -அனைவருக்கும் அந்தர்யாமி அக்காரக்கனி எம்பெருமானே தானே
கிமன்ய திக் பாலை –இவர்களால் ப்ரபன்னருக்கு என்ன வேண்டும் –

இந்திரன், அக்னி தேவன், எமதருமன், வருண பகவான், நிருதி பகவான், வாயு பகவான், குபேரன், ஈசானன் ஆகிய எட்டுபேரும் அஷ்ட திக் பாலகர்கள்
கிழக்குத் திசைக்கு அதிபதி, இந்திரன்
தென்கிழக்கு அக்னி தேவன்
தரும தேவன் -காலதேவன் – அவர் தான் எம தருமன். தென் திசைக்காவலன்
வருண பகவான், மேற்குத் திசையின் நாயகன். காவலன்
நிருதி பகவான் தென்மேற்கு திசையின் அதிபதி. –
இவரை வழிபட்டு வந்தால், மனோபலம் பெருகும். மனதில் தைரியம் பிறக்கும். எதிரிகள் பற்றிய பயமும் நீங்கும்.
வடமேற்கு திசைக்குக் காவலன் வாயு பகவான்
குபேரன் வடக்குத் திசையின் நாயகன்
வடகிழக்கு திசையின் அதிபதி, நாயகன்… ஈசானன்.-சிவனாரின் ஐந்து முகங்களில், ஈசானமும் ஒன்று

————–

யஸ் யோதய பரார்த்த யஸ்ய ஆலோகேந யாத்யகம் விலயம்
காலேந போதயதி ய கடிகா மித்ரே அத்ர கோ விராகீ ஸ்யாத் –91-

யஸ்ய – எவனுடைய, உதய: (1) ௨தயமானது (2) தோற்றமானது (அவதாரமானது), பரார்த்த: – (1) பிறர்‌ தூக்கம்‌ விட்‌டு எழுந்து நல்ல காரியம்‌ செய்து சுகப்படுவதற்காக ஏற்படுகிறதோ (2) நல்லோர்கள்‌ வாழ்‌வு பெறுவதற்காக ஏற்படுகிறதோ, யஸ்ய ஆலோகேந – (1 எவனைக்‌ காண்பதனால்‌ (2) நல்லோர்கள்‌ வாழ்வு பெறுவதற்காக ஏற்படுகிறதோ, யஸ்ய ஆலோகேந – (1) எவனைக்‌ காண்பதனால்‌ (2) எவனுடைய கடாக்ஷத்தினாலே, அகம்‌ பாபமானது, விலயம்‌ யாதி – நாசத்தை யடைகிறதோ, ய: – எவன்‌, காலேந – (1) உரிய காலத்தில்‌ (இரவு முடியும்‌ ஸமயத்தில் ) (2) அஜ்ஞானம்‌ நீங்க வேண்டிய நல்ல காலம்‌ கிட்டும்போது, போதயதி – (1) விழிப்பை உண்டு பண்ணுகிறானோ (2) தானாகவோ அல்லது ஆசாரியர்கள்‌ வாயிலாகவோ ஜ்ஞானைத்தை உண்டாக்குகிறானோ, அத்ர கடிகாமித்ரே அத்தகைய இந்த கடிகை மலை ஸூரியனிடத்தில்‌, க: – எவன்‌, விராகீ ஸ்யாத்‌ ஆசையற்றவனாக இருப்பான்‌.

யஸ் யோதய பரார்த்த –யாருடைய உதயத்தால் பரர்களுக்கு நன்மை விளைகிறதோ
ஞானம் –அந்தமில் பேர் இன்பம் பிராப்தி பர்யந்தம் கிட்டுமோ
யஸ்ய ஆலோகேந யாத்யகம் விலயம் –யாரைக் காண்பதினாலேயே அகம் -அழுக்கு இருட்டு -அஞ்ஞானம் நீங்குகின்றதோ
கடாக்ஷத்தால் பிரதிபந்தங்களைப் போக்கி அருளி
காலேந போத யதிய கடிகா –சரியான காலத்தில் ஒளி உண்டாக்கி -விழிப்பு உண்டாக்கி -ஞானம் உண்டாக்கி
காலம் தாழ்த்தாமல் கிருபை அருளி
மித்ரே அத்ர கோ விராகீ ஸ்யாத் —அப்பேர் பட்ட ஸூர்யன் மேல் யார் தான் விருப்பம் கொள்ளாமல் இருப்பார் –
அக்காரக்கனி திவாகரன்-அச்யுத பானு – மேல் ஆர் தான் ஆசை கொள்ளாமல் இருக்க இயலும்

—————

ஸரஸே ஜாக்ரதி கடிகா ஸைல கதே ஸரஸி ஜாலயே மோஹாத்
விரஸேஷு சித்த நாமா விஷயேஷுர கேஷு விஹரதே ப்ருங்க –92-

கடிகாஸைலகதே – (1) கடிகை மலையை அடைந்ததும்‌ (2) கடிகை மலையை அடைந்தவனும்‌, ஸரஸே – (1) நீர்‌ நிறைந்ததும்‌ (2) ஆஸ்ரிதரிடம்‌ அன்புடையவனும்‌, ஸரஸிஜ ஸரஸிஜா ஆலயே – (1) தாமரை மலர்களுக்கு இருப்பிடமுமான தடாகம்‌, (2) பிராட்டிக்கு இருப்பிடமுமான எம்பெருமான்‌, ஜாக்ரதி – (1) தன்னிடம் மலர்ந்த மலர்களால்‌ விழித்திருக்கச்‌ செய்தேயும்‌, (2) நம்மிடம்‌ யாராவது வரப்போகிறார்களா என்று கவனமாயிருக்கச்‌ செய்தேயும்‌, (1) அதனை (2) அவனை (அலக்ஷ்யம்‌ பண்ணி), சித்தநாமா ப்ருங்க: – எனது (1) மனமென்னும்‌ (2) அன்பற்ற, விஷய இக்ஷுர கேக்ஷ – (2) ஸ்த்ரீ முதலிய (1) முள்ளி மலர்களில்‌, விஹரதே – அலைந்து திரிகிறது.

தாமரைக் குளத்தில்‌ தேன்‌ நிறைந்த தாமரை மலர்கள்‌ மலர்ந்து கிடக்க, அதை விட்டுச்‌ சுவையற்ற முள்ளி மலரில்‌ அலையும்‌ மதியற்ற வண்‌டு போலே என் மனமானது – பிராட்டிக்கு வாஸஸ்தானமாய்‌ அவள்‌ காரணமாக ஆஸ்ரிதர்களிடத்தில்‌ அன்பு நிறைந்த எம்பெருமான்‌ கடிகை மலையில்‌ நம்மை எதிர்பார்த்திருக்க, அவனை அநாதரம்‌ பண்ணி, அன்பு சிறிதுமின்றிக்கே யிருக்கும்‌ பெண்களிடத்தில்‌ அலைந்து திரிகின்றது என்றாராயிற்று. இதுவும் நைச்ய அனுசந்தானம் -நம்மை திருத்து வதற்காகவே அருளிச் செய்துள்ளார்

ஸரஸே ஜாக்ரதி கடிகா ஸைல கதே -நீர் நிரம்பிய ஸரோவரம் இங்கே உள்ளது -நன்றாக மலர்ந்த
கருணா ரஸம் பொழியும் அக்காரக்கனி -கடிகைத்தடம் குன்றத்திலே நீர்ப்பண்டமாக
ஸரஸி ஜாலயே மோஹாத் -ஸரஸி ஜா- தாமரை மலர்களுக்கு இருப்பிடம் -பிராட்டி அம்ருத பல வல்லித் தாயாரும் இங்கே எழுந்து அருளி இருக்க
விரஸேஷு சித்த நாமா விஷயே ஷுர கேஷு விஹரதே ப்ருங்க — ரீங்காரம் இட்டு வரும் வண்டு
இங்கே வராமல் முள்ளு மலரிலே சென்று தன்னை வருத்திக் கொள்கிறதே ஐயோ
மிதுனமாக இங்கே நமக்காகவே உகந்து எழுந்து அருளி நித்ய வாஸம் பண்ணி நிற்க
புருஷாந்தரங்களை வேறே எங்கு எங்கோயே போகுமோ
ஹரீ ஹரீ என்று அன்றோ ரீங்காரம் இட்டுக் கொண்டு மங்களா ஸாஸனம் பண்ண அன்றோ அடுப்பது
கீழ் அச்யுத பானு ராம திவாகரன் அக்காரக்கனி பாஸ்கரன்
இங்கு தாமரை விகஸிப்பதும் பொருந்துமே

————-

பிப்ரதி ஸதைவ லக்ஷ்மீம்‌ விப்ராஜதி மித்ர மண்டலே விதுஷாம்‌ | கடிகாத்ரி ஸார்வ பெளமே கிம்‌ வா கடதே ந ஸம்ஸ்ரிதாபிமதம்‌ |! 93

ஸதைவ ! – எப்போதும்‌, லக்ஷ்மீம்‌ – (1) ஸ்ரீ மஹாலக்ஷமியை (2) செல்வத்தை, பிப்ரதி (1) திரு மார்பில்‌ தரித்துக்‌ கொண்டிருப்பவனும்‌ (2) வளர்த்து வைத்திருப்பவனும்‌, மித்ர மண்டலே விதுஷாம்‌ விப்ராஜதி (1) ஸூர்ய மண்டலத்தில்‌ ஞானிகள்‌ த்யானம்‌ செய்வதற்காக விளங்கிக்‌ கொண்டிருப்பவனுமாகிய (2) தோழர்களான சிற்றரசர்கள்‌ மந்திரிகள்‌ புரோகிதர்கள்‌ ஆகிய இவர்களின்‌ நடுவே வித்வான்‌௧ளை கெளரவிப்பதற்காகக்‌ கொலுவில்‌ விளங்குமவனாகிய, கடிகாத்ரி ஸார்வ பெளமே – திருக்கடிகை மலையிலுள்ள (1) எம்பெருமானாகிய (2) சக்ரவர்த்தியினிடத்தில்‌, ஸம்ஸ்ரித அபிமதம்‌ – (1) தன்னை ஆஸ்ரயித்த ஞானிகளின்‌ விருப்பமானது (2) வித்வான்‌௧ளின்‌ விருப்பமானது, கிம்‌ வா எதுதான்‌, ந கடதே – நிறைவேறாது.

இதில்‌ எம்பெருமானைச்‌ சக்கரவர்த்தியாக ரூபணம்‌ செய்தார்‌. லஷ்மீ: – (1) பிராட்டி (2) செல்வம்‌. மித்ர: – ஸூரியன்‌, மித்ரம்‌ – தோழன்‌, ஸார்வ பெளமன்‌ பூமண்டலமனைத்துக்கும்‌ பேரரசனான சக்ரவர்த்ததி விசேஷணங்களின்‌ பொருள்களைப்‌ பிரித்துக்‌ காண்க.

பிப்ரதி சதைவ லஷ்மீ -எப்பொழுதும் செல்வங்கள் மிக்கு இருக்கும் சக்ரவர்த்தி
அம்ருத பல வல்லி தாயார் இறையும் அகலகில்லேன் என்று இருக்க
விப்ரா ஜதி மித்ர மண்டலே விதுஷாம் -தோழர்கள்-வேத விற்பன்னர்கள் பண்டிதர்கள் மந்திரிமார்கள் புடை சூழ்ந்து –
ஓலக்கத்தில் சாதனர்களை கௌரவித்து –
ஞானிகள் தபஸ்ஸூ செய்யும் படி ஸூர்ய நாராயணனாக இருக்க
கடிகாத்ரி ஸார்வ பவ்மே -ஸர்வேஸ்வரேஸ்வரன் அக்காரக்கனி எம்பிரான் நித்ய ஸந்நிதியாய் எழுந்து அருளி இருக்க
நம் போல்வார் கூட சகல மனுஷ நயன விஷய தாங்கனாக உகந்து எழுந்து அருளி இருக்க
கிம் வா கடதே ந ஸம் ஸ்ரித அபி மதம் –அபீஷ்டங்கள் எவை தான் யாருக்குத் தான் கிட்டாமல் போகும் –

—————–

ஸ்ரித கடிகாசல ஸிகரே ஸ்திர கருணா பூர நிர்ப்பரே ஸிஸிரே
தீவ்யந்தி விமல பஷா திவ்யே கமலாலயே சிரம் ஹம்ஸா –94-

ஸ்ரித கடிகாசல ஸிகரே – கடிகை மலை யுச்சியை அடைந்ததும்‌, ஸ்திர கருணாபூர நிர்ப்பரே – நிலைத்திருக்கிற (1) கருனை யாகிற (2) நீர் வெள்ளத்தால்‌ நிறைந்ததும்‌, ஸிஸிரே – குளிர்ந்ததும்‌, திவ்யே – (1) அப்ராக்ருதமான (2) அழகுடையதுமான கமல ஆலயே – (1) பிராட்டிக்கு இருப்பிடமான பெருமானாகிற (2) கமல மலர்களுக்‌ க இருப்பிடமான தாமரைத்‌ தடாகத்தில்‌, விமல பக்ஷா: – : 1) குற்றமற்ற ஜ்ஞாநம்‌ அநுஷ்டான மென்கிற (2) இரண்டு இறகுகளையுடைய, ஹம்ஸா: ‘1) யோகிகளாகிற (2) அன்னப் பறவைகள்‌, சிரம்‌ வெகு காலம்‌, தீவ்யந்தி -விளையாடுகின்றன.

இதில்‌ எம்‌பருமானைத்‌ தாமரைத் தடாகமாகவும்‌ யோகிகளை ஹம்ஸங்களாகவும்‌ கூறுகிறார்‌. அன்னப்‌ பறவைகளுக்கு ஆகாசத்தில்‌ பறந்து செல்வதற்கு துணை செய்கின்ற இரண்டு இறகுகள் போல, யோகிகளுக்‌குப் பரமாகாசமான ஸ்ரீவைகுண்டத்துக்குப்‌ பறந்து செல்வதற்கு உறுப்பாகிய ஞானமும்‌ அநுஷ்டானமும்‌ இரண்டு சிறகுகளாகக்‌ கருதப்பட்டன.

ஹம்ஸா: – (1) யோகிகள்‌ (2) அன்‌னப் பறவைகள்‌. திவ்யம்‌ (1) அப்ராக்ருதமானது (2) அழகுடையது. அன்னங்கள்‌ தடாகத்கில்‌ விளையாடுகின்றன, அதுபோல்‌ யோகிகள்‌ எம்பெருமானிடம்‌ ரமிக்கின்றனர்‌

ஸ்ரித கடிகாசல ஸிகரே -அடைந்த -உகந்து அருளி
ஸ்திர கருணா பூர நிர்ப்பரே ஸிஸிரே -குளிர்ந்த தடாகம் -கருணை வெள்ளம் நிரம்பிய
ஆச்சார்ய புருஷர்கள் கூடி -கிருபா கடாக்ஷம் -பெற்று ஆழ்ந்து –
லோக ஹிதம் ஒன்றே இவர்கள் க்ருத்யம் -59 சதகம் -நம் போல்வாரை கரை சேர்க்கவே
நம்போல்வாரை மிதுனத்துக்கு சேஷமாக்கி அருளவே இவர்கள் இங்கே மண்டி உள்ளார் அன்றோ
தீவ்யந்தி விமல பஷா திவ்யே கமலாலயே சிரம் ஹம்ஸா –பாவனத்வம் -நிறைய நாளாக விளையாடிக் கொண்டு இருக்கும்
உலாவும் பெருமாள் -ஞான தீபம் ப்ரஸாதம் -ஸஜாதீய மனுஷ்யர் என்று எண்ணினால் யானையைக்குளிப்பாட்டிய பின்பு தன் மேல் புழுதி போட்டுக் கொள்ளுமா போலே அன்றோ
ஆச்சார்யர் திவ்ய மயம் என்று உணர வேண்டுமே –
திவ்யமான தடாகத்தில் மிதுன கருணா கடாக்ஷத்தில் விளையாடும் பரம ஹம்ஸர்
தூவி சேர் அன்னம் சூழ் புனல் குடந்தையே தொழுது
ஆச்சார்யர் -ஞானம் அனுஷ்டானம் -இரண்டு சிறகுகள் -பரம ஹம்ஸர் –
ப்ரயோஜனாந்தர பரர் இல்லாமல் -மங்களா ஸாஸனம் முதல் பாசுரம் கலியன்

அஸ்மாத் பூயாந் த்வமஸி விவிதா நாத்மந: சோதயித்வா |
பத்மா பர்த்து: ப்ரதி திநமிஹ ப்ரேஷயந் ப்ராப்ருதாநி ||
தஸ்மிந் திவ்யே வரவரமுநே தாமநி ப்ரஹ்ம ஸாம்யாத் |
பாத்ரீ பூதோ பவது பகவந் நைவ கிஞ்சித் தயாயா: ||–ஸ்ரீ வர வர முனி சதகம் –59

பிராட்டியின் கணவனான ஸ்ரீமந் நாராயணனுக்குப் பரிசாக இங்கு தினந்தோறும் பல ஜீவன்களைச் சுத்தி செய்து எங்களை அனுப்பிக் கொண்டு நீர் மதிக்கத் தக்கவராக இருக்கிறீர்.ஹே வரவரமுநியே! அந்தப் பரமபதத்தில் பரப்ரஹ்ம ஸமமாக இருப்பதால்
உமது கருணைக்குப் பாத்திரமாக ஒரு வஸ்துவும் ஆகிறதில்லை.

———————-

விஹரதி பஹு குண ஜாலே வீரே கடிகாத்ரி கிருஷ்ண வர்த்மநிதே
விஜஹதி ஸமஸ்த தாபான் விஜயந்தே கில மமாபி மோஹ மஹோ –95-

பஹுகுண ஜாலே – சுத்தி, நல்‌ நிறம்‌ முதலிய நற்குணங்களின்‌ ஸமூகங்களை உடையவனும்‌, வீரே – எரிக்கும்‌ பராக்ரமுடையவனுமான, கடிகாத்ரி க்ருஷ்ண வர்த்மநி – கடிகை மலையிலுள்ள அக்நி யானவன்‌ விஹரதி ஸதி – ஸஞ்சாரம்‌ செய்யும் போது, தே -முன்‌ ஸ்லோகத்தில்‌ கூறப்பட்ட ஹம்ஸங்கள்‌, ஸமஸ்த தாபாந்‌ – எல்லாத்‌ தாபங்களையும்‌, விஜஹதி – விட்டு விடுகின்றன, (மேலும்‌) மம – என்னுடைய, மோஹமபி அஜ்ஞானத்தையும்‌, விஜயந்தே – வெல்லுகின்றன. அஹோ – ஆச்சரியம்
ஹம்ஸங்கள்‌ அக்நியினிடம்‌ சென்று தமது தாபத்தைத்‌ தீர்த்துக்‌ கொள்வதும்‌, இக் கிரந்த கர்த்தாவின்‌ அஜ்ஞானத்தை வெற்றி கொள்வதும (போக்குவதும்‌) ஆச்சரியமாகையால்‌ விரோதம்‌ தோன்றும்‌, பரிஹாரம்‌ மேலே காண்க.

பஹு குண ஜாலே – க்ருபை வாத்ஸல்பம்‌ முதலிய குளிர்ந்த பல குண ஸமூகங்களை யுடையவனும்‌, வீரே – ஸம்ஸார தாபம்‌ போக்கும்‌ பராக்ரமமுடையவனுமான, கடிகாத்ரி க்ருஷ்ண வர்த்மநி – கடிகை மலையில்‌ வசிக்கும்‌ க்ருஷ்ணனாகிய ஸித்தோபாயமான பெருமான்‌, விஹரதி – விஹாரம்‌ செய்யும் போது, (அவனை யாஸ்ரயித்து) தே – ஹம்ஸர்கள்‌ என்று கூறப்பட்ட யோகிகள்‌, ஸமஸ்த தாபாந்‌ – ஆத்யாத்மிகம்‌ ஆதி பெளதிகம்‌ ஆதி தைவிகமாகிய எல்லாத்‌ தாபங்களையும்‌ (கஷ்டங்களையும்‌) விஜஹதி – விட்டு விட்டுச்‌ சுகமாக இருக்கிறார்கள்‌. (இதுவே யன்றி), மம – என்னுடைய, மோஹமபி – அவிவேகத்தையும்‌, விஜயந்தே – தமது உபதேசத்தாலே வெற்றி கொள்கிறார்கள்‌. இப்படிப் பொருள்‌ கொண்டால்‌ முற் காட்டிய விரோதம்‌ தோன்ற இடமில்லாமை காண்க.

க்ருஷ்ணவர்த்மா – (1) கறுத்த வழியை உடையது (தன்‌ வழியைக்‌ கறுப்பாக்குவது ) ஆகையால்‌ இது அக்நிக்குப்‌ பெயர்‌ (2) க்ருஷ்ணனாகிய வர்த்ம – மார்க்கம்‌ உபாயமென்றபடி. அதாவது க்ருஷ்ணனாகிய மோக்ஷோபாயம்‌. யோகிகள்‌ எம்பெருமானை யணுகி, தாம்‌ ஸம்ஸார தாபம்‌ தீரத்துக் கொள்வதோடு தம்மை யடைந்த வர்க்கும்‌ ஸம்ஸார தாபம்‌ தீர்த்து, மோக்ஷம்‌ பெறுவதற்குரிய ஞானம்‌ உண்டாவதற்காக, அஜ்ஞானம்‌ தீரும்படி உதவுகிறார்களென்றவாறு.

விஹரதி பஹு குண ஜாலே -கல்யாண குண கணங்கள் மிக்கு
வீரே -தாப த்ரயங்களைப் போக்கி அருளும் வீரனே
கடிகாத்ரி கிருஷ்ண வர்த்மநிதே –மார்க்கம் உபாயம் –அக்காரக்கனி கண்ணன் என்னும் கரும் தெய்வமே ஸித்த உபாயம்
விஜஹதி –ஆஸ்ரயித்து- கைங்கர்யமே யாத்ரையாகக் கொண்டு
ஸமஸ்த தாபான் விஜயந்தே -கீழே பரம ஹம்சர்கள் -தாபத் த்ரயங்கள் விடுபட்டுப்போய்
கில மமாபி மோஹம் அஹோ — அடியேனுக்கும் மோஹம் விலகிற்றே -என்ன ஆச்சார்யம் –
நீயே உபாயம் உபேயம் -அறியும்படி அருளினாயே
நாம் அனுசந்திக்க வேண்டியதற்காக அருளிச் செய்த ஸ்லோகம் அன்றோ

————–

கநக மய கடக ஸோபாம் கலயதி கடிகா மஹீ ப்ருதோ ருசிரே
தீப்தி மதி க்ருஷ்ண வர்ணே த்ருஷ்டே த்ராஸ லவம் அநு பவேத் கோ வா -96-

கநக மய கடக ஸோபாம்‌ – ஸ்வர்ண மயமான மலைச்‌ சரிவின்‌ சோபையை, கலயதி உண்டு பண்ணுவதும்‌, தீப்திமதி – ப்ரகாசமுடையதும்‌, ருசிரே – அழகுடையதுமான, கடிகா மஹீ ப்ருத க்ருஷ்ண வர்ணே – கடிகை மலையினுடைய கரு நிறமானது, த்ருஷ்டே ஸதி – பார்க்கப்பட்ட வளவில்‌, கோ வா – எவன் தான்‌, த்ராஸ லவம்‌ – பயத்தின்‌ சிறு பகுதியையும் கூட, அநுபவேத்‌ – அநுபவிப்பான் –

கநக மய கடக ஸோபாம் கலயதி –பொன் மயமான ஜ்வலிக்கும் சோபை மிக்க
கடிகா மஹீ ப்ருதோ ருசிரே தீப்தி மதி க்ருஷ்ண வர்ணே த்ருஷ்டே -ப்ரகாஸம் -அழகு -கருமை வண்ணம் -பொன் வண்ணமும் சேர்ந்து
த்ராச லவம் அனு பவேத் கோவா -ஸம்ஸார பயம் லவலேசமும் கீழே இருந்து தரிசித்தாலே போதுமே
எம்பெருமான் பொன் மலை மேல் ஏதேனும் ஆவேனே
சமன் கொள் வீடு தரும் தடம் குன்றமே போல் இங்கும் –

முன்‌ ஸ்லோகத்தில்‌ மஹான்கள்‌ கடிகை யெம்பெருமானை ஆஸ்ரயித்து ஸம்ஸார தாபம்‌ தீரப் பெறுகிறார்களென்று அருளியவர்‌ இந்த ஸ்லோகத்தில்‌ அவ்வெம்பெருமானை ஆஸ்ரயிக்கவும்‌ வேண்டாம்‌, வெகு தூரத்திலிருந்தே கடிகை மலையைத் தர்ஸித்தாலே போதும்‌. சிறிதும்‌ ஸம்ஸாரத்திற்கு அஞ்ச வேண்‌டாம்‌ என்கிறார்‌. மலையின்‌ அழகு – கநகமயகடக சோபாம்‌ கலயதி தீப்திமதி க்ருஷ்ண வர்ணே – என்றதனால்‌ குறிக்கப்படுகிறது. மரங்கள்‌ அடர்ந்திருப்பதால்‌ மலையின்‌ கீழ்ப்பகுதி கறுத்துத்‌ தோன்றுகிறது. அக் கருநிறமானது சிவப்புப் பாறை மயமாகையால்‌ தங்க நிறமுள்ள சரிவுக்குச்‌ சோபையை யுண்டாக்கித் தானும்‌ அத்தங்க நிறப்‌ பாறைகளால்‌ சோபயை அடைகிறது. இங்ஙனம்‌ அத் திருமலையின்‌ கருநிறமே நம்முடைய அச்சமனைத்தையும்‌ அகற்றவல்ல தென்றாராயிற்று. இருள்‌ பேய்‌ முதலியவற்றின்‌ கருநிறம்‌ அச்சத்தை உண்டாக்கும்‌. இம்மலையின்‌ கருநிறம்‌ அச்சத்தைப்‌ போக்குமென்றபடி. திருவேங்கட மாமலை யொன்றுமே தொழ நம்‌ வினை ஓயுமே (திருவாய்மொழி 3.3.8) என்று நம்மாழ்வார்‌ அருளியது போலவே இங்கும் அருளிச் செய்கிறார்

—————-

ஸப்தரிஷி ஸேவ்ய மாநே சந்தத ஸூமந ஸ்துதே ஸஹஸ்ராஷே
ரமதாம் மநோ ஹரெள மே ராஜதி கடிகாத்ரி ரத்ன ஸாநு தடே –97-

ஸப்தர்ஷி ஸேவ்யமாநே – ஸப்த ரிஷிகளால்‌ ஸேவிக்கப்பட்டவனும்‌, ஸந்தத ஸுமநஸ்‌ ஸ்துதே – எப்போதும்‌ தேவர்களால்‌ துதிக்கப்பட்டவனும்‌, ஸஹஸ்ராஷே ஆயிரங்‌ கண்ணுடையவனும்‌. கடிகாத்ரி ரத்நஸாநு தடே – கடிகைமலை யென்கிற மேருமலையின்‌ சரிவில்‌, ப்ராஜதி -விளங்குமவனான, ஹரெள – (1) இந்திரனிடத்தில்‌ (2) நரஸிம்மப் பெருமாளிடத்தில்‌, மே மந: – என்னுடைய மனஸ்ஸானது, ரமதாம்‌ – ப்ரீதியை அடைந்திடுக.

ஹரி: என்பது இந்திரனுக்கும்‌, திருமாலுக்கும்‌, சிங்கத்துக்கும்‌ பெயர்

ஸப்த ரிஷிகள்‌ ஆவார்‌ – வஸிஷ்டர்‌, காஸ்யபர்‌, அத்ரி, ஜமதக்நி, கெளதமர்‌, விஸ்வாமித்ரர்‌, பரத்வாஜர்‌ என்ற எழுவர்‌ என்று விஷ்ணு புராணம்‌ (3.1.32) கூறும்‌. மரீசி, அங்கிரஸ்ஸு, அத்ரி, புலஸ்த்யர் . புலஹர்‌, க்ரது, வஸிஷ்டர்‌ ஆகிய எழுவரென்றும்‌– மரீசி அத்திரி, வசிஷ்டர், காஸ்யபர், கௌதமர், பரத்வாஜர், அங்கீரஸ் .ஆகிய எழுவரென்றும்‌–
சந்தத ஸூமந ஸ்துதே ஸஹஸ்ராஷே-– -புருஷ ஸூக்தம் கொண்டு ஸ்துதிக்கும் ஸத் புருஷர்கள்
ரமதாம் மநோ ஹரவ் மே ராஜதி கடிகாத்ரி ரத்ன ஸாநு தடே -நரஸிம்ஹன் இடம் மனஸ்ஸூக்கு ப்ரீதி உண்டாக்கி அருள வேண்டும்-மேரு போன்ற குன்றம் கீழேயே அருளிச் செய்தார் அன்றோ –

—————

பாத ஸ்பர்சந விபவாத் பாலித புவநே ப்ரபோதி தாத்ம குணே
பஜது கடிகாத்ரி மித்ரே பகவதி பாவம் மநஸ் ஸரோஜம் மே –98–

பாத ஸ்பர்சந விபவாத்‌ – (1) தனது கிரணங்களின்‌ ஸம்பந்தமாகிற பெருமையினால்‌ (2) தனது திருவடிகளின்‌ ஸம்பந்தமாகிற பெருமையினால்‌, பாலித புவநே – உலகங்களைக்‌ காப்பவனும்‌, ப்ரபோதித ஆத்ம குணே – (1) தூங்கும் போது கூம்பிய – ஆத்மாவின்‌ குணமாகிய அறிவை மலரச் செய்பவனும்‌, (2) மோக்ஷ உபாயமாகிய தத்‌ வஜ்ஞானத்தை மிகவும்‌ உண்டாக்குமவனுமாகிய, கடிகாத்ரி மித்ரே பகவதி – கடிகை மலையிலுள்ள (1) சூரியனாம்‌ (2) எம்பெருமானிடத்தில்‌, மே மநஸ்‌ ஸரோஜம்‌ – என்னுடைய மனமாகிய தாமரை மலரானது, பாவம்‌ – (1) ப்ரீதியை (2) பக்தியை, பஜது- அடைந்திடுக

பாத ஸ்பர்சந விபவாத் -தீண்டி -கிரணங்களை பரப்பி –திருவடி சடாரி சம்பந்தத்தால் -ப்ருத்ய -அடியார் அடியார்
பாலித புவநே ப்ரபோதி தாத்ம குணே-பரிபாலனம் -இருள் நீக்கி -பயிர்களை விளைவித்து –
தத்வ ஞானம் அறிவித்து -அஞ்ஞானங்களைப் போக்கி-ஆத்ம குணம் வளர்த்து —
பஜது கடிகாத்ரி மித்ரே பகவதி பாவம் மநஸ் ஸரோஜம் மே –மித்ரன் சூரியனுக்கும் இன்னும் ஓரு பெயர் –
கடிகைத்தடம் குன்றம் மேல் உள்ள அக்காரக்கனி தானே ஹிருதய கமலத்தை இசைவித்து தனது தாளிணைக் கீழ் இருத்தும் அம்மான்

————-

துஷ்டே அல்பத ஸூ ஸீலே ஸூ குண க்ருஹீத ஸூ லக்ஷணே ஸூ த்ருடே
ஆரோபிதோ மதீயோ பத்ரே கடிகாத்ரி தூர்வஹே பார –99

அல்பத:துஷ்டே – (1) சிறிது கொடுத்தாலும்‌ அதனால்‌ ஸந்தோஷிப்பவனும்‌ (2) சிறிது ஆஹாரமிட்டாலும்‌ மகிழ்ச்சியடைவதும்‌, ஸுசீலே – (1) பக்தர்களோடு பேதமில்லாமல்‌ கலந்து பழகுதலை – சீலத்தை மிகவுமுடையவனும்‌ (2 )தன்னண்டையில்‌ வந்தவர்களைக்‌ கொம்பிலும்‌ குளம்பிலும்‌ ஏற்காமல்‌ ஸாதுவாக இருப்பதும்‌, ஸுகுண க்ருஹீதே- (1) ஜ்ஞாநம்‌ பக்தி சாந்தி வைராக்யம்‌ முதலிய நற்குணங்களையுடையவர் கட்கு வசப்படுபவனும்‌ (2) நல்ல கயிற்றால்‌ கட்டி வைத்தால்‌ அதற்கு அடங்கியிருப்பது… ஸூ லக்ஷணே – (1) நல்ல உத்தம புருஷ லக்ஷணங்களை யுடையவனும்‌ (2) எருதுக்கு இருக்க வேண்டிய நல்ல ஸாமுத்ரிக லக்ஷணங்களை யுடையதும்‌, ஸுத்ருடே – (1) பிராட்டி போல்வார்‌ குற்றங்களை யுரைத்தாலும்‌ ஆஸ்ரிதர்களைக் காப்பதில்‌ மிகவும்‌ மனத்திண்மை யுடையவனுமான (2) மிகவும்‌ பாரமேற்கத்தக்க பலமுடையதுமான, கடிகாத்ரி தூர்வஹே – கடிகாத்ரியில்‌ எழுந்தருளியிருந்து எல்லோருடைய ரக்ஷண பாரத்‌தையும்‌ வஹிக்கிற (1) எம்பெருமானாகிற பத்ரே – (2) எருதினிடத்தில்‌, மதீய: – என்னுடைய, பார: – ரக்ஷணமாகிய பாரமானது (சுமையானது) ஆரோபித: – ஏற்றப்ட:._து. பத்ர: – எருது.

துஷ்டே அல்பத ஸூ ஸீலே -எருது அல்ப தீனி கொடுத்தாலும் ஸந்தோஷம் அடைந்து –
அஞ்சலி பரமாம் முத்ரா -ஸக்ருத் -பக்தி ஒன்றையே எதிர்பார்த்து –
ஆச்சார்யர் ஸுலப்யமே உருவாகி
என் பேரைச் சொன்னான் ஊரைச் சொன்னான் இத்யாதி
ஸூ குண க்ருஹீத –கழுத்தில் காட்டியதும் அடங்கி இருக்கும்
கல்யாண குணங்கள் -ஞான பக்தி வைராக்யம் -பக்த ஆஸ்ரித வத்சலன் -பக்த உசிதன்
ஸூ லக்ஷணே ஸூ த்ருடே –அங்க அடையாளங்கள் பூர்த்தி -மல்லாண்ட திண் தோள்
திண் கழல் -ஊற்றம் உடையாய் -நெடுமால்
ஞானம் அனுஷ்டானங்கள் நிறைந்த ஆச்சார்ய ஸமூஹம் -நம்மைக் கரை யேற்றவே விரதம் தீக்ஷயாகக் கொண்டு
ஆரோபிதோ மதீயோ பத்ரே கடிகாத்ரி தூர்வஹே பார —இங்கே அன்றோ உள்ளது –
என்னுடைய பாரங்களை சமர்ப்பிக்க ஏற்றவாறு –
காளை புகுதக் கனாக் கண்டேன்
ரிஷபம் -ரிஷ அபம் -தீப பிரகாசம் இவனே
இவனையே பார்த்த சாரதி என்றும் முன்பே அருளிச் செய்தார்
பத்ரம் -மங்களம் -ஆச்சார்யர் திருவடிகளே மங்களகரம் -மங்களா ஸாஸனம் பண்ண நம்மை ஆக்கி அருளும் காளைகள் –

இதில்‌ எம்பெருமான்‌ பத்ரமாக எருதாக உருவகிக்கப்பட்டான்‌. ஒருவன்‌ தன்னுடைய பொருள்‌ பாரத்தை எருதினிடம்‌ ஏற்றுமா போலே, தம்மைக்‌ காப்பாற்றுதலாகிய பாரத்தை எம்பெருமானாகிய எருதினிடம்‌ ஏற்றினார்‌. இந்த பரஸமர்ப்பணம்‌ ஸித்தோபாய நிஷ்டர்க்குத்‌ தன்னடையே உண்டாகும்‌ ஸ்வபாவமிறே

———–

மேல் மூன்றும் பிரார்த்தனா ரூபமாக அங்கீ கரித்து அருள வேண்டி அருளுகிறார்

அநநு குணாம் அபி வாணீம் ஆகஸ் ஸந்தோ ஹ மந்த மதி கலிதாம்
அங்கீ கரோது பகவான் ஆஸ்ரித தோஷ அவலோநா அகல்ய –100-

ஆஸ்ரித தோஷ அவலோகந அகல்ய: – தன்னை யடைந்த பக்தர்களின்‌ குற்றங்களைக்‌ காண்பதில்‌ திறமை யற்றவனான, பகவாந்‌– ஜ்ஞாநம்‌, சக்தி, பலம்‌, ஐஸ்வர்யம்‌, வீர்யம்‌, தேஜஸ்‌ என்கிற ஆறு குணங்களை யுடைய எம்பெருமான்‌, ஆகஸ்‌ ஸந்தோஹ மந்தமதி கலிதாம்‌ – குற்றங்களின்‌ திரட்சிக்கு இருப்பிடமான – அல்ப புத்தியான அடியேனால்‌ சொல்லப்பட்ட. வாணீம்‌ – இந்த ஸ்தோத்ரமாகிய வாக்கை, அநநுகுணாம்‌ அபி – (தன்னுடைய பெருமைக்குத்‌) தக்கதாக இல்லாவிட்டாலும்‌, அங்கீகரோது – (தனது ஸ்தோத்ரமாக) ஏற்றுக்‌ கொள்வானாக

அநநு குணாம் அபி வாணீம் -உனது பெருமைக்குச் சேராத வாக்கு –
ஆகஸ் ஸந்தோ ஹ மந்த மதி கலிதாம்-மந்த மதிகளான -ப்ருத்யர்களின் கடைசில் நிலையானதாக ஆக்கி அருள் என்றார் அன்றோ
அங்கீ கரோது -இளைய புன் கவிதையேலும் எம்பிராற்கு இனிய வாறே அன்றோ
பகவான் –ஸ்வா பாவிக ஷட் குண -பகவான்
ஆஸ்ரித தோஷ அவலோநா அகல்ய –குற்றங்கள் எல்லாம் பார்க்காமல் -வாத்சல்யம் மிக்கு உள்ள அக்காரக்கனி எம்பெருமான் அன்றோ

———–

ஸ்வாமிந ஏவ க்ருதிர் மே ஸுக்திஸ் தோஷாய ததபி தஸ்யைஷா |! ஸ்வோக்தி மநு வததி பாலே ஸுதராம்‌ தாதோ அபி தோஷமுபயாதி--101-

மே க்ருதி: – என்னுடைய இந்த க்ரந்தமானது, ஸ்வாமிந: ஸூக்தி: ஏவ திருக்கடிகை யெம்பெருமானுடைய ஸ்ரீஸூக்தியே ஆகும்‌. ததபி – அத்தகையதாயினும்‌, ஏஷா – இந்த ஸ்ரீஸூக்தியானது, தஸ்ய தோஷாய – அவனுடைய ஸந்தோஷத்தின்‌ பொருட்டு ஆகிறது. (எப்படியென்னில்‌) பாலே – தன்‌ குழந்தையானது, ஸ்வ உக்திமபி (தகப்பனாரான) தனது சொல்லாயிருந்தாலும்‌ அதை, அநுவததி ஸதி – அப்படியே அநுவதித்துப்‌ பேசுமளவில்‌, தாத: – தகப்பன் ஸுதராம்‌ – மிகவும்‌, தோஷம்‌ ஸந்தோஷத்தை, உபயாதி(கலு) – அடைகிறான்‌ அல்லவா

இளைய புன் கவிதை
தன் சொல்லால் என்னைப் பாடுவித்த அப்பன்
பாலன் அநு வாதம் -தப்பாகவே பின்னால் சொன்னாலும்
தாதா-அப்பனுக்கு சந்தோசம் ஆகுமே
ஆர்த்தி பிரபந்தம் -முக்த ஜல்பிதம் என்று மா முனிகள் -திருவாய் மொழிப்பிள்ளை திருவடி அடைந்த வஸ்துவின் உளறல்

தேசிகர்கள் போற்றும் திருவாய் மொழிப் பிள்ளை
வாச மலர்த்தாள் அடைந்த வத்து வென்று -நேசத்தால்
என் பிழைகள் காணா எதிராசா அடியேன்
புன்பகர்வைக் கேளும் பொறுத்து—57-

தேசிக குல கூடஸ்தரான ஸ்ரீ ஆழ்வார் உடைய அசேஷ வ்ருத்தியிலும் அந்விதராய்
அதுவே யாத்ரையாகச் செய்து கொண்டு போருகையாலே
செந்தமிழ் வேத திருமலை ஆழ்வார் வாழி-என்று ஸ்ரீ ஆச்சார்யர்களாலே மங்களா சாசனம் பண்ணும் படியான மகாத்ம்யத்தை உடையரான ஸ்ரீ பிள்ளை யுடைய சௌகந்த்ய சௌகுமார்ய யுக்தமான திருவடிகளை ஆஸ்ரயித்து

சேஷத்வ ஆஸ்ரயமான வஸ்து என்கிற ஸ்நேஹத்தால்-அடியேனுடைய அபராதங்களை தர்சியாதே அதில் அவிஞ்ஞாதா வாய் இருக்கிற தேவர் அடியேனுடைய தோஷ யுக்தமான
முக்த ஜல்பிதத்தை சீறாமல் சஹித்து நின்று சாதாரமாக திருச் செவி சாத்தி அருள வேணும்

———-

பக்தோசித அப் யுக்தாம் பக்த்யா சவ்ம்ய வர கிங்கர உப ஹிதாம்
அம்ருத பலா வளிம் அநகா ம்ருது ளாமஸ் வாத்ய ம்ருத்யு மதி யாந்தி –102-

பக்த்யா – பக்தியோடு கூடி, ஸெளம்யவா கிங்கர உபஹிதாம்‌ – மணவாள மாமுனிகளின்‌ அடியவனாகிய அடியேனால்‌ ஸமர்‌ப்பிக்கப்பட்டும்‌, பக்தோசித உபயுக்தாம்‌ – தக்கானாலே செவிசாத்தப்பெற்றும்‌, ம்ருதுளாம – பக்தியினால்‌ மெத்தென்றுள்ள கனிந்துள்ள, அம்ருதபல ஆவளிம்‌ – அமுத. பால்‌ தித்திக்கும்‌ பழங்களாகிய ஸ்லோகங்களின்‌ வரிசையை, ஆஸ்வாத்ய – சுவைத்து அனுபவித்து, அநகா: – பாவம்‌ தொலையப்‌ பெற்றவர்களாய்க்‌ கொண்டு (மக்கள்‌) ம்ருத்யும்‌ – ஸம்ஸாரத்தை, அதியாந்தி கடந்து பரமபதம்‌ செல்லுகிறார்கள்

பக்தோசித அப யுக்தாம் -பக்த வத்சலன் -தக்கான் திருச்செவி சாத்தும் படி அருளி -அங்கீ கரித்து அருளி
பக்த்யா ஸெளம்ய வர கிங்கர உப ஹிதாம் -அடையாளம் காட்டிக்கொள்கிறார் –ஷட் பதம் -திருவடித் தாமரைகளில் அமர்ந்த வண்டு
திவ்ய ஞான பிரதர் -தனியனிலே உண்டே-ஸௌம்ய ஜாமாத்ரு யோகீந்த்ர சரணாம்புஜ ஷட்பதம் |தேவராஜ குரும் வந்தே திவ்ய ஜ்ஞான ப்ரதம் சுபம் ||
மா முனிகள் நியமிக்க அருளிச் செய்த திவ்ய கிரந்தம்
அம்ருத பலா வளிம் -ஸ்வாமியே திரு நாமம் -ஆவளி -தொடர்
ஒவ்வொன்றுமே அம்ருதம் -தொகுத்து அருளிய திவ்ய மாலை –
அநகா-குற்றங்களைப் போக்கி அருளும்
ம்ருது லாம் -மிருதுவாக
ஆஸ்வாத்ய -தாபத் த்ரயங்களுக்கு ஆஸ்வாஸ கரம்
ம்ருத்யு மதி யாந்தி –ஸம்ஸாரத் தடைகளைப் போக்கி நிரதிசய பரம புருஷார்த்தம்
ஆச்சார்யர் திருவடிகளிலே சேர்த்து அருளும்

—————————————————————————————————————————–

வித்தகனே வேந்தே மணவாள மா முனியே
சுத்தனே சோதிச் சுடர் முடியே -முத்தே
கரும்பின் சுவையே கடலில் அமுதமே
அரும்பின தாள் நீயே அருள் —ஸ்ரீ பொன்னடிக்கால் ஜீயர் குண வகுப்பு

————-

மல்லிகைகள் வகுள மலர் மணி முடியில் நாறும்
வண் பவள வாய் அலரில் மறைகள் மிகு நாறும்
நல்லிசை சேர் பதின்மர்களின் நற் கலைகள் எல்லாம்
நலமுடைய கருணை விழி நாள் தோறும் மணக்கும்
சொல்லரிய பாதம் அபிஷேக மணம் நாறும்
தொல்லை எதிராசன் என இவ்வுலகில் வந்தோன்
செல்வன் மணவாளன் லோக குரு எங்கோன்
திருவடிகள் அல்லது ஒரு தெய்வம் அரியேனே–ஸ்ரீ ஸ்வாமி எறும்பி அப்பாவின் ஸ்ரீ மணவாள மா முனிகள் அகவல்

——————————————————————————————————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ எறும்பி அப்பா ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ பஜ கோவிந்தம்–தமிழாக்கம்: ஸ்ரீ அரங்க. இரகுநாதன் ஸ்வாமிகள்–

January 27, 2023

ஸ்ரீ பஜ கோவிந்தம் என்பது சமஸ்கிருத மொழியில் ஆதி சங்கரரால் இயற்றப்பட்ட எட்டாம் நூற்றாண்டு பக்திப் பாடலாகும்.
இது ஸ்ரீ ஆதிசங்கரரின் அத்வைதக் கொள்கையின் விழுமியமாய்க் கருதப்படுகிறது.
இப் பாடல் ஸ்மர்த்தப் பிராமணர்கள் மட்டுமின்றி வைணவர்களிடையேயும் புகழ் பெற்றதாகும்.

பாடல் எழுந்த சூழல்
ஒரு முறை ஆதிசங்கரர் தனது சீடர் குழாத்துடன் வாரணாசித் தெருக்களில் சென்று கொண்டிருந்தாராம்.
அப்போது முதிர்ந்த குரு ஒருவர் தனது மாணவர்களுக்கு சமஸ்கிருத இலக்கணத்தைக் கற்பித்துக் கொண்டிருந்தாராம்.
இதைக் கண்ட சங்கரமுனி அவர் மீது இரங்கி முதிர்ந்த வயதில் இலக்கணம் கற்பிப்பதில் காலத்தை வீணாக்காமல்
கடவுளைப் புகழ்வதிலும் அவரைக் கண்டடைவதிலும் செலவழிக்க வேண்டும் எனும் பொருள் அமைய
‘பஜ கோவிந்தம் (கோவிந்தனைப் பாடுவோம்)’ எனப் பாடினாராம்
இப்பாடல் இருபத்தேழு வரிகளை உள்ளடக்கியது. உண்மையில் பதின்மூன்று வரிகள் மட்டுமே சங்கரரால் பாடப்பட்டவை என்றும்
இதர பதினான்கு வரிகள் அவரோடு அங்கிருந்த ஈரேழு சீடர் ஒவ்வொருவரும் பாடியதாய்ச் சொல்லப்படுகின்றது.

பஜ கோவிந்தம்

பஜ கோவிந்தம் பஜ கோவிந்தம்
கோவிந்தம் பஜ மூடமதே
பஜ கோவிந்தம் பஜ கோவிந்தம்
கோவிந்தம் பஜ மூடமதே

ஸம்ப்ராப்தே ஸன்னிஹிதே காலே
ஸம்ப்ராப்தே ஸன்னிஹிதே காலே
நஹி நஹி ரக்ஷதி டுக்ருங்கரணே
நஹி நஹி ரக்ஷதி டுக்ருங்கரணே

பஜ கோவிந்தம் பஜ கோவிந்தம்
கோவிந்தம் பஜ மூடமதே

மூட ஜஹீஹி தன ஆகம த்ருஷ்ணாம்
மூட ஜஹீஹி தன ஆகம த்ருஷ்ணாம்
குரு ஸத்புத்திம் மனஸி வித்ருஷ்ணாம்
குரு ஸத்புத்திம் மனஸி வித்ருஷ்ணாம்

யல்லபஸே நிஜ கர்மோபாத்தம்
யல்லபஸே நிஜ கர்மோபாத்தம்
வித்தம் தேன வினோதய சித்தம்
பஜ கோவிந்தம் பஜ கோவிந்தம்
கோவிந்தம் பஜ மூடமதே

யாவத் வித்தோபார்ஜன ஸக்த:
தாவன்னிஜ பரிவாரோ ரக்த:
யாவத் வித்தோபார்ஜன ஸக்த:
தாவன்னிஜ பரிவாரோ ரக்த:

பச்சாத் ஜீவதி ஜர்ஜர தேஹே
பச்சாத் ஜீவதி ஜர்ஜர தேஹே
வார்த்தாம் கோபின ப்ருச்சதி கேஹே
வார்த்தாம் கோபின ப்ருச்சதி கேஹே

பஜ கோவிந்தம் பஜ கோவிந்தம்
கோவிந்தம் பஜ மூடமதே

மாகுருதன ஜன யௌவ்வன கர்வம்
ஹரதி நிமேஷாத் கால:ஸ்ர்வம்
மாகுருதன ஜன யௌவ்வன கர்வம்
ஹரதி நிமேஷாத் கால:ஸ்ர்வம்

மாயாமயம் இதம் அகிலம் ஹித்வா
மாயாமயம் இதம் அகிலம் ஹித்வா
ப்ரஹ்ம பதம் த்வம் ப்ரவிச விதித்வா
ப்ரஹ்ம பதம் த்வம் ப்ரவிச விதித்வா

பஜ கோவிந்தம் பஜ கோவிந்தம்
கோவிந்தம் பஜ மூடமதே

ஸுரமந்திர தருமூல நிவாஸ:
சய்யா பூதலம் அசினம் வாஸ:
ஸுரமந்திர தருமூல நிவாஸ:
சய்யா பூதலம் அசினம் வாஸ:

ஸர்வ பரிக்ரஹ போகத்யாக:
ஸர்வ பரிக்ரஹ போகத்யாக:
கஸ்ய ஸுகம் நகரோதி விராக:
கஸ்ய ஸுகம் நகரோதி விராக:

பஜ கோவிந்தம் பஜ கோவிந்தம்
கோவிந்தம் பஜ மூடமதே

பகவத் கீதா கிஞ்சிததீதா
பகவத் கீதா கிஞ்சிததீதா
கங்காஜல லவ கணிகா பீதா
பகவத் கீதா கிஞ்சிததீதா
கங்காஜல லவ கணிகா பீதா

ஸக்ருதபியேன முராரி
ஸக்ருதபியேன முராரி ஸமர்ச்சா
ஸக்ருதபியேன முராரி ஸமர்ச்சா
க்ரியதே தஸ்ய யமேன நசர்ச்சா
க்ரியதே தஸ்ய யமேன நசர்ச்சா

பஜ கோவிந்தம் பஜ கோவிந்தம்
பஜ கோவிந்தம் பஜ கோவிந்தம்
பஜ கோவிந்தம் பஜ கோவிந்தம்
கோவிந்தம் பஜ மூடமதே

புனரபி ஜனனம் புனரபி மரணம்
புனரபி ஜனனம் புனரபி மரணம்
புனரபி ஜனனீ ஜடரே சயனம்
புனரபி ஜனனீ ஜடரே சயனம்

இஹ ஸம்ஸாரே பஹு துஸ்தாரே
இஹ ஸம்ஸாரே பஹு துஸ்தாரே
க்ருபயா பாரே பாஹி முராரே
க்ருபயா பாரே பாஹி முராரே

பஜ கோவிந்தம் பஜ கோவிந்தம்
கோவிந்தம் பஜ மூடமதே

கேயம் கீதா நாம ஸஹஸ்ரம்
த்யேயம் ஸ்ரீபதி ரூபமஜஸ்ரம்
கேயம் கீதா நாம ஸஹஸ்ரம்
த்யேயம் ஸ்ரீபதி ரூபமஜஸ்ரம்

நேயம் ஸஜ்ஜன ஸங்கே சித்தம்
நேயம் ஸஜ்ஜன ஸங்கே சித்தம்
தேயம் தீனஜனாய ச வித்தம்
தேயம் தீனஜனாய ச வித்தம்

பஜ கோவிந்தம் பஜ கோவிந்தம்
கோவிந்தம் பஜ மூடமதே

அர்த்தம் அனர்த்தம் பாவய நித்யம்
நாஸ்தி தத: ஸுகலேச: ஸத்யம்
அர்த்தம் அனர்த்தம் பாவய நித்யம்
நாஸ்தி தத: ஸுகலேச: ஸத்யம்

புத்ராதபி தனபாஜாம் பீதி:
புத்ராதபி தனபாஜாம் பீதி:
ஸர்வத்ரைஷா விஹிதா ரீதி:
ஸர்வத்ரைஷா விஹிதா ரீதி:

பஜ கோவிந்தம் பஜ கோவிந்தம்
கோவிந்தம் பஜ மூடமதே

குரு சரணாம்புஜ நிர்பர பக்த:
ஸம்ஸாராத சிராத்பவ முக்த:
குரு சரணாம்புஜ நிர்பர பக்த:
ஸம்ஸாராத சிராத்பவ முக்த:

ஸேந்த்ரியமானஸ நியமாதேவம்
ஸேந்த்ரியமானஸ நியமாதேவம்
த்ருக்ஷ்யஸி நிஜ ஹ்ருதயஸ்தம் தேவம்
த்ருக்ஷ்யஸி நிஜ ஹ்ருதயஸ்தம் தேவம்

பஜ கோவிந்தம் பஜ கோவிந்தம்
கோவிந்தம் பஜ மூடமதே
பஜ கோவிந்தம் பஜ கோவிந்தம்
கோவிந்தம் பஜ மூடமதே

——————

பஜ கோவிந்தம் பஜ கோவிந்தம்
கோவிந்தம் பஜ மூடமதே
ஸம்ப்ராப்தே ஸந்நிஹிதே காலே
நஹி நஹி ரக்ஷதி டுக்ருங்கரணே

ஏ மூட மனமே! கோவிந்தனை வணங்குவாய். கோவிந்தனை வணங்குவாய். கோவிந்தனை வணங்குவாய்.
நாம் போகும் காலம் வரும் போது நாம் படித்த எந்த கல்வியும் உடன் வராது. வீணாக பொய்க் கல்விகளில் நேரத்தை வீணாக்காதே.
நீ கோவிந்தனை வணங்குவாய். கோவிந்தனை வணங்குவாய். கோவிந்தனை வணங்குவாய்.

———–

மூட ஜஹீஹி தனாகம த்ருஷ்ணாம்
குரு ஸத்புத்திம் மனஸி வித்ருஷ்ணாம்
யல்லபஸே நிஜ கர்மோப்பாத்தம்
வித்தம் தேன வினோதய சித்தம்

ஏ மூடனே அளவற்ற செல்வம் சேர்க்கும் உன் தணியாத தாகத்தை விட்டுவிடு.
சஞ்சலமும் பேராசையும் இல்லாமல் மெய்ப் பொருளைப் பற்றிய எண்ணங்களை உன் மனதில் நினை.
நீ அடையும் செல்வம் எல்லாமே நீ செய்யும் வினைகளாலும் வினைப் பயன்களாலும் தான்.
அதைக் கொண்டு உன் மனதில் திருப்தி அடை.
நீ கோவிந்தனை வணங்குவாய். கோவிந்தனை வணங்குவாய். கோவிந்தனை வணங்குவாய்.

————

நாரி ஸ்தனபர நாபிதேசம்
த்ருஷ்வா மாகா மோஹாவேசம்
ஏதன் மாம்ஸ வஸாதி விகாரம்
மனஸி விசிந்தய வாரம் வாரம்

அழகான பெண்களின் அழகிய கொங்கைகளையும் வயிற்றுப் பிரதேசங்களையும் பார்த்து மயக்க ஆவேசம் அடையாதீர்கள்.
இவையெல்லாம் புலால், கொழுப்பு மற்றும் அது போன்ற பொருட்களின் மாற்று வடிவங்கள்
மனதில் இதனை மீண்டும் மீண்டும் நினைத்துக் கொள்ளுங்கள்.
கோவிந்தனை வணங்குங்கள். கோவிந்தனை வணங்குங்கள். கோவிந்தனை வணங்குங்கள்.

—–

நளிநீ தள கத ஜலம் அதிதரளம்
தத்வத் ஜீவிதம் அதிசய சபலம்
வித்தி வ்யாத்யபிமானக்ரஸ்தம்
லோகம் சோகஹதம் ச சமஸ்தம்

தாமரை இலையில் தங்கி இருக்கும் நீரானது நிலையில்லாதது.
அது போல வாழ்க்கையும் மிகவும் நிலையில்லாதது
இந்த உலகில் எல்லாமும் எல்லாரும் வியாதியாலும் தற்பெருமையாலும் விழுங்கப்பட்டவர்கள்
மேலும் (அந்த வியாதியாலும் தற்பெருமையாலும் ஏற்படும்) சோகத்தால் அழிக்கப்பட்டவர்கள் இதை நீ அறிவாய்.
கோவிந்தனை வணங்குங்கள். கோவிந்தனை வணங்குங்கள். கோவிந்தனை வணங்குங்கள்.

———-

யாவத் வித்தோ பார்ஜன சக்த:
தாவன் நிஜ பரிவாரோ ரக்த:
பஸ்சாத் ஜீவதி ஜர்ஜர தேஹே
வார்த்தாம் கோபி ந ப்ருச்சதி கேஹே

எது வரை பொருள் சம்பாதிக்கும் வலிமை இருக்கிறதோ அது வரை தான் உறவும் நட்பும் நம்மிடம் அன்பும் பற்றும் கொண்டு இருக்கும்
பின்னர் வலிவிழந்து நடுங்கும் முதிர்ந்த உடலுடன் வாழும் போது நம் வீட்டில் நம்மை அண்டி வாழ்ந்தவர் கூட
நாம் எப்படி இருக்கிறோம் என்று கவலைப்பட மாட்டார்கள்.
கோவிந்தனை வணங்குங்கள். கோவிந்தனை வணங்குங்கள். கோவிந்தனை வணங்குங்கள்!

————-

யாவத் பவனோ நிவசதி தேஹே
தாவத் ப்ருச்சதி குசலம் கேஹே
கதவதி வாயௌ தேஹாபாயே
பார்யா பிப்யதி தஸ்மின் காயே

எது வரையில் உடம்பில் மூச்சுக் காற்று இருக்கிறதோ அது வரையில் தான்
உன் வீட்டில் இருப்பவர்கள் உன் நலன்களைப் பற்றி விசாரிப்பார்கள்.
உடலை விட்டு அந்த மூச்சுக் காற்று போன பின்னால் இது நாள் வரை பல முறை அந்த உடலுடன்
கூடி வாழ்ந்த மனைவியும் அந்த உயிரற்ற உடலைக் கண்டு பயப்படுவாள்.
கோவிந்தனை வணங்குங்கள். கோவிந்தனை வணங்குங்கள். கோவிந்தனை வணங்குங்கள்!

———————-

பாலஸ்தாவத் க்ரீடா சக்த:
தருணஸ்தாவத் தருணீ சக்த:
வ்ருத்தஸ்தாவத் சிந்தா சக்த:
பரே ப்ரஹ்மணி கோபி ந சக்த:

சிறு வயதிலோ விளையாட்டுச் செயல்களிலேயே ஒவ்வொருவரும் மூழ்கிப் போகின்றனர்.
பருவ வயதிலோ இனக்கவர்ச்சியிலேயே மனமெல்லாம் இருக்கிறது.
முதுமைக்காலத்திலோ எத்தனையோ கவலைகள்.
ஐயோ! பரம்பொருளைப் பற்றி எண்ண ஒருவருக்கும் தமது வாழ்க்கையில் நேரமே இல்லையே?
கோவிந்தனை வணங்குங்கள். கோவிந்தனை வணங்குங்கள். கோவிந்தனை வணங்குங்கள்!

—————-

கா தே காந்தா கஸ்தே புத்ர:
சம்சாரோயம் அதீவா விசித்ர:
கஸ்ய த்வம் க: குத ஆயாத:
தத்வம் சிந்தய ததிஹ ப்ராத:

யார் உனது துணைவி? யார் உனது புதல்வன்? இந்த உலகவாழ்க்கை மிகவும் விசித்ரமானது;
பெரிய பெரிய அறிவாளிகளையும் மயக்கக்கூடியது. நீ யாருக்கு உரியவன்? நீ யார்? எங்கிருந்து வந்தாய்?
அந்த உண்மையை இப்போது எண்ணிப் பார் சகோதரனே.
கோவிந்தனை வணங்குங்கள். கோவிந்தனை வணங்குங்கள். கோவிந்தனை வணங்குங்கள்!

————

ஸத் ஸங்கத்வே நிஸ்ஸங்கத்வம்
நிஸ்ஸங்கத்வே நிர்மோஹத்வம்
நிர்மோஹத்வே நிஸ்சல தத்வம்
நிஸ்சல தத்வே ஜீவன் முக்தி:

அடியவர், நல்லவர், உண்மைப் பொருளை அறிவதிலும் அடைவதிலும் நாட்டமுடையவர் இவர்களின் கூட்டு, பற்று இல்லாத நிலையை அளிக்கும்.
பற்று இல்லாத நிலையை அடைந்தால் மயக்கங்கள் இல்லாத நிலை கிடைக்கும்.
மயக்கம் இல்லாத நிலையை அடைந்தால் என்றும் நிலையான மறைப் பொருளை அடைய முடியும்.
அப்படி நிலையான மறைப் பொருளை அடைந்தால் இங்கேயே இப்போதே முக்தி நிலையை அடையலாம்.
கோவிந்தனை வணங்குங்கள். கோவிந்தனை வணங்குங்கள். கோவிந்தனை வணங்குங்கள்!

————

வயஸி கதே க: காம விகார:
சுஸ்கே நீரே க: காசார:
க்ஷீணே வித்தே க: பரிவார:
ஞாதே தத்வே க: சம்ஸார:

இளமை நீங்கி முதுமை வந்துவிட்டால் எங்கே போயின காமக் களியாட்டங்கள்?
நீர் நிலைகளில் நீர் வற்றிப் போனால் எங்கே போயின நீர் நிலைகளை நம்பி வாழும் பறவைகளும் விலங்குகளும்?
செல்வம் அழிந்து போனால் எங்கே போனார்கள் நம் நண்பர்களும் உறவினர்களும்?
உண்மைப் பொருளை அறிந்து கொண்ட பின் எங்கே போனது என்றும் மாறும் நிலையுடைய இந்த சம்ஸாரம்?
கோவிந்தனை வணங்குங்கள். கோவிந்தனை வணங்குங்கள். கோவிந்தனை வணங்குங்கள்!

————

கா தே காந்தா தன கத சிந்தா
வாதுல கிம் தவ நாஸ்தி நிவந்தா
த்ரிஜகதி சஜ்ஜன சங்கதிர் ஏகா
பவதி பவார்னவ தரனே நௌகா

மனைவி மக்கள், வீடு வாசல், சொத்து சுகம் போன்றவற்றில் இருந்து எழும் கவலைகள் உனக்கு ஏன்? .
மூடனே ஏன் இந்த நிலை உனக்கு? உனக்கு இவை நல்ல கதி இல்லை.
மூன்று உலகங்களிலும், உண்மையை விரும்பும் நல்லவர்களின் உண்மையான நட்பு மட்டுமே.
பிறப்பு இறப்பு என்னும் மாபெரும் கடலைக் கடக்க உதவும் படகு போன்றது.
கோவிந்தனை வணங்குங்கள். கோவிந்தனை வணங்குங்கள். கோவிந்தனை வணங்குங்கள்!

———–

தின யாமின்யௌ சாயம் ப்ராத:
சிஷிர வஸந்தௌ புனர் ஆயாத:
கால: க்ரீடதி கச்சதி ஆயு:
தத் அபி ந முஞ்சதி ஆசா வாயு:

பகலும் இரவும்,மாலையும் காலையும், வாடையும் கோடையும் மீண்டும் மீண்டும் வருகின்றன.
காலமோ தன் விளையாட்டினை விளையாடிக் கொண்டிருக்கிறது.
வாழ்நாளோ போய்க் கொண்டிருக்கிறது.
ஆனாலும் என் ஆசையெனும் புயல் மட்டும் நின்றபாடில்லை.
கோவிந்தனை வணங்குங்கள். கோவிந்தனை வணங்குங்கள். கோவிந்தனை வணங்குங்கள்!

———–

மா குரு தன ஜன யௌவன கர்வம்
ஹரதி நிமேஷாத் கால: ஸர்வம்
மாயா மயம் இதம் அகிலம் ஹித்வா
ப்ரம்ஹபதம் த்வம் ப்ரவிச விதித்வா

செல்வம் எப்போதும் நிலைக்காதது.
அது செல்வோம் செல்வோம் என்று சொல்வதால் தான் செல்வம் என்றே பெயர்.
சுற்றம், நண்பர்கள் இப்போது இருப்பார்கள்; நாளை இருக்க மாட்டார்கள்;
செல்வம் இருக்கும் வரை தான் எல்லாமும். இளமையோ நாளுக்கு நாள் நம்மை விட்டுத் தூரே செல்கிறது.
அதனால் செல்வம், சுற்றம்/நண்பர்கள் குழாம், இளமை இவற்றைப் பெற்றோம் என்ற கர்வம் கொள்ள வேண்டாம்.
பேரும் புகழும் இன்று வரும்; நாளை போகும்.
காலம் இந்த எல்லாவற்றையும் ஒரு நிமிடத்தில் அழித்து ஒழித்து விடும்.
தப்பித் தவறி தவறாக ஒரு வார்த்தை வந்தால் போதும்.
சேர்த்து வைத்த பெயரும் புகழும் காணாமல் போய்விடும்.
தப்பித் தவறி ஒரு சுடு சொல் சொன்னால் போதும்.
சுற்றமும் நட்பும் காணாமல் போய்விடும்.
தப்பித் தவறி ஒரு தவறான அடி எடுத்துவைத்தால் போதும்.
சேர்த்து வைத்தச் செல்வம் எல்லாம் காணாமல் போய்விடும்.
கால தேவன் (மரணம்) வந்துவிட்டாலோ எல்லாமே ஒரே நொடியில் காணாமல் போய்விடும்.
இங்கு எதுவுமே நிலையில்லாதது. தோற்ற மயக்கம். அழியக் கூடியது.
அதனால் அவைகளில் உள்ளப் பற்றினைத் துறந்துவிட்டு
இறைவனை அறியும் வழிகளில் நீ நுழைவாய்.
கோவிந்தனை வணங்குங்கள். கோவிந்தனை வணங்குங்கள். கோவிந்தனை வணங்குங்கள்!

—————

தமிழாக்கம்: ஸ்ரீ அரங்க. இரகுநாதன்

தனியன்கள்

காலடி தோன்றிய நாளடி தொட்டுஅவர்
காலடி பற்றிய காதலார்ச் … சீலர்க்கு
மாலடி பற்றுதல் மாணடி என்றவர்
தாளடி வீழ்ந்தேன் தவித்து.

பிரம்மஞானம் கூறி பிறப்பறுக்கும் ஆறென்(று)
இரண்டில்லா அத்வைதம் ஈந்தார் … சிறப்பொவ்வா
பத்தியில்லா ஞானமெனப் பண்டுரைத்தார் தாளிணையைப்
பத்திரமாய்ச் சிக்கெனவே பற்று.

வானப் பெரும்புகழ் வண்ஞானி சங்கரரின்
ஞானக் குவையெனும் நாயகன் பாமாலை
மோனப் பொருளுணர்ந்து முத்திபெற வெண்பாவில்
தீனன் பெயர்த்தேன் திளைத்து.

நூல்

ப⁴ஜ கோ³விந்த³ம் ப⁴ஜ கோ³விந்த³ம்
கோ³விந்த³ம் ப⁴ஜ மூட⁴மதே ।
ஸம்ப்ராப்தே ஸந்நிஹிதே காலே
நஹி நஹி ரக்ஷதி டு³க்ருʼங்கரணே ॥ 1॥

1) கோவிந்த கோவிந்த கூவிடுவாய் ஏமூடா
சேவித்து நீஉய்யும் சீலமிது .. ஆவிஏகும்
பாவியுந்தன் அந்திமநாள் பத்தியின்றிக் கற்றதெல்லாம்
மேவியுனைக் காவாது காண்

மூட⁴ ஜஹீஹி த⁴நாக³மத்ருʼஷ்ணாம்
குரு ஸத்³பு³த்³தி⁴ம் மநஸி வித்ருʼஷ்ணாம் ।
யல்லப⁴ஸே நிஜகர்மோபாத்தம்
வித்தம் தேந விநோத³ய சித்தம் ॥ 2॥

2) சொத்துகள் மீதுற்ற சூதான பற்றொழி
புத்தியால் பெற்றவை போற்றுவாய் ..மெத்த
உழைப்பின் உயர்வை உளத்தில் இருத்திப்
பிழையற வாழ்தலே பீடு

நாரீஸ்தநப⁴ரநாபீ⁴தே³ஶம்
த்³ருʼஷ்ட்வா மா கா³ மோஹாவேஶம் ।
ஏதந்மாம்ஸவஸாதி³விகாரம்
மநஸி விசிந்தய வாரம் வாரம் ॥ 3॥

3) நங்கையரின் ஊனழகில் நல்லோரும் நேர்கெடுவர்
தங்கஉடல் வெற்றுத் தசைக்கோளம் … அங்கஎழில்
உன்நிலை மாற்றா(து) உயர்ந்திட பக்திஆழ்
அந்நிலையே ஆ(று)என்(று) அறி.

நலிநீத³லக³தஜலமதிதரலம்
தத்³வஜ்ஜீவிதமதிஶயசபலம் ।
வித்³தி⁴ வ்யாத்⁴யபி⁴மாநக்³ரஸ்தம்
லோகம் ஶோகஹதம் ச ஸமஸ்தம் ॥ 4॥

4) கமலஇலை நீர்முத்து காண்சலன வாழ்க்கை
இமயமலை அன்னபெரும் இன்னல் … (இ)யமபயத்
துன்பத்தின் தாக்கத்தைத் தூளாக்கும் அப்பற்றே
இன்பத்துள் எல்லாம் இறை.

யாவத்³வித்தோபார்ஜநஸக்த-
ஸ்தாவந்நிஜபரிவாரோ ரக்த: ।
பஶ்சாஜ்ஜீவதி ஜர்ஜரதே³ஹே
வார்தாம் கோঽபி ந ப்ருʼச்ச²தி கே³ஹே ॥ 5॥

5) பெறுமுன் உழைப்பால் பெருகும் உறவால்
பெறுவாய் மகிழ்ச்சி பிறரால் … ஒருகால்
செயலகெட்(டு) உடல்கெட்டு சீர்கெட்ட காலை
அயல்பட்டுச் செல்வர் அகன்று.

யாவத்பவநோ நிவஸதி தே³ஹே
தாவத்ப்ருʼச்ச²தி குஶலம் கே³ஹே ।
க³தவதி வாயௌ தே³ஹாபாயே
பா⁴ர்யா பி³ப்⁴யதி தஸ்மிந்காயே ॥ 6॥ 

6) உயிரோட்டம் உள்ளவரை உன்சுற்றம் கூடும்
உயிரோட்டம் நின்றாலோ ஓடும் … உயிரனைய
இல்லாளும் ஆவியிலா இக்கூட்டிற் கஞ்சியங்கே
நில்லாமல் நீங்கல் நினை

பா³லஸ்தாவத்க்ரீடா³ஸக்த:
தருணஸ்தாவத்தருணீஸக்த: ।
வ்ருʼத்³த⁴ஸ்தாவச்சிந்தாஸக்த:
பரமே ப்³ரஹ்மணி கோঽபி ந ஸக்த: ॥ 7॥ 

7) குழவிப் பருவம் குதூகலம ஆகும்
இளமை வனிதையர் ஈனக் …களியினில்
மீதமும் இல்லறம் மென்றிட என்றுதான்
நாதனை எண்ணுவாய் நீ

கா தே காந்தா கஸ்தே புத்ர:
ஸம்ஸாரோঽயமதீவ விசித்ர: ।
கஸ்ய த்வம் க: குத ஆயாத-
ஸ்தத்த்வம் சிந்தய ததி³ஹ ப்⁴ராத:  ॥ 8॥  

8) பெற்றவர் உற்றவர் பிள்ளையும் சுற்றமும்
வெற்றுற(வு) ஆகிடும் வேடிக்கை … மற்றிவர்பால்
பற்றோடு தாபமேன் பாசமேன் நேசமேன்
சற்றுநீ சிந்திப்பாய் சீர்.

ஸத்ஸங்க³த்வே நிஸ்ஸங்க³த்வம்
நிஸ்ஸங்க³த்வே நிர்மோஹத்வம் ।
நிர்மோஹத்வே நிஶ்சலதத்த்வம்
நிஶ்சலதத்த்வே ஜீவந்முக்தி: ॥ 9॥

9) நல்லவர் நட்பால் நசிந்திடும் வீண்அவா
வல்லதாம் ஆசை விலகிடும் … நில்லாது
மோகமும் ; உள்ளமும் ஒருமுகப் பட்டிடின்
வேகமாய்க் கிட்டிடும் வீடு.

கா தே காந்தா த⁴நக³தசிந்தா 
வாதுல கிம் தவ நாஸ்தி நியந்தா । 
த்ரிஜக³தி ஸஜ்ஜநஸங்க³திரேகா 
ப⁴வதி ப⁴வார்ணவதரணே நௌகா ॥ 10॥ 

10) மக்கள் மனைவியென மாயச் சகதியில்
சிக்கித் தவிக்கும் சிறுமதியே …. முக்காலும்
நல்லவர் நட்பொன்றே நம்பிறப் பாழியை
வெல்கிற ஓடமென் றுணர்

ஜடிலோ முண்டீ³ லுஞ்சி²தகேஶ:
காஷாயாம்ப³ரப³ஹுக்ருʼதவேஷ: ।
பஶ்யந்நபி ச ந பஶ்யதி மூடோ⁴
ஹ்யுத³ரநிமித்தம் ப³ஹுக்ருʼதவேஷ: ॥ 11॥

11) மழித்தலும் நீட்டலும் மாற்றிடாப் பற்றை
ஒழித்திடாப் பொய்யன் உலகம்…பழித்த(து)
அழித்திடா ஞானமில் அந்தகன் அவனைக்
கொழித்திடும் எத்தனென்றே கொள்

அங்க³ம் க³லிதம் பலிதம் முண்ட³ம்
த³ஶநவிஹீநம் ஜாதம் துண்ட³ம் ।
வ்ருʼத்³தோ⁴ யாதி க்³ருʼஹீத்வா த³ண்ட³ம்
தத³பி ந முஞ்சத்யாஶாபிண்ட³ம் ॥ 12॥

12) உடலம் தளர்ந்தும் உரோமம் நரைத்தும்
நடக்கக் கழியே நயப்பார் … கடைவாயிற்
பற்களும் போயினும் பாரிதன் மானிடர்
பற்றுகள் விட்டிலர் பார்

அக்³ரே வஹ்நி: ப்ருʼஷ்டே² பா⁴நு:
ராத்ரௌ சுபு³கஸமர்பிதஜாநு: ।
கரதலபி⁴க்ஷஸ்தருதலவாஸ-
ஸ்தத³பி ந முஞ்சத்யாஶாபாஶ: ॥ 13॥

13) முகத்தை முழங்காலில் மூடி உறக்கச்
சுகத்தில் திளைத்துச் சுவைப்பான் …. புகலென
ஈண்டும் மரத்தடி ஏழையும் ஆசைகள்
ஈண்டல் விடுத்தல் இலை

குருதே க³ங்கா³ஸாக³ரக³மநம்
வ்ரதபரிபாலநமத²வா தா³நம் ।
ஜ்ஞாநவிஹீந: ஸர்வமதேந
முக்திம் ந ப⁴ஜதி ஜந்மஶதேந ॥ 14॥

14) கங்கை குளித்தும் கடலில் முழுகினும்
அங்கை சுருக்கா(து) அளிப்பினும் …. பொங்கிடும்
ஞானம்கை கூடார்க்கு நண்ணும் பிறப்புநூறும்
மோனம்கை கூடாது காண்

ஸுரமந்தி³ரதருமூலநிவாஸ:
ஶய்யா பூ⁴தலமஜிநம் வாஸ: ।
ஸர்வபரிக்³ரஹபோ⁴க³த்யாக:³
கஸ்ய ஸுக²ம் ந கரோதி விராக:³ ॥ 15॥

15) சொத்துச் சுகங்களால் சோரா தொதுக்கியே
வெற்றுத் தரையில் விழிமூடார் … சித்தம்
சிறிதும் கலங்காத சீலோர் மகிழ்வைப்
பறித்துக் குலைப்பவர் பாழ்

யோக³ரதோ வா போ⁴க³ரதோ வா
ஸங்க³ரதோ வா ஸங்க³விஹீந: ।
யஸ்ய ப்³ரஹ்மணி ரமதே சித்தம்
நந்த³தி நந்த³தி நந்த³த்யேவ ॥ 16॥

16) இனிமைக் களிபெற்றும் இன்யோகம் கற்றும்
தனிமை விழைந்தும் தகவோர் … கனிந்தும்
உகப்பாய்ப் பரத்தில் ஒருங்கிணைந் தார்க்கிவ்
இகத்திலும் இன்பம் இலக்கு

ப⁴க³வத்³கீ³தா கிஞ்சித³தீ⁴தா
க³ங்கா³ஜலலவகணிகா பீதா ।
ஸக்ருʼத³பி யேந முராரிஸமர்சா
க்ரியதே தஸ்ய யமேந ந சர்சா ॥ 17॥

17) கங்கைச் சுவைநீரைக் கைத்தலம் மாந்தியும்
அங்கண் அரியுரை அன்புளம் …. தங்கிடத்
தோன்றும் பொழுதில் தொழுது வழிபட
ஈண்டும் பிறப்பொன் றிலை

ரத்²யாசர்படவிரசிதகந்த:²
புண்யாபுண்யவிவர்ஜிதபந்த:² ।
யோகீ³ யோக³நியோஜிதசித்தோ
ரமதே பா³லோந்மத்தவதே³வ ॥ 18॥

18) கந்தல் உடுத்திக் கடுவினை நீக்கியும்
அந்தத் தியானலயிப்(பு) ஆழ்பவர் … புந்தியுடைப்
பிள்ளையாய் யோகியாய்ப் பிச்சிபோல் வாழ்வரே
தெள்ளியன் நற்றாள் திளைத்து

கஸ்த்வம் கோঽஹம் குத ஆயாத:
கா மே ஜநநீ கோ மே தாத: ।
இதி பரிபா⁴வய ஸர்வமஸாரம்
விஶ்வம் த்யக்த்வா ஸ்வப்நவிசாரம் ॥ 19॥ 

19) எவருந்தன் பெற்றோர் உறவென்று பார்க்கில்
இவரெல்லாம் பொய்யான ஏய்ப்பே … இவற்றைப்
புரட்டென்றும் மாயப் புரிவென்றும் தேரி
விருட்டென்று மாயை விரட்டு

த்வயி மயி சாந்யத்ரைகோ விஷ்ணு-
ர்வ்யர்த²ம் குப்யஸி மய்யஸஹிஷ்ணு: ।
ப⁴வ ஸமசித்த: ஸர்வத்ர த்வம்
வாஞ்ச²ஸ்யசிராத்³யதி³ விஷ்ணுத்வம் ॥ 20॥

20) என்னுள் இருப்பான் இதர ருளுமிருப்பான்
என்னைப் பொருளின்றி ஏசாதே … தன்னுளே
காண்பானை மாற்றாருள் காண்பாரை மாறுகள்
காணாமல் நீங்கிடும் காண்

ஶத்ரௌ மித்ரே புத்ரே ப³ந்தௌ⁴
மா குரு யத்நம் விக்³ரஹஸந்தௌ⁴ ।
ஸர்வஸ்மிந்நபி பஶ்யாத்மாநம்
ஸர்வத்ரோத்ஸ்ருʼஜ பே⁴தா³ஜ்ஞாநம் ॥ 21॥

21) நண்பன் பகையென்றும் நம்மவர் சுற்றமென்றும்
மண்ணில் பொருளற்ற மாறுகள் … உன்னுடைச்
சக்தியைப் பேதத்தில் சாகடித்தால் எப்போது
முத்தியை ஏற்பாய் மொழி

காமம் க்ரோத⁴ம் லோப⁴ம் மோஹம்
த்யக்த்வாssத்மாநம் பா⁴வய கோsஹம் । 
ஆத்மஜ்ஞாநவிஹீநா மூடா⁴-
ஸ்தே பச்யந்தே நரகநிகூ³டா:⁴ ॥ 22॥ 

22) சினத்துடன் காமம் சிதைத்திடும் ஆசை
மனத்துள மாயையும் மாய்க்கத் ..துணையினைத்
தேராத மூடனைத் தீயாக ஆரிருள்
சோரா தெரித்திடும் சூழ்ந்து

கே³யம் கீ³தாநாமஸஹஸ்ரம்
த்⁴யேயம் ஶ்ரீபதிரூபமஜஸ்ரம் ।
நேயம் ஸஜ்ஜநஸங்கே³ சித்தம்
தே³யம் தீ³நஜநாய ச வித்தம் ॥ 23॥

23) ஆயிரம் நாமமொடு ஆர்த்திடுவாய் கீதையும்நீ
மாயவனைத் தூயவுளத் துள்ளிருத்து … ஆய்ந்தபின்னர்
நல்லோரின் நட்பினையே நாடிநீ பெற்றதெல்லாம்
இல்லார்க்கும் ஈவாய் இசைந்து

ஸுக²த: க்ரியதே ராமாபோ⁴க:³
பஶ்சாத்³த⁴ந்த ஶரீரே ரோக:³ ।
யத்³யபி லோகே மரணம் ஶரணம்
தத³பி ந முஞ்சதி பாபாசரணம் ॥ 24॥

24) மனிதா திளைக்கிறாய் மாதர் களியில்
பிணியில் உழல்கிறாய் பின்னர் … இனிஇதைச்
சாவுதான் நீக்கிச் சரிசெய்யும் என்றறிந்தும்
தீவினை நீக்கிடாய் தேர்ந்து

அர்த²மநர்த²ம் பா⁴வய நித்யம்
நாஸ்திதத: ஸுக²லேஶ: ஸத்யம் ।
புத்ராத³பி த⁴நபா⁴ஜாம் பீ⁴தி:
ஸர்வத்ரைஷா விஹிதா ரீதி: ॥ 25॥

25) நிதியம் அமைதியை நீக்கும் மகிழ்ச்சி
மிதிபடும் செல்வம் மிகுந்தால் … விதியால்
மதித்த மகனும் மதியாப் பகையாம்
பொதிந்த அறமிதைப் போற்று

ப்ராணாயாமம் ப்ரத்யாஹாரம்
நித்யாநித்ய விவேகவிசாரம் ।
ஜாப்யஸமேதஸமாதி⁴விதா⁴நம்
குர்வவதா⁴நம் மஹத³வதா⁴நம் ॥ 26॥

26) பலனடக்கும் மூச்சுப் புலனொடுக்க யார்க்கும்
நலனடக்கும் நில்லாமை நிற்றல்.. கலங்கியும்
ஓர்ந்தும் உரைத்தும் இறைமையில் ஆழ்பவர்
சேர்ந்தாரே வீடெனும் சீர்.

கு³ருசரணாம்பு³ஜநிர்ப⁴ரப⁴க்த:
ஸம்ஸாராத³சிராத்³ப⁴வ முக்த: ।
ஸேந்த்³ரியமாநஸநியமாதே³வம்
த்³ரக்ஷ்யஸி நிஜஹ்ருʼத³யஸ்த²ம் தே³வம் ॥ 27॥

27) குருவவர் தாளைக் குவையெனக் கொள்வார்க்(கு)
இருவினை இன்னல்கள் இல்லை … உருகும்
புலன்கள் உருவில் புகுந்திடக் காட்டும்
நலன்கள் இறைமை நமக்கு

——————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ அரங்க. இரகுநாதன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ சங்கர பாகவதாள் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ ஸ்வாமி பூந்தானம் அருளிச் செய்த -ஸ்ரீ ஞானப்பான –

January 22, 2023

இவர் பதினாறாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். நீண்ட காலம் கழித்து பிறந்த குழந்தையை இழக்க நேரிட்டபொழுது குருவாயூரப்பனை வேண்டி எழுதியதே ஞானப்பான என்னும் நூல். இந்த நூல் எளிய மலையாள நடையில், சமசுகிருதம் கலக்காமல், உயர்ந்த தத்துவக் கருத்துகளை உள்ளடக்கியவாறு எழுதப்பட்டது.

இது ஞான ஊற்று என்பதுதான். ஊற்று என்பதால் இது பானம்-அள்ளிப் பருக வேண்டிய பானம்-ஞான பானம்  மொத்தம் 91 கிருதிகள் இருந்தன

தன்னுடைய மகன் மரணத்தின் சோகத்தைத் தாங்க முடியாமல் குருவாயூரப்பனையே தன் மகனாக நினைச்சுப் பாடியதுதான் இந்த ஞானப்பானம்.

பூந்தானம் நம்பூதிரி சிறந்த பக்தர். படிப்பறிவு இல்லாதவர். பக்தியுடன் இறைவன் பெயரில் தா மனதிற்குத் தோன்றியபடி மலையாளத்தில் சிறு சிறு கவிதைகள் எழுதுவார். ஒரு சமயம் அவர் கண்ணனைப் பற்றிய பாடல்களை எழுதி, மேல்பத்தூர் நாராயண பட்டத்திரியிடம் கொடுத்து, தயவு செய்து இதில் தவறு ஏதும் இருந்தால் திருத்தித் தாருங்கள் என்று சொன்னார். நாராயண பட்டத்திரி தான் சிறந்த அறிவாளியென்ற கர்வத்தில், “இதில் நிறைய இலக்கணப் பிழை இருக்கிறது, படிப்பறிவு இல்லாதவன் எழுதுவது போல் இருக்கிறது” என்று ஏளனமாகக் கூறினார். பூந்தானம் மிகுந்த வருத்தத்துடன் சென்று விட்டார். அவர் மனம் கலங்கியது. அவர் வருத்தத்தை குருவாயூரப்பனால் சகிக்க முடியவில்லை. நாராயண நம்பூதிரியின் ரோகத்தின் உபத்திரவத்தை அதிகப்படுத்தினார். ரோகத்தின் அவஸ்தையில் அவர் அலறினார்.

அடுத்த நாள் நாராயண பட்டத்திரியின் வீட்டிற்கு ஒரு அழகிய இளைஞன் வந்தான். நீங்கள் இயற்றிய நாராயணீயத்தைக் கேட்பதற்காக வந்திருக்கிறேன், படியுங்கள் என்று சொன்னான். பட்டதிரியும் மகிழ்ச்சியுடன் படிக்க ஆரம்பித்தார். அவர் படிக்கப் படிக்க, பல இடங்களில் பிழை இருக்கிறது என்று அந்த இளைஞன் சொல்லிக் கொண்டே வந்தான். பட்டத்திரி, “இத்தனை தவறுகளைச் சொல்லும் நீ யார்?” என்று கேட்டார். உடனே அந்த இளைஞன் மறைந்தான். புல்லாங்குழலை ஊதிக்கொண்டு அங்கே குருவாயூரப்பன் காட்சி அளித்தார். மேலும், “நாராயண நம்பூதிரியின் பக்தியை விட பூந்தானத்தின் பக்தியின் மேல் எனக்கு விருப்பம் அதிகம், அவரது பாடல்களில் இலக்கணம் இல்லாவிட்டாலும் பக்தி இருக்கிறது, பூந்தானத்திடம் மன்னிப்பு கேள், உன்னுடைய ரோகத்தின் உபத்திரவம் குறையும்” என்று கூறி மறைந்தார்.

உடனே நாராயண பட்டத்திரி, தன்னுடைய வித்யா கர்வத்தை எண்ணி வெட்கி, பூந்தானத்திடம் மன்னிப்பு கேட்டார். மேலும், அவரால் தனக்கு அப்பனின் தரிசனம் கிடைத்ததில் மகிழ்ந்து அவருக்குத் தன் மோதிரத்தையும் பரிசாக அளித்தார். “நமது இந்த நட்பின் அடையாளமாக இந்த மோதிரம் எப்போதும் உங்கள் விரலிலேயே இருக்கவேண்டும்,அந்தக் குருவாயூரப்பனே நேரில் வந்து கேட்டாலொழிய வேறொருவருக்கும் தரக் கூடாது” என்று அன்புக் கட்டளையிட்டார். அதனால்தான் அந்த மோதிரத்தைக் கொள்ளையர்கள் பார்த்துவிடக் கூடாது என்றும், மாங்காட்டச்சனிடம் அதைத் தரவும் தயங்கினார் பூந்தானம்.  கண்ணனுக்கு பூந்தானம் நம்பூதிரியும், நாராயண பட்டத்திரியும் இரு கண்களைப் போன்றவர்கள் என்பது  இதிலிருந்து விளங்குகிறது. பின்னாளில் “ஞானப்பான” என்ற சிறந்த காவியத்தையும் பூந்தானம் இயற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இது 360 வரிகளைக் கொண்டது. மலையாளத்து பகவத் கீதை என்ற சிறப்புப் பெயரும் இதற்கு உண்டு.

46,660 பேர் கூடி இந்த நூலில் உள்ள பாடல்களைப் பாடியுள்ளனர். இது கின்னஸ் புத்தகத்தில் பதிவாகியிருக்கிறது.

அவர் எழுதிய காப்பியங்கள்:

  • ஞானப் பானா
  • பாஷாகர்ணமிருதம்
  • ஆஞ்சனா ஸ்ரீதரா கிருஷ்ணா
  • அம்பாடி பைதல்
  • ஹரி ஸ்தோத்ரம்
  • ஸப்த ஸ்வர கீர்த்தனம்
  • கான ஸங்கம்
  • நீயத்ரே கோவிந்தா
  • மூலதத்வம்
  • மாயா வாமனம்( தமிழ்)
  • குரு ஸ்துதி
  • த்வாதச நாம கீர்த்தனம்
  • தச அவதார ஸ்தோத்ரம்
  • வாஸுதேவ ஸ்துதி (தமிழ்)
  • அஷ்டாக்ஷர கீர்த்தனம்

மேற்கூறியவை உட்பட ஏறக்குறைய 60 காவியங்கள் பூந்தானம் இயற்றியுள்ளார்.

மூன்னுமொன்னிலடங்குன்னு பின்னெயும் ஒன்னுமில்லபோல் விசுவமன்னேரத்து

இந்த வரிகளில் பூந்தானம் இரண்டு பதங்களை கையாண்டு நம்மையெல்லாம் வியப்பிலாழ்த்துகிறார். ‘மூன்றும் ஒன்றில் அடங்கிவிடுகிறது; அப்பொழுது எதுவுமே இல்லாமல் ஆகிவிடுகிறது’ எங்கிறார் பூந்தானம்.

எந்த மூன்று? எந்த ஒன்று?

ஒன்று என்பது பரமாத்மனைக்குறிக்கும். பரமாத்மன் அல்லது பர பிரம்மம் ஏகன், அத்விதீயன், அவனன்றி வேறொன்றில்லை, ஓங்காரஸ்வரூபன்,அக்ஷரன்( நாசமில்லாதவன்), ஆதியும் அந்தமும் இல்லாதவன், அவ்யக்தன், அவனே நிர்குணன், சகுணன், நித்தியன், சுயம் பிரகாசிக்கின்றவன், சர்வ வியாபி, சர்வ சக்தன், சர்வஞ்சன், சத்-சித்-ஆனந்தன்

நமது வேத உபனிஷத்துக்கள் நிறைய ‘மூன்றுகள்’ குறிப்பிட்டுள்ளது.

  • பரமாத்மா ( நிர்குணபிரம்மம், ஸகுண பிரம்மம்), பிரகிருதி( மஹா மாயா, யோக மாயா, லோக மாயா),ஜீவாத்மா
  • மும்மூர்த்திகள்
  • முப்பெரும் தேவிகள்
  • சிருஷ்டி, பாலனம், சம் ஹாரம்
  • பிரகிருதியின் முக்குணங்கள்
  • ஜீவாத்மாவின் அவஸ்தாத்ரயம்
  • ஞாதா, ஞேயம், ஞானம்
  • பூதம், நிகழ்காலம், வருங்காலம்

————————-

பாடல்

கண்ணன் வருகின்ற நேரம் கண்ணன் வருகின்ற நேரம் –

கரையோரம் தென்றல் கண்டுகொழித்தது பாரும் – அந்தக் கானத்திடை மோனக்குயில் ஓசைக்கு இணையாதென

தரமான குழலிசை கேளும் – போன ஆவி எல்லாம் கூட மீளும்!

(கண்ணன்)

சல்ல சலனமிட்டு ஓடும், நதி பாடும் – தென்றல் தங்கித் தங்கிச் சுழன்று ஆடும் – நல்ல

துதிபாடிடும் அடியாரவர் மனமானது இதுபோலென துள்ளித் துள்ளிக் குதித்தாடும் – புகழ்

சொல்லிச் சொல்லி இசைபாடும்!

(கண்ணன்)

கண்ணன் நகைபோலே முல்லை, இல்லையில்லை – என்று கண்டதும் வண்டொன்றும் வர்லை

இது கனவோ அல்ல நனவோ எனக் கருதாதிரு மனமே – ஒரு

காலமும் பொய் ஒன்றும் சொல்லேன் – எங்கள் கண்ணன் அன்றி வேறு இல்லேன்!

(கண்ணன்)

தாழை மடல் நீர்த்து நோக்கும், முல்லை பார்க்கும் – என்ன செளக்கியமோ என்று கேட்கும் – அட

மொழி பேசிட இதுவோ பொழுதெனவோ – மாதவனின்

முத்து முடி தனில் சேர்வோம் – அங்கே மெத்த மெத்தப் பேசி நேர்வோம்

பனம் என்பது மலையாளத்தில் ஒரு வித தனிப்பட்ட ராகம். நம் ஊர் காவடி சிந்து, நொண்டிச்சிந்து மாதிரி. அந்த ராகத்தில் வார்த்தைகளை நிரப்பி பூந்தானம் எழுதிய காவியம். அவரே பாடியது. ஞானம் தானே அறிவின் முதிர்ச்சி. ஞானப்பனம் பக்தி, ஞானத்தின் ஒரு அற்புத கலவை. சிலர் பான என்பது ஒரு மண் சட்டி பானையை குறிக்கிறது. ஞானம் நிரம்பிய பானை என்பார்கள். உருண்டையாக இருந்தால் லட்டு, வில்லையாக இருந்தால் மைசூர்பாக். மொத்தத்தில் கடலைமாவு சர்க்கரை கலவை தானே.-மலையாள பகவத் கீதை என்றே பெயர் பெற்றது இந்த ஞானப்பானம்.

”பக்தி ஒன்பது வகை. ஸ்ரவணம் (கேட்பது), கீர்த்தனம் (பாடுவது, தனியாகவோ சேர்ந்தோ), விஷ்ணு ஸ்மரணம் (சதா விஷ்ணுவை நினைப்பது, அதை தான் அவர் எப்போதும் செயகிறார்), பாதசேவனம் ( திருவடி தொழல் ), அர்ச்சனம் (நாமங்களால் போற்றுவது) வந்தனம் (பூஜை வழிபாடு) தாஸ்யம் (தன்னை சேவகனாக அர்பணிப்பது) சக்யம் (நண்பனாக பகவானோடு பழகுவது), ஆத்மநிவேதனம் (உள்ளம் உடல் இரண்டோ டும் சரணடைவது). இதில் ரொம்ப சுலபமானது கேட்பது பாடுவது.
பூந்தானம் நாள் என்று மலையாள கும்ப மாதத்தில், அசுவதி நட்சத்திரத்தில் குருவாயூரில் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் ஞானப்பானா ஓதப்பெறும். மேலும் பூந்தானம் பிறந்த வீட்டில் ஐந்துநாள் இலக்கிய விழாக்கள் கொண்டாடப்படுகின்றன. மேல் குறிப்பிட்ட நாள் ஞானப்பானாவில் பூந்தானத்தால் சுட்டப்பெறுவதால் இந்நாள் பூந்தான நாளாகக் கொண்டாடப்பெறுகிறது.
————-

கிருஷ்ண கிருஷ்ணா முகுந்த ஜநார்த்தனா
கிருஷ்ண கோவிந்த நாராயணா ஹரே
அச்யுத அநந்த கோவிந்த மாதவா
ஸச்சிதானந்த நாராயணா ஹரே

குருநாதன் துணசெய்க ஸந்னதம்

திருநாமங்ஙள் நாவின் மேல் எப்பொழும்

பிரியாதெயிரிக்கேணம்  நம்முடே

நரஜன்மம் ஸபல மாயிடுவான்      (2)

குரு நாதன் துணை செய்யட்டும்
சந்ததம் திரு நாமங்கள் நாவின் மேல் எப்பொழுதும் பிரியாதே இருக்க அருளட்டும்
நமது நர ஜென்மம் ஸபலமாக்கி அருளட்டும் –

திருநாமங்கள் நாவிலிருந்து என்றும் எப்போதும் பிரியாமல் இருக்க நமது மானிடப் பிறவி சாபல்ய மடைய குருநாதன் துணை செய்யட்டும்

——–

கால லீலா–

இன்னலேயோளம் எந்தென்னறிஞ்ஞிலா

இனி நாளேயும்  எந்தென்னறிஞ்ஞிலா

இன்னீக்கண்ட தடிக்கு  வினாசவும்

இன்ன நேரம் என்னேதுமறிஞ்ஞிலா     (3)

நேற்று வரை என்ன நடக்கும் என்றறியவில்லை

இனி நாளைக்கும் என்னவென்று தெரியவில்லை

இன்றிருக்கும் இவ்வுடலுக்கு அழிவும் இன்ன

நேரத்தில் மரணம் என்றும் அறிவதில்லை

சாஸ்வதமில்லாத இந்த காற்றடைத்த பை பொய்யாக மாறலாமே. ஏதோ ஒரு காரணத்தால் தான் பகவான் நமக்கு முற்பிறவி ஞாபகமோ அடுத்த பிறவி பற்றி ஏதாவதோ தெரியாமல் வைத்திருக்கிறான். நாம் வாழும்வரை நமது இப்போது நடக்கும் வாழ்க்கை பிரச்னையே பெரிய மலைபோல் இருக்கிறதே…” என்கிறார் பூந்தானம். ஒரு நல்ல யோசனை. இப்போது இருக்கிற நேரத்தில் கிருஷ்ணனை கெட்டியாக பிடித்துக்கொள்வோம். அவனிருக்க பயமேன்?

கண்டுகண்டங்ஙிருக்கும் ஜனங்ஙளே

கண்டில்லேன்னு வருத்துன்னதும் பவான்

ரெண்டு நாலு தினம் கொண்டொருத்தனே

தண்டிலேற்றி நடத்துன்னதும் பவான்     (4)

பார்த்துக் கொண்டிருக்கும் ஜனங்களைக் காண முடியாமல் செய்வதும் பகவான் ஓரிரு தினங்களில் ஒருவனைப் பல்லக்கிலேற்றி மன்னனாக்குவதும்  பகவான்

மாளிக முகளேறிய மன்னண்டெ தோளில்

மாறாப்பு கேற்றுன்னதும் பவான் (5-1)

மாடமாளிகை மேல் அமர்ந்திருக்கும்  மன்னனின் தோளில் அழுக்கு மூட்டை ஏற்றுவதும் பகவான் கண்டறிவோர் சிலர் கண்டாலும் அறியாதோர் சிலர்

கண்டுகண்டங்கிரிக்கும் ஜனங்களெ

                                    கண்டில்லென்னு வருத்துன்னதும் பவான்

                                    ரண்டுநாலு தினம் கொண்டொருத்தனெ

                                    தண்டிலேற்றி நடத்துன்னதும் பவான்

                                    மாளிகமுகளிலேறிய மன்னன்றெ

                                    தோளில் மாறாப்பு கேற்றுன்னதும் பவான்–5-1

“ நாம் தினமும் பார்த்துக் கொண்டேயிருக்கின்ற மனிதர்களை, காணாமல் பண்ணுவதும் அந்த பகவான் தான்;இரண்டு நாலு நாட்களில்  நல்ல ஆரோக்கியத்துடன் நடமாடிக்கொண்டிருக்கும் ஒருவனை பாடை மேல் படுக்கவைத்து எடுத்துச் செல்ல வைப்பதும் அந்த பகவான் தான்; மாடமாளிகையில் உல்லாச வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருக்கின்ற மன்னனை தோளில் துண்டு போட்டுக்கொண்டு தெருவில் நடக்க வைப்பதும் அந்த பகவான் தான்.”

——-

அதிகார பேதம்

கண்டால் ஒட்டறியுன்னு சிலரிது

கண்டாலும் திரியா சிலர்க்கேதுமே      (5-2)

கண்டதொன்னுமே ஸத்தியமில்லென்னது

மும்பே கண்டங்ஙறியுன்னிது சிலர்

மனுஜாதியில்த் தன்னெ பலவிதம்

மனஸ்ஸினு விசேஷமுண்டோர்க்கணம்   (6)

காண்பதேதும் நிஜமல்லஎனக் கண்டறிவோர் சிலர் மானிட ஜாதியில்  இவ்வாறு பலரும் பலவிதம் மனசுக்கு  ஓரோர் குணம் என்பதும் அறிந்திருத்தல் நலமே

பலர்க்கும் அறியேணமென்னிட்டல்லோ

பலஜாதி பறயுன்னு சாஸ்த்ரங்ஙள்

கர்மத்தில் அதிகாரி ஜனங்ஙள்கு

கர்ம சாஸ்த்ரங்ஙளுண்டு பலவிதம்       (7)

பலரும் அறிய வேண்டும் என்றுதானே பல வர்ண தர்மங்களைச் சொல்கின்றன சாத்திரங்கள் அவரவர் வர்ண பேதங்கள்  அனுசரித்துபாவிக்கும் மக்களுக்கு கர்ம சாத்திரங்கள் பலவுண்டு பலவிதம்

ஸாங்க்ய ஸாஸ்த்ரங்ஙகள் யோகங்ஙளென்னிவ

சங்க்யயில்லது நில்க்கட்டே ஸர்வவும்  (8-1)

———-

தத்வ விசாரம்

சுழந்நீடுன்ன ஸம்ஸார சக்ரத்தில்

உழன்னீடும் நமுக்கறிஞ்ஞீடுவான்          (8-2)

சாங்கிய சாத்திரங்கள் யோகங்கள் ஆகியவை கணக்கில் அடங்காது இருக்கட்டும் ஒரு புறம் அனைத்தும்சுழன்று கொண்டிருக்கும் சம்சார சக்கரத்தில் சுழலும் நம் போன்றோர்  அறிந்து கொள்ள

அறிவுள்ள மஹத்துக்களுக்குண்டொரு

பரமார்த்தம் அருள் செய்திரிக்குன்னு

எளிதாயிட்டு முக்தி  லபிப்பானாய்

செவி தன்னிது கேள்ப்பின் எல்லாவரும்         (9)

ஞானிகளான மகான்கள்  பரம் பொருள் ஒன்றே என்றறிந்து அருளிச் செய்துள்ளனர் எளிதாய் முக்தி கிடைக்க செவி கொடுத்துக் கேட்பீரே அனைவரும்

நம்மெ ஒக்கேயும்  பந்திச்ச  சாதனம்

கர்மம் என்னறியேண்டது முன்பினால்

முன்னில் இக்கண்ட  விஸ்வம்  அசேஷவும்

ஒன்னாய் உள்ளொரு ஜோதிஸ்வரூபமாய்       (10)

நம் அனைவரையும் கட்டி இருப்பது கர்மமே என்றறிய வேண்டும் முன்னால் நாம் காணும் அகிலமெல்லாம் ஒன்றேயான ஒரு ஜோதிஸ்வரூபமே

தோற்றம் என்றால் மறைவு என்பது சொல்லாமல் தெரிவது. உண்டானது எல்லாமே இல்லாததாகிவிடும். நடுவில் சில காலம் மாயையால் சாஸ்வதமாக நிலைத்த்திருப்பது போன்ற பொய் எண்ணத்தை வளர்க்கும். எல்லாமே ஒருநாள் ஜோதி ஸ்வரூபத்தில் கலக்கும். ஆக்கம் அழிவில் நிறைவுறும். அதை தான் மஹா பிரளயம் என்போம். ஒன்று என்றும் அழியாமல் சிறிய தீபமாய் நம்முள் என்றும் இருந்து மற்ற பிறவிகளிலும் நம்மோது தொடரும் அது ஒன்றே சாஸ்வதம். அதுவே ஆத்ம தீபம். சாக்ஷியானது. ஏதோடும் இணையாமல் சேர்ந்து இருப்பது. ஒன்றே பலவாக தோன்றுவது

ஒன்னும் சென்னங்கு தன்னொடு பற்றாதே ஓன்னிலும் சென்னு தானும் வலையாதே
ஒன்னொன்னாயி நினய்க்கும் ஜனங்களுக்கு ஒன்னு கொண்டு அறிவாகுன்ன வஸ்துவாய்
ஒன்னிலும் அறியாத்த ஜனங்களுக்கு ஒன்னு கொண்டும் திரியாத்த வஸ்துவாய்
ஒன்னு போலே ஒண்ணு இல்லாத உள்ளத்தில் ஒன்னாய் உள்ள ஒரு ஜீவ ஸ்வரூபமாய்
ஒன்னிலும் ஒரு பந்தம் இல்லாததாய் நின்னவன் தன்னே விஸ்வம் சமச்சு போலே
மூணும் ஒன்னில் அடங்குன்னு பின்னேயும் ஒன்னும் இல்லைபோல் விஸ்வ மன்னேரத்த

ந தத்ர சூர்யோ பாதி, ந சந்த்ரதாரகம் நேம வித்துதோ பாந்தி குதோயமக்னி தமேவ பாந்தம் அனுபாதி சர்வம் தஸ்ய பாசா சர்வமிதம் விபாதி

அங்கே சூரியனுமில்லை நிலவுமில்லை நக்ஷத்திரங்களுமில்லை.மின்னலும் வருவதில்லை.ஆனால் ஒளிமயமாக இருக்கிறது.எப்படி? பிரபஞ்சத்திலுள்ள எல்லாம் பிரமனுடைய ஒளியை உள்வாங்கி பிரதிபலிக்கின்றது.அங்கு அது மட்டும் தான் ஒளி உமிழ்கிறது;”

பிரம்ம சூத்திரம் ஒன்றாம் அத்தியாயத்தில் இரண்டாவது சூத்திரத்திலேயே பிரம்மன் என்றால் என்ன விளக்கப்பட்டுள்ளது.

————————————-

கர்மம்
ஒன்னு கொண்டு சமச்சொரு விஸ்வத்தில் மூன்னாய் இட்டுள்ள கர்மங்கள் ஓக்கேயும்
புண்ய கர்மங்கள் பாப கர்மங்களும் புண்ய பாபங்கள் மிஸ்ரமாம் கர்மவும்
மூன்னு ஜாதி நிரூ பிச்சு காணும் போன் மூன்னு கொண்டும் தனக்குன்னு ஜீவனே
பொன்னின் சங்கல ஒன்னி பறஞ்சதில் ஒன்னு இரும்பு கொண்டு அன்னத்தேற பேதங்கள்
இரண்டினாலும் எடுத்துக் பணி செய்த சங்கல யல்லோ மிஸ்ரமாம் கர்மாவும்

மூன்னுஜாதி நிரூபிச்சு காணூம்போள்

                                                     மூன்னுகொண்டும் தளைக்குன்னு ஜீவனெ

                                                     பொன்னின்சங்கலையொன்னிப்பறஞ்சதி

                                                     லொன்னிரும்புகொண்டதனெனத்ரபேதங்கள்

                        ரண்டுனாலுமெடுத்து பணிசெய்த

                         சங்கலயல்லோ மிஸ்ரமாம் கர்மவும்

கர்மங்கள் எதுவாக இருந்தாலும் அவை நம்மை இகலோகத்துடன் பந்திக்கிறது. நாம் பந்தத்திலிருந்து விடுபட முடிவதில்லை.கட்டிப் போடுகின்ற சங்கிலியின் தரத்தில் தான் வேறுபாடு என்கிறர் பூந்தானம்.புண்ணியகர்மங்கள் செய்யும்பொழுது நாம் நல்லது செய்தோம் என்ற திருப்தி ஏற்பட்டு மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால் அந்த மகிழ்ச்சியின் பின்னால் ‘நான்’ செய்தேன் என்ற ‘அகந்தை’ ஒளிந்திருக்கிறது பாபார்மங்கள் செய்பவர்களும் நாம் மற்றவர்களுக்கு ஒரு பாடம் கற்பித்தோம் என்ற மமதையில் மிதக்கிறார்கள். ரஜோகர்மத்தை அடிப்படையாகக் கொண்ட புண்ணிய –பாப கர்மங்களின் பின்னாலும் ‘ மமதாகாரம்’ செயல்படுகிறது.இந்த செயல்கள் எதுவும் ஆத்மா செய்யாததால் ‘நான்; செய்தேன் என்ற மமதாகாரம் வரும்பொழுது அந்த ‘நான்’ ‘நானல்ல’.அது ‘தனுவான நானென்ற எண்ணத்திலிருந்து உதித்த நானாக இருக்கிறது..ஆகவே இந்த கர்மங்கள் நம்மை பௌதிக உடலுடன் பிணைத்து ‘புனரபி மரணம் ,புனரபி ஜனனம்’ என்ற சக்கரச் சுழற்சியில் சிக்க வைக்கிறது.

ஆகவே பூந்தானம் ஒரு சங்கிலி தங்கத்தால் செய்த்தென்றல் இன்னொன்று இரும்பினால் செய்தது; மற்றொன்று உலோகங்களின் கலவையில் செய்தது.எங்கிறார். நிதரிசனமான உண்மை நாம் கட்டப்பட்டிருக்கிறோம் என்பது தான். கிளிக்கு தங்க கூண்டானால் என்ன? இரும்பு கூண்டானால் என்ன? கூண்டு கூண்டு  தான்.கர்மங்கள் பந்தமே-பந்தனமே.

பிரம்மா வாதியாய் ஈச்ச எரும்போளம் கர்ம பந்தன்மார் அன்னது அறிஞ்சாலும்
புவனங்கள் ஸ்ருஷ்டிக்க என்னது புவனாந்த்ய பிரளயம் கழி வோளம்
கர்ம பாசத்தே லம் கிக்க என்னது பிரம்மா வென்னும் எளுதல்ல நிர்ணயம்
திக் பாலன் மாரும் அவ்வண்ணம் ஓரொரு திக்கு தோறும் தளச்சு கிடக்கின்னு
அல்ப கர்மிகளாகிய நாம் எல்லாம் அல்ப காலம் கொண்டோர் ஒரு ஜந்துக்கள்
கர்ப்ப பாத்திரத்தில் புக்கும் புறப்பெட்டும் கர்மம் கொண்டு களிக்குன்னது இங்கனே

——————–

ஜீவ கதி
நரகத்தில் கிடக்குன்ன ஜீவன் போய் துரிதங்களோடு ஒடுங்கி மனஸ்ஸின்டே
பரிபாகவும் வன்னு க்ரமத்தாலே நர ஜாதியில் வன்னு பிறந்திட்டு
ஸூஹ்ருதம் செய்து மேல் போட்டு போயவர் ஸ்வர்க்கத்து இங்கலிருன்னு சுகிக்கின்னு
ஸூஹ்ருதங்களும் ஓக்க ஒடுங்கும் போள் பரிபாகவும் எள்ளோளும் இல்லவர்
பரிச்சோடம் அங்கு இருன்னிட்டு பூமியில் ஜாதராய் துரிதம் செய்து சத்தவர்
வன்னொர துரிதத்தின் பலமாயி பின்னே போய் நரகங்களில் வீழு என்ன
ஸூர லோகத்தில் நின்னஒரு ஜீவன் போய் நர லோகே மஹீ ஸூ ரனாகு என்ன
சண்ட கர்மங்கள் செய்தவன் சாகும் போள் சண்டால குலத்திங்கள் பிறக்குன்னு
அசுரன் மார் சூரன் மார் ஆயிடு என் அமரன் மார் மரங்கள் ஆயிடு என்னு
அஜம் சத்து கஜமாய் பிறக்கு என்னு கஜம் சத்தங்க ஜவுமாய் ஆயிடு என்னு
நரி சத்து நரனாய் பிறக்குன்னு நாறி சத்துடனோர் அரியாய் போகுன்னு
க்ருப கூடாதே பீடிப்பிச்சீடுன்ன ந்ருபன் சத்து கிருமியாய் பிறக்குன்னு
ஈச்ச சத்தொரு பூச்சையாயீடு என்ன ஈஸ்வரன் டே விலாசங்கள் இங்கனே
கீழ் மேல் இங்கனே மண்டுன்ன ஜீவன் மார் பூமி யீன்னத்ற நேடுன்னு ஜீவன் மார்
அங்கனே செய்து நேடி மரிச்சுட னன்ய லோகங்களோர் என்னில்
சென்னிரு என்னு புஜிக்கின்னு ஜீவன் மார் தங்கள் செய்த ஒரு கர்மங்கள் தன் பலம்
ஒடுங்கிடும் அது ஒட்டு நாள் செல்லும் போன் உடனே வன்னு நேடுன்னு பின்னேயும்

தன்டே தன்டே க்ருஹத்திங்கள் நின்னுடன் கொண்டு போன்ன தனம் கொண்டு நாம் எல்லாம்
மற்று எங்கானும் ஒரேடேத்தி ருன்னிட்டு விட்டுடு என்னு பறயும் கணக்கினே

————–

பாரத மஹிமா

கர்மங்களுக்கு விளை பூமியாகிய ஜென்ம தேசம் இப்பூமி அறிஞ்ஞாலும்
கர்ம நாஸம் வருத்தேனம் எங்கிலும் செம்மே மட்டெங்கும் சாதிய நிர்ணயம்
பக்தன் மாருக்கும் முமுஷு ஜனங்களுக்கும் சக்தராகிய விஷயீ ஜனங்களுக்கும்
இச்சி சீடுன்ன டொக்க கொடுத்திடும் விஸ்வ மாதாவு பூமி சிவ சிவ
விஸ்வ நாதன் டே மூல ப்ரக்ருதி தான் ப்ரத்ய ஷேண விள்ங்குன்னு பூமியாய்
அவனீ தல பாலனத்தின் அல்லோ அவதாரங்களும் பல தோற்கும் போள்
அது கொண்டு விசேஷிச்சும் பூ லோகம் பதிநாலிலும் உத்தமம் என்னல்லோ
வேத வாதிகளாய முனிகளும் வேதவும் பஹு மானிச்சு சொல்லென்னு
லவணாம்புதி மத்யே விளங்குன்ன ஜம்பூத்தீவு ஒரு யோஜனை லக்ஷவும்
ஸப்த த்வீபுகள் உண்டதில் எத்தறயும் உத்தமமாம் என்னு வாழ்த்துன்னு பின்னேயும்
பூ பத்மத்தின்னு கர்ணிகையாய் இட்டு பூதரேந்த்ரநதி லல்லோ நில்குன்னு
இதில் ஒன்பது கண்டங்கள் உண்டல்லோ அதிலும் உத்தமம் பாரத பூ தலம்
சம்ம மதராய மா முனி ஸ்ரேஷ்டன் மார் கர்ம க்ஷேத்ரம் என்னல்லோ பற யுன்னு
கர்ம பீஜ மதீன்னு முனக்கேண்டு ப்ரஹ்ம லோகத்தி ரிக்குன்ன வர்களுக்கும்
கர்ம பீஜம் வரட்டி கலஞ்சுடன் ஜென்ம நாஸம் வருத்தேனும் எங்கிலும்
பாரத மாய கண்ட மொழிஞ்சுள்ள பாரில் எங்கும் எளுதல்ல நிர்ணயம்
அத்ற முக்கியமாய் உள்ளதொரு பாரதம் இதி பிரதேசம் என்னெல்லாரும் ஓர்க் கணம்

—————–

அத்ர முக்கிய மாயுள்ளொரு பாரதம்

இப்பிரதேச மென்னொல்லாரும் ஓர்க்கணம்

——————-

கலிகால மஹிமா

இப்பிறவி பிறந்தால் மட்டுமே முக்தி அடைய இயலும். குறிப்பாக இந்தக் கலிகாலத்தில், பதினான்கு உலகங்களில் இந்த உலகு மட்டுமே மோட்சத்திற்கு வழிகாட்டும் உலகம் என்கிறார்.

” யுகம் நாலிலும் நல்ல கலியுகம்

சுகமே தானே முக்தி வருதுவன்” ( ஞானப்பானா- 27)

என்று இக்காலத்தை ஞானத்தின் காலமாகக் காட்டி நம்பிக்கை அளிக்கிறார் பூந்தானம்.

யுகம் நாலிலும் நல்லூ கலியுகம் சுகமேதன்னெ முக்தி வருத்துவான்

கிருஷ்ண கிருஷ்ண முகுந்த ஜனார்த்தன கிருஷ்ண கோவிந்த ராம என்னிங்கனெ

திருநாம ஸங்கீர்த்தன மென்னியே மற்றில்லேதுமே யத்ன மறிஞ்ஞாலும்

அது சிந்திச்சு மற்றுள்ள லோகங்கள்

மற்ற பதிமூன்று லோகங்கள்

பதின் மூன்றிலுள்ள ஜனங்கள்

மற்று தீவுகள் ஆறில் உள்ளோரும்

மற்று கண்டங்களில் உள்ளோரும்

மற்று மூனு யுகங்களில் உள்ளோரும்

முக்தி தங்களுக்குச் சாத்யம் அல்லாயாகையால்

கலிகாலத்தில பரத கண்டத்தில்

கலிதடராம் கை வணங்கீடு என்ன ”(ஞானப் பானா – 29)

என்ற பகுதியில் பரதகண்டம் பற்றிப் பூந்தாம் குறிப்பிடுகிறார். உலகங்கள் பதினான்கு என்பது உலக வழக்கு. அவற்றில் பூமி ஆகிய இவ்வொன்று நீங்கினால் பதிமூன்று உலகங்கள். மொத்தத் தீவுகள் ஏழு. அதில் இதனை விடுத்தால் மற்றவை ஆறு. யுகங்கள் நான்கு. அவற்றில் இக்கலியுகம் நீங்கினால் மற்றவை மூன்று யுகங்கள். இந்நிலைப்பாட்டில் பரத கண்டத்தில் உயிர்கள் மட்டுமே ஞானத்தை, இறைபாதத்தை அடைய வழி தெரிந்தவர்கள். ஆகவே இக்காலம் நன்று. இவ்வுலகம் நன்று. இதனில் முக்தி வழி தேடுவோம் என்று உலக இயல்பினை எடுத்துரைக்கிறார் பூந்தானம்.

அதில் வன்னொரு புல்லாய் இட்டு எங்கிலும் இது காலம் ஜனிச்சு கொண்டீடுவான்
யோக்யத வருந்தீடுவான் தக்கொரு பாக்யம் போராதே போய் அல்லோ தெய்வமே
பாரத கண்டத்து இங்கண் பிறந்த ஒரு மானுஷிற்கும் கலிக்கும் நமஸ்காரம்
என்னெல்லாம் புகழ்ந்தீடு என்னு மற்றுள்ளோர் என்னது என்தின்னு நாம் பறைஞ்ஜீடுன்னு

அத்ர முக்கிய மாயுள்ளொரு பாரதம்

இப்பிரதேச மென்னொல்லாரும் ஓர்க்கணம்

————-

என் திண்டே குறவு

காலம் இன்னம் கலி யுகம் அல்லயோ பாரதமி பிரதேசமும் அல்லயோ
நம்மள் எல்லாரும் நான்மாரும் அல்லயோ செம்மே நன்னாய் நிரூபிப்பன் எல்லாரும்
ஹரி நாமங்கள் இல்லாத போகயோ நரகங்களில் பேடி குறகயோ
நாவு கூடாத ஜென்மம் அது ஆகாயோ நமக்கு இன்னி விநாசம் இல்லாய் கயோ
கஷ்டம் கஷ்டம் நிரூபணம் கூடாதே சுட்டுக் தின்னுன்னு ஜென்மம் பழுதே நாம்

———–

துர்லபமாய மனுஷ்ய ஜென்மம்

‘‘எத்தனை ஜன்மம் மலத்தில் கழிஞ்சதும்

எத்தனை ஐன்மம் ஜலத்தில் கழிஞ்சதும்

எத்தனை ஜன்மம் மண்ணில் கழிஞ்சதும்

எத்தனை ஜன்மம் மரங்களில் நின்னிடும்

எத்தனை ஜன்மம் மரித்து நடன்னதும்

எத்தனை ஜன்மம் பரன்னு நடன்னதும்

எத்தனை ஜன்மம் மிருகங்கள் பசுக்களாய்

மரத்திய ஜனதில் மும்பே கழிஞ்சதும்” (ஞானப்பானா- 32)

என்று மலம், ஜலம், மண், மரம், பறவை, விலங்கு, பசு போன்றனவாய் முற்காலத்தில் பிறந்து இளைத்தோம் என்கிறார் பூந்தானம்.

எத்தனையெத்தனை ஜன்மத்திற்குப் பின் இந்த மனித ஜன்மம் கிடைத்திருக்கிறது? எண்ணற்ற புண்ணிய கர்மங்களின் பலனாக இந்த மனித ஜன்ம்ம் கிடைத்துள்ளது.எத்தனையோ ஜன்மங்கள் புழுவாகவும் பூச்சியாகவும், புல்லாகவும் மரமாகவும் சேற்றிலும் அழுக்கிலும் கிடந்து உழன்றபிறகு மனித ஜன்மம் கிடைத்துள்ளது.ணிரிலும் நிலத்திலும் வாழ்ந்து இறந்தும் பிறந்தும் பல ஜன்மங்கள் கழிந்து மனித ஜன்ம்ம் கிடைத்துள்ளது

இந்த மனித ஜன்மத்திற்கு முன் பசுவாகவும் மற்ற மிருகங்களாகவும் பிறந்தோம் இறந்தோம்.பிறகு தான் மனித ஜன்மம் கிடைத்துள்ளது.

மேலும் மனித வாழ்வில் எவ்வளவு நாள் அறிவின்றி இழந்தோம் என்ற கணக்கையும் தருகிறார் பூந்தானம்.

‘‘எத்ரெயும் பணி பெற்று இங்கு மாதாவின் கர்ப்ப பாத்திரத்தில் வீணது அறிஞ்சாலும்

பத்துமாதம் வயித்தில் கழிஞ்சுபோயி

பத்து பதிரெண்டு உன்னியாய் ஆட்டம் போயி

தன்னிதான்  அறியாதி கழிஞ்சுன்னு” (ஞானப்பானா 33)

என்ற கால விரயம் கவிதையாய் பூந்தானம் வழி வெளிப்படுகிறது.

பத்து மாதம் தாயின் கர்பத்தில் இருந்தோம்; பிறந்தபின் பத்து பன்னீரெண்டு வருடங்கள் ஒன்றும் தெரியாத பால்ய பருவத்தில் –விவேகம் உதிக்காத நிலையில் எது சத்தியம்; எது நசுவரம்; எது நித்தியம் என்று அறியாத நிலையில் ‘ நான்” என்ற அகம்பாவத்துடன் இந்த உலகில் வாழ்ந்து விடுகிறோம்.

இத்ர காலம் இருக்கும் இனி என்னும் ஸத்யமோ நமக்கு ஏதும் ஒன்னில்லல்லோ

‘‘நீர்போலே போலே உள்ளொரு தேகத்தில்…..

நீர்த்துப் போகும் அதினி பறையாவு” (ஞானப்பானா 35)

என்று மனித வாழ்க்கை நீர்க்குமிழி போன்றது. இறைசிந்தனை அந்தக் குமிழிக்குள் இல்லாமல் போகுமானல் எந்நேரமும் வாழ்க்கை என்னும் நீர்க்குமிழி உடையலாம் என்று பூந்தானம் குறிப்பிடுகிறார்

நீர்ப்போள போலெ உள்ளொரு தேஹத்தில்

வீர்ப்பு மாத்ரம் உண்டு இங்ஙனெ காணுன்னு

ஒர்த்து அறியாதே பாடு பெடுன்னேரம்

நேர்த்து பொகுமதென்னே பறயாவூ

அத்ர மாத்ரம் இரிக்குன்ன நேரத்து

கீர்த்தி சீடுன்னதில்ல திருநாமம்

In the body which is like a water bubble,–We see it filled up always,
And when we put efforts without thought,–We can tell that this bubble will only burst.-In this very limited time,-We should be Chanting the Divine Names of Lord

அப்படிப்பட்ட அனித்தியமான வாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கும் நாம் ஒரு நேரமாவது பகவன் சொல்லுகின்றோமா? இல்லையே இப்படி நமது கிடைப்பதற்கரிய வாழ்வை வீணாக்கலாமா ?பூன்தானம் அங்கலைக்கிறாற்.

————–

ஸம்ஸார வர்ணனை

ஸ்தானமானங்கள் சொல்லி கலஹிச்சு நாணம் கெட்டு நடக்குன்னுது சிலர்
மத மஞ்சரம் சிந்திச்சு சிந்திச்சு மதி கெட்டு நடக்குன்னிது சிலர்
சஞ்ச லாஷிமார் வீடுகளில் புக்கு குஞ்சிராமனா யாடுன்னுது சிலர்
கோலகங்களில் சேவகராய் இட்டு கோலம் கெட்டி ஜெலியுன்னிது சிலர்
சாந்தி செய்து புலர்த்துவனாய் இட்டு ஸந்த்யா யோலம் நடக்குன்னுது சிலர்
கொஞ்சி கொண்டு வளர்த்த ஒரு பைகலே கஞ்சிக்கு இல்லான்னு வில் குன்னிது சிலர்
அம்மக்கும் புனர் அச்சனும் பார்யைக்கும் உன்மான் போலும் கொடுக்கின்னல்ல சிலர்
அக்னி சாஷியாய் ஒரு பத்னியே ஸ்வப்னத்தில் போலும் காணுன்னுல்ல சில
சத்துக்கள் கண்டு சிஷித்து சொல்லும் போல் சத்ருவே போல் க்ருதிக்கினு சிலர்
வந்திதன்மாரே காணுன்ன நேரத்து நிந்தி சத்ரே பற யுன்னிது சிலர்
காண்க நம்முட ஸம்ஸாரம் கொண்டத்ரே விஸ்வமீ வண்ணம் நில்பு என்னும் சிலர்
ப்ராஹ்மண்யம் கொண்டு குந்திச்சு குந்திச்சு பிரம்மாவும் என்னிக் கொக்காய் என்னும் சிலர்
அர்த்தாசக்கு விருது விளிப்பான் அக்னி ஹோத்ராதி செய்யுன்னுதி சிலர்
ஸ்வர்ணன்கள் நவ ரத்னங்களே கொண்டும் எண்ணம் கூடாதே வில்கின்னுது சிலர்
மத்தேபம் கொண்டு கச்ச வடம் செய்தும் உத்தம துரம் கங்களது கொண்டும்
அத்தரயுமல்ல கப்பல் வெப்பிச்சிட்டு மெத்ர நேடுன்னி தர்த்ரம் சிவ சிவ
வ்ருத்தியும் கெட்டு தூர்த்தராய் எப்பொழுதும் அர்த்தத்தே கொதிச்செத்ர நசிக்குன்னு
அர்த்தமெத்ர வளரே யுண்டாயாலும் த்ருப்தியாகா மனசின் ஒரு காலம்

‘‘பத்து கிட்டுகில் நூறு மதி என்னும்

சதமாகில் சகாஸ்கரம் மதி என்னும்

ஆயிரம் பணம் கையில் உன்கும்போல்

ஆயுதமகில் ஆச்சர்யம் என்னுதம்

ஆசையுள்ள பாசம் மதிஞ்சன்னு” (ஞானப்பானா- 38)

ஆசை என்ற கயிறு உள்ளத்தைக் கட்டி வைத்திருக்கிறது. பத்து கிடைத்தால் நூறு கிடைக்குமா என்று எண்ணுகிறது. நூறு கிடைத்தால் ஆயிரம் வந்தால் போதும் என்கிறது. ஆயிரம் வந்தால் அதைவிட அதிகமாக எண்ணுகிறது. இதுவே மனதின் இயல்பாக உள்ளது என்று பூந்தானம் மனவாசையின் அளவை அளக்கிறார்.

வேர் விடாதே கரேறுன்னு மேல்குமேல்
சத்துக்கள் சென்னிலர் அன்னாலாய அர்த்தத்தில் ஸ்வல்ப மாத்ரம் கொடா சில துஷ்டன் மார்
சத்து பன்னேரம் வஸ்திரம் அது போலும் எத்திடா கொண்டு போவான் ஒருத்தருக்கும்
பச்சாதாபம் ஓர் எள்ளளவும் இல்லாத விச்வாஸ பாதகத்தே கருதுன்னு
வித்திலாஸ பற்றுக ஹேதுவாய் சத்யத்தே த்யஜிக்குன்னு சில ரஹோ
சத்யம் என்னது ப்ரஹ்மம் அது தன்னே ஸத்யம் என்னு கருதுன்னு சத்துக்கள்

கிடைத்த மனிதப் பிறவியைப் பயனுள்ளதாக மாற்றாமல் மனித குலம் அழிகிறதே என்ற மிகவும் வருத்தப்படுகிறார் பூந்தானம்.

‘வித்யா கொண்டு அறியந்தது அறியாதே

வித்வான் எண்டு நடிக்கன்னு சிலர்

குங்குமந்திந்தி வாசம் அறியாதே

குங்குமம் சுமக்கும் கழுதை’ (ஞானப்பானா 43)

என்று மனிதவாழ்வின் இயல்வினைச் சுட்டுகிறானர்

—————

வைராக்யம்

எண்ணி எண்ணி குறை யுன்னி தாயுசும் மண்டி மண்டி சுரேறுன்னும் மோஹவும்
வன்னு வோணம் கழிஞ்சு விஷு என்னும் வன்னில் எல்லோ திருவாதிர என்னும்
கும்ப மாசத்தில் ஆகுன்னு நம்முட ஜென்ம நக்ஷத்ரம் அஸ்வதி நாள் என்னும்
ஸ்ரார்த்தம் உண்டகோ விருச்சிக மாசத்தில் ஸத்ய என்னும் எழுதல் இனி என்னும்
உன்னி உண்டாயி வேல் பிச்சத்தில் ஒரு உன்னி உண்டாயி கண்டா ஊஞ்ஞான் என்னும்
கோணிக்கல் தன்னேல் யன்ன நிலமினி காண மன்னன் எடுப்பிக்க அரிது என்னும்
இத்தம் ஒரோன்னு சிந்திச் சிரிக்கும் போல் சத்து போகுன்னு பாவம் சிவ சிவ
எந்த நித்ர பரஞ்சு விசேஷிச்சும் சிந்திச் சீடு வினாவோலம் எல்லாரும்
கர்மத்தின் டே வலிப்பவும் ஓரோரோ ஜென்மங்கள் பலதும் கழிஞ்சு என்னதும்

காலம் இன்னு கலி யுக மாயதும் பாரத கண்டத்தின் டே வலிப்பதும்
அதில் வன்னு பிறன்னதும் எத்தனை நாள் பழுதே தன்னே போய ப்ரகாரமும்
ஆயுஸ்ஸிண்டே ப்ரமாணம் இல்லாததும் ஆராக்யத்தோடே இருக்குன்ன அவஸ்தையும்
இன்னு நாம சங்கீர்த்தனம் கொண்டு உடன் வன்னு கூடும் புருஷார்த்தம் என்னதுவும்
இனி யுள்ள நரக பயங்களும் இன்னும் வேண்டும் நிரூபணம் ஓக்கேயும்
எந்தினு வ்ருத காலம் களயுன்னு வைகுண்டத்தின்னு போய் கொல்வின் எல்லாரும்
கூடி யல்ல பிறக்குன்ன நேரத்துக்கு கூடி யல்ல மரிக்குன்ன நேரத்தும்
மத்யே இங்கனே காணுன்ன நேரத்து மத்சரிக்குன்னது எந்தினு நாம் வ்ருத
அர்த்தமோ புருஷார்த்தம் இருக்கவே அர்த்தித்து என்ன கொதிக்குன்னது எந்து நாம்
மத்யான்னர்க்க ப்ரகாஸம் இரிக்கவே கத்யோதத்தையோ மானிச்சு கொள்ளெண்டு

காலமின்னு கலியுக மல்லயோ

பாரத மிப்ப்ரதேசவு மல்லயோ

நம்மளெல்லாம் நரன்மாரு மல்லயோ

செம்மே நன்னாய் நிரூபிப்பினெல்லாரும்

ஹரி நாமங்ஙளில்லாதெ போகயோ

நரகங்ஙளில் பேடி குறகயோ

நாவு கூடாதெ ஜன்ம அதாகயோ

நமுக்கின்னி வினாச மில்லாய்கயோ

கஷ்டம் கஷ்டம் நிரூபணம் கூடாதே

சுட்டு தின்னுன்னு ஜன்மம் பழுதே நாம்

Are we not living in Kali Yuga, in the land of Bharat?-Have we not got a human life?
Is there scarcity for the Names of the Lord?–Are we born without a tongue to chant them?
Have we no fear of the sufferings in hell?–Have we no thought about our end?
Have we any assurance of our next birth?–But, alas! We are wasting our life without concern!!!

‘‘கூடியல்லோ பிறக்குன்னா நீரதும்

கூடியல்லோ மரிக்குன்னா நீரதும்

மத்தியே இங்ஙனே கன்னுன்னா நீரது

மட்சரிக்குன்னது என்தின்னு விர்தா?” ( பூந்தானம், 49)

என்று பிறப்பின் இறப்பின் தனிமையைச் சுட்டுகிறது ஞானப்பானா. நாம் எல்லோரும் ஒரே நேரத்தில் கூடிப் பிறக்கவில்லை. ஒன்றாய்க் கூடி இறக்கவும் முடியாது. ஒவ்வொருவரும் இறப்பினைத் தனியாகவே எதிர்கொள்ளவேண்டும். மத்தியில் நாம் இணைந்திருக்கிறோம். ஏன் மற்றவர்களோடு தேவையின்றிப் போட்டிபோடுகிறீர்கள் என்று மெய்ம்மை நாடுகிறது ஞானப்பானா.

‘உன்னிக் கிருஷ்ணன் மனசில் களிக்கும்பால்

உன்னிகள் மது வேணுமோ மக்களே

மித்ரங்கள் நமக்கேத்ரா சிவ சிவா

விஷ்ணுபக்தன் மாரிலே புவனத்தில்” (ஞானப்பானா- 51)

என்று குழந்தை வரம் வேண்டுவோர்க்கு ஆறுதல் தருகிறது ஞானப்பானா.

————–

நாம ஜபம்

சக்தி கூடாதே நாமங்கள் எப்பொழுதும் பக்தி பூண்டு ஜபிக்கணும் நம்மூடே
ஸித்த காலம் கழி வோள மீ வண்ணம் ஸ்ரத்தை யோடே வஸிக்கே ண மேவரும்
காணா குன்ன சராசர ஜீவியே நாணம் கை விட்டு கூப்பி ஸ்துதிக்கணும்
ஹரி ஷாஸ்ரு பரி ப்ளூதனாயிட்டு பருஷாதிக ளோக்கெ ஸஹிச்சுடன்
ஸஜ் ஜனங்களே காணுன்ன நேரத்து லஜ்ஜ கூடாதே வீணு நமிக்கணும்
பக்தி தன்னில் மூழ்கி சமஜ்ஜுடன் மத்தன போலெ ந்ருத்தம் குதிக்கணம்
பாரில் இங்கனே ஸஞ்சரி சீடும் போல் ப்ராரப்தங்கள் அசேஷம் ஒழிஞ்சிடும்
விதிச்சீடுன்ன கர்மம் ஒடுங்கவும் போல் பதிசீடுன்ன தேஹம் ஒரே டத்து
கொதிச் சிடுன்ன ப்ரஹ்மத்தே கண்டிட்டு குதிச்சீடுன்ன ஜீவனும் அப்போளே
ஸக்தி வேரிட்டு ஸஞ்சரி சீடும் போல் பாத்ரமாயில்ல என்னது கொண்டேதும்
பரிதாபம் மனஸ்ஸில் முழு கேண்ட திரு நாமத்தின் மஹாத்ம்யம் கேட்டாலும்
ஜாதி பார்க்கிலோ ரந்த்யஜனாகிலும் வேதவாதி மஹீ ஸூ ரனாகிலும்
நாவு கூடாதே ஜாதன் மாராகிலும் மூகரே அங்கு ஒழிச்சுள்ள மானுஷர்

எண்ணமற்ற திருநாமம் உள்ளதில்

ஒன்னு மாத்ரம் ஒரிக்கல் ஒரு தினம்

ஸ்வஸ்தன் ஆயிட்டு இருக்கும் போழெங்கிலும்

ஸ்வப்னத்தில் தான் அறியாதெ எங்கிலும்

மற்றொன்னாயி பரிஹஸிச்செங்கிலும்

மற்றொருத்தர்க்கு வேண்டியென்னாகிலும்

ஏது திக்கிலிருக்கிலும் தன்னுடே

நாவு கொண்டிது சொல்லி என்னாகிலும்

அதுமல்லொரு நேரம் ஒரு தினம்

செவி கொண்டிது கேட்டு என்னாகிலும்

ஜன்ம சாபல்யம் அப்போழே வன்னு போய்

ப்ரம்ம ஸாயுஜ்யம் கிட்டீடும் என்னேல்லோ

God’s Names are numerous;–And if any one of those Names,–At least once a day, while sitting quiet at a place,–Or unawares in a dream while sleeping,–Or mocking as something else, or to satisfy some one else;–You utter with your tongue or just hear with your ears,–At that very moment, your life is fulfilled;–And you reach the Supreme abode of Brahman.

ஸ்ரீதர் ஆச்சார்யன் தானும் பரஞ்ஞிது

பாதராயணன் தானும் அருள் செய்து

கீதயும் பரஞ்ஞீடுன்னதிங்ஙனெ

வேதவும் பஹுமாநிச்சு சொல்லுன்னு

அமோதம் பூண்டு சொல்லுவின் நாமங்ஙள்

ஆனந்தம் பூண்டு ப்ரஹ்ம்மத்தில் சேருவான்

மதியுண்டெங்கிலொக்க மதியிது

திருநாமத்தின் மாஹாத்யமாமிது

பிழையாகிலும் பிழ கேடென்னாகிலும்

திருவுள்ளம் அருள்க பகவானே

And so say Sreedhara the great scholar,–And sage Veda Vyasa who wrote the puranas.–Even Bagavad Geetha says the same,–And also so say the Vedas with respect.–So sing God’s holy names easily–And with joy become one with God.–For those aiming at salvation this book is sufficient,–For it sings about greatness of God’s holy names.–With errors or without errors.–Please grant me your grace , Oh my God

பூந்தானம் ‘‘கீதையும் வேதங்களும் பரந்தாமன் புகழைப் பாடினால் மட்டுமே முக்தி” என்று உரைக்கின்றன (ஞானப்பானா 60) என்று பாடுகிறார்.

கிருஷ்ண கிருஷ்ணா முகுந்த ஜநார்த்தனா
கிருஷ்ண கோவிந்த நாராயணா ஹரே
அச்யுத அநந்த கோவிந்த மாதவா
ஸச்சிதானந்த நாராயணா ஹரே

——————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ  பூந்தானம் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீபாடலாத்ரி_நரசிம்ம பெருமாள் ஸ்துதி–ஸ்ரீ நரசிம்ம அஷர மாலை–

January 21, 2023

ஸ்ரீபாடலாத்ரி நரசிம்ம பெருமாள் ஸ்துதி ஸ்லோகம்

ஜிதந்தே_மஹா ஸ்தம்ப_ஸம்பூத_விஷ்ணோ!
ஜிதந்தே_ஜகத் ரக்ஷணார்தாவார
ஜிதந்தே_ ஹரே_பாடலாத்ரௌ_நிவாஸின்
ஜிதந்தே_ ந்ருஸிம்ஹ_ப்ரஸீத_ப்ரஸீத
நமஸ்தே_ஜகந்நாத_விஷ்ணோ_முராரே
நமஸ்தே_ந்ருஸிம்ம_அச்யுதாநந்த_தேவ
நமஸ்தே_க்ருபாலோ_சக்ரபாணே
நமஸ்தம்ப_ஸம்பூத_திவ்யாவதார
பரப்ரஹ்மரூபம்_ப்ரபுத்தாட்டஹாஸம்
கரப்ரௌல_சக்ரம்ஹரப்ரஹ்மஸேவ்யம்
ப்ரஸந்நம்_த்ரிநேத்ரம்_ஹரிம்பாடலாத்ரௌ
சான்மேக_காத்ரம்_ந்ருஸிம்ஹம்_பஜாம்
கிரி ஜந்ருஹரிமீசம்_கர்விதாராதிவஜ்ரம்
பரம புருஷமாத்யம்_பாடலாத்ரௌ_ப்ரஸன்னம்
அபய_வரத_ஹஸ்தம்_சங்க சக்ரே ததாநம்சரண_மிஹபஜாம்_சாச்வதம்
நாரஸிம்ஹம்_ஸ்ரீந்ருஸிம்ஹ_மஹா ஸிம்ஹ_திவ்யசிம்ஹ!
கிரிஸம்பவ_தேவேச_ரக்ஷமாம்_சரணா கதம்

ஸ்ரீ_நரசிம்மர்_காயத்ரி
ஓம்_வஜ்ர_நகாய_வித்மஹே !!!
தீக்ஷ்ண_தம்ஷ்ட்ராய_தீமஹி !!!
தந்நோ_நரசிம்ஹப்_ப்ரசோதயாத் !!!

ஸ்ரீபாடலாத்ரி_நரசிம்மர்_திருவடிகளே__சரணம்
————–

லஷ்மி நரஸிம்ஹ சரணம் ப்ராத்யே🌹
🌹ஸ்ரீ நரசிம்ம அஷர மாலை 🌹🌹🔥🌹🔥🌹🔥🌹🔥🌹🔥🌹🔥🌹🔥🌹🔥🌹
🔥ஜய ஜய லக்ஷ்மீ நரசிம்ஹ
ஜய ஹரி லக்ஷ்மீ நரசிம்ஹ
அனாத ரக்ஷக நரசிம்ஹ
ஆபத் பாந்தவ நரசிம்ஹ.🌹
🔥இஷ்டார்த்த ப்ரத நரசிம்ஹ
ஈஷ்பரேஷ நரசிம்ஹ
உக்ர ஸ்வரூப நரசிம்ஹ
ஊர்த்வா பாஹூ நரசிம்ஹ.🌹
🔥எல்லா ரூப நரசிம்ஹ
ஐஸ்வர்ய ப்ரத நரசிம்ஹ
ஓங்கார ரூப நரசிம்ஹ
ஔஷத நாம நரசிம்ஹ.🌹
🔥அம்பர வாஸ நரசிம்ஹ
காம ஜனக நரசிம்ஹ
கிரீட தாரி நரசிம்ஹ
ககபதி வாஸன நரசிம்ஹ.🌹
🔥கதா தரனே நரசிம்ஹ
கர்ப்ப நிர்ப்பேதந நரசிம்ஹ
கிரிதர வாஸ நரசிம்ஹ
கௌதம பூஜித நரசிம்ஹ.🌹
🔥கடிகாசல ஸ்ரீ நரசிம்ஹ
சதுர் புஜனே நரசிம்ஹ
சதுரா யுத்தர நரசிம்ஹ
ஜ்யோதி ஸ்வரூப நரசிம்ஹ.🌹
🔥தந்தே தாயியு நரசிம்ஹ
த்ரிநேத்ர தாரி நரசிம்ஹ
தநுஜா மர்த்தன நரசிம்ஹ
தீனநாத நரசிம்ஹ.🌹
🔥துக்க நிவாரக நரசிம்ஹ
தேவாதி தேவ நரசிம்ஹ
ஜ்ஞான ப்ரதனே நரசிம்ஹ
நர கிரி ரூப நரசிம்ஹ.🌹
🔥நர நாராயண நரசிம்ஹ
நித்யானந்த நரசிம்ஹ
நரம்றாக ரூப நரசிம்ஹ
நாம கிரீஷ நரசிம்ஹ.🌹
🔥பங்கஜானன நரசிம்ஹ
பாண்டுரங்க நரசிம்ஹ
ப்ரஹ்லாத வரத நரசிம்ஹ
பிநாக தாரி நரசிம்ஹ.🌹
🔥புராண புருஷ நரசிம்ஹ
பவ பய ஹரண நரசிம்ஹ
பக்த ஜன ப்ரிய நரசிம்ஹ
பக்தோத்தார நரசிம்ஹ.🌹
🔥பக்தானுக்ரஹ நரசிம்ஹ
பக்த ரக்ஷக நரசிம்ஹ
முநி ஜன ஸேவித நரசிம்ஹ
ம்ருக ரூப தாரி நரசிம்ஹ.🌹
🔥யக்ஞ புருஷ நரசிம்ஹ
ரங்கநாத நரசிம்ஹ
லக்ஷ்மீ ரமணா நரசிம்ஹ
வங்கி புரிஷ நரசிம்ஹ.🌹
🔥சாந்த மூர்த்தி நரசிம்ஹ
ஷட்வர்க தாரி நரசிம்ஹ
சர்வ மங்கள நரசிம்ஹ
சித்தி புருஷ நரசிம்ஹ.🌹
🔥சங்கடஹர நரசிம்ஹ
சாளிக்ராம நரசிம்ஹ
ஹரி நாராயண நரசிம்ஹ
க்ஷேம காரி நரசிம்ஹ.🌹
🔥ஜெய ஜெய லக்ஷ்மீ நரசிம்ஹ
ஜெய சுப மங்கள நரசிம்ஹ
ஜய ஜய லக்ஷ்மீ நரசிம்ஹ
ஜய ஹரி லக்ஷ்மீ நரசிம்ஹ..🌹🌹🔥🌹🔥🌹🔥🌹🔥🌹🔥🌹🔥🌹🔥🌹🔥🌹
🌹ஸ்ரீ லஷ்மி நரசிம்மயே நமஹ 🌹
————

ஸ்ரீஅனுமன் ஸ்துதி

வீதாகில விஷயேச்சசம் ஜாதானந்தா
ஸ்ரூபுல கமத்யச்சம் ஸீதா பதித தூதாத்யம்
வாதாத் மஜ மத்ய பாவயே ஹ்ருதயம்
அனைத்து விஷயங்களும் அறிந்தவரே பக்தனின் ஆனந்த கண்ணீர் கண்டு உணர்ச்சி வசப்படுபவரே தூய மனம் படைத்தவரே ராமதூதர்களில் முதல்வரே தியானிக்கத் தக்கவரே வாயுகுமாரரே ஆஞ்சநேயரே உம்மை மனதில் இருததி தியானிக்கிறேன்.
—————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ லஷ்மி நரஸிம்ஹ ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

 

ஸ்ரீ அஷ்டபதி – ஸ்லோகம்–

January 16, 2023

ஸ்ரீ அஷ்டபதியின் விளக்கம்*

*அஷ்டபதி 1* நாராயணனின் பத்து அவதாரங்களைப் பற்றியது.

*அஷ்டபதி 2* இந்த அஷ்டபதி கிருஷ்ணனை துதிப்பதாக அமைந்துள்ளது.

*அஷ்டபதி 3* ராதை கண்ணன் மற்றவர்களுடன் விளையாடுவதை செய்வதைப் பார்த்து பொறாமை கொண்டு அவனை விட்டு நீங்குகிறாள். ராதை ஜீவாத்மா என்று பார்த்தால், ஜீவன் தன் அந்தராத்மாவான பகவானுடன் இணையத் துடிக்கிறது.

*அஷ்டபதி 4* கிருஷ்ணன் கோபியருடன் ராஸலீலை செய்வதை தோழி வர்ணிக்கிறாள்.

*அஷ்டபதி 5* ராதை கோபித்து அவனை விட்டு நீங்கினாலும் அவன் நினைவை தடுக்க முடியாமல் அவனை நினைத்து கூறும்

*அஷ்டபதி 6* ராதா அவனுடன் இருந்த அனுபவத்தை நினைந்து அவனைத் தன்னுடன் சேருமாறு செய்ய தோழியை வேண்டுகிறாள்.

*அஷ்டபதி 7* கிருஷ்ணனும் ராதை கோபித்துக் கொண்டு சென்றதைப் பார்த்து வருந்துகிறான். அவனுடைய மனோநிலையைக் குறிப்பது இந்த அஷ்டபதி.

*அஷ்டபதி 8* கிருஷ்ணனை அழைத்து வர ராதையால் அனுப்பப்பட்ட சகி அவனிடம் சென்று ராதையின் நிலையைக் கூறுகிறாள்

*அஷ்டபதி 9* சகி கிருஷ்ணனிடம் ராதையின் நிலையை மேலும் வர்ணிக்கிறாள்

*அஷ்டபதி 10* ராதையின் நிலையை அறிந்ததும் கண்ணன் தான் அங்கேயே இருப்பதாகச சொல்லி ராதையை அங்கு அழைத்து வரும்படி சகியிடம் கூறுகிறான்

*அஷ்டபதி 11* சகி கண்ணன் இருக்குமிடத்திற்கு செல்வதற்கு ராதையை தூண்டுகிறாள்

*அஷ்டபதி 12* சகி மீண்டும் கண்ணனிடம் சென்று ராதையின் நிலையைக் கூறுகிறாள்.

*அஷ்டபதி 13* ராதை , சகி இன்னும் வராததைக் குறித்து வருந்துகிறாள்

*அஷ்டபதி 14*. சகி திரும்பி வந்து ஒன்றும் பேசாமல் நின்றாள். அதைப் பார்த்து ராதை கண்ணன் மறந்துவிடடான் என எண்ணுகிறாள்

*அஷ்டபதி 15* ராதை கண்ணன் வேறு கோயியையுடன் இருப்பதால்தான் வரவில்லை என்று எண்ணி துயரமடைகிறாள்

*அஷ்டபதி 16*. யார் கண்ணனுடன் இருக்கிறாளோ அவர்கள் கொடுத்து வைத்தவள். ஏனென்றால் இந்த வேதனையை அனுபவிக்கவில்லை என்று ராதை சொல்லுகிறாள்

*அஷ்டபதி 17* ராதை கண்ணனை நினைத்து ஏங்குகிறாள்

*அஷ்டபதி 18* சகி ராதையிடம் கண்ணன் தானே வந்த பின்பு அவனை போகச்சொன்னது தவறு என்று கூறுகிறாள்

*அஷ்டபதி 19* அவள் சமாதானம் ஆகி இருப்பாள்என்று கண்ணன் மறுபடி அவளிடம் வரநினைப்பது

*அஷ்டபதி 20* கண்ணன் ராதை இன்னும் தயங்குவதைப் பார்த்து அவளாக வரட்டும் என்று அவர்கள் சந்திக்கும் இடத்தில் சென்று காத்திருக்கிறான்.

*அஷ்டபதி- 21* ராதை, கண்ணன் இருக்கும் இடம் நோக்கி செல்ல நினைக்கிறாள்

*அஷ்டபதி 22* ராதை கண்ணன இருக்கும் இடம்போய் அவனைக் காண்கிறாள் (கல்யாண அஷ்டபதி) ஜீவாத்மாவும் பரமாத்மாவும் இணையும் இடம்

*அஷ்டபதி 23* ராதையிடம் கண்ணன் பேசுகிறான்.

*அஷ்டபதி 24* கண்ணனுடன் இணைந்த பிறகு ராதா கண்ணனை நோக்கி இவ்வாறு கூறுகிறாள்.

முதல் அஷ்டபதி – ஸ்லோகம்

மேகைர்மேதுரமம்பரம் வனபுவ: ஸ்யாமா: தமாலத்ருமை:நக்தம் பீருரயம் த்வமேவ ததிமம் ராதே க்ருஹம் ப்ராபய

இத்தம் நந்த நிதேஸத: சலிதயோ: பிரத்யத்வ குஞ்ஜத்ருமம்

ராதா மாதவயோர்  ஜயந்தி யமுனாகூலே ரஹ: கேளய:

வாக்தேவதா சரித சித்ரித சித்த ஸத்மா

பத்மாவதீ சரண சாரண சக்ரவர்த்தீ

ஸ்ரீ வாஸூதேவரதி கேளிகதா ஸமேதம்

ஏதம் கரோதி ஜயதேவ கவி: ப்ரபந்தம்

யதி ஹரிஸ்மரணே ஸரஸம் மன:

யதி விலாஸ கலாஸு குதூஹலம்

மதுர கோமள காந்த பதாவளீம்

ஸ்ருணு  ததா ஜயதேவ ஸரஸ்வதீம்

வாச: பல்லவயுத்யுமாபதிதர: ஸந்தர்ப்ப ஸுத்திம் கிராம்

ஜானீதே ஜயதேவ ஏவ ஸரண: ஸ்லாக்யோ துரூஹத்ருதே

ஸ்ருங்காரோத்தர ஸத்ப்ரமேய ரசனை: ஆசார்ய கோவர்த்தன

ஸ்பர்த்தீ கோபி நவிஸ்ருத: ஸ்ருதிதரோ தோயீ கவிஷ்மாபதி:

ராகம் மாளவம்

ப்ரளய பயோதி ஜலே த்ருத வானஸி  வேதம்

விஹித வஹித்ர சரித்ரம் அகேதம்

கேசவ த்ருத மீன ஸரீர (ஜய ஜகதீஸ ஹரே )

பிரளயபயோதிஜலே- பிரளயகால வெள்ளத்தில்
மீன சரீர- மீன் உருக்கொண்டு
கேசவ- கிருஷ்ணா
அகேதம்- சிரமம் இன்றி
விஹிதவஹித்ரசரித்ரம்- ஒரு ஓடத்தைப்போல சஞ்சரித்து
வேதம்-வேதங்களை
த்ருதவான் அஸி- மீட்டாய்
ஜெய ஜகதீசஹரே – உலகநாயகனே , நாராயணா உனக்கு ஜெயம் உண்டாகட்டும்.(இது ஒரு மங்களாசாசனம் )

வேதங்கள் கடலினில் ஹயக்ரீவாசுரனால் மூழகடிக்கப் பட, ஞானம் தர்மம் இவை வேதத்தின் வழிகாட்டுதல் இன்றி அதர்மத்தில் மூழ்கின. மஹாமத்ஸ்யமாக நாராயணன் வேதங்களை வெளிக் கொணர்ந்தார் என்பது மத்ஸ்யாவதாரம். ஸர்வஞத்வம் ஸர்வவ்யாபித்வம் இவையே மஹாமத்ஸ்யம். இறைவன் அருளால் மட்டுமே இந்த சம்சாரத்தைக் கடக்க இயலும்.ஆகையால் இறைவனே துக்க சாகரத்தைக் கடக்கும் ஓடமாகி துக்கமற்ற (அகேதம் ) கரையில் நம்மை சேர்க்கிறான்.

க்ஷிதிரதி விபுலதரே தவதிஷ்டதி ப்ருஷ்டே

தரணி தரண கிண சக்ர கரிஷ்டே

கேசவ த்ருத கச்சப ரூப (ஜயஜக தீஸஹரே )

க்ஷிதி: இந்த பூமி
விபுலதரே – விசாலமான
தவ ப்ர்ஷ்டே – உன் முதுகில்
திஷ்டதி – நிற்கிறது.
தரணி தரண- பூமியை சுமப்பதால்
கிணசக்ர கரிஷ்டே –உன் முதுகில் வட்ட வடிவமான வடுக்கள் அழகு செய்கின்றன.
கேசவ –கேசவா
த்ருதகச்சப ரூப- ஆமை உருக் கொண்டவனே

இந்த ஸ்லோகம் கூர்மாவதாரத்தைக் குறிப்பிடுகிறது. ஆனால் மந்தரமலையைத் தாங்கியதைக் கூறாமல் கவி உலகத்தையே தாங்கும் ஆதி கூர்ம வடிவினையே குறிப்பிடுகிறார். இதன் சாராம்சம் என்ன வென்றால் இந்த உலகத்தையே தாங்குபவன் இந்த மந்தர மலையை முதுகில் தாங்கினான் என்பது ஒரு பொருட்டல்ல என்பது.

தேசிகர் தசாவதார ஸ்தோத்ரத்தில் இவ்வாறு குறிப்பிடுகிறார். கூர்மாவதாரத்தில் தேவர்களும் அசுரர்களும் மந்தர மலையை பகவான் முதுகில் ஏற்றிக் கடைந்தபோது அது அவருக்கு முதுகு சொறிவதைப்போல பரம சுகமாக இருக்க ஆனந்தமாகத் தூங்கினாராம். அவர் மூச்சுக்காற்று கடல் அலைகளை ஊஞ்சல் போல ஆடவைத்ததாம் . அது திருமகளுடன் அவர் ஊஞ்சலாடுவது போல இருந்ததாம்.

கூர்மாவதாரத்தில் பகவானுடைய முதுகு ஒரு லக்ஷ யோசனைகள் பரப்பைக் கொண்டதாக இருந்தது என்று பாகவதம் சொல்கிறது.

வஸதி தஸன ஸிகரே தரணீ தவ லக்னா

ஸஸினி களங்க களேவ நிமக்னா

கேசவ த்ருத ஸூகர ரூப (ஜயஜக தீஸஹரே )

த்ருத ஸூகர ரூப – வராக உருக் கொண்டவனே
தவ தசன சிகரே- உன் கோரைப்பல்லின் நுனியில்
வஸதி லக்னா- ஒட்டிக்கொண்டு இருந்த
தரணீ- பூமியானது
சசினி – சந்திரனில்
நிமக்னா- உள்ளே ஒளிந்த
களங்க கலா இவ – களங்கம் போல இருந்தது

வராஹப் பெருமானின் கோரைப்பல் வளைந்து சந்திரன் பிறை போல இருந்தது, அதில் தாங்கிய பூமி பிறையினுள் களங்கம் போல் தெரிந்தும் தெரியாமலும் இருந்தது,

தேசிகர் இதை வர்ணிக்கிறார் . வராஹப்பெருமான் மிக வேகத்துடன் வெளிக் கிளம்பின போது எல்லா ஜீவராசிகளையும் தன்னுள் கொண்ட பூமி அவர் பல்லில் ஒட்டிக்கொண்ட கோரைக்கிழங்கு போல் இருந்ததாம்.

தவகர கமலவரே நகமத்புத ஸ்ருங்கம்

தளித ஹிரண்ய கஸிபு தனு ப்ருங்கம்

கேசவ த்ருத நரஹரி ரூப (ஜயஜக தீஸஹரே )

த்ருத நரஹரி ரூப- நரசிங்க ரூபம் கொண்ட
தவ கரகமலவரே –உன் தாமரைக் கரத்தில்
அத்புத ச்ருங்கம் – மலைச் சிகரத்தைப்போன்ற
நகம் – நகம்
தலித ஹிரண்ய கசிபுதனு – ஹிரண்யனின் உடலைக் கிழித்த
ப்ருங்கம்- வண்டு ஆனது.

இந்த ச்லோகம் அத்புத ரசத்தைவெளிப்படுத்துகிறது.
1. தாமரை போன்ற கைகளில் மலைச்சிகரத்தைப் போன்ற நகங்கள் ஒரு அத்புதம்
2. சாதாரணமாக வண்டுதான் தாமரை இதழ்களைத் துளைத்துக்கொண்டு உள்ளே செல்லும். ஆனால் இங்கு தாமரையின் முனைகள் வண்டைத் துளைப்பது இன்னொரு அத்புதம் .
இது கவியின் கற்பனை வளத்தைக் காட்டும் அருமை

சலயசி விக்ரமணே பலிமத்புத வாமன

பத நக நீரஜ  நித ஜன பாவன

கேசவ த்ருத வாமன ரூப (ஜயஜக தீஸஹரே )

கேசவ – கேசவா
த்ருதவாமன ரூப – வாமனன் உருக் கொண்டவனே
விக்ரமனே(णे)-மூன்று அடிகள் எடுப்பதில்
ச்சலயஸி- பலியை வஞ்சித்தாய்
பதநக நீர ஜனித ஜனபாவன- உன் நகத்திலிருந்து பெருகிய நீர் மக்களை புனிதப்படுத்தியது.
வாமனனாக வந்து மூன்றடி மண் கேட்டு த்ரிவிக்ராமனாக் வளர்ந்ததை வஞ்சித்தாய் என்று கூறுகிறார்.
த்ரிவிக்ரமனின் பாதம் பிரம்ம லோகத்தை அடைய பிரம்மா தன் கமண்டலுவில் இருந்து நீரைத் தெளித்து பாதத்தை அலம்புகிறார் . அந்த பாதத்தில் இருந்து விழுந்த நீரே கங்கை ஆயிற்று. பிறகு பகீரதன் மூலம் பூமிக்கு வந்து மக்களை புனிதப்படுத்துகிறது.

க்ஷத்ரிய ருதிரமயே ஜகத பகத பாபம்

ஸ்னபயஸி பயஸி ஸமித பவ தாபம்

கேசவ த்ருத ப்ருஹுபதி  ரூப (ஜயஜக தீஸஹரே )

கேசவ – கேசவா
த்ருத ப்ருகுபதிரூப – பரசுராமனாக வந்து
க்ஷ்த்ரியருதிரமயீ-க்ஷத்ரியர்களின் உதிரமாகிய
பயசி- நீரில்
ஜகத் – உலகத்தை
ஸ்னபயஸி- நீராட்டி
அபஹதபாபம்- அதன் பாவங்களைப் போக்கி
சமித பவதாபம்- சம்சார துக்கத்தைப் போக்கினாய்

பரசுராமர் குருக்ஷேத்ரத்தில் க்ஷத்ரியர்களின் குருதியால் ஒரு தடாகத்தை உண்டாக்கினார். அதில் ஸ்நானம் செய்தால்எல்லா பாவங்களும் தீரும் என்றும் சம்சார துக்கம் போகும் என்றும் சொல்லப்படுகிறது. இதைத்தான் கவி இங்கே குறிப்பிடுகிறார்.

விதரஸி திக்ஷுரணே திக்பதிகமனீயம்

தஸமுக மௌளி பாலிம் ரமணீயம்

கேசவ த்ருத ரகுபதி ரூப (ஜயஜக தீஸஹரே )

கேசவ – கேசவா-
த்ருத ராம சரீர – ராமனாக வந்து
ரமணீயம்-அழகான
தசமுகமௌலி மணிம் – ராவணனின் பத்து தலைகளிலும் இருந்த மணிகளை
திக்பதி கமநீயம் –பத்து திக்பாலகர்களும் விரும்பும்படி
ததாஸி- – கொடுத்தாய்

ராவணனைக் கொன்றபின் அவனுடைய பத்து தலைகளிலும் இருந்த மணி மகுடங்களை அவனால் துன்புறுத்தப்பட்ட திக்பலகர்களுக்கு கொடுத்தான் என்று பொருள்.

வஹசி விபுஷி விஸதே வஸனம் ஜலதாபம்

ஹலஹதி பீதி மிளித யமுனாபம்

கேசவ த்ருத ஹலதர ரூப (ஜயஜக தீஸஹரே )

கேசவ – கேசவா
ஹலதரரூப – பலராமனாய் வந்து
விசதே – வெண்மையான
வபுஷி – உடலில்
ஜலதாபம் – நீருண்ட மேகம் போன்ற
வசனம் – உடை
வஹஸி- தரித்துள்ளாய்
ஹலஹதிபீதி- உன்னுடைய கலப்பைக்கு பயந்து
மிலித யமுனாபம் – யமுனையே உன்னிடம் அடைக்கலம் புகுந்தது போல் இருக்கிறது.

பலராமர் வெண்மை நிறம் கொண்டவர் ( ஆதிசேஷனின் நிறம்).கருப்பு ஆடை அணிந்தவர் .கண்ணன் கருமை நிறம் . தங்க நிற ஆடை அணிந்தவன் . இங்கு ஒருசமயம் பலராமர் மதுரையில் இருந்து கோகுலம் வருகிறார். அப்போது அவர் யமுனையில் ஜலக்ரீடை செய்ய ஆவல் கொண்டு யமுனையை தன் இருப்பிடத்திற்கு வரும்படி அழைக்க யமுனை வராததால் கோபம் கொண்டு கலப்பையால் யமுனையை இழுக்கிறார். இந்த சம்பவம் இங்கே நினைவுகூரப் படுகிறது.

நிந்தஸி  யக்ஞ விதே அஹஹ ஸ்ருதி ஜாதம்

ஸதய ஹ்ருதய தர்ஸித பஸுகாதம்

கேசவ த்ருத புத்த ஸரீர (ஜயஜக தீஸஹரே )

கேசவ- கேசவா
ஸதய ஹ்ருதய- தயை உள்ளம் கொண்டவனே
த்ருத புத்த சரீர- புத்தர் உருக்கொண்டு
ஸ்ருதிஜாதம் – வேத பிரமாணமான
யக்ஞவிதே:-யக்ஞங்களில்
தர்சித- காணப்பட்ட
பசுகாதம் – பசுக்கொலையை
நிந்தஸி- நிந்தித்தாய்

புத்தர் வேதத்தின் விரோதி அல்ல. அஹிம்சை கொள்கை உள்ள அவர் பசுக்கொலையை தான் கண்டித்தார். அவர் காலத்தில், வேதமுறைகள் சரியாக அனுஷ்டிக்கப் படவில்லை.,பேராசை கொண்ட பண்டிதர்கள் பசுக்கொலையை பெருவாரியாக மேற் கொண்டனர். புத்த அவதாரத்தின் மூலம் ,” எல்லா உயிரிலும் நானே இருக்கிறேன்” என்று கூறிய கண்ணனின் தயை சொல்லப் படுகிறது .

ம்லேச்ச நிவஹநிதனே கலயஸி கரவாளம்

தூமகேதுமிவ கிமபி கராளம்

கேசவ த்ருத கல்கி ஸரீர (ஜயஜக தீஸஹரே )

கேசவ – கேசவா
த்ருத கல்கி சரீர- கல்கி அவதாரத்தில்
ம்லேச்ச நிவஹ நிதனே – துஷ்டர்களை அழிப்பதற்கு
கிமபி கராளம்- கடுமையான
தூமகேதும் இவ –தூமகேதுவைப் போல
கலயஸி கரவாளம் – கத்தியை எடுக்கிறாய்.

ஸ்ரீஜயதேவகவேரிதம் உதிதம் உதாரம்
ச்ருணு ஸுகதம் சுபதம் பவ சாரம்
கேசவ த்ருத தச வித ரூப
ஜய ஜகதீச ஹரே
கேசவ- கேசவா

த்ருத தசவித ரூப – பத்து அவதாரம் எடுத்தவனே
ஸ்ரீஜயதேவகவே: ஜெயதேவகவியின்
உதிதம் – படைப்பான
ஸுகதம் – சுபதம்- சுகத்தையும் நலனையும் அளிக்கும்
பவசாரம்- வாழ்க்கையின் சாரமாகவும் உள்ள

இதம் உதாரம் – இந்த துதியை
ச்ருணு- கேள்

ஜெய ஜெகதீச ஹரே – உலக நாயகனாகிய உனக்கு மங்களம்

ஸ்ரீ ஜயதேவ கவே: இத முதிதம் உதாரம்

ஸ்ருணு ஸுகதம் ஸுபதம் பவஸாரம்

கேசவ த்ருத தஸவித ரூப (ஜயஜக தீஸஹரே )

வேதானுத்தரதே ஜகன்னிவஹதே பூகோளம் உத்பிப்ரதே

தைத்யம் தாரயதே பலிம் சலயதே க்ஷத்ரக்ஷயம் குர்வதே

பௌலஸ்த்யம்  ஜயதே ஹலம் கலயதே காருண்யம் ஆதன்வதே

ம்லேச்சான் மூர்ச்சயதே தஸாக்ருதி க்ருதே கிருஷ்ணாய துப்யம் நம:

முடிவில் ஒரே ஸ்லோகத்தில் பத்து அவதாரத்தையும் வர்ணிக்கிறார்
.
வேதான் உத்தரதே ஜகன்னிவஹதே பூகோளம் உத்பிப்ரதே
தைத்யம் தாரயதே பலிம் சலயதே க்ஷத்ரக்ஷயம் குர்வதே
பௌலஸ்த்யம் ஜெயதே ஹலம் கலயதே காருண்யம் ஆதன்வதே
ம்லேச்சான் மூர்ச்ச்யதே தசாக்ருதிர்க்ருதே க்ருஷ்ணாய தஸ்மை நம:

வேதான் உத்தரதே -வேதத்தைக் காத்து( மத்ஸ்யம்)
ஜகன்னிவஹதே -உலகைத் தாங்கி( கூர்மம்)
பூகோளம் உத்பிப்ரதே -பூமியை வெளிக் கொணர்ந்து ( வராஹம்)
தைத்யம் தாரயதே -அசுரனை பிளந்து ( நரசிம்மம்)
பலிம் சலயதே -பலியை வஞ்சித்து( (வாமனன்)
க்ஷத்ரக்ஷயம் குர்வதே -க்ஷத்ரியர்களை அழித்து ( பரசுராமர்)
பௌலஸ்த்யம் ஜெயதே- ராவணனை வென்று( ராமர்)
ஹலம் கலயதே- கலப்பையைத் தாங்கி(பலராமர்)
காருண்யம் ஆதன்வதே- கருணை உருவாகி( புத்தர்)
ம்லேச்சான் மூர்ச்ச்சயதே –துஷ்டர்களை அழித்து
தசாக்ருதி: க்ருதே- இவ்வாறு பத்து அவதாரம் எடுத்த
க்ருஷ்ணாய தஸ்மை நம:- கிருஷ்ணனை வணங்குகிறேன்.

—————-

இந்த அஷ்டபதி கிருஷ்ணனை துதிப்பதாக அமைந்துள்ளது.

அஷ்டபதி – 2

 ராகம் பைரவி                       தாளம் ஆதி 

ஸ்ரித கமலாகுச மண்டல த்ருத குண்டல

கலித லலித வனமால ஜய ஜய தேவ ஹரே

ஹரி கோவிந்த ஹரி கோபால  (ஜய ஜய தேவ ஹரே)

ச்ரிதகமலாகுசமண்டல- ஸ்ரீதேவியின் மார்பின் அணியானவனே

த்ருதகுண்டல –குண்டலம் தரித்தவனே

கலிதலலிதவனமால- வனமாலை அணிந்தவனே

ஜய ஜயதேவ ஹரே-இது த்ருவ பதம் என்று சொல்லப்படுகிறது,.கவியின் முத்திரையாய் எல்லா ஸ்லோகங்களுக்கும் கடைசி வரியாய் இருக்கிறது.

முதல் அஷ்டபதியில் கண்ணனை நாராயணனாக வர்ணித்தாயிற்று. இதில் புருஷகாரபூதையான ஸ்ரீயை குறிப்பிடுகிறார், ஸ்ரீதேவியின் மார்பின் அணியானவன் என்று. . கடைசி ஸ்லோகத்தில் கூறியுள்ளபடி அவளை முன்னிட்டுக்கொண்டுதான் பகவானை சரணடைய வேண்டும் என்ற சம்ப்ரதாயத்தை ஒட்டி.

குண்டலம் தரித்து, வனமாலையுடன் கண்ணனின் அழகைக் காண்கிறோம். கையில் குழல் முன்னுச்சியில் மயிற்பீலியுடன் அவனை கற்பனை செய்கிறோம்.

தின மணி மண்டல மண்டன பவ கண்டன

முனிஜன மானஸ ஹம்ஸ (ஜய ஜய தேவ ஹரே)

தினமணிமண்டன -சூரியனுக்கு அலங்காரம்ஆனவனே
பவகண்டன- சம்சார துக்கத்தை போக்குபவனே
முநிஜனமானஸஹம்ஸ- முனிவர்களின் மனமாகிய மானஸரோவரில் நீந்தும் ஹம்ஸமானவனே . ( ஹம்சம் மானஸரோவரில் இன்புற்றிருப்பது போல முனிவர்கள் மனதில் பிரகாசிக்கிறான்.)

சூர்ய மண்டல மத்ய வர்த்தி, என்று பிரம்மத்தை சூரியமண்டலத்தின் உள்ளே இருப்பதாக வேதம் கூறுகிறது. எல்லா உயிர்களுக்கும் அந்தராத்மாவான நாராயணன் சூரியனுக்குள்ளும் இருக்கிறான் என்பது பொருள். மேலும், ‘தஸ்ய பாந்தம் அனுபாதி சர்வம் தஸ்ய பாஸா சர்வம் இதம் விபாதி,’ சூரியன் மற்றும் எல்லா பிரகாசத்திற்கும் ஒளியாய் இருப்பது பிரம்மமே என்ற உபநிஷத் வாக்கியத்தையும் இங்கு நினைவு கூறுகிறோம்.

காளிய விஷதர பஞ்ஜன ஜன ரஞ்ஜன

யதுகுல நளின தினேஸ (ஜய ஜய தேவ ஹரே)

காளியவிஷதரகஞ்சன – காளியனாகிய பாம்பை அடக்கி
ஜனரஞ்சன—ஜனங்களை மகிழ்வித்தவனே
யதுகுலநளினதிநேச- யதுகுலம் என்ற தாமரைக்கு சூரியன் போன்றவனே . யதுகுலத்தின் துயரைப் போக்கி அதை விகசிக்க செய்தவன்

மதுமுர நரக வினாஸன கருடாஸன

ஸுரகுல கேளி நிதான (ஜய ஜய தேவ ஹரே)

மதுமுரநரகவினாசன- மது, முரன், நரகன் இவர்களை அழித்து
கருடாஸன-கருடனை வாகனமாகக் கொண்டு
ஸுரகுலகேளிநிதான- தேவர்களை மகிழ்வித்தவனே

அமல கமலதள லோசன பவமோசன

த்ரிபுவன பவன நிதான (ஜய ஜய தேவ ஹரே)

அமலகமலதள லோசன-அழகான தாமரைக்கண் உடையவனே
பவமோசன-பிறவித்துன்பத்தில் இருந்து விடுவிப்பவனே
த்ரிபுவனபவனநிதான- மூவுலகையும் படைத்து அதன் கண் நிற்பவனே

மூவுலகும் அவனிடம் இருந்து உண்டானதும் அன்றி அவனுடைய இருப்பிடம் ஆகவும் உள்ளது, நாராயணன் என்ற சொல்லுக்கு எல்லாம் அவனிடம் உள்ளது , எல்லாவற்றிலும் அவன் உள்ளான் என்று பொருள்.
துஷ்ட நிக்ரகம் சிஷ்ட பரிபாலனம் முன் ஸ்லோகத்தில் கூறப்பட்டது. இதில் அவன் அதோடு நிற்கவில்லை. ஜீவர்களை பிறவித்துன்பத்தில் இருந்து விடுவித்து முக்தியை அளிக்கிறான் என்று இதில் கூறப்பட்டுள்ளது. எப்படி? அவனுடைய தாமரைக்கண் பார்வையிலேயே நம்மைக் கடைத்தேற்றுகிறான்.

ஜனக ஸுதா க்ருத பூஷண ஜித தூஷண

ஸ்மர ஸ்மித தஸகண்ட (ஜய ஜய தேவ ஹரே)

ஜனகஸுதாக்ருத பூஷண-ஜனககுமாரியான சீதைக்கு அணிகலன் போன்றவனே
ஜிததூஷண- தூஷணனை வென்றவனே (காம்க்ரோதம் முதலிய எல்லா தோஷங்களையும் வென்றவனே)
ஸமரசமித தசகண்ட- ராவணனைக் கொன்றவனே

இங்கு சீதையின் அணிகலன் என்று சொல்லி தூஷணனை வென்றவன் என்று அடுத்து வருவது வால்மீகி ராமாயணத்தில் கர தூஷணர்களையும் அவர் சைன்யத்தையும் ராமன் ஒருவனாக நின்று அழித்தபோது நடந்த சம்பவம் நினைவுக்கு வருகிறது.

சீதை ராமனின் வீரத்தைக் கண்டு மகிழ்ந்து அவனை ஆரத்தழுவுகின்றாள். அப்போது அவளை காட்டுக்கு அழைத்துச்செல்ல ராமன் மறுத்தபோது “ராம ஜாமாதரம் ப்ராப்ய ஸ்த்ரியம் புருஷவிக்ரஹம்,”? “என்தந்தை ஒரு ஆண் வேடமிட்ட பெண்ணையா மருமகனாகப் பெற்றார்” என்று கூறினாள் அல்லவா அதை நினைவுகூர்ந்து கண்ணீர் பெருக அவன் விழுப்புண்களைப் போக்க விரும்பினவள் போல் ஆரத்தழுவினாள்.

அபினவ ஜலதர ஸுந்தர த்ருத மந்தர

ஸ்ரீமுக சந்த்ர சகோர (ஜய ஜய தேவ ஹரே)

அபிநவஜலதரசுந்தர –நீருண்டமேகம்போல் அழகானவனே
த்ருதமந்தர—மந்தர மலையைத் தாங்கினவனே
ஸ்ரீமுக சந்த்ர சகோர—ஸ்ரீதேவியின் முகமாகிய சந்திரனுக்கு சகோரபட்சி போன்றவனே

அபிநவ ஜலத என்றால் அப்போது நீருண்ட மேகம் , அதாவது அவனுடைய கருணை எப்போதும் வற்றாத நீருண்டமேகம் என்று பொருள்.

மந்தரமலையை தாங்கினவன் என்பது அவன் வற்றாக் கருணைக்கு ஒரு சான்றாகத் திகழ்கிறது.

மந்தரமலையை கருடன் மேல் ஏற்றி ஆமை உருவில் அதை சுமந்து அதன் மேல் கையால் பிடித்துக் கொண்டு கடைபவர்களை ஊக்குவித்து வாசுகியை உள்ளிருந்து பலமூட்டி அமிர்தத்தை பங்கிட்டு இன்னும் என்னதான் அவன் செய்யவில்லை?

அவன் கருணையின் எல்லை தயையே உருவான மகாலக்ஷ்மியை தன் மார்பில் சுமந்து ஹ்ருதயத்தை தயையின் இருப்பிடமாகச் செய்தது.
அதனால் லக்ஷ்மியின் சந்திர வதனத்தின் அம்ருதத்தைப பருகும் சகோரபட்சி ஆகிறான்.

ஸ்ரீ ஜயதேவ கவேரிதம் குருதே முதம்

மங்களம் உஜ்வல கீதம் (ஜய ஜய தேவ ஹரே)

கடைசி ஸ்லோகத்தில் கிருஷ்ணனை சரணம் அடைதல் சொல்லப் படுகிறது.

8.தவ சரணம் பிரணதா வயம் இதி பாவய
குரு குசலம் ப்ரணதேஷு
ஜய ஜயதேவ ஹரே

.தவ சரணம் – உன் சரணத்தை
பிரணதா வயம்- நமஸ்கரிக்கிறோம்
இதி பாவய – என்று அறிவாயாக
ப்ரணதேஷு-வணங்குபவர்க்கு
குரு குசலம்- நன்மை அளிப்பாயாக.

ஸ்ரீ ஜெயதேவ கவேரிதம் குருதே முதம் மங்களம் உஜ்வல கீதம்
ஜயஜயதேவஹரே
ஸ்ரீ ஜெயதேவ கவேரிதம்-ஜெயதேவ கவி செய்த இந்த கவிதை
குருதே முதம்-மகிழ்ச்சி அளிக்கிறது
மங்களம் உஜ்வல கீதம்-மங்களமானதும் உயர்வானதும் ஆகியது.

ஸ்லோகம்

பத்மா பயோதர தடீ பரிரம்பலக்ன

காஸ்மீர முத்ரிதமுரோ மதுஸுதனஸ்ய

வ்யக்தானுராகமிவ கேலதனங்க கேத

ஸ்வேதம்பு பூரம் அனுபூரயது ப்ரியம் வ:

மூன்றாவது அஷ்டபதி

ராதை கண்ணன் மற்றவர்களுடன் சல்லாபம் செய்வதைப் பார்த்து பொறாமை கொண்டு அவனை விட்டு நீங்குகிறாள். ஆனால் அவனை மறக்க முடியாமல் அவனைத் தேடி அலைபவளிடம் அவளுடைய தோழி வந்து அவன் காட்டில் மற்ற கோபிகைகளுடன் வசந்த கால கேளிக்கைகளில் ஈடுபட்டு இருப்பதைச். சொல்கிறாள். அந்த அஷ்டபதியைக் கீழே காணலாம்.

அதற்கு முன் ஒரு சந்தேகம் எழுகிறது. ராதைக்கு அவள் அவனை எங்கு விட்டு வந்தாள் என்பது தெரியாதா? அவனைத் தேடி அலைவானேன்?

அவன்தான் மாயாவி ஆயிற்றே . திடீரென்று மறைந்து விடுவான். இந்த இடத்தில் பாகவதத்தில் காணப்படும் ஒரு காட்சி நினைவுக்கு வருகிறது.

கோபியர் கண்ணன் தங்களுடன் இருப்பதால் கர்வம் கொள்ள அவன் ஒரு கோபியுடன் மறைந்து விடுகிறான். அவள் கண்ணன் தன் மேல்தான் மிக அன்பு வைத்திருப்பதாக எண்ணி தன்னால் நடக்கமுடியவில்லை என்று கூறி தன்னை தூக்கிச்செல்லும்படி கூறுகிறாள். கண்ணன் “சரி, என் தோள் மீதுஏறிக்கொள் என்று கூறி மறைந்து விடுகிறான். அவன் அவனைத் தேடி அலைகிறாள். இந்த கோபியைத்தான் பிற்காலத்தில் ராதையாக் அச்சிதன்யர் முதலியவர்கள் உருவகப் படுத்தி இருக்க வேண்டும். ஏனென்றால் பாகவதத்தில் ராதை என்ற பாத்திரமே இல்லை.

அஷ்டபதி முன்னுரையில் கூறியபடி ராதை ஜீவாத்மா என்று பார்த்தால், ஜீவன் தன் அந்தராத்மாவான பகவானுடன் இணையத் துடிக்கிறது. ஆனால் உலக இன்பத்தில் ஈடுபட்டு அறியாமையினால் ஏற்பட்ட நான் என்ற உணர்வால் அவனைப் பிரிந்து வருந்துகிறது. ஆனாலும் அதன் காரணம் என்ன என்பதை அறியவில்லை.

நாம் உலகில் நம் அறியாமையினால் அவனைப் பிரிந்து வருந்துகிறோம் ஆனாலும் அது அவனுடைய பிரிவினால்தான் என்பதை அறியாது அவனையே குறை கூறுகிறோம்.

இப்போது இந்த அஷ்டபதியைப் பார்க்கலாம்.இதில் உள்ள வசந்த கால வர்ணனை காளிதாசனின் குமாரசம்பவத்தில் சிவன் தவத்தைக் கலைக்க மன்மதன் வரும்போது சொல்லப்பட்ட வசந்த வர்ணனையை நினைவூட்டுகிறது. கவித்துவத்தில் காளிதாசனை ஒத்திருந்தாலும் கண்ணனின் ராசலீலையை சொல்வதால் அதை விட மேம்பட்டதாகிறது.

வஸந்தே வாஸந்தி குஸும ஸுகுமாரைஅவயவை:

ப்ரமந்தீம் காந்தாரே பஹுவிஹித க்ருஷ்ணாநுஸரணாம்
அமந்தம் கந்தர்ப்ஜ்வர ஜனித சிந்தாகுலதயா
வலத்பாதாம் ராதாம் ஸரஸமிதம் ஊசே ஸஹசரீ
ராகம் வஸந்தா தாளம் ஆதி
லலித லவங்க லதா பரிஸீலன கோமள மலய ஸமீரே
மதுகர நிகர கரம்பித கோகில கூஜித குஞ்ஜ குடீரே

லலிதலவங்க லதாபரிசீலன- அழகிய லவங்கக் கொடிகளை தழுவி வரும்
கோமள மலயசமீரே – ம்ருதுவான மலாயா மாருதம் வீசும்
மதுகரநிகர கரம்பித- வண்டுகள் இனிமையாக ரீங்கரிக்கும்
கோகில கூஜித குஞ்ச குடீரே- குயில்கள் கூவும் பூங்காவில்

விஹரதி ஹரிரிஹ ஸரஸ வஸந்தே
ந்ருத்யதி யுவதி ஜனேன சமம் ஸகி
விரஹி ஜனஸ்ய துரந்தே ராதே (விஹரதி)

( இந்த வரிகள் த்ருவபதம் என்று சொல்லப் படும் . இவை ஒவ்வொரு ஸ்லோகத்தின் கீழும் காணப்படும் பல்லவி போன்றது.)

ஹரி: – கிருஷ்ணன்
இஹ- இங்கு
விரஹிஜனஸ்ய- பிரிவுற்ற காதலர்களுக்கு
துரந்தே- துன்பத்தைத் தரும்
ஸரஸவஸந்தே- இந்த அழகான வசந்தகாலத்தில்
யுவதிஜனேன ஸமம் – கோபியருடன்
விஹரதி- விளையாடுகிறான்
ஸகி- தோழி

மலையமாருதம் மெல்ல வீசுகிறது லவங்க கொடிகளைத் தழுவி வருவதால் சுகந்தம், வண்டுகளின் ரீங்காரம், குயில்களின் இசை , இவ்வாறு வசந்தம் வர்ணிக்கப படுகிறது. விஹரதி யுவதிஜனேன என்பதால் அவனுடன் இருக்கும் கோபியரின் ஆனந்தமும் விரஹி ஜனஸ்ய துரந்தே என்பதால் அவனைப் பிரிந்து இருக்கும் ராதையின் துன்பமும் தெளிவாகிறது.

உன்மத மதன மனோரத பதிகவ தூஜன ஜனித விலாபே
அளிகுல ஸங்குல குஸும ஸமூஹ நிராகுல வகுள கலாபே (விஹரதி)

உன்மத மதன மனோரத – மன்மதனால் உண்டான வேட்கையுடன்
பதிகவதூஜன – விட்டுப்பிரிந்த காதலரால்
வதூஜன- பெண்களுக்கு
ஜனித விலாபே- துக்கத்தை ஏற்படுத்தும்,
அலிகுல சங்குல நிராகுல – வண்டுகளின் கூட்டத்தால் அல்லலுறும்
குஸுமஸமூஹ- புஷ்பகொத்துகளை உடைய
வகுள கலாபே- வகுள மரங்களைக் கொண்ட,( வசந்த காலத்தில்)

வசந்த காலத்தில் காதல் வேட்கை எல்லை மீற வெளியூர் சென்றுள்ள காதலரை நினைத்து பெண்கள் ஏங்குகின்றனர். வகுள மரங்களில் ஏராளமான பூக்கள் பூக்க வண்டுகள் அவற்றை சுற்றி கோலாஹலமாக இருக்கும் காட்சியை இந்தப் ஸ்லோகம் சித்தரிக்கிறது. பிரிந்துள்ள காதலரை நினைத்த பெண்களின் ஏக்கம் ராதையின் மனதைப படம் பிடிக்கிறது.

ம்ருகமத ஸௌரப ரபஸ வஸம்வத நவதள மால தமாலே
யுவஜன ஹ்ருதய விதாரண மனஸிஜ நகருசி கிம்ஸுக ஜாலே (விஹரதி)

நவதளமால தமாலே- தமால மரங்களின் புத்தம்புதிய தளிர்களின் வரிசை மாலைகள் எனத் தோன்ற
. ம்ருகமத சௌரப ரபஸ வசம்வத- அவைகளின் மணம் கஸ்தூரியை ஒத்து இருந்தது.
கிம்சுக ஜாலே- கிம்சுக புஷ்பங்கள் (சிவப்பு நிறத்தில் வளைவாக இருப்பவை)
யுவ ஜன ஹ்ருதி விதாரண- இளைஞர்களின் ஹ்ருதயத்தை பிளக்கும்
மனஸிஜநகருசி- மன்மதனின் நகங்கள் போன்று இருந்த ( வசந்த காலத்தில்)

மதன மஹீபதி கனக தண்டருசி கேஸர குஸும விகாஸே
மிளித ஸிலீமுக பாடல படல க்ருதஸ்மர தூண விலாஸே (விஹரதி)
மதனமஹீபதி -மன்மதனாகிய அரசனின்
கனகதண்டருசி- பொன் தடியைப்போல் உள்ள
கேஸரகுஸும விகாஸே- பொன்னிற கேசரி புஷ்பங்கள்
மிலித சிலீமுக- வண்டுகளுடன் கூடிய
பாடல படல-பாடல புஷ்பங்கள் ( கிண்ணம் போன்றவை)
க்ருதஸ்மரதூண விலாஸே- மன்மதனின் அம்பறாத்தூணி என பிரகாசிக்கும்,(வசந்த காலத்தில்)
பாடல புஷ்பங்கள் கிண்ணம் போல இருப்பதால் அம்பராத்தூணி என வர்ணிக்கப படுகின்றன. வண்டுகள் சரங்களாக உருவகப்படுத்தப் படுகின்றன . சிலீமுக என்றால், வண்டு , அம்பு என்று இரு பொருள்.
விகளித லஜ்ஜித ஜகதவ லோகன தருண கருண க்ருத ஹாஸே
விரஹி நிக்ருந்தன குந்தமுகாக்ருதி கேதகி தந்ததுரி தாஸே (விஹரதி)

விகலித லஜ்ஜித- வசந்த காலத்தில் மன்மத வேட்கையால் பீடிக்கப்பட்டு வெட்கத்தை விட்ட
ஜகதவலோகன- ஜனங்களைப் பார்த்து
தருண கருண க்ருத ஹாஸே- சிரிப்பதைப்போன்று தோன்றும் வெண்மையான கருண மலர்கள் ,
விரஹிநிக்ருந்தன – விரகத்தால் வாடுபவர் ஹ்ருதயத்தை கிழிப்பதைப் போன்ற
குந்த முகார்த்தி- ஈட்டி ஒத்த முட்களை உடைய
கேதகதந்துரித ஆசே- தாழ்மபூக்களின் வாசத்தால் சூழப்பட்ட திசைகளை உடைய (வசந்த காலத்தில்)

இந்த ஸ்லோகம் கண்ணனைக் குறிப்பதாக உள்ளது. கண்ணன் வெட்கத்தை விட்டு தன்னிடம் ஆசையைத் தெரிவிக்கும் பெண்களைப் பார்த்து கருணையுடன் சிரிக்கிறான் (தருண கருண க்ருத ஹாஸே) தன் ஸ்வரூபத்தை அறியாமல் சாதாரண மானுடன் என்று எண்ணுகிறார்களே என்று.,

மாதவிகா பரிமள மிளிதே நவ மாலிகயாதி ஸுகந்தௌ
முனி மனஸாமபி மோஹன காரிணி தருணா காரண பந்தௌ (விஹரதி)

மாதவிகாபரிமளலலிதே- மாதவிகொடியின் புஷ்பங்களால் பரிமளமானதும்
நவமாலிகயா – மல்லிகையால்
அதிஸுகந்தௌ- மேலும் மணமூட்டப பட்டதும்
முநிமானஸமபி- முனிவர்களின் மனதைக்கூட
மோகன காரிணி- மயக்கச்செய்வதும்
தருண – இளைஞர்களுக்கு
அகாரண பந்தௌ-இயற்கையிலேயே இனியதும் ( ஆன வசந்த காலத்தில்)

ஸ்புரததி முக்த லதா பரிரம்பண முகுளித புலகித சூதே
ப்ருந்தாவன விபினே பரிஸர பரிகத யமுனா ஜல பூதே (விஹரதி)
ஸ்புரத் அதிமுக்த லதா- அசைகின்ற மாதவிக்கொடியால்
பரிரம்பண –தழுவப்பட்டு
முகுலித புலகித சூதே – மயிர்க்கூச்ச்சல் அடைந்தது போல மொட்டுக்கள் கொண்ட மாமரங்கள் உடைய
யமுனாஜலபூதே-யமுனையின் நீரால் புனிதமாக்கப்பட்ட
பிருந்தாவனவிபினே – பிருந்தாவனமாகிய காட்டில்
பரிஸர பரிகத –அன்பு கொண்டவர்களால் சூழப்பட்டு ( வஸந்தகாலத்தில் கண்ணன் விளையாடுகிறான்)
ஸ்ரீ ஜயதேவ பணிதமிதம் உதயதி ஹரி சரண ஸ்ம்ருதி ஸாரம்
ஸரஸ வஸந்த ஸமய வன வர்ணனம் அனுகத மதன விகாரம் (விஹரதி)
ஸ்ரீ ஜெயதேவ பணிதம் இதம்- ஸ்ரீ ஜெயதேவரால் சொல்லப்பட்ட
ஸரஸவஸந்தஸமயவரவர்ணனம்- ரஸமான வசந்த கால வர்ணனை
அனுகத மதன விகாரம் – ராதையின் விரகத்தைக் கூறுவதாகவும்
ஹரிசரணஸ்ம்ருதிஸாரம்- ஹரிசரணத்யானத்தின் சாரமாகவும்
உதயதி – சிறப்புடன் விளங்குகின்றது
ஸ்லோகம்
தரவிதளித மல்லீ வல்லீ சஞ்சத் பராக
ப்ரகடித படவாஸைர் வாஸயன் கானனானி
இஹஹி தஹதி சேதகேதகீ கந்த பந்து:
ப்ரஸர தஸமபாண ப்ராணவத் கந்தவாஹ:
உன்மீலன் மதுகந்தலுப்த மதுப வ்யாதூத சூதாங்குர
க்ரீடத் கோகில காகலீ கலகலைர் உத்கீர்ண கர்ண ஜ்வரா:
நீயந்தே பதிகைகதம் கதமபி த்யானாவதான க்ஷண

 

ப்ராப்த ப்ராண ஸமாஸமாகம ரஸோல்லாஸைஅமீவாஸரா:
—————-
நான்காவது அஷ்டபதி
 
அநேக நாரீ பரிரம்ப ஸம்ப்ரம
ஸ்புரன் மனோஹாரி விலாஸ லாலஸம்
முராரிம் ஆராத் உபதர்ஸயந்தி அஸௌ
ஸகீ ஸமக்ஷம் புனராஹ ராதிகம்
 
ராகம் பந்துவராளி தாளம் :ஆதி
 
சந்தன சர்ச்சித நீலகளேபர பீதவஸன வனமாலி
கேளி சலன்மணி குணடல மண்டித கண்டயுக ஸ்மிதஸாலீ
ஹரிரிஹ முக்த வதூநிகரே விலாஸினி விலஸதி கேளிபரே

கிருஷ்ணன் கோபியருடன் ராஸலீலை செய்வதை தோழி வர்ணிக்கிறாள்.

சந்தனச்சர்சித –சந்தனம் பூசிய
நீலகளேபர- நீல மேனியுடன்
பீதவஸன- பீதாம்பரம் தரித்து
வனமாலீ- வனமாலை அணிந்தவனாய்
கேளிசலன் மணிகுண்டல- அவன் ஆடும்போது அசையும் மணிகுண்டலங்கள்
மண்டித கண்ட யுகஸ்மிதசாலீ-இரு கன்னங்களிலும் விளங்க
விலாசினி- அழகியவளே
ஹரிரிஹ- ஹரி இங்கு
முக்த வதூநிகரே – இளம் பெண்கள் கூட்டத்தில்
கேளிபரே – விளையாடுபவனாக
விலஸதி- விளங்குகிறான்

நீலவண்ண மேனியில் சந்தனப் பூச்சு. இடையில் பீதாம்பரம். மார்பில் வனமாலை. கண்ணன் கோபியருடன் ஆடும்போது அவனுடைய மணிகுண்டலங்கள் அழகாக அவன் கன்னங்களில் அசைகின்றன. இவ்வாறு அவன் இளம்பெண்கள் கூட்டத்தில் விளையாடுவதை வர்ணிக்கும் அஷ்டபதி இது.

பீன பயோதர பார பரேண ஹரிம் பரிரப்ய ஸராகம்
கோபவதூரனுகாயதி காசித் உதஞ்சித பஞ்சம ராகம்

பீனபயோதரபாரபரேண ஹரிம் பரிரப்ய ஸராகம்
கோபவதூரனுகாயதி காசித் உதஞ்சித பஞ்சமராகம்
ஹரிரிஹ முக்த வதூநிகரே விலாசினி விலஸதி
கேளிபரே(துருவபதம் )

கோபவதூ:- கோபியரில்
காசித் – ஒருத்தி
பீனபயோதரபாரபரேண- தன் பருத்த மார்பினால்
ஹரிம்- கண்ணனை
ஸராகம்- காதலுடன்
பரிரப்ய –தழுவிக்கொண்டு
உதஞ்சித பஞ்சமராகம்-பஞ்சம ஸ்வரத்தை ஜீவஸ்வரமாகக் கொண்ட ராகத்தில்
அனுகாயதி- பாடுகிறாள்

ஸ்ருங்கார ரஸத்தை பிரதிபலிக்கும் ராகங்கள் பஞ்சம ஸ்வரத்தை மையமாகக் கொண்டவை. பரதரின் நாட்ய சாஸ்த்ரத்தின்படி ‘பஞ்சமம் மத்யபூயிஷ்டம் ஹாஸ்யஸ்ருங்காரயோ: பவேத் .’ சிருங்காரம் ஹாஸ்யம் இந்த ரஸங்களுக்கு பஞ்சமத்தை மையமாக்க் கொண்ட ராகங்கள் பொருத்தமானவை. அதனால் தான் குயில் பஞ்சமஸ்வரத்தில் கூவுவதால் அது காதலைத் தூண்டுவதாகக் கருதப்படுகிறது’

காபி விலாஸ விலோல விலோசன கேலன ஜனித மனோஜம்
த்யாயதி முக்த வதூரதிகம் மதுஸூதன வதன ஸரோஜம்

காபி விலாஸவிலோலவிலோசன கேலனஜனிதமனோஜம்
த்யாயதி முகதவதூரதிகம் மதுசூதன வதன ஸரோஜம்
ஹரிரிஹ முக்த வதூநிகரே விலாசினி விலஸதி கேளிபரே

காபி முக்தவதூ: ஒரு அழகிய கோபி
விலாஸவிலோலவிலோசன கேலனஜனிதமனோஜம்- கண்ணனின் கண்களுடைய சலனத்தால் ஈர்க்கப்பட்டு காதல் மேலிட்டு
மதுசூதன வதன ஸரோஜம்- கண்ணனின் முகத்தாமரையில்
த்யாயதி அதிகம் – மிகவும் ஆழ்ந்துவிட்டாள்.

காபி கபோலதலே மிளிதா லபிதும் கிமபிஸ்ருதிமுலே
சாரு சுசும்ப நிதம்பவதி தயிதம் புலகைரனுகூலே

காபி கபோலதலே மிலிதா லபிதும் கிமபி ஸ்ருதிமூலே
சாரு சுசும்ப நிதம்பவதீ தயிதம் புலகைரனுகூலே
ஹரிரிஹ முக்த வதூநிகரே விலாசினி விலஸதி கேளிபரே

காபி நிதம்பவதீ- இடை அழகுள்ள ஒருத்தி
கபோல தலே மிலிதா-அவனுடைய கன்னத்தின் அருகில் வந்து
புலகை:அநுகூலே – புலகாங்கிதம் அடைந்து
ஸ்ருதிமூலே- அவன் காதருகில்
லபிதும் கிமபி – ஏதோ சொல்பவள் போல
சாரு சுசும்ப – முத்தமிட்டாள்

கேளிகலா குதுகேன  காசித் அமும் யமுனா வனகூலே
மஞ்ஜூள வஞ்ஜூள குஞ்ஜகதம் விசகர்ஷ கரேணதுகூலே

கேளிகலாகுதுகேன ச காசித் அமும் யமுனாஜலகூலே
மஞ்சுளவஞ்சுளகுஞ்சகதம் விசகர்ஷ கரேண துகூலே
ஹரிரிஹ முக்த வதூநிகரே விலாசினி விலஸதி கேளிபரே

காசித் -ஒரு கோபி
கேளிகலாகுதுகேன – கண்ணனுடன் விளையாட ஆசைகொண்டு
யமுனாஜலகூலே – யமுனைக்கரையில்
மஞ்சுளவஞ்சுளகுஞ்சகதம்- லதாக்ருஹத்தில் உள்ள
அமும்- அவனை
கரேண- கையால்
துகூலே – வஸ்திரத்தைப பிடித்து
விசகர்ஷ- இழுத்தாள்

கரதல தாள தரள வலயாவலி கலிதகலஸ்வன வம்சே
ராஸ ரஸே ஸஹ ந்ருத்யபரா ஹரிணா யுவதி ப்ரஸஸம்ஸே

கரதலதால தரள வலயாவளி கலிதகலச்வனவம்சே
ராஸரஸே ஸஹந்ருத்யபரா ஹரிணா யுவதி: பிரசசம்ஸே
ஹரிரிஹ முக்த வதூநிகரே விலாசினி விலஸதி கேளிபரே

யுவதி:- ஒரு பெண்
ராஸரஸே- ராஸ லீலையில்
ஸஹந்ருத்யபரா-கண்ணனுடன் கூட ஆடுபவளாய்
கலிதகலச்வனவம்சே – கண்ணனின் புல்லாங்குழல் கீதத்திற்கு சரியாக
தரள வலயாவளி – சப்திக்கும் தன்னுடைய வளைகளால்
கரதலதால- தாளம் போட்டுக்கொண்டு
ஹரிணா- கிருஷ்ணனால்
ப்ரசசம்ஸே-பாராட்டப்பட்டாள்

ஜயதி லலிதவ்ருத்திம் சிக்ஷிதோ வல்லவீனாம்
சிதில வலய சிஞ்ஜா சீதலை: ஹஸ்ததாலை:
அகிலபுவனரக்ஷாவேஷ கோபஸ்ய விஷ்ணோ:
அதர மணிஸுதாயாம் அம்சவான் வேணு நால; (தேசிகரின் கோபாலவிம்சதி ஸ்லோகம்-16)

உலகத்தை எல்லாம் காக்க இடையன் வேஷம் கொண்ட விஷ்ணுவான கண்ணனின் புல்லாங்குழலில் இருந்து வந்த நாதமானது கோபியரின் வளையல்களின் தாளத்தை ஒட்டி நாட்டிய கதியை ஒத்திருந்தது. சாதாரணமாக கீதத்திற்கேற்ப தாளம் வாசிக்கப்படும். இங்கு தாளத்தை ஒட்டி கீதம் அமைகிறது, அதாவது பகவான் பக்தர்கள் போடும் தாளத்திற்கு ஆடுகிறான் என்பது அவன் பக்தவாத்சக்யத்தைக் கூறுகிறது.

ஸ்லிஷ்யதி காமபி சும்பதி காமபி காமபி ரமயதி ராமம்
பஸ்யதி ஸஸ்மித சாருதராம் அபராம் அனுகச்சதி வாமாம்

ச்லிஷ்யதி காமபி சும்பதி காமபி காம்பி ரமயதி ராமாம்
பச்யதி ஸ ஸ்மித சாருதராம் அபராம் அனுகச்சதிவாமாம்
ஹரிரிஹ முக்த வதூநிகரே விலாசினி விலஸதி கேளிபரே

ஸ: – கண்ணன்
காம்பி- ஒரு கோபியைச்லிஷ்யதி-தழுவி
சும்பதி காமபி- இன்னொருத்தியை முத்தமிட்டு
காமபி ராமாம் ரமயதி – இன்னொருத்தியுடன் விளையாடுகிறான்
ஸ்மிதசாருதராம்- அழகிய புன்சிரிப்புடன் கூடிய ஒருத்தியை
பச்யதி- பார்க்கிறான்
அபராம் வாமாம் – இன்னொரு அழகியை
அனுகச்சதி- தொடர்கிறான்.

எல்லா கோபியரிடமும் ஒரேவிதமான அன்பு கொண்டுள்ளான் கண்ணன் என்பதை தெரிவிக்கும் ஸ்லோகம் இது. கீதையில் ‘ஸமோ அஹம் சர்வபூதேஷு ந மே த்வேஷ்யோ அஸ்தி ந ப்ரிய:’- எல்லா உயிர்களும் எனக்கு ஒன்றுதான்., அன்பன் பகைவன் என்ற வேறுபாடில்லை. என்று சொல்கிறான். இதைப் புரிந்துகொள்ளாமல் நாம் ராதையைப் போல் அவன் பாரபட்சம்

ஸ்ரீ ஜயதேவ பணிதமிதம் அத்புத கேஸவ கேளி ரஹஸ்யம்
ப்ருந்தாவன விபினே சரிதம் விதனோது ஸுபானி யஸஸ்யம்

ஸ்ரீ ஜெயதேவபணிதம் இதம் அத்புத கேசவகேளிரஹஸ்யம்
பிருந்தாவனவிபினே லலிதம்விதநோது சுபானி யசஸ்யம்
ஹரிரிஹ முக்த வதூநிகரே விலாசினி விலஸதி கேளிபரே

ஸ்ரீஜயதேவபணிதம் – ஜெயதேவரால் புனையப்பட்ட
பிருந்தாவனவிபினே லலிதம்- அழகிய பிருந்தாவனத்தில் நடைபெற்ற
அத்புதகேலி ரஹஸ்யம் – கண்ணனின் அத்புதமான ராசலீலை என்ற ரஹஸ்யம்
இதம்- என்ற இந்த கவிதை
சுபானி யசஸ்யம்- மங்கலமான மேன்மையை
விதநோது- விளைவிக்குமாக.

அத்புத கேலி ரஹஸ்யம்
முக்திக்கு இரண்டு வழிகள் சொல்லப் பட்டிருக்கின்றன., முதலாவது ரஸாஸ்வாதம் பிரேம பக்தி. மற்றது ஞான மார்க்கம்.
‘ரஸோ வை ஸ: ரஸம் ஹோவாயம் லப்த்வா ஆனந்தீ பவதி. ‘ அதாவது பிரம்மமே ரஸம். பிரம்மத்தை அடைந்தால் ஆனந்தம் பெறலாம். ரஸம் , ஆனந்தம், பிரம்மம் எல்லாம் ஒன்றே.

கோபியர் , மீரா ஆண்டாள் இவர்களுடைய பக்தி மதுர பக்தி., எளிதானது. ஆழ்வார்களும் நாயக நாயகி பாவத்தி ஆழ்ந்து அனுபவித்துள்ளனர்.

பக்தியின் ரஸங்கள் தாஸ்ய, சக்ய, வாத்சல்ய , மதுர, சாந்த என்று ஐந்து வகைப்படும்.இதற்கு உதாரணங்கள் ஹனுமான் தாஸ்யம் , உத்தவர் சக்யம்,யசோதை வாத்சல்யம் , ராதை மதுரம், முனிவர்கள் சாந்தம்.

ராஸக்ரீடை ரஹஸ்யம் என்னவென்றால், ஜீவன் பிரம்மத்துடன் சேர்ந்து அனுபவிக்கும் ஆனந்தமே. யோகிகள் இந்த உலகத்தையே பிருந்தாவ்னமாகக் காண்கிறார்கள். பகவானின் சிருஷ்டி ஸ்திதி ஸம்ஹாரம் என்ற லீலைதான் ராஸலீலை. அவன் அணித்து ஜீவராசிகளுடனும் கைகோர்த்து நிற்கிறான். நம் எண்ணங்கள் எல்லாம் அவனைப்பற்றியே ஆகுமானால் அவைதான் கோபியர். ஒவ்வொரு கோபியரிடையிலும் ஒவ்வொரு கண்ணன் . எல்லா எண்ணங்களும் சேர்ந்து ஒருமுகமானால் அதுதான் ராதை. ராதை கண்ணன் சங்கமமே ஜீவபிரம்ம சங்கமம்.

——
ஐந்தாவது அஷ்டபதி
ஸ்லோகம்
விஹரதி வனே ராதா ஸாதாரண ப்ரணயே ஹரௌ
விகளித நிஜோத்கர்ஷாத் ஈர்ஷ்யாவஸேன கதா அன்யத:
க்வசிதபி லதா குஞ்ஜே குஞ்ஜன் மதுவ்ரத மண்டலீ
முகர ஸிகரே லீனா தீனாப்யுவாச ரஹஸகீம்

ராதை கோபித்து அவனை விட்டு நீங்கினாலும் அவன் நினைவை தடுக்க முடியாமல் அவனை நினைத்து கூறும் அஷ்டபதி இது. ராஸக்ரீடையில் அவன் அழகையும் அந்த அநுபவத்தையும் நினைவு கூறுகிறாள்.

ராகம் தோடி தாளம் ஆதி
ஸஞ்சரத தர ஸுதா மதுரத்வனி முகரித மோஹன வம்சம்
சலித த்ருகஞ்ல சஞ்சல மௌளி கபோல விலோல வதம்ஸம்
ராஸே ஹரிமிஹ விஹித விலாஸம்
ஸ்மரதி மனோ மம க்ருத பரிஹாஸம்
ஸஞ்சரத்அதர- அசையும் உதடுகளில் இருந்து வரும்
ஸுதாமதுரத்வனி – அமுதம் போன்ற இசையை
முகரித – வெளிப்படுத்தும்
மோகன வம்சம் – அழகிய குழல்
சலித த்ருகஞ்சல – சலிக்கும் கண்கள்
சஞ்சல மௌளி- தலை அசையும்போது
கபோல விலோலவதம்ஸம்- கன்னத்தில் விளையாடும் குண்டலங்கள்
ராஸே- ராசக்ரீடையின்போது
க்ருத பரிஹாஸம்- என்னுடன் பரிகாசத்துடன்
விஹிதவிலாஸம் – விளையாடின
ஹரிம் – ஹரியை
மனோ – என்மனம்
ஸ்மரதி- நினைக்கிறது. .
எவ்வளவு அழகான கற்பனை! கிருஷ்ணனின் அழகிய முகத்தில் அசையும் உதடுகள் , அவன் குழலின் இனிய கானம். அவன் குழல் ஊதும்போது கான லயத்திகேற்ப தலையை அசைப்பதனால் கன்னங்களில் விளையாடும் அவன் குண்டலங்கள்.
அதை எவ்வாறு மறக்க இயலும் என்று ராதை ஏங்குகிறாள்.
சந்த்ரக சாரு மயூர ஸிகண்டக மண்டல வலயித கேஸம்
ப்ரசுர புரந்தர தனுரனுரஞ்ஜித மேதுர முதிர ஸுவேஷம்
சந்த்ரகசாரு மயூர சிகண்டிக– சந்திரனைப் போல அழகிய மயிற்பீலி
மண்டலவலயித கேசம் –சுற்றி அமைந்த கேசம்
மேதுரமுதிரஸுவேசம்- கார்மேகத்தின் மேல்
ப்ரசுர புரந்தர தனுரனுரஞ்சித- காணப்படும் அழகிய வானவில்லை போல விளங்கும். (அவனை என் மனம் நினைக்கிறது)
கண்ணனின் கேசத்தைச்சுற்றி மயில் தொகைகள் அரை வட்டமாக அமைக்கப் பட்டிருக்கின்றன. அவைகளின் நடுப்பாகம் சந்திரனைப்[போல் உள்ளது. கேசத்துன் கருமை கார்மேகத்தை ஒத்திருக்கிறது. அதன் மேல் வண்ணங்களுடைய மயிற்பீலி ஒரு வானவில்லைப் போல் தோற்றம் அளிக்கிறது. சந்திரனும் வானவில்லும் சேர்ந்த ஒரு அதிசயம்!
கோபகதம்ப நிதம்ப வதீமுக சும்பன லம்பித லோபம்
பந்து ஜீவ மதுராதர பல்லவ கலித தரஸ்மித ஸோபம்
கோபகதம்பநிதம்பவதீ முக-அழகிய கோபிகளை
சும்பன லம்பித லோபம் – முத்தமிடும் ஆசையுடன் கூடிய
பந்துஜீவ மதுராதர பல்லவம் – குந்துமணி போன்ற அழகிய அவன் உதடுகள்
உல்லாசஸ்மித சோபம்- விரிந்த முறுவலுடன் விளங்கும் ( அவனை —)
அவனுடைய சிவந்த உதடுகள் முறுவலிக்க அது அவன் கோபியரை முத்தமிடும் ஆசையைக் குறிக்கிறது என்று எண்ணுகிறாள் ராதை. .
விபுல புலகபுஜ பல்லவ வலயித வல்லவ யுவதி ஸஹஸ்ரம்
கரசரணோரஸி மணிகண பூஷண கிரண விபின்ன தமிஸ்ரம்
வலயித வல்லவயுவதி ஸஹஸ்ரம்- ஆயிரக்கணக்கான கோபியரை ஆலிங்கனம் செய்ததனால் ஏற்பட்ட
விபுல புலகபுஜபல்லவ- புளகாங்கிதத்துடன் கூடிய தளிர்போன்ற அவனுடைய புஜங்களையும்
கரசரணோரஸி – கைகளிலும் பாதங்களிலும்
மணிகணபூஷண – ஆபரணங்களின்
கிரணவிபின்ன தமிஸ்ரம்- ஒளியால் இருளை போக்கடிக்கும் (அவனை—)
ராதை அவனுடைய புளகாங்கிதம் கொண்ட அங்கங்களை நினைவு கூர்கையில், பொறாமையினால் அது அவன் கணக்கில்லாத கோபியரை ஆலிங்கனம் செய்ததால் தான் என்று நினைக்கிறாள். ராசக்ரீடை இரவில் நடைபெறும்போது கண்ணின் அங்கங்களில் உள்ள ஆபரணங்களின் ஒளி இருளைப் போக்கிவிட்டதாம்.
ஜலத படல சல திந்து விநிந்தக சந்தன பிந்து லலாடம்
பீன பயோதர பரிஸரமர்தன நிர்தய ஹ்ருதய கவாடம்
ஜலதபடலவலதிந்துவிநிந்தக-மேகக் கூட்டங்கள் நடுவில் உள்ள சந்திரனை பரிஹசிக்கும்
சந்தன திலக லலாடம்- சந்தனதிலகத்தை உடைய நெற்றியை
பீனபயோதரபரிஸரமர்தன- இறுகத் தழுவுதலால் கோபியரின் மார்பை வருத்தும்
நிர்தய ஹ்ருதயகபாடம் – கருணையில்லாத கதவு போன்ற ஹ்ருதயத்தையும் உடைய ( அவனை)
மேகக்கூட்டங்களால் சந்திரன் மறைக்கப படுகிறான்., ஆனால் கண்ணன் நெற்றியில் உள்ள சந்தனத் திலகம் என்ற சந்திரன் மறைக்கப் படுவதே இல்லை.
மணிமய மகர மனோஹர குண்டல மண்டித கண்ட முதாரம்
பீதவஸனம் அனுகத முனிமனுஜ ஸுராஸுர வர பரிவாரம்
மணி மயமகரமனோஹர குண்டல- ரத்னங்களாள் ஆன மகர குண்டலம்
மண்டித கண்டம் உதாரம்- அலங்கரிக்கும் கன்னங்களையும்
பீதவசனம் – உடுத்திருக்கும் பீதாம்பரத்தையும்
அநுகத- அவன் ராசக்ரீடையைக் காண அவனைத் தொடர்ந்த
முநிமனுஜ ஸுராஸுரவரபரிவாரம்- முனிவர்கள் மனிதர்கள் தேவர்கள் அசுரர்கள் இவர்களையும் உடைய (அவனை)
விஸத கதம்ப தலே மிளிதம் கலிகலுஷபயம் ஸமயந்தம்
மாமபி கிமபி தரங்க தனங்க த்ருஸா வபுஷா ரமயந்தம்
விசத கதம்பதலே – கதம்ப மரத்தின் அடியில்
மிலிதம் – சந்தித்தவனை
கலிகலுஷபயம் – பாவங்களினால் உண்டான பயத்தைப்
சமயந்தம்- போக்குபவனை
மாமபி – என்னையும்
கிமபி தரள தரங்க தனங்க த்ருசா-அழகிய காதல் பார்வையினால் கூடிய
மனஸா- மனத்தினால்
ரமயந்தம்- மகிழ்விப்பவனை ( அவனை)
ஸ்ரீ ஜயதேவ பணிதம் அதி ஸுந்தர மோஹன மதுரிபு ரூபம்
ஹரிசரண ஸ்மரணம் ப்ரதி ஸம்ப்ரதி புண்யவதாமனுரூபம்
ஸ்ரீஜயதேவபணிதம் – ஸ்ரீ ஜயதேவரால் இயற்றப்பட்ட
அதிசுந்தர மோகன மதுரிபுரூபம் – இந்த அதிசுந்தரமான மோகனக்ருஷ்ணனின் வர்ணனை
ஹரிசரண ஸ்மரணம் பிரதி- ஹரியின் சரணாரவிந்தத்தை பற்றியுள்ள
புன்யவதாம் – புண்ணியவான்களுக்கு
சம்ப்ரதி – இச்சமயம்
அனுரூபம் – அனுகூலத்தைக்கொடுக்குமாக.
———————–

ஆறாவது அஷ்டபதி ஸ்லோகம்

கணயதி குண க்ராமம் ப்ராமம் ப்ரமாதபி நேஹதே

வஹதி ச பரீதோஷம் தோஷம் விமுஞ்சதி தூரத:

யுவதிஷு வலத்த்ருஷ்ணே க்ருஷ்ணே விஹாரிணி மாம்வினா

புனரபி மனோ வாமம் காமம் கரோதி கரோமி கிம்

ராகம்  காம்போஜி                            தாளம் ஆதி

முந்தைய அஷ்டபதியில் ராதை கண்ணனின் அழகையும் செயல்களையும் நினைவு கூர்ந்து இந்த அஷ்டபதியில் அவனுடன் சுகித்த அனுபவத்தை நினைந்து அவனைத் தன்னுடன் சேருமாறு செய்ய தோழியை வேண்டுகிறாள்.

ஜீவன் இறைவனிடம் இருந்து தன் அறியாமையினால் பிரிந்து வருந்துகிறான். அந்த அனுபவம் இன்னதென்று நினைவில்லாவிட்டாலும் அந்த ஆனந்தத்தை இழந்ததை உணர்கிறான். அவனுடன் சேர்வது ஒன்றே வாழ்வின் குறிக்கோள் என்பதை உணரும்போது ராதையின் சகியைப் போல் ஆசார்யரானவர் ஜீவனையும் பகவானையும் ஒன்று சேர்க்க முயற்சிப்பதுதான் சகி என்ற பாத்திரத்தின் உருவகம்.

ராதை தான் கண்ணனுடன் இருந்ததை விவரிக்கிறாள்.

நிப்ருத நிகுஞ்ஜ க்ருஹம் கதயா நிஸி ரஹஸி நிலீய வஸந்தம்

சகித விலோகித ஸகல திஸா ரதி ரபஸ வஸேன ஹஸந்தம்

ஸகி ஹே கேசி மதன முதாரம்

ரமய மயா ஸஹ மதன மனோரத பாவிதயா ஸவிகாரம்

நிப்ர்தநிகுஞ்சகதயா ரஹஸி- ராதை கண்ணனை சந்திக்க யாரும் அறியாமல் லதாக்ருஹத்திற்கு செல்கிறாள்.
நிலீய வஸந்தம்- அங்கு மறைந்து கொண்டு
சகிதவிலோகித ஸகலதிசா- அவனைக்காணாமல் பயத்துடன் எல்லா திசைகளிலும் பார்ப்பவளைக்கண்டு
ரதிரபஸபரேண- காதல் மேலிட்டு
ஹஸந்தம்- சிரித்துக் கொண்டு நிற்பவனாய்
கேசிமதனம் உதாரம் – கேசி என்ற அரக்கனைக் கொன்ற சிறந்த வீரனான் கண்ணனை
ஹே ஸகி-தோழி
மதனமநோரதபாவிதயா – மன்மதனால் பீடிக்கப்பட்ட
மயா ஸஹ- என்னுடன்
ஸவிகாரம்- காதலோடு
ரமய – ரமிக்கச்செய்வாயாக

இனி வரும் ஸ்லோகங்கள் ராதை- கண்ணன் சேர்க்கை அதாவது நாயக நாயகி பாவ பக்தியை விளக்குகின்றன. பகவான்தான் உயிர் இந்த உலகம் அவனுடைய சரீரம். பக்தி என்பது அந்த உயிரை உடலின் ஒவ்வொரு அணுவிலும் உணர்வது . இந்த பாவத்தில் பார்த்தால் நாயக நாயகி பாவம் பற்றி லோகாயதமான உணர்வு ஏற்படாது. சரீர சுகம் என்பது சரீர சரீரி சம்பந்தம். இதுதான் ஆண்டாளையும் மீராவையும் பாட வைத்தது.

ப்ரதம  ஸமாகமா லஜ்ஜிதயா படு சாடு ஸதைரனு கூலம்

ம்ருது மதுராஸ்மித பாஷிதயா ஸிதிலீக்ருத ஜகன துகூலம் (ஸகி ஹே)

ப்ரதம ஸமாகம லஜ்ஜிதயா- முதல் முதலாக அவனுடன் சேர்கையில் உண்டான வெட்கத்துடன் கூடிய என்னை
படுசாடுசதை: – திறமையான செயல்களாலும்
ம்ருதுமதுரஸ்மிதபாஷிதயா- இனிமையான சொற்களாலும்
அனுகூலம் – இயல்பான நிலை அடையச்செய்து
சிதிலீக்ருதஜகனதுகூலம் – ஆடையை நெகிழச்செய்த கண்ணனை

முதல் முதலாக இறை உணர்வு ஏற்படும்போது நமக்கு இந்த சரீர உணர்வு தூக்கலாக இருக்கிறது. வெட்கம் என்பது நான் எங்கே அவன் எங்கே அவனுடன் என்னால் சேர முடியுமா என்ற நாணம். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக உடல் உணர்வு அற்று விடுகிறது.முதலில் அவன் ஒளிந்து கொண்டு நம்மைப் பார்த்து நகைக்கிறான். பிறகு நம் தயக்கத்தை அவனுடைய லீலைகள் மூலம் போக்கி விடுகிறான்.

ஸகி ஹே கேசிமதனம் உதாரம்
ரமய மயா ஸஹ மதனமநோரதபாவிதயா ஸவிகாரம் (முன்னம் காண்க)

கிஸலய  ஸயன நிவேஸிதயா சிரம் உரஸி மமைவ ஸயானம்

க்ருத பரிரம்பண சும்பனயா பரிரப்ய க்ருதாதர பானம் (ஸகி ஹே)

கிஸலய சயன நிவேசிதயா- தளிர்களால் ஆன சயனத்தில்
சிரம் உரஸி மமைவ சயானம்- என்மேல் வைத்துக்கிடந்த மலர் மார்பனை
க்ருதபரிரம்பணசும்பனயா பரிரப்ய க்ருதாதரபானம் – என்னைத்தழுவி அதரபானம் செய்தவனை

நமக்கு மிகவும் நெருங்கி வருபவன். நம்மை முழுதும் அறிந்தவன்.

ஸகி ஹே கேசிமதனம் உதாரம்
ரமய மயா ஸஹ மதனமநோரதபாவிதயா ஸவிகாரம் (முன்னம் காண்க)

அலஸ நிமீலித லோசனயா புளகாவலி லலித கபோலம்ஸ்ரமஜல ஸகல களே பரயா வர மதன மதாத் அதிலோலம் (ஸகி ஹே)

அலஸநிமீலித லோசனயா- மகிழ்வினால் என் கண்கள் மூடியிருக்க
புலகாவலிலலிதகபோலம்- மலர்ந்த கன்னங்கள் உடையவனை
ச்ரமஜலஸகலகலேவரயா – என் உடல் வியர்த்திருக்க
வரமதனமதாததிலோலம்-மன்மதனால் பீடிக்கப்பட்டவனை
அவன் பெயரைக்கேட்டாலே புளகாங்கிதம் அடைந்து அவனை நேரில்கண்டது போல் கண்கள் மூடினாலும் உள்ளே தெரிபவனாக இருக்கிறான். அந்த நிலை அடைந்து விட்டால் அவன் நமக்கு ஒப்பான ஆனந்தம் அடைகிறான்.

ஸகி ஹே கேசிமதனம் உதாரம்
ரமய மயா ஸஹ மதனமநோரதபாவிதயா ஸவிகாரம்(முன்னம் காண்க )

கோகில கலரவ கூஜிதயா ஜித மனஸிஜ தந்த்ர விசாரம்

ஸ்லத குஸுமாகுல குந்தளயா நக லிகித கன ஸ்தனபாரம் (ஸகி ஹே)

கோகிலகலரவகூஜிதயா- ஆனந்தம் மேலிட்டு குயில் போலக் கூவின என்னைக் கண்டு
ஜிதமனஸிஜதந்த்ரவிசாரம் – காதல் மேலிட்டவனை
ச்லதகுஸுமாகுலகுந்தலயா-என் கூந்தல் அவிழ
நகலிகிதஸ்தனபாரம்- அவனுடைய நகங்கள் என் மார்பில் பதிய வைத்தவனை

கூஜ்ந்தம் ராம ராமேதி மதுரம் மதுராக்ஷரம் என்று கூவின வால்மீகி முதலிய குயில்களைப்போல பக்தனும் அச்சுதா அமரர் ஏறே ஆயர்தம் கொழுந்தே என்று கூவும் போது அவனுக்கும் நம்மேல் காதல் மேலிடுகிறது.

ஸகி ஹே கேசிமதனம் உதாரம்
ரமய மயா ஸஹ மதனமநோரதபாவிதயா ஸவிகாரம்( முன்னம் காண்க )

சரண ரணித மணி நூபுரயா பரிபூரித ஸுரத விதானம்

முகர விஸ்ருங்கல மேகலயா ஸகசக்ரஹ சும்பன தானம் (ஸகி ஹே)

சரணரணிதமணிநூபுரயா – என் பாதங்களில் உள்ள நூபுரம் சப்திக்க பரிபூரிதஸுரதவிதானம் – காதல் விளையாட்டில் மூழ்கியவனை
முகரவிச்ருங்கலமேகலயா-என் இடை ஆபரணம் குலுங்க
ஸகசக்ரஹசும்பனதானம்- என்மேல் இதழ்கள் பதித்தவனை

காலில் சதங்கை ஒலிக்க இடையில் மணிமாலையுடன் நாம் சங்கீர்த்தனம் செய்யும் பக்தனை அவன் தழுவி முத்தம் இடாமல் வேறென்ன செய்வான்?

ஸகி ஹே கேசிமதனம் உதாரம்
ரமய மயா ஸஹ மதனமநோரதபாவிதயா ஸவிகாரம்(முன்னம் காண்க )

ரதிஸுக ஸமய ரஸாலஸயா தர முகுளித நயன ஸரோஜம்

நிஸ்ஸஹ  நிபதித தனுலதயாமதுசூதனம் உதித மனோஜம் (ஸகி ஹே)

ரதிஸுகஸமயரஸாலஸயா – என் மகிழ்ச்சியையும் களைப்பையும் பார்த்து
தரமுகுளித நயனஸரோஜம்- சிறிது மலர்ந்த தாமரைக் கண்களை உடையவனை
நிஸ்ஸஹநிபதிததனுலதயா –மயங்கியதுபோன்ற உடலைக் கண்டு
மதுசூதனமுதிதமநோஜம்- மனமகிழ்ந்தவனை

பக்தி மேலீட்டால் உடல் தளர்கிறது, உணர்வு நழுவி மயங்கியது போல் இவ்வுலக உணர்வின்றி இருப்பதைக்கண்டு அவன் மனமகிழ்ந்து தன்னுடன்
சேர்த்துக் கொள்கிறான். அந்த நிலை வேண்டும் என்றால் குருக்ருபை வேண்டும். அதுதான் சகியிடம் வேண்டுதல்.

ஸகி ஹே கேசிமதனம் உதாரம்
ரமய மயா ஸஹ மதனமநோரதபாவிதயா ஸவிகாரம்( முன்னம் காண்க )

ஸ்ரீ ஜய தேவ பணிதமிதம் அதிஸய மதுரிபு நிதுவன ஸீலம்

ஸுகமுத் கண்டித ராதிகயா கதிதம் விதநோது சலீலம் (ஸகி ஹே)

ஸ்ரீஜயதேவபணிதம் இதம் – ஸ்ரீ ஜெயதேவரால் கூறப்பட்ட இந்த
அதிசய மதுரிபு நிதுவனசீலம் –அதிசயமான கண்ணனின் காதலினால்
ஸலீலம் – விளையாட்டாகச் செய்யப்பட்டதும்
உத்கண்டித கோபவதூகதிதம்- அதனால் மகிழ்வுற்ற ராதையால் சொல்லப்பட்டவையான இவை
ஸுகம் விதநோது – கேட்பவர்களுக்கு சுகத்தை அளிக்கட்டும்.

எல்லாமே அவனுடைய் லீலா வினோதம் அதைக் கேட்பவர்க்கு எல்லா சுகங்களும் உண்டாகட்டும் என்கிறார் ஜெயதேவர்.

ஸகி ஹே கேசிமதனம் உதாரம்
ரமய மயா ஸஹ மதனமநோரதபாவிதயா ஸவிகாரம்( முன்னம் காண்க)

———————————–

ஏழாவது அஷ்டபதி ஸ்லோகம்

கம்ஸாரிரபி ஸம்ஸார வாஸனாபந்த ஸ்ருங்கலாம்

ராதாம் ஆதாய ஹ்ருதயே தத்யாஜ வ்ரஜ ஸுந்தரீ

கம்ஸாரிரபி- கிருஷ்ணன் (கம்ஸாரி- கம்சனை கொன்றவன்), கம் என்றால் சுகம் கம் ஸாரயதி – கம்ஸாரி: – சுகத்தைக் கொடுப்பவன்
ஸம்சாரவாஸனாபந்தஸ்ருங்கலாம் – (கர்மவினை என்ற தளைக்குட்பட்ட ஜீவனான), ஸம் ஸம்யக் ஸாரம் ஸம்ஸாரம் – சிருங்காரம், வாஸனா- தொடரும் நினைவுகள் . பந்த ஸ்ருங்கலா- பிணைக்கும் சங்கிலி. அதனால் பிணைக்கப்பட்ட ராதை என்று பொருள்.
ராதாம்-ராதையை
ஹ்ருதயே ஆதாய- மனதில் கொண்டு
வ்ரஜசுந்தரீ:- மற்ற கோபியரை
தத்யஜ- விட்டு நீங்கினான்.

கிருஷ்ணனும் ராதை கோபித்துக் கொண்டு சென்றதைப் பார்த்து வருந்துகிறான். அவனுடைய மனோநிலையைக் குறிப்பது இந்த அஷ்டபதி. ஜீவன் தன்னை விட்டுப் பிரிந்து சம்சாரத்தில் அகப்பட்டு வருந்துகையில் பகவானும் அந்த ஜீவனைக்குறித்து வருந்துகிறான் என்பது இதன் பொருள்.இனி அஷ்டபதியைக் காண்போம்.

இதஸ்ததஸ்தாம் அனுஸ்ருத்ய ராதிகாம்

அனங்க பாண வ்ரண கின்ன மானஸ:

க்ருதானுதாப: ஸ களிந்த நந்தினீ

தடாந்த குஞ்ஜே விஷஸாத மாதவ:

ராகம்: பூபாளம்                                 தாளம்: த்ரிபுடை

மாமியம் சலிதா விலோக்ய வ்ருதம் வதூநிசயேன

ஸாபராததயா மயாபி ந வாரிதா அதி பயேன ஹரிஹரி

ஸா இயம் – இந்த ராதை
மாம் – என்னை
வதூநிசயேன –பெண்களுடன்
வ்ருதம்-சூழப்பட்டவனாகப்
விலோக்ய – பார்த்து
சலிதா-சென்றுவிட்டாள்
மயா அபி- என்னாலும்
அபராததயா – குற்றம் செய்தேன் என்பதனால்
ந வாரிதா- தடுக்கப்படவில்லை

பல்லவி

ஹதாதரதயா ஸா கதா குபிதேவ

ஹரிஹரி- கஷ்டம் !
ஹதாதரதயா- கவனிக்கப படாமையால்
குபிதேவ – கோபம் கொண்டு
ஸா- அவள்
கதா – சென்றுவிட்டாள்

கிம் கரிஷ்யதி கிம் வதிஷ்யதி ஸா சிரம் விரஹேண

கிம் தனேன ஜனேன கிம் மம ஜீவிதேன க்ருஹேண (ஹரி ஹரி)

ஸா –அவள், கிம் கரிஷ்யதி ,என்ன செய்வாளோ, சிரம் விரஹேண -விரஹ தாபத்தினால் வெகு நேரம் வருந்தி , கிம் வதிஷ்யதி – தோழியிடம் என்ன சொல்வாளோ? அவளில்லாமல், தனேன -செல்வத்தினாலோ , ஜனேன -மற்றவர்களாலோ அல்லது ஜீவிதேன க்ருஹேண- வாழ்வதினாலோ, கிம் – என்ன பயன்?

சிந்தயாமி ததானனம் குடிலப்ரு கோப பரேண

ஸோண பத்ம மிவோ பரி ப்ரமதாகுலம் ப்ரமரேண (ஹரி ஹரி)

குடிலப்ரூகோபபரேண- கோபத்தால் நெரிந்த புருவத்துடன் கூடிய
ததானனம் – அவள் முகத்தை
சோணபத்மம் – சிவந்த தாமரை மலர்
உபரிப்ரமதாகுலம் ப்ரமரேண- மேல் சூழ்ந்து சஞ்சரிக்கும் வண்டுகள் போல
சிந்தயாமி. – நினைக்கிறேன்.

தாமஹம் ஹ்ருதி ஸங்கதாம் அனிஸம் ப்ருஸம் ரமயாமி

கிம் வனேனுஸராமி தாமிஹ கிம்வ்ருதா விலபாமி (ஹரி ஹரி)

அஹம் – நான்
தாம் – அவளை
ஹ்ருதி ஸங்கதாம் –என் ஹ்ருதயத்தில் உள்ளவளாக
அனிசம் -எப்போதும்
ப்ருசம் ரமயாமி- மிகவும் இன்பமடைகிறேன். அப்படி இருக்கையில்
கிம் – எதற்காக
வனே – காட்டில்
அனுஸராமி – தேடிப பின் செல்ல வேண்டும்.?
இஹ- இங்கு
கிம் – ஏன்
வ்ருதா – வீணாக
விலபாமி- புலம்ப வேண்டும்?

இறைவன் தன்னை அறியாமையால் விட்டுச்சென்ற ஜீவனிடம் என்றும் பிரியாமல்தான் இருக்கிறான். விட்டுப்பிரிதல் என்பது நம் அறியாமை என்னும் மாயையே. உலக இன்பத்தை நாடி இறைவனை மறந்து விடுவதயு ஒரு நிலை. அந்த உலக வாழ்க்கையால் துன்புற்று என்னை மறந்து விட்டான் இறைவன் என்று குழம்புவது இன்னொரு நிலை. இதுதான் ராதையின் நிலை.

தன்வி கின்னம் அஸுயயா ஹ்ருதயம் தவா கலயாமி

தன்ன வேத்மி குதோ கதாஸி ந தேன தேனுனயாமி (ஹரி ஹரி)

தன்வி-மெல்லியலாளே
தவ ஹ்ருதயம் – உன் மனம்
அசூயயா-பொறாமையினால்
கின்னம்- வருத்தம் அடைந்திருக்கிறது என்று
ஆகலயாமி- அறிகிறேன்.
குதா கதா அஸி- நீ எங்கு சென்றாய்
தத் – என்பதை
ந வேத்மி- அறியேன்
தேன – அதனால்
தே- உன்னை
அனுனயாமி-பின் தொடர்ந்து சென்று சமாதானம் செய்ய முடியவில்லை.

த்ருஸ்யசே புரதோ கதா கதமேவ மே விததாஸி

கிம் புரவே ஸஸம்ப்ரமம் பரிரம்பணம் ந ததாஸி (ஹரி ஹரி)

மே- எனக்கு
புரத: – முன்னால்
கதாகதம் ஏவ – நடமாடிக்கொண்டிருப்பவளாகவே
த்ருச்யஸி- காணப்படுகிறாய் ( அதாவது எப்போதும் கண்முன்னால் இருப்பவளாக)
கிம்_ ஏன்
புரே இவ – முன் போல்
ஸஸம்ப்ரமம் – ஆர்வமுடன்
ந ததாஸி பரிரம்பணம் – அணைத்துக்கொள்ளாமல் இருக்கிறாய் ?

க்ஷம்யதாம் அபரம் கதாபி த வேத்ருஸம் ந கரோமி

தேஹி  ஸுந்தரி தர்ஸனம் மம மன்மதேன துனோமி (ஹரி ஹரி)

கதா அபி – ஒருபொழுதும்
ஈத்ருசம் – இவ்வாறு
அபரம்- மற்றொரு தவறை
தவ – உன்னிடம்
ந கரோமி- செய்ய மாட்டேன்
க்ஷம்யதாம் – மன்னிக்க வேண்டும்.
சுந்தரி- அழகியே
மம – எனக்கு
தர்சனம் தேஹி- தரிசனம் கொடு.
மன்மதேன- மதனாவஸ்தையால்
துநோமி- வருந்துகிறேன்.

பகவான் நம்மைப் பிரிந்து படும் அவஸ்தையை இது விவரிக்கிறது. கருணையால் நம்மை காக்க பாடுபடுகிறான். நாம் இருக்கும் இடம் தெரிய வில்லை என்பது நம் மன நிலை அவனை விட்டு தூரத்தில் இருப்பதால் உண்டான பச்சாதாபத்தைக் குறிக்கிறது.நான் உன்னை இனிமேல் விடமாட்டேன் என்று கூறுகிறான்.

கஜேந்தரனும் திரௌபதியும் அல்லலுறும்போது பகவானும் அவர்கள் கூப்பிடமாட்டார்களா என்று தவித்தானாம் . கூப்பிட்டவுடன் ஓடோடி வந்தான்.

வர்ணிதம் ஜயதேவகேன ஹரேரிதம் ப்ரவணேன

கிந்து பில்வ  ஸமுத்ர ஸம்பவ ரோஹிணீ ரமணேன

இதம் – இந்த சம்பவம்
ஹரி ப்ரவனே(णे)ன- ஹரியின் மீது மனம் வைத்த
கிந்து பில்வஸமுத்ர ஸம்பவ ரோஹிணீரமனே(णे)ன- கிந்துபில்வம் என்கிற சமுத்திரத்திலிருந்து தோன்றிய சந்திரனைப்போன்ற
ஜெயதேவகென – ஜெயதேவரால்
வர்ணிதம் – வர்ணிக்கப்பட்டது.

—————————————-

8வது அஷ்டபதி
கிருஷ்ணனை அழைத்து வர ராதையால் அனுப்பப்பட்ட சகி அவனிடம் சென்று ராதையின் நிலையைக் கூறுகிறாள்.
யமுனா தீரவானீர நிகுஞ்ஜே மந்தம் ஆஸ்திதம்
ப்ராஹ ப்ரேம பரோத் ப்ராந்தம் மாதவம் ராதிகா ஸகீ
யமுனாதீரவாநீர நிகுஞ்சே-யமுனைக்கரையில் அடர்ந்த தோப்பில் ராதைஇடம் ப்ரேமையால் குழம்பி உட்கார்ந்திருக்கும் கண்ணனிடம் ராதையின் தோழி சொல்லுகிறாள்.
ராகம் ஸௌராஷ்ட்ரம் தாளம் ஆதி
நிந்ததி சந்தனம் இந்து கிரணம் அனுவிந்ததி கேத மதீரம்
வ்யாள நிலய மிளலேன கரளமிவ கலயதி மலய ஸமீரம்

சந்தனம் – சந்தனப்பூச்சை
நிந்ததி- வெறுக்கிறாள்.
குளிர்ச்சியான சந்தனம் பிரிவாற்றாமையால் உஷ்ணத்தைத் தருகிறது
இந்துகிரணம் – சந்திரனின் கிரணங்கள்
அதீரம் கேதம் – அதிகமான துக்கத்தை கொடுப்பதாக
அனு விந்ததி- உணர்கிறாள் நிலவு எரிப்பதாக உணர்கிறாள்.
மலய ஸமீரம்- தென்றல் காற்றை
வ்யாலநிலயமிலன – பாம்புகளின் இருப்பிடத்தில் இருந்து வருவதால்
கராலம் இவ கலயதி-விஷமென உணர்கிறாள்.

சந்தன மரங்களைத்தழுவி வரும் மலையமாருதம் பரிமளம் உடையதாக இருக்கும். ஆனால் அது சந்தன மரங்களின் அடியில் உள்ள பாம்புகளின் சேர்க்கையால் விஷக்காற்று போல் இருக்கிறது என்று நினைக்கிறாள்.

எதெது காதலர்களுக்கு இன்பத்தைக் கொடுக்குமோ அதெல்லாமே பிரிந்து உள்ளமையால் எதிர் பலனைக் கொடுக்கிறது என்பது கவி கற்பனை.

ஸா விரஹே தவ தீனா
மாதவ மனஸிஜ விஸிக பயாதிவ பாவனயா த்வயி லீனா(ஸா)( த்ருவ பதம்)
மாதவ – மாதவா
தவ விரஹே- உன் பிரிவினால்
ஸா – அவள்
தீனா- வாடி
மனசிஜவிசிகபயாத் இவ- காமனின் அம்புக்கு பயந்தவளாக
தவ பாவனா- உன் நினைவில்
லீனா- ஆழ்ந்திருக்கிறாள்.
அவிரள நிபதித மதன ஸராதிவ பவதவனாய விஸாலம்
ஸ்வஹ்ருதய மர்மணி வர்ம கரோதி ஸஜல நளிநீதள ஜாலம்

அவிரல நிபதித – தொடர்ந்து விழும்
மதனசராத் – மன்மதனின் அம்புகளில் இருந்து
ஸ்வஹ்ருதயமர்மணி பவத் – தன் ஹ்ருதயத்தில் உள்ள உன்னை
அவனாய – காப்பாற்றுவதற்காக
விசாலம் – அகன்ற
ஸஜலநளிநீதள ஜாலம்- ஈரமான தாமரை இலைகளாள் ஆன வலையினால்
வர்மகரோதி- அதை மூடிக்கொள்கிறாள்.

பிரிவுத்தீயால் வருந்தும் நாயகி தாமரை இலைகளை தன் உடல்மீது வைத்துக்கொண்டு உஷ்ணத்தை தணிப்பது என்பது காவியங்களில் கூறப்பட்டிருக்கிறது. உதாரணமாக காளிதாசனின் சாகுந்தலத்தில் துஷ்யந்தனைப் பிரிந்து வருந்தும் சகுந்தலையை தாமரை இலைப்படுக்கையில் அமர்த்தி தோழிகள் தாமரை இலைகளை வைக்கிறார்கள். இங்கு ராதை அவள் உள்ளத்தில் உள்ள கண்ணனை மனம்தான் அன்பிலிருந்து காப்பாற்றவே அங்ஙனம் செய்தால் என்பது. கவியின் அழகான கற்பனை.

குஸும விஸிக ஸரதல்ப மனல்ப விலாஸ கலா கமனீயம்
வ்ரதமிவ தவ பரிரம்ப ஸுகாய கரோதி குஸும ஸயனீயம்(ஸா)

அனல்ப விலாசகலா கமநீயம் – சிறந்த அழகிய பூக்குவியல்களால் ஆன
குஸுமசயநீயம் – மலர்படுக்கையில் படுத்த அவள்
தவ- உன்னுடைய
பரிரம்ப ஸுகாய – தழுவல் என்னும் சுகத்தை அடையும் பொருட்டு
குஸுமவிசிக சரதல்பம் –மலராகிய அம்புப்படுக்கையில் சயனித்து
வ்ரதமிவ கரோதி- வ்ரதம் இருப்பவள் போல் தோன்றுகிறாள்.

மலர்கள் மன்மதனின் சரங்கள் ஆதலால் மலர்படுக்கை அம்புப் படுக்கையைப்போல இருக்கிறதாம். அதனால் அவள் கிருஷ்ணனை அடையும் பொருட்டு தவம் செய்வது போல் தோன்றுகிறது என்கிறாள்.

வஹதிச களித விலோசன ஜலபரம் ஆனன கமலம் உதாரம்
விதுமிவ விகட விதுந்தத தந்த தளன களிதாம்ருததாரம்(ஸா)
ஆனனகமலம் – அவளுடைய முகத்தாமரை
வலிதவிலோசன ஜலபரம்- துயருற்ற கண்களில் இருந்து கண்ணீர் பெருகுவதாக
வஹதி- உள்ளது. ( அது எப்படி இருந்தது என்றால்)
விகட – கொடிய
விதுந்துத – ராகுவால் ( வவிது என்றால் சந்திரன் துத அவனை துன்புறுத்துபவன் அதாவது ராகு)
தந்த தலன-கடிக்கப்பட்ட
கலித அம்ருத தாரம்- ஒழுகும் அம்ருததாரையைக் கொண்ட
விதும் இவ – சந்திரனைப்போல் இருந்தது.
விலிகதி ரஹஸி குரங்கமதேன பவந்தம் அஸமஸர பூதம்
ப்ரணமதி மகரம் அதோ வினிதாய கரே ச ஸரம் நவசூதம்(ஸா)

ரஹஸி- தனிமையாக இருக்கையில்
பவந்தம் – உன்னை
அஸமசர பூதம் – மன்மதனின் உருவமாக
குரங்கமதேன-கஸ்தூரியால்
லிகதி- வரைகிறாள்.
அதை: அடியில்
மகரம்- மீனை
விநிதாய – வரைந்து ( மன்மதனின் கொடி)
கரே ச – கரத்தில்
நவசூதம் – மாம்பூக்களை
சரம்- அம்புகளாக்கி
ப்ரணமதி- வணங்குகிறாள்

கண்ணனையே மனம்தான் உருவத்தில் கண்டு என்னை துன்புறுத்தாதே அருள் செய் என்று வணங்குகிறாள்.

மன்மதன் ஐந்து புஷ்ப சரங்கள் கொண்டவன் ஆதலால் அஸமசரன் எனப்படுகிறான். அஸம என்றால் ஒற்றைப்படை, இங்கு ஐந்து.
அரவிந்தம் அசோகம் ச சூதம் ச நவமல்லிகா
நீலோத்பலம் ச பஞ்சைதே பஞ்சபாணஸ்ய ஸாயகா:
தாமரை, அசோகா புஷ்பம், மாம்பூ, மல்லிகை, நீலோத்பலம் இவை மன்மதனின் ஐந்து பாணங்களாகக் கூறப்படுகின்றன.

ப்ரதிபதம் இதமபி நிகததி மாதவ தவ சரணே பதிதாஹம்
த்வயி விமுகே மயி ஸபதி ஸுதாநிதிரபி தனுதே தனுதாஹம்
பிரதிபதம் – ஒவ்வொரு அடிவைக்கும்போதும்
இதம் அபி நிகததி- இவ்வாறு சொல்கிறாள்.
மாதவ – மாதவா
தவ சரணே- உன் பாதத்தில்
பதிதா அஹம் – வீழ்கிறேன்
த்வயி விமுகே- நீ பராமுகமாக இருப்பின்
சஸுதாநிதி: அபி- சந்திரன் கூட
தனுதாஹம் தனுதே – உடலை எரிக்கிறான்.
த்யான லயேன புரபரி கல்ப்ய பவந்தம் அதீவ துராபம்
விலபதி ஹஸதி விஷீததி ரோதிதி சஞ்சதி முஞ்சதி தாபம்(ஸா)
அதீவ துராபம்- அடைய முடியாத
பவந்தம்-உன்னை
த்யானலயேன- த்யானிப்பதன் மூலம்
புர: பரிகல்ப்ய – தன் முன் இருப்பதாக பாவித்து
விலபதி – புலம்புகிறாள்.
ஹஸதி – சிரிக்கிறாள்
விஷீததி –சோகிக்கிறாள்
ரோதிதி –அழுகிறாள்
சந்ச்சதி –அலைகிறாள் . பின்னர் உன் சேர்க்கை கிடைக்கும் என்ற நினைவில்
முஞ்சதி தாபம்- தாபத்தை விடுகிறாள்.
ஸ்ரீ ஜயதேவ பணிதமிதம் அதிகம் யதி மனஸா நடனீயம்
ஹரி விரஹாகுல வல்லவ யுவதி ஸகீ வசனம் படனீயம்(ஸா)

ஸ்ரீஜயதேவபணிதம்- ஸ்ரீஜயதேவரால் சொல்லப்பட்ட
இதம் -இந்த வர்ணனை
மனசா- மனதினால்
அதிகம் – மிகவும்
நடநீயம் – கற்பனை நாடகமாகக் காணப்படவேண்டும்.
ஹரி விரஹாகுல – ஹரியின் விரகத்தினால் வருந்தும்
வல்லவயுவதி – கோபியான ராதையின்
சகிவசனம் – சகி சொன்ன வார்த்தைகள்
படநீயம். படிக்கப்பட வேண்டும்’

.
குருவானவர் பகவானிடத்தில் பக்தனுக்காக பரயுந்துரைக்கும் பாவனையில் இந்த அஷ்டபதி அமைந்துள்ளது.

பின்வரும் இரண்டு அஷ்டபதியும் இந்தக் கருத்தைக் கொனடவையே ஆகும்.

ஒன்பது அஷ்டபதி ஸ்லோகம

சகி ராதையின் நிலையை மேலும் வர்ணிக்கிறாள். ராதையின் வேதனை பகவானோடு இணையத்துடிக்கும் பக்தனின் நிலையை ஒத்ததாகும். ஆழ்வார்களின் நாயக நாயகி பாவத்தை வர்ணிக்கும் பாசுரங்களும் மீரா போன்ற மற்ற பக்தர்களின் பாடல்களும் இதற்கு உதாரணம்.

ஆவஸோ விபினாயதே ப்ரியஸகீ மாலாபி ஜாலாயதே

தாபோ நிஸ்வஸிதேண தாவதஹன ஜ்வாலா கலா பாயதே

ஸாபித்வத் விரஹேன ஹந்த ஹரிணீ ரூபாயதே ஹா கதம்

கந்தர் போபி யமாயதே விரசயன் ஸார்தூல விக்ரீடிதம்

ராகம்:பிலஹரி                  தாளம் ஆதி

ஸ்தன வினிஹிதமபி ஹாரம் உதாரம்

ஸா மனுதே க்ருஸதனு rரிவபாரம்

ராதிகா க்ருஷ்ண ராதிகா விரஹே தவகேஸவ

ஸ்தனவிநிஹிதம் –மார்பில் அணிந்துள்ள
ஹாரம் உதாரம் – மெல்லிய ஹாரத்தை
க்ருசதனு: – உன்னைப்பிரிந்ததால் மெலிந்த உடலுடைய
ஸா- அவள்
பாரம் இவ- பெரும் சுமை போல
மனுதே – -எண்ணுகிறாள்.
கேசவ- கேசவா
தவவிரஹே- உன்னைவிட்டுப் பிரிந்துவருந்தும்
ராதிகா- ராதை

ஸரஸமஸ்ருணமபி மலயஜ பங்கம்

பஸ்யதி விஷமிவ வபுஷி ஸஸங்கம்

ஸரஸம் அஸ்ருணம் அபி மலயஜபங்கம்
பச்யதி விஷம் இவ வபுஷி ஸசங்கம் (ராதிகா)

வபுஷி- உடலில்
அஸ்ருணம் – குளிர்ச்சியாகவும்
ஸரஸம்- மிருதுவாகவும் உள்ள
மலயஜபங்கம் – சந்தனப்பூச்சை
(சந்தனமரங்கள் பெரும்பாலும் மலையமலையில் காணப்படுவதால் குழைத்த சந்தனம் மலயஜபங்கம் என்று குறிப்பிடப்படுகிறது.பங்கம் என்றால் சேறு. ராதை வெறுப்பினால் சேறு என்று கருதுகிறாள் )
விஷம் இவ ஸசங்கம் – விஷமோ என்ற சந்தேஹத்துடன்
பச்யதி- பார்க்கிறாள். (அது எறிவதுபோல் உணர்ந்ததினால் )

ஸ்வஸித பவனம் அனுபம பரிணாஹம்

மதன தஹனமிவ வஹதி ஸதாஹம்

அனுபமபரிணாஹம் –நீண்ட பெருமூச்சுடன் கூடிய
ச்வஸித பவனம்- தன் மூச்சுக்காற்றை
மதனதஹனம் இவ – காதல் தீயைப் போல்
ஸதாஹம் வஹதி- சுடுவதாக உணர்கிறாள்

திஸி திஸி கிரதி ஸஜலகண ஜாலம்

நயன நளினமிவ விகளித நாளம்

விகளிதநாலம்- தண்டில்லாத
நயனநளினம் – தாமரை போன்ற அவள் கண்கள்
திசி திசி – எல்லாதிக்குகளிலும்
ஸஜலகணஜாலம்- கண்ணீர் துளிகளை
கிரதி- இறைக்கிறது. (ஏனென்றால் நீ வருகிறாயா என்று எல்லா திசையிலும் பார்ப்பதால்.)

நயன விஷயமபி கிஸலய தல்பம்

கலயதி விஹித ஹுதாஸன கல்பம்

கிசலய தல்பம் -இளம்தளிர்களால் ஆன சயனத்தை
நயனவிஷயம் அபி- பார்த்தால் கூட
ஹுதாச விகல்பம் – நெருப்பால் ஆனதோ என்று
கணயதி- எண்ணுகிறாள்.
தாமரை மலர்களை போல இளம்தளிர்களால் ஆன சயனத்தை காதல்வயப்பட்ட மங்கையர் நாடுவர். அது கூட அவளுக்கு குளிர்ச்சியைத்தருவதற்கு பதில் நெருப்பு போல் தெரிகிறதாம்.

த்யஜதி ந பாணி தலேன கபோலம்

பால ஸஸினமிவ  ஸாயம் அலோலம்

பாணிதலேன கபோலம் – கன்னத்தில கையை
ந த்யஜதி-வைத்து விடுவதே இல்லை. எப்போதும் கன்னத்தில் கை வைத்து கவலையுடன் இருக்கிறாள்.
அது எப்படி இருக்கிறது என்றால்
ஸாயம் – மாலையில் ( இரவு தொடங்குதன் முன்) காணப்படும்
பாலசசினம் அலோலம் இவ – ஒளி மங்கிய பிறைச்சந்திரன் போல இருக்கிறது,
கை முகத்தை பாதி மறைப்பதால் பிறைச்சந்திரனுக்கு ஒப்பிடப்படுகிறது.

ஹரிரிதி   ஹரிரிதி ஜபதி  ஸகாமம்

விரஹ விஹித மரnணேவ நிகாமம்

விரஹவிஹித மரணேவ- பிரிவாற்றாமையால் உயிர் துறப்பவள் போல
நிகாமம் – விடாமல்
ஹரிரிதி ஹரிரிதி – ஹரி ஹரி என்று
ஸகாமம்- காதல் வயப்பட்டவளாய்
ஜபதி – ஜபித்துக்கொண்டு இருக்கிறாள்
உயிர் துறக்கும்போது ஹரி நமத்திக் கூறினால் அடுத்த பிறவியிலாவது அவனை அடையலாம் என்று எண்ணுபவள் போல.

ஸ்ரீ ஜயதேவ  பணிதமிதி கீதம் 

ஸுகயது கேசவபதம் உபநீதம்

ஸ்ரீ ஜெயதேவரால் கூறப்பட்ட இந்த கீதமானது கேசவன் பாதாரவிந்தத்தை அடைந்தோர்க்கு ஆனந்தம் அளிக்கட்டும்.

——————————————-

10வது அஷ்டபதி ஸ்லோகம்

ராதையின் நிலையை அறிந்ததும் கண்ணன் தான் அங்கேயே இருப்பதாகச சொல்லி ராதையை அங்கு அழைத்து வரும்படி சகியிடம் கூறுகிறான். சகி ராதையிடம் சென்று கண்ணனும் அவள் நினைவாகவே இருப்பதாகக் கூறுகிறாள்.

அஹமிஹ நிவஸாமி யாஹி ராதாம்

அனுநய மத்வசனேன ச ஆனயேதா:

இதி மதுரிபுணா ஸகீ நியுக்தா

ஸ்வயமிதமேத்ய புனர்ஜகாத ராதாம்

ராகம் ஆனந்தபைரவி            தாளம் ஆதி

வஹதி மலயஸமீரே மதனமுபநிதாய

ஸ்புடதி குஸுமநிகரே விரஹி ஹ்ருதய தளனாய

தவ விரஹே வனமாலி ஸகி ஸீததி ராதே

மலயஸமீரே – மந்தமாருதம்
மதனம் –காமதேவனை
உபநிதாய- உடன் கொண்டுவருவதுபோல
வஹதி – வீசும்போது
குஸும நிகரே –மலர்க் கூட்டங்கள்
விரஹிஹ்ருதய தலனாய- பிரிவுற்றிருக்கும் மனதை பிளப்பது போல
ஸ்புடதி – இதழ் விரியும்போது

வனமாலீ- கண்ணன்
தவ விரஹே- உன் பிரிவினால்
ஸீததி- வருந்திக்கொண்டிருக்கிறான்

தஹதி ஸிஸிரமயூகே மரணம் அனுகரோதி

பததி மதனவிஸிகே விலபதி விகல தரோதி

சிசிரமயூகே – குளிர்ந்த சந்திரகிரணம்
தஹதி- நெருப்பாக எரிக்கும்போது
மரணம் அனுகரோதி-மரணத் தருவாயில் இருப்பதாக நினைக்கிறான்.
மதனவிசிகே – மன்மதனின் பாணங்களான மலர்கள்
பததி – தன்மீது விழும்போது
அதி விகலதர: மிகவும் துன்புற்று
விலபதி-புலம்புகிறான்

த்வனதி மதுப ஸமூஹே ஸ்ரவணம் அபிததாதி

மனஸி வலிதவிரஹே நிஸிநிஸி ருஜம் உபயாதி

மதுபஸமூஹே- வண்டுகளின் கூட்டங்கள்
த்வனதி- ரீங்காரம் செய்யும்போது
ச்ரவணம் – காதை
அபிததாதி- மூடிக் கொள்கிறான்
நிசி நிசி – இரவுதோறும்
வலிதவிரஹே-விரகத்தினால்
மனஸி- மனதில்
ருஜம்- துன்பம்
உபயாதி- அடைகிறான்

வஸதி விபின விதானே த்யஜதி லலித தாம

லுடதி தரணி ஸயனே பஹு விலபதி தவ நாம

லலிததாம- வசதியான இருப்பிடத்தை
த்யஜதி- விட்டு
தரணி சயனே – மண்ணில் சயனித்தவனாக
லுடதி- அமைதியின்றி புரள்கிறான்.
தவ நாம- உன் பெயரை
பஹு விலபதி-பலமுறை கூறி வருந்துகிறான்.

பணதி கவி ஜயதேவே விரஹ விலஸிதேன

மனஸி ரபஸவிபவே ஹரிருதயது ஸுக்ருதேன 

கவிஜயதேவே- ஜெயதேவ கவி
விரஹா விலஸிதேன – பகவான் பக்தனைப் பிரிந்து துயருறுவதைப்பற்றி
பணதி- கூறியதை
மனஸி- கேட்டவர் மனதில்
ஸுக்ருதேன –நல்வினைப்பயனாக
ரபஸவிபவே – பகவானிடத்தில் அன்பு உண்டாகி
ஹரி: – ஹரியானவன்
உதயது- தோன்றட்டும்

இதைக் கேட்டவுடன் ராதை மயக்கமுறுகிறாள் . அதனால் தான் இந்த அஷ்டபதி ஐந்து சுலோகங்களுடன் நின்று விடுகிறது.

———————————————-

11வது அஷ்டபதி

சகி கண்ணன் இருக்குமிடத்திற்கு செல்வதற்கு ராதையை தூண்டுகிறாள்

பூர்வம் யத்ர ஸமம் த்வயா ரதிபதே: ஆஸாதிதாஸ்ஸித்தய:

தஸ்மின்னேவ நிகுஞ்ஜமன்மத மஹாதீர்த்தே புனர்மாதவ:

த்யாயன் த்வாம் அனிஸம் ஜபன்னபி தவைவாலாப மந்த்ராவலிம்

பூயஸ்த்வத் குசகும்ப நி்ர்பர பரீரம்பாம்ருதம் வாஞ்சதி

ராகம் கேதாரகௌளம்                               தாளம் ஆதி

ரதி ஸுகஸாரே கதமபி ஸாரே மதன மனோஹரவேஷம்

நகுரு  நிதம்பினி கமன விளம்பளம் அனுஸர தம் ஹ்ருதயேஸம்

ரதிசுகஸாரே- காதல் விளையாட்டுக்காக
அபிஸாரே- குறிக்கப்பட்ட இடத்திற்கு
கதம்- சென்றிருக்கும்
மதனமநோஹரவேஷம் –காமனைப்போல் அழகான உருவத்துடன் உள்ள
ஹ்ருதயேசம்- உன் உள்ளத்தில் குடிகொண்ட
தம் – அந்த கண்ணனை
அனுஸர – பின் தொடர்ந்து செல்
.நிதம்பினி- அழகான இடுப்பை உடையவளே
கமனவிலம்பனம் – செல்வதில் தாமதம்
ந குரு செய்யாதே

தீரஸமீரே யமுனாதீரே வஸதி வனே வனமாலீ

கோபீபீனபயோதர மரத்தன சஞ்சல கரயுகசாலீ

வனமாலீ – வனமாலை தரித்தவனாய்
கோபீபீனபயோதரமர்தனசஞ்சலதர யுகசாலீ- கோபியருடன் விளையாடுவதில் இச்சை கொண்ட கண்ணன்
தீரஸமீரே- மென்மையான காற்று வீசும்
யமுனாதீரே – யமுனையின் தீரத்தில்
வஸதி – இருக்கிறான்.

நாமஸமேதம் க்ருத ஸங்கேதம் வாதயதேம்ருது வேணும்

பஹுமனுதே தனுதே தனுஸங்கத பவனசலிதமபி ரேணும் (தீர)

ம்ருது வேணும்- மதுரமான புல்லாங்குழலை
நாமஸமேதம் க்ருதகசங்கேதம் –உன்பெயரைச்சொல்லி கூப்பிடுவதுபோன்ற பாவனையில்
வாதயதி- வாசிக்கிறான்.
தி – உன்னுடைய
தனுஸங்கத பவனசலிதம் – உன் மேனியைத்தழுவிய காற்றினால் கொணரப்பட்ட
ரேணும் அபி – மண்துகளைக்கூட
அதனு பஹுமனுதே – மிகவும் மேலானதாக நினைக்கிறான்

பததி பதத்ரே விசலதி பத்ரே ஸங்கித பவதுபயானம்

ரசயதி ஸயனம் ஸசகித நயனம் பஸ்யதி தவ பந்தானம் (தீர)

பததி பதத்ரே- ஒரு பறவை உட்காரும்போது
விசலிதபத்ரே – இலைகள் சலசலக்கையில்
சங்கித பவதுபயானம் – நீ வருகிறாயோ என சந்தேகித்து
ரசயதி சயனம்- உனக்கு மஞ்சத்தை விரிக்கிறான்.
ஸசகித நயனம் – கண்களில் எதிர்பார்ப்புடன்
தவ பந்தானம் – நீவரும் வழியை
பச்யதி- பார்க்கிறான்

முகரமதீரம் த்யஜ மஞ்ஜீரம் ரிபுமிவ கேளிஷுலோலம்

சலஸகி குஞ்ஜம் ஸதிமிர புஞ்ஜம் ஸீலய நீல நிசோளம் (தீர)

கேலிஷு லோலம்- காதல் விளயாட்டில் அசைந்து
முகரம் அதீரம்-மிகவும் சப்தம் செய்யும்
மஞ்ஜீரம்- உன் காற்சலங்கையை
ரிபும் இவ – எதிரி என்று நினைத்து
த்யஜ- கழற்றிவிடு.
ஸதிமிரபுஞ்சம் – அடர்ந்த இருளான
குஞ்சம் – கொடிவீட்டிற்கு
நீல நிசோலம் – கருப்பு நிறமுள்ள வஸ்திரத்தை
சீலய – உடுத்திக்கொள்
சல சகி- செல் தோழி
அவள் செல்வதை யாரும் அறியாதிருக்கும் பொருட்டு இந்த அறிவுரை.

உரஸி முராரே உபஹிதஹாரே கனயிவ தரளபலாகே

தடிதிவ பீதே ரதிவிபரீதே ராஜஸி ஸுக்ருத விபாகே (தீர)

ஸுக்ருதவிபாகே – உன்னுடைய நற்கர்மபலனாக
தரள பலாகே – சலிக்கும் கொக்குகள் போன்ற
உபஹித ஹாரே –மலைகளால் அலங்கரிக்கப்பட்ட
கன இவ முராரே: உரஸி- கறுத்த மேகம் போன்ற ஹரியின் மார்பில்
பீதே – பொன்வண்ணமான நீ
ரதிவிபரீதே – காதல் மேலிட்டு
தடித் இவ -மின்னலைப்போல்
ராஜஸி-பிரகாசிக்கிறாய்

விகளிதவஸனம் பரிஹ்ருதரஸனம் கடயஜகனமபிதானம்

கிஸலய ஸயனே பங்கஜ நயனே நிதிமிவ ஹர்ஷ நிதானம் (தீர)

பங்கஜநயனே- ப்ங்கஜலோசனனாகிய கண்ணனிடம்
கிஸலயசயனே – தளிர்களால் ஆன மஞ்சத்தில்
பரிஹ்ருத ரஸனம்- ஒட்டியாணம் அற்ற
விகலித வசனம் – தளர்ந்த உடையுடன்
ஜகனம் அபிதானம் –இடை ஆபரணம் அற்ற உன்னை
ஹர்ஷநிதானம் – பெரும் மகிழ்ச்சியை கொடுக்கக்கூடிய
நிதிம் இவ –பெரும் நிதியைப் போல
கடய- சமர்ப்பிப்பாயாக.

ஹரிரபிமானீ ரஜனிரிதானீம் இயமுபயாதி விராமம்

குரு மம வசனம் ஸத்வர ரசனம் பூரய மதுரிபு காமம் (தீர)

ஹரி: – கிருஷ்ணன்
அபிமாநீ- பெருமை கொண்டவன்
இதாநீம் – இப்போது
இயம் ரஜனி: அபி- இந்த இரவும்
யதிவிராமம்- – முடிவை அடையப் போகிறது.
குரு மம வசனம் – என்சொல் கேட்பாயாக
ஸத்வரரசனம்- இது விரைவில் பயனை அளிக்கும்
மதுரிபுகாமம் – கண்ணனின் ஆவலை பூர்த்தி செய்.

ஸ்ரீஜயதேவே க்ருதஹரிஸேவே பணதி பரமரமணீயம்

ப்ரமுதித ஹ்ருதயம் ஹரிமதிஸதயம் நமத ஸுக்ருதகமனீயம் (தீர)

ஸ்ரீஜயதேவே –ஸ்ரீஜயதேவரால்
க்ருத ஹரி சேவே- ஸ்ரீ ஹரியின் சேவையாக
பணிதம் – இது செய்யப்பட்டது.
பரமரமணீயம் – மிகவும் அழகிய
ப்ரமுதிதஹ்ருதயம்- மனதுக்கு ஆனந்தத்தைக்கொடுக்கும்
அதிஸதயம்- .மிகவும் தயை உள்ள
ஸுக்ருதகமநீயம் –நற் கர்மாவின் பலனாக உள்ள
ஹரிம் – ஹரியை
நமத – வணங்குவீர்.

——————————————————-

12வது அஷ்டபதி

விரஹதாபத்தால் மெலிந்த ராதையால் ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியவில்லை. அதனால்சகி மீண்டும் கண்ணனிடம் சென்று ராதையின் நிலையைக் கூறுகிறாள்.

ஸ்லோகம்

அததாம் கந்தும் அஸக்தாம்  சிரம்

அனுரக்தம் லதாக்ருஹே த்ருஷ்ட்வா

தச்சரிதம் கோவிந்தே மனஸிஜ

மந்தே  ஸகீ ப்ராஹ

ராகம் சங்கராபரணம்                     தாளம் மிஸ்ரசாபு

பஸ்யதி திஸி திஸி ரஹஸி பவந்தம்

த்வததர மதுர மதூனி பிபந்தம்

நாத ஹரே ஜகன்னாத ஹரே

ஸீததி ராதா வாஸ க்ருஹே (நாத)

நாதஹரே – ஹரே கிருஷ்ண
ராதா- ராதை
ஆவாஸக்ருஹே- உங்கள் சந்திக்குமிடத்தில் இருப்பவளாய்
ஸீததி- வருந்துகிறாள்
ரஹஸி-தனிமையில்
திசி திசி – ஒவ்வொரு திசையிலும்
பவந்தம் – நீஇருப்பதாகவும்
தததரமதுரமதூனி பிபந்தம் –அவளுடைய தேனொத்த அதரபானம் செய்பவனாகவும்
பச்யதி- காண்கிறாள்.

த்வத பிஸரண ரபஸேன வலந்தீ

பததி பதானி கியந்தீ சலந்தீ (நாத)

த்வதபிஸரண ரபசேன- உன்னை சந்திக்கும் ஆவலால்
வலன்தீ- இழுக்கப்பட்டு
கியன்தி பதானி- சில அடிகள்
சலந்தீ- செல்பவளாய்
பததி –முடியாமல் விழுகிறாள்

விஹித விஸதபிஸ கிஸலய வலயா

ஜீவதி ப்ரமிஹ தவ ரதிகலயா (நாத)

விஹிதவிசத பிஸா- வெளுத்த தாமரைத்தண்டையே
கிஸலய வலயா- வளையாகக் கொண்டு ( சாதாரண கங்கணம் பாரமாகத் தோன்றியதால் அல்லது மெலிந்த கரங்களில் இருந்து வளை நழுவுவதால் )
தவரதிகலயா- உன் மீது கொண்ட ப்ரேமையால் மட்டுமே
இஹ – இவ்வுலகில்
பரம் ஜீவதி – உயிர்வாழ்கிறாள்.

முஹுரவ லோகித மண்டன லீலா

மதுரிபுர ஹமிதி பாவன ஸீலா (நாத)

மதுரிபு: அஹம் இதி- நானே கண்ணன்
பாவனசீலா- என்ற பாவனையில்
மண்டனலீலா – உனக்குகந்த ஆபரணங்களை பூட்டிக்கொண்டு
முஹு: அவலோகித – அவற்றைத் திரும்ப திரும்பப் பார்க்கிறாள்.

த்வரித முபைதி ந கதமபி ஸாரம்

ஹரிரிதி வததி ஸகீம் அனுவாரம் (நாத)

ஹரி: – ஹரி
த்வரிதம் – விரைவாக
அபிஸாரம்-சந்திக்குமிடத்திற்கு
கதம் – ஏன்
ந உபைதி- வரவில்லை என்று
அனுவாரம் – அடிக்கடி
சகீம் – தோழியை
வததி- கேட்கிறாள்

ஸ்லிஷ்யதி சும்பதி ஜலதர கல்பம்

ஹரிருபகத இதி திமிரம் அனல்பம் (நாத)

திமிரம் அனல்பம் – அடர்ந்த இருளைக் கண்டு
ஜலதரகல்பம் – நீருண்டமேகம் போல் இருப்பதால்
ஹரி: உபகாத – ஹரி வந்துவிட்டார் என்று’
ச்லிஷ்யதி- தழுவுகிறாள்
சும்பதி –முத்தமிடுகிறாள்

பவதி விளம்பினி விகளித லஜ்ஜா

விலபதி ரோதிதி வாஸக லஜ்ஜா (நாத)

வாஸகஸஜ்ஜா- சந்திக்கும் இடத்தில் தயாராக உள்ளவள்
பவதி விலம்பினி – நீ வராமல் தாமதிக்கையில்
விகளிதலஜ்ஜா – வெட்கத்தை விட்டு
விலபதி ரோதிதி- புலம்பி அழுகிறாள்.

ஸ்ரீ ஜயதேவ கவேரிதம் உதிதம்

ரஸிக ஜனம் தனுதாம் அதிமுதிதம் (நாத)

ஸ்ரீஜயதேவகவே:- ஸ்ரீஜயதேவகவியிடம்
உதிதம்இருந்து- தோன்றிய
இதம் – இந்த கவிதை
ரஸிகஜனம்- ரசிகர்களை
அதிமுதிதம்- மிகவும் இன்புற்றவர்களாய்
தனுதாம்- ஆக்கட்டும்

குருவால் நல்லுபதேசம் பெற்றபின் கூட நம்மால் பகவானைத்தேடிச் செல்ல முடியவில்லை. நம் பாசபந்தங்கள் தடுக்கின்றன. அப்போது பகவானின் அருள் இருந்தால் மட்டுமே அது சாத்தியம் ஆகிறது. அதனால் நம் சார்பில் குருவே பகவானை வேண்டுகிறார் , ” இந்த ஜீவன் உன்மேல் பக்தி கொண்டாலும் சக்தியற்றது , நீதான் இதை காத்தருள வேண்டும்.” என்று

———————————————–

13வது அஷ்டபதி      ஸ்லோகம

சகி கண்ணனைப் பார்த்துவிட்டு திரும்பி வரும்போது பிருந்தாவனத்தில் பூரண சந்திரன் பிரகாசித்தது. ராதை விரஹதாபத்தினால் துன்பமடைந்து சகி இன்னும் வராததைக் குறித்து வருந்துகிறாள்.

அத்ராந்தரே ச குலடாகுல வர்த்ம காத

ஸஞ்ஜாத பாதக இவ ஸ்புடலாஞ்சன ஸ்ரீ:

ப்ருந்தாவனாந்தரம் அதீபயத் அம்ஸுஜாலை:

திக்ஸுந்தரீ வதன சத்தன பிந்துரிந்து:

ப்ரஸரதி ஸஸதர பிம்பே விஹித விளம்பே ச மாதவே விதுரா

ராகம்  ஆஹிரி, நீலாம்பரி                             தாளம் ஜம்பை

கதித ஸமயேபி ஹரி: அஹஹ ந யயௌ வனம்

மம விபலமிதமமல ரூபமபி யௌவனம்

ஹரி- ஹரியானவன்
கதிதஸமயே அபி– வருவதாகச் கூறிய வேளையில்
ந யயௌ-வரவில்லை
இதம்- இந்த
மம- என்னுடைய
யௌவனம் – இளமையும்
அமலரூபம் அபி –அழகும்
விபலம் – வீண்

யாமிஹே கமிஹ ஸரணம் ஸகீஜன வசன வஞ்சிதாஹம் (யாமி)

சகீஜனவசனவஞ்சிதா-( கண்ணனை அழைத்து வருவேன் என்ற) சகியின் வார்த்தையும் பொய்யாக
கம் – யாரை
இஹ – இங்கு
சரணம் யாமி – சரணமடைவேன்?

யதனு  கமனாயநிஸி கஹனம்பி ஸீலிதம்

தேன மம ஹ்ருதய மிதம் அஸமஸர கீலிதம் (யாமி)

யதனுகமனாய- யார் வரவிற்காக
கஹனம் அபி- இருளடர்ந்ததாயினும் இந்தக் காடு
நிசி- இரவில்
சீலிதம் – அடையப்பட்டதோ
தேன – அவனால்
மம ஹ்ருதயம் – என் இதயம்
அஸமசரகீலிதம் – மன்மதனின் பாணங்களால் கிழிக்கப்பட்டதாயிற்று.

மம மரணமேவரம் அதிவிதத கேதனா

கிமிதி விஷஹாமி விரஹானலம் அசேதனா (யாமி)

அசேதனா- ஆள் அரவமற்ற
விததகேதனா – வீணான இந்த இடத்தில்( கண்ணன் வராததால்)
கிம் இதி- எதற்காக
விரஹானலம்- பிரிவுத்தீயை
விஷஹாமி – நான் பொறுத்துக்கொள்ள வேண்டும்?
மம- எனக்கு
மரணம் ஏவ- மரணமே
வரம் இதி- மேலானது

அஹஹ கலயாமி வலயாதி மணி பூஷணம்

ஹரிவிரஹ தஹன வஹனேன பஹுதூஷணம் (யாமி)

வலயாதிமணிபூஷணம்- வளைகள் முதலிய ஆபரணங்கள் ( கண்ணனை சந்திப்பதற்காக பூண்டவை)
ஹரிவிரஹதஹன வஹனேன- கண்ணனின் விரஹத்தால் நெருப்புபோல சுடுவதால்
பஹுதூஷணம்- வெறுக்கத்தக்கவையாக
கலயாமி- எண்ணுகிறேன்

மாமிஹ ஹி விதுரயதி மதுர மதுயாமினீ

காபி ஹரிமனுபவதி க்ருத ஸுக்ருத காமினீ (யாமி)

மதுரமதுயாமிநீ – இந்த இனிமையான வசந்தகால இரவு
மாம்- என்னை
விதுரயதி- வருத்துகிறது
காபி ஸுக்ருதகாமினி – யாரோ ஒருத்தி புண்ணியம் செய்தவள்
ஹரிம் அனுபவதி – ஹரியுடன் சுகம் அனுபவிக்கிறாள்.
அதனால் தான் அவன் வரவில்லை என்று எண்ணுகிறாள்.

குஸும ஸுகுமாரதனும் அஸமஸர லீலயா

ஸ்ரகபி ஹ்ருதி ஹந்திமாம் அதி விஷம ஸீலயா (யாமி)

குஸுமஸுகுமாரதனும் மாம் – மலரைப்போல மெல்லிய என் உடலை
ஹரதி- மார்பில் உள்ள
ஸ்ரக் அபி – பூமாலை கூட
அதிவிஷமசீலயா- மிகக்கொடியவையான
அதனுசரலீலயா- மன்மதனுடைய அம்பானதால்
மாம் – என்னை
ஹ்ருதி- ஹ்ருதயத்தில்
ஹந்தி –வேதனை உண்டாக்குகிறது.

அஹமிஹஹி நிவஸாமி ந விகணித வேதஸா

ஸ்மரதி மதுஸூதனோ மாமபி ந சேதஸா  (யாமி)

ந கணித வனவேதஸா- இந்த மூங்கில் காடுகளை பொருட்படுத்தாமல்
அஹம் – நான்
இஹா- இங்கு
நிவஸாமி- இருக்கிறேன்,
மதுஸூதன: – மதுசூதனன்
மாம் – என்னை’
சேதஸா அபி – மனதால் கூட
ந ஸ்மரதி- நினைப்பது இல்லை

ஹரிசரண ஸரண ஜயதேவகவி பாரதீ

வஸது ஹ்ருதி யுவதிரிவ கோமள கலாவதீ(யாமி)

ஹரிசரண ஸரண- ஹரியின் பாதசேவையில் ஈடுபட்ட
ஜயதேவகவிபாரதி – ஜெயதேவகவியின் கவிதை
கோமளகலாவதீ-அழகும் கலைத்திறனும் வாய்ந்த
யுவதிரிவ – பெண்மணியைப்போல
ஹருதி- ஹ்ருதயத்தில்
வஸது- வசிக்கட்டும்

——————————————–

14வது அஷ்டபதி

சகி திரும்பி வந்து ஒன்றும் பேசாமல் நின்றாள். அதைப் பார்த்து ராதை கண்ணன் தன்னைவிட மேலான ஒரு யுவதியுடன் ரமித்துக் கொண்டிருக்கிறான் அதனால்தான் சகி மௌனமாக் இருக்கிறாள் என்று எண்ணி அந்த அழகி அவனுடன் ரமிப்பதை நினைக்கிறாள்.

அதாகதாம் மாதவ மந்தரேண

ஸகீமியம் வீக்ஷ்ய விஷாதமுகாம்

விஸங்கமானா ரமிதம் கயாபி

ஜனார்த்தனம் த்ருஷ்டவத் ஏததாஹ

ராகம் ஸாரங்கா                                                           தாளம் ஆதி

ஸ்மர ஸமரோசித விரசித வேஷா

களித குஸுமபர விலுளித கேஸா

ஸ்மரஸமரோசிதவிரசிதவேஷா – மன்மத லீலைக்கொப்பான ஆடை அணிகளுடன்
தலிதகுஸுமதள விரலித கேசா- தளர்வான கூந்தலில் இருந்து நழுவும் மலர்களுடன்

காபி மதுரிபுணா விலஸதி யுவதிரத்யதிக குணா

காபி-யாரோ ஒருவள்
அதிககுணா – என்னை விட சிறந்த அழகு, குணம் உடையவள்
மதுரிபுணா-கண்ணனுடன்
விலஸதி-விளையாடுகிறாள்

ஹரிபரிரம்பண பலித விகாரா

குசகலசோபரி  தரளித ஹாரா (காபி)

ஹரிபரிரம்பண – ஹரியை தழுவுதலால்
வலிதவிகாரா- உணர்ச்சி பெருகுபவளாய்
குசகலசோபரி –கலசங்கள் போன்ற ஸ்தனங்களின் மேல்
தரளிதஹாரா- புரளும் ஹாரத்தை உடையவளாய்

விசல தளக லளிதாவன சந்த்ரா

தததர பான ரபஸ க்ருத தந்த்ரா (காபி)

விசலத் அலக –புரண்டு விழும் கூந்தலால்
லலிதானனசந்த்ரா- அழகுடன் கூடிய சந்திரன் போன்ற முகத்தை உடையவளாய்
ததரபான – கண்ணனுடைய அதரபானத்தால்
ரபஸக்ருததந்த்ரா- உணர்ச்சிமேலிட்டு தன் நினைவிழந்தவளாய்

சஞ்சல குண்டல லலித கபோலா

முகரித ரஸன ஜகன கதிலோலா (காபி)

சஞ்சல குண்டல- அசையும் காதணிகளால்
லலிதகபோலா- அழகுறு கன்னங்களை உடையவளாய்
ஜகனகதி லோலா- இடுப்பு அசைவதனால்
முகரிதரஸன- சப்திக்கும் மணிகளை உடைய இடை ஆபரணம் உடையவளாய்

தயித விலோகித லஜ்ஜித ஹஸிதா

பஹுவித கூஜித ரதி ரஸ ரஸிதா (காபி)

தயிதவிலோகித-பிரியனான கண்ணனை பார்த்து
லஜ்ஜிதஹஸிதா- வெட்கத்துடன் சிரிப்பவளும்
ரதிரஸரஸிதா- காதல் விளையாட்டினால் மகிழ்ந்து
பஹுவிதகூஜித –பலவிதமான மதுர ஓசைகள் செய்பவளும்

விபுல புலக ப்ருது வேபது பங்கா

ஸ்வஸித நிமீலித விகஸதனங்கா (காபி)

விபுலபுலக ப்ருதுவேபதுபங்கா-புளகாங்கிதம் மற்றும் வியர்வை இவைகளால் பாதிக்கப்பட்டு
ச்வஸிதநிமீலித – பெருமூச்சினாலும் கண்மூடுவதாலும்
விகசதனங்கா – காதலை வெளிப்படுத்துபவளாய்

ஸ்ரமஜல கணபர ஸுபக ஸரீரா

பரிபதி தோரஸி ரதி ரண தீரா  (காபி)

ஸ்ரமஜலகணபரஸுபகசரீரா- வியர்வை சூழ்ந்த அழகிய சரீரம் உடையவளாய்
பரிபதிதோரஸி ரதிரணதீரா- காதல் விளையாட்டில் விட்டுக்கொடுக்காது கண்ணனின் மேல் விழுந்தவளாய்
எவளோ ஒருவள் கண்ணனுடன் ரமிக்கிறாள்.

ஸ்ரீஜய தேவ பணித ஹரி ரமிதம்

கலி கலுஷம் ஜனயது பரிஸமிதம் (காபி)

ஸ்ரீ ஜெயதேவரால் கூறப்பட்ட ஹரியின் காதல் லீலைகள் கலியுகத்து தீமைகளை அகற்றட்டும்.

15வது அஷ்டபதி

ராதை கண்ணன்யாரோ ஒருவளுடன் இன்புற்றிருபப்தால் தான் வரவில்லை என்று எண்ணி தான் அவனோடு இருக்கையில் நிகழ்ந்த எல்லா செயல்களும் இன்னொரு பெண்ணிடமும் நடப்பதாக எண்ணித் துயருறுகிறாள்.

விரஹ பாண்டு முராரி முகாம்புஜ

த்யுதிரயம் திரயன்னபி வேதனாம்

விதுரதீவ தனோதி மனோபுவ:

ஸுஹ்ருத் அயே ஹ்ருதயே மதன வ்யதாம்

ராகம் ஸாவேரி                   தாளம்  ஆதி

ஸமுதித மதனே ரமணி வதனே சும்பன சலிதாதரே

ம்ருகமத திலகம் லிகதி ஸபுலகம் ம்ருகமிவ ரஜீனீகரே

ஸமுதிதமதனே – காதல் மேலீட்டால்
சும்பனவலிதாதரே – முத்தமிடப்பட்ட உதடுகளுடன் கூடிய
ரமணீவதனே –அழகியின் முகத்தில்
சபுலகம் – புளகாங்கிதனாய்
ரஜநீகரே ம்ருகமிவ- சந்திரனில் காணப்படும் மான் பிம்பத்தைப்போல்
ம்ருகமத திலகம் – கஸ்தூரி திலகத்தை
லிகதி- இடுகிறான்

ரமதே யமுனா புளினவனே விஜயீ முராரிரதுனா

விஜயீ முராரி:-வெற்றிபெறுபவனான கண்ணன்
அதுனா- இப்போது
யமுனாபுலினவனே – யமுனையின் மணற்பாங்கான வனத்தில்
ரமதே – களிக்கிறான்.

கனசய ருசிரே ரசயதி சிகுரே தரளித தருணானனே

குரவக குஸுமம் சபலா ஸுஷமம் ரதிபதி ம்ருக கானனே (ரமதே)

தரளிததருணானனே – அசையும் அழகிய முகத்தில்
கனசயருசிரே – –கருத்தமேகம் போல் அடர்ந்த
ரதிபதிம்ருககானனே – மன்மதன் என்ற மான் சஞ்சரிக்கும்காடுபோன்ற
சிகரே- அவளுடைய கூந்தலில்
சபலாஸுஷமம்- மின்னல்,போன்ற
குரபககுஸுமம் –சிவந்த மலரை
ரசயதி- சூடுகிறான்

கடயதி ஸுகனே குசயுக ககனே ம்ருகமத ருசிரூஷிதே

மணிஸரம் அமலம் தாரக படலம் நகபத ஸஸி பூஷிதே (ரமதே)

ம்ருகமதருசிரூஷிதே – கஸ்தூரியின் வாசம் கொண்ட
நகபத சசிபூஷிதே – அவனுடைய நகங்கள் பட்டு பிறைச்சந்திரன் உள்ளதுபோல் தோன்றிய
ஸுகனே குசயுகககனே- அவளுடைய அகன்ற ஆகாயம் போன்ற ஸ்தனங்களின் மேல்
தாரகபடலம் – நக்ஷத்திரக் கூட்டங்கள் போன்ற
மணிஸரம் அமலம்- அழகிய முத்துமாலையை
கடயதி-அணிவிக்கிறான்

ஜித பிஸஸகலே ம்ருது புஜ யுகளே கரதல நளினீ தளே

மரகத வலயம் மதுகர நிசயம் விதரதி ஹிமஸீதளே (ரமதே)

ஜிதபிஸசகலே – தாமரைத்தண்டை மிஞ்சிய
ஹிமசீதலே- குளிர்ந்த
ம்ருதுபுஜயுகளே –மிருதுவான புஜங்களை உடைய
கரதலநளிநீதலே –தாமரை ஒத்த அவள் கரங்களில்
மதுகரநிசயம் – வண்டு சூழ்ந்தாற்போல் உள்ள
மரகதவலயம் – பச்சைக்கல் வளையை
விதரதி – அணிவிக்கிறான்.

ரதி க்ருஹ ஜகனே விபுலாபகனே மனஸிஜ கனகாஸனே

மணிமய ரஸனம் தோரண ஹஸனம் விகிரதி க்ருத வாஸனே (ரமதே)

விபுலாபகனே – அகன்ற
மனஸிஜகனகாஸனே – மன்மதனின் தங்கசிம்மாசனம் போன்ற
ரதிக்ருஹஜகனே –காதல் க்ருஹமான அவள் இடுப்பை
க்ருதவாஸனே- இருப்பிடமாகக் கொண்ட
மணிமயரஸனம்-பொன்மணிகளைக் கொண்ட ஒட்டியாணம்
விகிரதி – உடைந்து சிதறுகிறது. (கண்ணன் பிடித்து இழுப்பதால்)

சரண கிஸலயே கமலா நிலயே நகமணி கணபூஜிதே

பஹிரபவரணம் யாவக பரணம் ஜனயதி ஹ்ருதி யோஜிதே (ரமதே)

கமலாநிலயே ஹ்ருதி யோஜிதே- ஸ்ரீதேவி குடிகொண்ட மார்பில் வைக்கப்பட்ட
நகமணிகணபூஷிதே- சிவந்த மணிகள் போன்ற நகங்களுடைய
சரண கிஸலயே-அவளுடைய தளிர்போன்ற பாதத்தில்
பஹிரபவரணம் – மேல்பூச்சாக
யாவகபரணம் – செம்பஞ்சுக்குழம்பை
ஜனயதி- பூசுகிறான்.

த்யாயதி ஸத்ருஸம் காமபி ஸுத்ருஸம் கல ஹலதர ஸோதரே

கிமபலமவஸம் சிரமிஹ விரஸம் வதஸகி விடபோதரே (ரமதே)

ரமயதிசஸுப்ருசம் காமபி ஸுத்ருசம் கலஹலதரஸோதரே
கிம் அபலம் அவசம் சிரம் இஹ விரஸம் வத சகி விடபோதரே (ரமதே)

கலஹலஸோதரே – அந்த வஞ்சகமான கண்ணன்
காமபி ஸுத்ருசம் – வேறு ஒரு பெண்ணை
ஸுப்ருசம் ரமயதி- மிகவும் சந்தோஷப் படுத்துகையில்
சகி- சகியே
கிம் ஏன்
இஹ –இங்கு
விடபோதரே – கொடிவீட்டில்
அபலம்- வீணாக
சிரம் – நெடு நேரம்
விரஸம்-பலனின்றி
அவஸம்- இருக்க வேண்டும்.

இஹ ரஸ பணனே க்ருத ஹரி குணனே மதுரிபு பதஸேவகே

கலியுக சரிதம் ந வஸது துரிதம் கவிந்ருப ஜயதேவகே (ரமதே)

இஹ- இங்கு
ரஸபணனே – சுவைமிக்க
க்ருத ஹரிகுணனே- ஹரியின் சிறப்பை கூறி
மதுரிபுபதசேவகே- ஹரியின் பதம் துதிக்கும்
கவிந்ருப ஜயதேவகே- கவிராஜரான ஜெயதேவருக்கு
கலியுகசரிதம் – கலியுகத்தின் இயல்பான
துரிதம் –துன்பங்கள்
ந வஸது- இல்லாமல் இருக்கட்டும்.

——————————————

16வது அஷ்டபதி

யார் கண்ணனுடன் இருக்கிறாளோ அவள் கொடுத்து வைத்தவள். ஏனென்றால் இந்த விரஹவேதனையை அனுபவிக்கவில்லை என்று ராதை சொல்லுகிறாள்.

நாயா தஸ்ஸகி நிர்தயோ யதிஸட: த்வம் தூதி கிம் தூயஸே

ஸ்வச்சந்தம் பஹுவல்லவ: ஸ ரமதே கிம் தத்ரதே தூஷணம்

பஸ்யாத்ய  ப்ரியஸங்கமாய தயிதஸ்ய ஆக்ருஷ்யமாணம் குணை:

ராகம்  புன்னாகவராளி                         தாளம் ஆதி

அனில தரள குவலய நயநேன

தபதி ந ஸா கிஸலய ஸயனேன

அனிலதரள –காற்றில் அலைபடும்
குவலய நயனேன –தாமரை போன்ற கண்களை உடைய கண்ணனுடன் இருப்பதால்)
ஸா- அவள்
கிஸலய சயநேன- இளம்தளிர் படுக்கையில் படுத்து ( விரஹம் மேலிட்டதால்)
ந தபதி-வெப்பத்தினால் வாடுவதில்லை
குளிர்ந்த தளிர்களால் ஆன சயனம் வெப்பத்தைக் கொடுக்கிறது விரஹத்தினால்

யா ரமிதா வனமாலினா  ஸகி

சகி –தோழி,
யா ரமதே – யார் சுகம் அநுபவிக்கிறாளோ
வனமாலினா- கண்ணனுடன் (அவள்)

விகஸித ஸரஸிஜ லலித முகேன

ஸ்புடதி ந ஸா மனஸிஜ விஸிகேன (யா ரமிதா)

ஸா- அவள்
மனஸிஜ விசிகேன – காமனின் அம்பினால்
ந ஸ்புடதி- பிளக்கப்படுகிறதில்லை (ஏன் என்றால்)
விகஸித- மலர்ந்த
ஸரஸிஜ – தாமரை போன்ற
லலிதமுகேன- அழகிய முகம் கொண்ட கண்ணனோடு இருப்பதால்

அம்ருத மதுர ம்ருதுதர வசனேன

ஜ்வலதி ந ஸா மலயஜ பவனேன (யா ரமிதா)

அம்ருத- அமிர்தம் போன்ற
மதுரம்ருதுதர – மதுரமாகவும் மிருதுவாகவும் உள்ள ‘
வசனேன –கண்ணனின் சொற்களைக் கேட்பதனால்
மலயபவனேன மலையமாருதத்தால்
ந ஜ்வலதி- எரிக்கப் படுவதில்லை
குளிர்ந்த காற்று வெப்பத்தைக் கொடுக்கிறது பிரிவாற்றாமையால்.

ஸ்தல ஜலருஹ ருசிகர சரணேன

லுடதி ந ஸா ஹிமஹர கிரணேன (யா ரமிதா)

ஸா- அவள்
ஹிமகரகிரணேன- சந்திரனின் கிரணங்களால் விரஹம் மேலிட்டு
நலுடதி- புரளுவதில்லை
ஸ்தல ருஹ ருசிர கரசரணேன- நிலத்தில் உதித்த் தாமரை போன்ற கைகளும் பாதங்களும் கொண்ட கண்ணனுடன் இருப்பதால்.
தாமரை இருப்பதால் சந்திரன் இல்லை என்றாகிறது. அதனால் சந்திர கிரணங்களால் துன்பம் இல்லை.

ஸஜல ஜலத ஸமுதய ருசிரேண

தளதி ந ஸா ஹ்ருதி விரஹ பரேண (யா ரமிதா)

ஸா- அவள்
ஹ்ருதி – ஹ்ருதயத்தில்
விரஹதவேன – விரஹத்தீயால்
தஹதி- பொசுக்கப்படுவதில்லை
ஸஜலஜலத ஸமுதய – நீருண்ட மேககூட்டம் போன்ற
ருசிரேண- ஒளி வீசும் கண்ணனோடு இருப்பதால்

கனக நிசய ருசி ஸுசி வஸனேன

ஸ்வஸிதி ந ஸா பரிஜன ஹஸனேன (யா ரமிதா)

கனக நிகஷ ருசி –உரைகல் மேல் பிரகாசிக்கும் பொன் போன்ற
சுசிவஸனேன – பீதாம்பரத்தை தரித்த கண்ணனோடு இருக்கையில்
பரிஜன ஹஸனேன – சுற்றி உள்ளவர்களால் பரிகாசம் செய்யப் பட்டு.
(கண்ணன் வருவான் என்று கூறினாயே அவன் வரவில்லையே என்று பரிஹசிப்பவர்களால்)
ந ச்வஸிதி- பெருமூச்சு விடுவதில்லை.

ஸ கல புவன ஜ ன வர தருணேன

வஹதி  ந ஸா ருஜம் அதி கருணேன (யா ரமிதா)

அதிகருணேன- மிகவும் கருணையுடையவனும்
ஸகலபுவனஜனவரதருணேன- அகில உலகத்திலும் உள்ளவர்களில் சிறந்த யுவநும் ஆகிய கண்ணனுடன் இருப்பதால்’
ஸா- அவள்
ந ருஜம் வஹதி- ஒருவித கஷ்டமும் அனுபவிப்பதில்லை

ஸ்ரீ ஜய தேவ பணித வசனேன

ப்ரவிஸது ஹரிரபி ஹ்ருதயம் அனேன (யா ரமிதா)

அனேன – இந்த .
ஸ்ரீ ஜயதேவ பணித வசனேன- ஸ்ரீ ஜயதேவரால் சொல்லப்பட்ட இந்த வார்த்தைகளுடேன் கூட
ஹரி: அபி – ஹரியும்
ஹ்ருதயம் – உள்ளத்தில்
ப்ரவிசது- பிரவேசிக்கட்டும்

———————-

17வது அஷ்டபதி

அத கதமபி யாமினீம் வினீய

ஸ்மரஸர ஜர்ஜரி தாபி ஸா ப்ரபாதே

அனுநய வசனம் வதந்தம் அக்ரே

ப்ரண தமபி ப்ரியமாஹ ஸாப்யஸூயம்

 

ராகம் ஆரபி                         தாளம் ஆதி

ரஜனி ஜனித குருஜாகர ராக கஷாயிதமலஸ நிமேஷம்

வஹதி நயனம் அனுராகமிவஸ்புடம் உதித ரஸாபி நிவேஸம்

நயனம் –உன் கண்
ரஜனிஜநிதகுருஜாகர ராக கஷாயிதம்- இரவு தூங்காதனாலும் கலக்கமற்று சிவந்து
அலஸநிவேசம்- மெதுவாக மூடித்திறந்து
உதிதரஸாபிநிவேசம்- தீவிரமான ஸ்ருங்கர ரஸத்த்தில் ஆழ்ந்து
அனுராகம் இவ ஸ்புடம்- தெளிவாக ( அவளுடன் ) காதலை தெரிவிப்பதாக
வஹதி- இருக்கிறது.

அதாவது இரவு பூராவும் அவளுடன் களித்துவிட்டு இங்கு வருகிறாய் என்று குற்றம் சாட்டுகிறாள்.
கண்ணன சொல்கிறான் “ இல்லை இல்லை இரவு முழுவதும் உன்னையே நினைத்துக்கொண்டிருந்ததனால் தூக்கம் இல்லாமல் என் கண்கள் அப்படி உள்ளன்” என்று. அதற்கு ராதை சொல்கிறாள்.

ஹரிஹரி யாஹி மாதவ யாஹி கேசவ மாவத கைதவ வாதம்

தாமனுஸர ஸரஸீருஹ லோசன யா தவ ஹரதி விஷாதம்

ஹரிஹரி- கஷ்டம்!
யாஹி மாதவ – மாதவா நீ போய்வா
யாஹி கேசவ – கேசவா நீ போகலாம்.
கைதவ வாதம்- உன் வஞ்சகமான இன்சொல்
மா வத – பேசவேண்டாம்
ஸரஸீருஹலோசன -தாமரைக்கண்ணனே
யா – எவள்
தவ – உன்னுடைய
விஷாதம் – மனச்சோர்வை
ஹரததி- அகற்றுகிறாளோ
தாம் அனுஸர- அவளையே பின்பற்றிச்செல்

கஜ்ஜள மலின விலோசன சும்பன விரசித நீலிமரூபம்

தஸன வஸனமருணம் தவ க்ருஷ்ண தனோதி தனோரனு ரூபம் (யாஹி)

க்ருஷ்ண – கிருஷ்ணா
கஜ்ஜலமலினவிலோசன சும்பன-மைதீட்டிய விழிகளை முத்தமிட்டதால்
விரசித நீலிம ரூபம்- கரும் நிறம் உடையவையாகி
தவ – உன்னுடைய
அருணம் தசனவஸனம்-சிவந்த உதடுகள்
தனோ: -உடலுக்கு
அனுரூபம தனோதி- ஒத்ததக ஆயிற்று ( ( கருமை நிறமாக)

கிருஷ்ணன் சொல்கிறான் “ இல்லை அவை நான் உன்னைத்தேடி அலைந்தபோது வண்டுகளால் கடிக்கப்பட்டு அவ்வாறு ஆயின என்று.
அதற்கு ராதை உன் ஏமாற்றுவேலை இங்கே வேண்டாம் என்று போகச்சொல்லுகிறாள்.

வபுரனுஸரதி தவ ஸ்மர ஸங்கர கர நகர க்ஷத ரேகம்

மரகத ஸகல கலித கலதௌத லிபேரிவ ரதிஜய லேகம் (யாஹி)

தவ வபு:- உன்னுடல்
ஸ்மரஸங்கர கர நகரக்ஷத ரேகம்- காதல் விளையாட்டினால் நகக்குறிபட்டு
மரகதசகலகலிதகலதௌத லிபேரிவ- மரகதக் கல் மேல் தங்க ரேகைகள் போல
ரதிஜயலேகம்-காதலில் ஜெயத்தை காட்டுவது
அனுஹரதி- போல தோற்றம் அளிக்கிறது.

கண்ணன் “ நான் உன்னைத் தேடி அலையும்போது முட்கள் குத்திய வடுவல்லவா அவை !’ என்கிறான்.
ராதை “உன்னை அறிவேன். போய் வா என்கிறாள்.

சரண கமல கள தலக்தக ஸிக்தம் இதம் தவ ஹ்ருதயம் உதாரம்

தர்ஸய தீவ பஹிர் மதனத்ரும நவ கிஸலய பரிவாரம் (யாஹி)

தவ ஹ்ருதயம் உதாரம் – உன் பரந்த மார்பில்
சரணகமல காலத்- அவளுடைய பாதங்களில் இருந்து சிந்திய
அலக்தக ஸிக்தம் – செம்பஞ்சுக் குழம்பின் கறை
மதனத்ரும நவ கிஸலய பரிவாரம் – மன்மதனாகிற மரத்தின் தளிர்வரிசை
பஹி: வெளியில்
தர்சயதி இவ –காண்பிப்பதுபோல் இருக்கிறது.

“அவை சிகப்பு நிற கற்களால் உண்டானவை .” என்கிறான்.
ராதை பொய்யுரை போதும் போய் வா என்கிறாள்.

    தஸன பதம் பவ ததரகதம் மம ஜனயதி சேதஸிகேதம்

ததயதி கதமதுனாபி மயாஸஹ தவ வபுரே ததபேதம் (யாஹி)

பவததரகதம் – உன் உதடுகளில்
தசனபதம்-பற்களின் அடையாளம்
மம சேதஸி- என்மனதில்
கேதம்- துக்கத்தை
ஜனயதி- உண்டாக்குகிறது. (இன்னொரு பெண்ணின் அடையாளமாதலால்)
அதுனா அபி- அப்படி இருக்கையில் இப்போது கூட
தவ வபு: -உன் உடல்
மயா ஸஹ- என்னுடன் கூட
ஏதத் அபேதம் – பேதமில்லாமல் இருக்கும் தன்மையை ( நாம் இருவரல்ல ஒருவர் என்னும் உணர்வை )
கதம் கதயதி – எவ்வாறு கூறும்?

கண்ணன், “ என் உதடுகளை வண்டு தாமரை என்று நினைத்துக் கடித்துவிட்டது “என்று கூற,
ராதை “போதும் போதும் நான் இனிமேல் உன்னை நம்பத்தயாரில்லை போய்வா. “என்கிறாள்.

பஹிரிவ மலின தரம் தவ க்ருஷ்ண மனோபி பவிஷ்யதி நூனம்

கதமத வஞ்யஸே ஜனம் அனுகதம் அஸம ஸர ஜ்வர தூனம் (யாஹி)

க்ருஷ்ண-கிருஷ்ணா
நூனம் – நிச்சயம்
தவ மன: அபி- உன் மனதும்
பஹி: இவ – உன் உடலைப்போல (வனத்தில் அலைவதால்)
மலினதரம் – மிகவும் அழுக்கடைந்து
பவிஷ்யதி- இருக்க வேண்டும்.
அத கதம் – பிறகு ஏன்
அசஸமசரஜ்வரதூனம் – மன்மதனின் சரத்தால் துயருறும்
அனுகதனம் – உன்னை நம்பி இருக்கும்
ஜனம் –ஜீவனை
வஞ்சயசே- ஏமாற்றுகிறாய்

கண்ணன “நான் உன்னை ஏமாற்றவே மாட்டேன் ,” எனக்கூற
ராதை கோபம் தணியாமல் ‘போய் வா ,’ என்கிறாள்.

ப்ரமதி பவான பலா கபளாய வனேஷு கிமத்ர விசித்ரம்

ப்ரதயதி பூதனிகைவ வதூவத நிர்தய பால சரித்ரம் (யாஹி)

பவான் – நீ
வனேஷு – வனங்களில்
அபலாகவலாய – அபலைகளை கவர்வதற்கே (kavala –devour)
பிரமாதி- அலைகிறாய்
அத்ர- என்பதில்
‘கிம் சித்திரம் – என்ன ஆச்சரியம்
பூதனிகா ஏவ- பூதனை வரலாறே
வதூவத நிர்தய பால சரித்ரம் – உன் தயை அற்ற பெண்வதம் செய்த பாலலீலையை
ப்ரதயதி- பறை சாற்றுகிறதே .

அதனால் ‘உன்னை நம்ப மாட்டேன் நீ போகலாம் ,’ என்கிறாள்

ஸ்ரீ ஜயதேவ பணித ரதி வஞ்சித கண்டித யுவதி விலாபம்

ஸ்ருணுத ஸுதா மதுரம் விபுதா வததாபி ஸுகம் ஸுதுராபம் (யாஹி)

விபுதா:- பண்டிதர்களே
ஸ்ரீஜயதேவபணித – ஸ்ரீ ஜெயதேவரால் கூறப்பட்ட
ஸுதாமதுரம்- அமிர்தத்திற்கொப்பான
விபுதாலயதோ அபி – தேவர் உலகத்திலும்
துறாப்ம் – கிடைக்காத
ரதிவஞ்சித- காதலில் ஏமாற்றமடைந்து
கண்டித யுவதிவிலாபம்- மனமுடைந்த யுவதியின் ப்ரலாபத்தை
ச்ருணுத- கேளுங்கள்

ராதை கண்ணனுடன் சேர ஆவல் இருந்தும் பொறாமையால் இவ்விதம் அவனைப் புறக்கணித்தாள். அந்த மாயவனுக்கா தெரியாது அவள் மனம் ! அங்கிருந்து போவதைப்போல் விலகி சிறிது தூரத்தில் சென்று காத்திருந்தான். ராதையின் சகி அவளுக்கு நல்லுரை கூற, விடியும் சமயம் அவள் சமாதானம் ஆகி இருப்பாள்என்று கண்ணன் மறுபடி அவளிடம் வந்தான்.

இதைக்கூறுவது அடுத்த இரண்டு (18, 19)அஷ்டபதி. 19 வது அஷ்டபதி சரித்திரப்புகழ் வாய்ந்தது.

—————————

18வது அஷ்டபதி

சகி ராதையிடம் கண்ணன் தானே வந்த பின்பு அவனை போகச்சொன்னது தவறு என்று கூறுகிறாள். இது நாம் சாதாரணமாக வாழ்க்கையில் செய்யும் தவறு.

பகவானை வேண்டிக்கொண்ட பின்னும் நாம் நினைத்தது நடக்கவில்லை என்றால் அவனை வெறுத்து ஒதுக்கி விடுகிறோம். நம் கர்மவினைப்படிதான் எல்லாம் நடக்கும் ஆனால் அவன்தான் நமக்கு ஒரே துணை என்பதை மறந்து விடுகிறோம்

. குருவானவர் நம்மை சரியான வழியில் திருப்பி விடுகிறார். நடப்பதெல்லாம் நாராயணன் செயல் என்று நான் எனது என்ற அகந்தையை விட்டு அவனை சரணடையச் சொல்கிறார்.

அததாம் மன்மத கின்னாம் ரதி ரஸ பின்னாம்

விஷாத ஸம்பன்னாம்

அனுசிந்தித ஹரி சரிதாம் கலஹாந்தரிதாம்

ராகம் யதுகுல காம்போஜி                      தாளம் மிஸ்ரசாபு  

ஹரிரபி ஸரதி வஹதி மது பவனே

கிமபரம் அதிக ஸுகம் ஸகி பவனே

ஹரி: – ஹரி
அபிஸரதி – உன் சங்கேத இடத்தில் இருக்கையில்
மதுபவனே – தென்றல் காற்று
வஹதி-வீசுகையில்
கிம் அபரம்- வேறு எது
அதிசுகம் – இதைவிட மேலான சுகம்
புவனே – உலகில்( பவனே என்பது பாடபேதம். இங்கு புவனே என்பதுதான் பொருத்தமாக இருக்கிறது)

பல்லவி

மாதவே மாகுரு மானினி மானம் அயே ஸகி

அயே மானினி-துடுக்கான பெண்ணே
மாதவே – மாதவனிடத்தில் (மா என்றால் லக்ஷ்மி, தவ என்றால் பதி, லக்ஷ்மீப்தியே உன்னைத்தேடி வரும்போது)
மா குரு மானம் – கௌரவம் பார்க்காதே

தாள பலா தபி குரும் அதி ஸரஸம்

கிமு விபலீ குருஷே குச கலாஸம் (மாதவே)

தாலபலாதபி-பனம்பழத்தை விட
குரும்- பெரிய
அதிஸரஸம் – ஸ்ருங்கார ரசம் நீரம்பிய
குச கலசம்- கலசம் போன்ற மார்பை
கிம்- ஏன்
விபலீ குருஷே – வீணாக சுமக்கிறாய்

கதி ந கதிதமிதம் அனுபதம் அசிரம்

மா பரிஹர ஹரிம் அதிசய ருசிரம் (மாதவே)

அதிசய ருசிரம்- அதிசய மநோஹரமான
ஹரிம்- ஹரியை
மா பரிஹர – அலட்சியம் செய்யாதே என்று
இதம் – இதை
அசிரம் அனுபதம் – மீண்டும் மீண்டும்
கதி கதிதம்- எவ்வளவு தரம் சொல்லி இருக்கிறேன்

கிமிதி விஷீதஸி ரோதிஷி விகலா

விஹஸதி யுவதி ஸபா தவ ஸகலா (மாதவே)

கிமிதி-எதற்காக ( செய்வதையும் செய்துவிட்டு)
விகலா- வீணாக
விஷீதஸி- புலமபிக்கொண்டும்
ரோதிஷி –அழுதுகொண்டும் இருக்கிறாய்
யுவதிஸபா -மற்ற யுவதிகள் கொண்ட
தவ ஸகலா- உன் நட்புவட்டம்
விஹஸதி – உன்னைப்பார்த்து சிரிக்கிறது.

ம்ருது நளினீ தள ஸயனே

ஹரீம் அவலோகய ஸபலய நயனே (மாதவே)

ஸஜலநளிநீதல சீதல சயனே
ஹரிம் அவலோகய ஸபலய நயனே (மாதவே)

ஸஜலநளிநீதல சீலித சயனே-நீருடன் கூடிய குளிர்ந்த தாமரை இதழ் மேல் இருப்பவனாக
ஹரிம் –ஹரியை
அவலோகய- பார்.
ஸபலனயனே –உன்கண்கள் பெற்ற பயனாக.

ஜனயஸி மனஸி கிமிதி குரு கேதம்

ஸ்ருணுமம ஸுவசனம் அனீஹித பேதம் (மாதவே)

மனஸி- மனதில்
கிம் இதி- எதற்கு
குருகேதம் – மிகுந்த துக்கத்தை
ஜனயஸி- உண்டுபண்ணிக் கொள்கிறாய்?
அநீஹிதபேதம் – உங்களுக்குள் பேதத்தை விரும்பாத
மமவசனம் – என் வார்த்தையை
ச்ருணு- கேள்

ஹரிருபயாது வதது பஹுமதுரம்

கிமிதி கரோஷி ஹ்ருதயம் அதிவிதுரம் (மாதவே)

ஹரி: – ஹரி
உபயாது- வரட்டும்
பஹுமதுரம் – மிகவும் இனிமையாக
வதது- பேசட்டும்
கிமிதி- ஏன்
ஹ்ருதயம் – உன் இதயத்தை
அதிவிதுரம் – கடுமையானதாக
கரோஷி- செய்து கொள்கிறாய்?

ஸ்ரீஜய தேவ பணிதம் அதி லலிதம்

ஸுகயது ரஸிக ஜனம்  ஹரி சரிதம் (மாதவே)

ஸ்ரீ ஜயதேவ பணிதம் -ஸ்ரீ ஜெயதேவருடைய கூறப்பட்ட
அதிலலிதம்- மிகவும் அழகான
ஹரிசரிதம்- ஹரியின் சரிதம் .
ரஸிகஜனம் –ரசிகர்களுக்கு
ஸுகயதி- சுகத்தைக் கொடுக்கிறது.

————-

19 வது அஷ்டபதி

அடுத்த நாள் கண்ணன் ராதையிடம் வந்து அவளை சமாதானப்படுத்துகிறான்.

மற்றவைகளுக்கு இல்லாத ஒரு மேன்மை இந்த அஷ்டபதிக்கு உண்டு. அதை அந்த ஸ்லோகம் வரும்போது பார்க்கலாம்.

அத்ராந்தரே மஸ்ருண ரோஷ வஸாத் அஸீம்நி

ஸ்வாஸ நிஸ்ஸஹ முகீம் ஸுமுகீம் உபேத்ய

ஸவ்ரிடம் ஈக்ஷித ஸகீவதனாம் தினாந்தே

ஸானந்த கத்த பதம் ஹரிரித்யுவாச

ராகம்  முகாரி                                 தாளம் ஜம்பை

வதஸி யதி கிஞ்சிதபி தந்தருசி கௌமுதீ

ஹரது தர திமிரம் அதிகோரம

ஸ்புரததர ஸீதவே தவ வதன சந்த்ரமா

ரோசயது லோசன சகோரம்

கிஞ்சிதபி- ஏதாவது ஒரு வார்த்தையாவது
வதஸி யதி- நீ கூறினால்
தந்தருசி கௌமுதீ- உன் பற்களின் ஒளியாகிற நிலவு
தரதிமிரம் அதி கோரம்- மிகவும் பயங்கரமான என் பயத்தை ( நீஎன்னை வெறுத்துவிட்டாய் என்ற பயத்தை)
ஹரது-போக்கடிக்கட்டும்.
தவ – உன்னுடைய
வதன சந்த்ரமா- முகமாகிய சந்திரனில்
ஸ்புரத் அதர சீதவே – துடிக்கும் உதடுகளாகிய அம்ருதத்தை
மம – என்னுடைய் லோசனசகோரம்- கண்கள் என்னும் சகோரரபக்ஷிகளை ரோசயது- இன்புறச்செய்யட்டும்

ப்ரியே சாருஸீலே ப்ரியே சாருஸீலே

முஞ்ச மயி மானம் அநிதானம்

ஸபதி மதனானலோ தஹதி மம மானஸம்

தேஹி முக கமல மதுபானம்

ப்ரியே சாருசீலே- பிரியமான அழகியே
மயி- என்னிடத்தில்
அனிதானம் – காதலுக்குப் பொருந்தாத
மானம் – கோபத்தை
முஞ்ச – விட்டுவிடு.
ஸபதி-தற்சமயம்
மதனானல: -மன்மதனால் தூண்டப்பட்ட நெருப்பு
மம மானஸம்- என் மனதை
தஹதி – எரிக்கிறது
முககமல மதுபானம் – உன் இதழமுதத்தை
தேஹி – தருவாயாக.

ஸத்யமேவாஸி யதி ஸுததி மயி கோபினீ

தேஹி கர நகர ஸர காதம்

கடய பூஜ பந்தனம் ஜனய ரத கண்டனம்

யேன வா பவதி ஸுக ஜாதம் (ப்ரியே)

ஸுததி- அழகான பற்களை உடையவளே
ஸத்யம் ஏவ – உண்மையாகவே
மயி- என்னிடத்தில்
யதி கோபினி – கோபமாக இருந்தால்
கர நகர சர காதம் – உன் கூர்மையான் நகமாகிய சரத்தினால் என்னை அடித்து விடு.
புஜபந்தனம் கடய – உன் கைகளால் என்னைக் கட்டிவிடு.
ரதகண்டனம் ஜனய- உதடுகளால் என்னை கடித்துவிடு.
யேன வா பவதி ஸுகஜாதம் – அது சுகத்தைக் கொடுக்கும்

த்வமஸி மம ஜீவனம்  த்வமஸி மம பூஷணம்

த்வமஸி மம பவஜலதி ரத்னம்

பவது பவதீஹ மயி ஸததமனுரோதினீ

தத்ர மம ஹ்ருதயம் அதி யத்னம் (ப்ரியே)

த்வமஸி- நீதான்
மம ஜீவனம்- உயிர்.
த்வமஸி- நீதான்
மம-என்
பூஷணம் – ஆபரணம் (சிறப்பு அம்சம்)
த்வமஸி- நீதான்
மம- எனக்கு
பவஜலதி- வாழ்க்கையாகிற கடலில் கிடைத்த
ரத்னம் – ரத்தினம்
இஹ – இங்கு
பவதீ – நீ
ஸததம் – எப்போதும்
அனுரோதிநீ- மனம் குளிர்ந்தவளாக
பவது – இருப்பாயாக.
தத்ர- அதற்காக
மம ஹ்ருதயம் – என் இதயம்
அதியத்னம். – மிகவும் யத்தனிக்கிறது.

நீல நளினாபமபி தன்வி தவ லோசனம்

தாரயதி கோகன த ரூபம்

குஸும ஸரபாண பாவேன யதி ரஞ்ஜயஸி

க்ருஷ்ணமித மேததனு ரூபம் (ப்ரியே)

தன்வி –மெல்லியலாளே
தவ லோசனம் – உன் கண்கள்
நீல நளிநாபம் அபி – நீல தாமரை போல் இருந்தும்
கோகனத ரூபம் – சிவந்த வர்ணம்
தாரயதி- தரித்துள்ளது (கோபத்தினால்)
குஸுமசரபாணபாவேன – (உன் கண்கள் என்கிற) மன்மதனின் அம்புகளால்
இதம் க்ருஷ்ணம்அபி – இந்த கிருஷ்ணனை (நீல வண்ணனையும்)
யதி ரஞ்சயஸி-சிவப்பாக செய்தாயானால் ( அம்புகளால் ஏற்பட்ட உதிரப் பெருக்கினால் ) ரஞ்சயஸி என்றால் சந்தோஷப்படுத்துவது என்றும் அர்த்தம்)
ஏதத்- இது
அனுரூபம் – பொருத்தமாக இருக்கும்.

ஸ்புரது குச கும்பயோ: உபரி மணி மஞ்சரி

ரஞ்ஜயது தவ ஹ்ருதய தேஸம்

ரஸது ரஸனாபி தவ கனஜகன மண்டலே

கோஷயது மன்மத நிதேஸம்  (ப்ரியே)

குசகும்பயோ: உபரி- உன் கும்பஸ்தனங்களின் மேல்
மணிமஞ்சரீ –மணிஹாரம் மலர்க்கொத்துப்போல
ஸ்புரது- அசையட்டும்
தவஜகனமண்டலே- உன் இடுப்பில்
ரஸனா அபி – மேகலையும்
ரஸது- ஒலிக்கட்டும்.
மன்மதநிதேசம்- மன்மதனின் செய்தியை
கோஷயது – கோஷிக்கட்டும்

ஸ்தல கமல பஞ்ஜனம் மம ஹ்ருதய ரஞ்ஜனம்

ஜனித ரதி ரங்க பர பாகம்

பண மஸ்ருணவாணி கரவாணி சரணத்வயம்

ஸரஸ ஸதலக்தக ஸராகம் (ப்ரியே)

மஸ்ருணவாணி- அழகிய வாக்கை உடையவளே
பண- கட்டளையிடு
ஸ்தலகமலபஞ்ஜனம்- நிலத்தாமரையொத்த
மம ஹ்ருதய ரஞ்ஜனம் – என் இதயத்தை மகிழ்விக்கும்
சரணத்வயம் – உன் பாதங்களை
ஜனித ரதி ரங்க பர பாகம்- ஒன்றுக்கொன்று அழகு செய்வதாக இன்பம் விளைவிக்கும்
ஸரஸ லஸதலக்தக ஸராகம்-பாதங்களின் ஒரே நிறமுடைய செம்பஞ்சுக்குழம்புப் பூசுவதை
கரவாணி –செய்கிறேன்.

ஸ்மரகரள கண்டனம் மம ஸிரஸி மண்டனம்

தேஹீ பத பல்லவம் உதாரம்

ஜ்வலதி மயி தாருணோ மதன கதனானலோ

ஹரது ததுபாஹித விகாரம் (ப்ரியே)

பத பல்லவம் உதாரம் –அழகிய தளிர்போன்ற பாதத்தை
ஸ்மர கரள கண்டனம் –மன்மதவேதனையால் ஏற்பட்ட விஷத்தை தணிக்கும் பொருட்டு
மமசிரஸி – என் தலையில்
மண்டனம் தேஹி – அலங்காரமாக வை.
மயி – என்னிடத்தில்
தாருண; – பயங்கரமான
மதனகதனானல: : காதல்தீயானது
ஜ்வலதி – தகிக்கிறது.
ததுபாஹித விகாரம் ஹரது –அதனால் ஏற்பட்ட பாதிப்பு விலகட்டும்.

இந்த அஷ்டபதியின் வரலாறு பின்வருமாறு.
ஜெயதேவர் ஒருநாள் ராதையின் கோபத்தையும் கண்ணன் அவளை சமாதானப்படுத்துவதையும் கூறும் இந்த அஷ்டபதியை எழுதிக்கொண்டு இருந்தார். அப்போது மேற்கண்ட வரிகளை எழுதியவர் பகவான் தலை மேல் ராதையின் பாதங்களை வைப்பதாவது ? இது அபசாரமல்லவா என்று எண்ணியவராய் அதை மாற்ற முயற்சித்தபோது ஒன்றும் சரியாக அமையாமல் அதை அப்படியே விட்டுவிட்டு ஸ்நானம் செய்வதற்கு போய் விட்டார். அப்போது கண்ணன் ஜெயதேவர் உருவம் கொண்டு அங்கு வந்து பத்மாவதியிடம் தான் எழுதிக்கொண்டிருந்ததை தரும்படி கேட்டு அவர் எந்த வரிகளை வேண்டாம் என்று நீக்கினாரோ அதையே எழுதிவிட்டுப் போய்விட்டான். ஜெயதேவர் ஸ்நானம் முடித்து வேறு கற்பனையுடன் வந்து அந்த ஏட்டை எடுத்துப் பார்த்தால் எதை வேண்டாம் என்று நீக்கினாரோ அதே வரிகள் எழுத்ப்பட்டிருப்பதைப் பார்த்து பத்மாவதியிடம் இது யார் எழுதியது என்று கேட்டார். அப்போது அவள் “நீங்கள் தான் ஸ்நானம் செய்யப்போனவுடன் திரும்பி வந்து இதை எழுதிவிட்டு நான் ஸ்நானம் செய்துவிட்டு வருகிறேன் என்று சொல்லிப் போனீர்கள்?” என்றாள் அப்போதுதான் அவருக்கு அது கண்ணனின் விளையாட்டு என்று தெரிந்தது. தன் காணாத பகவானை பத்மாவதி கண்டு விட்டாள் . அவள் பாக்கியம் செய்தவள் என்று அது முதல் அடுத்த அஷ்டபதிகளுக்கு தன் முத்திரையை பத்மாவதி ரமண ஜெயதேவகவி என்று .மாற்றிக்கொண்டு விட்டார்.

இதனால் பகவானுக்கு அவர் பக்தர்களின் மேல் உள்ள அன்பு தெரிகிறது. பாகவதத்தில் ஓர் சம்பவம் இதற்கு உதாரணமாக காண்கிறோம். நாரதர் கண்ணனைக்காண த்வாரகைக்கு வருகிறார் அப்போது எல்லாபத்தினிகள் வீட்டிலும் அவனைகண்டு பிறகு ஒரு தனி இடத்தில் பூஜை செய்பவனாகக் காண்கிறார்.” எல்லோரும் உன்னை வணங்க நீ யாரை வணங்குகிறாய்?” என்று கேட்க அவன் என் பக்தர்களின் பாத தூளி இங்கு இருக்கிறது. அதை வணங்குகிறேன் என்று சொல்கிறான். இதிலிருந்து பக்தபராதீனன் என்பது நிதர்சனமாகத் தெரிகிறது.

இதி சடுல சாடுபடு சாரு முர வைரிணோ

ராதிகாம் அதிவசன ஜாதம்

ஜயது பத்மாவதி ரமண ஜயதேவகவி

பாரதி பணிதமிதி கீதம் (ப்ரியே)

இதி- இவ்வாறு
முரவைரிண: -கிருஷ்ணனுடைய
சடுல சாடு படுசாரு- அதி சாமர்த்தியமானதும் அழகியதுமான
ராதிகாம் அதி- ராதையை குறித்துக் கூறிய
வசனஜாதம் – வார்த்தைகளை உடைய
பத்மாவதீரமண- பத்மாவதியின் பதியான
ஜயதேவகவி- ஜெயதேவரால்
பாரதீபூஷிதம்- வாக்கினால் அலங்கரிக்கப்பட்ட
மாநிநீஜனஜனித சாதம் – ஊடல் கொண்ட பெண்களுக்கு சுகம் அளிப்பதுமான கீதம்
ஜயது- வெல்லட்டும்

———–

20வது அஷ்டபதி

கண்ணன் வந்து பிரியமாகப் பேசிய பின்னும் ராதை தயங்குகிறாள். பிறகு கண்ணன் ராதை இன்னும் தயங்குவதைப் பார்த்து அவளாக வரட்டும் என்று அவர்கள் சந்திக்கும் இடத்தில் சென்று காத்திருக்கிறான். அப்போது சகி ராதையை அங்கு செல்லும்படி கூறுகிறாள்.

ஸுசிரம் அனுநயனே ப்ரீணயித்வா ம்ருகாக்ஷீம்

கதவதி க்ருதவேஷ கேஸவே குஞ்ஜ ஸய்யாம்

ரசித ருசிர பூஷாம் த்ருஷ்டி மோக்ஷே ப்ரதோஷே

 

ஸ்புரதி நிரவஸாதாம் காபி ராதாம் ஜகாத

ராகம் மோஹனகல்யாணி                                 தாளம் ஆதி

விரசித சாடு வசன ரசனம் சரணே ரசித ப்ரணிபாதம்

ஸம்ப்ரதி மஞ்ஜுள வஞ்சுள ஸீமனி கேளிஸயனம் உபயாதம்

முக்தே மதுமதனம் ஹே ராதே முக்தே மதுமதனம் அனுகதம் அனுஸர ராதே ( த்ருவபதம்)

விரசித சாடு வசன ரசனம்- உன்னிடம் சாதுர்யமாகப் பேசி
சரணே ரசித ப்ரணிபாதம்- உன் பாதங்களை வணங்கி
ஸம்ப்ரதி- இப்போது
மஞ்சுள வஞ்சுள ஸீமனி-அழகான கொடிவீட்டின் சமீபம்
கேளிசயனம் – மஞ்சத்திற்கு
அனுயாதம்-சென்ற

அனுகதம் – உனக்கு அனுகூலனான
மதுமதனம் –கண்ணனை
முக்தே ராதிகே –அப்பாவியான ராதையே
அனுஸர- பின் தொடர்ந்து செல்.

கன ஜகன ஸ்தன பாரபரே தர மந்தர சரண விஹாரம்

முகரித மணி மஞ்ஜீர முபைஹி விதேஹி மராள விகாரம்

கனஜகன ஸ்தன பார பரே-ஸ்தனம் இடுப்பு இவைகளின் பாரத்தால்
தரமந்தர சரணவிஹாரம்- கால்கள் மெதுவாக நடக்க
மராளநிகாரம் – அன்னம் போல்
விதேஹி- செல்.
முகரிதமணிமஞ்ஜீரம்- உன் பாதங்களின் சலங்கை சப்திக்க
உபைஹி- செல்வாயாக.

ஸ்ருணு ரமணீயதரம் தருணீஜன மோஹன மதுபவிராவம்.

குஸுமஸராஸன ஸாஸன வந்தினி பிகநிகரே பஜபாவம்

ரமணீயதரம்- அழகான
தருணீஜனமோஹன – பெண்களை மயக்குகிற
மதுபவிலாபம்- வண்டின் ரீங்காரத்தை ( கண்ணனின் அதரமாகிற தேனை உண்டு எழும் குழல் நாதம்)
ச்ருணு- கேள்
குஸுமசராசன – மன்மதனின்
சாஸன வந்தினி – கட்டளைபோல் பாடும்
பிகநிகரே – குயில்கள் குரலில்
பஜ பாவம் – ஆனந்திப்பாயாக.

அனித தரள கிஸலய நிகரேண கரேண லதா நிகுரும்பம்

ப்ரேரணமிவ கரபோரு கரோதி கதிம் ப்ரதி முஞ்ச விளம்பம்

கரபோரு- யானைதுதிக்கையைப்போல் துடை உள்ளவளே
லதாநிகுரம்பம் –கொடிகள் எல்லாம்
அனிலதரள கிஸலய நிகரேண- காற்றில் அசையும் தளிர்களாகிய
கரேண- கைகளால்
ப்ரேரணம் கரோதி இவ – உன்னை வரவேற்பதுபோல் உள்ளன.
கதிம் பிரதி – நீ செல்வதற்கு
விளம்பம் முஞ்ச- தாமதம் செய்யாதே.

கரபோரு- அழகிய பெண்களின் துடைகள் யானைத்துதிக்கையைப்போல் அல்லது வாழைத்தண்டுபோல் இருக்கும் என்பது சாமுத்ரிகா லக்ஷணம்.
இந்த இடத்தில் காளிதாசனின் கவியழகைக் காண்போமா?

காளிதாசன் பார்வதியின் அழகை வர்ணிக்கிறான் குமாரசம்பவத்தில்.
நாகேந்தர ஹஸ்தா: த்வசி கர்கசத்வாத் ஏகாந்தசைத்யாத் கதலீவிசேஷா:
லப்த்வாபி லோகே பரிணாஹி ரூபம் ஜாதா: ததூர்வோ: உபமான பாஹ்யா:

யானைத்துதிக்கைகளின் தோல் மிகவும் கடினமானதாலும் வாழைத் தண்டுகள் மிகவும் குளிர்ந்து இருப்பதாலும் இரண்டும் உலகில் உவமைகளாககக் கூறப்பட்ட போதிலும் பார்வதியின் விஷயத்தில் ஒவ்வாததாகின்றன. அதாவது அவள் சௌந்த்ர்யத்திற்கு ஈடே இல்லை என்று கூறுகிறான்.,

ஸ்புரித மனங்க தரங்க வஸாதிவ ஸூசித ஹரி பரிரம்பம்

ப்ருச்ச மனோஹர ஹார விமலஜலதாரம் அமும் குச கும்பம்

சூசிதஹரிபரிரம்பம்- ஹரியின் ஆலிங்கனத்தை நினைவுபடுத்தும்
அனங்க தரங்க வசாத் இவ – மன்மத வேகத்தால் துடிக்கும்
மனோஹர ஹாரவிமலஜலதாரம்- அழகிய ஜலதாரைகள் போன்ற முத்துமாலைகளை தாங்கி நிற்கும்’
அமும் குசகும்பம் –இந்த உன் குசகலசங்களைக் கேள் (உன் உள்ளகிடக்கையை சொல்லும்)

அதிகதம் அகில ஸகீபிரிதம் தவ வபுரபி ரதிரண ஸஜ்ஜம்

சண்டி ரஸித ரஸனாரவ டிண்டிமம் அபிஸர ஸரஸம் அலஜ்ஜம்

சண்டி- பிடிவாதக்காரியே
அகிலஸகீபி: உன் எல்லா தோழிமார்களுக்கும்
இதம் தவ வபு: – இந்த உன் உடல்
ரதிரணஸஜ்ஜம் – கூடலுக்கு தயாராக இருக்கிறது என்று
அதிகதம் – தெரிந்ததே
ரஸித ரசனாரவடிண்டிமம்- உன் காற்சிலம்பு உன் வரவைத் தெரிவிக்கும் பறை போல் ஒலிக்க
அலஜ்ஜம்- நாணத்தை விட்டு
ஸரஸம்- காதலுடன்
அபிஸர – செல்வாயாக

ஸ்மரஸர ஸுபக நகேன ஸகீம் அவலம்ப்ய கரேண ஸலீலம்

சல வலய க்வணிதை: அவபோதய ஹரிமபி நிஜகதி ஸீலம்

ஸகீம் – தோழியாகிற என்னை
ஸ்மர சர ஸுபக நகே – மன்மதபாணம் போல் அழகிய நகம் பொருந்திய
கரேண – கரத்தால்
அவலப்ய – பிடித்துக்கொண்டு
ஸலீலம் – நளினமாக
சலவலயக்வணிதை:- உன் வளைகளின் ஒலியால்
நிகதிதசீலம் – உன்னை எதிர்பார்த்துக்கொண்டிருக்கும்
ஹரிம் அபி- ஹரிக்கும்
அவபோதய –உன் வரவைத் தெரியப்படுத்து

ஸ்ரீ ஜயதேவ பணிதம் அதரீ க்ருத ஹாரம் உதாஸித வாமம்

ஹரிவினிஹித மனஸாம் அதிதிஷ்டது கண்டதடீம் அவிராமம்

ஸ்ரீ ஜெயதேவ பணிதம்- ஸ்ரீ ஜெயதேவரால் கூறப்பட்ட இந்த கீதம்
அதரீக்ருத ஹாரம்- ஒரு மாலையினும் மேம்பட்டதாய்
உதாஸித வாமம்- பெண்ணாசையை அகற்றுவதாய்
ஹரிவிநிஹிதமனஸாம்- ஹரியினிடத்தில் ஒன்றுபட்ட மனம் உடையோரின்
கண்டதடீம் –கண்டத்தில்( மாலையைப்போல் )
அவிராமம்- எப்போதும்
அதிதிஷ்டது – வசிக்கட்டும்

நாம சங்கீர்த்தனத்தில் ஈடுபட்ட பக்தர்களால் பாடப்படுவதால்( கண்ட தேசத்தில் இருந்து எழுவதால்) இந்த கீதகோவிந்தம் சிறந்த மாலையைப்போல் உள்ளது.

கண்ணன பூதனையிடம் ஸ்தன்ய பானம் செய்ததை நினைத்தால் மீண்டும் இந்த உலகில் தாயிடம் பால் குடிக்கும்படி நேராது. ( பிறவி இருக்காது) அவன் உரலில் கட்டுண்டதை நினைத்தால் நம் கட்டுக்கள் அவிழும்.( சம்சார பந்தம் விடுபடும்) அவன் செய்த கோபியர் லீலையை நினைந்தால் காம இச்சை விலகும்.

நியாய சாஸ்திரத்தில் தத்க்ரது நியாயம் என்று ஒன்று உண்டு. அது என்னவென்றால் எதை நினைக்கிறோமோ அதே போல ஆகிவிடுவோம் என்பது. வேதாந்த தேசிகர் யாதவாப்யுதயத்தில் கூறுகிறார் . அந்த நியாயம் பகவான் விஷயத்தில் பயன்படாது வெட்கத்தால் ஆரண்யத்தில் ஒளிந்து கொண்டு விட்டது என்று. ஆரண்யகம் என்றால் உபநிஷத் . அங்கு இந்த நியாயம் சொல்லப்படுகிறது. கண்ணன் விஷயத்தில் அது அவனுடைய செய்கைகளுக்கு நேர் மாறான பலனைக் கொடுப்பதால் அது ஆரண்யத்தில் ஒளிந்துகொண்டு விட்டது என்கிறார்.

———————————–

ஸ்ரீ“திருத்தாள் மாலை”  —பிள்ளைப்பாக்கம் இளையவல்லி ஸ்ரீ லஷ்மி நரசிம்ஹ ஆச்சார்யரால் அருளப்பட்ட தமிழ் பாசுரங்கள்

January 15, 2023
ஸ்ரீ:“திருத்தாள் மாலை”–முகவுரை.
உயர்வற வுயர்நலம் உடையவன் யவனவன்
மயர்வற மதிநலம் அருளினன் யவனவன்
அயர்வறு மமரர்கள் அதிபதி யவனவன்
துயரறு சுடரடி தொழுதெழு என்மனனே!  {திருவாய்மொழி. 1-1-1}
“தான் ஸமஸ்த கல்யாண குணாத்மகனாயிருக்கிற இருப்பைக் காட்டி உபகரித்தான்;
அக்குணங்களும் தன்னைப்பற்றி நிறம் பெற வேண்டும்படியாயிருக்கிற திவ்யாத்ம ஸ்வரூப வைலக்ஷ்யண்யத்தைக் காட்டி உபகரித்தான்;
இப்பேற்றுக்கு என் பக்கத்தில் சொல்லலாவது ஒன்றுமின்றிக்கேயிருக்க, நிர்ஹேதுகமாகத் தானே உபகாரகனானான்;
ஸ்வஸ்வரூபாபந்நரா யிருக்கிறவர்களுக்கும் அவ்வருகாயிருக்கிற இருப்பைக் காட்டி உபகரித்தான்;
தன்னுடைய திவ்ய விக்ரஹ வைலக்ஷ்யண்யத்தைக் காட்டி உபகரித்தான் என்று அவன் பண்ணின உபகாரங்களடையச் சொல்லி,
இப்படி உபகாரகனானவன் திருவடிகளிலே நித்ய கைங்கர்யத்தைப் பண்ணி உஜ்ஜீவிக்க வாராயென்று தம் திருவுள்ளத்தோடே கூட்டுகிறார்.
ஆறு கிண்ணகமெடுத்தால் நேர் நின்ற மரங்கள் பறியுண்டுபோய்க் கடலிலே புகும்; நீர்வஞ்சி தொடக்கமானவை வளைந்து பிழைக்கும்:
அதுபோல பகவத் குணங்களினுடைய எடுப்பு இருந்தபடி கண்டோமுக்கு எதிரே நானென்று பிழைக்க விரகில்லை;
அவன் திருவடிகளிலே தலைசாய்த்துப் பிழைக்க வாராய் நெஞ்சே என்கிறார்;
உயர்வறவுயர் நலமுடையவன் துயரறு சுடரடி தொழுதெழப் பாராயென்கிறார்.
“அஹமஸ்யாவரோ ப்ராதாகுணைர் தாஸ்யமுபாகத: என்னுமாப்போலே”
“ சேஷபூதன் சேஷிபக்கல் கணிசிப்பது திருவடிகளையிறே,
ஸ்தநந்தயப்ரஜை முலையிலே வாய்வைக்குமாப்போலே, இவரும் ‘உன் தேனேமலருந் திருப்பாதம்’ என்கிற திருவடிகளிலே வாய் வைக்கிறார்”
“செய்ய சுடராழியானுக்கே சூட்டினேன் சொன்மாலை” என்று பொய்கையாழ்வாரும்,
“நிகரில்லாப் பைங்கமலமேந்திப் பணிந்தேன் பனிமலராள், அங்கம்வலங் கொண்டானடி” என்று பூதத்தாழ்வாரும் 
“இன்றே கழல் கண்டேன் ஏழ்பிறப்பும் யானறுத்தேன்” என்று பேயாழ்வாரும்,
“நீரோதமேனி நெடுமாலே! நின்னடியை, யாரோதவல்லார்?” என்று திருமழிசைப்பிரானும்,
“எப்போதும், கைகழலா நேமியான் நம்மேல் வினைகடிவான், மொய்கழலே ஏத்த முயல்” என்று நம்மாழ்வாரும்,
“மேவினேன் அவன் பொன்னடி மெய்ம்மையே” என்று மதுரகவியாழ்வாரும்,
“அணியரங்கத்தரவணையில் பள்ளிகொள்ளும் அம்மான்தனடி யிணைக்கீழ் அலர்களிட்டு அங்கு அடியவரோடு என்றுகொலோ அணுகும் நாளே?” என்று குலசேகரப் பெருமாளும்,
“மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா! உன் சேவடி செவ்வி திருக்காப்பு” என்று பெரியாழ்வாரும்,
“அன்று இவ்வுலகம் அளந்தாய்! அடிபோற்றி” என்று ஸ்ரீ ஆண்டாளும்,
கற்றினம் மேய்த்த எந்தை கழலிணை பணிமினீரே” என்று தொண்டரடிப்பொடியாழ்வாரும்,
“நீள்மதிளரங்கத்தம்மான் திருக், கமலபாதம் என் கண்ணினுள்ளனவொக்கின்றதே” என்று திருப்பாணாழ்வாரும்,
“தன்னுருவாய் என்னுருவில் நின்ற எந்தை தளிர்புரையும் திருவடி என் தலைமேலவே” என்று திருமங்கையாழ்வாரும் அருளிச்செய்துள்ளமை
இவண் காண்க.
“தனக்குவமையில்லாதான் தாள் சேர்ந்தார்க் கல்லால் மனக்கவலை மாற்றல் அரிது” என்பர் தெய்வப்புலமைத் திருவள்ளுவ நாயனார்.
ஸ்ரீய:பதியின் திருத்தாள் வைபவம்” எனும் நன்னூலை ஸ்ரீமான் பிள்ளைப்பாக்கம் இளையவல்லி லக்ஷ்மீ நரசிம்மாச்சாரியாரவர்கள் இயற்றியுள்ளார்.
அது “திருத்தாள்மாலை”என்ற திருநாமத்தோடு இத்தமிழ்ச்சங்கத்தின் 88-வது வெளியீடாகப் பிரசுரிக்கலாயிற்று.
சிரஞ்சீவி பஞ்சாமிருதத்தின் திருமண மாலையாய்த் திகழ்வதே இச்செய்ய தமிழ்மாலையின் தனிச்சிறப்பு.
பொங்கும் மங்கலம் எங்கும் தங்குக.
——————————–
தூய நான் மறையின் தொன்முடி துலங்கும் சுந்தரச் சோதியார் திருத்தாள்
ஆயிரங் கண்ணன் அரன் அயனாதி யனைவருந் தொழுதெழுந் திருத்தாள்
நேயமார் தூய மாதவர் நெஞ்சில் நிலையுற நிலவு செய் திருத்தாள்
பேயனே னாமிப் பேதையே னகத்தும் பிரிவறப் பிறங்கிடுந் திருத்தாள்.                                 
சுட்டிய தூணிற் றோன்றியக் கணமே சுடரெழக் குதிகொளுந் திருத்தாள்
கிட்டிய கேடன் கனகனை மாளக் கிடத்து மாவூருடைத் திருத்தாள்
ஒட்டிய மைந்த னுரையினை மெய்ப்பித் துவந்தவன் தொழுதெழுந் திருத்தாள்
மட்டிலா வினையேன் மனத்திலு மன்ன மகிழ்ந்தருள் பரப்பிய திருத்தாள்.                      
ஒளிவடி வேந்தி யடியிரந் தோங்கி யுலகெலா மளந்தருள் திருத்தாள்
களமிகக் கமலங் கொண்டயன் துலக்கக் கங்கையைக் கான்றதோர் திருத்தாள்
வளமிக வழங்கு மாவலி சிரத்தே வைப்புற மகிழ்ந்தருள் திருத்தாள்
எளியனே னிருளா ரிவ்வித யத்து மிலங்கிடத் தலங்கொளுந் திருத்தாள்.              
திருமகள் வருடச் சிவந்தலர் திருத்தாள் செவ்வியத் தாமரைத் திருத்தாள்
வரமது வேண்டி யணுகிய வானோர் வணங்கிட மகிழ்ந்தருள் திருத்தாள்
தருமசிந் தையனாந் தசரதன் மனையில் தவழ்ந்தலங் கரித்தருள் திருத்தாள்
கருமியேன் வினைகள் களைந்தருள் வானென் கருத்தினுங் கனிந்தமர் திருத்தாள்.                      

தூயமா முனிவன் கௌசிகன் பின்னர்த் தொடர்ந்து கானடந்தருள் திருத்தாள்
சாயலாண் மங்கை யகலிகை சாபந் தவிர்த்தருள் பவித்திரத் திருத்தாள்
தீயவ ரரக்கர் பூண்டொடு தீவான் செறிவன முகந்தருள் திருத்தாள்
பேயனே னேனும் பெரும்பதந் தனையான் பெற்றிட  வருள்செயுந் திருத்தாள்.                       

கொங்கல ரடிக்கே யுரியவ னென்ற குகன்றனுக் குதவிய திருத்தாள்
கங்கையின் மதுரக் கனிகளாய்ந் தளித்த சபரியை யுவந்தருள் திருத்தாள்
கங்குலும் பகலும் கருணையே பொழியுங் கமலமா மென்மலர் திருத்தாள்
துங்கமி லெளியேன் மனத்திலுந் துலங்கத் தோய்ந்தருள் பரப்பிய திருத்தாள்.                  

பரிவுடன் பணிந்த பரத நம்பிக்குப் பாதுக மீந்தருள் திருத்தாள்
விரியழற் பங்கி விராதனை யுதைத்து வீழ்த்தி விண் ணருளிய திருத்தாள்
அரியெனக் கவந்த னறிந்துள முருக வாதரித் தருளிய திருத்தாள்
எரிவினை மிஞ்சு மெளியனே னுளத்து மிலங்கிவீற் றிருப்பமர் திருத்தாள்.                    

அஞ்சலி கரத்தோ டடிபணிந் தேத்தும் அனுமனுக் கருள்புரி திருத்தாள்
செஞ்சிறைக் கிழவன் சடாயு கண் டேத்தச் சேண்பத மருளிய திருத்தாள்
தஞ்சனே னடியே னென்ற வீடணற்குத் தண்ணளி யருளிய திருத்தாள்
நஞ்சினுங் கடிய நெஞ்ச னேனுக்கும் நலந் தர நயந்தருள் திருத்தாள்.                       

நிராசனராய தண்டக முனிவர் நினைவினில் நிலவு செய் திருத்தாள்
விராவரு கானப் புள்விலங் கவைக்கும் வியன்பத மருளிய திருத்தாள்
தராதலத் தன்று சராசர முற்றுந் தனிக்கதி தந்தருள் திருத்தாள்
பராவுத வில்லாப் பாவியே னுளத்தும் படிந்தருள் பண்ணிய திருத்தாள்.                     

வேண்டிய வசுதே வன்றளை யவிழ வியந்தவன் கண்டதோர் திருத்தாள்
ஆண்டவ னருளார் நந்தகோ பன்ற னகந்தனிற் றிகழ்தரு திருத்தாள்
மூண்டெழு காத லசோதையா மன்னை முகந்தனை மலர்த்திய திருத்தாள்
ஈண்டி வந்திந்த எளியனே னகத்து மிருளற வொளிதருந் திருத்தாள்.                    

தலைவனா நந்தன் மாளிகை யெங்குந் தவழ்ந் தெழிலூட்டிய திருத்தாள்
முலையினூ டுயிருண் டரக்கியை வீழ முடித்துமீ தாடிய திருத்தாள்
தலைநெறித் தோடித் தங்கிய கபட சகடிறத் தாக்கிய திருத்தாள்
நிலையிலா வெளியேன் நெஞ்சிலு நிலைத்து நின்றருள் பரப்பிய திருத்தாள்.                                   

தயிர்கடை யொலிக்குத் தாளமிட்டது போற் சதிருட னாடிய திருத்தாள்
உயருர லுருட்டி நிறுத்திமீ தமுத முண்ணுவா னுயர்ந்தெழு திருத்தாள்
நயமுற மடுவிற் காளியன் முடிமேல் நடனமுற் றருளிய திருத்தாள்
மயலுறு மெனது மனதையு முகந்து மன்னிட மகிழ்ந்தருள் திருத்தாள்.                           

வலம்புரி யாழிக் குறிகண்மண் படிய வனவிருந் தையிலுலாந் திருத்தாள்
சிலம்புகள் செய்யுஞ் சிஞ்சித மார்ப்பத் தெருவெலாந் திரிந்தருள் திருத்தாள்
நிலம்பெறு நித்ய போக்யமா யிலகும் நிதியென நிலவிடுந் திருத்தாள்
அலம்பெறு மடியே னகத்தையுந் தனதோ ராசனமாக்கிய திருத்தாள்.                    

சுருதிபின் தொடரக் குழலிசை சுவைப்பச் சுரபிகள் பின்தொடர் திருத்தாள்
அரிவையர் துகிலை யபகரித் தாங்கோர் குருந்திடை யமர்ந்தருள் திருத்தாள்
இருமையு மெவர்க்கு மிணையிலாக் கதியா யிலகிடு மிண்டைநாண் மலர்த்தாள்
கருவினை கனிந்த கடையனே னகத்துங் கருணையோ டமர்ந்தருள் திருத்தாள்.              

தன்னையா தரித்த தருமனாதி யர்க்காய்த் தூதுசென் றருளிய திருத்தாள்
சொன்னவா றிளையோன் தூய சிந்தனையினாற் சுருக்குறக் கட்டுணுந் திருத்தாள்.
மன்னவன் வகுத்த மல்ல ரீட்டத்தை மட்குழி யொத்திய திருத்தாள்
என்னையா தரிப்பா யென்னுளந் தங்கி யிலங்கிய பங்கயத் திருத்தாள்.                                

————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பிள்ளைப்பாக்கம் இளையவல்லி ஸ்ரீ லஷ்மி நரசிம்ஹ ஆச்சார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.