Archive for the ‘Sri Baashyam’ Category

ஸ்ரீ பாஷ்யார்த்த தீபிகை — நான்காம் அத்யாயம் — முதல் பாதம் —

November 26, 2021

ஸ்ரீ பாஷ்யம் -மங்கள ஸ்லோகம்

அகில புவன ஜன்ம ஸ்தேம பங்காதி லீலே
விநத விவித பூத வ்ராத ரக்ஷைக தீஷே
ஸ்ருதி சிரஸி விதீப்தே ப்ருஹ்மணி ஸ்ரீ நிவாஸே
பவது மம பரஸ்மின் சேமுஷீ பக்தி ரூபா –

பாராசார்ய வச ஸூதாம் உபநிஷத் துக்தாப்தி மத்யோத் த்ருதாம்
சம்சாராக்னி விதீபன வ்யபகாத ப்ராணாத்மா சஞ்சீவி நீம்
பூர்வாச்சார்ய ஸூரஷிதாம் பஹூ மதி வ்யாகாத தூரஸ்தி தாம்
ஆ நீதாம் து நிஷாஷரை ஸூ மனஸோ பௌமா பிபந்து அந்வஹம்–

——————————

ஸ்வர்க்க காமோ யஜேத-என்னும் இடத்தில்
பலா வம்சம் முதலில் ஏற்படுவதானாலும் பலவாப்தி என்பது
சாதன உத்பத்தியை அங்கீ கரிக்க வேண்டி இருப்பதாலும்
இதில் உத்பத்தி க்ரமத்தை அனுசரித்து
முதல் அத்தியாயத்தில் சங்கமான வித்யை நிரூபிக்கப் பட்டது –
இப்போது அந்த வித்யையின் பலத்தை நிரூபிக்கிறார்
‘என்று நான்காம் அத்யாயத்துக்கு சங்கதி

அந்த வித்யா பலன்களாக
1- உத்தர பாபம் ஒட்டாமையும்
2-பூர்வ பாப விநாசமும்-ஸ்தூல தேகத்தில் இருந்து உத்க்ரந்தியும்
3- அர்ச்சிராதி கதியும்
4-தேச விசேஷம் சென்று புறப்படும் பர ப்ரஹ்ம அனுபவம்
என்ற நான்கு பொருள்களும் நான்கு பாதங்களால் முறையே காட்டப்படுகின்றன என்று பாதங்களின் சங்கதி –

முதல் பாதம் -ஆவ்ருத்தி பாதம் –
உபாசகனின் கடைசி சரீரத்தில் புண்ய பாபங்கள் ஓட்டுவது இல்லை என்பதும் –
பக்தியும் -ஆராயப்படுகின்றன –

இரண்டாம் பாதம் –உத்க்ராந்தி பாதம் –
முக்தி பெரும் ஜீவன் சரீரத்தில் இருந்து கிளம்பும் விதம் ஆராயப்படுகிறது

கதி பாதம் –
பரம பதத்துக்கு அழைத்துச் செல்லப்படும் வித்யா பலம் கூறப்படுகிறது

முக்தி பாதம் –
ப்ரஹ்மத்தை அடைந்த முக்தன் பெரும் ஐஸ்வர்யம் கூறப் படுகிறது

முதல் இரண்டு பாதங்களால்
வித்யா பலமான பாப அஸ்லேஷ விநாசமும்
உத் க்ரணமும்
கூறப் படுகின்றன

பின் இரண்டு பாதங்களால்
உத் க்ராந்தனான ஜீவனுக்கு அர்ச்சிராதி மார்க்க கமனமும்
ப்ரஹ்ம பிராப்தியும்
முறையே பேசப்படுகின்றன என்று த்வீக சங்கதி –

முதல் பாதம் முதல் அதிகரணத்தில் -வித்யைக்கு முன் சொல்லப் படாதவையான
த்யான
உபாசன
பக்தி
தர்சன
சாமானாகாரத்வம்
என்னும் ரூபங்களை நிரூபிக்கிறார் என்று அதிகரண சங்கதி –

ஆனாலும் இவ்வர்த்தத்தை சாதன அத்யாயத்தில் நிரூபிக்காமல்
பல அத்யாயத்தில் காட்டுவது பொருந்தாது என்றால்
அது இல்லை –
உபாசனத்திற்கும் முக்திக்கும் -ஸாத்ய சாதன பாவம் தோன்றவும்
பக்தி என்பது நிரதிசய ப்ரீதி ரூபை யாகையாலே பல கோடியிலும் அடங்கும் என்று காட்டவும்
இங்கு நிரூபிப்பதில் தோஷம் ஒன்றும் இல்லை என்பதாம் –

———————————————————————————————————————————-

முதல் பாதம் -ஆவ்ருத்தி பாதம் –

உபாசகனின் கடைசி சரீரத்தில் புண்ய பாபங்கள் ஓட்டுவது இல்லை என்பதும் –
பக்தியும் -ஆராயப்படுகின்றன –

11-அதிகரணங்கள்–19 ஸூத்ரங்கள்–

———————————————————————————————————————————————————————-

அதிகரணம் -1-ஆவ்ருத்யதிகரணம் -2 ஸூத்ரங்கள்–
ஆயுள் முடியும் வரை உபாசனத்தை பலமுறை அனுஷ்டிக்கப் பட வேண்டும் என்கிறது –

அதிகரணம் -2-ஆத்மத்வோபாஸ நாதிகரணம்—1 ஸூத்ரம்-
தன்னுடைய ஆத்மாவாகவே ப்ரஹ்மத்தை உபாசிக்க வேண்டும் என்கிறது –

அதிகரணம் -3- ப்ரதீகாதி கரணம் –2 ஸூத்ரங்கள்—
பிரதீகம் -மனம் சரீரம் போன்றவை -இவற்றை உபாசனம் சரி அல்ல -இவை ஆத்மா அல்ல -என்று நிரூபிக்கப் படுகிறது

அதிகரணம் -4-ஆதித்யாதிமத்யதிகரணம் -1 ஸூத்ரம்–
உத்கீதம் போன்றவற்றையே சூரியன் முதலான தேவர்களாக பார்க்க வேண்டும் -என்று நிரூபிக்கப் படுகிறது-

அதிகரணம் -5-ஆஸி நாதி கரணம் —4 ஸூத்ரங்கள்-
அமர்ந்து கொண்டு தான் உபாசனை செய்ய வேண்டும் என்று நிரூபிக்கப் படுகிறது–

அதிகரணம் -6-ஆப்ரயாணாதி கரணம் -1 ஸூத்ரம்-
மரணம் அடையும் காலம் வரையில் உபாசனம் செய்ய வேண்டும் என்று நிரூபிக்கப் படுகிறது –

அதிகரணம் -7-ததிகமாதிகரணம் -1 ஸூத்ரம்-
ப்ரஹ்ம வித்யைக்கு முன்னால் செய்த பாவங்கள் ,வரப் போகும் பாவங்கள் ஆகியவை அழிகின்றன என்று நிரூபிக்கப் படுகிறது

அதிகரணம் -8-இதராதிகரணம்–1 ஸூத்ரம்–
முன்னர் செய்த புண்ணியங்கள் அழிந்து விடும் இனி செய்யப்படும் புண்யங்கள் ஒட்டாது -என்று நிரூபிக்கப் படுகிறது –

அதிகரணம் -9-அநாரப்த கார்யாதிகரணம்–1 ஸூத்ரம் –
பலன் அளிக்கத் தொடங்காத புண்ய பாப கர்மங்கள் மட்டுமே அழிகின்றன எனபது நிரூபிக்கப் படுகிறது –

அதிகரணம் -10-அக்னிஹோதராத்ய திகரணம்-3 ஸூத்ரங்கள் –
பலனை விரும்பாதவர்கள் கூட அக்னி ஹோத்ரம் போன்ற நித்ய கர்மாக்களை இயற்ற வேண்டும் என்று நிரூபிக்கப் படுகிறது

அதிகரணம் -11-இதர ஷபணாதி கரணம் –1 ஸூத்ரம்-
பிராரப்த கர்மம்-பலன் தரத் தொடக்கி விட்ட கர்மங்கள் ஒரே சரீரத்தில் முடிந்து விடும் என்னும் விதி கிடையாது என்று நிரூபிக்கப் படுகிறது

———————————————————————————————–

151-ஆவ்ருத்தி அதிக ரணம்-4-1-1-

ஆயுள் முடியும் வரை உபாசனத்தை பலமுறை அனுஷ்டிக்கப் பட வேண்டும் என்கிறது

471-ஆவ்ருத்தி அசக்ருத் உபதேசாத் –4-1-1-

ப்ரஹ்மத்தை பற்றிய ஞானம் மீண்டும் மீண்டும் சிந்திக்கப் பட வேண்டும் என்கிறது

தைத்ரியம் -2-1- ப்ரஹ்ம விதாப் நோதி பரம் –
ப்ரஹ்மத்தை அறிந்தவன் உயர்ந்ததை அடைகிறான் என்றும்

ஸ்வேதாச்வதர -3-8- தமேவ விதித்வாதி ம்ருத்யுமேதி –
ப்ரஹ்மத்தை அறிவதால் மட்டும் மரணத்தை கடந்து செல்கிறான் -என்றும்

முண்டக -3-2-9-ப்ரஹ்ம வேதி ப்ரஹ்ம ஏவ பவதி –
ப்ரஹ்மத்தை அறிந்தவன் ப்ரஹ்மமாகவே ஆகிறான் –

முண்டக -3-1-3-யதா பஸ்ய பஸ்யதே ருக்ம வர்ணம் –
பொன் நிறமான ப்ரஹ்மத்தைக் கண்டவன்

உமி நீங்கும் வரை தானே நெல்லைக் குத்த வேண்டும்
ஒரு முறை ப்ரஹ்மத்தை அறியும் வரை உபாசனம் போதும்
என்பர் பூர்வ பஷி
ஜ்யோதிஷ்டோமம் ஒரு முறை அனுஷ்டித்து பலம் பெறுவது போலே என்பர்

இது சரி அல்ல –
த்யானம் உபாசனம் போலவே வேதனமும் –
உபாஸ்தி த்யாயதி பதங்கள் மூலம் வேதனமும் உணர்த்தப் படுகிறது

ஆவ்ருத்தி அசக்ருத் -வேதனம் அடிக்கடி ஆவ்ருத்தி செய்யப்பட்டே மோக்ஷத்திற்கு சாதனமாகும்
உபதேசாத்-தியானத்திற்கும் உபாசனத்திற்கும் பர்யாயமான சமமான -வேதன -ஸப்தத்தால் -உபதேசிப்பதால் என்றவாறு –

சாந்தோக்யம் -3-8-1-மநோ ப்ரஹ்ம இதி உபாசீத –
மனசை ப்ரஹ்மமாக உபாசிக்க வேண்டும் -மூலம் அறியலாம்

சாந்தோக்யம் -3-18-3-பாதி ச தபதி ச கீர்த்யா யசச ப்ரஹ்ம வர்ச்ச சேன ய ஏவம் வேத –
இப்படி அறிந்து கொள்கிறவன் ப்ரஹ்ம தேஜஸ் அடைகிறான் -இங்கு வேதன சப்தம்

சாந்தோக்யம் -4-1-4-யஸ்தத்வேத யத் ச வேத சமயைதத் உகத –
ரைக்வர் எதனை அறிகிறாரோ அதனையே மற்றும் உள்ள அனைவரும் அறிகின்றனர் –
என்று தொடங்கப் பட்டதில் வேதன சப்தமும்
முடியும் பொழுது -4-2-2-அநும ஏதாம் பாகவோ தேவதாம் சாதியாம் தேவதாம் உபாஸ் ஸே -என்று
மூத்தவரே நீர் எந்த தேவதையை உபாசனம் செய்கின்றீரோ அதையே எனக்கு உபதேசிக்க வேண்டும் –
என்று உபாசன பத பிரயோகம் உண்டே

இது போலே தைத்ரியம் -2-1-ப்ரஹ்ம விதாப் நோதி பரம் –
ப்ரஹ்மத்தை அறிந்தவன் உயர்ந்ததை அடைகிறான் என்றும்

ப்ருஹத் -2-4-5-ஆத்மா வா அரே த்ரஷ்டவ்ய ச்ரோதவ்யோ மந்தவ்யோ நிதித்யாசிதவ்ய -என்று
உயர்ந்த அந்த பரமாத்மாவே காணப் படத்தக்கது த்யானிக்கப் பட வேண்டியது எண்ணப்பட வேண்டியது ஆகும் என்றும்

முண்டக -3-1-8-ததஸ்து தம் பஸ்யதே நிஷ்கலம் த்யாயமான –
த்யானத்தில் உள்ளவன் அவனைக் காண்கிறான் -என்றும்

த்யானம் இடைவிடாமல் நினைப்பதே –
உபாசனையும் அவ்விதமே –
வேதனமும் இவற்றைப் போன்றதே –

முண்டக -3-2-9-ப்ரஹ்ம வேத ப்ரஹ்ம ஏவ பவதி –
ப்ரஹ்மத்தை அறிபவன் அவனையே அடைகிறான்

ஸ்வேதாச்வதர -1-8-ஜ்ஞாத்வா தேவம் முச்யதே சர்வபாசை
அதனை அறிந்தவன் அனைத்து பாபங்களில் இருந்தும் விடுபடுகிறான் –

———————————————————————————————————————————

4-1-2- லிங்காத் ச–4-1-2-

லிங்கம் ஸ்ம்ருதி
அனுமானம் ஸ்ம்ருதியைக் கொண்டு ஸ்ருதியை அனுமானம் செய்வதால்
ஸ்ம்ருதி எனபது லிங்கம் ஆகும்

ஸ்ரீ விஷ்ணு புராணம் -6-7-91-
தத்ரூப ப்ரத்யயே சைகா சந்ததிச் சான்ய நிஸ் ஸ்ப்ருஹா தத் த்யானம்
பிரதமை -ஷட்பி அங்கை –நிஷ்பாத்யதே ததா -என்று

தாரணை மூலம் கிட்டும் ப்ரஹ்மத்தின் திரு மேனி குறித்த ஞானம் என்பதில்
வேறு விதமான அறிவு கலக்காமல் ஒரே எண்ணமாக இருப்பதே த்யானம்

அதற்கு முன்பு யமம் -நியமம் ஆசனம் பிராணாயாமம் ப்ரத்யாஹாரம் மற்றும் தாரணை
ஆகிய ஆறு அங்கங்களாக ஏற்படுகிறது-

ஸ்ரீ கீதையும்
மாம் த்யா யந்த உபாஸதே தேஷாம் அஹம் சமுத்தர்த்தா ம்ருத்யு ஸம்ஸார சாகராத் யேத்
வஷரம நிர்த்தேச்யம் அவ்யக்தம் பர்யுபாஸதே –

இவ்வாறு பலமுறை ஆவ்ருத்தி செய்யப்பட பக்தி ரூப வேதனமே முக்தி சாதனம் என்று தேறிற்று

ஆக வேதனம் என்பது ஒரு முறை அல்லாமல்
பல முறை செய்யப்பட வேண்டியது என்றதாயிற்று –

————————————————————————————————————–

அதிகரணம் -152-ஆத்மத்வோபாஸ நாதிகரணம்-4-1-2-

உபாசன விஷயனான பரமபுருஷனை தன் அந்தர்யாமி என்றே
உபாஸிக்க வேண்டும் என்று சமர்ப்பிக்கிறார்
என்று சங்கதி –

தன்னுடைய ஆத்மாவாகவே ப்ரஹ்மத்தை உபாசிக்க வேண்டும் என்கிறது

475-ஆத்மேதி து உபகச்சந்தி க்ராஹயந்தி ச –4-1-3-

தன்னுடைய ஆத்மாவாகவே ப்ரஹ்மத்தை உபாசிக்க வேண்டும் –

உபாசகனான ஜீவனைக் காட்டிலும் உபாஸ்யனான ப்ரஹ்மம் வேறு
என்று பல ஸூத்ரங்கள் உள்ளதால்
வேறு பட்டவனாக உபாசிக்க வேண்டும்
என்பர் பூர்வ பஷி –

ப்ரஹ்ம ஸூத்ரம் –
2-1-2-அதிகம் து பேத நிர்தேசாத் -வேறு பட்டது -என்றும்

3-4-8-அதி கோபதேசாத்–அதிகமான உபதேசம் உள்ளதால் -என்றும்

1-1-14-நேதரோ நுபபத்தே —

தத்க்ரது நியாயம் -சாந்தோக்யம் -3-14-1-யதா க்ரதுரஸ்மின் லோகே புருஷோ பவதி தத்த ப்ரேத்ய பவதி –

இங்கு எவ்விதம் உபாசிகின்றானோ அப்படியே அவ உலகிலும் அனுபவிக்கின்றான்

ஆக ப்ரஹ்மத்தைக் காட்டிலும் வேறு பட்டவனாகவே உபாசிக்க வேண்டும் என்பர்

ஆத்மேதி து உபகச்சந்தி க்ராஹயந்தி ச
து -சப்தம் -ஏவ பொருளில் -ஆத்மாவாக மட்டுமே உபாசிக்க வேண்டும் –
தன் சரீரத்துக்கு தான் ஆத்மாவாக இருப்பது போலேவே
ஆத்மேதி து -ஆத்மா என்றே -உபாஸகன் உபாஸ்யத்தைத் தன் ஆத்மா என்றே உபாஸிக்கத் தகும்
வேறு ஒன்றாய் அல்ல -ஏன் எனில்
உபகச்சந்தி –சுருதிகள் கூறும் படி பழைய உபாசகர்கள் இவ்வாறே கருதினார்கள்
க்ராஹயந்தி ச-சில ஸ்ருதி வாக்கியங்கள் வேறாகக் கூறினாலும் அவை ப்ரஹ்மத்தை அந்தர்யாத்மாவாகவே கூறுவதால் –
மேலும் அதி கந்து பேத நிர்தேசாத் போன்றவையும் ப்ரஹ்மம் அந்தர்யாமி அல்ல என்று தெரிவிக்க வில்லை
ஸ்வரூபத்தால் வேறுபாட்டையே கூறுகின்றன
இப்படி உபாசகன் பரமாத்மாவின் சரீரம் என்றும்
பரமாத்மா ஆத்மாவுக்கு ஜீவ பூதம் என்றும் செல்வதாலும்
ஜீவன் ப்ரஹ்மத்துக்கு அதீனமான ஸ்வரூப ஸ்திதி ப்ரவ்ருத்தி இத்யாதிகள் என்றும்
தனக்கு ஆத்மாவாகையாலேயே -அஹம் ப்ரஹ்மாஸ்மி –என்றே அனுசந்திக்க வேண்டும் -பிரகார பிரகாரி பாவம் உண்டே –

பரமாத்மா தனக்கு ஆத்மா -ஏன் என்றால் இப்படியே உபாசிப்பவர்கள் செய்துள்ளார் –
த்வாம் வா அஹமசி புகவோ தேவதே அஹம் வை த்வம் அஸி-என்று
நீயே நான் ஆகிறேன் நானே நீ ஆகிறாய் –

சதபத ப்ராஹ்மணம்–14-16-7-30-ய ஆத்மநி திஷ்டன் ஆத்மந-அந்தரயமாத்மா ந வேத யஸ்ய ஆத்மா சரீரம்
ய ஆத்ம நமந்தரோ யமயதி ச த ஆத்மா அந்தர்யாம்யம்ருத -என்று
யார் ஒருவன் ஆத்மாவின் உள்ளும் புறமும் வியாபித்து -யாரை ஆத்மா அறியாமல் உள்ளதோ –
யாருக்கு ஆத்மா சரீரமோ -யார் ஆத்மாவின் உள்ளே புகுந்து நியமனம் செய்கின்றானோ –
யார் அழிவற்றவனோ-அவனே உனக்கு ஆத்மாவாக உள்ள அந்தர்யாமி என்றும்

சாந்தோக்யம் -6-8-6-சந்மூலா சோம்யேமா சர்வா பிரஜா சதாயதநா -சத்ப்ரதிஷ்டா ஐததாத்ம்யமிதம் சர்வம் -என்று
இவை அனைத்தும் சத் எனப்படும் ப்ரஹ்மத்தின் இடம் உத்பத்தியான பின்னர் அதனிடம் வாழ்ந்து
அதனிடமே லயித்து விடுகின்றன -இவை அனைத்தும் ஆத்மாவாகவே உள்ளன –

சாந்தோக்யம் -3-14-1-சர்வம் கல்விதம் ப்ரஹ்ம தஜ்ஜலான் –
ப்ரஹ்மத்திடம் தோன்றி அதிலே லயித்து விடுவதாலும் அதனிடமே வாழ்வதாலும் இவை அனைத்துமே ப்ரஹ்ம் ஆகும் –

அனைத்து அறிவுகளும் ப்ரஹ்மத்திடமே சேர்வதால் அனைத்து சொற்களும் ப்ரஹ்மத்தையே குறிக்கும் –

ப்ருஹத் -1-4-10-அத யோன்யம் தேவதா முபாஸ்தே அந்ய அசாவந்ய அசமஸ்மீதி ந ஸ தேவதே -என்று
யார் ஒருவன் தன்னைக் காட்டிலும் வேறான தேவதையை -நான் வேறு அது வேறு -என்று உபாசிக்கிறானோ
அவன் ஏதும் அறியாதவனாக இருக்கிறான் –

ப்ருஹத் -1-4-7-அக்ருத்ஸ் நோ ஹி ஏஷ ஆத்மேத்யே வோயா சீத-
இந்த ஜீவன் பூர்ணம் அல்ல ஆகவே பூரணமான ஜீவனை உபாசிக்க வேண்டும்

ப்ருஹத் -2-4-6-சர்வே தம் பராதாத்யோ அந்யத் ராத்மனா சர்வே வேத -என்று
ஆத்மாவைக் காட்டிலும் அனைத்தையும் வேறுபடுத்திக் காண்பவனை -மற்றவை அனைத்தும் வேறுபடுத்தித் தள்ளிவிடும்

இந்த வரிகளும்
ஸ்வேதாச்வதர 1-5-ப்ருதகாத்மானம் ப்ரேரிதம் ஸ மத்வா -என்று
தன்னை விட வேறுபட்டதான நியமிப்பவனை -என்றதும் முரண்பட்ட வரிகள் அல்ல

ஆகவே
உபாசகனின் ஆத்மாவாகவே உள்ள ப்ரஹ்மமே உபாசனை செய்யப்பட வேண்டும் என்றும்
தனது ஆத்மாகவே ப்ரஹ்மத்தை எண்ணி உபாசிக்க வேண்டும் என்றும் தெளிவாகக் காட்டப் பட்டது –

அஹம் சப்தமும் பரமாத்மாவிலேயே பர்யவசாயம் -முடிவு அடையும்
இதனால் அஹம் ப்ரஹ்ம என்றே உபாஸிக்க வேண்டும் என்றதாயிற்று –

———————————————————————————

அதிகரணம் -153 ப்ரதீகாதி கரணம் -4-1-3-

இப்படி ப்ரஹ்ம உபாஸனத்தில் ஸ்வ ஆத்மா என்று உபாஸனம் இந்த்ர ப்ராண அதிகரணத்தில் சொல்லப்பட்டது
ஆனாலும் அஹம் புத்தி ஸப்தங்களுக்கு பரமாத்மா என்ற பொருளிலேயே முடிவு என்ற அர்த்தத்தை
உறுதிப் படுத்த இங்கு சொல்லப் பட்டது –
இவ்வாறு மநோ ப்ரஹமேத் யுபா ஸீத முதலிய ப்ரதீக உபாஸனங்களில் ப்ரஹ்ம உபாஸனம் ஆகையாலே
ஸ்வ ஆத்மா என்ற புத்தியில் உபாசனம் செய்யத் தக்கது என்ற சங்கையால் சங்கதி

மநோ ப்ரஹ்மேதி -முதலிய ப்ரதீக உபாஸனங்களிலும் மநோ அஹம் அஸ்மி என்று மனம் முதலியவற்றிலும்
உபாசனத்திற்கு ப்ரஹ்ம உபாசனம் ஸமமாகையால் ஆத்ம தயா அனுசந்தானம் செய்யத் தக்கது
என்பது பூர்வ பக்ஷம்
இத்தை நிரஸிக்கிறார் –

பிரதீகம் -மனம் சரீரம் போன்றவை -இவற்றை உபாசனம் சரி அல்ல –
இவை ஆத்மா அல்ல -என்று நிரூபிக்கப் படுகிறது

474-ப்ரதீகே ந ஹி ஸ –4-1-4-

சாந்தோக்யம் -3-11-1-மநோ ப்ரஹ்ம இதி உபாசீத –
மனத்தை ப்ரஹ்மம் என்று உபாசிப்பனாக -என்றும் –

சாந்தோக்யம் -7-1-5-ஸ யோ நாம ப்ரஹ்ம இதி உபாஸ்தே-
நாமத்தை ப்ரஹ்மம் என்று உபாசிப்பவன்

ந ப்ரதீகே -மனம் முதலியவற்றில் ஆத்மாவை ஏற்றி உபாசனை செய்வது பொருந்தாது
ஏன் என்றால்
ந ஹி ஸ -அத்தைய மனம் போன்றவை உபாசகனின் ஆத்மா அல்ல
உபாசிக்கப்படும் பொருள்களே ஆகும் –

ப்ரதீக உபாஸனத்திலே பிரதீகம் தான் உபாஸ்யம் -ப்ரஹ்மம் அன்று –ப்ரதீகமாவது அங்கம் –
சித் அசித் சரீரக ப்ரஹ்மத்தில் அசித்தும் ஏகதேசமான அங்கம் -என்று கருத்து
ப்ரதீக உபாஸனம் -ப்ரஹ்மம் அல்லாதவற்றில் -ப்ரஹ்மம் என்று த்ருஷ்டியில் விதிப்பதால் –
ப்ரஹ்மம் என்று அனுசந்தானம் என்று கருத்து –

இங்கு மனம் முதலியவை அல்ப சக்தி உள்ளவை யாதலால் அவற்றை ப்ரஹ்மம் என்ற த்ருஷ்டியுடன்
உபாஸனம் செய்யச் சொல்வது சரியில்லை
ஆகையால் ப்ரஹ்மமே மனம் முதலிய த்ருஷ்டியால் உபாஸிக்கத் தக்கது
என்ற பக்ஷத்திற்கு விடை அளிக்கிறார் –

—————————————————————————————————-

478-ப்ரஹ்ம த்ருஷ்டி உத்கர்ஷாத் –4-1-5-

ப்ரஹ்மம் மனம் முதலானவற்றிலும் உயர்ந்தது –
மனம் முதலானவற்றில் ப்ரஹ்ம திருஷ்டியை ஏற்கலாம் –
ப்ரஹ்மத்திடம் மனம் போன்றவற்றின் த்ருஷ்டி பொருந்தாது

வேலைக்காரனை அரசன் என்று புகழ்ந்தால் அவன் சில நன்மைகள் செய்வான்
அரசனை வேலைக் காரன் என்றால் தண்டனை தானே கொடுப்பான் –

ஆகையால் தீமையை விளைவிக்கும்
இவ்விஷயம் பூம வித்யையிலும் உள்ளது –

————————————-

அதிகரணம் -4-ஆதித்யாதிமத்யதிகரணம் –

கடந்த அதிகரணத்தில் கீழான பொருளில் மேலானவனே த்ருஷ்ட்டி செய்யத் தக்கது எனப்பட்டது
அப்படியாகில்
பல சாதனத்வேன உத்க்ருஷ்டமான உத்கீதாதியில் ஆதித்யாதி திருஷ்ட்டி செய்யத்தக்கது
என்னும் சங்கையால் சங்கதி –

உத்கீதம் போன்றவற்றையே ஸூரியன் முதலான தேவர்களாக பார்க்க வேண்டும் –
என்று நிரூபிக்கப் படுகிறது –

479-ஆதித்யாதி மதய ஸ அங்கே உபபத்தே —4-1-6-

உத்கீதாதிகளில் ஆதித்ய த்ருஷ்டி செய்யத்தக்கதா
ஆதித்யாதிகளில் உத்கீதாதிகள் த்ருஷ்டி செய்யத்தக்கதா
என சம்சயம்
தாழ்ந்தவன் இடமே உயர்ந்தவனாகவே த்ருஷ்டி செய்ய வேண்டும் அன்றோ என்ற நியாயத்தாலே
பல சாதனம் என்பதால் உயர்ந்த கர்மத்தை விட கர்ம சேஷ பூதமான ஆதித்யாதி தேவதை த்ருஷ்டமான படியால்
ஆதித்யாதிகள் இடம் உத்கீதாதி த்ருஷ்டி செய்வதே மேல்
என்ற பூர்வ பஷத்தை இங்கு நிரஸிக்கிறார்

சாந்தோக்யம் -1-3-1-ய ஏவ அசௌ தபதி தம் உத்கீதம் உபாசீத -என்று
யார் இப்படி ஒளிர்கிறானோ அவனையே உத்கீதமாக உபாசிக்க வேண்டும்

யாகங்களின் அங்கமான உத்கீதம் உயர்ந்ததா ஸூரியன் போன்றார்கள் உயர்ந்தவர்களா சங்கை

இதில் ஸ சப்தம் ஏவகாரம் உறுதியைச் சொல்கிறது
அங்கே – க்ரதுவின் அங்கமான உத்கீதா திகளில்
ஆதித்யாதி மதய ஸ -ஆதித்ய த்ருஷ்டியே செய்யத்தக்கது
ஏன் எனில்
உபபத்தே-கர்மங்கள் பலனை அளிப்பதும் ஆதித்யாதி தேவதை ப்ரீதியை முன்னிட்டே வருகிறபடியால்
அத்தேவதைகளே உயர்வு பொருந்துவதாதலின் முன் கூறிய நியாயத்தாலே
கர்ம அங்க உத்கீதாதியில் தான் ஆதித்யாதி த்ருஷ்டிகள் செய்யத் தக்கன –

தேவர்களை ஆராதிப்பதால் அன்றோ கர்ம பலன்கள் –
அவர்கள் மகிழ்ந்து அளிக்கின்றார்கள் –
ஆகவே உத்கீதம் முதலான வற்றை ஸூரியன் போன்றாராக எண்ண வேண்டும் –

சுத்தியில் இது வெள்ளி -அந்யதா க்யாதி ஞானம் -ராஜதத்வ பிரகார ரூப ஏக தேசத்தால் போலவே
பிரகார பிரகாரி ஐக்யத்தால் கொள்ளலாமே
ஸத் க்யாதி -யதார்த்த ஞான பக்ஷம்
பஞ்சீ கரண ப்ரக்ரியையால் -ரஜத்வ ஏக தேசம் இதில் உண்டே
நான் கருடன் -உத்கீதமே ஸூர்யன் மனமே ப்ரஹ்மம் -இவற்றுக்கு
தேகாத்ம பிரமம் போல் அஹம் த்வ பிரகார கருடனாகவும் கருடத்வ பிரகார கருடனாகவும் -இரண்டு ஞானங்கள்
பேதத்தை க்ரஹிக்காமை –
ஞானமும் வியவஹாரமும் அயதாவஸ்திதம் என்பர் பிறர்
விவகார மட்டும் அயதாவஸ்திதம் என்பது நம் ஆச்சார்யர்களின் திரு உள்ளம் –

——————————————————————————————-

அதிகரணம் -5-ஆஸி நாதி கரணம் –

கீழ் ப்ரதீக அதிகரணமும் ஆதித்யாதி மத்ய அதிகரணமும் ப்ராசங்கிகம்
இதில் முதலில் கூறிய பகவத் உபாசனத்திற்கு அபேக்ஷிதமான ஆஸனாதிகள் சிந்திக்கப்படுகின்றன
என்று சங்கதி

விசேஷமாக ஏதும் கூறப்படாமையாலே நியமம் ஏதும் இல்லை என்கிற பூர்வ பக்ஷத்தை நிரசிக்கிறார்

அமர்ந்து கொண்டு தான் உபாசனை செய்ய வேண்டும் என்று நிரூபிக்கப் படுகிறது-

4-1-7-ஆஸிந சம்பவாத் —4-1-7-

ஆஸிந -உட்கார்ந்து கொண்டே உபாஸிக்க வேண்டும்
சம்பவாத்-உட்கார்ந்தவனுக்கே மனஸ்ஸூ ஒருமைப் படுவதால் என்றபடி
ஒருமை இல்லா விட்டால் உபாஸனம் சம்பவிக்காதே

அமர்ந்து கொண்டு மட்டுமே -அப்போது தான் கை கூடும் –
ஞானம் த்யானம் உபாசனம் -அப்போது தான் ஸ்ரத்தை உண்டாகும் –
மன ஒருமைப்பாடு உண்டாகும்

———————————————————————————

483-த்யா நாத் ஸ —4-1-8-

நிதித்யாசிதவ்ய –த்யானம் -வேறு எந்த வித எண்ணமும் தோன்றாதபடி
இடைவிடாத நினைவு வெள்ளமே த்யானம்

——————————————————————————

484–அசைலம் ஸ அபேஷ்ய-4-1-9-

அசையாமல் இருப்பதே த்யானம் –

சந்தோக்யம் -7-6-1-த்யாய தீவ ப்ருத்வீ த்யாய தீவ அந்தரிஷம் த்யாய தீவ த்வயௌ த்யாய தீவ ஆப
த்யாயந்தீவ பர்வதா -போலே அந்த நிலை அவசியம் –

பூமி த்யானிக்கிறது
ஆகாசம் த்யானிக்கிறது
என்று பூம வித்யையில் உள்ளது இவற்றைப் போலவே அசலத்வம் ஸ்திதி மூலமாகவே சம்பவிக்கும் என்று கருத்து –

————————————————————————

485-ஸ்மரந்தி ஸ –4-1-10-

ஸ்ம்ருதியில் உள்ளது -ஸ்ரீ கீதை 6-11/12
சுசௌ தேசே பிரதிஷ்டாப்ய ஸ்திரம் ஆசனம் ஆத்மந நாத் யுச்சரிதம் நாதி நீசம் சேலாஜி நகு சோத்தரம்-என்றும்

தத்ர ஏகாக்ரம் மன க்ருத்வா யத சிந்தேந்த்ரிய க்ரிய உபவிச்யாசதே யுஜ்ஞ்யாத் யோகம் ஆத்ம விசுத்தயே-என்றும் சொல்லிற்றே-

ஆஸீனம் -உட்கார்ந்தவனுக்கே தியானத்தை இவற்றில் ஸ்மரிக்கிறார்கள்

—————————————————————————

486-யத்ர யகாக்ரதா தத்ர அவிசேஷாத்–4-1-11-

மனதை ஒருமுகப் படுத்த கூறப்பட்ட அதே கால தேசங்களை உபாசனத்துக்கு கொள்ள வேண்டும்

ஸ்வேதாச்வதர -2-10-சமே சுசௌ சர்க்கராவஹ் நிவாலுகா விவர்ஜிதே –
சம தளம் -மணல் நெருப்பு சிறுகற்கள் இல்லாத இடம் -மநோ அனுகூலே -மனத்து ஏற்ற இடம் தேவை –

யத்ர -எந்த தேச காலங்களில் மனதிற்கு
யகாக்ரதா -ஒருமித்த தன்மை ஏற்படுகிறதோ
தத்ர -அதே தேசத்தில் காலத்தில் உபாஸனம் செய்ய வேண்டும்
அவிசேஷாத்-மணல் முதலியன இல்லாமலும் -மனதுக்கு அனுகூலமாகவும் சுத்தமமாயும் உள்ள தேசத்தில்
என்ற வாஜஸ நேயத்தில் மனத்தின் ஓர்மை தவிர மற்ற தேச கால விவரணங்கள் ஏதும் இல்லை யாதலால்
மன ஒற்றுமைக்கு அனுகூலமான தேசமும் காலமும் உபாஸன அனுகூலங்கள் என்றதாயிற்று

இதனால் ஆஸன ஸ்திதி காமனாதிகளுக்குள் ஆசனத்தை மட்டும் சொல்வதால்
உட்கார்ந்தே உபாஸனம் செய்ய வேண்டும் என்று தேறிற்று –

வித்ய அங்க பாதத்தில் வித்யையின் அங்கங்கள் எல்லாம் சொல்லப்பட்டு விட்ட படியால்
திரும்பவும் ஆசனாதிகள் அங்கங்கள் பற்றி இங்கு ஏன் சிந்தை என்றால்
தைல தாராவத் ஸ்ம்ருதி சந்ததி ரூபையான த்யானம் -பக்தி -தினமும் மென்மேலும் கவனத்துடன் சாதிக்கத் தக்கது
அது ஆசனாதி அங்கங்களுடன் மனதின் ஓர்மை யுடன் இதரங்களைப் பற்றிய அனைத்து முயற்சிகளுடன்
இருக்கா விடில் ஸித்தியாதே என்பதால் ஸூத்ரகாரரால் மீண்டும் இங்கு செய்யப்பட்டுள்ளது

————————————————————————-

அதிகரணம் -156-ஆப்ரயாணாதி கரணம் -4-1-6-

ஒரே நாளில் செய்தாலே ஸாஸ்த்ர பலன் சித்தித்து விடுவதாலும்
ஆயுள் உள்ளவரை செய்ய வேண்டும் என்ற ஸ்ருதியிலோ விதியைக் குறிக்கும் பதங்கள் இல்லாததாலும்
அவை பலத்தைக் குறிப்பதாகவே கொள்ளத்தாகும்
என்பர் பூர்வ பக்ஷி
இத்தை நிரஸிக்கிறார்

மரணம் அடையும் காலம் வரையில் உபாசனம் செய்ய வேண்டும் என்று நிரூபிக்கப் படுகிறது –

488-ஆப்ரயாணாத் தத்ர அபி ஹி த்ருஷ்டம்–4-1-12-

மரண காலம் வரையில் –
ஏன் –
ஸ்ருதிகளில் அப்படியே காண்கையாலே-

சாந்தோக்யம் -8-15-1-ஸ கல்வேவம் வர்த்தயன் யாவதாயுஷம் ப்ரஹ்ம லோகம் அபி சம்பத்யதே -என்று
ஆயுள் உள்ள வரையில் உபாசனத்தையும் தர்மத்தையும் கடைப்பிடித்து
ப்ரஹ்ம லோகம் அடைகிறான் -என்கிறது –

இந்த ஸ்ருதியில் விதி ப்ரத்யயம் இல்லாவிட்டாலும்
உபாஸனம் ஆவ்ருத்தி வேறே ப்ரமாணத்தால் கிடைக்காததால்
உபாசன ஆவ்ருத்தி விதியை ஏற்க வேண்டும் என்று கருத்து –

————————————————————————————–

அதிகரணம் -157-ததிகமாதிகரணம் – 4-1-7-

இப்படி ப்ரஹ்ம வித்யா ஸ்வரூபத்தை நிரூபித்து
தத் பலங்களான
பாப சம்பந்தம் இன்மை
பாபத்தை நாசம்
இவற்றை மேல் நான்கு அதிகரணங்களாலே நிரூபிக்கிறார்
என்று பேடிகா சங்கதி

ப்ரஹ்ம வித்யை ஸ்வதா ஆனந்த ரூபை யாகையாலே பலமாகவே சேர்க்கத் தக்கது
ஆதலின்
அதன் ஸ்வரூபத்தை ஆராய்வதும் இந்த பல அத்தியாயத்திலேயே பொருந்துவதாகும்

ப்ரஹ்ம வித்யைக்கு முன்னால் செய்த பாவங்கள் ,வரப் போகும் பாவங்கள் ஆகியவை அழிகின்றன
என்று நிரூபிக்கப் படுகிறது –

490-தததிகமே உத்தர பூர்வாகயோ –அச்லேஷ வி நாசௌ தத் வ்யபதேசாத் —4-1-13-

சாந்தோக்யம் -4-14-1-தத்யதா புஷ்கர பலாசா அபோ ந ச்லிஷ்யந்தே ஏவம் ஏவம் விதி பாவம்
கர்ம ந ச்லிஷ்யதே-என்று-தாமரை இலை மேல் நீர் ஒட்டாது போலே ஒட்டாது என்றும்

ப்ருஹத் -4-14-23-தஸ்யை வாத்மா பதவித் தம் விதித்வா ந கர்மணா லிப்யதே பாபகேந-என்று
ஆத்மாவை அறிந்தவனை கர்மங்கள் தீண்டாது என்றும் –ஒட்டாதவற்றையும்

சாந்தோக்யம் -5-24-3-தத்யதா இஷீக தூலம் அக்னௌ ப்ரோதம் ப்ரதூயதே ஏவம் ஹாஸ்ய சர்வே பாப்மாந ப்ரதூயந்தே –
துடப்பத்தின் நுனியில் பஞ்சு போன்ற பகுதி தீயில் அழிவது போலே ப்ரஹ்ம உபாசகனின் பாவங்கள் அனைத்தும் அழியும் என்றும்

ஷீயந்தே ஸ அஸ்ய கர்மாணி தஸ்மின் த்ருஷ்டே பராவரே -என்று
உயர்ந்த ப்ரஹ்மத்தைக் கண்டதும் இவனது பாவ கர்மங்கள் அனைத்தும் அழிந்து விடுகின்றன -என்றும் சொல்லிற்றே

பூர்வ பஷி –
ப்ரஹ்ம வித்தின் வித்யா ஆரம்பத்திற்குப் பின்னால் வரும் பாபங்கள் சம்பந்திக்காமையும்
முன்புள்ள பாபங்களுக்கு விநாசமும்
ஏற்படுமா ஏற்படாதா என்று சம்சயம்

ந புக்தம் ஷீயதே கர்ம-என்று சொல்லுகையாலே
அஸ்லேஷ வி நாச ஸ்ருதி –ஸ்துதிக்காக ஏற்பட்டது என்பதால் உண்மையில்
அஸ்லேஷமும் விநாஸமும் ஸம்பவிக்க மாட்டா
என்பது பூர்வ பக்ஷம் –

இவை இரண்டும் சரி அல்ல
எதனால் என்றால்-
ப்ரஹ்ம வைவர்த்த புராணம் -நா புக்தம் ஷீயதே கர்ம கல்ப கோடி சதைரபி என்ற
சாஸ்திர வாக்யங்களுக்கு முரணாக இருப்பதால் –
இவை அர்த்த வாதங்களே –
வித்யையை புகழவே சொல்லப்பட்டவை

வித்யை ப்ரஹ்மத்தை அடைய மட்டுமே என்று
தைத்ரியம் -2-1- ப்ரஹ்ம விதாப் நோதி பரம் -என்றும் –
முண்டகம் -3-2-9-ப்ரஹ்ம வேத ப்ரஹ்ம ஏவ பவதி -என்றும் தானே சொல்லிற்று என்பர்

அப்படி அல்ல –

தததிகமே -ப்ரஹ்ம வித்யை அனுஷ்டித்த போது
உத்தர பூர்வாகயோ –வித்ய அனுஷ்டானத்தின் முந்தைய பிந்தைய பாபங்களுக்கு
அஸ்லேஷ வி நாசௌ -அஸ்லேஷமும் விநாசமும் வரும்
ஏன் எனில்
தத் வ்யபதேசாத் —அவ்வாறு ஸ்ருதி சொல்வதால்

இப்படியாகில் ந புக்தம் ஷீயதே கர்ம-என்று ஸ்ருதி சொல்வது என் எனில்
செய்த கர்மாக்களுக்கு ப்ரஹ்ம வித்யாதிகளால் பிராயச்சித்தம் செய்து கொள்ளா விடில்
கர்ம பலன்களை அனுபவித்தே தீர்க்க வேண்டும் என்கிறது
ஆகவே விரோதம் இல்லை

வித்யையின் மஹாத்ம்யம் குறித்து –
சாந்தோக்யம் -4-14-3-ஏவம் விதி பாபாம் கர்ம ந ச்லிஷ்யதே-என்று
இப்படி அறிந்தவனை பாவங்கள் தீண்டுவது இல்லை என்றும்

சாந்தோக்யம் -5-24-3-ஏவம் ஹாஸ்ய சர்வே பாப்மாந ப்ரதூயந்தே –என்றது
நெருப்பு எரிக்கிறது என்பதற்கும் தீ அணைக்கும் என்பதரும் முரண்பாடு இல்லையே

பரம புருஷனின் ஆராதனத்தால் முன்பு செய்த பாவங்களால் உண்டான ப்ரஹ்மத்தின் அப்ரீதியை மாற்றி
ப்ரீதியை யுண்டாக்குவதாலே முன்பு செய்த பாவங்கள் அழியும்

அஸ்லேஷம் புத்தி பூர்வகமாக செய்யப்படாத தெரியாமல் செய்யும் பாவங்களையே குறிக்கும்
ஏன் எனில்

கட உபநிஷத் -2-24-நா விரதோ துச்சரிதாத் -என்று
முரணான ஒழுக்கத்தில் இருந்து விலகாதவன் பரமாத்மாவை அடைய முடியாது -என்பதால் –

ஆகையால் மரண காலம் வரை தொடரும் வித்யை நாள் தோறும் வலிமை அடைந்து –
தவறான செயல்கள் அழிவதால் -மாறிக் கொண்டே வரும் என்றதாயிற்று-

இப்படியானால் ப்ரஹ்ம வித்யை ஸர்வ பாப ப்ராயச்சித்த ருபை யாதலின்
ஸ்வர்க்கார்த்தம் சாதனமாக யாகத்தை அனுஷ்டிப்பது போலே முக்திக்காக வேறு சாதனத்தை
அனுஷ்ட்டிக்க வேண்டாவோ என்னில்

ஸ்வர்க்கனுபவம் கர்மாவை உபாதியாகக் கொண்டது -ஆதலால் கர்மாவை அனுஷ்ட்டிக்க வேண்டும்
முக்தியோ ஞான சங்கோச நிவ்ருத்தியை முதல் கொண்ட ப்ரஹ்ம அனுபவத்திற்குத் தடையான
எல்லா பாபங்களும் பிராயச்சித்தமாக வித்யா அனுஷ்டானத்தால் சமனமானவுடன்
சங்கோச காரணம் இல்லாததாலும்
ஞான சங்கோச நிவ்ருத்தியே முக்தி யாதலாலும் ஸ்வ பாவத்தால் ஸித்தித்த
விசிஷ்ட ப்ரஹ்ம அனுபவ சக்தி தோன்றுகையால் ஸ்வர்க்காதிகளில் இருந்து வேறுபாடு ஸித்தமாகையாலே
வேறு சாதனம் தேவையில்லை என்று கருத்து –

அஸ்லேஷம் என்பது கர்ம சக்தி உண்டாகாமை
பாப விநாசம் என்பது உண்டான கர்ம சக்திகளின் அழிவு
கர்ம சக்தி புண்ய பாபங்களுக்கு ஏற்றபடி பலனைக் கொடுக்கும் பகவானின் நிக்ரஹமும் அனுக்ரஹமுமே
இவ்வாறானால் -நிமித்தம் இருப்பின் நைமித்திகம் உண்டு என்னும் நியாயத்தாலே
முன் பாபங்கள் தோன்றியவை யாதலின் அவற்றுக்கு ப்ரஹ்ம வித்யை பிராயச்சித்தம் ஆகட்டும்
பிந்திய பாபம் உண்டாகாமையால் அதற்கு ப்ரஹ்ம வித்யை எப்படி பிராயச்சித்தம் ஆகும் என்னில்

அபுத்தி பூர்வகமான பாபத்திற்கும் ப்ரஹ்ம வித்யை நைமித்திக பிராயச்சித்தம்
என்பது ஸூத்ரகாரர் திரு உள்ளம் அன்று
ப்ரஹ்ம வித்யா நிஷ்டனுக்கு அபுத்தி பூர்வ பாபம் பாபமே என்று என்பதே திரு உள்ளம்
ஆகவே ப்ரஹ்ம நிஷ்டனுக்கு புத்தி பூர்வக உத்தராகம் சம்பவிக்காது –
அப்படித் தோன்றினாலும் அந்த பாபத்தைப் பிராயச்சித்தத்தால் போக்கடிக்க வேண்டும் –
அது செய்யா விடில் விரைவில் பாப பலனை அனுபவித்தே முக்தி பெறுவான்

இந்த வ்ருத்தாந்தம் வ்ருத்ராதிகள் இடம் கண்டோம்
ஆகவே புத்தி பூர்வ ஆகத்துக்கு அவசியம் பிராயச்சித்தம் பண்ணியே யாக வேண்டும் என்றதாயிற்று –

———————————————————————————-

அதிகரணம் -158-இதராதிகரணம்–4-1-8-

முன்பு
பாபத்திற்கு அஸ்லேஷமும் விநாஸமும் கூறப்பட்டன
இங்கு
ஸூஹ் ருதத்துக்கும் அஸ்லேஷமும் விநாஸங்கள் கூறப்படுகின்றன என்று
அதிதேசத்தால் சங்கதி

முன்னர் செய்த புண்ணியங்கள் அழிந்து விடும்
இனி செய்யப்படும் புண்யங்கள் ஒட்டாது -என்று நிரூபிக்கப் படுகிறது –

491-இதரச்ய அபி ஏவம் அசம்ச்லேஷ பாதே து —4-1-14-

சாந்தோக்யம் -8-4-1-சர்வே பாப்மான அதோ நிவர்த்தந்தே -என்றும் –

கௌஷீதகீ -1-4- தத் ஸூ க்ருத துஷ்க்ருதே தூ நுதே –என்று
புண்ய பாவங்களை உதறுகிறான்

புண்ய பலன்கள் மழை உணவு போன்றவை
உபாசனம் முழுவதும் இயற்ற வேண்டுமே-அழிவு பற்றி கூறலாமோ என்ன

பாதே து – சரீரம் விழும் நேரத்தில் அந்த புண்ய பலன்கள் அழிகின்றன –
ப்ரஹ்ம ப்ராப்திக்கு தடையாக உள்ளதால் –

புண்ய பலம் ஸூக ரூபமாகையாலே ப்ரஹ்ம வித்துக்கு அநிஷ்டம் இல்லாமையாலும்
புண்யத்தின் அஸ்லேஷ விநாசங்கள் கூடா என்பது பூர்வ பக்ஷம்
அதனை நிரஸிக்கிறார்

இதரச்ய அபி -பாபத்தின் வேறான புண்யத்துக்கும்
ஏவம் அசம்ச்லேஷ பாதே து-பாபத்தைப் போலவே அஸ்லேஷ விநாசங்கள் ஸமமானவை
புண்ய பலமான ஸ்வர்க்கமும் முமுஷுக்கு அநிஷ்டமே
வித்யைக்கு ஏற்ற மழை உணவு ஆரோக்யம் போன்றவையும் சரீரம் விழுந்தபின் அநிஷ்டங்களே
உத்தர புண்ய ஸ்வேஷம் எவ்வாறு சொல்லக் கூடும் என்றால் வித்ய உத்பத்திக்காக செய்த
ஸூஹ் ருதங்களுக்குள் உப யுக்தமான எஞ்சிய சிஷ்ட ஸூஹ்ருதத்துக்கும்
மோஹத்தால் வேறு பலத்துக்காகச் செய்த ஸூஹ் ருதத்துக்கும் பிரபலமான கர்மாக்களால் தடை வரும்

ஆதலால் அப்போது பலனைக் கொடுக்காத அந்தக் கர்மமும் வித்வானின் விஷயத்தில் ஸ்நேஹத்தால்
பிறர் செய்த ஸூஹ்ருதமும் வித்வானுக்கு அநிஷ்டங்கள் ஆகையாலே
இவையே அஸ்லேஷ -அசம்பந்த -விஷயங்களாகக் கூடும் –

———————————————————————————–

அதிகரணம் -159-அநாரப்த கார்யாதிகரணம் -4-1-9-

ப்ரஹ்ம உத்பத்திக்கு முன்னும் பின்னுமுள்ள ஸூஹ்ருத துஷ் ஹ்ருதங்களுக்கு
அஸ்லேஷமும் விநாசமும் கூறப்பட்டன
இப்போது வித்யைக்கு முன்புள்ள ப்ரார்ப்தே தரமான ஸூஹ்ருத துஷ் ஹ்ருதங்களுக்கு மட்டும்
வித்யா மஹாத்ம்யத்தாலே விநாசம் இங்கே சமர்த்திக்கப் படுகிறது

பிராரப்தத்தினைத் தவிர்ந்த கர்மங்களுக்கு மட்டுமா அஸ்லேஷ விநாசங்கள்
என்று சம்சயம் இங்கு

சர்வ பாப்மாந பிரயந்துதே –என்று பொதுவாகக் கூறி இருப்பதால்
எல்லா பாபங்களும் விநாசம் கூடும் என்பது பூர்வ பக்ஷம்
அத்தை நிரசிக்கிறார்

பலன் அளிக்கத் தொடங்காத புண்ய பாப கர்மங்கள் மட்டுமே அழிகின்றன
என்பது நிரூபிக்கப் படுகிறது –

492-அநாரப்த கார்யே ஏவது பூர்வே ததவதே –4-1-15-

இதுவரை பலன் அளிக்கத் தொடங்காத புண்ய பாவங்கள் மட்டுமே அழிகின்றன –

சர்வ பாப்மாந பிரயந்துதே –
அனைத்து பாவங்களும் அழியும் என்றால் சரீரம் மட்டும் எவ்விதம் இருக்கும்

சாந்தோக்யம் -6-14-2-தஸ்ய தாவதேவ சிரம் யாவந்த விமோஷயே அத சம்பத்ச்ய -என்று
பலன் அளிக்கத் தொடங்கப் பட்ட கர்மங்கள் முடியும் வரையில் சரீரத்தின் தொடர்பு உள்ளது என்றது-

து ஸப்தம் பக்ஷத்தை விலக்குவது
பூர்வே -அநாரப்த கார்யே ஏவ-வித்ய உத்பத்திக்கு முந்திய ப்ராரப்தம் அல்லாத கர்மங்களே நசிக்கின்றன
ஏன் எனில்
ததவதே-தஸ்ய தாவதேவ சிரம் யாவந்த விமோஷயே அத சம்பத்ச்ய-என்று வித்யை பூர்த்தியானவனுக்கு
உடலை விடும் வரை விளம்பம் உண்டு என்று வேதம் கூறுவதால்
சர்வ கர்மங்களும் அழிந்திட்டால் சரீர ஸ்திதியே ஸம்பவிக்காதே

ஆதலின் சரீரத்தைத் தரிப்பதற்குக் காரணமான பிராரப்த கர்மம் தவிர
மற்ற அபிராரப்த கர்மங்களுக்கே நாசம் என்று தேறிற்று –

——————————————————-

அதிகரணம் -10-அக்னிஹோதராத்ய திகரணம் -4-1-10-

வித்யா பலத்தால் ஸூஹ்ருதங்களும் அஸ்லேஷம் கூறப்பட்டது
அக்னி ஹோத்ரம் போன்ற நித்ய நைமித்திகமான தம் தம் ஆஸ்ரம தர்மங்களும்
பொதுவாக ஸூஹ்ருதத்தில் அடங்குவதால்
அவற்றின் பலன்களுக்கும் அஸ்லேஷம் வரத் தோன்றுவதால் பலத்தில்
விருப்பம் இல்லாதவனுக்கு அனுஷ்டானம் சம்பவிக்காது
என்ற சங்கையால் சங்கதி –

ஆகவே அக்னிஹோத்ராதிகள் வித்வானால் அனுஷ்ட்டிக்கத் தக்கவை அல்ல
என்று பூர்வ பக்ஷம்

பலனை விரும்பாதவர்கள் கூட அக்னி ஹோத்ரம் போன்ற நித்ய கர்மாக்களை
இயற்ற வேண்டும் என்று நிரூபிக்கப் படுகிறது

493-அக்னிஹோத்ராதி து தத் கார்யாயைவ தத் தர்சநாத் –4-1-16-

அக்னி ஹோத்ரம் போன்றவையும் ப்ரஹ்ம வித்யைக்கே-
ப்ரஹ்ம விதியை -4-1-14-இதரஸ் யாப்யேவம் அசம்ச்லேஷ -என்று
ப்ரஹ்ம வித்யைக்கு பின்புள்ள புண்ய பாவங்கள் ஒட்டாமல் போகும் என்றால்
பலன் இல்லாத கர்மாக்களை யார் இயற்றுவார்கள்

து பதம் அக்னிஹோத்ரம் போன்றவை அன்றாடம் இயற்றப்பட வேண்டும்
தத் கார்யாயைவ -வித்யா உத்பத்தி என்னும் கார்யத்துக்காகவே அனுஷ்ட்டிக்கத் தக்கது என்றவாறு
தா தர்சநாத் இப்படி வேதங்களில் சொல்வதால் வித்யை வளரும் பொருட்டு நித்யம் இயற்றியே ஆக வேண்டும்
அப்படி அனுஷ்ட்டிக்கா விடில் வித்யையே உண்டாக மாட்டாது என்று கருத்து
இல்லையேல் அதனால் வரும் பாவம் மன உறுதியைக் குலைத்து விடும் –
உபாசனை செய்ய இயலாமல் போய் விடும்-

அனுஷ்டித்த கர்மத்துக்கு பலம் ஏற்பட பிரதிபந்தம் ஏற்படுமா ஏற்படாதா என ஸந்தேஹித்து
ஏற்படலாம் என்று முன் கூறியதைக் காட்டுகிறார் –

————————————————————————

புண்ய பாவங்கள் அனுபவித்தே கழிக்க வேண்டி இருக்குமாகில்
சாட்யாயன சாகை -ஸூக்ருத சாதுக்ருத்யாம் -என்று
ஏன் கூற வேண்டும்

494-அத அந்யா அபி ஹி ஏகேஷாம் உபயோ –4-1-17-

அக்னி ஹோத்ரம் காட்டிலும் வேறு சிலவும் உளதால் –
ப்ரஹ்ம வித்யைக்கு முன்பும் பின்னும் பலன் மீது விருப்பம் கொண்டு செய்யப்பட புண்ய கர்மங்களுக்குள்
வலிமையான பாவ கர்மங்களால் தடைப்பட்ட ஏராளமான புண்ணியங்கள் இருக்கக் கூடும்

அத -வித்யைக்குக் காரணமான அக்னி ஹோத்ராதி தர்மத்தைக் காட்டிலும் வேறான
அந்யா அபி ஹி ஏகேஷாம் உபயோ-இது வரை பலன் தராத கர்மாக்களும் உள்ளனவே
என்று சில சாமிகளின் மதம் உண்டு –

இவற்றையே அழிகின்ற
பூர்வ புண்யங்களும் ஒட்டாமல் போகும் உத்தர புண்யங்களும் என்றது

——————————————————————————-

495-யதேவ வித்யயேதி ஹி —4-1-18-

ஹி-எதனால்
யதேவ வித்யயேதி -யதேவ வித்யயா கரோதி ததேவ வீர்யவத்தரம்-என்று
உத்கீத உபாசனத்தாலே க்ரது பலமான
ஸ்வர்க்காதிகளுக்கு கர்மாந்தரங்களால் பிரதிபந்தம் ஏற்படாமை கூறப்பட்டதோ
அதே காரணத்தால் பலம் பிரதிபந்தம் அடைந்த சாது க்ருதயங்கள் உண்டு என்று
வசனத்துக்கு முன் கூறியதே விஷயம் என்று –

வித்யையின் மூலமாக –
சாந்தோக்யம் -1-1-10-யதேவ வித்யயா கரோதி ததேவ வீர்யவத்தரம் -என்று
எந்த கர்மத்தை உத்கீத வித்யையுடன் இயற்றுகின்றானோ அதுவே தடையின்றி பலன் தரும்

இவையே உபாசகனின் நண்பர்களுக்கு சென்று சேரும் –

ஸர்வ அபேஷா ச-என்ற அதிகரணத்தில்
கர்மாக்கள் அங்கம் எனப்பட்டன
இங்கும் கர்மாக்களுக்கு அங்க பாவத்தை ஏன் கூறுகிறார் என்றால்
முன் பாதத்தில் வித்யை எதையும் எதிர்பாராதது என்று சங்கித்து
சா பேஷம் -எதிர்பார்ப்பதே -என்று சாதிக்கப்பட்டது
இதில் ஸூஹ்ருதம் ஒட்டாது என்ற பிரசங்கத்தில் அக்னி ஹோத்ராதிகளும் ஸூஹ்ருதம் ஆகையால்
அவற்றை விட்டு விடலாம் என்று சங்கதி
அவை அவசியம் அனுஷ்ட்டிக்க வேண்டியவை என்று ஸ்தாபிக்கப் போவதால்
கூறியது கூறல் என்ற தோஷம் இல்லை யாம் –

———————————————————————–

அதிகரணம் -161-இதர ஷபணாதி கரணம் -4-1-11-

பலன் கொடுக்கத் தொடங்காத புண்ய பாபங்களுக்கு வித்யையாலே விநாசம் சொல்லப் பட்டது
இப்போது பிராரப்த கர்மங்களுக்கு வித்யை தோன்றின சரீரத்தின் முடிவிலேயோ
பிராரப்த கார்ய சரீராந்தரத்தின் முடிவிலோ விநாசம் என்று அநியமத்தை ஸ்தாபிக்கிறார்
என்று சங்கதி –

பிராரப்த கர்மம்-பலன் தரத் தொடக்கி விட்ட கர்மங்கள்
ஒரே சரீரத்தில் முடிந்து விடும் என்னும் விதி கிடையாது என்று நிரூபிக்கப் படுகிறது –

496-போகேந த்விதர ஷபயித்வா அத சம்பத்யதே –4-1-19-

ப்ரஹ்மத்தை அடைய சரீர மாத்ரத்தால் விளம்பம் ஸ்ருதமாகையாலே
வித்யா உத்பத்தியான சரீரத்தின் முடிவிலேயே அழிகின்றன
என்று பூர்வ பக்ஷம்
இத்தை நிரசிக்கிறார்

து ஸப்தம் பூர்வ பக்ஷத்தை விலக்குகிறது
இதரே-ஆரப்த கார்யங்களான புண்ய பாபங்களை
போகேந ஷபயித்வா -பல அனுபவத்தால் போக்கடித்து
அத -பிறகு -பிராரப்த கர்ம அவசானத்தில்
சம்பத்யதே -ப்ரஹ்ம வித்தானவன் பர ப்ரஹ்மத்தை அடைகிறான் என்பதால்
ஸ்ருதியும் பிராரப்த கர்மத்தின் முடிவிலேயே மோக்ஷம் என்று கூறுகிறது

புண்ய பாபங்கள் எவ்வளவு சரீரங்களாலே அனுபவிக்கத் தக்கனவோ அவ்வளவு சரீரங்களைப் பரிக்ரஹித்து
புண்ய பாபங்களை அனுபவித்துத் தீர்த்த பின்னரே முக்தனாகிறான் என்று கருத்து –

பிராரப்த கர்மங்களின் பலன்கள் பல சரீரங்கள் எடுத்த பின்னரே கழியுமானால்-
அந்த சரீரங்களின் முடிவில் ப்ரஹ்மத்தை அடைகிறான் –

தஸ்ய தாவதேவ சிரம் யாவந்த விமோஷ்ய-என்பதால்
பிராரப்த கர்மாக்கள் முடிந்த பின்னரே ப்ரஹ்மத்தை அடைகிறான் –

—————————

இப்பாத அதிகரண பொருள்களை ஒரே ஸ்லோகத்தால் ஸ்வாமி தேசிகன் அருளிச் செய்கிறார் –

அதிகரணம் -1-ஆவ்ருத்யதிகரணம் -ப்ரஹ்ம வித்ய உபாசனம் அடிக்கடி செய்ய வேண்டும்
அதிகரணம் -2-ஆத்மத்வோபாஸ நாதிகரணம்—அஹம் ப்ரஹ்மாஸ்மி என்று உபாஸிக்க வேண்டும் –
அதிகரணம் -3- ப்ரதீகாதி கரணம் –ப்ரதீகங்களான மனம் முதலியவற்றில் அஹம் மன -என்று உபாஸிக்கக் கூடாது –
அதிகரணம் -4-ஆதித்யாதிமத்யதிகரணம் -உத்கீதத்தில் ஆதித்யாதி த்ருஷ்டி செய்ய வேண்டும்
அதிகரணம் -5-ஆஸி நாதி கரணம் —ஆசனத்தில் வசதியாய் அமர்ந்தே உபாஸிக்க வேண்டும்
அதிகரணம் -6-ஆப்ரயாணாதி கரணம் -வித்யா யோனியான சரீரம் உள்ளதனையும் தினமும் இடைவிடாது சிந்திக்க வேண்டும்
அதிகரணம் -7-ததிகமாதிகரணம் -வித்யையின் மஹிமையால் பூர்வ உத்தர ஆகங்களுக்கு அஸ்லேஷ விநாசம் என்றும்
அதிகரணம் -8-இதராதிகரணம்–ஸ்வர்க்காதி சாதனமான புண்யத்துக்கும் அஸ்லேஷ விநாசங்கள் கூடும்
அதிகரணம் -9-அநாரப்த கார்யாதிகரணம்–பிராரப்த கர்மாக்களுக்கு போகத்தாலேயே நாசம்
அதிகரணம் -10-அக்னிஹோதராத்ய திகரணம்-வர்ணாஸ்ரம தர்மங்கள் அவஸ்யம் அநுஷ்டேத்யத்வம்
அதிகரணம் -11-இதர ஷபணாதி கரணம் –ப்ராரப்த்த கர்மத்தின் முடிவில் மோக்ஷம் என்றும்

——————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஸ்ருதி பிரகாசர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ போதாயனர் -வ்ருத்தி காரர் – ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பாதராயணர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பாஷ்யார்த்த தீபிகை — மூன்றாம் அத்யாயம் — நான்காம் பாதம் —

November 26, 2021

ஸ்ரீ பாஷ்யம் -மங்கள ஸ்லோகம்

அகில புவன ஜன்ம ஸ்தேம பங்காதி லீலே
விநத விவித பூத வ்ராத ரக்ஷைக தீஷே
ஸ்ருதி சிரஸி விதீப்தே ப்ருஹ்மணி ஸ்ரீ நிவாஸே
பவது மம பரஸ்மின் சேமுஷீ பக்தி ரூபா –

பாராசார்ய வச ஸூதாம் உபநிஷத் துக்தாப்தி மத்யோத் த்ருதாம்
சம்சாராக்னி விதீபன வ்யபகாத ப்ராணாத்மா சஞ்சீவி நீம்
பூர்வாச்சார்ய ஸூரஷிதாம் பஹூ மதி வ்யாகாத தூரஸ்தி தாம்
ஆ நீதாம் து நிஷாஷரை ஸூ மனஸோ பௌமா பிபந்து அந்வஹம்–

—————————————————————-

சாதனா அத்யாயம்–அங்க பாதம் –
கர்மங்கள் அனைத்தும் கைவிடத் தக்கது என்ற வாதம் தள்ளப்பட்டு
அனைத்தும் கொள்ளத் தக்கதே என்று நிரூபிக்கப் படுகிறது

மேலும் ப்ரஹ்ம வித்யைக்கு அங்கமாக உள்ளவற்றையும் பற்றி கூறப்படுகிறது

இதில் 15 அதிகரணங்களும் 50 ஸூத்ரங்களும் உள்ளன-

————————————————————————–

அதிகரணம் -1-புருஷார்த்தாதி கரணம் -20 ஸூத்ரங்கள் –
கர்மத்தை அங்கமாக கொண்ட ப்ரஹ்ம உபாசனை மூலம் மோஷம் என்னும் புருஷார்த்தம் கிட்டுவதாக நிரூபிக்கப் படுகிறது-

அதிகரணம் -2- ஸ்துதி மாத்ராதிகரணம் – 2 ஸூத்ரங்கள்-
சாந்தோக்யம் -1-1-3-ச ஏஷ ரஸா நாம் ரசதம -என்றது உத்கீதம் புகழ மட்டும் அல்ல -விதி வாக்யம் என்று நிரூபிக்கப் படுகிறது

அதிகரணம் -3- பாரிப்லவாதி கரணம் – 2 ஸூத்ரங்கள்–
கௌஷீ தகீ உபநிஷத் -3-10-சாந்தோக்யம் -6-1-1-போன்றவற்றில் காணப்படும் சிறு கதைகள்
அங்கு விதிக்கப்படும் வித்யைகளைப் புகழ் வதற்காகவே என்று நிரூபிக்கப் படுகிறது

அதிகரணம் -4- அக்நீந்த நாத்யாதி கரணம் -1 ஸூத்ரம்–
சன்யாசிகளுக்கு ப்ரஹ்ம உபாசனம் செய்யும் பொழுது அக்னி ஹோத்ரம் போன்றவை
எதிர் பார்க்கப் படுவது இல்லை என்று நிரூபிக்கப் படுகிறது –

அதிகரணம் -5-சர்வ அபேஷாதி கரணம் –1 ஸூத்ரம்–
கிருஹஸ்தாச்ரமத்தில் உள்ளோர்க்கு யஜ்ஞம் போன்றவற்றை ப்ரஹ்ம உபாசனம் எதிர்பார்க்கின்றது -என்று நிரூபிக்கப் படுகிறது –

அதிகரணம் -6- சம தமாத்யாதிகரணம் –1 ஸூத்ரம்–
க்ருஹஸ்ரமத்திலுள்ள ப்ரஹ்ம ஞானிக்கும் சமம் தமம் ஆத்ம குணங்கள் கைக் கொள்ளத் தக்கவை என்று நிரூபிக்கப் படுகிறது –

அதிகரணம் -7-சர்வ அன்ன அநுமத்யதிகரணம் –4–ஸூத்ரங்கள்–
பிராண வித்யை கூடின ஒருவனுக்கு உயிர் போகும் நேரத்தில் மட்டுமே அனைத்து வித உணவும்
அநு மதிக்கப் படுகின்றன என்று நிரூபிக்கப் படுகிறது –

அதிகரணம் -8- விஹி தத்வாதி கரணம் —4–ஸூத்ரங்கள்–
யஜ்ஞம் போன்ற கர்மங்கள் ப்ரஹ்ம வித்யை மற்றும் க்ருஹஸ்தாஸ்ரமத்தின் அங்கமாகவே விதிக்கப் பட்டதால்
இவற்றை ப்ரஹ்ம நிஷ்டர்கள் மற்றும் கிருஹஸ்தர்கள் அனுஷ்டிக்க வேண்டும் என்று நிரூபிக்கப் படுகிறது –

அதிகரணம் -9-விதுராதிகரணம் —4–ஸூத்ரங்கள்–
எந்த ஆச்ரமத்திலும் இல்லாத விதுரர்களுக்கும் ப்ரஹ்ம விதையில் அதிகாரம் உண்டு என்று நிரூபிக்கப் படுகிறது
விதுரர் க்ருஹஸ்ராமத்தில் இருந்து மனைவியை இழந்த பின்னர் சன்யாசமோ வானப்ரச்தாமோ கைக் கொள்ளாமல் -அநாஸ்ரமி-என்பர்

அதிகரணம்-10-தத் பூதாதிகரணம் —4–ஸூத்ரங்கள்–
ப்ரஹ்மச்சாரி வானப்ரஸ்தன் சந்நியாசி ஆகியவர்கள் ஆச்ரமங்களைக் கை விட நேர்ந்தால்
ப்ரஹ்ம வித்யையில் அதிகாரம் இல்லை என்று நிரூபிக்கப் படுகிறது

அதிகரணம் -11-ஸ்வாம்யதிகரணம் –2 ஸூத்ரங்கள்–
ருத்விக்கால் -யாகம் யஜ்ஞம் போன்றவற்றை நடத்தி வைப்பவர் -உத்கீத உபாசனம் செய்யப்பட வேண்டும் என்று நிரூபிக்கப் படுகிறது

அதிகரணம் -12-சஹ கார்யந்தர வித்யதிகரணம் -3 ஸூத்ரங்கள்-
பால்யம் பாண்டித்தியம் மௌனம் ஆகியவை யஜ்ஞம் போன்ற ப்ரஹ்ம வித்யைக்கு அங்கமாக உள்ளன என்று நிரூபிக்கப் படுகிறது –

அதிகரணம் -13-அநாவிஷ்கராதி கரணம் –1 ஸூத்ரம்–
பால்யம் எனபது ப்ரஹ்ம ஞானிகள் தங்கள் மேன்மைகளை வெளிக் காட்டாமல் உள்ளதே ஆகும் -என்று நிரூபிக்கப் படுகிறது

அதிகரணம் -14-ஐஹிகாதிகரணம் —1 ஸூத்ரம்–
இந்த பிறவியில் பலன்கள் அளிக்க வல்ல வித்யைகள் தடை இல்லாமல் இருந்தால் மட்டுமே உண்டாகும் –
தடை இருந்தால் உண்டாகாது என்று நிரூபிக்கப் படுகிறது –

அதிகரணம் -15-முக்தி பலாதிகரணம் –1 ஸூத்ரம்–
மோஷ பலன் அளிக்க வல்ல உபாசனங்களுக்கும் தடை ஏற்படா விடில் பலன் உடனே கிட்டும் –
தடை ஏற்பட்டால் தாமதமாகவே ஏற்படும் என்று நிரூபிக்கப் படுகிறது

————————————————————

முன் பாதத்தில் வித்யை சிந்திக்கப்பட்டது
இங்கு வித்ய அங்கமான கர்மம் சிந்திக்கப்படுகிறது
என்று பாத சங்கதி

இவ்வதி கரணத்தில் கர்மங்களுக்கு வித்ய அங்கத்வம் ஸித்திக்க வித்யைக்கு அங்கித்வம் ஸாதிக்கப் படுகிறது
என்று அதிகரண சங்கதி
அல்லது
முன் பாத இறுதி அதிகரணத்தில் உத்கீத வித்யைக்குத் தனிப் பலம் கூறி புருஷார்த்த சாதகத்வம் கூறப்பட்டது
இப்போது வித்யைக்கு பலம் இருப்பதால் புருஷார்த்தம் ஸாதிக்கப் படுகிறது
என்று சங்கதி –

அதிகரணம் -109-புருஷார்த்தாதி கரணம் -3-4-1-
கர்மத்தை அங்கமாக கொண்ட ப்ரஹ்ம உபாசனை மூலம் மோஷம் என்னும் புருஷார்த்தம் கிட்டுவதாக நிரூபிக்கப் படுகிறது-

ஸூத்ரம் -417-புருஷார்த்த அத சப்தாத் இதி பாதராயண –3-4-1-

ப்ரஹ்ம வித்யைகள் மூலம் மோஷ புருஷார்த்தம் ஏற்படுகிறது என ஸ்ருதிகள் கூறுவதால் –
என்று பாதராயணர் கருதுகிறார் –

வித்யையினால் புருஷார்த்தம் ஸித்திக்கிறதா
அன்றி கர்மாவினாலா -என்று சம்சயம்
கர்மாவினால் தான் என்று பூர்வ பக்ஷம்
ஏன் எனில்
வித்யா கர்மாவின் அங்கமானது என்பதால்
கர்மாவைச் செய்யும் பிரத்யகாத்மாவின் உண்மை ஸ்வரூபமே ஸ்ருதி ப்ரதிபாத்யம் யாகையாலும்
யதேவ வித்யயா கரோதி -என்று வித்யா சாமான்யம் கர்ம அங்கமாகக் கூறப்படுவதால்
வித்யை கர்ம அங்கம் என்பதாம் –
இந்தப் பூர்வ பக்ஷத்தைப் பின்னால் ஆறு ஸூத்ரங்களால் கூறப் போகிறவராய்
முதலில் ஸித்தாந்தத்தைக் கூறுகிறார் –

புருஷார்த்த அத சப்தாத் இதி பாதராயண
அத-வித்யையாலே
புருஷார்த்த-மோக்ஷம் ஸாதிக்கப்படுகிறது
இதி பாதராயண-என்று பாதாரயனார் கூறுகிறார்
சப்தாத்-ப்ரஹ்ம விதாப் நோதி பரம்
வேதாஹா மேந்தம் புருஷம் மஹாந்தம் ஆதித்ய வர்ணம் தமஸ-புரஸ்தாத் தமேவம் வித்வான் அம்ருத இஹ பவதி
என்று வித்யையால் புருஷார்த்த ஸித்தி என்று ஸப்தம் கூறுவதால்
என்றபடி –

தைத்ரிய ஆனந்த வல்லி -2-1- ப்ரஹ்ம விதாப் நோதி பரம் -என்றும்

ஸ்வேதாச்வதர உபநிஷத் -3-8-வேதாஹா மேந்தம் புருஷம் மஹாந்தம் ஆதித்ய வர்ணம் தமஸ-
புரஸ்தாத் தமேவம் வித்வான் அம்ருத இஹ பவதி நான்ய பந்தா அயநாய வித்யதே -என்றும்

முண்டக உபநிஷத் -3-2-8-யதா நன்ய ச்யந்த மாநா சமுத்ரே அஸ்தம் கச்சந்தி நாம ரூபே விஹாய ததா வித்வான்
நாம ரூபாத் விமுக்த பராத் பரம் புருஷம் உபைதி திவ்யம்

அடுத்து உள்ள ஆறு ஸூத்ரங்கள் பூர்வ பஷ ஸூத்ரங்கள்-

அடுத்த 13 ஸூத்ரங்கள் இவற்றை தள்ளி சித்தாந்த நிரூபண ஸூத்ரங்கள்

——————————————————————————-

418-சேஷத்வத் புருஷார்த்த வாத யதா அன்யேஷூ இதி ஜைமினி —3-4-2-

யாகத்தின் -கர்மத்தின் -சேஷமாக-தொண்டு செய்வதாக மட்டுமே வித்யைகள் உள்ளதால்
அவன் பலன் அளிக்கின்றன என்று கூறுவது புகழ்ச்சிக்கு மட்டுமே

இவை அர்த்த வாதமே –
யாகங்களில் பயன்படுத்த படும் மற்ற உபகரணங்கள் போன்று உள்ளவையே என்று ஜைமினி கூறுகிறார்

சேஷத்வத் -வித்யை ஆத்ம ஸம்ஸ்காரமாதலின் -ஆத்மாவுக்கு சேஷமாகையால்
தத்வம் அஸி -என்று ஜீவனுக்கும் ப்ரஹ்மத்துக்கும் சாமானாதி கரணியம் உள்ளதால்
ப்ரஹ்மத்துக்கு கர்மாவைச் செய்பவன் என்ற முறையால் ஜீவாத்மா பேதம் தோன்றுகையால்
ஆத்மா ஞாதவ்யன் என்றால் வ்ரீஹ் யாதிகளுக்கு ப்ரோக்ஷணம் சேஷமாவது போல்
வித்யையும் ஆத்ம ஸம்ஸ்காரகம் என்பதாக ஆத்மாவின் சேஷம் என்பது பலிக்கிற படியால்
கர்ம சேஷமான ஆத்மாவை த்வாரமாகக் கொண்டு கர்ம சேஷமாகையால் என்றபடி –
புருஷார்த்த வாத -ப்ரஹ்ம விதாப்னோதி பரம் -என்று பல ஸ்ருதி அர்த்த வாதம் மட்டுமே
எங்கனே எனில்
யதா அன்யேஷூ இதி ஜைமினி-பூர்வ மீமாம்ஸையில் ஜைமினி த்ரவ்ய குண ஸம்ஸ்கார கர்மாக்களில்
தனியே பல ஸ்ருதி இருந்தால் அது அர்த்த வாதமே என்று அருளினார்
அதே போல் புருஷார்த்த ஸ்ருதியும் அர்த்தவாத மாத்திரமே என்பதாம் –
ஆகையால் வித்யை க்ரது சேஷை யாதலின் வித்யையால் புருஷார்த்தம் ஸித்திக்காது –

ப்ரஹ்ம விதாப் நோதி பரம் -என்று
உயர்ந்த பலனை அடைகின்றான் என்கிறது மோஷம் கிட்டுகிறது என்று சொல்ல வில்லை என்பர்

உடலை விட மாறுபட்டதும் நித்யமாக உள்ளதும் ஆத்மா என்று அறிந்தவனுக்கே மட்டுமே
யாகத்தில் கர்த்ருத்வம் கை கூடுகிறது

வித்யைகள் மூலமாகவே இத்தை அறிவதால் அவை யாகம் என்கிற கர்மத்துக்கு
வித்யை அங்கமாக உள்ளது

எனவே வித்யைகள் கர்மங்களின் அங்கமே –
வித்யைகள் மூலம் புருஷார்த்தங்கள் கிட்டாது –
கர்மங்கள் மூலமே என்பர் –

——————————————————————————————————

419–ஆசார தர்சநாத் —3-4-3-

ஆசார தர்சநாத்-ப்ரஹ்ம வித்துக்களின் ஆசாரமும் கர்மாவையே பிரதானமாகக் கொண்டதாகக் காணப்படுவதால்
கேகேயர் சாந்தோக்ய வாக்கியமும் -பராசரர் வாக்கியமும் கீதா வாக்கியமும் உண்டே

சாந்தோக்யம் -5-11-5-யஷ்ய மாணோ ஹவை பகவந்தோ அஹம் அஸ்மி -என்றும்

ஸ்ரீ கீதையில் -கர்மணைவ ஹி சம்சித்திம் ஆஸ்திதா ஜனகாதய -என்றும்

ஸ்ரீ விஷ்ணு புராணம் -6-6-12-இயாஜ ச அபி ஸூ பஹூன் யஜ்ஞான் ஞான வ்யபாஸ்ரைய -என்றும்

ப்ரஹ்ம ஞானிகள் கர்மத்தையே முக்கியமாக கொண்டதை சொல்லிற்று

இத்தால்
வித்யைகள் கர்மத்தின் ஸ்வரூபத்தை அறிந்து கொள்ளும் அங்கமே என்றும்
அவற்றின் மூலம் புருஷார்த்தம் கிட்டும் என்றது தவறு என்பர் –

இது லிங்கமாய் இருக்கட்டும்
அது அங்கதா விதி எப்படி என்றால் –

————————————-

420-தத் ஸ்ருதே –3-4-4-

வேத வரிகளிலும் வித்யைகள் கர்மங்களின் அங்கம் எனக் காணலாம் –

சாந்தோக்யம் -1-1-10-ய தேவ வித்யயா கரோதி ததேவ வீர்ய வத்திரம் பவதி -என்று
வித்யை யுடன் செய்யப்படும் கர்மம்
அதிக வீர்யம் உள்ளதாக மாறுகிறது-

இந்த சுருதி ப்ரகரணத்தை இட்டு உத்கீத வித்யா மாத்ர பரை -என்னலாகாது
ப்ரகரணத்தைக் காட்டிலும் ஸ்ருதி பலீயஸ் யாகையாலே
துர்ப்பலமான பிரகரணத்தைக் கொண்டு ஸ்ருதிக்குப் பாதகம் கூறக் கூடாதாதலின்
இந்த ஸ்ருதி வித்யா சாமான்யத்தைப் பற்றியதாதலின்
ப்ரஹ்ம விதியையும் கர்ம அங்கம் என்று விதிக்கப் பட்டதாயிற்று –

————————————————————————————-

421-சமன்வ ஆரம்பணாத் –3-3-5-

சமன்வ ஆரம்பணாத்-வித்யா கர்மங்களுக்கு ஒரே புருஷன் இடம் சேர்க்கை காணப்படுவதாலும்
இச்சேர்க்கையும் வித்யா கர்ம அங்கம் என்று கூறாவிடில் பொருந்தாது ஆகுமே –

ப்ருஹத் உபநிஷத் -4-4-2-தம் வித்யா கர்மணீ சமன்வார பேத -என்று
பரலோகம் செல்லும் ஒருவனை வித்யையும் கர்மமும் பின் தொடர்ந்து செல்கின்றன என்பதால்
இத்தகைய தொடர்பு வித்யை கர்மத்தின் அங்கமாக இருந்தால் மட்டுமே பொருந்தும்

—————————————————————————–

422-தத்வத விதா நாத் –3-3-6-

தத்வத -வித்யா யுக்தனான புருஷனுக்கு
விதா நாத்-கர்மாவை விதிப்பதாலும்
அதாவது -அத்யயனம் செய்தவனுக்குக் கர்மாவை விதிப்பதாலும்
அர்த்த ஞானம் வரை குறிப்பதாலும் வித்யை கர்ம அங்கமே யாகும் –

சாந்தோக்யம் -8-15-1-ஆசார்ய குலாத் வேத மதீத்ய யதா விதா நம் குரோ கர்மாதி சேஷணாபி
சமாவ்ருத்ய குடும்பே சுசௌ தேசே -என்று
வேதத்தை அறிந்தவனுக்கும் கர்மம் விதிக்கப் பட்டது –

வேத அத்யயயனம் அர்த்தங்களை அறியும் வரை செல்வதாகும் பிரபாரகர் குமாரிலபட்டர் ஆகியவர்களின் வாதம்

ஆக ப்ரஹ்ம வித்யை கர்மங்களின் அங்கமாக உள்ளதால் அதற்கு தனிப் பலன் இல்லை என்று உணரலாம்

————————————————————————————————–

423-நியமாத் –3-4-7-

ஈசாவாசய உபநிஷத் -1-2- குர்வந்நேவே ஹ கர்மாணி ஜிஜீவிஷேத் சதம் வா -என்று
நூறாண்டு காலம் கர்மம் செய்து வாழ்வதையே ஒருவன் விரும்ப வேண்டும் –
என்று பலன் கர்மம் மூலமே கிட்டுகிறது என்பதும்
வித்யை கர்மத்தின் அங்கம் என்பதும் தெளிவாகிறது –

————————————————————————————

இனி சித்தாந்தம்

424-அதிக உபதேசாத் து பாதராணஸ்ய ஏவம் தத் தர்சநாத் —3-4-8-

து-ஸப்தம் பூர்வ பக்ஷத்தை விலக்குகிறது
வித்யை கர்மாவுக்கு அங்கம் அல்ல
பாதராணஸ்ய ஏவம் –ஆனால் வித்யையால் புருஷார்த்தம் கிட்டுகிறது என்று பாதாரயணர் கருதுகிறார்
ஏன் எனில்
அதிக உபதேசாத்–கர்மா கர்த்தாவான ஜீவனை விட வேறுபட்ட பரமாத்மா அறியத் தக்கவனாக
உபதேசிக்கப் பட்டு இருப்பதால்
அவனுக்கு வேத்யம் எப்படி எனில்
தத் தர்சநாத் -பஹுஸ்யாம் என்றும் -யஸ் ஸர்வஞ்ஞ ஸர்வ வித் என்றும் –
ஏஷ ஸர்வேஸ்வர ஏஷ பூத அதிபதி -என்றும் ஸ காரணம் கரணாதி பாதிப -என்றும்
சொல்லப்பட்டு ஜீவனிடம் சம்பவிக்க முடியாத பஹு பவன ஸங்கல்பம் முதலிய குணங்களை
அறியவேண்டும் என்று உபதேசம் செய்யும் பிரகரணங்களில் காணப்படுவதால் என்றபடி –

உபாசிக்கத் தக்கவன் பர ப்ரஹ்மமே என்று –
சாந்தோக்யம் –
8-1-5-அபஹத பாபமா விஜர விம்ருத்யு விசோக விஜிகித்ச அபிபாச சத்ய காம -சத்ய சங்கல்பன் என்றும்

6-2-3-தத் ஐஷத பஹூச்யாம் பிரஜாயேயேதி தத் தேஜோ அஸ்ருஜத-என்றும்

முண்டக -1-1-9-ய சர்வஜ்ஞ சர்வவித் -என்றும் –

ஸ்வேதாச்வதர உபநிஷத் -பராஸ்ய சக்தி வித்தைவ ச்ரூயதே ஸ்வ பாவிகீ ஜ்ஞான பல க்ரியாச்ச

தைத்ரியம் -2-8-ச ஏகோ ப்ரஹ்மண ஆனந்த என்றும் யதோ வாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய மனஸா சஹ
ஆனந்தம் ப்ராஹ்மணோ வித்வான் ந பிபேதி குதச்ச நேதி-என்றும்

ப்ருஹத் உபநிஷத் -4-4-22-ஏஷ சர்வேஸ்வர ஏஷ பூதாதிபதி ரேஷ பூதபால ஏஷ சேது விதரண -என்றும்

ஸ்வேதாச்வதர உபநிஷத் -6-9-ச காரணம் கரணாதிபாதிபோ ந ச அஸ்ய கச்சித் ஜனிதா ந ச அதிப -என்றும்

ப்ருஹத் உபநிஷத் -3-8-9-ஏதஸ்ய வா அஹரச்யபிரசாசனே கார்க்கி ஸூ ர்யா சந்திர மசௌ வித்ருதௌ திஷ்டத -என்றும்

தைத்ரிய உபநிஷத் -2-8-பீஷாஸ்மாத் வாத பவதே பீஷோ தேதி ஸூர்ய பீஷாஸ்மாத் அக்னிச்ச இந்த்ரச்ச ம்ருத்யூர் தாவதி பஞ்சமா -என்றும்

பரம புருஷ உபாசனை எனப்படும் வித்யையின் பலமே மோஷம் புருஷார்த்தம் கிட்டுகிறது –
இத்தால் அடையாள வாக்யங்கள் தள்ளப் படுகின்றன –

——————————————————————————————

425-துல்யம் து தர்சனம் –3-4-9-

வித்யைகள் கர்மங்களின் அங்கங்கள் அல்ல என்றும் கூறப் படுகின்றன –

வித்யையே பிரதானம் என்கிற பக்ஷத்திலும் ப்ரஹ்ம வித்துக்கள் ஆசாரம் ஸமமாகவே காணப்படுகிறது என்பதாம்
இதனால் கர்மாவை அனுஷ்டிக்காத நிலையும் காணப்பட்டு இருப்பதால்
கர்ம அனுஷ்டானத்தைக் கண்டு இருப்பது நிலையானது அல்ல –
எவ்விடம் என்றால்
காவிஷேயர் என்னும் ரிஷிகள் கேட்க்கும் சுருதியில்

கௌஷீதகீ உபநிஷத் -3-2-6-ருஷய காவஷேயோ கிமர்த்தா வயம் யஷ்யாமகஹே கிமர்த்தா வயம் யஷ்யாமகஹே-என்று
காவேஷயர் போன்ற முனிவர்கள் எதற்கு வேத அத்யயனம் செய்ய வேண்டும் என்று
இரு முறை கேட்டதால் கர்மங்கள் கை விட்டதையும் காணலாம்

இரண்டும் முரண் படுவதால் எப்படிக்கூடும் என்னில்
பலனை எதிர்பாராமல் செய்யப்படும் கர்மங்கள் ப்ரஹ்ம வித்யைக்கு அங்கமாகும் –
ஆகவே செய்யத்தக்கது
பலனை எதிர்பார்த்து செய்யும் கர்மங்கள் ப்ரஹ்ம ஞானிக்கு விரோதங்கள்
ஆகவே விடத்தக்கது

————————————————————-

426-அசர்வத்ரீகீ —3-4-10-

சாந்தோக்யம் -1-1-10-யதேவ வித்யயா கரோதி–ததேவ வீர்ய வத்தரம் பவதி என்று –
யத் கரோதி என்னாமல் -ய -என்று
முன் -1-1-10-உத்கீதம் உபாசீத -என்பதைக் குறித்தே சொல்லப் பட்டது
பொதுவாக இல்லை-

யதேவ வித்யயா கரோதி–ததேவ வீர்ய வத்தரம் பவதி–என்ற ஸ்ருதியானது கர்ம அங்கத்தை விதிக்கிறது
என்பது பொருத்தம் அற்றது
இங்கு வித்யா ஸப்தம்
ந அசர்வத்ரீகீ-எல்லா வித்யைகளையும் பொதுப்படக் குறிப்பது அல்ல –
உத்கீத வித்யைக்கு மட்டுமே பொருந்துவது
எப்படி எனில்
யத் கரோதி –தத் வித்யயா என்று அந்வயிக்காமல் சுருதியில் உள்ளபடியே அந்வயிக்க வேண்டும்
இவ்வன்வயத்தில் வித்யையால் செய்யப்படும் க்ரதுவுக்கு வீர்யவத் தரத்வம் ஏற்படுவதால் சாதன பாவம் தோன்றுவதால்
யதேவ என்று ப்ரஸித்த வந் நிர்தேசத்தாலும்
உத்கீதம் உபாஸீத என்று பக்கத்தில் உள்ள உத்கீத வித்யா பிரஸித்தியாலும்
எல்லா வித்யைகளையும் குறிப்பது அல்ல இந்த வித்யா ஸப்தம் என்பதாம் –

——————————————————————————————————————————————————–

427- விபாக சதவத்-3-4-11-

ப்ருஹத் உபநிஷத் -4-4-2-தம் வித்யா கர்மணீ சமன்வார பேத –
பரமபதம் செல்வனை தொடர்ந்து வித்யையும் கர்மமும் செல்கின்றன என்கிறது –

வித்யை அதன் பலனை பெறுவதற்காக பின் செல்கிறது
கர்மம் தனது பலனை அடைய பின் செல்கிறது-

விபாக-தம் வித்யா கர்மணீ சமன்வார பேத -என்ற ஸ்ருதியில்
வித்யை தன் பல பிரதானத்திற்காகவும்
கர்மமும் ஸ்வ பல பிரதானத்திற்காகவும்
புருஷனைச் சேர்க்கிறது என்று பகுத்து அறிய வேண்டும் –
ஆகவே ஒவ்வொன்றுக்கும் பலம் வேறு என்பதால் வித்யை கர்ம அங்கம் அல்ல என்பதாம்
இந்த ஸ்ருதி ஸம்ஸாரிகமான வித்யா கர்மங்களை பற்றியது அல்லது
ப்ரஹ்ம வித்யை அதன் அங்கமான கர்மம் பற்றியது என்று கொண்டாலும்
வித்யை யானது -நேஹா பிக்ரம நாசோ அஸ்தி என்னும் நியாயத்தாலே ப்ராரப்தத்தின் முடிவில்
முக்தியைக் கொடுக்க அந்வயிக்கிறது
கர்மமும் அடுத்த பிறவியிலும் வித்யையை உபாதானம் செய்ய அந்வயிக்கிறது
சதவத் -நிலம் ரத்னம் விற்பனை செய்பவனை இரு நூறு அடைகிறது என்றால்
நிலத்துக்காக ஒரு நூறும் இரத்தினத்துக்கு ஒரு நூறும் என்று பிரிவு படுத்துவது போலே
இங்கும் அப்படியே என்று கருத்து –

——————————————————————————

428-அத்யயந மாத்ரவத்–3-4-12-

சாந்தோக்யம் -8-15-1- வேதமதீத்ய –
வேத அத்யயனம் உள்ளவனுக்கே கர்மம் விதிக்கப் பட்டதால் வித்யை கர்மத்தின் அங்கம் அல்ல

அர்த்த ஞானம் கர்மத்தின் அங்கம் ஆகாது -அத்யயன விதி அர்த்த ஞானத்தை ஏற்படுத்தும்
அர்த்த ஞான ரூபமாக உள்ள ப்ரஹ்மத்தின் ஸ்வரூபம் அறிதல்
மோஷ சாதனம் -த்யானம் உபாசனம் போன்றவற்றால் கூறப்படுவதும்
புருஷார்த்தமாக உள்ளதை அடைய உதவும் ப்ரஹ்ம வித்யையும் வெவ்வேறே ஆகும்-

அத்யயந மாத்ரவத்-அத்யயனம் மட்டும் செய்துள்ள புருஷனுக்கே கர்மம் விதிக்கப் படுகையால்
வித்யை கர்மாவுக்கு அங்கம் அல்ல
ஏன் எனில்
ஆதான விதியானது அடுத்த க்ரதுவைக் குறிக்காமல் அக்னி ஆதானத்தை மட்டும் குறிப்பது போலே
அத்யயன விதியும் அக்ஷர ராசிகளை க்ரஹிப்பது என்ற பொருளோடு முடிவடைகிறது –
கற்றுக் கொண்ட அத்யயனம் பலனுள்ள அர்த்தத்தைப் போதிப்பதாகக் கண்டு இருப்பதால்
அதில் நிர்ணயம் ஏற்பட அத்யயனம் செய்தவன் மீமாம்ஸையைக் கேட்கத் தானே ஈடுபடுகிறான்
அத்யயனத்தை விதித்தது அர்த்த ஞானம் வரை பயன் உள்ளதாயினும்
அர்த்த ஞானத்தை விட வேறாயும் நம்பிக்கையுடன் ஆவ்ருத்தி செய்யப்படுவதுமான
ப்ரஹ்ம வித்யை உபாஸீத முதலிய ஸாஸ்த்ரங்களால் விதிக்கப் படுகிறது –
ஆகையால் அதீத்ய ஸ்னாயாத் -என்பதை மட்டும் கொண்டு வித்யை கர்மாவுக்கு அங்கம் என்ன ஒண்ணாது –

ஆகவே ப்ரஹ்ம வித்யை கர்மத்தின் அங்கம் ஆகாது

————————————————————————————-

429-நா விசேஷாத் –3-4-13-

ஈசாவாஸ்ய -1-2- குர்வன்நேவேஹ கர்மாணி -கர்மங்களை மட்டும் இயற்று –
ந அவிசேஷாத்-விசேஷமான காரணம் ஏதும் இல்லை

ஜனகர் போன்றவர் கர்மம் மூலம் சித்தி பெற்றனர் என்றது
முக்தி அடையும் வரை உபாசனம் செய்ய வேண்டும் என்பதற்கே —

ந -குர்வன்நேவேஹ கர்மாணி -என்று ப்ரஹ்மத்தின் ஆயுஸ்ஸுக்கு கர்மங்களில் நியமேன
விநியோகம் காட்டப்படுவது தவறு
அவிசேஷாத்-வித்வானுக்கே என்று விசேஷம் ஏதும் இல்லாமையால் -என்றபடி
ஆனால் அவித்வான்கள் பற்றியது
வித்வானுக்கு பிரயாணம் வரை உபாஸனா ஆவ்ருத்தி காணப்படுவதால் அர்த்த ஸ்வ பாவத்தால்
இது அவித்வான்களைப் பற்றியது என நிச்சயிக்கப் படுகிறது
அல்லது
அவிசேஷாத்-ஸ்வ தந்திரமான கர்மத்தில் தான் வித்வத் ஆயுஸ்ஸுக்கு விநியோகம் என்கிற விஷயத்தில்
விசேஷமான ஹேது ஒன்றும் இல்லாமையால் என்றபடி
பிரகாரணத்தினாலும் கர்மா வித்யைக்கு அங்கம் என்று புலப்படுகிறது –
ஆகவே வித்யை கர்ம அங்கமானது அல்ல –

——————————————————-

430-ஸ்துதயே அநு மதிர் வா —3-4-14-

வித்யையை புகழும் பொருட்டே கர்மங்களை எப்பொழுதும் செய்ய வேண்டும் என்றது
வா -பதம் -ஏவ என்னும் பொருளில் -உறுதியாக கூறுவதை சொல்கிறது

ஈசாவாஸ்யம் இதம் சர்வம் ஈ சேந ஆவாஸ்யம் -ஸர்வமும் ஈசனுக்குப் பரதந்த்ரம்
இது வித்யா பிரகரணமாதலின் வித்யையின் ஸ்துத்யர்த்தமாகவே -எப்போதும் கர்ம அனுஷ்டானத்துக்கு அனுமதியே –
வித்யா மஹாத்ம்யத்தாலே எப்போதும் கர்மா அனுஷ்டானம் செய்த போதிலும்
அந்த கர்மத்தாலேயே லேபம் அடைய மாட்டான் என்று வித்யை போற்றப்பட்டதாயிற்று

மேலும் ந கர்மணா லிப்யதே நர -என்ற வாக்ய சேஷமும் வித்வானுக்கு கர்ம லேபம் இல்லை என்று கூறுகிறது
நரமதே இதி நர -சங்கம் அற்றவன் என்றபடி
நரனான உன்னிடம் கர்மா ஓட்டுவது இல்லை என்று பொருள் –

ஈசாவாஸ்ய உபநிஷத் -1-1- ஈசாவாஸ்யம் இதம் சர்வம் -என்று தொடங்கிய பிரகரணம்
வித்யைப் பற்றி தொடர்ந்து கூறுகிறது

இந்த வித்யை உள்ளவனுக்கு கர்மம் ஒட்டாது என்றும்
வாழ் நாள் முழுவதும் இயற்றினாலும் ஒட்டாது என்பதால் அனுமதிக்கிறது

இதன் பிற்பகுதி -ஏவம் த்வயி நாந்யதே தோஸ்தி ந கர்ம லிப்யதே நரே-
கர்மங்கள் ஓட்டுவது இல்லை –

ஆகவே வித்யைகள் கர்மங்களின் அங்கம் அல்ல

—————————————————————————

431-காம காரேண ச ஏகே-3-4-15-

ஏகே-சில சாகை காரர்களும்
காம காரேண ச –யதேச்சையாக வித்யா நிஷ்டனுக்கு கார்ஹஸ்த்ய த்யாகத்தைச் சொல்கின்றனர்
இது ப்ரஹ்ம வித்யைக்குப் பிரதானத்தைக் காட்டவே

ஆகவே வித்யை கர்ம அங்கம் இல்லை –

க்ருஹஸ்த தர்மத்தை கை விடலாம் என்பர் சிலர்

ப்ருஹத் -4-4-22-கிம் பிரஜயா கரிஷ்யாமோ ஏஷாம் நோயமாத்மா அயம் சோக -என்று
பிள்ளைகள் மூலம் அடையப் படும் உலகாக பரமாத்மாவே எங்களுக்கு உள்ள போது
பிள்ளைகளைப் பெற்று என்ன செய்யப் போகிறோம்-

எனவே வித்யை கர்மத்தின் அங்கம் அல்ல –

————————————————————————————————————————————

432-உபமர்த்தம் ச–3-4-16-

கர்மங்கள் ப்ரஹ்ம வித்யை மூலம் அழிக்கப் படுகின்றன –

முண்டகம் -2-2-8-பித்யதே ஹ்ருதய க்ராந்தி-சித்யந்தே சர்வ சம்சய –
ஷீயந்தே ச அஸ்ய கர்மாணி தஸ்மின் த்ருஷ்டே பராவரே —

வித்யை கர்மத்தின் அங்கமாக இருந்தால் இப்படி கர்மங்கள் அழிப்பது பொருந்தாது

——————————————————————————————————————

433-ஊர்த்வரே தஸ் ஸூச சப்தே ஹி–3-4-17-

ஊர்த்வரே தஸ்ஸூக்களான -ஆஸ்ரமங்களில் ப்ரஹ்ம வித்யை காணப்படுகிறதே –
அக்னி ஹோத்ராதி கர்மாக்கள் இல்லையே
எனவே வித்யை கர்மாவுக்கு அங்கம் இல்லை

சந்யாசிகளுக்கும் ப்ரஹ்ம வித்யை கூறப்படுவதை காண்கிறோம் –
அக்னி ஹோத்ரம் தர்ச பூர்ண மாச கர்மாக்கள் அவர்களுக்கு இல்லையே

ஆபஸ்தம்ப ஸ்ரௌதம் -3-14-8- யாவத் ஜீவம் அக்னி ஹோத்ரம் ஜூ ஹோதி –
சன்யாசம் வாழ்க்கை நெறி இல்லை என்பர்
பூர்வ பஷி ஆனால்

சாந்தோக்யம் -2-3-21-த்ரயோ தர்மஸ்கந்தா-தர்மத்தை மூன்று மார்க்கங்கள் நிலை நிறுத்துகின்றன
அதாவது
யஜ்ஞம் அத்யயனம் தானம் கொண்ட க்ருஹதாஸ்ரமம் -தவம் கொண்ட சன்யாசம் =ப்ரஹ்மசர்யம்

சாந்தோக்யம் -5-10-1-ஏ சேமே அரண்யே ஸ்ரத்தா தப இதி உபாசதே

ப்ருஹத் 4-4-22-ஏவம் ஏவ பிரவ்ராஜி நோ லோகம் இச்சந்த பிரவ்ரஜந்தி

ஆக சன்யாசம் குறித்து வைராக்கியம் இல்லாதவர்களுக்கு கர்மம் செய்ய வேண்டும் என்று கூறப்பட்டன

———————————————————————————————————————————

434-பராமர்சம் ஜைமினி அசோத நாத் ச அபவததி ஹி –3-4-18-

த்ரயோ தர்மஸ்கந்தா–முதலியவற்றில் அந்த ஆஸ்ரமங்களுக்கு
அசோத நாத் –விதி இல்லாமையால்
பராமர்சம் ஜைமினி-உபாசனத்தின் ஸ்துதிக்காக அந்த ஆஸ்ரமங்களை
அனுவாதமே செய்துள்ளது என்று ஜைமினி கருதுகிறார்
மேலும்
அபவததி ஹி -வீரஹா வா ஏஷ தேவா நாம் யோ அக்னிம் உத்வாசயதே -என்று
ஸ்ருதி ஆஸ்ரமங்களைத் தூஷிக்கிறது

அநு வாதம் மட்டுமே –
உணர்த்தியதை மீண்டும் உணர்த்துதல் -விதிக்கப்பட வில்லை மறுத்து கூறுகிறது

பூர்வ பஷி த்ரயோ தர்மசகந்தா என்று
சன்யாச ஆஸ்ரமம் ஏற்கப் பட்டதை ஒத்துக் கொள்ள மாட்டார்கள்

உபாசனையை புகழ்வதற்கே இப்படி சொல்வதாக சொல்வார்கள் –

தைத்ரிய சம்ஹிதையில் -1-5-2- வீர ஹாவா ஏஷ தேவா நாம் யோ அக்னிம் உத்வாசயதே -என்று
அக்னி தர்மத்தை கை விடுகிறவன் வீரனைக் கொன்ற பாபத்தை அடைகிறான் என்கிறது

எனவே சன்யாச ஆஸ்ரமம் நிலையே இல்லை என்பர் ஜைமினி

—————————————————————————————————————————

436-அனுஷ்டேயம் பாதராயண சாம்ய ஸ்ருதே–3-4-19-

அனைத்து ஆஸ்ரமங்களும் கடைப் பிடிக்கத் தக்கதே –
அனைத்தும் கூறப்படுவதால் -பாதராயணர் இப்படியே கருதுகிறார்

த்ரயோ தர்மஸ்கந்தா என்று மூன்றையும் பொதுவாக சொல்வதால் –

பாதராயண சாம்ய ஸ்ருதே–க்ருதாஸ்ரமம் போலவே பிற ஆஸ்ரமங்களும் அனுஷ்ட்டிக்கத் தக்கும் என்று வியாசர் திரு உள்ளம்
ஸமமாகவே ஸ்ருதி சொல்வதால்
எல்லா ஆஸ்ரமங்களுக்கும் ப்ரஹ்ம நிஷ்டை உண்டே என்று ஸ்ருதிகள் உண்டே
அனுவாதத்தால் சிலவற்றுக்கு விதேயம் இல்லை என்றால் க்ருதாஸ்ரமத்துக்கும்
அவ்வாறே கொள்ள வேண்டி இருக்குமே –

சாந்தோக்யம் -2-23-1-ப்ரஹ்ம சம்ஸ்தோ அம்ருதத்வமேதி –
ப்ரஹ்மத்தை அடைந்தவன் இறவாமை அடைகிறான் -என்று
ப்ரஹ்மத்தில் ஈடுபட்டு நிலையாக இருத்தல் அனைத்து ஆச்ரமங்களுக்கும் பொருந்தும்

ப்ரஹ்மத்தில் நிலை நிற்காமல் ஆஸ்ரம தர்மங்களை மட்டுமே செய்பவர்கள் பிரம லோகம் போன்றவற்றை அடைகிறார்கள்

ஸ்ரீ விஷ்ணு புராணம் –
1-6-34-பிரஜாபத்யம் ப்ராஹ்மணானாம் -என்று தொடங்கி-

1-6-37-ப்ராஹ்மம் சந்நியாசினாம் ஸ்ம்ருதம் -என்றும்

1-6-38-ஏகாந்தின சதா ப்ரஹ்ம த்யாயினோ யோகினோ ஹி யே தேஷாம் தத் பரமம் ஸ்தானம் யத்வை பஸ்யந்தி ஸூர்ய-என்றும்

சாந்தோக்யம் -5-10-1- யே சேமே அரண்யே ஸ்ரத்தா தப இதி உபாசதே

ஆக மற்றை ஆஸ்ரமங்களை கடைப்பிடிக்க வேண்டும் என்றதாயிற்று –
அனைத்தும் விதிகளே
அனுவாதம் மட்டும் அல்ல

—————————————————————————

3-4-20-விதிர் வா தாரணவத்-

விதிர் வா –வா -சப்தம் உறுதியைக் காட்டுகிறது -சர்வ ஆஸ்ரமங்களுக்கும் விதியே கூறத்தக்கது
தாரணவத் –யதா தஸ்தாத் சமிதம் தாரயன -என்று அனுவாதம் போன்ற வாக்யத்திலும்
உபரி தாரணம் பிராப்தம் இல்லாததால் அதற்கு விதி என்று ஒப்புக் கொள்வது போல்
ஆஸ்ரமங்களுக்கும் விதி சித்தமே –

ஜாபால ஸ்ருதியில்
ப்ரஹ்மசர்யம் சமாப்ய க்ருஹீபவேத் க்ருஹாத்வாநீ பூத்வா ப்ரவ்ரஜேத் யதிவேததரா ப்ரஹ்மசார்ய தேவ
ப்ரவ்ரஜேத் க்ருஹாத்வா வநாத்வா யதஹரேவ விரஜேத் ததஹரேவப்ரவ்ரஜேத்-என்று
எப்பொழுது வைராக்கியம் விரக்தி உண்டாகிறதோ அப்பொழுது சன்யாசம் கொள்ளக் கடவன் என்றது

ஆக ப்ரஹ்ம வித்யை கர்மத்தின் அங்கம் அல்ல –
மோஷ புருஷார்த்தம் ப்ரஹ்ம வித்யையின் மூலம் கிட்டும் கர்மத்தினால் அல்ல என்று தேறுகிறது –

—————————————————————————————————————————-

அதிகரணம் -2- ஸ்துதி மாத்ராதிகரணம் –

கீழே ப்ரஹ்ம நிஷ்டனை ஸ்துதிக்க ஆஸ்ரமத்துக்கு அனுவாதத்வத்தை பூர்வ பஷமாக்கி
விதியே என்று ஸ்தாபித்தார்
இங்கும் ஸ்துதியின் ப்ரசங்கத்தாலே ரஸதமத்வத்தைக் காட்டும் வாக்யங்கள் ஸ்துதி பரங்களா
அல்லது த்ருஷ்டி விதியா என்ற சம்சயத்தால் சங்கதி –

பூர்வ பாதத்தில் உத்கீதம் பற்றிய பிரசங்கம் வந்தது
இதில் மறுபடியும் ஏன் உத்கீதம் பற்றிப் பேசப்படுகிறது எனில்
இவ்வதி கரணம் உத்கீத உபாசன பரம் என்றும்
முன் உத்கீத அதிகரணம் இங்கு ஸித்தமான உபாஸனத்தை
வராததை முன் கூட்டி எதிர்பார்த்தால் -எனும் அநாகதா வேஷண நியாயத்தாலே உப ஜீவித்து
க்ரதுக்களில் உபதான நியமம் இல்லை என்பதைச் சொல்லும் விஷய வேறுபாட்டாலே
இரண்டுக்கும் விரோதம் இல்லை –

சாந்தோக்யம் -1-1-3-ச ஏஷ ரஸா நாம் ரசதம -என்றது
உத்கீதம் புகழ மட்டும் அல்ல –
விதி வாக்யம் என்று நிரூபிக்கப் படுகிறது

3-4-21-ஸ்துதி மாத்ரம் உபாதாநாத் இதி சேத் ந அபூர்வத்வாத்–3-4-21-

ஓம் இத்யேதத் அக்ஷரம் உத்கீதம் உபாஸீத
ஓம் இத் உத்காயதி தஸ்ய உப வ்யாக்யானம்
ஏஷாம் பூதாநாம் ப்ருத்வீ ரஸ
ப்ருத்வியா ஆபோ ரஸ
அபாம் ஒவ்ஷதயயோர் ரஸ
ஓஷதீ நாம் புருஷ ரஸ
புருஷஸ்ய வாக் ரஸ
வாசா ருக் ரஸ
ருசஸ் சாம ரஸ
சாம்னா உத்கீத ரஸ
ச ஏஷ ரஸா நாம் ரஸ தம பரம பரார்த்ய அஷ்டமோ யத் உத்கீதம்
போன்ற வாக்கியங்களில் உத்கீதத்தைச் சார்ந்த த்ருஷ்டி விசேஷங்களுக்கு விதி ஏற்கத் தக்கதா
அல்லது ஸ்தோத்ரம் மட்டுமா
என்று சம்சயம்

சாந்தோக்யம் -1-1-3- ச ஏஷ ரஸா நாம் ரச தம பரம பரார்த்யோ அஷ்டமோ யத் உத்கீதம் –
எட்டாவது சுவை ப்ரஹ்மத்துக்கு ஒப்பான சுவை உத்கீதம் –

உத்கீதம் முதலானவற்றில் மிகுதியான வீர்யத்துடன் கூடிய பலன் உண்டாக
இப்படி த்ருஷ்டி விதி வாக்யம் அமைக்கப் பட்டது –

உபாதாநாத் ஸ்துதி மாத்ரம் -ஸ்தோத்ர பரமே என்று கர்ம அங்கமான உத்கீதத்தை
ரஸ தமம் என்று எல்லாம் பேசிற்று
என்றால்
இதி சேத் ந-இவ்வாறு கூறுவது தவறே
அபூர்வத்வாத்-முன் பிராப்தம் இல்லாததால் என்றபடி
ரச தமமாக இருப்பதாக பிரமாணாந்தரத்தில் பிராப்தம் இல்லாத படியால் என்றபடி –
ஸ்துதிக்காவே ஏற்பட்டவை அல்ல
உபாசன பரமே

——————————————————————————————————————

438-பாவ சப்தாத் ச-3-4-22-

உபா சீத என்று செயலைக் குறிக்கும் -விதி யுடன் கூடிய வினைச் சொல்-
எனவே இது விதி வாக்யமே என்றதாயிற்று

——————————————————————————————————————————————————-

அதிகரணம் -3- பாரிப்லவாதி கரணம் –

இதிலும் ப்ரசங்க சங்கதியே
கீழ் ரச தமத்வாதி வாக்கியங்கள் ஸ்துதி பரமே என்று பூர்வ பக்ஷம் செய்து
உபாசன பரமே என்று ஸ்தாபிக்கப் பட்டது

இதே போல் ப்ரதர்த்தனாதி வித்யைகளில் வரும் கதைகள் ஸ்துத்யர்த்தங்களா –
பாரிப்லவா ப்ரயோக அர்த்தமா என்று சம்சயம்
பாரிப்லவா ப்ரயோகம் என்பது ஸ்வரத்துடன் ருத்விக்குகள் கூறும் மனு முதலியவர்களின் கதைகள் –
பாரிப்லவா ப்ரயோக அர்த்தங்களா
வித்யா விசேஷத்தை விளக்குவதற்கானவையா
என்று சம்சயம்

கௌஷீதகீ உபநிஷத் -3-10-
சாந்தோக்யம் -6-1-1-போன்றவற்றில் காணப்படும் சிறு கதைகள்
அங்கு விதிக்கப்படும் வித்யைகளைப் புகழ் வதற்காகவே என்று நிரூபிக்கப் படுகிறது

439-பாரிப்லவ அர்த்தா இதி சேத் ந விசேஷி தத்வாத் –3-4-23-

கௌஷீதகீ -ப்ரதர்த்தநோ வை தைவோதா சிரிந்த்ரச்ய ப்ரியம் தாம உபஜகாம –
திவோ தாசனின் புத்திரன் ப்ரதர்த்தனன் என்பவன் இந்தரனின் சுகமான உலகத்தை அடைந்தான் –

சாந்தோக்யம் -ஸ்வேதகேது ஹாருணேய ஆஸ-
அருணனின் பிள்ளைக்கு பிள்ளை ஸ்வேதகேது
மனு வைவஸ்வதோ ராஜா -வைவச்வதனின் புத்ரனான மனு என்னும் ராஜா -போன்றவை
நிகழ்வுகள் ஆங்காங்கு உள்ள வித்யைகளை புகழ் வதற்காகவே –

பாரிப்லவ அர்த்தா இதி சேத் ந விசேஷி தத்வாத்
ஆக்யானாநி சம் சந்தி-என்று ஆக்யானங்களுக்கு பாரி ப்லவத்தில் விநியோகம் -பலன் -காணப்படுவதால் –
சர்வ வியாக்யானங்களும் பாரி ப்லவத்திற்கு சேஷமானவையே
பாரி ப்லவம் ஆக்யானத்தைச் சொல்பவையே யாயினும் இங்கு ஆக்யானம் பாடுவதைக் குறிக்கிறது
இப்பஷத்தை
பாரிப்லவ அர்த்தா இதி சேத் -என்று அனுவதித்து
ந -என்று அத்தை நிஷேதிக்கிறார்

சர்வ வியாக்யானங்களும் பாரி ப்லவ பிரயோகத்தில் பயன்படுபவை அல்ல
விசேஷி தத்வாத் -விநியோகம் விசேஷித்துச் சொல்லப் படுவதால்
ஆக்யா நாதி சம் சந்தி -என்று சொல்லி
அங்கேயே மனுர்வை வஸ்வதோ ராஜா என்று மன்வாதிகளில் ஆக்யானத்தை விசேஷமாகக் கூறியதால் என்றபடி –

அவ்வாக்யானங்களே பரி ப்லவ ப்ரயோகத்திற்கு உரியவை
ப்ரதர்த்தனாதி சர்வ ஆக்யானங்களுக்கும் பயன் இல்லை
அவ்வாக்யானங்கள் வித்யா விதிக்கு என்றே கருத்து –

———————————————————————————————————————————————–

440-ததா ச ஏக வாக்ய உப பந்தாத் —3-4-24-

விதி வாக்யத்துடன் கூடிய ஒரே வாக்யமாகையாலும்
ப்ருஹத் -4-5-6-ஆத்மா வா அரே த்ரஷ்டவ்ய –
ஆத்மாவைக் காண வேண்டும் ஆத்மாவே காணத் தக்கது

யஜூர் வேதம் அக்னி அழுதான்
அவன் கண்ணீர் என்பதே வெள்ளி யாகத் தோன்றிற்று

இது போன்ற வரிகள் யாக விதி யுடன் தொடர்பு கொண்டே கூறப்பட்டவை –
பாரிப்லவாம் பொருட்டு அல்ல –

——————————————————————–

அதிகரணம் -4- அக்நீ இந்தநாத்யாதி கரணம் –

ஸ்துதி பிரசங்காத் அவாந்தர சங்கதி விசேஷ மூலமாக இரண்டு அர்த்தங்கள் சிந்திக்கப் பட்டன
ஊர்த்வரே தஸ் ஸூ ச சப்தே ஹி–3-4-17-என்ற ஸூத்ரத்தில் வித்யாவான்களும் –
ஊர்த்வரேதஸ் ஸூக்களுமான ஆஸ்ரமிகள் உண்டு என்று கூறப்பட்டது

இப்போது –
ஊர்த்வரே தஸ் ஸூ க்களுக்கு யஜ்ஞாதி அதிகாரம் இல்லாமையாலே
அவற்றை அங்கமாகக் கொண்ட வித்யையும் கூடாது
என்ற பூர்வ பக்ஷத்தை
நிரஸிக்கிறார் –

சன்யாசிகளுக்கு ப்ரஹ்ம உபாசனம் செய்யும் பொழுது அக்னி ஹோத்ரம் போன்றவை
எதிர் பார்க்கப் படுவது இல்லை என்று நிரூபிக்கப் படுகிறது

441-அத ஏவ ச அக்நீ இந்த நாதி அநபேஷா –3-4-25-

சன்யாசிகள் வித்யைகள் அக்னி ஹோத்ரம் எதிர்பாராமல் உள்ளன
சாந்தோக்யம் -2-23-1-ப்ரஹ்ம சமஸ்தோ அம்ருதத்வமேதி -என்றும் –
5-10-1-யே சேமே அரண்யே ச்ரத்தா தப இத்யுபாசதே -என்று
காடுகளின் சன்யாசிகள் எந்த ப்ரஹ்த்தை உபாசிக்கின்றார்களோ

ப்ருஹத் -4-4-22-ஏதமேவ ப்ரவ்ராஜிநோ லோகமிச்சந்த ப்ரவ்ரஜந்தி -என்று
அந்த பரம் பொருளை அடைய விரும்பும் காரணத்தினால் மட்டுமே சன்யாசிகள் அனைத்தையும் துறக்கின்றார்கள் என்றும்

கட -1-2-15-யதிச் சந்தோ ப்ரஹ்மசர்யம் சரந்தி -என்றும்

சன்யாசிகளுக்கு உரிய கர்மங்கள் மட்டுமே போதும்
அக்னி ஹோத்ரம் தர்ச பூர்ண மாசம் போன்ற கர்மாக்கள் தேவை இல்லை என்றதாயிற்று –

—————————————————————————————————

அதிகரணம் -5-சர்வ அபேஷாதி கரணம் –

வித்யையானது யஜ்ஞாதிகளை அபேஷியாமல் மோக்ஷத்தை சாதிக்குமாயின்
அப்போது க்ருஹஸ்தர்களுக்கும் அது கர்மத்தை அபேக்ஷிக்காமலே மோக்ஷத்தை ஸாதிக்கட்டுமே
அப்போது யஜ்ஞாதிகளை விதிப்பதும் வீணே யாகும்
என்னும் சங்கையைப் பரிஹரிக்க
க்ருஹஸ்தர்களுக்கு யஜ்ஞாதிகளின் அபேக்ஷை சொல்லப்படுகிறது
என்று சங்கதி –

கிருஹஸ்தாச்ரமத்தில் உள்ளோர்க்கு யஜ்ஞம் போன்றவற்றை ப்ரஹ்ம உபாசனம் எதிர்பார்க்கின்றது –
என்று நிரூபிக்கப் படுகிறது –

443-சர்வ அபேஷா ச யஜ்ஞாதி ஸ்ருதே அச்வவத் —3-4-26

யஜ்ஞேன தானேன-என்று ஸ்ருதி கிருஹஸ்தர்கள் இடம் அக்னி ஹோத்ரம் போன்றவற்றை எதிர்பார்க்கும் –
குதிரைக்கு கடிவாளம் போலே

ப்ருஹத் -4-4-22–விவிதிஷந்தி -அறிய விரும்புகின்றனர் –
விருப்பத்து யஜ்ஞம் போன்றவை உபாயம் ஒழிய ப்ரஹ்ம வித்யைக்கு அங்கம் இல்லை
என்ற சங்கை வந்தால்
அப்படி அல்ல

தமேவம் வேத அநு வசநேன ப்ராஹ்மணா விவிதிஷந்தி யஜ்ஞேன தானேன தமஸா அநாசகேன-
அங்கம் தான் ஆர்வம் மூலம்

வேதனம் -ப்ரஹ்ம ஞானமும் அங்கமே –
இவற்றால் எம்பெருமானுக்கு மகிழ்வு உண்டாக்கி
உயிர் பிரியும் காலம் வரை கர்மங்கள் செய்து அவன் கடாஷத்தால் கிட்டுவதே யாகும்

அஸ்வ வத்-கமனத்துக்கு சாதனமான அஸ்வமானது ஸ்வ பரி பந்த ரூபமான பரிகரத்தை அபேக்ஷிப்பது போலே
மோக்ஷ சாதன வித்யையும் நித்ய நைமித்திக ரூப பரிகரத்தை அபேக்ஷிக்கிறது என்று
ஊர்த்வரே தஸ் ஸூக்களின் வித்யையும் அந்தவந்த ஆஸ்ரம தர்மத்தை அபேக்ஷிக்கின்றது என்று கருத்து –

ப்ரஹம ஸூத்ரம் -4-1-1-ஆவ்ருத்தி ரச க்ருதுபதேசாத் -என்றும்

ஸ்ரீ கீதை–
18-5-யஜ்ஞ தான தப கர்ம ந த்யாஜ்யம் கார்யம் ஏவ தத் யஜ் நோ தானம் தபச்சைவ பாவனானி மநீஷிணாம் -என்றும்

18-46-யத ப்ரவ்ருத்தி பூதா நாம் யேன சர்வமிதம் ததம் ஸ்வ கர்மாணா தமப்யர்ச்சைய சித்திம் விந்ததி மா நவ -என்றும் சொல்லிற்று –

———————————————————————————————————————

அதிகரணம் -6- சம தமாத்யாதிகரணம் –

கீழ் கார்ஹஸ்த்ய கர்மங்களான யஜ்ஞாதிகள் என்ன -மற்ற ஆஸ்ரம தர்மங்கள் என்ன
இவற்றுக்கு வித்யாத்வம் கூறப்பட்டது
இப்போது சாந்தோ தாந்தோ முதலியவற்றால் சமதாதிகளுக்கும் அங்கத்வம் தோன்றுவதால்
இவை க்ருஹஸ்தர்கள் இடம் கூடாது என்கிற
பூர்வ பக்ஷம் தோன்றுவதால் சங்கதி

க்ருஹஸ்ரமத்திலுள்ள ப்ரஹ்ம ஞானிக்கும் சமம் தமம் ஆத்ம குணங்கள் கைக் கொள்ளத் தக்கவை
என்று நிரூபிக்கப் படுகிறது –

444-சம தமாத் யுபேத ஸ்யாத் ததாபி து தத்விதே –ததங்க தயா தேஷாம் அபி அவஸ்ய அநுஷ்டே யத்வாத்-3-4-27-

க்ருஹஸ்தர்களுக்கு இந்திரிய வியாபார ரூபமான கர்மமே வித்யா அங்கமாக வேண்டி இருப்பதால்
இந்திரிய வியாபாரங்களில் ஒய்வு ரூபமான சமதாதிகள் –
ஊர்த்வரே தஸ் ஸூ க்கள் விஷயத்திலே வேண்டுமே ஒழிய இவர்களுக்கு வேண்டாவே
என்பது பூர்வ பக்ஷம்

கர்மங்கள் உள் வெளி இந்த்ரியங்களால் நடத்தப் படுவதால்
சமம் தமம் -இவற்றை அடக்குவது -என்பது முரண்படும்
என்பர் பூர்வ பஷி –

இதை நிரசிக்கிறார்
அப்படி அல்ல
இவற்றுடன் கூடியவர்களாகவே இருத்தல் வேண்டும் –
சம தமாத் யுபேத ஸ்யாத் -இவை உடையவனாகவே வேண்டும்
ஆயினும் யஜ்ஞாதி கர்மங்களை உடையவனே
ததங்க தயா தத்விதே –சாந்தோ தாந்த -முதலியவற்றால் வித்யா அங்கமாக
சமதாதிகளை விதிக்கையாலே என்றபடி –
மனம் ஒருமித்த சமதமதாதிகளாலேயே வித்யையின் நிறைவேற்றம் என்பதாம்

ப்ருஹத் உபநிஷத் -4-4-23-தஸ்மாத் ஏவம்வித சாந்தோ தாந்த திதி ஷூ சமாஹிதோ பூத்வா ஆத்மன்யே வாத்மானம் பச்யேத்-என்று
த்யானம் கை கூட அவசியம் –
ப்ரஹ்ம வித்யையும் கை கூட அவசியம் –

சாஸ்த்ரங்களில் விதிக்கப் பட்ட கர்மங்களை இயற்றுவதே கர்ண இந்த்ரியங்களின் பணி

சாஸ்த்ரங்களில் விதிக்கப் படாதவற்றையும் விலக்கப் பட்டவற்றையும் பிரயோஜனம் இல்லாதவற்றையும்
செய்யாமல் இருப்பதே சமம் தமம் ஆகும்

விதிக்கப் பட்ட கர்மங்கள் பகவத் ஆராதன ரூபம் –
இத்தை செய்வதால் பர ப்ரஹ்மம் மகிழ்ந்து
கடாஷம் காரணமாகவே பூர்வ ஜன்ம வாசனைகள் அழியும்

எனவே க்ருஹஸ்தாஸ்ரமத்தில் உள்ளாருக்கும் சமம் தமம் போன்ற ஆத்ம குணங்களைக்
கைக் கொள்ள வேண்டும் என்றதாயிற்று –

——————————————————————————————————————————————-

அதிகரணம் -7-சர்வ அன்ன அநுமத்யதிகரணம் –

ப்ரஹ்ம வித்துக்களை சமதாதிகள் அநுஷ்டேயங்களே என்று ஸ்தாபிக்கப் பட்டது கீழே
அங்கு போஜன நியமம் எனும் சமம் உண்டா இல்லையா என்று விசாரிக்கப் படுகிறது
என்று சங்கதி –

பிராண வித்யை கூடின ஒருவனுக்கு உயிர் போகும் நேரத்தில் மட்டுமே
அனைத்து வித உணவும் அநு மதிக்கப் படுகின்றன என்று நிரூபிக்கப் படுகிறது

445-சர்வ அன்ன அநு மதி -ச ப்ராணாத்யயே தத் தர்சநாத் –3-3-28-

சர்வ அன்ன அநு மதி -ச -ச சப்தம் ஏவகார அர்த்தம் -பரிமித சக்தரான பிராண வித்துக்கு
சர்வ அன்ன அனுமதி பிராண ஆபத்தில் தான்
ப்ராணாத்யயே தத் தர்சநாத்-அதிசயிதமான சக்தி உள்ள ப்ரஹ்ம வித்துக்கு
அவ்வாறே காணப்படுவதால் என்றபடி

ப்ருஹத் -6-1-14-ந ஹவாஸ்ய அன்னம் ஜக்தம் பவதி நா நன்னம் பரிக்ரஹீதம் பவதி -என்றும்

சாந்தோக்யம் -5-2-1-ந ஹவா ஏவம் விதி கிஞ்சித் அநன்னம் பவதி -என்றும் சொல்லிற்றே

சாந்தோக்யத்தில் ஒரு கதை குரு தேசத்தில் பஞ்ச நிலையில் உஷஸ்தி ப்ரஹ்ம ஞானி
தொடர்ந்து த்யானம் செய்ய பக்கத்து கிராமம் போக
அங்கே யானைப் பாகன் வேக வைத்த கொள்ளை கொடுக்க அத்தை உண்டு உயிர் தரித்தார்

அடுத்து யானைப் பாகன் தண்ணீரை அளிக்க அத்தை குடிக்க மறுத்து –
உச்சிஷ்டம் மே பீதம் ஸ்யாத் -சாந்தோக்யம் -1-10-3-
உயிர் தரிக்க அது அவசியம் ஆயிற்று உண்டேன்

சாந்தோக்யம் -1-10-4-ந வா அஜீவிஷ்ய மிமா நகா தன்காமோ ம உதபானம் –
இந்த தண்ணீர் பருகுவது விருப்பமே -உயிர் தரிக்க அல்லவே

மீதம் இருந்த கொள்ளை மனைவியிடம் கொடுத்து வைத்து
அடுத்த நாளும் உயிர் பிரியும் ஆபத்திலே உண்டார்

இத்தால்
ப்ரஹ்ம வித்யை கை வந்தவருக்கும் உயிர் பிரியும் நிலையில் அனைத்தும் கொள்ளத் தக்கது
என்னும் போது ப்ரஹ்ம வித்யை இல்லாதவனுக்கும் அப்படியே என்று சொல்லவும் வேண்டுமோ –

———————————————————————————————————

446-அபாதாத் ச –3-4-29-

சாந்தோக்யம் -7-26-2-ஆஹார சுத்தௌ சத்வ சுத்தி சத்வ சுத்தௌ த்ருவா ஸ்ம்ருதி –

ஆபத்து காலத்தில் தள்ளப் படாத காரணத்தால் –
அனைத்தும் அனுமதிக்கப் பட்டதாகும்

—————————————————————————————————————-

447-அபி ஸ்மர்யதே-3-4-30-

ஸ்ம்ருதியும் –
பிராண சம்சயமா பந்த யோன்னமத்தி யதச்தத லிப்யதே ந சா பாபேன பத்மபத்ர இவாம் பஸா–
தாமரை இலை தண்ணீர் போலே ஒட்டாது என்கிறது –
ஆபத்தில் சர்வ அன்ன அனுமதி ஸ்ம்ருதியிலும் உண்டே

————————————————————————————

448-சப்தஸ் ச அத அகாமகாரே —3-4-31-

விருப்பத்தின் படி அனைத்தையும் உண்ணும் செயலைத் தடுக்கும் வேத வாக்யம்-
காமகார ப்ரதிஷேதம் உள்ளதே –

கட சம்ஹிதை -தஸ்மாத் ப்ராஹ்மண ஸூரம் ந பிபதி பாப்ம நா நோத்ஸ்ருஜா இதி -என்று
அந்தணர்கள் கள்ளைப் பருகாமல் -விருப்பத்தின் அடிப்படையில் -சொல்லப் பட்டது –

—————————————————————————–

அதிகரணம் -8- விஹி தத்வாதி கரணம் –

ப்ரஹ்ம வித்யை யஜ்ஞாதி கர்மங்களை அங்கங்களாகக் கொண்டது எனப்பட்டது
அந்த யஜ்ஞாதிகளே முமுஷுக்கள் அல்லாத கேவல ஆஸ்ரமிகளாலும்
அனுஷ்ட்டிக்கத் தக்கவையா அல்லவா
என்று சம்சயத்தால் சங்கதி –

யஜ்ஞம் போன்ற கர்மங்கள் ப்ரஹ்ம வித்யை மற்றும் க்ருஹஸ்தாஸ்ரமத்தின் அங்கமாகவே விதிக்கப் பட்டதால்
இவற்றை ப்ரஹ்ம நிஷ்டர்கள் மற்றும் கிருஹஸ்தர்கள் அனுஷ்டிக்க வேண்டும் என்று நிரூபிக்கப் படுகிறது –

449-விஹிதத்வாத் ச ஆஸ்ரம கர்ம அபி-3-4-32-

யஜ்ஞம் போன்ற கர்மங்கள் மோஷத்தில் இச்சை இல்லாத க்ருஹஸ்தாஸ்ரமத்தில்
உள்ளவர்களுக்கும் அனுஷ்டிக்க வேண்டுமா

கேவல ஆஸ்ரமத்துக்கும் அங்கமாகில்
வித்யைக்கும் அங்கமாகில்
யஜ்ஞாதி கர்மாக்களுக்கு நித்ய அநித்ய சம்யோக ரூபமான விரோதம் வருமாகையால்
யஜ்ஞாதி கர்மாக்கள் கேவல ஆஸ்ரமத்திற்கும் அங்கம் என்று
பூர்வ பக்ஷத்தை நிரஸனம் செய்கிறார் –

நித்ய அநித்ய சம்யோக ரூபமான விரோதத் துக்கு பரிஹாரம்
யாவஜ் ஜீவனம் அக்னி ஹோத்ரம் ஜூஹோதி-என்றும்
தமேவம் வேத அநு வசநேன ப்ராஹ்மணா விதிதி ஷந்தி யஜ்ஜேன தானேந தபஸா அநாசகேந -என்றும்
வெவ்வேறு விநியோகம் கூறி உள்ள படியால் விரோதம் இல்லை
அக்னி ஹோத்தமே ஜீவன் உள்ளவரை செய்வதாகவும்
காமாலைக்கு ஏற்பச் செய்வதாகவும் -இரண்டும் உள்ளதே
அதே போல் இரண்டுடன் சம்பந்தம் தவறு அற்றது என்பதாம் –

ஆஸ்ரம கர்ம அபி -அந்தந்த ஆஸ்ரமத்தில் விதிக்கப் பட்டதை இயற்ற வேண்டும் –

ஆபஸ்தம்ப ஸூ த்ரம் -3-14-11-யாவஜ் ஜீவனம் அக்னி ஹோத்ரம் ஜூஹோதி-
நித்ய கர்மாவை போன்று விதிக்கப் பட்டுள்ளது

ப்ருஹத் -4-4-22-தமேவம் வேத அநு வசநேன –
வேதங்கள் மூலம் அறிய முயல்கின்றனர் –

இவற்றின் மூலம் கர்மங்களை வித்யைக்கு அங்கமாக கூறப்பட்டன –
ஆக க்ருஹஸ்தர்களும் யஜ்ஞம் முதலானவற்றை இயற்ற வேண்டும் –

——————————————————————————————————————————————-

450-சஹ காரித்வேன ச–3-4-33-

ப்ரஹ்ம வித்யைக்கு கர்மங்கள் அங்கமாக துணையாக இருப்பதனால் –

க்ரஹஸ்தர்களால் அன்றாடம் இயற்றப்படும் யஜ்ஞம் முமுஷூக்களால் இயற்றப் படும் பொழுது
ப்ரஹ்ம வித்யைக்கு அங்கம் ஆகும் என்றதாயிற்று

————————————————————————————

451-சர்வதா அபி த ஏவ உபய லிங்காத் —3-4-34-

யஜ்ஞம் முதலானவை ப்ரஹ்ம வித்யைக்கு அங்கம் ஆனாலும்
க்ருஹ்ஸ்ராமத்துக்கு அங்கமானாலும்
கர்ம ஸ்வரூபங்களில் வேறுபாடு இல்லை
அப்படி இருப்பதாக ஸ்ருதிகளில் சொல்லாமையால் –

சர்வதா அபி த ஏவ -வித்யார்த்தம் என்றாலும் அந்த யஞ்ஞாதி களே விநியோகப்படுகின்றன
ஒரு கர்மமே இரண்டுக்கும் பயன்படுவதாகும்
உபய லிங்காத் -உபயத்ர -இரு இடங்களில் சுருதியில் யஞ்ஞாதி ஸப்தங்களால்
ஏகமே என்று அறிவித்து விநியுக்தமாகையாலே
கர்ம ஸ்வரூப பேதங்களில் பிரமாணம் இல்லை என்பதாம் –

—————————————————————————

452-அநபி பவம் ச தர்சயதி —3-4-35-

தைத்ரிய நாராயண வல்லி-தர்மேண பாபம் அப நுததி–தடையாக உள்ள பாபங்களை நீக்குகிறான்
மனத் தூய்மை உண்டாக்கி -வித்யை உண்டாகி ஓங்கி வளர்கிறது

எனவே வித்யைகளின் அங்கமாகவும்
ஆஸ்ரமத்தின் அங்கமாகவும் யஜ்ஞம் போன்றவை உள்ளன –

யாகாதிகளை நியமத்துடன் வர்ணாஸ்ரம முறைப்படி செய்வது கர்ம யோகம் –
அதனால் மனச் சுத்தி ஏற்பட்டு ஆத்ம ஞானம் ஏற்பட்டவனுக்கு ப்ரஹ்ம வித்யை தோன்றும்
அது வளர செய்யும் நித்ய நைமித்திக கர்மாக்கள் மனத்து மலம் போக்கி வித்யை உண்டாவதால்
அங்க பாவம் சித்தமாயிற்று
ஒரே கர்மா இரண்டுக்கும் பயன் படுவது என்றும் சித்தம்
ஆகவே கேவல ஆஸ்ரமிக்களுக்கும் முமுஷுக்களுக்கும் யஜ்ஞாதிகள் அநுஷ்டேயங்கள் என்று
இந்த அதிகரணத்தில் சித்தம் –

————————————————————————————————————————————————————-

அதிகரணம் -9-அந்தராதிகரணம் –

நான்கு ஆஸ்ரமிகளுக்கும் ப்ரஹ்ம வித்யை அதிகாரம் உண்டு என்றும்
ஆஸ்ரம தர்மங்கள் வித்யைக்கு ஸஹ காரிகள் என்றும் சொல்லப்பட்டத்து

இப்போது இந்த நான்கு ஆஸ்ரமங்களிலும் அடங்காத மனைவி இழந்தவர்
மணம் செய்து கொள்ளாதவட்களுக்கும் ப்ரஹ்ம வித்யை அதிகாரம் உண்டு
என்று இதில் சாதிக்கிறார் –

எந்த ஆஸ்ரமத்திலும் இல்லாத விதுரர்களுக்கும்
ப்ரஹ்ம விதையில் அதிகாரம் உண்டு என்று நிரூபிக்கப் படுகிறது
விதுரர் க்ருஹஸ்ராமத்தில் இருந்து மனைவியை இழந்த பின்னர்
சன்யாசமோ வானப்ரச்தாமோ கைக் கொள்ளாமல் -அநாஸ்ரமி-என்பர் –

453-அந்தரா ச அபி து தத்ருஷ்டே–3-4-36-

ரைக்வர் பீஷ்மர் சம்வர்த்தர் – போன்றவர்களிடம் கண்டோம் –
ப்ருஹத் -4-4-22- யஜ்ஞேன தானேன தபஸா நாசகேன-
யஜ்ஞம் தபஸ் தானம் மூலம் –

ச ஸப்தம் ஏவகாரப் பொருளில் வந்தது
அந்தரா ச அபி து –ஆஸ்ரமத்துக்குப் புறம்பானாலும் -அநாஸ்ரமிகளுக்கும்
தத்ருஷ்டே-ரைக்குவர் போல்வார் இடம் கண்டோமே –

எந்த வித ஆஸ்ரமத்தில் இல்லாதது இருந்தும் தானம் -ஜபம் உபவாசம் மூலம் ப்ரஹ்ம வித்யை அடையலாமே –

—————————————————————————-

454-அபி ஸ்மர்யதே –3-4-37

மனு ஸ்ம்ருதி -2-87-ஜப்யேநாபி ச சம்சித்யேத் ப்ராஹ்மணோ
நாத்ர சம்சய குர்யாத் மைத்ரோ ப்ராஹ்மண உச்யதே –என்று
சம்சித்தயேத் -தகுந்த நிலையை ஜபம் மூலமே அடைகிறான் என்றது

———————————————————————————–

455-விசேஷ அனுக்ரஹ ச –3-4-38-

ப்ரசன உபநிஷத் -1-10-தபஸா ப்ரஹ்ம சர்யேண ச்ரத்தயா வித்யயா ஆத்மானம் அன்விஷ்யேத்-

——————————————————————————–

456-அதஸ் து இதர ஜ்யாயா லிங்கா ச்ச–3-4-39-

அதஸ் து இதர -அநாஸ்ரமத்தைக் காட்டிலும் பின்னமான ஆஸ்ரயத்வமே –
அது ஆபத் விஷயம் -சக்தருக்கே ப்ரஹ்ம வித்யை கைகூடும்
ஜ்யாயா ஸ்ரேஷ்டமாகும்
லிங்கா ச்ச–ஸ்ம்ருதியும் சொல்லிற்றே

ஆஸ்ரமத்தில் இருப்பதே சிறந்தது

தஷ ஸ்ம்ருதி 1-10-அநாஸ்ரமீ ந திஷ்டேத்துதி நமேகமபி த்விஜ-என்றதே

————————————————————————-

அதிகரணம்-10-தத் பூதாதிகரணம் –

ஆஸ்ரமத்தில் இருந்து நழுவி உள்ளவர்களுக்கும் அநாஸ்ரமித்வம் சமம் ஆகையால்
வித்யாதிகாரம் உண்டு என்ற சங்கையால் சங்கதி
நைஷ்டிகர் -வைகானசர் -பரி வ்ராஜர்களுக்கும் அதிகாரம் உண்டு என்பர் பூர்வ பக்ஷிகள்
அத்தை நிரஸிக்கிறார்

ப்ரஹ்மச்சாரி வானப்ரஸ்தன் சந்நியாசி ஆகியவர்கள் ஆஸ்ரமங்களைக் கை விட நேர்ந்தால்
ப்ரஹ்ம வித்யையில் அதிகாரம் இல்லை என்று நிரூபிக்கப் படுகிறது –

457-தத் பூதஸ்ய து ந அதத்பாவ ஜைமிநே அபி நியமாத் தத் ரூபா பாவேப்ய —3-4-40-

ஆஸ்ரமங்களில் இருந்து நழுவினால் ப்ரஹ்ம வித்யையில் அதிகாரம் இல்லை -ஜைமினியும் இவ்வாறே கருதுகிறார்

கிருஹஸ்தர் நாவி தானம் செய்து ப்ரஹ்ம விதியை அடைவது போலே மூவரும் அடையலாம்
என்பர் பூர்வ பஷி

அப்படி அல்ல

து சப்தம் பூர்வ பக்ஷத்தை விலக்கும்
தத் பூதஸ்ய து -நைஷ்டிகாதி ஆஸ்ரம நிஷ்டனுக்கு
அதத்பாவ -அநாஸ்ரமியாய் இருக்கை
ந -கூடாது
ஜைமிநே அபி நியமாத் தத் ரூபா பாவேப்ய-தர்மங்களில் இருந்து நழுவக் கூடாது என்று ஸாஸ்த்ரம் நியமிப்பதால்
ப்ரஹ்ம வித்யையில் அதிகாரம் இல்லை என்பர் ஜைமினி

விதுராதிகளைப் போல் பரி ப்ரஷ்டர்களை அநாஸ்ரமிகள் கோடியில் சேர்க்கக் கூடாது

சாந்தோக்யம் -2-22-1- பிராமசார்யாசார்யா குல வாஸீ த்ருதீயோ அத்யந்தம் ஆத்மநாசார்ய குலே அவசாதயன் -என்றும்

அரண்யமியாத் ததோ ந புரேயாத்-என்றும்

சந்த்யச்யாக்னிம் ந புனராவர்த்தயேத்-என்றும் சொல்வதால் –

——————————————————————————-

458-ந ச ஆதி காரிகம் அபி பதநாநுமாநாத் தத் அயோகாத்-3-4-41-

பூர்வ மீமாம்சை -6-8-24-அவாகீர்ணி பசு பதநாநுமாநாத் தத யோகாத் -என்று
பிரமசார்யத்தில் இருந்து நழுவினால் பிராயச் சித்தம் உண்டு என்கிறது
என்பர் பூர்வ பஷி

அது சரியல்ல –

அவர்கள் பதிதர்கள்-ஸ்திரீ தொடர்பு உள்ளவர்கள் என்று ஸ்ம்ருதியில் உள்ளதால்

ஆரூடோ நைஷ்டிக தர்மம் யஸ்து பிரச்யவதே த்விஜ பிராயச்சித்தம் ந பஸ்யாமி யேன கத்யேத் ஆத்மஹா -என்று
அவனுக்கு பிராயச் சித்தம் இல்லை என்பதால் –

——————————————————————————-

459- உப பூர்வம் அபி இதி ஏகே பாவம் அநசனவத் தத் உக்தம் –3-4-42-

ஏகே-சிலர்
பாவம் அபி -பிராயச்சித்தம் இருப்பதையும் கூறுகிறார்கள்
உப பூர்வம் அபி -இந்த நைஷ்டிக ப்ரஹ்மசர்ய பரிச்யவனமாவது
உப பாதகம் -மஹா பாதகங்களில் அடங்கியது அன்று
ஆகையால் உண்டு என்பதற்கு உதாஹரணம்
அநசனவத் -மதுவின் அசனம் முதலியவற்றின் நிஷேதம்

பிரமசார்யத்தில் இருந்து நழுவினால் சிறிய பாவம் என்பர் பூர்வ பஷி –

பிராயச்சித்தம் செய்து அதிகாரம் பெறலாம் என்பர் பூர்வ பஷி –

—————————————————————————-

460-பஹிஸ் து உபயதா அபி ஸ்ம்ருதே ஆசாராச் ச –3-4-43-

அப்படி அல்ல –
இவர்கள் ப்ரஹ்ம வித்யைக்கு புறம்பு ஆனவர்களே ஆவார் -ஆத்மாவைக் கொன்றவன் போலே
இவர்கள் உடன் தொடர்பும் கூடாது –

து -ஸப்தம் மாதாந்தரத்தை விலக்கும்
உபயதா அபி-உப பாதகமாய் இருந்தாலும்
பஹிஸ் -பரி ப்ரஷ்டன் நைஷ்டிகனை விட -கீழ் ஆனவனே -வித்யா அதிகாரம் அற்றவனே -என்பதாம்
ஸ்ம்ருதே-பிராயச்சித்தம் ந பஸ்யாமி என்ற ஸ்ம்ருதியாலும்
ஆசாராச் ச –நைஷ்டிக பரி ப்ரஷ்டர் -பால ஹத்யை செய்தவன் -நன்றி மறந்தவன் -சரணாகதனைக் கொன்றவன்
இவர்களுக்கு வித்யா உபதேசம் செய்வது இல்லை என்பது சிஷ்டாசார சித்தம்

————————————————————————————–

அதிகரணம் -11-ஸ்வாம்யதிகரணம் –

உபாசனத்தை அனுஷ்டிப்பவர் அனுஷ்டிக்காதவர் என்ற பிரிவு ப்ரஸக்தமாதலின்
அடுத்த படி உத்கீத உபாஸனையை அனுஷ்டிப்பவர் அனுஷ்டிக்காதவர் பற்றிய விசாரம்
என்று சங்கதி –

ருத்விக்கால் -யாகம் யஜ்ஞம் போன்றவற்றை நடத்தி வைப்பவர் –
உத்கீத உபாசனம் செய்யப்பட வேண்டும் என்று நிரூபிக்கப் படுகிறது

462-ஸ்வாமி ந பலஸ்ருதே இதி ஆத்ரேய–3-4-44-

உபாசனையின் பலன் யாருக்கு கிட்டுகிறதோ அவனே அந்த உபாசனைகளையும் இயற்ற வேண்டும்
உத்கீத உபாசனம் தடைகளை நீக்கி வீர்யம் அளிப்பதால் யஜமானன் மட்டுமே உரிமை உள்ளவன் ஆவான்

ஸ்வாமி ந -எஜமானனுக்கு உபாசன கர்த்ருத்வம்
ஏன் எனில்
பலஸ்ருதே இதி ஆத்ரேய-அவனுக்கே பல சம்பந்தம் ஸ்ருதி சொல்வதால் என்பர் ஆத்ரேயர்
என்ற பூர்வ பக்ஷத்தைக் காட்டுகிறார் –

——————————————————————————–

463-ஆர்த்விஜ்யம் இதி ஔடுலொமி –தஸ்மை ஹி பரிக்ரீயதே–3-4-45-

ஆர்த்விஜ்யம்-ருத்விக்கே செய்ய வேண்டும் –
ருத்விக்கானவன் யஜமானனால் விலைக்கு வாங்கப்பட்டவனாய்
அவனுடைய பலத்துக்காக ப்ரவர்த்திக்கிறான்

ருத்விஜோ வ்ருணீதே ருத்விக்ப்யோ தஷிணாம் ததாதி –
இதற்காக அன்றோ தஷ்ணை அளிக்கின்றான்

ருத்விக்கு மட்டுமே அதனை இயற்றும் தகுதி உள்ளது –
எனவே அவனே இயற்ற வேண்டும்

———————————————————————————-

அதிகரணம் -12-சஹ கார்யந்தர வித்யதிகரணம் –

முன்பு யஜ்ஞாதிகளும்-சமாதிகளும் வித்யா ஸஹ காரிகள் எனப்பட்டன
இப்போது வேறு ஸஹ காரி கூறப்படுகிறது என்று சங்கதி
இடையில் உத்கீத விசாரம் பிரசங்காத் வந்தது
ஆதலால் விரோதம் இல்லை

இங்கு மனனத்தை விதிக்கப் போவதால் அது தியானத்துக்கு அவலம்பனமான
ஸூபாஸ்ர்யத்தைப் பற்றி யதாதலின்
யஜ்ஞாதிகளையும் சமாதிகளை நிரூபித்த பின் மனனம் நிரூபிக்கப் படுகிறது என்று சங்கதி –

பால்யம் பாண்டித்தியம் மௌனம் ஆகியவை யஜ்ஞம் போன்ற ப்ரஹ்ம வித்யைக்கு
அங்கமாக உள்ளன என்று நிரூபிக்கப் படுகிறது –

464-சஹகார்யந்திர விதி பஷேண த்ருதீயம் தத்வதோ வித்யாதிவத்-3-4-46-

ப்ருஹத் -3-5-1-தஸ்மாத் ப்ராஹ்மண பாண்டித்தியம் நிர்வித்ய பால்யேன திஷ்டாசேத் பால்யம் ச பாண்டித்தியம் ச நிர்வித்யாத முனி -என்று

பால்யம் பாண்டித்தியம் மௌனம் விதிக்கப்பட்டவையா
வெறுமனே கூறப்பட்டவையா
ஞானம் என்பதை குறித்தே உள்ளன இவை விதி இல்லை

மௌனம் மனன ரூபமாகையாலே
ஸ்ரோதவ்வயோ மந்தவ்ய என்ற விதியால் ப்ராப்தமாகையாலே மௌனம் அனுவதிக்கப் படுகிறது
என்பர் பூர்வ பஷி –

அப்படி அல்ல

அத்தை நிரஸிக்கிறார்
தத்வதோ-வித்யாவானுக்கு சஹ கார்ய அந்தர் விதி-வேறு ஸஹகாரியான மௌனம் விதிக்கப்படுகிறது
வித்யாதிவத்–யஜ்ஞம் தானம் முதலிய ஆஸ்ரம விதிகளையும்
ஆதி -என்பதால் ஸ்ரவண மனனங்களையும் போலே
சஹகார்யந்திர விதி பஷேண த்ருதீயம் -பாண்டித்யம் -பால்யம் -இவற்றை விட்டு
வேறான மூன்றாவதான சஹகாரியாக மௌனம் விதிக்கப் படுகிறது
பஷேண-என்பதால் வேறானது என்றது
வ்யாஸாதிகள் முனிகள் மனன சீலர்கள்

சமம் தமம் போலேவே மௌனம் சரவணம் மனனம் -வித்யாதிவத் -விதி +ஆதிவத்

இவற்றை ப்ருஹத் –
4-4-22 -தமேதம் வேதாநுவசநேன ப்ராஹ்மண விவிதிஷந்தி யஜ்ஞேன தானேன தபஸா நாசகேன-என்றும் –

4-4-23-சாந்தோ தாந்தோ -என்றும்
சமம் தமம் அங்கங்கள் போலே –

2-4-5-ச்ரோதவ்யோ மந்தவ்யோ –

3-5-1- தஸ்மாத் ப்ராஹ்மண பாண்டித்தியம் நிர்வித்ய -என்று இவையும் அங்கங்கள் ஆகும்

பஷேண-மௌனம் -கெட்டவற்றை மீண்டும் சிந்தித்தல் –
ப்ரஹ்மம் தூய்மையானது பூரணமானது என்று அறிந்து
ஸ்ரவணம் மனனம் மூலம் உபாசனத்தை அடைந்து
பக்தி காரணமாக சத்வ குணத்தால் உறுதி யாக்கி –

ஸ்ரீ கீதை –
11-53 நாஹம் வேதை என்றும் –

11-54-பக்த்யாது அனந்யா சக்த்யா ஜ்ஞாதும் -எனபது போலே

ஸ்வேதாச்வதர -6-23-யத்ய தேவே பரா பக்தி -என்றும்

கட -2-23/முண்டக -3-2-3- நாயமாத்மா ப்ரவசநேன-என்றும்

ப்ருஹத் -3-5-1-பால்யேன திஷ்டாசேத் -என்றும்

பால்யம் ச பண்டிதம் ச நிர்வித்ய அத முனி ஸ்யாத்-என்றும்

ச ப்ராஹ்மணா கேன ஸ்யாத் -யேன ஸ்யாத் தேன ஈத்ருச ஏவ-என்று

மௌனம் மட்டுமே உபாயம்-அனைத்து ஆச்ரமங்களுக்கு – என்றதே –

சாந்தோக்யம் -அபிசமாவ்ருத்ய குடும்பே சுசௌ தேசே –ச கல்வேவம் வர்த்தயன் யாவதாயுஷம்
ப்ரஹ்ம லோகம் அபிசம்பத்யதே ந ச புநரா வர்த்ததே -என்று

க்ருஹஸ்ராமத்துக்கு சொன்னது அனைத்துக்கும் சொன்னதற்கு உப லஷணம்

———————————————————————————————————————————-

465-க்ருத்ஸ்ன பாவாத் து க்ருஹிணா உப சம்ஹார-3-4-47-

எல்லா ஆஸ்ரமிகளுக்கும் பொதுவானால்
சாந்தோக்யத்தில் க்ருஹஸ்த தர்மத்தைக் கொண்டு
ஸகல் வேவம் வார்த்தையான யாவதாயுஷம் ப்ரஹ்ம லோகம் அபி ஸம்பத்யதே
நச புநர் ஆவர்த்ததே நச புநர் ஆவர்த்ததே-என்று
உபஸம்ஹாரம் பண்ணுவது எதனால்
து -ஸப்தம் வினாவை விலக்குகிறது
க்ருத்ஸ்ன பாவாத்–எல்லா ஆஸ்ரமங்களிலும் வித்யை இருப்பதால்
க்ருஹிணா உப சம்ஹார-க்ருஹஸ்தர்களான உபாசகர்களுக்கும் உண்டு என்ற
தோற்றச் செய்யவே உப சம்ஹாரம் செய்யப்பட்டது
என்று பூர்வபக்ஷ நிரசனம்

அனைத்து ஆச்ரமங்களுக்கும் உண்டு என்கிறது

ப்ருஹத் -3-5-1-ப்ரஹ்மணா புத்ரைஷணாயாச்ச வித்தை ஷணாயாச்ச லோகை
ஷணாயாச்ச வ்யுத்தாய பிஷாசர்யம் சரத்தி என்று

சன்யாச ஆச்ரமத்துக்கும்
தஸ்மாத் ப்ராஹ்மண பாண்டித்தியம் நிர்வித்ய என்றும் கூறிற்று

——————————————————————-

466-மௌன வத் இதரேஷாம் அபி உபதேசாத் –3-4-48-

மௌன வத் -ஸர்வவித ஆசைகளையும் விட்ட சந்நியாசியின்ன பஷா சரண பூர்வக மௌன உபதேசம் போலே
இதரேஷாம் அபி -மற்ற ஆஸ்ரமிகளுக்கும்
உபதேசாத் -யஜ்ஞாதிகளையும் சஹகாரிகளாக உபதேஸிக்கையாலே

இதனாலும்
அத முனி என்ற வாக்கியத்தில் பிஷாசர்யம் சரதி என்று சந்யாச ஆஸ்ரமத்துக்கே
உரிய தர்மத்தைக் கொண்டு உப சம்ஹாரமும் சர்வ ஆஸ்ரம தர்மங்களையும்
காட்டுபவையேயாகும் -என்றவாறு –

மௌனவத் வித்யைக்கு அங்கம் என்றதாயிற்று

மௌனம் போன்று ப்ரஹ்மத்தை அடைதல் அனைத்து ஆச்ரமங்களுக்கும் உள்ளது
யஜ்ஞம் போன்றவற்றை போன்று பாண்டித்தியம் முதலானவையும்
ப்ரஹ்ம வித்யைக்கு அங்கம் என்றதாயிற்று –

————————————————————

அதிகரணம் -13-அநாவிஷ்கராதி கரணம் –

மௌன ரூபமான வித்யா அங்கம் முன் சிந்திக்கப் பட்டது
இப்போது பால்யமும் வித்யா அங்கம் என்று சிந்திக்கப் படுகிறது –
என்று சங்கதி

பால்யம் என்பது ப்ரஹ்ம ஞானிகள் தங்கள் மேன்மைகளை வெளிக் காட்டாமல் உள்ளதே ஆகும் –
என்று நிரூபிக்கப் படுகிறது –

467-அநாவிஷ் குர்வன் அந்வயாத்-3-4-49-

பாலனின் காம சாராதிகள் அனைத்துமே ஏற்கத் தக்கவையே என்று பூர்வ பக்ஷம்
வித்வானுக்கு விசேஷத்தை விதிக்கையாலே வித்யையின் மஹிமையாலும்
வித்வத் விஷயத்திலே அநேக நியமங்களைச் சொல்லும் ஸாஸ்த்ரங்களின் விசேஷ விதியாலும்
பாதிக்கப் படுகின்றன என்று பூர்வ பக்ஷத்தை நிரஸிக்கிறார் –

அநாவிஷ் குர்வன் -வித்வான்களும் பாலர்களைப் போலே தம் மஹாத்ம்யத்தை வெளியிடாதவராக இருக்க வேண்டும்
அந்வயாத்-பாண்டித்யம் காரணமாகத் தம் மஹிமையை வெளியிடாமையே வித்யைக்கு அனுகூலமாக அந்வயிப்பதால் என்றவாறு
வித்ய உத்பத்திக்கு விரோதமான தம் உயர் குலப் பிறப்பு முதலிய பெருமைகளை வெளிப்படுத்தாமல் இருக்க வேண்டுமே –

வேத அத்யயனம் பண்ணி அர்த்தங்களை அறிந்த பின்பு பால்யத்துடன் -ஏதும் அறியாத மாதிரி –
பாலகனின் தன்மையையே பாலகன் என்கிறது டம்பம் போன்றவற்றை வெளிக் காட்டாமல் –

கட உபநிஷத் -2-23-நாவிரதோ துச்சரிதாத் நாசாந்தோ நாசமாஹித நாசாந்த மா நசோ வாபி
ப்ரஜ்ஞாநேநைநம் ஆப்நுயாத்-என்றும்

சாந்தோக்யம் -7-26-2–ஆகார சுத்தௌ சத்வ சுத்தி -என்றும் சொல்லிற்றே-

————————————————————————————————————————————————–

அதிகரணம் -14-ஐஹிகாதிகரணம் –

இப்படி அங்கங்கள் பற்றி சிந்திக்கப் பட்டது
இதன் பின் அங்கி நிறைவேற சிந்தனை என்று சங்கதி

இம்மையில் பலம் கிட்டுவதற்கான உபாசனம்
தனக்கு காரணமான ஸூஹ்ருதமோ துஷ் ஹ்ருதமோ சித்தித்த பின் உண்டாகிறதா
அல்லது பின்னாலோ வேறு காலத்திலோ உண்டாகலாம் என்று அநியமமா
என்று சம்சயம்

உத்பத்தி காரணம் பூரணமாய் இருந்தால் விளம்பிக்கக் காரணம் இல்லாமையால்
உடனே உண்டாகும் என்று பூர்வ பக்ஷம்

இதனை நிரஸிக்கிறார்

இந்த பிறவியில் பலன்கள் அளிக்க வல்ல வித்யைகள் தடை இல்லாமல் இருந்தால் மட்டுமே உண்டாகும் –
தடை இருந்தால் உண்டாகாது என்று நிரூபிக்கப் படுகிறது –

469-ஐஹிகம் அப்ரஸ்நுத பிரதிபந்தே தத் தர்சநாத்–3-4-50-

வித்யைகள் மோஷம் அளிக்கவும் உலக பயன்கள் அளிக்கவும்-
புண்ய கர்மங்கள் முடிந்த உடனே பலமா
கால தாமதம் உண்டா

ஐஹிகம் -முக்தியைத் தவிர்த்த வேறு இம்மைப் பயன்களை உடையது உபாசனம்
அப்ரஸ்நுத பிரதிபந்தே -பிரபல கர்மாக்களால் பலத்துக்குப் பிரதிபந்தம் இல்லாத போது
தத் தர்சநாத்
ஆகவே இப்போது அனுஷ்டித்த கர்ம பலத்துக்கு பிரபலமான வேறு கர்மாக்களால்
பிரதி பந்தம் இல்லை என்றால் அடுத்துத் தானே ஸ்ரேயஸ்ஸூக்கான உபாஸனம் நிறைவேறுகிறது என்றும்
பிரதிபந்தகம் இருந்தால் வேறு காலத்தில் உபாசனத்தின் நிறைவேற்றம் என்றும் அநியமம் என்று கருத்து

எங்கனே என்னில்
மழை விரும்புபவன் காரீரி என்ற யாகத்தைச் செய்ய விதித்தபடி
வேறு பிரதிபந்தகம் இல்லா விட்டால் உடனே பலனும்
இருந்தால் காலம் விளம்பித்தும் பலன் ஏற்படும் என்ற அநியமம் உள்ளது போலே
இங்கும் அநியமம் ஸித்தம் என்று கருத்து –

ஸ்ரீ கீதை -7-16-சதுர்விதா பஜந்தா மாம் ஜநா ஸூ க்ருதி நோர்ஜுனா
வலிமையான பூர்வ கர்மங்கள் மூலம் தடை ஏற்படலாம் –

சாந்தோக்யம் -1-1-10-யதேவ வித்யயா கரோதி ஸ்ராத்த யோபநிஷதா ததேவ வீர்ய வத்தரம்
உத்கீத வித்யையுடன் கூடிய கர்மங்களில் உண்டாகும் தடை ஏதும் இல்லை

ஆகவே புண்ய கர்மங்கள் செய்த உடனே பலன் உண்டாகும் என்பதில்
விதி முறை இல்லை என்றதாயிற்று –

——————————————————————————————————————————–

அதிகரணம் -15-முக்தி பலாதிகரணம் –

கீழ் இம்மையில் பலன் தரும் வித்யைக்கு உத்பத்தி காலத்தில் அநியமம் சொல்லப்பட்டது
இப்படியே ப்ரஹ்ம பிராப்தி ஹேதுக்களான வித்யைகளுக்கும் உத்பத்தியில் அநியமம் கூடலாம் என்று சங்கதி –

மோஷ பலன் அளிக்க வல்ல உபாசனங்களுக்கும்
தடை ஏற்படா விடில் பலன் உடனே கிட்டும் –
தடை ஏற்பட்டால் தாமதமாகவே ஏற்படும் என்று நிரூபிக்கப் படுகிறது –

470-ஏவம் முக்தி பலா நியம தத் அவஸ்தா வத்ருதே தத் அவஸ்தா வத்ருதே–3-4-51-

மிகப் பெரிய புண்ய கர்மங்கள் இயற்றினாலும் அந்த கர்மங்கள் முடிந்த உடனேயே
ப்ரஹ்ம உபாசனம் கைக் கூட வேண்டிய அவசியம் இல்லை
வலிமையான தடைகள் ஏதும் இல்லாமல் மட்டுமே பலன் உடனடியாக ஏற்படும்
ப்ரஹ்ம ஞானிகளுக்கு அபசாரம் செய்தல் போன்ற பாபங்கள் மற்றவற்றை விட மிகவும் வலிமையானதாகும்-

இவை பலம் வாய்ந்தவை யாதலால் உடனே உபாசனங்கள் உத்பத்தி ஆகின்றன
என்று பூர்வ பக்ஷம்
ஏவம் முக்தி பலா நியம -முன் போல் முக்தியைப் பலமாகக் கொண்ட உபாசனங்களுக்கும் அநியமம் கூடும்
ஏன் எனில்
தத் அவஸ்தா வத்ருதே தத் அவஸ்தா வத்ருதே-பிரதிபந்தகம் இல்லாத காலத்தில்
தானே பல நிச்சயம் உண்டாவதால் என்றபடி

இத்தால் வித்யா சாதனமான கர்மம் பிரபலமானாலும்
இதைவிட பாகவத அபசாரம் பிரபலமாகையாலே
அதனால் பிரதிபந்தகம் சம்பவிக்கலாம்
எனவே அநியமம் சித்தித்தது என்பதாம் –

ததா வஸ்தாவ்ருதே-இரண்டு முறை படித்தது இந்த அத்யாயம் நியமனம் என்பதைக் காட்டிற்று –

உபாஸனம் சித்தித்தவனுக்கும் பாகவத அபசார ரூபமான பிரபல பிரதிபந்தகம் வந்தால்
பல விளம்பம் ஏற்படும் என்று
நியாய சித்தாஞ்சனத்தில் ஸ்வாமி தேசிகன் காட்டி அருள்கிறார்
ஜென்மாதிக்கு காரணமான கர்மங்களோபாதி இவை மேல் விழும்
ஆனால் உபாஸனம் நிறைவேறினவனுக்குச் சிரமம் இல்லை –
அவன் ப்ராரப்தத்தின் முடிவு போலவே உபாஸனத்தின் முடிவில் சம்சாரத்தை விட்டு விடுகிறான்
உபாய அனுஷ்டானம் நிறைவேறியவனுக்கும் பாகவத அபசாராதிகளால்
பற்பல சரீரங்களைப் பெறுவது பொருந்தும்

—————

இப் பாத -15-அதிகரண சாரங்கள்

1-புருஷார்த்தாதி கரணம் -வித்யை கர்மாக்களை அங்கமாகக் கொண்டது –
2-ஸ்துதி மாத்ராதிகரணம் –உத்கீதையில் அப்ராப்தையான ரசதமத்வாதி த்ருஷ்டி விதிக்கப் படுகிறது –
3- பாரிப்லவாதி கரணம் – வித்யா விதி யுடன் கூடிய ஆக்யான சம்சனங்கள் வித்யா ஸித்த்யர்த்தங்கள் –
4- அக்நீந்த நாத்யாதி கரணம் -அந்தந்த ஆஸ்ரயம தியத தர்மங்களால் ஊர்த்தவ ரேதஸ்ஸுகளுக்கு சங்கா வித்யை உண்டு
5-சர்வ அபேஷாதி கரணம் –க்ருஹஸ்தனின் வித்யையும் யஜ்ஞ தானாதிகளை அபேக்ஷிப்பது –
6- சம தமாத்யாதிகரணம் –க்ருஹஸ்தனுக்கும் சாந்த்யாதிகள் தேவை
7-சர்வ அன்ன அநுமத்யதிகரணம் –ஆபத்து இல்லாக் காலத்தில் வித்வானுக்கும் அன்ன சுத்தியாலே யோக ஸித்தி
8- விஹி தத்வாதி கரணம் —ஒரு கர்மமே வித்யார்த்தமாகவும் ஆஸ்ரம அர்த்தமாகவும் ஆகலாம்
9-விதுராதிகரணம்-விதுரனுக்கும் வித்யா சம்பந்தம் உண்டு
10-தத் பூதாதிகரணம் —ப்ரஹ்மசர்யம் இழந்த நைஷ் டிகாதிகளுக்கு வித்யையில் அதிகாரம் இல்லை
11-ஸ்வாம்யதிகரணம் –
12-சஹ கார்யந்தர வித்யதிகரணம் -க்ரத்வங்கங்களில் ரஸ தமத்வாதி தர்சனம் ருத்விக் கர்த்ருகம்
13-அநாவிஷ்கராதி கரணம்-த்யான ஸித்த்யர்த்தமாக ஸூபாஸ்ரய தாரணா ரூபமான மௌனம் விதிக்கப் படுகிறது
14-ஐஹிகாதிகரணம் —காரணமான ஸூஹ்ருத துஷ்ஹ் ருதங்கள் பிரபல கர்மாந்தரங்களால்
தடைப்படா விடில் இம்மையில் ப்ரஹ்ம வித்யை உண்டாகிறது
15-முக்தி பலாதிகரணம் –அப்ரஹ்ம வித்யை போலவே ஸூஹ்ருதங்களும் பாகவத அபசாராதிகளால்
பிரதிபந்தகம் ஏற்பட்டால் ப்ரஹ்ம வித்யை உண்டாக்க மாட்டாது

இப்படி 15 அர்த்தங்களை ஸூத்ரகாரர் இப் பாதத்தில் விளக்குகிறார் –

———————————————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஸ்ருதி பிரகாசர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ போதாயனர் -வ்ருத்தி காரர் – ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பாதராயணர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பாஷ்யார்த்த தீபிகை — மூன்றாம் அத்யாயம் — மூன்றாம் பாதம் —

November 26, 2021

ஸ்ரீ பாஷ்யம் -மங்கள ஸ்லோகம்

அகில புவன ஜன்ம ஸ்தேம பங்காதி லீலே
விநத விவித பூத வ்ராத ரக்ஷைக தீஷே
ஸ்ருதி சிரஸி விதீப்தே ப்ருஹ்மணி ஸ்ரீ நிவாஸே
பவது மம பரஸ்மின் சேமுஷீ பக்தி ரூபா –

பாராசார்ய வச ஸூதாம் உபநிஷத் துக்தாப்தி மத்யோத் த்ருதாம்
சம்சாராக்னி விதீபன வ்யபகாத ப்ராணாத்மா சஞ்சீவி நீம்
பூர்வாச்சார்ய ஸூரஷிதாம் பஹூ மதி வ்யாகாத தூரஸ்தி தாம்
ஆ நீதாம் து நிஷாஷரை ஸூ மனஸோ பௌமா பிபந்து அந்வஹம்–

—————————————————————-

மூன்றாம் அத்யாயம்-சாதனா அத்யாயம்–55 அதிகரணங்கள்–181 ஸூத்ரங்கள்

மூன்றாம் பாதம் –குண உப சம்ஹார பாதம் –
உபாசனம் த்யானம் பக்தி போன்ற ப்ரஹ்ம வித்யைகளும்
அவற்றின் ஒற்றுமை வேற்றுமைகளும் படிக்கப் படுகின்றன –
இதில் 26 அதிகரணங்கள்/ 64 ஸூத்ரங்கள் உள்ளன –

இதுவரை பத்து பாதங்களால் மோக்ஷத்திற்கான தத்வ ஞானம் உறுதி செய்யப் பட்டது
மேல் வரும் ஆறு பாதங்களாலே பர ப்ரஹ்ம பிராப்தி என்னும் பலத்துடன் அதுக்கு ஹேதுவான உபாஸனத்தையும் விளக்கப் பட இருக்கிறது

ப்ரஹ்ம உபாஸனத்தில் இச்சை பிறக்க ப்ரஹ்மமே பலம் தருவது என்பது வரை கூறப்பட்டது
இப்போது அந்த உபாசன விஷயத்தில் ஓர் இடத்தில் கூறப்பட்ட குண விசேஷங்களை
மற்றோர் வித்யையிலும் அனுசந்தானம் செய்ய ஏற்றுக் கொள்வதாகிற குண உப ஸம்ஹாரத்தையும்
கூறப்பட்ட குணங்களை அதே வித்யையில் மட்டும் அனுசந்தானம் செய்வது என்னும் விகல்பத்தையும்
தீர்மானிக்க பேத அபேத சிந்தை செய்யப் படுகிறது

வித்யைகள் ஒன்றுக்கு ஓன்று வேறு படாதவைகள் என்றால் குணங்களை உப சம்ஹாரம் செய்யலாம்
வித்யை களுக்குள் பேதம் உண்டு என்னில் விகல்பம் தான் என்று கருத்து

இந்த பேத அபேதங்கள் இப்பாதத்தில் ஒத்தவை அல்ல
ஆயினும் அவை குண ஸம்ஹாரத்திற்கு நிமித்தங்களே

இந்தப் பாதத்தில் குண சம்ஹாரம் உண்டா இல்லையா என்பது விசாரிக்கப் படுவதால்
இதற்கு குண சம்ஹார பாதம் என்ற பெயர் ஆயிற்று –

——————————————————————————————————————————-

முதல் அதிகரணம் -சர்வ வேதாந்த ப்ரத்யய அதிகரணம்- 5 ஸூத்ரங்கள்–
வைச்வாநர வித்யை-தஹர வித்யை போன்ற வேத சாகைகளில் ஓதப்படும்
அனைத்தும் ஒன்றே என்று நிரூபிக்கப் படுகிறது –

இரண்டாவது அதிகரணம் -அந்யதாத்வ அதிகரணம் -4 ஸூத்ரங்கள்–
சாந்தோக்யம் மற்றும் ப்ருஹத் உபநிஷத்தில்,சொல்லும் உத்கீத வித்யைகள்
வெவ்வேறு என்று நிரூபிக்கப் பட உள்ளது-

மூன்றாவது அதிகரணம் -சர்வாபேத அதிகரணம் -1-ஸூத்ரம்-
சாந்தோக்யம் கௌஷீதகீ உபநிஷத்துக்களில் கூறப்படும் பிராண வித்யை என்பது
ஒன்றே என்று நிரூபிக்கப் படுகிறது –

நான்காவது அதிகரணம் -ஆனந்தாத் யதிகரணம் 7 -ஸூத்ரங்கள்-
ப்ரஹ்ம ஆனந்த மயம் -அவிகாராய -ஞான மயம் -அபரிச்சேத்யம்-அகில ஹேய ப்ரத்ய நீகத்வம் -ஆகிய
ஐந்து குணங்களும் ப்ரஹ்ம வித்யையில் படிக்கப்பட வேண்டும் என்று நிரூபிக்கப் படுகிறது –

ஐந்தாவது அதிகரணம் -கார்யாக்யா நாதிகரணம் –1-ஸூத்ரம்-
ஆசமனம் செய்யும் நீர் பிராணனுக்கு வஸ்த்ரமாக உள்ளது என்று நிரூபிக்கப் படுகிறது –

ஆறாவது அதிகரணம் -சமா நாதிகரணம் –1-ஸூத்ரம்–
சுக்ல யஜூர் வேதம் -அக்னி ரஹச்யம்-ப்ருஹத் ஆரண்யகம் -இரண்டு உபநிஷத்களிலும் உள்ள
சாண்டில்ய வித்யைக்குள் -ரூபத்தில் வேறுபாடு இல்லாததால் – இரண்டும் ஒன்றே என்று நிரூபிக்கப் படுகிறது-

ஏழாவது அதிகரணம் -சம்பந்தாதி கரணம் –3 -ஸூத்ரங்கள்-
ஆதித்யனை இருப்பிடமாகக் கொண்ட ப்ரஹ்மம்-அந்தராதித்ய வித்யை –
கண்களை இருப்பிடமாகக் கொண்ட ப்ரஹ்மம் அஷி வித்யை என்பதும் கொள்ள வேண்டும் என்று நிரூபிக்கப் படுகிறது-

எட்டாவது அதிகரணம் -சம்ப்ரு யதிகரணம் –1-ஸூத்ரம்-
கட உபநிஷத்தில் உள்ள சம்ப்ருதி -அனைத்து வல்லமை உடன் இருத்தல் -த்யு வ்யாப்தி -தேவ லோகத்தில் பரவி இருத்தல் –
ஆகியவை அனைத்து வித்யைகளிலும் உபாசிக்க வேண்டியவை அல்ல என்று நிரூபிக்கப் படுகிறது –

ஒன்பதாவது அதிகரணம் -புருஷ வித்யாதிகரணம் –1-ஸூத்ரம்–
சாந்தோக்யம் தைத்ரியம் இரண்டிலும் முழங்கப் படும் புருஷ வித்யைகளில் ரூபம் வேறுபடுவதால்
அவை வெவ்வேறு வித்யைகள் என்று நிரூபிக்கப் படுகின்றன –

பத்தாவது அதிகரணம் -வேதாத்யதிகரணம்—1-ஸூத்ரம் –
தைத்ரிய சீஷா வல்லியில் உள்ள சில மந்த்ரங்கள் ப்ரஹ்ம வித்யைக்கு அங்கம் அல்ல என்று நிரூபிக்கப் படுகிறது

அதிகரணம் -11- ஹான்நயதி கரணம் —1-ஸூத்ரம் –
புண்ய பாப கர்மங்கள் மோஷம் பெறுபவனை விட்டு விலக்கி மற்றவர்களுடன் சேர்த்து விடுகின்றன -என்று
அனைத்து வித்யைகளிலும் கொள்ள வேண்டும் என்று நிரூபிக்கப் படுகிறது-

அதிகரணம் -12- சாம்பராய திகரணம்–5 -ஸூத்ரங்கள்- –
உபாசகனின் கர்மம் முழுவதும் அவன் உடலை விட்டு கிளம்பும் காலத்தில் அழிந்து விடுகின்றன என்று நிரூபிக்கப் படுகிறது –

அதிகரணம் -13–அநிய மாதிகரணம் —1-ஸூத்ரம்-
அனைத்து வித்தைகளுக்கும் அர்ச்சிராதி மார்க்கம் பொது என்று நிரூபிக்கப் படுகிறது –

அதிகரணம் -14-அஷரத்யதி கரணம் –2–ஸூத்ரங்கள்–
ப்ரஹ்மத்தின் அகில ஹேய ப்ரத்ய நீகத்வம் போன்ற மேன்மைகள் அனைத்து வித்யைகளிலும் ஓதப்பட வேண்டும் நிரூபிக்கப் படுகிறது –

அதிகரணம் -15-அந்தரத்வாதிகரணம் -3- ஸூத்ரங்கள்–
ப்ருஹத் உபநிஷத்தில் இரண்டு வெவ்வேறு பகுதிகளில் ஓதப்படும் வித்யைகள் ஒன்றே என்று நிரூபிக்கப் படுகிறது –

அதிகரணம் -16-காமாத்யதிகரணம் -3- ஸூத்ரங்கள்–
சாந்தோக்யம் ப்ருஹத் இரண்டிலும் கூறப்படும் தஹர வித்யை ரூபம் ஒன்றாதலால் ஒன்றே என்று நிரூபிக்கப் படுகிறது

அதிகரணம் -17- தந் நிர்த்தாரணா நியமாதி கரணம் –1-ஸூத்ரம்–
சாந்தோக்யத்தில் உள்ள உத்கீத உபாசனங்கள் ப்ரஹ்ம வித்யைக்கு அங்கமாக உள்ள
யாகங்களில் இருந்தாலும் இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம் என்று நிரூபிக்கப் படுகிறது-

அதிகரணம் -18-பிரதாணாதிகரணம்—1-ஸூத்ரம்–
அபஹத பாப்மா போன்ற குணங்களை உபாசிக்கும் பொழுது தஹர ஆகாசம் என்னும் ப்ரஹ்மத்தின்
ஸ்வரூபமும் உபாசிக்கப்பட வேண்டும் என்று நிரூபிக்கப் படுகிறது –

அதிகரணம் -19-நாராயண அநுவாகம்
ப்ரஹ்ம வித்யையின் மூலம் உபாசிக்கப்படும் பரம் பொருள் எந்த தேவதை என்று உணர்த்தவே என்று நிரூபிக்கப் படுகிறது –

அதிகரணம் -20-பூர்வ விகல்பாதி கரணம் -7-ஸூத்ரங்கள் –
அக்னி கிரியாமயமான யாக அங்கம் அல்ல -வித்யாமயமான யாக அங்கமே என்று நிரூபிக்கப் படுகிறது –

அதிகரணம் -21-சரீரே பாவதி கரணம் -2-ஸூத்ரங்கள் –
சாதன தசையில் அனைத்து வித்யைகளிலும்-தன்னைப் பாவங்கள் அற்றவன் முதலான ஸ்வரூபம் உள்ளதாகவே
ஜீவன் உபாசித்துக் கொள்ள வேண்டும் என்று நிரூபிக்கப் படுகிறது-

அதிகரணம் -22-அங்காவபத்தா திகரணம் -2-ஸூத்ரங்கள் –
சாந்தோக்யத்தின் உத்கீத உபாசனைகள் அனைத்து சாகைகளிலும் தொடர்பு உடையவை ஆகும் என்று நிரூபிக்கப் படுகிறது –

அதிகரணம் -23-பூமஜ்யாயஸ் த்வாதி கரணம் -1 ஸூத்ரம் –
சாந்தோக்யத்தில் கூறப்பட்ட பூரணமான வைச்வாநர உபாசகமே சரியானது என்று நிரூபிக்கப் படுகிறது –

அதிகரணம் -24-சப்தாதி பேதாதி கரணம்-1 ஸூத்ரம் –
சத் வித்யை தஹர வித்யை போன்ற ப்ரஹ்ம
வித்யைகள் ஒன்றுக்கு ஓன்று வேறுபட்டவை என்று நிரூபிக்கப் படுகிறது –

அதிகரணம் -25-விகல்பாதிகரணம்-2-ஸூத்ரங்கள் – –
ப்ரஹ்ம வித்யைகளில் ஏதேனும் ஒன்றைப் பற்றினாலும் பலன் கிட்டுமே –

அதிகரணம் -26-யதாச்ரய பாவ அதிகரணம்–6 ஸூத்ரங்கள்-
உத்கீத உபாசனம் அனைத்து யாகங்களிலும் அங்கம் அல்ல என்று சிலர் மீண்டும் ஆஷேபிக்க சமாதானம் கூறுகிறது-

——————————————————————————————————————————-

முதல் அதிகரணம் –சர்வ வேதாந்த ப்ரத்யய அதிகரணம் –
சர்வ வேதாந்தங்களிலும் சொல்லப்பட்ட தஹர வித்யை ஒன்றா வேறானதா என்ற சம்சயம்
வைச்வாநர வித்யை-தஹர வித்யை போன்ற வேத சாகைகளில் ஓதப்படும் அனைத்தும் ஒன்றே என்று நிரூபிக்கப் படுகிறது –

351-சர்வ வேதாந்த ப்ரத்யயம் சோத நாத்ய விசேஷாத்–3-3-1-

சமிதோ யஜதி -தனூன பாதம் யஜதி போல் விசேஷம் இன்றி மறுபடியும் ஒரு சொல் வருவதும்
பிரகரணம் மாறுவதும்
பேதத்துக்கு ஹேது என்று பூர்வ மீமாம்ஸையில் சொல்லப் பட்டுள்ளது
ஆதலின் தஹர வித்யை வெவ்வேறு தான் என்று பூர்வ பக்ஷம்

வெவ்வேறு சாகைகளில் படிக்கப்படும் வித்யைகள் ஒரே பேராக இருந்தாலும் ஒன்றே என்னக் கூடாது என்பர் பூர்வ பஷி
பிரகரண பேதம் இருக்குமே

அவிசேஷ புன ஸ்ரவணம் -வேறுபாடு இல்லாமல் மீண்டும் படிக்கப் படுத்தல் –
மீண்டும் படித்தது வீணாகப் போகக் கூடாதே என்பதால்
இரண்டு முறை படிப்பது வெவ்வேறே என்று கொள்ள வேண்டும் என்பர்

இத்தை நிரஸிக்கிறார்
சர்வ வேதாந்த ப்ரத்யயம் -எல்லா வேதாந்தங்களிலும் விளக்கப்படும் உபாசனம் ஒன்றே
சோத நாத்ய விசேஷாத்–விதி வாக்யம் -பல சம்யோகம் -உபாஸன விஷய குணங்கள் என்னும் ரூபங்கள் –
கர்மாவின் பெயர் இவற்றில் பேதம் இல்லாமையால் என்றவாறு

விசேஷம் இன்றி மறுபடியும் ஸ்ரவணம் என்பதுவும் -பிரகரண பேதமும் -அதைப் பற்றிய பிரதிபத்தி ஞானம்
வேறுபடாமையால் பயன்பட்டுவிடுகின்றன யாதலின் அவை வித்யை பின்னம் ஆகா

மீமாம்சையில் சாகாந்தர அதிகரணத்தில் ஐக்ய ஹேதுவாகக் கூறப்பட்ட விதி முதலியவைகள்
இங்கும் பயன்படுபவை யாதலின் வித்யைகளுக்குள் அபேதம் ஸித்தமாகிறது என்று கருத்து –

அதர்வண வேதம் சிரோ விரதம் சொல்லும் முண்டக உபநிஷத் -3-2-10-
தோஷாமே வைதாம் ப்ரஹ்ம வித்யாம் வதேத சிரோவ்ரதாம் விதிவைத் பைஸ்து சீரணம் -என்று
யார் ஒருவன் முறைப்படி தலையிலே தீயை சட்டியில் வைத்து தாங்கும் விரதம் ஏற்கிறானோ அவனுக்கு ப்ரஹ்ம வித்யை உபதேசிக்க வேண்டும்
வேறு இடங்களில் இப்படி இல்லையே என்பர்

சோதனா -என்றால் விதி வாக்கியம்
சோதனா +ஆதி +அவிசேஷாத்–உபாசீத வித்யாத் -உபாசனைக்கு அறிய வேண்டும்

ஜைமினி ஸூத்ரம்-2-4-9–ஏகம் வா சம்யோக ரூப சோதநாக்ய விசேஷாத் –என்று
தொடர்பு விதி வாக்கியம் ரூபம் பெயர் வேறுபடாமல் உள்ளதால் ஒன்றே ஆகும் என்பதாம்

சாந்தோக்யத்திலும் வாஜசனே யாகத்திலும் வைச்வா நர வித்யை குறித்து –
இது வைச்வா நரம் உபாசீதே -ஒரே மாதிரி உள்ளது

இரண்டிலும் உபாசிக்கப்படும் பரமாத்மா வைச்வாநரம் என்றும் ப்ரஹ்மத்தை குறித்தே பலனாகவும் கூறப்படுகின்றது

இப்படி வேவேறே சாகைகளில் படிக்கப் பட்டாலும் வித்யை ஒன்றே எனபது தெளிவாகும்

—————————————————————————————————————————

352- பேதாத் ந இதி சேத் ஏகச்யாம் அபி –3-3-2-

ஒரே வித்யை பல சாகைகளில் கூறப் பட்டு இருந்தாலும் உபாசகர்கள் வெவ்வேறே என்பதால்
சிரோ விரதம் அதர்வண வேதத்தில் அங்கமாக கூறப்பட்டுள்ளதே என்றால்-

விசேஷம் இன்றி புநர் ஸ்ரவணம் அர்த்தம் உள்ளதாலின் வித்யா பேதத்தினை அது ஸ்தாபிக்காது
ஆதர் வணிகர்களுக்கு சிரோ விரத வித்ய உபதேஸத்திலே நியதமான அங்கம் என்று நிச்சயிப்பதால்
மற்றவர்களுக்கு அது இல்லை என்னும் அர்த்தத்தால் வித்யை பின்னமே வேறானதே
வித்யை ஒன்றே என்றால் சிரோ விரதம் ஆதர்வணிகர்களுக்கே என்னும் நியமம் இல்லாது போகட்டும் என்பது சங்கை –

அதுக்கு உத்தரம் அருளிச் செய்கிறார் –

———————————————————————————————————————————-

353-ஸ்வாத்யா யஸ்ய ததான்வே ஹி சமாசாரே அதிகாராத் ச சவவத் ச தந் நியம –3-3-3-

வேத அத்யயனம் செய்யத் தகுதியாகும் பொருட்டு இத்தை அங்கமாக விதிக்கின்றது –
சமாசாரம் என்ற கிரந்தம் இத்தை கூறும் ஸ்வ ஹோமங்கள் போலே –

சிரோ விரதம் வித்யைக்கு அங்கம் அல்ல
ஸ்வாத்யா யஸ்ய ததான்வே ஹி –வேதத்துக்கு அதனால் ஸம்ஸ் கார்யத்வம் உண்டாவதற்காக
தந் நியமம் –சிரோ விரதம் உபதேசிக்க வேண்டிய நியமம்
அது வித்யைக்கு அங்கம் அல்ல
ஏன் எனில்
சமாசாரே அதிகாராத் -சமாசாரம் என்னும் கிரந்தத்தில் வேத விரதம் என்று கூறி இருப்பதால்
தேஷாம் ஏதாம் ப்ரஹ்ம வித்யாம் -என்ற இடத்தில் வேத வித்யை என்று பொருள்
ச சவ வச்ச –தந் நியம -ஸப்த ஸூர்யாதிகளாய் ஸதவ்தனம் வரையான பல ஸவ ஹோமங்களும்
ஆதர் வணிகர் களான ஏகாக்னிகளையே சார்ந்தவை என்று ஸ்ருதியில் உள்ளது –
அவை அவ் வேத அத்யாயி தவிர பிற வேதத்தைச் சார்ந்தோர்க்கு இல்லை -த்ரேத அக்னிகளுக்கு அல்ல
அப்படியே சிரோ விரதமும் ஆதர் வணிகர் கட்கு அங்கம் என்று தீர்மானிக்கப் படுகிறது –

முண்டக உபநிஷத் –
3-2-11- நைதத சீர்ண வராதோ அதியீத -என்று
சிரோ வ்ரதத்தை பின்பற்றாதவன் இந்த வேதத்தை அத்யயனம் செய்யக் கூடாது என்று விதிக்கிறது

3-2-10-தேஷாம் ஏதாம் ப்ரஹ்ம வித்யாம் வதேத -என்று ப்ரஹ்ம வித்யைக்கும் இப்படியே என்கிறது

சப்த ஸூரியம் தொடங்கி சதோனம் எனபது வரை ஸ்வ ஹோமங்கள் அனைத்தும் மற்ற ஹோமங்கள் போன்று
மூன்று அக்னியில் இயற்றப் படாமல் ஒரே அக்னியில் இயற்றப் படும் –
அதர்வண வேதத்துக்கு மட்டும் இது எப்படியோ அப்படியே சிரோ விரதமும் -என்பதால்
இது வேறு வித்யைக் கூற வில்லை

——————————————————————————————————————————-

354- தர்ஸயதி ச-3-3-4-

வேதம் உணர்த்துகிறது -தஹர வித்யை பல சாகைகளில் கூறப் பட்டு இருந்தாலும்
ஒன்றே என்று உணர்த்துகிறது-
உபாஸனம் ஸர்வ வேதாந்தங்களிலும் விதிக்கப் படுகிறது என்று காட்டுகிறது –

சாந்தோக்யம் –
8-1-1-தஸ்மின் யதந்தஸ் ததன் வேஷ்டவ்யம்-
தஹர ஆகாயம் என்பதற்குள் இருப்பதுவும் தேடப்படுவதுவும் எது என்று கேட்டு

8-1-2- கிம் தத்ர வித்யதே யதன்வேஷ்டவ்யம் -என்று தேடத் தகுந்ததாக எது என்று கேட்டு

அபஹதபாப்மா போன்ற எட்டு தன்மைகளுடன் கூடிய பரமாத்மாவே என்றது
தைத்ரிய நாராயண வல்லி சாந்தோக்ய உபநிஷத்தும் -12-3-
தத்ர அபி தஹரம் ககனம் விசோகஸ் தஸ்மின் யதன் தாஸ்ததுபா ஸி தவ்யம் -என்று
தஹா என்னும் மாகாசம் தோஷம் வருத்தம் அற்று உள்ளது —
அதனுள் உள்ள பரமாத்மாவே உபாசிக்கத் தக்கவன் என்றது

இரு வித்யைகளும் ஒன்றே என்று சொல்லாவிட்டால் சாந்தோக்யம் தேடத்தக்கது என்றும்
தைத்ரியத்தில் விசேஷியாமல் அது உபாஸித்வயம் என்று இருப்பதும் பொருந்தாதே

இத்தால் ஒன்றே என்று நிரூபணம் ஆயிற்று-

——————————————————————————————————————————-

355-உப சம்ஹார அர்த்தா பேதாத் விதி சேஷவத் சமாநே ச–3-3-5-

ஒன்றில் கூறிய வித்யையின் குணங்கள் அனைத்திலும் சேர்த்து கொள்ள வேண்டும்

ச என்று இதனை வலி உறுத்துகிறது

ச-அவதாரணம் -ஏவ என்றவாறு
சமாநே -எல்லா வேதாந்தங்களிலும் தஹர உபாஸனம் சமானமாக இருக்கும் பொழுது
உப சம்ஹார -ஒரு வித்யையில் சொன்ன குணங்களுக்கு மறு வித்யையிலும் உப ஸம்ஹாரம் -அனுசந்தானம் – செய்யத் தக்கது
அர்த்தா பேதாத் –வித்யையின் அங்கம் ஆகையால் வித்யைக்கு உபகாரம் செய்வதில் ஏதும் பேதம் இல்லாமையாலே
விதி சேஷவத் -விதி -வித்யை -ஒரு வேதாந்தத்தில் வைச்வானர வித்யைக்கு விசேஷணமாக விதிக்கப்பட்ட குணமானது
அந்த வித்யையின் உபகாரத்துக்காக உப சம்ஹரிக்கப் படுவது போலே இவ்வாறே உப சம்ஹாரம் செய்ய வேண்டும் என்பதாம் –

ரூப ஐக்யத்தால் வித்யையில் ஐக்யம் சொல்லும் பொழுது எதை உப ஸம்ஹாரம் செய்வது
ரூப ஐக்யத்த்தைத் தான் என்றால்
ரூப ஐக்யத்தால் வித்யை ஐக்யம் –வித்யை ஐக்யத்தால் ரூப ஐக்யம் -என்று அந்யோன்ய ஆஸ்ரய தோஷம் வரும்
ஆகையால் உப ஸம்ஹார்ய குணம் எது என்றால்-அறிய வேண்டிய ஆகாரத்தின் ஐக்யம் வித்யையில் ஐக்யத்தைக் குறிக்கிறது –
இந்த வேத்ய ஆகார ஐக்யம் வித்யையில் ஐக்யத்தைக் குறிக்கிறது –
இந்த வேத்ய ஆகார ஐக்யம் பூர்வமே ஸித்தமாகையாலே அது உப ஸம்ஹார்யம் அன்று
அதனால் அந்யோன்ய ஆஸ்ரயாதிகள் இல்லை
வேத்ய ஆகார ஐக்யத்தால் வித்யை ஐக்யம் சித்தித்தால் வேத்ய ஆகாரத்தை இட்டு வேறு ஒரு அங்கம் ஆகர்ஷிக்கப் படுகிறது
அந்த அங்கம் எல்லா இடங்களிலும் ஸ்ருதமானால் உபஸம்ஹார்யம் அன்று
சில இடங்களில் மட்டும் ஸ்ருதம் என்றால் கர்ம ஐக்யத்தாலும் சாகாந்தரத்திலும் உப சம்ஹரிக்கத் தக்கது என்பதே ஆச்சார்யர்களின் திரு உள்ளம் –

———————————————————————————————————————————————————————————————————–

இரண்டாவது அதிகரணம் -அந்யதாத்வ அதிகரணம் –

இவ்வாறு விதி முதலிய வற்றில் பேதம் உண்மையில் வித்யையில் ஐக்யம் ஸித்தம்
வித்யை ஏகமாகில் குணம் உப ஸம்ஹரிக்கத் தக்கது என்று கூறப்பட்டது

இப்போது சில வித்யைகளை உத்தேசித்து
ஐக்ய ஹேதுக்களான விதி முதலியவற்றில் பேதம் உள்ளதா இல்லையா என்று
விசாரிக்கப் படுகிறது என்று சங்கதி –

சாந்தோக்யம் மற்றும் ப்ருஹத் உபநிஷத்தில்,சொல்லும் உத்கீத வித்யைகள்
வெவ்வேறு என்று நிரூபிக்கப் பட உள்ளது

எதிரிகளை வீழ்த்த சாம கானத்தில் பாடும் உத்கீதம் பகுதி வேதத்தில் உள்ளது
அசுரர்களை வீழ்த்த தேவர்கள் இத்தை கைக் கொண்டார்கள்
முதலில் வாக் தேவதை கொண்டு பாட -வாக்கின் தோஷங்களால் முயற்சி பலிக்க வில்லை
இப்படியே பல உறுப்புகளை கொண்டு முயன்றும் பலிக்க வில்லை
இறுதியில் பிராணன் கொண்டு பாடி வென்றனர் –

இத்தால் எல்லா உறுப்புக்களும் தோஷத்துடன் கூடியவை என்றும்
பிராணன் மட்டுமே தோஷம் அற்றது என்றும் சொல்லிற்று ஆயிற்று

356-அந்ய தாத்வம் சப்தாதி சேத் ந அவிசேஷாத் —3-3-6-இது பூர்வ பக்ஷ ஸூத்ரம்

வேத வரி மூலம் வேறுபாடு விளங்குகிறது எனபது பொருந்தாது -வேறுபாடு இல்லாமல் உள்ளதால் –

அந்ய தாத்வம் சப்தாத் -அத ஹ ஏவாயம்-வாக்கியத்தில் ஒரு பக்கத்தில் உத்கீதத்தில் பிராண த்ருஷ்ட்டி செய்யவும்
மற்ற ஒரு பக்கம் உத் காதாவிடம் பிராண த்ருஷ்ட்டி செய்யவும்
சப்தத்தாலே ரூப பேதம் ஏற்படுகிறதே என்றால்
இதி சேத் ந -அப்படி அல்ல
அவிசேஷாத் —தொடக்கத்தில் இரண்டு இடத்திலும் விசேஷம் இன்றிக்கே உத் கீதத்துக்கே
உபாஸ்யத்வம் சொல்லி இருப்பதால் ரூப பேதம் இல்லை
எனவே வித்யா பேதம் ஸித்தியாது என்று கருத்து

ப்ருஹத் உபநிஷத் –
1-3-1-த்வயா ஹ பிரஜாபத்யா தேவாச்ச அஸூராச்ச –தே ஹ தேவா ஊசு ஹந்தா அஸூரான் யஜ்ஞே உத்கீதேன அத்யயாமா -என்றும்

1-3-7-அத ஹ ஏனம் ஆ சன்யம் பிராண மூசு –பவத்யாத்மநா பராஸ்யத் விஷன் ப்ராத்ருவ்யோ பவதி ய ஏவம் வேத -என்றது

சாந்தோக்யம் –
1-2-1- தேவா ஸூராஹைவ யத்ர சம்யேதிரே–தத் தஹ தேவா உத்கீதம் ஆஜஹ்ரு அநேன ஏ நான் அபிஹநிஷ்யாமி -என்றும்

1-2-7-அத ஹ ஏவாயம் முக்ய ப்ராணம் தம் உத்கீதம் உபாசாம் சக்ரிரே -என்றும்

1-2-8-யதா அஸ்மா நமாகணம் ருத்வா விதயம் சதே ய ஏவம் ஹைவ சவித்வம்சதே ய ஏவம் விதி பாபம் காமயதே

இங்கு உபாசனம் விதிக்காமல் உத்கீததுக்கு பலன் சொன்னது அதன் மீது ஆசை உண்டாக்கவே

ப்ரஹ்ம ஸூத்ரம் -1-3-25- அர்த்தவாதம் -ஆசை உண்டாக்குவதும் ஒரு வகை பிரமாணம் என்று அறியலாம்-

பூர்வ பஷம்-
இரண்டு வித்யையும் ஒன்றே –
முக்ய பிராணனை ஏறிட்டுக் கொண்டு உபாசிப்பதாலும் -சத்ருக்களை அழிப்பது பலன் என்பதாலும் –

ஆனால் ரூபத்தில் பேத முள்ளது என்பீர் ஆகில் -அதாவது

ப்ருஹத் உபநிஷத்தில் -வாஜச நேயகம் -அத ஹ இமம் ஆசந்யம் பிராணம் ஊசு த்வம் ந உத்காய ததா
இதி தேப்ய ஏஷ பிராண உதகாயத் -என்று –
ய ஏவம் வேத -என்று
உத்கீதத்தை கர்த்தாவின் மீது ஏற்றிக் கூறுவதாக -பாடுபவனை பிராணன் என்று கொண்டு அவனைத் த்யாநிப்பதாகக் கூறுகிறது

சாந்தோக்யத்தில் 1-2-8-அதஹ அயம் முக்ய பிராண தம் உத்கீதம் உபாசம் சக்ரிரே —-ய ஏவம் விதி பாபம் காமயதே ஏவ-என்று
உத்கீத கர்மம் மீது பிராணன் ஏறிட்டு கூறப் படுவதால்
ரூபம் வேறே என்றால்

பூர்வ பஷி வாதம் –

இரண்டிலும் அசுரர்களை அழிப்பதே குறிக்கோள் உண்டு-உத்கீதம் கொண்டே அழிக்கிறது
வாஜச நேயகத்தில் -ப்ருஹத் உபநிஷத் -9-3-1-தே ஹ தேவா ஊசு ஹந்தா அ ஸூ ரான் யஜ்ஞே உத்கீதேந -என்றும்

சாந்தோக்யத்தில்-1-2-10-தத்த தேவா உத்கீதம் ஆஜஹ்ரு அநேநைவ ஏ நான் அபிஹா நிஷ்யாம -என்று
தொடக்க வரிகள் ஓன்று போலே உள்ளன

பின்னால் உள்ள ப்ருஹத் உபநிஷத்தும் -1-3-7-தேப்ய எஸ பிராண உதகாயத் –
உத்கீதமே வஸ்துவாக இருந்த போதிலும் இங்கு கர்த்தாவாகவும் கூறப்பட்டது-

உணவே சமைக்கிறது போலே –
ஆகவே இரண்டு வித்யைகளும் ஒன்றே என்பர் பூர்வ பஷி

ஆனால் த்வம் ந உத் காயேதி –ததேதி தேப்ய ப்ராண உத் காயத் என்ற வாக்யத்தால்
உத்காதாவிடம் ப்ராண த்ருஷ்டி ரூபமான வேறுபாடு தோன்றுவதால்
அதற்கு என்ன கதி என்றால்
உத் கான கர்மாவான உத் கீதத்தில் கர்த்தாவின் தன்மை உபசார வழக்கால் கூறப்படுகிறது
ஆதலின் அபேதம் சித்தமே என்ற
பக்ஷத்தை
நிரசிக்கிறார்

—————————————————————————————————————————

இனி சித்தாந்தம்
357- ந வா பிரகரண பேதாத் பரோவரீயஸ் த்வாதிவத் —3-3-7-

இரண்டிலும் பிரகாரம் வேறுபட்டு உள்ளது -குணத்தில் வேறுபாடு கூறுவது போன்று

ந வா-பதங்கள் பூர்வ பஷத்தை தள்ளுகிறது-பிரகரண பேதம் உண்டே
பிரகரண பேதாத் –சாந்தோக்யத்தில் பிரணவத்தை உத்கீத அவயமாக உபாஸிக்க வேண்டும் என்று தொடங்கி
அந்தப் ப்ரவணமே உத்கீதம் எனப்படுகிறது என்று கூறுவதாகத் தெரிகிறது

வாஜசனயேகத்தில் -விசேஷமாக முழு உத்கீதமும் உபாஸ்யமாகத் தொடங்குகிறது

ஆகவே உத்கீதத்தில் பிராண த்ருஷ்டி சமமாய் இருப்பினும் ரூப பேதத்தால் வித்யா பேதம் ஸித்தம்

பரோவரீயஸ் த்வாதிவத் –ஒரே சாகையில் உத்கீத அவயவமான ப்ரணவத்தில் பரமாத்ம த்ருஷ்டி விதிக்கப் பட்டு இருக்கிறது –
அது சமமாயினும் ஓர் இடத்தில் த்ருஷ்டி விசேஷணமான பரமாத்விற்கு ஹிரண்ய புருஷத்வம் என்ற ரூபம் விதிக்கப் படுகிறது
மற்றோர் இடத்திலோ பரமாத்மாவிற்கு த்ருஷ்டி விசேஷணமாய் இருப்பினும்
பரோ வரீ யஸ்த்வம் முதலிய குணம் விதிக்கப் படுகிறது –

பரோ வரீ யஸ்த்வம்-என்பது வரீ யஸாம் பரத்வம் –அதாவது உயர்ந்தவர்கட்க்கு எல்லாம் உயர்ந்தவன்
உபாசிக்கப்படும் பிரணவம் ஒன்றாயினும்
த்ருஷ்டி விசேஷணமான பரமாத்மா ஒன்றாயினும்
பரமாத்மாவுக்கு இரண்டு வேறு தர்மங்கள் கூறப்பட்டமையால் வித்யா பேதம் ஸித்தித்தது போலே
இங்கும் கேவலம் பிரணவம் பூரணமான உத்கீதம் என்று வெவ்வேறு ரூப பேதத்தாலே வித்யை வேறு பட்டதே
ஆனால் த்ருஷ்ட்டி விசேஷணமான பரமாத்மாவின் விசேஷண பேதத்தால் வித்யா பேதம் சித்தித்தால்
விசேஷ்யமான உத் கீத பேதத்தால் வித்யா பேதம் என்பதில் விவாதம் இல்லை என்று கருத்து

இப்படி வித்யா பேதம் சித்தித்தால்
உபஸம்ஹார வாக்கியத்தில் உள்ள கர்ம விஷயமாகவும் கர்த்ரு விஷயமாக உள்ள
ப்ராண த்ருஷ்டி விதி உள்ளவாறே பொருள் கொள்ளத் தக்கதாகும்
த்ருஷ்டி விதி என்பது ஒன்றை மற்ற ஒன்றாக நினைத்து உபாஸித்தல்
மனதை ப்ரஹ்மமாக நினைத்து உபாஸித்தல் போன்றது –

சாந்தோக்யம் -1-1-1-ஓம் இதி ஏதத் அஷரம் உத்கீதம் உபாசன -என்று
உத்கீத அவயவமான ஓம் குறித்து உபாசனை தொடங்கப் படுகிறது –
மேலே தேவர்கள் முக்ய பிராணனை உபாசனம் செய்தார்கள் என்றது

ப்ருஹத்தில் இவ்விதமாக தொடங்கும் பிரகரணம் இல்லை
விஷய பேதமும் ரூப பேதமும் உண்டே -இரண்டு வித்யைகளும் ஓன்று அல்ல

சாந்தோக்யத்தின் தொடக்கத்தில் உத்கீத அவயவமான பிரணவத்தில் பரமாத்மாவை ஏறிட்டு உபாசிக்கும்படி
1-6-6-ய ஏஷோஅந்தராதித்யே ஹிரண்ய மய புருஷோ த்ருச்யதே -பொன் மயமான புருஷன் என்றும்

1-9-2-ச ஏஷ பரோவரீயான் உத்கீத -சிறந்த குணம் கொண்டவர்களில் சிறந்தவன் என்றும்
இரு விதமான உபாசனைகள் உண்டே –

———————————————————————————————————————–

358-சம்ஜ்ஞாத சேத் தத் உக்தம் அஸ்தி து தத் அபி —3-3-8-

பெயர் ஒன்றாக இருந்தாலும் வித்யைகள் ஒன்றே என்று சொல்ல முடியாதே –
வெவ்வேறு வித்யைகள் உள்ள இடங்களில் இது போலே காணலாம் என்றவாறு

சம்ஜ்ஞாத சேத் –உத்கீத வித்யை என்ற ஒரே பெயர் கொண்டு வித்யை ஐக்யம் சொன்னால்
தத அஸதி து -அந்த பெயர் ஒற்றுமை விதேயம் வேறு ஆனாலும் உள்ளது தான்
தத் உக்தம் —நித்ய அக்னி ஹோத்ரத்திலும் -குண்ட பாவிகளின் மாஸா மாத்ர ஹோமா வசாநிகமான
அயன அக்னி ஹோத்ரத்திலும் பெயர் ஒற்றுமை போலவும்
சாந்தோக்யம் முதல் ப்ரபாடகத்தில் அநேக வித்யைகளிலும் உத்கீதம் என்ற பெயர் ஒற்றுமை போலேயும்
இவ்விடமும் பெயர் ஒற்றுமை விதேயம் என்று சாதிக்க வல்ல ஹேதுவாகாது –

உத்கீத வித்யை-பெயர் ஒன்றாக இருந்தாலும் வெவ்வேறே என்று முன்பு பார்த்தோம்

அக்னி ஹோத்ரம் எனபது அன்றாடம் இயற்றப் படும் அக்னி ஹோத்ரத்தையும்
குண்ட பாயிகளின் அய நாக்னி ஹோத்ரம் இரண்டையும் குறிக்கும்

சாந்தோக்ய உபநிஷத்தில் முதல் பிரபாடகத்தில் பல வித்யைகளையும்
உத்கீத வித்யை என்றே கூறப்படுவதை பார்க்கிறோம்-

————————————————————————————————————–

359-வ்யாப்தேச்ச சமஞ்ஜசம் –3-3-9-

பல இடங்களில் கூறப்படுவதால் நடுவில் கூறப்படுவதும் பொருந்தும்

சாந்தோக்யம் முதல் பிரபாடகத்தில் உத்கீதத்தின் அவயவமான பிரணவத்தைக் குறித்து பேசி
மேலே -1-2-1-தத்த தேவா உத்கீதமா ஜஹ்ரு-என்றது
அங்கும் பிரணவமே உபாசிக்கத் தக்கது என்று கூறப்பட்டதாக அறிய வேண்டும்

ஆக
சாந்தோக்யம் ப்ருஹத் உபநிஷத்தில் சொல்லிய
உத்கீத இரண்டு வித்யைகளும் வெவ்வேறு என்றவாறு-

முன்னும் பின்னும் உத்கீத சப்தங்கள் ப்ரணவத்தையே குறித்து பிரணவத்துக்கே உபாஸ்யத்வம் வியாப்தமாய் இருப்பதால்
இடையில் தம் தேவா உத்கீதமா ஜஹ்ரு-என்றதிலும் உத்கீத ஸப்தத்துக்கு பிரணவம் என்ற பொருளே பொருத்தமானது
இடையில் வேறே பொருளைக் கூறி பிரகரணத்தைப் பிளந்து வித்யை ஐக்யம் சொல்ல வழி இல்லை

இது குண உப ஸம்ஹார பாதமாகையாலே ப்ரஹ்ம விதியே சிந்திக்கத் தக்கது

அதை விட்டு இடையிலே பர மத கண்டன ரூப காம்ய பலமான அப்ரஹ்ம வித்யையான
உத்கீத வித்யைப் பற்றி நிரூபித்தால் பொருந்தாது என்ற ஆஷேபத்துக்கு
நம் ஆச்சார்யர் அருளிய பரிஹாரம்
1 உத்கீதி யாதிகளில் உபாஸனம் ப்ரஹ்ம த்ருஷ்டி ரூபம் ஆகையாலே
ப்ரஹ்ம ஞானத்தை அபேக்ஷிப்பதால் இந்த பாதத்திலே பொருந்தும்
2-வித்ய அங்கமான கர்மாக்களுக்கு வீர்ய வத்தரத்வத்தை ஏற்படுத்துவதால்
இங்கு விசேஷமாக விசாரிக்கத் தக்கதாம்

ஆகவே இங்கு உத் கீத வித்யா நிரூபணம் பொருத்தமானதே —

————————————————————————————————————————-

மூன்றாவது அதிகரணம் -சர்வாபேத அதிகரணம் –
சாந்தோக்யம் கௌ ஷீதகீ உபநிஷத்துக்களில் கூறப்படும் பிராண வித்யை என்பது
ஒன்றே என்று நிரூபிக்கப் படுகிறது

3-3-10-சர்வாபேதாத் அந்யத்ர இமே —

அந்யத்ர–கௌஷீ தகீ ப்ராண வித்யையில்
இமே —வஸிஷ்டத்வம் முதலிய குணங்கள் உள்ளவையே
ஏன் எனில்
சர்வாபேதாத் -ப்ராணனுக்கு ஸர்வமுமான ஜ்யேஷ்டத்வம் ஸ்ரேஷ்டத்வம் இவற்றை விளக்கும் முறை வேறுபாட்டால் என்றபடி
வாக் முதலியவற்றின் ஸ்திதி கார்யங்கள் இரண்டும் ப்ராணனுக்கு அதீனமாவை யாதலால் –
ப்ராணனுக்கு ஜ்யேஷ்டத்வமும் ஸ்ரேஷ்டத்வமும் விளக்கப் பட்டன
ஆகையால் வாக்கு முதலியவற்றைச் சார்ந்த கார்ய சாமர்த்திய ரூபமான வசிஷ்டத்வம் முதலியவற்றின் சம்பந்தமும்
இங்கும் சொன்னதே போன்றதே என்று வித்யை ஐக்யம் சித்தமாயிற்று –

சாந்தோக்யத்திலும்-5-1-1- -வாஜச நேயகத்திலும் -ப்ருஹத் -6-1-1-பிராண வித்யை கூறப்படுகிறது

யோ ஹ வை ஜ்யேஷ்டம் ச ஸ்ரேஷ்டம் ச வேத ஜ்யேஷ்டச்ச ஹ வை ஸ்ரேஷ்டச்ச பவதி
ப்ராணோ வாவ ஜ்யேஷ்டச்ச ஸ்ரேஷ்டச்ச -என்று
பிராணன் மூத்ததாகவும் உயர்ந்ததாகவும் கூறப்பட்டு உபாசிக்கத் தகுந்ததாக உணர்த்தப் பட்டது

இதனைத் தொடர்ந்து வாக் இந்த்ரியத்திடம் செல்வம் வசிஷ்டம்
கண் இந்த்ரியத்திடம் நிலை நிறுத்தும் தன்மை பிரதிஷ்டம்
காது இந்த்ரியத்திடம் சேகரிக்கும் தன்மை சம்பத்
மனம் -ஆயதனம்-அனைத்துக்கும் இருப்பிடம்
அனைத்தும் பிராணனை சேர்ந்தவை என்றது

கௌஷீதகீ உபநிஷத்திலும் பிராணன் மூத்ததாகவும் உயர்ந்ததாகவும் சொல்லப் பட்டாலும் வாக்கு முதலானவற்றுக்கு
கூறப்பட்ட வசிஷ்டம் முதலான தன்மைகள் சொல்ல பட வில்லை
எனவே உபாசன ரூபம் மாறுபடுகிறது
இரண்டும் வெவ்வேறே என்பர் பூர்வ பஷி

இரண்டும் ஒன்றே –
சாந்தோக்யம்–5-1-6- -ஏதா ஹ வை தேவதா அஹம் ஸ்ரேயசி வ்யூதரே -என்றும்
ப்ருஹத் -6-1-7-அஹம் ஸ்ரேயசே விவதமா நா -என்றும்
விவாதம் செய்து பிராண வித்யை தொடங்குகிறது

மற்ற இந்த்ரியங்கள் வெளியேறினாலும் பிராணன் உடல் தொடர்ந்து செயல்பட
மற்ற இந்த்ரியங்கள் தங்கள் இருப்புக்கு பிராணனையே அண்டி உள்ளமை காட்டப் பட்டது

ஆக வசிஷ்டம் போன்ற தன்மைகள் பிராணனுக்கு உள்ளமை மறைமுகமாக இங்கும் கூறப்பட்டன
எனவே இரண்டுக்கும் பேதம் இல்லை என்றதாயிற்று

——————————————————————————————————————-

நான்காவது அதிகரணம் -ஆனந்தாத் யதிகரணம் –

முன் மூன்று அதிகரணங்களில் -வித்யா பேத அபேத சிந்தை செய்யப்பட்டது
முதல் அதிகரணத்தில் -வைச்வாநர வித்யையில் வாயு பிராணா என்று
வாயு பரமாத்மாவின் பிராணனாகத் த்யானிக்கத் தக்கவன் எனப்பட்டான்
இரண்டாவதில் உத்கீத வித்யையில் த்ருஷ்டி விசேஷணமாக பிராணன் பேசப்பட்டான்
மூன்றாவதில் பிராணனே நிரூபிக்கப் பட்டான்
ஆக மூன்று அதிகரணங்களும் மிக்க சம்பந்தம் உள்ளவையே

மேலும் பிராண வித்யை அதிகரணத்தில் -ஜ்யேஷ்டத்வம் ஸ்ரேஷ்டத்வம் என்ற குணங்களைக் கூறியதிலேயே
அடங்கி விட்ட வஸிஷ்டத்வாதி குணங்களும் அனுசந்திக்கத் தக்கவை என்றால் போலே
ப்ரஹ்மம் ஸர்வ வித்யைகளாலும் அறியத் தக்க தாதலின்
அவனது ஸ்வரூப நிரூபக தர்மங்களான ஆனந்தாதிகளுக்கும் ப்ரஹ்ம ஸ்வரூப நிரூபண
அந்தர் பாவத்தால் அனுசந்தேயம்
இங்கு சொல்லப்படுகிறது என்று சங்கதி –

ப்ரஹ்ம் ஆனந்தமயம் -அவிகாராய -ஞானமயம் -அபரிச்சேத்யம்-அகில ஹேய ப்ரத்ய நீகத்வம் -ஆகிய
ஐந்து குணங்களும் ப்ரஹ்ம வித்யையில் படிக்கப்பட வேண்டும் என்று நிரூபிக்கப் படுகிறது –

361-ஆனந்தாதய ப்ரதா நஸய —3-3-11-

ஞான ஆனந்த அமல அந்நதத்வ ரூபங்களான ஸ்வரூப நிரூபக தர்மங்கள்
ஸர்வ பர வித்யைகளிலும் உப ஸம்ஹரிக்கத் தக்கவையா இல்லையா என்று சம்சயம்

ஒரு பிரகரணத்தில் உள்ள குணங்களை வேறு பிரகரணத்தில் உப ஸம்ஹரிக்கையில்
பிரமாணம் இல்லாமையால் உப ஸம்ஹார்யங்கள் அன்று
என்று பூர்வ பக்ஷம்

அதை நிரசிக்கிறார்

ஸர்வ அபேதாத் -என்ற ஸூத்ரத்தில் இருந்து -அபேதாத் -என்பது இங்கு அனுவர்த்திக்கிறது
ஆனந்தாதய ப்ரதா நஸய-ஆனந்தாதி குணங்கள் எல்லா வித்யைகளிலும் உப ஸம்ஹரிக்கத் தக்கவையே
ப்ரஹ்மத்துக்கு சர்வ வித்யைகளிலும் அபேதத்தாலே -ப்ரஹ்ம ஸ்வரூபத்துக்கு இன்றியமையாத
ஆனந்தாதி குணங்கள் அனுசந்திக்கக் கூடியவையே
இதனால் ப்ரஹ்ம குணங்கள் அநந்தமாய் இருந்தாலும் உப ஸம்ஹரிக்கக் கூடியவையே என்று கருத்து –

ப்ரஹ்மத்தின் ஆனந்தம் போன்ற தன்மைகள் அனைத்து இடங்களிலும் பொருந்தும் –
ஒரு சில குணங்களே சில வித்யைகளுக்கு கூறப்பட்டாலும் –
அனைத்து குணங்களுன் கூடிய ப்ரஹ்மம் அனைத்து உபாசனைகளிலும் ஒன்றாகவே இருப்பதால்

தைத்ரிய ஆரண்யகத்தில் -2-5-தஸ்ய ப்ரியமேவ சிர-
பிரியத்தைத் தலையாகக் கொண்டு போன்ற வரிகள் உண்டே

இது போன்றவையும் அனைத்து வித்யைகளிலும் படிக்க வேண்டி வருமே என்றால்
பதில் அடுத்த ஸூத்ரத்தில்-

———————————————————————————————————————

362-ப்ரிய சிரஸ் த்வாத்ய ப்ராப்தி உபச யாபச யௌ ஹி பேதே –3-3-12-

ப்ரஹ்ம ஸ்வரூப குணங்களுக்கே உப ஸம்ஹாரம் ப்ராப்தம் என்றால்
ப்ரிய சிரஸ் த்வாத்ய ப்ராப்தி -ப்ரிய சிரஸ் த்வம் முதலிய தன்மைகள் கிட்டாமல் போகும்
தஸ்ய ப்ரியமேவ சிரஸ் -என்று கூறப்பட்டது
ப்ரியமே சிரஸ் -என்பது போன்றவைகள் ப்ரஹ்மத்தின் குணங்கள் அல்லாமையாலும் –
புருஷன் போன்றதாக ரூபகம் செய்வதில் அடங்கியதாலும் என்றபடி
பேதே -சிரஸ் பக்ஷம் போன்ற அவயவ பேதத்தை ஒப்புக் கொண்டால்
உபச யாபச யௌ ஹி -ப்ரஹ்மத்துக்கு வளர்ச்சி தளர்ச்சி எல்லாம் ஏற்படும்
அதனால் ஸத்யம் ஞானம் ஆனந்தம் அஜரம் -என்ற ஸ்ருதியுடன் விரோதம் வரும் -என்பதாம்

அவசியம் இல்லை -காரணம்
உறுப்பு பேதங்களை ஏற்றால்
வளர்தல் குறைதல் போன்ற தோஷங்கள் வருமே

தைத்ரிய ஆனந்த வல்லி-2-1- சத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்ம-என்பதற்கு முரணாகி விடுமே

ப்ரிய சிரஸ்த்வாதிகளை விட ஆனந்தாதிகளுக்கு விசேஷத்தைச் சாதிக்கிறார்

———————————————————————————————————————-

அனைத்து குணங்களையும் அனைத்து வித்யைகளிலும் படிக்க வேண்டும் என்றால்
அளவிறந்த எண்ணற்ற கல்யாண குணங்களையும் படிக்க வேண்டி வருமே
கணக்கற்று உள்ளதால் இயலாதே என்றால் –

363-இதரே து அர்த்த சாமான்யாத் –3-1-13-

து -ஸப்தம் சங்கையை விலக்குகிறது
இதரே -ஆநந்தம் முதலானவைகள்
அர்த்த சாமான்யாத் –ப்ரஹ்ம நிரூபக தர்மங்கள்
ஆதலால் -அனு வர்த்தந்தே -வருவித்திக் கொண்டு விசேஷணமாக அனுவர்த்திக்கின்றன
தர்மியான ப்ரஹ்மம் தோன்றும் போது எல்லாம் தர்மமான இவையும் அவசியம் தோன்றக் கூடியவையே
ப்ரிய சிரஸ்த்வம் முதலானவையோ ப்ரஹ்ம ஸ்வரூப நிரூபக தர்மங்கள் அல்ல என்று கருத்து

சத்யத்வம் ஞானத்வம் அனந்ததவம் அமலத்வம் –
யதோ வா இமானி –
தைத்ரியம் -3-1-சத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்ம
ஆனந்தோ ப்ரஹ்ம
குணங்கள் குணியை விட்டுப் பிரியாதவை
காருண்யம் போன்றவை எந்த வித்யையில் படிக்கப் படுகின்றனவோ
அங்கு மட்டும் படித்தால் போதும் என்றதாயிற்று-

ஜகத் காரணத்வம் என்பது உப லக்ஷணம் என்றும் விசேஷணம் என்றும் ஏற்கப்பட்டுள்ளது
ப்ரக்ருதி புருஷ கால விசிஷ்டமான ப்ரஹ்மத்துக்கு காரணத்வம் லக்ஷணம்
இதில் விசேஷ்ய அம்சத்துக்கு லக்ஷணம் ஆனந்தாதிகள்
அதில் விசேஷ்யத்தை அனுசந்திக்கையில் காரணத்வத்துக்கு அந்வயம் இல்லாமையால்
அது உப லக்ஷணம் எனப்படுகிறது
ஞாப்ய அந்தர்பூதத்வே சதி ஞாப்ய பிரதிபத்த் யுபாயத்வம் உப லக்ஷணத்வம் –
ப்ரஹ்மம் ஜகத் காரணமாக உப லஷிதம் என்று ஸ்ரீ பாஷ்யத்தில் அருளப் பட்டது
ஆனந்தாதிகளும் ப்ரஹ்மத்துக்கு மற்றோர் லக்ஷணம் என்று கருத்து

———

ஆத்மா நம் ரதி நம் வித்தி -கட உபநிஷத் -3-3-ஆத்மாவுக்கு தேருக்கு உரிமையாளன் –
தேர் வீரன் -சரீரம் தேர் -அறிவி தேரோட்டி -மனஸ் கடிவாளம் போன்று -உபாசனதுக்கு உதவ

ஸ்வரூப தர்மங்கள் அல்ல என்றால் ப்ரஹ்மாவுக்கு ப்ரிய சிரஸ்த்வம் போன்றவை எதற்கு என்ன
364-ஆத்யா நாய பிரயோஜன அபவாத் –3-3-14-

வேறு பயன் கூறப் படாததால் உபாசனையின் பொருட்டே –
ஆத்யாநம் அல்லது அநு சிந்தனம் எனபது உபாசனத்தையும் குறிக்கும் –
இப்படிப்பட்ட உபாசனம் சாஸ்திர ஞானம் மூலம் கை கூடும் –

இந்த ஞானம் வரவே தைத்ரியம் -2-1-ப்ரஹ்ம வித் ஆப் நோதி பரம் –
அன்னமயம் -புத்தியில் ஏறிட்டுக் கூறுவது போலே

தஸ்ய இதம் ஏவ சிர –தஸ்ய பிராண ஏவ சிர -போலே உபாசனையின் பொருட்டே
பிரிய சிரஸ்த்வம் போன்றவை குணங்கள் அல்ல -என்றே கொள்ள வேண்டும் –

ப்ரஹ்மம் ஆனந்த மயமானது –
அதை பிரியம் மோதம் முதலிய ரூபமாகப் பிரித்து தலை சிறகு வால் என்று
எல்லாம் ரூபகம் செய்தது புத்தியில் நிலை பெறச் செய்யவே என்று தாத்பர்யம் –

—————————————————————————————————————

365-ஆத்ம சப்தச்ச —3-3-15-

தைத்ரியம் -2-5-அன்யோந்தர ஆத்மா ஆனந்தமய -என்று
ஆத்ம பதத்தினால் ஆனந்த மயன் கூறப்பட்டான்

ஆத்மாவுக்கு தலை வால் பக்கம் இல்லாததால் ப்ரஹ்மத்துக்கும் இல்லை
ஆகவே ப்ரிய சிரஸ்த்வம் குணம் இல்லை
உபாசனையின் பொருட்டே படிக்கப் பட்டது
இதற்கு பூர்வ பஷ வாதம்

தைத்ரியம் –
2-5–அந்யோந்தர ஆத்மா பிராணமய -என்றும் –
2-3-அந்யோந்தர ஆத்மா மநோமய என்றும்
அசேத வஸ்துக்களையும் ஆத்மா பதம் குறிக்க
பரமாத்மாவை அந்யோந்தர ஆத்மா ஆனந்தமய -என்று
ஆத்மா பதம் எவ்வாறு குறிக்க இயலும்

ப்ரிய சிரஸ்த்வம் போல்வன ப்ரஹ்ம ஸ்வரூப தர்மங்கள் அல்ல
சிரஸ் -பக்ஷம் -புச்சம் போல்வன ஆத்ம தர்மங்கள் அல்ல

அடுத்த ஸூத்ரம் விடை அளிக்கிறது-

——————————————————————————————————————-

366-ஆத்ம க்ருஹீதி இதரவத் உத்தராத் —3-3-16-

ஆத்மக்ருஹீதி –அந்ய அந்தர ஆத்மா -என்று ஆத்ம சப்தத்தால் பரமாத்மாவுக்கே கிரஹணம் கூடும்
இதரவத் -ஆத்மா வா இதம் ஏக ஏவ அக்ர ஆஸீத் –என்ற சுருதியில் உள்ள ஆத்ம ஸப்தம் எப்படி பரமாத்மாவை க்ரஹிக்கிறதோ அவ்வாறே
உத்தராத் -சோகாமயத பஹூஸ் யாம் ப்ரஜாயேய-முதலிய வாக்யத்தால் என்றபடி –

அந்யோந்தர ஆத்மா ஆனந்தமய -ஆத்மா பதம் பரமாத்மாவையே குறிக்கும் –
மற்றைய இடங்களிலும் இப்படியே கொள்ளப் படுகிறது

ஐ தரேய உபநிஷத் -1-1-1-ஆத்மா வா இதம் ஏக ஏவ அக்ர ஆஸீத் –ச ஈஷத லோகாந்து ஸ்ருஜை –
ஆத்மா பதம் பரமாத்மாவையே குறிக்கும்

உத்தரேத் -அடுத்து உள்ள வரிகளில் ஆனந்த மயமானவனான அவனே உலகைப் படைக்கிறான்
தைத்ரியம் -2-6-சோகாமயத பஹூஸ் யாம் ப்ரஜாயேய-
ஆக ஆத்மா பதம் பரமாத்மாவையே குறிக்கும் என்றதாயிற்று-

———————————————————————————————————–

367-அந்வயாத் இதி சேத் ஸ்யாத் அவதாரணாத்-3-3-17-

இப்படி நிச்சயம் அறியலாம் எவ்விதம் என்றால் முன்பும் இவ்விதம் கூறப்பட்டதால் ஆகும்

அந்வயாத் -முன் உள்ள அந்ய அந்தர ஆத்மா பிராணமய -என்னும் வாக்யத்தால் ஸித்தமான அநாத்மாக்களில்
ஆத்ம ஸப்தத்துக்கு அந்வயம் காணப்படுவதால்
பின் வாக்யத்தால் எப்படி தீர்மானம் பிறக்கும் என்றால்
இதி சேத் அவதாரணாத்-தஸ்மாத் வா ஏ தஸ்மாத் ஆத்மந ஆகாச சம்பூத -என்று
ப்ரக்ருதமான ஆத்மாவுக்கே பிராணமயனைத் தொடங்கி ஆனந்த மயன் வரை குறிப்பிட்ட ஆத்ம சப்தத்தால்
கிரஹணம் நிச்சயிக்கப் படுவதால் என்றவாறு
ஸ்யாத் -முன் கூறியபடியே தீர்மானம் ஆகக் கூடும்

இதற்கு முன்பும் தைத்ரியம் -2-1-தஸ்மாத் வா ஏ தஸ்மாத் ஆத்மந ஆகாச சம்பூத –
இந்த பரமாத்மாவிடம் இருந்தே ஆகாயம் தோன்றிற்று

அன்னம் பிராணன் மநோ விஞ்ஞான மயன் சொல்லி ஆனந்த மயனில் நிறுத்தி –
ஆனந்த மயனான ப்ரஹ்மத்துக்கு அந்தர்யாமியாக யாரும் இல்லாததால் –
அடுத்து-2-6- ச ஆகாமயதா-அவன் சங்கல்பித்தான் என்றது

ஆகவே பரமாத்மாவாக இல்லாத வஸ்துக்களுக்கும்
ஆத்மா பத பிரயோகம் தோஷம் இல்லை-

ஆகையால் ப்ரிய சிரஸ் முதலியவை ஆத்ம தர்மம் அல்லவாயினும்
ஞானம் ஆனந்தம் முதலியவை ஆத்மாவின் தர்மங்கள் ஆகையாலும்
அவையே ப்ரஹ்ம ஸ்வரூப நிரூபகங்கள் ஆகையாலும்
ஆனந்தாதிகளுக்கே எங்கும் உப ஸம்ஹரிக்கின்ற தன்மை ஆகலாம் –

——————————————————————————————————–

ஐந்தாவது அதிகரணம் -கார்யாக்யா நாதிகரணம் –

சாந்தோக்ய வாஜசனே யாதிகளில் ஜ்யேஷ்டஞ்ச ஸ்ரேஷ்டஞ்ச என்று பிராண உபாஸனத்தை விதித்து
ச ஹோவாச கிம் மே வாஸோ பவிஷ்யதீதி ஆப இதி ஹோ வாசா -என்று அப்புக்களுக்கு பிராண வாஸஸ்த்வம் கூறி
ஆசமனத்தால் பிராணனை நிர்வாணம் இன்றி வஸ்திரம் உள்ளனவாக ஆக்குகிறான் என்கின்றன

போஜனத்தின் முன்னும் பின்னும் ஆசமனம் பிராண வித்யைக்கு அங்கமாக விதிக்கப் படுகிறதா
அல்லது
ஆசமனம் செய்யும் அப்பு பிராணன்களுக்கு வஸ்திரம் ஆகும் என்ற அனுசந்தானம் விதிக்கப் படுகிறதா
என்று சம்சயம்

ஆஸாமேத் -என்று விதி ப்ரத்யயத்தாலும் -ஸ்ம்ருதி ஆசார ப்ராரப்தமான ஆசமனத்தைக் காட்டிலும்
ஆசமனத்தின் பின் பிராண வித்யைக்கு அங்கமாக விதிக்கப் படுகிறது என்று பூர்வ பஷம்
அத்தை நிராகரிக்கிறார் –

ஆசமனம் செய்யும் நீர் பிராணனுக்கு வஸ்த்ரமாக உள்ளது என்று நிரூபிக்கப் படுகிறது –

368-கார்யாக்யாநாத் அபூர்வம் —3-3-18-

அபூர்வம்-முன் பிராப்தம் இல்லாதது
ப்ராணனுக்கு வஸ்திரம் என்ற அனுசந்தானமே இங்கு விதிக்கப் படுகிறது
ஆசமனம் ப்ரமாணாந்தர ப்ராப்தமாதலின் அது விதிக்கப் படுவது இல்லை
கார்யாக்யாநாத் -ஸாஸ்த்ரம் புதியதையே வேறு வகையில் கிடைக்காததையே விதிக்கும்
அப்பு பிராணனின் வஸ்திரம் என்று முன் பின் ஆசமனங்களால் அனுசந்தானமே அப்ராப்தமாதலின் விதிக்கப்படுகிறது
ஆசமனம் ப்ராப்தமாதலின் அது விதிக்கப்படுவது இல்லை –

சாந்தோக்யம் – 5-2-2–ச ஹோவாச கிம் மே வாஸோ பவிஷ்யதீதி ஆப இதி ஹோ வாசா தஸ்மாத் வா
ஏதத சிஷ்யந்த புரஸ்தாத் உபரிஷ்டாச் சாத்பி பரிதததி சம்புகோ ஹ வாஸோ பவத்ய நக்நோ பவதி –
நீரே வஸ்த்ரமாக பிராணனுக்கு உள்ளது

இது போலே ப்ருஹத் உபநிஷத்திலும் -8-1-14-கிம் மீ வாஸ-என்றும் -ஆபோ வாஸ -என்றும் உள்ளது

தத் வித்வாம் சச் ஸ்ரோத்ரியா அசிஷ்யந்த ஆசாமந்த்ய சித்வா சாசாமந்த்யே தமே வததநமநகநம் குர்வந்தோ மன்யந்தே -என்றும்

ப்ருஹத் மாத்யந்தினத்தில் -தஸ்மாத் ஏவம் வித சிஷ்யன் நாசா மேதசித்வா சாசா மந்த்யேதமே வததநமநகநம் குருதே

ஆசமனம் செய்ய வேண்டும் என்பது விதி முறையே -பிராண வித்யையின் அங்கமாக-இது தவறான வாதம்

ஆசமன நீர் பிராணனுக்கு வஸ்த்ரம் ஆகிறது என்றதை உணர்த்தவே இங்கு கூறிற்று-

————————————————————————————————————-

ஆறாவது அதிகரணம் -சமாநாதிகரணம் –

கீழ் பிராண வித்யா சேஷமாக பிரசங்க சங்கதியால் வந்தது
அதற்கு முன் ஸ்வரூப ப்ரதீதியில் உள் அடங்கியமையால் உப ஸம்ஹாரங்கள் எனப்பட்டது
இந்த அதிகரணத்தில் ஸத்ய சங்கல்பத்துவத்தில் அடங்கிய வசித்துவம் முதலிய குணங்கள்
உப ஸம்ஹாரங்கள் என்று கூறப்படுகிறது
என்று சங்கதி

சுக்ல யஜூர் வேதம் -அக்னி ரஹஸ்யம்-ப்ருஹத் ஆரண்யகம் -இரண்டு உபநிஷத்களிலும் உள்ள
சாண்டில்ய வித்யைக்குள் -ரூபத்தில் வேறுபாடு இல்லாததால் – இரண்டும் ஒன்றே என்று நிரூபிக்கப் படுகிறது-

369-சமான ஏவம் ச அபேதாத் –3-3-19-

வாஜசனேயகம் அக்னி ரஹஸ்யத்தில் -மநோ மயனாய் பிராண சரீரனாய் பா ரூபனாய் ஸத்ய ஸங்கல்பனாய்
ஆகாச ஆத்மாவான ஆத்மாவை உபாஸிக்க விதிக்க
ப்ருஹதாரண்யகத்தில் சாண்டில்ய வித்யையில் -மநோ மெய்ஞான இந்தப் புருஷன் பா ரூபன் ஸத்யன் –
அவன் ஹ்ருதயத்துக்குள் நெல் போல் சாமை போல் எல்லாருக்கும் தலைவனாய் -அதிபதியாய் –
ஸமஸ்த உலகையும் ஆளுகிறான் என்று கூறுகிறது
இவ்விரண்டிலும் வித்யா பேதம் உள்ளதா இல்லையா என்று சந்தேகம்

ஓர் இடத்தில் ஸத்ய ஸங்கல்பம் அதிகமாய் உள்ளது
மற்ற ஒன்றில் வசித்துவம் முதலியன
ஆகையால் ரூபம் வெவ் வேறாதலின் வித்யை பின்னமானது என்று பூர்வ பக்ஷம்

அத்தை நிரஸிக்கிறார்
சமான ஏவம் ச அபேதாத்-மநோ மயத்தவாதிகள் சமானமாகையாலும்
வசித்வாதிகளும் ஸத்ய ஸங்கல்பத்தின் விஸ்தார ரூபமாதலாலும் அபேதம் ஸித்தம்
அத்தாலே ரூப பேதம் இல்லாமையால் வித்யை ஐக்யம் ஸித்தமாம் –

வாஹச நேயகத்தில் அக்னி ரகசியம் சாண்டில்ய வித்யை-
சத்யம் ப்ரஹ்ம இதி உபாசீத அதகலு க்ரதும யோகம் புருஷ -என்று
சத்தியத்தை பிரமமாக உபாசிக்க வேண்டும் என்று தொடங்கி

ச ஆத்மானம் உபாசீத மனோமயம் பிராண சரீரம் பாரூபம் சத்ய சங்கல்பம் ஆகாசாத்மானம் -என்று
தூய்மையான மனம் மூலம் அறியத் தக்கவனாக -பிராணனை சரீரமாகக் கொண்டவனாக – ஜ்யோதி ரூபமாக –
ஆகாசத்துக்கு ஆத்மாவாக உள்ளவனாக -சத்ய சங்கல்பனாக –
உள்ள பரம் பொருளை உபாசிக்கக் கடவன் -என்று முடித்தது

இது போன்று ப்ருஹத் உபநிஷத்தில் -5-6-1-
மநோமயோ அயம் புருஷ பாஸ் சத்ய தஸ்மின் அந்தர்ஹ்ருதயே யதா வ்ரீஹிர்வா யவோ வா ச ஏஷ சர்வச்ய வசீ
சர்வஸ்யோசா நஸ் சர்வஸ் யாதிபதி சர்வம் இதம் ப்ரசாஸ்தி யதிதம் கிம் ச -என்று
இந்த புருஷன் தூய்மையான மனம் கொண்டு அறியத் தக்கவன் -தானாகவே பிரகாசமாக உள்ளவன் –
மாற்றங்கள் அடையாதவன் -ஹிருதயத்தில் நெல் அளவு உள்ளவன் அனைவரையும் தன வசத்தில் படுத்தி நியமித்தபடி உள்ளவன் -என்றது

இரண்டு வித்யைகளிலும்-சம்யோகம் -பலன்களில் உள்ள தொடர்பும் –
சோதனா -உபாசனை விதி முறைகளும் -ஆக்யா-பெயரும் -ஒன்றாக இருந்தாலும்
அனைவரையும் தன் வசப்படுத்தும் தன்மையில் வேறுபாடு இருப்பதால் இரண்டும் வெவ்வேறு
என்பர் பூர்வ பஷி

ஆனால் சமான ஏவம் -பொதுவாக உள்ளதால் இரண்டும் ஒன்றே
அனைத்தையும் வசப்படுத்தும் தன்மை சத்ய சங்கல்பத்தில் அடங்கும் –
ஆகவே இரண்டும் ஒன்றே —

——————————————————————————————————

ஏழாவது அதிகரணம் -சம்ப்ரு யதிகரணம் –

கீழே உபாஸ்யத்வேன வித்யா ஐக்யம் கூறப்பட்டது போல்
அஷி -கண் ஆதித்யன் -இரண்டு இடங்களிலும் சம்பந்தியாக வ்யாஹ்ருதி சரீரகனாக
பரமாத்மாவே உபாஸ்யன் ஆகையால் வித்யை ஐக்யம் என்று பூர்வ பக்ஷம்

கட உபநிஷத்தில் உள்ள சம்ப்ருதி -அனைத்து வல்லமை உடன் இருத்தல் –
த்யு வ்யாப்தி -தேவ லோகத்தில் பரவி இருத்தல் -ஆகியவை
அனைத்து வித்யைகளிலும் உபாசிக்க வேண்டியவை அல்ல என்று நிரூபிக்கப் படுகிறது

370-சம்பந்தாத் ஏவம் அந்யத்ர அபி-3-3-20-

ப்ருஹத் உபநிஷத் –
5-5-1-சத்யம் ப்ரஹ்ம என்று தொடக்கி –
5-5-2-தத்யத் சத்யம் அசௌ ச ஆதித்யோ ய ஏஷ ஏதஸ்மின் மண்டலே புருஷோ யச்சாயம் தஷிணே அஷின் –என்று
ஸூர்ய மண்டலத்திலும் ஸூர்யனின் வலது கண்ணிலும் உள்ளான் அவனே உபாசிக்கத் தக்கவன் -என்றது

ஸூர்ய மண்டலத்தில் உள்ளதை தஸ்யோ உபநிஷதஹா என்றும்
தச்யோ பநிஷதஹம் என்றும்
அவன் பெயர் அஹ என்றும்
அஹம் என்றும் கூறியது

உபாசிக்கும் வஸ்து ஒன்றே என்பதால்-சத்யம் என்னும் ப்ரஹ்மமே —
ரூப பேதம் இல்லை என்பதால் இரண்டும் ஒன்றே என்பர் பூர்வ பஷி

சித்தாந்தம் அடுத்த ஸூத்ரத்தில்-

————————————————————————————————————–

371- ந வா விசேஷாத்–3-3-21-

உபாசிக்கப்படும் வஸ்து வேறுபடுவதால் –
இருக்கும் இட வேறுபாடு ரூப வேறுபாடு உள்ளதால்
வெவ்வேறு வித்யைகள் என்றதாயிற்று

அனுசந்தானம் செய்ய வேண்டிய ஸத்ய ப்ரஹ்மம் ஒன்றே யானாலும்
இரண்டு ஸ்தானங்களில் சம்பந்தம் என்ற வேத்ய ஆகாரத்தை பேதத்தால்
வித்யை வெவ்வேறான படியால்
எந்த நாமம் எங்கு ஸ்ருதமோ அங்கேயே அது நியதமும் ஆகும் –

—————————————————————————————————————-

372-தர்சயதி ச –3-2-22-

சாந்தோக்யம் -1-7-5-தஸ்யை தஸ்ய தத் ஏவ ரூபம் யதமுஷ்ய ரூபம் -என்று
ஒன்றில் உள்ள திரு மேனி மற்றதுக்கும் பொருந்தும் என்று
தனித் தனியே சொல்வதால் இரண்டும் ஒன்றல்ல –

ஸ்ருதியே -வித்யா பேதம் இருந்தால் குணம் உப ஸம்ஹரிக்க வேண்டியது இல்லை என்று
சொல்லுமே
ரூப ஐக்யம் கொண்டே வித்ய ஐக்யம் கொள்ள வேண்டும்
உனது பக்ஷம் படி வித்யை ஐக்யம் என்றால் ரூபம் சித்தமாகையால்
ப்ராப்திக்கு அபேஷை இல்லாமையால் ரூப அதிதேசம் செய்தது வீணாகும்
அந்த அதிதேசம் வித்யா பேதத்தை ஆதாரமாகக் கொண்டதாதலின்
குண உபஸம்ஹாரம் கிடையாது என்பதாம்

———————————————————————————————-

எட்டாவது அதிகரணம் -சம்பந்தாதி கரணம் –

கீழே ஸ்தான பேதத்தால் வ்யவஸ்தை செய்யப்பட்டது
இதில் ஒரு வித்யையை அனுசரித்துச் செய்யப்படாத சம்ப்ருதி முதலிய குணங்களுக்கும்
முன் கூறியது போலே ஸ்தான பேதத்தாலே வியவஸ்தை செய்யப்படுகின்றது என்று சங்கதி –

ஆதித்யனை இருப்பிடமாகக் கொண்ட ப்ரஹ்மம்-அந்தராதித்ய வித்யை –
கண்களை இருப்பிடமாகக் கொண்ட ப்ரஹ்மம் அஷி வித்யை என்பதும்
கொள்ள வேண்டும் என்று நிரூபிக்கப் படுகிறது

374-சம்ப்ருதி த்யு வ்யாப்தி அபி ச அத —3-2-23-

தைத்ரியத்திலும் ராணாயணீய கிலயத்திலும்-
ப்ரஹ்ம ஜ்யேஷ்டா வீரயா சம்ருதானி ப்ரஹ்மாக்ரே ஜ்யேஷ்டம் திவமாத தான ப்ரஹ்ம பூதானாம்
ப்ரதமோத ஜஜ்ஞே தே நார்ஹதி ப்ரஹ்மணா ஸ்பர்த்திதும்
இரண்டு தன்மைகளும் பொதுவாக உள்ளதால் அனைத்து வித்யைகளிலும் படிக்க வேண்டும்
என்பர் பூர்வ பஷி

சித்தாந்தம் -இரண்டும் சமாஹார த்வந்த்வம் ஒன்றே ஆகும்
எங்கு எங்கு சேர இயலுமோ அங்கு கொள்ள வேண்டும்
அனைத்து வித்யைகளிலும் இல்லை-

சம்ப்ருதி த்யு வ்யாப்தி அபி ச அத -இது சமாஹாரத்தால் வந்த ஏக வசனம்
சம்ப்ருதி முதலிய குண ஸமுதாயமும் -அநாரப்ய அதீதமாய் இருந்தாலும்
அத ஏவ -ஸ்தான பேதத்தால் ஸ்தாபிக்கத் தக்கது
எங்கும் உபஸம்ஹாரம் செய்யத் தக்கது அன்று
எப்படி என்றால்
த்யு வ்யாப்தி-என்பது தன் சாமர்த்தியத்தால் அல்ப ஸ்தானத்தில் இருக்கத் தகாதது
ஆதலின் எந்த ஸ்தானத்தில் அனுசந்திக்கக் கூடுமோ அந்த ஸ்தானத்தில் தான் நியதம்
சம்ப்ருதி யாதிகளும் – த்யு வ்யாப்தி கூடப் படிக்கப் பட்டு இருப்பதால் அங்கு தான் வியவஸ்தை செய்யத் தக்கது
ஹ்ருதயாதிகளான அல்ப ஸ்தானங்களில் உபஸம்ஹாரம் செய்யக் கூடாது என்று கருத்து –

சாந்தோக்யம் -3-14-3-ஜ்யாயான் ப்ருதிவ்யா -பூமியைக் காட்டிலும் ப்ரஹ்மம் பெரியது என்றும்

சாந்தோக்யம் -8-1-3-யாவான் வா அயம் ஆகாச தாவ நேஷ அந்தர்ஹ்ருதய ஆகாச –
இதயத்தில் உள்ள ஆகாசம் என்று கூறப்படும் பரம் பொருள் வெளியே உள்ள ஆகாசம் போன்று பெரியது
என்று ப்ரஹ்த்தின் பெருமையை கூறுவதற்காக சொல்லப் பட்டன —

இப்படியாகில் எங்கும் உபஸம்ஹாரம் செய்யத்தக்க ஆனந்தாதி குணங்களுக்கு உள்ளே
அனந்தத்வம் எப்படி அல்ப ஸ்தான உபாசனங்களில் கூடும் என்னில்
அவ்வுபாசனங்களில் பரமாத்மாவுக்கு அல்பத்வம் ஓவ்பாதிகம் என்றும்
அனந்தத்வம் ஸ்வாபாவிகம் என்றும் கருத்து –

———————————————————————————————————————-

ஒன்பதாவது அதிகரணம் -புருஷ வித்யாதிகரணம் –

த்யு வ்யாப்தி சந்நிதியில் படிக்கப்பட்ட ஸம்ப்ருத்யாதி குண ஸமுதாயம்
த்யு வ்யாப்த்யுசித ஸ்தானத்தினுள் ப்ரவேசிப்பதால் ஒரே வித்யையில் அந்வயம் கூறப்பட்டது

இவ்வாறு ப்ரஹ்ம வித்யா சந்நிதியில் படிக்கப் பட்டதாலே புருஷ வித்யைக்குப்
ப்ரஹ்ம வித்யா சேஷத்வம் கூறப்படுகிறது என்பது சங்கதி

சாந்தோக்யம் தைத்ரியம் இரண்டிலும் முழங்கப் படும் புருஷ வித்யைகளில்
ரூபம் வேறுபடுவதால் அவை வெவ்வேறு வித்யைகள் என்று நிரூபிக்கப் படுகின்றன –

375–புருஷ வித்யாயாம் அபி ச இதரேஷாம் அநாம்தாநாத்-3-2-24-

தைத்ரியம் -தச்யைவம் விதுஷோ யஜ்ஞஸ் யாத்மா யஹமான ஸ்ரத்தா பத்நீ
சரீர மித்மமுரோ வேதிர் லோமானி -என்று
முன்பு கூறப்பட்ட சரணாகதிக்கு
ஆத்மா -யஜமானன் –
தெய்வ பக்தி -தர்ம பத்நீ –
உடல்-சமித்து –
மார்பு -யாகம் செய்யும் இடம் –
உடல் ரோமங்கள் பரிஸ்தரணம்-என்றது

சாந்தோக்யத்தில்-3-16-1-
புருஷவாவ யஜ்ஞஸ் தஸ்ய யாநி சதுர் விம்சதி வர்ஷாணி -என்று
புருஷ ஆயுளின் 116 வருடங்களில் முதல் 24 வருடங்கள் –

இரண்டிலும் பெயர் ஒன்றே என்றும்
உடல் உறுப்புக்களே யஜ்ஞத்தின் அங்கங்கள் என்றும் சொல்வதால்
ரூபம் ஒன்றே
பலன் சாந்தோக்யத்தில் 116 வருடங்கள் வாழ்வான் என்கிறது

ஒரே பெயராகையாலும்
தைத்ரீயகத்தில் பலம் சொல்லாமல் சாந்தோக்யத்தில் நூறு வருஷ ஆயுஸ்ஸூ என்று
புருஷ வித்யா பலமாயும் சொல்வதால்
வித்யை ஐக்யம் என்று பூர்வ பக்ஷம்

இதனை நிரஸிக்கிறார்
புருஷ வித்யாயாம் அபி ச -ஒரே சம்ஜ்ஜை இருந்தாலும் ரூப பேதத்தால் வித்யா பேதம் ஸித்தம் தான்
இதரேஷாம் அநாம்தாநாத்-ஓர் இடத்தில் கூறப்படும் குணங்களுக்கு வேறே ஒரு இடத்தில் விளக்கம் இல்லாமையால்
தைத்ரீயகம் கூறிய யஜமானம் பத்னீ போன்ற அவயவங்களுக்கும்
சாந்தோக்யம் கூறிய அவயவங்களுக்கும் பேச்சே இல்லாமையால் என்றபடி

ஒரு சாகையிலே கூறப்பட்ட குணங்கள் மற்று ஒன்றில் இல்லாததால்
இரண்டும் வெவ்வேறே ஆகும் –

தைத்ரியம் -யத் சாயம் ப்ராதர் மத்யந்தினம் ச தானி சவதானி -என்று
காலை மாலை மதியம் -ஆகிய மூன்று ஸ்வனங்கள்

சாந்தோக்யம் இது போல் அன்றி -மனிதன் வாழ்வை மூன்றாகப் பிரித்து
அதுவே ஸ்வனங்கள் என்றது

ஸ்வனம் எனபது ஒரு நாள் ஸூரிய உதயம் முதல் மறு நாள் ஸூர்ய உதயம் வரையில்

சாந்தோக்யத்தில் அசிசிஷா எனப்படும் உண்பதில் உள்ள விருப்பம் தீஷை என்று கூறப்படும் –
தைத்ரியத்தில் இல்லை

சாந்தோக்யத்தில் கூறப்பட்ட பத்னி என்பது தைத்ரியத்தில் வேறு பொருளில் உண்டு

ஆக ரூப வேறுபாடுகள் உள்ளதால் இரண்டும் வெவ்வேறே ஆகும் –

தைத்ரியத்தில் இதற்கு முந்திய பகுதியில் –
ப்ரஹ்மணே த்வா மஹச ஓம் இதி ஆத்மானம் யுஞ்ஜீத -என்று
ப்ரஹ்மத்தில் ஓம் என்று கூறி உனது ஆத்மாவை அதில் சேர்ப்பாயாக -என்று தொடங்கப் பட்டது

இதற்கு பலனாக -ப்ரஹ்மணோ மஹிமா நமாப் நோதி-பிரமத்தின் மேன்மையை அடைகின்றான் என்கிறது –

இத்தை தொடர்ந்து -தச்யைவம் விதுஷா -இப்படியாக அறிந்தவன் என்று தொடங்கி
கூறப்பட்ட புருஷ வித்யை அந்த ப்ரஹ்ம உபாசனையே
யஜ்ஞமாக உருவகப் படுத்திக் கூறப்படுவதாகக் கொள்ள வேண்டும்

ஆக ப்ரஹ்ம வித்யையுடன் தொடர்பு உள்ளதால்
ப்ரஹ்த்தை அடைவதையே பலனாகக் கொள்ள வேண்டும்

பூர்வ மீமாம்சம் -பலவத் சந்நிதாவ பலம் ததங்கம் –
இரண்டு விஷயங்கள் கூறப்பட்டு ஒன்றுக்கு பலன் சொல்லி ஒன்றுக்கு சொல்லாமல் இருந்தால்
பலன் கூறப்படாதது கூறப்பட்டதுக்கு அங்கம் என்று கொள்ள வேண்டும் என்றது
தைத்ரீயத்தில் உள்ள புருஷ வித்யை முன் அனு வாகத்தில் கூறிய ந்யாஸ வித்யைக்கு அங்கமே என்று கருத்து

இங்கு ஒரு கேள்வி எழும்
ப்ரஹ்மணோ மஹிமா நமாப் நோதி-என்று இதிலும் பலம் உண்டே எனில்
தைத்ரீயத்தில் உள்ள ப்ரஹ்ம வித்யை ஸ்வ தந்திரமாகக் கொண்டால்
ப்ரஹ்ம பிராப்தி பலன் அப்ரஹ்ம வித்யையான புருஷ வித்யையின் பலம் ஆகாது
ஆகவே புருஷ வித்யா சம்பந்தம் இன்றி முன் அனுவாகத்தில் உள்ள ப்ரஹ்ம வித்யையுடன்
பொருந்துகிறது என்ற கருத்தால் அப்படிக் கூறப்பட்டது
ஆகையால் விரோதம் இல்லை என்பதாம்

இந்தப் புருஷ வித்யையால் தன் அங்கங்களைத் தவிர வேறு ஒன்றையும் எதிர்பார்க்காத
ந்யாஸ வித்யைக்குத் தேவையான இதர நைரபேஷ்யம் ஸித்தம் என்று
நிக்ஷேப ரக்ஷையில் ஆச்சார்யரால் அனுக்ரஹிக்கப் பட்டுள்ளது –

இதன் படி புருஷ வித்யை ப்ரஹ்ம வித்யையின் அங்கம் ஆகும்

ஆக புருஷ வித்யையின் பலமாக ப்ரஹ்மமே கூறப்பட்டதாகும்

ஆனால் சாந்தோக்யத்தில் நீண்ட ஆயுள் பலனாக சொல்லப் பட்டது –
ரூப வேறுபாடும் பல வேறுபாடும் உள்ளதால் இரண்டும் வெவ்வேறே –
ஒன்றில் கூறப்பட்ட குணங்கள் மற்று ஒன்றில் இல்லை –

———————————————————————————————————————-

பத்தாவது அதிகரணம் -வேதாத்யதிகரணம் –

ப்ரஹ்ம வித்யையின் அருகில் படிக்கப்பட்டதால் புருஷ வித்யை அதுக்கு அங்கம் எனப்பட்டது
இதே போல் அருகில் படிக்கப்பட்ட சன்னோ மித்ர முதலிய மந்திரங்களும்
ப்ரஹ்ம வித்யைக்கு அங்கங்கள் ஆகட்டும் என்ற சங்கையால் சங்கதி

தைத்ரிய சீஷா வல்லியில் உள்ள சில மந்த்ரங்கள் ப்ரஹ்ம வித்யைக்கு அங்கம் அல்ல
என்று நிரூபிக்கப் படுகிறது

376-வேதாத்யர்த்த பேதாத் –3-3-25-

அதர்வணம் தொடக்கத்தில் தைத்ரியம் -1-1-1-சுக்ரம் பிரவித்ய ஹ்ருதயம் ப்ரவத்ய -என்று
விரோதியின் வீர்யத்தையும் இதயத்தையும் பிளக்க வேண்டும் -என்று ஓதுகின்றனர்

சாமவேதம் ரஹஸ்ய பிரமாணத்தை படிக்கத் தொடங்கும் பொழுது –
தேவ சவித பிர ஸூவ யஜ்ஞம் பிர ஸூவ -என்று
சவித தேவனே யஜ்ஞத்தை உண்டாக்குவாயாக -என்கிறார்கள்

காடகர்களும் தைத்ரரீயர்களும் -சம்நோ மித்ர சம் வருண -என்று
மித்திரன் வருணன் போன்றவர்கள் நமக்கு நன்மை அளிக்கட்டும் என்கிறார்கள்

சாம்யாயநியர்கள் -ஸ்வேத அஸ்வோ ஹரி நீலோசி –
நீயே வெண் குதிரை கருப்பும் கூட -என்கிறார்கள்

ஐதரேயர்கள் மஹா வ்ரத பிரமாணத்தை -இந்திர ஹ வை வ்ருத்ரம் ஹத்வா மஹான் அபவத் -என்று
வ்ரதனைக் கொன்ற இந்த்ரன் வலிமை அடைந்தான் என்பர்

கௌஷீதகியர்கள் மஹா வ்ரத ப்ராமாணத்தை-
பிரஜாபதிர் வைசம்வத்சர தஸ்ய ஏஷ ஆத்மா யத் மஹா வ்ரதம்–
பிரஜாபதியே வருடம் -அவரது ஆத்மாவே இவ் வ்ரதம் – -என்பர்

யஜூர் வேதத்தை சார்ந்தவர்கள் -ப்ரவர்க்ய பிரமாணத்தை –
தேவாவை சத்ரம் நிஷேது -தேவர்கள் யஜ்ஞம் நிறைந்த காலத்தை தொடங்கினர் -என்று தொடங்குகிறார்கள்

இவை எல்லாம் வித்யையின் அங்கமே என்பர்
பூர்வ பஷி

அப்படி அல்ல –
பிளப்பது குறித்து வேறுபாடுகள் உண்டே –
தைத்ரியம் -1-1-சுக்ரம் ப்ரவித்ய ஹ்ருதயம் ப்ரவித்ய ருதம் வதிஷ்யாமி சத்யம் வதிஷ்யாமி -என்று
அங்கத்தைப் பிளந்து இதயத்தை பிளந்து நான் உண்மையைக் கூறுகிறேன் நான் உண்மையைக் கூறுகிறேன்

தைத்ரியம் -1-12-ருதமவாதிஷம் சத்யமவாதிஷம் –
நான் சரியாக உண்மையாக கூறினேன் என்றும்

கட உபநிஷத் -1-1- தேஜஸ்வி நாவதீத மஸ்து மா வித் விஷாவஹை –
நாம் ஓதும் மந்த்ரங்கள் வலுப் பெற வேணும் நாம் த்வேஷம் கொள்ளாமல் இருப்போம் -என்பர்

எதிரிகளை வீழ்த்த அபிசார மந்த்ரங்கள் உடன் கூடியதாக உள்ளதால்
இவை வித்யைக்கு அங்கம் இல்லை என்றதாயிற்று –

சுக்ரம் ப்ரவித்ய -என்ற மந்திரத்துக்கு வித்ய அங்கத்வம் இல்லை என்பது விவாதம் அற்ற விஷயம்
வேத ஸப்தத்தை ஸூத்ரத்தில் எடுத்தது த்ருஷ்டாந்த அர்த்தமாம்
ஆதி பதத்தால் ருத -சத்ய -வதனம் முதலியவை கூறப்படுகின்றன
சக்ரம் ப்ரவித்ய -ஹ்ருதயம் ப்ரவித்ய -என்கிற மந்த்ரத்துக்கு வஸ்து சாமர்த்தியம் என்னும் லிங்கத்தால்
ஆபிசார அங்கத்வம் தோன்றுவது போல்
சன்னோ மித்ர என்ற மந்த்ரமும்
ருதம் வதிஷ்யாமி -ஸத்யம் வதிஷ்யாமி -என்றும்
தேஜஸ் வினாவதீதஸ்து-என்றும் சொல்லப்படுவது வஸ்து ஸாமர்த்யம் என்னும் லிங்கத்தால்

அத்யயன தோஷம் என்று தோன்றுகிறது-

சக்ரம் ப்ரவித்ய -ஹ்ருதயம் ப்ரவித்ய என்பது ப்ரஹ்ம வித்யா பிரகரணத்தைக் காட்டிலும் ப்ரபலமான லிங்கத்தால்
ஆபி சாரங்கமே யன்றி ப்ரஹ்ம வித்யா அங்கம் அன்று என்று கூறியது போலே
இங்கும் லிங்கம் பிரபலமாகையால் -சன்னோ மித்ர -முதலியவை அத்யயன அங்கமாக விநியோகப் பட்டுள்ளமை
யாதலின் ப்ரஹ்ம வித்யா அங்கம் அல்ல என்பதாம் –

——————————————————————————————————————–

அதிகரணம் -11- ஹான்நயதி கரணம் –

முன் அதிகரணத்தில் -சக்ரம் ப்ரவித்ய -என்ற மந்த்ரங்களுக்கு லிங்க பலத்தாலே அந்த அந்த கர்ம சேஷத்வம் சொல்லப்பட்டது
இவ்வதிகரணத்தில்-உபாயனத்திற்கு ப்ரஹாண -விடுவித்தல் -விஷயத்வ ரூபமான அர்த்த சாமர்த்ய ரூப லிங்கத்தால்
ஹானம் உபாயனங்கள் -விடுதல் ஏற்றுல் -ஒன்றோடு ஓன்று சம்பந்தம் என்ற நியமத்தாலே
இரண்டு இடங்களிலும் இரண்டும் அனுசந்திக்கத் தக்கவை என்று சங்கதி –

புண்ய பாப கர்மங்கள் மோஷம் பெறுபவனை விட்டு விலக்கி மற்றவர்களுடன் சேர்த்து விடுகின்றன -என்று
அனைத்து வித்யைகளிலும் கொள்ள வேண்டும் என்று நிரூபிக்கப் படுகிறது-

377-ஹாநௌ து உபாய ந சப்த சேஷத்வாத் குசாஸ் சந்தஸ் ஸ்துத்யுபகா நவத் தத் உக்தம் –3-3-26-

சாந்தோக்யம் -8-13-1-அஸ்வ இவ ரோமாணி விதூய பாபம் சந்திர இவ ரஹோர்முகாத் பிரமுஷ்ய தூத்வா
சரீரமக்ரதம் க்ருதாத்மா ப்ரஹ்ம லோகமபி சம்பவாமி -என்று
குதிரையின் முடி விடுவது போலேயும் சந்தரன் ராகு முகத்தில் விடுபடுவது போலேயும்
சரீரம் விட்டு பரமபதம் அடைவேனாக-என்கிறது

முண்டகம் -3-1-3-ததா வித்வான் புண்ய பாபே விதூய நிரஞ்சன பரமம் சாம்யம் உபைதி -என்றும்

சாத்யாயர சாகையில் -தஸ்ய புத்ரா சாயம் உபயந்தி ஸூஸ்குதஸ் சாதுக்ருத்யாம் த்விஷந்த பாவக்ருத்யாம் -என்று
உபாசகர புத்ரர்கள் அவனது செல்வத்தையும் -நண்பர்கள் புண்ணியத்தையும் விரோதிகள் பாபத்தையும் அடைகின்றனர்

கௌ ஷீதகியில்1-4-தத் ஸூ க்ருத துஷ்க்ருதே தா நுதே தஸ்ய ப்ரியா ஜ்ஞாதயஸ் ஸூ க்ருதும் உபயந்தி அப்ரியா துஷ்க்ருதாம் -என்று
புண்ய பாபம் கை விடுவதையும் -ஹாநி –
மற்றவர்கள் இடம் சேர்வதையும் உபாய நம் -இரண்டுமே வித்யைகளின் அங்கம்
ப்ரஹ்ம வித்யை செய்பவர் அனைவருக்கும் பொருந்தும் –

இதில் ஹாநி மட்டுமே ஓர் இடத்தில் கூறப்பட்டு உபாயநம் கூறப்படா விட்டாலும்
அத்தையும் கொள்ள வேண்டுமா கூடாதா சங்கை வரும் –

ஒன்றை மட்டுமே கொள்ள வேண்டும்
என்பர் பூர்வ பஷி

ப்ரஹ்மத்தை அடையப் போகும் வித்வானுக்கு இரண்டு சாகைகளில் புண்ய பாப விமோசனம் கூறப்படுகிறது
அவ்வாறு விடப்பட்ட புண்ய பாபங்களுக்கு வேறு இடத்தில் பிரவேசம் ஒரு சாகையில் கூறப்படுகிறது
ஒரு சாகையில் விமோசனம் பிரவேசம் இரண்டும் கூறப்படுகின்றன –
இம்மூன்றும் ஸர்வ வித்யைகளிலும் விகல்பமாக அனுஷ்ட்டிக்கத் தக்கவையா
ஒரு சேர அனுஷ்ட்டிக்கத் தக்கவையா
என்று சம்சயம்
மூன்று விதமாகக் கூறப்பட்டுள்ளதால் அவை சம பலமான விகல்பமே என்று பூர்வ பக்ஷம் –

ஸூத்ரத்தில் து இத்தை தள்ளுகிறது -ஒன்றுக்கு ஓன்று தொடர்பு உடையதால்

ஹானவ் -என்ற சொல்லால் உப லக்ஷண முறையில் உபாயனத்தையும் கொள்ள வேண்டும்
உபாயான ஸப்த சேஷத் வாத் –
கேவலம் ஹானியோ -புண்ய பாபங்களை விடுதலையே –
உபாயனமோ -புண்ய பாபங்களை ஏற்றுக் கொள்ளுதலையோ
கூறப்பட்டு இருப்பதால் இரண்டையும் ஒரு சேரக் கூட்டிக் கொள்ளத் தக்கவையே

ஒரு சாகையில் இல்லாததை வேறு ஒரு சாகை சொல்லும் என்பதற்கு பல உதாரணங்கள் உண்டு

கௌஷீதகீ -குசா வா நஸ்பத்யா-மரத்தினால் ஆகிய சமித்து என்கிறது -எந்த மரத்தினால் என்றால் –
சாட்யாய நசாகையில் -ஔதும்பர்ய குசா -அத்தி மரத்தின் சமித்து என்கிறது

தேவாசூரானாம் சந்தோபி -யார் சந்தஸ் முதலில் படிக்க வேண்டும் –
தேவச் சம்தாம்சி பூர்வம் -தேவ சந்தசை முதலில் கூற வேண்டும் என்கிறது வேறு இடத்தில்

ஒரு சாகையில் பொன்னை வைத்துக் கொண்டு ஷோடசீ ஸ்தோத்ரம் தொடங்க வேண்டும் -எந்தக் காலத்தில் என்பதை
வேறு சாகையில் சமயா விஷிதே ஸூ ர்ய ஷோடசி ந ஸ்தோத்ரம் உபாகரோதி -பாதி அஸ்தமன நேரத்தில் என்கிறது

ஒரு சாகையில் ருத்விக்கள் உபகானம் செய்ய வேண்டும் என்றும்
மற்று ஒன்றில் ந அர்வர்யு உபகாயேத் -என்று அத்வர்யு உபகானம் செய்யக் கூடாது என்று விதி விளக்குகிறது

பூர்வ மீமாம்ஸையிலும்
அபி வா வாக்ய சேஷஸ் ஸ்யாத் அந்யாய் யத்வாத் விகல்பஸ்ய -என்று
வாக்ய சேஷத்தால் பொருள் கொள்ள வழி இருக்கையில் விகற்பம் தவறு என்று தீர்மானிக்கப் பட்டது

ஆகவே விகல்பம் அல்ல
ஆகவே ஒன்றுக்கு ஓன்று தொடர்பு உடைய இவை இரண்டையும்
எங்கும் கொள்ள வேண்டும் என்றதாயிற்று-

இங்கு ஒரு கேள்வி வரலாம்
துஷ் க்ருதங்களைச் செய்த கர்த்தா தானே அவற்றின் பயன்களை அனுபவிக்க வேண்டும்
ப்ரஹ்ம வித்தினால் விடப்பட்ட புண்ய பாபங்களை ஸூஹ் ருத்துக்களும் துர்ஹ் ருத்துகளும்
எவ்வாறு அனுபவிக்க முடியும் எனில்
அவர்களின் வித்யா மஹிமை காரணமாக அவற்றுக்கு சமமான ஸூக துக்கங்களை
இவர்கள் ப்ரஹ்ம வித்திடம் செய்த பக்திக்கும் அபசாரத்துக்கும் அவர்களுக்குப் பயனாகின்றன என்பதாகும் –

——————————————————————————————————————-

அதிகரணம் -12- சாம்பராய திகரணம் –

ஸூஹ்ருத -துஷ் ஹ்ருதங்களின் ஹானத்தையும் உபாயனத்தையும் ஸர்வ வித்யைகளும்
சிந்திக்க வேண்டும் என்று கூறி உள்ளன
இப்போது தேகத்தை விட்டுப் பிரியும் போது ப்ரஹ்ம வித்தின் பாபம் அடியோடு நசிக்கிறதா
அல்லது வழி நடுவிலும் கொஞ்சம் நசிக்கிறதா
என்ற சம்சயத்தால் சங்கதி

இரண்டு இடங்களிலும் பாபம் கழிவதாக சுருதி சொல்வதாலும்
தேவயான மார்க்கம் செல்ல உபபத்தி வேண்டுகையாலும்
பூர்வ பக்ஷம்

உபாசகனின் கர்மம் முழுவதும் அவன் உடலை விட்டு கிளம்பும் காலத்தில்
அழிந்து விடுகின்றன என்று நிரூபிக்கப் படுகிறது –

378-சாம்பராயே தர்த்த வ்யாபாவாத ததா ஹி அன்யே–3-3-27-

ஒரு பகுதி உடலை விட்டு கிளம்பும் போதும் மீதி பகுதி மோஷம் செல்லும் வழியிலும்
என்பர் பூர்வ பஷி

கௌ ஷீதகீ -1-3-ச ஏதம் தேவயா நம் பந்தா நம் ஆபத்ய அக்னிலோகம் ஆகச்சதி
என்று அர்ச்சிராதி மார்க்கத்தில் முதலில் அக்னி லோகம் வருவதையும்

தொடர்ந்து -1-4-ச ஆகச்சதி விரஜாம் நதீம் தாம் மன சாத்யேதி தத் ஸூ க்ருத துஷ்க்ருதே தூநுதே-என்று
விரஜா நதி வந்து தனது சங்கல்பம் மூலம் தாண்டி புண்ய பாபங்களைத் துறக்கிறான் -என்கிறது

சாந்தோக்யம் -8-3-1-அஸ்வ இவ ரோமாணி விதூய பாபம் சந்திர இவ ரஹோர்முகாத் பிரமுஷ்ய தூத்வா
சரீரமக்ரதம் க்ருதாத்மா ப்ரஹ்ம லோகமபி சம்பவாமி -என்று
உடலைக் கை விடும் போதே துறக்கிறான் என்கிறது

சாட்யாயன சாகை தஸ்ய புத்ரா சாயம் உபயந்தி ஸூஸ்குதஸ் சாதுக்ருத்யாம் த்விஷந்த பாவக்ருத்யாம் -என்று
உபாசகர புத்ரர்கள் அவனது செல்வத்தையும் –
நண்பர்கள் புண்ணியத்தையும்
விரோதிகள் பாபத்தையும் அடைகின்றனர் என்று
உடலைக் கை விடும் பொழுதே இவை நீங்கி விடுகின்றன என்பது ஆயிற்று

இனி சித்தாந்தம் –

சாம்பராயே -மரண காலத்தில் தானே ஸூஹ்ருத துஷ் ஹ்ருத ஹானி சிந்திக்கத் தக்கது
ஏன் எனில்
தர்த்த வ்யாபாவாத -மரணத்திற்குப் பின் ப்ரஹ்ம ப்ராப்தியைத் தவிர தாண்ட வேண்டிய
கர்ம பல போகம் இல்லாமையால் என்றபடி
ததா ஹி அன்யே–அவ்வாறே மற்றோரும் படிக்கின்றனர் –

சாந்தோக்யம் –
8-12-1-அசரீரம் வாவ சந்தம் ந ப்ரியாப்ரிய ச்ப்ருசத-என்றும் –

8-3-4-ஏஷ சம்ப்ரசாதோ அஸ்மாத் சரீராத் சமுத்தாய பரம் ஜ்யோதி ரூப சம்பத்ய ஸ்வேன ரூபேண அபி நிஷ்பத்யதே –

6-14-2-தஸ்ய தாவதேவ சிரம் யாவந்த விமோஷ்யதே சம்பத்ச்யே

தேகத்தை விடும் அளவே ப்ரஹ்ம ப்ராப்திக்கு விளம்பம் –
பின் கர்ம பல போகத்துக்கு அவகாசம் இல்லை -என்றும் சொல்லிற்றே-

———————————————————————————————————————-

379-சந்தத உபயா விரோதத்–3-3-28-

முரண்பாடு இல்லாமல் வரிகளை மாற்றி அந்வயம் செய்து படிக்க வேண்டும்-
தத் ஸூஹ்ருத துஷ்ஹ்ருதே தூநுதே–ஏதம் தேவயா நம் பந்தா நம் ஆபத்ய என்று
புண்ய பாபங்களைக் கை விட்டு
தேவ யான மார்க்கத்தை அடைந்து அக்னி லோகம் வருகிறான் என்று

இதற்கு பூர்வ பஷியின் ஆஷேபம் அடுத்த ஸூத்ரம்

————————————————————————————————————————-

380-கதே அர்த்தத்வம் உபயதா அந்யதா ஹி விரோத —3-3-29-

உடலை விடும் பொழுதே கர்மங்கள் கழிந்தால் அவற்றால் உண்டான ஸூஷ்ம சரீரமும் அழிந்து விடுமே
அர்ச்சிராதி மார்க்கத்தில் செல்வது என்பது இயலாத ஒன்றாகி விடுமே

உபயதா-தேக வியாக காலத்திலும் வழி நடுவிலும் கர்ம ஷயத்தை ஏற்றால்
கதே அர்த்தத்வம் -தேவயான கதி ஸ்ருதி அர்த்தம் உள்ளதாகும்
அந்யதா ஹி விரோத-ஏற்கா விட்டால் ஸூஷ்ம சரீரத்துக்கு ஹேதுவான கர்மம் இல்லாமையாலே
தேவயான கதி ஸ்ருதிக்கு விரோதம் வரும்

என்னும் பூர்வ பக்ஷத்தை நிரசிக்கிறார் மேல் –

இதற்கு சித்தாந்தம் பதில் அடுத்த ஸூத்ரத்தில்-

———————————————————————————————————————–

381-உபபன்ன தல் லஷணார்த்தோ பலப்தே லோகவத் —3-3-30-

சாந்தோக்யம் –
8-3-4-பரம் ஜ்யோதி ரூப சம்பத்ய ஸ்வேன ரூபேண அபி நிஷ்பத்யதே -என்றும் –

8-12-3- ச தத்ர பர்யேதி ஐஷத் கிரீடன் ரமமாண என்றும் —

7-25-2-ச ச்வராட்பவதி தஸ்ய சர்வேஷூ லோகேஷூ காம சாரோ பவதி -என்றும் –

7-26-2- ச ஏகதா பவதி த்ரிதா பவதி-என்றும்
சரீர தொடர்பு தொடரும் என்கின்றன ஸ்ருதி ஸ்ரீ ஸூக்திகள்

ஸூஷ்ம சரீரத்தை உத்பத்தி செய்ய வல்ல கர்மங்கள் தொலைந்த பின்பு
இது எவ்வாறு இயலும் என்றால்

உபபன்ன -மரண காலத்திலே கர்ம ஷயம் பொருத்தமானதே
தல் லஷணார்த்தோ பலப்தே -கர்மாக்களை விட்ட முக்தனுக்குக் கூட தேக சம்பந்த லக்ஷணமான அர்த்தத்துக்கு-
ஐஷத் க்ரீடன் ரம மாண- ச ஏகதா பவதி த்ரிதா பவதி-என்று உப லப்தி இருப்பதால் என்றபடி
லோகவத் —மகாராஜாவை உபாசிப்பவனுக்கு உலகப் பொதுவான முறை அன்றி அழகிய புருஷார்த்தம் ஸித்திப்பது போலே
ப்ரஹ்ம வித்யை மகிமையால் கிடைக்கும் ஸூஷ்ம சரீரத்தால் அர்ச்சிராதி கதி பொருந்தும் என்றதாகிறது

ப்ரஹ்ம வித்யையால் உபாசகனுக்கு ப்ரஹ்ம அனுபவத்தை அளிக்கும் பொருட்டு
ஸூஷ்ம சரீரத்தை நிலையாக இருக்கும் படி செய்கிறது

ப்ரஹ்மத்தை நேரடியாக அறிந்த வசிஷ்டாதிகளுக்கும் புத்திர சோகம் உண்டே
சுக துக்கங்கள் இல்லை உபாசகனுக்கு என்றது எவ்விதம் –
பதில் அடுத்த ஸூத்ரத்தில்-

———————————————————————————————————————–

382-யாவத் அதிகாரம் அவஸ்திதி ஆதிகாரிணாம்-3-3-31-

ஆதிகாரிணாம்-அல்ப அதிகாரிகளான வசிஷ்டாதிகளுக்கோ
என்றால்
யாவத் அதிகாரம் -அதிகாரம் முடியும் வரையில் அர்ச்சிராதி கதி இல்லை
அவஸ்திதி -அந்த அதிகாரத்தில் இருக்க வேண்டும்
அதிகாரி ஹேதுவான கர்ம பல தானத்துக்கு ஆரம்பிக்கப் பட்டதாதலின்
ஞானிகளுக்கும் பலத்தைத் தந்தே கர்மம் நசிப்பது என்று கருத்து –

அனைத்து ஞானிகளுக்கும் புண்ய பாபம் கழிந்ததாக கூறவில்லை –
யாருக்கு உடல் விழுந்த உடன் அர்ச்சிராதி மார்க்கம், கிட்டுமோ அவர்களுக்கு மட்டுமே

வசிஷ்டர் போல்வாருக்கு அவர்கள் தொடங்கி உள்ள பதவி முடியாமல் உள்ளதால் –
கர்மம் மூலமே அந்த அந்த பதவியை பெறுகிறார்கள் –

அர்ச்சிராதி மார்க்கம் அவர்களுக்கு இல்லை

பதவிக்கு காரணமான கர்மமும் கர்மம் காரணமாக உண்டான பதவியும் தொடர்ந்து
அர்ச்சிராதி மார்க்கம் என்பது இல்லை-

ஸ்தூல தேகத்தின் முடிவில் கர்மம் முழுவதும் அழிந்தால் ப்ரஹ்மத்தை அடைவதற்கு முன் இருந்த
ஞான சங்கோசத்திற்கு காரணமான கர்மம் இல்லாமையாலே
அந்த இடைக்காலத்தில் ஞான சங்கோசத்துக்குக் ஹேது என்ன எனில்
ஆதியில் எல்லாக் கர்மாக்களை கழிந்த போதிலும் ஞான சங்கோச மாத்ரத்திற்கு
ப்ரஹ்மத்தை அடையும் வரை தொடர்ந்துள்ள ஸூஷ்மமான கர்ம விசேஷம் ஹேது
என்பது கருத்தாகும் –

—————————————————————————————————————————–

அதிகரணம் -13–அ நியமாதிகரணம் –

முன் அதிகரணத்தின் முடிவில் தேகத்தின் ஸ்தூலதா ஹேது
ஸர்வ கர்மங்களுக்கும் அழிவு என்றும்
பின் அர்ச்சிராதி மார்க்கத்தில் ப்ரஹ்மத்தை அடைபவனுக்கு
ஞான சங்கோச ஹேது ஸூஷ்ம கர்மா நாசம் என்றும் கூறப்பட்டது

இப்போது பேசப்படும் அர்ச்சிராதி கதி
எந்த வித்யையில் உள்ளதோ அது அந்த வித்யா நிஷ்டனுக்கு மட்டுமா
எல்லா வித்யா நிஷ்டர்களுக்குமா
என்ற சம்சயத்தால் சங்கதி –

எதில் கூறப்பட்டதோ அந்த வித்யா நிஷ்டனுக்கே என்பது பூர்வ பக்ஷம்
ஏன் எனில்
மற்றவர்களுக்கு இது உண்டு என்பதற்கு பிரமாணம் இல்லை
பஞ்சாக்கினி வித்யையில் பொதுவாகச் சொல்லப்பட்டது
உபகோஸலாதி வித்யைக்கு உரியது என்று நிச்சயிக்கப் பட்டுள்ளது
எல்லா வித்யைகளுக்கும் பொது என்றால் குறிப்பாக இதில் குறிப்பிட்டது வீணாகுமே
ஆகவே பொதுவானது அல்ல என்பது பூர்வ பக்ஷம் –

அனைத்து வித்யைகளுக்கும் அர்ச்சிராதி மார்க்கம் பொது என்று நிரூபிக்கப் படுகிறது –

383- அ நியம சர்வேஷாம் அவிரோத சப்த அநுமா நாப்யம் —3-3-32-

சாந்தோக்யம் -5-10-1
தத்யா இத்தம் விதுர்யே சேமே அரண்யே ச்ரத்தா தப இதி உபாசதே தே அர்ச்சிஷிம் அபி சம்பவந்தி -என்றும்

ப்ருஹத் -6-2-15 ய ஏவம் எதத் விது யே சாமி அரண்யே -ஸ்ரத்தாம் சத்யம் உபாசதே – தே அர்ச்சிஷிம் அபி சம்பவந்தி என்றும்

பஞ்சாக்னி வித்யை பற்றிக் கூறும் பொழுதும்
வாஜச நேயக பகுதிகளிலும் அர்ச்சிராதி மார்க்கம் கூறப் பட்டுள்ளது

சத்யம் தப பதங்கள் ப்ரஹ்மத்தையே குறிக்கும் –

சாந்தோக்யம் -சத்யம் த்வேவ விஜிஞ்ஞாசி தவ்யம் -என்றும் –
7-19-1-ச்ரத்தா த்வேவ விஜிஞ்ஞாசி தவ்யம் -என்றும்

ஸ்ரீ கீதையில் 8-24-அக்னிர் ஜ்யோதிரஹ சுக்ல ஷண்மாசா உத்தராயணம் தத்ர ப்ரயாதா கச்சந்தி
ப்ரஹ்ம ப்ரஹ்ம விதோம் ஜனா– என்று

பல ஸ்ருதி ஸ்ம்ருதி வரிகளில் -அனைத்து வித்யைகளிலும் கூறப்பட்ட
அர்ச்சிராதி மார்க்கம் என்பதை
உபகோசல வித்யை போன்றவையும் மீண்டும் கூறும் –

அநியம -இந்த வித்யா நிஷ்டர்களுக்கு மட்டும் என்ற நியமம் இல்லை -அனைவருக்கும் பொது
சர்வேஷாம் -எல்லா உபாஸகர்களுக்கும் பொது என்று நியமம் இன்மையைக் கூறுவதாலேயே
அவிரோத சப்தா நுமா நாப்யம் —ஸ்ருதி ஸ்ம்ருதிகளுடன் விரோதம் இல்லை
சிறப்பாக கூறியது அந்த வித்யையைத் துதிப்பதுக்காகவே
வித்யைக்கு அங்கமான கதி சிந்தனம் வித்ய அங்க பாதத்தில் கூறாமல்
இங்கு குறிப்பது புத்திக்கு மிக பொருந்தவே –

——————————————————————————————————————————-

அதிகரணம் -14-அஷரத்யதி கரணம் –

அர்ச்சிராதி கதி அனைத்துக்கும் பொது என்று கீழே
இதில் அவ்வாறே அஸ்தூலத் வாதிகளுக்கும் பொதுத் தன்மை கூறப்படுகிறது –
என்று சங்கதி –

ப்ரஹ்மத்தின் அகில ஹேய ப்ரத்ய நீகத்வம் போன்ற மேன்மைகள்
அனைத்து வித்யைகளிலும் ஓதப்பட வேண்டும் நிரூபிக்கப் படுகிறது

384-அஷரதியாம் து அவரோத சாமான்ய தத் பாவாப்யாம் ஔபத சதவத் தத் உக்தம் —3-3-33-

ப்ருஹ தாரண்யகத்தில்-3-8-8/9—
ஏதத் ஏவ தத் அஷரம் கார்க்கி ப்ராஹ்மணா அபிவதந்தி அஸ்தூலம் அநணு அஹரச்வம் அதீர்க்கம்
அலோஹிதம் அச்நேஹம் அச்சயம் அதம –அவாயு அநகாசம் அசங்கம் அரசம் அகந்தம் அசஷூஷ்கம்
அச்ரோத்தம் அவாக் அமான அதேஜச்கம் அபராணம் அஸூகம் அமாத்ரம் அனந்த்ர அபாஹ்யம்
ந தத் அச்நாதி கிஞ்சன ஏதச்யா வா அஷரண்ய பிரசாசநே சார்க்கி ஸூ ர்யா சந்திர மசௌ வித்ருதௌ திஷ்டத –என்றும்

முண்டக உபநிஷத் -1-1-5-
அத பரா யயா தத் அஷரம் அதிகம்யதே யத் தத் அரேச்யம் அக்ராஹ்யம் அகோத்ரம் அவர்ணாம்
அசஷூ ச்ரோத்ரம் தத் அபாணிபாதம் -என்றும் முழங்கியது –

இந்த ப்ரஹ்மத்தின் தன்மைகள் அனைத்து வித்யைகளிலும் படிக்கப் பட வேண்டுமா –
இஷ்டி வித்யைகளில் மட்டும் படிக்கப் பட வேண்டும் என்பர் பூர்வ பஷி

அஷரதியாம் து அவரோத –அக்ஷர ப்ரஹ்மம் சம்பந்தப்பட்ட அஸ்தூலத்வம் ஸர்வ வித்யைகளிலும் உப ஸம்ஹாரம் சுத்தமானது
ஏன் எனில்
சாமான்ய தத் பாவாப்யாம் -ப்ரஹ்மம் ஸர்வ வித்யைகளிலும் சமம் ஆகையால் ஸாமான்யமாகச் சொல்லப்படுகிறது
இவை ப்ரஹ்ம ஸ்வரூப ப்ரதீதியில் ஸ்வரூபத்தை நிரூபனம் என்ற முறையில் உள்ளடக்கியவை யாதலாலும்
குணங்கள் பிரதானத்தையே பின் பற்றுபவையாதலாலும் தத் பாவ ஸப்தார்த்தங்கள்
என்ற இரண்டாலும் என்றபடி

ப்ரஹ்மம் பொதுவாக உள்ளதாலும்
அஷர ப்ரஹ்மத்தின் ஸ்வரூபத்தை உணர்ந்து கொள்ளவும்
எல்லா வித்யைகளிலும் படிக்க வேண்டும்

ஆனந்தாதி குணங்களை போலேவே அச்தூலத்வம் போன்ற தனித் தன்மைகளையும் உணர்ந்தே உபாசிக்க வேண்டும்
அங்கத்துக்கும் பிரதான முறைக்கும் விரோதம் வந்தால் பிரதான முறையே கொள்ள வேண்டும்

அக்னிர் வை ஹோத்ரம் வே -என்ற மந்த்ரத்தை சாம வேதத்தில் உரத்த குரலிலும்
யஜூர் வேதத்திலும் தாழ்ந்த குரலிலும் சொல்ல வேண்டும் என்று உள்ளது –

பூர்வ மீமாம்ஸையில் -குணத்துக்கும் முக்யத்துக்கும் விரோதம் வந்தால்
குணம் முக்கியத்துக்காக ஏற்பட்டது என்ற காரணத்தால்
முக்கியத்தை அனுசரித்தே வேதத்தைப் பயன் படுத்த வேண்டும் என்று உள்ளது
அஸ்தூலத்வாதிகள் ஆனந்தாதிகளைப் போலவே ஸ்வரூப வானுசந்தானத்திலே அடங்கி உள்ளவை என்பதால்
எல்லா உபாசனங்களிலும் உப ஸம்ஹரிக்கத் தக்கவையே –
இவையும் அசேதன சம்சர்க்க யோக்யமான ஜீவர்களை விட ப்ரஹ்மம் விலக்ஷணம் என்று காட்டுமே

அனைத்து வித்யைகளிலும் அனைத்து குணங்களையும் படிக்க வேண்டும் என்று கொண்டால்
சாந்தோக்யம் -3-14-2-சர்வ கர்ம சர்வ கந்த சர்வ ரச-போன்று
அந்த அந்த வித்யைகளில் படிக்க வேண்டிய சிறப்பான குணங்கள் இல்லாமல் போகுமே என்றால்

———————————————————————————————————————-

385-இயம் ஆம ந நாத் –3-3-34-

ஆமநநம் -தனித் தன்மையுடன் கூடிய த்யானம் –
இந்த தனித் தன்மைகளை படிக்க வேண்டுமே ஒழிய –
சர்வ கர்ம போன்ற தன்மைகள் அந்தந்த வித்யைகளில் மட்டும் படித்தால் போதும்-

இயத் -அஸ்தூலத் வாதிகளால் விசேஷித்தமான ஆனந்தாதிகளே எல்லா இடத்திலும் பிரதானம்
ஆமந நாத் -அபிமுகமான மனனம் -ப்ரஹ்ம அனுசந்தானத்தால் என்றபடி
பர ப்ரஹ்ம அனுபவம் எந்தத் தர்மம் இன்றிப் பொருந்தாதா அந்தத் தர்மம் எங்கும் அனுசந்திக்கத் தக்கதே
மற்ற தர்மங்கள் அங்கு அங்கு ஸ்திதங்களாம்

———————————————————————————————————————-

அதிகரணம் -15-அந்தரத்வாதிகரணம் –

கீழ்ச் சொன்னபடி ஹேய ப்ரத்ய நீகத்வம் ஸ்திரமானால் பசி தாகம் யாதும் இல்லை என்றாவதால்
ப்ராணித்ருத்வம்-முதலியவை கொண்டவன் ஜீவனே என்னும் சங்கையால் சங்கதி

ப்ருஹத் உபநிஷத்தில் இரண்டு வெவ்வேறு பகுதிகளில் ஓதப்படும் வித்யைகள்
ஒன்றே என்று நிரூபிக்கப் படுகிறது –

386-அந்தரா பூதக்ராமாவத் ஸ்வாத்மான-அந்யதா பேதா நுபபத்தி இதி சேத் ந உபதேசவத் —3-3-35

ப்ருஹத் உபநிஷத்தில் -3-4-1-உஷஸ்தர் என்பவர் யாஜ்ஞ வல்க்யரிடம் –
யத் சாஷாத் அபரோஷாத் ப்ரஹ்ம ய ஆத்மா சர்வாந்தர தம் மே வ்யாசஷ்வ -என்று உணர்த்த கேட்க –
ய ப்ராணே ந பிராணி ந ச த ஆத்மா சர்வாந்தரோ ய அபாநேநாபாநிதி ச த ஆத்மா சர்வாந்தர -என்று பதில் சொல்லியும்
திருப்தி அடையாமல் மீண்டும் அதே கேள்வியைக் கேட்க -அதற்கு யாஜ்ஞ வல்க்யர் –

3-4-2-ந த்ரேஷ்டர் த்ரஷ்டாரம் பச்யே-ந ஸ்ருதேஸ் ஸ்ரோதாரம் ஸ்ருணுயா-ந மதேர் மந்தாரம் மன்வீதா
ந விஜ்ஞாதேர் விஜ்ஞாதாரம் விஜா நீயா ஏ ஷத ஆத்மா சர்வாந்தர அதோ ந்யதார்த்தம் -என்று பதில் அளித்தார்

இதே போன்று-அடுத்த பகுதியில் கஹோலர் யாஜ்ஞ வல்க்யர் இடம் –
3-5-1-யத் ஏவ சாஷாத் அபரோஷாத் ப்ரஹ்ம ய ஆத்மா சர்வாந்தர தம் மே வ்யாசஷ்வ –என்று அதே கேள்வியைக் கேட்க

இதற்கு –ய அச நா யாபிபாசே சோகம் மோஹம் ஜராம் ம்ருத்யு மத்யேதி ஏவம் வை தம் ஆத்மானம் விதித்வா
ப்ராஹ்மணா புத்ரேஷணாயாச் ச வித்தேஷணாயாச் ச லோகேஷணாயாச் ச வ்யுத்தாய -என்று பதில் சொல்லத் தொடங்கி-
அநோன்யதார்த்தம் -இவனை விட வேறுபட்ட ஜீவன் துன்பம் நிறைந்தவன் என்று முடித்தார்

இரண்டிலும் கேள்விகள் ஒன்றாக இருந்தாலும் ரூப வேறுபாட்டால் இரண்டும்
வெவ்வேறே வித்யைகள் என்பர் பூர்வ பஷி
உஷஸ்தியின் வினா விடையில் ப்ராண நாதி ஹேதுவான ப்ரத்யகாத்மா தோன்றுகிறான்
பின்னருள்ள வினா விடையில் பசி தாகம் முதலிய அற்ற பரமாத்மா தோன்றுகிறான்
எனவே ரூப பேதத்தால் வித்யா பேதம் என்பர் பூர்வ பக்ஷி

முதல் பதிலில் பிராண வாயுவை இயக்கம் செயல் போன்றவற்றைச் செய்பவனே அந்தர்யாமி-
சரீரம் இந்த்ரியம் புத்தி மனம் பிராணன் போன்றவற்றைக் காட்டிலும்
வேறுபட்ட பிரத்யகாத்மா -ஜீவாத்மா அந்தர்யாமி – என்றும்

இரண்டாவது பதிலில் பசி தாகம் அற்ற பரமாத்மாவே அந்தர்யாமி என்றும் கூறுகிறார் –
என்பர் பூர்வ பஷி

இத்தை அனுவாதம் செய்து கண்டிக்கிறார் –

அந்தரா -ய ஆத்மா ஸர்வாந்தர -என்ற உஷஸ்தியின் ப்ரஸ்னம்
பூதக்ராமாவத் ஸ்வாத்மான-தன் ஆத்மாவான ப்ரத்யகாத்ம விஷயம் என்று ஏற்கத் தக்கது
அந்யதா -அப்படி ஒப்புக் கொள்ளா விட்டால்
பேதா நுபபத்தி இதி சேத் -பதில் கூறுவதில் பதில் பொருந்தாது என்றால்
ந -அப்படி அல்ல -ப்ரத்யகாத்மா பற்றியது அல்ல என்று கருத்து
இரண்டு விடைகளும்  பரமாத்மாவையே பற்றியவையே -என்பதாம்
உபதேசவத் —உபாஸ்யமான ப்ரஹ்மத்தின் மஹிமையையே பற்றியே விளக்குவதால்
ரூப ஐக்யமும் வித்யா ஐக்யமும் ஸித்தம் –

அப்படி அல்ல இரண்டிலும் பரமாத்மாவே –
யத் சாஷாத் ப்ரஹ்ம என்று ப்ரஹ்மமே உணர்த்தப் படுகிறது –
சத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்மம் இவனே அனைத்துக்கும் அந்தர்யாமி

அந்தர்யாமி ப்ராஹ்மணம் -ய ப்ருதிவ்யா திஷ்டன் பிருதிவ்யா அந்தரய ஆத்மிநி திஷ்டன் ஆத்மன அந்தர -என்றது

இது போன்றே ய ப்ராணேன ப்ராணதி–இயல்பாக இப்படிப்பட்ட செயல்களைச் செய்வது பரமாத்மாவே

இது போன்றே சாந்தோக்யத்திலும் சத் விதையில்
6-1-1-உத தமோ தேசமே ப்ராஷ்யா -நீ அவனை அறிவாயா -என்றும் –

6-1-40-பகவான் தேவ ப்ரவீது -எனக்கு அதனை உபதேசிக்க வேண்டும் -என்றும்

6-5-4-பூய ஏவ மா பகவன் விஜ்ஞாபயது -எனக்கு மீண்டும் உபதேசிக்க வேண்டும் என்றும் ‘

அதற்கு பதிலாக -6-8-7-ஏஷோ அணிமா ஜத தாத்ம்யமிதம் சர்வம் தத் சத்யம் -என்று உணர்த்தப் பட்டது

அதனால் இரண்டு வித்யைகளிலும் உள்ள ரூபம் ஒன்றேயாக உள்ளதால் இரண்டும் ஒன்றே

——————————————————————————————————————-

ஆனால் கேள்வி கேட்டவர்கள் இருவர் –
உபாசிக்கப் படும் பரமாத்மாவின் தன்மைகளும் வெவ்வேறே என்பதால்
வித்யைகளில் பேதம் உள்ளது என்பர் பூர்வ பஷி

இதற்கு பதில் அடுத்த ஸூத்ரத்தில்

3-3-36–வ்யதிஹார விசிம் ஷந்தி ஹி இதரவத் —3-3-36-

வ்யதிஹார -இருவர் வினாக்களும் ஒரே விதமாதலின் ஒரே விஷயத்தைப் பற்றியவை என்று தீர்மானித்து விட்டால்
விடையில் உள்ள செய்தி பற்றிய புத்தியை மாற்றிக் கொள்ள வேண்டும்
கஹோளனால் பிராணன ஹேதுத்வ புத்தியானது ஸர்வாந்தர விஷயை என்றும்
உஷஸ்தியால் பசி தாகங்களைக் கடந்தவன் என்ற புத்தி சர்வ அந்தர விஷயை என்று மாற்றிக் கொள்வது
விசிம் ஷந்தி ஹி -இரண்டு இடங்களிலும் யாஜ்ஜ வல்க்ய வசனங்களே விசேஷிக்கின்றன
இதரவத் —வேறான ஸத் வித்யையில் எல்லா விடைகளும் பரம காரணமான ப்ரஹ்மத்தையே குறிப்பனவே –

இரண்டுமே பரமாத்மாவைப் பற்றியே
சர்வ அந்தர்யாமித்வமும் பிராணன் இயக்கம் தன்மையும் அவனுக்கே-

அவ்வாறே ஸத் வித்யையிலும் கேள்வியும் பதிலும் -திரும்ப திரும்ப வருவதால்
எப்படி உபாஸ்யன் ஒருவனே என்று தோன்றும்
என்ற வினாவுக்கு விடை தருகிறார் மேல் –

———————————————————————————————————————–

388-சைவ ஹி சாத்யாதய —3-3-37-

சத் எனப்படும் பர ப்ரஹ்மமே -சாந்தோக்யம் –
6-3-2- ஸேயம் தேவதைஷத-சங்கல்பம் செய்தது -என்றும்

6-8-6- தேஜ பரஸ்யாம் தேவதாயாம் -அந்த பர ப்ரஹ்மத்தின் தேஜஸ் -என்றும்

6-9-1- யத சோம்யமது மதுக்ருதோ நிஸ் திஷ்டந்தி -தேனீக்கள் தேனில் ஒன்றுவது போன்று

6-8-7-ஏததாத்ம்யமிதம் சர்வே தத் சத்யம் ச ஆத்மா -அனைத்தும் இந்த சத் என்பதை ஆத்மாவாகக் கொண்டது

ஒரு சிலர் 36/37 வெவ்வேறே அதிகரணங்கள் என்பர்

ஜாபால உபநிஷத் –
த்வா வா அஹம் அஸ்மி புகவோ தேவதே அஹம் வை த்வமசி பகவோ தேவதே -என்றும்

ஐ தரேய உபநிஷத் -தத்யோஹம் ச அசௌ ச அசௌ சோ அஹம் -என்றும்
ஜீவன் பரமாத்மா ஓன்று என்பர்

இது ஏற்க இயலாது –
ப்ரஹ்மமே அனைத்தாகவும் உள்ளதே என்றே கூறுகின்றன

சாந்தோக்யம் –
3-14-1– தத் சர்வே கல்விதம் ப்ரஹ்ம -என்றும் –

6-8-7-ஏத தாத்ம்யமிதம் –சர்வம் –தத்வமஸி–என்றும்
ப்ரஹ்மம் அனைத்துக்கும் ஆத்மா -ஆத்மாவாகவே உபாசிக்க வேண்டும்

இத்தையே -4-1-3-ஆத்மேதிது உபகச்சந்தி க்ராஹயந்தி ச –

ப்ருஹத் உபநிஷத் –
5-4-1-ச யோ ஹ வை மஹத்யஷம் ப்ரதமஜம் வேத சத்யம் ப்ரஹ்ம -என்றும்

5-4-2-தத் யத் சத்ய ச ஆதித்ய ஏ ஏஷ ஏ தஸ்மின் மண்டலே புருஷோ யச்சாயம் தஷிணே அஷின் -என்றும்
சொல்வது இரண்டும் ஒரே வித்யை என்பர் பூர்வ பஷி

ஸூரியன் கண்கள் இருப்பிட பேதம் உள்ளதால் வெவ்வேறே என்று 3-3-21- ந வா விசேஷாத் -ஸூத்ரத்திலேயே பார்த்தோம்
பாபங்களை அழிக்கிறான் உடலை விடுகிறான் -வித்யைகளின் பலன் ஒன்றாகும் பொழுது-

சைவ ஹி –ஸேயம் தேவதை ஷத-இத்யாதி வாக்யங்களில் எங்கும் அத்தகைய ஒரே பரதேவதை தொடர்கிறது
சாத்யாதய-ஏததாத்ம்யமிதம் சர்வே தத் சத்யம் ச ஆத்மா தத் த்வம் அஸி -என்று
அந்த ஸத்யாதிகளே எல்லா வித்யைகளிலும் முடிவாகக் கூறப்பட்டுள்ளன –
ஆகவே வித்யை ஐக்யமே ஸித்தம் –

————————————————————————————————————————

அதிகரணம் -16-காமாத்யதிகரணம் –

கீழே பிராணி த்வாதிகளுக்கும் அசநா யாத்யதீ தத்வாதிகளுக்கும்
தர்மி பேதம் இல்லாமையால் வித்யை ஐக்யம் கூறப்பட்டது
இங்கு வசித்வம் முதலிய எட்டு குணங்களுக்கும் தர்மி பேதம் உள்ளதாக சங்கையால் சங்கதி –

சாந்தோக்யம் ப்ருஹத் இரண்டிலும் கூறப்படும் தஹர வித்யை ரூபம் ஒன்றாதலால்
ஒன்றே என்று நிரூபிக்கப் படுகிறது –

389-காமாதி இதரத்ர தத்ர ச ஆய்த நாதிப்ய —3-3-38-

சாந்தோக்யம் -8-1-1-அத ய இதம் ப்ரஹ்ம புரே தஹரம் புண்டரீகம் வேஸ்ம தஹர அஸ்மின்
அந்தராகாச தஸ்மின் யதந்த ததன்வேஷ்டவ்யம் -என்றும்

வாஜச நேயகத்தில் -ப்ருஹத் உபநிஷத் -4-4-2-ச வா ஏஷ மஹான் அஜ –ஆத்மா யோயம் விஜ்ஞான மாயா ப்ராணேஷூ ய –
ஏஷேரந்தர் ஹ்ருதய ஆகாச தஸ்மின் சேதே சர்வச்ய வசீ சர்வஸ் யேசான-என்றும் உள்ளன

சாந்தோக்யத்தில் தஹர ஆகாசத்தில் உள்ளவன் அறியத் தக்கவன் என்று விதிக்கப் படுகிறது
வாஜஸ நேயகத்தில் ஹ்ருதயத்தில் உள்ளே சயனித்து இருப்பவன்
எல்லாரையும் வசப்படுத்துபவன் தலைவன் -என்று கூறப்படுகிறது
இரண்டு இடங்களிலும் வித்யை ஒன்றா வேறா என்று சம்சயம்

இவை இரண்டும் வெவ்வேறே ஆகும் பூர்வ பஷி –
ரூப வேறுபாடு உள்ளதால் –
சாந்தோக்யத்தில் அபஹதபாப்மா போன்ற எட்டு குணங்களுடன் கூடிய ஆகாசம் உபாசிக்கப் படுகிறது
ப்ருஹத்தில் வசீத்வம் குணம் கொண்ட பர ப்ரஹ்மம் உபாசிக்கப் படுகிறது

ஆனால் உண்மையில் ரூப வேறுபாடே இல்லை
சத்ய காமத்வமே இரண்டிலும் உண்டு –

இதரத்ர -வாஜஸ நேயகத்திலும்
தத்ர ச -சாந்தோக்யத்திலும்
காமாதி -ஸத்யம் காமம் முதலியவையே உபாஸ்யமான ரூபம்
ஏன் எனில்
ஆய்த நாதிப்ய–ஹ்ருதய ஆயதனத்வம் -ஸத்ய ஸங்கல்பத்வம் என்னும் வஸித்வம் முதலியவற்றின் ப்ரத்யபிஞ்ஞானத்தாலும்
பரம் ஜோதி ரூப ஸம்பத்ய என்றும்
அபயம் வை ப்ரஹ்ம பவதி என்றும்
ப்ரஹ்ம பிராப்தி என்னும் ஒரே பலத்தாலும் வித்யை ஐக்யம் ஸித்தமாயிற்று –

சாந்தோக்யத்தில் உள்ள தஹர வித்யையால் ஹ்ருதய ஆயதனனான ஆகாசம் எனப்படும் ப்ரஹ்மம்
ஸத்ய காமத்வாதி குணங்களுடன் உபாசிக்கத் தக்கவன் என்று நிச்சயிக்கப் பட்டது
வாஜஸ நேயகத்தில் ஹ்ருதய ஆயதனனான பரமாத்மாவே ஸத்ய ஸங்கல்பத்தின் விசேஷங்களான
வஸித்வாதிகளுடன் உபாஸ்யன் என்று தீர்மானிக்கப் பட்டது
ஏன் எனில்
ரூப ஐக்யத்தால் வித்யை ஐக்யம் சித்தித்தால் ஏஷ அந்தர் ஹ்ருதய ஆகாஸ தஸ்மின் சேதே-என்று உள்ள
ஆகாச சப்தம் ஹ்ருதய ஆகாசத்தைச் சொல்கிறது -பரமாத்மாவைச் சொல்லவில்லை
ஆகவே ரூப பேதம் இல்லை என்று கருத்து –

இத்தையே சாந்தோக்யம்-8-3-4- பரம் ஜ்யோதி ரூப சம்பத்ய ஸ்வேன ரூபேண அபி நிஷ்பத்யதே -என்றும் –

ப்ருஹத் -4-4-25-அபயம் வை ப்ரஹ்ம பவதி -என்றும் கூறப்பட்டது கொண்டு அறியலாம்

சாந்தோக்யம் -1-3-13-தஹர உத்தேரேப்ய-ஆகாசம் பரமாத்மாவே என்றும்

நாரதீயம் -13-2-தச்யாந்தே ஸூஷிரம் ஸூஷ்மம்-என்கிறதால்
இரண்டு வித்யைகளும் ஒன்றே-

ஆமாம் மனசாலே அது காணத் தக்கது –
தேஹ நாநாஸ்தி கிஞ்சன -முதலியவை இந்த வித்யையில் முன்னால் தொடங்கி யுள்ளன
ஆதலின் அதுவே பின் நேதி நேதி -என்று சொல்லப் படுவதால் ப்ரஹ்மம் நிர்விசேஷம் என்று தோன்றுவதால்
வசித்துவம் முதலிய குணங்களும்
ஸ்தூலத்வாதி குணங்கள் போலவே நிஷேதிக்கத் தக்கவை
ஆகையால் ஸத்ய காமத்வாதிகளுக்கு மோக்ஷ சாதனமான உபாஸனத்தில் வேத்யமான ரூபம் இல்லை
என்கிற பூர்வ பஷி சங்கையைப் பரிஹரிக்கிறார் –

ப்ரஹ்மத்துக்கு வசித்வம் கிடையாதே குணங்கள் ஒன்றும் இல்லை என்பதால் என்பர்

ப்ருஹத் –
4-4-19/20-மனசா ஏவ அனுத்ரஷ்டவ்யம் ம்ருத்யோஸ்ஸ ம்ருத்யும் ஆப்நோதி ய இஹ நானேவ பச்யதி
ஏகத் ஏவ அனுத்ரஷ்டவ்யம் ஏதத் அப்ரமேயம் -என்றும்

4-4-22-ச ஏஷ நேதி நேத்யாத்மா -என்பர்

இதற்கு பதில் அடுத்த ஸூத்ரம் –

———————————————————————————————————————

390-ஆதராத் அலேப –3-3-39-

ப்ரஹ்மத்தின் குணங்கள் கை விட பட வேண்டியவை அல்ல என்று
பல ஸ்ருதிகள் முழங்கும் –

சாந்தோக்யம் –
8-1-1-தஸ்மின் யத் அந்த தத் அந்தவேஷ்டவ்யம் -என்றும் –

8-1-5-ஏஷ ஆத்மா அபஹத பாப்மா விஜரோ விம்ருத்யூர் விசோகா விஜிகத்ச அபிபாசாஸ் சத்ய காம சத்ய சங்கல்ப -என்றும்

ப்ருஹத் -4-4-22-சர்வச்ய வசீ –சர்வஸ் ஏசான்–ஏஷ சர்வேஸ்வர ஏஷ பூதாதிபதி ஏஷ பூதபால
ஏஷ சேது விதரண ஏஷாம் லோகாநாம் அம்பேதாய -என்றும்

சாந்தோக்யம் -8-1-6-தத்ய இஹாத் மான மனுவித்ய விரஜந்தி ஏதாம்ச சத்திய காமான் தேஷாம் சர்வேஷூ லோகேஷூ காம சாரோ பவதி -என்றும்

அத யா இஹான் மான மனுவித்ய விரஜந்தி ஏதாம்ச சத்திய காமான் தேஷாம் சர்வேஷூ லோகேஷூ அகாம சாரோ பவதி -என்றும்

வாஜச நேயகத்திலும் -4-4-22-சர்வச்ய வசீ –சர்வஸ் யேசானா–ஏஷ சர்வேஸ்வர ஏஷ பூதாதிபதி ரேஷ பூ பால -என்றும்

அவனது சர்வேஸ்வரத்வத்தை முழங்கின -ப்ருஹத் உபநிஷத் –

4-4-19–நேஹ நாநாஸ்தி கிஞ்சன -என்றும் –

4-4-20-ஏகத் ஏவ அநி நுரஷ்டவ்யம் -என்று
அவனால் படைக்கப் பட்டவைகள் அனைத்தையும் ஒன்றாக பார்க்க வேண்டும்

6-4-22-ச ஏஷ நேதி நேத்யாத்மா -ப்ரஹ்மம் அத்தகையது அல்ல அனைத்துக்கும் அந்தர்யாமி என்றும்

அக்ராஹ்யோ ந ஹி க்ருஹ்யதே அசீர்யோ ந ஹி சீர்யதே அசந்கோ ந ஹி லஜ்யதே அவ்யதிதோ ந ஹி வ்யததே நரிஷ்யதி -என்றும்

சாந்தோக்யம் -8-1-5-நாச்ய ஜரயைத் ஜீர்யதி ந வதேன அஸ்ய ஹன்யதே எதத் சத்யம் ப்ரஹ்ம புரம்
அஸ்மின் காமாஸ் சமாஹித -என்றும் சொல்லிற்று-

ஆதராத் அலேப-வேறு ப்ரமாணங்களால் அறியப்படாத ஸ்வரூபமான வஸித்வம் முதலானவை
வேதத்தால் மட்டுமே அறியத் தக்கன தாதலின் இந்த ஆதரத்தினால் சொல்லப் படுகிறது –
ஆதலின் லோபம் கூடாது -வஸித்வம் முதலானவை களும் ப்ரஹ்ம குணமே –
நிஷேதிக்கும் சுருதிகள் ப்ராக்ருத விசேஷத்தை நிஷேதிப்பவை
ப்ரஹ்மாத்மகம் இல்லாதது இல்லை என்றே சொல்லும்
ஆகவே ஸத்ய காமத்வாதிகள் அறிய வேண்டிய ப்ரஹ்மத்தின் ரூபங்கள் தான் -என்றவாறு –

————————————————————————————————————————-

அப்படியானால் ஸத்ய காமத்துடன் கூடிய ப்ரஹ்ம உபாசன பலமாக –
சயதி பித்ரு லோக காமோ பவதி -என்று ஸாம்ஸாரிக பலத்தைச் சொல்வதால்
ஸ குண ப்ரஹ்ம உபாஸகனுக்கு மோக்ஷ பலம் கிடையாது என்கிற
சங்கையை நிரஸனம் பண்ணுகிறார் –

391-உபஸ்திதே அத தத் வசநாத்–3-3-40-

ப்ரஹ்மத்தை அடைந்தவன் என்பதே காரணமாக பித்ரு லோகம் செல்வதாக கூறுகையால் –
என்பர் பூர்வ பஷி

உபஸ்திதே -ப்ரஹ்மம் ப்ராப்தமாம் போது -ஜீவன் ஸ்வ ஸ்வரூப ஆவிர்பாவம் பெற்று பந்தங்கள் நீங்கின அளவிலே
அத -இந்தப் ப்ரஹ்ம ப்ராப்தியைக் ஹேதுவாகக் கொண்டு
தத் வசநாத்-காம சாரம் -இஷ்டப்படி ஸஞ்சாரம் –சொல்லப் பட்டு இருப்பதால்
அவை ஸம்ஸார பலங்கள் அல்ல
ஒரே சமயத்தில் பல அர்ச்சா திவ்ய தேசங்களிலும் சென்று கைங்கர்யம் செய்ய சக்தன் ஆகிறான்
முத்தாத்மாவின் ஸத்ய சங்கல்பத்தின் பெருமை இவ்வாறு பேசப்படுகிறது –

எங்கும் சஞ்சரிக்கிறான் -பிறவியை நினைவு கொள்ளாமல்
சாந்தோக்யம் -7-25-2-ச ஸ்வராட் பவதி தஸ்ய சர்வேஷூ லோகேஷூ காமசாரோ பவதி –
சஞ்சாரம் செய்வது முக்தாத்மா அனுபவிக்கும் பலனே ஒழிய
சம்சாரிகள் அனுபவிக்கும் பலன் அல்லவே

இதனால் சத்ய காமத்வம் போன்ற தன்மைகள் மோஷத்தை விரும்பும் உபாசகனால்
அந்த அந்த உபாசனங்களில் த்யாநிக்கத் தக்கவன் என்று நிரூபணம் ஆயிற்று-

————————————————————————————————————————-

அதிகரணம் -17- தந் நிர்த்தாரணா நியமாதி கரணம் –

சாந்தோக்யத்தில் உள்ள உத்கீத உபாசனங்கள் ப்ரஹ்ம வித்யைக்கு
அங்கமாக உள்ள யாகங்களில் இருந்தாலும் இருக்கலாம்
இல்லாமலும் இருக்கலாம் என்று நிரூபிக்கப் படுகிறது-

392-தந் நிர்த்தாரணா நியம -தத் த்ருஷ்டே -ப்ருதக்க்ய ப்ரதிபந்த பலம் —3-3-41-

சாந்தோக்யம் -1-1-1- ஓம் இதி ஏதத் அஷரம் உத்கீதம் உபாசீத —
அனைத்திலும் உத்கீத உபாசனை அங்கம்
என்பர் பூர்வ பஷி

சாந்தோக்யம் -1-1-10-யதேவ வித்யயா கரோதி ததேவ வீர்ய வத்தரம் பவதி

இது தவறான வாதம் –

தேந உபௌ குருதோ யச்சைதத் ஏவம் வேத யாச்ச ந வேத –
உத்கீதம் அறிந்தவர்களும் அறியாதவர்களும் பிரணவம் மூலமே உபாசனை செய்கிறார்கள்
என்கிறது சாந்தோக்யம்

கோதோ ஹதே ந பசு காமஸ்ய -பசு பலனாக போன்ற யாகங்களில் உத்கீத உபாசன
அங்கமாக கொள்ள வேண்டாமே

ப்ருதக்க்ய ப்ரதிபந்த பலம் -தடை நீக்கம் —என்றது
இத் தகைய ஸ்வர்க்கம் போன்றவற்றை அளிக்கும் யாகங்களை விட மாறு பட்டது என்றது-

நிர்த்தாரணம் -நிச்சயேந சேதச-அவதாரணம் பலம் உபாஸனம் என்பது பொருள்
தந் நிர்த்தாரணஸ்ய அநியம -உத்கீத விஷயமான உபாஸனத்துக்கு நியமேன உபாதேயத்வம் கிடையாது
அங்கத்வம் இல்லை என்பதாம் –
ஏன் எனில்
தத் த்ருஷ்டே -உத்கீத உபாஸகனுக்கும் அது இல்லாதவனுக்கும் கர்மா அனுஷ்ட்டிக்கத் தக்கது
ஆதலின் அநியமம் காணப்படுவதால் என்றபடி
இவ்வாறு உத்கீத உபாஸனம் அங்கம் இல்லை என்னில் அதை ஏன் விதிக்க வேண்டும் என்றால்
ப்ருதக்க்ய ப்ரதிபந்த பலம் —கர்ம பலத்தைக் காட்டிலும் வேறாக அப்ரதிபந்தம் -தடையின்மையே பலமாம்
கர்மத்துக்கு வீரியவத் தரத்வம் ஏற்படுத்துதலே உபாசன பலமாம்
அதாவது பிரபலமான வேறு கர்ம பலத்தால் விளம்பம் ஏற்படாமல் சீக்ரம் பலம் தருவதாம் –

ஜூஹ்வா ஜூஹோதி என்ற வாக்கியம் ஜூஹு என்ற சாதனம் கொண்டு ஹோமம் செய்யச் சொல்லிற்று
பின்னர் யஸ்ய பர்ண மயீ ஜூஹுர் பவதி நஸபாபம் ஸ்லோகம் ஸ்ருணோதி-என்று
அந்த ஜூஹு இலை வடிவாய் இருந்தால்
எஜமானன் பாப ஸ்லோகத்தைக் கேட்க்காத நிலை ஏற்படும் என்ற ஒரு பலனைத் துதித்தது
பிரதான கர்மத்தின் பலனே பர்ண மயமான ஜூஹு வுக்கும் பலமாகும்
பர்ண மயத்வம் ஜூஹு வின் மூலம் அங்கமாகிறது
உத்கீத உபாஸனம் அப்படி அன்று

ஏன் எனில்
அதை உபாஸிப்பவனும் உபாஸியாதவனும் க்ரதுவை அனுஷ்ட்டிக்க முடியும்
ஆதலாலும் யதேவ வித்யயா கரோதி ததேவ வீர்ய வத்தரம் பவதி என்ற பலத்தின் சாதனம் என்பதை
மூன்றாம் வேற்றுமை உணர்த்துவதால் க்ரதுவின் பலமான ஸ்வர்க்காதிகளைத் தவிர
வீர்ய வத்தரத்வம் என்ற தனிப்பலன் சுருதியில் காணப்படுவதாலும்
கர்ம அங்கமான உத்கீத உபாஸனத்தை த்வாரமாகக் கொண்டு
உத்கீத உபாஸனத்துக்கு அங்கத்வம் இல்லை

எப்படி எனில்
பசுவை விரும்புபவன் அதைக் கறந்து ப்ரணயனம் செய்ய வேண்டும்
விருப்பம் இல்லாதவன் செய்ய வேண்டியது இல்லை என்பதால்
நியமம் இல்லை யாதலின் ப்ரணயனம் அங்கம் ஆவது இல்லை
அதே போல் அநியத்துக்கு அங்கத்வம் இல்லை என்பதாம் –

—————————————————————————————————————————

அதிகரணம் -18-பிரதாணாதிகரணம்–

முன் அதிகரணம் பிரசங்கத்தால் வந்தது
அதற்கு முன் தஹர வித்யா நிரூபணம் செய்யப் பட்டதுடன் சங்கதி –

பரமாத்ம ஸ்வரூப சிந்தனமும் -அபஹத பாப்மத் வாதி குண சிந்தனமும் விதிக்கப் பட்டுள்ளன
இங்கு குண சிந்தன விஷயத்தில் அந்த குணங்களோடு கூடியவனாக பரமாத்ம சிந்தனம்
ஆவ்ருத்தி செய்யத் தக்கதா
அல்லது தேவை இல்லையா என்று சம்சயம்
ஸர்வ குணங்களுக்கும் இருப்பிடம் பரமாத்மா ஒருவனே யாதலால்
ஒரு முறை சிந்தித்தால் போதும் ஆவ்ருத்தி வேண்டாம்
என்பது பூர்வ பக்ஷம்

அபஹத பாப்மா போன்ற குணங்களை உபாசிக்கும் பொழுது தஹர ஆகாசம் என்னும்
ப்ரஹ்மத்தின் ஸ்வரூபமும் உபாசிக்கப்பட வேண்டும் என்று நிரூபிக்கப் படுகிறது

393-ப்ரதா நவத் ஏவ தத் உக்தம் –3-3-42-

சாந்தோக்யம் -8-1-6- தஹர ஆகாச ஸ்வரூபம் சொல்லியே குணங்களும் விதிக்கப் படுகின்றன

பூர்வ பஷம்
தஹர ஆகாசம் குணங்கள் உடன் கூடியே உள்ளான்
ஒரு தடவை உபாசனை செய்த பின் குணங்களை கொண்டவன் என்று
தனியாக உபாசனை செய்ய வேண்டாம் என்பர்

அப்படி அல்ல –
ஸ்வரூப உபாசனை வேற
குண உபாசனை வேறு-

ப்ரதா நவத் -ஆவர்த்த நீயம் என்று வருவித்திக் கொள்ள வேண்டும் –
இந்த்ராய ராஜ்ஜே புரோடாசம் இந்த்ராயாதி ராஜாயா இந்த்ராய ஸ்வ ராஜே என்று
உத்திஷ்டனான ஒரே இந்த்ரன் ராஜத்வாதி விஸிஷ்ட வேஷத்தாலே வேறு தேவதை என்று ஒப்புக் கொண்டு
புரோடாசே பிரதானம் ஆவர்த்தனம் ஆவது போலே
ஏவ தத் உக்தம்–குணி ஸ்வரூபம் ஒன்றானாலும்
குண விஸிஷ்ட ஆகார பேதத்தாலே தர்மி சிந்தனம் ஆவர்த்தி செய்யத் தக்கது
சங்கர்ஷண காண்டத்தில் இவ்வர்த்தம் காட்டப் பட்டது –

இங்கு அபஹத பாப்மா விரஜ -என்று பிரத்யேக குண அநுஸந்தானமும்
வ்ரஜந்த்யே தாம்ச்ச சத்யான் காமான் -என்று ஓன்று சேர்ந்து அனுசந்தானமும் விதிக்கப் பட்டது
இவ்விதம் இரு வகைப்பட்ட குண அனுசந்தானத்தாலும் தர்மியை விட்டு குண அனுசந்தானம் பொருந்தாது –
ஆகையால் ப்ரஹ்ம அனுசந்தானம் தானே ஸித்தமானதால் விவாதம் இன்மையால்
அதிக சங்கைக்கு அவகாசமே இல்லை
ஆக அதற்க்கு என் சமாதானம் என ஓர் கேள்வி

சர்வ வித்யைகளுக்கும் ஸாதாரணமும் ஸாமான்ய குணங்களுமான ஸத்யத்வ ஞானத்வ அமலத்வாதி
ஸ்வரூப நிரூபக தர்மங்களுடன் குணியின் அனுசந்தானம் ப்ராப்தமானாலும் –
அவற்றை விட்டு வேறானதாய் அநந்த வித்யா விசேஷங்களில் நியதமாயுள்ள ஸ்தானாதி விசேஷணம் கூடிய
ப்ரஹ்மத்துக்கு ஆவ்ருத்தி சிந்தை கூடுமாதலின் தவறு இல்லை என்பதால்
சமாதானம் கூறுகிறது –

————————————————————————————————————————–

அதிகரணம் -19—லிங்க பூயஸ்த்வ அதிகரணம்-
நாராயண அநுவாகம்

முன் அதிகரணத்தில் உள்ள தஹர வித்யா வாக்யத்தோடு
ஏக வாக்யமாகையால் சங்கதி
தஹர வித்ய அநந்தரம் படிக்கின்ற–
ஸஹஸ்ர சீர்ஷம் தேவம் விஸ்வ அஷம் விஸ்வ சம்புவம் விஸ்வம் நாராயணன் -முதலிய
இந்த நாராயண அனுவாகத்தில் உபாஸனம் விதிக்கப்பட வில்லை
இதுக்கு முன் அனுவாகத்தில் சொல்லப்பட்ட தஹர வித்யைக்கு உபாஸகனானவனை நிர்த்தாரணம் செய்வது பலமா
அல்லது ஸகல பரவித்யா வேத்ய விசேஷத்தை நிர்த்தாரணம் செய்வது பலமா
என்று சம்சயம்
தகர வித்யைக்கு அடுத்தாற் போலே குறிப்பிட்டு உள்ளமையால் அந்த உபாஸ்ய விசேஷணத்தைத் தீர்மானிப்பதே
வாக்கியத்தின் பலம் என்று பூர்வ பக்ஷம்

அதை நிரஸிக்கிறார்

ஸகல பர வித்யைகளிலும் உபாஸ்யமானது எது என்று நிச்சயிக்க
லிங்க பூயஸ்த்வாத் -லிங்கங்கள் ஏராளமாக இருப்பதால் அதுவே யுக்தக வேத்ய விஷயத்தை
நிர்ணயம் செய்வதில் சிஹ்னமான வாக்யங்கள் நிறைய இருப்பதால் என்றவாறு
தத் ஹி -அந்த வாக்கியம் தானே
பலீய -வலிமை மிக்கது
ப்ரகரணத்தை விட பலமானது
தத் அபி —தகர வித்யையிலும் இவனே உபாஸ்யன் என்று காட்ட பத்மகோச ப்ரதீகாசம்
முதலியவற்றால் ஹ்ருதயம் முதலியவற்றைக் கூறுவது பொருத்தமே

ப்ரஹ்ம வித்யையின் மூலம் உபாசிக்கப்படும் பரம் பொருள் எந்த தேவதை என்று
உணர்த்தவே என்று நிரூபிக்கப் படுகிறது –

394-லிங்க பூயஸ்த்வாத் தத் ஹி பலீய தத் அபி —3-3-43-

தைத்ரிய நாராயண வல்லி-
13-1-சஹஸ்ர சீர்ஷம் தேவம் விச்வாஷம் விஸ்வ சம்பவம் விஸ்வம் நாராயணம் தேவம் அஷரம் பரமம் பதம் -என்றும்

13-2- சோ அஷரம் பரம ஸ்வராட் -என்று முடித்தது

முந்திய அனுவாகத்தில் -12-3-
தஹாம் விபப்மாம் பரவேஸ்ம பூதம் யத் புண்டரீகம் புரமத்த்ய சமஸ்தம் தத்ர அபி
தஹரம் ககனம் விசோகஸ் தஸ்மின் யதந்தஸ் ததுபாசி தவ்யம் –
என்று தஹர வித்யை சொல்லி

மீண்டும் இந்த அனுவாகத்திலும் -13-2-
பத்மகோச ப்ரதீகாசம் ஹ்ருதயஞ்சா ப்யதாமுகம்-என்று சொல்லி

நாராயண அனுவாகம் தஹர வித்யையின் உபாசனப் பொருள் என்று உணர்த்திற்று
என்பர் பூர்வ பஷி –

அப்படி அல்ல –
இங்கு கூறப்படும் உபாசனப் பொருள் மற்ற வித்யைகளிலும் கொள்ளத் தக்கது என்று உணர்த்தவே
அஷரம் சிவன் சம்பு பரப்ரஹ்மம் பரஞ்சோதி பரதத்வம் பரமாத்மா பதங்களால்
உணர்த்தப் படும் உபாசனப் பொருள் நாராயணனே

லிங்கம் -அடையாளம் –
பூர்வ மீமாம்சை -3-3-14-சுருதி லிங்க வாக்ய பிரகரண ஸ்தான ஸ்மாக்யநாம் சமவாயே பார தௌர்பல்யம்
அர்த்த விபர கர்ஷாத் -என்று லிங்கமே பிரதானம் என்று சொல்லும்

பத்மகோச ப்ரதீகாசம் தஹர வித்யைக்கு பின்பு சொல்லப் பட்டதால்
இதுவும் தஹர வித்யையின் உபாசன பொருளே
என்பர் பூர்வ பஷி

சித்தாந்தம்
தஹர விதையிலும் உபாசனப் பொருள் நாராயணனே என்று காட்டவே –
சகஸ்ர சீர்ஷம் முதல் வேற்றுமையாகவே கொள்ள வேண்டும் -விச்வமேதம் புருஷ போலே

அந்தர் பஹிச்ச தத் சர்வம் வ்யாப்ய நாராயண ஸ்தித -13-1- என்றும்
தச்யாக்ச்சிகாய மத்யே பரமாத்மா வ்யவஸ்தித ச ப்ரஹ்மா ச சிவஸ் சேந்திர சோஷர பரம்ஸ் ஸ்வராட் -13-2-என்றும்
முதல் வேற்றுமையிலே உள்ளன

ஆகையால் அந்த அந்த பர வித்யைகளில் உள்ள
பர ப்ரஹ்ம
பர தத்வ
பரஞ்சோதி
பரமாத்மா
அஷி
சிவ
சம்பு
சப்தங்களால் அந்த அந்த உபாஸ்யர்களைக் கூறி
பிரகரணத்தைக் காட்டிலும் பலவத்தான வாக்யத்தால்
அவர்களுக்கு நாராயணத்வத்தை விதிப்பதால்
இந்த அனுவாகம் பரவித்யா வேத்ய விசேஷத்தை நிர்த்தாரணம் செய்வதற்கு ஆனது என்று ஸித்தம் –

————————————————————————————————————————————-

அதிகரணம் -20-பூர்வ விகல்பாதி கரணம் –

ப்ரகரணத்தைக் காட்டிலும் பலம் மிக்க வாக்யத்தால் நாராயண அனுவாகத்துக்கு
ஸர்வ வித்யா சாதாரணத்வம் சொல்லப்பட்டது

இங்கு பிரகரணத்துக்கு எந்த பாதகமும் இல்லாமையாலே
மனச்சிதாதி அக்னிகள்
க்ரியா மயமான க்ரதுவில் அனுபிரவேசிப்பவை
என்ற சங்கையால் சங்கதி –

அக்னி கிரியாமயமான யாக அங்கம் அல்ல –
வித்யா மயமான யாக அங்கமே என்று நிரூபிக்கப் படுகிறது –

395-பூர்வ விகல்ப பிரகரணாத் ஸ்யாத் க்ரியா மானஸ வத்

மனசால் உருவாக்கப்படும் அக்னி குறித்து வாஜச நேயகத்தில் அக்னி ரகச்யத்தில் –
மனச்சித வாக்சித பிராண சித சஷூ சித ச்ரோத்ர சித கர்ம சித அக்னி சித
மனசால் கற்ப்பிக்கப் பட்ட அக்னியும்
க்ரியா ரூபமான யாகங்களில் சேர்த்துக் கொள்ளப் படும் என்றவாறு-

அக்னிகள் வித்யா ரூபங்களாகக் கூறப்பட்டுள்ளன
இவை கிரியா மயமான க்ரதுவுக்கு அங்கங்களா
வித்யா மய க்ரதுவுக்கு அங்கங்களா
என்ற சம்சயம்

இந்தப் பிரகரணத்தில் வித்யாமய க்ரது சம்பந்தமுள்ள க்ருஹம் ஸ்தோத்ரம் முதலியன காணப்பட்டாலும்
வித்யாமய க்ரது விதி இல்லாமையாலும்
க்ரது விதிக்கு உப யுக்தமான பலாந்தரம் கூறப்படாமையாலும்
முன்பு அஸத் வா இதம் அக்ர ஆஸீத் என்று தொடங்கி இஷ்ட கசித அக்னி பற்றிப் பேசப்படுவதால்
மனச்சித்யாதி அக்னிகளில் ஒவ்வொன்றிலும் தாவான் யாவான சவ் பூர்வ என்று
இஷ்டக சித் அக்னி கார்யத்தை அதிதேசம் செய்வதால்
இஷ்டக சித் அக்னியோடு மனச்சிதாதிகளுக்கு விகல்பம் தோன்றுவதால்
இஷ்டக சித் அக்னி சேஷி பூதமான க்ரியாமய க்ரதுவுக்கு அங்கங்கள் என்கிற
பூர்வ பக்ஷத்தை
இரு ஸூத்ரங்களில் நிரஸிக்கிறார் –

க்ரியா ஸ்யாத் -மனச்சித்தாதிகள் க்ரியா மய க்ரத்திற்கே அங்கமானவை
பூர்வ விகல்ப பிரகரணாத் -ப்ரகரணத்தில் அவ்வாறு சொல்லப்படா விட்டாலும்
முன் ப்ரக்ருதமான இஷ்டக சித் அக்னியால் தெளிவான கிரியாமய க்ரது பிரகரணமாகையால்
விகல்பம் கிரியாமய க்ரத்வங்களால் மனச்சிதாதிகளும் அக்னியாகையாலே
அதுக்கு இஷ்டக சித் அக்னியுடன் விகல்பம் வித்யா ரூபங்களான மனச்சிதாதிகளுக்கு கிரியாமயக்ரத் வங்கத்வம்
எப்படிக் கூடும் என்றால்
மானஸாத் –த்வாதசாஹங்கமான மானஸ க்ரஹமானது மனத்தால் தயாரிக்க வேண்டிய
கிரஹண சாதனமான ஸ்த்ராதிகளைக் கொண்டு இருப்பதால் வித்யா ரூபமாய் இருந்தாலும்
அந்த க்ரஹத்திற்கு கிரியாமய க்ரத்வங்கத்வத்தால் கிரியாமயத்வம் இருப்பது போல்
இங்கும் கூடும் என்பதால் –

————————————————————————————————————

396-அதி தேசாத் ச–3-3-45-

கற்கள் மீது வைக்கப்படும் அக்னி போன்று மனம் மூலம் ஏற்படும் அக்னிக்கும் உண்டு
க்ரியா ரூபமான யாகத்தில் ஈடுபடுதலால்-கிரியா ரூபம் அடைகின்றன-

அவற்றுக்கு ஒவ்வொன்றுக்கும் -தாவான் யாவாந சவ் பூர்வ -என்று
மனச்சிதாதிகளில் பூர்வ இஷ்டக சித அக்னி கார்யத்தில் அதிதேசத்தாலும்
இஷ்டக சித அக்னியோடு மனச் சிதாதிகளுக்கு விகல்பம் தோன்றுகிறது
அதனால் இவ்விகல்பம் மனச் சிதாதிகளுக்கு இஷ்டக சித அக்னிக்கு சேஷியான
கிரியாமய க்ருத்வின் அங்கத்துவம் இன்றி சம்பவிக்காது
ஆதலின் மனச் சிதாதிகள் அதற்கு அங்கங்கள் என்ற பூர்வ பக்ஷத்தை நிரஸிக்கிறார் –

————————————————————————————————————–

397-வித்யா ஏவ து நிர்த்தாரணாத் தர்சநாத் ச-3-3-46-

அவை வித்யா ரூபமானவையே ஆகும் –
இது முந்திய பூர்வ பஷ ஸூத்ரங்களுக்கு பதில்

சதபத ப்ராஹ்மணம்-10-5-3-3- தே மனசைவ அதீயந்தி மனசைவ அசீயந்த மனசை ஷூக்ரஹா அக்ருஹந்த
மனஸா ஸ்துவந்த மனஸா அசம்சன் யத் கிஞ்ச யஜ்ஞே கர்ம க்ரியதே யத் கிஞ்ச யஜ்ஞீயம்
கர்ம மனசைவ தேஷு மனோ மயேஷூ மனஸ் சித்ஸூ மனோமயம் அக்ரியதா –
வித்யா ரூபமே

து -ஸப்தம் பூர்வ பக்ஷத்தை விலக்குவது
மனசித்தாதிகள்
வித்யா ஏவ -வித்யாமய க்ரதுவின் அங்கங்களே
நிர்த்தாரணாத் -மனசித்தாதிகளுக்கு மனதால் சம்பாதிக்கப் பட்ட அக்னித்வம் ஸித்தமானாலும்
வித்யாசித ஏவ -என்றும்

இதற்கு உரையாக
வித்யயா ஹைவேதே ஏவம் விதசகிதா பவந்தி என்றும் தீர்மானிக்கையால்
இந்தத் தீர்மானம் மனச் சிதாதிகளுக்கு வித்யாமய க்ரத்வ அங்க தயைவ வித்யாமயம் ஸித்திப்பதற்காக
தர்சநாத் ச-அங்கேயே வித்யாமய க்ரது காணப்படுவதால் -என்றபடி

மனைஸ ஷு க்ரஹாக்ருயந்தே மனஸா ஸ்து வந்தி என்னும் இடத்தில் மனஸா த்ரஷ்டும் -என்று கருத்து

ஆக இந்த இரண்டு ஹேதுக்களால் மனச் சிதாதிகளுக்கு
வித்யாமய க்ரத்வ அங்கத்துவம் ஸித்தமாகிறது –

ஆமாம் -வித்யாமய க்ரதுவில் விதிக்கும் பதம் காணப்படாமையாலும்
பல சம்பந்தம் தோன்றாமையாலும்
ப்ரகரணத்தில் உள்ள இஷ்டக சித் அக்னியில் தோற்றம் கிரியாமய க்ரத்வ அங்கத்வம் தோன்றுவதால்
பிரகரணத்தால் வித்யாமய க்ரத்வ அங்கத்துவம் பாதிக்கப் படுகிறது
என்ற சங்கையைப்
பரிஹரிக்கிறார் –

—————————————————————————————————————–

398-ஸ்ருத்யாதி பலீயஸ் த்வாத் ச ந பாத –3-3-47-

சுருதி லிங்கம் வாக்கியம் வலிமையானதால் தடை இல்லை –
வித்யா ரூபமான யாகங்கள் குறித்து சுருதி வாக்யங்கள் உள்ளதால் இவற்றைத் தள்ள இயலாது –

மனம் மூலம் செய்யும் யாகம் எப்போதும் எங்கும் செய்யலாமே
மனம் மூலம் உண்டாகும் அக்னி வித்யா ரூபமான யாகத்தின் அங்கம் என்றதாயிற்று

இதில் ஸ்ருதியாக ஸ்ரீ பாஷ்யத்தில்
தேஹை தே வித்யா சித ஏவ -என்றும்
இதற்கு விவரணமான -வித்யயா ஹைவேதே ஏவம் விதசகிதா பவந்தி-என்றும்
இரண்டு வாக்யங்கள் காட்டப்பட்டுள்ளன

இவற்றின் அர்த்தம்
ஏவம் வித–மனஸ் சஷுஸ் யாதிகளின் வியாபாரங்களில் அத்வித்வத்தைச் சம்பாதிக்கும் புருஷனுக்கு
தே -மனச் சித் யாதி அக்னிகளும்
வித்யயா -பிரதான வித்யையால்
சிதா பவந்தி -என்று அர்த்தம் –

பூர்வ பஷி
இப்படியான வித்யா ரூப யாகத்துக்கு விதியும் இல்லை பயனும் இல்லை
ஆகவே இப்படிப்பட்ட யாகம் ஏதும் இல்லை என்பர் –

ஆனால் மனஸா ஏஷு க்ருஹா அக்ருஹ்யந்த முதலியவற்றில்
விதி பதம் காணாததால் வித்யமய க்ரதுக்கு விதி இல்லை
அதனால் வித்யாமய க்ரதுகளில் அந்வயம் கூடாது
என்ற சங்கையை நிரஸிக்கிறார்

——————————————————————————————————————

399-அநு பந்தா திப்ய-பிரஜ்ஞாந்திர ப்ருந்தக்த வவத் த்ருஷ்டச்ச தத் உக்தம் –3-3-48-

அநு பந்தங்கள் ஸ்தோத்ரம் போன்றவை மூலம்
வித்யா ரூபமான யாகத்துக்கும் கர்ம ரூபமான யாகத்துக்கும் வேறுபாடு அறியப்படுகின்றன –
கர்ம ரூபமான யாகப் பலன்களும் வித்யா ரூபமான யாகங்களுக்கும் கிட்டும்-

அநு பந்தா திப்ய-மானஸ க்ருஹ ஸ்தோத்ர ஸஸ்த்ர ரூபங்களான யஜ்ஞ அனு பந்தங்களால் இஷ்டக சித அந்வயியான
க்ரதுவைக் காட்டிலும் இங்கு விதிக்கப்படும் க்ரதுவுக்கு –
ப்ருந்தக்தவம் -வேறுபாடு தோன்றுகிறது

பிரஜ்ஞாந்திர ப்ருந்தக்தவ வத் -தஹர வித்யாதி ரூபங்களான பிரஜ்ஞாந்திரங்களுக்கு வேறுபாடு
ஹேதுக்களால் தோன்றுவது போல் என்றபடி

அநு பந்தாதி-ஆதி பதத்தாலே முன் கூறிய ஸ்ருதி முதலியவை சொல்லப்படும்

ஆகவே ஸ்ருதியாதிகளாலும் அனுபந்தங்களாலும் வித்யாமய விதியானது கல்பிக்கப் படுகின்றது என்று பொருள்

த்ருஷ்டச்ச -வாக்யம் அனுவாதம் போல் இருந்தாலும் விதி கல்பனம் காணப்படுவதே

யதேவ வித்ய யா கரோதி -முதலியவற்றில் எப்படி விதியானது கல்பிக்கப் படுகின்றதோ அப்படி என்று கருத்து

பூர்வ மீமாம்ஸையில்
தத் உக்தம்–நவ சனா நித்ய பூர்வத் வாத் -என்று விதி கல்பனம் சொல்லப்பட்டது என்பதாம்

அதி தேசத்தாலும் மனச் சிதாதிகளுக்கு இஷ்டக சித் அக்னி சேஷி பூத க்ரியா மய க்ரத்வ
அங்கத்வம் தோன்றுகிறதே என்ற சங்கையைப் பரிஹரிக்கிறார் –

—————————————————————————————————————–

400- ந சாமாந்யத் அபி உபலப்தே ம்ருத்யுவத் ந ஹி லோகாபத்தி-3-3-50

சில விஷயங்களில் ஒற்றுமை இருந்தாலும் ஒன்றாகவே கொள்ள முடியாது

ச ஏஷ ஏவ ம்ருத்யு ய ஏஷ ஏதஸ்மின் மண்டலே புருஷ -என்று
இந்த புருஷனே ம்ருத்யு ஆவான் என்றது
யம லோகத்தை ஆளுபவன் -என்றது இல்லை –

எனவே வித்யா ரூப யாகம் கர்ம ரூபமான யாகத்துக்கு அங்கம் இல்லை-

ந சாமாந்யத் அபி உபலப்தே -ஏதேனும் ஒரு சாமான்ய தர்மத்தை இட்டு அதிதேசம் பொருத்த மாகையாலே
அதி தேசத்தால் கிரியாமய க்ரதுவின் அங்கத்வம் மனச் சிதாதிகளுக்கு அவஸ்யம் ஏற்க வேண்டியது இல்லை
ஏன் எனில்

ம்ருத்யுவத் – ச ஏஷ ஏவ ம்ருத்யு ய ஏஷ ஏதஸ்மின் மண்டலே புருஷ-என்று ஸம்ஹர்த்தா என்ற
சாமான்ய தர்மத்தை இட்டு மண்டல புருஷனை மிருத்யுவாக அதிதேசம் செய்தால் போலே இங்கும்
இஷ்டக சித் அக்னிக்கு ஸ்வ க்ரதுவின் சாத் குண்யம் பலமானால் போல்
மனச் சிதாதிகளுக்கும் வித்யாமய க்ரது ஸாத் குண்யமே பலம் என்கிற சாமான்ய தர்மத்தை இட்டு
அதி தேசிக்கக் குறை இல்லை

நஹி லோகாபத்தி -மண்டல புருஷனுக்கு மிருத்யு லோக பிராப்தி இல்லாதாப் போலே
இஷ்டக சித் அக்னி அதி தேசத்தால் தததிதேச பூத கிரியாமய க்ரதுவில்
அனு பிரவேசம் மனச் சிதாதிகளுக்கு வராது என்பது கருத்து –

—————————————————————————————————————-

401-பரேண ச சப்தச்ய தாத்வித்யம் பூயஸ்த்வாத் து அநு பந்த–3-3-51-

சதபத ப்ராஹ்மணத்தில்-10-5-4-1-அயம் வாவ லோக ஏஷ அக்னிச் சிதஸ் தச்யாப ஏவ பரிச்ரித -என்று
உலகமே அக்னி மேடை -கடலில் உள்ள நீரே கற்கள் -என்றும்

ச ஏ ஹைததேவம் வேத லோகம் ப்ருணாம் ஏநம் பூதம் ஏதத் சர்வம் அபி சம்பத்யதே -என்று
இப்படிப்பட்ட அக்னியை உலகமாக அறிபவனே அவனை அனைவரும் அடைகின்றனர்

தனிப் பலனைக் கொண்ட வித்யை கூறப்படுகிறது இங்கே

மனச்சித் போன்ற வித்யாமயமானவற்றை
ப்ருஹத் ஆரண்யக உபநிஷத்தில் சொல்லாமல்
அக்னி ரஹஸ் யத்தில் படித்தது
மனச்சித் போன்ற அக்னிகளுக்கும் படிக்க வேண்டிய தன்மைகள் பலவும் உள்ளதால்-

பரேண ச -ப்ராஹ்மணத்தால்
சப்தச்ய -மனச் சிதாதிகளைக் கூறும் ஸப்தத்துக்கு
தாத்வித்யம் -தத்விதத்வம் வித்யா மய ப்ரதிபாதகத்வம் தோன்றுகிறது

பர ப்ராஹ்மணத்திலோ என்றால் –
அயம் வாவ லோக ஏஷ அக்னிச் சிதஸ் தச்யாப ஏவ பரிச்ரித -முதலியவற்றால் தனிப்பலமுள்ள வித்யை விதிக்கப் படுகிறது
அக்னி ரஹத்தியத்திலோ என்னில் கிரியை தான் விதிக்கப் படுகிறது

ஆகையால் மனச் சிதாதிகளுக்கு கிரியாமய அங்கத்துவம் கிடையாது
ஆனால் க்ரியா ப்ரகரணத்தில் மனச் சிதாதிகளுக்கு அனு பந்தம் எப்படிக் கூடும் என்றால்
பூயஸ்த்வாத் து அநு பந்த-சம்பாத நீயமான அங்கி அங்கங்கள் ஏராளமாதலின் அனு பந்தம் கூடும்
ஆகையால் வித்யாமய க்ரத்வ அங்கத்வம் மனச் சிதாதி அக்நி களுக்கு ஸித்தம் –

———————————————————————————————————-

அதிகரணம் -21-சரீரே பாவதி கரணம் –

முன் அதிகரணம் ப்ரசங்கத்தால் வந்தது –
அதனால் -அதன் முன் அதிகரணத்தோடு சங்கதி சொல்லத் தக்கது –
அங்கே எல்லா வித்யைகளிலும் ப்ரஹ்மத்துக்கே உபாயஸ்த்வம் சொல்லப் பட்டது
அவ்விதமே ப்ரத்யகாத்மாவும் அனுசந்திக்கத் தக்கது என்று ஆக்ஷேப சங்கதி –

சாதன தசையில் அனைத்து வித்யைகளிலும் தன்னைப் பாவங்கள் அற்றவன் முதலான
ஸ்வரூபம் உள்ளதாகவே ஜீவன் உபாசித்துக் கொள்ள வேண்டும்
என்று நிரூபிக்கப் படுகிறது-

402-ஏக ஆத்மந சரீரே பாவாத் —3-3-51-

இது பூர்வ பஷ ஸூத்ரம்-சரீரத்தில் இருப்பு உள்ளதால் சிலர் இப்படி கொள்கின்றனர் –

ப்ரஹ்ம ஸூத்ரம் -1-4-6-த்ரயாணாமேவ ச ஏவம் உபன்யாச பரச் நச்ச -என்று
உபாயம் மற்றும் உபாயத்தால் அடையப் படும் வஸ்து அறிவதை போலே
உபாசகனையும் பற்றியும் அறிய வேண்டும்

மேலும் ப்ரஹ்ம ஸூத்ரம் -4-1-3-ஆத்மேதி தூப கச்சந்தி ப்ராஹ யந்தி ச -என்று
தனது ஆத்மாவாக பரமாத்மாவாக உள்ளதால் ஜீவனையும் உபாசிக்க வேண்டும் என்கிறது

ஸ்வர்க்க பலன் போன்றவற்றை உபாசிக்கும் பொழுது
தனது ஸ்வரூபம் பற்றி அறியாதவனாகவே ஆகிறான்

எப்படி உபாசிக்கிறானோ அப்படியே ஆகிறான் –

சரீரத்தில் உள்ள ப்ரத்யகாத்மா வின் ஸ்வரூபம் கர்த்தா போக்தா முதலிய விதத்தில் அனுசந்திக்கத் தக்கதா
அன்றி
பிரஜாபதி வாக்கியத்தில் உள்ள படி அபஹத பாப்மத்வாதி எட்டு குணங்களுடன் கூடியதாக அனுசந்திக்கத் தக்கதா என்றும்
கர்ம விதிகளில் போலேவே உபாசன விதிகளிலும் அப்படி கர்த்ருத்வ போக்த்ருத்வ அனுசந்தானத்தாலே
தானே சாதன அனுஷ்டானமும் தத் பலன்களும் சம்பவிக்கையாலே
தத் க்ரது நியாயப்படி எப்படி எப்படி உபாஸிக்கிறார்களோ
அப்படி அப்படி பயன் பெறுவர் என்பதுடன் ஒரே அர்த்தம் உள்ளதாதலின்
பரமாத்ம விஷயமே என்று பூர்வ பக்ஷம் இந்த ஸூத்ரத்தால் காட்டப்படுகிறது –

ஏக -கர்த்ருத்வாதி விஸிஷ்டமான ஆத்ம ஸ்வரூபமே அனுசந்தேயம் என்று சிலர் எண்ணுகிறார்கள்
ஆத்மந சரீரே பாவாத் -சரீரத்தில் உபாஸகனான ஆத்மா அவ்வாறு கர்த்ருத்வாதிகளுடன் இருப்பதால் என்றபடி

இந்த பூர்வ பக்ஷத்தை நிரஸிக்கிறார் –

——————————————————————————————————-

403-வ்யதிரேகஸ் தத்பாவ பாவித்வாத் ந து உப லபதிவத்–3-3-53-

அந்த அந்த ஸ்வரூபங்களைக் கொண்டவனாகவே ஆகிறான்
சாந்தோக்யம் -3-14-4-ஏவம் க்ரது அமும் லோகம் ப்ரேத்ய அபி சாம்பவி தாஸ்மி-என்று
உபாசனைக்குத் தக்கபடி உலகை விட்ட பின்னர் ஆவேன் –
அடையப் போகும் ஸ்வரூபத்தையே உபாசிக்க வேண்டும்

யாகம் போன்ற கர்மங்களில் ஈடுபடும் ஒருவன் தன்னை சரீரத்தைக் காட்டிலும் வேறுபட்டவனாக
ஜ்ஞாத்ருத்வம் போன்ற தன்மைகள் கொண்டவனாக அறிய வேண்டும் –
இப்படி அறிந்தால் மட்டுமே கர்மங்களை இயற்ற அதிகாரம் படைத்தவன் ஆகிறான்-

ந து–முன் சொன்னபடி கர்த்ருத்வாதி விஸிஷ்டமாக அனுசந்தேயம் அன்று
வ்யதிரேகஸ் -ஸாம்ஸாரிக ஸ்வரூபத்தைக் காட்டிலும் முக்த ஸ்வரூபத்துக்கு உள்ள வேறுபாடு அனுசந்திக்கத் தக்கது
தத்பாவ பாவித்வாத் -அப்படி அபஹத பாப்மத்வாதிகளே ஜீவனுக்கு ப்ராப்ய ஆகாரமாதலின்
அத்தகைய ஆகாரத்துடன் கூடியவனாகவே ஆத்மா உபாசன தசையில் அனுசந்திக்கத் தக்கது என்று கருத்து
உப லபதிவத்-ப்ரஹ்ம ஸ்வரூப ப்ராப்தியானது யத் அவஸ்தித ப்ரஹ்ம உபாஸகனுக்கு நடப்பது போலவே
ஜீவ ஸ்வரூபத்திலும் சமம் என்று கருத்து

உண்மையான ஸ்வரூபம் உடையவனுக்கே ப்ரஹ்ம அனுபவம் பலம்
யதா க்ரது நியாயம் பரமாத்மாவை மட்டும் பற்றியது அல்ல -பிரத்யகாத்மா பூத உபாய விஷயமுமாதலால்
அபஹத பாப் மத்வாதி குண விஸிஷ்ட ஸ்வரூபமே அனுசந்திக்கத் தக்கது
ஜீவ உபாசனம் ப்ராப்தமாதலின்
அஹம் ஸப்தத்துக்கு முக்ய அர்த்தம் சுத்த ஜீவாத்ம ஸ்வரூபமே உபாஸ்யம் என்றும்
அசுத்தாஸ்தே ஸமஸ்தாஸ் து -என்றபடி
அசுத்த ஸ்வரூப உபாஸனம் நிஷித்தம் ஆகையால் உள் அடங்காதது என்பது ஸூத்ரகாரர் திரு உள்ளம்

—————————————————————————————————–

அதிகரணம் -22-அங்காவபத்தாதிகரணம் –

கீழ் ப்ரஹ்மத்துக்கு உபாஸ்யத்வம் நியதமான இடங்களில் எல்லாம் சுத்த ஜீவனுக்கே உபாயஸ்த்வம் கூறப்பட்டது
இங்கு உத்கீத அனுபிரவேசம் உள்ள சாகைகளில் எல்லாம்
உத்கீதாத் யுபாசன அனுபிரவேசம் உண்டா இல்லையா என சம்சயம்

ஓம் இத்யேத் அக்ஷரம் உத்கீதம் உபாஸீத -என்று உத்கீதாதிகள்
க்ரத் வங்க விஷயங்களான உபாஸனைகளாகக் கூறப்படுகின்றன
அவை எந்த சாகையில் உள்ளனவோ அங்கு மட்டும் பயன்படுத்தத் தக்கவையா
அல்லது எல்லா சாகைகளிலும் சம்பந்தம் உடையவையா என்று சம்சயம்

முன்பு உத்கீத உபாஸனத்துக்கு பேத அபேத சிந்தை செய்யப்பட்டது
பின்னர் உத்கீத உபாஸனத்துக்கு கர்ம பலத்தைத் தவிர்த்து வேறு பலம் இருப்பதால்
ப்ரசங்கத்தால் புருஷார்த்தம் ஸித்திக்கப் பட்டது
தற்போது ஓர் இடத்தில் கூறப்பட்ட உத்கீத உபாஸனத்துக்கு எங்கும் சொல்லப்பட்ட
உத்கீத சாமான்ய சேஷத்வம் கூறப்படுகின்றது என்று சங்கதி
பொருள் வேறுபடுவதால் கூறியது கூறல் தோஷம் இல்லை

சாந்தோக்யத்தின் உத்கீத உபாசனைகள் அனைத்து சாகைகளிலும் தொடர்பு உடையவை ஆகும் என்று நிரூபிக்கப் படுகிறது –

404-அங்காவ பத்தா து ந சாகா ஸூ ஹி ப்ரதிவேதம்–3-3-53-

சாந்தோக்யம் –
1-1-1-ஓம் இதி ஏதத் உத்கீதம் உபாசீத் –

2-2-1- லோகேஷூ பஞ்சவித்யாம் சாம உபாசீத் –

ஐதரேய ஆரண்யகம் -2-1-2—உக்தமுக்தமிதி வை பிரஜா வதந்தி ததிதமே வோக்த மியமேவ ப்ருத்வீ –

சதபத ப்ராஹ்மணம் -10-5-4-1-அயம் வாவ லோகே எஸ அக்னிச்ச
என்று அந்த அந்த கர்மங்களுக்கு அங்கமாக உத்கீத உபாசனங்கள் உள்ளன

அந்த ஸ்வரத்துடன் ஓதப் படுவதால் குறிப்பிட்ட சாகைக்கே பொருந்தும்
என்பர் பூர்வ பஷி
சாகைகள் தோறும் ஸ்வரம் மாறுவதால் அதைக் கொண்டு உத்கீதம் பின்னம் ஆகையாலே எங்கு உபாசனம் கூறப்பட்டதோ
அங்கு நெருங்கி இருப்பதால் அவற்றுடன் சேர்த்து அவ்விடத்திலேயே பயன்படுத் தக்கவை என்று பூர்வ பஷத்தை
நிரசிக்கிறார்

அப்படி அல்ல
உத்கீத உபாசனை அனைத்திலும் செய்யப்பட வேண்டும்
சர்வசாகா ப்ரத்யய நியாயத்தால் -ஒரே யாகம் கூறப்படுவதால் அனைத்துக்கும் பொருந்தும்

அங்காவ பத்தா து -கர்மாவின் அங்கமான உத்கீத விஷயமான உபாஸனைகள்
ந சாகாஸூ -படிக்கப்பட்ட சாகைகளுக்கு மட்டும் உரியவை அல்ல
ஆனால்
ப்ரதிவேதம்-ஸர்வ சாகைகளிலும் உத்கீதாதிகளோடு சம்பந்திக்கின்றன
ஹி-ஏன் எனில் -உத்கீதம் உபாஸீத என்று உத்கீத ஜாதீயம் என்ற வேறுபாடு இன்மையால்
ஸர்வ உத்கீத ஸம்பந்தம் உபாஸனத்துக்கு ப்ராப்தமாதலின் -என்பதாம் –

———————————————————————————————–

405-மந்த்ராதிவத் வா அவிரோத-3-3-54-

வா -உம்மைத் தொகை
ஆதி என்ற பதம் -ஜாதி குணம் எண்ணிக்கை ஒற்றுமை வரிசை பொருள் செயல்
மந்த்ரம் ஜாதி போன்றவை ஒவ் ஒரு சாகையிலே படிக்கப் பட்ட போதிலும்
அதன் அங்கியான யாகம் அனைத்து சாகைகளிலும் ஒன்றே என்பதால்
அனைத்து சாகைகளிலும் அங்கமாக ஏற்றுக் கொள்ளப் படுகின்றன

ஸ்வர பேதம் இருந்தாலும் முரண் பாடு இல்லை என்றதாயிற்று-

———————————————————————————————

அதிகரணம் -23-பூமஜ்யாயஸ் த்வாதி கரணம் –

கீழே உத்கீதம் பற்றிய பிரஸ்தாபம் வந்தது
அதில் ஸமாவயவமான உத்கீதாதிகளில் ஸமஸ்த உபாஸனமும் ஸ்ருதியில் ப்ரஸித்தம்
இதே போல் வைச்வானர வித்யையிலும் ஸமஸ்த உபஸ்தானம் செய்யத் தக்கதா
வ்யஸ்த உபஸ்தானம் செய்யத்தக்கதா
அன்றி இரண்டு உபாஸனமா
என்ற சங்கையில் சங்கதி –

சாந்தோக்யத்தில் கூறப்பட்ட பூரணமான வைச்வாநர உபாசமே சரியானது என்று நிரூபிக்கப் படுகிறது –

406-பூம்ந க்ரதுவத் ஜ்யாயஸ்த்வம் ததா ஹி தர்சயதி-3-3-55-

கேகேய மன்னன் -ஒவ்பமன்யவர் முதலான ஆறு பேர் இடம் கேட்க
தனித்தனியே ஆறையும் உபாசிப்பதாகச் சொன்னார்கள்

வைச்வா நரன் பரம புருஷன் மூன்று உலகங்களை சரீரமாக கொண்டு உள்ளான்
1-ஸ்வர்க்கம் தலை
2-ஸூர்யன் கண்கள்
3-வாயு -பிராணன்
4-ஆகாசம் சரீரத்தின் நடுப்பகுதி
5-நீர் மூத்திரப்பை
6-பூமி பாதங்கள்-

இவ்வாறு அவயவங்களைக் கூறி ஆங்காங்கு வ்யஸ்த உபாஸனமும் அதன் பலனும் கூறப்பட்டன
பின்பு –யஸ்த் வேத மேவம் ப்ராதேச மாத்ரம் அபி விமானம் ஆத்மாநாம் உபஸ்தே-என்று
முன் கூறிய வ்யஸ்த உபாசனமே சமுதாயமாக முடிக்கப் பட்டது

அவயவங்களின் உபாசனையே கூறப் படுகிறது
என்பர் ஒரு பூர்வ பஷி

மற்ற ஒருவர் கூறுகிறார்
பூரணமான உபாசனமே கைக் கொள்ளத் தக்கது
ஏன் எனில்
சர்வேஷு பூதேஷு சர்வேஷு ஆத்ம ஸூ சாந் நமத்தி என்று
வ்யஸ்த உபாசன பலத்தைக் காட்டிலும் வேறு பலத்தை விதிக்கையால்
வ்யஸ்தம் ஸமஸ்தம் என்று இரண்டு உபாஸனங்களும் அனுஷ்ட்டிக்கத் தக்கது
என்று இரண்டாவது பக்ஷம்

இரண்டு பூர்வ பக்ஷங்களையும் நிரஸிக்கிறார் –

பூம்ந -விபுலமான ஸமஸ்த உபாஸனத்திலும் என்பதாம்
ஜ்யாயஸ்த்வம் -ஜ்யேஷ்டத்வம் -ப்ரமாணிகத்வம்-என்பதாம்
ஏன் எனில்
வ்யஸ்த ஸமஸ்த உபாசன வாக்யங்களுக்கும் ஏக வாக்யத்வம் தோன்றுவதால்
க்ரதுவத் -வைச்வாநரம் த்வாதச கபாலம் நிர்வபேத் புத்ரே ஜாதே -என்று
விதிக்கப்பட்ட க்ரதுவின் ஏக தேசங்களான அஷ்ட கபாலங்களே
அஷ்டா கபாலோ பவதி -என்று அனுவாதம் செய்யப்படுகிறது போலே

இங்கும்
ஏகதேச உபாசனங்களும் அவற்றின் பலன்களும்
ஸமஸ்த உபாசன ஏக தேச அனுவாத ரூபம்
ஆகையால் ஸ்திதி ரூபங்கள் என்பதாம்
ததா ஹி தர்சயதி–ஸமஸ்த உபாசனத்திற்கு ஜ்யாயஸ்வத்தை ஸ்ருதியே சொல்கிறது

இதனால் தெரிவதாவது
நீ அத்யயனம் செய்யும் வைச்வாநரம் என்னும் ஆத்மாவைச் சொல்லும் என்று கேட்டதும்
அவயவங்களை சொல்லி ஸமஸ்தமாக முடிப்பதால்
ஒரே வைச்வாநர ஆத்மாவுக்கே த்ரை லோக்ய சரீரக பர ப்ரஹ்மத்வம் இருப்பதால்
அதன் உபாசனத்தை விதித்துப் பலமாக சர்வேஷு ஆத்ம ஸூ அன்ன மத்தி என்றும்
தத்யதே ஷீக தூலம் அஃனவ் ப்ரோதம் ப்ரதூயேத ஏவம் ஹாஸ்ய ஸர்வே பாப்மாந ப்ரதூயந்தே -என்றும்
சர்வ ஆத்மாக்களுக்கும் போக்யமான பரமாத்ம அனுபவம் என்றும்
விரோதியான ஸர்வ பாபங்களைக் கடத்தல் என்றும் கூறியதாகத் தோன்றுகிறது

ஆகவே ஒரே வாக்யமாகையாலே சமஸ்தத்தையே உபாசனம் செய்ய வேண்டும்

ஆனால் வ்யஸ்தாதிகளில் உபாசனமோ
ஸ்வர்க்க லோகாதிகளுக்குத் தலை முதலிய அவயவங்கள் என்று காட்ட
ஏக தேசத்தில் பலனைக் கூறியதும் அனுவாதத்தில் ஸ்துதியே என்பது கருத்து –

—————————————————————————————————

அதிகரணம் -24-சப்தாதி பேதாதி கரணம் –

கீழே வித்யா விசேஷ சிந்தனம்
இதில் எல்லா வித்யைகளையும் பற்றிய பொதுவான சிந்தனை
அல்லது
வைச்வானர வித்யையில் ஸமஸ்த உபாசனமே சிறந்தது என்று
வ்யஸ்த உபாசன மூலமாக வைச்வானர வித்யையின் நாநா த்வம் நிரசிக்கப் பட்டது

இப்போது ஸத் வித்யா தஹர வித்யா உப கோசல வித்யைகளுக்கு
நாநாத்வம் என்பது பிரித்துக் காட்டும் ப்ரமாணங்களைக் கொண்டு விளக்கப்படுகிறது
என்று சங்கதி

சத் விதியை தஹர விதியை போன்ற ப்ரஹ்ம வித்யைகள் ஒன்றுக்கு ஓன்று வேறுபட்டவை
என்று நிரூபிக்கப் படுகிறது –

407-நா நா சப்தாதி பேதாத் —3-3-56-

விதி வாக்யமும் ரூபமும் வேறு பட்டு உள்ளதால் வித்யைகள்  வேறு பட்டவையே ஆகும்
சத்வித்யை
பூம வித்யை
தஹர வித்யை
உபகோசல வித்யை
சாண்டில்ய வித்யை
வைச்வா நர வித்யை
ஆனந்த மய வித்யை
அஷர வித்யை
நா நா சப்தாதி வேறு பட்டவையே

சப்தங்கள் -ஆதி சப்தத்தால் அப்யாசம் சங்க்யா சம்ஜ்ஞை குணம் பிரகரணாந்தரம்

உபாசனம் ஒரே ப்ரஹ்மம் பற்றி என்றாலும்
வெவ்வேறே குணங்களை பற்றி உபாசனம் என்பதால்
வித்யைகள் வேறுபட்டனவே ஆகும்-

உபாஸ்ய ப்ரஹ்மமும்
பலமும்
ஏகமாகையாலே
வேத உபாஸீத சொற்கள் பர்யாயங்கள்
ஒரே வித்யையே என்பது பூர்வ பக்ஷம்

நா நா சப்தாதி பேதாத்–வேத்யமான ப்ரஹ்மம் ஒன்றே யானாலும்
ஸப்தங்கள் வெவ்வேறாய் இருப்பதால் வெவ்வேறானவையே
ஸப்த பேதம் வித்யா பேதத்திற்கு காரணம்

வேதனம் த்யானம் உபாசனம் போல் இவை பர்யாய ஸப்தங்கள் அன்றோ என்னில்
முக்கிய ஸப்தம் கௌண ஸப்தம் என்ற பேதத்தாலும்
வித்யா பேதம் சித்திக்கலாம் என்பதே ஸ்ரீ பாஷ்யகாரர் திரு உள்ளம்

முன் காண்டத்தில் சப்தாந்தர அதிகரணத்தில் –
ஸப்தம் ரூபம் பலம் நாமம் இந்த நான்கும் கர்ம பேதகங்கள் என்று கூறப்பட்டது
அநித்யம் அஸூகம் லோகம் இமம் ப்ராப்ய பஜஸ்வமாம் என்றும்

மாம் ஏகம் சரணம் வ்ரஜ என்றும்
சொல்லும் ந்யாஸ உபாசன விதி ஸப்த பேதத்தாலும்
அபஹத பாப்மத்வாதிகள் உபாசன ரூபங்கள்
நிரபேஷ உபாயத்வம்
ந்யாஸ வித்யா ரூபம்
ஆகவே ரூப பேதம் உள்ளது

இரண்டிற்கும் முக்தி ரூப பலம் பொதுவானாலும் –
விளம்ப அவிளம்ப -பேதங்களால் பல பேதம் இருப்பதாலும்
ப்ராரப்த பங்கத்தாலும் அது இல்லாமையாலும்
ஸத் வித்யா தஹர வித்யா ந்யாஸ வித்யா என்கிற நாம பேதத்தாலும்
ந்யாஸ உபாசன வித்யைகள் வெவ்வேறானவை

ஆக இப்படி கௌணம் இன்றி முக்கியமான ஸப்த பேதத்தால்
வித்யா பேதத்தை ஸ்ரீ பாஷ்யகாரர் திரு உள்ளம் பற்றியதாக
ஆச்சார்யர்கள் காட்டுவார்கள் –

——————————————————————————————-

அதிகரணம் -25-விகல்பாதிகரணம் –

கீழே ப்ரஹ்ம ப்ராப்தியை பலமாகக் கொண்ட வித்யாதிகள் வெவ்வேறானவை

என்று ஸ்தாபிக்கப் பட்டது

இங்கு
அந்த வித்யைகள் அனைத்தும் சேர்ந்து முக்திக்கு ஹேதுவா
தனித்தனி வித்யையே ஹேதுவா
என்று விசாரிக்கப் படுகிறது –

ப்ரஹ்ம வித்யைகளில் ஏதேனும் ஒன்றைப் பற்றினாலும் பலன் கிட்டுமே –

408-விகல்போ அவிசிஷ்ட பலத்வாத்-3-3-57-

ஜ்யோதிஷ்டோமம் தார்ச பூர்ண மாசம் போன்றவை ஸ்வர்க்கத்தில்
அதிகம் காலம் இருக்கும் பொருட்டு
அடுத்து அடுத்து அனுஷ்டிக்கும் யாகங்கள்

இது போலே அதிக ப்ரஹ்ம அனுபவத்துக்கு
பல ப்ரஹ்ம வித்யைகள் உபாசிக்க வேண்டும்
என்பர் பூர்வ பஷி

அப்படி அல்ல
அவிசிஷ்ட பலத்வாத் -பலனில் வேறுபாடு இல்லாமையாலே

விகல்ப ஏவ -ஏதேனும் ஒன்றைச் செய்தாலே போதும் -சமுச்சயம் இல்லை
அவிசிஷ்ட பலத்வாத்–கால ஸ்வரூபங்களால் அளவிட முடியாத ப்ரஹ்ம அனுபவமே
எல்லா பர வித்யைகளுக்கும் பலமாகையால் என்பதாம்

ஒரே வித்யையில் இத்தகைய பலம் ப்ராப்யமாகையாலே சமுச்சயத்தில் பலம் இல்லை என்பதாம்
ஆகவே ஸர்வ வித்யைகளுக்கும் விகல்பமே –

தைத்ரிய ஆனந்த வல்லி-
2-1-ப்ரஹ்ம விதைப் நோதி பரம் -என்றும்

2-8-ச ஏகோ ப்ரஹ்மணா ஆனந்த ச்ரோத்ரி யஸ்ய சாகா மஹா தஸ்ய –

முண்டக -3-1-3-யதா பஸ்ய பச்யதே ருக்ம வர்ணம் கர்த்தாரம் ஈசம் புருஷம் ப்ரஹ்ம யோநிம்
ததா வித்வான் புண்ய பாபே விதூய நிரஞ்சன பரமம் சாம்யம் உபைதி -என்றும்
ஆனந்த ரூபமாக ப்ரஹ்மம் பலன் என்பதால்
ஒரே வித்யை அனுஷ்டித்தால் போதுமே

————————————————————————————–

409-காம்யாஸ்து யதா காமம் சமுச்சீ யேரன் நவா பூர்வே ஹேத்வ பாவாத்–3-3-58-

காம்ய பலன்கள் இஷ்டப்படி சேர்த்தோ தனியாகவோ அனுஷ்டிக்கலாம் –
ப்ரஹ்ம வித்யை போலே அல்லாமல் அளவுள்ள பலன்களை அளிப்பதால்-

காம்யாஸ் து -ப்ரஹ்ம பிராப்தி தவிர்ந்த பலன்களைக் கொண்ட காம்ய வித்யைகளோ என்னில்
யதா காமம் -விருப்பப் படி
சமுச்சீ யேரன் நவா -அதிக பலத்தை விரும்பி சமுச்சயம் ஏற்படலாம்
இல்லை எனில் தனித்தனியே செய்தால் போதும் என்பதாம்
ஏன் எனில்
பூர்வே ஹேத்வ பாவாத்-பலத்துக்கு அபரிமிதத்வம் என்ற முன் கூறிய பலம் இல்லாமையால் என்றபடி –

———————————————————————————————

அதிகரணம் -26-யதாச்ரய பாவ அதிகரணம் –

கீழே காம்ய வித்யைகளுக்கு இச்சைக்கு ஏற்றபடி விகல்பமும் சமுச்சயமும் கூறப்பட்டன
அப்படியே
உத்கீதாதி வித்யையும் விருப்பப்படி ஏற்கத் தக்கதா இல்லையா என்ற சம்சயம் –

அல்லது
முன் எல்லா வித்யைகளுக்கும் சமமான பலம் சொல்லப்பட்டது
அந்தப் பிரசக்தியால் இங்கு தந் நிர்தாரண அதிகரணத்தில் கூறிய உத் கீத வித்யையின் பலம்
வீர்யவத்தரம் என்பதை பல காரணங்களால் ஆக்ஷேபித்து
அக் காரணங்களை நிரஸனம் செய்து அந்தப் பலத்தை உறுதிப் படுத்துகிறார்

இதனால் உத்கீத விஷயமாக இரண்டு அதிகரணங்களில்
கூறியது கூறல் என்கிற தோஷம் இல்லை –

உத்கீத உபாசனம் அனைத்து யாகங்களிலும் அங்கம் அல்ல என்று
சிலர் மீண்டும் ஆஷேபிக்க சமாதானம் கூறுகிறது

410-அங்கேஷூ யதாச்ரய பாவ–3-3-59-

யாகத்தின் ஆச்ரயமான உத்கீதம் போன்று உத்கீத உபாசனங்கள் யாகத்தின் அங்கமே ஆகும்
எப்போதும் கொள்ள வேண்டும்
சாந்தோக்யம் -1-1-10-தே நோ பௌ குருதே –
அதனைக் கொண்டு இருவரும் செய்ய வேண்டும் –

ஓம் இதி உத்கீதம் உபாஸீதே -அனைத்து யாகங்களிலும் கொள்ள வேண்டும்-

கர்ம அங்கங்களை ஆஸ்ரயித்த உத்கீதாதி உபாஸனங்களுக்கு கோதோஹனாதிகள் போலே
முன் கூறிய உபாதான நியமம் கூடுமோ கூடாதோ என்று சம்சயம்
கூடாது என்று பூர்வ பக்ஷம்

உத்கீத உபாஸீத என்ற விதி வாக்யத்தில் வேறு பலம் சொல்லப் படாததால்
க்ரதுவின் அங்கமான உத்கீத விஷயகம் இது வாதலின்
அதை மூலமாகக் கொண்டு உத்கீத வித்யைக்கு க்ரத்வ அங்கத்வத்தில் விரோதம் இல்லை யாதலின்
விதி வாக்கியத்தில் க்ரதுவின் அங்கத்வம் அறியப்பட்டது போலே
யதேவ வித்யயா கரோதி -முதலியவை அர்த்தவாத வாக்யம் என்று ஏற்க வேண்டும் என்ற
பூர்வ பக்ஷம் நான்கு ஸூத்ரங்களால் கூறப்படுகிறது –

அங்கேஷூ -உத்கீதாதிகளில் ஆஸ்ரயித்து வருகிற உபாசனங்களுக்கு
யதாச்ரய பாவ-உத்கீதாதிகளைப் போலே அங்க பாவம் கூடும்
கோதோஹனாதிகளுக்கு தம் வாக்கியங்களில் பலம் கூறப்பட்டு இருப்பது போலே
உத்கீதம் உபாஸீத என்ற வாக்யத்தில் பலம் கூறப்படாததால் அங்க பாவம் விருத்தம் என்று கருத்து –

—————————————————————————————————

411-சிஷ்டேச்ச-3-3-60-

விதிக்கப் பட்டதாலும் அங்கமே ஆகும் –

உத்கீதம் உபாஸீத-சிஷ்டி ஸாசனம்

சிஷ்டேச்ச-சிஷ்டி -ஸாஸனம் -விதி
உத்கீதம் உபாஸீத என்ற விதியாலும்
கோதோ ஹனேந பசு காமஸ்ய ப்ரணயேத் என்னும் விதி வாக்யத்தில் வேறு அதிகாரம் தெரிவது போல்
இங்கு தெரியாததாலும் உபாசனத்துக்கு உத்கீத அங்க பாவமே விதேயம் என்று தெரிகிறது
ஆகவே உபாதான நியமம் உண்டு

—————————————————————————————————-

412- சாம ஹாராத் –3-3-61-

சமா தானம் செய்து கொள்ளலாம் என்றும் கூறுவதால்
சாந்தோக்யம் -1-5-5-ஹோத்ரு ஷத நாத் ஹை வாபி துருக்கீதம் அநு சமா ஹரதி –என்று
தோஷங்கள் அனைத்தையும் ஹோத்ரி தள்ளுகிறான் –

அதாவது
உத்காதாவால் ஓதப்படும் உத்கீதத்தின் அவயவமான பிரணவமும்
ஹோதாவால் கூறப்படும் ருக்குகளின் இறுதியில் உள்ள ஓங்காரமும்
ஒன்றே என்று உத்காதாவும் ஹோதாவும் என்ன வேண்டும்

இதை அனைத்திலும் விதியாகக் கொள்ள வேண்டும் என்றதாயிற்று-

ஹோத்ரு ஷத நாத் ஹை வாபி துருக்கீதம் அநு சமா ஹரதி-என்று
சமா ஹாரத்தால் உபாஸனத்துக்கு உபாதான நியமம் தோன்றுகிறது

சமாஹாரமானது-சமாதானம்
துருத்கீதம் -வேதனம் அற்ற உத்கீதம்

அது தோஷ யுக்தம் ஆகையால் ஹோத்ருஷதநத்தாலே அந்த தோஷத்துக்கு சமாதானம்
சொல்லும் போது வேதனம் அவஸ்யம் என்று பலிப்பதால் உபாதான நியமம் ஸித்திக்கிறது –

—————————————————————————————————

413-குண சாதாரணய் ஸ்ருதே ச-3-3-62-

பிரணவத்தின் குணமான உபாசனத்தின் தன்மைக்கு இதன் தன்மை பொதுவாக உள்ளது
என்று கூறப்படுவதால் –

சாந்தோக்யம் -1-1-9-தே நேயம் த்ரயீ வித்யா வர்த்ததே ஓம் இதி ஆச்ராவயதி ஓம் இதி சம்சதி ஓம் இதி உத்காயதி -என்றபடி
உத்கீத உபாசனம் அனைத்து கர்மங்களுக்கும் அங்கம் ஆகிறது-

ப்ரணவ குணமாகக் கூறப்பட்ட உபாசனத்திற்கு சாதாரணத் தன்மை கூறப்பட்டுள்ளதால் என்றபடி
அதாவது
தே நேயம் த்ரயீ வித்யா வர்த்ததே ஓம் இதி ஆச்ராவயதி ஓம் இதி சம்சதி ஓம் இதி உத்காயதி என்று
தேன -என்ற தத் ஸப்தத்தால் ப்ராக்ருதமான உபாஸனத்துடன் கூடிய ப்ரவணமே குறிக்கப் படுவதால்
இம்மூன்று இடங்களிலும் பிரணவம் தொடர்வதால் அத்துடன் வழங்கும் உபாசனத்திற்கும் தொடர்ச்சி உண்டு
ஆகவே கர்ம அங்கமாக உபாஸனோ பாதாந நியமம் ஸித்தம் என்ற பூர்வ பக்ஷத்தை நிரஸிக்கிறார் –

——————————————————————————————————

இப்படி கூறப்பட்ட-3-3-59-முதல் -3-3-62- ஸூத்ரங்களில் –
பூர்வ பஷ வாதங்களுக்கு பதில் மேலே

415-ந வா தத்வ ஹ பாவ ஸ்ருதே –3-3-63-

ந வா -உபாசனத்துக்கு உபாதான நியமம் கிடையாது
தத்வ ஹ பாவ ஸ்ருதே-க்ரத் வங்க பாவத்தில் ஸ்ருதி இல்லாமையால் -அங்க பாவம் இருந்தால் ஸஹ பாவம் உண்டு என்பதாம் –

ஆகவே யதேவ வித்யயா கரோதி ததேவ வீர்யவத்தரம் -என்று த்ருதீய விபக்தி ஸ்ருதியால்
வீர்யவத்வ ஸாதகமான வித்யைக்கு க்ரத் வங்கமாக விநியோகம் கூடாததாலின் அங்க பாவம் சொல்லப்பட வில்லை எனப்பட்டது

எங்கு நேராகப் பல சாதனத்வம் கூறப்படுகிறது அங்கு பல சாதனத்வம் முதலில் தோன்றுவதால்
க்ரத்வங்கம் என்று விநியோகம் கூடாது யுஎன்பது கருத்து

இங்கு பூர்வபக்ஷ நிரசனம் இதுவே
உத்கீதம் உபாஸீத என்னும் இடத்தில் கர்ம ஸ்ருதி உபாசனத்திற்கு உத்கீத விஷயகத்வத்தைக் காட்டுமே தவிர
அதன் அங்கத்வத்தைப் போதிப்பது அல்ல
மூன்றாவது அவசியம் செய்ய வேண்டிய உபாஸனம் இல்லா விட்டால் துருத்கீதத்வத்தையும்
அதன் சமாதானத்தையும் சொல்லும் ஸ்ருதி கர்மாங்க பாவத்தில் காரணம் என்பது தவறு

ஏன் எனில்
ஒரு அதிகாரி வித்யா பலமான வீர்யவத்தரத்வம் முதலியவற்றை விரும்பி வித்யையை உபக்ரமித்து உள்ளபடி
அனுஷ்ட்டிக்கா விட்டால் அவனைப் பற்றி ஹோத்ருஷ தனத்தால் துருத்கீதத்வ பரிஹாரம் சொல்லப்பட்டதே தவிர
கர்மாங்க பூதமான உத்கீதத்தை அனுஷ்ட்டிக்கும் ஸர்வாதிகரின் விஷயமாகச் சொல்லப்படவில்லை

நான்காவது ஸூத்ரத்துக்கு ஸமாதானம் உபாசனத்துடன் கூடிய ப்ரணவத்திற்கு மூன்று வேதங்களையும்
அனுவர்த்திப்பதாக த்துதி இருப்பினும் உபாஸனத்தில் கர்மாங்கத்வம் இல்லை
ஏன் எனில்
உபாசனத்திற்கும் வீர்யவத்தரத்வாதி பல சாதனத்வம் இருப்பதால் புருஷார்த்தவம் நிச்சயிக்கப் பட்டுள்ளதாதலின்
அது வெறும் துதி மட்டுமே என்று கருத்து –

உத் கீதத்துக்கு யாகத்தின் அங்கம் கூறப்படாத காரணத்தால் உத்கீத உபாசனம் அங்கம் எனபது சரியல்ல –

—————————————————————————–

416-தர்ச நாத் ச-3-3-64-

சுருதி ருத்விக்குகளுக்கு ரக்ஷணத்தைக் கூறுகிறது
ஆகையால் யஜமான ரக்ஷணம் என்பது அவன் செய்யும் க்ரது பலத்தைப் பிரதிபந்திக்காமல் இருப்பது
அது ப்ரஹ்ம ஞானத்தால் ஏற்படுகிறது ஆதலின் உத்காத் ருக்களுக்கு வேதாதா நியதம் ஸித்தித்தது
இதுவும் உத்கீத உபாசனத்திற்கு கர்ம அங்கத்துவம் இல்லாத விஷயத்தில் தான் ஸித்திக்கும்
ஆதலால் உபாதான நியமம் ஸித்தம்

அடுத்த பாதத்தில் ப்ரஹ்ம வித்ய அங்கங்களை சொல்கிறபடியால் தத் ப்ரசங்க அர்த்தமாக
இப்பாதத்தில் கதாசை அதிகரணத்தில் அங்க அங்கத்துவ சிந்தனை செய்தபடியால்
முன் உத்கீத ப்ரகரணத்தில் சொல்லாதது பற்றி
இடம் இல்லாத இடத்தில் -அஸ்தான பாதித்தவம் என்ற தோஷம் இல்லையாம் –

இப்படி அங்கம் அல்ல என்று ஸ்ருதிகள் கூறுவதால்
சாந்தோக்யம் -4-17-10-ஏவம் வித ஹைவ ப்ரஹ்மா யஜ்ஞம் யஜமானம் சர்வாம்ச்சார்த் விஜோ அபி ரஷதி
என்று சொல்வதால்
உத்கீத உபாசனம் எப்போதும் யாகங்களின் அங்கம் அல்ல என்றதாயிற்று-

—————–

இப் பாத அதிகரண விஷயங்கள்

1-சர்வ வேதாந்த ப்ரத்யய அதிகரணம்–வித்யை ஐக்யம்
2-அந்யதாத்வ அதிகரணம்–இரு விதப்பிரிவு
3-சர்வாபேத அதிகரணம்–பிராண வித்யை ஐக்யம்
4-ஆனந்தாத் யதிகரணம் –சர்வ வித்யைகளிலும் ஸ்வரூபம் போலே ஆனந்தாதிகள் ஸ்வரூப நிரூபக தர்மத்திற்கு தொடர்ச்சி
5-கார்யாக்யா நாதிகரணம்-ப்ராணனுக்கு வஸ்திரம் என்று அப்பை ஜலத்தை -த்ருஷ்டி செய்தல்
6-சமா நாதிகரணம்-சாண்டில்ய வித்யை ஐக்யம்
7-சம்பந்தாதி கரணம்-அஹஸ் -அஹம் ஸப்தங்கள் பிரித்து நிலை பெறுதல்
8-சம்ப்ரு யதிகரணம்-சம்ப்ருத்யாதி குணங்களுக்கு ஸ்தான நியமம்
9-புருஷ வித்யாதிகரணம்–புருஷ வித்யா பேதம்
10-வேதாத்யதிகரணம்–சன்னோ மித்ர மந்திரங்களுக்கு பரஸ்பர சம்பந்தம்
11-ஹான்நயதி கரணம்-புண்ய பாப ஹான உபாதானங்களுக்குப் பரஸ்பர சம்பந்தம்
12-சாம்பராய திகரணம்-ஹான உபாதானங்களுக்கு ப்ராப்த காலங்கள்
13-அநிய மாதிகரணம்-அர்ச்சிராதி கதிகள் எல்லா வித்யைகட்க்கும் பொதுவாதல்
14-அஷரத்யதி கரணம்-எல்லா வித்யைகளிலும் அஸ்தூலத்வாதி குணச் சேர்க்கை
15-அந்தரத்வாதிகரணம்-பல சிஷ்யர்கள் கேட்ட அர்த்தங்களுக்குப் பரஸ்பரம் வ்யதிஹாரம்
16-காமாத் யதிகரணம் -தஹர வித்யைகளுக்கு ஐக்யம்
17-தந் நிர்த்தாரணா நியமாதி கரணம்-உத்கீத உபாசனத்தின் குண பல விதி
18-பிரதாணாதிகரணம்-அபஹத பாப்மத்வாதி உபாசனங்களில் எங்கும் குணியின் ஆவ்ருத்தி
19-லிங்க பூயஸ்த்வ அதிகரணம்- நிகில பர வித்யைகளிலும் அறியத் தக்கது
20-பூர்வ விகல்பாதி கரணம்-மனச் சித் ப்ரப்ருதிகளான அக்னிகள் வித்யா மயங்களாயும் வித்யாமய க்ரத்வ அனு ப்ரவேசிகளாயும் உள்ளமை –
21-சரீரே பாவதி கரணம்-சுத்தனான ஷேத்ரஞ்ஞன் சிந்த நீயன்
22-அங்காவபத்தா திகரணம்-க்ரிய அங்க பூத ஸர்வ உத் கீதங்களிலும் உபாசன விதி
23-பூமஜ்யாயஸ் த்வாதி கரணம்-வைச்வானர வித்யையில் ஸமஸ்த உபாஸனமே கார்யம்
24-சப்தாதி பேதாதி கரணம்-வித்யைகளின் நாநாத்வம் -பேதம்
25-விகல்பாதிகரணம்-மோஷார்த்த வித்யைகளில் விகல்பம்
26-யதாச்ரய பாவ அதிகரணம்–கீழ்ச் சொன்ன உத்கீத உபாசனத்திற்கு சொன்ன அநீயதையை யுக்திகளால் உறுதிப்படுத்தி ஸ்தாபித்தல்

என்று மூன்று ஸ்லோகன்களால் ஸ்வாமி தேசிகன் காட்டி அருளுகிறார் –

————————————————————————————————————————————————-————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஸ்ருதி பிரகாசர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ போதாயனர் -வ்ருத்தி காரர் – ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பாதராயணர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பாஷ்யார்த்த தீபிகை — மூன்றாம் அத்யாயம் — இரண்டாம் பாதம் —

November 26, 2021

ஸ்ரீ பாஷ்யம் -மங்கள ஸ்லோகம்

அகில புவன ஜன்ம ஸ்தேம பங்காதி லீலே
விநத விவித பூத வ்ராத ரக்ஷைக தீஷே
ஸ்ருதி சிரஸி விதீப்தே ப்ருஹ்மணி ஸ்ரீ நிவாஸே
பவது மம பரஸ்மின் சேமுஷீ பக்தி ரூபா –

பாராசார்ய வச ஸூதாம் உபநிஷத் துக்தாப்தி மத்யோத் த்ருதாம்
சம்சாராக்னி விதீபன வ்யபகாத ப்ராணாத்மா சஞ்சீவி நீம்
பூர்வாச்சார்ய ஸூரஷிதாம் பஹூ மதி வ்யாகாத தூரஸ்தி தாம்
ஆ நீதாம் து நிஷாஷரை ஸூ மனஸோ பௌமா பிபந்து அந்வஹம்–

—————————————————————-

மூன்றாம் அத்யாயம்-சாதனா அத்யாயம்–55 அதிகரணங்கள்–181 ஸூத்ரங்கள்

இரண்டாம் பாதம் –உபய லிங்க பாதம் -8 அதிகரணங்கள்-40 ஸூத்ரங்கள்
குற்றம் குறை அற்றவன் -அளவற்ற திருக் கல்யாண குணங்களை கொண்டவன்
தாழ்வு அற்றவன் -என்கிறார் இதில்-

இந்தப் பாதமே ஆரம்பிப்பது வீண் என்று
சங்கித்து
விடை தருகிறார் ஸ்வாமி
கீழே இரண்டு அத்யாயங்களாலே ப்ரஹ்மம் தனக்கு உரிய ஸ்வ பாவங்களுடன் விளக்கப் பட்டு இருக்க
இந்த சாதன அத்தியாயத்தின் நடுவிலே அதே ப்ரஹ்மம் உபய லிங்க பாதத்தில் மறுபடி இழுத்து விசாரிக்கப் படுவான்
என் எனில்
அறிய வேண்டும் ப்ரஹ்மத்தின் குண பேதத்தால் வித்யா பேதம் சொல்லுகையாலும்
ப்ரஹ்மமே ஸித்த உபாயம் ஆகையாலும்
அதன் மேல் மிக்க ஆசை ஆர்த்தி வேண்டும் என்பதற்காக இவ்விடம் ப்ரஹ்மம் பற்றிப் பேசுவதில் விரோதம் இல்லை என்பதாம்

அடுத்தபடி இப் பாதத்தின் நடுவில் ஜீவனின் ஸ்வப்னாதி அவஸ்தைகளை பற்றிப் பேசுவது எவ்வாறு பொருந்தும்
எனில்
ஸ்வப்ன பதார்த்தங்கள் யாவும் பரமாத்ம அதீனம் ஆகையாலும்
ஜீவனுக்கு முக்தி தசையிலும்-மிக்க பர வசமானவன் தான் நான் என்னும் ஞானம் உதிக்கைக்காகவும்
வைராக்ய பாதத்தில் கூறாமல் இங்கு சொல்வதில் விரோதம் இல்லை

இதற்கு முன் கர்மத்துக்கு ஏற்றவாறு போக்குவரத்து பிறப்பு முதலியவை சேர்வதால்
விழித்து இருக்கும் ஜீவனுக்குத் துக்கம் உண்டு எனச் சொல்லப் பட்டது
இப்போது ஸ்வப்ன அவஸ்தை விசாரிக்கப் படுகிறது என்று சங்கதி –

——————————————————————————-

முதல் அதிகரணம் -சந்த்யாதி கரணம்– 6 ஸூத்ரங்கள்-
கனவில் காணும் பொருள்கள் அனைத்தும் பரமாத்வால் படைக்கப் படுகின்றன -எனபது நிரூபிக்கப் பட்டுள்ளது-

இரண்டாம் அதிகரணம் -தத்பாவாதிகரணம் -2 ஸூத்ரங்கள்-
ஜீவன் உறங்கும் இடங்கள் எவை எவை என்று நிரூபிக்கப் படுகிறது-

மூன்றாவது அதிகரணம் -கர்மாநு ஸ்ம்ருதி சப்த வித்யதிகரணம் — 1 ஸூத்ரம்–
உறங்கிய ஜீவனே மீண்டும் விளித்து எழுகிறான் -வேறே ஜீவன் இல்லை என்று நிரூபிக்கிறது –

நான்காவது அதிகரணம் -முக்தாதிகரணம் – 1 ஸூத்ரம்-
விழிப்பு கனவு ஆழ்ந்த உறக்கம் மூன்றை விட மாறுபட்ட மூர்ச்சை நிலை-

ஐந்தாவது அதிகரணம் – உபய லிங்க அதிகரணம் -15 ஸூத்ரங்கள்–
அந்த்ர்யாமியாக இருந்தும் உடலின் தோஷங்கள் தட்டாதவன் பரப் ப்ரஹ்மம்-

ஆறாவது அதிகரணம் -அஹி குண்டலாதிகரணம் -4 ஸூத்ரங்கள்–
ப்ரஹ்மத்தின் ரூபம் அசேதன பொருள்களான மூர்த்தமும் -விக்ரகமும் -பிரபஞ்சமே ப்ரஹ்மத்துக்கு சரீரம் என்றும் கூறப்பட்டன –
அசேதனங்களின் தோஷங்கள் ப்ரஹ்மத்துக்கு ஏற்படாது என்று நிரூபிக்கப் படுகிறது –

ஏழாவது அதிகரணம் -பராதிகரணம் -7 ஸூத்ரங்கள்–
ப்ரஹ்மத்தை விட உயர்ந்த வஸ்து வேறு இல்லை என்றும் இவனை
தவிர அடைய வேண்டிய வஸ்து வேறு இல்லை என்றும் நிரூபிக்கப் படுகிறது –

எட்டாவது அதிகரணம்-பலாதிகரணம் – 4 ஸூத்ரங்கள்-
கர்மங்களின் அனைத்து பலன்களையும் பரமாத்மாவே அளிக்கிறான் என்று நிரூபிக்கப் படுகிறது

————————————————————————————————————————————-

முதல் அதிகரணம் -சந்த்யாதி கரணம்
கனவில் காணும் பொருள்கள் அனைத்தும் பரமாத்வால் படைக்கப் படுகின்றன –
என்பது நிரூபிக்கப் பட்டுள்ளது-

ஸ்வப்னம் பற்றி ஸ்ருதி கூறுகிறது
கனவில் ரதங்களோ -குதிரைகளோ -நல்ல வீதிகளோ இல்லை
அப்போது இவற்றை நிர்மிக்க தடாகம் முதலியவற்றையும் படைக்கிறானே -அவனே கர்த்தா என்று கூறிய இடத்தில்
கனவில் பொருள்களைப் படைத்தவன் ஜீவனா பரமாத்மாவான என்று சம்சயம்
ஜீவன் தான்
ஏன் எனில்
கனவு காணும் ஜீவன் -ப்ரகரணத்தில் -அவ்விடம் -இருப்பதால்
ஸ -என்று குறிப்பிடத் தக்கவனாய் இருப்பதாலும்
பிரஜாபதி வாக்கியத்தில் ஸத்ய காம ஸத்ய ஸங்கல்ப என்று
ஸத்ய ஸங்கல்பத்வம் சொல்லப்படுவதால்
என்று பூர்வ பக்ஷம்
இந்த பூர்வ பக்ஷம் மேல் வரும் இரண்டு ஸூத்ரங்களால் விளக்கப் படுகிறது –

312-சந்த்யே சிருஷ்டி ஆஹஹி–3-2-1-

கனவு நிலையில் உள்ளதைப் பற்றி
ப்ருஹத் உபநிஷத் -4-3-10-ந தத்ர ரதா ந ரதயோகா ந பந்தா நோ பவந்தி அத ரதான்
ரதயோகான் பத –ஸ்ருஜதே ந தத்ர ஆனந்தா முத பிரமுதோ பவந்தி அத ஆனந்தான் முத
ப்ரமுத ஸ்ருஜதே ந தத்ர வேசாந்தா புஷ்கரிண்ய ஸ்ரவந்த்யோ பவந்தி அத வேசாந்தா
புஷ்கரிண்ய ஸ்ரவந்த்ய ஸ்ருஜதே ச ஹி கர்த்தா-

சந்த்யே -ஸ்வப்னத்தில்
சிருஷ்டி -ரதாதிகளின் ஸ்ருஷ்டி யானது
ஆஹஹி-ஸ்வப்னம் காணும் ஜீவனால் செய்யப்படுவதாக வேதம் கூறுகிறது அன்றோ
ஸஹி கர்த்தா என்று ஜீவனையே கர்த்தாவாக வேதம் பேசுகிறது என்பதாம் –

சந்த்யம் -கனவில் உள்ள இடம்
ச ஹி கர்த்தா -அவனே செய்கிறான் –
படைப்பவன் ஜீவனா பரமாத்மாவா
பூர்வ பஷி ஜீவன் என்பார்-

—————————————————————————————————————-

313-நிர்மாதாரம் ச ஏகே புத்ராய ச–3-2-2-

ஏகே-சில வேதாந்திகள்
நிர்மாதாரம் ச -ஜீவாத்மாவையே ஸ்வப்ன பொருள்களைப் படைப்பவன் என்கிறார்கள்
அது எப்படி என்றால்
புத்ராய ச-கட உபநிஷத் –5-8–ய ஏஷூ சுப்தேஷூ ஜாகர்த்தி காமம் காமம் புருஷோ நிர்மிமாண-என்ற இடத்தில்
காம ஸப்தத்தாலே புத்ர பவ்த்ராதிகளும் சொல்லப் படுகின்றனர்
அவர்களை ஜீவன் படைப்பதனால் என்று கருத்து

கட உபநிஷத் –5-8–ய ஏஷூ சுப்தேஷூ ஜாகர்த்தி காமம் காமம் புருஷோ நிர்மிமாண-என்கிறது
விரும்பியவற்றை தூங்கும்பொழுது தானே படைக்கின்றான் –
பூர்வ பஷி

விரும்பியவற்றை -புத்ராதிகளையும் –
கட உபநிஷத் -1-5-சர்வான் காமான் சந்தத ப்ரார்த்தயஸ்வ
கட உபநிஷத்-1-23- -சதாயுஷு புத்திர பௌத்ரான் வ்ருணீஷ்வ-என்கிறது

இந்த பூர்வ பக்ஷத்தைக் கண்டிக்கிறார் –
மேலே சித்தாந்த பதில்

——————————————————————————————————————

314-மாயா மாத்ரம் து கார்த்ஸ்யேன அநபி வ்யக்த ஸ்வரூபத்வாத்–3-2-3-

து -பூர்வ பஷ வாதங்களை மறுக்கிறது –
ஸ்வப்னத்தில் காணும் ரதம் முதலியவை ஜீவனால் படைக்கப் பட்டவை அல்ல
மாயா -ஆச்சர்யம் -மித்யை அல்ல-
மாயா மாத்ரம் -ஸ்வப்னங்கள் காண்பவனால் மட்டும் அனுபவிக்கத் தக்கவையாய் -மற்றோருக்குப் பயன் படாததவையாய்
அந்தக் காலத்திலேயே அழிவதாயும் ஆச்சர்ய ரூபமாகவும் உள்ளன
இவை ஜீவனால் படைக்கக் கூடாதவை
ஏன் எனில்
ஜீவனுக்கு ஸத்ய ஸங்கல்பத்வமும் ஸம்ஸார தசையில் முற்றும் வெளிப்படாத நிலையில் நிலையில் இருப்பதால்
ஸங்கல்ப மாத்ரத்தால் படைப்பது என்பது பொருந்தாது –

காமம் காமம் புருஷ நிர்மி மாண -ஸ்ருதி -அப் புருஷனையே ஸ்ருஷ்டி கர்த்தா என்கிறது
தொடக்கத்தில் இவர் அனைவரும் உறங்குகையில் விழித்து இருக்கிறான் என்றும்
முடிவில் இவை அனைத்தும் அவன் இடத்திலே ஆஸ்ரயித்து இருக்கின்றன
அவனை யாரும் மீற முடியாது -என்றும்
பரம புருஷனுக்கே உரிய தர்மங்கள் சொல்லப் பட்டு இருப்பதால்
ஸஹி கர்த்தா என்ற தத் சப்தமும் பிரகரணத்தே பொருந்த -புருஷோத்தமனையே புலப்படுத்துகிறது –
காமம் காமம் -என்று ஸங்கல்பித்து ஸங்கல்பித்து என்றபடி –

ஜனகஸ்ய குலே ஜாதே தேவ மாயேவ நிர்மிதா -பால -2-27-
ந பவந்தி -கனவில் காண்பவை அவன் ஒருவன் மட்டுமே காணுமாறு பரம் பொருள் படைக்கிறான் என்கிறது –
இந்த ஆச்சர்யமே மாயா-சத்ய சங்கல்பன் அன்றோ –

கட உபநிஷத் -5-8-7- ஏஷூ சுப்தேஷூ ஜாகர்தி –
இவை தூங்கும் பொழுது அவன் விழித்து உள்ளான்

மேலும் அதே வரியில் –
தத் ஏவ சுக்ரம் தத் ப்ரஹ்ம தத் ஏவ அம்ருதம் உஸ்யதே தஸ்மின் லோகாஸ்ரித சர்வே தது நான்யேதி கச்சன -என்று
அந்த ப்ரஹ்மமே ஒளி அமிர்தம் அனைத்தும் ஒடுங்கி உள்ளன –
அவனைக் கடந்து ஏதும் இல்லை என்கிறது

ப்ருஹத் உபநிஷத் -4-3-10-வேசாந்தா புஷ்கரிண்ய ஸ்ரவந்த்ய ஸ்ருஜதே ஸ ஹி கர்த்தா என்று
பரம புருஷனைப் பற்றிக் கூறியது

ஜீவனின் ஸத்ய ஸங்கல்பத்வம் சம்சார தசையில் ஏன் புலப்படவில்லை
என்பதற்கு விடை அளிக்கிறார் மேலே

———————————————————————————————————————–

அபஹத பாப்மத்வம் ஜீவனுக்கு சம்சாரத்தில் இல்லாத காரணம்

315-பராபித்யாநாத் து திரோஹிதம் ததோ ஹி அஸ்ய பந்த விபர்யயௌ –3-2-4-
பரம புருஷனின் சங்கல்பம் காரணமாகவே மறைக்கப் பட்டு சம்சார பந்தம் ஏற்படுகின்றது

பராபித்யா நாத் -பரமாத்மாவின் சங்கல்பத்தாலேயே
து -பூர்வ பஷம் நிரசனம்
அஸ்ய -இந்த ஜீவனின் ஸ்வா பாவிகமான ரூபம்
திரோஹிதம்-மறைந்து உள்ளது
ததோ ஹி -அந்த ஸங்கல்பத்தாலேயே
அஸ்ய பந்த விபர்யயௌ –இந்த ஜீவனுக்கு ஸம்ஸாரமும் மோக்ஷமும் உண்டாகின்றன

தைத்ரியம் -2-7-1-யதா ஹி ஏவ ஏஷ ஏ தஸ்மின் அத்ருஷ்ய அநாத்ம்யே அநிருக்தே அநிலயநே
அபயம் பிரதிஷ்டாம் விந்ததே அத ச
அபயம் கத பவதி யதா ஹி ஏவ ஏஷ ஏதஸ்மின் உதரம் அந்தரம் குருதே அத தஸ்ய பயம் பவதி -என்றும்
ஏஷ ஹி ஏவ ஆனந்தயாதி -என்றும்

2-8-1-பீஷாச்மாத் வாத பவதே -என்றும் கூறும்-

கோஹ்யே வாந் யாத்க ப்ராண்யாத்-யதேஷ ஆகாஸ ஆனந்தோ நஸ்யாத்
ஏஷஹ் ஏவ ஆனந்தயாதி பரஞ்சோதி ரூப சம்பத்ய ஸ்வேந ரூபேண அபி நிஷ்பத்யதே -முதலிய ஸ்ருதிகளால்
பரமாத்மாவின் மூலமே ஜீவனின் ஸூக துக்கங்களை பறை சாற்றுகின்றன

ஸத்ய சங்கல்பம் மறையும் காரணத்தைக் கூறுகிறார் –

—————————————————————————————————————————

316-தேக யோகாத்வா ச அபி –3-2-5-

ஜீவனின் ஸ்வரூப மறைவு உடல் சேர்க்கையின் பொழுது உண்டாகிறது –
ஸூஷ்மம் நிறைந்த பிரக்ருதியின் தொடர்பால் –
ஆக ஜீவன் படைக்க சக்தன் அல்லன்

வா -விகல்பம் என்னும் பொருளில் வந்தது
ச அபி –-சங்கல்பத்தின் மறைவும்
தேக யோகாத்-தேவ மனுஷ்யாதி -அசித் -சம்பந்தத்தாலும்
பிரளய காலத்தில் நாம ரூப விபாகங்கள் அற்ற ஸூஷ்ம தசையில் உள்ள அசித்துடன் சம்பந்தத்தாலும் உண்டாகிறது
ஆகவே மறைந்த ஸங்கல்பம் உள்ள ஜீவன் ஸ்வப்ன பதார்த்தங்களை படைப்பவன் அல்லன்

கட உபநிஷத் -5-8-தஸ்மின் லோகாஸ்ரித சர்வே தது நாத்யேதி கச்சன -என்பது
பரம் பொருளுக்கே பொருந்தும்-

—————————————————————————————————————————

317-ஸூ கச்ச ஹி ஸ்ருதே ஆச ஷதே ச தத்வித —3-2-6-

கனவுகள் நற்பலன் தீய பலன்களை உணர்த்தும் ஸ்ருதிகளும் அப்படியே சொல்லும்
சாந்தோக்யம் -5-2-8-யதா கர்ம ஸூ காம்யேஷூ ஸ்த்ரியம் ச்வப்நேஷூ பச்யதி ஸ்ம்ருத்திம் தத்ர ஜாநீயாத் தஸ்மின் ஸ்வப்ன நிதர்சனே —

ஸூ கச்ச ஹி ஸ்ருதே –எக்காரணத்தால் ஸ்வப்னங்கள் எதிர்கால ஸூக துக்க ஸூசகங்கள் -என்று ஸ்ருதியில் கூறப்படுகிறது
தத்வித —ஸ்வப்ன அத்யாயம் பற்றி அறிந்தவர்கள்
ஆச ஷதே ச –ஸூ சகம் என்று கூறினார்களோ -அதனாலே ஸ்வப்ன பதார்த்தங்கள் ஜீவனால் படைக்கப் படுபவை அல்ல
அவை ஜீவனுக்கு வசப்பட்டு இருந்தால் நல்லதையே படைப்பான் -தீயவற்றைப் படைக்க மாட்டான்
காம்யமான கர்மங்கள் நிறைவேற வேண்டுபவன் கனவில் அழகிய ஸ்த்ரீயைக் கண்டால் ஐயமும்
கருத்த பல்லும் கருத்த நிறமும் உள்ள மனிதனைக் கண்டால் தோல்வியும் அடைகிறான் என்று சுருதி பலவற்றைக் காட்டுகிறது –

எனவே கனவும் சர்வேஸ்வரன் நியமனம் என்றதாயிற்று-

—————————————————————————————————————————–

இரண்டாம் அதிகரணம் -தத்பாவாதிகரணம் -ஜீவன் உறங்கும் இடங்கள் எவை எவை என்று நிரூபிக்கப் படுகிறது-

கீழ் ஸ்வப்ன நிரூபனம் -இதில் ஸூஷ்ப்தி தசை பற்றி விசாரம்

318-தத் பாவ நாடீஷூ தத் ஸ்ருதே ஆத்மநி ச –3-2-7-

ஆழ்ந்த உறக்க நிலை -கனவுகள் அற்ற -ஸூ ஷுப்தி நிலை -நாடிகளில் நுழைந்து –

சாந்தோக்யம் -8-6-3-யத்ர ஏதத் ஸூ ப்த சமஸ்த சம்ப்ரசந்தம ஸ்வப்னம் ந விஜா நாதி ஆ ஸூ ததா நாடீஷூ ஸூ ப்தோ பவதி -என்றும்

ப்ருஹத் உபநிஷத் -2-1-19-அத யதா ஸூ ஷூப்தோ பவதி யதா ந கஸ்ய ச ந வேத ஹிதா நாம நாட்யோ
த்வாசப்ததி சஹஸ்ராணி ஹ்ருதயாத் புரீததம் அபி பிரதிஷ்டந்தே தாபி பிரத்யவஸ்ருப்ய புரீதாதி சேத -என்று
ஹிதா நாடிகள் என்று கூறப்படும் 74000 நாடிகள் இதயத்தில் நின்றும் புறப்பட்டு
புரீதத் என்னும் இடத்தை அடைந்து ஜீவன் இவைகளால் சூழப் பட்டு உறங்குகின்றான்

சாந்தோக்யம் -6-8-1- யத்ர ஏதத் புருஷ ஸ்வபுதி நாம சதா நாம்ய ததா சம்பன்னோ பவதி -என்று
ஆழ்ந்த உறக்கத்தில் ஜீவன் பரமாத்மா உடன் சேர்ந்து உள்ளான் -என்கிறது –

ஆக ஜீவன் உறங்கும் இடங்கள் நாடிகள் புரீதத் ப்ரஹ்மம் மூன்றும் கூறப் பட்டன
மூன்றும் வெவ்வேற இடங்கள் இல்லை
மாடியில் கட்டில் மேல் -மெத்தை மேல் உறங்குகிறான் போலே –
நாடி மாடி /புரீதத் -கட்டில் /பரமாத்மா மெத்தை -போலே –

மூன்றும் விகல்பம் என்பது பூர்வ பக்ஷம்
இம்மூன்றும் ஒன்றோடு ஓன்று அபேக்ஷை இன்றியே ஸ்தானமாக சுருதியில் சொல்லப்பட்டு இருப்பதால்
இவை தனித்தனி ஸ்தானம் என்பர்
இத்தை நிரஸிக்கிறார் இதில்
ப்ரஹ்மமே ஸாஷாத்தாக படுக்கை ஸ்தானத்தில் இருப்பதால் மூன்றும் சேர்ந்து ஸ்தானம் ஆகும்
விகல்பம் பொருந்தாது என்பதாம் –

————————————————————————————————————————————–

319-அத பிரபோத அஸ்மாத் —3-2-8-

அஸ்மாத் —இந்த ப்ரஹ்மத்தின் இடம் இருந்தே
பிரபோத -விழித்து எழுவதாக ஸ்ருதி
அத -இக்காரணத்தாலேயே பொருந்துகிறது

ஸ்ருதி -ஸத் -ப்ரஹ்மத்தின் இடம் இருந்து வருபவன் அங்கு இருந்து வந்ததை உணர வில்லை என்கிறது –

ப்ரஹ்மத்திடம் உறங்குவதால் அங்கே இருந்தே விழித்து எழுதல் எனபது பொருந்தும்
சாந்தோக்யம் -6-10-2-சத ஆகம்ய ந விது சதா ஆகச்சாமஹே-என்றபடி
ப்ரஹ்மத்திடம் உறங்கி விட்டு வந்த போதிலும் தாங்கள் அவ்விதம் செய்வதை ஜீவன் அறிவதில்லை

————————————————————————————————————————————–

மூன்றாவது அதிகரணம் -கர்மாநுஸ்ம்ருதி சப்த வித்யதிகரணம் –
உறங்கிய ஜீவனே மீண்டும் விளித்து எழுகிறான் -வேறே ஜீவன் இல்லை என்று நிரூபிக்கிறது

ஸூஷுப்தனான ஜீவனே விழித்ததும் எழுந்து கொள்கிறானா
அல்லது வேறு யாராவதா என்று சம்சயம்
ஸூஷுப்தனாயும் –எல்லா உபாதைகளில் இருந்து விடுபட்டவனாயும் -ப்ரஹ்ம சம்பத்தி உள்ளவனுமான
ஜீவன் முக்தன் போன்றவனாதலால்
பழைய கர்ம சம்பந்தம் இல்லாமல் உறங்கியவனை விட்டு வேறான ஜீவனே எழுந்து கொள்கிறான் என்று பூர்வ பக்ஷம் –

சித்தாந்தம்
உறங்கினவனுக்கு கர்மாவை அழிக்க வல்ல ப்ரஹ்ம ஞானம் இல்லாமையாலும்
தனது கர்ம பலன் தன்னாலே அனுபவிக்கப்பட வேண்டியதாலும்
தானே உறங்கி எழுந்தேன் என்ற நினைவாலும்
முன்பு இருந்த படியே புலியாகவோ சிங்கமோ எப்படி இருந்ததோ அதே போலவே ஆகின்றன என்ற ஸப்தத்தாலும்
முக்தி சாதனத்தை அனுஷ்ட்டிக்க விதிக்கும் ஸாஸ்த்ர நியமனம் வீணாகி விடுமே என்பதாலும் –
உறங்கினவனே எழுந்து கொள்கிறான் என்று சித்தாந்தம் –

320-ச ஏவது கர்மானு ஸம்ருதி சப்த விதிப்ய-3-2-9-

கர்மம்– ஞாபகம் –வேத வரி –விதிகள் –ஆகிய நான்கு காரணங்களாலும் அதே ஜீவனே விழித்து எழுகிறான்
உண்மையான ஞானம் வரும் வரை கர்மங்களின் பலன்களை அனுபவித்தே தீர வேண்டுமே

சாந்தோக்யம் -6-10-2- த இஹ வ்யாகரோ வா சிம்ஹோ வா வ்ருகோ வா வரஹா வா கீடோ வா பதங்கோ வா
தம்சோ வா மசகோ வா யத்யத் பவந்தி ததா பவந்தி -என்று
புலி சிங்கம் ஓநாய் பன்றி புழு பறவை ஈ கொசு -அதே உருவில் எழுந்து வருகிறான்

சாந்தோக்யம் -8-11-1-தத் யத்ர ஏதத் ஸூ ஷூப்த –நாஹகலு அயம் ஏவம் சம்ப்ரதி ஆத்மானம் ஜா நாதி அயம் அஹம் அஸ்மி இதி நோ ஏவ
இமானி பூதானி வி நாசமேவ அபீத பவதி நாஹம் அத்ர போக்யம் பச்யாமி -என்றும்

முக்தனைப் பற்றி –
சாந்தோக்யம் -8-12-3-பரம் ஜ்யோதிரூப சம்பத்ய ஸ்வேன ரூபேண அபி நிஷ்பத்யதே ச தத்ர பர்யேதி ஐ ஷத் கிரீடன் ரமமாண- என்றும்

7-25-2-ஸ ஸ்வ ராட் பவதி தஸ்ய சர்வேஷூ லோகேஷூ காம சாரோ பவதி -என்றும்

7-26-2-சர்வம் ஹ பச்ய பஸ்யதி சர்வம் ஆப் நோதி சர்வச -என்றும் கூறும் –

—————————————————————————————————————————————

நான்காவது அதிகரணம் -முக்தாதிகரணம் –
விழிப்பு கனவு ஆழ்ந்த உறக்கம் மூன்றை விட மாறுபட்ட மூர்ச்சை நிலை-

இதுவரை ஜாக்ரத் -ஸ்வப்ன -ஸூஷுப்தி -தசைகளை விசாரித்து –
ஸூஷுப்திக்கு சமமான மூர்ச்சா நிலை விசாரிக்கப்படுகிறது
முதல் இரண்டிலும் ஞானம் உள்ள தசைகள்
பின் இரண்டிலும் ஞான லோப தசை

321- முக்தே அர்த்த சம்பதி பரி சேஷாத்–3-2-10-

மூர்ச்சையும் மரணமும் ஒன்றா -வெவ்வேறா -சங்கை
இந்திரிய வியாபாரங்கள் இல்லை என்பதால்
இரண்டும் ஒன்றே பூர்வ பக்ஷம்
மயக்கம் மூர்ச்சை மற்ற மூன்று நிலைகளுக்குள் சேர்ந்ததே என்பர்
மரணத்தின் பாதி நிலையே -ஞானம் இல்லாததால் விழிப்போ கனவோ இல்லை

அத்தைக் கண்டிக்கிறார்

முக்தே -மூர்ச்சை அடைந்தவனுடைய நிலை
அர்த்த சம்பதி -அரை மரணம் அடைந்த நிலையே
பரி சேஷாத்–ப்ராணாதி சர்வ வியாபாரங்களும் இல்லாமையால் ஸ்வாபமும் இல்லை –
ஜாக்ர அவஸ்தையும் இல்லை -மீண்டும் எழுந்து வருவதால் மரண நிலையம் இல்லை
தோற்றத்தின் வேறுபாட்டால் பிராணன் ஸூஷ்மமாய் இருப்பது தெரிவித்தாலும் மூர்ச்சை அரை மரண நிலையே –

ஆழ்ந்த உறக்கம் இறந்த நிலையும் இல்லை -மரணத்தின் பாதி நிலையே பிராணன் இருப்பதால் என்றவாறு

இந்த நான்கு அதிகரணங்களும் ஒரு பேடிகை
இதில் ஜீவனுக்கு நான்கு நிலைகளிலும் உள்ள துக்கங்கள் காட்டப்படுகின்றன

இனி ப்ரஹ்மம் ஜாக்ராதிகள் ஆகிய எந்த நிலையிலும் தோஷம் அற்றது என்றும்
தானே நிர்த் தோஷமான கல்யாண குணம் மிக்கது என்றும்
நான்கு அதிகரணங்களாலும் விளக்குகிறார் –

—————————————————————————————————————————————–

ஐந்தாவது அதிகரணம் – உபய லிங்க அதிகரணம் –
அந்த்ர்யாமியாக இருந்தும் உடலின் தோஷங்கள் தட்டாதவன் பரப் ப்ரஹ்மம்-

322-ந ஸ்தாநத அபி பரஸ்ய உபய லிங்கம் சர்வத்ர ஹி–3-2-11-

அகில ஹேய ப்ரத்ய நீயகத்வ -சமஸ்த கல்யாண ஏக குணங்கள் கொண்டவன் –
ப்ரஹ்மத்தை அடையும் பொருட்டு சம்சார விரக்தி பிறந்த பின்பு அவனது உபய லிங்கத்வம் விளக்குகிறார் –
மிகுந்த வைராக்யம் சித்திக்கவே மரண அவஸ்தை நிரூபணம் கீழ்
இனி பரம புருஷார்த்த ஆர்வம் பெருக்க உபய லிங்கத்வம் இங்கே ஸ்தாபிக்கப்படுகிறது

ப்ரஹ்ம ஸூத்ரம் -1-2-8-சம்போக பிராப்தி இதி சேத் ந வைசேஷ்யாத்–என்று
அந்தராத்மாவாக இருப்பது உபாசகன் தன்னை அடைய -சுக துக்கங்களை அனுபவிக்க இல்லை –

ப்ரஹ்ம ஸூத்ரம் -1-3-6-ஸ்தித்யத நாப்யாம்-ச -இருப்பதாலும் உண்பதாலும் -ஒரு மரம் இரண்டு பறவைகள் -முண்டக உபநிஷத்

ப்ரஹ்ம ஸூத்ரம் -3-2-5–தேஹ யோகாத்வாத் -தேக சம்பந்தம் இருப்பதாலும் –

ப்ருஹத் உபநிஷத் -3-7-3- ய ப்ருதிவ்யாம் திஷ்டன் -பூமியில் இருப்பதாலும்

ப்ருஹத் உபநிஷத் -3-7-22–ய ஆத்மநி திஷ்டன் -ஆத்மாவில் இருப்பதாலும்

ப்ருஹத் உபநிஷத்-3-7-18- -ய சஷூஷூ திஷ்டன்

ப்ருஹத் உபநிஷத்-3-7-23- -ய ரேதஸ் திஷ்டன் -ரேதசில் இருப்பதாலும் –
தோஷங்கள் தட்டும் என்பர் பூர்வ பஷி —

ஜீவனைப் போலே அவனுடைய அந்தர்யாமியான பர ப்ரஹ்மத்துக்கும் ஜாக்ரத் தசையில்
ஸ்தானம் முதலியவற்றால் தோஷங்கள் ஸம்பவிக்குமா ஸம்பவிக்காதா என்று சம்ஸயம்

சர்வ அவஸ்தைகளிலும் ஸ்திதி சொல்லப்படுவதால் சர்வ தோஷங்களும் சம்பவிக்கும்
என்று பூர்வ பக்ஷம்
அதை நிராகரிக்கிறார் –

ஸ்தாநத அபி –பிருத்வீ முதலியவற்றில் அந்தர்யாமியாய் இருந்தாலும்
பரஸ்ய-ப்ரஹ்மத்துக்கு
ந –முன் கூறிய தோஷங்கள் வருவது இல்லை
ஸ்தான ப்ரயுக்தமான தோஷம் ஜீவனுக்கு வருவது போலே ப்ரஹ்மத்துக்கு இல்லை
சர்வத்ரஹி உபய லிங்கம்–ஸ்ருதி ஸ்ம்ருத்யாதிகள் எங்கும்
நிகில தோஷங்கள் அற்றவன் என்றும்
கல்யாண குணங்களுக்கு உறைவிடமானவன் என்றும்
உபய லிங்கமாக பர ப்ரஹ்மம் பேசப்படுகிறது
ஆதலின் தோஷம் சம்பவிக்காது –

அபஹத பாப்மா இத்யாதி -யஸ் ஸர்வஞ்ஞ ஸர்வவித் போன்ற சுருதிகள்
யோ மாம் அஜம் அநாதிஞ்ச பர பராணம் -போன்ற ஸ்ம்ருதிகளும்
மேலும் பலவும் உண்டே –

சாந்தோக்யம் -8-1-5-அபஹத பாப்மா விஜரோ விம்ருத்யு விசோக விஜிகத்ச அபிபாச சத்ய காம சத்ய சங்கல்ப-என்றும்
ஸ்ரீ விஷ்ணு புராணம் -6-5-84/85–
சமஸ்த கல்யாண குணாத் மகோ சௌ ஸ்வ சக்தி லேசோத்ருத பூத வர்க்க
தேஜோ பல ஐஸ்வர்ய மஹாவபோத ஸூ வீர்ய சக்த்யாதி குணைக ராசி
பர பராணாம் சகலா ந யத்ர க்லேசாதய சந்தி பராவரே சே-என்றும்

ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-22-51-சமஸ்த ஹேய ரஹிதம் விஷ்ணு வாக்யம் பரமபதம் –
தோஷம் அற்றவன் என்றதாயிற்று

————————————————————————————————————————————-

323-பேதாத் இதி சேத் ந ப்ரத்யேகம் அதத் வசநாத் –3-1-12-

பேதாத் இதி சேத் –இயற்கையில் பாபம் அற்ற ஜீவனுக்கு சரீர சம்பந்தத்தால் ஏற்படும் அவஸ்தா பேதத்தால் தோஷங்கள் ஏற்படுவது போல்
பரமாத்மாவுக்கும் பிருத்வீ முதலிய சரீர சம்பந்த அவஸ்தா பேதத்தால் தோஷங்கள் சம்பவிக்கலாமே என்னில்
ந -வாராது
ப்ரத்யேகம் அதத் வசநாத் –ஒவ்வொரு பர்யாயத்திலும் ஏஷ ஆத்மா அந்தர்யம் அம்ருத –என்று
தோஷம் அற்றவன் என்று சொல்வதால்
சரீர சம்பந்தம் மட்டும் தோஷத்துக்கு காரணம் ஆகாது
ஜீவனுக்கோ -பராபித்யா னுத்து திரோ ஹிதம் என்றபடி பரமாத்மாவின் ஸங்கல்பத்தாலே கர்மாதீனமான
ஞான சங்கோசத்துக்குக் காரணமான சரீர சம்பந்தம் ஏற்படுவதால் தோஷங்கள் உண்டாகின்றன என்பதாகும் –

சரீர தொடர்பு கூறும் இடங்களிலும் பரமாத்மா தோஷம் அற்றவன் –
ப்ருஹத் உபநிஷத் –
3-7-3-ய ப்ருதிவ்யான் திஷ்டன் –
3-7-23- ய ஆத்மா நி திஷ்டன் -இடங்களிலும்
ச தே ஆத்மா அந்தர்யாமி அம்ருத -தோஷம் அற்று தானாகவே -கர்மம் அடியாக அன்று -உள்ளான்

ப்ரஹ்ம ஸூத்ரம் -3-2-4-பராபித்யா நாத் து திரோஹிதம் -ஸூ த்ரத்தில் நிரூபிக்கக் கண்டோம்

அசேதனப் பொருள்களும் சில கால கட்டத்தில் அவனது சங்கல்பத்தின் படி இன்பம் பயக்கும் படியைக் காண்கிறோம்

ஸ்ரீ விஷ்ணு புராணம் -2-6-46-48-
நரக ஸ்வர்க்க சம்ஜ்ஞே வை பாப புனே த்விஜோத்தம -வஸ்து ஏகம் ஏவ துக்காய ஸூ காய ஈர்ஷ்யா கமாய ச –
கோபாய ச யத தஸ்மாத் வஸ்து வஸ்தவாமகம் குத-தத் ஏவ ப்ரீதயே பூத்வா புன துக்காய ஜாயதே –
தத் ஏவ கோபாய யத் பிரசாதாய ச ஜாயதே தஸ்மாத் துக்காத்மகம் நாஸ்தி ந ச கிஞ்சித் ஸூ காத்மகம் –என்றபடி

ப்ரஹ்மத்துக்கு உடல் தொடர்பு லீலைகளுக்கு மட்டுமே இருக்கும்-

————————————————————————————————————————————

324-அபி ச ஏவம் ஏகே –3-1-13-

முண்டக உபநிஷத் -3-1-1-
த்வா ஸ்பர்ணா சயுஜா சகாய சமா நம் வ்ருஷம் பரிஷஸ்வ ஜாதே தயரன்யே பிப்பலம் ச்வாத்வத்தி
அனச்னன் அந்ய அபிசாகசீதி -என்றும்

சாந்தோக்யம் –
அநேன ஜீவேன ஆத்மநா அநு ப்ரவச்ய நாம ரூபே வ்யாகரவாணி –என்றும் உண்டே

அபி ச –மேலும்
ஏகே -சில வேதாந்திகள்
ஏவம்-ஒரே சரீரத்தில் உள்ள ஜீவனுக்கும் பரமாத்மாவுக்கும் தோஷத்தையும் அது இல்லாமையையும் கூறி
நியமனம் ஐஸ்வர்யம் பிரகாஸம் -போன்றவற்றை ப்ரஹ்மத்துக்கு வெளிப்படையாக ஸ்தாபிக்கின்றனர்
கர்மத்தை அனுபவியாமை ப்ரஹ்மத்துக்கு மட்டும் எவ்வாறு கூடும் என்ற ஆஷேபம் எழ
அதற்கு விடை அருளுகிறார்

கர்ம வசப்படுவானோ பரம் பொருளும் என்றால்
ரூபம் அற்றவன் என்கிறது அடுத்த ஸூத்ரத்தில்-

———————————————————————————————————————————–

325-அரூபவதேவ ஹி தத் ப்ரதா நத்வாத் —3-2-14-

தத் அரூபவதேவ ஹி –ஜீவனைப் போலே கர்ம வச்யத்வம் இல்லாமையால்
ஸமஸ்த அந்தர்யாமியாக இருந்தாலும் அரூபத்வமே இவனுக்கு
ஏன் எனில்
ப்ரதா நத்வாத்–நிர்வாஹனானமையால் -இவனே ப்ரதானன்
இவன் ஸ்வ தந்த்ரன் அன்றோ -நாம ரூப காரியங்களின் துக்காதிகளின் ஸ்பர்சம் இல்லாதவன் என்றதாயிற்று –

கர்மம் அடியாக தேவாதி மனுஷ்ய தேகம் எடுப்பது போலே ப்ரஹ்மத்துக்கு இல்லையே –
உள்ளே புகுந்தாலும் நாம ரூபங்களால் பாதிக்கப் படுவதில்லை
சந்தோக்யம் -8-14-1-ஆகாசோ வை நாம ரூபாயோ நிர்வஹிதா தே யதந்த்ரா தத் ப்ரஹ்மம்-

அந்தர்யாமியாக இருந்தும் தோஷம் தட்டாமல் உள்ளான்-

ப்ரஹ்மத்துக்கு எவ்வாறு விதி வஸத்வம் நீங்குகிறது என்னில்
விதி இரண்டு விதம்
அறியாததை அறிவிப்பது
ஒன்றில் ஈடுபடாதவனை ஈடுபடுத்துவது
இவனோ ஸர்வஞ்ஞன் -ஸர்வ நியந்தா
எனவே அஞ்ஞானமோ பராதீனத் தன்மையும் இல்லாத ப்ரஹ்மத்திடம் விதிகள் சக்தியை இழந்து
அவனது விசேஷணமான ஜீவன் இடத்தில் பயன் உள்ளவை ஆகின்றன
ஆகவே ப்ரஹ்மம் உபய லிங்கமே என்றதாயிற்று –

இனி ஸத்யம் ஞானம் -ஸ்ருதியில் விசேஷம் அற்ற -ப்ரகாஸ மாத்ர -ப்ரஹ்மமே சொல்வதால்
உபய லிங்கம் எப்படிக் கூறலாம் என்ற சங்கைக்கு பதில் அருளுகிறார் –

சத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்மம் -தைத்ரியம் -1-1-ஒளி ரூபம் என்றும் –

ப்ருஹத் உபநிஷத் –நேதி நேதி-இல்லை இல்லை -என்பதால்

கல்யாண குணங்கள் உள்ளவை என்பது எவ்வாறு என்றால்

————————————————————————————————————————————-

326–பிரகாசவத் ச அவையர்த்தாத் —3-2-15-

சத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்மம் என்ற சுருதி பொய்யாகக் கூடாது என்பதால்
ஒளி மயமானது ப்ரஹ்மம் எனபது போலே
யஸ் ஸர்வஞ்ஞ ஸர்வ வித் இத்யாதி வாக்கியங்களும் ச பலமாக வேண்டுமே

சத்ய சங்கல்பன் ஜகத் காரணன் அந்தர்யாமி -அகில ஹேய ப்ரத்யநீகத்வம் அனந்த கல்யாண குண சாகரம்
என்ற ஸ்ருதி வாக்யங்களையும் ஏற்க வேண்டும்

—————————————————————————————————————————————

327-ஆஹ ச தந்மாத்ரம்–3-2-16–

சத்யம் ஞானம் ஆனந்தம் ப்ரஹ்மம் என்று ஒளி மயம் என்றது மற்றையவற்றை மறுக்க வில்லை –
நேதி நேதி -ப்ருஹத் உபநிஷத் -4-2-4- எதனால் என்பதை மேலே பார்ப்போம்

————————————————————————————————————————-

328-தர்சயதி ச அத அபி ஸ்மர்யதே-3-2-17-

தர்சயதி ச அத அபி ஸ்மர்யதே-அதோ என்று முற்றிலும் –
முழு வேதாந்தமும் நிரஸ்த நிகில தோஷனாய்
கல்யாண குணகரனாய் உள்ள உபய லக்ஷணங்களையும் காட்டுகிறது –

உபய லிங்கத்வம் அநேக ஸ்ருதி ஸ்ம்ருதிகளும் சொல்லுமே –

ஸ்வேதாஸ்வதார உபநிஷத் –
6-7-தம் ஈஸ்வரானாம் பரமம் மகேஸ்வரம் தம் தைவதாநாம் பரமம் ச தைவதம் -என்றும்

6-9-ச காரணம் கரணாதி பாதிபோ ந சாஸ்ய கச்சித் ஜனிதா ந சாதிப -என்றும்

6-8-ந தஸ்ய கார்யம் கரணம் ச வித்யதே ந தத் சமச் சாப்யதிகச்ச த்ருஸ்யதே
பராஸ்ய சக்திர் விவிதைவ ச்ரூயதே ஸ்வாபாவிகீ ஞான பல க்ரியா ச -என்றும்

முண்டக உபநிஷத் -1-1-9-ய சர்வஜ்ஞ சர்வவித் யஸ்ய ஞான மயம் தப -என்றும்

தைத்ரிய ஆனந்த வல்லி–2-8-1-பீஷாஸ்மாத்வாத பவதே பீஷோ தேதி சூர்ய -என்றும்

தைத்ரிய ஆனந்த வல்லி-
2-8-ச ஏகோ ப்ரஹ்மண ஆனந்த -என்றும்

2-9-யதோ வாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய மனசா சஹ ஆனந்தம் ப்ரஹ்மணோ வித்வான் ந பிபேதி குதஸ்சந-என்றும்

ஸ்வேதாஸ்வதார உபநிஷத் -6-19-நிஷ்கலம் நிஷ்க்ரியம் சாந்தம் நிரவத்யம் நிரஞ்ஜனம் என்றும்

ஸ்ரீ கீதையில் பல இடங்களில் – –
10-3-யோ மாம் அஜம் அநாதிம் ச வேத்தி லோக மகேஸ்வரம் -என்றும் –

10-42-விஷ்டப்யாஹமிதம் க்ருத்ஸ் நம் ஏகாம் சேந ஸ்திதோ ஜகத் -என்றும்

9-10-மயா அத்ய ஷேண பிரகிருதி ஸூயதே ச சராசரம் ஹேது நா அநேன கௌந்தேய ஜகத்தி பரிவர்த்ததே -என்றும்

15-17-உத்தம புருஷ த்வன்ய பரமாத் மேத்யுதா ஹ்ருத யோ லோகத்ரயமா விஸ்ய பிபர்த்யவ்யய ஈஸ்வர-என்றும்

ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-1-46/47–
சர்வஜ்ஞ சர்வக்ருத் சர்வ சக்தி ஞான பலர்த்திமான் அன்யூனஸ் சாபி அவ்ருத்திச்ச ஸ்வாதிநோ அநாதிமான் வசீ
க்லமதந்த்ரீ பயக்ரோத காமாதி பிரசம்யூத நிரவத்ய பர ப்ராப்தே நிரதிஷ்டோ அஷர க்ரம-என்றும்

ப்ரஹ்மம் அந்தர்யாமியாக இருந்தும்
உபய லிங்கங்கள் நிறைந்தவன் என்பதை பல இடங்களிலும் சொல்லிற்றே –

———————————————————————————————————————————–

329-அத ஏவ ச உபமா சூரியகாதிவத்–3-2-18-

ஆகவே நீரில் -கண்ணாடியில் -பிரதிபலிக்கும் சூர்யன் போன்றவை
பர ப்ரஹ்மத்துக்கு உபமானமாக சொல்லப் பட்டன

ப்ருத்வீ முதலிய ஸ்தானங்களில் ஏற்படும் தோஷம் உபய லிங்க விஸிஷ்ட ப்ரஹ்மத்திடம்
ஏற்படாத காரணத்தாலேயே இந்த த்ருஷ்டாந்தங்கள்

யாஜ்ஞாவல்க்ய ஸ்ம்ருதி 3-144-
ஆகாசம் ஏகம் ஹி யதா கடாதி ஷூ ப்ருதக் பவேத் –ததாத்மைகோ ஹ்ய நேகஸ்தோ ஜலாதாரேஷ்வி வாம்சுமான்
ஏக ஏவ ஹி பூதாத்மா போதே பூதே வ்யவஸ்திதே ஏகதா பஹூதா ச ஏவ த்ருச்யதே ஜல சந்த்ரவத் –

ஒரே ஆகாசம் எவ்வாறு குடம் முதலியவற்றில் வெவ்வேறாகத் தோன்றுகிறதோ
ஒரே ஸூர்யன் நீர் நிலைகளில் வெவ்வேறாகத் தோன்றுகிறானோ
அப்படியே ஒருவனே என்று ஸ்தான ப்ரயுக்தமான விரிதலோ சுருக்கமா -இல்லாமல் –
தோஷம் தட்டாத ஒரே தன்மையுடன் பல பொருள்களில் ப்ரஹ்மம் இருப்பான் என்கிறது-

———————————————————————————————————————————–

330-அம்புவத் அக்ரஹணாத் து ந ததாத்வம் —3-2-19-

நீரில் உள்ளது போலே பொய்யானவன் அல்லவே
ப்ரஹ்மம்-உண்மையாகவே உள்ளான் –

ப்ருஹத் உபநிஷத் –
3-7-3- ய பிருதிவ்யாம் திஷ்டன் -என்றும் –

3-7-4- ய அப்ஸூ திஷ்டன் -என்றும் –

3-7-22-ய ஆத்மநி திஷ்டன் -என்றும்

தோஷம் தட்டாது என்பதற்கு சொல்லிய திருஷ்டாந்தம் உண்மையாக இருப்பவன் ஆகையால்
பொருந்தாது என்பர் பூர்வ பஷி

து -ஸப்தம் பூர்வ பக்ஷத்தைக் காட்டுகிறது
அம்புவத் அக்ரஹணாத் –தண்ணீரில் உண்மையாக ஸூர்யன் க்ரஹிக்கப் படாதது போலே
ப்ருத்வீ முதலியவற்றில் ப்ரஹ்மம் க்ரஹிக்கப்பட வில்லை
ஆதலால்
ந ததாத்வம் —ஸூர்யனிடம் ஜலகத தோஷம் தட்டாதது போல்
ப்ரஹ்மத்தின் இடமும் இவற்றின் தோஷம் தட்டாது என்று சொல்ல முடியாது
ஏன் எனில்
அவற்றில் உண்மையாகவே ப்ரஹ்மம் இருப்பதால்
என்று பூர்வ பக்ஷம்

—————————————————————————————————————————————-

331–வ்ருத்தி ஹ்ராஸ பாக்த்வம் அந்தர்பாவாத் உபய சமஞ்ஜஸ்யாத் ஏவம் தர்சநாத் ச –3-2-20-

சிறிய நீர் நிலை பெரிய நீர் நிலை பிம்மம் தோன்றுவது போலே
சுருக்கமும் விரிவும் இல்லாதவன் என்பதற்கே திருஷ்டாந்தம்

ஆகாசம் ஏகம் ஹி யதா கடாதி ஷூ ப்ருதக் பவேத் -வெற்றிடம் குடங்களில் தனித் தனியே உள்ளது போலே
ஜலதாரேஷூ இவ அம்சுமான் -நீர் நிலைகளில் சூரியன் போலே பலவற்றிலும் உள்ளான்-

அந்தர்பாவாத் -ப்ருத்வீ முதலான விஷம ஸ்தானங்களில் உள்ள பரமாத்வாவுக்கு -அவற்றினுள் இருப்பதாலேயே
வ்ருத்தி ஹ்ராஸ பாக்த்வம் -நீர் நிலைகளில் ஸூர்யனை உபமானமாகக் காட்டியமையால் சுருக்கமும் விரிவும் விலக்கப் படுகின்றன
இது எவ்வாறு தோன்றுகிறது என்றால்
உபய சமஞ்ஜஸ்யாத் ஏவம் தர்சநாத் ச -இரண்டு உதாரணங்களும் அப்போதே பொருந்துவனவாகும்
குடாகாசம் நீர் நிலைகளில் உண்மை இல்லாத ஸூர்யனையும் காட்டியது
பரமாத்மாவுக்கு ப்ருத்வீ யாதிகளின் தோஷம் ஒட்டாது என்று காட்டவே
இரண்டு உதாரணங்கள் காட்டி ஒரு அம்சம்  ஒத்து இருப்பதைக் காட்டியவாறு
இம்மாணவன் சிங்கம் என்றால் க்ரூரத் தன்மைகளில் ஒன்றை மட்டும் காட்டவே
உவமையில் ஏதேனும் ஒரு அம்சத்தில் தான் ஒற்றுமை காட்ட வேண்டும்

ப்ருஹத் உபநிஷத் -2-3-1-
த்வே வாவா ப்ரஹ்மணோ ரூபே மூர்த்தம் ச அமூர்த்தம் ச -என்று
ஸ்தூல அஸ்தூல ரூபங்கள் இரண்டும் உண்டு என்று சொல்லத் தொடங்கி–

2-3-6-தஸ்ய ஹ வா ஏதஸ்ய புருஷஸ்ய ரூபம் யதா மஹாரஜநம் வாச -என்று
திவ்யமான ரூபம் உள்ளது என்று சொல்லி தொடர்ந்து –

அதாத ஆதேச நேதி நேதி இதி நஹ்யே தஸ்மாத் இதி நேதி அந்யத் பரம் அஸ்தி என்று
இதி -என்றது –மூர்த்தம் அமூர்த்தம் ஸூ ஷ்மம் ஸ்தூலம் போன்றவை சொல்லி
உடனே ந -என்று இவற்றை நிராகரித்து
ப்ரஹ்மம் மட்டுமே உண்மை மற்றவை அவன் மேல் ஏறிட்டுக் கூறப்பட்டன என்று சொல்லி
தோஷம் அற்றவன் என்று எவ்வாறு சொல்ல முடியம்
பிரபஞ்சத்துக்கு ப்ரஹ்ம ரூபத்வம் தடுக்கப் படுகிறதே
உபய லிங்கத்வவம் அன்று என்று தோற்றும்
என்பர் பூர்வ பஷிகள்

அதற்கு பதிலாக அடுத்த ஸூத்ரம் –

——————————————————————————————————————————————-

332-பிராக்ருத ஏதாவத்த்வம் ஹி பிரதிஷேததி தாதா ப்ரவீதி ச பூய–3-2-21-

முன்பு கூறிய ரூபங்களை மட்டுமே நிராகரித்து
அனைத்து கல்யாண குணங்கள் நிறைந்தவன் என்று மேலே சொல்வதால்
விக்ரஹத்தை கண்டு ப்ரஹ்மம் இவ்வளவே என்று நினைக்கலாம் –

அத்தையே நிராகரித்தது –

பிராக்ருத ஏதாவத்த்வம் ஹி பிரதிஷேததி -முன் தொடக்கப்பட்ட ஸ்தூல ஸூஷ்ம ரூபமான பிரபஞ்சம் மட்டும்
ப்ரஹ்மத்தின் ரூபம் அன்று என்றே –
அதாத ஆதேசோ நேதி நேதி-என்ற சுருதியில் விளக்கப் படுகிறது
தாதா ப்ரவீதி ச பூய-முன் சொன்னதைக் காட்டிலும் பூயஸ்த்வத்தை -பெருமையை –
வாக்ய சேஷம் சொல்லுகிறது

நேதி நேதி என்று தொடர்ந்து ப்ருஹத் உபநிஷத் -2-3-6-
ந ஹி ஏ தஸ்மாத் இதி நேத்யன்யத் பரமஸ்தி அத நாமதேயம் சத்யச்ய சத்யமிதி ப்ராணா வை
சத்யம் தேஷாம் ஏஷ சத்யம் இதி -என்கிறது

பிராணன் உள்ளதால் ஜீவன் -ஆகாயம் போல் அல்லாமல் நித்யம் சத்யம் –
இப்படிப்பட்ட ஜீவர்களைக் காட்டிலும் உயர்ந்தவன் பர ப்ரஹ்மம்

ஞானம் சுருங்குவதும் விரிவதும் இல்லை -பாபங்களால் தீண்டப் படாதவன் -கர்ம வச்யன் இல்லை –
அதனால் இவர்களைக் காட்டிலும் மேலான சத்யம் என்கிறது –

ப்ரஹ்மம் எனபது விக்ரஹம் மாத்ரமே அத்தைக் கொண்டு அறியலாம் என்பதையே
நேதி நேதி என்கிறது
சாஸ்திரம் ஒன்றே அவனை அறிய பிரமாணம் என்பதால்

இதி ந -இது முன் சொன்ன ப்ரப்ரகாரம் அன்று ப்ரஹ்மம்
நேதி நேதி என்று குறிப்பிட்ட ப்ரஹ்மத்தை விட்டு
அந்யத் நஹ் யஸ்தி-வஸ்து ஸ்வ ரூபத்தாலும் குணத்தாலும் உயர்ந்தது வேறு இல்லை என்று பொருள்
ஸத்யம் என்பது ப்ரஹ்மத்தின் பெயர்
ஏன் அப்பெயர் வந்தது என்னில்
ப்ராணனுடன் கூடவே சஞ்சரிப்பதாலும்
ஆகாசம் போல் ஸ்வரூப விகாரம் பெறாததால் ஜீவன் ஸத்யம் எனப்படுகிறான்
ஸ்வரூப விகாரமும் ஞான சங்கோச ஸ்வபாவ விகாரமும் இல்லாததால்
ப்ரஹ்மம் தேப்ய -ஜீவர்களைக் காட்டிலும் அதிக ஸத்யன்
ஆகையால் வேறு ப்ரமாணங்களால் அறியாத ப்ரஹ்மதுக்கு மூர்த்த அமூர்த்த ரூபமான பிரபஞ்சத்தை
பிரகாரமாக உபதேசிகையாலே உபய லிங்கமே ப்ரஹ்மம்
ஆகவே திரும்ப திரும்ப பிரகார விசேஷமே உபதேசிக்கப் படுகையாலே
நேதி நேதி என்பதன் மூலம் முன் ப்ரக்ருதமான அளவு மட்டும் நிஷேதிக்கப் படுகிறது

மேல் ஒரு ஆசங்கை
உண்மையில் ப்ரத்யக்ஷத்தால் நிர்விசேஷ ப்ரஹ்மம் மட்டுமே க்ரஹிக்கப் படுகிறது
அதற்கு வேறுபட்டதும் பிராந்தியால் ஏற்படுவதுமான விசேஷ ரூபத்தை
நேதி நேதி என்று மறுக்கிறது என்று கொள்ளலாமே என்னில்
இதற்கு மறுப்புக் கூறுகிறார் மேல் –

———————————————————————————————————————————————–

333-தத் அவ்யக்தம் ஆவ ஹி –3-2-22-

தத் -அந்தப் ப்ரஹ்மம்
அவ்யக்தம் -சப்தம் தவிர்த்த எந்தப் ப்ரமாணத்தாலும் புலப்படுவது அன்று
ஆஹஹி -ஸ்ருதி அவ்வாறே சொல்கிறது

சாஸ்திரம் ஒன்றே பிரமாணம் என்பதை
கட உபநிஷத் -6-9-ந சந்த்ருசே திஷ்டதி ரூபமஸ்ய ந சஷூஷா பச்யதி கச்ச ந ஏ நம் -என்றும்

முண்டக உபநிஷத் -3-2-8-ந சஷூஷா க்ருஹ்யதே நாபி வாசா -என்கிறதே –

மேலும் ஒரு ஸூத்ரத்தால் உணர்த்துகிறார் –

———————————————————————————————————————————————-

334-அபி சம்ராதனே ப்ரத்யஷ அநுமா நாப்யாம்–3-2-24-

பக்தி என்னும் உபாசனம் கொண்டே ப்ரஹ்மத்தை அறிய -ப்ரஹ்மத்துக்கு மகிழ்வு ஏற்ப்படுத்தி –
உணர இயலும் என்று ஸ்ருதியும் ஸ்ம்ருதியும் சொல்லும் –

முண்டக உபநிஷத் -3-2-3-
நாயமாத்மா ப்ரவச நேன லப்யோ ந மேதயா ந பஹூ நா ஸ்ருதே ந யமேவைஷ வ்ருணுதே
தேன லப்யஸ் தச்யைஷ ஆத்மா விவ்ருணுதே தநூம் ஸ்வாம்-என்றும்

3-1-8-ஜ்ஞான பிரசாதேன விசுத்த சத்த்வ ததஸ்து தம் பச்யதி நிஷ்கலம் த்யாய மாந-என்றும்

ஸ்ரீ கீதையில் -11-53- நாஹம் வேதைர் ந தபஸா ந தாநேன ந சேஜ்யயா-என்றும்

11-54-பக்த்யா த்வ நன்யயா சக்ய அஹம் ஏவம் விதோ அர்ஜுனா ஜ்ஞாதும் த்ரஷ்டும்
ச தத்த்வேன பிரவேஷ்டும் ச பரந்தப–என்றும் சொல்லுமே

அபி ச -மேலும்
சம்ராதனே -மிகவும் ப்ரீதி கரமான உபாஸனம் இருந்தால் பகவானின் ஸாஷாத் காரம் ஸம்பவிக்கும்
வேறு பிரகாரங்களாலே ஸம்பவிக்காது
ப்ரத்யஷ அநுமா நாப்யாம்–ஸ்ருதி ஸ்ம்ருதிகள் இருக்கிற படியால் என்றபடி –

சம்ராதனே -ஆழ்ந்த பக்தி என்னும் உபாசனத்தையே ஸூத்ரத்தில் குறிக்கப் படுகிறது –
இதுவே அவனுக்கு மகிழ்வு ஏற்படுத்தும் என்றதாயிற்று-

———————————————————————————————————————————————-

335-பிரகாசாதி வத் அவைசேஷ்யம் பிரகாச ச கர்மணி அப்யாசாத் –3-2-25-

ஞான ஆனந்த மயம் போலேவே மூர்த்தமாகவும் அமூர்தமாகவும் உள்ள பொருள்களை உடலாகக் கொண்ட
ப்ரஹ்மம் என்றே யோகிகள் இடைவிடாத உபாசனத்தால் உணர்ந்து காண்கிறார்கள்

ப்ருஹத் உபநிஷத் -1-4-10-தத்தை தத் பஸ்யன் ருஷிர் வாமதேவ பிரதிபேத அஹம் மநுரபவம் ஸூர்யச்ச-என்கிறது –

இதனாலும் மூர்த்த அமூர்த்த ரூபத்துடன் கூடியமை தடுக்கப் படவில்லை –
வாமதேவன் கூறினார் -நான் மனுவாய் இருந்தேன் -பின்பு ஸூர்யன் ஆனேன் –
அத்தகையவருக்கு பக்தியோகம் என்னும் கர்மாவினால்
பிரகாசாதி வத் ச -தர்சனம் முதலியவை உண்டானவோ
அவைசேஷ்யம் பிரகாச ச கர்மணி அப்யாசாத்–அவர்களின் ப்ரஹ்ம ஸ்வரூபம் குணம் இவை பற்றிய தர்சனத்தில்
ஞானம் ஆனந்தம் முதலிய ஸ்வரூபம் போலவே
மூர்த்தம் அமூர்த்தம் என்னும் ரூபமும் விசேஷம் இன்றி இடம் பெற்றதே
ஜகத் நஸ்வரத் தன்மைக்கு மட்டும் ப்ரஹ்ம குணத்வம் தடுக்கப் படுகிறது என்ற விசேஷம் ஏதும் இல்லை

ஆகவே
மூர்த்த அமூர்த்த ரூப விசிஷ்டம் ப்ரஹ்மம் என்பதற்குத் தடையில்லை என்பதாம் –

———————————————————————————————————————————————-

336- அதோ அனந்தேன ததாஹி லிங்கம்–3-2-26-

அனந்தேன -எல்லையில்லாத கல்யாண குண கணங்களுடன் சம்பந்தம்
அதோ –கூறிய காரணங்களால் நிலை யாயிற்று
ததாஹி -அப்படி இருந்தாலே
லிங்கம்-உபய லிங்கம் ப்ரஹ்மம் என்பது பொருந்தும்

மேலே கூறியவற்றால் உபய லிங்கமாகவே உள்ளது என்று காட்டி அதிகரணத்தை நியமிக்கிறார்

அளவற்ற திருக் கல்யாணங்களை கொண்டதாயும்
அகில ஹேய ப்ரத்ய நீகனாயும் ப்ரஹ்மம் உண்டு
என்று நிரூபித்தாயிற்று-

உபசர்க அபவாத நியாயம் -பொது விதியும் சிறப்பான விதியும் -விரோத அதிகரண நியாயம்
இவற்றைக் கொண்டு இவை விளக்கத் தக்கது
இதில் அபேச்சேத அதிகரணத்துக்கு இடம் இல்லை என்று கூற வேண்டும்

பிராணிகளை ஹிம்சிக்கலாவது பொது விதி
அக்னீ ஷோமீய யாகத்தில் பசுவை ஹிம்ஸிக்கலாம் சிறப்பு விதி
இந்த சிறப்பு விதியை விட்டு வேறு தன் இச்சையால் செய்யும் ஹிம்சைகளைத் தடை செய்வதாகக் கொள்ளுவதே
உத்சர்க அபவாத நியாயம் எனப்படுகிறது

அதே போலே நிர்க்குணம் நிரஞ்சனம் அத்ரேஸ்யம் -முதலியவை பொது விதிகள் –
ஸர்வஞ்ஞன்-ஸ்வா பாவிக ஞானம் பலம் ஸம்ருத்திகளை யுடையவன் என்பவை அபவாதங்கள் -சிறப்பானவை –
இவற்றால் ஸித்தமான விசேஷ குணங்களை விட்டு வேறான விரஜோ -விம்ருத்யு -விசோகா -விஜிகத்சோ-அபி பாஸ-என்று
சிறப்பாய் நிஷேதிக்கப்பட்ட ஹேய -தீய குணங்கள் இல்லை என்பதையே நிர்க்குணம் இத்யாதியால் பொதுவாகச் சொல்வதால்
நிர் குண -ச குண ஸ்ருதிகளுக்கு ஹேய ப்ரத்ய நீகத்வம் -கல்யாண குண கரத்வம் என்ற விஷயம் வேறுபடுவதால் விரோதம் இல்லை
விதி நிஷேதங்களுக்கும் இவாறே விரோதம் சாந்தமாகிறது

இங்கு அபேச்சேத அதிகரண நியாயத்துக்கு இடம் இல்லை
அதாவது
ஒரு யாக விசேஷத்தில் ஐந்து ரித்துவிக்குகள் ஒருவருக்கு ஒருவர் கச்சத்தைப் பிடித்துக் கொண்டு பின் செல்வர் –
அத்வர்யுவை -ப்ரஸ்தோதாவும் -அவரை ப்ரதி ஹர்த்தாவும் தொட்டுக் கொண்டே செல்ல வேண்டும் –
இவர்கள் அன்வாரம்பணத்துக்கு-தொட்டுக் கொண்டே செல்வத்துக்கு -தடை ஏற்பட்டால் பிராயச்சித்தம் செய்யுமாறு விதிக்கப்படுகிறது
1- உத்காதா விட்டால் தக்ஷிணை இன்றி யாகத்தை முடித்து மறுபடியும் அவனைக் கொண்டு யாகம் செய்ய வேண்டும்
2-ப்ரதி ஹர்த்தாவால் அபச்சேதம் வந்தால் ஸர்வஸ்வத்தையும் தானம் செய்ய வேண்டும்
இந்த இடத்தில் உத்காதாவின் அபச்சேத நிமித்தமான பிராயச்சித்த புத்தி
ப்ரதி கர்த்தாவின் அபச்சேத நிமித்தமான பிராயச்சித்த புத்தியால் பாதிக்கப் படுகிறது என்பது அபச்சேத நியாயம்

இந்த நியாயத்தாலே அத்வைதிகள் நிர்க்குண ஸாஸ்த்ரம் குண ப்ராப்தியை எதிர்பார்ப்பதால் பிரபலமானது பரமானது
ஆதலின் இதனால் ச குண சாஸ்திரம் பாதிக்கப் படுவதால் ப்ரஹ்மம் நிர்க்குணம் என்றே தேறும் என்பர்

அது அனு உசிதமானது -ஏன் எனில்
உத்காதாவின் அபச்சேதம் ஏற்படுகையில் ப்ரதி கர்த்தாவின் அபச்சேதம் உண்டாக வேணும் என்ற நிர்பந்தம் இல்லை
இரண்டும் முறையே க்ரமமாக ஏற்பட வேண்டும் என்பதும் இல்லை
க்ரமமாக ஏற்பட்டாலும் உத்காதாவின் அபச்சேதம் முதலிலும் ப்ரதி கர்த்தாவின் அபச்சேதம்
அடுத்தபடி ஏற்படுவதையும் இருக்கட்டும்
அதுவே மாறியும் இருக்கட்டும்

பூர்வ அபூர்வ க்ரம நியதம் இல்லாமையாலே விரோதத்துக்கோ க்ரமத்துக்கோ எங்கு நியமம் உள்ளதோ
அங்கு அபச்சேத நியாயம் வாராது
அதிலும் அபச்சேத நியாயம் சொன்னால் எப்போதும் பூர்வ ஸாஸ்த்ரத்துக்கு அப்ராமாண்யம் வந்து சேரும் –
அதை ஆச்சார்யர்களும் அருளினார்கள்
உன்க்கு பூர்வ அபூர்வம் விரோதம் முந்தையதற்கு அப்ராமாண்யம் இவை நியதமாய் இல்லையோ
அங்கு அபச்சேத நியாயம் பொருந்தும் என்றனர்
பூர்வ அபர்யம் விரோதச்ச பூர்வா ப்ராமாண்யம் ஏவச நியமான் நாஸ்தி தத்ராஸவ் அபச்சேத நயோ பவேத் -என்று –

ஆகவே அபச்சேத நியாயத்தைக் கொண்டு -நியத பரமான நிர்க் குண சாஸ்திரம் கொண்டு ச குண ஸாஸ்த்ரத்தைப் பாதிக்க இயலாது
நிர்க்குண ஸாஸ்த்ரம் நியத பரமாகையாலே இதை அபேக்ஷித்து உபக்ரம அதி கரண நியாயப்படி ச குண ஸாஸ்திரமே பிரபலம்
அதாவது
பிரஜாபதி வருணாய அஸ்வம் அநயத்-என்ற இடத்தில் அஸ்வத்தைப் ப்ரதி க்ரஹிக்க இஷ்டி கூறப்படுகிறது
இது உபக்ரமம் தொடக்கம் -தான் தோன்றும் போது விரோதம் தோன்றாததாலே அஸஞ்சாத விரோதி எனப்படும் -இது பிரபலம்
இந்த இஷ்டி செய்வது தாதாவுக்கா ப்ரதி க்ரஹீதாவுக்கா என்ற சங்கை வந்தால் உபக்ரம வாக்கியத்தை அனுசரித்து
தாதாவுக்கே என்று தீர்மானிக்கப் பட்டுள்ளது
இந்த நியாயத்தைக் கொண்டு ச குண நிர்க்குண வாக்கியங்களை ஆராய்ந்தால்
ச குண விதி பூர்வ பாவி என்றும் நிர்க்குண விதி பரமானது என்றும்
அவர்கள் கூற்றுப்படி உபக்ரமமான ஸாஸ்த்ரத்தை விட பரமான -உப ஸம்ஹாரமான நிர்க்குண ஸாஸ்த்ரம் துர்ப்பலம் என்று தேறுகிறது
ஆதலின் பரத்தைக் கொண்டு பூர்வத்தைப் பாதிக்க இயலாது
அப்படிப் பாதிக்கும் என்றால் மாத்யமிகளின் ஸர்வ ஸூந்ய வாதம் பிரமம் ஆதலின் அவன் மதமே வெற்றி பெறும் –

———————————————————————————————————————————————–

ஆறாவது அதிகரணம் -அஹி குண்டலாதிகரணம் –
ப்ரஹ்மத்தின் ரூபம் அசேதன பொருள்களான மூர்த்தமும் -விக்ரகமும் -பிரபஞ்சமே
ப்ரஹ்மத்துக்கு சரீரம் என்றும் கூறப்பட்டன –
அசேதனங்களின் தோஷங்கள் ப்ரஹ்மத்துக்கு ஏற்படாது என்று நிரூபிக்கப் படுகிறது –

கீழே ப்ரஹ்மத்துக்கு நிர்தோஷத்வம் சாதிக்கப் பட்டது
அதை நிலை நாட்ட அசித் வஸ்துக்களும் ப்ரஹ்மத்தின் ரூபமே என்று சாதிக்க வேண்டும்
அசித்து ப்ரஹ்மத்தின் ரூபம் என்பது அஹி குண்டல நியாயத்தால் ஸித்திக்குமா
பிரபையும்  விளக்கு அல்லது ஸூர்யன் போன்ற நியாயத்தால் ஒரே ஜாதி என்ற முறையில் ஸித்திப்பதா
அன்றி விசேஷண விசேஷ்ய பாவத்தால் ஸித்திக்குமா
என்ற சம்சயத்தால் இவ்வதிகரணம் தோன்றுகிறது –

337-உபய வ்யபதேசாத் து அஹி குண்டலவத் —3-2-26-

இது பூர்வ பஷ ஸூத்ரம் –
சுருண்டும் நீண்டும் உள்ள பாம்பு போலே ப்ரஹ்மம் –
த்வேவாவ ப்ரஹ்மணோ ரூப-மூர்த்தம் அமூர்தம் இரண்டும் ப்ரஹ்மத்தின் ரூபம்

தொடர்ந்து
அதாத ஆதேச நேதி நேதி -ப்ருஹத் உபநிஷத் -2-3-6- என்று
ப்ரஹ்மம் அசித் பொருள்கள் அளவு மட்டும் அல்ல என்றது

நஹி ஏ தஸ்மாத் ந அத்ய அன்யத பரமச்ய-என்று ப்ரஹ்மத்தை விட உயர்ந்த பொருள் இல்லை -என்றும்
இதையே திருடமாக
அத நாமதேயம் சத்யச்ய சத்யம் பிராண ஏவ சத்யம் தேஷாம் ஏஷ சத்யம் என்றும்

ஸ்வேதாஸ்வதர உபநிஷத் -6-16-பிரதான ஷேத்ரஜ்ஞபதிர் குணேச – என்றும் –
6-13-நித்யோ நித்யச் சேதநச்சேதநா நாம் -என்றும்

மஹா நாராயண உபநிஷத் -13-1-பதிம் விச்வச்ய ஆத்மேச்வரம் –என்றும் சொல்லிற்று-

அசேதனம் ப்ரஹ்ம ரூபம் என்பது
1-ப்ரஹ்ம ஸ்வரூபமமே அசித் ரூபமாக பரிணமிப்பதாலே ஏற்படுகிறதா
2- அல்லது ப்ரஹ்மமும் அசித்தும் ஒரே ஜாதி என்பதால் ஏற்படுகிறதா
3-ஜீவனைப் போல் சரீரம் என்பதால் ப்ரஹ்மத்தின் விசேஷணம் என்பதாலா

1-சுருண்டும் நீண்டுமுள்ள பாம்பு போலேயா
2-சூரியனும் ஒளிக் காற்றையும் போலேயா
3-அம்சம் அம்சி பாவமா –
மூன்று வித கேள்விகள் ப்ரஹ்மத்துக்கும் அசித்துக்கும்

ப்ரஹ்ம ஸூத்ரம் -1-4-23-பிரக்ருதிச்ச பிரதிஜ்ஞாத் ருஷ்டாந்தா னுபரோதாத் -என்று
ப்ரஹ்மமே  உபாதான காரணம் என்றும்

ப்ரஹ்ம ஸூத்ரம் -2-1-15-தத நன்யத்வம் ஆரம்பண சப்தாதிப்ய-பொருளும் காரணமும் வேறு அல்ல -என்றும்
அம்ச அம்சி பாவம் முன்பே கூறப்பட்டது

மூன்றில் பாம்பு போலே நீட்டியும் சுருண்டும் என்பதே அசித்துக்கும் ப்ரஹ்மத்துக்கும் என்பதே சரியான விடையாகும்

ப்ரஹ்ம ஏவ இதம் சர்வம் -ப்ருஹத் உபநிஷத் -4-5-1- இவை அனைத்தும் ப்ரஹ்மமே என்றும்

சாந்தோக்யம் -7-25-2-ஆத்மா ஏவ இதம் சர்வம் -இவை அனைத்தும் ஆத்மாவே

சாந்தோக்யம் -6-3-2-ஹந்தா ஹமிமாஸ் திஸ்ரோ தேவதா அநேன ஜீவேன ஆத்ம அநு ப்ரவச்ய -என்று
தேஜஸ் நீர் பூமி மூன்றின் உள்ளே புகுந்து அநேக நாம ரூபங்களை எடுக்கிறேன்

உபய வ்யபதேயாத் து அஹி குண்டலவத் —
து -ஸப்தம் -ஏவ போல் அவதாரணம்
அஹி குண்டலவத் —=சர்ப்பத்துக்கு குண்டல பாவமும் நேரான தன்மையும் போலே
ப்ரஹ்மம் அசித் ரூபமாகிறது எனலாம்
ஏன் எனில்
உபய வ்யபதேசாத் –பேதமாயும் அபேதமாயும் வழங்கப் படுவதால்
இப்பிரபஞ்சம் எல்லாமே ப்ரஹ்மம் என்று அபேதமும்
இந்த ஜீவனைத் துணை கொண்டு யாவற்றிலும் உள்ளே நுழைந்து நாம ரூபங்களை அமைக்கிறேன் என்று
சங்கல்பிக்கும் போது பேதமும் பேசப்படுகின்றது
இவை சர்ப்பத்தின் வெவ்வேறு தன்மை போலே -ருஜு பாவமும் -வக்ர பாவமும் -பொருந்தலாம் என்பது பூர்வ பக்ஷம் –

எனவே அசித் என்பதும் ப்ரஹ்மத்தின் ஒரு வகையான விசேஷ நிலை என்றதாயிற்று-

——————————————————————————————————————————————–

338-பிரகாசஸ்ரயவத்வா தேஜஸ் த்வாத் —3-2-27-

ஒளியும் உத்பத்தி இடமும் போன்று -காரணம் இரண்டும் தேஜஸ் என்ற ஜாதியினால்
இது பூர்வ பஷ ஸூத்ரம்

வா என்றது பாம்பு போன்று நீண்டும் சுருங்கியும் –
அம்ச அம்சி பாவம் இரண்டையும் தள்ளுகிறது

அசித் ரூபம் என்றால் இரண்டும் வெவ்வேறே என்கிற பேத ஸ்ருதிகள் தள்ளப்படும் –
அவிகாராய சுருதி வாக்யமும் தள்ளுபடும்

ஒளியும் ஒளி உள்ள தீபாதிகளும் தேஜஸ்த்வம் -ஒரே ஜாதி சேர்க்கையால்
ஸ்வரூபத்தில் பேதம் இருந்தாலும் அபேதம் பேசப்படுவது போலே
அசித்தான பிரபஞ்சத்துக்கும் ப்ரஹ்மத்துக்கும் அபேதம் கூடும் -அசித்துக்கு ப்ரஹ்ம ரூபத்வம் கூடும் –
முன் கூறிய பிரகாரத்தில் ப்ரஹ்மத்துக்கு நிர்தோஷத்வம் அபரிணாமித்வம் சொல்லும் ஸ்ருதிகளுடன் விரோதம் ஏற்படும் –
இப்பஷத்தில் அவ்விரோதம் வாராது என்றபடி –

இந்த பக்ஷத்தை ஏற்றாலும் ப்ரஹ்மமே சர்வமும் என்று அபேதமும்
ஸர்வ ஸப்த வாஸ்யத்வம் சொல்வதால் அசேதன ரூபம் இல்லாமல் போகட்டும்
ஒரு பசு கண்டம் முண்டம் பூர்ண ஸ்ருங்கம் என்று கூறப்பட முடியாது அல்லவா
எனும் அஸ்வாரஸ்யத்தால்
சித்தாந்தம் கூறுகிறார் –

——————————————————————————————————————————————–

339-பூர்வவத் வா–3-2-28-

முன்பு கூறப் பட்டது போன்று என்றவாறு –
வா -ஸப்தம் இரண்டு பூர்வ பக்ஷங்களையும் தள்ளுகிறது
கடந்த இரண்டு ஸூத்ரங்களில் உள்ள பூர்வ பஷத்தை தள்ளுகிறது

முதல் வாதம் படி அசித் ஸ்வரூபம் ப்ரஹ்மத்துக்கு வரும் தோஷங்களும் தட்டும்
ஒளி ஒளிக்கதிர் என்று கொண்டால் பசு குதிரை இரண்டு பிரிவுகளான ப்ரஹ்மம் ஸ்ருதி வாக்ய விரோதம் ஆகும்

பூர்வ வத்வா -அம்ச அதிகரணத்தில் பேத அபேத வியபதேசங்கள் பொருந்தவும் –
ப்ரஹ்மம் நிர் தோஷம் என்று ஸாதிக்கவும்
ஜீவனை -பிரகாச குண ஜாதிகளை போலே விட்டுப் பிரிக்க இயலாத -அப்ருதக் ஸித்த -விசேஷணம் -ஆதலின்
ப்ரஹ்மத்துக்கு அம்சமே என்று கீழே சாதித்தால் போலவே அசித்தும் விசேஷணமாதலின் அம்சமாகலாம்

இத்தால் அசித் என்ற சொல்லும் அத்துடன் கூடிய ப்ரஹ்மத்தையே சொல்லும்
ஆகவே இவை யாவுமே ப்ரஹ்மமே என்று சொல்வதும் பொருத்தம் ஆகுமே

விசிஷ்டத்தில் விசேஷணம் ஏக தேசம் என்பதால் அபேதம் முக்கிய வழக்கே
ஸ்வரூப ஸ்வபாவ பேதங்களாலே இரண்டுக்கும் பேத வழக்கே முக்யமாம்

இதனால் ப்ரஹ்மம் நிர்தோஷம் என்பது ஸித்தம் –

ஆக முன்பு கூறிய படி ஒரு அம்சமாகவே கொள்ள வேண்டும்

ப்ரஹ்ம ஸூத்ரம் -2-3-42-அம்சோ நாநா வ்யபதேசாத் -ஒரு அம்சமாகவே ஆகும்

ப்ரஹ்ம ஸூத்ரம் -2-3-45-பிரகாசாதிவத் து நைவம்பர-பரமாத்மாவின் அம்சம்

பிரிக்க இயலாது
பேத அபேத ஸ்ருதிகளும் கொள்ள முடியும்
தோஷங்களால் தீண்டப் படாததது என்ற வாதமும் கொள்ளப் படும்

ஆக ஒளி ரத்னக் கல்லை விட்டு பிரிக்க முடியாதது போலேயும்
குணம் குணம் உள்ளவன் -ஆத்மா உடல் போலே
ஜீவனும் அசித்தும் ப்ரஹ்மத்தின் அம்சங்களே -என்றாகிறது-

————————————————————————————————————————————————

340-பிரதிஷேதாச்ச–3-2-29-

தள்ளப் படுவதாலும் -கடந்த ஸூத்ர சித்தாந்தம் தொடர்கிறது

ப்ருஹத் உபநிஷத் -4-4-25-ச வா ஏஷ மஹா நஜ ஆத்மா அஜரோ அமர –
பரமாத்மா பிறப்பு இறப்பு கிழத் தன்மை அற்றவன் -என்றும்

சாந்தோக்யம் -8-1-5-நாச்ய ஜரயா ஏதத் ஜீரயதி –
வயதாகி கிழத் தன்மை அடைவது இல்லை

தோஷங்கள் தட்டாமல்
காரணமாகவும்
அம்ச அம்சி பாவமே பொருந்தும் என்றதாயிற்று

ஸூஷ்மமாக உள்ள பொழுது அவற்றை அம்சமாக காரணமாயும்
ஸ்தூலமாக உள்ள பொழுது அவற்றை அம்சமாகக் கார்யமாகவும்
கார்ய கார்யங்களுக்கு இடையில் பேதம் இல்லை -அபேத ஸ்ருதியும்

காரணமான ப்ரஹ்மத்தை அறிந்தவன் கார்யப் பொருள்கள் அனைத்தையும் அறிந்தவனாகவும் கொண்டு
ப்ரஹ்மத்தை தோஷங்கள் தீண்டுவது இல்லை என்றும்
சமஸ்த கல்யாண குணங்கள் கொண்டவன் என்றும்
உபய லிங்கத்வம் நிரூபிக்கப் பட்டது

————————————————————————————————————————————————

ஏழாவது அதிகரணம் -பராதிகரணம் –
ப்ரஹ்மத்தை விட உயர்ந்த வஸ்து வேறு இல்லை என்றும்
இவனை தவிர அடைய வேண்டிய வஸ்து வேறு இல்லை என்றும் நிரூபிக்கப் படுகிறது-

ப்ரஹ்மம் உபய லிங்கம் என்று ஸ்தாபித்தார்
இனி முன் கூறிய ஜகத்துக்கு எல்லாம் நிமித்தமாயும் உபாதானமாயும் உள்ள ப்ரஹ்மத்தை விட
சிறந்ததோர் தத்வம் உள்ளது என்று சில போலி ஹேதுக்களால்
சங்கித்து
கண்டிக்கப்படுகிறது என்று சங்கதி –

341-பரமத சேது உன்மான சம்பந்த பேத வ்யபதேசேப்ய-3-2-31-

அணை அளவு தொடர்பு வேறுபாடு ஆகியவை கூறப்பட்டதால் இதை விட உயர்ந்தது உள்ளது

சேது சேர்ப்பது ஓன்று என்றால் சேர வேண்டியது சிறந்த வேறு ஓன்று இருக்குமே
இந்த பூர்வபக்ஷ ஸூத்ரம் இது –

சாந்தோக்யம் -8-4-1-அத ய ஆத்மா ச சேது வித்ருதி –
இந்த ஆத்மாவைத் தாங்கும் பாலமாக உள்ளான்

சாந்தோக்யம் -8-4-2-ஏதம் சேதும் தீர்த்தவா அந்தஸ் சந் அனந்தோ பவதி –
பாலத்தை கடந்து குருடனானவன் நிலை மாறப் பெறுகிறான்

இவற்றால் ப்ரஹ்மத்தை விட உயர்ந்தவை உண்டு என்றதாயிற்று

உந்மிதம்-என்று அளவு பட்டு ப்ரஹ்மம் கூறப் படுகிறது

சாந்தோக்யம் -3-18-2-சதுஷ்பாத் ப்ரஹ்ம-நான்கு பாதங்கள் கொண்டது என்றும்

ப்ரசன உபநிஷத் -ஷோடச கலம் -பதினாறு பிரிவுகள் கொண்டது -என்றும்

ஸ்வேதாஸ்வதர உபநிஷத் -6-19-அம்ருதஸ்ய பரம் சேதும் தக்தேந்த மிவா நலம் –
தானாக வெளிப்படும் மோஷத்தை அடைய உதவும் பாலமாக ப்ரஹ்மம் உள்ளான் என்றும்

முண்டக உபநிஷத்-2-2-5- -அம்ருதஸ்யைஷ சேது -மோஷத்தை அடைவிக்கும் பாலம் ப்ரஹ்மம் என்றும்

முண்டக உபநிஷத் -3-2-8-பராத்பரம் புருஷம் உபைதி -பரமாத்மாவை விட உயர்ந்த புருஷன் அடைகிறான் என்றும்

தைத்ரிய நாராயண வல்லி -1-5- பராத்பரம் யத் மஹதோ மஹாந்தம் -பெரியதான பரமாத்மாவை விட பெரியதான என்றும்

ஸ்வேதாஸ்வதர உபநிஷத் –
3-9-தேநேதம் பூர்ணம் புருஷேண சர்வம் –
அந்த புருஷனால் இவை நிரம்பி உள்ளன -என்றும்

3-10-ததோ யதுத்தரதரதரம் தத் அரூபம் அநாமயம் –
அந்த புருஷனைக் காட்டிலும் மேலானது-உருவம் அற்றது -துன்பம் அற்றது -என்றும்

இப்படி பல ஸ்ருதிகள் அந்த பிரமத்தைக் காட்டிலும் மேலான வஸ்து உள்ளதைச் சொல்லிற்று–

அத -இது வரை ஸர்வ காரணமாயும் -உபய லிங்கமாயும் கூறப்பட்டுள்ள ப்ரஹ்மத்தை விட
பரம் -உயர்ந்த தத்வம் உள்ளது
ஏன் எனில்
சேது உன்மான சம்பந்த பேத வ்யபதேசேப்ய-வியபதேசம் என்பது சேது உன்மானம் முதலிய ஒவ்வொன்றுடன் சேர்க்கிறது
1- சேது வ்யபதேசத்தால் அடையப்படும் பொருள் வேறே ஓன்று என்று புலனாகிறது
2-சதுஷ்பாத் ப்ரஹ்ம ஷோடசகலம் -என்று உன்மான வ்யபதேசத்தால் -உன்மானம் -அளவு –
நான்கு பாதங்கள் பதினாறு கலைகள் என்று அளவிட்டதை விட அளவில்லாத வேறு தத்வம் இருக்க வேண்டும் என்று கருத்து
3-ஸம்பந்த வியபதேசத்தாலே -அம்ருதஸ்ய பரம் சேதும் -என்று ப்ராப்ய ப்ராபக சம்பந்தம் சொல்வதால்
அம்ருதம் என்று அடைய வேண்டிய தத்வம் சேதுவை விட வேறானது
4-பேத வியபதேசத்தால் -பராத்பரம் புருஷம் உபைதி–ததோ யதுத்தரதரதரம் –என்று எல்லாம்
புருஷன் என்றும் பர ப்ரஹ்மத்தை விட மேலான தத்வம் உள்ளது என்று தோன்றுகிறது என்று பூர்வ பக்ஷம்

இனி இந்த பூர்வ பஷத்துக்கு பதில் மேலே –இதைக் கண்டிக்கிறார் –

——————————————————————————————————————————————–

342-சமான்யாத் து-3-2-31-

பொதுவான தன்மை காரணத்தால் ஆகும் –
து -பதம் பூர்வ பஷத்தை தள்ளுகிறது
சேது என்று ஒரு கரையில் இருந்து அடுத்த கரைக்கு செல்வதை சொல்ல வில்லை

உலகங்கள் தம் தம் ஸ்வபாவங்களில் சாங்கர்யம்–கலப்பு -ஏற்படாமல் இருக்க
பரம புருஷனே சேது போலே தரிக்கிறான் என்று சுருதி சொல்லும்
ஸிநோதி -காட்டுகிறது என்பதால் சேது என்று காரணப்பெயர்
ஆதலால் வேறே ப்ராப்யம் இங்கே தோன்றவில்லை
ஏதம் சேதும் தீர்த்வா –என்ற இடத்தில் அடைந்து என்ற பொருள்
வேதாந்தம் தரதி என்பது போலே ப்ராபக ப்ராப்யங்களுக்கு அபேதத்தைச் சொல்லுகிறது –

சாந்தோக்யம் -8-4-1-ஏஷாம் லோகா நாம் அசம்பேதாய-
இந்த உலகங்கள் ஒன்றுடன் ஓன்று கலக்காமல் இருக்க -என்கிறது
சேதனம் அசேதனங்களை தன்னுள் வைத்து ஒன்றுடன் ஓன்று கலவாமல் காப்பதால் சேது எனப்படுகிறான்

சாந்தோக்யம் -8-4-2- ஏதும் சேதும் தீர்த்தவா –
தீர்த்தவா அடைதல் பொருளில் கடந்து என்று அல்ல –
வேதாந்தத்தை கடக்கிறான் முற்றிலும் அறிந்தவன் ஆகிறான் என்றே பொருள்

—————————————————————————— —————————————————————

343-புத்த்யர்த்த பாதவத் —3-2-32-

இதனால் இரண்டாவது ஹேதுவுக்கு விடை கூறுகிறார்
ப்ரஹ்மத்தை அளவிட்டுக் கூறியது உன்மானம்
ஏன் என்றால்
புத்த்யர்த்த -அனுசந்தானம் செய்ய வசதிக்காக
பாதவத் —வாக் பாத -சஷு பாத என்று எல்லாம் ப்ரஹ்மத்துக்கு வாகாதிகளைப்
பாதங்களாகச் சொல்லுவது உபாசானத்துக்கானது
அது போலவே இதுவும்
ப்ரஹ்மம் பரிமாணம் உள்ளது என்பதைக் காட்டுவதற்கு அல்ல

பாதம் போன்று உபாசனத்துக்கு கூறப் பட்டது –
சதுஷ்பாத் ப்ரஹ்ம –ஷோடசகலம் –பாதோச்ய விசவா பூதானி என்று
உபாசனத்துக்கு புத்திக்கு அளவு படுத்தி சொன்னவை

சத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்மம்-தெளிவாக உள்ளதே –

இவனே காரணம் என்பதை
தைத்ரியம் -2-1-தஸ்மாத்வா ஏ தஸ்மாத் ஆத்ம ந ஆகாச சம்பூத –
இதில் இருந்து ஆத்மாவும் ஆகாசமும் வெளிப்பட்டன என்றும்

தைத்ரியம்-2-6- -சோகாமயாத பஹூச்யாம் பிரஜாயேய-
அது தன்னைப் பலவாகக் கடவது என்று எண்ணியது -என்றும்

சாந்தோக்யம் -3-18-2-வாக் பாத பிராண பாத சஷூ பாதோ மன பாத –
பாதங்களாக வாக் போன்றவை உள்ளன என்றது உபாசனைக்கு எளிதாக்கவே என்றவாறு

உபாஸனார்த்தமாயினும் பரிமாணம் ப்ரஹ்மத்துக்கு எவ்வாறு பொருந்தும்
என்பதற்கு விடை மேல் –

———————————————————————————————————————————————-

344-ஸ்தான விசேஷாத் பிரகாசாதிவத்–3-2-33–

அளவிட முடியாத வஸ்துவை உபாசனை பொருட்டு மாத்ரம் எப்படி அளவிட்டு சொல்ல முடியும் என்றால் –
எங்கும் பரவும் பிரகாசத்துக்கு -ஒளி முதலான ஸ்தானங்களின் சம்பந்தம் காரணம் ஆகும்
ஜன்னல் ஒளி –குட ஆகாசம் போலே

———————————————————————————————————————————————-

345-உபபத்தேச் ச–3-2-34-

மூன்றாவது ஹேதுவை இதில் நிரஸனம் செய்கிறார் –

தன்னை அடையும் உபாயமாக தானே உள்ள தன்மை பொருந்துவதால் –
முண்டகம் -அம்ருதஸ்யைஷ சேது -அடை யைப் படும் இலக்கே அவன் என்றே பொருள் கொள்ள வேண்டும்
முண்டகம் -3-2-3-நாயமாத்மா ப்ரவசநேன லப்யோ ந மேதயா

ந பஹூ நா ஸ்ருதே ந யமேவைஷ வ்ருணுதே தே ந லப்யஸ் தஸ்யைஷ ஆத்மா விவ்ருணுதே தனூம் ஸ்வாம்-என்று
பரமாத்மாவை கேட்டோ ஆழ்ந்த ஞானத்தாலோ அறிய அடைய முடியாது –
அவனே யாரைத் தெரிந்து எடுத்து அவன் மட்டுமே அடைகிறான் அவனுக்கு தனது ரூபத்தை வெளிப்படுத்துகிறான்-

—————————————————————————————————————————————–

346-ததா அந்ய பிரதிசேஷாத்-3-2-35-

நான்காவது ஹேதுவை இதில் நிரஸனம் செய்கிறார் –

பேத ஸ்ருதிகளாலே அதிகமான ஒரு தத்வம் உண்டு என்பது தவறு
ததா -அவ்விடத்திலேயே
அந்ய பிரதிசேஷாத்-அந்யனான பரன் தடுக்கப் படுவதால்

இப்படி அவனைக் காட்டிலும் வேறு இல்லை என்று மறுப்பதால் ஆகும்
ததோ எதுத் தர தரம் -என்றும்
பராத்பரம் புருஷம் -என்றும் –
அஷராத் பரத பர -என்றும்
உயர்ந்த வஸ்து வேறே உண்டு என்கிறீர்கள்

அதே ஸ்வேதாஸ்வதர உபநிஷத் -3-9-
யஸ்மாத் பரம் ந அபரமஸ்தி கிஞ்சித் யஸ்மாத் ந அணீய ந ஜ்யோயோஸ்தி கச்சித் என்றதே

ப்ருஹத் உபநிஷத்

2-3-6-நஹ்யே தஸ்மாத் இதி நேதி அந்யத் பரமஸ்தி-என்றும்

நாராயண வல்லி -1-2- ந தஸ்ய ஈசே கச்ச ந தஸ்ய நாம மஹத்யச-என்றும் –

சர்வே நிமேஷா ஜ்ஞ்ஞிரே வித்யூத புருஷா நதி -என்றும்

ச ஆப ப்ரதுகே உபே இமே -என்றும்

1-3-அத்ப்யஸ் சம்பூத ஹிரண்ய கர்ப்ப இத்யஷ்டௌ-என்றும் அவனே ஜகத் காரணம் என்றதே

ஆனால் ஸ்வேதாஸ்வதர -3-10-
ததோ எதுத் தர தரம் என்று சொன்னது எதனால் என்றால் –

இந்த வரிக்கு முன்னால் -3-8- வேதாஹமேதம் புருஷம் மஹாந்தம் ஆதித்ய வர்ணம் தமஸ பரஸ்தாத்
தமேவ விதித்வா அதி ம்ருத்யுமேதி நான்ய பன்னா வித்யதே அயநாயா -என்று முழங்கி

3-9-யஸ்மாத் பரம் நாபரமஸ்தி கிஞ்சித் யஸ்மாத் நாணீய நஜ்யா யோஸ்தி கச்சித் வருஷ இவஸ்தப்த
திவி திஷ்டதி ஏக தே நேதம் பூர்ணம் புருஷே ந சர்வம் -என்றும்

நிகமத்தில் -3-10-ததோ எதுத் தர தரம் தத் அரூபம் அநாமயம் ய எதத் விது அம்ருதாச்தே பவந்தி
அதே தர துக்க மேவ அபியந்தி -என்றது

மேலும் முண்டகம் 3-2-8–பராத்பரம் புருஷம் உபைதி திவ்யம் –
என்பதை 2-1-2-அஷராத் பரத பர -என்றதே –

பர ப்ரஹ்மத்தைக் காட்டிலும் வேறே தத்வம் இல்லை -அவனே தோஷம் அற்றவன் -அம்ருதம் –
அவனை அறிந்தவன் சம்சாரத்தைக் கடக்கிறான்
வேறு முக்திக்கான உபாயம் இல்லை என்று
அதே ஸ்ருதிகள் உப சம்ஹரிக்கின்றனவே

ஸ்ருத்யந்தரங்களும் இத்தையே பறை சாற்றுகின்றன

————————————————————————————————————————————

347-அநேந சர்வ கதத்வம் ஆயாம சப்தாதிப்ய —3-2-36-

அநேந -இந்த ப்ரஹ்மத்தால்
சர்வ கதத்வம் -ஜகத் எங்கும் வியாபித்து இருத்தல்
ஆயாம சப்தாதிப்ய-எங்கும் வியாபித்து இருப்பதாகச் சொல்லும் ஸப்தங்களால் –
வியாப்ய நாராயண ஸ்தித -போன்றவைகளால் அறிவிக்கப் படுகிறது
இதனால் இந்தப் ப்ரஹ்மத்தை விடச் சிறந்தது ஏதும் இல்லை என்று நிரூபணம் ஆயிற்று

ஆயாம -அனைத்தும் ப்ரஹ்மத்தால் வ்யாபிக்கப் பட்டது என்கிறது-சர்வ வ்யாபகத்வம்
ஸ்வேதாஸ்வதர உபநிஷத் -தே நதம் பூர்ணம் புருஷேண சர்வம் -என்றும் –

நாராயண வல்லி -11-6-யச்ச கிஞ்சித் ஜகத் யஸ்மின் த்ருச்யதே ச்ரூயதேபி வா அந்தர் பஹிச்ச
தத் சர்வம் வ்யாப்ய நாராயண ஸ்தித -என்றும்

‘முண்டகம் -1-1-6-நித்யம் விபும் சர்வ கதம் ஸூஷூஷ்மம் யத் பூதயோ நிம் பரிபச்யந்தி தீரா -என்றும்

ஸூத்ரத்தில் உள்ள ஆதி என்ற பதம் ப்ரஹ்மத்துக்கு அனைத்துமாய் இருக்கும் பெருமையை

ப்ருஹத் உபநிஷத் -4-5-1-ப்ரஹ்மை வேதம் சர்வம் -என்றும்

சாந்தோக்யம் -ஆதமை வேதம் சர்வம் -என்றும்

ப்ரஹ்மமே அனைத்தையும் விட உயர்ந்தது என்று முழங்கும் –

இதனால் யதோவா இமானி -இத்யாதிகளாலே கூறப்படும் ஜகத் நிமித்த உபாதான
ப்ரஹ்மத்தைக் காட்டிலும் வேறான தத்வம் கிடையாது என்பது ஸித்தம் –

————————————————————————————————————————————-

எட்டாவது அதிகரணம் -பலாதிகரணம் –
கர்மங்களின் அனைத்து பலன்களையும் பரமாத்மாவே அளிக்கிறான் என்று நிரூபிக்கப் படுகிறது –

பரத்வமும் பல பிரதத்வமும் உபாஸிப்பதற்குத் தேவையானவை
பின்னால் சொல்ல இருக்கும் உபாஸ்யத்தின் ஸித்திக்காக பரத்வம் சொல்லப்பட்டது
இவ்வதி கரணத்தில் பல பரதனும் இவனே என்ற முறையில் ஓவ்தார்யம் கூறப்படுகிறது –

348-பலம் அத உபபத்தே —3-2-37-

யாகாதிகளில் கர்மமே அபூர்வத்தின் மூலமாக பலன் தரும் என்று பூர்வ பக்ஷம்

பரம் பொருளின் இடம் இருந்தே பலம் கிட்டுகின்றன -இதுவே பொருந்தும் –
எங்கும் உள்ளவன் -அனைத்தும் அறிந்தவன் -சர்வ சக்தம் -உதாரன் –
யஜ்ஞம் தானம் ஹோமம் உபாசனம் இவற்றால் மகிழ்ந்து அளிக்கின்றான்
ஷணம் நேரம் அழியக் கூடிய கர்மங்கள் பலன்களை தர வல்லமை அற்றனவே என்றவாறு-

பலம் அத உபபத்தே-இவன் இடம் இருந்தே கர்ம பலன் பெறுகிறார்கள்
கர்மம் க்ஷணிகம்
ஸர்வஞ்ஞன்-ஸர்வசக்தன் -காருணிகன் -உதார குணம் -ஆதியும் அந்தமும் இல்லாதவன்
ஆகவே கர்மத்தால் ப்ரீதனாகி இவனே பலன் அருளுகிறார் என்பதே பொருந்தும்

————————————————————————————————————————————-

349-ஸ்ருதத்வா ச–3-2-38-

கீழே அசேதனமான கர்மங்களுக்குப் பல பிரதத்வம் கூடாமையாலே இவனே பல பிரதன் என்றார்
இதில் வெளிப்படையாகக் காட்டி அருளுகிறார் –

இப்படியே ஸ்ருதி வரிகள் -பல போகங்களையும் மோஷத்தையும் பரம் பொருளே அளிப்பதாக கூறுகின்றன –

ப்ருஹத் -4-4-24-ச வா ஏஷ மஹான் அஜ –ஆத்மா அந்நாத வஸூதான -என்றும்

தைத்ரிய ஆரண்யகம் -2-7- எஷஹி ஏவ ஆனந்த யாதி -என்றும் கூறும்

—————————————————————————————————————————————–

350-தர்மம் ஜைமினி அத ஏவ-3-2-39-

தர்மம் ஜைமினி
தர்மம் முதளியவைகளே பலன் அளிப்பதாக ஜைமினி கூறுகிறார்
கண்களில் புலப்படாத அபூர்வம் -எதிர்காலத்தில் அந்த பலன்களை அளிக்கின்றது

அத ஏவ -அதற்க்கு ஏற்ப ஸ்ருதியும் உண்டே என்றவாறு
சாஸ்திரம் யஜேன ஸ்வர்க்க காமா -யாகம் மூலம் ஸ்வர்க்கம் கிட்டும் என்றதே –

—————————————————————————————————————————————-

351-பூர்வம் து பாதராயண ஹேது வ்யபதேசாத் —3-2-40-

பூர்வம் து பாதராயண-பலனை அளிப்பதால் முந்தையதே -என்கிறார் பாதராயணர்-
து -பூர்வ பஷத்தை தள்ளுகிறது
முன் கூறியதே என்று பாதராயணர் -வியாசர் -திரு உள்ளம்

வாயு அக்னி குறித்து யாகம் பண்ணும் பொழுது
யஜ் -அந்த யாகங்களின் எஜமானனாக உள்ள தேவதைகளே பலன்களை அளிப்பதாக கூறும்

தைத்ரிய சம்ஹிதை -2-1-1-வாயவ்யாம் ஸ்வேதமால பேத பூதி காமோ வாயுர்வை ஷேபிஷ்டா தேவதா
வாயுமேவ ஸ்வேன பாக தேயேன உபதாவதி ச ஏவ எனம் பூதிம் கமயதி -என்று

இது போன்ற வாதங்களை அர்த்த வாதங்கள் என்று தள்ள இயலாது –
இதனை மருத்து கண்களுக்கு புலப்படாத அபூர்வம் என்பதை உருவாக்கி பலன் அளிப்பதாக சொல்வதை
பிரமாணிகர்கள் ஒத்துக் கொள்ள மாட்டார்கள்

பூர்வ பஷிகள் யஜேத என்பதை யஜ் ஏத என்று பிரித்து
யஜ் தவத்தை என்றும்
ஏத அபூர்வம் என்றும் சொல்வதை ஏற்க இயலாது

ஏத எனபது கர்த்தாக்கள் மூலம் இயற்றப்படும் கர்மங்களைக் குறிக்கும்

இதனை உணர்த்தவே-தைத்ரிய சம்ஹிதை -2-1-1-வாயுர்வை ஷேபிஷ்டா த்கேவதா -என்றன –
ஆயினும் ஆராதிக்கத் தகுந்தவனாக உள்ளவன் பரம புருஷனே –

அவனே அந்தர்யாமியாக இருந்து கொண்டு பலனை அளிக்கின்றான் என்பதை
நாராயண வல்லி -1-2-
இஷ்டா பூர்த்தம் பஹூதா ஜாதம் ஜாயமா நம் விஸ்வம் பிபர்த்தி புவனச்ய நாபி –
ததே வாக்னி தத் வாயு தத் ஸூர்ய தாது சந்த்ரமா -என்று கூறியது

ப்ருஹத் உபநிஷத்- 3-7-7- யோ வாயௌ திஷ்டன் யஸ்ய வாயு சரீரம் என்றும் –

3-7-5-யோ அக்னௌ திஷ்டன் -என்றும்

3-7-9–யோ ஆதித்யே திஷ்டன் -என்றும் சொல்லிற்று

ஸ்ரீ கீதையிலும் -7-21-
யோ யோ மாம் யாம் தநும் பக்த ஸ்ரத்தயா அர்ச்சிதும் இச்சதி தஸ்ய தஸ்ய அசலாம் ஸ்ரத்தாம் தாம் ஏவ வித்தாம் யஹம் -என்றும்

7-22-ச தயா ஸ்ரத்தயா யுக்த தஸ்ய ஆராதன மீஹதே லபதே சே தத காமான் மயைவ விஹிதான் ஹிதான் -என்றும்

9-24-அஹம் ஹி சர்வ யஜ்ஞானாம் போக்தா ச ப்ரபுரேவ ச -என்றும்

7-23-தேவான் தேவ யஜோ யாந்தி மத் பக்தோ யாந்தி மாம்பி -என்றும்

9-25-யாந்தி மத்யாஜி நோபிமாம் -என்றும்
அரசன் தானே நேரடியாகவோ வேலையாட்கள் மூலமாகவோ மகிழ்ந்து பரிசு அளிப்பது போலே
பரமபுருஷன் இடம் இருந்தே ஸ்வர்க்கம் போன்ற போகங்களும் மோஷமும் கிட்டுகிறது என்று நிரூபணம் ஆயிற்று –

ஹேது வ்யபதேசாத் –யஜேத -யஜ தேவ பூஜாயாம் -பகவத் ஆராதனம் –
பரமாத்மாவே நேராகவும் -அக்னியாதி தேவர்கள் மூலமாகவும் பல பிரதன்
இவ்வாறு அதிகாரி இருக்க
அபூர்வம் என்று கல்பிக்க வேண்டியது இல்லை

அனைத்து அர்த்தவாதங்களும் பொருந்தி விடுகின்றன —

அடுத்த பாதத்தில் வித்யா பேதங்களில் வெவ்வேறு கல்யாண குணங்களைக் காட்டி அருளப் போகிறார் –

——————————————————

இப்பாத அர்த்தங்களை சுருக்கமாக ஸ்வாமி தேசிகன் காட்டி அருளுகிறார்

1-சந்த்யாதி கரணத்தில் -ஸர்வேஸ்வரனே ஸ்வப்ன பதார்த்தங்களை படைக்கிறான் என்றும்
2-தத்பாவாதிகரணத்தில் -அவனே ஸூஷ்ப்தி தசையில் ஆதாரம் என்றும்
3-கர்மாநு ஸ்ம்ருதி சப்த வித்யதிகரணத்தில் -உறங்கி விழிப்பவனும் ஒருவனே என்றும்
4-முக்தாதிகரணத்தில் -மூர்ச்சை அடைந்தவனை எழுப்புவான் என்றும் சில சமயங்களில் மரணத்திற்கும் காரணம் என்றும்
5-உபய லிங்க அதிகரணத்தில் -நிர்தோஷன் -கல்யாண குணகரன் என்றும்
6-அஹி குண்டலாதிகரணத்தில் -தனி சரீரமான அசித்துக்களை அம்சமாகக் கொண்டவன் என்றும்
7-பராதிகரணத்தில் எல்லாவற்றையும் விட இவனே சிறந்தவன் என்றும்
8-பலாதிகரணத்தில் -ஸர்வ கர்ம உபாசனங்களுக்கும் இவனே பல பிரதன் என்றும்

அருளிச் செய்து
இந்தக் குணங்களைக் கூறியது ப்ரஹ்ம வித்யா ரூபத்தில் பக்தி ஸித்திப்பதற்காக
யதார்த்தமான குணங்களைக் கொண்டு எம்பெருமானை உபாஸிக்கையில்
ரூப பேதங்கள் சொல்ல வேண்டி இருப்பதால்
அவற்றைப் பிற மதத்தவர் போலே வ்யவஹாரிகங்கள் என்று சொல்வது பொருந்தாது
என்பது ஸூத்ரகாரரின் திரு உள்ளம் –

————————————————————————————————–—————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஸ்ருதி பிரகாசர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ போதாயனர் -வ்ருத்தி காரர் – ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பாதராயணர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பாஷ்யார்த்த தீபிகை — மூன்றாம் அத்யாயம் — முதல் பாதம் —

November 26, 2021

ஸ்ரீ பாஷ்யம் -மங்கள ஸ்லோகம்

அகில புவன ஜன்ம ஸ்தேம பங்காதி லீலே
விநத விவித பூத வ்ராத ரக்ஷைக தீஷே
ஸ்ருதி சிரஸி விதீப்தே ப்ருஹ்மணி ஸ்ரீ நிவாஸே
பவது மம பரஸ்மின் சேமுஷீ பக்தி ரூபா –

பாராசார்ய வச ஸூதாம் உபநிஷத் துக்தாப்தி மத்யோத் த்ருதாம்
சம்சாராக்னி விதீபன வ்யபகாத ப்ராணாத்மா சஞ்சீவி நீம்
பூர்வாச்சார்ய ஸூரஷிதாம் பஹூ மதி வ்யாகாத தூரஸ்தி தாம்
ஆ நீதாம் து நிஷாஷரை ஸூ மனஸோ பௌமா பிபந்து அந்வஹம்–

—————————————————————-

சாதனா அத்யாயம்–55 அதிகரணங்கள்–181 ஸூத்ரங்கள்

————————————————————-

முதல் பாதம் -வைராக்ய பாதம்-ஜீவனுக்கு உள்ள தோஷங்களை விளக்கி –
இவை இல்லாத ப்ரஹ்மத்தை அடைய வைராக்கியம் ஏற்பட இவை முதலில் கூறப்படுகின்றன –
6 அதிகரணங்கள்-27-ஸூத்ரங்கள்-

——————————————————————-

முதல் இரண்டு அத்யாயங்களால்
குத்ருஷ்டிகளின் கோணல் யுக்திகளால் அசைக்க ஒண்ணாத ஸமஸ்த ஜகத் ஏக காரணத்வத்துடன்
அகில ஹேய ப்ரத்ய நீகனாய் -ஸித்த வஸ்துவாய் உள்ள பரம புருஷனான ஸ்ரீயப்பதியை விசாரித்து
பின் இரண்டு அத்யாயங்களாலே
சேதனன் செய்யத்தக்க பரம புருஷன் திருவடிகள் விஷயத்தில் பக்தி பிரபத்தி என்ற ஸாத்ய உபாயங்களையும்
அதன் பலமான பரம புருஷ பரிபூர்ண அனுபவ ஜெனித கைங்கர்யங்களையும் விசாரிக்கிறார்
என்று த்விக சங்கதி

மூன்றாம் அத்யாயம் மூன்றாம் பாதத்தில் விசாரிக்கப் போகும் ஸாத்ய உபாய ரூபமான பக்திக்கு
அதிகாரம் ஸித்திக்க வேண்டி
ஐஸ்வர்யம் கைவல்யம் முதலியவற்றில் வைராக்யம் தோன்றக் காரணமான ஸம்ஸார தோஷத்தை
முதல் பாதத்தில் விவரிக்கிறார் என்று சங்கதி –

இம் மூன்றாம் அத்யாயம் முதல் இரண்டு பாதங்களால்
வைராக்கியமும்
உபய லிங்கமும் -அகில ஹேய ப்ரத்ய நீகத்வமும் -ஸமஸ்த கல்யாண குண கரத்வமும்
பின் இரு பாதங்களாலே
அங்க ஸஹிதமான ப்ரஹ்ம வித்யையையும் பற்றி
ஸூத்ரகாரர் காட்டி அருளுகிறார் –

முதல் வைராக்ய பாதத்தில்
ஐஸ்வர்யாதிகளில் வைராக்யம் உண்டாகும் பிரகாரத்தைக் காட்டுகிறார் என்று த்விக சங்கதி

———–

இங்கு ஒருவர் கேட்க்கிறார் -முக்தி நம்மால் சாதிக்கக் கூடியதா அன்றா –
சாதிக்க முடியாது என்றால் சாதன அத்யாயத்துக்குப் பலனே இல்லையே –
அதை ஆரம்பிப்பதே வீணாகுமே
சாதிக்கத் தக்கதே என்றால் ஸ்வர்க்காதிகள் போல் அதுவும் அழிவுள்ளதாகும் –
ஆகையால் முக்தியை நித்யை என்று கூற முடியாதே
இந்த விஷயத்தில் என்ன வழி என்று கேட்க்கிறார்

அதுக்கு விடை -ப்ரஹ்ம அனுபவம் முன்பு இல்லாததே -உபாஸகனாலே சாதிக்கப்படுவது –
ஆதலின் முக்கியர்த்தம் சாதன அத்யாயம் தொடங்குவதில் தவறு இல்லை –
முக்தி அந்த்யமாகுமோ என்னில்
அபாவம் என்பதும் ஒரு பாவமே என்பது நம் சித்தாந்தம் -பாவாந்தர அபாவ பக்ஷம் –
சம்சாரத்தில் ஞான சங்கோச தசைக்கு த்வம்சமே அழிவே முக்தி -விஸிஷ்ட ப்ரஹ்ம அனுபவமே முக்தி
தார்க்கிகர் மதத்தின் படி த்வம்சத்துக்குத் தொடக்கம் பூர்வ அவதி உண்டாம் -முடிவு உத்தர அவதி இல்லை –
ஆதலின் நித்யத்வம் ஸித்தமாகிறது –
ஆனால் கர்ம வசத்தால் ஞான ஸங்கோசம் விலகவே ஸ்வரூப ஆவிர்பாவம் -மலர்ச்சி -ஏற்பட்டு
நச புநராவர்த்ததே -என்று கூறிய நித்யத்வமும் -ஸ சா நந்த்யாய கல்பதே-என்று
முக்தி தசையில் வரக் கூடும் ஞான வியாப்தியைக் கூறும் ஸ்ருதியால் நேரில் கூறப்பட்டது
எனவே இந்த சாதன அத்யாயம் ஆரம்பத்தில் தவறு இல்லையே என்பர் ஸ்வாமி தேசிகன் –

———-

முதல் அதிகரணம் -ததந்திர பிரதிபத்த்ய அதிகரணம் -7 ஸூத்ரங்கள் –
ஜீவன் இந்த உடலை விட்டு கிளம்பும் பொழுது
பஞ்ச பூதங்களுடன் கூடிய சூஷ்ம ரூபத்துடன் செல்வதை சாந்தோக்யம் -கருத்து நிரூபிக்கப்படுகிறது –

இரண்டாவது அதிகரணம் –க்ருதாத்ய யாதிகரணம்–4 ஸூத்ரங்கள்-
அனுபவிக்க வேண்டிய எஞ்சிய கர்ம பலன்களுடன் ஸ்வர்க்கத்தில் இருந்து ஜீவன் வருகிறான் என்று நிரூபிக்கப் படுகிறது-

மூன்றாம் அதிகரணம் –அநிஷ்டாதிகார்யாதிகரணம்-10- ஸூத்ரங்கள்–
பாபம் செய்தவர்கள் சந்திர மண்டலம் செல்வது இல்லை என்பது நிரூபிக்கப் படுகிறது-

நான்காவது அதிகரணம் –தத் ஸ்வா பாவ்யாபத்த்யதிகரணம் – 1 ஸூத்ரம்-
மேலே கிளம்பிய ஜீவன் ஆகாசம் போன்றவற்றுடன் தொடர்பு மட்டுமே அடைகின்றான் என்று நிரூபிக்கப் படுகிறது

ஐந்தாம் அதிகரணம் -நாதிசிராதி கரணம்- 1 ஸூத்ரம்-
ஆகாசம் போன்றவற்றில் ஜீவன் சிறிது காலமே தங்கி விட்டுக் கிளம்புகிறான் என்று நிரூபிக்கப் படுகிறது –

ஆறாவது அதிகரணம் -அந்யா திஷ்டிதாதி கரணம் -4-ஸூத்ரங்கள்–
மற்ற ஜீவன்களுடன் தொடர்பு மட்டும் கொள்கின்றான் என்கிறதாயிற்று-

—————————————————————————————————————————

முதல் அதிகரணம் -ததந்திர பிரதிபத்த்ய அதிகரணம் –
ஜீவன் இந்த உடலை விட்டு கிளம்பும் பொழுது பஞ்ச பூதங்களுடன் கூடிய
ஸூஷ்ம ரூபத்துடன் செல்வதை சாந்தோக்யம் -கருத்து நிரூபிக்கப்படுகிறது –

இந்த தேஹியானவன் இந்த மனித சரீரத்தை விட்டு வேறு சரீரத்தை அடையும் பொழுது
சரீர கரணங்களான பூத ஸூஷ்மங்களுடன் சேர்ந்து செல்கிறானா –
அல்லது தனியே செல்கிறானா என்ற சம்சயம்
கூடப் போவது இல்லை என்று பூர்வ பக்ஷம்
போகும் இடங்களில் பூத ஸூஷ்மங்கள் ஸூலபமுமாய் இருப்பதாலே உடன் கொண்டு செல்வது இல்லை
என்று பூர்வ பக்ஷம்
இத்தை நிரசிக்கிறார்

284-ததந்திர ப்ரதிபத்தௌ ரம்ஹதி சம்பரிஷ்வக்த ப்ரசன நிரூபணாப்யாம்-3-1-1-

ஜாக்ரத் -விழிப்பு நிலை /ஸ்வப்னம் -கனவு நிலை /ஸூஷுப்தி -தூக்க நிலை /மூர்ச்சை -மயக்க நிலை
பூத ஸூஷ்மங்களுடன் சேர்ந்தே செல்வதை நிரூபிக்கிறார்-

2-4-17-சம்ஜ்ஞா மூர்த்திக் லுப்தி -பெயர் ரூபம் மாறுதல் -பற்றி சொல்லி
மூர்த்தி பதம் உடலைக் குறிக்கும் அதையே இங்கே தத் பதம் சொல்லும்

முன் அதிகரணத்தில் ஸம்ஜ்ஞா மூர்த்தி க்லுப்தி -ஸூத்ரத்தில் உள்ள
மூர்த்தி சப்தத்துக்குப் பொருளான சரீரத்தை இங்கு தத் சப்தத்தால் காட்டுகிறது –
ததந்திர ப்ரதிபத்தௌ -மற்று ஒரு உடலை அடையும் பொழுது
சம்பரிஷ்வக்த -முன் தேகத்தில் கடைந்து எடுத்த பூத ஸூஷ்மங்களுடன் இணைந்து
ரம்ஹதி -செல்கிறான்
ப்ரசன நிரூபணாப்யாம் -கேள்வி பதில்களால் அவ்வாறே தோன்றுகிறது
சாந்தோக்யம் பஞ்சாக்னி வித்யையில் உள்ளவை கொண்டு நிரூபணம்-

ஆருணி என்பவரின் பிள்ளை ஸ்வேதகேது-என்பவன் பாஞ்சால தேசம் சென்று ப்ரவாஹணன் அரசன் இடம்
1-யாகம் முதலானவற்றை இயற்றினவர்கள் உயிர் பிரிந்த பின்பு எங்கு செல்கின்றனர்
2-மீண்டும் எந்த பாதையில் உலகிற்கு வருகின்றார்கள்
3-தேவ யானம் பித்ரு யானம் வழி களின் வேறுபாடு
4-ஸ்வர்க்க லோகத்தை அடையாதவர்கள் யார்
5- கேள்வியாக சாந்தோக்யம் -5-3-3- வேதத யதா பஞ்சம் யா மாஹூதாவாப் புருஷ வசசோ பவந்தி -என்று
ஐந்தாவது ஆஹூதியாக அளிக்கப் படும் நீர் எனபது எவ்விதம் புருஷன் என்று கூறப்படுகிறது என்று அறிவாயா

இதற்கு -ஸ்வர்க்கம் என்பதையே அக்னியாகக் கொண்டு பதில் உள்ளது –
ஸூரியன் சமித்துக் கட்டை -ஸூர்ய கிரணங்கள் புகை -சந்தரன் தணல் நட்ஷத்ரங்கள் பொறிகள்
சாந்தோக்யம் இதனை தொடர்ந்து –5-4-2-தஸ்மின் ஏ தஸ்மின் அக்னௌ தேவா ஸ்ரத்தாம் ஜூஹ்வதி தஸ்யா ஆஹூதே சோமராஜாபவதி-என்று
ஸ்வர்க்கம் என்னும் அக்னியில் தேவர்கள் -இந்த்ரியங்கள் -அனைத்தும் இணைந்து ஸ்ரத்தை என்னும் நீரை
ஆஹூதியாக அளிக்க சோம ராஜா என்ற பெயருடன் அழகிய உடலை அடைகிறான் என்கிறது

கர்ம பலன்கள் முடிவைந்த நிலையில் பர்ஜன்யம் என்ற அக்னியில் பிராணன்கள் சோமராஜாவை இட
உடல் நீராக மாறி ஜீவனுடன் சேர்ந்து மழை ஆகிறது
அந்த மழையை பூமி என்ற அக்னியில் அதே இந்த்ரியங்கள் இட -ஹோமம் செய்கின்றன என்ற கருத்து –
மழை நீர் நெல் போன்ற உணவாக மாற -அந்த உணவை புருஷன் என்ற அக்னிக்கு அதே இந்த்ரியங்கள் ஹோம திருவ்யமாக இட
புருஷன் இடம் சென்ற அன்னம் ரேதசாக மாறி அந்த விந்துவை இந்த்ரியங்கள் பெண் என்ற அக்னியில் ஆஹூதியாக இட கர்ப்பம் ஆகிறது

சாந்தோக்யம் -5-9-1-இதி து பஞ்சம்யாமாஹூதா வாப புருஷவசசோ பவந்தி –
இப்படியாக ஐந்தாவது ஆஹூதியாக விடப்படும் நீர் -விந்து -புருஷனாக பெயர் அடைகின்றது
புதிய உடல் எடுக்க பூதங்களுடன் ஸூஷ்மமாகவே செல்கின்றான் என்று உணரலாம்

ஆப புருஷ வசஸ -சாந்தோக்யம்-5-9-1-நீரான ரேதஸ் புருஷன் ஆகிறது

பஞ்ச பூதங்களுடன் செல்வதாக சொல்ல முடியுமோ –
இதற்கு பதில் அடுத்த ஸூத்ரம்

——————————————————————————————————————————-

ஆப புருஷ வசஸ-என்னும் இடத்தில் அப் ஸப்தத்தால்
ப்ருத்வீ முதலிய வேறு பூதங்களுக்கும் எப்படி வ்யவஹாரம் ஏற்படும் என்றால்
அந்த சங்கையைப் பரிஹரிக்கிறார்

285-த்ர்யாத்மகத்வாத் து பூயஸ்த்வாத்–3-1-2-

து -சங்கையை நிவர்த்திப்பிக்கிறது -நீர் மட்டும் கொண்டு உடல் உண்டாக வாய்ப்பில்லையே
பூயஸ்த்வாத்–அப் -பெரும் பகுதி யாகையாலே இந்த சப்தத்தால் சொல்லிற்று

தாஸாம் த்ரிவ்ருத்தம் த்ரிவ்ருத்தம் ஏகைகாம் -சாந்தோக்யம் -6-3-3-
நீர் நெருப்பு நிலம் -ஒவ் ஒன்றிலும் மற்ற இரண்டின் பகுதியைச் சேர்த்து உருவாக்குவதே த்ரிவ்ருத்தம் ஆகும்
ஸ்தூல நீர் -பாதி ஸூஷ்ம நீரும் கால் பகுதி ஸூஷ்ம நெருப்பும் கால் பகுதி ஸூஷ்ம நிலமும் சேர்ந்தது ஆகும்-

இவ்விதமே பஞ்சீ கரண ப்ரக்ரியையும் காணத் தக்கது

———————————————————————————————————————————-

286-பிராண கதே ச–3-1-3-

பிராணன்களும்-இந்த்ரியங்களும் -செல்வதால் இந்த்ரியங்களுக்கு ஆதாரமாக உள்ள
பூத ஸூ ஷ்மங்களுடன் ஜீவன் செல்கின்றான்

ப்ருஹத் உபநிஷத் -4-4-2-
தம் உத்க்ராமந்தம் பிராண அநூத்க்ராமாதி பிராணம் அநூத்க்ராமந்தம் சர்வே பரானா அநூத்க்ராமந்தி -என்றும்

ஸ்மர்யதே ச –ஸ்ம்ருதியும் இப்படியே சொல்கிறது என்றவாறு –

ஸ்ரீ கீதை 15-7/8-
மன ஷஷ்டானி இந்த்ரியாணி பிரகிருதி ஸ்தானி கர்ஷதி சரீரம் யத் அவாப் நோதி யத் ச அபி
உக்த்க்ரமாதீச்வர க்ரஹீத்வைதானி சம்யாதி வாயுர் கந்தா நிவாசயாத் – என்று
காற்று மலர்களில் உள்ள நறு மணத்தை கவர்ந்து செல்வது போலே
ஜீவன் அனைத்தையும் எடுத்துச் செல்கிறான்
இவற்றுக்கு ஆஸ்ரயமாக பூத ஸூஷ்மங்களும் கூட செல்கின்றன –

ஸ்தூல சரீரத்தை விட்டுப் போகும் ஜீவனை பிராணன் பின் பற்றுகிறது –
பிராண வாயுவை இந்த்ரிய ஸூஷ் மங்களும் பின் செல்கின்றன -என்றே பொருள் இவற்றுக்கு

————————————————————————————————————————————-

287-அக்னி நயாதி கதி ஸ்ருதே இதி சேத ந பாக்தத்வாத் –3-1-4

மரண காலத்தில் இந்த்ரியங்கள் அக்னியுடன் இணைவதாகக் கூறுவதால்
பிராணன் ஜீவனுடன் செல்வது இல்லை எனபது பூர்வ பஷம்

பிருஹத் உபநிஷத் -5-12-13-யத்ர அஸ்ய புருஷஸ்ய ம்ருதச்ய அக்னிம் வாக் அப்யேதி வாதம் பிராண சஷூராதித்யம் -என்று
இறந்த பின்பு வாக்கு அக்னியிலும் பிராணன் வாயுவிலும் கண்கள் சூரியனிலும் இணைகின்றன
எனவே ஜீவனுடன் இந்த்ரியங்கள் செல்வது இல்லை என்பர்

தம் உத்க்ராமந்தம் சர்வே ப்ராணா உத்க்ராமந்தி -என்று
அந்த அந்த அபிமான தேவதைகள் அவற்றின் மீது தங்கள் தொடர்பை கை விடுகின்றன என்றே கொள்ள வேண்டும்

அதே உபநிஷத்தில் -ஓஷதீர் லோமா நி வனச்பதீன் கேசா –
தலை முடிகள் மரங்களிலும் கைமுடிகள் செடிகளிலும் கலக்கின்றன என்கிறது

அக்னி நயாதி கதி ஸ்ருதே –அக்னி வாயு ஸூர்யன் முதலிய அதிஷ்டான தேவதைகள் இடம் லயம் அடைவதாகச் சொல்வதால்
இந்திரியங்கள் ஜீவனுடன் செல்வதாகச் சொல்லும் சுருதிகள் உபசார வழக்காகவே கொள்ள வேண்டும்
என்னில்
இதி சேத ந -அது தவறு
பாக்தத்வாத் –ஓஷதீர் லோமா நி வனச்பதீன் கேசா –
தலை முடிகள் மரங்களிலும் கைமுடிகள் செடிகளிலும் கலக்கின்றன என்பதால்
அக்னியை வாக்கு அடைகிறது போன்ற வாக்கியங்கள் அமுக்கியமாகவே கொள்ள வேண்டும்
இவற்றுக்கு லயம் என்றால் ரோம கேசாதிகளுக்கும் லயம் ஏற்க நேரிடும்
ஆகவே இந்திரியங்கள் ஜீவனுடன் செல்வத்தைச் சொல்லும் ஸ்ருதிகளே முக்யமாகக் கொள்ள வேண்டும் என்று கருத்து –

ஆக
அந்த அந்த தேவதைகளின் கட்டுப்பாட்டை நீக்கி
ஜீவன் இந்த்ரியங்களுடன் அவற்றின் பூதங்களுடன் செல்கின்றான் –

—————————————————————————————————————————————-

288–ப்ரதமே அஸ்ரவணாத் இதி சேத் ந தா ஏவ ஹி உபபத்தே –3-1-5-

ப்ரதமே -பஞ்சாக்னி வித்யையில் முதலான தேவ லோக ரூபமான அக்னி ஹோமத்திலே
அஸ்ரவணாத் -அப்புக்கள் ஹோமம் செய்யத் தக்கனவாகக் கூறப்படாமையாலே
பிற பூதங்களுடன் சேர்ந்து அப்புக்கள் செல்கின்றன என்பது தகாது
இதி சேத் ந -இது தவறு

சாந்தோக்யம் -5-4-2-தஸ்மின் ஏ தஸ்மின் அக்னௌ தேவா ஸ்ரத்தாம் ஜூஹ்வதி –
தேவ லோகம் –ஸ்ரத்தை நீர் அல்லவே

நீர் என்பதே ஸ்ரத்தை -சோமராஜா -வர்ஷம் -அன்னம் -ரேதஸ் -கர்ப்பம் பல விதமாக மாறும் –
இத்தையே ஏவம் ஆப புருஷவசச தைத்ரீய பிரமாணம் –3-2-4- அப பிரணயதி ஸ்ரத்தா வா ஆப -என்று
அவன் நீரை எடுக்கிறான் -ஸ்ரத்தை என்பதே நீர்
ஜீவன் சோம ராஜாவாக மாறுவது நீரால் தான் என்பதை
சாந்தோக்யம் -5-4-2-ஸ்ரத்தாம் ஜூஹ்வதி தஸ்யா ஆஹூதி சோமோராஜா சம்பவதி -என்று கூறியது

உபபத்தே -விடைக்கு வினாவுடன் பொருத்தமாய் இருப்பதால்
கேள்வியிலும் -நீர் ஐந்தாம் ஆஹுதியில் புருஷன் எனப்படுவதை அறிவீரோ
விடையில் தேவலோகம் என்னும் அக்னியில் பிராணங்கள் ஸ்ரத்தையை ஹோமம் செய்கின்றன என்று கூறுவதால்
ஸ்ரத்தை என்பது அப்பையே குறிக்கும் –

எனவே நீர் முதலான பூத ஸூஷ்மங்களுடன் இணைந்து ஜீவன் கிளம்புகின்றான்

———————————————————————————————————————————————-

289-அஸ்ருத்வாத் இதி சேத் ந இஷ்ட அதிகாரிணாம் பிரதீதே –3-1-6-

இஷ்டம் பூர்த்தம் தானம் -பலனை விரும்பி யாகம் செய்பவர்கள் –

சாந்தோக்யம் -5-10-3-அத ய இம க்ராமே இஷ்டாபூர்த்தா தத்தம் இதி உபாசதே தே தூமம் அபி சம்பவந்தி –
குளம் வெட்டுதல் போன்ற -புண்யம் செய்து மார்க்கம் வழியாக ஸ்வர்க்கம் செல்கிறார்கள் –

இதை முடிக்கும் பொழுது -5-10-4/5-
பித்ரு லோகன் ஆகாசம் ஆகாசாத் சந்த்ரமசம் ஏஷ சோமோராஜா தத் தேவா நாமந்தம் தம் தேவா பஷயந்தி
தஸ்மின் யாவத் சம்பாதம் அத ஏவம் எத அத்வானம் புன நிவர்த்தந்தே
யோ யோ ஹி அந்தமத்தி யோ யோ ரேத சிஞ்சதி தத் பூய ஏவ பவதி-என்று
பித்ரு லோகம் -ஆகாயம் -சந்திர மண்டலம் -சோமராஜா வாகிறான் அங்கு உணவாகிறான்

சாந்தோக்யம் -5-4-2-ஸ்ரத்தாம் ஜூஹ்வதி தஸ்யா ஆஹூதி சோமோராஜா சம்பவதி

இத்தால் ஸ்ரத்தை போன்ற மன நிலையை கொண்டு யாகம் செய்த ஜீவனே
தம் தேவா பஷயந்தி -5-10-4-சோமோ ராஜாவை உண்கிறார்கள் –

அசருத்வாத் – ஆபஸ் புருஷ வசஸோ பவந்தி ஸ்ரத்தாம் ஜூஹ்வதி –என்று
த்யு லோக அக்னியாதிகளிலே அப்பே ஹோமம் செய்வதாகக் கூறப்படுகின்றதே அன்றி
ஜீவன் அவ்வாறு சொல்லப்பட வில்லையே
ஆதலின் பூத ஸூஷ் மங்களுடன் கலந்த ஜீவன் செல்கின்றான் என்பது தவறாகும்
இதி சேத் ந -என்று சொல்வது தவறாகும்

இஷ்ட அதிகாரிணாம் பிரதீதே –இதே ஸ்ருதியில் மேலே
அத ய இம க்ராமே இஷ்டாபூர்த்தா தத்தம் இதி உபாசதே தே தூமம் அபி சம்பவந்தி –என்று தொடங்கி
ஆகாசம் ஆகாசாத் சந்த்ரமசம் ஏஷ சோமோராஜா சம்பவதி -இது போன்ற வாக்யங்களால்
இஷ்டா பூர்த்தங்களை அனுஷ்ட்டிக்கும் ஜீவன்கள் சந்திரன் போலே
அம்ருத மயமான சரீரங்களைப் பெறுகிறார்கள் என்று சொல்வதால்
தேவாஸ் ஸ்ரத்தாம் ஜூஹ்வதி தஸ்யா ஆஹூதி சோமோராஜா சம்பவதி என்று
முதல் வாக்யத்தில் கூறிய சோமராஜன் என்ற ஸப்தத்தின் அடையாளத்தால்
அச் சப்தம் பூத ஸூஷ்ம யுக்தனான ஜீவனையே சொல்கிறது என்று தோன்றுகிறது –

ஜீவனை உண்ண முடியுமா கேள்விக்கு பதில் அடுத்த ஸூத்ரம்

———————————————————————————————————————————————

ஏஷ சோமோ ராஜோ தம் தேவா பஷயந்தி -5-10-4—என்று தூமாதி மார்க்கத்தாலே
ஸ்வர்க்கத்தை அடைந்தவனுக்கு தேவர்களின் உணவு நிலை -பஷ்யத்வம் -சோமோ ராஜாவை உண்கிறார்கள்-என்பது
கூடாமையாலே இஷ்டாதி காரி வாக்யத்தில் ஜீவன் சொல்லப்பட வில்லை
என்ற சங்கையைப் பரிஹரிக்கிறார் இதில் –

290-பாக்தம் வா அநாத்ம வித்த்வாத் ததா ஹி தர்சயதி-3-1-7-

பாக்தம் வா அநாத்ம வித்த்வாத் ததா ஹி தர்சயதி-
இங்கு வா ஸப்தம் சங்கையை விலக்குகிறது
பாக்தம் து -தேவ பஷ்யத்வம் கூறப்படுவது -அமுக்யார்த்தம் -உபசார வழக்கு
அநாத்ம வித்த்வாத் -ஸ்வர்க்காதிகளை உத்தேசித்து யஜ்ஞாதிகளைப் பண்ணும் ஜீவர்கள்
பரமாத்ம வித்துக்கள் அல்லாமையாலே
தேவர்கள் ஏவியதைச் செய்வார்கள் என்னும் அபிப்ராயத்தாலே சொன்னதாம் அத்தனை
ததா ஹி தர்சயதி-அநாத்ம வித்துக்களான த்ரை வர்ணிக்கர் இந்த்ராதிகளை அடைந்து
உபகாரிகளாய் இருப்பர் என்றவாறு

ப்ரஹ்மத்தை பற்றி அறிவில்லாத காரணத்தால் அந்த அதிகாரிகள் தேவர்களுக்கு உணவாகிறார்கள்
வா -என்கிற பதம் இத்தைக் காட்டும்
ப்ருஹத் உபநிஷத் -1-4-10-யதா பசு ஏவம் ச தேவா நாம் –
மனிசர்களுக்கு பசு உணவாவது போலே தேவர்களுக்கு இவர்கள் உணவாகிறார்கள்

இத்தையே ஸ்ரீ கீதை -7-23–தேவான் தேவ யஜோ யாந்தி மத்பக்தா யாந்தி மாம்பி –
ஆக தேவர்களுக்கு பணிவிடை செய்வார்கள் என்ற கருத்து

இதனையே சாந்தோக்யம் -3-6-1-ந வை தேவா அச்நந்தி ந பிபந்தி எதத் ஏவ அம்ருதம் த்ருஷ்ட்வா த்ருப்யந்தி -என்றபடி
தேவர்கள் உண்ணாமல் பருகாமல் –அமிர்தத்தை கண்களால் பார்த்த படி மகிழ்ந்து இருப்பார்கள் மன நிறைவும் அடைவார்கள்

ஆக ஜீவர்கள் பூத ஸூஷ்மங்களுடனே கிளம்புகிறான் என்று நிரூபிக்கப் பட்டது-

இந்த பஞ்ச அக்னி வித்யையில் ப்ரக்ருதியை விட வேறுபட்ட பரிசுத்த ஆத்ம ஸ்வரூபத்தை
ப்ரஹ்மாத்மகமாகவே உபாஸிக்க வேண்டும் என்று கருத்து

இவ் வித்யைக்குப் பலம் ஸ்வ ஆத்ம அனுபவத்துடன் கூடிய பரிபூர்ண ப்ரஹ்ம அனுபவம்
மதுவித்யா நிஷ்டனுக்கு வஸூவாதி பத பிராப்தி இடைப்பட்ட பலன் போல் இவனுக்கு ஸ்வ ஆத்ம அனுபவம்

இங்கு ஸ்வாமி தேசிகன் –
தேவ லோகம் -மேகம் -ப்ருத்வீ புருஷன் ஸ்த்ரீ என்று ஐந்து அக்னிகளைக் கல்பித்து
அவற்றில் ஸ்ரத்தை என்னும் பூத ஸூஷ்மம் க்ரமமாக பரிணாமம் அடைந்து
சோமன் மழை அன்னம் ரேதஸ் என்ற ஹவிஸ்ஸை ஜீவனுடன் தேகத்தில் உள்ள ப்ராணன்கள்
ஹோமம் செய்கின்றன -என்பது பஞ்ச அக்னி வித்யை என்று
த்யவ் பர்ஜன்யோ அத ப்ருத்வீ ஜூஹ்வதீதி ப்ரவீதி -என்ற ஸ்லோகத்தால் அருளிச் செய்கிறார்

——————————————————————————————————————————————

இரண்டாவது அதிகரணம் –க்ருதாத்ய யதிகரணம்-

கீழே சரீரம் உள்ளவரை சம்பந்தத்தைச் சாதித்தது
இதில் கர்ம சம்பந்த நியமத்தைச் சாதிக்கிறார் என்று சங்கதி –

அனுபவிக்க வேண்டிய எஞ்சிய கர்ம பலன்களுடன் ஸ்வர்க்கத்தில் இருந்து
ஜீவன் வருகிறான் என்று நிரூபிக்கப் படுகிறது

3-1-8-க்ருதாத்யயே அநு சயவான் த்ருஷ்ட சம்ருதிப்யாம் யதேதேம் அநேவம் ச –

தூமாதி மார்க்கத்தாலே ஸ்வர்க்கம் சென்ற இஷ்டாதிகாரி ஜீவர்கள் மறுபடி மனித உலகில் திரும்பும் பொழுது
அங்கு அனுபவித்தது போக மிஞ்சிய கர்மாக்களுடன் வருகிறார்களா இல்லையா என்று சங்கை

யாவத் சம்பாதம் உஷித்வா-என்று கர்மா தொலையும் வரை வசித்து –
ப்ராப்யாந்தம் கர்மண தஸ்ய-என்று கர்மா முடியும் நிலையைப் பெற்று
என்று எல்லாம் ஸ்ருதி சொல்வதாலேயே
மிச்சத்துடன் திரும்புவது இல்லை என்று பூர்வ பக்ஷம்
இதை நிரஸனம் செய்கிறார் –

க்ருதாத்யயே அநு சயவான் –ஸ்வ க்ருதமான புண்ய கர்மாக்கள் பல அனுபவத்தால் அழிந்த பிறகு
அனுபவித்த பின் எஞ்சிய கர்மாவுடன் அனுசயத்துடன் -பூமியில் ஜனிக்கிறார்
ஏன் எனில்
த்ருஷ்ட சம்ருதிப்யாம்–சுருதி ஸ்ம்ருதிகளால் என்றபடி
நல்ல நடத்தை உள்ளவர் -புண்ய கர்மாக்களைச் செய்தவர் நல்ல ப்ரஹணாதி ஜென்மங்களை அடைகிறார்கள் என்று ஸ்ருதியும்
கர்ம சேஷத்துடன் நல்ல ரூபத்தையும் ஜாதியையும் அடைகிறார்கள் என்று ஸ்ம்ருதியும் சொல்லுமே
யதேதேம் -ஸ்வர்க்கத்துச் சென்ற வழிப்படியேயும் -சந்திரனில் இருந்து ஆகாசம் செல்வது –
அநேவம் ச -வேறு வழிகளிலும் திரும்புகிறான் என்பதாம் –
வாயு மேக அப் ராதிகளை அடைவதால் அநேகஞ்ச என்கிறது
நீரைத் தங்கி நிற்கும் நிலையை அப்ரம் என்றும்
பொழியும் நிலையை மேகம் என்றும் கூறுவதால் புநர் யுக்தி தோஷம் இல்லை –

புண்யம் செய்தவர்கள் தூ மாதி மார்க்கம் தொடங்கி பித்ரு மார்க்கம் அடைந்து சந்திர மண்டலம் செல்கிறார்கள்
புண்ய பலன்களை அனுபவித்த பின்பு
சாந்தோக்யம் -5-10-5-யாவத் சம்பாதம் உஷித்வா அத ஏதமேவ அத்வானம் புன நிவர்த்தந்தே -என்று
கர்ம பலன் உள்ள வரையில் ஸ்வர்க்கத்தில் வாழ்ந்து எஞ்சிய கர்மங்களுடன் உலகிற்கு திரும்புகின்றார்கள்

யாவத் சமபாதம் உஷித்வா -என்று எந்த கர்மத்தின் மூலமாக ஸ்வர்க்கம் புகுந்தாரோ
அந்த கர்ம பலன் அனுபவித்த பின்பு என்றபடி
இதனை ப்ருஹத் உபநிஷத் -4-4-6-
ப்ராப்யாந்தம் கர்மண தஸ்ய யத் கிஞ்சேஹ கரோத்யாயம் தஸ்மாத் லோகாத் புனரேத்யச்மை லோகாய கர்மணே-என்றது-

த்ருஷ்ட ஸ்ம்ருதி ப்யாம்–ஸ்ருதியும் ஸ்ம்ருதியும் இப்படியே கூறும்
சாந்தோக்யம் -5-10-7-
தத்ய இஹ ரமணீய சரணா அப்யாசோ ஹ யத் தே ராமணீயாம் யோநிம் ஆபத்யேரன் ப்ராஹ்மண யோநிம் வா
ஷத்ரிய யோநிம் வா வைசிய யோநிம்வா அத யே இஹ கபூய சரணா
அப்யாசோ ஹ யத் தே கபூயாம் யோ நிம் ஆபத்யேரன் ஸ்வ யோ நிம் வா ஸூகர யோநிம் வா சண்டாள யோநிம் வா -என்று
பிராமணன் ஷத்ரியன் வைஸ்யன் நாய் பன்றி சண்டாளன் ஆக பிறக்கிறார்கள்

இதே கருத்தை கௌதம ஸ்ம்ருதி -2-11/12/13-
வர்ண ஆச்ரமாச்ச ஸ்வ கர்ம நிஷ்டா ப்ரேத்ய கர்மபலம் அநுபூய தத சேஷேண விசிஷ்ட தேச ஜாதி குல ரூப ஆயு ஸ்ருத வித்த வ்ருத்த
ஸூ க மேதசா ஹி ஜன்ம பிரதிபத்யந்தே விஷ்வஞ்ச விபரீதா நச்யந்தி -என்றும்

ஆபஸ்தம்ப தர்ம ஸூத்ரமும்-2-1/2/3–
தத பரிவ்ருத்தௌ கர்ம பல சேஷேண ஜாதிம் ரூபம் வர்ணம் பலம் மேதாம் பிரஜ்ஞாம் த்ரவ்யாணி தர்ம அனுஷ்டானம் இதி
பிரதிபத்யந்தே தத் சக்ரவத் உபயோர் லோகயோ ஸூ கே ஏவ வர்த்ததே -என்றும் கூறும்

சாந்தோக்யம் -5-10-5-யாவத் சமபாதம் என்றது பலன் அளிக்கத் தொடங்கிய கர்மங்கள் ஆகும் –

ப்ருஹத் உபநிஷத் 4-4-6–யத் கிஞ்சேஹ கரோத்யம் இதே பொருளில் சொல்லும்

எஞ்சிய கர்மங்களுடன் திரும்புகிறான் –
மேலே கிளம்பும் பொழுது
தூமம் -புகை-இரவு கிருஷ்ண பஷம் தஷிணாயணம் -பித்ரு லோகம் ஆகாயம் சந்தரன் பாதையிலும்
கீழே வரும் பொழுது
சந்தரன் ஆகாயம் வாயு தூமம் அப்ரம் மேகம் மழை தான்யங்கள் புருஷன் ரேதஸ் ஸ்திரீயின் கர்ப்பம் –
என்று ஸ்வாமி தேசிகன் அருளிச் செய்கிறார்

—————————————————————————————————————————————

292-சரணாத் இதி சேத ந தத் உப லஷணார்த்தா இதி கார்ஷ்ணாஜிநி –3-1-9-

ஆசாரம் என்பதே கபூய சரணா ரமணீய சரணா பதங்கள் கூறப்பட்டது
அவை கர்மங்களையே குறிக்கும் என்று கார்ஷ்ணாஜி நி முனிவர் கூறுகிறார்

தைத்ரிய சம்ஹிதை -1-11-12-
யானி அனவத்யானி கர்மாணி தானி சேவிதவ்யாநி நோ இதராணி யானி அஸ்மாகம் ஸூ சரிதானி தானி த்வயா உபாச்யாநி–

இதனால் இன்ப துன்பங்கள் புண்ய பாப கர்மாக்களே ஆகும்

சரணாத் -ரமணீய சரணா என்னும் ஸ்ருதியில் ரமணீயம் என ஸ்ம்ருதியால் விதிக்கப் பட்ட
ஸந்த்யா வந்தனாதி ஆசாரங்களால் ப்ரஹணாதி பிறப்பை யுடையவர் என்று சொல்வதால்
அனுபவித்து மிஞ்சிய கர்மத்தால் நல்ல கெட்ட பிறப்புக்கள் என்பது இல்லை
இதி சேத ந –என்பது தவறு
தத் உப லஷணார்த்தா இதி கார்ஷ்ணாஜிநி –இவை உப லக்ஷணமாகக் கர்மாக்களையே குறிக்கும்
என்பதே கார்ஷ்ணாஜிநியின் திரு உள்ளம்
ஸந்த்யா வந்தனாதிகளை அங்கங்களாகக் கொண்ட யஜ்ஞாதி புண்ய கர்மாக்களாலேயே
ஸ்வர்க்க பிராப்தி என்று அவர் திரு உள்ளம்

இதையே மேலும் காட்டி அருளுகிறார் –

—————————————————————————————————————————————–

293-ஆநர்த்தக்யம் இதி சேத் ந தத் அபேஷத்வாத்–3-1-10-

இதி சேத் ந -ஸ்ம்ருதி விஹிதமான ஆசாரம் சுகத்தின் சாதனை இல்லை என்னில்
ஆ நர்த்தக்யம் -பயன் அற்ற தன்மை ஏற்படும் என்பது இல்லை
தத் அபேஷத்வாத்-அவ் வாசாரத்தை அங்கமாக அபேக்ஷித்தித்து தான் புண்ய கர்மம் சுகத்தை சாதிக்கும்
ஸ்ம்ருதி -ஸந்த்யா ஹீனன் ஸர்வ கர்மாக்களுக்கும் அர்ஹதை அற்றவன் என்று அல்லவோ கூறுகிறது
என்பது கார்ஷ்ணாஜிநியின் மதம் –

புண்ய பாப கர்மங்கள் ஆசாரத்தையே சார்ந்து உள்ளன –

தஷ ஸ்ம்ருதி -2-027-சந்த்யா ஹீநோ அசுசி நித்யம் அனர்ஹா சர்வ கர்மஸூ –
சந்த்யா வந்தனம் செய்யாதவன் அசுத்தமானவன் -அவன் எந்தக் கர்மங்களை செய்ய தகுதி அற்றவனாகிறான் –

வசிஷ்ட ஸ்ம்ருதி -6-3-ஆசார ஹீநம் ந புநந்தி வேதா –
ஆசாரம் இல்லாதவனை வேதத்தாலும் புனிதன் ஆக்க முடியாது –

———————————————————————————————————————————————–

294-ஸூஹ்ருத துஷ்ஹ்ருதே ஏவ இது து பாதரி —3-1-11-

புண்யம் கர்ம ஆசரதி பாபம் கர்ம ஆசரதி- யானி அனவத்யானி கர்மாணி தானி சேவிதவ்யாநி
நோ இதராணி யானி அஸ்மாகம் ஸூ சரிதானி என்று
சரண என்ற பதமும் கர்ம என்ற பதமும் தனித் தனியே சொல்லப்பட்டன –

யானி அன்வத் யானி கர்மாணி -என்று ஸ்ருதிகளில் நேராகக் கூறப்பட்ட கர்மங்கள் உணர்த்தப் பட்டன –

யானி அஸ்மாகம் ஸூ சரிதானி -ஆசாரம் மூலமாக செய்யும் கர்மங்கள் –
கோபலீவர்த்த ந்யாயம்-மாடுகளை அழைத்து வா எருதுகளை அழைத்து வா சிறப்பித்து சொல்வது போலே

ஸூஹ்ருத துஷ்ஹ்ருதே ஏவ இது து பாதரி
து ஸப்தம் முன் பக்ஷத்தை நிவ்ருத்தி செய்து
ஸூஹ்ருத துஷ்ஹ்ருதே ஏவ-ரமணீய சரணா கபூ சரணா என்னும் ஸ்ருதியில்
புண்ய கர்மாவை ஆசரிக்கிறான் பாப கர்மாவை ஆசரிக்கிறான் என்ற பிரயோகம் போலே
சரண ஸப்தத்தாலே ஸூஹ்ருத துஷ்ஹ்ருத கர்மங்களே குறிக்கப்படுகின்றன
அது தவிர ஸதாசார துராசாரங்கள் குறிக்கப் படுவது இல்லை
இது பாதரி -என்பது பாதிரி முனிவர் திரு உள்ளம்
இதுவே ஸூத்காரரின் திரு உள்ளமும்
கர்மங்கள் ஆசாரத்தை அபேக்ஷிப்பவையே என்ற கார்ஷ்ணாஜிநி திரு உள்ளமும் ஸூத்ர காரரின் திரு உள்ளமே

ஆக இத்தால்
எஞ்சிய கர்மங்களுடன் ஜீவன் மீண்டும் வருகிறான் என்றதாயிற்று –

———————————————————————————————————————————————-

கீழே வெறும் இஷ்டா பூர்த்தத்த புண்ய அதிகாரிகள் சந்திரனை அடைந்து கர்ம சேஷத்துடன்
திரும்புகிறார்கள் என்று ஸ்தாபித்தார்
இதில் விதித்ததை அனுஷ்டிக்காத அதிகாரிகளும் யமயாதனை அனுபவித்து சந்திரனை அடைந்து
மறுபடியும் திரும்புகின்றார்களா இல்லையா என்று சங்கை
கௌஷீதகீ உபநிஷத் -1-2- யே வை கே ச அஸ்மாத் லோகாத் ப்ரயந்தி சந்த்ரமசம் ஏவ தே சர்வே கச்சந்தி
இந்த உலகில் இருந்து அனைவர்களும்-புண்யவான்களும் -பாபிகளும் – சந்திர மண்டலம் செல்கிறார்கள்
என்று கூறுவதால் பாபிகள் யமலோக யாதனைகளை அனுபவித்தே சந்த்ர லோகம் ஏறுவதும் இறங்குவதும்
தவிர்க்க முடியாதவை என்ற பூர்வ பக்ஷத்தை
ஐந்து ஸூத்ரங்களாலே விளக்குகிறார் –

மூன்றாம் அதிகரணம் –அநிஷ்டாதிகார்யாதிகரணம்-
பாபம் செய்தவர்கள் சந்திர மண்டலம் செல்வது இல்லை என்பது நிரூபிக்கப் படுகிறது

295-அநிஷ்டாதிகாரிணாம் அபி ச ச்ருதம்-3-1-12-

யாகம்-இஷ்டங்கள் -குளங்கள் வெட்டுதல் -பூர்த்தம் -தத்தம் தானம் – போன்றவற்றை செய்யாமல்
பாபம் செய்தவர்களும் சந்திர மண்டலம் செல்வது கூறப்படுகிறது –

பூர்வபஷ ஸூத்ரங்கள்-இதுவும் அடுத்த நான்கும் –

கௌஷீதகீ உபநிஷத் -1-2- யே வை கே ச அஸ்மாத் லோகாத் ப்ரயந்தி சந்த்ரமசம் ஏவ தே சர்வே கச்சந்தி
இந்த உலகில் இருந்து அனைவர்களும் சந்திர மண்டலம் செல்கிறார்கள்

அனைவருக்கும் சந்த்ர மண்டல கமநம் ப்ரஸித்தம்

—————————————————————————————————————————————-

296-சம்யமனே து அனுபூய இதரேஷாம் ஆரோஹ அவரோஹா தத்கதி தர்சநாத்–3-1-13-

து சப்தம் புண்யசாலி பாபிகளுக்கு வேறுபாட்டைக் காட்டுகிறது
இதரேஷாம் சம்யமனே அனுபூய ஆரோஹ அவரோஹா பவத -பாபிகள் யமனின் ஆட்சியில்
பாபங்கள் பலனை அனுபவித்து பின் சந்திரனை அடைந்து அங்கிருந்து இரக்கம் ஏற்படுகிறது
தத்கதி தர்சநாத்–பாபிகளுக்கு யமலோகம் செல்வதாக சொல்லப்படுவதால்

யமனின் ஆணைக்கு ஏற்ப தண்டனை அனுபவித்த பின்பே சந்திர மண்டலம் செல்வதும் இறங்குவதும் நடக்கும்

கட உபநிஷத் -அயம் லோகோ நாஸ்தி பர இதி மாநீ புன புன வசமாபத்யே மே-என்றும்

தைத்ரீய ஆரண்யகம் -2-1-வைவஸ்வதம் சங்கமனம் ஜனா நாம் யமம் ராஜா நாம் –

—————————————————————————————————————————————–

297-ச்மரந்தி ச–3-1-14-

பராசரர் போன்ற மகரிஷிகள் -ஸ்ரீ விஷ்ணு புராணத்தில் -3-7-5–
சர்வே சைதே வசம் யாந்தி யமச்ய பகவன்கில -என்று
அனைவரும் யமனின் கட்டுப்பாட்டில் உள்ளனர் என்பர்

——————————————————————————————————————————————

298-அபி சப்த –3-1-15-

ரௌரவம் மஹா ரௌரவம் தாபனம் அவீசி சம்ஹாரம் கால சூத்ரம் கும்பீபாகம் ஆகிய
ஏழு நரகங்கள் ஸ்ம்ருதிகளில் ரிஷிகளால் கூறப்படுகிறது

ஏழு நரகங்களுக்குச் செல்பவராக சொல்லி யமனிடம் செல்வதாக எங்கனம் சொல்ல முடியும் என்றால்

——————————————————————————————————————————————

299-தத்ர அபி தத் வ்யாபாராத் அவிரோத —3-1-16-

யமனுடைய ஆணைக்கு உட்பட்டே நரகங்கள் உள்ளதால் விரோதம் இல்லை

தத்ர அபி -அந்த ஏழு நரகங்களிலும்
தத் வ்யாபாராத் -அந்த யமனின் உத்தரவால் நடப்பதால்
அவிரோத -முன் கூறிய யமவசத்துக்குக் குற்றம் இல்லை

பாபிகள் யமலோக யாதனைகளை அனுபவித்தே சந்த்ர லோகம் ஏறுவதும் இறங்குவதும்
தவிர்க்க முடியாதவை என்ற பூர்வ பக்ஷத்தை நிரஸனம் செய்கிறார்
இனி இந்த பூர்வ பஷங்களுக்கு பதில் கூறப்படுகிறது

——————————————————————————————————————————————-

300-வித்யா கர்மணோ இதி து பிரக்ருதத்வாத்–3-1-17-

து -ஸப்தம் பூர்வ பக்ஷத்தை விலக்குவது
பாபிகளுக்கு எவ்வாறு அர்ச்சிராதி கதி மார்க்கத்தால் ப்ரஹ்ம ப்ராப்தி இல்லையோ
அவ்வாறே தூமாதி மார்க்கத்தால் சந்த்ர பிராப்தியும் இல்லை
வித்யா கர்மணோ -அந்த ப்ரஹ்மத்தையும் சந்த்ரனை அடைதலும் –
ப்ரஹ்ம வித்யைக்கும் புண்ய கர்மத்துக்கும் பலமாய் இருப்பதால் என்றபடி
இதி து பிரக்ருதத்வாத்-இப்படி ப்ரக்ருதமாய் இருக்கையாலே என்றபடி

ப்ரஹ்ம வித்யை உள்ளவர்களுக்கு அர்ச்சிராதி மார்க்கமும்
கர்மங்களை சரிவர இயற்றுபவர்களுக்கு தூமாதி மார்க்கமும் கிட்டும் என்றே படிக்கப் படுகிறது

தேவயானத்தைப் பற்றிக் கூறும் பொழுது சாந்தோக்யம் -5-10-1-
தத்ய இத்தம் விது யே ச இமே அரண்யே ச்ரத்தா தப இதி உபாஸ்யதே–தே அர்ச்சிஷம் அபி சம்பவந்தி அர்ச்சிஷ அஹ -என்றும்

பித்ருயானத்தைப் பற்றிக் கூறும் பொழுது சாந்தோக்யம் -5-10-3-
அத யே இமே க்ராமா இஷ்டாபூர்த்தா தத்தம் இதி உபாசதே –தே தூமம் அபி சம்பவந்தி -என்றது

கௌஷீதகி உபநிஷத் -யே கே ச அஸ்மாத் லோகாத் ப்ரயந்தி சந்த்ரமசம் ஏவ தே சர்வே கச்சந்தி -என்று
அனைவரும் சந்திர மண்டலம் செல்கின்றனர்

பரமபுருஷ உபாஸன ப்ரஹ்ம வித்யா நிஷ்டர்கள் அர்ச்சிராதி மார்க்கம் சென்று திரும்பி வராமல்
பரம புருஷனை அனுபவிக்கிறார்கள் என்றும்
கிராமத்தில் இருந்து தேவாலயம் தடாகாதிகள் நிர்மாணம் யாகம் தானம் செய்பவர்
தூ மார்க்கம் மூலம் ஸ்வர்க்கம் அடைந்து திரும்புவார்கள் என்றும் இந்த ஸ்ருதிகளின் பொருள் –

பாவம் செய்தவர்கள் சந்திர மண்டலம் செல்லா விடில்
ஐந்தாவது ஆஹூதி ஏற்படாமல் உடலும் தோன்றாதே என்ன அடுத்த ஸூத்ரத்தில் சமாதானம்

——————————————————————————————————————————————–

301-ந த்ருதீயே ததா உபலப்தே–3-1-18-

ந த்ருதீயே -வித்யா நிஷ்டர் கர்ம நிஷ்டர் தவிர்த்த மூன்றாவதான பாபிகள் விஷயத்தில்
தேஹம் தொடங்க ஐந்தாவது ஆஹுதி தேவை இல்லை
ததா உபலப்தே-அவ்வாறு சுருதியில் காணப்படுவதால்

மூன்றாவது இடமாகிய நரகம் செல்லும் பாபம் செய்தவர்களுக்கு பொருட்டு ஐந்தாவது ஆஹூதி
அவசியம் இல்லை என்று ஸ்ருதி கூறும்

சாந்தோக்யம் -5-3-3-வேத்த யதா கே நா சௌ லோகோ ந சம்பூர்யதே –என்று கேட்டு
பஞ்ச அக்னி வித்யையில் பாஞ்சால மன்னன் -ஸ்வர்க்க லோகம் பூர்ணபம் ஆகாமைக்குக் காரணம் தெரியுமா என்று கேட்க

விடையாக -5-10-8-அத எதையோ பதோர்ந கதரேண ச தானி இமானி ஷூத்ராணி அசக்ருதா வர்த்தீநி பூதானி பவந்தி
ஜாயாஸ்ய ம்ரியச்வேதி ஏதத் த்ருதீயம் ஸ்தானம் தே நா சௌ லோகோ ந சம்பூர்யதே

அற்பமாய் அடிக்கடி திரும்பி வரும் பூதங்கள் பிறந்தும் இறந்தும் தவிப்பவையான பாபிகள்
இவர்களால் ஸ்வர்க்க லோகம் பூர்த்தி அடைவது இல்லை -அவர்களை மூன்றாம் இடம் -த்ருதீய ஸ்தானம் என்றும்
அவர்கள் தேவ யான பித்ரு யான மார்க்கங்களை விட்டு நரகங்களை அனுபவித்து
அடிக்கடி ஜனன மரணங்களை அடைந்து தவிக்கின்றனர் என்கிறார் –

ஆகையால் அந்த பாபிகளுக்கு பஞ்சம ஆஹுதியின் அபேக்ஷை இல்லை என்று தெரிகிறது –

ஐந்தாவது ஆஹூதி இல்லாமலேயே உடல் எடுத்தவர்கள் உண்டே -என்கிறது-

——————————————————————————————————————————————–

302-ஸ்மர்யதே அபி ச லோகே —3-1-19-

த்ரௌபதி திருஷ்டத்யும்னன் போன்ற புண்ணியம் செய்தவர்களுக்கு
ஐந்தாவது ஆஹூதி இல்லாமலே உடல் உண்டானதே –
அக்னியில் இருந்து தோன்றியதாக மகாபாரதம் சொல்லும்

——————————————————————————————————————————————–

303-தர்சநாத் ச –3-1-20-

ஸ்ருதியிலும் இதே கருத்தைக் காணலாம் –
சாந்தோக்யம் -6-3-1-தேஷாம் கலு ஏஷாம் பூதானாம் த்ரீண்யேவ பீஜானி பவந்தி அண்டஜம் ஜீவஜம் உத்பிஜ்ஜம்-என்று

கொசு போன்றவை ஸ்வே தஜம்
செடி கொடி மரம் போன்றவை உத்பிஜ்ஜம்
மனுஷ்யர் போன்றோர் ஜீவஜர்
இந்த மூன்றில் அண்டஜத்துக்கும் உத்பிஜ்ஜத்துக்கும்-கருவின் தொடர்பு வேண்டாம்

தேஜஸ் உஷ்ணம் மூலம் முட்டை உடைந்து உயிர் பிறப்பதும்
ரேதஸ் விந்து மூலம் கர்ப்பம் மூலம் பிறப்பவை –

பூமியை பிளந்து செடி போன்றவை பிறப்பதும் –
வியர்வை மூலம் போன்றும் கிருமிகள் -போன்றவை ஐந்தாவது ஆஹூதி இல்லாமல் உண்டானவை

———————————————————————————————————————————————

304-த்ருதீய சப்தாவரோத சம்சோகஜச்ய-3-1-21-

இந்த ஸ்ருதியில் பேன் போன்ற ஸ்வேதஜங்களுக்கு எப்படி அடக்கம் என்ற சங்கை வர
அத்தை நிவர்த்திப்பிக்கிறார்

சாந்தோக்யம் -அண்டஜம் ஜீவஜம் உத்பிஜ்ஜம்-என்று
உத்பிஜ்ஜம் பதம் மூலம் வெப்பத்தாலும் வியர்வையாலும் உண்டாகும் கிருமிகள் பற்றிக் கூறப்பட்டது

த்ருதீய சப்தாவரோத சம்சோகஜச்ய–உத்பிஜ்ஜம் என்ற மூன்றாம் சொல்லாலே சம்சோகஜமான ஸ்வேதத்திற்கும்
அவராக கிரஹணம் பொருள் கொள்ளப் படுகிறது

ஆகையால் பாபிகள் சந்த்ர மண்டலம் செல்வதோ திரும்பி வருத்தலோ கிடையாது என்பது ஸித்தம் –

எனவே பாபம் செய்தவர்களும் சந்திர மண்டலம் செல்வது எனபது பொருந்தாது என்றது ஆயிற்று –

———————————————————————————————————————————————-

நான்காவது அதிகரணம் –தத் ஸ்வாபாவ்யாபத்த் யதிகரணம் –
மேலே கிளம்பிய ஜீவன் ஆகாசம் போன்றவற்றுடன் தொடர்பு மட்டுமே அடைகின்றான் என்று நிரூபிக்கப் படுகிறது –

305- தத் ஸ்வா பாவ்யாபத்தி உபபத்தி-3-1-22-

தூமாதி மார்க்கத்தால் சந்திரனை அடைந்த புண்ய கர்மனுக்குத் திரும்பி வரும் வழி கூறப்படுகிறது
யதேத்தம் -சென்ற வழிப்படியே –ஆகாசம் வாயு தூமம் அப்ரம் -பரவிய மேகம் -பின் மழை பொழியும் மேகம் -என்ற
முறையைக் கூறும் ஸ்ருதியில் கூறப்படும் ஆகாசாதித் தன்மை தெய்வத்தன்மை மனுஷ்யத்தன்மை முதலியன போல்
ஆகாசாதிகளைச் சரீரமாகக் கொண்டு ஜனனம் என்னும் தன்மையதா
அன்றி ஆகாசாதிகளுக்கு சமத்துவம் பெறுவதா
என்ற சம்சயம்

ஆகாசாதி சரீரிகத்வ ரூபமே என்பது பூர்வ பக்ஷம்
ஏன் எனில்
ஸ்ரத்தையை -நீரை -ஹோமம் செய்கின்றனர்
அந்த ஆஹுதியால் ஸோம ராஜன் ஆகிறான் என்பது போலே ஆகாச பாவம் சொல்லப் படுகிறது –
ஸோம பாவம் என்பது சந்திரனுக்கு சமமான சரீரம் கொண்டு இருத்தல்
அவ்வாறே ஆகாசாதி சரீரம் என்ற
பக்ஷத்தைக் கண்டிக்கிறார் –

ஆகாயம் போன்றவற்றின் ஸ்வ பாவம் அடைகிறான் என்று கூறுவதே பொருந்தும்
சாந்தோக்யம் ஜீவன் திரும்பும் வரிசையை -5-10-5/6-
அத ஏவம் ஏவ அத்வானம் புன -நிவர்த்தந்தே யத் ஏதம் ஆகாசம் –ஆகாசாத் வாயும் வாயுர்பூத்வா தூமோ பவதி
தூமோ பூத்வா அப்ரம் பவதி -அப்ரம் பூத்வா மேகோ பவதி -மேகோ பூத்வா ப்ரவர்ஷதி–
சோமராஜா சரீரம் போலே ஆகாயம் முதலான சரீரங்களை எடுக்கின்றான்
பூர்வ பஷம்

ஸ்வா பாவ்யா பதி என்பதால் சரீரம் எடுக்க வில்லை –
தன்மைகளை மட்டுமே அடைகின்றான் எனபது சித்தாந்தம்-

வேறு உலகத்தில் இருந்து இறங்கி வரும் ஜீவனுக்கு ஆகாச வாயு தூமாதி பாவம் என்பது
தத் ஸ்வா பாவ்யாபத்தி –ஆகாசாதிகளுக்கு சமத்துவம் அடைதலே
ஆகாசாதி சரீரிகத்வம் இல்லை
ஏன் எனில்
உபபத்தி-ஸூக துக்க அனுபவங்களின் அபாவத்துக்கு -இன்மை -பொருத்தம் இருப்பதால் –
ஸோமாதி பாவத்தால் உண்டாகும் ஸூக துக்காதிகளின் அனுபவம் ஆகாசாதி பாவத்தில் இல்லாமையால்
ஆகாசாதிகளுடன் சாம்யம் வரும் என்று கருத்து –

———————————————————————————————————————————————-

ஐந்தாம் அதிகரணம் -நாதிசிராதி கரணம்
ஆகாசம் போன்றவற்றில் ஜீவன் சிறிது காலமே தங்கி விட்டுக் கிளம்புகிறான் என்று நிரூபிக்கப் படுகிறது –

306-நாசிசிரேண விசேஷாத்-3-1-23-

ஆகாசாதி இடங்களில் நீண்ட காலம் தங்கி இருக்கிறானா
அல்லது விரைவிலே திரும்பி இறங்கி வருகிறானா
என்று சம்சயம்
நீண்ட காலம் கூட இருக்கிறான் என்று பூர்வ பக்ஷம்
ஏன் எனில்
விசேஷமான வசனம் இல்லாமையாலே
என்ற பக்ஷத்தை நிரஸிக்கிறார்

மேலே வ்ரீஹ் யாதி பாவம் கூறிய இடத்தில்
சாந்தோக்யம் -5-10-6-அதோவை கலு துர் நிஷ் பிரபதரம்
சிரமப்பட்டு அரிசியில் இருந்து வெளியேறுகின்றான்-என்று கூறுவதால்

ஆகவே ஆகாசம் தொடங்கி வர்ஷம் வரை ஜீவன் விரைவிலேயே வெளியேறுவதாகத் தோன்றுகிறது

—————————————————————————————————————————————

ஆறாவது அதிகரணம் -அந்யாதிஷ்டிதாதி கரணம் –
மற்ற ஜீவன்களுடன் தொடர்பு மட்டும் கொள்கின்றான் என்கிறதாயிற்று

307-அந்யா திஷ்டிதே பூர்வவத் அபிலாபாத் —3-1-24-

தொடர்பு மட்டுமே கொள்கின்றான்

சாந்தோக்யம் -5-10-6-
மேகோ பூத்வா ப்ரவர்ஷதி தா இஹ வ்ரீஹியவா ஓஷதி வனச்பதய திலாமாஷா இதி ஜாயந்தே
தேவா ஜாயந்தே-மனுஷா ஜாயந்தோ போலே இங்கும் கூறப்படுவதால்
தாவர உடல்களுடன் பிறக்கிறான்
என்பர் பூர்வ பஷி –

தேவ பாவம் மனுஷ்ய பாவம் போல் தான்யாதிகளைச் சரீரமாகக் கொண்ட தன்மையா
அல்லது சம்பந்தம் மட்டுமா -என்ற சங்கை
நெல் முதலிய சரீரங்களைக் கொண்டு தோன்றுகிறார்களா
அன்றி பிற ஜீவன்களால் அதிஷ்டிதமான வ்ரீஹி முதலியவற்றுடன் சம்பந்திக்கிறார்களா
என்று சம்சயம்
மேகமாகப் பொழிகிறான்
பின் நெல் சாமை பச்சிலை வனஸ்பதிகள் எள் உளுந்து என்பனவாக மாறுகிறான் என்று சொல்வதால்
வ்ரீஹி முதலிய ஜென்மங்களை அடைகிறான்
என்பதே பொருந்தும் என்று பூர்வ பக்ஷம்

இதனைக் கண்டிக்கிறார்

அப்படி அல்ல –
ஆகாயம் மழை மேகம் போலே தொடர்பு மட்டுமே கொள்கிறான்-

அந்யா திஷ்டிதே -சம்பந்தம் மட்டுமே
ஏன் எனில்
பூர்வவத் அபிலாபாத் –ஆகாசாதி பாவம் போலே வ்ரீஹ் யாதி பாவம் சொல்லுகையாலே
அதற்க்கு காரணமான கர்மாவைச் சொல்லாமையாலே

சாந்தோக்யம் –
ரமணீய சரணா கபூய சரணா -சந்திர மண்டலத்தில் பலன்கள் தொடங்கப் பட்ட கர்மங்கள் முடிந்தன
என்று ஜென்மத்தின் காரணமான புண்ய பாப ரூபமான கர்மம் கூறப்படுகிறது
உண்டாகின்றன என்ற சொல் உபசார வழக்கு

பஞ்ச ஆஹூதிக்கு பின்பு எடுக்கும் உடலிலே மீண்டும் கர்ம பலன்கள் அனுபவிக்க வேண்டும்
இடைப் பட்ட காலத்தில் அனுபவிக்க கர்மங்கள் இல்லை என்பதால்
தொடர்பு மட்டுமே என்றதாயிற்று-

—————————————————————————————————————————————-

308-அசுத்தம் இதி சேத ந சப்தாத் –3-1-25-

அக்னி ஷோமம் போன்ற பசு ஆடு வதையுடன் கூடிய யாகங்களால் பெற்ற பாவங்களால்
தான்ய உடல் கொள்வான் என்பர் பூர்வ பஷி
ந ஹிம்ச்யாத் சர்வ பூதானி -சாந்தி பர்வம் -278-5–சாஸ்திர விதி என்பதால்
பாபம் வாராது என்றாலும்
ஏதாவது பலனை குறித்து செய்யும் யாகத்தில் பசு வதை பாபம் ஆகுமே என்றால்

தைத்ரிய சம்ஹிதை -2-5-5-ஸ்வர்க்க காமோ யஜேத-என்றும்

ஆபஸ்தம்ப ஸூத்ரம்-2-1-2-2-சர்வ வர்ணானாம் ஸ்வ தர்ம அனுஷ்டானே பரம் அபரிமிதம் ஸூகம் –

மனு ஸ்ம்ருதி -1-2-9-சரீரஜை கர்ம தோஷை யாதி ஸ்தாவரதாம் நர -என்றும் சொல்லும்

ஆக ஆசை விருப்பத்தின் அடியாகவே யாகம் செய்வதால்
பாபம் கிட்டி தான்ய உடலை பெறுகிறான் என்பர் பூர்வ பஷி

நெல் முதலிய தன்மைகளுடன் தோன்றுகிறார்கள் என்று பிறப்பின் காரணமான
கர்மாக்கள் ஸ்ருதி கூறா விடிலும் அசுத்தம் –
யாகாதி காம்ய கர்மங்கள் ஹிம்சை நிறைந்தமையால் அசுத்தமாகுமே என்னில்
இதி சேத ந -அது அல்ல
சப்தாத் –யாகத்தில் பயன்படுத்துவது ஹிம்ஸை இல்லை என்றும்
அதுக்குப் பொன் மயமான சரீரத்துடன் ஸ்வர்க்க கமனமும் பலமாகச் சொல்லப்பட்டு இருப்பதால்
யாகாதிகளில் ஏதும் அசுத்தமான அம்சம் இல்லை என்பதாகும் –

சித்தாந்தம் –
பசு வதை இல்லை -ஸ்வர்க்கம் செல்லவே -என்பர் –
ஹிரண்ய சரீர ஊர்த்வம் ஸ்வர்க்கம் லோகமேதி -என்று சொல்லுவரே

தைத்ரிய பிராமணமும் -நா வா வு ஏதன் ம்ரியதே ந ரிஷ்யசி தேவான் இதேஷி பதிபி ஸூ கேபி
எத்ர யந்தி ஸூ க்ருதோ நாபி துஷ்க்ருத தத்ர த்வா தேவ சவிதா ததாது என்று
சவிதா என்னும் ஸூர்யன்
அந்த மருத்துவனாய் நின்ற மா மணி வண்ணன் இடம் அழைத்துச் செல்வான் -என்றதே-

—————————————————————————————————————————————-

309-ரேதஸ் சிக்யோக-அத —3-1-26-

அத —வ்ரீஹ் யாதி தன்மை அடைந்த பின்பு
ரேதஸ் சிக்யோக-ஸ்ரூயதே -தான்யாதிகளை உண்டவன் இந்திரியத்தை யுடைய புருஷனாக மாறுகிறான்
ஆஹுதி செய்யப்பட்டு மழையாய் வந்த நீர் தான்யமாகி
மனிதன் உடலில் உணவான பின்பு இந்த்ரியமாக மாறுகிறது
இதனால் புருஷ சம்பந்தம் கூறுவதால் வ்ரீஹ் யாதி பாவத்திலும் ஸம்பந்தம் மட்டுமே ஸித்திக்கிறது

விந்துவை விடுபவனாக கூறுவது போன்று –
சாந்தோக்யம் -5-10-6-யோ யோ ஹி அந்தமத்தி யோ யோ ரேத சிஞ்சதி தத் பூய ஏவ பவதி -போலே
நெல் போன்றவைகளுடன் சேர்த்தி அடைகின்றான் என்றே கொள்ள வேணும்

—————————————————————————————————————————————–

310- யோ நே சரீரம்–3-1-27-

கர்ப்பத்தை அடைந்த பின்னரே உடல் தோன்றுகிறது
ஆகாயம் போன்றவற்றுடன் சேர்த்தி மட்டுமே கொள்கிறான் என்றதாயிற்று-

யோ நே சரீரம்-பெண் உறுப்பை அடைந்த பிறகே சரீரம் தோன்றுகிறது –
அங்கு தான் ஸூக துக்க அனுபவங்கள் உண்டாகின்றன

இதனால் ஆகாசாதிகளில் அனுபவித்து எஞ்சிய கர்மாக்களை யுடையவனுக்கு
சம்பந்தம் மட்டுமே கூறப்படுகிறது என்பதாம்

இந்தப் பாதத்தில் ஜீவனுக்கு ஸம்ஸார பந்தம் உண்மையானது என்று கூறுவதால்
சாங்க்யர்கள் -மித்யா வாதிகள் மதங்கள் நிரசிக்கப் பட்டவை ஆகின்றன –

—————————————

இப்பாதத்தில் ஆறு அதிகரணங்களின் பொருள்களை

1-ததந்திர பிரதிபத்த்ய அதிகரணத்தில் தேஹத்தை விடும் ஜீவன் பூத ஸூஷ்மங்களுடன் போகிறான் என்றும்
2-க்ருதாத்ய யாதிகரணத்தில் -ஸ்வர்க்கத்தை அனுபவித்த ஜீவன் போன வழியிலும் வேறு வழியிலும் திரும்புகிறான் என்றும்
3-அநிஷ்டாதிகார்யாதிகரணத்தில் நரகம் அடைந்தவர்களுக்கு சந்த்ர பிராப்தி இல்லை என்றும்
4-தத் ஸ்வா பாவ்யாபத்த்யதிகரணத்தில் ஆகாசாதிகளுடன் ஸாம்யமே தவிர ஆகாசாதிகளாக ஜென்மம் இல்லை என்றும்
5-நாதிசிராதி கரணத்தில் -ஆகாசாதிகளில் இருந்து சீக்கிரம் இறங்குகிறான் என்றும்
6-அந்யா திஷ்டிதாதி கரணத்தில் -பர சரீர பூதமான வ்ரீஹ் யாதிகளிலே ஸம்பந்தம் மாத்ரமே
என்றும் விளக்கப்பட்டன என்று ஸ்வாமி தேசிகன் அருளிச் செய்கிறார் –

————————————————————————————————–—————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஸ்ருதி பிரகாசர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ போதாயனர் -வ்ருத்தி காரர் – ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பாதராயணர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பாஷ்யார்த்த தீபிகை –இரண்டாம் அத்யாயம் –மூன்றாம் பாதம் —

November 26, 2021

ஸ்ரீ பாஷ்யம் -மங்கள ஸ்லோகம்

அகில புவன ஜன்ம ஸ்தேம பங்காதி லீலே
விநத விவித பூத வ்ராத ரக்ஷைக தீஷே
ஸ்ருதி சிரஸி விதீப்தே ப்ருஹ்மணி ஸ்ரீ நிவாஸே
பவது மம பரஸ்மின் சேமுஷீ பக்தி ரூபா –

பாராசார்ய வச ஸூதாம் உபநிஷத் துக்தாப்தி மத்யோத் த்ருதாம்
சம்சாராக்னி விதீபன வ்யபகாத ப்ராணாத்மா சஞ்சீவி நீம்
பூர்வாச்சார்ய ஸூரஷிதாம் பஹூ மதி வ்யாகாத தூரஸ்தி தாம்
ஆ நீதாம் து நிஷாஷரை ஸூ மனஸோ பௌமா பிபந்து அந்வஹம்–

—————————————————————-

வேத பாஹ்யங்களான ஸாங்க்யாதி தந்திரங்கள் நியாய ஆபாஸத்தை மூலமாகக் கொண்டவை –
முன் பின் முரண்பாடு உள்ளவை-அசமஞ்சஸம் என்று ஸ்தாபித்த பின்னர்
இந்த பாதத்தில் தன் பக்ஷத்துக்கு தோஷ லேசமும் இல்லை என்று காட்டி அருள
ப்ரஹ்மத்தின் கார்யமான சித் அசித் ஆத்மகமாம் பிரபஞ்சத்துக்கு
கார்யத்வம் எந்த வகையில் என்பது நிரூபிக்கப் படுகிறது
என்பது பாத சங்கதி –

முதல் அதிகரணம் –வியதத் அதிகாரணம் –

ஸ்ரீ பாஞ்ச ராத்ர அதிகரணத்தில்
ஜீவனின் உத்பத்தி வாதமானது ஜீவனுக்கு அபிமானியான ஸங்கர்ஷணாதிகளைக் குறிப்பது ஆதலின்
உபசார வழக்கு எனப்பட்டது
அப்படியாகில்
அதே நியாயத்தில் ஆகாசத்துக்கு உத்பத்தி வாதமும் உபசார வழக்கு ஆகட்டுமே என்ற சங்கையில்
இந்த அதிகரணம் எழுகிறது என்று சங்கதி –

ஸூத்ரம் –213–ந வியத் அஸ்ருதே –2-3-1-

ஆகாசம் உண்டாகிறதா இல்லையா என்று சம்சயம்
அது உண்டாவது இல்லை
அஸ்ருதே -ஆத்மாவைப் போலவே நிர் அவயவமான ஆகாசத்துக்கு உத்பத்தி எங்கும் கேட்கப்படாமையால்
என்ற பூர்வ பக்ஷத்தைக் கண்டிக்கிறார்

———-

ஸூத்ரம் –214–அஸ்தி து –2-3-2-

து -பக்ஷம் மாறுவதைக் காட்டுகிறது
அஸ்தி -ஆகாசத்துக்கு உத்பத்தி உண்டு
ஏன் எனில்
ஆத்மன ஆகாஸஸ் ஸம்பூத -என்று
உத்பத்தி ஸ்ரவணத்தாலே பிரமாணாந்தரத்தாலே அப்ராப்தமான ஆகாச உத்பத்தியை ஸ்ருதி விளக்குவதால்
வஹ்னினா சின்ஜேத்-நெருப்பினால் நனைக்க வேண்டும் என்பது போலே
இதுக்குத் தகுதி இன்மை -அயோக்யதை -இல்லை என்று கருத்து –

————-

ஸூத்ரம் –215-கௌண்ய சம்பவாத் ஸப்தாச்ச –2-3-3-

மேலும் பூர்வ பக்ஷத்தை உபந்யசிக்கிறார்
ஆத்மன ஆகாஸஸ் ஸம்பூத-என்கிற ஸ்ருதி
கௌணீ –முக்யப் பொருள் அற்றது -உபசார வழக்கு
ஸூஷ்ம அவஸ்தமான தன்னிடம் இருந்து ஸ்தூல அவஸ்தமான தான் உண்டாகிறது என்ற
முக்கியமற்ற அர்த்தத்தைக் கூறுகிறது
ஏன் எனில்
அசம்பவாத் -தத் தேஜோ அஸ்ருஜத -என்று
ஜகத்தின் ஸ்ருஷ்டிக்கு முன்பு தேஜஸ்ஸூ உண்டாகிறது -என்பதால்
ஸப்தாச்ச -வாயுச் சாந்த ரிஷஞ்ச ஏதத் அம்ருதம் -என்று
ஆகாசத்துக்கு அம்ருதத்வ சப்தத்தாலேயும் வ்யுத் உத்பத்தி கௌணீ யாகும் -உபசார வழக்கே என்றவாறு –

———————

ஸூத்ரம் –216-ஸ்யாச்ச ஏகஸ்ய ப்ரஹ்ம சப்தத்வத் –2-3-4-

ஏகஸ்ய ஸ்யாச்ச –ஆத்மன ஆகாஸஸ் ஸம்பூத-ஆகாசாத் வாயு -வாயோர் அக்னி —
முதலிய இடங்களில் அனு ஷக்தமாய்க் கொண்டுள்ள ஒரு ஸம்பூத சப்தத்துக்கு
ஆகாசஸ் சம்பூத -என்பதில் கௌணத்வமும் –
வாயுஸ் ஸம்பூத-என்பதில் அனு ஷக்தமான அதே பதத்துக்கு முக்யத்வமும் இருக்கலாம்
ப்ரஹ்ம ஸப்த வத்தஸ்மாதேதத் ப்ரஹ்ம நாம ரூபம் அன்னஞ்ச ஜாயதே தபஸா சீயதே ப்ரஹ்ம
என்ற இடங்களில்
பிரதானத்தில் கௌணமாகவும் பர ப்ரஹ்மத்தில் முக்யமாகவும் கொள்வது போலே
இதுவும் கூடலாம் என்பது பூர்வ பக்ஷ ஸூத்ரம்

இந்த சங்கையை மேல் நிரஸனம் செய்கிறார் –

———————-

ஸூத்ரம் –217–ப்ரதிஜ்ஜா ஹாநி அவ்யதி ரேகாத் –2-3-5-

யேநா ஸ்ருதம் ஸ்ருதம் பவதி -என்று சொன்ன ப்ரஹ்ம விஞ்ஞானத்திலே
ஆகாசம் முதலான சர்வ விஞ்ஞான ப்ரதிஜ்ஜைக்கு
அஹாநி -தடை இல்லை
அவ்யதி ரேகாத் -ஆகாசமும் ப்ரஹ்மத்தினிடம் தோன்றியது ஆதலின்
ப்ரஹ்ம கார்யமான ஜகத்தில் அந்தர் பூதம் ஆகையால் உப பன்னமே யாகும் என்பதாம் –

—————————-

ஸூத்ரம் –218–சப்தேப்ய –2-3-6–

ஐததாத்ம்யம் இதம் ஸர்வம் -என்ற ஸ்ருஷ்டியில்
ப்ரஹ்மத்துக்கு ஸ்ருஷ்டிக்கு முன்பு ஏகத்வத்தை உறுதிப் படுத்தலையும் சர்வாத்மத் வாதிகளையும் சொல்லும்
ஸப்தங்களாலேயும் ஆகாசத்துக்கு உத்பத்தி உண்டு என்று தோற்றுகிறது
தத் தேஜஸ் அஸ்ருஜத-என்கிற வாக்கியத்தில்
ஆகாசத்துக்கு உத்பத்தி கூறப்படவில்லை என்பது வேறு ஸ்ருதியால் விளக்கப்பட்டது
அதன் உத்பத்தியைத் தடுக்க மாட்டாது என்பது கருத்து

—————–

ஸூத்ரம் -219-யாவத் விகாரந்து விபாகோ லோகவத் –2-3-7–

சாந்தோக்யத்தில் -தத் தேஜஸ் அஸ்ருஜத-என்று
தேஜஸ்ஸூக்கு ஸ்ருஷ்டி சொன்னது போலே ஆகாசத்துக்கு வெளிப்படையாகக் கூறப்பட வில்லை
அப்படி இருந்தாலும் அங்கேயே
ஐததாத்ம்யம் இதம் ஸர்வம்-என்று
யாவற்றும் ஸமஸ்த ஜகத்தும் ப்ரஹ்மத்தின் விகாரம் என்றே கூறப்பட்டுள்ளமையால்
விபாக -உத்பத்தி சொல்லப்பட்டதாகிறது
லோகவத் -உலகில் யாவரும் தேவதத்தன் புதல்வர்கள் என்று சொல்லிப் பின் குறிப்பிட்ட சிலரை மட்டும் சுட்டி
இவர்கள் தேவதத்த புதல்வர்கள் என்று சொன்னால் மற்ற எல்லாரும்
அவனுடைய புதல்வர்கள் என்பதைக் காட்டுவதாகிறது –
அதேபோல் இங்கும் க்வசித் தேஜஸ்ஸு க்கு உத்பத்தி சொன்னது
ஆகாசத்தில் உத்பத்தையைக் காட்டுவதற்க்கே யாகும் என்று அபிப்ராயம் –

——————

ஸூத்ரம் –220-ஏதேந மாதரிச் வாவ் வ்யாக்யாத –2-3-8–

ஏதேந –ஆகாசத்துக்குக் கூறிய நியாயத்தாலே
மாதரிச் வாவ் வ்யாக்யாத-வாயுவும் விளக்கப்பட்டது
ப்ரஹ்மத்தின் காரியமே என்று கூறப்படுகிறது
மேலே தேஜோ அத ததாஹ் யாஹ 2-3-10-என்ற ஸூத்ரத்தில்
அத -என்ற சொல்லாலே வாயுவை பாரமர்சிக்கைக்காக
ஏதேந மாதரிச் வாவ் வ்யாக்யாத–என்று தனி ஸூத்ரம் செய்தார் என்று கருத்து –

—————-

ஸூத்ரம் –221-அசம்ப வஸ் து ஸதோ அனுப பத்தே –2-3-9–

து -என்பது ஏவகார பொருளில் வந்தது
ஸத் அஸ்து அஸம்பவ –ஸத் என்ற ப்ரஹ்மத்துக்கு உத்பத்தி -அஸம்பவ-இல்லாமை –
ப்ரஹ்மத்தைத் தவிர வேறே எதற்கும் உத்பத்தி இல்லாமை கூற முடியாது -என்பதாயிற்று
அனுப பத்தே -ஏக -விஞ்ஞானத்தால் ஸர்வ விஞ்ஞானம் என்ற
ப்ரதிஜ்ஜைக்கு அனுபவத்தி வாராமைக்காக ப்ரஹ்மத்தைத் தவிர்த்த ஆகாசாதி ஜகத்து முழுவதற்கும்
உத்பத்தி சித்தித்தது –

————————

இரண்டாவது அதிகரணம் –தேஜோ அதிகரணம் –

மஹத் முதலியவற்றுக்கும் ப்ரக்ருதியாதிகளைச் சரீரமாகக் கொண்ட ப்ரஹ்மத்திடம் இருந்து உத்பத்தியை
இவ்வதிகரணத்தில் சாதிக்கிறார் என்று சங்கதி
நான்கு ஸூத்ரங்கள் பூர்வ பக்ஷம்

ஸூத்ரம் –222-தேஜோ அதஸ் ததாஹ்யாஹ –2-3-10-

ப்ரஹ்மத்தால் அனு பிரவேசிக்கப்பட்ட மஹான் அஹங்காரம் முதலிய கார்யங்கள்
தனி ப்ரக்ருதி முதலியவற்றில் இருந்து உண்டாகின்றனவா
அல்லது ப்ரக்ருதியை சரீரமாகக் கொண்ட பரமாத்மாவின் இருந்து உண்டாகின்றனவா
இவ்வாறு ஆகாசாத் வாயு -என்கிற இடத்தில்
வெறும் ஆகாசத்தில் இருந்து வாயு தோன்றுகிறதா
அல்லது ஆகாசத்தை சரீரமாகக் கொண்ட பரமாத்மா விடம் இருந்து தோன்றுகிறதா என்று சங்கை
கேவலம் பிரகிருதி முதலியவற்றில் இருந்தே தோன்றுகின்றன என்பது பூர்வ பக்ஷம்
ஆகாசாத் வாயு -வாயோர் அக்னி -என்று கேவலம் ஆகாசாதிகளே காரணங்கள் என்று
சொல்லுகையால் என்னும் பக்ஷத்தை உபந்நியாசிக்கிறார்

அத-கேவல வாயுவில் இருந்து
தேஜஸ் -தேஜஸ் உண்டாகிறது
ததாஹ்யாஹ-ஸ்ருதி அப்படித்தான் கூறுகிறது –

——–

ஸூத்ரம் –223-ஆப –2-3-11-

அதஸ் ததாஹ்யாஹ -என்று கூட்டிக் கொள்ள வேண்டும்
அத-கேவலம் இந்த தேஜஸ்ஸில் இருந்தே
ஆப -ஜலம் உண்டாயிற்று
ததாஹ்யாஹ -ஸ்ருதி அப்படித்தான் கூறுகிறது –

————

ஸூத்ரம் -224-ப்ருத்வீ -2-3-12-

இவ்வாறே பிருத்வீயும் கேவலம் அப்புக்களில் இருந்து -ஜலத்தில் இருந்தே உண்டாகிறது
என்று ஸ்ருதி கூறுகிறது –
தா அன்னம் அஸ்ரு ஜந்த –என்னும் இடத்தில்
அன்ன -சப்தத்தால் எப்படி பிருத்வீ கூறப்படுகிறது என்றால்

———

ஸூத்ரம் –225-அதிகார ரூப சப்தாந்த ரேப்ய–2-3-13-

த அன்னம் அஸ்ருஜந்த -என்னும் இடத்தில் அன்னம் என்று பிருத்வீ கூறப்படுகின்றது
ஏன் எனில்
அதிகாரத்தால் -மஹா பூதங்களில் ஸ்ருஷ்டி பிரகரணம் ஆகையால்
ரூபாத் யத் க்ருஷ்ணம் ததந் நஸ்ய -என்று
மேல் வாக்யத்தாலே பிருத்வியின் க்ருஷ்ண ரூபத்தை அன்னத்துக்குச் செல்வதாலும்
சப்தாந்தராச்ச –இந்த சாந்தோக்யத்துக்கு சமான பிரகரணமான தைத்ரியத்திலே
அத்ப்ய ப்ருத்வீ –ஜலத்தில் இருந்து பிருத்வீ உண்டாகிறது என்று கூறும்
வேறு சப்தத்தாலும் அன்னம் என்பது பிருத்வீயே ஆகும்

இந்த பூர்வ பக்ஷத்தை நிரஸனம் செய்கிறார் –

———–

ஸூத்ரம் –226-ததபித்யானா தேவது தல் லிங்காத் ஸ –2-3-14-

து சப்தம் பூர்வ பக்ஷத்தை விலக்குவது
கேவலம் மஹத் அஹங்காரம் ஆகாச தேஜஸ் வாயு முதலியவை தம் கார்யங்களை உண்டாக்குபவை அன்று –
ஆனால் ஸ ஏவ -மஹத்தாதிகளைச் சரீரமாகக் கொண்ட பரமாத்மாவே அஹங்காராதிகளுக்கு காரணம்
தல் லிங்காத் –தத் அபி -த்யானத் –
பரமாத்மாவே அஹங்காராதிகளின் காரணம் என்பதற்கு லிங்கமான
பரமாத்மாவின் அபித்யான ரூபமான ஸங்கல்பத்தாலே
தத் ஈஷத
பஹுஸ்யாம் ப்ரஜாயேய யேதி
தத் தேஜோ அஸ்ருஜத
தத் தேஜ ஈஷத –தா ஆபா ஈஷாந்த
பலவாக ஆவோம் -உத்பத்தி செய்வோம்
இது முதலிய இடங்களிலே பஹு வான ஸங்கல்ப ரூபமான அபித்யானம் பரமாத்ம லிங்கம்
என்று அன்றோ சொல்லப்படுகிறது

இங்கு தேஜஸ் முதலிய சொற்கள்
தேஜஸ் முதலியவற்றைச் சரீரமாகக் கொண்ட பர ப்ரஹ்ம பரங்கள் என்று
நாம ரூப வியாகரண ஸ்ருதியாலே ஸித்தித்தது
கேவலமான அசேதனங்களுக்கு இத்தைய ஸங்கல்பம் கூடாது என்று கருத்து –

————–

ஸூத்ரம் –227–விபர்ய யேண து க்ரமோ அத உப பத்யதே –2-3-15-

து -என்பது ஏவகாரப் பொருளில் வந்தது –
விபர்ய யேண-க்ரமமும் இதனாலே பொருந்துகிறது
ஆகாசாத் வாயு -முதலியவற்றில் பரம்பரையாகக் கூறப்பட்ட ஸ்ருஷ்டி க்ரமத்தை விட
ஏதஸ் மாஜ் ஜாயதே பிராணா -மனஸ் -ஸர்வ இந்திரியாணி ச -முதலிய ‘இடங்களில் சொன்ன
ப்ரஹ்மத்தின் இடத்தில் இருந்தே எல்லாம் உண்டாகிறது என்கிற விபரீத க்ரமமும்
அத ஏவ உப பத்யதே –அதை அதை சரீரமாகக் கொண்ட பரமாத்வின் ஸங்கல்பத்தாலே
ஸ்ருஷ்டி என்று சொன்னால் தான் பொருந்தும் –

—————–

ஸூத்ரம் –228-அந்தரா விஞ்ஞான மனஸீ க்ரமேண தல் லிங்காத் இதி சேந் ந அவிசேஷாத் –2-3-16-

விஞ்ஞான காரணங்களாக இந்திரியங்கள் மனம் என்பவை
ஏதஸ்மாஜ் ஜாயதே ப்ரானோ மன ஸர்வ இந்திரியாணி ச
கம் வாயுர் ஜ்யோதிர் ஆப ப்ருத்வீ –முதலிய ஸ்ருதிகளிலே
ஏதஸ்மாத் -என்பது பர ப்ரஹ்மம் அன்று -தன்மாத்ரத்தைக் குறிப்பது
ஆகவே ஆகாசத்திற்கும் ஐந்து தன்மாத்ரைக்கும் நடுவே இந்திரியங்களும் மனஸும் பிராணனும்
க்ரமப்படி உண்டாகின்றன என்று இந்த க்ரம ஸ்ருஷ்டி விவஷிக்கப் படுகிறது

தல் லிங்காத் -பிருத்வி அப்யஸூ ப்ரலீயதே என்று தொடங்கி –
வாயு ஆகாச ப்ரலீயதே -ஆகாசம் இந்த்ரியேஷூ ப்ரலீயதே —
இந்திரியாணி தன்மாந்த்ரேஷு ப்ரலீயதே — -தன்மாத்ராணீ பூதாதவ் ப்ரலீயந் தே —
என்று கூறிய பிரளய க்ரமத்தை நினைவுறுத்தும் லிங்கத்தால் அவ்வாறே தோன்றுகிறது
இதி சேந் ந -என்பது தவறு
அவிசேஷாத்–பூதங்களுக்கும் தன்மாத்திரைகளுக்கும் இடையில் விஞ்ஞானங்களும் மனமும் உண்டாகிறன என்றாலும்
தேஜஸ் முதலிய சொற்கள் அவற்றைச் சரீரமாகக் கொண்ட ப்ரஹ்மத்தையே குறிப்பவை என்றால் போலே
இந்திரிய மனஸ் பிராண சப்தங்களும் அவற்றை சரீரமாகக் கொண்ட ப்ரஹ்மத்தையே குறிப்பவை யாதலின்
அனைத்திற்கும் ப்ரஹ்மத்தின் இடம் இருந்தே ஸ்ருஷ்டி என்ற பொருள் முடிவதால்
ஏ தஸ்மாத் ஜாயதே பிராண-என்பதற்கும்
ஏ தஸ்மாத் ஜாயதே கம் -என்பதற்கும்
வேறுபாடு ஏதும் இல்லாமையாலே ப்ரஹ்மத்திடம் இருந்தே சாஷாத்தாக சர்வமும் உண்டாகின்றன
என்பதற்கு இவ் வாக்கியம் ப்ரமாணமாம்

உலகில் தேஜஸ் அக்னி முதலிய சொற்களுக்கு ப்ரஹ்மமே பொருள் என்று கூறியது
முக்யமில்லாமல் கௌணமாகி விடுமே என்னும் சங்கையை அடுத்தபடி நீக்குகிறார் –

———-

ஸூத்ரம் –229–சராசர வ்யபாஸ்ரயஸ் து ஸ்யாத் தத் வ்யப தேசோ பாக்த தத் பாவ பாவித்வாத் –2-3-17-

து -என்பது சங்கையை விலக்குகிறது
சராசர வ்யபாஸ்ரயஸ் -ஜங்கம ஸ்தாவர வஸ்துக்களைச் சொல்லுகிற
தத் வ்யப தேச-அந்த ஜங்கம ஸ்தாவர வாசகமான சொற்கள்
ப்ரஹ்மணி அபாக்த -ஜகத்தின் அந்தர்யாமியான ப்ரஹ்மத்தையே முக்கியமாகக் குறிப்பன
தத் பாவ பாவித்வாத்–ப்ரஹ்மத்தின் அநு ப்ரவேசத்தால் நடப்பதால்
இதனால் தேஜஸ் முதலிய சப்தங்களும் ப்ரஹ்ம பர்யந்தம் குறிப்பிடுவன என்பதற்கும்
ப்ரஹ்மம் சர்வத்துக்கும் அந்தர்யாமீ என்பதே காரணம் என்பதாகிறது

அநேந ஜீவே நாத்மன் அனு ப்ரவிஸ்ய நாம ரூபே வியாகரவாணி தத் அனு பிரவிஸ்ய சச்ச த்யச்சா பவத் -என்னும்
ஸ்ருதிகளில் லோகத்தில் புத்ராதிகளுக்கு நாம ரூபாதி வியாகரணம் செய்யும் பெற்றோர்கள் போல் அன்றிக்கே
செய்யப்படும் நாம ரூபங்கள் தன் வரையாக வேண்டும் என்று எம்பெருமான் அவற்றுள்
அந்தப் பிரவேசம் செய்வதாலேயே ஸர்வ ஸப்தங்களும் அந்தர்யாமியான விசேஷ்யம்-ப்ரஹ்மம் -வரை போதிப்பவை
ஆகையால் ப்ரஹ்ம போதகத்வம் என்பதே முக்யம் என்பது கருத்து –

—————

மூன்றாம் அதிகரணம் -ஆத்ம அதிகரணம்

இப்படி அசேதனத்திற்கு ஸ்வரூப பரிணாம ரூபமான ப்ரஹ்ம கார்யத்தைக் கூறி
ஜீவனுக்கு அசேதனம் போலே அத்தகைய கார்யத்வம் இல்லா விட்டாலும்
ஸ்வ பாவ அந்யதா பாவம் -மாற்றம் -என்னும் கார்யம் கூடுமாதலின் –
ப்ரஹ்ம கார்யத்வம் பொருந்துவதை இவ்வதி கரணத்தில் ஸ்தாபிக்கிறார்
என்று சங்கதி –

ஸூத்ரம் –230–ந ஆத்மா ஸ்ரூதே நித்யத் வாச் ச தாப்ய–2-3-18-

ஆத்மா உத் பன்னம் ஆகிறதா இல்லையா என்று சம்சயம்
ஆகிறது என்று பூர்வ பக்ஷம்
தோயேன ஜீவான் விஸ சர்ஜ பூம்யாம் பிரஜாபதி -ப்ரஜா அஸ்ருஜதே -முதலிய
ஸ்ருதிகளில் ஜீவனுக்கு உத்பத்தி சொல்லப்பட்டு இருப்பதால் -என்றபடி
ஆனால்
நித்யோ நித்யாநாம் சேதனச் சேதநாநாம் -என்று ஜீவன் நித்யனாகக் கூறப்பட்டு இருக்கிறதே என்றால்
வாயுச் சாந்தரிஷஞ்சை தத் அம்ருதம் -என்பது போலே
நீண்ட காலம் நிற்பது என்ற கருத்தைக் கொண்டது எனலாம்
ஆத்மாவுக்கு உத்பத்தி உண்டு என்பதை ஒத்துக் கொள்ள விட்டால் ப்ரஹ்ம கார்யத்வம் கூடாமையாலே
ஏக விஞ்ஞானத்தால் ஸர்வ விஞ்ஞானம் வரும் என்ற ப்ரதிஜ்ஜை பொருந்தாது
என்று கூறும் பக்ஷத்தை நிராகரிக்கிறார் –

ந ஆத்மா ஸ்ரூதே –ஆத்மா உத்பத்தி உள்ளது அன்று
ந ஜாயதே ம்ரியதே வா விபச்சித் -என்பது போன்ற
ஸ்ருதிகளால் உத்பத்தி இல்லை எனப்படுவதால்
தாப்யநி த்யத் வாச்ச -நித்யோ நித்யாநாம் முதலிய ஸ்ருதிகளில் ஆத்மாவுக்கு
நித்யத்வம் சொல்லப்படுவதால் என்றபடி
ஜீவர்களுக்கு ஸ்ருஷ்டியைச் சொன்னது ஸூக துக்க அனுபவத்துக்கு ஏற்றபடி
ஞானத்துக்கு சுருக்கமும் விரிவுமாகிற ஸ்வ பாவ மாற்றம் என்னும் காரியத்தைக் கருத்தில் கொண்டதே யாகும் –
இத்தகைய வேறு அவஸ்தையைப் பெறலாகிற உத்பத்தி கூடுமாகையாலே
ஜீவனுக்கு ப்ரஹ்ம கார்யத்வம் தடை அற்றதாதலின்
ஏக விஞ்ஞானத்தால் ஸர்வ விஞ்ஞானமும் வரும் என்கிற ப்ரதிஜ்ஜை தவறு அற்றதாகிறது
ஸ்ருஷ்டிக்கு முன்பு ப்ரஹ்மம் ஏகமே இருந்தது என்பது
தேவர் முதலிய நாம ரூப விபாகம் அற்ற ஸூஷ்ம ஜீவ சரீரகம் என்று கருத்து –

இவ்விடம் முக்கியமானதொரு விஷயம்
நம் சித்தாந்தத்தில் ஸர்வ த்ரவ்யங்களின் ஸ்வரூபம் நித்தியமாய் இருந்தாலும்
அநித்யங்களான அவஸ்தா பேதங்களை இட்டு அநித்யம் என்று கூறுகிறோம்
இப்படி அநித்யங்களான மஹத்வாதி அவஸ்தா மூலமான த்ரவ்யங்கள் அநித்யங்கள் ஆனாலும்
அவயவியை ஒப்புக் கொள்ளாமையாலே ஸ்வரூப பத நித்யத்வம் ஸித்தமாயிற்று
அப்படியே த்ரவ்யங்களிலே அடங்கிய ஆத்மாவுக்ககும் ஸ்வரூப பத நித்யத்வம் ஸித்தமாயிற்று இருக்க
ந ஆத்மா ஸ்ருதே -என்று மறுபடியும் ஆத்மாவுக்கு நித்யத்வத்தை ஏன் கூறுகிறார் எனில்
இவ்விஷயத்தில் சிறிது வேறுபாடு உள்ளது
நாமாந்தர பஜன காரணமான அவஸ்தைகள் ஸ்வரூபத்தைச் சார்ந்தவை
அது போல் ஆத்மாவின் ஸ்வரூபமே நிர்விகாரமாதலின் ஞான சங்கோச ரூப அவஸ்தையும்
தேவத்வம் முதலிய அவஸ்தையும் ஆத்ம ஸ்வரூபத்தைச் சார்ந்தவை அல்ல என்னும் பேதத்தைக் காட்டவே
திரும்ப ஆத்மாவின் நித்யத்வத்தை இங்கே கூறுகிறார்
இதனால் த்ரிகுணாத்மக த்ரவ்யம் போலே ஜீவனுக்கு ஸ்வரூப விகாரம் இல்லை என்று கூறியது ஆகிறது

தேவாதிகளான அவஸ்தைகள் ஸ்வரூபத்தைச் சாராதவை
ஆனால் ப்ரத்யக்த்வம் ஞாத்ருத்வம் என்ற இரு தர்மங்கள் நித்யங்கள்
சம்சார தசையில் பல சரீரங்களை எடுக்கையிலும் ஸ்வரூபத்தை விடுவது இல்லை
இந்தப் ப்ரத்யக்த்வம் இரண்டு விதம்
நான் என்று தனக்குத் தோற்றுகை -பிறவற்றுக்குத் தான் தோற்றுகை
நான் நான் என்று தனக்குத் தோற்றுகை ஸ்வரூபத்தால் ஏற்படுவது
இது தான் ஸ்வஸ்மை ஸ்வயம் பாசமானத்வம் எனப்படும்
நான் உறங்கினேன் நான் இத்தகையவன் என்று
வேறு விசேஷங்களுடன் கூடித் தோன்றுகை பரதஸ் ஸ்வஸ்மை பாசமானத்வம்
இது தர்ம பூத ஞானத்தால் ஆவது -இவ்விரண்டும் சித்தாந்தத்துக்கு ஏற்றது
இவ்வபிப்ராயத்தாலேயே ஸூத்ர காரர் மறுபடி ஆத்ம நித்யத்வத்தை அருளிச் செய்தார் என்பதாம்

————–

நான்காம் அதிகரணம் –ஜ்ஞாதி கரணம்

ப்ரசங்கத்தால் ஜீவனின் ஸ்வரூபத்தை நிரூபிக்கிறார் –
ஜீவன் சைதன்ய மாத்ர -ஞான மாத்ர -ஸ்வரூபனா
ஜட ஸ்வரூபனாய் இருந்து வைத்து புதிதாக வந்த ஞானத்தைப் பெற்றவனா
அல்லது ஞாத்ருத்வத்தையே ஸ்வரூபமாகக் கொண்டவனா என்று சம்சயம்
ஞான மாத்ர ஸ்வரூபம் என்று முதல் பக்ஷம்
விஞ்ஞானம் யஜ்ஞம் தநுதே -என்று ஞான ஸ்வரூபன் என்கிறது –
ஸூஷு தி மூர்ச்சாதிகளில் ஆத்மாவுக்கு ஞானம் தோன்றாமையால்
சைதன்ய குணம் வரப்பெற்று கல் போன்று இருக்கிறான் என்பது இரண்டாம் பக்ஷம்
இவ்விரண்டையும் நிரசிக்கிறார் –

ஸூத்ரம் –231-ஜ்ஞ அத ஏவ –2-3-19-

ஜ்ஞ –ஜீவன் ஞான ஆஸ்ரயனே
அத ஏவ -அதயோ வேத இதம் ஜிக்ராணீ திச ஆத்மா நபஸ்யோ ம்ருத்யும் பஸ்யதி –போன்ற ஸ்ருதிகளால்
பக்தன் முக்தன் என்றும் இரு வகை ஜீவனும் ஞாதா என்று கூறுவதாலே ஆத்மா ஞாதாதே என்பது ஸித்தாந்தம்
ஞான மாத்ரம் என்று ஸ்ருதி கூறியது நித்தியமான தர்மபூத ஞானம் ஆத்மாவுக்கு ஸ்வரூப நிரூபக குணமாகையாலும்
ஆத்ம ஸ்வரூபம் ஸ்வயம் ப்ரகாசகமாகையாலும் என்றபடி
ஸூஷூப்த்யாதிகளிலே தர்ம பூத ஞானம் கர்மத்தால் சங்குசிதமாய் இருக்கிறது –
ஆதலின் ஆத்மா ஞாத்ரு ஸ்வரூபன் என்று தேறுகிறது

————-

ஜீவாத்மா விபு என்னும் வைசேஷிகன் இரண்டாம் பக்ஷத்தை நிரசிக்கிறார்

ஸூத்ரம் –232–உத் க்ராந்தி கத்யாக தீ நாம் –2-3-20-

ஸ்ருதே -என்று கூட்டிக் கொள்ள வேண்டும்
உத் க்ராந்திக்குப் பின் கதி -ஆகமனம் பற்றிய ஸ்ருதி உள்ளமையால் என்றபடி
அணு ஸ்வரூபோ ஜீவ –தேந ப்ரத்யோ தேந ஏஷ ஆத்மா நிஷ் க்ராமதி -என்று
ஜீவனுக்கு தேகத்தில் இருந்து உத் க்ராந்தி -வெளியேற்றம் -ஸ்ருதியில் ப்ரஸித்தமானது
ஆத்மா விபுவானால் இது எப்படிக்கூடும்
யேவை சாஸ்மாத் லோகாத் ப்ரயந்தி சந்த்ர மச மேவ தே கச்சந்தி -என்று
தேகத்தில் இருந்து வெளிக்கிளம்பும் ஜீவன் ஸ்வர்க்கத்துக்குச் செல்லலும்
புனரேதி அஸ்மை லோகாய கர்மணே -என்று
மறுபடியும் பூமியில் கர்ம சேஷத்தை அனுபவிக்கைக்காக வருகிறான் என்று வருகையும்
கூறப்படுவதால் ஆத்மாவுக்கு விபுத்வம் பொருந்தாது -ஆதலின் ஜீவன் அணு ஸ்வரூபனே –

————-

ஸூத்ரம் –233-ஸ்வாத்ம நா ச உத் தரயோ –2-3-21-

ச -என்பது ஏவகாரார்த்தம் உடையது
உத் தரயோ -உத் க்ராந்திக்குப் பின் கதியும் ஆகதியும் -இரண்டும்
ஸ்வாத்ம நா ச -ஸ்வரூபத்துடனேயே ஆத்ம ஸ்வரூபம் பர லோகம் செல்கிறது
இந்த லோகத்துக்கு வருகிறது என்ற நிர்வாஹம் பொருந்தும்
ஆத்மா விபு என்றால் சரீரத்தில் இருந்த ஆத்மாவுக்குச் சரீரத்தில் இருந்து பிரிவு தான்
உத் க்ராந்தி என்று ஸ்ரமப்பட்டு நிர்வகித்தாலும்
பின்னர் வரும் கமன ஆகமனங்கள் பொருந்தாது -என்பதாம் –

————-

ஸூத்ரம் –234–ந அணுர் அதத் ஸ்ருதேர் இதி சேந் ந இதர அதிகாராத் –2-3-22-

ந அணுர் -ஜீவன் அணு அல்லன்
அதத் ஸ்ருதேர் -அணுத்வத்திற்கு எதிரான மஹத்வத்தைக் கூறும் ஸ்ருதி இருப்பதால்
யோ அயம் விஞ்ஞான மய –எனத் தொடங்கி
ஸ வா ஏஷ மஹான் அஜ ஆத்மா –என்று ஜீவனுக்கு மஹத்வம் கூறுவதால்
இதி சேந் ந -என்பது தகாது
இதர அதிகாராத் –இந்த வாக்கியத்தில் ஜீவனுக்கு மஹத்வம் கூறவில்லை –
பரமாத்மாவுக்கே மஹத்வம் கூறப்படுகிறது
யஸ்யா னுவித்த பிரதிபுத்த ஆத்மா -என்று நடுவில் ஜீவனைக் காட்டிலும் இதரனான பரமாத்மாவைப் பற்றி பேசுவதால்
பிரகரணம் முழுவதும் பரமாத்மாவைப் பற்றியதே
யஸ்ய பரம புருஷஸ்ய அனு வித்த -உபாஸக ஆத்மா பிரதி புத்தோ பவதி -ஸர்வஞ்ஜோ பவதி
என்பது ஸ்ருதியின் பொருள் –

————–

ஸூத்ரம் –235–ஸ்வ சப்தோந் மானாப் யாஞ்ச –2-3-23–

ஏஷோ அணுர் ஆத்மா யஸ்மின் ப்ராண பஞ்சதா சப் விபேச -என்று
ஸாஷாத் அணு ஸப்தம் கூறப்படுவதாலும்
உன் மனத்தாலும்
ஆரா என்ற தானியத்தின் நுனி அளவு என்று வாலாக்ர பாகத்தின் பதினாயிரத்தில்
ஒரு பங்கு ஜீவன் என்று சொல்வதால்
ஜீவன் அணுவே ஆவான் –

———-

ஸூத்ரம் -236–அவிரோத சந்தன வத்–2-3-24–

அணுவான ஜீவன் உடலின் ஏக தேசத்தில் இருந்தாலும் உடல் முழுவதுமான
ஸூக துக்க அனுபவத்தில் விரோதம் இல்லை
சந்தன வத்-சந்தனத்துளி உடலில் ஒரு பகுதியில் பூசப்பட்டாலும் உடல் முழுவதும் பரவலாய்
இன்பத்தைக் கொடுப்பது போலேவே ஆத்மாவும் அனுபவிக்கலாம் –

—————-

ஸூத்ரம் –237–அவஸ்திதி வைசேஷ்யாத் இதி சேந் ந அப்யுபகமாத் ஹ்ருதி ஹி –2-3-25–

சந்தன பிந்து மார்பில் வைக்கப்படுவதால் இன்பம் பயக்கிறது –
ஆத்மாவுக்கோ அவ்வாறு ஓர் இடம் இல்லை என்பதால் எப்படி அவ்வனுபவங்கள் கூடும்
இதி சேந் ந -என்பது பொருந்தாது
அப்யுபகமாத் -ஆத்மாவுக்கு தேஹத்தில் மார்பிலே சிறப்பான இருப்பு ஏற்கப்பட்டு இருக்கையாலே
உடல் முழுவதும் பரவும் இன்ப துன்பங்களின் அனுபவம் கூடும் –
இதயத்தில் யோ அயம் விஞ்ஞான மய ப்ராணேஷு ஹ்ருத் யந்தர் ஜ்யோதி -என்னும் ஸ்ருதியில்
ஆத்மா ஹ்ருதயத்தில் இருப்பதாக கொள்ளப் படுகிறான் அல்லவா –

—————

ஸூத்ரம் –238–குணாத வ ஆலோக வத் –2-3-26–

வ -ஸப்தம் மதாந்தரத்தை விலக்குகிறது –
குணாத் -அணுவான ஆத்மா தன் குணமாயும் விபு வாயும் உள்ள தர்ம பூத ஞானம் மூலம்
எல்லா தேஹத்தையும் வியாபித்து இருக்கிறது –
ஆலோகவத் –ஓர் இடத்தில் உள்ள ஸூர்யன் தீபம் மணி முதலியவற்றின் ஒளி குணமாய் மிகுந்த பிரதேசத்தை
வியாபித்து இருப்பது போலே ஆத்மாவின் தர்ம பூத ஞானமும் வியாபித்து இருப்பதில் தடையில்லை –
விஞ்ஞானம் யஜ்ஞம் தநுதே -முதலிய ஸ்ருதிகளில் விஞ்ஞான ஸ்வரூபனாய்ப் பேசப்பட்ட ஆத்மாவுக்கு
ஞானம் குணம் என்பது எவ்வாறு என விளக்குகிறார் –

—————-

ஸூத்ரம் –239–வ்யதிரேகா கந்தவத் ததா ச தர்சயதி–2-3-27–

வ்யதிரேக –ஞான ஸ்வரூபனான ஆத்மாவைக் காட்டிலும் -குணமான தர்ம பூத ஞானத்திற்கு
வேறுபாடு அவஸ்யம் ஏற்கத் தக்கது
கந்தவத் -கந்தமுடையது பிருத்வீ என்றால் பிருத்வீயைக் காட்டிலும் அதன் குணமான கந்தத்திற்கு
வேறுபாடு சித்தித்தால் போலே தர்ம பூத ஞானத்திற்கும் ஸித்திக்கும்
ததா ச தர்சயதி–ஜாநாத் யே வாயம் புருஷ –என்பது போன்ற ஸ்ருதிகளும்
குணியாயும் குணமாயும் பிரித்துக் காட்டுகின்றன —

—————-

ஸூத்ரம் –240-ப்ருதக் உப தேசாத் –2-3-38–
ந விஞ்ஞாதுர் விஞ்ஞாதேர் விபரி லோபோ வித்யதே -என்று
தர்மியான ஞானத்தைத் தனிப்படுத்தி
ஞானம் நித்யம் என்று சொல்வது எப்படிக் கூடும் என்பதற்கு விடை தருகிறார்

———–

ஸூத்ரம் –241-தத் குண சாரத்வாத் து தத் வியபதேச ப்ராஞ்ஜவத்–2-3-29–

து சப்தம் சங்கையை விலக்க வல்லது
தத் குண சாரத்வாத் -அந்த ஞான ரூப குணத்தை சாரமாக ஸ்வரூப நிரூபகமாகக் கொண்டு இருப்பதால்
தத் வியபதேச –ஆத்மாவை ஞானம் என்று வ்யவஹரிப்பது
ப்ராஞ்ஜவத்-ப்ரஹ்மணா விபச்சிதா என்று ப்ராஞ்ஞன் எனப்பட்ட பரம புருஷன்
ஸத்யம் ஞானம் என்று ஞான ஸ்வரூபனாக வியவஹரிக்கப் படுகிறானோ
அப்படியே ஜீவனும் என்பதாம் —

————-

ஸூத்ரம் –242–யாவதாத்ம பாவித் வாச்ச ந தோஷ தத் தர்சனாத் –2-3-30-

ஞானம் ஆத்மாவுக்கு ஸ்வரூபம் உள்ளளவும் நிற்பதாகையாலும் அந்த நித்யமான தர்ம பூத ஞானத்தாலே
அந்த ஆத்மாவை வியவஹரிப்பதில் குற்றம் ஒன்றும் இல்லை
தத் தர்சனாத்-கண்ட முண்டமான பசுவின் இனத்திற்கு பசுத்வம் என்ற தர்மம்
அந்த ஸ்வரூபம் உள்ள அளவும் நிற்பதாகையால்
அந்த பசுத்வத்தினைக் குறிப்பதான பசு என்ற சொல்லால்
கண்டாதிகளான இனம் அனைத்தையும் குறிப்பதால் இங்கும்
விஞ்ஞானம் யஜ்ஞம் தநுதே -என்று விஞ்ஞான ஸப்தத்தாலே ஆத்மாவைக் குறிப்பதில் தவறு இல்லை –
ச காரத்தாலே
ஆத்ம ஸ்வரூபம் ஸ்வ ப்ரகாசமாகையாலும் ஞானம் என்று குறிப்பிடலாம் என்று காட்டப் படுகிறது

ஆத்மாவுக்கு ஞானம் நித்யமாகில் ஸூஷூப்தி முதலிய தசைகளில் ஏன் அது தோன்றவில்லை
என்னும் சங்கையை மேலே பரிஹரிக்கிறார் –

—————-

ஸூத்ரம் –243–பும்ஸ்த்வாதி வத் வஸ்ய ததோ அபி வ்யக்தி யோகாத் –2-3-31–

து ஸப்தம் சங்கையை விலக்குகிறது
அஸ்ய ஸத -ஸூஷூப்யாதிகளிலும் மறைவாயுள்ள இந்த ஞானத்திற்கு விழிப்பு நிலையில்
அபி வ்யக்தி யோகாத் –வெளியீடு உள்ளமையால் ஞானம் பிரகாசிப்பதால் ஞானம் ஆத்மாவுக்கு நித்தியமான தர்மம்
பும்ஸ்த்வாதி வத்–சரீரத்தில் இருக்கும் ஆண்மைக்கான தாது பால்யத்தில் வெளிப்படாமல் இருந்து
யவ்வனத்தில் வெளித் தோன்றுவது போலே இங்கும் குறையில்லை –

——————–

இவ்வாறு ஆத்மாவுக்கு ஞாத்ருத்வத்தையும் அணுத்துவத்தையும் சாதித்து
விபுத்வம் கூறி வரும் குற்றத்தையும் எடுத்துக் காட்டுகிறார் –

ஸூத்ரம் –244–நித்யே பலப்த் யநுபலப்தி பிரசங்கோ அந்யதா நியமோவா அந்யதா –2-3-32–

அந்யதா -ஆத்மா ஞான மாத்ர ஸ்வரூபன் என்னும் பக்ஷத்திலும்
ஆத்மா சர்வகதன்-விபு -என்னும் பக்ஷத்திலும்
நித்யமாயும் உப லப்தியோ – புலப்படலோ -அனுப லப்தியோ – புலப்படாமையோ -ஏற்படும் –
அதவா அந்யதர நியம -அல்லது அவ்விரண்டில் ஓன்று எப்போதும் கட்டாயம் இருக்க வேண்டும்

ஞான மாத்ர ஸ்வரூபன் என்னும் பக்ஷத்தில்
ஆத்மா புலப்படுகைக்கும் புலப்படாமைக்கும் ஆத்ம ஸ்வரூபமே காரணம் ஆதலின்
வேறு ஹேது இல்லாமையால் ஸ்வரூபம் நித்யமாதலின் இரண்டும் நித்யமாய் இருக்கும் –
ஆனால் புலப்படுகையும் புலப்படாமையும் ஒன்றோடு ஓன்று முரண் பட்டவை யாதலின்
இரண்டில் ஒன்றுக்கே ஆத்ம ஸ்வரூபம் ஹேது என்று சொல்லில்
இரண்டில் ஓன்று இருந்தே தீர வேண்டும் நியமம் வந்து சேரும்

ஆத்மா விபு என்னும் பஷத்திலும்
ஞானத்துக்கு ஹேதுவான ஆத்ம மனஸ் ஸம்யோகங்கள் விபுக்கள் அனைவருக்கும் பொது யாதலின்
ஒரு ஆத்மாவுக்கு ஞானம் உண்டானால் எல்லாருக்கும் அது புலப்பட வேண்டி இருக்கும்
ஒருவருக்குப் புலப்பட வில்லை என்றால் எல்லாருக்கும் புலப்படாமலே போக வேண்டி இருக்கும்
ஆகையால் இந்த இரண்டு மதமும் சரியானவை அல்ல என்பதாம் –

——————

ஐந்தாம் அதிகரணம் –கர்த்ர் அதி கரணம் –

இப்படி ஆத்மாவுக்கு கர்த்ருத்வத்தை சாதிக்க வல்ல ஞாத்ருத்வத்தை நிரூபித்து
கர்த்ருத்வம் நிரூபிக்கிறார் என்று சங்கதி

ஸூத்ரம் –245-கர்த்தா ஸாஸ்த்ர அர்த்தவத் வாத் –2-3-33-

ஆத்மாவுக்கு ஞாத்ருத்வம் போலே கர்த்ருத்வம் உண்டா இல்லையா என்று சம்சயம்
அஹங்கார விமூடாத்மா கர்த்தா அஹமிதி மன்யதே -என்று சொல்வதால் ஆத்மா கர்த்தா அன்று
ப்ரதானமே கர்த்தா என்பது பூர்வ பக்ஷம்
இந்த சாங்க்ய மதத்தை நிரசிக்கிறார் –

ஆத்மாவே கர்த்தா -பிரதானம் அன்று –
ஏன் எனில்
ஸாஸ்த்ர அர்த்த வத் வாத் –ஆத்மா கர்த்தா வானால் தான்
யஜேத -உபா ஸீ த -என்று யாக உபாஸனாதிகளை விதிக்கும் ஸாஸ்த்ரம் பிரயோஜனம் உள்ளதாகும்
சாஸனாத் ஸாஸ்த்ரம் என்கிறபடி -கர்த்தா செய்ய வேண்டிய கர்மங்களை விதித்துத் தூண்டுகிறது –
இதனால் ஞாதாவை உத்தேசித்துத் தானே இதைச் செய் -இதைச் செய்யாதே என்று
விதி நிஷேதங்களைக் கூறுவது பொருந்துகிறது
அசேதனமான பிரதானம் கர்த்தாவானால் அவ்வாறு விதிப்பது பொருந்தாது
ஆதலின் கர்த்தாவான ஆத்மாவைக் குறித்தே ஸாஸ்த்ரம் போதிக்கிறது –
பிரதானத்தைக் குறித்து அன்று

————–

ஸூத்ரம் –246–உபாதா நாத் விஹார உபதேசாச் ச –2-3-34–

ஏவ மேவைஷ ஏதான் பிராணான் க்ருஹீத்வா ஸ்வே சரீரே யதா காமம் பரி வர்த்ததே –என்று
ஆத்மா ப்ராணனைக் க்ரஹித்தல் கூறப்படுவதானால்
யதா காமம் பரி வர்த்ததே-என்று சரீரத்தில் ஆத்மாவின் விஹாரத்தை உபதேசிப்பதாலும்
ஆத்மாவே கர்த்தா –பிரதானம் கர்த்தா அன்று –

——————-

ஸூத்ரம் –247–வ்யபதேசாச்ச க்ரியா யாம் ந சேந் நிர்தேச விபர்யய –2-3-35–

க்ரியா யாம் வ்யபதேசாச்ச கர்த்தா -விஞ்ஞானம் யஜ்ஞம் தநுதே கர்மாணி தநுதே அபி ச -என்று
வைதிக லௌகிக கிரியைகளில் ஆத்மாவுக்கு கர்த்ருத்வம் சொல்லப்படுவதாலும்
ந சேத் –கர்த்தா இல்லை எனில்
விஞ்ஞானம் யஜ்ஞம் தநுதே-என்னும் ஸ்ருதியில் விஞ்ஞான ஸப்தம் ஆத்மாவைச் சொல்லவில்லை
அந்தக்கரணம் என்னும் பக்தியைச் சொல்லுகிறது என்றால்
நிர்தேச விபர்யய ஸ்யாத் –விஞ்ஞானம் யஜ்ஞம் தநுதே-என்று
மூன்றாம் வேற்றுமையுடன் நிர்தேசிக்கப் பட்டு இருக்கும்
கிரியையில் புத்தி காரணம் ஆகையால் –

—————-

ஸூத்ரம் –248–உப லப்தி வத் அநியம –2-3–36–

பிரதானத்துக்கே கர்த்ருத்வம் -ஆத்மாவுக்கு போக்த்ருத்வம் என்னும் பக்ஷத்தில்
உப லப்தி வத் அநியம–முன்பு சொன்ன உப லப்த்ய நியம ப்ரசங்கம் போலே
போக்த்ருத்வத்துக்கு அநியமமும் ப்ரசங்கிக்கும்
பிரதானம் ஸர்வ காரணமாதலால் போக்த்ருத்வமும் சர்வ ஆத்மாக்களுக்கும் பொதுவாக ப்ரசங்கிக்கும் –

—————–

ஸூத்ரம் –249-சக்தி விபர்யயாத் –2-3-37–

ப்ரக்ருதியே கர்த்தா என்றால் கர்த்தாவுக்கே போக்த்ருத்வம் யுக்தமாதலின்
ப்ரக்ருதிக்கே போக்த்ருத்வ சக்தியும் பிரசங்கிக்கும்
ஆதலின் ஆத்மாவுக்கு போக்த்ருத்வ சக்தியின்மை ஏற்க வேண்டி வரும் –

————

ஸூத்ரம் –250–ஸமாத்ய பாவாச்ச –2-3-38–

பிரக்ருதிக்கு கர்த்ருத்வத்தை அங்கீகரித்தால் மோக்ஷத்துக்கு சாதனமான சமாதி இல்லாததாகி விடும்
ப்ரக்ருதியை விட நான் வேறானவன் என்னும் ஸமாதியில் -ஸித்த விருத்தி நிரோதத்திலே –
ப்ரக்ருதி கர்த்தாவாதல் பொருந்தாது ஆதலின் பிரதானம் கர்த்தா அன்று –

—————-

ஸூத்ரம் –251–யதாச தக்ஷ உபயதா –2-3-39-

ஆத்மா கர்த்தா என்றால் அவன் ஸூகாதி அனுபவங்களை இச்சிக்கையில்
வைதிக லௌகிக கர்மாக்களைச் செய்கிறான்
இச்சியாத போது செய்வது இல்லை -என்று இரு விதமாகவும் வியவஸ்தை கூடும்
யதாச தக்ஷ உபயதா-தச்சன் விரும்பும் போது செயல் ஆற்றுகிறான் –
விரும்பாத போது செயல் ஆற்றுவது இல்லை –
இப்படி இச்சா மூலமாகச் செய்தலும் செய்யாமையும் என்ற வ்யவஸ்தை கூடாது என்பது கருத்து –

——————

ஆறாம் அதிகரணம் –பரா யத்த அதிகரணம்

ஸூத்ரம் –252–பராத்து தத் ஸ்ருதே –2-3-40–

து ஸப்தம் சங்கையை விலக்குகிறது
பராத் -பரம புருஷ ஸங்கல்பத்தாலே
தத் -கர்த்ருத்வம் ஏற்படுகிறது
ஸ்ருதே-அந்தப் பிரவிஷ்டச் ஸாஸ்தா ஜனானாம் ஸர்வாத்மா ய ஆத்மாநம் அந்தரோ யமயதி -என்று
பரமாத்மாவுக்கு அதீனமான கர்த்ருத்வம் ஸ்ருதியில் கூறப்படுவதால்
இப்படி ஜீவன் பராதீன கர்த்தா என்றால் -ஈஸ்வரனே எல்லாரையும் தூண்டுவதால்
ப்ரயோஜக கர்த்தா ஆதலின் கர்மாவின் பலம் கர்த்தாவையே சாரும் என்பதால்
அவனுக்கே விதி நிஷேத வாக்யங்களுக்கு வச்யத்வம் ஏற்படும் என்ற சங்கையை நிரசிக்கிறார் –

——————-

ஸூத்ரம் –253–க்ருத ப்ரயத்ன அபேக்ஷஸ் து விஹித பிரதி ஷித்த அவையர்த் யாதிப்ய –2-3-41-

து -ஸப்தம் சங்கையை விலக்குகிறது
முதல் ப்ரவ்ருத்தியிலே ஜீவன் செய்யும் ப்ரயத்னத்தை அபேக்ஷித்துப் பரம புருஷன் ஜீவனை ப்ரவர்த்திப்பிக்கிறான்
ஏன் எனில்
விஹித பிரதி ஷித்த அவையர்த் யாதிப்ய–ஜீவனுக்கு முதல் பிரவிருத்தியில்
ஸ்வ தந்தர்ய தன்மையை அங்கீ கரிக்கா விட்டால்
இதைச் செய் செய்யாதே என்னும் விதி நிஷேத ஸாஸ்த்ரங்களுக்கு வியர்த்தத் தன்மை வரும் –
ஜீவன் தண்டனைக்கோ அனுக்ரஹத்துக்கோ ஆளாகாமல் போவான்
அக் குறைகள் வாராமைக்காக ஜீவனின் முதல் முயற்சியை எதிர்பார்த்தே
பகவான் இவனைப் பிரவர்த்திப்பிக்கிறான் –
அந்த முதல் முயற்சியிலும் ஸ்வா தந்தர்யம் ஈஸ்வரனால் கொடுக்கப் பட்டது
அதுவும் முன் பின் கர்மாக்களின் பலம் அளிப்பதாகக் கருதப்படுகிறது –

ஆச்சார்யர் அருளிய முறையில் பாகுபாடு-இரக்க மின்மை இவற்றைப் பரிஹாரம் செய்யும் முறை கூறப்படுகிறது
கர்த்ருத்வம் இருவகைப்படும் -அவை ப்ரயோஜக கர்த்ருத்வம் -ப்ரயோஜ்ய கர்த்ருத்வம் -என்பன
முதல் கர்த்ருத்வம் ஈஸ்வரனுக்கும் இரண்டாவது ஜீவனுக்கும் உரியது –
இதனால் அந்தப் பிரவிஷ்டச் சாஸ்தா ஜனானாம் சர்வாத்மா ய ஆத்மாநம் அந்தரோ யமயதி –முதலிய
ப்ரமாணங்களில் சொல்கிறபடி சுருக்கம் இன்றி எப்போதும் எவ்வகையான ப்ரவ்ருத்தி நிவ்ருத்தி ரூபமான
கார்யங்களுக்குமான கர்த்ருத்வம் உண்டு என்னப்பட்டது

இந்நிலையில் ஜீவனின் தவறான ப்ரவ்ருத்திகளுக்கும் அதனால் ஏற்படும் துக்க அனுபவத்திற்கும்
காரணமாகையால் ஈஸ்வரனுக்கு வைஷம்யமும் நைர் க்ருண்யமும் பிரசங்கிக்கும் என்றால் அவை வாரா
பலவகை முளைகளுக்கும் ஜலம் சாதாரண காரணமாவது போலவும்
முளைகளின் வேறுபாட்டுக்கு விதை வேறுபாடே காரணமாவது போலேயும்
ஜீவனின் விஷம ப்ரவ்ருத்திக்கும் துக்க அனுபவத்துக்கும் அவன் கர்மாவே காரணமாதலின்
ஜலம் போலே பொதுக் காரணமான ஈஸ்வரனிடம் அத் தோஷங்கள் ஓட்டுவது இல்லை –
தோஷங்கள் கர்மங்களாலே ஏற்படுபவையே
ஸமோஹம் ஸர்வ பூதேஷூ என்றான் அல்லவா
அதன்படி ஜீவனின் கர்ம பரம்பரையே காரணமாக
ஈஸ்வரன் உயர்த்துவது தாழ்த்துவது-உந்நி நீஷா அதோ நி நீஷா-என்ற
பாகுபாடு ஏற்படுகிறது என்பதில் குறையில்லை –

ஆமாம் -ஜீவனின் கர்ம பரம்பரையே இஷ்டத்துக்கு கஷ்டத்துக்கும் காரணம் என்றால்
ஈஸ்வரனின் கிருபைக்கு இடையில் என்ன கார்யம் என்றால்
சகல காரியங்களுக்கும் கர்மாதீனம் என்றாலும் சிறு வியாஜத்தை முன்னிட்டே
ஏராளமான குறைகளையும் -அபராதங்களையும் -பொறுத்து
முக்தி பர்யந்தமான ஐஸ்வர்யத்தைக் கொடுத்தல் கிருபையின் கார்யம் ஆதலால் கிருபைக்கு விசேஷ பிரயோஜனம் உண்டு —
ஆனாலும் ஈஸ்வரனுக்கு ஜீவனைத் தண்டித்தல் குற்றம் அன்றோ என்னில் -அது யாருக்குத் தோஷம் –
ஈஸ்வரன் ஸர்வ நியந்தா வாதலின் இது அவனுக்குத் தோஷம் அன்று -ஜீவனுக்கு கஷ்டம் தருவதே யாயினும்
ஈஸ்வரனுக்கு அது கேடு அல்ல
உலகில் துஷ்ட நிக்ரஹம் செய்து இஷ்ட பரிபாலனம் செய்யும் மஹா ராஜாவைப் புகழ்வது போலவே
கிருபை மிக்க ஈஸ்வரனை தங்கள் தோஷங்களை நீக்குவதற்காக ஆஸ்ரயிப்பதில் தடை ஏதும் இல்லை
ஆகையால் அனுக்ரஹம் நிக்ரஹம் இரண்டுக்கும் விஷயம் வெவ்வேறு யாதலால் தோஷம் இல்லை –

இதே போல் பகவானுக்கு உரிய உதாசீனத்தவம் -நடு நிலைமை -ப்ரேரகத்வம் -தூண்டும் தன்மை –
ஸாஷித்வம் -அனுமந்த்ருத்வம் -அனுமதித்தல் முதலிய தர்மங்கள்
ஒன்றோடு ஓன்று முரணாகத் தோன்றினாலும் இவை லக்ஷணத்தால் பொருத்தமானவை யாதலால்
விரோதம் இல்லை

ரக்ஷணம் ஏதோ ஒரு காலத்தில் யாதலின் கிருபையும் ஏதோ ஒரு கால விசேஷத்தே தானோ என்று சங்கிக்க வேண்டாம்
கருணை நித்யம் அநித்யம் என்று இருவகைப்படும்
எல்லா ஜீவன்களின் ஸ்வரூபம் ஸ்திதி முதலியவற்றைக் காக்கும் கிருபை நித்யை
அவரவர் அறியாமலே செய்யும் ஸூஹ் ருதாதி மூலக மான கர்மாக்களுக்கு உசிதமான
விசேஷ பலன்களைக் கொடுக்கும் கிருபை அநித்யை
ஆதலின் ஸர்வ விஷயத்திலும் ஸகல பல பிரதான சங்கல்ப ரூபமான சாமான்ய கிருபையே
நித்யமும் நிர்ஹேதுகமாகவும் ஆகும்
விசேஷ பல பிரதான ஸங்கல்ப ரூபமான அநித்ய கிருபையே ஸ ஹேதுகமாகும்
இத்தால் நித்ய க்ருபாவத்வம் ஸித்திக்கிறது –

முன் கூறிய கர்த்ருத்வாதி தர்மங்களுக்கு முரண்பாடு இல்லை -எப்படி எனில்
1-ஈஸ்வரன் ஸ்வதந்த்ரனான படியால் கர்த்ருத்வம்
2-ப்ரயோஜ்ய கர்த்தாவான ஜீவன் மூலம் செய்விப்பதால் ப்ரேரகத்வம்
3-ப்ரவர்த்தனான சேதனனை மீண்டும் மீண்டும் செய்யத் தூண்டுவதால் அனுமந்த்ருத்வம்
4-முளைகளுக்கு ஜலம் போலே சர்வத்திற்கும் பொதுக் காரணம் ஆதலின் உதா சீனத்தவம்
5- எப்போதும் எல்லாவற்றையும் காண்கையாலே ஸாஷித்வம்
6-அவனவன் கர்மத்துக்கு ஏற்றவாறு செய்விப்பதால் சஹகாரித்வம்
7- சர்வ ஸ்வாமியாய் ஆஸ்ரித ரக்ஷண பலத்தைத் தானே ஏற்பதால் பலித்தவம்
8-பலமதே உப பத்தே என்பதால் ஸர்வ கர்மா பல பிரதத்வம்
என்ற இவை அனைத்தும் ஓர் ஓர் காலத்தில் இன்றியிலே சர்வ காலத்திலும் இருப்பதால் ஒன்றுக்கு ஓன்று விரோதம் இல்லை

இங்கு ஒரு பூர்வ பக்ஷம்

ஜீவனின் முதல் பிரவிருத்தி ஈஸ்வரனின் தூண்டுதல் இல்லாமலே நடப்பதால் பகவானை அபேக்ஷிக்காமல்
ஜீவன் தானே கர்த்தா ஆகிறான்
அப்படி இல்லை எனில்
கர்த்தாவே போக்தா வாதலின் ஜீவனிடம் பகவத் நிக்ரஹம் பிறக்க வழி இல்லை
ஈஸ்வரனுக்கே கர்ம பல போக்த்ருத்வம் பிரசங்கிக்கும் என்கின்றனர்
இந்த வினா மற்றவர் பக்கலிலும் சமம்
முதல் பிரவிருத்தியில் நிரபேஷ கர்த்ருத்வம் இருந்தாலும் இரண்டாம் ப்ரவ்ருத்தியில் ஈஸ்வரன் அனுமந்தா என்று
அவர்கள் சொல்வதால் நிர்த்தயத்வம் வரலாம்
கிணற்றில் குதிக்கத் தொடங்கும் சிறுவனை இரக்கம் மிக்க பெரியோர்கள் தடுத்து ரஷிப்பதைப் பார்க்கிறோம்
அவ்வாறு இல்லாமல் தவறாகப் பிரவர்த்திப்பவனை ஈஸ்வரன் தடுக்காமல் அனுமதிப்பது தயை அற்ற காரியமே ஆகும்
சர்வ நியந்தா என்னும் ஸ்ருதியை இத்தகையோர் விஷயத்தில் விலக்கி -சுருக்கிக் கொள்ள வேண்டி இருப்பதாலும்
முதல் பிரவ்ருத்தியில் ஈஸ்வரன் உபேக்ஷித்து இருக்கிறான் என்பது பொருந்தாலும்
மேலும் கல்ப காலத்தின் ஆதியில் ஜீவனின் முதல் ப்ரவ்ருத்தி ஈஸ்வரனை அபேக்ஷிக்காது என்று சொன்னால்
அத்தகைய விஷயமான ப்ரவ்ருத்தி ஞானத்தையே ஆகாரமாகக் கொண்ட ஜீவ ஸ்வரூபத்தால் ஏற்பட்டது அன்று

பின் என் எனில்
பூர்வ கல்பத்தில் செய்யப்பட அவரவர் களுடைய பாப கர்மாவைக் காரணமாக் கொண்டது எனல் வேண்டும்
இதனால் சம்சாரம் அநாதி யாதலின் ஜீவனின் பிரவிருத்தி முதலானது என்பது பொருந்தாது
ப்ரவ்ருத்தியோ கர்ம அதீனமானது என்றால் அதில் ஈஸ்வரனுக்கு என்ன இடம் என்பது பூர்வ பக்ஷம்

இதுக்கு விடை –

கர்மமே ஈஸ்வர சங்கல்ப ரூபம் -ஆகையால் ப்ரவ்ருத்தியும் அந்த சங்கல்ப அதீனம் என்று பலிக்கிறது
முதல் ப்ரவ்ருத்தி ஈஸ்வர அதீனம் அன்று என்பவராலும் ஓர் அளவுக்கு ஈஸ்வர அதீனம் ஏற்கப்பட்டு இருப்பதாலும்
எல்லா ப்ரவ்ருத்திகளும் அவனது அதீனமடியாகவே என்றதாகிறது

இப்படியாகில் ஸ்ரீ பாஷ்யத்தில் தத்ர உபேஷ்ய ததோ அனுமத்ய என்பது முதலியவை
முதல் க்ஷணத்தில் உபேக்ஷிக்கிறான் என்றும்
இரண்டாம் க்ஷணத்தில் அனுமதிக்கிறான் என்றும் எப்படிக் கூறலாம் என்றால்

முதலில் என்பது
ஸ்ருஷ்டி காலத்தைப் போன்றது
கர்மாவைப் போலே வைஷம்ய காரணம் இன்றி ஜலம் போலே சாமான்ய காரணம் ஆகிறான் என்ற கருத்தால்
உபேக்ஷிக்கிறான் என்றதே தவிர அக்காலத்தில் ஈஸ்வரன் பிரேரகன் அல்ல என்ற கருத்தால் அன்று –

அப்படியானால் அவனுக்கு கர்த்ருத்வ -காரயித்ருத்வ -உபேக்ஷகத்வாதிகள் எப்போதும் இருப்பது
விருத்தம் அன்றோ என்னில்
கீழ்ச சொன்னவாறு கர்த்ருத்வாதி சர்வ லக்ஷணமும் பொருந்துவன வாதலின்
ஒரே பொருளில் த்ரவ்யத்வம் கடத்வம் ப்ருத்வீத்வம் முதலியவற்றுக்கு விரோதம்
இல்லாமையைப் போலவே இங்கும் விரோதம் இல்லை

ஆகையால் ஜீவனுடைய கர்மத்தை அபேக்ஷித்து ஸ்ருஷ்டியாதிகளைச் செய்வதால்
ஈஸ்வரனுக்கு வைஷம்யமும் நைர் க்ருண்யமும் கிடையாது என்பது கருத்து –

—————

ஏழாம் அதிகரணம் -அம்ச அதிகரணம் –

இப்படி ஜீவனுக்கு கர்த்ருத்வம் பராதீனமாகில்
அப்போது ராஜ பிருத்ய நியாயத்தாலே பரமாத்மாவின் அம்சம் என்பது உபசார வழக்கு ஆகலாம்
என்ற சங்கையை இந்த அதிகரணத்தில் பரிஹரிக்கிறார் –

ஜீவன் பரமாத்மாவை விட மிக வேறு பட்டவனா
அல்லது அஞ்ஞனான பரமாத்மாவா
அல்லது உபாதி சம்பந்தம் பெற்ற பரமாத்மாவான
அல்லது பரமாத்மாவின் அம்சம் ஆனவனா
என்ற நான்கு வகை சங்கைகள்

1-மிகவும் வேறுபட்டவன் என்பது வைசேஷிகன் மதம்
ப்ருதக் ஆத்மானம் ப்ரேரிதாரஞ்ச மத்வா -என்ற
சுருதி வாக்கியம் அவர்களுக்குத் துணை நிற்கிறது
இப்படி பேத பக்ஷத்திலே அரசனே உலகம் முழுவதும் என்பது போலே
அபேத ஸ்ருதிகளை உபசார சொற்களாகக் கொள்ள வேண்டும்

2- அஞ்ஞான ப்ரஹ்மமே ஜீவன் ஆகிறது என்பது சங்கரர் பக்ஷம்
தத் தவம் அஸி
அயம் ஆத்மா ப்ரஹ்ம -முதலிய
அபேத ஸ்ருதிகள் இதுக்குப் பிரமாணங்கள்
இப்பஷத்தில் பேத ஸ்ருதிக்கு அஞ்ஞான க்ருதமான பேதம் விஷயம்

3-உபாதியுடன் சம்பந்தம் உள்ள ப்ரஹ்மமே ஜீவ பாவத்தை அடைகிறது என்பது யாதவ பாஸ்கர பக்ஷம்
இதற்கு அபேத ஸ்ருதி முக்யத்வமே காரணம்

இம்மூன்று பக்ஷங்களையும் நிரசிக்கிறார்

ஸூத்ரம் –254–அம்சோ நாநா வியபதேசாத் அந்யதா ச அபி வியபதேசாத் தா சகித வாதித்வ மதீயத ஏ கே –2-3-42-

அம்சோ –ஜீவன் அம்சமே -பரமாத்மாவின் சரீரமாய் இருந்து கொண்டே
விசேஷணமாய் இருப்பதால் அம்சம் ஒரு பகுதி ஆகிறான்
நாநா வியபதேசாத் அந்யதா ச அபி வியபதேசாத் –ப்ருதக் ஆத்மானம் முதலிய
ஸ்ருதியால் பேதம் கூறப்படுவதாலும்
தத் த்வம் அஸி
அயம் ஆத்மா ப்ரஹ்ம -முதலிய வேறுபட்ட வ்யபதேசத்தாலும்
இவ்வாறு அபேத ஸ்ருதி பேத ஸ்ருதிகளுக்கு முக்கியமாக அர்த்தம் ஸித்திக்க
சித் அசித் விசிஷ்டமான ப்ரஹ்மம் என்று ஒரே வஸ்துவில் பரமாத்மாவில்
விசேஷணமான ஜீவன் அம்ச பூதன் என்றே கொள்ள வேண்டும்
பேத ஸ்ருதிகள் விசேஷணமான ஜீவனுக்கும் விசேஷ்யமான ப்ரஹ்மத்துக்கும்
ஸ்வரூபத்திலும் ஸ்வ பாவத்திலும் பேதத்தைக் காட்டுகின்றன
தத் த்வம் அஸி
அயம் ஆத்மா ப்ரஹ்ம -முதலிய அபேத ஸ்ருதிகள்
ஜீவ சரீரகனான பரமாத்மா ஒருவன் என்று சொல்லுகின்றன –
இந்த இரு ஸ்ருதிகளும் முக்ய அர்த்தங்கள்
அஞ்ஞனான ப்ரஹ்மமே ஜீவன் என்கிற வாதத்திலும்
உபாதியுடன் கூடிய ப்ரஹ்மம் ஜீவன் என்கிற வாதத்திலும்
பரமாத்மாவுக்கு ஸர்வஞ்ஞத்வம் நிர் தோஷத்வம் முதலியவற்றைப் போதிக்கும் ஸ்ருதிகள் விரோதிக்கும்
தா சகித வாதித்வ மதீயத ஏ கே –சில ஸ்ருதிகள்
ப்ரஹ்ம தாஸா ப்ரஹ்மே மே கிதவா உத -முதலிய வாக்யங்களால்
ப்ரஹ்மம் ஸர்வ ஜீவ அந்தர்யாமியாய் இருக்கையால் ஸர்வ ஜீவ ஸமூஹமும்
ப்ரஹ்மாத்மகமே என்று கூறும் –

——————

ஸூத்ரம் –255—-மந்த்ரவர்ணாச்ச||2.3.43||

——–

ஸூத்ரம் –256—அபி ச ஸ்மர்யதே||2.3.44||

———–

ஸூத்ரம் –257–ப்ரகாஷாதிவந்நைவஂ பரஃ||2.3.45||

————-

ஸூத்ரம் –258–ஸ்மரந்தி ச||2.3.46||

———–

ஸூத்ரம் –259–அநுஜ்ஞாபரிஹாரௌ தேஹஸம்பந்தாஜ்ஜ்யோதிராதிவத்||2.3.47||

————–

ஸூத்ரம் –260–அஸந்ததேஷ்சாவ்யதிகரஃ||2.3.48||

————–

ஸூத்ரம் –261–ஆபாஸ ஏவ ச||2.3.49||

————

ஸூத்ரம் –262–அதரிஷ்டாநியமாத்||2.3.50||

—————-

ஸூத்ரம் –263–அபிஸந்த்யாதிஷ்வபி சைவம்||2.3.51||

————

ஸூத்ரம் –264–ப்ரதேச பேதா ததி சேந் நாந்தர் பாவாத்||2.3.52||

ப்ரஹ்மம் அசேத்த்யமானாலும் உபாதி ஸம்யுக்த ப்ரதேசமும்
உபாதி சம்பந்தம் அற்ற பிரதேசமும் என இரண்டும் உள்ளன
ஆகையால் போக வ்யவஸ்தை பொருந்தும்
இதி சேத் ந -என்று சொல்வது பொருந்தாது
அந்தர் பாவாத் -விபுவான ப்ரஹ்மம் சலியாது -அணுக்களான உபாதிகளே சலிக்கும்
அப்போது ஸர்வ ப்ரஹ்ம ப்ரதேசமும் உபாதியின் ஸ்பர்சத்தில் உள் அடங்கி விடுவதால்
கூறிய குற்றங்கள் அதே நிலையில் உள்ளன

ஆகையால் மற்றவை யாவும் அசமஞ்ஜஸங்கள்
ஸ்ரீ பாஷ்யகாரரின் சித்தாந்தமே முழுவதுமாக சமஞ்ஜஸம்

————-

இப்பாதத்தில் உள்ள ஏழு அதிகரணங்களின் சாரம்

1-வ்யத் அதி கரணத்தில் ஆகாசத்துக்கு க்லுப்தியும் உத்பத்தியும் பேசப்பட்டன
2-தேஜ அதிகரணத்தில் க்ரமமாகத் தோன்றும் மஹத்தாதி காரியங்களுக்கு
முந்தைய தத்வ விசிஷ்டனான ப்ரஹ்மத்தின் இடம் இருந்தே உத்பத்தி என்றதாயிற்று
3-ஆத்ம அதிகரணத்தில் நித்யனான ஜீவனுக்கு உத்பத்தி லயங்களாவன
தேஹச் சேர்க்கையும் தேஹ வியோகத்தையும் அடிப்படையாகக் கொண்டமையும் பேசப்பட்டன
4-ஞாத் அதிகரணத்தில் ஜீவனுக்கு ஞான குணாகத்வமும் ஞாத்ருத்வமும் பேசப்பட்டன
5-கர்த்ரு அதிகரணத்தில் ஜீவனுக்கு கர்த்ருத்வம் பேசப்பட்டது
6-பராயத் அதிகரணத்தில் ஜீவனுக்கு கர்த்ருத்வம் பகவத் அதீனம் என்று பேசப்பட்டன
7-அம்ச அதிகரணத்தில் -குணங்களும் தேஹங்களும் -குணம் ஜீவனுக்கு அம்சமாய் இருப்பது போல்
ப்ரஹ்மத்துக்கும் சித் அசித் ரூபமான ஜகத்தும் அம்சமானது என்று

ஆக ஏழு அர்த்தங்கள்
ஸ்ருதிகளில் பரஸ்பர விரோதத்தைப் பரிஹரிக்கும்
இந்த வியத் பாதத்திலே சாதிக்கப் பட்டன –

————–—————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஸ்ருதி பிரகாசர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ போதாயனர் -வ்ருத்தி காரர் – ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பாதராயணர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பாஷ்யார்த்த தீபிகை –இரண்டாம் அத்யாயம் –இரண்டாம் பாதம் —

November 26, 2021

ஸ்ரீ பாஷ்யம் -மங்கள ஸ்லோகம்

அகில புவன ஜன்ம ஸ்தேம பங்காதி லீலே
விநத விவித பூத வ்ராத ரக்ஷைக தீஷே
ஸ்ருதி சிரஸி விதீப்தே ப்ருஹ்மணி ஸ்ரீ நிவாஸே
பவது மம பரஸ்மின் சேமுஷீ பக்தி ரூபா –

பாராசார்ய வச ஸூதாம் உபநிஷத் துக்தாப்தி மத்யோத் த்ருதாம்
சம்சாராக்னி விதீபன வ்யபகாத ப்ராணாத்மா சஞ்சீவி நீம்
பூர்வாச்சார்ய ஸூ ரஷிதாம் பஹூ மதி வ்யாகாத தூரஸ்தி தாம்
ஆ நீதாம் து நிஷாஷரை ஸூ மனஸோ பௌமா பிபந்து அந்வஹம்–

—————————————————————-

தன் பக்ஷத்தில் சாங்க்யாதிகள் கூறிய அனுப பத்திகளை -பிழைகளைக் -காட்டி
இந்த தர்க்க பாதத்தில் எதிரி மதங்களைக் கண்டிக்கிறார் என்பது பாத சங்கதி

————

முதல் அதிகரணம் -ரசன அனு பபத்ய அதிகரணம்

முன் அதிகரணத்தில் அவாப்த ஸமஸ்த காமனுக்குப் பல அபேக்ஷை இராமையாலே
நிமித்த காரணத்வம் பொருந்தாது என்ற சங்கை தீர்க்கப் பட்டது
இவ்வதி கரணத்தில் பிறரது யுக்தி தவறு என்று காட்டப்படுகிறது என்பது அதிகரண சங்கதி

சாங்க்யர்கள் கூறும் பிரதானம் காரணம் என்கிற வாதம்
நல்ல யுக்தியை ஆதாரமாகக் கொண்டதா இல்லையா என்று சம்சயம்
நல்ல யுக்தியை ஆதாரமாகக் கொண்டதே
ஸத்வ ரஜஸ் தமோ மயமான ஜகத்துக்கு அம் மூன்று குணங்களில் சம நிலையை யுடைய
பிரதானமே காரணம் என்பது தான் பொருத்தம் உள்ளது
என்ற பூர்வ பக்ஷத்தைக் கண்டிக்கிறார் –

ஸூத்ரம் –171–ரசன அனு பபத்தேச் ச ந அனு மானம் ப்ரவ்ருத்தேச் ச –2-2-1-

அனுமானம் -பிரதானமானது
ந -ஜகத் காரணம் அல்ல
ரசன அனு பபத்தேச் ச -ப்ராஞ்ஞனான பரம புருஷனாலே அதிஷ்டிதம் இல்லாத
அசேதனமான பிரதானத்திற்கு விசித்ரமான ஜகத்தின் ஸ்ருஷ்டி கூடாததால்
ப்ரவ்ருத்தேச் ச -ரதம் முதலியவற்றுக்குக் காரணமான த்ரவ்யங்கள் -அசேதனங்கள் –
ரதத்தைப் படைக்கத் தெரிந்து கொண்ட சேதனனால் தலைமை தாங்கப்பட்டு -அதிஷ்டிதமாய் –
தான் அதன் படைப்பு தொடங்கப்படுவதால் ஒரு பொருளின் குணங்களான
வெண்மை முதலிய போலவே த்ரவ்யங்களான ஸத்வ ரஜஸ் தமஸ் என்பவற்றுக்கும்
உபாதான காரணத்வம் கூடாது என்று
ச என்ற சொல்லால் குறிக்கப் படுகிறது

———

ஸூத்ரம் –172-பய அம்புவத் சேத் தத்ராபி –2-2-2-

பய -பாலும்
அம்புவத் -தண்ணீரும்
ப்ராஞ்ஞனான ஜீவனது அதிஷ்டானம் இன்றியே தயிராகவும்
இளநீர் மா முதலிய பற்பல சுவை உடையனவாகவும் மாறுவதே போல்
தனி பிரதானமும் ஜகத்தாக மாறுவது பொருத்தமே
என்றால்
தத்ராபி -அந்தப் பாலிலும் தண்ணீரிலும் கூட ஜீவனின் அதிஷ்டானம் -தலைமை -உள்ளது என்பதை
யோக அப் ஸூ திஷ்டன் -முதலிய
ஸ்ருதிகளிலே ஸித்தமாகக் காண்பதால் அதுவும் நம் பக்ஷத்தில் சேர்ந்ததே என்பதாம்

——–

ஸூத்ரம் –173– வ்யதிரேக அந வஸ்திதேச் ச அநபேஷத்வாத் –2-2-3–

வ்யதிரேக அந வஸ்திதே-
எப்போதும் ஸ்ருஷ்டியே ஏற்படுமாதலின் ப்ரதிவர்க்கம் என்னும் பிரளய அவஸ்தைக்கு இல்லாமை -அபாவம் -வரத்
தோன்றுவதால் என்றபடி
அதனால் பிரஞ்ஞனால் தலைமை தாங்கப்படாத பிரதானம் காரணம் இல்லை
மேலும்
அநபேஷத்வாத்
பிரதானத்துக்கு சேதன அபேக்ஷை இல்லாமையால் எப்போதும் ஜகத்தின் ஸ்ருஷ்டி நடந்து கொண்டே இருக்க நேரிடும்
ப்ராஞ்ஞ-ஜீவனுக்கு -அதீனமான பரிணாமத்தை ஏற்றுக் கொண்டல் ப்ராஞ்ஞனின் ஸங்கல்பத்துக்கு
அனுகுணமாக ஸ்ருஷ்டி ப்ரளயங்கள் கூடும் என்பது தாத்பர்யம்

————-

ஸூத்ரம் –174-அந் யத்ர அபாவாச்ச ந த்ருணாதி வத் –2-2-4–

த்ருணாதி வத்-
பசுக்கள் முதலியவை உட் கொண்ட புல் போன்றவை பாலாக மாறுவது போல்
கேவலம் பிரதானம் காரணம் ஆகட்டுமே என்னில்
தகாது
அந் யத்ர அபாவாச்ச-
காளை போன்றவை தின்னும் புல் போன்றவை பாலாக மாறக் காணாமையாலே
அப்படி மாற -ப்ராஞ்ஞனான பகவானின் அதிஷ்டானம் அவசியம் ஆதலின்
அது இல்லாத பிரதானம் காரணம் ஆகாது –

—–

ஸூத்ரம் –175–புருஷாச் மவதிதி சேத் தத்ராபி –2-2-5-

பிரதானம் ப்ராஞ்ஞனான பகவானால் அதிஷ்டானம் பெறா விடினும் ஜீவன் தன் ஸந்நிதானத்தால்
அதை ஜகத்தின் ஸ்ருஷ்டியில் பிரவர்த்திக்கிறான் -தூண்டுகிறான் –
எப்படி எனில்
புருஷாச் மவத் -புருஷர் போலும் கல் போலும்
அதாவது
நடக்க சக்தி அற்றுப் பார்வை உள்ள புருஷன் -நடக்க சக்தி உள்ள கண் பார்வை அற்ற புருஷனின் உதவியால் நடந்து
விரும்பும் இடத்துக்குச் செல்வது போலவும்
காந்தக்கல் தன் நெருக்கத்தால் இரும்பை அசைத்துத் தன் பால் ஈர்ப்பது போலவும்
பிரதானமும் ஜீவனின் சேர்க்கையால் உலகைப் படைக்கலாம்
தத்ராபி -அப்படியும் ஜகத் ஸ்ருஷ்டியாதிகள் கூடா
குருடன் நடக்கவும் நொண்டி வழி காட்டவும் சக்தி உள்ள சேதனர்கள்
இரும்புக்கும் காந்தத்துக்கும் எப்போதாவது தான் நெருக்கம் ஏற்படுகிறது
இவ்விடமோ புருஷனுடைய ஸந்நிதானம் -அருகில் இருத்தல் -தவிற வேறு விசேஷம் ஏதும் இல்லை
அந்த ஸந்நிதானம் மட்டுமே காரணம் என்றால் எப்போதும் ஸ்ருஷ்டி ஏற்பட வேண்டும்
அல்லது ஒரு போதும் ஸ்ருஷ்டியே இல்லை என்று ஏற்க வேண்டி வரும் –

——————-

ஸூத்ரம் –176-அங்கித்வ அனுபபத்தேச் ச –2-2-6–

குணங்களின் ஏற்றத் தாழ்வுகளால் அங்க அங்கி பாவத்தைக் கல்பித்து ஜகத்தின் ஸ்ருஷ்டி உன்னால் ஏற்கப்படுகிறது
பிரளய தசையிலோ சமநிலையில் உள்ள சத்வாதி குணங்களுள் ஒன்றுக்கு ஓன்று ஏற்றத் தாழ்வை அடிப்படையாகக் கொண்ட
அங்க அங்கி பாவம் கூறுவது பொருந்தாது ஆதலின் ஜகத்தின் ஸ்ருஷ்டி பொருந்தாது
அந்த நிலையிலும் வேறுபாட்டை ஏற்றுக் கொண்டால் வேறுபாடு -விசேஷம் -இன்மையால் எப்போதும் ஸ்ருஷ்டியே ஏற்படும்
ஆகையால் ப்ராஞ்ஞனால் அதிஷ்டிதம் இல்லாத பிரதானம் காரணம் அன்று –

——-

ஸூத்ரம் –177-அந்யத அனுமிதவ் சஞ்ஞ சக்தி வியோகாத் –2-2-7-

கூறியதை விட்டு வேறு வழிகளில் பிரதானத்தை அனுமித்தாலும் பிரதானத்துக்கு ஞாத்ருத்வம் இல்லாமையால்
ரசன அனுபவத்தி முதலிய தோஷங்கள் அப்படியே உள்ளன –

————

ஸூத்ரம் –178- அப்யுபகமேப் யர்த்தா பாவாத் –2-2-8-

கேவல பிரதானத்தை காரணமாக ஏற்றுக் கொண்டாலும் பயன் இல்லாமையால் அதை அனுமானிக்க வேண்டாம்
புருஷனின் போக அப வர்க்கங்களுக்காக பிரதானம் ப்ரவர்த்திக்கிறது என்று உங்கள் கருத்து –
அது பொருந்தாது –
சைதன்யமே ஸ்வரூபமாக ஒரு வியாபாரமும் அற்ற புருஷனுக்கு அசேதன தர்மத்தின் அத்யாசத்தாலே
ப்ரக்ருதி தர்சன ரூபமாக போகமும் ப்ரக்ருதி விவேக ரூபமாக அப வர்க்கமும் சம்பவிக்கா –

——————

ஸூத்ரம் –179-விப்ரதிஷேதாச் ச அசமஞ்சஸம் –2-2-9–

ஒன்றோடு ஓன்று முரண் பட்ட வாதங்களாலும் இந்த சாங்க்ய மதம் நேர்மை அற்றது
ப்ரக்ருதி புருஷனின் போக அபவர்க்கங்களுக்காக ப்ரவர்த்திக்கிறது என்பது சாங்க்யர் கூற்று
அசேதனமான ப்ரக்ருதி தானே புருஷனிடம் உள்ள சைதன்யத்தைத் தன்னிடமும்
தன் பால் உள்ள கர்த்ருத்வத்தை புருஷன் இடமும் அனுசந்தானம் செய்து பந்தத்தை அடைகிறது
மோக்ஷ சாதனத்தையும் அனுஷ்டிக்கிறது என்றும் கூறுகிறார்கள்
அசேதனமான பிரதானத்துக்கு சேதன தர்மமான அத்தி யாஸம் எப்படிப் பொருந்தும்
இப்படி முரண் பட்ட பேச்சுக்களால் பிரதான காரிய வாதம் அடியோடு அசமஞ்சஸமாகும் –

இங்கு ஸாஸ்த்ர யோநித்வாத் அதிகரணத்துக்கும்
இவ்வதிகரணத்துக்கும் முரண்பாட்டை நீக்கும் வழி சிறிது விளக்கப்படுகிறது
ஸாஸ்த்ர யோநித்வாத் அதிகரணத்தில் அனுமானத்தால் ஈஸ்வரனைச் சாதிக்க முடியாது என்று கூறப்பட்டது
ரசனானுபத் யதிகரணத்தில் அசேதனங்களுக்கு சேதன அதிஷ்டானம் முக்யம் என்றுள்ள வியாப்தியால் -நியமித்தால் –
அந்தச் சேதனன் ஈஸ்வரனே என்று அனுமானத்தால் ஸாதிக்கப்பட்டது
ஆகவே இரண்டு அதிகரணங்களுக்கும் முரண்பட்டு உள்ளது என்ற சங்கைக்கு விடையாவது
ஸாஸ்த்ர யோநித்வாத் அதிகரணத்தில் அனுமானத்தால் ஈஸ்வரனைச் சாதிக்க முடியாது என்று கூறப்பட்டது
இங்கு ஈஸ்வரன் அனுமானத்தாலே பாதிக்கவும் முடியாதவன் என்று கூறப்படுகிறது
ஆகவே இரண்டுக்கும் முரண் ஏதும் இல்லை
அதாவது
எந்த வஸ்து எந்த ப்ரமாணத்தால் சாதிக்கத் தக்கதோ
அந்த வஸ்துவே அந்த ப்ரமாணத்தாலேயே பாதிக்கவும் தக்கதாகும்
ப்ரத்யக்ஷத்தால் காணத்தக்க குடம் அதே ப்ரத்யக்ஷத்தால் தான் பாதிக்கவும் படக்கூடும்
ப்ரத்யக்ஷத்துக்கு விஷயமாகாத பரமாணு முதலியவை ப்ரத்யக்ஷத்தால் பாதிக்கவும் படமாட்டா
அதேபோல் அனுமானத்துக்கு விஷயமாகாத ஈஸ்வரன் அந்த அனுமானத்தால்
சாதிக்கவோ பாதிக்கவோ இயலாதது என்பதே ஸூத்ர காரரின் திரு உள்ளம்
என்று ஸ்ரீ தேசிகன் -நன்வத்ரா சேத நானாம் -என்று தொடங்கும் ஸ்லோகத்தாலே அருளிச் செய்கிறார் –

————————-

இரண்டாம் அதிகரணம் –மஹத் தீர்க்க அதிகரணம்

அனுமானத்தால் சித்திப்பது பிரதானம் போல் பரமாணுவும் ஆதலின்
நிரீஸ்வர சாங்க்யன் ஏற்ற பிரதான காரணத்வத்தைக் கண்டித்த பின்
கணாதர் ஏற்ற பரமாணு காரண வாதத்தைக் கண்டிக்கிறார் என்பது சங்கதி

சேஸ்வர சாங்க்யன் நிராகரிக்க வேண்டாதவன்
யோக மதமும் மிக்க விரோதம் இல்லாமையால் கண்டிக்க வேண்டியது இல்லை

பரமாணு காரண வாதியான புத்த மதஸ்தரும்
பிரதான காரணவாதியான பாசுபதனும் வேதத்தை நம்பாதவர்கள்
ஆதலின் சாங்க்யர் வைசேஷிகர்களுக்குப் பின் கண்டிக்கத் தக்கவர்

கநாதர் கூறும் பரமாணு காரண வாதம் சரியானதா இல்லையா என்று சம்சயம்
பூர்வ பஷீ அந்த வாதம் சரியானதே என்பதற்க்கு காரணம்
நூல் முதலிய அவயவங்கள் சேர்க்கையால் துணி முதலிய அவயவிகள் உண்டாகக் காண்கையாலே
அவயவங்கள் சிறுமை பெருமைகளுக்கு ஏற்ப கடுகுக்கும் மலைக்கும் வேறுபாடு காணப்படுவதால்
அந்த அவயவங்கள் சிறுமைக்கு எல்லையான பரமாணுவே காரணம் என்பதாகும்
இதனைக் கண்டிக்கிறார் –

ஸூத்ரம் –180-மஹத் தீர்க்கவத் வா ஹ்ரஸ்வ பரி மண்டலாப்யாம் –2-2-10-

இங்கு வா என்பது ச என்னும் பொருளில் வந்தது
அசமஞ்சஸம் என்று வருவித்துக் கொள்ள வேண்டும்
ஹ்ரஸ்வ பரி மண்டலாப்யாம்-மஹத் தீர்க்கவத்-
த்வய அணுகம் போலே
பரம அணுக்களால் த்வ அணுகம் -த்வய அணுக்களால் த்ரி அணுகம் –
இவற்றின் உத்பத்தி எவ்வாறு பொருந்தாதா அவ்வாறே அவர்கள் கூறிய எல்லா விஷயங்களும்
அநவஸ்தை முதலிய தோஷங்களால் பொருந்தாதவையே என்று கருத்து
எப்படி என்றால்
நூல் முதலிய அவயவங்கள் நான்கு பக்கம் -நான்கு திசைகளிலும் மேலும் கீழும் என்று
ஆறு பக்கங்களுடன் சேர்ந்து -ஒன்றோடு ஓன்று அளவில் பெரிய காரியப் பொருளை –
துணி முதலிய அவயவியைப் படைக்கின்றன
அதே போல் பரமாணுக்களும் ஆறு பக்கங்களுடன் சேர்ந்தே -ஒன்றோடு ஓன்று -த்வி அணுகம் முதலிய
கார்யங்களை நிறைவேற்றும் உண்டாக்கும் என்று சொல்ல வேண்டும்
அந்தப் பக்கங்கள் அவயவங்களை உடையவற்றுக்கே கூடுமாதலால்
பரமாணுக்களும் ச அவயவங்களாகவே இருக்க வேண்டும் என்று நேரிடும்
இப்படி ஏற்றால் முடிவே இல்லாமல் அநவஸ்தை வரும்
எந்தச் சிறு அவயவத்துக்கும் ஓர் அவயவியும் உண்டு என்று ஏற்க வேண்டி வரும் என்பதால்
உன் இஷ்டம் நிறைவேறாது –

————-

ஸூத்ரம் –181-உபய தாபி ந கர்மாத தத் அபாவ –2-2-11-

மற்றும் எது அசமஞ்சஸம் என்ற வினாவிற்கு விடை தருகிறார் இந்த ஸூத்ரத்தாலே
த்வய அணுகத்தைப் படைக்கப் பரமாணு செய்யும் முதல் செயல் ஒரு அத்ருஷ்டத்தால் -புண்யத்தால்
செய்விக்கப்படுகிறது என்று ஒப்புக் கொள்கின்றனர்
அந்த அத்ருஷ்டம் அணுவில் உள்ளதா -அன்றி ஜீவனிடம் உள்ளதா
இரண்டு இடங்களிலும் அது பொருந்தாது
பரமாணுக்கள் சேருவதற்கான கர்மா -அத்ருஷ்டம் -ஈர் இடங்களிலும் உள்ளது ஆகாது
அத்ருஷ்டம் ஜீவனின் கர்மாவால் உண்டாவது ஆதலின் பரமாணுவில் அது வராது
அதில் உண்டு என்று ஏற்றால் எப்பொழுதும் ஸ்ருஷ்டி நடந்து கொண்டே இருக்க வேண்டும்
ஜீவனிடம் உள்ளதாக ஏற்றுக் கொண்டால் அத்ருஷ்டம் வெவ்வேறு இடத்தில் இருப்பதால்
பரமாணுவில் கர்மாவை உத்பத்தி செய்ய இயலாது
அத்ருஷ்டமுள்ள ஆத்மாவின் சேர்க்கையால் பரமாணுவில் கர்ம உத்பத்தி ஆகிறது என்றால்
அந்த சம்யோகம் நித்யமாகையாலும் எப்போதும் ஸ்ருஷ்ட்டியை ஏற்க நேரிடும் –

————

ஸூத்ரம் –182-சமவாயாப் யுபகமாச்ச ஸாம யாத அநவஸ்திதே –2-2-12–

கணாத மதம் ஸமவாயம் என்ற சம்பந்தத்தை ஏற்றுக் கொள்வதாலும் அசமஞ்சஸம்
ஏன் எனில்
ஸம யாத -ஜாதிக்கும் வ்யக்திகளுக்கும் குணங்களுக்கும் த்ரவ்யங்களுக்கும் இடையே
விட்டுப் பிரிக்க முடியாத நிலைக்கு -அப்ருதக் ஸ்திதி -ஹேதுவாக ஸமவாயம் என்ற
சம்பந்தம் அங்கீ கரிக்கப் பட்டுள்ளது
அதே போல் அந்த ஸமவாயத்திற்கும் ஜாதி முதலியவற்றுக்கு இடையே
அதே அப்ருதக் ஸித்துக்கு ஹேதுவாக ஓன்று தேவைப்படுகிறது
அங்கோர் ஸமவாயம் ஏற்க வேண்டும்
இப்படி வியவஸ்தையே முடிவு இல்லாமல் போகும்
அதற்காக வேறே ஒரு சம்பந்தத்தை ஏற்காமல் ஸ்வ அப்ருதக் ஸித்தி-நிர்வாஹகத்வம்
தன்னை விட்டுப் பிரியாமையைத் தானே ஜாதியாதிகள் நிர்வஹிப்பவை என்று ஏற்றுக் கொண்டால் போதும்
ஸமவாயம் எனத் தனி சம்பந்தம் ஏற்பது அசமஞ்சஸம் ஆகும் –

—————-

ஸூத்ரம் –183-நித்யமேவச பாவாத் –2-2-13–

ஸமவாய சம்பந்தம் நித்தியமாக இருப்பதாக ஒப்புக் கொள்வதால்
சம்பந்திகளும் நித்யம் என்று ஏற்க வேண்டி வரும்

ஆக சமவாயத்தின் சம்பந்திகளான ஜாதி வியக்த்யாதிகளும் த்ரவ்ய குணாதிகளும் அவயவ அவயவிகளும்
நித்யமானவை என்று ஏற்படுவதால் ஒன்றுக்கும் காரண கார்ய பாவமே ஸித்தியாது –

———————

ஸூத்ரம் –184-ரூபாதி மத்வாச் ச விபர்யயோ தர்சனாத் –2-2-14–

பரமாணுக்களுக்கு ரூபாதிகள் உண்டு என்று ஏற்றுக் கொள்வதாலும்
விபர்யய -நித்யத்வம் நிர் அவயவத்வம் முதலியவற்றுக்கு முரண் ஏற்பட்டு விடும்
தர்சனாத் -ரூபாதிகளைக் கொண்ட குடம் முதலியவை அநித்யமாயும் ஸ அவயமாயும் காணப்படுவதாலும்
காண்பதற்கு ஏற்ற படியே கல்பிப்பதாலும்
பரமாணுக்களுக்கு அவர்கள் கூறும் நித்யத்வமும் நிர் அவயவத்மமும் பொருந்தாது என்பதாம் –

————

ஸூத்ரம் –185–உபயதா ச தோஷாத் –2-2-15-

பரமாணுக்களுக்கு அநித்யத்வாதிகள் வந்து விடுமே என்று பயந்து ரூபாதிகள் இல்லை என்று ஒப்புக் கொண்டால்
காரியத்தின் குணங்களுக்குக் காரண குணம் மூலம் என்ற நியமம் ஸித்திக்காது
அது ஸித்திக்க வேண்டி பரமாணுக்களுக்கு ரூபாதிகளை ஒப்புக் கொண்டால் அநித்யம் முதலானவை வந்து சேரும்
ஆகவே இரு வழிகளாலும் அசமஞ்சஸமாகும் –

————-

ஸூத்ரம் –186–அபரிக்ரஹாச் சாத் யந்தமநபேஷா –2-2-16–

கபில மதத்தில் ஸ்ருதி நியாய விரோதம் இருந்தாலும் ஸத் காரிய வாதிகளான வைதிகர்கள்
அதனை ஏற்றுக் கொண்டுள்ளனர்
கணாத மாதத்திலோ ஒரு அம்ஸத்தையும் வைதிகர்கள் ஏற்காமையாலே அனுபபத்தியாலும்
க்ஷேமார்த்திகளால் அடியோடு ஏற்கக் கூடாததாகும் –

————–

மூன்றாவது அதிகரணம் –ஸமுதாய அதிகரணம்

ஸூத்ரம் –187-ஸமுதாய உபய ஹேது கே அபி தத் அப்ராப்தி –2-2-17-

உபய ஹேது கே அபி-ஸமுதாய -பரமாணுக்களால் உண்டாகும் ப்ருத்வீ சமுதாயத்திலும் –
ப்ருதிவ்யாதிகளால் உண்டாகும் சரீர இந்திரிய விஷய சமுதாயத்திலும்
தத் அப்ராப்தி -ஜகத் ரூபமான சமுதாயத்தின் உத்பத்தி கூடாது
ஏன் எனில்
க்ஷணிகமான பரமாணுக்கள் ஒன்றோடு ஓன்று சேரும் வேளையில் தாமே நசித்துப் போவதால்
ப்ருத்வீ யாதி சமுதாயத்தை எப்படி உண்டாக்கும்
அஸ்திரமானவற்றில் ஸ்திரம் என்னும் பிரமத்தால் சமுதாயத்தின் உத்பத்தி கூடும் என்றால்
சக்தி சிப்பியில் வெள்ளி என்ற பிரமத்தால் வெள்ளியின் உத்பத்தி கூடாதது போலே
சமுதாய உத்பத்தி கூடாது
ஆகையால் அந்த மதம் அசமஞ்சஸம்

இவ்விடம் கணாதரும் புத்த மதஸ்தரும் ஒரே விதமாய் நான்கு விதமான பரமாணுக்களை ஒப்புக் கொள்கிறார்கள்
ஆகையால் கணாதரைக் கண்டித்தும் புத்த மதஸ்தர் கண்டிக்கப் படுகின்றனர்
ஸூ கதர் என்னும் புத்தரின் சிஷ்யர் நால்வர்
வைபாஷிகர் -ஸுத்ராந்திகர் -யோகாசரர் -மாத்யமிகர் –
வைபாஷிகர் என்பவர் ப்ருத்வீ முதலிய ஸ்தூல த்ரவ்யங்கள் ப்ரத்யக்ஷ சித்தங்கள் என்பர்
ஸுத்ராந்திகர் -அவை ஞானத்தால் அனுமானம் செய்யத் தக்கவை என்பர்
யோகாசரர் -வெளிப்படையாக பாக்யங்களான ப்ருத்வீ யாதிகள் இல்லை என்பர்
ஆந்தரமான ஞான சந்தான மாத்ரமே ஸத்யம் என்கின்றனர்
இம்மூவரும் தாம் ஏற்றுக் கொண்ட பொருள்கள் க்ஷணிகம் என்பர்
மாத்யமிகர் –சர்வ வஸ்துக்களும் சூன்யம் என்பர்

இதில் வைபாஷிகனும் ஸுத்ராந்திகனும் கூறும் ஜகத்தின் உத்பத்தி பிரகாரம்
நன்கு உப பாதனம் செய்யத் தக்கதா இல்லையா என்ற சம்சயம்
உபபாதிக்கத் தக்கதே –
பிருத்வீ ஜலம் தேஜஸ் வாயுக்களின் பரமாணுக்கள் நான்கும்
கந்தம் ரஸம் ரூபம் ஸ்பர்சம் இவற்றை யுடையவனாய் ப்ருதிவ்யாதி ரூபங்களாகக் கூடுகின்றன
அவற்றில் இருந்து சரீர இந்திரிய விஷய ஸமுதாயங்கள் தோன்றுகின்றன
இதில் ஆந்தரமான விஞ்ஞான ஸந்தானமே ஆத்மாவாகும்
இவை க்ஷணிகமே யாயினும் ஸ்திரம் என்ற பிரமத்தாலே உலக வ்யவஹாரங்கள் கூடும் என்ற
பூர்வ பஷியை மேற்கொண்ட ஸூத்ரத்தால் கண்டிக்கிறார்

———–

ஸூத்ரம் –188–இதர தர ப்ரத்ய யத்வாத் உப பன்னம் இதி சேந் ந ஸங்காத பாவா நிமித்தத்வாத் –2-2-18-

ஸகல வஸ்துக்களும் க்ஷணிகமாய் இருந்தாலும் அஸ்திரத்தை ஸ்திரம் என்று
பிராந்தியாகிய அவித்யை யாலே ராக த்வேஷாதிகள் உண்டாகின்றன
அவற்றில் இருந்து பிருதிவ்யாதிகள்
அவற்றில் இருந்து அவித்யை
இவ்வாறு ஒன்றில் இருந்து மற்று ஒன்றாக ஹேதுவாய் இருப்பதால் எல்லாமே பொருந்துமே என்றால்
இல்லை

ஸங்காத பாவா நிமித்தத்வாத்-ஸமுதாய பாவத்துக்கு அவித்யை நிமித்தமாக மாட்டாமையால் –
அஸ்திரத்தை ஸ்திரம் என்ற காரியத்தை எப்படி உண்டாக்கும்
இந்த அவித்யை யுடைய ஆத்மா அப்போதே நசிக்கையாலே
யாருக்கு ராக த்வேஷாதிகளை உண்டாக்குகின்றது
ஆகையால் இம்மதம் தவறானது

—————

ஸூத்ரம் –189-உத்தரோத் பாதேச பூர்வ நிரோதாத் –2-2-19–

உத்தரமான குடம் உண்டாகப் போகும் க்ஷணத்தில் முந்தைய மண் பிண்டத்தின் க்ஷணம் நசிப்பதால்
உத்தர குட க்ஷணத்துக்கு அபாவமே சூன்யமே ஹேது என்று சொல்ல வேண்டி இருப்பதால்
வியாவர்த்தகமான -பிரித்துக் காட்டத் தக்க விசேஷம் இல்லாமையாலே
குடத்தின் ஷணத்தால் துணி உண்டாகலாம் -அல்லது சர்வ ஜகத்தும் உண்டாகலாம் என்று கருத்து
க்ஷணம் என்ற சொல் ஷண்யதே என்ற வ்யுத்பத்தியாலே குடம் முதலியவற்றைக் குறிப்பிடும் –

—————–

ஸூத்ரம் –190-அஸதி ப்ரதிஜ்ஜோ பரோதோ யவ்க பத்ய மன்யதா –2-2-20-

அஸதி
காரணம் இல்லாமலே கார்யம் உண்டாகில்
ப்ரதிஜ்ஜோ
அதிபதி ஸஹ காரி முதலியவைகள் விஞ்ஞானத்தின் உத்பத்தி ஹேது என்று சொல்லுகிற
உங்கள் ப்ரதிஜ்ஜைக்குத் தடை வரும்
அந்யதா -இந்த சங்கையைப் பரிஹரிக்கைக்குப் பூர்வமான குட க்ஷணம் இருந்து கொண்டே
உத்தரமான குடத்தின் க்ஷணத்தை உண்டாக்குகின்றது என்று சொன்னால்
யவ்க பத்யம் -இரண்டு குட க்ஷணங்களும் ஒரே நேரத்தில் தோன்றக் கூடும்
அது உண்மையில் தோன்றுவது இல்லை –

————–

ஸூத்ரம் –191–ப்ரதி சங்க்யா ப்ரதி சங்க்யா நிரோதா ப்ராப்திர் அவிச்சேதாத் –2-2-21-

உலக்கையால் அடிபட்டு ஸ்தூலமாகத் தோன்றும் குடத்தின் அழிவு ப்ரதி சங்க்யா நிரோதம் -எனப்படும்
ஒவ்வோர் ஷணத்திலும் கண்களுக்குப் புலப்படாமல் அழிகிற அழிவு குடத்தில் ஏற்படுகிறது
அதை அப்ரதி சங்க்யா நிரோதம் என்பர்
இத்தகைய இருவகை விநாசங்களுக்கும் பிராப்தி இல்லை
ஏன் எனில்
அவிச்சேதாத் –உத்பத்தி விநாசம் என்னும் தர்மத்தை யுடைய மண் கட்டி முதலிய த்ரவ்யங்களுக்கு
விச்சேதம் -இடையூறு -இல்லாமையால் –
ஆகவே மண் கட்டிக்கு அடியகன்ற தோர் தோற்றமாதலால் குடத்தின் உத்பத்தி குடம்
கபாலம் ஓடு போன்ற நிலை அடைதலே அழிவு என்பது ப்ரத்யக்ஷமாகத் தோன்றுவதால்
கீழ்ச் சொன்ன இருவகை விநாசங்களும் நிரன்வய விநாசம் எனக் கூடாது
நிரன்வய விநாஸம் என்பது அழிவு
ஒரு நிலையிலே அந்வயிக்காமல் -சம்பந்திக்காமல் -இருத்தல் என்பதாம்
தீபத்தின் நாசம் என்பதும் தீபத்தின் ஸூஷ்ம அவஸ்தையே யாகும் –

—————

ஸூத்ரம் –192–உபயதா ச தோஷாத் –2-2-22-

உத்பன்னமான த்ரவ்யத்துக்கு தும்சத்வம் சூன்யத்வம் சொன்னாலும்
துச்சத்தில் இருந்தே ஜகத்துக்கு உத்பத்தி சொன்னாலும்
ஜகத்தே துச்சம் சூன்யம் என்று ஒப்புக் கொள்ள நேரிடும் –

————–

ஸூத்ரம் –193–ஆகாசே ச அவிசேஷாத் –2-2-23-

ஆகாசத்திலும் துச்ச ஸ்வரூபத்வம் சொல்லக் கூடாது
அவிசேஷாத் –பிருதிவ்யாதிகளைப் போலே ஆகாசத்திற்கும் அபாதிதமான ப்ரதீதி ஸித் தத்வம் சமம்
ஆகையால் விசேஷம் இல்லை
அத்ரஸ்யேந பததி-இங்கு கழுகு விழுகிறது என்று
கழுகு விழுவதற்கு ஆஸ்ரயமாகவே ஆகாசம் தோன்றுவதால் அதற்குப் பாதகம் இல்லை –

————

ஸூத்ரம் –194-அனுஸ் ஸ்ருதேச் ச –2-2-24–

இது அதே குடம் என்ற நினைவு -ப்ரத்யபிஜ்ஜை -ஏற்படுவதாலும்
குடம் முதலியவை க்ஷணிகம் என்பது தகாது
ப்ரத்யபிஜ்ஜை -என்பது சென்ற காலத்திலும் நிகழ் காலத்திலும் இருக்கிற
ஒன்றைப் பற்றிய ப்ரத்யக்ஷ ஞானம் –
அதே இது என்பது போன்றது
அதில் அதே என்பது ஸ்மரண அம்சம் -இது என்பது கிரஹண அம்சம் என்றும் கூற இயலாது
அதே இது என்ற விசேஷண விசேஷ்ய பாவத்தால் -ஸாமா நாதி கரண்யத்தால் –
க்ரஹண அம்சமே ஒரு பொருளில் தோன்றுவதால் ப்ரத்யக்ஷ ரூபம் தான்
அதற்குக் காரண ஸாமக்ரீ எது என்றால்
முன் அனுபவத்தால் உண்டான ஸம்ஸ்காரத்துடன் கூடிய இந்திரியங்களின் சேர்க்கை
இதனையுடைய மனிதனுக்கு இந்த ப்ரத்யபிஜ்ஜை ஏற்படுகிறது –
குடம் முதலிய விஷயங்களும் அறிபவனும் க்ஷணிகம் என்றால்
இந்த ப்ரத்யபிஜ்ஜை உண்டாகவே மாட்டாது

——————

ஸூத்ரம் –195–ந அஸத் அத்ருஷ்டத்வாத் –2-2-25–

அஸத் ந -நசித்துப் போன குடம் முதலியவற்றின் குடத்தன்மை -கடத்தவம் -போன்ற தர்மமானது
குடம் முதலியவற்றின் ஞானத்தில் சங்கமிக்கிறது -ஒட்டிக் கொள்கிறது என்பதும் பொருந்தாது –
ஏன் எனில்
அத்ருஷ்டத்வாத்-பொருள் நசித்த பின் அதன் தர்மம் மட்டும் வேறு ஒன்றில் ஒட்டிக் கொள்வது என்பது
எங்குமே காணப்படாமையாலே
ஸுராந்திகர் கூறுவது –
நீலம் மஞ்சள் முதலிய பல நிற அறிவைக் கொண்டு அவ்வறிவுக்கு முன் இருந்த நீலம் முதலியவை பற்றிய அறிவில்
நீலமான குடம் தான் அழியும் போது தன் நீல நிறத்தை ஒப்படைத்து விட்டு அழிகிறது
பின்னர் நீலக்குடம் முதலிய பொருள் அனுமானத்தால் தீர்மானிக்கப் படுகிறது என்பதாம்
இத்தகைய மதமும் அசங்கதம் என்பதாம் –

———–

ஸூத்ரம் –196–உதா ஸீநா நாம் அபி சைவம் ஸித்தி –2-2-26–

வைபாஷிகனுக்கும் ஸுந்த்ராதிகனுக்கும் பொதுவான தோஷம் இந்த ஸூத்ரத்தில் கூறப்படுகிறது
ஏவம் –இப்படி சர்வ த்ரவ்யங்களுக்கும் க்ஷணிகம் கூறினால்
உதா ஸீநா நாம் அபி ஸ்த்திதி ஸ்யாத் –ஒரு முயற்சியும் இல்லாதவர்களுக்கும்
இம்மை மறுமை பலன்கள் யாவும் சித்தித்து விடும்
புண்ய கர்மாக்களை அனுஷ்ட்டித்து புருஷன் க்ஷணிகனாய் நசித்துப் போவதால்
அந்த புண்ய பலனை வேறே ஒரு மனிதனே அனுபவிக்க நேரிடும்
ஆகையால் வைசேஷிக ஸுத்ராந்திக மதம் அசமஞ்சேஸமே என்று கருத்து –

————-

நான்காம் அதிகரணம் –உப லப்த் யதிகரணம்

இவ்வாறு பாஹ்யார்த்தங்களின் இருப்பைப் பற்றி பேசுவோரைக் கண்டித்து
விஞ்ஞானம் மட்டுமே உள்ளது என்னும் யோகாசாரநைக் கண்டிக்கிறார் என்று சங்கதி
யோகாசாரனின் ஞானம் மட்டுமே -ஸத் -என்கின்ற வாதம் யுக்தமா அயுக்தமா என்ற சங்கையில்
யுக்தமே என்கிறான் பூர்வ பஷி
ஏன் எனில்
இது குடம் இது வஸ்திரம் என்று குடம் முதலியவற்றின் ஞானத்துக்கும் பொதுவாகக்
குடம் முதலிய ஆகாரம் தோன்றுகிறது
பாஹ்யார்த்தங்களே ஸத் என்பாரும் குடம் முதலியவற்றில் உள்ள குடத்தன்மை கடத்வம் முதலியவற்றை
குடம் முதலியவற்றின் ஞானத்துக்கு ஆகாரமாக ஏற்று
வஸ்திரம் முதலியவற்றின் ஞானத்தில் இருந்து பேதம் சொல்கின்றனர்
ஆதலின் குடத்தன்மை முதலியவற்றின் தோற்றம் ஞானத்தின் உடையனதே தவிர
பாஹ்யார்த்தமான குடம் போன்றவற்றினுடையது அன்று
அப்படிப்பட்ட ஆகாரத்தோடு பாஹ்யார்த்த ப்ரதீதி -குடம் முதலியவற்றுக்கு பிராந்தி ரூபம் என்கின்றனர்
இம்மதத்தை இங்கு கண்டிக்கிறார் –

ஸூத்ரம் –197–ந பாவ உப லப்ர்தே–2-2-27-

அபாவ ந -ஞானத்தைத் தவிர வேறே பதார்த்தம் இல்லை என்று கூற இயலாது
ஏன் எனில்
உப லப்தே -நான் குடத்தை அறிகிறேன் என்று குடம் பற்றிய ஞானத்துக்கு
குடம் விஷயமாகவும்
ஆத்மா ஞாதாவாகவும் தோன்றுவதால்
விஷயங்களையும் ஞாதாவையும் இல்லை என்றால் ஞானமும் ஸித்திக்க மாட்டாது —

—————

ஸூத்ரம் –198-வை தர்ம் யச்ச ந ஸ்வப் நாதி வத் –2-2-28–

ஸ்வப் நாதி வச்ச ந-ஸ்வப்னத்தில் உண்டாகும் ஞானம் மித்யா விஷயமானால் போலவோ என்றால்
விழிப்பில் பெரும் ஞானமும் மித்யா விஷயமே என்பது பொருந்தாது
ஏன் எனில்
வை தர்ம்யாத் –ஸ்வப்ன ஞானத்தைக் காட்டிலும் விழிப்பு நிலை ஞானத்துக்கு வேறுபாடு உள்ளமையால்
அதாவது
ஸ்வப்ன ஞானத்திற்கு நித்ராதி தோஷம் காரணம்
ஸ்வப்னத்துக்கு பிந்திய நிலையில் இல்லை என்கிற பாதகமான எண்ணமும் உள்ளது
விழிப்பு நிலை ஞானத்திற்கு இவ்விரண்டும் இல்லை
இவ்வாறு தோஷம் அற்று பாதகமும் அற்றுள்ள குடம் முதலியவை பற்றிய ஞானத்தை –
மித்யா விஷயம் -அஸத்ய விஷயம் -என்று கூறுவது அயுக்தம்
ச -காரத்தால்
ஸ்வப்ன பதார்த்த ஞானமும் யதார்த்த விஷயகம் என்று ஸூ சிக்கப் படுகிறது –

—————–

ஸூத்ரம் –199–நா பாவோ அனு பலப்தே –2-2-29–

அபாவ ந –பொருள் அற்ற அர்த்த சூன்யமான ஞானத்திற்கு உண்மையும் இருப்பும் இல்லை
ஏன் எனில்
அனு பலப்தே-ஓர் இடத்திலும் அது தென்படாமையாலே பாதிக்கப்பட்ட ப்ரதீதியால்
ஸித்தமான அர்த்தத்தைக் கழித்து விட்டால்
ஞானத்தையும் கழிக்க வேண்டும் என்று கருத்து –

——————–

ஐந்தாம் அதிகரணம் –ஸர்வத அனுபபத் யதிகரணம்

ஸூ கத மதத்தினர் கூறும் ஸர்வ சூன்யத்வ வாதத்தை இதில் நிரஸனம் செய்கிறார்

ஸூத்ரம் –200–ஸர்வத அனுபபத்தேச் ச –2-2-30-

மாத்யமிகன் சொன்ன ஸர்வ சூன்ய வாதம் கூடுமா கூடாதா என்கிற சம்சயம் எழ
பூர்வ பஷீ கூடும் என்று வாதிக்கிறான்
மண் கட்டி முதலியவற்றை பிசையாமல் குடம் முதலியவற்றை உண்டாக்க இயலாது –
பிசைந்தாலோ கட்டி நசிந்து விடுகிறது
ஆகவே பிண்ட அபாவத்தால் உண்டான குடம் முதலியவை அபாவாத்மகங்களே என்று
கொள்ளுவது தான் பொருத்தமானது என்கிறான்
அதனைக் கண்டிக்கிறார் –

சர்வ சூன்யவாதி சர்வத்தையும் ஸத் என்று ப்ரதிஜ்ஜை செய்து தன் விருப்பத்தைச் சாதிக்கிறானா
அன்று அஸத் என்று கூறி சாதிக்கிறானா
அல்லது வேறு வழியிலா
ஸர்வதா -எல்லா வகைகளாலும் அவன் கூறும் ஸர்வ சூன்யத்வம் சித்திக்காது
அனுப பத்தே -எல்லா விதத்திலும் அனுப பத்தி இருப்பதால் -பாவம் அபாவம்-என்ற சொற்கள்
ஒரு பொருளின் அவஸ்தா விசேஷத்தையே குறிப்பவை என்று முன்னமே நிரூபித்து உள்ளோம்

மண் -அகன்ற அடிப் பாகத்தையும் மத்ய பாகத்தையும் உடைய பாத்திரமாக மாறும் அவஸ்தையே
குடம் இருக்கிறது என்ற புத்திக்கு விஷயமாகிறது
மண் கட்டி நிலை இங்கு குடம் தோன்றப் போகிறது என்ற புத்திக்கு விஷயம்
பானையின் ஓடு குடம் அழிந்தது என்ற புத்திக்கு விஷயம் ஆகிறது
ஆகவே உள்ள பொருளின் தர்மமே சத்த்வமும் அசத்த்வமும் என்று விளக்குவதால்
நீ கூறும் சர்வ சூன்யத்வ வாதம் சித்திக்க மாட்டாது –

—————

ஆறாவது அதிகரணம் –ஏகஸ் மின்ன ஸம்பவாதி கரணம்

அசத்துக்கு அஸத் சொல்லும் வாதியைக் கண்டித்து
ஸத்யத்வத்தையும் அஸத்யத்வத்தையும் சேர்த்துச் சொல்லும் ஜைன மதத்தைக் கண்டிக்கிறார்
என்று சங்கதி

ஸூத்ரம் –201- ந ஏகஸ் மின்ன ஸம்பவாத் –2-2-31-

ஜைன மதம் யுக்தமா அயுக்தமா என்ற சம்சயத்தில்
யுக்தமே என்று பூர்வ பக்ஷம்
ஏன் எனில்
ஜீவன் என்றும் அஜீவன் என்றும் கூறப்படும் முழு ஜகத்தும்
சத்தாயும் அசத்தாயும் நித்யமாயும் அநித்யமாயும் பின்னமாயும் அபின்னமாயும் உள்ளதாகத் தோற்றுகிறது
த்ரவ்ய ஸ்வரூபம் ஸ்திரமாயும் ஏகமாயும் இருக்கும்
கடத்வம் கபாலத்வம் போன்ற பர்யாயங்களான அவஸ்தைகளாலே அநேகமாயும் அசத்தாயும் அஸ்திரமாயும் இருக்கும்
அதனால் இந்த மண் குடம் இந்த மண் கபாலம் -ஓடு – இது முதலிய ப்ரதீதி -எண்ணம் -தோன்றும்
என்னும் பஷத்தை நிரஸிக்கிறார்

ந -ஜைன மதம் பொருத்தமானது அல்ல
ஏன் எனில்
ஏகஸ்மின் அஸம்பவாத்-ஒரே த்ரவ்யத்தில் ஒரே சமயத்தில் ஒன்றுக்கு ஓன்று
முரணான தர்மங்கள் சம்பவிக்காதவை என்பதால்
குடம் வாணாய் என்பவற்றின் பேதங்களும் பிருத்வியின் பிரதேச பேதத்தால் அல்லது
ஒரு பிரதேசத்தில் பேத அபேத ஆஸ்ரயித்தவம் இல்லை
ஆகவே ஒரு வஸ்து தானே இரு வடிவுள்ளதாக இருக்கும் என்பது சரியில்லை

—————–

ஸூத்ரம் –202–ஏவாஞ்ச ஆத்ம அகார்த்ஸ்ன்யம் –2-2-32-

இப்படி ஒப்பும் கொள்ளும் பக்ஷத்தில் ஆத்மாவுக்கு அகார்த்ஸ்ன்யம் வந்து விடும்
அது எப்படி என்றால்
ஆத்மாவே சரீர பரிணாமமாய் இருக்கிறான் என்று ஜைன மதம்
அப்படியாகில் யானையின் உடலில் உள்ள ஜீவன் கொசுவின் உடலில் நுழைகையில்
ஆத்மாவுக்கு அகார்த்ஸ்ன்யம்-அபூர்ணத்வம் வரக்கூடும் –

—————–

ஸூத்ரம் –203-ந ச பர்யாயா தப்ய விரோதோ விகாராதிப்ய –2-2-33-

ந ச பர்யாயா தபி அவிரோதோ
ஆத்மாவுக்கு அல்பத்வ அவஸ்தை என்னும் பர்யாயத்தாலும்
கீழ்க் கூறிய விரோதம் வராது என்பது பொருந்தாது
ஏன் எனில்
விகாராதிப்ய -குடம் முதலியவற்றுக்கும் போலவே ஆத்மாவுக்கும் பெருமை சிறுமை முதலிய
விகாரங்கள் என்னும் தோஷம் சம்பவிக்கக் கூடுமாகையாலே
அவஸ்தா பேதத்தை ஏற்றாலும் ஆத்மாவுக்குத் தோஷத்தைப் பரிஹரிக்க முடியாது என்றபடி –

————–

ஸூத்ரம் –204-அந்த்யா வஸதி தேச் ச உபய நித்யத் வாத விசேஷ –2-2-34–

அந்த்யா வஸதி தேச் ச –ஜீவனுக்கு மோக்ஷ தசையில் வரக்கூடிய இறுதியான பரிமாணம்
பிற்பாடு ஒரே விதமாக இருப்பதால்
உபய நித்யத் வாத் –ஆத்ம ஸ்வரூபமும் -அந்திம இறுதிப் பரிமாணமும் நித்யமாயும் இருப்பதாலும்
அவிசேஷ -முன் தசையிலும் பின் தசை போலே ஆத்ம ஸ்வரூப பரிமாணங்கள் இருக்க வேண்டியவை யாதலால்
ஆத்மாவுக்குத் தேகம் போன்ற பரிமாணம் என்ற விசேஷம் இல்லை
ஆகையால் ஜைன மதம் பொருந்தாது என்பதாம் –

—————-

ஏழாம் அதிகாரணம் –பசுபத் யதிகரணம்

பசுபதி மதத்தில் ப்ரக்ருதி காரணம் என்று ஒப்புக் கொண்டாலும்
காணாத சாக்ய பாஷண்டை த்ரயீ தர்மோ விலோபித-என்கிறபடியே
வேதத்தை ஏற்காதவர்களுடன் சேர்ந்து இருப்பதால் ஜைனர்களைக் கண்டித்ததும்
பசுபத மதத்தைக் கண்டிக்கிறார் என்று சங்கதி

பசுபதியால் இயற்றப்பட்ட மதம் முமுஷுக்களால் ஆதரிக்கத் தக்கதா அல்லவா என்ற சங்கையில்
ஸர்வஞ்ஞனான ருத்ரனால் இயற்றப்பட்ட தாதலின் ஆதரிக்கத் தக்கதே என்பதே பூர்வ பக்ஷம்
அதனை இங்கு நிரஸனம் செய்கிறார்

ஸூத்ரம் –205–பத்யுர அஸாமஞ் ஜஸ்யாத் –2-2-35–

ந ஏகஸ்மின்ன சம்பவாத் – என்கிற ஸூத்ரத்தில் இருந்து ந -தருவித்துக் கொள்ள வேண்டும்
பத்யு ந -பசுபதியின் மதம் சரி இல்லை
அஸாமஞ் ஜஸ்யாத்–வேதாந்த சித்தனான பரமபுருஷனை கீழானவனாகவும்
ருத்ரனை நிமித்த காரணமாகவும்
கள் குடத்தை ஸ்தாபிப்பது போன்ற வேத விருத்தமான ஆசாரங்களை விளக்குவதாலும்
பசுபதி மதம் அசமஞ்சஸம் ஆதலின் ஆதரிக்கத் தக்கது ஆகாது –

———–

ஸூத்ரம் –206–அதிஷ்டான அனுப பத்தேச் ச –2-2-36-

அனுமான சித்தனான பசுபதி என்னும் ஈஸ்வரன் பிரதானத்தை அதிஷ்டிக்கிறான் என்று சொல்வதால்
சரீரமுள்ள குயவன் போன்றவனுக்கே மண் உருண்டை முதலியவற்றை அதிஷ்டித்தல் காணப்படுவதால்
சரீரம் அற்ற பிரதானத்தை அதிஷ்டித்தல் ஆகாது –
அதற்காக பசுபதிக்கு சரீரத்தை ஒத்துக் கொண்டால்
ஸ அவயவமான சரீரத்துக்கு ஒரு காரணம் அபேக்ஷிக்கப் படுவதால் ஓர் முடிவு இராமல் போகும் —

——————-

ஸூத்ரம் –207–கரண வத் சேத் ந போகாதிப்ய –2-2-37-

கரண வத் சேத் ந -ஷேத்ரஞ்ஞன் – ஜீவன் -சரீரம் இன்றியே தன் கரண களேபரங்களை
அதிஷ்டிப்பது போலவே பசுபதியும் அதிஷ்டிக்கலாம் என்பது தகாது
போகாதிப்ய-அவ்வாறே ஷேத்ரஞ்ஞனைப் போலவே
பசுபதிக்கும் புண்ய பாப ரூப கர்ம பல போகாதிகள் வந்து சேரும் –

——————

ஸூத்ரம் –208–அந்த வத்த்வம் அஸர்வ ஜ்ஞதாவா –2-2-38–

வா என்பது உம் -ச என்ற பொருளில்
பசுபதிக்கு புண்ய பாபங்கள் உண்டு என்றால்
அந்த வத்த்வமும்-விநாசமும் -ஸ்ருஷ்டிக்கும் ஸம்ஹாரத்துக்கும் விஷயமாதலும் –
ஸர்வஞ்ஞத்வம் இன்மையும் ஏற்படுமாகையால் பசுபதி மதமும் அசமஞ்சஸம் –

———————-

எட்டாவது அதிகரணம் –உபபத்ய சம்பவ (பாஞ்சராத்ரம் )அதி கரணம்

ஸூத்ரம் –209-உபபத்ய சம்பவாத் –2-2-39-பூர்வ பக்ஷ ஸூத்ரம்

வாஸூ தேவாத் சங்கர்ஷ்னோ நாம ஜீவோ ஜாயதே -என்று
ந ஜாயதே ம்ரியதேவா விபச்சித -போன்ற ஸ்ருதிக்கு விரோதமான ஜீவ உத்பத்தியைச் சொல்வதால்
பாஞ்சராத்ரம் பிரமாணம் இல்லை என்பர்
நான்கு வேதங்களாலும் புருஷார்த்தம் அடையப்பெறாதவர் இதனால் பெறுகிறார் என்று
வேதங்களை அலட்சியப்படுத்திச் செல்வதாலும் பிரமாணம் இல்லை என்பர்

———

ஸூத்ரம் –210- ந ச கர்த்து கரணம் –2-2-40-பூர்வ பக்ஷ ஸூத்ரம்

சங்கர்ஷணாத் ப்ரத்யும்ன சம்ஞ்ஞம் மநஸ் உத்பத்தே என்று
மனஸ்ஸுக்கு ஸங்கர்ஷணன் என்ற பெயர் கொண்ட கர்த்தா வாகிய
ஜீவனிடம் உத்பத்தி கூறுவது ஸ்ருதிக்கு விருத்தமாகையாலும் பாஞ்ச ராத்ரம் அப்ரமாணம்
கர்த்து கரணம் நச -கர்த்தாவான ஜீவன் இடத்திலிருந்து மனஸ் ஸர்வேந்திராணி ச என்று
மனஸ் ப்ரஹ்மத்தினிடம் இருந்து தோன்றுவதாகவே ஸ்ருதி சொல்வதால்

இந்த இரண்டு பூர்வ பக்ஷ ஸூத்ரங்களுக்கு அடுத்த இரண்டும் ஸித்தாந்த ஸூத்ரங்கள் –

ஸூத்ரம் –211-விஞ்ஞானாதி பாவே வா தத் அப்ரதிஷேத –2-2-41-

வா ஸப்தம் பூர்வ பஷத்தை விலக்கிக் காட்டுகிறது
விஞ்ஞானஞ்ச தத் ஆதிச விஞ்ஞானாதி -என்று விக்ரஹம்
அதனால் விஞ்ஞானாதி என்பது -ஞானமே ஸ்வரூபமாய்க் கொண்ட ஜகத் காரணமான பரமாத்வைச் சுட்டுகிறது
அதன் பாவம் -விஞ்ஞானாதி பாவம் -அவனது அவதார ரூபமாய் இருத்தலாம்
ஆகவே ப்ரத்யும்ன அநிருத்த ஸங்கர்ஷணாதிகள்
விஞ்ஞான ஸ்வரூபமாய்
ஜகத்தின் ஏக காரணமான பரப்ரஹ்மத்தின் அவதார ரூபமே என்பது ஸித்தம் –

அதைத் தடுக்க வில்லை -அந்த விஷயத்துக்கு ப்ராமாண்யத்தைத் தடுக்கவில்லை
முழு பாஞ்ச ராத்ர ஸாஸ்த்ரமும் பிரமாண தர்மம் என்பதாகிறது
அஜயமானோ பஹுதா விஜாயதே -என்று ஸூவ இச்சையாலேயே அவதாரங்கள் தான்
வாஸூதேவாத் ஸங்கர்ஷனோ நாம ஜீவோ ஜாயதே -சங்கர்ஷணாத் ப்ரத்யும்ன ஸம்ஜ்ஞம் மனோ ஜாயதே
இத்யாதிகளால் சொல்லப்படுகிறது -ஜீவனின் உத்பாதிகளைப் பற்றிச் சொல்லவில்லை
இங்கு ஜீவாதி சப்தங்கள் விசேஷ்யங்களாயும்
ஸங்கர்ஷணாதி சப்தங்கள் விசேஷணங்களாயும் இருக்கும் என்கின்றனர் பூர்வ பக்ஷிகள்
ஸித்தாந்தத்தில் ஜீவனின் அதிஷ்டாவாதான ஸங்கர்ஷணன் என்றும் பொருள்
ஸங்கர்ஷணாதி பதங்கள் விசேஷ்யங்கள் -ஜீவாதி பதங்கள் விசேஷணங்கள் என்று கருத்து
நான்கு வேதங்களாலும் புருஷார்த்தங்கள் கிட்ட வில்லை என்பது
உதயத்துக்கு முன் ஹோமம் செய்பவர் பொய் பேசுபவராம் என்ற வேத வாக்கியம் -உதயத்துக்கு பின் அக்னி ஹோத்ரம்
செய்வதை போற்ற வந்த அர்த்த வாதம் என்பது போல் பாஞ்ச ராத்ரம் சிறந்தது என்பதைக் காட்டவே –
அதாவது
வேதாந்தத்தில் கூறப்பட்ட பரம புருஷனின் உபாசனத்தையும் அவனை அர்ச்சிப்பதையும்
பாஞ்ச ராத்ரம் விளக்குவதால் அது முழுவதுமே பிரமாணம் என்பது சித்தம் –

ஸூத்ரம் –212–விப்ரதிஷேதாச் ச -2-2–42-

இந்த பாஞ்சராத்ரத்திலும் ஜீவனின் உத்பத்தியை விசேஷமாக நிஷேதித்து இருப்பதால்
இது வேதத்துக்கு முரண் அற்றது

அசேதநா பரார்த்த ச நித்யா சதத விக்ரியா
த்ரி குணா கர்மிணாம் க்ஷேத்ரம் ப்ரக்ருதே ரூப முச்யதே
வ்யாப்தி ரூபேண ஸம்பந்த தஸ் யாச்ச புருஷஸ் யச
ஸஹ்ய நாதி ரநத் தச்ச பரமார்த்தே நிச்சித -என்று

பாஞ்ச ராத்ரத்திலே ஜீவனுக்கு உத்பத்தி நிஷேதிக்கப்பட்டது
ஆகையால் ஸ்ருதியுடன் சிறிதும் முரண்பாடு இல்லை

கீழே பூர்வ பக்ஷிகள் கூறிய முக்தி பிரகாரத்தை விளக்க அதிகரண ஸாரா வளியில் ஸ்வாமி தேசிகன்
ஸ்வா தந்தர்யம் ப்ரஹ்மண ஐக்யம்– –கல்பதாம் ஜல்பதாம் வ-என்ற ஸ்லோகத்தின் கருத்து

ஸ்வா தந்தர்யம் பசுபதி ஸமத்வம் -இவ்விரண்டும் பாசுபத பேதங்கள் -இவை முக்தியில் பிரகாரங்கள்
ப்ரஹ்மத்துடன் ஐக்யமும் அவித்யா நிவ்ருத்தியும் அத்வைதிகள் கூறும் முக்தி பிரகாரங்கள்
புத்தமத ஒரு சாரார் விஷய வாசனை தொலைவதே அது என்பர்
பிரபாகரர் -மித்யா ஞான சந்ததியின் அழிவே அது என்பர்
நையாயிகரில் சிலர் தன் புத்தி சுகங்களை நித்யம் நெருக்கமான நிலையே முக்தி என்பர்

பாட்ட மீமாம்சகர் சித்தத்தால் தன் ஆத்ம ஸுக்யத்தை அனுபவிப்பதே முக்தி என்பர்
காணாதர்கள் -கல் -பாஷாணம் -போன்றதே முக்தி என்பர்
ஜைனர்களோ நித்யம் மேல் நோக்கிப் பயணம் அனைத்து மக்களின் மத்தகத்தின் கூடிய சரீர பிரவேசம் முக்தி என்பர்
சூன்ய அத்வைதமே முக்தி என்பது
கேவல ஆத்ம அனுபவமே முக்தி என்பர் சாங்க்யர்
உபாதை நிவ்ருத்தியே முக்தி -யாதவ பாஸ்கர மதஸ்தர்
தேக விச்சேதம் ஆயிரம் யுவதிகளை அனுபவிப்பதே முக்தி என்பர் சாருவாகர்

இப்படி விபரீத உக்திகளைக் கூறும் உங்களை சுருதி உபகரிக்கட்டும் என்று
இகழ்ச்சியாக சொல்லும் ஸ்லோகம்
கீழ் சொன்ன யுக்திகள் எல்லாமே ஸ்ருதி ஸ்ம்ருதி அனுமானம்
அனைத்துக்குமே விருத்தமானவை என்று கருத்து

————–

பாதேஸ்மின் –காபிலஸ்தை –பஞ்சம ஆம்நாய தர்சீ —

முதல் அதிகரணம் –ரசனா னுப பத்தி -காபிலர்கள் செய்த விரோதம்
இரண்டாம் அதிகரணம்-மஹத் தீர்க்கம் –காணாதர்கள் செய்த விரோதம்
மூன்றாம் அதிகரணம் -சமுதாயம் -வ்ருத்த வைபாஷிகன் செய்த விரோதங்கள்
நான்காம் அதிகரணம் –உபலப்தி -யோகாசாரர் செய்த விரோதங்கள்
ஐந்தாம் அதிகாரணம் -ஸர்வதா அனுபபத்தி -மாத்யமிக சூன்ய வாதி ப்ரசக்தி
ஆறாம் அதிகரணம் —ஏகஸ்மின்ன ஸம்பவம் -ஜைனர்கள் செய்த விரோதங்கள்
ஏழாம் அதிகரணம் -பசுபதி -பசுபதி மதஸ்தர் செய்த விரோதங்கள்
இவற்றைக் கண்டித்த பின்
எட்டாம் அதிகரணம் –உத்பத்ய சம்பவம் -பாஞ்சராத்ரம் -பாஞ்ச ராத்ரமே வேதாந்த மார்க அநுசாரி என்று ஸ்தாபித்தார்

ஸ்ரீ மத் பாரதத்தில் ஆனுசாசநிக பர்வத்தில் -ஞான காண்டத்தில் பல ஸ்லோகங்களால் முழுவதுமே
பாஞ்ச ராத்ர சாஸ்திரம் ப்ரமாணமே என்று ஸ்தாபித்த
வியாசர் பாஞ்சராத்ரத்தின் ஒரு பகுதி அப்ரமாணம் என்று சொல்கிறார் என்பது பொருந்தாது
தன் சொல்லுடனும் முரணானதாகும்
ஆகையால் பாஞ்ச ராத்ரத்தில் சுருதி விரோதத்தை அங்கீகரித்து விரோதம் இல்லாத அம்சம் மட்டுமே பிரமாணம்
என்று சங்கரர் கூறுவது கண்டிக்கப்பட்டது என்பதே ஸ்ரீ பாஷ்யகாரர் திரு உள்ளம்
ஸ்ரீ ஆளவந்தாரும் ஆகம ப்ராமாண்யத்தில் இத்தை நன்கு ஸ்தாபித்தார்

————–—————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஸ்ருதி பிரகாசர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ போதாயனர் -வ்ருத்தி காரர் – ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பாதராயணர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பாஷ்யார்த்த தீபிகை –இரண்டாம் அத்யாயம் –முதல் பாதம் —

November 26, 2021

ஸ்ரீ பாஷ்யம் -மங்கள ஸ்லோகம்

அகில புவன ஜன்ம ஸ்தேம பங்காதி லீலே
விநத விவித பூத வ்ராத ரக்ஷைக தீஷே
ஸ்ருதி சிரஸி விதீப்தே ப்ருஹ்மணி ஸ்ரீ நிவாஸே
பவது மம பரஸ்மின் சேமுஷீ பக்தி ரூபா –

பாராசார்ய வச ஸூதாம் உபநிஷத் துக்தாப்தி மத்யோத் த்ருதாம்
சம்சாராக்னி விதீபன வ்யபகாத ப்ராணாத்மா சஞ்சீவி நீம்
பூர்வாச்சார்ய ஸூரஷிதாம் பஹூ மதி வ்யாகாத தூரஸ்தி தாம்
ஆ நீதாம் து நிஷாஷரை ஸூ மனஸோ பௌமா பிபந்து அந்வஹம்–

—————————————————————-

இதுவரை சர்வ வேதாந்தங்களும்
அகில ஹேய ப்ரத்ய நீக கல்யாண கதான ஸ்வரூப ஸ்ரீ யபதியான பரம புருஷன் ஸ்ரீ மன் நாராயணன்
என்று அவனுடைய பரத்வத்தை வெளிப்படுத்தி காரணத்வம் நிரூபிக்கப் பட்டது

அது எந்தப் பிரமாணத்தாலும் பாதிக்கத் தக்கது அன்று
என்று அபாத்யத்வம் என்ற அம்சம் இரண்டாம் அத்யாயத்தால் நிரூபிக்கப் படுகிறது –

இதில் முதல் இரண்டு பாதங்களில் –
காரண பூதமான பர ப்ரஹ்மம் பற்றி பூர்வ பக்ஷங்களால் கூறப்படும் பாதகங்கள் பரிஹரிக்கப் படுகின்றன

பின்னுள்ள இரண்டு பாதங்களில் (வியத்பாதம் -பிராண பாதம் )
கார்யத்வத்தை ஹேது வாகக் கொண்டு வரும் விரோதத்தை
வேதாந்த வாக்யங்களுக்கு பரஸ்பரம் முரண்பாட்டை நீக்குவதன் மூலம் பரிஹரிக்கிறார் என்று சங்கதி

முதல் அத்தியாயத்தின் முடிவில் இரண்டு வகையான சாங்க்யர் நிரசனம் ஆனதால்
இங்கு முதலில் இங்கு சாங்க்யன் வேதாந்த விரோதத்தைச் சொல்கிறான்
அடுத்தபடி யோக வாதீ என்று இங்கு அதிகரண சங்கதி

ஸ்ம்ருதி அதிகரணம் –2-1-1-

ஸூத்ரம் –135-ஸ்ம்ருத் யந வகாச தோஷ ப்ரசங்க இதி சேந் ந அந்ய ஸ்ம்ருத் யந வகாச தோஷ ப்ரசங்காத்–2-1-1-

முன் கூறப்பட்ட பரம புருஷனே காரணம் என்ற விஷயம் கபிலர் முதலியோரின் ஸ்ம்ருதிகளோடு
விரோதத்தால் மாற்றி விட -விலக்கி விடத் தக்கதா -இல்லையா என்ற சங்கை
விலக்கத் தக்கதே என்பதே சாங்க்யர்களின் பூர்வ பக்ஷம்

ஏன் எனில்
ஸ்ருதி விருத்தமான அர்த்தம் கொண்ட ஸ்ம்ருதி ஆதரிக்கத் தகாதது என்று மின்
பூர்வ மீமாம்ஸையில் ஸ்திரப் படுத்தப் பட்டு இருந்தாலும் இன்
வேதாந்த அர்த்தம் எளிதில் அறிய முடியாதது ஆதலின் ஆப்தரான கபிலராலே அருளப்பட்ட கேவலம்
தத்வ ப்ரதிபாதனம் செய்யும் சாங்க்ய ஸ்ம்ருதி கொண்டே வேதாந்த அர்த்தங்களை நிர்ணயம் செய்ய வேண்டும்
அவ்வாறு இல்லா விட்டால் கபில ஸ்ம்ருதிக்கு முற்றிலும் வையர்த்தம் பயன் அற்ற தன்மை ஏற்படும் என்றார்கள் –

ஸ்ம்ருத் யந வகாச தோஷ ப்ரசங்க இதி சேந் ந
கபில ஸ்ம்ருதிக்கு இடமே இல்லை என்ற தோஷம் வந்து விடுமே என்றால்
அது அல்ல -ஏன் எனில்
கபிலர் கூறிய பிரதானம் ஜகத் காரணம் என்பது தகாது
ஏன் எனில்
ஆப்த தமர்களான பல மஹரிஷிகள் அருளிய வேறு வேதாந்த அர்த்தத்துக்கு முரண் இல்லாத
பற்பல ஸ்ம்ருதிகளுக்கு இடம் இல்லாமை என்ற அதே தோஷம் வந்து விடும் –
ஆதலின் அது அன்று என்கிறோம் –

அவற்றுக்கு எப்படி இடம் இல்லாமை ஏற்படும்
மனு ஸ்ம்ருதி முதலியவை தர்மாதிகளை விளக்குவதால் அவகாசம் உள்ளவை ஆகலாமே என்றால்
அந்தத் தர்மங்களும் பரம புருஷ ஆராதன அர்த்தங்கள் என்று
இஷ்டா பூர்த்தம் பஹூதா ஜாதம்
ஜாய மானம் விஸ்வம் பிபர்த்தி புவனஸ்ய நாபி ததே வாக்நிர் இதி யஞ்ஜைஸ் த்வ மிஜ்யஸே நித்யம் ஸர்வ தேவம யாச் யுத —
இது முதலிய ஸ்ருதி ஸ்ம்ருதிகளாலே ஸித்திப்பதாலும்

ஆஸீ திதம் தமோ பூதம் -என்று தொடங்கி
ஆபோ நார இதி ப்ரோக்தா ஆபோவை நர ஸூ நவே
தா யதஸ் யாயனம் பூர்வம் தேந நாராயண ஸ்ம்ருத–என்றும்
விஷ்ணோஸ் ஸகாசா துத் பூதம்– என்ற இது போன்ற
மனு பராசர ஸ்ம்ருதிகளால் பரம புருஷனே ஜகத் காரணன் என்று ஸித்திப்பதாலும்
பரம புருஷனுக்கு காரணத்வம் சொல்லா விட்டால் மன்வாதி ஸ்ம்ருதிகளுக்கு இடம் இல்லை
என்ற தோஷம் வரும் என்பதாம்

இந்த்ரியங்களுக்குப் புலப்படாதவற்றை ஸாஷாத் கரிக்க வல்லவர் கபிலர் ஆதலின்
அவருக்குத் தோன்றாத ப்ரஹ்ம காரணத்வம் கூடாது என்று மேலே தோன்றும் சங்கைக்கு உத்தரம் கூறுகிறார் –

———–

ஸூத்ரம் –136-இதரேஷாம் சாநு பலப்தே –2-1-2-

வேதார்த்தங்களை ஸாஷாத் கரிக்க வல்லவர்களாய்
யத்வை கிஞ்சந மனுரவ தத் தத் பேஷஜம் -என்று ஸ்ருதியில் ப்ரசித்தரான
மனு போன்றாருக்கு பிரதானம் காரணம் என்று தோன்றாமையாலே
வேதாந்தார்த்த விருத்தமான கபிலரின் ஸ்ம்ருதி அல்லது தோற்றம் பிராந்தியை மூலமாகக் கொண்டது என்று கருத்து

——————————

இரண்டாம் அதிகரணம் –யோக ப்ரத்யுக்த் யதி கரணம் –

ஸூத்ரம் –137–ஏதேந யோக ப்ரத் யுக்த –2-1-3-

வேதாந்தங்களுக்கு ஹிரண்ய கர்ப்பனால் அருளப்பட்ட யோக ஸ்ம்ருதி
ப்ரமாணமா அல்லவா என்பது சம்சயம்
ப்ரமாணமே –
ஏன் எனில்
முழு வேதங்களையும் ப்ரவர்த்திப்பித்த ஹிரண்ய கர்ப்பன் -பிரமதேவன் – அருளியதாலும்
யோக ஸ்ம்ருதி பகவானை ஏற்றுக் கொள்வதாலும்
என்பது பூர்வ பக்ஷம் –

ஆகவே யோக ஸ்ம்ருதிப் படி பிரதானமே உபாதான காரணமாகும் -ஈஸ்வரன் நிமித்த காரணமே
என்ற பூர்வ பக்ஷத்தை நிரஸனம் செய்கிறார்
அந்த ஸூத்ரத்தாலே

ஏதேந யோக ப்ரத் யுக்த
கபில ஸ்ம்ருதிக்குக் கூறிய முறையால் யோக ஸ்ம்ருதிக்கும் வேதாந்த வாக்யங்களுடன் விரோதம் வருவதால்
அதுவும் பிரமாணம் இல்லை என்று கூறப்படுகிறது
சதுர் முகனானாலும் ஜீவனே யாதலின் அவருக்கு ஏற்பட்ட தோற்றமும்
ப்ராந்தியை மூலமாகக் கொண்டதே என்பதாகும் –

————

மூன்றாம் அதிகரணம் –ந விலக்ஷணத்வாதி கரணம்

ஸூத்ரம் –138– ந விலக்ஷணத்வா தஸ்ய தாத் வஞ்ச சப்தாத் –2-1-4-

இவ்வாறு கபில ஸ்ம்ருதியையும் யோக ஸ்ம்ருதியும் முரணானவை ஆதலின்
அவற்றால் வேதாந்த அர்த்தம் பாதிக்கப்படாது என்று காட்டி
பிறர் கூறும் தர்க்கங்களால் ஏற்படும் பாதத்தை இங்கு பரிஹரிக்கிறார் என்று சங்கதி –

வேதாந்தங்களுக்கு ப்ரஹ்மம் காரணம் என்பதில் நோக்கமா -அன்றி -பிரதானம் காரணமா என்று ஸந்தேஹம் தோன்றுகிறது
அங்கு பிரதான காரணத்வமே யுக்தமானது
ஏன் எனில்
ஜகத் ஜடமாய் இருப்பதால் ப்ரஹ்மத்தை விட ஸஜாதீயமான பிரதானம் காரணமாகத் தக்கது
என்ற பூர்வ பக்ஷத்தை நிரசிக்கிறார்

ந விலக்ஷணத்வாத்
அபிமானி வ்யபதேசாச் சான்ய
என்கிற இரண்டு ஸூத்ரங்களாலும் நிரஸனம் செய்கிறார்
இவை இரண்டும் பூர்வ பக்ஷ ஸூத்ரங்கள்

இதி சேத் ந –என்று கூறுவது பொருந்தாது
ஏது எனில்
அஸ்யக -இந்த ஜகத்துக்கு
விலக்ஷணத் வாத் -ஜடத்வாதிகளால் ப்ரஹ்மத்தை விட வேறுபாடு இருப்பதால் என்றபடி
ஸ லக்ஷணங்களுக்கே ம்ருத் கடாதிகளைப் போலே கூடும் என்பதால்
அத– ஆகையால் –ஜகத்துக்கு சமமான ப்ரதானமே
காரணம்
ததாத் வஞ்ச சப்தாத் -ப்ரஹ்மத்துக்கு ஜகத் விலக்ஷணத்வமும்
விஞ்ஞானம் சா விஞ்ஞானஞ்ச -முதலிய சப்தங்களால் அறியப்படுகிறது

ஆபோ வா அகா மயந்த –தம் ப்ருதி வ்ய ப்ரவீத் -முதலிய வாக்கியங்களில்
பிருத்வீ முதலிய அசேதனங்களுக்கும் ஞான கார்யமான காமனை முதலியவை கூறப்படுவதால்
ஞானாச்ரயம் என்ற முறையில் ப்ரஹ்மத்துடன் ஸாம்யம் உள்ளபடியால் உத் பத்தி தவறு இல்லையே என்றால்
அதற்கும் பூர்வ பக்ஷி விடை கூறுகிறார்

2-1-4-விலஷணத்வாத் அதிகரணம் -யஸ்ய சேதனஸ்ய யத் த்ரவ்யம் சர்வாத்மனா -ஸ்வார்த்தே -நியந்தும் –தாரயிதும்–சக்யம் –  சேஷைதக ஸ்வரூபஞ்ச-தத் தஸ்ய சரீரம் –சரீர லஷணம்

-யஸ்ய சேதனச்ய யத் த்ரவ்யம் -சஷ்டி யந்தம் —முதல் சட்டம் -எவனுக்கு ஆறாவது வேற்றுமை – ந கடத்வாதி போலே இல்லாமல்-பிரத்யோகம் எதிர் பார்க்கும் மனைவி -கணவன் இரண்டும் பிரதியோகம் எதிர் பார்க்கும்-சைதன்யம் உள்ளவனுக்கு தானே சரீரமாக இருக்கலாம்-இரண்டாவது சட்டம் –த்ரவ்யமாக இருக்க வேணும் -கிரியைகள் ஜாதி போலே இல்லை  கோத்சவம் -பச்சை -நடக்கிறான் -ஜாதி  குணம் கிரியை   போலே இல்லை-மூன்றாவது சர்வாத்மனா-எப்பொழுதும் ஸ்வார்த்தே— தன் பொருட்டே-நாலாவது –சர்வாத்மனா நியந்தும் –நியமிக்கத் தகுதி உள்ளதாக-ஐந்தாவது –சர்வாத்மனா தாரயிதும்-சக்யமோ -யோக்யதை கொண்டதாய்-ஆறாவது தச் சேஷைதக ஸ்வரூ பஞ்ச-தத் தஸ்ய சரீரம் –ஒருத்தனுக்காக இருப்பதே சரீரம் –

———————-

ஸூத்ரம் –139-அபிமானி வ்யபதேசஸ் து விசேஷ அனு கதிப்யாம் –2-1-5-

து -என்கிற சப்தம் சங்கையை நிவர்த்திக்கிறது
ப்ருத்வீ அப்ரவீத் -முதலிய இடங்களில் ப்ருத்வீ யாதிகளின் அபிமானி தேவதைகளைக் குறிப்பதாகும்
பிருத்வீ முதலிய அசேதனங்களைக் குறிக்க வில்லை
ஏன் எனில்
விசேஷ அனு கதிப்யாம் –ஹந்தா ஹமிமா -திஸ்ரோ தேவதா -என்று
ப்ருத்வீ யாதிகளை தேவதை என்று விசேஷயத்தால் குறிப்பதாலும்
அக்னிர் வாக் பூத்வா முகம் ப்ராவிஸத் -முதலியவற்றால்
அக்னி முதலியவற்றுக்கு வாகாதிகளுக்கு அனு கதி -பின் பற்றிச் செல்லுதல் கூறுவதாலும்
அசேதனத்வேந ஜகத்துக்கு ஸஜாதீயமான பிரதானம் காரணம் என்பது பூர்வ பக்ஷம்

இதற்கு ஸித்தாந்தி கூறும் விடை –

—————

ஸூத்ரம் –140-த்ருஸ்ய தேது –2-1-6-

து சப்தம் பூர்வ பக்ஷத்தை நிரஸனம் செய்கிறது
ப்ரஹ்மத்தை விட விலக்ஷணமான ஜகத்துக்கு ப்ரஹ்ம கார்யத்வம் என்பது கூடும்
ஏன் எனில்
உலகில் தேனடையில் இருந்து விலக்ஷணமான கிருமி போன்றவை தோன்றக் காணப்படுகிறது அல்லவா
அப்படியே காரியமும் காரணமும் விலக்ஷணமாய் இருப்பது தவறு அல்லவே
ஆகவே ப்ரஹ்மம் ஜகத்துக்குக் காரணமாய் இருக்கலாம் –

———————

ஸூத்ரம் –141-அஸத் இதி சேந் ந ப்ரதிஷேத மாத்ரத் வாத் –2-1-7-

கார்யம் காரணத்தைக் காட்டிலும் விலக்ஷணமாய் இருக்கலாம் என்று ஏற்றுக் கொண்டால்
காரணத்தில் கார்யம் இல்லாததால் அஸத் காரிய வாதம் சரி என்றதாகும்
அசத்தான பொருள் தானே தோன்றுகிறது எனக் கொள்ள நேரும்
அப்படியாயின்
ஸர்வம் கல்விதம் ப்ரஹ்ம என்று
ஜகத்தையும் ப்ரஹ்மத்தையும் சாமா நாதி கரணமாகச் சொன்னது பொருந்தாது
இதி சேந் ந–இப்படிக் கூறுவது பொருந்தாது
ப்ரதிஷேத மாத்ரத் வாத் –கார்ய காரணங்கள் ஒரே விதமாகவே இருக்க வேண்டும் என்கிற நியமம் மட்டும் தடுக்கப் பட்டது அன்றி
அவை ஒரே த்ரவ்யம் என்பது தடுக்க வில்லை
காரண அவஸ்தையில் இருக்கும் ஒரே த்ரவ்யமே காரியமான அவஸ்தையை அடைந்து கொண்டு
ஸஜாதீயமாகவும் விஜாதீயமாகவும் இரண்டு அவஸ்தைகளையும் அடைகிறது என்பது கருத்து

—————–

ஸூத்ரம் –142-அபீதவ் தத்வத் பிரசங்காத் அசமஞ்சஸம் –2-1-8-

இது பூர்வபக்ஷ ஸூத்ரம்
அபீதவ் -ஜகத்துக்கு ப்ரஹ்மத்தினிடம் -அப்யய -பிரளய காலத்திலும் -உத்பத்தியிலும்
தத்வத் பிரசங்காத் -முன் போலவே பிண்டத்தவம் கடத்தவம் முதலிய அவஸ்தைகளை யுடைய மண் போலே
ப்ரஹ்மத்துக்கும் ஸர்வஞ்ஞத்வம் அஞ்ஞத்வம்–முதலிய நிலைகள் வந்துவிடுமாதலால்
முரணான அர்த்தத்தைச் சொல்லும் வேதாந்தங்களுக்கு
அசமஞ்சஸம் -என்ற நிலை வந்துவிடும்
சர்வஞ்ஞதிகளை யுடைய ப்ரஹ்மமே
அஞ்ஞத்வ விசிஷ்ட ஜகத்தாகிறது-என்று
வேதாந்தங்கள் கூறுகின்றன என்றால்
ப்ரஹ்மம் காரணம் என்று சொல்வது தகாது என்பது பூர்வ பக்ஷம்

இந்த சங்கையை பரிஹரிக்கிறார்

————

ஸூத்ரம் –143-ந து த்ருஷ்டாந்த பாவாத் –2-1-9–

ந -ப்ரஹ்மத்தினிடம் அஞ்ஞத் வாதிகள் பிரசங்கிக்க மாட்டா
அதனாலேயே வேதாந்தங்களை அசமஞ்சஸ்த்வம் இல்லை
து -ஸப்தம்
அஞ்ஞத்வ பிரசங்கம் அசம்பாவிதம் என்று காட்டுகிறது
ஒரு வஸ்துவுக்கு இரு அவஸ்தைகள் ஏற்பட்டால் குண தோஷங்களின் வ்யவஸ்தைகளில் த்ருஷ்டாந்தம் இருப்பதால்
ப்ரஹ்மத்திடம் காரணத்வம் கார்யத்வம் என்கிற இரு அவஸ்தைகள் இருப்பதாக சரீரகதமான கர்ம வஸ்யாதிகளும் அதில் ஓட்டுவது இல்லை
ஆதலால் தவறு ஏதும் இல்லை
மனிதன் எப்படி பிறந்த பின் பாலனாகவும் யுவாவாகவும் முதியனாகவும் ஆகிறானோ அதே போல்
அசேதனமான மனித சரீரத்தில் பிறப்பும் பாலத்தவாதிகளும் ஏற்படினும் ஆத்மாவில் ஏற்படுவது இல்லையே
ஆத்மாவிடம் ஏற்படும் சுக துக்காதிகளும் சரீரத்துக்கு இல்லை அல்லவா
இதே போல் அவஸ்தா பேதம் அடையும் ப்ரஹ்மத்தினிடன் சேதன அசேதன தோஷங்கள் கலப்பது இல்லை
ஆகவே வேதாந்தங்கள் ஸமஞ்சசமே –

—————–

ஸூத்ரம் –144-ஸ்வ பக்ஷ தோஷாச் ச –2-1-10-

ப்ரஹ்ம காரண வாதம் தோஷம் அற்றது என்பது மட்டும் அன்று
பிரதான காரண வாதம் மிக்க தோஷங்களை யுடையது என்பதால் அதை விட்டு ஒழிக்க வேண்டும்

அவர் மதத்தில் நிர்விகாரமான புருஷனுக்கு பிரகிருதியின் சேர்க்கையால்
பிரகிருதியின் தர்மத்தைத் தன்னிடம் உள்ளதாய் பிரமித்து அதனடியாக ஜகத்தின் ஸ்ருஷ்டி கூறப்படுகிறது

பிரகிருதியின் இருப்பை மட்டும் சன்னிதானம் என்றால் முக்தனுக்கும் அத்யாஸம் வரும்
விகாரங்கள் சன்னிதானம் என்றால் எல்லா விகாரங்களை அத்யாசத்தாலே ஏற்படுவதால்
அத்யாசத்திற்கு விகாரம் ஹேது என்று கூறுவது முரணாகும்

இவ்வாறு மிகவும் அசமஞ்சஸமான பிரதான காரகத்வம் இகழத் தக்கதாம் –

———-

ஸூத்ரம் –145-தர்க்க அப்ரதிஷ்டா நா தபி–2-1-11-

கபில சித்தாந்தம் தர்க்கத்தை மூலமாகக் கொண்டது ஆதாலால்
புத்த மதஸ்தர் கூறிய தர்க்கங்களால் அது பாதிக்கப்பட்ட படியால்
தர்க்கத்துக்கு ஓர் முடிவே இராமையாலே அது யுக்தமான சித்தாந்தம் அன்று

————————

ஸூத்ரம் –146-அந்யத அநு மேயம் இதி சேத் ஏவமபி அநிர் மோக்ஷ ப்ரசங்க –2-1-12-

அந்யத அநு மேயம்
இதற்கு முன் உள்ள தர்க்கங்களாலே பாதிக்க ஒண்ணாதபடி
பிரதான காரணத்தை அனுமானிக்கிறோம் என்று கூறினால்
இதி சேத் ஏவமபி அநிர் மோக்ஷ ப்ரசங்க
இப்படியும் உன்னை தர்க்கத்தில் திறமை உள்ளவன் ஒருவன் ஏற்படக்கூடுமாதலின்
தோஷத்துக்கு விமோசனமே – –

——————-

நான்காவது அதிகரணம் –சிஷ்டா பரிக்ரஹா அதிகரணம்

ஸூத்ரம் –147-ஏதேந சிஷ்டா பரிக்ரஹா அபி வ்யாக்யாதா –2-1-13-

ஏதேந -கபில ஸ்ம்ருதியை நிராகாரணம் செய்த ஹேதுவான
நிலையற்றது என்ற ஹேதுவால்
சிஷ்டா பரிக்ரஹா அபி -சிஷ்டர்கள்
கணாதிகளின் ஸ்ம்ருதிகளும்
வ்யாக்யாதா -நிரஸனம் செய்யப்பட்டன என்று வ்யாக்யாதங்கள் என்பது கருத்து –

——————

ஐந்தாம் அதிகரணம் –போக்த்ரா பத்தி அதிகரணம்

ஸூத்ரம் -148–போக்த்ரா பத்தேர விபாகஸ் சேத் ஸ்யால் லோகவத் –2-1-14-

ப்ரஹ்மத்துடன் ஜகத்தில் உள்ள விகாரங்கள் ஒட்டாது என்பதற்கு ஜீவனை த்ருஷ்டாந்தமாக –
ந து த்ருஷ்டாந்த பாவாத் -என்கிற ஸூத்ரத்தில் காண்பித்தது
அப்படியானால் ஜீவனுக்கு உள்ளது போல் சர்வ சரீரத்வம் உள்ளமையால் ப்ரஹ்மத்துக்கு
சுக துக்க போக்த்ருதம் உண்டோ என்கிற சங்கையிலே
இவ்வதி கரணம் ப்ரவ்ருத்தம் ஆகிறது

ஸர்வாத்ம பூத ப்ரஹ்மத்துக்கு தன் சரீரமான ஜீவனைக் காட்டிலும்
நிரதிசய ஆனந்த ஏக ஸ்வரூபமான பேதம் கூறுவது
பொருந்துவதா இல்லையா என்ற சங்கைக்கு
பொருந்தாது என்பது பூர்வ பக்ஷம்

ப்ரஹ்மத்துக்கு ஜகத்து சரீரமானால் ஜீவனுக்குப் போலே ஸ போக்த்ருத்வம்
வந்து சேரும் என்பதால் பேதமில்லை -அபேதமே
அபஹத பாப்மத்வாதி ரூபமான விபாகம் கூடாது
இதி ஸ்யாத் -என்றால் விபாகம் வரத்தான் வரும்
ப்ரஹ்மம் கர்ம வஸ்யம் இல்லையால் ஜீவனைக் காட்டிலும் விபாகம் கூடும்
சுக துக்க போக்த்ருத்வங்கள் ச சரீரத்வம் காரணம் அன்று
கர்ம வஸ்யத்வமே காரணம்
அகர்ம வஸ்ய முக்தனுக்கு போக்த்ருத்வம் காணப்படாமையாலே -அதே போன்று
ஈஸ்வரனுக்கு சுக துக்க போக்த்ருவான்கள் பிரசங்கியாது
லோகவத் –
லோகத்தில் ராஜ வஸ்யர்களான ப்ருத்யர்களும் சாசகனான ராஜாவுக்கும் ஸ சரீரத்வம் இருந்தாலும்
ஸாஸனத்தை மீறினால் துக்கம் ப்ருத்யர்கட்க்கு இருக்க
ராஜாவுக்கோ தன் ஸாஸனத்தை மீறியதாக துக்கம் ஏற்படுவது இல்லை
அது போலவே ஸர்வ லோக நியந்தாவான ஈஸ்வரனுக்கு சுக துக்கங்கள் இல்லை என்பது திரு உள்ளம் –

————–

ஆறாம் அதிகரணம் -ஆரம்பணாதி கரணம் —

ந விலக்ஷணத்வாதி கரணத்தில்
கார்ய காரணங்கள் ஸ லக்ஷணமாகவே இருக்க வேண்டும் என்று நியமம் சொல்லும்
சாங்க்யனை நிரஸனம் செய்து
இதில்
கார்ய காரணங்களுக்கு விலக்ஷணதை சாதிப்பது போல் ஸ்வரூப பேதமும் சித்திக்கட்டும் என்று
எழுந்த வைசேஷிகன் கேள்விக்கு
காரியமும் காரியங்களும் அநந்யங்கள் -அபின்னங்கள் -என்று விளக்குவதன் மூலம்
கண்டனம் செய்கிறார் -என்று சங்கதி

ஸூத்ரம் –149–தத் அந்நயத்வம் ஆரம்பண சப்தாதிப்ய –2-1-15-

ப்ரஹ்மத்தின் கார்யமான ஜகத் ப்ரஹ்மத்தை விட வேறானதா -ஓன்று பட்ட்டதா -என்று சம்சயம்
வேறானதே என்று பூர்வ பக்ஷம்
ஏன் என்றால்
மண் முதலியவற்றுக்கும் குடம் முதலியவற்றுக்கும்
அறியப்படும் தன்மை
கூறப்படும் தன்மை
முதலியவற்றால் பிற இடங்களில் கார்ய காரணங்களுக்குப் பிற இடங்களில் பேதம் காண்கையாலும்
மண் குடம் முதலியவற்றைப் போல் ப்ரஹ்மத்துக்கும் ஜகத்துக்கும் பேதம் ஒப்ப வேண்டும்
ஆகையால் அபேத ஸ்ருதிகள் லக்ஷண தயா வேறே தாத்பர்யம் கொண்டவை என்னும்
பக்ஷத்தை நிரஸனம் செய்கிறார் –

தத் அந்நயத்வம் ஆரம்பண சப்தாதிப்ய

தத் அந்நயத்வம் -அந்த ப்ரஹ்மத்தின் இடம் வேறுபாடு இன்மை -ஜகத்துக்குச் ஸித்திக்கிறது என்று பொருள்
ஆரம்பண சப்த ஆதி –ஏஷாம் தாநி -ஆரம்பண சப்தாதீநி தேப்ய –
வாசாரம்பணம் -விகாரோ -நாமதேயம் –
ம்ருத்தி கேத்யேவ ஸத்யம்
ஸதேவ சோம்ய இதம் அக்ர ஆஸீத் -முதலிய
ஜகத்துக்கும் ப்ரஹ்மத்துக்கும் அபேதம் கூறும் வாக்யங்களாலே
ஜகத்துக்கு ப்ரஹ்மத்தை விட வேறுபாடு இன்மை ஸித்தித்தது
அதாவது
விகாரம் -குடம் முதலிய அவஸ்தைகளும்
நாம தேயம் -குடம் முதலிய பேர்களும்
வாசாரம்பணம் -குடத்தால் தண்ணீர் கொண்டு வா என்ற சொற்களை உச்சரித்து
ஒன்றை ஏற்பது
மற்ற ஒன்றை விடுவது
முதலிய ப்ரவ்ருத்தி நடைபெற ஏற்பட்டவை
ஆரம்பணம் -கொள்ளுதல் மண் என்ற பொருளாலே விகாரமும் நாமதேயமும் கொள்ளப்படுகின்றன
குடம் என்ற நிலையும் பெயரும் ஏற்கப்படுகின்றன

ம்ருத்தி கேத்யேவ ஸத்யம் –கார்யப் பொருளாய் மாறிய நிலையிலும்
நேற்று நாம் பார்த்த மண்ணே குட வாணாயகவும் மாறி விட்டது என்று காரணமான மண் நினைவு படுவதாலும்
மண்ணின் அவஸ்தைகள் பல இருப்பினும் த்ரவ்யம் ஒன்றே என்பது ப்ரத்யக்ஷ ஸித்தமாம்
மண்ணைத் தவிர வேறே பொருள் தேவை இல்லை என்பதாம்

ஒரே மண் என்னும் த்ரவ்யம் -பிண்டம் கட்டி உருண்டை குடம் முதலிய அவஸ்தை மாறுபாடுகளால்
மண் கட்டி குடம் ஓடு முதலிய பெயர்களைப் பெறுகுவது போல்
புத்தி பேதம் ஸப்த பேதம் முதலிய அவஸ்தா பேதங்களை சார்ந்து இருப்பதால் அவை வஸ்து பேதத்தை சாதிக்க மாட்டாதவை
ஆகவே மண் என்ற ஒரே பெயர் காரண காரியமாக இருப்பது போல்
சித் அசித் விஸிஷ்ட ப்ரஹ்மம் ஸூஷ்ம அவஸ்தையில் காரணமாயும் ஸ்தூல அவஸ்தையில் கார்யமாயும் இருப்பதால்
ஜகத்துடன் அநந்யத்வம் -பேதமற்ற தன்மை என்று பெறுகிறது

இங்கு
வாசா ரம்பண சப்தாதிப்ய -என்று கூறாமல்
ஆரம்பண சப்தாதிப்ய-என்று ஸூத்ரம் செய்யப்பட்டதால்
வாசா ரம்பண-என்பதை ஒரே பதமாகக் கூறிய ஸ்ரீ சங்கர மதம் தவறு என்று உணர்த்தப்படுகிறது

ஸ்ரீ பாஷ்யத்தில் இந்த அதிகரணத்தில்
முதலில் கார்ய காரணங்களுக்குப் பேதம் கூறும் கணாத மதம் காட்டப்படுகிறது
அதற்கு -அத்ராஹு -என்று தொடங்கி சங்கரர் தம் சித்தாந்தப்படி கூறும் சமாதானம் கூறப்பட்டது
அந்த சங்கரரை ஜீவனுக்கு அஞ்ஞானம் சொல்பவன் எதிர்த்தான்
கேசித் -என்று தொடங்கியது அவ்வெதிர்ப்பு
பிறகு மாயாவி இரண்டிற்கும் பேதம் சொல்பவனை எதிர்த்தான்
பின் இவ்வதிகரண பூர்வ பக்ஷி -காணாதன் -சங்கர மதத்தைக் கண்டிக்கவே
இறுதியாக காணாதனை நம் பாஷ்யகாரர் நிரசனம் செய்கிறார் என்பது ஸாரம் –

———

ஸூத்ரம் –150–பாவே சோப லப்தே –2-1-16-

குடம் முதலிய கார்ய அவஸ்தையிலும் அந்த மண் காணப்படுவதால்
அந்த மண்ணே இந்தக் குடமாய் மாறி இருக்கிறது என்று
காரணம் காரியம் பாவம் தோன்றுவதால் கார்யம் வேறானது அன்று
பால்யம் யுவா கிழவன் போன்ற அவஸ்தைகள் மாறினாலும்
தேவ தத்தன் ஒருவனே அன்றி வேறே ஒருவன் அல்ல
அதே போல் ஜகத்தும் ப்ரஹ்மமும் ஒன்றே அன்றி வேறு அல்ல –

——–

ஸூத்ரம் –151-ஸத்வாச் ச அபரஸ்ய –2-1-17-

அபரஸ்ய–காரியத்துக்கு
ஸத்வாச் ச –காரணத்தில் இருப்பு தோன்றுவதால்
காரணத்தை விட கார்யம் வேறு அன்று
இந்தக் குடம் இத்யாதி எல்லாம் நேற்று மண்ணாகவே இருந்தன என்று காரண கார்ய பாவம் தோன்றுகிறது
இப்போது குடம் முதலிய உருவங்களில் தோன்றும் மண்
முன் பிண்ட வடிவமாய் இருந்தது என்பது உறுதியான கருத்து

——–

ஸூத்ரம் –152-அஸத் வ்யபதேசான் நேதி சேந் ந தர்மாந்தரேண வாக்ய சேஷாத் யுக்தேச் சப்தாந் தராச்ச–2-1-18-

ஸதேவ சோம்ய இதம் அக்ர ஆஸீத் என்று
காரண அவஸ்தையில் கார்யம் -அஸத்- இல்லை என்று பேசுவதால்
காரணத்தில் கார்யம் இல்லை என்றால் அது சரி அன்று
தர்மாந்தரேண–அஸத் என்ற வழக்கிற்குக் காரணமான ஸூஷ்ம அவஸ்தை வேறு தர்மத்தாலே
அஸத் ஏவ இதம் -என்ற வழக்கு ஏற்படுகிறது
அதற்கு ஹேது எது என்றால்
வாக்ய சேஷாத் யுக்தேச் சப்தாந் தராச்ச–தத் அஸத் ஏவ சந் மநோ குரு தஸ்யாம் இதி
அஸத் என்று சொல்லப்பட்ட வஸ்து தானே ஸத் ஸ்யாம் என்று ஸங்கல்பம் பண்ணியது என்று
வாக்ய சேஷத்தில் சொல்லுகையாலே
அஸத் என்று வழங்குவது ஸூஷ்ம அவஸ்தை என்று வேறு தர்மத்தின் சம்பந்தத்தால் ஏற்பட்டது –
ஒன்றும் இல்லாதது -துச்சம் -என்ற பொருளில் இல்லை
யுக்தேச் ச -குடம் இருக்கிறது குடம் இல்லை என்ற இருவகை வழக்குகளும் ஒன்றுக்கு ஓன்று முரணான
குடத்தன்மை கபாலத்தன்மை என்னும் இவை தவிர தோன்றாதான
துச்சத்வத்தை-அஸத் -வ்யபதேசத்துக்கு ஹேதுவாகக் கற்பித்தல் அடியோடு தவறானது
சப்தாந்தராச்ச
இதம் வா அக்ரே நைவ கிஞ்சனாஸீத் -முதலிய
காரண வாக்யங்களுக்குச் சமமான
ஸதேவ சோம்ய இதம் அக்ர ஆஸீத்-என்பது முதலான காரண வாக்கியத்தில்
ஸச் ஸப்தத்தாலே காரணத்தைச் சொல்வதால்
அந்த அஸத் ஸப்தத்துக்கும் ஸூஷ்ம அவஸ்தா விசிஷ்டமான ப்ரஹ்மமே அர்த்தம் என்று தோன்றுகிறது
ஸத் -என்றால் பிராமண சித்தம் என்று பொருள் –

—————

ஸூத்ரம் –153–ஸூ பட வச்ச –2-1-19-

நூல்கள் விசேஷ சம்பந்தத்தைப் பெற்று வஸ்திரம் என்று
பெயர் -தோற்றம் -கார்யாந்தரங்கள் -முதலியவற்றை அடைகின்றனவே
அதே போல்
ப்ரஹ்மமும் நாம ரூப விபாகங்களைப் பெற்றமையால் கார்யம் என்னும் தன்மையை அடைகிறது

——————

ஸூத்ரம் –154–யதா ச ப்ராணாதி –2-1-20-

ஒரே வாயு எவ்வாறு உடலிலே வெவ்வேறு வியாபாரத்தைப் பெற்று
பிராணன் அபானம் முதலிய பெயர்களைப் பெறுகிறதோ
அது போலவே
ப்ரஹ்மமும் நாம ரூப விபாகத்தால் கார்ய பாவத்தை அடைகிறது என்பதாம்

—————

ஏழாம் அதிகரணம்–இதரவ்யபதேஷாதிகரணம்||

ஸூத்ரம் –155-இதரவ்யபதேஷாத்திதாகரணாதிதோஷப்ரஸக்திஃ||2.1.21||

ஸூத்ரம் –156-அதிகஂ து பேத நிர்தேஷாத்||2.1.22||

ஸூத்ரம் –157-அஷ்மாதிவச்ச ததநுப பத்திஃ||2.1.23||

—————–

எட்டாம் அதிகரணம்–உப ஸஂஹார தர்ஸந அதி கரணம்||

ஸூத்ரம் –158-உபஸஂஹார தர்ஷநாந்நேதி சேந்ந க்ஷீரவத்தி||2.1.24||

ஸூத்ரம் –159-தேவாதிவதபி லோகே||2.1.25||

——————

ஒன்பதாம் அதிகரணம் –க்ருத்ஸன ப்ரஸக்தி யதி கரணம்

ஸூத்ரம் –160-க்ருத்ஸன ப்ரஸக்தி நிர்வயத்வ சப்த கோபோவா –2-1-26-

காலம் என்னும் வெளி உதவியை மட்டும் கொண்டு ப்ரஹ்மம் ஜகத் காரணம் ஆகட்டும்
அப்படி இருந்தாலும் ஒரு அவயவமும் இல்லாத ப்ரஹ்ம ஸ்வரூபம்
எப்படி பலவாறாக மாறுவேன் என்று சங்கல்ப்பிப்பது –
எப்படி பல பொருளாக மாறுவது
என்ற சங்கையால் சங்கதி

ப்ரஹ்மத்துக்கு ஜகத் காரணத்வம் கூடுமா கூடாதா என்ற சம்சயம் கூடாது –
ஏன் எனில்
நிர் அவயவமான ப்ரஹ்மம் ஜகத்துக்கு உபாதானம் என்று ஏற்றுக் கொண்டால்
ப்ரஹ்மம் முழுவதுமே ஜகத்தாகப் பரிணமிப்பதால் நித்ய விபூதியில் வியாபித்து உள்ளது
என்ற தன்மை ப்ரஹ்மத்துக்கு ஒவ்வாது போகும்
இந்த தோஷம் நீங்க ப்ரஹ்மம் ஸ அவயவம் என்று ஏற்கப் பட்டால்
ஏகமேவ அத்விதீயம் என்று
நிர் அவயவத்வம் சொல்லும் ஸ்ருதியுடன் முரண்பாடு ஏற்படும் என்பது பூர்வ பக்ஷம்

க்ருத்ஸன ப்ரஸக்தி
ப்ரஹ்மம் காரணம் ஆகில் அது முழுவதுமாகக் காரியமாக மாறுவதாக ஏற்க வேண்டி வரும்
அதற்காக ஸ அவயவம் என்று ஏற்றால்
நிர்வயத்வ சப்த கோபோவா —
நிர் அவயத்வம் சொல்லும் ஏகமர்வ அத்விதீயம் என்ற
சுருதி வாக்யத்துடன் விரோதம் -நிர்வயத்வ சப்த கோபம் -வரும்
என்று இப் பூர்வ பஷத்தை நிரஸனம் செய்கிறார் –

———

ஸூத்ரம் –161-ஸ்ருதேஸ் து சப்த மூலத்வாத் –2-1-27-

து சப்தம் பக்ஷத்தை விலக்குவது
ஸ்ருதேஸ்–ப்ரஹ்மத்தின் இருப்புக்கு ஸ்ருதியே பிரமாணம் ஆகையாலே -இப்படி நேராது
சப்த மூலத்வாத்-ஸ்ருதி என்னும் சப்தத்தையே ஆதாரமாக -நம்பிக்கை காரணமாக -ஏற்று இருப்பதால்
பிரமாணாந்தரங்களுக்கு விஷயமாகாத ப்ரஹ்மத்திற்கு ஸ்ருதி கூறியபடி
நிர் அவயவத்வம் -காரணத்வம் -சர்வ சக்தத்வம் -முதலிய தர்மங்களை ஏற்றுக் கொள்வதால் எல்லாம் பொருந்தும்
இதனால் விரோதம் இல்லை
பரிமித சக்திகமான ஷீராதிகளை உதாரணம் காட்டி வினவுதல் கூடாது என்று திரு உள்ளம் –

—————–

ஸூத்ரம் –162-ஆத்ம நிச ஏவம் விசித்ராச் சஹி –2-1-28-

ஆத்ம நிச ஏவம்
ஜீவாத்மாவிடம் சகல இதர வை லக்ஷண்யத்தாலே தோஷம் ஏதும் வாராமை போலே
தேஹாதி வை லக்ஷண்யத்தாலே தோஷம் ஏதும் வாராது என்று பரிஹாரம் கூற வேண்டும்
விசித்ராச் சஹி
அசேதனமான அக்னி ஜலம் முதலியவையும் விசித்ரங்களாகவே காணப்படுகின்றன
அக்னியில் உள்ள வெப்பம் நீரில் இல்லை
நீரில் உள்ள குளிர்ச்சி நெருப்பில் இல்லை
அப்படியே சித் அசித் விலக்ஷணமான ப்ரஹ்மத்திடம் ஸாஸ்த்ரத்தால் மட்டுமே அறியத்தகும்
ஸர்வ சக்திமத்வம் கூடும் என்பது கருத்து –

————-

ஸூத்ரம் –163-ஸ்வ பக்ஷ தோஷச் ச -2-1-29-

அனுமான கம்யமாய்
அசேதனமான பிரதானத்தில் கீழ்ச சொன்ன தோஷம் யாவும் மற்றும் பலவும் ப்ரஸக்தமாகும் –

—————

ஸூத்ரம் –164-ஸர்வோ பேதா ச தத் தர்சனாத் –2-1-30-

பரதேவதையானது மற்ற யாவற்றையும் விட வி லக்ஷண தன்மையால் மட்டும் ஸர்வ சக்தி யுக்த்தை அன்று
பின் ஏன் எனில்
தர்சனாச் ச -ஸ்ருதியாலும் கூறப்பட்டதால் சர்வ சக்தி உள்ளதாம்
தர்சய தீதி -தர்சனம் -ஸ்ருதி -வேதம்
பராஸ்ய சக்தி விவிதைவ ஸ்ரூயதே ஸ்வ பாவிகீ ஞான பல க்ரியா ச
இது முதலிய ஸ்ருதி பலத்தாலும் -உபாதானத்வம் நிமித்தத்வம் இரண்டும் கூடிய சக்தி யோகத்தவம் ஸித்திக்கிறது
ஆகவே ப்ரஹ்மத்துக்குக் காரணத்தவம் தடை அற்றது

————–

ஸூத்ரம் –165-விகரணத் வாந் நேதி சேத் ததுக்தம் –2-1-31–

சொன்ன அர்த்தத்தை உறுதி படுத்த மேலும் சங்கையை எழுப்பி சமாதானம் கூறுகிறார்
விகரணத் வாத் -சரீரம் இன்மையால்
நேதி சேத்-ப்ரஹ்மத்துக்குக் காரணத்வம் கூடாது என்றால்
ந தஸ்ய கார்யம் கரணஞ்ச வித்யதே -என்று
சரீர இந்திரியாதிகள் அவனுக்கு இல்லை என்ற படியால்
தத் யுக்தம் -பரிஹாரம் முன்னே கூறப்பட்டது
ஸ்ருதேஸ் து ஸப்த மூலத்வாத்
விசித்ராச் சஹி -என்ற ஸூத்ரங்களால்
சர்வ சக்தி உள்ளவன் என்று கூறப்பட்ட படி ஸர்வ வித காரணத்வமும் கூடும் என்பதாம் –

—————–

பத்தாம் அதிகரணம்–ப்ரயோஜனவத்வ அதிகரணம்

ஸூத்ரம் –166-ந ப்ரயோஜனவத்வாத் –2-1-32-

அவாப்த ஸமஸ்த காமனான பரம புருஷனுக்கு ஜகத் ஸ்ருஷ்டியாதிகளில் பிரயோஜனம் இல்லாமையால்
காரணத்வம் கூடாது என்கிற சங்கையை இங்கு பரிஹரிக்கிறார் என்று சங்கதி

ப்ரஹ்மத்துக்கு ஜகத் காரணத்வம் கூடுமா கூடாதா -என்று சம்சயம்
அது கூடாது
ந ப்ரயோஜனவத்வாத்-ப்ரஹ்மம் அவாப்த ஸமஸ்த காமனான படியால்
ஸ்ருஷ்டியால் அதற்கு ஒரு பிரயோஜனமும் இல்லாமையால் அது பொருந்தாது

உலகில் குயவர் போன்றவர் ஒரு ப்ரயோஜனத்தை எதிர்பார்த்தே குடம் முதலியவற்றைப் படைப்பதை பார்க்கிறோம் –
ஆகவே கர்ப்பவாசாதி துக்க ரூபமான ஜகத்தின் ஸ்ருஷ்ட்டியை கருணையால் செய்கிறான் என்பது அயுக்தம் ஆதலின்
ப்ரஹ்மத்துக்கு காரணத்வம் பொருந்தாது என்று பூர்வ பக்ஷம் இந்த ஸூத்ரத்தில் கூறப்படுகிறது

அதற்கு விடை மேல் –

———————-

ஸூத்ரம் -167-லோக வத் து லீலா கைவல்யம் –2-1-33-

து சப்தம் சங்கையை விலக்குகிறது
லீலா கைவல்யம்-கேவலம் லீலையே பிரயோஜனம்
கேவலம் என்கிறது -வேறே பயன்கள் இல்லை என்கிறது
ஆகவே கேவல லீலை ஸ்ருஷ்ட்டியை ஆரம்பிக்கவே பயன்படுகிறது
அவன் அவாப்த ஸமஸ்த காமன் ஆனாலும் லீலா ரஸ மாத்ரத்திற்காக ஜகத் ஸ்ருஷ்டியாதிகளைச் செய்வது பொருந்தும்
லோகவத்
லோகத்தில் மஹா ராஜாவுக்கு கேவலம் பந்து விளையாட்டு சூதாட்டம் முதலியவற்றில் ஈடுபாடு காணப்படுகிறது
அப்படியே ப்ரஹ்மத்துக்கும் காரணத்வம் கூடும் –

———

ஸூத்ரம் –168–வைஷம்ய நைர் க்ருண்யே ந சாபேக்ஷத்வாத் ததாஹி தர்சயதி–2-1-34–

இங்கு ஒரு ஆஷேபம் தோன்றுகிறது
ஸர்வ சமனாய் பரம காருணிகனான பரம புருஷனுக்கு தேவ மனுஷ்யாதிகளான விஷமமான ஸ்ருஷ்டிகளைச் செய்வதால்
வைஷம்யமும் -பக்ஷபாதமும்
துக்கம் மிக்க ஜகத்தைப் படைப்பதால்
நைர் க்ருண்யம் -இரக்கம் இன்மை
என்ற தோஷமும் வருமே என்பதே அது
அதுக்கு இந்த ஸூத்ரம் விடை தருகிறது

வைஷம்ய நைர் க்ருண்யே ந
இவ்விரு தோஷங்களும் வாராது
ஏன் எனில்
சாபேக்ஷத்வாத்
ஜீவர்களின் முந்திய கர்மங்களை அநு சரித்து தேவர் மனுஷ்யர் போன்ற வேறுபட்ட ஸ்ருஷ்ட்டியை செய்வதனால்
ஸ்வத ஸர்வ சமனான ஈஸ்வரனுக்கு தேவாதி விஷம ஸ்ருஷ்டியிலும்
துக்க மிக்க ஸ்ருஷ்டியிலும்
அவ்வோ ஜீவர்களின் பூர்வ ஜென்ம கர்மமே ஹேது என்று கருத்து
ததாஹி தர்சயதி
ஸாது காரீ -சாதுர் பவதி -அஸாது காரீ பாபோ பவதி -முதலிய சாஸ்திரங்கள்
பூர்வ கர்மாவுக்கு ஏற்பவே -ஸாது பாபீ என்ற வைஷம்யம் ஏற்படுவதைக் காட்டுகிறது

————

ஸூத்ரம் –169–ந கர்மா அவி பாகாத்தி சேந் நா நாதித்வாத் உப பத்யதே சாப் யுபலப்யதே ச –2-1-35-

ந கர்மா
ஸ்ருஷ்டிக்கு முன்னால் கர்மா இல்லை
ஏன் எனில்
அப்போது ஜீவர்கள் இல்லாமையாலே
ஸதேவ சோம்ய இதம் அக்ர ஆஸீத் ஏகமேவ அத்விதீயம் என்னும் ஸ்ருதி
ப்ரஹ்மதுக்கும் ஜீவனுக்கும் விபாகம் இல்லை
ப்ரஹ்மம் ஒன்றே அப்போது இருக்கிறது என்று சொல்வதால்
ஜீவர்களின் கர்மாவை அநு சரித்தே ஸாதுத்வமும் பாபித்வமும் போன்ற வைஷம்யம் ஏற்படுகிறது என்பது அனுப பன்னம்

இதி சேத் ந
என்று கூறுவது சரி அன்று
ஏன் எனில்
அநாதித்வாத்
ஜீவர்களின் கர்ம ப்ரவாஹமும் அநாதியாய் இருப்பதாலே

உப பத்யதே ச
ஜீவர்கள் அநாதிகளாய் பிரளய காலத்தில் இருந்தாலும் ஏகமேவ என்ற ஸ்ருதி பொருந்தலாம்
ப்ரஹ்மம் ஏகம் என்பது நாம ரூப விபாகத்திற்குத் தகாத ஸூஷ்ம அவஸ்தையில் உள்ள சேதன அசேதன சரீரகத்வம்
இத்தால்
அந்த ஸூஷ்ம அவஸ்தை ப்ரஹ்ம பர்யந்தம் குறிப்பிடுவதால் ப்ரஹ்மம் ஏகம் என்பது பொருந்துமே

யுபலப்யதே ச
ஸ்ருதி ஸ்ம்ருதிகளிலே ஜீவர்களுக்கு அவர் தம் கர்மாக்களுக்கும் அநாதித் தன்மை தோன்றுகிறது
ஞ்ஞாஞவ் த்வவ் அஜாவிச நீசவ்
நித்யோ நித்யாநாம் சேதன அசேதனானாம் –முதலிய ஸ்ருதிகள்
ப்ரக்ருதிம் புருஷஞ்சைவ வித்தி அநாதி உபா வபி முதலிய ஸ்ம்ருதிகள் –

—————

ஸூத்ரம் –170–ஸர்வ தர்மோ பபத்தேச் ச –2-1-36-

சாங்க்ய வைசேஷாதிகளின் பக்ஷங்களில் காரணமாக ஏற்கப்பட்ட பிரதான பரமாணுக்களில்
அஸம்பாவிதமாயும்
காரணத்வத்துக்கு இன்றியமையாதவையுமான
ஸர்வஞ்ஞத்வம் – ஸர்வ சக்தித்வம் முதலிய தர்மங்களுக்குப் பரம புருஷன் இடத்தில் பொருத்தம் இருப்பதால்
அவனே ஸூஷ்ம சித் அசித் சரீரகனாய் இருந்து
ஸகல ஜகத்துக்கும் ஸர்வ வித காரணமாவான் என்பது சித்தமாயிற்று –

————

நம் ஆச்சார்யர் அருளிய முறையில் வைஷம்யம் நைர் க்ருண்யங்களை நீக்கும் முறை ஓன்று வருமாறு
நிச்சேஷாத்ம பவர்க்கே –குத்ர சிந் நித்யமஸ்து –அதிகரண ஸாரா வளி
அதாவது
நித்ய ஸம்ஸாரி ஒரு சாரார் -வரும் காலத்தில் சம்சாரம் அற்றவர் ஒரு சாரார்
ஷிபாம் யஜஸ்ரம சுபான் -என்றபடி ஒரு காலமும் ஸம்ஸாரம் நீக்கம் அற்றவன் நித்ய ஸம்ஸாரி
இத்தகைய நித்ய சம்சாரியை ஏற்றுக் கொள்ளா விட்டால்
லீலா விபூதி நித்யை என்ற ஸ்ரீ ஸூக்தி யுடன் முரண்பட்டு ஏற்படும்
ஆகவே நித்ய சம்சாரியை ஏற்க வேண்டும் என்று சிலர் கூறுகின்றார்கள்

மற்றும் சிலர் எல்லா ஜீவர்களுமே முக்திக்கு யோக்கியர்கள் என்று கூறும் சுகர் போன்றவர்க்கு
ஸஹ காரி காரணம் சித்தித்தால் முக்தியில் சந்தேகம் இல்லை என்றும்
ஷிபாம் யஜஸ்ரம சுபான்
மாமப்ராப்யைவ கௌந்தேய
அவிச்சின்னாஸ் தத
மூடா ஜன்ம நிஜன் மநி -என்கிற
பிரமாணங்கள் விளம்ப மிகுதியைக் கூறுகின்றன என்றும்
ததா ஸம்ஸாரி பாந்தஸ்ய யாதி மோஹ ஸ்ரம சமம் -முதலிய பிரமாணங்கள் எல்லா ஸம்ஸாரிகளுக்கும் உபாயத்வ சம்பந்தத்தால்
ஸம்ஸார மோஹ நிவ்ருத்தியைச் சொல்வதாலும் நித்ய ஸம்ஸாரியே இல்லை என்கிறார்கள்
இந்த இரண்டு பஷத்திலும் வைஷம்ய நைர் க்ருண்யத்தைப் பரிஹரித்து அருளுகிறார் –

நித்ய சம்சாரியை ஏற்கா விட்டால் ஜீவர்கள் அனந்தர்களாய் இருப்பினும் எல்லாரும் முக்தி யோக்கியர்கள் ஆதலின்
கால க்ரமத்தில் முக்தர்களாகும் பக்ஷத்தில் லீலா விபூதி இல்லாமல் போவதால் பகவானுக்கு லீலை ஒய்வு பெற்று விடும்
அதை விலக்க நித்ய சம்சாரியை ஏற்றால் அவனிடம் பகவானுக்குத் தயை இல்லாமையால்
நைர் க்ருண்யம் என்கிற தோஷம் வரும் என்ற பூர்வ பஷத்துக்கு சமாதானம்
முன் பக்ஷத்தில் லீலை அற்றுப் போம் என்பது தோஷம் அன்று
ஏன் எனில்
சுயேச்சையான செயலே லீலை யாதலின் ஸ்ருஷ்டியில் ஈடுபடுவது போல்
அதில் இருந்து விலகி நிற்றலும் லீலையே யாதலின் பிறரின் உபத்திரவத்தினால் அல்லது
தன் இச்சையால் மட்டும் வந்தபடியால் லீலையில் ஒய்வு குறையாகாது –
நித்ய ஸம்ஸாரி பக்ஷத்தில் அந்த ஜீவர்களின் முன் கர்மாவுக்கு ஏற்ப பகவானின் தயை விரோதியாய் இருப்பதால்
நைர் க்ருண்யாதி தோஷங்கள் இல்லை என்று பொருள்

ஸ்ரீ பாஷ்யம் ஆரம்பணாதி கரணத்தில் –பூர்வ பக்ஷத்தில் வந்த
லீலா விபூதியின் ஏற்க முடியாத நிலையாகிற தோஷத்துக்கு
இவ்வர்த்தம் இங்கு வேறு முறையில் பரிஹாரமாக எழுதப்படுகிறது –

—————-

இந்த ஸ்ம்ருதி பாதத்தில் பத்து அதிகரணங்களில் பத்து பொருள்கள் கூறப்படுகின்றன
1-ஸ்ம்ருதி அதிகரணத்தில் -சாங்க்ய ஸ்ம்ருதி விரோதம் வருமே என்பது பூர்வ பஷியின் யுக்தி
2-யோக அதிகரணத்தில் –பிரஜாபதியின் மதத்தில் விரோதம் வரும் என்பது யுக்தி
3-ந விலக்ஷணத்வ அதிகரணத்தில் காரண பூத ப்ரஹ்மத்துக்கும் கார்யமான ஜகத்துடன் வேறுபாடு
4-சிஷ்டா பரிக்ரஹத்தில் பரமாணு காரணத்வத்துக்குப் பாதகம்
5-போக்த்ரா பத் யதிகரணத்தில் தேஹ சம்பந்தத்தால் சுக துக்க அனுபவம் தவிர்க்க முடியாது என்பது யுக்தி
6-ஆரம்பணாதி கரணத்தில் -காரியமும் உபாதான காரணமும் பின்னமாய் இருக்க வேண்டும் என்கிற யுக்தி
7-இதர வ்யபதேச அதிகரணத்தில் -தனக்கு ஹிதத்தைச் செய்யாமை அஹிதத்தைச் செய்வதால் காரணத்வம் தகாது என யுக்தி
8-உப ஸம்ஹாரா தர்சன அதிகரணத்தில் -ஸஹ காரிகள் இல்லாமையால் காரணத்வம் தகாது எனும் யுக்தி
9-க்ருத்ஸன ப்ரஸக்தி அதிகரணத்தில் -ப்ரஹ்மம் பூர்ணமாய்க் காரணமா -ஏக தேசம் காரணமா என்கிற விகற்பம்
இவ்வாறு பத்து பூர்வ பக்ஷ யுக்திகளையும் முன் காட்டிய யுக்திகளால் ஸூத்ர காரர் நிராகரிக்கிறார் என்று திரு உள்ளம்
10-ந ப்ரயோஜனத்வ அதிகரணத்தில் -பயன் இன்மையால் ஸ்ருஷ்டியாதிகள் பொருந்தாது என்று ஆஷேபம்

————–—————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஸ்ருதி பிரகாசர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ போதாயனர் -வ்ருத்தி காரர் – ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பாதராயணர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பாஷ்யார்த்த தீபிகை –முதல் அத்யாயம் –நான்காம் பாதம் —

November 26, 2021

ஸ்ரீ பாஷ்யம் -மங்கள ஸ்லோகம்

அகில புவன ஜன்ம ஸ்தேம பங்காதி லீலே
விநத விவித பூத வ்ராத ரக்ஷைக தீஷே
ஸ்ருதி சிரஸி விதீப்தே ப்ருஹ்மணி ஸ்ரீ நிவாஸே
பவது மம பரஸ்மின் சேமுஷீ பக்தி ரூபா –

பாராசார்ய வச ஸூதாம் உபநிஷத் துக்தாப்தி மத்யோத் த்ருதாம்
சம்சாராக்னி விதீபன வ்யபகாத ப்ராணாத்மா சஞ்சீவி நீம்
பூர்வாச்சார்ய ஸூரஷிதாம் பஹூ மதி வ்யாகாத தூரஸ்தி தாம்
ஆ நீதாம் து நிஷாஷரை ஸூ மனஸோ பௌமா பிபந்து அந்வஹம்–

—————————————————————-

முதல் அத்யாயம்-சமந்வய அத்யாயம்-
நான்காம் பாதம் -அந்ய யோக வியவச்சேத பாதம் -ஸ்பஷ்ட தர ஜீவாதி லிங்க வாக்ய விசாரம்-
8-அதிகரணங்கள் –29 ஸூத்ரங்கள்

————–

ஆகாசம் என்ற சொல் முக்தனைக் குறிக்காமல் அவ்வாக்கியத்தில் சொல்லப்படும்
ப்ரஹ்ம லோகத்தைச் சொல்லும் என்று
கீழ் அதிகரணத்தில் கூறியது போலே -இங்கும்
அவ்யக்தாத் புருஷ பர -என்ற இடத்தில் அவ்யக்தம் என்ற சொல்லும்
ப்ரஹ்மாத்மகம் அல்லாத பிரதானத்தைக் குறிக்கலாம் என்று சந்தேகித்து
உருவகமாக வைத்து வர்ணிக்கும் வாக்யாந்தரத்தில் கூறப்பட்ட
சரீரத்தைக் குறிப்பதாக ஸ்தாபிக்கப் படுகின்றது என்று சங்கதி –

1-4-1-ஆநுமாநிகாதி கரணம் -பிரகிருதி உலகின் காரணம் இல்லை

107–ஆநுமாநிகம் அபி ஏகேஷாம் இதி சேத் ந சரீர ரூபக விந்யஸ்த க்ருஹூதே தர்சயதி ச –1-4-1-

பிரக்ருதியும் காரணப் பொருளாக உபநிஷத் வாக்யங்கள் உள்ளன என்பர் -அது சரி அல்ல –
உடலை உருவகப் படுத்தவே அப்படி சொல்லப் பட்டது

கட உபநிஷத் –
இந்த்ரியேப்ய பரா ஹ்யர்த்தா அர்த்தேப் யஸ்ஸ பரமமந
மநசஸ்து பரா புத்திர் புத்தேராத்மா மஹான்பர
மஹத பரம வ்யக்த மவ்யக்தாத் புருஷ பர
புருஷான்ன பரம் கிஞ்சித் சா காஷ்டா சா பராகதி –என்று
புலன் -பொருள்கள் -மனம் -அறிவு -மஹான்-அவயகதம் உடல் -புருஷன் -இதை விட மேல் ஒன்றும் இல்லை –

இது சாங்க்ய மதம் ஈஸ்வர தத்தவத்தை ஒத்துக் கொள்ளவது இல்லை –
ஸூத்ர காரர் இந்த சங்கையை அனுவதித்துக் கண்டிக்கிறார்

ஏகேஷாம் -கடகர்களுடைய சாகையிலே -இந் த்ரியேப்ய பரா ஹ்யர்த்தா-இத்யாதியிலே
ஆநுமாநிகம் அபி -அனுமானிக்கப்படும் அப்ரஹ்மாத்மக பிரதானமும் ஜகத்துக்குக் காரணமாக
மஹத பரம் அவ்யக்தம் -எனப்பட்டது
இதி சேத் ந -என்பது தகாது -அப்ரஹ்மாத்மக பிரதானம் காரணம் என்று கூறப்படவில்லை
சரீர ரூபக விந்யஸ்த க்ருஹூதே தர்சயதி ச –உருவகத்தால் அவ்யக்தம் பிரதானம் சரீரமே
ஜீவனும் அல்லன்
பரம புருஷனே அந்தர்யாமியாய் இருந்து உபாஸனத்தை நடத்தி வைக்கிறான் என்று
அவனே வசீகரிக்க வேண்டியவற்றுள் பரம காஷ்டை -பேர் எல்லை -என்று கூறப்படுகிறது
அவன் இடம் சரணாகதி செய்வதே அவனை வசீகரிப்பது
யச்சேத் வாங் மனஸீ ப்ராஞ்ஞா -என்று இவ்வர்த்தத்தையே ஸ்ருதி காட்டுகிறது

சித்தாந்தம் –
முன்னால் அதே உபநிஷத்தில் யமன் நசிகேதனிடம்
ஆத்மானம் ரதினம் வித்தி சரீரம் ரதமேவ ச
புத்திம் து சாரதிம் வித்தி மன பிரக்ரஹமேவ ச
இந்த்ரியாணி ஹயா நா ஹூர் விஷயாம்ஸ் தேஷு கோசாரான்-என்றும்

விஜ்ஞாந சாரதிர் யஸ்து மன ப்ரக்ரஹ வான் நர
சோத்வன பாரமாப் நோதி தத் விஷ்ணோ பரமம் பதம் -என்றும்

உடலைத் தேராகக் கொண்டு மன உறுதியை தேர் ஒட்டுபவனாகவும் -மனத்தை கடிவாளமாகவும்
புலன்களை குதிரைகளாகவும் உலக விஷயங்களை பாதையாகவும்
யார் ஒருவனுக்கு இந்த தேர் சரியாக ஓடுகின்றதோ அவன் பரமபதம் சென்று அடைகின்றான்

இத்தால்
பூர்வ பஷ வாதங்கள் உடைக்கப் படுகின்றன-

அவ்யக்தம் என்பதற்கு சரீரம் என்று எப்படி பொருள் வரும் என்பதை மேலே காட்டுகிறார் –

————————————————————-

108–ஸூஷ்மம் து ததர்ஹத்வாத் –1-4-2-

ஸூட்சும தசையில் உள்ள பிரகிருதி ஒருவகையாக மாறுதலை அடைந்து உடலாகி –
ஸ்தூல உடலாலே கார்யங்கள் செய்ய வேண்டுமே –
இந்த உடலே ஜீவன் என்னும் என்னும் தேரினை அதன் இலக்குக்கு எடுத்துச் செல்ல உதவும்-

து சப்தம் ஏவ என்ற பொருளில் வந்தது
ஸூஷ்மந்து-அவ்யக்தம் தான் -வேறு அவஸ்தை பெற்று சரீரம் ஆகிறது
ததர்ஹத்வாத்-அந்த சரீர அவஸ்தமான ப்ரதானமே உபாசன அனுஷ்டானத்துக்குத் தகுதி உள்ளதாக ஆகின்றது
அதனால் காரண வாசக ஸப்தம் கார்யத்தைக் குறிக்கிறது

ரூபகம் செய்யப்பட ஆத்மாதிகள் வசீகரிக்கத் தக்கவையில் சிறந்த
இந்த்ரியம் அர்த்தம் முதலியவற்றால் க்ரஹிக்கப் பெற்றால்
அவ்யக்தாத் புருஷ பர -என்று
புருஷனை ஏன் கிரஹிக்க வேண்டும் என்பதற்கு மேல் விடை அளிக்கிறார் –

————————————————————

109-தத் அதீனத்வாத் அர்த்தவத் –1-4-3-

பிரகிருதி எனபது பரம் பொரூடன் தொடர்பு கொண்டால் மட்டுமே பயனுள்ளதாக இருக்கும்
சாங்க்ய மதம் போலே பிரகிருதி மாறும் என்பதை ஒத்துக் கொண்டாலும் தன்னிச்சையாக செயல்பட முடியாது
பரம் பொருளின் ஆணைக்கு இடங்க நடந்தால் மட்டுமே பயனுள்ளதாகும்-

தத் அதீனத்வாத் -ஆத்ம சரீராதிகள் அந்தர்யாமியான புருஷனுக்கு ஆதீனம் ஆகையாலே
அர்த்தவத் –பிரயோஜனம் உள்ளதாகிறது
ஆகவே உபாசனம் கை கூடுவதற்கு வசப்படுத்த வேண்டிய இந்திரியாதிகளுக்கு எல்லை நிலனாயும்
பரம ப்ராப்யனாயும் இருக்கிறான் என்ற சொல் புருஷனைப் பற்றிக் கூறியது என்பது வேதாந்த தீபத்தின் விடை
ஸ்ரீ பாஷ்யத்திலோ பிரதானத்தை ஏற்பதும் மறுப்பதும் முரண் பட்டதாதலால் எப்படிக் கூடும் என்று சந்தேகித்து
ஸ்வ தந்திரமாக பிரதானத்தை ஏற்க வில்லை
பின் என் எனில் பரம புருஷன் பிரேரணனையால் ஸ்ருஷ்டியாதிகளில் ப்ரவர்த்திப்பதால் பிரயோஜனம் உள்ளது
என்று விடை கூறப்படுகிறது –

——————————————————————–

110-ஜ்ஞேயத்வா வசநாத் ச–1-4-4-

சாங்க்ய மதத்தின் படி அவ்யக்த-பிரகிருதி – ஞானம் பற்றியே
மோட்ஷம் என்று உபநிஷத் கூற வில்லை-

தந்த்ர சித்த ப்ரக்ரியை இவ்வாக்கியத்தில் சம்மதமானால் அவ்யக்தம் ஜேயம் என்று எண்ண வேண்டும்
வ்யக்தம் அவ்யக்தம் ஜேயன் -இவை பற்றி அறிவதால் என்று அல்லவோ சாங்க்யர்களின் முறை
இந்த சாகையில் அவ்யக்தம் ஜேயமாம் முமுஷுக்கு என்று கூற வில்லை
சாங்க்ய ப்ரக்ரியைக்கு இங்கு ஸம்பந்தமே இல்லை –

———————————————————————-

111–வததி இதி சேத் ந ப்ராஜ்ஞோ ஹ பிரகரணாத்–1-4-5-

கடவல்லி -3-15-
அசப்தம் அஸ்பர்சம் அரூபம் அவ்யயம் தத் அரசம் நித்யம் அகந்த வச்ச யத்-
அநாதி அநந்தம் மஹத பரம் த்ருவம் நிசாய்ய தம் ம்ருத்யுமுகாத் ப்ரமுச்யதே–

இந்த வரிகளுக்கு முன்னால்
விஜ்ஞான சாரதி யஸ்து மன ப்ரக்ரஹ வான்னர
சோத்வன பாரமாப் நோதி தத் விஷ்ணோ பரமம் பதம்-என்றும்

அதற்கு கீழே –
ஏஷ சர்வேஷூ பூதேஷு கூடோத்மாந பிரகாசதே
த்ருச்யதே த்வகர்யயா புத்த்யா ஸூ ஷ்மயா ஸூஷ்ம தர்சிபி – என்று இருப்பதால்

சாங்க்ய வாதம் புருஷர்களை விட மேல் இல்லை எனபது உடைக்கப்பட்டு
பரம் பொருள்
யத்த தத்ரேச்யம் -முண்டகம் -என்றும் –
புத்தரோத்மா மஹான் பர -என்றும்
மேலானவன் என்று உணர முடியலாம்-

இவற்றால் பரம புருஷனே சொல்லப்படுகிறான் -பிரதானம் அன்று
பரம் ஆப்நோதி தத் விஷ்ணோ பரமம் பதம் என்று ப்ராஞ்ஞனுக்கு உரிய பிரகரணம் ஆகையாலே

—————————————————

112-த்ரயாணாம் ஏவ ச ஏவம் உபன்யாச ப்ரசன ச –1-4-6-

மூன்றைப் பற்றிய கேள்வியும் பதிலுமே உள்ளதால் பிரக்ருதியைப் பற்றிக் குறிப்பிட வில்லை என்று அறியலாம்
உபாயமும் உபேயமும் உபேதாவையும் -மூன்றையும் பற்றியே உண்டு –

யமனிடம் இருந்து மூன்று வரங்களைப் பெற்ற நசிகேதன்
முதல் வரத்தின் முலம் தந்தையை அருகில் கேட்டான்–
இரண்டாம் வரத்தின் முலம் அக்னியைக் குறித்துக் கேட்டான் –
மோட்ஷம் பெற்றவர் சென்று அடையும் இடம் –மோட்ஷம் பெற விரும்புவர்களின் தன்மைகள் -வழி ஆகியவற்றை பற்றி –
ந ஜாயதே ம்ரியதே வா -அணோர் அணீயான்–இத்தா வேத யத்ரச-துர்க்கம் பதஸ்தத் கவயோ வதந்தி-

இந்தப் ப்ரகரணத்தில் -யேயம் ப்ரேத விசிகித்சா மனுஷ்யே-என்று தொடங்கி
இறுதி வரை உபாஸ்யன் -உபாஸகன் -உபாஸனம் -மூன்று அர்த்தங்களும்
இவ்வாறு அறியத்தக்கன என்று உபந்யாஸமும் வினாவும் உள்ளன
ஆதலால் அப்ரஹாத்மகமான பிரதானத்தை ஜேயம் என்று கூற வில்லை –

ஆக மூன்றிலும் பிரக்ருதியைப் பற்றி இல்லை-

——————————————————

113-மஹத்வத் ச –1-4-7-

மஹத் என்று கூறும் இடத்திலும் பிரக்ருதியைப் பற்றி கூறவில்லை
புத்தேராத்மா மகான் பர –
மஹத் தத்துவத்தை விட அது உயர்ந்தது என்று கொண்டால் -சாங்க்ய மத மஹான் பற்றி இல்லை
புத்திக்கு மேலே உள்ள ஆத்மாவைப் பற்றி -என்று ஆத்மாவுக்கு விசேஷணமாகவே கொள்ள வேண்டும்

ஆத்மா எல்லாவற்றையும் விட மஹத்தான பரம் என்று திரு உள்ளம்

மேலும் மஹத பரம் அவ்யக்தம் -என்று மஹானை விட மேலானது அவ்யக்தம்-
இங்கு சாங்க்ய மத அவ்யக்தம் பிரகிருதி பற்றி இல்லை-

ஆநுமாநிகாதி கரணம் சம்பூர்ணம்

———————————————————

1-4-2-சமசாதிகரணம் -ப்ரஹ்மத்தை அந்தர்யாமியாகக் கொண்டு உள்ளது பிரகிருதி-

பரிசேஷ க்ரமத்தாலும் ஸ்தான ப்ரமாணத்தாலும் அவ்யக்தம் என்பது அவ்யக்தத்தின் -பிரதானத்தின் -கார்யமான
சரீரத்தைச் சொல்வது என்று முன் ஸ்தாபித்தார்
அதே காரணத்தால் அஜாமேகம் என்ற இடத்திலும் அஜா ஸப்தம் அவ்யக்த்தத்தைக் குறிப்பிட்டதாகட்டும்
என்ற பூர்வ பக்ஷம் கூறி
அப்ராஹ்மத்மகமான பிரதானம் அதன் பொருள் அன்று என்று
இவ்வதி கரணத்தில் ஸ்தாபிக்கிறார் –

114-சமசவத் அவிசேஷாத்-1-4-8-

உபநிஷத்தில் சமசம் -பதம் தெளிவாக கூறப்பட்டுள்ளது –
ஸ்வேதரா-4-5-
அஜாம் ஏகம் லோஹித ஸூக்ல கிருஷ்ணாம் பஹ்வீ பிரஜா ஸ்ருஜமா நாம் சரூபா
அஜோ ஹி ஏகோ ஜூஷமாண அநு சேதே ஜஹாத் யேநாம் புக்த போகாம் அஜ அன்ய-
சமசம் எனபது யாகங்களில் உதவும் ஒரு பாத்ரம் –

பிருஹு –4-2-3-
இதம் தச்சிர ஏஷ ஹி அர்வாக்பிலஸ் சமச ஊர்த்வ புத்ன–என்று-இப்படி மேலே பருத்து கீழே துளை உள்ளது
தலையே -மண்டை ஓடே -ஆகும் நமது தலையைக் குறிக்கும்
அஜா பிறப்பற்ற பிரக்ருதியைக் குறிக்கும்-

ப்ரக்ருதி என்றே பூர்வ பக்ஷம்
ஏன் எனில்
அஜாம் என்று உத்பத்தி இல்லாமை கூறப்படுவதாலும்
ஏராளமான பிரஜைகளுக்குத் தானே ஸ்ருஷ்டி கர்த்தா என்று கூறியதாலும்
என்ற இந்த பூர்வ பஷத்தை நிரசிக்கிறார் –

இந்த அஜா சப்தம் சாங்க்யர்கள் கூறும் பிரதானத்தை அன்று என்ற வாக்யத்தைத் தருவித்திக் கொள்ள வேண்டும் –
சமசவத் அவிசேஷாத்—அர்வாக்பிலஸ் சமச ஊர்த்வ புத்ன–என்ற மந்திரத்தில் சமசத்திற்கு -பஷிப்பதற்கு சாதனம்
என்ற காரணத்தால் சமஸ பதம் சிரசைச் சொல்வது போல்
அஜா மேகம் என்றதில் அஜாம் என்ற ஸப்தம் அப்ரஹ்மத்மக பிரதானத்தைச் சொல்வது என்கையில்
விசேஷ காரணம் இல்லாமையால் அது பொருந்தாது
ஸ்வ தந்திரமாக ஸ்ருஷ்டிப்பது என்ற ஒரு விசேஷணமும் இல்லை

ப்ரஹ்மாத்மிகை யானால் ப்ரக்ருதி ஸ்ருஷ்டி ஹேதுவாய் அஜா என்று கூப்பிடலாமே
ப்ரஹ்மாத்மிகையான அஜையைச் சொல்லுகையில் விசேஷ ஹேதுவை அருளுகிறார் மேல்

———————————————————————–

115-ஜ்யோதிர் உபக்ரமா து ததா ஹி அதீயதே ஏகே –1-4-9-

ஜோதியான பரம் பொருளைச் சார்ந்தே அஜா என்னும் பிரகிருதி உள்ளது –
தைத்ரியம் –
அணோர் அணீயான் மஹதோ மஹூயா நாத்மா–திஷ்டத் யந்தராத்மா-என்று
அஜா எனபது பரம் பொருளைச் சார்ந்த பிரக்ருதியே என்றதாயிற்று –

ஜ்யோதிர் உபக்ரமாது- ஜ்யோதி -ப்ரஹ்மம் -அத்தைக் காரணமாக் கொண்டதே இந்த அஜை
ததா ஹி அதீயதே ஏகே -தைத்ரியம் சொல்லுமே -பர ப்ரஹ்மத்தை உபபாதித்து -ஸப்த ப்ராணா ப்ரபவந்தி என்று
சகல ஜகத்தும் ப்ரஹ்மத்தில் இருந்து தோன்றுகின்றன -என்கிறதே
இதே போலவே ஸ்வேதாஸ்வர மந்த்ரமும் கூறும்

அப்படியாயின் ஒரே வஸ்துவுக்கு அஜாத்வமும் -ஜ்யோதி ரூப க்ரமாத்வமும் -ப்ரஹ்ம காரணத்வமும் –
பொருத்துவதற்கு ஹேது மேலே அருளிச் செய்கிறார் –

—————————————————————————-

116-கல்பந உபதேசாத் ச மத்வாதி வத் அவிரோத –1-4-10-

பிரகிருதி பிறப்பற்றது என்றும்
கல்பாதியிலே உருவாக்கப் பட்டது என்பதும் முரண் பட்டது இல்லை –

தைத்ரிய உபநிஷத்தில் -5-7-
சூர்யா சந்திர மசவ் ததா யதா பூர்வம் கல்பயந் -என்றும்

ஸ்வேதாஸ்வதார உபநிஷத்தில் –
அஸ்மான் மாயீ ஸ்ருஜதே விஸ்வமேதத்–4-9 -என்று படைக்கப் பட்டதை சொல்லிற்று –

சாந்தோக்யம் -மது வித்யையில்-
பிரளயம் முடிந்து உலகம் படைக்கப் பட்ட பின்பு –
அசௌவா ஆதித்யோ தேவமது -என்று தேவர்களுக்கு மதுவாக உள்ளதையும்
பிரளய காலத்தில் –
நை வோதே தா நாஸ்த மேதா-என்று சூரியன் மறைவதும் இல்லை உதிப்பதும் இல்லை -எனபது போலே –
இரண்டு நிலைகளுக்கும் முரண்பாடு இல்லை-

கல்பந உபதேசாத் ச -ஸ்வேதாஸ்வதார உபநிஷத்தில் –
அஸ்மான் மாயீ ஸ்ருஜதே விஸ்வமேதத்–என்று ஸ்ருஷ்ட்டியை உபதேசிகையாலே
பிரளய சமயத்தில் இந்த ப்ரக்ருதியானது பரம புருஷனுக்கு சரீரமாய் ஸூஷ்மமாய் உள்ளது
அந்த அவஸ்தையைக் கருதியே பிரக்ருதியை அஜா எனப்படுகிறது
ஸ்ருஷ்டி சமயத்தில் ஸ்தூல அவஸ்தை ஏற்படுவதால் ஜ்யோதிர் ரூப க்ரமாத்வம் -பொருந்துமே

மத்வாதி வத் அவிரோத –மது வித்யையில் கார்ய அவஸ்தையில் -அசௌவா ஆதித்யோ தேவமது-என்று மதுவாகக் கல்பனமும்
அதே ஆதித்யனுக்கு –அத தத ஊர்த்வ உததி அனேநை வோதேதா நாஸ்த மேதா-என்று முதலில்
காரண அவஸ்தையில் நாம ரூபங்களை விட்டமையால் ஸூஷ்ம ரூபமான இருப்பும் எப்படி முரண் பட்டவை இல்லையோ
அப்படியே இங்கும் இரண்டு தன்மைகளும் முரண் இல்லை –

சமசாதிகரணம் சம்பூர்ணம்

———————————————————————

1-4-3-சங்க்ய உப சங்க்ரஹாதி கரணம் -இந்த்ரியங்களுக்கு ப்ரஹ்மமே அந்தர்யாமி –

முன் அதிகரணத்தில் சாங்க்யர் கூறிய அப்ரஹ்மாத்மக அவ்யக்தத்தை விளக்கும்
அஜாமேகம் -ஸ்ருதியில் ஏற்பட்ட பூர்வ பக்ஷம் நிரசிக்கப் பட்டது
இதில் சாங்க்யர் கூறும் தத்வ சங்க்யை -எண்ணிக்கை யைக் கொண்டு
ஸ்ருத் யர்த்தத்தில் ஏற்படும் பூர்வ பக்ஷம் கண்டிக்கப் படுகிறது என்று சங்கதி –

117-ந சங்க்ய உப சங்கரஹாத் அபி நாநா பாவாத் அதிரேகாத் ச –1-4-11-

ப்ருஹத் ஆரண்யாகாவில்-4-4-17-
யஸ்மின் பஞ்ச பஞ்ச ஜனா ஆகாசாஸ்ஸ ப்ரதிஷ்டித தமேவ மன்ய ஆத்மானம் வித்வான் ப்ரஹ்மாத்ருதோம்ருதம் –
என்று
5 தன்மாத்ரைகள் -5-ஞான இந்த்ரியங்கள் -5 கர்ம இந்த்ரியங்கள் -பிரகிருதி -மனம் -அஹங்காரம் -ஆத்மா
என்று 25 தத்வமாக ஜீவனைக் குறித்து
இவற்றை அறிந்தால் மோஷம் பெறலாம் என்கிறது உபநிஷத்

25 கூறப்படுகின்றன என்று பூர்வ பக்ஷம்
பஞ்ச பஞ்ச ஜனா என்று ஐந்து ஜனங்களால் ஆரம்பிக்கப் பட்ட கார்யங்கள் ஐந்து ஆக 25 என்று
விசேஷிப்பதால் தத்வங்கள் தோன்றுகின்றன
மோக்ஷ ப்ரகரணத்தாலே அந்த ஸங்க்யை சாங்க்ய தந்த்ர யுக்தங்கள் என்று தோன்றுகிறது
தமேவ மன்ய ஆத்மானம் வித்வான் ப்ரஹ்மாத்ருதோம்ருதம் –என்றதும்
25 வது தத்வமான ஆத்மாவை ப்ரஹ்மம் என்று அறிந்தவன் முக்தன் ஆவான் என்கிறது
என்னும் பக்ஷத்தைக் கண்டிக்கிறார் –

சாங்க்ய மதம் போலே சுதந்திரமான தத்வங்கள் அல்ல
யஸ்மின்-என்று பரம் பொருளைச் சார்ந்தே உள்ளவை-

ந சங்க்ய உப சங்கரஹாத் அபி –25 எண்ணிக்கையை ஏற்றாலும் இந்த தத்வங்கள் அப்ராஹ்மத்வங்கள் அல்ல
நாநா பாவாத் –யஸ்மின் -என்று குறிப்பிட்ட ப்ரஹ்மம் அந்த தத்துவங்களுக்கு ஆதாரமான படியாலே
அப்ரஹ் மாத்மகமான தத்வங்களைக் காட்டிலும் இந்த தத்துவங்களுக்கு ப்ரஹ்மாத் கத்வத்தாலே பேதம் தோன்றுவதால்
அதிரேகாத் ச-யத் ஸப்தத்தால் சொல்லப்படும் ப்ரஹ்மமும் ஆகாசமும்
வேறாய் இருப்பதால் -அதிகமாய் இருப்பதால் -தத்வங்கள் 27 ஆகின்றன
ஸூத்ரத்திலே அபி ஸப்தத்தாலே ஸங்க்யையை அங்கீ கரிக்க வில்லை என்று ஏற்படுகிறது
ஆத்மாவுக்கும் ப்ரஹ்மத்துக்கும் ஐக்யமும் -ய ஆத்மனி திஷ்டன் -இத்யாதி ஸ்ருதியோடு முரண் பட்டது என்று முன்பே கூறப்பட்டது
பஞ்ச ஜனங்கள் என்பது கண் முதலிய இந்திரியங்கள் அவை ஐந்து என்பதே பஞ்ச பஞ்ச ஜனா என்பதின் பொருள் –
ஸப்த ஸப்தர்க்ஷய-என்பது போலே -என்பது திரு உள்ளம் –

———————————————————————–

118-ப்ராணாதய வாக்ய சேஷாத்-1-4-12-

பஞ்ச பஞ்ச ஜனா -ஐந்து பொருள்கள் –
ப்ருஹத் ஆரண்யாகாவில் 4-4-18-
பிராணஸ்ய பிராணமுத சஷூஷஸ் சஷூ ஸ்ரோத்ரஸ்ய ஸ்ரோத்ரம்-
அந்நஸ் யாந்னம்- மநஸோ யே மநோ விது—என்று –
பிராணன் கண் காது அன்னம் அல்லது நாக்கு மனம் என்பவை ஆகும்-

ஜனநாத் -ஜனங்கள் என்ற வ்யுத்பத்தியாலே இந்திரியங்கள் கூறப்படுகின்றன என்று கருத்து

அன்னஸ் யான்னம் -என்ற வாக்கியம் இல்லாமையால் பஞ்ச ஜனங்கள் ஐந்து என்று
எப்படி அறியப்படுகிறது
என்ற சங்கையை பரிஹரிக்கிறார் மேல் –

—————————————————————————

119-ஜ்யோதிஷா ஏகேஷாம் அஸத் அந்நே –1-4-13-

காண்வ முனிவரின் உபநிஷத் வரியில் அன்னம் என்று கூறவில்லை என்றாலும்
அதற்கு முந்திய வரியில்
தம் தேவா ஜ்யோதிஷாம் ஜ்யோதிராயூர் ஹோபாசதேம்ருதம் -ஜ்யோதிகள் அனைத்துக்கும் ஜ்யோதி என்று
புலன்கள் ஐந்துக்கும் ஜ்யோதியான பர ப்ரஹ்மத்தை சொல்லிற்று-

ஜ்யோதிஷா ஏகேஷாம் அஸ்தி அந்நே –
ஏகேஷாம் -காணவர்களின் வாக்ய சேஷத்தாலே
அஸத் அந்நே-அன்னம் என்ற பாடம் இல்லா விட்டாலும்
ஜ்யோதிஷா-தம் தேவா ஜ்யோதிஷாம் ஜ்யோதி -என்று தொடக்கத்தில் ஆறாம் வேற்றுமையான
ஜ்யோதிஸ் ஸப்தம் ப்ரஹ்மத்தைக் குறித்தால் ப்ரகாசகங்களுக்கும் ப்ரகாசங்கள் ப்ரஹ்மமே என்று தோன்றுகிறது
அந்தப் ப்ரகாசங்கள் எவை என்றால் -பஞ்ச பஞ்ச ஜனா என்று பொதுவாகச் சொன்ன பஞ்ச ப்ரகாசங்களை
பிராணஸ்ய பிராணம் முதலியவற்றிலே விசேஷிக்கிறது
பிராணஸ்ய-என்று த்வக் இந்திரியம் சொல்லப்படுகிறது
அன்னஸ்ய -என்று மூக்கும் க்ராண இந்த்ரியமும் ரசன இந்த்ரியமும் சேர்த்து கூறப்படுகின்றன
ஆகவே ஐந்து என்பதற்குத் தடையில்லை எனத் திரு உள்ளம்
ஆகவே யஸ்மின் பஞ்ச பஞ்ச ஜனா என்ற மந்திரத்தில் இந்த்ரியங்களுக்கும் ஆகாசாதி பூதங்களுக்கும்
ப்ரஹ்ம ஆஸ்ரயத்வம் கூறப்படுவது சாங்க்யரின் கருத்து அன்று –

சங்க்ய உப சங்க்ரஹாதி கரணம் சம்பூர்ணம்

——————————————————————————

1-4-4-காரணத்வாதி கரணம் -ப்ரஹ்மமே அனைத்துக்கும் காரணம் –

இப்படி மூன்று அதிகரணங்களால்
சாங்க்யர் கூறின சாகையை அனுசரித்த வாக்கியங்கள் பரமாத்மாவையே போதிப்பவை
என்று ஸ்தாபித்தவுடன்
அவர்கள் அப்ராஹ்மாத்மக பிரதானத்தையே போதிப்பதாகக் கூறும்
அவ்யாக்ருதம் முதலிய சொற்களும் பரமாத்மாவே பொருள் என்று
ஈஷத் யதிகரணாதிகளில் சொன்ன அர்த்தத்தை
இங்கு சிங்க நோக்கு முறையில் -ஸிம்ஹ அவலோகந-காட்டி ஸ்தாபிக்கிறார் –

120-காரணத்வேன ச ஆகாசாதிஷூ யதா வ்யபதிஷ்ட உக்தே –1-4-14-

ஆகாயம் உட்பட அனைத்துக்கும் காரணமாக பர ப்ரஹ்மமே உள்ளது என்று கூறப்பட்டதால்
ப்ரஹ்மமே உலகின் காரணப் பொருள் –

சாந்தோக்யம் -2-7-1-
சத் ஏவ சோம்ய இதம் அக்ர ஆஸீத் -சத் என்பதே காரணப் பொருள்

தைத்ரிய உபநிஷத்தில் -3-19-1-
அசத் ஏவா இதம் அக்ர ஆஸீத் -என்று முதலில் அசத் என்பதே காரணப் பொருள்

ப்ருஹத் உபநிஷத்தில் -1-4-7-
தத் ஏதத் தர்ஹி அவ்யாக்ருதம் ஆஸீத் -என்று காரணப் பொருள் அவ்யாக்ருதமாக இருந்தது
சாங்க்ய மதத்தில் அவ்யாக்ருதம் பிரகிருதி

ஜகத்துக்குக் காரணத்தைக் கூறும் -தத்தே தந்தர் ஹி அசதே வேதம் –இத்யாதி வாக்கியங்கள்
பிரதானத்தைக் காரணமாக் கூறுபவைவா
அன்றி ப்ரஹ்மத்தைக் காரணமாக் கூறுபவையா என்று சம்சயம்
பிரதான காரண வாத பரங்களே -பூர்வ பக்ஷம்
ஏன் எனில்
ஸதேவ சோம்ய இதம் அக்ர ஆஸீத் -என்று சில இடங்களில் ஸத் காரணம் எனப்படுகிறது

சில இடங்களில் அசதே வேதம் அக்ர -என்று அஸத் காரணம் எனப்படுகிறது
அவ்வாறே தத்தே தந்தர் ஹி அவ்யாக்ருதம் ஆஸீத் -என்று அவ்யாக்ருதம் காரணம் எனப்படுகிறது
அவ்யாக்ருதம் என்பதே பிரதானம்
ஆதலின் பிரதானம் காரணமாகையாலே ஸகல வாக்கியங்களும் பிரதானத்தையே காரணம் என்கின்றன
என்ற பூர்வ பக்ஷத்தைக் கண்டிக்கிறார் –

தைத்ரியம் -2-1-1-
சத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்மம்-என்றும் தஸ்மாத் வை ஏ தஸ்மாத் ஆத்மான ஆகாச சம்பூத் -என்று
பரமாத்வா விடம் இருந்து ஆகாசம் தோன்றிற்று என்றும்

சாந்தோக்யம் -6-2-3-
தத் ஐ ஷத பஹூச்யாம் -பலவாக தோன்றுவேன் என்பதால் சத் அசத் அவ்யாக்ருதம்
போன்றவையும் ப்ரஹ்மத்தை குறிக்கும் பதங்கள்

ப்ருஹத் உபநிஷத்தில் -1-4-7-
தத் நாம ரூபாப்யம் வ்யாக்ருத யதா -என்று
இத்தையே குறிக்கும் -பர ப்ரஹ்மமே காரணம் என்றதாயிற்று

காரணத்வேன ச -ஆகாசாதிஷூ யதா வ்யபதிஷ்ட உக்தே –-ஆகாசம் முதலிய பதம் கொண்ட வாக்யங்களில் –
தஸ்மாத் வை ஏ தஸ்மாத் ஆத்மான ஆகாச சம்பூத் -முதலிய எல்லா வாக்யங்களிலும்
யாதவ்ய பதிஷ்டைஸ்யைவ காரணத்வேந யுக்த –சர்வஞ்ஞன் ஸர்வ சக்தன் என்று
எல்லாம் ஈஷத் அதிகரணாதிகளிலே ஸ்தாபிக்கப் பட்ட பரம புருஷனே காரணம் என்று சொல்வதால்
அவனுக்கு தேவாதி நாம ரூபங்கள் இல்லாமையால் அஸத் -அவ்யாக்ருதம் -எனப்படுகிறான்
ஆதலால் எல்லா காரணாதி வாக்கியங்களும் பர ப்ரஹ்மத்தையே காரணமாக் கூறுவன என்று திரு உள்ளம்

அப்படியாகில்
அஸத் வா இதம் அக்ர ஆஸீத் என்பதற்கு என்ன பொருள் என்பதைக் கூறுகிறார் அடுத்து –

——————————————————————————-

121-சமாகர்ஷாத் –1-4-15-

மற்ற உபநிஷத்களிலும் கூறப்பட்டவற்றை குறிப்பிடுவதாலும் பர ப்ரஹ்மமே காரணம்
தைத்ரிய உபநிஷத் –
சோகா மயத பஹூச்யாம் பிரஜா யேய-என்றும்
அசத் வை இதம் அக்ர ஆஸீத் -என்றும்

ப்ருஹத் ஆரண்யாகாவில் –
தத் ஏதம் தர்ஹி அவ்யாக்ருதம் ஆஸீத் என்றும்

அதே உபநிஷத் –
ச ஏஷ இஹ ப்ரவிஷ்ட ஆனகாக்ரேப்ய-என்று
உள்ளே புகுந்து நகக் கண்கள் வரையில் உள்ளான் -என்கிறது-

தைத்ரிய உபநிஷத் –சோகா மயத பஹூச்யாம் பிரஜா யேய-என்று
பஹு பவன சங்கல்பத்துடன் ஜகாத்தை ஸ்ருஷ்ட்டி செய்யும்
ஸர்வஞ்ஞனான பர ப்ரஹ்மத்தையே அஸத் வா இதம் -என்ற வாக்யத்தில் ஆகர்ஷித்துக் கொள்வதால்
ஸூஷ்ம சித் அசித் விஸிஷ்டனான ப்ரஹ்மத்துக்குக் காரண அவஸ்தையில் நாம ரூப சம்பந்தம் இல்லாமையால்
இத்தைப் பின் பற்றி அஸத் என்று ப்ரஹ்மத்தைச் சொல்கிறது
தத்தே தந்தர் ஹி அவ்யாக்ருதம் ஆஸீத் என்று ப்ருஹத் ஆரண்யாகாவிலும்
அதிலே ச ஏஷ இஹ ப்ரவிஷ்ட ஆனகாக்ரேப்ய பஸ்யன் சஷு -போன்ற
முன் பின் வாக்கியங்களை ஆராயும் போது ஸர்வஞ்ஞனாய் ஸர்வ ஸக்தியுக்தனாய் உள்ள பர ப்ரஹ்மமே
அவ்யாக்ருத சரீரமாய்க் கொண்டு ஜகாத்தை ஸ்ருஷ்டிக்கையாலே
அவ்யாக்ருதம் என்று பிரதான சரீரிகமான பர ப்ரஹ்மமே கூறப்படுகிறது என்பது ஸித்தமாயிற்று –

காரணத்வாதி கரணம் சம்பூர்ணம்

———————————————————————————

1-4-5-ஜகத்வாசித்வாதி கரணம் -ப்ரஹ்மமே அறியத்தக்கது –

இப்படி முன் அதிகரணத்தில் வேறாகக் கூற முடியாத பிரகரண பலத்தாலே
அப்ரஹ்மாத்மக ப்ரதான காரணத்வத்தை நிரஸனம் செய்து
யஸ்ய சைதத் கர்ம என்று கர்மவான் என்னும் சிறப்பான லிங்கத்தைத் துணை கொண்டு
முன் அதிகரண நியாயத்தின் படி ஸமாகர்ஷிக்கப் பட்ட ஜீவனே பிரதானத்தின் அதிஷ்டா யாதலின்
பரனாகட்டும் என்று சங்கித்து
அவனுக்கும் காரணத்வம் இல்லை என்று நிரூபிக்கிறார்
என்று சங்கதி

முன்பு அவ்யாக்ருத ஸப்தத்துக்கு ப்ரக்ருதி என்ற பொருளை விலக்கி பரமாத்மா என்ற
பொருள் தீர்மானிக்கப் பட்டது
தற்போது கர்ம ஸப்தத்திற்கு புண்ய பாப ரூபமான கர்மா என்ற பொருளை விலக்கி
படைக்கப்படும் ஜகத் என்ற பொருள் நிறுவப்படுகிறது
என்று மற்றோர் சங்கதி –

121-ஜகத் வாசித்வாத்–1-4-16-

யோ வை பாலாகே ஏதேஷாம் புருஷாணாம் கர்த்தா யஸ்ய வைதத் கர்ம ச வை வேதிதவ்ய –
பாலாகி என்னும் ஒருவன் அஜாத சத்ரு என்ற அரசன் இடம் வந்து ப்ரஹ்மத்தை குறித்து கூறுவதாக சொல்லி
ப்ரஹ்ம தே ப்ருவாணி யோ வை பாலாகே ஏதேஷாம் புருஷாணாம் கர்த்தா யஸ்ய வைதத் கர்ம ச வை வேதிதவ்ய –
யஸ்யா வா ஏதத் கர்ம -யாருக்கு இது கர்மமோ -இது என்றது உலகம் –
கர்மம் -உலகை உருவாக்கும் செயலையும் சொல்லி
பர ப்ரஹ்மமே அனைத்துக்கும் காரணம் என்றதாயிற்று-

யஸ்ய சைதத் கர்ம -ப்ரக்ருதி வ்யுக்தனான புருஷனே வேதிதவ்யன் –
அவனுக்கு புண்ய பாப ரூப கர்ம சம்பந்தம் சொல்வதால்
என்கிற பூர்வ பக்ஷத்தைக் கண்டிக்கிறார்

ஜகத் வாசித்வாத்-பரம புருஷனே வேதி தவ்யன் -அறியத்தக்கவன் என்று வருவித்துக் கொள்ள வேண்டும்
ஏன் எனில்
கர்ம -என்று ஏதத் ஸப்தத்தோடு ஒரே வேற்றுமையில் உள்ள கர்ம ஸப்தம் –
க்ரியதே இதி கர்ம என்ற வ்யுத்பத்தியால் ஜகத்தைச் சொல்லுவதால்
இது புண்ய அபுண்ய ரூப கர்மாவைக் குறிப்பதால்
ஏதத் என்ற ஸப்தம் வீணாகும் என்று கருத்து –

—————————————————————————

122-ஜீவ முக்ய பிராண லிங்காத் ந இதி சேத தத் வ்யாக்யாதம் –1-4-17-

அதாஸ்மின் பிராண ஏவ ஏகதாபவதி-என்றும்

தத்யதா ச்ரெஷ்டீ ஸ்வைர்ப்புங்க்தே யதா ஸ்வா ஸ்ரேஷ்டி நம் புஞ்ஜந்தி
ஏவமேவைஷா பிரஜ்ஞாத்மா ஏதைராத்மயிர் புங்க்தே
ஏவமேவைத ஆத்மான எனம் புஞ்ஜந்தி -என்றும்

ப்ரஹ்மேதே பிரவாணி -என்றும்

சர்வான் பாப்மநோப ஹத்ய சர்வேஷாம் பூதானாம் ஸ்ரைஷ்ட்யம் ஸ்வா ராஜ்ய மாதிபத்யம் பர்யேதி யா ஏவம் வேத -என்று
பிராணனை உடலாக உடைய ப்ரஹ்மத்தை உபாசனை செய்ய வேண்டும் என்றதாயிற்று –

ஜீவ முக்ய பிராண லிங்காத் ந இதி சேத -ஜீவ லிங்கத்தாலும் முக்ய ப்ராண லிங்கத்தாலும்
வேதி தவ்யன் பரமாத்மா அல்லன் என்றால்
தத் வ்யாக்யாதம்-ப்ரதர்த்தன வித்யையில் அது விரித்து உரைக்கப் பட்டது
ப்ரகரணத்தை முன் பின் ஆராய்வதால் பரமாத்ம பரம் இவ்வாக்கியம் என்று நிச்சயித்தால்
ஜீவாதிகளைக் குறிப்பிடும் சொற்களும் ஜீவாதிகளைச் சரீரமாகக் கொண்ட பரமாத்மாவையே போதிப்பவை என்று
ப்ரதர்தன வித்யா நியாயம் இங்கே நோக்கத் தக்கது

தவ்ஹ ஸூப்தம் புருஷமா ஜக்மது –என்று தொடங்கி
உறங்கும் மனிதனிடம் நெருங்கி பிரம்பால் அடித்து எழுப்பி
சரீரம் இந்திரியம் பிராணன் இவற்றை விட வேறான ஜீவன் இருப்பதை விளக்குவது இந்த வாக்யம்
என்ற சங்கைக்கு
உத்தரம் சாதிக்கிறார் மேல் –

—————————————————————————–

123-அன்யார்த்தம் து ஜைமினி ப்ரசன வியாக்யா நாப்யாம் அபி ச ஏவம் ஏகே –1-4-18-

அஜாத சத்ருவும் பாலாகியும் தூங்கிக் கொண்டு இருந்த மனிதனை எழுப்ப –
உடலில் வேறுபட்டவன் ஜீவன் -ஜீவனில் வேறுபட்டவன் பர ப்ரஹ்மம்
க்வ ஏஷ ஏதத் பாலாகே புருஷோசயிஷ்ட -தூங்கி எழுவதற்கு முன்னால் எங்கு இருந்தான்

விடையாக
அதாஸ்மின் பிராண ஏவ ஏகதா-தூங்கும் பொழுது பிராணனில் ஒன்றி விடுகிறான்

சாந்தோக்யம் -சதா சோம்ய ததா சம்பன்னோ பவதி –தூங்கும் பொழுது சத்துடன் ஒன்றி விடுகிறான்
பிராணன் என்றது ப்ரஹ்மமே

ப்ருஹத் உபநிஷத் -ய ஏஷோந்தர் ஹ்ருதய ஆகாசஸ் தஸ்மின் சேதே-என்று தூங்குபவன் இதயத்திலுள்ள
ஆகாயம் ஆகிய பரம் பொருளிடம் தூங்குகின்றான்
பிராணன் போன்ற சொற்கள் ப்ரஹ்மமே என்றதாயிற்று-

து என்ற சொல் சங்கையை மாற்றுகிறது
ஜீவனைக் குறிப்பது ஜீவனை விட்டு வேறான ப்ரஹ்மம் இருப்பதை விளக்குவதற்க்கானது
கேள்வியாலும் பதிலாலும் அவ்வாறே புலப்படுகிறது
இவ்வினா விடைகளாலே ஜீவனைக்குறிப்பது ப்ரஹ்மத்தை விளக்கவே என்று ஜைமினி கூறுகிறார்
ஸ்ரீ வியாசருக்கு இதுவே திரு உள்ளம்
அபி ச ஏவம் ஏகே –வாஜசநேயிகள் இவ்வினா விடைகளை பரமாத்ம பரமாகவே ஓதுகிறார்கள்
ய ஏஷோந்தர் ஹ்ருதய ஆகாசஸ் தஸ்மின் சேதே–தஹர ஆகாசம் பரமாத்மாவே என்று முன்னமே நிரூபணம் ஆயிற்று –

————————————————————————————

1-4-6-வாக்ய அந்வயாதி கரணம் -காணப்படுபவன் ப்ரஹ்மமே –

முன் அதிகரணத்தில்
சாங்க்யனால் லிங்கமாக ஒப்புக் கொள்ளப்பட்ட கர்ம ஸப்தம்
புண்ய பாப ரூப கர்மாக்களையும் ஜகத்தையும் குறிப்பதால்
பக்தனான ஜீவனுக்குப் பரத்வம் கிடையாது என்று ஸ்தாபிக்கப் பட்டது
இந்த அதிகரணத்தில்
மைத்ரீ ப்ராஹ்மண ப்ரகரணத்தில் ஆத்ம ஸப்தத்தால் குறிக்கப்படுவதாகிய சிறப்பான லிங்கத்தாலும்
ஸர்வம் தம் பரா தாத் யோ அந்யத்ராத் மனஸ் சர்வம் வேத -என்னும் ஸ்ருதியில்
ஜீவனைக்காட்டிலும் வேறான தத்வம் தடுக்கப்படுவதாலும்
கணவன் மனைவி புதல்வன் என்னும் சம்பந்தம் ஜீவனுக்கே சிறப்பானததாலும்
முக்த ஜீவனே மைத்ரேயீ ப்ராஹ்மணத்தில் பேசப்படுகிறான்
என்ற சங்கையால் என்று சங்கதி

124-வாக்ய அந்வயாத்-1-4-19-

ப்ருஹத் ஆரண்யாகாவில்-
நவா அரே பத்யு காமாய பதி ப்ரியோ பவதி ஆத்ம நஸ்து காமாய பதி ப்ரியோ பவதி -என்றும்
ஆத்மா வரே அரே த்ரஷ்டவ்ய ஸ்ரோதவ்யோ மந்தவ்யோ நிதித்யாசி தவய -மைத்ரேயி ஆத்ம நி கல்வரே த்ருஷ்டே
ஸ்ருதே மதே விஞ்ஜாதே இதம் சர்வம் விதிதம் -என்று
அனைத்தும் அறிந்தவை ஆகும் –
இதம் சர்வம் யதயமாத்மா -இந்த ஆத்மாவே அனைத்தும் என்பதால்
பரமாத்மா என்று உணர்ந்தால் மட்டுமே பொருந்தும்-

வாக்ய அந்வயாத்-காணத்தக்கவன் என்று குறித்தது பரமாத்மாவையே
அது ஏன் என்றால்
மைத்ரேயீ ப்ராஹ்மணத்தில் எல்லா வாக்கியங்களும் பரமாத்மாவிடமே அன்வயம் -பொருந்தும் –
ஸர்வ காரணத்வம் சொல்வதால்
ஜகத் வியாபார வர்ஜம் -ஸூத்ரப்படி முக்தாத்மாவுக்குக் கூட ஸம்பவிக்காதே
ஒவ்வொரு வாக்யத்திலும் ஆத்ம ஸப்தம் மைத்ரேயிக்கு அம்ருதத்வத்தை சாதிப்பவனாகக் காண வேண்டியவன்
என்று உபதேசிக்கப்பட்ட பரமாத்மாவையே போதிக்கும் என்பதால் வாக்யங்களுக்கு அந்வயம் பொருத்தம் ஏற்படும்

அந்த அந்த ஜீவன்களின் கர்ம அனுகுணமாக பரமபுருஷன் தனது ஸங்கல்பத்தாலே
பத்யாதிகளைப் பத்னீ முதலியவர்களுக்குப் பிரியமாக்குகிறான் –

ஆத்மன காமாயா என்று பரமாத்மாவின் ஸங்கல்பம் ஸித்திக்கவே என்றே பொருள் –
தங்கள் காமம் நிறைவேற என்ற பொருள் அன்று

ஆத்ம சப்தத்துக்கு ஜீவாத்ம பரமாகவும் பொருள் கொண்டு வேறே நிர்வாகமும் ஸ்ரீ பாஷ்யத்தில் காட்டப்பட்டு உள்ளது –
விஞ்ஞான கன ஏவ ஏதேப்யோ பூதேப்ய சமுதாய தான்யே வானு விநஸ்யதி -என்னும் வாக்யத்தில்
ஜீவ லிங்கமான விஞ்ஞான கன ஸப்தத்துக்கு பிற மதம் கொண்டும் நிர்வாஹம் அருளிச் செய்துள்ளார் –

————————————————————————————-

125-பிரதிஜ்ஞா சித்தே லிங்கம் ஆஸ்மரத்ய-1-4-20-

ஆஸ்மரத்யர் என்பவர் இதம் சர்வம் விதிதம் -ஒன்றை அறிந்தால்
அதனைச் சார்ந்த அனைத்தையும் அறிந்தது போலே
ஆகும் என்பதால் பரமாத்மாவே என்கிறார்-

ஜீவன் பரமாத்மாவின் கார்யமாகையாலே அவனை விட வேறு படாதவன் என்பதால்
ஜீவனைச் சொல்லும் பதம் பரமாத்மாவைக் குறிக்கும் என்பர் ஆஸ்மரத்யர்
ஜீவ வாசகமான ஞான கனமும் அவ்வாறே ஆகும் என்று கருத்து
இது சங்கர மதத்துக்கு ஆதாரம் –

———————————————————————————–

126–உத்க்ரமிஷ்யத ஏவம் பாவாத் இதி ஔடுலொமி-1-4-21-

ந ஜாயதே ம்ரியதே -கட உபநிஷத் -கர்ம வினைகளால் தோன்றி மறைகின்றான் –
தனது உருவம் மட்டும் மாறும் மண் குடம் போலே அன்றி ப்ரஹ்மத்துடன் ஒன்றி விடுகிறான்
இந்த ஔடுலொமி கருத்து படியே –

சாந்தோக்யம் –
ஏஷ சம்ப்ரசாத அஸ்மாச் சரீராத் சமுத்தாய பரஞ்ஜ்யோதி ரூப
சம்பத்ய ஸ்வேன ரூபேண அபி நிஷ்பத்யதே -என்றும்

முண்டக உபநிஷத்தில்
யதா நத்ய ச்யந்தமாநா சமுத்ரே அஸ்தம் கச்சந்தி நாம ரூபே விகாயா
ததா வித்வான் நாம ரூபாத் விமுக்த பராத் பரம் புருஷம் உபைதி திவ்யம் -என்று
ஜீவன் முக்தி அடையும் பொழுது
ப்ரஹ்மமாகவே மாறுகின்றான் என்பதை உணர்த்தும்-

உத்க்ரமிஷ்யத –ஸ்வநே ரூபேண அபி நிஷ் பத்யதே -சரீரத்தை விட்டுச் செல்லும் ஜீவனுக்கு
ஏவம் பாவாத் -முக்தியை ஐக்யம் ஏற்படுவதால்
இதி ஔடுலொமி-ஜீவ ஸப்தம் பரமாத்மாவைக் குறிக்கும் என்று அருளிச் செய்கிறார்

—————————————————————————————

127-அவஸ்திதே–இதி காசக்ருத்சன-1-4-22-

ஜீவன் ப்ரஹ்மமாக இல்லாதது இயற்கையா –
அப்படியானால் மோட்ஷம் அடையும் பொழுது ஜீவ ஸ்வரூபம் அழிய வேண்டும்
ஜீவன் தன் ஸ்வரூபம் அழிய முயலாதே

ஏதோ ஒரு காரணத்தினால் ப்ரஹ்மமாக இல்லை என்று கொண்டால்
முன்பு ப்ரஹ்மமாக இருந்து இருக்க வேண்டும்
மோட்சத்தின் பொழுது ப்ரஹ்மம் ஆகிறான் என்றது தவறாகும் –

பரம் பொருள் ஜீவன் உள்ளேயே இருப்பதாக உணர்த்தவே
ஜீவனைக் குறித்த பதங்கள் கூறப்பட்டன
ப்ருஹத் ஆரண்யாகாவில்-
ய ஆத்மா நி திஷ்டன் யச்யாத்மா சரீரம் -போன்ற பல வாக்யங்கள் உண்டே –
இதையே காசக்ருத்ச்னர் எடுத்துக் காட்டுகிறார்-

ய ஆத்மனி திஷ்டன் -இத்யாதிகளில் ஜீவாத்மாவுக்கும் ஆத்மாவாக பரமாத்மாவின் ஸ்திதியைக் கூறுவதால்
விஞ்ஞான கன சப்தங்கள் பரமாத்மாவின் முடிவதால் பரமாத்ம வாசகங்கள் தான்
தேவன் மனுஷ்யன் ஸப்தங்கள் ஜீவாத்மாவைக் குறிப்பது போலவே
சரீர வாசக ஸப்தங்கள் ஸர்வ சரீரிகனான பரமாத்மாவைக் குறிப்பவை என்று காசக்ருஸ்தனரின் திரு உள்ளம் –

வாக்ய அந்வயாதி கரணம் சம்பூர்ணம்

———————————————————————————————-

1-4-7-பிரக்ருத்யதிகரணம் -ப்ரஹ்மமே உபாதான காரணம் –

கீழே பரமாத்மா ஜீவர்களின் நியாமகன் -என்பதால் ஸப்த ஸாமாநாதி கரண்யம் சொன்னதைக் கொண்டு
ஸேஸ்வர மீமாம்சகன் -ராஜாவே ராஜ்யம் என்றால் -உபசார வழக்காகவே தேறும் -ஐக்யம் அன்று
ராஜ்யத்துக்கு ராஜா உபாதான காரணம் அல்லன்
அதே போல் ஜகத்துக்கும் ப்ரஹ்மம் உபாதான காரணம் இல்லாமல் நிமித்த காரணமே ஆகும் என்பான்
இதற்கு விடை கூறலே சங்கதி

128-பிரகிருதி ச பிரதிஜ்ஞா த்ருஷ்டாந்த அநுபரோதாத் —1-4-23-

பிரமமே உபாதான காரணமாக இருந்தால் மட்டுமே பிரதிஞ்ஞை எனப்படும் உண்மையான வரிகள் பொய்யாகாது
ஸ்வேதாஸ்வதார உபநிஷத்தில் –
அஸ்மான் மாயீ ஸ்ருஜதே விஸ்வமேதத்-என்று மாயையான பரம் பொருள்
மாயையான பிரகிருதி கொண்டு உலகைப் படைக்கிறான்

பூர்வ பஷி –
இதனால் நிமித்த காரணமும் உபாதான காரணமும் வெவ்வேறே என்பர்
ப்ரஹ்மத்தை உபாதான காரணமாகக் கொண்டால் மாறுதல் அடைய வேண்டி வரும்
அவிகாராய என்றது பொய்யாகும் என்பர்

சித்தாந்தம்
பிரதிஜ்ஞை -உததமாதே சம்ப்ராஷ்ய யே நாஸ்ருதம் ஸ்ருதம் பவத்யமதம் மதம் அவிஜ்ஞாதம் விஜ்ஞாதம் -என்று
பரம் பொருளைக் குறித்து சொல்லிற்று
எதை ஒன்றைக் கேட்டால் கேட்க்கப் படாதது கேட்க்கப் படுகிறதோ நினைத்தால் நினைக்கப் படாதவை
நினைக்கப் படுகிறதோ அறிந்தால் அறிந்தது ஆகின்றதோ -அதுவே பரம்பொருள்

சாந்தோக்யம் -திருஷ்டாந்தம் –
யதா சோம்ய ஏகேந மருத் பிண்டேந சர்வம் ம்ருண் மயம் விஜ்ஞாதம் ஸ்யாத்
குயவன் என்று மட்டும் கொண்டால் அனைத்தையும் அறிந்தது ஆகாதே
ப்ரஹ்மத்தை உபாதானமாக் கொண்டு ஏற்படும் மாறுதல்கள் அவனது உடலாக உள்ள
நமது சரீரத்தில் நிகழ்வதால் அவனுக்கு தோஷம் தட்டாதே
இத்தையே அஸ்மான் மாயீ ஸ்ருஜ்யதே -என்கிறது

பூர்வ பஷத்தை நிரசிக்கிறார்
பிரகிருதி ச -நிமித்தமான ப்ரஹ்மமே உபாதானமும் ஆகிறது
ஏன் எனில்
பிரதிஜ்ஞா த்ருஷ்டாந்த அநுபரோதாத் —ஏக விஞ்ஞானத்தால் ஸர்வமும் அறியப்படும் என்ற ப்ரதிஜ்ஜைக்கும்
மண் -ம்ருத் -போன்ற த்ருஷ்டாந்தங்களுக்கும் விரோதம் வாறாமைக்காக
நிமித்த காரணம் மட்டும் ப்ரஹ்மம் என்றால் குயவனைப் பற்றிய அறிவால் குடத்தின் தன்மையை அறிய முடியாதே
உபாதான காரணமும் ப்ரஹ்மமாய் இருந்தால் தானே நேற்று இருந்த மண் இன்று குடமானது போல் ஜகத்தின் ஞானம் சித்திக்கும் –
ஸாஸ்திரத்தால் மட்டுமே அறியக் கூடிய ப்ரஹ்மம் காரணமும் கார்யமுமாய் இருப்பதாக ஸ்ருதி சொல்வதால்
நிமித்தமும் உபாதானத்வமும் முரண் ஆகாது
விகாரங்கள் சித் அசித் வஸ்துக்களையே சார்ந்தவை –
இவற்றின் சரீரிகமான ப்ரஹ்மத்துக்கு விகாரம் இல்லை -என்பதைக் காட்டவே
அஸ்மான் மாயீ ஸ்ருஜதே விஸ்வமேதத் -என்று ப்ரக்ருதியையும் புருஷனையும் வெவ்வேறாகக் கூறுகிறது

இனி வைசேஷிகர் வாத நிரஸனம்
நிமித்தமும் உபாதானமும் ஒருவருக்கே கூடாது -நிமித்த காரணம் ஸமவாயி காரணத்தை விட வேறானதே என்பர்
மாயாந்து ப்ரக்ருதிம் வித்யாத் மாயினம் து மஹேஸ்வரம் என்று
உபாதானமாயும் நிமித்தமாயுமாய் உள்ள ப்ரக்ருதிக்கும் ஈஸ்வரனுக்கு பேதத்தை நன்கு காட்டுகிறது

சமவாயி காரண பின்னமாய் இருக்க வேண்டும் என்றால் ஏதேனும் ஒரு சமவாயி காரணத்தைக் காட்டிலும் பேதமா
அனைத்து சமவாயி காரணங்களின் பேதமா என்று விகல்பித்து
முதல் பக்ஷத்தில் ஜகத்தின் உபாதானமான ப்ரஹ்மத்தினிடம் ஏதேனும் உபாதான பேதம் ஸூ லபமாகையாலே
உன் நோக்கம் நிறைவேறாது
இரண்டாம் பக்ஷத்தில் குடத்தின் நிமித்தமான தண்டத்தில் தன் ரூபாதிகளான உபாதானத்தில் இருந்து
பேதம் வராதலால் லக்ஷணத்து அவ்யாப்தி தோஷம் வரும்
ஆகவே நிமித்த லக்ஷணம் கூறியது பொருந்தாது –

நாங்கள் அப்படிக்கூற வில்லை -அதன் நிமித்தத்தை விட உபாதானத்துக்கு பேதம் என்றே கூறுகிறோம்
குடம் முதலியவற்றில் உபாதானமான மண் முதலியவற்றில் இருந்து பேதம் வருவதால் அவ்யாப்தி தோஷம் வராது
ப்ரஹ்மத்தினிடமும் இந்த லக்ஷணம் இல்லை என்றால் இதுவும் கூடாது
ஏன் எனில் துவம்சம் அழிவு என்னும் கார்யம் நிமித்தத்தால் உண்டாவதால்
த்வம்ச நிமித்தமான தண்டத்தை விட உபாதான பேதம் பிரசித்தம் இல்லாததால் லக்ஷணம் அப்ரஸித்தம் ஆகிறது

ப்ரஹ்மத்தில்
ஸூஷ்ம சித் அசித் விஸிஷ்ட ப்ரஹ்மம் உபாதானம்
ஸங்கல்ப விஸிஷ்ட ப்ரஹ்மம் நிமித்தம்
ஆகவே வெவ்வேறானவையே
முன் மண் இருந்த ஞானம் இப்போது குடத்தைக் கண்டு உபாதாய ஞானத்தால் உபாதிய ஞானம்
சர்வம் ம்ருன் மயம் விஞ்ஞாதம் ஸ்யாத்
அவஸ்தைகளுடைய பேதம் என்ற ஞானம் போலவே இங்கும்

இங்கு இன்னும் ஒரு பூர்வபக்ஷம்
உபாதானமும் உபேதேயமும் ஒன்றாக இருந்தால் சர்வ வஸ்து இல்லாமையால்
சர்வ விஞ்ஞான ப்ரதி விஞ்ஞானமும் இல்லாமல் போகுமே
தனது ஞானத்துக்கு தனது ஞானமே ஹேது என்றதாகுமே -ஆத்மாஸ்ரய தோஷம் வரும்

ஸூஷ்ம ஸ்தூல பேதம் உண்டே -இரண்டு ஞானங்களுக்கும் பேதம் சித்தம் அன்றோ
காரணம் ஒன்றே யானாலும் காரியப் பொருள்கள் பலவாக இருப்பதால் சர்வ விஞ்ஞான ப்ரதிஜ்ஜைக்கு விரோதம் இல்லையே –
தேவதத்தன் முதலானோருக்கு பாலத்வம் யுவத்வம் அவஸ்தா பேதம் உண்டே

ஆகந்து காப்ருக் சித்த தர்மோ அவஸ்தே தீ கீர்த்யதே
விசேஷ்ய அபி ச வைசிஷ்ட்ய பேதோ அவஸ்தாந்தராயதே -என்று
புதிதாய் இணை பிரியாதோர் தர்மம் வந்து பெறுவதே அவஸ்தை என்கிறார்
விசேஷ்யமான பொருளில் ஒரு தர்மத்தை யுடைமை என்ற பேதம்
வேறு அவஸ்தையாகக் கருதப்படுகிறது என்பதாலும் பொருந்தும்

————————————————————————————-

129-அபித்யோப தேஸாத் ச-1-4-24-

தனது சங்கல்பத்தை ப்ரஹ்மம் –
ததைஷத பஹூச்யாம் -சாந்தோக்யம் என்றும்
ஸோ காமயத பஹூச்யாம் -தைத்ரியம் -என்றும்
சொல்லுவதால் உபாதான காரணமும் ப்ரஹ்மமே என்று அறியலாம்-

——————————————————————————————–

130-சாஷாத் உபயாம்நா நாத் ச–1-4-25-

வேத வரிகளும் ப்ரஹ்மமே உபாதான காரணம் என்று சொல்லுகின்றன
யஜூர் வேதம் -ப்ரஹ்ம வனம் ப்ரஹ்ம ச வருஷ ஆஸீத் யதோ த்யாவாப்ருதிவீ நிஷ்ட தஷூ
ம நீ ஷி ணோ மநஸா விப்ரவீமி வோ ப்ரஹ்மாத் யதிஷ்டத் புவ நாதி தாரயன்-என்று
காடு போலே ஆதாரமாக உள்ளவனும் ப்ரஹ்மமே -உபாதான காரணமாக இருக்கும் மரமும் ப்ரஹ்மமே
நிமித்த காரணமும் ப்ரஹ்மமே -என்றதாயிற்று-

—————————————————————————————–

131-ஆத்மக்ருதே–1-4-26-

தன்னைத் தானே படைத்துக் கொண்டதாலும் உபாதான காரணமும் ப்ரஹ்மமே
தைத்ரியம் -ஸோ காமயத பஹூச்யாம் -என்றும்
ததாத்மானம் ஸ்வயமக்ருத-என்றும் கூறப்பட்டது

உலகில் உள்ளவற்றை தனது உடலாகக் கொண்டு-அவற்றை படைக்கும் கர்த்தாவாகவும்
தன்னால் படைக்கப் பட்ட தானே உருவாக்கப் பொருளாகவும் ப்ரஹ்மம் உள்ளது

இத்தாலும் உபாதான காரணமும் ப்ரஹ்மமே -என்னலாம்-

————————————————————————————

ப்ரஹ்மம் தன்னைத் தானே ஜகத்தாகப் பண்ணினான் என்றால்
அபஹத பாப் மத்வாதிகளுக்கு முரண் படாதோ –
ஜகத்து துக்கியாய் அன்றோ இருக்கிறது என்னில்
அதற்கு சமாதானம் இதில்

131-பரிணாமாத்–1-4-27-

பரிணாமத்தைக் கூறுவதால் ப்ரஹ்மம் குறையற்றது
ப்ருஹத் உபநிஷத்தில் -தத் ஹ இதம் தர்ஹி அவ்யாக்ருதம் ஆஸீத் தத் நாம ரூபாப்யாம் வ்யாக்ரியத
ஸூஷ்ம விசிஷ்ட ப்ரஹ்மம் –ஸ்தூல விசிஷ்ட ப்ரஹ்மம் -எப்பொழுதும் அந்தர்யாமியாக ப்ரஹ்மம் உள்ளது
தோஷங்கள் தட்டாது-

———————————————————————————-

132-யோ நிஸ்ஸ கீயதே ஹி-1-4-28-

ப்ரஹ்மத்தை யோநியாகவும் கூறுவதாலும் அவனே உபாதான காரணமாவான்
முண்டக உபநிஷத் –
யத் பூத யோநிம் பரிபஸ்யந்தி தீரா -ஞானம் உடையவர்கள் பூதங்களின் யோனியாக காண்கின்றார்களோ -என்றும்
கர்த்தாரமீசம் புருஷம் ப்ரஹ்ம யோநிம் -படைப்பவனும் புருஷனும் யோநியும் ஆக உள்ள ப்ரஹ்மம் -என்றும்

யதோர்ணநாபி ஸ்ருஜதே கிருஷ்ண தேச
யதா ப்ருதிவ்யாமொஷதய சம்பவந்தி
யதா சத புருஷாத் கேசலோ மாநி ததா ஷராத் சம்பவதீஹ விச்வம் -என்று
சிலந்தி நூலை தன்னுள்ளே இழுத்துக் கொள்வது போலேயும் -பயிர்கள் பூமியில் இருந்து தோன்றுவது போலேயும் –
பரம் பொருளின் இடத்தில் இருந்து உலகம் தோன்றுகிறது

கர்த்தா என்கிற பதம் நிமித்த காரணத்தையும்
யோநி என்கிற பதம் உபாதான காரணத்தையும் குறிக்கும்-

யோ நிஸ்ஸ கீயதே ஹி-யோனி ஸப்தம் உபாதான காரணம் என்னும் பொருளில் வந்தது
ஹி -ஹேதுப் பொருளைக் காட்டும்
எக் காரணத்தால் யோனி என்று ப்ரஹ்மம் கூறப்படுகிறதோ அதே காரணத்தால்
அது நிமித்தமும் உபாதானமும் என்று ஸித்திக்கிறது –

பிரக்ருத்யதிகரணம் சம்பூர்ணம்

———————————————————————————

1-4-8-சர்வ வியாக்யான அதிகரணம் -ஸ்ரீ மன் நாராயணனே அனைத்தும்-

ஸாஸ்த்ர ஆரம்பத்தில் ஜந்மாத் அதிகரணத்தில் தொடங்கிய நிமித்த உபாதானத்வம்
ப்ரக்ருதி அதிகரணத்திலே உறுதி செய்யப் பட்டது
இனி ஹிரண்ய கர்ப்பஸ் சமர்த்த தாக்ரே பூதஸ்ய ஜாத –
பதிரேக ஆஸீத்
ந சந் ந சாஸத் சிவ
ஏவ கேவல –இத்யாதிகளில்
முன் கூறிய அதிகரணப் பொருள்களையே ஊகித்து அறிய வேண்டும் என்று சங்கதி –

134-ஏதேந சர்வே வ்யாக்யாதா வ்யாக்யாதா–1-4-29-

இதன் மூலம் ப்ரஹ்மமே அனைத்துக் காரணமும் என்றும்
ஸ்ரீ மன் நாராயணனே ப்ரஹ்மம் என்றும் படிக்கப் பட்டது –

ஏதேந -முன் கூறப்பட்ட நியாய கலாபத்தாலே
சர்வே -இதுவரை காட்டப்படாத -ஹிரண்ய கர்ப்பஸ் சமர்த்த தாக்ரே -இத்யாதி வாக்கியங்களும்
வ்யாக்யாதா வ்யாக்யாதா-ஸ்ரீயப்பதியான பரமபுருஷ காரணத்வ பரங்களாகவே வ்யாக்யாதங்கள்
இரட்டிப்பு அத்யாய பூர்த்தியைக் காட்டும்

ஸதேவ -என்ற ஏவகாரத்தாலே காரணத்வத்தையும் உபாஸ்யத்வத்தையும் போதிக்கும்
வாக்கியங்களில் உள்ள சாமான்ய ஸப்தங்கள் அருகே விசேஷ சப்தம் இருப்பதால்
சாக பசு நியாயப்படி அதையே குறிக்கும் என்பதாக ஸித்தம்

சர்வ வேதாந்தகளும்–ஸத் -ப்ரஹ்மம் -அக்ஷரம் –ஆத்மா முதலிய பதங்களும் –
சிவ சம்பு ஹிரண்ய கர்ப்பாதிகளும் ஸ்ரீ மன் நாராயணனையே போதிப்பதாகும்

மஹா உபநிஷத் -ஏகோ ஹை வை நாராயணா ஆஸீத் ந ப்ரஹ்மா நேசான
ஸ முனிர் பூத்வா சம சிந்தயத் த ஏத வ்யாஜ யந்த விச்வே ஹிரண்ய கர்ப்போ அக்னீர் யம
வருண ருத்ர இந்த்ரா விஷ்ணுஸ் ததா ஸீத் ஹரி ரேவ நிஷ்கள

ருத்ராதிகளுக்கு கார்யத்வமும் கர்ம வஸ்யத்வமும் ஸ்ருதிகள் கோஷிக்குமே
ஸ்ரீ மன் நாராயணனே மோக்ஷ பிரதன் -அந்தர்யாமியானவனுக்கே -ஸஹஸ்ர சீர்ஷா புருஷன்

விஷ்ணுக்கும் உத்பத்தி உண்டே காரணத்வம் சொல்லலாகாதே என்னில்
ரஷார்த்தம் ஸர்வ பூதா நாம் விஷ்ணுத்வம் உப ஜஜ்ஜிவான்
அஜாயமானோ பஹுதா விஜாயதே -என்று இச்சா பரிஹ்ருஹீதா திவ்ய மங்கள விக்ரஹம் –
ஆதியம் சோதி உருவை அங்கு வைத்து இங்கு பிறந்தவன்
இதம் பூர்ணம் –இத்யாதி

—————

சர்வ வியாக்யான அதிகரணம்-சம்பூர்ணம்

———

இப்பாத அதிகரண அர்த்தங்களை

1-அனு மாதிக அதிகரணத்தில் –சாங்க்யர் கூறும் ப்ரக்ரியா பிரகாரங்களும்
2-சமஸ அதிகரணத்தில் -அவர்கள் ஏற்கும் ஸ்ருஷ்டி க்ரமமும்
3- சாங்க்ய உப ஸங்க்ரஹ அதிகரணத்தில் -அந்த எண்ணிக்கை அமைப்பும்
4-காரணத்வ அதிகரணத்தில் -அவர்கள் கூறும் அவ்யாக்ருதத்துடன் ஐக்யமும்
5- ஜகத் வாசித்வ அதிகரணத்தில் -தன் பாபம் பற்றிய வசனமும்
6-வாக்ய அந்வய அதிகரணத்தில் -கர்ம பலமான தோஷ சம்பந்தமும்
7-ப்ரக்ருத் யதிகரணத்தில்-உபாதான நிமித்த பேதமும்
8-சர்வ வியாக்யான அதிகரணத்தில் -ப்ரஹ்மாதிகளுக்குக் காரணத்வமும் –

ஆக எட்டு பூர்வ பக்ஷ யுக்தி ஆபாஸ மூலகமான கருத்துக்களால் முன் மூன்று பாதங்களின் கருத்துக்கள் தாக்கப்படவே
ஸ்ருதி தாத்பர்யங்களை வெளிப்படுத்தி
அவற்றின் யதார்த்த அர்த்தங்களைக் காட்டி
ஸூத்ர காரர் ரக்ஷித்து அருளினார் என்று திரு உள்ளம் –

முதல் அத்யாயம்-சமந்வய அத்யாயம்-நான்காம் பாதம் -அந்ய யோக வியவச்சேத பாதம் -சம்பூர்ணம்

————————————————————————————————–—————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஸ்ருதி பிரகாசர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ போதாயனர் -வ்ருத்தி காரர் – ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பாதராயணர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பாஷ்யார்த்த தீபிகை –முதல் அத்யாயம் –மூன்றாம் பாதம் —

November 26, 2021

ஸ்ரீ பாஷ்யம் -மங்கள ஸ்லோகம்

அகில புவன ஜன்ம ஸ்தேம பங்காதி லீலே
விநத விவித பூத வ்ராத ரக்ஷைக தீஷே
ஸ்ருதி சிரஸி விதீப்தே ப்ருஹ்மணி ஸ்ரீ நிவாஸே
பவது மம பரஸ்மின் சேமுஷீ பக்தி ரூபா –

பாராசார்ய வச ஸூதாம் உபநிஷத் துக்தாப்தி மத்யோத் த்ருதாம்
சம்சாராக்னி விதீபன வ்யபகாத ப்ராணாத்மா சஞ்சீவி நீம்
பூர்வாச்சார்ய ஸூரஷிதாம் பஹூ மதி வ்யாகாத தூரஸ்தி தாம்
ஆ நீதாம் து நிஷாஷரை ஸூ மனஸோ பௌமா பிபந்து அந்வஹம்–

———-

முதல் அத்யாயம்-சமந்வய அத்யாயம்-மூன்றாம் பாதம் — 44 ஸூத்ரங்கள் –

கீழ் இரண்டு பாதங்களால்-
அஸ்பஷ்ட தரமாயும் அஸ்பஷ்டமாயும் உள்ள ஜீவாதி லிங்கங்கள் உடைய வாக்கியங்கள் நிரூபிக்கப்பட்டு
இதில்
ஸ்பஷ்டமான -பலவாறு தோன்றுதல் -நாடீ சம்பந்தம் -முதலிய லிங்கங்கள் உடைய வாக்கியங்கள் நிரூபிக்கப்படுகின்றன
முன் பாதத்தோடு சங்கதி

முன் அதிகரணத்தில் த்யு ப்ருத்வீ யாதி சம்பந்த புருஷன் பரமாத்மாவே என்று கூறப்பட்டது
இதில் பலவாறு தோன்றுதல் -நாடீ சம்பந்தம் -முதலிய லிங்கங்களால் ஆக்ஷேபித்து
ஜீவனாகத்தான் இருக்கக் கூடும் என்று
பூர்வபக்ஷம் செய்ய
அதுக்கு உத்தரம் இது என்று சங்கதி

மேலும் அத்ருஸ்யத் வதி கரணத்தில் முண்டக வாக்யங்களுக்கு த்ரை லோக்ய சரீர பரமாத்ம பரத்வம் ஸ்தாபிக்கப் பட்டது
அதை ஒட்டி வைஸ்வநர அதிகரணத்தில் சாந்தோக்யத்தில் உள்ள வைச்வானர வித்யா வாக்கியங்களும்
த்ரை லோக்ய சரீரத்வம் என்னும் லிங்கத்தால்
வைச்வானர ரூப ஜீவ பரத்வத்தை சங்கித்து பரமாத்ம பரத்வமே ஸ்தாபிக்கப் பட்டது –
இந்த அதிகரணத்தில் ப்ரசங்கத்தால் ப்ராப்தமான வேறு உபநிஷத் வாக்ய விசாரம் முடிந்த பின்
அத்ருஸ்யத் வதிகரண விஷயத்தை ஸ்தாபிக்க அதன் சேஷமாக முண்டகத்தில் உள்ள த்யுப் வாதி வாக்யமே
இங்கு சமாதானம் செய்யப்படுகிறது

முதல் பாதத்தை விட்டு மூன்றாம் பாதத்தில் அது ஏன் சொல்லப்படுகிறது -என்றால்
விலக்கத்தக்க ஜீவ லிங்கங்கள் இங்கு ஸ்பஷ்டமாய் இருப்பதால் அது பொருந்துவதாகும்
இதற்கு -ஸூத்ரம் -68– பிரகரணாத்–1-3-5—என்னும் ஸூத்ரத்தில் பலன் ஸ்பஷ்டமாய் உள்ளது –

1-3-1-த்யுத்வாத்யதிகரணம் -தேவலோகம் பூமி ஆகியவற்றின் இருப்பிடம் ப்ரஹ்மமே –

ஸூத்ரம் -64 –த்யுத்வாதி ஆயாதநம் ஸ்வ சப்தாத் –1-3-1-

பூமி தேவலோகம் பரம் பொருளுக்கே இருப்பிடம்
முண்டக –
யச்மிந்த்யௌ ப்ருத்வீ சாந்தரிஷ மோதம் மன சஹ பிராணைச்ச சர்வை தமேவைகம் ஜானதாத்மா நம் அந்யா வாசோ
விமுஞ்சத அம்ருதஸ் யைஷசேது–முண்டகம் 2-2-5–என்றும்

அரா இவ ரத நாபௌ சம்ஹதா யத்ர நாட்ய -ச ஏஷோ அந்தஸ் சர்தே பஹூதா ஜாயமான –முண்டகம்-2-2-6–என்றும்
மன சஹ பிராணை ஓதம் -என்றும்

நாராயண வல்லி உபநிஷத்தில்-1-3-2–
சந்ததம் சிராபிஸ்து லம்பத்யா கோச சந்நிபம் தச்யாந்தே ஸூஷிரம் சூஷ்மம் தஸ்மின் சர்வம் ப்ரதிஷ்டிதம் -என்று
ஜீவன்களின் நாடிகளுக்கும் பரம் பொருளே ஆதாரம் என்றும்

அதர்வணத்தில் முண்டக –யச்மிந்த்யௌ ப்ருத்வீ சாந்தரிஷ மோதம் -என்று தொட்ங்கும் வாக்கியத்தில்
தேவலோகம் பிருத்வீ இவற்றுக்கு ஆதாரமாக கூறப்படுபவன் ஜீவனா பரமாத்மாவா என்று சம்சயம்
ஜீவன் என்று பூர்வ பக்ஷம்
ஏன் எனில்
அரா இவ ரத நாபௌ சம்ஹதா யத்ர நாட்ய ச ஏஷோ அந்தஸ் சர்தே பஹூதா ஜாயமான –முண்டகம்-2-2-6-ஸ்லோகங்களில்
நாடீ சம்பந்தமும்
பஹுதா ஜாயமானத்வமும்
மனஸ் ப்ராண ஸம்பந்தமும்
ஜீவ லிங்கங்களாகக் காணப்படுவதால் ஜீவனே யாக்கலாம் என்று பூர்வ பக்ஷம்

இதுக்கு விடை
த்யுத்வாதி ஆயாதநம் ஸ்வ சப்தாத் –
த்யுத்வாதி ஆயாதநம் -இவற்றுக்கு ஆயதனமாகக் கூறப்படுபவன் பரமாத்மாவே -ஜீவன் அல்லன்
ஸ்வ சப்தாத்-அம்ருதஸ் யைஷசேது–முண்டகம் 2-2-5–என்ற படி தனக்கு அசாதாரணமான சப்தத்தால் கூறுகிற
தமேவம் வித்வான் அம்ருத இஹ பவதி நான்ய பந்தா அயனாய வித்யதே -ஸ்வேதாஸ்வர -3-8–இத்யாதிகளாலே
மோக்ஷ ஹேதுத்வம் பரமபுருஷனுக்கே தானே ப்ரஸித்தமாய் உள்ளது –

ஸ்ரீ கீதையில் –
அஜோ அபிசன் நவ்ய யாத்மா பூதா நாம் ஈஸ்வரோ அபிசன் ப்ரக்ருதிம் ஸ்வாம் அதிஷ்டாய சம்பவாம் யாத்மமாயயா -என்றும் –
அந்தர் பஹிஸ்ஸ தத் சர்வம் வ்யாப்யா நாராயண ஸ்தித -என்றும்

ஸ்வேஸ்வதார உபநிஷத்தில் –
தமேவம் வித்வான் அம்ருத இஹ பவதி நான்ய பந்தா அயனாய வித்யதே -ஸ்வேதாஸ்வர -3-8–என்றும்

முண்டக உபநிஷத்தில் –
யஸ் சர்வஜ்ஞ சர்வவித்–முண்டகம்-1-2-9–என்று அனைத்தும் பரம் பொருளையே ஆதாரமாகக் கொண்டது என்கின்றன –
பிறப்பற்றவன் -அழிவற்றவன் -சர்வேஸ்வரன் -சங்கல்பம் அடியாக -பஹுதா ஜாயமான-முண்டகம் -2-2-6-என்றும்
அஜாயமாநோ பஹுதா விஜாயதே தஸ்ய தீரா பாரிஜாநந்தி யோனிம்-தைத்ரியம் -3-13-என்றும்
சொல்லுகிறபடி நித்ய மங்கள விக்கிரகத்துடன் திருவவதரித்து
அனைத்துக்கும் ஆதாரமாக இருக்கிறான் -ஜீவனுடைய அனைத்து உபகரணங்களும் ஆதாரம் என்றபடி –

——————————————-

ஸூத்ரம் -65–முக்தோ உபஸ்ருப்ய வ்யபதேசாத் ச –1-3-2-

முண்டக உபநிஷத் –
யதா பஸ்ய பஸ்யதே ருக்ம வர்ணம் கர்த்தாரமீசம் புருஷம் ப்ரஹ்மயோநிம் ததா வித்வான் புண்ய பாபே
விதூய நிரஞ்சன பரமம் சாம்யம் உபைதி–முண்டக -3-1-3- -என்றும்

யதா நத்ய ஸ்யந்தமாநா சமுத்ரேஸ் தம் கச்சந்தி நாம ரூபே விஹாய ததா வித்வான் நாம ரூபாத் விமுக்த
பராத்பரம் புருஷன் உபைதி திவ்யம் -முண்டக -3-1-8–என்றும்

நதிகள் ரூப நாமம் இல்லாமல் கடலை அடைவது போலே முக்தாத்மாக்கள்,பரம்பொருளை அடைகின்றனர்-

பொன்னிறம் கொண்டவன் -நியமிப்பவன் -காரணமானவன் -அவனைக் கண்டதும்
புண்ய பாபங்கள் அற்று பரம சாம்யம் அடைகிறான் –

முக்தனுக்கு பரம புருஷனே பரம ப்ராப்யன் என்றதாயிற்று

——————————————-

ஸூத்ரம் -66–ந அநு மாநம் அதச் சப்தாத் பிராண ப்ருச் ச –1-3-3–

ந அநு மாநம் -இந்தப் ப்ரகரணத்தில் அனுமான பிராமண கம்யமான பிரதானம் இவற்றுக்கு ஆயதனம் ஆகாது
அதச் சப்தாத் -அந்தப் பிரதானத்தைக் குறிக்கும் ஸப்தம் இல்லாமையாலே
பிராண ப்ருச் ச –இவ்வாறே ஜீவனும் ஆக மாட்டான்

முன்பு உள்ள ஸூத்ரங்களில் பிராண வாயுவைக் குறிப்பிடாதலால் –
இங்கு பிரக்ருதியையும் ஜீவனையும் கூறப்பட வில்லை –

———————–

ஸூத்ரம் -67–பேத வ்யபதேசாத் –1-3-4-

ஜீவனின் தன்மைகளில் இருந்து இவனை வேறுபடுத்தி சொல்வதாலும் இவன் பரம் பொருளே –
முண்டக –
சாமா நே வ்ருஷே புருஷோ நிமக் நோ அநீசயா சோசதி முஹ்ய மான –
ஜூஷ்டம் யதா பச்யத் யந்யமீசம் அஸ்ய மஹிமானம் இதி வீத சோக

மரம் போன்ற அழியக் கூடிய சரீரத்தில் அழுந்தி மயங்கிய ஜீவன் –
அதே சரீரத்தில் உள்ள பரமாத்மா -தன்னிலும் வேறுபட்டவன்-நியமிப்பவன் –
மேன்மை உடைய பரமாத்மா -என்று உணர்ந்து வருத்தம் நீங்குகிறான் என்றபடி –

இது போன்ற வாக்யங்களாலே ப்ரக்ருதிக்கு அதீனனான இந்த ஜீவனின்
சோகத்தை நீக்குபவனாக வேறுபடுத்திக் கூறுவதால்
அந்த ஆயதனன் ஜீவன் அல்லன்

—————

ஸூத்ரம் -68– பிரகரணாத்–1-3-5-

முண்டக உபநிஷத்தில் பரம் பொருளின் தன்மைகள் கூறப்பட்டு
வேறு எதையும் கூறப்படாத காரணத்தால் இங்கு கூறப்படுகிறவன் பரம் பொருளே –
1-2-22-அத்ருச்யத்வாதி குணக தர்மோக்த-அவனுக்கே உரித்தான தன்மைகளுடன்
யாராலும் காணப்படாமல் உள்ளவன்-

முண்டக உபநிஷத் –
அத பரா யயா ததஷரமதி கமே யத்ததத்ரேஸ்ய மக்ராஹ்ய மகோத்த்ரம வர்ணம் அசஷூ ஸ்ரோத்ரம்
தத பாணி பாதம் நித்யம் விபும் சர்வகதம் ஸூ ஸூஷ்மம் ததவ்யயம் யத் பூத யோ நிம் பரிபச்யந்தி தீரா -என்றும்
சொல்லப்படுபவர் பரமாத்மாவே என்றவாறு –

இங்கும் இத்தைச் சொல்வான் என் என்னில்
நாடீ சம்பந்தம் -பஹுதா ஜாயமானத்வம் -மனஸ் பிராணங்களின் ஆதாரத்வம் இவற்றால் நடுவில்
பர ப்ரஹ்ம பிரகாரணத்துக்குத் தடை -இடையூறு -ஏற்பட்டு விட்டதோ என்ற
சங்கையைத் தீர்க்கவே இந்த அதிகரணம் ஆரம்பிக்கப் பட்டது என்று கருத்து —

————————

ஸூத்ரம் -69–ஸ்தித்யத நாப்யாம் ச –1-3-6-

முண்டக உபநிஷத்தில் இந்த உடலில் இருக்கும் தன்மை
பரம் பொருளுக்கு உடலில் இருக்கும் இருப்பு மட்டுமே –
ஜீவாத்மாவுக்கு மட்டுமே கர்ம பலன் அனுபவிக்க வேண்டும் –

த்வா ஸூ பர்ணா சாயுஜா சகாயா சமானம் வ்ருக்ஷம் பரிக்ஷஸ்வ ஜாதே தயோர் அந்நிய பிப்பலாம் ஸ்வாத் வத்தி
அனஸ்ந்னந்தயோ அபிசாகாதீதி-முண்டகம் -3-1-1-என்கிறபடி –
உண்ணாமல் தேஜஸ் மிக்கு -இருப்பவன் பரமாத்மா என்றபடி

இத்தாலும் இவற்றுக்கு ஆயதனம் பரமாத்மாவுக்கே
அஜாயமானோ பஹுதா விஜாயதே என்றபடி ராம கிருஷ்ணாதி அவதாரங்களுடன் ஆவிர்பாவமும்
நாடீ ஆதாரத்தவாதிகளும் பரம புருஷனுக்கே பொருத்தம் என்றபடி –

முதல் அதிகரணம் -த்யுத்வாத்யதிகரணம்- முற்றிற்று

————————————-

இரண்டாம் அதிகரணம் –பூமாதிகாரணம்

பரமாத்ம ப்ரகரண தொடர்ச்சியால் முண்டகம் முழுவதும் -அடி முதல் -முடிவு வரை பரமாத்ம பரமே என்று நிரூபிக்கப் பட்டது
அப்படியாகில் சாந்தோக்யத்தில் பூம வித்யையில் ஜீவ ப்ரகரண தொடர்ச்சியாலே ஜீவன் நிரூபிக்கப் படுகிறான்
என்று பூர்வ பக்ஷம் தோன்றவே
பிரமாணங்கள் மூலம் நிரூபிக்கும் இந்த அதிகரணம் பொருந்துகிறது

முன் அதிகரண விஷயமாக முண்டகத்தில்
யே ந அக்ஷரம் புருஷன் வேத ஸத்யம்-என்று
ஸத்ய அக்ஷர சப்தங்களால் குறிக்கப்படும் பரமபுருஷனே ஸத்ய ஸப்த வாஸ்யன் -என்பதை
இந்த அதிகரணத்தில் சாதிக்கிறார் என்று சங்கதி –

ஸூத்ரம் -70–பூமா சம் ப்ரசாதாத் தத் உபதேசாத் –1-3-7-

பூமா -பெரியவன் -ஜீவனை விட உயர்ந்த பெருமை யுடைய பர ப்ரஹ்மம் –

சாந்தோக்யம் ஏழாம் அத்தியாயத்தில் –
யத்ர நாந்யத் பஸ்யதி நாந்யத் ச்ருணோதி நாந்யத் விஜா நாதி ச பூமா அத யத்ர நாந்யத் பச்யத்
அந்யஸ் ச்ருணோதி அந்யத் விஜா நாதி தத் அல்பம் -என்று
பூமா பற்றியும் அல்பம் பற்றியும்
சாந்தோக்யத்தில் நாரத முனிவர் சனத் குமாரரிடம் ப்ரஹ்மம் பற்றி விளக்கி சொல்ல கேட்க

வாக்கு மனம் ஈடுபாடு புத்தி ஞானம் வலிமை உணவு நீர் ஆகாயம் ஞாபக சக்தி குறிக்கோள் -பிராணன் -என்று சொல்லி

ஏவம் விஜானன் அதிவாதீ பவதி -என்று பிராணனை ப்ரஹ்மம் என்று உணர்ந்தவன் அதிவாதி –
உயர்ந்த ஞானம் உடையவன் ஆகிறான்

சாந்தோக்யத்தில் மேலும் ஏஷ து வா அதிவததி யஸ் சத்யேன அதிவததி என்று
சத்யம் என்று ப்ரஹ்மத்தை உணர்ந்தவன் அதிவாதி ஆகிறான்

சம் ப்ரசாதா என்றது
ஜீவனையா என்கிற சங்கைக்கு –
ஏஷ சம்ப்ரசாதோ அஸ்மாச் சரீராத் சமுத்தாய ஸ்வேன ரூபேண அபி நிஷ்பத்யதே என்று
இந்த உடலை விட்டு நீங்கி அந்த உயர்ந்த ரூபத்தை அடைகிறான்
இதன் மூலம் ஸம் ப்ரசாதனன் என்பது ஜீவனைக் குறிக்கும் என்று உணரலாம்

ஆத்மாவை அறிய விரும்பும் நாரதருக்கு ஸநத்குமார்
நாமம் முதல் பிராணன் வரை பலவற்றையும் உபாசிக்கத் தக்கவையாக உபதேஸிக்கிறார்
பிராணனை விட எது உயர்ந்தது என்ற வினாவோ விடையோ இல்லை
ஆகையால் பிராணன் என்னும் ஜீவன் வரையிலும் ஆத்ம உபதேஸம் என்று தோன்றுகிறது
இதற்கு மேலும் பூமா என்பதும் ப்ரத்யகத்மாவே என்பதே பூர்வ பக்ஷம் –

இனி ஸித்தாந்தம்
பூமா -பூம குண விசிஷ்டன் பரமாத்மாவே
ஏன் எனில்

சம் ப்ரசாதாத் தத் உபதேசாத்-சம் ப்ரசாதன் என்னும் ஜீவனை விட உயர்ந்தவனாக
ஸத்யம் எனப்படும் பரமபுருஷனையே உபதேஸிக்கையாலே
ஏஷ சம்ப்ரசாதோ அஸ்மாச் சரீராத் சமுத்தாய ஸ்வேன ரூபேண அபி நிஷ்பத்யதே என்று சொல்லி
ஏஷ து வா அதிவததி யஸ் சத்யேன அதிவததி ஸூகம் த்வேவ விஜிஜ்ஞாஸி தவ்யம்
பூமாத் வேவ விஜிஜ்ஞாஸி தவ்ய-என்று
ஏராளமான ஸூகம் உடையவனாய் சத்யம் எனப்படுபவனாய் உள்ள பரம புருஷனை உபதேசிப்பதால்
பூமா எனப்படுபவன் பரமாத்மாவே என்று தேறுகிறது

பிராண ஸப்தத்தின் பொருளே ஆத்மா என்று எண்ணி ஆத்மாவை விட எது பெரியது என்று கேட்க வில்லை
ஆச்சார்யரும் கிருபையாலே சத்யமே அறியத்தக்கது என்று
ஏஷது வா அதி வததி-முதலிய வாக்யத்தால் உபதேஸிக்கிறார்
அதி வாதித்வம் என்பது தான் உபாசிக்கும் பொருளையே எல்லாவற்றையும் விடச் சிறந்தது என்று கூறுதல் –

——————

ஸூத்ரம் -71-தர்மோபபத்தே ச-1-3-8-

பூமா என்பதற்கு பல தன்மைகள் சொல்லப் பட்டுள்ளன அது பரம் பொருளை மட்டுமே குறிக்கும்

அந்த பரமாத்மா எதில் பிரதிஷ்டை செய்யப் பெற்று இருக்கிறார் –
தனது மஹிமையில் முதலிய வாக்கியங்களில் விளக்கப்பட்ட
தன் மஹிமையை பிரதிஷ்டை பெறுதல்
ஸர்வ காரணத்வம்
ஸர்வாத்மத்வம் -முதலிய தர்மங்கள் பகவானிடம் உப பன்னம் -பொருந்தும் -என்பதால்
பூமா என்பது பரமாத்மாவே என்பது உறுதி யாயிற்று

இந்த வித்யையில் தியானிக்க வேண்டியவைகளை சொல்லும் கிரமத்தில்
தஸ்மின் யதந்த ததன்வேஷ்டவ்யம் -என்று தேட வேண்டிய பொருளுக்கு ஆதாரமான
தஹர ஆகாசத்தைச் சொல்லுகையாலும்
பூத ஆகாசமே என்பது முதல் பக்ஷம்

இதற்கு விடை கூறுகிறார் இந்த ஸூத்ரத்தில்
தஹர ஆகாசம் பர ப்ரஹ்மம் தான் பூத ஆகாசம் அன்று
ஏன் எனில்
உத்தரேப்ய -மேல் வாக்கியங்களில் சொல்லப்படும் ஹேதுக்களால்
ஏஷ ஆத்மா அபஹத பாப்மா விஜரோ விமிருத்யு -என்று தொடங்கும் வாக்கியம்
யம் காமம் காமயதே ஸோ அஸ்ய ஸங்கல்பா தேவ சமுத் திஷ்டாதி -முதலிய வாக்யங்களால் கூறப்படும்
குணங்கள் பூத ஆகாசத்துக்குப் பொருந்தாதவை

இப்படி தஹர ஆகாசத்தைப் பூத ஆகாசம் அன்று என்று நிரூபித்து
மேலே ப்ரத்யகாத்மாவாக இருக்கலாமோ என்ற சங்கையையும் நிராகாரணம் பண்ணுகிறார்

அத ஏஷ சம்ப்ரசாதோ அஸ்மாச் சரீராத் சமுத்தாய ஸ்வேன ரூபேண அபி நிஷ்பத்யதேஎன்கிற வாக்கியத்தில்
இதர பராமர்சாத் -ப்ரஹ்மத்தைத் தவிர வேறே ஜீவனைப் பேசுவதால்
ஸ இதி சேத் -இந்த தஹர ஆகாசம் ஜீவனே என்றால்
ந -அது தவறு
அசம்பவாத் -கூறிய அபஹத பாப் மத்வாதிகள் ஜீவனிடம் சம்பாவிதம் அல்லவே
ஸம்ப்ரஸாதன் என்றது பகவானின் சம்பந்த ஞானத்தால் ரசிகனான ஜீவனைக் குறிக்கிறது

ஸங்கல்ப -நாம -த்யானம் -விஞ்ஞானம் -பலம் -அன்னம் – நீர் -தேஜஸ் -ஆகாசம் -மன்மதன் -திசை -பிராணன் என்னும் ஜீவன்
இவை அனைத்துக்கும் மேல் ஸத்ய ஸப்த பொருளாக பரமாத்மாவே பூம குண விசிஷ்டானாயும்
த்யானிக்கத் தக்கவனாயும் கொல்லப்படுகிறான் என்று கருத்து –

சாந்தோக்யம் –ஏதத் அம்ருதம்-பூமா அழிவற்றது என்றும்
சர்வே மஹிம் நி -மற்று எதையும் சாராமல் தன்னுடைய பெருமையால் விளங்கி நிற்கும் என்றும்
ச ஏவாத ஸ்தாத் ச ஏவேதம் சர்வம் -என்று
அதுவே மேலும் கீழும் முன்னும் பின்னும் தெற்கும் வடக்காகவும் உள்ளது
போன்ற தன்மைகள் பூமா பரம் பொருளுக்கே பொருந்தும் என்றதாயிற்று –

பூமாதி கரணம் சம்பூர்ணம்

——————————————–

1-3-3-அஷர அதிகரணம் -அஷரம் எனபது ப்ரஹ்மமே –

கீழ் அதிகரணங்களில் -ஸத்யம் அக்ஷரம் என்ற சொற்களுக்கும் பொருளாகக் கூறப்பட்ட பரம புருஷனே
பூமாதி கரணத்தில் -ஸத்யம் ஸப்தத்தின் பொருள் என்று ஸ்தாபித்து
இவ்வதி கரணத்தில் அக்ஷரம் என்ற சொல்லின் பொருளும் அவனே என்று ஸ்தாபிக்கப் படுகிறது –

அஷரம் அம்பராந்த த்ருதே-1-3-9-

ப்ருஹத் ஆரண்யாகாவில் –
ச ஹோவாச ஏதத்வை தத் அஷரம் கார்க்கி ப்ராஹ்மணா அபிவ தந்தி அஸ்தூலம் அநணு
அஸ்ரஸ்வம் அதீர்க்கம் அலோஹிதம் அஸ்நேந ஹமச்சாயம் –(ப்ரு -3–8–8-)
வசக்னு மகா ரிஷியின் பெண் கார்க்கி என்ற பெண் யாஜ்ஞவல்க்யர் இடம் -கேட்ட கேள்விக்கு அவர் சொன்ன பதில் )-என்று
அஷரம் பருத்ததும் அல்ல சிறியதும் அல்ல குட்டியும் அல்ல நெட்டையும் அல்ல நிழலும் அல்ல இருளும் அல்ல
காற்றும் அல்ல ஆகாசமும் அல்ல-எதனுடன் சேர்ந்ததும் அல்ல எதையும் உண்பவன் அல்ல -இப்படி பலவாறு சொல்லி –

யயா தத் அக்ஷரம் அதிகம்யதே–முண்டகம் –1–1–5-
முண்டக-2-1-2- அஷராத் பாரத பர -என்று அஷரம் என்பதை பிரக்ருதியாக சொல்லி

இவ்வாக்கியத்தில் -அக்ஷரம் -பிரதானமா ஜீவனா பரமாத்மாவா என்ற சங்கை வர
முதலில் பிரதானம் என்று பூர்வ பக்ஷம்
ஏன் எனில்
அக்ஷராத் பரத பர -என்ற இடத்தில்
அக்ஷர சப்தத்துக்குப் பிரதானம் என்ற பொருளில் பிரயோகம் காணப்படுகிறது
இதற்கு விடையே
அஷரம் -அக்ஷர ஸப்தத்தின் பொருள் பர ப்ரஹ்மமே
ஏன் எனில்
அம்பராந்த த்ருதே-ஆகாசத்தில் எல்லையான -முடிவான -காரணமான ஆகாசத்தினைத் தாங்குவதாகக் கூறுவதால்
எதில் ஆகாசம் பின்னப்பட்டு உள்ளது
சர்வ விகாரப் பொருள்களுக்கும் காரணமாய் -ஆகாசம் என்னும் சொல்லின் பொருளாய்
பிரதானத்துக்கும் ஆதாரமாகச் சொல்லப்பட்ட அக்ஷரம் பிரதானமாக இருக்க முடியாது
பரமாத்மா தான் -அது பிரதானத்துக்கு ஆதார பூதம் -அவனே அன்றி பிரதானம் எப்படி இருக்க முடியும்

ப்ருஹத் ஆரண்யாகாவில்-
யத் ஊர்த்வம் கார்க்கி திவோ யதர்வாக் ப்ருதிவ்யா யத் அந்தரா த்யாவா ப்ருத்வீ இமே யத் பூதஞ்ச பவச்ச
பவிஷ்யச் சேத்யா சஷதே-ஆகாச ஏவ தத் ஓதம் ச ப்ராதம் ச –5-8-4–என்று கேட்டு

ஆகாச ஏவ ததோதஞ்ச ப்ரோதஞ்ச -என்று அந்த பொருள்கள் சார்ந்து உள்ளது ஆகாசமே என்று பிரக்ருதியே ஆகும்
அது அஷரத்தை ஆதாரமாக கொண்டது என்பதால் அஷரம் ப்ரஹ்மமே-

—————————————————

ஆனால் ஜீவனுக்கும் அசேதனமான பிரதானத்துக்கான ஆதாரத்வம் கூடுமே
அக்ஷரம் என்பது ஜீவனாகலாம் என்கிற பக்ஷத்தை அடுத்துக் கண்டிக்கிறார் –

ஸூத்ரம் -73-சா ச பிரசாச நாத் –1-3-10-

அஷரம் ஸூரியனையும் சந்திரனையும் நியமிப்பதாக சொல்வதால் அது ப்ரஹ்மமே
யஸ்ய அஷரம் சரீரம் -என்பதால்
உடலுடன் தொடர்பு கொண்ட ஜீவனோ என்னில் –
ப்ருஹத் ஆரண்யாகாவில்-
ஏதஸ்ய வா அஷரஸ்ய பிரசாச நே கார்க்கி ஸூர்யா சந்திர மசௌ வித்ருதௌ திஷ்டத-என்று
ஸூரியனையும் சந்திரனையும் இயக்குவது என்பதால் ப்ரஹ்மமே

சா ச -அம்பராந்தமான பிரதானத்தின் த்ருதியும் -தாங்குதலும்
பிரசாச நாத் –இந்த அக்ஷரத்தின் நியமனத்தாலே ஏற்படுகிறது
ஏதஸ்ய வா அக்ஷரஸ்ய இத்யாதி -என்ற இது முதலியவற்றில்
தன் நியமத்துக்கு உள்பட்ட ஸர்வ வஸ்துக்களையும் தாங்குதல் பக்தனுக்கோ முக்தனுக்கோ கூடாது
ஆதலின் புருஷோத்தமன் ப்ர ஸாஸ்தா வான அக்ஷரமாம் –

———————

ஸூத்ரம் -74-அந்ய பாவ வ்யாவ்ருத்தே ச –1-3-11-

அஷரம் மிக உயர்ந்தது ஒப்பார் மிக்கார் இல்லாதது –
ப்ருஹத் ஆரண்யா காவில் கார்க்கி என்பர் கேட்க –
தத்வா ஏதத் அஷரம் கார்க்கி அத்ருஷ்டம் த்ரஷ்ட்ரு அஸ்ருதம் ஸ்ரோத்ரு-என்றும்
நான்யதோ அஸ்தி த்ரஷ்ட்ரு நான்யதோ அஸ்தி ஸ்ரோத்ரு-என்பதால்
அஷரம் பரம் பொருளே –

அந்ய பாவ -வேறு தன்மை -ப்ரதாநத்வமும் ஜீவத்வமும்
வ்யாவ்ருத்தே ச –விலக்கப்படுவதால் -அக்ஷரம் என்பது பரமாத்மாவே யாகும்
கார்கி இந்த அக்ஷரத்தின் இடமே ஆகாசம் குறுக்கும் நெடுக்குமாகப் பின்னப் பட்டுள்ளது
இந்த அக்ஷரமே பிறவற்றால் காணப்படாமல் தான் அனைத்தையும் காண்கிறது என்று சொல்லுகையால்
இப்படி ஸர்வஞ்ஞனாயும் ஸர்வ அந்தர்யாமியான ஸர்வ ஆதரன் எனும் அஷரம்
பிரதானத்தில் இருந்தும் ஜீவனிடம் இருந்தும் பிரிதாய் விலக்கிக் கூறப்படுகிறது என்று ஸித்தாந்தம் –

அஷர அதி கரணம் சம்பூர்ணம்

———————————————–

1-3-4-ஈஷதி கர்மாதிகரணம் -கானப்படுபவன் ப்ரஹ்மமே-

அத்ருஷ்டம் த்ரஷ்ட்ரு -என்று பரமாத்மா இதரங்களால் காணப்படாதவன் என்று கூறப்பட்டது
அப்படியாயின் -பராத்பரம் புரி சயம் புருஷம் ஈஷதே -என்று காணப்படுபவனாகக் கூறப்படுபவன்
பரமாத்மாவாய் இருக்க முடியாது என்ற சங்கை இந்த அதிகரணத்தில் தீர்க்கப்படுகிறது என்று சங்கதி –

ஸூத்ரம் -75-ஈஷதி கர்ம வ்யபதேசாத் ச –1-3-12-

ஜீவனுக்கும் மேலான புருஷன் என்று ப்ரஹ்மத்தை சொல்லிற்று –
ப்ரசன உபநிஷத்தில் -சத்யகாமன் என்பவனது கேள்விக்கு விடையாக
ய புநரேதம் த்ரிமாத்ரேண ஒம் இதி ஏதே ஏவ அஷரேண பரம்புருஷம் அபித்யாயித ச தேஜஸி ஸூர்யே சம்பன்ன-
யதா பாதோதரஸ் த்வாச்சா விநிர் முச்யதே ஏவம் ஹை வ ச பாப்மநா விநிர்முக்தி ச சமாபி உந்நீயதே ப்ரஹ்ம லோகம்
ச ஏதஸ்மாத் ஜீவநாத் பராத்பரம் புரிசயம் புருஷம் ஈஷதே – -என்று

புருஷன் என்ற ஹிரண்யகர்ப்பன் உபாசித்து ப்ரஹ்ம லோகம் அடைவதைச் சொல்லிற்று
என்பர் பூர்வ பஷத்தில்

அதர்வணத்தில் சத்யகாம ப்ரஸ்தானத்தில் -பராத்பரம் புரிசயம் புருஷம் ஈஷதே என்னும் பகுதியில்
தியானிக்கவும் பார்க்கவும் படும் புருஷன்
ஜீவ சமஷ்ட்டி ரூபமான நான்முகனா அல்லது பரம புருஷனா என்ற சம்சயம்
சமஷ்டி ரூபமான -ஜீவனான -சதுர்முகன்பூர்வ பக்ஷம்
ஏன் எனில்
ஒரு மாத்திரை அளவுள்ள ப்ரணவ உபாசன பலம் மனுஷ்ய லோகம் என்றும்
இரண்டு மாத்ரை அளவுள்ள ப்ரணவ உபாசன பலம் அந்தரிக்ஷ பிராப்தி என்றும்
மூன்று மாத்ரை உபாசன பலம் ப்ரஹ்ம லோக பிராப்தி என்றும் கூறப்பட்டு இருப்பதால்
அந்த லோகத்தை அடைந்து காணப்படுபவன் நான்முகனே என்று பூர்வ பக்ஷம்
இதுக்கு விடை –

ஆனால் மேலே –
யத்தத் சாந்தம் அஜாம் அம்ருதம் அபயம் பரஞ்ச –
என்பதால் உள்ள
யத்தத் கவயோ வேத யந்த -என்று
நித்ய ஸூரிகள் பார்க்கும் இடம் என்பதால் பரம புருஷனையே சொல்லிற்று-

ஈஷதி கர்ம -பார்வைக்கு விஷயமானவன்
ஸ -அந்த ஸ்ருதி ப்ரதிபாத்யனான பரமாத்மாவே -சதுர்முகன் அன்று ஏன் எனில்
வ்யபதேசாத் ச –சாந்தமாய் ஜாரை மரணம் அற்று அம்ருதமாய் அபயமாயும் பரமமான ப்ரஹ்மத்தை அடைகிறான்
என்று மேலே சொல்வதால்
இத்தகைய தர்மங்கள் பர ப்ரஹ்மத்துக்கே பொருந்தும்
அந்தரிக்ஷ லோகத்துக்கு மேலே நான்முகன் லோகம் என்பது சரி அல்ல
நடுவில் மஹர் லோகாதிகள் உண்டே
ஆகவே சர்வ பிராகிருத லோகங்களுக்கும் மேலே ஸ்ரீ வைகுண்டம் -யத்தத் கவயோ வேத யந்த -என்று
நித்ய ஸூரிகள் பார்க்கும் இடம் என்பதால் பரம புருஷனையே சொல்லிற்று-
ஆகவே நான்முகன் லோகம் அன்று என்று திரு உள்ளம் –

ஈஷதி கர்மாதிகரணம் சம்பூர்ணம்

——————————————————————-

1-3-5-தஹராதி கரணம் -தஹரா ஆகாயம் என்பதுவும் ப்ரஹ்மமே-

இப்படி கார்க அக்ஷர வித்யையில் அறியத் தக்க புரிசயனான புருஷனுக்கு பரமாத்மா நிலையை ஸ்தாபித்து
தஹர வித்யையில் ஆகாசம் எனப்படும் புரிசய புருஷனுக்கும் அப்ரமாத்மத் வம் இல்லை –
அவன் பரமாத்மாவே என்பது சங்கதி

ஸூத்ரம் -76-தஹர உத்தரேப்ய-1-3-13-

இதயத்தில் உள்ள தஹர என்னும் ஆகாயத்தில் உள்ளவனும் பர ப்ரஹ்மமே
சாந்தோக்யம் –8-1-1–அத யதிதம் அஸ்மின் ப்ரஹ்ம புரே தஹரம் புண்டரீகம் வேஸ்ம தஹரோ அஸ்மின் அந்தரே ஆகாசாஸ்
தஸ்மின் யதந்தஸ் தத் அன்வேஷ்டவ்யம் தத்வாவ விஜிஜ்ஞாசி தவ்யம் -என்று
ஆகாயமா பரம் பொருளா ஜீவனா –

பஞ்சபூதங்களில் ஒன்றே என்பது முதல் பூர்வ பக்ஷம்
ஏன் என்னில்
ஆகாசம் என்ற சொல் அந்தப்பொருளிலே பிரசித்தம்
தஸ்மின் யதந்தஸ் தத் அன்வேஷ்டவ்யம் -என்று
தேட வேண்டிய பொருளுக்கு ஆதாரமான தஹர ஆகாசத்தைச் சொல்லுகையாலும் பூதாகாசமே என்பது முதல் பூர்வ பக்ஷம்
இதுக்கு விடை

தஹர -தஹர ஆகாசம் பர ப்ரஹ்மம் தான் பூத ஆகாசம் அல்ல
ஏன் என்னில்
உத்தரேப்ய-மேல் வாக்யங்களால் சொல்லப்படும் ஹேதுக்களாலே

அதே உபநிஷத்தில் மேலே –
ஏஷ ஆத்மா அபஹத பாப்மா விஜரோ விம்ருத்யூர் விசோகோ விஜிகத்சோ அபிபாபசஸ்
சத்ய காம சத்ய சங்கல்ப -என்பதால் பரம் பொருளே

மேலும் அதே உபநிஷத்தில் மேலே –
யாவான் வா அயமாகா சாஸ்தா வா நேஷோ அந்தர் ஹ்ருதய ஆகாச-8-1-3- -என்று
ஆகாயம் போலே என்பதால் தஹரா எனபது ஆகாசம் இல்லை-

அன்வேஷ்டவ்யம்-என்று சொன்னதும் கல்யாண குணங்களைப் பற்றியே
அத யதிதம் அஸ்மின் ப்ரஹ்மபுரே-என்ற விஷய வாக்கியத்தின் பொருள் மேலே சொல்லப்படும் –

——————————————————————-

ஸூத்ரம் -77-கதி சப்தாப்யாம் ததா ஹி த்ருஷ்டம் லிங்கம் ச –1-3-14-

அனைவரும் சென்று அடையும் இடம் என்பதாலும்
ப்ரஹ்ம லோகம் என்பதாலும்
தஹரா பர ப்ரஹ்மமே -பரம் பொருளே

சாந்தோக்யம் –
தத் யதா ஹிரண்ய நிதிம் நிஹித ம ஷேத்ரஜ்ஞா உபர்யுபரி சஞ்சரந்தோ ந விந்தேயுர் யேவ ஏவேமாஸ் சர்வா பிரஜா
அஹர் அஹர் கச்சந்த்ய ஏதம் ப்ரஹ்ம லோகம் ந விந்தந்தி அந்ருதேன ஹி பிரத்யூடா–8-3-2–என்றும்
ஏவமேவ இமா சர்வா பிரஜா சதி சம்பத்ய ந விதுஸ் சதி சம்பத்யா மஹயிதி-என்றும்

ப்ருஹத் ஆரண்யாகாவில்–
ஏஷ ப்ரஹ்ம லோகஸ் சம்ராடிதி ஹோவாச -என்பதால்
தஹரா என்றது பர ப்ரஹ்மமே-

நிலத்துக்குள் புதைந்து கிடைக்கும் புதையலை அறியாத மக்கள் அந்த நிலத்தின் மேலே அடிக்கடி நடமாடியும் அறிவது இல்லை
கதி சப்தாப்யாம் –
உபநிஷத் வாக்கியத்தில் ஏதம் என்று தஹர ஆகாசத்தைக் குறிப்பிட்டு ஸூ ஷுப்தி தசையில் செல்லும் -செல்லத்தக்க
தஹர ஆகாசத்தை ப்ரஹ்ம லோகம் என்று
இப்படி கமனத்தாலும் ப்ரஹ்ம லோக ஸப்தத்தாலும் குறிப்பது ப்ரஹ்மமே என்று சாதிக்க வல்லது
ததா ஹி த்ருஷ்டம்
இப்படி வேறு உபநிஷத்திலும் -ஏவமேவ இமா சர்வா பிரஜா சதி சம்பத்ய ந விதுஸ் சதி சம்பத்யா மஹயிதி-
முதலான வாக்கியங்களில் காணப்படுகிறது
லிங்கம் ச –
மற்ற ஸ்ருதிகளை விட்டு இதே ஸ்ருதியில் சொல்லும் கதியும் -ப்ரஹ்ம லோக ஸப்தமும்
வேறு எதையும் அபேக்ஷிக்காத லிங்கங்கள் என்றவாறு

———————————————-

ஸூத்ரம் -78-த்ருதேச்ச மஹிம் ந அஸ்ய அஸ்மின் உபலப்தே –1-3-15-

அனைத்துக்கும் ஆதாரமாக பற்றாக உள்ளவன் தஹரா என்பதால் பர ப்ரஹ்மமே –

சாந்தோக்யம் –
அத ய ஆத்மா ச ஹேதுர் வித்ருதி ரேஷாம் போகாநாம் சம்பேதாய-8-4-1–என்று
உலகங்கள் அனைத்துக்கும் ஆதாரம் என்றும்

ப்ருஹத் ஆரண்யாகாவில்–4-4-22- –
ஏஷ சர்வேஸ்வர ஏஷ பூதாதிபதி ரேஷ பூதபால ஏஷ சேதுர் விதரண
ஏஷாம் லோகா நாம சம்பேதாய -என்பதால் தஹரா என்றது பர ப்ரஹ்மமே-

த்ருதேச்ச மஹிம் ந அஸ்ய –இந்த பரமாத்மாவுக்கு ஜகத்தினைத் தங்குவது என்னும் மஹிமை
அஸ்மின் -இந்த தஹர ஆகாசத்தில்
உபலப்தே –தோன்றுகையாலே இந்த மகிமைக்கு ஆஸ்ரயமான தஹர ஆகாசம் பரமாத்மாவே தான்
யஸ் ஆத்மா ஸ சேதுர் வித்ருதி என்றும்
ஏஷாம் லோகாநாம் அசம்பேதாய இத்யாதி வாக்யங்களால் தாரணா ரூபமான மஹிமை சொல்லப்படுகிறது –

——————————————–

ஸூத்ரம் -79-பிரசித்தே ச –1-3-16-

ஆகாயம் என்று பரம் பொருளை ஒட்டியே பல இடங்களிலும் சொல்லப் பட்டதால்
தஹரா பர ப்ரஹ்மமே –

தைத்ரீய ஆனந்த வல்லியில் —
கோ ஹி ஏவ அந்யாத்க ப்ராணயாத் -யதேஷ ஆகாச ஆனந்தோ ந ஸ்யாத்-2-7-

மேலும் -சாந்தோக்யம்-1-9-1-
சர்வாணி ஹ வா இமானி பூதானி ஆகாசாத் ஏவ சமுத்பத்யந்தே– -என்று
ஆகாயம் பரம் பொருள் என்ற காரணத்தால்
தஹரா என்றது பர ப்ரஹ்மமே –

ஸ்ருதி ப்ரசித்தமும்
அபஹத பாப் மத்வாதிகளுடன் கூடிய ப்ரஸித்தி ப்ரபலம்

இப்படி பூத ஆகாசம் இல்லை என்று நிரூபித்து
மேலே பிரத்யக்தமா இல்லை என்று நிரூபிக்கிறார்

———————————————–

ஸூத்ரம் -80-இதர பராமர்சாத் ச இதி சேத ந அசம்பவாத் –1-3-17-

தஹரா ஜீவனாக இருக்க முடியாது -ஜீவனுக்கு பொருந்தாத தன்மைகள் சொல்லப் படுவதால்

சாந்தோக்யம் –
அத ய ஏஷ சம்ப்ரசாதோ அஸ்மாச் சரீராத் சமுத்தாய பரம் ஜ்யோதிரூப சம்பத்ய ஸ்வேன ரூபேண
அபி நிஷ்பத்யதே ஏஷ ஆத்மேதி ஹோவாச ஏதத் அம்ருதம் அபயம் யேதத் ப்ரஹ்ம-8-3-3- -என்று
ஆத்மா சம்பிரசாதன் என்றும்
பரம் பொருளைக் காட்டிலும் வேறு ஒருவனாக சொல்லப் பட்டதால்
சாந்தோக்யத்தில் சொல்லப்பட்ட தஹரா ஆகாயத்தின் தன்மைகள்
பர ப்ரஹ்மத்துக்கு மட்டுமே பொருந்தும்-

அத ய ஏஷ சம்ப்ரசாதோ அஸ்மாச் சரீராத் சமுத்தாய பரம் ஜ்யோதிரூப சம்பத்ய ஸ்வேன ரூபேண-என்கிற வாக்கியத்தில்
இதர பராமர்சாத் -ப்ரஹ்மத்தைத் தவிர வேறு ஜீவனைப் பேசுவதால்
ச இதி சேத் -இந்த தஹர ஆகாசம் ஜீவனே என்றால்
ந-அது தவறு
அசம்பவாத் –கூறிய அபஹத பாப் மதவாதி கல்யாண குணங்கள் சம்பாவிதம் அல்ல என்பதால்
ஸம் ப்ரஸாதன் என்றது பகவத் சம்பந்த ஞானத்தால் ரசிகனான ஜீவனைக் குறிக்கிறது –

——————————————–

ஸூத்ரம் -81-உத்தராத் சேத் ஆவிர்ப்பூத ஸ்வரூப து –1-3-18-

பிரஜாபதி ரிஷி இந்த்ரனிடம் ஜீவனுக்கும் உயர்ந்த தன்மைகள் ப்ரஹ்மத்தின் அருளால் –
சம்ப்ரசாதோ அஸ்மாச் சரீராத் சமுத்தாய பரம் ஜ்யோதிரூப சம்பத்ய ஸ்வேன ரூபேண நிஷ்பத்யதே –

ஆனால் தஹரா ஆகாயத்துக்கு இந்த தன்மைகள் மறையாமல்
இயற்கையாகவே உள்ளன –
எனவே தஹரா ஜீவன் அல்ல பரம் பொருளே-

உத்தராத் சேத் -பிரஜாபதி வாக்யத்தால் -மேலே ஜீவனுக்கும் இந்த அபஹத பாப் மத்வாதிகள் கூறுவதால்
ஜீவனுக்கு அவை சம்பாதிக்காது என்று கூறுவது சரியில்லை
ஆவிர்ப்பூத ஸ்வரூப து –முதலில் கர்ம சம்பந்தத்தால் மறைக்கப்பட்ட ஸ்வரூபத்தை யுடைய ஜீவன்
பின்பு பரமாத்மா ஸம்பத்தியால் ஸ்வரூப ஆவிர்பாவம் அடைகிறான் என்று பிரஜாபதி வாக்கியம்
து -தஹர ஆகாஸனோ என்னில் -மறைக்கப்படாத ஸகல கல்யாண குணங்களும் ஸ் வாபாவிகமாக
இவனது ஸ்வரூப ஆவிர்பாகத்துக்கும் காரணமான பரமபுருஷனே -ஜீவன் அல்லன்
ஸத்யன் என்ற சொல்லின்படி சேதன அசேதன நியாமகன்
ஆகவே பரமாத்மாவே அன்றி ஜீவன் அல்லன்

இப்படியாகில் ஜீவனை ஸம் ப்ரஸாத என்று ஜீவனை ஏன் பிரஸ்தாபிக்க வேண்டும் என்றால் -மேல் –

——————————————

ஸூத்ரம் -82-அன்யார்த்த ச பராமர்ச –1-3-19-

ஜீவனுக்கு பரம் பொருளின் கடாஷத்தால் உயர்ந்த தன்மை அடைவதை சொல்லி
பரம் பொருளின் உயர்ந்த தன்மை காண்பிக்கப் பட்டது-

அன்யார்த்த ச பராமர்ச –
பராமர்ச -தஹர வாக்கியத்தில் ஜீவனை பிரஸ்தாபித்தது
அன்யார்த்த ச -தஹர ஆகாச ப்ராப்தியாலே முக்தனுடைய ஸ்வரூப ஆவிர்பாவம் ஏற்படுகிறது என்று
அவனது கல்யாண குணத்தை விளக்கவே என்றவாறு –

———————————————

ஸூத்ரம் -83-அல்ப ஸ்ருதே இதி சேத் தத் உக்தம் –1-3-20

தஹரா ஆகாயம் சிறியது என்பதால் பர ப்ரஹ்மம் அல்ல எனபது சரியல்ல –
இதயத்தில் உள்ளான் -1-2-7 ஸூத்ரம் சொல்லவே
சிறிய உருவம் உள்ளவனாக சொல்லப் பட்டது-

அல்ப ஸ்ருதே –ஆராக்ர சத பாகஸ்ய -இத்யாதி வாக்கியப்படி அணு பரிணாமம் ஜீவனுக்கே கூடும் என்றால்
இதி சேத்–அது தவறு
தத் உக்தம் -ஸர்வத்ர ப்ரஸித்த அதிகரணத்தில் -நிசாயத்வா தேவம் என்ற ஸூத்ரத்தில் இது விளக்கப்பட்டு விட்டது
உபாஸகர்கள் அனுக்ரஹத்துக்காக கட்டை விரல் அளவுள்ள
திருமேனி உள்ளவன் என்பதால் அல்பத்வம் சொல்லப்படுகிறது என்று திரு உள்ளம் –

———————————————–

ஸூத்ரம் -84-அநு க்ருதே தஸ்ய ச –1-3-21-

முண்டகம் –
யதா பஸ்ய பஸ்யதே ருக்ம வர்ணம் கர்த்தாரம் ஈசம் புருஷம் ப்ரஹ்ம யோநிம் ததா வித்வான்
புண்ய பாபே விதூய நிரஞ்சன பரமம் சாம்யமுபைதி –3-1-3–என்பதால்
இயற்கையாக அந்த தன்மைகளைக் கொண்ட தஹரா ஜீவன் இல்லை பர ப்ரஹ்மமே-

அநு க்ருதே தஸ்ய ச
தஸ்ய -அந்த பரமாத்மாவின்
அநு க்ருதே -ஸாம்யத்தை அடைகையாலும்
சாம்யத்தை அடையும் ஜீவனைக்காட்டிலும் சாம்யத்தை உண்டாக்கும் பரமாத்மாவுக்கு தஹரத்துக்கு –
பேதம் ஸித்தமாயிற்று
நிரஞ்சன பரமம் ஸாம்யம் உபைதி -என்று முக்தனுக்கு ஸாம்யா பத்தி -சொல்லிற்றே –

————————————————-

ஸூத்ரம் -85-அபி ஸ்மர்யதே-1-3-22-

ஸ்ரீ கீதை –
இதம் ஜ்ஞானம் உபாஸ்ரித்ய மம சாதர்ம்யம் ஆகாதா–சர்க்கே அபி நோபே ஜாயந்தே
பிரளயே ந வ்யதந்தி ச -14-2- -என்று இதே கருத்து சொல்லப் பட்டதே-

இங்கும் பகவத் உபாஸனத்தாலே அவனுடன் ஸாம்யம் உடைய அனுக்ரஹம்
பகவானால் என்று சொல்லப்படுகிறதே

அதயதிதம் அஸ்மின் ப்ரஹ்ம புரே தஹரம் புண்டரீகம் வேஸ்ம என்று அனுவதித்து
தஹரோ அஸ்மின் அந்தர ஆகாச என்ற வாக்கியத்தில் அஸ்மின் -இந்த அற்பமான இதயம் என்னும் தாமரையில்
அந்தர ஆகாச -உள்ளிருக்கும் ஆகாசம் எனப்படும் பரமாத்மா
ய -எவன் உள்ளானோ
தஸ்மின் -அவனிடம்
யத் -எந்த எந்த கல்யாண குணம் உள்ளதோ
தத் -அந்த ப்ரஹ்மமும் அந்த கல்யாண குண ஜாதங்களும் இரண்டும் உபாசிக்கத்தக்கவை
என்று யத் சப்தத்தை அத்தியாஹரம்-வருவித்திக் கொண்டும் கொள்ளாமலும் பொருள் சொல்லலாமே –

1-3-5-தஹராதி கரணம் சம்பூர்ணம்

——————————————–

1-3-6-ப்ரமிதாதி கரணம் -கட்டை விரல் அளவுள்ளவன் ப்ரஹ்மமே –

அல்ப ஸ்ருதே –ஸூத்ரத்தில் கூறிய அல்ப பரிமாணத்வம்
ஜீவனுக்கும் கடவல்லியில் கூறப்பட்டுள்ளதால்
அங்குஷ்ட ப்ரமிதன் ஜீவனாகவே இருக்கலாமே
என்ற சங்கையைப் பரிஹரிக்கவே
இந்த அதிகரணம் என்று சங்கதி –

ஸூத்ரம் -86-சப்தாத் ஏவ ப்ரமித–1-3-23-

கடவல்லியில் -அங்குஷ்ட மாத்ர புருஷ மத்ய ஆத்மனி திஷ்டதி என்றும்
ஈஸானோ பூத பவ்யஸ்ய ந ததோ விஜூ குப்சதே -என்றும்
அங்குஷ்ட மாத்ர புருஷோ ஜ்யோதிரிவா தூமக என்றும்
ஹ்ருதய ஸம் நிவிஷ்ட என்றும்
முதலிலும் நடுவிலும் இறுதியிலும் கூறப்பட்ட அங்குஷ்ட ப்ரமிதன்
ஜீவனா பரமாத்மாவான என்ற சங்கை
ஜீவனே என்று பூர்வ பக்ஷம்
ஏன் எனில்

ஸ்வேதாச்வதார உபநிஷத்தில்-
பிராணாதி ப சஞ்சரதி ஸ்வகர்மபி அங்குஷ்ட மாத்ர-என்றும்
அங்குஷ்ட மாத்ர ரவி துல்ய ரூப என்றும்
பிராண வாயு கர்ம வினைகள் சம்சாரம் என்பதால்
அங்குஷ்ட மாத்ர என்றது ஜீவனே பூர்வ பஷம்

சப்தாத் ஏவ ப்ரமித–பரமாத்மாவுக்கு அசாதாரணமான ஈஸானோ பூத பவ்யஸ்ய என்னும் ஸப்தத்தாலேயே
பிராணாதி ப சஞ்சரதி ஸ்வகர்மபி-என்ற வாக்கியத்தில் கர்ம சம்பந்தமாகிய ஜீவ லிங்க சப்தம் இருப்பது போல்
பரமாத்ம லிங்கம் இங்கு இருப்பதாலேயே
பரமாத்மாவே தான் ஜீவன் அல்லன் என்று திரு உள்ளம்

கடோ உபநிஷத்தில் –
ஈசா நோ பூத பவ்யச்ய ந ததோ விஜூ குப்சதே -என்று
முக் காலங்களையும் நியமிக்கும் தன்மை பரம் பொருளுக்கே உண்டு -எனவே
அங்குஷ்ட மாத்ரன் பரம் பொருளே-

ஆனால் விபுவான பரமாத்மாவுக்கு
அங்குஷ்ட ப்ரமிதத்வம் எவ்வாறு பொருந்தும் என்பதற்கு மேல் ஸூத்ரம்

———————————————————–

ஸூத்ரம் -87-ஹ்ருதி அபேஷயா து மனுஷ்யாதிகாரத்வாத்-1-3-24-

மனிதர்கள் இதயத்தில் பர ப்ரஹ்மம் உள்ளான் என்பதைக் காட்டவே கட்டை விரல் அளவு உள்ளவன் -என்கிறது –
உபாசனைக்கு ஏற்றவாறு என்றவாறு –

ஹ்ருதி அபேஷயா து மனுஷ்யாதிகாரத்வாத்
து சப்தம் சங்கையை விலக்குவது
ஹ்ருதி –மனிதனின் ஹ்ருதயத்தில் உபாஸனார்த்தமாக
தத் அபேஷயா -அத்தை அபேக்ஷித்து விபுவான பர ப்ரஹ்மத்துக்கு அந்த அளவு கூறப்பட்டது
மனுஷ்யாதிகாரத்வாத்-உபாஸனம் விதிக்கும் ஸாஸ்த்ரம் மனிதர்களை உத்தேசிக்கையாலே
அவர்கள் இருதயத்தை முன்னிட்டே இந்த அளவு என்று ப்ரஹ்மத்துக்குக் கூறப்பட்டது –

ப்ரமிதாதி கரணம் சம்பூர்ணம்

————————————————————-

மனிதர்களுக்கு உபாசனத்தில் பிரஸ்தாபிக்கப்பட்டு
பின்பு தேவத அதிகரணம்
மத்வாத் யதி கரணம்
அப ஸூத்ர அதிகரணம்
ப்ரசங்க சங்கதியால் இடையே வந்தன
இப்படி விசேஷ அதிகாரம் பற்றி நிரூபிப்பதால் ஸாமான்யமான அதிகாரத்தைப் பற்றிப் பேசும்
மூன்றாம் அத்யாயம் -நான்காம் பாதத்துடன் சாங்க்யம் -கலப்பு -என்ற தோஷம் இல்லை

இப்படி பிரசங்காத் வந்த மூன்றில் முதலில் தேவத அதிகரணத்தில்
தேவதைகளுக்குப் பொதுவாக உபாஸனத்தில் அதிகாரம் உண்டா என்று கேட்டு
அத்தை ஸ்தாபிக்கிறார் –

1-3-7-தேவாதிகரணம் -தேவர்களுக்கு ப்ரஹ்ம உபாசனை உண்டு

ஸூத்ரம் -88-தத் உபரி அபி பாதராயண சம்பவாத்-1-3-25-

உபாசனை மனிதர்களுக்கு மட்டும் அல்ல தேவர்களுக்கும் பொருந்தும் என்கிறார் பாதராயணர்-

உடல் இல்லையே துன்பம் வாராதே உபாசனை வேண்டாம் -என்பர் பூர்வ பஷிகள்

தத் -அந்த ப்ரஹ்ம உபாஸனம்
உபரி அபி -ஸ்வர்க்க லோகத்தில் உள்ள தேவர்களுக்கும்
பாதராயண -உண்டு என்று பாதாரயணர் கூறுகிறார்
சம்பவாத்-அநேந ஜீவேந அநு ப்ரவிஸ்ய நாம ரூப வியாகரவாணி -என்பதால்
தேவதைகளுக்கும் சரீரம் உண்டு
மோஷையில் ஆசையும் சாமர்த்தியமும் கூடுவதால் உபாஸனம் உண்டு –

நாம ரூப வியாகரணம் -தேவர்களுக்கும் பொருந்துமே –

சாந்தோக்யம் –
தௌ சமித் பாணி பிரஜாபதி சகாசமா ஜக்மது -என்பதால்
தேவர்களுக்கும் உடல் உண்டு உபாசிப்பார்கள் என்றதாயிற்று-

———————————————————–

ஸூத்ரம் -89-விரோத கர்மணி இதி சேத் ந அநேக பிரதிபத்தே தர்சநாத்–1-3-26-

தேவர்கள் பல உடல்களை எடுத்துக் கொள்ள முடியுமே –
ஒரே நேரத்தில் பல உடல்களை எடுத்துக் கொண்டு ஹவிர்பாஹம் பெறலாம்

சௌபரி பல உடல்களை கொண்டதும் உண்டே-

விரோத கர்மணி இதி சேத் ந
தேவதைகளுக்கு சரீரம் உண்டு என்று ஏற்றால் யாகாதி கர்மங்களில் எந்த இடத்துக்கு அவர்கள் செல்வார்கள்
என்னும் ஆஷேபம் தவறு
அநேக பிரதிபத்தே தர்சநாத்–ஒரே நேரத்தில் பல உடல்களை எடுத்துக் கொள்ளும் சாமர்த்தியம் உண்டே
எனவே விரோதம் வராது என்றவாறு

————————————————–

ஸூத்ரம் -90-சப்தே இதி சேத் ந அத பிரபவாத் ப்ரத்யஷ அநுமா நாப்யாம்-1-3-27-

தேவர்கள் உடலுடன் உள்ளவர்கள் என்றால் வேத வாக்யங்களுக்கு பங்கம் வருமோ என்றால் வாராது
இந்த்ரன் பொதுப் பெயர் வேத ஒலியைக் கொண்டே பிரஜாபதியைப் படைக்கின்றான் –
பூ என்ற சொல்லின் மூலம் பூமியைப் படைக்கின்றான்
ஆரம்பத்தில் வேத வாக்யங்கள் படைக்கப் பட்டன -அதில் இருந்தே அனைத்தையும் படைத்தான் -மனு ஸ்ம்ருதி-

விரோத -சொல்லை முன் ஸூத்ரத்தில் இருந்து எடுத்துக் கொள்ள வேண்டும்
சப்தே -வைதிக சப்தத்தில் விரோதம் வரும்
சரீரம் உண்டு என்றாலே அவயவங்களுடன் இருந்து உத்பத்தி விநாசம் வரும்
உத்பத்திக்கு முன்னும் விநாசத்துக்குப் பின்னும் இந்திராதி சொற்களுக்கு உரிய பொருள் இல்லாமல் போகும்
அநித்யத்வமும் ஏற்க நேரிடுமே என்றால்
இதி சேத் ந -இப்படிச் சொல்வது தவறு
அத பிரபவாத் -இந்த்ராதிகள் நசித்தவுடன் நித்தியமான வேதங்களால் இந்த்ராதியின் ஆக்ருதிகளை நினைத்து
நான்முகன் புது புது இந்த்ராதிகளைப் படைக்கிறான்
ததா யதா பூர்வமே கல்பயத்
இதுக்குப் பிரமாணம் ஏது என்றால்
ப்ரத்யஷ அநுமா நாப்யாம்-ஸ்ருதியாலும் ஸ்ம்ருதியாலும் தெரிந்து கொள்கிறோம் –
ஆகையால் அவையே பிரமாணம்

வேதத்தில் –
வேதே ந நாம ரூபே வியாகரோத் ஸதா ஸதீ பிரஜாபதி என்றும்
ஸ்ம்ருதியில்
ஸர்வேஷாஞ்ச ஸ நாமானி கர்மாணி விவிதானி ச
வேத ஸப்தேப்ய ஏவாதவ் ப்ருதக் ஸம்ஸ் தாச்ச நிர்மமே -என்றும் உள்ளனவே –

———————————————–

ஸூத்ரம் -91-அத ஏவ ச நித்யத்வம் —1-3-28-

விஸ்வா மித்ரர் வசிஷ்டர் கூறியது போன்றவை –
இவர்கள் கல்ப காலத்தில் கர்ம பலன்களுக்கு தக்க படி தோன்றுகின்றனர்
அவர்களுக்கு வேதத்தில் குறிப்பட்ட பகுதிகள் தானாகவே தெரியத் தொடங்கும்
ஆக வேத வரிகள் ஒவ்வொரு கல்பத்திலும் தொடர்ச்சியாக ஒருவருக்குப் பின் ஒருவருக்கு உபதேசிக்கப் படும்

அத ஏவ -ப்ரஹ்ம தேவன் வைதிக சப்த்தத்தாலே ஜகத்தில் ஆகாரத்தை நினைத்து ஸ்ருஷ்டி செய்வதாலேயே
ச நித்யத்வம்-நித்யத்வம் ஸித்திக்கிறது
நைமித்திக பிரளயம் முடிந்த உடன் ப்ரஹ்ம தேவன் வஸிஷ்ட விச்வாமித்திராதியரின் பதவிகளுக்கு
உரிய புண்யம் மிக்க ஜீவர்களை நினைத்து
விச்வாமித்ரஸ்ய ஸூ க்தம் பவதி -முதலிய வேத பாகங்களையும் ஆராய்ந்து முன் கல்பங்களின் படியே
இந்த கல்பத்திலும் ஸ்ருஷ்டித்து அவர்கள் மூலமாக மந்த்ரங்கள் ஸூ க்தம் இவற்றைப் பரப்பச் செய்தார்

ஆனால் பிராகிருத பிரளயத்தில் ப்ரஹ்மாதிகள் யாவரும் நசித்த படியால்
பிராகிருத ஸ்ருஷ்டி தொடங்கும் போது நித்யம் எப்படிப் பொருந்தும்
என்ற சங்கையை மேல் பரிஹரிக்கிறார் –

————————————————-

ஸூத்ரம் -92-சாமான நாம ரூபாத்வாத் ச ஆவ்ருத்தௌ அபி அவிரோத தர்சநாத் ஸ்ம்ருதே ச —1-3-29-

பிரளய காலத்துக்கு பின்புமுன்பு உள்ளது போலே தோன்றுவதால் வேதங்கள் நித்யம் –
தைத்ரியம் –
ஸூர்யா சந்த்ரமசௌ தாதா யதா பூர்வமகல்பயத் -என்றும்

ஸ்வே தாஸ்வதார உபநிஷத்தில் –
யோ ப்ரஹ்மாணம் விததாதி பூர்வம் யோ வை வேதாம்ச்ச ப்ரஹிணோதி தஸ்மை -என்றும்

ஸ்ரீ விஷ்ணு புராணத்தில் –
யதர்த்துஷ் வ்ருது லிங்காநி நாநா ரூபாணி பர்யயே த்ருச்யந்தே தாநி தான்யேவ ததா பாவா யுகாதிஷூ -என்றும்
கல்பத்திலும் முன்பு இருந்தவை போலே அனைத்தும் தோன்றும் -என்றதே –

வேதங்களை முன் வரிசை மாறாமல் பிரமனுக்கு உபதேசிக்கிறார்
வேதத்துக்கு நித்யத்வம் என்பது முன்பு உச்சரித்த க்ரமத்தை நினைத்து
அதே க்ரமப்படி மறுபடியும் உச்சரிக்கப் படுவதே
அக்ஷரங்கள் நித்யம் என்பது அன்று –

தேவாதிகரணம் சம்பூர்ணம்

—————————————————-

1-3-8–மத்வதிகரணம் -தேவர்களுக்கு மதுவித்யை உண்டு-

கீழே தேவாதி சாமான்யத்துக்கு பகவத் உபாசன அதிகாரம் ஸ்தாபிக்கப் பட்டது
இதில் வஸ்வாதி தேவதா விசேஷங்களுக்கு மது வித்யை என்னும்
ப்ரஹ்ம வித்யையில் அதிகாரம் உண்டு என்று ஸ்தாபிக்கிறார் –

ஸூத்ரம் -93-மத்வாதிஷூ அசம்பவாத் அநதிகாரம் ஜைமிநி-1-3-30-

மது வித்யை போன்ற விதைகளுக்கு தேவர்களுக்கு அதிகாரம் இல்லை -என்பர் ஜைமிநி
ஸூரியன் தேனை சேகரிக்கின்றான்-வேத ஓசைகளே தேன் –
நான்கு திசைகள் நான்கு வேதங்கள்-கிழக்கில் இருந்து ருக் வேதம்
இந்த அமிர்தம் போன்ற தேவை உபாசிப்பவன் வஸூக்களில் ஒருவன் ஆகிறான் –

சாந்தோக்யம் மது வித்யையில்
அசவ் வா ஆதித்யோ தேவ மது -என்று தொடங்கி
தத்யத் பிரதமம் அம்ருதம் தத் வசவ உப ஜீவந்தி –என்று கூறி –
ஸ ஏதத் அம்ருதம் வேத வஸூநா மேகோ பூத்வா அக்னிநைவ முகேந ஏத தேவ அம்ருதம்
த்ருஷ்ட்வா த்ருப் யந்தி –முதலிய வாக்யங்களால்
ருக் யஜுஸ் சாமாதி வேதங்களில் சொல்லப்பட்ட
கர்மாக்களால் ஏற்படும் ரசத்துக்கு ஆதாரம் ஆதலின்
ஆதித்யனை தேவமது என்றும்
கிழக்கில் வஸூக்கள்
தெற்கில் ருத்ரர்கள்
மேற்கே ஆதித்யர்கள்
வடக்கே மருத்துக்கள் சாத்யர்கள் போக்யமாக அனுபவிப்பதாகச் சொல்லி
அவர்கள் அனுபவிக்கும் ஆதித்யனின் அம்சங்களை உபாசிக்கத் தக்கவை யாகவும்
ப்ராப்யங்களாகவும் உபதேசிக்கிறது –

தேவர்கள் முன்பே வஸூக்களாய் உள்ளதால்
எப்படி தங்களையே உபாசிக்க முடியும் -எனவே பொருந்தாது –
பலனான வஸூத்வம் முன்னமே அடையப் பெற்று இருப்பதாலும் அதிகாரம் இல்லை என்பதே பொருந்தும்
என்பதும் பூர்வ பக்ஷம்
இதையே இரண்டு பூர்வ பக்ஷ ஸூத்ரங்கள் கூறும் –

மத்வாதிஷூ அசம்பவாத் -தாமே தம்மை உபாசித்து அசம்பாவிதம்
கர்மாவும் கர்த்தாவுமாய் இருக்காய் சம்பவியாது
அநதிகாரம் ஜைமிநி-
எனவே அதிகாரம் இல்லை என்று ஜைமினி

—————————————————-

ஸூத்ரம் -94-ஜ்யோதிஷி பாவாத் ச –1-3-31-

உயர்ந்த ஜ்யோதி ரூபமான பரம்பொருளை தேவர்கள் உபாசிப்பதால் –
ப்ருஹத் ஆரண்யாகாவில் –
தம் தேவா ஜ்யோதிஷாம் ஜயோதிராயுர் ஹோபாசதே அம்ருதம் -என்று சொல்லப்பட்டதே

அதனால் ப்ரஹ்ம உபாசனை தேவர்களுக்கும் மனுஷ்யர்களுக்கும் சொல்லப் பட்டாலும்
தேவர்களுக்கு அது சிறப்பு மது வித்யை பொருந்தாது-

ஜ்யோதிஷி -பர ப்ரஹ்மத்தின் இடம்
பாவாத் ச –தம் தேவா ஜ்யோதிஷாம் ஜ்யோதி -என்ற பர ப்ரஹ்ம உபாஸனம்
மனுஷ்ய தேவ இருவருக்கும் பொதுவாய் இருந்தும்
ஜ்யோதிஸ்ஸான பர ப்ரஹ்மத்தை தேவர்கள் உபாசிக்கிறார்கள் என்ற சிறப்பான வசனம்
வஸூ வாதிகளுக்கு மது வித்யையில் அதிகாரம் இல்லை என்று காட்டுகிறது என்பர் பூர்வ பக்ஷி

———————————————————

ஸூத்ரம் -95-பாவம் து பாதராயண அஸ்தி ஹி —1-3-32-

தேவர்களுக்கு மது வித்யையில் அதிகாரம் உண்டு என்று பாதராயணர் கருதுகின்றார் –
30/31 சூத்ரங்கள் பூர்வ பஷமாக்கி
இது சித்தாந்தம்

மது வித்யை மூலம் வஸூக்கள் தங்கள் அந்தர்யாமியாக உள்ள பரம் பொருளை உபாசிக்கிறார்கள் –
தங்களையே அல்ல-
இந்த கல்பத்தில் வஸூவாக உள்ளவர்கள் அடுத்த கல்பத்திலும் வஸூவாக இருக்க உபாசிக்கின்றனர்-
எனவே அவர்களுக்கும் அதிகாரம் உண்டு-

து சப்தம் ஜைமினி பக்ஷத்தை மறுதலிக்கிறது
பாவம் து பாதராயண -அதிகாரம் உண்டு என்று பாதராயணர் கூறுகிறார்
ஏன் எனில்
அஸ்தி ஹி-உபாஸ்யத்வமும் ப்ராப்யத்வமும் உள்ளன
ய ஏதா மேவம் ப்ரஹ்ம உபநிஷதம் வேத -என்று க்ருத்ஸன முழு மது வித்யைக்கும் ப்ரஹ்ம வித்யை என்றே பெயர்
இவர்களை சரீரமாகக் கொண்ட பர ப்ரஹ்ம உபாசனை என்றவாறு
கல்பாந்தரத்தில் தங்கள் தேஹ முடிவில் ப்ரஹ்மத்தை அடைவதில் விரோதம் இல்லையே –

————————————————————

2-9- அப ஸூத்ர அதிகரணம்

கீழே தேவாதிகளுக்கும்
வ ஸூ முதலிய தேவ விசேஷங்களுக்கும்
ஆர்த்தித்தவமும் சாமர்த்தியமும் இருப்பதால் ப்ரஹ்ம வித்யையில் அதிகாரம் உண்டு என்று ஸ்தாபித்தார்
அப்படி என்றால் நான்கு வர்ணத்தாருக்கும் ஏற்கலாமே
என்ற சங்கையை நீக்குகிறார் இதில்

ஸூத்ரம் -96-ஸூகஸ்ய தத நாதர ஸ்ரவணாத் ததா ஆத்ரவணாத் ஸூச்யதே ஹி –1-3-33

அன்னப் பறவைகளின் பேச்சைக் கேட்ட ஜானஸ்ருதியின் சோகம் -அவன் உடனே
ரைக்வ ரிஷியிடம் ஓடியதில் இருந்து புரிகின்றது
இது முதல் 39- வரை ஸூத்ரர்களுக்கு ப்ரஹ்ம ஆராய்ச்சி பொருந்துமா என்றது பற்றி விளக்கும்

இரண்டு அன்னப் பறவைகள் -அவரை ரைக்வர் என்று நினைத்தாயோ என்றதும் ஓடி
ரைக்வரும் ஸூத்ரா உன்னுடைய மரியாதையைக் கண்டு மகிழ்ந்து உபதேசிக்கின்றேன் என்றார்
இது ஜாதி வாக்கியம் அல்லை
அன்னப் பறவைகள் பேச்சை கேட்டு மனம் வருந்தியதால் என்பதே பொருள்-

அர்த்தித்தவமும் சாமர்த்தியமும் ஸூத்ரர்களுக்கும் சம்பவிக்கலாமே
அக்னி கிடையாது என்றாலும் மனஸ்ஸாலே உபாஸிக்கலாமே
இதிஹாஸ புராணங்களைக் கேட்ட மாத்ரத்தாலேயே ப்ரஹ்ம ஸ்வரூபாதி ஞானம் ஏற்படலாமே
விதுரர் போன்றவர் ப்ரஹ்ம நிஷ்டர்கள் என்பது பிரசித்தம் அன்றோ
ஸம் சர்க்க வித்யையில் -ஆஜஹார இமாச் ஸூத்ர -என்று ஸூ த்ர சப்தத்தால்
ஞான சுருதியை அழைத்து ரைக்குவர் ப்ரஹ்ம வித்யையை உபதேஸிக்கையாலே
ஸூ திறனுக்கும் அதிகாரம் உண்டு என்பர் பூர்வ பக்ஷி
அதை நிரஸனம் செய்கிறார்

உபநயனம் செய்து வேத அத்யயனம் செய்து வேதாந்த ஞானத்தால் தான் ப்ரஹ்ம ஞானம் என்பது ஸாஸ்த்ர சித்தம்
இதிஹாஸ புராணாதிகள் ஸ்வ தந்திரமான உபாயங்கள் அல்ல -வேதாந்த விளங்கங்களே
விதுராதிகள் முன் ஜென்மத்தில் ப்ரஹ்ம வித்யா நிஷ்டர்கள் -அந்த ஸம்ஸ்காரமே இப்பிறவியிலும் தொடர்ந்தது
ஸூத்ர என்று அழைத்தது சோகம் அடைந்தவன் என்றவாறு -ஜாதி வசனம் அல்ல
தத நாதர ஸ்ரவணாத்-அந்த ஹம்ஸ ரூபம் கொண்ட இரு ரிஷிகளின் அநாதர வாக்யத்தைக் கேட்டு
ததா ஆத்ரவணாத்—ஜானை சுருதி ராஜா ரைக்குவரைத் தேடி ஓடி வந்ததால்
அஸ்ய -அந்த ஞான சுருதிக்கு
ஸூக் ஸூஸ்யதே ஹி –சோகம் காணப்படுகிறது அன்றோ

——————————————————————-

ஸூத்ரம் -97-ஷத்ரியத்வ கதே -ச-1-3-34-

தானம் அன்ன தானம் போன்றவை ஞானஸ்ருதி செய்ததால் அவன் ஷத்ரியன்-
ஸூத்ரர்களுக்கு ப்ரஹ்ம உபாசனை அதிகாரம் இல்லை

ஸம் வர்க்க வித்யையின் தொடக்கத்தில்
ஜானஸ்ருதிர் ஹ பவ்த்ராயண பஹு தாயீ -முதலிய வாக்யங்களால்
சிறந்த கொடையாளி -கிராமங்களை தானம் பண்ணினவன்
அன்னம் உண்பித்தவன் -என்று
ஷத்ரிய வர்ணாஸ்ரம நிறைந்தவன் என்பதாலும்
ஸூத்ரன் என்ற சங்கை வேண்டாம் –

———————————————————————

ஸூத்ரம் -98-உத்தரத்ர சைத்ரரதேன லிங்காத் —1-3-35-

உத்தரத்ர -இந்த வித்யையின் மேல் பகுதியில் ப்ராஹ்மண ஷத்ரியர்களுக்கே சம்பந்தம் காணப்படுகிறது
அதக ஸுநகம் காபேய மபி பிரதாரிணஞ்ச -இத்யாதி வாக்கியத்தில்
அபி ப்ரதாரீ என்று சைத்ரதரன் எனப்படும் ஷத்ரியன் சொல்லப்படுகிறான்
சைத்ரரதேன லிங்காத் —காபேயம் என்பதுடன் தொடர்பால் -லிங்கத்தால் -அபிப்ரதாரி என்பவன்
ஷத்ரியன் என்றும் சைத்ரதரன் என்றும் தோன்றுகிறது
மற்றோர் பிரகரணத்தில் காபேயனுடன் சம்பந்தம் உள்ளவன் சைத்ரரதன் ஷத்ரியனே என்றும் காணப்படுகிறது
ஏதே நவ சைத்ர ரதம் காபேயோ அயா ஜயன் -என்ற இடத்திலும்
சைத்ர ரதோ நாம ஏக க்ஷத்ர பதிர ஜாயத -என்கிற இடத்திலும் அவ்வாறே

ஆகவே இவ் வித்யையில் ப்ராஹ்மணரான ரைக்குவரை விட்டு
வேறான ஞானஸ்ருதியும் ஷத்ரியனாகவே இருக்க வேண்டும் என்று கருத்து –

சைத்த்ரரதன் என்பவன் ஷத்ரியன் என்பதற்கு அடையாளங்கள் உண்டே –
சம்வர்க்க வித்யையில்-சௌனகன் மகனான காபேயனும்-
காஷ சே நி என்பவரின் மகனான அபிப்ராதாரி இருவரும் உணவு உன்ன அமர்ந்த போது
ஒரு பிரமச்சாரி வந்து பிச்சை கேட்க –
இங்கு காபேயன் பிராமணன் என்றும் அபிப்ரதாரி ஷத்ரியன் என்றும்
ஏதேர வை சைத்ரரதம் காபேயா அயாஜயன் -என்பதன் மூலம் காபேயன் பிராமணன் என்றும்
சைத்ரரதோ நாம ஏக ஷத்ரபதி ஜாயத -என்பதன் மூலம்
அபிப்ரதாரி ஷத்ரியன் என்று அறியலாம்

இத்தால் காபேயனுடன் ப்ரஹ்ம விதியை பயின்ற அபிப்ரதாரி -சைத்ர ரத வம்சத்தில் வந்தவன் -ஷத்ரியன் என்றும்
ரைக்ருவர் உடன் தொடர்புடைய ஞான ஸ்ருதியும் ஷத்ரியனாக இருக்க வேண்டும் –

அதனால் ஸூத்ரர்களுக்கு ப்ரஹ்ம வித்யையில் அதிகாரம் இல்லை என்றதாயிற்று

————————————————————–

ஸூத்ரம் -99-சம்ஸ்கார பராமர்சாத் தத பாவாபி லாபாத் ச –1-2-36-

ப்ரஹ்ம வித்யை கூறும் வரிகளில் உப நயனம் பஞ்ச சம்ஸ்காரங்கள் கூறப்படுவதாலும்-
சாந்தோக்யம் உபத்வா நேஷ்யே-உப நயனம் செய்து வைக்கின்றேன் -என்று உள்ளது
ப்ரஹ்ம விதியை பற்றி சொல்லும் பகுதியில் –
ந ஸூத்ரே பாதகம் கிஞ்சித் ந ச சம்ஸ்காரம் அர்ஹதி –
ஸூத்ரர்களுக்கு உப நயனம் போன்றவை பொருந்தாது என்பதாலும் அவர்களுக்கு
ப்ரஹ்ம உபாசனைக்கு அதிகாரம் இல்லை

சம்ஸ்கார பராமர்சாத் -வித்ய உபதேச பிரகரணத்தில் -உபத்வா நேஷ்யே -என்று உபநயனத்தைக் கூறுகையாலே
தத பாவாபி லாபாத் ச – ந ஸூத்ரே பாதகம் கிஞ்சித் ந ச சம்ஸ்காரம் அர்ஹதி –என்று
ஸூத்ரனுக்கு உப நயனம் இல்லை என்று சொல்வதால் ஞானசுருதி ஸூத்ர ஜாதியன் அல்லன் –

எனவே ஸூத்ரர்களுக்கு ப்ரஹ்ம வித்யையில் அதிகாரம் இல்லை என்றதாயிற்று-

—————————————————————-

ஸூத்ரம் -100-தத் பாவ நிர்த்த்தாரேண ச ப்ரவ்ருத்தே —1-3-37-

நைதத் அப்ரஹ்மணோ வேத்தும் அர்ஹதி
ஸூத்திரன் அல்ல என்பதை உறுதி செய்த கொண்ட பின்பே ப்ரஹ்ம வித்யை உபதேசிக்கப் பட வேண்டும்

ஜபாலை என்பவரின் குமாரன் சத்யகாமன் ஒரு குருவிடம் ப்ரஹ்ம வித்யை கற்க செல்ல –
உனது கோத்ரம் என்ன என்று கேட்டதும் தெரியாது என்று சொன்னதும்
இத்தை கேட்டதும் பிராமணன் மட்டுமே இப்படி உண்மை சொல்வான் –
எனவே உனக்கு ப்ரஹ்ம வித்யை உபதேசிக்கிறேன் -என்றார் –

——————————————————————-

ஸூத்ரம் -101-ஸ்ரவணாத் யய நார்த்த பிரதிஷேதாத் —1-3-38-

ஸூத்ரர்கள் வேதத்தைக் கேட்பதும் பொருளை ஆராய்வதும் அதன் பலனை பெறுவதும் கூடாது என்று வேதங்கள் கூறும்
தஸ்மத் ஸூத்ர சமீபே நாத்யேதவ்யம்-என்பதாலும்
ஸூத்ரர்களுக்கு ப்ரஹ்ம உபாசனைக்கு அதிகாரம் இல்லை –

——————————————————————–

ஸூத்ரம் -102-ச்ம்ருதே ச-1-3-39-

ஸ்ம்ருதிகளும் ஸூத்ரர்கள் வேதம் கேட்டால் காதை அறுக்க வேண்டும் –
வேதம் ஓதினால் நாக்கை அறுக்க வேண்டும்
மனப்பாடம் செய்தால் உடலை அறுக்க வேண்டும் என்பதால் அதிகாரம் இல்லை-

அத ஹாஸ்ய வேதம் உப ஸ்ருண்வதஸ் த்ரபு ஜதுப்யாம் ஸ்ரோத்ர பரிபூரணம் –இத்யாதி
ஸ்ம்ருதியாலும் ஸூத்ரனுக்கு ப்ரஹ்ம வித்யையில் அதிகாரம் இல்லை என்று ஸித்தம்

அப ஸூத்ராதி கரணம் சம்பூர்ணம்

—————————————————————–

ஸூத்ரம் -103–ப்ரமிதாதி கரணம் சேஷம்-1-3-39-

அங்குஷ்ட ப்ரமித அதிகரணத்தில் மனுஷ்ய உபாஸன அதிகாரம் பற்றிய பேச்சால்
ப்ராசங்கிகமாக மூன்று அதிகரணங்களில் தேவதாதி அதிகாரத்தை பிரஸ்தாபித்து
ப்ரக்ருதமான அங்குஷ்ட பிரமிதனுக்குப் பரமாத்மத் வத்தை
இரண்டு ஸூத்ரங்களாலே சாதிக்கிறார் –

ஸூத்ரம் -104-கம்ப நாத் –1-3-40

அங்குஷ்ட மாத்ரனைக் கண்டு தேவர்களும் அஞ்சி நடுங்குவதால் அவனே பரம் பொருள் –

கட உபநிஷத் –
யதிதம் கிஞ்ச ஜகத் சர்வம் பிராண எஜதி நிஸ்ஸ்ருதம்
மஹத்பயம் வஜ்ர முத்யதம் ய ஏதத் விதுரம் ருதாஸ்தே பவந்தி
பயதா ச்யாக் நிஸ் தபதி பயாத் தபது ஸூர்ய
பயா இந்திரஸ்ஸ வாயுஸ்ஸ ம்ருத்யுர் தாவாதி பஞ்சம-

தைத்ரிய உபநிஷத் –
பீஷாஸ்மாத் வாத பவதே பீஷோ தேதி ஸூர்ய
பீஷாஸ் மாதக் நிஸ் சேந்த்ரஸ்ஸ ம்ருத்யும் தாவதி பஞ்சம –

இப்படிப்பட்ட பெருமைகளை யுடையவனே பர ப்ரஹ்மம்-

——————————————-

ஸூத்ரம் -105-ஜ்யோதிர் தர்சநாத் –1-3-41-

அங்குஷ்ட மாத்ரனை மிகுந்த ஒளி உள்ளவனாகச் சொல்லுவதால் அவனே பரம் பொருள் –

கட உபநிஷத் –
ந தத்ர ஸூர்யோபாதி ந சந்திர தாரகம் நேமா வித்யுதோ பாந்தி குதோயம் அக்னி –
தமேவ பாந்த மநு சர்வம் தஸ்ய பாஸா சர்வமிதம் விபாதி –

இப்படிப்பட்ட பெருமை உடையவன் பரம் பொருளாகவே இருக்க முடியும்-

ப்ரமிதாதி கரணம் சேஷம் சம்பூர்ணம்

————————————————–

1-3-10-அர்த் தாந்தரத்வ அதி வ்யபதேச அதிகரணம் -ஆகாயம் எனபது ப்ரஹ்மமே-

முன்பு அங்குஷ்ட பிரமிதம் பரமாத்மா என்று சாதிக்கப் பட்டது
அதற்கு முன் தஹர வித்யை புத்தியில் இருப்பதால்
அதற்கு அடுத்த ப்ரகரணத்தில் உள்ளதும்
தஹர வித்யைக்கு அங்கமுமான
ஆகாஸோ ஹவை நாம ரூபயோர் நிர்வஹிதா என்னும் வாக்யத்தில் முக்தாத்மாவே பேசப்படுகிறான்
என்று சங்கித்து
நிராகரிக்கிறார் என்று சங்கதி

ஸூத்ரம் -106-ஆகாச அர்த்தாரந்த்வாதி வ்யபதேசாத் —1-3-42-

ஆகாசத்துக்கும் மற்றவற்றுக்கும் வேறுபாடுகள் தெளிவாகக் காட்டப் பட்டுள்ளதால் ஆகாயம் எனபது பரம் பொருளே

முக்தி பெற்ற ஜீவனே ஆகாசம் என்பர் பூர்வ பஷி –

சாந்தோக்யம் –
அஸ்வ இவ ரோமாணி விதூய பாபம் சந்திர இவ ராஹோர் முகாத் ப்ரமுச்ய
தூத்வா சரீரமக்ருதம் க்ருதாத்மா ப்ரஹ்ம லோகமபி சம்பவாமி –

சித்தாந்தம் –
ஆகாயத்தைக் கூறும் பொழுது –
நாம ரூபயோர் நிர்வஹிதா -பெயர் மற்றும் உருவங்களை நிர்வஹிப்பவன்
என்பதால் ஆகாயம் ஜீவன் அல்ல பரம் பொருளே –

ஆகாச -ஆகாசம் எனப்படுவது பரமாத்மாவே -முக்தன் அல்லன்
ஏன் எனில்
அர்த்தாரந்த்வாதி வ்யபதேசாத் —பரமாத்மாவுக்கு அசாதாரணமான நாம ரூபங்களை நிர்வஹித்தலும்
அவற்றால் ஸம்பந்தப்படாமையும் கூறப்படுவதாலும்
மேலும்
நிருபாதிக ப்ரஹ்மத்வம் அம்ருதத்வம் ஆத்மத்வம் இவற்றாலும்
ஆகாசம் என்பது பரமாத்மாவே –

———————————————————

தத்வ மஸி -என்று ஜீவனுக்கும் ப்ரஹ்மத்துக்கும் ஐக்யம் சொல்லுவதாலும்
நேஹ நா நாஸ்தி -என்று பேதத்தைத் தடுப்பதாலும்
ஜீவனைக் காட்டிலும் பரமாத்மாவுக்கு அர்த்தாந்தரம் சொன்னது தகாது என்ற சங்கை தோன்ற
விடை தருகிறார் –

ஸூத்ரம் -107-ஸூஷூப்த்யுத் க்ராந்த்யோ பேதேந –1-3-43-

தூங்கும் பொழுது உள்ள ஜீவனும் உயிர் பிரியும் பொழுது உள்ள ஜீவனும் வெவ்வேறு என்பதால்
ஜீவன் வேறு பரம்பொருள் வேறு

பூர்வ பஷி –
தத்வ மஸி–
அஹம் பிரம்மாஸ்மி –
நேஹ நா நாஸ்தி -என்பர்

சித்தாந்தம் –
ப்ருஹத் உபநிஷத் –
ப்ராஜ்ஞே நாத் மநா சம்பரிஷ்வக்தோ ந பாஹ்யம் கிஞ்சன வேத நாந்தரம் –
ஜீவன் உறங்கும் பொழுது பரம் பொருளால் அணைத்துக் கொள்ளப் படுகிறான் –
அப்பொழுது அவனுக்கு எதுவும் தெரியாத நிலையில் உள்ளான் என்றும்

ப்ராஜ்ஞே நாத் மநான் வாரூட உத்சர்ஜன்யாதி -என்று
பரம் பொருளுடன் சென்று சேர்த்தி பெறுகின்றான்

எனவே ஜீவனும் பரம் பொருளும் ஓன்று அல்ல -ஆகாயம் பர ப்ரஹ்மமே ஜீவன் அல்ல-

வ்யபதேசாத்-என்ற பதத்தைக் கூட்டிக் கொள்ள வேண்டும்
ஸூ ஷூப்த்யுத் க்ராந்த்யோ பேதேந –ஸூ ஷூப்ததி தசையிலும் யுத்க்ராந்தி தசையிலும்
அத்யந்த அஞ்ஞனனான ஜீவனைக் காட்டிலும்
யோ பேதேந –அதே சமயத்தில் ஸர்வஞ்ஞனான ஜீவனைக் குறிப்பிடுவதால் இரண்டும் வெவ்வேறே
பரமாத்மா அர்த்தாந்தர பூதனானவனே என்றவாறு –

————————————————————-

ஸூத்ரம் -108-பத்யாதி சப்தேப்ய —1-3-44-

பதி என்ற பதம் மூலம் ப்ரஹ்மம் அழைக்கப் படுவதால் அவனும் ஜீவனும் ஓன்று அல்ல

ப்ருஹத் உபநிஷத் -சர்வஸ்யாதி பதிஸ் சர்வஸ்ய வஸூ சர்வஸ் யேசாந-என்று
அனைத்துக்கும் நாயகன் -நியமிப்பவன் -சர்வேஸ்வரன் என்பதால்
பரம் பொருளும் ஜீவனும் வேறு -ஆகாசம் எனப்படுபவன் பரம் பொருளே –என்றதாயிற்று-

பத்யாதி சப்தேப்ய -ஸர்வஸ்ய அதிபதி –ஸர்வஸ் ஈஸாநா –ஸர்வஸ்ய வஸீ –இத்யாதிகளால்
தழுவப்படும் ப்ராஞ்ஞனை பதி என்றும் -ஈஸாநா என்றும் வஸீ என்றும் சொல்வதால்
ஆகாசம் பரமாத்மாவே என்று ஸித்தமாயிற்று
ஐக்யம் கூறியதும்
பேதத்தைத் தடுத்ததும்
ஸர்வ ஜகத்துக்கும் அந்தர்யாமி ஒருவனே
ஆதலாலும் ப்ரஹ்ம சரீரம் இல்லாத வஸ்துவே உலகில் இல்லாமையாலும் பொருந்தும் என்று
ஸர்வம் கல்விதம் ப்ரஹ்ம தஜ்ஜலான் -என்ற ஸ்ருதியிலே நன்கு கூறப்பட்டது என்று திரு உள்ளம்

அர்த் தாந்தரத்வ அதி வ்யபதேச அதிகரணம் சம்பூர்ணம்

———-

பத்து அதிகரணங்களால் கூறப்பட்ட கருத்துக்கள்

1-த்யுப் வாத் யாயதனம் –விஸ்வமே பகவானுக்கு ஆத்மா
2-பூமா -எல்லையற்ற கருணை
3-அக்ஷர -நியமனமும் ஸர்வ ஆதாரத்வமும்
4-ஈஷதி கர்ம வ்யபதேசம் -முக்தர்களுக்கு போக்யமான ஸ்வ பாவம்
5-தஹர -தஹரமான தன்னை ஆதாரமாகக் கொண்ட அனைத்தையும் கொண்டமை -தஹர ஸ்வாதார ஸர்வத்வம்
6-ப்ரமித -ஹ்ருதயத்தில் பரிமிதனாய் இருந்து ஸர்வ நியாந்தாவாதல்
7-தேவதா -தேவதைகளால் உபாஸிக்கப் படுதல்
8-மத்வதி கரணம் -வஸூ வாதி தேவதைகளால் ஸ்வ சரீரக பரமாத்மா உபாஸிக்கப் படுத்தல்
9-அப ஸூத்ர –ஸூ த்ராதிகளால் உபாஸிக்கக் தகாத தன்மை
10-அர்த்தாந்தரத்வா திவ்ய பதேச -நாம ரூபாதி ஏக கர்த்ருத்வம்

என்ற பத்து கல்யாண குணங்களாலே பூஷிதனான ஸ்ரீயப்பதி புருஷோத்தமன்
இந்த மூன்றாம் பாதத்தால் விசாரித்து ஸ்தாபிக்கப் பட்டான் –
என்று ஸ்வாமி தேசிகன் அருளுகிறார் –

————–—————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஸ்ருதி பிரகாசர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ போதாயனர் -வ்ருத்தி காரர் – ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பாதராயணர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-