ஸ்ரீ பாஷ்யார்த்த தீபிகை –முதல் அத்யாயம் –நான்காம் பாதம் —

ஸ்ரீ பாஷ்யம் -மங்கள ஸ்லோகம்

அகில புவன ஜன்ம ஸ்தேம பங்காதி லீலே
விநத விவித பூத வ்ராத ரக்ஷைக தீஷே
ஸ்ருதி சிரஸி விதீப்தே ப்ருஹ்மணி ஸ்ரீ நிவாஸே
பவது மம பரஸ்மின் சேமுஷீ பக்தி ரூபா –

பாராசார்ய வச ஸூதாம் உபநிஷத் துக்தாப்தி மத்யோத் த்ருதாம்
சம்சாராக்னி விதீபன வ்யபகாத ப்ராணாத்மா சஞ்சீவி நீம்
பூர்வாச்சார்ய ஸூரஷிதாம் பஹூ மதி வ்யாகாத தூரஸ்தி தாம்
ஆ நீதாம் து நிஷாஷரை ஸூ மனஸோ பௌமா பிபந்து அந்வஹம்–

—————————————————————-

முதல் அத்யாயம்-சமந்வய அத்யாயம்-
நான்காம் பாதம் -அந்ய யோக வியவச்சேத பாதம் -ஸ்பஷ்ட தர ஜீவாதி லிங்க வாக்ய விசாரம்-
8-அதிகரணங்கள் –29 ஸூத்ரங்கள்

————–

ஆகாசம் என்ற சொல் முக்தனைக் குறிக்காமல் அவ்வாக்கியத்தில் சொல்லப்படும்
ப்ரஹ்ம லோகத்தைச் சொல்லும் என்று
கீழ் அதிகரணத்தில் கூறியது போலே -இங்கும்
அவ்யக்தாத் புருஷ பர -என்ற இடத்தில் அவ்யக்தம் என்ற சொல்லும்
ப்ரஹ்மாத்மகம் அல்லாத பிரதானத்தைக் குறிக்கலாம் என்று சந்தேகித்து
உருவகமாக வைத்து வர்ணிக்கும் வாக்யாந்தரத்தில் கூறப்பட்ட
சரீரத்தைக் குறிப்பதாக ஸ்தாபிக்கப் படுகின்றது என்று சங்கதி –

1-4-1-ஆநுமாநிகாதி கரணம் -பிரகிருதி உலகின் காரணம் இல்லை

107–ஆநுமாநிகம் அபி ஏகேஷாம் இதி சேத் ந சரீர ரூபக விந்யஸ்த க்ருஹூதே தர்சயதி ச –1-4-1-

பிரக்ருதியும் காரணப் பொருளாக உபநிஷத் வாக்யங்கள் உள்ளன என்பர் -அது சரி அல்ல –
உடலை உருவகப் படுத்தவே அப்படி சொல்லப் பட்டது

கட உபநிஷத் –
இந்த்ரியேப்ய பரா ஹ்யர்த்தா அர்த்தேப் யஸ்ஸ பரமமந
மநசஸ்து பரா புத்திர் புத்தேராத்மா மஹான்பர
மஹத பரம வ்யக்த மவ்யக்தாத் புருஷ பர
புருஷான்ன பரம் கிஞ்சித் சா காஷ்டா சா பராகதி –என்று
புலன் -பொருள்கள் -மனம் -அறிவு -மஹான்-அவயகதம் உடல் -புருஷன் -இதை விட மேல் ஒன்றும் இல்லை –

இது சாங்க்ய மதம் ஈஸ்வர தத்தவத்தை ஒத்துக் கொள்ளவது இல்லை –
ஸூத்ர காரர் இந்த சங்கையை அனுவதித்துக் கண்டிக்கிறார்

ஏகேஷாம் -கடகர்களுடைய சாகையிலே -இந் த்ரியேப்ய பரா ஹ்யர்த்தா-இத்யாதியிலே
ஆநுமாநிகம் அபி -அனுமானிக்கப்படும் அப்ரஹ்மாத்மக பிரதானமும் ஜகத்துக்குக் காரணமாக
மஹத பரம் அவ்யக்தம் -எனப்பட்டது
இதி சேத் ந -என்பது தகாது -அப்ரஹ்மாத்மக பிரதானம் காரணம் என்று கூறப்படவில்லை
சரீர ரூபக விந்யஸ்த க்ருஹூதே தர்சயதி ச –உருவகத்தால் அவ்யக்தம் பிரதானம் சரீரமே
ஜீவனும் அல்லன்
பரம புருஷனே அந்தர்யாமியாய் இருந்து உபாஸனத்தை நடத்தி வைக்கிறான் என்று
அவனே வசீகரிக்க வேண்டியவற்றுள் பரம காஷ்டை -பேர் எல்லை -என்று கூறப்படுகிறது
அவன் இடம் சரணாகதி செய்வதே அவனை வசீகரிப்பது
யச்சேத் வாங் மனஸீ ப்ராஞ்ஞா -என்று இவ்வர்த்தத்தையே ஸ்ருதி காட்டுகிறது

சித்தாந்தம் –
முன்னால் அதே உபநிஷத்தில் யமன் நசிகேதனிடம்
ஆத்மானம் ரதினம் வித்தி சரீரம் ரதமேவ ச
புத்திம் து சாரதிம் வித்தி மன பிரக்ரஹமேவ ச
இந்த்ரியாணி ஹயா நா ஹூர் விஷயாம்ஸ் தேஷு கோசாரான்-என்றும்

விஜ்ஞாந சாரதிர் யஸ்து மன ப்ரக்ரஹ வான் நர
சோத்வன பாரமாப் நோதி தத் விஷ்ணோ பரமம் பதம் -என்றும்

உடலைத் தேராகக் கொண்டு மன உறுதியை தேர் ஒட்டுபவனாகவும் -மனத்தை கடிவாளமாகவும்
புலன்களை குதிரைகளாகவும் உலக விஷயங்களை பாதையாகவும்
யார் ஒருவனுக்கு இந்த தேர் சரியாக ஓடுகின்றதோ அவன் பரமபதம் சென்று அடைகின்றான்

இத்தால்
பூர்வ பஷ வாதங்கள் உடைக்கப் படுகின்றன-

அவ்யக்தம் என்பதற்கு சரீரம் என்று எப்படி பொருள் வரும் என்பதை மேலே காட்டுகிறார் –

————————————————————-

108–ஸூஷ்மம் து ததர்ஹத்வாத் –1-4-2-

ஸூட்சும தசையில் உள்ள பிரகிருதி ஒருவகையாக மாறுதலை அடைந்து உடலாகி –
ஸ்தூல உடலாலே கார்யங்கள் செய்ய வேண்டுமே –
இந்த உடலே ஜீவன் என்னும் என்னும் தேரினை அதன் இலக்குக்கு எடுத்துச் செல்ல உதவும்-

து சப்தம் ஏவ என்ற பொருளில் வந்தது
ஸூஷ்மந்து-அவ்யக்தம் தான் -வேறு அவஸ்தை பெற்று சரீரம் ஆகிறது
ததர்ஹத்வாத்-அந்த சரீர அவஸ்தமான ப்ரதானமே உபாசன அனுஷ்டானத்துக்குத் தகுதி உள்ளதாக ஆகின்றது
அதனால் காரண வாசக ஸப்தம் கார்யத்தைக் குறிக்கிறது

ரூபகம் செய்யப்பட ஆத்மாதிகள் வசீகரிக்கத் தக்கவையில் சிறந்த
இந்த்ரியம் அர்த்தம் முதலியவற்றால் க்ரஹிக்கப் பெற்றால்
அவ்யக்தாத் புருஷ பர -என்று
புருஷனை ஏன் கிரஹிக்க வேண்டும் என்பதற்கு மேல் விடை அளிக்கிறார் –

————————————————————

109-தத் அதீனத்வாத் அர்த்தவத் –1-4-3-

பிரகிருதி எனபது பரம் பொரூடன் தொடர்பு கொண்டால் மட்டுமே பயனுள்ளதாக இருக்கும்
சாங்க்ய மதம் போலே பிரகிருதி மாறும் என்பதை ஒத்துக் கொண்டாலும் தன்னிச்சையாக செயல்பட முடியாது
பரம் பொருளின் ஆணைக்கு இடங்க நடந்தால் மட்டுமே பயனுள்ளதாகும்-

தத் அதீனத்வாத் -ஆத்ம சரீராதிகள் அந்தர்யாமியான புருஷனுக்கு ஆதீனம் ஆகையாலே
அர்த்தவத் –பிரயோஜனம் உள்ளதாகிறது
ஆகவே உபாசனம் கை கூடுவதற்கு வசப்படுத்த வேண்டிய இந்திரியாதிகளுக்கு எல்லை நிலனாயும்
பரம ப்ராப்யனாயும் இருக்கிறான் என்ற சொல் புருஷனைப் பற்றிக் கூறியது என்பது வேதாந்த தீபத்தின் விடை
ஸ்ரீ பாஷ்யத்திலோ பிரதானத்தை ஏற்பதும் மறுப்பதும் முரண் பட்டதாதலால் எப்படிக் கூடும் என்று சந்தேகித்து
ஸ்வ தந்திரமாக பிரதானத்தை ஏற்க வில்லை
பின் என் எனில் பரம புருஷன் பிரேரணனையால் ஸ்ருஷ்டியாதிகளில் ப்ரவர்த்திப்பதால் பிரயோஜனம் உள்ளது
என்று விடை கூறப்படுகிறது –

——————————————————————–

110-ஜ்ஞேயத்வா வசநாத் ச–1-4-4-

சாங்க்ய மதத்தின் படி அவ்யக்த-பிரகிருதி – ஞானம் பற்றியே
மோட்ஷம் என்று உபநிஷத் கூற வில்லை-

தந்த்ர சித்த ப்ரக்ரியை இவ்வாக்கியத்தில் சம்மதமானால் அவ்யக்தம் ஜேயம் என்று எண்ண வேண்டும்
வ்யக்தம் அவ்யக்தம் ஜேயன் -இவை பற்றி அறிவதால் என்று அல்லவோ சாங்க்யர்களின் முறை
இந்த சாகையில் அவ்யக்தம் ஜேயமாம் முமுஷுக்கு என்று கூற வில்லை
சாங்க்ய ப்ரக்ரியைக்கு இங்கு ஸம்பந்தமே இல்லை –

———————————————————————-

111–வததி இதி சேத் ந ப்ராஜ்ஞோ ஹ பிரகரணாத்–1-4-5-

கடவல்லி -3-15-
அசப்தம் அஸ்பர்சம் அரூபம் அவ்யயம் தத் அரசம் நித்யம் அகந்த வச்ச யத்-
அநாதி அநந்தம் மஹத பரம் த்ருவம் நிசாய்ய தம் ம்ருத்யுமுகாத் ப்ரமுச்யதே–

இந்த வரிகளுக்கு முன்னால்
விஜ்ஞான சாரதி யஸ்து மன ப்ரக்ரஹ வான்னர
சோத்வன பாரமாப் நோதி தத் விஷ்ணோ பரமம் பதம்-என்றும்

அதற்கு கீழே –
ஏஷ சர்வேஷூ பூதேஷு கூடோத்மாந பிரகாசதே
த்ருச்யதே த்வகர்யயா புத்த்யா ஸூ ஷ்மயா ஸூஷ்ம தர்சிபி – என்று இருப்பதால்

சாங்க்ய வாதம் புருஷர்களை விட மேல் இல்லை எனபது உடைக்கப்பட்டு
பரம் பொருள்
யத்த தத்ரேச்யம் -முண்டகம் -என்றும் –
புத்தரோத்மா மஹான் பர -என்றும்
மேலானவன் என்று உணர முடியலாம்-

இவற்றால் பரம புருஷனே சொல்லப்படுகிறான் -பிரதானம் அன்று
பரம் ஆப்நோதி தத் விஷ்ணோ பரமம் பதம் என்று ப்ராஞ்ஞனுக்கு உரிய பிரகரணம் ஆகையாலே

—————————————————

112-த்ரயாணாம் ஏவ ச ஏவம் உபன்யாச ப்ரசன ச –1-4-6-

மூன்றைப் பற்றிய கேள்வியும் பதிலுமே உள்ளதால் பிரக்ருதியைப் பற்றிக் குறிப்பிட வில்லை என்று அறியலாம்
உபாயமும் உபேயமும் உபேதாவையும் -மூன்றையும் பற்றியே உண்டு –

யமனிடம் இருந்து மூன்று வரங்களைப் பெற்ற நசிகேதன்
முதல் வரத்தின் முலம் தந்தையை அருகில் கேட்டான்–
இரண்டாம் வரத்தின் முலம் அக்னியைக் குறித்துக் கேட்டான் –
மோட்ஷம் பெற்றவர் சென்று அடையும் இடம் –மோட்ஷம் பெற விரும்புவர்களின் தன்மைகள் -வழி ஆகியவற்றை பற்றி –
ந ஜாயதே ம்ரியதே வா -அணோர் அணீயான்–இத்தா வேத யத்ரச-துர்க்கம் பதஸ்தத் கவயோ வதந்தி-

இந்தப் ப்ரகரணத்தில் -யேயம் ப்ரேத விசிகித்சா மனுஷ்யே-என்று தொடங்கி
இறுதி வரை உபாஸ்யன் -உபாஸகன் -உபாஸனம் -மூன்று அர்த்தங்களும்
இவ்வாறு அறியத்தக்கன என்று உபந்யாஸமும் வினாவும் உள்ளன
ஆதலால் அப்ரஹாத்மகமான பிரதானத்தை ஜேயம் என்று கூற வில்லை –

ஆக மூன்றிலும் பிரக்ருதியைப் பற்றி இல்லை-

——————————————————

113-மஹத்வத் ச –1-4-7-

மஹத் என்று கூறும் இடத்திலும் பிரக்ருதியைப் பற்றி கூறவில்லை
புத்தேராத்மா மகான் பர –
மஹத் தத்துவத்தை விட அது உயர்ந்தது என்று கொண்டால் -சாங்க்ய மத மஹான் பற்றி இல்லை
புத்திக்கு மேலே உள்ள ஆத்மாவைப் பற்றி -என்று ஆத்மாவுக்கு விசேஷணமாகவே கொள்ள வேண்டும்

ஆத்மா எல்லாவற்றையும் விட மஹத்தான பரம் என்று திரு உள்ளம்

மேலும் மஹத பரம் அவ்யக்தம் -என்று மஹானை விட மேலானது அவ்யக்தம்-
இங்கு சாங்க்ய மத அவ்யக்தம் பிரகிருதி பற்றி இல்லை-

ஆநுமாநிகாதி கரணம் சம்பூர்ணம்

———————————————————

1-4-2-சமசாதிகரணம் -ப்ரஹ்மத்தை அந்தர்யாமியாகக் கொண்டு உள்ளது பிரகிருதி-

பரிசேஷ க்ரமத்தாலும் ஸ்தான ப்ரமாணத்தாலும் அவ்யக்தம் என்பது அவ்யக்தத்தின் -பிரதானத்தின் -கார்யமான
சரீரத்தைச் சொல்வது என்று முன் ஸ்தாபித்தார்
அதே காரணத்தால் அஜாமேகம் என்ற இடத்திலும் அஜா ஸப்தம் அவ்யக்த்தத்தைக் குறிப்பிட்டதாகட்டும்
என்ற பூர்வ பக்ஷம் கூறி
அப்ராஹ்மத்மகமான பிரதானம் அதன் பொருள் அன்று என்று
இவ்வதி கரணத்தில் ஸ்தாபிக்கிறார் –

114-சமசவத் அவிசேஷாத்-1-4-8-

உபநிஷத்தில் சமசம் -பதம் தெளிவாக கூறப்பட்டுள்ளது –
ஸ்வேதரா-4-5-
அஜாம் ஏகம் லோஹித ஸூக்ல கிருஷ்ணாம் பஹ்வீ பிரஜா ஸ்ருஜமா நாம் சரூபா
அஜோ ஹி ஏகோ ஜூஷமாண அநு சேதே ஜஹாத் யேநாம் புக்த போகாம் அஜ அன்ய-
சமசம் எனபது யாகங்களில் உதவும் ஒரு பாத்ரம் –

பிருஹு –4-2-3-
இதம் தச்சிர ஏஷ ஹி அர்வாக்பிலஸ் சமச ஊர்த்வ புத்ன–என்று-இப்படி மேலே பருத்து கீழே துளை உள்ளது
தலையே -மண்டை ஓடே -ஆகும் நமது தலையைக் குறிக்கும்
அஜா பிறப்பற்ற பிரக்ருதியைக் குறிக்கும்-

ப்ரக்ருதி என்றே பூர்வ பக்ஷம்
ஏன் எனில்
அஜாம் என்று உத்பத்தி இல்லாமை கூறப்படுவதாலும்
ஏராளமான பிரஜைகளுக்குத் தானே ஸ்ருஷ்டி கர்த்தா என்று கூறியதாலும்
என்ற இந்த பூர்வ பஷத்தை நிரசிக்கிறார் –

இந்த அஜா சப்தம் சாங்க்யர்கள் கூறும் பிரதானத்தை அன்று என்ற வாக்யத்தைத் தருவித்திக் கொள்ள வேண்டும் –
சமசவத் அவிசேஷாத்—அர்வாக்பிலஸ் சமச ஊர்த்வ புத்ன–என்ற மந்திரத்தில் சமசத்திற்கு -பஷிப்பதற்கு சாதனம்
என்ற காரணத்தால் சமஸ பதம் சிரசைச் சொல்வது போல்
அஜா மேகம் என்றதில் அஜாம் என்ற ஸப்தம் அப்ரஹ்மத்மக பிரதானத்தைச் சொல்வது என்கையில்
விசேஷ காரணம் இல்லாமையால் அது பொருந்தாது
ஸ்வ தந்திரமாக ஸ்ருஷ்டிப்பது என்ற ஒரு விசேஷணமும் இல்லை

ப்ரஹ்மாத்மிகை யானால் ப்ரக்ருதி ஸ்ருஷ்டி ஹேதுவாய் அஜா என்று கூப்பிடலாமே
ப்ரஹ்மாத்மிகையான அஜையைச் சொல்லுகையில் விசேஷ ஹேதுவை அருளுகிறார் மேல்

———————————————————————–

115-ஜ்யோதிர் உபக்ரமா து ததா ஹி அதீயதே ஏகே –1-4-9-

ஜோதியான பரம் பொருளைச் சார்ந்தே அஜா என்னும் பிரகிருதி உள்ளது –
தைத்ரியம் –
அணோர் அணீயான் மஹதோ மஹூயா நாத்மா–திஷ்டத் யந்தராத்மா-என்று
அஜா எனபது பரம் பொருளைச் சார்ந்த பிரக்ருதியே என்றதாயிற்று –

ஜ்யோதிர் உபக்ரமாது- ஜ்யோதி -ப்ரஹ்மம் -அத்தைக் காரணமாக் கொண்டதே இந்த அஜை
ததா ஹி அதீயதே ஏகே -தைத்ரியம் சொல்லுமே -பர ப்ரஹ்மத்தை உபபாதித்து -ஸப்த ப்ராணா ப்ரபவந்தி என்று
சகல ஜகத்தும் ப்ரஹ்மத்தில் இருந்து தோன்றுகின்றன -என்கிறதே
இதே போலவே ஸ்வேதாஸ்வர மந்த்ரமும் கூறும்

அப்படியாயின் ஒரே வஸ்துவுக்கு அஜாத்வமும் -ஜ்யோதி ரூப க்ரமாத்வமும் -ப்ரஹ்ம காரணத்வமும் –
பொருத்துவதற்கு ஹேது மேலே அருளிச் செய்கிறார் –

—————————————————————————-

116-கல்பந உபதேசாத் ச மத்வாதி வத் அவிரோத –1-4-10-

பிரகிருதி பிறப்பற்றது என்றும்
கல்பாதியிலே உருவாக்கப் பட்டது என்பதும் முரண் பட்டது இல்லை –

தைத்ரிய உபநிஷத்தில் -5-7-
சூர்யா சந்திர மசவ் ததா யதா பூர்வம் கல்பயந் -என்றும்

ஸ்வேதாஸ்வதார உபநிஷத்தில் –
அஸ்மான் மாயீ ஸ்ருஜதே விஸ்வமேதத்–4-9 -என்று படைக்கப் பட்டதை சொல்லிற்று –

சாந்தோக்யம் -மது வித்யையில்-
பிரளயம் முடிந்து உலகம் படைக்கப் பட்ட பின்பு –
அசௌவா ஆதித்யோ தேவமது -என்று தேவர்களுக்கு மதுவாக உள்ளதையும்
பிரளய காலத்தில் –
நை வோதே தா நாஸ்த மேதா-என்று சூரியன் மறைவதும் இல்லை உதிப்பதும் இல்லை -எனபது போலே –
இரண்டு நிலைகளுக்கும் முரண்பாடு இல்லை-

கல்பந உபதேசாத் ச -ஸ்வேதாஸ்வதார உபநிஷத்தில் –
அஸ்மான் மாயீ ஸ்ருஜதே விஸ்வமேதத்–என்று ஸ்ருஷ்ட்டியை உபதேசிகையாலே
பிரளய சமயத்தில் இந்த ப்ரக்ருதியானது பரம புருஷனுக்கு சரீரமாய் ஸூஷ்மமாய் உள்ளது
அந்த அவஸ்தையைக் கருதியே பிரக்ருதியை அஜா எனப்படுகிறது
ஸ்ருஷ்டி சமயத்தில் ஸ்தூல அவஸ்தை ஏற்படுவதால் ஜ்யோதிர் ரூப க்ரமாத்வம் -பொருந்துமே

மத்வாதி வத் அவிரோத –மது வித்யையில் கார்ய அவஸ்தையில் -அசௌவா ஆதித்யோ தேவமது-என்று மதுவாகக் கல்பனமும்
அதே ஆதித்யனுக்கு –அத தத ஊர்த்வ உததி அனேநை வோதேதா நாஸ்த மேதா-என்று முதலில்
காரண அவஸ்தையில் நாம ரூபங்களை விட்டமையால் ஸூஷ்ம ரூபமான இருப்பும் எப்படி முரண் பட்டவை இல்லையோ
அப்படியே இங்கும் இரண்டு தன்மைகளும் முரண் இல்லை –

சமசாதிகரணம் சம்பூர்ணம்

———————————————————————

1-4-3-சங்க்ய உப சங்க்ரஹாதி கரணம் -இந்த்ரியங்களுக்கு ப்ரஹ்மமே அந்தர்யாமி –

முன் அதிகரணத்தில் சாங்க்யர் கூறிய அப்ரஹ்மாத்மக அவ்யக்தத்தை விளக்கும்
அஜாமேகம் -ஸ்ருதியில் ஏற்பட்ட பூர்வ பக்ஷம் நிரசிக்கப் பட்டது
இதில் சாங்க்யர் கூறும் தத்வ சங்க்யை -எண்ணிக்கை யைக் கொண்டு
ஸ்ருத் யர்த்தத்தில் ஏற்படும் பூர்வ பக்ஷம் கண்டிக்கப் படுகிறது என்று சங்கதி –

117-ந சங்க்ய உப சங்கரஹாத் அபி நாநா பாவாத் அதிரேகாத் ச –1-4-11-

ப்ருஹத் ஆரண்யாகாவில்-4-4-17-
யஸ்மின் பஞ்ச பஞ்ச ஜனா ஆகாசாஸ்ஸ ப்ரதிஷ்டித தமேவ மன்ய ஆத்மானம் வித்வான் ப்ரஹ்மாத்ருதோம்ருதம் –
என்று
5 தன்மாத்ரைகள் -5-ஞான இந்த்ரியங்கள் -5 கர்ம இந்த்ரியங்கள் -பிரகிருதி -மனம் -அஹங்காரம் -ஆத்மா
என்று 25 தத்வமாக ஜீவனைக் குறித்து
இவற்றை அறிந்தால் மோஷம் பெறலாம் என்கிறது உபநிஷத்

25 கூறப்படுகின்றன என்று பூர்வ பக்ஷம்
பஞ்ச பஞ்ச ஜனா என்று ஐந்து ஜனங்களால் ஆரம்பிக்கப் பட்ட கார்யங்கள் ஐந்து ஆக 25 என்று
விசேஷிப்பதால் தத்வங்கள் தோன்றுகின்றன
மோக்ஷ ப்ரகரணத்தாலே அந்த ஸங்க்யை சாங்க்ய தந்த்ர யுக்தங்கள் என்று தோன்றுகிறது
தமேவ மன்ய ஆத்மானம் வித்வான் ப்ரஹ்மாத்ருதோம்ருதம் –என்றதும்
25 வது தத்வமான ஆத்மாவை ப்ரஹ்மம் என்று அறிந்தவன் முக்தன் ஆவான் என்கிறது
என்னும் பக்ஷத்தைக் கண்டிக்கிறார் –

சாங்க்ய மதம் போலே சுதந்திரமான தத்வங்கள் அல்ல
யஸ்மின்-என்று பரம் பொருளைச் சார்ந்தே உள்ளவை-

ந சங்க்ய உப சங்கரஹாத் அபி –25 எண்ணிக்கையை ஏற்றாலும் இந்த தத்வங்கள் அப்ராஹ்மத்வங்கள் அல்ல
நாநா பாவாத் –யஸ்மின் -என்று குறிப்பிட்ட ப்ரஹ்மம் அந்த தத்துவங்களுக்கு ஆதாரமான படியாலே
அப்ரஹ் மாத்மகமான தத்வங்களைக் காட்டிலும் இந்த தத்துவங்களுக்கு ப்ரஹ்மாத் கத்வத்தாலே பேதம் தோன்றுவதால்
அதிரேகாத் ச-யத் ஸப்தத்தால் சொல்லப்படும் ப்ரஹ்மமும் ஆகாசமும்
வேறாய் இருப்பதால் -அதிகமாய் இருப்பதால் -தத்வங்கள் 27 ஆகின்றன
ஸூத்ரத்திலே அபி ஸப்தத்தாலே ஸங்க்யையை அங்கீ கரிக்க வில்லை என்று ஏற்படுகிறது
ஆத்மாவுக்கும் ப்ரஹ்மத்துக்கும் ஐக்யமும் -ய ஆத்மனி திஷ்டன் -இத்யாதி ஸ்ருதியோடு முரண் பட்டது என்று முன்பே கூறப்பட்டது
பஞ்ச ஜனங்கள் என்பது கண் முதலிய இந்திரியங்கள் அவை ஐந்து என்பதே பஞ்ச பஞ்ச ஜனா என்பதின் பொருள் –
ஸப்த ஸப்தர்க்ஷய-என்பது போலே -என்பது திரு உள்ளம் –

———————————————————————–

118-ப்ராணாதய வாக்ய சேஷாத்-1-4-12-

பஞ்ச பஞ்ச ஜனா -ஐந்து பொருள்கள் –
ப்ருஹத் ஆரண்யாகாவில் 4-4-18-
பிராணஸ்ய பிராணமுத சஷூஷஸ் சஷூ ஸ்ரோத்ரஸ்ய ஸ்ரோத்ரம்-
அந்நஸ் யாந்னம்- மநஸோ யே மநோ விது—என்று –
பிராணன் கண் காது அன்னம் அல்லது நாக்கு மனம் என்பவை ஆகும்-

ஜனநாத் -ஜனங்கள் என்ற வ்யுத்பத்தியாலே இந்திரியங்கள் கூறப்படுகின்றன என்று கருத்து

அன்னஸ் யான்னம் -என்ற வாக்கியம் இல்லாமையால் பஞ்ச ஜனங்கள் ஐந்து என்று
எப்படி அறியப்படுகிறது
என்ற சங்கையை பரிஹரிக்கிறார் மேல் –

—————————————————————————

119-ஜ்யோதிஷா ஏகேஷாம் அஸத் அந்நே –1-4-13-

காண்வ முனிவரின் உபநிஷத் வரியில் அன்னம் என்று கூறவில்லை என்றாலும்
அதற்கு முந்திய வரியில்
தம் தேவா ஜ்யோதிஷாம் ஜ்யோதிராயூர் ஹோபாசதேம்ருதம் -ஜ்யோதிகள் அனைத்துக்கும் ஜ்யோதி என்று
புலன்கள் ஐந்துக்கும் ஜ்யோதியான பர ப்ரஹ்மத்தை சொல்லிற்று-

ஜ்யோதிஷா ஏகேஷாம் அஸ்தி அந்நே –
ஏகேஷாம் -காணவர்களின் வாக்ய சேஷத்தாலே
அஸத் அந்நே-அன்னம் என்ற பாடம் இல்லா விட்டாலும்
ஜ்யோதிஷா-தம் தேவா ஜ்யோதிஷாம் ஜ்யோதி -என்று தொடக்கத்தில் ஆறாம் வேற்றுமையான
ஜ்யோதிஸ் ஸப்தம் ப்ரஹ்மத்தைக் குறித்தால் ப்ரகாசகங்களுக்கும் ப்ரகாசங்கள் ப்ரஹ்மமே என்று தோன்றுகிறது
அந்தப் ப்ரகாசங்கள் எவை என்றால் -பஞ்ச பஞ்ச ஜனா என்று பொதுவாகச் சொன்ன பஞ்ச ப்ரகாசங்களை
பிராணஸ்ய பிராணம் முதலியவற்றிலே விசேஷிக்கிறது
பிராணஸ்ய-என்று த்வக் இந்திரியம் சொல்லப்படுகிறது
அன்னஸ்ய -என்று மூக்கும் க்ராண இந்த்ரியமும் ரசன இந்த்ரியமும் சேர்த்து கூறப்படுகின்றன
ஆகவே ஐந்து என்பதற்குத் தடையில்லை எனத் திரு உள்ளம்
ஆகவே யஸ்மின் பஞ்ச பஞ்ச ஜனா என்ற மந்திரத்தில் இந்த்ரியங்களுக்கும் ஆகாசாதி பூதங்களுக்கும்
ப்ரஹ்ம ஆஸ்ரயத்வம் கூறப்படுவது சாங்க்யரின் கருத்து அன்று –

சங்க்ய உப சங்க்ரஹாதி கரணம் சம்பூர்ணம்

——————————————————————————

1-4-4-காரணத்வாதி கரணம் -ப்ரஹ்மமே அனைத்துக்கும் காரணம் –

இப்படி மூன்று அதிகரணங்களால்
சாங்க்யர் கூறின சாகையை அனுசரித்த வாக்கியங்கள் பரமாத்மாவையே போதிப்பவை
என்று ஸ்தாபித்தவுடன்
அவர்கள் அப்ராஹ்மாத்மக பிரதானத்தையே போதிப்பதாகக் கூறும்
அவ்யாக்ருதம் முதலிய சொற்களும் பரமாத்மாவே பொருள் என்று
ஈஷத் யதிகரணாதிகளில் சொன்ன அர்த்தத்தை
இங்கு சிங்க நோக்கு முறையில் -ஸிம்ஹ அவலோகந-காட்டி ஸ்தாபிக்கிறார் –

120-காரணத்வேன ச ஆகாசாதிஷூ யதா வ்யபதிஷ்ட உக்தே –1-4-14-

ஆகாயம் உட்பட அனைத்துக்கும் காரணமாக பர ப்ரஹ்மமே உள்ளது என்று கூறப்பட்டதால்
ப்ரஹ்மமே உலகின் காரணப் பொருள் –

சாந்தோக்யம் -2-7-1-
சத் ஏவ சோம்ய இதம் அக்ர ஆஸீத் -சத் என்பதே காரணப் பொருள்

தைத்ரிய உபநிஷத்தில் -3-19-1-
அசத் ஏவா இதம் அக்ர ஆஸீத் -என்று முதலில் அசத் என்பதே காரணப் பொருள்

ப்ருஹத் உபநிஷத்தில் -1-4-7-
தத் ஏதத் தர்ஹி அவ்யாக்ருதம் ஆஸீத் -என்று காரணப் பொருள் அவ்யாக்ருதமாக இருந்தது
சாங்க்ய மதத்தில் அவ்யாக்ருதம் பிரகிருதி

ஜகத்துக்குக் காரணத்தைக் கூறும் -தத்தே தந்தர் ஹி அசதே வேதம் –இத்யாதி வாக்கியங்கள்
பிரதானத்தைக் காரணமாக் கூறுபவைவா
அன்றி ப்ரஹ்மத்தைக் காரணமாக் கூறுபவையா என்று சம்சயம்
பிரதான காரண வாத பரங்களே -பூர்வ பக்ஷம்
ஏன் எனில்
ஸதேவ சோம்ய இதம் அக்ர ஆஸீத் -என்று சில இடங்களில் ஸத் காரணம் எனப்படுகிறது

சில இடங்களில் அசதே வேதம் அக்ர -என்று அஸத் காரணம் எனப்படுகிறது
அவ்வாறே தத்தே தந்தர் ஹி அவ்யாக்ருதம் ஆஸீத் -என்று அவ்யாக்ருதம் காரணம் எனப்படுகிறது
அவ்யாக்ருதம் என்பதே பிரதானம்
ஆதலின் பிரதானம் காரணமாகையாலே ஸகல வாக்கியங்களும் பிரதானத்தையே காரணம் என்கின்றன
என்ற பூர்வ பக்ஷத்தைக் கண்டிக்கிறார் –

தைத்ரியம் -2-1-1-
சத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்மம்-என்றும் தஸ்மாத் வை ஏ தஸ்மாத் ஆத்மான ஆகாச சம்பூத் -என்று
பரமாத்வா விடம் இருந்து ஆகாசம் தோன்றிற்று என்றும்

சாந்தோக்யம் -6-2-3-
தத் ஐ ஷத பஹூச்யாம் -பலவாக தோன்றுவேன் என்பதால் சத் அசத் அவ்யாக்ருதம்
போன்றவையும் ப்ரஹ்மத்தை குறிக்கும் பதங்கள்

ப்ருஹத் உபநிஷத்தில் -1-4-7-
தத் நாம ரூபாப்யம் வ்யாக்ருத யதா -என்று
இத்தையே குறிக்கும் -பர ப்ரஹ்மமே காரணம் என்றதாயிற்று

காரணத்வேன ச -ஆகாசாதிஷூ யதா வ்யபதிஷ்ட உக்தே –-ஆகாசம் முதலிய பதம் கொண்ட வாக்யங்களில் –
தஸ்மாத் வை ஏ தஸ்மாத் ஆத்மான ஆகாச சம்பூத் -முதலிய எல்லா வாக்யங்களிலும்
யாதவ்ய பதிஷ்டைஸ்யைவ காரணத்வேந யுக்த –சர்வஞ்ஞன் ஸர்வ சக்தன் என்று
எல்லாம் ஈஷத் அதிகரணாதிகளிலே ஸ்தாபிக்கப் பட்ட பரம புருஷனே காரணம் என்று சொல்வதால்
அவனுக்கு தேவாதி நாம ரூபங்கள் இல்லாமையால் அஸத் -அவ்யாக்ருதம் -எனப்படுகிறான்
ஆதலால் எல்லா காரணாதி வாக்கியங்களும் பர ப்ரஹ்மத்தையே காரணமாக் கூறுவன என்று திரு உள்ளம்

அப்படியாகில்
அஸத் வா இதம் அக்ர ஆஸீத் என்பதற்கு என்ன பொருள் என்பதைக் கூறுகிறார் அடுத்து –

——————————————————————————-

121-சமாகர்ஷாத் –1-4-15-

மற்ற உபநிஷத்களிலும் கூறப்பட்டவற்றை குறிப்பிடுவதாலும் பர ப்ரஹ்மமே காரணம்
தைத்ரிய உபநிஷத் –
சோகா மயத பஹூச்யாம் பிரஜா யேய-என்றும்
அசத் வை இதம் அக்ர ஆஸீத் -என்றும்

ப்ருஹத் ஆரண்யாகாவில் –
தத் ஏதம் தர்ஹி அவ்யாக்ருதம் ஆஸீத் என்றும்

அதே உபநிஷத் –
ச ஏஷ இஹ ப்ரவிஷ்ட ஆனகாக்ரேப்ய-என்று
உள்ளே புகுந்து நகக் கண்கள் வரையில் உள்ளான் -என்கிறது-

தைத்ரிய உபநிஷத் –சோகா மயத பஹூச்யாம் பிரஜா யேய-என்று
பஹு பவன சங்கல்பத்துடன் ஜகாத்தை ஸ்ருஷ்ட்டி செய்யும்
ஸர்வஞ்ஞனான பர ப்ரஹ்மத்தையே அஸத் வா இதம் -என்ற வாக்யத்தில் ஆகர்ஷித்துக் கொள்வதால்
ஸூஷ்ம சித் அசித் விஸிஷ்டனான ப்ரஹ்மத்துக்குக் காரண அவஸ்தையில் நாம ரூப சம்பந்தம் இல்லாமையால்
இத்தைப் பின் பற்றி அஸத் என்று ப்ரஹ்மத்தைச் சொல்கிறது
தத்தே தந்தர் ஹி அவ்யாக்ருதம் ஆஸீத் என்று ப்ருஹத் ஆரண்யாகாவிலும்
அதிலே ச ஏஷ இஹ ப்ரவிஷ்ட ஆனகாக்ரேப்ய பஸ்யன் சஷு -போன்ற
முன் பின் வாக்கியங்களை ஆராயும் போது ஸர்வஞ்ஞனாய் ஸர்வ ஸக்தியுக்தனாய் உள்ள பர ப்ரஹ்மமே
அவ்யாக்ருத சரீரமாய்க் கொண்டு ஜகாத்தை ஸ்ருஷ்டிக்கையாலே
அவ்யாக்ருதம் என்று பிரதான சரீரிகமான பர ப்ரஹ்மமே கூறப்படுகிறது என்பது ஸித்தமாயிற்று –

காரணத்வாதி கரணம் சம்பூர்ணம்

———————————————————————————

1-4-5-ஜகத்வாசித்வாதி கரணம் -ப்ரஹ்மமே அறியத்தக்கது –

இப்படி முன் அதிகரணத்தில் வேறாகக் கூற முடியாத பிரகரண பலத்தாலே
அப்ரஹ்மாத்மக ப்ரதான காரணத்வத்தை நிரஸனம் செய்து
யஸ்ய சைதத் கர்ம என்று கர்மவான் என்னும் சிறப்பான லிங்கத்தைத் துணை கொண்டு
முன் அதிகரண நியாயத்தின் படி ஸமாகர்ஷிக்கப் பட்ட ஜீவனே பிரதானத்தின் அதிஷ்டா யாதலின்
பரனாகட்டும் என்று சங்கித்து
அவனுக்கும் காரணத்வம் இல்லை என்று நிரூபிக்கிறார்
என்று சங்கதி

முன்பு அவ்யாக்ருத ஸப்தத்துக்கு ப்ரக்ருதி என்ற பொருளை விலக்கி பரமாத்மா என்ற
பொருள் தீர்மானிக்கப் பட்டது
தற்போது கர்ம ஸப்தத்திற்கு புண்ய பாப ரூபமான கர்மா என்ற பொருளை விலக்கி
படைக்கப்படும் ஜகத் என்ற பொருள் நிறுவப்படுகிறது
என்று மற்றோர் சங்கதி –

121-ஜகத் வாசித்வாத்–1-4-16-

யோ வை பாலாகே ஏதேஷாம் புருஷாணாம் கர்த்தா யஸ்ய வைதத் கர்ம ச வை வேதிதவ்ய –
பாலாகி என்னும் ஒருவன் அஜாத சத்ரு என்ற அரசன் இடம் வந்து ப்ரஹ்மத்தை குறித்து கூறுவதாக சொல்லி
ப்ரஹ்ம தே ப்ருவாணி யோ வை பாலாகே ஏதேஷாம் புருஷாணாம் கர்த்தா யஸ்ய வைதத் கர்ம ச வை வேதிதவ்ய –
யஸ்யா வா ஏதத் கர்ம -யாருக்கு இது கர்மமோ -இது என்றது உலகம் –
கர்மம் -உலகை உருவாக்கும் செயலையும் சொல்லி
பர ப்ரஹ்மமே அனைத்துக்கும் காரணம் என்றதாயிற்று-

யஸ்ய சைதத் கர்ம -ப்ரக்ருதி வ்யுக்தனான புருஷனே வேதிதவ்யன் –
அவனுக்கு புண்ய பாப ரூப கர்ம சம்பந்தம் சொல்வதால்
என்கிற பூர்வ பக்ஷத்தைக் கண்டிக்கிறார்

ஜகத் வாசித்வாத்-பரம புருஷனே வேதி தவ்யன் -அறியத்தக்கவன் என்று வருவித்துக் கொள்ள வேண்டும்
ஏன் எனில்
கர்ம -என்று ஏதத் ஸப்தத்தோடு ஒரே வேற்றுமையில் உள்ள கர்ம ஸப்தம் –
க்ரியதே இதி கர்ம என்ற வ்யுத்பத்தியால் ஜகத்தைச் சொல்லுவதால்
இது புண்ய அபுண்ய ரூப கர்மாவைக் குறிப்பதால்
ஏதத் என்ற ஸப்தம் வீணாகும் என்று கருத்து –

—————————————————————————

122-ஜீவ முக்ய பிராண லிங்காத் ந இதி சேத தத் வ்யாக்யாதம் –1-4-17-

அதாஸ்மின் பிராண ஏவ ஏகதாபவதி-என்றும்

தத்யதா ச்ரெஷ்டீ ஸ்வைர்ப்புங்க்தே யதா ஸ்வா ஸ்ரேஷ்டி நம் புஞ்ஜந்தி
ஏவமேவைஷா பிரஜ்ஞாத்மா ஏதைராத்மயிர் புங்க்தே
ஏவமேவைத ஆத்மான எனம் புஞ்ஜந்தி -என்றும்

ப்ரஹ்மேதே பிரவாணி -என்றும்

சர்வான் பாப்மநோப ஹத்ய சர்வேஷாம் பூதானாம் ஸ்ரைஷ்ட்யம் ஸ்வா ராஜ்ய மாதிபத்யம் பர்யேதி யா ஏவம் வேத -என்று
பிராணனை உடலாக உடைய ப்ரஹ்மத்தை உபாசனை செய்ய வேண்டும் என்றதாயிற்று –

ஜீவ முக்ய பிராண லிங்காத் ந இதி சேத -ஜீவ லிங்கத்தாலும் முக்ய ப்ராண லிங்கத்தாலும்
வேதி தவ்யன் பரமாத்மா அல்லன் என்றால்
தத் வ்யாக்யாதம்-ப்ரதர்த்தன வித்யையில் அது விரித்து உரைக்கப் பட்டது
ப்ரகரணத்தை முன் பின் ஆராய்வதால் பரமாத்ம பரம் இவ்வாக்கியம் என்று நிச்சயித்தால்
ஜீவாதிகளைக் குறிப்பிடும் சொற்களும் ஜீவாதிகளைச் சரீரமாகக் கொண்ட பரமாத்மாவையே போதிப்பவை என்று
ப்ரதர்தன வித்யா நியாயம் இங்கே நோக்கத் தக்கது

தவ்ஹ ஸூப்தம் புருஷமா ஜக்மது –என்று தொடங்கி
உறங்கும் மனிதனிடம் நெருங்கி பிரம்பால் அடித்து எழுப்பி
சரீரம் இந்திரியம் பிராணன் இவற்றை விட வேறான ஜீவன் இருப்பதை விளக்குவது இந்த வாக்யம்
என்ற சங்கைக்கு
உத்தரம் சாதிக்கிறார் மேல் –

—————————————————————————–

123-அன்யார்த்தம் து ஜைமினி ப்ரசன வியாக்யா நாப்யாம் அபி ச ஏவம் ஏகே –1-4-18-

அஜாத சத்ருவும் பாலாகியும் தூங்கிக் கொண்டு இருந்த மனிதனை எழுப்ப –
உடலில் வேறுபட்டவன் ஜீவன் -ஜீவனில் வேறுபட்டவன் பர ப்ரஹ்மம்
க்வ ஏஷ ஏதத் பாலாகே புருஷோசயிஷ்ட -தூங்கி எழுவதற்கு முன்னால் எங்கு இருந்தான்

விடையாக
அதாஸ்மின் பிராண ஏவ ஏகதா-தூங்கும் பொழுது பிராணனில் ஒன்றி விடுகிறான்

சாந்தோக்யம் -சதா சோம்ய ததா சம்பன்னோ பவதி –தூங்கும் பொழுது சத்துடன் ஒன்றி விடுகிறான்
பிராணன் என்றது ப்ரஹ்மமே

ப்ருஹத் உபநிஷத் -ய ஏஷோந்தர் ஹ்ருதய ஆகாசஸ் தஸ்மின் சேதே-என்று தூங்குபவன் இதயத்திலுள்ள
ஆகாயம் ஆகிய பரம் பொருளிடம் தூங்குகின்றான்
பிராணன் போன்ற சொற்கள் ப்ரஹ்மமே என்றதாயிற்று-

து என்ற சொல் சங்கையை மாற்றுகிறது
ஜீவனைக் குறிப்பது ஜீவனை விட்டு வேறான ப்ரஹ்மம் இருப்பதை விளக்குவதற்க்கானது
கேள்வியாலும் பதிலாலும் அவ்வாறே புலப்படுகிறது
இவ்வினா விடைகளாலே ஜீவனைக்குறிப்பது ப்ரஹ்மத்தை விளக்கவே என்று ஜைமினி கூறுகிறார்
ஸ்ரீ வியாசருக்கு இதுவே திரு உள்ளம்
அபி ச ஏவம் ஏகே –வாஜசநேயிகள் இவ்வினா விடைகளை பரமாத்ம பரமாகவே ஓதுகிறார்கள்
ய ஏஷோந்தர் ஹ்ருதய ஆகாசஸ் தஸ்மின் சேதே–தஹர ஆகாசம் பரமாத்மாவே என்று முன்னமே நிரூபணம் ஆயிற்று –

————————————————————————————

1-4-6-வாக்ய அந்வயாதி கரணம் -காணப்படுபவன் ப்ரஹ்மமே –

முன் அதிகரணத்தில்
சாங்க்யனால் லிங்கமாக ஒப்புக் கொள்ளப்பட்ட கர்ம ஸப்தம்
புண்ய பாப ரூப கர்மாக்களையும் ஜகத்தையும் குறிப்பதால்
பக்தனான ஜீவனுக்குப் பரத்வம் கிடையாது என்று ஸ்தாபிக்கப் பட்டது
இந்த அதிகரணத்தில்
மைத்ரீ ப்ராஹ்மண ப்ரகரணத்தில் ஆத்ம ஸப்தத்தால் குறிக்கப்படுவதாகிய சிறப்பான லிங்கத்தாலும்
ஸர்வம் தம் பரா தாத் யோ அந்யத்ராத் மனஸ் சர்வம் வேத -என்னும் ஸ்ருதியில்
ஜீவனைக்காட்டிலும் வேறான தத்வம் தடுக்கப்படுவதாலும்
கணவன் மனைவி புதல்வன் என்னும் சம்பந்தம் ஜீவனுக்கே சிறப்பானததாலும்
முக்த ஜீவனே மைத்ரேயீ ப்ராஹ்மணத்தில் பேசப்படுகிறான்
என்ற சங்கையால் என்று சங்கதி

124-வாக்ய அந்வயாத்-1-4-19-

ப்ருஹத் ஆரண்யாகாவில்-
நவா அரே பத்யு காமாய பதி ப்ரியோ பவதி ஆத்ம நஸ்து காமாய பதி ப்ரியோ பவதி -என்றும்
ஆத்மா வரே அரே த்ரஷ்டவ்ய ஸ்ரோதவ்யோ மந்தவ்யோ நிதித்யாசி தவய -மைத்ரேயி ஆத்ம நி கல்வரே த்ருஷ்டே
ஸ்ருதே மதே விஞ்ஜாதே இதம் சர்வம் விதிதம் -என்று
அனைத்தும் அறிந்தவை ஆகும் –
இதம் சர்வம் யதயமாத்மா -இந்த ஆத்மாவே அனைத்தும் என்பதால்
பரமாத்மா என்று உணர்ந்தால் மட்டுமே பொருந்தும்-

வாக்ய அந்வயாத்-காணத்தக்கவன் என்று குறித்தது பரமாத்மாவையே
அது ஏன் என்றால்
மைத்ரேயீ ப்ராஹ்மணத்தில் எல்லா வாக்கியங்களும் பரமாத்மாவிடமே அன்வயம் -பொருந்தும் –
ஸர்வ காரணத்வம் சொல்வதால்
ஜகத் வியாபார வர்ஜம் -ஸூத்ரப்படி முக்தாத்மாவுக்குக் கூட ஸம்பவிக்காதே
ஒவ்வொரு வாக்யத்திலும் ஆத்ம ஸப்தம் மைத்ரேயிக்கு அம்ருதத்வத்தை சாதிப்பவனாகக் காண வேண்டியவன்
என்று உபதேசிக்கப்பட்ட பரமாத்மாவையே போதிக்கும் என்பதால் வாக்யங்களுக்கு அந்வயம் பொருத்தம் ஏற்படும்

அந்த அந்த ஜீவன்களின் கர்ம அனுகுணமாக பரமபுருஷன் தனது ஸங்கல்பத்தாலே
பத்யாதிகளைப் பத்னீ முதலியவர்களுக்குப் பிரியமாக்குகிறான் –

ஆத்மன காமாயா என்று பரமாத்மாவின் ஸங்கல்பம் ஸித்திக்கவே என்றே பொருள் –
தங்கள் காமம் நிறைவேற என்ற பொருள் அன்று

ஆத்ம சப்தத்துக்கு ஜீவாத்ம பரமாகவும் பொருள் கொண்டு வேறே நிர்வாகமும் ஸ்ரீ பாஷ்யத்தில் காட்டப்பட்டு உள்ளது –
விஞ்ஞான கன ஏவ ஏதேப்யோ பூதேப்ய சமுதாய தான்யே வானு விநஸ்யதி -என்னும் வாக்யத்தில்
ஜீவ லிங்கமான விஞ்ஞான கன ஸப்தத்துக்கு பிற மதம் கொண்டும் நிர்வாஹம் அருளிச் செய்துள்ளார் –

————————————————————————————-

125-பிரதிஜ்ஞா சித்தே லிங்கம் ஆஸ்மரத்ய-1-4-20-

ஆஸ்மரத்யர் என்பவர் இதம் சர்வம் விதிதம் -ஒன்றை அறிந்தால்
அதனைச் சார்ந்த அனைத்தையும் அறிந்தது போலே
ஆகும் என்பதால் பரமாத்மாவே என்கிறார்-

ஜீவன் பரமாத்மாவின் கார்யமாகையாலே அவனை விட வேறு படாதவன் என்பதால்
ஜீவனைச் சொல்லும் பதம் பரமாத்மாவைக் குறிக்கும் என்பர் ஆஸ்மரத்யர்
ஜீவ வாசகமான ஞான கனமும் அவ்வாறே ஆகும் என்று கருத்து
இது சங்கர மதத்துக்கு ஆதாரம் –

———————————————————————————–

126–உத்க்ரமிஷ்யத ஏவம் பாவாத் இதி ஔடுலொமி-1-4-21-

ந ஜாயதே ம்ரியதே -கட உபநிஷத் -கர்ம வினைகளால் தோன்றி மறைகின்றான் –
தனது உருவம் மட்டும் மாறும் மண் குடம் போலே அன்றி ப்ரஹ்மத்துடன் ஒன்றி விடுகிறான்
இந்த ஔடுலொமி கருத்து படியே –

சாந்தோக்யம் –
ஏஷ சம்ப்ரசாத அஸ்மாச் சரீராத் சமுத்தாய பரஞ்ஜ்யோதி ரூப
சம்பத்ய ஸ்வேன ரூபேண அபி நிஷ்பத்யதே -என்றும்

முண்டக உபநிஷத்தில்
யதா நத்ய ச்யந்தமாநா சமுத்ரே அஸ்தம் கச்சந்தி நாம ரூபே விகாயா
ததா வித்வான் நாம ரூபாத் விமுக்த பராத் பரம் புருஷம் உபைதி திவ்யம் -என்று
ஜீவன் முக்தி அடையும் பொழுது
ப்ரஹ்மமாகவே மாறுகின்றான் என்பதை உணர்த்தும்-

உத்க்ரமிஷ்யத –ஸ்வநே ரூபேண அபி நிஷ் பத்யதே -சரீரத்தை விட்டுச் செல்லும் ஜீவனுக்கு
ஏவம் பாவாத் -முக்தியை ஐக்யம் ஏற்படுவதால்
இதி ஔடுலொமி-ஜீவ ஸப்தம் பரமாத்மாவைக் குறிக்கும் என்று அருளிச் செய்கிறார்

—————————————————————————————

127-அவஸ்திதே–இதி காசக்ருத்சன-1-4-22-

ஜீவன் ப்ரஹ்மமாக இல்லாதது இயற்கையா –
அப்படியானால் மோட்ஷம் அடையும் பொழுது ஜீவ ஸ்வரூபம் அழிய வேண்டும்
ஜீவன் தன் ஸ்வரூபம் அழிய முயலாதே

ஏதோ ஒரு காரணத்தினால் ப்ரஹ்மமாக இல்லை என்று கொண்டால்
முன்பு ப்ரஹ்மமாக இருந்து இருக்க வேண்டும்
மோட்சத்தின் பொழுது ப்ரஹ்மம் ஆகிறான் என்றது தவறாகும் –

பரம் பொருள் ஜீவன் உள்ளேயே இருப்பதாக உணர்த்தவே
ஜீவனைக் குறித்த பதங்கள் கூறப்பட்டன
ப்ருஹத் ஆரண்யாகாவில்-
ய ஆத்மா நி திஷ்டன் யச்யாத்மா சரீரம் -போன்ற பல வாக்யங்கள் உண்டே –
இதையே காசக்ருத்ச்னர் எடுத்துக் காட்டுகிறார்-

ய ஆத்மனி திஷ்டன் -இத்யாதிகளில் ஜீவாத்மாவுக்கும் ஆத்மாவாக பரமாத்மாவின் ஸ்திதியைக் கூறுவதால்
விஞ்ஞான கன சப்தங்கள் பரமாத்மாவின் முடிவதால் பரமாத்ம வாசகங்கள் தான்
தேவன் மனுஷ்யன் ஸப்தங்கள் ஜீவாத்மாவைக் குறிப்பது போலவே
சரீர வாசக ஸப்தங்கள் ஸர்வ சரீரிகனான பரமாத்மாவைக் குறிப்பவை என்று காசக்ருஸ்தனரின் திரு உள்ளம் –

வாக்ய அந்வயாதி கரணம் சம்பூர்ணம்

———————————————————————————————-

1-4-7-பிரக்ருத்யதிகரணம் -ப்ரஹ்மமே உபாதான காரணம் –

கீழே பரமாத்மா ஜீவர்களின் நியாமகன் -என்பதால் ஸப்த ஸாமாநாதி கரண்யம் சொன்னதைக் கொண்டு
ஸேஸ்வர மீமாம்சகன் -ராஜாவே ராஜ்யம் என்றால் -உபசார வழக்காகவே தேறும் -ஐக்யம் அன்று
ராஜ்யத்துக்கு ராஜா உபாதான காரணம் அல்லன்
அதே போல் ஜகத்துக்கும் ப்ரஹ்மம் உபாதான காரணம் இல்லாமல் நிமித்த காரணமே ஆகும் என்பான்
இதற்கு விடை கூறலே சங்கதி

128-பிரகிருதி ச பிரதிஜ்ஞா த்ருஷ்டாந்த அநுபரோதாத் —1-4-23-

பிரமமே உபாதான காரணமாக இருந்தால் மட்டுமே பிரதிஞ்ஞை எனப்படும் உண்மையான வரிகள் பொய்யாகாது
ஸ்வேதாஸ்வதார உபநிஷத்தில் –
அஸ்மான் மாயீ ஸ்ருஜதே விஸ்வமேதத்-என்று மாயையான பரம் பொருள்
மாயையான பிரகிருதி கொண்டு உலகைப் படைக்கிறான்

பூர்வ பஷி –
இதனால் நிமித்த காரணமும் உபாதான காரணமும் வெவ்வேறே என்பர்
ப்ரஹ்மத்தை உபாதான காரணமாகக் கொண்டால் மாறுதல் அடைய வேண்டி வரும்
அவிகாராய என்றது பொய்யாகும் என்பர்

சித்தாந்தம்
பிரதிஜ்ஞை -உததமாதே சம்ப்ராஷ்ய யே நாஸ்ருதம் ஸ்ருதம் பவத்யமதம் மதம் அவிஜ்ஞாதம் விஜ்ஞாதம் -என்று
பரம் பொருளைக் குறித்து சொல்லிற்று
எதை ஒன்றைக் கேட்டால் கேட்க்கப் படாதது கேட்க்கப் படுகிறதோ நினைத்தால் நினைக்கப் படாதவை
நினைக்கப் படுகிறதோ அறிந்தால் அறிந்தது ஆகின்றதோ -அதுவே பரம்பொருள்

சாந்தோக்யம் -திருஷ்டாந்தம் –
யதா சோம்ய ஏகேந மருத் பிண்டேந சர்வம் ம்ருண் மயம் விஜ்ஞாதம் ஸ்யாத்
குயவன் என்று மட்டும் கொண்டால் அனைத்தையும் அறிந்தது ஆகாதே
ப்ரஹ்மத்தை உபாதானமாக் கொண்டு ஏற்படும் மாறுதல்கள் அவனது உடலாக உள்ள
நமது சரீரத்தில் நிகழ்வதால் அவனுக்கு தோஷம் தட்டாதே
இத்தையே அஸ்மான் மாயீ ஸ்ருஜ்யதே -என்கிறது

பூர்வ பஷத்தை நிரசிக்கிறார்
பிரகிருதி ச -நிமித்தமான ப்ரஹ்மமே உபாதானமும் ஆகிறது
ஏன் எனில்
பிரதிஜ்ஞா த்ருஷ்டாந்த அநுபரோதாத் —ஏக விஞ்ஞானத்தால் ஸர்வமும் அறியப்படும் என்ற ப்ரதிஜ்ஜைக்கும்
மண் -ம்ருத் -போன்ற த்ருஷ்டாந்தங்களுக்கும் விரோதம் வாறாமைக்காக
நிமித்த காரணம் மட்டும் ப்ரஹ்மம் என்றால் குயவனைப் பற்றிய அறிவால் குடத்தின் தன்மையை அறிய முடியாதே
உபாதான காரணமும் ப்ரஹ்மமாய் இருந்தால் தானே நேற்று இருந்த மண் இன்று குடமானது போல் ஜகத்தின் ஞானம் சித்திக்கும் –
ஸாஸ்திரத்தால் மட்டுமே அறியக் கூடிய ப்ரஹ்மம் காரணமும் கார்யமுமாய் இருப்பதாக ஸ்ருதி சொல்வதால்
நிமித்தமும் உபாதானத்வமும் முரண் ஆகாது
விகாரங்கள் சித் அசித் வஸ்துக்களையே சார்ந்தவை –
இவற்றின் சரீரிகமான ப்ரஹ்மத்துக்கு விகாரம் இல்லை -என்பதைக் காட்டவே
அஸ்மான் மாயீ ஸ்ருஜதே விஸ்வமேதத் -என்று ப்ரக்ருதியையும் புருஷனையும் வெவ்வேறாகக் கூறுகிறது

இனி வைசேஷிகர் வாத நிரஸனம்
நிமித்தமும் உபாதானமும் ஒருவருக்கே கூடாது -நிமித்த காரணம் ஸமவாயி காரணத்தை விட வேறானதே என்பர்
மாயாந்து ப்ரக்ருதிம் வித்யாத் மாயினம் து மஹேஸ்வரம் என்று
உபாதானமாயும் நிமித்தமாயுமாய் உள்ள ப்ரக்ருதிக்கும் ஈஸ்வரனுக்கு பேதத்தை நன்கு காட்டுகிறது

சமவாயி காரண பின்னமாய் இருக்க வேண்டும் என்றால் ஏதேனும் ஒரு சமவாயி காரணத்தைக் காட்டிலும் பேதமா
அனைத்து சமவாயி காரணங்களின் பேதமா என்று விகல்பித்து
முதல் பக்ஷத்தில் ஜகத்தின் உபாதானமான ப்ரஹ்மத்தினிடம் ஏதேனும் உபாதான பேதம் ஸூ லபமாகையாலே
உன் நோக்கம் நிறைவேறாது
இரண்டாம் பக்ஷத்தில் குடத்தின் நிமித்தமான தண்டத்தில் தன் ரூபாதிகளான உபாதானத்தில் இருந்து
பேதம் வராதலால் லக்ஷணத்து அவ்யாப்தி தோஷம் வரும்
ஆகவே நிமித்த லக்ஷணம் கூறியது பொருந்தாது –

நாங்கள் அப்படிக்கூற வில்லை -அதன் நிமித்தத்தை விட உபாதானத்துக்கு பேதம் என்றே கூறுகிறோம்
குடம் முதலியவற்றில் உபாதானமான மண் முதலியவற்றில் இருந்து பேதம் வருவதால் அவ்யாப்தி தோஷம் வராது
ப்ரஹ்மத்தினிடமும் இந்த லக்ஷணம் இல்லை என்றால் இதுவும் கூடாது
ஏன் எனில் துவம்சம் அழிவு என்னும் கார்யம் நிமித்தத்தால் உண்டாவதால்
த்வம்ச நிமித்தமான தண்டத்தை விட உபாதான பேதம் பிரசித்தம் இல்லாததால் லக்ஷணம் அப்ரஸித்தம் ஆகிறது

ப்ரஹ்மத்தில்
ஸூஷ்ம சித் அசித் விஸிஷ்ட ப்ரஹ்மம் உபாதானம்
ஸங்கல்ப விஸிஷ்ட ப்ரஹ்மம் நிமித்தம்
ஆகவே வெவ்வேறானவையே
முன் மண் இருந்த ஞானம் இப்போது குடத்தைக் கண்டு உபாதாய ஞானத்தால் உபாதிய ஞானம்
சர்வம் ம்ருன் மயம் விஞ்ஞாதம் ஸ்யாத்
அவஸ்தைகளுடைய பேதம் என்ற ஞானம் போலவே இங்கும்

இங்கு இன்னும் ஒரு பூர்வபக்ஷம்
உபாதானமும் உபேதேயமும் ஒன்றாக இருந்தால் சர்வ வஸ்து இல்லாமையால்
சர்வ விஞ்ஞான ப்ரதி விஞ்ஞானமும் இல்லாமல் போகுமே
தனது ஞானத்துக்கு தனது ஞானமே ஹேது என்றதாகுமே -ஆத்மாஸ்ரய தோஷம் வரும்

ஸூஷ்ம ஸ்தூல பேதம் உண்டே -இரண்டு ஞானங்களுக்கும் பேதம் சித்தம் அன்றோ
காரணம் ஒன்றே யானாலும் காரியப் பொருள்கள் பலவாக இருப்பதால் சர்வ விஞ்ஞான ப்ரதிஜ்ஜைக்கு விரோதம் இல்லையே –
தேவதத்தன் முதலானோருக்கு பாலத்வம் யுவத்வம் அவஸ்தா பேதம் உண்டே

ஆகந்து காப்ருக் சித்த தர்மோ அவஸ்தே தீ கீர்த்யதே
விசேஷ்ய அபி ச வைசிஷ்ட்ய பேதோ அவஸ்தாந்தராயதே -என்று
புதிதாய் இணை பிரியாதோர் தர்மம் வந்து பெறுவதே அவஸ்தை என்கிறார்
விசேஷ்யமான பொருளில் ஒரு தர்மத்தை யுடைமை என்ற பேதம்
வேறு அவஸ்தையாகக் கருதப்படுகிறது என்பதாலும் பொருந்தும்

————————————————————————————-

129-அபித்யோப தேஸாத் ச-1-4-24-

தனது சங்கல்பத்தை ப்ரஹ்மம் –
ததைஷத பஹூச்யாம் -சாந்தோக்யம் என்றும்
ஸோ காமயத பஹூச்யாம் -தைத்ரியம் -என்றும்
சொல்லுவதால் உபாதான காரணமும் ப்ரஹ்மமே என்று அறியலாம்-

——————————————————————————————–

130-சாஷாத் உபயாம்நா நாத் ச–1-4-25-

வேத வரிகளும் ப்ரஹ்மமே உபாதான காரணம் என்று சொல்லுகின்றன
யஜூர் வேதம் -ப்ரஹ்ம வனம் ப்ரஹ்ம ச வருஷ ஆஸீத் யதோ த்யாவாப்ருதிவீ நிஷ்ட தஷூ
ம நீ ஷி ணோ மநஸா விப்ரவீமி வோ ப்ரஹ்மாத் யதிஷ்டத் புவ நாதி தாரயன்-என்று
காடு போலே ஆதாரமாக உள்ளவனும் ப்ரஹ்மமே -உபாதான காரணமாக இருக்கும் மரமும் ப்ரஹ்மமே
நிமித்த காரணமும் ப்ரஹ்மமே -என்றதாயிற்று-

—————————————————————————————–

131-ஆத்மக்ருதே–1-4-26-

தன்னைத் தானே படைத்துக் கொண்டதாலும் உபாதான காரணமும் ப்ரஹ்மமே
தைத்ரியம் -ஸோ காமயத பஹூச்யாம் -என்றும்
ததாத்மானம் ஸ்வயமக்ருத-என்றும் கூறப்பட்டது

உலகில் உள்ளவற்றை தனது உடலாகக் கொண்டு-அவற்றை படைக்கும் கர்த்தாவாகவும்
தன்னால் படைக்கப் பட்ட தானே உருவாக்கப் பொருளாகவும் ப்ரஹ்மம் உள்ளது

இத்தாலும் உபாதான காரணமும் ப்ரஹ்மமே -என்னலாம்-

————————————————————————————

ப்ரஹ்மம் தன்னைத் தானே ஜகத்தாகப் பண்ணினான் என்றால்
அபஹத பாப் மத்வாதிகளுக்கு முரண் படாதோ –
ஜகத்து துக்கியாய் அன்றோ இருக்கிறது என்னில்
அதற்கு சமாதானம் இதில்

131-பரிணாமாத்–1-4-27-

பரிணாமத்தைக் கூறுவதால் ப்ரஹ்மம் குறையற்றது
ப்ருஹத் உபநிஷத்தில் -தத் ஹ இதம் தர்ஹி அவ்யாக்ருதம் ஆஸீத் தத் நாம ரூபாப்யாம் வ்யாக்ரியத
ஸூஷ்ம விசிஷ்ட ப்ரஹ்மம் –ஸ்தூல விசிஷ்ட ப்ரஹ்மம் -எப்பொழுதும் அந்தர்யாமியாக ப்ரஹ்மம் உள்ளது
தோஷங்கள் தட்டாது-

———————————————————————————-

132-யோ நிஸ்ஸ கீயதே ஹி-1-4-28-

ப்ரஹ்மத்தை யோநியாகவும் கூறுவதாலும் அவனே உபாதான காரணமாவான்
முண்டக உபநிஷத் –
யத் பூத யோநிம் பரிபஸ்யந்தி தீரா -ஞானம் உடையவர்கள் பூதங்களின் யோனியாக காண்கின்றார்களோ -என்றும்
கர்த்தாரமீசம் புருஷம் ப்ரஹ்ம யோநிம் -படைப்பவனும் புருஷனும் யோநியும் ஆக உள்ள ப்ரஹ்மம் -என்றும்

யதோர்ணநாபி ஸ்ருஜதே கிருஷ்ண தேச
யதா ப்ருதிவ்யாமொஷதய சம்பவந்தி
யதா சத புருஷாத் கேசலோ மாநி ததா ஷராத் சம்பவதீஹ விச்வம் -என்று
சிலந்தி நூலை தன்னுள்ளே இழுத்துக் கொள்வது போலேயும் -பயிர்கள் பூமியில் இருந்து தோன்றுவது போலேயும் –
பரம் பொருளின் இடத்தில் இருந்து உலகம் தோன்றுகிறது

கர்த்தா என்கிற பதம் நிமித்த காரணத்தையும்
யோநி என்கிற பதம் உபாதான காரணத்தையும் குறிக்கும்-

யோ நிஸ்ஸ கீயதே ஹி-யோனி ஸப்தம் உபாதான காரணம் என்னும் பொருளில் வந்தது
ஹி -ஹேதுப் பொருளைக் காட்டும்
எக் காரணத்தால் யோனி என்று ப்ரஹ்மம் கூறப்படுகிறதோ அதே காரணத்தால்
அது நிமித்தமும் உபாதானமும் என்று ஸித்திக்கிறது –

பிரக்ருத்யதிகரணம் சம்பூர்ணம்

———————————————————————————

1-4-8-சர்வ வியாக்யான அதிகரணம் -ஸ்ரீ மன் நாராயணனே அனைத்தும்-

ஸாஸ்த்ர ஆரம்பத்தில் ஜந்மாத் அதிகரணத்தில் தொடங்கிய நிமித்த உபாதானத்வம்
ப்ரக்ருதி அதிகரணத்திலே உறுதி செய்யப் பட்டது
இனி ஹிரண்ய கர்ப்பஸ் சமர்த்த தாக்ரே பூதஸ்ய ஜாத –
பதிரேக ஆஸீத்
ந சந் ந சாஸத் சிவ
ஏவ கேவல –இத்யாதிகளில்
முன் கூறிய அதிகரணப் பொருள்களையே ஊகித்து அறிய வேண்டும் என்று சங்கதி –

134-ஏதேந சர்வே வ்யாக்யாதா வ்யாக்யாதா–1-4-29-

இதன் மூலம் ப்ரஹ்மமே அனைத்துக் காரணமும் என்றும்
ஸ்ரீ மன் நாராயணனே ப்ரஹ்மம் என்றும் படிக்கப் பட்டது –

ஏதேந -முன் கூறப்பட்ட நியாய கலாபத்தாலே
சர்வே -இதுவரை காட்டப்படாத -ஹிரண்ய கர்ப்பஸ் சமர்த்த தாக்ரே -இத்யாதி வாக்கியங்களும்
வ்யாக்யாதா வ்யாக்யாதா-ஸ்ரீயப்பதியான பரமபுருஷ காரணத்வ பரங்களாகவே வ்யாக்யாதங்கள்
இரட்டிப்பு அத்யாய பூர்த்தியைக் காட்டும்

ஸதேவ -என்ற ஏவகாரத்தாலே காரணத்வத்தையும் உபாஸ்யத்வத்தையும் போதிக்கும்
வாக்கியங்களில் உள்ள சாமான்ய ஸப்தங்கள் அருகே விசேஷ சப்தம் இருப்பதால்
சாக பசு நியாயப்படி அதையே குறிக்கும் என்பதாக ஸித்தம்

சர்வ வேதாந்தகளும்–ஸத் -ப்ரஹ்மம் -அக்ஷரம் –ஆத்மா முதலிய பதங்களும் –
சிவ சம்பு ஹிரண்ய கர்ப்பாதிகளும் ஸ்ரீ மன் நாராயணனையே போதிப்பதாகும்

மஹா உபநிஷத் -ஏகோ ஹை வை நாராயணா ஆஸீத் ந ப்ரஹ்மா நேசான
ஸ முனிர் பூத்வா சம சிந்தயத் த ஏத வ்யாஜ யந்த விச்வே ஹிரண்ய கர்ப்போ அக்னீர் யம
வருண ருத்ர இந்த்ரா விஷ்ணுஸ் ததா ஸீத் ஹரி ரேவ நிஷ்கள

ருத்ராதிகளுக்கு கார்யத்வமும் கர்ம வஸ்யத்வமும் ஸ்ருதிகள் கோஷிக்குமே
ஸ்ரீ மன் நாராயணனே மோக்ஷ பிரதன் -அந்தர்யாமியானவனுக்கே -ஸஹஸ்ர சீர்ஷா புருஷன்

விஷ்ணுக்கும் உத்பத்தி உண்டே காரணத்வம் சொல்லலாகாதே என்னில்
ரஷார்த்தம் ஸர்வ பூதா நாம் விஷ்ணுத்வம் உப ஜஜ்ஜிவான்
அஜாயமானோ பஹுதா விஜாயதே -என்று இச்சா பரிஹ்ருஹீதா திவ்ய மங்கள விக்ரஹம் –
ஆதியம் சோதி உருவை அங்கு வைத்து இங்கு பிறந்தவன்
இதம் பூர்ணம் –இத்யாதி

—————

சர்வ வியாக்யான அதிகரணம்-சம்பூர்ணம்

———

இப்பாத அதிகரண அர்த்தங்களை

1-அனு மாதிக அதிகரணத்தில் –சாங்க்யர் கூறும் ப்ரக்ரியா பிரகாரங்களும்
2-சமஸ அதிகரணத்தில் -அவர்கள் ஏற்கும் ஸ்ருஷ்டி க்ரமமும்
3- சாங்க்ய உப ஸங்க்ரஹ அதிகரணத்தில் -அந்த எண்ணிக்கை அமைப்பும்
4-காரணத்வ அதிகரணத்தில் -அவர்கள் கூறும் அவ்யாக்ருதத்துடன் ஐக்யமும்
5- ஜகத் வாசித்வ அதிகரணத்தில் -தன் பாபம் பற்றிய வசனமும்
6-வாக்ய அந்வய அதிகரணத்தில் -கர்ம பலமான தோஷ சம்பந்தமும்
7-ப்ரக்ருத் யதிகரணத்தில்-உபாதான நிமித்த பேதமும்
8-சர்வ வியாக்யான அதிகரணத்தில் -ப்ரஹ்மாதிகளுக்குக் காரணத்வமும் –

ஆக எட்டு பூர்வ பக்ஷ யுக்தி ஆபாஸ மூலகமான கருத்துக்களால் முன் மூன்று பாதங்களின் கருத்துக்கள் தாக்கப்படவே
ஸ்ருதி தாத்பர்யங்களை வெளிப்படுத்தி
அவற்றின் யதார்த்த அர்த்தங்களைக் காட்டி
ஸூத்ர காரர் ரக்ஷித்து அருளினார் என்று திரு உள்ளம் –

முதல் அத்யாயம்-சமந்வய அத்யாயம்-நான்காம் பாதம் -அந்ய யோக வியவச்சேத பாதம் -சம்பூர்ணம்

————————————————————————————————–—————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஸ்ருதி பிரகாசர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ போதாயனர் -வ்ருத்தி காரர் – ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பாதராயணர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading