ஸ்ரீ பாஷ்யார்த்த தீபிகை –இரண்டாம் அத்யாயம் –மூன்றாம் பாதம் —

ஸ்ரீ பாஷ்யம் -மங்கள ஸ்லோகம்

அகில புவன ஜன்ம ஸ்தேம பங்காதி லீலே
விநத விவித பூத வ்ராத ரக்ஷைக தீஷே
ஸ்ருதி சிரஸி விதீப்தே ப்ருஹ்மணி ஸ்ரீ நிவாஸே
பவது மம பரஸ்மின் சேமுஷீ பக்தி ரூபா –

பாராசார்ய வச ஸூதாம் உபநிஷத் துக்தாப்தி மத்யோத் த்ருதாம்
சம்சாராக்னி விதீபன வ்யபகாத ப்ராணாத்மா சஞ்சீவி நீம்
பூர்வாச்சார்ய ஸூரஷிதாம் பஹூ மதி வ்யாகாத தூரஸ்தி தாம்
ஆ நீதாம் து நிஷாஷரை ஸூ மனஸோ பௌமா பிபந்து அந்வஹம்–

—————————————————————-

வேத பாஹ்யங்களான ஸாங்க்யாதி தந்திரங்கள் நியாய ஆபாஸத்தை மூலமாகக் கொண்டவை –
முன் பின் முரண்பாடு உள்ளவை-அசமஞ்சஸம் என்று ஸ்தாபித்த பின்னர்
இந்த பாதத்தில் தன் பக்ஷத்துக்கு தோஷ லேசமும் இல்லை என்று காட்டி அருள
ப்ரஹ்மத்தின் கார்யமான சித் அசித் ஆத்மகமாம் பிரபஞ்சத்துக்கு
கார்யத்வம் எந்த வகையில் என்பது நிரூபிக்கப் படுகிறது
என்பது பாத சங்கதி –

முதல் அதிகரணம் –வியதத் அதிகாரணம் –

ஸ்ரீ பாஞ்ச ராத்ர அதிகரணத்தில்
ஜீவனின் உத்பத்தி வாதமானது ஜீவனுக்கு அபிமானியான ஸங்கர்ஷணாதிகளைக் குறிப்பது ஆதலின்
உபசார வழக்கு எனப்பட்டது
அப்படியாகில்
அதே நியாயத்தில் ஆகாசத்துக்கு உத்பத்தி வாதமும் உபசார வழக்கு ஆகட்டுமே என்ற சங்கையில்
இந்த அதிகரணம் எழுகிறது என்று சங்கதி –

ஸூத்ரம் –213–ந வியத் அஸ்ருதே –2-3-1-

ஆகாசம் உண்டாகிறதா இல்லையா என்று சம்சயம்
அது உண்டாவது இல்லை
அஸ்ருதே -ஆத்மாவைப் போலவே நிர் அவயவமான ஆகாசத்துக்கு உத்பத்தி எங்கும் கேட்கப்படாமையால்
என்ற பூர்வ பக்ஷத்தைக் கண்டிக்கிறார்

———-

ஸூத்ரம் –214–அஸ்தி து –2-3-2-

து -பக்ஷம் மாறுவதைக் காட்டுகிறது
அஸ்தி -ஆகாசத்துக்கு உத்பத்தி உண்டு
ஏன் எனில்
ஆத்மன ஆகாஸஸ் ஸம்பூத -என்று
உத்பத்தி ஸ்ரவணத்தாலே பிரமாணாந்தரத்தாலே அப்ராப்தமான ஆகாச உத்பத்தியை ஸ்ருதி விளக்குவதால்
வஹ்னினா சின்ஜேத்-நெருப்பினால் நனைக்க வேண்டும் என்பது போலே
இதுக்குத் தகுதி இன்மை -அயோக்யதை -இல்லை என்று கருத்து –

————-

ஸூத்ரம் –215-கௌண்ய சம்பவாத் ஸப்தாச்ச –2-3-3-

மேலும் பூர்வ பக்ஷத்தை உபந்யசிக்கிறார்
ஆத்மன ஆகாஸஸ் ஸம்பூத-என்கிற ஸ்ருதி
கௌணீ –முக்யப் பொருள் அற்றது -உபசார வழக்கு
ஸூஷ்ம அவஸ்தமான தன்னிடம் இருந்து ஸ்தூல அவஸ்தமான தான் உண்டாகிறது என்ற
முக்கியமற்ற அர்த்தத்தைக் கூறுகிறது
ஏன் எனில்
அசம்பவாத் -தத் தேஜோ அஸ்ருஜத -என்று
ஜகத்தின் ஸ்ருஷ்டிக்கு முன்பு தேஜஸ்ஸூ உண்டாகிறது -என்பதால்
ஸப்தாச்ச -வாயுச் சாந்த ரிஷஞ்ச ஏதத் அம்ருதம் -என்று
ஆகாசத்துக்கு அம்ருதத்வ சப்தத்தாலேயும் வ்யுத் உத்பத்தி கௌணீ யாகும் -உபசார வழக்கே என்றவாறு –

———————

ஸூத்ரம் –216-ஸ்யாச்ச ஏகஸ்ய ப்ரஹ்ம சப்தத்வத் –2-3-4-

ஏகஸ்ய ஸ்யாச்ச –ஆத்மன ஆகாஸஸ் ஸம்பூத-ஆகாசாத் வாயு -வாயோர் அக்னி —
முதலிய இடங்களில் அனு ஷக்தமாய்க் கொண்டுள்ள ஒரு ஸம்பூத சப்தத்துக்கு
ஆகாசஸ் சம்பூத -என்பதில் கௌணத்வமும் –
வாயுஸ் ஸம்பூத-என்பதில் அனு ஷக்தமான அதே பதத்துக்கு முக்யத்வமும் இருக்கலாம்
ப்ரஹ்ம ஸப்த வத்தஸ்மாதேதத் ப்ரஹ்ம நாம ரூபம் அன்னஞ்ச ஜாயதே தபஸா சீயதே ப்ரஹ்ம
என்ற இடங்களில்
பிரதானத்தில் கௌணமாகவும் பர ப்ரஹ்மத்தில் முக்யமாகவும் கொள்வது போலே
இதுவும் கூடலாம் என்பது பூர்வ பக்ஷ ஸூத்ரம்

இந்த சங்கையை மேல் நிரஸனம் செய்கிறார் –

———————-

ஸூத்ரம் –217–ப்ரதிஜ்ஜா ஹாநி அவ்யதி ரேகாத் –2-3-5-

யேநா ஸ்ருதம் ஸ்ருதம் பவதி -என்று சொன்ன ப்ரஹ்ம விஞ்ஞானத்திலே
ஆகாசம் முதலான சர்வ விஞ்ஞான ப்ரதிஜ்ஜைக்கு
அஹாநி -தடை இல்லை
அவ்யதி ரேகாத் -ஆகாசமும் ப்ரஹ்மத்தினிடம் தோன்றியது ஆதலின்
ப்ரஹ்ம கார்யமான ஜகத்தில் அந்தர் பூதம் ஆகையால் உப பன்னமே யாகும் என்பதாம் –

—————————-

ஸூத்ரம் –218–சப்தேப்ய –2-3-6–

ஐததாத்ம்யம் இதம் ஸர்வம் -என்ற ஸ்ருஷ்டியில்
ப்ரஹ்மத்துக்கு ஸ்ருஷ்டிக்கு முன்பு ஏகத்வத்தை உறுதிப் படுத்தலையும் சர்வாத்மத் வாதிகளையும் சொல்லும்
ஸப்தங்களாலேயும் ஆகாசத்துக்கு உத்பத்தி உண்டு என்று தோற்றுகிறது
தத் தேஜஸ் அஸ்ருஜத-என்கிற வாக்கியத்தில்
ஆகாசத்துக்கு உத்பத்தி கூறப்படவில்லை என்பது வேறு ஸ்ருதியால் விளக்கப்பட்டது
அதன் உத்பத்தியைத் தடுக்க மாட்டாது என்பது கருத்து

—————–

ஸூத்ரம் -219-யாவத் விகாரந்து விபாகோ லோகவத் –2-3-7–

சாந்தோக்யத்தில் -தத் தேஜஸ் அஸ்ருஜத-என்று
தேஜஸ்ஸூக்கு ஸ்ருஷ்டி சொன்னது போலே ஆகாசத்துக்கு வெளிப்படையாகக் கூறப்பட வில்லை
அப்படி இருந்தாலும் அங்கேயே
ஐததாத்ம்யம் இதம் ஸர்வம்-என்று
யாவற்றும் ஸமஸ்த ஜகத்தும் ப்ரஹ்மத்தின் விகாரம் என்றே கூறப்பட்டுள்ளமையால்
விபாக -உத்பத்தி சொல்லப்பட்டதாகிறது
லோகவத் -உலகில் யாவரும் தேவதத்தன் புதல்வர்கள் என்று சொல்லிப் பின் குறிப்பிட்ட சிலரை மட்டும் சுட்டி
இவர்கள் தேவதத்த புதல்வர்கள் என்று சொன்னால் மற்ற எல்லாரும்
அவனுடைய புதல்வர்கள் என்பதைக் காட்டுவதாகிறது –
அதேபோல் இங்கும் க்வசித் தேஜஸ்ஸு க்கு உத்பத்தி சொன்னது
ஆகாசத்தில் உத்பத்தையைக் காட்டுவதற்க்கே யாகும் என்று அபிப்ராயம் –

——————

ஸூத்ரம் –220-ஏதேந மாதரிச் வாவ் வ்யாக்யாத –2-3-8–

ஏதேந –ஆகாசத்துக்குக் கூறிய நியாயத்தாலே
மாதரிச் வாவ் வ்யாக்யாத-வாயுவும் விளக்கப்பட்டது
ப்ரஹ்மத்தின் காரியமே என்று கூறப்படுகிறது
மேலே தேஜோ அத ததாஹ் யாஹ 2-3-10-என்ற ஸூத்ரத்தில்
அத -என்ற சொல்லாலே வாயுவை பாரமர்சிக்கைக்காக
ஏதேந மாதரிச் வாவ் வ்யாக்யாத–என்று தனி ஸூத்ரம் செய்தார் என்று கருத்து –

—————-

ஸூத்ரம் –221-அசம்ப வஸ் து ஸதோ அனுப பத்தே –2-3-9–

து -என்பது ஏவகார பொருளில் வந்தது
ஸத் அஸ்து அஸம்பவ –ஸத் என்ற ப்ரஹ்மத்துக்கு உத்பத்தி -அஸம்பவ-இல்லாமை –
ப்ரஹ்மத்தைத் தவிர வேறே எதற்கும் உத்பத்தி இல்லாமை கூற முடியாது -என்பதாயிற்று
அனுப பத்தே -ஏக -விஞ்ஞானத்தால் ஸர்வ விஞ்ஞானம் என்ற
ப்ரதிஜ்ஜைக்கு அனுபவத்தி வாராமைக்காக ப்ரஹ்மத்தைத் தவிர்த்த ஆகாசாதி ஜகத்து முழுவதற்கும்
உத்பத்தி சித்தித்தது –

————————

இரண்டாவது அதிகரணம் –தேஜோ அதிகரணம் –

மஹத் முதலியவற்றுக்கும் ப்ரக்ருதியாதிகளைச் சரீரமாகக் கொண்ட ப்ரஹ்மத்திடம் இருந்து உத்பத்தியை
இவ்வதிகரணத்தில் சாதிக்கிறார் என்று சங்கதி
நான்கு ஸூத்ரங்கள் பூர்வ பக்ஷம்

ஸூத்ரம் –222-தேஜோ அதஸ் ததாஹ்யாஹ –2-3-10-

ப்ரஹ்மத்தால் அனு பிரவேசிக்கப்பட்ட மஹான் அஹங்காரம் முதலிய கார்யங்கள்
தனி ப்ரக்ருதி முதலியவற்றில் இருந்து உண்டாகின்றனவா
அல்லது ப்ரக்ருதியை சரீரமாகக் கொண்ட பரமாத்மாவின் இருந்து உண்டாகின்றனவா
இவ்வாறு ஆகாசாத் வாயு -என்கிற இடத்தில்
வெறும் ஆகாசத்தில் இருந்து வாயு தோன்றுகிறதா
அல்லது ஆகாசத்தை சரீரமாகக் கொண்ட பரமாத்மா விடம் இருந்து தோன்றுகிறதா என்று சங்கை
கேவலம் பிரகிருதி முதலியவற்றில் இருந்தே தோன்றுகின்றன என்பது பூர்வ பக்ஷம்
ஆகாசாத் வாயு -வாயோர் அக்னி -என்று கேவலம் ஆகாசாதிகளே காரணங்கள் என்று
சொல்லுகையால் என்னும் பக்ஷத்தை உபந்நியாசிக்கிறார்

அத-கேவல வாயுவில் இருந்து
தேஜஸ் -தேஜஸ் உண்டாகிறது
ததாஹ்யாஹ-ஸ்ருதி அப்படித்தான் கூறுகிறது –

——–

ஸூத்ரம் –223-ஆப –2-3-11-

அதஸ் ததாஹ்யாஹ -என்று கூட்டிக் கொள்ள வேண்டும்
அத-கேவலம் இந்த தேஜஸ்ஸில் இருந்தே
ஆப -ஜலம் உண்டாயிற்று
ததாஹ்யாஹ -ஸ்ருதி அப்படித்தான் கூறுகிறது –

————

ஸூத்ரம் -224-ப்ருத்வீ -2-3-12-

இவ்வாறே பிருத்வீயும் கேவலம் அப்புக்களில் இருந்து -ஜலத்தில் இருந்தே உண்டாகிறது
என்று ஸ்ருதி கூறுகிறது –
தா அன்னம் அஸ்ரு ஜந்த –என்னும் இடத்தில்
அன்ன -சப்தத்தால் எப்படி பிருத்வீ கூறப்படுகிறது என்றால்

———

ஸூத்ரம் –225-அதிகார ரூப சப்தாந்த ரேப்ய–2-3-13-

த அன்னம் அஸ்ருஜந்த -என்னும் இடத்தில் அன்னம் என்று பிருத்வீ கூறப்படுகின்றது
ஏன் எனில்
அதிகாரத்தால் -மஹா பூதங்களில் ஸ்ருஷ்டி பிரகரணம் ஆகையால்
ரூபாத் யத் க்ருஷ்ணம் ததந் நஸ்ய -என்று
மேல் வாக்யத்தாலே பிருத்வியின் க்ருஷ்ண ரூபத்தை அன்னத்துக்குச் செல்வதாலும்
சப்தாந்தராச்ச –இந்த சாந்தோக்யத்துக்கு சமான பிரகரணமான தைத்ரியத்திலே
அத்ப்ய ப்ருத்வீ –ஜலத்தில் இருந்து பிருத்வீ உண்டாகிறது என்று கூறும்
வேறு சப்தத்தாலும் அன்னம் என்பது பிருத்வீயே ஆகும்

இந்த பூர்வ பக்ஷத்தை நிரஸனம் செய்கிறார் –

———–

ஸூத்ரம் –226-ததபித்யானா தேவது தல் லிங்காத் ஸ –2-3-14-

து சப்தம் பூர்வ பக்ஷத்தை விலக்குவது
கேவலம் மஹத் அஹங்காரம் ஆகாச தேஜஸ் வாயு முதலியவை தம் கார்யங்களை உண்டாக்குபவை அன்று –
ஆனால் ஸ ஏவ -மஹத்தாதிகளைச் சரீரமாகக் கொண்ட பரமாத்மாவே அஹங்காராதிகளுக்கு காரணம்
தல் லிங்காத் –தத் அபி -த்யானத் –
பரமாத்மாவே அஹங்காராதிகளின் காரணம் என்பதற்கு லிங்கமான
பரமாத்மாவின் அபித்யான ரூபமான ஸங்கல்பத்தாலே
தத் ஈஷத
பஹுஸ்யாம் ப்ரஜாயேய யேதி
தத் தேஜோ அஸ்ருஜத
தத் தேஜ ஈஷத –தா ஆபா ஈஷாந்த
பலவாக ஆவோம் -உத்பத்தி செய்வோம்
இது முதலிய இடங்களிலே பஹு வான ஸங்கல்ப ரூபமான அபித்யானம் பரமாத்ம லிங்கம்
என்று அன்றோ சொல்லப்படுகிறது

இங்கு தேஜஸ் முதலிய சொற்கள்
தேஜஸ் முதலியவற்றைச் சரீரமாகக் கொண்ட பர ப்ரஹ்ம பரங்கள் என்று
நாம ரூப வியாகரண ஸ்ருதியாலே ஸித்தித்தது
கேவலமான அசேதனங்களுக்கு இத்தைய ஸங்கல்பம் கூடாது என்று கருத்து –

————–

ஸூத்ரம் –227–விபர்ய யேண து க்ரமோ அத உப பத்யதே –2-3-15-

து -என்பது ஏவகாரப் பொருளில் வந்தது –
விபர்ய யேண-க்ரமமும் இதனாலே பொருந்துகிறது
ஆகாசாத் வாயு -முதலியவற்றில் பரம்பரையாகக் கூறப்பட்ட ஸ்ருஷ்டி க்ரமத்தை விட
ஏதஸ் மாஜ் ஜாயதே பிராணா -மனஸ் -ஸர்வ இந்திரியாணி ச -முதலிய ‘இடங்களில் சொன்ன
ப்ரஹ்மத்தின் இடத்தில் இருந்தே எல்லாம் உண்டாகிறது என்கிற விபரீத க்ரமமும்
அத ஏவ உப பத்யதே –அதை அதை சரீரமாகக் கொண்ட பரமாத்வின் ஸங்கல்பத்தாலே
ஸ்ருஷ்டி என்று சொன்னால் தான் பொருந்தும் –

—————–

ஸூத்ரம் –228-அந்தரா விஞ்ஞான மனஸீ க்ரமேண தல் லிங்காத் இதி சேந் ந அவிசேஷாத் –2-3-16-

விஞ்ஞான காரணங்களாக இந்திரியங்கள் மனம் என்பவை
ஏதஸ்மாஜ் ஜாயதே ப்ரானோ மன ஸர்வ இந்திரியாணி ச
கம் வாயுர் ஜ்யோதிர் ஆப ப்ருத்வீ –முதலிய ஸ்ருதிகளிலே
ஏதஸ்மாத் -என்பது பர ப்ரஹ்மம் அன்று -தன்மாத்ரத்தைக் குறிப்பது
ஆகவே ஆகாசத்திற்கும் ஐந்து தன்மாத்ரைக்கும் நடுவே இந்திரியங்களும் மனஸும் பிராணனும்
க்ரமப்படி உண்டாகின்றன என்று இந்த க்ரம ஸ்ருஷ்டி விவஷிக்கப் படுகிறது

தல் லிங்காத் -பிருத்வி அப்யஸூ ப்ரலீயதே என்று தொடங்கி –
வாயு ஆகாச ப்ரலீயதே -ஆகாசம் இந்த்ரியேஷூ ப்ரலீயதே —
இந்திரியாணி தன்மாந்த்ரேஷு ப்ரலீயதே — -தன்மாத்ராணீ பூதாதவ் ப்ரலீயந் தே —
என்று கூறிய பிரளய க்ரமத்தை நினைவுறுத்தும் லிங்கத்தால் அவ்வாறே தோன்றுகிறது
இதி சேந் ந -என்பது தவறு
அவிசேஷாத்–பூதங்களுக்கும் தன்மாத்திரைகளுக்கும் இடையில் விஞ்ஞானங்களும் மனமும் உண்டாகிறன என்றாலும்
தேஜஸ் முதலிய சொற்கள் அவற்றைச் சரீரமாகக் கொண்ட ப்ரஹ்மத்தையே குறிப்பவை என்றால் போலே
இந்திரிய மனஸ் பிராண சப்தங்களும் அவற்றை சரீரமாகக் கொண்ட ப்ரஹ்மத்தையே குறிப்பவை யாதலின்
அனைத்திற்கும் ப்ரஹ்மத்தின் இடம் இருந்தே ஸ்ருஷ்டி என்ற பொருள் முடிவதால்
ஏ தஸ்மாத் ஜாயதே பிராண-என்பதற்கும்
ஏ தஸ்மாத் ஜாயதே கம் -என்பதற்கும்
வேறுபாடு ஏதும் இல்லாமையாலே ப்ரஹ்மத்திடம் இருந்தே சாஷாத்தாக சர்வமும் உண்டாகின்றன
என்பதற்கு இவ் வாக்கியம் ப்ரமாணமாம்

உலகில் தேஜஸ் அக்னி முதலிய சொற்களுக்கு ப்ரஹ்மமே பொருள் என்று கூறியது
முக்யமில்லாமல் கௌணமாகி விடுமே என்னும் சங்கையை அடுத்தபடி நீக்குகிறார் –

———-

ஸூத்ரம் –229–சராசர வ்யபாஸ்ரயஸ் து ஸ்யாத் தத் வ்யப தேசோ பாக்த தத் பாவ பாவித்வாத் –2-3-17-

து -என்பது சங்கையை விலக்குகிறது
சராசர வ்யபாஸ்ரயஸ் -ஜங்கம ஸ்தாவர வஸ்துக்களைச் சொல்லுகிற
தத் வ்யப தேச-அந்த ஜங்கம ஸ்தாவர வாசகமான சொற்கள்
ப்ரஹ்மணி அபாக்த -ஜகத்தின் அந்தர்யாமியான ப்ரஹ்மத்தையே முக்கியமாகக் குறிப்பன
தத் பாவ பாவித்வாத்–ப்ரஹ்மத்தின் அநு ப்ரவேசத்தால் நடப்பதால்
இதனால் தேஜஸ் முதலிய சப்தங்களும் ப்ரஹ்ம பர்யந்தம் குறிப்பிடுவன என்பதற்கும்
ப்ரஹ்மம் சர்வத்துக்கும் அந்தர்யாமீ என்பதே காரணம் என்பதாகிறது

அநேந ஜீவே நாத்மன் அனு ப்ரவிஸ்ய நாம ரூபே வியாகரவாணி தத் அனு பிரவிஸ்ய சச்ச த்யச்சா பவத் -என்னும்
ஸ்ருதிகளில் லோகத்தில் புத்ராதிகளுக்கு நாம ரூபாதி வியாகரணம் செய்யும் பெற்றோர்கள் போல் அன்றிக்கே
செய்யப்படும் நாம ரூபங்கள் தன் வரையாக வேண்டும் என்று எம்பெருமான் அவற்றுள்
அந்தப் பிரவேசம் செய்வதாலேயே ஸர்வ ஸப்தங்களும் அந்தர்யாமியான விசேஷ்யம்-ப்ரஹ்மம் -வரை போதிப்பவை
ஆகையால் ப்ரஹ்ம போதகத்வம் என்பதே முக்யம் என்பது கருத்து –

—————

மூன்றாம் அதிகரணம் -ஆத்ம அதிகரணம்

இப்படி அசேதனத்திற்கு ஸ்வரூப பரிணாம ரூபமான ப்ரஹ்ம கார்யத்தைக் கூறி
ஜீவனுக்கு அசேதனம் போலே அத்தகைய கார்யத்வம் இல்லா விட்டாலும்
ஸ்வ பாவ அந்யதா பாவம் -மாற்றம் -என்னும் கார்யம் கூடுமாதலின் –
ப்ரஹ்ம கார்யத்வம் பொருந்துவதை இவ்வதி கரணத்தில் ஸ்தாபிக்கிறார்
என்று சங்கதி –

ஸூத்ரம் –230–ந ஆத்மா ஸ்ரூதே நித்யத் வாச் ச தாப்ய–2-3-18-

ஆத்மா உத் பன்னம் ஆகிறதா இல்லையா என்று சம்சயம்
ஆகிறது என்று பூர்வ பக்ஷம்
தோயேன ஜீவான் விஸ சர்ஜ பூம்யாம் பிரஜாபதி -ப்ரஜா அஸ்ருஜதே -முதலிய
ஸ்ருதிகளில் ஜீவனுக்கு உத்பத்தி சொல்லப்பட்டு இருப்பதால் -என்றபடி
ஆனால்
நித்யோ நித்யாநாம் சேதனச் சேதநாநாம் -என்று ஜீவன் நித்யனாகக் கூறப்பட்டு இருக்கிறதே என்றால்
வாயுச் சாந்தரிஷஞ்சை தத் அம்ருதம் -என்பது போலே
நீண்ட காலம் நிற்பது என்ற கருத்தைக் கொண்டது எனலாம்
ஆத்மாவுக்கு உத்பத்தி உண்டு என்பதை ஒத்துக் கொள்ள விட்டால் ப்ரஹ்ம கார்யத்வம் கூடாமையாலே
ஏக விஞ்ஞானத்தால் ஸர்வ விஞ்ஞானம் வரும் என்ற ப்ரதிஜ்ஜை பொருந்தாது
என்று கூறும் பக்ஷத்தை நிராகரிக்கிறார் –

ந ஆத்மா ஸ்ரூதே –ஆத்மா உத்பத்தி உள்ளது அன்று
ந ஜாயதே ம்ரியதே வா விபச்சித் -என்பது போன்ற
ஸ்ருதிகளால் உத்பத்தி இல்லை எனப்படுவதால்
தாப்யநி த்யத் வாச்ச -நித்யோ நித்யாநாம் முதலிய ஸ்ருதிகளில் ஆத்மாவுக்கு
நித்யத்வம் சொல்லப்படுவதால் என்றபடி
ஜீவர்களுக்கு ஸ்ருஷ்டியைச் சொன்னது ஸூக துக்க அனுபவத்துக்கு ஏற்றபடி
ஞானத்துக்கு சுருக்கமும் விரிவுமாகிற ஸ்வ பாவ மாற்றம் என்னும் காரியத்தைக் கருத்தில் கொண்டதே யாகும் –
இத்தகைய வேறு அவஸ்தையைப் பெறலாகிற உத்பத்தி கூடுமாகையாலே
ஜீவனுக்கு ப்ரஹ்ம கார்யத்வம் தடை அற்றதாதலின்
ஏக விஞ்ஞானத்தால் ஸர்வ விஞ்ஞானமும் வரும் என்கிற ப்ரதிஜ்ஜை தவறு அற்றதாகிறது
ஸ்ருஷ்டிக்கு முன்பு ப்ரஹ்மம் ஏகமே இருந்தது என்பது
தேவர் முதலிய நாம ரூப விபாகம் அற்ற ஸூஷ்ம ஜீவ சரீரகம் என்று கருத்து –

இவ்விடம் முக்கியமானதொரு விஷயம்
நம் சித்தாந்தத்தில் ஸர்வ த்ரவ்யங்களின் ஸ்வரூபம் நித்தியமாய் இருந்தாலும்
அநித்யங்களான அவஸ்தா பேதங்களை இட்டு அநித்யம் என்று கூறுகிறோம்
இப்படி அநித்யங்களான மஹத்வாதி அவஸ்தா மூலமான த்ரவ்யங்கள் அநித்யங்கள் ஆனாலும்
அவயவியை ஒப்புக் கொள்ளாமையாலே ஸ்வரூப பத நித்யத்வம் ஸித்தமாயிற்று
அப்படியே த்ரவ்யங்களிலே அடங்கிய ஆத்மாவுக்ககும் ஸ்வரூப பத நித்யத்வம் ஸித்தமாயிற்று இருக்க
ந ஆத்மா ஸ்ருதே -என்று மறுபடியும் ஆத்மாவுக்கு நித்யத்வத்தை ஏன் கூறுகிறார் எனில்
இவ்விஷயத்தில் சிறிது வேறுபாடு உள்ளது
நாமாந்தர பஜன காரணமான அவஸ்தைகள் ஸ்வரூபத்தைச் சார்ந்தவை
அது போல் ஆத்மாவின் ஸ்வரூபமே நிர்விகாரமாதலின் ஞான சங்கோச ரூப அவஸ்தையும்
தேவத்வம் முதலிய அவஸ்தையும் ஆத்ம ஸ்வரூபத்தைச் சார்ந்தவை அல்ல என்னும் பேதத்தைக் காட்டவே
திரும்ப ஆத்மாவின் நித்யத்வத்தை இங்கே கூறுகிறார்
இதனால் த்ரிகுணாத்மக த்ரவ்யம் போலே ஜீவனுக்கு ஸ்வரூப விகாரம் இல்லை என்று கூறியது ஆகிறது

தேவாதிகளான அவஸ்தைகள் ஸ்வரூபத்தைச் சாராதவை
ஆனால் ப்ரத்யக்த்வம் ஞாத்ருத்வம் என்ற இரு தர்மங்கள் நித்யங்கள்
சம்சார தசையில் பல சரீரங்களை எடுக்கையிலும் ஸ்வரூபத்தை விடுவது இல்லை
இந்தப் ப்ரத்யக்த்வம் இரண்டு விதம்
நான் என்று தனக்குத் தோற்றுகை -பிறவற்றுக்குத் தான் தோற்றுகை
நான் நான் என்று தனக்குத் தோற்றுகை ஸ்வரூபத்தால் ஏற்படுவது
இது தான் ஸ்வஸ்மை ஸ்வயம் பாசமானத்வம் எனப்படும்
நான் உறங்கினேன் நான் இத்தகையவன் என்று
வேறு விசேஷங்களுடன் கூடித் தோன்றுகை பரதஸ் ஸ்வஸ்மை பாசமானத்வம்
இது தர்ம பூத ஞானத்தால் ஆவது -இவ்விரண்டும் சித்தாந்தத்துக்கு ஏற்றது
இவ்வபிப்ராயத்தாலேயே ஸூத்ர காரர் மறுபடி ஆத்ம நித்யத்வத்தை அருளிச் செய்தார் என்பதாம்

————–

நான்காம் அதிகரணம் –ஜ்ஞாதி கரணம்

ப்ரசங்கத்தால் ஜீவனின் ஸ்வரூபத்தை நிரூபிக்கிறார் –
ஜீவன் சைதன்ய மாத்ர -ஞான மாத்ர -ஸ்வரூபனா
ஜட ஸ்வரூபனாய் இருந்து வைத்து புதிதாக வந்த ஞானத்தைப் பெற்றவனா
அல்லது ஞாத்ருத்வத்தையே ஸ்வரூபமாகக் கொண்டவனா என்று சம்சயம்
ஞான மாத்ர ஸ்வரூபம் என்று முதல் பக்ஷம்
விஞ்ஞானம் யஜ்ஞம் தநுதே -என்று ஞான ஸ்வரூபன் என்கிறது –
ஸூஷு தி மூர்ச்சாதிகளில் ஆத்மாவுக்கு ஞானம் தோன்றாமையால்
சைதன்ய குணம் வரப்பெற்று கல் போன்று இருக்கிறான் என்பது இரண்டாம் பக்ஷம்
இவ்விரண்டையும் நிரசிக்கிறார் –

ஸூத்ரம் –231-ஜ்ஞ அத ஏவ –2-3-19-

ஜ்ஞ –ஜீவன் ஞான ஆஸ்ரயனே
அத ஏவ -அதயோ வேத இதம் ஜிக்ராணீ திச ஆத்மா நபஸ்யோ ம்ருத்யும் பஸ்யதி –போன்ற ஸ்ருதிகளால்
பக்தன் முக்தன் என்றும் இரு வகை ஜீவனும் ஞாதா என்று கூறுவதாலே ஆத்மா ஞாதாதே என்பது ஸித்தாந்தம்
ஞான மாத்ரம் என்று ஸ்ருதி கூறியது நித்தியமான தர்மபூத ஞானம் ஆத்மாவுக்கு ஸ்வரூப நிரூபக குணமாகையாலும்
ஆத்ம ஸ்வரூபம் ஸ்வயம் ப்ரகாசகமாகையாலும் என்றபடி
ஸூஷூப்த்யாதிகளிலே தர்ம பூத ஞானம் கர்மத்தால் சங்குசிதமாய் இருக்கிறது –
ஆதலின் ஆத்மா ஞாத்ரு ஸ்வரூபன் என்று தேறுகிறது

————-

ஜீவாத்மா விபு என்னும் வைசேஷிகன் இரண்டாம் பக்ஷத்தை நிரசிக்கிறார்

ஸூத்ரம் –232–உத் க்ராந்தி கத்யாக தீ நாம் –2-3-20-

ஸ்ருதே -என்று கூட்டிக் கொள்ள வேண்டும்
உத் க்ராந்திக்குப் பின் கதி -ஆகமனம் பற்றிய ஸ்ருதி உள்ளமையால் என்றபடி
அணு ஸ்வரூபோ ஜீவ –தேந ப்ரத்யோ தேந ஏஷ ஆத்மா நிஷ் க்ராமதி -என்று
ஜீவனுக்கு தேகத்தில் இருந்து உத் க்ராந்தி -வெளியேற்றம் -ஸ்ருதியில் ப்ரஸித்தமானது
ஆத்மா விபுவானால் இது எப்படிக்கூடும்
யேவை சாஸ்மாத் லோகாத் ப்ரயந்தி சந்த்ர மச மேவ தே கச்சந்தி -என்று
தேகத்தில் இருந்து வெளிக்கிளம்பும் ஜீவன் ஸ்வர்க்கத்துக்குச் செல்லலும்
புனரேதி அஸ்மை லோகாய கர்மணே -என்று
மறுபடியும் பூமியில் கர்ம சேஷத்தை அனுபவிக்கைக்காக வருகிறான் என்று வருகையும்
கூறப்படுவதால் ஆத்மாவுக்கு விபுத்வம் பொருந்தாது -ஆதலின் ஜீவன் அணு ஸ்வரூபனே –

————-

ஸூத்ரம் –233-ஸ்வாத்ம நா ச உத் தரயோ –2-3-21-

ச -என்பது ஏவகாரார்த்தம் உடையது
உத் தரயோ -உத் க்ராந்திக்குப் பின் கதியும் ஆகதியும் -இரண்டும்
ஸ்வாத்ம நா ச -ஸ்வரூபத்துடனேயே ஆத்ம ஸ்வரூபம் பர லோகம் செல்கிறது
இந்த லோகத்துக்கு வருகிறது என்ற நிர்வாஹம் பொருந்தும்
ஆத்மா விபு என்றால் சரீரத்தில் இருந்த ஆத்மாவுக்குச் சரீரத்தில் இருந்து பிரிவு தான்
உத் க்ராந்தி என்று ஸ்ரமப்பட்டு நிர்வகித்தாலும்
பின்னர் வரும் கமன ஆகமனங்கள் பொருந்தாது -என்பதாம் –

————-

ஸூத்ரம் –234–ந அணுர் அதத் ஸ்ருதேர் இதி சேந் ந இதர அதிகாராத் –2-3-22-

ந அணுர் -ஜீவன் அணு அல்லன்
அதத் ஸ்ருதேர் -அணுத்வத்திற்கு எதிரான மஹத்வத்தைக் கூறும் ஸ்ருதி இருப்பதால்
யோ அயம் விஞ்ஞான மய –எனத் தொடங்கி
ஸ வா ஏஷ மஹான் அஜ ஆத்மா –என்று ஜீவனுக்கு மஹத்வம் கூறுவதால்
இதி சேந் ந -என்பது தகாது
இதர அதிகாராத் –இந்த வாக்கியத்தில் ஜீவனுக்கு மஹத்வம் கூறவில்லை –
பரமாத்மாவுக்கே மஹத்வம் கூறப்படுகிறது
யஸ்யா னுவித்த பிரதிபுத்த ஆத்மா -என்று நடுவில் ஜீவனைக் காட்டிலும் இதரனான பரமாத்மாவைப் பற்றி பேசுவதால்
பிரகரணம் முழுவதும் பரமாத்மாவைப் பற்றியதே
யஸ்ய பரம புருஷஸ்ய அனு வித்த -உபாஸக ஆத்மா பிரதி புத்தோ பவதி -ஸர்வஞ்ஜோ பவதி
என்பது ஸ்ருதியின் பொருள் –

————–

ஸூத்ரம் –235–ஸ்வ சப்தோந் மானாப் யாஞ்ச –2-3-23–

ஏஷோ அணுர் ஆத்மா யஸ்மின் ப்ராண பஞ்சதா சப் விபேச -என்று
ஸாஷாத் அணு ஸப்தம் கூறப்படுவதாலும்
உன் மனத்தாலும்
ஆரா என்ற தானியத்தின் நுனி அளவு என்று வாலாக்ர பாகத்தின் பதினாயிரத்தில்
ஒரு பங்கு ஜீவன் என்று சொல்வதால்
ஜீவன் அணுவே ஆவான் –

———-

ஸூத்ரம் -236–அவிரோத சந்தன வத்–2-3-24–

அணுவான ஜீவன் உடலின் ஏக தேசத்தில் இருந்தாலும் உடல் முழுவதுமான
ஸூக துக்க அனுபவத்தில் விரோதம் இல்லை
சந்தன வத்-சந்தனத்துளி உடலில் ஒரு பகுதியில் பூசப்பட்டாலும் உடல் முழுவதும் பரவலாய்
இன்பத்தைக் கொடுப்பது போலேவே ஆத்மாவும் அனுபவிக்கலாம் –

—————-

ஸூத்ரம் –237–அவஸ்திதி வைசேஷ்யாத் இதி சேந் ந அப்யுபகமாத் ஹ்ருதி ஹி –2-3-25–

சந்தன பிந்து மார்பில் வைக்கப்படுவதால் இன்பம் பயக்கிறது –
ஆத்மாவுக்கோ அவ்வாறு ஓர் இடம் இல்லை என்பதால் எப்படி அவ்வனுபவங்கள் கூடும்
இதி சேந் ந -என்பது பொருந்தாது
அப்யுபகமாத் -ஆத்மாவுக்கு தேஹத்தில் மார்பிலே சிறப்பான இருப்பு ஏற்கப்பட்டு இருக்கையாலே
உடல் முழுவதும் பரவும் இன்ப துன்பங்களின் அனுபவம் கூடும் –
இதயத்தில் யோ அயம் விஞ்ஞான மய ப்ராணேஷு ஹ்ருத் யந்தர் ஜ்யோதி -என்னும் ஸ்ருதியில்
ஆத்மா ஹ்ருதயத்தில் இருப்பதாக கொள்ளப் படுகிறான் அல்லவா –

—————

ஸூத்ரம் –238–குணாத வ ஆலோக வத் –2-3-26–

வ -ஸப்தம் மதாந்தரத்தை விலக்குகிறது –
குணாத் -அணுவான ஆத்மா தன் குணமாயும் விபு வாயும் உள்ள தர்ம பூத ஞானம் மூலம்
எல்லா தேஹத்தையும் வியாபித்து இருக்கிறது –
ஆலோகவத் –ஓர் இடத்தில் உள்ள ஸூர்யன் தீபம் மணி முதலியவற்றின் ஒளி குணமாய் மிகுந்த பிரதேசத்தை
வியாபித்து இருப்பது போலே ஆத்மாவின் தர்ம பூத ஞானமும் வியாபித்து இருப்பதில் தடையில்லை –
விஞ்ஞானம் யஜ்ஞம் தநுதே -முதலிய ஸ்ருதிகளில் விஞ்ஞான ஸ்வரூபனாய்ப் பேசப்பட்ட ஆத்மாவுக்கு
ஞானம் குணம் என்பது எவ்வாறு என விளக்குகிறார் –

—————-

ஸூத்ரம் –239–வ்யதிரேகா கந்தவத் ததா ச தர்சயதி–2-3-27–

வ்யதிரேக –ஞான ஸ்வரூபனான ஆத்மாவைக் காட்டிலும் -குணமான தர்ம பூத ஞானத்திற்கு
வேறுபாடு அவஸ்யம் ஏற்கத் தக்கது
கந்தவத் -கந்தமுடையது பிருத்வீ என்றால் பிருத்வீயைக் காட்டிலும் அதன் குணமான கந்தத்திற்கு
வேறுபாடு சித்தித்தால் போலே தர்ம பூத ஞானத்திற்கும் ஸித்திக்கும்
ததா ச தர்சயதி–ஜாநாத் யே வாயம் புருஷ –என்பது போன்ற ஸ்ருதிகளும்
குணியாயும் குணமாயும் பிரித்துக் காட்டுகின்றன —

—————-

ஸூத்ரம் –240-ப்ருதக் உப தேசாத் –2-3-38–
ந விஞ்ஞாதுர் விஞ்ஞாதேர் விபரி லோபோ வித்யதே -என்று
தர்மியான ஞானத்தைத் தனிப்படுத்தி
ஞானம் நித்யம் என்று சொல்வது எப்படிக் கூடும் என்பதற்கு விடை தருகிறார்

———–

ஸூத்ரம் –241-தத் குண சாரத்வாத் து தத் வியபதேச ப்ராஞ்ஜவத்–2-3-29–

து சப்தம் சங்கையை விலக்க வல்லது
தத் குண சாரத்வாத் -அந்த ஞான ரூப குணத்தை சாரமாக ஸ்வரூப நிரூபகமாகக் கொண்டு இருப்பதால்
தத் வியபதேச –ஆத்மாவை ஞானம் என்று வ்யவஹரிப்பது
ப்ராஞ்ஜவத்-ப்ரஹ்மணா விபச்சிதா என்று ப்ராஞ்ஞன் எனப்பட்ட பரம புருஷன்
ஸத்யம் ஞானம் என்று ஞான ஸ்வரூபனாக வியவஹரிக்கப் படுகிறானோ
அப்படியே ஜீவனும் என்பதாம் —

————-

ஸூத்ரம் –242–யாவதாத்ம பாவித் வாச்ச ந தோஷ தத் தர்சனாத் –2-3-30-

ஞானம் ஆத்மாவுக்கு ஸ்வரூபம் உள்ளளவும் நிற்பதாகையாலும் அந்த நித்யமான தர்ம பூத ஞானத்தாலே
அந்த ஆத்மாவை வியவஹரிப்பதில் குற்றம் ஒன்றும் இல்லை
தத் தர்சனாத்-கண்ட முண்டமான பசுவின் இனத்திற்கு பசுத்வம் என்ற தர்மம்
அந்த ஸ்வரூபம் உள்ள அளவும் நிற்பதாகையால்
அந்த பசுத்வத்தினைக் குறிப்பதான பசு என்ற சொல்லால்
கண்டாதிகளான இனம் அனைத்தையும் குறிப்பதால் இங்கும்
விஞ்ஞானம் யஜ்ஞம் தநுதே -என்று விஞ்ஞான ஸப்தத்தாலே ஆத்மாவைக் குறிப்பதில் தவறு இல்லை –
ச காரத்தாலே
ஆத்ம ஸ்வரூபம் ஸ்வ ப்ரகாசமாகையாலும் ஞானம் என்று குறிப்பிடலாம் என்று காட்டப் படுகிறது

ஆத்மாவுக்கு ஞானம் நித்யமாகில் ஸூஷூப்தி முதலிய தசைகளில் ஏன் அது தோன்றவில்லை
என்னும் சங்கையை மேலே பரிஹரிக்கிறார் –

—————-

ஸூத்ரம் –243–பும்ஸ்த்வாதி வத் வஸ்ய ததோ அபி வ்யக்தி யோகாத் –2-3-31–

து ஸப்தம் சங்கையை விலக்குகிறது
அஸ்ய ஸத -ஸூஷூப்யாதிகளிலும் மறைவாயுள்ள இந்த ஞானத்திற்கு விழிப்பு நிலையில்
அபி வ்யக்தி யோகாத் –வெளியீடு உள்ளமையால் ஞானம் பிரகாசிப்பதால் ஞானம் ஆத்மாவுக்கு நித்தியமான தர்மம்
பும்ஸ்த்வாதி வத்–சரீரத்தில் இருக்கும் ஆண்மைக்கான தாது பால்யத்தில் வெளிப்படாமல் இருந்து
யவ்வனத்தில் வெளித் தோன்றுவது போலே இங்கும் குறையில்லை –

——————–

இவ்வாறு ஆத்மாவுக்கு ஞாத்ருத்வத்தையும் அணுத்துவத்தையும் சாதித்து
விபுத்வம் கூறி வரும் குற்றத்தையும் எடுத்துக் காட்டுகிறார் –

ஸூத்ரம் –244–நித்யே பலப்த் யநுபலப்தி பிரசங்கோ அந்யதா நியமோவா அந்யதா –2-3-32–

அந்யதா -ஆத்மா ஞான மாத்ர ஸ்வரூபன் என்னும் பக்ஷத்திலும்
ஆத்மா சர்வகதன்-விபு -என்னும் பக்ஷத்திலும்
நித்யமாயும் உப லப்தியோ – புலப்படலோ -அனுப லப்தியோ – புலப்படாமையோ -ஏற்படும் –
அதவா அந்யதர நியம -அல்லது அவ்விரண்டில் ஓன்று எப்போதும் கட்டாயம் இருக்க வேண்டும்

ஞான மாத்ர ஸ்வரூபன் என்னும் பக்ஷத்தில்
ஆத்மா புலப்படுகைக்கும் புலப்படாமைக்கும் ஆத்ம ஸ்வரூபமே காரணம் ஆதலின்
வேறு ஹேது இல்லாமையால் ஸ்வரூபம் நித்யமாதலின் இரண்டும் நித்யமாய் இருக்கும் –
ஆனால் புலப்படுகையும் புலப்படாமையும் ஒன்றோடு ஓன்று முரண் பட்டவை யாதலின்
இரண்டில் ஒன்றுக்கே ஆத்ம ஸ்வரூபம் ஹேது என்று சொல்லில்
இரண்டில் ஓன்று இருந்தே தீர வேண்டும் நியமம் வந்து சேரும்

ஆத்மா விபு என்னும் பஷத்திலும்
ஞானத்துக்கு ஹேதுவான ஆத்ம மனஸ் ஸம்யோகங்கள் விபுக்கள் அனைவருக்கும் பொது யாதலின்
ஒரு ஆத்மாவுக்கு ஞானம் உண்டானால் எல்லாருக்கும் அது புலப்பட வேண்டி இருக்கும்
ஒருவருக்குப் புலப்பட வில்லை என்றால் எல்லாருக்கும் புலப்படாமலே போக வேண்டி இருக்கும்
ஆகையால் இந்த இரண்டு மதமும் சரியானவை அல்ல என்பதாம் –

——————

ஐந்தாம் அதிகரணம் –கர்த்ர் அதி கரணம் –

இப்படி ஆத்மாவுக்கு கர்த்ருத்வத்தை சாதிக்க வல்ல ஞாத்ருத்வத்தை நிரூபித்து
கர்த்ருத்வம் நிரூபிக்கிறார் என்று சங்கதி

ஸூத்ரம் –245-கர்த்தா ஸாஸ்த்ர அர்த்தவத் வாத் –2-3-33-

ஆத்மாவுக்கு ஞாத்ருத்வம் போலே கர்த்ருத்வம் உண்டா இல்லையா என்று சம்சயம்
அஹங்கார விமூடாத்மா கர்த்தா அஹமிதி மன்யதே -என்று சொல்வதால் ஆத்மா கர்த்தா அன்று
ப்ரதானமே கர்த்தா என்பது பூர்வ பக்ஷம்
இந்த சாங்க்ய மதத்தை நிரசிக்கிறார் –

ஆத்மாவே கர்த்தா -பிரதானம் அன்று –
ஏன் எனில்
ஸாஸ்த்ர அர்த்த வத் வாத் –ஆத்மா கர்த்தா வானால் தான்
யஜேத -உபா ஸீ த -என்று யாக உபாஸனாதிகளை விதிக்கும் ஸாஸ்த்ரம் பிரயோஜனம் உள்ளதாகும்
சாஸனாத் ஸாஸ்த்ரம் என்கிறபடி -கர்த்தா செய்ய வேண்டிய கர்மங்களை விதித்துத் தூண்டுகிறது –
இதனால் ஞாதாவை உத்தேசித்துத் தானே இதைச் செய் -இதைச் செய்யாதே என்று
விதி நிஷேதங்களைக் கூறுவது பொருந்துகிறது
அசேதனமான பிரதானம் கர்த்தாவானால் அவ்வாறு விதிப்பது பொருந்தாது
ஆதலின் கர்த்தாவான ஆத்மாவைக் குறித்தே ஸாஸ்த்ரம் போதிக்கிறது –
பிரதானத்தைக் குறித்து அன்று

————–

ஸூத்ரம் –246–உபாதா நாத் விஹார உபதேசாச் ச –2-3-34–

ஏவ மேவைஷ ஏதான் பிராணான் க்ருஹீத்வா ஸ்வே சரீரே யதா காமம் பரி வர்த்ததே –என்று
ஆத்மா ப்ராணனைக் க்ரஹித்தல் கூறப்படுவதானால்
யதா காமம் பரி வர்த்ததே-என்று சரீரத்தில் ஆத்மாவின் விஹாரத்தை உபதேசிப்பதாலும்
ஆத்மாவே கர்த்தா –பிரதானம் கர்த்தா அன்று –

——————-

ஸூத்ரம் –247–வ்யபதேசாச்ச க்ரியா யாம் ந சேந் நிர்தேச விபர்யய –2-3-35–

க்ரியா யாம் வ்யபதேசாச்ச கர்த்தா -விஞ்ஞானம் யஜ்ஞம் தநுதே கர்மாணி தநுதே அபி ச -என்று
வைதிக லௌகிக கிரியைகளில் ஆத்மாவுக்கு கர்த்ருத்வம் சொல்லப்படுவதாலும்
ந சேத் –கர்த்தா இல்லை எனில்
விஞ்ஞானம் யஜ்ஞம் தநுதே-என்னும் ஸ்ருதியில் விஞ்ஞான ஸப்தம் ஆத்மாவைச் சொல்லவில்லை
அந்தக்கரணம் என்னும் பக்தியைச் சொல்லுகிறது என்றால்
நிர்தேச விபர்யய ஸ்யாத் –விஞ்ஞானம் யஜ்ஞம் தநுதே-என்று
மூன்றாம் வேற்றுமையுடன் நிர்தேசிக்கப் பட்டு இருக்கும்
கிரியையில் புத்தி காரணம் ஆகையால் –

—————-

ஸூத்ரம் –248–உப லப்தி வத் அநியம –2-3–36–

பிரதானத்துக்கே கர்த்ருத்வம் -ஆத்மாவுக்கு போக்த்ருத்வம் என்னும் பக்ஷத்தில்
உப லப்தி வத் அநியம–முன்பு சொன்ன உப லப்த்ய நியம ப்ரசங்கம் போலே
போக்த்ருத்வத்துக்கு அநியமமும் ப்ரசங்கிக்கும்
பிரதானம் ஸர்வ காரணமாதலால் போக்த்ருத்வமும் சர்வ ஆத்மாக்களுக்கும் பொதுவாக ப்ரசங்கிக்கும் –

—————–

ஸூத்ரம் –249-சக்தி விபர்யயாத் –2-3-37–

ப்ரக்ருதியே கர்த்தா என்றால் கர்த்தாவுக்கே போக்த்ருத்வம் யுக்தமாதலின்
ப்ரக்ருதிக்கே போக்த்ருத்வ சக்தியும் பிரசங்கிக்கும்
ஆதலின் ஆத்மாவுக்கு போக்த்ருத்வ சக்தியின்மை ஏற்க வேண்டி வரும் –

————

ஸூத்ரம் –250–ஸமாத்ய பாவாச்ச –2-3-38–

பிரக்ருதிக்கு கர்த்ருத்வத்தை அங்கீகரித்தால் மோக்ஷத்துக்கு சாதனமான சமாதி இல்லாததாகி விடும்
ப்ரக்ருதியை விட நான் வேறானவன் என்னும் ஸமாதியில் -ஸித்த விருத்தி நிரோதத்திலே –
ப்ரக்ருதி கர்த்தாவாதல் பொருந்தாது ஆதலின் பிரதானம் கர்த்தா அன்று –

—————-

ஸூத்ரம் –251–யதாச தக்ஷ உபயதா –2-3-39-

ஆத்மா கர்த்தா என்றால் அவன் ஸூகாதி அனுபவங்களை இச்சிக்கையில்
வைதிக லௌகிக கர்மாக்களைச் செய்கிறான்
இச்சியாத போது செய்வது இல்லை -என்று இரு விதமாகவும் வியவஸ்தை கூடும்
யதாச தக்ஷ உபயதா-தச்சன் விரும்பும் போது செயல் ஆற்றுகிறான் –
விரும்பாத போது செயல் ஆற்றுவது இல்லை –
இப்படி இச்சா மூலமாகச் செய்தலும் செய்யாமையும் என்ற வ்யவஸ்தை கூடாது என்பது கருத்து –

——————

ஆறாம் அதிகரணம் –பரா யத்த அதிகரணம்

ஸூத்ரம் –252–பராத்து தத் ஸ்ருதே –2-3-40–

து ஸப்தம் சங்கையை விலக்குகிறது
பராத் -பரம புருஷ ஸங்கல்பத்தாலே
தத் -கர்த்ருத்வம் ஏற்படுகிறது
ஸ்ருதே-அந்தப் பிரவிஷ்டச் ஸாஸ்தா ஜனானாம் ஸர்வாத்மா ய ஆத்மாநம் அந்தரோ யமயதி -என்று
பரமாத்மாவுக்கு அதீனமான கர்த்ருத்வம் ஸ்ருதியில் கூறப்படுவதால்
இப்படி ஜீவன் பராதீன கர்த்தா என்றால் -ஈஸ்வரனே எல்லாரையும் தூண்டுவதால்
ப்ரயோஜக கர்த்தா ஆதலின் கர்மாவின் பலம் கர்த்தாவையே சாரும் என்பதால்
அவனுக்கே விதி நிஷேத வாக்யங்களுக்கு வச்யத்வம் ஏற்படும் என்ற சங்கையை நிரசிக்கிறார் –

——————-

ஸூத்ரம் –253–க்ருத ப்ரயத்ன அபேக்ஷஸ் து விஹித பிரதி ஷித்த அவையர்த் யாதிப்ய –2-3-41-

து -ஸப்தம் சங்கையை விலக்குகிறது
முதல் ப்ரவ்ருத்தியிலே ஜீவன் செய்யும் ப்ரயத்னத்தை அபேக்ஷித்துப் பரம புருஷன் ஜீவனை ப்ரவர்த்திப்பிக்கிறான்
ஏன் எனில்
விஹித பிரதி ஷித்த அவையர்த் யாதிப்ய–ஜீவனுக்கு முதல் பிரவிருத்தியில்
ஸ்வ தந்தர்ய தன்மையை அங்கீ கரிக்கா விட்டால்
இதைச் செய் செய்யாதே என்னும் விதி நிஷேத ஸாஸ்த்ரங்களுக்கு வியர்த்தத் தன்மை வரும் –
ஜீவன் தண்டனைக்கோ அனுக்ரஹத்துக்கோ ஆளாகாமல் போவான்
அக் குறைகள் வாராமைக்காக ஜீவனின் முதல் முயற்சியை எதிர்பார்த்தே
பகவான் இவனைப் பிரவர்த்திப்பிக்கிறான் –
அந்த முதல் முயற்சியிலும் ஸ்வா தந்தர்யம் ஈஸ்வரனால் கொடுக்கப் பட்டது
அதுவும் முன் பின் கர்மாக்களின் பலம் அளிப்பதாகக் கருதப்படுகிறது –

ஆச்சார்யர் அருளிய முறையில் பாகுபாடு-இரக்க மின்மை இவற்றைப் பரிஹாரம் செய்யும் முறை கூறப்படுகிறது
கர்த்ருத்வம் இருவகைப்படும் -அவை ப்ரயோஜக கர்த்ருத்வம் -ப்ரயோஜ்ய கர்த்ருத்வம் -என்பன
முதல் கர்த்ருத்வம் ஈஸ்வரனுக்கும் இரண்டாவது ஜீவனுக்கும் உரியது –
இதனால் அந்தப் பிரவிஷ்டச் சாஸ்தா ஜனானாம் சர்வாத்மா ய ஆத்மாநம் அந்தரோ யமயதி –முதலிய
ப்ரமாணங்களில் சொல்கிறபடி சுருக்கம் இன்றி எப்போதும் எவ்வகையான ப்ரவ்ருத்தி நிவ்ருத்தி ரூபமான
கார்யங்களுக்குமான கர்த்ருத்வம் உண்டு என்னப்பட்டது

இந்நிலையில் ஜீவனின் தவறான ப்ரவ்ருத்திகளுக்கும் அதனால் ஏற்படும் துக்க அனுபவத்திற்கும்
காரணமாகையால் ஈஸ்வரனுக்கு வைஷம்யமும் நைர் க்ருண்யமும் பிரசங்கிக்கும் என்றால் அவை வாரா
பலவகை முளைகளுக்கும் ஜலம் சாதாரண காரணமாவது போலவும்
முளைகளின் வேறுபாட்டுக்கு விதை வேறுபாடே காரணமாவது போலேயும்
ஜீவனின் விஷம ப்ரவ்ருத்திக்கும் துக்க அனுபவத்துக்கும் அவன் கர்மாவே காரணமாதலின்
ஜலம் போலே பொதுக் காரணமான ஈஸ்வரனிடம் அத் தோஷங்கள் ஓட்டுவது இல்லை –
தோஷங்கள் கர்மங்களாலே ஏற்படுபவையே
ஸமோஹம் ஸர்வ பூதேஷூ என்றான் அல்லவா
அதன்படி ஜீவனின் கர்ம பரம்பரையே காரணமாக
ஈஸ்வரன் உயர்த்துவது தாழ்த்துவது-உந்நி நீஷா அதோ நி நீஷா-என்ற
பாகுபாடு ஏற்படுகிறது என்பதில் குறையில்லை –

ஆமாம் -ஜீவனின் கர்ம பரம்பரையே இஷ்டத்துக்கு கஷ்டத்துக்கும் காரணம் என்றால்
ஈஸ்வரனின் கிருபைக்கு இடையில் என்ன கார்யம் என்றால்
சகல காரியங்களுக்கும் கர்மாதீனம் என்றாலும் சிறு வியாஜத்தை முன்னிட்டே
ஏராளமான குறைகளையும் -அபராதங்களையும் -பொறுத்து
முக்தி பர்யந்தமான ஐஸ்வர்யத்தைக் கொடுத்தல் கிருபையின் கார்யம் ஆதலால் கிருபைக்கு விசேஷ பிரயோஜனம் உண்டு —
ஆனாலும் ஈஸ்வரனுக்கு ஜீவனைத் தண்டித்தல் குற்றம் அன்றோ என்னில் -அது யாருக்குத் தோஷம் –
ஈஸ்வரன் ஸர்வ நியந்தா வாதலின் இது அவனுக்குத் தோஷம் அன்று -ஜீவனுக்கு கஷ்டம் தருவதே யாயினும்
ஈஸ்வரனுக்கு அது கேடு அல்ல
உலகில் துஷ்ட நிக்ரஹம் செய்து இஷ்ட பரிபாலனம் செய்யும் மஹா ராஜாவைப் புகழ்வது போலவே
கிருபை மிக்க ஈஸ்வரனை தங்கள் தோஷங்களை நீக்குவதற்காக ஆஸ்ரயிப்பதில் தடை ஏதும் இல்லை
ஆகையால் அனுக்ரஹம் நிக்ரஹம் இரண்டுக்கும் விஷயம் வெவ்வேறு யாதலால் தோஷம் இல்லை –

இதே போல் பகவானுக்கு உரிய உதாசீனத்தவம் -நடு நிலைமை -ப்ரேரகத்வம் -தூண்டும் தன்மை –
ஸாஷித்வம் -அனுமந்த்ருத்வம் -அனுமதித்தல் முதலிய தர்மங்கள்
ஒன்றோடு ஓன்று முரணாகத் தோன்றினாலும் இவை லக்ஷணத்தால் பொருத்தமானவை யாதலால்
விரோதம் இல்லை

ரக்ஷணம் ஏதோ ஒரு காலத்தில் யாதலின் கிருபையும் ஏதோ ஒரு கால விசேஷத்தே தானோ என்று சங்கிக்க வேண்டாம்
கருணை நித்யம் அநித்யம் என்று இருவகைப்படும்
எல்லா ஜீவன்களின் ஸ்வரூபம் ஸ்திதி முதலியவற்றைக் காக்கும் கிருபை நித்யை
அவரவர் அறியாமலே செய்யும் ஸூஹ் ருதாதி மூலக மான கர்மாக்களுக்கு உசிதமான
விசேஷ பலன்களைக் கொடுக்கும் கிருபை அநித்யை
ஆதலின் ஸர்வ விஷயத்திலும் ஸகல பல பிரதான சங்கல்ப ரூபமான சாமான்ய கிருபையே
நித்யமும் நிர்ஹேதுகமாகவும் ஆகும்
விசேஷ பல பிரதான ஸங்கல்ப ரூபமான அநித்ய கிருபையே ஸ ஹேதுகமாகும்
இத்தால் நித்ய க்ருபாவத்வம் ஸித்திக்கிறது –

முன் கூறிய கர்த்ருத்வாதி தர்மங்களுக்கு முரண்பாடு இல்லை -எப்படி எனில்
1-ஈஸ்வரன் ஸ்வதந்த்ரனான படியால் கர்த்ருத்வம்
2-ப்ரயோஜ்ய கர்த்தாவான ஜீவன் மூலம் செய்விப்பதால் ப்ரேரகத்வம்
3-ப்ரவர்த்தனான சேதனனை மீண்டும் மீண்டும் செய்யத் தூண்டுவதால் அனுமந்த்ருத்வம்
4-முளைகளுக்கு ஜலம் போலே சர்வத்திற்கும் பொதுக் காரணம் ஆதலின் உதா சீனத்தவம்
5- எப்போதும் எல்லாவற்றையும் காண்கையாலே ஸாஷித்வம்
6-அவனவன் கர்மத்துக்கு ஏற்றவாறு செய்விப்பதால் சஹகாரித்வம்
7- சர்வ ஸ்வாமியாய் ஆஸ்ரித ரக்ஷண பலத்தைத் தானே ஏற்பதால் பலித்தவம்
8-பலமதே உப பத்தே என்பதால் ஸர்வ கர்மா பல பிரதத்வம்
என்ற இவை அனைத்தும் ஓர் ஓர் காலத்தில் இன்றியிலே சர்வ காலத்திலும் இருப்பதால் ஒன்றுக்கு ஓன்று விரோதம் இல்லை

இங்கு ஒரு பூர்வ பக்ஷம்

ஜீவனின் முதல் பிரவிருத்தி ஈஸ்வரனின் தூண்டுதல் இல்லாமலே நடப்பதால் பகவானை அபேக்ஷிக்காமல்
ஜீவன் தானே கர்த்தா ஆகிறான்
அப்படி இல்லை எனில்
கர்த்தாவே போக்தா வாதலின் ஜீவனிடம் பகவத் நிக்ரஹம் பிறக்க வழி இல்லை
ஈஸ்வரனுக்கே கர்ம பல போக்த்ருத்வம் பிரசங்கிக்கும் என்கின்றனர்
இந்த வினா மற்றவர் பக்கலிலும் சமம்
முதல் பிரவிருத்தியில் நிரபேஷ கர்த்ருத்வம் இருந்தாலும் இரண்டாம் ப்ரவ்ருத்தியில் ஈஸ்வரன் அனுமந்தா என்று
அவர்கள் சொல்வதால் நிர்த்தயத்வம் வரலாம்
கிணற்றில் குதிக்கத் தொடங்கும் சிறுவனை இரக்கம் மிக்க பெரியோர்கள் தடுத்து ரஷிப்பதைப் பார்க்கிறோம்
அவ்வாறு இல்லாமல் தவறாகப் பிரவர்த்திப்பவனை ஈஸ்வரன் தடுக்காமல் அனுமதிப்பது தயை அற்ற காரியமே ஆகும்
சர்வ நியந்தா என்னும் ஸ்ருதியை இத்தகையோர் விஷயத்தில் விலக்கி -சுருக்கிக் கொள்ள வேண்டி இருப்பதாலும்
முதல் பிரவ்ருத்தியில் ஈஸ்வரன் உபேக்ஷித்து இருக்கிறான் என்பது பொருந்தாலும்
மேலும் கல்ப காலத்தின் ஆதியில் ஜீவனின் முதல் ப்ரவ்ருத்தி ஈஸ்வரனை அபேக்ஷிக்காது என்று சொன்னால்
அத்தகைய விஷயமான ப்ரவ்ருத்தி ஞானத்தையே ஆகாரமாகக் கொண்ட ஜீவ ஸ்வரூபத்தால் ஏற்பட்டது அன்று

பின் என் எனில்
பூர்வ கல்பத்தில் செய்யப்பட அவரவர் களுடைய பாப கர்மாவைக் காரணமாக் கொண்டது எனல் வேண்டும்
இதனால் சம்சாரம் அநாதி யாதலின் ஜீவனின் பிரவிருத்தி முதலானது என்பது பொருந்தாது
ப்ரவ்ருத்தியோ கர்ம அதீனமானது என்றால் அதில் ஈஸ்வரனுக்கு என்ன இடம் என்பது பூர்வ பக்ஷம்

இதுக்கு விடை –

கர்மமே ஈஸ்வர சங்கல்ப ரூபம் -ஆகையால் ப்ரவ்ருத்தியும் அந்த சங்கல்ப அதீனம் என்று பலிக்கிறது
முதல் ப்ரவ்ருத்தி ஈஸ்வர அதீனம் அன்று என்பவராலும் ஓர் அளவுக்கு ஈஸ்வர அதீனம் ஏற்கப்பட்டு இருப்பதாலும்
எல்லா ப்ரவ்ருத்திகளும் அவனது அதீனமடியாகவே என்றதாகிறது

இப்படியாகில் ஸ்ரீ பாஷ்யத்தில் தத்ர உபேஷ்ய ததோ அனுமத்ய என்பது முதலியவை
முதல் க்ஷணத்தில் உபேக்ஷிக்கிறான் என்றும்
இரண்டாம் க்ஷணத்தில் அனுமதிக்கிறான் என்றும் எப்படிக் கூறலாம் என்றால்

முதலில் என்பது
ஸ்ருஷ்டி காலத்தைப் போன்றது
கர்மாவைப் போலே வைஷம்ய காரணம் இன்றி ஜலம் போலே சாமான்ய காரணம் ஆகிறான் என்ற கருத்தால்
உபேக்ஷிக்கிறான் என்றதே தவிர அக்காலத்தில் ஈஸ்வரன் பிரேரகன் அல்ல என்ற கருத்தால் அன்று –

அப்படியானால் அவனுக்கு கர்த்ருத்வ -காரயித்ருத்வ -உபேக்ஷகத்வாதிகள் எப்போதும் இருப்பது
விருத்தம் அன்றோ என்னில்
கீழ்ச சொன்னவாறு கர்த்ருத்வாதி சர்வ லக்ஷணமும் பொருந்துவன வாதலின்
ஒரே பொருளில் த்ரவ்யத்வம் கடத்வம் ப்ருத்வீத்வம் முதலியவற்றுக்கு விரோதம்
இல்லாமையைப் போலவே இங்கும் விரோதம் இல்லை

ஆகையால் ஜீவனுடைய கர்மத்தை அபேக்ஷித்து ஸ்ருஷ்டியாதிகளைச் செய்வதால்
ஈஸ்வரனுக்கு வைஷம்யமும் நைர் க்ருண்யமும் கிடையாது என்பது கருத்து –

—————

ஏழாம் அதிகரணம் -அம்ச அதிகரணம் –

இப்படி ஜீவனுக்கு கர்த்ருத்வம் பராதீனமாகில்
அப்போது ராஜ பிருத்ய நியாயத்தாலே பரமாத்மாவின் அம்சம் என்பது உபசார வழக்கு ஆகலாம்
என்ற சங்கையை இந்த அதிகரணத்தில் பரிஹரிக்கிறார் –

ஜீவன் பரமாத்மாவை விட மிக வேறு பட்டவனா
அல்லது அஞ்ஞனான பரமாத்மாவா
அல்லது உபாதி சம்பந்தம் பெற்ற பரமாத்மாவான
அல்லது பரமாத்மாவின் அம்சம் ஆனவனா
என்ற நான்கு வகை சங்கைகள்

1-மிகவும் வேறுபட்டவன் என்பது வைசேஷிகன் மதம்
ப்ருதக் ஆத்மானம் ப்ரேரிதாரஞ்ச மத்வா -என்ற
சுருதி வாக்கியம் அவர்களுக்குத் துணை நிற்கிறது
இப்படி பேத பக்ஷத்திலே அரசனே உலகம் முழுவதும் என்பது போலே
அபேத ஸ்ருதிகளை உபசார சொற்களாகக் கொள்ள வேண்டும்

2- அஞ்ஞான ப்ரஹ்மமே ஜீவன் ஆகிறது என்பது சங்கரர் பக்ஷம்
தத் தவம் அஸி
அயம் ஆத்மா ப்ரஹ்ம -முதலிய
அபேத ஸ்ருதிகள் இதுக்குப் பிரமாணங்கள்
இப்பஷத்தில் பேத ஸ்ருதிக்கு அஞ்ஞான க்ருதமான பேதம் விஷயம்

3-உபாதியுடன் சம்பந்தம் உள்ள ப்ரஹ்மமே ஜீவ பாவத்தை அடைகிறது என்பது யாதவ பாஸ்கர பக்ஷம்
இதற்கு அபேத ஸ்ருதி முக்யத்வமே காரணம்

இம்மூன்று பக்ஷங்களையும் நிரசிக்கிறார்

ஸூத்ரம் –254–அம்சோ நாநா வியபதேசாத் அந்யதா ச அபி வியபதேசாத் தா சகித வாதித்வ மதீயத ஏ கே –2-3-42-

அம்சோ –ஜீவன் அம்சமே -பரமாத்மாவின் சரீரமாய் இருந்து கொண்டே
விசேஷணமாய் இருப்பதால் அம்சம் ஒரு பகுதி ஆகிறான்
நாநா வியபதேசாத் அந்யதா ச அபி வியபதேசாத் –ப்ருதக் ஆத்மானம் முதலிய
ஸ்ருதியால் பேதம் கூறப்படுவதாலும்
தத் த்வம் அஸி
அயம் ஆத்மா ப்ரஹ்ம -முதலிய வேறுபட்ட வ்யபதேசத்தாலும்
இவ்வாறு அபேத ஸ்ருதி பேத ஸ்ருதிகளுக்கு முக்கியமாக அர்த்தம் ஸித்திக்க
சித் அசித் விசிஷ்டமான ப்ரஹ்மம் என்று ஒரே வஸ்துவில் பரமாத்மாவில்
விசேஷணமான ஜீவன் அம்ச பூதன் என்றே கொள்ள வேண்டும்
பேத ஸ்ருதிகள் விசேஷணமான ஜீவனுக்கும் விசேஷ்யமான ப்ரஹ்மத்துக்கும்
ஸ்வரூபத்திலும் ஸ்வ பாவத்திலும் பேதத்தைக் காட்டுகின்றன
தத் த்வம் அஸி
அயம் ஆத்மா ப்ரஹ்ம -முதலிய அபேத ஸ்ருதிகள்
ஜீவ சரீரகனான பரமாத்மா ஒருவன் என்று சொல்லுகின்றன –
இந்த இரு ஸ்ருதிகளும் முக்ய அர்த்தங்கள்
அஞ்ஞனான ப்ரஹ்மமே ஜீவன் என்கிற வாதத்திலும்
உபாதியுடன் கூடிய ப்ரஹ்மம் ஜீவன் என்கிற வாதத்திலும்
பரமாத்மாவுக்கு ஸர்வஞ்ஞத்வம் நிர் தோஷத்வம் முதலியவற்றைப் போதிக்கும் ஸ்ருதிகள் விரோதிக்கும்
தா சகித வாதித்வ மதீயத ஏ கே –சில ஸ்ருதிகள்
ப்ரஹ்ம தாஸா ப்ரஹ்மே மே கிதவா உத -முதலிய வாக்யங்களால்
ப்ரஹ்மம் ஸர்வ ஜீவ அந்தர்யாமியாய் இருக்கையால் ஸர்வ ஜீவ ஸமூஹமும்
ப்ரஹ்மாத்மகமே என்று கூறும் –

——————

ஸூத்ரம் –255—-மந்த்ரவர்ணாச்ச||2.3.43||

——–

ஸூத்ரம் –256—அபி ச ஸ்மர்யதே||2.3.44||

———–

ஸூத்ரம் –257–ப்ரகாஷாதிவந்நைவஂ பரஃ||2.3.45||

————-

ஸூத்ரம் –258–ஸ்மரந்தி ச||2.3.46||

———–

ஸூத்ரம் –259–அநுஜ்ஞாபரிஹாரௌ தேஹஸம்பந்தாஜ்ஜ்யோதிராதிவத்||2.3.47||

————–

ஸூத்ரம் –260–அஸந்ததேஷ்சாவ்யதிகரஃ||2.3.48||

————–

ஸூத்ரம் –261–ஆபாஸ ஏவ ச||2.3.49||

————

ஸூத்ரம் –262–அதரிஷ்டாநியமாத்||2.3.50||

—————-

ஸூத்ரம் –263–அபிஸந்த்யாதிஷ்வபி சைவம்||2.3.51||

————

ஸூத்ரம் –264–ப்ரதேச பேதா ததி சேந் நாந்தர் பாவாத்||2.3.52||

ப்ரஹ்மம் அசேத்த்யமானாலும் உபாதி ஸம்யுக்த ப்ரதேசமும்
உபாதி சம்பந்தம் அற்ற பிரதேசமும் என இரண்டும் உள்ளன
ஆகையால் போக வ்யவஸ்தை பொருந்தும்
இதி சேத் ந -என்று சொல்வது பொருந்தாது
அந்தர் பாவாத் -விபுவான ப்ரஹ்மம் சலியாது -அணுக்களான உபாதிகளே சலிக்கும்
அப்போது ஸர்வ ப்ரஹ்ம ப்ரதேசமும் உபாதியின் ஸ்பர்சத்தில் உள் அடங்கி விடுவதால்
கூறிய குற்றங்கள் அதே நிலையில் உள்ளன

ஆகையால் மற்றவை யாவும் அசமஞ்ஜஸங்கள்
ஸ்ரீ பாஷ்யகாரரின் சித்தாந்தமே முழுவதுமாக சமஞ்ஜஸம்

————-

இப்பாதத்தில் உள்ள ஏழு அதிகரணங்களின் சாரம்

1-வ்யத் அதி கரணத்தில் ஆகாசத்துக்கு க்லுப்தியும் உத்பத்தியும் பேசப்பட்டன
2-தேஜ அதிகரணத்தில் க்ரமமாகத் தோன்றும் மஹத்தாதி காரியங்களுக்கு
முந்தைய தத்வ விசிஷ்டனான ப்ரஹ்மத்தின் இடம் இருந்தே உத்பத்தி என்றதாயிற்று
3-ஆத்ம அதிகரணத்தில் நித்யனான ஜீவனுக்கு உத்பத்தி லயங்களாவன
தேஹச் சேர்க்கையும் தேஹ வியோகத்தையும் அடிப்படையாகக் கொண்டமையும் பேசப்பட்டன
4-ஞாத் அதிகரணத்தில் ஜீவனுக்கு ஞான குணாகத்வமும் ஞாத்ருத்வமும் பேசப்பட்டன
5-கர்த்ரு அதிகரணத்தில் ஜீவனுக்கு கர்த்ருத்வம் பேசப்பட்டது
6-பராயத் அதிகரணத்தில் ஜீவனுக்கு கர்த்ருத்வம் பகவத் அதீனம் என்று பேசப்பட்டன
7-அம்ச அதிகரணத்தில் -குணங்களும் தேஹங்களும் -குணம் ஜீவனுக்கு அம்சமாய் இருப்பது போல்
ப்ரஹ்மத்துக்கும் சித் அசித் ரூபமான ஜகத்தும் அம்சமானது என்று

ஆக ஏழு அர்த்தங்கள்
ஸ்ருதிகளில் பரஸ்பர விரோதத்தைப் பரிஹரிக்கும்
இந்த வியத் பாதத்திலே சாதிக்கப் பட்டன –

————–—————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஸ்ருதி பிரகாசர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ போதாயனர் -வ்ருத்தி காரர் – ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பாதராயணர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading