Archive for the ‘Kulesekara Aazlvaar’ Category

ஸ்ரீ பெருமாள் திருமொழி -1–ஸ்ரீ திவ்யார்த்த தீபிகை –

August 6, 2021

இருள் இரிய சுடர் மணிகள் இமைக்கும் நெற்றி
இனத்துத்தி அணி பணம் ஆயிரங்கள் ஆர்ந்த
அரவரச பெரும் சோதி அனந்தன் என்னும்
அணி விளங்கும் உயர் வெள்ளை அணையை மேவி
திரு அரங்க பெரு நகருள் தெண்ணீர் பொன்னி
திரை கையால் அடி வருட பள்ளி கொள்ளும்
கருமணியை கோமளத்தை  கண்டு கொண்டு என்
கண் இணைகள் என்று கொலோ களிக்கும் நாளே–1-1-

பதவுரை

திரு அரங்கம்–ஸ்ரீரங்கமென்கிற
பெரு நகருள்–பெரிய நகரத்திலே
இருள் இரிய சுடர் மணிகள் இமைக்கும்–இருளானது சிதறி யொழியும் படி ஒளி விடுகின்ற மணிகள் விளங்கா நிற்கப் பெற்ற
நெற்றி–நெற்றியையும்
இனம் துத்தி–சிறந்த புள்ளியையும்
அணி–அழகாக உடைய–
ஆயிரம் பணங்கள் ஆர்ந்த–ஆயிரம் படங்களை உடையவனாய்
அரவு அரசன்–நாகங்களுக்குத் தலைவனாய்
பெரு சோதி–மிக்க தேஜஸ்ஸை யுடையனான
அனந்தன் என்னும்–திருவனந்தாழ்வானாகிற
அணி விளங்கும் உயர் வெள்ளை அணையை–அழகு மிக்கு உயர்த்தியை யுடைய வெண்ணிறமான திருப் படுக்கையிலே
மேவி–பொருந்தி
தெள் நீர் பொன்னி–தெளிந்த தீர்த்தத்தையுடைய காவிரி யானது
திரை கையால் அடி வருட–அலைகளாகிற கைகளாலே திருவடிகளைப் பிடிக்க
பள்ளி கொள்ளும்–திருக் கண் வளர்ந்தருளா நின்ற
கரு மணியை–நீல மணி போன்றவராய்
கோமளத்தை–ளெஸகுமார்யமே வடிவெடுத்தவரான பெரிய பெருமாளை
என் கண் இணைகள்–என் கண்களானவை
கண்டு கொண்டு–ஸேவிக்கப் பெற்று
களிக்கும் நாள்–ஆநந்தடையும் நாள்
என்று கொல்–எந்நாளோ!

திருவரங்கம் பெரிய கோயிலில் உபய காவேரீ மத்யத்தில் திருவனந்தாழ்வான் மீது
திருக் கண் வளர்ந்திருளா நின்ற அழகிய மணவாளனை அடியேன் கண்ணாரக் கண்டு
களிக்கும் பாக்கியம் என்றைக்கு வாய்க்குமோ! என்கிறார்.

ஆயிரம் பைந்தலைய அனந்தனாகையால்
ஒவ்வொரு தலையிலும் ஒவ்வொரு மாணிக்க மணி உண்டாகையால் மணிகள் எனப்பட்டது.
ஒரு மணியின் சுடரே இருளனைத்தையும் ஒழிக்கவற்றாயிருக்க,
ஆயிரம் மணிகளின் சுடரால் இருளிரியச் சொல்ல வேண்டாவே.

இமைத்தல்-விழித்தல் அதாவது இங்கு, விளங்குதல்.
துத்தி-படத்தின் மேலுள்ள பொறி.
மேவி என்ற வினையெச்சம் பள்ளி கொள்ளும் வினையைக் கொண்டு முடியும்.
பொன்னி-பொன்களைக் கொழிக்கையாலே காவிரிக்குப் பொன்னி யென்று பெயராயிற்று.
“பொன்னி திரைக் கையாலடி வருட” என்றது-காவிரியின் அலைகள் இனிதாக மோதிக் குளிர்ச்சி பெற்றுள்ள
கரையிலே பரமஸூகமாகக் கண் வளர்ந்தருள்கின்றமையைக் கூறியவாறு.

கோமளம்-வடசொல்,
கண்ணால் துகைக்க வொண்ணாத ஸௌகுமார்ய முடையவனை”என்பது வியாக்கியானம்.

————–

வாயோர் ஈர் ரைஞ்சூறு துதங்கள் ஆர்ந்த
வளை வுடம்பின் அழல் நாகம் உமிழ்ந்த செந்தீ
வீயாத மலர் சென்னி விதானமே போல்
மேன்மேலும் மிக எங்கும் பரந்ததன் கீழ்
காயாம்பூ மலர் பிறங்கல் அன்ன மாலைக்
கடி அரங்கத்து அரவணையில் பள்ளி கொள்ளும்
மாயோனை மணத் தூணே பற்றி நின்று என்
வாயார என்று கொலோ வாழ்த்தும் நாளே ?–1-2-

பதவுரை

கடி அரங்கத்து-நறு மணம் மிக்க கோயிலிலே
ஓர் ஈர் ஐ நூறு வாய்–ஓராயிரம் வாய்களிலே
துதங்கள் ஆர்ந்த–ஸ்தோத்ர வாக்கியங்கள் நிறைந்திருக்கப் பெற்றவனாய்
வளை உடம்பின்–வெளுத்த உடம்பை யுடையவனாய்
அழல்–(எதிரிக்ள வந்து கிட்ட வொண்ணாதபடி) அழலை உமிழா நிற்பவனான
நாகம்–ஆதி சேக்ஷன்
உமிழ்ந்த–(தன் வாயினின்று) வெளிக் கக்கிய
செம் தீ–செந் நிறமான ஆகநி ஜ்வாலையானது
சென்னி–தலையின் மேலே
வீயாத மலர்–அழிவில்லாத புஷ்பங்களாற் சமைத்த தொரு மேற் கட்டி போல
எங்கும் மேல் மேலும் பரந்து மிக–மேற்புறமெங்கும் விஸ்தரித்து விளங்க
அதன் கீழ்–(ஆதிசேக்ஷன் உமிழ்ந்த அக்நி ஜ்வாலையாகிற) அந்தப் புஷ்ப விதாநத்தின் கீழே)
அரவு அணையில்–சேஷ சயநத்திலே
பள்ளி கொள்ளும்–கண் வளர்ந்தருளா நிற்பவனும்
காயா பூ மலர் பிறங்கல் அன்ன– காயாவின் அழகிய பூக்களாலே தொடுக்கப்பட்ட நீலமாலை போன்றவனாய்
மாலை–பெருமை பொருந்தியவனாய்
மாயோனை–ஆச்சர்யனான ஸ்ரீரங்கநாதனை (அடியேன்)
மனம் தூண் பற்றி நின்று– திருமணத் தூண்களிரண்டையும் அவலம்பாகப் பற்றிக்கொண்டு நின்று
என் வாய் ஆர வாழ்த்தும் நாள் என்று கொல்–என் வாய்த்தினவு தீர ஸ்துதி செய்யுங்காலம் என்றைக்கு வாய்க்குமோ?.

ஆயிரம் வாய்களாலும் ஆயிர நாமங்களைச சொல்லி எம்பெருமானைத் துதிப்பவனும்,
‘சுத்த ஸத்வகுணமுடையவன்’ என்பது நன்கு விளங்குமாறு பால்போல
வெளுத்த உடலையுடையவனுமான ஆதிசேஷன்,
எம்பெருமானிடத்திலுள்ள பரிவின் மிகுதியாலே அஸ்நாதத்திலும் பயத்தை மங்கிப்பவனாதலால்
கொடிய அரக்கரசுரர்கள் விபவாவதாரங்களிற் போல அர்ச்சையிலும் வந்து நலிவர்களோ என்னும்
அதி சங்கையினால் அவர்கள் அணுக முடியாதபடி எப்போதும் அழலை வாயில் நின்று கக்கிக் கொண்டிருப்பதனால்
செந்நிறமான அந்த அக்நி ஜ்வாலையானது அவனுடைய தலைகளின் மேற் கிளம்பி விசேஷமாகப் பரவி

‘சண்பகம் முதலிய செம் மலர்களாலே ஒரு மேற் கட்டி அமைக்கப்பட்டுள்ளதோ’ என்று
உத்பரேக்ஷிக்கத் தக்கதாய் விளங்க, அத்தகைய மேற்கட்டியின் கீழே
அரவணையின் மீது பள்ளி கொண்டருளா நின்ற பெரியபெருமாளை ஸேவித்த மாத்திரத்திலேயே

“காலாழும் நெஞ்சழியும் கண்சுழலும்” என்றபடி சைதில்யம பிறந்து தரித்து நிற்க முடியாத அவஸ்தை விளையுங்கால்
அவ் வழகிய மணவாளனுடைய திருக் கண்ணோக்கத்திலே நிலாவுகின்ற இரண்டு திருமணத் தூண்களை
அவலம்பமாகப் பற்றிக் கொண்டு தரித்து நின்று, வெகு நாளாக இழந்த இழவு தீர ஸ்தோத்ரம் பண்ணும்படியான
பாக்கியம் என்றைக்கு வாய்க்குமோ? என்கிறார்.

(மணத் தூணே பற்றிநின்று) அழகிய மணவாளன் ஸந்நிதியில் அண்மை யிலிருக்கும்
இரண்டு தூண்களுக்குத் “திரு மணத் தூண்” என்பது ஸம்ப்ராதாயத் திரு நாமம்.
. “மணத்தூணருகில் நின்று கொண்டு” என்னாமல்
“பற்றி நின்று” என்றதன் உட்கருத்தை ஸ்ரீரங்க ராஜஸ்த்தில் படடர் வெளியிட்டருளினார்.

அழகிய மணவாளனுடைய திருக்கண்ணோக்கமாகிற அமுதவாற்றின் பெரு வெள்ளமானது
அநுபவிக்க இழிந்தவர்களை ஒருமித்து நிலை நின்று அநுபவிக்க வொணணாதபடி தூக்கித் தள்ளி அசைக்குமளவில்,
அவர்கள் அவலம்பமாகப் பற்றிக் கொண்டு நிற்பதற்காக நாட்டப் பட்டுள்ளவை போன்ற
திருமணத் தூண்களைப் பற்றுவோம் என்பது இந்த ச்லோகத்தின் கருத்து.

அழகிய மணவாளனது திரு மேனியின் பரிமளம் இரண்டு தூணாகப் பரிணமித்து
உருவெடுத்து நிற்பதால் “திருமணத்தூண்” என்று திருநாமமாயிற்று என்பர்.

————-

எம் மாண்பின் அயன் நான்கு நாவினாலும்
எடுத்தேத்தி ஈர் இரண்டு முகமும் கொண்டு
எம்மாடும் எழில் கண்கள் எட்டினோடும்
தொழுது ஏத்தி இனிது இறைஞ்ச நின்ற செம்பொன்
அம்மான் தன் மலர் கமல கொப்பூழ் தோன்ற
அணி அரங்கத்து அர வணையில் பள்ளி கொள்ளும்
அம்மான் தன் அடி இணை கீழ் அலர்கள் இட்டு அங்கு
அடியவரோடு என்று கொலோ அணுகும் நாளே–1-3-

பதவுரை

எம் மாண்பின் அயன்–ஸர்வ விதத்தாலுமுண்டான மாட்சிமையை யுடைய நான்முகன்
நான்கு நாவினாலும் (தனது)–நாலு நாக்கினாலும்
எடுத்து–சொற்களை யெடுத்து
ஏத்தி–துதித்து
ஈர் இரண்டு முகமும் கொண்டு–நான்கு முகங்களாலும்
இனிது ஏத்தி–இனிமையாக (வேதங்களாலே) ஸ்தோத்திரம் பண்ணி
எழில் கண்கள் எட்டினோடும்–அழகிய எட்டு கண்களினாலே
எம் மாடும்–எல்லாப் பக்கங்களிலும்
தொழுது இறைஞ்ச நின்ற–நன்றாக ஸேவிக்கும்படி அமைந்த
செம் பொன்–செவ்விய பொன் போல் (விரும்பத்தக்க வடிவுடைய) ஸ்வாமியான தன்னுடைய
கமலம் மலர் கொப்பூழ்–தாமரைப் பூவை யுடைய திருநாபி யானது
தோன்ற–விளங்கும்படி
அணி அரங்கத்து அரவு அணையில்
பள்ளி கொள்ளும்;
அம்மான் தன்–பெரிய பெருமாளுடைய
அடிஇணை கீழ்-திருவடிகளின் கீழே
அலர்கள் இட்டு- புஷ்பங்களை ஸமர்ப்பித்து
அங்கு அடியவரோடு–அங்குள்ள கைங்கர்ய பரர்களோடு கூட
அணுகும் நாள் என்று கொல்-நெருங்கி வாழ்வது என்றைக்கோ?

பிரமன் வாயார வாழ்த்திக் கண்ணாரக் கண்டு களிக்கும் படியாவும்,
ஸகல லோகங்களினுடையவும் ஆவிர்ப்பாவத்துக்குக் காரணமாகிய திருநாபிக் கமலம் நன்கு விளங்கும்படியாகவும்
திருவனந்தாழ்வான் மீது சாய்ந்தருளா நின்ற பெரிய பெருமாளை ஆராதிக்கின்ற அடியார்களோடு கூட
அடியேனும் ஆராதிக்கும்படி அந்த திவ்ய ஸந்நிதானத்திற்குப் போய்ச் சேரும் பாக்கியம் என்றைக்கு வாய்க்குமோ? என்கிறார்.

எம் மாண்பின்-துதிப்பதற்கு உறுப்பான வாக்தேவியை எப்போதும் தன் வசமாகக் கைக் கொண்டிருக்கும்
அதிசயத்தை யுடையவன் என்பது உட் கருத்து.

————

மாவினை வாய் பிளந்து உகந்த மாலை வேலை
வண்ணனை என் கண்ணனை வன் குன்றம் ஏந்தி
ஆவினை அன்று உய்ய கொண்ட ஆயர் ஏற்றை
அமரர்கள் தம் தலைவனை அம் தமிழ் இன்ப
பாவினை அவ் வடமொழியை பற்றற்றார்கள்
பயில் அரங்கத்து அரவு அணை பள்ளி கொள்ளும்
கோவினை நாவுற வழுத்தி என் தன் கைகள்
கொய்ம் மலர் தூ என்று கொலோ கூப்பும் நாளே—-1-4-

பதவுரை

மாவினை வாய் பிளந்து உகந்த மாலை–குதிரை வடிவங்கொண்டு வந்த கேசியினுடைய வாயைக் கிழித்து மகிழ்ந்த பெருமானாய்
வேலை வண்ணணை–கடல் போன்ற வடிவை யுடையவனாய்
என் கண்ணணை–என்னுடையவன்’ என்று அபிமானிக்கக் கூடிய (ஸூலபனான) க்ருஷ்ணனாய்’
அன்று–(இந்திரன் கல் மழை பெய்வித்த) அக் காலத்திலே
வன் குன்றம் ஏந்தி–வலிய (கோவர்த்தன) மலையை (க்குடையாக)த் தூக்கி
ஆவினை உய்யக் கொண்ட–பசுக்களைக் காப்பாற்றி யருளின
ஆயர் ஏற்றை–இடையர் தலைவனாய்
அமரர்கள் தம் தலைவனை–நித்யஸூரிகளுக்கு ஸ்வாமியாய்,
அம் தமிழ் இன்ப பாவினை–அழகிய தமிழ்ப் பாஷையாலாகிய ஆநந்த மயமான அருளிச் செயல் போல் யோக்கியனாய்
அ வடமொழியை–அழகிய ஸம்ஸ்க்ருத பாஷையாலாகிய ராமாயணாதிகள் போல் யோக்யனாய்
பற்று அற்றார்கள் பயில் அரங்கத்து–ஸம்ஸார பந்தம் அற்றவர்களான விரக்தர்கள் நித்திய வாஸம் செய்கிற கோயிலிலே
அரவு அணையில் பள்ளி கொள்ளும்,
கோவினை–ஸ்வாமியான ஸ்ரீரங்கநாதனை
நா உற–நாக்குத் தடிக்கும்படி
வழுத்தி–துதித்து
என் தன் கைகள்–என்னுடைய கைகளானவை
கொய் மலர் தூய்–(காலத்தில்) பறிக்கப்பட்ட புஷ்பங்களை பணிமாறி
கூப்பும் நாள் என்று கொல்–அஞ்ஜலி பண்ணும் நாள் எதுவோ!

குதிரை வடிவங்கொண்டு தன்னைக் கவளங்கொள்ள வந்த கேசியென்னு மசுரனைக் கொன்று
தன்னை நித்யாநுபாவ்யனாக உபகரித்தருளினவனும்,
கடலைக் கண்டாற் போலே வடிவைக் கண்ட போதே தாப த்ரயமும் தீரும்படியிருப்பவனும்,
அரியன செய்து ஆச்ரிதரைக் காப்பாற்றினவனும்
பரம யோக்யனுமான ஸ்ரீரங்கநாதனை
நாத்தழும் பெழத் துதித்து நன்மலர்களைக் கொணர்ந்து ஸமர்ப்பித்து
‘அடியேனை ஆட்கொள்ள வேணும்’ என்கிற ப்ரார்த்தனை தோற்றக் கைகூப்பி நிற்கும்படியான பாக்கியம்
என்றைக்கு வாய்க்குமோ என்கிறார்.

எம்பெருமானுடைய ஒப்புயர்வற்ற போக்யதைக்கு அவனுடைய திவ்ய குணங்களை ப்ரதிபாதிக்கின்ற
திருவாய்மொழி முதலிய திவ்ய ப்ரபந்தங்களும் ஸ்ரீராமாயணம் முதலிய இதிஹாஸ புராணங்களுந் தவிர
வேறொன்றும் ஒப்புச்சொல்லத் தகாமையால் “அந்தமிழினின் பப்பாவினை அவ்வடமொழியை” என்றார்.

(பற்றற்றார்கள் பயிலரங்கம்)
“சிற்றெயிற்று முற்றல் மூங்கில் மூன்று தண்டரொன்றினர்,
அற்ற பற்றர் சுற்றிவாழு மந்தணீரரங்கமே” என்றார் திருமழிசைப்பிரானும்.

———

இணை இல்லா இன் இசை யாழ் கெழுமி இன்பத்
தும்புருவும் நாரதனும் இறைஞ்சி ஏத்த
துணை இல்லா தொன் மறை நூல் தோத்திரத்தால்
தொன் மலர் கண் அயன் வணங்கி யோவாது ஏத்த
மணி மாட மாளிகைகள் மல்கு செல்வ
மதிள் அரங்கத்து அர வணையில் பள்ளி கொள்ளும்
மணி வண்ணன் அம்மானை கண்டு கொண்டு என்
மலர் சென்னி என்று கொலோ வணங்கும் நாளே ?—1-5-

பதவுரை

இன்பம்–(வீணா கானத்தாலே) இன்பந்தருகின்ற
தும்புருவும்–தும்புரு மஹரிஷியும்
நாரதனும்–நாரத முனிவனும்
இணை இல்லா இன் இசை–ஒப்பற்றதும் போக்யமுமான இசையை
யாழ்–வீணையிலே
கெழுமி–நிறைத்து
(வீணா கானத்தைப் பண்ணிக் கொண்டு)
இறைஞ்சி ஏத்த–திருவடிகளிலே விழுந்து) வணங்கித் துதிக்கவும்
தொல் மலர்க் கண் அயன்–நித்யமான நாபீ கமலத்தி லுதித்த நான்முகனானவன்
வணங்கி–நமஸ்கரித்து
துணை இல்லா–ஒப்பு இல்லாததும்
தொல்–அநாதியுமான
மறை நூல் தோத்திரத்தால்–வேதசாஸ்த்ரங்களாகிற ஸ்தோத்ரங்களால்
ஓவாது ஏத்த–இடைவிடாமல் துதிக்கவும்
மணி மாடம் மாளிகைகள்–மணி மயமான மாட மாளிகைகளையும்
மல்கு செல்வம்–பூர்ணமான ஸம்பத்தையும்
மதிள்–ஸப்த ப்ராகாரங்களையுமுடைய
அரங்கத்து–கோயிலிலே
அரவு அணையில் பள்ளிகொள்ளும்;
மணி வண்ணன் அம்மானை–நீல மணி போன்ற திருநிறத்தை யுடையனான எம்பெருமானை
கண்டு கொண்டு–ஸேவித்து
என் மலர் சென்னி–என்னுடைய பூமாலை யணிந்த தலையானது
வணங்கும் நாள் என்று கொல்–(அவன் திருவடிகளில்) நமஸ்கரிப்பது என்றைக்கோ!

தும்புரு நாரதர் முதலிய முனிவர்கள் பகவத் குணங்களை இனிய இசையுடன் வீணையிலே யிட்டுப் பாடிக் கொண்டும்,
நான்முகன் முகங்களாலும் நான்கு வேதங்களை ஓதிக் கொண்டும் வணங்கப்
பள்ளி கொண்டருளா நின்ற பெரிய பெருமாளை நான் ஸேவிக்கப் பெறுவதும்,
அரசாட்சிக்கு ஏற்பப் பூ முடி சூடிக் கிடக்கின்ற என் தலை அவனுடைய திருவடியை முடிசூடப் பெறுதலும்
என்றைக்கு வாய்க்குமோ? என்கிறார்.

இன் இசை யாழ் கெழுமி-இனிய இசையையுடைத்தான வீணையை அப்யஸித்து என்றுமாம்

———

அளி மலர் மேல் அயன் அரன் இந்திரனோடு ஏனை
அமரர்கள் தம் குழுவும் அரம்பையரும் மற்றும்
தெளி மதி சேர் முனிவர்கள் தம் குழுவும் முந்தி
திசை திசையில் மலர் தூவி சென்று சேரும்
களி மலர் சேர் பொழில் அரங்கத்து உரகம் ஏறி
கண் வளரும் கடல் வண்ணர் கமல கண்ணும்
ஒளி மதி சேர் திரு முகமும் கண்டு கொண்டு என்
உள்ளம் மிக என்று கொலோ வுருகும் நாளே—1-6-

பதவுரை

அளி மலர் மேல் அயன்–(மதுபானத்துக்காக) வண்டுகள் படிந்திருக்கிற தாமரைப் பூவில் தோன்றிய பிரமனும் சிவனும்
அரன்–சிவனும்
இந்திரனோடு ஏனை அமரர்கள் தம் குழுவும்–இந்திரனோடு கூட மற்றைத் தேவர்களின் திரளும்
அரம்பையரும்–ரம்பை முதலிய தேவ மாதரும்
மற்றும்–மற்றுமுள்ள
தெளி மதி சேர் முனிவர்கள் தம் குழுவும்–தெளிந்த ஞானத்தை யுடைய (ஸநகாதி) மஹர்ஷிகளின் ஸமூஹமும்
உந்தி–ஒருவர்க்கொருவர் நெருக்கித் தள்ளி
திசை திசையில்–பார்த்த பார்த்தவிடமெங்கும்
மலர் தூவி–புஷ்பங்களை இறைத்துக் கொண்டு
சென்று சேரும்–வந்து சேர்தற்கு இடமான
களிமலர் சேர் பொழில் அரங்கத்து–தேன் மிக்க மலர்களை யுடைய சோலைகளை யுடைத்தான கோயிலிலே
உரகம் ஏறி–திருவனந்தாழ்வான் மீது பள்ளி கொண்டு
கண் வளரும்–திருக்கண் வளர்ந்தருளா நின்ற
கடல் வண்ணர்–கடல் போன்ற வடிவை யுடையரான பெரிய பெருமாளை யுடைய
கமலம் கண்ணும்–செந்தாமரை போன்ற திருக் கண்களையும்
ஒளி மதி சேர் திரு முகமும்–ஒளியை யுடைய சந்திரன் போன்ற திருமுக மண்டலத்தையும்
கண்டு கொண்டு–ஸேவிக்கப் பெற்று
என் உள்ளம்–என்னுடைய மனமானது
மிக உருகும் நாள் என்று கொல்–மிகவும் உருகுங்காலம் என்றைக்கோ?

தேவர்களும் தேவ மாதர்களும் முனிவர்களும் ஆராதந உப கரணங்களைக் கோண்டு வந்து,
திரள் மிகுதியாலே ஒருவரை யொருவர் நெருக்கி தள்ளிப் புகும்படியான கோயிலிலே கண் வளர்ந்தருளாகின்ற
பெரிய பெருமாளையுடைய செந்தாமரைக் கண்ணையும் முக சந்த்ர மண்டலத்தையும் ஸேவிக்கப்பெற்று,
‘பாவியேனுக்கும் இப் பேறு வாய்த்த அதிசயம் என் கொல்! என்று
நெஞ்சுருகும் படியான நாளும் வரப் போகிறதோ! என்கிறார்.

———

மறம் திகழும் மனம் ஒழித்து வஞ்சம் மாற்றி
ஐம்புலன்கள் அடக்கி இடர் பார துன்பம்
துறந்து இரு முப் பொழுது ஏத்தி எல்லை இல்லா
தொன் நெறி கண் நிலை நின்ற தொண்டரான
அறம் திகழும்  மனத்தவர் தம் கதியை பொன்னி
அணி அரங்கத்து அரவணையில் பள்ளி கொள்ளும்
நிறம் திகழும் மாயோனை கண்டு என் கண்கள்
நீர் மல்க என்று கொலோ நிற்கும் நாளே ?—-1-7-

பதவுரை

மறம் நிகழும் மனம் ஒழித்து–கொடுமையால் விளங்கா நின்றுள்ள மனத்தை ஒழித்து
வஞ்சம் மாற்றி–வஞ்சனைகளைப் போக்கி
வல் புலன்கள் அடக்கி–கொடிய இந்திரியங்களை அடக்கி
இடர் பாரம் துன்பம் துறந்து–(மேன் மேலும்) துக்கத்தை விளைப்பனவாய்ப்
பெருஞ்சுமையா யிராநின்ற பழ வினைகளை வேரறுத்து
இரு முப்பொழுது ஏத்தி–பஞ்ச காலங்களிலும் துதித்து
எல்லை இல்லா தொல் நெறிக் கண் நிலை நின்ற–அளவிறந்த பழைய மர்யாதையிலே நிலை நின்ற
தொண்டர் ஆன–தாஸ பூதர்களான
அறம் திகழும் மனத்தவர் தம்–தர்ம சிந்தையே விளங்கும் மனமுடையரான ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு
கதியை–பரம ப்ராப்யனாய்
பொன்னி அணி அரங்கத்து–காவிரியால் அழகு பெற்ற கோயிலிலே
அரவு அணையில் பள்ளி கொள்ளும்:
நிறம் திகழும்–அழகு விளங்கா நின்றுள்ள
மாயோனை–ஆச்சரியனான எம்பெருமானை
என் கண்கள்–எனது கண்களானவை
கண்டு–ஸேவிக்கப் பெற்று
நீர் மல்க நிற்கும் நாள் என்று கொல்–ஆநந்தக் கண்ணீர் ததும்பும்படி நிற்பது என்றைக்கோ?

முன்னடிகளிரண்டும் ஸ்ரீவைஷ்ணவ லக்ஷணங்கூறுவன.
“திகழும் மனம் மறம் ஒழித்து” என்று அந்வயித்து,
விளாங்கா நின்ற மனத்தில் நின்றும் கொடுமையை நீக்கி என்றுரைத்தலுமாம்.
மறம்-கொலை, கோபம், கொடுமை.
இடர்ப் பாரத் துன்பம் துறந்து-“பாரமாய பழவினை பற்றறுத்து” என்கை.
மஹத்தான துக்கத்தை விளைவிக்கக் கூடியதும்,
மனிதனைக் கீழே அமுக்குவதில் தலைச் சுமை போன்றதுமான பழையவினையை வேரோடு களைந்து என்றபடி.

(இருமுப் பொழுதேத்தி.) இரண்டும் மூன்றும் ஐந்து; பஞ்ச காலபராயணர்களாய் என்றபடி.
இதனைச் சிறிது விவரிப்போம்; –
ஒரு தினத்தின் பகற்பொழுதை ப்ராத:காலம், ஸங்கவகாலம், மத்யாஹ்நகாலம், அபராஹ்காலம், ஸாயங்காலம் என்று ஐந்தாகப் பகுத்து,
ஸூர்யோதயம் முதல் அவ்வாறு நாழிகை இவற்றிற்கு முறையே உரியவை என்று வரையறுத்து,
அபிகமநம், உபாதாநம், இஜ்யா, ஸ்வாத்யாயம், யோகம் என்ற ஐந்து ஒழுக்கங்களையும் முறையே
அந்த (ப்ராத:காலம் முதலிய) ஐந்து சிறுபொழுதிலும் அநுஷ்டிக்கும்படி பாஞ்சராத்ரம் முதலிய ஆகமங்கள் கூறும்.

இரவில் ஆசரிக்க வேண்டுவதும் யோகாநுஷ்டாநமே இவற்றின் விவரம் வருமாறு:-

முதலாறு நாழிகையாகிய ப்ராத:காலத்திலே, ஸ்நாநம் ஸந்த்யாவந்தனம் ஜபம முதலிய காலைக் கடன்களைச் செய்து முடித்துத்
தாம் ஆராதிக்கவேண்டிய எம் பெருமானுடைய ஸந்நிதியிற்சென்று ப்ரதக்ஷிண நமஸ்கார ஸ்தோத்ரம்
முதலியவற்றால் எம் பெருமானை உகப்பிக்க வேண்டும்; இஃது அபிகமநகால நியமம்.

அதற்கு அடுத்த ஸங்கவகாலத்திலே, பகவதாராதநத்துக்கு வேண்டிய சுத்த தீர்த்தம் சந்தனம் புஷ்பம் தூப தீப த்ரவ்யங்கள்
முதலியவற்றையும், எம்பெருமானுக்கு அமுது செய்விப்பதற்கு வேண்டிய பால் தயிர் நெய் தேன் முதலிய வற்றையும்
எம்பெருமானுக்கு அமுது செய்விப்பதற்கு வேண்டிய அரிசி பருப்பு கறியமுது சர்க்கரை நெய் தயிர் பழம் முதலிய
போஜநோபகரணங்களையும் ஸம்பாதித்துத் தொகுத்து ஸித்தஞ் செய்யவேண்டும். இஃது உபாதாநகால நியமம்.

மூன்றாவதான மத்யாஹ்ந காலத்திலே, மாத்யாஹ்நிகஸநாநமும் மாத்யாஹ்நிகச் சடங்கும் செய்து
விதிமுறை வழுவாது பகவானுக்குத் திருவாராதநம் பண்ணிப் பக்குவமான உணவுகளை அமுது செய்வித்து
அங்ஙனம் நிவேதித்த உணவுகளை அதிதிகளோடு புஜிக்க வேண்டும். இஃது இஜ்யாகால நியமம்.

அதற்கு அடுத்ததான அபராஹ்ந காலத்திலே, மோக்ஷமார்க்கத்துக்கு உரிய வேத வேதாந்த வேதாந்தங்களையும்
இதிஹாஸ புராணங்களையும் மற்றும் உரிய நுர்ல்களையும் தாம் கற்றலும் கற்பித்தலும் வேண்டும். இது ஸ்வாத்யாயகாலநியமம்.

ஈற்றதான ஸாயங்காலத்திலே, மாலைக் கடனாகிய ஸந்த்யா வந்தனத்தைச் செய்யத் தொடங்கி
ஸூர்யாஸ்தமனமான பின்பு ஜபத்தைப் பூர்த்திசெய்து இரவு போஜநாநந்தரம் ஏகாந்தமாக இருந்து
ஐம்பொறிகளை யடக்கி ப்ராணாமஞ்செய்து மனத்தைப் பரமாத்மாவினிடத்தே நிலை நிறுத்தி
பகவத்குணாநு ஸந்தானத்தோடு பள்ளி கொள்ள வேண்டும். இது யோகாகாலநியமம்.

இவ்வாறு அநுஷ்டிக்கும் பாகவதர் பஞ்சகாலபராயணர் எனப்படுவர்.

————

கோலார்ந்த நெடும் சார்ங்கம் கூன் நல் சங்கம்
கொலை ஆழி கொடும் தண்டு கொற்ற ஒள் வாள்
காலார்ந்த கதி கருடன் என்னும் வென்றி
கடும் பறவை இவை அனைத்தும் புறம் சூழ் காப்ப
சேலார்ந்த நெடும் கழனி சோலை சூழ்ந்த
திரு வரங்கத்து அரவணையில் பள்ளி கொள்ளும்
மாலோனை கண்டு இன்ப கலவி எய்தி
வல் வினையேன் என்று கொலோ வாழும் நாளே ?–1-8-

பதவுரை

கோல் ஆர்ந்த–அம்புகளோடு கூடிய
நெடு சார்ங்கம்–பெரியதான ஸ்ரீ சார்ங்க மென்னும் வில்லும்
கூன் நல் சங்கம்–வளைந்து விலக்ஷணமான ஸ்ரீ பாஞ்சஜந்யமென்னும சங்கமும்
கொலை ஆழி–(எதிரிகளைக்) கொலை செய்ய வல்ல ஸூதர்சநமும்
கொடும் தண்டு–(பகைவர்களுக்குக்) கொடுந்தொழில் புரிகின்ற கௌமோதகி யென்னும் கதையும்
கொற்றம் ஒள் வாள்–வெற்றி பெற்று ஒளி மிக்க நந்தகமென்னும் வாளும்
கால் ஆர்ந்த கடும் கதி–வாயு வேகம் போன்ற மிகவும் விரைந்த நடையை யுடைய
கருடன் என்னும்–பெரிய திருவடி யென்னும் பேரை யுடைய
வென்றி பறவை இவை அனைத்தும்–ஐய சீலமான பக்ஷிராஜனும் (ஆகிய) இவை யெல்லாம்
புறம் சூழ் காப்ப–நாற் புறமும் சூழ்ந்து கொண்டு ரக்ஷையிட
சேல் ஆர்ந்த நெடு கழனி–(நீர் வளத்தால்) மீன்கள் நிரம்பிய விசாலமான
கழனிகளாலும்
சோலை சூழ்ந்த–சோலைகளாலும் சூழப்பட்ட
திரு அரங்கத்து அரவு அணையில்
பள்ளி கொள்ளும்;
மாலோனை–ஸர்வாதிகனான எம்பெருமானை
வல் வினையேன்–மஹா பாபியான அடியேன்
கண்டு–ஸேவிக்கப் பெற்று
இன்பம் கல்வி எய்தி–ஆநந்த மயமான ஸம்ச்லேஷத்தையும் பெற்று
வாழும் நாள் என்று கொல்–வாழ்வது என்றைக்கோ?

பஞ்சாயுதங்களும், திருவடி விஷ்வகஸேநன் முதலிய நித்யஸூரி வர்க்கங்களும்
‘அழகிய மணவாளனுக்கு எந்த ஸமயத்தில் என்ன தீங்கு நேரிடுமோ? என்று அதி சங்கை பண்ணி
எப்போதும் நாற்புறமும் சூழ்ந்து காவலாயிருக்கத் திருவனந்தாழ்வான் மீது திருக்கண் வளர்ந்தருளா நின்ற பெரிய பெருமாளை,
ஸாம்ஸாரிக ஸூகாபாஸங்களிலேயே ருசி கண்டிருக்குமபடி மஹா பாபத்தைப் பண்ணி
நித்ய கைங்கரியத்தை இழந்து கிடக்கிற அடியேன் என்றைக்கு ஸேவித்து வாழப் போகிறேன் என்கிறார்.
இப் பாசுரத்தை அடியொற்றியே ஆழ்வான் ஸ்ரீவைகுண்ட ஸ்தவத்தில் அருளிச் செய்தமையும் காண்க

—————

தூராத மனக் காதல் தொண்டர் தங்கள்
குழாம் குழுமி திரு புகழ்கள் பலவும் பாடி
ஆராத மனக் களிப்போடு அழுத கண்ணீர்
மழை சோர நினைந்து உருகி ஏத்தி நாளும்
சீர் ஆர்ந்த முழ வோசை பரவை காட்டும்
திரு வரங்கத்து  அரவணையில் பள்ளி கொள்ளும்
போராழி அம்மானை கண்டு துள்ளி
பூதலத்தில் என்று கொலோ புரளும் நாளே?—-1-9-

பதவுரை

தூராத காதல் மனம்–ஒரு நாளும் த்ருப்தி பெறாத ஆசை கொண்ட மனத்தை யுடையவரான
தொண்டர் தங்கள் குழாம்–ஸ்ரீ வைஷ்ணவர்களின் கோஷ்டியிலே
குழுமி–கூடி
திரு புகழ்கள் பலவும் பாடி–(எம்பெருமானது) கீர்த்திகளெல்லாவற்றையும் (வாயாரப்) பாடி
ஆராத மனம் களிப்போடு–(அவ்வளவிலும்) த்ருப்தி பெறாத மநஸ்ஸிலுள்ள ஆனந்தத்தோடே
அழுத கண் நீர்–அழுத கண்களிலுண்டான நீர்த் துளிகள்
மழை சோர–மழை போல் பெருகி வர
நினைந்து உருகி ஏந்தி–(எம்பெருமானை) நினைத்து (அத்தாலே) மனமுருகி ஸ்தோத்திரம் பண்ணி,
நாளும்–எப்போதும்
சீர் ஆர்ந்த முழவு ஓசை–நல்ல வாத்யங்களின் கோஷமானது
பரவை காட்டும்–கடலோசை போல் முழங்கப் பெற்ற
திரு அரங்கத்து ஸ்ரீரங்கத்திலே அரவு அணையில் பள்ளி கொள்ளும்
போர் ஆழி–(பகைவரோடு) யுத்தஞ்செய்வதையே தொழிலாக வுடைய
திருவாழி யாழ்வானை யுடையவரான
அம்மானை–எம்பெருமானை
கண்டு–ஸேவிக்கப் பெற்று
துள்ளி–ஆநந்தத்துக்குப் போக்கு வீடாகத்) தலை கால் தெரியாமல் கூத்தாடி
பூதலத்திலே–பூமியிலே
புரளும் நாள் என்று கொல்–(உடம்பு தெரியாமல்) புரள்வது என்றைக்கோ!.

“இன் கனி தனி யருந்தான்” (நல்ல பொருள்களைத் தனியே அநுபவிக்கலாகாது) என்றாற்போல,
பகவத் குணங்களைத் தனியே அநுபவிக்கக் கூடாதாகையால்,
அக் குணங்களை வாய் விட்டுக் கதறினாலன்றி த்ருப்தி பெற முடியாதபடி கரை புரண்ட காதலை யுடைய
பாகவதர்களின் கோஷ்டியிலே கலந்து அவர்களுடன் எம்பெருமானது கீர்த்திகளை வாயாரப் பாடி
அதனால் ஆநந்தக் கண்ணீர் பெருகப் பெற்று ‘நமக்குமன்றோ இவ்வநுபவம் கிடைத்தது!’ என்கிற
உள்ளடங்காத பேரின்பப் பெருமையாலே
“மொய்ம்மாம் பூம்பொழிற் பொய்கை” என்கிற திருவாய் மொழியிற்படி
தலை கால் தெரியாமல் துள்ளிக் கூத்தாடி, இப்போது ஸிம்ஹாஸநத்திலே மார்பு நெறித்திருக்கு மிருப்புத் தவிர்ந்து
ஆநந்த மிகுதியாலே நிலத்தில் வீழ்ந்து புரளும்படியான பாக்கியம் வாய்ப்பது என்றைக்கோ? என்கிறார்.

தூராத மனக் காதல் சப்தாதி விஷயங்களை எவ்வளவு அநுபவித்தாலும் எத்தனை நாள் அநுபவித்தாலும்
சிறிதும் த்ருப்தி அடையாத இந்திரியங்களை யுடையவர்களின் கோஷ்டியில் நின்றும் விலகி,
எம்பெருமானை எவ்வளவு அநுபவித்தாலும் பர்யாப்தி பெறாத மெய்யடியார்கள் திரளிலே புக விரும்புகிறபடி.

பரவை காட்டும் என்றது-
கடலின் அலைகளின் கோஷத்துக்கு ஓய்வு இல்லாதாப் போலே
கோயிலில் வாத்யங்களின் முழக்கத்துக்கு ஓய்வு இல்லாமையால் கடலை ஒத்திருக்கின்ற என்றவாறு.
பரவை-கடல் பரவியது: ஐ-கருத்தாய்ப் பொருள் விகுதி.

————-

வன் பெரு வானகம் உய்ய அமரர் உய்ய
மண் உய்ய மண் உலகில் மனிசர் உய்ய
துன்பம் மிகு துயர் அகல அயர் ஒன்றில்லா
சுகம் வளர அக மகிழும் தொண்டர் வாழ
அன்போடு தென் திசை நோக்கி பள்ளி கொள்ளும்
அணி அரங்கன் திரு முற்றத்து அடியார் தங்கள்
இன்ப மிகு பெரும் குழுவு கண்டு யானும்
இசைந்த உடனே என்று கொலோ விருக்கும் நாளே ?—1-10-

பதவுரை

வன்–(நைமித்திக ப்ரளயத்தில்) அழியாதிருக்கக் கடவதும
பெரு–பெருமை தங்கியதுமான
வானகம்–ஸ்வர்க்கம் முதலிய மேலுலகங்கள்
உய்ய–உஜ்ஜீவிக்கவும்
அமரர்–தேவர்கள்
உய்ய–உஜ்ஜீவிக்கவும்
மண் உய்ய–பூலோகம் உஜ்ஜீவிக்கவும்
மண் உலகில் மனிசர் உய்ய–பூலோகத்திலுள்ள மனிதர்களெல்லாம் உஜ்ஜீவிக்கவும்
மிகு துன்பம் துயர் அகல–மிக்க துக்கத்தை விளைப்பதான பாவங்கள் நீங்கவும்
அயர்வு ஒன்று இல்லா சுகம் வளர–துக்கம் கலசாத சுகம் வளரவும்
அகம் மகிழும்–(எப்போதும்) மனதில் ஆனந்தத்தை யுடையரான
தொண்டர்–ஸ்ரீவைஷ்ணவர்கள்
வாழ–உஜ்ஜீவிக்கவும்
அன்போடு–திருவுள்ளத்தில் உகப்போடு
தென் திசை நோக்கி–தெற்குத் திக்குக்கு அபிமுகமாக
பள்ளி கொள்ளும்–பள்ளி கொண்டிரா நின்ற
அணி அரங்கன்–ஸ்ரீரங்கநாதனுடைய
திரு முற்றத்து–ஸந்நிதியுள் திரு முற்றத்திலே
அடியார் தங்கள்–ஸ்ரீவைஷ்ணவர்களுடைய
இன்பம் மிகு பெரு குழுவு கண்டு–ஆநந்தம் நிரம்பிய பெரிய கோஷ்டியை சேவித்து
யானும்–அடியேனும்
இசைந்து–(அவர்களுள் ஒருவனாக) மனம் பொருந்தி
உடனே–அவர்களோடு கூட
இருக்கும் நாள் என்று கொல்–வாழ்ந்திருக்குங்காலம் எப்போது (வாய்க்குமோ?).

தேவர்களும் மநுஷயர்களும் விலக்ஷண ஸ்ரீவைஷ்ணவர்களும் வாழவும்
பாவங்கள் நீங்கிப் புண்ணியங்கள் செழிக்கவுமாகக்
குட திசை முடியை வைத்துக் குண திசை பாதம் நீட்டி வட திசை பின்பு காட்டித் தென் திசை இலங்கை
பாகவதர்களை யுடைய கோஷ்டியிலே சேர்ந்து
அடியேனும் அவர்களைப் போலே திளைத்து வாழ்வது என்றோ! என்கிறார்.

————–

திடர் விளங்கு கரை பொன்னி நடுவு பாட்டு
திரு வரங்க தரவணையில் பள்ளி கொள்ளும்
கடல் விளங்கு கரு மேனி அம்மான் தன்னை
கண்ணார கண்டு உகக்கும் காதல் தன்னால்
குடை விளங்கு விறல் தானை கொற்ற ஒள் வாள்
கூடலர் கோன் கொடை குலசேகரன் சொல் செய்த
நடை விளங்கு தமிழ் மாலை பத்தும் வல்லார்
நலம் திகழ் நாரணன் அடி கீழ் நண்னுவாரே—1-11-

பதவுரை

திடர் விளங்கு கரை–மணற்குன்றுகள் விளங்கா நின்ற கரையை யுடைத்தான
பொன்னி நடுவு பாடு–காவிரியின் நடுவிடத்து
திரு அரங்கத்து அரவு அணையில் பள்ளி கொள்ளும்:
கடல் விளங்கு–கடல் போல் விளங்குகின்ற
கரு மேனி–கரிய திருமேனியை யுடைய
அம்மான் தன்னை–பெரிய பெருமாளை
கண் ஆர கண்டு உகக்கும் காதல் தன்னால்–கண்கள் த்ருப்தி யடையும்படி
ஸேவித்து ஆநந்திக்க வேணும்’ என்று உண்டான ஆசையினால்
குடை விளங்கு–(அரசாட்சிக்கு ஏற்ப) வெண் கொற்றக் குடையுடன் விளங்கா நிற்பவரும்
விறல் தானை–பராக்கிரமம் மிக்க ஸேஸனைகளை யுடையவரும்
கொற்றம் ஒள் வாள்–வெற்றியும் ஒளியும் பொருந்திய வாளை யுடையவரும்
கூடலர் கோன்–மதுரையிலுள்ளவர்களுக்குத் தலைவரும்
கொடை–ஔதார்யத்தையே இயற்கையாக வுடையவருமான
குலசேகரன்–குலசேகரப் பெருமாள்
சொற்செய்த–அருளிச் செய்த
நடை விளங்கு–தமிழ் நடையானது நன்கு விளங்கா நின்ற
தமிழ் மாலை பத்தும்–தமிழ்ப் பிரபந்தரூபமான இப் பத்துப் பாசரங்களையும்;
வல்லார்–ஓத வல்லார்கள்
நலம் திகழ் நாரணன்–கல்யாண குண சாலியான ஸ்ரீமந் நாராயணனுடைய
அடி கீழ் நண்ணுவார்–திருவடிகளில் சேரப் பெறுவர்.

————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய வாச்சான்  பிள்ளை  ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம்.
ஸ்ரீ குலேசேகரர்    ஆழ்வார் ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள்  ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு வடிகளே சரணம்

ஸ்ரீ முகுந்தமாலாவில், ஸ்ரீ க்ருஷ்ணானுபவம்–

April 10, 2021

ஸ்ரீ முகுந்தமாலாவில், க்ருஷ்ணானுபவம்

குஷ்யதே யஸ்ய நகரே ரங்க யாத்ரா திநே திநே |
தமஹம் ஸி ரஸா வந்தே ராஜாநம் குலசேகரம். ||

எந்த ராஜாவின் நகரில், “ஸ்ரீ ரங்கத்துக்குப் போவோம், வாருங்கள்” என்று தினம், தினம் பறை என்கிற வாத்தியத்தின்
மூலம் அழைக்கப்படுகிறதோ, அந்த ராஜ்யத்தின் அரசனான ஸ்ரீ குலசேகரரைத் தலையால் வணங்குகிறேன்

————​

​ஸ்ரீ வல்லபேதி வரதேதி தயாபரேதி
பக்த ப்ரியேதி பவலுண்டந கோவிதேதி |
நாதேதி நாகசயநேதி ஜகந் நிவாஸே
த்யாலாபிநம் ப்ரதிபதம் குரு மே முகுந்த ||–1-

மே ….முகுந்த….என்கிறார். என்னுடைய முகுந்தனே என்று அழைக்கிறார். அழைத்து என்ன சொல்கிறார் தெரியுமா !
ஸ்ரீ வல்லபா ( லக்ஷ்மி பதி ), வரதா, தயாபரா , பக்த ப்ரியா , பவலுண்டன கோவிதேதி (பிறவித் துயரை அறுப்பவனே )
நாத இதி–காப்பாற்றுபவனே —நாதா, ( அவன் தான் நாதன், நாமெல்லாம் அல்ல ),
நாகசயனா , ஜகந்நிவாஸா —அடியேன் எப்போதும் உன்னுடைய திருநாமங்களையே———
ஆலாபிநம் ——–பேசுபனாக—பாடுபவனாக —அனுக்ரஹம் செய் என்கிறார்.
உன் திரு நாமங்களை எப்போதும் நாம சங்கீர்த்தனமாகச் செய்ய–அருள் புரிவாயாக—என்கிறார்.

———-

ஜயது ஜயது தேவோ தேவகீ நந்த நோயம்
ஜயது ஜயது க்ருஷ்ணோ வ்ருஷ்ணி வம்ச-ப்ரதீப : |
ஜயது ஜயது மேக ச்யாமள கோமாளாங்கோ
ஜயது ஜயது ப்ருத்வீ –பாரநாஸோ முகுந்த : ||–2-

இவன் தேவகியின் மைந்தன்
இவன் வ்ருஷ்ணி குலத்தின் விளக்கு —ஆயர் குல விளக்கு
இவன் மேக ச்யாமளன்
இவன் கோமாளாங்கன்
இப்படிப்பட்டவன் வெற்றி அடைவானாக என்று , ஜயது ,ஜயது என்று எட்டு தடவை சொல்கிறார்
( இது அஷ்டாக்ஷரத்தை நினைவுபடுத்துகிறதா !)

————

முகுந்த! மூர்த்நா ப்ரணிபத்ய யாசே
பவந்த–மேகாந்த -மியந்த -மர்த்தம் |
அவிஸ்ம்ருதிஸ் -த்வச் -சரணாரவிந்தே
பவே பவே மேஸ்து பவத்-ப்ரஸாதாத் ||–3-

இந்த 3வது ஸ்லோகத்தில் முகுந்தனிடம் ஒன்றே ஒன்று யாசிக்கிறார்.
எவ்வளவு பிறவி எடுத்தாலும், முகுந்தனின் கிருபையாலே அவனுடைய திருவடிகளை மறக்காமல் இருக்க யாசிக்கிறார்.
அவிஸ்ம்ருதி —மறக்காமலிருப்பது—பகவத் ப்ரஸாதாத் –பகவானுடைய கிருபையால்.
பவே பவே—ஒவ்வொரு ஜன்மத்திலும். என்கிறார்.

———–

நாஹம் வந்தே தவ சரணயோர் த்வந்த –மத்வந்த –ஹேதோ :
கும்பீபாகம் குருமபி ஹரே ! நாரகம் நாபநேதும் |
ரம்யா ராமா ம்ருது தநு லதா நந்தநே நாபி ரந்தும்
பாவே பாவே ஹ்ருதய –பவநே பாவயேயம் பவந்தம் ||–4-

அவன், ஹரி—ஹரே என்று அழைக்கிறார். அஹே—அடியேன். தவ த்வந்தம் சரணயோ ——உன்னுடைய இரு திருவடிகளை .
எதற்காக நமஸ்கரிக்கவில்லை ,ஆனால் , எதற்காக நமஸ்கரிக்கிறேன் என்று விண்ணப்பிக்கிறார்.
மோக்ஷத்துக்காக அல்ல;கும்பீபாகம் என்கிற நரகவேதனையை நீக்கு என்பதற்காக அல்ல;
தேவலோக நந்தவனத்தில், கொடிபோன்ற மாதர்களுடன் ரமிக்க வேண்டும் என்பதற்காக அல்ல.
பிறகு எதற்காக என்றால்,
ஒவ்வொரு ஜன்மத்திலும் அடியேனின்— ஹ்ருதய பவநே–இதயக் கோயிலில் உன்னை நினைக்க வேண்டும்–
என்பதற்காகவே நமஸ்கரிக்கிறேன் என்கிறார். –

—————-

நாஸ்தே தர்மே ந வஸூ நிசயே நைவ காமோப —போகே
யத்யத் பவ்யம் பவது பகவந் ! பூர்வ கர்மாநுரூபம் |
ஏதத் ப்ரார்த்யம் மம பஹூமதம் ஜந்ம ஜந்மாந்த ரேபி
த்வத் –பாதாம்போருஹ —யுககதா நிஸ் சலா பக்தி ரஸ்து ||–5-

பகவந் ! பகவானே …என்று தாபத்துடன் அழைக்கிறார்.
இந்த ஸ்லோகத்தில் எவற்றில் ஆசை இல்லை ; ஆனால் எதில் ஆசைப்பட்டுப் பிரார்த்திக்கிறேன் என்பதைச் சொல்கிறார்.
தர்மே ஆஸ்தா ந—தர்மத்தில் ஆசை இல்லை;
வஸூ நிசயே ந —-குவியல், குவியலாக இருக்கிற பணத்தின்மீதும் ஆசை இல்லை;
காமோப –போகே நைவ—-காமம் என்கிற போகத்திலும் ஆசை இல்லவே இல்லை;
உடனே கர்மானுபவத்தைச் சொல்கிறார்.
பூர்வ கர்மானுரூபம் யத்யத் பவ்யம் பவது—பூர்வ ஜென்மங்களின் கர்மாக்களுக்கு ஏற்ப, எது எது எப்படி நடக்கவேண்டுமோ ,
அவைகள் அப்படியே நடக்கட்டும் ஆனால்
மம ஜன்ம ஜன்மாந்தரேபி ——அடியேனுக்கு, இந்த ஜன்மத்திலும் அடுத்த ஜன்மங்களிலும்,
பஹூ மதம் ப்ரார்த்யம் —-மிகவும் ஆசையான பிரார்த்தனை எதுவெனில்,
ஏதத் —- இதுவே —-( என்கிறார் )
த்வத் பாதாம் போருஹ –யுககதா——- உன்னுடைய திருவடித் தாமரைப் பற்றியதான
நிஸ்சலா பக்தி : அஸ்து—– அசையாத பக்தி தொடர்ந்து இருக்கவேண்டும். அதுவே அடியேனின் ஆசை.
அதற்கு அருள் புரிக என்கிறார்.

————-

திவி வா புவி வா மமாஸ்து வாஸோ
நரகே வா நரகாந்தக ! ப்ரகாமம் |
அவதீரித —ஸாரதாரவிந்தௌ
சரணௌ தே மரணேபி சிந்தயாமி ||–6-

இச் ச்லோகத்தில் , நரகாசுரனை அழித்தவனே என்கிறார்—-…..
மம -( என்னுடைய) வாஸம்,
திவிவா , புவிவா –தேவ லோகத்தில் இருந்தாலும், இந்தப் பூமியில் இருந்தாலும் —ஏன் நரகே வா—-நரகத்திலே இருந்தாலும் கூட,
அவதீரித –ஸாரதாரவிந்தௌ—- சரத்காலத்தில் பூத்திருக்கும் தாமரைப் புஷ்பத்தையே பழிக்கும்,
தே சரணௌ —உன்னுடைய திருவடிகளை ,
மரணே அபி சிந்தயாமி—–அடியேனின் மரண சமயத்திலும் நினைக்கிறேன் .
( நமக்கும், அப்படியே எப்போதும் நம்முடைய சிந்தனை ஸ்ரீ கிருஷ்ணனின் திருவடித் தாமரைகளிலேயே இருக்கவேண்டும்;
அதற்கு, அந்தக் கிருஷ்ணனே அருளவேண்டும் )

——————

கிருஷ்ண ! த்வதீய –பதபங்கஜ –பஞ்ஜராந்த–
மத்யைவ மே விஸது மாநஸ –ராஜ ஹம்ஸ : |
ப்ராண –ப்ரயாண–ஸமயே கபவாத –பித்தை :
கண்டா –வரோதந –விதௌ ஸ்மரணம் குதஸ் தே ||–7-

க்ருஷ்ணா…..
ப்ராண –ப்ரயாண —ஸமயே
கப–வாத–பித்தை :——–இந்த உயிர் ,ப்ராணன் , ப்ரயாணப்படும் சமயத்தில், உடலை விட்டுப் பிரியும் சமயத்தில்,
கபம் (சளி ) வாதம் ( வாய்வு ), பித்தம் —இவைகள் ,
கண்டாவரோதந விதௌ —-நெஞ்சை அடைக்கும் நேரத்தில், தே – ஸ்மரணம் –குத : —உன்னுடைய நினைவு எப்படி வரும் ( வராது )
அதனால்,
மே மாநஸ —ராஜ ஹம்ஸ :—–அடியேனுடைய மனமாகிய ராஜஹம்ஸம், அத்யைவ —இன்றே, இப்போதே
த்வதீய –பத பங்கஜ –பஞ்ஜராந்தம்–உன்னுடைய திருவடித்தாமரை என்கிற கூண்டுக்குள் ,
விஸது—-புகுந்து கொள்ளட்டும்

முந்தைய ச்லோகத்தில்,
மரணேபி …… மரணம் ஏற்படும் சமயத்திலும் —உன் திருவடிகளையே சிந்தனை செய்கிறேன் என்று சொன்ன ஆழ்வாருக்கு ,
ஒரு சந்தேகம் வந்தது. கபம், வாதம், பித்தம், இவையெல்லாம், நெஞ்சை நெருக்கி, குரலை ஒடுக்கி,
மனசைத் தடுமாறும்படி செய்துவிட்டால், மரணம் ஏற்படும் சமயத்தில் ஸ்ரீ கிருஷ்ணனை நினைக்காமல் தடுத்துவிட்டால்,
என்ன செய்வது என்று தோன்றி, இந்த ச்லோகத்தை அமைத்துள்ளாரோ !
அப்போதைக்கு, இப்போதே சொல்லி வைத்தாரோ ! ( இந்தச் சமயம் வராஹ சரம ச்லோகம் நினைவுக்கு வருகிறதா )

————–

சிந்தயாமி ஹரிமேவ ஸந்ததம்
மந்த மந்த –ஹஸிதாநநாம்புஜம் |
நந்தகோப –தநயம் பராத்பரம்
நாரதாதி –முநிப்ருந்த –வந்திதம் ||–8-

மந்தஹாஸம் ததும்பும் ,அன்றலர்ந்த தாமரை திருமுகத்தை உடையவனும்,நந்தகோபரின் செல்வனும்,
பராத்பரம்—எல்லாரையும்விட உயர்ந்தவனும், நாரதர் முதலியமுனிக் கணங்கள் வணங்கும் , ஹரிமேவ—-ஸ்ரீ ஹரியையே
ஸந்ததம் சிந்தயாமி—-எப்போதும் ஸ்மரிக்கிறேன் ( நாமும் இந்த ச்லோகத்தைத் தினமும் சொல்லலாம் )

——–

கரசரண—ஸரோஜே காந்தி மந் —நேத்ரமீநே
ஸ்ரமமுஷி புஜவீசி –வ்யாகுலே காதமார்க்கே |
ஹரிஸரஸி விகாஹ்யா பீய தேஜோஜலௌகம்
பவமரு –பரிகிந்ந : கேதமத்ய த்யஜாமி ||–9-

இந்த ச்லோகத்தில், பகவானது திருமேனி தேஜஸ் என்கிற தீர்த்தத்தைப் பருகி, தாகத்தைப் போக்கிக்கொள்கிறேன் என்கிறார்.
அந்தத் தீர்த்தம் தடாகத்தில் இருக்கிறது; அது ஹரி என்னும் தடாகம்; அந்த ஹரியின் , திருக்கைகளும், திருவடிகளும் தாமரைகள் ;
அவை நிறைந்த தடாகம்; அவரது ஒளி வீசுகிற திருக்கண்கள் ,மீன்கள் அவை நிறைந்த தடாகம்;
அவரது திருப்புஜங்களே ச்ரமங்களை அகற்றிப் புயல் போல இருக்கும் தடாக அலைகள்;இந்தத் தடாகம் மிக ஆழமானது;
சம்சாரமாகிய பாலைவனத்தில் வருந்திய அடியேன் ,
இந்த ஹரி என்கிற தடாகத்தில் மூழ்கி, அவரது தேஜஸ் என்கிற ஜலத்தைப் பானம் செய்து,
அத்ய கேதம் த்யஜாமி—–இப்போது கஷ்டங்களை எல்லாம் விட்டு விடுகிறேன்
( பாலைவனத்தில் நீருக்காக அலைந்த நான், பகவானின் தேஜஸ் என்கிற ஜலத்தைப் பருகினேன் ,தாகம் தீர்ந்தது ,என்கிறார் )

————

ஸரஸிஜ –நயநே ஸசங்க —சக்ரே
முரபிதி மா விரமஸ்வ ! ரந்தும் |
ஸூகதரமபரம் ந ஜாது ஜாநே
ஹரிசரண — ஸ்மரணாம்ருதேந துல்யம் ||–10-

சித்த —என்று மனதைக் கூப்பிடுகிறார். தாமரைக் கண்ணனும், சங்குசக்ரதாரியும், முரன் என்கிற அசுரனை அழித்தவனுமாகிய
ஹரியிடம் பக்தி கொள்வதை விடாதே ; யத :—-ஏன் எனில், ஹரியின் திருவடிகளை ஸ்மரிக்கும்
அமிர்தத்தோடு அதற்குச் சமமான மற்றோர் உயர்ந்த சுகம், ஜாது ந ஜாதே ——எப்போதும் அறிந்திலேன் .

———

மாபீர்–மந்தமநோ விசிந்த்ய பஹூதா யாமீஸ்சிரம் யாதநா :
நாமீ ந : ப்ரபவந்தி பாபரிபவ : ஸ்வாமீ நநு ஸ்ரீதர : |
ஆலஸ்யம் வ்யப நீய பக்தி–ஸுலபம் த்யா யஸ்வ நாராயணம்
லோகஸ்ய வ்யஸநாபநோத நகரோ தாஸஸ்ய கிம் ந க்ஷம : ||–11

மனதே….பயப்படாதே என்கிறார். இந்த ஸ்லோகத்திலும். மனஸ் …..எதற்காகப் பயப்படவேண்டாம் ?
பதில் சொல்கிறார்…
பாபிகளுக்குப் பகைவன் —யமன் கொடுக்கும் தண்டனைகள். இந்த யம தண்டனைகள் சக்தியை இழந்தவை —-எப்போது தெரியுமா?
ஸ்ரீமன் நாராயணனைத் த்யானம் செய்தால், இவை சக்தியை இழந்தவை ஆலஸ்யம் இல்லாமல் த்யானம் செய்தால்,
பக்தியுடன் த்யாநித்தால், அவை நம்மைத் துன்புறுத்தாது. உலகத்தார் கஷ்டங்களைஎல்லாம் போக்குபவன் இவன்—-
அப்படி இருக்கிற கருணா சாகரன் , தன்னுடைய பக்தனுக்கு ( தாஸஸ்ய), ந க்ஷம : —–துன்பத்தை அழிப்பதில் வல்லமை இல்லாதவனா ! —

—————–

பவஜலதி —கதாநாம் த்வந்த்வ —வாதாஹதாநாம்
ஸுத துஹித்ரு —-களத்ர –த்ராண — – பாரார்திதாநாம் |
விஷம –விஷய –தோயே மஜ்ஜதா –மப்ல வாநாம்
பவது ஸரணமேகோ விஷ்ணு போதோ நராணாம் ||–12

பகவான் ,கரை ஏற்றுகிறான் —விஷ்ணு போத :—என்கிறார்–விஷ்ணு என்கிற ஓடமாகக் கரைஏற்றுகிறான்.
இந்த சம்சாரம் இருக்கிறதே—புனரபி ஜனனம், புனரபி மரணம் –இந்தக்கடலில்,
த்வந்த்வ வாதாஹதனாம்—குளிர்–வெய்யில், சுகம்–துக்கம் என்பன போன்ற இரட்டைகள் ,இவனைத் தாக்குகின்றன;
உறவுகள் —இவர்களைக் காப்பது என்கிற பாரத்தால், கஷ்டப்படுகிறான் ; விஷய சுகம் என்கிற ஜலத்தில் மூழ்குகிறான்;
இவனைக் கரையேற்ற ஓடம் இல்லை; இப்படிப்பட்டவர்களுக்கு, விஷ்ணுவே ஓடம் . அவன்தான் சரணம்

———–

பவஜலதி –மகாதம் துஸ்தரம் நிஸ்தரேயம்
கதமஹமிதி சேதோ மா ஸ்ம கா : காதரத்வம் |
ஸரஸிஜத்ருஸி தேவே தாவகீ பக்திரேகா
நரகபிதி நிஷண்ணா தாரயிஷ்யத்வஸ்யம் ||–13

மறுபடியும் மனஸ்ஸுக்குச் சொல்கிறார்.
ஹே சேத :—–மனசே…ஜனன, மரண சம்சாரக் கடல் –இது மிக ஆழமான கடல்;
இதைத் தாண்டுதல் எப்படி என்று …காதரத்வம் மா ஸ்மா கா :——பயப்படாதே –
தாமரைக் கண்ணன்; நரகாசுரனை அழித்தவன்; அப்படிப்பட்ட பகவானிடம் ,உனக்குப் பக்தி இருந்தால்,
ஏகா அவஸ்யம் தாராயிஷ்யதி– அது ஒன்றே , அவசியம் , தாண்டச் செய்துவிடும்

————–

த்ருஷ்ணா தோயே மதந–பவநோத்தூத–மோஹோர்மி- மாலே
தாராவர்த்தே தநய —சஹஜ –க்ராஹ –ஸங்காகுலே ச |
ஸம்ஸாராக்யே மஹதி ஜலதௌ மஜ்ஜதாம் நஸ்த்ரிதாமந்
பாதாம் போஜே வரத பவதோ பக்திநாவம் ப்ரயச்ச ||–14-

பக்திநாவம் , என்கிறார் ,இந்த ச்லோகத்தில்.
பக்திநாவம் ——பக்தி என்கிற ஓடம் .ப்ரயச்ச—கொடுங்கள் என்கிறார்.
அந்த பக்தி, பவது பாதாம்புஜே—-தேவரீரின் திருவடித் தாமரைகளின்மீது பக்தி என்கிறார்.
வரத —-வரம் அளிப்பவரே என்று பகவானைக் கூப்பிடுகிறார். பக்தியாகிய ஓடத்தை யாருக்காகக் கேட்கிறார் ?
மஹதி ஜலதௌ மஜ்ஜதாம் ந :—-பெரிய சமுத்ரத்தில் மூழ்கியுள்ள எங்களுக்கு,
அது என்ன சமுத்ரம் ? சம்சாரமென்னும் பெரிய சமுத்ரம்;
இந்த சமுத்ரத்தில் பேராசை என்கிற ஜலம்;காமமும், மோஹமும் , காற்றும் அலையும்
(காற்று வீசி சமுத்திர அலைகள் மேலே எழும்புவது போன்று காமம் என்கிற காற்று இந்த சம்சாரக் கடலில் வீசி,
மோஹம் என்கிற அலைகளை, மேலே மேலே எழுப்புகிறது );
தாராவர்த்தே—மனைவி என்கிற சுழல்; மக்கள், கூடப் பிறந்தவர்கள்-இவர்களெல்லாம், முதலைக் கூட்டங்கள்.
ஹே..த்ரிதாமந் —–ஹே,பரந்தாமா, இப்படிப்பட்ட சம்சாரக் கடலைத் தாண்ட, பக்தி என்கிற ஓடத்தை அருளும்படி விண்ணப்பிக்கிறார்.

——–

மாத்ராக்ஷம் க்ஷீண புண்யாந் க்ஷணமபி பவதோ பக்திஹீநாந் பதாப்ஜே
மாஸ்ரௌஷம் ஸ்ராவ்யபந்தம் தவ சரிதம பாஸ்யாந்ய தாக்யா நஜாதம் |
மாஸ்மார்ஷம் மாதவ ! த்வா மபி புவநபதே ! சேதஸா பஹ்நுவாநாந்
மாபூவம் த்வத் ஸபர்யா —வ்யதிகர –ரஹிதோ ஜந்மஜந்மாந்த ரேபி ||–15-

ஸ்ரீ குலசேகரர், இந்த ச்லோகத்தில், பகவத் பக்திக்கான முக்ய விவரங்களைச் சொல்கிறார்.
புவநபதே ! மாதவா! என்கிறார்.
உன் திருவடியில் (பவத: பதாப்ஜே பக்திஹீநாந்) பக்தி இல்லாதவர்களை, பாவிகளை
( க்ஷீண புண்யான் ) ஒரு க்ஷணமும் பார்க்கமாட்டேன்; உன் திவ்ய சரிதங்களைத் தவிர, மற்றக் கதைகளைக் கேட்கமாட்டேன் ;
உன்னை மனத்தால் வெறுப்பவரை நான் மனத்தாலும் நினைக்கமாட்டேன் (மாஸ்மார்ஷம் );
இந்த ஜன்மத்திலும்,மற்ற ஜன்மங்களிலும், உன்னை பூஜை செய்யாதவனாக இருக்கமாட்டேன் (மாபூவம்).
பார்க்கமாட்டேன்; கேட்கமாட்டேன்;நினைக்கமாட்டேன்;
உடலாலும் உள்ளத்தாலும் ஒன்றி செய்யப்படும் பூஜையைச் செய்யாமல் இருக்கமாட்டேன்—-என்கிறார்.

—————

ஜிஹ்வே ! கீர்த்தய கேசவம் முரரிபும் சேதோ ! பஜ ஸ்ரீதரம்
பாணித்வந்த்வ ! ஸமர்ச்சயாச்யுதகதா: ஸ்ரோத்ரத்வய ! த்வம் ஸ்ருணு |
க்ருஷ்ணம் லோகய லோசநத்வய ! ஹரேர் –கச்சாங்க்ரியுக்மாலயம்
ஜிக்ர க்ராண முகுந்தபாத –துளஸீம் மூர்த்தந்! நமாதோக்ஷஜம் ||–16-

நாக்கே—கேசவனைத் துதி; மனமே , முராரியைப் பஜனை செய்;கைகளே, ஸ்ரீதரனை அர்ச்சியுங்கள்;
காதுகளே, அச்சுதனின் சரிதங்களைக் கேளுங்கள்;கண்களே, கண்ணனைத் தர்சியுங்கள் ;
கால்களே , —ஹரே ஆலயம் கச்ச—ஹரியின் திருக்கோவிலுக்குச் செல்லுங்கள்;
மூக்கே ,முகுந்தனின் திருவடித் துளசியை நுகர்வாயாக; தலையே,விஷ்ணுவை வணங்குவாயாக .
இந்த ஸ்லோகத்தில்,பகவானின் திருநாமங்களாகிய , கேசவன், முராரி,ஸ்ரீதரன், அச்யுதன், கிருஷ்ணன்,
ஸ்ரீஹரி,முகுந்தன், விஷ்ணு —ஆக , எட்டுத் திருநாமங்களைச் சொல்கிறார்.

—————

ஹே லோகா : ஸ்ருணுத ப்ரஸுதி மரணவ்யாதேஸ் — சிகித்ஸாமிமாம்
யோகஜ்ஞா : ஸமுதா ஹரந்தி முநயோ யாம் யாஜ்ஞவல்க் யாதய : |
அந்தர் ஜ்யோதிரமேயமேக –மம்ருதம் க்ருஷ்ணாக்யமாபீயதாம்
தத்பீதம் பரமௌஷதம் விதுநதே நிர்வாணமாத்யந்திகம் ||–17-

க்ருஷ்ணாக்யம் அம்ருதம் ஆபீயதாம் தத் பரமௌஷதம் —-கிருஷ்ணன் என்கிற அம்ருதம் உயர்ந்த மருந்து என்கிறார்.
ஹே, லோகா :—லோகத்தில் உள்ளவர்களே, ஜனன, மரண வியாதிக்கு,
இமாம் சிகித்ஸாம், ஸ்ருணுத—-இந்த சிகிச்சையைக் கேளுங்கள் என்கிறார்.
யாஜ்ஞவல்க்யர் போன்ற மஹரிஷிகள் சொன்ன மருந்து என்கிறார்.
நமக்குள் அந்தர்யாமியாகவும், ஜோதிஸ்வரூபனாகவும் ,
அமேயம் ஏகம் க்ருஷ்ணாக்யம் —-அளவிட முடியாத , ஒன்றாக உள்ள, கிருஷ்ணன் என்கிற அம்ருதமே மருந்து;
அதைப் பானம் செய்தால்,கடைசியான மோக்ஷ சுகம் கிடைக்கும்
( முக்தி தரும் )இதைப் பானம் செய்யுங்கள்

————

ஹே மர்த்யா : ! பரமம் ஹிதம் ஸ்ருணுத வோ வக்ஷ்யாமி சங்க்ஷேபத :
ஸம்ஸாரார்ணவ —மாபதூர்மி –பஹுளம் ஸம்யக் ப்ரவிஸ்ய ஸ்திதா : |
நாநா –ஜ்ஞான –மபாஸ்ய சேதஸி நமோ நாராயணாயேத்யமும்
மந்த்ரம் ஸப்ரணவம் ப்ரணாமசஹிதம் ப்ராவர்த்தயத்வம் முஹூ : ||–18-

ஹே மர்த்யா:—-ஒ, மனுஷ்யர்களே , என்கிறார். இவர்கள் யார் ?
ஆபதூர்மி ஸம்ஸாரார்ணவம் ஸம்யக் ப்ரவிஸ்ய ஸ்திதா :—-ஆபத்தான அலைகலுள்ள, சம்சார சமுத்ரத்தில் நன்கு மூழ்கி உள்ளவர்கள் .
உங்களுக்கு, மிக உயர்ந்த ஹிதம் –நன்மையை ,சுருக்கமாக, வக்ஷ்யாமி—சொல்கிறேன். ஸ்ருணுத—-கேளுங்கள்.
பலவிதமான ஞானங்களைத் தள்ளிவிட்டு, ஸப்ரணவம்—–பிரணவத்துடன் கூடி இருக்கிற,
நமோ நாராயணாய இதி —“நமோ நாராயணாய” என்கிற மந்த்ரத்தை, நமஸ்காரத்துடன் , அடிக்கடி (முஹூ : ) ஜெபியுங்கள்

——————–

ப்ருத்வீ ரேணுரணு: பயாம்ஸி கணிகா : பல்கு –ஸ்புலிங்கோநலஸ்
தேஜோ நிஸ்வஸநம் மருத் தநுதரம் ரந்த்ரம் ஸு ஸுக்ஷ்மம் நப : |
க்ஷூத்ரா ருத்ர –பிதாமஹ –ப்ரப்ருதய : கீடா : ஸமஸ்தாஸ் –ஸு ரா :
த்ருஷ்டே யத்ர ஸ தாவகோ விஜயதே பூமாவதூதாவதி : ||–19–

உன்னுடைய மஹிமையைக் காணும்போது, பூமி, சிறிய தூசு; ஜலமெல்லாம் திவலை ( நீர்த் துளி);
தேஜஸ் என்பது சிறிய நெருப்புப் பொறி;காற்று, சிறிய மூச்சு ; ஆகாயம், மிகச் சிறிய த்வாரம்;
சிவன், பிரமன் முதலான சகல தேவர்களும் சிறிய புழுக்கள்; உன்னுடைய அளவில்லாத இந்த மஹிமை வெல்லட்டும்

————-

பத்தேநாஞ்ஜலிநா நதேன ஸிரஸா காத்ரை : ஸரோமோத்கமை :
கண்டேந ஸ்வரகத் கதேந நயநேநோத்கீர்ண –பாஷ்பாம்புநா |
நித்யம் த்வச்சரணாரவிந்த — யுகள –த்யாநாம்ருதாஸ்வாதிநாம்!
அஸ்மாகம் ஸரஸீருஹாக்ஷ ! ஸததம் ஸம்பத்யதாம் ஜீவிதம் ||–20–

தாமரைக் கண்ணா ! கூப்பிய கரங்களோடும், வணங்கிய தலையோடும், மயிர்க்கூச்செடுக்கும் உடலோடும்,
தழு தழுத்த குரலோடும், ஆனந்தபாஷ்பம் பெருகும் கண்களோடும், உன் திருவடித் தாமரைகளை த்யானம் செய்கிற
அம்ருத ரஸத்தை, எப்போதும் பானம்செய்கிற , வாழ்க்கை நிறைவடையட்டும்

—————

ஹே கோபாலக ! ஹே க்ருபாஜலநிதே ! ஹே ஸிந்து கந்யாபதே
ஹே கம்ஸாந்தக ! ஹே கஜேந்த்ரகருணாபாரீண ! ஹே மாதவ ! |
ஹே ராமாநுஜ ! ஹே ஜகத்குரோ ! ஹே புண்டரீகாக்ஷ ! மாம்
ஹே கோபி ஜநநாத ! பாலயபரம் ஜாநாமி ந த்வாம் விநா ||-21-

ஹே, கோபாலா, ஹே கருணா சமுத்ரமே, ஹே சமுத்ரராஜனின் புத்ரியான லக்ஷ்மியின் பதியே ,
கம்சனை அழித்தவனே, கஜேந்த்ரனைக் கருணையோடு காப்பாற்றியவனே , மாதவா, பலராமனின் தம்பியே,
மூவுலக்கும் ஆசானே, தாமரைக் கண்ணா, கோபிகைகளின் அன்பனே, உன்னையல்லால் , வேறு யாரையும் அறியேன்,
மாம், பாலய—என்னைக் காப்பாற்று

—————-

பக்தாபாய –புஜங்க –காருடமணிஸ் –த்ரைலோக்ய –ரக்ஷாமணி :
கோபீலோசந –சாதகாம்புதமணி : சௌந்தர்யமுத்ரா மணி : |
ய : காந்தாமணி —ருக்மிணி —கநகுச –த்வந்த்வைக —பூஷாமணி :
ஸ்ரேயோ தேவஸிகாமணிர் திஸது நோ கோபால சூடாமணி : ||–22-

ய :—எவன் , தேவா—அந்தப் பகவான்,
அவன் தேவசிகாமணி—அவன், பக்தர்களுக்கு வரும் ஆபத்துக்களாகிய சர்ப்பத்துக்கு, காருடமணி (கருட ரத்னம்)
அவன், மூவுலகையும் ரக்ஷிக்கும் மணி (ரத்னம் ).
அவன், கோபிகைகளின் கண்களாகிற சாதகபக்ஷிகளுக்கு, மேகமாகிய மணி ( ரத்னம் ).
அவன், சௌந்தர்ய –முத்ரா மணி—அழகிற்கே அழகான மணி (ரத்னம் ).
அவன், பெண்கள் குல ரத்னமான ருக்மிணிக்கு ,அலங்கார மணி (ரத்னம்).
அவன், கோபால சூடாமணி ( யாதவ குலத்துக்கே சூடாமணி ).
அவன், அந்தக் கண்ணன், நமக்கு க்ஷேமத்தை அளிக்கட்டும்.
( அவன் ஏழு மணிகளாக, ஆழ்வாரால் போற்றப்படுகிறான் )

——————–

ஸத்ருச்சேதைக மந்த்ரம் ஸகலமுபநிஷத் —வாக்ய–ஸம்பூஜ்ய –மந்த்ரம்
ஸம்ஸாரோத்தார– மந்த்ரம் ஸமுபசித தமஸ் –ஸங்க –நிர்யாண –மந்த்ரம் |
ஸர்வைஸ்வர்யைக —மந்த்ரம் வ்யஸந –புஜக –ஸந்தஷ்ட–ஸந்த்ராண –மந்த்ரம்
ஜிஹ்வே!ஸ்ரீ-க்ருஷ்ண -மந்த்ரம் –ஜபஜப ஸததம் ஜந்ம –ஸாபல்ய –மந்த்ரம்–23-

வியாதிகள் தீர, மணி, மந்த்ரம், ஔஷதம் என்று மூன்று முறைகள் உள்ளதாக, ஆயுர்வேதம் சொல்கிறது.
ஆழ்வார், சம்சாரிகளின் பிறப்பு, மறுபடியும் இறப்பு, திரும்பவும் பிறப்பு என்பதான பிணி தீர , இந்த மூன்றையும் சொல்கிறார் .
இதற்கு முந்தைய ஸ்லோகத்தில் , மணி என்பதாகச் சொன்னார். இந்த ஸ்லோகத்தில், மந்த்ரம் என்பதைச் சொல்கிறார்.

ஹே…ஜிஹ்வே —ஸததம் ஜபஜப —-என்கிறார். அதாவது, ஏ , நாக்கே—-எப்போதும் ஜபித்துக்கொண்டிரு —என்கிறார்.
எந்த மந்த்ரத்தை—? ஸ்ரீ க்ருஷ்ண மந்த்ரம்—
இந்த மந்த்ர மஹிமையைச் சொல்கிறார்.
விரோதிகளை அழிக்கும் மந்த்ரம்
எல்லா உபநிஷத்துக்களும் போற்றுகிற மந்த்ரம்
சம்சார சமுத்ரத்தைத் தாண்ட வைக்கும் மந்த்ரம்
சேதனர்களிடம் மண்டியுள்ள அஞ்ஜானம் என்கிற இருட்டை அகற்றும் மந்த்ரம்
எல்லா ஐஸ்வர்த்தையும் அளிக்கும் மந்த்ரம்
துன்பமென்கிற சர்ப்பம் தீண்டியவரைக் காக்கும் மந்த்ரம்
ஜன்ம சாபல்ய மந்த்ரம்
இதுவே ஸ்ரீ க்ருஷ்ண மந்த்ரம்.–எப்போதும் ஜபிக்கச் சொல்கிறார்.

———————-

வ்யாமோஹ –ப்ரஸமௌஷதம் முநிமநோவ்ருத்தி–ப்ரவ்ருத்யௌஷதம்
தைத்யேந்த்ரார்த்திகரௌஷதம் த்ரிஜகதாம் ஸஞ்ஜீவநை கௌஷதம் |
பக்தாத்யந்தஹிதௌஷதம் பவபயப்ரத்வம்ஸநை கௌஷதம்
ஸ்ரேய : ப்ராப்திகரௌஷதம் பிப மந :ஸ்ரீ -க்ருஷ்ண –திவ்யௌஷதம் ||–24-

முந்தைய இரண்டு ஸ்லோகங்களில், மணி, மந்த்ரம் என்று இரண்டையும் சாதித்த ஆழ்வார்
இந்த ஸ்லோகத்தில் ,ஔஷthaம் என்பதாகச் சொல்கிறார்
மனஸ்ஸுக்குச் சொல்கிறார் ;—
உலக மயக்கங்களைத் தெளிவிக்கும் ஔஷதம்
ரிஷிகளின் மனஸ் சை பகவானிடம் திருப்பும் ஔஷதம்
அரக்கர்களுக்குக் கஷ்டத்தைக் கொடுக்கும் ஔஷதம்
மூவுலக மக்களும் பிழைப்பதற்கான ஔஷதம்
பக்தர்களுக்கு மிக அனுகூலமான ஔஷதம்
சம்சார பயத்தை அழிக்கும் சிறந்த ஔஷதம்
எல்லாவிதமான நன்மைகளையும் கொடுக்கும் ஔஷதம்
இந்த ஔஷதம்— க்ருஷ்ண திவ்ய ஔஷதம்
பிப —பருகுவீர்களாக
க்ருஷ்ணன் என்கிற ஔஷதத்தைப் பருகுங்கள் ,இதுவே திவ்ய ஔஷதம் .என்கிறார்

————-

ஆம்நாயா ப்யஸநாந்யரண்யருதிதம் வேதவ்ரதான் யந்வஹம்
மேதஸ்சேதபலாநி பூர்த்தவிதயா ஸர்வே ஹூதம் பஸ்மநி |
தீர்த்தாநாம வகாஹநாநி ச கஜஸ்நாநம் விநா யத் பத
த்வந்த்வாம்போருஹ –ஸம்ஸ்ம்ருதீர்விஜயதே தேவஸ் ஸ நாராயண : ||–25-

பகவானின் திருவடிப் பெருமையைச் சொல்கிறார்.

பகவானின் திருவடிகளைத் த்யாநிக்காமல்,
வேத அத்யயனம்/ பாராயணம் செய்தல், காட்டில் புலம்புவதற்கு ஒப்பாகும்.
வைதீக விரதங்கள், உடல் கொழுப்பை அகற்றுமே அன்றி,வேறு பலனைக் கொடுக்காது.
குளம்./ கிணறு இவைகளை வெட்டுவது, நெருப்பே இல்லாத சாம்பலில், ஹோமம் செய்யப்பட்டதாகும்.
தீர்த்தங்களில் ஸ்நானம் செய்வது, யானைகள் குளிப்பது போலாகும்.
அதனால், ஸ : தேவா விஜயதே—அந்த பகவானுக்கே விஜயம்—வெற்றி

————-

ஸ்ரீமந் நாம ப்ரோச்ய நாராயணாக்யம்
கே ந ப்ராபுர் வாஞ்சிதம் பாபி நோபி |
ஹா ந : பூர்வம் வாக் ப்ரவ்ருத்தா ந தஸ்மின்
தேந ப்ராப்தம் கர்ப்பவாஸாதி துக்கம் ||–26

ஸ்ரீமந்நாராயணா என்கிற பகவன் நாமத்தைச் சொல்லிப் பாவியும்கூட ,அவர் விரும்பிய பலனை அடைந்திருக்கிறார்கள்.
ஹா—-முன் பிறவியிலேயே இதைச் சொல்லவேண்டுமென்றுத் தோன்றவில்லையே ?அதனால், கர்ப்ப வாஸம்
முதலான கஷ்ட துக்கங்கள் எல்லாம், ப்ராப்தம்—அடையப்பட்டது

———

மஜ்ஜந்மந : பலமிதம் மதுகைடபாரே
மத்ப்ரார்த்தநீய –மதநுக்ரஹ ஏஷ ஏவ |
த்வத் ப்ருத்ய –ப்ருத்ய –பரிசாரக–ப்ருத்ய –ப்ருத்ய
ப்ருத்யஸ்ய ப்ருத்ய இதிமாம் ஸ்மர லோகநாத ||-27-

மதுகைடபரை அழித்தவரே ! ஹே லோகநாதா ! அடியேன் உம்மை வேண்டி, தேவரீர் அனுக்ரஹிக்க வேண்டியது இதுவே !
உமது ,அடியார்க்கு, அடியாரின் அடியார்க்கு, அடியாரின் அடியார்க்கு, அடியாரின் அடியேன் என்று ,
மாம்—அடியேனை, ஸ்மர— நினைப்பீராக அதாவது , அடியாரின் வரிசையில், ஏழாவது நிலையில் உள்ள அடியானாக,
பகவானைத் திருவுள்ளம் பற்றச் சொல்கிறார்.

————-

நாதே ந புருஷோத்தமே த்ரிஜகதா மேகாதிபே சேதஸா
ஸேவ்யே ஸ்வஸ்ய பதஸ்ய தாதரி ஸுரே நாராயணே திஷ்டதி |
யம் கஞ்சித் புருஷாதமம் கதிபயக்ராமேஸமல் பார்த்ததம்
ஸேவாயை ம்ருகயாமஹே நரமஹோ மூகா வராகா வயம் ||–28-

மூவுலகங்களுக்கும் ஒரே தலைவன்; மனதால் ஸ்மரித்து அவனுக்கு அடிமையானாலேயே
தன் ஸ்தானத்தையே நமக்கு அளித்து விடுபவன்;
புருஷோத்தமன்; நாராயணன் என்னும் தேவன் நமக்கு நாதனாக இருக்கும்போது,
சில கிராமங்களுக்கு மட்டுமே தலைவன் ; சொற்பப் பணத்தைக் கொடுப்பவன்; தரக் குறைவான மனிதன் —இவனிடம்,
ஸேவாயை ம்ருகயாமஹே —-வேலை கொடுங்கள் என்று கெஞ்சி அலைகிறோமே —நாம், எவ்வளவு மூடர்கள் -அற்பர்கள்

———

மதந பரிஹர ஸ்திதிம் மதீயே
மனஸி முகுந்த–பதாரவிந்த —தாம்நி |
ஹர–நயந –க்ருஸா நுநா க்ருஸோஸி
ஸ்மரஸி ந சக்ர பராக்ரமம் முராரே ||–29-

மன்மதா! முகுந்தனின் திருவடிகள் என் மனத்தில் வசிக்கின்றன —நீ என் மனத்தில் இருங்காது நீங்கி விடு.
நீ, ஏற்கெனவே சிவபிரானின் நெற்றிக் கண்ணால் அழிந்திருக்கிறாய்;
முராரியின், சக்ராயுதத்தின் பராக்ரமத்தை நினைவு படுத்திக் கொள்ளவில்லையா ?

————

தத்த்வம் ப்ருவாணானி பரம் பரஸ்மாத்
மது க்ஷரந்தீவ ஸதாம் பலாநி |
ப்ராவர்த்தய ப்ராஞ்ஜலிரஸ்மி ஜிஹ்வே
நாமாநி நாராயண கோசராணி ||–30-

தன்னுடைய நாக்கைக் கை கூப்பி வணங்குகிறார்.
நாக்கே, உன்னை நமஸ்கரிக்கிறேன் . நாராயணனின் திருநாமங்களைச் சொல்லிக்கொண்டே இரு.
அந்தத் திருநாமங்கள் உயர்ந்தவைகளில் உயர்ந்ததான தத்வங்களைக் கூறுகின்றன.
தேனைப் பொழிகின்றன. நல்லவர்கள் விரும்புகின்ற பலன்களும் அவையே

——————-

இதம் ஸரீரம் பரிணாம பேஸலம்
பதத்ய வஸ்யம் ஸ்லத–ஸந்தி –ஜர்ஜரம் |
கிமௌஷதை: க்லிஸ்யஸி மூட துர்மதே
நிராமயம் க்ருஷ்ண –ரஸாயநம் பிப ||–31-

ஹே—மூடனே….இந்த சரீரம் ,வயதால் முதிர்ச்சி அடைந்து, இளைத்து, பூட்டுகள் தளர்ந்து, நிச்சயம் அழியப்போகிறது.
துர்மதே—-துர்புத்தியே ! இந்த சரீரத்தைக் காப்பாற்ற, பற்பல மருந்துகளை ஏன் சாப்பிடுகிறாய் ?
க்ருஷ்ண ரஸாயனம் பிப—-ஸ்ரீ கிருஷ்ணன் என்கிற திருநாமத்தை உச்சரிக்கின்ற மிக உயர்ந்த மருந்தைப் பானம் செய்

—————–

தாரா வாராகர வரஸுதா தே தநூஜோவிரிஞ்சி :
ஸ்தோதா வேதஸ்தவ ஸுர குணோ ப்ருத்ய வர்க்க : ப்ரஸாத :
முக்திர் மாயா ஜகத விகலம் தாவகீ தேவகீ தே
மாதா மித்ரம் வலரிபுஸுதஸ் –த்வய்யதேந்யந்த ஜாநே ||–32-

க்ருஷ்ணா….உன்னுடைய பத்னி, திருப்பாற்கடலில் உதித்த மஹாலக்ஷ்மி என்பதை அறிவேன்.
உனது தனயன், பிரம்மா என்பதை அறிவேன்
உன்னைத் துதிப்பது, வேதங்கள் என்பதை அறிவேன்
உனது வேலைக்காரர்கள், தேவர்கள் என்பதை அறிவேன்
உனது மாயை உலகம் என்பதை அறிவேன்
உனது தாயார் ,தேவகி என்று அறிவேன்
உனது சிநேகிதன் இந்திரனின் புத்ரனான அர்ஜுனன் என்பதை அறிவேன்
அத: அந்யத் ந ஜாநே —இவற்றைக்காட்டிலும் வேறு ஒன்றும் உன்னைப் பற்றி அறியேன்

—————–

க்ருஷ்ணோ ரக்ஷது நோ ஜகத்ரய குரு : க்ருஷ்ணம் நமஸ்யாம்யஹம்
க்ருஷ்ணேநாம ரஸத்ரவோ விநிஹதா:க்ருஷ்ணாய துப்யம் நம : |
க்ருஷ்ணாதேவ ஸமுத்திதம் ஜகதிதம் க்ருஷ்ணஸ்ய தாஸோஸ்ம்யஹம்
க்ருஷ்ணே திஷ்டதி ஸர்வமேததகிலம் ஹே க்ருஷ்ண ரக்ஷஸ்வ மாம் ||–33-

ஜகத்ரய குரு :க்ருஷ்ண :ந : ரக்ஷது —உலகத்துக்கெல்லாம் ஆசார்யனான ஸ்ரீ கிருஷ்ணன் நம்மை ரக்ஷிப்பானாக
அஹம் க்ருஷ்ணம் நமஸ்யாமி —-அடியேன் ஸ்ரீ கிருஷ்ணனை நமஸ்கரிக்கிறேன்
கிருஷ்ணனால் தேவர்களின் விரோதிகள் அழிக்கப்பட்டனர்;
க்ருஷ்ணாய துப்யம் நம:—-க்ருஷ்ணனான உனக்கு நமஸ்காரம்
இந்த உலகமெல்லாம், ஸ்ரீ க்ருஷ்ணனிடமிருந்து தோன்றியது;
அஹம் க்ருஷ்ணஸ்ய தாஸ :—அடியேன் க்ருஷ்ண தாஸன்.
எல்லாமே க்ருஷ்ணனிடத்தில் நிலை பெற்று இருக்கிறது.ஹே, கிருஷ்ண ! மாம் ரக்ஷஸ்வ —ஹே, க்ருஷ்ணா ,
அடியேனைக் காப்பாற்று

————–

தத்த்வம் ப்ரஸீத பகவந் ! குரு மய்ய நாதே
விஷ்ணோ ! க்ருபாம் பரம காருணிக : கில த்வம் |
ஸம்ஸார —ஸாகர –நிமக்ந –மநந்த தீநம்
உத்தர்த்துமர்ஹஸி ஹரே !புருஷோத்தமோஸி ||–34-

ஹே, பகவானான விஷ்ணுவே !அநந்த ஹரே —-முடிவே இல்லாத ஹரியே நீ, புருஷர்களில் சிறந்தவன் புருஷோத்தமன்.
பரம காருணிகன் –கருணைக்கடல் . அடியேன் பிறவிக் கடலில் மூழ்கியவன்; தீனன் ;
அடியேனைக் கரை ஏற்றத் தகுந்தவன்;அப்படிப்பட்ட நீ, அடியேனுக்கு அருள் புரிவாயாக

————–

நமாமி நாராயண பாத பங்கஜம்
கரோமி நாராயண –பூஜநம் ஸதா |
வதாமி நாராயண –நாம நிர்மலம்
ஸ்மராமி நாராயண –தத்வ மவ்யயம் ||–35-

எப்போதும், அடியேன் ஸ்ரீ நாராயணனின் திருவடித்தாமரைகளையே வணங்குகிறேன் .
ஸ்ரீமந்நாராயணனைப் பூஜிக்கிறேன் நாராயண நாமத்தைச் சொல்கிறேன் .
அழிவே இல்லாத, நாராயணன் என்னும் தத்வப் பொருளையே ஸ்மரிக்கிறேன்

———-

ஸ்ரீநாத நாராயண வாஸுதேவ
ஸ்ரீக்ருஷ்ண பக்த ப்ரிய சக்ரபாணே |
ஸ்ரீ பத்மநாபாச்யுத கைடபாரே
ஸ்ரீ ராம பத்மாக்ஷ ஹரே முராரே ||–36-

லக்ஷ்மிபதியே , நாராயணனே , வாஸுதேவனே , க்ருஷ்ணா , பக்தப்ரியா , சக்ரபாணியே , பத்மநாபனே ,
அச்யுதனே ,கைடபனை அழித்தவனே ( ஸ்ரீ ஹயக்ரீவா), ஸ்ரீராமா , தாமரைக் கண்ணனே , ஹரியே ,முராரியே-

————-

அநந்த வைகுண்ட முகுந்த க்ருஷ்ண
கோவிந்த தாமோதர மாதவேதி |
வக்தும் ஸமர்த்தோபி ந வக்தி கஸ்சித்
அஹோ ஜநாநாம் வ்யஸநாபி முக்யம் ||–37-

அநந்தா , வைகுந்தநாதா , முகுந்தா, க்ருஷ்ணா , கோவிந்தா, தாமோதரா , மாதவா,—–
இப்படியெல்லாம், சொல்வதற்கு ஸமர்த்தோபி—சாமர்த்யம் இருந்தும், ஜனங்கள் ,
உலக விஷயங்களில் ஊன்றி இருக்கிறார்களே—-என்ன ஆச்சர்யம் !

————-

த்யாயந்தி யே விஷ்ணுமநந்தமவ்யயம்
ஹ்ருத்பத்ம —மத்யே ஸததம் வ்யவஸ்திதம் |
ஸமாஹிதாநாம் ஸததாபயப்ரதம்
தே யாந்தி ஸித்திம் பரமாஞ்ச வைஷ்ணவீம் ||–38-

பகவான் ஸ்ரீவிஷ்ணு முடிவே இல்லாதவர்; ஹ்ருதயத் தாமரையில் எப்போதும் நிலையாக வீற்றிருப்பவர்;
ஐம்புலன்களையும் அடக்கியவருக்கு, எப்போதும் அபயம் அளிப்பவர்; அப்படிப்பட்ட
ஸ்ரீ மஹாவிஷ்ணுவை, த்யானம் செய்பவர்கள் மிக உயர்ந்ததும் ,சாச்வதமுமான ,
வைஷ்ணவீம் ஸித்திம் —உயர்ந்த லோகமான ஸ்ரீ வைகுந்தத்தை அடைவார்கள்.

———–

க்ஷீரஸாகர —தரங்க –ஸீகரா ஸார
தாரகித —சாரு –மூர்த்யே |
போகீபோக —ஸயநீய –ஸாயிநே
மாதவாய –மதுவித்விஷே நம : ||–39-

திருப்பாற்கடலில் ஆதிசேஷனின் திருமேனியில் பள்ளிகொண்டு பாற்கடலின் அலைத்துளிகள் , நக்ஷத்ரங்கள் போலப்
பட்டுத் திருமேனியை அலங்கரிக்கிற ஸ்ரீமந்நாராயணனும்,
மது என்னும் அரக்கரை அழித்தவரும் , ஸ்ரீ மஹாலக்ஷ்மியின் நாதனுமான( மாதவன்) ஸ்ரீமந் நாராயணனுக்கு நமஸ்காரம்

—————

யஸ்ய ப்ரியௌ ஸ்ருதிதரௌ கவிலோக வீரௌ
மித்ரே த்விஜந்மவர -பாராஸவா –வபூதாம் |
தேநாம்புஜாக்ஷ –சரணாம்புஜ —ஷட்பதேந
ராஜ்ஞா க்ருதா க்ருதிரியம் குலஸேகரேன ||–40-

தாமரைக் கண்ணனின் திருவடித் தாமரைகளில் வண்டு போன்ற ஸ்ரீ குலசேகர மன்னருக்கு, ப்ரியமானவர்களும்,
கேள்வி ஞானம் உள்ளவர்களும் கவிகளில் சிறந்தவர்களும் வீரர்களும் –
அந்தண -மிஸ்ர வர்ணத்தில் இரு நண்பர்களாக இருந்தார்களோ ,அந்தக் குலசேகர மன்னரால்,
இயம் க்ருதி : க்ருதா —-இந்த ஸ்தோத்ரம் செய்யப்பட்டது.

———

கும்பே புனர்வஸு பவம் கேரளே கோள பட்டணே
கௌஸ்துபாம்ஸம் ஸம்தராதீசம் குலசேகரமாஸ்ரயே

—————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ குலசேகராழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ பெருமாள் திருமொழி அருளிச் செயலில் – பல ஸ்ருதிகள் தொகுப்பு –

April 4, 2019

கொடை குலசேகரன் சொல் செய்த நடை விளங்கு தமிழ் மாலை பத்தும் வல்லார் நலம் திகழ் நாரணன் அடி கீழ் நண்னுவாரே–1-11-

கொடை மாறாதே கொடுக்கும் பெருமாள் அருளிச் செய்த –
உள்ளில் அர்த்தத்தில் இழிய வேண்டாதே -பதங்கள் சேர்ந்த சேர்த்திகள் பார்க்க வேண்டாதே -இது தானே ஆகர்ஷகமாய்
இருக்கிற தமிழ்த் தொடை பத்தும் வல்லார்
சீலாதி குண பூரணராய் -சர்வ ஸ்வாமிகளாய்-வத்சலராய் இருக்கும் -ஸ்ரீ பெரிய பெருமாள் திருவடிகளின் கீழே
யனுபவிக்க ஆசைப் பட்டால் போலே கிட்டப் பெறுவார்கள்-

————————

சொல்லின் இன் தமிழ் மாலை வல்லவர் – தொண்டர் தொண்டர்கள் ஆவரே –2-10-
இனிய சப்தங்களை உடைய தமித் தொடை வல்லவர்கள்
இவர் ஆசைப் பட்டுப் போந்த பாகவத சேஷத்வ பர்யந்தம் ஆகிற புருஷார்த்தத்தை லபிப்பார்கள் –

———————————–

கொங்கர் கோன் குலசேகரன் சொன்ன சொல் இங்கு வல்லவர்க்கு ஏதம் ஓன்று இல்லையே–3-9-
மேலைத் திக்குக்கு நிர்வாஹகரான ஸ்ரீ குலசேகரப் பெருமாள் அருளிச் செய்தது
இவற்றில் வல்லவர்களுக்கு இங்கே ஏதம் ஓன்று இல்லையே
ஏதமாவது-அபாகவாத ஸ்பர்சமாதல்-
பகவத் பிராவண்யத்தில் குறையாதல் -வரும் துக்கம் போம் என்றும்
இஸ் சம்சாரத்தில் இருக்கும் நாளில்லை –
இத் துக்க பிரசங்கம் உள்ளத்து இவ்விடத்தே இறே –
இவை கற்றவர்களுக்கு இப்பிரசங்கம் உள்ள இத்தேசத்திலே இல்லை –

—————————————–

கொன் நவிலும் கூர் வேல் குலசேகரன் சொன்ன பன்னிய நூல் தமிழ் வல்லார் பாங்காய பத்தர்களே –4-11-

பிரதி பஷத்தை வெல்ல வல்லார் போலே யாய்த்து கவி பாடி இருக்கும் படியும்
பரம்பின லஷணோபேதமான தமிழ்த் தொடையை வல்லவர்கள்
இங்கேயே இருந்து -அது வர வேணும் இது வர வேணும் என்னாதே
அவனுக்கு இஷ்ட விநியோஹ அர்ஹம் ஆவார்கள்-

——————————

நல் தமிழ் பத்தும் வல்லார் நண்ணார் நரகமே–5-10-
கடல் பேர் ஆழமாய் இருக்கச் செய்தே -உள்ளுள்ள பதார்த்தங்கள் தோற்றும்படியாய் இருக்குமா போலே
அர்த்தம் மிக்கு இருக்குமாய்த்து இத் திருமொழி –
சம்சார சம்பந்தத்துக்கு அடியான பாபத்தை பண்ணினார்களே யாகிலும்
இஸ் சம்சாரத்திலே வந்து பிரவேசியார்கள் –

—————————————-

இன் இசையில் மேவி-சொல்லிய இன் தமிழ் மாலை பத்தும் சொல்ல வல்லார்க்கு இல்லை துன்பம் தானே–6-10-

பாட்யே கே யே ச மதுரம் –எண்ணும்படியான தமித் தொடை பத்தும்
இவருடைய பாவ பந்தம் இல்லை யாகிலும் இவை கற்றவர்களுக்கு பகவத் அனுபவத்துக்கு விச்சேத சங்கை பிறவாதே
நிரந்தர அனுபவமாகச் செல்லப் பெறுவார்கள்
சம்போக மத்யே பிறக்குமது இறே ஊடல் ஆவது
உன் தலை பத்து என் தலை பத்து என்று முடிய உடலாய்ச் செல்லும் அனுபவத்தை பெறுவார்கள் –

—————————————

மாலடி முடி மேல் கோலமாம் குலசேகரன் சொன்ன நல் இசை தமிழ் மாலை வல்லார்கள்-நண்ணுவார் ஒல்லை நாரணன் உலகே–7-11-

சர்வேஸ்வரன் திருவடிகளை தமக்கு முடி மேல் மாலையாக உடைய பெருமாள்
அழகிய இசையோடு கூடின தமிழ்த் தொடை வல்லவர்கள்
இங்கே இருந்து அவதாரத்தில் ஏக தேசத்தை அனுபவிக்க ஆசைப்பட்டு அது கிடையாதே இருந்து புலம்பாதே
உபய விபூதி நாயகனை பரம பதத்தில் நித்ய அனுபவம் பண்ணப் பெறுவார்கள் –

——————————————-

கொல் நவிலும் வேல் வலவன் குடை குலசேகரன் சொன்ன பன்னிய நூல் பத்தும் வல்லார் பாங்காய பத்தர்களே—8-11-

வேலைப் பிடித்த பிடியிலே எல்லாரும் -வேலின் கொடுமையே -என்று சொல்லா நின்ற வேலையும்
ஐஸ்வர்ய பிரகாசகமான வெண் கொற்றக் கொடையையும் உடைய ஸ்ரீ குலசேகரப் பெருமாள் அருளிச் செய்த
பரம்பி -லஷணத்தால் குறைவற்ற இப்பத்தும் வல்லார்கள்
திருத் தாயாராயும் அடியாராயும் அனுபவிக்கப் பெறுவார்கள் –

——————————————

குலசேகரன் சொல் செய்த-சீரார்ந்த தமிழ் மாலை இவை வல்லார் தீ நெறி கண் செல்லார் தாமே–9-11-

கூர்மை மிக்க வேலையையும் உடையராய் -ஸ்ரீ உறையூருக்கு நியாமகருமாய் –
ஐஸ்வர்ய பிரகாசகமுமான வெண் கொற்றக் குடையும் உடையருமான ஸ்ரீ குலசேகரப் பெருமாள் அருளிச் செய்த –
பாட்யேகேயேச மதுரம் -என்று இவை பூரணமான தமிழ் தொடை வல்லவர்கள் –
பகவத் விஷயத்தை காற்கடைக் கொண்டு விஷய பிரவணர் ஆகார்கள் –

—————————————–

நல் இயல் இன் தமிழ் மாலை பத்தும் வல்லார்நலம் திகழ் நாரணன் அடி கீழ் நண்னுவாரே–10-11-
அழகிய இயலை உடைய தமிழ் மாலை பத்தும் வல்லார் –
ஸ்ரீ பரம பதத்திலே விளங்கா நின்றுள்ள ஸ்ரீ சர்வேஸ்வரன் திருவடிகளைக் கிட்டப் பெறுவார் –

—————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம்.
ஸ்ரீ குலேசேகரப் பெருமாள் திரு வடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு வடிகளே சரணம்

ஸ்ரீ குலசேகர பெருமாள் சாத்தி அருளிய திவ்ய நாமங்கள் –

March 9, 2019

அம்மான்
ஆயர் ஏறு
ஆழி அம்மான்
ஆதி ஆயன்
அணி அரங்கன்
அரங்க நகர் துயின்றவன்
அரசன்
அத்தன்
அச்சன்
அரங்கன்
அல்லி மா மா மலர் மங்கை நாதன்
ஆலினிலைப் பாலகன்
அரு மருந்து
அயோத்திமனே
அயோத்தி நகருக்கு அதிபதி
தாமோதரன்
தடம் கண்ணினன்
தாசாரதி
ஈசன்
இலங்கை அழித்தவன்
எம்பெருமான்
எம்பிரான்
என் அமுது
எந்தை
கோவிந்தன்
ஜனகன் திரு மருகா
காகுஸ்தா
கடல் வண்ணர்
கடல் கிடந்தவன்
கண்ணன்
கண புரத்து என் கரு மணி
கரிய கோ
கரு மணி
கரும்பு அன்னவன்
கேசவன்
கோமளம்
கோமளப் பிள்ளாய்
குழகன்
மாலோன்
மாயோன்
மலர் கண்ணன்
மணி வண்ணன்
மைதிலி தன் மணவாளன்
நாரணன்
நெடியான்
நெடும் தோள் வேந்தே
நீர் நிறத்தன்
பேய் முலை உண்ட வாயன்
பெரும் சுடர்
ராமன்
ராகவன்
சிலை வலவா
ஸ்ரீ ராமா
செல்வன்
தாமரைக் கண்ணன்
தனி முதல்வன்
தயரதன் தன் மா மதலாய்
தென் அரங்கன்
திருக் கண்ணபுரத்து அரசு
திரு மார்பன்
திரு மங்கை கேள்வன்
உலகம் உண்டவன்
உன்மதன்
வன மாலை மார்வன்
வானவர் தம் பிரான்
வஸூ தேவன்
வீரன்
வேங்கடக் கோன்
வேங்கடவா
வித்துவக்கோட்டு அம்மன்

——————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமழிசைப் பிரான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

நீராட்டம்–அருளிச் செயல்களில் -பிரயோகங்கள்

July 29, 2018

திருப்பாவையில் – நீராட்டம்–6-பிரயோகங்கள்

மார்கழி —நீராடப் போதுவீர் போதுமினோ
ஓங்கி –நம் பாவைக்குச் சாற்றி நீராடினால்
ஆழி –நாங்களும் மார்கழி நீராட மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்
புள்ளின் வாய் –குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே
முப்பத்து மூவர் –இப்போதே எம்மை நீராட்டேலோ ரெம்பாவாய்
மாலே –மார்கழி நீராடுவான்-

நாச்சியார் திரு மொழி –

கோழி அழைப்பதன் முன்னம் குடைந்து நீராடுவான் போந்தோம் –3–1 –

பரக்க விழித்து எங்கும் நோக்கிப் பலர் குடைந்து ஆடும் சுனையில் அரக்க நில்லாக் கண்ண நீர்கள் அலமருகின்றவா பாராய் —3-4-

அஞ்ச யுரப்பாள் யசோதை ஆணாட விட்டிட்டு இருக்கும் -3-9-

குங்குமம் அப்பிக் குளிர் சாந்தம் மட்டித்து மங்கல வீதி வலம் செய்து மண நீர்
அங்கு அவனோடும் உடன் சென்று அங்கு ஆனை மேல் மஞ்சனமாட்டக் கனாக் கண்டேன் தோழீ நான் –6–10-

செங்கண் மால் தன்னுடைய வாய்த் தீர்த்தம் பாய்ந்தாட வல்லாய் வலம் புரியே – -7–6-

——————–
பெரியாழ்வார்

அஞ்சன வண்ணனோடு ஆடலாட யுறுதியேல்-மஞ்சில் மறையாதே மா மதீ மகிழ்ந்து ஓடி வா – 1–4–2-

ஆடுக செங்கீரை ஆடுக ஆடுகவே -1–5 –

நீராட்டு பதிகம் -2-

பேடை மயில் சாயல் பிணை மணாளா நீராட்டமைத்து வைத்தேன் —3-3-3-

அரும் தவ முனிவர் அவபிரதம் அங்கு குடைந்தாட
கலப்பைகள் கொழிக்கும் கங்கையின் கரைமேல் கண்டம் என்னும் கடிநகரே –4-7-6-

பொங்கு ஒலி கங்கைக் கறை மலி கண்டத்து உரை புருடோத்தமன் அடி மேல்
வெம் கலி நலியா வில்லி புத்தூர்க் கோன் விட்டு சித்தன் விருப்புற்று தங்கி அவன் பால் செய் தமிழ் மாலை
தங்கிய நாவுடையார்க்கு கங்கையில் திருமால் கழலிணைக் கீழே குளித்து இருந்த கணக்காமே –4-7-11-

—————————–

பெருமாள் திருமொழி

ஆடிப்பாடி அரங்காவோ என்று அழைக்கும் தொண்டர் அடிப்பொடி யாட நாம் பெறில் கங்கை நீர் குடைந்தாடும் வேட்கை என்னாவதே -2-2-

கங்கையிலும் தீர்த்தமலி கணபுரத்தென் கரு மணியே -8-3-

————————————————–

பெரிய திரு மொழி –

ஆயர் மட மக்களை பங்கய நீர் குடைந்தாடுகின்றார்கள் பின்னே சென்று ஒளித்திருந்து அங்கவர் பூந்துகில் வாரிக் கொண்டிட்டு -10-7–11-

——————————

திரு நெடும் தாண்டகம்

அணியரங்கம் ஆடுதுமோ தோழீ என்னும் என் சிறகின் கீழ் அடங்காப் பெண்ணைப் பெற்றேன் -12-

அணியரங்கம் ஆடுதுமோ தோழீ என்னும் பெற்றேன் வாய்ச சொல் இறையும் பேசக் கேளாள் -19-

———————————————————-

திருவாய்மொழி

நீர் புரை வண்ணன் சீர் சடகோபன் நேர்தல்யாயிரத்து ஓர்தல் இவையே -1-8-11-

வெள்ளமே புரை நின் புகழ் குடைந்து ஆடிப் பாடிக் களித்து உகந்து உகந்து உள்ள நோய்கள் எல்லாம் துரந்து உய்ந்து போந்திருந்தே-2-6-4 –

தாமரை நீள் வாசத் தடம் போல் வருவானே ஒருநாள் காண வாராயே -8-5-1-

அவன் கையதே எனதாருயிர் அன்றில் பேடைகாள் எவம் சொல்லி நீர் குடைந்தாடுதிர் புடை சூழவே -9-5-3-

பெயர்கள் ஆயிரமுடைய வல்லரக்கர் புக்கழுந்த தயரதன் பெற்ற மரகத மணித்தடத்தினையே -10-1-8-

—————————————————

பொருப்பிடையே நின்றும் புனல் குளித்தும் ஐந்து நெருப்பிடையே நிற்கவும் நீர் வேண்டா –மூன்றாம் திருவந்தாதி -76-

மால் தான் புகுந்த மடநெஞ்சம் மற்றதுவும் பேறாகக் கொள்வேனோ பேதைகாள்
நீராடி தான் காண மாட்டாத தாரகல சேவடியை யான் காண வல்லேற்கிது –நான்முகன் -27-

சூட்டு நன்மாலைகள் தூயனவேந்தி விண்ணோர்கள் நன்னீர் ஆட்டி அந்தூபம் தாரா நிற்கவே –திருவிருத்தம் –21 —

அழைத்துப் புலம்பி முலை மேல் நின்றும் ஆறுகளாய் மழைகே கண்ணநீர் திருமால் கொடியான் என்று வார்கின்றதே -52-

ஓ ஓ உலகின் இயல்வே ஈன்றோள் இருக்க மணை நீராட்டி –திருவாசிரியம் -6-

———————————————-

பெருமாள் வீர கல்யாண குணத்தில் ஆழ்ந்தார் திருவடி –பாவோ நான்யத்ர கச்சதி வீர –
செஞ்சொல் கவிகாள் உயிர் காத்து ஆள் செய்மின் -நம்மாழ்வார் -ஸுலப்ய ஸுசீல்ய குணங்களில் ஆழ்ந்தார் நம்மாழ்வார் –
குணவான் –என்றாலே சீல குணத்தை சொல்லுமே –

———————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ அருளிச் செயல்களில் –ஸ்ரீ நவநீத கிருஷ்ணன் அனுபவம்–

July 19, 2018

ஸ்ரீ கிருஷ்ண த்ருஷ்ணா தத்வமுடைய அனுபவம் –

1-மூவாறு மாதம் மோஹித்ததில்-முதலில் பத்துடை அடியவர்க்கு எளியவன் பிறர்களுக்கு அரிய வித்தகன் –
மலர்மகள் விரும்பும் நம் அரும் பெறல் அடிகள்
மத்துறு கடை வெண்ணெய் உரலிடை ஆப்புண்டு எத்திறம் உரலினோடு இணைந்து இருந்து ஏங்கிய எளிவே -1-3-1-

2–“வள வேழுலகின் முதலாய வானோர் இறையை அரு வினையேன்
கள வேழ் வெண்ணெய் தோடு வுண்ட கள்வா என்பன் ” ( 1.5.1)-என்பர் அடுத்து

3.–உண்டாய் உலகேழ் முன்னமே உமிழ்ந்து மாயையால் புக்கு –
உண்டாய் வெண்ணெய் சிறு மனுஷர் அவளை யாக்கை நிலையெய்தி
மண் தான் சோர்ந்து உண்டெழும் மனிசர்க்காகும் பீர் சிறிதும்
அண்டா வண்ணம் மண் கரைய நெய்யூண் மருந்தோ மாயோனே ?”-1-5-8-

4–“வைகலும் வெண்ணெய் கை கலந்து உண்டான்
பொய் கலவாது என் மெய் கலந்தானே -1-8-5-களவிலும் மறைக்காமல் -என் பொல்லா உடம்பிலும் கலந்தானே

5–உயிரினால் குறை இல்லா உலகேழ் தன்னுள் ஒடுக்கி தயிர் வெண்ணெய் யுண்டானை -4-8-11-
தனக்கு அபிமானமான வெண்ணெய் உண்பதுக்குத் தடை வரக்கூடாதே என்று உலகினை விழுங்கினானாம்

6–சூட்டு நன் மாலைகள் தூயன வேந்தி விண்ணோர்கள் நன் நீராட்டி – தூபம் தரா நிற்கவே
அங்கு ஒரு மாயையினால் ஈட்டிய வெண்ணெய் தோடு வுண்ணப் போந்து இமிலேற்றுவன் கூன்
கோட்டிடை யாடின கூத்து அடலாயர் தம் கொம்பினுக்கே -(திருவிருத்தம் 21)–
திருட வந்தது நித்ய முக்தர்களுக்கும் அறியாமல் அன்றோ –

————————————————–

ஸ்ரீ பெரியாழ்வார் – -யசோதை பாவனையில் -அனுபவம் –

வைத்த நெய்யும் கைந்த பாலும் வடி தயிரும் நறு வெண்ணையும்
இத்தனையும் பெற்றறியேன் எம்பிரான் ! நீ பிறந்த பின்னே
எத்தனையும் செய்யப் பெற்றாய் ஏதும் செய்யேன் கதம் படாதே
முத்து அனைய முறுவல் செய்து மூக்குறிஞ்சி முலை யுணாயே -2.2.2)

8–பூணித் தொழுவினில் புக்குப் புழுதி அளைந்த பொன் மேனி
காணப் பெரிதும் உகப்பன் ஆகிலும் கண்டார் பழிப்பர்
நாண் எத்தனையும் இலாதாய் நப்பின்னை காணில் சிரிக்கும்
மாணிக்கமே என் மணியே மஞ்சனமாட நீ வாராய் — 2.4.9-

அவனால் மறுக்க ஒண்ணாத இந்த அம்மான் பொடி கொண்டு அன்றோ அவனை நீராடப் பண்ணினாள் –

9–உருக வாய்த்த குடத்தோடு வெண்ணெய் உறிஞ்சி
உடைத்திட்டுப் போந்து நின்றான்—-
வருக என்று உன் மகன் தன்னைக் கூவாய்
வாழ வொட்டான் மது சூதனனே -( 2.9.3)-

—————————————–

ஸ்ரீ குலசேகர ஆழ்வார் அனுபவம்

10–முழுதும் வெண்ணெய் அளைந்து தொட்டு உண்ணும் ,
முகிழ் இளம் சிறுத் தாமரைக் கையும்
எழில் கொள் தாம்பு கொண்டு அடிப்பதற்கு எள்கு நிலையும்
வெண் தயிர் தோய்ந்த செவ்வாயும் அழுகையும் அஞ்சி நோக்கும்
அணி கொள் செஞ்சிறு வாய் நெளிப்பதுவும்
தொழுகையும் இவை கண்டா யசோதை தொல்லை இன்பத்து இறுதி கண்டாளே–7-7-

—————————————-

ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் அனுபவம் –

11–கண்ணி நுண் சிறுத் தாம்பினால் கட்டுண்ணப் பண்ணிய பெரு மாயன் என் அப்பனில் —
நம்மாழ்வாரை கட்டுண்ணப் பண்ணிய விருத்தாந்தம் என்று அன்றோ இத்தை அனுபவிக்கிறார் –

—————————————-

ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் அனுபவம் –

12–காசையாடை மூடியோடிக் காதல் செய்தானவனூர்
நாசமாக நம்பவல்ல நம் பெருமான்
வேயின் அன்ன தோள் மடவார் “வெண்ணெய் உண்டான் இவன் ” என்று
ஏச நின்ற எம்பெருமான் எவ்வுள்
கிடந்தானே -(பெரிய திருமொழி 2.2.1)

13–“உரி யார் வெண்ணெய் உண்டு உரலோடும் கட்டுண்டு ” (பெரிய திருமொழி 6.5.4)

14-வண்டு முரலும் கூந்தல் ஆய்ச்சி தயிர் வெண்ணெய் நாணாது உண்டான் (6.10.3)

15–பூண் கோதை ஆய்ச்சி கடை வெண்ணெய் புக்குண்ணா
அங்கு அவள் ஆர்த்துப் புடைக்கப் புதையுண்டு
ஏங்கி இருந்து சிணுங்கி விளையாடும்
ஓங்கோத வண்ணனே ! சப்பாணி
ஒளி மணி வண்ணனே ! சப்பாணி (10.5.1)

16–உறிமேல் தடா நிறைந்த வெள்ளி மலை இருந்தால் ஒத்த வெண்ணையை
வாரி விழுங்கி விட்டு கள்வன் உறங்குகிறான் வந்து காண்மின்கள் ” (ib 10.7.3)

17–“சீரார் தயிர் கடைந்து வெண்ணெய் திரண்டதனை
வேரார் நுதல் மடவாள் வேர் ஓர் கலத்திட்டு
நாரார் உறி ஏற்றி நன்கு அமைய வைத்தனை
போரார் வேல் கண் மடவாள் போந்தனையும் பொய் உறக்கம்
ஓராதவன் போல் உறங்கி அறிவுற்று
தாரார் தடம் தோள்கள் உள்ளளவும் கை நீட்டி
ஆராத வெண்ணெய் விழுங்கி
அருகில் இருந்த மோரார் குடம் உருட்டி முன் கிடந்த ஸ்தானத்தே
ஓராதவன் போல் கிடந்தானைக் கண்டு அவளும்
வாராத் தான் வைத்தது காணாள் – வயிறு அடித்து இங்கு
ஆரார் புகுதுவார் ஐயர் இவர் அல்லால் ?
“நீர் தாம் இது செய்தீர் என்று ” ஓர் நெடும் கயிற்றால்
ஊரார்கள் எல்லாரும் காண உரலோடே
தீரா வெகுளியாளாய்ச் சிக்கென வாரத்தடிப்ப …”-சிறிய திருமடல் -30-37-

18. “மின்னிடை ஆய்ச்சியர் தம் சேரிக் களவின் கண்
துன்னு பாடல் திறந்து புக்கு – தயிர் வெண்ணெய்
தன் வயிறார விழுங்க கொழும் கயல் கண்
மன்னு மடவோர்கள் பற்றியோர் வான் கயிற்றால்
பின்னும் உரலோடு கட்டுண்ட பெற்றிமையும் –பெரிய திருமடல் -137-139-

—————————————

ஸ்ரீ பொய்கை ஆழ்வார் அனுபவம்-

19-நான்ற முலைத் தலை நஞ்சுண்டு உறி வெண்ணெய் தோன்ற யுண்டான்
வென்றி சூழ் களிற்றை யூன்றி
பொருதுவுடைவு கண்டானும் புள்ளின் வாய் கீண்டானும்
மருதிடை போய் மண்ணளந்த மால் -18-

20-அறியும் உலகெல்லாம் யானையும் அல்லேன்
பொறி கொள் சிறை யவுணமூர்ந்தாய் -வெறி கமழும்
காம்பேய் மென் தோளி கடை வெண்ணெய்
யுண்டாயை தாமே கொண்டார்த்த தழும்பு -22-

21-விரலோடு வாய் தோய்ந்த வெண்ணெய் கண்டு ஆய்ச்சி
உரலோடு பிணைத்த நான்று – குரல்
ஓவாது ஏங்கி நினைந்து அயலார் காண இருந்திலையே
ஓங்கோத வண்ணா ! உரை ” — 24

22-வானாகித் தீயாய் மறி கடலாய் மாருதமாய்
தேனாகிப் பாலாம் திருமாலே –ஆனாய்ச்சி
வெண்ணெய் விழுங்க நிறையுமே முன்னொரு நாள்
மண்ணை யுமிழ்ந்த வயிறு-92-

————————————————

ஸ்ரீ பேய் ஆழ்வார் அனுபவம் –

23-“மண்ணுண்டும் பேய்ச்சி முலை உண்டும் ஆற்றாதாய்
வெண்ணெய் விழுங்க வெகுண்டு , ஆய்ச்சி – கண்ணிக்
கயிற்றினால் கட்டத் தான் கட்டுண்டு இருந்தான்
வயிற்றினோடாற்றா மகன் ” (மூன்றாம் திருவந்தாதி 91)

—————————————————-

ஸ்ரீ திருப்பாண் ஆழ்வார் அனுபவம் –

24-வெண்ணெய் உண்ட வாயனை , என் உள்ளம் கவர்ந்தானை —
என் முடினைக் கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாவே —
அரங்கனே வெண்ணெய் உண்ட வாயன் -ஆழ்வார் திரு உள்ளத்தையும் இத்தால் தானே கவர்ந்து உண்டு அருளினான் –

—————————————————

வெண்ணெய் -ஆத்ம வர்க்கம் –அத்வேஷம் ஒன்றே பற்றாசாக விழுங்கிக் கைக் கொண்டு அருளுகிறார் –
ஸ்ரீ ஜனக மஹாராஜர் கும்பன் போலே விவாக சுகம் ஒன்றும் இன்றியே
ஸ்ரீ பெரியாழ்வார் திருமகள் போலே வளர்க்க ஸ்ரீ செங்கண்மால் தான் கொண்டு போனான் அன்றோ

———————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

பெருமாள் திருமொழி -10–ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் –

November 8, 2015

பிரவேசம் –

அநாதி காலம் இழந்த இழவை-ஸ்ரீ தேவகி தேவகியார் பெற்று வைத்து ஸ்ரீ கிருஷ்ணனுடைய பால சேஷ்டிதங்களை
யனுபவிக்கப் பெறாதே இழந்தவள் பாசுரத்தாலே பேசினார் -ஆல நீள் கரும்பில் –
மன்னு புகழில்-ஸ்ரீ கௌசலையையார் பெற்ற பேற்றை அனுபவித்தார் –
பால்ய அவஸ்தையிலே எல்லாம் அனுபவித்து ப்ராப்த யௌவனம் ஆனவாறே அனுபவிக்கப் பெறாதே இழந்த
ஸ்ரீ சக்கரவர்த்தியோபாதி தமக்கு ப்ராப்தி உண்டாகையாலே அவன் பாசுரத்தாலே தம் இழவைப் பேசினார் -வன் தாளில் –
இத் திருமொழி யிலே-கீழ்ப் பிறந்த இழவுகள் எல்லாம் தீர –
ஸ்ரீ சக்கரவர்த்தி திரு மகன் நித்ய வாஸம் பண்ணுகிற
ஸ்ரீ திருச் சித்ரகூடமாகிற திருப்பதியிலே திரு வவதாரம் தொடங்கி-அந்த திருவவதார வ்ருத்தாந்தத்தை
ஸ்ரீ வால்மீகி பகவான் பேசி அனுபவித்தால் போலே தன்னுடைய ஜ்ஞான வைச்யத்தாலே
சம காலத்தில் போலே அனுபவிக்கிறார் –

—————-

அவதாரிகை –

முதல் பாட்டு -தேவர்கள் எம்மாரும் க்ருத்தார்த்தராம் படி வந்து திருவவதாரம் பண்ணின படி சொல்கிறது –

அம் கண் நெடு மதில் புடை சூழ் அயோத்தி என்னும்
அணி நகரத்து உலகு அனைத்தும் விளக்கும் சோதி
வெம் கதிரோன் குலத்துக்கோர் விளக்காய் தோன்றி
விண் முழுதும் உய்ய கொண்ட வீரன் தன்னை
செம் கண் நெடும் கரு முகிலை ராமன் தன்னை
தில்லை நகர் திரு சித்திர கூடம் தன்னுள்
எங்கள் தனி முதல்வனை எம்பெருமான் தன்னை
என்று கொலோ? கண் குளிர காணும் நாளே— 10-1-

பதவுரை

அம் கண்–அழகிய இடத்தை யுடையதும்
நெடு மதிள்–உயர்ந்த மதிள்களினால்
புடை சூழ்–நாற்புறமும் சூழப்பட்டதும்
அயோத்தி என்னும்–அயோத்யா என்று ப்ரஸித்தமுமான
அணி நகரத்து–அழகிய நகரத்திலே
உலகு அனைத்தும்–ஸகல லோகங்களையும்
விளக்கும் சோதி–விளங்கச் செய்கிற தனது ஒளியின் அம்சத்தாலே
வெம் கதிரோன் குலத்துக்கு–ஸூர்ய வம்சத்துக்கு (விளக்க முண்டாம்படி)
ஓர் விளக்கு ஆய் தோன்றி–ஒப்பற்தொரு விளக்கு போல (அதில்) வந்து அவதரித்து
விண் முழுதும்–தேவர்களெல்லாரையும்
உயக் கொண்ட–துன்பந்தீர்ந்து வாழச்செய்த
வீரன் தன்னை–மஹாவீரனும்
செம் கண்–சிவந்த திருக்கண்களையுடைய
நெடு கரு முகிலை–பெரிய காளமேகம் போன்ற வடிவ முடையவனும்
இராமன் தன்னை–ஸ்ரீராமனென்னும் திருநாமமுடையவனும்
தில்லை நகர் திரு சித்ர கூடம் தன்னுள்–தில்லை நகரத்திலுள்ள திருச்சித்திர கூடத்தில் (எழுந்தருளியிருக்கிற)
எங்கள் தனி முதல்வனை–எமக்கு ஒப்பற்ற காரணமாகிறவனும்
எம் பெருமான் தன்னை–எமக்குத் தலைவனுமான பரமனை
கண் குளிர காணும் நாள்–கண்கள் குளிரும்படி ஸேவிக்கும் நாள்
என்று கொல் ஓ–எந்நாளோ!

அம் கண் நெடு மதில் புடை சூழ் அயோத்தி என்னும்
போக்ய போக உபகரண போக ஸ்தானங்களை உடைத்தாய்
ஆகாச அவகாசம் எல்லாம் தானேயாம்படி நிமிர்ந்த மதிளாலே சூழப் பட்ட ஸ்ரீ அயோத்யை-
அபராஜிதை என்று சொல்லுகிற ஸ்ரீ பரமபதம் போலே சத்ருக்களுக்கு கணிசிக்க ஒண்ணாத ஊர்
என்னும் –
ஸ்ரீ பரம பதம் போல் சிலர் அறிந்து சிலர் அறியாதாய் இருக்கை யன்றிக்கே
சர்வ லோக பிரசித்தமாய் இருக்கை –

அணி நகரத்து உலகு அனைத்தும் விளக்கும் சோதி
அலங்காரங்களால் குறைவற்ற ஊர் -என்னுதல்-
சர்வ லோகங்களையும் தன் தேஜஸ்ஸாலே -நாராயண பரஞ்சோதி -என்கிறபடியே பரஞ்ஜோதிஸ்ஸாய் உள்ளது

வெம் கதிரோன் குலத்துக்கோர் விளக்காய் தோன்றி
ஜகத்தில் அந்தகாரம் எல்லாம் நீக்கக் கடவ ஆதித்யன் வம்சத்திலே -அவனைப் போலே
இரவு கலவாத அத்விதீயமான தேஜஸ்ஸாய் வந்து உதித்து –

விண் முழுதும் உய்யக் கொண்ட வீரன் தன்னை
தன் வீர்ய குணத்தாலே தேவ ஜாதியடைய உஜ்ஜீவிப்பித்தவனை

செம் கண் நெடும் கரு முகிலை –
தேவ ஜாதி யன்றிக்கே ஜகத்தை அடைய ரஷிப்பதாக-கடலிலே மணலே சேஷமாக பருகின காளமேகத்தினுடைய வடிவையும்
ஸ்ரீ சர்வேஸ்வரத்வ லஷணமான புண்டரீகாஷத்வங்களையும் உடையவன்

ராமன் தன்னை-
வடிவு அழகாலும் கண் அழகாலும் அபிராமத்தாலும் அனுகூல பிரதிகூல விபாகம் இன்றியே தோற்ப்பிக்குமவனை –
கீழில் -வீரன் -என்கிறதும் -இங்கும் அன்வயிக்கக் கடவது -சத்யேதியாதிவத் –

தில்லை நகர் திரு சித்திர கூடம் தன்னுள்
அவதாரத்தில் சமகாலத்தில் அனுபவிக்கப் பெறாத இழவு தீர பிற்பட்ட காலத்தில் உள்ளாருக்கும்
உதவலாம் படி சந்நிஹிதனானவனை

எங்கள் தனி முதல்வனை எம்பெருமான் தன்னை
அக்காலத்தில் அனுபவிக்கப் பெறாத எங்களை உஜ்ஜீவிப்பைக்கு ஒப்பில்லாத காரண பூதனானவனை –
வகுத்த சேஷியானவனை

என்று கொலோ? கண் குளிர காணும் நாளே—
இந்த ராஜ்ய துரந்தரையிலே அகப்பட்டு இருக்கிற நான் அன்றோ -அவனைக் காணப் பெறாதே விடாய்த்த கண்களானவை கண்டு
விடாய் தீர்ந்து கண் படைத்த பிரயோஜனம் பெறலாவது என்றோ என்கிறார் –
என்று கொலோ என்று கால தத்வத்துக்கு ஒரு அவதி பெற்றானாகில்-இன்று கண்டதோடு ஒக்கும் கிடீர் –

—————————————————————————-

அவதாரிகை –

இரண்டாம் பாட்டு —
ராஷச வதத்துக்கு எல்லாம் அடியாகவும் -ரிஷியுடைய அபிமதம் தலைக் கட்டுகைக்கும்
தாடகா தாடகேயரை நிரசித்த படி சொல்லுகிறது —

வந்து எதிர்ந்த தாடகை தன் உரத்தை கீறி
வரு குருதி பொழி தர வன் கணை ஒன்றேவி
மந்திரம் கொள் மறை முனிவன் வேள்வி காத்து
வல் அரக்கர் உயிர் உண்ட மைந்தன் காண்மின்
செந்தளிர் வாய் மலர் நகை சேர் செழும் தண் சோலை
தில்லை நகர் திரு சித்ர கூடம் தன்னுள்
அந்தணர்கள் ஒரு மூவாயிரவர் ஏத்த
அணி மணி யாசனத்து இருந்த அம்மான் தானே– 10-2–

பதவுரை

வந்து எதிர்ந்த தாடகை தன் உரத்தை கீறி–செருக்கிவந்து எதிரிட்ட தாடகையினுடைய மார்பைப் பிளந்து
வரு குருதி பொழிதர–ரத்தம் வெளிவந்து சொரியம் படி
வல் கணை ஒன்று ஏவி–வலிய ஒப்பற்றதோர் அம்பைச் செலுத்தி
மந்திரம் கொள் மறை முனிவன் வேள்வி காத்து–எல்லா மந்திரங்களையும் தம்மிடத்திலே கொண்ட
வேதங்களின் வழியே விச்வாமித்ர மஹாமுநி செய்த யாகத்தைப் பாதுகாத்து
வல் அரக்கர்–(அந்த யாகத்துக்கு இடையூறு செய்த ஸுபாஹூ முதலிய) வலிய ராக்ஷஸர்களுடைய
உயிர் கண்ட–உயிரைக் கொள்ளை கொண்ட
மைந்தன்–மிடுக்கை யுடையவன் (யாரென்னில்)
செம் தளிர்வாய் மலர்–சிவந்த தளிர்களின் நடுவே மலர்ந்த புஷ்பங்களை யுடையதும்
நகை சேர்–(காண்பவர்) மகிழும்படியான அழகு பொருந்தினதும்
செழு–செழுமையை யுடையதுமான
தண்–குளிர்ந்த
சோலை–சோலைகளை யுடைய
தில்லை நகர் திருச்சித்ர கூடம் தன்னுள்;
அந்தணர்கள் ஒரு மூவாயிரவர் ஏத்த–ப்ரர்மணர் மூவராயிரம் பேர் (திரண்டு துதிக்க)
அணி மணி ஆசனத்து இருந்த–அழகிய ரத்நஸிம்ஹாஸநத்திலே வீற்றிருந்த
அம்மான் தானே–ஸர்வேச்வரனே யாவன்;
காண்மின்–அறியுங்கள்.

வந்து எதிர்ந்த தாடகை
தான் மிகைத்து வந்து மேலிட்ட தாடகையை -நக்ர்த்திக்கு-சந்நிவேசத்துக்கு – ஒப்பில்லாதவள் –
தன்னிகர் ஒன்றில்லாத தாடகை இறே –

தன் உரத்தை கீறி-
ஸ்ரீ பெருமாள் பக்கல் பொல்லாங்கு நினைத்த நெஞ்சை -மலை போலே பிளந்து

வரு குருதி பொழி தர வன் கணை ஒன்றேவி
செம்பாட்டுத் தரையிலே-செம்மண் தரையிலே- மலை யருவி விழுந்தால் போலே ருதிரம் வந்து கொழிக்க –
வலிக்கு ஒப்பில்லாத திருச் சரத்தை நடத்தி

மந்திரம் கொள் மறை முனிவன் வேள்வி காத்து
ரிஷி தனக்கே தனக்கு என்னாதபடி நிர்ப்பரனாய்த் தன்னுடைய அனுஷ்டானங்கள் எல்லாம் அடைவே அனுஷ்டித்து
யாகத்தைத் தலைக் கட்டும்படி பண்ணி

வல் அரக்கர் உயிர் உண்ட மைந்தன் காண்மின்
யஜ்ஞ் விக்னரரான மாரீச ஸூபாஹூகளைக் முடித்த பிள்ளைத் தனத்தை உடையவனை
மாரீசன் பட்டானோ என்னில் -பின்னை இருந்த இருப்பு ம்ருத ப்ராயன் என்று கருத்து

செந்தளிர் வாய் மலர் நகை சேர் செழும் தண் சோலை-தில்லை நகர் திரு சித்ர கூடம் தன்னுள்
சிவந்த தளிர்கள் நடுவே விகசியா நின்றுள்ள புஷ்பங்களை உடைத்தாய் -தர்ச நீயமான ஸ்ரமஹரமான
சோலையாலே அலங்க்ருதமான ஊரிலே

அந்தணர்கள் ஒரு மூவாயிரவர் ஏத்த
அநந்ய பிரயோஜனரான பிராமணர் மூவாயிரம் பேர் -திரண்டு மங்களா சாசனம் பண்ண

அணி மணி யாசனத்து இருந்த அம்மான் தானே–
கோப்புடைய சீரிய சிங்காசனம் என்னும்படியே மஹார்கங்களான ரத்னங்களை யுடைத்தான-சிம்ஹாசனத்திலே
தன் மேன்மை தோற்ற வீற்று இருந்த ஸ்ரீ சர்வேஸ்வரன் கிடீர் -என்கிறார் –

————————————————————————

அவதாரிகை –

மூன்றாம் பாட்டு –
பிராட்டியோட்டை கலவிக்கு விரோதியைப் போக்கின படி சொல்லுகிறது

செவ்வரி நல் கரு நெடும் கண் சீதைக்காகி
சின விடையோன் சிலை இருத்து மழு வாள் ஏந்தி
செவ்வரி நல் சிலை வாங்கி வென்றி கொண்டு
வேல் வேந்தர் பகை தடிந்த வீரன் தன்னை
தெவ்வர் அஞ்சு நெடும் புரிசை வுயர்ந்த பாங்கர்த்
தில்லை நகர் திரு சித்ர கூடம் தன்னுள்
எவ்வரு வெஞ்சிலை தடக் கை ராமன் தன்னை
இறைஞ்சுவார் இணை அடியே இறைஞ்சினேனே—-10-3-

பதவுரை

செவ்வரி நல் கரு நெடு கண்–(உத்தம லக்ஷ்ணமான) சிவந்த ரேகைகள் படர்ந்த அழகிய கருமையான நீண்ட கண்களை யுடைய
சீதைக்கு ஆக–வநிதையை மணம் புரிதற் பொருட்டு
சினம் விடையோன்–கோபத்தை யுடைய ரிஷபத்தை வாஹநமாக வுடையனான சிவபிரானுடைய
சிலை இறுத்து–வில்லை முறித்து (பின்பு மிதிலா புரியினின்று மீளும் வழியில்)
மழுவாள் ஏந்தி–கோடாலியாகிய ஆயுதத்தை ஏந்தியவனான பரசுராமனுடைய
வெவ் வரி நல் சிலை–பயங்கரமான கட்டமைந்த சிறந்த வில்லை
வாங்கி– கையிற்கொண்டு (வளைத்து)
வென்றி கொண்டு–(அவனை) வென்று
வேல் வேந்தர் பகை தடித்த–(தான் அவதரித்த ஜாதியிற்பிறந்த) வேற்படையை யுடைய க்ஷத்ரியர்களுக்குப் பகையைத் தீர்த்த
வீரன் தன்னை–மஹா வீரனான
தெவ்வர்–பகைவர்கள்
அஞ்சு–(கண்டமாத்திரத்திலே, கடக்க வொண்ணா தென்று) அஞ்சும் படியான
நெடு புரிசை–உயர்ந்த மதிளையும்
உயர்ந்த பாங்கர்–ஓங்கிய (அட்டாலை யென்னும்) மதிற்பக்கத் திடத்தையுமுடைய
தில்லை நகர் திருச்சித்ர கூடம் தன்னுள்
(எழுந்தருளியிருக்கிற)
எவ்வரு வெம் சிலை தடகை இராமன் தன்னை–(வேறொருவரால்) அடக்கியாளுதற்கு அரியதும் (பகைவர்க்குப்)
பயங்கரமுமான வில்லை ஏந்திய பெரிய கையையுடைய இராமபிரானை
இறைஞ்சுவார்–வணங்குகிற அடியார்களுடைய
இணை அடியே–இரண்டு திருவடிகளையே
இறைஞ்சினேன்–வணங்கினேன்.

செவ்வரி நல் கரு நெடும் கண் சீதைக்காகி-சின விடையோன் சிலை இருத்து மழு வாள் ஏந்தி
அஸி தேஷணா -என்கிறபடியே -கண் அழகிலே தோற்று சினத்தை உடைய ரிஷபத்தை
தனக்கு வாஹநமான ருத்ரனுடைய வில்லை
ஒருவரால் கிட்ட ஒண்ணாதே வில்லை அநாயாசேன முறித்து அச் செயலிலே தோற்ற
ஸ்ரீ பிராட்டியை திருமணம் புணர்ந்து
எழுந்து அருளா நிற்க வழியிலே வந்து தோற்றின -தன் க்ரைர்யத்துக்குத் தக்க மழுவாகிற ஆயுதத்தையும் உடைய
ஸ்ரீ பரசுராம ஆழ்வானுடைய-

செவ்வரி நல் சிலை வாங்கி வென்றி கொண்டு வேல் வேந்தர் பகை தடிந்த வீரன் தன்னை
வெம்மையை உடைத்தாய் தர்ச நீயமான வில்லை வாங்கி இவனை வென்று தான் திருவவதாரம் பண்ணின
ஷத்ரிய குலத்துக்கு பகை தீர்ந்த வீரத்தை யுடையவனை

தெவ்வர் அஞ்சு நெடும் புரிசை வுயர்ந்த பாங்கர்த் தில்லை நகர் திரு சித்ர கூடம் தன்னுள்-எவ்வரு வெஞ்சிலை தடக் கை ராமன் தன்னை
ஷத்ருக்கள் அஞ்சும் படியான உயர்ந்த மதிளையும்-அட்டாலைகளையும் உடைத்தான ஊரிலே வர்த்திக்கிற
அவஷ்டப்யம் அஹத்தநு -என்று வேறு ஒரு ஒருத்தரால் அடக்கியாள ஒண்ணாதே காணவே பிரதிபஷம் முடியும்படியான
ஸ்ரீ சார்ங்கத்தை உடைய சக்கரவர்த்தி திருமகனை

இறைஞ்சுவார் இணை அடியே இறைஞ்சினேனே—-
ஸ்ரீ சக்கரவர்த்தி திருமகனுடைய வீரத்துக்கும் அழகுக்கும் தோற்று இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு தோற்று
அவர்கள் திருவடிகளிலே – இறைஞ்சினேனே—-
ஸ்ரீ பரத ஆழ்வானுக்குத் தோற்ற ஸ்ரீ சத்ருகன ஆழ்வான் போலே –

————————————————————-

தொத்தலர் பூம் சுரி குழல் கைகேசி சொல்லால்
தொன் நகரம் துறந்து துறை கங்கை தன்னை
பத்தி உடை குகன் கடத்த வனம் போய் புக்கு
பரதனுக்கு பாதுகமும் அரசும் ஈந்து
சித்ர கூடத்து இருந்தான் தன்னை இன்று
தில்லை நகர் திரு சித்ர கூடம் தன்னுள்
எத்தனையும் கண் குளிர காண பெற்ற
இரு நிலத்தார்க்கு இமையவர் நேர் ஒவ்வார் தாமே— 10-4–

பதவுரை

தொத்து அலர் பூ சுரி குழல்–கொத்துக் கொத்தாக மலர்ந்த புஷ்பங்களைச் சூடிய நுனி சுருண்ட கூந்தலை யுடைய
கைகேசி–கைகேயியினது
சொல்லால்–சொல்லின்படி
தொல் நகரம் துறந்து–தொன்று தொட்டுப் பரம்பரையாய் வருகிற ராஜ்யத்தைக் கை விட்டு
துறை கங்கை தன்னை–கங்கையின் துறையை
பத்தி உடை குகன் கடத்த–மஹா பக்தனான குஹப் பெருமான் புணை செலுத்தி யுதவ; (கடந்து)
வனம் போய் புக்கு–காட்டிற்போய்ச் சேர்ந்து
பரதனுக்கு–(அங்கு வந்த) பரதாழ்வானுக்கு
பாதுகமும் அரசும் ஈந்து–(தனது) மரவடியையும் ராஜ்யத்தையுங் கொடுத்து
சித்திர கூடத்து இருந்தான் தன்னை–சித்ரகூட பர்வதத்தி லெழுந்தருளி யிருந்த ஸ்ரீராமபிராணை
இன்று–இப்பொழுது (பிற்காலத்தில்)
தில்லைநகர் திருச்சித்ரகூடம் தன்னுள்
கண் குளிர காண பெற்ற–கண் குளிரும்படி ஸேவிக்கப் பெற்ற
இரு நிலத்தார்க்கு–பெரிய (சிறந்த) பூலோகத்திலுள்ளவர்களுக்கு
இமையவர்–நித்யஸூரிகளும்
எத்தனையும் நேர் ஒவ்வார்–சிறிதும் ஸமமாக மாட்டார்கள்.
(தாம் ஏ–ஈற்றசைகள், தோற்றமுமாம்)

தொத்தலர் பூம் சுரி குழல் கைகேசி சொல்லால்
கொத்துக் கொத்தாக அலருகிற பூக்களை உடைய -சுருண்டு அழகியதான குழலை உடைய கைகேயி –
இத்தால் தன் ஒப்பனையாலும் அழகாலும் ஸ்ரீ சக்கரவர்த்தியைத் தானிட்ட வழக்காம் படி
பண்ணிப் பிரமிக்க வல்லளான கைகேசி சொல்லால்-
ஸ்ரீ சக்கரவர்த்தி வாய் திறக்க மாட்டாதே இருக்க -பிள்ளாய் -உங்கள் ஐயர் உன்னைக் காடேறப் போகச் சொல்லா நின்றார் –
என்று கைகேயி சொன்ன வார்த்தையாலே –

தொன் நகரம் துறந்து துறை கங்கை தன்னை
குல க்ரமா கதமதாய் வருகிற படை வீட்டை சந்யசித்து -இவள் சொன்னாள் என்று போகைக்கு
பிராப்தி இல்லாமையைக் காட்டுகிறது

கங்கையின் துறை தன்னை பத்தி உடை குகன் கடத்த
தம்பிமாரைக் காட்டில் ஸ்நேஹத்தை உடையனாய் -பிரியில் தரியாத படி ஸ்ரீ பெருமாள் நியமிக்கையாலே நின்றவனுமாய்
ஸ்ரீ பரத ஆழ்வானையும் கூட அசிர்க்கும் படியான ஸ்ரீ குஹப் பெருமான் கங்கையைக் கடத்த

வனம் போய் புக்கு-
மனுஷ்ய சஞ்சாரம் இன்றியே துஷ்ட ம்ருஹங்களேயான காட்டிலே போய்ப் புக்கு –

பரதனுக்கு பாதுகமும் அரசும் ஈந்து சித்ர கூடத்து இருந்தான் தன்னை -இன்று தில்லை நகர் திரு சித்ர கூடம் தன்னுள்
ஸ்ரீ சித்ரகூடத்திலே எழுந்தி அருளி இருக்கிற இருப்பு தான் பெறாதே பிற்பட்டார்க்கும் இழவு தீர சர்வ காலத்திலும்
அனுபவிக்கைக்காக திருச் சித்ரகூடத்திலே வர்த்திக்கிறவனை

எத்தனையும் கண் குளிர காணப் பெற்ற
இவனைக் காணப் பெறாதே விடாய்த்த கண் குளிரும்படி –
காணப் பெற்ற-
கேட்டே போகை அன்றிக்கே கண்டு அனுபவிக்கப் பெற்ற

இரு நிலத்தார்க்கு இமையவர் நேர் ஒவ்வார் தாமே—
உகந்து அருளின தேசங்களை உடைய ஸ்லாக்கியமான பூமியில் உள்ளார்க்கு சதா பஸ்யந்தி-பண்ணி இருக்கையே-
ஸ்வ பாவமான நித்ய ஸூரிகளும் ஒவ்வார் –
இங்கு கண்ணுக்கு விஷயம் புறம்பே உண்டாய் இருக்கச் செய்தே
அத்தை த்யஜித்து காண்கிறவர்கள் -அவர்கள் அதுவே ஆசையாக இருக்கிறவர்கள் இறே –

———————————————————————————–

வலி வணக்கு வரை நெடும் தோள் விராதை கொன்று
வண் தமிழ் மா முனி கொடுத்த வரி வில் வாங்கி
கலை வணக்கு நோக்கரக்கி மூக்கை நீக்கி
கரனோடு தூடணன் தன் உயிர் ரை வாங்கி
சிலை வணக்கி மான் மறிய வெய்தான் தன்னை
தில்லை நகர் திரு சித்ர கூடம் தன்னுள்
தலை வணக்கி கை கூப்பி ஏத்த வல்லார்
திரிதலால் தவமுடைத்து தரணி தானே —10-5–

பதவுரை

வலி வணக்கு–(எதிரிகளுடைய) வலிமையைத் தோற்பிக்கின்ற
வரை நெடு தோள்–மலை போன்ற பெரிய தோள்களை யுடைய
விராதை–விராதனென்னும் இராக்ஷஸனை
கொன்று–கொன்று
வண் தமிழ் மா முனி கொடுத்த–சிறந்த தமிழ்ப பாஷைக்கு உரியவரான அகஸ்திய முனிவர் கொடுத்த
வரி வில் வாங்கி–கட்டமைந்த வில்லை பெற்று
கலை வணக்கு நோக்கு அரக்கி மூக்கை நீக்கி–மானின் பார்வையைத் தோற்பிக்கும் யடியான பார்வை யழகை
யுடையவளாய் வந்த சூர்ப்பணகை யென்னும் ராக்ஷஸியின் மூக்கை அறுத்து
கானோடு தூடணன் தன் உயிரை வாங்கி–கரன் தூஷணன் என்னும் அரக்கர்களின் உயிரை (அவர்களுடம்பினின்று) கவர்ந்து
மான்–மாரீசனாகிய மாயா ம்ருகமானது
மறிய–அழியும்படி
சிலை வணக்கி எய்தான் தன்னை–தனது வில்லை வளைத்து அம்புகளை எய்தவனான இராமபிரானை
தில்லைநகர் திருச்சித்ரகூடம் தன்னுள்
தலை வணங்கி கை கூப்பி ஏத்த வல்லார்–தலை வணங்கி அஞ்ஜலி பண்ணித் துதிக்கவல்ல அடியார்கள்
திரிதலால்–(தன்மீது) ஸஞ்சரிக்கப் பெறுதலால்
தரணி–பூமியானது
தவம் உடைத்து–பாக்கியமுடையது
(தான், ஏ -ஈற்றசைகள், தேற்றமுமாம்)

வலி வணக்கு வரை நெடும் தோள் விராதை கொன்று
எதிரிகள் வலியைத் தோற்பிக்கக் கடவதாய்-மலை போலே திண்ணியதான தோள்களையும் உடைய
விராதனைக் கொன்று

வண் தமிழ் மா முனி கொடுத்த வரி வில் வாங்கி
ஸ்ரீ அகஸ்த்யன் கொடுத்த தர்ச நீயமான வில்லை வாங்கி

கலை வணக்கு நோக்கரக்கி மூக்கை நீக்கி
கலை நோக்கைத் தோற்பிக்கும் படியான நோக்கை உடைய ஸூர்ப்பணகி யுடைய மூக்கை வாங்கி

கரனோடு தூடணன் தன் உயிரை வாங்கி
இவளுடைய ரூப வைரூப்யம் கண்டு பொறுக்க மாட்டாத வந்த கர தூஷணர்களை ப்ராணன்களை ஹரித்து

சிலை வணக்கி மான் மறிய வெய்தான் தன்னை
அது கேட்டுப் பொறாதே-ராவணனாலே ப்ரேரிதனாய் வந்த மாரீசனான மாயா ம்ருகத்ததை எய்து கொன்றவனை

தில்லை நகர் திரு சித்ர கூடம் தன்னுள்-தலை வணக்கி கை கூப்பி ஏத்த வல்லார்
அக்காலத்திலே காணப் பெறாத இழவு எல்லாம் தீரத் தலை யுண்டான பிரயோஜனம் பெற வணங்கி -கை யுண்டான
பிரயோஜனம் பெறத் தொழுது -வாயுண்டான பிரயோஜனம் பெற பெற ஏத்த வல்லார்

திரிதலால் தவமுடைத்து தரணி தானே –
இவர்களுடைய சஞ்சாரத்துக்கு விஷயமாகையாலே பூமியானது பாக்யத்தை உடையது –

——————————————————-

தன மருவு வைதேகி பிரியல் உற்று
தளர்வெய்தி சடாயுவை வைகுந்தத்து ஏற்றி
வன மருவு கவி அரசன் காதல் கொண்டு
வாலியை கொன்று இலங்கை நகர் அரக்கர் கோமான்
சினம் அடங்க மாருதியால் சுடுவித்தானை
தில்லை நகர் திரு சித்ர கூடம் தன்னுள்
இனிது அமர்ந்த வம்மானை ராமன் தன்னை
ஏத்துவார் இணை அடியே யேத்தினேனே –10-6–

பதவுரை

தனம் மருவு–(தான் விரும்புஞ்) செல்வமாகப் பொருந்திய
வைதேகி பிரியல் உற்று–பிராட்டி பிரியப் பெற்று
தளர்வு எய்தி–(அதனால்) வருத்தமடைந்து
சடாயுவை–ஜடாயுவென்னும் கழுகரசை
வைகுந்தத்து ஏற்றி–பரமபதத்திற் செலுத்தி
வனம் மருவு–(வாலிக்கு அஞ்சிக்) காட்டில் மறைந்து வசிக்கிற
கவி அரசன்–வாநர ராஜனான சுக்ரீவனுடன்
காதல் கொண்டு–ஸ்நேஹஞ் செய்து கொண்டு
வாலியை கொன்று==(அவனது விருப்பத்தின்படி அவன் தமையனான) வாலியை வதைத்து
இலங்கை நகர்–இலங்காபுரியை
அரக்கர் கோமான் சினம் அடங்க–(அதற்குத் தலைவனாகிய) ராக்ஷஸராஜானான ராவணனுடைய செருக்கு ஒழியும்படி
மாருதியால் சுடுவித்தானை–அனுமானைக் கொண்டு எரிப்பித்தவனும்
தில்லைநகர் திருச்சித்ரகூடம் தன்னுள்
இனிது அமர்ந்த–இனிமையாய் எழுந்தருளியிருக்கிற
அம்மானை–ஸர்வேச்வரனுமான
இராமன் தன்னை–இராமபிரானை
ஏத்துவார்–துதிக்கின்ற அடியார்களுடைய
இணை அடியே–உபய பாதத்தையே
எத்தினேன்–துதிக்குந் தன்மையேன் (யான்.)

தன மருவு வைதேகி பிரியல் உற்று தளர்வெய்தி சடாயுவை வைகுந்தத்து ஏற்றி
திரு முலைத் தடத்தின் அழகாலும் -ஆபிஜாத்யத்தாலும் -பிரியத் தகாத ஸ்ரீ பிராட்டி பிரிவாலே –
ஸ்ரீ பெருமாள் தம்மளவிலே நோவு பட்டு
ஸ்ரீ பிராட்டிக்காக ராவணனோடு யுத்தம் பண்ணி -பிராணனை விட்ட ஸ்ரீ பெரிய உடையாரை
ஸ்ரீ பரம பதத்து ஏறப் போக விட்டு –
தனமருவு வைதேகி -என்று
விஷ்ணோ ஸ்ரீ -என்கிறபடியே ஸ்ரீ பெருமாளுக்குத் தனமான ஸ்ரீ பிராட்டி என்றுமாம் –

வன மருவு கவி அரசன் காதல் கொண்டு வாலியை கொன்று
வாலிக்கு அஞ்சி காட்டிலே மறைந்து கிடக்கிற குரங்குகளுக்கு ராஜாவான ஸ்ரீ ஸூக்ரீவனை
சிநேக பூர்வகமாகக் கட்சி கொண்டு –அதற்காக அதிபல பராக்ரமான வாலியை நிரசித்து

இலங்கை நகர் அரக்கர் கோமான் சினம் அடங்க மாருதியால் சுடுவித்தானை
இலங்கைக்கு நிர்வாஹகன் என்றும் ராஷேச்வரன் என்றும் மோஹித்து இருக்கிறவனுடைய அபிமானமும் சீற்றமும் அடங்கும் படி
ஸ்ரீ திருவடி வாலிலே நெருப்பை இட்டு சுடுவித்தவனை

தில்லை நகர் திரு சித்ர கூடம் தன்னுள் இனிது அமர்ந்த வம்மானை ராமன் தன்னை
அக்காலத்தில் அனுபவிக்கப் பெற்றிலோம் என்னும் இழவு தீரே இங்கே நித்ய சந்நிஹிதனாக இருக்கிற
ஸ்ரீ சர்வேஸ்வரனான ஸ்ரீ சக்கரவர்த்தி திருமகனை

ஏத்துவார் இணை அடியே யேத்தினேனே –
அவனுடைய வடிவு அழகிலும் சௌலப்யத்திலும் ஈடுபட்டு ஏத்துமவர்கள் திருவடிகளிலே ஏத்தினேனே –

———————————————————————-

குரை கடலை அடல் அம்பால் மறுக வெய்து
குலை கட்டி மறு கரையை அதனால் ஏறி
எரி நெடு வேல் அரக்கரோடும் இலங்கை வேந்தன்
இன் உயிர் கொண்டவன் தமிபிக்கு அரசும் ஈந்து
திரு மகளோடு இனிது அமர்ந்த செல்வன் தன்னை
தில்லை நகர் திரு சித்ர கூடம் தன்னுள்
அரசு அமர்ந்தான் அடி சூடும் அரசை அல்லால்
அரசு ஆக எண்ணேன் மற்று அரசு தானே— 10-8-

பதவுரை

குரை கடலை–கோஷிக்கின்ற கடலை
அடல் அம்பால்–தீக்ஷ்ணமான அம்பைக் கொண்டு
மறுக எய்து–கலங்கும்படி எய்யத் தொடங்கி
குலை கட்டி–(அதில்) அணை கட்டி
அதனால்–அந்த அணை வழியாக
மறு கரையை ஏறி–(கடல் கடந்து) அக்கரை சேர்ந்து
எரி நெடு வேல் அரக்கரொடும்– (சத்துருக்களை) எரிக்கின்ற நீண்ட வேற்படையை யுடைய இராக்கதர்களும்
இலங்கை வேந்தன்–இலங்கைக்கு அரசனான இராவணனும் ஆகிய அனைவர்களுடைய
இன் உயிர் கொண்டு–இனிய உயிரைக் கவர்ந்து (கொன்று)
அவன் தம்பிக்கு–அவ்விராவணனது தம்பியான விபீஷணனுக்கு
அரசும் இந்து–ராஜ்யத்தைக் கொடுத்து
திருமகளோடு–லக்ஷ்மியின் அவதாரமான பிராட்டியுடனே
இனிது அமர்ந்த–இனிமையாகச் சேர்ந்த
செல்வன் தன்னை–எல்லா வகைச் செல்வங்களுமுடையவனும்
தில்லை நகர் திருச் சித்ரகூடம் தன்னுள்
அரசு அமர்ந்தான்–தனது மேன்மை தோன்ற எழுந்தருளி யிருப்பவனுமான
அடி சூடும்–இராமபிரானது திருவடிகளைத் தலைமேற் கொள்ளுதலாகிற
அரசை அல்லால்–அரசாட்சியைப் பெற விரும்புவேனே யன்றி
மற்று அரசு–அதற்கு மாறாக ஸ்வாதந்திரியம் பாராட்டுகிற அரசாட்சியை
அரசு ஆக எண்ணேன்–ஒரு பொருளாக மதிக்க மாட்டேன்.

குரை கடலை அடல் அம்பால் மறுக வெய்து
கோஷத்தை உடைத்தான கடலை -சத்ருக்கள் என்றால் எப்போதோ என்று மேல் விழக் கடவதான
அம்பை விட்டு மருகும்படியாக செய்து

குலை கட்டி மறு கரையை அதனால் ஏறி
அஞ்சின கடலானது என் மேலே தூர்த்துக் கொள்ளீர் என்ன அதன் மேலே மலைகளை இட்டுத்
தூரத்து வழி செய்து அந்தக் கரையிலே போய்

எரி நெடு வேல் அரக்கரோடும் இலங்கை வேந்தன்-இன் உயிர் கொண்டவன் தமிபிக்கு அரசும் ஈந்து
சத்ருக்களை எரிக்கக் கடவதாய் நெடிதான வேலை உடைய ராஷசரோடே-லங்காதிபதியான ராவணனை
அவன் உகந்த பிராணனை ஹரித்து -அவன் தம்பிக்கு ராஜ்யத்தையும் கொடுத்து

திரு மகளோடு இனிது அமர்ந்த செல்வன் தன்னை
ஸ்ரீ பிராட்டியோடு கூட பிரிந்த பிரிவு எல்லாம் மறக்கும் படி இனிது அமர்ந்து அருளிய
ஐஸ்வர்யம் உடையவன் தன்னை

தில்லை நகர் திரு சித்ர கூடம் தன்னுள் அரசு அமர்ந்தான் அடி சூடும் அரசை அல்லால் அரசு ஆக எண்ணேன் மற்று அரசு தானே—
ராஜ்ஜியம் பண்ணி இருக்கிறவன் திருவடிகளைக் கொடுக்கை யாகிற ராஜ்ஜியம் ஒழிய அதற்கு எதிர்த்தட்டாக
ஸ்வ தந்த்ர்யத்தைப் பார்க்கும் ராஜ்யத்தை ராஜ்யமாக வேண்டேன் –

————————————————————-

அம் பொன் நெடு மணி மாட அயோத்தி எய்தி
அரசு எய்தி அகத்தியன் வாய் தான் முன் கொன்றான்
தன் பெரும் தொல் கதை கேட்டு மிதிலை செல்வி
உலகு உய்யத் திரு வயிறு வாய்த்த மக்கள்
செம் பவள திறல் வாய் தன் சரிதை கேட்டான்
தில்லை நகர் சித்ர கூடம் தன்னுள்
எம்பெருமான் தான் சரிதை செவியால் கண்ணால்
பருகுவோம் இன் அமுதம் மதியோம் அன்றே— 10-8–

பதவுரை

அம் நெடு பொன் மணி மாடம்–அழகிய உயர்ந்த பொன்னையும் இரத்தினங்களையுங் கொண்டு
அமைக்கப்பட்ட உபரிகை வீடுகளையுடைய
அயோத்தி–அயோத்யா நகரத்துக்கு
எய்தி–மீண்டு வந்து
அரசு எய்தி–அரசாட்சியை அடைந்து
தான் முன் கொன்றான் தன்–தன்னால் முன்பு கொல்லப்பட்டவனான இராவணனுடைய
பெரு தொல் கதை–பெரிய பூர்வ வ்ருத்தாந்தங்களை யெல்லாம்
அகத்தியன் வாய் கேட்டு–அகஸ்திய மகாமுனிவன் வாயாற் சொல்லக் கேட்டு
மிதிலை செல்வி–மிதிலா நகரத்தில் தோன்றிய பிராட்டி
உலகு உய்ய–உலக முழுவதும் வாழும்படி
திரு வயிறு வாய்த்த–பெற்ற
மக்கள்–தன் பிள்ளைகளான குசலவர்களுடைய
செம் பவளம் திரள் வாய்–சிவந்த பவழத்துண்டு போன்ற வாயினால்
தன் சரிதை–தனது சரித்திரமான ஸ்ரீராமாயணத்தை
கேட்டான்–கேட்டருளினவனான
தில்லைநகர் திருச்சித்ரக்கூடம் தன்னுள்
(எழுந்தருளியிருக்கிற)
எம் பெருமான் தன்–எமது தலைவனுடைய
சரிதை–சரித்திரத்தை
செவியால் கண்ணால், பருகுவோம்–காதினாற்கேட்டு (அப்பெருமானைக்) கண்ணால் ஸேவிக்கப் பெறுவோம்யாம்
(அதுவேயன்றி)
இன் அமுதம்–இனிய தேவாம்ருதத்தையும்
மதியோம்–ஒரு பொருளாக நன்கு மதிக்க மாட்டோம்
அன்றே–அல்லவா! (ஈற்றசை, தோற்றமுமாம்)

அம்பொன் நெடு மணி மாட அயோத்தி எய்தி
திரு அபிஷேகத்துக்கு ஈடாக அலங்கரித்து -தர்ச நீயமாய் ஒக்கத்தை உடைத்தாய் நல்ல ரத்னங்களாலே சமைக்கப் பட்ட
மாடங்களை உடைய ஸ்ரீ திரு அயோத்யையிலே ஜகத்தை எல்லாம் உகக்கும் படி மீண்டு எழுந்து அருளிப் புகுந்து

அரசு எய்தி
ராஜ்யம் புநரவாப்தவான் -என்னும்படியாக ஜகத்தை எல்லாம் வாழும்படியாக சாம்ராஜ்யத்திலே அதிகரித்து

அகத்தியன் வாய் தான் முன் கொன்றான் தன் பெரும் தொல் கதை கேட்டு –
வேறு க்ர்த்யம்சம் இல்லாமையாலே பொது போக்காக தான் முன் கொன்ற ராவணனுடைய பூர்வ வ்ருத்தாந்தங்களை அடைய
ஸ்ரீ அகஸ்த்ய பகவான் விண்ணப்பம் செய்யக் கேட்டு

மிதிலை செல்வி உலகு உய்யத் திரு வயிறு வாய்த்த மக்கள் செம் பவள திறல் வாய் தன் சரிதை கேட்டான்
ஸ்ரீ ஜனக ராஜன் திரு மகள் ஜகம் அடைய உஜ்ஜீவிக்கும் படி பெற்ற ஸ்ரீ குசலவர்கள் பேச தம்முடைய வ்ருத்தாந்தமான
ஸ்ரீ இராமாயண கதையை கேட்டு அருளினவர் நித்ய வாஸம் பண்ணுகிற

தில்லை நகர் சித்ர கூடம் தன்னுள் எம்பெருமான் தான் சரிதை செவியால் கண்ணால் பருகுவோம் இன் அமுதம் மதியோம் அன்றே—
என்னுடைய நாதனுடைய வ்ருத்தாந்தத்தை ஸ்ரீ திருவடியைப் போலே சர்வ இந்த்ரியங்களாலும் அனுபவிக்கப் பெற்ற நாம்
தேவ ஜாதி அனுபவிக்கிற அமிர்தத்தை ஒன்றாக மதியோமே –

——————————————————————————-

செறி தவ சம்புகன் தன்னை சென்று கொன்று
செழு மறையோன் உயிர் மீட்டு தவத்தோன் ஈந்த
நிறை மணி பூண் அணியும் கொண்டு இலவணன் தன்னை
தம்பியால் வான் ஏற்றி முனிவன் வேண்ட
திறல் விளங்கும் இலகுமனை பிரிந்தான் தன்னை
தில்லை நகர் திரு சித்ர கூடம் தன்னுள்
உறைவானை மறவாத வுள்ளம் தன்னை
வுடையோம் மற்று உறு துயர் அடையோம் அன்றே —10-9–

பதவுரை

செறி தவம்–மிக்க தபஸ்ஸை யுடையனான
சம்புகன் தன்னை–(சூத்ரசாதியனான) சம்புகனை
சென்று, கொன்று–(அவனிருக்கு மிடந்தேடிச்) சென்று தலையறுத்து
செழுமறை யோன் உயிர் மீட்டு–சிறந்த ப்ராஹ்மண குமாரனுடைய உயிரை மீட்டுக் கொடுத்து
தவத்தோன் ஈந்த–அகஸ்திய மா முனிவன் கொடுத்த
நிறைமணி பூண் அணியும் கொண்டு–பெருவிலையுள்ள ரத்நஹாரமான ஆபரணத்தையும் சாத்தியருளி
இலவணன் தன்னை–லவணாஸுரனை
தம்பியால்–சத்ருக்நனைக் கொண்டு
வான் ஏற்றி–வீர ஸ்வர்க்கத்திற் குடியேற்று வித்து
முனிவன் வேண்ட–துர்வாஸமுனிவனது சாபத்தால்
திறல் விளங்கும் இலக்குமனை பிரிந்தான் தன்னை–பலபராக்கிரமம் விளங்கப் பெற்ற லக்ஷ்மணனை துறந்தவனும்
தில்லைநகர் திருச்சித்ரகூடம் தன்னுள்
உறைவானை–நித்யவாஸம் பண்ணுகிறவனுமான இராமபிரானை
மறவாத உள்ளம் தன்னை உடையோம்–மறவாமல் எப்பொழுதும் தியானிக்கிற மனத்தையுடைய நாம்
மற்று உறு துயரம் அடையோம்–இனி (எம்பெருமானை அநுபவிக்கப் பெற்றிலோ மென்று வருந்துன்பத்தை அடையமாட்டோம்)
(அன்று, எ – ஈற்றசை)

செறி தவ சம்புகன் தன்னை சென்று கொன்று
மிக்க தபஸ்சை உடையனாய் -ஷூத்ரனான ஜம்புகனைத் தலை யறுத்து

செழு மறையோன் உயிர் மீட்டு தவத்தோன் ஈந்த நிறை மணி பூண் அணியும் கொண்டு இலவணன் தன்னை தம்பியால் வான் ஏற்றி –
விலஷணனான பிராமணனுடைய புத்திரன் பிராணனை மீட்டு –
ஸ்ரீ அஹஸ்த்ய பகவான் கொடுத்த பெரு விலையனான ஹாரத்தையும் சாத்தி யருளி
ஸ்ரீ திரு வயோத்யையிலே புகுந்து லவணா ஸூரனை ஸ்ரீ சத்ருகன ஆழ்வானை விடுவித்து வீர ஸ்வர்க்கத்திலே குடியேற்றுவித்து

முனிவன் வேண்ட திறல் விளங்கும் இலகுமனை பிரிந்தான் தன்னை தில்லை நகர் திரு சித்ர கூடம் தன்னுள் உறைவானை –
ஸ்ரீ துர்வாசவினுடைய சாபத்தாலே -த்விதீயம் மேந்த்ராந்தமா நம் -என்கிறபடியே தம்முடைய
பிராண பூதரான ஸ்ரீ இளைய பெருமாளுக்கு விடை கொடுத்து
அப்படிப்பட்ட தன்னைப் பின்புள்ளார் காணப் பெறாத இழவு தீர ஸ்ரீ திருச் சித்ர கூடத்திலே நித்ய வாஸம் பண்ணுகிறவனை

மறவாத வுள்ளம் தன்னை வுடையோம் மற்று உறு துயர் அடையோம் அன்றே —
இப்படிப்பட்ட சௌலப்யத்தை அநவரத பாவனை பண்ணி இருக்கிற நமக்கு –
ஸ்ரீ எம்பெருமானை அனுபவிக்கப் பெற்றிலோம் என்கிற இழவு இனி இல்லை –

————————————————————————

அன்று சரா சரங்களை வைகுந்தத்து ஏற்றி
அடல் அரவ பகை ஏறி அசுரர் தம்மை
வென்று இலங்கு மணி நெடும் தோள் நான்கும் தோன்ற
விண் முழுதும் எதிர் வர தான் தாமமேவி
சென்று இனிது வீற்று இருந்த அம்மான் தன்னை
தில்லை நகர் சித்ர கூடம் தன்னுள்
என்றும் நின்றான் அவன் இவன் என்று ஏத்தி நாளும்
இறைஞ்சுமினோ எப் பொழுதும் தொண்டீர்! நீரே —10-10–

பதவுரை

அன்று–(தன்னடிச்சோதிக்கு எழுந்தருள்கிற) அந்நாளில்
சர அசரங்களை–(அயோத்யாபுரியிலுள்ள) ஜங்கமும் தாவரமுமான எல்லா வுயிர்களையும்
வைகுந்தத்து ஏற்றி–பரமபதத்துக்குப் போகச் செய்து
அடல் அரவம் பகை ஏறி–வலிமையை யுடைய பாம்புகளுக்குப் பகையான கருடன் மேல் ஏறிக் கொண்டு
அசுரர் தம்மை வென்று–அசுரர்களை ஜயித்து
இலங்கும் அணி நெடு தோள் நான்கும் தோன்ற–(அந்த ஜயலக்ஷ்மி) விளங்கப் பெற்ற அழகிய
நீண்ட (தனது) திருக்கைகள் நான்கும் விளங்க
விண் முழுதும்–பரமபதத்திலுள்ளாரெல்லாரும்
எதிர் வர–எதிர் கொண்டு உபசரிக்கும்படி
தன் தாமம் மேவி சென்று–தமது ஸ்தாநமான அப் பரம பதத்திலே போய்ப் புக்கு
இனிது வீற்றிருந்த-(தன் மேன்மை யெல்லாம் தோன்றும்படி) இனிமையாகத் (திவ்ய ஸிம்ஹாஸநத்தில்) எழுந்தருளியிருந்த
அம்மான் தன்னை தில்லை நகர் திரு சித்ரகூடம் தன்னுள் என்றும் நின்றான் அவன் இவன் என்று ஏத்தி–ஸர்வேச்வரனை
(அந்த இருப்பில் ஒன்றுங் குறையாமல் அவ்வாறே) தில்லைச் சித்ரக்கூடத்தில் எந்நாளும் (நமக்காக)
நித்யவாஸம் பண்ணுகிற அப்பெருமான் இவ்விராமபிரானே யென்றறிந்து துதித்து
தொண்டீர் நீர்–அவனுக்கு அடியவர்களான நீங்கள்
நாளும் எப்பொழுதும்–தினந்தோறும் எப்பொழுதும்
இறைஞ்சு மின்–வணங்கி உஜ்ஜீவியுங்கள்
(ஏ – இசைநிறை.)

அன்று சரா சரங்களை வைகுந்தத்து ஏற்றி
அபிவ்ர்ஷா பரிம்லா நா -என்று வ்யதிரேகத்திலே அவை பட்டது அறிந்து அருளுகையாலே –
நோசா சாக்தம் அயோத்யாயாம் ஸூ ஷூமம் அபித்ர்ச்யதே-திர்யக்யோநி கதாச்சான்யே சர்வே ராம அநு வ்ரதா-என்கிறபடியே
ஸ்ரீ இளைய பெருமாளோபாதி ஸ்ரீ பரம பதத்துக்கு போக விட்டு

அடல் அரவ பகை ஏறி அசுரர் தம்மை-வென்று இலங்கு மணி நெடும் தோள் நான்கும் தோன்ற
சர்ப்ப ஜாதிக்கு ஜன்ம சத்ருவான ஸ்ரீ பெரிய திருவடியை மேற்கொண்டு அசூர வர்க்கத்தை வென்று –
அந்த வீர ஸ்ரீ விளங்குகிற திருத் தோள்கள் நாலோடும் கூட -அங்குள்ளார் உகக்கும் படி எழுந்து அருளி

விண் முழுதும் எதிர் வர தான் தாமமேவி சென்று இனிது வீற்று இருந்த அம்மான் தன்னை
ஸ்ரீ பரம பதத்திலே போய்ப் புக்கு தன் மேன்மை எல்லாம் தோற்றும்படியான ஸ்ரீ ஈஸ்வரனை

தில்லை நகர் சித்ர கூடம் தன்னுள் என்றும் நின்றான் அவன் இவன் என்று ஏத்தி நாளும் இறைஞ்சுமினோ எப் பொழுதும் தொண்டீர்! நீரே —
அவ்விருப்பில் ஒன்றும் குறையாமே காலதத்வம் உள்ளதனையும் இங்கே நமக்காக நித்ய வாஸம் பண்ணுமவனை
அநந்ய பிரயோஜனரான நீங்கள் அவனை ஆஸ்ரயித்து க்ருத்தார்த்தர் ஆகுங்கோள் –

—————————————————————————————–

தில்லை நகர் திரு சித்ர கூடம் தன்னுள்
திறல் விளங்கு மாருதியோடு அமர்ந்தான் தன்னை
எல்லையில் சீர் தயரதன் தான் மகனாய் தோன்றிற்று
அது முதலா தன் உலகம் புக்கது
கொல் இயலும் படை தானை கொற்ற ஒள் வாள்
கோழியூர் கோன் குடை குலசேகரன் சொல் செய்த
நல் இயல் இன் தமிழ் மாலை பத்தும் வல்லார்
நலம் திகழ் நாரணன் அடி கீழ் நண்னுவாரே–10-11–

பதவுரை

தில்லைநகர் திரு சித்ரகூடம் தன்னுள்
திறல் விளங்கும்–பல பராக்கிரமம் விளங்கப் பெற்ற
மாருதியோடு–அனுமானுடனே
அமர்ந்தான் தன்னை–நித்யவாஸம் பண்ணுகிற எம் பெருமானைக் குறித்து
எல்லை இல்சீர் தயரதன் தன் மகன் ஆய் தோன்றிற்று அது முதல் ஆ தன் உலகம் புக்கது ஈறு ஆ–அழிவில்லாத
புகழையுடைய தசரதசக்ரவர்த்தியின் குமாரனாய் பிறந்தது முதல் பரமபதம் புக்கது இறுதியாக
(ஸ்ரீராமாயணத்தை முழுதையும் ஸங்க்ரஹமாக அமைத்து)
கொல் இயலும் படை தானை கொற்றம் ஒள்வாள் கோழியர் கோன் குடை குலசேகரன் சொல் செய்த–(பகைவர்களைக்) கொல்லுதல்
பொருந்திய ஆயுதங்களுடைய சேனையையும் வெற்றியையும் ஒளியையுமுடைய வாளாயுதத்தையுடைய வரும்
உறையூரிலுள்ளார்க்குத் தலைவரும் வெண் கொற்றக்குடையை யுடையவருமான குலசேகராழ்வார் அருளிச்செய்த
நல் இயல்–சிறந்த இயற்றமிழிலக் கணத்துக்கு இசைந்த
இன் தமிழ் மாலை பத்தும்–இனிய தமிழ்ப் பிரபந்த ரூபமான இப்பத்துப் பாசுரங்களையும்
வல்லார்–கற்று வல்லவர்கள்
நலம் திகழ–பரமபதத்தில் விளங்குகிற
நாரணன்–ஸ்ரீமந் நாராயணனுடைய
அடிகீழ் நண்ணுவார்–திருவடிகளிற் சேரப் பெறுவார்கள்.

நிகமத்தில் –
தில்லை நகர் திரு சித்ர கூடம் தன்னுள் திறல் விளங்கு மாருதியோடு அமர்ந்தான் தன்னை
பாவோ நான்யத்ர கச்சதி -என்று அங்குப் போகேன் என்ற ஸ்ரீ திருவடியை விட மாட்டாமே இங்கே வந்து
நித்ய வாஸம் பண்ணுகிறவனை

எல்லையில் சீர் தயரதன் தான் மகனாய் தோன்றிற்று அது முதலா தன் உலகம் புக்கது
பஹூ குணனான ஸ்ரீ சக்கரவர்த்திக்கு -பிதரம் ரோசயாமாச – என்று பிள்ளையாய் பிறந்தது தொடக்கமாக
ஸ்ரீ பரமபதம் புக்கது முடிவாக யுண்டான ஸ்ரீ இராமாயண கதையை

கொல் இயலும் படை தானை கொற்ற ஒள் வாள் கோழியூர் கோன் குடை குலசேகரன் சொல் செய்த
கொலையை முயலா நின்றுள்ள வேலையை யுடையராய் –
வெற்றியையும் அழகையும் உடைய வாளையும் உடைய
கோழியர்க்குக் கோன்-கோழி -ஸ்ரீ உறையூர் -சோழ ராஜாவானவன் –
வெண் கொற்றக் குடையை உடையரான ஸ்ரீ குலசேகரப் பெருமாள் அருளிச் செய்த

நல் இயல் இன் தமிழ் மாலை பத்தும் வல்லார் நலம் திகழ் நாரணன் அடி கீழ் நண்னுவாரே–
அழகிய இயலை உடைய தமிழ் மாலை பத்தும் வல்லார் –
ஸ்ரீ பரமபதத்திலே விளங்கா நின்றுள்ள ஸ்ரீ சர்வேஸ்வரன் திருவடிகளைக் கிட்டப் பெறுவார் –

————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய வாச்சான்  பிள்ளை  ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம்.
ஸ்ரீ குலேசேகரர் ஆழ்வார் ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள்  ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு வடிகளே சரணம்

பெருமாள் திருமொழி -9–ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் –

November 8, 2015

பிரவேசம் –

ஸ்ரீ கௌசலையார் பெற்ற பேற்றை அனுபவித்தார் கீழில் திரு மொழியில் –
பால்ய அவஸ்தை எல்லாம் அனுபவித்து பிராப்த யௌவனர் ஆனவாறே -அனுபவிக்கப் பெறாதே இழந்த
ஸ்ரீ சக்கரவர்த்தியோ பாதியும் தமக்கு பிராப்தி ஒத்து இருக்கையாலே அனுபவிக்கப் பெறாதே இழந்தேன் என்று
அவன் சொல்லுகிற பாசுரத்தாலே தம் இழவைப் பேசுகிறார் —

வன் தாள் இணை வணங்கி வள நகரம்
தொழுது ஏத்த மன்னனாவான்
நின்றாயை அரி அணை மேல் இருந்தாயை
நெடும் கானம் படர போகு
வென்றாள் எம்மி ராமாவோ!
உன்னை பயந்த கைகேசி தன் சொல் கேட்டு
நன்றாக நானிலத்தை ஆள்வித்தேன்
நன் மகனே! உன்னை நானே—- 9-1–

பதவுரை

எம் இராமாவோ–ஓ எமது இராமனே!
வளம் நகரம்–அழகிய அயோத்தி மாநகரத்துப் பிரஜைகள் அனைவரும்
வல் தாளின் இணை வணங்கி தொழுது ஏத்த–(சரணமடைந்தவர்களை எப்பொழுதும் விடாமற் பாதுகாக்கும்)
வலிமையையுடைய (உனது) இரண்டு திருவடிகளிலும் (விழுந்து) நமஸ்கரித்து (எழுந்து) கைகூப்பி நின்று துதிக்க
மன்னன் ஆவான் நின்றாயை–அரசனாகப் பட்டாபிஷேகஞ் செய்து கொள்ளுதற்கு ஸித்தனாய் நின்றவனும்
அரி அணை மேல் இருந்தாயை–சிங்காசனத்தின் மீது வீற்றிருக்க ஸித்தனாயிருந்தவனுமான உன்னை
நெடுங்கானம் படர போகு என்றாள்–பெரிய காட்டிற்கு செல்லுதற்கு (இந்நகர் விட்டு நீங்கிப்) போ என்று (கைகேயி) கூறினாள்
நல் மகனே–நல்ல குமாரனே!
நான்–நான்
உனை பயந்த கைகேசி தன் சொல் கேட்டு–உன்னைப் பெற்று வளர்த்த தாயான கைகேயியின் வார்த்தையைக் கேட்டு
நன்றாக உன்னை நானிலத்தை ஆள்வித்தேன்–நன்றாக! உன்னை நிலவுலகத்தை ஆளும்படி செய்தேன்

வன் தாள் இணை வணங்கி
தானும் ராஜ்ய பரப்பை எல்லாம் ஆண்டானாய் இருக்கச் செய்தே-அவ்வளவன்றியே –
வண் புகழ் நாரணன் திண் கழல்-என்னுமா போலே
ஆஸ்ரிதரை எல்லா அவஸ்தையிலும் விடேன் என்னும் திருவடிகளை வழி பட்டு

வள நகரம் தொழுது ஏத்த
திரு அபிஷேகத்துக்கு அலங்கரித்து இருக்கிற -ஸ்ரீ திரு நகரியிலே
அப்படி இருக்கிற ஸ்ரீ திரு நகரி தொழுது ஏத்த

மன்னனாவான் நின்றாயை –
திரு அபிஷேகத்துக்கு முன்புள்ள கர்த்தவ்யங்கள் எல்லாம் தலைக் கட்டி திரு அபிஷேகம் பண்ணுகைக்கு
திருக் காப்பு நாண் சாத்தி நிற்கிற யுன்னை

அரி அணை மேல் இருந்தாயை
சிம்ஹாசனத்திலே பதஸ்தனாய் இருந்தான் என்னும் படி தோற்றச் சமைந்து இருக்கிற யுன்னை

நெடும் கானம் படர போகு வென்றாள்
இப்படி ராஜாக்கள் அல்லாதாரும் புக மாட்டாத காட்டை -தேவ நேந வனம் கத்வா -என்னுமா போலே
இவ் ஊரில் நின்றும் புறப்பட்டு
வழியே போய்க் காட்டிலே புகுமது அன்றியே காட்டிலே போம்படியாய்-
நெடிய காட்டிலே இறே போகச் சொல்லிற்று

எம்மி ராமாவோ!
நினைக்கவும் -சொல்லவும் -காணவும் -தாபம் போம்படியான உம்மை இறே போகச் சொல்லிற்று

உன்னை பயந்த கைகேசி தன் சொல் கேட்டு
திரு அபிஷேக கல்யாண வார்த்தை -ஸ்ரீ கௌசல்யையாரிலும் காட்டில் தனக்கு நான் சென்று சொல்லி
ப்ரீதி காண வேணும் என்னும்படி பெற்ற தாயாய்ப் போந்த கைகேயி வார்த்தை கேட்டு

நன்றாக நானிலத்தை ஆள்வித்தேன்
வஞ்சன பரை என்று அறியாதே தாய் என்று இவளுக்கு வார்த்தை சொல்லப் புகுந்து –
அவள் வார்த்தையிலே அகப்பட்டு
பூமிப் பரப்பை எல்லாம் அழகிதாக உன்னை ஆள்வித்தேன்

நன் மகனே! உன்னை நானே—-
நான் இப்படி செய்த இடத்திலும் நீர் குணாதிகராம் படி நின்றீர் –
நான் நானாம் படி செய்தேன் –

—————————————————————————————

வெவ்வாயேன் வெவ்வுரை கேட்டு இரு நிலத்தை
வேண்டாதே விரைந்து ,வென்றி
மைவாய களிறு ஒழிந்து தேர் ஒழிந்து
மா ஒழிந்து வானமே மேவி
நெய் வாய வேல் நெடும் கண் நேர் இழையும்
இளம் கோவும் பின்பு போக
எவ்வாறு நடந்தனை? எம்மி ராமாவோ!
எம்பெருமான்! என் செய்கேனே ?– 9-2–

பதவுரை

எம் இராமாவோ!
வெவ் வாயேன் வெவ் உரை கேட்டு–கொடிய வாயை யுடையேனை என்னுடைய கடுஞ்சொற்களைக் கேட்டு
இரு நிலத்தை வேண்டாதே–பெரிய நிலவுலகத்து அரசாட்சியை விரும்பாமலே விட்டிட்டு
விரைந்து–சீக்கிரமாக
வென்றி மை வாய களிறு ஒழிந்து தேர் ஒழிந்து மா ஒழிந்து–வெற்றியை விளைப்பதான
மைம் மலை போன்ற வடிவத்தையுடைய யானையும் தேரும் குதிரையுமாகிய வாஹநங்களை யொழிய விட்டு
வனமே மேவி–காட்டையே சேர்ந்து
நெய் வாய வேல் நெடு கண் நேரிழையும்–நெய்ப்பூசிய நுனியையுடைய வேலாயுதம் போன்ற
நீண்ட கண்களையும் தகுதியான ஆபணரங்களை யுமுடையளான பிராட்டியும்
இளங்கோவும்–இளைய பெருமாளும்
பின்பு போக–உடன் தொடர்ந்து வர
எவ்வாறு நடந்தனை–எங்ஙனம் நடந்து சென்றாயோ!
எம் பெருமான்–எமது ஐயனே!
என் செய்கேன்–நான் என் செய்வேன்!

வெவ் வாயேன் வெவ் வுரை கேட்டு
அநலாஸ்யனான என்னுடைய -காடு ஏறப் போம் -ராஜ்யத்தைத் தவிரும் -என்ற
என் வார்த்தையைக் கேட்டு

இரு நிலத்தை வேண்டாதே –
உம்மைப் பிரியில் முடிவோம் -என்று வளைப்புக் கிடக்கிற நகர ஜனங்களை எல்லாம் ஒளித்து-
அவர்களைக் கை விட்டு

விரைந்து –
போகிறோம் -என்று விளம்பிப் போமாகில் -ராஜ்யத்தில் நசையாலே நின்றோம் என்று
கைகேயி நினைக்கும் -என்று விரைந்து

வென்றி மைவாய களிறு ஒழிந்து தேர் ஒழிந்து-மா ஒழிந்து –
வென்றியை விளைப்பதாய்-அஞ்சன கிரி போலே
பெரிய வடிவை உடைத்தாய் இருக்கிற ஆனை என்ன -தேர் என்ன -குதிரை என்ன -இவற்றை ஒழிந்து

வனமே மேவி
இவற்றை ஒழிந்தால் இந்த தேசத்துக்கு போலியான தேசத்திலே போய்ப் புகாதே வனமே மேவி

நெய் வாய வேல் நெடும் கண் நேர் இழையும் இளம் கோவும் பின்பு போக
நீர் போய்ப் புக்காலும் புகுகைக்கு தகாதவர்களை கூடக் கொண்டு

எவ்வாறு நடந்தனை? எம்மி ராமாவோ! எம்பெருமான்! என் செய்கேனே ?–
கால் நடை நடந்து அறியாத நீர் இவர்களையும் கூடக் கொண்டு பொல்லாத காட்டிலே போனீர் –
என்னாயனே நான் என் செய்கேன் –

———————————————————————————–

கொல் அணை வேல் வரி நெடும் கண் கௌசலை தன்
குலமதலாய்! குனி வில்லேந்தும்
மல்லணைந்த வரை தோளா! வல் வினையேன்
மனம் உருக்கும் வகையே கற்றாய்
மெல்லணை மேல் முன் துயின்றாய்
இன்று இனி போய் வியன் கான மரத்தின் நீழல்
கல்லணை மேல் கண் துயில கற்றனையோ?
காகுத்தா! கரிய கோவே! —–9-3–

பதவுரை

கொல் அணை–கொலைத் தொழில் பொருந்தின
வேல்–வேலாயுதம் போன்ற
வரி நெடுங்கண்–செவ்வரி பரந்த நீண்ட கண்களையுடைய
கௌசலை தன்–கௌஸல்யையினது
குலம்–குலத்தில் தோன்றிய
மதலாய்–குமாரனே!
குனி வில் ஏந்தும்–வளைந்த வில்லைத் தரித்த
மல் அணைந்த வரை தோளா–வலிமை பொருந்திய மலைகள் போன்ற தோள்களை யுடையவனே!
வல் வினையேன்–மஹா பாபியான என்னுடைய
மனம் உருக்கும் வகையே கற்றாய்–மனதை உருகச் செய்வதற்கே வல்லவனே!
காகுத்தா–ககுத்ஸ்தனென்னும் அரசனது குலத்தில் தோன்றியவனே!
கரிய கோவே–கருநிறமுடைய ஐயனே!
மெல் அணை மேல் முன் துயின்றாய்–மென்மையான பஞ்சனை மெத்தையின் மேல் முன்பெல்லாம் படுத்து உறங்கிப் பழகினவனான நீ
இனி இன்று போய்–இனிமேற் புதிதாக இன்றைக்குச் சென்று
வியன் கானம் மரத்தின் நீழல்–பெரிய காட்டிலுள்ள மரத்தின் நிழலிலே
கல் அணை மேல் கண் துயில கற்றனையோ–கருங்கற் பாறைகளையே படுக்கையாகக் கொண்டு அதன் மேற்படுத்துத் துயிலப் பழகின்றாயோ

கொல் அணை வேல் வரி நெடும் கண் கௌசலை தன் குலமதலாய்! –
கொலையிலே அணைந்த வேல் போலே புகரை உடைத்தாய் –
செவ்வரி கருவரியையும் உடைத்தாய் பரப்பையும் உடைத்தான கண்ணை யுடைய
ஸ்ரீ கௌசலையாருடைய உத்தாரகர் ஆனவனே –

குனி வில்லேந்தும் மல்லணைந்த வரை தோளா!
வீரர்கள் வில் ஒருக்கால் நாணி இறங்கிடாமையாலே வளைந்த படியே இருக்கும் இறே –
அந்த வில் தானும் மிகை என்னும் படி
மலை போலே பெரிய மிடுக்கை உடைய தோளையும் உடையவனே

வல் வினையேன் மனம் உருக்கும் வகையே கற்றாய்-
ஆயுத அழகாலும் தோள் அழகாலும் என் நெஞ்சை அழிக்கவே கற்றவனே

மெல்லணை மேல் முன் துயின்றாய்-
அழகிய படுக்கையிலே முற்காலம் எல்லாம் கண் வளர்ந்த நீர் –

இன்று இனி போய் –
பல மாளிகைகளிலே பல படுக்கைகளிலே கண் வளர்ந்த நீர் இன்றாக இனிப் போய்

வியன் கான மரத்தின் நீழல்-
காட்டில் வர்த்திப்பார் தாங்களும் வெருவும்படி-காட்டிலே -இலை இல்லாத மரத்தின் நிழலின் கீழே

கல்லணை மேல் கண் துயில கற்றனையோ?
பாறைகளை யணையாகக் கண் வளரும் படி கற்றீரோ

காகுத்தா! கரிய கோவே!-
இச் செயல்கள் உம்முடைய குடிப்பிறப்புக்கும் சேராது -உம்முடைய வடிவு அழகுக்கும் சேராது –

———————————————————————

வா போகு வா இன்னம் வந்து
ஒருகால் கண்டு போ மலராள் கூந்தல்
வேய் போலும் எழில் தோளி தன் பொருட்டா
விடையோன் தன் வில்லை செற்றாய்!
மா போகு நெடும் கானம் வல் வினையேன்
மனம் உருக்கும் மகனே! இன்று
நீ போக என் நெஞ்சம் இரு பிளவாய்ப்
போகாதே நிற்க்குமாறே! —9-4–

பதவுரை

வா–(சற்று இங்கே) வா
போகு–இனிச் செல்வாய்
வா–மறுபடியும் இங்கு வா
இன்னம் வந்து ஒருகால் கண்டு போ–(போம்போது) பின்னையும் ஒரு தரம் வந்து என்னைப் பார்த்து விட்டுப் போ
மலர் ஆள் கூந்தல்–பூக்களை எப்பொழுதும் தரிக்கிற மயிர் முடியை யுடையவளும்
வேய் போலும் எழில் தோளி தன் பொருட்டு ஆ–மூங்கில் போன்ற அழகிய தோள்களை யுடையளுமான பிராட்டியை மணஞ்செய்து கொள்ளுதற்காக
விடையோன் தன் வில்லை செற்றாய்–சிவனுடைய வில்லை முறித்தவனே!
வல் வினையேன் மனம் உருக்கும் மகனே–மஹா பாபியான எனது மனதை உருகச் செய்கிற மைந்தனே!
இன்று–இப்பொழுது
நீ–நீ
மா போகு நெடுங்கானம் போக–யானைகள் ஸஞ்சரிக்கிற பெரிய காட்டுக்குப் போக
என் நெஞ்சம்–எனது மனமானது
இரு பிளவு ஆய் போகாதே நிற்கும் ஆறே–இரண்டு பிளப்பாகப் பிளந்து போகாமலே வலியதாய் நிற்கும் தன்மை என்னோ?

வா போகு வா –
சற்றுப் போது காணா விட்ட வாறே வரும்படி காண்கைக்காக ஸூமந்த்ரனை விட்டு அழைப்பிக்கும்-
பிறகு பின்பும் பிறகு அழகையும் காண்கைக்காகப் போ என்னும் –
பின்னையும் கண் மறையப் போனவாறே வா வென்னும் –

இன்னம் வந்து ஒருகால் கண்டு போ –
வந்தவாறே இன்னம் போம் போது ஒருக்கால் கண்டு போம் என்னும் –
இப்படி யாகும் இவன் யாத்ரை தான் இருப்பது –

மலராள் கூந்தல்
பூ மாறாதே யாளும் மயிர் முடியையும்

வேய் போலும் எழில் தோளி தன் பொருட்டா
பசுமைக்கும் சுற்றுடைமைக்கும் ஒழுகு நீட்சிக்கும் வேய் போலே இருக்கிற அழகிய தோளை
உடையாளாய் இருக்கிற ஸ்ரீ பிராட்டி நிமித்தமாக –

விடையோன் தன் வில்லை செற்றாய்!
பெரு மிடுக்கனான ருத்ரனுடைய வில்லை முறித்தவனே

மா போகு நெடும் கானம் –
ஆனைகள் சஞ்சரிக்கிற காடு

வல் வினையேன் மனம் உருக்கும் மகனே! –
பால்ய அவஸ்தை தொடங்கி பதினாலாண்டு உன் சௌந்தர்யாதி சேஷ்டிதங்களாலே மஹா போகங்களை
என்னை அனுபவிப்பித்த உன்னை முடிய அனுபவிக்கப் பெறாதே மஹா பாபத்தைப் பண்ணி
என்னுடைய ஹ்ருதயத்தை சிதிலம் ஆக்குமவனே

இன்று நீ போக என் நெஞ்சம் இரு பிளவாய்ப் போகாதே நிற்க்குமாறே! —
உன் சந்நிதியில் இருக்கிற என் நெஞ்சமானது நீ போனவாறே சிதிலமாகாதே வலித்திரா நின்றதீ –
இதுக்கு ஹேது அறிகிறிலேன்-

——————————————————————————————–

பொருந்தார் கை வேல் நுதி போல்
பரல் பாய மெல் அடிகள் குருதி சோர
விரும்பாத கான் விரும்பி வெயில் உறைப்ப
வெம்பசி நோய் கூர இன்று
பெரும் பாவியேன் மகனே! போகின்றாய்
கேகயர் கோன் மகளாய் பெற்ற
அரும் பாவி சொல் கேட்ட அரு வினையேன்
என் செய்கேன்? அந்தோ! யானே— 9-5–

பதவுரை

பொருந்தார் கை வேல் நுதி போல்–பகைவர்கள் கையிலேந்தும் கூர்மையான வேலாயுதத்தின் நுனி போன்ற
பரல்–பருக்கைக் கற்கள்
பாய–(காலில் தைத்து அழுத்தவும்)
மெல் அடிக்கள் குருதி சோர–மென்மையான (உனது) பாதங்களினின்று ரத்தம் பெருகவும்
வெயில் உறைப்ப–(மேலே) வெயிலுறைக்கவும்
வெம் பசி நோய் கூர–(வேண்டிய போது உணவு கிடையாமலே) வெவ்விய பசியாகிய நோய் மிகவும்
பெரும் பாவி யேன் மகனே–மஹா பாபியான எனது மைந்தனே!
இன்று–இப்பொழுது
விரும்பாத கான் விரும்பி போகின்றாய்–(எவரும்) விரும்பாத காட்டை
(நான் போகச் சொன்னேனென்பதனாலே) விரும்பி (அவ்விடத்துக்குச் செல்கிறாய்)
கேகயர்கோன் மகள் ஆய்பெற்ற அரும்பாவி–கேகயராஜன் பெற்ற மகளான கொடிய பாவியாகிய கைகேயியினுடைய
சொல் கேட்ட அரு வினையேன் யான்–வார்த்தையைக் கேட்ட கொடியேனாகிய நான்
அந்தோ! என் செய்கேன்–ஐயோ! என்ன செய்வேன்!

பொருந்தார் கை வேல் நுதி போல் பரல் பாய
சத்ருக்கள் கையில் வேல் முனையை இட்டிருந்தால் போல் பரற்களானவை பாய

மெல் அடிகள் குருதி சோர
இங்குத்தையில் மிதிக்க சஹியாத ஸூகுமாரரான திருவடிகள் பாறைகள் மேலே மிதிக்கையாலே ரதத்தைப் புறப்பட விட

விரும்பாத கான் விரும்பி –
ஸூகுமாரர் அல்லாதாரும் விரும்பாத காட்டை நான் போகச் சொன்னேன் என்னுமத்தாலே விரும்பி

வெயில் உறைப்ப வெம்பசி நோய் கூர -மிக
மேலே வெய்யிலானது உறைப்ப-நினைத்த போது அமுது செய்யக் கிடையாமையாலே வெவ்விய பசியான நோய்

இன்று- பெரும் பாவியேன் மகனே! போகின்றாய்
மஹா பாபியான என் வயிற்றிலே பிறக்கையாலே இறே ஸூ குமாரரான நீர் காடு ஏறப் போகிறது

கேகயர் கோன் மகளாய் பெற்ற அரும் பாவி சொல் கேட்ட –
கேகேய ராஜன் மகளாய் பெற்றது ஒரு மஹா பாபத்தை யாய்த்து -அவள் வார்த்தையிலே அகப்பட்ட

அரு வினையேன் என் செய்கேன்? அந்தோ! யானே—
பிரதிகிரியை அல்லாத செயலைச் செய்த என்னால் செய்யலாம் பரிஹாரம் இல்லை –

—————————————————————————–

அம்மா என்று அழைக்கும் ஆர்வ சொல்
கேளாதே அணி சேர் மார்வம்
என் மார்வத் திடை அழுந்த தழுவாதே
முழுசாதே மோவாது உச்சி
கைம்மாவின் நடை அன்ன மென்னடையும்
கமலம் போல் முகமும் காணாது
எம்மானை என் மகனை இழந்திட்ட
இழி தகையேன் இருகின்றேனே– 9-6–

பதவுரை

அம்மா என்று உகந்து அழைக்கும்–ஐயா! என்று மகிழ்ச்சி கொண்டு (என்னை) அழைக்கின்ற
ஆர்வம் சொல் கேளாதே–ப்ரீதி விளங்குஞ்சொல்லை (நான்) கேட்கப் பெறாமலும்
அணி சேர் மார்வம்–ஆபரணங்கள் பொருந்திய (என் மகனது) மார்பு
என் மார்வத்திடை அழுந்த–என் மார்பிலே அழுந்தும்படி
தழுவாதே–(நான் அவனை) இறுக அணைத்துக் கொள்ளாமலும்
முழுசாதே–(அந்த ஆலிங்கந போகக் கடலில்) முழுகாமலும்
உச்சி மோவாது–உச்சியை மோந்திடாமலும்
கைம்மாவின் நடை அன்ன மெல் நடையும்–யானையினது நடை போன்ற (கம்பீரமான அம்மகனது) மென்மையான நடையின் அழகையும்
கமலம் போல் முகமும் காணாது–தாமரை மலர்போன்ற (அவனது) முகப் பொலிவையும் காணமாலும்
எம்மானை என் மகனை இழந்திட்ட–எமது ஐயனான என் மகனைக் (காடேறப் போக்கி) இழந்து விட்ட
இழி தகையேன்–இழிவான செயலைச் செய்தவனான நான்
இருக்கின்றேனே–(இன்னமும் அழிந்திடாமல்) உயிர் வாழ்ந்திருக்கின்றேனே.

அம்மா என்று அழைக்கும் ஆர்வ சொல் கேளாதே-
வேறு ஒன்றைக் கணிசியாதே -காரியப் பாடு அற-ஐயர் -என்று அழைக்கும் ப்ரேமம் வழிந்து
புறப்பட்ட சொல்லைக் கேளாதே –

அணி சேர் மார்வம் என் மார்வத் திடை அழுந்த தழுவாதே முழுசாதே மோவாது உச்சி
ஆபரணங்களாலே அலங்க்ர்தமான திரு மார்வைக் கொண்டு-ஸூ காடம் பரிஷச்வஜே -என்னும்படி
ஏக தத்வம் என்னும் படி தழுவி முழுசாதே –
முழுசி அநந்தரம் உச்சியை மோந்து கொள்ளாதே

கைம்மாவின் நடை அன்ன மென்னடையும்
மத்த மாதங்க காமி நம் -என்னும் படி அமைந்து இருக்கிற நடை அழகும்

கமலம் போல் முகமும் காணாது
விகாசம் செவ்விக்கு தாமரை ஒரு போலியான திரு முகத்தைக் காணாது

எம்மானை என் மகனை –
நடை அழகாலே என்னை எழுதிக் கொண்ட என்மகனை

இழந்திட்ட இழி தகையேன் இருகின்றேனே–
இப்படித் தண்ணிய செயலை செய்தக்கால் முடியவும் ஆகாதே இருக்கவும் வேணுமோ நான் –

——————————————————————————–

பூ மருவி நறும் குஞ்சி சடையா புனைந்து
பூம் துகில் சேர் அல்குல்
காமர் எழில் விழல் உடுத்து கலன் அணியாது
அங்கங்கள் அழகு மாறி
ஏமரு தோள் என் புதல்வன் யான் இன்று
செல தக்க வனம் தான் சேர்த்தல்
தூ மறையீர்! இது தகவோ? சுமந்திரனே!
வசிட்டனே! சொல்லீர் நீரே –9-7-

பதவுரை

தூ மறையீர்–நித்ய நிர்த் தோஷமான வேதத்ததை ஓதி யிருக்கிற பிராமணர்களே!
சுமந்திரனே–(ராஜ தர்மத்தை நன் கறிந்து நடத்திப் போந்த ஸுமந்த்ரரே!)
வசிட்டனே–ராஜ தர்மங்களை உபதேசித்துப் போருகிற) வஸிஷ்ட மஹர்ஷியே
(உங்களை ஒரு விஷயம் கேட்கிறேன்)
பூ மருவும் நறு குஞ்சி–புஷ்பம் மாறாதே யிருப்பதாய் மணம் கமழா நின்ற திருக் குழலை
புன் சடை ஆ புனைந்து–விகாரமான ஜடையாகத் திரித்து
பூ துகில் சேர் அல்குல்–நல்ல பட்டுப் பீதாம்பரங்கள் சாத்த வேண்டிய திருவரையிலே
காமர் எழில் விழல் உடுத்து–காண்கைக்கு ஆசைப்படத்தக்க அழகிய விச்வாமித்ரத்தைக் கயிறாக முறுக்கிச் சாத்தி
கலன் அணி யாது–திருவாபரணங்கள் அணியாமல்
அங்கங்கள் அழகு மாறி–இயற்கை யழகுக்கு மேல் திருவாபரணங்களால் உண்டாகக்கூடிய செயற்கை யழகின்றியிலே
ஏமரு தோள் என் புதல்வன் தான்–ஸுரக்ஷிதமான தோள்களை யுடையனான எனது குமாரனானவன்
யான் இன்று செல தக்க வனம் சேர்தல்–நான் இப்போது போகவேண்டிய காட்டுக்குத் தான் போவது
தகவோ–தகுதி தானோ!
நீரே சொல்லீர்–(தர்மஜ்ஞரான) நீங்களே (ஆராய்ந்து) சொல்லுங்கள்

பூ மருவி நறும் குஞ்சி சடையா புனைந்து
பூ மாறாதே இருப்பதாய் பரிமளத்தைப் புறப்பட விடா நிற்கும் திருக் குழலை –
மனுஷ்யர்க்குப் பார்க்க ஒண்ணாத படி ஜடையாக்கி

பூம் துகில் சேர் அல்குல் காமர் எழில் விழல் உடுத்து –
அறுபதினாயிரம் ஆண்டு தேடின திருப் பரியட்டங்களில் நல்லவை எல்லாம் சாத்தக் கடவ திருவரையிலே –
கண்டார் விரும்பும் படி விச்வாமித்ரத்தைக் கயிறாக முறுக்கிச் சாத்தி

கலன் அணியாது அங்கங்கள் அழகு மாறி
ஸ்வா பாவிகமான அழகு ஒழியத் திரு ஆபரணங்கள் சாத்தாமையாலே அத்தாலே வரும் அழகு இன்றியே

ஏமரு தோள் என் புதல்வன் –
விக்நம் பண்ணினாரை அழியச் செய்து அபிஷேகம் பண்ண வல்ல என் மகன்

யான் இன்று செல தக்க வனம் தான் சேர்த்தல்
அறுபதினாயிரம் ஆண்டு போகங்களை புஜித்து-வீத ராகனான நான் போகக் கடவ காட்டிலே
ஸூகுமாரராய்-போக யோக்யரான தாம் போகை

தூ மறையீர்! இது தகவோ?
பதிம் விஸ்வஸ்ய -என்று ஓதி இருக்கிற பிராமணரே -நீங்கள் இது சொல்லி கோள்-இது தர்மமோ

சுமந்திரனே! வசிட்டனே! சொல்லீர் நீரே
ராஜ தர்மத்தை பழக அறிந்து நடத்திப் போந்த ஸ்ரீ ஸூமந்த்ரனே -சொல்லாய்
இவ்வம்ச த்துக்கு குருவாய் ராஜ தர்மங்களை உபதேசித்துப் போருகிற ஸ்ரீ வசிஷ்ட பகவானே சொல்லாய் –

‘பூணார் அணியும், முடியும், பொன்னா சனமும், குடையும்,
சேணார் மார்பும், திருவும், தெரியக் காணக் கடவேன்,
மாணா மரவற் கலையும், மானின் தோலும் அவைநான்
காணாது ஒழிந்தேன் என்றால், நன்று ஆய்த்து அன்றோ கருமம்? –ஸ்ரீ கம்ப ராமாயணம்/அயோத்தியா காண்டம்/4-நகர் நீங்கு படலம்-65-1670

‘பூண் ஆர் அணியும் – அணிதற்குப் பொருந்திய அணிகலன்களும்;
பொன் ஆசனமும்- பொன்மயமான சிங்காதனமும்;
குடையும் -வெண்கொற்றக் குடையும்;
சேண் ஆர்மார்பும் – அகன்று பொருந்திய மார்பும்;
திருவும் – அங்கே வீற்றிருக்கும்திருமகளும்;
தெரியக் காணக் கடவேன் நான் – விளங்கப் பார்த்தற்குக் கடமைப்பட்ட யான்;
மாணா மர வற்கலையும் – மாட்சிமை இல்லாத மரவுரியும்;
மானின் தோலும் – மேனியில் போர்த்துக்கொள்ள மான் தோலும்;
அவை – ஆகிய அவற்றை;
காணாது ஒழிந்தேன் என்றால் – பாராமல் (விண்ணுலகு) சென்றுவிட்டேன் என்றால்;
கருமம் நன்றுஆய்த்து அன்றோ? – என் செயல் நல்லதாக ஆய்விடும் அல்லவா?

————————————————————-

பொன் பெற்றார் எழில் வேத புதல்வனையும்
தம்பியையும் பூவை போலும்
மின் பற்றா நுண் மருங்குல் மெல்லியல் என்
மருகியையும் வனத்தில் போக்கி
நின் பற்றா நின் மகன் மேல் பழி விளைத்திட்டு
என்னையும் நீள் வானில் போக்க
என் பெற்றாய்? கைகேசி! இரு நிலத்தில்
இனிதாக இருக்கின்றாயே– 9-8-

பதவுரை

கைகேசீ–கைகேயியே
பொன் பெற்றார் எழில் வேதம் புதல்வனையும்–கல்விச் செல்வத்தைப் பெற்றவர்களான உபாத்தியாயரின்
கீழே யிருந்து அழகிய வேதங்களை ஓதியிருக்கிற மூத்த மகனான இராமனையும்
தம்பியையும்–(அவனது) தம்பியான லக்ஷ்மணனையும்
பூவை போலும்–(பேச்சின் இனிமையிற் கொஞ்சுகிற) கிளி போன்றவளும்
மின் பற்றா நுண் மருங்குல் மெல் இயல்என் மருகியையும்–மின்னலும் ஈடாகமாட்டாத நுண்ணிய இடையையும்
மென்மையான தன்மைனையு முடையவளுமான என் மருமகளாகிய ஸீதையையும்
வனத்தில் போக்கி –காட்டுக்குப் போகச்செய்து
நின் பற்று ஆம் நின் மகன் மேல் பழி விளைத்திட்டு–உனது அன்புக்கு இடமான உன் மகனான பரதன்
மேற் பழியுண்டாம்படி செய்து (இவ்வளவு செய்துவிட்டு நீ)
என்னையும் நீள் வானில் போக்க–(புத்ர விரஹத்தால்) என்னையும் தூரத்திலுள்ள மேலுலகத்திற்குச் செலுத்துதலினால்
என் பெற்றாய்–நீ என்ன பயனடைந்தாய்!
இரு நிலத்தில்–பெரிய இவ்வுலகத்தில்
இனிது ஆக–சுகமாக
இருக்கின்றாயே–வாழ்கின்றாயே

பொன் பெற்றார் எழில் வேத புதல்வனையும் தம்பியையும்
தந்யர் என்று எல்லாரும் சொல்லும் படி இருக்கிற உபாயாத்யர்கள் கீழே இருந்து அழகிய சகல வேத சாஸ்திரங்களையும்
ஓதி இருக்கிற ஸ்ரீ பெருமாளையும் -அவரை அல்லாது அறியாத தம்பியாரையும்

பூவை போலும் மின் பற்றா நுண் மருங்குல் மெல்லியல் என் மருகியையும் –
பூவை போலே இருப்பாளுமாய் -மின்னுக்கு ஒப்பான இடையை யுடையாளுமாய் ம்ருது ஸ்வபாவையுமான
என் மருமகளான பிராட்டியையும்

வனத்தில் போக்கி
காட்டிலே போக விட்டு

நின் பற்றா நின் மகன் மேல் பழி விளைத்திட்டு
உன்னை அல்லது வேறு ஒருவரை தாய் என்று இராத ஸ்ரீ பெருமாளையும் ஸ்ரீ இளைய பெருமாளையும்
வனத்திலே போக விட்டு

என்னையும் நீள் வானில் போக்க என் பெற்றாய்? கைகேசி!
இச் செயல்கள் எல்லாம் செய்து நீ பெற்ற பிரயோஜனம் என்

இரு நிலத்தில் இனிதாக இருக்கின்றாயே–
சம்சார ஸூகம் ஆகிறது -புத்ரர்களோடும் பர்த்தாவோடும் கூடி இருக்கை யாய்த்து –
உனக்கு புத்ரரான ஸ்ரீ பெருமாளைக் காட்டிலே போக்கி என்னையும் ஸ்வர்க்கத்திலே
போக்குகையாலே சம்சார ஸூகம் அழகியதாக அனுபவிக்கக் கடவை இறே –

————————————-

முன் ஒரு நாள் மழு வாளி சிலை வாங்கி
அவன் தவத்தை முற்றும் செற்றாய்
உன்னையும் உன் அருமையையும் உன் நோயின்
வருத்தமும் ஒன்றாக கொள்ளாது
என்னையும் என் மெய் உரையும் மெய்யாக
கொண்டு வனம் புக்க எந்தாய்!
நின்னையே மகனாய் பெற பெறுவேன்
ஏழ் பிறப்பும் நெடும் தோள் வேந்தே —9-9-

பதவுரை

முன் ஒருநாள்–முன்பு ஒரு நாளிலே
மழு ஆளி சிலை வாங்கி–பரசுராமனிடத்திலிருந்து அவன் கை வில்லை வாங்கி
அவன் தவத்தை முற்றும் பெற்றாய்–அவனியற்றிய தபஸ்ஸின் பயனை முழுதும் (அம்புக்கு இலக்காக்கி) அழித்திட்டவனே!
உன்னையும் உன் அருமையையும்–உன்னுடைய மேன்மையையும் (நான் பெருந்தவஞ் செய்து) உன்னை அருமை மகனாகப் பெற்ற தன்மையையும்
உன் மோயின் வருத்தமும்–உனது பெற்ற தாயான கௌசல்யை (உன்னை பிரியில் தரியேன் என்று) உன் பின் தொடர்ந்த வருத்தத்தையும்
ஒன்று ஆக கொள்ளாது–ஒரு பொருளாகக் கொள்ளாமல்
என்னையும்–என்னையும்
என் மெய் உரையும்–எனது ஸத்ய வாக்கையும்
மெய் ஆக கொண்டு–பொருளாகக் கருதி
வனம் புக்க எந்தாய்–காடேறச் சென்ற எமது ஐயனே!
நெடுந்தோள் வேந்தே–பெரிய தோள்களை யுடைய அரசனே!
ஏழ் பிறப்பும்–இனி அனேக ஜன்மங்கள் பிறந்து பிறந்த ஜன்மந்தோறும்
நின்னையே மகன் ஆக பெற பெறுவேன்–நீ எனக்குப் பிள்ளையாய்ப் பிறக்கும்படி பேறு பெறக் கடவேன்.

முன் ஒரு நாள் மழு வாளி சிலை வாங்கி
முன் ஒரு காலத்திலே மழுவை ஆயுதமாக உடைய ஸ்ரீ பரசுராமன் கையிலே
ஸ்ரீ சார்ங்கத் திரு வில்லை வாங்கி

அவன் தவத்தை முற்றும் செற்றாய்
அவன் லோகாந்தரங்களை ப்ராபிக்கக் கடவதாக ஆர்ஜித்த தபஸ்ஸை அவ்வம்பாலே அழித்துப் பொகட்டாய்

உன்னையும் உன் அருமையையும் –
உன் ஸ்லாக்கியதையும்-மஹதாதபசாராம –என்று நான் உன்னைப் பெறப்பட்ட அருமையையும்

உன் நோயின் வருத்தமும் ஒன்றாக கொள்ளாது
உன்னைப் பிரியில் தரியேன் -என்று பின் தொடர்ந்த ஸ்ரீ கௌசல்யையார் வ்யசநத்தையும் ஒன்றாக கொள்ளாது

என்னையும் என் மெய் உரையும் மெய்யாக கொண்டு வனம் புக்க எந்தாய்!
உன்பக்கல் எனக்கு உண்டான பாவ பந்தத்தை மெய்யாக அறியாதே என்னைப் பிதா என்றே நினைத்து
நெடு நாள் சத்யம் சொல்லிப் போந்தவனை நான் தோன்றி அசத்திய பிரதிஜ்ஞன் ஆக்க ஒண்ணாதே
எனக்கு சத்தியத்தை சத்யமாக்க வேணும் என்று நெஞ்சிலே கொண்டு காடு ஏறப் போன என்னாயனே

நின்னையே மகனாய் பெற பெறுவேன் ஏழ் பிறப்பும் நெடும் தோள் வேந்தே —
அநேக ஜன்மங்கள் பிறந்து – பிறந்த ஜன்மம் தோறும் நீ எனக்குப் பிள்ளையாய்ப் பிறக்கும் படி
பேறு உடையேன் ஆவேன்
நெடும் தோள் வேந்தே
ரஷ்ய வர்க்கத்தின் அளவில்லாத காவல் துடிப்புடைய தோளை உடையவனே –

—————————————————

தேனகுமா மலர் கொந்தாள் கௌசலையும்
சுமித்ரையும் சிந்தை நோவ
கூன் உருவில் கொடும் தொழுத்தை சொல் கேட்ட
கொடியவள் தன் சொல் கொண்டு இன்று
கானகமே மிக விரும்பி நீ துறந்த
வள நகரைதுறந்து நானும்
வானகமே மிக விரும்பி போகின்றேன்
மனு குலத்தார் தங்கள் கோவே! —9-10–

பதவுரை

மனுகுலத்தார் தங்கள் கோவே–மநுகுலத்திற் பிறந்த அரசர்களிற் சிறந்தவனே!
தேன் நகு மா மலர் கூந்தல்–தேனைப் புறப்பட விடுகிற சிறந்த மலர்களைச் சூடிய கூந்தலையுடைய
கௌசலையும்–கௌஸல்யையும்
சுமித்திரையும்–ஸுமித்ரையும்
சிந்தை நோவ–மனம் வருந்த
கூன் உருவின் கொடும் தொழுத்தை சொல் கேட்ட கொடியவள் தன்சொல் கொண்டு–வக்ரமான வடிவம் போலவே
மனமுங் கோணலாகப் பெற்ற வேலைக்காரியான கூனியினது வார்த்தையைக் கேட்ட
கொடியவளான கைகேயியின் சொல்லை ஏற்றுக்கொண்டு
கானகமே மிக விரும்பி இன்று நீ துறந்த–காட்டையே மிகவும் விரும்பி இப்பொழுது நீ கைவிட்ட
வளம் நகரை–(உன் பட்டாபிஷேகத்தின் பொருட்டு) அலங்கரிக்கப் பட்டிருக்கிற இந்நகரத்தை
நானும் துறந்து–நானும் விட்டிட்டு
வானகமே மிக விரும்பி போகின்றேன்–மேலுலகத்தையே மிகவும் விரும்பி (அவ்விடத்திற்குச்) செல்கின்றேன்.

தேனகுமா மலர் கொந்தாள் கௌசலையும் சுமித்ரையும் சிந்தை நோவ-
தேனைப் புறப்பட்டு விக்கிற மலரோடு கூடின மயிர் முடியை உடைய ஸ்ரீ கௌசலையாரும்-
ஸ்ரீ ஸூமத்ரையாரும் நெஞ்சு நோவ

கூன் உருவில் கொடும் தொழுத்தை சொல் கேட்ட கொடியவள் தன் சொல் கொண்டு இன்று
வடிவிலே வக்ரம் போலே நெஞ்சம் வக்கிரமாய் திண்ணிதான கூனியை யுடைய வார்த்தையைக் கேட்ட
கைகேயியுடைய வார்த்தையிலே அகப்பட்டு

கானகமே மிக விரும்பி நீ துறந்த வள நகரை துறந்து
நான் போகச் சொன்னேன் -என்னுமத்தையே கொண்டு ஒருவர்க்கும் சஞ்சரிக்க அரிதான காட்டை விரும்பி –
திரு அபிஷேகத்துக்கு அலங்கரித்து இருக்கிற ஊரை நீ கை விட்டாய் என்று நானும் ஸ்ரீ திரு அயோதயையைத் துறந்து

நானும் வானகமே மிக விரும்பி போகின்றேன்-
நீ இல்லாத நகரி இறே -அத்தாலே ஸ்வர்க்கமே யாகிலும் நீ இல்லாத ஊரை விட்டுப் போகின்றேன்

மனு குலத்தார் தங்கள் கோவே! –
மநு குலோத்பவனானவனே-

————————————————————————————

ஏரார்ந்த கரு நெடுமால் ராமனாய்
வனம் புக்க வதனுக்கு ஆற்றா
தாரர்ந்த தடவரை தோள் தயரதன் தான்
புலம்பிய அப் புலம்பல் தன்னை
கூரார்ந்த வேல் வலவன் கோழியூர் கோன்
குடை குலசேகரன் சொல் செய்த
சீரார்ந்த தமிழ் மாலை இவை வல்லார்
தீ நெறி கண் செல்லார் தாமே–9-11-

பதவுரை

ஏர் ஆர்ந்த–அழகு நிறைந்த
கரு–கரு நிறமுடைய
நெடுமால்–மஹா விஷ்ணு
இராமன் ஆய்–ஸ்ரீ ராமனாகத் திருவவதரித்து
வனம் புக்க–காட்டுக்குச் சென்றதான
அதனுக்கு–அச் செயலை
ஆற்றா–பொறுக்க மாட்டாமல்
தார் ஆர்ந்த தட வரை தோள் தயரதன் புலம்பிய–வெற்றி மாலை பொருந்திய பெரிய மாலை போன்ற
தோள்களை யுடைய தசரத சக்ரவர்த்தி கதறின
அப் புலம்பல் தன்னை–அக் கதறல்களை,
கூர் ஆர்ந்த–கூர்மை மிக்க
வேல் வலவன்–வேற்படையின் தொழிலில் வல்லவரும
கோழியர் கோன்–உறையூரிலுள்ளார்க்குத் தலைவரும்
குடை–கொற்றக்குடையை உடையவருமான
குலசேகரன்–குலசேகராழ்வார்
சொல் செய்த–அருளிச் செய்த
சீர் ஆர்ந்த–சிறப்பு மிக்க
தமிழ் மாலை இவை– தமிழ்ப் பிரபந்தரூபமான இப் பத்துப் பாசுரங்களையும்
வல்லார்–கற்க வல்லவர்கள்
தீ நெறிக்கண்–கொடிய வழி யொன்றிலும்
செல்லார்–சென்று சேர மாட்டார்கள்.
(தான், தாம்–அசைகள்)

நிகமத்தில் –
ஏரார்ந்த கரு நெடுமால் ராமனாய் வனம் புக்க வதனுக்கு ஆற்றா-
எல்லா பிரகாரத்தாலும் பூர்ணனாய் -சர்வாதிகனான ஸ்ரீ சர்வேஸ்வரன் கர்ம வஸ்யரோடே-
இதர சஜாதீயனாய் வந்து அவதரித்து –
கர்மவஸ்யரும் போகத் தகாத காட்டில் புக்கான் -என்றதுக்கு ஆற்ற மாட்டாதே

தாரர்ந்த தடவரை தோள் தயரதன் தான் புலம்பிய அப் புலம்பல் தன்னை
அறுபதினாயிரம் ஆண்டு ராஜ்ஜியம் பண்ணுகையாலே மாலை மாறாத திண்ணியதான மலை போலே
தோளை உடைய ஸ்ரீ சக்கரவர்த்தி பிரலாபித்த பாசுரத்தை –

கூரார்ந்த வேல் வலவன் கோழியூர் கோன் குடை குலசேகரன் சொல் செய்த-
கூர்மை மிக்க வேலையையும் உடையராய் -ஸ்ரீ உறையூருக்கு நியாமகருமாய் -ஐஸ்வர்ய பிரகாசகமுமான
வெண் கொற்றக் குடையும் உடையருமான ஸ்ரீ குலசேகரப் பெருமாள் அருளிச் செய்த –

சீரார்ந்த தமிழ் மாலை இவை வல்லார் தீ நெறி கண் செல்லார் தாமே–
பாட்யேகேயேச மதுரம் -என்று இவை பூரணமான தமிழ் தொடை வல்லவர்கள் –
பகவத் விஷயத்தை காற்கடைக் கொண்டு விஷய பிரவணர் ஆகார்கள் –

————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய வாச்சான்  பிள்ளை  ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம்.
ஸ்ரீ குலேசேகரர் ஆழ்வார் ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள்  ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு வடிகளே சரணம்

பெருமாள் திருமொழி -8–ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் –

November 8, 2015

பிரவேசம் –

ஸ்ரீ தேவகியார் இழந்த இழவு மாத்ரமேயோ –
ஸ்ரீ கௌசல்யைத் தான் காணப் பெற்றேனோ -என்று அச்சம காலத்திலே
தாம் இழக்கையாலே -அவள் அனுபவத்தை ஸ்ரீ திருக் கண்ணபுரத்திலே அனுபவிக்கிறார் –

————

மன்னு புகழ் கௌசலை தன் மணி வயிறு வாய்த்தவனே!
தென் இலங்கை கோன் முடிகள் சிந்துவித்தாய்! செம்பொன் சேர்
கன்னி நன் மா மதிள் புடை சூழ் கண புரத்து என் கரு மணியே!
என்னுடைய இன் அமுதே! ராகவனே! தாலேலோ— 8-1–

பதவுரை

மன்னு புகழ்–நிலை நின்ற புகழை யுடைய
கௌசலை தன்–கௌஸல்யையினுடைய்
மணி வயிறு–அழகிய வயிற்றிலே
வாய்த்தவனே–பிள்ளையாகத் திருவவதரித்தவனே!
தென் இலங்கை கோன்–தென்னிலங்கைக்கு இறைவனான ராவணனுடைய
முடிகள்–பத்துத் தலைகளையும்
சிந்துவித்தாய்–சிதறப் பண்ணினவனே!
செம் பொன் சேர்–செவ்விய பொன்னாலே செய்யப்பட்டதாய்
கன்னி–அழிவில்லாததாய்
நல்–விலக்ஷணமாய்
மா–பெரிதான
மதில்–திருமதிளாலே
புடை சூழ்–நாற் புறமும் சூழப்பட்ட
கணபுரத்து–திருக் கண்ணபுரத்தில் எழுந்தருளியிருக்கிற
என் கருமணியே–நீல ரத்நம் போன்ற எம்பெருமானே!
என்னுடைய இன் அமுதே–எனக்கு போக்யமான அம்ருதமாயிருப்பவனே!
இராகவனே!–ஸ்ரீராமனே!
தாலேலோ–(உனக்குத்) தாலாட்டு

மன்னு புகழ் கௌசலை தன் மணி வயிறு வாய்த்தவனே!
ஸ்ரீ சர்வேஸ்வரனைப் பிள்ளையாகப் பெற்றாள் -என்ற நிலை நின்ற புகழை உடைய –
ஸ்ரீ கௌசலையாருடைய
அழகிய வயிற்றிலே அவளுக்குப் பிள்ளையாகப் பெற்றவனே

தென் இலங்கை கோன் முடிகள் சிந்துவித்தாய்! –
இத் திரு மொழி இறே ஸ்ரீ ராமாவதாரத்தில் மிகை -ஆகையாலே இச் சந்தை

செம்பொன் சேர் கன்னி நன் மா மதிள் புடை சூழ் கண புரத்து என் கரு மணியே!
அழிவில்லாத மதிளாலே சூழ்ந்த ஸ்ரீ திருக் கண்ணபுரத்திலே
எனக்கு திருஷ்டிக்கு நிர்வாஹகனாய் நிற்கிறவனே

என்னுடைய இன் அமுதே! ராகவனே! தாலேலோ—
தேவர்கள் அமிர்தம் போல் அன்றிக்கே எனக்கு அமிர்தமானவனே-
தேவர்களுடைய அமிர்தம் உப்புச் சாறு இறே –
அது அன்று இறே இவருடைய அமிர்தம் இருந்த படி –

——————————————————————————–

புண்டரீக மலர் அதன் மேல் புவனி எல்லாம் படைத்தவனே!
திண் திற லாள் தாடகை தன் உரம் உருவ சிலை வளைத்தாய்!
கண்டவர் தம் மனம் வழங்கும் கண புரத்து என் கருமணியே !
எண் திசையும் ஆள் உடையாய்! ராகவனே! தாலேலோ –8-2–

பதவுரை

புண்டரிகம் மலர் அதன் மேல்–(திருநாபியில் அலர்ந்த) தாமரைப் பூவின் மேல் (பிரமனைத் தோற்றுவித்து அவன் முகமாக)
புவனி எல்லாம் படைத்தவனே–உலகங்கள் எல்லாவற்றையும் ஸ்ருஷ்டித்தவனே!
திண் திறலாள் தாடகை தன்–த்ருடமான பலத்தை யுடையளான தாடகையினுடைய
உரம் உருவ–மார்வைத் துளைக்கும் படியாக
சிலை வளைத்தாய்–வில்லை வளைத்து அம்புகளை எய்தவனே!
கண்டவர்–ஸேவித்தவர்கள்
தம் மனம் வழங்கும்–தங்கள் மனத்தைத் தாங்களே இசைந்து கொடுப்பதற்குத் தகுந்த
கணபுரத்து என் கருமணியே;
எண் திசையும்–எட்டுத் திக்கிலுள்ளவர்களையும்
ஆள் உடையாய்–அடிமை கொண்டருளுபவனே!
இராகவனே! தாலேலோ–ஸ்ரீராமனே! (உனக்குத்) தாலாட்டு

புண்டரீக மலர் அதன் மேல் புவனி எல்லாம் படைத்தவனே!
திரு நாபீ கமலத்திலே லோகம் எல்லாம் ஸ்ருஷ்டித்தவனே

திண் திறலாள் தாடகை தன் உரம் உருவ சிலை வளைத்தாய்!
ஸ்ருஷ்டிக்குமது அன்றியே -பயிரைச் செய்து களை பிடுங்குமா போலே
ஆசூர வர்க்கத்தைப் போக்கின படி
திண்ணிய திறலை உடையளான தாடகை உரத்தை மாறுபாடு உருவ வில்லை வளைத்தவனே

கண்டவர் தம் மனம் வழங்கும் கண புரத்து என் கருமணியே !
கண்டவர்கள் நெஞ்சுகளை தாங்களும் இசைந்து கொடுக்கும் படி
ஸ்ரீ திருக்கண்ண புரத்திலே நிற்கிறவனே

எண் திசையும் ஆள் உடையாய்! ராகவனே! தாலேலோ –
அவதாரத்தில் பிற்பாடரான எட்டு திக்கிலும் உள்ளாறும் வந்து வாழும் படி நின்றவனே –

—————————————————————-

கொங்கு மலி கரும் குழலாள் கௌசலை தன் குல முதலாய் !
தங்கு பெரும் புகழ் சனகன் திரு மருகா ! தாசரதீ !
கங்கையிலும் தீர்த்த மலி கண புரத்து என் கரு மணியே
எங்கள் குலத்தின் இன் அமுதே !ராகவனே !தாலேலோ !—8-3–

பதவுரை

கொங்குமலி கரு குழலாள்–பரிமளம் மிகுந்த கறுத்த கூந்தலை யுடையளான
கௌசலை தன்–கௌஸல்யையினுடைய
குலம் மதலாய்– சிறந்த பிள்ளையானவனே!
தங்கு பெருபுகழ் சனகன்–பொருந்திய மஹா கீர்த்தியை யுடைய ஜநக மஹாராஜனுக்கு
திரு மருகா–மாப்பிள்ளை யானவனே!
தாசரதீ–சக்ரவர்த்தி திருமகனே!
கங்கையிலும்–கங்கா நதியிற் காட்டிலும்
மலி தீர்த்தம்–சிறப்பு மிக்க தீர்த்தங்களை யுடைய
கண புரத்து–திருக் கண்ணபுரத்தி லெழுந்தருளி யிருக்கிற
என் கரு மணியே
எங்கள் குலம்–எங்கள் ராஜ வம்சத்துக் கெல்லாம்
இன் அமுதே–போக்யமான அமுதம் போன்றவனே!
இராகவனே! தாலேலோ

கொங்கு மலி கரும் குழலாள் கௌசலை தன் குல முதலாய் !
மிக்க பரிமளத்தைப் புறப்பட விடுகிற இருண்ட குழலை உடைய ஸ்ரீ கௌசலையாருடைய
குலத்துக்கு உத்தாரகன் ஆனவனே

தங்கு பெரும் புகழ் சனகன் திரு மருகா !
புகழ் என்று பிறந்தவை எல்லாம் தங்கும் படி பெரிய புகழை உடைய
ஸ்ரீ ஜனக ராஜனுக்கு மருமகன் ஆனவனே

தாசரதீ !
அவனோடு சத்ர்ச சம்பந்தம் பண்ணலாம் படியான பிறப்பை உடையவனே

கங்கையிலும் தீர்த்த மலி கண புரத்து என் கரு மணியே
காதசித்க சம்பந்தத்தால் வரும் ஸூ த்தி யோகம் இறே கங்கைக்கு உள்ளது
சம்பந்தம் நித்யமாகையாலே அதிலும் ஸூத்தி மிக்கு இருக்கிற ஸ்ரீ திருப் பொய்கையை உடைய
ஸ்ரீ திருக் கண்ணபுரத்திலே ஸூலபன் ஆனவனே

எங்கள் குலத்தின் இன் அமுதே !ராகவனே !தாலேலோ !—
ராஜ வம்சத்துக்காக போகய பூதன் ஆனவனே –

————————————————————————————

தாமரை மேல் அயன் அவனை படைத்தவனே! தயரதன் தன்
மா முதலாய்! மைதிலி தன் மணவாளா வண்டினங்கள்
காமரங்கள் இசை பாடும் கண புரத்து என் கருமணியே!
ஏமருவும் வெம் சிலை வலவா! ராகவனே! தாலேலோ– 8-4–

பதவுரை

தாமரை மேல்–(திருநாபிக்) கமலத்திலே
அயன் அவனை படைத்தவனே–பிரமனை உண்டாக்கினவனே!
தயரதன் தன் மாமதலாய்–தசரதனுடைய மூத்த குமாரனே!
மைதிலி தன் மணவாளா–பிராட்டிக்கு வல்லபனே!
வண்டு இனங்கள்–வண்டுகளின் கூட்டங்கள்
காமரங்கள் இசை பாடும்–காமரமென்னும் இசையைப் பாடப் பெற்ற
கண புரத்து–திருக் கண்ணபுரத்தி லெழுந்தருளி யிருக்கிற
என் கருமணியே
ஏ மருவும் சிலை வலவா–அம்புகள் பொருந்திய (ஸ்ரீசார்ங்கமென்னும்) வில்லை ஆள வல்லவனே
இராகவனே! தாலேலோ

தாமரை மேல் அயன் அவனை படைத்தவனே!
கீழ்ச் சொன்ன சிருஷ்டி பின்னாட்டின படி

தயரதன் தன் மா முதலாய்!
அறுபதினாயிரம் ஆண்டு மலடு நின்ற ஸ்ரீ சக்கரவர்த்தியினுடைய மலடு தீரப் பிறந்தவனே –

மைதிலி தன் மணவாளா –
பிள்ளை பெற்றத்தின் மேலும் பிறப்பில் வந்த ஏற்றத்துக்கு மேலே —
யச்யஸா ஜனகாத்மஜா -என்று ஸ்ரீ பிராட்டியை
உனக்கு என்று இட்டுப் பிறந்த மேன்மையை உடையவனே

வண்டினங்கள் காமரங்கள் இசை பாடும் கண புரத்து என் கருமணியே!
வண்டினங்கள்-காமரம் -என்கிற பண்ணிலே -இசை பாடுகிற ஸ்ரீ திருக்கண்ண புரத்திலே சந்நிஹிதன் ஆனவனே

ஏமருவும் வெம் சிலை வலவா! ராகவனே! தாலேலோ–
ஆரேனும் பிடிக்கிலும் ஏவிலே மீட்டும் ஸ்ரீ சார்ங்கத்தை உன் நினைவிலே வரும் படி செலுத்த வல்லவனே –

——————————————————————————–

பாராளும் படர் செல்வம் பாரத நம்பிக்கே அருளி
ஆரா அன்பில் இளையவனோடு அரும் கானம் அடைந்தவனே
சீராளும் வரை மார்பா ! திரு கண்ண புரத்தரசே !
தாராளும் நீண் முடி என் தாசரதீ ! தாலேலோ—– 8-5-

பதவுரை

பார் ஆளும் படர் செல்வம்–பூமி முழுவதையும் ஆட்சி புரிகையாகிற பெரிய ராஜ்ய ஸம்பத்தை
பரதன் நம்பிக்கே–ஸ்ரீ பரதாழ்வானுக்கே
அருளி–நியமித்து விட்டு
ஆரா அன்பு இளையவனோடு–பரிபூர்ணமான பக்திப் பெருங்காதலை யுடைய இளைய பெருமாளுடன் கூட
அரு கானம் அடைந்தவனே–(புகுவதற்கு) அருமையான காட்டைக் குறித்து எழுந்தருளினவனே!
சீர் ஆளும் வரை மார்பா–வீர லெக்ஷ்மிக்கு இருப்பிடமாய் மலை போன்ற திரு மார்பை யுடையவனே!
திருக்கண்ணபுரத்து அரசே-
தார் ஆளும் நீள் முடி–மாலையோடு கூடின சிறந்த திரு முடியை யுடையவனே!
என் தாசரதீ! தாலேலோ

பாராளும் படர் செல்வம் பாரத நம்பிக்கே அருளி
பூமிப் பரப்படைய ஆளக் கடவதான பெரிய சம்பத்தை -பாரதந்த்ர்ய குணங்களாலே
பூர்ணனாய் இருக்கிற ஸ்ரீ பரத ஆழ்வானுக்கு அருளி

ஆரா அன்பில் இளையவனோடு அரும் கானம் அடைந்தவனே
அவனைப் போலவே நியமித்த இடத்திலே பிரிந்து இருக்க மாட்டாதே –
குருஷ்வ மாம் -என்னும் ஸ்ரீ இளைய பெருமாளோடு கூடி
ஒருவராலும் இயங்க ஒண்ணாத துஷ்ட சத்வ பிரசுரமான காட்டிலே பிரவேசித்தவனே

சீராளும் வரை மார்பா ! திரு கண்ண புரத்தரசே !
வீர ஸ்ரீ க்கு நிர்வாஹகன் ஆனதுவும்

தாராளும் நீண் முடி என் தாசரதீ ! தாலேலோ—–
ஆதி ராஜ்ய ஸூசகமான மாலையோடு கூடின முடியை உடைய ஸ்ரீ சக்கரவர்த்தி திருமகனே –

————————————————————————-

சுற்றம் எல்லாம் பின் தொடர தொல் கானம் அடைந்தவனே!
அற்றவர்கட்க்கு அரு மருந்தே! அயோத்தி நகர்க்கு அதிபதியே!
கற்றவர்கள் தாம் வாழும் கண புரத்து என் கரு மணியே!
சிற்றவை தன் சொல் கொண்ட சீ ராமா! தாலேலோ –8-6–

பதவுரை

சுற்றம் எல்லாம் பின் தொடர–எல்லா உறவினரும் பின்னே தொடர்ந்து வர
தொல் கானம் அடைந்தவனே–புராதநமான தண்டகாரண்யத்துக் கெழுந்தருளினவனே!
அற்றவர்கட்கு–உனக்கே அற்றுத் தீர்ந்த பரம பக்தர்களுக்கு
அரு மருந்தே–ஸம்ஸார ரோகத்தைத் (தணிக்க) அருமையான மருந்து போன்றவனே!
அயோத்தி நகர்க்கு அதிபதியே–அயோத்யா நகரத்திற்கு அரசனே!
கற்றவர்கள் தாம் வாழும் கணபுரத்து–ஞானிகள் வாழ்தற்கு இடமான திருக்கண்ணபுரத்திலே எழுந்தருளியிருக்கிற
என் கருமணியே–நீலமணி போலழகிய எம்பெருமானே!
சிற்றவை தன்–சிறிய தாயாராகிய கைகேயியினுடைய
சொல் கொண்ட சீராமா–சொல்லை ஏற்றுக்கொண்ட ஸ்ரீராமமே!
தாலேலோ –

சுற்றம் எல்லாம் பின் தொடர தொல் கானம் அடைந்தவனே!
எல்லாரும் போனார்களோ -சிறிதிடம் போய் மீண்டது என்று அன்றோ சொல்லிற்றாய்த்து –
அஹம் சர்வம் கரிஷ்யாமி -என்று சொன்ன எல்லா அடிமையும் செய்யும் ஸ்ரீ இளைய பெருமாள்
கூடப் போகையாலே-எல்லா பந்துக்களும் கூடப் போனார்கள் யாய்த்து இறே -என்று
ஸ்ரீ எம்பெருமானார் அருளிச் செய்து அருளினார்

அற்றவர்கட்க்கு அரு மருந்தே! –
கர்ப்ப பூதாஸ்த போதநா –என்று இருக்குமவர்களுக்கு -அரு மருந்தே —
அப்யஹம் ஜீவிதம் ஜஹ்யாம்-என்று இருக்கும் மருந்து ஆனவனே

அயோத்தி நகர்க்கு அதிபதியே!
ஸ்ரீ பரமபதம் போலே அயோத்யை இறே -இதுக்குப் பெயர் –
அப்படிப் பட்ட படைவீட்டுக்கு அதிபதியானவனே

கற்றவர்கள் தாம் வாழும் கண புரத்து என் கரு மணியே!
கற்பது ஒரு தேசத்திலே இருந்து ஒரு காலத்திலேயாய்-பிராப்ய வஸ்துவைக் கிட்டி
அனுபவிப்பது ஒரு தேச விசேஷத்திலேயாகாமே
பிராப்ய வஸ்து தெற்கு திக்கிலே காணலாம் படி ஸ்ரீ திருக்கண்ண புரத்திலே நின்றவனே

சிற்றவை தன் சொல் கொண்ட சீ ராமா! தாலேலோ –
பெற்ற தாயான நான் உம்மைப் பிரியில் தரியேன் என்று ஸ்ரீ கௌசலையார் பின் தொடரச் செய்தேயும்
மாற்றுத் தாயான கைகேசி சொல்லு மாறாதே வனத்தே போந்தவனே –

—————————————————————————–

ஆலின் இலை பாலகனாய் அன்று உலகம் உண்டவனே!
வாலியை கொன்று அரசு இளைய வானரத்துக்கு அளித்தவனே!
காலின் மணி கரை அலைக்கும் கண புரத்து என் கரு மணியே!
ஆலி நகர்க்கு அதிபதியே! அயோத்தி மனே! தாலேலோ— 8-7–

பதவுரை

அன்று–முன்பு மஹாப்ரளயம் வந்த போது
ஆலின் இலை–ஓர் ஆலந்தளிரிலே
பாலகன் ஆய்–குழந்தை வடிவாய்க் கொண்டு
உலகம் உண்டவனே–லோகங்களை யெல்லாம் திருவயிற்றில் வைத்து நோக்கினவனே!
வாலியை கொன்று–வாலியைக் கொலை செய்து
இளைய வானரத்துக்கு–அவனது தம்பியான ஸுகரீவனுக்கு
அரசு அளித்தவனே–ராஜ்யத்தைக் கொடுத்தவனே!
காலில் மணி–கால்வாய்களிலுள்ள ரத்நங்களை
கரை அலைக்கும்–கரையிலே கொண்டு கொழிக்கப் பெற்ற
கண புரத்து–திருக் கண்ணபுரத்தில் எழுந்தளி யிருக்கிற
என் கருமணியே
ஆலி நகர்க்கு–திருவாலி திருநகரிக்கு
அதிபதியே–தலைவனே!
அயோத்திமனே–அயோத்தி நகர்க்கு அரசனே!
தாலேலோ

ஆலின் இலை பாலகனாய் அன்று உலகம் உண்டவனே!
லோகத்தை எல்லாம் திரு வயிற்றிலே வைத்து ஒரு பாவனான ஆலிலையிலே-அது தான் விஞ்சும் என்னும் படி
கண் வளர்ந்து அருளின அகடிதகட நா சாமர்த்தியத்தை உடையவனே

வாலியை கொன்று அரசு இளைய வானரத்துக்கு அளித்தவனே!
வாலி ஆரைத் துணையாக நீ விஜயம் பண்ணின ராவணனை வாலிலே கட்டி வைத்தான்
அவ் வாலியைக் கொன்று அவனுக் கிடைந்து பர்வத குஹைகளிலே கிடக்கிற
ஸ்ரீ மஹா ராஜற்கு வானர ராஜ்யத்தைக் கொடுத்தவனே

காலின் மணி கரை அலைக்கும் கண புரத்து என் கரு மணியே!
காற்றாலே உள்ளுக் கிடக்கிற ரத்னங்களை கரையிலே ஏறிடும் என்னுதல்
கால் வாய்களில் மணிகளைக் கொடு வந்து கரையிலே ஏறிடும் என்னுதல்

ஆலி நகர்க்கு அதிபதியே! அயோத்தி மனே! தாலேலோ—
ஸ்ரீ திரு வாலிக்கு நிர்வாஹகன் ஆனவனே –
வாலியைக் கொன்று ஊரில் தன்னைத் துணையாகக் கொள்ளப் பெற்றதே –
(ஒரு வாலியைக் கொன்று ஒரு வாலி தன்னைத் துணையாகக் கொள்ளப் பெற்றதே என்று
சாடூக்தி அருளிச் செய்கிறார் )

————————————————————————–

மலை அதனால் அணை கட்டி மதிள் இலங்கை அழித்தவனே!
அலை கடலை கடைந்து அமரர்க்கு அருளி செய்தவனே!
கலை வலவர் தாம் வாழும் கண புரத்து என் கரு மணியே!
சிலை வலவா! சேவகனே! சீ ராமா! தாலேலோ– 8-8-

பதவுரை

மலை அதனால் அணை கட்டி–மலைகளைக் கொண்டு ஸேது பந்தனம் பண்ணி
மதிள் இலங்கை அழித்தவனே–அரணை யுடைத்தான லங்காபுரியைப் பாழ்படுத்தினவனே
அலை கடலை கடைந்து–அலை யெறிகின்ற திருப்பாற்கடலைக் கடைந்து
அமரர்க்கு–தேவர்களுக்கு
அமுது–அம்ருதத்தை
அருளிச் செய்தவனே–கொடுத்தருளினவனே!
கலை வலவர் தாம் வாழும் கணபுரத்து–ஸகல சாஸ்த்ரங்களையும் அறிந்தவர்கள் வாழ்கிற திருக்கண்ணபுரத்தில் எழுந்தருளியிருக்கிற
என் கருமணியே
சிலைவலவா–(ஸ்ரீ சார்ங்கமென்னும்) வில்லைச் செலுத்த வல்லவனே!
சேவகனே–வீரனே!
சீராமா! தாலேலோ

மலை அதனால் அணை கட்டி மதிள் இலங்கை அழித்தவனே!
நிலத்திலே வர மலையைக் கொண்டு -அரணான மலையை -அணையாகக் கட்டி
நீர் தானே மிகை என்னும் படியான
அரணையும் உடைத்தான இலங்கையை மூலையடியெ வழி போக்கினவனே

அலை கடலை கடைந்து அமரர்க்கு அருளி செய்தவனே!
அகாதமான சமுத்ரத்தைக் கடைந்து அமிர்தத்தை வாங்கி அசுரர்கள் கையிலே தேவர்கள்
சாவாத படி அவர்களுக்குக் கொடுத்தவனே

கலை வலவர் தாம் வாழும் கண புரத்து என் கரு மணியே!
சகல வித்யா ஸ்தலங்களும் கை வந்து இருக்குமவர்கள் உன்னை அனுபவிக்கும்
ஸ்ரீ திருக்கண்ண புரத்திலே சந்நிஹிதன் ஆனவனே

சிலை வலவா! சேவகனே! சீ ராமா! தாலேலோ–
ஸ்ரீ சார்ங்கம் கை வைத்து இருக்குமவனே –
அது தான் மிகை என்னும் படியான வீரப் பாட்டை உடையவனே –

—————————————————————————————

தளை அவிழும் நறும் குஞ்சி தயரதன் தன் குல முதலாய்!
வளைய வொரு சிலை யதனால் மதிள் இலங்கை அழித்தவனே!
களை கழுநீர் மருங்கலரும் கண புரத்து என் கரு மணியே!
இளையவர்கட்க்கு அருள் உடையாய்! ராகவனே! தாலேலோ– 8-9-

பதவுரை

தளை அவிழும் நறு குஞ்சி-கட்டு அவிழும்படியான நறுநாற்றமுடைய மயிர்முடியை யுடையனான
தயரதன் தன்–தசரத சக்ரவாத்தியினுடைய
குலம் மதலாய்–சிறந்த திருக்குமாரனே!
ஒரு சிலை வளைய–ஒப்பற்ற வில்லானது வளைய
அதனால்–அந்த வில்லாலே
மதிள் இலங்கை அழித்தவனே
களை கழுநீர்–களையாகப் பறிக்கப்பட்ட செங்கழுநீர்கள்
மருங்கு அலரும் கணபுரத்து–சுற்றிலும் மலரப் பெற்ற திருக்கண்ணபுரத்தி லெழுந்தருளியிருக்கிற
என் கருமணியே
இளையவர்கட்கு–இளையவர்கள் விஷயத்திலே
அருள் உடையாய்–கருணை பொருந்தியவனே!
இராகவனே! தாலேலோ

தளை அவிழும் நறும் குஞ்சி தயரதன் தன் குல முதலாய்!
கட்டவிழும்படியான நறு நாற்றத்தை உடைய மயிர் முடியை உடைய ஸ்ரீ சக்கரவர்த்தி குலத்துக்கு
உத்தாரகன் ஆனவனே

வளைய வொரு சிலை யதனால் மதிள் இலங்கை அழித்தவனே!
ப்ரஹ்மாஸ்த்ராதிகள் வாய் மடியுமூரை மனுஷ்யத்வத்துக்கு ஏகாந்தமான வில்லாலே
அவனுடைய ஊரை அழியச் செய்தவனே

களை கழுநீர் மருங்கலரும் கண புரத்து என் கரு மணியே!
களையாகப் பறித்து கரையிலே பொகட்ட செங்கழு நீர்கள் பொகட்ட இடங்களிலே கிடந்தது தன்னிலத்திலே
அலருமா போலே செவ்வி பெற்று அலரும் ஸ்ரீ திருக்கண்ண புரம்

இளையவர்கட்க்கு அருள் உடையாய்! ராகவனே! தாலேலோ–
தம்பிமார்க்கு உறுப்பாகாத போது-என் பிராண்ன்களும் எனக்கு வேண்டா என்னுமவர் இறே-

——————————————————————————-

தேவரையும் அசுரரையும் திசைகளையும் படைத்தவனே!
யாவரும் வந்து அடி வணங்க அரங்க நகர் துயின்றவனே!
காவிரி நல் நதி பாயும் கண புரத்து என் கரு மணியே!
ஏவரி வெஞ்சிலை வலவா! ராகவனே! தாலேலோ— 8-10-

பதவுரை

தேவரையும்–தேவர்களையும்
அசுரரையும்–அஸுரர்களையும்
திசைகளையும்–திக்குக்களையும் (அதாவது எல்லா ப்ரதேசங்களையும்)
படைத்தவனே–ஸ்ருஷ்டித்தவனே
யாவரும் வந்து அடி வணங்க–ஸகல சேதநரும் வந்து திருவடிகளில் ஸேவிக்கும்படியாக
அரங்கம் நகர்–ஸ்ரீரங்கத்திலே
துயின்றவனே–பள்ளி கொண்டிருப்பவனே!
காவிரி நல் நதி–காவேரி யென்கிற சிறந்த நதி யானது
பாயும்–ப்ரவஹிக்கப் பெற்ற
கண புரத்து–திருக் கண்ணபுரத்தில் எழுந்தருளி யிருக்கிற
என் கரு மணியே
ஏ வரி வெம் சிலை வலவா–அம்புகள் தொடுக்கப்பெற்று அழகியதாய் (ச் சத்துருக்களுக்கு)க் கொடிதா யிருந்துள்ள வில்லை ஆள வல்லவனே
இராகவனே! தாலேலோ

தேவரையும் அசுரரையும் திசைகளையும் படைத்தவனே!
சஹஜ சத்ருக்களான-தேவாஸூரர் முதலான பதார்த்தங்களையும் –
இவர்களுக்கு அவகாச பிரகாசம் பண்ணும் தேசங்களையும் ஸ்ருஷ்டித்தவனே

யாவரும் வந்து அடி வணங்க அரங்க நகர் துயின்றவனே!
ஸ்ருஷ்டி பிரயோஜனம் எல்லாம் தன்னை ஆஸ்ரயிக்கை இறே –
இதுக்காக ஸ்ரீ கோயிலிலே வந்து கண் வளர்ந்து அருளினவனே

காவிரி நல் நதி பாயும் கண புரத்து என் கரு மணியே!
ஒருவர் ஏற்றிப் பாய்ச்ச வேண்டாத படி தானே வந்து எங்கும் பரக்கும் காவேரியை யுடைய
ஸ்ரீ திருக் கண்ணபுரத்திலே ஸூலபன் ஆனவனே

ஏவரி வெஞ்சிலை வலவா! ராகவனே! தாலேலோ—
ஏவிலே மூட்டக் கடவதாய் தர்ச நீயமாய் பிடித்த பிடியிலே சத்ருக்கள் மண் உண்ணும் படியான
ஸ்ரீ சார்ங்கத்தை உன் கருத்திலே நடத்த வல்லவனே –

————————————————————-

கன்னி நன் மா மதிள் புடை சூழ் கண புரத்து என் காகுத்தன்
தன் அடி மேல் தாலேலோ என்று உரைத்த தமிழ் மாலை
கொல் நவிலும் வேல் வலவன் குடை குலசேகரன் சொன்ன
பன்னிய நூல் பத்தும் வல்லார் பாங்காய பத்தர்களே— 8-11-

பதவுரை

என் காகுத்தன் தன் அடி மேல்–என் ஸ்வாமியான இராமபிரான் விஷயமாக
தாலேலோ என்று உரைத்த–(கௌஸல்யை) தாலாட்டிச் சொன்ன பாசுரங்களை (உட்கொண்டு)
கொல் நவிலும் வேல் வலவன் குடை குலசேகரன்–கொலைத் தொழில் புரிகின்ற வேலாயுதத்தைச் செலுத்த
வல்லவரும் குடையை யுடையவருமான குலசேகராழ்வார்
கன்னி நல் மா மதிள் புடை சூழ் கண புரத்து–சாச்வதமான சிறந்த அழகிய மதிள்கள் நாற்புறமும் சூழப் பெற்ற திருக்கண்ணபுரத்திலே
சொன்ன–அருளிச் செய்த
பன்னிய நூல் தமிழ் மாலை பத்தும்–பரம்பியதாய் ஸலக்ஷணமாய்த் தமிழ்ப் பாமாலை ஆகிய இப்பத்துப் பாசுரங்களையும்
வல்லார்–அதிகரிக்க வல்லவர்கள்
பாங்கு ஆய பத்தர்கள்==அமைந்த பக்திமான்களாகப் பெறுவர்

நிகமத்தில் –
கன்னி நன் மா மதிள் புடை சூழ் கண புரத்து என் காகுத்தன்
அழியாத பெரு மதிள் சூழ்ந்த ஸ்ரீ திருக் கண்ணபுரத்திலே நின்று அருளின
ஸ்ரீ கிருஷ்ணனை அன்றியிலே ஸ்ரீ சக்கரவர்த்தி திருமகனை யாய்த்து கவி பாடிற்று –

தன் அடி மேல் தாலேலோ என்று உரைத்த தமிழ் மாலை
ஸ்ரீ சக்கரவர்த்தி திருமகனுடைய பால்ய அவஸ்தையில் ஸ்ரீ கௌசல்யார் சொன்ன பாசுரத்தை
ஸ்ரீ திருக் கண்ணபுரத்திலே சொன்ன தமிழ் தொடை

கொல் நவிலும் வேல் வலவன் குடை குலசேகரன் சொன்ன
வேலைப் பிடித்த பிடியிலே எல்லாரும் -வேலின் கொடுமையே -என்று சொல்லா நின்ற வேலையும்
ஐஸ்வர்ய பிரகாசகமான வெண் கொற்றக் கொடையையும் உடைய ஸ்ரீ குலசேகரப் பெருமாள் அருளிச் செய்த

பன்னிய நூல் பத்தும் வல்லார் பாங்காய பத்தர்களே—
பரம்பி -லஷணத்தால் குறைவற்ற இப்பத்தும் வல்லார்கள்
ஸ்ரீ திருத் தாயாராயும் அடியாராயும் அனுபவிக்கப் பெறுவார்கள் –

——————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய வாச்சான்  பிள்ளை  ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம்.
ஸ்ரீ குலேசேகரர்    ஆழ்வார் ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள்  ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு வடிகளே சரணம்

பெருமாள் திருமொழி -7–ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் –

November 8, 2015

பிரவேசம் –

ஸ்ரீ பிராட்டி ஸ்ரீ திருவடியைக் கண்டவாறே -பிரணய ரோஷம் தலையெடுத்து —
பிதுர் வசன பரிபாலனம் பண்ணப் போந்தார் என்று இறே
ஸ்ரீ பெருமாள் உங்கள் கோஷ்டியில் பிரசித்தராய் இருப்பது –
இப்பது அங்கன் அன்று காண்-
தம்மை விச்வசித்துக் கை கொடுத்த என்னை கை விடுகைக்காக காண் —
ரஷிதா ஜீவ லோகஸ்ய -என்கிறதையும் விட்டார் இறே என்று கிலாய்த்தால் போலே
கிலாய்த்தார் இவரும் கீழில் திரு மொழியில் –

சர்வாத்மாக்களுக்கும் ஸ்ரீ பிராட்டிமாரோபாதி பிராப்தி உண்டு என்னும் படி
ஸ்ரீ பகவத் விஷயத்தில் அவஹாகித்தவர் ஆகையால் இவர் கிலாய்த்தார் –
இப்படி கிலாய்த்தத்தைக்கு பிராப்தி உண்டாய் இருக்கிற விஷயத்தை அநாதி காலம் இழந்தோம்
என்கிற இழவு வந்து தலை எடுத்து
முன்பு ஸ்ரீ கிருஷ்ணனைப் பெற்று வைத்து பால்ய அவஸ்தையிலே அவன் செயல்களை அனுபவிக்கப் பெறாதே இழந்திருந்து –
கம்ச வத பர்யந்தமாக முன்புள்ள விரோதிகளை எல்லாம் போக்கி தங்கள் முகத்தில் விழித்த ஸ்ரீ கிருஷ்ணனைக் கண்ட போது
கீழ் அனுபவிக்கப் பெறாத இழவுகளைச் சொல்லிக் கூப்பிட்ட ஸ்ரீ தேவகியார் பாசுரத்தாலே
அநாதி காலம் தாம் இழந்த இழவுகளைச் சொல்லுகிறார் -இத் திரு மொழியிலே –

——————–

ஆலை நீள் கரும்பு அன்னவன் தாலோ
அம்புயத் தடம் கண்ணினன் தாலோ
வேலை நீர் நிறத் தன்னவன் தாலோ
வேழ போதக மன்னவன் தாலோ
ஏலவார் குழல் என் மகன் தாலோ
என்று என்று உன்னை என் வாய் இடை நிறைய
தால் ஒலித்திடும் திரு வினை இல்லாத
தாயிற் கடை யாயின தாயே –7-1-

பதவுரை

ஆலை நீள் கரும்பு அன்னவன்–ஆலையிலிட்டு ஆடத் தகுந்த நீண்ட கரும்பு போன்ற கண்ணனே!
தாலோ –(உனக்குத்) தாலாட்டு
அம்புயம் தட கண்ணினன்–தாமரை போன்று விசாலமான திருக் கண்களை உடையவனே!
தாலோ – தாலேலோ;-
வேலை நீர் நிறத்து அன்னவன்–கடலின் நிறம் போன்ற நிறத்தை யுடையவனே!.
தாலோ -தாலேலோ
வேழம் போதகம் அன்னவள்–யானைக் குட்டி போன்றவனே!
தாலோ–தாலேலோ;
ஏலம் வார் குழல்–பரிமளம் மிக்கு நீண்ட திருக் குழலை யுடைய!
என் மகன்–என் மகனே!
தாலோ -தாலேலோ;
என்று என்று–இப்படி பலகாலுஞ்சொல்லி
என் வாயிடை நிறைய–என் வாய் திருப்தி யடையும்படி
உன்னை தால் ஒலித்திடும் திருவினை இல்லா தாயரில்–உன்னை தாலாட்டுகையாகிற ஸம்பத்து இல்லாத தாய்மார்களில்
கடை ஆயின தாய்–கடையான தாயாயிரா நின்றேன் நான் (என்கிறாள் தேவகி.)

ஆலை நீள் கரும்பு அன்னவன் தாலோ
சமைய வளர்ந்த ஆலைக் கரும்பு போலே ரசேந்த்ரியத்துக்கு இனியனானவனே

அம்புயத் தடம் கண்ணினன் தாலோ
விகாசம் செவ்வி குளிர்த்தி மென்மை யுடைய தாமரைப் பூ போலே இருக்கிற திருக் கண்களைக் கொண்டு
என்னை குளிர நோக்குகிறவனே-என்று
சஷூர் இந்த்ரியத்துக்கு இனிதாய் இருக்கிற படி சொல்லுகிறார்

வேலை நீர் நிறத் தன்னவன் தாலோ
அவயவங்களை பிரித்துச் சொல்ல வேணுமோ –
அவயவியான மேனி ஸ்ரமஹரமான கடல் போலே இருக்கிறவனே –

வேழ போதக மன்னவன் தாலோ
ஆனைக் கன்று போலே வைத்த கண் வாங்காதே பார்த்த படியே இருக்கும் படியான சரிதங்களை உடையவனே –

ஏலவார் குழல் என் மகன் தாலோ
இப்படி உபமானங்களால் சொல்ல ஒண்ணாமையாலே –
என் மகன் -என்னும் அத்தனை அல்லது

என்று என்று உன்னை என் வாய் இடை நிறைய தால் ஒலித்திடும் திரு வினை இல்லாத
இப்படி பல காலும் சொல்லி வாயாரத் தாலாட்டும் சம்பத்து இல்லாத –

தாயிற் கடை யாயின தாயே –
பெறுகைக்கு நோன்பு நோற்று பெற்று வைத்து அனுபவத்தில் குறைய நிற்கையாலே
பிள்ளைகளைப் பெற்று அனுபவிக்கும் தாய் மார் எல்லாரிலும் கடையானேன் இறே நான் –

———————————————————————

வடி கொள் அஞ்சனம் எழுது செம் மலர் கண் மருவி
மேல் இனிது ஒன்றினை நோக்கி
முடக்கி சேவடி மலர் சிறு கரும் தாள்
பொலியும் நீர் முகில் குழவியே போலே
அடக்கி ஆர செஞ்சிறு விரல் அனைத்தும்
அம் கை யோடு அணைந்து ஆனையில் கிடந்த
கிடக்கை கண்டிட பெற்றிலன் அந்தோ!
கேசவா ! கெடுவேன் கெடுவேனே– 7-2-

பதவுரை

வடி கொள்–கூர்மையை யுடைத்தாய்
அஞ்சனம் எழுது–மையிடப் பெற்றதாய்
செம் மலர்–செந்தாமரை மலரை ஒத்ததான
கண்–கண்களாலே
மேல் ஒன்றினை–மேற்கட்டியிலே தொங்க விட்டிருக்கும் கிளி முதலியவற்றில் ஒரு வஸ்துவை
இனிது–இனிதாக
மருவி நோக்கி–பொருந்தப் பார்த்துக் கொண்டும்
கரு தாள்–கறுத்த புறந்தாளை யுடையதும்
மலர்–செந்தாமரை மலரை யொத்து
சிறு–சிறுத்த
சே அடி–சிவந்த அகவாயை உடையதுமான திருவடிகளை
முடக்கி–முடக்கிக் கொண்டும்
நீர் பொலியும்–(கழுத்தளவும் பருகின) நீர் விளங்கப் பெற்ற
முகில் குழவி போல–மேகக் குட்டிப் போல,
செம்சிறு விரல் அனைத்தும்–அழகிய சிறுத்த திரு விரல்களெல்லாவற்றையும்
அம் கையோடு–உள்ளங்கையிலே
அடக்கி ஆர–அடங்கும் படி
அணைந்து–முடக்கிப் பிடித்துக் கொண்டும்
ஆனையின் கிடந்த கிடக்கை–ஆனை கிடக்குமா போலே பள்ளி கொண்டருளுமழகை.
கண்டிட பெற்றிலேன்–கண்டு அநுபவிக்கப் பெறாத பாவியானேன்;
அந்தோ–ஐயோ!
கேசவா–கண்ண பிரானே!
கெடுவேன் கெடுவேன்–ஒன்று மநுபவிக்கப்பெறாத பெரும் பாவியானேன்.

வடி கொள் அஞ்சனம் எழுது செம் மலர் கண் மருவி
கூர்மையை உடைய செம்மலர்க் கண் என்னுதல்-
திருக் கண்ணுக்கு ஈடாக வடிக்கப்பட்ட அஞ்சனத்தை உடைய கண்ணன் -என்னுதல்
செம்மலர் -சிவந்த தாமரை போலே இருந்துள்ள

மேல் இனிது ஒன்றினை நோக்கி
பிள்ளையைத் தொட்டிலே வளர்த்தி -அநந்ய பரனாய் பார்த்து கிடக்கைக்காக
மேலே ஒன்றைத் தூக்கி வைப்பார்கள் இறே –
அத்தை இனியனாய்க் கொண்டு சதா தர்சனம் பண்ணிக் கிடக்கும் இறே

முடக்கி சேவடி மலர் சிறு கரும் தாள்
அங்குக் கிடக்கும் படி சொல்லுகிறது மேல் –
புறவாய் கறுத்து-அகவாய் சிவந்த திருவடிகளை முடக்கி –

பொலியும் நீர் முகில் குழவியே போலே
கழுத்தே கட்டளையாக நீரைப் பருகிற்று ஒரு மேகக் கன்று போலே
அடக்கி ஆர செஞ்சிறு விரல் அனைத்தும் அம் கை யோடு அணைந்து –
செறிந்து அழகிதான திரு விறர்களை உள்ளங்கையிலே அடக்கும் படி மடித்துப் பிடித்து

ஆனையில் கிடந்த கிடக்கை கண்டிட பெற்றிலன் அந்தோ!
ஆனை தன அவயவங்களை பொகட்டுக் கொண்டு ஸ்வைரகமாக கிடந்தால் போலே
தொட்டிலிலே கிடக்கும் போது அனுபவிக்கப் பெற்றிலேன் என்று ஐயோ -என்கிறாள்

கேசவா ! கெடுவேன் கெடுவேனே–
அப்போதைத் திருக் குழல் அழகை அனுபவிக்கவும் பெற்றிலேன்
முன்பு மலடு நின்று இழந்தேன்
பின்பு பெற்று வைத்தே அனுபவிக்கப் பெறாது ஒழிந்தேன்
இரண்டாலும் மஹா பாபி இறே நான் –

———————————————————————

முந்தை நன் முறை அன்புடை மகளிர்
முறை முறை தம் தம் குறங்கிடை இருத்தி
எந்தையே ! என் தன் குல பெரும் சுடரே !
எழு முகில் கணத்து எழில் கவரேறே!
உந்தை யாவன் என்று உரைப்ப நின் செங்கேழ்
விரலினும் கடை கண்ணினும் காட்ட
நந்தன் பெற்றனன் நல்வினை இல்லா
நாங்கள் கோன் வாசுதேவன் பெற்றிலனே– 7-3-

பதவுரை

அன்பு உடை–ப்ரீதியை யுடையவர்களான
முந்தை நல் முறை மகளிர்–பரம்பரையாக வருகிற நல்ல உறவு முறையை யுடைய பெண்கள்
தம் தம் குறங்கிடை–தங்கள் தங்கள் துடைகளிலே
முறை முறை–க்ரமம் க்ரமமாக
இருத்தி–வைத்துக் கொண்டு
எந்தையே–“என் அப்பனே!
என் தன் குலம் பெருசுடரே–எங்கள் குலத்துக்குப் பெருத்ததொரு விளக்கானவனே!
எழு முகில் கணத்து–(கடலில் நீரை முகந்து கொண்டு) மேலேழுகின்ற மேக ஸமூஹத்தினுடைய
எழில் கவர்–அழகைக் கவர்ந்து கொண்ட
ஏறே–“ காளை போன்றவனே!”
(என்றிப்படி பலவாறாகத் துதித்து)
உந்தையாவன் என்று உரைப்ப–உன் தகப்பனார் யார்? (காட்டு,) என்றவளவிலே
நின்–உன்னுடைய
செம் கேழ் விரலினும்–சிவந்து சிறந்த விரலினாலும்
கடை கண்ணினும்–கடைக் கண்ணாலும்
காட்ட–(இன்னார் என் தகப்பனார் என்று) காட்ட
(அந்தப் பாக்கியத்தை)
நந்தன் பெற்றனன்–நந்தகோபர் பெற்றார்;
நல் வினை இல்லா நங்கள் கோன்–பாக்யஹீநையான என்னுடைய பர்த்தாவான
வசுதேவன்–வஸுதேவர்
பெற்றிலன்–(நந்தகோபர் பெற்ற பாக்கியத்தைப்) பெறவில்லை.

முந்தை நன் முறை அன்புடை மகளிர்
தாய்மார் -அவர்களுடைய தாய்மார் -பாட்டிமார் எல்லாரும்

முறை முறை தம் தம் குறங்கிடை இருத்தி
அவ்வோ அடைவுகளிலே குறங்குகளிலே வைத்துக் கொண்டு

எந்தையே ! என் தன் குல பெரும் சுடரே ! எழு முகில் கணத்து எழில் கவரேறே!
என் தன தமப்பனே -எங்கள் குலத்துக்கு விளக்கானவனே
ஏழு வகைப் பட்ட மேக சமூஹங்களினுடைய அழகைக் கவர்ந்த சிம்ஹம் போலே இருக்கிறவனே

உந்தை யாவன் என்று உரைப்ப
இப்படி ஸ்தோத்ரங்களைப் பண்ணி உங்கள் தமப்பனார் ஆர் என்று கேட்க

நின் செங்கேழ் விரலினும் கடை கண்ணினும் காட்ட நந்தன் பெற்றனன்
சிவந்த விரலாலும் கண்ணாலும் காட்ட ஸ்ரீ நந்த கோபர் பெற்றார்

நல்வினை இல்லா நாங்கள் கோன் வாசுதேவன் பெற்றிலனே–
பாஹ்ய ஹீனையான என்னை கைப்பிடிக்கையாலே ஸ்ரீ ஸ்ரீ வஸூ தேவரும் இழந்தாரே –

—————————————————————————

களி நிலா எழில் மதி புரைமுகமும்
கண்ணனே ! திண் கை மார்வும் திண் தோளும்
தளி மலர் கரும் குழல் பிறை யதுவும்
தடம் கொள் தாமரை கண்களும் பொலிந்த
இளமை இன்பத்தை இன்று என் தன் கண்ணால்
பருவேற்க்கு இவள் தாய் என நினைந்த
அளவில் பிள்ளைமை இன்பத்தை இழந்த
பாவியேன் எனது ஆவி நில்லாதே– 7-4-

பதவுரை

கண்ணனே களி நிலா–ஸ்ரீ கிருஷ்ணனே! ஆநந்தத்தை விளைவிக்கும் நிலாவை யுடைய
எழில் மதி புரை முகமும் திண் கை–பூர்ண சந்திரனை ஒத்த திருமுகமும் திண்ணிதான திருக் கைகளும்
மார்வும்–திரு மார்பும்
திண் தோளும்–வலிமை பொருந்திய திருத் தோள்களும்
தளிர் மலர் கரு குழல்–தளிரையும் மலரையும் முடைத்தாய்க் கறுத்த திருக் குழற்கற்றையும்
பிறை அதுவும் தடங்கொள்–அஷ்டமீ சந்திரன் போன்ற திருநெற்றியும் விசாலமான
தாமரை கண்களும்–தாமரை போன்ற திருக் கண்களும் (ஆகிய இவை)
பொலிந்த இளமை இன்பத்தை–அழகு பெற்று விளங்கும்படியான யௌவநாவஸ்தையின் போக்யதையை
இன்று–இப்போது
என் தன் கண்ணால்–என்னுடைய கண்ணாலே
பருகுவேற்கு–நான் அநுபவியா நின்றாலும்
இவள் தாய் என நினைந்த–(இவள் என்னுடைய) தாய் என்று நினைப்பதற்குத் தகுதியான
பிள்ளைமை–சைசவப் பருவத்திலுண்டான
அளவு இல் இன்பத்தை–அளவில்லாத ஆநந்தத்தை
இழந்த–அநுபவிக்கப் பெறாமல் இழந்த
பாவியேன் எனது–பாவியான என்னுடைய
ஆவி நில்லாது–உயிரானது தரித்து நிற்க வழி யில்லையே!.

களி நிலா எழில் மதி புரைமுகமும்
செறிந்த நிலாவை வுடைய பூர்ண சந்தரனைப் போலே இருக்கிற திரு முகமும்

கண்ணனே ! திண் கை மார்வும் திண் தோளும்
ஸ்ரீ கிருஷ்ணனே -சொல்லுகிற -விலஷணமான திண்ணிதாய் இருக்கிற
திருக்கையும் திரு மார்வும் திருத் தோளும்

தளி மலர் கரும் குழல் பிறை யதுவும்
தளிரையும் மலரையும் உடைத்தாய் இருண்டு இருக்கிற திருக் குழலின் கீழே
உன்நேயமான பிறை போலே விளங்குகிற திரு நெற்றியும்

தடம் கொள் தாமரை கண்களும்-
ஒரு தாமரைப் பூவே தடாகம் எல்லாம் விழுங்கும் படி அலர்ந்தாப் போலே
திரு மேனி எல்லாம் பரப்பு மாறும் படி அலர்ந்த திருக் கண்களும்

பொலிந்த இளமை இன்பத்தை இன்று என் தன் கண்ணால் பருகுவேற்க்கு –
இவ்வவயவ சோபைகளால் விளங்கா நின்றுள்ள யௌவன அவஸ்தையில் அழகை
என் கண்ணாலே அனுபவிக்கிற எனக்கு

இவள் தாய் என நினைந்த அளவில் பிள்ளைமை இன்பத்தை இழந்த பாவியேன் –
தாய் ஒருத்தியையும் அல்லது வேறு ஒருத்தியையும் அறியாத அதி சைசவமாய் இருக்கிற
பருவத்தை அனுபவிக்கப் பெறாமையாலே
இப்போது கிட்டி அனுபவிக்கச் செய்தேயும் இழவே தலை எடுக்கும் படியான
மஹா பாபத்தைப் பண்ணினேன்

எனது ஆவி நில்லாதே–
என் பிராணன் தரிக்கிறது இல்லை –

———————————————————————–

மருவு நின் திரு நெற்றியில் சுட்டி அசை தர
மணி வாய் இடை முத்தம்
தருதலும் உன் தன் தாதையை போலும்
வடிவு கண்டு கொண்டு உள்ளம் உள் குளிர
விரலை செஞ்சிறு வாய் இடை சேர்த்து
வெகுளியாய் நின்று உரைக்கும் அவ் வுரையும்
திருவிலேன் ஒன்றும் பெற்றிலேன் எல்லாம்
தெய்வ நங்கை யசோதை பெற்றாளே –7-5-

பதவுரை

நின் திரு நெற்றியில் மருவும் சுட்டி அசை தர–உன்னுடைய திரு நெற்றியிலே பொருந்தியிருக்கிற சுட்டியானது அசையும்படி
மணிவாயிடை முத்தம் தருதலும் உன்தன் தாதையை போலும்–அழகிய வாயிலுண்டான
முத்தத்தை கொடுப்ப தென்ன உன்னுடைய தகப்பானரைப் போன்ற
வடிவு–(உன்) வடிவழகை
கண்டு கொண்டு–(நான்) பார்த்து
உள்ளம் டீள் குளிர–(கடலில் நீரை முகந்து கொண்டு) மேலேழுகின்ற மேக ஸமூஹத்தினுடைய
செம் சிறு வாயிடை–சிவந்த சிறிய திருவாயிலே
விரலை சேர்த்து வெகுளியாய் நின்று உரைக்கும் அ உரையும்–விரல்களை வைத்துக் கொண்டு (நீ) சீற்றத்தோடே
சொல்லுகிற மழலைச் சொற்க ளென்ன (ஆகிய இவற்றிலே)
ஒன்றும் திரு இலேன் பெற்றிலேன் –ஒன்றையும் பாக்யமற்றவளான நான் அநுபவிக்கப்பெறவில்லை.
தெய்வ நங்கை எசோதை–‘தெய்வமாது’ என்று சொல்ல லாம்படியான யசோதைப் பிராட்டி
எல்லாம் பெற்றாளே–அந்த பால்யசேஷ்டிதங்கள் எல்லாவற்றையும் அநுபவிக்கப் பெற்றாளே!.

மருவு நின் திரு நெற்றியில் சுட்டி அசை தர
திரு நெற்றியிலே கூடப் பிறந்தால் போலே இருக்கும் திருச் சுட்டியானது அசையும் படி

மணி வாய் இடை முத்தம்-தருதலும் உன் தன் தாதையை போலும்
அழகிய வாயில் முத்தம் -அதர முத்தம் கொடுத்தாலும் உன் தமப்பனைப் போலே

வடிவு கண்டு கொண்டு உள்ளம் உள் குளிர
வடிவு அழகைக் கண்டு நெஞ்சமானது குளிர

விரலை செஞ்சிறு வாய் இடை சேர்த்து வெகுளியாய் நின்று உரைக்கும் அவ் வுரையும்
சிவந்து குவிந்து இருந்துள்ள திருப் பவளத்திலே திரு விரலைச் சேர்த்துச் சீற்றத்தோடு நின்று
சொல்லுகிற மழலைச் சொல்களும்

திருவிலேன் ஒன்றும் பெற்றிலேன் எல்லாம் தெய்வ நங்கை யசோதை பெற்றாளே –
பால்ய அவஸ்தையிலே அனுபவங்களை அனுபவிக்க பாஹ்ய ஹீனையான நான் இழந்தேன்
இழக்கைக்கு நான் ஒருத்தி உண்டானாப் போலே
அனுபவிக்கைக்கு இட்டுப் பிறந்த ஸ்ரீ யசோதைப் பிராட்டி எல்லாம் பெற்றாள் இறே –

———————————————————————————-

தண் தாமரை கண்ணனே! கண்ணா !
தவழ்ந்து எழுந்து தளர்ந்த்ததோர் நடையால்
மண்ணில் செம் பொடி ஆடி வந்து என் தன்
மார்வில் மன்னிடப் பெற்றிலேன் அந்தோ !
வண்ண செஞ்சிறு கை விரல் அனைத்தும்
வாரி வாய் கொண்ட அடிசிலின் மிச்சில்
உண்ண பெற்றிலேன் ஓ! கொடு வினையேன்
என்னை என் செய்ய பெற்றது எம்மோயே –7-6-

பதவுரை

தண் அம் தாமரை கண்ணனனே–குளிர்ந்த அழகிய தாமரை போன்ற திருக்கண்களை யுடையவனே
கண்ணா தவழ்ந்து எழுந்து–கண்ணபிரானே (நீ) தவழ்ந்து கொண்டுஎழுந்திருந்து
தளர்ந்தது ஓர் நடையால்–தட்டுத்தடுமாறி நடப்பதாகிற ஒரு நடையினால்
செம்மண் பொடியில்–சிவந்த புழதி மண்ணிலே
ஆடி வந்து–விளையாடி (அக்கோலத்தோடே) வந்து
என் தன் மார்வில்–என்னுடைய மார்விலே
மன்னிட பெற்றிலேன் அந்தோ–நீ அணையும் படியான பாக்கியத்தை பெற்றிலேன்; இஃது என்ன தெளர்ப்பாக்கியம்!
வண்ணம் செம்–அழகு பெற்றுச் சிவந்து
சிறு–சிறிதான
கை விரல் அனைத்தும்–கைவிரல்களெல்லா வற்றாலும்
வாரி வாய்க் கொண்ட அடிசிலின் மிச்சல் உண்ணப் பெற்றிலேன்–வாரிக் கொண்டு அமுது செய்த ப்ரஸாதத்தினுடைய
சேஷத்தை (நான்) உண்ணப் பெறவில்லை;
கொடுவினையேன்–(இவற்றை யெல்லாம் நான் இழக்கும் படியாக) மஹா பாபத்தைப் பண்ணினேன்;
ஓ எம்மோய் என்னை என் செய்ய பெற்றது–ஐயோ! என் தாயானவள் என்னை எதுக்காக பெற்றாளோ!

தண் தாமரை கண்ணனே! கண்ணா !
குளிர்ந்து அழகிதான தாமரைப் பூப் போலே அலர்ந்த திருக்கண்களை யுடைய ஸ்ரீ கிருஷ்ணனே

தவழ்ந்து எழுந்து தளர்ந்த்ததோர் நடையால்
தவழ்ந்து எழுந்து இருந்து நடக்கப் புகுவது தள்ளம்பாறுவதான தளர் நடையாலே

மண்ணில் செம் பொடி ஆடி வந்து என் தன் மார்வில் மன்னிடப் பெற்றிலேன் அந்தோ !
நிலப் பண்பாலே சிவந்த புழுதியை யாடி வந்து அக்கோலத்தோடே என் மார்விலே வந்து
கட்டிக் கொண்டு கிடக்கப் பெற்றிலேன் –

வண்ண செஞ்சிறு கை விரல் அனைத்தும் வாரி வாய் கொண்ட அடிசிலின் மிச்சில் உண்ணப் பெற்றிலேன் ஓ! கொடு வினையேன்
அழகியதாய் சிவந்த திரு மார்வில் அணைத்தாலும்-வாரி அமுது செய்து சேஷத்தை உண்ணப் பெறாத
மஹா பாபத்தைப் பண்ணினேன்

என்னை என் செய்ய பெற்றது எம்மோயே –
ராஜ மஹிஷியாய்-பிள்ளைகள் அலைந்த எச்சில் உண்ணாமைக்கோ-எங்கள் தாயார் என்னைப் பெற்றது –
அமுதிலும் ஆற்ற இனிதே தம் மக்கள் சிறு கை அளாவிய கூழ் –
மக்கள் மெய் தீண்டல் உடற்கு இன்பம் மற்றவர் தம் சொற் கேட்டல் இன்பம் செவிக்கு –

—————————————————————–

குழகனே !என் தன் கோமள பிள்ளாய்
கோவிந்தா ! என் குடங்கையில் மன்னி
ஒழுகு பேர் எழில் இளம் சிறு தளிர் போல்
ஒரு கையால் ஒரு முலை முகம் நெருடா
மழலை மென் நகை இடை இடை அருளா
வாயிலே முலை இருக்க வென் முகத்தே
எழில் கொள் நின் திரு கண் இணை நோக்கம்
தன்னையும் இழந்தேன் இழந்தேனே– 7-7-

பதவுரை

குழகனே–எல்லாரோடும் கலக்கும் ஸ்வபாவமுடையவனே!
என் தன் கோமளம் பிள்ளாய்–என் வயிற்றிற் பிறந்த அழகிய குமாரனே!
கோவிந்தா–கோவிந்தனே!
என் குடங்கை யில் மன்னி ஓழுகு பேர்–என்னுடைய குடங்கையிலே பொருந்தியிருந்து வெள்ளமிடாநின்ற மிக்க
எழில் இள சிறு தளிர் போல்–அழகை யுடைத்தாயும் மிகவும் இளைசான தளிர் போன்றதுமான
ஒரு கையால் ஒரு முலை முகம்–ஒரு திருக் கையாலே (என்னுடைய) ஒரு முலைக் காம்பை
நெருடா–நெருடிக் கொண்டு
முலை வாயிலே இருக்க–மற்றொரு முலையானது (உன்) வாயில் இருக்க
இடை இடை–நடு நடுவே
என் முகத்தை மழலை மெல் நகை அருளா–என் முகத்தை நோக்கி புன் சிரிப்பைச் செய்து கொண்டு
எழில் கொள் நின் திரு கண் இணை நோக்கம் தன்னையும்–அழகிய உன் இரண்டு கண்களாலும் பார்க்கிற பார்வையையும்
இழந்தேன் இழந்தேன்–ஐயோ! இழந்தேனே!

குழகனே !என் தன் கோமள பிள்ளாய்
லோக யாத்ரையிலே -அந்ய பரையாய்-தனக்கு முகம் கொடுத்து இருந்தால் –
லோக யாத்ரையைக் கை விட்டு உன்னையே
பார்க்க வல்லேனாம் படி கலைக்க வல்லை யாய்த்து -காணப் பெறாத சௌகுமார்யத்தை உடையவனே –

கோவிந்தா ! என் குடங்கையில் மன்னி
கோ ஸம்ர்த்தியை உடையவனே -என் கையிலே இருந்து –

ஒழுகு பேர் எழில் இளம் சிறு தளிர் போல் ஒரு கையால் ஒரு முலை முகம் நெருடா
அழகு வெள்ளம் பரந்து ஒடும்படியான தளிர் போலே இருக்கிற ஒரு திருக்கையாலே
இவள் இரங்கி முலை கொடுக்கும் படி

ஒரு முலைக் கண்ணை நெருடிக் கொண்டு மழலை மென் நகை இடை இடை அருளா வாயிலே முலை இருக்க வென் முகத்தே
வாயிலே முலை இருக்கச் செய்தே முலை சுரக்கும் படியாக தன் முகத்திலே
இடை இடையே மழலைச் சிரிப்பாக சிரியா

எழில் கொள் நின் திரு கண் இணை நோக்கம் தன்னையும் இழந்தேன் இழந்தேனே–
அதுக்கும் இரங்காரும் இரங்கும்படி அழகிய திருக் கண்களாலே பார்க்கிற பார்வையும் –
பெற்ற வன்றே போக விட்டதுக்கு மேலே
இவ் வவஸ்தையிலே சேஷ்டிதங்களையும் அனுபவிக்கப் பெற்றிலேன் –

——————————————————–

அவதாரிகை –

எட்டாம் பாட்டு -நான் இழந்த இழவு எல்லாம் ஸ்ரீ யசோதை பிராட்டி பெற்றாள் என்கிறாள் –

முழுதும் வெண்ணெய் அளைந்து தொட்டு உண்ணும்
முகிழ் இளம் சிறு தாமரை கையும்
எழில் கொள் தாம்பு கொண்டு அடிப்பதற்கு எள்கு
நிலையும் வெண் தயிர் தோய்ந்த செவ் வாயும்
அழுகையும் அஞ்சி நோக்கும் அந் நோக்கும்
அணி கொள் செஞ்சிறு வாய் நெளிப்பதுவும்
தொழுகையும் இவை கண்ட வசோதை
தொல்லை இன்பத்து இறுதி கண்டாளே– 7-8-

பதவுரை

வெண்ணெய் முழுதும் அளைந்து–வெண்ணெய் குடத்திலுள்ளவளவும கையை விட்டு (அளைந்து)
தொட்டு உண்ணும்–எடுத்து உண்கிற
இள முகிழ் தாமரை சிறுகையும்–இளந்தளிரையும் தாமரையையும் போன்ற சிறிய திருக் கைகளும்
எழில் கொள் தாம்பு கொண்டு அடிப்பதற்கு–அழகிய தாம்பாலே அடிக்க (அதற்கு)
எள்கு நிலையும்–அஞ்சி நிற்கும் நிலையும்
வெண் தயிர் தோய்ந்த செம் வாயும்–வெளுத்த தயிர் பூசிய சிவந்த வாயும்,
அழுகையும்–அழுவதும்,
அஞ்சி நோக்கும் அ நோக்கும்–பயந்து பார்க்கிற அப்பார்வையும்
அணி கொள் செம் சிறு வாய் நெளிப்பதுவும்–அழகிய சிவந்த சிறிய வாய் துடிப்பதும்
தொழுகையும்–அஞ்ஜலி பண்ணுகையும் (ஆகிற
இவை–இவற்றையெல்லாம்
கண்ட–நேரில் கண்ணாற்கண்டு அநுபவித்த
அசோதை–யசோதை யானவள்
தொல்லை இன்பத்து–பரமானந்தத்தினுடைய
இறுதி–எல்லையை
கண்டாள்-காணப் பெற்றாள்

முழுதும் வெண்ணெய் அளைந்து –
வெண்ணெயில் உண்டான ஆதராதிசயத்தாலே திருக் கண்களை வெண்ணெய் குடத்திலே
இட்டு அளையுமாய்த்து-

தொட்டு உண்ணும்
அதி சாபலத்தாலே -மாளும் -என்று -விரலோடு வாய் தோய்ந்த -என்றும் சொல்லுமா போலே
தொட்டு உண்ணுமாய்த்து

முகிழ் இளம் சிறு தாமரை கையும்
இளம் தளிர் போலேயும் நிறத்துக்கு -விகாசம் -செவ்விக்கு தாமரைப் பூ போலே இருக்கிற திருக் கைகளும் –

எழில் கொள் தாம்பு
ஸ்பர்சிக்கைக்கு ஆசைப்பட்டு இருக்கும் திருமேனியை ஸ்பர்சித்தது இறே என்று –
எழில் கொள் தாம்பு -என்கிறார் –
ராஜ ஜன்மம் வேண்டா –அசேதனமாகவே அமையும் அங்குத்தை ஸ்பர்சம் பெறில்-என்று இருக்குமவர் இறே

கொண்டு அடிப்பதற்கு எள்கு நிலையும் –
இவர் அங்குத்தை ஸ்பர்சத்தை நினைத்து -எழில் கொள் தாம்பு -என்கிறார் –
ஆகிலும் கைக்கு எட்டிற்று ஒன்றை இட்டு அவள் -அடிக்க அதுக்கு ஈடுபட்டு பையாந்து நிற்கும் நிலையும்

வெண் தயிர் தோய்ந்த செவ் வாயும்
தயிர் களவு கண்டாய் -என்று அடிக்கப் புக்கவாறே -இல்லை செய்கைக்காக முகத்திலே பூசிக் கொள்ளுமே –
வெளுத்த தயிரும் சிவந்த திருப் பவளமுமான பரபாகம் இருக்கிற படி –

அழுகையும் அஞ்சி நோக்கும் அந் நோக்கும்
இல்லை -என்று இருக்கச் செய்தே களவை நாடுவதே நம் அழுகையும்
அழப் புக்கவாறே -வாய் வாய் -என்னும் இறே –
அத்தாலே பயப்பட்டு அச்சம் எல்லாம் தன்னோக்கிலே தோற்றும்படி பார்த்து கொடு நிற்கும் நிலையும்

அணி கொள் செஞ்சிறு வாய் நெளிப்பதுவும்
பின்னையும் அழாது இருக்கவும் மாட்டான் -அழவும் மாட்டான் —
அழகிய திருப் பவளத்தை நெளிக்கும் இத்தனை இறே

தொழுகையும் இவை கண்ட வசோதை
போக்கற்றார் செய்யும் செயல் இறே தொழுகையும் –
சாபராதாரானருக்கு அபராதம் பொறுக்குமது அஞ்சலி என்னும் இடம் தான் அறிந்து இருக்குமது
யாகையாலே அஞ்சலியைப் பண்ணுமதாய்த்து

இவை கண்ட யசோதை –
இவற்றை இங்கே சாஷாத் கரிக்க கண்ட ஸ்ரீ யசோதைப் பிராட்டி

தொல்லை இன்பத்து இறுதி கண்டாளே–
ஸ்ரீ பரம பதத்தில் நிரவதியான அனுபவத்தை சாவதி யாக்கினவாறே –
அங்கே சென்று எல்லாரும் தொழ இருக்குமவன் தான்
தொழுகையாலே அபரிச்சின்னமான அனுபவம் பரிச்சின்னமாய்த்து இறே –

———————————————————————————-

குன்றினால் குடை கவித்ததும் கோல
குரவை கோத்ததும் குடமாட்டும்
கன்றினால் விள வெறிந்ததும் காலால்
காளியன் தலை மிதித்ததும் முதலா
வென்றி சேர் பிள்ளை நல் விளையாட்டம் அனைத்திலும்
அங்கு என் உள்ளம் குளிர
ஒன்றும் கண்டிட பெற்றிலேன் அடியேன்
காணுமாறு இனி வுண்டேனில் அருளே— 7-9–

பதவுரை

குன்றினால் குடை கவித்ததும்–கோவர்த்தன மலையைக் குடையாகத் தாங்கி நின்றதும்
கோலம் குரவை கோத்ததும்–அழகாக ராஸ க்ரீடை செய்ததும்
குடம் ஆட்டும்–குடக் கூத்தாடினதும்
கன்றினால் விள எறிந்ததும்–கன்றாய் வந்த ஒரு அசுரனைக் கொண்டு (அஸுராவேசமுடைய) விளங்காய்களை உதிர்த்ததும்
காலால் காளியன் தலை மிதித்ததும் முதலா–திருவடிகளாலே காளிய நாகத்தின் தலையை மர்த்தித்ததும் (ஆகிய இவை) முதலாகவுள்ள
வென்றி சேர்–வெற்றி பொருந்திய
நல் பிள்ளை விளையாட்டம் அனைத்திலும்–விலக்ஷணமான பால்ய சேஷ்டிதங்க ளெல்லா வற்றினுள்ளும்
ஒன்றும்–ஒரு சேஷ்டிதத்தையும்
என் உள்ளம் உள் குளிர–என் நெஞ்சு குளிரும்படி
அடியேன்–நான்
அங்கு கண்டிட பெற்றிலேன்–அச்சேஷ்டிதங்களை நீ செய்தவிடத்தில் கண்ணாரக் கண்டு களிக்க பெற்றிலேன்;-
இனி–இப்போது
காணும் ஆறு–(அவற்றை நான்) காணத் தக்க உபாயம்
உண்டு எனில்–இருக்குமாகில்
அருள்00கிருபை செய்தருள வேணும்.

குன்றினால் குடை கவித்ததும் கோல குரவை கோத்ததும்
இடையரும் பசுக்களும் தொலையும் படியாக இந்த்ரன் கல் வர்ஷம் வர்ஷித்த படியாலே
மலையை எடுத்து குடையாக தரித்ததும் –
தர்ச நீயமான குரவைக் கூத்திலே கோபிகாரோடு ஒக்கத் தன்னையும் கோத்ததும்

குடமாட்டும் கன்றினால் விள வெறிந்ததும்
ஒருவன் கன்றாய் ஒருவன் விளாவாய் வந்த இருவரையும் சேர முடித்ததும்

காலால் காளியன் தலை மிதித்ததும் முதலா
நான் ஆசைப்பட்டு பெறாத திருவடிகளைக் கொண்டு ஆசூர பிரக்ருதியான காளியன்
தலையிலே மிதித்தது முதலாக

வென்றி சேர் பிள்ளை நல் விளையாட்டம்
வீரப் பாட்டுக்கும் மௌக்யத்துக்கும் சேர்ந்து இருக்கிற அதி மநோஹரமான
அனைத்திலும் அங்கு என் உள்ளம் குளிர ஒன்றும் கண்டிட பெற்றிலேன் –

அடியேன்
இவை காண்கையே பிரயோஜனமாக இருக்கிற நான்

ஒன்றும் காணப் பெற்றிலேன் – காணுமாறு இனி வுண்டேனில் அருளே—
நீ நினைத்தக்கால் செய்ய ஒண்ணாதது இல்லை -நான் இவை காணும் படி அருள வேணும் –

—————————————————————————–

வஞ்ச மேவிய நெஞ்சுடைப் பேய்ச்சி
வரண்டு நார் நரம்பு எழக் கரிந்துக்க
நஞ்சமார் தரு சுழி முலை அந்தோ !
சுவைத்து நீ அருள் செய்து வளர்ந்தாய்
கஞ்சன் நாள் கவர் கரு முகில் எந்தாய் !
கடைப் பட்டேன் வெறிதே முலை சுமந்து
தஞ்சம் மேல் ஒன்றி இலேன் உய்ந்து இருந்தேன்
தக்கதே நல்ல தாயைப் பெற்றாயே— 7-10-

பதவுரை

வஞ்சம் மேவிய நெஞ்சு உடை பேய்ச்சி–வஞ்சனை பொருந்திய நெஞ்சை யுடையளான பூதனை யானவள்
வரண்டு–உடம்பு சோஷித்து
எழ–(உள்ளுள்ள ரத்தமாம்ஸங்கள) வெளியிற் கொழிக்கும் படியாகவும்
நார் நரம்பு கரிந்து உக்க–நார் போன்ற நரம்புகள் கருகி உதிரும் படியாகவும (அவளுடைய)
நஞ்சம் ஆர் தரு சுழி முலை–விஷந்தீற்றிய கள்ள முலையை
நீ சுவைத்து–நீ ஆஸ்வாதநம் பண்ணியும்
அருள் செய்து–(என் மேல்) கிருபையினாலே
வளர்ந்தாய்–உயிருடன் வளரப் பெற்றாய்
அந்தோ–ஆச்சரியம்!
கஞ்சன் நாள் கவர்–கம்ஸனுடைய ஆயுஸ்ஸை அபஹரித்த
கரு முகில் எந்தாய்–காளமேகம் போன்ற நாயனே!
முலை வெறிதே சுமந்து–(நான்) முலையை வியர்த்தமாகச் சுமந்து
கடைப்பட்டேன்–கெட்டவரிலும் கடைகெட்டவளானேன்;
தஞ்சம் ஒன்று இலேன்–(உன்னையொழிய வேற) புகலற்றிராநின்றேன்;
உய்ந்திருந்தேன்–(என்றைக்காகிலு முன்னைக் கண்ணால் காண்போமென்று)பிராணனைப் பிடித்துக் கொண்டு ஜீவிக்கிறேன்;
தக்கது–உனக்குத் தகுதியான
நல்ல தாயை–நல்ல தாயாரை
பெற்றாய்–ஸம்பாதித்துக் கொண்டாய்.

வஞ்ச மேவிய நெஞ்சுடைப் பேய்ச்சி
இவனைக் கண்டால் செவ்வியராக இருக்க விறே கடவது —
கண்டு வைத்து வஞ்சனத்திலே பொருந்தின பூதனை –

வரண்டு நார் நரம்பு எழக் கரிந்துக்க
மாம்சமும் உள்ளுண்டான உதிரமும் -முலைப் பாலோடு கொழித்துக் கொண்ட புறப்பட –
சேஷித்த உடம்பு நார் நரம்பும் தோலுமாம் படி கரிந்துக்க

நஞ்சமார் தரு சுழி முலை அந்தோ ! சுவைத்து நீ அருள் செய்து வளர்ந்தாய்
கிடந்த ஆஸ்ரயத்தையும்-இழக்க வற்றாய்-மிக்க நஞ்சை உடைத்தாய் -கோபத்தையும் உடைத்தாய் இருக்கிற
முலையாலே தாரகமாக வுண்டு அருளி வளர்ந்தாய்

கஞ்சன் நாள் கவர் கரு முகில் எந்தாய் !
கம்சனுடைய ஆயுஸை-அபஹரித்து அத்தாலே ஏறின புகரை யுடைய வடிவை யுடையையாய்
அச் செயலாலும் வடிவு அழகாலும் என்னை எழுதிக் கொண்டவனே

கடைப் பட்டேன் வெறிதே முலை சுமந்து
முலை நெரித்த போது உண்பான் ஒரு பிள்ளையைப் பெற்று வைத்து பெறாதே வ்யர்த்தமாய் இருக்கையாலே
எத்தனையேலும் தண்ணியராலும் தாழ்ந்தேன்

தஞ்சம் மேல் ஒன்றி இலேன் உய்ந்து இருந்தேன்
வேறு தாரகர் இல்லாமையாலே பிராணன்களை வருந்தி தரித்து இருந்தேன்

தக்கதே நல்ல தாயைப் பெற்றாயே—
முலைப்பால் அபேஷிதமான போது உனக்கு நல்ல தாயைப் பெற்றாயே –

——————————————————————————–

மல்லை மா நகர்க்கு இறையவன் தன்னை
வான் செலுத்தி வந்து ஈங்கு அணை மாயத்து
எல்லையில் பிள்ளை செய்வன காணாத்
தெய்வ தேவகி புலம்பிய புலம்பல்
கொல்லி காவலன் மாலடி முடி மேல்
கோலமாம் குலசேகரன் சொன்ன
நல் இசை தமிழ் மாலை வல்லார்கள்
நண்ணுவார் ஒல்லை நாரணன் உலகே– 7-11-

பதவுரை

மல்லை மா நகர்க்கு–செல்வம் நிரம்பிய பெரிய நகரமாகிய வட மதுரைக்கு
இறையவன் தன்னை–தலைவனாயிருந்த கம்ஸனை
வான் செலுத்தி–வீர ஸ்வர்க்கத்திற்கு அனுப்பி
ஈங்கு வந்து அணை–(தேவகீ ஸமீபமாகிய) இங்கே வந்து சேர்ந்த
பிள்ளை–கண்ண பிரானுடைய
மாயத்து எல்லை இல் செய்வன–அற்புதத்தில் எல்லை யில்லாத சேஷடிதங்களை
காணா–(நடந்த போது) காணப் பெறாத
தெய்வத் தேவகி–தெய்வத் தன்மை பொருந்திய தேவகி யானவள்
புலம்பிய புலம்பல்–புலம்பிக் கொண்டு சொன்ன பாசுரங்களை
கொல்லி காவலன்–கொல்லி நகர்க்கு அரசராய்
மால் அடி முடி மேல் கோலம் ஆம்–ஸர்வேச்வரனுடைய திருவடிகளைத் தம் திருமுடிக்கு அலங்காரமாக வுடையரான
குலசேகரன்–குலசேகராழ்வார்
சொன்ன–அருளிச் செய்த
நல் இசை தமிழ் மாலை–நல்ல இசையையுடைய தமிழினாலாகிய சொல் மாலையை
வல்லார்கள்–ஓத வல்லவர்கள்
ஒல்லை–விரைவாக
நாரணன் உலகு–ஸ்ரீவைகுண்டத்தை
நண்ணுவார்–சேரப் பெறுவர்-

மல்லை மா நகர்க்கு இறையவன் தன்னை-வான் செலுத்தி
மிக்க சம்பத்தை உடைய ஸ்ரீ மதுரைக்கு நிர்வாஹகனான கம்சனை தானே கை தொட்டு முடிக்கையாலே
வீர ஸ்வர்க்கத்திலே பொகட்டு

வந்து ஈங்கு அணை மாயத்து எல்லையில் பிள்ளை செய்வன காணாத்
கம்ச வதம் பண்ணி இங்கே வந்து கிட்டின ஆச்சர்ய சேஷ்டிதங்களுக்கு அவதி இன்றியிலே
இருக்கிற ஸ்ரீ கிருஷ்ணனுடைய பால சேஷ்டிதங்களை காணாமையாலே

தெய்வ தேவகி புலம்பிய புலம்பல்
இவன் சேஷ்டிதங்களை அனுபவிக்கப் பெறாத இழவையும் உடையாளாய்-
இவனைப் பிள்ளையாகப் பெறுகைக்கு ஈடான பாக்யத்தைப் பண்ணின ஸ்ரீ தேவகியார்
புலம்பிய பாசுரத்தை

கொல்லி காவலன்
கொல்லி என்கிற படை வீட்டுக்கு நிர்வாஹகரானவர்

மாலடி முடி மேல் கோலமாம் குலசேகரன் சொன்ன
ஸ்ரீ சர்வேஸ்வரன் திருவடிகளை தமக்கு முடி மேல் மாலையாக உடைய ஸ்ரீ பெருமாள்

நல் இசை தமிழ் மாலை வல்லார்கள்
அழகிய இசையோடு கூடின தமிழ்த் தொடை வல்லவர்கள்

நண்ணுவார் ஒல்லை நாரணன் உலகே–
இங்கே இருந்து அவதாரத்தில் ஏக தேசத்தை அனுபவிக்க ஆசைப்பட்டு அது கிடையாதே இருந்து புலம்பாதே
உபய விபூதி நாயகனை ஸ்ரீ பரம பதத்தில் நித்ய அனுபவம் பண்ணப் பெறுவார்கள் –

————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய வாச்சான்  பிள்ளை  ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம்.
ஸ்ரீ குலேசேகரர்    ஆழ்வார் ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள்  ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு வடிகளே சரணம்