Archive for the ‘Divya desams’ Category

ஸ்ரீ திவ்ய தேச மங்களா ஸாஸன அருளிச் செயல்கள்-ஸ்ரீ திரு வித்துவக் கோடு

March 24, 2024

மூலவர் -உய்ய வந்த பெருமாள் -அபய ப்ரதன் / நின்ற திருக் கோலம் -தெற்கே திரு முக மண்டலம்
தாயார் -வித்துவக்கோட்டு வல்லி
விமானம் -தத்வ காஞ்சனா விமானம்
தீர்த்தம் -சக்ர தீர்த்தம்
மங்களா சாசனம் -குலசேகராழ்வார்

அம்பரீஷன் வெகுகாலம் இங்கே த்வம் புரிந்து முக்தி பெற்றதாக ஸ்தல வரலாறு –
திருமாலே இந்திரன் வடிவில் வந்து அம்பரீஷனை சோதித்த பொழுது -அவனது வைக்ராயத்தாலே மகிழ்ந்து
ஸ்ரீ வைகுண்டத்தில் உள்ள தன் அப்ராக்ருத ரூபத்துடன் சேவை சாதித்தார்
பர வாஸூதேவனை சேவித்த பின் வ்யூஹ அவதாரத்தை அனுக்ரஹிக்க வேண்ட -நான்கு திருக் கோலம் கொண்டு இங்கே எழுந்து அருளி இருக்கிறார்
கோயிலில் முதலில் சிவன் சந்நிதியும் அதன் பின் பெருமாள் சந்நிதியும் உள்ளது –
பஞ்ச பாண்டவர்கள் ஐவரும் சேர்ந்து த்வம் இருந்து இந்த நான்கு மூர்த்திகளைப் பிரதிஷ்டை செய்தார்கள் –
திரு மிற்றக் கோடு -நான்கு மூர்த்தி பெருமாள் –
காசி விஸ்வ நாதர் காட்சி -இங்கு பிரதிஷ்டை –

மூலவர் ஸ்ரீ அபய ப்ரதன், ஸ்ரீ உய்ய வந்த பெருமாள்
கோலம் நின்ற
திருமுக மண்டலம் தெற்கு
உற்சவர் ஸ்ரீ அபய ப்ரதன்
தாயார் ஸ்ரீ திரு வித்துவக் கோட்டு வல்லி, ஸ்ரீ பத்ம பாணி நாச்சியார்
தீர்த்தம் ஸ்ரீ சக்ர தீர்த்தம்
விமானம் ஸ்ரீ தத்வ காஞ்சன விமானம்
மண்டலம் மலைநாட்டுத் திருப்பதிகள்
மாநிலம் கேரளம்
அடிப்படை இடம் ஸ்ரீ குருவாயூர்
நாமாவளி ஸ்ரீ வித்வகோட்டு வல்லீ ஸமேத ஸ்ரீ உய்ய வந்தான் ஸ்வாமிநே நமஹ

ஸ்ரீ குலசேகரப் பெருமாள் -10-பாசுரங்கள் மங்களாசாசனம்

தரு துயரம் தடாயேல் உன் சரண் அல்லால் சரண் இல்லை
விரை குழுவும் மலர் பொழில் சூழ் வித்துவ கோட்டு அம்மானே
அரி சினத்தால் ஈன்ற தாய் அகற்றிடினும் மற்று அவள் தன்
அருள் நினைந்தே அழும் குழவி அதுவே போன்று இருந்தேனே -5-1-

கண்டார் இகழ்வனவே காதலன் தான் செய்திடினும்
கொண்டானை அல்லால் அறியா குலமகள் போல
விண் தோய் மதிள் புடை சூழ் வித்துவ கோட்டம்மா! நீ
கொண்டு ஆளாய் ஆகிலும் உன் குரை கழலே கூறுவனே— 5-2-

மீன் நோக்கும் நீள் வயல் சூழ் வித்துவ கோட்டு அம்மா ! என்
பால் நோக்காய் ஆகிலும் உன் பற்று அல்லால் பற்றி இலேன்
தான் நோக்காது எத் துயரம் செய்திடினும் தார் வேந்தன்
கோல் நோக்கி வாழும் குடி போன்று இருந்தேனே— 5-3-

வாளால் அறுத்து சுடினும் மருத்துவன் பல்
மாளாத காதல் நோயாளன் போல் மாயத்தால்
மீளா துயர் தரினும் வித்துவ கோட்டு அம்மா ! நீ
ஆளா வுனதருளே பார்ப்பன் அடியேனே— 5-4-

வெம் கண் திண் களிறு அடர்த்தாய் ! வித்துவ கோட்டு அம்மானே !
எங்கு போய் வுய்கேன் ? உன் இணை அடியே அடையல் அல்லால்
எங்கும் போய் கரை காணாது எறி கடல் வாய் மீண்டேயும்
வங்கத்தின் கூம்பேறும் மா பறவை போன்றேனே— 5-5-

செந் தழலே வந்து அழலை செய்திடினும் செங்கமலம்
அந்தரம் சேர் வெங்கதிரோர்க்கு அல்லால் அலராவால்
வெந்துயர் வீட்டா விடினும் வித்து கோட்டு அம்மா ! உன்
அந்தமில் சீர்க்கு அல்லால் அகம் குழைய மாட்டேனே—5-6-

எத்தனையும் வான் மறந்த காலத்தும் பைம் கூழ்கள்
மைத்து எழுந்த மா முகிலே பார்த்து இருக்கும் மற்றவை போல்
மெய் துயர் வீட்டா விடினும் வித்துவ கோட்டு அம்மா! என்
சித்தம் மிக வுன் பாலே வைப்பன் அடியேனே —5-7-

தொக்கி இலங்கி ஆறெல்லாம் பரந்தோடி தொடு கடலே
புக்கு அன்றி புறம் நிற்க மாட்டாத மற்றவை போல்
மிக்கு இலங்கு முகில் நிறத்தாய் ! வித்துவ கோட்டு அம்மா ! உன்
புக்கு இலங்கு சீர் அல்லால் புக்கிலன் காண் புண்ணியனே ! —5-8-

நின்னையே தான் வேண்டி நீள் செல்வம் வேண்டாதான்
தன்னையே தான் வேண்டும் செல்வம் போல் மாயத்தால்
மின்னையே சேர் திகிரி வித்துவ கோட்டு அம்மா !
நின்னையே தான் வேண்டி நிற்பன் அடியேனே–5-9-

வித்துவ கோட்டு அம்மா ! நீ வேண்டாயேயா யிடினும்
மற்றாரும் பற்றிலேன் என்று அவனை தாள் நயந்த
கொற்ற வேல் தானை குலசேகரன் சொன்ன
நல் தமிழ் பத்தும் வல்லார் நண்ணார் நரகமே– 5-10-

இத்தலம் கேரளாவில் பாலக்காட்டு மாவட்டத்தில் உள்ள பட்டாம்பி என்னும் நகருக்கு அருகில் அமைந்துள்ளது.

துவாபர யுகத்தில் தோற்றுவிக்கப்பட்ட பஞ்ச பாண்டவர்கள் வனவாச காலத்தில் தென்னிந்தியாவில் பயணம் செய்கையில் இங்குள்ள நீளா நதிக்கரையோரம் ஒரு அழகான இடத்தைக் கண்டனர். அங்கு நிலவிய தெய்வீகம் கலந்த அமைதியைக் கண்டதும் சில காலம் அங்கேயே தங்கி இருக்க எண்ணினர். நித்ய வழிபாட்டிற்காக விக்கிரகங்களையும், ஆலயத்தையும் நிர்மானித்தனர்.

முதலில் அர்ஜு னன் மஹாவிஷ்ணுவின் சிலையை பிரதிஷ்டை செய்தான். அதற்கு வடக்கே தருமர் ஒரு சிலையையும் தென்புறத்தில் பீமன் ஒரு
சிலையையும் அதற்கு பின்புறம் (தென்புறத்திலே) நகுலனும் சகாதேவனும் ஒரு சிலையையும் பிரதிஷ்டை செய்தனர். அவர்களது வனவாசம் முடியும் வரை
இங்கேயே இருந்ததாகவும் கூறுவர். வெகு காலத்திற்குப் பின்னால் பாண்டியமன்னன் ஒருவனால் மிகப்பெரிய சுற்றுமதில் கட்டப்பட்டது.

இவ்வாறு நெடுங்காலம் 4 மூர்த்திகளால் ஆனதாகவே இக்கோவில் இருந்தது. சுமார் 2000 (1800) ஆண்டுகட்கு முன்பு தென்னாட்டைச் சேர்ந்த
முனிவர் ஒருவர் காசிக்குச் சென்றிருந்தார். அங்கேயே வெகு காலம் தங்கிவாழ்ந்திருந்தார். அவரது அன்னையார் மரணத் தறுவாயில் இருப்பதாக செய்தி
வந்ததையடுத்து அவர் திரும்பிவரும்போது அவரது பக்தி ஈடுபாட்டினால் காசி விஸ்வநாதரும் அம்முனிவரது குடையில் மறைந்து வந்ததாக கூறுவர்.

வரும் வழியில் இந்தச் சன்னதிக்கு வந்த முனிவர் நீளா நதியில் நீராடச் செல்லும்போது நான்கு மூர்த்திகட்கு முன்புறம் இருந்த ஒரு பலி பீடத்தில்
தமது குடையை வைத்துவிட்டுச் சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது அந்தப் பலி பீடம் நான்காக வெடித்து அவ்வெடிப்பிலிருந்து சுயம்புவாக
சிவலிங்கம் ஒன்றும் தோன்றியிருந்ததாம். குடையும் மறைந்துவிட்டது.

காசி விஸ்வநாதரே இந்த நான்கு மூர்த்திகளோடு தங்குவதற்கு இங்கே வந்துவிட்டதாகவும், அதற்கு அந்த முனிவர் காரணமாக இருந்தார் என்றும்
கூறுவர். பிற்காலத்தில் இந்த சிவலிங்கத்தைச் சுற்றிலும் தனியே ஒரு கோவில் கட்டப்பட்டுவிட்டது.
இவ்விதம் இது ஐந்து மூர்த்தி தலமாயிற்று ஐந்து மூர்த்தி திருக்கோவில் என்றும் இதனை வழங்குவர்.

மூலவர்- உய்யவந்த பெருமாள், அபயப்ரதன், தெற்கு நோக்கி நின்ற திருக்கோலம்
தாயார்-வித்துவக்கோட்டு வல்லி, பதமாஸனி நாச்சியார்.
தீர்த்தம்– சக்ர தீர்த்தம்
விமானம்- தத்வ காஞ்சன விமானம்
காட்சி கண்டவர்கள்–  அம்பரிஷன் (பஞ்சபாண்டவர்கள்)

திருவித்துவக்கோடு என்னும் இத்தலம், திருமிற்றக்கோடு எனவும், திருவீக்கோடு எனவும் வழங்கப்படுகிறது

கோவிலின் சுவர்களில் அமைந்துள்ள அழகிய சுதைச் சிற்பங்களும், சிற்பங்களும், சிற்ப வேலைப்பாடுகளும், அர்ஜு னன் தவம் செய்த காட்சி,
தசாவதாரக் காட்சிகள், கிருஷ்ண லீலா காட்சிகள் போன்றவை சிறந்த வண்ணங்களில் மிளிர்வது கண்கொள்ளாக் காட்சியாகும். பார்ப்பதற்குப்
பேரழகு பொருந்தியதாகும் இவைகள்.

திருமாலுக்கும் சிவனுக்கும் இங்கு ஒரே இடத்தில் சன்னதியிருப்பது முக்கண்ணன் மற்ற தேவதாந்தங்கள் போல் ஸ்ரீமந் நாராயணனின் உடலின்
அங்கமே என்று நீரூபிப்பதைப் போல அமைந்துள்ளது.

இது பிற்காலத்தே செய்யப்பட்ட ஏற்பாடென்றும் கூறுவர். இருப்பினும் திருமாலும் சிவனும் இணைந்திருக்கும் கோவில்கள் குறிப்பாக திவ்ய
தேசங்களில் 10க்கு மேற்பட்ட தலங்களில் உண்டு. இரு மூர்த்திகளும் கிழக்கு நோக்கி அமர்ந்த திருக்கோலம்.

 அம்பரீஷ சக்ரவர்த்தி பரமபதநாதனின் வ்யூக அவதாரத்தை சேவிக்க வேண்டுமென்று எம்பெருமானை இவ்விடத்திலிருந்து பிரார்த்திக்க
எம்பெருமான் நான்கு வடிவங்கொண்டு (வ்யூக வடிவத்தை) அவனுக்கு காட்சி கொடுத்து முக்தியும் கொடுத்தார். இதனால்தான் நாலுமூர்த்தி கோவில் என்னும் பெயர், இத்தலத்திற்கு உண்டானதென்றும் பிற்காலத்தே பஞ்ச பாண்டவர்களின் தொடர்பால் இத்தலத்தின் பிரசித்தி உயர்வடைந்ததென்றும் கூறுவர்.

நடுவில் இருக்கும் மூர்த்தியை தருமனும், மேற்கில் உள்ள மூர்த்தியை அர்ஜு னனும், இடப்புறம் உள்ள மூர்த்தியை பீமனும், வலப்புறம் உள்ள
மூர்த்தியை நகுல சகாதேவர்கள் பூஜை செய்ததாகவும் வரலாறு.- பாண்டவர்களின் வருகைக்கு முன்பே இத்தலம் இருந்ததென்பது ஆய்வாளர்களின் முடிவும் கூட.

வாய்த்த கருமம் இனி மற்று இல்லை நெஞ்சமே
தோய்த்த தயிர் வெண்ணெய் தொட்டு உண்ட கூத்தன்
திரு வித்துவக் கோடு சேர்ந்தால் பிறவிக்
கருவின் துவக்கு ஓடும் காண் –69-

(இ – ள்.) நெஞ்சமே – (எனது) மனமே! – (கிருஷ்ணாவதாரத்திலே),
தோய்த்த தயிர் – தோய்த்தபடியேயுள்ள தயிரையும்,
வெண்ணெய் – வெண்ணையையும்,
தொட்டு உண்ட – களவுகண்டு புசித்த,
கூத்தன் – திருவிளையாட்டையுடைய திருமாலினது,
திருவிற்றுவக்கோடு – திருவிற்றுவக்கோடென்னுந் திவ்வியதலத்தை,
சேர்ந்தால் – சென்று சேர்ந்தமாத்திரத்தில், –
பிறவி – பிறப்புக்குக்காரணமான,
கருவின் துவக்கு – கர்ப்பத்தின் சம்பந்தம்,
ஓடும் – நீங்கும்; (ஆதலால்),
வாய்த்த கருமம் – நாம்செய்யக்கிடந்த தொழில்,
இனி மற்று இல்லை – இனிமேல் வேறொன்று மில்லை; (எ – று.) – காண் – அசை தேற்றமுமாம்.

மனமே! திருவிற்றுவக்கோடென்னுந் திவ்வியதலத்தைச் சேர்ந்தாயாயின், பிறப்புக்குக்காரணமான கரும சம்பந்தமெல்லாம்
ஒழிந்து நற்கதி பெறுவையென்பதாம். இவ்வாறு சுகரமான உபாயத்தாற் பெரும்பேறு பெறலாயிருக்க,
அதனைச் செய்யாது வீணேயுழல்வது என்னே! என்ற கருத்து இங்குத் தொனிக்கும்.
இங்குத் திருவிற்றுவக்கோடு என்றது – அத்திருப்பதியி லெழுந்தருளியிருக்கும் எம்பெருமானையுங் குறிக்கும்;
உபலக்ஷணம். ‘திருவித்துவக்கோடு’ என்றும் வழங்குவர்.

——————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ திவ்ய தேச மங்களா ஸாஸன அருளிச் செயல்கள்-ஸ்ரீ திரு நாவாய் –

March 24, 2024

மூலவர் -நாவாய் முகுந்தன் -நாராயணன் -நின்ற திருக் கோலம் -கிழக்கே திரு முக மண்டலம்
தாயார் -மலர் மங்கை நாச்சியார் ‘
விமானம் -வேத விமானம்
தீர்த்தம் -கமல தடாகம்
மங்களா சாசனம் -நம்மாழ்வார் -9-8-/ திருமங்கை ஆழ்வார் –

ஒன்பது யோகிகள் -பெருமாளை சேவிக்க ஆசைப்பட்டார்கள் -நவ யோகி -மருவி நாவாய் ஆகியது –
பாரதப் புழா-நதிக்கரையில் அமைந்துள்ள திவ்ய தேசம் –
மலையாள திவ்ய தேசங்களில் இங்கு மட்டுமே தனி சந்நிதி தாயாருக்கு உண்டு –
யோகிகள் பகவானை பிரதிஷடை செய்து மறு நாள் வந்து பார்க்கும் பொழுது அங்கு விக்ரஹம் மாயமாகி இருந்தது
தொடர்ந்து அடுத்த எட்டு நாட்கள் நடந்தது இந்தச் சம்பவம் –
9 நாள் கடைசி யோகி ப்ரதிஷ்டை பகவான் பூமிக்குள் புதைந்து கொண்டு இருக்க யோகி அவரை -அப்படியே
நிறுத்த முழங்காலுக்கு மேலே இன்றும் சேவை சாதிக்கிறார்
குட்டிபுரம் ரயில் நிலையத்தில் இருந்து 7 கி மி தூரம் –
பட்டாம்பி -அருகில் – வடக்கு கேரளா -/ காசி யில் செய்யும் பலன் இங்கே
-சங்க சக்ர கதா பத்ம -நான்கு திருக் கைகளிலும் ஏந்தி -நவ யோகி ஸ்தலம்
விஷ்ணு போத ஆன்ரு சம்சயம் –

மூலவர் ஸ்ரீ நாவாய் முகுந்தன், ஸ்ரீ நாராயணன்
கோலம் நின்ற
திருமுக மண்டலம் கிழக்கு
உற்சவர் நாராயணன்
தாயார் ஸ்ரீ மலர் மங்கை நாச்சியார்
தீர்த்தம் ஸ்ரீ செங்கமல ஸரஸ்
விமானம் ஸ்ரீ வேத விமானம்
மண்டலம் ஸ்ரீ மலைநாட்டுத் திருப்பதிகள்
மாநிலம் கேரளம்
அடிப்படை இடம் இடக்குளம்
நாமாவளி ஸ்ரீ மலர் மங்கை நாச்சியார் ஸமேத ஸ்ரீ நாராயணாய நமஹ

————–

ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் -2-பாசுரங்கள் மங்களாசாசனம் –

தூவாய புள்ளூர்ந்து வந்து துறை வேழம்
மூவாமை நல்கி முதலை துணித்தானை
தேவாதி தேவனைச் செங்கமலக் கண்ணானை
நாவா யுளானை நறையூரில் கண்டேனே.—பெரிய திருமொழி -6-8-3-

கம்பமாகளிறு அஞ்சிக்கலங்க * ஓர்
கொம்புகொண்ட குரைகழல்கூத்தனை *
கொம்புலாம்பொழில் கோட்டியூர்க்கண்டுபோய் *
நம்பனைச்சென்றுகாண்டும் நாவாயுளே. –பெரிய திருமொழி -10-9-3-

————–

ஸ்ரீ நம்மாழ்வார் –11-பாசுரங்கள் மங்களாசாசனம் –

அறுக்கும் வினையாயின ஆகத்து அவனை
நிறுத்தும் மனத்து ஒன்றிய சிந்தையினார்க்கு
வெறித் தண் மலர்ச் சோலைகள் சூழ் திரு நாவாய்
குறுக்கும் வகை உண்டு கொலோ கொடியேற்கே –9-8-1-

கொடி ஏர் இடைக் கோகன கத்தவள் கேள்வன்
வடி வேல் தடம் கண் மடப்பின்னை மணாளன்
நெடியான் உறை சோலைகள் சூழ் திருநாவாய்
அடியேன் அணுகப் பெரும் நாள் எவை கொலோ–9-8-2-

எவைகோல் அணுகப் பெரும் நாள் என்று எப்போதும்
கவை யில் மனம் இன்றி கண்ணீர்கள் கலுழ்வன்
நவை இல் திரு நாரணன் சேர் திருநாவாய்
அவையுள் புகலாவது ஓர் நாள் அறியேனே–9-8-3-

நாளேல் அறியேன் எனக்கு உள்ளன நானும்
மீளா அடிமைப் பணி செய்யப் புகுந்தேன்
நீளார் மலர்ச் சோலைகள் சூழ் திரு நாவாய்
வாளேய் தடம் கண் மடப்பின்னை மணாளா –9-8-4-

மணாளன் மலர் மங்கைக்கும் மண் மடந்தைக்கும்
கண்ணாளன் உலகத்து உயிர் தேவர்கட்கு எல்லாம்
வின்ணாளன் விரும்பி உறையும் திருநாவாய்
கண்ணாரக் களிக்கின்றது இங்கு என்று கொல் கண்டே–9-8-5-

கண்டே களிக்கின்றது இங்கு என்று கொல் கண்கள்
தொண்டே உனக்காய் ஒழிந்தேன் துரிசு இன்றி
வண்டு ஆர் மலர்ச் சோலைகள் சூழ் திருநாவாய்
கொண்டே உறைகின்ற எம் கோவலர் கோவே–9-8-6-

கோவாகிய மாவலியை நிலம் கொண்டாய்
தேவா சுரம் செற்றவனே திருமாலே
நாவாய் உறைகின்ற என் நாரண நம்பீ
ஆவா அடியான் இவன் என்று அருளாயே–9-8-7-

அருளாது ஒழிவாய் அருள் செய்து அடியேனைப்
பொருளாக்கி உன் பொன்னடிக் கீழ் புக வைப்பாய்
மருளே இன்றி உன்னை என் நெஞ்சத்து இருத்தும்
தெருளே தரு தென் திரு நாவாய் என் தேவ–9-8-8-

தேவர் முனிவருக்கு என்றும் காண்டற்கு அரியன்
மூவர் முதல்வன் ஒரு மூ உலகு ஆளி
தேவன் விரும்பி உறையும் திரு நாவாய்
யாவர் அணுகப் பெறுவார் இனி அந்தோ ––9-8-9-

அந்தோ அணுகப் பெரு நாள் என்று எப்போதும்
சிந்தை கலங்கி திருமால் என்று அழைப்பன்
கொந்தார் மலர்ச் சோலைகள் சூழ் திரு நாவாய்
வந்தே உறைகின்ற எம்மா மணி வண்ணா–9-8-10-

வண்ணம் மணிமாடம் நல் நாவாய் உள்ளானைத்
திண்ணம் மதிள் தென் குருகூர்ச் சடகோபன்
பண்ணார் தமிழ் ஆயிரத்து இப்பத்தும் வல்லவர்
மண் ஆண்டு மணம் கமழ்வர் மல்லிகையே–9-8-11-

இவ்விடத்தில் எம்பெருமானைக் குறித்து 9 யோகிகள் தவம் செய்ததாகவும் அதனால் இந்த ஸ்தலம் நவ யோகிஸ்தலம் என்று
அழைக்கப்பட்டு காலப் போக்கில் நாவாய் ஸ்தலம் என்றாகி தற்போது திருநாவாய் என்றழைக்கப்படுகிறது.

மூலவர்- நாவாய் முகுந்தன் நாராயணன் கிழக்கு நோக்கிய திருக்கோலம்
தாயார்- மலர்மங்கை நாச்சியார்
விமானம்- வேதவிமானம்
காட்சி கண்டவர்கள் இலட்சுமி, கஜேந்திரன், நவயோகிகள்.

இத்தலம் பாரத் புழை ஆற்றை ஒட்டியுள்ளது. கேரளாவில் இத்தலம் மிகவும் முக்கியத்துவமும், புராதனமும் வாய்ந்ததாகும். காசியில்
நடைபெறுவதைப் போன்று இங்கு சிரார்த்தங்களும் செய்யப்படுகின்றன.
இத்தலத்தின் எதிர்ப்புறம் சிவனுக்கும் பிரம்மனுக்கும் கோவில்கள் இருப்பதால் இது
ஒரு மும்மூர்த்தி ஸ்தலமாகப் புகழ்பெற்றுள்ளது.

ஒரு முறை மகாலட்சுமியும், கஜேந்திரனும் தாமரைப் பூக்களைப் பறித்து பகவானை அர்ச்சித்து வர கஜேந்திரனுக்குப் பூ கிடைக்காமல்
போயிற்று. இதனால் பகவானிடம் கஜேந்திரன் தனது நிலையை விளக்கிமுறையிட பகவான் லட்சுமி தேவியைப் பூப்பறிக்க வேண்டாமென்று
சொல்லிவிட்டார். இதனால் மகிழ்ந்த கஜேந்திரன் ஏராளமான பூக்களைப்பறித்துப் பகவானை அர்ச்சிக்கலானான். பூஜையின்போது லட்சுமி தேவி
தனக்கு சமமான சிம்மாசனத்தை அளித்து அதிலமர்ந்து தன்னோடு சேர்ந்து எம்பெருமானை பூஜிக்குமாறு வேண்டிக்கொண்டாள். எம்பெருமான் மனமுவந்துபூஜையை ஏற்றுக் கொண்டு அவ்விருவருக்கும் காட்சி கொடுத்தான். இதனால் இந்த ஒரு இடத்தில் மட்டும் மலையாள திவ்யதேசத்தில் லட்சுமி தேவிக்குத் தனி சன்னதியுள்ளது

பறந்து திரிதரினும் பாவியேன் உள்ளம்
மறந்தும் பிறிது அறிய மாட்டா சிறந்த
திரு நாவாய் வாழ் கின்ற தேவனை அல்லால் என்
ஒரு நாவாய் வாழ்த்தாது உகந்து –65–

(இ – ள்.) பாவியேன் – தீவினையுடைய எனது,
உள்ளம் – மனமானது,
பறந்து திரிதரினும் – ஒருநிலையில்நில்லாது விரைந்து அலையுந்தன்மையதாயினும்,
மறந்தும் – மறந்தாயினும்,
பிறிது – திருமாலையன்றி வேறொருதெய்வத்தை,
அறியமாட்டா(து) – (தியானிக்கும்பொருளாக) மதியாது;
என் ஒரு நா வாய் – எனது ஒருபடிப்பட்ட நாக்கையுடைய வாயானது,
சிறந்த – மேம்பட்ட,
திருநாவாய் – திருநாவா யென்னுந் திவ்வியதலத்தில்,
வாழ்கின்ற – நித்திய வாசஞ்செய்கின்ற,
தேவனை அல்லால் – ஸ்ரீமந்நாராயணனையல்லாமல், (பிறிதொருதெய்வத்தை),
உகந்து வாழ்த்தாது – விரும்பித் துதியாது; (எ – று.)

“மறந்தும்புறந்தொழா மாந்தர்” ஆதலால், தேவதாந்தரங்களினிடத்தில் தமக்குஉள்ள உபேட்சையையும்
பரதேவதையினிடத்தில் தமக்குஉள்ள அபேட்சையையும் இங்ஙனம் கூறி வெளியிட்டனர்.
கணவனையே தெய்வமாகக்கொண்டொழுகுங் கற்புடைமகளிர்க்குப் பிறிதோராடவரது தொடர்பில்லாமலிருத்தல்
இன்றியமையாதவாறுபோல, எம்பெருமானைச் சரண
மடைந்து உய்யும் பிரபந்நர்க்குத் தேவதாந்நரபஜதஞ்செய்யாமை இன்றியமையாத தாகு மென்க.
ஒருநாவாய் தேவனையல்லால் வாழ்த்தாது என்ற தொடரில் – எனக்கு நாவொன்றாதலால்,
பரதேவதையாகி அடியார் துயரைப் போக்கிப் பாதுகாக்க வல்ல பரமபுருஷனொருவனைத் துதித்தலே அதற்கு ஏற்கு மென்பதும்,
சரணமடைபவர்களைச் சமயத்திலே கைவிடும் பிறதெய்வங்களைச் சிறிதும் பொருள்செய்யா தென்பதும், தொனிக்கும்.
“உனையன்றி நான் மறந்தும், தீதாக வந்தனைசெய்யேன் புறஞ்சிலதேவரையே” என்பர், அழகரந்தாதியிலும்.
ஒருகால் தேவதாந்தரங்களை யான் வாழ்த்தக் கருதினாலும் என்வாய் வாழ்த்தாது; அது எம்பெருமானையே வாழ்த்தப் பழகியதும்,
பிறதெய்வங்களை வாழ்த்தப் பழகாதது மாதலால் என்னுங் கருத்து அமைய
‘திருநாவாய்வாழ்கின்ற தேவனையல்லால் என்னொருநாவாய் வாழ்த்தா துகந்து’ என வாயின்மே லேற்றிக்கூறினா ரென்னலாம்.
“வாயவனையல்லது வாழ்த்தாது” என்றார் பெரியாரும்.

——————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ திவ்ய தேச மங்களா ஸாஸன அருளிச் செயல்கள்-ஸ்ரீ திருக் கடிகை -ஸ்ரீ சோளிங்கர்

March 24, 2024

மூலவர் -யோக நரஸிம்ஹர் -அக்காராக கனி / வீற்று இருந்த திருக் கோலம் /கிழக்கே திரு முக மண்டலம்
உத்சவர் -பக்தோசிதான் -தக்காண
தாயார் -அம்ருத பல வல்லித் தாயார்
விமானம் -சிம்ம கோஷ்டாக்ருதி விமானம்
தீர்த்தம் -அம்ருத தீர்த்தம் / தக்கான் குளம்
மங்களா சாசனம் -பேயாழ்வார் -திரு மங்கை ஆழ்வார் -மிக்கானை –அக்காராக கனியை அடைந்து உய்ந்து போனேனே –

சப்த ரிஷிகள் -தவத்தை -காலன்-கேயன் – அரக்கர்கள் கெடுக்க -அவர்கள் அரசனை வேண்டிக் கொள்ள
-அவன் ஸ்ரீ ராமரைப் பிரார்த்திக்க -அவர் திருவடியை அனுப்பினார்
அவர் நரசிம்ஹ பெருமாள் கடாஷத்தோடே அவர் கொடுத்து அருளிய சக்ராயுதத்தால் அரக்கர்களை வென்றார்
யோக நரஸிம்ஹர் பெரிய மாலையிலும் திருவடி சங்கு சக்கரங்கள் நான்கு திருத் தோள்கள் உடன் சின்ன மாலையிலும் சேவை சாதிக்கின்றனர்
கடி -ஒரு நாழிகை -24 நிமிஷங்கள் -இந்த மலையில் ஒரு கடி பொழுது இருந்தோமேயானால் பாவங்கள் கழிந்து பரம பதம் கிடைக்கும் –
மலை அடிவார திருக் கோயிலும்- வூரும் ஸ்வாமி தொட்டாச்சார்யரால் ஸ்தாபிக்கப் பட்டவை –
ஸ்ரீ நிவாஸ மஹா குரு -தொட்டாச்சார்யார் ஸ்வாமி –
1543-1607 இருந்தவர் –கோவிந்த ராஜர் -பிரதிஷ்டை பண்ணினவரும் இவரே –
யோகம் -கை வந்தவர் -வாதூல குல தெய்வதிம் -நிதிம்-
தாயார் நவராத்ரி கீழே எழுந்து அருளி 2 மாதம் கீழே இருந்து சேவை —

தற்போது உள்ள பெயர் ஸ்ரீ சோளிங்கர்
மூலவர் ஸ்ரீ யோக நரசிம்ஹர், ஸ்ரீ அக்காரக் கனி
கோலம் வீற்றிருந்த
திருமுக மண்டலம் கிழக்கு
உற்சவர் ஸ்ரீ பக்தோசித பெருமாள்
தாயார் ஸ்ரீ அம்ருத வல்லி
தீர்த்தம் ஸ்ரீ ப்ரஹ்ம தீர்த்தம்
விமானம் ஸ்ரீ ஸிம்ம கோஷ்டாக்ருதி விமானம்
மண்டலம் தொண்டைநாட்டுத் திருப்பதிகள்
மாநிலம் தமிழ் நாடு
அடிப்படை இடம் சென்னை
நாமாவளி ஸ்ரீ அம்ருத வல்லீ ஸமேத ஸ்ரீ யோக நரசிம்ஹாய நமஹ

——————

ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் -3-பாசுரங்கள் மங்களாசாசனம் –

மிக்கானை மறையாய் விரிந்த விளக்கை என்னுள்
புக்கானைப் புகழ் சேர் பொலிகின்ற பொன் மலையை
தக்கானைக் கடிகைத் தடங்குன்றின் மிசை யிருந்த
அக்காரக் கனியை அடைந்துய்ந்து போனேனே. –பெரிய திருமொழி -8-9-4-

கண்ணார் கண்ண புரம் கடிகை கடி கமழும்
தண்ணார் தாமரை சூழ் தலைச் சங்க மேல் திசையுள்
விண்ணோர் நாண் மதியை விரிகின்ற வெஞ்சுடரை
கண்ணாரக் கண்டு கொண்டு களிக்கின்றது இங்கு என்று கொலோ.–பெரிய திருமொழி -8-9-9-

காரார் குடந்தை கடிகை கடல் மல்லை ஏரார் பொழில் சூழ் இடவெந்தை நீர்மலை –சிறிய திருமடல் – 73

————–

ஸ்ரீ பேயாழ்வார் -1-பாசுரம் மங்களாசாசனம் –

பண்டெல்லாம் வேங்கடம் பாற்கடல் வைகுந்தம்
கொண் டங்குறைவார்க்குக் கோயில் போல் – வண்டு
வளங்கிளரும் நீள் சோலை வண் பூங்கடிகை
இளங்குமரன் தன் விண்ணகர். –மூன்றாம் திருவந்தாதி – 61-

சோளசிம்மபுரம் என்னும் திருக்கடிகை

இத்தலத்தைப் பற்றி விஷ்ணுபுராணமும் பாத்ம புராணமும் துணுக்குத் துணுக்குத் தகவல்கள் தருகின்றன.

சப்தரிஷிகளும், வாமதேவர் என்னும் முனிவரும் பிரஹலாதனுக்காக பெருமாள் காட்டின நரசிம்ம அவதாரத்தைக் காண வேண்டுமென்ற ஆவலால்
இம்மலையில் வந்து தவமியற்றத் தொடங்கினர். அவர்கள் ஏன் இம்மலையைத்தேர்ந்தெடுத்தனர் என்றால் முன்னொரு காலத்தில் விசுவாமித்திரர்
இம்மலையில் ஒரு கடிகை நேரத்தில் (ஒரு நாழிகை நேரத்தில்) நரசிம்மனைக் குறித்து துதித்து பிரம்மரிசி பட்டம் பெற்றாராம். எனவே கடிகை நேரத்தில்
தாமும் நரசிம்ம மூர்த்தியைக் காணலாம் என்ற பேரவா காரணத்தால் இம்மலையைத் தெரிவு செய்து தவமியற்றத் தொடங்கினர்.

இஃதிவ்வாறிருக்க ஸ்ரீஇராமவதாரம் முடிந்ததும் ஸ்ரீராமன் வைகுண்டத்திற்கு எழுந்தருளுந் தருவாயில் தாமும் உடன்வருவதாக
ஆஞ்சநேயர் கூற, கடிகாசலத்தில் என்னைக் குறித்து தவம் செய்யும் ஸப்த ரிஷிகட்கு, உண்டாகும், இன்னல்களைக் களைந்து அதன்பின் வைகுந்தம்
வருவாயாக என்று கூற, அவ்விதமே ஆஞ்சநேயனும் இம்மலை வந்து சேர்ந்தார். காலன், கேயன் என்னும் இரு அரக்கர்கள் இம்மலையில்
நாராயணன் குறித்து தவஞ்செய்யும் ரிஷிகட்கு பெருத்த இடையூறு விளைவிக்க அவர்களொடு பொருது களைத்துப்போன ஆஞ்சநேயர் ஸ்ரீராமனைத் துதித்து நிற்க ஸ்ரீராமன் அனுமனுக்கு காட்சி தந்து சங்கு சக்கரங்களை வழங்க, அவற்றால் இரு அரக்கர்களின் தலையைக் கொய்து ரிஷிகளுக்கு தடையற்ற நிலையை உண்டாக்குகிறார். இறுதியில் ரிஷிகளின் தவத்தை மெச்சிய பகவான்
நரசிம்ம மூர்த்தியாக அவர்களுக்கு காட்சி கொடுத்து நின்றான்.

நரசிம்ம அவதாரத்தைக் கண்டு களித்த ஆஞ்சநேயர் ஆனந்த பஜனம் செய்து நிற்க ஆஞ்சநேயா நீ நமது முன்பமர்ந்து யோக ஆஞ்சநேயராக
மக்களுக்கு தீராத பிணிகளையுந் தீர்த்து கலியுகம் முடியும் தறுவாயில் எம்மை வந்தடைவாயாக என்றருளி மறைந்தார்.

இதனால் தான் யோக நிலையில் அமர்ந்த (சங்கு சக்கரத்துடன்) ஆஞ்சநேயருக்கும் தனிச்சன்னதி உள்ளது. இப்பிரதான கீர்த்தி அனுமனுக்கு
வேறெந்த திவ்ய தேசத்திலும் இல்லை. கலியுகம் முடியும் வரை அனுமனும் கலியுகத்திலேயே வாழ்வதாக ஐதீஹம். எனவேதான் பக்தி ரசத்தோடு
இராமாயணம் படிக்கும் இடம் தோறும் அனுமன் அருவமாகவோ உருவமாகவோ பிரத்யட்சம் ஆவதாய் ஐதீஹம்

மூலவர்–யோக நரசிம்மர் (அக்காரக்கனி) வீற்றிருந்த திருக்கோலம். கிழக்கே திருமுக மண்டலம்
தாயார்–அம்ருதவல்லி (தனிக்கோயில் நாச்சியார்)
உற்சவர்–பக்தவத்ஸ்ல பெருமாள் (தக்கான்)
தீர்த்தம்–அம்ருத தீர்த்தம் தக்கான் குளம் பாண்டவ தீர்த்தம்
விமானம்–ஸிம்ஹ விமானம் கோஷ்டாக்ருதி விமானம் (ஸிம்ஹாக்ர விமானம்) ஹேமகோடி விமானம் என்றும் சொல்லப்படும்.
காட்சி கண்டவர்கள்-  ஆஞ்சநேயர், ஸப்த ரிஷிகள்

இங்கு கீழே உற்சவரும், சுமார் 500 அடி உயரமுள்ள கடிகாசலம் என்ற பெரிய மலைமீது மூலவரும் அதனருகில் உள்ள சிறிய மலையில் சங்கு
சக்கரங்களுடன் இலங்கும் ஆஞ்சநேயரும் அமர்ந்துள்ளனர்.

சுமார் ஒரு கடிகை (24 நிமிடம்) இங்கு தங்கியிருந்தாலே மோட்சம் கிடைக்கும் என்று ஐதீஹமிருப்பதால் இதற்கு திருக்கடிகை என்னும் பெயர்
வந்தது. கடிகை – நாழிகை அசலம் – மலை எனவே கடிகாசலமானது

தொட்டாச்சார்யார் என்னும் ஆச்சார்ய புருஷர் இத்தலத்தில் பிறந்தவர். இவர் ஆண்டுதோறும் காஞ்சிக்குச் சென்று வரதராஜப் பெருமாளை
இடைவிடாது தரிசிப்பதை விரதமாகக் கொண்டிருந்தார். ஓராண்டு உடல் நலிவால் காஞ்சி செல்ல இயலாது போகவே தக்கான் குளக்கரையிலமர்ந்து
காஞ்சி வரதராஜப் பெருமாளின் கருட சேவையை மனதில் எண்ணித்துதித்து கண்ணீர் சிந்த கருட வாகனத்தில் காஞ்சிப் பெருமாள் இவருக்குக் காட்சி
தந்தார். இதன் நினைவாக இன்றும் காஞ்சியில் பிரம்மோத்ஸவத்தின் மூன்றாம் நாள் காலை கருட வாகனத்தில் எழுந்தருளும்போது கோபுர வாயிலில்
தாமதித்து நின்று சோளிங்கபுரம் தொட்டையாசர் சுவாமிகள் சேவை சாதிப்பதாய்க் கற்பூர ஆர்த்தி நடந்து வருகிறது. இத்திருக்கடிகையில்
தொட்டாச்சார்யருக்கும் தனிச்சன்னதி உள்ளது.
சோழநாட்டைப் போன்று வளமிகுந்து நரசிம்மப் பெருமாள் உறைதற்கு இடமாதல் பற்றி சோளசிம்மபுரம் என்று அழைக்கப்படுகிறது.
கல்வெட்டுக்களும் இப்பெயரையே குறிக்கின்றன. இப்போது சோளிங்கர் என்பர்.

சோழன் கரிகால் பெருவளத்தான் தன் நாட்டை 48 மண்டலங்களாகப் பிரித்த போது இப்பகுதியைக் கடிகைக் கோட்டம் என்னும் பெயராலேயே
குறிக்கிறான். இச்செய்தி பட்டினப் பாலையில் பேசப்படுகிறது.

ஒரு சமயம் துர்வாச முனிவர் இத்தலத்தை அடைந்து இப்பெருமாளை வணங்கி நரசிம்மனின் திருத்துழாய் மாலையைப் பெற்று அதைக் கழுத்திலும்,
தலையிலும் சூடி ஆனந்தக் கூத்தாடினார். அப்போது அங்கே நிரம்பியிருந்த சாதுக்கள் கட்டத்தில் தானும் ஒருவனாக நின்ற புதன் (நவக்கிரகங்களில்
ஒருவன்) துர்வாசரின் இச்செயலைக் கண்டு ஏளனத் தொனியில் சிரித்துக் கேலி செய்ய, துர்வாசரால் சபிக்கப்பட்ட புதன், இக்கடிகாசலத்தில்
பாண்டவதீர்த்தத்தில் நீராடி அங்கு ஆடியும் பாடியும் வரும் முனிவர்களுக்குத் தொண்டு செய்து தன் சாபந்தீர்ந்து மீண்டும் உயர்நிலை பெற்றான் என்று
புராணங்கூறும்.
தொட்டையாசார் பல அற்புதங்கள் செய்து காட்டித் தமது பக்தியை வெளிக்காட்டிய இடம். இவரைப் போன்று எறும்பியப்பா என்னும் ஞானியும்
இங்குதான் வாழ்ந்தார்.

இங்குள்ள பெரியமலையில் யோக நரசிம்மர் எழுந்தருளியுள்ளார். இது 1500 படிகள் கொண்டது. இவரைத் தரிசித்துவிட்டுத்தான் சிறிய மலையில்
எழுந்தருளியுள்ள ஆஞ்சநேயரை தரிசிக்க வேண்டும்.

மலைமேல் இருக்கும் நரசிம்மப் பெருமாளுக்கு பக்தோசித ஸ்வாமி என்ற பெயருண்டு. பக்தர்கள் உசிதப்படி அருள்பவர் என்பது பொருள்.
அடிவாரத்தில் உள்ள பக்தோசித சுவாமிக்கு தக்கான் எனப் பெயர். தீர்த்தத்திற்கும் தக்கான் குளம் என்பதே பெயர்.

அக்காரக் கனி என்றால் என்ன? இனிப்பே உருவான வெல்லமே மரமாகப் பூத்துக் காயாகி கனியாகி நமக்கு கிடைக்கப்பெற்றது போல்
சுவைமிக்க கனியாகும். அது போன்றவராம் இப்பெருமாள் (அதாவது வேண்டிய மாதிரியே வரம் கொடுப்பவர் என்பதுதான்)
‘வண்பூங்கடிகை இளங்குமரன்’ என்பது பேயாழ்வார் மங்களாசாசனம்

சீரருளால் நம்மைத் திருத்தி நாம் முன்னறியாக்
கூரறிவும் தந்தடிமை கொண்டதற்கே – நேரே
ஒரு கடிகையும் மனமே உள்ளுகிலாய் முத்தி
தரு கடிகை மாயவனைத் தான்–நூற்றெட்டு திருப்பதியந்தாதி

சீர் அருளால் நம்மைத் திருத்தி நாம் முன் அறியாக்
கூர் அறிவும் தந்து அடிமை கொண்டதற்கே நேரே
ஒரு கடிகையும் மனமே உள்ளுகிலாய் முத்தி
தரு கடிகை மாயவனைத் தான் –95-

(இ – ள்.) மனமே – ! – சீர் அருளால் – சிறந்த திருவருளினால், நம்மை – ,
திருத்தி – நல்லவழியிற் செல்லுமாறு செய்து,
நாம் முன் அறியா கூர் அறிவும் தந்து – நாம் இதற்குமுன்னே அறிந்திராத நுட்பமான அறிவையும் (நமக்குக்) கொடுத்து,
அடிமை கொண்டதற்கு – (நம்மை) ஆட்கொண்டதற்காக, –
முத்தி தரு கடிகை மாயவனை – (தன்னையடைந்தார்க்கு) நற்கதியையளிக்குந் திருக்கடிகை
யென்னுந் திவ்வியதலத்தி லெழுந்தருளிய எம்பெருமானை,
நேரே – நேராக,
ஒரு கடிகையும் – ஒரு நாழிகைப் பொழுதாவது,
உள்ளுகிலாய் – நினைக்கமாட்டாய்; (எ – று.) – தான் – ஈற்றசை.

எம்பெருமான் தனது நிர்ஹேதுக கிருபையினால் நம்மைத்திருத்தி நுண்ணியபகுத்தறிவைக் கொடுத்து
நம்மையாட்கொண்டதற்காக, அப்பெருமானைச் சிறிதுபொழுதாவது சிந்திக்கலாமே!
அதுவுஞ்செய்யாது செய்ந்நன்றி மறந்தவனாய் வாளா கிடக்கின்றனையே! இது என்ன துர்ப்புத்தி! என்று
தமது நெஞ்சத்தின் நிலையை இகழ்ந்தவாறு, நம்மிடத்து நன்மை சிறிதுமில்லாதிருக்கையிலும்
அவ்வெம்பெருமான் வலியக் கருணைசெய்து திருத்தி நம்மை அடிமைகொண்டதற்குக் கைம்மாறு –
அப்பிரான் விஷயத்தில் உபகாரஸ்மிருதி செய்யவேண்டுவதன்றி, வேறுதொழிலின்று என்பது இங்குப் போதரும்.

ஒருவர் ஒருகடிகைப்பொழுது இத்தலத்தி லுறைந்தாலும் அவர்க்கு முத்தி கிடைக்கு மாதலால்,
இத்தலத்திற்குக் கடிகையென்று திருநாமம்; கடிகாசல மெனப்படும்.
இது, சோளதேசம்போன்று வளம்மிக்கு நரசிங்கமூர்த்தி உறைதற்கு இடமாயிருத்தல்பற்றி,
சோளஸிம்ஹபுரமென்றும் வழங்கப்பெறும். சோளஸிம்ஹராஜனது புர மெனினுவாம்.

——————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ திவ்ய தேச மங்களா ஸாஸன அருளிச் செயல்கள்-ஸ்ரீ திருக் கடல் மல்லை –

March 24, 2024

மூலவர் -ஸ்தல சயனப் பெருமாள் /புஜங்க சயனம் / கிழக்கே திரு முக மண்டலம்
தாயார் -நில மங்கைத் தாயார் –
விமானம் -காக நாக்ருதி விமானம்
தீர்த்தம் -புண்டரீக புஷ்கரிணி -கருட நிதி
மங்களா சாசனம் -பூதத்தாழ்வார் -திருமங்கை யாழ்வார் -2-7-

புண்டரீக மகரிஷி -கடலில் சயனித்து இருக்கும் பெருமாளை சேவிக்க -ஆசை கொண்டு பக்தி பாரவசியத்தாலே தன்னிலை மறந்து
கைகளால் கடல் நீரை வாரி இறைக்க முற்பட்டார் –
ரிஷியின் பக்தியை மெச்சிய பரமன் தனது ஆதி சேஷன் படுக்கையும் துறந்து கரைக்கு ஓடு வந்து நிலத்திலேயே சயனித்த க்ஷேத்ரம்
பூதத்தாழ்வார் திரு வவதார ஸ்தலம் –
முன்பு 7 கோயில்கள் இருந்ததாம் –கடல் அரிக்க–
இடது திருக் கை ஆஹ்வானம் —

மூலவர் ஸ்தலசயன பெருமாள்
கோலம் சயனம்
திருமுக மண்டலம் கிழக்கு
உற்சவர் ஸ்ரீ உலகுய்ய நின்ற பெருமாள்
தாயார் ஸ்ரீ நில மங்கை தாயார்
தீர்த்தம் ஸ்ரீ புண்டரீக புஷ்கரணி
விமானம் ஸ்ரீ ககநா க்ருதி விமானம்
மண்டலம் தொண்டைநாட்டுத் திருப்பதிகள்
மாநிலம் தமிழ் நாடு
அடிப்படை இடம் சென்னை
நாமாவளி ஸ்ரீ நிலமங்கை நாச்சியார் ஸமேத ஸ்ரீ ஸ்தல சயனத் துறைவான் ஸ்வாமிநே நமஹ

———————-

ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் -26-பாசுரங்கள் மங்களாசாசனம் –

பாராயதுண்டு உமிழ்ந்த பவளத் தூணைப்
படு கடலில் அமுதத்தைப் பரிவாய் கீண்ட
சீரானை எம்மானைத் தொண்டர் தங்கள் சிந்தை யுள்ளே
முளைத்து எழுந்த தீங்கரும்பினை
போரானைக் கொம்பொசித்த போர்ஏற்றினை
புணர் மருதம் இற நடந்த பொற் குன்றினை
காரானை யிடர்கடிந்த கற்பகத்தைக்
கண்டது நான் கடல் மல்லைத் தல சயனத்தே ————–2-5-1-

பூண்ட வத்தம் பிறர்க்கடைந்து தொண்டு பட்டுப்
பொய் நூலை மெய் நூல் என்று என்றும் ஓதி
மாண்டு அவத்தம் போகாதே வம்மின்
எந்தை என் வணங்கப் படுவானை கணங்கள் ஏத்தும்
நீண்ட வத்தக் கருமுகிலை எம்மான் தன்னை
நின்ற வூர் நித்திலத்தைத் தொத்தார் சோலை
காண்டவத்தைக் கன லெரி வாய்ப் பெய்வித்தானைக்
கண்டது நான் கடல் மல்லைத் தல சயனத்தே –2-5-2-

உடம்புருவில் மூன்று ஒன்றாய் மூர்த்தி வேறாய்
உலகுய்ய நின்றானை அன்று பேய்ச்சி
விடம்பருகு வித்தகனைக் கன்று மேய்த்து
விளையாட வல்லானை வரை மீ கானில்
தடம்பருகு கருமுகிலைத் தஞ்சைக் கோயில்
தவ நெறிக்கோர் பெரு நெறியை வையம் காக்கும்
கடும்பரி மேல் கற்கியை நான் கண்டு கொண்டேன்
கடி பொழில் சூழ் கடல் மல்லைத் தல சயனத்தே –2-5-3-

பேய்த்தாயை முலையுண்ட பிள்ளை தன்னைப்
பிணை மருப்பில் கரும் களிற்றைப் பிணை மானோக்கின்
ஆய்த்தாயர் தயிர் வெண்ணெய் அமர்ந்த கோவை
அந்தணர் தமமுதத்தைக் குரவை முன்னே
கோத்தானை குடமாடு கூத்தன் தன்னைக்
கோகுலங்கள் தளராமல் குன்றமேந்திக்
காத்தானை எம்மானைக் கண்டு கொண்டேன்
கடி பொழில் சூழ் கடல் மல்லைத் தல சயனத்தே–2-5-4-

பாய்ந்தானைத் திரி சகடம் பாரி வீழப்
பாலகனாய் ஆலிலையில் பள்ளி யின்ப
மேய்ந்தானை இலங்கொளி சேர் மணிக் குன்றன்ன
ஈரிரண்டு மால் வரைத் தோள் அம்மான் தன்னை
தோய்ந்தானை நிலமகள் தோள் தூதிற் சென்று
அப்பொய்யறை வாய்ப்புகப் பெய்த மல்லர் மங்கக்
காய்ந்தானை எம்மானைக் கண்டு கொண்டேன்
கடி பொழில் சூழ் கடல் மல்லைத் தல சயனத்தே-2-5-5-

கிடந்தானைத் தடங்கடலுள் பணங்கள் மேவிக்
கிளர் பொறிய மறி திரிய வதனின் பின்னே
படர்ந்தானை படுமதத்த களிற்றின் கொம்பு
பறித்தானைப் பாரிடத்தை எயிறு கீற
விடந்தானை வளை மருப்பின் ஏனமாகி
இரு நிலனும் பெரு விசும்பும் எய்தா வண்ணம்
கடந்தானை எம்மானைக் கண்டு கொண்டேன்
கடி பொழில் சூழ் கடல் மல்லைத் தல சயனத்தே–2-5-6-

பேணாத வலி யரக்கர் மெலியவன்று
பெரு வரைத் தோளிற நெரித்தன்ற வுணர்கோனை
பூணாகம் பிளவெடுத்த போர் வல்லோனைப்
பொரு கடலுள் துயிலமர்ந்த புள்ளூர்தியை
ஊணாகப் பேய் முலை நஞ்சுண்டான் தன்னை
உள்ளுவார் உள்ளத்தே யுறைகின்றானை
காணாது திரி தருவேன் கண்டு கொண்டேன்
கடி பொழில் சூழ் கடல் மல்லைத் தல சயனத்தே–2-5-7-

பெண்ணாகி யின்னமுதம் வஞ்சித்தானைப்
பிறை எயிற்று அன்று அடல் அரியாய்ப் பெருகினானை
தண்ணார்ந்த வார் புனல் சூழ் மெய்யம் என்னும்
தடவரை மேல் கிடந்தானைப் பணங்கள் மேவி
எண்ணானை எண்ணிறந்த புகழினானை
இலங்கொளி சேர் அரவிந்தம் போன்று நீண்ட
கண்ணானை கண்ணாரக் கண்டு கொண்டேன்
கடி பொழில் சூழ் கடல் மல்லைத் தல சயனத்தே–2-5-8-

தொண்டாயார் தாம் பரவும் அடியினானைப்
படி கடந்த தாளாளற்கு ஆளாய் உய்தல்
விண்டானை தென்னிலங்கை யரக்கர் வேந்தை
விலங்குண்ண வலங்கை வாய்ச் சரங்கள் ஆண்டு
பண்டாய வேதங்கள் நான்கும்
ஐந்து வேள்விகளும் கேள்வியோடு அங்கமாறும்
கண்டானை தொண்டனேன் கண்டு கொண்டேன்
கடி பொழில் சூழ் கடல் மல்லத்தை தல சயனத்தே–2-5-9-

பட நாகத்தணைக் கிடந்து அன்று அவுணர் கோவை
பட வெகுண்டு மருதிடை போய்ப் பழன வேலி
தடமார்ந்த கடல் மல்லை தல சயனத்துத்
தாமரைக் கண் துயில் அமர்ந்த தலைவர் தம்மை
கடமாரும் கருங்களிறு வல்லான்
வெல் போர்க் கலி கன்றி யொலி செய்த வின்பப் பாடல்
திடமாக விவை யைந்தும் ஐந்தும் வல்லார்
தீவினையை முதலறிய வல்லார் தாமே —2-5-10-

நண்ணாத வாளவுணர் இடைப்புக்கு வானவரைப்
பெண்ணாகி யமுதூட்டும் பெருமானார் மருவினிய
தண்ணார்ந்த கடல் மல்லைத் தல சயனத்துறைவாரை
எண்ணாதே இருப்பாரை இறைப் பொழுதும் எண்ணோமே—2-6-1-

பார்வண்ண மட மங்கை பனி நன் மா மலர்க் கிழத்தி
நீர் வண்ணன் மார்வகத்தில் இருக்கையை முன் நினைந்தவனூர்
கார் வண்ண முது நீர்க் கடல் மல்லைத் தல சயனம்
ஆர் எண்ணும் நெஞ்சுடையார் அவர் எம்மை யாள்வாரே—2-6-2-

ஏனத்தின் உருவாகி நிலமங்கை எழில் கொண்டான்
வானத்திலவர் முறையால் மகிழ்ந்தேத்தி வலம் கொள்ள
கானத்தின் கடல் மல்லைத் தல சயனத்துறை கின்ற
ஞானத்தின் ஒளி யுருவை நினைவார் என் நாயகரே –2-6-3-

விண்டாரை வென்றாவி விலங்குண்ண மெல்லியிலார்
கொண்டாடு மல்லகலம் அழலேற வெஞ்சமத்து
கண்டாரைக் கடல் மல்லைத் தல சயனத்து உறைவாரை
கொண்டாடும் நெஞ்சுடையார் அவர் எங்கள் குல தெய்வமே –2-6-4-

பிச்சச் சிறு பீலி சமண் குண்டர் முதலாயோர்
விச்சைக் கிறை யென்னும் அவ் விறையைப் பணியாதே
கச்சிக் கிடந்தவனூர் கடல் மல்லைத் தல சயனம்
நச்சித் தொழுவாரை நச்சென்றன் நன்னெஞ்சே—2-6-5-

புலன் கொள் நிதிக் குவையோடு புழைக் கைம்மா களிற்றினமும்
நலம் கொள் நவ மணிக் குவையும் சுமந்து எங்கும் நான்றொசிந்து
கலங்களி யங்கும் மல்லைக் கடல் மல்லைத் தல சயனம்
வலங்கொள் மனததாரவரை வல்ங்கொள் என் மட நெஞ்சே–2-6-6-

பஞ்சிச் சிறு கூழை உருவாகி மருவாத
வஞ்சப் பெண் நஞ்சுண்ட அண்ணல் முன் நண்ணாத
கஞ்சைக் கடந்தவனூர் கடல் மல்லைத் தல சயனம்
நெஞ்சில் தொழு வாரைத் தொழு வாய் என் தூய் நெஞ்சே—2-6-7-

செழு நீர் மலர்க் கமலம் திரையுந்து வன் பகட்டால்
உழு நீர் வயல் உழவர் உழப் பின்முன் பிழைத்து எழுந்த
கழுநீர் கடி கமழும் கடன்மல்லைத் தலசயனம்
தொழு நீர் மனத்தவரைத் தொழுவாய் என் தூய நெஞ்சே -2-6-8-

பிணங்களடு காடதனுள் நடமாடு பிஞ்ஞகனோடு
இணங்கு திருச் சக்கரத்து எம்பெருமானார்க்கிடம் விசும்பில்
கணங்களி யங்கும் மல்லைக் கடல் தல சயனம்
வணங்கும் மனத்தாரவரை வணங்கு என் தன் மட நெஞ்சே–2-6-9-

கடி கமழு நெடு மறுகில் கடல் மல்லைத் தல சயனத்து
அடிகளடியேநினையும் அடியவர்கள் தம்மடியான்
வடி கொள் நெடு வேல் வலவன்கலிகன்றி யொலி வல்லார்
முடி கொள் நெடுமன்னர் தம் முதல்வர் முதலாவாரே—2-6-10-

சங்கு தங்கு தடங்கடல் கடன் மல்லையுள் கிடந்தாய்! அருள் புரிந்து
இங்கு என்னுள் புகுந்தாய்! இனிப் போயினால் அறையோ!
கொங்கு செண்பக மல்லிகை மலர்ப் புல்கி இன்னிள வண்டு போய்
இளந்தெங்கின் தாதளையும் திருவாலி யம்மானே!–3-5-8-

புள்வாய் பிளந்த புனிதா! என்று அழைக்க
உள்ளே நின்று என்னுள்ளம் குளிரும் ஒருவா!
கள்வா! கடன்மல்லைக் கிடந்த கரும்பே!
வள்ளால்! உன்னை எங்ஙனம் நான் மறக்கேனே?–7-1-4-

பிண்டியார் மண்டை யேந்திப் பிறர் மனை திரி தந்துண்ணும்
முண்டியான் சாபம் தீர்த்த ஒருவனூர் உலகமேத்தும்
கண்டியூர் அரங்கம் மெய்யம் கச்சி பேர் மல்லை யென்று
மண்டினார் உய்யலல்லால் மற்றையார்க்கு உய்யலாமே? –திருக் குறுந் தாண்டகம் – 19

வங்கத்தால் மா மணி வந்துந்து முந்நீர் மல்லையாய்! மதிள் கச்சி யூராய்! பேராய்!
கொங்கத்தார் வளங்கொன்றை யலங்கல் மார்வன் குல வரையன் மடப் பாவை இடப்பால் கொண்டான்
பங்கத்தாய்! பாற்கடலாய்! பாரின் மேலாய்! பனிவரையி னுச்சியாய்! பவளவண்ணா!
எங்குற்றாய்? எம்பெருமான்! உன்னை நாடி ஏழையேன் இங்ஙனமே உழி தருகேனே.–திருநெடுந்தாண்டகம் – 9

காரார் குடந்தை கடிகை கடல் மல்லை ஏரார் பொழில் சூழ் இடவெந்தை நீர்மலை –சிறிய திருமடல் – 73

மன்னுங் கடல் மல்லை மாயவனை – வானவர் தம் சென்னி மணிச்சுடரைத் தண்கால் திறல் வலியை –பெரிய திருமடல் – 120

———————-

ஸ்ரீ பூதத்தாழ்வார் -1-பாசுரம் மங்களாசாசனம் –

தமருள்ளம் தஞ்சை தலை யரங்கம் தண்கால்
தமருள்ளும் தண் பொருப்பு வேலை – தமருள்ளும்
மா மல்லை கோவல் மதிட் குடந்தை யென்பரே
ஏவல்ல வெந்தைக் கிடம்.–இரண்டாம் திருவந்தாதி – 70-

இந்த தேசம் பல்லவ மன்னர்களின் வரலாற்றோடு மண்டிக் கிடக்கிறது. பாகவத புராணத்தில் புண்டரீக மஹரிஷியின் வரலாற்றைச்
சொல்லி வரும்போது இத்தல வரலாறு இணைந்து வருகிறது.
இந்த முனிவர் தாமரஸ புஷ்பங்களைக் கொண்டு சஷீராப்தி நாதனை (திருப்பாற் கடலில் எம்பெருமான் பள்ளி கொண்ட கோலத்தை) வழிபட
எண்ணி ஒரு கூடை நிறைய பூக்களைப் பறித்து வைத்து கிழக்கு நோக்கிச் செல்கையில் சமுத்திரம் வழியை
அடைத்துக்கொண்டிருப்பதைப் பார்த்து பக்தி மேலீட்டால் சமுத்திர ஜெலத்தைக் கைகளால் இறைத்து விடலாமென இறைக்க ஆரம்பித்தார்.

இவரது பக்தியை மெச்சிய எம்பெருமான் இவர்படும் துயரைப் போக்க காட்சி கொடுக்க எண்ணியவராய் ஒரு முதியவர் வேடங்கொண்டு இவரிடம்
வந்து அருந்துவதற்கு ஆகாரம் கேட்க, அந்த நிலையிலும் அவருக்கு ஆகாரம் கொடுக்க எண்ணிய ரிஷி தாம் கொண்டுவந்த மலர்க்கூடையை
அவரிடம் கொடுத்து இதை வைத்துக்கொண்டிரும். யாம் சென்று ஆகாரம் கொண்டு வருகிறோம் என்று சொல்லிச் செல்ல, அவர் ஆகாரம் கொண்டு
வருவதற்குள் எம்பெருமான் மாமல்லைக்கடலில் ரிஷியால் கொணரப்பட்ட பூக்களையெல்லாம் சூடிக்கொண்டு ஆதிசேடன் மேல் சயனித்திருக்கும்
திருக்கோலத்தில் சேவை சாதிக்க இதைக் கண்டு பேரானந்தமுற்ற ரிஷி எம்பெருமானின் பாதத்தருகில் அமரும் பாக்கியம் தமக்கு வேண்டுமென்று
கேட்க பெருமானும் அவ்வாறே அருளினார்.

இவ்விதம் அந்த ஸ்தலத்திலேயே சயன திருக்கோலத்தில் காட்சி யருளியமையால் தலசயனப்பெருமாள் என்னும் திருநாமம் உண்டாயிற்றென்பர்.
தற்போதுள்ள கோவிலும் வெறுந்தரையிலே (ஆதிசேடன் மீது) எம்பெருமான் சயனித்திருக்க புண்டரீக மஹரிஷி கை கூப்பிய வண்ணம் அருகில் உள்ளார்.

மூலவர்–ஸ்தல சயனப் பெருமாள். புஜங்க சயனம் கிழக்கு நோக்கிய திருக்கோலம்.
உற்சவர்– உலகுய்ய நின்றான்
தாயார்– நிலமங்கைத் தாயார், தனிக்கோயில் நாச்சியார்
தீர்த்தம்– புண்டரீக புஷ்கரணி கருட நதி
காட்சி கண்டவர்கள்– புண்டரீக மஹரிஷி

சுமார் இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்பே இது மிகச் சிறந்த கடற்கரை நகரமாகவும், பெரிய துறைமுகமாகவும், பன்னாட்டு வணிகர்களும்
வந்து குழுமி பண்டமாற்று செய்துகொள்ளும் மிகப்பெரிய வாணிகத்தலமாகவும் விளங்கியது. கி.பி. முதல் நூற்றாண்டில் பெரிப்பளசு தமது நூலில்
இவ்வூரினையும் பாண்டிச்சேரியையும் பற்றி குறிக்கிறார். இங்கு கிரேக்கர்கள். ரோமானியர்கள். கோணகர்களின் வாணிகக் கப்பல்கள் நிதிக் குவியலோடு
வந்து நம் நாட்டு பொருட்களையும், யானைகளையும் ஏற்றிச் சென்றனர்.
எண்ணற்றக் கப்பல்கள் வந்தும், போய்க் கொண்டும் கடலில் ஓவியக் காட்சிகளைத் தீட்டிக் கொண்டிருந்தன

சங்க காலத் தொகை நூலான பத்துப்பாட்டில் தொண்டைமான் இளந்திரையன் மீது உருத்திரங் கண்ணனார் என்பார் பாடிய பாடலில் இந்த
மாமல்லபுரம் குறிக்கப்படுகிறது. அந்தக் காலத்திலேயே (நீர்ப்பாயல் (சலசயனம்) சலசயனம் என்று குறிக்கப்பட்டுவிட்டது)

வண்டல் ஆயமொடு உள்துறை தலைஇப்
புனல் ஆடும் மகளிர் இட்ட பொலங்குழை
இரைதேர் மணிச்சிரல் இரைசெத்து எரிந்தென
புள்ஆர் பெண்ணை புலம்பு மடற் செல்லாது
கேள்வி அந்தணர் அருங்கடன் இறுத்த
வேள்வித் தூணத்து அசைஇ யவனர்
ஓதிம விளக்கின் உயர்மிசைக் கொண்ட
வைகுறு மீனின் பைபயத் தோன்றும்
நீர்ப்பெயற்று எல்லைப் போகி – என்ற பாடலில்
நீர்ப்பெயற்ற- நீர்ப்பாயற்று – நீர்ப்பாயலை உடையது (நீர்ப்பாயல்-சலசயனம் என்னும் கோயிலேயாகுமென) ஆராய்ச்சியாளர் குறித்துச் சென்றுள்ளனர்.
சங்க காலத்திலேயே சலசயனம் என்னும் சொல் அக்கால தமிழ்ச்சொல்லான நீர்ப்பாயல் என்றே குறிக்கப்படுவதிலிருந்து இதன் தொன்மை விளங்கும்.
சங்க காலத்தில் மட்டுமல்ல ஆழ்வாரும் இதே நீர்ப்பாயல் என்னும் சொல்லை எடுத்தாண்டுள்ளார்.

தூயனாயு மன்றியும் சு ரும்புலாவு தண்டுழாய்
மாய நின்னை நாயினேன் வணங்கி வாழ்த்து மீதெல்லாம்
நீயுநின் குறிப்பினிற் பொறுத்து நல்கு வேலை நீர்ப்
பாயலோடு பத்தர் சித்தம் மேயவேலை வண்ணனே –

இங்குள்ள ஆதிவராகர் கோவில், மும்மூர்த்தி மண்டபம், பாண்டவர் ரதங்கள், அர்ஜூனன் தவம், கண்ணபிரானின் கவின்மிகு லீலா விநோதக்
காட்சிகள், தசாவதாரக் காட்சிகள், இராமானுஜர் மண்டபம், திரௌபதி தேர், திருமாலின் சயன திருக்கோலங்கள் நின்ற, அமர்ந்த திருக்கோலங்கள் என்று
எங்கு காணினும் விஷ்ணுவின் காட்சிகளும், இலட்சினைகளும், வைணவம்எத்துனை யாழமாக வேரூன்றி தழைத்துப் பரவி விரவியிருந்ததை எண்ணிப்
பார்க்கும்போது நெஞ்சு விம்முகிறது.
பல்லவ மன்னர்கள் வைணவர்கள், வைணவம் பரப்பும் வீரர்களாகவும் இவர்கள் திகழ்ந்தனர். இங்கு சிம்ம விஷ்ணு என்னும் பல்லவமன்னன் தனது
பக்தியின் அடையாளமாக ஆதிவராகர் குகைக் கோவில் அமைத்தான். இக்கோவிலின் உட்புறத்தில் ஸ்ரீசிம்மவிஷ்ணு போத்தாதி ராஜன் என்று பல்லவ
கிரந்த எழுத்துக்களில் பொறிக்கப்பட்டுள்ளது. சிம்ம விஷ்ணுவுக்கு எதிரே அவனது மகன் மகேந்திர வர்மனுக்கும் இங்கு சிலை வைக்கப்பட்டுள்ளது.
இங்குள்ள வராக மண்டபம் மும்மூர்த்தி மண்டபம் போன்றன சிம்ம விஷ்ணுவால் கட்டப்பட்டதாகும். பல்லவ மன்னர்கள் தங்களுக்கு தூய
வைணவ பெயர்களையே வைத்துக்கொண்டனர் என்பதற்கு இதுவே சான்று.

ஆதிவராக மண்டபம் என்றும் ஒரு மண்டபம் இங்குள்ளது. இது இங்குள்ள மகிசாசுர மர்த்தினிக் குகையிலிருந்து தெற்கே உள்ளது. குகை
மேற்கு நோக்கிய அமைப்பு. இதன் நடுவில் உள்ள கருவறையில் வராக மூர்த்தி உள்ளார்.

கல்வெட்டுக்களில் இக்கோவில் (ஆதிவராக மண்டபம்) பரமேச்சுர மகா வராஹ விஷ்ணுக் கிரஹம் எனக் குறிக்கப்பட்டுள்ளது. திருமாலின் 10
அவதாரங்களைக் குறிக்கும் கல்வெட்டும் இங்குள்ளது.

ஒரு காலத்தில் இங்கு ஏழு கோயில்கள் இருந்ததாகவும் அவைகள் கடல் கோளால் அழிக்கப்பட்டுவிட்டன வென்றும் அப்போது இந்நகரத்திற்கு 7
கோயில் நகரம் என்னும் பெயர் விளங்கியதாகவும் அறிய முடிகிறது. இதன்பின் பல்லவ மன்னன் ராஜ சிம்மன் காலத்தில் கடற்கரையில் 3 கோவில்கள்
எழுப்பப்பட்டன. இக்கோயில்களின் அமைப்பைக் கண்டு சோழமன்னன் ராஜராஜ சோழன் வியந்து போற்றியுள்ளான். இதிலும் 2 கோவில்கள் கடல்
வெள்ளத்தில் அழிந்து விட்டன. அக்கோயில் குறித்து இரண்டு பலி பீடங்களும்ஒரு கொடி மரமும் இன்றும் இருக்கின்றன. அழியாத ஒரு கோவில் இன்றும்
கடல்வயப்பட்டே உள்ளது. சுற்றிலும் கடல் நீரால் சூழப்பட்டு கடல் அலைகள் கோவிலின் மதிற்சுவர்களில் அலைமோதிக் கொண்டிருக்கின்றன. இதைத்தான்
சலசயனப் பெருமாளாகக் கொள்ளும் ஒரு கருத்தும் உண்டு. இந்தக் கோவிலில் தற்போது திருவாராதன வழிபாடுகள் இல்லை. இப்பெருமானைச் சேவிக்கும் போது இக்கோவில் அமைந்துள்ள சூழ்நிலையும் அலைமுழங்கும் திருப்பாற்கடல் நாதனையே சேவிக்கும் உணர்வைத் தரும்.

கடலுக்குள் அமிழ்ந்த கோவிலில் இருந்த பெருமாளைக் கொணர்ந்து கடற்கரைக்குச் சற்றுத் தொலைவில் ஊருக்குள் அமைத்துள்ளனர். இங்கு பள்ளி
கொண்ட நிலையில் உள்ள பெருமாளுக்கே ஸ்தல சயனத் துறைவார் என்பது திருநாமம். இக்கோவில் தான் மங்களாசாசனம் செய்யப்படட திவ்யதேசமாகும். இதுதான் தல சயனமாகும்.
சிலர் இரண்டு கோவில்களும் (அதாவது சலசயனம், தல சயனம்) மங்களாசாசனம் என்று கூறுவர்.

இருப்பினும் தற்போது பெயர் பெற்றிருப்பது ஊருக்குள் அமைந்திருக்கும் தலசயனப் பெருமாள் கோவில் மட்டுமே.

இங்கு ஸ்தல சயனப்பெருமாள் கோவில் அமைவதற்கு முன்பே சுமார் ஒரு யுகத்திற்கு முன்பிருந்தே ஆதிவராஹப் பெருமாள் கோவில் என்று ஒரு
கோவில் இருந்தது. இப்போதும் அந்தத் தலம் இங்குள்ள கலங்கரைவிளக்கத்திற்குச் செல்லும் பாதையின் ஓர் பால் அமைந்துள்ளது.
ஏனத்துருவில் என்று திருமங்கையாழ்வார் இந்தப் பெருமாளையும் மங்களாசாசனம் செய்துள்ளார்.-பிராட்டியின் பெயரான நிலமங்கை நாச்சியார் என்பதையும் திருமங்கையாழ்வார் இப்பாடலில் குறித்துள்ளார்.

கடற்கரைக் கோவிலின் மூலவர் தலசயனத் துறைவார். உற்சவரின் திருநாமம் உலகுய்ய நின்றான் என்பதாகும். இங்கு உற்சவர் தம் கையில் ஒரு
சிறு தாமரை மொக்குடன் திகழ்கிறார் இதை அவரே மூலவரின் பாதங்களில் சேர்ப்பிப்பதாகவும் ஐதீஹம். பார்ப்பதற்கு மிக்க ரம்மியமானவர் இவர். கையில்
தாமரை மொட்டுடன் இருக்கும் உற்சவர் 108இல் இவர் ஒருவர்தான்.
பல்லவ மன்னர்கள் கலைத்தாய்க்குச் சிற்பக் கலையை காணிக்கையாக அர்ப்பணித்த இவ்விடத்திற்கு அர்த்த சேது என்றும் ஒரு பெயரும் உண்டு.
இப்போதுள்ள கோவில் ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்படவில்லையென்றும், அக்கோவில் கடலுக்குள் மூழ்கிவிட்டதென்றும்,
கடலுள் கிடந்த இக்கருமாணிக்கம் (பெருமாள்) தன் பக்தரின் கனவில் தான் இருப்பதை யுணர்த்த அந்த திவ்ய விக்ரஹத்தை எடுத்துவந்து இப்போதுள்ள
இடத்தில் பிரதிஷ்டை செய்தனர் என்றும் மரபுவழிக் கதைகள் உள்ளன.

இப்பெருமாள் (ஏனப்பிரான்) வலது திருக்கரத்தை தமது திருமார்பின் மீது உபதேச முத்திரையாக வைத்து ஞானத்தமிழ் புரிந்த நான் என்பதை
விளக்குகிறார்.

செறிந்த பனைபறித்துத் திண் களிற்றை சாடி
முறிந்து விழப் பாகனையு மோதி – யெறிந்து
தருக்கடன் மல்லைக் குமைத்தான் தஞ்சமென் நெஞ்சே
திருக்கடன் மல்லைக்குள் திரி.–பிள்ளைப் பெருமாளைய்யங்கார்

செறிந்த பணை பறித்து திண் களிற்றைச் சாடி
முறிந்து விழப் பாகனையும் மோதி எறிந்து
தருக்கு அடல் மல்லைக் மைத்தான் தஞ்சம் என்று நெஞ்சே
திருக்கடல் மல்லைக்குள் திரி –93–

(இ – ள்.) நெஞ்சே – (எனது) மனமே! –
செறிந்த – நெருங்கியுள்ள.
பணை – தந்தங்களை,
பறித்து – பிடுங்கி, (அவற்றைக்கொண்டே),
திண் களிற்றை – வலிய (குவலயாபீடமென்னும்) மதயானையை,
சாடி – அடித்துக்கொன்று, –
பாகனையும் – (அவ்யானையை நடத்துபவனான) பாகனையும்,
முறிந்து விழ – இறந்து கீழ்விழும்படி,
மோதி எறிந்து – அடித்துத் தள்ளி, –
தருக்கு அடல் மல்லை – செருக்கையும் தேகவலிமையையுமுடைய மல்லர்களை,
குமைத்தான் – பொருது கொன்றவனாகிய திருமாலே,
தஞ்சம் என்று – ரக்ஷகமென்று (அறுதியிட்டு),
திருக்கடன்மல்லைக்குள் திரி – திருக்கடன்மல்லையென்னுந் திவ்வியதலத்திற் சென்று திரிவாயாக; (எ – று.)

எம்பெருமானையே ரக்ஷகமாக நினைத்துத் திருக்கடன்மல்லையிற் சென்று வசித்தால் அப்பெருமான்
விரோதிகளையெல்லாம் போக்கி நற்கதியளிப்ப னென்பதாம்.
இது, பூதத்தாழ்வார் திருவவதாரஸ்தலம்.

நின்று திரியும் பிறவி எல்லாம் நேர்வித்து
கொன்று திரியும் கொடு வினையார் இன்று
வெருவிட எந்தைக்கே விழுமிய தொண்டு ஆனேன்
திருவிட வெந்தைக்கே செறிந்து –92-

(இ – ள்.) நின்று திரியும் பிறவி எல்லாம் நேர்வித்து – நிலைத்திணைப் பொருளும் (ஸ்தாவரமும்) இயங்கு
திணைப்பொருளும் (ஜங்கமமும்) ஆகிய எல்லாப்பிறவிகளையும் (எனக்கு) உண்டாக்கி,
கொன்று திரியும் – (என்னை) மிகவும் வருத்திக்கொண்டு திரிகின்ற,
கொடு வினையார் – மிகக்கொடிய தீவினைகள்,
இன்று -இப்போது,
வெருவிட – அஞ்சியோடும்படியாக, (யான்),
திருவிடவெந்தைக்கே செறிந்து – திருவிடவெந்தையென்னுந் திவ்வியதலத்தில் நெருங்கி,
எந்தைக்கே விழுமிய தொண்டு ஆனேன் – (அத்தலத்தில் எழுந்தருளிய) எமது ஸ்வாமியாகிய நித்யகல்யாணப்பெருமானுக்கே சிறந்த அடியவனாயினேன்; (எ – று.)

எம்பெருமானுக்கே அடிமைப்பட்டதனால், எனக்குப் பிறவித்துன்பங்களை இதுகாறும் விளைத்து என்னை வருத்தி
வந்த பாவங்களெல்லாம் இனி என்னையணுகாது அஞ்சியோடு மென்பதாம்.
“அகஞ்சிவந்த கண்ணினராய் வல்வினையராவார்,
முகஞ்சிதைவராமன்றேமுக்கி – மிகுந்திருமால்,
சீர்க்கடலையுள் பொதிந்த சிந்தனையேன்றன்னை,
யார்க்கடலாஞ் செவ்வேயடர்த்து,”
“வானோ மறிகடலோ மாருதமோ தீயகமோ,
கானோ வொருங்கிற்றுக் கண்டிலமால் – ஆனீன்ற,
கன்றுயரத் தாமெறிந்து காயுதிர்த்தார் தாள்பணிந்தோம்,
வன்றுயரையாவா மருங்கு” என்பன நம்மாழ்வார்பாசுரம்.
செறலினால், ‘கொடுவினையார்’ என அஃறிணையை உயர்திணையாக் கூறினார்; திணைவழுவமைதி.

இத்தலத்தி லெழுந்தருளிய வராகப்பெருமாள் தமதுதேவியை இடப்பக்கத்திற் கொண்டிருத்தலால்,
இத்தலத்திற்குத் திருவிடவெந்தையென்று திருநாமமாயிற்று

——————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ திவ்ய தேச மங்களா ஸாஸன அருளிச் செயல்கள்-ஸ்ரீ திரு இடவெந்தை

March 24, 2024

மூலவர் -லஷ்மீ வராஹப் பெருமாள் / நின்ற திருக் கோலம் / கிழக்கே திரு முக மண்டலம்
உத்சவர் -நித்ய கல்யாணப் பெருமாள்
தாயார் -அகில வல்லி நாச்சியார் -கோமள வல்லித் தாயார் –
விமானம் -கல்யாண விமானம்
தீர்த்தம் -கல்யாண தீர்த்தம் -வராஹ தீர்த்தம்
மங்களா சாசனம் -திருமங்கை யாழ்வார் -2-7-

மேக நாதன் பிள்ளை -பலி அரசனுக்கு அருள் புரிய வராஹப் பெருமாள் பூமி பிராட்டியை இடது மடியில் இருத்திக் கொண்டு சேவை சாதித்தார் –
காலவ மகரிஷிக்கு 360 பெண்கள் பிறக்க -ரிஷி வேண்ட பகவான் தினமும் ஒவ்வொரு பெண்ணாகத் திருமணம் செய்தார்
இறுதியில் அவர்கள் அனைவரையும் ஒரே பெண்ணாக அகில வல்லி நாச்சியாராக ஆக்கி அவள் உடன் சேவை சாதிக்கிறார் –
திரு வல வெந்தை -திருக் கடல் மல்லை / புருஷோத்தமன் -ஜீவாத்மா அனைவரும் அவன் இடம் சேர வேண்டுமே
–இதுவே நித்ய கல்யாண பெருமாள் காட்டி அருளுகிறார்
கன்னத்தில் மை தீட்டி சேவை
ஆதி சேஷன் -வாசுகி -திருவடியின் கீழே -சேவை –

மூலவர் ஸ்ரீ லக்ஷ்மி வராகப் பெருமாள்
கோலம் நின்ற
திருமுக மண்டலம் கிழக்கு
உற்சவர் ஸ்ரீ நித்ய கல்யாண பெருமாள்
தாயார் ஸ்ரீ கோமள வல்லி நாச்சியார்
தீர்த்தம் ஸ்ரீ கல்யாண தீர்த்தம்
விமானம் ஸ்ரீ கல்யாண விமானம்
மண்டலம் தொண்டைநாட்டுத் திருப்பதிகள்
மாநிலம் தமிழ் நாடு
அடிப்படை இடம் சென்னை
நாமாவளி ஸ்ரீ கோமள வல்லீ ஸமேத ஸ்ரீ நித்ய கல்யாணாய நமஹ

—————

ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் -13-பாசுரங்கள் மங்களாசாசனம் –

பார்த்தற்காய் அன்று பாரதம் கை செய்திட்டு வென்ற பரஞ்சுடர்
கோத்து அங்கு ஆயர் தம் பாடியில் குரவை பிணைந்த எங்கோவலன்
ஏத்துவார் தம் மனத்துள்ளான் இட வெந்தை மேவிய எம்பிரான்
தீர்த்த நீர்த் தடஞ்சோலை சூழ் திருவேங்கடம் அடை நெஞ்சமே! –1-8-4-

திவளும் வெண் மதி போல் திரு முகத்தரிவை செழும் கடல் அமுதினில் பிறந்த
வவளும் நின்னாகத்திருப்பது மறிந்தும் ஆகிலும் ஆசை விடாளால்
குவளை யங்கண்ணி கொல்லியம்பாவை சொல்லு நின் தாள் நயந்திருந்த
விவளை உன் மனத்தால் என் நினைந்து இருந்தாய் இடவெந்தை யெந்தை பிரானே–2-7-1-

துளம்படு முறுவல் தோழி யார்க்கருளாள் துணை முலை சாந்து கொண்டு அணியாள்
குளம்படு குவளைக் கண்ணினை எழுதாள் கோல நன் மலர் குழற்கு அணியாள்
வளம்படு முந்நீர் வையம்முன்னளந்த மால் என்னும் மாலின மொழி யாள்
இளம்படி இவளுக்கு என் நினைந்து இருந்தாய் இடவெந்தை யெந்தை பிரானே–2-7-2-

சாந்தமும் பூணும் சந்தனக் குழம்பும் தட முலைக்கணியிலும் தழலாம்
போந்த வெண் திங்கள் கதிர் சுட மெலியும் பொரு கடல் புலம்பிலும் புலம்பும்
மாந்தளிர் மேனி வண்ணமும் பொன்னாம் வளைகளும் இறை நில்லா என் தன்
ஏந்திழை இவளுக்கு என் நினைந்து இருந்தாய் இடவெந்தை யெந்தை பிரானே –2-7-3-

ஊழியில் பெரிதால் நாழிகை யென்னும் ஒண் சுடர் துயின்றதால் யென்னும்
ஆழி யும் புலம்பும் அன்றிலும் உறங்கா தென்றலும் தீயினில் கொடிதாம்
தோழியோ வென்னும் துணை முலை யரக்கும்சொல்லுமின் என் செய்கேன் யென்னும்
ஏழை என் பொன்னுக்கு என் நினைந்து இருந்தாய் இடவெந்தை யெந்தை பிரானே—2-7-4-

ஓதிலும் உன் பேர் அன்று மற்று ஓதாள் உருகும் நின் திரு வுரு நினைந்து
காதன்மை பெரிது கையற வுடையள் கயல் நெடுங்கண் துயில் மறந்தாள்
பேதையன் பேதை பிள்ளைமை பெரிது தெள்ளியள் வள்ளி நுண் மருங்குல்
ஏதலர் முன்னா வென் நினைந்து இருந்தாய் இடவெந்தை யெந்தை பிரானே—2-7-5-

தன் குடிக்கேதும் தக்கவா நினையாள் தடங்கடல் நுடங்கெயிலங்கை
வன் குடி மடங்க வாளமர் தொலைத்த வார்த்தை கேட்டின்புறும் மயங்கும்
மின் கொடி மருங்குல் சுருங்க மேல் நெருங்கி மென் முலை பொன் பயத்திருந்த
என் கொடி இவளுக்கு என் நினைந்து இருந்தாய் இடவெந்தை யெந்தை பிரானே——2-7-6-

உளம் கனிந்து இருக்கும் உன்னையே பிதற்றும் உனக்கன்றி எனக்கன்பு ஒன்றிலளால்
வளங்கனி பொழில் சூழ் மாலிருஞ்சோலை மாயனே யென்று வாய் வெருவும்
களங்கனி முறுவல் காரிகை பெரிது கவலையோடே வலம் சேர்ந்திருந்த
இளங்கனி இவளுக்கு என் நினைந்து இருந்தாய் இடவெந்தை யெந்தை பிரானே-2-7-7-

அலங்கெழு தடக்கை யாயன் வாயாம்பற்கு அழியுமால் என்னுள்ளம் யென்னும்
புலங்கெழு பொரு நீர்ப் புட்குழி பாடும் போதுமோ நீர் மலைக்கு யென்னும்
குலங்கெழு கொல்லி கோமளவல்லி கொடி இடை நெடு மழைக் கண்ணி
இலங்கெழில் தோளிக்கு என் நினைந்து இருந்தாய் இடவெந்தை யெந்தை பிரானே—2-7-8-

பொன் குலாம் பயலை பூத்தன மென் தோள் பொரு கயல் கண் துயில் மறந்தாள்
அன்பினால் உன் மேல் ஆதரம் பெரிது இவ் வணங்கினுக்குற்ற நோய் அறியேன்
மின் குலா மருங்குல் சுருங்க மேல் நெருங்கி வீங்கிய வன முலையாளுக்கு
என் கொலாம் குறிப்பில் என் நினைந்து இருந்தாய் இடவெந்தை யெந்தை பிரானே—–2-7-9-

அன்னமும் மீனும் ஆமையும் அரியுமாய எம்மாயனே அருளாய்
என்னுமின் தொண்டர்க்கு இன்னருள் புரியும் இடவெந்தை யெந்தை பிரானை
மன்னு மாட மங்கையர் தலைவன் மான வேல் கலியன் வாய் ஒலிகள்
பன்னிய பனுவல் பாடுவார் நாளும் பழ வினை பற்று அறுப்பாரே—2-7-10-

காரார் குடந்தை கடிகை கடல் மல்லை ஏரார் பொழில் சூழ் இடவெந்தை நீர்மலை –சிறிய திருமடல் – 73

தொன்னீர்க் கடல் கிடந்த தோளா மணிச் சுடரை என் மனத்து மாலை இடவெந்தை யீசனை –பெரிய திருமடல் – 119-

இத்தலத்தைப்பற்றி வராஹ புராணத்தில் புலஸ்தியர் என்னும் முனிவர் கௌசிக ரிஷிக்கு கூறியதாக உள்ளது.

முன்னொரு யுகத்தில் (கிரேதா) மேகநாதன் என்னும் அரசன் இருந்தான். அவன் புதல்வன் பலி மிகவும் நீதிமானாக செங்கோலோச்சி வந்தான்.
அக்காலத்தில் மாலி, மால்யவான், ஸு மாலி என்னும் மூன்று அரக்கர்கள் தேவர்களுடன் யுத்தம் செய்ய பலியின் உதவியைக் கேட்டனர் பலி மறுத்தான்.
அரக்கர்கள் தேவர்களோடு யுத்தம் செய்து தோற்றுப் போய் மீண்டும் பலியிடமே தஞ்சம் புகுந்தனர்.
அரக்கர்களின் பொருட்டு பலி தேவர்களுடன் யுத்தம் செய்து வென்றான். தேவர்களைக் கொன்ற பாவம் போவதற்காக இவ்விடத்து வந்து தேவர்கள்
தலைவன் திருமாலைக் குறித்து கடுந்தவம் செய்தான். தவத்தில் மகிழ்ந்த விஷ்ணு, வராஹரூபியாய் அவனுக்கு காட்சிகொடுத்து மோட்சம் நல்கி
சக்திவாய்ந்த வராஹ மூர்த்தியாய் இங்குள்ள வராஹ குளத்தில் நின்றருளினார்.

இஃதிவ்வாறிருக்க சரஸ்வதி நதிக்கரையில் குனி என்னும் ஒரு ரிஷி தவஞ்செய்து சுவர்க்கம் பெற்றார். குனியின் மகளும் அவ்விதமே சுவர்க்கம்
செல்ல எண்ணி தவஞ்செய்யுங்காலை, நாரதர் வந்து, நீ மணமாகாதவள் மணஞ்செய்தாலன்றி சுவர்க்கம் சித்திக்காது என்று சொல்லி, அங்கு
தவஞ்செய்துகொண்டிருந்த மற்ற ரிஷிகளிடம் இப்பெண்ணைத் திருமணம் செய்துகொள்ளுமாறு நாரதர் வேண்டினார்.
அம்முனிவர்களுள் காலவரிஷி என்பார் அப்பெண்ணைத் திருமணஞ்செய்துகொண்டு ஓராண்டில் 360 கன்னிகைகளை (பெரிய
பிராட்டியார் அம்சமாக) பெற்றார். இவ்விதம் 360 கன்னிகைகள் தமக்குப் பிறந்ததை ஞான திருஷ்டியால் உணர்ந்த முனிவர் இது இறைவன் செயலே
என்று எண்ணி அத்தனைபேரையும் கிருஷ்ணார்ப்பணம் என்று கிருஷ்ணருக்கே அர்ப்பணித்துவிட தமக்குள் தீர்மானித்திருந்தார்.
பருவமடைந்த இவர்களை திருமணஞ்செய்து கொடுக்கத் திண்டாடிக் கொண்டிருந்த வேளையில், சரஸ்வதியில் தீர்த்தாடனம் செய்ய வடதேச
யாத்திரை சென்ற சிலர் இவ்விபரந் தெரிந்து காலவரிஷியை அணுகி தமது நாடாகிய வாமகவிபுரி என்னும் ஊருக்கு வருமாறும் அங்கு எழுந்தருளியுள்ள
வராஹமூர்த்தி மிகப்பெரிய வரப்பிரசாதி யென்றும், தெய்வத்தால்தான் இக்காரியம் நடக்க வேண்டுமென்று சொல்ல அவரும் இசைந்து இங்குவந்த
வராஹமூர்த்தியைக் கருதி கடுந்தவஞ் செய்து வரலாயினார்.
இவரின் தவத்தை மெச்சிய ஸ்ரீமந் நாராயணன் ஒரு பிரம்மச்சாரி வடிவில் வந்து இம்முனிவரை அணுகி தான் திவ்யதேச யாத்திரையாக வந்ததாக கூற, காலவரிஷி தனது நிலையை எடுத்துரைத்து தனது பெண்களை திருமணம் செய்து தங்களின் பிரம்மச்சரிய விரதத்தை
முடித்துக்கொள்ள வேண்டும் என்று மன்றாட ஸ்ரீமந்நாராயணனும் அதற்கு ஒப்புக்கொண்டு தினம் ஒரு கன்னிகையாக 360 பெண்களையும் திருமணம்
செய்து கொண்டார்.
கடைசி தினத்தில் எல்லோரும் பார்த்துக்கொண்டிருக்க 360 கன்னியர்களையும் ஒன்றாகச் சேர்த்து ஒரே பெண்ணாக்கி தனது
இடப்பக்கத்தில் வைத்துக்கொண்டு வராஹ ரூபியாக சேவை சாதித்தார். திருவாகிய இலக்குமியை இடப்புறம் ஏற்றுக்கொண்ட எம்பெருமான் ஆன
படியால் திரு+இட+எந்தை திருவிட வெந்தையாயிற்று, காலப்போக்கில் மருவி திருவடந்தை ஆயிற்று.

மூலவர்–லட்சுமி வராஹப் பெருமாள் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலம்.
உற்சவர்- நித்ய கல்யாணப் பெருமாள்
தாயார்– கோமளவல்லி நாச்சியார்
தீர்த்தம்– வராஹதீர்த்தம், கல்யாண தீர்த்தம்
விமானம்– கல்யாண விமானம்
காட்சி கண்டவர்கள்– பலி, காலவ ரிஷி

இந்த வராஹ மூர்த்தியை மாமல்லபுரத்திலிருந்து அரிகேசரிவர்மன் என்னும் மன்னன் தினமும் வந்து வணங்கி சென்று கொண்டிருந்தான்.
இம்மன்னன் தன் பொருட்டு தினமும் 12 மைல் வந்து சேவித்துச் செல்வதைக்கண்ட எம்பெருமான் இவனது கனவில் தோன்றி உனக்காக
மாமல்லையில் எழுந்தருளுகிறேன் என்று சொல்லி பிராட்டியை வலப்பக்கத்தில் வைத்துக் கொண்டு எழுந்தருளினார்.
இக்கோவில் மாமல்லபுரத்தில் கலங்கரை விளக்கத்திற்கு செல்லும் பாதையின் ஓர்பால் அமைந்துள்ளது. இப்பெருமானைக்கூட திருமங்கையாழ்வார்
மங்களாசாசனம் செய்துள்ளார்.
360 கன்னியரை ஒன்றாக்கி ஒரே பெண்ணாகச் செய்தமையால் இங்குள்ள பிராட்டிக்கு அகிலவல்லி நாச்சியார் என்று பெயரும் உண்டு.
தினமும் ஒரு திருமணம் செய்து கொண்டதால் பெருமாளுக்கு நித்ய கல்யாணப் பெருமாள் என்றும் ஊருக்கு நித்ய கல்யாணபுரி என்றும்
பெயராயிற்று. வராக அவதாரம் எடுத்தமையால் வராகபுரி என்னும் பெயருண்டு.அசுரகுல கால நல்லூர் என்பதே கல்வெட்டுகளில் காணப்படும் பெயர். ஸ்ரீயின் அவதார ஸ்தலமாதலால் ஸ்ரீபுரி என்றும் இந்த ஊருக்கு நான்கு பெயர்கள் உண்டு.
360 கன்னியரில் முதற்கன்னிக்கு கோமளவல்லி என்பது பெயர்.
இங்கு தனிக் கோயிலில் உள்ள தாயாருக்கு கோமளவல்லி நாச்சியார் என்பதே திருநாமம்
நித்ய கல்யாண அவதாரத்தில் எழுந்தருளியிருப்பதாக ஐதீஹம். இவ்விருவர் திருமேனியில் (முகத்தில்) தாடையில் பொட்டு இயற்கையாகவே
அமைந்திருப்பது கண்கூடு. இந்தப் பொட்டு திருமகள் திருமண வைபவத்தை நினைவு கூறும் நிகழ்ச்சியாகும்.

இங்கு பெருமாள் எழுந்தருளியுள்ள முறை மிகச் சிறப்பான ஒன்றாகும். ஒரு திருவடி பூமியிலும் மற்றொன்று ஆதிசேடனும் அவன் பத்தினியான
இருவர் முடியிலும் வைத்துக்கொண்டு, அகிலவல்லி நாச்சியாரை இடது தொடையில் தாங்கிக்கொண்டு, சரம ஸ்லோகத்தை உபதேசிக்கும் வராஹ
மூர்த்தியாய் நின்றிலங்குகிறார்.

கி.பி. 1052 ஆம் ஆண்டில் விஜய ராஜேந்திர தேவ சோழனின் 35வது ஆட்சியாண்டில் இக்கிராமம் இப்பெருமாளுக்கே தேவதானமாய்த் தரப்பட்ட
செய்தியை ஜெயங்கொண்ட சோழ மண்டலத்து கலியாண திருவிடவெந்தை தேவர்க்கு நித்திய சிறப்புக்கும்… நாம் பிறந்த பூர நாளால் திங்கள் தோறும்
திருவிழா உள்ளிட்டு வேண்டும் நிபந்தனைகளுக்கும்.. யாண்டு முப்பத்தைந்தாவது முதல் தேவதான இறையிலியாக … கொடுக்க
வென்று திருவாய் மொழிந்தருளினாரென்று திருவோலை கூறுகிறது.

யானைத் தந்தத்தால் செய்யப்பட்ட பல்லக்கு ஒன்று இக்கோவிலில் உள்ளது. கொச்சி மகாராஜாவின் அரண்மனையில் ஒன்றும், இங்கொன்றுமாக
இந்தியாவிலேயே இந்த இரண்டு யானைத் தந்த பல்லக்குகள்தான் உள்ளதென தொல் பொருள் ஆய்வுத்துறையினர் கூறுகின்றனர்.

இன்று சிறப்புற்றிருக்கும் கோவளம் என்பதே ஒரு காலத்தில் பிராட்டியின் அவதார மகிமையைக் குறிக்கும் முகத்தான் கோமளவல்லிபுரம்
என்று வழங்கப்பட்டதாகும். இங்குதான் காலவரிஷி தவம் புரிந்தார்.

எம்பெருமான் 360 கன்னிகைகளை இரண்டு கன்னிகளாக்கி ஏற்றுக் கொண்டார் என்றும் சொல்வர். ஒருவர் கோமளவல்லி. (தனிக் கோவில்
நாச்சியார்) இன்னொருவர் அகிலவல்லி, இத்திருநாமத்தில் அனைத்து ஜீவராசிகளும் அடங்கி விட்டதாக ஒரு ஐதீஹம். ஒவ்வொரு தினமும் அவர்
திருமணம் கொண்டதும் ஓர் அடையாளம். அதாவது பிறக்கும் உயிர்கள் ஒவ்வொன்றையும் ஒவ்வொரு வினாடியிலும் ஏற்று அவைகட்கு நாயகனாக
அருள்புரிகிறார் என்பதும் ஐதீஹம். (அதாவது நாமெல்லாம் நாயகி போன்றும் எம்பெருமான் ஒருவரே நாயகன் என்றும் சொல்லும் வைணவக் கொள்கை
ஈண்டு நோக்கத்தக்கது)

நின்று திரியும் பிறவியெல்லாம் நேர்வித்துக்
கொன்று திரியும் கொடுவினையார் – இன்று
வெருவிட வெந்தைக்கே விழுமிய தொண்டானேன்
திருவிட வெந்தகைக்கே செறிந்து.-பிள்ளைப் பெருமாளைய்யங்கார்

நின்று திரியும் பிறவி எல்லாம் நேர்வித்து
கொன்று திரியும் கொடு வினையார் இன்று
வெருவிட எந்தைக்கே விழுமிய தொண்டு ஆனேன்
திருவிட வெந்தைக்கே செறிந்து –92-

(இ – ள்.) நின்று திரியும் பிறவி எல்லாம் நேர்வித்து – நிலைத்திணைப் பொருளும் (ஸ்தாவரமும்) இயங்கு
திணைப்பொருளும் (ஜங்கமமும்) ஆகிய எல்லாப்பிறவிகளையும் (எனக்கு) உண்டாக்கி,
கொன்று திரியும் – (என்னை) மிகவும் வருத்திக்கொண்டு திரிகின்ற,
கொடு வினையார் – மிகக்கொடிய தீவினைகள்,
இன்று -இப்போது,
வெருவிட – அஞ்சியோடும்படியாக, (யான்),
திருவிடவெந்தைக்கே செறிந்து – திருவிடவெந்தையென்னுந் திவ்வியதலத்தில் நெருங்கி,
எந்தைக்கே விழுமிய தொண்டு ஆனேன் – (அத்தலத்தில் எழுந்தருளிய) எமது ஸ்வாமியாகிய நித்யகல்யாணப்பெருமானுக்கே சிறந்த அடியவனாயினேன்; (எ – று.)

எம்பெருமானுக்கே அடிமைப்பட்டதனால், எனக்குப் பிறவித்துன்பங்களை இதுகாறும் விளைத்து என்னை வருத்தி
வந்த பாவங்களெல்லாம் இனி என்னையணுகாது அஞ்சியோடு மென்பதாம்.
“அகஞ்சிவந்த கண்ணினராய் வல்வினையராவார்,
முகஞ்சிதைவராமன்றேமுக்கி – மிகுந்திருமால்,
சீர்க்கடலையுள் பொதிந்த சிந்தனையேன்றன்னை,
யார்க்கடலாஞ் செவ்வேயடர்த்து,”
“வானோ மறிகடலோ மாருதமோ தீயகமோ,
கானோ வொருங்கிற்றுக் கண்டிலமால் – ஆனீன்ற,
கன்றுயரத் தாமெறிந்து காயுதிர்த்தார் தாள்பணிந்தோம்,
வன்றுயரையாவா மருங்கு” என்பன நம்மாழ்வார்பாசுரம்.
செறலினால், ‘கொடுவினையார்’ என அஃறிணையை உயர்திணையாக் கூறினார்; திணைவழுவமைதி.

இத்தலத்தி லெழுந்தருளிய வராகப்பெருமாள் தமதுதேவியை இடப்பக்கத்திற் கொண்டிருத்தலால்,
இத்தலத்திற்குத் திருவிடவெந்தையென்று திருநாமமாயிற்று

——————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ திவ்ய தேச மங்களா ஸாஸன அருளிச் செயல்கள்-ஸ்ரீ திரு நீர் மலை -ஸ்ரீ தோயாத்ரி –

March 24, 2024

மலை அடிவாரக் கோயில் –
மூலவர் -நீர் வண்ணன் -ரெங்க நாதர் -நின்றான் நின்ற திருக் கோலம் / கிழக்கே திரு முக மண்டலம்
தாயார் -அணி மா மலர் மங்கை -ரெங்க நாயகி
விமானம் -தோய கிரி விமானம்
தீர்த்தம் – மணி கர்ணிகா -ஸ்வர்ண -ஷீர -காருண்ய -சித்த புஷ்கரிணிகள்
மங்களா சாசனம் -பூதத்தாழ்வார் -திருமங்கை ஆழ்வார்
மலை மேல் கோயில் –
மூலவர் -சாந்த நரஸிம்ஹர் -இருந்தான் -வீற்று இருந்த திரு முக மண்டலம் – கிழக்கே திரு முக மண்டலம்
ரெங்க நாதர் -கிடந்தான் -மாணிக்க சயனம் -தெற்கே திரு முக மண்டலம்
தாயார் -ரெங்க நாயகி –
மூலவர் -த்ரிவிக்ரமன் -நடந்தான் / நின்ற திருக் கோலம் / கிழக்கே திருமுக மண்டலம்
காண்டவ வானம் -முனிவர்கள் -600 வருடங்கள் -த்வம் செய்து நீர்மையை சேவிக்க பிரார்த்தித்தனர் –
அவர்களுக்கு கருணையை உணர்த்தி இந்த க்ஷேத்ரத்தையே நீர் மலையாக உருவாக்கினார்
வால்மீகி முனிவர் இங்கு மலை மேல் பெருமாளை சேவித்துக் கீழே இறங்கி புஷ்கரிணியில் தீர்த்தமாட
-நீர் வண்ண பெருமாள் அவருக்கு சீதா லஷ்மண பரத சத்ருக்ந ஹனுமத் ஸஹிதமாக இராமனாக புஷ்காரிணியிலே சேவை சாதித்தார்
கோபுர துவாரம் -நேராக ராமர் சந்நிதியே -த்வஜ ஸ்தம்பம் தள்ளியே இருக்கும் –
திரு மங்கை ஆழ்வார் இப்பெருமாளை மங்களா சாசனம் செய்ய எழுந்து அருளிய போது இவ்விடத்தை சுற்றி
நீர் சூழ்ந்து கொண்டு இருக்க ஆறு மாத காலம் காத்து இருந்து பகவானை மங்களா சாசனம் செய்தார் –
இதனாலே திரு நீர் மலை -பெயர் பெற்றது -ஆழ்வார் தங்கி இருந்த இடம் இப்பொழுதும் திரு மங்கை யாழ்வார் புரம் -என்று அழைக்கப் படுகிறது –
திருக் கோவல் நகர் திரு வாலி குடந்தை புனல்நறையூர் –நீர் வண்ணன் -நரஸிம்ஹர் -உலக அளந்த பெருமாள் -ரெங்கன் -நான்கு புஷ்கரணிகள் நால்வருக்கும்
நீர் மலை -உறக்கமும் உறுதியும் -ரக்ஷணம் தீக்ஷை -ஸுலப்யம் -பரத்வம் –

மூலவர் ஸ்ரீ ரங்கநாதன், ஸ்ரீ நீர்வண்ணன், ஸ்ரீ த்ரிவிக்ரமன்,ஸ்ரீ சாந்த நரசிம்ஹன்
கோலம் நின்ற, வீற்றிருந்த, சயனம், நடந்த
திருமுக மண்டலம் கிழக்கு, தெற்கு
உற்சவர்
தாயார் ஸ்ரீ ரங்க நாயகி, ஸ்ரீ அணி மா மலர் மங்கை
தீர்த்தம் ஸ்ரீ மணி கர்ணிகா தடாகம்
விமானம் ஸ்ரீ தோய கிரி விமானம்
மண்டலம் தொண்டைநாட்டுத் திருப்பதிகள்
மாநிலம் தமிழ் நாடு
அடிப்படை இடம் சென்னை
நாமாவளி ஸ்ரீ அணி மா மலர் மங்கை ஸமேத ஸ்ரீ நீர் வண்ணன் ஸ்வாமிநே நமஹ

—————–

ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் -19-பாசுரங்கள் மங்களாசாசனம் –

அன்றாயர் குலக்கொடியோடு அணி மா மலர் மங்கை யொடன்பாளாவி அவுணர்க்கு
என்றானுமிரக்க மிலாதவனுக்கு உறையுமிடமாவது இரும் பொழில் சூழ்
நன்றாய புனல் நறையூர் திருவாலி குடந்தை தடந்திகழ் கோவல் நகர்
நின்றான் இருந்தான் கிடந்தான் நடந்தாற் கிடம் மா மலையாவது நீர் மலையே–2-4-1-

காண்டா வனமென்பதோர் காடு அமரர்க்கரையனது கண்டவன் நிற்க முனே
மூண்டாரழலுண்ண முநிந்ததுவும் அதுவன்றியும் முன்னுலகம் பொறை தீர்த்து
ஆண்டான் அவுணனவன் மார்பகலம் உகிரால் வகிராக முனிந்து அரியாய்
நீண்டான் குறளாகி நிமிர்ந்தவனுக்கிடம் மா மலையாவது நீர் மலையே–2-4-2-

அல மன்னு மடல் சுரி சங்க மெடுத்து அடலாழியி னாலணி யாருருவில்
புல மன்னு வடம் புனை கொங்கையினாள் பொறை தீர முனாளடுவாளமரில்
பல மன்னர் படச் சுடராழி யினைப் பகலோன் மறையப் பணி கொண்டணிசேர்
நிலா மன்னனுமாயுலகாண்டவனுக்கிடம் மா மலையாவது நீர் மலையே–2-4-3-

தாங்காத தோர் ஆளரியாய் அவுணன் தனை வீட முனிந்தவனால் அமரும்
பூம் கோதையர் பொங்கெரி மூழ்க விளைத்தது வன்றியும் வென்றி கொள் வாளமரில்
பாங்காக முனைவரொடு அன்பளவிப் பதிற்றைந்தி ரட்டிப்படை வேந்தர் பட
நீங்காச் செருவில் நிறை காத்தவனுக்குகிடம் மா மலையாவது நீர் மலையே–2-4-4-

மாலுங்கடலார மலைக் குவடிட்டணை கட்டி வரம்புருவ மதி சேர்
கோல மதிளாய விலங்கை கெடப் படை தொட்டொரு கால மரி லதிர
காலமிது வென்றயன் வாளி யினால் கதிர் நீண்முடி பத்தும் அறுத்தமரும்
நீல முகில் வண்ணம் எமக்கிறைவர்க்கிடம் மா மலையாவது நீர் மலையே–2-4-5-

பாராருலகும் பனி மால் வரையும் கடலும் சுடருமிவை யுண்டும் எனக்
காரா தென் நின்றவன் எம்பெருமான் அலை நீருலகுக்கரசாகிய அப்
பேரானை முனிந்த முனிக் கரையன் பிறரில்லை நுனக்கெனும் எல்லையினான்
நீரார் பேரான் நெடு மாலவனுக்கிடம் மா மலையாவது நீர் மலையே –2-4-6-

புகரார் உருவாகி முனிந்தவனைப் புகழ் வீட முனிந்து உயிர் உண்டு அசுரன்
நகராயின பாழ்பட நாமம் எறிந்தது வன்றியும் வென்றி கொள் வாள்அவுணன்
பகராத வனாயிர நாமம் அடிப்பணி யாதவனைப் பணியால் அமரில்
நிகராய வன்னெஞ்சு இடந்தானவனுக்கு இடம் மா மலையாவது நீர் மலையே-2-4-7-

பிச்சச்சிறு பீலி பிடித்துலகில் பிணந்தின் மடவாரவர் போல் அங்ஙனே
அச்சமிலர் நாணிலரா தன்மையால் அவர் செய்கை வெறுத் தணி மா மலர் தூய்
நச்சிந மனாரடையாமை நமக்கருள் செய்யென வுள் குழைந்தார்வமொடு
நிச்சம் நினைவார்க்கு அருள் செய்யுமவற்கிடம் மா மலையாவது நீர் மலையே–2-4-8-

பேசுமளவன்றிது வம்மின் நமர் பிறர் கேட்பதன் முன் பணிவார் வினைகள்
நாசமது செய்திடுமா தன்மையால் அதுவே நமதுய்விடம் நாண் மலர் மேல்
வாச மணி வண்டறை பைம்புறவில் மனமைந்தொடு நைந்து உழல்வார் மதியில்
நீசரவர் சென்று அடையாதவனுக்கிடம் மா மலையாவது நீர் மலையே–2-4-9-

நெடுமாலவன் மேவிய நீர் மலை மேல் நிலவும் புகழ் மங்கையர் கோன் அமரில்
கட மா களியானை வல்லான் கலியன் ஒலி செய்த தமிழ் மாலை வல்லார்க்கு உடனே
விடுமால் வினை வேண்டிடில் மேல் உலகும் எளிதாயிடும் அன்றி யிலங்கொலி சேர்
கொடு மா கடல் வையகம் ஆண்டு மதிக்குடை மன்னவராய் அடி கூடுவரே-2-4-10-

அலங்கெழு தடக் கை ஆயன் வாயாம்பற்கு அழியுமால் என்னுள்ளம் என்னும்
புலங்கெழு பொரு நீர்ப் புட் குழி பாடும் போதுமோ நீர் மலைக்கு? என்னும்
குலங்கெழு கொல்லி கோமள வல்லிக் கொடி யிடை நெடு மழைக் கண்ணி
இலங்கெழில் தோளிக்கு என் நினைந்திருந்தாய்? இடவெந்தை எந்தை பிரானே! பெரிய திருமொழி -2-7-8-

ஓடா அரியாய் இரணியனை ஊனிடந்த
சேடார் பொழில் சூழ் திரு நீர் மலையானை
வாடா மலர்த் துழாய் மாலை முடியானை
நாடோறும் நாடி நறையூரில் கண்டேனே. –பெரிய திருமொழ -6-8-4-

கதியே லில்லை நின்னரு ளல்லது எனக்கு
நிதியே! திரு நீர் மலை நித்திலத் தொத்தே!
பதியே! பரவித் தொழும் தொண்டர் தமக்குக்
கதியே! உனைக் கண்டு கொண்டு உய்ந்தொழிந்தேனே—பெரிய திருமொழி -7-1-7-

அருவி சோர் வேங்கடம் நீர் மலை யென்று வாய்
வெருவினாள் மெய்யம் வினவி யிருக்கின்றாள்
பெருகு சீர்க் கண்ண புர மென்று பேசினாள்
உருகினாள் உள் மெலிந்தாள் இது என் கொலோ? 0-பெரிய திருமொழி -8-2-3-

மஞ்சுயர் மா மதி தீண்ட நீண்ட மாலிருஞ் சோலை மணாளர் வந்து என்
நெஞ்சுள்ளும் கண்ணுள்ளும் நின்று நீங்கார் நீர் மலையார் கொல்? நினைக்க மாட்டேன்
மஞ்சுயர் பொன் மலை மேலெழுந்த மா முகில் போன்றுளர் வந்து காணீர்
அஞ்சிறைப் புள்ளுமொன்று ஏறி வந்தார் அச்சோ ஒருவ ரழகிய வா! —பெரிய திருமொழி -9-2-8-

ஒரு நல் சுற்றம் எனக்குயிர் ஒண் பொருள்
வரு நல் தொல் கதி ஆகிய மைந்தனை
நெருநல் கண்டது நீர் மலை, இன்று போய்
கருநெல் சூழ் கண்ண மங்கையுள் காண்டுமே.–பெரிய திருமொழி -10-1-1-

கார் வண்ணம் திருமேனி கண்ணும் வாயும்
கைத் தலமும் அடியிணையும் கமலவண்ணம்
பார் வண்ண மட மங்கை பித்தர் பித்தர்
பனி மலர் மேற் பாவைக்குப் பாவம் செய்தேன்
ஏர் வண்ண வென் பேதை என் சொல் கேளாள்
எம் பெருமான் திருவரங்கம் எங்கே? என்னும்
நீர் வண்ணன் நீர் மலைக்கே போவே னென்னும்
இது வன்றோ நிறை யழிந்தார் நிற்குமாறே! –திருநெடுந்தாண்டகம் – 18

காரார் குடந்தை கடிகை கடல் மல்லை ஏரார் பொழில் சூழ் இட வெந்தை நீர் மலை –சிறிய திருமடல் – 73

அன்னவனை ஆதனூராண்டாளக்குமையனை நென்னலை யின்றினை நாளையை நீர்மலை மேல் –பெரிய திருமடல் – 130

—————————–

ஸ்ரீ பூதத்தாழ்வார் -1-பாசுரம் மங்களாசாசனம் –

பயின்றது அரங்கம் திருக் கோட்டி பன்னாள்
பயின்றதுவும் வேங்கடமே பன்னாள் -பயின்றது
அணி திகழுஞ்சோலை அணி நீர் மலையே
மணி திகழும் வண் தடக் கை மால். –இரண்டாம் திருவந்தாதி – 46-

இந்த தலம் அமைந்துள்ள பகுதியை காண்டவனம் என்றும், இத்தலம் அமைந்துள்ள மலையினை தோயத்தரி என்றும் புராணம் செப்புகிறது.

இராமாயணம் இயற்றிய வால்மீகி இந்த ஸ்தலத்திற்கு வந்ததாக ஒரு வரலாறு உண்டு. இங்குவந்த வால்மீகி மலைமீதேறி சயனத் திருக்கோல
அரங்கன் அமர்ந்த திருக்கோல நரசிம்மன், நடந்த திருக்கோல திருவிக்ரமன் ஆகிய மூவரையும் வழிபட்டு கீழே இறங்கலானார்.
ஏனோ தெரியவில்லை. இம்மூவரைச் சேவித்தும் வால்மீகிக்கு பூரண திருப்தியுண்டாகவில்லை. உள்மனதை ஏதோ வருடியது போல இருந்தது. கீழே
இறங்கியதும் கீழ்த்திசை நோக்கி கரங்களை குவித்த வால்மீகி என் பிரிய ராமன் இங்கு இல்லை. ரமனியமான ராமபிரானே எங்கே உன் பேரழகுத்
திருவுருவம் என்று ராமனைப் பிரிந்த நெஞ்சு வேகுவதுபோல நீர்மல்கப் பிரார்த்தித்து நின்றார்.

அந்தர்யாமியான பரஸ்வரூப நாராயணன் வால்மீகியின் பிரார்த்தனைக்கு இரங்கினார். இங்கு எழுந்தருளியுள்ள பெருமாள்கள் மூலமாகவே வால்மீகிக்கு
காட்சியளித்தார். அதாவது இங்குள்ள ரெங்கநாதனே ராமனாகவும், லட்சுமிதேவியே ஜானகியாகவும், ஆதிசேடன் இலக்குமணனாகவும் சங்குச்சக்கரங்கள்
சத்ருக்கனர், பரதராகவும், விஸ்வக்சேனர் சுக்ரீவனாகவும் கருடன் ஆஞ்சநேயராகவும், ரம்மியமான நீர்வண்ண ரூபத்தில் காட்சி கொடுத்து
வால்மீகியின் கண்ணீரைத் துடைத்ததாக ஐதீஹம்
ராமனின் பேரழகில் அதாவது நீர்வண்ணனாக ராமன் காட்சி அளித்த தோற்றப் பொலிவை கண்டு மயங்கி நின்ற வால்மீகி இதே திருக்கோலத்தை
எல்லோருக்கும் காட்ட வேண்டுமென்று வேண்டி நிற்க அவ்வண்ணமே ஆயிற்றென்பது வரலாறு. தாமரை மலர் பீடத்தில் அஸ்த முத்திரை பொருந்திய
அபயமளிக்கும் அழகிய திருக்கரத்துடன், திருமார்பை சாளக்கிராம மாலை அலங்கரிக்க நீர்வண்ண ரூபத்தில் இங்குகாட்சி தருகிறார்.

இந்த மலைக்குத் திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்ய வந்தபோது தொடர்மழை பெய்து அடைமழையாக மாறி மலையைச் சுற்றிலும்
அரண்போல் நீர் சூழ்ந்துகொண்டது. திருமங்கையால் பெருமாளைத் தரிசிக்கமுடியவில்லை. ஒன்றிரண்டு நான்கைந்து ஆறேழுவென நாட்கள் கடந்து

வாரங்களாகி மாதங்களுக்குள் ஐக்கியமாகிவிட்டது. என்ன நேர்ந்தாலும் சரி எத்தனை மாதங்களாயினும் சரி இப்பெருமானைச் சேவிக்காது
செல்வதில்லையென முடிவு செய்துவிட்டார்.-அர்ச்சாவதாரத்தில் அவருக்குள்ள ஈடுபாட்டிற்கு எல்லை காட்ட முடியுமா.

கடல் நீர் கண்டு களிக்க முடியுமேயன்றி உண்டு உய்ய முடியாது. ஆற்று நிரோவெனில் வற்றும், பெருகும். அதன் மருங்கேயே காலம் முழுவதும்
வாழ்தலுமரிது. குளங்குட்டைகளில் உள்ள நீரெனில் பருவகாலம் முடிந்ததும் வற்றி போகும். அடுத்த பருவத்திற்கு அவை காத்து நிற்கும். ஊற்று நீரெனில்
எங்கு ஊற்றுள்ளது என்று தேடியல்லவா கண்டுபிடிக்க வேண்டும். அதுவும் நன்னீர் ஊற்றாக அமையுமென சொல்ல முடியாதே. கிணற்று நீரென்றால்
வேண்டும். போதெல்லாம் முகந்து கொள்ளலாமே. கிணற்றில் நீர் வற்றினும் ஆழப்படுத்திக் கொள்ளலாமே. அதுபோன்றதல்லவா எம்பெருமானின்
நிலைகள். அதாவது கடல்நீர் போன்றதே பரம். ஆற்றுநீர் போன்றதே வ்யூகம். குளத்து நீர் போன்றதே விபவம் ஊற்று நீர் போன்றது அந்தர்யாமித்வம்.
கிணற்று நீர் போன்றதல்லவா அர்ச்சாவதாரம்.
வேண்டிய பொழுதெல்லாம் சேவித்து ஆத்மதாகம் தீர்க்கப் பெறலாமே. எம்பெருமான் கோபமாக இருந்தால் கூட பக்தி யென்னும் கயிற்றால் கட்டி
இழுத்து விடலாமே.
(அர்ச்சாவதாரமான அதிபோக்யமான வஸ்து நமக்கு எளிதில் கிடைத்திருக்க, அதைவிட்டு கிட்டுதற்கரிய பரஸ்வ ரூபத்தை ஏன் அனுபவிக்கத்
துடிக்க வேண்டும்)
“ஏரார் முயல் விட்டு காக்கை பின் போவாரோ” அப்பேர்ப்பட்ட அர்ச்சாவதார மூர்த்தியை நீர் சூழ்ந்து விட்டால் மட்டும் சேவிக்காது சென்று
விடலாமா என்று எண்ணி அங்கேயே தங்கி இருந்தார். தங்கியிருந்தார் 6 மாத காலம். பிறகு நீர்வற்றிப் போன பின்பு பெருமாளைக் கண்குளிரக் கண்டு
பாக்களை மங்களாசாசனமாய் பொழிந்தார்.
திருமங்கையாழ்வார் வந்தபோது நீர் சூழ்ந்து நின்ற காரணத்தால் திருநீர்மலை என்றாயிற்று. அதற்கு முன்பு காண்டபவனப் பெருமாள் என்றும்,
காண்டபவன நாதன் என்னும் பெயர்களே வழக்கிலிருந்ததாக அறிய முடிகிறது.

சர்வேஸ்வரனின் மாயையே காண்டவ வனமாக ஏற்பட்டதால் உலகத்தில் மாயையில் சிக்கியிருக்கும் அனைத்து ஜீவராசிகளும் இத்தலத்தில் பெருமாளை
சேவித்துக் கடைத்தேறுகின்றன.
தோயம் என்ற சொல்லுக்கு பால் என்பது பொருள். ஒரு காலத்தில் இம்மலை நீர்மலையாக விளங்கப்போகிறது என்பதாலோ என்னவோ
முதலிலேயே தோயாத்ரி என்றும் பெயர் ஏற்பட்டுவிட்டது.

1. மலைஅடிவாரக் கோவில்
மூலவர்- நீர் வண்ணன், நீலமுகில் வண்ணன் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலம்
தாயார்– அணிமாமலர் மங்கை தனிக்கோவில் நாச்சியார்

2. மலைமேல் உள்ள கோவில்கள்
மூலவர்– சாந்த நரசிம்மன் அமர்ந்த திருக்கோலம் பிராட்டியை இதயத்தில் ஏற்றுள்ளார்.
ரங்கநாதன் சயன திருக்கோலம்
திரிவிக்ரமன் (நடந்த மற்றும்) நின்ற திருக்கோலம்
தீர்த்தம்– மணிகர்ணிகா தடாகம், ஷீர புஷ்கரணி காருண்ய புஷ்கரணி, ஸித்த புஷ்கரணி ஸவர்ண புஷ்கரணி.
விமானம்– தோயகிரி விமானம்
காட்சி கண்டவர்கள்– தொண்டைமான், வால்மீகி.

இங்கு இராமபிரான் கல்யாணராமனாக அதாவது வனம் ஏகும் முன்

திருமங்கையாழ்வார் இவ்வூருக்கு வந்தபோது நீர்சூழ்ந்து கொண்டதால் 6 மாத காலம் அவர் தங்கியிருந்த மந்திரகிரி என்னும் ஊர் இங்கிருந்து சமீப
தொலைவில் உள்ளது.உள்ள சீத்தா ராமனாக திருமணக் கோலத்தில் காட்சி

இரங்கு முயிரனைத்து மின்னருளால் காப்பான்
அரங்க னொருவனுமேயாதல் – கரங்களால்
போர்மலை வான் வந்த புகழ்வாணன் காட்டினான்
நீந்மலை வா ழெந்தையெதிர் நின்று–நூற்றெட்டுத் திருப்பதியந்தாதி

இரங்கும் உயிர் அனைத்தும் இன் அருளால் காப்பான்
அரங்கன் ஒருவனுமே ஆதல் கரங்களால்
போர் மலை வான் வந்த புகழ் வாணன் காட்டினான்
நீர் மலை வாழ் எந்தை எதிர் நின்று –91–

(இ – ள்.) இரங்கும் – வருந்துகின்ற,
உயிர் அனைத்தும் – எல்லாவுயிர்களையும்,
இன் அருளால் – (தனது) இனியகருணையினால்,
காப்பான் – பாதுகாப்பவன்,
அரங்கன் ஒருவனுமே ஆதல் – திருவரங்கநாதன் ஒருத்தனேயாவனென்ற விஷயத்தை,
கரங்களால் – (தனது) ஆயிரங்கைகளினாலும்,
போர் மலைவான்வந்த – போர்செய்யும்படி வந்த,
புகழ் வாணன் – பிரசித்திபெற்ற பாணாசுரன்,
நீர்மலை வாழ் எந்தை எதிர் நின்று – திருநீர்மலையென்னுந் திவ்வியதலத்தில் நித்தியவாசஞ்செய்கின்ற எம்பெருமானது எதிரிலே நின்று, காட்டினான் -; (எ – று.)

பாணாசுரன் முதலிற் சிவபிரானை யடுத்து அவனது துணைவலியாற் செருக்கிக் கண்ணபிரானோடு போர்செய்யத்தொடங்கி,
இடையிலே தனது பரிவாரங்களோடு சிவபிரான் கைவிட்டு ஓடியதனால் தனது குறைகள் தீரவும் தன்விருப்பம் கைகூடவும்
பெறாமையோடு அப்பிரானது சக்கராயுதத்தினாற் கைகள் அறுப்புண்டு, சிவபிரான் பிரார்த்தனைக்கு இணங்கி
நான்கு கைகளோடும் உயிரோடும் தன்னை அக்கண்ணபிரான் விட்டிட்டதைக் காணவே,
அவ்வசுரன் ஸ்ரீகிருஷ்ணனே ரக்ஷகனென்று துணிந்து அப்பிரானை வணங்கி உறவுபூண்டு அத்திருமாலருளாற் பேறு
பெற்று உய்ந்தனனென்பது பிரசித்தமாதலால், ஸ்ரீரங்கநாதனே எல்லாவுயிர்களையுந் தடுமாற்றத்தினின்று
நீக்கிக் காக்கின்ற கடவுளாவ னென்றதைக் காட்டியவ னாவான்;
“வணங்கரியா னரங்கன் னடியார்தொழ வாளரவு,
வணங்கரியாடல்பரிதேர் நடத்தெந்தை வானவர்க்கும்,
வணங்கரியா னன்றிக் காப்பாரில்லாமை விண்மண்ணறியும்,
வணங் கரியானவர் வாணன் கண்டாகனன் மார்க்கண்டனே” என்றார் திருவரங்கத்தந்தாதியிலும்.

“புகழ்வாணன்’ என்றது அவன் சிவபிரான் தனதுவாயிலிற் கணங்களோடு பாதுகாவலாகும் பெருமை பெற்றிருந்தவ னென்பதையும்,
‘கரங்களால் போர்மலைவான்’ என்றது – தான் ஆயிரங்கைகள் கொண்டதனால் போர்த்தினவு விஞ்சப்பெற்றிருந்தவ னென்பதையுங் காட்டும்.
“ருத்ரனும் ஸகலப்ராணிகளையும் ஸம்ஹரிக்கையே தொழிலாகவுடையனாய், விடாயர் முகத்திலே
நெருப்பைச் சொரிந்தாற்போலே யிருக்கத் தழல்நிறவண்ணனாய்,
தன்னையாஸ்ரயித்தவர்களை ‘அறுத்துத்தா, பொசித்துத்தா’ என்று கொடுந்தொழில்களைச் செய்வித்துக் கொள்ளுகையாலும்,
தன்னை ஆஸ்ரயித்த வாணனை ‘தலையிற்பூவாடாதே நோக்குகிறேன்’ என்று ப்ரதிஜ்ஞை பண்ணித் தன்னைத்
தொழுத கைகளைக் கள்ளிக்காடுசீய்த்தாப்போலே சீய்க்கக்கண்டு ‘உயிருண்டாகில் உப்புமாறியுண்ணலாம்’ என்று
நெற்றியிற் கண்ணைப் புதைத்துக்கொண்டு நழுவினவனாகையாலும் ………… ரக்ஷகனாகமாட்டான் ………
ஈஸ்வரன் மாதாக்கள்கைவிட்ட அவஸ்தையிலும்
“பின்னுநின்றடியேனுக்கு உற்றானாய் வளர்த்து என்னுயிராகி நின்றான்” என்கிறபடியே தன்னுருக்கெடுத்து
வேற்றுருக்கொண்டு தாய்முகங்காட்டியும், இன்சொல்லுச் சொல்லியும், ப்ராதாக்களும் பர்த்தாக்களும் நெகிழ
நின்றவன்று தான் ஏறிட்டுக்கொண்டு கழுத்திலே ஓலைகட்டித் தூதுபோயும், புருவம்நெரித்த விடத்திலே தேரைநடத்தியும்,
மார்பிலே அம்பேற்றும், சாவாமல் நோக்கியும், செத்தாரை மீட்டும் நாராயணத்வப்ரயுக்தமான உதரத்தெரிப்பாலே
அகவாயிலேநின்று ஸத்தையைநோக்கிக்கொண்டுபோருகையாலே இவனே எல்லார்க்கும் ரக்ஷகன்” என்ற
ப்ரபந்நபரித்ராணம் இங்குக் காணத்தக்கது.
“வாணபுரம்புக்கு முக்கட்பிரானைத் தொலைய வெம்போர்கள்செய்து,
வாணனை யாயிரந்தோள் துணித்தான் சரணன்றி மற்றொன்றிலமே” என்பது, நம்மாழ்வார் பாசுரம்.
நீரானது அரண்போலச் சூழப்பெற்ற மலையாதல்பற்றி, இத்தலம், திருநீர்மலை யெனப் பெயர்பெறும்.

——————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ திவ்ய தேச மங்களா ஸாஸன அருளிச் செயல்கள்-ஸ்ரீ திரு வல்லிக்கேணி

March 24, 2024

மூலவர் -வேங்கடகிருஷ்ணன் / நின்ற திருக் கோலம் / கிழக்கே திரு முக மண்டலம்
உத்சவர் -ஸ்ரீ பார்த்த சாரதி
தாயார் -ருக்மிணித் தாயார்
விமானம் -ஆனந்த விமானம்
தீர்த்தம் -கைரவிணி புஷ்கரிணி
மங்களா சாசனம் -பேயாழ்வார் திருமழிசை ஆழ்வார் திருமங்கை ஆழ்வார்

சுமதி மஹாராஜர் -திரு வேங்கடமுடையானை இரண்டு திருக் கரங்கள் உடன் சேவை சாதிக்க வேண்ட –
அவரை க் கைரவிணி புஷ்கரிணிக் கரையிலே த்வம் செய்யப் பணித்தார் –
அவ்வண்ணமே வியாசருக்கு சுமதி ராஜாவுக்கும் இங்கே வேங்கட கிருஷ்ணனாக சேவை சாதித்தார்
ருக்மிணி பல ராமன் ப்ரத்யும்னன் அநிருத்தனன் உடன் கண்ணன் சேவை சாதிக்கிறார் -சாத்விகி தேரோட்டி உடன்
பீஷ்மர் விட்ட அமுக்ககால் துளைக்கப் பட்ட திரு முக வடுக்கள் உடன் உத்சவர் பார்த்த சாரதி சேவை சாதிக்கிறார் –
அருகே மயிலாப்பூரில் பேயாழ்வார் அவதார ஸ்தலம் –
நின்றான் இருந்தான் கிடந்தான் நடந்தான் பிறந்தவன் -ஐவருக்குக்கும் மங்களாசானம்
ஒப்பவர் இல்லா மாதர் வாழும் மாட மா மயிலைத் திரு வல்லிக் கேணி –
ப்ருந்தாரண்யம் துளசிக்காடு –வியாசரால் -ஆர்த்த்ரேயருக்கு -கொடுத்த மூல விக்ரஹம் –
மன்னாத பெருமாள் ஸ்தல பெருமாள் / தெள்ளிய சிங்கர் /
துர்வாசர் தபஸ் -விஸ்வகர்மா தேர் நிழல் -சாபம் தீர
முத்கலர்-தபஸ் -மீன் கூடாது என்பதால் -புஷ்காரிணியில் மீன்களே இல்லை
ஒரு வல்லித் தாமரையாள் ஒன்றிய சீர் மார்பன் -பேயாழ்வார் தெரு -தனி சந்நிதி –
-வாளா கிடந்தது –வாய் திறவான் -ஐந்தலை நாகத்து அணையான் -திரு மழிசை ஆழ்வார் –
இங்கே தபஸ் நெடு நாள் திரு மழிசை ஆழ்வார் -என்னை ஆளுடைய அப்பன் பிரசாதம்
-தனிக் கோவில் நாச்சியார் -வேத வல்லி தாயார் -ப்ருகு மகரிஷி திருக் குமாரி / நான்கு திருக்கரங்கள் மன்னாத பெருமாள் –
தெளிய சிங்க பெருமாள் வீதி /சப்த ரோமருக்காக கஜேந்திர வரதன் -7 நாள் தெப்ப உத்சவம் –

மூலவர் ஸ்ரீ வேங்கட கிருஷ்ணன்
கோலம் நின்ற
திருமுக மண்டலம் கிழக்கு
உற்சவர் ஸ்ரீ பார்த்த சாரதி
தாயார் ஸ்ரீ வேத வல்லி
தீர்த்தம் ஸ்ரீ கைரவிணீ சரஸ்
விமானம் ஸ்ரீ ஆனந்த விமானம்
மண்டலம் தொண்டைநாட்டுத் திருப்பதிகள்
மாநிலம் தமிழ் நாடு
அடிப்படை இடம் சென்னை
நாமாவளி ஸ்ரீ ருக்மணி ஸமேத ஸ்ரீ வேங்கட கிருஷ்ணாய நமஹ

—————-

ஸ்ரீ திருமழிசைப் பிரான் -1- பாசுரம் மங்களாசாசனம் –

தாளால் உலகம் அளந்த வசைவே கொல்?
வாளா கிடந்தருளும் வாய் திறவான் – நீளோதம்
வந்தலைக்கும் மா மயிலை மா வல்லிக் கேணியான்
ஐந்தலை வாய் நாகத்தணை. –நான்முகன் திருவந்தாதி – 35

————

ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் -10-பாசுரங்கள் மங்களாசாசனம் –

விற் பெரு விழவும் கஞ்சனும் மல்லும் வேழமும் பாகனும் வீழ
செற்றவன் தன்னைப் புரமெரி செய்த சிவனுறு துயர் களை தேவை
பற்றலர் வீயக் கோல் கையில் கொண்டு பார்த்தன் தன் தேர் முன்னின்றானை
சிற்றவை பணியால் முடி துறந்தானைத் திருவல்லிக்கேணிக் கண்டேனே-2-3-1-

வேதத்தை வேதத்தின் சுவைப் பயனை விழுமிய முனிவர் விழுங்கும்
கோதிலின் கனியை நந்தனார் களிற்றைக் குவலயத்தோர் தொழுது ஏத்தும்
ஆதியை யமுதை யென்னை யாளுடையப்பனை ஒப்பவரில்லா
மாதர்கள் வாழும் மாட மா மயிலைத் திரு வல்லிக்கேணிக் கண்டேனே—2-3-2-

வஞ்சனை செய்யத் தாயுருவாகி வந்த பேயலறி மண் சேர
நஞ்சமர் முலை யூடுயிர் செக வுண்டநாதனைத் தானவர் கூற்றை
விஞ்சை வானவர் சாரணர் சித்தர் வியந்துதி செய்யப் பெண்ணுருவாகி
அஞ்சுவை யமுத மன்றளித்தானைத் திரு வல்லிக் கேணிக் கண்டேனே–2-3-3-

இந்திரனுக்கென்று ஆயர்கள் எடுத்த எழில் விழவில் பழ நடை செய்
மந்திர விதியில் பூசனை பெறாது மழை பொழிந்திடத் தளர்ந்து ஆயர்
எந்தமோடின்வானிரை தளராமல் எம்பெருமான் அருள் என்ன
அந்தமில் வரையால் மழை தடுத்தானைத் திருவல்லிக் கேணிக் கண்டேனே —2-3-4-

இன் துணைப் பதுமத் தலர்மகள் தனக்குமின்பன் நற் புவி தனக்கிறைவன்
தன் துணை யாயர் பாவை நப்பின்னை தனக்கிறை மற்றை யோர்க்கெல்லாம்
வன் துணை பஞ்ச பாண்டவர்க்காகி வாயுரை தூது சென்றியங்கும்
என் துணை எந்தை தந்தை தம்மானைத் திருவல்லிக்கேணிக் கண்டேனே–2-3-5-

அந்தகன் சிறுவன் அரசர் தமரசற் கிளையவன் அணி யிழையைச் சென்று
எந்தமக்குரிமை செய்யெனத் தரியாது எம்பெருமான் அருள் என்ன
சந்தமில் குழலாள் அலக் கண் நூற்றுவர் தம் பெண்டிரும் எய்தி நூல் இழப்ப
இந்திரன் சிறுவன் தேர் முன் நின்றானைத் திருவல்லிக்கேணிக் கண்டேனே –2-3-6-

பரதனும் தம்பி சத்ருக்கனனும் இலக்குமனோடு மைதிலியும்
இரவு நன் பகலும் துதி செய்ய நின்ற இராவணாந்தகனை யெம்மானை
குரவமே கமழும் குளிர் பொழிலூடு குயிலொடு மயில்கள் நின்றால
இரவியின் கதிர்கள் நுழைதல் செய்தறியாத் திருவல்லிக்கேணிக் கண்டேனே—2-3-7-

பள்ளியில் ஓதி வந்த தன சிறுவன் வாயில் ஓர் ஆயிர நாமம்
ஒள்ளியவாகிப் போத வாங்கு அதனுக்கு ஒன்றுமோர் பொறுப்பிலனாகி
பிள்ளையைச் சீறி வெகுண்டு தூண் புடைப்பப் பிறை எயிற்று அனல் விழிப் பேழ்வாய்
தெள்ளிய சிங்கமாகிய தேவைத் திருவல்லிக்கேணிக் கண்டேனே—2-3-8-

மீனமர் பொய்கை நாண மலர் கொய்வான் வேட்கையினோடு சென்று இழிந்த
கானமர் வேழம் கை எடுத்து அலறக் கராவதன் காலினைக் கதுவ
ஆனையின் துயரம் தீரப் புள்ளூர்ந்து சென்று நின்று ஆழி தொட்டானை
தேனமர் சோலை மாட மா மயிலைத் திருவல்லிக்கேணிக் கண்டேனே—2-3-9-

மன்னு தண் பொழிலும் வாவியும் மதிளும் மாட மாளிகையும் மண்டபமும்
தென்னன் தொண்டையர்கோன் செய்த நன் மயிலைத் திருவல்லிக்கேணி நின்றானை
கன்னி நன் மாட மங்கையர் தலைவன் காமரு சீர்க் கலிகன்றி
சொன்ன சொல் மாலை பத்துடன் வல்லார் சுகமினி தாள்வர் வானுலகே–2-3-10-

——————

ஸ்ரீ பேயாழ்வார்-1-பாசுரம் மங்களாசாசனம் –

வந்துதைத்த வெண் திரைகள் செம் பவள வெண் முத்தம்
அந்தி விளக்கு மணி விளக்காம் – எந்தை
ஒருவல்லித் தாமரையாள் ஒன்றிய சீர் மார்வன்
திரு வல்லிக் கேணியான் சென்று. –மூன்றாம் திருவந்தாதி – 16-

பிருந்தம் என்றால் துளசி.-ஆரண்யம் என்றால் காடு. எனவே பிருந்தாரண்யம் துளசி வனம் என்று-பொருள் கொள்ளப்படும்.

சுமதி என்னும் மன்னன் வேங்கட மலையில் ஸ்ரீனிவாசப்பெருமாளை வழிபட்டு அர்ஜு னனுக்கு தேரோட்டிய கண்ணனாக பெருமாளைக் காண
விழைவதாக எண்ணி தவத்திலிருக்க அப்போதே ஸ்ரீனிவாசன் அசரீராய் நீ விரும்பிய தோற்றத்துடன் கைரவணி தீர்த்தங்கொண்ட பிருந்தாரண்யத்தில்
எழுந்தருளினேன் அங்கு சென்று தரிசிப்பாயாக என்று கூற, சுமதியும் அவ்வாறு செய்தான் என்பது வரலாறு.

ஆனால் இந்த பிருந்தாரண்யத்துக்கு எப்போது பெருமாள் அவ்விதம் வந்தாரென்னில் வேத வியாசருக்கு ஆத்திரேய முனிவர் என்னும் ஒரு சீடரிருந்தார். அவர் தம் குருவின் கட்டளைப்படி பிருந்தாரண்யத்திற்குத் தவம் செய்ய வந்தபோது அவரால் கொடுக்கப்பட்ட கண்ணனின் திவ்ய மங்கள விக்ரகமொன்றையுங் கொண்டு வந்தார். அவ்விக்கிரகம் ஒரு கையில் சங்கேந்தியதாயும் மறு கையில் தான் முத்திரையுடையதாயும் (தன் திருவடியில் சரணம் அடைய அருள்புரிதல்) இலங்கியிருந்தது.

பிருந்தாரண்யம் வந்த ஆத்திரேய முனிவர் அங்கு சுமதி என்ற முனிவரைக் கண்டு (சுமதி மன்னர்வேறு) மகிழ்ந்து தம் வருகையைக் கூற
இருவரும் அப்பெருமானை அங்கேயே பிரதிட்டை செய்து வழிபடலாயினர்.
வலப்புறம் ருக்குமணியையும் இடப்புறம் சாத்தியாகியையும் நிறுவி வழிபட்டு அவ்விருவரும் மோட்ச உலகுபெற்றனர்.

இக்கோலத்தையே கண்டு வழிபடுமாறு ஏழுமலையான் கட்டளையிட சுமதி மன்னனும் அவ்விதமே வழி பாடியியற்றினான். வேங்கடவனால்
காட்டப்பட்டதால் வேங்கட கிருஷ்ணன் என்னும் திருநாமம் உண்டாயிற்று.

மூலவர்- வேங்கட கிருஷ்ணன் ருக்குமணி பிராட்டியுடன் பலராமன், ஸாத்யகி, அநிருத்தன், பிரத்யுமனன் இவர்களோடு கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலம்.
உற்சவர்– பார்த்தசாரதி
தாயார்– வேதவல்லி
விமானம்– ஆநந்த விமானம், ப்ரணவ விமானம், புஷ்ப விமானம், சேஷ விமானம், தைவீக விமானம்.
தீர்த்தம்– கைரவிணி (அல்லிக்கேணி) இத்தீர்த்தத்தில் இந்திர, ஸோம, அக்னி, மீன, விஷ்ணு என்ற 5 தீர்த்தங்கள் சூழ்ந்துள்ளதாய் ஐதீஹம்.
கடலுக்கு மிக அருகாமையில் இருந்தாலும் மீன்கள் இதில் வசிப்பதில்லை அவ்வளவு புனிதமானது இந்த தீர்த்தம். பெருமாளின் திருமஞ்சனத்திற்கும் இதுவே தீர்த்தம்.
காட்சி கண்டவர்கள்– சுமதி ராஜன், பிருகு மகரிஷி, மதுமான் மகரிஷி, சப்தரோமர் அத்திரி மகரிஷி, ஜாஜலி மகரிஷி

அத்திரி முனிவரின் தவத்திற்கு மகிழ்ந்த திருமால் அவர் விருப்பப்படி நரசிம்ம மூர்த்தியாக இத்தலத்தது எழுந்தருளினார்.

மதுமான் மகரிஷி என்னும் முனிவரின் தவத்திற்கு இசைந்து அவர் விரும்பிய வண்ணம் ராமனாக இத்தலத்து எழுந்தருளினார். சீதை, இலக்குவன்,
பரத சத்ருக்கணரும் பின் தொடர்ந்தனர்.

சப்தரோமர் என்னும் ரிஷியின் தவத்திற்குகந்து கஜேந்திரவரதர் கோலத்தில் இங்கு காட்சி தந்தார்.

சுமதி என்னும் மன்னனின் விருப்பதிற்கிசைந்து வேங்கட கிருஷ்ணனாய் அவதாரம் செய்தார்.

திருமாலுடன் ஊடல் கொண்ட திருமகள் வைகுண்டத்தை விட்டுப் பிரிந்து இவ்விடத்தில் தவஞ்செய்துகொண்டிருந்த பிருகு மகரிஷியின்
குடிசைக்கருகில் குழந்தையாய் உருவாகி நிற்க, வேதங்களில் கூறப்பட்ட தேவமகள் இவளேயென உணர்ந்து வேதவல்லி என்று பெயரிட்டு வளர்த்துவர
தக்க பருவம் வந்ததும், ரங்கநாதனே இளவரசர் வடிவம் பூண்டு திருமகளை ஏற்றுக்கொண்டார். திருமகள் ரங்கநாதரைக் கண்டதும் இவரே மந்நாதர் (என்
கணவர்) என்றுரைத்ததால் மந்நாதர் என்ற பெயரும் உண்டு.- எனவே திருமணக் கோலத்திலான ரங்கநாதராக (மந்நாதர்) இத்தலத்து எழுந்தருளினார்

இவ்விதம் ஐந்து மூர்த்திகளும் ஒருங்கே எழுந்தருளியிருப்பது. இந்த ஒரு திவ்ய தேசத்தில் மட்டும்தான்.

திரிந்துழலும் சிந்தைதனிச் செல்வே நிறுத்திப்
பரிந்து புகன்மின் புகன்றால் – மருந்தாங்
கருவல்லிக் கேணியாம் மாக்கதிக்கு கண்ணன்
திருவல்லிக் கேணியான் சீர்–நூற்றெட்டுத் திருப்பதியந்தாதி

திரிந்து உழலும் சிந்தை தனிச் செவ்வே நிறுத்தி
புரிந்து புகன்மின் புகன்றால் மருந்து ஆம்
கருவல்லிக்கு ஏணி ஆம் மாக்கதிக்கு கண்ணன்
திருவல்லிக்கேணி யான் சீர் –94-

(இ – ள்.) திரிந்து உழலும் – (ஐம்புலவாசைகளிற்) சென்று அலைகின்ற,
சிந்தைதனை – உங்கள் மனத்தை,
செவ்வே நிறுத்தி – (அவ்வாறு செல்லவொட்டாது) நேராக நிறுத்தி,
திருவல்லிக்கேணியான் – திருவல்லிக்கேணியென்னுந் திவ்வியதலத்தி லெழுந்தருளிய,
கண்ணன் – கண்ணபிரானாகிய வேங்கடகிருஷ்ணனது,
சீர் – கீர்த்தியை,
புரிந்து புகன்மின் – விரும்பிக் கூறுங்கள்;
புகன்றால் – அவ்வாறு புகழ்ந்துகூறினால், (அது), –
கரு வல்லிக்கு – கருப்பமாகிய கொடிக்கு,
மருந்து ஆம் – (நசிக்கச்செய்யும்) ஒளஷதமாம்;
மா கதிக்கு – சிறந்த முத்தியுலகத்துக்கு,
ஏணி ஆம் – (ஏறிச்செல்லுதற்குஉரிய) ஏணியாகும்; (எ – று.)

மனத்தைப் பல விஷயங்களிற்செல்லாது ஒருவழிப்படுத்தித் திருவல்லிக்கேணியி லெழுந்தருளிய திருமாலின்
கீர்த்தியை யெடுத்துக்கூறினால், அது கொழுந்தோடிப்படர்கின்ற கர்ப்பபரம்பரைகளை நீக்கி முத்தி
நெறியிலேறுதற்கு எளியஉபாயமாகு மென்பதாம்.
கருவல்லிக்கு மருந்து – பிறப்புக்களை இனி உண்டாகவொட்டாது தடுக்குந் திவ்யௌஷதம்,
கீழிடத்திலிருந்து மேலிடத்திலேறுதற்கு ஏணி இன்றியமையாக் கருவியாதல்போல
நிலவுலகத்திலிருந்து மேலுலகமாகிய முத்தியுலகத்தி லேறுதற்குக் கண்ணபிரானது புகழ்கள்
இன்றியமையாத உபாயமாமென்பது, ‘ஏணியாம் மாக்கதிக்கு’ என்றதன் கருத்து. கண்ணன் – பார்த்தசாரதியுமாம்.

இது – தொண்டைமான்சக்கரவர்த்தியின் பிரார்த்தனைப்படியே திருவேங்கடமுடையான் கண்ணனாகத்
தனது குடும்பத்தோடு சேவைசாதித்த தலம்;
இத்தலத்துப்புஷ்கரிணி – அல்லிப்பூக்கள் நிறையப்பெற்றதனால், கைரவிணியென்று வடமொழியிலும்,
திருவல்லிக்கேணி யென்று தென்மொழியிலும் பெயர்பெறும்.
இந்தப் புண்ணியதீர்த்தத்தின்பெயரே இத்தலத்திற்கும் பெயராயிற் றென்க.
இது மயிலையை யடுத்திருத்தலால், மயிலைத்திருவல்லிக்கேணி யெனப் பெயர்பெறும்;
இம்மயிலையே பேயாழ்வாரது திருவவதாரஸ்தலமாம்.

நின்றான் இருந்தான் கிடந்தான் நடந்தான் பறந்தான் -பஞ்ச அம்ருத சேவை
அர்த்த பஞ்சகம் -பஞ்ச பிரகாரங்கள் ஐந்தையும் காட்டி அருளும் திவ்ய தேசம்

மன்னு தண் பொழிலும்-பரத்வம் பொழில் ஏழும்
வாவியும் –திருப்பாற் கடல் வ்யூஹம்
மதிளும்–அந்தர்யாமி
மாட மாளிகையும் மண்டபமும் –விபவம்
தென்னன் தொண்டையர் கோன் செய்த நன் மயிலைத் திருவல்லிக்கேணி நின்றானை-அர்ச்சாவதாரம்

யானைக்குளம் கஜேந்திர ஸரஸ் அருகில் திருமழிசை வரதனை மங்களா சாசனம்
பரத்வம் அந்தர்யாமித்வம் இரண்டிலும் ஆழ்ந்த ஆழ்வார் என்பதாலேயே இருவருக்கும் அருகில் இன்றும் நித்ய சந்நிதி
இவர் சாத்து முறைக்கு மட்டும் வரதரே எழுந்து அருளுகிறார்
இன்றும் யானைக்குளத் தெருக்கள் உண்டே
கஜேந்திர வரதர் பிரபையில் திருக்கச்சி நம்பியும் எம்பெருமானாரும் சேவை உண்டே

துவாதச ஆராதனம் அனைவரையும் ஒரு சேர சேவை ப்ரஹ்ம உத்சவம் -பார்த்த சாரதிக்கும் -தெள்ளிய சிங்கருக்கும் நடக்கும்
எம்பெருமானாராக பார்த்தசாரதியை அவதாரம்

அருளிச் செயல் மண்டபம் என்றே பிரசித்தி இதற்கு
புஷ்ப -போக -தியாக -ஞான மண்டபங்கள் போல்

எம்பெருமானார் திருவவதார ஆறாம் நாள் வெள்ளைச்சாத்து உத்சவத்தில் எதிராஜ மடம் எழுந்து அருளுகிறார்
அங்கு காவி வஸ்திரம் திருமண் காப்பு ஜீயர் சமர்ப்பிக்கிறார்
கோஷ்டியார்களுக்கும் திருமண் காப்பு விநியோகம் உண்டே

ப்ருந்தாரண்யம் -பிருந்தாவனம் போல் இங்கும் -ப்ரஹ்மாண்ட புராணம் விவரிக்கும்

————–——————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ திவ்ய தேச மங்களா ஸாஸன அருளிச் செயல்கள்-ஸ்ரீ திரு எவ்வுள் –

March 24, 2024

மூலவர் -வைத்ய வீர ராகவன் – புஜங்க சயனம் -கிழக்கே திரு முக மண்டலம்
உத்சவர் -வீர ராகவன்
தாயார் -கனக வல்லித் தாயார் -வசுமதி
விமானம் -விஜய கோடி விமானம் -புண்யா ஆவரத்தக விமானம்
தீர்த்தம் -ஹ்ருத்தாப நாசினி தீர்த்தம்
மங்களா சாசனம் -திரு மழிசை ஆழ்வார் –திரு மங்கை ஆழ்வார்

வீஷாரண்ய க்ஷேத்ரம் -சாலி ஹோத்ர முனிவர் -சாலி எனப்படும் நெல் மணிகளால் புத்திர பெயர் வேண்டி யஜ்ஜம்-செய்தார் –
அவர் இவ்வூரில் பர்ண சாலை அமைத்து அதிதி ஸத்காரம் செய்து வந்தார் –
பெருமாளே இங்கு வந்து இவரிடம் உண்டு -நான் ஒய்வு எடுப்பதற்கு எவ்வுள் என்று கேட்டு அவ்விடத்திலேயே சயனித்துக் கொண்டார் –
திரு எவ்வுள் -பெயர் மருவி திரு வள்ளூர்-ஆக அழைக்கப் படுகிறது –
தை அம்மாவாசை -பிரசித்தம் / மது கைடபர்களை அழித்த வீரம் -வீர ராகவன் –
புஷ்கரிணி வெல்லம் கரைத்து -நோய்கள் தீரும் -கிங்க்ருஹேச ஸ்தோத்ரம் தேசிகன் -தர்ம சேனா புரம் அருகில் –அரசன் திரு மகள் -தாயார் –

தற்போது உள்ள பெயர் ஸ்ரீ திருவள்ளூர்
மூலவர் ஸ்ரீ வீர ராகவப் பெருமாள், திரு எவ்வுள் கிடந்தான்
கோலம் சயனம்
திருமுக மண்டலம் கிழக்கு
உற்சவர் ஸ்ரீ வீர ராகவன்
தாயார் ஸ்ரீ கனகவல்லி, ஸ்ரீ வசுமதி
தீர்த்தம் ஸ்ரீ ஹ்ருத் தாப நாசினி புஷ்கரணி
விமானம் ஸ்ரீ விஜய கோடி விமானம்
மண்டலம் தொண்டை நாட்டுத் திருப்பதிகள்
மாநிலம் தமிழ் நாடு
அடிப்படை இடம் சென்னை
நாமாவளி ஸ்ரீ கனக வல்லீ ஸமேத ஸ்ரீ வீர ராகவாய நமஹ

———

ஸ்ரீ திருமழிசைப் பிரான் -1-பாசுரம் மங்களாசாசனம் –

நாகத்தணைக் குடந்தை வெஃகா திருவெவ்வுள்
நாகத்தணை யரங்கம் பேரன்பில் – நாகத்
தணைப் பாற்கடல் கிடக்கும் ஆதி நெடுமால்
அணைப்பார் கருத்தனாவான். –நான்முகன் திருவந்தாதி – 36-

—————-

ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் -11-பாசுரங்கள் மங்களாசாசனம் –

காசை யாடை மூடி யோடிக் காதல் செய்தானவனூர்
நாசமாக நம்ப வல்ல நம்பெருமான்
வேயினன்ன தோள் மடவார் வெண்ணெய் யுண்டான் இவன் என்று
ஏச நின்ற வெம்பெருமான் எவ்வுள் கிடந்தானே–2-2-1-

தையலாள் மேல் காதல் செய்த தானவன் வாளரக்கன்
பொய்யிலாத பொன் முடிகள் ஒன்பதோடு ஒன்றும் அன்று
செய்த வெம்போர் தன்னில் அங்கோர் செஞ்சரத்தால் உருள
எய்த வெந்தை யெம்பெருமான் எவ்வுள் கிடந்தானே–2-2-2-

முன்னோர் தூது வானரத்தின் வாயில் மொழிந்து அரக்கன்
மன்னூர் தன்னை வாளியினால் மாள முனிந்து அவனே
பின்னோர் தூது ஆதி மன்னர்க்காகிப் பெரு நிலத்தார்
இன்னார் தூதனென நின்றான் எவ்வுள் கிடந்தானே–2-2-3-

பந்தணைந்த மெல் விரலாள் பாவை தன் காரணத்தால்
வெந்திறல் ஏறு ஏழும் வென்ற வேந்தன் விரி புகழ் சேர்
நந்தன் மைந்தனாக வாகும் நம்பி நம் பெருமான்
எந்தை தந்தை தம் பெருமான் எவ்வுள் கிடந்தானே-2-2-4-

பாலனாகி ஞாலமே ழும் உண்டு பண்டா லிலை மேல்
சால நாளும் பள்ளி கொள்ளும் தாமரைக் கண்ணன் எண்ணில்
நீல மார் வண்டுண்டு வாழும் நெய்தலந்தண் கழனி
ஏல நாறும் பைம் புறவில் எவ்வுள் கிடந்தானே–2-2-5-

சோத்த நம்பி யென்று தொண்டர் மிண்டித் தொடர்ந்து அழைக்கும்
ஆத்தனம்பி செங்கணம்பி ஆகிலும் தேவர்கெல்லாம்
மூத்த நம்பி முக்கண்ம்பி யென்று முனிவர் தொழு
தேத்தும் நம்பி யெம்பெருமான் எவ்வுள் கிடந்தானே—2-2-6-

திங்களப்பு வானெரி காலாகித் திசை முகனார்
தங்களப்பன் சாமியப்பன் பாகத்திருந்த வண்டுண்
தொங்கலப்பு நீண் முடியான் சூழ் கழல் சூட நின்ற
எங்களப்பன் எம்பெருமான் எவ்வுள் கிடந்தானே—2-2-7-

முனிவன் மூர்த்தி மூவராகி வேதம் விரித்துரைத்த
புனிதன் பூவை வண்ணன் அண்ணல் புண்ணியன் விண்ணவர் கோன்
தனியன் சேயன் தான் ஒருவனாகிலும் தன்னடியார்க்கு
இனியன் எந்தை யெம்பெருமான் எவ்வுள் கிடந்தானே–2-2-8-

பந்திருக்கும் மெல் விரலாள் பாவை பனி மலராள்
வந்திருக்கும் மார்வன் நீல மேனி மணி வண்ணன்
அந்தரத்தில் வாழும் வானோர் நாயகனாயமைந்த
இந்த்ரற்கும் தம் பெருமான் எவ்வுள் கிடந்தானே—2-2-9-

இண்டை கொண்டு தொண்டர் ஏத்த எவ்வுள் கிடந்தானை
வண்டு பாடும் பைம் புறவில் மங்கையர் கோன் கலியன்
கொண்ட சீரால் தண் தமிழ் செய் மாலை ஈரைந்தும் வல்லார்
அண்டமாள்வதாணை அன்றேலாள் வர மருலகே–2-2-10-

என்னுடைய வின்னமுதை எவ்வுள் பெருமலையை கன்னி மதிள் சூழ் கண மங்கைக் கற்பகத்தை –பெரிய திருமடல் – 116-

திருவள்ளூர் (திரு எவ்வுள்)

கிரேதாயுகத்தில் புரு புண்ணியர் எனப் பெயர் கொண்ட அந்தணர் ஒருவர் தமது மனைவியுடன் பத்ரியில் புத்திரப்பேறு வேண்டிசாலியக்ஞம்
என்னும் பெயர் கொண்ட யாகம் தொடங்கி சாலி எனப்படும் நெல்மணிகளால் அந்த யாகத்தைச் செய்தார்.
யாகத்தின் முடிவில் யாக குண்டலியில் தோன்றின மகாவிஷ்ணு மஹாபுருஷரே உமது யாகத்தை மெச்சினோம் நீர் வேண்டின வரம்
கேளுமென்ன, புத்திர பாக்கியம் கருதியே யாம் இந்த யாகம் துவங்கியதாகவும், தமக்குப் புத்திரப் பேறு வேண்டுமென்றும் கேட்க அப்படியே உமக்குப்
புத்திரப் பேறு அளித்தோம், நீர் சாலியக்ஐம் செய்து புத்திரப்பேறு பெற்றபடியால் உமக்குப் பிறக்கும் புத்திரன் சாலிஹோத்ரன் என்ற பெயருடன்
பிரசித்தி பெற்றுத் திகழ்வான் என்று கூறியருளினார்.-அவ்வாறே பிறந்து வளர்ந்த சாலி ஹோத்ரரும் தக்க பருவமும்,
ஞானமும் எய்திய பிறகு தீர்த்த யாத்திரை தொடங்கினார். அவ்விதம் வருங்காலையில் எண்ணற்ற ரிஷிகள் தவமியற்றும்
வீட்சாரண்யம் எனப்படும் இவ்விடத்தையடைந்து இங்குள்ள ஹ்ருதத்த பாப நாசினி என்னும் தீர்த்தத்தில் தேவர்கள் வந்து நீராடிச் செல்வதைக் கண்டு
இந்த ஆரண்யத்தில் ஒரு குடில் அமைத்து நெடுங்காலம் பெரும் பக்திபூண்டு எம் பெருமானிடம் பக்தி செலுத்திப் போது போக்கி வந்தார்.

இவ்வாறு தினந்தோறும் இவர் மிகுந்த ஈடுபாட்டுடன் பூஜை செய்து வருகையில் எப்போதும் போல் ஓர்நாள் அரிசியை மாவாக்கி எம்பெருமானுக்கு
அமுது படைத்து யாராயினும் அதிதி வருவார்களா என்று காத்திருந்தார். இந்த விரதத்தைப் பன்னெடுங்காலம் விடாது பின்பற்றி வந்தார் சாலி
ஹோத்ரர்.-இந்நிலையில் அதிதியை எதிர்பார்த்திருந்த அந்நாளில் இவரது பக்தியை மெச்சிய எம்பெருமான் தானே ஒரு முதியவர் ரூபத்தில் வந்து கேட்க தாம் வைத்திருந்த மாவில் பாதியைக் கொடுத்தார் சாலிஹோத்திரர். அதை உண்ட பின்பும் தமது பசியடங்கவில்லையென்று முதியவர் கேட்க தனக்கு
வைத்திருந்த மீதி மாவினையும் கொடுத்தார். அதனையும் உண்டு முடித்த எம்பெருமான் உண்ட மயக்கால் மிக்க களைப்பாயுள்ளது, படுக்கச் சற்று இடம்
வேண்டும் எங்கு படுக்கலாமென்று கேட்க சாலி ஹோத்ரர் தமது பர்ணக சாலையைக் காட்டி இவ்வுள் தேவரிருடையதே இங்கு சயனிக்கலாம். என்று
சொல்ல, தனது கிழச் சொரூபத்தை மாற்றிய எம்பெருமான் தெற்கே திருமுகம் வத்துச் சயனித்தார். ஒன்றுமே புரியாத சாலிஹோத்தரர் தாம் செய்த
பாக்கியத்தை எண்ணி எம்பெருமானைப் பணிந்து நிற்க தமது வலது திருக்கரத்தை சாலிஹோத்ர முனிவரின் தலையில் வைத்து அவரை
ஆசீர்வதித்து என்ன வரம் வேண்டுமென்று கேட்க, இதே திருக்கோலத்தில் எம் பெருமான் இவ்விடத்திலேயிருந்து அருள்பாலிக்க வேண்டுமென சாலி
ஹோத்ர முனிவர் வேண்ட எம் பெருமான் ஸ்ரீமந் நாராயண மூர்த்தியும் அதற்கிசைந்து அவ்வண்ணமே சயன திருக்கோலத்தில் எழுந்தருளினார்.
முனிவரின் சிரசில் வலது கரத்தால் ஆசி செய்து பிரம்மனுக்கு உபதேசம் செய்யும் பாவனையில் இடது கரத்தை ஞான முத்திரையாகக் காட்டி
காட்சியளித்தார். உடனே விஜயகோடி விமானத்துடன் இத்தலம் உருப்பெற்றது.

எம்பெருமான் தாமே வந்து முனிவரிடம் கிங்கிருஹம் ‘படுக்க எவ்வுள்’ எங்குற்றதெனக் கேட்டதால் வடமொழியில் கிங்கிருஹரபுரமென்றும் தமிழில்
எவ்வுள்ளூர் என்று மாயிற்று. எம்பெருமானுக்கும் கிங்கிருஹசன், எவ்வுட்கிடந்தான் என்னும் திருநாமமாயிற்று.

மூலவர்–வீரராகவப் பெருமாள், புஜங்கசயனம் கிழக்கு நோக்கிய திருமுக மண்டலம்.
தாயார்- கனக வல்லி (வஸு மதி தேவி)
உற்சவர்- மூலவருக்குரைத்ததே
விமானம்– விஜயகோடி விமானம்
தீர்த்தம்- ஹ்ருத்தபாப நாசினி
காட்சி கண்டவர்கள்– சாலிஹோத்ர முனிவர் (மது, கைடபன்)

இச்ஷேத்திரத்திற்கு வீச்சாரண்யச் ஷேத்ரம் என்றும் இங்கு செய்யப்படும் புண்ணியமாவது பல்லாயிரம் மடங்காக விருத்தியாவதால்
புண்யாவார்த்த ஷேத்ரமென்றும் எவ்வுள்ளுர் என்றும் இத்தலத்திற்குப் பல திருநாமங்களமைகின்றன.
சாலிஹோத்ர முனிவருக்காக எம்பெருமான் இங்கே சயனித்துவிட எம்பெருமானைச் சேரும்பொருட்டு மகாலெட்சுமி வஸு மதி என்ற பெயரில்
தர்மசேன புரம் என்னும் நாட்டையாண்ட திலிப மகாராஜாவுக்குப் புத்திரியாக அவதரித்து வாழ, இவ்வெம்பெருமான் வீரநாராயணன் என்ற திருப்பெயருடன்
வேட்டைக்குச் செல்ல, தேவியைக் கண்டு மணமுடித்ததாக வரலாறு. கனகவல்லித் தாயார் என்றும் திருநாமம் உண்டு. அதற்கு முன் கிங்கிருஹேசன்
(எவ்வுள் கிடந்தான்) என்பதே பிரதானம். இங்கு கனகவல்லித் தாயாருக்குத் தனிச் சன்னதி உண்டு.

‘பாண்டவர் தூதனாக பலித்ருள் பரனேபோற்றி
நீண்டவனேன்ன வேதம் நிகழ்த்துமா நிதியே போற்றி
தூண்டலில்லாமல் வோங்குஞ் சோதிநல் விளக்கே போற்றி
வேண்டவ ரெவ்வுள்ளூர்வாழ் வீரராகவனே போற்றி–வடலூர் இராமலிங்க அடிகளார் -திருப்பஞ்சகத்தில் ஒரு பாசுரம்

இப்பெருமானுக்கு வைத்திய வீரராகவன் என்னும் சிறப்புத் திருநாமமுண்டு.

இவ்விடம் வந்து சிவனுக்குப் பிரம்மஹத்தி தோஷம் நீங்கியது என்ற வரலாறும் உண்டு. இன்றும் தீர்த்தக் கரையின் முன்னால் இப்பெருமானைத்
திரிசித்தபடி ருத்ரன் நின்றுள்ள காட்சியைக் காணலாம்.

மது கைடபன் என்ற இரு அரக்கர்கள் பிரம்மாவின் படைப்புத் தொழில் ரகஸ்யத்தை திருடி பிரம்மாவை அச்சுறுத்த, பிரம்மன் திருமாலை
வேண்ட பயங்கர ரூபங்கொண்ட இவ்விருவரையும் திருமால் துவம்சம்ப்படுத்தினார். அவர்கள் தமது பராக்கிரமத்தால் சூர்ய சந்திரர்களின்
ஒளியையும் மறைத்து உலகை இருளில் மூழ்கடித்தனர். இறுதியில் எம்பெருமான் அவர்கள் மீது சக்ராயுதத்தை ஏவ அதன்முன் நிற்க முடியாமல் இருவரும்
ஓடியொழிந்தார்கள். (இக்கதை பாண்டிநாட்டு திருப்பதிகளுள் ஒன்றான வானமாமலை என்னும் திருச்சீரிவரமங்கை ஸ்தலத்திற்கும் சொல்லப்பட்டுள்ளது)

அவ்விதம் ஓடிவந்த இவ்விருவரும் இறுதியில் உற்ருத்த பாப நாசினி என்னும் இந்த தீர்த்தத்தில் மூழ்கி தம்மை மறைத்துக்கொண்டனர். தாம்
கிடப்பதற்கு உள் ஆதி இருந்த இந்த தீர்த்தத்தில் மூழ்கியதால் எம்பெருமான் சினந்தணிந்து அவர்களையும் ரட்சித்தான் என்பர்.

பத்ரிகாஸ்ரமத்தில் உள்ள கங்கா தீர்த்தத்தில்தேவ பாகர் என்னும் முனிவர் ஒருவர் இருந்தார். அவர் மார்க்கண்டேய முனிவரையணுகி சகல
பாபங்களையும் போக்கவல்ல புண்ய தீர்த்தமும் மோட்சத்தையும் தரக் கூடிய பெருமாள் எழுந்தருளியுள்ள ஸ்தலம் யாதென வினவ அவர் தேவபாகரை
இத்தலத்தின் மேன்மைகளை எடுத்துக் கூறி இங்கு ஆற்றுப்படுத்தியதாகவும் புராணங்கூறும்.

கௌசிகன் என்னும் அந்தணன் ஒருவன் சகல புண்ணிய தீர்த்தங்களிலும் நீராட யாத்திரை புறப்பட்டு நெடுங்காலம் அவ்விதமே திரிந்து
தண்டகாரண்யத்தின் மத்திய பிரதேசத்தை அடைந்தான். அங்கு உணவின்றி வாடி பசியால் மிக்க களைப்புற்றுச் சோர்ந்துபோனபோது அவ்வழியே சென்ற
சண்டாளன் ஒருவனைக் கண்டு அவனிடம் தனக்கு உணவளிக்குமாறு வேண்டினான். இப்பிராமணனின் முகத்திலிருந்த ஒளியைக் கண்ட அவன் தன்
தோள் மீது ஏற்றிச் சென்று கௌசிகனுக்கு உணவளித்தான். அயர்ந்து தூங்கிய கௌசிகனுக்குப் பணவிடைகள் செய்யுமாறு தன் புத்திரியை அனுப்பினான்.அவளது பணிவிடைகளில் தன்நிலை மறந்த கௌசிகன் பலகாலம் அவளுடனே தங்கியிருந்து இன்புற்றிருந்தான்.
பிறகு ஒரு நாள் தன் நிலையுணர்ந்த கௌசிகன் மீண்டும் தீர்த்த யாத்திரை தொடங்கி தனது கிழப்பருவ நிலையில் இங்குள்ள ஹ்ருத்த பாப
நாசினியினில் நீராடி உயிர் நீத்தான். அன்று தெய்வாதீனமாய்த் தைஅமாவாசையாயிற்று. இவனை யமலோகத்திற்கு இட்டுச் சென்ற யமதூதர்கள்
இவன் பாபச் செயல்களின் பொருட்டே இவனை இங்கு கொணர்ந்தோம் எனக் கூறினார். இதைக் கேட்டு நகைத்த எமன் இவன் தை அமாவாசையன்று
ஹ்ருத்த பாப நாசினியிலில் நீராடியதால் இவனுக்கு பாபங்களே இல்லை.இவனை மோட்சவாயிலில் கொண்டு சென்றுவிட்டுவாருங்கள் என்று
உத்திரவிட்டான்.

நீர்மை கெட வைதாரும் நின்னோடெதிர்த்தாரும்
சீர்மை பெற நின்னடிக்கீழ் சேர்கையினால் நேர்மையிலா
யெவுள்ளத் தனேன் செய்கையை பொறுத்தருளி
யைவ்வுள்ளத்தனே நீ யிரங்கு—  நூற்றெட்டுத் திருப்பதியந்தாதி

நீர்மை கெட வைத்தாரும் நின்னோடு எதிர்ந்தாரும்
சீர்மை பெற நின் அடிக்கீழ்ச் சேர்க்கையினால் நேர்மை இலா
வெவ் உளத்தனேன் செய் மிகையைப் பொறுத்து அருளி
எவ்வுள் அத்தனே நீ இரங்கு–90-

(இ – ள்.) எவ்வுள் அத்தனே – திருவெவ்வுளூர் என்னுந் திவ்வியதலத்தில் எழுந்தருளிய தலைவனே! – நீ -, –
நீர்மை கெட – (தமது) தன்மை அழியும்படி,
வைதாரும் – (உன்னை) நிந்தித்தவரும்,
நின்னோடு எதிர்த்தாரும் – உன்னோடு எதிர்த்துப் போர்செய்தவரும், (தாங்கள் செய்த அபராதத்தினால் அழிந்துபோகாமல்),
சீர்மை பெற – சிறப்பு அடையும்படி,
நின் அடிக்கீழ் சேர்கையினால் – உனது திருவடிகளிற் சேர்தலினாலே, –
நேர்மை இலா – நல்லகுணமில்லாத,
வெம் உளத்தனேன் – கொடிய சிந்தனையையுடைய யான்,
செய் – செய்த,
மிகை – குற்றங்களையும்,
பொறுத்து அருளி – உனது திருவருளினாற் பொறுத்துக்கொண்டு,
இரங்கு – (என்திறத்தில்) திருவுள்ளமிரங்கி (உனக்கு) ஆட்கொள்வாயாக; (எ – று.)

வைதார் – சிசுபாலன் முதலானோர். எதிர்த்தார் – தந்தவக்ரன் முதலானோர். எம்பெருமான் தன்னை விரும்பி
இடைவிடாது மனத்திற்கொண்டு பக்தியோடு வாழ்த்தியவர்க்கும் வழிபட்டவர்க்கும் பரமபதம் அளித்தல் போலவே,
தன்னை வெறுத்து இடைவிடாது மனத்திற்கொண்டு வைதவர்க்கும் எதிர்த்துப் போர்செய்தவர்க்கும் பரமபதம்
அளித்தருள்கின்றன னென்பதையும்; அபாரகருணாநிதியான அப்பெருமான் உயிர்கட்கு நற்கதியளித்தற்குத்
தன்சம்பந்தமான ஏதேனும் ஒன்றை வியாஜமாகக்கொண்டு அருள் செய்கின்றன னென்பதையும்;
எவ்விதத்திலும் சேதநரை உஜ்ஜீவிப்பிப்பது எம்பெருமானது இயல்பு என்பதையும்;
ஏதேனும் ஒருவியாஜத்தை அபேக்ஷிக்கும் எம்பெருமான் த்வேஷாதிகளினாலாவது செய்யும் நாமஸங்கீர்த்தனாதிகளையும்
திருவுள்ளம்பற்றியருளும்படியான மகோதாரனென்பதையும் இங்கு உணரலாம்;
“வைதாரையு முன்மலைந்தாரையு மலர்த்தாளில்வைத்தாய்,
மொய்தாரையத்தனை தீங்கிழைத்தேனையு மூதுலகிற்,
பெய்தாரை வானிற் புரப்பா னிடபப்பெருங்கிரியாய்,
கொய்தாரைவேய்ந்த திருவடிக்கீழ்த் தொண்டுகொண்டருளே” என்றார் அழகரந்தாதியிலும்.
‘எம்பெருமானது திருவடியே வீடு’ என்ற கொள்கை, இரண்டாமடியில் விளங்குகின்றது. ‘எவ்வுளத்தனே’ என்ற விளியால்,
வைதாரையும் எதிர்த்தாரையும் கூடக்கைவிடமாட்டாது திருவடிக்கீழ்ச்சேர்த்துக்கொள்ளும்
உரிமையுடையவன் எம்பெருமா னென்பது, பெறப்படும்.
“செய்தகுற்றம் நற்றமாகவே கொள் ஞாலநாதனே” என்பது திருமழிசையார் பாசுரம்.

திருமால் சாலிஹோத்திர மகாரிஷிக்குப் பிரதியக்ஷமாகி, உறைதற்கு உரிய உள் ‘எவ்வுள்’ என வினாவியதனால்,
இத்தலத்திற்குத் திருவெவ்வுளூரென்று திருநாமமாயிற் றென்பர்.

——————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ திவ்ய தேச மங்களா ஸாஸன அருளிச் செயல்கள்-ஸ்ரீ திரு நின்றவூர்

March 24, 2024

மூலவர் -பக்த வத்சலப் பெருமாள் / நின்ற திருக் கோலம் / கிழக்கே திரு முக மண்டலம்
உத்சவர் -பத்தராவிப் பெருமாள்
தாயார் -என்னைப் பெற்றத் தாயார் / ஸூதா வல்லி –
விமானம் -உத்பல விமானம்
தீர்த்தம் -வருண புஷ்கரிணி தீர்த்தம் –
மங்களா சாசனம் -திரு மழிசை ஆழ்வார்
திருக் கடல் மல்லை –நின்ற வூர் நித்திலத் தொத்தினை –கண்டது நான் கடல் மல்லை தல சயனத்தே
நின்றவூர் நின்ற நித்திலத்தொத்தினை –திருக்கண்ண மங்கையில் கண்டு கொண்டேனே –தொத்து -சொத்து
இரண்டு இடத்திலும் சென்று பெற்ற பாசுரங்கள் –

திருவாகிய மஹா லஷ்மி தனி சிறப்புடன் தங்கிய வூர் –
சமுத்திர ராஜன் இடம் சீற்றம் கொண்ட மஹா லஷ்மி அங்கு இருந்து இந்த ஷேத்ரத்தில் தங்கி விட்டாள்
பிரமானால் தூண்டப்பட்ட சமுத்திர ராஜன் இங்கு வந்துத் தாயாரை -என்னைப் பெற்ற தாயே -என்று
மனம் உருகி வேண்ட தாயாரும் மனம் கனிந்து இங்கேயே தங்கி அருள் புரிகிறார் –
திருமலை திருப்பதி பெரிய ஜீயர் அதீனம் -இந்த திவ்ய தேசம் —
வருணன் சமுத்திர ராஜன் இருவருக்கும் பிரத்யக்ஷம் –

மூலவர் ஸ்ரீ பக்த வத்ஸலப் பெருமாள், ஸ்ரீ பத்த ராவிப் பெருமாள்
கோலம் நின்ற
திருமுக மண்டலம் கிழக்கு
உற்சவர் ஸ்ரீ பக்த வத்ஸலப் பெருமாள்
தாயார் ஸ்ரீ சுதாவல்லி, ஸ்ரீ என்னைப் பெற்ற தாயார்
தீர்த்தம் ஸ்ரீ வருண புஷ்கரணி
விமானம் ஸ்ரீ உத்பலா விமானம்
மண்டலம் தொண்டைநாட்டுத் திருப்பதிகள்
மாநிலம் தமிழ் நாடு
அடிப்படை இடம் சென்னை
நாமாவளி ஸ்ரீ என்னைப் பெற்ற தாயார் ஸமேத ஸ்ரீ பக்த வத்சலாய நமஹ

—————

ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் -2-பாசுரங்கள் மங்களாசாசனம் –

பூண்டவத்தம் பிறர்க் கடைந்து தொண்டு பட்டுப் பொய்ந் நூலை மெய்ந் நூலென் றென்றுமோதி
மாண்டு அவத்தம் போகாதே வம்மின் எந்தை என் வணங்கப் படுவானை கணங்களேத்தும்
நீண்டவத்தைக் கரு முகிலை எம்மான் தன்னை நின்றவூர் நித்திலத்தைத் தொத்தார் சோலை
காண்டவத்தைக் கனலெரி வாய்ப் பெய்வித்தானைக் கண்டது நான் கடல் மல்லைத் தல சயனத்தே. –பெரிய திருமொழ -2-5-2-

ஏற்றினை இமயத்து ளெம் மீசனை இம்மையை மறுமைக்கு மருந்தினை
ஆற்றலை அண்டத்தப் புறத் துய்த்திடும் ஐயனைக் கையிலாழி யொன்றேந்திய
கூற்றினை குரு மா மணிக் குன்றினை நின்றவூர் நின்ற நித்திலத் தொத்தினை
காற்றினைப் புனலைச் சென்று நாடிக் கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே. –பெரிய திருமொழி -7-10-5-

திருமங்கையாழ்வார். திவ்ய தேசங்களை மங்களாசாசனம் செய்து கொண்டே வரும் போது இத்தலத்தின் வழியாகச் சென்றும் இதனைப் பாடாது சென்றார்.
இதைக் கண்ட பிராட்டி, பெருமாளை எழுப்பி உடனே சென்று ஒரு பாசுரம் பெற்றுவருமாறு சொல்ல, பெருமாள் வருவதற்குள் திருமங்கையாழ்வார்
திருவிடந்தை வந்து விட்டு, திருக்கடன் மல்லை (மாமல்லபுரம்) வந்து விட்டார்.

அப்போது எம்பெருமான் பாசுரங் கேட்டுவந்து நிற்பதைக் கண்ட திருமங்கையாழ்வார்.

நீண்ட வத்தக் கருமுகிலை எம்மான் தன்னை
நின்றவூர் நித்திலத் தொத்தார் சோலை
காண்டவத்தைக் கனலெரிவாய் பெய்வித்தானைக்
கண்டது நான் கடல்மலலை தலசயனத்தே-என்று மங்களா ஸாஸனம்

கண்ணமங்கைப் பெருமாளை மங்களாசாசனம் செய்யும் போது திருநின்றவூர் பெருமாள் வந்து நிற்பதை
ஓரக் கண்ணால் கண்ட திருமங்கையாழ்வார் நின்றவூர் நின்ற நித்திலத் தொத்தினை என்று பெருமாளையும் அவர் காற்றினும் கடுகி வந்த வேகத்தைக்
குறிக்கு மாற்றான் “காற்றினைப் புனலை” என்று அவரது வேகத்தையும் குறித்து கண்ண மங்கையுள் கண்டு கொண்டேன் என்று அவரையும் சேர்த்து
மங்களாசாசனம் செய்தார்.

திருவாகிய இலக்குமிப் பிராட்டி வைகுந்தத்தை விட்டு இங்கு வந்து நின்றதால் திரு நின்றவூராயிற்று

ஆதிசேடனைத் தாங்கியுள்ள ஸமுத்திர ராஜனுடன் கோபம் செய்து கொண்டு இவ்விடத்து வந்து நின்றதாகவும், பிறகு
ஸமுத்திரராஜன் நேரில் வந்து மன்னிப்புக் கேட்டு மீண்டும் வைகுண்டம் எழுந்தருள வேண்டுமென்று விண்ணப்பம் செய்தான். எவ்வளவு கூறியும்
திருமகள் மறுத்துவிடவே ஸமுத்திர ராஜன் வைகுந்தம் வந்து எம்பெருமானிடம் முறையிட்டுத் தாங்களே என்னை ரட்சிக்க வேண்டும்
தேவியை மீண்டும் இங்கே எழுந்தருள மனங்கனிய அருள வேண்டும் என வேண்டினான். பக்தர்க்கு
இரங்கும் பண்பினான பரந்தாமன் மீண்டும் ஸமுத்திர ராஜனைப் பிராட்டியிடம் அனுப்பி நீ முன்னால் செல், நான் பின்னால் வருகிறேன் என்று
சொல்லியனுப்ப அவ்வண்ணமே ஸமுத்திரராஜன் வந்து தன்னை மீண்டும் மன்னிக்குமாறு என்னை பெற்றதாயே என்றும் பலவாறு வேண்டியும் திருமகள்
சமாதானம் அடையவில்லை. அவ்வேளையில் எம்பெருமானும் அங்கு எழுந்தருளி சமாதானஞ் சொல்ல திருமகள் மீண்டும் வைகுந்தம் எழுந்தருள
சம்மதித்தார்.
இதுவரை ஜலத்திலேயே ஸமுத்திர ராஜனுக்கு காட்சி கொடுத்த எம்பெருமானும் பிராட்டியும் இப்போது முதன்முதலாக நிலத்திலும் காட்சி
கொடுத்ததால், ஸமுத்திர ராஜனைக் நோக்கி உனக்கு என்னவேண்டும் என்று கேட்க, தாங்கள் இருவரும் இத்திருமணக் கோலத்தில் காட்சி தந்து
அதேபோல் இங்கேயே நின்றிலங்கவேண்டும்மென்று வேண்ட அவ்வண்ணமே அருள் பாலித்தனர்.

பக்தனுக்காக அவன்பால் வாத்சல்யம் (பேரன்பு) ஏற்பட்டு தன்னைவிட்டுப் பிரிந்த தேவியை அழைத்துவர பக்தனுக்காகத் தான் புறப்பட்டு வந்ததால்
பெருமாளுக்கு இங்கு பக்தவத்ஸலன் என்பது திருநாமம். இவ்வாறு பக்தர்களின் உயிருக்குயிராய் விளங்குவதால் பத்தராவிப்பெருமாள் என்ற திருநாமமுண்டு-ஸமுத்திரராஜன் பிராட்டியை வேண்டும்பொழுது என்னைப் பெற்ற தாயல்லவா என்று சொல்லி தன்பிழை பொறுத்து வைகுண்டம் ‘மீளக் கேட்டுக் கொண்டதால் என்னைப் பெற்ற தாயார் என்பதே பிராட்டியின் திருநாமம் நன்னு கன்ன தல்லி’ என்பர் தெலுங்கில்.

மூலவர்-பக்தவத்சல பெருமாள். பத்தராவிப்பெருமாள் கிழக்கு நோக்கி நின்றிருந்த திருக்கோலம்.
தாயார்- என்னைப் பெற்ற தாயார், சுதாவல்லி
தீர்த்தம்– வருண புஷ்கரணி
விமானம்- உத்பல விமானம்
காட்சி கண்டவர்கள்- ஸமுத்திர ராஜன், வருணன்.

திருமலை பெரிய திருப்பதி பெரிய ஜீயர் சுவாமிகளின் நிர்வாகத்திற்குட்பட்டது இந்த ஸ்தலம்.

பூந்தமல்லியில் (பூவிருந்த வல்லியில்) நாசரத்பேட்டையில் அனந்த நாராயண தீட்சிதர் பூமிநாச்சியார் என்னும் தம்பதியார் வாழ்ந்து வந்தனர்.
(இந்த பூமிநாச்சியார் இராமானுஜரின் பெரிய சகோதரி) இவர்கட்கு புத்திரப்பேறு இல்லை. புத்திரப்பேறு வேண்டி திருமலையாத்திரையை
மேற்கொண்டனர்.
யாத்திரையின்போது இத்தலத்திற்கு அருகில் உள்ள வருண புஷ்கரணியின் சமீபம் உள்ள ஏரிகாத்த ராமரின் ஆலயத்தில் தங்கினர்.
மானசீகமாக இப்பெருமானை வேண்டினர். (மதுராந்தகம் போன்ற இங்கும் ஒரு ஏரிகாத்த ராமன் உள்ளன்)
அப்போது அவர்களின் கனவில் தோன்றிய ராமன் நீங்கள் புத்திரப்பேறு குறித்து திருமலை செல்லவேண்டாம். எம் அம்சமாக உங்கட்கு ஒரு புத்திரன்
பிறப்பான் என்றார். அவர்களும் அவ்வண்ணமே ஊருக்குத் திரும்ப அவர்கட்கு வைணவ சீலனாக ஒரு திருமகன் அவதரித்தான். அவர்தான்
முதலியாண்டான்.-இவருக்கு பூந்தமல்லியில் சன்னதி உண்டு.
இந்தக் குடும்பத்தில் ஏற்கனவே லட்சுமணன் அவதாரம் செய்தான். (ஆம் ராமானுஜராக வந்தது ஆதிசேடனன்றோ) தற்போது ராமபிரானின்
அம்சமாக முதலியாண்டார் அவதரித்தார்.
இவ்வாறு லட்சுமணன் முதலாவதாகவும் ராமன் இரண்டாவதாகவும் அவதாரம் செய்தது பகவத் அவதாரங்களிலேயே இதற்குமுன் ஒருமுறைதான்
நிகழ்ந்தது. அதுதான் ஸ்ரீகிருஷ்ணர் – பலராமர் அவதாரமாகும்.
இவர் (முதலியாண்டார்) பிற்காலத்தே இராமானுஜரின் பிரதம சீடராகத் திகழ்ந்தார். இராமானுஜருக்கு சாத்துமறை நடந்த மறுநாளில் இவருக்கு
சாத்துமறை நடக்கும். இவரது உபதேசங்களுள் மிகவும் முக்கியமானது மூன்று திவ்யங்கள் எனப்படும். அவை.
அ) எம்பெருமானின் தீர்த்தம் பசுவின் பாலும் நெய்யும் போல்-ஆ) ஆழ்வார்களின் அருளிச் செயல் அம்ருத பானம் போல
இ) பிராட்டிக்கு ராவண பவனம் போல ஸ்ரீவைணவர்கட்கு ஸம்சாரம்.

சீரறிந்து தோழிமீர் சென்று கொணர்ந்தெனக்குப்
போரமுலை முகட்டிற் பூட்டுமினோ நேரவுணர்
பொன்றவூர் புட்கழுத்திற் பொன்னை மாணிக்கத்தை
நின்றவூர் நித்திலத்தை நீர்–நூற்றெட்டுத் திருப்பதியந்தாதி

திரு நின்ற ஊர் -தலைவி தோழி யார்க்கு அறத்தொடு நிற்றல் –

சீர் அறிந்து தோழி மீர் சென்று கொணர்ந்து எனக்குப்
போர முலை முகட்டில் பூட்டுமினோ நீர் அவுணர்
பொன்ற ஊர் புட் கழுத்தில் பொன்னை மாணிக்கத்தை
நின்ற ஊர் நித்திலத்தை நீர் –89-

(இ – ள்.) தோழிமீர் – (எனது) பாங்கிமார்களே! –
நீர் – நீங்கள், –
நேர் அவுணர் பொன்ற – எதிர்த்துப்பொருத அசுரர்கள் அழியும்படி,
ஊர் – ஏறிநடத்துகின்ற,
புள் – கருடாழ்வானது,
கழுத்தில் – கழுத்திலே,
பொன்னை – பொன்போலப் பிரகாசிப்பவனும்,
மாணிக்கத்தை – (இயற்கையில்) கருமாணிக்கம்போன்ற கருநிறமுள்ளவனுமாகிய,
நின்றவூர் நித்திலத்தை – திருநின்றவூரென்னுந் திவ்வியதலத்தி லெழுந்தருளிய முத்துப்போன்றவனை,
சீர் அறிந்து – (அவனது) சிறப்பை யுணர்ந்து, –
சென்று – போய்க்கிட்டி,
கொணர்ந்து – கொண்டுவந்து,
எனக்கு போர – எனக்குத் திருப்தியுண்டாகும்படி
முலை முகட்டில் – (எனது) தனங்களது உச்சியின்மீது,
பூட்டுமின் – அணியுங்கள்; (எ – று.)

திருநின்றவூர்ப் பத்தராவியாகிய தலைமகனைக் களவொழுக்கத்தாற் கூடிப்பிரிந்த தலைவி
அப்பிரிவாற்றாமையாற் பலவாறு நோவுபட, அத்துயர மாத்திரத்தையே கண்ட தோழியர்
அந்நோயின்காரணமும் அதற்குப்பரிகாரமும் இன்னவென்று உணராது வேறுபலவகையாக ஆராய்ந்து
பரிகாரஞ்செய்யத் தொடங்கியபோது நோயொன்றும் மருந்தொன்று மாகையாலே அந்நோய் தீராது வளர,
அதனை ஆற்றமாட்டாத அந்தத்தலைவி நாணந்துறந்து தானே தனது நோயையும் நோயின்காரணத்தையும்
அந்நோய் தீர்க்கும் மருந்தையும் அம்மருந்தைப் பிரயோகிக்கும் விதத்தையும் உணர்த்துதல், இச்செய்யுளிற் கூறிய விஷயம்.
இங்ஙனம் களவைவெளிப்படுத்துதலின் காரணம் – தன்கருத்தைத் தோழியர்மூலமாகத் தாய்மார்க்கும் அவர்கள்
மூலமாகத் தந்தைக்கும் மற்றும் பெரியோர்க்கும் தெரிவித்துத் தன்னை அவனுக்கே விரைவில் வெளிப்படையாக
மணஞ்செய்துவைக்கும்படி கொள்ளும் விருப்பம்.

எம்பெருமானை – பெறுதற்கு அருமையும் ஒண்மையும் பற்றிப் பொன்னாகவும், கருநிறம்பற்றி மாணிக்கமாகவும்,
ஸ்ரமஹரமாயிருத்தல்பற்றி முத்தாகவும் கூறினள்;
“வெள்ளறையுள் கல்லறைமேற்பொன்னை மரதகத்தை,”
“நின்றவூர் நின்ற நித்திலத்தொத்தினை,”
“நின்றவூர் நித்திலத்தை” என்ற ஆன்றோர் அருளிச்செயல்கள் காண்க.
எம்பெருமானொருத்தனையே இவ்வாறு பொன்னாகவும் மாணிக்கமாகவும் நித்திலமாகவும் குணபேதத்தால் வியப்புத்தோன்றக் கூறியது –
பலபடப்புனைவணியாம். எம்பெருமானைப் பொன்மாணிக்கம் முத்து என்று உருவகத்தாற் கூறியதற்கு ஏற்ப,
“முலை முகட்டிற்பூட்டுமின்’ என்று தலைவி சமத்காரந்தோன்றக் கூறினள்;
பொன் முதலியவை முலைமுகட்டிற் பூணத்தக்க பொருள்களாதல் காண்க. ‘முலைமுகட்டிற்பூட்டுமினோ’ என்றதனால்,
“மலராள்தனத்துள்ளான்” என்றவாறு அப்பிராட்டியோடொப்ப எம்பெருமானைத் தான் அநுபவிக்கப்
பாரிக்கின்றனள் இத்தலைவி யென்பது பெறப்படும்.
சீர் அறிந்து என்பதற்கு – “மற்றொருவர்க் கென்னைப் பேசலொட்டேன் மாலிருஞ்சோலை யெம்மாயற்கல்லால்” என்றபடி
அவ்வெம்பெருமானுக்கன்றி மற்றொருத்தற்குப் பேச்சுப்படாதபடி அநந்யார்ஹையான எனது சிறப்பை யறிந்து என்றும் உரைக்கலாம்.

எம்பெருமான் ஒருகால் காட்சிகொடுத்து மறைய, பின்பு பிரிவாற்றாது வருந்துகின்ற ஐயங்கார் தம்பக்கல்
பரிவுடையாரை நோக்கி ‘எம்பெருமானை என்னிடத்திற்சேர்த்து என்னை ரக்ஷிக்கப் பாருங்கள்’ என்று பிரார்த்தித்தல்,
இதற்கு உள்ளுறைபொருள். விவரம் உய்த்து உணர்க.

——————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ திவ்ய தேச மங்களா ஸாஸன அருளிச் செயல்கள்-ஸ்ரீ திருப் புட் குழி-

March 24, 2024

மூலவர் -விஜய ராகவப் பெருமாள் / வீற்று இருந்த திருக் கோலம் / கிழக்கே திரு முக மண்டலம்
தாயார் -மரகத வல்லி
விமானம் – விஜய கோடி விமானம்
தீர்த்தம் -ஜடாயு தீர்த்தம்
மங்களா சாசனம் -திரு மங்கை ஆழ்வார்

ஜடாயு மஹா ராஜருக்கு ஈமச்ச சடங்குகளை செய்து அருளிய திருத் தலம் -புள் -பறவை –
அவருக்காக குழி தோன்றிச் சடங்கு செய்த இடம் –
வெப்பம் தாங்காமல் பிராட்டி பின்னே சேவை -ஸ்ரீ தேவி பூ தேவி மாறி – சேவை-
க்ருத்ர புஷ்கரிணி நீராடி வயிற்றில் பச்சை பயிறு –காலையில்- முளைக்க வைக்கும் தாயார் குழந்தை பேறு அளிப்பார் –
குதிரை வாகனம் -கீல் குதிரை -பிரசித்தம் –
பின்பழகிய பெருமாள் ஜீயர் திருவவதார ஸ்தலம்
யாதவ பிரகாசர் இடம் ராமானுஜர் பயின்ற தேசம்

மூலவர் ஸ்ரீ விஜய ராகவப் பெருமாள்
கோலம் வீற்றிருந்த
திருமுக மண்டலம் கிழக்கு
உற்சவர் ஸ்ரீ ராம பிரான்
தாயார் ஸ்ரீ மரகத வல்லி
தீர்த்தம் ஸ்ரீ ஜடாயு தீர்த்தம்
விமானம் ஸ்ரீ விஜய வீர கோடி விமானம்
மண்டலம் தொண்டைநாட்டுத் திருப்பதிகள்
மாநிலம் தமிழ் நாடு
அடிப்படை இடம் ஸ்ரீ காஞ்சீபுரம்
நாமாவளி ஸ்ரீ மரகதவல்லீ ஸமேத ஸ்ரீ விஜயராகவாய நமஹ

———————

ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் -2-பாசுரங்கள் மங்களாசாசனம்

அலங்கெழுதடக்கை ஆயன்வாயாம்பற்கு
அழியுமால்என்னுள்ளம்என்னும் *
புலங்கெழுபொருநீர்ப்புட்குழிபாடும்
போதுமோநீர்மலைக்கு? என்னும் *
குலங்கெழுகொல்லி கோமளவல்லிக்
கொடியிடைநெடுமழைக்கண்ணி *
இலங்கெழில்தோளிக்கு என்நினைந்திருந்தாய்?
இடவெந்தைஎந்தைபிரானே! –பெரிய திருமொழி -2-7-8-

மின்னை யிருசுடரை வெள்ளறையுள் கல்லறை மேற் பொன்னை மரதகதைப் புட்குழி யெம் போரேற்றை –பெரிய திருமடல் – 117-

சென்னையிலிருந்து வேலூர் சாலையில் அமைந்துள்ள இந்த பாலுசெட்டி சத்திரத்திலிருந்து நடந்தே செல்லலாம். சென்னையிலிருந்தும்
காஞ்சிபுரத்தில் இருந்தும் தற்போது ஏராளமான பேருந்துகள் உண்டு.

சீதையை இராவணன் சிறையெடுத்துச் சென்றபோது அவனையெதிர்த்து போரிட்ட ஜடாயு இராவணனால் வெட்டப்பட்டு இவ்விடத்தில் வீழ்ந்து பின்
ஜானகியைத் தேடி அவ்வழிழிழழிததததனதமனழிழிதமதமட்தமனதமழியில் வந்தஇராமனிடம் விவரங்களைத் தெரிவித்துவிட்டு உயிர் நீத்தார். ராமன் அவருக்கு மோட்சமளித்து தனது கரங்களால் அந்திமச் சடங்குகளை இங்கு (இத்தலத்தில்)
செய்வித்தார். எனவே இத்தலத்திற்கு திரு + புள் + குழி என்ற பெயருண்டாயிற்று (வட மொழியில் க்ருத்ர புஷ்கரணி சேஷத்தரம் எனப்படுகிறது)
இதே வரலாறுதான் புள்ளம் பூதங்குடிக்கும் கூறப்பட்டுள்ளது

மூலவர்-விஜயராகவப் பெருமாள். நான்கு புஜங்களுடன் கிழக்குநோக்கி வீற்றிருந்த திருக்கோலம்.
தாயார்– மரகதவல்லி (தனிக்கோவில்)
தீர்த்தம்- ஜடாயு தீர்த்தம்
விமானம்- விஜயகோடி விமானம்
காட்சி கண்டவர்கள்- ஜடாயு

ஜடாயுவுக்கு மோட்சமளித்த ராமன் இங்கு ஜடாயு தீர்த்தத்தை உண்டாக்கினார் என்று சொல்லப்படுகிறது. இங்கு கோவிலுக்கு எதிர்ப்
புறத்தில் ஜடாயுவுக்கு சன்னதியுள்ளது. மூலவர் தமது தொடையின் மீது ஜடாயுவை வைத்துக்கொண்டு ஸமஸ்காரம் செய்யும் பாவணையில்
அமர்ந்துள்ளார். இந்த தாபத்தைத் தாங்க முடியாமல் இடம், வலமாகமாறி எழுந்தருளியுள்ளார்.

வலப்பக்கத்தே இருக்க வேண்டிய ஸ்ரீதேவி இடப்பக்கத்தே இருப்பது இங்கும் திருவிடவெந்தையில் மட்டுமே.
இங்கு பெருமாள் வெளியே புறப்பட்டு திருவீதி கண்டருளும் போதெல்லாம் ஜடாயுவுக்கும் சகல மரியாதைகளும் உண்டு.
இங்கு எழுந்தருளியுள்ள விஜயராகவப் பெருமாளுக்கு வடமொழியில் ஸமர புங்கவன் என்பது பெயர். இதைத்தான் போரேறு என்று தமிழ்படுத்தினார்
ஆழ்வார்.

இந்த ஊரில் உள்ள ஜடாயு தீர்த்தத்தில் நீராடி இரவில் மடியில் (பெண்கள்) வறுத்த பயறு கட்டிக்கொண்டு படுக்க மறுநாள் விடிந்தவுடன்
அப்பயறு முளைத்திருக்குமாயின் அவர்கட்கு குழந்தைப்பேறு உண்டாகும். இங்கு இது அனுபவரீதியாகக் காணப்படும் உண்மையாகும். இதனாற்றான்
இந்தத் தாயாருக்கு வறுத்த பயறு, முளைவிக்கும் மரகதவல்லித் தாயார் என்று பெயர் பிரசித்தம்.

இவ்வூரில் வாழ்ந்த யாதவப் பிரகாசர் என்பவரிடமே இராமானுஜர் அத்வைத பாடங்களைப் பயின்றார். இராமானுஜர் படித்த மண்டபம் இன்றும்
உள்ளது. இராமானுஜர் கல்வி கற்றதை விளக்கும் சிற்பமும் இக்கோவிலில் உள்ளது. (இராமானுஜரோடு எம்பாரும் இங்குதான் கற்றார்.]

நம்பிள்ளையாரின் சீடரான பின்பழகிய பெருமாள் ஜீயர் அவதரித்த தலம் ஆகும்.

இங்குள்ள குதிரை வாகனம் மிகவும் அதிசயமானதாகும். கல் குதிரை என வழங்கப்படும் இக்குதிரை உண்மையான குதிரை போலவே அசையும்
உறுப்புக்களைக் கொண்டது. இதைச் செய்த தச்சன் இதுமாதிரி இனி யாருக்கும் செய்துகொடுப்பதில்லை என்று உறுதியோடு இருந்து உயிர்துறந்தானாம்.
இவனது உறுதிக்கும் பக்திக்கும் பாராட்டுத் தெரிவித்து பெருமாள் 8ஆம் உத்சவத்தன்று அவனது வீதிக்கு எழுந்தருளுகிறார்.

மால்வேழ்கு மரவும் மாயையும் வெற்பும் கடலும்
மேல் வீழப் படையும் விட்டுப் போய்ப் – பாலன்
நெருப்புட்குழி குளிர நின்றதும் கேட்டதோர்
திருப்புட்குழி யமலன் சீர்” – பிள்ளைப் பெருமாள் ஐயங்கார்

மால் வேழமும் அரவும் மாயையும் வெற்பும் கடலும்
மேல் வீழ் படையும் விடமும் போய் பாலன்
நெருப்பு உள் குழி குளிர நின்றதும் கேட்டு ஓதார்
திருப் புட்குழி அமலன் சீர் –88-

(இ – ள்.) (இரணியாசுரன் தனக்குஇணங்கிவராத தனதுகுமாரனான பிரகலாதாழ்வானை உபத்திரவிக்கும்பொருட்டு ஏவியனவான),
மால் வேழமும் – பெரிய மதயானைகளும்,
அரவும் – பெரும்பாம்புகளும்,
மாயையும் – (சம்பரனென்னும்அசுரனாற்செய்யப்பட்ட) மாயையும்,
வெற்பும் – மலையும்,
கடலும் – சமுத்திரமும்,
மேல் வீழ் படையும் – மேலேவிழுகின்ற வாள்முதலிய ஆயுதங்களும்,
விடமும் – விஷமும்,
போய் – (உபத்திரவஞ்செய்யமாட்டாமல் வலியொடுங்கிப்) போக,
பாலன் – (எம்பெருமானது திருவஷ்டாக்ஷரத்தின் மகிமையை யறிந்து உச்சரித்த) சிறுவனாகிய பிரகலாதாழ்வான்,
குழி உள் நெருப்பு குளிர நின்றது – பள்ளத்திலே மூட்டிய நெருப்புச் சுடாமற் குளிரும்படி நின்றதை,
கேட்டுஉம் – கேட்டிருந்தும், –
திருப்புட்குழி அமலன் சீர் – திருப்புட்குழியென்னுந் திவ்வியதலத்தி லெழுந்தருளிய திருமாலினது சிறப்புக்களை,
ஓதார் – (இவ்வுலகத்துச்சனங்கள்) கூறமாட்டார்கள்; (எ – று.)

எம்பெருமானது திருவடிகளையே சரணமாக நம்பியிருந்த சிறுவனாகிய பிரகலாதாழ்வான் தன் தந்தையாகிய
இரணியாசுரனது சூழ்ச்சியினால் தோன்றிய பலவகையாபத்துக்களினின்று நீங்கியதைக் கேட்டறிந்தும்,
உலகத்துச்சனங்கள் அப்பெருமானது குணங்களை யநுசந்தித்து நற்கதிபெறாது அழிகின்றனரே!
இது என்ன பேதைமை? என்று இரங்கியவாறு.
இரணியன் அருந்தவம்புரிந்து பெருவரங்கள்பெற்றுச் செருக்கித் தன்னையே அனைவரும் கடவுளாகக்கொண்டு வணங்கி
வழிபடவேண்டுமென்று கட்டளையிட்டகாலத்தில் எல்லாத்தெய்வங்களும் இருந்தஇடம் தெரியாதபடி மறைந்துகிடக்க,
அவ்விரணியனது செருக்கை யொழிக்குமாறு எம்பெருமான் பிரகலாதனுக்கு அநுக்கிரகித்து நரசிங்க
மூர்த்தியாய்த் தோன்றிய பின்பு பிறதெய்வங்கள் தலையெடுத்ததனால் ஸ்ரீமந்நாராயணனே பரதேவதையென்று
அப்பிரானதுசீரையே ஓதவேண்டியதாக இருக்க, அதனைவிட்டுப் பிறதெய்வங்களின்சீரையும் ஓதுகின்றார்களே!
இது என்ன அறிவு! என்ற கருத்தும் ‘நெருப்புட்குழிகுளிர நின்றதுகேட்டும் ஓதார் திருப்புட்குழி அமலன்சீர்’ என்றவிடத்துத் தோன்றும்.

இரணியாசுரனது ஏவுதலினால் திக்கஜங்கள் பிரகலாதனைப் பூமியிலே வீழ்த்தித் தந்தங்களினாலே பாய்ந்து இடிக்க,
அந்தத்தந்தங்கள் முறிந்து பொடியாய்ப்போயினதனால், மால்வேழமும்; தக்ஷகன் முதலான கொடிய மகாசர்ப்பங்கள்
உக்கிரமான விஷங்களைக் கக்கிக்கொண்டுவந்து அவனது சகல அவயவங்களிலும் கடிக்கவும்
அவனது தேகத்திலுள்ள தோலிற் கிஞ்சித்தாயினும் சேதமுண்டாகவில்லை யாதலால், அரவும்;
மகாமாயாவியாகிய சம்பராசுரன் செய்த மாயைகளெல்லாம் ஸ்ரீமந்நாராயணனுடைய நியமநத்தினாலே திருவாழியாழ்வான்
அவரைப் பாதுகாக்கும்பொருட்டு அங்கே எழுந்தருளித் தகித்துச் சாம்பராக்கிவிட்டதனால், மாயையும்;
பருவதங்களினாலே அமுக்கப்பட்டபோதிலும் ஸ்ரீவிஷ்ணுஸ்மரணமாகிற கவசத்தினாலே காக்கப்பட்டதனால், வெற்பும்;
தைத்தியர்கள் நாகபாசங்களினாலே கட்டிக் கடலிலே போகட அவன் அதில்வீழ்ந்து அசைந்துகொண்டு அதனை
விட்டுப் புறப்பட்டு வெளியில்வந்துவிட்டதனால், கடலும்; அங்கிருந்த அசுரர்களெல்லாரும் ஒன்றாய்ச்சேர்ந்து
பலவிதஆயுதங்களையெடுத்துப் பிரகரித்து வதைக்கும்படி யத்தனிக்க, அவன் அவற்றினாற் கிஞ்சித்தும் வேதனை
யுறாமல் விளங்கியதனால், மேல்வீழ்படையும்; பாகஞ்செய்வோர் போஜநங்களிலெல்லாம் கலந்துகொடுத்த மகாவிஷம்
ஸ்ரீஅநந்தநாமோச்சாரண பிரபாவத்தினாலே நிர்வீரியமாகி அவனுடைய உதரத்தில் ஜீரணமாகிவிட்டதனால், விடமும்;
அசுரர்கள் அக்கினியை வளர்த்து அவனை அதிலே மறையவைத்து அனலை மூட்டிக்கொளுத்த அவ்வக்கினி கொஞ்சமாகிலும்
அவனைத் தகிக்கமாட்டாமல் அதிசீதளமானதனால், நெருப்பும் ஒன்றுஞ்செய்யமாட்டாமற் போயினமை பிரசித்தம்.
“நம்பெருமா ளெழுத்தெட்டின் பெருமை நவிலுமதோ,
சம்பரன்மாயம் புரோகிதர்சூழ்வினை தாரணிவாள்,
வெம்படை மாசுணம் மாமதவேழம் விடந்தழல் கால்,
அம்பரமே முதலானவை பாலனுக்கு அஞ்சினவே” என்றார் திருவரங்கத்துமாலையிலும்.

புள்ளை (சடாயுவென்னும் பெரியவுடையாரைக்) குழியிலிட்டு ஸம்ஸ்கரித்ததுபோல எம்பெருமான்
சேவை சாதிக்கின்ற தலமாதல்பற்றி, திருப்புட்குழியென்று இத்தலத்திற்குத் திருநாம மென்பர்.

——————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்