Archive for the ‘Desihan’ Category

ஸ்ரீ யதிராஜ சப்ததி—ஸ்ரீ வேதாந்த தேசிகன் ஸ்வாமி–ஸ்லோகங்களும் விளக்கமும்–

January 26, 2026

ஸ்ரீ மான் வேங்கட நாதார்ய கவிதார்க்கிக கேசரீ
வேதாந்தாசார்ய வர்யோமே சந்நிதத்தாம் சதா ஹ்ருதி —

சீரொன்று தூப்புல் திருவேங்கடமுடையான்
பாரொன்றச் சொன்ன பழ மொழியில் ஓரொன்று
தானே அமையாதோ தாரணியில் வாழ்வார்க்கு
வானேறப் போமளவும் வாழ்வு –
————

ஸ்ரீ லக்ஷ்மி நாதாக்ய சிந்தௌ சடாரிபு ஜலதஹா ப்ராப்ய காருண்ய நீரம்!
நாதா த்ரவப் க்ஷிஞ்சன் ததானு ரகுவரம் போஜ ஷக்சுர் ஜலாப்யம்!!
கத்வதாம் யாமுநாக்யம் சரிதாமத் யதீந்த்ராக்ய பாத்மாகாரேந்திரம்!
ஸம்பூர்ய ப்ராணி சாஸ்யே ப்ரவஹத பஹூதா தேசிகேந்த்ர பிரமேகைஹி.”!!

ஸ்ரீ லட்சுமி நாதன் ஒரு பெரிய கடல்.  நம்மாழ்வார் ஒரு மேகம்.
இந்த கருமேகம் ஆழ்வார் கடலில் இருந்து தண்ணீரை (ஞானம்/அறிவு) எடுத்து மலைகளில் மழையாக (பாசுரங்கள்) பொழிந்தார்.
மலை என்பது ஸ்வாமி நாதமுனிகல் என்று குறிப்பிடப்படுகிறது.
இரண்டு நீர்வீழ்ச்சிகளாக நீர் விழுகிறது,
இந்த நீர் வீழ்ச்சி ஸ்வாமி உய்யக்கொண்டார் மற்றும் ஸ்வாமி மணக்கால் நம்பி என்று குறிப்பிடப்படுகிறது,
இந்த நீர் அருவி ஸ்ரீ ஆளவந்தார் என்ற பெரிய ஆற்றை அடைந்தது.
அப்போது ஏரியில் தண்ணீர் தேங்கியது.
இந்த ஏரி ஸ்வாமி ராமானுஜரால் குறிப்பிடப்படுகிறது.
ஏரியில் இருந்து 74 கால்வாய்கள் மூலம் தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது.

74 ஸ்லோகங்கள் ஸ்வாமி ராமானுஜர் உருவாக்கிய 74 சிம்ஹாசனங்களுக்குச் சமம்.

வீராணம் ஏரியில் 74 கடைமடைகள் உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த ஏரியின் 74 கடைகளும் ஸ்வாமி ராமானுஜரால் நியமிக்கப்பட்ட 74 சிம்மஸ்னாதிபதிகளை
சித்தரிப்பதாக நமது பூர்வாச்சாரியர்கள் விளக்கம் அளித்துள்ளனர்

ஸ்வாமி மணவாள மாமுனிகள் இப் பூலோகத்தில் 74 ஆண்டுகள் வாழ்ந்தார்,
ஸ்வாமி பிறந்தது 1370 ஆம் ஆண்டு ஐப்பசி மூலம்,
அவதார சமாப்தி 1443 ஆம் ஆண்டு மாசி கிருஷ்ண பக்ஷ துவாதசியில்.

ஆழ்வார்கள் ஆச்சார்யாக்கள் மற்றும் அவர்களின் படைப்புகள் பற்றிய அனைத்து விவரங்களையும் நமக்குத் தரும் ஸ்ரீ மாமுனிகளின் ஒரு படைப்பான ஸ்ரீ உபதேச ரத்தினமாலாவும் 74 ஸ்லோகங்கள் கொண்டது(இங்கு கவனிக்க வேண்டியது, ஸ்வாமி மணவாள மாமுனிகள் ஸ்வாமி ராமானுஜருக்கு மரியாதை அளித்து 73 பாடல்களை மட்டுமே இயற்றியுள்ளார் என்பதும்,ஆனால் அவரது சிஷ்யரும் அஷ்டதிக் கஜங்களில் ஒருவரான ஸ்ரீ எறும்பியப்பா 74 வது பாடலை இயற்றினார்

ஸ்வாமி ராமானுஜ @ 74 வயதில் திருக்குறுங்குடி நம்பிக்கு ஆச்சாரியார் ஆனார்-
ஸ்ரீ திருக்குறுங்குடி நம்பி ” ஸ்ரீ வைஷ்ணவ நம்பி” என்று அறியப்பட்டார்

———–

ஸ்ரீ யதிராஜ ஸப்ததி -மங்கள ஸ்லோகங்கள் —

ஸ்ரீபாஷ்யம் விரசய்ய ஸம்ய மிவரோ ஜித்வா ஸ்வயம் வாதிந :
பாஹ்யாம்ஸ்சாபி குத்ருஷ்டிகாந் புவிபுந : பாஷ்ய ப்ரதிஷ்டாஸயா |
ஸ்ரீமத் வேங்கடநாத தேஸிக சிரோ ரத்நாத்மநா வீர்பபௌ
இத்யேவம் ச வதந்தி ஹந்த !க்ருதிந :த்ரைகாலிக ஜ்ஞாநி ந : || –5-

ஸ்ரீ உடையவர், ஸ்ரீபாஷ்யத்தை அருளி அவைதிக மதங்களையும் ,பிற மதங்களையும் வாதிட்டு வென்றார்.-இவ்வுலகில், ஸ்ரீபாஷ்யம் நிலை பெற வேண்டும் என்கிற க்ருபையால்,அந்த ஸ்ரீ எம்பெருமானாரே மறுபடியும், ஸ்ரீ வேதாந்த தேசிகனாக அவதரித்தார் என்று, முக்காலத்தையும் உணர்ந்த ஞாநிகள் கூறுகிறார்கள்.
ஸ்வாமி தேசிகன், எம்பெருமானாரின், அவதாரம் என்பதை, ஸ்வாமியின் திருக்குமாரரான ஸ்ரீ நயினாராசார்யர் – ஸ்ரீமத் வேதாந்த தேசிக மங்களத்தில் புகழ்கிறார் —

வேங்கடசாவதாரோயம் தத் கண்டாம் ஸோதவா பவேத் |
யதீந்த்ராம் ஸோதவேத்யேவம் விதர்க்யா யாஸ்து மங்களம் || –6

ஸ்வாமி தேசிகன், திருவேங்கடமுடையானுடைய அவதாரமோ?
அவரது திருமணி ஆழ்வாரின் ( கண்டை–கண்டாமணி )அவதாரமோ?
அல்லது, எம்பெருமானார், இப்படி அவதரித்தாரா ? என்று, ஸ்வாமி தேசிகனைத் தரிசிப்போர்
பலபடியாக யூகித்துப் புகழும் ஸ்வாமி தேசிகனுக்கு மங்களம் —–என்கிறார்

ஸ்ரீ பாஷ்யகார : பந்தாந மாத்மநா தர்ஸிதம் புந : |
உத்தர்த்து மாகமதோ நூந மித்யுக்தாயாஸ்து மங்களம் || –7-

உலகுக்கு முன்பு வெளிப்படுத்திய விசிஷ்டாத்வைத சித்தாந்தத்தை, மீண்டும் உலகில் தழைக்கச் செய்ய அவதரித்த யதிராஜரோ இவர் என்று, வித்வான்களெல்லாம் வியந்து பாராட்டும் வேதாந்தாசார்யருக்கு மங்களம் என்கிறார்

லக்ஷ்மீ பதேர் யதி பதேஸ்ச தயைக தாம்நோ :
யோஸௌ புரா ஸமஜநிஷ்ட ஜகத்திதார்த்தம் |
ப்ராச்யம் ப்ரகாஸியது வ :பரமம் ரஹஸ்யம்
ஸம்வாத ஏஷ சரணாகதி மந்த்ர ஸார : || கத்ய பாஷ்யத்தில், ஸ்வாமி தேசிகன் அருள்கிறார்

வாத்ஸல்ய குண பரனான லக்ஷ்மிபதிக்கும், யதிபதிக்கும்( யதிராஜர் ) உலகத்தாருக்கு நன்மையை அளிக்கும் பொருட்டு, எந்த ஸம்வாதம் முன்பு நடந்ததோ, த்வய மந்த்ரமான அந்த ஸம்வாதம் ,
முன்னோர்கள் உபதேசித்த அந்தப் பரம ரஹஸ்யத்தை நமக்கு வெளிப்படுத்துவதாக என்கிறார்.
( பங்குனி உத்ர நந்நாளில் யதிராஜர், திருவரங்கத்தில், திவ்ய தம்பதிகளிடம் சரணாகதி செய்ததையும்,
அப்போது நடந்த ஸம்வாதத்தையும் குறிப்பிடுகிறார் )

பத்யு ஸம்யமிநாம் ப்ரணம்ய சரணௌ தத்பாத கோடிரயோ
ஸம்பந்தேன ஸமித்யமாந விபவாந் தந்யாம்ஸ் ததாந்யாந்குருந் |
ஸுத்தம் ஸம்ஸ்ரித பாதராயண தநோர் நாராயணஸ்யோக்திபி :
ஸ்ரீமாந் வேங்கடநாயக : ஸ்திதிபதம் நிர்மாதி நீதே :ஸுபம் || ந்யாய பரிசுத்தியில் , ஸ்வாமி தேசிகன் யதிராஜரை நமஸ்கரிக்கிறார்

ஸ்ரீ யதிராஜரை நமஸ்கரித்து, அவருடைய திருமுடி சம்பந்தத்தாலும் திருவடி சம்பந்தத்தாலும் ,
பெருமைகளையும் பாக்யங்களையும் பெற்ற ஆசார்யர்களை நமஸ்கரித்து ,
பாதராயணராகிய ஸ்ரீ வேத வியாஸரை சரீரமாகக் கொண்ட ஸ்ரீமந்நாராயணனுடைய ஸ்ரீஸுக்திகளைக் கொண்டு, ஸ்ரீவேங்கடநாதன் ( ஸ்வாமி தேசிகன் ), ந்யாய பரிஸுத்தியை எழுதுகிறார் என்கிறார்.

காதா தாதாகதாநாம் களதி கமநிகா காபிலீ க்வாபி லீநா
க்ஷீணா காணாத வாணீ த்ருஹின ஹரதிர: ஸௌரபம் நாரபந்தே |
க்ஷாமா கௌமாரிலோக்திர் ஜகதி குருமதம் கௌரவாத் தூரவாந்தம்
காஸங்கா ஸங்கராதோர் பஜதி யதிபதௌ பத்ரவேதீம் த்ரிவேதீம் || -9. தத்வமுக்தா கலாபத்தில் , ஸ்வாமி தேசிகன் சொல்கிறார் –

யதிராஜர், வேதங்களாகிற பத்ர வேதியை அடைந்த போது,புத்த மதம் நழுவுகிறது ;
கபில மதம் ஓடி ஒளிகிறது ;கணாமதம் அழிகிறது;
ப்ரஹ்மாவால் தோற்றுவிக்கப்பட்ட யோக மதமும், பசுபதி மதமும் மணம் அற்றதாகிறது;
குமாரில மதம் நசிக்கிறது;குருமதம் , பெருமைக்கு வெகு தொலைவில் எறியப்படுகிறது.
இப்படியிருக்க, சங்கரர் முதலானவர்களின் மதங்களின் நிலையைப் பற்றிச் சந்தேகம் தேவையா ?

உக்த்யா தனஞ்ஜய விபீஷண லக்ஷ்யயாதே
ப்ரத்யாய்ய லக்ஷ்மண முநேர் பவதா விதீர்ணம் |
ச்ருத்வா வரம் ததநுபந்த மதாவலிப்தே
நித்யம் ப்ரஸீத பகவந் மயி ரங்கநாத ||ந்யாஸ திலகத்தில், யதிராஜருடைய ஸம்பந்தத்தால் ,செருக்கு வந்ததாகச் சொல்கிறார்.

பெருமை மிகு திருவரங்கச் செல்வனே ! அர்ஜுனனுக்குச் சொன்ன சரம ஸ்லோகத்தையும் ,
விபீஷணணுக்குச் சொன்ன சரம ஸ்லோகத்தையும் சொல்லி, நம்பச் செய்து,
ஸ்ரீ பாஷ்யகாரருக்கு உன்னால் அளிக்கப்பட்ட வரத்தைக் கேட்டு அறிந்து,
அவரது ஸம்பந்தத்தால் செருக்கு நிறைந்த எனக்கு, எப்போதும் வரம் தந்து அருள்வாயாக !
( வரம் யாதெனில் )
ஸ்ரீ பாஷ்யகாரரின் திருவடிகளிலோ அவரது சிஷ்ய பரம்பரை ஆசார்யர்களிடமோ ,
ப்ரபத்தியாகிய பரண்யாஸத்தைச் செய்தவர்கள் எல்லாருக்கும், பரமபதம் அளிப்பதே
( இன்னும் பல )

ப்ரதிஷ்டாபித வேதாந்த : ப்ரதிக்ஷிப்த பஹிர்மத : |
பூயாஸ் த்ரைவித்ய மாந்யஸ்த்வம் பூரி கல்யாண பாஜநம் || -சங்கல்ப ஸுர்யோதயத்தில் சொல்கிறார்–யதி சிஷ்யனுக்கு ஆசீர்வாதம் செய்கிறார்

நடாதூர் அம்மாள், ஸ்வாமி தேசிகனைப் பால்ய வயதில் அனுக்ரஹித்த ச்லோகம் .
ஸ்வாமி தேசிகன் , சிறு குழந்தையாகத் தன்னுடைய மாதுலர் ( மாமா) அப்புள்ளார் ( ஆத்ரேய ராமாநுஜர் )கூடவே, நடாதூரம்மாளின் காலக்ஷேபத்துக்கு, கச்சி வாய்த்தான் மண்டபத்துக்குப் போன போது,
நடாதூரம்மாள், குழந்தையான ஸ்வாமி தேசிகனின் திருமுக காந்தியை–முக விலக்ஷணத்தைக் கடாக்ஷித்து ,அநுக்ரஹித்து,ஆசீர்வாதமாக அருளிய ச்லோகம் .
இதைத் தான் இயற்றிய சங்கல்ப ஸுர்யோதய நாடகத்தில்,ஸ்வாமி தேசிகன் , யதி (ராஜன் ) தனக்கு ( சிஷ்யன் )ஆசீர்வாதமாகச் சொன்னதாக, ஒரு காக்ஷியை ஏற்படுத்துகிறார்.
இது, ஸ்வாமி தேசிகனுக்கு, யதிராஜரிடம் உள்ள ஆழ்ந்த பக்தியை வெளிப்படுத்துகிறது.

சதாச்சார்ய உபதேச முகமாய் ஸ்ரீ எம்பெருமானார் அருளிச் செய்த ஸ்ரீ பாஷ்யாதி கிரந்தங்களை அதிகரித்து -பல முறை ஸ்ரீ பாஷ்ய பிரவசனம் நடத்திச் சாத்திய ஸ்ரீ வேதாந்தாச்சார்யார் ஸ்ரீ பாஷ்யகாரரான எம்பெருமானார் இடத்தில் தமக்கு உள்ள பக்திக்கு போக்கு வீடாக ஸ்வாமியை ஸ்துதிக்க இழிந்து குரு பரம்பரா பூர்வகமாக ஸ்ரீ பகவத் ராமானுஜர் உடையவும் –
அவர் ஸ்ரீ ஸூக்திகள் உடையவும் ப்ரபாவங்களை பரக்கப் பேசி அனுபவிக்க உபக்ரமிக்கிறார் – முதல் ஒன்பது ஸ்லோகங்களால்-அடைவே எம்பெருமான் -பிராட்டி -சேனை முதலியார் -ஆழ்வார் -நாத முனிகள் -முதல் பெரிய நம்பி வரையில் உள்ள ஆச்சார்யர்களை அடி பணிகிறார்


1-கம் அபி ஆத்யம் குரும் வந்தே கமலா க்ருஹமேதி நம்
ப்ரவக்தா சந்தசாம் வக்தா பஞ்ச ராத்ரஸ்ய ஸ்வயம் –

வேதங்களை பிரமனுக்கு கற்பித்தவன்
பாஞ்சராத்ர ஆகமத்தை இயற்றியவன்
பெரிய பிராட்டியாருடன் இல்லறத்தில் உள்ளவன்
முதலாச்சார்யன்
இப்படிப்பட்ட பெரிய பெருமாளை அடியேன் வணங்குகிறேன்

முதன் முதலில் வேதங்களை வெளிப்படுத்தி பிரகாசிப்பித்தவனும் –
ஸ்ரீ பாஞ்ச ராத்ம ஆகமத்தை அருளிச் செய்தவனும்
பீதகவாடைப் பிரானார் பிரம குருவாக வந்து -என்கிறபடியே -பிரதம ஆச்சார்யனும்
ஸ்ரீயபதியுமான சர்வேஸ்வரனை அடி பணிகிறேன் என்று பகவத் வந்தனம் பண்ணுகிறார் –

கம் அபி ஆத்யம் குரும்-பிரதமம் -ஆதி -குரு-ஓதாதே ஓதுவிக்கும் ஒருவன் தானே
-கம் அபி யாரோ ஒருவன் -பிரசித்த விசேஷணம் -அத்யந்த ஸ்துதி வாக்கியம்
வந்தே-வந்தனம் க்ரியா பதம்– ஞான அநு கூல வியாபாரம் -ஸூ அதிக உத்கர்ஷம் –
கமலா க்ருஹமேதி நம் -சர்வ ரக்ஷகன் -க்ருஹஸ்தன் இவன் -பெரிய பிராட்டியார் -சப்த லோகீ-ஸமஸ்த லோகங்களுக்கும் க்ருஹம் வளப்படுத்துபவன் -க்ருஹமேதி -ஸ்ரீ யபதி-பிராபப்யமும் ப்ராபகமும்
ஆச்சார்ய க்ருத்யம் சொல்கிறது மேல்
ப்ரவக்தா சந்தசாம் வக்தா பஞ்ச ராத்ரச்ய ஸ்வயம் –
சந்தஸ் -வேதம் –
வக்தா -சொல்கிறவன்
ப்ரவக்தா -பிரகர்ஷம் -பிரவசனம் -கால ஷேபம் -வசனம் ஸ்வ தந்திரமாக பேசுவது
தனது சங்கல்பத்துக்கு பரதந்த்ரனாக உள்ளான் –
வேதம் நித்யம் -அப்வருஷேயம் -என்பதும் அவன் சங்கல்பம் தானே –
வேதம் ஈஸ்வரன் பரஸ்பர நிரூபகம் -அவனால் செய்யப் பட்டது என்று சொல்லக் கூடாதே -சுருதி பிரமாணம் –ஸ்வ அபிப்ராயத்தால் பாஞ்சராத்ர ஆகமம் அருளி -என்றவாறு –இவனே வக்தா -வேதத்துக்கு ப்ரவக்தா -என்றவாறு —

ஆத்யம்-பூர்வம் வேதம் சொல்வதையே இங்கு தேசிகன்
கள்ள வேடத்தை -இத்யாதி நாஸ்திக சாஸ்திரங்களும் இவனே பிரவர்த்தா –
கம் அபி -இதம் இத்தம் என்று சொல்ல முடியாத ப்ரஹ்மம் -வாசா அகோசரத்வம்
ஸ்ரீ வராஹ நாயனார் பூமிப் பிராட்டிக்கு உபதேசம் -அஹம் ஸ்மராமி
ஸ்ரீ கீதாச்சார்யனாகவும் உபதேசம் –
அக்னி தேவதை உபதேசம் -கொஞ்சம் விட்டு ஆச்சார்யர் மூலம் முறைப்படி உபாசித்து பெற்ற வித்யையே நிலைத்து நிற்கும் –
குரு சப்தம் அந்தகார நிரோதத்வம் –
லஷ்மீ நாத ஸமாரம்பாம் போல் இங்கும்

வந்தே -மங்களார்த்தம் -நமஸ்கார ரூபம் இது
கமலா க்ருஹமேதி நம் -கிருஹ லஷ்மீ இல்லாத வீடு சோபை இழக்கும் அன்றோ –பத்நியா ஸஹ –
வேறு ஒரு கார்யமார்த்தமாக எழுந்து அருளும் பொழுது பிரார்த்திக்காமல் அந்தப்புர வாசத்திலே –
மிதுனத்தில் -பிரார்த்திக்க வேண்டுமே
பிரமேயமான அவனைப் போல் பிரமாணமும் நித்யம்
கல்பம் தோறும் நான்முகனுக்கும் மகரிஷிகளும் இவனே வேத உபதேசம்
தேன ப்ரோக்தம் -பிரவசனம் செய்து அருளுகிறார் –

பாஞ்ச ராத்ரம் இருளைப் போக்கி -கன இருள் அகன்றது
ஐவருக்கு
ஞான பாத யோக பாத கிரியா பாத –இத்யாதி ஐந்தும்
ப்ரஹ்ம ராத்ரம் இந்த்ர ராத்ரம் இத்யாதி ஐந்தும்
கால பஞ்சக கர்தவ்யம் வைதிக கால கர்தவ்யங்கள்
ரிஷிகள் மூலம் வெளியிடாமல் தானாகவே வெளியிட்டு அருளி -ஸ்வயம் -அருளிச் செய்து
ஆத்ய குருவாக வந்தனம் இதில்

வேதங்களைப் ப்ரகாசப்படுத்தி, தன் சரணாரவிந்தங்களை அடைவதற்கான உபாயமான ,
ஆராதனம் செய்யும் க்ரமத்தைத் தானே பாஞ்சராத்ர ஆகமம் மூலமாக உபதேசித்தவன்;
புருஷகார பூதையான பெரிய பிராட்டியாரோடு எப்போதும் பிரியாத திருமார்பினன்;
திவ்ய தம்பதிகள் சேஷியாய்,த்யாநத்துக்கு சாக்ஷியாய்,சாக்ஷாத்காரத்துக்கு இலக்காக இருக்கும் லக்ஷ்மிபதி ;
இவனே ஆதிகுரு ; முதல் ஆசார்யன்; பகவத் கீதை மூலமாக, கர்ம,ஞான, பக்தி,ப்ரபத்திகளை உபதேசித்த ஆதிகுருவை வணங்குகிறேன் .

ஸ்வாமி தேசிகன், தன் மாதுலர் ஆத்ரேய இராமாநுஜர் என்கிற அப்புள்ளாரிடம் , வேதங்கள்,வேதாந்தங்கள், சகல சாஸ்த்ரங்கள் எல்லாவற்றையும் கற்றுத் தெளிந்தவர் .இவற்றுக்கு அடிப்படை, யதிராஜரின் ஸ்ரீஸுக்திகள், ஸ்ரீபாஷ்யம், முதலியன.இவை யாவும், பகவான் முதலாக, ஸ்ரீபாஷ்யகாரர் வரை ,எண்ணெய் ஒழுக்கு போல,உபதேச பரம்பரையில் வந்தவை என்பதை மனத்தில் தெளிந்து,முதல் ஆசார்யனான பகவானைத் துதிக்க நா எழாமல், அவனது கல்யாண குணங்களில் ப்ரமித்து , திளைத்து,பிரமனுக்கு வேதத்தை உபதேசித்த வெள்ளைப் பரிமுகனாக பகவான் நின்று,தனக்கு உபதேசித்ததை எண்ணி,நெகிழ்ந்து, முதல் ஸ்லோகத்தில், ஆதி குருவான—ப்ரதம ஆசார்யனான, பகவானை வணங்குகிறார்.

2-சஹ தர்ம சரிம் சௌரே சம் மந்த்ரித ஜகத்திதாம்
அனுக்ரஹ மயீம் வந்தே நித்யம் அஜ்ஞாத நிக்ரஹாம்

இந்த உலகிற்கு எந்த வகையில் நன்மை செய்யலாம் என்று பெரிய பெருமாளுடன் எப்போதும் ஆலோசனை செய்பவள்
அருள் என்பதே வடிவம் கொண்டதோ என்னும்படி உள்ளவள்
அன்பின் மிகுதியால் தண்டனை என்பதையே அறியாதவள்
பெரிய பெருமாளுக்கு ஏற்றவளாக இருப்பவள்
இப்படிப்பட்ட பெரிய பிராட்டியாரை அடியேன் வணங்குகிறேன்-

எப்போதும் எம்பெருமானுடன் சகல லோகங்களுடைய ஷேமத்தையே நோக்கிக் கொண்டு இருப்பவளும் –
நம்மிடம் நிக்ரஹம் என்பதையே அறியாதவளும்
அருளே வடிவு எடுத்தவளாய் -ஜகத் ரக்ஷணத்தில் பகவானுக்கு சக தர்ம சாரிணியுமான பிராட்டியை அடி பணிகிறார் –

சஹ தர்ம சரிம் சௌரே-விஷ்ணு பத்னீ இவளுக்கு ஏற்றம் -ஸ்ரீ அவனுக்கு ஏற்றம் -சர்வ சேஷிக்கு –சௌரே-ஸ்ரேய பூதன்-பரத்வம் ஸுலப்யம் இரண்டும் சித்தம் –
ஸூரசேனன் -வாஸூ தேவர் உடைய தந்தை -குலத்தையும் காட்டும்
சம்மந்த்ரித ஜகத்திதாம் –மந்த்ரித-ஆலோசனம் -ஜகத் ஹிதம் –சம் யக்-ஏக அபிப்ராயம் ஒரே நினைவு இருவருக்கும் –
அனுக்ரஹ மயீம்
வந்தே -வணங்குவோம்
நித்யம் அஜ்ஞாத நிக்ரஹாம் -நிக்ரஹ பிரகாரம் அறியாதவள் -அறிந்தும் அறியாதவள் -அவ்விஞ்ஞாதா அவன்
ஆஸ்ரித அபராதங்களை அறியாதவன் -சகஸ்ராம்பூ -அறிந்தவன் -சரணாகத வாத்சல்யன்-போக்யமாக கொள்பவன்
-காணாக் கண் இட்டு இருப்பவன் -இவள் நித்யம் -எல்லார் விஷயத்திலும் எப்பொழுதும் -அவன் கதாசித் இவளுக்கு நித்யம் என்றவாறு –

உபதேச பரம்பரையில் -புருஷகார பூதை -பிராட்டி விஷயம் லோக ரக்ஷணத்துக்கு
அவனுடன் -மந்த்ர ஆலோசனை செய்பவள்
பூ மன்னு மாது பொருந்திய மார்பன்
மா மகள் மன்னிய -கமலா க்ருஹ
ப்ரஹ்மணி ஸ்ரீ நிவாஸே
ஸ்ரீய பதித்வம் -மிதுனம் உத்தேச்யம்

வேதங்கள் -கரண களேபரங்கள் கொடுத்து அருளினாலும் -வேதங்களுக்கு அபார்த்தம் சொல்லி –
தர்ம கதி மீறி அதோ கதியாக விழ
ஹே காந்த ஆழ்வாரைக் கொண்டு வேதார்த்த யதார்த்த ஸ்தாபனம் செய்து அருளுவதற்காக
பிராட்டி விஷ்வக்சேனருக்கும்
விஷ்வக்சேனர் மூலம் ஆழ்வாருக்கும் உபதேசித்து –
பகவத் ஸஹ ஏகி பூய ஜகத் ஹித மந்த்ர ஆலோசனை -பெருமாளும் பிராட்டியும் ஆச்சார்ய பீடத்தை அலங்கரித்து
ஜகத்தை உஜ்ஜீவிப்பித்து அருளுகிறார்கள்
வாத்சல்யம் விஞ்சி பர துக்க அஸஹிஷ்ணுத்வம் அனுக்ரஹம் மட்டுமே -அஞ்ஞாதம் அறியாமல் பிராட்டி-

திவ்ய தம்பதியரை, “கமலா க்ருஹ மேதிநம்” என்று நமஸ்கரித்தவர், இந்த ஸ்லோகத்தில், பிராட்டியை ஸேவிக்கிறார்.
ஆசார்ய பரம்பரையில், பகவானுக்கு அடுத்தது, பிராட்டி. இந்தக் க்ரமத்தில் , பிராட்டியை நமஸ்கரிக்கிறார்.
பிராட்டி, கருணையே வடிவானவள். ஜீவாத்மாக்களுக்கு, நன்மைகளைச் செய்வதிலேயே நாட்டம் கொண்டவள்.
சரணம் என்று வந்தவர்களுக்கு,அபயம் அளித்து, ரக்ஷிக்கும் பகவானுக்கு, ஸஹதர்ம சாரிணியாக,கணமும் பிரியாமல் ,கூடவே இருப்பவள்.

பகவான், பிராட்டியிடம் சொல்கிறாராம்.
உண்டியே, உடையே என்று உலக சுகங்களில் மயங்கி ,
துன்பத்தில் உழலும் ஜீவாத்மாக்களைத் திரும்பவும் நம்முடைய வைகுண்டத்துக்கு ஏற்ற,நீ தூண்டினாய்.
அதனால்,ப்ரஹ்மாவைப் படைத்து,வேதங்களை உபதேசித்து, ப்ரஹ்மா மூலமாக சரீரம்,
பஞ்சேந்த்ரியங்களை , ஜீவன்களுக்குக் கொடுத்து, அவர்கள் வேதங்களை அத்யயனம் செய்து, தர்ம மார்க்கத்தில் இழிந்து
பக்தி, ப்ரபத்தி இவைகளை அநுஷ்டித்து,பாப, புண்யங்களை ஒழித்து, இங்கு வருவார்கள் என்று ஏற்படுத்தினேன்.
ஆனால், வேதங்களுக்குத் தவறான அர்த்தங்களைச் சொல்பவர்கள் வார்த்தைகளில் மயங்கி இருக்கிறார்கள்.
அவர்களைத் திருத்த திருக்குருகூரில் அவதரித்துள்ள சடகோபனுக்கு, நாமே நேரில் சென்று , தத்வங்களை உபதேசித்து ,
அவர் மூலமாக, ஜீவாத்மாக்களைத் திருத்தலாமா —- என்று கேட்டாராம்.

அதற்கு, பிராட்டி,
நாமே நேரில் சென்று, நாங்கள் தான் ஜகத் காரணம்,நாங்களே சேஷிகள் என்று சொன்னால் ஒருவரும் நம்ப மாட்டார்கள்;
யானையின் மூலமாக, இன்னொரு யானையை வசப்படுத்துவது போல
நமது ஸேநாதிபதியான விஷ்வக்ஸேனரை அனுப்பி,
சடகோபனுக்கு உபதேசிக்கச் செய்து, சடகோபன் மூலமாகவே ஜீவாத்மாக்களைத் திருத்தலாம் என்று யோசனை கூறினாளாம்.

உடனே பகவான், பிராட்டியிடம்,
“நீயே விஷ்வக்ஸேனருக்கு உபதேசித்து, அவரைக் குருகூர் சடகோபனிடம் அனுப்பி,
தத்வார்த்தங்களைச் சொல்லுமாறு அறிவுரை கூறுவாயாக “ என்றாராம்.

இப்படி, ஸேநாதிபதியான விஷ்வக்ஸேநருக்கு தத்வங்களை உபதேசித்து,
பெரிய உபகாரம் செய்த பெரிய பிராட்டியை நமஸ்கரிக்கிறேன்

—————————————————

3 -வந்தே வைகுண்ட சேநாநயம் தேவம் ஸூத்ரவதி சகம்
யத் வேத்ர சிகரே ஸ்பந்தே விஸ்வம் ஏதத் வ்யவஸ்திதம்

வந்தே வைகுண்ட சேநாநயம் -சேனாபதி ஆழ்வாரை சேவிக்கின்றேன்
தேவம் ஸூ த்ரவதி சகம் -ஸூ த்ரவதி சமேத
யத் வேத்ர சிகரே ஸ்பந்தே -செங்கோலின் அக்ர
விஸ்வம் ஏதத் வ்யவஸ்திதம்-ஸமஸ்த பிரபஞ்சம் வியவஸ்திதம் ஆகுமே
ஸாத்யா சந்தி தேவர் -பூஜ்யர் -நித்ய ஸூ ரிகள் -சேஷாசயனர் -மந்த்ர ஆலோசனை -பிராட்டி இவருக்கு உபதேசம் –

யாருடைய கையில் உள்ள பிரம்பின் நுனி அசைவதைக் கண்டு இந்த உலகம் இயங்குகிறதோ
யாரிடம் இந்த உலகம் கட்டுப்பட்டு உள்ளதோ
யார் ஒருவர் ஸூத்ரவதி என்பவளுக்குக் கணவனோ
பெரிய பெருமாளின் சேனைக்குத் தலைவராக உள்ளவர் யாரோ
அப்படிப்பட்ட விஷ்வக் சேனரை அடியேன் வணங்குகிறேன் –

குரு பரம்பரையில் மூன்றாவது ஸ்தானம் –
இவர் பிரம்பின் கீழே தானே அவனும்
ஸூ த்ர வதி பிரே ரிக்க -ஸ்ரீ நம்மாழ்வாருக்கு உபதேசம்
ஸ்ரீ பரதாழ்வான் ஸ்ரீ பெருமாள் இடம் செல்லும் பொழுது நான்கு படை தலைவர் மனைவிகள்
அவர்களைப் பிரேரித்தது போலே -என்பர் வியாக்யாதாக்கள் –
வைகுண்ட சேனாபதி என்று சேனாபதி வழக்கமாக சொல்லும் சுப்ரமண்யனை வியாவர்த்திக்கிறது –

ஸூத்ரவதி தேவியின் நாயகனான எந்த விஷ்வக் சேனரின் பிரம்பின் -செங்கோலின் ஆஞ்ஜையில் இந்த உலகம்
நிலை நிற்குமோ அந்த சேனை முதல்வரை அடி பணிகிறேன்

விஷ்வக்ஸேநர் என்கிற சேனைமுதலியார், நித்யஸுரிகளுக்கும் முக்தர்களுக்கும் , பரமபதத்தில் தலைமையேற்று ஒழுங்குபடுத்துபவர்.
நித்யஸுரிகள் ப்ரக்ருதி சம்பந்தமே இல்லாமல்,பரமபதத்தில் எப்போதும் பகவத் கைங்கர்யத்தில் ஈடுபட்டு ,பரம ஆனந்தத்துடன் இருப்பவர்கள்.
முக்தர்களோ பக்தி அல்லது ப்ரபத்தியை அனுஷ்டித்து ப்ரக்ருதியின் தொடர்பை அறுத்து,பரமபதத்தை அடைந்து,
திவ்ய தம்பதிகளுக்கு எப்போதும் கைங்கர்யம் செய்து ஆனந்திப்பவர்கள் .
இந்தப் ப்ரக்ருதி , பகவானுக்கு லீலா விபூதி. இங்கு கோடிக்கணக்கான அண்டங்கள் உள்ளன;
ஒவ்வொரு அண்டத்திலும், 14 உலகங்கள் உண்டு. யாவும், திவ்ய தம்பதியரின் ஆணைக்கு உட்பட்டு, செயலாற்றுகின்றன.
திவ்ய தம்பதியருக்கு அடுத்தபடியாக, கண்காணிப்பவர், விஷ்வக்ஸேநர் .
எனவே, இவை அனைத்தும், இவரது ஆளுகைக்கு உட்பட்டது எனலாம்.
இவர், ஸுத்ரவதியின் நாயகர். ஸுத்ரவதி, கணவரான சேனை முதலியாரை விரைவாகச் சென்று,
குருகூர் சடகோபனுக்கு ,உபதேசிக்குமாறு தூண்டுகிறாளாம்.
அதனாலேயே, ஸுத்ரவதி ஸமேத ஸ்ரீ விஷ்வக்ஸேநர் என்று ஸ்வாமி தேசிகன் ஸேவிப்பதாகச் சொல்வார்கள்.

ஸ்ரீ சடகோபனின் உபதேசத்தால் ஜீவாத்மாக்கள் நற் கதி பெற்று ஸ்ரீ வைகுண்டம் சென்று விட்டால் ,ஹவிர்பாகம் கிடைக்காமல்
போய் விடுமே என்று தேவர்கள் இடையூறு செய்ய நினைத்தாலும்
ஸேனை முதலியாரிடம் உள்ள பயத்தால், அப்படிச் செய்ய நடுங்குவார்களாம்.
அப்படிப்பட்ட ஸுத்ரவதீ ஸமேத ஸ்ரீவிஷ்வக்ஸேனரை நமஸ்கரிக்கிறேன்

————

4-யஸ்ய சாரஸ்வதம் ஸ்ரோதோ வகுளா மோத வாசிதம்
ஸ்ருதீ நம் விஸ்ரமாயாலம் சடாரிம் தமுபாஸ்மஹே

யஸ்ய சாரஸ்வதம் ஸ்ரோதோ வகுளா மோத வாசிதம் -சரஸ்வதி சம்பந்தம் பெற்ற திருவாய் மொழி
ஸ்ருதீ நம் விஸ்ரமாயாலம் -வேதங்கள் இளைப்பாற
சடாரிம் தமுபாஸ்மஹே -வந்தே -ஒருமையில் கீழ் -இங்கு குழாங்களாக உபாசிக்கிறோம் நம்மையும் சேர்த்து

யஸ்ய சாரஸ்வதம் -வாக் தேவதா –
ஸ்ரோதோ -பிரவாஹம்
வகுளா மோத வாசிதம் -வகுளம் ஆமோத வாசித்தம்-மகிழம் பூ பரிமளம் நாள் கமழ் -மகிழ் மாலை மார்பினன் –
அஸ்மாத் குல தானம் போக்யம் – வண் குருகூர் நகரான
ஸ்ருதீ நம் விஸ்ரமாயாலம் –அலம் போதுமானவை –விஸ்ரமம் ஒய்வு -தத்வ ஹித புருஷார்த்தம் -ஆழ்வார் நன்றாக வெளியிட சுருதிகள் ஒய்வு எடுத்தனவாம் –
சடாரிம் தமுபாஸ்மஹே -ப்ரீதி பூர்வகமாக த்யானம் செய்து அனுதியானம் உபாசனம் –

அவருடைய திருமேனி மட்டும் அல்லாது அவரது வாக்கின் மூலம் வெளிவரும் சொற்களிலும் மகிழம் பூ மணம் சூழ்ந்துள்ளது
அத்தகைய அவரது வாக்கானது வெள்ளம் போன்று ஓடி வர அதில் வேதங்கள் தங்கள் களைப்பை ஆற்றிக் கொள்கின்றன
இப்படிப்பட்ட நம்மாழ்வாரை நாம் உபாஸிப்போம்-

எந்த நம்மாழ்வாரின் மகிழ மலர் மணம் கமழ்கின்ற திவ்ய வாக்கின் பிரவாஹம்
வேதங்களுக்கு இளைப்பாற இடமாகுமோ
அந்த சடகோபனை அடி பணிகிறேன் என்று பிரபன்ன ஜன கூடஸ்தரான ஆழ்வாரைப் போற்றுகிறார் –

மகிழ் மலர் மணம் வீசும் திரு வாய் மொழி -திருத் துழாய் மணம் -பரஸ்பர சேர்த்தி
அல்பர் கண்டு பயந்த வேதங்கள் -வேத நெறியை அலங்கோலம் பண்ணுகிறார்கள் -அந்த பயம் நீங்கி இளைப்பாறப் பெற்றன –
உபாஸ் மஹே -இடைவிடாத ஸ்ம்ருதி -நாம் அனைவரும் கால ஷேபம் திருவாய் மொழியிலிலே செய்யக் கடவோம்

ஸ்வாமி தேசிகன் , இந்த ஸ்லோகத்தின் மூலம் ஸ்ரீ சடகோபரை நமஸ்கரிக்கிறார் .
நம்மாழ்வார் என்கிற சடகோபன், திருவவதாரம் கலியுகம் தொடங்கி 46 வது நாள் என்பர்.
இவர் பகவானுடையவும் ஸேனை முதலியாருடையவும் அம்சம் என்றும் சொல்வர்.

அவதரித்து, 12 நாட்கள் வரை பால் கூட அருந்தாது, கண்கள் திறக்காது இருந்ததால் பெற்றோரான காரியாரும் , உடையநங்கையும்
ஆழ்வார்திருநகரியில் நித்ய வாஸம் செய்யும் பொலிந்து நின்ற பிரான் சந்நிதியில் இருத்தி,”மாறன் ” என்று பெயர் சூட்டினர். குழந்தை, சந்நிதியிலிருந்து தவழ்ந்து சென்று அருகில் இருந்த புளியமரத்தின் அடியில் யோகாசனத்தில் அமர்ந்தது.
இப்படியே,16 ஆண்டுகள் கழிந்தன. அப்போது,விஷ்வக்ஸேநர் , பெரிய பிராட்டியின் கட்டளைப்படி
அங்கு எழுந்தருளி மாறனுக்கு “பஞ்ச ஸம்ஸ்காரங்களை”ச்செய்து, மந்த்ரங்கள்,ரஹஸ்யார்த்தங்கள் என்பன எல்லாவற்றையும் உபதேசித்தார்.

மாறன், சிறுவயதிலேயே ,”சடவாயு”வை ஜயித்ததால் ,”சடகோபன் “ என்றும்,
ஆழ்வார்திருநகரி பொலிந்து நின்ற பிரான், மகிழம்பூ மாலையை அனுக்ரஹிக்க ,அதை அணிந்துகொண்டதால்,“வகுளாபரணர் ” என்றும்
தன்னுடைய பாசுரங்கள் போன்றவற்றின் மூலமாக ,பிற மதங்களைக் கண்டனம் செய்ததால் “பராங்குசர் “ என்றும் ,
திருக்குருகூரில் அவதரித்ததால் “குருகைப்பிரான் “ என்றும் ,இவருக்குத் திருநாமங்கள் உண்டு.

இவருக்கு முன்பாகவே ,த்வாபர யுகத்தின் முடிவில் ,அவதரித்த மதுரகவிகள் , வடதேச யாத்திரையில் அயோத்தியில் இருந்தார்.
ஒருநாள் இரவில், தெற்கே உள்ள எம்பெருமானை வணங்க,தெற்கு நோக்கிக் கைகூப்பியபோது, தெற்கே ஒரு பேரொளியைக் கண்டார்.
அதிசயித்து, அந்தப் பேரொளியைத் தேடித் தெற்கே வந்தவர் , குருகூர்க் கோயிலில் அந்தப் பேரொளி உட்புக,
இவரும் பின்தொடர்ந்து வந்து, அங்கு புளியமரத்தடியில், யோகத்தில் இருந்த சடகோபரை ஸேவித்தார்.

அவரோ,கண் திறந்து பார்த்தாரில்லை. மதுரகவிகள், கைதட்டி ஓசை எழுப்ப, சடகோபர் ,கண்விழித்து, மதுரகவிகளைப் பார்த்தார்.
மதுரகவி, சடகோபரைக் கேட்டார்:–
“செத்தத்தின் வயிற்றில், சிறியது பிறந்தால், எத்தைத் தின்று எங்கே கிடக்கும் ? “
அதாவது, ப்ரக்ருதிக்கு உயிரில்லை; உயிரில்லாத ப்ரக்ருதியான சரீரத்தில், அணுவான ஜீவாத்மா புகுந்தால்,
எதை அனுபவித்துக் கொண்டு, எங்கு இன்பம் உண்டு என்று எண்ணி இருக்கும் ?

ஸ்ரீ சடகோபன் பதிலிறுத்தார் :–
” அத்தைத் தின்று அங்கே கிடக்கும்” அதாவது, சரீரத்தில் உள்ள ஐம்புலன்களால் கிடைக்கிற
இன்ப துன்பங்களை நுகர்ந்து, இன்புற்றேன் என அங்கேயே கிடக்கும்.

ஸ்ரீ மதுரகவிகள் சந்தோஷித்து, ஸ்ரீ சடகோபரையே ஆசார்யராக இருக்குமாறு பிரார்த்தித்தார்
சடகோபரும் அப்படியே அருளி, மதுரகவிகளுக்குத் தத்வங்களை உபதேசித்து, தான் இயற்றுகிற பாசுரங்களைப் பட்டோலை செய்யுமாறு நியமித்து,
திருவிருத்தம் (100),திருவாசிரியம் (7) பெரிய திருவந்தாதி (87),.திருவாய்மொழி (1102) ஆக , 1296 பாசுரங்களைச் சொல்ல,
மதுரகவிகள், இவற்றைப் பட்டோலைப் படுத்தினார்.

பகவான் அளித்த மகிழம்பூ மாலையை அணிந்ததால், திருமேனி மாத்ரமல்ல, ஆழ்வாரின் ஸ்ரீஸுக்திகளிலும் மகிழம்பூ மணம் —
அதாவது, ப்ரஹ்ம கந்தம் —அதாவது பகவானின் லீலைகள்,தத்வங்கள் ஆகிய மணம் வீசுகிறதாம்.

பிற மதஸ்தர்களின் குதர்க்க அர்த்தங்களால் வேத மாதா களைத்துப் போய் ,ஆழ்வாரின் திருவாய்மொழியில் ச்ரம பரிகாரம் செய்து கொள்கிறாளாம் .
ஆழ்வார், சடவாயுவை ஜயித்தது போல,அல்ப அறிவாளிகளின் வீண் வாதங்களையும் ஜயிக்கிறாராம் .
இப்படி, பகவானை இடைவிடாது த்யானித்து, அவனது சேர்க்கையை , ஆழ்வார் பெறுகிறார்.
இதனால்,ஆழ்வாரின் மகிழம்பூ மணம் பகவானுக்கும், பகவானின் திருத் துழாய் மணம் ஆழ்வாருக்கும் பரவி உள்ளது . இப்படிப்பட்ட ஸ்ரீ நம்மாழ்வாரை நமஸ்கரிக்கிறேன் .

பகவானை இடைவிடாது த்யானித்து அனுபவிக்கும் ஆழ்வாரை,ஸ்வாமி தேசிகன் விடாமல் த்யானம் செய்வதால் ,
ஸ்வாமி தேசிகனிடமும் ,அவருடைய ஸ்ரீஸுக்திகளிலும் ,மகிழம்பூ வாசனையும் , துளசி வாசனையும் சேர்ந்து வீசுகிறது.
இது ரஸா னுபவம்.

———————

5–நாதேந முனிநா தேந பவேயம் நாதவா நஹம்
யஸ்ய நைகமிகம் தத்த்வம் ஹஸ்தாமலகதாம் கதாம் –

சர்வ வேதங்களின் உட்ப்பொருளான பகவத் தத்வம் எந்த பெரிய முதலியாருக்கு கையிலங்கு நெல்லிக் கனியாக இருக்குமோ –
அந்த ஸ்ரீ மன் நாத முனிகளே எனக்கு ஸ்வாமியாக இருந்து என்னை ஆட் கொள்ள வேண்டும்
என்று ஸ்ரீ மன் நாத முனியை அடி பணிகிறார் –

வேதங்களில் பொதிந்துள்ள உண்மைகள் அனைத்தும் அவரிட்மன் உள்ளங்கை நெல்லிக்கனி போன்று தெளிவாக நிற்கும் நிலை பெற்றது
அப்படிப்பட்ட நாதமுனிகள் மூலம் நான் உயர்ந்த நல்லவரை அடைவேன் ஆவேன்

நாதமுனியை எனது நாதராக (எஜமானர்) நான் வைத்திருக்கிறேன்,
யாருடைய கைகளில் வேதங்களின் அடிப்படையான கருவானது புரிதலின் தெளிவைப் பெற்றதோ –
இதை ஹஸ்தாஅமலகா என்று அழைக்கலாம்,
இந்த நாதத்தைக் கொண்டு ஒருவர் கூறுவது போல், நான் ” அநாத ” (ஸ்வாமி இல்லாமல் )  இருக்க முடியாது.

நாதேந முனிநா தேந -நாத -முனி இரண்டு பதமாக கொண்டு சிஷ்யர் ஸுசீல்யம் -நாத சப்தம் -அத -அப்புறம் சொல்லாமல் -உடனே உபதேசித்து அருளி
முனி மனா சீலன் -திவ்ய சரணார விந்தங்கள் அனைவரது தியானம்
பவேயம் நாதவா நஹம்
யஸ்ய நைகமிகம் தத்த்வம்–நிகமம் வேதாந்தங்கள் –நிகமே பாவம் நைகமிகம் -வேதாந்த சித்தம் -தத்வ த்ரயம்
-போக்தா போக்யம் பிரேரிதா-உபய நியாந்தா -ஈஸ்வரன் –
ஹஸ்தாமலகதாம் கதாம் -ஹஸ்தம் -நெல்லிக்கனி -சம்சயம் விபர்யயம் இல்லாமல் பிரத்யக்ஷமாக காட்டி அருளி –
-ஆத்ம பிரமாணம் மங்களாசாசன ஸ்லோகம் -ஆளவந்தார் -பரமதங்களை கண்டனம் பண்ணி –
ததீயம் மதம் ஸூ ஸ்தாபனம் -சாஸ்வத மதம் -யோக மஹிமை தத்வ த்ரயம் பிரத்யக்ஷம் ஜீயாத்

வீரநாராயணபுரத்தில் ( தற்போதைய காட்டுமன்னார்குடி ) ஆனி அநுஷத்தில் அவதாரம்.பால்யத்திலேயே யோகத்தில் இழிந்தவர்.
திருக்குடந்தை ஸ்ரீ ஆராவமுதன் ஸந்நிதியில்
ஆராவமுதே, அடியேனுடலம் நின்பால் அன்பாயே நீராய் அலைந்து கரைய உருக்குகின்ற நெடுமாலே
சீரார் செந்நெல் கவரிவீசும் செழுநீர் திருக்குடந்தை ஏரார் கோலம் திகழக் கிடந்தாய் !கண்டேன் எம்மானே !
என்கிற திருவாய்மொழிப் பாசுரத்தை,பக்தர் சிலர் பாடக்கேட்டு,

அவர்களை , எல்லாப் பாசுரங்களையும் சொல்லுமாறு,
நாதமுனிகள் வேண்ட,

அவர்கள் இதற்குமேல் தெரியாதென்று சொல்ல,

திருவாய்மொழி முழுவதையும் தெரிந்துகொள்வதற்காக ஆழ்வார்திருநகரிக்கு எழுந்தருளினார்.
அங்கும், ஒருவருக்கும் திருவாய்மொழி முழுவதும் தெரியவில்லை.
அச்சமயத்தில் ஒரு பக்தர், ஆலோசனைப்படி, மதுரகவிகளின் “கண்ணிநுண் சிறுத்தாம்பு “–11 பாசுரங்களை உபதேசமாகப் பெற்று,
(முழுவதும் ஸ்ரீ நம்மாழ்வாரைப் போற்றும் பாசுரங்கள் ), அவற்றைப் பன்னீராயிரம் தடவை ஆவ்ருத்தி செய்து (ஜபித்து ),
நித்யஸுரியான ஸ்ரீ நம்மாழ்வாரை ஸாக்ஷாத்கரித்து,
அவரை ஆசார்யராக வரித்து,
அவரிடம்,மறைந்துபோன திருவாய்மொழி ,மற்ற ப்ரபந்தங்கள்
ரஹஸ்யஅர்த்தங்கள்,
ப்ரஹ்ம ஸுத்ரங்கள் எல்லாவற்றையும் உபதேசமாக அடைந்தார்.

ஸ்ரீ நம்மாழ்வார், “பொலிக!பொலிக!பொலிக!” என்கிற திருவாய்மொழியைச் சொல்லிக் கொடுக்கும் போது,
கலியும் கெடும் கண்டுகொண்மின்” என்கிற வாசகத்தால், பின்னாளில் அவதரிக்க இருக்கும் ஸ்ரீ பாஷ்யகாரரான ராமானுஜரின்
அர்ச்சா திருமேனியை”யும் அவருக்கு எழுந்தருளப் பண்ணிக் கொடுத்தார் என்றும் சொல்வர்.

திவ்ய ப்ரபந்தங்களை , மருமான்களாகிய கீழையகத்தாழ்வான் (க்ருஷ்ணன் ), மேலையகத்தாழ்வான்(வரதன் ) இருவருக்கும்,
தாளம் அமைத்துக் கற்பித்தார் .

ஸ்ரீ நம்மாழ்வார் அருள்செய்ய, பகவானுடைய ஸ்வரூபம் , கல்யாண குணங்கள் , நித்ய விபூதி, லீலா விபூதி,
அனைத்தையும் அறிந்து, யோகீச்வரனாக விளங்கினார்.

தன்னுடைய மருமான்கள் மூலமாக, பகவத் விஷயத்தை அனுபவித்து ரஸித்து,பகவானை சரணம் அடைய மிகவும் உதவிய ஸ்ரீமந்நாதமுநிகளை , அவருக்குத் தாஸனாக இருந்து நமஸ்கரிக்கிறேன்.

—————————

6-நமஸ்யாம் அரவிந்தாஷம் நாத பாவே வ்யவஸ்த்திதம்
சுத்த சத்த்வ மயம் சௌரே அவதாரம் இவ அபரம்

எப்போதும் பெரிய முதலியாரைச் சிந்தையில் நிலையாகக் கொண்டு இருப்பவரும் –
சுத்த சத்வ மயனான எம்பெருமானின் அபர அவதாரமோ
என்று அதிசயிக்கும் படியான பிரபாவம் யுடையருமான ஸ்ரீ புண்டரீகாக்ஷரை –
திருவெள்ளறையில் சித்திரை மாத கார்த்திகை திருநக்ஷத்ரத்தில் அவதாரம்.
ஸ்ரீ உய்யக் கொண்டாரை -நமஸ்கரிக்கிறேன் -என்கிறார் –

நாதமுனிகளின் சிந்தனைகளில் எப்போதும் தனது மனதை நிலை நிறுத்தியவர்
தூய்மையாக உள்ள ஸத்வ குணம் மட்டுமே கொண்டவர்
கிருஷ்ணனின் மற்ற ஒரு அவதாரம் போன்று உள்ளவர்
இப்படிப்பட்ட உய்யக்கொண்டாரை அடியேன் வணங்குகிறேன்

நமஸ்யாம் அரவிந்தாஷம்-புண்டரீகாக்ஷர் -நமாமி –
நாத பாவே வ்யவஸ்த்திதம்-நாதஸ்ய பாவ -மநோ வ்ருத்தி விசேஷம் -ஸ்திரமாக உள்ளவர் –
குருகை காவல் அப்பன் – பிணம் இருக்க மணம் சூடுவாரோ – நம்மை உய்யக் கொண்டார் –
சுத்த சத்த்வ மயம் -ஸ்வ பாவமாக -பிராஸூர்யார்த்தம் மயம் -ஆனந்த மயம் போலே -ரஜஸ் தமஸ் இடம் இல்லாதபடி
-அப்ராக்ருதம் -குண சத்வம் -பரமபதத்தில் த்ரவ்யம் -சுத்த சத்வம்
சௌரே அவதாரம் இவ அபரம்-அவன் கல்யாண குணங்கள் திரு மேனி போலே -சுத்த சத்வம் -ஜென்ம கர்ம மே திவ்யம்

————

7-அனுஜ்ஜித ஷமா யோகம் அபுண்ய ஜன பாதகம்
அச்ப்ருஷ்ட மத ராகம் தம் ராமம் துர்யம் உபாஸ்மஹே

பொறுமைக்கு கொள்கலமாய் எப்போதும் விளங்குபவரும் -சாது ஜன பிரியரும் –
ராக த்வேஷங்களை வென்றவரும் -உயர்ந்த வைராக்ய சீலருமான
ஸ்ரீ ராம மிஸ்ரரை -ஸ்ரீ மணக்கால் நம்பியை நமஸ்கரிக்கிறேன் என்கிறார் –

நான்காவது ராமரை –ஸ்ரீ மணக்கால் நம்பியை -நாம் உபாசிப்போம் –

அனுஜ்ஜித ஷமா யோகம் -ஷமா குணம் ஆஸ்ரயமாக-விடாமல் -அனுஜ்ஜிதம் -பச்சை இட்டு ஆளவந்தார்
-சம்பிரதாயத்துக்கு ஆக்கி அருளின –உஜ்ஜித ஷாமா யோகம் பரசுராமர் -பரசுராமனின் வியாவருத்தம்
அபுண்ய ஜன பாதகம் –பெருமாளின் இவருக்கு வியாவிருத்தி-புண்ய ஜன -ராக்ஷசர் -பாதகம் செய்தார் பெருமாள் – –
இல்லாத தோஷத்தை சப்தத்தால் ஏறிட்டு அருளுகிறார் -நைகி நிந்தா நியாயம் இந்த ஸ்லோகம்
அச்ப்ருஷ்ட மத ராகம் தம் -பலராமனின் வியாவருத்தம்
மதம் ராகம் சுரா பானம் பருகி -யாதவர் -பாபம் இல்லையே -யது குலம் -சந்த்ர வம்சர்-க்ஷத்ரியர் -யாதவர் என்றால் இடையர் இல்லை –
ராகவா யாதவீயம் ஸ்தோத்ரம் ராமருக்கும் கிருஷ்ணருக்கும் வேங்கடாத்ரி அருளிச் செய்து உள்ளார்
யாதவர் -இடையர் இரண்டும் கிருஷ்ணன் இரண்டு குலம் –
ராமம் துர்யம் உபாஸ்மஹே -நான்காவது ராமர் –ராம மிஸ்ரர் –

பொறுமை மன அடக்கம் ஆகியவற்றை எப்போதும் கை விடாதவர்
அடியார்களுக்கு எந்தவிதமான தீங்கையும் எண்ணாதவர்
எவ்வித செருக்கும் ஆசையும் அற்றவர்
இப்படிப்பட்ட நன்மையால் நான்காவது இராமர் என்று போற்றப்படும் மணக்கால் நம்பியை நாம் உபாஸிப்போம்
பரசு ராமர் சக்ரவர்த்தி திருமகன் பலராமர் மற்ற மூவர்-

பரசுராமர்- சகிப்புத் தன்மை இல்லாதவர்–பலராமர்–மது அருந்தும் பழக்கமுடையவர்.)

லால்குடிக்கு அருகே உள்ள மணக்கால் க்ராமத்தில் மாசிமாத மகத்தில் அவதாரம்.
உய்யக் கொண்டாரின் திருவடி பணிந்து,12 வருஷகாலம் அவருக்கு சிச்ருக்ஷை புரிந்து,எல்லாவற்றையும் உபதேசமாகப் பெற்றவர்.
உய்யக் கொண்டாருக்கு அநேககாலம் மடைப்பள்ளி கைங்கர்யம் செய்தவர்.

புராணங்களில் சொல்லப்படுகிற மூன்று ராமர்களினின்றும் வேறுபட்டு சிறந்தவராக ஸ்ரீராமமிச்ரர் இருந்தார்.
ஸ்வாமி தேசிகனுக்கு உய்யக்கொண்டார் பகவான் கண்ணன் என்றால், மணக்கால்நம்பி 4வது ராமர்.

———————

8-விகாஹே யாமுனம் தீர்த்தம் சாது ப்ருந்தாவனே ஸ்த்திதம்
நிரஸ்த ஜிஹ்மக ஸ்பர்சே யத்ர கிருஷ்ணா க்ருதாதர —

ஸ்ரீ கிருஷ்ணன் அன்பு பூண்ட யமுனா நதி போல அடியார்களை காத்தும் தீயவர்களை விரட்டியும்
காளிய வ்ருத்தாந்தம் -இருக்கும் ஆளவந்தார் இடம் நான் ஆழ்ந்து உள்ளேன் –

தமது சிஷ்ய சமூகமன் ஆகிற சத்துக்களின் ஆத்ம ரக்ஷணத்தில் நிலை நின்றவரும் –
அரங்கனின் -கண்ணனின் -யுடைய பரம ஆதரத்துக்கு பாத்திரம் ஆனவரும்
-விஷய பிராவண்யம் துளியும் இல்லாதவருமான -ஸ்ரீ ஆளவந்தார் -ஸ்ரீ யாமுனாச்சார்யர் -என்கிற
குளிர்ந்த தடாகத்தில் அமிழ்ந்து களிக்கிறேன் -என்கிறார்

-விகாஹே யாமுனம் தீர்த்தம் -யமுனா சம்பந்தி -யமுனாச்சார்யர் ஆகிய பாவனம் மிக்க ஆச்சார்யர் –அவஹாகிப்போம்
-குடைந்து ஆடி பருகி களிப்போமே-தீர்த்தத்திலும் பகவத் குணங்களிலும் –
சதீர்த்தயர் -சமான சிஷ்யர்கள் ஒரே ஆச்சார்யர் இடம் –
தீர்த்தனுக்கு அற்ற பின்னே –தீர்த்தனுக்கே தீர்த்த மனத்தராகி -தீர்த்தங்கள் ஆயிரம் –தேவர் வைகலும் தம் தேவியர்க்கு உரைப்பர்
-கேனோ பாயானே ஸ்ரீ ராம ராம ராமேதி போலே –
சாது ப்ருந்தாவனே ஸ்த்திதம் -பிருந்தாவனம் -அழகிய -ஸ்திதம் -யமுனா தீர்த்தம் -மற்ற இடங்கள் அசாது-தோஷம் அற்ற தேசம் என்றவாறு –
சாது பிருந்தா அவனே ஸ்திதம்-அவ ரக்ஷனே-தாது -ரக்ஷணத்திலே-
-சாது கோஷ்ட்டியுள் கொள்ளப் படுபவர்-ஸ்ரீ வைஷ்ணவர்கள் உடைய -ரக்ஷணத்திலே ஸ்திதம் -ஆளவந்தார் என்றபடி –
நிரஸ்த ஜிஹ்மக ஸ்பர்சே--சர்ப்பம் -ஜிஹ்மம் -வக்ரகதியில் போவது குடிலை கதி -ஆர்ஜவம் நேர்மை –
அஹங்காரம் மமகாரங்கள் -போக்கி -அபஹத பாப்மாதிகள் -அளிப்பது போலே –
யமுனா தீர்த்தம் தூயமையாக ஆகி -காளியன் நிரசித்து -அந்த ஸ்பர்சம் இருந்ததே -அத்தை போக்கி என்றுமாம் –
யத்ர கிருஷ்ணா க்ருதாதர — கிருஷ்ணரால் ஆதரிக்கப் பட்ட யஹூய யமுனை -கிருஷ்ண மிஸ்ரரால் –
ஆளவந்தார் கிருஷ்ண க்ருதங்களில் ஆழ்ந்தார் –

உலகத்தில் மிகவும் உயர்ந்த இடமான பிருந்தாவனத்தில் உள்ள யமுனை நதியிடம் மிகவும் அன்புடன் கிருஷ்ணன் இருந்தான்
அந்த நீரில் இருந்து காளியனை அவ்விடத்து விட்டு விலக்கினான்
இந்த யமுனை நதி போன்றே அடியார்களைக் காப்பாற்றவும் தீய புத்தியை விலக்கவும் உறுதியுடையவர் ஆளவந்தார் ஆவார்
அப்படிப்பட்ட அவரிடம் நான் ஆழ்ந்து உள்ளேன்
இந்த ஸ்லோகத்தில் யாமுனம் யமுனை ஆற்றையும் ஆளவந்தாரையும் குறிக்கும் –

யமுனையின் புனித நீரில் ( ஆளவந்தார் ) நீராடுவோம்,
அவர் சராசரி மோகம் மற்றும் பற்றுதல் ஆகியவற்றுடன் அனைத்து தொடர்புகளையும் துண்டித்தவர்,
சாதுக்களைப் பாதுகாப்பதில் உறுதியாக நின்றவர்,
மற்றும் கிருஷ்ணரால் வலியுறுத்தப்பட்ட விஷயங்கள் மிகச் சரியாக இருந்தன .
(இரண்டாவது பொருள்: பிருந்தாவனத்திற்கு அருகில் உள்ள விஷப் பாம்பு அகற்றப்பட்ட யமுனை நதியின்
புனித நீரில் ஸ்நானம் செய்வோம், அதில் கிருஷ்ணர் ஆர்வம் காட்டினார்.)

ஸ்ரீமந்நாதமுநிகள் —இவரது குமாரர் ஈச்வர பட்டர் –இவரது திருக் குமாரர் யாமுனாசார்யர் (யமுனைத் துறைவர் ),
ஆடி மாதம் உத்தராஷாடா நக்ஷத்ரத்தில் அவதாரம். மணக்கால் நம்பியிடம் சாஸ்த்ர அர்த்தங்களைப் பயின்றவர் .
சோழநாட்டு அரச ஆஸ்தான வித்வான் ஆக்கியாழ்வானை ,இவர் ,அவரிடம் மூன்று விஷயங்களைக் கூறி மறுக்கச் சொல்லி,
அவர் மறுக்க இயலாது திகைத்தபோது, யாமுனரே அவற்றுக்கான மறுப்பையும் சொல்ல,
பட்டத்துராணி மகிழ்ந்து, ” என்னை ஆளவந்தீரோ ” என்று சொல்ல அன்றுமுதல் “ஆளவந்தார் ” என்கிற திருநாமமும் சேர்ந்தது.

யமுனையின் தீர்த்தத்தில் கோடைகாலத்தில் கஷ்டப்படுபவன் முழுகித் திளைத்து மகிழ்வது போல ,
யாமுனரின் குணப் ப்ரவாஹத்தில் மூழ்கித் திளைப்பதாயும் ,ஸாதுவான யமுனை நதி, ப்ருந்தாவனத்தில் காடுகளின் ஊடே வரும்போது,
காளியனால் துன்பப்பட்டதால்,அந்த சர்ப்பக் கூட்டத்தையே விரட்டி, கண்ணன் யமுனை நதியிலும், மணல் திட்டுக்களிலும் கோபியரோடு
விளையாடி, இப்படி கண்ணனால் பஹுமாநிக்கப்பட்டதென்றும் யாமுனரும் சாதுக்களான பெரியநம்பி முதலிய சிஷ்யர்களுக்கு
உபதேசங்கள் செய்து காத்தவர் என்றும் , யமுனைக்குக் கருணை செய்ததைப் போல, ஆளவந்தாரிடமும் ,கண்ணன் பரிவு காட்டினான் என்றும் –
யத்ர க்ருஷ்ண க்ருதாதர : ” என்று சொல்லி,ஆளவந்தாரின் குணங்களாகிய வெள்ளச்சுழிப்பில் ஆழ்ந்து
அவரை வணங்குகிறேன் ——–என்கிறார் ஸ்வாமி தேசிகன்.

——————

9-தயா நிக்நம் யதீந்த்ரஸ்ய தேசிகம் பூர்ண மாஸ்ரயே
யேன விஸ்வ ஸ்ருஜோ விஷ்ணோ அபூர்யத மநோ ரத

ஜகத் காரணனான புருஷனின் மநோ ரதம்-எந்த பரம தயாளுவாள் பூர்த்தி செய்யப் பட்டதோ —
ஆளவந்தார் ஆ முதல்வன் இவன் என்று கடாக்ஷிக்கப் பண்ணி
தர்சன ப்ரவர்த்தராம் படி பஞ்ச ஸம்ஸ்கார முகமாக வாழ்வித்த ஸ்ரீ பூர்ணாச்சார்யார் என்ற
ஸ்ரீ பெரிய நம்பிகளை -ஆஸ்ரயிக்கிறேன் என்கிறார் –

தயா நிக் நம் -அடிமைப் பட்டு வசப்பட்டு -கருணாவஸ்யன்-மெய்யே பெற்று ஒழிந்தேன்
– விதி வாய்க்கின்றது அவனுக்கு -தயா பிரபாவம் -அவனாலும் மீற முடியாதே –
சர்வ நியாந்தா காருண்யத்துக்கு நியாமகன் ஆவதே -பொய்யே கைம்மை சொல்லி மெய்யே பெற்று ஒழிந்தேன்
நமக்கு விதி பிராரப்ய கர்மா -அவனுக்கு காருண்ய நிக்னம்
தானே சென்று உடையவருக்கு பஞ்ச சம்ஸ்காரம் செய்து அருளின தயா பிரபாவம்
யதீந்த்ரச்ய தேசிகம் -ஸ்ரீ பாஷ்யகாரருக்கு சாஷாத் ஆச்சார்யர் -பஞ்சாச்சார்யார் –
பூர்ண மாஸ்ரயே-பூர்ணர் -மஹா பூர்ணர் பெரிய நம்பி -ஆஸ்ரயிக்கிறேன்-
யேன விஸ்வ ஸ்ருஜோ –விஷ்ணோ அபூர்யத மநோரத-ஸ்ருஷ்டித்த விஷ்ணுவுடைய -மநோ ரதம் நிறைவேறியது –
சங்கல்பத்தாலே பஹுஸ்யாம் என்றவனுடைய மநோ ரதம்
இதனாலே பெரிய நம்பி -இவர் ஆனார் -பெரிய பெருமாள் -பெரிய பிராட்டியார் /பெரிய திரு மண்டபம் /
பெரியாழ்வார் -சாஷாத் மாமனார் -/ பெரிய உடையார் -ஜடாயு மஹா ராஜர் /
பெருமாள் மநோ ரதம் நிறைவேற்றியதால் பெரிய நம்பி –
பூர்ணர் முதல் பகுதியில் அடுத்து மஹா பூர்ணர் ஆகிறார் எம்பெருமானாரை சம்பிரதாயத்தில் கொண்டு வந்ததால் –

இந்த உலகைப்படைத்த பெரிய பெருமாளின் மநோ ரதம் இவரால் நிறைவேறியது
அன்புக்கு வசப்பட்ட ஆச்சார்யரான பெரிய நம்பியை அடியேன் அடைவேனாக
ஸ்ரீ வைஷ்ணவம் தழைக்க இவர் மூலம் அன்றோ அன்றோ பஞ்ச ஸம்ஸ்காரம் செய்வித்தான் அரங்கன்

அவர் நமக்கு மகா ராமானுஜரைக் கொடுத்தார், அதன் மூலம் பிரதம படைப்பாளியின் நம்பிக்கையை நனவாக்கினார்.

பெரிய நம்பிகளும், ராமாநுஜரும் , மதுராந்தகத்தில் ஏரி காத்த ராமன் ஸந்நிதியில் சந்தித்துக் கொண்டனர்.
பெரிய நம்பிகள் ராமானுஜருக்கு, அங்கேயே மந்த்ரோபதேசங்கள் ,அர்த்த விசேஷங்கள் எல்லாவற்றையும் சொல்லி அருளினார்.
இப்படியாக,பெரிய நம்பிகள் உடையவர் மீது, மிகுந்த கருணையுடன் இருந்து , உடையவர் மூலமாக ஜனங்களையும் திருத்தி,
பெரிய பெருமாளின் திருவுள்ளத்தையும் பூர்த்தி செய்த பகவத் ,ஆசார்ய பூர்ணத்வம் உள்ள
பெரியநம்பிகளை வணங்குகிறேன் —-என்கிறார் , ஸ்வாமி தேசிகன்

—————

மேல் எம்பெருமானாரை ஸ்துதிக்க புகுகிறார் –

10-ப்ரணமாம் லஷ்மண முனி ப்ரதிருஹ்ணாது மாமகம்
பிரசாதயாதி யத் ஸூக்தி ஸ்வாதீந பதிகாம் ஸ்ருதிம் –

பரம புருஷனை தன்னுள் மறைத்து வைத்துக் கொண்டு இருந்துள்ள
வேத மாதாவுக்கு எந்த ஸ்ரீ பாஷ்யகாரரின் ஸ்ரீ பாஷ்யாதி ஸ்ரீ ஸூக்திகள் அணிகலன்கள் ஆகுமோ –
ஸ்ருதியின் பரமார்த்தம் பிரகாசம் ஆகுமோ -அந்த ஸ்ரீ லஷ்மண முனி
அடியேனுடைய பிராணாமத்தை அங்கீகரித்து அருள வேணும் என்று வேண்டுகிறார் –

இராமானுஜரின் உயர்ந்த கிரந்த நூல்கள் பெரிய பெருமாளையே தன் வசப்படுத்திக் கொண்டவை யாகும்
அவை உபநிஷத்துக்களுக்கு எழில் சேர்ப்பவை யாகும்
அப்படிப்பட்ட ஸ்ரீ ராமானுஜ முனி அடியேனுடைய நமஸ்காரங்களை ஏற்றுக் கொண்டு அருள் புரிய வேண்டும்

ப்ரணமாம் லஷ்மண முனி– ப்ரதிருஹ்ணாது மாமகம் -என்னுடைய பிரணாமத்தை எம்பெருமானார் ஸ்வீ கரித்து அருளட்டும் –
இந்த பிராணாயாமம் அவருக்கே உரியது -சர்வ தேவதா நமஸ்காரம் கேசவன் பிரதி கச்சதி –
இவர் சேவா யோக்யர் அன்றோ
எம்பெருமானார் திருவடிகளை அடைகின்றேன் -குரு பரம்பரையா முகமாக பெரிய பிராட்டியார் இன் அமுத திருமகள்
-இரங்கும் திருவாளர் -திரு நாரணன் -அது சரணா கதி -இங்கு பிரமாணம்
ப்ரதிக்ருஹம் -பிரசாதயாதி யத் ஸூ க்தி ஸ்வாதீந பதிகாம் ச்ருதிம் –
எவருடைய ஸ்ரீ ஸூ க்திகள் ஸ்ருதியை முழுவதுமாக பிரகாசிக்கப் பண்ணிற்றோ- பிரசாதம் -ஒப்பனை -பிரசாதனம் அலங்கரித்தல் –
ஸ்வாதீந பதிகாம்-நாயகியை தானே அலங்கரிக்க வேண்டும் -பதியை தனக்கு அதீனமாக்கி-கொள்ள -ஸ்ரீ யபதி
-பதி விசுவஸ்ய-ஏறா ளும் இறையோன் -காளை மாட்டை மட்டும் அவன் இவன் உபய விபூதியையும் –
இவனை நிரூபித்து -சாஸ்த்ரா யோநித்வாத் -ஸ்வரூப ரூப குண விபூதியை காட்டும் நாயகி
சுருதி பெருமை ஸ்ரீ பதி பெருமை யதிபதி பெருமை சொல்லிற்று

ஸ்ருதிகளின் ( வேதங்களின் ) அர்த்தங்களை ஒன்றுக்கொன்று விரோதமின்றி அனைவரும் ஏற்றுப் பாராட்டும்படி
ஸ்ரீ ராமானுஜரின் ஸ்ரீஸுக்தி உள்ளது .
இந்த ஸ்ரீஸுக்தி “சைரந்த்ரீ ” மற்றும் “ஸ்வாதீனபதிகா” என்கிறார் ஸ்வாமி தேசிகன்.

ராஜாக்களுக்குப் பல மனைவிகள் இருப்பர்.அவர்களுள் “ஸ்வாதீன பதிகா “ என்பவள் ,தன்னுடைய மயக்குப் போகங்களால் ,
அரசனைத் தன் ஸ்வாதீனத்திலேயே வைத்திருப்பாள் .

இவளுக்கு ஒரு தாதி இருப்பாள். “சைரந்த்ரீ ” என்று பெயர்.
இவள் , அரசிக்குப் பலவகையிலும் பணிவிடை செய்து ,ஸ்நானம் செய்வித்து , கூந்தலில் நறுமணத் தைலத்தைத் தடவி
கூந்தலில் ஒரு சிக்கு இல்லாமல் லாகவமாக எடுத்து , வாரி , பின்னி , முடிந்து ,வாசனைப் பூக்களைச் சூட்டி ,
அணிகலன்களையும் சூடி அரசன் பார்த்து ஆனந்தம் அடையும்படி செய்வாள்.

அதைப்போல , ” ஸ்ருதி “—உபநிஷத் நாயகி .
இவளுடைய புருஷன் புருஷோத்தமன் –பகவான்.
வேத வாக்யங்களுக்கு , பிற மதவாதிகள் அர்த்தங்களை மாற்றிச் சொல்லி, பொய் என்றும் சொல்லி ,
அழுக்கை ஏற்றி விட்டார்கள் .
இந்த மாதிரியான அழுக்குகளை , ராமாநுஜரின் ஸ்ரீஸுக்திகள் என்கிற “சைரந்த்ரீ ”
மீமாம்சம் போன்ற வாசனைத் தைலங்களைத் தடவி,
சிக்கலை எடுத்து, அழுக்கைப் போக்கி ,
உண்மையான ரூப கல்யாண குணவிசேஷங்களை உடைய பகவானையும் வேதங்களையும் சேர்த்து
கைங்கர்யம் செய்யும் ஜீவாத்மாக்கள் அனுபவிக்கும்படி மஹோபகாரம் செய்த ராமாநுஜருக்கு
எந்தக் கைம்மாறும் இயலாத நிலையில் ,நமஸ்காரத்தைச் செய்கிறேன் ;
அதை ஏற்று ,ஸ்ரீ உடையவர் ,அடியேனை அனுக்ரஹிப்பாராக என்கிறார் ஸ்வாமி தேசிகன் .

——————

11-உபவீதிநம் ஊர்த்வ புண்ட்ர வந்தம்
த்ரிஜகத் புண்ய பலம் த்ரிதண்ட ஹஸ்தம்
சரணா கத சார்த்த வாஹம் ஈடே
சிகாயா சேகரிணம் பதிம் யதீ நாம் –

திரு மார்பில் இலங்கிய முந்நூலினாலும் –
அணிந்த ஈராறு திரு நாமங்களினாலும் –
முக்கோல் ஏந்திய திருக் கையினாலும் —
மனசாலும், உடலாலும், வார்த்தைகளாலும் வணங்கும் பகவானை
ஆவாஹநம் செய்திருக்கும் அந்தத் த்ரிதண்ட ஹஸ்தம்–
திரு முடியில் திரு குழல் கற்றையினாலும் எழில் யுற்று விளங்குபவராய் –
எல்லா உலகங்களின் நல் தவப் பயனின் உருவோ என்று
அதிசயிக்கக் கூடியவராக யதி ஸார்வ பவ்மரை ஸ்துதிக்கப் புகுகிறேன் -என்கிறார்

உபவீதிநம் -அழகிய பூணூல்
ஊர்த்வ புண் ட்ரவந்தம்-
த்ரிஜகத் புண்ய பலம் த்ரிதண்ட ஹஸ்தம் -மூ லோக ஸமஸ்த சேதன பலமாகவே இவர் அவதாரம்
சரணா கத சார்த்த வாஹம் -கோஷ்ட்டி -பிரபன்ன -தானே செய்து அருளி -நமக்கு -முன் நின்று நடத்தி –
ஈடே -விளங்குகிறார்
சிகாயா சேகரிணம் -திரு முடிக்கு அலங்காரம் -உத்தம அலங்காரம் சிகை –
பதிம் யதீ நாம் – நேராக சேவை சாதிக்க -அனுபவிக்கிறார்-கீழே ஸ்ரீ ஸூ க்திகளை அனுபவித்து -திவ்ய மங்கள விக்ரஹம் -இதில் –
யதிபதிக்கு இவை லிங்கங்கள் – சாஸ்திரம் -சொல்லுமே -கர தூஷிணி-பரம ஹம்ஸ லக்ஷணம் -யதி லிங்க பேதம் 65 -th வாதம் –

யஜ்ஜோ பவீதம் தரித்தவர்
திரு நெற்றியில் அழகான ஊர்த்வ புண்ட்ரம் தரித்தவர்
இம் மூன்று லோக புண்ய பலன்களே ஹேதுவாக திரு அவதரித்தவர் என்று காட்டவே த்ரி தண்டம் தரித்தவர்
தன்னிடம் சரண் அடைந்தவர்களை சரியான வழியிலே நடத்தி அருள்பவர்
நேர்த்தியாக சிகை அழகு கொண்டவர்
சந்நியாசிகள் தலைவராக உள்ளவர்
இப்படிப்பட்ட ராமானுஜரை அடியேன் வணங்குகிறேன்

பகவத் அநுபவத்தைப்போல, பூர்வாசார்யர்களை அனுபவிப்பதும், சிஷ்யர்களுக்கு மிகவும் தேவையானது .
இதற்கு உதவுவது ஆசார்யனின் திருமேனி ஸ்வரூபத்தை மனத்தில் க்ரஹிப்பது;
பிறகு, அவர் ஆக்ஜாரூபமான கைங்கர்யங்களைச் செய்வது;ஆகமரீதிப்படி பகவானைத் த்யானித்து, ஆராதிப்பது.
ஸ்ரீ அப்புள்ளார் சொல்ல, ஸ்வாமி தேசிகன் ஸ்ரீ உடையவரின் திருமேனி சௌந்தர்யத்தை மனத்தில் தரித்தவர்.
அதனால், த்யாநித்ததை, அப்படியே வருணிக்கிறார்.

யதிராஜரின் சிவந்த திருமேனியில், திருமார்பில் பளிச்சென்று வெண்மையாக விளங்கும் யஜ்ஞோபவீதம்;
பிறகு, திருமுகமண்டலத்தில் பளிச்சிடும் ஊர்த்வபுண்டரம் ( திருமண்ணும் ஸ்ரீசூர்ணமும் );
மனசாலும், உடலாலும், வார்த்தைகளாலும் வணங்கும் பகவானைத் தன்னுடைய த்ரிதண்டத்தில் ஆவாஹநம் செய்திருப்பதால்,
அந்தத் த்ரிதண்ட ஹஸ்தம்; அரசர்களுக்கு,சிரஸ்ஸில் க்ரீடத்தைப் போல,
சிகையாலான க்ரீடத்தை அணிந்திருப்பதால், க்ரீடமான சிகை

ஸ்ரீ நம்மாழ்வாரைப் பின்பற்றி , பெரியபெருமாள் -பிராட்டி–-திவ்யதம்பதியரிடம் ,
பங்குனி உத்ர நந்நாளில் ,சரணாகதியை அனுஷ்டித்தவர்;
இவ்வளவு பெருமைபெற்ற ,எதிராஜரைத் துதிப்போம்.

—————

12-பிரதயன் விமதேஷூ தீஷ்ண பாவம்
பிரபு அசமத் பரி ரஷணே யதீந்திர
அப்ருதக் பிரதி பன்ன யன்மயதவை
வவ்ருதே பஞ்சபி ஆயுதை முராரே

பகவானுடைய சங்கு,சக்ரம், கதை,வாள் ,வில் —என்கிற பஞ்சாயுதங்களும்
யதிராஜன் திருவுருவத்தில் அவதரித்துள்ளன.
வேத விருத்தமாகப் பிரசாரம் செய்யும் பாஷாண்டிகளை அழிக்க, பஞ்சாயுதங்களும் இப்படி, யதிராஜராக
அவதரித்துள்ளன .இப்படிப்பட்ட யதிராஜர், நம்மை,முழுவதுமாகக் காப்பாற்ற வல்லவர்.

ஆஸ்ரிதர்கள் ரக்ஷணத்திலும் –ஆஸ்ரித விரோதி நிரசனத்திலும் தீஷித்து இருப்பதில்
பிரகாசமுள்ள எம்பெருமானின் பஞ்ச திவ்ய ஆயுதங்களின்
ஸ்வபாவத்தையே மாறுபடாமல் கொண்ட ஸ்ரீ யதிராஜரானவர்
தம்மைச் சார்ந்த ஜனங்களின் உஜ்ஜீவனத்திலும் –
பாஹ்ய குத்ருஷ்டிகளின் நிரசனத்திலும் சமர்த்தராக விளங்கினார் –

பிரதயன் விமதேஷூ தீஷ்ண-பாவம் –விமத விரோதி வர்க்கம் விபக்ஷம்-ஆஸ்ரித விரோதிகள் தானே நிரதிசய அனுகூல ஸ்வரூபனுக்கு
-மம பிராணா ஹி பாண்டவ —
குரூரமான ஸ்வ பாவம்-பஞ்சாயுதங்களுக்கும் ஸ்வாமிக்கும் -பற்றலர் வீய பாஞ்ச ஜன்யம் வைத்த போர் ஏறு
பிரபு அசமத் பரி ரஷணே-அஸ்மத் பரி ரக்ஷணம் -சர்வ பிரகார ரக்ஷணம் -சர்வ தர்மான் பரித்யஜ்ய
-பரி உப சர்க்கம் ஆஸ்ரிதர்க்கு ஆபரணம் -இவை –
யதீந்திர
அப்ருதக் பிரதி பன்ன யன்மயதவை -வேறு ஸ்வ பாவம் கல்பிக்க முடியாதே –யன் மயத்வம் -எந்த ஸ்வ பாவம் ஸ்வரூபம்
வவ்ருதே பஞ்சபி ஆயுதை முராரே -பஞ்சாயுதம் -அம்சம் –வவ்ருதே -சமுதாய ஸ்வரூபம் -பூதலம் காப்பதற்கு ராமானுஜ முனி யாயின -ஏகி பூதம் –

ஸ்ரீ பஞ்சாயுதங்களான சங்கு சக்கரம் கதை வாள் வில் அனைத்துமே ஸ்ரீ ராமானுஜராக உருவம் கொண்டு இங்கே வந்தன
வேத பாஹ்ய குத்ருஷ்டிகளை தனது கொடிய தன்மையைக் காண்பித்து வாதம் செய்து வெற்றி கொள்ளும்
ஸ்ரீ ராமானுஜர் நம்மைக் காத்து அருளுவதில் வல்லவர் ஆவார் –

அடையார் கமலத்து அலர்மகள் கேள்வன்* கையாழியென்னும்-
படையோடு நாந்தகமும் படர் தண்டும்,* ஒண் சார்ங்கவில்லும்-
புடையார் புரிசங்கமும் இந்தப் பூதலம் காப்பதற்கு* என்று-
இடையே* இராமானுச முனியாயின இந்நிலத்தே -33-பாசுரம் அடி ஒற்றி அருளிச் செய்த ஸ்லோகம் –

—————-

ஸ்ரீ கண்ணனே ஸ்ரீ எம்பெருமானார் -சிலேடையில் அமைந்த ஸ்லோகம் –

13-சமித உதய சங்கராதி கர்வ
ஸ்வ பலாத் உத்த்ருத யாதவ பிரகாச
அவரோபி தவான் ஸ்ருதே அபார்த்தான்
நநு ராம அவரஜ ச ஏஷ பூய -13

பாணாசூர யுத்தத்தில் சிவபெருமானைக் கண்ணன் வென்றான்
இதே போல் அத்வைதிகள் வான்தங்களை ராமானுஜர் வென்றார்
யாதவர்களின் பெருமையை கண்ணஅவருக்குப் பெருமை அளித்தார் நம் ஸ்வாமி
அர்ஜுனன் தேர் முன் நின்று அவனது எதிரிகளை கிருஷ்ணன் வென்றான்
வேதத்தின் முன்பாக நின்று வேத பாஹ்ய குத்ருஷ்டிகளை நம் ஸ்வாமி வென்றார்
நம்பி மூத்த பிரானின் தம்பியான கிருஷ்ணனே -பார்த்த சாரத்தியே நம் ஸ்வாமியாக திரு அவதரித்து அருளினார்

சமித உதய சங்கராதி கர்வ-
சங்கரர் -ப்ரஹ்மம் இந்திரன் முதலானோர் ஆதி சப்தத்தால் –
கர்வம் உதிக்க அத்தை சமனம் பண்ணி -பாணாசுரன் -வத்சா அபஹரணம் -கோவர்த்தனம் –
சங்கர பாஸ்கர யாதவ -இத்யாதி நம் ராமானுஜர் -பார்ப்பான் ஆறு சமயங்கள் பதைப்ப –
ஸ்வ பலாத் உத்த்ருத யாதவ பிரகாச
குலம் உத்தரிக்க கோபாலன் -சங்க நிதி பத்ம நிதி கொடுத்து -கடலை ஊடறுத்து படை வீடு செய்து அருளி –
எதிரிகள் விட்ட அம்பை தான் ஏற்று -3-5-திருவாய்மொழி –
யாதவ அப்யுதயம் -ஈடு -முனிவின்றி ஏத்தி குனிப்பார் –
கலந்து பரிமாறி -உன்னதி உண்டு பண்ணி ஸூ பலத்தால்
நம் ராமானுஜர் யாதவ பிரகாசன் ஏக தண்டீ -ஸூ பலத்தால் -மாற்றி அருளி -த்வேஷப் பட்டு -மாற்றி -த்ரி தண்டி யாக்கி -சிகை கொடுத்து தன் திருவடி சேர்த்து –
அவரோபி தவான் ஸ்ருதே அபார்த்தான்
பார்த்தன் இல்லாதவன் அபார்த்தன் -கௌரவர்கள் -உன்மதி போக்கி தரை மட்டம் ஆக்கி -கேவல ஸ்ரவணம் மாத்திரம் விஷயம் ஆக்கி
தத்வ ஹித புருஷார்த்தங்கள் -சுருதி -தப்பான அர்த்தங்கள்
அந்தர் ஜுரம் போக்கி -அருளி –
நநு ராம அவரஜ ச ஏஷ பூய -உத்ப்ரேஷை -இதுவே அதுவாகும் -நநு-ஊகம்-சாமான்ய சப்தம் -ஸாத்ருஷ்யம் கொண்டு –
ராமஸ்ய அவரஜ -அனுஜா தம்பி அநு ஜாதியே -இவர் தான் அவரோ -பூய திரும்பியும் -பல ராமானுஜர்
கிருஷ்ணன் -இளைய பெருமாள் -ராமானுஜர் –
சமாக்கியம் -சடாரி பாதுகை போலே -ச ஏஷ பூவ- உத்ப்ரேஷம் / நிர்ணயம் இரண்டும் கொள்ளலாம் -ச ஏவ பூய-பாட பேதம் –

தனது சொந்த படைப்புகளால்  -கீதை மற்றும் ப்ரஹ்ம ஸூத்ரங்களுக்கக் கூறப்பட்ட- தவறான அர்த்தங்களை நீக்கினார்.

கார்த்திகையானும் கரி முகத்தானும் -22-படியே முக்கண்ணனான சங்கரன் செருக்கை அடக்கிய கண்ணன் –
யது குலத்தில் உதித்து தன் வல்லமையால் யாதவர்களை பிரகாசப் படுத்தியவன் –
பார்த்தனின் விரோதிகளை பெருமை யுறாமல் அழித்தவன்-

பலராமனின் தம்பியான அந்த ஸ்ரீ ராமானுஜன்-ஸ்ரீ பார்த்த சாரதியே தானே
இந்த நம் ஸ்ரீ ராமானுஜன் என்று அதிசயிக்கும் படி அன்றோ

சங்கராதி வேத குத்ருஷ்டிகளின் செறுக்கை தம் ஸ்ரீ ஸூக்திகளாலும் தர்க்க வாதங்களாலும் அடக்கி –
தம் புத்தி சாமர்த்யத்தாலும் கிருபா அதிசயத்தாலும் யாதவ பிரகாசரை வாழ்வித்து –
பிறர் -கல்பித்து -கூறும் ஸ்ருதிகளும் அபார்த்தங்களை களைந்து ஒழித்தவர்-

நாம்-நான் என்கிற அஹங்காரத்தை ஏற்படுத்துகிற அத்வைதக் கருத்துக்களைப் போக்கியவர்
யாதவப்ரகாசரை , அத்வைதத்திலிருந்து, ஸ்ரீவைஷ்ணவராக்கி,ஆட்கொண்டவர்.
ஸ்ரீபாஷ்யாதிகள் மூலமாக, கீதையின் பொருளை உணர்த்தியவர்.
யாதவர்களின் கீர்த்தியை ஓங்கச் செய்து, த்ரௌபதியின் மாங்கல்யத்துக்குக் கேடு வரா வண்ணம்
காத்த, கண்ணனே ஸ்ரீபாஷ்யகாரராக அவதரித்தார்.

—————

14- அபஹூஸ்ருத சம்பவம் ஸ்ருதீ நாம்
ஜரதீ நாம் அயதாயத பிரசாரம்
வி நிவர்த்தயிதம் யதி ஈஸ்வர உக்தி
விததே தா ஸ்த்திர நீதி பஞ்ஜர ஸத்தா-14

அநாதியான உபநிஷத் கருத்துக்களுக்கு ஆழ்ந்த அறிவு இல்லாமல் நேர்மையற்ற முறையில் உரை செய்தார்கள்
இப்படிப்பட்ட புற வாதங்களை ஒழித்து வலிமையான எதிர்வாதம் என்னும் கூண்டில் உபநிஷத் என்னும்
கிளியானது ஸ்ரீ ராமானுஜரின் ஸ்ரீ பாஷ்யங்களால் பாதுகாக்கப் பட்டது

ராமானுஜர், வேதங்கள் போன்ற பழைய வேதங்களின் பறவைகளுக்கு நிரந்தர சரணாலயமாக
தனது படைப்புகளுக்கு ஒரு கூடு கொடுத்தார், ஏனெனில்
பறவைகள் வேதப் படைப்புகளைத் தவறாகப் புரிந்துகொள்ளும் பாஹ்ய வாதிகளால் சித்திரவதைக்கு ஆளாகின்றன.

அபஹூஸ்ருத சம்பவம் -பஹூசுருதர் -பல படி பலவற்றை கேட்க வேண்டும் இல்லாதார் அல்ப ஸ்ருதர்கள் -இவற்றால் சம்பவிக்கப் பட்ட
ஸ்ருதீ நாம்- ஜரதீ நாம் -அநாதியான வேதங்கள் -ஜீரணம் சரீரம் ஆவதால் ஜரா மூப்பு –
சமன்வயதிகாரணம் -நியோக – த்யான யோகம் ஜர அத்வைதிகள் –
ஜுராசிக் age -முன் காலம் -அநாதித்வம் வயோதிகம் இரண்டும் வேதங்களுக்கு –
அயதாயத பிரசாரம் -யதாயத்த அர்த்தம் இல்லாமல் போக
வி நிவர்த்தயிதம்-விசேஷ நிவர்த்தனம் –
யதி ஈஸ்வர உக்தி– விததே -யதீஸ்வர -யுக்தி
தா ஸ்த்திர நீதி பஞ்ஜர ஸத்தா-பூர்வ உத்தர மீமாம்சம் பஞ்ஜர ஸத்தா-ஆக்கி அருளினார் இவர் ஸ்ரீ ஸூ க்திகளால் -பஞ்ஜர-கூடு-

ஸ்ரீ எம்பெருமானாருடைய திவ்ய ஸ்ரீ ஸூக்திகள் –
அல்ப ஞானம் படைத்த குத்ருஷ்டிகளால் உண்மைக்கு புறம்பான
அர்த்தங்களை பிரசாரம் பண்ணுவதால்
வேதங்களுக்கு ஏற்பட்ட இளைப்பைப் போக்கி –
அவைகளை மறுக்க ஒண்ணாத நியாயங்களால்
நன்றாக ரக்ஷிக்கப் பட்டவைகளாய் ஆக்கி யுள்ளன
உபநிஷத் ஆகிற கிளியை மீண்டும் ரஷித்து அருளினார் —
வேதாந்த விழுப் பொருளை சித்தாந்தப் படுத்தி அருளினார் என்றபடி –

கிளிகள் —பக்ஷிகள்—இவற்றுக்கு சிறகு முளைத்து தத்தித் தத்திப் பறப்பதைப் பார்க்கும் சிறுவர்கள்,
அவற்றைப் பிடித்து, சிறகுகளை இழுத்தும் துன்புறுத்தியும் மகிழ்வர்.
பெரியவர்கள், அவை துன்புறுவதைப் பார்க்கச் சகிக்காமல் , இரும்புக்கூடு அமைத்து, கிளிகளை உள்ளே
வைத்துப் பழம் முதலியவை கொடுத்துப் பாதுகாத்து, அவற்றின் பேச்சை ரசிப்பர் .
அறிவாளிகள் அவை துன்புறுவதைச் சகிக்காமல், அவற்றின் விருப்பப்படிப் பறக்க விடுவர்.
சிற்றறிவுள்ள மதவாதிகள் , வேதங்களாகிற புராதன காலப் பக்ஷிகளை அலைக்கழித்து,
தவறான அர்த்தங்களைச் சொல்லி, துன்புறுத்துவர்.
ஆனால்,நமது ராமாநுஜரோ இவற்றைக் கண்டித்து, வேத வாக்யங்களுக்கு
உண்மையான அர்த்த விசேஷங்களைச் சொல்லி, வேதங்களைக் காத்தார்.

————

15-அமுநா தபந அதிசாயி பூம் நா
யதி ராஜேந நிபத்த நாயக ஸ்ரீ
மஹதீ குரு பங்க்தி ஹார யஷ்டி
விபுதா நாம் ஹ்ருதயங்கமா விபாதி

ஸ்வாமியின் தேஜஸ்ஸு ஸூர்யனை விட ஒளி மிக்கதாகும்
நன்கு கற்று அறிந்த ஞானிகள் தங்கள் மார்பில் எப்போதும் ஆச்சார்ய பரம்பரை என்னும்
இரத்தின மாலையை மானசீகமாக அணிந்து இருப்பார்கள்
அந்த குருபரம்பரை மாலையின் நடுநாயகமாக நம் ஸ்வாமி உள்ளார்

(ராமானுஜம்) மையமானது மற்றும் அணிபவரின் இதயத்திற்கு மிகவும் பிரியமானது மற்றும் அருகில் உள்ளது.

அமுநா-அ சவ் -அவர் இவர் உவர் -சப்தம் -வந்தாய் போ வாராதாய் வாராதாய் போல் வருவான் -பிரத்யக்ஷம் இல்லை
மானஸ அனுபவம் -ஆழ்வாருக்கு -உரு வெளிப்பாடு பாவனா பிரகர்ஷம் -பிரத்யக்ஷ சாமானாகாரம்-அத்யந்த ப்ரீதியால்
அனவரத சிந்தனை -ஆண்டாளுக்கு பாவனா பிரகார்ஷம் –
தேனை -அநேந-நடுவில் –அமுநா-என்றபடி
தபந அதிசாயி பூம் நா -தபந-அனந்த கோடி -சூர்யன் தேஜஸ் விஞ்சி –
யதி ராஜேந நிபத்த நாயக ஸ்ரீ -நாயக ரத்னம் -மத்திய மணி – பிரதானம் -அலங்கரிக்க
மஹதீ குரு பங்க்தி ஹார யஷ்டி-அத்யந்த பிரபாவம் குரு பரம்பரை ஹாரம்
விபுதா நாம் ஹ்ருதயங்கமா விபாதி -இருதயத்தில் இருந்து சந்தோஷப்பட வைக்கும்
விபாதி -விளங்கும் யாருக்கு விபுதா நாம் -ஜெயா விபூதி பதே-நிலத்தேவர்கள் -அமரர்கள் -நித்ய ஸூ ரிகளுக்கும்

தேஜோவானான ஸூரியனிலும்-விஞ்சிய தேஜஸை யுடைய நம் ஸ்வாமி
நாயக ரத்னமாக அமைந்துள்ளதால்
மிகவும் பெருமை யுற்ற குரு பரம்பரையான ரத்ன ஹாரமானது மிகவும் பெருமை யுடையதாய்
தத்வ வித்துக்களான வித்வான்களுக்கு சிந்தனைக்கு இனியதாக விளங்குகிறது –

பூர்வாசார்ய பரம்பரையில், யதிராஜர் ஸுர்யனை விடப் ப்ரகாசத்துடன் நடுநாயக ரத்னமாக விளங்குகிறார் .
இதனால், குருபரம்பரைக்கே ஏற்றம் .குருபரம்பரை என்கிற மணிகளால் ஆன ஹாரத்தில் ,
பண்டிதர்களுக்கு , ஹ்ருதய அங்கமாக (மனத்துக்கு உகந்ததாக —மார்பில் பொருந்தியதாக)
இந்த நாயகக் கல்லாக, ஸ்ரீ ராமானுஜர் விளங்குகிறார்

————————

16-அலூந பஷச்ய யதி ஷமாப்ருத
விபாதி வம்சே ஹரி தத்த்வம் அஷதம்
யத் உத்பாவ ஸூ த்த ஸூ வ்ருத்த
சீ தளா பவந்தி முத்தாவளி பூஷணம் புவ –

யதிராஜர் என்று போற்றப்படும் இராமானுஜ சித்தாந்தங்கள் அனைத்தும் அவற்றை எதிர்த்து வீண் வாதம் செய்ய இயலாதபடி உள்ளன
அவர் ஏற்படுத்திய பரம்பரையில் ஸ்ரீ ஹரியின் உண்மையான தன்மை சிறிதும் குறைவின்றி உள்ளது
இந்தப் பரம்பரையில் உள்ளவர்கள் தூய்மையானவர்களாக -சிறந்த ஒழுக்கம் உள்ளவர்களாக
தூய எண்ணம் கொண்டவர்களாக -பரமபதம் சென்றாலும் அங்கு உள்ளவர்கள் வரிசையில் முத்துபோன்று ஒளி மிக்கு ஆபரணம் போல் இருப்பார்கள்

அலூந பஷச்ய யதி -பக்ஷம் சிறகு -லூனம் வெட்டப் பட்ட
மைநாகம் பர்வதம் -கிருத யுகம் மலைகள் இறக்கை இருக்க -இந்திரன் வஜ்ராயுதம் கொண்டு ஷேத்திக்க –
வாயு காத்தது சமுத்திரத்தில் தள்ளப் பட்டதால் சிறகுகள் இழக்காமல் -சிரமம் தீர்க்க இளைப்பாற சொல்லிற்றே
ஷமாப்ருத –ஷாமா பூமி –ப்ருத் -பூதரங்கள் மஹீதாரங்கள் குல பர்வதங்கள் -பாஷ்யகாரர் அலூன பக்ஷம் கொண்ட பர்வதம் –
பகவத் அனுபவ கைங்கர்ய உபகார பரம்பரையை யாராலும் ஷேத்திக்க முடியாதே -பாஹ்ய குத்ருஷ்டிகள் -பக்ஷம் கண்டிக்க முடியாதே
விசிஷ்டாத்வைத பக்ஷம் -ஸ்திரம் என்றவாறு
பர்வதத்தில் மூங்கில்கள் -பச்சை பசேல் என்று இருக்குமே
விபாதி வம்சே ஹரி தத்த்வம் அஷதம்ஹரிதம் பச்சை –ஹரி தத்வம் பசுமை நிறம்
வம்சம் மூங்கில் பரம்பரை –வம்சீ புல்லாங்குழல் வம்சீ விபூதி கரன்
அஷதம்--குறைவற்று /விபாதி -விளங்கும் -தீர்க்கமான கரும் பச்சை நிறம்
சிஷ்ய பரம்பரை –வம்சம் –ஹரி தத்வம் ஸ்ரீ யபதி தத்வம் பொதுவானதே எல்லா சம்பிரதாயங்களில் -பசுமை நன்றாக விளங்கும் –
யத் உத்பாவ-யத்தில் இருந்து உண்டான –ஹரி தத்துவத்தில் இருந்து -விளைந்த முத்துக்கள்
ஸூ த்த – பவந்தி–வெண்மை
ஸூ வ்ருத்த பவந்தி–செறிந்த ஆகாரம்
சீ தளா பவந்தி-குளிர்ந்த
முத்தாவளி பூஷணம் புவ –லோகம் -இட ஆகு பெயர் -லோகத்தார்களுக்கு -என்றவாறு –
திருவடி சம்பந்தம் -திரு முடி சம்பந்தம் -ஏற்றம் பெற்ற பூர்வாச்சார்யர்கள் -வம்ச சப்தம் அனைவரையும் குறிக்கும் -ஸ்ரீ யபதியே பரதத்வம் என்பது குறைவற்று இருக்குமே
முத்துக்கள் -பரம பாகவதர்கள் -ஸமாச்ரயணம் பண்ணி -ஆச்சார்ய துல்யர் -வம்சத்தில் உதித்த முத்துக்கள் பிரபன்ன ஜனங்கள்
ஸூ த்த-தேவ்தாந்தாந்தரா உபாயாந்தர இத்யாதி சம்பந்தம் இல்லாத சுத்தி கொண்டவர்கள் மற்று ஓர் தெய்வம் உளது என்று இருப்பார் உடனும் உற்றாமல்
ஆச்சார்ய சம்பந்தம் விடாமல் –
தீபா உத்பன்ன ப்ரதீபங்கள் போலே இருப்பார்களே –
வ்ருத்தம்-அனுஷ்டானம் -துல்ய சீல வாயோ வ்ருத்தம்-சோபனமான வ்ருத்தம் –
சீதளம் -ராக த்வேஷாதிகள் இல்லாமல் குளிர்ந்த கடாக்ஷம்
1-4-ஆச்சார்ய லக்ஷணம் -வாடைக் காற்று -குளிர்ந்த ஸ்வ பாவம் காட்டும் என்று காட்டி அருளி –
சிலேடைகள் நிறைந்த ஸ்லோகம் -பர்வதம் -எம்பெருமானார் -அலூன பக்ஷம் வைதரம்யா த்ருஷ்டாந்தம்
-மூங்கில்கள் பசுமை -வெண்மை ஆகாரம் குளிர்ச்சி -வம்சம் -முத்துக்கள்

ராமானுஜரின் சிறகுகள் இன்னும் வெட்டப்படாத மைனாக மலை!
அவரது குழுவிலும், சீடர்களின் வரிசையில் (மூங்கில் போல) பசுமையான தன்மை நீடிக்கிறது
மற்றும் ஹரியின் கொள்கை உயர்வாக ஆட்சி செய்கிறது!
வரிசையில் உள்ள அனைத்தும் மிக உயர்ந்த தன்மையுடன் தூய்மையாக பிரகாசிக்கின்றன;
குளிர்ந்த மற்றும் இரக்கமுள்ள; பெரிய ஒளிவட்டத்துடன் உலகை முத்து மாலையாக அலங்கரிப்பார்கள்.
(வம்சம் என்றால் பரம்பரை மற்றும் மூங்கில்;
ஹரி என்றால் இறைவன் மற்றும் பச்சை நிறமும் கூட)

புறச் சமயிகளால் கண்டிக்க இயலாத எம்பெருமானார் தர்சனம் -ஆகிய பரதத்வம் —
ஸமஸ்த கல்யாண குணங்களோடும் -திவ்ய மங்கள விக்ரகத்துடன்
வெட்டிக் களையப் படாத இறகுகளை யுடைய பர்வதம் போலே-
(மைனாக பர்வதம் விருத்தாந்தம் -சிறகுகள் உண்டே பர்வதங்களுக்கு )
ஸூ ரஷிதமாக விளங்குகிறது
இந்த சம்பிரதாயஸ் தர்களான மஹான்கள் சத்துக்களையும்
குளிர்ந்த இதயம் படைத்தவர்களாயும்
பூமிக்கே அணிகலன்களாகயும் யுள்ளனர் –

ஸ்ரீ உடையவர், மைநாக மலையை ஒத்தவர்
மைநாக மலையின் சிறகுகள் துண்டிக்கப்படவில்லை.
அதைப் போல, இவருடைய மதமும் ,ஒருவராலும் துண்டிக்கப்படாதது.
இவருடைய சிஷ்ய பரம்பரையில் ( அதாவது ,பச்சை மூங்கிலாக உருவகப்படுத்துகிறார் )
ஹரிதத்வம் —பகவத் தத்வம் –பச்சையாக இருக்கிறது ( செழிப்பாக இருக்கிறது).
இந்த சிஷ்ய பரம்பரையான பச்சை மூங்கிலில் ( கணுக்கள் –மூங்கிலில் இருப்பதைப்போல, சிஷ்ய பரம்பரை ) ,
சிஷ்யர்கள் சுத்தர்கள், நல்ல ஒழுக்க சீலர்கள், ( குளிர்ச்சி–சீதளம் ), கருணை உள்ளவர்கள்–
இப்படி, முத்துவடம்போல, பூமாதேவிக்கு ஆபரணமாக ஆகிறார்கள்

————————

சந்திரன் உடன் ஒப்புமை —

17-அநபாய விஷ்ணு பத சம்ஸ்ரயம் பஜே
கலயா கயா அபி கலயா அபி அனுஜ்ஜிதம்
அகளங்க யோகம் அஜடாசய உதிதம்
யதிராஜ சந்த்ரம் உபராக தூரகம் –

பகவானின் திருவடிகளை எப்போதும் பற்றி உள்ளவர்
அனைத்து ப்ரஹ்ம வித்யைகளின் மூலமும் சிறிதும் கைவிடாதபடி உள்ளவர்
எந்தவித தோஷத்தாலும் தீண்டப்படாதபடி உள்ளவர்
மூடர்கள் மனதில் நிலை பெறாமல் உள்ளவர்
உலக விஷய ஆசைகளுக்கு அப்பால் உள்ளவர்
தன்னை அடியவர்களுக்கு சந்திரன் போல் ஆஹ்லாதகரமாக குளிர்ந்து உள்ளவர்
இப்படிப்பட்ட ஸ்வாமியை அடியேன் சரணமாகப் பற்றுகிறேன் –

அநபாய விஷ்ணு பத சம்ஸ்ரயம் பஜே
சிரஸ் சம்பந்தம் உண்டே அபாய தேவதாந்த்ர சிரஸ்
அநபாய விஷ்ணு பாத ஸம்ஸராயம்
கலயா கயா அபி கலயா அபி அனுஜ்ஜிதம் -உஜ்ஜிதம் -விடப்பட்டது –கலா அவயவம் வித்யைகள் –
அகளங்க யோகம் -களங்கமே இல்லையே
அஜடாசய உதிதம் -ஜடம் -அசேதனம் -ஜல சமுத்திரத்தில் இருந்து உதயம் -பரப்ரஹ்மம் சங்கல்பத்தாலே இவர் ஆவிர்பாவம்
யதிராஜ சந்த்ரம் உபராக தூரகம் -அஸூர கிரஹங்கள் பீடிக்கப் படும் -மீமாம்சகர்கள் சேஷஷ்வர -ராகு -சிரஸ் மட்டும் -கேது சரீரம் மட்டும் –
சுருதி சிரஸ் -கர்ம காண்டம் தனியாக பூர்வ மீமாம்சகர்கள் -பாட்ட பிராக்கள் ராகு மீமாம்சகர்கள்
அத்வைதிகள் கேது -கர்ம விசாரம் வேண்டாம் என்பர்
-உபராகம் -கிரஹணம் –தூரகம் -தத் ஸ்பர்சம் அற்றவர்

பகவான் திருவடிகளையே இடைவிடாமல் பற்றியபடியே -தோஷங்கள் தீண்டாமல் -மூடர்கள் மனசில் நிலை பெறாமல்
உலக விஷய ஆசைக்கு அப்பால் உள்ளவர் -தன்னை அண்டியவர்கள் இடம் சந்தரன் போலே குளிர்ந்து இருப்பவர் –
இப்படிப்பட்ட ராமானுஜரை நான் அடைகிறேன் –
விஷ்ணு பதம் -ஆகாசம் -கர்ப்ப லக்ஷணம் – இடை வெளி -மணி வயிறு வாய்த்தவன் என்பதால்
-அபாயம் இல்லாத அநபாயமான விஷ்ணு திருவடிகளில் அன்றோ இந்த சந்திரன்-
ஷயம் இல்லாத -களங்கம் இல்லாத சந்திரன் அன்றோ இவர் –
அஜாடம் அஜலம் -ஜலாசயம் சமுத்திரம் -முட்டாள் கூட்டம் -அறிவற்றார் அறியார்கள் இந்த சந்த்ர பிரபாவம் –
உபராக தூரகம் மறைக்க முடியாத தேஜஸ் கொண்டவர் –

ராமானுஜர் ஒரு உண்மையான சந்திரன்.
பௌர்ணமி நிலவு இறைவனின் பாதமாகிய பாதுகாப்பான வானத்தில் நிலை பெற்றுள்ளதால்.
சந்திரன், இலக்கங்கள் நிறைந்தது (அதாவது 16 கலைகள்), பரிபூரணமாக இருப்பது, குறைபாடுகள் இல்லாதது,
இப்போது நீர் ஆதாரங்கள் காரணமாக, கிரகணத்திற்கு உட்பட்டது அல்ல;
எனவே ராமானுஜரும் பாதுகாப்பான விஷ்ணு வாசஸ்தலத்தை நாடியுள்ளார்,
அனைத்து வித்யாக்களிலும் முழு தேர்ச்சி பெற்றவர்,
புலன் இன்பங்களை அனுபவிக்கும் மக்களிடமிருந்து வெகு தொலைவில் உள்ளார். அந்த ராமானுஜரை வணங்குகிறேன்

சந்திரன் களங்கம் உள்ளவன்
உபராகத்துக்கு க்ரஹணத்துக்கு உட் பட்டவன் –
ஸ்வாமி இடத்திலோ தோஷத்துக்கு பிரசக்தியே இல்லையே
சகல வித்யைகளையும் பூர்ணமாக அதிகரித்து –
தோஷம் அற்று –
மகான்கள் மனசில் சதா பிரகாசித்து –
ராக துவேஷாதிகளுக்கு புறம்பாயும்
உபராகத்துக்கு உட் படாத யதிராஜ சந்திரனை உபாசிக்கிறேன் –

யதிராஜர் சந்த்ரனுக்கும் மேம்பட்டவர் .
சந்த்ரன் ,நிலவினால் குளிர்ச்சியைக் கொடுத்து, மகிழ்விப்பதைப்போல,
யதிராஜரும் தன் அடியார்களுக்கு, பகவானிடத்தில் ப்ரபத்தியை அநுஷ்டிக்கச்செய்து,
பாபங்களைப்போக்கி மகிழ்விக்கிறார்.
சந்த்ரனைவிட கம்பீரமான தோற்றம் உடையவர்.
பகவானின் திருவடிகளையே எப்போதும் த்யானிப்பவர்.
எவ்விதக் களங்கமும் இல்லாதவர்.
ராகு, கேதுவால் சந்த்ரன் பீடிக்கப்படுகிறான்;
ஆனால், எம்பெருமானாரோ ,காம புருஷார்த்தங்களை விரும்புவாரோடு ஒருபோதும் சேராதவர்.
எம்பெருமானாரின் திவ்ய குணநலன்களில் ஈடுபட்டு அவருக்கு அடிமை செய்ய விரும்பி , பூஜிக்கிறேன்

—————

அவதார பிரயோஜனத்தை அருளிச் செய்கிறார் –

18-அபிகம்ய சம்யகநகா ஸூ மேத்ஸ
யதி சக்ரவர்த்தி பத பத்ம பத்த நம்
ஹரி பக்த தாஸ்ய ரசிகா பரஸ்பரம்
க்ரய விக்ரயார்ஹ தசயா சமிந்ததே

ஸ்வாமியின் திருவடிகள் ஒப்பில்லாத நகரம் போன்று உள்ளன
அந்த நகரத்தை அண்டுபவர்கள் சிறந்த ஞானம் கிட்டப் பெறுகின்றனர்
தங்கள் பாபங்கள் அனைத்தும் நீங்கப் பெறுகின்றனர்
அடியார்களுக்குத் தொண்டு செய்வதில் இன்பம் பெரும் நிலை அடைகின்றனர்
உயர்ந்தவற்றை வாங்குவதிலும் விற்பதிலும் –உயர்ந்த கல்வி பெறுவதிலும் அளிப்பதிலும் -தேர்ச்சி பெற்று மேன்மை அடைகின்றனர்

அபிகம்ய சம்யக்
-சேர்ந்து அடைந்து -எங்கே என்றால் -திடமான சித்தம் சாமர்த்தியம் –சம்யக் -ராமானுஜ யதிராஜா ஸார்வ பவ்மன்
திருவடி தாமரை ஆகிய பட்டணத்தில் -அபிமதம் பெற -அநிஷ்ட நிவ்ருத்தி இஷ்ட பிராப்தி பெற -மற்ற எங்கும் வாழ்வு அற்று
நாடு நகரமும் நன்கு உடன் -அறிய -ஒரு நாயகனே இவர் அன்றோ -நாடு கிராமம் அவிசேஷஞ்ஞர் -நகரம் பட்டணம் விசேஷஞ்ஞர்-
-அல்பம் மகா ரத்னம் வரை பெறலாமே -பலர் வாழும் பட்டணம் -மீண்டும் கிராமம் போகாதவர் -திருவடிகளில் வாழ்வு பெற்று இருப்பார்கள்
அநகா ஸூ மேத்ஸ–
அநகா–தோஷம் அற்ற -ஆச்சார்யர்- பகவத் -துல்ய -பக்தர்கள் -தோஷ ரஹித்தவம் -சத்ருக்னவ் நித்ய சத்ருகன்
– அநகா-கோதில் அடியார் –ஸ்வாபாவிக பகவத் பக்தியை அடியார் இடம் வைப்பவன் –
ஸூ மேத்ஸ-சோபனமான மதி -இத்தால் சம்பவிக்கும் -ஆச்சார்ய அபிமானம் மூலம் -புத்தியில் சகலார்த்தங்களும் பிரகாசிக்கப் படுபவர் –
-அநகா -அத ஏவ ஸூ மேத்ஸ-
யதி சக்ரவர்த்தி –
யதிராஜாக்களுக்கு ராஜா -சர்வ பவ்மன்-
பத பத்ம பத்த நம் –
திருவடி தாமரை ஆகிய -பட்டணம் –
பத்ம ரேகை -சங்க ரங்க கல்பக -த்வஜ –சரணாரவிந்தம் –
இலச்சினை பட நடந்து –தளர் நடை நடப்பான் -அசாதாரண -ஆச்சார்யர் திருவடிகளுக்கு பத்ம ரேகை பிரதான்யம் -சக்கரவர்த்தி லக்ஷணம்
உறுதி உடன் வாழ -சாமர்த்தியம் உடன் சென்று அடைந்த –சம்யக் அதிகம்ய –
ஹரி பக்த தாஸ்ய ரசிகா-பவந்தி-ஹரி பக்தர்களாக இருந்து அனகர் ஆகி வளர்ந்து -அடியார் அடியார் -சேஷ பூத -சரம நிலை -அடைந்து
பரஸ்பரம் க்ரய விக்ரயார்ஹ தசயா-சமிந்ததே –
நன்கு வளர்கின்றார்கள் -இந்ததே –சம் இந்ததே -பிறர் பார்த்து அதிசயிக்கும் படி -எந்த அளவுக்கு என்றால் –
அடியார் அடியார் –அடியோங்களாக வளர்ந்து -புருஷார்த்த காஷ்டை -அடைகிறார்கள் –
நிரவதிக ப்ரீதி உடன் ராகம் உந்த விதி என்பதால் இல்லாமல் –
ரசிகர் -பூர்ண திருப்தி இத்தால் அடைபவர்கள் -இது மேலும் வளர்ந்து –சமிந்ததே –
பரஸ்பரம் க்ரய விக்ரயார்ஹ தசயா -தசை அடைந்து -ஒருவர் ஒருவரை -விற்கும் படி -பரஸ்பரம் –பரகா பரம் -பரி பூர்ண உரிமை என்றபடி –
எம் தம்மை விற்கவும் பெறுவார்கள் -கேசவா என்னும் கிளர் ஒளி யாகிய மூர்த்தி என்று பேசும் அடியார்கள்
நித்ய விபூதி துல்யம் அன்றோ இவர் திருவடிகள் -பரஸ்பரம் இப்படி இருப்பார்களே -சேஷத்வ பாரதந்தர்ய காஷ்டையில் இருப்பார்களே –
பட்டணம் சென்று வேலை பார்க்க படித்து மேலும் மேலும் வளர்வது போலெ எதி சக்ரவர்த்தி திருவடிகளை அடைந்து –
மீட்சி இல்லாமல் இந்த காஷ்டையிலே இருக்கப் பெறுவோம் -ஸ்வரூப ஆவீர் பூதம் – அடைவோம் -மதுரகவி நிலையையை பெறப் பெறுவோம்
ஸ்ரீ ராமாயணம் போலே பகவத் ஸமாச்ரயணம் திருவாய் மொழி போலே ஆச்சார்யர் ஸமாச்ரயணம்

பெரிய மனிதர்களும், களங்கமற்றவர்களும், கற்றறிந்தவர்களும், உண்மையான பெருநகரத்தை நாடுவதன் தகுதியை சரியாகப் பகுத்தறிவார்கள்,
யதி-சக்கரவர்த்தியின் பாதங்கள். அவ்வாறு குடியேறினாலும், அவர்கள் களத்தில் அறிவாளிகள், பக்தர்களுக்கு அடி பணிந்தவர்கள்;
பாகவதங்களால் பொருட்களைப் பண்டம் போல வாங்கவோ அல்லது விற்கவோ,
சரியான மனப்பான்மையுடன், மனதளவில் தயாராக இருக்கிறார்கள்.

முன்பு மந்த மதிகளாயும் நல் நடத்தை இல்லாதவர்களாயும் இருந்தவர்கள்
அண்ணல் இராமானுசன் வந்து தோன்றிய அப்பொழுதே நண்ணரும் ஞானம் தலைக் கொண்டு
நாரணற்கு ஆளாயினரே-என்கிறபடியே
நல்ல புத்தி யுடையவர்களாய் குற்றம் அற்றவர்களாய்
எம்பெருமானார் திருவடிகள் ஆகிற திவ்ய நகரத்தை அடைந்து
பாகவத பண்புகளில் நிலை பெற்று
ஒருவருக்கு ஒருவர் விற்கவும் வாங்கவுமாம் படி விளங்குகின்றனர்

குற்றமில்லாத, வித்வான்களான பாகவத கைங்கர்ய அநுபவம் மிகுந்தவர்கள்
யதிராஜரின் திருவடித் தாமரை என்கிற நகரை அடைந்து, ஒருவரை ஒருவர்
விற்கவும் வாங்கவும் இருக்கும் நிலையிலே தங்களைப் பரிமாறிக் கொள்கின்றனர்.
( ஒரு பாகவதருக்கு பகவத் ஆராதனத்துக்குச் சில பொருட்கள் வேண்டியிருக்க பணம் போதாதபோது,
அப்போது அங்கு வந்த பாகவதர், என்னை விற்றுக் கிடைக்கும் பணத்தை, பகவத் ஆராதனத்து செலவுக்கு ,
உபயோகப்படுத்துங்கள் என்றாராம் இப்படி, ஸ்ரீவைஷ்ணவர்கள் ஒருவர் மீது ஒருவர் பொறாமை
இல்லாமல் , ஒருவருக்கொருவர் உதவுவது )

—————

அப்படி உலகோர் திருந்தியமைக்கு தாமே த்ருவ்ஷ்டாந்தம் –

19-புருஷ அதிவாத பரிவாத பைசு ந
ப்ரப்ருதி ப்ரபூத பத நீய பங்கி லா
ஸ்வ ததே மமாத்ய ஸூ பகா சரஸ்வதீ
யதிராஜ கீர்த்தி கதைக விசோதிதா

என்னுடைய வாக்கு என்னும் நீரானது இதுவரை எப்படி இருந்ததது என்னில்
கடுமையான சொற்கள் நிறைந்ததாகவும்
எதனையும் மிகைப்படுத்திக் கூறுவதாகவும் மற்றவர்கள் குற்றங்களைப் பழிப்பதாகவும்
அவர்களை பற்றித் தகாதது கூறுவதாகவும் இருந்தது
இது போன்று பலவிதமான தோஷங்கள் கூடியதாகக் கலங்கிக் காணப்பட்டது
ஆனால் அதில் இடைப்பட்ட ராமானுஜர் சம்பந்தம் என்னும் தேத்தாங்கொட்டை மூலம்
எனது வாக்கு என்னும் நீர் தூய்மை பெற்று இப்போது பரி சுத்தமாகவும் இனிப்பாகவும் உள்ளது

இதன் விளைவாக, சாதுக்களுக்குப் பிரியமாக இருக்க வேண்டிய சரியான உச்சரிப்பு இப்போது என்னிடம் உள்ளது.

புருஷ அதிவாத பரிவாத பைசு –
துன்பம் கொடுக்கும் கடுமையான -இல்லை என்று நெடும் சொல்லால் மறுத்த -நீசன் -பாருஷ்யம் கடும் சொல் –
அதிவாத -மிகைப் படுத்தி -யதார்த்த வாதி இல்லாமல் -சத்யா வாதித்தவம் இல்லாமல் –
வாய்மை எனப்படுவது யாதொன்றும் தீமை இல்லாத சொல் -அயோக வியத்தேசேதம் -தீமை இல்லாத சொற்கள் எல்லாம் வாய்மை இல்லை
பரிவாதம் -குணங்களில் செயல்பாடுகளில் தோஷம் சொல்வது -தோஷம் கிரஹிக்கவே கூடாதே
நம் தோஷம் கண்டால் லாபம் -அசலார் குண கிரஹணம் லாபம் உண்டு நாம் மாற்றி பண்ணுகிறோம் ஹானி விளைவித்து கொள்கிறோம்
பைசு – தோஷம் இல்லாத போது சொல்வது கோள் சொல்வது -பரிவாக்கத்துக்கு மேலே உள்ள குற்றம் இது
தீக் குறளை சென்று ஓதோம்
ந ப்ரப்ருதி ப்ரபூத- பத நீய பங்கிலா –
இவை முதலான மகத்தான பாபங்களால்
அஸூயம் -பதநீயம் – பாபத்தால் –அப்ருதகத -கலங்கி –
ஸ்வ ததே மமாத்ய ஸூ பகா சரஸ்வதீ –
-மம சரஸ்வதி -வாக்கு –
யதிராஜ கீர்த்தி கதைக விசோதிதா-
இன்று யதிராஜர் பெரும் கீர்த்தி சொல்லாத தொடங்கி
தேத்தாங் கொட்டை போலே சுத்தப் படுத்தப் பட்டது
கதகம்-தேத்தாங் கொட்டை-
அப்புள்ளார் கிருபையால் கேட்டு சொல்லி விசோதித்தா -நன்கு சுத்தி கரிக்கப் பட்டது
ஸூபகா
அத்யந்த மங்களம் உண்டாக்கப் பட்டதே மேலும் –
ஸ்வததே
சோபனமும் ஆனதே தன்னாலே –
இனி மேல் சேஷி தம்பதி திருவடிகளில் சேரும் காலம் எண்ணி கால ஷேபம் செய்வதுவே க்ருத்யம் –

முன்பு அடியேனுடைய வாக்கு கொடுமை நிறைந்து –
பிறரை பழித்தும் கோள் சொல்லியும்
அதிவாதம் பண்ணியும் –
இதனால் தூய்மை அற்றதாய் சேறு போலே கலக்கம் உற்று இருந்தது –
ஸ்வாமியைப் பற்றியபின் -ஸ்வாமியுடைய பிரபாவம்
ஆகிற தேத்தாம் கொட்டை யால் தெரிவிக்கப்பட்டு
அனைவராலும் ருசிக்கும் படி அழகாய் அமைந்ததே –

குளத்தில் அழுக்காக இருக்கும் நீர் , தேத்தாங்கொட்டையினால் தெளிவைப் பெறுவதைப் போல,
அடியேன் பேச்சுக்கள், குத்தல்,மிகைப்படுத்துதல், வம்பு, கோள் சொல்லல், இதுபோன்ற குற்றங்களால்
குழம்பி இருந்தபோது, எம்பெருமானாரின் புகழ் பரவிய அடியேனின் சொற்களால் தெளிவடைந்து
பெரியோர்கள் கொண்டாடும் நிலையில் உள்ளது.

——————————

இப்படி தமக்கு வாழ்ச்சி அளித்த எம்பெருமானார் திருவடிகளில் –
அத்திருவடிகளின் பிரபாவத்தை வாயாறப் பேசி சரணம் புகுகிறார் –

20-அனுகல்ப பூத முரபித் பதம் சதாம்
அஜஹத் த்ரிவர்க்கம் அபவர்க்க வைபவம்
சல சித்த வ்ருத்தி விநிவர்த்தந ஔ ஷதம்
சரணம் யதீந்திர சரணம் வ்ருணீ மஹே –

ஸ்வாமியின் திருவடிகள் எப்படிப்பட்டவை என்னில்
ஞானவான்களுக்கு இவை முன்னாக எம்பெருமானின் திருவடிகளும் முக்யம் அற்றவையாகவே தோன்றும்
ஆறாம் பொருள் இன்பம் இவற்றை எதையும் துறக்காமலேயே மோக்ஷ இன்பத்தை அளிக்க வல்லவை
கலக்கம் நிறைந்த மனநிலையைப் போக்கும் மருந்தாகவே உள்ளன
இப்படிப்பட்ட திருவடிகளை அடியோங்களான நாம் சரணம் என்று நாடுவோம்

இந்த பாதங்கள் சரணடைந்தவர்களுக்கு, (தர்மம், அர்த்தம், காமம்,) மற்றும் மோக்ஷம்
ஆகிய இலக்குகளையும் பாதுகாக்கும்.
அவர்கள் பலவீனமானவர்களின் போக்குகளை சரி செய்வதில் வல்லவர்கள்

அனுகல்ப பூத முரபித் பதம் சதாம்
சத்துக்களுக்கு-சதாம் -பாகவத ஆச்சார்ய சேஷத்வ ரதி உடன் உள்ளவர்க்கு
முரபித் பதம் -முராரி -விரோதி நிராசன சீலன் திருவடிகள் -யவரை பற்ற அநு கல்பம் -பிரதான கல்பம் -திவ்ய தம்பதிகள்
-பூமி நீளா-தேவி -நித்ய ஸூ ரீகல் -ஆச்சார்யர் அநு கல்பம் –
சத்துக்கள் ஆராதனத்தில் பாஷ்யகாரர் பிரதானம் -முராரி பதம் அநு கல்பம் ஆக்கப் படும்
-வடுக நம்பி நிலை -நம் பெருமாள் நீர் சேவியும் எம்பெருமானுக்கு நான் பால் காச்சி அமுது செய்விக்க வேண்டுமே
அஜஹத் த்ரிவர்க்கம் -அபவர்க்க வைபவம்
இம்மையும் சாதித்து வானவர் நாடு -நீ கண்டு கொள்-என்று வீடும் தரும் –
வாய் கொண்டு மானிடம் பாட வந்த கவி அல்லேன் -ஆழி பிரான் எனக்கே உளன் –
இவரும்-அப்படியே அருளுவார் –
அஜஹத் – முக்கிய அர்த்தம் அமுக்கிய அர்த்தம் -காக்கைகள் இருந்து தயிரை காப்பாற்று -பூனை வந்தது -ஒரு காக்காய் வர வில்லை –அஜஹத் -லக்ஷணை
காக்கையும் மற்றவற்றையும் காட்டுவது போலே
அஜஹத் த்ரிவர்க்கம் -அபவர்க்க வைபவம்
இங்கு உள்ள காலம் வரை ராமானுஜர் அடியார் என்ற புகழும் கொடுத்து மேலே அபவர்க்க வைபவம் கொடுக்கும்
சல சித்த வ்ருத்தி விநிவர்த்தந ஔஷதம்
மனஸ் சஞ்சலம் -நிவர்த்திக்கும் -சஞ்சல மநோ வ்ருத்தி -நின்றவா நில்லா நெஞ்சு –
அப்பியாசம் வைராக்யம் கொண்டே வெல்ல வேண்டும் -கீதை -போகாத ஊருக்கு வழி அவன் சொல்ல
-உடையவர் திருவடிகளை வரிக்கவே இது சாத்தியம் ஆகும் -இது ஒன்றே மருந்து –விசேஷ விவிதமான நிவர்த்தனம் –
சரணம் யதீந்திர சரணம் வ்ருணீ மஹே –
ஸ்ரீ பாஷ்யகாரர் திருவடியை -புகலாக வரிக்கிறோம் -அவன் திருவடிகள் ஸ்தானத்தில் இவர் ஒரு திருவடியே
உபாயம் க்ருஹம் ரக்ஷகம்-சரணம் சப்தம் –
வ்ருணீ மஹே –லும் – உத்தம புருஷ பஹு வசனம் -வரித்தோம் ஆகிறோம் –

சத்துக்களுக்கு இத்திருவடிகள் பகவத் சரணாரவிந்தமும்
இதற்கு அடுத்த படியே என்னும்படி பரம ப்ராப்யமாய் இருக்கும் —
பெரு நிலம் அளிக்கும் –
எல்லாம் தந்திடும் –
நிலையில்லா என் பாவி நெஞ்சத்தை தன்னிடத்தில் நிலை நிறுத்த மருந்தாயும் இருக்கும் –

இப்படிப் பட்ட திவ்ய சரணாரவிந்தங்களை புகலாகப் பெற்றேன் என்று ப்ரீதர் ஆகிறார் –

எம்பெருமானாரின் திருவடிகள் ,பகவானின் திருவடிகளையும்விட மேன்மையானவை.
( பகவானின் திருவடி இரண்டாம் பக்ஷம்)
இம்மை, மறுமை பலனை அளிக்கவல்லவை.
சஞ்சல புத்தியைத் தெளிவித்து, தத்வ அர்த்தங்களை உணர்த்தும் .
இப்படிப்பட்ட ,யதிராஜரின் திருவடிகளில் சரணம் அடைகிறேன்.

சோமாசி ஆண்டான் திருநாராயண பெருமாள் செல்லப் பிள்ளைக்கு பாட –
எம்பெருமான் ஆட –
உடையவர் சேவித்து களிப்பார்-
மோக்ஷ சாம்ராஜ்யம் நம் இராமானுசன் இட்ட வழக்காய் இருக்கும் –
உமது ஸூக்ருத பலம் நீர் பாட நீர் களிப்புறம் படி நான் ஆடிக் காட்டுகிறேன் –
உடையவர் தந்தால் உமக்கு பேறு உண்டு -என்றதும்
அன்று முதல் தேவு மற்று அறியேன் என்று அதி ப்ரவணராய்
கைங்கர்யத்தில் ஈடுபட்டு பாவ பந்தத்துடன் -எம்பெருமானார் -என்பர் –
பட்டர் நம்பெருமாள் என்று சொல்வது போலே –

—————

இப்படி பெருமை வாய்ந்த யதிராஜ சரணாரவிந்தத்தை ஆஸ்ரயித்தவர்களுடைய
பெருமையை அருளிச் செய்கிறார் –

21-ஸ்வ சித அவதூத பரவாதி வைபவா
நிகமாந்த நீதி ஜலதே தல ஸ்ப்ருச
பிரதிபாதயந்தி கதிம் ஆபவர்க்கிகீம்
யதி சார்வ பௌம பதசாத் க்ருதாசயா –

ஸ்வாமியின் திருவடிகளை தங்கள் மனத்தில் பதித்தவர்களும்
அவரது திருவடிகளில் தங்கள் மனத்தை வைத்தவர்களும் ஆகிய சான்றோர்களின் வலிமை என்ன
தங்கள் மூச்சுக் காற்று மூலமே தங்கள் வாதங்களை எதிர்ப்பவர்களை வீழ்த்தி விடுவர் .
வேதாந்த நீதி என்னும் ஆழ் கடலின் தரையை அடைபவர்
மோக்ஷத்தைப் பற்றிய உபாயத்தைப் போதிப்பதில் வல்லவர் ஆவார்

ஸ்வ சித அவதூத பரவாதி வைபவா –
உசுவாச நிசவாதம் மூலமே அவதூதம் ஆக்கி
சத் ஸம்ப்ரதாயிகள் இல்லாத பாஹ்ய குத்ருஷ்டிகள் பர வாதிகள் -பிரகட -ப்ரசன்ன-இரண்டு வகைகள் உண்டே
அநாயாசேனே-நிரசித்து –
பதஞ்சலி -ஆதிசேஷனாக இருந்து -பாணினி அஷ்டாத்யாயி வியாக்யானம் மஹா பாஷ்யம் -சேஷாவதாரம்-வாதாசனம் -வாக்கையே உண்டு –
திரைக்கு உள்ளே இருந்து -ஆதி சேஷன் உரு கொண்டு சங்கைகள் தீர்த்து –ஒருவர் திரை விலக்க பஸ்மம் ஆனார்கள் அனைவரும் –
ஒருவர் வெளியில் சென்று வர -ப்ரஹ்ம ரஜஸ் ஒருவர் உஜ்ஜயினியில் இருந்து 3000 வருஷம் –
பச தாது பஸ்மாம் -பாடம் சொல்லி –கோவிந்த பாதர் தொடையில் எழுதி -ஆடு மேய்க்கும் அலமேலு பிழைக்க வைக்க
எழுதின இலைகள் ஆடு சாப்பிட மீதி உள்ளது தான் மஹா பாஷ்யம் என்பர் –
சிலையினால் இலங்கை செற்ற தேவனே தேவன் ஆவான் -கிருஷ்ணன் உக்தியால் செய்வான் -பெருமாள் ஆர்ஜவ வியாபாரம் -அது போலே ராமானுஜர் -என்பர் –
கலையினால் பெற்றவன் கிருஷ்ணன் –
தொண்டனூர் -நம்பி பிரதிஷ்டை-
அமுதனார் -ஆதிசேஷன் அவதாரமேயென்று சொல்ல வில்லை -யதிராஜா விம்சதியில் சொல்ல வில்லை –
விஷ்வக் சேனர் -பஞ்சாயுதம் என்பர் தேசிகன் –
தங்கள் மூச்சுக்கு காற்றாலே விரட்டி அடிக்கப் பட்ட -சாமர்த்தியம்
நிகமாந்த நீதி ஜலதே தல ச்ப்ருச-
வேதாந்த நியாயங்கள் ப்ரஹ்ம ஸூத்ர -அதிகரண நியாயம் -சமுத்திரம் -கரை காண இயலாத -மூழ்கி முத்து எடுப்பவர்
-தல ஸ்பர்சி மூக்கி முத்து எடுப்பவர்கள் –
பிரதிபாதயந்தி கதிம் ஆப வர்க்கிகீம்
அபவர்க்கம் மோக்ஷ பிராப்தி -இதுதான் பரம புருஷார்த்தம் என்று ஸ்வரூபம் காட்டி
யதி சார்வ பௌம பதசாத் க்ருதாசயா —
ஆசயா சந்தனம் -யதி ராஜ யதி சக்கரவர்த்தி யதி சார்வ பௌம-பூமி முழுவதையும் தனக்கு ஆக்கிக் கொண்ட –
சாத் க்ருதா-ஒன்றிலே சமர்ப்பிக்கப் பட்டு
திருவடிகளில் சமர்ப்பிக்கப் பட்ட ஹிருதயம் உள்ளவர்கள் –
கிருபையா கேவலம் ஆத்ம சாத்க்ரு -ஆளவந்தார் –

ராமானுஜரின் பாதங்களில் அசைக்க முடியாத பக்தியைப் பற்றுபவர்கள், வேதாந்த சாஸ்திரப் பெருங்கடலில் ஆழமாக ஆழ்ந்து
(தேர்ந்த கருத்துகளின் முத்துக்களை எடுக்க), அவர்கள் மற்ற அமைப்புகளிலிருந்து போட்டியாளர்களை
மிகவும் சிரமமின்றி தோற்கடித்து, முக்தியின் பாதையில் நம்மை வழி நடத்துகிறார்கள்.

அன்று ஆரணச் சொல் கடல் கொண்ட ஒண் பொருள் கண்டு அளிப்ப-என்றபடி
ஸூஷ்ம அர்த்தங்களை தெரிந்து தெளிவாக உபதேசிப்பார்கள் அன்றோ –
இவர்களுடைய ஹூம் என்ற மூச்சுக் காற்றாலே பிரதிவாதிகள் அனைவரையும் அழிக்கக் கூடியவர்கள் –
எம்பெருமானார் திருவடிகளில் நிலை பெற்ற மனசை உடையவர்களாய்
தாங்களே மோக்ஷ சாம்ராஜ்யம் அளிக்க வல்லவர்கள் –

யதிஸார்வ பௌம —யதீச் சக்ரவர்த்தி ,ஸ்ரீ உடையவர்.
இவருடைய திருவடிகளில் மனத்தையே சமர்ப்பித்தவர்கள் பாகவதோத்தமர்கள்;
வேதாந்த ஞானம் மிக்கவர்கள்; பிறமதப் பிரசாரகர்களை நிரஸிப்பவர்கள்

———————

மீண்டும் உடையவர் சரணம் பற்றுகிறார் —

22-மூலே நிவஸ்ய மஹதாம் நிகம த்ருமாணாம்
முஷ்ணன் பிரதாரக பயம் த்ருத நைக தண்ட
ரங்கேச பக்த ஜன மானஸ ராஜ ஹம்ச
ராமானுஜ சரணமஸ்து முனி ஸ்வயம் ந

ஆழ்ந்த வேர்கள் கொண்ட பரந்த வேதம் என்னும் மரத்தின் கீழ் எப்போதும் அமர்ந்துள்ளவர்
வேதங்களை வஞ்சகம் மூலம் வீழ்த்த வல்லவர்கள் இடம் இருந்து அதனைக் காத்து அதன் அச்சம் போக்குபவர்
திருக்கையில் த்ரிதண்டம் ஏந்தியவர்
ஸ்ரீ அரங்கன் திரு முற்றத்து அடியார்களின் மனம் என்னும் தடாகத்தில் வாழும் பரம ஹம்ஸர்
இப்படிப்பட்ட ஸ்வாமி தாமாகவே வந்து தனது பேறாகவே அடியோங்களை ரக்ஷித்து அருளட்டும்

மூலே நிவச்ய மஹதாம் நிகம த்ருமாணாம்
வேதாந்தம் மஹத் வர்ஷங்கள்-கல்ப விருக்ஷங்கள் -அநந்தம்-மூல -கல்ப சாகி பர ப்ரஹ்மம் -இவரே ரக்ஷகம் –
மூலம் -வேர் நிவஸ்ய அமர்ந்து –
ஸ்ருதிகளையும் சிறுது சிரசில் உள்ள அவனும் இவரால் ரக்ஷிக்கப்
முஷ்ணன் பிரதாரக பயம் த்ருத நைக தண்ட
பிரதாரக -வஞ்சகர் -ஏமாற்றுபவர் –த்ரி தண்டம் வைத்து நிரசித்து -ரக்ஷித்து –நைக தண்ட -அநேக தண்டம் -த்ரி தண்டம்
ரங்கேச பக்த ஜன மானஸ ராஜ ஹம்ச
மானஸ சரோவர் -தீர்த்தம் -புனிதம் -அதிலே ராஜ ஹம்சம் -சிரேஷ்ட பஷியில் சிரேஷ்டர்
ராமானுஜ சரணமஸ்து முனி ஸ்வயம் ந –
சர்வத்தையும் சாஷாத்காரித்து -அநவரதம் மனனம்-மனன சீலர் முனி –
நமக்கு உபாய பூதர் -ரக்ஷகராக ஆகக் கடவர் –
வந்தார் தாமே -அசை-சிந்தாமணி மாலை -வந்தார் தாமே -தம்மை நிர்பந்திப்பார் பிரார்த்திப்பார் யாரும் இல்லாமல் வந்தார் -என்ற கருத்தில் –
ஸ்வயம் -நம் இடம் அபேக்ஷிக்காமல் தானே வந்து –

வேத முறைக்கு எதிராகக் கலகம் செய்யும் மதவெறியர்களை விரட்டியடிப்பவர்;
மற்றும் பக்தர்களின் (ராமானுஜரின்) இதயத்தின்  ” மானசரோவரில் ” அரச அன்னம் போல் நிற்பவர்

பரந்து கிடைக்கும் வேதமாகிய பெரிய மரத்தின் நிழலில்
கையில் முக்கோல் ஏந்தி அமர்ந்து வஞ்சனையுள்ள
குத்ருஷ்டிகளால் உண்டாகும் பயத்தை போக்கி அருளி –
ஸ்ரீ ரெங்கநாதன் அடியார்கள் மணம் ஆகிற தடாகத்தில்
ராஜ ஹம்சம் போலே சஞ்சரிக்கும் எம்பெருமானார் அடியேனுக்கு புகலாக வேண்டும் -என்கிறார் –

ராமாநுஜர் பரமஹம்ஸர். இந்தப் பரமஹம்ஸர்,
ஹம்ஸம் மாநஸரஸ்ஸில், பெரும் பெரும் மரங்களின் அடியே கூடு கட்டி வாழ்வதைப்போல,
திருவரங்கச் செல்வனுக்குத் த்ரிகரண சுத்தியாகத் தொண்டு செய்யும் பக்தர்களின்
மனம் என்கிற மாநஸரஸ்ஸில் சுகமாக வாழ்கிறார்.
அதாவது,
உடையவரை, ஸ்ரீவைஷ்ணவர்கள் ஆஸ்ரயித்து, அவரைப் பூஜித்து, இதயத்தில் இருத்தி , த்யாநம் செய்கிறார்கள் .
இந்த ஸ்லோகத்தில், ஸ்வாமி தேசிகன் ,உடையவரை ராஜ ஹம்ஸமாகவும், பரமஹம்ஸராகவும்
நினைத்துச் சரணம் அடைகிறார்.

———————

எம்பெருமானாரைப் புகலாக பற்றி அவர் அனுக்ரஹத்தால் விஷய ப்ராவண்யன் அற்றவன் ஆனேன் –

23-சத் மந்திர வித் ஷிபதி சம்யமி நாம் நரேந்திர –
சம்சார ஜிஹ்மக முகை சமுபஸ்த்திதம் ந
விஷ்வக் ததம் விஷய லோப விஷம்
நிஜாபி காட அநுபாவ கருடத்வஜ பாவ நாபி –

ஸம்ஸாரம் என்ற பெரிய நாகத்தின் வாய் மூலம் வெளிவந்த உலக விஷயங்களில் பற்று என்னும் கொடிய விஷமானது நான்கு திசைகளிலும் பரவி உள்ளது
அந்த விஷத்தைத் தனது மந்த்ரங்கள் மூலம் போக்க வல்ல பாம்பாட்டி போன்று யதிராஜர் உள்ளார்
எப்படி என்றால் -மிகவும் பெருமை யுடையவனும் கருடனைக் கொடியாக உள்ளவனும் ஆகிய பகவானைத் த்யானிப்பதன் மூலமே ஆகும்

சத் மந்திர வித் ஷிபதி
மந்த்ரங்களை அறிந்தவர் -சத் மத்ரங்கள் -சர்வ லோக க்ஷேமம் மங்களம் -அனுசந்திப்பார்க்கும் கேட்ப்பார்க்கும் –
மந்த்ரமும் அர்த்தமும் -வித் -அறிந்தவர் -ஸ்திர புத்தி கொண்டவர்
சம்யமி நாம் நரேந்திர –
நரர்களுக்கு -ராஜா -சம்யமி அடக்குதல் -யதி ராஜர் என்றபடி
சம்சார ஜிஹ்மக முகை சமுபஸ்த்திதம் ந
ஜிஹ்மகம் -சர்ப்பம் –ஜிஹ்மம் -அகங்கார மமக வக்ர கத்தி முன்னே பார்த்தோம்
சம்சார சர்ப்பங்கள்மூலம் நமக்கு வந்த
விஷ்வக் ததம் விஷய லோப விஷம் –
தொடர்ந்து சூழலில் அகப்பட்டு –விஷய லோப விஷம் -இந்திரியங்கள் சப்த்தாதி சிற்றின்ப விஷயங்கள் –லோபம்
-தாழ்ந்தது என்று அறிந்தாலும் விடாதே லோபி –
நிஜாபி காட அநுபாவ கருடத்வஜ பாவநாபி –
தனக்கே உரித்தான திட மஹாத்ம்யம்
கருடத்வஜ-கருடக் கொடியாக உடையவன்
பாவநா -த்யானம்
மந்த்ரம் -த்யானம் -சேர்ந்தே -இருப்பவை -பிரணவம் ஷிப ஸ்வாக -கருட மந்த்ரம் -ஆத்மாநாம் கருட இத த்யானம் செய்ய பலம் -கிட்டும் –
ஷிபதி-சப்தம் இதனாலே இங்கே –
சப்தம் அர்த்தம் இரண்டும் முக்கியம் மந்திரத்துக்கு -ஆடி ஆடி -2-4-பிரகலாதன் நரசிம்மன் -தாத்பர்ய ரத்னாவளி –
ஷபீத உஷா வல்லபன் -ஷிப்த லங்கம் -புள் உயர்த்தாய் -2-4-4–
அஷ்டாக்ஷர -ஷடாக்ஷர துவாதச அக்ஷரமந்த்ரம் -வியாபக மந்த்ரம் -சம்சார நிவ்ருத்தி -பக்தி யோகத்துக்கு இவை -அஷ்டாக்ஷரம் ஸ்ரேஷ்டம்
த்வயம் -பரந்யாசம் -பிரபத்தி –
நிஜாபி-ஸ்ரீ பாஷ்யகாரர் பெரிய திருவடி –நிஜ -சப்தம் -சாஸ்திரம் அம்ருதம் -பூர்வாச்சார்ய ஸூ ரஷிதாம் –நிஜம் சப்தம் அங்கும் -மங்கள ஸ்லோகத்தில்
பகவத் சிந்தனை பெரிய திருவடி போலே சிந்தனை பண்ணுபவர் என்றவாறு –

ராமானுஜர், ஆற்றல் மிக்க மந்திரங்களில் வல்லவர், மற்றும் உண்மையான பாம்பைக் கவர்ந்திழுப்பவர் –

விசுவாசிகள் அல்லாத விஷ பாம்புகளால் தனது பக்தர்கள் தாக்கப்படாமல் பார்த்துக் கொள்கிறார்.

உடல் முழுவதும் பரவியிருக்கும் (கருடனைப் பற்றித் தியானிப்பதன் மூலம்) உணர்வுப் பூர்வமான மோகம் என்ற விஷத்தையும் நமக்குக் குணப்படுத்துபவர்.

சதாச்சார்ய உபதேச முகமாய் நலம் தரும் சொல்லான திரு மந்த்ரார்த்தங்களை அளித்தும்
யதிகளுக்கு ராஜாவாகவும்-
நிரதிசய ப்ரபாவமும் யுடைய எம்பெருமானார் –
சம்சாரம் ஆகிய விஷ பாம்பு மூலம்
நம்முள் பரவி சூழ்ந்து இருக்கும் விஷய ப்ராவண்யம் என்கிற விஷத்தை
புட் கொடியனான எம்பெருமான் அனுக்ரஹம் கொண்டு போக்கடிக்கிறார் –

மால் பால் மனம் வைக்க மங்கையர் தோள் பற்று விட்டறும் என்றபடி –

நரேந்த்ரன் என்பவன் விஷவைத்யன் (பாம்பாட்டி )
இவன் ,மந்த்ர ஸித்தி உள்ளவர்களிடம் கருடமந்த்ரத்தை உபதேசமாகப் பெற்று,லக்ஷக்கணக்கான தடவை ஜபித்து,
ஸித்தி அடைந்து, எந்த ஸர்ப்பம் கடித்து இருந்தாலும் பல இடங்களில் பலமுறை கடித்து இருந்தாலும்,
கருட மந்த்ரத்தால் , பாம்பின் விஷம் முழுவதையும் இறக்கி, கடிபட்டவனைப் பிழைக்க வைக்கிறார்.

அதைப்போல, ராமானுஜரும், அஷ்டாக்ஷரம், த்வயம் போன்ற மந்த்ரங்களை பெரியநம்பிகளிடம் உபதேசமாகப்
பெற்று, தத்வ,ஹித, புருஷார்த்தங்களை நன்கு அறிந்து, தன் அடியார்கள் ப்ரபத்தியை அனுஷ்டிக்கச் செய்து,
அடியார்களின் ஸம்ஸார வ்ருக்ஷ விஷங்களை நீக்கி,நல்ல வாழ்வை அளிக்கிறார்.

—————

எந்தன் மெய் வினை நோய் களைந்தான் என்றார் கீழ் –
களைந்து நல் ஞானம் அளித்தனன் என்று போற்றுகிறார் இங்கு –

24-நாத ச ஏஷ யமி நாம் நக ரஸ்மி ஜாலை
அந்தர நிலீ நம் அப நீய தம மதீயம்
விஜ்ஞான சித்ரம் அநகம் லிகதி இவ சித்தே
வ்யாக்யாந கேளி ரசி கே ந கர அம்புஜேந –

ஸ்வாமியின் ஞான முத்திரையில் உள்ள திரு நகங்களில் இருந்து தேஜஸ்ஸூ ப்ரவாஹம்
அடியேன் உள்ளத்தில் நிறைந்த அஞ்ஞானம் என்ற அந்தகார இருளை நீக்குகிறது
உபதேசம் செய்ய வேண்டிய வகை அறிந்து தனது தாமரைத் திருக்கைகள் மூலம்
எனது உள்ளத்தில் சிறந்த ஞானம் என்னும் சித்ரத்தைத் தீட்டி அருள்கிறார்

நாத ச ஏஷ யமி நாம் –
யமி– யதி வாசக சப்தம் யதி நாதர்
ஏஷ– நம்மில் ஒருவர் -சக நித்ய ஸூரிகள்
நக ரஸ்மி ஜாலை –அந்தர நிலீ நம் அப நீய தம மதீயம்-
இருளை போக்கி எழுதுகிறார் -நகத்தில் இருந்து புறப்படும் தேஜஸ் கற்றைகளைக் கொண்டு
மதியம் தம -அந்தர் -உள்ளே உள்ள -அப நீயம் -போக்கி
விஜ்ஞான சித்ரம் அநகம் லிகதி இவ சித்தே
எழுதும் முத்திரை போலே -இவ-சப்தம் -4-1-6-அஸீனா அதிகரணம் -ஆஸீனா சம்பவாத் –
அசலத்தவம் -மலை போல த்யானம் -அசைவு இல்லாமல் இருப்பவை எல்லாம் த்யானம் இல்லை -அது போலே லிகதி இவ
எங்கே -சித்தத்தில் எழுதுகிறார்
எத்தை -தோஷம் அற்ற ஆத்மதத்வம் என்கிற சித்திரம்
அனேகம் ஆத்ம சித்திரம் -பகவத் சரீரம் என்ற உணர்வால் குற்றம் இல்லாத –விஜ்ஞான சித்ரம் அநகம்-
வ்யாக்யாந கேளி ரசிகே நகர அம்புஜேந –
வியாக்கியான முத்திரை –செந்தாமரைக் கைகளால்

ராமானுஜர் தனது வலது உள்ளங்கையில் அமர்ந்து, சைகையில், அறிவுரை மற்றும் அறிவுறுத்தல்.
பொலிவுடன் கூடிய நகங்கள், நம் இதயங்களில் உள்ள இருளை (அறிவை) அகற்றி,
இரு விரல்களையும் ஒருங்கிணைத்து, நம் இதயங்களில் ஒரு ஞானத்தை – தகவலறிந்த
ஓவியம் வரைவதற்குத் தயாராகிறது.

யோகீந்த்ரரான எம்பெருமானார்
என்னுள்ளே மறைந்து —
என்னைத் தீ மனம் கெடுத்து –
மருவித் தொழும் மனமே தந்து –
தம் திருக் கை தாமரைகளால் வியாக்கியான சைலிகளை
ரசித்துப் போற்றக் கூடிய என் உள்ளத்திலே
நல் ஞானம் ஆகிற சித்தரத்தை எழுதுகிறார் போலும் –

உடையவர்,யோகீச்வரன் . இவர், ஊனக்கண்ணால் பார்க்க இயலாததையும் பார்க்கும் சக்தி பெற்றவர்.
இவர், தமது உபதேச முத்ரை உள்ள வலது திருக்கர நகங்களின் காந்தியால், மனத்தில் மறைந்திருக்கும்
அறியாமை இருளை அகற்றி, ஞானத்தை உபதேசிக்கும் விதமாக , உபதேச முத்ரையோடு கூடிய திருக்கைகளில்,
இரு விரல்களையும் குவித்து, ஒப்பற்ற ஓவியர் போல ஒளிர்கிறார்

———————

இனி திருப்பொடு எழில் ஞான முத்திரை வாழியே -என்கிறபடியே
ஞான பிரதராய் எழுந்து அருளி யுள்ள யதிராஜரை சாஷாத் கரித்து மேலும் அனுபவித்து மகிழ்கிறார்
பாஷ்யகாரரை, பக்தி மூலமாக சாக்ஷாத்கரித்து,உபதேச முத்ரையோடு கூடிய திருமேனியை
ஸ்வாமி தேசிகன் ஸேவித்து அனுபவிக்கும் ஸ்லோகம்.

25-உத்க்ருஹணதீம் உபநிஷத் ஸூ நிகூடமர்த்தம்
சித்தே நிவேசயிதும் அல்ப தியாம் ஸ்வயம் ந
பச்யேம லஷ்மண முனே ப்ரதிபந்த ஹஸ்தாம்
உன்நித்ர பத்ம ஸூ பகாம் உபதேச முத்ராம்

நமது உள்ளத்தில் தகாத அறிவு மட்டுமே உள்ளது
இதனைப் போக்குவதற்காகவே யதிராஜர் தனது திருக்கையில் மலர்ந்த தாமரை மலர் போன்ற ஞான முத்திரை வைத்துள்ளார்
இதனைக் காணும் போது அவர் தானாகவே வலிய வந்து வேதாந்த உண்மைகளை நம் உள்ளத்தில் வைத்து அருளுவதாகவே தோன்றுகிறது
அத்தகைய ஞான முத்திரையை நாம் அண்டி இருப்போமாக

உத்க்ருஹணதீம் உபநிஷத் ஸூ நிகூடமர்த்தம்
உபநிஷத் ரகஸ்ய அர்த்தங்களை மேலே எடுத்து –
சித்தே நிவேசயிதும் அல்ப தியாம் ஸ்வயம் ந
மனசிலே வைத்து -முன்பு எழுதுவது போலே -இங்கே உபநிஷத்துக்கள் ரகஸ்யார்த்தங்களை எடுத்து நம் மனசில் வைத்து அருளுகிறார் –
அல்ப ஞானம் உள்ள நமக்கு –
பச்யேம லஷ்மண முனே ப்ரதிபந்த ஹஸ்தாம்
கண்டு -சேவித்து –
உன்நித்ர பத்ம ஸூ பகாம் உபதேச முத்ராம்
குவிந்த தாமரை மொட்டு போலே -உத்போதம் மலர்வது
வியாக்கியான முத்திரை உபதேச முத்திரை பர்யாயம் -திருமலை இன்றும் சேவிக்கிறோம்
ஹயக்ரீவர் -தேசிகன் -நிறைய இடங்களில் சேவிக்கிறோம் –
25 தத்வம் ஜீவாத்மா அறிய வேண்டிய –அஹங்கார மமகாரங்கள் அற்று உய்ய ஒரே வழி உடையவர் திருவடி –என்று-
இந்த 25 ஸ்லோகத்தில் அமைத்து அருளினார்-

உபநிடதங்களில் மறைந்திருக்கும் அர்த்தத்தை, மந்தமான புத்திசாலிகளின் இதயங்களில் ஆழமாக பதிய வைக்கும்
முயற்சியில் எழுப்பப்பட்ட, மலர்ந்த தாமரை போன்ற அவரது கையில் உள்ள முத்திரையை நாம் உணர்கிறோம்.

உபநிஷத்துக்குள் மறைந்துள்ள பொருள்களை மந்த மதிகளான நம்முடைய மனசில் பதிய வைப்பதற்காக –
உயர்ந்து இருப்பதும் –
அலர்ந்த தாமரை மலர் போல் மனத்துக்கு இனியதாய்
நமக்கு ப்ராப்தமான உபதேச முத்திரை யுடைய திருக் கைகளை சேவித்து களிக்கிறோம்-

என்ன உபதேசம் செய்கிறாராம் ?
ஸ்ரீமந்நாராயணனே பரதத்வம்; ஜீவர்களும் அசேதனங்களும் அவருக்கு சரீரம்; அந்தர்யாமி ப்ராஹ்மணத்தில்
( உபநிஷத் ) உள்ளதை, உபதேச முத்ரையைக் காட்டி,உபதேசிக்கிறாராம் .
நம்வீட்டில், நமக்குத் தெரியாமல்,இருக்கிற புதையலை , கையை உயரத் தூக்கிக் காட்டுவதைப்
போல, உபதேச முத்ரை இருக்கிறதாம்.
இவர், லக்ஷ்மண முநி
அபாத்ரத்தில் ஞாநோபதேசம் கூடாது என்பதை நன்கு அறிந்து, நம்மை நல்ல சத்பாத்ரம் என்று உணர்ந்து ,
உபதேச முத்ரையோடு ப்ரத்யக்ஷமாகி இருக்கிறார் என்கிறார்

——————

ஞான முத்திரையை கீழ் இரண்டு ஸ்லோகங்களில் அனுபவித்து
இனி ஸ்வாமி திருவாய் மலர்ந்து அருளும் ஸ்ரீ வாக்ய சைலிகளை போற்றுகிறார் –
உபதேசிப்பவர், அவரின் உபதேச முத்ரை,இவற்றை வர்ணித்தவர்
இந்த ஸ்லோகத்தில் உபதேசமொழிகளின் சொற்சுவை, பொருட்சுவையைச் சொல்கிறார்.

26-ஆகர்ஷணாநி நிகமாந்த சரஸ்வதீ நாம்
உச்சாட நாதி பஹி அந்த உபப்லவா நாம்
பத்த்யாநி கோர பவ சம்ஜ்வா பீடிதா நாம்
ஹ்ருதயாநி பாந்தி யதிராஜ முனே வசாம்சி –

யதிராஜரின் புண்ணிய கிரந்தங்கள் வேதாந்த வரிகளையும் அவற்றுள் உள்ள மறை பொருள்களையும் நம் அருகே அழைத்து வந்து விடுகின்றன
நமது உள்ளும் புறமும் நம்மைப் பெரும் தொந்தர வுகளுக்கு ஸம்ஸாரம் என்ற பயங்கரம் ஆட்படுத்தியபடியே உள்ளது
இத்தகைய நோயால் பீடிக்கப்பட்ட நமக்கு நன்மை செய்வதாக நமது உள்ளத்தில் பதிந்து நிற்பதாக அவை உள்ளன –

ஆகர்ஷணாநி நிகமாந்த சரஸ்வதீ நாம்
வேதாந்த வாக்யார்த்தங்கள் -கொண்டும் -இவர் ஸ்ரீ ஸூக்திகளைக் கொண்டு ஆகர்ஷிக்கிறார்
அர்த்தங்களை ஆகர்ஷித்து நம் மனசில் பொருந்துகிறார்
உச்சாட நாதி பஹி அந்த உபப்லவா நாம்
நம்மை பிடித்து ஆட்டும் அநாதி அபராதங்கள் அஞ்ஞானங்கள் கர்மா வாசனை ருசி -இத்யாதி சம்சார பேய்களை
துஸ் சக்திகளை உச்சாடனம் -விரட்டும் மந்த்ரம்
-இவரது ஸ்ரீ ஸூ க்திகள்-வெருட்டி ஓட்டும் -என்றவாறு –
பத்த்யாநி கோர பவ சம்ஜ்வா பீடிதா நாம்
கோரமான சம்சார பீதி –பவ-கோர பவ -ஜ்வரம் -சம் ஜ்வரம் -அந்தரஜுரம் சமனப் படுத்தினார் ஸ்ரீ பாஷ்யகாரர்
விஜ்வர கிருதக்ருத்யர் ஆனார் பெருமாள் –ததா ராம –
ஹ்ருதயாநி பாந்தி யதிராஜ முனே வசாம்சி
வசாம்சி – ஸ்ரீ ஸூக்திகள் -ஹ்ருதயத்தில் பிரகாசிக்கும்

ஸ்ரீ ராமானுஜரின் இலக்கியப் படைப்புகள், உப நிஷத்துக்களில் இருந்து அதிக அளவு வைராக்கியத்துடன் இருக்க “வழி காட்டுகின்றன”.
மந்திரம் உச்சரிப்பதைப் போலவே, உள்ளும் வெளியிலும் நாம் அனுபவிக்கும் சித்திரவதைகள் மற்றும்
சம்சார உலகில் மக்கள் பாதிக்கப்படும் நாள்பட்ட நோய் மற்றும் குறைபாடுகளுக்கு எதிராக
உறுதியான மற்றும் பாதுகாப்பான ஊட்டச் சத்தை இந்த படைப்புகள் அழிக்கின்றன .

எம்பெருமானாருடைய உபதேச பரம்பரைகள் வேதாந்த வாக்யங்களுக்கு மகிழ்ச்சி யுண்டு பண்ணுபவையாயும் –பாஹ்ய குத்ருஷ்டிகளை மாளப் பண்ணுபவையாயும் சம்சார பெரு நோய்க்கு சமனம் பண்ணும் பத்யங்களாய் மனதில் கொண்டு போற்றும்படியான நிதிகளாய் விளங்குகின்றன –

உடையவரின் உபதேசம், அவருக்குத் திருப்தியையும் சிஷ்யர்களுக்குச் சந்தேகமே இல்லாத தெளிவையும் ஏற்படுத்துகிறதாம்.பெரிய பெருமாளுக்கோ,தன்னுடைய சங்கல்பத்தின்படி, உடையவர், வேதாந்த ஸம்ப்ரதாயப் ப்ரவர்த்தகர் ஆனதால், மகிழ்ச்சியாம் -உடையவரின் வாதங்கள், “ஆகர்ஷணானி “–பிறமத வாதிகளைத் தத்வ வாதத்தால், மாற்றி,அவர்களை ஈர்த்து, வசீகரித்து,விசிஷ்டாத்வைதிகளாக மாற்றுகிறதாம் -எந்த ஆதாரமும் இல்லாமல், ப்ரமாணம் இல்லாமல், தர்க்கிக்கும் அத்வைதிகளை, ஸ்ரீஉடையவரின் ஸ்ரீஸுக்திகள் , பேய் பிசாசுகளை விரட்டும் உச்சாடன மந்த்ரங்களைப் போல, விரட்டுகிறதாம். –ஸ்ரீ ஸுக்திகள் —மணி.
இதில் உள்ள மந்த்ர உச்சாடனங்கள் – —மந்த்ரம்இவை ஸம்ஸார தாப ஜ்வரத்துக்குப் பத்தியம்–ஔஷதம்இவ் விதமாக, யதிராஜரின் ஸ்ரீஸுக்திகள் ,மணி,மந்த்ரம் , ஔஷதம்.

————————

உபதேச வாக்ய ஸ்ரேணியில் ஈடுபட்டவர்
மேலே ஸ்வாமி திங்களும் ஆதித்யனுக்கும் எழுந்தால் போலே விளங்குவதை கொண்டாடுகிறார்
இந்த ஸ்லோகத்தில், அக்நி ,சந்த்ரன் , ஸுர்யன் மூவரையும்
யதிராஜரோடு ஒப்பிட்டு உடையவரின் மேன்மையைப் பாராட்டுகிறார்.–

27-சீத ஸ்வபாவ ஸூபக அனுபவ சிகாவான்
தோஷ அவமர்த்த நியத உந்நதி ஓஷதி ஈச
தாப அனுபந்த சமன தபன பிரஜா நாம்
ராமானுஜோ ஜயதி சம்வலித த்ரிதாமா –

அருள் என்னும் குளிர்ந்த காரணமாக சந்த்ரன் போலவும் தன்னை ஆஸ்ரயித்தவர்கள் தோஷங்களைப் போக்குவதால் அக்னி போலவும் இவ் வுலகம் வளம் பெற ஸூர்யன் இன்றியமையாமல் இருப்பது போல் இருந்து நமது தாபத் த்ரய பிரவாஹங்களைப் போக்கி அருளுவதால் ஸூர்யன் போலவும் ஆக மூன்று வித தேஜஸ்ஸுக்களும் கலந்து போல் உள்ளார்

அவர் வெற்றியுடன் பிரகாசிக்கட்டும்-

அவர்- அந்த ராமானுஜர், தனது குளிர்ச்சியான மற்றும் கனிவான தாக்கத்தால், அசாதாரண அக்னியாக நடந்து கொள்கிறார்;

அவர்- நம் இருளை (நம் குறைகளை) நீக்கும் விஷயத்தில் நாவல் சந்திரனாக இருப்பவர்;

அவர்- நமக்கு ஏற்படும் மூன்று வகையான துன்பங்களை நீக்குவதில், இரண்டாம் சூரியனாக இருப்பவர்;

இவ்வாறு, நமக்கு இரட்சிப்பை வழங்குவதற்காக அவர் மூன்று பேரின் கூட்டமாக விவரிக்கப்படலாம்.

சீத ஸ்வபாவ ஸூபக அனுபவ சிகாவான்-அக்னிக்கும் சிகா வான் -மேல் நோக்கி ஜ்வாலை -பூர்வ சிக ப்ராஹ்மணர்
-அக்னி உடைய உஷ்ணம் இல்லாமல் -உவமானம் திருத்தி சீத ஸ்வ பாவ -கிட்டி அனுபவிக்கும் படி
-வாடை காட்டு -தூது -ஆழ்வார் -குளிர்ந்த ஆச்சார்ய ஹிருதயம் போலே இருக்குமே -ஸூபக அனுபவ-கிட்டி எளிதில் அனுபவிக்கும் படி
-சிகாவான் ஸ்வாமி –
தோஷ அவமர்த்த நியத உந்நதி ஓஷதி ஈச -ஒஷாதிகளுக்கு அதிபதி சந்திரன் -சோமாயா கந்தர்ப்பாயா இத நம
-ஜயாதி கர்ம ஒஷாயாமி முடித்து ஹோமம் -முடிப்பார்கள் -ராசாதிபன் -சந்திரன் -ரசம் உடைய ஸ்தாவரங்கள் ஓஷதி -ஒளஷதம் என்றால் மருந்து –
தோஷங்களை நசிக்கும் அவமர்த்தம் -அந்தகாரம் இருளை போக்கும் -சம்சாரிக அஞ்ஞானம் போக்கும் ஸ்ரீ பாஷ்யகாரர்
-இருள் தரும் மா ஞாலத்தில் இருந்தும் –நியதி உந்நதி இவருக்கு -தேய் பிறை இல்லையே -பிரகாசம் வளர்ச்சி கொண்டே இருக்குமே –
தாப அனுபந்த சமன தபன பிரஜா நாம்-சூர்யன் -பிரஜைகளின் தாபம் -அனுபந்தம் -சம்பந்தி -தொடர்பு அறுக்கும் -சம்சார தாபம் போக்கி -ஸ்வாமி
-சம்சாரம் ஜரா மரணாதி-இவை அனுபந்தங்கள் -சேர்ந்தே தொடர்ந்து வருமே -ஜரா மரணம் -சோகம் மோகம் பசி தாகம் போல்வன -இவற்றை சனம் பண்ணி அருளுவார் –
சூர்யன் தாபம் உண்டாக்குவான் -சமன சாமர்த்தியம் இல்லையே
தாப த்ரயங்களை போக்கி -ஷடூர்மிகள்-போக்கி அருளி –
யதிராஜர் சப்தத்தால் போகுமே –
ராமானுஜோ ஜயதி சம்வலித த்ரிதாமா-தாம -ஜ்யோதிஸ் -ஜெயந்தி சம்பவம் தாம -வையயந்தி விபூஷணம் –
சூர்யன் சந்திரன் அக்னி – தேஜஸ் பதார்த்தங்கள் -மூன்றின் தேஜஸூம் சேர்ந்து பிரகாசிக்கிறார்
தனக்கு உள்ளே அடக்கி -அப்ருதக் சித்தமாக கொண்டு விளங்குகிறார்
தாமம் -இருப்பிடம் -பரந்தாமன் போலே –த்ரிதாம -சாஷாத் பகவான் -ஸ்ரீ வைகுண்டம் -ஷீராப்தி -சூர்ய மண்டல மதியவர்த்தி –உபாஸ்யமாக
மூன்று -நிலைகள் -பக்த நிஷ்டர்களுக்கு -அம்பஸிய மத்யே -இத்யாதி -வித்யா சஹா ஸவித்ரு மண்டலா மத்திய வர்த்தி
–ஹிரண்யஸ்ய –கப்யாசம் புண்டரீகம் அஷிணி-காயத்ரி மந்த்ரம் -இவனையே குறிக்கும் –
கோயில் திருமலை பெருமாள் கோயில் பிரபன்னர்களுக்கு த்ரிதாமம் –
கருவிலா திருவிலாதார் அணி அரங்கம் என்னா -வேங்கடமே வேங்கடமே என்கின்றாளாள் -அனந்தாழ்வான் –
வானவர்கள் சந்தி செய்ய நின்றான் –
பகவானையும் தன்னுள் அடக்கிய ஸ்ரீ பாஷ்யகாரர் –இருப்பிடம் வைகுந்தம் -இத்யாதி –

பாபங்களை எரித்து நம்மை தூய்மை படுத்தும் ப்ரபாவத்தால் அக்னியாய் இருப்பாராயும் –
இனிய குளிர்ந்த ஸ்வ பாவத்தால் -அஞ்ஞானமான இருளை போக்கடிப்பதில்
நியதமான மஹிமையுடைய சந்திரனாக இருப்பவரும் –
ஆத்யாத்மிகாதி தாபங்களின் ஸம்பந்தத்தை ஒழிப்பதில் சூர்யன் போன்றவரும்
இப்படி ஒருங்கே சேர்ந்துள்ள மூன்று தேஜஸ்களை யுடைய எம்பெருமானாருக்கு பல்லாண்டு -என்று
மங்களாசாசனம் செய்து அருளுகிறார் –

அக்நியிடம் , அசுத்தம் நெருங்கினால் சுட்டு, எரித்துவிடும்.
அதனிடம், உஷ்ணம் என்கிற தோஷம் இருக்கிறது.
ஆனால், உடையவரோ,
தானும் பவித்ரம், தன்னை அடைபவர்களையும் குளிர நோக்கி அவர்களையும்
பவித்ரமாக்குகிறார். இது அவரின் மேன்மை.

சந்த்ரன் ,இருளைப் போக்கி, எல்லாரையும் குளிர்வித்து மகிழ்விக்கிறார் .
உடையவர்,
மன இருளைப் போக்கி,வேதாந்தக் கருத்துக்கள் என்கிற சந்த்ர குளிர்ச்சியை—சிஷ்யர்களுக்குக் கொடுக்கிறார்.
மேலும்,அவர்களின் தவறுகளை –கேடுகளை , கோபித்துத் திருத்துகிறார்.
இப்படி ,எல்லாரும் கொண்டாடும் திருமேனியின் பேரழகில் (சந்த்ரனைவிடப் பேரழகு )
அனைவரும் வணங்கும்படி,ப்ரகாசிக்கிறார் .

பல்லாயிரம் ஒளிக் கற்றைகளோடு பிரகாசிக்கும்,ஸுர்யனைப் போல யதிராஜர் ப்ரகாசிக்கிறார் .
ஸுர்யனின் கொடூர வெய்யிலால், பூமி உலர்ந்து வறண்டு விடுகிறது.
ஆனால், உடையவரோ,
ஆத்யாத்மிகம், ஆதிபௌதிகம் , ஆதிதைவிகம் என்கிற ஸம்ஸாரத் தாபத்ரயங்களைப் போக்கி, ரக்ஷிக்கிறார் .

இப்படி, யதிராஜர்,அக்நி ,சந்த்ரன் ,ஸுர்யன் —-மூன்று பேரின் ஸ்வரூபமாக இருப்பதால்,
(த்ரிதாமா—மூன்று இடங்களை ,திருப்பாற்கடல், ஸுர்ய மண்டலம், ஸ்ரீ வைகுண்டம் –இருப்பிடமாக உடைய பகவான் )
ஸ்ரீமந்நாராயணன் , அவற்றை எல்லாம் விட்டுவிட்டு தன்னையே த்யானித்து, துதித்து,அர்ச்சித்து வரும்
உடையவரின் ஹ்ருதயத்தில் ,நித்ய வாஸம் செய்கிறான்.
ஆதலால் , யதிராஜர் , பகவானால் ஆட்கொள்ளப்பட்டார்
இவர்–குளிர்கிற அக்நி . எப்போதும் வளர்பிறைச் சந்த்ரன் -2வது ஸுர்யன்

————

ஸ்வாமியுடைய தேஜஸை ஸ்துதித்து மகிழ்ந்தார் கீழ் –
மேலே அவருடைய சகல வித்யா வைதுஷ்யத்தையும் –
குத்ருஷ்ட்டி நிரசன சாமர்த்யத்தையும் புகழ்கிறார் –

28-ஜயதி சகல வித்யா வாஹி நீ ஜன்ம சைல
ஜனி பத பரிவ்ருத்தி ஸ்ராந்த விஸ்ராந்தி சாகீ
நிகில குமதி மாயா சர்வரீ பால ஸூர்ய
நிகம ஜலதி வேலா பூர்ண சந்த்ரோ யதீந்திர –

அனைத்து வித்யைகளும் நதி போன்று ப்ரவாஹம் எடுப்பதாக உள்ள மலை போன்றும்
ஸம்ஸாரத்தில் உழன்று திரிந்து களைப்பு அடைந்தவர்கள் வந்து இளைப்பாறும் மரம் போன்றும்
புற வாதிகளின் வாதமாகிய அந்தகாரம் இந்த உலகில் சூழ்ந்து விடாதபடி ரஷித்து நிற்கும் பால ஸூர்யன் போன்றும்
வேதம் என்னும் கடல் பொங்கி எழும் படிச் செய்யும் முழு நிலவு போன்றும் ஸ்வாமி உள்ளார்

ராமானுஜம் கிட்டத்தட்ட இப்படி ஜொலிக்கிறார்:

யதீந்திர –ஜயதி சகல வித்யா வாஹி நீ ஜன்ம சைல-
நான்கு வேதங்கள் -ஆறு அங்கங்கள் -சிஷா இத்யாதி -தர்ம சாஸ்திரம் – இதிகாசபுராணம் மீமாம்ஸா நியாய –14 வித்யா ஸ்தானங்கள் சதுர்வித வித்யைகள் –
வாஹி நீ –பிரவஹிக்கும் நதி -மலையில் தோன்றி புவனம் வழியாக சாகரம் சேரும் -ஞானம் பிறந்து லோகம் உஜ்ஜீவித்து பகவான் இடம் சேரும் -ஜென்ம சைல -உத்பத்தி ஸ்தானம் -போலே ஸ்ரீ பாஷ்ய காரர் -உய்ய உடையவர்
-நம்மை மாதவன் அரங்கன் திருவடிகளில் சேர்க்க
யதீந்திர — ஜனி பத பரிவ்ருத்தி ஸ்ராந்த விஸ்ராந்தி சாகீ-
நிழல் கொடுக்கும் பெரும் மரம் –சாகீ-வா ஸூ தேவ தருச்சாயா -நிவாஸ வ்ருஷ ஸாதூ நாம் -தாரை பெருமாளை -சாகைகள் -வேத பாகங்கள் –
ஸ்ராந்த– சிரமம் கொண்டவர்களுக்கு – விஸ்ராந்தி-கொடுக்கும் சாகீ ஸ்வாமி -ஜனி -சம்சாரம் -சூழல் ஜென்ம வியாதி –
-ஸ்வர்கம் நரகாதிகள் -பதம் -மார்க்கம் -பரிவ்ருத்தி மீண்டும் மீண்டும் -கத்வா கத்வா நிவர்த்தந்தே -சுற்று சூழல் -என்றுமாம் -பரி சேஷணம் -போலே
கர்மா அவித்யாதிகளில் -அதனாலே சிரமம் -ஸ்ராந்தம் களைப்பை போக்கி விஸ்ராந்தம்-அளிப்பவர் –
யதீந்திர -நிகில குமதி மாயா சர்வரீ பால ஸூ ர்ய-சோபனா மதி சுமதி –குஸ்திதா மதி குமதி -பிரயோஜனம் இல்லாமல் –
மாயா வர்க்கமான விப்ரலிம்பம் -பாஷாண்டிகள் வேத பாஹ்யர்கள் -குத்ருஷ்டிகள் -அல்லாத அர்த்தம் கொடுப்பவர்கள் -நிகிலா சப்தம் -அதனால் –
சர்வரீ -இரவு ஞான சங்கோசம் –நன்று இது தீயது இது நடத்திய நான்மறை -நின்ற நம் அன்புடை வானோர் நிலம் அளந்தான்
-இன்று நமக்கு இரவு -ஞான சங்கோசம் -கை விளக்காக -கொடுத்த சாஸ்திரம் -உதிக்கும் சூரியனுக்கு தான் அந்தகார நிவர்த்தகம் –
யதீந்திர – நிகம ஜலதி வேலா பூர்ண சந்த்ரோ -சந்திரன் கடலில் இருந்து உதிக்க -சூர்யன் மலையில் இருந்து உதிக்கும் -உதய கிரி -அஸ்தமன கிரி –
பிள்ளான் -யதிராஜர் சமுத்திரத்தில் உதித்த சந்திரன் -தனியன் –ஜலாதி -சமுத்திரம் –வேலா -கடல் கரை -கடல் என்றுமாம்
-வேலை வண்ணனை மேவுகிறாய் -பெரியாழ்வார் –
பாராசார்ய வாசஸ்-வேதாந்த சமுத்திரத்தில் உதித்த சந்திரன் -ஸ்வாமி என்றவாறு

இமயமலையில் இருந்து அனைத்து ஆறுகளும் (கங்கை போன்ற) அனைத்து புராணங்களும் பாய்கின்றன:

அனைத்தையும் வழங்கும் ” கல்பக ” மரம், அதன் நிழலில், மீண்டும் மீண்டும் பிறப்பு மற்றும் இறப்புகளால் சித்திரவதை செய்யப்பட்ட ஜீவர்கள் ஓய்வெடுக்க முடியும்;

பலதரப்பட்ட பள்ளிகளில் இருந்து தகராறு செய்பவர்களின் மாயையான இயங்கியல் ஆதிக்கம் செலுத்தும் இரவு இருளை அகற்றும் விடியல் சூரியன்;

வேதங்களின் பாற்கடலில் இருந்து தோன்றும் முழு நிலவு.

எல்லா வித்யைகள் ஆகிற நதிகளுக்கு தோற்றுவாயான உயர்ந்த மலை போன்றவரும் –
சம்சாரம் ஆகிற நெடு வழியில் தொடர்ந்து நடந்து வந்த களைப்பை போக்கும் நிழல் தரும் மரம் போன்றவரும் –
எல்லா குத்ருஷ்டிகளின் பிரமமாகிற இருளை போக்கடிக்கும் பால சூர்யன் போன்றவரும் –
வேதமாகிய கடல் நீர் களித்து பொங்குவதற்கு முழு நிலவு போல் இருப்பவராக
யதிராஜருக்கு பல்லாண்டு என்று மங்களா சாசனம் பண்ணி அருளுகிறார் –

உடையவர், எல்லா வித்யைகளும், 64 கலைகளும் உற்பத்தியாகும் இடம் போன்ற அசைக்க முடியாத மலை.
பிறமதவாதிகளால், வாதத்தில் இந்த மலையைப் பிளக்க இயலாது;
மலையில் உள்ள நெடிதுயர்ந்த தேவதாரு போன்ற மரங்களின் அடியில் எல்ல ஜீவராசிகளும்,
வெய்யிலுக்கும்,மழைக்கும் பாதுகாப்பாக இருப்பதைப் போல,
உடையவர் என்கிற மலையில் உள்ள தத்வ உபதேசங்கள் என்கிற மரங்களின் அடியில்,
ஸம்ஸார தாபத்தில் அடிபட்ட ஜீவாத்மாக்கள்,இங்கு புகலடைந்து,சந்தோஷிக்கிறார்கள்.

உடையவர், ஸகல கலா வல்லவர்.
வேதங்கள், உடையவரைப் பார்த்து, பௌர்ணமீ சந்த்ரனைப் பார்த்துப் பொங்கி எழும்
கடல்போலக் குதூகலிக்கிறது
இவர் , ஹிமாலய மலை; இவரின் உபதேசங்கள் ,அதில் உள்ள தேவதாரு போன்ற மரங்கள்;
இவர் பால ஸுர்யன் . இவர் பூர்ண சந்த்ரன் ; ஜய , ஜய ,யதிராஜ —-

——————

எம்பெருமானாரின் சகல வித்யா பாரங்கத்தைப் பேசினவர்-
மேலே ஸ்வாமியுடைய ஸ்ரீ ஸூக்திகள் தமக்கு அனுக்ரஹம் பண்ண வேண்டும் என்று வேண்டுகிறார் –

29-முனி பஹூ மத சாரா முக்தி நிஸ்ரேணிகா இயம்
சஹ்ருதய ஹ்ருதயா நாம் சாச்வதீ திஷ்ட ஸித்தி
சமித துரித கந்தா சம்யமி இந்த்ரச்ய ஸூக்தி
பரிசித கஹ நா ந பிரஸ்நுவீத பிரசாதம்

ராமானுஜர் உலகுக்குத் தந்த இலக்கியத் தலைசிறந்த படைப்புகள்,
நமக்குத் திறந்து, உள் அர்த்தத்தையும் உட்பொருளையும் நமக்குத் தெளிவாகப் புரிய வைக்கட்டும்!
இந்தப் படைப்புகள் , பெரிய முனிவர்களால் பாராட்டப்பட்ட, அத்தியாவசியமானவற்றை வலியுறுத்தும்
மோக்ஷத்தின் படிக்கட்டுகளாக செயல்படும் திறன் கொண்டவை . –
மோக்ஷத்தையே எட்டிப்பிடிக்க உதவும் ஏணி
அவர்கள் மகிழ்ச்சிக்கு ஒரு ஆதாரமாக உள்ளனர்,
நல்ல மனம் படைத்த அனைவருக்கும் அவர்கள் மனத்தில் நிலை பெற்றுள்ள தன்மை உடையவை
பாபங்கள் அனைத்தையும் நீக்க வல்லவை .
அவர்கள் ஆழ்ந்த ஆய்வு, ஆழ்ந்த மற்றும் ஆழமான கருத்துக்கள் சிறந்த இன்பத்தை வெளிப்படுத்துகிறார்கள்,
இப்படிப்பட்ட அவர் திவ்ய கிரந்தங்கள் நமக்கு அருள் புரியட்டும்

1-முனி பஹூ மத சாரா -ரிஷிகள் கொண்டாடும் சாரதமம் -வியாசர் வைசம்பாயனர் போல்வார்
2-முக்தி நிஸ்ரேணிகா இயம் -படிக்கட்டு -நிஸ்ரேணிகா சோபனம் -பர்யாயம் –
3-சஹ்ருதய ஹ்ருதயா நாம்-பரமை ஏகாந்திகள் –
சாச்வதீ திஷ்ட ஸித்தி -திஷ்டம் புண்ணியம் -ஸூ ஹ்ருத சித்தி -ஸ்திரமான
4-சமித துரித கந்தா-பாபங்கள் -வாசனை உடன் போக்கி –
சம்யமி இந்த்ரச்ய ஸூ க்தி-யதீந்த்ரர் ஸ்ரீ ஸூ க்திகள் -நான்கு விசேஷங்கள் இவற்றுக்கு மேலே -அருளிச் செய்தவை
விமதர்கள் பாஹ்ய குத்ருஷ்டிகள் கலக்கம் போக்கும் –சமித விமத கேதா -பாட பேதம்
பரிசித கஹ நா ந பிரஸ்நுவீத பிரசாதம் -நமக்கு மிகவும் ககனமாவை -அனுக்ரஹத்தால் ஆழ்ந்த கருத்துக்களை
பிரகாசிக்கும் -தெளிய அறிவிக்கும் -அவைகளே நமக்கு –ஸூ கம்பீர –
ஸ்ரீ பாஷ்யம்– ஸ்ரீ பாஷ்யகாரர் ஸ்ரீ மன் நாராயணன் -மூவர் அருளாலே ஸ்ரீ பாஷ்யம் ஆழ்ந்த கருத்துக்களை அறியப் பண்ணும்

பராங்குச பரகால நாத யாமுன முனிவர்களால் அருளப்பட்ட சாரமான அர்த்தங்களை உட் கொண்டவைகளும்-
பரமபதத்துக்கு படிக்கட்டு போன்றதும்
சத்துக்களுடைய மனசில் நித்தியமான ஆனந்தம் பொங்கச் செய்பவைகளும்-
ப்ரதிபஷிகளால் உண்டாகும் துக்கத்தை போக்குபவைகளும் –
அனுபவிக்க பரம கம்பீரமாய் இருப்பவைகளுமான ஸ்வாமியுடைய ஸ்ரீ பாஷ்யாதி ஸ்ரீ ஸூக்திகள்
அடியேனுக்கு நன்றாக விளங்க வேண்டும் படி அனுக்ரஹம் பண்ணி அருள வேண்டும் –

உடையவரின் ,ஸ்ரீபாஷ்யம், கீதா பாஷ்யம், வேதார்த்த ஸங்க்ரஹம் போன்றவைகளில்,
பூர்வாசார்யர்களின் வேதாந்த ரஹஸ்யங்கள் பொதிந்து இருக்கின்றன.
சடகோபமுநி , நாதமுநி, யாமுனமுநி , —முநித்ரய வேதாந்தக் கருத்துக்களும் உள்ளடக்கி இருக்கின்றன.
ஸ்ரீவ்யாஸரின் ப்ரஹ்மஸுத்ரங்களின் வ்யாக்யானமான ,ஸ்ரீபாஷ்யம் ——இது, உடையவரின் ஸ்ரீஸுக்தியான, மடந்தை. உத்தம ஸ்த்ரீ
இதை ஸேவிக்க ஸேவிக்கஉள்ளார்ந்த அர்த்தங்கள் ,ஊற்றுபோலச் சுரந்துகொண்டே இருக்கும் .
இதைப் படித்துப் படித்து, இந்த ஸ்ரீபாஷ்யம் என்கிற க்ரந்தமே( உத்தம ஸ்த்ரீ )
என்னை அநுக்ரஹிக்கவேண்டும் என்று ப்ரார்த்திக்கிறார்

—————

ஸ்வாமியின் ஸ்ரீ ஸூக்திகளின் பெருமைகளை மேலும் பேசி ப்ரீதர் ஆகிறார் –

30-பவ மரு பரிகிந்த ஸ்ப்பீத பா நீய சிந்து
துரித ரஹித ஜிஹ்வா துக்க குல்யா சகுல்யா
சுருதி நயன சநாபி சோபதே லஷ்மண
உக்தி நரக மதன சேவ ஆஸ்வாத நாடிந்தமா ந –

ராமானுஜரின் படைப்புகளின் அனைத்துத் திறனையும் பாருங்கள். அவர்கள்-

வறண்ட பாலைவனத்தில் பயணிக்கும் தாகத்தால் துன்புறுத்தப்பட்ட பயணிக்கு குளிர்ந்த நீரை வழங்கும் நதி போல;

ஆன்மிகப் பணிகளைப் படிக்கும் புனிதர்களுக்குப் பால் ஆறு போல

வேதங்களின் கண்களைப் போல, மிகவும் விலையுயர்ந்த மற்றும் விளக்கத்திற்கு மிகவும் உதவியாக இருக்கும்

இறைவனுக்குச் செய்யும் சேவையின் பேரின்பத்தை எவரும் அனுபவிக்கும் வகையில், முக்கிய நரம்பு நாண் இயக்கியைப் போல.

நரகத்தை அண்ட விடாமல் தடுக்கும் ப்ரஹ்ம ஞானம் உண்டாக்கி அந்தமில் பேரின்பம் கிட்ட வழி செய்யுமே

பவ மரு பரிகிந்த -சம்சார பாலைவனத்தால் மிகவும் துன்பப்பட்டு -தாப த்ரயத்தால் –
ஸ்ப்பீத பா நீய சிந்து -பருகத் தக்க நிறைந்த -பான யோக்யம் பா நீயம் -நதி போலே
துரித ரஹித ஜிஹ்வா -பாபம் அற்றவர்கள் -நாக்குக்கு
துக்க குல்யா சகுல்யா-ஊற்று எடுத்து வரும் பால் ஆற்றை போலே இருக்குமே -புண்ய சீலர் வாயிலே வற்றாத பாலாறு போலே என்றபடி
சுருதி நயன சநாபி -வேதங்களுக்கு ஸ்திரமான கண்கள் போலே -காதுக்கு கண்கள் போலே -தெளிந்த அர்த்தம்
-த்ரஷ்டவ்ய ஸ்ரோதவ்ய -இரண்டும் என்றுமாம் –சநாபி -ஸ்திரம் என்றவாறு
சோபதே லஷ்மண உக்தி-இளைய பெருமாள் -பிராணாயாமம் லஷ்மண முனி -சொல்கிறோமே –சோபதே -விளங்குகின்றன
நரக மதன-நரகாசுரனை அழித்தவன்-சம்சார நரகம் அழிப்பவன் என்றுமாம் -நாரணன் பேர் வைத்த அன்னை நரகம் புகாள்
சேவ ஆஸ்வாத நாடிந்தமா ந-நாடி யை முடிக்கு விட்டு -ஸ்ரீ யபதிக்கு சேவா பண்ணும் படி -பலப்படுத்தும்

வேதாந்தங்களை தெளிவாக பார்த்து அறியும் கண்களாக இருப்பவைகள்-
சம்சாரமாகிற பாலைவனத்தில் அலைந்து மிகவும் களைத்தவர்களுக்கு-தாப ஹரமாக –
பருக இனிதான தீர்த்தமுள்ள நதி போன்றவைகளும்
பாபம் அற்ற மஹான்களுக்கு பால் போலே நாவுக்கு இனியவையாயும் –
நரகாசுரனை முடித்த எம்பெருமானுடைய குண அனுபவத்தை ஆனந்தவாஹமாக செய்வதுமாக விளங்குகின்றன –

எம்பெருமானுடைய ஸ்வரூப ரூப குண விபூதி பூர்த்தியை ஸ்வாமி ஸ்ரீ ஸூக்திகளிலே பரக்க
அருளிச் செய்கையாலே –
இவை ஆனந்த ஜனகமான நாடி விஷயத்தை தட்டுமைவாய் இருக்குமே –

யதிராஜரின் ஸ்ரீஸுக்தி, பாலைவனமாகிய ஸம்ஸாரத்தில், தாகம் தாகம் என்று, தவிப்பவர்களுக்கு, வற்றாத நதிநீர் .
புண்ய புருஷர்களுக்கு,அவர்களுடைய நாக்குக்கு பாலாற்று நீர்.
ஸ்ருதிகளுக்குக் கண் . இந்த ஸுக்தி ஸேவிப்பவர்களின் ஆனந்த நாடியைத் தொட்டு, இங்கு மாத்ரமல்ல, ஸ்ரீவைகுண்டத்திலும்
பேரானந்தத்தை அனுபவிக்க உதவுகிறது.

——————

மேலும் ஸ்ரீ ஸூக்திகள் பிரபாவம்

31-ஹரிபத மகரந்த ச்யந்தின சம்ஸ்ரிதா நாம்
அனுகத பஹூ சாகா தாபம் உன்மூல யந்தி
சமித துரித கந்தா சம்யமி இந்த்ர பிரபன்னா
கதக ஜன மநீஷா கல்ப நா கல்ப வ்ருஷா-

ராமானுஜரின் படைப்புகள் நமக்கு எவ்வளவு பெரிய காரியங்களைச் சாதிக்கின்றன!
அவற்றைப் படித்தால், இறைவனின் பாதங்களிலிருந்து வரும் அமிர்தம் போன்ற தேன் பெருகிக் கொண்டே இருக்கும்,
மேலும் மோக்ஷ  ஆனந்தத்திற்குச் சமமாக இருக்கும்.
படைப்புகள் பன்முகத்தன்மை கொண்ட வேதங்களின்
பாதையைத் தழுவி நெருக்கமாகச் செல்கின்றன என்பதை நாம் உணர்கிறோம்.
அவர்கள் கற்பவர்களின் பாவங்களின் குமட்டல் வாசனையை கடைசி வரை அகற்ற முடியும்.
அவை நம் இதயங்களில் ஒரு ” கல்பக ” மரமாக-மாற்றாத ஞானத்தை
அளித்த படி நமது கற்பனை எண்ணங்களின் வளமான வரிசையை உருவாக்குகிறது.
மேலும், படைப்புகள், வாசிப்பின் போது, ​​மூன்று வகையான தானங்களில் இருந்து நம்மை விடுவிக்கின்றன.

ஹரிபத மகரந்த ச்யந்தின -மோக்ஷம் -ஹரி பதம் -விஷ்ணு பதம் -தத் விஷ்ணோ பரமம் பதம் -தேனை பிரவஹிக்கும்
-திருவடி என்றுமாம் -இடது திருவடி அங்குஷ்டம் தேன் பெருகுவதாக சுருதி -அம்ருத தாரை -போக்யத்தை -உன் தேனே மலரும் திருப் பாதம் –
சம்ஸ்ரிதா நாம் -தன்னை ஆஸ்ரயித்தவர்களுக்கு -சம்யக்கு ஆஸ்ரயம் -ஆச்சார்யர் மூலம் பகவானை ஆஸ்ரயித்து
அனுகத பஹூ சாகா -சாஸ்திரங்களில் -பிரவேசித்து -சாகைகளில் புகுந்து சர்வ அர்த்தங்களையும் சேர்த்து திரட்டி
தாபம் உன்மூல யந்தி -தாபங்களை வேரோடு போக்கி -அடியோடு உன்மூலம்
சமித துரித கந்தா -பாபங்களை வாசனையோடு போக்கி
சம்யமி இந்த்ர பிரபன்னா
கதக ஜன மநீஷா -கதகன் பிரமாணம் கொண்டு வாதம் பண்ணுபவன் -கவிதார்க்கிக ஸிம்ஹம் –கவி கதக கண்டீரன சரண நளின –
மநீஷா-புத்தி கூர்மை
கல்ப நா கல்ப வ்ருஷா-உண்டாக்கி –கல்ப நா -ஸ்ருஷ்ட்டி என்றவாறு -கற்பனை கவி ஸ்ருஷ்ட்டி கர்த்தா -கல்ப வருஷம் போலே –
1-நிரதிசய ஆனந்தம் திருவடி தேனை அருளும் -நால் தோள் அமுதே -கற்பக வருஷம் பணைத்தால் போலே -2-அநு கத சாகைகள்
3–சம்சார தாபங்கள் வேரோடு போக்கி -4-மேல் மேலும் புத்தி கூர்மை அருளும் -வாதம் செய்து புற சமயிகளை நிரசிக்க -ஸூ சம்ப்ரதாயம் ஸ்தாபிக்க -உதவுமே –
கற்பக வ்ருஷங்கள் பஹு வசனம் -நவ கிரந்தங்கள் உண்டே என்பதால் –

மேலும் ஸ்ரீ ஸூக்திகள் பிரபாவம் -தன்னை கிட்டினவர்களை பகவத் சரணாரவிந்தங்கள் –
சர்வ பாபங்களையும் போக்கி
தேனே பாலே கன்னலே அமுதே என்று மிகவும் போக்யங்களாயும் இருக்குமா போலே
சகல வேதங்களையும் அனுசரித்து சமன்வயப்படுத்தி அவதரித்த ஸ்ரீ பாஷ்யகாரருடைய ஸ்ரீ ஸூக்திகளை அப்யசிப்பவர்களை
சகல பாபங்களையும் போக்குபவையுமான அர்த்தங்களைச் சுரப்பதால்
உபபாதனம் பண்ணுகிறவர்களுக்கு கற்பக வ்ருக்ஷத்தை போலே தாபங்களைப் போக்கடிக்கும் –

யதிராஜரின் ஸ்ரீஸுக்திகள், தேவலோக கல்பவ்ருக்ஷம் போன்றவை. கற்பகம் என்றும் சொல்வர் .
பல அடர்ந்த கிளைகள், இலைகள் , பழங்கள் உள்ள இம்மரம் இளைப்பாறுபவர்களின்,களைப்பைப் போக்கும்.
பசி, தாகத்தைப் போக்கும்; நறுமணக் காற்றைக் கொடுக்கும்;
மரத்தின் அடியில் அமர்ந்துகொண்டு, மனதில் நினைப்பவை (தர்ம வழியில் நினைப்பவை) நடக்கும்;
யதிராஜரின்ஸ்ரீஸுக்திகள் ,
பச்சைத் தேன் ; பசும்பால்;
ஆசார்ய சிச்ருக்ஷையுடன் ,பக்தியோடு தினமும் ஸ்ரீபாஷ்ய அர்த்தங்களைக் கேட்டால், பாவங்கள் எல்லாம் போகும்.
80 க்ருச்ரங்கள் செய்ததற்குச் சமம். ( ஒரு க்ருச்ரம் என்பது , ரூபாய் 12–50 என்று கணக்கு
ஒரு குறிப்பிட்ட பாவம் கழிய, மந்த்ரத்தைச் சொல்லி, வேதபாராயண ஸ்வாமிக்கு ஒரு க்ருச்ரம் என்பது கொடுப்பது சாஸ்த்ர விதி )
பாஷ்யகாரரின் ஸ்ரீஸுக்திகளைக் கற்றவர், உத்தம புருஷர். கல்பவ்ருக்ஷம்போல் உதாரர். வள்ளல்.
வேத ஸம்பந்நர் . பகவத் கல்யாண குணங்களில் திளைத்து, பிறரையும் அனுபவிக்கும்படி செய்பவர்

———

எம்பெருமானார் ஸ்ரீ ஸூக்திகள் இனியவை -மஹா உபகாரம் செய்பவை என்றார் கீழ் –எம்பெருமானார் சேனையர் கோன் அவதாரமாக வந்து பிறந்து மஹா உபகாரத்தை செய்தார் என்கிறார் –

32-நாநா பூதை ஜகதி சமயை நர்ம லீலாம் விதித்சோ
அந்த்யம் வர்ணம் ப்ரதயதி விபோ ஆதிம வ்யூஹ பேதே
விச்வம் த்ராதும் விஷய நியதம் வ்யஞ்ஜிதா அனுக்ரஹ
சந் விஷ்வக் சேன யதிபதி அபூத் வேத்ர சார த்ரிதண்ட

இறைவன் பல மத அமைப்புகளை உருவாக்கி யிருக்கிறான் – அவை ஒன்றுக்கொன்று சண்டையிடுகின்றன –
இவை எல்லாம் இன்புறும் இவ்விளையாட்டு உடையானுடைய லீலையே .
அவரது முதல்- தொடக்கமற்ற- வியூஹ வடிவம், வாசுதேவர். இருண்ட சாயல் கொண்ட கிருஷ்ணராக பிந்தைய நாள் அவதாரத்தை எடுத்தார்.
கலி யுகத்தில், மக்கள் இன்பத்தில் குடி கொண்டிருக்கும் போது, ​​இறைவன் விஷ்வக்சேனரை அனுப்பினார்,
அவர் தனது அருளால் (ராமானுஜராக பிறந்தார் ,
(சேனாபதி விஷ்வக்சேனர் யதிபதி ஸ்ரீ ராமானுஜராக மாறும்போது, ​​மந்திரக்கோல் திரிதண்டம் ஆகிறது )

நாநா பூதை ஜகதி சமயை -பல பல சமயங்கள் -கலி யுகத்திலே
நர்ம லீலாம் விதித்சோ-லீலா விஷயம் -கேலிக்கு விஷயம் -மா ஞாலம் வருந்தாதோ -மாட்டாயா –ரக்ஷணத்தில் நோக்கு இல்லாமல் லீலா ரசம் செய்து இருக்க
அந்த்யம் வர்ணம் ப்ரதயதி விபோ-ஆதிம வ்யூஹ பேதே-திருப் பாற் கடல் வ்யூஹம் -ஆதி -பர வா ஸூ தேவன் -பாலின் வண்ணம் -கிருத -மஞ்சள் த்ரேதா -த்வாபர நீலம்- கலி கறுத்த வண்ணம் –
விச்வம் த்ராதும் விஷய நியதம்–ஜகத்தை ரக்ஷித்து அருள -சப்தாதி விஷயங்களில் மூழ்கிய ஜகத்தை ரக்ஷிக்க-
வ்யஞ்ஜிதா அனுக்ரஹ சந்-பிராட்டி அனுக்ரஹம் பெற்று
விஷ்வக் சேன யதிபதி அபூத்-சேனை முதலியார் பிராட்டி அனுக்ரஹம் பெற்று
வேத்ர சார த்ரிதண்ட -வேத்ரமே- த்ரி தண்டம் -பிரம்பு -கொண்டே ஜகத் நிர்வாஹம் அவர் -த்ரி தண்டம் கொண்டு இவர்
-உபய விபூதி நிர்வாஹம் -ஜ்யேஷ்ட புத்ரனை தாயார் நியமிக்குமா போலே –திருவவதார ரகஸ்யம் –

பல மதங்களை ஸ்ருஷ்டித்து பரிஹாஸமான தொரு விளையாட்டை விளையாடுவதாக வ்யூஹ மூர்த்தியான
வாஸூ தேவன் கள்ள வேடம் கொண்டு ஒருப்பட்ட போது விஷய ப்ரவணராய் இருக்கிற சம்சாரிகள்
இந்த மதங்களைப் பற்றி நாசம் அடையாக கூடாது என்று
கிருபையால் சேனை முதலியாரே எம்பெருமானாராக திருவவதரித்தார் –
அவர் கை பிரம்பு செங்கோல் த்ரிதண்டம் ஆயிற்று –
சாது பரித்ராணத்துக்காகவே ஸ்வாமி அவதாரம் –
திருவனந்த ஆழ்வான் –
எம்பெருமான் –
சேனை முதலியார்
பஞ்ச திவ்ய ஆயுதங்கள் திருவவதாரமாகவே ஸ்வாமி போற்றப்படுகிறார் –

பகவானுக்கு, இவ்வுலகம் லீலாவிபூதி —-அதுவும்,
கலியுகத்தில் இவனே புத்தர் என்று சொல்லி, வேதத்துக்கு எதிராகப் பேசினான்.
பாசுபதமதத்தை வளரச் செய்தான். இப்படி, விளையாடினான்.
விஷ்வக்ஸேநரோ ,ஏன் இப்படி மக்களைப் புத்தி தடுமாறச் செய்கிறீர் என்று பகவானைக் கேட்காமல்,
இவை அவருடைய லீலாவிபூதியின் விளையாட்டு என்று உணர்ந்து ,
எம்பெருமானாராக அவதரித்தார்.
கஜேந்த்ரனைக்காக்க பகவான், அலைகுலைய ஓடிவந்ததைப் போல, போட்டது போட்டபடி வைகுண்டத்தை விட்டு
இவர் , ஓடிவந்தாராம்.
வைகுண்டத்தில், அவரது செங்கோல் பிரம்பு; அதையும் எடுத்துவரவில்லையாம்.
இந்தச்செங்கோல் பிரம்பே தானும் ஓடிவந்து , யதிராஜரின் திருக்கரத்தில், “த்ரிதண்டமா”க அவதரித்ததாம்.

—————

இப்படி திருவவதரித்து அருளிய எம்பெருமானாருடைய உபதேசங்கள் பெருமையை உபபாதிக்கிறார் –

33-லஷ்யம் புத்தே ரசிக ரசநா லாஸ்ய லீலா நிதானம்
சுத்த ஆஸ்வதம் கிமபி ஜகதி ச்ரோத்ர திவ்ய ஔஷதம் ந
லஷ்ய அலஷ்யை ஸிதி ஜலதிவத் பாதி தாத்பர்ய ரத்னை
லஷ்மீ காந்த ஸ்படிக முகுர லஷ்மணர்ய உபதேச –

நல்ல மனங்கள் இந்தப் படைப்புகளைப் படிப்பதை நோக்கமாகக் கொண்டு செயல்படும்.
ஒரு “ரசிகா” ருசிக்கும் மற்றும் அவற்றை எடுத்துக் கொள்ளும் போது அவனது நாக்கு மிகவும் நல்ல விளையாட்டுடன் இருக்கும்.
பேசுவதற்கும் விவாதத்துக்கும் ஏற்ற பொருள்!
காது மிகவும் அன்புடனும் தூண்டுதலுடனும் அவற்றைக் கேட்கும்,
இது ஒரு தனித்துவமான வகை மெய் நிகர் மருத்துவத்தை நிரூபிக்கிறது, அது எவ்வளவு இனிமையானது;
மேலும் அவை இறைவனின் வடிவத்தையும் இயல்பையும் சரியான முறையில் நமக்கு வெளிப்படுத்தும் படிகக் கண்ணாடி.
ராமானுஜரின் படைப்புகளில் உள்ள மையச் செய்திகள் – சில புரிந்து கொள்ளப்பட்டவை மற்றும் சில இல்லை –
ஞானவான்களுக்குப் புலப்படும் -அல்லாதார்க்கு அதன் அர்த்தம் விளங்காது
ஒரு தெளிவான கடலில் பரந்த மற்றும் அளவிட முடியாத கற்கள் சிதறிக் கிடக்கிறது.

நகா லஷ்யம் புத்தே –
-நம்முடைய –புத்திக்கு ஞானத்துக்கு -கிரஹிக்கும் ஞானத்துக்கு லஷ்யம் –
ரசிக ரசநா லாஸ்ய லீலா நிதானம்
-ரசிகர்கள் -ஸ்ரீ ஸூ க்திகளையே –ரஸநா-அருளிச் செயல் வேதம் -இவற்றிலே ஊன்றிய நாக்கு
லாஸ்யம் தாண்டவம் -நாட்டிய பேதங்கள் -முக கை பிரதானம் லாஸ்யம் /கால் பிரதானம் தாண்டவம் –
நாவு துடித்து நடமாடும் -நிதானம் காரண பூதம் -நா துடிக்கும் நாம் ருசித்த ஸ்ரீ ஸூ க்திகளை கேட்க்கும் பொழுது எல்லாம்
சுத்த ஆஸ்வதம்
-தூய்மையான -மதுரமான போக்யம்-ரமணீயம்
கிமபி ஜகதி ச்ரோத்ர திவ்ய ஔஷதம் ந
-ஸ்ரோத்ரத்துக்கு திவ்ய அப்ராக்ருத ஒளஷதம் -நஸ்யம் மூக்கு வழியே -இது காது வழியே
லஷ்ய அலஷ்யை ஸிதி ஜலதிவத் பாதி தாத்பர்ய ரத்னை
-ஆத்மாவுக்கு ஊனமாவது -2-2-11-தேவதாந்த்ர விச்வாஸம் -வியாக்யானம் –
லஷ்யம் அலஷ்யம் அறியப்பட்டதும் அறிய படாததுமான–தாத்பர்ய ரத்னங்களைக் கொண்டு –ஸ்தித ஜலதி -வெண்மை கடல் –பாற் கடல் –
-சில தாத்பர்ய ரத்தினங்கள் அறிவுக்கு எட்டும் -சில எட்டாதே -வேங்கடேசன் -வேங்கட கவி இருவரும் கடைய -அமுதம்
-தாத்பர்ய ரத்னாவளி பிறக்க -மலையை வைத்து அவன் -ஆச்சார்ய பிரஜ்ஜா கொண்டு -சடஜித் உபநிஷத் -அதே போலே பாஷ்யகாரர்
-உபநிஷத் கடைந்து -ஸ்ரீ பாஷ்யம் –சம்ப்ரதாயம் கொண்டு -சஞ்சீவனம் –உபய வேதாந்த ரத்தினங்கள் –
லஷ்மீ காந்த ஸ்படிக முகுர
-ஸ்படிகம் -அருகில் உள்ள வஸ்துவை தன்னுள் காட்டுமே -ஸ்ரீ லஷ்மீ காந்தனை தன்னுள்ளே
உள்ளதாக காட்டும் -எங்கும் தேட வேண்டாம் -ஸ்ரீ யபதியை தெளிவாக ஸ்ரீ பாஷ்ய காரர் ஸ்ரீ ஸூக்திகள் காட்டுமே
லஷ்மணர்ய உபதேச
-எம்பெருமானார் உபதேசங்கள் -சாரீர சாஸ்திரம் -சரணாகதி விஷயமாக

எம்பெருமானாருடைய உபதேசங்கள்
தெளியச் சொல்லப் பட்டவை –
புத்தியில் எளிதாக படியும்படி யுள்ளவை –
அப்படிப் படிந்தவர்க்கு மேலும் மேலும் வாசிக்கவும் சொல்ல நாவு துடிக்கும் படியும் உள்ளவை –
வாசிப்பவனுக்கு ஆனந்தம் உண்டாக்குபவை –
கேட்பவனுக்கு பரம ஒளஷதமாய் இருப்பவை –
இன்பம் விளைவிப்பவை –
சர்வேஸ்வரனை கண்ணாடி போலே காட்டித் தருமவை –
இத்தன்மைகள் சார்ந்த எம்பெருமானாரது உபதேச கிரந்தங்கள் –
கடலில் எளிதில் கண்டு எடுக்கக் கூடியவைகளும்-இப்படி சில – காணக் கூடாதவை –
ஆழ்ந்து நோக்கியே அறியத் தக்கவை –
இப்படி சில தாத்பர்யங்களான ரத்னங்கள் நிரம்பிய கடல் போல் விளங்குகின்றன –

யதிராஜரின், ஸ்ரீபாஷ்யம் போன்ற ஸ்ரீஸுகத்திகளின் பெருமையைச் சொல்கிறார்.
ஒரு நூல் என்றால்
1.படிக்கத் தொடங்கியதும், புத்தியைக் கவரவேண்டும்.
2. மேலும், மேலும் படிக்கத் தூண்டுவதாக இருக்க வேண்டும்.
3. அதன் கருத்து, மேலும் மேலும் அனுபவிக்கத் தக்கதாக இருக்கவேண்டும்.
4. அதைவிளக்கிப் பிறருக்கு,அழகாக எடுத்துச் சொல்வதாக இருக்கவேண்டும்
5. இப்படிச் சொல்லும்போது, கேட்போர், இதைத் தொடர்ந்து கேட்கவேண்டும் என்கிற ஆசையைத் தூண்டுவதாக இருக்கவேண்டும்.
6. கேட்பவர்களுக்கு, நன்மை தருவதாக இருக்கவேண்டும்.
7. சொல்லும் கருத்துக்கள், உயர்ந்ததாக இருக்கவேண்டும்.
8. இவை, எளிதில் புரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கவேண்டும்.

இந்த 8 குணங்களும், உடையவரின் ஸ்ரீஸுக்திகளுக்கு உண்டு, என்கிறார்.
லக்ஷ்யம் புத்தே—ஸ்ரீஸுக்தியைப் பிரித்ததுமே ,அது நமது புத்தியைக் கவர்கிறது. பார்த்ததும் படிக்கத் தோன்றுகிறதாம்.
கடந்த காலத்தைப் பற்றிய அறிவு–“ஸ்ம்ருதி “. எதிர்காலத்தைப் பற்றிய அறிவு “மதி “. முக்காலத்தையும் அறியும் அறிவு “ப்ரக்ஞா”.
இது, புத்தே லக்ஷ்யம்—பார்த்ததும் படிக்கத் தோன்றும்.
மீதி ஸுக்திகளில் புத்தி இழிவதில்லையாம்.-

”சுத்தாஸ்வாதம்”
”உடையவரின் ஸ்ரீஸுக்தி “ஔஷதம் ”
காதால் கேட்டவுடன், ஸம்ஸாரவ்யாதி போய்விடும். கேட்பதற்கு, சுகமாக இருக்கும்”,

திவ்யதம்பதிகள், திருப்பாற்கடலில், ரத்னங்கள் இழைத்த மண்டபத்தில், தங்கஸிம்ஹாசனத்தில் எழுந்தருளி இருக்கிறார்கள்.
தங்கள் சோபையைக் காண விரும்பினால், அவர்கள் கண்ணாடியைத் தேடவேண்டாம்.
சுற்றி இருக்கும் ரத்னங்களும், திருப்பாற்கடலும், அழகைக் காட்டும்.
இவர்களே, தங்கள் கல்யாண குணங்களை அறிய ஆசைப்பட்டால், ஸ்ரீஉடையவரின் ஸ்ரீபாஷ்யாதி க்ரந்தங்களைப்
பார்த்தால் போதும். இவருடைய ஸ்ரீஸுக்திகள் தெளிந்த கடல்;
கடலின் அடியில், முத்து, ரத்நம், சங்கு, பவளம் முதலிய விலைமதிக்கமுடியாத பொருட்கள் நன்கு தெரியும்;
மறைந்தும் தெரியும்; அதைப்போலவே,
ஸ்ரீபாஷ்யம். படிப்பவர்கள மதிநுட்பத்திற்கு ஏற்ப, விசேஷ அர்த்தங்கள் புலப்படும்—என்கிறார்.

————————

யதிராஜரை அண்டிய ஸ்ரீவைஷ்ணவ லக்ஷணம் சொல்கிறார்.

34-ஸ்திதிம் அவதீர யந்தி அதி மநோ ரத சித்தி
மதீம் யதிபதி சம்ப்ரதாய நிரபாய தநோபசிதா
மதுகர மௌளி தக்ன மத தந்துர தந்தி கடா
கரட கடாஹ வாஹி கந சீகர சீபரிதாம்

” ராமானுஜ சம்பிரதாயம் ” எனப்படும் பெரும் செல்வத்தைப் பெற்ற பின் தொடர்பவர்களின் மகத்துவம் –
உண்மையில் ஒரு செல்வத்தை இழக்கவோ அல்லது திருடவோ முடியாது – சில அம்சங்களைக் கொண்டுள்ளது.
உயர்ந்த வரிசையின் செழுமைக்காக அவர்கள் ஒரு செப்புப் பையைப் பொருட்படுத்த மாட்டார்கள்,
அது எப்போதும் எதிர்பார்த்ததை விட அதிக செல்வம் கிடைத்தாலும், யானைக் கூட்டங்கள் சேர்ந்தாலும்
அவற்றை மதிக்க மாட்டார்கள் –
அவர்கள் ராமானுஜர் அடியார் சம்பந்தமே பிராப்யமாயும் பெரும் செல்வமாயும் கருதி
மற்ற அனைத்தையும் புல்லைப் போலவே திரஸ்கரிப்பார்கள்

ஸ்திதிம் அவதீர யந்தி அதி மநோ ரத சித்தி மதீம்-
மநோ ரதம் கடந்த -ஸ்திதிம் -அவதீர யந்தி -த்ருணாய மேனா-தர்மார்த்த காமங்களை மதிக்காமல் -திரஸ்கரித்து –
யதிபதி சம்ப்ரதாய நிரபாய தநோபசிதா
யதிபதி சம்ப்ரதாயம் -ராமானுஜ தர்சனம் -குரு பரம்பரை மூலம் பெரும் சம்ப்ரதாயம் -வேதார்த்தங்கள் –
அழிவற்ற பெரும் தனம் -நிரபாய தானம் -உபசித்தம் -நல்ல வழியிலே பெற்ற சம்பிரதாய தனம் –மனனம் பண்ணி -ரஷித்து-வாசித்து பிரவர்ப்பித்தும் – –
மதுகர மௌளி தக்ன மத தந்துர தந்தி கடா
மத தந்துர தந்தி– மத நீர் பெருக்கும் யானைகள் –மதுகரம் -வண்டுகள் -அத்யந்த ஸூ கந்தம் -பெருக்கில் மூழ்கி -உந்து மத களிறு —
கடா கரட கடாஹ வாஹி கந சீகர சீபரிதாம்
காதுகள் தாடைகள் -வழியே பெருகும் மத நீர் /கடாஹ வாஹி கந சீகர சீபரிதாம் –மூழ்கி திளைக்கும் படி -மத நீர் திவலைகள்
-இவற்றையும் திரஸ்கரிப்பார்கள் என்றவாறு -ஐஸ்வர்யார்த்திகள் இல்ல என்றவாறு –
கூரத் ஆழ்வான் போல்வார் ஐஸ்வர்யங்களை துரந்து எம்பெருமான் ஸ்ரீ ஸூக்திகளையே தனமாக கொண்டவர்கள் என்றவாறு

இவர்கள், உடையவரின் உபதேசங்களைக் கேட்டும்,ஸ்ரீஸுக்திகளை க்ரஹித்தும்
பகவத் விஷயத்தைத் தவிர மீதி எதிலும் பற்றற்று இருந்தார்கள்.
பகவானின் திருவடிகள்தான் அகண்ட ஐஸ்வர்யம் என்று எண்ணினார்கள்.
மதங்கொண்ட யானைகள் பெருக்கும் மதஜலத்தில், வண்டுகள் வந்து மூழ்கும். யானைக்கூட்டத்தை
உடைய சக்ரவர்த்தியின், சாம்ராஜ்ய ஐஸ்வர்யத்தையே , யதிராஜரின் ஸம்ப்ரதாய ஐஸ்வர்யத்தைப்
பெற்றவர்கள் அலக்ஷியப்படுத்துவர்.

எம்பெருமானார் தர்சனம் என்ற மாசற்ற தனத்தைப் பற்றி அதனால் பெருமை யுற்றவர்கள் –
யானைகள் கட்டி வாழ்தல் -ஆகிற பெரும் ஐஸ்வர்யத்தை பெற நேர்ந்தாலும்
அந்த ஐஸ்வர்யத்தை சிறிது அளவும் மதிக்க மாட்டார்கள் –
த்ருணீக்ருத விரிஞ்சாதி –முக்தகம் ஸ்லோகம் அனுசந்தேயம் –

—————

ப்ரபாவத்தை சமத்காரமாக அருளிச் செய்கிறார் –

35-நிருபதி ரெங்க வ்ருத்தி ரசிகான் அபி தாண்டவயன்
நிகம விமர்ச கேளி ரசிகை நிப்ருதை வித்ருத
குண பரிணத்த ஸூ க்தி த்ருட கோண விகட்ட
நயா ரடதி திசா முகேஷு யதிராஜ யச படஹ-

ஸ்ரீ ரெங்கவாசிகள் நாட்டியக்காரர்கள் என்னும் உவமையில் அன்றாட வாழ்க்கையே நாட்டியம் போலவே தானே அவர்களுக்கு ஏற்ற பறை ஸ்வாமியின் கீர்த்தி -புகழ் என்பதே வேதங்களில் உள்ள ஆழ்ந்த பொருள்களை ஆராய்பவர்கள் யாரோ அவர்கள் அந்தப் பறையை அடித்தபடியே உள்ளார்கள் அந்தப் பறையானது ஸ்ரீ ரெங்கநாதனின் கல்யாண குணங்கள் என்னும் கயிற்றால் இழுத்துக் கட்டப்பட்டுள்ளது இந்தப் பறையில் அடிக்க உதவும் கோல்களாக யதிராஜரின் நூல்கள் உள்ளன ஸ்ரீ ரெங்கத்தில் வாழவைத் தவிர வேறே ஒன்றையும் மனத்தாலும் நினைக்காத அநந்யார்ஹ சேஷ பூதர்கள் மகிழ்ந்து கொண்டே இருக்கும் படி அந்தப் பறை ஒலித்துக் கொண்டே இருக்கிறது ராமானுஜரின் படைப்புகளைப் படிப்பதன் மூலம் அறிவுப் பூர்வமாக உற்சாகமடைந்து,மீண்டும் மீண்டும் தன்னிச்சையாக இருந்தாலும் மகிழ்ச்சியுடன் நடனமாடுகிறார்கள்.இந்த மேளம் அடிக்க, நடனம் இசைந்துள்ளது.இது யதிகளின் ராஜாவான யதிராஜாவின் வருகையை உறுதியுடன் பறை சாற்றும்!

1-நிருபதி ரெங்க வ்ருத்தி ரசிகான் அபி தாண்டவயன் –
ஸ்ரீ ரெங்கே வர்த்திக்கும் -ஸ்ரீ ரெங்கம் நாட்டிய மேடை என்றுமாம் -நிருபதி -உபாதி இல்லாமல் -இயல்பான
-ரசிகர்கள் -இவர்களுக்கு ஜென்ம சித்தம் -நல்லார் வாழும் நளிர் அரங்கம் -இயல்பாக தாண்டவம் செய்து விக்கும் யதிராஜர் யசஸ் என்றுமாம்
-முரசு மாடம் உயர வைத்து அடிக்க –
2-நிகம விமர்ச கேளி ரசிகை -வேதாந்த விமர்சனம் -ஸ்ரீ பாஷ்ய முகேன-நன்றாக ஆராய்ந்து -சர்ச்சை பண்ணி மகிழ்ந்து -நல்ல பொழுது போக்கு
நிப்ருதை வித்ருத -நன்கு கவனம் உடையவர்களால் –வித்ருத -தாங்கி அடர்த்தி பிடித்துக் கொண்டு
3-குண பரிணத்த ஸூ க்தி த்ருட கோண விகட்ட நயா –
குணம் -சத்வ குணம் /கயிறு -அநு குண தசார்த்தி தேனை -நூல்களால் செய்யப் பட்ட திரி -ஸமாஹிதா –ஸ்நேஹம் -எண்ணெய் ஸ்நேஹம்
-ஸ்ரீ தர கருணை -தயா சதகம் —த்ரிதாம -பரம பதம் ஷீராப்தி ஆதித்ய மண்டலம் -திவ்ய தாமம் -சிஷ்யர்களை பரீஷை பண்ணி ஸத்பாத்ரம் ஆக்கி
-சம்ப்ரதாயம் ப்ரதீபம் -அனககுணம் -தோஷம் அற்ற திரி -சத்வ குணம் -ஆஹித ஸ்நேஹம் ப்ரீதி கொண்டு -ஆச்சார்யர் க்ருத்யம் –
குணங்களால் நன்கு கட்டப்பட்ட -பொருள் பொதிந்த ஸ்ரீ ஸூக்திகளால் திடமான கோல் கொண்டு முரசை அடிக்க
ரடதி திசா முகேஷு-ரடதி அபிவிருத்தி -திசைகள் எங்கும் ஒலிக்கும்
யதிராஜ யச படஹ-படகம் முரசு பேரி-எம்பெருமானுடைய யசஸ் ஆகிற முரசு

ஸ்ரீரங்கம்–ரங்கம் என்றாலே நாடக மேடை.
இங்கு, உடையவரின், ஸித்தாந்த ப்ரசாரம் அதிகமாக நடந்தது.
இங்கு, உடையவரின் புகழைப் பேசுபவர்களின் வார்த்தைகளைக் கேட்டு,
ரஸிகர்கள் ஆனந்தக் கண்ணீருடன் நர்த்தனம் செய்கிறார்கள்.
உடையவரின் கீர்த்தி ஒரு வாத்யம் –.பேரிகை . அதன் பெயர்–படஹம்.
இதில் , உடையவரின் ஸ்ரீஸூக்திகள் என்கிற கோல்களால் (குச்சிகள் ) ரஸிகர்கள் , அடிக்கிறார்கள் .
இந்தக் கோல்கள் , ஸ்ரீஸூக்திகளில் உள்ள இனிமையான அர்த்தமுள்ள சொற்களால் கட்டப்பட்ட கோல்கள்.
இது சப்த சௌடவம் ,அர்த்த சௌடவம் என்பர். இதனால், படஹவாத்யத்தை ரஸிகர்கள் அடிக்கிறார்கள்.
இந்த ஓசையைக் கேட்டு, ஸ்ரீரங்கவாஸிகள் ஆனந்திக்கிறார்கள்.ஆனந்தத்தில் ஆடுகிறார்கள் .—ரங்கம் அல்லவா !
இந்த வாத்ய ஓசை நாடெங்கும் பரவியது. பரமாத்மா ஸத்யமானவன் ;
அவனை வைகுண்டத்தில் அடைவதே மோக்ஷம் ;இதுவே நித்தியமானது. என்கிற ஸித்தாந்தம் பரவியது

யதிராஜர் யசஸ் ஆகிற படஹம்-பறை -போன்ற வாத்ய விசேஷம் –
வேதாந்த விசாரம் ஆகிற விளையாட்டில் ரசிகர்களால் –
பொருள் செறிந்த திவ்ய ஸூ க்திகள் ஆகிற தண்டத்தால் தட்டப்பட்டு
ஸ்ரீ ரெங்க வாசிகளான ரசிகர்களை தாமாகவே களி நடம் புரியச் செய்து ஒலிக்கிறது –
ஸ்ரீ ரெங்க வாசம் விரும்புவர் நாட்டியகாரர் என்று கொண்டு -நாட்டியம் அன்றாட வாழ்வு –
பறை ராமானுஜர் புகழ் –
வேத விற்பன்னர் பறை அடிப்பவர்கள்
ஸ்ரீ ரெங்க நாதனது திருக் கல்யாண குணங்கள் அந்த பறையில் கட்டப் பட்ட கயிறுகள் –
ஸ்வாமி ஸ்ரீ ஸூ க்திகள் பறையை அடிக்கும் குச்சி –
இப்படிப் பட்ட ஸ்ரீ ரெங்க வாழ்வே அநந்ய பிரயோஜனர் மகிழ்ந்து இருக்கும் படி –
அந்த பறை ஓசை திக்கு எட்டும் முழங்கு கின்றதே

————————

ராமானுஜரின் கீர்த்தி நாடெங்கும் பரவியதைப் பேசியவர் , ஸ்ரீஸுக்திகளின் கீர்த்தியைச் சொல்கிறார்.

36-இதம் பிரதம சம்பவத் குமதி ஜால கூலங்கஷா
ம்ருஷா மத விஷா நல ஜ்வலித ஜீவ ஜீவாதவ
ஷரந்தி அம்ருதம் அஷரம் யதி புரந்தரச்ய உக்தய
சிரந்தன சரஸ்வதீ சிகுர பந்த சை ரந்த்ரிகா-

இந்தக் கலிகாலத்தில் விதவிதமான பல மதங்கள் தலையெடுத்து விபரீதமாக புத்தி கொண்டதாக உள்ளனர் அந்தக் கூட்டங்கள் அனைத்துமே வேருடன் அறுக்க வல்லது ஸ்வாமியின் கிரந்தங்கள் பொய் என்பதையே மட்டும் குறிக்கோளாகக் கொண்டு அந்தத் தீ மூலம் ஜீவர்களை விஷம் போல் அழிக்கும் மதங்களில் இருந்து ஜீவர்களை ரக்ஷித்து அருளும் –வேதம் என்ற அரசியின் உபநிஷத் என்ற கூந்தலை அழகாகச் சீவி அலங்கரிக்கும் பணிப் பெண்கள் போன்றவை ஸ்வாமி யுடைய கிரந்தங்கள் அவை அழிவற்ற மோக்ஷம் பெரும் அருளை நம் மேல் பொழிகின்றன இவை அனைத்தும் ராமானுஜரின் படைப்புகளால் சாதிக்கப்படுகின்றன.

1-இதம் பிரதம சம்பவத் குமதி ஜால கூலங்கஷா -இ தம் பிரதமம் சம்பவத் வேதம் -அநாதி -என்றவாறு
குமதி –குத்ருஷ்டா மதி சுமதி ஷோபனா மதி -இவை வேத வ்ருத்தம் -கேவல உக்திகளால் -தர்க்கங்கள் -குமதி ஜாலங்கள்
-அல்ப மதியால் பிரமிக்க -விபரீத புத்தி பண்ண வைக்கும் -கூலங்கஷா-கொழுப்பை அடக்கிய -குருகையில் வந்து கொழுப்பு அடக்கிய
குல பதி தந்ததை குறிப்பினில் வைத்து பரமபத பங்கமும் —
2-ம்ருஷா மத விஷா நல ஜ்வலித ஜீவ ஜீவாதவ -மாயாவதி மதம் -ம்ருஷா மதம் -ஜகத் மித்யா ப்ரஹ்மம் சத்யம் -விஷம் கலந்த அ நலம் -நெருப்பு
-விஷம் போலேயும் நெருப்பு போலேயும் -அழல் நாகம் உமிழ்ந்த செந்தீ -அஸ்தானே பய சங்கையால் -அங்கு ஓர் ஆரவாரம் அது கேட்டு
-விஷம் கலந்த அக்னி உமிழ்வானே -அது பிராப்யம் -இது அப்ராப்யம் –ஜீவாது –அமிருதம் பிராணாத்மா சஞ்சீவினி –
-பிள்ளை லோகாச்சார்யார் –சம்சார சர்ப்ப சந்தஷ்ட ஜீவ ஜீவாது -அமிர்தம் -விஷ மாற்று மருந்து இரண்டும் –
3-ஷரந்தி அம்ருதம் அஷரம் -ஒவ் ஒரு ஷரமும் அமிருதம் பெருக்கும்-
யதி புரந்தரச்ய உக்தய -யதீந்த்ரர் -ஸ்ரீ ஸூக்திகள் -நவ கிரந்தங்கள்
4-சிரந்தன சரஸ்வதீ சிகுர பந்த சைரந்த்ரிகா-புராதன நூதன அத்யதன போலே -சிரந்தன
-ஸ்ரீ யதித்வம் மோக்ஷ பிரதத்வம் சன்னியோக சிஷ்ட நியாயம் சேர்ந்தே வரும் –
சிரந்தன சரஸ்வதி -அநாதியான வேத சுருதி -குழல் சிகுரம்-சைரந்திரிகா தலை அலங்காரம் -திரௌபதி வேஷம் -அர்ஜுனன் அலி-வேஷம் ஸ்ரீ பாஷ்ய காரர் ஸ்ரீ ஸூக்திகள் வேதம் பெண் கலைந்த திருமுடியை சீர் பண்ணி அலங்க்ருதம் செய்தன கொங்கில் பிராட்டி ஐதிக்யம் -வெள்ளை-கறுப்பு பின்னல் யதிகள் க்ரஹஸ்தர்கள் கலந்து சம்ப்ரதாயம் வளர்க்க –

மிகவும் ப்ராசீனமான வைதிக தரிசனத்தை உபபாதிக்கும் யதீந்திரருடைய திவ்ய ஸூக்திகள் –
வேதத்துக்கு புறம்பான -மிகவும் பிற்பட்ட காலத்தில் உண்டான
குமதிகளுடைய மதங்களை நசிக்கப் பண்ணியும் –
மாயாவாதம் ஆகிற விஷ அக்னியால் தபிக்கும் ஆத்மாக்களுக்கு ஜீவாதுவாய் இருந்து கொண்டும் –
வேத மாதின் அளகபாரமான உபநிஷத்துக்களை சிக்கிவிடுத்து அழகாகப் பண்ணும்
சைரந்திரிகை யாகை யாகப் பணி செய்தும்
நித்தியமான மோக்ஷ சாம்ராஜ்யத்தை அளிக்கின்றன –

புதிது புதிதாகத் தோன்றுகிற துர்ப்புத்தி உடைய பிற மதத்தினரின் கூட்டத்தைப் பேர்ப்பனவாய்
பொய்யையே கொண்ட மதமாகிய விஷம் கலந்த தீயினால் எரிந்த , ஜீவாத்மாக்களை பிழைப்பிக்கும் மருந்துகளாய்
வேதவாக்காகிற அரசியின் உபநிஷத் பாகமாகிய கூந்தலை வாரி முடித்து அலங்கரிக்கிற பணிப் பெண்களாயுள்ள
ஸ்ரீ பாஷ்யகாரருடைய ஸ்ரீஸுக்திகள் அழிவற்ற மோக்ஷத்தை மொழிகின்றன என்கிறார் .

குதர்க்கவாதிகளின் கொழுப்பை அடக்குவதாயும் ,
மாயாவாதிகளின் மதமாகிய விஷ அக்னியால் , வெந்துபோன ஜீவராசிகளுக்கு உயிர் ஊட்டுபவையாகவும்
அநாதியான ஸ்ருதி ,
யுவதியின் கலைந்துபோன கேசங்களை (வாக்யங்கள் ) சேர்த்து முடிக்கும் தாதி போன்றவையுமான
யதிராஜரின் ஸ்ரீஸுக்திகள் ,குறையாத மோக்ஷமாகிற அமுதத்தைப் பெருக்குகின்றன

4 வது வரியான ” சிரந்தந ஸரஸ்வதீ சிகுர பந்த ஸைரந்த்ரிகா : || “
இது, பழமையான ஐதிஹ்யத்தை உணர்த்துவதாகச் சொல்வர்.
ஸ்ரீபாஷ்யகாரரின் அந்திம காலத்தில்,ப்ரஹ்மவித்துக்களான சில சிஷ்யர்கள்,
தம் ஆசார்யன் பிரிவை எண்ணி வருத்தமும் , பிற்பாடு சித்தாந்தத்தை ஸ்தாபிக்கவல்ல
இத்தகைய ஆசார்யன் இல்லாமல் போவதை எண்ணிக் கவலையும் கொண்டனர்.

இவர்களை நோக்கி, எம்பெருமானார் ,
நீங்கள் என் சிஷ்யையான கொங்குப் பிராட்டியைப் போய்ப் பாருங்கள் உங்கள் கவலை நீங்கும் என்றாராம்.

இவர்களும், அப்படியே சென்று பார்த்து , தங்கள் கவலையைச் சொன்னார்களாம்
இவர்கள் சொன்னதைக் கேட்டுக்கொண்ட கொங்குப்பிராட்டி ,வீட்டுக்குள் சென்று, தலைக்குப் பூசும் தைலம் , சீப்பு , சிவப்பு
மற்றும் வெள்ளைப் பட்டுக்கயிறு இவற்றை எடுத்துவந்து, இவர்கள் எதிரே அமர்ந்து , தலைக்கேசத்துக்குத் தைலம் தடவி,
கேசத்திலுள்ள சிக்கல்களை நீக்கி ,நன்கு வாரி, பின்னி அதைச் சிவப்புக் கயிற்றினால் ,நன்றாகக் கட்டினாளாம் .
பிறகு , சிறிது நேரம் சுகமாக இளைப்பாறினாளாம் .
பிறகு, வெள்ளைப் பட்டுக் கயிற்றால் மறுபடியும் இறுகக் கட்டி இவர்களை வணங்கி , விடைகொடுத்து அனுப்பிவிட்டாளாம்

இவர்கள் நேரே உடையவரிடம் வந்தார்கள் ;நடந்ததைச் சொல்லி , எங்களுக்கு ஒன்றும் புரியவில்லையே என்றார்கள்

எம்பெருமானார் , புன்சிரிப்புடன் விளக்கினாராம்
சிஷ்யர்களே—இந்தப் இந்தப்பெண்ணை ,சாதாரணமாக எண்ணவேண்டாம் ;
வேதங்களே இப்பெண்ணுருவம் பூண்டன
நமது வாக்யார்த்தங்கள் ,உபநிஷத் அர்த்த நிர்ணயம் இவைகளினால் நமக்கு சிஷ்யையாக நடித்தாள் ;
இவளுடைய கூந்தலே உபநிஷத் வாக்யங்கள் ;
இவள் கூந்தலை முதலிலே உதறியது , பிற மதஸ்தர் சொன்ன தவறான அர்த்தங்கள் ;
தைலம் தடவியது ,வேதார்த்த நிர்ணயம் செய்தது;சிக்கலை எடுத்தது , கூந்தலைப் பின்னியது எல்லாம்
விபரீத அர்த்தங்களைக் கண்டித்து உபநிஷத் வாக்யங்களின் ஒற்றுமையை உறுதிப் படுத்தியதைக் காட்டும்.
சிவப்பு பட்டுநூலால் கட்டியது, சிவப்பு நிற காஷாயம் அணிந்த நான்,பிற மதஸ்தர்களால் ,
சித்தாந்தத்துக்குக் கேடு வராதபடி ஸ்ரீபாஷ்யாதி நூல்களை இயற்றி,ப்ரசாரம் செய்தது. சிறிது நேரம் சுகமாக இளைப்பாறியது,
வேதவேத்யனான தன்னுடைய நாயகனோடு, சேர்ந்து இன்பமாக இருந்த நிலையைத் தெரிவிக்கிறது.

உடனே அவர்கள், அப்படிஎன்றால், வெள்ளைப் பட்டுநூலால் கட்டியதற்குப் பொருள்—-? என்று கேட்டார்கள்.
அதற்கு,
எம்பெருமானார், நாமே, சிலகாலம் கழித்து, மீண்டும் காஞ்சியில் தூப்புலில் , வேதாந்த தேசிகனாக அவதரிக்கப் போகிறோம்;
ஆயுள் முழுவதும் க்ருஹஸ்தாஸ்ரமத்திலேயே இருந்து,
க்ரந்தங்கள் உபதேசங்கள் மூலமாக நம் சித்தாந்தத்தை மேலும் வளர்ப்போம்;
பிறமதவாதிகளை வாதப்போரில் வெல்வோம்;

இதனால்தான்
வேங்கடசாவதாரோயம் தத்கண்டாம் சோதவா பவேத் |
யதீந்த்ராம்சோதவேத்யேவம் விதர்க்யாயாஸ்து மங்களம் ||
என்று, ஸ்வாமி தேசிகன் ஸ்ரீநிவாசனின் அவதாரமோ,
அவனுடைய திருமணியின் அவதாரமோ, அல்லது யதிராஜரின் அவதாரமோ என்று ஊஹிக்கப்படுபவருக்கு
மங்களம் என்று சொல்வதாக, பறவாக்கோட்டை ஸ்ரீமதாண்டவன் தனது வ்யாக்யானத்தில் சொல்கிறார்.

————

ஸ்ரீ ஸூக்தி பிரபாவத்தை -மேலும் அனுபவிக்கிறார் –

37-ஸூதா அசன ஸூ துர்க்ரஹ ஸ்ருதி சமஷ்டி முஷ்டிந்த்ய
கதா ஆஹவம் அசௌ கதான் கபட சௌகதான் கண்டயன்
முனி மனஸி லஷ்மண முதம் உதஞ்ஜயதி அஞ்ஜசா
முகுந்த குண மௌக்திக ப்ரகர ஸூக்திபி ஸூக்திபி

உப்புச்சாற்றைப் பருகும் தேவர்களாலும் எளிதில் அறிந்து கொள்ள இயலாத ஆழ்ந்த பொருள்களை
யுடைய வேதங்களை மிகவும் எளிதாக ஒரு பிடியில் பருக வல்லவர் நம் ஸ்வாமி,
புத்தாதி பாஹ்யர் வாதங்களை எளிதாக நிரஸித்து அருளினார்
அவருடைய கிரந்தங்கள் அனைத்துமே எம்பெருமானின் கல்யாண குணங்கள் என்னும் முத்துக் குவியல்களை
உருவாக்கிப் பாதுகாக்கும் முத்துச் சிப்பி போல் உள்ளன
இதன் மூலம் நம்மை பேர் இன்ப வெள்ளத்தில் ஆழ்த்துகின்றார் .
இறைவன் ஒரு கல்யாண குண சாகரம் என்பதை விளக்கி, முத்துக்களை, அதாவது இறைவனின் குணங்களை
வரிசையாகக் கொண்ட சிப்பி ஓடுகளாகச் செயல்பட்டு நம் இதயங்களை மகிழ்விக்கிறார் .

ஸூ தா அசன –தேவர்கள் -ஸூ தா அமிர்தம் —
ஸூ துர்க்ரஹ –அவர்களாலும் கிரகிக்க முடியாத
சுருதி சமஷ்டி முஷ்டிந்த்ய –சர்வ வேதங்களையும் -கையிலே -முஷ்டியிலே-தயந்தி -பருகுவது –தாத்பர்ய சூஷ்ம ஸமஸ்த அர்த்தங்களையும் -கைக் கொண்டு
கதா ஆஹவம் அசௌ–ஆஹவம் யுத்தம் –கதா ஆஹவம் –வாத யுத்தம் –ஆஹவ புங்கவ ஸ்தோத்ரம் -திருப் புட் குழி பெருமாள் சந்நிதியில் -ஸ்ரீ தேசிகன் அருளி
கதான் கபட சௌகதான்–புத்தர்கள் –கபட சந்யாசிகள் பிரசன்ன புத்தர்கள்
கண்டயன்-நிராகரித்து —
முனி மனஸி லஷ்மண –லஷ்மண முனி
முதம் உதஞ்ஜயதி -ஸந்தோஷம் ஏற்படுத்தி -பாஹ்ய குத்ருஷ்ட்டி நிரசன பூர்வகமாக கல்யாண குணங்களை அருளிச் செய்த ஸ்ரீ ஸூக்திகளாலே –
அஞ்ஜசா —
முகுந்த குண மௌக்திக ப்ரகர–முத்து குவியல்
சுக்திபி ஸூக்திபி–அருளிச் செய்த ஸூ க்திகளாலே –
குணங்களான முத்துக்கள் -முகுந்தனின் கல்யாண குணங்கள் நிரம்பிய ஸூக்திகளாலே —

உடையவரின் ஸ்ரீஸுக்திகளுக்கு, பெருமை எப்படி வந்தது ? சொல்கிறார்,ஸ்வாமி தேசிகன்.
ஸ்ரீபாஷ்யம் போன்ற ஸ்ரீஸுக்திகள் ,மேலெழுந்தவாரியாக அர்த்தம் பண்ணினால்,
அத்வைதத்தைக் கண்டிப்பதாகத் தோன்றினாலும்,
பகவானின் கல்யாண குணங்களை,உறுதிப்படுத்திச் சொல்கின்றன என்கிறார் .
2வது வரியில், உடையவரை “அஸௌ ” என்பதற்கு, உடையவரே நேரில் ப்ரத்யக்ஷமாகி,
ஸ்வாமி தேசிகனுக்குப் பிற மத கண்டனங்களை உபதேசிக்கிறார் என்று வியாக்யானம் இடுகிறார்கள்.
உடையவரின் ஸ்ரீஸுக்திகள் ,சிப்பிகளைப்போல ! இவற்றில், பகவானின் கல்யாண குணங்கள் என்கிற முத்துக்கள் உள்ளன.
அதனால், எனது மனத்தில், ஆனந்தம் வெள்ளப் பெருக்கு எடுக்கிறது, என்கிறார் .

ஸமஸ்த கல்யாண குணாத்மகன் பகவான் என்று ஸ்தாபித்து –
பகவத் குணங்களான முத்துக்களுக்கு இவை முத்துச் சிப்பி போல் உள்ளன –
அமுதம் உண்ணும் தேவதைகளுக்கும் நிலம் இல்லாத மறைகளின் உட் பொருளை கையிலங்கு நெல்லிக் கனியாகக் கண்டு
கொண்டுள்ள ஸ்வாமி கபடர்களைத் தம் ஸ்ரீ ஸூக்திகளால் கண்டித்து நம் மனத்தில் ஆனந்தத்தை வளரச் செய்கிறார் –

———————

உடையவர், ப்ரஹ்மத்தைக் காத்தவர் என்கிறார்.

38-கபர்த்தி மத கர்த்தமம் கபில கல்பநா வாகுராம்
துரத்யயம் அதீத்ய தத் த்ருஹிண தந்திர யந்திர உதரம்
குத்ருஷ்டி குஹ நா முகே நிபதத பரப்ரஹ்மண
கர க்ரஹ விசஷணோ ஜயதி லஷ்மண அயம் முனி

பர ப்ரஹ்மம் சைவம் என்னும் சேற்றிலே சிக்கியது
கபில முனிவரின் சாங்க்ய வலையிலே சிக்குண்டது
நான்முகன் கண்ட யோக ஸாஸ்த்ரம் என்னும் இயந்திரத்தின் நடுப் பகுதியிலே அகப்பட்டது
இவற்றையும் தாண்டி மாயாவாதிகளின் வாதங்களிலே சிக்குண்டது
இவை அனைத்தையும் நீக்கி பர ப்ரஹ்மத்தை மிகவும் எளிதாக உயர்த்த வல்லவராக
உள்ள ஸ்வாமி அனைவரிலும் மேம்பட்டவராக உள்ளார்-

கபர்த்தி மத கர்த்தமம் –புதை சேற்றில் -கர்த்தமத்தில் –கபர்த்தி மதம் -சைவ மதம் —கபர்த்தி -ருத்ரன் -ஜடா முடிக்கு கபர்த்தம் /
கபில கல்பநா வாகுராம்-கபிலர் கற்பனை ரூபமான வலை–கர்த்தப பிரஜாபதி குமாரர் கபிலர் —பிரக்ருதிக்கு ஸ்ருஷ்ட்யாதி காரணத்வம் சொல்லி
துரத்யயம் அதீத்ய –கடக்க ஒண்ணாத
தத் த்ருஹிண -சதுர்முக ப்ரஹ்ம -யோக மதம் ஆகிய –
தந்திர யந்திர உதரம் –கபடமாக பிடித்து வைக்கும் யந்த்ரம் / சாஸ்திரம் நமக்கு உபாதேயம் –
மதங்கள் த்யாஜ்யம் –தத்வம் ஹிதம் புருஷார்த்தங்கள் இவர்களுக்கு வேறே -/ தட்டான் வைரம் பதிக்க -மாப்பிள்ளையாக முடியாதே –
குத்ருஷ்டி குஹ நா முகே –பாழும் கிணறு –
நிபதத பரப்ரஹ்மண –பர ப்ரஹ்மம் விழுந்து கொண்டே இருக்க –
கர க்ரஹ விசஷணோ ஜயதி -கை கொடுத்து தூக்கி ரக்ஷித்து -ஜெயந்தி -பல்லாண்டு பல்லாண்டு
லஷ்மண அயம் முனி
கரம் / கஜம் குடுமி -அப்பய்ய தீக்ஷிதர் –மேலே குடுமி இருக்குமே -ஐயோ கை தூக்கி தானே கிணற்றில் விழுவார்கள் –

பரப்ரஹ்மம் —
சைவம் என்கிற சேற்றில் விழாமல் அதைத் தாண்டி,
கபிலரின் சாங்க்யமத வலையில் அகப்படாது தப்பித்து,
சிக்கல் உள்ள சார்வாகமத யந்த்ரதந்த்ரங்களில் புகாமல் பிழைத்து, வந்தது.
சங்கரரின் மாயாவாதத்தில் –அதன் வாயில் அகப்பட இருந்த சமயத்தில்,
பரப்ரஹ்மத்தைக் கைகொடுத்துக் காப்பாற்றியவர் , யதிராஜர் .
அதனால், அவர் மேன்மையாக விளங்குகிறார் என்கிறார்
ஜயகோஷம் செய்கிறார்–ஜய ஜய யதிராஜ

பரம் பொருளான புருஷோத்தமனைப் பல பெரிய ஆபத்துக்களின் நின்றும் ரக்ஷித்து அருளினவர் எம்பெருமானார் –கடக்க அரிதான சைவம் என்ற சேற்றைக் கடந்து சாங்கியருடைய அப்ரமாணிகமான மதமாகிற வலையில் இருந்து தப்பி –த்ருஹிண -மதமாகிற -யோக மதம் -சுழலும் யந்திரத்தின்-மத்யத்தையும் தாண்டி குத்ருஷ்டிகளான குகை வாயிலில் விழுந்து கொண்டு இருந்த பர ப்ரஹ்மம்
எம்பெருமானைக் கை கொடுத்து ஆபத்தின் நின்றும் விடுவிக்கும் சாமர்த்தியம் வாய்ந்த இந்த லஷ்மண முனி விஜய ஸ்ரீ யுடன் பிரகாசிக்கிறார் –

—————

39-கணாத பரிபாடிபி கபில கல்பநா நாடகை
குமாரில குபாஷிதை குரு நிபந்தன க்ரந்த்திபி
ததாகத கதா சதை தத் அநுசாரி ஜல்பை அபி
பிரதாரிதம் ஜகத் பிரகுணிதம் யதீந்திர உக்திபி –

ராமானுஜரின் உன்னதமான நூல்கள் களத்தில் இறங்கி மக்களின் மனசாட்சியை சரியான நேரத்தில் உருவாக்கியது.

கணாதாரின் -வைசேஷிகரின் பரம அணுவே காரணம் என்பதையும்
கபிலனின் கற்பனை -சாங்க்ய தத்வம்
ஏமாற்றம் முற்றிலும் நாடகம் மற்றும் புரளி
குமாரிலா பட்டரின் மீமாம்ஸா வாதமும்
பிரபாகரர் போதித்த முடிச்சு போன்ற அவிழ்க்க முடியாத புதர்களாலும்
புத்தரின் பல்வேறு புனைகதைகளாலும் சூன்ய வாதங்களாலும் ,
அவர்களை போன்றே மாயாவாதிகளின் வாதங்களாலும் இந்த உலகம் பெரிதாக குழம்பி நின்றது
இந்த நிலையானது ஸ்வாமிகளின் கிரந்தங்களால் சீராக்கப் பட்டது

கணாத பரிபாடிபி –பரிபாஷைகளால் முதலில் –சப்தம் சொல்லி ஒவ்வாத அர்த்தம் சொல்லி -சாங்கியம் பிரதானம்
-மூல பிரக்ருதிக்கு பரிபாஷை –இவர்களுக்கு –கணாத ரிஷி -வைசேஷிக மதம் -பரமாணுவை —
கபில கல்பநா நாடகை-கற்பனையான நாடகங்கள் –ஈஸ்வரனை ஒத்துக்க கொள்ளாமல் –நிரீஸ்வர –
குமாரில குபாஷிதை–மீமாம்சகர் -குமாரில பட்டர் —குஸ்ஸிதா பாஷ்யம்–நிந்திக்கும் மதம் பிரபாகரன் சிஷ்யர்
-அபிப்ராய பேதம் -குரு மதம் -பரிகாசமாக -குருவுக்கு விஞ்சிய –வேதாந்தம் நிந்தித்து
குரு நிபந்தன க்ரந்த்திபி–முடிச்சுகள் போட்டு -அறிய முடியாத படி —
ததாகத கதா சதை –ததா கதன் -புத்தன் -சூன்யம் இதம் சர்வம் –ததா கதம் நாஸ்திக வாதம் –
-ஜாபாலி -பெருமாள் –வார்த்தை –கதா -வாதங்கள் -பிரமாணங்கள் கொண்டு சொல்லாமல் –சதை -கணக்கற்ற
தத் அநுசாரி ஜல்பை அபி–பிரசன்ன புத்தன் -ஞானம் ஒன்றே -ஜகம் மித்யா ப்ரஹ்மம் ஒன்றே ஜல்பிதம்
பிரதாரிதம் ஜகத்–ஏமாற்றப் படாதே ஜகம் –
பிரகுணிதம் யதீந்திர உக்திபி–தன்னை சுதாரித்து கொண்டதே -வெளி வந்து -ஸ்வாமி களுடைய ஸ்ரீ ஸூ க்திகளாலே
யதார்த்தமான தத்வ ஹித புருஷார்த்தங்களை வெளியிட்டு அருளி –

உலகம் ஏமாந்த தருணம்—-
கணாதர் என்பவரின் பரிபாஷைகள்;
கபிலரின் கற்பனைகள்;
குமாரிலரின் குறையுள்ள பேச்சுகள்;
ப்ரபாகர குருவின்,சிக்கலான நூல் முடிச்சுகள்;
புத்தரின் கட்டுக் கதைகள்;
இவற்றாலெல்லாம் ,பிறந்து பரவிய அர்த்தமில்லாப் பேச்சுகள் ;
இப்படி உலகம் ஏமாந்து இருந்த சமயத்தில், எம்பெருமானார் ஸ்ரீஸுக்திகள் பிறந்து பரவி வளர்ந்தன;
உலகம் தன்னை சுதாரித்துக் கொண்டது.
இப்படி, உண்மையை உலகுக்கு, தன்னுடைய ஸ்ரீஸுக்திகளின் மூலமாக உணர்த்தியவர், யதிராஜர்

தாங்கள் கெட்டது போதாது என்று லோகத்தாரையும் தாங்கள் கல்பித்த அபார்த்தங்களாலே
கெடுத்தவர்கள் கணாதர் கபிலர் குமரில பட்டர் பிரபாகர் புத்தர் இவர்களை
தம் ஸ்ரீ ஸூக்திகளால் நிரசித்து லோகத்தார் க்ஷேமத்தை பெருக்கியவர் நம் ஸ்வாமி –

——————

ஸ்வாமியுடைய சிஷ்ய அக்ரேஸர்களுடைய பெருமையை பரக்க உபபாதிக்கிறார் –

40-கதா கலஹ கௌதுக க்ரஹ க்ருஹீத கௌதஸ்குத
ப்ரதா ஜலதி சம்ப்லவ க்ரசன கும்ப சம்பூதய
ஜெயந்தி ஸூ திய யதி ஷிதிப்ருத் அந்திக உபாசநா
பிரபாவ பரிபக்த்ரிம ப்ரமிதி பாரதீ சம்பத

ஸ்வாமியின் திருவடி நிழலில் எப்போதும் அண்டி நின்று அதனாலேயே
பெருமை -முழுமையான ஞானம் வாக் வன்மை பெற்றவர்கள்
வாதம் செய்ய வல்ல புற சமயிகள் -உத்ஸாகம் என்னும் பிசாசால் பீடிக்கப்பட்ட புற மதவாதிகள் யுடைய
புகழ் என்னும் கடலை அகஸ்தியர் போன்று உறிஞ்சி விடுவதில் வல்லவராக அல்லவா உள்ளனர் –
ராமானுஜரின் காலடியில் அருகாமையில் படிக்கும் பாக்கியத்தைப் பெற்ற அறிஞர்களுக்கு முதிர்ந்த ஞானம் இருக்கிறது,
அதுவே அவர்களின் செல்வம். அத்தகைய அறிஞர்கள் உலகை மகிழ்விக்கப் போகிறார்கள்.

கதா கலஹம் -யுத்தம் -வாய் சண்டை கலகம்-வாதப்போர்
கௌதுக க்ரஹ-குதூகலம் இவற்றால் -க்ரஹம் -பிடித்து துன்புறுத்தும் -நவ க்ரஹம் போலே / முதலை -பிசாசங்களும் க்ரஹம்
–நல்லது செய்யும் சாமர்த்தியம் சர்வேஸ்வரன் ஒருவனே –க்ருஹம் -வீடு வேற — —
க்ருஹீத கௌதச்குத-தார்க்கிகள் –ஏன் ஏன் கேட்டுக் கொண்டே -விச்வாஸ ஹீனர்கள் -தர்க்க மாத்ர நிஷ்டர்கள்
ப்ரதா ஜலதி சம்ப்லவ க்ரசன–சமுத்திரம் -அபரிச்சின்ன தீர்த்தம் -பருகி -க்ரசனம் -வாயில் போட்டுக் கொள்ளுவது –
கும்ப சம்பூதய –ஏக வசனம் -அகஸ்தியர் -இங்கு பல அகஸ்யர்கள் -பஹு வசனம் -கும்பயோனி அகஸ்தியர் —
ஜெயந்தி ஸூ திய –சோபனா மதி தீ -ஞானம் –
கும்ப கரணர்–பண்டு ஒரு நாள் கூற்றத்தின் வாயில் விழுந்து -தெற்குத் திக்கில் –தோற்றும் உனக்கே பெரும் துயில் –
வேதாந்தத்தில் பகவத் அனுபவம் -ஸூ ஷிப்த்தி தசை –இதுவே துயில் அணை —
கும்ப சம்பூதியையே சொல்கிறாள் ஆண்டாள் -பேயாழ்வார் -பாசுரம் -பெரும் தமிழன் —
வாசல் திறவாதார் -இவரே –
யதி ஷிதிப்ருத்–யதி ராஜர் -பூமியை நிர்வஹிக்கிறவர்-ஷிதி-பூமி / ப்ருத்-நிர்வகித்தால் -பர்த்தா/ பரம் பாரம் பொறுப்பு
–பூ பாலன் -என்றவாறு —பூ ஷிதி பர்யாயம்
அந்திக உபாசநா–அருகில் இருந்து -குருகுல வாசம் –சிசிருஷை பண்ணி -கற்று –
பிரபாவ பரிபக்த்ரிம ப்ரமிதி –பலபூதமான -பரிபக்குவமான தசை அடைந்து -ஒளி விட –
பாரதீ சம்பத–சாஸ்திர ஞானம் -ஐஸ்வர்யம் -நாவினுள் நின்று மலரும் ஞானக் கலைகள் –

“சிஷ்யஸ்தேஹம் ” என்று, பணிவு பக்தியுடன் தன்னைவந்து ஆச்ரயிக்கும் சிஷ்யர்களுக்கு, உடையவர்,
மறுபடியும் சந்தேகத்துக்கு இடமில்லாமல், கற்பிப்பார்.
இந்த சிஷ்யர்கள்–குட்டி அகஸ்த்யர்கள் பிறமதவாதிகளின் , புகழ் என்கிற சமுத்ரம் பொங்கிய போது,
இந்த சிஷ்யர்கள், குட்டி அகஸ்த்யர்களாக ஆகி, அந்த சமுத்ரத்தையே பானம் செய்துவிட்டார்கள்,
( திருக்குருகைப் பிரான் பிள்ளான், கிடாம்பி ஆச்சான் ,கூரத்தாழ்வான் போன்ற சிஷ்யர்கள் )
இவர்கள் வித்யா ஸம்பன்னர்கள் ;ஸத்ஸம்ப்ரதாய நிஷ்டர்கள் ;ஸ்ரீவைஷ்ணவ வித்வான்கள் .

இப்படி புறச் சமயிகள் வாதம் பண்ணுபவர்கள் எங்கே எங்கே என்று கடல் போலே பொங்கி வந்தாலும் –
அகஸ்தியருக்கு ஒப்பான சிஷ்யர்கள் -கடல் நீர் வற்றும் படி ஆசமனம் பண்ணினது போலே –
இக்கடலையும் உலர்த்த வல்லவர்கள் –
ஆழ்வான் ஆண்டான் பிள்ளான் போல்வார் அவர்களை அடக்க வல்லவர்கள் –
எம்பெருமானார் திருவடிகளில் கைங்கர்ய ப்ரபாவத்தால் இவர்கள் வித்யா பூர்ணர்களாய் –
தத்வ ஞானிகளாய் –
ஜய சீலர்களாய் -விளங்குகிறார்கள் –

—————

ஸ்வாமியுடைய திருவடி சம்பந்திகளுடைய திருவடி சம்பந்த பலத்தை துணை கொண்டு
தற்காலம் உள்ள பாஹ்ய குத்ருஷ்டிகளின் தலை மேல் கால் வைத்து நிரசனம் பண்ண வல்லேன் -என்கிறார் –

41-யதீஸ்வர சரஸ்வதீ ஸூரபித ஆசயா நாம் சதாம்
வஹாமி சரணாம் புஜம் பிரணதி சாலிநா மௌளிநா
ததன்ய மத துர்மத ஜ்வலித சேதஸாம் வாதி நாம்
சிரஸ்ஸூ நிஹிதம் மயா பதம் அதஷிணம் லஷ்யதாம்

ராமானுஜரின் படைப்புகளின் ஞான நறுமணத்தைப் பெற்ற மஹான்களின் தாமரை பாதங்களை என் தலையில் சுமக்கிறேன்.
ஆனால் அதே சமயம் உலகமும் பார்க்கட்டும் என்று சொல்கிறேன்.
எரியும் பைத்தியக்கார வெறியுடன், ராமானுஜரின் அமைப்பை எதிர்த்துப் போட்டியிடுபவர்களின்
தலையில் நான் என் இடது காலை வைக்கத் துணிவேன்.

யதீஸ்வர சரஸ்வதீ--எம்பெருமான் அருளிச் செய்த சாஸ்திர ஞானம் -நவ கிரந்தங்கள்
ஸூ ரபித ஆசயா நாம் சதாம் –ஆசயாம் புத்தி –தேசிகாசாய பிரகாசம் -ஆசை ஹிருதயம் பிரகாசம் —ஸூ ரபி பரிமளம் -எப்பொழுதும் கமழ்ந்து உள்ள
சரணாம் புஜம் -திருவடித் தாமரைகள்
பிரணதி சாலி நா மௌளிநா –தாழ்ந்து வணங்கி சிரஸா
வஹாமி -வகிக்கிறேன் —சதாம் சரணம் புஜம் அந்வயம்
மேலே
ததன்ய மத துர்மத -தத் அந்நிய பாஹ்ய குத்ருஷ்டிகள் மதம் –துர்மதம் -அசூயை -துர் குணங்கள்
ஜ்வலித சேதஸாம் வாதி நாம்–நாம் கல்யாண குணங்கள் பிராப்தி அனுபவிப்பதை சொல்ல -அவர்கள் மனம் அசூயையால் பற்றி எரியுமே–
சிரஸ்ஸூ நிஹிதம் மயா பதம் அதஷிணம் –இடது காலை வைப்பேன் -பீச்சங்கால் –வலது காலை வைக்க கூட மதிக்க மாட்டேன் –தக்ஷிணம் -வலது —
லஷ்யதாம் -லோகம் காணக் கடவது -இத்தை ரகஸ்யமாக செய்ய வில்லை –behold -அனைவரும் பாருங்கோள்-நிஹிதம் -வைக்கப் பட்டது காணீர் —

வேதவிரோதமதங்கள் , உடையவராலும், அவரது ஸ்ரீஸுக்திகளாலும் மீண்டும் தலையெடுக்காதபடி செய்யப்பட்டன.
அவரது பெருமைமிகு சிஷ்யர்கள் பிள்ளான் , ஆச்சான் போன்றவர்கள் திருநாடு அலங்கரித்தார்கள்.
அப்புள்ளாரும் ,ஸுதர்சன ஸுரியும் வயோதிகம் அடைந்து விட்டார்கள்.
இதுதான் தக்க தருணம் என்று, பிற மதஸ்தர்கள் , எதிரிகள் ஒன்று சேர்ந்து,வாதப்போருக்கு ஆயத்தமான சமயத்தில்,
ஸ்ரீவைஷ்ணவர்கள் ,என்செய்வது என்று கலங்கி இருந்தபோது,
எதிரிகளின் மாயாவாதங்களை நிரஸித்த யதிராஜரின் விசிஷ்டாத்வைத சித்தாந்தத்தை
மறுபடியும் ஸ்தாபித்தவர்,ஸ்வாமி தேசிகன்.
இந்த ஸ்லோகத்தில், ஸ்வாமி தேசிகன்,
அப்புள்ளார் போன்ற பூர்வாசார்யர்களின் திருவடிகளைத் தலையில் தாங்கினேன் .
அந்த பலத்தினால்,தீய மனம் கொண்ட எதிரிகளின் தலையில் ,
என் இடதுகாலை வைத்து,அவர்கள் தலையை இடறுகிறேன் —என்கிறார்

யதிராஜ திவ்ய ஸூக்திகளின் வாசனை கமழும் மனத்தினரான மஹான்களுடைய திருவடித் தாமரைகளை
சென்னிக்கு அணியாகக் கொண்ட அடியேன் எம்பெருமானார் தரிசனத்துக்குப் புறம்பான மதங்களில்
துர்மானத்தால் மனதை வைத்துள்ள புறச் சமயிகள் தலைகளை
என் இடதுகாலால் மிதிக்கிறேன் -யாவரும் காண்க என்று வீர வாதம் பண்ணுகிறார் –

——————

எம்பெருமானார் தரிசனத்தில் நிலையாய் இருந்து பாபம் அற்று ஸூ கமாய் இருப்பாயாக –
என்று தம் திரு உள்ளத்தை நோக்கிச் சொல்கிறார் –

42-பஜஸ்வ யதிபூபதே அநிதமாதி துர்வாச நா கதத்வ
பரி வர்த்தன ச்ரம நிவர்த்தநீம் வர்த்தநீம்
லபஸ்வ ஹ்ருதய ஸ்வயம் ரத பத ஆயுத அனுக்ரஹ
த்ருத ப்ரஹ்ருதி நிஸ் த்ருடத் துரித துர்வ்ருதிம் நிர்வ்ருதிம்

ஓ என் மனமே! ராமானுஜரின் ஒரு தெளிவான பாதையைத் தேர்ந்தெடுங்கள்,
அதில் இழியவே பல்வேறு பாதைகளில் அலைந்து திரிவதில் இருந்து விடுபடும்.
அது சக்ராயுதம் ஏந்தும் எம்பெருமானின் கிருபா மழையை உங்கள் மேல் பொழிவிக்கும்
அது உங்கள் பாவங்களைக் கழுவுவதற்கு, உங்கள் மீது வேகமாகப் பெருகும்.
இதன் மூலம் அந்தமில் பேர் இன்பம் உடனே கிட்டி விடும்

பஜஸ்வ ஹ்ருதய–உபாயமாக இதை செய் -பஜநம்-ஏக தேசம் -சிரவணம் கீர்த்தனம் -இத்யாதி நவ வித –
-ப்ரீதி பூர்வக அனுசந்தானமே பஜனம்-இங்கு உபாயம் –இது வரை பெறாத ஒன்றை பெறுவது
லாபம் -பிரவ்ருத்தி செய்து பெறுவது – இங்கு யதிராஜர் ராஜ பாட்டை -உபாயமாக அர்ச்சிராதி மார்க்கம்
யதிபூபதே-பூமியா பதி பூ பதி -யதிராஜர் –
அநிதமாதி துர்வாச நா-கதத்வ பரி வர்த்தன–-கதா கதா சிரமம் -மாறி மாறி பல பிறப்பும் பிறந்து –
கதத்வம் –தீய மார்க்கம் -தூமாதி -மார்க்கம் சென்று ஸ்வர்க்காதி அனுபவித்து திரும்பி — பரி வர்த்தனம் மீண்டும் மீண்டும் —
காரணம் -துர்வாசனை –க்ருத்ய அகரணம் அக்ருத்ய கரணம் -அநாதி காலமாக -கிற்பன் கில்லேன் –முனை நாள்கள் எல்லாம் –
-கிற்பன் முடியும் என்று இலேன் -கில்லேன் முடியாது என்று இலேன் —
பகவத் ஆஜ்ஜை சித்தம் -என்று உணராமல் ஸ்வரூப ஹானி -முனை நாள்கள் எல்லாம் அல்ப சாரங்கள் அவை சுவைத்து –
-சுவைக்க சுவைக்க உன்னை விட்டு அகன்றேன் –விகிதத்தை செய்யாமை -அவி ஹதம் செய்து -இல்லாத காலமே இல்லை -அநாதி காலம் –
என்னைப் பார்த்தால் பேற்றுக்கு வழி இல்லை -உன்னைப் பார்த்தால் பேறு கொடுக்காமல் இருக்க முடியாதே
-கைக் கொள்ளாமல் இருக்க விரகு இல்லை உன்னைப் பார்த்தால்
முந்நீர் –ஆக்கையின் வழி உழல்வேன் —முன்னாள் எல்லாம் -யதிராஜர் இவற்றை நிவர்த்தித்து -ராஜ மார்க்கம் அடைவாயாக –
ச்ரம நிவர்த்தநீம் வர்த்தநீம் -சிரம நிவர்த்தனீ வர்த்தனீ -மார்க்கம் -அர்ச்சிராதி மார்க்கம் -சன்மார்க்கம் பஜஸ்வ-இத்தால் -அடைவது மேலே
லபஸ்வ ஹ்ருதய -மனமே இதை அடைவாய் -புருஷார்த்தமாக பெறுவாய்
ஸ்வயம் ரத பத ஆயுத அனுக்ரஹ–தேருக்கு பதம் -தேர் சக்கரம் -ரதாங்க பாணி -சக்கரம் –கமன சாதனம் பதம் –
ஆயுதமாக உடையவன் -கையார் சக்கரத்து கரு மேனி அம்மன் -அனுக்ரஹத்தால்
நிக்ரஹ நிவ்ருத்தி பெறுவாய் -ஸ்வாமி ராஜ பேட்டையில்
அதி வேகமான பிரவாகம் -அருள் வெள்ளம் –
த்ருத ப்ரஹ்ருதி நிஸ் த்ருடத் துரித துர்வ்ருதிம் நிர்வ்ருதிம் -துரிதம் -உரு மாய்ந்து போகும் -சகடாசுரன் பட்டது படும்
நிஸ் த்ருடத்-சும்மெனாதே கை விட்டோடி -தூறுகள் பாய்ந்தனவே –
துரித -சஞ்சித பாபங்கள் –துர்வ்ருத்திம் -துக்கம் உண்டாக்கும் பாபங்கள் -பிராரப்த கர்மங்கள் –
நிர்வ்ருதிம் –நிரவதிக ஆனந்தம் லபஸ்வ -அடைவாய் –
பஜஸ்வ –பக்தி பிரபக்தி -சொல்ல வில்லை -எதிராஜர் சம்ப்ரதாயம் –சாது கோஷ்ட்டி அடைந்து –த்வஜ விட்டு ஒழிக்க வேண்டியது
துர்ஜன சம்சர்க்கம் த்வஜித்து -சாது சமாகம் கைக் கொள்ள வேண்டும் -இத்தையே பஜஸ்வ என்கிறார் –
பத-பாத-சப்தங்கள் -பதயத்தி இதி பதம் ப்ராப்யம் -எதனால் சென்று அடைகிறோம் -பரம பதம் -பரம பிராப்யம்
திவ்யாத்மா ஸ்வரூபம் -ப்ரத்யாத்மக ஸ்வரூபம் ஸ்தான விசேஷம் மூன்றும் -பரமபதம் என்பதால் குறிக்கும் –
ஸ்ரீ பதம் -பெரிய பிராட்டியார் திருவடி —பர தத்வம் இது தான் -சாஸ்திரம் பிரவ்ருத்தி திருவைக் கண்டதும் -நின்றதே –
எல்லை அடைந்தோம் என்றதே —
பாத விபக்தி பரிச்சயம் ரகு வம்சம் -காளிதாசர் காவியங்கள் குமார சம்பவம் வாசித்து அறிய வேண்டும் -பாஷா விசேஷம்
-சம்பாஷணை ரூபம் –நாடகங்கள் வாசித்து சாகுந்தலம் -என்னை பேசு என்னை பேசு என்னப் பண்ணும் -பிரயோகங்கள் அறியலாம் 

இந்த ஸ்லோகத்தில் “மனஸ் “ஸுக்குச் சொல்கிறார்–பாகவதர்களுக்கும் சொல்வதாவது –
பிற மதங்கள்—முள்ளும் கற்களும் நிறைந்த பாதை.
அதில் செல்லாமல் ,
யதிராஜரால் நன்கு அமைக்கப்பட்ட ஸித்தாந்த வழியில் செல்வாயாக !
பகவானின் அனுக்ரஹ வெள்ளத்தால் ,பாபமாகிய தடங்கல் அழிய ,
வைகுந்தம் சென்று பரமானந்தத்தை அனுபவிப்பாய் என்கிறார்

ஓ மனமே அநாதியாக துர்வாசனையால் தடம் கெட்டுத் திரிவதால் உண்டான இன்னல்களைப் போக்கும்படி யுள்ள
செப்பன் இட்ட மார்க்கமாகிற சத் சம்பிரதாயத்தைப் பற்றினால்
கை கழலா நேமியனான எம்பெருமானின் அனுக்ரஹத்தால்
பாபம் அற்ற வாழ்ச்சி பெறுவாய் என்று தம் திரு உள்ளத்துக்கு உபதேசிக்கிறார் –

———————

எம்பெருமானார் ஸ்ரீ ஸூக்திகள் சார தமமானவை –
அதனால் மதிக்க முடியாத பெருமை வாய்ந்தவை -என்கிறார் –

43-குமதி விஹித க்ரந்த்த க்ரந்த்தி ப்ரபூத மதாந்திர
க்ரஹிள மனச பஸ்யந்தி அல்பம் யதீஸ்வர பாரதீம்
விகட முரபித் வஷ பீடீ பரிஷ்கரண உசித குலகிரி
துலா ஆரோஹே பாவீ கியான் இவ கௌஸ்துப-

வீணான இயங்கியல்வாதிகளின் தவறான புத்தகங்களில் உள்ள தவறான எண்ணங்களால் உலகம் நிறைந்துள்ளது.
அவர்கள் மீது சாஃப்ட் கார்னர் உள்ள எவரும், வெறி பிடித்த மனம் கொண்டு வலிய முடிச்சுகளால்
கட்டப்பட்டவர்களாய் இருந்து ராமானுஜரின் படைப்புகளை அளவிலும் மதிப்பிலும் அற்பமாகக் கருதுவார்கள்.
இருப்பினும், அத்தகைய மதிப்பீட்டால் நாங்கள் புண்படுத்தப்படவில்லை, ஏனெனில்
இறைவனின் மார்பில் உள்ள ஸ்ரீ கௌஸ்துப ரத்தினம் ஒரு உயர்ந்த மலைச் சங்கிலியுடன் ஒப்பிடும் போது
அளவில் அற்பமானதாகத் தோன்றும் என்றாலும் எல்லாவற்றிற்கும் மேலாக, மதிப்பிடும் அன்றோ

குமதி விஹித –குஸ்திதா மதி குமதி -குத்ருஷ்டிகள் –வேதத்தை இசைந்து -பாஹ்யர் இசையாமல் -இருவரும் சேர்ந்து குமதி -அவர்களால் பண்ணப் பட்ட
க்ரந்த்த க்ரந்த்தி– ப்ரபூத -நிறைந்த கிரந்தங்கள் —அதி ப்ரபூதான் -பூரித்து வைத்த –கிரந்தம் -எழுதி -கிரந்தி பேசி வைத்தது –
மதாந்திர -மாதாந்தரங்கள் –
க்ரஹிள மனச-அகப்பட்டு விகாரம் அடைந்த மனசை யுடையவர்கள் –
பஸ்யந்தி அல்பம் யதீஸ்வர பாரதீம் -யதீஸ்வரர் வாக் வ்ருத்திகள் ஸ்ரீ ஸூ க்திகளை அல்பம் என்பர் சிலர் –
பிரமாணம் பிரமேயம் -சர்வம் சூன்யம் -என்பர் –
அத்வைதர் -புத்தர் கூடி –கடனை கண்டாகாதி -எல்லா மதமும் தப்பு என்பதே இவர்கள் மதம்
கண்டன கண்ட காவியம் கண்டனத்துக்கு சதா தூஷணி பண்ணினார் -தத்வ முக்த கலாபம் பண்ணினார் -தேசிகன்
ஆல்பமாக கணிசித்தால் தோஷம் ஆகாதோ எண்ணில்
விகட முரபித் வஷ பீடீ பரிஷ்கரண உசித –போக்யமான -பகவான் உடைய வஷத் ஸ்தலம் -மேடை -கோயில் கட்டணம் அன்றோ அவளுக்கு
-அலங்கரிக்க உசிதமான கௌஸ்துபம்
குலகிரி துலா ஆரோஹே பாவீ கியான் இவ கௌச்துப–பெரிய பர்வதம் -கூட கௌஸ்துபத்துக்கு ஒவ்வாதே-
நிரவதிக தேஜஸ் அன்றோ இது –
மந்த புத்தி கொண்டு இவர்கள் செய்த புத்தகச் சும்மை– பொருந்தாதே -ராமானுஜர் மெய்ப்பொருள் பொருந்திய பின் நம் மனசிலே
தங்கம் -குந்துமணி -சாம்யம் -என்பதை கண்டு வருந்தும் -உருக்கி அடித்தாலும் வருந்தாமல் -சாம்யம் எடையில் தான் என்றாலும் -வருந்தும்

பிற மதங்களில் தர்க்கவாத நூல்கள் நிறைய இருக்கின்றன.
அந்த மதவாதிகளுக்கு, உடையவரின் ஸித்தாந்த நூல்கள், சிறியதாகவே தோன்றும்.
பகவானின் திருமார்பில் அணிகலனாக இருக்கும் “கௌஸ்துப மணி” மிகவும் சிறந்தது;
ஆனால், சிறியது.
குலாசலம் என்கிற மலை மிகப் பெரியது.
தராசில் எடைபோட்டால் மலை இருக்கும் தட்டு அடியிலேயே இருக்கும்;
எடையைக்கொண்டு சிறப்புகளைக் கூற முடியுமா ?
பிற மத நூல்கள் நிறைய இருந்தாலும் குலாசலம் என்பதற்காக உயர்வைப் பெறாது.
கௌஸ்துப மணியைப் போன்ற ஸ்ரீபாஷ்ய ஸுக்திகள் உயர்ந்தவை.
ஸாரமான நூல்களும் ஸம்பிரதாயமும் உள்ளவை–என்கிறார்,

இதர மதஸ்தர்கள் அநேக விஷயங்களை சம்பந்தா சம்பந்தம் இன்றி முடித்து இருப்பதால்
அவர்களுடைய கிரந்தங்கள் விஸ்தாரமாய் இருக்கும் -பொருள் இராது –
எம்பெருமானார் ஸ்ரீ ஸூக்திகள் சாரமாய் இருப்பதால் சிறியவை என்று சொல்லி அவமதிப்பார் சிலர் –
பெரிய பாராங்கல்லை தராசின் ஒரு தட்டிலும்
பெரிய பெருமாள் திரு மார்பை அலங்கரிக்கும் ஒப்புயர்வற்ற கௌஸ்துபத்தை ஒரு தட்டிலும் வைத்தால்
எது எடை அதிகமாக இருக்கும் —
அதிக எடை இருப்பதால் பாராங்கல் உயர்ந்ததாகி விடாது என்றபடி –

—————

ஸ்வாமியுடைய ஸ்ரீ ஸூக்திகளின் பெருமை மந்த மதிகளுக்கு நிலம் இல்லை என்கிறார் –

44-ஸ்த்தவிர நிகம ச்தோம ஸ்த்தேயாம் யதீஸ்வர பாரதீம்
குமதி பணிதி ஷோப ஷீபா ஷிபந்து பஜந்து வா
ரச பரிமள ச்லாகா கோஷ ஸ்ப்புடத் புட பேதனம்
லவண வணிஜ கர்ப்பூர அர்க்கம் கிம் இதி அபிமன்வதே

ராமானுஜரின் படைப்புகள் பழங்கால வேத வாசகங்களில் முரண்பாடுகள் ஏற்படும் போதெல்லாம் அவற்றைத் தீர்க்க நமக்கு உதவுகின்றன.
தர்க்க வல்லுனர்களின் கேடுகெட்ட வாதங்களால் பாதிக்கப்பட்டு, நல்ல புத்தியை இழந்தவர்கள்,
ராமானுஜரின் படைப்புகளை விட்டுவிடலாம், இல்லையென்றால், அந்தப் படைப்புகளைப் படிக்கட்டும். அது என்ன விஷயம்?
பச்சைக் கற்பூரத்தின் சுவையை புகழ்ந்து பேசும் சத்தம் மிக அதிகமாக இருக்கும் ஒரு நகரத்தில்,
சாதாரண உப்பு வியாபாரிகள் பச்சைக் கற்பூரத்தைப் பற்றி எப்படிப் பதிலளிப்பார்கள்? இது வெளிப்படையானது
(அவர்களுக்குத் தெரியாது அல்லது ரசிக்க முடியாது!-இவர்களால் பச்சைக் கற்பூரம் தனது மஹிமையை இழக்காது அன்றோ )

ஸ்த்தவிர நிகம ச்தோம ஸ்த்தேயாம்–ஸ்த்தவிர -நிகம பழைமையான -முதிர்ந்த –ப்ராசீனம் –
-ஸ்தோம -வேதம் – ஸ்த்தேயாம்-கைம்முதல் –தத்வ ஹித புருஷார்த்தங்கள் நிர்ணயம் பண்ண –
யதீஸ்வர பாரதீம்–ஸ்ரீ பாஷ்யகாரர் ஸ்ரீ ஸூ க்திகள்
குமதி பணிதி ஷோப ஷீபா-குத்ருஷ்டிகள் -பாஹ்யர்கள் -பணிதி இயற்றப்பட்ட நூல்கள் –ஷோபம்-அஹங்காரம் –
ஷிபந்து பஜந்து வா — ஷேபித்தாலும் பஜித்தாலும் சரி-இதனால் ஏற்றமோ தாழ்வோ -கோது என்று இகழ்வினும்-கொள்-வோம் – என்று உகந்தாலும் –
இதுக்கு த்ருஷ்டாந்தம் மேலே
ரச பரிமள ச்லாகா கோஷரசம் -நாவுக்கு –பரிமளம் -ஸூ கந்தம்-கொண்டாடும் கோஷம் –
ஸ்ப்புடத் புட பேதனம்— நகரம் எல்லாம் எதிர் ஒலிக்கும் படி –
லவண வணிஜ கர்ப்பூர அர்க்கம் -கிம் இதி அபிமன்வதே-பச்சை கற்பூரம் –சாதாரணமாக சொல்லும் இது கற்பூரம் இல்லை -வியாவர்த்திக்க
–பச்சை விசேஷணம் –menthaal synthetik பேர் -oliyam -5th deraivative camphor –
அர்க்கம் -விலை மதிப்பு -புல்லிங்க சப்தம் -உப்பு வியாபாரிக்கு எப்படி தெரியும் –நகரம் எங்கும் நான்கு திக்கிலும்
எதிர் ஒலித்து இருந்தாலும் –இவன் என்னவாக நினைப்பான் –பேதனம் -பிளக்கும் படி -ஒலி என்றவாறு
கிம் இதி அபிமன்வதே-அபிமானிக்கிறார் -அபிமானம் -பிரமம் –அபிமன்யதே -பாட பேதம் –உள்ளத்து உள்ளபடி அறிதல் –
யதார்த்த ஞானம் யதார்த்த ஞானம் இரண்டுக்கும் அபிமானம் உண்டே
அபிமன்யதே பாடம் சரி இல்லை என்பர் –
வேதாந்த ச்சார்யார் கிரந்த மாலை -காஞ்சி ஸ்வாமிகள் நன்றாக சிரமம் எடுத்து -பாட பேதங்கள் -சமன்யவப்படுத்துவார்

வேதங்கள் ,உபநிஷத்துக்கள் —இவைகளின் கருத்துக்களை விளக்கும் ,ஸ்ரீ உடையவரின் ஸ்ரீஸுக்திகளை ,
குயுக்தி வாதங்கள் செய்பவர் இகழ்ந்தாலும் , ஏற்றாலும் —இரண்டும் எமக்கு ஒன்றே.
தனது சுவை, வாஸனை இவை பற்றிக் கொண்டாடிப் பேசப்படுபவர்களால் உயர்வாகக் கருதப்படும்
பச்சைக் கற்பூரத்தை, உப்பு விற்பவர்கள் அறியமாட்டார்கள் என்கிறார்

சிக்கல்களை விடுவித்துத் தெளிவாக உண்மைப் பொருளை உபபாதிக்கும் யதீஸ்வருடைய ஸ்ரீ ஸூக்திகளை
புத்தி கேடர்களான புறச் சமயிகளின் பேச்சுக்களால் மனக் கலக்கம் அடைந்து மதி இழந்தோர்
கொண்டால் என்ன -விட்டால் என்ன- ஒரு குறையும் இல்லை –
மிக உயர்ந்த வஸ்து என்று ஊர் அறிந்த கற்பூரத்தின் பெருமையை -விலையை
உப்பு விற்பவன் எப்படி அறிவான்–மூட்டை என்ன விலை – என்று தான் கேட்ப்பான் –

————

45-வஹதி மஹி ளாம் ஆத்ய வேதா த்ரயீ முகரை முகை
வர தநுதயா வாம பாக சிவஸ்ய விவர்த்ததே
ததபி பரமம் தத்த்வம் கோபீ ஜனச்ய வசம் வதம்
மதன கதனை ந க்லிச்யந்தே யதீஸ்வர சம்ஸ்ரயா-

மும்மூர்த்திகளில் பிரம்மா வேதம் ஓதும் முகங்களில் தன் மனைவியைத் தன் நாக்கில் சுமந்துள்ளார்.
சிவனின் இடது பாதி முழுவதையும் அவன் மனைவி எடுத்துக் கொள்கிறாள்.
உயர்ந்த பரதத்வமான கண்ணனோ , தனது சொந்த வழியில், கோபியர்களுக்கு அடி பணிந்தார்.
அப்போது, ​​பெண் பால் காதலுக்கு அடி பணியாதவர்கள் ராமானுஜரின் சீடர்கள் மட்டுமே!
யதிராஜ அடியவர்கள் காமாதி தோஷங்களில் சிக்கிக் கொள்வதில்லை என்றவாறு

வஹதி மஹி ளாம் ஆத்ய வேதா த்ரயீ முகரை முகை
ஆத்ய -சிருஷ்டியில் முதல் -வேதா -நான் முகன்–வேதஸாம் பிதாமக –தூண் பிதாமகி-ஸ்தம்பம் -பிள்ளை -அவர் பிள்ளை கணக்கற்ற நான் முகன் –
அண்டங்கள் பல பல —
த்ரயீ -வேதங்கள் -எண்ணிக்கை இல்லை -ருக் யஜுவ்ர் சாம -மூன்று வகை -முன்பு யுகங்களில் ஒரே வேதம் -கலிக்காக நான்காக பிரித்து
அதர்வணம் -ருக்கில் சேரும் -என்பர் -வஸிஷ்டர் ராமர்
பட்டாபிஷேகம் அதர்வண வேதம் கொண்டு –
முகரை-இடை விடாமல் -வாசனையே உபாத்தியாயர் -வாய் வெருவுதல் -வெருவாதாள் வேங்கடமே வேங்கடமே என்கின்றாளால்
வேதங்களை வாய் விடாமல் சொல்லி —வஹதி மஹி ளாம்-வகிக்கிறாள் -சரஸ்வதி
வர தநுதயா வாம பாக சிவஸ்ய விவர்த்ததே –
அழகிய -ஸ்ரேஷ்டமான -பகுதியில் -இடது பாகத்தில் -மாறு பட்டு விளங்கும் -சிவனுக்கு -உமை ஒரு பாகன் –
விவர்த்த வாதம் -பரிணாமம் -வாதிகள் -உபாதான காரியம் இரண்டும் சத்யம் -ப்ரஹ்மம் மட்டும் சத்யம் விவர்த்தம்
ஸ்வரூப பரிணாமம் -உபாதி பரிணாமம் -நாம் சரீர பரிணாம வாதிகள் –
வியாவர்த்தகன் -வியாவர்த்தகம் -வேறு பட்டது -முரட்டு ஆண் சரீர பாகத்தி இருந்து வேறு பட்ட அழகிய இடப் பாகம்
வர வர முனி -அழகிய மணவாள முனி –
ததபி பரமம் தத்த்வம் கோபீ ஜனச்ய வசம் வதம்-பர தத்வம் -சர்வ நியாந்தா -அவன் கூட கோபி ஜனங்கள் வசப்பட்டு -நியாமகன்
முன்பு சொன்னவர்கள் அபர தத்வங்கள் -நஹீ நிந்தா நியாயம் -எம்பெருமானார் திருவடி சம்பந்தம் இல்லாத பலனைக் காட்டி அருளுகிறார் –
அமர்யாதா -துர்மானி -அநாத ஸ்தோத்ர ரத்னம் -53 -கூரத் ஆழ்வான் சொல்ல மாட்டார் -ஆளவந்தார் எம்பெருமானார் திருவடி சம்பந்தம் இல்லை சொன்னார் நான் சொல்ல மாட்டேன் என்பாராம் -அழகர் கேட்டு ஆனந்தம் அடைந்தார் –
மதன கதனை ந க்லிச்யந்தே–மன்மதன் -மூலம் கிலேசம் அடைய முடியாதே
யதீஸ்வர சம்ஸ்ரயா–ஸ்ரீ ஸூக்திகள் -பயின்று -கடாக்ஷ உபதேசங்களால் -யத்ர யத்ர யதீஸ்வர ஸம்ஸரய–தத்ர தத்ர இது இல்லை என்றவாறு –

யதிராஜருடைய விசிஷ்டாத்வைத ஸித்தாந்தம் ,கௌஸ்துபமணி பச்சைக் கற்பூரம் போன்றது –
இதற்குக் காரணம் என்ன ? சொல்கிறார்.
விச்வாமித்ரர் போன்ற ரிஷிகள் ,அப்சரஸ் ஸ்த்ரீகளிடம் மயங்கினார்கள்.
ப்ரஹ்மா , தன் மனைவி சரஸ்வதியை எப்போதும் தன்னுடைய நாவிலேயே வைத்துக்கொண்டிருக்கிறார்.
பரமசிவனோ ,தன் சரீரத்தில் பாதியையே பார்வதிக்குக் கொடுத்து, பிரியாமல் இருக்கிறான்.
பகவானோ, மஹாலக்ஷ்மியைத் தன் திருமார்பில் வைத்துக் கொண்டு இருக்கிறான் ;
இது போதாது என்று, ஆயர்பாடியில் இடைச்சிகளுக்கு வசப்பட்டு இருக்கிறான்.
ஆனால், இப்படி காமத்துக்கு வசப்படாதவர் யதிராஜருடைய திருவடியை ஆச்ரயித்தவர்கள்.
மும்மூர்த்திகளையும் ஆட்டிப்படைக்கும் காமம், யதிராஜரின் ஸித்தாந்தத்தில் மூழ்கி,
அவருக்கு சிஷ்யர்களாக இருப்பவர்களிடத்தில் ,நெருங்கவே பயப்படுகிறது.
ஆக , காமத்துக்கு வசப்படாதவர்கள், யதிராஜரின் ஸித்தாந்தத்தில் நிஷ்டை உடைய சிஷ்யர்கள் —என்கிறார்

எம்பெருமானார் தரிசனத்தை அவலம்பித்தவர்கள் விஷய வைராக்யம் உள்ளவர்களாகப் பார்க்கக் படுகிறார்கள் -என்கிறார் –
அனாதியான வேதங்களை சதா உருச் சொல்லிக் கொண்டு இருக்கும் நான்முகனும் நாவிலே மனைவியை கொண்டுள்ளான் –
சிவனுடைய இடது புறமே பெண்ணாய் விட்டது -பரதத்வமான எம்பெருமானும் கோபியர்கள் வசமாய் விட்டான்
ஆனால் எம்பெருமானார் திருவடிகளை பற்றினவர்கள் காமனால் பீடிக்கப் படுவதில்லை –பரம விரக்தர்களாய் இருப்பார்களே –

ஹதி மஹிலாமாத்யோ வேதாஸ்த்ரயீமுகரைர்முகை
வரதனுதயா வாமோ பாக: ஶிவஸ்ய விவர்ததே |
ததபி பரமம் தத்த்வம் கோபிஜனஸ்ய வஶம்வதம்
மதன கதனைர்ன க்லிஶ்யந்தே கதம் ந்விதரே ஜனா: ||– சங்கல்ப ஸூர்யோதய ஸ்லோகம்

வேதம் முழங்கும் தன் திருநாவில்
நான்முகன் தன் மனைவி கலைமகளைத் தாங்கினான்…
சிவனுக்கு ஒரு பாதி உடலே பெண்ணாக ஆனது…
இவர்களை விட கண்ணனென்னும் பெரிய தத்துவமோ
கோபிமார்களின் வசத்தில் ஆட்பட்டு கிடக்கிறான்…
மன்மதனிடம் போரிட்டு இவர்களே தோற்றார்கள் என்றால்
சாமான்ய மக்கள் என்ன ஆவரோ!

வஹதி மஹி ளாம் ஆத்ய வேதா த்ரயீ முகரை முகை
ஆத்ய -சிருஷ்டியில் முதல் -வேதா -நான் முகன்–வேதஸாம் பிதாமக –
தூண் பிதாமகி-ஸ்தம்பம் -பிள்ளை -அவர் பிள்ளை கணக்கற்ற நான் முகன் –
அண்டங்கள் பல பல —
த்ரயீ -வேதங்கள் -எண்ணிக்கை இல்லை -ருக் யஜுவ்ர் சாம -மூன்று வகை –
முன்பு யுகங்களில் ஒரே வேதம் -கலிக்காக நான்காக பிரித்து
அதர்வணம் -ருக்கில் சேரும் -என்பர் -வஸிஷ்டர் ராமர்
பட்டாபிஷேகம் அதர்வண வேதம் கொண்டு –
முகரை-இடை விடாமல் -வாசனையே உபாத்தியாயர் -வாய் வெருவுதல் –

வெருவாதாள் வேங்கடமே வேங்கடமே என்கின்றாளால்
வேதங்களை வாய் விடாமல் சொல்லி —வஹதி மஹி ளாம்-வகிக்கிறாள் -சரஸ்வதி
வர தநுதயா வாம பாக சிவஸ்ய விவர்த்ததே –

அழகிய -ஸ்ரேஷ்டமான -பகுதியில் -இடது பாகத்தில் -மாறு பட்டு விளங்கும் -சிவனுக்கு -உமை ஒரு பாகன் –
விவர்த்த வாதம் -பரிணாமம் -வாதிகள் -உபாதான காரியம் இரண்டும் சத்யம் -ப்ரஹ்மம் மட்டும் சத்யம் விவர்த்தம்
ஸ்வரூப பரிணாமம் -உபாதி பரிணாமம் -நாம் சரீர பரிணாம வாதிகள் –
வியாவர்த்தகன் -வி யா வர்த்தகம் -வேறு பட்டது -முரட்டு ஆன் சரீர பாகத்தி இருந்து வேறு பட்ட அழகிய இடப் பாகம்

வர வர முனி -அழகிய மணவாள முனி –
ததபி பரமம் தத்த்வம் கோபீ ஜனச்ய வசம் வதம்-பர தத்வம் -சர்வ நியாந்தா -அவன் கூட கோபி ஜனங்கள் வசப்பட்டு -நியாமகன்
முன்பு சொன்னவர்கள் அபர தத்வங்கள் -நஹீ நிந்தா நியாயம் -எம்பெருமானார் திருவடி சம்பந்தம் இல்லாத பலனைக் காட்டி அருளுகிறார் –
அமர்யாதா -துர்மானி -அநாத ஸ்தோத்ர ரத்னம் -53 -கூரத் ஆழ்வான் சொல்ல மாட்டார் -ஆளவந்தார் எம்பெருமானார் திருவடி
சம்பந்தம் இல்லை சொன்னார் நான் சொல்ல மாட்டேன் என்பாராம் -அழகர் கேட்டு ஆனந்தம் அடைந்தார் –
மதன கதனை ந க்லிச்யந்தே–மன்மதன் -மூலம் கிலேசம் அடைய முடியாதே
யதீஸ்வர சம்ஸ்ரயா–ஸ்ரீ ஸூ க்திகள் -பயின்று -கடாக்ஷ உபதேசங்களால் –
யத்ர யத்ர யதீஸ்வர ஸம்ஸரய–தத்ர தத்ர இது இல்லை என்றவாறு –

மன்மதனிடம் போரிட்டு யதிகளின் அரசனை அண்டியவர்கள் தோற்பதில்லை…

யதி என்பது துறவியைக் குறிக்கும். யதிகளின் அரசனாக ராமானுஜரைக் குறிப்பிடுகிறார்.
ராமானுஜரை அண்டியவர்கள் காமம் என்னும் சிற்றின்பத்துக்கு அடிமையாவதில்லை என்பது கருத்து.

இதில் சில சொல் விளையாட்டுக்களையும் கவி உள்நுழைத்து இருக்கிறார்.
ஆத்யோ வேதா: என்று பிரமன், ஒன்பது பிரஜாபதிகளில் முதன்மையானவன் என்றும்,
முதன்மையானவனே பெண்ணைத் தன் நாவில் தாங்குகிறான் என்றும் குறிப்பிடுகிறார்.
அடுத்து “சிவ”னென்னும் பெயர் தாங்கியவன், இடம் வலமாக மாறி “வசி” என்று வசப்பட்டவனாகி விட்டான் என்று குறிப்பிடுகிறார்.
அடுத்து கோபிகைகளைக் குறிப்பதற்கு, ஆண்பால் சொல்லான கோபி ஜன: என்று குறிப்பிட்டது,
கோபிகைகள் “இடைப் பேச்சும் முடை நாற்றமுமாக” பார்ப்பதற்கு அப்படி ஒன்றும் அழகு என்று சொல்ல முடியாமல் இருந்ததை
சூசகமாக சுட்டிக் காட்டி, அவர்கள் பார்வைக்காகவும் கண்ணன் காத்திருந்தான் என்று குறிப்பிடுகிறார்.

—————

46-நிகம பதிக சாயா சாகீ நிராசா மஹா நிதி
மஹித விவித சாஸ்த்ர ஸ்ரேணீ மநோ ரத சாரதி
திரிபுவன தம ப்ரத்யூஷ அயம் த்ரிவித்ய சிகாமணி
ப்ரதயதி யதி ஷமாப்ருத் பாராவரீம் அபிபர்யயாம்

ராமானுஜர்- வேதங்களின் ஆழ்ந்த பொருளை அறியாமல் வழிப்போக்கர்கள் போல் திரிபவர்களுக்கு
அவற்றை அறிவித்து நிழலை வழங்கும் மரத்தைப் போல் நிற்பவர்,
வேத வழியைப் பின்பற்றுபவர்களால் மகிழ்ந்தவர்;
எல்லா ஆசைகளையும் துறந்த மக்களுக்கான
உத்வேகத்தின் மதிப்பு மிக்க புதையல் -களஞ்சியமாகப் போற்றப் படுபவர்;
அவரது வழியைப் பின்பற்றும் பல்வேறு மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்ற உதவுபவர்;
சீடர்களை நல்ல வழியில் இட்டுச் செல்லும் தேர்ப் பாகனாக இருப்பவர்
மூன்று உலகங்களின் அந்தகார அஞ்ஞான இருளுக்கு விடியல் போல் செயல்படுபவர்;
வைதிகர்கள் தலையில் சூடும் இரத்தினக்கல் போன்றவர்
மற்றும் வேத ஞானத்தின் தலை சிறந்த தலைவன் –
பர ப்ரஹ்மனைப் பற்றிய சரியான அறிவை நம்மில் புகுத்துபவர்
அஞ்ஞானம் ஸம்சய ஞானம் விபரீத ஞானம் போன்ற மயர்வுகளை அறுத்து மதி நலம் அருள்பவர்

நிகம பதிக சாயா சாகீ -நிகமம் -வேதங்கள் -பதிகம் -மூன்று யுகங்களிலும் நல்ல வழி காட்டும் -வழிப் போக்கன் —
நிகமமாகிற பதிகம் என்றபடி -களைத்து போன வேதத்துக்கு நிழல் தரும் வ்ருக்ஷம் போலே ஸ்ரீ பாஷ்யகாரர்
-திருவாய்மொழியும் வேதத்துக்கு களைப்பை போக்கி -என்பர் –
நிராசா மஹா நிதி –நிராசர்களுக்கு -பற்று அற்ற பரமை காந்திகளுக்கு மஹா நிதி போன்றவர் -சாம்சாரிக ஆசை இல்லாமல்
பகவத் விஷயத்தில் ப்ரீதி கொண்ட அநந்ய பிரயோஜனர்களுக்கு –
மஹித விவித சாஸ்த்ர ஸ்ரேணீ மநோ ரத சாரதி -உயர்ந்த -விவித -சாஸ்த்ரர் -சிஷ்ய வர்க்கர் -ஸமாச்ரயணம் பண்ணி -அமர்ந்து கால ஷேபம் செய்பவர்கள் –
ஸ்ரேஷ்டர்கள் -பலர் -சிஷ்யர் சமுதாயத்துக்கு -மநோ ரதத்துக்கு -சாரதியாக இருந்து வழி நடத்துபவர் -மேலும் மேலும் ஆழ்ந்து கற்க ஆசை கொண்டவர்களுக்கு –திரிபுவன தம ப்ரத்யூஷ -மூன்று உலகுக்கும் தமஸ் இருளை போக்கும் -அருணோதயம் முன்னால்–ப்ரபாதம் -ப்ரத்யூஷம் -விடியல் -உஷா காலத் தொடக்கம் -அயம் த்ரிவித்ய சிகாமணி-மூலமான வேதம் அறிந்தவர்களுக்கு நாயகர்-ஸீரோ பூஷணம்
ப்ரதயதி யதி ஷமாப்ருத் -யதி ராஜர் -பிரகாசப்படுத்தி அருளுகிறார் –
பாராவரீம் அபிபர்யயாம் –சமுத்திரம் -மாறாட்டங்கள் இல்லாமல் -விபரீத புத்தி இல்லாமல் -நிர்குணம் நிர் விபூதி -என்பார்கள் குத்ருஷ்டிகள்
-ஸ்திரமான திடமான -விபர்யயம் சம்சயத்துக்கும் உப லக்ஷணம்-பாராவாரம் -அபரிச்சின்னம் -திடம் -கடல் போன்ற -என்றவாறு –

சரி, இவர்கள், காம வசப்படாதவர்கள்–இவர்களுக்குப் பேரின்பம் கிட்டுமோ ?
இப்படி இருக்கும் முமுக்ஷுக்களுக்கு ( மோக்ஷத்தை விரும்புபவர் ) அழிவற்ற,நித்யமான ,
பகவானின் திருவடிகளைச் சரணம் அடையும் வழியைக் காட்டுகிறார், யதிராஜர் .
இந்த சிஷ்யர்கள், பலவிதம்;
க்ருஹஸ்தர்கள் ; ப்ரஹ்மசாரிகள்; ஸன்யாசிகள் ; பெண்கள்;இப்படிப் பலவிதம்.
இவர்கள், ஆசார்ய பக்தியும், பகவத் பக்தியும் உள்ளவர்கள்.
யதிராஜர், அவரவர் மனநிலைக்கேற்ப உபதேசித்து, மோக்ஷ அனுபவத்தை ஏற்படுத்துகிறார்.
இவர், த்ரிவித்ய சிகாமணி –என்கிறார் -மூன்று வேதங்களே ப்ரமாணம் என்று கர்ஜிக்கும்,
வித்வான்களுக்கு , அலங்காரமான சிரோபூஷணம்

எம்பெருமானார் வேதம் காட்டும் வழியில் சஞ்சரிக்குமவர்களுக்கு குளிர்ந்த நிழல் தரும்
பல கிளைகளையுடைய மரமாய் இருப்பவர்
வைராக்ய சீலர்களுக்கு பெரிய நிதி –
பற்றிலார் பற்ற நின்றானே என்னும் படி –
வர்ணாஸ்ரம ஸ்த்ரீ புருஷ விபாகத்தால் பலவிதமான பூஜிக்கத்தக்க சிஷ்யர்கள் மனம் ஆகிற ரதங்களுக்கு சாரதி
எல்லா உலக இருள் போக்கும் உஷஸ் -வைதிக ஸார்வ பவ்மர் –
நித்தியமான ஜீவாத்மா பரமாத்மா -சம்பந்த -சேஷ சேஷி பாவத்தை விளக்கமுறச் செய்து அருளுகிறார் –

———————

மேலும் ஸ்ரீ ஸூக்திகள் வைபவம் –

47-ஜடமதி முதா தந்தா தந்தி வ்யதா ஔஷத சித்தய
ப்ரமிதி நிதய ப்ரஜ்ஞா சாலி ப்ரபாலன யஷ்டைய
சுருதி ஸூரபய சுத்த ஆனந்த அபி வர்ஷூக வாரிதா
யம கதி கத விச்சேதின்ய யதீஸ்வர ஸூக்தய

ராமானுஜரின் படைப்புகள் பிரகாசிக்கின்றன:

முட்டாள்களுடன் தொடர்ந்து வாதிடுவதன் விளைவாக –தந்தா தந்தி வ்யதா-பல்லின் கடி வேதனை போல் புத்தியைக் கலக்கும்
இதற்கு ஏற்ற மருந்தாக ஸ்வாமியுடைய கிரந்தங்கள் –ப்ரமிதி நிதய-ஞானத்தின் பொக்கிஷமாக உள்ளன
நமது ஞானம் என்னும் பயிரைக் காப்பாற்றும் யஷ்டைய-நான்கு கொம்புகள் போல் நான்கு வேதங்களும் உள்ளன
இத்தகைய சுருதி ஸூரபய-வேதங்களின் நறு மணத்தை அவற்றின் சேர்க்கை மூலம் ஸ்வாமியுடைய கிரந்தங்கள் நம் மேல் வீசும்படி உள்ளன
எங்கும் ஞானம் ஆனந்தம் என்னும் மழை பொழியும் மேகம் போன்றவை இவை
நாம் யம லோகம் செல்வதற்கு எதிராக ஒரு உறுதியான உத்தரவாதம்-
யமலோகம் என்ற பேச்சையே முற்றிலும் நீக்க வல்லவை-

ஜடமதி முதா தந்தா தந்தி வ்யதா ஔ ஷத சித்தய-ஜடம் -ஞானம் இல்லாமல் -அசுயம் பிரகாசம் –முத்தா -வீணாகா பேசி –
அதனால் பல் வலி –வ்யதா-நல்ல மருந்து போல்வனவும் -பரமமான ஒளஷதம் –
தந்தா தந்தி -விதண்டா வாதம் செய்து -அதனால் பல் நோவும் படி –வாய் சண்டை -என்றபடி –
ப்ரமிதி நிதய-பிரமங்கள் தோஷங்கள் இல்லாத நல்ல யதார்த்த ஞானம் -உடையவர்களுக்கு நிதி –
ப்ரஜ்ஞா சாலி ப்ரபாலன யஷ்டைய -தத்வ தெளிந்த ஞானம் –ப்ரஜ்ஞ்ஞா -விசுவாசம் -கொண்டவர்களை நன்கு வழி நடத்தி
-யஷ்டி-லீலா யஷ்டி -மாட்டை ஓட்ட –கறையினார் துவர் உடுக்கை –அழுக்கும் கறையுமே வைத்து வஸ்திரம் –
கடை ஆவின் கழி கோல் கை -வழி காட்டி ஓட்ட –பசு பாலனம் -புத்தியை நல்ல வற்றை தோன்ற செய்து –
சுருதி ஸூரபய –செவிகளுக்கு அமிருதம் –சுரக்கும் சுரபிகள் போல் சொல் அமுதே —பசுக்கள் -நறு மணம்-கமழும் ஸ்ரீ ஸூ க்திகள்
காதுகளில் மிருத வர்ஷம் -செவிக்கு இனிய செஞ்சொல் –
சுத்த ஆனந்த பிவர்ஷூக வாரிதா–துக்கம் கலப்பற்ற ஆனந்த மேகம் -இடைவீடு இன்றி வர்ஷிக்கும் முகில் -நிரவதிக ஆனந்த பகவத் விஷய ஞானம்
யம கதி விச்சேதின்ய–நமன் கதி -வார்த்தையே பிரஸ்த்துதம் இல்லாமல் –யம வஸ்த்தையே வார்த்தையே இல்லாமல் –
யதீஸ்வர ஸூக்தய-எம்பெருமானார் உடைய ஸ்ரீ ஸூ க்திகள்

யதிராஜரின் ஸ்ரீஸுக்திகள் —–
மூடர்களோடு விவாதித்து விவாதித்து பல்வலி வந்தவர்களுக்கு பரம ஔஷதம் .
இவை சூக்ஷ்மங்களின் புதையல்.
விவேகிகளுக்கு வழிகாட்டும் செங்கோல்கள் ;
வேதமணம் வீசும் ஸ்ரீஸுக்திகள் .
பிறமதங்களை விரட்டித் துரத்தும் தடிகள்.
துன்பத்தையே ஏற்படுத்தாமல், இன்பத்தையே கொடுப்பவை.
நரகத்தைத் தடுக்கும் வல்லமை உள்ளவை–முன்னை வினை அகல-தென் புலத்தார்க்கு என்னுக் கடவுடையேன் யான்  -தனியனில் உண்டே

இராமானுசன் என்னும் கார் தனையே –காரேய் கருணை இராமானுசர் -வேதங்கள் பார் மேல் நிலவிடப்பார்த்து அருளும் கொண்டல் அன்றோ நம் ஸ்வாமி

புத்தி கேடர்களான புறச் சமயிகளுடைய பற்களில் கடியுண்டதனால்
உண்டான வ்ரணத்தை ஆற்றுவதற்கு நல்ல மருந்தாயும் –
உண்மை நல் ஞான நிதிகளாயும் –
அந்த ஞானமான பயிரை நன்றாகக் காக்கக் கூடிய முள் வேலியாயும்-
அந்த ஞானப் பயிரை வ்ருத்தி பண்ண -வேத மணம் கமழ்ந்த பரிசுத்த ஆனந்தமான மழையைப் பெய்யும் மேகங்களாயும்-
எம லோகம் என்ற பேச்சையே அழிப்பதாயும் உள்ள
யதிராஜ திவ்ய ஸூ க்திகள் விஜய ஸ்ரீ யுடன் பிரகாசிக்கின்றன –

—————

மேலும் ஸ்ரீ ஸூக்திகள் வைபவம் -பிரத்யக் தத்தவ –ஜீவாத்மாவும் -முதல் இரண்டு வரிகள் பரமாத்மாவும்-அடுத்த இரண்டு வரிகள்

48-ப்ரதி கலம் இஹ பிரத்யக் தத்தவ அவலோகன தீபிகா
எதி பரிப்ருட க்ராந்தாச் சிந்தாம் நிரந்தர யந்தி ந
அகலுஷ பரஞான ஔத் ஸூக்ய ஷுதா ஆதுர துர்த்தசா
பரிணத பல ப்ரத்யா சீதத் பலேக்ரஹி ஸூக்ரஹா

ப்ரதி கலம் -நிமிஷம் தோறும்
இஹ -இங்கு -சம்சாரத்திலேயே ஞானம் பெற -அங்கும் கேட்டாரார் வானவர் -ரஸம் அனுபவிக்க-அங்கு ஸ்வஸ்மை ப்ரகாசமாகவே இருக்குமே –
பிரத்யக் தத்தவ -ஜீவாத்ம பரமாத்மாவைப் பற்றிய
அவலோகன தீபிகா-பார்க்க உதவும் விளக்கு போன்றவை
எதி பரிப்ருட க்ராந்தாச் சிந்தாம் நிரந்தர யந்தி ந-நிரந்தரமாக நித்தியமாக அனுபவிக்கும் படி
அகலுஷ பரஞான ஔத் ஸூக்ய ஷுதா ஆதுர துர் த்தசா பரிணத பல-குற்றம் அற்ற பர ஞானம் இல்லாத –ஷுதா-பசியினால் -துர்கதி-அபி நிவேசம் மிக்கு அறிய விரும்புவார்க்கு பக்குவமான பழமான பலத்தைக் காட்டும்
ப்ரத்யா சீதத் பலேக்ரஹி ஸூக்ரஹா -பக்குவமான அருகிலுள்ள பழம் போல் -கையாலே பறிக்கும் படி-ஸூகமாக க்ரஹிக்கும் படி

ராமானுஜரின் படைப்புகள் எப்போதும் நம் இதயங்களை நிரப்புகின்றன

ப்ரதி கலம் இஹ பிரத்யக் தத்தவ அவலோகன தீபிகா
இருள் தரும் மா ஞாலம் -பிரதி க்ஷணம் -ஆத்மதத்வம் பிரகாசிக்கும் ஞான விளக்கம் -சேஷ பூதம் நியாமாகம் -ஆதேயம் -சரீரம் என்று யாதாம்யா ஞானம் அருளும்
எதி பரிப்ருட க்ராந்தாச் சிந்தாம் நிரந்தர யந்தி ந–எதி சிரேஷ்டர் -யதி பதி -கிரந்தங்கள் -மனசில் புகுந்து இடை வெளி இல்லாமல் நிறைந்து பூர்ணமாக இருக்கின்றன
அகலுஷ பரஞான ஔத் ஸூ க்ய -கலக்கம் அசுத்தி இல்லாமல் -பர விஷய ஞானம் -பெற்று அடைய தீவிர இச்சை -அதி மாத்திரை த்வரை-இத்தால் அடைந்த
ஷிதா ஆதுர துர்த்தசா -பரிணத பல -பசி மிக்கு -சிரம தசை
ப்ரத்யா சீதத் பலேக்ரஹி ஸூ க்ரஹா -தவறாமல் பலன் கொடுக்கும் -நல்ல செயல்கள் போலே –விளங்கும் ஸ்ரீ ஸூ க்திகள் –
வேறு ஒன்றும் நுழைய இடம் இல்லாமல் இவற்றையே அனுபவித்திக் கொண்டு கால ஷேபம் நடத்துவோம் -என்றவாறு -பஹு வசனங்கள் எல்லாம் -தீபங்கள் –

ஜீவாத்மாவின் உண்மையான தத்துவத்தைப் பிரகாசிக்கும் விளக்குகள்,
பெரிய இறைவனைப் பற்றிய அறிவிற்காக, மிகுந்த பசியுடன் ஏங்கிக் கொண்டிருக்கும் நபர்களுக்கு,
அவர்களுடைய சிரமத்தை நீக்கி அவர்களுக்கு ஏற்ற
பழங்களை அளித்து அவர்கள் அருகில் ஆதரவாக உள்ள மரங்கள் போன்றன
மிகவும் எளிதாக அடைய வல்லவை -ஒவ்வொரு நொடியிலும் நமது எண்ணங்களை சரியான பாதையில் நடத்த வல்லவை

யதிராஜருடைய ஸ்ரீஸுக்திகள் ,உண்மைத் தத்துவத்தை உபதேசிப்பவை.
ஆசார்ய முகேன , காலக்ஷேபம் செய்தவர்கள் அவற்றிலேயே சிந்தையைச் செலுத்தி, ஆழ்ந்து அனுபவிப்பர்
இப்படி, எளிமை , கம்பீரம், நடையழகு உள்ளவை.

எம்பெருமானாருடைய ஸ்ரீ ஸூக்திகள் ஸூக்ரஹம் –
எளிதில் தெளிய அறியக் கூடியவை –
இவ்விருள் தரும் மா ஞாலத்தில் ஜீவ தத்துவத்தை கண்டு அறிவதற்கு சுடர் விளக்காய் இருப்பவர்களும் –
பரதாத்ம தத்துவத்தை பற்றின உண்மை ஞானம் பெறும் அவா என்ற பசியால் வாடுபவர்களுக்கு
தம் கையாலேயே எட்டிப் பறிக்கும் படி பழுத்த பழங்களை-அடிக் கிளைகளையே -தரும் படியான மரம் போல் உள்ளவைகளும்
எளிதில் கிரஹிக்கக் கூடியவையாயுமாய் யுள்ள எதிராஜருடைய கிரந்தங்கள்
எங்களுக்கு சதா சிந்தனைக்கு விஷயமாய் இருக்கின்றன –

கடலள வாய திசையெட்டி னுள்ளும் கலியிருளே
மிடைதரு காலத் திராமா னுசன், மிக்க நான்மறையின்
சுடரொளி யாலவ் விருளைத் துரத்திலனேல்உயிரை
உடையவன், நாரணன் என்றறி வாரில்லை உற்றுணர்ந்தே.

தீபம் இருளைப் போக்கும் -யதீந்த்ர கிரந்தம் அஞ்ஞானம் போக்கி சூஷ்மமான ஆத்ம தத்துவத்தையும் விளக்குமே
ஸத் பாத்திரத்தில் ப்ரேம ரூபம் -நெய் போல் ப்ரகாசப்படுத்தும்-தீபம் ஸ்நேஹத்தால் பிரகாசிக்கும்
சாங்க்யர் -கபிலர் -ஜீவஸ்ய கர்த்ருத்வம் நாஸ்தி -குருடன் நொண்டி சேர்ந்து காட்டைக் கடப்பர் என்பர்
ஆத்மா -ஞானம் -செயல்பாடு பிரதானம் -சரீரத்தில் உள்ள கர்த்ருத்வம் பிரதிபலிக்கும் என்பர்
ஆத்மாவுக்கு கர்த்ருத்வம் -சாஸ்திரம் பொருளாக வேண்டுமே –
வேறே சிலர் ஸ்வ தந்த்ர கர்த்ருத்வம்
பரார்த் து -ப்ரஹ்மத்துக்கு அடங்கின கர்த்ருத்வம்
வேறே சிலர் ஞாத்ருத்வம் இல்லை ஞான மாத்திரமே
விஞ்ஞானம் யஜ்ஜம் பண்ணுகிறது சுருதி -விஞ்ஞாதா -அவனே ஞானமாயும் ஞானம் உடையவனாயும் இருப்பான்
சிலர் ஆத்மா விபு -ஜைனர் எடுத்துக் கொண்ட சரீரம் அளவு என்பர்
அத்வைதி அபின்னம் என்பர்
பாஸ்கரர் பின்னம் அபின்னம் என்பர்
ஆதார ஆதேய நியாம்ய நியமிக்கும் இல்லை என்பர்
இவை எல்லாம் நிரசித்து பாஷ்யத்தில்
பர தந்த்ர கர்த்தா-ஸ்வயம் பிரகாசம் -அஜடம் -அணு -அப்ருதக் சித்தம் -சம்சயம் விபர்யம் இல்லாமல் காட்டி அருளுகிறார்
இதே போல் பரமாத்ம ஞானம் சுலபமாக-அகலுஷம் பர தத்வ ஞானம் ஸூ லபமாகக் காட்டி அருளும்
நிர்குணம் நிர்விசேஷ ப்ரஹ்மம்-மூவரில் ஒருவர் -நிமித்த காரணம் மாத்திரம் -குழப்பங்களைப் போக்கி –
குண விக்ரஹ விபூதி விசிஷ்டன் -அபின்ன நிமித்த உபாதான காரணம்
த்ரிவித காரணமும் இவனே-ப்ரக்ருதி விஸிஷ்ட ப்ரஹ்மம் -ஸங்கல்ப விஸிஷ்ட ப்ரஹ்மம்-ஞானாதி ஸமஸ்த குண விஸிஷ்ட ப்ரஹ்மம்-மூன்றுமே த்ரிவித காரணங்களும் ப்ரஹ்மமே ஸ்ரீயப்பதி- ஸூலபமாகக் காட்டி அருளி -மோக்ஷத்தில் விருப்பம் -அபி நிவேசம் பெருக்கும்படி ஸ்வாமியுடைய ஸ்ரீ ஸூக்திகள்-தத்வ ஞானம் பெற்ற பின்பு மோக்ஷத்தில் இச்சையும் கொடுக்கும் அன்றோ

——————————————

வைஷ்ணவ வாமநத்தில் நிறைந்த நீல மேனியின் ருசி ஜனக விபவ லாவண்யம் பூர்ணம் —சூரணை -162-
ருசி விவசர்க்குப் பாதமே சரணம் ஆக்கும் ஒவ்தார்யம் வானமா மலையிலே கொழுந்து விடும் —சூரணை -163-

அதே போல் கீழ் ஸ்லோகத்துக்கும் இதுக்கும் சம்பந்தம்

49-முகுந்த அங்க்ரி ஸ்ரத்தா குமுத வன சந்திர ஆதப
நிபா முமுஷாம் அஷோப்யாம் தததி முனி ப்ருந்தாரக கிர
ஸ்வ சித்தாந்த த்வாந்த ஸ்த்திர குதுக துர்வானி
பரிஷத் திவாபீத ப்ரேஷா திநகர சமுத்தான புருஷா –

முகுந்த அங்க்ரி -முகுந்தனுடைய திருவடித் தாமரைகள்
ஸ்ரத்தா குமுத வன சந்திர ஆதப நிபா-ஸ்ரத்தை யாகிய ஆம்பல் காடுகள் சந்த்ரனைக் கண்டு மகிழும் மலரும் -அழகு குளிர்ச்சி சோமவத்
ஸ்வ சித்தாந்த -தங்கள் சித்தாந்தம் -தாங்களே கல்பித்து கொண்டது
த்வாந்த ஸ்த்திர குதுக -தப்பான வாதமாகிய இருளில் மகிழ்ந்து
துர்வானி பரிஷத் திவாபீத ப்ரேஷா -கோட்டான் கூட்டங்களுடைய பார்வைக்கு
திநகர சமுத்தான புருஷா -ராமானுஜ திவாகரன் தேஜஸ்ஸு இவர்களுக்கு குரூரமாக தோற்றும்
அஷோப்யாம் முமுஷாம்-கலக்க முடியாத மோக்ஷ விருப்பம் ஏற்படுத்தி முமுஷுவாக்கவும் வல்லவை

முகுந்த அங்க்ரி ஸ்ரத்தா குமுத வன சந்திர ஆதப நிபா முமுஷாம்-மோக்ஷ பிரதா முகுந்ததோ –மும்-மோக்ஷம் கும் -இஹ லோக பலன் -சிரத்தை –
குமுதம் -சந்த்ர பிரகாசம் -ஆம்பல் மலர் -ஆம்பல் வாய் கூம்பின காண்-காலையில் –
வனம் -சமுதாயம் –நெய்தல் ஏற்றும் ஒரு புஷ்ப்ப வகை -ஆம்பல் சஜாதீயம் —
அற்ற குளத்தில்-அழு நீர் பறவை போல் -உறவு -குட்டியும் ஆம்பலும் நெய்தலும் வற்றி -மூதுரையார் பாசுரம் –
பக்தி மிக்கு இருப்பார்கள் -சந்திரன் ஒளி போஷிக்குமா போலே -திருவடிக்கு அற்று தீர்த்தார்கள் உடைய பக்தி சிரத்தையை வளர்த்து –
நிபா-ஒத்த என்றபடி -நன்கு பிரகாசிக்கும் சந்திரன் -பூர்ண சந்திரன் ஒத்து என்றபடி -முமுஷாம் அஷோப்யாம் தததி முனி ப்ருந்தாரக கிர
மோக்ஷத்தில் தீவிர இச்சை –முமுஷூ –ஷோபமே அடையாத -வற்றாத தீவிர ஆசை என்றபடி -த்வரை மாறாமல் –
வரை இடுதல் படிப்படியாக மாறுதல் -பற்றுதல் -முழுவதுமாக மாறுவது -த்வய மந்த்ரம் அனவ்ரதம் -அனுசந்தானாம் -சொல்லி
பரம புருஷார்த்தம் பற்றுதல் வரை இடாமல் -திருவடி அழகு மனன சீலர்கள் முனி –கிர -வார்த்தை -ஸ்ரீ ஸூ க்திகள் -தததி -அருளும் -ஸூ கம்பீரா –
ஸ்வ சித்தாந்த த்வாந்த ஸ்த்திர குதுக துர்வானி பரிஷத்
தங்கள் -அஞ்ஞானம் இருள் நிறைந்த துர்வானி -அதிலே இருந்து பழகி -அதுவே வெளிச்சமாக கொண்டு –
சூர்யா உதயம் கண் கூசும் இவற்றுக்கு -அதே போலே இவர்களுக்கு -மோஹம் நிறைந்து –
சந்த்ர சூர்யன் போலே யதிபதி கிரந்தங்கள் -என்றவாறு –குமுதா மலர் -அநந்ய ப்ரயோஜனர்களுக்கு சந்திரன் -குத்ருஷ்ட்டி பாஹ்யர்களுக்கு சூர்யன் –
த்வாந்தம் -இருட்டு –அஞ்ஞானம் த்வாந்த ரோதம் –ஸ்திரமாக இருளில் இருந்த தூர்வாதிகள் –
திவாபீத ப்ரேஷா திநகர சமுத்தான புருஷா -கோட்டான் பஷி பகலைக் கண்டால் பயம் -இரவில் -ஆந்தை போலே –
ஓடி ஒழியச் செய்யும் தீவிர சூர்யா பிரபை போல என்றவாறு

ராமானுஜரின் வார்த்தைகள் செயல்படுகின்றன-
முகுந்தனின் பாதத்தில் பக்தி கொண்ட -ஆம்பல் -அல்லி மலர்களின் அணி வகுப்புக்கு நிலவொளி போலவும் ,
மத வெறியர்களின் ஆந்தைகளுக்குக் கொடூரமான சூரிய ஒளியைப் போல கூடியதாக உள்ளன
மேலும் கலங்காத மோக்ஷ விருப்பம் ஏற்படுத்தி முமுஷுவாக்கவும் வல்லவை

யதிராஜரின் ஸ்ரீஸுக்திகள் ,
படிக்கப் படிக்க மோக்ஷத்தில் ருசியை ஏற்படுத்துகின்றன.
பகவானின் திருவடியில் ,பக்தியை வளர்க்கின்றன.
இருளில் இருக்கும் பிறமதப்பிரதிவாதிகளான கோட்டான்களுக்கு, ஸுர்ய உதயம்

ஜீவ பர யாதாத்ம ஞானம் பெற்றவர்க்கு
பகவத் சரணார விந்தங்களில் பக்தியும்
மோக்ஷத்தில் இச்சையும்
ஸ்வாமியுடைய ஸ்ரீ ஸூ க்திகளே உண்டு பண்ணுகின்றன –

மோக்ஷ பிரதனான எம்பெருமான் திருவடிகளில் பக்தியாகிற குமுத மலர்களுக்கு நில ஒளிக்கு ஒப்பானதும் –
ஆம்பல் சந்திரனை கண்டு வ்ருத்தி யடையுமே –
தங்கள் மதங்கள் ஆகிற நிலையான இருளில் களிக்கும் துர்வாதிகளான ஆந்தைக் கண்களுக்கு சூரியோதயம் போலே வெறுப்புண்டு பண்ணுபவையுமான
ஸ்ரீ யதீந்திரருடைய ஸ்ரீ ஸூக்திகள் மோக்ஷத்தில் நிலையான இச்சையை விளைவிக்கின்றன –

தத்வ ஞானம் -ஸ்ரீ பாஷ்யம் போல்வன
பக்தி வளர்க்க கீதா பாஷ்யம்
உபாயம் -கத்ய த்ரயம்
காலஷேபம் -நித்ய கிரந்தம்

நாட்டிய நீசச் சமயங்கள் மாண்டன நாரணனைக்

காட்டிய வேதம் களிப்புற்றது தென் குருகை வள்ளல்

வாட்டமிலா வண் தமிழ் மறை வாழ்ந்தது மண்ணுலகில்

ஈட்டிய சீலத்து இராமானுசன் தன்னியல்வு கண்டே – 54-

பேதையர் வேதப் பொருள் இது என்று உன்னிப் பிரமம் நன்று என்று
ஓதி மற்று எல்லா வுயிரும் அக்தென்று உயிர்கள் மெய் விட்டு
ஆதிப் பிரானோடு ஒன்றாம் என்று சொல்லும் அவ்வல்லல் எல்லாம்
வாதில் வென்றான் எம் இராமானுசன் மெய்ம் மதிக் கடலே – 58-

——————

50-நிராபாத போதாயன பணித நிஷ்யந்த ஸூபகா
விசுத்த உபன்யாச வ்யதி புதுர சாரீரக நயா
அகுண்ட்டை கல்பந்தே யதிபதி நிபந்தா நிஜ முகை
அநித்ராண ப்ரஜ்ஞா ரச தமனி வேதாய ஸூதியாம்

ராமானுஜரின் படைப்புகள் வேதாந்த சாஸ்திரத்தின் குறைபாடற்ற ஏற்பாடுகளை வெளிப்படுத்துகின்றன,
போதாயனரின் வர்ணனையின் (ப்ரஹ்ம ஸூத்திரம்) மற்றும் அது போன்றவற்றின் தரத்தை வடி கட்டுகின்றன.(சாரீரக நயா-156 அதிகரணங்கள்)
படைப்புகளில் எந்த முரண்பாடும் இல்லை. அவர்களின் கருத்துக்கள் வலுவானவை, தெளிவானவை
மற்றும் வலியுறுத்தல் தொடர்பாக சுட்டிக் காட்டப்படுகின்றன.
அவை –ப்ரஜ்ஞா ரச தமனி-அறிவுசார் நரம்பு நாண்களைத் தாக்குவதில் திறமையானவை.
மேலும் அவை அறிஞர்களின் அறிவுத் திறனை மலரச் செய்ய உதவுகின்றன.
இதன் மூலம் அவர்களுக்கு இன்பம் ஊட்டுகின்றன

நிராபாத போதாயன பணித நிஷ்யந்த ஸூ பகா
குற்றம் அற்ற -யாராலும் விரோதிக்க முடியாத போதாயான வ்ருத்திகளைக் கொண்டு -ஆளவந்தார் மநோ ரதம்-நிறைவேற்றி
-ஆபாத -தோஷம் நிராபாத தோஷம் அற்ற போதாயனர் வ்ருத்தி கிரந்தம் –
விசுத்த உபன்யாச வ்யதிபுதுர சாரீரக நயா
ஸ்ரீ பாஷ்ய ஸ்ரீ ஸூ க்திகள் -சாரீரக சாஸ்திர நியாயங்கள் -சாரீரக நியாயம்
அகுண்ட்டை கல்பந்தே –
யதிபதி நிபந்தா நிஜ முகை -ஸ்ரீ பாஷ்யகாரர் -நிபந்த்தித்தல் இயற்றியது –நிபந்த -சிகிச்சை பண்ணும் ஊசிகள் –
நாடி பேதங்கள் -சலாக சிகிச்சை -மந்தமான தன்மை மாற்றி -சீனர்கள் இங்கே உள்ளவற்றை புத்தர்கள் கொண்டு போனது -என்பர்
-போதி தர்மர் -என்பவர் கொண்டு போனார் என்பர் -முனை மழுங்காத ஊசியால்–நிஜ முகை -aqu puncture போலே -பிரபந்தங்கள்
அநித்ராண ப்ரஜ்ஞா ரச தமனி வேதாய ஸூ தியாம்
சதாச்சார்யர்களால் சிஷிக்கப் பட்ட ஞானம் உடையவர்களுக்கு சங்கோசம் இல்லாத ரசத்தை -அடைப்பை நீக்கி –தமனி வேதாய -போக்யதை ஊட்டும் படி-
அனுபவிக்கும் படி -யதாவஸ்தித பாகம் கொடுக்கும்

யதிராஜருடைய ஸ்ரீஸுக்திகள் —இவற்றில்,
போதாயனரின் கருத்துக்கள் ப்ரவஹிக்கும் .
வ்யாஸரின் ப்ரஹ்மஸுத்ரத்துக்குத் தெளிவான விளக்கம் ,
பிறமதவாதிகளால் அசைக்கமுடியாத ஸித்தாந்த யுக்திகள் –இவை ப்ரகாசிக்கும் .
அறிஞர்களின் அறிவு நாடியைத் தட்டி, பேரின்பத்துக்கு இழுத்துச் செல்லும்

எம்பெருமானாருடைய ஸ்ரீ ஸூக்திகள் வித்வான்களுக்கு ஆனந்தம் விளைவிப்பவை —
முன்னுக்கு பின் முரண்பாடு ஏதும் இன்றி இருப்பவையாயும்
பகவத் போதாயன க்ருதமான வ்ருத்தி கிரந்தத்தை தழுவியபடியால் தெளிவுற்றதாயும் இருப்பதாயும்
குற்றம் குறை கூற முடியாதபடியான உபபாதனங்களால் விளங்குகின்ற –
அதிகரண நிபந்தங்கள் -விஷயங்களை பாகுபடுத்தி உரைத்தல் -உள்ள ஸ்ரீ ஸூக்திகள்
நன்றாக ஸ்தாபிக்கப் பட்ட பிரதான அர்த்தங்கள் உள்ளவையாய்
வித்வான்களுடைய மலர்ந்த ஞானத்துக்கு ரசம் விளைவிக்க வல்லவையாய் அமைந்துள்ளன –

பாராசர்ய வசஸ் ஸுதாம் (1)
உபநிஷத் துத்தாப்தி மத்யோ திருதாம் (2)
ஸம்சாராக்நி விதீபன வியபகத பிராணாத்ம சஞ்சீவனீம் (3) |
பூர்வாசார்ய ஸுரக்ஷிதாம் (4)
பகுமதிம் வியாஸாத தூரஸ்திதாம் (5)
அநீதாந்து நிஜாக்ஷரைஹி மனஸோ பௌமாஸ்து பிபந்வஹம் ||

1-உபநிஷத் ஆகிய சமுத்திரத்தில் இருந்து எடுக்கப்பட்டது
2- ஸம்ஸார அக்னியால் தாக்கப்பட்ட- பிரானாகிய பரமாத்விடம் இருந்து பிரிந்து வசிக்கும் ஜீவாத்மாக்களை உஜ்ஜீவிப்பது
3-பலவிதமான அறிவுத் தடுமாற்றங்களால் அகன்று சென்றது
4-பாதாரயனாரின் ஸ்ரீ ஸூக்திகளால் அருகில் கொண்ட வரப்பட்டன
5- இந்த அம்ருதத்தை அறிவுள்ளவர்கள் அன்றாடம் பருகட்டும்

————

ஸ்ரீ ஸூக்திகள் பிரபாவம் மற்று ஒரு படியால் அருளிச் செய்கிறார் –

51-விகல்ப ஆடோபேந சுருதி பதம் அசேஷம் விகடயன்
யத்ருச்சா நிர்த்திஷ்டே யதி ந்ருபதி சப்தே விரமதி
விதண்டா அஹங்குர்வத் பிரதிகதாக வேதண்ட
ப்ருதநா வ்யாத வியாபார வ்யதி மதன சம்ரம்ப கலஹ

தவறான காரணத்தை அடிப்படையாகக் கொண்ட புற மதவாதிகள் தகாத
வழியில் இட்டுச் செல்ல விதண்டா வாதம் செய்தபடியே இருந்தனர்
மிகவும் கர்வம் கொண்ட யானைக் கூட்டங்கள் போல் ஒருவரை ஒருவர் வாதத்தால் வென்று இருந்தார்கள்
இந்த காட்டு யானைகளின் எரிச்சலூட்டும் சத்தம் (விகல்ப ஆடோபேந-படாடோப விகல்பங்கள் -நாநாவித இறைச்சல்கள் )-டம்பப்போர் -ராமானுஜரின் திரு நாம உச்சாரதாலே (யத்ருச்சா நிர்த்திஷ்டே)–அதே ஷணத்தில் அடங்கி விடும்.

விகல்ப ஆடோபேந சுருதி பதம் அசேஷம் விகடயன்
இதுவா அதுவா -ஸர்வதா கேள்வி –விகல்பம்/ ஆடோபேன -ஆடம்பரம் -/ கட்டணம் பண்ணுவது சேர்ப்பது வளர்ப்பது / விகடயன் குறைப்பது அழிப்பது
நிர்ணய ஞானம் இல்லாமல் சம்சயம் மோக பூர்வகமாக கேள்வியால் -அசேஷ ஸ்ருதியை அழித்தும்
விதண்டா அஹங்குர்வத் பிரதிகதாக வேதண்ட ப்ருத நா
விதண்டா வாதங்களால் -வாதம் ஜல்பம் விதண்டம் -மூன்று வகை -நல்ல வாதம் முதல் -/ பிரமாணம் கொண்டு -மத்யஸ்தரை கொண்டு -தத்வ ஸ்தாபனத்துக்கு –
ஜல்பம் -தான் ஜெயிப்பதே பிரதானம் என்று கொண்டு -அதற்காகவே வாதம் செய்வது ஜல்பம் / பர பக்ஷ தோஷம் சொல்லி
ஸூ பக்ஷ ஸ்தாபனம் இல்லாமை விதண்டா வாதம் -அஹங்காரம் இதனால் கொண்டு -தூர்வாதிகள் –
வேதண்டம்-மாதங்கம் -யானை -11-சப்தங்கள் கஜம் ஹஸ்தி களபம்-ஸ்தம்பேராபம் -அமர கோசம் -பிடித்து பழக்கப் பட்ட யானை மாதங்கம்
-காட்டு யானை வேதண்டம் -காட்டுக்கு அடங்காத காட்டு யானை கூச்சல்
வ்யாத வியாபார வ்யதி மதன சம்ரம்ப கலஹ
கட்டுப்பாடு இல்லாத பெரும் கூச்சல் –
யத்ருச்சா நிர்த்திஷ்டே யதி ந்ருபதி சபதே விரமதி
எம்பெருமானார் பெயரை உச்சரித்தாலே அடங்கும் படி -யதேச்சையாக சொன்னாலும் -அடங்கி போகும் -இருந்த இடமே தெரியாத படி -ஆகுமே -சப்த மாத்திரத்தாலே –

ஒன்றைப் ப்ரணாமாக ஏற்று, அதனால் தெளிவு ஏற்படுபவற்றில் சிலவற்றை அங்கீகரித்தும்
சிலவற்றை நிராகரித்தும் செய்வது, நேர்மையல்ல.
காட்டு யானைகள், மதம் பிடித்து அருகிலுள்ள கிராமங்களில் புகுந்து,
பயிர்களை அழித்து, மக்களைத் துன்புறுத்தும் போது ,
அந்த நாட்டு அரசன் ஓடிவந்து வில்லில் நாண் ஏற்றி சப்தத்தை எழுப்பினால்,
யானைகள் பயந்து ,திரும்பவும் காட்டுக்குள் சென்று விடும்.
அதைப் போல,
பிற மதஸ்தர்களின் விதண்டா வாதங்கள் என்கிற பேரிரைச்சல் கேட்டாலும், அங்கு,
எம்பெருமானார் என்கிற திரு நாமத்தைக் கேட்டவுடன் , அவர்கள் நடுங்கி வாய்மூடி மௌனியாவர்

சோபனமான வழியை தம் இஷ்டப்படி சஞ்சரித்து யானைகள் பாழ் படுத்துமா போலே
மனம் போனபடி கூச்சல் இடுவதால் வேத மார்க்கத்தை பாழ் படுத்தும் துர்வாதிகள்
தமது தங்கள் துர்வாதங்களால் பரஸ்பரம் ஜெயிப்பதற்காக விளைவிக்கும் கலகமானது
யதிராஜ ஸ்ரீ ஸூக்திகளின் சப்தங்களை யாதிருச்சிகமாக கேட்டால் கூடத் தானே அடங்கி விடும் —
ஸ்ரீ எதிராஜரின் பெயரைச் சொன்னாலே அடங்கி விடும் என்னவுமாம் –

பிருகு வருணன் -ப்ரஹ்மம் -எதோ வா இமானி –இத்யாதி -எங்கு இருந்து படைத்தார்-அத்தைப் படைத்தவர் யார் -எதற்க்காகப் படைத்தார்-அவாப்த ஸமஸ்த காமத்வம் சேராதே சத்தா அசத்தா –குதர்க்கங்கள்
எது சாதனம் உபாதானம் போன்ற கேள்விகள் -விதண்டா வாதங்கள்
மஞ்சள் வாழைப்பழம் -இரண்டு தன்மை -எது முதலில் -சமவாய சம்பந்தம் -யுகபத் ஒரே சமயத்தில் இரண்டையும் மனதில் கொள்ள முடியாதே
விசேஷயத்துடனும் விசேஷணத்துடன் அடுத்த விசேஷணம் ஏறும்
தத்வமஸி-தத் த்வம் அஸி-வாதங்கள் போல்வன

ந சேத் ராமாநுஜேத் ஈஷா சதுரா சதுர் அக்ஷரீ -காமவஸ்யாம் பிரபத்யந்தே ஜந்தவோ ஹந்தமாத்ருஸா–என்று-அறிவுடையார் ஈடுபடும்படி மோக்ஷ ஹேதுவான திரு நாமத்தை உடையவர்
ரா அக்ஷரம் கேட்டாலே மாரீசன் பயந்ததாக ராவணன் இடம்
அது ப்ரமேயம் பற்றி-இங்கு பிரமாணம் பற்றி
மண் மிசை யோநிகள் தோறும் பிறந்து எங்கள் மாதவனே
கண்ணுற நிற்கிலும் காணகில்லா உலகோர்கள் எல்லாம்
அண்ணல் இராமானுசன் வந்து தோன்றிய வப்பொழுதே
நண்ணரு ஞானம் தலைக் கொண்டு நாரணற்கு ஆயினரே – 41-

——————————

ஸ்வாமியுடைய ஸ்ரீ ஸூக்திகள் தமது ஞானத்துக்கு தெளிவை அளிக்க வேணும் என்று பிரார்த்திக்கிறார் –

52-பிரதிஷ்டா தர்க்காணாம் பிரதிபதம் ருசாம் தாம யஜூஷாம்
பரிஷ்கார சாம்நாம் பரிபணம் அதர்வாங்க ரசயோ
பிரதீபா தத்த்வாநாம் பிரதிக்ருதி ரசௌ தாபச கிராம்
பிரசித்திம் சம்வித்தே பிரதிசதி யதீசான பணிதி

பிரதிஷ்டா தர்க்காணாம் -தர்க்கம் யுக்தி நியாய வாதம் -ஸாஸ்த்ர அநு க்ருஹீதம் -ஸ்வாமியுடைய கிரந்தங்களில் இருப்பிடம் -பர்யவசான பூமி-ஆர்ஷம் தர்ம உபதேசம் வேத வாக்யத்துக்கு அவி ரோதினம் -மநு -வேதம் சொல்வதை ஸ்தாபிக்கவே தர்க்கம்
பிரதிபதம் ருசாம் -ருக் வேதங்களுக்கு சமமான பதங்கள் கொண்டவை -பர்யாய ஸப்தங்கள் கொண்டவை
தாம யஜூஷாம்-யஜுர்வேத இருப்பிடம் தாமம் –
நா ருக்வேத -கிஷ்கிந்தா காண்டத்தில் சொல்லின் செல்வனைக் கொண்டாடி
ருக் வேதம் விநயம் -யஜுர் வேதம் தாரண சக்தி -சாம வேதம் பாண்டித்யம் தரும்
பரிஷ்கார சாம்நாம்
-சாமவேதத்துக்கு அலங்கரிக்கும்
பரிபணம் அதர்வாங்க ரசயோ -அதர்வண வேதத்துக்கு மூல தனம்
பிரதீபா தத்த்வாநாம் –24 தத்துவங்களுக்கும் -25-ஆத்மா 26-பரமாத்மா தத்வங்களுக்கும் தீபம் யாதாத்ம்ய ஞானம் அளிக்கும்-ஸ்ரீ பாஷ்யம் ஸ்ரீ கீதா பாஷ்யம் விளக்கிக் காட்டுமே
பிரதிக்ருதி ரசௌ தாபச கிராம்-தபஸ் -வால்மீகி பராசரர் மநு போல்வார் அருளிச் செய்த ஸ்ம்ருதிகளுக்கும் இதிஹாச புராணங்களும் பிரதி ரஸம்-பிம்பம் போல்வன
பிரசித்திம் சம்வித்தே பிரதிசதி யதீசான பணிதி–ஸ்வாமியுடைய ஸ்ரீ ஸூக்திகள் நமது புத்திக்கு ஆனந்தம் கொடுக்கட்டும் – -சந்தோஷம் தெளிவு –

பிரதிஷ்டா தர்க்காணாம் பிரதிபதம் ருசாம் தாம யஜூஷாம்
தர்க்கங்களை -அனுகூலம் -எல்லை நிலம் –பிரதிஷ்டா காஷ்டா -அனுகூல உக்திகளின் பரா காஷடை-
-பிரத்யக்ஷம் அநு மானம் சப்தம் -மூன்று பிரமாணங்கள் அனுகூலமான தர்க்கம் -என்றவாறு –
ருக் வேதம் மொழி பெயர்ப்பை போலே -பிரதிபதம் -இருக்கும் –பிரதிபதம் சப்தங்களை மொழி மாற்றி –
வாக்யார்த்தம் -வாக்கியங்களின் அர்த்தம் -/ தாம இருப்பிடம் யஜுர் வேதங்கள் இருப்பிடம்
பரிஷ்கார சாம்நாம் பரிபணம் அதர்வாங்க ரசயோ
பரிஷ்காரம் திருத்தங்கள் -திருந்து வேதம் -/ பரிபணம் -சமானம் -அதர்வண வேத சாம்யம் -சமமான மதிப்பு என்றவாறு
-சப்தத்தாலும் அர்த்தத்தாலும் –மூல தனம் என்றுமாம் –
பிரதீபா தத்த்வாநாம் பிரதிக்ருதி அசௌ தாபச கிராம்
தத்வங்கள் ஸ்திரம் நித்யம் -உள்ளது உள்ள படி பிரகாசிக்கும் விளக்கு போல்வன /
தபஸ் நிஷ்டர்கள் முனிவர்கள் வசனங்கள் ப்ரதிக்ருதி -உள்ளபடி சொல்லும் -சாயலாக -பிரதி பிம்பம் -முன்னோர் மொழிந்த முறை தப்பாமல் –
பிரசித்திம் சம்வித்தே பிரதிசதி யதீசான பணிதி
ஈசான நியமனம் -ஈஸ்வர -பணிதி-ஸ்ரீ ஸூ க்திகள்
சம்வித் ஞானம் பிரசித்திம் தெளிவை பிரதிசைதி உண்டாக்கும் -பிரசாதம் -தெளிவு அளிக்கும் -உண்டாக்கட்டும் -வழங்கட்டும்
-பவந்தி பவந்தோ –பாட பேதம் போலே –பிரதி சதி -பிரதி சது–வழங்குகின்றன வழங்கட்டும்
பணிதி –-கத்யம் பத்யம் இரண்டும் -வாக்கில் இருந்து வெளிப்பட்ட காவ்யம் கத்யம் இரண்டும் –

வார்த்தை தர்க்கம் அங்கேயே முடிந்துவிடும், ராமானுஜரின் படைப்புகளில் இடம் இருக்காது.
அவற்றில், ரிக் வேதம் ஏறக்குறைய முற்றிலும் வேறுபட்ட பதிப்பாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளது;
அவற்றில் யஜுர் வேதம் உறுதியாக நிலை நிறுத்தப் பட்டுள்ளது;
அவை சாம வேதத்தை முழுமையாக அலங்கரிக்கும் ஆபரணம்.
அவை தத்துவங்களை விளக்கும் விளக்கு.
வால்மீகி போதாயனர் போன்ற முனிகளின் உயர்ந்த வார்த்தைகளின் பிரதிபலிப்பு அவை.
ராமானுஜரின் இந்தப் படைப்புகள் நமக்குப் பார்வைத் தெளிவைத் தரட்டும்!-யாதாத்ம்ய ஞானம் அறிவிக்கும்

யதிராஜரின் ஸ்ரீஸுக்திகள் ,
நான்கு வேதங்களுக்கு விளக்கம் ;
தத்வங்களுக்கு இருப்பிடம்;
ரிஷிகளின் வாக்யங்களுக்குப் ப்ரதிபிம்பம் ;
இப்படிப்பட்ட ஸ்ரீஸுக்திகள் தெளிவான தத்வ ஞானத்தைஅளிக்கின்றன

சகல வேதங்களையும் அனுசரித்துப் பொருள் கண்டவையும் -நாம் அறிய வேண்டிய தத்துவங்களை
பிரகாசிப்பவைகளுமாய் மகரிஷிகளுடைய வாக்கை பிரதிபாலிப்பதுமாயும் உள்ள
ஸ்ரீ ஸூக்திகள் தாம் நமது ஞானத்துக்கு தெளிவை அனுக்ரஹிக்க வேணும் –

ஸ்வாமி ஸ்ரீ ஸூக்திகள்-புற மதங்கள் அனைத்தையும் எதிர்வாதம் செய்யும் யுக்திகள் நிறைந்தவை –
ருக்வேதப் பொருள் போன்றவை –
யஜூர் வேத இருப்பிடம் –
சாம வேதங்களுக்கு பெருமை சேர்ப்பவை –
அதர்வண வேத மூல தனம்
தத்தவங்களை சரியாக விளக்கிக் காட்டும் தீபம்
வால்மிகியாதி முனிவர்களின் சொற்சாயல்-
ப்ரஹ்ம ஞானம் மலர்ந்து தெளிய வைப்பவை

—————————

ஸ்வாமியுடைய ஸ்ரீ ஸூக்திகள் எம்பெருமானுடைய திருவடித் தாமரைகளில்
ஐகாந்த்ய பக்தியை உண்டு பண்ணுகின்றன —

என் நான் செய்கேன்-உபாயாந்தரம் இல்லை யாரே களை கண்–வேறே ரக்ஷகர் இல்லை – என்னை என் செய்கின்றாய் என்று பேற்றை அளிப்பாய் பரம ஐகாந்தி -ஸ்தோத்ர ரத்ன ஸ்ரீ ஸூக்திகளைக் கேட்டு எம்பார் சம்பிரதாயத்துக்கு திரும்பினார் அன்றோ

யத் பதாம்போருஹ-த்யான வித்வஸ்தாசேஷ-கல்மஷ
வஸ்துதாம்-உபயாதோ-ஹம் யாமுநேயம் நமாமி தம்.-ஸ்ரீ கீதா பாஷ்யத்தின் தொடக்கத்தில் உள்ள ஸ்வாமி ஸ்ரீ ஆளவந்தார் பற்றிய தனியன்”-ஆ முதல்வன் இவன் என்று கடாக்ஷம் பெற்ற பெருமை

53-ஹத அவத்யே ஹ்ருத்யே ஹரி சரண பங்கேருஹ யுகே 
நிபத்தந்தி ஐகாந்த்யம் கிமபி யதி பூப்ருத் பணிதய
சுநா சீர ஸ்கந்த த்ருஹிண ஹர ஹேரம்ப ஹூதபுக்
ப்ரபேசாதி ஷூத்ர பிரணதி பரிஹார பிரதிபுவ

ஹத அவத்யே -ஒழிக்கப்பட்ட தோஷங்களையுடைய ஹ்ருத்யே -மனதுக்கு ஆனந்தம் கொடுக்கும்
ஹரி சரண பங்கேருஹ யுகே -பாபங்களை அபஹரிக்கும் -பரம போக்யமான -பாவானத்வம் போக்யத்வம் -திருவடித்தாமரைகளில்
யதி பூப்ருத் பணிதய-யதி ராஜர் -பூ பூமி தாங்கும்
சுநா சீர-இந்திரன் –ஸ்கந்தத்ருஹிண-நான்முகன் ஹர-ருத்ரன் –ஹேரம்ப -விநாயகர் ஹூதபுக் -ஸூர்யன்
ப்ரபேசாதி ஷூத்ர பிரணதி-போன்ற ஷூத்ர தேவதைகள் -ஏழு ப்ரஸித்தர்களை சொல்லி -அல்ப அஸ்திர பலன்களையே கொடுப்பவர்கள்
அனந்தமாயும் ஸ்திரமாயுமான மோக்ஷம் –மார்க்கண்டேயனும் கரியே -மோக்ஷ பிரதத்வம் நாராயணன் ஒருவனுக்கே
பரிஹார -ப்ரணாமங்களை பரிஹாரம் செய்ய
பிரதிபுவ-எதிர் ஜாமீன் கொடுத்து உத்தரவாதம்
நிபத்தந்தி ஐகாந்த்யம் கிமபி -பரம ஐகாந்திக்கு -அசைக்க முடியாத ப்ரேமங்களை உண்டு படும்
தேவதாந்தங்கள் நிவர்த்தகம் இதில்
ப்ரயோஜனாந்தரங்கள் மேல்
ஆரோக்யம் பாஸ்கரன் -செல்வம் அக்னி- ஞானம் ருத்ரன் -மோக்ஷம் ஜனார்த்தனன் –

ஹத அவத்யே ஹ்ருதயே ஹரி சரண பங்கேருஹ யுகே
அவத்யம் -தோஷம் –ஹத -விலக்கப்பட்ட / ஹ்ருத்யே அளவற்ற ப்ரீதிக்கு விஷயம் -உபய லிங்கம்
ஹரி சரண -ஸ்ரீ பாதார விந்தம் –பங்கம் சேறு –ருஹி மலர்ந்த தாமரை யுகே இணை அடிகள்
நிபத்தந்தி ஐ காந்த்யம் கிமபி யதி பூப்ருத் பணிதய
பரமை ஐ காந்திகள் -அநந்ய பிரயோஜனர்கள் -நிபத்தந்தி திடமாக உண்டாக்குகின்றன –
தேவதாந்த்ர சம்பந்தம் உள்ளாருக்கு பரிஹாரம் நமக்கு ஸ்திர அநந்ய பிரயோஜனர் ஆக்கும்
பாலே மருந்தும் விருந்துமாகுமா போலே –
பூப்ருத் அரசர் -பூமியை தரிக்கும் யதி ராஜர் –பணிதய அருளிச் செயல்கள் -திவ்ய ஸ்ரீ ஸூ க்திகள்
கிமபி -இன்னது என்று -சொல்ல முடியாது -கண்டவர் விண்டிலர் -ஐ காந்திய போகம் அனுபவிக்கலாம் ஒழிய -விவரிக்க முடியாதே
சுநா சீர ஸ்கந்த த்ருஹிண ஹர ஹேரம்ப ஹூதபுக்
இந்திரன் -சு நா சீரான -சோபனமான சேனை உடையவன் /ஸ்கந்தன் -தேவ சேனாபதி கார்திகையான் /
த்ருஹினன் சதுர்முக ப்ரஹ்மா -38-ஸ்லோகம் த்ருஹின தந்திரம் -யோக சாஸ்திரம் -/ஹரன்/ஹேரம்பன் விநாயகன்
/ஹூதபுக் அக்னி -ஹுதம் ஹவிஸ் -ஹூ தம் புங்கதே அஸ்னாதி சாப்பிடுவான் –
ப்ரபேசாதி ஷூ தர பிரணதி பரிஹார பிரதிபுவ
பிரபா ஒளி -பிரபேசாதி ஸூ ர்யன் /ஸூத்ர அபர தத்வ தேவதைகளை / வணங்குவதை -பிராயாச்சித்தம் பிரதிபுவ -சிகிச்சை /
வியாதிகளுக்கும் பாவங்களுக்கும் அழிக்க பிரத்திபூ–பரிஹரித்துக் கொள்ள -பிராயாச்சித்தத்தால் ஏற்படும் பரிஹாரம் -பலன் பரிஹாரம்
-அமணன் பாழி சிம்மத்தை காட்டி -ஜைனர் கோயில் -வண்டர் தொண்டர் -மூர்ச்சிக்க
-எம்பெருமானார் -பிள்ளை உறங்கா வல்லி தாசர் பாதர் தூளி -சேர்த்து -மாய பிரான் தமர் அடி கொண்டு நீர் தூவுமின் -தீர்ப்பாரை யாமினி —
ஸ்ரீ பாஷ்யகாரர் ஸ்ரீ ஸூ க்திகள் -இந்த சக்தி உண்டே

ராமானுஜரின் படைப்புகள் குறையற்றவை, இதயத்திற்கு மகிழ்ச்சியானவை,
முன்பு சிவன், இந்திரன், சுப்ரமணியன், விநாயகர், சூரியன், அக்னி முதலிய சிறு தெய்வங்களின் வழிபாட்டுக்குத்
தங்களைக் கொடுத்த மனங்களைக் கூட மாற்றும் திறன் கொண்டவை.
அவர்கள் பிராயச்சித்தத்திற்காகவும், பரமாத்மாவைப் பற்றி ஒரே மனதுடன் பக்தி ஒழுக்கத்திற்காகவும் சேவை செய்கிறார்கள்.
நமது இதயத்திற்கு இனிமையை அளிக்கும் எம்பெருமான் திருவடித்தாமரைகளில் மனம் ஈடுபடும் படி செய்ய வல்லவை

ஸ்கந்தன், இந்த்ரன் , ப்ரஹ்மா , ருத்ரன் , அக்நி , ஸுர்யன் முதலான பரிவார தேவதைகளை வணங்கியவர்களுக்குப்
ப்ராயச்சித்தமாக , யதிராஜரின் ஸ்ரீஸுக்திகள் , தன்னைக் கற்றவர்களை, பரமைகாந்திகளாக ஆக்குகின்றன .
இதற்கு, தானே ஜாமீனாக இருப்பதாக உறுதி அளிக்கிறார்.

குற்றம் அற்றவை -இன்பம் விளைவிப்பவை –
சிவன் அயன் இந்திரன் கந்தன் கரிமுகன் அக்னி சூர்யாதி சகல பகவச் சேஷமான தேவதைகள் இடத்தில்
ஸ்வாமித்வ புத்தி கொண்டு வணக்கம் செலுத்துவதை பரிஹரிப்பதில்
மிக சமர்த்தங்களாய் இருந்து
எம்பெருமானுடைய திருவடித் தாமரைகளில் ஐகாந்த்ய பக்தியை உண்டுபண்ண வல்லவனாய் யுள்ளன –

வ்ருத்தாசுரன் -இந்திரனிடம் -குவிந்தனையே நமஸ்காரம் பண்ணுவான்
அம்பரீஷன் -பெருமாளே இந்திரனாக வேஷம் போட்டு வந்தாலும் ஒன்றும் கேட்டுப் பெற மாட்டேன் -நீயே நேரில் வந்தாலும் உன்னை வணங்கி ஒன்றும் கேட்க்காமல் இருப்பேன்
நித்ய நைமித்திக்க கர்மங்களில் அக்னி சூர்யன் வருணன் பித்ருக்கள் வணங்குவது இவர்களுக்கும் அவனே -சர்வ பூத -அந்தர்யாமி என்று எண்ணியே செய்கிறோம்
கவ்யம் ஹவ்யம் -பித்ரு தேவ ஸ்வரூபம் ஏற்றுக்கொண்ட விஷ்ணு
அனைவரும் அவன் சரீரம் தானே-

சாஷாத் அவிரோதம் -ஜைமினி -இந்திரன் சப்தமே நாராயணனைக் குறிக்கும்
வ்ருத்தாசுரனைக் கொன்ற இந்திரனே லிங்கம் அடையாளம் சொல்லும் பொழுது அந்தர்யாமி-அவஸ்திதம் உள்ளுறையும் நாராயணனை குறிக்கும்
ஸ்ரத்தையும் வளர்த்து விடுபவனும் நானே -கீதையில்
அவரவர் விதி வழி அடைய நின்றனரே -அவஸ்த்திதேரிதி

யயாதி இந்திர ஸம்வாதம் -கீழே தள்ள விரகு பாரத்தான் அன்றோ -இவனோ திருவடியில் விழுந்து அடியேன் என்பவர்க்கு சாம்யா பத்தி அருளுவானே
விகற்ப தேசம் சுவேதன் -ஸத்யலோகம் சென்று பசி தாகம் -கீழே சோறு தண்ணீர் கொடுக்காததால் -இதற்குப் பரிஹாரம் நான்முகன் செய்ய முடியாமல் -உத்தர காண்ட சரித்திரம்
ராமனே விராமன் -வரம் கொடுத்த தேவதை வரம் எல்லாம் ஒய்வு எடுக்கலாமே இவன் இடம் -ருத்ரனை அண்டிய பாணாசுரன் வ்ருத்தாந்தம் அறிவோமே -வேத அபஹார குரு பாதக தைத்ய பீடாதி -தீர்த்து அருளுபவன் இவன் ஒருவனே -நாடி நீர் வணங்கும் தெய்வமும் உம்மையம் முன் படைத்தான் -தேவதாந்த்ர தாஸ்யம் நிவர்த்தி செய்து நாராயணனை அண்டியவர்களுக்கு தேவ ரிஷி பித்ரு கடன்கள் ஒன்றுமே இருக்காவே

சர்வ ஸ்மாத் பரனாயும் மோக்ஷ பிரதனனாயும் உள்ள எம்பெருமான் இருக்க
தேவதாந்த்ர பஜனம் பண்ணிக் கெடாதீர்கள் -என்றபடி –

சங்கல்ப ஸூரியோதயம் -24 ஸ்லோகம் ஸ்வாமியே இத்தை விளக்கி அருள்கிறார்

————————

ஸ்வாமியுடைய ஸ்ரீ ஸூக்திகள் வைதிகர்களின் ஸூக்ருத பலன் -என்கிறார் –

54-யதா பூத ஸ்வ அர்த்தா யதி ந்ருபதி ஸூக்திர் விஜயதே
ஸூதா சந்தோஹ அப்தி ஸூ சரித விபக்தி ஸ்ருதிமதாம்
கதா த்ருப்யத் கௌதஸ்குத கலஹ கோலா ஹல
ஹத த்ரிவேதீ நிர்வேத ப்ரசமன விநோத பிரணயிநீ

யதா பூத ஸ்வ அர்த்தா -இயற்கையாக உள்ள எளிய வார்த்தைகள் –ஸத்யமானவை
ஸூதா சந்தோஹ அப்தி -அமுதக்கூட்ட சமுத்திரம்
ஸூ சரித விபக்தி ஸ்ருதிமதாம்-வைதிகர் பூர்வ ஸூ ஹ்ருத பரிணாமம் போன்றதும்
யதி ந்ருபதி ஸூக்திர் விஜயதே

கதா த்ருப்யத் கௌதஸ்குத -வாதத்தால் மதம் கொண்ட தூர்வாதிகளின்
கலஹ கோலாஹல ஹத த்ரிவேதீ நிர்வேத –வாதக் கூட்டங்களால் வருந்திய வேதம் -பேத அபேத கடக சுருதிகள் கொண்ட வேதம்
ப்ரஹ்ம சரீரமாக கொண்டு பேத அபேத ஸ்ருதியை ஸமன்வயப்படுத்தி –உடல் மிசை உயிர் எனக்கரந்து எங்கும் பரந்துளன் -இது கொண்டு ஸூ த்திரங்களை ஓருங்க விட்டார்
ப்ரசமன விநோத பிரணயிநீ–
சமனம் பண்ணி -வேத மாதா துன்பம் போக்கி -மகிழ வைத்தார் அன்றோ

ராமானுஜரின் படைப்புகள் வெற்றியைக் கூறுகின்றன

யதா பூத ஸ்வ அர்த்தா யதி ந்ருபதி ஸூக்திர் விஜயதே
யதிராஜர் -நரபதி அரசர் -விஜயதே -பல்லாண்டு –யதா பூதம் உள்ளது உள்ளபடி தாத்பர்யம் -இசைந்ததாக -சுருதி ஸ்ம்ருதி இத்யாதிகளுக்கு
ஸூதா சந்தோஹ அப்தி ஸூ சரித விபக்தி ஸ்ருதிமதாம்
அப்தி -கடல் -அம்ருத கடல் -அளவற்ற –சந்தோக-அபரிச்சின்னம் -அம்ருத தன்மை –ஸந்தோஹ சப்தம் ஸூதா உடன் சேர்ந்து
-பிரதாப பந்ததி -நிரவதிக போக்யதை காட்ட –
ஸூ சரித-ஸூ ஹ்ருதம் -சோபனமான சரிதம் –விபக்தி பலன் -விபாகம் தன்மை அடைந்து –ஸ்ருதிமதாம் -வேதம் வல்லவர்கள்
கதா த்ருப்யத் கௌதச்குத கலஹ கோலா ஹல ஹத
வாத கதை -கொழுப்பு ஏறி –வாதம் பண்ணி திமிரு கொண்டு -திருப்த பிரபன்னன் திமிரான பிரபன்னன்
-6–2-திருவாய்மொழி -பிரவேசம் -பெருமாள் விளம்பி வர -பராங்குச நாயகி -த்வரை மிக்கு இருப்பதால் –
ஆர்த்தோவா யதி வா திருப்தா –சப்த வியாக்யானம் -தேக அவசானம் போதும் என்று இருப்பவன்
-வாசி இல்லாமல் அவன் ரஷிப்பான் -சரணாகதன் என்பதே கொண்டு
சரண்யம் ஸ்வபாவம் சொல்ல வந்தது –சரண்ய லக்ஷணம் சொல்ல வந்ததே -இவனுக்கு நாமே உள்ளோம்
-சரணாகதி பண்ணி மோக்ஷம் இப்பொழுதே என்று கேட்க தெரியாத குழந்தை -என்று கொள்ளுபவன்
-பிராணன் அபி -சொல்ல வில்லை -இதை விட பிராணன் பெரிசு இல்லையே அவனுக்கு –
தூது விட்டும் வர வில்லை -பாக்ய ஹானி -முகம் கொடுக்கக் கடவோம் அல்லோம் என்று –
த்ரிவேதீ நிர்வேத ப்ரசமன விநோத பிரணயிநீ
வேதங்கள் தாத்பர்ய அர்த்தம் -பேத அபேத கடக சுருதி -சமணம் பண்ணி –ப்ரீதிக்கு விஷயம் -சர்வம் சமன்வயதா -பண்ணி அருளியதால் –

அவை மேற்பரப்பில் தோன்றும் உண்மையான பொருளைக் கொண்டுள்ளன; இதனால் ஒரு நேர்மை பாதுகாக்கப்படுகிறது;
அவை அமிர்தக் கடல் போல் செயல்படுகின்றன;
வேதங்கள் செய்த தவத்தின் பலனாக அவை விவரிக்கப்படுகின்றன;
தவறாக வழிநடத்தப்பட்ட மத அமைப்புகளின் தொழில் முறை போட்டியாளர்-சர்ச்சை வாதிகளால் ஈடுபடும்
செயலற்ற வாதங்களால் கிழித்தெறியப்பட்ட வேதங்களின் துக்கத்தை அவை துடைத்தழிக்கின்றன.
வேதங்களின் வருத்தங்களை போக்கி அருளி இன்பம் உண்டாக்குவதில் ஆர்வம் கொண்ட ராமானுஜரின் இந்தப் படைப்புகள் வெற்றி பெறட்டும்!

யதிராஜரின் ஸ்ரீஸுக்திகள் ,அமுதக்கடல்;
நாயகியாக இருக்கும் மூன்று வேதங்களின் உயிர்த்தோழி .
சேதநாசேதநங்களை சரீரமாக உடையவன் பகவான் என்கிற ஐக்யத்தைச் சொல்கிறது.
இப்படி, வேதமாதாவுக்கு, ஏற்பட்ட வருத்தத்தை , யதிராஜரின் ஸ்ரீஸுக்திகள் போக்குகின்றனவாம்

வேதங்களை பரம பிரமாணமாகக் கொண்ட வைதிகர்களின் ஸூ க்ருதமே வடிவாய் யுள்ளவைகளும் –
உண்மைப் பொருளை உணர்விப்பதால் அமுதமயமான கடல் போல் உள்ளவைகளும் –
செறுக்குற்று துர்வாதம் பண்ணும் புறச் சமயிகளுடைய அட்ட ஹாஸங்களாலே
துயர் உற்ற வேதங்களின் துயரத்தை போக்கடிப்பதிலேயே நோக்குடைய ஸ்வாமி யுடைய
ஸ்ரீ ஸூக்திகள் விஜய ஸ்ரீ யுடன் விளங்குகின்றன –

பேத சுருதிகள் ஸ்வரூபத்தாலும் குணத்தாலும் வேறே வேறே
ஜீவர்களும் ஒருவருக்கு ஒருவர் பேதம்
விஸிஷ்ட ஐக்யம் -சேதன அசேதன விஸிஷ்ட ப்ரஹ்மம் ஒன்றே -ஏகமேவ அத்விதீயம்
ஸமஸ்த ஜகத் அந்தர்யாமி -நிரீஸன்- ஸ்ரீ லஷ்மி பதி -சரீரீ பிரகாரம் பிரகார பாவம்

———————

எம்பெருமானார் தரிசனத்தில் குறை சொல்லுபவர் தாமே தமக்கு
இழுக்கைத் தேடிக் கொள்கின்றனர் -என்கிறார் —

55-ஸ்ருதி ஸ்ரோணி சூடாபத பஹூமதே லஷ்மணமதே
ஸ்வ பஷ ஸ்த்தான் தோஷான் விததமதி ஆரோபயதிய
ஸ்வ ஹஸ்தேன உத்ஷிப்தை ச கலு நிஜகாத்ரேஷூ
பஹூளம் களத்பிர் ஜம்பாலைர் ககன தலம் ஆலிம்பதி ஜட

இராமானுஜ சித்தாந்தம் -விசிஷ்டாத்வைதம்  வேதங்களால் ஆதரிக்கப்படுகிறது
(தத்துவம் என்பது வேதங்களின் “சிரஸ் ”
(தலை) உபநிடதங்களின் துல்லியமான பொருள் மற்றும் விளக்கத்தை அடிப்படையாகக் கொண்டது).
பல்வேறு மதங்களில், சில மனச் சோர்வடைந்த மனங்கள் செயற்கையாக
தவறான மற்றும் ஊகிக்கப்பட்ட குறைபாடுகளைக் கூறுகின்றன. அதனால் என்ன?

கண்ணாடி போன்று அவர்கள் மதங்களில் உள்ள குற்றங்களே பிரதிபலிக்கின்றன
ஒரு சக மனிதர் கைநிறைய சேற்றை வானத்தில் எறிந்துவிட்டு, திரும்பத் திரும்ப அப்படிச் செய்தால்,
நிகர முடிவு மற்றும் ஒரே முடிவு: விஷயம் அவன் தலையில் விழுந்து அசுத்தம் செய்யுமே
இது போன்றே அறிவற்ற புறச்சமயிகள் வாதங்களும் உள்ளன

சுருதி ஸ்ரோணி சூடாபத பஹூ மதே லஷ்மண மதே
ஸ்ரீ பாஷ்ய காரர் -சித்தாந்தம் -வேதம் -கணக்கற்ற -சமுதாயம் -சூடா பதம் சிரஸ்-கொண்டு தரிக்கும் படி -வேதாந்தங்கள் ஆதரத்துடன் தரிக்கும் –
தத்வ ஹிதம் புருஷார்த்தங்கள் –தெளிவாக காட்டி -அத்யந்த பஹு மதி –
ஸ்வ பஷ ஸ்த்தான் தோஷான் விதத மதி ஆரோபயதி ய
அ ஸூ யை யால் -தன்னுடைய பக்ஷ தோஷங்களை கல்பித்து -குத்ருஷ்டிகள் -பொருந்தாத அர்த்தங்கள் -அபார்த்தங்கள் -ஆரோபித்து -இல்லாததை இருப்பது போலே –
விததம் -உண்மைக்கு புறம்பான -மதி ஞானம் -தங்கள் மத தோஷங்களை தப்பாக ஆரோபித்து
ஸ்வ ஹஸ்தேன உத்ஷிப்தை ச க லு நிஜகாத்ரேஷூ -பஹூ ளம் களத்பிர் ஜம்பாலைர் ககன தலம் ஆலிம்பதி ஜட
த்ருஷ்டாந்தம் காட்டி -ஜடத்தன்மை -போன்ற அஞ்ஞன்/ தன் சரீரத்தில் உள்ள -வியர்வை சளி –ஜம்பாலைர் -சேறு -கொண்டு ஆகாசம் மேலே எறிய-
வந்து சரீரத்தில் விழுமே -ஆகாசத்தை அழுக்காக பார்த்து -தன் சரீரத்தில் சேறு விழுமா போலே –
இவர்கள் காட்டும் தோஷங்கள் இவர்கள் மதத்தையே அழிக்கும்-
ஆரோபணம் -கல்பித்தல்- அதிஷ்டானம் கயிறு -பாம்பு என்பது ஆரோபணம் -/ ஸமாரோபணம் -நல்ல விஷயத்தில் -அக்னி ஆத்ம ஸமாரோபணம் –
ஜட பதார்த்தம் போலே அத்யந்த ஞான ஹீனர்கள் இவர்கள் -அயதாத்மா மதி முன்பு இப்பொழுது ஜடம் ஆவான் –

விசிஷ்டாத்வைதம் எல்லோராலும் போற்றப்படுவதைப் பொறுக்காத பிறமதவாதிகள் ,
தங்கள் மதங்களில் இருக்கிற தோஷங்களை (குற்றங்கள்) எல்லாம் யதிராஜரின் மதத்தில் இருப்பதாகச் சொல்லி,
தங்கள் அறிவின்மையைக் காட்டுகிறார்களாம்.
ஒரு முட்டாள் குளக்கரையில் நின்றுகொண்டு, குளிக்க வந்தவர்களைப் பார்த்து, இதோ மேலே ஆகாயத்தைப் பாருங்கள்,
இந்த வெளுப்பான ஆகாயத்தைக் கருப்பாக ஆக்குகிறேன் பாருங்கள் ,என்று சொல்லி,
குளத்துச் சேற்றை இருகைகளாலும் எடுத்து, உயரே ஆகாயத்தில் வீசி,வீசி எறிந்தால்
மேலேசென்ற சேறு பலவகையாகச் சிதறி, இந்த முட்டாளின் தலை, உடல், கை, கால் இவற்றில் விழுந்து, இவனையே கருப்பாக்கியது .
ஆனால், வானம் அப்படியே வெளுப்பாகவே இருந்தது.
பிற மதஸ்தர்கள் கூறும் அபத்த வாதங்கள் , யதிராஜரின் விசிஷ்டாத்வைதத்துக்குப் பொருந்தாமல் அந்த மதஸ்தர்களுக்கே பொருந்தும்

வேதாந்தம் -உபநிஷத்துக்களுக்கு அபிமதமாய் இருக்கும் எம்பெருமானார் தரிசனத்தில்
புத்தி கெட்டவனாக எவன் தோஷங்களை ஏறிட்டுச் சொல்லுகிறானோ –
அந்த ஜடபிராயனானவன்-ஆகாசத்தில் சேற்றை பூசுவதாக எறிய
அது முழுவதும் தன் மேலேயே விழுவதால் தன்னையே சேற்றால் பூசிக் கொள்கிறான் –

————————

எம்பெருமானார் சுடர் விட்டுப் பிரகாசிக்கும் தீபமாய் இருக்கிறார் என்கிறார் –

56-நிராலோகே லோகே நிருபதி பர ஸ்நேக பரித
யதி ஷமாப்ருத் தீப -யதி ந கலி ஜாஜ்வல்யத இஹ
அஹங்கார த்வாந்தம் விஜஹதி கதங்காரம் அநகா-
குதர்க்க வ்யாள ஓகம் குமதி மத பாதாள குஹரம்

இந்த உலகம் அறியாமையின் இருளில் தவிக்கிறது.
(கடவுள் மீதுள்ள அன்பின் எண்ணெயால் எரியும்)
விளக்கு ராமானுஜம் –அவர் இடம் கொண்ட பக்தியே எண்ணெய்
இந்தத் தீபம் மட்டும் இல்லாவிட்டால், மக்கள் எப்படித் தாங்கள் விரும்பினாலும்,
அகங்காரத்தின் இருளையும், அடிப்படையற்ற வாதங்களையும், போக்க முடியும்
போட்டி அமைப்புகளின் கீழ்த்தரமான பேச்சாளர்களால், -பாம்புகளுக்கு ஒப்பிடலாம்.-இவை நிறைந்த
குகையில் அறிவுள்ளவர்கள் தள்ளப்பட்டு கிடப்பார்களே –

நிராலோகே லோகே நிருபதி பர ஸ்நேக பரித
பிரயோஜனாந்தர தோஷம் அற்று -பர விஷய பக்தி -சிநேகம் -ப்ரீதி -எண்ணெய் -இரண்டு அர்த்தம் –பக்தியால் நிரம்பிய -எண்ணெய் மிகுந்து
யதி -ஷமாப்ருத் தீப -யதி ந கலி ஜாஜ்வல்யத இஹ
ஒருக்கால் நன்றாக பிரகாசிக்கப் போனால் -இந்த தீபம் -யதிராஜர் ஏற்றிய சித்தாந்த தீபம் -யதிராஜராகிய தீபம் -என்றுமாம் –
இஹ -நீராலோகம் இருள் தரும் மா ஞாலத்தில்
அஹங்கார த்வாந்தம் விஜஹதி கதங்காரம் அநகா-குதர்க்க வ்யாள ஓகம் குமதி மத பாதாள குஹரம் -தோஷங்கள் -அநகா –அஹங்காரம் ஆத்மாவை தேகமாக –த்வந்த்தம் இருள் –
/அஹங்காரம் உள்ளவனுக்கு ஞானம் கொஞ்சம் வந்தால் அதனால்
குதர்க்கம் -வியாளம் சர்ப்பம் -பாதாளம் ஆகிற குஹரம் துவாரம் –கீழே ஏழு லோகங்கள் ஸூ ர்யன் உதிக்காதே -/குமதி மத குத்ருஷ்ட்டி மதம் —
ஸ்ரீ பாஷ்ய காரர் தீபம் பிரகாசிப்பதால் இவர்கள் மாய்ந்தார்கள் –

கருணை யதிராஜர் அவதரிக்காமல் இருந்தாலோ,
முதலாழ்வார்கள் ஏற்றிய தத்வ ஞான விளக்கு ,எல்லோருடைய இதயத்திலும் ஆத்ம ஞான ஒளியைப்
பிரகாசிக்கும்படி செய்யாதிருந்தாலோ ,
அறிஞர்களும் ,அனுஷ்டானபரர்களும், பிறமத மாயாவாதம் என்கிற படுகுழியில், விழாமல் இருந்திருக்கமுடியாது.
அதாவது,
வித்வான்களும், அனுஷ்டான பரர்களும், கஷ்டப்பட்டு இருப்பர்

இருள் அடைந்த இவ்வுலகில் எம்பெருமான் நிருஹேதுக கிருபை என்ற
எண்ணெயினால் நிரம்பிய எம்பெருமானார் என்ற தீபம்
ஒளிவிட்டு பிரகாசியா விடில்
சத்துக்கள் -குதர்க்கங்களான பாதாள குகையை எப்படி அண்டாமல் விலகுவார்கள் –

——————

57-யதி ஷமாப்ருத் த்ருஷ்டம் மதம் இஹ நவீ நம் ததபி கிம் –
தத் பராக் ஏவ அந்யத் வத ததபி கிம் வர்ண நிகேஷ
நிசாம் யந்தாம் யத்வா நிஜமத திரஸ்கார விகமாத்
நிரா தங்கா டங்க த்ரமிட குஹதேவ பரப்ருதய –

ஓ, ராமானுஜரின் விசிஷ்டாத்வைதம் சமீபத்தியது என்பதில் நீங்கள் திருப்தி அடைகிறீர்கள்.
எல்லாம் சரி. எந்த பிரச்சினையும் இல்லை. அப்படியே இருக்கட்டும். என்றால் என்ன?
அப்படியானால், அதற்கு முன்னரே ஏதோ ஒரு மதம் இருந்திருக்க வேண்டும் என்று
நீங்கள் சுட்டிக் காட்டலாம். இது எதை நிறுவுகிறது?

ஒரு பொருள் பழமையானது என்பது பழமையானது என்பதற்கான எந்த தகுதியையும் அளிக்காது.
எதுவானாலும் முதலில் நவீனமானது, அதன் பிறகு பழமையாகுமே காலப்போக்கில்.
மாறாக ஒரு தவறான அமைப்பை இப்போது வரை செழிக்க விடுவது மனிதகுலம் செய்த தவறு.
நான் வலியுறுத்த விரும்புவது என்னவென்றால், தங்கர், திராவிடர், குஹதேவர், போதாயனார் மற்றும் பலர்
இந்த அமைப்பை ஆரம்ப காலத்திலிருந்தே வளர்த்து வந்தனர்.
அப்போது எதிர்ப்பு இல்லாததால் மட்டும் விரிவாகவும், அதிகமாகவும் எழுதவில்லை.
அந்த அமைப்பு சமீபத்தியது அல்லது அந்த மதிப்பெண்ணில் அது களங்கத்தை அனுபவிக்கிறது என்று அர்த்தமல்ல.
பூர்வர்கள் ஸித்தாந்தம் என்னும் ஸ்வா ரஸ்யம் ராமானுஜ தர்சன ஸித்தாந்தத்தை உரைத்துப் பார்த்தால் அகப்படும் என்றவாறு

யதி ஷமாப்ருத் த்ருஷ்டம் மதம் இஹ நவீ நம் ததபி கிம் –
நவ நீம் என்பர் -பிராசீன மதம் இல்லை என்பர் -இஹ -லோகத்தில் -யதி ராஜரால் சாஷாத் கரிக்கப் பட்ட இந்த சித்தாந்தம்-வேதத்துக்கு கர்த்தா இல்லை -சாஷாத்கரிக்கப் பட வேணும் –
தத் பராக் ஏவ அந்யத் வத ததபி கிம் வர்ண நிகேஷ
உரைகல்லில் உரைத்து பார்த்தால் –சாருவாக புத்தர் -சங்கரர் அத்வைதம் விட ப்ராசீனம் –பிராசீனம் என்பதால் கொள்ள வேண்டாமே– தோஷங்கள் நிறைந்து -உள்ளதால் –
நிசாம் யந்தாம் யத்வா நிஜமத திரஸ்கார விகமாத் -நன்றாக கேள்மின் —
நிரா தங்கா டங்க த்ரமிட குஹதேவ பரப்ருதய -குட தேவர் -வாமன ரூபம் —பாதாயனார் -வியாசர் –போதாயன-டங்கர் -ப்ரஹ்மனந்தி -வாக்கியங்கள் வாதூல கோத்ரம் என்பர்
-த்ரமிடர்–த்ரவிட ஆச்சார்யர் -வியாக்யானம் -சாந்தோக்யத்துக்கும் -ஆர்த்த்ரேயர் -இவர் என்பர்
-திருமழிசை ஆழ்வார் என்றும் சிலர் சொல்வர் -சிவ பாஷ்யர் -63-நாயன்மாருக்குள்ளும் உண்டே –சாக்கியம் கற்றோம் -இத்யாதி –
குஹதேவர்-நம்மாழ்வார் -நாத யமுனா பாஷ்யகாரர் – நிரா தங்கா –ஆபஸ்தம்பர் –ப்ராசீனர் மூவரையும் காட்டி -ஆதங்கம் இல்லாமல் –நிராதங்கம் –
சாஸ்திர தத்துவங்களை நிர்பயமாக அருளி -திரஸ்கரிக்கும் தகுதி இல்லையே –நிஜமத திரஸ்கார விகமாத்-பயம் கவலை அற்று இருக்க காரணம் –
த்ருதர்களாக இருந்தார்கள் -துர்வாத மத பலம் ஒங்க ஸ்ரீ பாஷ்யகாரர் அவற்றை நிரசித்து ஸூ மத ஸ்தாபனம் பண்ணி அருளினார் –
தரிசன ஸ்தாபகர் இல்லை பிரவர்த்தகர் -என்றவாறு –

யதிராஜரின் விசிஷ்டாத்வைதம் பிற்பாடு தோன்றியது.
சங்கரரின் அத்வைதமோ, முன்னமே தோன்றியது. அதனால், அத்வைதமே சிறந்தது என்றனர், பிறமதத்தினர்.
மதங்களின் சிறப்புக்கும், உயர்வுக்கும் ,பழமையோ புதுமையோ காரணமல்ல.
விசிஷ்டாத்வைதம் பின்னாலே தோன்றியது என்பது, அதன் குறையல்ல !
உயர்ந்த அந்த தத்வத்தை,முன்னமேயே தோற்றுவிக்காதது மனிதனின் குறையே !
டங்கர் ,த்ரமிடர் , குஹதேவர் முதலிய பூர்வாசார்யர்கள் ,
சங்கரரைக் காட்டிலும் பழமையானவர்கள் தாங்கள் சொன்ன விசிஷ்டாத்வைதக் கொள்கைகளை எல்லோரும்
அப்போது பாராட்டியதால் , கவலை அற்றவர்களாக, கண்டனத்துக்கான நூல்களை அப்போது எழுதாது விடுத்தனர்

எம்பெருமானார் வளர்த்த இந்த தர்சனம் நூதனமே என்பாரேல்
அதனால் குறை ஒன்றும் இல்லை என்கிறார் –
இதை விட சங்கராதி மதங்கள் தொன்மை வாய்ந்தவை என்பதனால் என்ன பெருமை –
உறை கல்லில் உரைத்துப் பார்த்தால் தெரியும் –
இந்த விசிஷ்டாத்வைத மதத்தை ப்ராசீன காலத்திலேயே ப்ரவர்த்திப்பத்தது-
டங்கர் -த்ரமிட பாஷ்ய காரர் -குஹ தேவர் போல்வார் தெளிந்த ஞானம் யுடையவர் அன்றோ –

————

மீண்டும் ஸ்ரீ ஸூக்திகள் வைபவம் –

58- ஸூதா ஆசாரம் ஸ்ரீ மத் யதிவர புவ ஸ்ரோத்ர குஹரே
நிஷிஞ்சந்தி நியஞ்சத் நிகம கரிமாணப் பணிதய
யத் ஆஸ்வாத் அப்யாச ப்ரசய மஹிம உல்லாசித தியாம்
சதா ஆச்வாத்யம் காலே தத் அம்ருதம் அநந்தம் ஸூ மநசம்

ராமானுஜரின் படைப்புகள், அவற்றின் மதிப்பில், வேதங்களைக் கூட மீறுகின்றன.
கேட்பவர்களின் காதில் அமிர்தத்தைப் பொழிகின்றன-
அடிக்கடி திரும்பத் திரும்பச் சொல்லப்படும் இந்த அமிர்த இன்பம், அவர்களின் மனதை உயர்ந்த ஞானமாக மலரச் செய்கிறது,
அதனால் இறைவனின் அமிர்தம் அவர்களுக்கு நிரந்தரமாக கிடைக்கச் செய்கிறது.
இவை மோக்ஷம் ஏற்படுத்தி அதன் பின்னர் கிட்டும் அனுபவ ஜெனித ப்ரீதி காரித கைங்கர்யம் பெறுவிக்கும்-

ஸூதா ஆசாரம் ஸ்ரீ மத் யதிவர புவ ஸ்ரோத்ர குஹரே
யதி ராஜர் —ஸூதா -சாரம் -ஆசாரம் -அம்ருத மழை -என்றவாறு –ஸ்ரோத்ரகுஹரே -காது துவாரம் –
நிஷிஞ்சந்தி நியஞ்சத் நிகம கரிமாணப்பணிதய
பொழிகிறது -நிகமம் வேதம் -அவற்றை விட உயர்ந்த -கரிமா –லகுமா எதிர்தட்டு பணிதய -ஸ்ரீ ஸூ க்திகள்-கேட்ப்பார்கள்
கேசவன் கீர்த்தி அல்லால் மற்றும் கேட்பரோ -காதுக்கு பூட்டு இல்லையே -ஸ்வாபாவிகமாக
கேட்ப்பார்கள் செவி சுடும் -பகவத் நிந்தைக்கு ஜீவனம் கொடுத்து கேட்ப்பார்கள் செவியும் சுடும் படி -சிசுபாலனும் தாள் பால் அடைந்தான் –
யத் ஆஸ்வாத் அப்யாச ப்ரசய
போக்யதை அனைவரதும் அப்யஸித்து பெற்ற
மஹிம உல்லாசிததியாம் ஸூ மனசம்
மகிமையால் விகசிக்கப் பெற்ற சுத்த மனஸ் -சாத்விகர்களுக்கு
சதா ஆச்வாத்யம் காலே தத் அம்ருதம் அநந்தம்
ஆராவமுதம் -பர ப்ரஹ்மம் -காலே -அதற்கான உரிய காலத்தில் -மோக்ஷம் அளிக்கும்-சதா ஆசுவாபகவத் அனுபவம்
ஸ்ரீ பாஷ்யகாரர் ஸ்ரீ ஸூ க்திகளைக் கொண்டே -என்றவாறு-

யதிராஜரின் ஸ்ரீஸுக்திகள் ,வேதங்களைவிட ,மேன்மையாகக் கேட்பவர் காதுகளில் அமுதமாகப் பொழிகின்றன.
அதனால்தான், இந்த ஸ்ரீஸுக்திகளை நன்கு க்ரஹித்தவர்களுக்கு ,
ஆராத அமுதனாகிய எம்பெருமான் போக்யனாக ஆகிறான்.

ஸ்வாமி தேசிகன், பற்பல – முப்பது -வருஷங்கள், ஸ்ரீபாஷ்ய காலக்ஷேபம் ஸாதித்து ,
அந்தப் பரம ஆனந்தத்தை வெளியிடுகிறார்

செல்வச் சீமானான இளையாழ்வார் இடம் அவதரித்து பரவும் வேதாந்த விழுப் பொருள்கள் -ஸ்ரீ ஸூக்திகள் –
தமது காதுகளில் பெருக்கும் அம்ருத தாரையின் அனுபவங்களால் மலரப் பெற்ற ஞானத்தை யுடைய
வித்வான்களுக்கு அவை நித்தியமாக அனுபவிக்கத் தக்கவை –
அளவிட முடியாத ஆனந்தம் விளைவிப்பவை -மோஷம் அடைவிப்பவை –

—————

எம்பெருமானார் திருவடி சம்பந்தமே உத்தாரகம்-

59-யதி ஷோணீ பர்த்து யத் இதம் அநிதம் போக ஜனதா
சிர ஸ்ரேணீ ஜூஷ்டம் தத் இஹ த்ருட பந்தம் ப்ரபவதி
அவித்யா அரண்யாநீ குஹர விஹரன் மாமக மன
பிரமாத்யன் மாதங்க பிரதம நிகளம் பாத யுகளம்

நான் ஸம்ஸாரம் என்னும் அஞ்ஞான பெரிய காட்டில் ஒரு காட்டு யானையைப் போல் சுற்றித் திரிந்தபோது, ​​
நான் வழிதவறிச் செல்வதைத் தடுக்க, ராமானுஜரின் பாதங்கள் (பரமை காந்திகளால் வணங்கப்படும் பாதங்கள்)
இந்த மதம் கொண்ட எனது மனமான யானையை அடக்க வல்ல
விலங்கு போன்று ஸ்வாமியின் திருவடிகள் உள்ளன –

யதி ஷோணீ பர்த்து யத் இதம் அநிதம் போக
பதி பார்த்தா பர்யாயம் -யதிராஜர் -ஷோணீ-பூமி —அநந்ய
ஜனதா சிர ஸ்ரேணீ ஜூஷ்டம் தத் இஹ த்ருட பந்தம் ப்ரபவதி
பக்தர்கள் -சென்னிக்கு -அது அன்றோ -என் மனசை கட்டிப் படுத்தும் விலங்கு -யத் -தத் -பிரசித்த தமம்-
அவித்யா அரண்யாநீ குஹர விஹரன் மாமக மன
அவித்யை -அஞ்ஞானம் -காடுகளில்–உள்ள பொந்துகளில் -என்னுடைய மனஸ் இஷ்டப்படி திரிந்து
பிரமாத்யன் மாதங்க பிரதம நிகளம் பாத யுகளம்
ஞான ஹீனம் -யானை -அடக்க முடியாதே -மதம் கொண்ட யானை போல -எனது மனஸ் -மாமத மனஸ் -விலங்கு
-முதல் அகப்பட்ட விலங்கு -திருவடி தாமரைகள் இரண்டும் –
யதி ஷோணீ பர்த்து–பாத யுகளம் –/யத் இதம்– அநிதம் போக ஜனதா சிர ஸ்ரேணீ ஜூஷ்டம்-/
தத் இஹ த்ருட பந்தம் ப்ரபவதி-அந்த யத் ததிஹ-பூர்வாகாரம் -வர்த்தமான ஆகாரம் -இஹ ப்ரபவது-பாட பேதம் -இந்த லோகத்தில் விளங்கட்டும் என்றபடி
புஷ்ப்பம்-பிரதம நிகளம் ஆனதே – எனக்கு ஆனால் போலே லோகத்தார் அனைவருக்கும் ஆகட்டும் என்றவாறு –

அஞ்ஞானம் என்பது, காடு.
இதில் மதம்பிடித்துத் திரியும் யானை என்பது “மனஸ் “.
இதை முறையாகக் கட்ட, பரமைகாந்திகளும், ஸார்வபௌமர்களும், ஸிரஸ்ஸால் வணங்கும்
எம்பெருமானின் திருவடித் தாமரைகள் தான் தகுந்த இடம். (காலுக்கு விலங்கு ).
இதைப்போல, யதிராஜரின் திருவடி சம்பந்தம் ,
மதம்பிடித்த யானை போன்ற மனஸ் உள்ளவர்களுக்கு, த்ருடமான உறுதியைக் காட்டும்

எந்த யதி ஸார்வ பவ்மருடைய திருவடிகள் ஐஸ்வர்யாதிகளிலே பற்று இல்லாத பெரியோர்களுடைய சிரங்களால்
வணங்கப் பட்டு அநந்ய பிரயோஜனர்கள் சென்னிப் பூவே-
அஞ்ஞானம் ஆகிற பெறும் காட்டில் விளையாடித் திரியும் அடியேன் மனசாகிற மத யானையை
பிடித்துக் கட்டும் சங்கிலியாக ஆகுமோ
அத்திருவடிகள் இவ்வுலகத்தவருக்கு திடமான சம்பந்தம் யுடையதாக விளங்க வேண்டும் –

——————

காரேய் கருணை இராமானுசரின் அருளின் தன்மையைக் கண்டு வியக்கிறார் –
கருணை வெள்ளத்தை சமத்காரமாக வர்ணிக்கிறார் –

60-சவீத்ரி முக்தா நாம் சகல ஜகதேன பிரசம நீ
கரீயோபி தீர்த்தை உபசித ரசா யாமுன முகை
நிருச்சேதா நிம்ன இதரம் அபி சமாப் லாவயதி மாம்
யத்ருச்சா விஷேபாத் யதிபதி தயா திவ்ய தடி நீ –

முத்துக்களை சுமந்து செல்லும் கங்கை ஓட்டம், யமுனை மற்றும் பிறவற்றில் இருந்து வரும்
நீர் வரத்து காரணமாக அதிகரித்து , சில சமயங்களில் உயர்ந்த நிலங்கள் வழியாகவும் பாய்கிறது.
அதுபோலவே, ராமுனுஜரின் கருணாவின் (தயா) கங்கை, முக்தாக்களை (விமோசனமான ஆன்மாக்களை) உருவாக்கும்,
யமுனாச்சாரியார் மற்றும் பிறரின் கூடுதல் ஆசீர்வாதத்தால் மேம்படுத்தப்பட்டு,
நம்முடைய எல்லா பாவங்களையும் நீக்கி, என்னைப் போன்ற உயர்ந்த கர்வமுள்ள நபரைக் கூட கடந்து,
அதன் தூய்மையான நீரில் என்னையும் மூழ்கடிக்க முடியும்.
நீசர்களில் தலையான அடியேனது பாபங்களையும் போக்கி அருளி முக்தர் ஆக்கியும் அருளும்

சவீத்ரி முக்தா நாம் சகல ஜகதேன பிரசம நீ கரீயோபி
முத்துக்கள் -முக்தர் –நதி -முத்து அலைக்கும் -திவ்ய தேசத்தில் அனைத்தும் உத்தேச்யம் –
பொன்னி பெண்ணை முத்து குவிப்பதை கலியன் -திரு நறையூர் திருக் கோவலூர் பதிகம் -தன்னிடம் தோன்றுவது பிரசவம் -சவீத்ரி-முத்துக்களை -/பாபங்களை போக்கும் –
சகல ஜகத் என்னும் போக்கும் -/
கங்கையால் போக்கப் படாத பாபங்களும் சேது தீர்க்கும் -கயா சேவைக்கு பின் சேது தீர்த்தம் –அஸ்வமேத யாகம் பண்ணி போக்கும் பாபங்கள் –
அனைத்தையும் போக்கும் ஸ்ரீ பாத தீர்த்தம் —
திவ்ய தயை பக்தர்களை முக்தர்கள் ஆக்கும் –சாமான்ய ஜனங்களை முக்தர் ஆக்கும்
தீர்த்தை உபசித ரசா யாமுன முகை
யமுனை போன்ற நதிகள் கலக்கும் -கங்கை -அபிவிருத்தி பண்ணப் பட்ட ரசம் -யமுனை பூர்ண பகவத் பாகவத சம்பந்தம் கலந்ததால் -தூய பெரு நீர் யமுனை அன்றோ –
திருவடி சம்பந்தம் மட்டும் முதலில் –
ஏனக –பாபங்கள் -சாளக்கிராமம் -கண்டகி விரஜா தீர்த்தம் என்பர் -அதனால் பாவானத்வம் –
தீர்த்தம் -ஆச்சார்ய பரமாகவும் -ஆளவந்தார் -விசேஷ கடாக்ஷம் -ஆ முதல்வன் இவன் -ரசம் ஊட்டுவது ஆச்சார்யர் ஸ்ரீ ஸூ க்திகள் என்றவாறு –
பாலும் சக்கரையும் போலே -பூர்வர் ஸ்ரீ ஸூ க்திகளும் ஸ்ரீ பாஷ்யகாரர் ஸ்ரீ ஸூ க்திகளும் என்றவாறு -ரசம் கூடி அன்றோ இருக்கும்

நிருச்சேதா நிம்ன இதரம் அபி சமாப் லாவயதி மாம்
குருச்சேதா -பாட பேதம்

யத்ருச்சா விஷேபாத் யதிபதி தயா திவ்ய தடி நீ
தயா -குணம் இங்கு -காரேய் கருணை இராமானுச -அப்ராக்ருதமான -நதி பிரவாகம் –

பரம ஆசார்யரான யதிராஜரின் கிருபையை, கங்கைக்கு ஒப்பிடுகிறார்.
இத்தோடு, ஆளவந்தார், நாதமுனிகள், நம்மாழ்வார்களின் கருணையும் சேர்ந்திருப்பதால் ,
யதிராஜரின் கருணைவெள்ளம் –த்ரிவேணி சங்கமமாக ஆகிறதாம்.
இந்தக் கருணையை , மழையாக என்மீது பொழிந்து, என்னை ஆட் கொண்டீர் என்கிறார்.
இவை,எனக்குத் தாரகம், போஷகம் , போக்யம் என்கிறார் .
உன் கருணையே கருணை என்று உருகுகிறார்

மோக்ஷ சாம்ராஜ்யம் இவரிட்ட வழக்கு என்பதால் முக்தர்களுக்கு தோற்றுவாய் –
சகல சேதனர்களின் பாபங்களை போக்கி அருளும் –
ஆளவந்தார் போல்வாரின் விசேஷ கடாக்ஷங்களால் விருத்தி பண்ணப் பட்ட பெருமை யுடையது –
தடங்கல் இல்லாமல் பெருகுவது –
யாருக்கும் தாழாமல் அஹங்கரித்து இருக்கும் என்னையும்-
நிர் வியாஜ்யமாக ஏறிப் பாய்ந்து ஆட் கொண்டு விட்டது –
என்னையும் மூழ்கடித்து தனது திருவடிகளில் இட்டுக் கொண்டதே –

———————

61-சிந்தா சேஷ துரர்த்த தந்துர வச கந்தநா சதா கரந்த்திலா-
சித்தாந்தா ந சமிந்ததே யதிபதி கிரந்தத அனுசந்தாயினி
முக்தா சுக்தி விசுத்த சுத்த தடி நீ சூடால சூடாபத கிம்
குல்யாம் கலயேத கண்ட பரசுர் மண்டூக மஞ்ஜூஷிகாம்

ராமானுஜரின் படைப்புகளை ரசிக்கும் பழக்கம் ஒருவருக்கு வந்தபின்பு மற்ற படைப்புகளில் ஆர்வம் காட்ட மாட்டார்; ஏன்?
இந்த (பிந்தைய) படைப்புகள் அற்பங்களை வலியுறுத்துகின்றன;
அவ்வாறு செய்யும் போது, ​​வார்த்தைகள், தர்க்கம் மற்றும் போக்கு அனைத்தும் கடினமானவை
மற்றும் அவை கடினமான பாதைகளில் பயணிக்கின்றன.
முழுப் பயிற்சி இல்லாமல் அங்கொன்றும் இங்கொன்றுமாக முடிச்சுப் போடப்பட்ட பல கிழிந்த துணிக் குவியல்கள் போல் அவை காட்சி யளிக்கும்
அவிழ்க்க முடியாத பல முடிச்சுகள் கொண்ட கந்தல் துணி போல் இவை உள்ளன –
எல்லாவற்றிற்கும் மேலாக, சிவன் தனது தலையின் மேல் , முத்து நிரம்பிய கங்கை நதியைத் தாங்குகிறார்.
ஆனால், தவளைகள் செழித்து வளரும் ஒரு தெரு சாக்கடையைப் பெற்றுத் தாங்க அவர் எப்போதாவது சம்மதிப்பாரா?

சிந்தா சேஷ துரர்த்த தந்துர வச கந்தநா சதா கரந்த்திலா-
அற்பமான அர்த்தங்கள் -ஸ்ருதிக்கு பொருத்தம் இல்லாமல் -தோஷம் நிறைந்த –கரடுமுரடான வார்த்தைகள் –பிரயோஜனம் இல்லாமல்
-வியர்த்தமான சிந்தனை மாத்திரமே மிஞ்சும் -தாபமே மிக்கு -ஆயாசம் மாத்திரமே பலன் –
சித்தாந்தா ந சமிந்ததே யதிபதி கிரந்தத அனுசந்தாயினி
சங்கராதி சித்தாந்தங்கள் இப்படி –யதிராஜர் நவ ரத்ன கிரந்தங்கள் அனுசந்தித்து -சதா காலம்-இருப்பவர்கக்ள் மத்தியில்
-இவர்கள் சித்தாந்தம் ஒரு காலும் விலை பெறாது -எடுபடாது –
முக்தா சுக்தி விசுத்த சுத்த தடி நீ சூடால சூடாபத
முத்து சிப்பிக்கள் நிறைய -பரி சுத்தமான தெளிந்த தீர்த்தம் கங்கை தரித்துக் கொண்டு இருக்கும்
கிம் குல்யாம் கலயேத கண்ட பரசுர் மண்டூக மஞ்ஜூஷிகாம்
கண்ட பரசுர-சிவன் -கைப்பிடி இல்லாத கோடாலி -ஆயுதம் -ருத்ரனுக்கு -காரண பெயர்
தவளை நிறைந்த அழுக்கான ஜல தாரையை மதிப்பானோ -கண் எடுத்தும் பார்க்க மாட்டானே -ஜலதாரை -சாக்கடை என்றவாறு-

தைப்பதற்கே முடியாத நிலையில், வஸ்த்ரங்கள் கிழிந்தால் அதை அங்கங்கு சேர்த்து முடிச்சுப் போட்டு,
உபயோகிக்க முயற்சித்தாலும், எப்படி அந்தக் கந்தல் துணி எதற்கும் பயன்படாதோ
அதைப்போல அடிப்படைப் ப்ரமாணங்கள் எதுவும் இல்லாமல்
சாஸ்த்ர மரியாதையை மீறிய பிற மதங்கள் ஒருவருக்கும் பயன்படாது.
சிவன், கங்கையைத் தலையில் தாங்குகிறான்;
அவனை, நிறையத் தவளைகள் வசிக்கும் வாய்க்காலைத் தலையில் தாங்கு என்று அவன் பக்தர்கள் வேண்டினால்,
சிவன் சரி என்பானா ? மாட்டான்.
அதைப்போல, ஸ்ரீபாஷ்யாதிகளை ஆழ்ந்து கற்றவர்கள் , விபரீதக் கருத்துக்களைச் சொல்லும் பிற மதங்களின்
கருத்துக்களை ஒப்புக்கொள்ளார். அபார்த்தம் என்று ஒதுக்குவர் என்கிறார்

ஸ்ரீ ஸூக்திகளை அனுபவிக்கப் பெற்றவர்கள் மற்ற கிரந்தங்களைக் கண் எடுத்தும் பாரார் –
ஸ்வாமி யுடைய ஸ்ரீ ஸூக்திகளை சதா அனுசந்திப்பார்க்கு
புத்தி கேடு உண்டாக்குவதையே குறிக் கோளாகக் கொண்டு அபார்த்தங்கள் நிறைந்த கந்தல் மூட்டைகளான
இதர மத கிரந்தங்கள் விஷயமாகவே தோன்றாதே
முத்துச் சிப்பிகள் இங்கே நிறைந்து இருப்பதால் –
உயர்ந்த கங்கையை சிரத்தில் அலங்காரமாகக் கொண்ட அரன்-
தவளைகள் நிறைந்த கால்வாயை தலையில் கொள்வானோ –

——————

62-வந்தே தம் யமி நாம் துரந்தரம் அஹம் மான அந்தகார த்ருஹா –
பந்த்தா நாம் பரி பந்த்திநாம் நிஜ த்ருசா ருந்தா நாம் இந்தா நயா
தத்தம் யேன தயா ஸூதா அம்பு நிதிநா பீத்வா விசுத்தம் பய –
காலே ந கரிசைல கிருஷ்ண ஜலத காங்ஷாதிகம் வர்ஷதி

வற்றாத கருணைக் கடலான ராமானுஜர், ஹஸ்திகிரி பகவான் வரதராஜருக்கு, சாலைக் கிணற்றில் இருந்து
சுத்தமான தண்ணீரைக் கொண்டு வந்து வழங்கினார்.
இத்தைப் பருகிய – ஒரு கருமேகம்பேர் அருளாளன் நம் மேல் அந்த நீரையே பலனாகப் பொழிகிறான்
இன்றும் அந்த மேகம், அந்த ஸ்ரீ வரதராஜர், நாம் எதிர்பார்த்ததைத் தாண்டி சரியான நேரத்தில் மழையைப் பொழிகிறது.
(இதற்குக் காரணம் ராமானுஜரின் தீர்த்த கைங்கர்யம்  , இப்போது பகவானால் ராமானுஜர்
அடியாக்களான நமக்கு திருப்பிக் கொடுக்கப் பட்டிருக்கிறது,)
அஹங்காராதி அஞ்ஞானங்களை ஸ்வாமி கடாக்ஷ லேசத்தாலே போக்கி அருளுகிறார்
இதனால் மற்ற மதத்தினர் வழிகளால் ஈர்க்கப்படாமல் நம்மைக் காத்து அருளுகிறார்
யதிகளின் தலைவரான இந்த ஸ்வாமியை அடியோங்கள் வணங்குவோம்

வந்தே தம் யமி நாம் துரந்தரம் அஹம்
யமி -அனைத்தையும் கட்டுப்படுத்தி உள்ள -யதிராஜர் -நாயகர்-அஹம் வந்தே –யேன தயா ஸூதா அம்பு நிதிநா–அந்த அம்ருதக் கடலான இவரை வணங்குகிறேன்
மான அந்தகார த்ருஹா–மமகாராம் -அந்தகாரம் -தேஹாத்ம ஸூ தந்த்ர பிரமங்களை விரட்டி
-பந்த்தா நாம் பரி பந்த்திநாம் நிஜ த்ருசா ருந்தா நாம் இந்தா நயா
மேல் மேல் வரும் தன் சிந்தனை ஞானத்தால் -உண்மைக்கு புறம்பான புற சமயங்களை அடக்கி -ருந்தானாம்
தத்தம் யேன தயா ஸூதா அம்பு நிதிநா பீத்வா விசுத்தம் பய
எந்த தயையின் -அம்ருதக் கடல் –சமர்ப்பிக்கப் பட்ட தீர்த்தம் -சாலக்கிணறு தீர்த்த கைங்கர்யம் –விசுத்தம் –வந்தவாசி போகும் வழியில் -2-மைல் தூரம் –
அவனே ஆசைப்பட்டு -ஆச்சார்யர் நியமனம் -தீர்த்த கைங்கர்யம் -எம்பெருமானார் கர ஸ்பர்சம் பெற்ற தூய்மை
காலே ந கரிசைல கிருஷ்ண ஜலத காங்ஷாதிகம் வர்ஷதி
ஹஸ்தி கிரி -நாதன் -தேவ பெருமாள் -காள மேகம் ஜலத -காலத்திலே-விருப்பத்துக்கு அதிகமான -மனசால் நினைக்க முடியாத பலன்களை வழங்குவான்
தீர்த்தம் பருகி தானே மேகம் பொழியும் -பாஷ்யகாரர் தயை கடல் சமர்ப்பித்த தீர்த்தம் கொண்டே நமக்கு பொழிகிறான்

யதிராஜர் சாலைக் கிணற்றிலிருந்து கொண்டுவந்து சமர்ப்பித்த சுத்த நீரைப் பருகி,
கரிகிரிமேல் நிற்கும் பேரருளாளன் ,எம்பெருமானாருக்கு அருள் மழை பொழிந்தான்.
பிற மதங்களை நிரஸிக்கும் அத்தகைய கீர்த்தி உள்ள எம்பெருமானாரை நமஸ்கரிக்கிறேன்

பரம தயாளுவான எம்பெருமானாரை அடி பணிகிறேன் –
இந்த அருள் கடலான எம்பெருமானாராலே சமர்ப்பிக்கப் பட்ட தூய்மை படைத்த திருமஞ்சன
நீரைப் பருகி அத்திகிரி உச்சியில் உள்ள கரும் கொண்டல் -தேவ பெருமாள்-பேர் அருளாளன் –
நமக்கு உசித காலத்தில் வேண்டுமவை எல்லாவற்றையும் தாராளமாக பொழியுமோ
அஹங்காரமான இருளைப் போக்குபவரும்
சத்ருக்களுடைய மதங்களை தன் கண் பார்வையாலே –
பார்த்தான் அறு சமயங்கள் பதைப்ப -என்னும் படி
மண் உண்ணும் படி செய்பவராக அந்த யதிகட்க்கு இறைவனான ஸ்வாமியை அடி பணிகிறேன் -என்றவாறு –

——————

63-காஷாயேண க்ருஹீத பீத வசநா தண்டைச் த்ரிபிர் மண்டிதா –
சா மூர்த்தி முரமர்த்த நஸ்ய ஜயதி த்ரயந்த சம்ரஷிணீ
யத் பிரயக்க்யாபித தீர்த்த வர்த்தித தயாம் அப்யச்யதாம் யத் குணாத்
ஆசிந்தோ அநிதம் பிரதேச நியதா கீர்த்தி பிரஜாகர்த்தி ந

முன்பு தத்தாத்ரேயராக வேதங்களை ரஷித்து அருளவே காவி வஸ்திரம் -சந்நியாஸ வேஷம் கொண்டு இருந்தான்
அதே போல் நம் ஸ்வாமியின் திரு அவதாரம் இப்பொழுது மற்றொரு அவதாரம்.
ராமானுஜரின் ஆடையைக் கொடுப்பதற்காக இறைவனின் வெள்ளை வஸ்திரம் பிழிந்து குங்கும நீரில் கழுவப்பட்டது.
மேலும் அவர் துறவி வரிசையின் அடையாளமாக திரி தண்டை எடுத்துக் கொண்டார்.
அவ்வளவு தான். இல்லையெனில், அவர் வெறும் மதுசூதன மூர்த்தி மட்டுமே (வேத தத்துவத்தை விசிஷ்டாத்வைதத்தில் பெற்றதற்காக)
இதற்கும் மேலே அவரது திவ்ய கிரந்தங்கள் மூலம் வேதாந்த சித்தாந்தங்களை வெளியிட்டும் அருளினார்
இவற்றால் நாம் அறிவு ஒங்கப்பெற்று அவரது கருணா குணத்தை புகழ்ந்து கொண்டு உள்ளோம்
இதனால் நமக்கும் மிகுந்த வை லக்ஷண்யம் கிட்டுகிறது
தலை, இதயம் ஆகிய குணங்கள் நம்மீது செலுத்திய வசீகர ஈர்ப்பினால் அவருடைய திவ்ய மங்கள விக்ரஹ
அழகைப் பின் பற்றிக் கொண்டிருக்கும் நமக்கு, ஒரு நேர்மையான வகைப் புகழ் என்பது தானாக வரும் வழக்கமான வரப் பிரசாதம்!
இந்த ஸ்வாமியுடைய கீர்த்திப் புகழானது கடற்பரப்பு எது வரையிலும் உள்ளதோ அது வரையிலும் பரவி நிலைத்து உள்ளது

காஷாயேண க்ருஹீத பீத வசநா தண்டைச் த்ரிபிர் மண்டிதா
பீதாக வாடைப் பிரானார் -பட்டு வஸ்திரம் -ஸ்வரூப நிரூபணம் -காஷாயம் -பீதாம்பரம் -க்ரஹிக்கப் பட்ட பீதாம்பரம் –
த்ரிதண்டம் ஏந்தி -சோபை மிக்கு -சங்கு சக்கரம் சேர்த்தி அழகு -மிக்கு அன்றோ இது -அஸி தீக்ஷணா போலே அன்றோ ஸ்வாமிக்கும் இது
-மண்டிதா -அலங்கரிக்கப் பட்ட என்றபடி / கண்டனம் சிதைப்பது -எதிர்மறை மண்டதம்
-சா மூர்த்தி முரமர்த்த நஸ்ய ஜயதி த்ரயந்த சம்ரஷிணீ
முரன் நிரஸ்தன -மது ஸூதன–வேத பாஹ்ய நிரசனம் -மூர்த்தி திவ்ய மேனி -ஜெயந்தி பல்லாண்டு மங்களா சாசனம்
-சா -சப்தம் -அந்த -பிரசித்தம் -தொடர்பு -தத்தாத்திரியனாய் முன்பு அவதரித்து –அத்ர மகரிஷிக்கு திருக் குமாரராக
-ததா -நான் என்னை கொடுத்தேன் -ஆறாவது அவதாரம் என்பர் -த்ரிதண்டம் உடன் அவதரித்து -வர்ண கிரமங்கள் நான்கு யுகம்
-அவரே ஸ்ரீ பாஷ்யகாரராக அவதரித்து -நியாய சித்தி கிரந்தத்தில் இத்தை காட்டி அருளி –
வேதாந்தம் சம் ரக்ஷணம் பண்ணவே —த்ரையந்தம்
யத் பிரயக்க்யாபித தீர்த்த வர்த்தித தயாம் அப்யச்யதாம் யத்குணாத்
தீர்த்தம் -ஞானம் –யது- நன்கு வளர்க்கப்பட்ட ஞானத்தால் –வளர்க்கப்பட்ட சித்தாந்தத்தால் -வேதம் எல்லாம் அவனையே பிரதிபாதிக்கும்
-பூர்வ கண்டமும் உத்தர கண்டமும் –
சர்வ அந்தராத்மா -சரீராத்மா பாவம் -ஸமஸ்த சேதன அசேதனங்கள்-தாத்பர்யம் -காட்டிய குணங்கள் -பக்தி ஞானம் வைராக்யம் அனுஷ்டானம் இவைகள்
-லோகத்தில் ஒப்புமை இல்லாத
ஆசிந்தோ அநிதம் பிரதேச நியதா கீர்த்தி பிரஜாகர்த்தி ந
இந்த குணங்களுக்கு ஒப்பு இல்லையே -ஸ்ரீ வைஷ்ணவர் கீர்த்தியும் உலகு எங்கும் பரவி உள்ளதே –
எம்பெருமானார் திருவடிவாரத்தில் உள்ளதை உணர்ந்த அன்றே கீர்த்தி உண்டே –அளவற்ற கீர்த்தி -கல்யாண குண அப்யாஸத்தால்

பகவான் , பட்டாடையைக் களைந்து சிவந்த காஷாயத்தைத் தரித்து, த்ரிதண்டத்தை ஏந்தி
சிகை, கமண்டலு இவற்றுடன் தத்தாத்ரேயராக வந்து, வேத, வேதாந்த அர்த்தங்களை நிலை நிறுத்தினார்.
யதிராஜரும் அப்படியே அநுசரித்து விசிஷ்டாத்வைதத்தை நிலை நிறுத்தினார்.
அறிவாளிகள் ஒப்புக்கொண்டு பாராட்டுவார்களாம் .
அதனால், பிள்ளான், கிடாம்பி ஆச்சான் போன்ற சிஷ்யர்களின் (அறிவாளிகளின் ) புகழ் நாடு முழுவதும் பரவியது.

” யத்ப்ரக்யாபித தீர்த்த வர்தித தியாம் ” என்பதற்கு,
இதில் “தீர்த்தம்” என்பது , யதிராஜரின் ஸ்ரீபாததீர்த்தம் என்றும் ,
இதை ஸ்வீகரிப்பதால் சிஷ்யர்களுக்கு ,ஞான விருத்தி மிகுதியாகி,
அவர்கள் புகழ் நாடெங்கும் பரவியது என்றும் வ்யாக்யானமிடுவர்

ஸ்ரீ தத்தாத்ரேய மகரிஷியாக திரு அவதரித்து த்ரி தண்டம் ஏந்தி வேதங்களை ரஷித்தான் முன்பு –
அவரைக் காட்டிலும் மேம்பட்ட ஸ்வாமியாக அவரே திருவவதரித்து –
சித்தாங்களை வெளியிட்டு அருளிய கருணையின் புகழ் திக்கெட்டும் என்றும் பரவி உள்ளது –
ஸ்வாமியுடைய கீர்த்தி பிரபாவங்களையும் திவ்ய மங்கள விக்ரக சோபையையும் ஏற்றிப் பேசுகிறார் –

எம்பெருமானாராலே பிரகாசிக்கப் பெற்ற சத் ஸம்ப்ரதாயத்தால்
விளக்கம் உறச் செய்யப் பட்ட புத்தியை யுடையோமான அடியோங்களுக்கு
ஸ்வாமியுடைய குண அனுபவம் பண்ணுவதால் –
அவருடைய சமுத்திர பர்யந்தம் பரவிய கீர்த்தி நெஞ்சுக்கு விஷயம் ஆகிறது –

காஷாயமான பீத வஸ்திரத்தாலும் –
திருக்கையில் ஏந்திய த்ரிதண்டத்தாலும்
எம்பெருமான் யுடைய திவ்ய மங்கள விக்ரஹம் போலே சோபையுடன் விளங்கா நிற்கின்றதே –
பல்லாண்டு பல்லாண்டு –

———

எம்பெருமானாருடைய திருவடித் தாமரைகளை தாம் எப்போதும் அணுக்கராக வேண்டும்
என்று பிரார்த்திக்கிறார் –

64-லிப்சே லஷ்மண யோகி ந பதயுகம் ரத்த்யா பராக சடா
ரஷா ஆரோபண தன்ய ஸூரி பரிஷித் சீமந்த சீமா அந்திகம்
பிஷா பர்யடன ஷணேஷூ பிபராஞ்சக்ரே களத் கில்பிஷா –
யத் வின்யாச மிஷேண பத்ர மகரீ முத்ராம் சமுத்ர அம்பரா

ராமானுஜர் சன்யாசியாக வேண்டிய உணவைப் பெறுவதற்காக, ( மது கரம்  ) தனது அன்றாட வழக்கத்தில் நடக்கும்போது , ​​
அவருடைய பாதங்கள் பூமித் தாயின் மீது ஆழமாகவும் தெளிவாகவும் இருக்கும்.
கடலை ஆடையாகக் கொண்ட பூமி இப்போது தன்னை அதிர்ஷ்டசாலியாகவும் புனிதமாகவும் கருதுகிறது.
அவரது திருவடிகளில் உள்ள கொடி மீன் போன்ற சிஹ்னங்கள் மூலம் தூய்மை பெருகிறதே
பலரும் இந்த பாத தூளிகளைத் தலையால் தரித்து தங்களுக்கு ரக்ஷையாக எண்ணி மகிழ்கிறார்கள்
நித்ய ஸூரிகள் கூட இதைப் போற்றுவார்கள்,
அவர்களைத் தங்கள் முன் தலையில் தாங்குவார்கள் என்று நான் கூறுவேன்.
அந்த பாதங்களை என் தலையில் சுமக்க ஏங்குகிறேன்.

லிப்சே லஷ்மண யோகி ந பதயுகம் ரத்த்யா பராக சடா
அடைய விரும்புகிறேன் –லிப்சே -/ விப்ரலம்பனம் ஏமாற்றுவது /எம்பெருமானார் திருவடி நிலைகளை காதலிக்கிறேன் என்றபடி -எப்படிப்பட்டவை –
ஸ்ரீ ரெங்கத்தில் ஸ்வாமி நடந்த தெரு புழுதி மேல் காதல் கொண்டே -ரத வீதியில் உள்ள பூமி –
ரஷா ஆரோபண தன்ய ஸூரி பரிஷித் சீமந்த சீமா அந்திகம்
நித்ய ஸூரிகள்–விரும்பி –மருந்தே அவர்கள் போக மகிழ்ச்சிக்கு -அந்த மருந்துகளில் இதுவே சீமா பூமி
இதுவே ரக்ஷை -மாயப்பிரான் தமர் அடி பொடி கொண்டு –
அமணன் பாழி என்று தெரிந்து மூர்ச்சிக்க —பிள்ளை உறங்கா வல்லி தாசர் திரு அடி துகளை கொண்டு –தோஷ பரிஹாரமே ரக்ஷை –
பூமிப் பிராட்டிக்கும் இதுவே ரக்ஷை -சீமந்தம் -தலைக்கு அணிய சீமா அதிகம்
பிஷா பர்யடன ஷணேஷூ பிபராஞ் சக்ரே களத் கில்பிஷா –
பிக்ஷைக்கு போகும் பொழுது -மாதுகரம் -பாதுகை இல்லாமல் -ஒரு காலில் சங்கு சக்கரம் -பூமிப் பிராட்டிக்கு ஸமாச்ரயணம்
-நம் போல்வார் செய்யும் அபராதங்களால் புனிதம் அடைய -கிடாம்பி ஆச்சான் ஏகமாக -திருக் கோஷ்ட்டியூர் நம்பி நியமனம்
-சங்கு சக்கர லாஞ்சனம்-நன்றாக பதிந்து -திருவடிகள் உழக்கின பாத தூளிகள் கொண்டு –
யத் வின்யாச மிஷேண பத்ர மகரீ முத்ராம் சமுத்ர அம்பரா
சமுத்திர அம்பரம் -பூமி பிராட்டி –காரார் –கண்ணார் கடல் உடுக்கை -கடலை வஸ்திரமாக கொண்டு
முத்திரைகள் தரித்து -சங்கு சக்கர லாஞ்சனம் என்றவாறு
பரந்யாசம் சம்சார நிவ்ருத்த மோக்ஷம் -ஸமாச்ரயணம் -நரகம் போக மாட்டான் பிறவி இருக்கும் என்பர் தேசிகன் சம்ப்ரதாயம் –
கொங்கில் பிராட்டி -மேல் நாட்டுக்கு போகும் பொழுது -திருவடி நிலை கொண்டு -கண்டார்கள் –

இப்படி, சிஷ்யர்களின் புகழ் பரவக் காரணமான , உடையவரின் திருவடிகள்
தனக்கு வேண்டும் என்று பிரார்த்திக்கிறார்.
யதிராஜர் ,பிக்ஷைக்கு எழுந்தருளும் போது பூமியில் அவரது திருவடிகள் ஆழமாகவும், கோலமாகவும் பதிந்து,
இந்தத் திருவடிகள் எழுப்பிய பாத தூளிகளை , நித்ய ஸூரிகளும் நெற்றியில் தரித்து, தந்யராகிறார்கள்;
அந்தத் திருவடிகளே எனக்குச் சரண் என்கிறார்

கடலை துகிலாகக் கொண்ட இந்த பூமி -மாதுகரத்துக்கு எழுந்து அருளுவது போன்ற சமயங்களில்
திருவடி சம்பந்தத்தால் திரு ரேகைகள் முத்தரிக்கப் பெற்று சகல தோஷங்களும் விலக்கப் பெற்று
தூய்மை அடைகிறது –
திருவடிகளுக்கு ரஷையான பாதுகைகளை தங்கள் சிரசில் தாங்குவதால் புண்ணியர்களான மஹான்களுக்கு
ஸ்வாமி திருவடிகள் அணித்தாய் உள்ளன –
அடியேனுக்கும் அப்படியே ஆக வேண்டும் –

——————

65-நாநா தந்திர விலோபிதேன மநஸா நிர்ணீத துர்நீ தபி –
கஷ்டம் குத்சித த்ருஷ்டிபிர் யதி பதே ஆதேச வைதேசிகை
வியாச ஹாசபதீக்ருத பரிஹ்ருத ப்ராசேதச சேதச-
க்லுப்த கேளி சுக சுக ச ச முதா பாதாய போதாயன

இணை அமைப்புகளை தவறாக இயக்கிய பல ஆதரவாளர்கள் ராமானுஜரால் பரப்பப்பட்ட அமைப்பின்
பரப்பு மற்றும் திசையிலிருந்து வெகு தொலைவில் சென்று விட்டனர்.
பிறகு, அவர்கள் தங்கள் படைப்புகளால், வியாசரை ஏளனப் பொருளாக ஆக்கி விட்டனர் ;
அவர்கள் மனதில் இருந்து வால்மீகியை விரட்டியடித்தனர்
அவர்கள் சுகரை வெறும் கிளியின் நிலைக்குக் கண்டனம் செய்கிறார்கள்;
அவர்கள் போதாயனாரை பயனற்ற விஷயங்களைப் பேசுபவர் என்று கருதுகிறார்கள்.
அதாவது, அடிப்படையாகவும் அதிகாரமாகவும் இருக்க வேண்டிய நமது பண்டைய படைப்புகளை
அவர்கள் முற்றிலுமாக புறக்கணித்துள்ளனர்-என்ன கொடுமை இது

நாநா தந்திர விலோபிதேன மநஸா நிர்ணீத துர்நீ தபி –
புதிதாக கற்பனையால் நாநா வித -இதிஹாச புராணங்களை விட்டு -புத்த சாருவாக ஜைனர் -/சாங்க்யர் சைவ -வேதார்த்தங்கள்
புத்த மதங்களை கொண்டே -ஸ்தாபித்து -வேத விருத்தமான அர்த்தங்களால் –
கஷ்டம் குத்சித த்ருஷ்டிபிர் யதி பதே ஆதேச வைதேசிகை
தர்சனம் -மதம் –எம்பெருமானார் உபதேசங்களை மாறாக சொல்லி –குத்ருஷ்டிகளாக –
வியாச ஹாச பதீக்ருத பரிஹ்ருத ப்ராசேதச சேதச-
வியாசர் -வால்மீகி போல்வார் / தத்வ த்ரய ஞானங்களை விளக்கி உள்ளார்கள் -வேத வேதாந்தர்த்தங்களை-
கிருஷ்ண த்வைபாயனர் -வியாசர் -வேதங்களை தொகுத்த காரண பெயர் -புராண தத்வங்கள் / ப்ரஹ்ம ஸூ த்ரங்கள் –
ப்ராதேசஸ் -வால்மீகி -பிதாமஹருக்கு பிதாமகர்-திருமலை நம்பி ஸ்ரீ பாஷ்யகாரருடைய உத்தம தேசிகர் -தாதாச்சார்யர் வம்சம் இவர் இடம்
-லஷ்மீ தாதாச்சார்யர் வம்சம் அனந்தாழ்வான் இடம் இருந்து –
க்லுப்த கேளி சுக சுக ச ச முதா பாதாய போதாயன
சுகர் போதாயனர் /-திரு உள்ளக் கருத்துக்கள் அழிக்கப் பட்டன-கேளி சுகர் –பொழுதுபோக்கு கிளி போலே எண்ணி –
முதா -வியர்த்தமாக -எண்ணி -வியர்த்த ஞான உபதேசங்கள் என்பர் -போதாயனரே இல்லை என்பர் -விதண்டா வாதிகள்-
முதா போதாயன பாதாயனார் -என்றும் பாட பேதம் –

குதர்க்கங்களையே நன்கு கற்று ,அதிலேயே மயங்கி, அதையே பேசி,
வ்யாஸ பகவானையே ஹாஸ்யப் பொருளாக்கி,
வால்மீகி மகரிஷியையே மனத்திலிருந்து விரட்டி,
சுகப் ப்ரம்மத்தை விளையாட்டுக் கிளியாக ஆக்கி,
போதாயநரைப் பாதித்து,
யதிராஜரின் ஸித்தாந்தத்தை ஏற்காமல், மாயாவாதம் செய்கிறார்களே என்று வருந்துகிறார்

பாஹ்ய குத்ருஷ்டிகளை பரிகாசப் பேச்சால் ஏளனம் பண்ணுகிறார் –
வேதாந்தங்களை சரியாக கிரஹிக்க யோக்யதை இல்லாமல் கலக்கமுற்று தெளிவற்ற
புத்தி யுடையவர்களால் நிர்ணயிக்கப் பெற்ற தீதுற்ற நெறியுடைய குத்ருஷ்டிகள்
வியாச மகா ரிஷியை பரிகாசத்துக்கு உள்ளாக்குகிறார்கள்
வால்மீகி முநிவரை மூடராக்கி விட்டனர் –
சுக ப்ரஹ்மத்தை விளையாட்டு கிளியாக்கி விட்டனர் –
யசஸ்வியான பகவத் போதாயனருடைய ஞானத்தையும் வியர்த்தமாக்கி விட்டனர் –
அந்தோ பரிதாபம் –

—————

66-அர்த்த்யா திஷ்டதி மாமிகா மதி அசௌ ஆசனமா ராஜன்வதீ –
பத்யா சம்யமிநாம் அநேன ஜகதாம் அத்யாஹித சேதி நா
யத் சாரஸ்வத துக்க சாகர ஸூதா சித்த ஔஷதா ஸ்வாதி நாம் –
பிரச்வாபாய ந போபவீதி பகவன் மாயா மஹா யாமி நீ–

வாழ்க்கை என்பது இறைவனின் ” மாயா ” என்பதன் கீழ் நாம் வாழ்ந்து துன்பப்படுகிறோம்.
இது மனித குலம் அனுபவித்த ஒரு நீண்ட, மிக நீண்ட, இருள் நிறைந்த இரவு.
ஆனால் உண்மையான நோய் தீர்க்கும் மருந்தான ராமானுஜரின் படைப்புகளின் அமிர்தக் கடலை –
சித்த மருந்தை -ஆழமாக குடித்த மக்களுக்கு,
இந்த மாயா-இரவு அறியாமையின் ஆழ்ந்த தூக்கத்தைக் குறிக்காது.
இந்த உலகில் பிறந்த ராமானுஜரே, அசுபமான மற்றும் தவறான அறிவை ஒழிப்பதற்காகவே,
என் இதயத்தை அவர் வழியில் செல்லச் செய்தார்,
என் எண்ணங்கள் இப்போது அர்த்தமுள்ளதாக இருக்கின்றன.

அர்த்த்யா திஷ்டதி மாமிகா மதி அசௌ ஆசனமா ராஜன்வதீ
என்னுடைய ஞான விசேஷம் -மாநகா-ஸ்த்ரீ லிங்கம் மாமிகா-இப்பொழுது ஸ்திரமாக உள்ளது -அசவ் -இந்த கால சந்நிதி
-நல்ல அர்த்தங்களை கொண்டதாக விளங்குகிறது
நேர் வழியில் -/ நல்ல பொருள்களை கொண்டதாக -விளங்கி-
ஸ்ரீ பாஷ்யகாரர் திருவதாரத்துக்கு பின் -அன்று நான் பிறந்திலேன் போலே – ஆ ஜென்ம -ஸ்வாமி அவதரித்த பின்பு
-பத்யா சம்யமிநாம் அநேன ஜகதாம் அத்யாஹித சேதி நா
சம்யமி -யதிகள்/ ஸ்ரீ பதி சமஷ்டி பதம் -ஸ்ரீ ய பதி – /யதிராஜாராலே -அத்யந்த அஹிதம் -வியாதி துர்பிக்ஷம் தார்த்ர்யம் இவை -போக்கி -அநேக ஜெகதாம் –
ஆத்மாவுக்கு ஏற்பட்ட வியாதி –பேரமர் காதல் -பக்தி உழவன் —ஈர மனஸ் -பக்தி உண்டாக –ரசிகனாக வேண்டுமே
கண் அழகை ரசித்த பிள்ளை உறங்கா வல்லி தாசர் அதிகாரி -ராஸிக்யத்தை மாற்றினால் போதும்
-ஊரவர் கவ்வை -எருவிட்டு -நீர் படுத்தி –அன்னை சொல்லால் –நீர் நித்யம் வேண்டுமே –
-நெஞ்சப் பெரும் செய்யுள் -உலகம் விஸ்தீரணம் மனஸ் அன்றோ – காரமர் மேனி கொண்டே
-நம் கண்ணன் தோழீ கடியன்- தனக்கா பண்ணினான் சொன்னதும்
பொறுக்காமல் -கடியன் கொடியன் நெடிய மால் உலகம் உண்ட அடியான் அறிவரிய மாயத்தால் ஆகிலும்
கொடிய என் நெஞ்சம் அவன் என்றே கிடைக்கும் -அவன் என்பதே முக்கியம்
விசேஷணங்களை தாத்பர்யம் தவிர்த்து விசேஷயம் ஒன்றிலே -மாயாவதி -கிருஷீ பலம் –
ஸ்ரீ பாஷ்யகாரர் -ஸமஸ்த லோக அஹிதங்களை போக்கி அருளி -எப்படிப் பட்டவர் -எப்படி அருளினார்
யத் சாரஸ்வத துக்க சாகர ஸூ தா சித்த ஔஷதா ஸ்வாதிநாம்
யத் -சப்தம் -கீழே சொல்லப் பட்டவருடைய -பாற் கடல் -ஸ்ரீ ஸூ க்திகளான -வாக்கால் வெளிப்பட்ட -நாவினில் நின்று மலரும் ஞானக் கலைகள் –
அமிர்தம் -இன்னமுதத்து அமுதம் –சித்த உபாய சோபனம் -பாராசரவ வச ஸூ தாம் -ஸூ த்ரம் கடைந்து எடுத்த அமிர்தம்
–அவற்றை கடைந்த அமிர்தம் –சித்த ஓஷதி வனஸ்பதி சாரங்களின் சாரம் –சகல தாபங்களையும் போக்கும் –
-பிரச்வாபாய ந போபவீதி பகவன் மாயா மஹா யாமி நீ–
பிரகிருதி -மாயை -ஞான சங்கோசம் திரோதானம் –மம மாயா துரத்யாயா –பகவான் மாயா —
சம்சாரமான காள ராத்திரி -நீள் இரவாக நீண்டு -ஊர் எல்லாம் துஞ்சி –பாம்பணையான் வாரானால் –
யாமம் -யாமி நீ -இரவு என்றவாறு -யாமங்களை யுடையது -ஜாமம் -முடிவில்லாதாது அன்றோ
இவர்களை உறக்கத்தில் ஆழ்த்தி -ஞான சங்கோசம் பண்ண முடியாதே –நீண்ட காலம் சம்சாரத்தில் ஆழ்ந்து இருப்பதே பிரஸ்வாபாயம்-

காட்டில் உள்ள ரிஷிகள், வியாதி, பசி, தாகம் —இவை தபஸ் செய்ய இடையூறாக இருப்பதால்,
பல மூலிகைகளால், “ஸித்தௌஷதம் “என்கிற ஔஷதத்தைத் தயாரித்து அருந்துவர் .
இதுபோன்ற ஔஷதத்தை , என்(ஸ்வாமி தேசிகன் ) புத்தியான ஸ்திரீயும் அருந்தி இருக்கிறாள்.
இது–இந்த ஔஷதம் பூமியில் உள்ள பாற்கடலான –யதிராஜரின் ஸ்ரீஸுக்திகளைக் கடைந்து எடுக்கப்பட்டது.
ப்ரக்ருதி ஸம்பந்தத்தினால் ஏற்படும் அஜ்ஞானம் , என்கிற கெட்ட புத்தியானது ,
யதிராஜரின் உபதேசத்தால் ஏற்படும் தத்வ ஞானத்தால் தானாகவே அகன்று போகும்

எம்பெருமானாருடைய பிரசாதம் அடியாக தமது சித்தம் கட்டுப்பாடுடன் உண்மை பொருள் செறிந்து விளங்குகிறது –
பாற் கடலை கடைந்து பெற்ற அமுதம் போன்ற ஸ்வாமி யுடைய ஸ்ரீ ஸூக்திகள் -ஆகிற
சித்த ஒளஷத்தை யுண்டவர்கள் –
மம மாயா துரத்யயா என்னும் படி பகவானுடைய மாயையான நீண்ட இரவு –
அநாதி மாயயா ஸூப் தா என்கிறபடி தூக்கத்துக்கு காரணம் ஆவது இல்லை
பாரோ உபகாரரான எம்பெருமானாரது அருளாலே பிறப்பு முதலே என் புத்தி கட்டு இன்றி திரியாமல்
ராஜாவை அனுசரித்து நடக்கும் பிரஜை போலே கட்டுப்பாடுடன் ருஜுவாக யுள்ளது
நான் பிறந்தது முதல் எனது புத்தியில் ஸ்வாமியே உள்ளார் –
அதனால் சீரான தெளிந்த புத்தி பெற்று பிரக்ருதியான மாயையால் மயங்காமல் உள்ளேன் –

————————

67-ஸூத்தா தேக வசம் வதீக்ருத யதி ஷோணீச வாணீ சதா –
ப்ரத்யாதிஷ்ட பஹிர்கதி சுருதி சிர பிரசாதம் ஆசீததி
துக்த உதன்வத் அபத்ய சந்நிதி சதா சாமோத தாமோதர –
ச்லஷண ஆலோகன தௌர் லலித்ய லலித உன்மேஷா மனீஷா மம

திருப்பாற்கடலில் இருந்து வந்த பெண்ணமுதம் திரு மார்பிலேயே நித்ய வாஸம் செய்வதால்
நித்ய ஆனந்த மயமாகவே எம்பெருமான் உள்ளான்
அவனது குளிர்ந்த கடாக்ஷ மழை நம்மை நித்தியமாக நனைக்கிறது இதனாலேயே நமது புத்தி தூய்மை அடைந்துள்ளது
இதன் மூலமும் ஆச்சார்ய உபதேசங்களாலும் ஸ்வாமியின் திவ்ய கிரந்தங்களில் ஆழ்ந்த பொருள்கள் நமக்கு கிட்டியது
தூய வேத விதிகளைக் கடைப்பிடித்து, நூற்றுக்கணக்கான ராமானுஜரின் பதிவு செய்யப்பட்ட வாசகங்களால் ஈர்க்கப்பட்டு,
அனைத்து அன்னிய தொடர்புகளையும் விலக்கி, அன்பான ரசனையையும் வளர்த்துக் கொண்டு,
வற்றாத அருகாமையில் இருக்கும் இறைவனின் அருள் கடாக்ஷம் மூலம் பிராட்டியாரைப் போலவே நம் உள்ளம் மகிழ்கிறது.

சுத்தா தேக வசம் வதீக்ருத யதி ஷோணீச வாணீ சதா –
யதி ராஜர் -ஸ்ரீ ஸூ க்திகள்-சத் சம்பிரதாயத்தில் –திரு மடப்பள்ளி மணம்-கிடாம்பி ஆச்சான் வழி வந்த அப்புள்ளார் -உபதேசம் –அஸ்மத் தேசிகன் -ஆதேசம்
ப்ரத்யாதிஷ்ட பஹிர்கதி சுருதி சிர பிரசாதம் ஆசீததி
பஹிர் மதி -பாட பேதம் -/ இரண்டுமே ஞானத்தை தானே குறிக்கும் -கதி வழி-கத்யர்த்தம் புத்யர்த்தம்
-அடையும் தேசம் -என்ன கதி -என்ன வழி ப்ராப்யம் ஞானம் என்றவாறு /
சுருதி சிரஸ் -உபநிஷத் -துர்மதிகளை வென்று –பாஹ்ய -தகர்த்து எறிந்து-உயர்ந்த மாடத்தில் உப்பரிகையில் விளங்குகிறது -ஸ்திரமாக ஆசீததி
துக்த உதன்வத் அபத்ய சந்நிதி சதா சாமோத தாமோதர –
தாமோதரன் தானே அங்கே-சதா -நித்ய நிரவத்ய ஆனந்த ஸூ லபன்-ஆமோத –
ச்லஷண ஆலோகன தௌர் லலித்ய லலித உன்மேஷா மனீஷா மம
என்னுடைய ஞானம் -உபயுக்த ஞானம் -ஷேமுஷீ -பக்தி ரூபா –மனீஷா பஞ்சகம் சங்கரர் அருளி உள்ளார்
-அஹம் அர்த்தமாக ப்ரஹ்மமே நான் -ஞானம் வந்தால் அவனே எனக்கு ஆச்சார்யர்
அந்த மனீஷா இல்லை என்னுடையது -இதுவே உபயுக்த ஞானம் மோக்ஷத்துக்கு

வேத வேதாந்தத்தைச் சொல்லும் யதிராஜரின் ஸ்ரீஸுக்திகளாலே என்னுடைய பெண்ணான புத்தி என்பவள்,
பிறமதவாதிகளையும் அவர்களின் அபத்தக் கருத்துக்களையும் துரத்தி,
எம்பெருமான்
வேதங்கள் என்கிற அரண்மனையில்
உபநிஷத் என்கிற உப்பரிகையில் பேரழகனாய் ,
மிடுக்குடன் வீற்றிருப்பதை அறிந்து,
அவனை அடையப்படிகளில் ஏறி, ஒய்யாரமாக உப்பரிகையை அடைகிறாள்

ஸ்ரீ லஷ்மி சமேத ஷீராப்தி நாதன் குளிர்ந்த கடாஷத்தால் எனது அறிவு மலர்ந்து
சதாச்சார்ய உபதேசத்தினால் பெற்ற யதிராஜர் ஸ்ரீ ஸூக்திகள் ஸ்ரீயபதியின் அருளைப் பெறுவித்து
அடியேன் மனம் அவனையே அனுபவிக்கும் படி பண்ணின -துய்ய மதி பெற்ற சதாச்சார்ய அனுக்ரஹத்தாலே
கையில் கனி என்ன வசப்பட்டவையும்
பாஹ்ய குத்ருஷ்டிகளை மாளப் பண்ணுபவையாயும் உள்ள ஸ்ரீ ஸூக்திகள் என் மனசில் நிரம்பி உள்ளன –
சமுத்திர உத்பாவையான பெரிய பிராட்டி
அகலகில்லேன் இறையும் என்று நித்தியமாய் தன்னிடம் இருப்பதால் ஆனந்திக்கும் எம்பெருமானுடைய
குளிர்ந்த கடாக்ஷத்தால் மலர்ந்த என்னுடைய புத்தியானது –
ஸ்ருதி சிரசி வீதீப்தே -என்றபடி வேதாந்த ப்ரதிபாதனான எம்பெருமானை அடைகிறது –

—————————

68-ஆசதாம் நாம யதீந்திர பத்ததி ஜூஷாம் ஆஜான ஸூத்தா மதி –
தத் அவ்யாஜ விதக்த முக்த மதுரம் சாரஸ்வதம் சாஸ்வதம்
கோ வா சஷூ உதஞ்சயேத் அபி புர சாடோப தர்க்க சடா –
சஸ்த்ரா ச சஸ்த்ரி விஹார சம்ப்ருத ரணா ஆஸ்வா தேஷு வா தேஷு ந

யதிராஜரின் உயர்ந்த மார்க்கத்தை அடைந்தவர்கள் தாங்கள் பிறந்தது முதலாகவே
ஸஹஜமாகவே யதார்த்த ஞானம் பெற்று விளங்குகிறார்கள்
அவர்களிடம் கம்பீரம் அழகு இனிமை ஆகியவற்றுடன் கூடிய நிலையான கல்வி இயற்கையாகவே அமைந்துள்ளது –
தம்பட்டம் கொண்டு எதிர்வாதம் செய்யும் புற சமயத்தார் வாதப்போருக்கு வந்தால்
அவர்கள் முன்பு நாம் சுவையான ஸ்வாமியின் கிரந்தங்கள் உதவியுடன் வாதம் செய்ய நின்றால்
நமக்கு முன் கண்ணைத்திறந்து பார்க்கும் படி யார் தான் நிற்க வல்லவர்கள்

ஆசதாம் நாம யதீந்திர பத்ததி ஜூஷாம் ஆஜான சுத்தா மதி
ஸ்ரீ பாஷ்ய காரர் -சம்ப்ரதாயம் -உணர்ந்து -ஆழ்வான்- பட்டர் பிள்ளான் –நேராக -ஞானம் பெற்ற -அத்யந்த ப்ரீதியுடன் கேட்டு
–தெளிவான மேதாவிலாசம் பிறப்பு தொடங்கியே-ஆஸ்தாம் -அது இருக்கட்டும்
எங்கள் ஆழ்வான் -விஷ்ணு சித்தர் இவரும் என்பர் -பிள்ளான் இடம் ஸ்ரீ பாஷ்யம் கேட்டு நடாதூர் அம்மாளுக்கு சாதித்தவர்
–திரு வெள்ளறை சோழியன் திணவற்று சொல்லுவார் -நான் செற்று வா -அடியேன் -தத் அவ்யாஜ விதக்த முக்த மதுரம் சாரஸ்வதம் சாஸ்வதம்
சாஸ்வதமான சொத்து –வியாஜ்யம் இல்லாமல் -மதுரமாக -ஆஸ்தாம் -இருக்கட்டும் -பத்திரமாக -நிரசிக்க இவை வேண்டாம் –
அபி புர சாடோப தர்க்க சடா –
ஆடம்பம் -தர்க்கங்கள் -வாதங்கள் -பிரதிவாதங்கள் -அசத்தி -தோஷங்கள் காட்டி நிரசித்து -முதலில் -விருத்தங்களை காட்டி
-சாத்தியம் பக்ஷம் ஹேது இவற்றில் தோஷங்களை காட்டி -அதுக்கு மேலே
சஸ்த்ரா ச சஸ்த்ரி விஹார சம்ப்ருத ரணா ஆஸ்வா தேஷு வா தேஷு ந
சஸ்திரம் தடுத்து -பிரத்யர்த்தங்கள் கொண்டு -பயன் அற்று -அக்னி அஸ்திரம் வாயு அஸ்திரம் பிரயோகம் போலே —
பிரயோகங்கள் -வாதி பண்ணின வாதங்களுக்கு பிரதிவாதங்கள் -இவற்றால்
கோ வா சஷூ உதஞ்சயேத்-
வாதப் போரிலே -தலை நிமிர்ந்து -கண்ணாலே பார்க்க முடியாமல் ஒழிந்து போவார்கள் -யாரால் தலை நிமிர்ந்து கண்ணை விழித்து பார்க்க முடியும் –
திருவடி -ராவணன் இடம் நான் தான் துர்பலமானவன் -நானே -அதே போலே இங்கும் -அடியேன் இவர்களை நிரசிப்பேன் -மமதையால் சொல்ல வில்லை –

ஸ்வாமி தேசிகன் பெருமைப்படுகிறார், இந்த ஸ்லோகத்தில். உடையவரின் பரிபூர்ணக் க்ருபைக்குப் பாத்ரமானவன்
ஸ்ரீபாஷ்யம் போன்றவைகளை, சதாசார்யன் மூலமாகக் கேட்டும் ,
பலதடவை காலக்ஷேபம் ஸாதித்தும் ,
பிறமதவாதிகளை வாதம் செய்து தோற்கடிப்பதற்குத் தான் ஒருவரே போதும் என்கிறார்

நல்ல ஆயுத பலம் உள்ளவன் எதிர்த்து போராட முடியாதவனாய் எப்படி இருப்பானோ அப்படி
எம்பெருமானார் சித்தாந்தத்தை அவலம்பித்த நான் தர்க்க பலத்தினால் எதையும் சாதிக்க வல்லேன் –
என் எதிரினில் யார் வாதத்துக்கு நிற்க முடியும் –
ராமானுஜ சித்தாந்தத்தைப் பற்றி ஒழுகுபவற்கு பிறப்பு முதலாக தீதற்ற ஞானம் வாழ்ச்சி பெறுமாக-
பொருள் செறிந்ததாகவும் அழகாகவும் ரஸ கனமாகவும் நித்யமாயும் இருப்பவைகளாயும்
அவர்களுடைய வாக்விந்யாஸங்கள் வாழ்ச்சி பெறுமாக –
படாடோபத்துடன் கூடிய யுக்தி வாதங்கள் ஆகிற ஆயுதங்களைக் கொண்டு வாதப்போர் என்ற விளையாட்டில்
மகிழ்ச்சியுறும் என் முன் எதிர் விழி கொடுத்து நிற்க எவன் வல்லவன் –
ஸ்வாமி சம்பந்தம் அடைந்தவர்கள் பிறந்ததுவே முதலாக ஞானம் படைத்தவர்களாக கம்பீரம் அழகு இனிமை நிறைந்து இருந்து
புற மத வாதிகள் இவர்கள் கண்ணைத் திறந்து பார்த்த ஷணத்திலே மாய்ந்து போவார்கள் –

———

69-பர்யாப்தம் பர்யசைஷம் கண சரண கதாம் ஆஷபாதம் சிசிஷே –
மீமாம்ஸா மாம்சல ஆத்மா சமஜநிஷி முஹூ சாங்க்ய யோகௌ சமாக்க்யம்
இத்தம் தை தை யதீந்திர த்ருடித பஹூ ம்ருஷா தந்திர காந்தார பாந்த்தை –
அந்தர் மோஹ ஷப அந்தை அஹஹ கிம் இஹ ந சிந்த நீயம் தநீய-

கணாதரின் வைஷேஷிகாவை திருப்தியாகப் படித்திருக்கிறோம்.
கௌதமருடைய நியாயம் கற்றோம்.
ஜைமினியின் மீமாமாச மதத்தையும் கற்று அதன் மூலம் கனம் கொண்ட நெஞ்சையும் பெற்றோம்  .
நாங்கள் கபிலரின் சாங்கியம் மற்றும் பதாஞ்சலியின் யோகாவிலும் தேர்ச்சி பெற்றுள்ளோம்.
இவ்வாறு பொய்யான கருத்துக்களை உணர்த்தவல்ல பல மதங்கள் இந்த உலகில் காடு போன்று நிரம்பி உள்ளன –
அந்தக்காட்டில் அஞ்ஞான அந்தகார இருள் பூர்ணமாக உள்ளது-அதில் குருடராகப் பலர் திரிகிறார்கள்
இந்தக்காடுகள் அனைத்துமே ஸ்வாமியுடைய திருப்பாத ஸ்பர்சத்தாலேயே முடியுடன் அழிக்கப் பட்டன
இந்தக் காலத்தில் அந்தப் புற மதங்களின் வாஸனையால் பீடிக்கப் பட்டு சிலர் இன்னமும் உள்ளனர்
அவர்களிடம் கலந்து சிந்திக்க என்ன உள்ளது –
ராமானுஜரால் (ஸ்ரீ பாஷ்யம் போன்ற அவரது படைப்புகளில்) இந்த அமைப்புகளை முற்றிலுமாக
இடித்துத் தள்ளும் போது, ​​தவறான பாதைகளின் அடர்ந்த காடுகளில், அறிவின் இரவில் கண்மூடித்தனமாக
உரத்த குரலில் கர்ஜிக்கும் மக்களிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டியது என்ன? என்றவாறு –

பர்யாப்தம் பர்யசைஷம் கண சரண கதாம்
காணாதர் வைசேஷிக மதம் –தர்க்க நியாயம் -நன்கு அறிந்து -பரியஸைஷம் -பர்யாப்த்தம் -சாஸ்திர பரிச்சயம்
-அநவரதம் வாசித்துக் கேட்டும் -மனனம் பண்ணியும் -எந்த அளவு வேண்டுமோ அந்த அளவு வரை -பர்யாப்த்தம் –
ஆஷபாதம் சிசிஷே
கௌதமர் நியாய சூத்திரங்கள் அக்ஷபாதர் -நியாய மதம் –பாஷ்யங்கள் விவரணம் –யுக்த அநு யுக்த பரிகாரங்கள் -காணாதர் சூத்ரகாரர் —
-மீமாம்ஸா மாம்சல ஆத்மா சமஜநிஷி முஹூ சாங்க்ய யோகௌ சமாக்க்யம் -இத்தம் தை தை யதீந்திர த்ருடித பஹூ ம்ருஷா தந்திர காந்தார பாந்த்தை –
இந்த காட்டில் உள்ள எல்லா மரங்களையும் அழித்து
அந்தர் மோஹ ஷப அந்தை அஹஹ கிம் இஹ ந சிந்த நீயம் தநீய-
பாஹ்ய மோகங்கள் -அந்தர மோகங்கள் -அனைத்தையும் போக்கி -அருளினார்

கணாதர் இயற்றிய வைசேஷிக மதத்தை விசேஷமாகப் பயின்றேன்.
ந்யாயசாஸ்த்ரம் , மீமாம்ஸம் படித்தேன். ஸாங்க்ய யோகம் கற்றேன்.
இதனால், எம்பெருமானாராலே கண்டிக்கப்பட்ட அந்தப் பொய்ப் ப்ரசாரங்கள் உள்ள மதங்களை ஆதாரபூர்வமாக மறுக்கப்பட்டது
( ந்யாய பரிஸுத்தி, ந்யாய ஸித்தாஞ்ஜனம், தத்வ முக்தாகலாபம் போன்றவை )

சாக்கியம் கற்றோம் -சமணம் கற்றோம் -சங்கரனார் ஆக்கிய ஆகம நூல் ஆராய்ந்தோம் -என்கிறபடி
கணாத கௌமத மீமாம்சக சாங்க்ய யோக மதங்களை வேண்டிய அளவு அவ்வவற்றில்
உயர்ந்த பாண்டித்யம் பெறும் அளவுக்கு கற்றுள்ளேன் –
ஆயினும் எம்பெருமானாரால் முறியடிக்கப் பெற்ற பல பல பொய்ச் சமயங்கள் என்கிற காட்டில்
அஞ்ஞான இருளால் குருடர்களாக அலைந்து திரியுமவர்கள் இடம் நமக்கு ஆக்க வேண்டியது ஒன்றும் இல்லை –

கணாதகரின் வைஷிக மதம் –
கௌதமரின் மதம் –
ஜைமினி மீமாம்ச மதம் –
கபிலரின் சாங்க்ய மதம்
பதஞ்சலி யோக மதம் -போன்றவை காடு போலே நிரம்பி உள்ளன
அஜ்ஞானம் இருள் சூழ -பலரும் குருடராக உழல–ஸ்வாமி திருவவதாரத்தால் வேரோடு ஒழிக்கப் பட்டாலும்
மீதி -கொஞ்சம் கொஞ்சம் உள்ளாருடன் தொடர்பு கொண்டு சிந்திக்க என்ன உள்ளது –

————————

70-காதா தாதாகதா நாம் களதி கம நிகா காபிலீ க்வாபி லீநா–
ஷீணா காணாத வாணீ த்ருஹிண ஹர கிர சௌரபம் நார பந்தே –
ஷாமா கௌமாரில உக்தி ஜகதி குருமதம் கௌரவாத் தூர வாந்தம் –
கா சங்கா சங்கர ஆதே பஜதி யதி பதௌ பத்ர வேதீம் த்ரிவேதீம் –

மூன்று வேதங்கள் மூலம் அமைக்கப்பட்ட -திரிவேதி பீடத்தில் -ஸிம்ஹாஸனத்தை அடைந்து ஸ்வாமி எழுந்து அருளி உள்ளார்
உடனே நடந்தது என்ன என்னில் –
புத்தரின் அமைப்பு உடனே சாஷ்டாங்கமாக விழுந்தது;
கபிலரின் சாங்கிய தத்துவம் எங்கோ மறைந்தது;
கணாதரின் வைஷேஷிக உபதேசம் மறைந்தது
நான்முகன் சிவன் இவர்கள் மதங்கள் நறுமணம் இழந்தன
குமாரில பட்டரின் (மீமாம்ஸ வாதம் தோற்றது
பிரபாகரனின் மதம் கற்பனை அதிகமாக உள்ளது என்று விலக்கப் பட்டது .-
இதெல்லாம், ராமானுஜரின் சித்தாந்தத்தை ஏற்றிய போது, ​​நமக்கு வழிகாட்டியாக இருந்தது.
அப்படியானால், சங்கரர் போன்றோர் வாதமும் கண்டிக்கப் பட்டதைக் கூறவும் வேண்டுமோ –

தயா சதகம் போலே இந்த யதிராஜ சப்ததியிலும் -ஸ்லோகம் சங்கதி -சூறாவளிக் காற்றில் தாக்கப்பட்டதை எல்லாம் அடைவு கெட அக்ரமமாக அருளுவார்
-பக்தி பிரவாஹம் அன்றோ -74-ஸ்லோகார்த்தங்கள் அறியலாம் –சார தமம் எல்லாமே –
காதா தாதாகதா நாம் களதி
–புத்தர் -தாதாக்கதர்-காதா சகஸ்ரம் -அஞ்ஞானம் மூழ்கடிக்க -500-வருஷம் பின்பு ஹர்ஷர் சமஸ்க்ருதம் புத்தர் வாதம் -முன்பு இல்லை என்பர்
-பிராகிருத பாஷையில் பேசி மக்களை கவர்ந்த -அசோகர் ஹர்ஷர் காலத்தில் தான் சிறப்பு பெற்றது என்பர் -புத்த வாதங்கள் இருந்த இடம் தெரியாமல் நழுவப் பண்ணினார்
-பிரகிருதி ஆத்ம பிரம்மம் -யாதாத்மா ஞானம் வந்தால் நழுவுவது போலே -யதிபதி வீற்று இருந்த ஒன்றாலே இவை நழுவின —
ஜைனரும் ததாகத்தார் சர்வஞ்ஞராக தன்னை சொல்லிக் கொள்வார் -மஹா வீரர் புத்தர் -சம காலத்தவர் என்பர் -புத்தர் ஞான உதயம் ஆன பின்பே இவருக்கு வந்தது என்பர் –
இவர்களும் பிராகிருத பாஷை -சம்ஸ்க்ருதம் வாணி அப்புறம் இவர்களுக்கும் -500-வருஷங்கள் பின்பே வந்தது என்பர் –காதா –அதனால் —
கம நிகா காபிலீ க்வாபி லீநா-
கபிலர் -சாங்க்ய சாஸ்திரம் -தேவ பாதை -திவ்ய மங்கள விக்ரகம் உபாஸ்யம் -என்பர் -வேறே கபிலர் -நிரீஸ்வர சாங்க்யர் இவர்
பிரகிருதி தான் பிரதான ஜகத் காரணம் -புருஷன் உபகாரகன் –சேதன அதிஷ்டானம் இல்லாமல் அசேதனம் செய்வது -ஒவ்வாதே-2–1-பாதம் -சாங்க்யர் நிரசனம்
–சங்கேதங்கள்-இவர்கள் கல்பித்து சொல்வதை -நிரசித்து அருளினார் –சென்று ஒழிந்தது -லீநா-எங்கே தொலைந்தது என்று அறிய முடியாமல் -இன்றும் கூட இல்லையே
ஷீணா காணாத வாணீ –
காணாதர் -அத்யந்த வைராக்ய சீலர் –வைசேஷிகர் -ஷீணா-ஓய்ந்து போனதே -அவர்கள் காதிலும் கேட்க்காத படி ஷீணம் தசை அடைந்தது –
த்ருஹிண ஹர கிர சௌரபம் நார பந்தே –
ப்ரம்மா -த்ருஹிண/ –வார்த்தைகள் –கிர-சாருவாக மதம் -ப்ருஹஸ்பதி -யோக மதமும் -தள்ளப் பட்டன –
ஹர கிர -பாசுபத சைவ மதம் –வேத விரோதம் -வ்ருத்தம்-இவற்றுக்கு மணம் உண்டாக வில்லை
ஷாமா கௌமாரில உக்தி
குமாரிள பட்டார் -ஸ்கந்தன் அவதாரம் என்பர் -/ சாஸ்திரம் வேற மதம் வேற -வியாகரண மீமாம்சம் நியாய சாஸ்திரங்கள் வேதாந்தத்துக்கு உபகரணங்கள் -/
வைகரண நையாயக மீமாம்ச மாதங்கள் இவற்றால் வந்தவை -/ ஜைமினி வேதாந்த விரோதி இல்லையே -2-இடங்களில் ஸூ த்ரகாரர் -விரோதம் -21-இடங்களில் புகழ்வார் –
பசி பட்டினி ஷாமா -இவர்கள் யுக்தி –குசேலர் -ஷாமா -பெயர் ஆகாரம் வழி இல்லா தசை –
ஜகதி குருமதம் கௌரவாத் தூர வாந்தம்
பிரபாகர் மதம் குரு மதம் -குமாரிள பட்டார் சிஷ்யர் -பிரபாகர் மிஸ்ரர் –லகுவாக சொல்லாமல் கனக்க சொல்வது கௌரவம் -குருவான மதம் என்றுமாம்
-இதனாலே இது –தள்ளப் பட்டது –
-கா சங்கா சங்கர ஆதே
கொஞ்சம் புத்த மதம் -கொஞ்சம் சாங்க்ய மதம் -கலந்து -ஞான மாத்திரம் -முன்பே -ஞானம் க்ஷணிகம் சொன்னதை இவர் நித்யம் என்றார் –
-ஞாதா ஜீவன் இல்லை ஞானம் மாத்திரம் ஜீவன் -ஞானான் மோக்ஷம் சாருவாக மதம் –
பஜதி யதி பதௌ பத்ர வேதீம் த்ரிவேதீம் –
சப்தமி -பாவ சப்தமி -யதிபதி -த்ரிவேதி ஆகிய கோப்புடைய சீரிய ஸிம்ஹாஸனம் – ருக் யஜுர் சாமம் –அதர்வணம் யஜுர் வேதத்தில் அடங்கினது என்பர் -/
பேத அபேத கடக சுருதிகள் என்றுமாம் -/–129-அடியேன் சப்தம் திருவாய் மொழியில் -அடியேன் உள்ளான் -மட்டுமே -சேஷத்வம் காட்டும் என்று
திருக் கோஷ்டியூர் நம்பி காட்டி அருளி -கிரியா பதம் இல்லாமல் -என்னிடம் உள்ளான் -சரீரம் இல்லாத ஆத்மா -உடல் உள்ளான் அடுத்த பதம் இருப்பதால் –
-பரிசுத்த ஆத்மா என்பதை இந்த ஒரு அடியேன் பதம் மட்டுமே காட்டும் –
சிங்காசனம் -சீரிய சிங்காசனம் -கோப்புடைய –பத்ர வேதீம் த்ரிவேதீம் –பஜ- தாது -வீற்று இருந்து அருளி -நடந்தவை எல்லாம் பட்டியல் இட்டு அருளுகிறார்

உடையவரின் ஸித்தாந்தம் உறுதி அடைந்ததால்,
பௌத்தம் படுத்தது;
ஸாங்க்யமதம் சிதைந்தது;
வைசேஷிக மதம் மாய்ந்தது;
சார்வாகம் சிதைந்தது;
குமாரிலமீமாம்ஸம் குலைந்தது;
சங்கராதிகளின் சமயமும் நலிந்தது என்கிறார்–

எம்பெருமானார் மூன்று வித ஸ்ருதிகளான சிம்ஹாசனத்தில் வீற்று இருப்பதைக் கண்ட மாத்திரத்திலேயே
இதர மதங்கள் தாமே நசித்துப் போயின –
புத்தர்கள் பாட்டுக்கள் அடங்கின –
கபிலர் காட்டின வழி எங்கேயோ சென்று மறைந்தது –
கணாதனுடைய குரல் ஓய்ந்து விட்டது –
நான்முகன் அரன் பற்றிய பேச்சின் வாசனை கூட தெரியவில்லை –
குமரில பட்டருடைய பேச்சுக்களும் ஒடுங்கின –
பிரபாகர் மதம் மதிப்புள்ள இடத்தில் இருந்து வெகு தூரம் சென்று விட்டது
மற்ற சங்கராதிகளுடைய மதங்களை பற்றி சொல்லவும் வேண்டுமோ -சந்தேகமே வேண்டாம் அதுவும் அழிந்து விட்டது என்றபடி –

அத்வைதிகள் பேத ஸ்ருதிகளுக்கு நிர்வேதத்தை உண்டு பண்ணினார்கள்
த்வைதிகள் அபேத ஸ்ருதிகளுக்கு நிர்வேதத்தை உண்டு பண்ணினார்கள்
இருவரும் சேர்ந்து அந்தர்யாமி ஸ்ருதிகளுக்கு அதிமாத்ரம் நிர்வேதத்தை உண்டு பண்ணினார்கள்
எம்பெருமானார் தான் மூவகை ஸ்ருதிகளையும் சமன்வயப்படுத்தி நிர்வேதம் உண்டாகாதபடி செய்து அருளி
த்ரிவேதீ நிர்வேதத்தை அறவே ஒழித்து அருளினார்

————————

முன் ஸ்லோகத்துடன் எதிராஜ சப்ததி முற்றுப் பெறும் –
இனி இந்த பிரபந்தம் சத்துக்கள் ஆதரிக்கக் கூடியதாய் இருக்கும் என்கிறார் –

71-விஷ்வக் வியாபிநி அகாதே யதி ந்ருபதி யச சம்பத் ஏக அர்ணவே அஸ்மின் –
ஸ்ரத்தா ஸூத்த அவகாஹை சுப மதிபி அசௌ வேங்கடேச அபிஷிக்த –
ப்ரஜ்ஞா தௌர்ஜன்ய கர்ஜத் ப்ரதிகதக வச தூல வாதூல வ்ருத்த்யா –
சப்தத்யா சாரவத்யா சமதநுத சதாம் ப்ரீதிம் ஏதாம் சமேதாம்

யதிராஜரின் புகழ் என்னும் பெரும் கடல் மிகவும் ஆழம் உள்ளதாகவும் எங்கும் பரவியும் உள்ளது
அதில் ஆழ்ந்து ஸ்நானம் செய்தவர்கள் தூய ஞானம் படைத்தவர்கள் ஆகிறார்கள்
இத்தகைய தூய்மையான எண்ணம் கொண்ட அவர்கள் யதிராஜரின் தொண்டுக்காகவே
வேங்கடேசனான அடியேனை முடி சூட்டி மகிழ்கிறார்கள்
இதன் மூலம் நான் பெற்ற மகிழ்ச்சி பயன் பெற வேண்டும் என்ற எண்ணம் காரணமாகவே இந்த நூல் இயற்றப் பட்டது

இதில் உள்ள ஆழ்ந்த சாரார்த்தம் காரணமாக வீணான ஆடம்பரம் கலந்த வாத கோஷம் எழுப்பும்
புற மதவாதிகள் யுடைய வாதங்கள் அனைத்துமே பெரும் காற்று முன்னாக நிற்க இயலாத பஞ்சு போல் ஆயின
இப்படியாக யதிராஜ சப்ததி என்ற இந்த நூலுடன் யதிராஜரின் அடியார்கள் மகிழ்ச்சி கலக்கும் படி ஆனது

அசவ் வேங்கடேச அபிஷிக்த மூர்த்த -விஷ்வக் -வியாபிநீ -அ காதே -எதி நிருபதி -யசஸ் சம்பத் ஏகார்ணவம்
-திக்குற்ற கீர்த்தி –ஐஸ்வர்யம் வாரி வழங்கி யசஸ் -எதிரிகளை ஒடுக்கி கீர்த்தி -பாதித-யசஸ் விஞ்சி இருக்குமே -வாரி வழங்கிய வள்ளல்
மனஸ் ப்ரஹ்ம த்ருஷ்ட்டி -உபாசனம் பலன் -மோக்ஷ பலன் கிடைக்காது -ஏவம் வேத -யசைஸால் விளங்கி கீர்த்தியால் அசலாரை அழித்து-விக்ரமன்
-அதனால் வந்த கீர்த்தி -பரிதபிக்க பண்ணி சத்ருக்களை –
தசரதன் மருமகள் -சத்ரு பரிதபித்தவர் -இருந்தால் -இந்த நிலை வந்து இருக்காதே -அதனால் அவனை முன்னிட்டு -அபராஜிதா -அயோத்யா –
அம்பரமே -யசஸ் -உந்து மத களிற்றன் கீர்த்தி நாயகனாய் இதனால் நின்ற நந்த கோபாலன்
இதனால் அபிஷேகம் –யாரால் -ஸ்ரத்தா சுத்த அவகாகியை -ஸ்ரத்தையால் -தீர்த்தம் – பாவனத்வம் – -சுத்தராலும் –
பெரும் புகழ் -வள்ளல் தன்மை ஏகாரண்வத்தில் மூழ்கி –நீராடி -சுத்த ஸ்வபாவம் உடையவர்கள் ஸூபமதிகள்-
வேத பிரமாண்யம்-மஹா விசுவாசம் கொண்டவர்கள் –வேர்த்த பொழுது குளித்து பசித்த பொழுது உண்டு ராமானுஜர் என்று சொல்லி உஜ்ஜீவனம் —
யதிராஜ சாம்ராஜ்யத்தில் -பட்டாபிஷேகம் – செய்யப்பட்டதும் -பறை சாற்றி -யதிராஜ சப்ததி
பிரஞ்ஞா -உத்க்ருஷ்ட ஞானம் -தெளிந்த ஞானம் –சதாச்சார்யர் இடம் -ஸச் சம்ப்ரதாயம் -குரு பரம்பரை ஸ்ரவணம் -மனனம் -அனவரத பாவனை –
பாஹ்ய குத்ருஷ்டிகள் –இப்படி இல்லையே -இணக்கம் இல்லாதவர்கள் -கர்ஜனை -கூச்சல் இட்டு விலக்குபவர்கள்-பெரும் குரல் மட்டுமே உள்ளது
-பிரதிவாதிகள் -மனம் போன படி பேசி –வசனங்கள் – -பஞ்சு போலே -ஸ்தூலம் –பெரும் காற்று -சூறை காற்றில் பஞ்சு பறப்பது போலே
-ஆக்கி -செயல்பாட்டால் -அத்யந்த சாராம்சம் -சார பூதம் -இந்த சப்ததி -சமேதாம்-இமாம் -70-ஸ்லோக ஸ்துதிகளை –
சதாம் ப்ரீதி -சத்துக்களுக்கு ப்ரீதி விஷய பூதம் ஆகும் -மோதம் பிரமாதம் ஆமோதம் –குண விசேஷங்கள் –ஸ்துதிம்-வேதாந்த தேசிகன் இத்தை நன்கு வழங்கினார் –
பட்டாபிஷேகம் செய்விக்கப் பட்டார் -பின்பு என்ன பண்ணினார் -இரண்டையும் சொல்லும் ஸ்லோகம் –

இந்த யதிராஜ ஸப்ததியை ,பாகவதோத்தமர்களின் நியமனத்தின் பேரில் எழுதினேன் .
யதிராஜரின் ஸித்தாந்த ஸாம்ராஜ்ய கீர்த்தி என்பது கங்கா நதி. இதில் தீர்த்தமாடினேன் .
ப்ரபல பண்டிதர்களாலே ,எனக்குப் பட்டாபிஷேகம் ஆயிற்று.
எதிரிகள் துர்ப்புத்தியாலே பிதற்றப்படும் வாதப்பேச்சு என்கிற பஞ்சு ,
யதிராஜ ஸப்ததி என்கிற பெரிய காற்றாலே ஒதுக்கித் தள்ளப்பட்டது.
இந்த ஸ்தோத்ரத்தினால் பெரியோர்களின் உகப்பை அடைந்தேன்

எங்கும் பரவியுள்ளதும் ஆழம் காண அரியதாயும் யுள்ள யதிராஜ ஸ்ரீ ஸூக்திகள் ஆகிற பெறும் கடலில்
மூழ்கிப் பாவனம் ஆக்கப் பெற்று நல் ஞானம் அடைந்த சத்துக்களால் கொண்டாடப் பெற்ற
வேங்கடேசன் என்று அழைக்கப்படும் அடியேனால் பணிக்கப் பட்டு ஞான சம்பத் இன்றி
கேவலம் சப்தம் மட்டும் செய்கின்ற ப்ரதிபஷிகளின் வாக்குகள் ஆகிற பஞ்சை அடித்துத் தள்ளும்
பெறும் காற்றின் பணியைச் செய்யுமதாயும்
சாரமான பொருள்களை யுடையதுமான இந்த யதிராஜ சப்ததியானது
பாகவதர்களுக்கு இன்பம் தர வல்லதாய் உள்ளது –
என்ன பாக்யம் இது -என்றபடி –

————————

72-ஆசா மதங்கஜ கணான் அவிஷஹ்ய வேகான் –
பாதே யதி ஷிதி ப்த ப்ரசபம் நிருத்தன்
கார்ய கதா ஆஹவ குதூஹலிபி பரேஷாம் –
கர்ணே ச ஏஷ கவிதார்க்கிக சிம்ஹ நாத –

தாங்கள் கூறியதை ஸ்தாபிக்க வேணும் என்னும் பேராசை கொண்ட மற்ற மதத்தினர் அடக்க இயலாத யானை போன்று அடக்க இயலாமல் உள்ளனர்
அவர்களைக் கட்டி இழுத்து வந்து யதிராஜரின் திருவடிகளில் வலியக் கட்டி வைப்பது ஓன்று உண்டு
எது என்றால் கவி தார்க்கிக ஸிம்ஹத்தின் கர்ஜனை என்னும் அடியேனது முழக்கம்
அவர்களின் செவிகளில் புகுந்து வாதப்போரில் உத்ஸாகம் கொண்ட அவர்களுக்கு இந்த நிலையை ஏற்படுத்தி விடும்

ஆசா மதங்கஜ கணான் அவிஷஹ்ய வேகான்
பொறுக்க மாட்டாத மிகுந்த ஆற்றாமையால் –சம்பிரதாயத்துக்கு தோஷங்கள் கல்பித்து
-யானை கூட்டங்கள் -ஆசா மாத்திரம் -சாமர்த்தியம் இல்லாமல் -உள்ளவர்கள்
-பாதே யதி ஷிதிப்த ப்ரசபம் நிருத்தன்
தந்தங்கள் கால்களால் ஸ்ரீ பாஷ்ய காரர் பெரிய மலை யாகிய பாறைகளில் குத்தி -உடையப் பெற்று
கார்ய கதா ஆஹவ குதூஹலிபி பரேஷாம் -கர்ணே ச ஏஷ கவிதார்க்கிக சிம்ஹ நாத –

மலைகளில் உள்ள காடுகளில், மதம் பிடித்த யானைகள் மரங்களை முட்டிக் கீழே சாய்த்து, காட்டையே சின்னாபின்னமாக்கி,
அட்டகாசம் செய்து, தண்ணீர் குடிக்க ,மலையடிவாரத்தில் உள்ள நீர்நிலைக்கு வரும்.
யானைகளின் அட்டகாச சப்தத்தினால் கண்விழித்து சோம்பல் முறிக்கும் சிங்கம் கர்ஜிக்கும் .
இந்த கர்ஜனையைக் கேட்கும் யானைகள், மலையில் உள்ள காட்டுக்குள் மறுபடியும் போகாமல்,
சிங்கத்துக்குப் பயந்து, அடிவாரத்திலேயே தங்கிவிடும்.

இதைப்போல, துர்வாதிகள் ரொம்ப வேகத்துடன் சாஸ்த்ரங்களுக்குக் கட்டுப்படாமல் அட்டகாசமாக வாதம் செய்யும்போது,
கவிதார்க்கிக ஸிம்ஹத்தின் யதிராஜ ஸப்ததியை அவர்கள் எதிரில் படித்தால்,
பயந்து, நடுங்கி, விசிஷ்டாத்வைதிகளாக மாறி விடுவர்

கவிதார்க்கிக ஸிம்ஹம் என்ற பட்டப் பெயரை யுடைய வேதாந்த வாரியன் பணித்த யதிராஜ சப்ததி என்ற சிம்ம நாதம் ப்ரதிபஷிகளுடைய காதில் பட்டால்
அவர்களும் எம்பெருமானாரை ஆஸ்ரயித்து உஜ்ஜீவிப்பர்கள் என்கிறார்
புற மதத்தார் யானை போலே மதம் கொண்டு பேராசையால் திரிய சிம்ஹம் போலே கர்ஜித்து
யதிராஜர் திருவடிகளில் வலியக் கொண்டு வந்து கட்டினேன்
கவிதார்க்கிக சிம்ஹ கர்ஜனை அவர்கள் செவியில் புகுந்து இந் நிலைமை ஏற்படுத்தி விட்டது –

—————————

73-உபசமித குத்ருஷ்டி விபலவா நாம்
உபநிஷதாம் உபசார தீபிகா இயம்
கபளித பகவத் விபூதி யுக்மாம்
திசது மதிம் யதிராஜ சப்ததி ந

மற்ற மதவாதிகள் உபநிஷத் வரிகளுக்கு தங்கள் விருப்பம் போன்ற பொருள்களைக் கூறி அவற்றுக்குப் பெரும் துன்பம் ஏற்படுத்தினார்
இந்தத்துன்பத்தை எதிராஜர் நீக்கி அருளினார்
இப்படிப்பட்ட யதிராஜரின் பெருமைகளை விளக்கும் இந்தக் க்ரந்தம் உபநிஷத்துக்களுக்கு
இரண்டு பக்கமும் ஏற்றி வைக்கப்பட்ட தீபம் போன்றது
இந்த கிரந்தத்தைக் கற்பதன் மூலம் உபய விபூதியையம் விபூதிமானையும் பற்றிய தெளிந்த ஞானத்தை இந்த நூல் அளிக்க வேண்டும்

உபநிஷத்களுக்கு விபரீத அர்த்தங்கள் சொல்வதால் வந்த விபத்துக்கு யதிராஜ ஸப்ததி ,
அந்த விபத்தைப் போக்குகிற தீபஹாரத்தி போன்றதாகும்.
இதை அனுசந்திப்பவர்களுக்கு பகவானிடம் பரம பக்தி ஏற்படும்

பங்கம் அடைந்த குத்ருஷ்டிகளால் ஏற்படக் கூடிய உபத்ரவங்கள் நீங்கிய வேதங்களுக்கு
கை விளக்காய் அமைந்த இந்த யதிராஜ சப்ததியானது நமக்கு மதி நலத்தை அருள வேணும்

புற மத வாதங்களால் துன்பம் அடைந்த உபநிஷத்துக்களை யதிராஜர் நீக்கி அருளினார் –

ஸ்வாமி பெருமைகளை விளக்கும் இப்பிரபந்தம் இரு பக்கம் ஏற்றி வைக்கப் பட்ட தீபம் போன்றதாகும் –

உபய விபூதி யாதாம்ய ஞானமும் இதனால் பெறலாம் –


இந்த நூலைப் பாராயணம் செய்பவர்களுக்கு அவர்கள் மேற்கொள்ள வேண்டிய மார்க்கமானது
உள்ளங்கை நெல்லிக்கனி போன்று தெளிவாகப் புலப்பட்டு விடும்
அவர்களின் சொற்கள் அனைத்தும் வேதங்களின் தலைகளில் வைக்கப்படும்
மேலும் அவர்கள் செய்வது-யதிராஜருடைய சித்தாந்தத்தின் மீது பொறாமை கொண்ட
அனைவரையும் பகல் நக்ஷத்ரம் போன்று ஒளி குன்றும்படி செய்வார்கள்

இந்த யதிராஜ ஸப்ததியை அனுசந்தித்தால் பகவத் கல்யாண குணங்கள் தெளிவாகத் தெரியும்.
இந்த ஸ்துதியின் பக்தர்கள் , பொறாமை உடைய பிறரை,நக்ஷத்ரங்கள் எப்படிப் பகலில் ப்ரகாசிக்காதோ அந்த மாதிரி, ப்ரகாசத்தை இழக்கச் செய்வர்

இந்த யதிராஜ சப்ததியைக் கற்பதில் விஷயத்தில் ஆதரம் யுடையவர்கள் சத் ஸம்ப்ரதாயத்தைக் கைக் கொண்டவர்களாய்
நல்ல விஷயங்களையே எப்போதும் கேட்பவர்களாய் மாச்சர்ய லேசமும் இல்லாதவர்களாய் விளங்கட்டும் –

நிகமத்தில் –
இந்நூலைக் கற்றார்க்கு மார்க்கம் உள்ளங்கை நெல்லிக் கனி போலே தெளிவாக புலப்படும் இவர்கள் வார்த்தைகள்
வேதங்களின் தலை மேல் வைக்கப்படும்
புற மதத்தினரையும் ஸ்வாமி மேல் பொறாமை கொள்பவர்களையும் பகல் வேளை நஷத்ரம் போலே
ஒளி குன்றும் படி செய்து விடுவார்கள் –

—————————————–

ஜயதி யதிராஜ ஸூக்தி ஜெயந்தி முகுந்தஸ்ய பாதுகா யுகளீ
ததுபயதன த்ரிவேதீம் அவத்யயந்த ஜெயந்தி புவி சந்த –

கவிதார்க்கிக ஸிம்ஹாய கல்யாண குண சாலிநே
ஸ்ரீ மதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம –

செல்ல வேண்டிய திசையை சரியாக காட்டுபவனே தேசிகன்.தூப்புல் வேதாந்த மஹாதேசிகன் :

ஆசார்யன் என்பதும் இதை போலவே.
சாரி என்றால் சஞ்சரிப்பவன்.
பாத சாரி காலால் நடந்து செல்பவன்.
கஜாச்சாரி யானைமேல் செல்பவன்.
எனவே சரியான பாதையில் நடந்து சென்று மற்றவர்க்கு வழிகாட்டுபவன் ஆசார்யன்.

இவர் ஒரு மஹா ஆசார்யனாய் இருந்து வைணவ சமயம் காத்த உத்தமர்.

அனந்தசூரியார் – தோத்தாத்ரி அம்மை தம்பதிக்கு திவ்ய குமாரனாய்
தொண்டைமண்டல
காஞ்சி மாநகரில்
பொய்கையாழ்வார் அவதரித்த விளக்கொளி எம்பெருமான் ஆலய பகுதியான
தூப்புல் எனும்
திருவிடத்தே திருமலை வேங்கடவன் கோயில் மணியின் அம்சமாக
கி.பி. 1268ஆம் ஆண்டு,
விபவ வருஷம்,
புரட்டாசி மாஸம்,
சிரவணம் நட்சத்திரம் கூடிய
புதன்கிழமையில்
அவதரித்தார்.

ஒரு வெண்கல மணியை பெருமாள் தனக்கு கொடுத்து அதை தான் விழுங்கியதாக கனவு கண்டாள் அவர் தாய்.

ராமானுஜரைப் போன்று இவரால் கணீரென்று வேத நாதம் எங்கும் ஒலிக்க பிரகாசிப்பார் என்று பெருமாளே அருளினார். அதனால் தான் பெருமாள் சந்நிதியில் மணி கிடையாது. திருவாராதனம் போது வெளியே உள்ள மணி மட்டும்
இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் வேங்கடநாதன் என்பதாம்.

பின்னாளில் இவர் ‘சுவாமி தேசிகன்’,
‘தூப்புல் நிகமாந்த தேசிகன்’,
‘தூப்புல் பிள்ளை’,
‘உபய வேதாந்தாசாரியர்’
‘சர்வ தந்திர சுதந்திரர்’
மற்றும்
‘தூப்புல் வேதாந்த மஹாதேசிகன்’
என்னும் பெயர்களால் அழைக்கப் பெற்றார்.

இராமனுசரின் உறவினரான நடாதூர் அம்மாளின் நேரடிச் சீடரும் இவரது தாய்மாமனுமான கிடாம்பி அப்புள்ளாரிடம் வடமறையான வேதங்களும்,
தென் மறையான
திவ்ய பிரபந்தமும்,
புராணங்களும் மற்றும்
சாத்திரங்களையும் குறைவறக் கற்றார்.

ஏழாம் வயதில் கிடாம்பி அப்புள்ளாரினால் உபநயனம் செய்விக்கப் பட்டதோடு,
கல்வியும் கற்றவர், தன் இருபத்தோராம் வயதில் திருமங்கை என்றழைக்கப்பட்ட கனகவள்ளி எனும் மங்கையை மணம்புரிந்தார்.
தன்னுடைய இருப்பத்தேழாம் வயதில் வைணவ குரு எனும் நிலையை அடைந்த இவர் தன்னுடைய குருவான கிடாம்பி அப்புள்ளாரின் ஆணைப்படி
கடலூருக்கு அருகில் உள்ள திருவஹீந்தரபுரம் சென்று சில காலம் வாழ்ந்தார்.
திருப்பதி,
மேல்கோட்டை,
காஞ்சிபுரம்,
அயோத்தியா,
பிருந்தாவனம்,
பத்ரிநாத்,
திருவரங்கம்
உள்ளிட்ட எண்ணற்ற தலங்களுக்கு சென்று ஜெகத்குரு இராமனுசரின் தத்துவங்களை பரப்பினார்.
இறுதியில் தன் மகனான குமார வரத தேசிகனோடு திருவரங்கம் வந்தவர் இப்புவியில் 101 வருஷங்கள் வாழ்ந்தார்.

இராமனுசரின் தத்துவங்களை பரப்புவதையே முழுப்பணியாக கருதியவர் சுமார் நூற்றிருப்பத்து நான்கு நூல்களை தமிழ், வடமொழி, பிராகிருதம், மணிப்பிரவாள நடையில் அருளியுள்ளார்.

மாமன் அப்புள்ளார் ஐந்து வயதில் அவரை நடாதூர் அம்மாள் பிரசங்கத்திற்கு அழைத்து சென்றபோது அவர் ஒரு கணம் சிறுவனைப் பார்த்து பிரமித்து
”எங்கே பிரசங்கத்தை நிறுத்தினோம்” என்பதை மறந்து போனார்.
மீண்டு யோசிக்கையில், சரியாக அந்த ஸ்லோகத்தை எடுத்து சொன்னார் தேசிகர்.

20 வயதில் சகல சாஸ்திரங்களும் அறிந்தார். அப்புள்ளாரிடம் கருட மந்திர உபதேசம் பெற்றார்.

திருவஹீந்த்ரபுரம் என்ற பெயர் இப்போது சுருங்கி திருவந்திபுரம் ஆகிவிட்டாலும் தேசிகரின் சரித்திரம் கொஞ்சமும் சுருங்கவில்லை.
இங்கு தான் ஒரு சிறு குன்றில் பலநாள் அன்ன ஆகாரமின்றி
கருட மந்த்ரம் ஜபித்தார்.
ஶ்ரீ ஹயக்ரீவ மந்திரம் ஜபிக்வே எம்பெருமானும்
திவ்ய தரிசனம் தந்துஅவருக்கு ஹயக்ரீவ மந்திராபதேசம் செய்து
ஶ்ரீ தேசிகன் விருப்பப்படி அவரது நாவில் குடிகொண்டார்.
தனது சிலா ரூபத்தையும் கொடுத்தார்.
அந்த ஹயக்ரீவ விக்ரஹத்தை இன்றும் தேவநாத பெருமாள் சந்நிதியில் காணலாம்.

காஞ்சி விஜயம் செய்து பிறகு பல திவ்ய தேச யாத்ரை சென்ற தேசிகன் ”பிரபத்தி’ எனும் சரணாகதி தத்தவத்தை விளக்கி வைஷ்ணவ சமூகம் பயன்பெற செய்தவர்.
நியாச விம்சதி,
நியாச தசகம்,
நியாச திலகம் என்று வடமொழியிலும்,
அடைக்கலப் பத்து,
அர்த்த பஞ்சகம் என்று தமிழிலும் அளித்த பெரிய ஞானி.
சகல கலைகளும் கைதேர்ந்து சர்வ தந்திர ஸ்வதந்திரர் என்று அழைக்கப் பட்டார்..

திருப்பதி சென்று தயா சதகம் இயற்றினார். பெருமாளால் வேதாந்தாச்சார்யா என்று கௌரவிக்கப் பட்டவர்.

ஸ்ரீ ரங்கம் போகும் வழியில் ஸ்ரீ பெரும்புதூர் சென்று ஸ்ரீ ராமானுஜரை வழிபட அங்கே யதிராஜ சப்ததி என்ற ஸ்லோகம் உருவானது.

ஸ்ரீ ரங்கத்தில் ரங்கநாதர் மகிழ்ந்து அளித்த பெயர் தான் வேதாந்த தேசிகர் என்று நாம் இன்றும் அவரை அறிவது..
ரங்கநாயகி தாயார் அளித்த பெருமை தான் சர்வ தந்த்ர ஸ்வதந்த்ரர்.

1327ல் அலாவுதினின் தளபதி மாலிக் காப்பூர் தெற்கே பல ஆலயங்களை அழித்தபோது ஸ்ரீரங்க பெருமாள் திருப்பதிக்கு எடுத்து செல்லப்பட்டும் ஸ்ரீ பாஷ்ய க்ரந்தங்கள் கர்நாடகத்துக்கும் எடுத்துச் செல்லப்பட்டது.
இந்த பொறுப்பை தேசிகன் ஏற்றார். ஒரு இரவு செத்த பிணங்களோடு பிணமாக கிடந்து மிலேச்சர்களிடம் இருந்து அரிய வைஷ்ணவ செல்வங்களை காப்பாற்றியவர் ஶ்ரீ மஹா தேசிகன்

”ஸ்ரீ ரங்கம் மீண்டும் பழம் பொலிவை பெற நீ அருள்வாய்” என்று பெருமாளை அவர் பாடியதே அபிதி ஸ்தவம் என்ற ஸ்லோகம்.

தேசிகர்
ஸ்ரீ ரங்கத்தில் தான் பெருமாள் திருவரங்கனை பாதாதி கேசம் வரை வர்ணித்த பகவத் த்யான சோபனம் ஸ்தோத்ரம் இயற்றினார்.
இதை படிக்கும் போது திருப்பாணாழ்வாரின் அமலனாதி பிரான் பாசுரங்கள் படிப்பதுபோல் எண்ணம் தோன்றுகிறது.

”நீரென்ன பெரிய ஞானஸ்தர், பண்டிதர் என்ற நினைப்போ?
ஒரே நாளில் 1000 பாக்களை ரங்கநாதர் மேல் இயற்ற முடியுமா உம்மால்?” என்று சில பெரிய கனத்த தலைக்காரர்கள் சவால் விட ”ரங்கநாதனைப் பாட முடியாமலா போகும் என்று தேசிகர் சவாலை ஏற்றாரே தவிர, அன்று முழுதும் சிஷ்யர்களுக்கு பாடம் கற்பித்ததில் போய்விட்டது.
அடடா நாளை காலையில் 1000 பாக்களை இயற்றியதை காட்ட வேண்டுமே, என்று இரவு யோசித்தார். ”தேசிகா, என் பாதுகையிலிருந்து ஆரம்பியேன் ” என்று ஸ்ரீ ரங்கநாதனே எடுத்துக் கொடுக்க, விடிகாலை 4 மணிக்கு எழுத்தாணியை பிடித்தார்.
மூன்றே மணி நேரத்தில் 1008 பாதுகா ஸ்துதி ஸ்லோகம் உருவானது. அதை உச்சரிக்கவே குறைந்தது 7 மணி நேரம் ஆகும் நமக்கு.
மறுநாள் காலை பண்டிதர்கள் அனைவரும் மூக்கில் மேல் விரலை வைக்க மறந்தாலும் தேசிகரை ”கவிதார்க்கிக சிம்ஹம்” என்ற பட்டத்தை அவருக்கு அளித்து கௌரவிக்க மறக்கவில்லை.

ஸ்ரீ வில்லிப்புத்தூரில் ஆண்டாளை வழிபாட்டு கோதா ஸ்துதி உருவானது. ஆண்டாள் உத்சவத்தின் போது திவ்ய பிரபந்தத்துடன் ஆண்டாளின் விருப்பப் படியே,
கோதாஸ்துதி ஸ்லோகங்கள் சொல்லப்பட்டு வருகிறதே.

காசு, தங்கம், நாணயம் இதெல்லாம் தேசிகர் பார்த்ததில்லை, வாங்கிக்கொள்ள மாட்டார். எனவே உஞ்சவ்ரித்தியில் வாழ்ந்த அவருக்கு அரிசியோடு தங்கமணிகளை கலந்து கொடுத்து, அதை அவர் மனைவியிடம் கொடுத்து சமைக்க சொல்ல, அவளோ இதெல்லாம் என்ன அரிசியோடு என்று கேட்க, ஏதாவது பூச்சி முட்டையாக இருக்கும் என்று கையால் கூட தங்கத்தை தொடாமல் தர்ப்பையால் அவற்றை ஓதுக்கி வெளியே எறிந்து விட்டார்.

தேசிகரின் பால்ய நண்பன் வித்யாரண்யன்
விஜயநகர சாம்ராஜ்யத்தில் பெரிய பதவியில் இருந்ததால்,

”தேசிகா, நீ எதற்காக ஏழ்மையில் வாடுகிறாய்,
வா என்னிடம், இங்கு உனக்கு நிறைய பரிசு வழங்க ஏற்பாடு செய்கிறேன் என்றான் ” வித்யாரண்யனுக்கு அவர் பதிலாக எழுதியதே நமக்கு பொக்கிஷமாக கிடைத்த
”வைராக்ய பஞ்சகம்”.

”வித்யாரண்யர்
நமக்கல்லவோ மிகப்பெரிய பரிசை அளித்துவிட்டார்.”.

ஆதி சங்கரர் ஒரு ஏழைப் பெண்ணுக்கு பொன் மழை பெய்ய வைத்த கனக தாரா ஸ்தோத்ரம் தெரியுமல்லவா. அதே போல் இன்னொன்றும் காஞ்சியில் நடந்திருக்கிறதே.

காஞ்சிபுரத்தில் தேசிகர் வாழ்ந்தபோது, அவரை அவமானப் படுத்த சில விஷமிகள்,

ஒரு ஏழைப்பையன் தனது திருமணத்துக்கு உதவி கேட்டபோது ”தம்பி நீ தேசிகர் என்று ஒருவர் ரெண்டு தெரு தள்ளி வசிக்கிறார். பணக்காரர்.
யார் கேட்டாலும் பணம் தருவாரே, அவரைப் போய் கேள்” என்று அனுப்ப,
அந்த அப்பாவி அவரது எளிய வாழ்க்கை நெறி தெரியாமல் அவரை நிதி உதவி கேட்க, அவனை அழைத்துக்கொண்டு நேராக வரதராஜ பெருமாள் கோவில் சென்று தாயாரின் சந்நிதியில் அவளை உதவி செய் என வேண்டினார் தேசிகர்.

”அவரது மனதைத் தொடும்

”ஸ்ரீ ஸ்துதி” தாயாரை உடனே அங்கே ஒரு பொன்மழை பெய்ய வைக்க காரணமானது..

ஒரு பாம்பாட்டி தேசிகரிடம் ”என்னுடைய விஷ பாம்புகளை உங்களால் சமாளிக்க முடியுமா?” என்று சவால் விட,
அவர் தரையில் ஒரு கோடு போட்டு
” உன் பாம்புகள் இந்த கோட்டைத் தாண்டட்டும்” என்றார்.
சில விஷ பாம்புகள் கோட்டைத் தாண்ட முயன்றபோது தேசிகர் உச்சரித்த கருட மந்திர ஸ்லோகம் கேட்ட கருடன் வந்து அத்தனை பாம்புகளையும் அன்றைய காலை உணவாகத் தூக்கிக் கொண்டு போய் விட்டான்.

பாம்பாட்டி அவர் காலில் விழுந்து ”என் பிழைப்பே இந்த பாம்புகள் தான் ” தயவு செய்து அவற்றை திரும்ப தரவேண்டும் என்று கெஞ்சினதால், மீண்டும் கருட மந்த்ரம் சொல்லி கருடனை அந்த பாம்புகளை திரும்ப தர வைத்தார் .

”உங்களால் எல்லாமே செய்ய முடியும் என்கிறார்களே, என்னைப்போல் கட்ட முடியாவிட்டாலும் ஒரு சாதாரண கிணறு கட்ட முடியுமா உங்களால்?” என்று ஏளனமாக கேட்டானாம் ஒரு மேஸ்திரி.

”சரியப்பா கட்டுகிறேன்”

‘ நான் கொடுக்கும் கற்களை மட்டுமே கொண்டு அதைக் கட்டவேண்டும்”

”ஆஹா அப்படியே.’ என்ற தேசிகர் அவன் கொடுத்த அளவு சரியில்லாத கோணா மாணா கற்களைக் கொண்டே கட்டிய அந்த வினோத கிணறு இன்றும் திருவஹிந்திர புரத்தில் இருக்கிறது.
எங்கே நீர் வற்றினாலும் அந்த கிணற்றில் நீர் வற்றுவதில்லை. சுவையிலும் குன்றவில்லை.

மற்றொரு சிற்பி தனது பங்குக்கு அவரை சவாலுக்கு இழுக்க, அவன் விரும்பியவாறே, அவன் அமைத்த பீடத்தில் தனது உருவத்தையே தத் ரூபமாக சிலையாக வடித்துக் காட்டியபோது அசந்து போனான். அவனமைத்த பீடம் போதாததால் அங்கங்கே அவர் உருவச்சிலையை உளியால் வெட்டும்போது அவன் வெட்டிய பாகங்கள் அவருடைய உடலிலிருந்து ரத்தத்தை சிந்த வைக்க, பயந்தே போய் அவர் காலடியில் விழுந்து மன்னிக்க வேண்டினான் அந்த சிற்பி.

தனது உருவத்தை தானே தேசிகர் வடித்த சிலாரூபம் இன்றும் தேவநாதர் ஆலயத்தில் இருக்கிறதே.
மேலே சொன்ன அவர்
கட்டிய கிணறையும் பார்க்க தவறவேண்டாம். கோவிலுக்கு அருகாமையில் சற்று தள்ளி
ஒரு மண்டபத்தில் உள்ளது.

நமது தூப்புல் குலமணியும் ஸாக்ஷாத் திருமலைமால் கண்டாவதாரமும் ராமானுஜ முனி அபராவதாரமாவார்.
அவர் ஆழ்வார் மீது வைத்திருக்கும் பற்றை அளவிடமுடியாது, வேறு எந்த ஆசார்யனும் தன்னை “சந்தமிகு தமிழ் மறையோன்” என்று பறைசாற்றி கொண்டதில்லை. அவர்காலத்தில் அத்வைத சித்தாந்தம் தலைஓங்கி நிற்க அதை நிஷ்கர்ஷித்து உண்மைபொருளை நிலை நாட்ட இவர்களுக்கு ஆழ்வார் ஸ்ரீஸூத்திகள் துணைபுரிந்தன. அதையும் நம் ஸ்வாமி “தெரியாத மறைநிலங்கள் தெளிகின்றோமே” என்றுசாதித்தார். ஆளவந்தார் இராமானுஜ முனிகாலம் தொடங்கி தேசிகரது காலம் ஏன் இன்றைய அளவிலும் ஆங்காங்கே பூர்வபக்ஷம் தலை ஓங்குகிறது அப்பொழுது அவர்கள் வேத வேதாந்தத்தை கொண்டேவாதம் செய்கிறார்கள்.
நமது ஆசார்யர்களோ ஆழ்வார்களோ திவ்ய பிரபந்தங்களைக் கொண்டு உண்மை பொருளை உணர்த்துகின்றனர். இது நமது சித்தாந்துக்கே உரிய சிறப்பு.

தேசிகர் 101 வருஷம் வாழ்ந்தார். தனது அந்திம நேரம் நெருங்கியதை உணர்ந்த தேசிகர் தனது குமாரர் குமார வரதாசாரியாரை அழைத்து அவர் மடியில் தலை வைத்து, அவரை ”திருவாய் மொழி, உபநிஷத் எல்லாம் சொல்லப்பா. கேட்டுக்கொண்டே செல்கிறேன்” என்றார். பரமபதம் அடைந்தார். தாயார் ரங்கநாயகி தன்னருகே ஒரு சந்நிதியில் தேசிகரை இருத்திக் கொண்டாள்.
வேறு யாருக்கும் இங்கு இடமில்லை என்ற அவள் ஆணை இன்றும் நிலுவையில் இருக்கிறது.

வேதாந்த தேசிகரே !

வேதாந்தாசார்யரே !

சீரார் தூப்புல் பிள்ளையே !

இன்னும் ஒரு நூறாண்டிரும் !

இல்லை இல்லை . . .

அது போதாது !

இன்னும் பல ஆயிரமாண்டிரும் .

———–

ஜயதி யதிராஜ ஸூக்தி ஜெயந்தி முகுந்தஸ்ய பாதுகா யுகளீ
ததுபயதன த்ரிவேதீம் அவத்யயந்த ஜெயந்தி புவி சந்த –

கவிதார்க்கிக ஸிம்ஹாய கல்யாண குண சாலிநே
ஸ்ரீ மதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம –

————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேதாந்த தேசிகன் சுவாமி திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ மும் மணிக் கோவை -ஸ்ரீ வேதாந்த தேசிகாசார்யர் ஸ்வாமிகள்-

November 4, 2025

ஸ்ரீ மான் வேங்கட நாதார்ய கவி தார்க்கிக கேசரீ
வேதாந்தா சார்ய வர்யோ மே சந்நிதத்தாம் சதா ஹ்ருதி –

கவி தார்க்கிக சிம்ஹாய கல்யாண குண சாலினே
ஸ்ரீ மதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம –

சீர் ஓன்று தூப்புல் திரு வேங்கடமுடையான்
பார் ஒன்றச் சொன்ன பழ மொழியுள் ஓர் ஓன்று
தானே யமையாதோ தாரணியில் வாழ்வார்க்கு
வான் ஏறப் போம் அளவும் வாழ்வு

———————————————————————————-

ஸ்ரீ மும் மணிக் கோவை -தமிழ் பிரபந்த லஷணம் படி 30 பாசுரங்கள் அடங்கி இருக்க வேண்டும்-இப்பொழுது 10 பாசுரங்களே அனுசந்தானத்தில் வருகின்றன
மேலும் திரு வயிந்திர புரம் தெய்வ நாயகன் மீது இவர் அருளிச் செய்த -பந்து -கழல் அம்மானை -ஊசல் -ஏசல் –இந்த ஐந்து பிரபந்தங்களும் நம் தீ வினைப் பயனை அனுசந்தான பரம்பரையில் வராமல் மறைந்து விட்டன

இதில் ஆழ்வார்களைப் போலே அளவில்லா காதல் கொண்டு
நாயகி தோழி செவிலி இவர்கள் பேய்ச்சாய்ப் பாடிய பாசுரங்கள் நம் மனத்தை கவரும் –

—————–

ஸ்ரீ தேசிகன் தெய்வ நாயகனைச் சரணம் அடையத் திரு உள்ளம் கொண்டு முதலில் செங்கமல வல்லித்தாயார் இடம் செய்யும் புருஷகார ப்ரபத்தியை முதல் பாசுரத்தால் வெளியிடுகிறார் –ஸ்ரீ சப்தார்த்தம் அருளுகிறார் –

அருள் தரும் அடியார் பால் மெய்யை வைத்துத்
தெருள் தர நின்ற தெய்வ நாயக நின்
அருள் எனும் சீர் ஓர் அரிவை யானது என
இருள் செக வெமக்கோர் இன்னொளி விளக்காய்
மணி வரை யன்ன நின் திரு வுருவில்
அணி அமர் ஆகத்து அலங்கலாய் இலங்கி
நின் படிக்கு எல்லாம் தன் படி ஏற்க
வன்புடன் நின்னோடு வதரித்து அருளி
வேண்டுரை கேட்டு மிண்டவை கேட்பித்து
ஈண்டிய வினைகள் மாண்டிட முயன்று
தன்னடி சேர்ந்த தமர் உனை அணுக
நின்னுடன் சேர்ந்து நிற்கும் நின் திருவே –1-

அருள் தரும் – அருளைக் கொடுக்கும்
அடியர் பால் – (உன்) தாஸ பூதர்கள்
விஷயத்தில்,
மெய்யை- ஸத்யத்தை (அல்லது சரீரத்தை,
அதாவது திரு மேனியை)
வைத்து – ஸ்தாபித்து,
தெருள் தர -ஞானத்தைக் கொடுப்பதற்காக
நின்ற- நிற்கின்ற
தெய்வநாயக – தேவநாதனே!
நின் – உன்னுடைய
அருள் எனும் – கருணை என்னும்
சீர் – (கல்யாண)குணம்
ஓர் அரிவை ஒரு ஸ்திரீ (ரூபம்) கொண்டது
ஆனது என என்னும்படியாக,
இருள் – அஜ்ஞானமாகிற இருட்டு
செக- நாசமடையும்படியாக
எமக்கு – எங்களுக்கு
ஓர் இன் ஒளி – ஒப்பற்ற இனிமையான ( போக்யமான) பிரகாசத்தை யுடைய விளக்காய் தீபமாகி,
மணி வரை யன்ன – ரத்ன பர்வதம் போன்ற
நின் திருவுருவில் – உனது அழகிய ரூபத்தில்
அணி அமர் – திருவாபரணங்கள் அமைந்துள்ள
ஆகத்து- திரு மார்பில்
அலங்களிலாய் – மாலையைப் போல் விசேஷ அலங்காரமாக
இலங்கி- பிரகாசித்துக் கொண்டு,
நின் படிக்கு உன்னுடைய பிரகாரங்களுக்கு
எல்லாம் –
தன் படி- தன் பிரகாரங்கள்
ஏற்க- ஒத்திருக்கும்படி
அன்புடன் – பிரீதி யுடன்
உன்னோடு – உன்னோடு கூட
அவதரித்தருளி – அவதாரம் செய்தருளி,
வேண்டு (சேதனர்கள்) பிரார்த்திக்கின்ற
உரை (அல்லது உனக்கு) வேண்டுவதான வார்த்தைகளை
கேட்டு- தான் கவனமாய்க் கேட்டு
மீண்டு அவை – மறுபடி அந்த வார்த்தைகளை
நீ (அல்லது)அந்தச் சேதனர்கள்
கேட்கும்படியாகச் செய்து,
கேட்பித்து
ஈண்டிய திரண்ட பாபங்கள் வினைகள்
மாண்டிட – முழுவதும் நாசமடையும்படி
முயன்று – பிரயத்னம் செய்து
தன்னடி சேர்ந்த தமர்-தன் திருவடிகளை ஆஸ்ரயித்த பக்தர்கள்
உனை அணுக – உன்னை அடையும்படி
நின்னுடன் சேர்ந்து- உன்னுடன் எப்போதும்
பிரிவில்லாமல் சேர்ந்து
நிற்கும் – நிலையாக நிற்கின்ற(அல்லது நிற்பாள்)
நின் திருவே – உன்னுடைய லக்ஷ்மியே.

ஸ்ரீமந் நிகமாந்த மஹா தேசிகன் அருளிச் செய்த தமிழ்ப் பிரபந்தங்களுள் முதலாவது மும்மணிக்கோவை என்பது பெரியோர் கொள்கை.ஆதலால் இந்தப் பாசுரம் மும்மணிக் கோவைக்கு மட்டுமல்லாமல், ஸ்வாமி தேசிகனுடைய தமிழ்ப் பிரபந்தங்கள் அனைத்துக்குமே மங்களப் பாசுரமாகும். அருளில் ஆரம்பிக்கிறது. ஸகல மங்களங்களுக்கும் அதி தேவதையான பெரிய பிராட்டியார் விஷயமான பாசுரம் இது. ”அகர முதலவெழுத்தெல்லாம்” என்ற திருவள்ளுவர் வாக்கின் படி எழுத்துக்களுள் முதலான
அகாரத்தைக் கொண்டு இம் முதற்பாட்டுத் தொடங்குகிறது. ”அ’ என்னும் அக்ஷரம் ஸ்ரீமந் நாராயணனைச் சொல்லும்’ என்று அறிஞர்கள் கூறுகிறார்கள். அந்த எழுத்தைக் கொண்டே அவ்வெம்பெருமான் விஷயமாகப் பாடப் பெறும் இந்த நூல் ஆரம்பிக்கப்படுகிறது.மும்மணிக்கோவை’ என்பது தமிழில் 96வகையான பிரபந்தங்களுள் ஒன்று.அது முப்பது பாசுரங்கள் கொண்டதென்றும், ஆசிரியப்பா (அகவல்), வெண்பா, கலித்துறை இம் மூன்று விதப் பாக்களும் அந்தாதியாக முறையே மாறி மாறி வர வேண்டும் என்றும் தமிழர்கள் அதற்கு இலக்கணம் வகுத்திருக்கிறார்கள். இவ்விதம் வரிசையாகக் கோக்கப்பட்ட மும்மணிகளால் ஆனதால், இது ‘மும்மணிக்கோவை எனப்படுகிறது.ஸ்ரீதேசிகன் வடமொழியில் காவ்யம், நாடகம், ஸந்தேசம், ஸ்தோத்ரம் என்று பல்வேறு முறைகளில் க்ரந்தங்கள் இயற்றி யிருப்பது போலவே சந்தமிகு தமிழிலும் தமிழர்கள் மரபை யொட்டிப் பல துறைகளிலும் பிரபந்தங்களை அருளிச் செய்திருக்கிறார்.அவற்றுள் மும்மணிக்கோவை’ என்கிற இவ்வழகிய பிரபந்தம் திருவஹிந்த்ர புரத்தில் கோயில் கொண்டிருக்கும் ஸ்ரீதேவநாதனைப் பற்றியது. இந்த எம்பெருமான் விஷயமாக ஸ்ரீதேசிகன் ஸம்ஸ்கிருதம், பிராகிருதம், தமிழ், இம் மூன்று மொழிகளிலும் அநேக விதமான ஸ்தோத்ரங்களைச் செய்துள்ளார்.-இவற்றில் அவ்வெம்பெருமானுடைய திவ்ய மங்கள் விக்ரஹம், அங்கப்ரத்யங்க ஸெளந்தர்யம், அதில் தமக்குள்ள வியாமோஹம் இவைகளைப் பரக்கப் பேசி யுள்ளார். ஜீவாத்மாவை ஸ்திரீயாகவும், புருஷோத்தமனைப் புருஷனாகவும், பக்தியைக் காமமாகவும் பாவித்து வர்ணிக்கும் தமிழர் மரபை இந்தப் பெருமாளிடத்தில் தான் இவ்வாசார்ய வள்ளல் அனுபவித்திருக்கிறார்.

ஊன்றிப் பார்க்குமிடத்து மும்மணிக்கோவை என்ற பெயர் கொண்ட இப்பிரபந்தத்தில் கவி ஸார்வ பெளமனான நம் தேசிகன் யாப்பிலக்கண முறையில் மட்டுமன்றி இன்னும் மற்ற விதங்களிலும் இதை மும் மணிகளின் கோவையாக விசித்திரமாக அமைத்திருக்
கிறார் என்று நினைக்க வேண்டி யிருக்கிறது. இந்நூலைச் செவ்வனே படித்து ஆராய்ந்து அவைகளை யெல்லாம் அறிதல் அவசியம். ஒவ்வொரு பகுதியிலும் ஆசிரியப்பா, வெண்பா, கலித்துறை என்கிற மூன்று விதமான பாக்கள் இருப்பது போலவே, ஒவ்வொன்றிலும் நாம் அவச்யம் அறிய வேண்டிய தத்துவம் ஹிதம் புருஷார்த்தம் என்ற மூன்றும் கூறப்பட்டிருப்பதாகத் தோன்றுகிறது.
இம்முதற்பாட்டில் பகவானுடைய தன்மையும், அவனோடு பிராட்டியினுடைய பிரிவில்லாச் சேர்த்தியும், ஈச்வர க்ருபா கார்யங்களெல்லாம் இருவரும் சேர்ந்தே அனுக்ரஹிக்குமவை என்கிற உண்மையும் காட்டப்படுகின்றன. பிராட்டியின் சேர்த்தி யில்லா விட்டால் அவ்வித அனுக்ரஹங்கள் நமக்குக் கிடைக்கா என்பதையும் தெரிவித்துள்ளார். இவை யெல்லாம் ஒவ்வொரு வரியிலும் பதத்திலும் கூட நாம் நன்கு காணலாம்.
இந்தப் பாசுரம் ‘அருள்’ என்று ஆரம்பித்து, திருவே’ என்று முடிகிறது. இவ் விரண்டையும் இசைத்து அநுஸந்தித்தால், லக்ஷ்மீ தத்துவமும் தயாதத்துவமும் வெகு அழகாக ஸூசிக்கப்பட்டதாகும்.
அருள் தரும்’ என்கிற சொற்றொடரில் ‘தரும்’ என்பதை மூன்று வகையில் அன்வயித்துப் பொருள் கூறலாம். ‘தரும்’ என்பதை வினைச் சொல்லாகவும்,அதை’திரு’ என்கிற எழுவாய்க்குப் பயனிலையாகவும் கொண்டால், ‘திருவே அருள் தரும்’ என்று வாக்கியம்
அமைகிறது. பயனிலையை முதலிலும் எழுவாயைக் கடைசியிலும் வைப்பதை இலக்கண முறையில் விற்பூட்டு’ என்னும் பொருள் கோளாகக் கூறுவர்.’தரும் என்னும் சொல்லை ‘அடியவர்’ என்பதோடும், ‘தெய்வநாயக’ என்பதோடும் அன்வயித்து இரண்டு விசேஷார்த்தங்களைப் பெறலாம். அருள் தரும் அடியவர்—அருள் புரிகிறவர்களே அடியவர்கள் – பகவத் தாஸ பூதர்கள்.எவர்கள் உலக வாழ்க்கையில் சென்றவிடமெங்கும் எக்காலத்திலும் எவரிடத்திலும் அருளே புரிந்து வருகிறார்களோ, அவர்களே மெய் யடியார்கள்.”அருள்கொண்டாடும் அடியவர்”, “அருள் மிகுத்ததொரு வடிவாய்” “அருள் தரும் ஆர தேசிகனே”, என்று முன்னுள்ளோர் பாராட்டிய அருள். அருள் புரிபவர்களுக்கே அருள் கொடுக்கப்படும் என்கிற தத்துவமும் விசதமாகிறது. அருள் தரும் தெய்வநாயக என்பது மூன்றாவது அன்வயம். இம்மூன்று அர்த்தங்களையும் ஒரு மும்மணியாகக் கருதலாம். இவ்விதம் சில பதங்களை முன்பின் பதங்களுக்கிடையே வைத்து அப்பதங்களுடன் தனித்தனியே அன்வயித்து அர்த்த புஷ்டியையும் த்வனி மூலமாய் அத்புத ரஸங்களையும் அமைப்பது இம் மஹாகவியின் ஸம்ஸ்கிருத – தமிழ்க்கவனங்களிலெல்லாம் காணக் கூடிய ஒரு பேரழகு.
முதல் பாசுரத்தில் மூன்று அருள்கள் – “அருள்தரும் அடியவர்”, “நின் அருள்”,”அவதரித்தருளி”;
இரண்டாம் பாசுரத்தில் மூன்று “திரு ;
மூன்றாம் பாசுரத்தில் “மும்மறை”;
நான்காம் பாசுரத்தில் மும் மணி”(பன்மணி, சித்திரமணி, அத்திரமணி) இவைகளெல்லாம் சொற்களாலான மும் மணிகள்.
பொருள் கொள்ளுமிடத்து எத்தனையோ மும்மணிகளை ரஸிகர்கள் கண்டெடுக்கலாம்.கவி ஸிம்மத்தின் கவிதையை ஊன்றிப் படிக்கப் படிக்க எதிர்பாராத புதிய புதியசொற் சுவையும் பொருட்சுவையும் பெற்று ஆனந்திக்கலாகும்.
“பத்துடையடியவர்க்கு எளியவன் ” என்றார் நம்மாழ்வார். அருள்தரும் அடியர் பால் மெய்யை வைப்பவனென்று பாடுகிறார் நம்மாசார்யோத்தமன்.
“அடியவர்க்கு மெய்யனாகிய தெய்வ நாயகன்-என்று திருமங்கைமன்னன் மங்களாசாஸனம்.-அந்த இரண்டு திருநாமங்களையும் எடுத்துக் கொண்டு ஒரோர் விசேஷணமிட்டு, “அருள்தரும் அடியவர் பால் மெய்யை வைத்து”, ‘தெருள் தர நின்ற தெய்வ நாயக” என்று இங்கே பாடுகிறார்.

‘அருள்தரும் அடியவர்பால் மெய்யை வைப்பவன்‘ என்றதால் ‘அப்படி யல்லாதாரிடத்துப் பொய்யன்’ என்று தோன்றுகிறது. “பொய்யர்க்கே பொய்யனாகும்” அன்றோ மெய்யை வைப்பது என்றால் அவர்கள் விஷயத்தில் ஸத்யஸந்தனாக விளங்குவது; அல்லது பிரஹ்லாத பீஷ்மாதிகள் விஷயத்தில் போல அவர்கள் வார்த்தையை மெய்யாக்குவது ‘வைத்து’ என்பதால் காப்பாற்றுவதற்காக (நிக்ஷேபமாக) ஒப்புவிக்கப்பட்டது என்று த்வனிக்கிறது. தன்னைக் காட்டிலும் தன்னடியாரிடத்து நம்பிக்கை வைத்துத் தனது ஸத்யத்திற்கு அவர்களை ரக்ஷகர்களாக்குகிறான் என்றதாயிற்று.மேலும் மெய்’ என்னும் சொல்லுக்குச் சரீரம் எனப் பொருள் உண்டு. அவ்வர்த்தமும் கவியின் திருவுள்ளத்திலிருக்கிறது என்று தெரிகிறது. மெய்யன்’என்றால் திருமேனியை யுடையவன் – அது இங்கே அர்ச்சா திவ்ய மங்கள விக்ரஹம். அதன் ரஷணத்தை அடியார்களிடம் ஒப்படைத்து வைத்ததாகப் பேசப்படுகிறது.அர்ச்சா- திருமேனி அர்ச்சக – பராதீந அகிலாத்ம ஸ்திதியை யுடையதொன்றன்றோ? அதனிடத்தில் பரிவுடன் அதனைப் போற்றும் மெய்யடியவர் பால் அது வைக்கப்பட்டிருக்கிறது என்கிற ரஹஸ்யம் விளங்குகிறது.

அடியவர்க்கே, மெய்யன்’ – விக்ரஹ விசிஷ்டன்;-அல்லாதார்க்குப் புலப்படான் -மெய்யை (திருமேனியை ) மெய்யாக (உண்மையாக) வைப்பது அடியவர் பால் தான் என்று ஒரு ரஸமான அர்த்தமும் இங்கே த்வனிக்கிறது.
தெருள் தர நின்ற – இதுவும் ஓர் அர்ச்சாவதார ரஹஸ்யம். தன்னைக் கிட்டி வழி படுவோருக்கு ஞானத்தைக் கொடுக்கிறான். திருக் கோயில்களில்
எழுந்தருளியிருக்கும் திவ்ய மங்கள விக்ரஹங்களை ஞானம் சிறிதுமின்றியே வந்து ஸேவிப்பவர்களுக்கும் அந்த ஸேவையினாலேயே ஞானம் உண்டாகிறது என்கிற தத்துவம் இதனால் உணர்த்தப்படுகிறது.
தர-முக்காலத்திலும் ஞானத்தைக் கொடுக்க ஸங்கல்பித்திருக்கிறான் என்று த்வனி.
நின்ற – வந்து தோன்றி மறைந்து போகும் ராம கிருஷ்ணாத்யவதாரங்கள் போலன்றிக்கே, ஞானம் நல்குவது என்ற த்ருடமான ஸங்கல்பத்துடன் ஸ்திரமாய் என்றென்றைக்கும் நிற்கிறான் என்று கூறப்படுகிறது.
நின்ற தெய்வ நாயக – அயிந்தைமாநகரில் நின்ற திருக் கோலத்துடன் எம்பெருமான் எழுந்தருளியிருப்பதைக் கண்ணா க் கண்டு இங்ஙனம் விளிக்கிறார்.
“அருள் வரதர் நின்ற பெருமையே” என்பது போல்-இங்கும் நிற்கிற அழகுக்குத் தோற்றுப் பாசுரமிடுகிறார்.
தெய்வ நாயக – அவன் தெய்வக் குழாங்கள் கை தொழ நிற்கும் தனிப்பெரும் நாயகன்.-அப்படியே அழைக்கிறார்.
நின்- நின்னருள்’ என்பதால் மற்றோர்களின் அருள் விலக்கப்படுகிறது. “அவ்வருளல்லன அருளுமல்ல” (நம்மாழ்வார்). இதைக் குறிக்க வேண்டி பாசுரத்தில் இரண்டாவது அடியில் ‘நின்’ என்னும் பதம் தனியான சொல்லாக விளங்குகிறது. ‘தெய்வ நாயக நின்‘ என்று அசைக்கும் இசைக்கும் சேர நிறுத்தி அனுபவிப்பதில் ஒரு ரஸம் காண்கிறது.
அருள் – வடமொழியில் ‘தயா’, க்ருபா’, ‘கருணா ‘,”அநுகம்பா , முதலான சொற்களின் பொருள்களையெல்லாம் கொடுக்க வல்ல ஒரு தமிழ்ச் சொல் இது.
அருள் எனும் சீர் : சீர் என்றால் குணம். இந்த சொற்றொடரால் ‘அருள் ஒன்று தான் குணம்; எம்பெருமானுடைய மற்ற குணங்களெல்லாம் அருளின் ஸம்பந்தமிராவிடில் தோஷங்களே யாவன’ என்கிற தத்துவார்த்தத்தைக் காட்டுகிறார்.
ஓர் அரிவையானதென – ஒப்பற்றஒரு ஸ்திரீ ரூபம் கொண்டது போல. குணம் வேறு, ரூபம் வேறு என்று தத்துவம் இருக்க, இங்கே குணமே ரூபமானது ; என்று ரஸமாகப் பேசுகிறார் .

என – என்று சொல்லும்படியாக. பிராட்டி அருள் நிறைந்தவளோ அல்லது அருள் பிராட்டியாக வடிவு கொண்டதோ என்று தர்க்கிக்கும்படி இருக்கிற நிலை காட்டப்படுகிறது. ஸந்தேஹாலங்காரம் போலும் இது.
எமக்கு--சேதனர்களுக்கு;மனுஷ்யர்களுக்கு.-அவர்களுள் ஒருவராய்த் தம்மையும் கூட்டிக்
கொண்டு பேசுகிறார்.
இருள்செக -எல்லாவிதமான இருளும் நீங்க.-உண்மையான தத்துவ ஹித புருஷார்த்தங்கள் எவை என்று தெரியாமல் துன்புறும் நிலை நீங்க. பிரகாசத்தினால் எப்படி இருள் இருந்தவிடம் தெரியாது போய் விடுகிறதோ அப்படியே நம்முடைய அஜ்ஞானமாகிற இருள் அடியோடு நீங்கும்படி செய்ய வல்ல இன்னொளி விளக்கு பிராட்டி-இன்னொளி விளக்கு – கண்ணைக் கூசச் செய்யும் கொடுஞ் சுடரன்று; இனிமையான ஒளியுள்ளது.
இருட்டில் தவிப்பவர்களுக்குத் தீபம் கிடைத்தால் என்ன ஸந்தோஷம் ஏற்படுமோ அதை ‘இன்’ என்பதால் குறிப்பிடுகிறார்.
ஒளி விளக்கு – மங்காத சுடர்.”நந்துதலில்லா நல் விளக்கு”என்று நான்காவது பாசுரத்தில் கூறுகிறார்.-விளங்க வைப்பது விளக்கு.-ஒளி விளக்கு- ஏற்றிய தீபம். அப்படிப்பட்ட தீபம் கிடைத்த பிறகு இருட்டைப் போக்குவதற்கு ஓர் உபாயம் தேட வேண்டியதில்லை. அது போலப் பிராட்டியின் கடாக்ஷம் பெற்றால் ஞானம் தானாக வரும் என்றபடி. அவள் “சைதன்ய – ஸ்தன்ய -தாயிநீ” அன்றோ?விளக்கு தன்னையும் காட்டி மற்ற வஸ்துக்களையும் காட்டுவது போலப் பிராட்டி தன்னையும் காட்டிக் கொண்டு எம்பெருமானையும் நமக்குக் காட்டிக் கொடுக்கிறாள்.

மணிவரையன்ன நின் திருவுருவில்- “பச்சைமாமலை போல் மேனி” என்றும் “கருமாணிக்க மலை” என்றும் ஆழ்வார்கள் அனுபவித்ததைச் சேர்த்து –மணி – வரை’ என்று பாசுரமிடுகிறார். ‘திரு – உரு’-மணி வரை’ என்ற போது ‘திரு’மணியாகவும்,உரு’ வரையாகவும் முறையே உத் பிரேக்ஷிக்கப்படுகின்றன. பெருமாளுக்குப் பிராட்டி தான் ஒளி பயக்கிறாள். “ப்ரபாவாந் ஸீதயா தேவ்யா”, “தீபஸ்- த்வமேவ ஜகதாம் தயிதா ருசிஸ்-தே” என்று ஸ்வாமியின் அருளிச் செயல்கள்.
அணியமராக அலங்கலாய் இலங்கி–அணியமராகத்து அலங்கலாயிலங்கி‘ என்றும் பாடம் உண்டு.-பொருளில் பேதமில்லை. ‘அணி’ என்பதற்கு அழகு, ஆபரணம் என்று இரண்டு அர்த்தங்கள் உண்டு.-ஆபரணங்கள் எல்லாம் அமர்ந்து நிறம் பெற விரும்பும் திரு மார்பு’ என்று பொருள் கொள்வது உசிதம்.
ஆகம் பிராட்டியின் அகம் -வீடு, பெருமாளது ஆகம்(மார்பு) ஆகம் -ஹ்றுதய ஸ்தானம்.
அலங்கலாய் இலங்கி- அலங்கல்- ஓர் ஆபரணம்.
-அலங்காரமாய் ஒளி கொடுத்துக் கொண்டு,ஆபரணங்களுக்கு மேல் ஆபரணமாய் விளங்கி; “ உன் திருமார்வத்து மாலை நங்கை” என்கிறபடியே. நின்படிக்கெல்லாம் தன்படி ஏற்க -உன் ரூப -குண – ஸெளந்தர்ய – லீலாதி ஸர்வப் பிரகாரங்களுக்கும் ஒன்று விடாமல் தன் ரூப குண ஸெளந்தர்ய லீலாதி ஸர்வப் பிரகாரங்களும் ஒத்திருக்கும்படி.
ஏற்க’ என்பதால் பிராட்டி ஸ்வேச்சையாலே பெருமாளுக்கு ஒத்த பிரகாரங்களைக் கொண்டு அநுரூபையாய் இருக்கிறாள் என்பது காட்டப்படுகிறது.
யத் – பாவேஷு ப்ருதக் – விதே அநுகுணாந் பாவாந் ஸ்வயம் பிப்ரதீ”. ‘தன் படி’ ‘நின் படி’ என்று வேற்றுமை இருக்கச் செய்தேயும்,அவற்றுள் ஒற்றுமையும் ஐக ரஸ்யமும் ஏற்க’ என்பதால் கூறப்படுகின்றன. ‘ஸஹ – தர்ம-சரி என்றும் “துல்ய-ஸீலவயோ -வ்ருத்தாம்” என்றும் மஹர்ஷிகள் கொண்டாடும் ஒற்றுமை யன்றோ? கடலுக்கு இக் கரையிலிருந்து-அவன் “மித்ர- பாவே ” என்றால், கடலுக்கு அக்கரையிலிருந்து அவள் “தேந மைத்ரீ பவது தே” என்று சொல்லும்படி ஓத்த மனோ வியாபாரங்களை யுடையவர்கள்.

அன்புடன் உன்னோடு அவதரித்தருளி -அவன் அவதாரம் போல இவள் அவதாரமும் கிருபையின் கார்யம் என்று காட்ட ‘அருளி’ என்று பிரயோகிக்கிறார். அவனுக்குப் போல இவளுக்கும் பூலோகத்திற்கு வருவது ஒரு அவதரணம் மேல் உலகத்திலிருந்து இழிதல்
அன்புடன்- அன்பினால்; அவனிடத்து அன்பினாலும் சேதனர்களான நம்மிடத்து
அன்பினாலும் பிராட்டி அவதரித்தருளுகிறாள்.-இறையும் அகலகில்லாதவளாகையால்
அவனை விட்டுப் பிரிந்திருக்க ஸஹியாதவளாய் அவதரிக்கிறாள். அவளும் வந்தால் தானே அவதார கார்யம் நிறைவேறும்? ‘உன்னோடு’ என்னும் பதம் இருவரும் சேர்ந்து அவதரித்த போது தான் தத்துவ பூர்த்தி என்பதைக் காட்டுகிறது. ஒருவர் மட்டும் அவதரித்தால்
பரதத்வத்தின் ஏக தேசந்தான் அவதரித்ததாகும்.-ஆகையால் உன்னோடு அவதரித்தருளி.
வேண்டுரை கேட்டு மீண்டவை கேட்பித்து--மிக ரஸமான சொற்றொடர். யாரிடம் • கேட்டு யாரைக் கேட்பித்து என்பதை ஆராய்ந்தால் ஆச்சர்யமான அர்த்தங்கள் ஏற்படுகின்றன. இதற்கு மூன்று அர்த்தங்கள் கொள்ளக் கிடக்கின்றன : முதலாவது,-சேதனன் வேண்டுரை ( பிரார்த்தனையை) அவனிடம் கேட்டு, எம்பெருமான் திருச்செவிகளில் அவைகளைக் கேட்பித்து, என்பது; இரண்டாவது, எம்பெருமான் சேதனர் பக்கல் வேண்டும் (எதிர்பார்க்கும்
நிலைகளைப் பற்றிய ] உரையை அவனிடம் கேட்டுத் தன் பிரஜைகளான சேதனர்களுக்கு வாத்ஸல்யத்தால் அதை அறிவிக்கும் பொருட்டு அவர்களைக் கேட்பித்து
என்பது; மூன்றாவது, எம்பெருமானிடம் கேட்ட வசனங்களையே அவன் அந்த நிஷ்டையினின்றும் தவறினது போல் காணும் ஸமயங்களில் அவனையே கேட்பித்து என்பது. இந்த மூன்றும் நம்மாசார்யோத்தமனது ஸ்ரீமத் ரஹஸ்ய த்ரய ஸாரத்தில் பொதிந்து கிடக்கும் அர்த்த விசேஷங்கள் த்வயாதிகாரத்தில் இந்தப் பங்கதிகள் காணக் கிடக்கின்றன. ‘ ஸ்ருணோதி-ஸ்ராவயதி’‘ என்கிற வ்யுத்பத்திகளில் ‘ஸாபராதரான அடியார்களை ஸர்வேஸ்வரன் திருவடிகளிலே காட்டிக் கொடுத்தருளவேணும் என்று இப்புடைகளிலே ஆஸ்ரிதருடைய
ஆர்த்த த்வனியைக் கேட்டு ஸர்வேவரனுக்கு விண்ணப்பம் செய்து, இவர்களுடைய ஆர்த்தியை ஸமிப்பிக்கும்’
என்றதாம்.** ஆந்ரு ஸம்ஸ்யம் பரோ தர்ம?”
இத்யாதிகளை அவன் பக்கலிலே கேட்டு “ஸ்ருணு சாவஹித: காந்த யத்தே வஹ் யாம் – யஹம் ஹிதம்! ப்ராணைரபி த்வயா நித்யம் ஸம் ரக்ஷ்ய: சரணாகத :”என்று கபோதத்தைக் கபோதி கேட்பித்தாப் போலே அவஸரத்திலே கேட்பிக்கும் என்னவுமாம். ஸர்வேஸ்வரன் பக்கலிலே லோக ஹிதத்தைக் கேட்டு “மித்ரம் ஒளபயிகம் கர்த்தும்’ இத்யாதிகளிற்படியே விபரீதரையும் கூடக் கேட்பிக்கும் என்னவுமாம்’ பெருமாளிடத்தில் வால்லப்யத்தால் (சலுகையால்] அவனையும் நம்மிடம் வாத்ஸல்யத்தால் நம்மையும் பிராட்டி கேட்பிக்கிறாள் என்றதாயிற்று.

ஈண்டிய வினைகள் மாண்டிட முயன்று– ஜீவாத்மாக்களிடம் சேர்ந்துள்ள எல்லா வினைகளும் வேரோடு அழியும்படி, முயன்று-ஸர்வ ப்ரகாரத்தாலும் எப்பாடு பட்டாயினும் வினைகளை மாள வைத்து, தன்னடி சேர்ந்த– தனது, அதாவது பிராட்டியினுடைய சரணங்களை ஆஸ்ரயித்தவர்களான தமர்-பாகவதர்கள் ; பிராட்டியால் தன்னுடையவர்கள் என அங்கீகரிக்கப்பட்டவர்கள்.
உனை அணுக- அணுக நிற்கும்’ என்றதால் பிராட்டி எம்பெருமானோடு இடைவிடாது நிற்பது அவனை ஆஸ்ரயிக்கிறவர்களை வாழ்விக்கவே.’அணுக என்பதற்கு அணுகுவதற்காகவே என்று அர்த்தம்;-அல்லது அவர்கள் உன்னை அணுகுங்கால் உன் பக்கத்தில் ப்ராப்ய கோடியில் (அடைய வேண்டிய நிலையில்) நிற்கிறாள் என்னவுமாம்.
நின்னுடன் சேர்ந்து- உன்னோடு ஸர்வ தேச ஸர்வ கால ஸர்வாவஸ் தைகளிலும் ஒரு சேர்த்தியாய் இருந்து. நிற்கும்- ஸ்திரமாய் எழுந்தருளி யிருக்கும்.
நின் திருவே – உனது தேவியே. உன்னுடன் ஒரு படியாய் நிற்கக் கூடியவள் பிராட்டி ஒருத்தியே தவிர வேறு எவருமில்லை என்றபடி.
‘நின் திரு’ – உன்னை யிட்டு அவள் திரு. உனக்கும் திருவாய் நிற்பவள்; திருவைத் தருபவள்.
நின் திருவே அருள்தரும் என்று (விற் பூட்டாக) அந்வயித்துக் கொள்வாருமுண்டு என்பது முன்பே கூறப்பட்டது. அருள் என்னும் சீர் வடிவெடுத்தாற் போன்ற திருவாலல்லது வேறு யாரால் அருள் தர இயலும்?

———————–

திருமால் அடியவர்க்கு மெய்யனார் செய்ய
திரு மா மகள் என்றும் சேரும் திரு மார்பில்
இம்மணிக் கோவையுடன் ஏற்கின்றார் என் தன்
மும்மணிக் கோவை மொழி –2-

திருமால்- ஸ்ரீய: பதியான ஸர்வேஸ்வரன்
அடியவர்க்கு மெய்யனார்- தாஸ பூதர்களான பக்தர்கள் விஷயத்தில் ஸத்யம் தவறாதவர்.
செய்ய – சிவந்த (அல்லது நேர்மையை யுடைய)
திருமாமகள் – பெரிய பிராட்டியார்
என்றும் – எப்போதும்
சேரும் – சேர்ந்து நிற்கும்
திருமார்பில்- (தமது) அழகிய மார்பில்
இம்மணிக் கோவையுடன்-இந்தமணிகளான ஹாரத்துடன்
என் தன் – என்னுடையதான
மும் மணிக் கோவை-மும்மணிக் கோவையாகிய கோவை
மொழி சொல்லை
ஏற்கின்றார் – ஏற்றுக் கொள்ளுகிார்.

இம்மணிக் கோவையுடன்-இந்த ஸ்ரீ கௌஸ்துபம் முதலிய ரத்னஆகாரத்துடன்
எம்பெருமானும் அன்புடன் ஏற்கும் இப்பிரபந்தம் பாகவதர்களுக்கு பரம போக்யமாம் -என்றவாறு –

திருமால்,அடியவர்க்கு மெய்யனார் திருமாலா யிருத்தல் பற்றி அவர் அடியவர்க்கு மெய்யனாகிறார்.-அல்லது திருமாலடியவர்க்கு மெய்யனார்-திருமாலுடைய அடியவர்க்கு மெய்யனார் என்று ஓரே பதமாகப் பொருள் கொள்ளலாம் – அப்போது தத்வ- ஹித . புருஷார்த்தங்கள் அனைத்தும் திருவும் மாலும் சேர்ந்த ஒரு மிதுனமே என்று நிச்சய ஜ்ஞானமுடையவர் திறத்து மெய்யன் என்றதாயிற்று.
செய்ய– முன் பதங்களோடு சேர்த்து அந் வயித்து ஒரு பொருளும் பின் பதங்களோடு சேர்த்து அந்வயித்து ஒரு பொருளும் கொள்ளும்படி இந்தப் பதம் உபயோகப் படுத்தப்பட்டிருக்கிறது. செய்ய பெருமாள் இந்தப் பிரபந்தத்தைத் தான் செய்து விட்டு எனது பிரபந்தம் என்று பெயரிட்டார் என்று ஒரு பொருள் த்வனிக்கிறது. மேலே என்றன்’ என்ற பதமும் இதை உறுதிப்படுத்துகிறது. இது பிரபந்தாரம்பத்தில் செய்யும் ஸாத்விக த்யாகத்தைக் குறிக்கும் மனோபாவம். திருமால் செய்ய, செய்யுள் அவதரித்தபடி.’செய்ய திருமகள்’ – சிவந்த பிராட்டியார் அல்லது செம்மை யுடைய திரு.-

என்றும் சேரும்- நித்ய வாஸம் செய்யும் திரு மார்பில்- திருவின் சோத்தியால் திரு மார்பு;அன்றிககே ஸ்வயம் அழகையுடைய மார்பு.பொன் தோய் வரை மார்பின் போக்யதையை அன்று கண்டு கொண்டன்றோ அதைத் தனக்கு ஆலயமாக அமைத்துக் கொண்டாள் பிராட்டி!
இம் மணிககோவை – இது எதைக் குறிக்கிறது-என்று ஆராய வேண்டி யிருக்கிறது. ‘இந்த’ என்று சுட்டிக் காட்டுவதால் இந்தப் பிரபந்தத்தை என்று பொருள் கொள்ளலாம். பெருமாள் திரு மார்பில் இருக்கும் ரத்ன ஹாரங்களைச் சுட்டிக் காட்டிப் பேசுகிறார் என்று சிலர்பொருள் கூறுகிறார்கள். அது பொருந்துமா என்று ஆலோசிக்க வேண்டும்.
இன் மணிக கோவை’ என்று பாடம் கொண்டு இனிமை யான ரத்னங்கள் என்றும் பொருள் கொள்கிறார்கள். ஆனால் ‘இன்மணி’ எதுகைக்குப் பொருந்தாது.
ஏற்கின்றார்- அடியேன் பணிவுடன் ஸமர்ப்பிப்பதைப் பரீதியுடன் அங்கீகரிக்கிறார்.
என்றன் -என்னுடையதான, அகங்கார மமகாரங்களை யறவே யொழித்த ஆசார்யன் என்றன்’ என்று பேசினால் “என் சொல்லால் யான் சொன்ன இன் கவி என்பித்து” என்ற நம்மாழ்வார் அருளிச் செயலை அடி யொற்றிப் பேசியதாகக் கொள்ள வேண்டும்.
மும்மணிக்கோவை மொழி – இந்தப் பிரபந்தத்தின் பெயர் இருப்பதைக் கொண்டு ஓர் அர்த்தம் இருக்கவே இருக்கிறது.
மொழி’ என்பது வடமொழி தென்மொழி என்ற பாஷைகளில் போல பாஷையைச் சொல்லும்.நவமணி மாலையின் கடைசிப் பாசுரத்தில்,
அந்தமில் சீர் அயிந்தை நகர் அமர்ந்த நாதன்
அடியிணைமேல் அடியுரையால் ஐம்ப தேத்திச்
சிந்தை கவர் பிராகிருத நூறு கூறிச்
செழுந்தமிழ் மும்மணிக்கோவை செறியச் சேர்த்து
“-என்று அருளிச் செய்திருப்பதை நோக்கின், இம் மணிக்கோவை மொழி’ என்றவிடத்து, ஸம்ஸ்கிருதம், பிராக்ருதம், தமிழ் என்ற மூன்று மணிகள் போன்ற மொழிகளின் கோவை யொன்று இப்பிரபந்த நிர்மாணத்தால் பூர்த்தி யாயிற்று என்று பாசுரமிடுவதாகத் தெரிகிறது.

அந்தமில் சீர் அயிந்தை நகர் அமர்ந்த நாதன்
அடியிணை மேல் அடி உரையால் ஐம்பது ஏத்திச்
சிந்தை கவர் ப்ராக்ருதம் நூறு கூறிச்
செழும் தமிழ் மும் மணிக் கோவை செறியச் சேர்த்துப்
பந்து கழல் அம்மானை ஊசல் ஏசல்
பரவு நவ மணி மாலை இவையும் சொன்னேன்
முந்தை மறை மொழிய வழி மொழி நீ என்று
முகுந்தன் அருள் தந்த பயன் பெற்றேன் நானே –
10-

அடி உரையால் ஐம்பது ஏத்திச் -எல்லா பாஷைகளுக்கும் மூலமாய் உள்ள
வட மொழியால் -தேவ நாயக பஞ்சாசத் -என்ற ஐம்பது ஸ்லோகங்களை இயற்றிப் புகழ்ந்து
சிந்தை கவர் ப்ராக்ருதம் நூறு கூறிச் -மனத்தைக் கவர்கின்ற ப்ராக்ருத பாஷையால் -அச்யுத சதகம் -என்னும் நூறு அஸ் ஸ்லோகங்களைக் கூறி செழும் தமிழ் மும் மணிக் கோவை செறியச் சேர்த்துப் பந்து கழல் அம்மானை ஊசல் ஏசல் பரவு நவ மணி மாலை இவையும் சொன்னேன் மும் மணிக் கோவையின் மீதி 20 பாசுரங்களும் பந்து கழல் அம்மானை ஊசல் ஏசல் ஆகிய பிரபந்தங்கள் ஐந்தும் அகப்பட வில்லை –

————————–

மொழிவார் மொழிவன மும்மறை யாகும் அயிந்தையில் வந்து
இழிவார் இழிக வென்று இன்னமுதக் கடலாகி நின்ற
விழி வார் அருள் மெய்யர் மெல்லடி வேண்டிய மெல்லியல் மேல்
பொழிவார் அனங்கர் தம் பூம் கரும்பு உந்திய பூ மழையே
-3-

மொழிவார் – வார்த்தை சொல்பவர்கள்
மொழிவன – பேசும் வார்த்தைகளெல்லாம்
மும் மறையாகும் – மூன்று வேதங்களே என்றுசொல்லும்படியிருக்கும்
அயிந்தையில் – திருவஹிந்த்ரபுரத்தில்
வந்து- (அர்ச்சாவதாரமாக) எழுந்தருளி,
இழிவார் – இறங்க (அதாவது அனுபவிக்க)விருப்ப முடையவர்
இழிக என்று – வந்து அனுபவியுங்கள் என்று(சொல்வதுபோல)
இன்னமுதக் கடல் ஆகி – (அனுபவிப்போருக்கு)
இனிமையான அம்ருத ஸமுத்ரம் என்னும்படி
நின்ற – நின்று கொண்டிருக்கும் (இதற்கு மெய்யர் என்பதோடு அந்வயம்)
விழிவார் அருள் – திருக்கண்களில் பெருகும் கிருபையை யுடைய
மெய்யர் – அடியவர்க்கு மெய்யனாகிய ஸ்ரீதேவநாதனுடைய
மெல்லடி -தாமரைப் பூப்போல் மிருதுவான திருவடியை
வேண்டிய – விரும்பிய
மெல்லியள்மேல் -மிருதுவான சரீரத்தையுடைய இந்த ஸ்திரீயின் மேல்
அனங்கர் – மன்மதனார்
தம் பூங்கரும்பு உந்திய -தமது அழகிய கரும்பாலான வில்லி இருந்து கிளம்பிய
பூமழையே – புஷ்ப வர்ஷத்தை
பொழிவார் – வர்ஷிப்பார்.

தோழியின் பேச்சாக பேசி அனுபவிக்கிறார்
பெண்டிர் சிறுவர் கிளி குயில் சகல ஜீவ ராசிகளும் பேசுகின்ற வாக்யங்கள்
எல்லாம் சகல வேத சரமாம் -திரு வயிந்திர புரம் -திவ்ய தேச பெருமையால் –
தெய்வ நாயகனை அணைய விரும்பி அது பெறாது வருந்தும் தலைவின் மீது மன்மதனும்
கரும்பு வில்லின் நின்று பூ மாரியைப் பெய்து இன்னும் வாட்டுகின்றானே
பிரகிருதி சம்பந்தம் வாட்டுக்கிறது -என்று ஸ்வாபதேசப் பொருள்-

ஸ்ரீமந்நிகமாந்தமகா தேசிகனுடைய தமிழ்ப் பிரபந்தங்கள் ஆழ்வார்களுடைய திவ்யப் பிரபந்தங்களை அடியொற்றியே அவதரித்திருக்கின்றன. பக்தி விஞ்சிய
போது ஆழ்வார்கள் தாமான தன்மையை மறந்து ஸ்திரீ ஸ்வபாவத்தை ஏறிட்டுக் கொண்டு சிங்காரப் பேச்சுகளாலே தங்களுடைய பக்தி பாரவச்யத்தைப் பாசுரமிட் டிருக்கிறார்கள். மும்மணிக்கோவையில் மூன்று பாசுரங்கள் அதே ரீதியில் அமைந்திருக்கின்றன.அவற்றுள் இது முதல் பாசுரம். ஆறாவது ஒன்பதாவது பாசுரங்களும் இங்ஙனமே இருப்பன. பக்தி யோக நிஷ்டனுக்குச் சொன்ன பரபக்தி பரஜ்ஞானம் பரமபக்தி என்ற தசைகள் பிரபன்னனுக்கும் உண்டு என்பதைக் காட்டுவதற்காகவும் இம் மூன்று பாசுரங்கள் பாடப்பட்டனவாகத் தோன்றுகிறது. ஸாத்விக பரிசீலனம் சாஸ்திராப்பியாஸம் முதலியவற்றால் பகவத் விஷயத்தில் வரும் பிரீதி விசேஷம் ஸார்வேஸ்வரனைத் தெளிய அறிய வேண்டும் என்ற ஆசைக்குக் காரணமாய் பக்தி என்று பேர் பெற்றிருக்கும். இந்த பக்தியினால் வரும் பரபக்தி எம்பெருமானுடைய ஸ்வரூபாதிகளை விஷயமாகக்
கொண்டதாய் ஸ்ம்ருதி ரூபமாய் ஸாக்ஷாத்காரம் போல் தெளிவை யுடைத்தாய் நிரதிசய ப்ரீதி ரூபமான த்யான விசேஷம். இந்த பரபக்தி பகவானை ஸாக்ஷத்கரிக்க வேண்டும் என்ற அபிநிவேசத்தை யுண்டாக்கி, “ஒருநாள் காண வாராய்” என்று புலம்பும்படி பண்ணி பகவத் பிரஸாதத்தாலே அக்காலத்தில் மட்டும் இருக்கும் பரிபூர்ண ஸாக்ஷாத்காரத்தை யுண்டாக்கும். இந்த ஸாஷாத்காரம் பரஜ்ஞானம் என்று பேசப்பட்டது. நிரதிசயமான பகவத் ஸ்வரூபத்தைக் கண்டவாறே பெற்றல்லது தரிக்க வொண்ணாத பிரீதி விசேஷமே பரமபக்தி. இந்தப் பிரபந்தத்தில் மூன்றாவது, ஆறாவது, ஒன்பதாவது இம்மூன்று பாசுரங்களில் இந்த மூன்று தசைகளையும் முறையே ஸ்ரீதேசிகன் அனுபவிக்கிறார். பக்தி ஸ்ருங்காரமாக பரிணமிக்கிறது என்பதும் ஆத்மாக்களுக்குப் பரமாத்மாவைக் குறித்து ஸ்திரீ பாவம் ஏற்படலாம் என்பதும் பிரமாணங்களிலிருந்து கிடைக்கிறது. ஸ்ரீதேசிகனே,”பக்தி: ஸ்ருங்கார – விருத்த்யா பரிணமதி” என்று த்ரமிடோபநிமிஷத் தாத்பர்ய ரத்நாவளியிலும்,”பக்திம் நிஜாம் ப்ரணய பாவநயா க்ருணந்த: என்று கோதா ஸ்துதியிலும் அருளிச் செய்திருக்கிறார். புருஷோத்தமனின் அழகும் ஆடவரும் பெண்மையை அவாவும்படியான தொன்றன்றோ? ஒரு நாயகி ஏற்ற நாயகனை வரித்து அவனுடன் கூடப் பெறாத போது மன்மத பாணங்களால் அடியுண்டு வருந்துவதும் அவனை நினைந்து நைந்து உருகுவதும் ஸ்ருங்காரர ஸப்ரதானமான காவியங்களில் வர்ணிக்கப்படும் விஷயங்கள். அந்த முறையையும், விசேஷித்து அதில் தமிழர்கள் துறையையும் பின்பற்றி ஸ்ரீதேசிகன், இங்கு தெய்வநாயகனைப் பெற ஆசைப்பட்டு, அவ்வாசை பெருகித் தன்னிலையை மாற்றிப் பெண்ணிலையை அடைவித்தபடியையும், அப்போது விரஹத்தை விருத்தி செய்யும் மன்மத பாணங்களாலே அடியுண்டு வருந்தும் நிலையையும், ஒரு தோழியின் பாசுரத்தாலே தெரிவிக்கிறார். ஸ்ரீதெய்வ நாயகனிடம் மையல் கொண்டு ஸ்திரீ பாவத்தை அடைந்தமை மெல்லடி வேண்டிய மெல்லியள்‘ என்பதால் காட்டப்பட்டது. அவனைக் கூடப் பெறாது அதனால் உண்டான விரஹ வேதனையை மன்மதன் தன் புஷ்பபாணங்களை வர்ஷித்து விருத்தி செய்கிறான் என்பதை ‘அனங்கர் தம் பூங்கரும்புங்திய பூமழையே பொழிவார்’ என்றுபேசுகிறார்.அனங்கனாகையால் அவனுக்கு சரீரம் இல்லை.சரீரம் இருந்தாலன்றோ சரீரம் படைத்தார் படும் வருத்தத்தை உணரக் கூடிய மனமிருக்கும். ஒன்று இரண்டு பாணங்களை எய்தான் என்பதில்லாமல் இடைவிடாது பூ(மன்மத சர) மழையாய்ப்பொழிந்து விரஹத்தை மறக்கவும் ஒட்டாது செய்கிறான் என்பது பொருள்.மன்மதனுக்குக் கரும்பு தான் வில் என்றும், புஷ்பங்களே பாணங்கள் என்றும் பிரஸித்தம். அனங்கனாயிருந்தும் சரீரம் கொண்டு செய்யவேண்டிய கார்யமான எய்தலைச் செய்கிறான் ; துன்பத்தை உண்டு பண்ணும் இயல்பில்லாத புஷ்பங்களாலே வருத்துகிறான்; பஞ்ச பாணம் மட்டுமுடையவன் பாண வர்ஷத்தைச் செய்கிறான்; இவ்வளவும் வருத்தம் பொறா ஒரு மெல்லியள் மேல் என்ன விபரீதம்! என்று தோழி கலங்கிக் கூறும் பாசுரமாயிருக்கிறது இது. இப்படித் தமிழ் மரபை யொட்டிப் பாசுரார்த்தம் பெறுவதோடு நிற்காமல் இன்னும் சற்று ஆழ்ந்து பார்த்தால் சில சப்த ஸ்வாரஸ்யங்களால் வேறு ரஸமான அரத்தங்களும் தோன்றுகின்றன. ‘அனங்கர்’ என்று மரியாதை தோற்ற உபயோகிக்கப்பட்ட சொல் ஸாதாரண மன்மதனைச் சொல்வதோடு கூட ஸாஷாந்- மந்மத- மந்மத :” என்று சொல்ல வல்ல அழகப் பிரானார் தம்மையே குறிக்கிறது எனக் கொள்ளலாம். அவருடைய பூங்கரும்பாவது அழகிய திருப் புருவங்கள். “இன்னுயிர்க்கு ஏழையர் மேல் வளையும் இணை நீல வில் கொல்? மன்னிய சீர் மதனன் கருப்புச்சிலை கொல்?” என்று நம்மாழ்வார் எம்பெருமானுடைய திருப்புருவங்களை சங்கித்தபடி அப்பூங்கரும்பிலிருந்து விடப்பட்ட பாணங்கள் போல் இருக்கின்றன திருக்கண்மலர்களின் கடாக்ஷங்கள்.தேவ நாயக பஞ்சாசத்தில் “அம்ருத – வர்ஷ – நிபை :அபாங்கை:” என்று அம்ருத வர்ஷமாக வர்ணிக்கப்பட்ட கடாக்ஷங்கள் இங்கே புஷ்ப வர்ஷமாக வர்ணிக்கப் பெறுகின்றன. விரஹ தாபம் தீரும்படி குளிரக் கடாக்ஷிக்கிறான் என்று சொன்னபடி. நல்ல வேத வித்துக்களான மஹான்கள் வஸிக்கும் அயிந்தைமாநகரில் கோயில் கொண்டவனாயிற்றேஎன்று எண்ணி ஆசைப்பட்டு மோசம் போனேன் என்றும், இழிவார் இழிக என்று ஆசைப்பட்டவர்களெல்லாம் வாருங்கள் என்று சொன்ன வார்த்தையை நம்பி இந்நிலை வந்தது என்றும் விப்ரலம்ப ஸ்ருங்காரமாக வைத்துப் பொருள் கொள்ளுவதோடு நில்லாமல், ஸத்ஸஹ வாஸத்தாலும் தன் ஸங்கல்பத்தாலும். தன்னை விரும்புவாரைத் தானும் விரும்பிக் குளிரக் கடாக்ஷிக்கிறான் என்று ஸம்ஸ்லேஷ தசா விஷயமாகவும் அர்த்தம் கொள்ளலாம். பெரும்பாலும் நாயிகா பாவம் விஸ்லேஷ தசையிலேயே கைக்கொள்ளப்படுகிறது.-ஸம்ஸ்லேஷ ரஸமும் த்வனிக்கும்படியாக விஸ்லேஷ தசையைப் பேசும் பாசுரம் அழகாக அமைந்திருக்கிறது.

அயிந்தைமாநகரிலுள்ள மெய்யடியார்கள்
ஸ்ரீதேசிகன் காலத்தில் எவ்வளவு உயர்ந்த நிலையில் இருந்தார்கள் என்பதை ‘மொழிவார் மொழிவன மும்மறையாகும்’ என்றதிலிருந்து ஒருவாறு ஊகிக்கலாம்.
க்ஷேத்திர மஹிமையால் அவர்களுக்கு இப் பெருமை கிடைத்தது என்றும் பொருள் கொள்ளும்படி ‘மும்மறை ஆகும் அயிந்தை’ என்று பிரயோகிக்கப்பட்டிருக்கிறது. இப்படிப்பட்ட மஹான்கள் வஸிப்பதாலேயே எம்பெருமானும் இதை உகந்து இங்கே நித்ய வாஸம் பண்ணுகிறான் என்பதும் ஸுசிதம். இப்படி பகவத் – ஸாந்நித்யமும் பாகவத – ஸம்ருத்தியும் மலிந்து கிடந்ததாலேயே ஸ்ரீதேசிகன் நெடுநாள்
இங்கே வாஸம் செய்யத் தீர்மானித்திருக்க வேண்டும். என்றும் அறியலாம்.
அப்படிப்பட்ட பெருமை வாய்ந்த க்ஷேத்திரத்தில் வந்தது மட்டுமன்றி எம்பெருமான் இங்கே
நிலையாக நின்றான்; அதுவும் ஒரு இன்னமுதக் கடலாக என்று இரண்டாம் பாதத்தில் கூறப்படுகிறது.
“கடலொப்பார் கண்டிடினும் காணாக் கூத்தால் “என்கிறபடி அளவிட வொண்ணாமைக்கும் காம்பீர்யத்திற்கும் கடல் போல் விளங்குகிறார். ஆனால் உப்புக்கடலன்று; அமுதக்கடல்;இன்னமுதக் கடல்.இது ஓர் அபூதோபமை. “அலையற்ற ஆரமுதக்கடல் “என்பதுபோல ஸ்ரீதேவநாதனுடைய திவ்யமங்கள விக்ரஹம் ஒரு விலக்ஷணமான அம்ருத ஸாகரம் போல் விளங்குகிறது என்கிறார்.

இழிவார் இழிக – நிற்கிற நிலையிலிருந்தே அனைவரையும் கூவி அழைத்து உங்களுக்காகவே நான் இங்கே வந்து நிற்பது என்று பேசாமல் பேசினாராயிற்று.’இழிவார்’ என்பதால் ஆசை மட்டும் இருக்குமாகில் அனைவருக்கும் இழிய அதிகாரம் உண்டு
என்று கிடைக்கிறது.
விழிவார் அருள் மெய்யர் -திருக் கண்களிலிருந்து வெள்ளமிடும் அருளை யுடைய மெய்யர். ‘இழிவார் இழிக’ என்று கூறியதை மெய்யாக்கிக் கொடுக்கும் கண்களைக் கொண்டு அடியவர்க்கு மெய்யராகிறார்.
மெல்லடி வேண்டிய மெல்லியள் — சரண கமலமாகையால் மெல்லடி,மிருதுவான பாதம்; அதை விரும்புவோரும் கூட மெல்லியர் (மிருதுவான தன்மையர்) ஆகிறார்கள் என்றும் சொல்லும்படி திருவடிகளின் மார்த்தவம் இருக்கிறது. ‘மெல்லடி வேண்டிய படியால் மெல்லியள் ஆனாள் ‘என்று ரஸோக்தி மெல்லியள் ‘ என்ற ஸ்திரீ லிங்கமான பதமும் கடைசிப் பாதமும் இப்பாசுரம் நாயிகாபாவ விஷயம் என்பதைக் காட்டுகின்றன. பெண் பேச்சிலும் தன் பேச்சு,தாய்ப் பேச்சு, தோழிப் பேச்சு என்று பல வகை யுண்டு. ‘மெல்லியள்’ என்று படர்க்கைச் சொல்லாக இருப்பதால் இது தாய் அல்லது தோழியின் பேச்சாக இருக்கவேண்டும்.நாயகி மன்மதபாணத் திற்கு இலக்கானமையைக் கூறுவதால் அந்த
ரங்கத் தோழியின் பேச்சு என்று சொல்வது பொருந்தும்.

பொழிவார் …… பூமழையே – இவள் மென்மை கண்டு இரங்காமல் மன்மதன் தன் அம்பு மழையைப் பொழிகிறான். மன்மத மன்மதன் இவளது மென்மைக்கேற்ப மிருதுவான புஷ்பங்களை எய்கிறான் என்று த்வனி. ஸாதாரண மன்மதன் தன் பாணங்களை எய்து ஒரு தலைவிக்கு ஒரு தலைவனிடத்தில் ஆசையை விளைவிப்பான். மன்மதமன்மதனான இவனோ தன்னிடத்திலேயே ஆசையை உண்டாக்கி அதை விருத்தி செய்கிறான் என்ற வேறுபாடும் காணத்தக்கது. இவ்விதமே இன்னும் பல ரஸமான அர்த்தங்களைப் பொதிந்து கொண்டிருக்கும் இன்னமுதக்கடல் இந்தப் பாசுரம் என்பதை ரஸிகர்கள் அனு பவித்து அறியலாம்.

————————

ஸ்ரீ தெய்வ நாயகன் தனது ஸ்வரூபம் ரூபம் குணம் விபூதி இவற்றைக் காட்டி அருள
அவனை அனுபவித்த படியை மேல் இரண்டு பாசுரங்களால் அருளிச் செய்கிறார் –

மலையில் எழுந்த மொக்குள் போல் வையம்
அழிய ஓன்று அழியா வடியவர் மெய்ய
வருமறையின் பொருள் ஆய்ந்து எடுக்கும் கால்
திருவுடன் அமர்ந்த தெய்வ நாயக
நின் திருத் தனக்கும் நீ திருவாகி
இந்து தன் நிலவுடன் இலங்கு தன்மையினை
நந்துதல் இல்லா நல் விளக்காகி
யந்தமில் யமுத வாழியாய் நிற்றி
பாற்கடல் தன்னில் பன் மணி யன்ன
சீர்க் கணம் சேர்ந்த சீலம் எல்லையிலை
யடியவர் பிழைகள் நின் கருத்து அடையாது
அடைய ஆண்டு அருளும் அரசனும் நீயே
யுயர்ந்த நீ யுன்னை எம்முடன் கலந்தனை
யயிந்தை மா நகரில் அமர்ந்தனை எமக்காய்ச்
சித்திர மணி எனத் திகழு மன்னுருவில்
அத்திரம் அணி என வனைத்தும் நீ யணிதி
விண்ணுள் அமர்ந்த வியன் உரு வதனால்
எண்ணிய ஈரிரண்டு உருக்களும் அடைதி
பன்னிரு நாமம் பல பல வுருவா
இன்னுரு வெங்கும் எய்தி நீ நிற்றி
மூனோடு ஆமை கேழல் கோளரியாய்
வானோர் குறளாய் மழுப்படை முனியாய்
பின்னும் இராமர் இருவராய்ப் பாரில்
துன்னிய பரம் தீர் துவரை மன்னனுமாய்க்
கலி தவிர்த்து அருளும் கற்கியாய் மற்று
மலிவதற்கு எண்ணும் வல்வினை மாற்ற
நானா வுருவமும் கொண்டு நல்லடியோர்
வானார் இன்பம் இங்குற வருதி
ஓர் உயிர் உலகுக்கு என்னும் நீ திருவொடு
உயிர் எல்லாம் ஏந்தி இன்புறுதி
யாவரும் அறியாது எங்கும் நீ கரந்து
மேவுறச் சூழ்ந்து வியப்பினால் மிகுதி
கொண்டிட வெம்மை யடைக்கலம் உலகில்
கண்டிலம் கதி யுனை யன்றி மற்று ஒன்றும்
பல்வகை நின்ற நின்படி யனைத்தினும்
தொல்வகை காட்டும் துணிந்து தூ மறையே -4-

மழையிலெழுந்த- (மழை பெய்து கொண்டிருக்கும் போது) அம்மழை நீரில்
உண்டான
மொக்குள்போல் – நீர்க் குமிழியைப்போல்
வையம் – உலகம் (எல்லா உலகங்களும்)
அழிய – அழியும் போது
ஒன்று அழியா – சிறிதளவும் குன்றாது குறையாது (நிற்கும்)
அடியவர் மெய்ய – தாஸ ஸத்யனாகிய தெய்வ நாயகனே!
அருமறையின் பொருள் – (கற்றறிவதற்கு) அரிய வேதங்களுடைய அர்த்தத்தை
ஆய்ந்தெடுக்குங் கால் – ஆராய்ந்து ஸாரத்தை நிஷ்கர்ஷிக்குமிடத்தில்
திருவுடன் அமர்ந்த- பெரிய பிராட்டியாருடன் கூடிய
தெய்வ நாயகன் – எல்லா தேவதைகளுக்கும் நாதன்
நீ- நீஒருவனே ;
நீ – (அப்படிப்பட்ட) நீ
நின் திரு தனக்கு – (எவளுடைய ஸம்பந்தத்தால் உனக்குத் தெய்வ நாயகத்வம் ஸ்த்தித்ததோ அப்படிப் பட்ட ) உனது பெரிய பிராட்டி யாருக்கு
திருவாகி – அவளுடைய பெருமைகளுக்கு காரணமாகி
இந்து – சந்திரன்
தன் நிலவுடன் – தனது நிலாவோடு கூட |
இலங்கு தன்மையினை – பிரகாசிப்பது போன்ற இயல்பை உடையை;
நந்துதல் இல்லா – (ஒரு போதும்) அழிவு (அணைதல்) இல்லாத
நல் விளக்காகி -நல்ல (அதாவது அழகான மங்களகரமான) தீபமாகி,
அந்தம் இல் – எல்லையில்லாத (முடிவில்லாத)
அமுத ஆழியாய் – அம்ருத ஸாகரம்போல்
நிற்றி- நிற்கிறாய்;
பாற்கடல் தன்னில் – பால் ஸமுத்திரத்தினிடத்து
பல்மணி யன்ன – பலவகை ரத்தினங்கள் இருப்பது போல
சீர்க்கணம் சேர்ந்த – கல்யாண குண ஸமூஹங்களுடன் சேர்ந்த
சீலம் – ஸௌசீல்யம் என்று சொல்லப்பட்ட (தாழ்ந்தவருடன் கூட நெருங்கிப் பழகும் )குண விசேஷத்தை
எல்லை யிலை -அளவிட வொண்ணாதபடி பெற்றிருக்கிறாய்;
அடியவர் பிழைகள் – உன்னை ஆஸ்ரயித்தவர் களுடைய அபராதங்கள்
நின் கருத்து அடையாது – உனது திருவுள்ளத்தை அடையாதபடி.
அடைய -முழுவதையும்
ஆண்டு – பரிபாலித்து
அருளும் – கிருபை செய்யும்
அரசனும் நீயே – ராஜாதி ராஜனும் நீயே;
உயர்ந்த நீ – எல்லாவற்றிற்கும் மேம்பட்ட நீ
உன்னை- அப்படிப்பட்ட உன்னை
எம்முடன் – மிகத் தாழ்ந்த எங்களோடு
கலந்தனை -(ஒரு நீராகக்) கலந்தாய்;
அயிந்தை மாநகரில் – திருவஹிந்திரபுரம் என்னும் திவ்ய தேசத்தில்
எமக்காய் – எங்களுக்காக வேண்டி
அமர்ந்தனை – நித்ய வாஸம் செய்தருளுகிறாய்;
சித்திரமணி யென – அழகான நீல ரத்னம் போல்
திகழும் – பிரகாசிக்கும்
மன்னுருவில்- நித்யமான உனது திருமேனியில்
அத்திரம் அணி என -அஸ்திரங்கள் திருவாபரணங்கள் என்று
அனைத்தும் – ஸகல தத்துவங்களையும்
நீஅணிதி- நீ அணிந்து கொண்டிருக்கிறாய் விண்ணினுள் அமர்ந்த -ஸ்ரீவைகுண்டத்தில் எழுந்தருளி யிருக்கும்
வியன் உரு – பெரிய அல்லது விலக்ஷணமான பர வாஸுதேவ ரூபம் என்ன;
அதனால் எண்ணிய -அதனால் ஸங்கல்பிக்கப் பட்ட
ஈரிரண்டு உருக்களும் – (வாஸூ தேவன், ஸங்கர்ஷணன், பிரத்யும்னன், அநிருத்தன், என்கிற) நான்கு (வ்யூஹ) ரூபங்களையும்
அடைதி – அடைந்து நிற்கிறாய்;
பன்னிரு நாமம் – கேசவாதி பன்னிரண்டு நாமங்களை உடைய
பலபல உருவாய் – வெவ்வேறு திருமேனிகளை உடையவனாய்
என்னுரு எங்கும் -என்னுடைய சரீரம் முழு
வதும்
எய்தி- அடைந்து
நீ நிற்றி- நீ நிற்கின்றாய்.
மீனோடு ஆமை கேழல் கோளரியாய்-மத்ஸ்ய, கூர்ம, வராஹ, நரசிங்க ரூபங்களென்ன,
வானார் குறளாய் -ஆகாசத்தை அளாவிய வாமனனென்ன
மழுப்படை முனியாய் – கோடரியை ஆயுதமாக உடைய பரசுராமனென்ன,
பின்பும் ராமர் இருவராய்-அதற்குப் பிறகு ஸீதாராமன், பலராமன்- என்கிற
பாரில் துன்னிய – பூமியின் கண் அமர்ந்துள்ள
பரம் தீர் – பாரத்தைப் போக்கின
துவரை மன்னனுமாய் -துவாரகா நாதனான கிருஷ்ணனென்ன,

கலி தவிர்த்து அருளும் -கலிகாலத்தில் ஏற்படும் துன்பங்களைப்போக்கி மறுபடியும் உலகத்தை ரஷிக்கும்
கற்கியாய் -கல்கி என்னும் ரூபமான -இப்படிப்பட்ட திவ்ய அவதார திருமேனிகளை அடைந்து
மற்றும் -இன்னும்
மலிவதற்கு-எல்லோருக்கும் அதிக ஸூலபனாய் இருப்பதற்காக
என்றும் -எக்காலத்திலும்
வல்வினை -ஆஸ்ரிதர்களுடைய பலமான பாபங்களை
மாற்ற-போக்குவதற்காக
நானா வுருவமும் -பல்வேறு அர்ச்சா திவ்ய மங்கள விக்ரஹங்களை
கொண்டு -பரிஹரித்துக்கொண்டு
நல்லடியோர்-உன்னிடத்தில் ப்ரீதியை யுடைய ஆழ்வார்களைப்போன்ற உனது தாஸ பூதர்கள்
வானார் இன்பம் -ஸ்ரீ வைகுண்டத்தில் பூர்ணமாக இருக்கும் பேரின்பத்தை
இங்குற -இங்கேயே அடையும்படியாக
வருதி-வருகிறாய் -அவதரிக்கிறாய்
ஓர் உயிர் உலகுக்கு என்னும் நீ –உலகத்திலுள்ள ஸகல சேதனா சேதன வஸ்துக்களுக்கும் ஒப்பற்ற அந்தராத்மாவாக இருக்கும் நீ
திருவொடு-பிராட்டியோடு
ஆர் உயிர் எல்லாம் -அழகுடன் பொலிகின்ற ஆத்ம வர்க்கத்தை எல்லாம்
ஏந்தி -(அந்தர்யாமி ) வடிவுடன் இருந்து தாங்கி
இன்புறுதி- (விசேஷ) இன்பத்தை அடைகிறாய்;
யாவரும் அறியாது -எவரும் அறியாமல்
எங்கும் -எல்லா இடத்திலும்
நீ கரந்து- (பாலுள் நெய் போல்) மறைந்திருந்து
மேவுறச் -மேன்மை யடையும்படியாக
சூழ்ந்து -(எல்லாவற்றையும்) வியாபித்து,
வியப்பினால் மிகுதி-(அந்த) ஆச்சர்யத்தினால் விஞ்சியிருக்கிறாய்;
கொண்டிட வெம்மை யடைக்கலம் -எங்களை ரக்ஷ்ய வஸ்துவாக ஏற்றுக் கொள்ள
உலகில் கண்டிலம் கதி யுனை யன்றி மற்று ஒன்றும்-இந்த உலகத்தில் உன்னைத் தவிர
வேறு ஒரு வித ரக்ஷகனையும் (நாங்கள்) காண வில்லை.
பல்வகை நின்ற நின்படி யனைத்தினும்- (கீழே கூறியபடி) பல விதங்களாக இருக்கும் உன் பிரகாரங்கள் எல்லாவற்றையும்
தொல்வகை காட்டும் துணிந்து தூ மறையே -பழைமையான வழியின் படியே பரிசுத்தமான வேதம் ஒன்றே தைரியமாக (நிச்சயமாக) காட்டிக் கொடுக்கும்.

ஸ்வரூப நிரூபக தர்மங்கள் ஐந்தையும் – நந்துதல் இல்லா -சத்யத்வம் –நல் என்று அமலத்வமும் -விளக்கு என்று ஜ்ஞானத்வமும் –அந்தமில் என்று அனந்தத்வமும்-அமுத வாழி-என்று ஆனந்தத்வமும் -அருளிச் செய்கிறார்
நின் திருத்தனக்கு –ஸ்ரீ மத சப்தார்த்தம்
சீர்க் கணம் சேர்ந்த -நாராயண சப்தார்த்தம்
மன்னுருவில் -திருமேனியை ஸூ சிப்பிக்கும் -சரனௌ சப்தார்த்தம் –
அடைக்கலம் -சரண சப்தார்தம் -த்வயத்தின் முற்பகுதியின் பொருளை அருளிச் செய்கிறார்
ஸ்ரீ தேசிகன் பெருமாள் கோயிலில் இருந்து திரு விந்திர புறத்திற்கு எழுந்து அருளிய பின் பேர் அருளாளனும் சுவாமிக்காக அங்கு எழுந்து அருளியதாகவும் -இத்தைக்கருதியே -அயிந்தை மா நகரில் அமர்ந்தனை எமக்காய் -என்று அருளிச் செய்ததாக பெரியோர் பணிப்பார்

ஸ்ரீ தேசிகப் பிரபந்தத்தின் பாசுரங்களுக்குள் முப்பத்திரண்டு அடிகள் கொண்ட நிலை மண்டிலஆசிரியப்பா இது வொன்றே.ஹஸ்திகிரி மாஹாத்மியத்தில் பதினாறு வரிகள் கொண்ட ஒரு பாசுரத்தில் ப்ரஹ்ம ஸூத்ரங்களின் பதினாறு பாதங்களில் கூறப்படும் பரப்ரஹ்மத்தைப் பற்றிய விஷயங்களை ஸ்ரீபாஷ்யத்தை அடி யொற்றி அநுபவித்தார். இங்கே முப்பத்திரண்டு அடிகளில் அந்தப் பரப்ரஹ்மமான ஸ்ரீமந் நாராயணனுடைய ஸ்வரூப ரூப குண விபவங்களையெல்லாம் ஆழ்வார்கள் அனுபவித்துப் பாசுரமிட்டபடியே தானும் அனுபவித்து அழகாய்ப் பாடுகிறார்.ஸ்ரீமானான நாராயணனே பர தத்துவம்,அவனே பரம ஹிதம், அவனே புருஷார்த்தம் என்பதே இங்கு நிரூபிக்கப்படுகிறது.

முதன் முதலில் எம்பெருமானுடைய நித்யத்வம் கூறப்படுகிறது. அண்டங்களும் அண்டத்துக்குட்பட்ட உலகங்களும் எல்லாம் அழிந்தவன்றும் ஒரு சிறிதும் மாறுதலில்லாத தெய்வம் இதொன்றே. மற்றைத் தெய்வங்களெல்லாம் மறைந்த பிரளயங்களிலும் இவன் ஒருவனே எஞ்சி நிற்பவன். ஆகையால் இவனே தெய்வநாயகன். இந்த விசேஷார்த்தத்தைத் தரும் சப்தம் இப்பெருமானுக்குத் திருநாமமாக அமைந்ததொருபடியே என்று அதை யிட்டே அவனை விளிக்கிறார்.
மழையில் எழுந்த மொக்குள் போல் வையம்-அழகான உவமை. மழை பொழியும்போது நீர்க்குமிழிகள் தோன்றி,சற்று நின்று அழகாகப் பிரகாசித்து, உடனே அழிகின்றன.அது போலவே இவ்வுலகமும் இருக்கிறது. பகவானுடைய தயையினால்
ஸ்ருஷ்டிக்கப்பட்டுப் பல்வேறு நாம ரூபங்களை யுடையதாய்ச் சிறிது காலம் நின்று திகழும் உலகங்களெல்லாம் நிலையாக நிற்காமல் முடிவில் அழிந்து போகின்றன.
ஒன்றழியா அடியவர் மெய்ய -எல்லாம் முற்ற அழிந்தாலும் ஒரு சிறிதும் அழியாதவன் ஒருவனே.-அவனே இங்கே அடியவர்க்கு மெய்யனாக விளங்குகிறவன். “அன்றழியா” என்றும் சிலர் பாடம் கொள்வர். ‘அன்று அழியாதவன்’ என்றால் என்றேனும் அழியக்கூடியவன் என்று பொருள்படுமாகையால் அது அவ்வளவு யுக்தமன்று.
அருமறை-ஸூக்ஷ்மமான வேதம்; அதாவது அரும்பாடுபட்டு அர்த்தத்தைக் கண்டு பிடிக்க வேண்டிய வேதம்.
அருமறையின் பொருள் – அப்படிப்பட்ட வேதத்தின் உட்பொருள். வேதம் பல படியாகப்பேசுவதொன்றாகையால் அதன் கருத்தை ஆய்ந்தறிந்து மெய்ப் பொருளைக் கொண்டு பிற பொருளை ஒதுக்க வேண்டியிருக்கிறது. அதை நன்கு ஆய்ந்தெடுத்தவர்கள் ஆழ்வார்கள்“அந்தமிலா ஆரணங்கள் நாலாய்நின்ற அதன் கருத்தை ஆழ்வார்கள் ஆய்ந்தெடுத்துச் செந்தமிழால் அருள் செய்தார்கள் என்று இவர் தாமே பிரபந்த ஸாரத்தில் அருளிச் செய்திருப்பதை இங்கே நினைப்பது. அவர்கள் அருளிச்செய்த தமிழ் மறையையே இந்தப் பாசுரத்தின் இறுதியில் “தூமறை” என்று கொண்டாடுகிறார் .
ஆய்ந்தெடுக்குங்கால் – வேதங்களை முழுவதும் ஆராய்ந்து அதன் உண்மையான கருத்தைத் தெரிந்தெடுத்தால்.
தெய்வநாயகன் திருவுடன் அமர்ந்தநீ – ‘பரதேவதை லக்ஷ்மியுடன் கூடியே யிருக்கும் நீ தான் என்று விளங்குகிறது. இந்திரனையும் வாயுவையும் ப்ரஹ்மாவையும் சிவனையும் அங்கங்கே வேதங்கள் கொண்டாடினாலும், அவற்றை யெல்லாம் ஐககண்ட்யம் செய்து பார்த்தபோது ஸ்ரீய: பதியாகிய நீதான் பரதேவதை என்று நிஷ்கர்ஷிக்கப் பட்டிருக்கிறது என்று பொருள்.
நின் திரு தனக்கு நீ திருவாகி – ‘ஸ்ரீ, என்கிற ஸம்ஸ்கிருத பதம் போல ‘திரு’ என்னும் தமிழ்ச்சொல் மங்களம் செல்வம் ஸம்பத்து முதலிய பொருள்களைக் குறிக்கும். அவைகளுக்கெல்லாம் அதி தேவதை லக்ஷ்மி அவளால் உனக்கு அவை யெல்லாம் ஸித்திக்கின்றனவாகையால் அவள் ‘நின் திரு’ உனக்குத்திரு. அப்படிப்பட்ட திருவுக்கு ஸம்பத்து மங்களம் முதலியவையெல்லாம் நீ யாகிறாய். ஆகையால் அவளுக்கு நீ திரு. இவ்விதம் ஒருவருக்கொருவர் பெருமையை யளிக்கும் இத் தன்மை வேறெங்கும்
காண இயலாது-இந்தச் சேர்த்திக்கு உபமானம் கொடுக்கிறார்
“இந்து தன் நிலவுடன் இலங்கு தன்மையினை ” என்று.
இந்து – சந்திரன். சந்திரனும் நிலவும் ஒன்றை விட்டு ஒன்று பிரியாமல் இருப்பது மட்டுமன்றி இரண்டும் தேஜோ ரூபமாய் இரண்டும் ஸந்தோஷத்தை உண்டு பண்ணுவது போலப் பெருமாளுடையவும் பிராட்டி யுடையவும் சேர்த்தி இருக்கிறது. உக்ரமான பாஸ்கரனையும் அவன் பிரபையையும் உபமானமாகக் கூறாது ஆஹ்லாதகரனான சந்திரனையும் சீதளமான நிலவையும் கூறியது கவனிக்கத் தக்கது.

நந்துதலில்லா நல்விளக்காகி -ஒருக்காலும் கெடாத, அதாவது மங்கியோ அணைந்தோ போகாத அழகான விளக்காகி.
அந்தமில் அமுத ஆழியாய் நிற்றி – முடிவில்லாத அம்ருத ஸாகரமாய் நிற்கிறாய். ‘அந்தமில்’ என்பதால் ஸர்வேஸ்வரனுக்கு தேசம் காலம் வஸ்து என்ற மூன்று விதத்தாலும் ஏற்படக்கூடிய முடிவு-அல்லது அளவு இல்லாமை கூறப்படுகிறது.
அமுதவாழி’ என்பதால் உப்புக்கடல் அன்று,-இன்பக் கடல் என்பது சொல்லப்படுகிறது.
இந்த இரண்டு அடிகளாலும் வேதாந்தங்களில் ப்ரஹ்மத்திற்கு முக்கியமானவை என்று நிர்ணயம் செய்யப்பட்ட ஐந்து குணங்களும் சொல்லப் படுகின்றன. “நந்துதலில்லா ” என்று ஸத்யத்வம் அதாவது விகாரமின்மை; “நல்” என்று அமலத்வம்,அதாவது கெட்ட குணங்களில்லாமை; “விளக்கு” என்று ஜ்ஞானத்வம்;அந்தமில்” என்று அநந்தத்வம்: “அமுதவாழி” என்று ஆநந்தத்வம். “நல்விளக்காகி’ ‘அமுதவாழி’ என்று ஸர்வேஸ்வரன் ஞானாநந்த ஸ்வரூபனாக இருக்கிறான் என்று காட்டவே
‘ப்ரஹ்மம் நிர்க்குணம் கேவல சிந்மாத்திரம்’ என்று-பேசும் மதங்களைப் பொய்யாக்கி நிற்கிற நிலை இது என்று அழகாக அருளிச் செய்யப்பட்டதாகிறது.
ப்ரஹ்ம ஸ்வரூபத்தை நிரூபிக்குமதான குணங்களைப் பேசிய பின், மற்ற கல்யாண குணங்களை அனுபவிக்கிறார்
‘பாற்கடல் தன்னில் பன்மணி யன்ன சீர்க்கணம் சேர்ந்த சீலம் எல்லையிலை‘ என்று-சீர் என்றால் கல்யாண குணம். சீர்க் கணம் – கல்யாண குண ஸமூஹம்.இவைகள் சீலத்தில் சேர்ந்திருக்கின்றன என்கிறார். சீலமும் ஒரு குணமாயிருக்க,அதன் முக்யத்வத்தைக் காட்டும் பொருட்டு அதைத் தனிக் குணமாகவும் அதை ஆஸ்ரயித்து மற்ற குணங்ககள் இருக்கின்றன என்றும் பேசுகிறார்.-சீலம்- ஸௌசீல்யம்; அதாவது தான் மிகவும் உயர்ந்தவனா யிருக்கச் செய்தேயும் பிறர் தாழ்வை நோக்காது அவர்களுடன் ஒன்றாக நெருங்கிப் பழகும் தன்மை. இதன் பெருமையைப் பார்த்து இதையே குணமாகக் கூறுவது வழக்கம். சக்கரவர்த்தித் திருமகனின் கல்யாண குணங்களைப் பேசப் புக்க வால்மீகி
மஹரிஷி முதலில் ‘குணவான் ‘ என்று ஆரம்பித்து, அதன் பின்னரே இதர குணங்களை வரிசை யிடுகிறார்.இங்கே ‘குணம்’ என்று அவர் கூறுவது ஸௌசீல்யத்தையே. இதர குணங்கள் இதைச் சேர்ந்து நிறம் பெற்றுக் கல்யாண குணங்களாகின்றன

அவை யெல்லாம் இதில் ஒடுங்கும்.-ஆதலால் தான் சீர்க்கணம் சேர்ந்த சீலம்’ என்று பேசினபடி.-இந்தச் சீர்க் கணத்திற்கு உவமை பாற்கடல் தன்னில் பன்மணி. ஷீர ஸமுத்திரத்தில் கிடக்கும் கணக்கற்ற ரத்தினம் முதலிய மணிகள் போன்றவை
உனது ஸ்வரூபமென்னும் கடலில் குணங்கள் என்னும் மணிகள்.
சீலம் எல்லையிலை – அளவற்ற குண ஸமூஹம்.-ஸ்வரூபம் அந்தமில் அமுதவழி;குணம்-சீலம் எல்லையிலை; இரண்டும் அபரிச்சேத்யம்.எல்லையில்லாத சீலம் தன் விஷயத்தில் செய்த மஹோபகாரத்தை மேல்வரும் அடிகளால் அநுஸந்திக்கிறார். முதலில் எங்கள் குற்றங்களைப் பாராது எங்களை ரக்ஷிக்கும் இறைவன் நீயே யன்றோ என்று
பேசுகிறார். அடியவர் பிழைகள் நின் கருத்தடையாது அடைய ஆண்டருளும் அரசனும் நீயே-சிக்ஷையையே அறியாத நிலை அர்ச்சாவதாரம் ஒன்று தானே.
ஸம் ரக்ஷண தீக்ஷிதனான சக்கரவர்த்தித் திரு மகனும் குற்றம் கண்டு காகம் போல்வாரைத் தண்டிக்க முயன்றும் ராவணன் போல்வாரைத் தண்டித்துமே ரக்ஷித்தான். குற்றமே யறியாத அரும் பெரும் நிலை அடியவர்க்கு மெய்யனாகி நின்ற இவ்வர்ச்சா ஸமாதியில் தானே காணக் கிடைக்கிறது.-அடைய – எல்லோரையும், எல்லாவற்றையும், ஆண்டு – ரக்ஷித்து, அருளும் – கிருபை செய்யும் அரசனும் – சக்கரவர்த்தியும், நீயே – நீ ஒருவனே.’அடைய’ என்பதால் ஒன்று கூட விடாமல்,தேவதைகள் மனுஷ்யர்கள் திர்யக்குகள் என்ற பேதமில்லாமல் என்றபடி.-அடியவர் பிழைகள் நின் கருத்தடையாது என்பதால் அனைவரையும் காத்தருளுவதில் விலக்ஷணமான ஓர் அம்சம் பேசப்படுகிறது.அனைவருக்கும் அரசனான நீ அடியவர்களுக்கு விசேஷித்து அருள் புரிகிறாய்; அவர்களுடைய குற்றங்கள் உன் உள்ளத்தில் படுவதே யில்லை-உயர்ந்த நீ உன்னை எம்முடன் கலந்தனை சீலத்தின் கார்யம் இது. உயர்ந்த நீ – கீழே கூறப்பட்ட ஸ்வரூப ரூப குண விபவாதிகளை அநுஸந்தித்து, இப்படி உயர்ந்த (மேன்மைகளை யுடையவனான) நீ இப்படிப்பட்ட உன்னை, எம்முடன் ஒரு நீராகக் கலந்தனையே என்று ஆச்சர்யப் படுகிறார்.’எம்முடன்? என்று தன்னை மற்ற ஸம்ஸாரிகளோடு சேர்த்துப் பேசுகிறார். “பொய்ந் நின்ற ஞானமும் பொல்லா வொழுக்கும் அழுக்குடம்புமான இந்நின்ற நீர்மையில் “எண்ணில் பல் குணத்தனான அவன் வந்து கலந்த நீர்மைக்குத் தோற்றுப்
பாசுரமிடுகிறார். கலந்தனை
– கங்காப் பிரவாகம் தெரு ஜலத்தோடு கலந்தது போல் ஒரே படியாய்க் காணும்படி கலந்தாய். எங்கள் ஸுக துக்கங்கள் உன்னுடைய ஸுக துக்கங்களாகும்படி கலந்தனை-அவனது ஸௌசீல்யத்தை அநுஸந்தித்து ஸ்வாமி மனமுருகி இந்தப் பாசுரம் பாடியிருக்கிறார் என்பதற்கு. இந்த அடியொன்றே சான்றாகும்.

அயிந்தைமாநகரில் அமர்ந்தனை எமக்காய்-அவன் ஸௌசீல்யத்தை அநுஸந்தித்த பிறகு ஸௌலப்ய குணத்தில் ஈடுபடுகிறார். ” பின்னானார் வணங்கும் சோதி” என்று திருமங்கை மன்னன் அது பலித்தபடி. ராம கிருஷ்ணாத்யவதாரங்கள் செய்த போது உன்னைக் கண்டு அனுபவிக்கும் பாக்கியம் பெறாத எமக்காக இன்று நாங்கள் காண அயிந்தையில் வந்து ஸ்திரமாய் எழுந்தருளி யிருக்கிறாய். எமக்காய்’ என்பதால் .இவ்விதம் அவதரித்து நீ இங்கே எழுந்தருளி யிருப்பது உனக்காக அன்று; ஸர்வ விதத்திலும் அது எங்களுக்காகவே என்றும் காட்டப்படுகிறது . ‘எமக்காய்’ என்றதால் இன்று இப் பாசுரத்தை ஓதும் நமக்கும் அருள் தர எண்ணி அயிந்தையில் நாதன் வந்து அமர்ந்திருக்கிறான் என்றபடி.
இப்படியாக எம்பெருமானுடைய ஸௌசீல்ய ளௌலப்யங்களை அனுபவித்து உலகத்திலுள்ள தத்துவங்களுக் கெல்லாம் மேற்பட்டவன் அவன் என்பதை இரண்டடிகளால் பேசுகிறார்.

சித்திரமணி யெனத் திகழும் மன்னுருவில்-அத்திரமணியென அனைத்தும் நீ அணிதி.
தத்துவங்களில் இருபத்து நாலு வகைப்பட்ட அசேதனத்தையும் இருபத்தைந்தாவதான சேதனனையும் ஸர்வேஸ்வரன் திருமேனியில் பூஷணங்களாயும் ஆயுதங்களாயும் அணிந்து கொண்டிருக்கிறான் என்று பிரமாணங்கள் கூறுகின்றன. இதையே நம் ஸ்வாமியினுடைய “புருடன் மணி வரமாக” என்ற அதிகார ஸங்கிரஹப் பாசுரத்திலும், “தத்வை: அஸ்த்ர விபூஷணை:” என்ற ஸங்கல்ப ஸூர்யோதயத்தின்
மங்கள ஸ்லோகத்திலும் காணலாம் . மன்னுரு – ஸ்திரமான,நித்யமான, விக்ரஹம்.
சித்திரமணி என -அழகான மணி,-கண்ணைக் கவரும் நீல ரத்னம் போல் எம்பெருமானுடைய திருமேனி திகழ்கின்றது.-பழைய ஸ்ரீ கோசங்களிலெல்லாம் ‘அணுகி
என்றே பாடமிருக்க, இங்கே”அணிதி” என்ற ஒரு பாடம் மேற் கொள்ளப் பட்டிருக்கிறது. ‘அணுகி’கிட்டி என்று அர்த்தம். பொருளும் பொருந்த வில்லை.-அன்வயமும் பொருந்த வில்லை. ‘தரித்து’ என்று பலாத்காரமாகப் பொருள் கொள்ள வேண்டியிருக்கிறது.
அணுகி’ என்ற வினை யெச்சத்தை மேல் வரும் அமர்ந்த’ என்றபதத்தோடாவது அல்லது ‘அடைதி’ என்ற பதத்தோடாவது அன்வயிக்க வேண்டும்.-இரண்டு பக்ஷங்களிலும் அர்த்த ஸ்வாரஸ்யம் குறைவாகவே இருக்கிறது. ‘அணிதி’ என்று வினைமுற்றாக வைப்பது பாசுர அமைப்புக்கும் ஒத்ததாக இருக்கிறது; பொருளும் தெளிவாக இருக்கிறது. அடைதி-“நிற்றி’ ‘வருதி” இன்புறுதி’ மிகுதி’ என்ற மேல் வாக்கியங்களின் போக்கைக் கவனித்தால் இதுவும்’அணிதி’ என்றே இருந்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது -32 அடியுள்ள பாசுரத்தில் 16 அடிகள் இத்துடன் முற்றுப் பெறுகின்றன. வினை முற்றே உசிதம் என்பதற்கு இதுவும் ஒரு காரணமாகும். மேல் வரும் அடிகளில் பஞ்ச ரூபங்கள் வர்ணிக்கப் பெறுகின்ற
விஷயம் வேறாகப் போகிறபடியால் அவற்றுடன் ஒட்டி அன்வயிக்க வேண்டிய ‘அணுகி’ என்னும் பாடம் அவ்வளவு ஸ்வாரஸ்யமாகத் தோன்ற வில்லை.
பாசுரத்தின் பிற்பகுதியில் பகவச் சாஸ்திரம் என்று கொண்டாடப் படுகிற பாஞ்சராத்ரத்தில் பரக்கப் பேசப்பட்ட எம்பெருமானுடைய பஞ்ச ரூபங்களைப் பேசுகிறார். முதலில் பர ரூபம்
விண்ணினுளமர்ந்த வியனுரு-விண்– பரமபதம், அதில் அமர்ந்த, வியன் -பெரிய, அல்லது பெருமை வாய்ந்த, அல்லது ஆச்சர்யமான, உரு-விக்ரஹம். இதுதான் பர வாஸு தேவ ரூபம் என்றும் ‘ஆதியஞ் சோதி யுரு‘ என்றும்-கொண்டாடப்படும் திவ்ய மங்கள விக்ரகம்.
அதனால் எண்ணிய ஈரிரண்டு உருக்களும் அடைதி-அதனால்-பர வாஸுதேவ ரூபத்தினால், எண்ணிய – ஸங்கல்பிக்கப்பட்ட, ஈரிரண்டு உருக்களும்-(வாஸுதேவன்,ஸங்கர்ஷணன், பிரத்யும்னன், அநிருத்தன் என்று பிரஸித்தமான) நான்கு வ்யூஹ ரூபங்களையும், அடைதி -அடைகிறாய். இவற்றின் குணம் கார்யம் முதலியவற்றை ஸ்வாமியின் ரஹஸ்ய க்ரந்தங்களிலிருந்து அறியலாம்.
இவ் வியூஹ ரூபங்களினுடைய அவாந்தர பேதங்களான கேசவன் முதலான பன்னிரண்டு ரூபங்களையும் அடுத்தபடியாகப் பிரஸ்தாவிக்கிறார். பன்னிருநாமம்-கேசவன்,நாராயணன்,மாதவன், கோவிந்தன், விஷ்ணு, மதுசூதனன்,திரிவிக்கிரமன், வாமனன், ஸ்ரீதரன், இருடீகேசன், பத்மநாபன், தாமோதரன் ஆகிய பன்னிரண்டு திருநாமங்கள்.-பல பல உருவாய்- இந்த நாமங்களுக்கு ஏற்பத் தனித் தனி பன்னிரண்டு ரூபங்கள் கொண்டு-என்னுரு எய்தி– என் சரீரத்தில் நெற்றி,வயிறு,மார்பு, உட்கழுத்து, வயிற்றின் வலப் புறம், வலது புஜம், வலக் கழுத்து, வயிற்றின் இடது புறம், இடது
புஜம்,இடக்கழுத்து, முதுகு, பிற்கழுத்து என்னும் ஸ்தானங்களில் முறையே சேர்ந்து.-எங்கும் எய்தி – கிழக்கு, மேற்கு, ஊர்த்வம்-(மேல்புறம்), தெற்கு, வடக்கு, தென் கிழக்கு, தென் மேற்கு,வட மேற்கு, வட கிழக்கு, கீழ்ப் புறம் என்ற எல்லாத் திசைகளிலும் சேர்ந்து.-நீ நிற்றி-நீ நிற்கிறாய். ஸ்வாமி அருளிச் செய்திருக்கும் ‘பன்னிரு நாமம் என்ற பிரபந்தத்தில் இவ் விரிவுகளெல்லாம் காணலாம்.

வியூஹங்களுக்கு அடைதி என்றும் பன்னிரு நாமங்களுக்கு ‘நிற்றி’ என்றும், அவதாரங்களுக்கு’வருதி‘ என்றும் பேசியவர் பர ரூபத்திற்கு அப்படி
யாதொரு வினைச் சொல்லும் உபயோகிக்காத அழகும் ரஸமும் அனுபவிக்கத்தக்கன –
விபவம், அர்ச்சை, அந்தர்யாமி என்ற மூன்று வகையான அவதாரங்களைப் பற்றி மேலடிகளில் பேசத் தொடங்குகிறார் . “மீனோடாமை” முதல் “கற்கியாய்” என்பது வரை விபவாவதாரங்கள்; “மற்றும்”தொடங்கி ” இங்குற வருதி” வரை அர்ச்சாவதாரங்கள்; அடுத்த இரண்டு அடிகள் அந்தர்யாம்யாவதாரத்தைப் பற்றியவை.-மீன்-மத்ஸ்யாவதாரம்; ஆமை – கூர்மாவதாரம்;கேழல் – வராஹாவதாரம்; கோளரி-நரஸிம்ஹாவதாரம் (கோள் – வலிமை, அரி – சிங்கம்) ; வானார் குறள் – ஆகாசம் நிறைந்த வாமனன் (குறள் – குள்ளன், வாமனன்); ‘வானார் குறள் ‘என்று திரிவிக்கிரம ரூபத்துடன் வாமனனையும் சேர்த்து இரண்டையும் ஒருசொற்றொடரால் பாசுரமிடும் அழகு கவனிக்கத்தக்கது. மழுப்படை முனி – பரசுராமன், (மழு =கோடரி, பரசு;படை – அதை ஆயுதமாக உடையவர்;பின்னும் இராமர் இருவராய் – ஸ்ரீராமனையும் பலராமனையும் சேர்த்துப் பேசுகிறார். ‘பின்னால்-என்பது முன் சொன்ன பரசுராமனும் ஒரு ராமனாயிற்றே என்ற எண்ணத்தால்.
பாரில் துன்னிய பரந்தீர் துவரை மன்னனுமாய்-கிருஷ்ணாவதாரம் ; இவ்வவதாரத்தில் ஸ்வாமிக்கு உள்ள விசேஷ ஈடுபாடு வாக்கியத்திலேயே தோற்றுகிறது. மேலும் பூமி ஒரு பசு வடிவங்கொண்டு அதர்ம மேலீட்டினால் தனக்கு ஏற்பட்ட துன்பத்தைத் தெரிவித்ததின் பேரில் ஸர்வேஸ்வரன் கிருஷ்ணாவதாரம் செய்தருளினான் என்கிற புராண ப்ரக்ரியையைத் திருவுள்ளத்தில் கொண்டு ‘பாரில் துன்னிய பரந்தீர்’என்று பாடப்படுகிறது. துன்னிய – நிறைந்த;பரம் -சுமை; துவரை – துவாரகை. கலிதவிர்த்தருளும் கற்கி– மேல் வரப் போகும் அவதாரம் ; கலியுகம் போய் கிருத யுகம் வரப்போவது அவர் அவதாரத்தாலே என்ற கொள்கையைக் காட்ட, ‘கலி தவிர்த்து’ என்று கூறப்பட்டிருக்கிறது.
“மற்றும்” என்று தொடங்கி எம்பெருமானுடைய அர்ச்சாவதாரங்களைப் பேசுகிறார். மத்ஸ்யம் கூர்மம் முதலிய விபவாவதாரங்களைப் போல இவைகளும் எம்பெருமானுடைய அவதாரங்களே ஆகிலும் அவைகளைக் காட்டிலும் இவை பல அம்சங்களில் வேறுபட்டவை என்பதைக் காட்ட ‘மற்றும்’ என்கிறார்.

மற்றும் மலிவதற்கு– இன்னும் அதிக ஸுலபனாகி எல்லோருக்கும் எளியவனாவதற்கு. ராம கிருஷ்ணாத்யவதாரங்களின் ஸௌலப்யமும் பரத்வம் என்னலாம்படி யன்றோ அவன் அர்ச்சாவதார ஸௌலப்யமிருப்பது . ஸர்வ ஸஹிஷ்ணுவாய் அர்ச்சக பராதீனமான அகில ஆத்ம ஸ்திதியை யுடைய இந்த அர்ச்சையின் ஸௌலப்யத்தை அநுஸந்தித்து மஹான்களெல்லாம் மனமுருகி மயங்குகிறார்கள் என்று பட்டர் ஸ்ரீரங்கராஜ ஸ்தவத்தில் வியந்ததை இங்கே நம்மாசார்யோத்தமன் ஸூசிப்பிக்கிறார்.
என்றும் வல்வினை மாற்ற -விபவாவதாரங்களைப் போல் தோன்றி மறையாமல் எப்போதும் ஸ்திரமாக நிற்கும் அர்ச்சா ரூபங்கள் ஒரு காலத்தில் மட்டும் அநுஸரித்தவர்களுடைய வினைகளைப் போக்கின என்றில்லாமல் என்றும் ஆஸ்ரிதர்களுடைய கொடிய வினைகளையும் போக்குவதற்காக என்று பொருள். பகவானுடைய திவ்ய மங்கள விக்ரஹம் ஸூபாஸ்ரயம் என்று கூறப்படுகிறது. பகவத் ஸ்வரூபம் போலன்றி த்யானத்திற்கு யோக்யமாயிருப்பதால் அது ஆஸ்ரயமாகிறது; பாபத்தைப் போக்குவதாகையால் ஸூபமாகவும் ஆகிறது. ‘திருவடி முதல் திருமுடி வரை புருஷோத்தமனது திவ்ய மங்கள விக்ரஹத்தை ஸேவித்தால் மஹாபாதகங்களெல்லாம் பறந்தோடிவிடும்’என்ற வசனத்தை நினைப்பூட்ட ‘வல் வினை மாற்ற என்று பேசப் பட்டிருக்கிறது.-இந்த வாக்கியத்தில் பல பாட பேதங்கள் காண்கின்றன. ‘‘நலிவதற்கெண்ணும் வல்வினை”, “மலிவதற்கெண்ணும் வல்வினை “, “நல்வினை ” என்றே சில பாடங்கள் உள. எல்லாவற்றையும் தூக்கிப் பார்த்து “மலிவதற்கு என்றும் வல்வினை மாற்ற”என்ற பாடமே யுக்தமென்று தீர்மானித்து அதுவேஇங்கு கொள்ளப்பட் டிருக்கிறது.
விபவாவதாரங்கள் பத்து என்று பொதுவாகச் சொல்லுகிறார்கள். அர்ச்சாவதாரங்களோ கணக் கற்றவை. அமைப்பும் வடிவமும் கூடப் பலவிதங்களாயிருப்பவை என்பதை “நானாவுருவம்” என்று காட்டுகிறார். பக்தனுடைய மனோ ரதத்திற்கு அநுகுணமாக வடிவங்களை ஸர்வேஸ்வரன் மேற் கொள்ளுகிறான்.
“தமருகந்ததெவ்வுருவம் அவ்வுருவம் தானே” என்று ஆழ்வார்கள் இதையே பாடுகிறார்கள். இப்படி அவன் பல்வேறு வடிவங்கள் எடுப்பது எதற்காக என்றால் “நல்லடியோர் வானார் இன்பம்-இங்குற.” ஆழ்வார்களுடைய அருளிச் செயல்களின் உயர்ந்த ரஹஸ்யம் இது. ‘விண்ணவர் வேண்டி விலக்கின்றி மேவும் அடிமை யெல்லாம் மண்ணுலகத்தில் மகிழ்ந்தடைகின்றனர்..நம்பண்ணமரும் தமிழ் வேத மறிந்தபகவர்களே ” என்று அதிகார ஸங்கிரஹத்தில் அருளிச் செயல்களுக்குள்ள பெருமை கூறப்பட்டிருக்கிறது. ஸ்ரீவைகுண்டத்தில் நித்ய ஸூரிகள் எந்த இன்பத்தை அடைகிறார்களோ, அந்த இன்பம்
(வான்= ஸ்ரீ வைகுண்டம், ஆர்= நிறைந்த), இங்கே தன்னை உபாஸிப்போருக்குக் கிடைக்கும்படி எம்பெருமான் அர்ச்சா ரூபத்தோடு எழுந்தருளி யிருக்கிறான் என்று பொருள். ‘நல்லடியோர்‘ என்பது அர்ச்சா ரூபங்களை உலோகத்தாலானவை என்று நினையாது இவை அப்ராக்ருதமான திருமேனிகளே என்ற தத்துவத்தை உணர்ந்து அவ்விதமே உபாஸிப்பவர்களைக் காட்டுகிறது.
வான் ஆர் இன்பம் இங்குஉற – பதங்களிலேயே வாசி தோற்றும்படி பாசுரம் பாடப்பட்டிருக்கிறது.-வானிலுள்ள இன்பம் மண்மிசை ஏற்படும்படி என்று ஒரு சேராச் சேர்த்தியைப் பேசுகிறார். அந்த இன்பத்தை இங்கே பெற்றவர்கள் தான், “இங்கே திரிந்தேற்கு இழுக்குற்றென்?” என்றும், “ஏரார் முயல் விட்டுக் காக்கைப் பின் போவதே” என்றும்,”இம்மைப் பிறவி செய்யாதே இனிப் போய்ச் செய்யும் தவம் தான் என் ” என்றும் பாட வல்லவர்களானார்கள். அந்தச் செந்தமிழாரணத்தின் வழியை யடியொற்றிய ஸ்வாமியின் ஸ்ரீஸூக்திகளில் இந்த மனோ பாவத்தைத் திரும்பத் திரும்பக் காணலாம்.

ஸ்வயம் ஸமுதிதம் வபு: தவ நிசாமயந்த: ஸதா வயம் த்ரிதர – நிர்வ்ருதிம் புவி முகுந்த விந்தே மஹி” என்றும், “முக்தாநுபூதிம் இஹ தாஸ்யதி மே முகுந்த:” என்றும்,’ஸத்யம் சபேவாரண-சைல – நாதவைகுண்டவாஸேபி ந மே பிலாவு : என்றும் இந்தச் சந்தமிகு தமிழ் மறையோன் அருளிச் செயல்களில் பல இடங்களில் காண்கிறோம்.
வருதி – அப்படி மெய்யன்பர்கள் பேரின்பம் அடையும்படி நீ இங்கே,வருதி – வருகிறாய், இதனால் உன் வரவுதான் அப்படிப்பட்ட பேரின்பத்தை அடைவிக்கிறது என்று தெரிகிறது.
இப்படி பரம் வியூஹம்,விபவம்,அர்ச்சை என்ற நான்கு ரூபங்களைப் பேசிவிட்டுக் கடைசியில் அந்தர் யாமி ரூபத்தைப் பற்றிப் பேசுகிறார்.

“திருவோடு ஒருயிர் உலகுக்கு என்னுநீ, ஏருயிரெல்லாம் ஏந்தி இன்புறுதி” என்று.
“என் திருமகள் சேர்மார்பனே என்னு மென்னுடை ஆவியே”‘என்று ஆழ்வார் ஆத்மாக்களுள் ஒருவரான தமக்குப் பிராட்டியோடு கூடிய பகவானே அந்தர்யாமி ரூபமாக இருக்கிறான் என்று அருளிச் செய்தது ஆத்ம வர்க்கங்கள் எல்லாவற்றுக்கும் துல்யம் என்பதை, “ஏருயிரெல்லாம் ஏந்தி” என்பதால் குறிப்பிடுகிறார். பிராட்டியும் நீயுமாக உலகனைத்துக்கும் ஓருயிராக இருக்கச் செய்தேயும், சேதனங்களுள் ஒவ்வொருவருக்குள்ளும் சூக்ஷ்மமான அந்தர்யாமி அவதாரமாக இருந்து அவர்களைத் தாங்கி அதனால் ஆநந்தமடைகிறாய். ஸ்வ ரூபத்தால் எல்லா வஸ்துக்களிலும் அந்த: பிரவேசம் செய்து நியமிக்கிறவன் திவ்ய மங்கள விக்ரஹத்துடன் ஒவ்வொரு ஆத்மாவுக்குள்ளும் எழுந்தருளி யிருக்கிறான் என்பது இங்கே கூறப்படுகிறது . பிரஜைகள் இடர்ப்பட்டு அம்மா’ என்று அழைத்தால் உடனே முகங்காட்டி ரக்ஷிக்க விரையும் வாத்ஸல்யம் நிறைந்த மாதா பிதாக்களைப் போல , என்றாகிலும் நம் பக்கல் இச் சேதனன் திரும்பிய போது அவனை ரக்ஷிக்க வேண்டுமென்ற ஆதரத்தினால் அந்தர்யாமி ரூபமாய் எழுந்தருளி யிருக்கிறான்.ஏருயிர்-விருத்தியடைகின்ற அல்லது-அழகிய உயிர்,அசேதனம் போலன்றிக்கே தர்ம பூத ஞாநத்தால் மேன்மேலெனப் பெருமையை அடைவது அல்லது ஜ்ஞாநாநந்த ஸ்வரூபத்தால் ஜடமான பொருள்களைக் காட்டிலும் அழகு பொருந்தியது. இந்த ஆத்ம வர்க்கங்களை யெல்லாம் தாங்கி.’ஓருயிரெல்லாம் ஏந்தி’ என்று சிலர் பாடம் கொள்வர். அதில் பொருள் நயமில்லாததோடு ஏந்தி -என்பதுடன் மோனையுமில்லாமல் போகிறது.திருவோடு சேர்ந்து நின்ற போதும் நீயும் அவளும் ஈருயிராயில்லாமல் ஒருயிராகவே விளங்குகிறீர்கள் என்றுகாட்ட ஓருயிர்’ என்று பேசப்பட்டிருக்கிறது. ஓர் – ஒன்றான, ஒப்பற்ற என்று பொருள்.-இன்புறுதி – நல்லடியோர் இன்பமுற வருதி,என்று கீழே சொல்லப்பட்டது. இங்கே ‘இன்புறுதி’ என்று அவனடையும் இன்பம் பேசப்படுகிறது.”தொண்டர் தங்கள் சிந்தையுள்ளே முளைத்தெழுந்த தீங்கரும்பு” என்றும், “மாசற்றார் மனத்துள்ளான்” என்றும் ஆழ்வார்கள் அனுபவித்த அனுபவங்களை யெல்லாம் திருவுள்ளத்தில் கொண்டு இங்கே இப்படி அருளிச் செய்கிறார்.யாவரு மறியாது எங்குநீ கரந்து- எல்லா வஸ்துகளுக்குள்ளும் நீ வியாபித்திருக்கிறாய்; ஆயினும் ஒருவருக்கும் புலப்படுவதில்லை.கரந்து-ஒளிந்து “உடல்மிசை உயிரெனக் கரந்து” என்றும் “பாலுள் நெய்யே போல் இவற்றுள் எங்கும் மறைந்துறைவாய் ‘என்றும் நம்மாழ்வார் அருளிச் செயல். இப்படி உள்ளே யிருக்கின்ற நீ வஸ்துக்களின் வெளியேயுமிருக்கிறாயே என்ற ஆச்சர்யத்தைப் பேசுகிறார்.”மேவுறச் சூழ்ந்த” என்று.-மே – மேன்மை; உற – ஏற்பட; சூழ்ந்து -வெளியே வ்யாபித்து. ‘உள்ளேயும் வியாபித்து வெளி யெங்கும் வியாபித்து ‘ நிற்கும் நிலை “அந்தர்- பஹி -சததஸர்வம் வ்யாப்ய நாராயண : ஸ்தித:” என்று உபநிஷத்தால் கொண்டாடப் பட்டபடியே இங்கேயும் கூறப்படுகிறது. இந்த ஆச்சரியமான நிலை உன் ஒருவனிடத்தில் தான் காணப்படுகிறபடியால் நீ அந்த வியப்பினால், மிகுதி -மேம்பட்டவனாகிறாய்.”ஆச்சர்யவத் பயதி” என்று கீதாசார்யன் பாராட்டும் ஆச்சர்யம் இங்கே ஸ்வாமிக்கு ஏற்பட்டிருக்கிறது. வியப்பினால் மிகுதி’ என்னும் பதங்களைப் பாசுரம் முழுவதிலும் கூறப்பட்ட பகவானுடைய ஆச்சர்யமான ஸ்வரூப ஸ்வபாவங்களைப் பற்றியதாகவும் வைத்துக் கொள்ளலாம். இத்துடன் இந்தப் பாசுரத்தில் வர்ணிக்கப்பட்ட எம்பெருமானின் இயல்பு முடிவடைகிறது. ஆகவே வியப்பில் முடிவது வியப்பில்லை. கொண்டிட எம்மை அடைக்கலம் உலகில் கண்டிலம் கதி உனையன்றி மற்றொன்றும்”மழையிலெழுந்த” என்று ஆரம்பித்து இருபத்தெட்டு வரிகளால் எம்பெருமானுடைய ஸ்வரூப ரூப குண விபவாதிகளை அனுபவித்து இப்படி ஸர்வ ப்ரகாரத்தாலும் மேன்மை பொருந்திய உன்னைத் தவிர எங்களுக்கு வேறு ரக்ஷகன் இல்லை என்று தம்முடைய நிர்ணயத்தை விண்ணப்பிக்கிறார்.அடைக்கலம் – ரக்ஷிக்கப் படவேண்டிய பொருள்.-எங்களை ரக்ஷிப்பதற்கு உன்னைத் தவிர வேறு ரக்ஷகன் இல்லை. இப்படி வேறு ரக்ஷகன் இல்லா நிலையே அநந்யகதித்வம்’ என்று கூறப்படுகிறது.பல்வகை நின்ற படியனைத்தும்-தொல்வகை காட்டும் துணிந்து தூமறையே.பல்வகைநின்ற = பலவிதங்களா யிருக்கும்,உன் படி யனைத்தும் – உனது ஸ்வரூப – ரூப – குண விபவாதிகள் எல்லாப் பிரகாரங்களையும், தொல்வகை = பழைமையான வழியில் துணிந்து காட்ட வல்லது பரிசுத்தமான வேதம் ஒன்று தான்.தூமறை – பரிசுத்தமான வேதம். இன்ன காலத்தில் இன்னார் இது செய்தார் என்றுசொல்ல முடியாதபடி அபௌருஷேயமாய், ‘எம்பெருமானுடைய மூச்சுக் காற்றுக்கள் தாம் வேதமாயின’ என்று சொல்லியபடி பரிசுத்தங்களான வேதங்கள். இங்கே தூமறை’ என்பதற்குத் தமிழ் மறை யென்ற பொருளும் கொள்ளலாம். இந்தப் பாசுரத்தின் ஆரம்பத்தில் வேதங்களை அருமறை என்று பிரஸ்தாவித்து, அதன் பொருளை ஆய்ந்தெடுக்க வேண்டும் என்றும் கூறியிருக்கிறார். இங்கே துணிந்து தூமறை காட்டும்’ என்ற பதங்களால் இது அந்த வேதங்களைக் காட்டிலும் வேறுபட்ட மற்றொரு வேதம் என்று கொள்ள வேண்டி வருகிறது. தவிரவும் யாதவாப்யுதயத்தில் உன்னுடைய ஒரு குணத்தின் ஒரு மூலையில் வேதங்களாகிற ஸ்துதி பாடகர்கள் ஓய்வடைந்து விட்டார்கள்’ என்று கூறியிருக்கிற ஆசார்யன் உனது பல்வேறு பிரகாரங்களையும் மறைதான், காட்ட வல்லது’ என்றால் இது மற்றொரு மறையாதல் வேண்டும். வடமொழி வேதம் எம்பெருமானை அணுக மாட்டாது, ‘அவனை அடையாது வாக்கு மனதுடன் திரும்பி விட்டது’ என்று தான் பேச வல்லதாயிற்று. கண்டேன்’ ‘கண்டேன்’என்று ஆழ்வார்களைப் போல உத்கோஷிக்க வேத வேதாந்தங்களால் இயலவில்லை. கண்டவர் தாமே காட்ட வல்லார். மாமலராள் தன்னொடு மாயனைக் கண்டமை காட்டுவது அவனைக் கண்ட ஆழ்வார்களின் அருளிச் செயலால் தானாகும்.மேலும் ‘துணிந்து’ என்பதால், அபெளருஷேயமான வேதமும் அசக்யம் என்று கைவிட்ட விஷயத்தைக் காட்ட முற்பட்டால் அது துணிந்து செய்யும் கார்யம் என்பது ஸுசிப்பிக்கப்படுகிறது.தொல்வகை காட்டும்’ என்ற பதச் சேர்த்தி வெகு அர்த்த புஷடியுள்ளது. காட்டும்போது, ‘இது புதிது புதிதாகக் கல்பிக்கப் பட்டது’ என்று தோற்றாமல் வேதங்கள் முன்சென்ற வழியே சென்று பார்க்கப்பட்டத்திது.’ என்று பார்ப்போர் மனத்தில் படும்படி காட்டுவது, “மதுரகவி தோன்றக் காட்டும் தொல் வழியே நல்வழிகள் துணிவார்கட்கே” என்ற அதிகார ஸங்கிரஹப் பாசுரச் சொற்றொடருடன், “தொல் வகை காட்டும் துணிந்து தூமறையே” என்பதைச் சேர்த்துப் பார்த்து ரஸிகர்கள் பல ரஸமான அர்த்தங் களையும் அனுபவிக்கலாம்.

————————

தூ மறையின் உள்ளம் துளங்காத் துணிவு தரும்
ஆம் அறிவால் ஆர்ந்து அடிமை ஆகின்றோம் பூ மறையோன்
பாராயணத்தில் பணியும் அயிந்தை நகர்
நாராயணனார்க்கே நாம் –5-

தூமறையின் – பரிசுத்தமான வேதத்தினுடைய
உள்ளம்- தாத்பரியம்
துளங்கா – ஸம்சயம் அடையாமல்
துணிவு தரும் – (நிச்சயம் இது என்ற)உறுதியான எண்ணத்தைத் தரும்
ஆம் அறிவால் -தகுந்த (வேதாந்த) விசேஷ ஞானத்தால்
ஆர்ந்து – நிறைந்து
அடிமையாகின்றோம் – (நாம்) தாஸர்களாக ஆகின்றோம். (யாருக்கு எனில்)
பூ மறையோன் – தாமரைப் பூவில் உண்டானவனும், எப்போதும் வேதாத்யயனம் செய்து கொண்டிருக்குமவனுமான ப்ரஹ்மாவினுடைய
பாராயணத்தில்- (வேத) பாராயணத்தில்
பணியும் – நமஸ்கரிக்கப்படும் (தெய்வமான) அயிந்தைநகர் – திருவஹிந்திரபுரத்தில் (எழுந்தருளி யிருக்கிறவனான )
நாராயணனார்க்கே-நாராயண சப்த ப்ரதிபாத்யனான எம்பெருமானுக்கே
நாம்-(அடிமையாகின்றோம் என்பதோடு அன்வயம்).

நாராயணனார்க்கே நாம்–அடிமை ஆகின்றோம்-என்று த்வயத்தில் ஸ்ரீ மதே நாராயணாய-சப்தார்த்தமும் துளங்காத் துணிவு-நம சப்தார்த்தமும் அருளிச் செய்கிறார் –

நான்காம் பாசுரத்தில் பெருமாளுடைய ஸ்வரூப ரூப குண விபவங்களை உபய வேதாந்தங்களும் கொண்டாடும்படியை விரிவாய்ப் பேசி ஐந்தாவதானஇப் பாசுரத்தில் அப்படிப்பட்ட எம்பெருமானோடு நமக்கு உணர வேண்டிய ஸம்பந்தத்தை உபபாதிக்கிறார்.நாம் அவனுக்கு அடிமையாகிறோம். இதுவும் நமக்கு உபய வேதாந்தம் காட்டிக் கொடுக்கும் ஓர் அர்த்த விசேஷம் என்பது இப் பாசுரத்தின் திரண்ட பொருள். இப்பாட்டில் ஸ்தல புராணமும் ஒருவாறு ஸுசிப்பிக்கப்படுகிறது.

“தூ மறை துணிந்து காட்டும்” என்றார் கீழ்ப்பாட்டில் ; இதில் காட்டுவதோடு நில்லாமல், நல்ல அர்த்தங்களை அறிந்து அனுஷ்டிக்க வேண்டிய துணிவையும் அது நமக்கு அளிக்கிறது என்கிறார்.
உள்ளம் ஹ்ருதயம். தூமறையின் உள்ளமாவது வேதாந்தங்களின் உண்மையான தாத்பரியம்.
இது ஆமறிவு –
இதுவாகிற, அல்லது, இத்தால், ஏற்படும் அறிவு; ‘ஆம்’ என்பது ‘அல்ல’ என்பதற்கு எதிர்ச் சொல்லாய்,’உண்டு’ என்கிற ஆஸ்திக்ய புத்தியைச் சொன்னபடி யாயினுமாம். அதாவது ஒன்றும் இல்லை’ என்று கூறும் ஸித்தாந்தங்களைத் தவிர்ந்து
எல்லாம் உண்டு – தெய்வம் உண்டு,-அதற்குக் கல்யாண குணங்களும் உண்டு’ என்று பேசும் அறிவாளிகளின் ளித்தாந்தத்தைச் சேர்ந்து,என்று பொருள்.
ஆஸ்திக்ய புத்தி தான் துளங்காத் துணிவைத் தரக் கூடியது.
‘உள்ளம் துளங்காத் துணிவு தரும் தூ மறையின் ஆமறிவால்’
என்று அன்வயித்தும் பொருள் கொள்ளலாம் எனத் தோன்றுகிறது. அநாதிகாலமாக ஸம்ஸரித்துப் போந்து மீண்டும் நமக்கு என்ன துர்க்கதிகள் வருமோ என்று துளங்கும்(அஞ்சும்) நமக்கு அவ் வண்ணம் அஞ்ச வேண்டாதபடி வேதாந்தங்களின் ஹ்ருதய ஸ்தானங்களான தத்துவ ஹித
புருஷார்த்தங்களின் அறிவால் (ஞானத்தால்) ஆர்ந்து(நிறைந்து) நமக்கு ஸ்வாமியான ஸர்வே வரனுக்குத் தாஸபூதர்களாகக் கடவோம் நாம்.
தூமறையை ‘ஸம்ஸ்கிருத வேதமாகக் ‘ கொண்ட போது தூமறை யனைத்தும் பார்த்தால் கலக்க மேற்படக் கூடுமெனினும் அதன் உள்ளத்தைப் பார்த்த போது துளக்கம் நீங்கித் துணிவு (ஸநிச்சயம்) ஏற்படும் என்று பொருள் கொள்ளுதலும், தூமறையைத் தமிழ்மறையாகக் கொண்டபோது உள்ளம் துளங்காத் துணிவு தரும் தூமறையின் ஆமறிவு என்று அன்வயித்து ‘மிகுந்த தெளிவுடன் அருளிச் செயல்கள் காட்டிக் கொடுக்கும் அர்த்த விசேஷம்’ என்று பொருள் கொள்ளுதலும் உசிதம்.ஆர்ந்து நிறைந்து; அல்லது மகிழ்ந்து அநுபவித்து.அறிவால் ஆர்ந்து- அறிவு நிறைந்து அடிமையாகின்றோம்; அல்லது அறிவால் மகிழ்ந்து(அனுபவபூர்த்தியோடு) அடிமையாகின்றோம். இவனுக்கு அடிமைத் தொழில் செய்வதிலும் இனியது வேறில்லை என்ற ஞானத்துடன் அடிமையாகின்றோம். “அங்கணாயகர்க்கு இன்று அடிமைத் தொழில் பூண்டாயே” என்று கொண்டாடத்தக்க நிலையாயிற்றே அது.அடிமை யாகின்றோம் – நமது சேஷத்துவமும் அவனுடைய சேஷித்துவமும் நமது ஸம்பிரதாயத்தின் முக்கியமான அர்த்தங்கள். சேதனன் சேஷத்வத்தை வஹித்த போது தாஸனாகிறான். அப்போது சேஷி ஸ்வாமி யாகிறான். இளையபெருமாள் அனுஷ்டித்துக் காட்டிய தாஸ்யம் (அடிமை) தான் இங்கே காட்டப்படுகிறது. ஸ்ரீ வைஷ்ணவ ஸித்தாந்தத்தின் அடிப்படையான இந்த தாஸ்யம் தான் ஆழ்வார் ஆசார்யர்கள் ஸ்ரீஸுக்திகளில் பரக்கப் பாராட்டப்பட்டிருக்கிறது. அடிமையாகின்றோம் என்று தாஸ வர்க்கங்களை முற்பாதியால் பேசிப் பாசுரத்தின் பிற்பாதியில் அவ்விதம் அடிமை கொள்ளுமவனான ஸ்வாமியின் நிலையைப் பேசுகிறார்.
பூமறையோன் . . நாராயணனார்
என்று.-பூவிலுதித்தவனும் மறையை இடைவிடாது சொல்லி வருபவனுமான ப்ரஹ்மா பணிகிறான். இத்தால் எம்பெருமானுடைய மேன்மை சொன்னபடி.
நாராயணனார்- அவன் ஸர்வத்துக்கும் இருப்பிடம் என்றும் ஸர்வத்தையும் இருப்பிடமாக உடையவன் என்பதும் இத்தால் கூறப்படுகிறது. இவன் இருக்குமிடம் அயிந்தைநகர்.நமக்கு ஸ்வாமி யானவன் நம்மை-அடிமை கொள்வதற்காகவே அமர்ந்த அயிந்தை. பாராயணத்தில்- பாராயண காலத்தில் அல்லது பாராயணத்தால் -பாராயணம் செய்வதால் . பாராயணம் செய்யுமவர்கள் அவரவர்கள் இஷ்ட தேவதையைப் பணிந்து பின்னரே பாராயணத்தைத் தொடங்குவது மரபு. இங்கே ப்ரஹ்மா பாராயணம் செய்யும் போது பணிவது அயிந்தை நகரை அலங்கரிக்கும்தேவநாதனையே தான் என்று காட்டப்படுகிறது.
இங்குப் ‘பாராயணம்’ என்ற சொல்லை உபயோகித்ததால் அர்த்த ஜ்ஞானமோ அநுஸந்தானமோ இல்லாமல் பாராயணத்தை மட்டும் செய்வதும் மிக்கபயனளிக்குமென்று தெரிகிறது.
‘பணியும்’ என்னும் சொல் ‘நாராயணனார் ?என்னும் சொல்லோடு மட்டுமில்லாமல் ‘அயிந்தைநகர்’ என்பதோடும் அந்வயிக்குமாறு அமைக்கப் பட்டிருக்கிறபடியால் வேறொரு பொருளும் தோற்றுகிறது. ‘பூமறையோன் பாராயணத்தில் பணியுமயிந்தைநகர்” என்று நகரைப் பிரமன் பணிகிறான் என ஓர் பொருளையும் கவி உத்தேசித்தே யிருத்தல் வேண்டும். ஏனெனில் திருவயிந்திரபுர ஸ்தல புராணத்தில் ப்ரஹ்மா சவ்கந்திய வனம் என்றபேர் கொண்ட இந்த ஸ்தலத்திற்கு வந்த போது ஓர்அசரீரி வாக்கு ஏற்பட்டதாகவும் அதன் சொற்படி இவ்வூரில் தவமிருந்து பெருமாளை ஸாக்ஷாத்கரித்துத் தமது லோகத்தை மீண்டும் அடைந்ததாகவும் சொல்லப்பட்டிருக்கிறது. இதை யொட்டி அங்கே யிருக்கும் மலைக்கு ப்ரஹமாசலம் என்று பெயர் வழங்குகிறது . ஸ்வாமியும் “ப்ரஹமாசலே ச பஹு மாந – பதே முநீநாம்” என்று அனுஸந்தித்திருக்கிறார்.
நாராயணனார்க்கே-இந்த ஏ’ காரத்தின் பெருமை சொல்லுந்தரமன்று. “உனக்கே நாம் ஆட்செய்வோம்” என்ற நாச்சியார் அருளிச் செயலின் ரஸம் முழுவதையும் காட்ட வேண்டி “நாராயணனார்க்கே நாம் அடிமை யாகின்றோம்” என்று அதை மொழி பெயர்த்தருளிச் செய்தபடி. நமது அநந்யசரணத்வம் (வேறு புகலில்லாமை) இதனால் வெளியாகிறது.
நாம்=அடிமைப்பட்டவுடன் பெருமை உண்டா கிறதென்று சொல்லிலேயே விளங்குகிறது.
அடியோம்’ என்ற அநுஸந்தானம் நிற்க இங்கே அவனுக்கு அடிமைப்பட்டதால் ஏற்பட்ட ஸாத்துவி அஹங்காரம் பிரகாசிக்கிறது.

————

ஆர்க்கும் கருணை பொழிவான் அயிந்தையில் வந்து அமர்ந்த
கார்க் கொண்டலைக் கண்ட காதல் புன்மையில் கண் பனியா
வேர்க்கும் முகிழ்க்கும் விதிர்விதிர்க்கும் வெள்கி வெவ்வுயிர்க்கும்
பார்க்கின்றவர்க்கு இது நாம் என் கொல் என்று பயிலுவமே –6-

ஆர்க்கும் – யாருக்கும், அதாவது யாவருக்கும்,(எல்லோருக்கும்)
கருணை பொழிவான் – கிருபையை வர்ஷிக்க வேண்டி அல்லது வர்ஷிப்பானொருவனாகி
அயிந்தையில் வந்து அமர்ந்து கார்க் கொண்டலைக் கண்ட-திருவயிந்திரபுரத்தில் வந்து அங்கே ஸ்திரமாகத் தங்கிய கருமை நிறம் கொண்ட மேகத்தை பார்த்த (கார்மேக
வண்ணனான தேவநாதனை ஸேவித்த என்றபடி)
காதல்-(அதனால்)காதலை யடைந்த
புனமயில் – காட்டிலுள்ள மயில் ( இங்கே மயிலின் அழகை யுடைய இந்தப் பெண்)
கண் பனியா – கண்ணினின்றும் நீர்த்துளி அரும்பா நின்று கொண்டு
வேர்க்கும் – உடல் முழுவதும் வேர்க்கப் பெறுவாள் ;
முகிழ்க்கும் – மயிர்க்கூச்செறிவாள்;
விதிர் விதிர்க்கும் – நடுநடுங்குவாள்;
வெள்கி- வெட்கத்தை யடைந்து
வெவ்வுயிர்க்கும் -வெப்பமான பெரு மூச்சு விடுவாள்;
பார்க்கின்றவர்க்கு இது என்கொல் என்று
(இந்தப் பெண்ணின் இத்தகைய அவஸ்தைகளைப்)-பார்க்கின்றவர்களுக்குத் தான்
இந்த நிலைமை என்ன என்று? நாம் பயிலுவம் – நாம் சொல்லக் கடவோம்(இன்ன தென்று சொல்லத் தெரிய வில்லையே என்றபடி)

தலைவின் நிலைமை கண்டு தோழி இரங்கிப் பேசுதல்
ஸ்வாபதேசப் பொருளில் -ஸ்வாமி உடைய பகவத் அனுபவ ஆர்வ மிகுதியையும்
அது கிடைக்கப் பெறாத நிலைமையில் படும் பாட்டையும் கண்டு பாகவதர்கள் வியந்து கூறியதாய்க் கொள்ளலாம்

“கண்டு வணங்கினார்க்கு என்னாங் கொல்” ‘பெருமாளை நேருக்கு நேராகக் கண்டு ஸேவிப்போர் தசை என்னவாகும்?” என்று திருமழிசை யாழ்வார் ஒரு பாசுரத்தில் கேட்கிறார். அதற்கு ஸ்ரீமந் நிகமாந்த தேசி கன் இந்தப் பாசுரத்தில் ஸமாதாநம் சொல்லுகிறார் போலும். ‘பூயோபூய? புளக நிசிதை:“என்று தொடங்கும் ஸ்ரீ வரதராஜபஞ்சாசத் ஸ்லோகத்தை இதனுடன் ஒப்பிட்டடுப் பார்க்க வேண்டும்.
“சாஸ்திர- ஐந்ய- தத்துவ ஜ்ஞான – கர்ம யோகாதி பரம்பரையாலே பிறந்த பரபக்தியானது ஸாக்ஷாத்கரிக்க வேண்டும் என்கிற அபிநிவேசத்தை யுண்டாக்கி, “காணுமாறருளாய் ‘ என்று விலபிக்கும்படி பண்ணி, இவ் வபேக்ஷா மாத்ரமடியாக வந்த பகவத் ப்ரஸாத விசேஷத்தாலே தத் கால நியதமான பரிபூர்ண ஸாக்ஷத்காரத்தை யுண்டாக்கும். இஸ் ஸாக்ஷாத்காரம் பரஜ்ஞானம் என்று பேசப்பட்டது. ” இவை ஸ்ரீமத் ரஹஸ்ய த்ரயஸார பங்க்திகள் . அந்த பரஜ்ஞான தசையைச் சித்திரிக்கிறது இப்பாசுரம்.-பிராட்டியைச் சரணமடைந்து, ஸாத்விக த்யாக புரஸ்ஸரமாகப் பெருமாளுடைய ஸ்வரூப ரூப குண விபவாதிகளை யெல்லாம் உள்ளபடி அறிந்து, ஆகமம் காட்டியபடியே உணர்ந்து,அவனுக்கு அடிமையானதின் பலனாக ஸ்ரீ தேவநாதன் ஸ்ரீ தேசிகனுக்குத் தன் வடிவழகைக் காட்டிக் கொடுக்க, அதனால் உண்டான அனுபவம் மேலிட்டு ஒரு பிராட்டி (நாயிகா)
தசையை யடைந்து அந்த அனுபவங்களை யெல்லாம் இப்பாசுரத்தால் பேசுகிறார்.
காட்டில் ஸ்வேச்சையாக ஸஞ்சரிக்கும் மயில் மேகத்தைக் கண்டதும் மிகக் களித்துத் தோகையை விரிப்பது நர்த்தனம் செய்வது இவை போன்ற பல செய்கைகளைச் செய்யும். அதுபோல் இந்த மயில் போன்ற ஸ்திரீயும் எம்பெருமானாகிய கார்மேகத்தைக் கண்டு பலபடியான நிலைகளை அடைகிறாள். மயிலைப் போல் அழகுடைமை பற்றி அத்தகைய உத்தம ஸ்திரீகளை ‘மயில்’ என்று பேசுவது முறை.புனம் என்றால் காடு. புன மயில் என்றால் காட்டில் தன்னிச்சையால் விஹரிக்கும் மயில் என்று பொருள் . ‘புனமயிலே! போதராய்” என்ற ஆண்டாள் அருளிச் செயலை நினைப்பது. இங்கே “காதல் புனமயில்”-காதல் என்னும் காட்டிலே ஸஞ்சரிக்கும் மயில் போன்ற ஸ்திரீ.-இவள் கண்டது கார்க் கொண்டல், அதாவது மழை காலத்து மேகம் ; வெளுத்த மேகமாயிராமல், நீருண்டு கறுத்து அழகாயிருக்கிறது. மேகங்கள் மலையினிடத்தே தங்கும். இங்கே ஓஷதாத்ரி என்னும் மலையை யுடைய அயிந்தையில் வந்து அமர்ந்ததாம் இந்தக் காளமேகம். மேகங்கள் வந்தவுடன் மழைபெய்யும். அவ்வண்ணமே இந்தக் காளமேகமும்கருணையை வர்ஷிக்கிறது. மழை எல்லோருக்கும் பெய்யும் என்று பிரஸித்தம். அப்படியே இந்தக் கருணை மழையும் இன்னார் இனியார் என்று வித்தியாஸம் பாராமல் யார்க்கும் பொழியும். ‘ஆர்க்கும்’ என்ற பதத்திற்கு யாவருக்கும்? என்றும் ‘சப்திக்கும்’ என்றும் பொருள்களைக் கொள்ளலாம். ‘ஆர்க்கும்.கார்க் கொண்டல்’ “வலம்புரி போல் நின்றதிரும்”-இடி முழக்கத்துடன் கூடிய மேகம் என்று அர்த்தமாகிறது. ஆர்க்கும் கருணை பொழிவான் வந்தமர்ந்த’ என்ற சொற்றொடரால் எல்லோருக்கும் தனது க்ருபையை வர்ஷிப்பதற்காகவே வந்து அமர்ந்த படியைக் கவி கூறுகிறார்.இந்த ஆறாவது பாசுரமும் நாயிகா பாவத்தில் அமைந்திருக்கிறது என்பது முன்னமே சொன்னோம். ஸ்ரீதேவ நாதனை ஸேவித்த ஒரு பெண்ணின் தசையைக் கவி வர்ணிப்பதைத் தமிழ் மரபை யொட்டி அவள் தாயார் பேசுவதாக வைத்து இப் பாசுரம் அவதரித்திருக்கிறதாயும் கூறுவர். அப்படியாயின்”நங்கைமீர் நீரும் ஓர் பெண் பெற்று நல்கினீர்,எங்ஙனே சொல்லுகேன் யான் பெற்ற ஏழையை”என்ற நம்மாழ்வார் அருளிச் செயலைப் பின் பற்றியதாகக் காண்கிறது இந்தப் பாசுரம். ‘நான் என்ன வென்று சொல்லுவேன் இவளுடைய அவஸ்தைகளை’என்பதுதான் இரண்டு பாட்டுக்களின் போக்கும்.

அவன் கார்க்கொண்டல்; இவள் காதற் புனமயில். காண்போர் தாபத்தைப் போக்கும் குளிர்ந்த திருமேனியும் அதன் அழகும் அவன் விஷயத்தில் பிரஸித்தங்களாயிருக்குமாப் போலே இவளுடைய காதலும் (பக்தியும்) பிரஸித்தம்.
ஆசைக்கு விஷயமான நாயகனை ஆசையை யுடைய நாயகி நேருக்கு நேராகக் கண்டால் படும் பாடுகளை மேல் வர்ணிக்கிறார்.
கண் பனியா வேர்க்கும் – கண்களில் நீர்த் துளிகள் அரும்பிப் பனித் திவலைகள் போல் பிரகாசிக்கின்றன.
“புண்டரீக பலாமாப்யாம் விப்ரகீர்ணம் இவோதகம்” என்று இந்த அழகைத் திருவடி அனுபவிக்கிறார்.
பனியா – பனிப்ப. பனியைச்-சொன்னபடியால் குளிர்ச்சி சொல்லப்பட்டது. ஆனந்த பாஷ்பம் குளிர்ந்திருக்கும். வேர்க்கும் – கண்கள் தாம் நீரைப் பெருக்குகின்றன வென்றால், உடல் முழுது ம்கூட வேர்வை விடுகிறது.
முகிழ்க்கும்-மயிர்க்கூச்செறிகிறது. இது புதிதாக ஏற்பட்ட ஸம்ஸ்லேஷ அனுபவத்தைக் காட்டுகிறது.“நவ – ஸங்கம – ஸவ்ரீடா:”-புதிதாக ஏற்பட்ட ஸங்கமத்தாலே நாணமுற்ற நாயகியினுடைய லக்ஷ ணங்கள் இவை எல்லாம்
விதிர் விதிர்க்கும்-நடுநடுங்கும்; இன்ப மேலீட்டினால் நடுங்கும். அல்லது அவன் பெருமையையும் தன் சிறுமையையும் எண்ணி நடுங்கும் என்றாயினுமாம்
வெள்கி வெவ்வுயிர்க்கும் -வெட்கிப் பெரு மூச்சு விடும். வெட்கமும் தன் நிலைமையை எண்ணியே.-அதாவது எல்லா விதத்திலும் கீழ்ப்பட்டவளான தன்னை எல்லா விதத்திலும் மேற் பட்டவனான ஸர்வேஸ்வரன் விரும்பி வந்து ஸம்ஸ்லேஷம் கொடுத்துப் பெறாப்
பேறு பெற்றானாய் நிற்பதைக் கண்டு இப் பெண் வெட்கமடைகிறாள் என்றபடி.
த்வய்யச்-யுதவிசதி சித்தம் அபத்ரபம் மே” என்றும் “நாணமில்லாச் சிறுதகையேன் நான் இங்கலற்றுவதென்” என்றும், “மாம் அலஜ்ஜம்” என்றும் அவனை ஆசைப்படுவதெல்லாம் வெட்கங்கெட்ட தன்மையைக் காட்டுகிறதென்று அனுஸந்திப்பது இயல்பு.

அவனை நேருக்கு நேராகக் கண்ட போது,
“ஆடிக் காண்பன் பாடி யலற்றுவன் தழுவல்வினையால் பக்கம் நோக்கி நாணிக் கவிழ்ந்திருப்பன்” என்று ஆழ்வார் அனுசந்தித்த படியே நாணம் மேலிடுவதும்
ஸஹஜம். இங்கே இந்தப் பெண்ணும் பெருமாளை ஸேவித்த போது முதலாக இன்பத்தை நுகர்ந்து பிறகு தன்னிலையை யெண்ணி வெட்கிப் போய் நமக்கு இவன்
எப்படி பதியாகப் போகிறான் என்கிற ஏக்கத்தால்-வெவ்வுயிர்க்கும் -உஷ்ணமான நீண்ட பெருமூச்சு விடுகிறாள். இந்தப் பாசுரத்தில் அவனைப் பெற்றதாலுண்டான ஸம்ஸ்லேஷாநந்தமும் அவனைப் பெறாது போய் விடுவோமோ என்று நினையும் போது ஒரு நடுக்கமும் ஒருங்கே தோற்றக் கிடக்கின்றன. இத்தகைய பாசுரங்களை அவரவர்கள் தந்தாம் உள்ளத்தில் இட்டு அனுபவித்து அர்த்தம் காண வேண்டுமே யன்றி ஒருவர் உணர்த்த உணரற்பாலதன்று. ஆசார்யோத்தமன் எம்பெருமானை அனுபவித்து, அவ்வனுபவத்தால் உண்டான பிரீதியின் பரீவாஹமாக அனுபவித்தபடியே பேசின பாசுரம் இது என்று சொல்லவும் வேண்டுமோ?“இப்படி இவள் அடையும் தசைகளை யெல்லாம் பார்க்கின்ற அயலார் ‘அவை என்ன? என்று கேட்கிறார்கள். நான் என்ன சொல்வது? உலகத்திலே காணும் நடத்தைக்கு மாறாக உள்ள இந்தத் தசைகளை நான் என்ன வென்று எடுத்துரைப்பது?” என்ற வினாவில் பாசுரம் முடிகிறது.
பக்த்யதியத்தால் பெரியோர்களுக்கு உண்டாகும் அனுபவங்களும் ஏற்படும் நிலைகளும் பிறருக்கு விளங்கா. அவற்றைக் கண்டு அதிசயிக்கும் உலகோரை நோக்கி ஆழ்வாரும் “என் நெஞ்சினால் நோக்கிக் காணீர்” என்றே சொல்ல வல்லவரானார். ஆக ஆழ்வார் தேசிகன் இவர்கள் தசை நமக்கு வந்த போதே நாம் இவற்றை யறிய வல்லோம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

————————

பயின மதி நீயே பயின மதி தருதலின்
வெளியும் நீயே வெளியுற நிற்றலின் –தேஜஸ் ஸூ ம் நீயே சகல வஸ்துக்களும் உன்னால் பிரகாசம் அடைவதால்
தாயும் நீயே சாயை தந்து உகத்தலின் –சாயை -திருவடி நிழலை
தந்தையும் நீயே முந்தி நின்று அளித்தலின்
உறவும் நீயே துறவாது ஒழிதலின்
உற்றது நீயே சிற்றின்பம் இன்மையினால்
ஆறும் நீயே யாற்றுக்கு அருள்தலின்
அறமும் நீயே மற நிலை மாய்த்தலின் –மற நிலை -பாபங்களின் நிலையை
துணைவனும் நீயே இணையிலை யாதலின்
துய்யனும் நீயே செய்யாள் உறைதலின் –துய்யன் -பரிசுத்தன்
காரணம் நீயே நாரணன் ஆதலின்
கற்பகம் நீயே நற்பதம் தருதலின்
இறைவனும் நீயே குறையொன்று இலாமையின்
இன்பமும் நீயே துன்பம் துடைத்தலின்
யானும் நீயே என்னுள் உறைதலின்
எனது நீயே யுனதன்றி இன்மையின்
நல்லாய் நீயே பொல்லாங்கு இலாமையின்
வல்லாய் நீயே வையம் உண்டு உமிழ்தலால்
எங்கனம் ஆகும் மெய்ய நின்னியல்பே
யங்கனே ஒக்க வறிவது ஆரணமே –7-

பயின்மதி தருதலின்-மேன்மேல் வித்யை முதலியவற்றைக் கற்கும் புத்தியைத் தருவதால்
பயில்மதி நீயே-சிக்ஷையினால் வரும் புத்தி யென்று சொல்லக் கூடியவன் நீ தான்.
வெளியுற நிற்றலின்(எனக்கு) புறம்பே யுள்ள வஸ்துக்களாய் நிற்பதால்
வெளியும் நீயே-வெளிப்பட்ட வஸ்துவும் நீ தான்.
சாயை தந்து உகத்தலின்-நிழலைக் கொடுத்து அதனால் ஸந்தோஷம் அடைவதால்
தாயும் நீயே – எனக்குத் தாயும் நீ தான்.
முந்தி நின்று – முன்பே வந்து நின்று
அளித்தலின் – கொடுத்துக் காப்பதால்
தந்தையும் நீயே – எனக்குப் பிதாவும் நீயே.
துறவாது ஒழுகலின்-(ஒருகாலும்) கை விடாத நிலையை யுடையவனாகையால்
உறவும் நீயே – (ஸர்வவித)பந்துவும் நீயே.
சிற்றின்பம் இன்மையின்- நீ சிற்றின்ப மில்லாமையால்
உற்றதும் நீயே – எனக்கு வகுத்த புருஷார்த்தமும் நீதான்.
ஆற்றுக்கு – (ஒரு பயனைப் பெற அனுஷ்டிக்கும்)
அருள் தலின் – பலனை அளிப்பதால்
உபாயத்திற்கு ஆறும் நீயே – (உண்மையில்) உபாயம் என்பது நீ தான்.
மற நிலை – அதர்ம வழிகளை
மாய்த்தலின் -ஒழித்தலால்
அறமும் நீயே – உண்மையான தர்மம் நீயே.
இணை யிலையாதலின்- உனக்குச் சமமானவர் வேறெவரு மில்லாத படியால்
துணைவனும் நீயே – உற்ற துணைவனும் நீயே.
செய்யாள் – பெரிய பிராட்டியார்
உறைதலின்- (உன்னிடத்தில்) நித்தியமாக வஸிப்பதால்
துய்யனும் நீயே – பரம பரிசுத்தனும் நீயே.
நாரணன் ஆதலின் -நாராயணன்’ என்னும் சொல்லால் கூறப்படுபவனாதலால்
காரணம் நீயே – (எல்லா வற்றுக்கும்) காரணம் நீ தான்.
நற்பதம் தருதலின் – நல்ல உயர்ந்த வாழ்வைக் கொடுப்பதால்
கற்பகம் நீயே – கற்பக வ்ருக்ஷம் நீ தான்.
குறை ஒன்றிலாமையின்- ஒருவிதமான குறைவும் இல்லாதவனாகையால்
இறைவனும் நீயே–(எல்லோருக்கும்) மஹாராஜனும் நீயே.
துன்பம் துடைத்தலின்–துன்பத்தைப் போக்குவதால்
இன்பமும் நீயே–இன்பம் எனப்படுவதும் நீதான்
என்னுள் உறைதலின்–எனக்குள்ளே அந்தராத்மாவாக வஸிப்பதால்
யானும் நீயே– ‘நான்’ என்று கூறப்படும் ஆத்ம வஸ்துவும் நீயே.
உனதன்றி யின்மையின்.-உன்னுடைய தல்லாமல் (உலகில்) வேறு ஒரு பொருளும்
இல்லாமையால்
எனதும் நீயே-என்னுடையது என நான் அபிமானிக்கும் பொருளும் நீ தான்.
பொல்லாங்கு இலாமையின் -ஒருவிதத் தீங்கும் (உன்னிடம்) இராமையால்
நல்லாய் நீயே – நீ தான் நல்லவன்.
வையம் உண்டு உமிழ்தலின்-உலகத்தை எல்லாம் (ப்ரளய காலத்திலே) விழுங்கி
(ஸ்ருஷ்டி காலத்தில்) உமிழ்வதால்
வல்லாய் நீயே – (மிகுந்த) சக்தியுள்ளவன் நீயே.
மெய்ய!- (அடியவர்க்கு) மெய்யனே!
நின்வியப்பு ஏ – உன் ஆச்சர்யமான தன்மை
எங்ஙனம் ஆகும் – எவ் வண்ணம் ஆகுமோ
அங்ஙனமே ஒக்க – அவ் வண்ணமே பொருந்துமாறு
அறிவது- உணர வல்லது
ஆரணமே – வேதம் ஒன்று தான்.

தெய்வ நாயகன் எதிரே வந்து உம்மோடு அணையாது வாழ இருப்பது அர்ச்சாவதாரம் என்பதால் என்று சமாதானம் செய்து மேலும் சில குணங்களைக் காட்டி அருள அவற்றை அனுபவித்து பேசுகிறார் –

எம்பெருமானுடைய ஸ்வரூப ரூப குண விபவாதிகளை யெல்லாம் தூ மறை காட்டியபடியே தாம் கண்டதை நான்காவது பாட்டிலே பேசிய ஆசார்யன் அடுத்த அகவலான இந்த ஏழாவது பாசுரத்தில் உலகிலுள்ளவை யெல்லாம் அவனே என்று அற்புதமான அவனது பெருமையை அனுஸந்திக்கிறார்.
பயின்மதிநீயே பயின்மதி தருதலின்-‘பயிலுதல்? என்ற சொல்லுக்கு சொல்லுதல், அப்யஸித்தல் அல்லது பழகுதல் என்று பொருள். மதியாவது ஞானம். இது ஆத்மாவுக்கு ஸ்வரூபமாகவும் குணமாகவும் இருக்கிறது.(ஜ்ஞாநாநந்த மயஸ்வாத்மா). மேன்மேலும் பயின்று (பழகி) விருத்தி யடையக் கூடிய ஞானத்தை இவ்வாத்மாவுக்கு நல்குகிற
படியால் அந்த ஞானமும் நீயே.உன்னையே ஞானம் என்று சொல்ல வேண்டும் என்று கொண்டாடுகிறார்.”பயில்மதி தருதலின்” என்பதில் ‘பயில்மதி’யை எழுவாயாகக் கொண்டு,”தாமரையாள் கேள்வன்-ஒருவனையே நோக்கும் உணர்வு ” என்கிறபடி மதி உன்னையே காட்டிக் கொடுக்கிற படியால் ஞானத்தின் பயனான உன்னை யன்றி யாரை ஞானம்’ என்று சொல்லலாம் என்றும் பொருள் கொள்ளலாம். ‘மதி’ என்பதற்கு ‘சந்திரன்’ என்றும் பலர் பொருள் கொண்டிருக்கின்றனர். ‘மநோ மய’: என்பதற்கு மனத்தால் அறியக் கூடியவன் என்பது போல ‘மதி’ என்பதற்கு ஞானத்தால் உணரப் படுகிறவன் என்றும்
பொருள் கொள்ளலாம்.வெளியும் நீயே வெளியுற நிற்றலின் – மதி அல்லது
‘ஞானம்’ என்னும் சொல்லால் உணர்த்தப்படும் ஆத்மா நீ என்றார்; இங்கு அதற்குப் புறம்பான ஸகல வஸ்துக்களும் நீயே என்கிறார். வெளியுற – (ஆகாயத் தோடு) ஸ்பர்சம் ஏற்படும்படியாக அல்லது கண் முதலிய இந்திரியங்கள் உற (உணரும்படியாக) புறம்புள்ள எல்லா வஸ்துக்களுமாய் நிற்பதாலே,
வெளியும் நீயே – அந்த வெளியும் நீதான். “நிற்கின்ற தெல்லாம் நெடுமால்’ என்ற நினைவு இங்கு.

‘வெளி’ என்பதற்கு ‘வெளிச்சம்’ என்று பொருள் கொண்டு ஒளியுடைய ஸூர்யன் சந்திரன் அக்னி இவை உன்னாலேயே ஒளி பெற்று விளங்குகின்றன என்றும் பொருள் கூறியிருக்கிறார்கள்.
தாயும் நீயே சாயை தந்து உகத்தலின் – ஸர்வேஸ்வரனைத் தாயாக வர்ணிப்பதை யொட்டி இங்கே தாயும் நீயே என்று கூறி அதற்குக் காரணத்தையும் காட்டுகிறார்.’சாயா’ என்னும் வடமொழிச் சொல் நிழல், பிரதிபிம்பம், ஸாம்யம், அழகு, ரக்ஷணம், என்று பல் பொருள் கொண்டது.அவை யெல்லாம் இங்கே கொள்ளலாம். குழந்தையைப் பெற்றுக் கண் நிழலிலே வைத்துக் காத்து அதனால் சந்தோஷமடைவது தாயின் இயல்பு. அது போல் எம்பெருமானும் தன்னடி நிழலை யளித்துக் காத்து அதனால் தன்னைப் பேறு பெற்றவனாக எண்ணி உகக்கிறான்.
தந்தையும் நீயே முந்தி நின்றளித்தலின் – அன்புக்கு உரிய குணங்களால் தாயாவது போல ரக்ஷணத்திற்கு உறுப்பான அம்சங்களாலே நீ தந்தையும் ஆகிறாய்.
முந்தி நின்று – எனக்கு நன்மையான வற்றை யான் அறிந்து உன்னை வேண்டாமலிருப்பினும் நீயே-எனக்கு நலத்தை யறிந்து முன் வந்து கொடுத்தருள்கிறாய். என் அறிவின்மையால் நான் தீமையைத் தீமை யென்று அறியாது நிற்க, அது வருவதற்கு
முன்பே முன் நின்று அதை விலக்கி என்னைக் காப்பாற்றுகிறாய், அதனால் நீ தந்தையும் ஆகிறாய்.உலகத்தில் தாய் வேறு, தந்தை வேறாயிருப்பது போலன்றி,எம்பெருமான் தாயும் தந்தையுமாகிறான்.
“தாயிருக்கும் வண்ணமே உம்மைத் தன் வயிற்றிருத்தி உய்யக் கொண்டான்” என்றும்,”தான் எனக்காய் நினைந்து அருள் செய்யும் அப்பன்” என்றும் திருமங்கையாழ்வாருடைய அருளிச்செயல்
உறவும் நீயே துறவாதொழுகலின் – தாய் தந்தை என்பது மட்டுமன்று,எல்லாவித பந்துவும் நீயே என்கிறார். ஒரு காலும் என்னைத் துறவாதிருத்தலால் நீதான் உறவு. ஏனையோர் உறவெல்லாம் ஒரு காரணத்தை யிட்டு நிற்கும். அவர்கள் கைவிட்டுச் சென்றாலும் செல்வர். நீ ஒருவனே கைவிடாதவன்.”உன்தன்னோடு உறவேல் நமக்கு இங்கு ஓழிக்க
ஒழியாது
. இவ்விடத்தில் ‘ஒழிதலின்’ என்ற பதம் இவ் வாக்கியத்திற்கு அநுகுணமா யில்லை யென்றதால்-ஒழுகலின்’ என்றபாடம் கொள்ளப்பட்டது.
உற்றதும் நீயே சிற்றின்பமின்மையின் – உற்றது ஏற்றது.அதாவது என் ஸ்வரூபத்திற்கு அனு குணமான புருஷார்த்தமும் நீயே. ஏனெனில் நீ சிற்றின்பமில்லை.அல்பமாய் நிலை யற்ற ஸுகங்கள் போலில்லாததால், நீ தான் எனக்கேற்ற புருஷார்த்தம்.
ஆறும் நீயே ஆற்றுக்கு அருள்தலின் – ஆறு என்றால் வழி. பேரின்பமாகிய புருஷார்த்தத்திற்கு உபாயமாய் நிற்பவனும் நீயே, உபாயம் பக்தி -பிரபத்திகளன்றோ எனில் அதற்கு விடையாக ‘ஆற்றுக்கு அருள்தலின் என்கிறார்.அதாவது பக்தி முதலானவைகளை ஒருவன் அனுஷ்டித்தாலும் அதனால் ப்ரஸன்னனான ஸர்வேஸ்வரனே தன் அநுக்ரஹ ஸங்கல்பத்தால் அவற்றுக்குப் பலன் கொடுக்கிறானே யொழிய அவை தாமே பலத்தைக் கொடுக்க சக்தி யற்றவை. அதனால் யகவானை ஸித்தோபாயம் என்றும் பக்தி ப்ரபத்திகளை ஸாத்யோபாயம் என்றும் கூறுவர்.
அறமும் நீயே மறநிலை மாய்த்தலின் – அறம்- தர்மம்;அதற்கு மாறான நிலை மறம். அதாவது அதர்மம்.-அதை ஒழிப்பதால் தர்ம ஸ்வரூபமா யிருப்பவனும் நீயே.அநாதியான கர்ம வாஸனையாலே எங்களுக்குப் பாபத்தில் உள்ள ருசியை விளக்குகிறாயன்றோ? இதற்கு மேல் அறமுண்டோ? மறநிலை மாய்ந்த போதன்றிப் புருஷார்த்தத்தில் ருசி பிறவாது;உபாயத்தில் பிரவிருத்தியும் ஏற்படாது, ஆகவே உற்ற புருஷார்த்தம்,அதைப் பெறுவிக்கும் ஆறு(உபாயம் ), அதில் மூட்டுவிக்கும் அறம், இவை யனைத்தும் நீயே என்கிறார். இங்கு ராமோ விக்ரஹவாந் தர்ம?” ‘கருஷ்ணம் தர்மம் ஸநாதநம்’ என்பவற்றை ஸ்மரிப்பது.

துணைவனும் நீயே-இணையிலை யாதலின் -எக்காரியத்திலும் உன்னைத் தவிர வேறு எனக்கு துணைவன் இல்லை. உனக்கு ஸமானம் வேறொருவரும் இல்லை யாதலால் வேறு எவனைத் துணையாகக் கூறமுடியும்.-உற்ற துணைவன் நீயே. நீ துணைவனா யிருக்கும் போது வேறு எவராலும் எனக்கு ஆக வேண்டியது ஒன்றுமில்லை. நீ துணைவனா யிருக்கையில் என்னைத் தடுப்பார் யாருமில்லை. நீ துணை செய்யாத போது
என்னால் ஆகக் கூடியது ஒன்றுமில்லை.
துய்யனும் செய்யாள் நீயே செய்யாள் உறைதலின் – சிவந்த நிறமுடையவள்,-அதாவது பெரிய பிராட்டியார். அவள் உன்னிடம் நித்ய வாஸம் செய்வதால் நீயே பரிசுத்தன். ‘(ஸ்ரீய:பதியாய் நிகில ஹேய ப்ரத்யனீகனாய்-என்று பூர்வர்கள் அருளிச் செயலால் ஸ்ரீய: பதியாய்-அதாவது லக்ஷ்மிக்குப் பதியாயிருப்பதாலே ஹேயப்ரத்யநீகன் (ஸகல தோஷங்களுக்கும் எதிர்த் தட்டா யிருக்கிறான்) என்று கிடைக்கிறது. பிராட்டிக்கு அஸாதாரண குணங்களான தயை, அநுக்ரஹம் முதலியன ஈஸ்வர குணத்தில் சேராமலிருக்குமே யாயின் அந்த ஈஸ்வர குணங்கள் தோஷங்களாகவே ஆகக் கூடுமாதலின் இங்கு செய்யாள் உறைதலின் துய்யன் என்று பேசுகிறார்.-

“தத் கல்யாணம் கிமபி யமிநாம் ஏக லக்ஷ்யம் ஸமாதெள பூர்ணம் தேஜ: ஸ் ரதி பவதீ பாதலாக்ஷாரஸாங்கம்” என்ற ஸ்ரீஸ்துதி ஸ்லோகத்திலும் இதே பொருள் த்வனிக்கிறது. பிராட்டியின் ஸம்பந்தம் பெற்றதால் அவனுக்கு மங்களத்வம் உண்டாகிறது.”ஸீதேவா நுகதா லக்ஷ்மீ: தஸ்ய கிந் நாம துர்லபம்” என்ற சுமித்திரையின் வாக்கியத்தாலும் “அப்ரமேயம் ஹி தத் தேஜோ யஸ்யஸா ஜநகாத்மஜா” என்ற மாரீசன் வாக்கியத்தாலும் வால்மீகி பகவான் விவரிக்கும் அர்த்தங்களும் இங்கே கொள்ளத் தக்கன காரணம் நீயே நாரணன் ஆதலின் -நாராயண சப்தத்தால் குறிக்கப்படுபவன் நீயே யாகையால் ஸகல ஜகத்துக்கும் காரணம் நீ தான். “நானுன்னை யன்றி யிலேன் கண்டாய் நாரணனே நீ என்னை யன்றி யிலை” என்ற திருமழிசைப் பிரான் வாக்கின்படி ஸமஸ்த வஸ்துக்களுக்கும் இவன் இருப்பிடம்,இவனுக்கு ஸமஸ்த வஸ்துக்களும் இருப்பிடம்.-இரண்டு வகையாலும் நீயே நாராயணன், உபாதானம் நிமித்தம் என்ற இரு வகைக் காரணமும் இவனே என்ற ஸுக்ஷ்மார்த்தங்களெல்லாம் காரணம் நீயே என்பதால் காட்டப்படுகின்றன .

கற்பகம் நீயே நற் பதம் தருதலின்– எல்லா வாற்றுக்கும் மூல காரணமா யிருப்பது மட்டுமன்றி எல்லாவற்றையும் கொடுக்க வல்ல கற்பக வ்ருக்ஷமும் நீயே.-கேட்டதை யெல்லாம் கொடுப்பது நமக்கு ஹிதமாக ஆகாது. நன்மை தீமைகளை அறியாது கற்பக வ்ருக்ஷம் நாம் கேட்பதை யெல்லாம் கொடுக்கும். எம்பெருமானோ வெனில் வேண்டிக் கேட்கிலும் தீமையைத் தன்னடியார்களுக்குக் கொடான்.-யாசிதோபி ஸதாபக்தை: நாஹிதம் காரயேத் ஹரி:” நமக்கு எது ஹிதமோ அதையே கொடுப்பது எம்பெருமானான இந்தக் கற்பகத்தின் ஏற்றம் .
நற் பதமாவது அடையப்படும் சிறந்த பதம்.-இங்கே எம்பெருமானே அங்ஙனமாதலின் நற்பதம் எனப்படுகிறான். ‘எனக்கே தன்னைத் தந்த கற்பகம்’‘ என்ற ஆழ்வார் அருளிச் செயலின் படி தன்னையே நமக்கு நற்பதமாக நல்குமவன். அவனை அனுபவித்தலாகிற மோக்ஷநந்தத்தைத் தர வல்லமை வேறெவருக்கும் கிடையாது;-சாதாரண கற்பகத்திற்கும் கிடையாது. அதையும் அடைவிக்குமவனான நீதான் உண்மையில் கற்பகம்.

இறைவனும் நீயே-குறையொன்றிலாமையின் – ஒருகுறையுமில்லாமல் பரிபூரணனான நீதான் எங்களுக்கு மஹாராஜன்.-அரசனென்பவன் குறைகளும் குற்றங்களும் இல்லாதிருக்க வேண்டும்.-அவைகள் ஒன்றும்-உன்னிடத்தில் கிடையாதபடியால் நீயே எங்களுக்கு இறைவன்.”‘குறையொன்றுமில்லாத கோவிந்தா.. இறைவா ”-என்ற திருப்பாவையின் இருபத் தெட்டாவது பாசுரத்தின் பொருள் இங்கே கிடைக்கிறது. ‘குறையொன்று மில்லாதபடியால் அவன் இறைவன்’ என்று இசைத்துப் பொருள்படுத்துகிறார்
இன்பமும் நீயே துன்பம் துடைத்தலின் – இங்கு இன்பமுடையவன்’ என்ற பொருளைத் தரும்.’இன்பன்’ என்ற சொல்லை ப்ரயோகிக்காது ‘இன்ப சொரூபன்‘ என்ற பொருளில் ‘இன்பம்’ என்றே கூறியதால், ஸம்ஸாரமாகிற பெருந் துயரைப் போக்கித் தன்னை அனுபவித்தலாகிய பேரின்பத்தை நாம் பெறும்படி செய்கிறான் என்றதாயிற்று. அவனே இன்பமா யிருந்தாலன்றி, இன்பமுடையனாக விருப்பதால் மாத்திரம் நம் துன்பத்தை ஒழிக்க வல்லனாகான்.-அவனே இன்பமயமாயிருப்பது பற்றி நம் துன்பங்களை யெல்லாம் தொலைக்கிறான் என்றபடி-

யானும் நீயே என்னுளுறைதலின்–கீழ் பதினான்கு அடிகளில் மதி,வெளி, தாய், தந்தை, உறவு, உற்றது, ஆறு,அறம், துணைவன்,துய்யன், காரணம்,கற்பகம், இறைவன், இன்பம், என்ற அம்சங்களை யெடுத்துத் தம்மளவில் அந்த அந்த அம்சங்களாய் நின்று விளங்குகின்றான் என்று-அருளிச் செய்து வந்த இவ்வாசிரியர் இனி மற்றும் பல அம்சங்களையும் கூறி விரித்துக் கொண்டிருக்க வேண்டாமென்று இவ் வடியிலும் அடுத்த அடியிலும் தாமும் தம்முடையவான அனைத்துமே அவ்வெம்பெருமான் தான் என்று முடிக்க முற்படுகிறார்.-‘நான்’ என்று சொல்லப்படும் ஆத்மாவாகிய என்னுள் வியாபித்து நிற்பதால் ‘நீவேறு நான் வேறு என்ற பேச்சுக்கே இடமில்லை. உனது திவ்யாத்ம ஸ்வரூபத்தால் என்னுடைய உள்ளும் புறமும் வியாபித்து நிற்கின்றாய்;-அங்குஷ்ட மாத்திர பரிமாண முள்ளவனாய் என்னுடைய ஹ்ருதயமாகிய குகையில் உன்னுடைய திவ்ய மங்கள விக்ரஹத்துடன் உறைகின்றாய் ; பனிக்கடலுள் பள்ளிகோளைப் பழகவிட்டு என் மனக் கடலுள் வாழ்கின்றாய்; அரவத்து அமளியினோடும் அழகிய பாற்கடலோடும் அரவிந்தப் பாவையும் நீயுமாய் என் அகம்படி வந்து புகுந்து நிற்கின்றாய்; வந்த நாள் வந்து என் நெஞ்சிடங்கொண்ட நீ மற்றோர் நெஞ்சறியாது என்னிடமே ஸ்திரமாக எழுந்தருளி யிருக்கின்றாய்; நான் உனக்குச் சரீரமாய் நீ எனக்கு ஆத்மாவாய் நின்று நாமிருவரும் பிரித்துப் பார்க்க வியலாத நிலையில் நிற்பது பற்றி யானும் நீயே யாகின்றாய் – என்றவாறு.

செய்யாளாகிய பிராட்டி கணமும் அவனை-விட்டுப் பிரியாது அவனிடம் உறைவதாகக் கீழே அருளிச் செய்தார் ஆசிரியர். இங்கு அவ் வெம்பெருமான் தம்முள் உறைவதாகக் கூறி யருளினார்;-ஆகவே இரண்டிடத்திலும் உறைதலின் என்ற சொல் பிரயோகித்தமை பற்றிப் பிராட்டியும் எம்பெருமானும் தம்முள் உறையும் சேர்த்தியை ஸ்வாமி தேசிகன் கண்டு மகிழ்ந்த சுவை காண்க.-எனதும் நீயே உனதின்றியின்மையின் முந்திய அடியில் யான் என்று வரும் அஹங்காரத்தை மாற்றினாராயிற்று, இவ்வடியில் ‘எனது’
என்று வரும் மமகாரத்தை மாற்றுகிறார். ஸகல வஸ்துக்களும் உன்னுடையவை உனக்குச் சேஷமானவை ; அவற்றுள் சிலவற்றை என்னுடைய அறியாமையால் என்னுடையனவாகக் கூறிக் கொள்கின்றேன்; என் வீடு, என் தோட்டம் என்றெல்லாம் பிதற்றும்படி மமகாரம் மிகுத்து நிற்கின்றது. உனக்குச் சேஷ பூதமில்லாத வஸ்துவே கிடையாது. ஆகவே எனது எனப்படும் அனைத்தும் உனக்குச் சேஷ பூதமே. சேஷி ஸம்பந்தாலே எனது எனப்படும் யாவும் நீயே.என்றவாறு.
யானும் நீ எனதும் நீ என்ற அநுஸந்தாநம் ஆழ்வார்களின் அருளிச் செயல்களில் மிக மிகக் காணக் கிடக்கின்றது. கடல் ஞாலம் செய்தேனும் யானே-யென்னும்’ என்கிற திருவாய் மொழியில் ஆழ்வார் தாமும் ஈஸ்வரனே யென்று அநுபவித்துப் பேசி யருளினார் ‘யானே யென்னை யறிய கிலாதே யானே யென்றனதே யென்றிருந்தேன் யானேநீ என்னுடைமையும் நீயே” என்ற பாசுரத்தில் ஆழ்வார் முந்திய தசையையும் பிந்திய தசையையும் சேர்த்துப் பாசுரமிட்டார். இங்கு நம் ஆசார்யோத்தமர் ‘யானும் நீயே’ எனதும் நீயே’ என்று நல்லுணர்வுக்குப் பின்வரும் அனுஸந்தானத்தை மட்டும் எடுத்து அருளிச் செய்தார். ஆளவந்தார் “ஸகலம் தத்ஹி தவைவ மாதவ” ‘அனைத்தும் உன்னுடையன’ என்றார் ஸ்வாமி தேசிகன் ‘அனைத்தும் நீயே’ என்கிறார்-அனைத்தும் நீயே யாதலால். மேல் வரும் இரண்டு அடிகளில் எம்பெருமானுடைய நன்மையையும் வன்மையையும் பேசி
முடிக்கிறார்:-நல்லாய் நீயே பொல்லாங்கிலாமையின் பொல்லாங்கு = தீங்கு, தீமை. இது இல்லாமையின் நல்லவனெனப்படுபவன் நீயே.

கீழடிகளில் துறவா தொழுகல்’ சிற்றின்பமின்மை’ ‘மறநிலைமாய்த்தல்’ குறையொன்றிலாமை துன்பம் துடைத்தல்‘ என்ற அம்சங்களால் விலக்குதற்குரிய தன்மைக்கு எதிராயிருக்கும் தன்மை கூறப்பட்டதாகிறது. இங்குக் கூறப்பட்ட அம்சங்களையே ஒன்று கூட்டி அதன் திரண்ட பொருளை இவ்வடியில் ‘பொல்லாங்கிலாமையின்’ என்ற தொடரால் வெளியிட்ட ருளினாரென்று கூடக் கூறலாம்.-வல்லாய் நீயே வையமுண்டுமிழ்தலின் உலகங்களை யெல்லாம் ப்ரளய காலத்தில் உண்டு
மீண்டும் ஸ்ருஷ்டி காலத்தில் உமிழ்வதால் வல்லமை யென்னும் குணம் உன்னிடம் தங்கி யிருக்கிறது.-நீயே ஸர்வ சக்தன். தெய்வங்கள் என்று பாராட்டப் படுவர்களெல்லாரும் எம்பெருமானுண்டுமிழ்ந்த எச்சில் தேவர்’ என்று ஆழ்வார்களிடம் பெயர் வாங்கி விட்டனர். ஆக நீ யொருவனே ஸர்வ சக்தன் என்றவாறு.-நம்மாழ்வார் ‘படைத் திடந்துண்டு மிழ்ந்தளந்து தேர்ந்துலகளிக்கும் முதற் பெருங்கடவுள்’ என்று மகிழ்ந்து பாடிய அம்சம் இது. ‘ஒரு பொருள் புறப்பாடின்றி முழுவதும் அகப்படக் கரந்து ஓராலிலைச் சேர்ந்த எம் பெரு மா மாயனை யல்லது ஒருமா தெய்வம் மற்றுடையமோ யாமே‘ என்று நம்மாழ்வார் திருவாசிரியத்தை முடித்த ரீதியில் ஸ்ரீ தேசிகனும் அத்தகைய முறைபிலே இந்த ஆசிரியப் பாவிலும் அதே பெருமையைப் பேசி ஒருவாறாக முடிக்கிறார்.-எங்ஙனமாகு மெய்யனின் வியப்பே அங்ஙனே யொக்க அறிவதாரணமே-‘மெய்ய’ என்பது இங்கு விளி. தொடக்கத்திலே இடப்பட்ட ‘அடியவர்க்கு மெய்யன்‘ என்ற திருநாமம் இப்பாசுரத்தில் பேசப்பட்ட பற்பல குண விசேஷங்களால் பொருத்தம் பெற்று மெய்யானது பற்றி இப் பாசுரத்தின் இறுதியில் ‘மெய்ய’ என்று ஒரு முறை அழைத்துக் கொண்டார் போலும்
ஆரணம் என்பது வேதம்.கர்ம பாகம் ஜ்ஞாந பாகம் எனப் பாகுபாடு பெற்ற வேதத்தில் ஜ்ஞாந பாகமாய் விளங்கும் உபனிடதங்கள் தாம் ஆச்சர்யமான உன் இயல்புகளை உள்ளபடி ஒருவாறு அறியும் வல்லமை பெற்றன.
வியப்பு என்றதால் ஒன்றுக் கொன்று மாறுபட்டு உலகில் ஒரிடத்தில் சேர்ந்து நிற்கப் பெறாதே தன்மைகளெல்லாம் உன்னிடம் கூடி நிற்கும் ஆச்சரியத்தை அடியேன் என்னென்பேன் என்றதாயிற்று. உதாஹரணமாய் உள்ளும் புறமும் ஒத்து
வியாபித்திருத்தல், தாயும் தந்தையுமாயிருத்தல்,-தன்னை அனுபவிக்கக் கொடுப்பவனாகவும் கொடுக்கப் படும் பொருளாகவும் நிற்றல்,யானாகவும் எனதாகவும்
நிற்றல், ஆகிய மாறுபட்ட தன்மைகளெல்லாம் உன்னிடம் ஒன்று கூடி நிற்கப் பெற்றாயே! இதென்ன ஆச்சரியம்! என்கிறார். நம்மாழ்வாரும் இத்தகைய மாறுபட்ட தன்மைகளை எம்பெருமானிடம் கண்டு”நல்குரவும் செல்வும்’ என்ற (6-3) திருவாய்மொழியில் அநுபவித்துப் பேசி யருளினார். கீழ்க் கூறிய விருத்த மாறுபட்ட) தத்துவங்களை மற்ற ப்ரத்யக்ஷம் முதலிய ப்ரமாணங்களால் அறிய முடியாதாதலின் இவ் விஷயத்தில் வேதமே ப்ரமாணம் என்றதாயிற்று.

இங்கு ‘ஆரணமே’ என்ற சொல்லின் ஏகாரத்தை வினாப் பொருளில் கொண்டு ஆரணம் அறிவதே’ என்றாக்கி உன் தன்மைகளை உபநிடதமும் அறிய வல்லதோ என்றும் பொருள் கொள்வது சிறக்கும். எம்பெருமான் தனக்கும் தன் தன்மை அறிய வரிதாய் நிற்க ( தனக்கும் தன் தன்மை யறிவரியானை)அவன் தன்மையை வேதம் மட்டும் அறிந்து விடுமோ? எம்பெருமானுடைய குணங்களை யறிய மனத்தையும் துணை கொண்டு பயணம் புறப்பட்டுப் பெரு முயற்சி செய்தும் அவனுடைய ஆநந்த குணத்தின் ஏக தேசத்தையும் காண வியலாது கையற்றுத் திரும்பி வந்ததாய் உபநிடதம் தானே முறையிடவில்லையா? யதோ வாசோ நிவர்த்தந்தே- இங்ஙனம் ஏகாரத்தை வினாப்பொருளிற் கொள்வதில் உள்ள தகுதியைச் சில குறிப்புக்களும் வலியுறுத்தும். ‘வியப்பு” என்பதால் ஆச்சர்யமென்று காட்டி,பின் அதை அறிய முடியு மென்று சொல்வதைக் காட்டிலும் அறிய முடியாதென்று சொல்வது சிறக்குமன்றோ; ஒரு மிக்க அறிவது என்றும் பொருள் தரும் ஒக்க அறிவது’ என்னும் தொடர் உன் அற்புதத் தன்மைகளை யெல்லாம் ஒரு மிக்க அறிவது இயலாததா மென்று கூறுவதிலே மிக்க நோக்குடைய தென்னலாம். மேலும் அடுத்த பாசுரம் ‘ஆரணங்கள் தேட’ என்று தொடங்குவதால் வேத பாகங்களனைத்தும் ஒன்று கூடியும் அவனைத் தேடிக் கொண்டே இன்னும் அவனைக் கண்ட பாடில்லை யென்றதாயிற்று. ஆதலின் ஏகாரத்தை வினாப் பொருளிற் கொள்வதும் தகும். ஆழ்வார்களும் பல விடங்களில் எம்பெருமானை நோக்கி அனைத்தும் நீயே என்று பாடியுள்ளார்கள்.
ஆனால் இப்பாசுரத்தில் 18 அடிகளில் ‘நீயே’ ‘நீயே என்று ஸ்ரீ தேசிகன் பாடியது போல் எங்கும் காண முடியாது. உயர்ந்த தத்துவார்த்தங்களும் அழகிய காவ்ய ரசனையும் ஒருங்கே இப் பாசுரத்தில் நாம் கண்டு களிக்கக் கிடக்கின்றன என்னுதல் மிகையாகாது

—————

ஆரணங்கள் தேட அயிந்தை நகர் வந்து உதித்த
காரணராய் நின்ற கடல் வண்ணர் -நாரணனார்
இப்படிக்கு மிக்கு அன்று எடுத்த பாதம் கழுவ
மெய்ப்படிக்கம் ஆனது பொன் வெற்பு –8-

ஆரணங்கள் தேட வேதங்கள் (எம்பெருமானைக் காணாமல்) தேடிக் கொண்டிருக்க
அயிந்தை நகர் வந்துதித்த காரணராய் நின்ற-திருவகீந்திரபுரத்தில் வந்து அவதரித்த( ஸகலஜகத்)காரண வஸ்துவாய் நிற்கின்ற
கடல் வண்ணர்- ஸமுத்ரம் போன்ற வர்ணமுடையவரான
நாரணனார்- நாராயணனெனப்படும்
எம்பெருமான்
இப்படிக்கு – இந்த பூமிக்கு
மிக்கு-மேற்பட்டு
அன்று எடுத்த-அன்று (த்ரிவிக்ரமாவதாரத்தில்) தூக்கிய
பாதம் – திருவடியை
கழுவ – அலம்ப (அதாவது ப்ரஹ்மா திருமஞ்சனம் செய்ய) (அந்த நீரை ஏற்பதற்கு)
பொன் வெற்பு – மேரு பர்வதம்
மெய்ப் படிக்கம் ஆனது -உண்மையான ப்ரதிக்ரஹ பாத்திரமாயிற்று.

ஸ்ரீ பாத தீர்த்தம் ஏந்தும் படிக்கமானதே மஹா மேரு பர்வதம் -வியப்பின் மேல் வியப்பு -திரிவிக்கிரம அவதாரம் அன்றோ –

இப் பாசுரத்தின் உள்ளுறை பொருள் அறிய வரிதாயுளது. இன்று நம் கண் முன் காட்சி தரும் இத் தெய்வநாயகனே பர ரூபத்தை யுடையனாகவும்,அன்று உலகளந்த த்ரிவிக்ரமனாய் ஸேவை ஸாதித்த வனாகவும் கூறுவதால் அர்ச்சாவதாரத்திற்கும் பரம் விபவம் முதலிய ரூபங்களுக்கும் உள்ள ஒற்றுமையும் தொடர்பும் கூறப்பட்டதாகின்றது.
ஆரணங்கள்தேட அயிந்தை நகர் வந்துதித்த--நான்மறைகள் தேடி என்றும் காண மாட்டாச் செல்வனான எம்பெருமான் இங்கு அயிந்தையில் வந்து எல்லோரும் கண்டு களிக்குமாறு நிற்கின்றான்.-வேதங்கள் ஒரு முகமாய்த் தன்னைத் தேடிக் கொண்டே நிற்க, அவற்றுக்கு அகப்படாது அவற்றை ஏமாற்றி விட்டு, நம்மை வாழ்விக்கத் திருவுளங்கொண்டு தன்னுடைய எல்லையற்ற ஸுவ்லப்யத்தால் இவ் வயிந்தையில் ஸகல சேதநரும் ஸேவித்து இன்புறலாவதொரு வடிவு கொண்டு விளங்கும் அற்புதம் பாசுரத்தின் முதலடியால் வெளியாகின்றது.-வேதத்தின் கைக்கு எட்டாத பரமபுருஷன் நம் கையில் எளிதாக வந்துதோன்றி அகப்பட்டானே !என்ன ஆச்சர்யம் !!!
காரணராய் நின்ற கடல்வண்ணர் நாரணனார்-இந்தக் கடல் வண்ணனே உலகமனைத்துக்கும் காரணமான வஸ்து. இவனே நாராயண சப்தத்தால்
சொல்லப்படுபவன்; நார – அயந சப்தங்கள் சேர்ந்து’நாராயண’ என்று ஆகும் போது அயந சப்தத்தில் உள்ள நகர ணகரமாகி அதனால் காட்டப்படும் ஒரு குறிப்பிட்ட வ்யக்தியும் இவனே.

இப்படிக்கு மிக்கு-படி – பூமி. இந்த பூமியையும் தாண்டித் திருவடி தூக்கப்பட்டதென்று கருத்து.-படி. – ப்ரகாரம்; ஒருவராலும் இத்தகையதென்று அளவுபடுத்திப் பேச வியலாது.அந்த நிலைமையை மீறிச் செய்தது . இந்த த்ரிவிக்ரமா வதாரம் என்றும் கொள்ளலாம்.-மேலும் – உன் பெருமைகளை ஒருவாறு கூற முற்பட்டுக் கீழ்ப் பாசுரங்களில் சிலவற்றைக் கூறி இப் பாசுரத்தில் ‘ஆரணங்கள் தேட என்று தொடங்கினேன். ஆனால் நீ த்ரிவிக்ரமாவதாரத்திற் செய்த செய்கைகளை நினைந்து அனுபவிக்கும் போது கீழ் நான் கூறிய பெருமைகளெல்லாம் ஏக தேசமென்னும்படி யிருக்குமென்ற கருத்தில் நோக்கமுடையதாகவும் ‘இப்படிக்கு மிக்கு’ என்ற தொடரைக் கொள்ளலாம்.
அன்றெடுத்த பாதம் உலகனைத்தையும் ஒரு திருவடியா லளந்து ஆகாசமெல்லாம் அளக்கத் தூக்கப்பட்ட திருவடி-ஆங்கு மாவலி வேள்வியிலிரந்து சென்று அகலிடமுழுதினையும் அளந்த பாதம்.-கழுவ – திருமஞ்சனம் செய்ய. இங்குத் திருமஞ்சனம் செய்தவர் யார் என்று கூறப்படவில்லை.-ப்ரஹ்மா தாம் செய்தார் என்பது மிகப் பிரசித்தம்.
“குறைகொண்டு நான்முகன்குண்டிகை நீர் பெய்து
மறை கொண்ட மந்திரத்தால் வாழ்த்திக் கறை கொண்ட
கண்டத்தான் சென்னிமே லேறக் கழுவினான்
அண்டத்தான் சேவடியை யாங்கு
“-என்று நான்முகன் திருவந்தாதிப் பாசுரம் திருவுள்
ளத்தில் தோன்றி யிருக்கும்.
ஸ்ரீ தேவநாதன் தன் திருவடிகளின் ப்ரபாவத்தால் நதிகளில் சிறந்ததும் புண்யமுமான கங்கையை உலகுக் களித்தது போல் மலைகளிற் சிறந்த மஹா மேருவை ஸுவர்ண மலையாக்கித் தந்தபெருமையையும் வெளியிடுகிறார்.
மெய்ப்படிக்கமானது பொன் வேற்பு
பொன் வெற்பு – மேருமலை . ப்ரஹ்மா திருமஞ்சனம் செய்த திருவடித் தீர்த்தத்தை ஏந்தியபடியால் இம்மலை பொன்னுமாய் ப்ரதிக்ரஹ பாத்ரமுமாயிற்று யென்று ஸசிதம்.

ஆராதிக்கப்படும், வஸ்து எம்பெருமானுடைய பொன்னார் கனை கழற்கால்; ஆராதிப்பவன் பி ரஹ்மா;திருமஞ்சனம் செய்வது குண்டிகை நீராலே; ஏந்துகிற பாத்ரம் மஹாமேருபர்வதம். எம்பெருமானுடைய திருவடியில் ப்ரம்மா செய்த திருமஞ்சனத் தீர்த்தத்தைத் தான் ஏந்திய பெருமை பெற்ற படியாலே தான் மேரு பர்வதம் பொன் மலையானதோடு
மஹா மேருவுமாயிற்றுப் போலும். விண்ணுலகில் செய்யப் பெற்ற திருமஞ்சனத் தீர்த்தம் பூமியில் விழும் போது முதலில் உயரமான மேருமலையின் மீதே விழுவதால் மேருமலை படிக்கமாக வர்ணிக்கப்பட்டது.
மூவராகிய ஒருவனை-மூலவுலகுண்டு மிழ்ந்தளங்தானை’ என்று ஸ்ரீ தேவநாதனைத் திருமங்கைமன்னன் மங்களாசாஸநம் செய்தார். அதைத் தழுவி ஸ்ரீ தேசிகன் முந்திய பாசுரத்தில் ‘வையமுண்டுமிழ்தலின்‘ என்றதால் உண்டுமிழ்ந்ததையும், இப் பாசுரத்தில் மூன்றாமடியில் அளந்ததையும் பேசினார்.
மஹாமேரு படிக்கமானதாகக் கூறுவது உதப்ரேக்ஷை மாத்திரமா, புராணங்களில் எங்காவது இவ் வரலாறு எடுக்கப்பட்டுளதாவென்பது ஆராய வேண்டிய விஷயம்.

——————————–

வெற்புடன் ஒன்றி யயிந்தையில் வெவ்வினை தீர் மருந்து ஓன்று
அற்புதமாக வமர்ந்தமை கேட்டருள வேண்டி நிற்கப்
பற்பில் அமர்ந்த செய்யாள் படி காட்டிய பண்புடை எம்
வில் புருவக் கொடிக்கு ஓர் விலங்கா மயல் பெற்றனமே –9-

அயிந்தையில் -திருவயிந்திரபுரத்தில்
வெற்புடன்- மலையோடு
ஒன்றி-சேர்ந்து(ஸம்பந்தம் பெற்று)
வெவ் வினைதீர்- கொடிய பாவங்களைப் போக்க வல்ல
ஒன்று மருந்து- ஒப்பற்ற (ஒரு) மருந்து
அற்புதமாக அதிக ஆச்சர்ய சக்திகளோடு
அமர்ந்தமை-இருந்ததை
கேட்டு அருள் வேண்டி நிற்க- (பிறர் சொல்லக்)கேட்டு கூடியதாக
(அந்த மருந்தின்) அருளைப் பிரார்த்தித்து நிற்குங்கால்
பற்பில்- தாமரையில் (பத்மத்தில்) அல்லது
தாமரையாகிய இல்லத்தில் (வீட்டில்)
அமர்ந்த- வீற்றிருந்த
செய்யாள்- பெரிய பிராட்டி யுடைய
படி- தன்மைகளை
காட்டிய-(நாம் காணும்படி)காட்டிக் கொடுத்த
பண்புடை -தன்மைவாய்ந்தவளான
எம் வில் புருவக் கொடிக்கு-வில்லைப் போன்ற புருவத்தையுடைய கொடியை யொத்த எங்கள் பெண்ணுக்கு
ஓர்-அதி விலக்ஷணமான
விலங்காமயல் – தீராத மயக்கத்தை(ஆசையை)
பெற்றனம் – அடைந்தனம்.

வெற்புடன் ஒன்றி யயிந்தையில் வெவ்வினை தீர் மருந்து ஓன்று -தெய்வ நாயகன் என்னும் மருந்து
ஔஷதாத்ரி திருமலையோடு ஓன்று பட்டு
அற்புதமாக வமர்ந்தமை கேட்டு –
அருள் வேண்டி நிற்கப் -அதன் கடாஷத்தை வேண்டி நிற்க
பற்பில் அமர்ந்த செய்யாள் படி காட்டிய-தாமரை ஸ்தானத்தில் எழுந்து அருளி யுள்ள பெரிய பிராட்டியுடைய பிரகாரங்களை நினைவு ஊட்டிய
பண்புடை -ஸ்வ பாவத்தை உடைய
எம் வில் புருவக் கொடிக்கு ஓர் விலங்கா மயல் பெற்றனமே -நீங்காத மயக்கம் வரப் பெற்றோம்

செவிலித் தாய் நல் தாய்க்குக் கூறுதல் -செவிலித் தாய் அறத்தொடு நிற்றல் -துறை -அயலாருக்கு மணம் பசுவதை தடுத்து பேசுவது
பரிபூர்ண அனுபவம் பெறத் துடிக்கும் ஸ்வாமி உடைய பேராவல் கொண்ட பித்தரான நிலையை பாகவதர் வியந்து பேசுவது –

ஆழ்வார் வாராயின முலையாளிவள் வானோர் தலைமகனாம் சீராயின தெய்வ நன்னோயிது’ என்றார் திருவிருத்தத்தில். வானோர் தலை மகன் தேவநாதன். அவன் பால் ஸ்ரீ தேசிகனுக்கு ஏற்பட்ட மிக்க பக்தியை ஒரு காதல் நோயாக வர்ணித்துக் காட்டுகின்றது இப் பாசுரம். கீழ்3, 6, ம் பாசுரங்களின் குறிப்புக்களில் அவற்றை முறையே பரபக்தி பரஜ்ஞாந தசைகளென்றும் இந்த 9 ம் பாட்டு பரம பக்திதசையென்றும் சொன்னோம். “இப்படி நிரதிசய போக்கியமான பகவத் ஸ்வரூபத்தை ஸாக்ஷாத்கரித்தவாறே பெருவிடாய்ப் பட்டவன் தடாகத்தைக் கண்டாற்போலே பிறந்த ப்ரீத்யதிசயம் பரம பக்தி” என்று ஸ்ரீமத் ரஹஸ்யத்ரய ஸாரத்தில்அருளிச் செய்யப்பட்டிருக்கிறது.

“ஆர்க்குங் கருணை”யில் எம்பெருமான் தன்னைக் காட்டிக் கொடுக்க அப்போது ஓர் அநுபவம் பிறந்தது. அவ்வநுபவம் “பயின் மதி’ யிலும் “ஆரணங்கள் தேட’விலும் தொடர்ந்து வந்து ‘எல்லாம் அவனே யென்றும், ‘எல்லாம் அவனதே’ என்றும் ஸாக்ஷாத்காரம் பிறந்தது.அதன் பலனாகப் பெருவிடாய் ஏற்பட்டு அந்தப் பிரீதி தலைக்கேறி நின்ற நிலையை இப்பாசுரத்திற் காண்கிறோம். இதை உணர்த்தப் பெண் பேச்சு வேண்டி யிருந்த படியால் இப் பாசுரம் நாயிகா பாவத்தில் அமைந்தது.-நோய் வாய்ப்பட்ட ஒருவன் அந்நோயைத் தீர்க்க வல்ல ஒரு மருந்து ஓரிடத்திலிருப்பதைக் கேள்வி யுற்றான். உடனே அங்குச் சென்று அம்மருந்தைப் பெற்று உபயோகித்தான், நோய் தீருவதற்கு மாறாகத் தீரா நோயாக விளைந்தது. இப்படியும் உண்டோ என்று வியக்கும் நிலையில் இப்பாசுரத்தின் போக்கு அமைந்திருக்கிறது. பேஷஜம் (மருந்து) பிஷக் (வைத்தியன்)என்று ஸஹஸ்ர நாமத்தில் இரண்டு திருநாமங்கள். ஆழ்வார்களும் ‘செடியார் வினைகள் தீர் மருந்தே’ என்றும் மருத்துவனாய் நின்ற மாமணி வண்ணா’ என்றும் பெருமாளை மருந்தாயும் மருத்துவனாயும் அநுபவிக்கின்றனர். மருந்தும் பொருளும் அமுதமும் தானே
யாகிறவனன்றோ. மலைகளில் விளையும் மருந்துக்கு வீர்யம் அதிகம்.

மாமலையிலுள்ள மருந்தே பிணி தீர்க்குமன்றோ?இங்கு தேவநாதனாகிய உயர் மருந்து ஒளஷதாத்ரி யென்னும் மலையிலமர்ந்துளது. அந்த மலையின் ஒரு பகுதியிலேயே எம்பெருமான் திருக் கோயில் அமைந்திருப்பதை இன்றும் காணலாம். ஆகவே மலையாகிய இடத்தால் வந்த சிறப்பும் கூறியதாயிற்று. மலையும் ஒளஷத்த மலை ; அம்மலையிலுள்ள இவனும் ஓர் பரமெளஷதம் (மருந்து). இடமும் ஒளஷதம்; அதில் உள்ள பொருளும் ஒளஷதம். இதை நினைந்தே ‘வெற்புடனொன்றி…. மருந்து’ என்றார் போலும். ஒன்றுதல்-ஒன்றுபட்டிருத்தல், ஒத்திருத்தல்.
வெவ்வினை தீர் மருந்து-உலகிலுள்ள மற்ற மருந்துக்கள் உடலைப் பற்றிய நோய்களையே தீர்க்கும். இந்த மருந்தோ அத்தகைய நோய்களை மாத்திர மன்றி ஆத்மாவைப் பற்றிய கொடிய வினையாகிய நோய்களையும் தீர்க்க வல்லதாய் மிக உயர்ந்ததாய்த் திகழ்கின்றது.
ஒன்று மருந்து-ஒப்பற்ற மருந்து. அன்றி சகல நோய்களையும் தீர்க்க வல்ல ஒரே மருந்து. இந்த தெய்வநாயகனெனும் ஒரு மருந்தே எல்லா வினைகளையும் ஒழிக்க வல்ல தென்ற தாயிற்று. ‘மாம் ஏகம்’ என்று தானே சொல்லிக் கொண்ட ஒரே மருந்து.
அற்புதமாக
-உலகில் வெவ்வேறு மருந்து வெவ்வேறு நோய் களைப் போக்கும். அதற்கு மாறாக இங்கு தெய்வ நாயகனெனும் மருந்து ஒன்றே எல்லா வினைகளையும் போக்க வல்லதாயிருப்பது மித அற்புதமன்றோ!மேலும் அயிந்தையில் அற்புதமாக அமர்ந்தமை என்று அந்வயம் கொண்டு, இத்தகைய உயர்ந்த ஒளஷதம் அயிந்தையில் நம் அனைவருக்கும் எளிதில் கிடைக்குமாறு அமைந்திருப்பது அற்புதம் என்றும் கொள்ளலாம்.
கேட்டு ஒளஷத ஸேவை செய்து அநுகூல மடைந்தோரும் அவர்கள் அனுகூலமடைந்ததைப் பார்த்தோரும் சொல்லக் கேட்டு, ‘கூரார் வேற்கண்ணீருமக்கறியக் கூறுகேனோ‘ என்ற கட்டுவிச்சி போன்ற அதிகாரிகள் சொல்லக் கேட்டு அருள் வேண்டி நிற்க அம்மருந்தை அணுகி,அதை ஸேவித்து அதனால் வரும் பலன்களைப் பிரார்த்தித்து நிற்க விலங்காமயல்-இத்தகைய ஒளஷதத்தை ஸேவிப்பதால் என்ன பலனைக் கண்டோமென்றால்- ஒரு நோய் தீர்ந்து-மற்றொரு நோய் பற்றிக் கொண்டது. முதலிலிருந்த நோய்க்குப் பரிஹாரம் உண்டு. இந்த மருந்தினால் வந்த நோயோ விலங்காமயல் ; எந்நாளும் தீராத நோய்.மயல் -மயக்கம்; காதல். கட்டு விச்சியும்’தீரா நோய் செய்தானென வுரைத்தாள்’ என்று மடலில் முடிவு கட்டினாற் போலே இப் பாசுரத்திலும் விலங்காமயல்’ என்று நிச்சயித்ததாகக் கூறலாம்
விளங்கா மயல் – விளக்க வொண்ணாத காதல்; விலக்க வேண்டாத காதல். ஆசைப்பட்டு நெடுங்காலம் தவங் கிடந்து பெற வேண்டிய இந்தக் காதல் நிலையை அடைந்த பின்னர் விலக்க வேண்டு மென்று நினைப்பாரும் உண்டோ என்றபடி : விலங்கு ஆம் மயல் என்றும் பதம் பிரிக்கலாம். விலங்காக ஆகிய மயல், விலங்கு – எம்பெருமானிடத்துப் பிணிக்கும்
பாசம்.அங்குமிங்கும் சலிக்க வொட்டாமற் செய்யும் தளை (விலங்கு)
. இங்கு எம்பெருமானிடம் காதல் அவனை விட்டு வேறொன்றிலும் மனம் செல்லாதவாறு
செய்கின்றது. ‘தூரம் ப்ரயாத மபி துஸ்த்யஜ காட பந்தம்‘ என்று இவர் தாமே தேவநாயக பஞ்சாசத்தில் அநுஸந்தித்தபடி. எவ்வளவு தூரத்திற் செல்ல முற்பட்டாலும் வலியப் பிடித்திழுக்கும்படியான ஒரு பந்தம்.

பற்பிலமர்ந்தசெய்யாள் படிகாட்டிய பண்புடை எம் விற்புருவக் கொடிக்கு-பெரிய பிராட்டியாருடைய தன்மைகளை அநுசரிக்கும் என்னுடைய இந்தப் பெண் என்பது இந்தத் தொடருக்குத் திரண்ட பொருள். செய்யாள் – லக்ஷ்மி. பற்பு-என்பது தாமரையைக் குறிக்கும். அதாகிற இல் – வீடு, வாஸஸ்தானம்-அதில் அமர்ந்த – வீற்றிருக்கும் செய்யாள். இங்கு
பற்பிலமர்ந்த செய்யாள்‘ என்ற தொடர் இந்த திவ்ய தேசத்தில் தனிக் கோயில் நாய்ச்சியாராக எழுந்தருளி யிருக்கும் செங்கமலவல்லி நாய்ச்சியாரை
ஸூசிப்பிப்பதாயும் கொள்ளலாம்.
‘பற்பில் மறந்த செய்யாள்’ என்றும் பாடமுண்டு . அப்போது பெருமாளிடத்து ஆசையாலே தனது பிறந்தகமான தாமரையை முற்றிலும் மறந்த செய்யாள் என்றாகிறது. உததிபரமவ்யோம்நோ?’ என்று பட்டர் அருளிச் செய்ததை அடி யொற்றியது-இப்பாடத்தால் வரும் பொருள் பிரகரணத்திற்கும் இப் பாடம் நன்கு பொருந்தியதாகக் காண்கிறது.-செய்யாள் படி காட்டிய பண்புடை எம்பெருமானிடத்து ப்ரீதி நிறைந்து அவனை விட்டு அரைக் கணமும் பிரிவைச் சகியாதவளாய்ப் பரிதவிக்கும் நாயகியின் நிலையை வர்ணிக்கும் நம்மாழ்வார் ‘திருமகள் கொல் பிறந்திட்டாள்’ என்று பாடினார் . திருமங்கை யாழ்வாரும் ‘காவியங்கண்ணி யெண்ணில் கடி மா மலர்ப் பாவை யொப்பாள்’ என்று பாசுரமிட்டார். இப் பாசுரங்களெல்லாம் ஸ்வாமி திருவுள்ளத்திலோட ‘செய்யாள் படி காட்டிய பண்புடை’ யென்று பேசுகிறார். இறையு மகல கில்லேன்-என்று க்ஷண காலமும் பிரிவைப் பொறுக்காத தன்மையை எண்ணிப் பெரிய பிராட்டியாரோடு ஸாம்யம் காட்டியபடி.-பண்பு இப்படியானால் இவள் ரூபம் எப்படி? |
விற் புருவக் கொடி.வில்லைத் தொலைத்த புருவத்தாள்‘-கொடி போன்ற மேனியை யுடையாள் என்று இந் நாயகியினுடைய ரூப வைலக்ஷண்யம் பேசப்படுகின்றது. தமிழ்ப் பிரபந்தங்கள் இயற்றுவதில் இவர் பர காலனோ அல்லது பக்தி ஸாரனோ வென்று ஸ்ரீ தேசிகன் விஷயமாகப் பூர்வர்கள் வியந்து புகழ்ந்திருக்கிறார்கள். நம்மாழ்வார் பாடிய ‘கங்குலும் பகலும்’ என்ற திருவாய் மொழியின் ரீதியை அநுஸரித்துத் திருமங்கை யாழ்வார் ‘திவளும் வெண் மதி போல்’ என்ற திருமொழியைப் பாடி யிருக்கிறார். அவ் விரண்டு பதிகங்களையும் ஒப்பிட்டுப் பார்க்கும் போது பராங்குச நாயகிக்கு பகவத் ப்ரேமம் முற்றியதென்று ஒரு பெருமை மட்டும் வெளியாகிறது. பரகால நாயகிக்கு அந்தப் பெருமையுடன் தானே ரூப லாவண்யாதிகள் நிறைந்து அவனே பார்த்து மேல் விழுவதற்குறிய பெருமை வாய்ந்தவள் இவள் என்று விசேஷாம்சம் அழகாகக் காட்டப் பட்டிருக்கிறது. ‘குவளையங் கண்ணி’ ‘கொல்லி யம் பாவை-இளம்படி’ இளங்கனி’ ‘குலங்கெழு கொல்லி’ கோமள வல்லி’ என்றெல்லாம் பேசிய கலியனை அடி யொற்றியே இங்கே விற் புருவக் கொடி என்று வர்ணித்ததாகக் கொள்ள வேண்டும். ஸ்வாமி தேசிகன் நாயிகா பாவத்தை அடைந்த போது எந்த வர்ணனை தான் அதிகமாகும்? ஆசார்யோத்தமன் ஸ்ரீ தேவநாதனிடத்தில் மிகுந்த வ்யாமோகம் அடைந்தமையை அவ்வெம்பெருமான் விஷயமான எல்லாப் பிரபந்தங்களிலும் காண்கிறோம்.-அது மிக விலக்ஷணமான தசையை யடைந்து ‘பக்தி: ஸ்ருங்கார வ்ருத்த்யா பரிணமதி‘ என்று அவர் தாமே யருளிச் செய்தபடி ஸ்த்ரீ பாவத்தை யடையச் செய்தது. ஸ்ரீ தேவநாயக பஞ்சாசத்தில் ‘பிம்பாதரம் ஸ்பருசதி ராகவதீ மதிர்மே‘ என்பது போன்ற பல வாக்கியங்கள் உள. அடுத்த பிரபந்தமான அச்யுத சதகம் முழுவதையும் பெண்கள் பாஷை யென்று பிரஸித்தி யடைந்த பிராகிருத பாஷையிலே அமைத்தார்.-அச்யுத சதகத்திற்கு அடுத்த பிரபந்தம் மும்மணிக்
கோவை. வடமொழி- ப்ராக்ருத நூல்களிலேயே ஸ்ருங்கார பாவத்தைப் பாராட்டிய ஸ்வாமி தமிழ்நூலாகிய இதில் இன்னும் வெளிப்படையான ரீதியிலே ஆழ்வார் காட்டிய துறைகளைக் கொண்டு அவ் வனுபவத்தைப் பேசி யிருக்கிறார். இந்த நூலில் 3, 6, 9, ம் பாசுரங்களில் ஆழ்வார்களுடைய நாயிகா பாவ ரஸங்களையெல்லாம் பொருத்திப் பாடியிருப்பது புலப்படுகிறது.-மேல் பிரபந்தங்களான பந்து,கழல், அம்மானை,
ஊசல், ஏசல், என்னும் ஐந்தும் கூட நாயிகா பாவத்திலே நிலை யுடையன வாதல் வேண்டும் -அவை நம் தீ வினையால் மறைந்து விட்டன.

—————-

பெற்றனை நீயே மற்றுள வெல்லாம் — அனைத்தையும் நீயே சிருஷ்டித்து அருளினாய்
பெறுவது நின்னை யுறுவது கொள்வார் -உன்னையே தக்க உபாயமாகவும் பலனாகவும் கொள்வார்
நின்னலால் அன்றி மன்னார் இன்ப
நீ நின் பொருட்டு நீ என் பொருட்டு இலை
நின்னுரு நின்றும் மின்னுருத் தோன்றும் –உன் திரு மேனியில் இருந்தே மின் போல் நிலையற்ற அனைத்தும் பிறக்கின்றன
நின் தனக்கு நிகர் நின்னடி யடைவார்
ந பால் அன்றி யன்பால் உய்யார்
வாரணம் அழைக்க வந்த காரணனே –10-

வாரணம்- கஜேந்திரன்
அழைக்க- (மூலமே என்று) அழைக்க
வந்த – வந்து தோன்றிய
காரணமே! – காரண வஸ்துவே
மற்று உள எல்லாம் – (உன்னைத் தவிர) மற்றெல்லாவற்றையும்
நீயே பெற்றனை – நீயே பிறப்பித்தாய்.
உறுவது கொள்வார் – தாம் பெற வேண்டிய
தகுந்த புருஷார்த்தத்தை அடைய விரும்புமவர்கள்
பெறுவது – அடைவது
நின்னை – உன்னைத் தான்
(அவர்கள்)
நின்னால் அன்றி- உன்னாலே யன்றி
இன்பம் மன்னார் – (வேறொருவராலும்
எத்தகைய) இன்பத்தையும் பெற மாட்டார்கள்.
நீ- நீ (நின் இருப்பும் செய்கையும்)
நின் பொருட்டு – உனக்காகவே (யன்றி)
என் பொருட்டு -என் பலனுக்காக இல்லை அன்று.
நின் உரு நின்றும் – உன் உருவத்தினின்றும்
மின்உரு – மின் போல் சஞ்சலமான,நிலை யற்ற
தோன்றும் – உற்பத்தி யாகின்றது;
உலகம் நின்அடி- உன் திருவடிகளை
அடைவார் – அடைபவர்
நின்றனக்கு – உனக்கு
நிகர் -சமமாக ஆவார்கள்;
நின் பால்- உன் விஷயத்தில்
அன்பால் அன்றி- பக்தி கொண்டாலன்றி
உய்யார்-உஜ்ஜீவிக்க மாட்டார்கள்

மேலே உள்ள 20 பாசுரங்களும் கிடைக்கப் பெற்றிலோம் –

இப்பிரபந்தம் இன்று காணும் நிலையில் இது கடைசிப் பாசுரமாக விளங்குகிறது.-தமிழ்ப் பிரபந்த விலக்கணத்தின் படி மும்மணிக்கோவை 30 பாசுரங்கள் கொண்டதாக விருக்க வேண்டும். இங்கு இதற்கு மேலுள்ள 20 பாசுரங்களும் நமக்குக் கிடைக்காமல் மறைந்து போயிருக்க வேண்டும்.
பெற்றனை நீயே மற்றுள வெல்லாம்-”மற்று தெல்லாம்‘ என்றும் பாடம்-கொள்வார்.
பொருள் ஒன்றே. உன்னை யொழிந்த அனைத்தையும் நீயே பிறப்பித்தனை பெற்றதாய் நீயே பிறப்பித்த தந்தை நீ’ என்றார் ஆழ்வார். பெற்றனை என்பதற்கு அடைந்திருக்கின்றாய் என்றும் பொருள் கொள்ளலாம். அப்போது அவை யனைத்தும் உன்னுடையனவே என்ற கருத்துத் தேர்கிறது.
எல்லாம் உள= எல்லாம் ஸத்தியமே பொய்யானவை யல்ல என்ற விசிஷ்டாத்வைத்துவம் த்வனிக்கிறது.
பெறுவது நின்னை யுறுவது கொள்வார்-தம் ஸ்வரூபத்திற்கு ஏற்ற பலனைப் பெற விரும்புவோர் பெறுவது உன்னையே. ‘உறுவது கொள்வார்’-என்றது பரமைகாந்திகளை. ‘திருவொடு மருவிய இயற்கை மாயாப் பெருவிறலுலகம் மூன்றினொடு நல் வீடு பெறினும் கொள்வ தெண்ணுமோ தெள்ளியோர் குறிப்பே’-என்று நம்மாழ்வாரும், ‘நாதே
நஸ்த்ருணம் அந்யத்- அந்யத்- அபி-வ…. வாசா ந யாசாமஹே’
என்று ஸ்ரீ தேசிகன் தாமும் அருளிச் செய்தபடி எம்பெருமானை யன்றி வேறெதையும் பொருட்படுத்தாத அதிகாரிகள் இங்கே குறிப்பிடப் பட்டவர்.
முதலிரண்டு வாக்கியங்களையும் ஒன்று சேர்த்துப் பார்த்தால் எல்லாவற்றையும் நீ அடைந்து நிற்கிறாய்;-உன்னை அம்மஹாதமாக்கள் பெறுகின்றனர் என்று
ரஸமான ஒரு கருத்துத் தோன்றுகிறது.
நின்னாலன்றிமன் னாரின்பம்.-இந்த வாக்யத்திற்கும் ‘உறுவது கொள்வார்’
என்பதையே எழுவாயாகக் கொள்ள வேண்டும்’-பரமை காந்திகள் நீயாகிய இன்பத்தைப் பெறுவதுவும் உன்னாலேயே. அவர்களுக்கு நீ புருஷார்த்தமாவது மட்டு மன்றி உபாயமும் நீயே. இங்கு-உன்னாலல்லால் யாவராலு மொன்றுங் குறைவேண்டேன்‘ என்ற அவர்களது திடமான மனப்பான்மைவிளங்குகிறது. அதுவுமவனதின்னருளே’ என்று-அவன் கை பார்த்திருக்குமவரே உண்மைப் பரமை காந்திகள்.’உறுவது கொள்வார்‘-என்னுமதை இங்கு வருவியாமல், யார் எந்த இன்பத்தை எவர் மூலமாகப் பெற்றாலும் அது உண்மையில் உன்னாலேயே கிடைக்கின்றது என்று பொதுப்பட்ட தத்துவத்தை உணர்த்தியதாகவும் கொள்ளலாம்.

நின் பொருட்டு நீ என் பொருட்டிலை-நின்பொருட்டன்றி என் பொருட்டில்லை
என்றும் பாடமுண்டு. உன் இருப்பும் உன் செய்கையும் மற்றுமுள்ள அனைத்தும் உனக்காகவே யன்றி எனக்காக வில்லை.-அவற்றால் வரும் பலன் அனைத்தும்
உன்னுடையனவே.இதனால் எம்பெருமான் அனைத்துக்கும் சேஷியாய் நிற்கும் தன்மை கூறப்பட்டபடி.-பட்டர் ‘ஸ்வமுத்திச்ய ஸ்ரீமான்’ என்று உபநிஷத்தின் கருத்தை வெளியிட்டதை இங்கு ‘நின் பொருட்டு என்றும் ‘என் பொருட்டில்லை’ என்றும் இரண்டும் வகையாக ஸ்ரீ தேசிகள் காட்டியருளியபடி.

நின்னுரு நின்று மின்னுருத் தோன்றும்-உன் உருவத்திலிருந்து மின்னலைப் போல்
சஞ்சலமான,நிலையற்ற ஐகத்துத் தோன்றும்.-இங்கு ஒரு ரஸமான அர்த்தம் த்வனியால் கிடைக்கிற தென்னலாம். அதாவது மின் உரு – மின்னற்கொடி போன்ற பெரியபிராட்டி, நின்னுரு நின்று- உன் வடிவத்தில்,தோன்றும் பிரகாசிக் கிறாள் என்று திருவையும் திருமாலையும் நேரிற்கண்ட பேயாழ்வார் ‘பொலிந்திருண்டகார் வானில் மின்னே
போல் தோன்றி மலிந்து திருவிருந்தமார்பன்’
என்று பாசுரமிட்டதைத் திருவுள்ளத்திற் கொண்டு அந்தப் பொருளையும் கொடுக்கும் முறையில் பாசுரத்தை ஸ்ரீ தேசிகன் அமைத்திருக்கக்கூடும்.

நின்றனக்கு நிகர் நின்னடியடைவார்-உன்னடி யடைந்து அதனால் உனது (பரம்)பதம் பெற்றவர்கள் உன்னைப் போன்ற வடிவம் பெறுதலாகிய ஸாரூப்யத்தை யடைவதுடன் உனக்குச் சமமான போகத்தையும் பெற்று விளங்குகிறார்கள்.
தன்னனைய ஸூரியர் தன்னடிக் கீழ் வாழ’ என்று இவர் தாமே வேறிடத்தில் அருளிச் செய்தார். தம்மையே நாளும் வணங்கித் தொழுவார்க்குத் தம்மையே யொக்க அருள் செய்யும் அவனதியல்பும் ஓடியோடிப் பல பிறப்பும் பிறந்துழலும் சேதநர்கள் அவனடி
யடைந்த மாத்திரத்தாற் பெறும் பேறும் ஒருங்கே விளங்குகின்றன
இவ்வடியில்

நின்பாலன்றி அன்பாலுய்யார்-நின்னடி யடைபவர் அன்பாலன்றி உய்யார்;-அதிலும் நின்பால் அன்பாலன்றி உய்யார் என்று பொருள் கொள்க.-வாரணமழைக்க வந்த காரணமே-கீழ் 9 பாசுரங்களில் ஸ்ரீ தேவநாதனை அடியவர்க்கு மெய்யனென்றும் அயிந்தை நாதனென்றும் தெய்வ நாயகனென்றும் விளித்தார். ஸ்ரீ தேசிகன்-இந்தப் பாசுரத்தில் பொதுப்பட மூலகாரணமே என்று மனமுருகிக் கூப்பிடுகிறார். கஜேந்திரனைக்
காத்த வரலாற்றில் ஸ்ரீ தேசிகனுக்கு மிக்க ஈடுபாடு உண்டென்னலாம். நவமணி மாலையிலும் “கையு மாழியுமாய்க் களிறு காத்தவனே” என்று அழைக்கிறார் . வாரணம் – யானை. ஏதோ ஒரு யானை அழைக்க – ஆதி மூலமே என்று கூப்பிட,வந்த -(அந்த யானையைக் காக்க) ஓடிவந்த காரணமே-ஜகத் காரண வஸ்துவே; இங்கு ‘அழைக்க’ என்ற சொல் யாகம் முதலிய க்ரியைகளையும் விசேஷ தபஸ்ஸையும் செய்தும் பெருவதற்கு அரியனான எம்பெருமான் யானை ‘மூலமே’ என்று அழைத்த மாத்திரத்திலே ஓடி வந்த ஸௌலப்யத்தைக் காட்டுகிறது. உலகில் தன்னிடம் சேருவதையே வருகை
என்று கூறுவதால் இங்கு ‘வந்த’ என்ற சொல் கஜேந்த்ர ரக்ஷணம் செய்வதற்காக வந்த இடமே எம்பெருமானுக்கு உரிய இடமென்றும் ஆகவே தன்னிடத்திற்கு வந்தா னென்றும் பொருளை த்வனியால் காட்டும். காரணம்’ என்றதால் தெய்வங்களெல்லாம் ஓடி யொளித்தவன்று அவன் ஒருவனே யானையைக் காக்க ஓடி வந்தபடியால் அவனே தெய்வ நாயகன் எனப்படும் காரணமாகின்றான்என்று சித்ததாயிற்று.
இந்தப் பாசுரத்தில் ஸ்ரீ தேசிகன் ஒரு சித்திரத்தை அமைத்திருக்கிறார். நீ,நின்னை, நின்னால், நின்பொருட்டு, நின்னுரு நின்று, நின்( னடி.), நின் பால் என்று ஏழு வேற்றுமைகளையும் ஏழடிகளில் வரிசையாய்க் கையாண்டு காரணமே யென்று விளி வேற்றுமையில் முடித்திருக்கிறார். தொன்று தொட்டு நான், என்னை என்னால், எனக்கு, என்னின்,எனது.என்பால் என்று, அஹங்காரம் முற்றி அதன் மீது வரும் வேற்றுமைகளையே உபயோகித்து வந்த சேதநன் பகவதநுக்ரஹம் பெற்றவாறே அகங்கார மமகாரங்களை ஒழித்து எம்பெருமானை முன்னிலையாக்கி அவன் விஷயத்திலே அத்தனை வேற்றுமைகளையும் உபயோகித்து உய்வான் என்று ஸூசிக்கப்பட்டதாகிறது.
மேலும் வேற்றுமையே யில்லாத எம்பெருமானிடம் எல்லா வேற்றுமைகளையும் ஏற்றிப் பேசிய ரஸம் காண்க.
இப்பிரபந்தத்தின் ஆதிச்சொல் அருள்; முடிவிலுள்ள சொல்- காரணம். இரண்டும் சேர்ந்து ‘அருள்காரணம்’ என்றாகி திருமாலின் அருளே அனைத் துக்கும் முக்கிய காரணம் என்ற உண்மைப் பொருளை-இப்பிரபந்தம் முழுவதிலும் தெரிவிக்கின்றது.

————————————————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ வேதாந்த தேசிகன் திருவடிகளே சரணம் .
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ வேதாந்த தேசிகர் ஸ்வாமிகள் வைபவம்-

November 2, 2025

ஸ்ரீமந்‌ நிகமாந்த மகாதேசிகன்‌ அருளிய தேசிகப்‌ பிரபந்தம்‌ உலகத்து உயிர்களனைத்தும்‌ நற்கதி பெற வேண்டும்‌ என்ற கருணை உள்ளத்தோடு நாள் தோறும்‌ பாராயணம்‌ பண்ணுவதற்கு ஏற்றவாறு அருளிச்செய்த 24 பிரபந்தங்களில்‌ 19 பிரபந்தங்கள் தான்‌
இப்போது நமக்குக்‌ கிடைத்துள்ளன. ஆழ்வார்கள்‌ அருளிய 24 பிரபந்தங்களும்‌ ‘அருளிச்செயல்‌’ என்ற பெயருடன்‌ வழங்குவது போல ஸ்ரீதேசிகன்‌ உலகம்‌ உய்வதற்காக அருளிச் செய்த பிரபந்தங்‌கள்‌ தேசிகப் பிரபந்தம்‌ என்ற பெயரால்‌ வழங்கப் படுகின்றன.-தத்துவங்களின்‌ ஸ்வரூபம்‌, ரகஸ்யங்களின்‌ அர்த்தம்‌, உபாயம்‌ பலன்‌. ஆசாரம்‌, அனுஷ்டானம்‌, ஆகார நியமம்‌ முதலிய பல விஷயங்கள்‌ இதில்‌ மிக அரிய பாக்களில்‌ வெளியிடப்படுவதால்‌ ஸத் ஸம்ப்ரதாய கிரந்தங்களுள்‌, ஸ்ரீ தேசிகப் பிரபந்தம்‌ தலை சிறந்து விளங்குகிறது. வேதத்திற்கும்‌ வேதாந்தத்துக்கும்‌ போல்‌ வரையறை யன்றி, எல்லாச் சாதியாரும்‌, பெண் பாலரும்‌ அனுசந்தித்து நல் வாழ்வு பெற வேண்டுமென்ற கருணை யுள்ளத்தோடு இந்தப்பிரபந்தங்களை ௮ருளிச்‌ செய்தார்‌. தத்துவ, ஹித புருஷார்த்தங்களை இனிய சொற்களிலே கலந்து பிரபத்தி என்னும்‌ தேனைக் குழைத்து இப்பிரபந்தங்களாகிய அழுதத்தைத்‌ திரட்டி உலகுக்கு வழங்கினார்‌ நம்‌ ஆசார்ய வள்ளல்‌. வேறு தெய்வத்தை நாடாத ஏகாந்திகளும்‌, வேறு பயனையும்‌ நாடாத பரம ஏகாந்திகளும்‌ இந்தப்‌ பிரபந்தங்களைத் தினமும்‌ அனுசந்தித்து இதன்‌ கருத்துக்களில்‌ ஈடுபட்டுப்‌ போற்றுகின்றனர்‌.-ஸ்ரீ தேசிகன்‌ காஞ்சிபுரத்தில்‌ திருத்தண்கா வெனப்படும்‌ விளக்‌கொளி யெம்பெருமான்‌ ஸந்திதிக்கு அருகில்‌ உள்ள தூப்புல்‌ என்ற புண்ணிய பூமியில்‌ கி.பி. 1268-ல்‌ புரட்டாசி மாதத் திருவோண நன்னாளில்‌ அவதரித்தார்‌. தவப் புதல்வராகப்‌ பிறந்தார்‌. ஆழ்வார்களும்‌, ஸ்ரீ பாஷ்யகாரர்‌ (இராமானுசர்‌] வரையிலுள்ள மஹாச்சார்யார்‌களும்‌ அருளிய திவ்ய ஸூக்த்திகளின்‌ கருத்தையும்‌, மதக் கொள்கைகளையும்‌, ரஹஸ்யார்த்தங்களையும்‌ மேலும்‌ விரிவாய்‌ அறிந்து சேதனர்கள்‌ இன்புற்று வாழ்வதற்கு வேண்டி ஸ்ரீ பாஷ்யகாரரது அவதாரமே என்று புகழும்படி ஸ்ரீ தேசிகனை அவதாரப் படித்தி அருளினான்‌ ஸர்வேஸ்வரனான எம்பெருமான்‌ எனலாம்‌.

ஸ்ரீமந்‌ அநந்தஸுரி என்னும்‌ வைணவ சீலருக்கும்‌ அவரது தர்ம பத்நியாகிய தோதாரம்மாவுக்கும்‌ அருந்தவப்‌ புதல்வராய்ப்‌ பிறந்தவருக்கு, திருவேங்கட முடையானது திருநட்சத்திரத்திலேயே அவதரித்த காரணத்தால்‌ ஸ்ரீ வேங்கடேசன்‌ என்று திருநாமம்‌ சூட்டினர்‌ பெற்றோர்‌. இராமானுஜரது சிஷ்யரான கிடாம்பியாச்‌சான்‌ என்பவரின்‌ சிஷ்யரான கிடாம்பி அப்புள்ளான்‌ தன்‌ சகோதரி மகனான தேசிகருக்கு மதம்‌, தத்துவம்‌, ஞானம்‌ முதலியவைகளில்‌ சிறந்த பயிற்சி கொடுத்தார்‌. இவரும்‌ ரஹஸ்யார்த்தங்களை யெல்‌லாம்‌ கசடறக் கற்று உபய வேதாந்தங்களிலும்‌ (தமிழ்‌ – சமஸ்கிருதும்‌) ஒப்புயர்வற்ற ஞானத்தோடு விளங்கினார்‌. அப்புள்ளாரும்‌-ஸ்ரீமத்‌ நாத முனிகள்‌ வாயிலாக வந்து ஆளவந்தாரால்‌ வளர்க்கப்‌ பட்டு ஸ்ரீ பாஷ்யகாரரால்‌ நன்கு பாதுகாக்கப்பட்டு வந்த ஸ்ரீ விசிஷ்டாத்வைத சித்தாந்தத்தை மேலும்‌ ஒளி விடுமாறு பாதுகாத்‌துப்‌ பாசுரம்‌ செய்ய தமக்குப்‌ பரம்பரையாய்‌ வந்த கருட மந்திரத்தை உபதேசித்தார்‌ தேசிகருக்கு.பெற்றோர்கள்‌, நியமனப்படி திருமங்கையார்‌ என்னும்‌ அழகுத் திருவுருவை மணந்தார்‌. பேரருளாளன்‌ திருவருளால்‌ அவருக்கு நாயனாராச்சான்‌ பிள்ளை என்ற திருக்குமாரன்‌ அவதரித்த போதிலும்‌, இல்லற வாழ்க்கையில்‌ மிக்க ஈடுபாடின்றி இல்லற தர்ம அனுஷ்டானங்களை மட்டும்‌ வழுவாது நடத்தி வந்தார்‌. தனது அருமைக் குமாரனுக்கு ‘வரதன்‌’ என்ற சிறப்பு நாமமிட்டு உரிய காலத்தில்‌ அந்தந்த ஸம்ஸ்காரங்களையும்‌ (சடங்குகளையும்‌) உபநயனத்தையும்‌ செய்து வித்யாப்யாசத்தையும்‌ செய்வித்தார்‌. இவரும்‌ தம்‌ தகப்பனார்‌ ஸந்நிதியிலேயே பஞ்ச ஸம்ஸ்காரம்‌ பெற்றுக்‌ கால க்ஷேபம்‌ செய்து தீபத்தில்‌ தோன்றிய பிரதிதீபம்‌ போல்‌ விளங்கினார்‌.-அப்புள்ளார்‌ தம்‌ அந்திம காலத்தில்‌ ஸ்ரீ தேசிகனை அழைத்து நீ பாஷ்யகாரருடைய பாதுகைகளையும்‌, தாம்‌ உபயோகித்து வந்த திருவாழி திருச்சங்கையும்‌ கொடுத்து, தேசிகன்‌ திருமுடியில்‌, தன்‌ திருவடிகளை வைத்து அனுக்ரஹித்துத் தாம்‌ திருநாட்டுக்கு எழுந்தருளினார்‌. பிறகு சில நாள்‌ சென்றவுடன்‌ தேசிகன்‌ திருவயிந்திபுரத்‌திற்கு எழுந்தருளி, அங்குள்ள தெய்வ நாயகனையும்‌, பிராட்டியையும்‌ மங்களஸாஸனம்‌ செய்து அங்குள்ள ஒளஷதாத்ரி என்ற மலையில்‌ ஏறி ஸ்ரீ நரசிம்ஹன்‌ ஸந்நிதிக்கு எதிரில்‌ ஒரு அச்வ மரத்தடியில்‌ கருட மந்திரத்தை ஜபித்தார்‌. அதனால்‌ மகிழ்ந்த கருட பகவான்‌, ஸ்ரீ ஹயக்ரீவ மந்திரத்தை உபதேசித்து யோக நிலையில்‌ இருக்கும்‌ ஒரு ஹயக்ரீவ விக்ரகத்தையும்‌ கொடுத்து விட்டு மறைந்தார்‌. தேசிகன்‌ ஹயக்ரீவ மந்திரத்தை ஜபித்து, அவரையே தியானித்துக்‌ கொண்டிருந்தமையால்‌ மிகவும்‌ மகிழ்ந்த ஹயக்ரீவன்‌ நேரில்‌ எழுந்தருளி, ஞானமும்‌ பிரவசன சக்‌தியும்‌ மென்மேலும்‌ பெருகுமாறு தன்னுடைய திருவாய்‌ அமுதத்தை இவருக்கு அளித்‌தார்‌. அதன்‌ பின்னர்‌ தேசிகர்‌ ஹயக்ரீவ ஸ்தோத்ரம்‌, கருட பஞ்சாசத்‌,தேவநாயக பஞ்சாசத்‌, அச்யுத சதகம்‌ முதலிய ஸ்தோத்திரங்களையும்‌, மும்மணிக்கோவை, நவமணிமாலை முதலிய தமிழ்‌ பிரபந்‌தங்களையும்‌ அருளிச்செய்து அவ்வூரிலேயே சித்தாந்த உபந்யாசம்‌ நடத்திக் கொண்டு நெடுங்காலம்‌ வாழ்ந்திருந்தார்‌. அதன்‌ பின்னர்‌ காஞ்சியில்‌ பேரருளாளரைச்‌ சேவிக்க விரும்பி வரும்‌ வழியில்‌ முதலாழ்வார்களுக்கு எம்பெருமான்‌ சேவை சாதித்த திருக் கோவலூருக்குச்‌ சென்று திருவிக்ரமப்பெருமாளைச்‌ சேவித்து, பின்‌ காஞ்சி சென்று, பெருமாளையும்‌, தாயாரையும்‌ பரிபூர்ணமாக அனுபவித்து நியாஸ சதகம்‌, வரதராஜ பஞ்சாசத்‌ முதலிய ஸ்தோத்ரங்களையும்‌, அடைக்கலப் பத்து, அருத்த பஞ்சகம்‌, முதலிய பிரபந்தங்களையும்‌ அருளிச் செய்தார்‌. அருகே யுள்ள திருவெஃகா, திருப்புட்குழி, முதலிய தேசத்துப் பெருமான்களையும்‌, மங்களா சாஸனம்‌ செய்து, யதோக்தகாரி ஸ்தோத்ரம்‌ முதலிய பல ஸ்தோத்ரங்களையும்‌ அருளிச் செய்து ஸம்பிரதாயப் பரிசுத்த முதலிய சில்லரை ரஹஸ்யங்களையும்‌, வேதாந்த கிரந்தங்களையும்‌ அருளிச் செய்து கொண்டிருந்தார்‌. அப்பொழுது பாஷ்யகாரருக்கு ஸரஸ்வதி தேவியால்‌ அளிக்கப்பட்ட ஹயக்ரீவர்‌ விக்ரகம்‌, அப்புள்‌ளாரின்‌ சந்ததி வழியாய்‌ இவருக்குக்‌ இடைத்தது. அதையும்‌ சேர்த்து ஆராதித்துக் கொண்டு சிஷ்யர்களுக்கு உபந்யாசம்‌ செய்து கொண்டிருநதார்‌. பின்பு திருக் கடிகை முதலிய திவ்ய தேசங்களைச்‌ சேவித்துக்‌ கொண்டு திருமலைக்கு எழுந்தருளி, அவ்வெம்பெருமானைப்‌ பூரணமாய்‌ அனுபவித்து அவனது தயையை வேண்டித்‌ தயா சதகம்‌ என்ற ஸ்தோத்ரத்தை அருளிச்‌ செய்தார்‌. பின்னர்‌ அங்கிருந்து வடக்கிலுள்ள பிருந்தாவனம்‌, திருவயோத்தி, சாளக்ராமம்‌, பத்ரியாஸ்ரமம்‌ முதலிய திவ்ய தேசங்களை மங்களாசாஸனம்‌ செய்து திரும்பி, திருவல்லிக்கேணி, திருவெவ்வுள்‌ முதலியவற்றையும்‌ சேவித்து மகிழ்ந்தவராய்‌, ஸ்ரீபெரும்புதூரில்‌ எம்பெருமானாரைக்‌ கண்டு களித்து மீண்டும்‌ காஞ்சி வந்து சித்தாந்தப் பிரசங்கம்‌ செய்து கொண்டிருந்தார்‌.

ஸ்ரீ பகவத்‌ ராமானுஜ சித்தாந்தத்தை நாடெங்கும்‌ பரவச்‌ செய்து, சேதனர்களது வாழ்வை வளப்படுத்த, ஸ்ரீரங்கமே வசதியான இடம்‌ என எண்ணியதால்‌ அங்கேயே நெடுங்காலம்‌ வசிக்க விரும்பினார்‌. உபய வேதாந்த ஸம்ப்ரதாயம்‌ தமக்குப்‌ பிற்காலத்‌தில்‌ நல்ல பிரசாரம்‌ அடைவதற்குச்‌ சிறந்த வழியாக பகவத் தியாந ஸோபாநம்‌, தசாவதார ஸ்தோத்ரம்‌, முதலிய ஸ்தோத்ரங்களையும்‌, தத்துவ ரத்நாவளி, ஸர்வார்த்த ஸித்தி, நியாயப் பரிசுத்தி, நியாய சித்தரஞ்சனி, ஈஸ்வர மீமாம்சை சததூஷணை, தத்துவ மாத்ருகை போன்ற பல வேதாந்தக்‌ கிரந்தங்களையும்‌ அருளிச் செய்ததால்‌ இவர்‌ செய்யும்‌ பேருபகாரத்தைக்‌ கண்டு மகிழ்ந்த ஸ்ரீரங்கநாதன்‌ இவருக்கு ‘வேதாந்தசார்யார்‌’ என்ற விருதை அளித்தார்‌. ஸ்ரீரெங்கநாச்சியார்‌ இவருக்கு ‘ஸர்வதந்திர ஸ்வதந்திரர் ‘ என்ற விருதை அளித்தருளினார்‌. அங்குள்ள மகா வித்வான்கள்‌ ‘கவிதார்க்‌கிக ஸிம்ஹம்‌’ என்ற விருதைச்‌ சமர்ப்பித்து மகிழ்ந்தனர்‌.ஒரு கால்‌ கிருஷ்ண மிச்ரன்‌ என்ற ஒரு வித்வான்‌ ஸ்வாமியிடம்‌ வாதம்‌ செய்தபோது, ஸ்வாமி தம்முடைய மேதா விலாசத்தால்‌ அவனை ஜயிக்க, அவனும்‌ ஸ்வாமியின்‌ பெருமையை வியந்து பணிந்து சென்றான்‌. அப்பொழுது அவதரித்தது ‘ஸங்கல்ப ஸூர்‌யோதயம்‌ என்னும்‌ அற்புத நாடகக்‌ கிரந்தம்‌ என்று தெரிகிறது.-இவ்வாறு ஸ்ரீரங்கத்தில்‌ நீண்ட நாட்கள்‌ இருந்த பின்னர்‌ தென்னாட்‌டிலுள்ள திருமாலிருஞ்சோலை, திருக்குறுங்குடி, ஸ்ரீவரமங்கை (நாங்குனேரி) முதலிய திவ்ய தேசங்களைச்‌ சேவித்து, ஸ்ரீவில்லிபுத்‌தூரில்‌, கோதா பிராட்டியாரைத்‌ தொழுது, கோதா ஸ்துதியை அருளிச்‌ செய்து திருப் புல்லாணி முதலிய திவ்ய தேசங்களையும்‌ வணங்கி, குருகூரில்‌ ஆழ்வாரைத்‌ திருவடி தொழுது, திருவனந்தபுரம்‌ முதலிய மலை நாட்டுத்‌ திருப்பதிகளையும்‌, சோழ நாட்டுத் திவ்ய தேசங்களையும்‌ மங்களாசாசனம்‌ செய்து, திருவயிந்திபுரத்திற்கு எழுந்தருளித்‌ தம்‌ கடமைகளை அனுஷ்டித்து வந்தார்‌.-அங்கும்‌ அவரது வல்லமையைப்‌ பரீட்சிக்கக்‌ கருதிய ஒரு கொத்தன்‌, கோணலான கற்களையே எடுத்துக் கொடுக்க ஸ்வாமி தம்‌ வல்லமையால்‌ அவற்றையே பயன்படுத்தி மிக அழகிய திருக்கிணற்றை அமைத்து அவனது செருக்கை அடக்கி அவன்‌ தன்னைப்‌ பணியுமாறு செய்தார்‌. இன்றும்‌ அக் கிணறும்‌ ஸ்ரீதேசிகன்‌ திருமேனித்‌ திருவடிகளின்‌ ஸ்பரிசம்‌ பெற்ற திருமாளிகையும்‌ எல்லாராலும்‌ சேவிக்கப்பட்டு வருகின்றன. ஒரு நாள்‌ சைன மதத்‌ தமிழ்ப் புலவர்கள்‌ பலர்‌ பல்வேறு மதத்தினர்களையும்‌ துணை கொண்டு ஸ்வாமியிடம்‌ வாது புரிய வந்தனர்‌. ஸ்ரீதேசிகனும்‌ அடியவர்க்கு மெய்யனான திரு முன்பே அவர்கள்‌ அனைவரையும்‌ வாதத்‌திலே தோற்கடித்து, அவர்களது வாதப் போக்கையும்‌, அவர்களைக்‌ கண்டித்த முறையையும்‌ தொகுத்துப்‌ ‘பரமத பங்கம்‌” என்னும்‌ ரஹஸ்யமாக அமைத்தருளினார்‌ என்பது பரம்பரைச்‌ செய்தியாகும்‌.-சீடர்களின்‌ வேண்டுகோளுக்கிணங்கி காஞ்சிக்குத்‌ திரும்பியவர்‌, காஞ்சியில்‌ ஒரு பாம்பாட்டி ஸ்வாமி முன் வந்து தன்‌ பெட்டியிலிருந்த பாம்புகளை வெளியே ஓட விட்டான்‌. சில கோடுகளை ஸ்வாமி பூமியில்‌ கீறவே பாம்புகளால்‌ அவற்றைத் தாண்ட முடியவில்லை. ஒரு கொடிய பாம்பு மட்டும்‌ அவற்றைத் தாண்டி ஸ்வாமியை அணுக, அவரும்‌ கருட மந்திரத்தை உச்சரித்தார்‌. உடனே ஆகாயத்திலிருந்து கருடன்‌ பறந்து வந்து எல்லாப் பாம்புகளையும்‌ தூக்கிச் சென்று விட்டான்‌. பாம்புப் பிடாரன்‌ தனக்குத் தோல்வி நேர்ந்தது மட்டுமன்றித்‌ தன்‌ ஜீவனோபாயமான சர்ப்பங்களையும்‌ இழக்க நேரிட்டதற்கு வருந்தி ஸ்வாமியைப்‌ பணிந்து பிரார்த்திக்க, ஸ்வாமியும்‌ மனமிரங்கி கருட தண்டகத்தை இயற்றி அனுஸந்தித்‌தார்‌. உடனே கருடன்‌ அந்த ஸர்ப்பங்களை யெல்லாம்‌ திரும்பக்‌ கொண்டு வந்து போட்டார்‌. பிடாரன்‌ மகிழ்ந்து, ஸ்வாமியை ஸர்வ சித்தி வல்லவர்‌ என்று கொண்டாடிப்‌ பாம்புகளை எடுத்துச்‌ சென்றான்‌.-காஞ்சியில்‌ பேரருளாளரது உத்சவ காலத்தில்‌ பெருமாளுக்கு முன்னால்‌ திவ்யப் பிரபந்தத்தை அனுசந்தித்தல்‌ சாஸ்த்ர விரோதமென்று பலர்‌ ஆட்சேபித்த பொழுது, ஸ்வாமிகள்‌ திவ்யப் பிரபந்தம்‌ பரம வைதிகமே யென்று ஸ்தாபித்து, உத்சவத்தைத்‌ தடையின்றி நடத்தச் செய்தார்‌. இவ் வெற்றிக்கு அறிகுறியாகப்‌ பேரருளாளன்‌, தன்‌ திருச்சின்னங்கள்‌ இரண்டினில்‌ ஒன்றைத்‌ தேசிகனுக்கு மனமுவந்து அருளினான்‌. இந்த வரலாற்றினைத்‌ தழுவியே இன்றும்‌ பேரருளாளனுக்கு ஒற்றைத்‌ திருச்சின்னமே சேவிக்கப்படுகின்ற தென்று பணிப்பர்‌ பெரியோர்‌.காஞ்சியிலிருந்து ஸ்ரீரங்கம்‌ செல்லும்‌ வழியில்‌, திருக்கோவலூரில்‌, இரவில்‌ ஒரு கடலை வியாபாரி வீட்டில்‌ தங்க நேர்ந்தது.ஸ்ரீ ஹயக்ரீவனுக்குச்‌ சுத்த தீர்த்தத்தை நிவேதனம்‌ செய்து தாம்‌ உபவாசமிருந்தார்‌. நள்ளிரவில்‌ அந்த வைசியர்‌ ஓடிவந்து சுவாமியிடம்‌, ஒரு வெள்ளைக் குதிரை தம்‌ வீட்டிற்குள்‌ புகுந்து கிடங்கிலுள்ள கடலையை மேய்வதாகவும்‌, தம்மால்‌ அடக்க முடியவில்‌லையென்றும்‌ முறையிட்டார்‌. ஸ்ரீ ஹயக்கிரீவனே அவ்வாறு செய்வதாக அநுமானித்த தேசிகர்‌, வைசியரிடம்‌ கொஞ்சம்‌ பால்‌ கொண்டு வரச் சொல்லி முழுவதும்‌ குதிரை வடிவு கொண்டிருந்த ஹயக்கிரீவனுக்கு நிவேதனம்‌ செய்ய குதிரையும்‌ மறைந்தது.வைசியரும்‌ மிகச்‌ சிறந்த பக்தரானார்‌. இந் நிகழ்ச்சியால்‌ அவருக்குப்‌ பெருஞ்செல்வம்‌ குவிந்தது.“உன்னை, விஜயநகரப்‌ பேரரசின்‌ ஆஸ்தான வித்வானாக ஆக்குகிறேன்‌’ என்று கூறிய தன்‌ நண்பர்‌ வித்யாரண்யரிடம்‌, எனக்குப்‌ பணமும்‌ பதவியும்‌ தேவையில்லை.-எனக்குக்‌ காஞ்சி வரதராஜரருளும்‌ அருட்செல்வமே, அமைதியையும்‌ ஆனந்தத்தையும்‌, அளிக்கவல்லது என்று கூறி விரும்பித்‌ தாமே வறுமையை ஏற்றுக் கொண்டவர்‌ இவர்‌. அப்பொழுது இவர்‌ அருளிய வைராக்ய பஞ்சகம்‌ என்ற ஐந்து ஸ்லோகங்கள்‌ சிறப்பு வாய்ந்தவைகளாகும்‌. அந்த வைராக்ப பஞ்சகப் பொருள்‌ சுருக்கம்‌ வருமாறு:நல்ல ஞானத்தைப்‌ பெற்றவர்களும்‌ தம்‌ வயிற்றை வளர்க்க, அரசர்களிடம்‌ சென்று அவர்களைப்‌ போற்றிப் புகழ்ந்து தம்‌ ஸ்வரூபத்தைக்‌ கெடுத்துக்‌ கொள்கிறார்களே. வயிற்றுப்‌ பசியைத்‌ தீர்த்துக்‌ கொள்ள, வயலில்‌ சிந்தியுள்ள தானியமே போதுமே. நீரைக்‌ கொண்டு கூட உயிர் தரித்து விடலாமே. உடலை மறைக்க ஒரு கந்தல்‌ துணி போதுமே. இப்படியிருக்க இவற்றிற்காக, நல்ல அறிஞர்களும்‌ கூடக்‌ கெட்டுப் போகிறார்களே. மல்லிகை மலர்‌ எம்பெருமானுக்கே உரியதாவது போல, நம்‌ வாக்கும்‌ எம்பெருமானைத்‌ துதிப்பதற்கே யமைந்தது. யாம்‌ மானிடம்‌ பாட வந்த கவியோமல்லோம்‌ என்கிறார்‌. இறையருள்‌ செல்வம்‌ என்‌ வசம்‌ இருக்கும் பொழுது நான்‌ ஏன்‌ வேறொரு செல்வத்தை நாட வேண்டும்‌. ‘சரீரபத நாவதி’ என்று தொடங்கும்‌ நாலாவது ஸ்லோ கத்தில்‌ ‘தநம்‌’ என்ற எழுத்துக்களை பதினோரு தடவை உபயோகித்‌திருக்கிறார்‌. நானோ என்‌ தந்தையோ பொருள்‌ சம்பாதிக்கா விட்‌டால்கூட என்‌ பாட்டன்‌ பிரம தேவன்‌ சம்பாதித்த செல்வமான பேரருளாளன்‌ அத்திகிரி உச்சியில்‌ உள்ளது. வேறு இழியும்‌ செல்வத்தை நான்‌ நாட வேண்டாம்‌ என்கிறார்‌. பிதாமஹன்‌ என்ற சொல்‌ பாட்டனர்‌, பிரமன்‌ என்ற இரு பொருளில்‌ இச்சுலோகத்தில்‌ அமைந்துள்ளது. தேசிகப்‌ பிரபந்தம்‌ மிக அரிய பாக்களால்‌ வெளியிடப்படுவதால்‌, ஸத் ஸம்பிரதாயக்‌ கிரந்தங்களுள்‌ தலை சிறந்ததாக விளங்குகிறது. இவர்‌ தமிழில்‌ மட்டுமின்றி சமஸ்கிருதம்‌, பிராகிருதம்‌ மணிப் பிரவாளம்‌ ஆகிய மொழிகளிலும்‌, நன்றாக எழுதும்‌ திறமைசாலி. அவர்‌ எழுதிய சஙகல்ப ஸூர்யோதயா என்ற வடமொழி நாடகம்‌ ஜீவாத்மா, பரமாத்மாவைப் போய்‌ அடைவதற்கு மேற்‌ கொள்ள வேண்டிய முயற்சிகளைக்‌ கூறுகிறது. எத்தனை விதமான,ஆசை, கோபம்‌, அகங்காரம்‌ போன்ற தடைகளைத்‌ தாண்ட வேண்டும்‌ என்பதைக்‌ குறிப்பிடுகிறார்‌. ‘யாதவாப்யுதயம்‌” என்ற தலைப்பில்‌ பகவான்‌ ஸ்ரீ கிருஷ்ணனுடைய அவதார மகிமையை எழுதியுள்ளார்‌. அவர்‌ எழுதியுள்ள ரகரியத் திரயசாரம் , சத தூஷணி போன்ற நூல்கள்‌ வைணவ பக்தி இலக்கியத்தின்‌ மாட்சியினைப்‌ பல வகையிலும்‌ காட்டுகின்றன. அவரது இலக்கிய கருவூலத்தின்‌ மணிமுடிகளாக விளங்குவது பாதுகா ஸகஸ்ரம்‌, தயா சதகம்‌ என்ற இரண்டுமே யாகும்‌. பாதுகா ஸகஸ்ரம்‌ என்ற கவிதை பகவான்‌ ஸ்ரீரெங்கநாதனது பாதுகை மகிமையையும்‌, அவரது பாதுகையான நம்மாழ்வாரது அளவு கடந்த பக்திப் பிரவாகத்தையும்‌ கூறுவதால்‌, காலக் கிரமத்தில்‌ உப கண்டத்தில்‌ அழிக்க அழியாத பக்திச்சுரங்கமாக மாறும்‌ தகுதி பெற்றவை. திவ்ய தம்பதிகளை ஸ்ரீதேசிகன்‌ அனுபவித்த முறைகளை நாமும்‌ அறிந்து இன்புறலாம்‌.ஸ்ரீ தேசிகன்‌ அருளிய 19 தமிழ்ப் பிரபந்தங்கள்‌ முறையே அமிருதரஞ்சனி, அதிகார சங்கிரகம்‌ அமிருதா சுவாதினி, பரமபத சோபானம்‌, பரமத பங்கம்‌, மெய்விரத மான்யம்‌ (அத்திகிரி மான்ய முதல்‌ ஆறு பிரபந்தங்களில்‌ பேரருளாளன்‌ புகழ்‌ பாடுகிறார்‌.-அவரது அருளிச் செயல்கள்‌ அருத்த பஞ்சகம்‌, அடை.க்கலப்பத்து,ஸ்ரீவைணவ தினசரி, திருச் சின்னமாலை, பன்னிருநாமம்‌, திருமந்திரச் சுருக்கு, த்வயச் சுரக்கு சரம சுலோகம்‌, கீதார்த்த சங்கிரகம்‌, மும்மணிக்கோவை, நவமணிமாலை, பிரபந்த சாரம்‌, ஆகார நியமம்‌ முதலியனவாகும்‌. ஸ்ரீதேசிகன்‌ திருக் குமாரரான நமினாராச்சாியார்‌, ஸ்ரீ தேசிகன்‌ பிள்ளையந்தாதி என்னும்‌ பிரபந்தத்தைப்‌ பாடியருளினார்‌. . ஸ்ரீதேசிகப் பிரபந்தத்தைத்‌ தொகுத்துக்‌ கொடுத்த ஸ்ரீராம தேசிகாசார்ய ஸ்வாமிகள்‌ ஒவ்வொரு பிரபந்தத்தலும்‌ அமைந்துள்ள விஷயங்களைச்‌ சுருக்கி பிரபந்‌தார்த்த ஸங்கிரகம்‌ என்ற பகுதியில்‌ கூறி யுள்ளார்கள்‌. -தம வாயிருந்து தாமேயான ஸர்வார்த்தங்களையும்‌ கூறும்‌ ஸ்ரீதேசிகனது ‘ஆபால கோபாலம்‌’ அனைவரும்‌ படித்தறிந்து அனுபவிக்கக் கூடியது. அவரது காவ்ய கிரந்தங்கள்‌; தர்க்க வேதாந்த சாஸ்திரநூல்கள்‌, வாத கிரந்தங்கள்‌ என்று வடமொழியில்‌ அருளிச்‌ செய்யப்பட்டுள்ள அனைத்திலுமுள்ள பயன்படக் கூடிய ஸாரார்த்‌தங்கள்‌ அனைத்தும்‌ இத் தமிழ்ப் பிரபந்தங்களில்‌ அடங்கியிருப்பதால்‌ இதை ஒரு ஸர்வார்த்த சித்தி என்றே கருதலாம்‌. ஆகவே தான்‌ இவரைத்‌ தமிழ்க் கடவுள்‌ என்று பிற மதத்திலுள்ளவர்கள்‌ கூடப்‌ புகழ்கின்றனர்‌.தமது உபய வேதாந்தாச்சார்யத்தை ஸ்தாபித்துக்‌ கொண்டதும்‌ அதன்‌ மூலமாக ஸ்ரீவைஷ்ணவர்கள்‌ அனைவரும்‌ உபய வேதாந்தாச்‌சார்யர்களாக இன்றளவும்‌ விளங்குவதும்‌ இப்பிரபந்தத்தின்‌ பெருமையினாலேயே. வடமொழியில்‌ உள்ள கவிதை நயங்களை யெல்‌லாம்‌ தமிழ்க் கவிதையிலும்‌ உட்புகுத்தி எண்ணிறந்த காவிய சித்திரங்களை உண்டாக்கி அளித்துள்ளார்‌. ஆகவே இப்பிரபந்த நூல்‌ ஸ்ரீவைஷ்ணவர்கள்‌ மட்டுமின்றி தமிழறிஞர்கள்‌ அனைவருமே படித்து ஆனந்திக்க வேண்டிய ஒன்றாகும்‌. அமிருத ரஞ்சனி-இதில்‌ ஸ்ரீ தேசிகன்‌ ஆச்சாரியாரது அருள்பெற்றுத்‌ தாம்‌ உய்ந்து போனதைக்கூறி சேதனம்‌, அசேதனம்‌ ஈஸ்வரன்‌ என்னும்‌ மூன்று தத்துவங்களின்‌ ஸ்வரூபத்தைப்‌ பிரித்துக் காட்டி, திருமந்திரம்‌, த்வ யம்‌, சரமஸ்லோகம்‌ என்னும்‌ மூன்று ரஹஸ்யங்களின்‌ அர்த்தத்தையும்‌ சுருக்கி வெளியிடுகிறார்‌.“காரணமாய்‌ உயிராகி அனைத்துங்‌ காக்கும்‌ கருணை முகில்‌ கமலையுடன்‌ இலங்குமாறும்‌
நாரணனாய்‌ வடிவான வுயிர்களெல்லாம்‌
நாமென்று நல்லடிமைக்‌ கேற்குமாறும்‌ தாரணி நீர்‌ முதலான மாயை காலம்‌
தனிவான்‌ என்றிவை உருவாந்‌ தன்மை தானும்‌
கூரணி சேர்‌ மதி யுடைய குருக்கள்‌ காட்டக்‌
குறிப்புடன்‌ நாம்‌ கண்டு வகை கூறினோமே.–என்று வைணவத்தில்‌ ஆச்சார்ய ஸ்தானம்‌ எவ்வளவு சிறப்பானது என்பதைக்‌ குறிப்பிடுகிறார்‌. இதனை அடுத்து வரும்‌ அதிகார ஸங்க்ரஹம் என்ற பகுதியில்‌ பத்து ஆழ்வார்கள்‌ மதுரகவிகள்‌. எட்டு ஆச்சார்யர்கள்‌ இவர்களைப்‌ புகழ்ந்து பேசித் தனியே எம்பெருமானார்‌, ஆளவந்தார்‌, நாதமுனிகள்‌ என்னும்‌ ஆச்சார்யர்கள்‌ நம்‌ ஸித்தாந்தத்துக்கு செய்த உபகாரத்தைக்‌ கூறிக்‌ கோயில்‌, திருமலை, பெருமாள் கோயில்‌ ஆகிய திவ்ய தேசங்களுக்கும்‌ ஒவ்வொரு பாசுரமிட்டு ஸ்ரீ ரெங்கநாதனின்‌ திருவடிகளின்‌ பெருமையை ஒரு பெரிய பாசுரத்தால்‌ விளக்கி ஆச்சார்யர்களின்‌ உபகாரத்தை அனுசந்‌தித்து முடிக்கிறார்‌.
பொய்கை முனி பூதத்தார்‌ பேயாழ்வார்‌, தண்‌
பொருநல் வருங்குருகேசன்‌, விட்டுச்‌ சித்தன்‌
துய்ய குலசேகரன்‌ நம்‌ பாண நாதன்‌
தொண்டரடிப் பொடி, மழிசை வந்த சோதி
வையமெலாம்‌ மறை விளங்க வாள்வேலேந்தும்‌
மங்கையர் கோன்‌ என்றிவர்கள்‌ மகிழ்ந்து பாடும்‌
செய்ய தமிழ்‌ மாலைகள்‌ நாம்‌ தெளிய ஓதி
தெளியாத மறை நிலங்கள்‌ தெளிகின்றோமே என்றும்‌
என்னுயிர்‌ தந்தளித்தவரைச்‌ சரணம்‌ புக்கு
யானடை வேன்‌ அவர்‌ குருக்கள்‌ நிரை வணங்கிப்‌
பின்னருளாற்‌ பெரும்புதூர்‌ தந்த வள்ளல்‌
பெரியநம்பி ஆளவந்தார்‌ மணக்கால்நம்பி
நன்னெறியை அவர்க்குரைத்த உய்யக் கொண்டார்‌
நாதமுனி, சடகோபன்‌ சேனை நாதன்‌
இன்னமுதத் திருமகள்‌ என்றிவரை முன்னிட்டு
எம்பெருமான்‌ திருவடிகள்‌ அடைகின்றேனே–என்றும்‌ ஆழ்வார்களையும்‌, ஆச்சாரியர்களையும்‌ புகழ்ந்து பாடியவர்‌, திருவரங்கப்‌ பெரிய கோயிலையும்‌ விண்ணுயிர்‌ வெற்புடை வேங்கடத்தையும்‌ புகழ்ந்து
ஆராத அருளமுதம்‌ பொதிந்த கோயில்‌
அம்புயத்தோன்‌ அயோத்தி மன்னற்களித்த கோயில்‌
தோலாத தனி வீரன்‌ தொழுத கோயில்‌
துணையான வீடணற்குத்‌ துணையாங் கோயில்‌
சேராத பயனெல்லாஞ்‌ சேர்க்கும்‌ கோயில்‌
செழு மறையின்‌ முதலெழுத்துச்‌ சேர்ந்த கோயில்‌
தீராத வினை யனைத்தும்‌ தீர்க்கும்‌ கோயில்‌
திருவரங்கம்‌ எனத் திகழும்‌ கோயில்தாமே
என்றும்‌
கண்ணனடி யிணை யெமக்குக்‌ காட்டும்‌ வெற்பு
கடுவினைய ரிரு வினையுங்‌ கடியும்‌ வெற்பு
திண்ண மதுவீடென்னத் திகழும்‌ வெற்பு
தெளிந்த பெருந் தீர்த்தங்கள்‌ செறிந்த வெற்பு
புண்ணியத்தின்‌ புகலிதெனப்‌ புகழும்‌ வெற்பு
பொன்னுலகிற்‌ போக மெல்லாம்‌ புணர்க்கும்‌ வெற்பு
விண்ணவரும்‌ மண்ணவரும்‌ விரும்பும்‌ வெற்பு
வேங்கட வெற்பென விளங்கும்‌ வேத வெற்பே”-என்றும்‌
உத்தம வமர்த்தல மமைத்ததோ ரெழிற்றணு வினுய்த்த கணையால்‌
அத்திவரக்கன்‌ முடி பத்து மொரு கொத்தென உதிர்த்த, திறலோன்‌
மத்துறு மிகுத்த தயிர்‌ மொய்த்த வெண்ணெய்‌ வைத்ததுணுமத்த
விடமாம்‌
அத்திகிரி, பத்தர் வினை, தொத்தறவனுக்கும்‌ மணி யத்திகிரியே–என்றும்‌ பாடியுள்ளார்‌. இத்தனை அற்புதமான பாசுரங்கள்‌ அருளிய தேசிகன்‌ இறுதியில்‌ தன்னடக்கமாக வெள்ளைப்‌ பரிமுகர்‌ தேசிகராய்‌ விரகால்‌ அடியோம்‌ உள்ளத் தெழுதியது. ஓலை யிட்டனம்‌ நாமிதற்கே
கொள்ளத் துணியினும்‌ கோதென்றி கழினுங்‌, கூர் மதியீர்‌,
எள்ளத்தனையுகவர்து இகழாதெம் மெழில் மதியே’–என்று பாடியிருப்பது அவரது சீலத்தையும்‌ பக்தியையும்‌ காட்டுகிறது.இனி அமிருத சுவாதினியில்‌ திருமந்திரம்‌ முதலிய மூன்று ரஹஸ்யங்களின்‌ தாத்பர்யம்‌. இராமாயணத்தின்‌ சாரமான காக சரணாகதி, விபீஷண சரணாகதி முதலியனவும்‌ வராகப்‌ பெருமானுக்‌கும்‌, பூமிப் பிராட்டிக்கும்‌ நடந்த உரையாடலின்‌ விளைவாக எழுந்த வராக சரம ஸ்லோகத்தின்‌ பொருள்‌, அஞ்சலியின்‌ பெருமை, ஏனைய ரஹஸ்யங்களின்‌ சுருக்கமும்‌ கூறப்பட்டு இறுதியில்‌ பாஷ்‌யகாரரின்‌ கீர்த்தியைக் கூறி அமலனடிப்பிரானின்‌ ஸாரார்த்தத்துடன்‌ முடிவடைகிறது.
நின்னருளாங்‌ கதியின்றி மற்றொன்றில்லேன்‌
நெடுங் காலம்‌ பிழை செய்த நிலை கழிந்தேன்‌
உன்னருளுக் கினிதான நிலை யுகந்தேன்‌
உன்சரணே சரணென்னுந்‌ துணிவு பூண்டேன்‌ –
மன்னிருளாய்‌ நின்றநிலை யெனக்குத்‌ தீர்த்து வானவர்தம்‌ வாழ்ச்சி தர வரித்தேனுன்னை
இன்னருளாலினி யெமக்கோர்‌ பரமேற்றாமல்‌
என் திருமாலடைக்கலங்‌ கொள்‌ என்னை நீயே!–என்றும்‌
பாண்‌ பெருமாள்‌ பெருமையினைக்‌
காண்பனவு முரைப்பனவு மற்றொன்றின்றிக்‌
கண்ணனையே கண்டுரைத்த கடிய காதற்‌
பாண் பெருமாள்‌ அருள்‌ செய்த பாடல்‌ பத்தும்‌
பழ மறையின்‌ பொருளென்று பரவுகின்றோம்‌
வேண்‌ பெரிய விரி திரைநீர்‌ வையத்துள்ளே
வேதாந்த வாரியென் றியம்ப நின்றோம்‌
நாண்‌ பெரியோமல்லோம்‌ நாம்‌ நன்றுந்தீதும்‌
நமக்குரைப்பாருளரென்று நாடுவோமே–என்றும்‌ அருளியுள்ளார்‌.
இதனை அடுத்து வரும்‌ பரமபத சோபானம்‌ (படி) என்ற பகுதியில்‌ பரமபதமெனும்‌ மிக்க உயரத்திலுள்ள ஓர்‌ இடத்தை அடைவதற்கு ஒன்பது படிகளை அமைத்துள்ளார்‌. அவைமுறையே.
1) தத்துவங்கள்‌ முதலியவற்றை அறிதல்‌,
2) ஸம்ஸாரத்‌தில்‌ வெறுப்பு,
3) உலக சுகங்களில்‌ ஆசை அறுதல்‌,
4) தன்‌ பாபங்களின்‌ விளைவால்‌ இனி வர இருக்கும்‌ நரகானுபவத்தை எண்ணி அஞ்சுதல்‌,
5) எம்பெருமான்‌ மோக்ஷத்தை அருள்வதற்குக்‌ காரணமான உபாயங்களை அனுஷ்டித்தல்‌
6) இச்சரீரத்திலிருந்து ஜீவன்‌ வெளியேறுதல்‌,
7) அர்ச்சராதி மார்க்கத்தால்‌ (புண்ணியம்‌
செய்தவர்கள்‌ செல்லும்‌ பாதை)செல்லுதல்‌, 8) ஸ்ரீ வைகுண்டம்‌ என்னும்‌ திவ்ய லோகம்‌ சேர்தல்‌,
9) அங்குள்ள ஸர்வேஸ்வரனைக்‌ கண்ணாரக் கண்டு களித்து அந்த நித்யானத்தத்திலேயே எப்பொழுதும்‌ மூழ்கிக்‌ கடத்தல்‌
என்ற விஷயங்களையும்‌ சுருக்கமாக வெளியிட்டுள்ளார்‌. இதன்‌ விரிவுரையை இவர்‌ எழுதிய ரஹஸ்ய கிரந்தத்தில்‌ காணலாம்‌.
மாளாதவினை யனைத்தும்‌ மாள நாம்‌ போய்‌
வானேறி மலர்மகளாரன்பு பூணும்‌
தோளாத மாமணிக்குத்‌ தொண்டு பூண்டு
தொழுதுகந்து தோத்திரங்கள்‌ பாடியாடிக்‌
கேளாத பழமறையின்‌ கீதங்கேட்டுக்‌
கிடையாத பேரின்பம்‌ பெருக நாளும்‌
மீளாத பேரடிமைக் கன்பு பெற்றோம்‌
மேதினியில்‌ இருக்கின்றோம்‌ விதியினாலே–என்று பாடி அருளியுள்ளார்‌. இனி பரமதபங்கம்‌ என்ற பகுதியில்‌ திருவெயிந்தையில்‌ அந்நிய மதத்தினருடன்‌ வாதம்‌ புரிந்து வெற்றி பெற்று, அம் மதங்களில்‌ உள்ள தோஷங்களையும்‌ வைணவத்தின்‌ மேன்மையையும்‌ பற்றி எழுதப்பட்ட ரகஸ்யத்தின்‌ ஒவ்வொரு அதிகாரத்தையும்‌ சுருக்கிப்‌ பாசுரங்களாகத்‌ தொகுக்கப்பட்ட பரமபத பங்கம்‌ என்ற பிரபந்தமாகத்‌ தோன்றியது. இதில்‌ அன்னிய மதங்களில்‌ பொதுவாய்‌ உள்ள தோஷங்களை வெளியிட்டு சார்வாகமதம்‌, பெளத்தம்‌, அத்வைதம்‌, ஜைனம்‌, பாஸ்கர யாதவ மதம்‌ போன்ற எல்லா மதங்களின்‌ முக்கியக் கொள்கைகளைச்‌ சுருக்கிக்‌ கூறிக் கண்டித்து பாஞ்சராத்திர சாஸ்திரத்தின்‌ பெருமையைப்‌ பேசி,சரணாககி ஸ்வரூபத்தின்‌ பெருமையையும்‌ பலனையும்‌ எடுத்துக்‌ காட்டி முடிவில்‌ தமக்கு அருள் புரிந்த திருவாழி ஆழ்வானுடைய திருக்கரங்களின்‌ பெருமையையும்‌ பேசித் தலைக் கட்டுகிறார்‌.
கோதவமொன்றில்லாத தகவே கொண்ட
கொண்டலென வந்துலகிலைவர்க்கன்று ஓர்‌
தூதுவனாய்‌ யொருகோடிமறைகளெல்லாம்‌
தொடர்ந்தோடத்தனி யோடித்‌ துயரந்தீர்த்த
மாதவனார்‌ வடகொங்கில்‌ வானியாற்றின்‌
வண்ணிகை நன்னடங்கண்டு மகிழ்ந்து வாழும்‌
போது, இவை நாம்‌ பொன்னயிந்தை நகரில்‌ முன்னாள்‌
புணராத பரமதப்‌ போர்பூரித்தோமே –என்கிறார்‌.
இனி ஸ்ரீதேசிகன்‌ பேரருளாளன்‌ மீது அத்திகிரி மான்யம்‌, மெய்விரத மான்மியம்‌, அருத்த பஞ்சகம்‌, அடைக்கலப்பத்து போன்ற ஆறு பிரபந்தங்களைப்‌ பாடுகிறார்‌. மெய்விரதமான்மியம்‌ என்ற பகுதியில்‌ ஸ்ரீ பாஷ்யத்தின்‌ பதினாறு பாதங்களின்‌ ஸாரார்த்‌தங்களையும்‌ ஒரே பாசுரத்தில்‌ அமைத்து அருளிச்‌ செய்துள்ளார்‌.பேரருளாளனின்‌ திருமேனி அழகையும்‌, இரு பிராட்டிமாருடன்‌ அவன்‌ காட்சி யளிப்பதையும்‌, தக்க எடுத்துக்காட்டுகளுடன்‌ வர்‌ணித்திருப்பது படித்துச் சுவைத்து அனுபவித்தால் தான்‌ தெரியும்‌.அருத்த பஞ்சகத்தில்‌ முக்தியைப் பெற விரும்புபவன்‌ முக்கியமாய்‌ உணர வேண்டியதான ஐந்து பொருள்களைக்‌ கூறுகிறார்‌. -அவை யாவன
1] தம்மால்‌ அனுபவிக்கப்பட வேண்டிய எம்பெருமானுடைய ஸ்வரூபம்‌, எம்பெருமானை அடையவிடாமல்‌, இதுவரை உள்ள இடையூறுகள்‌, மோக்ஷத்திற்காகச்‌ செய்யும்‌ உபாயங்‌கள்‌ முக்கிய பலமாகிய பகவத்‌ அனுபவம்‌ என்பனவாம்‌. அடைக்கலப்பத்து என்ற பகுதியில்‌ பேரருளாளன்‌ திருவடிகளில்‌ அடைக்கலம்‌ புகுந்தமையைப்‌ பத்துப்‌ பாசுரங்சளில்‌ விளக்குகிறார்‌. ஸ்வநிஷ்டை, உத்தி நிஷ்டை, ஆசார்ய நிஷ்டை., பாகவத நிஷ்டை என்று சரணாகதி பாகுபாடு பெற்றதைக் கூறி முடிவில்‌ சரணமடைந்து தலைக் கட்டுகிறார்‌.அடுத்து ஒரு ஸ்ரீ வைஷ்ணவன்‌ தினந்தோறும்‌ செய்ய வேண்‌டிய காரியங்களான ஐந்தும்‌ கூறப்பட்டுள்ளன அவை யாவன.-அபிகமனம்‌; அதாவது அன்று முழுதும்‌ நடக்க வேண்டிய காரியங்‌கள்‌ தடையின்றி நடந்தேறப்‌ பிரார்த்தித்துப்‌ பிரபத்தி பண்ணுவது.அடுத்து உபாதானம்‌; அதில்‌ பகவானது ஆராதனத்துக்கு வேண்டிய பொருள்கள்‌ முக்கியமாக மனது சுத்தமடைய ஆழ்வார்களும்‌ ஆச்சாரியர்களும்‌ அருளிய ஸ்ரீ ஸக்தி காலக்ஷேபத்தில்‌ ஈடுபடுதல்‌,பின்னர்‌ வருவது இஜ்யை, இதில்‌ பாஞ்சராத்ர சாஸ்திரத்திலும்‌ ஆஹ்நிகங்களிலும்‌ சொல்லிய முறைப்படி பகவானுக்குத்‌ திருவாராதனம்‌ செய்தல்‌, அடுத்து ஸ்வாத்யாயம்‌ என்பது. இதில்‌ வேதாந்த பாடங்களைப்‌ படித்துத்‌ தெரிந்து கொள்ளுதல்‌, இறுதியாக யோகம்‌ என்பதில்‌ பகவான்‌ திருவடிகளில்‌ இரவும்‌ பகலும் தான்‌ தலையை வைத்திருப்பதாய்த்‌ தியானம்‌ செய்து சயனித்தல்‌ என்று ஐந்து கார்யங்களையும்‌ பேரருளாளன்‌ விஷயமாக்கி வெளியிடுகிறார்‌.அடுத்துவரும்‌ திருச்சின்னமாலையில்‌ பேரருளாளன்‌ சந்நிதியில்‌ எழும்‌ திருச்சின்னத்தின்‌ ஓசையில்‌ மயங்கிய தேசிகன்‌ முதல்‌ ஆறு பாசுரங்களில்‌ திருமந்திரத்தின்‌ ஸாரார்த்தத்தையும்‌ 7, 8 பாசுரங்களில்‌ த்வயத்தின்‌ விசேஷார்த்தத்தையும்‌ 9-வது பாசுரத்தில்‌ சாம ஸ்லோகத்தின்‌ முக்கயார்த்தத்தையும்‌ வெளியிட்டு இறுதியில்‌ பேரருளாளன்‌ பெருமை பேசி ஆச்சார்யோபதேசத்தின்‌ ஸாரமடங்கிய இப்பிரபந்தத்தின்‌ இனிமையை சிற்றின்பத்தில்‌ பற்றில்லாமல்‌ வேறு இச்சையின்றி ஈடுபடுவோரே அனுபவிக்க முடியும்‌ என்று கூறி முடிக்கிறார்‌.இதை அடுத்துவரும்‌ பன்னிரு நாமம்‌, பேரருளாளன்‌ விஷயமே. கேசவன்‌ முதல்‌ தாமோதரன்‌ வரையில்‌ உள்ள பன்னிரு திருநாமங்களைச்‌ சொல்லி, அந்த அந்தத் திருமண்‌ காப்புகளில்‌ அவ்வவ் வெம்பெருமான்களின்‌ திருமேனி நிறம்‌, அவர்கள்‌ அணிந்‌திருக்கும்‌ ஆயதங்கள்‌, அவர்கள்‌ தலைவராய்‌ வீற்றிருக்கும்‌ திசை,நம்‌ சரீரத்தில்‌ அவர்கள்‌ வசிக்கும்‌ பாகம்‌ முதலியவற்றைக்‌ கூறுவதால்‌ புண்ட்ரம்‌ (நாமம்‌) தரிக்கும் பொழுது இப்பிரபந்தம்‌ அவசியம்‌ பாராயணம்‌ செய்ய வேண்டும்‌.
“கத்தித் திரியும்‌ கலைகளை வெல்லும்‌ கருத்தில்‌ வைத்துப்‌
பத்திக்குறு துணை பன்னிருநாமம்‌ பயில்பவர்க்கு
முத்திக்க மூலமெனவே மொழிந்த இம்மூன்று நான்கும்‌
தித்திக்கு மெங்கள்‌ திருவத்தி யூரரைச்‌ சேர்பவற்கே-என்ற பாசுரத்துடன்‌ முடிக்கிறார்‌.

இனி வரும்‌ மூன்று பிரபந்தங்களால்‌ முறையே திருமந்திரம்‌ த்வயம்‌. சரம ஸ்லோகம்‌ ஆகிய மூன்று ரஹஸ்யங்களின்‌ அர்த்தத்தை நம்‌ தேசிசுன்‌ விளக்கி யருள்கிறார்‌. திருமந்திரத்தைப்‌ பதம்‌ பதமாக,அதாவது, 1) அகாரம்‌ 2) அதன்‌ மேல்‌ உள்ள நான்காம்‌ வேற்றுமை
உருபு, 3) உகாரம்‌, 4) மகாரம்‌ நமபதம்‌, நார பதம்‌, அயன பதம்‌, அதன்‌ மேலுள்ள நான்காம்‌ வேற்றுமை உருபு ஆகியவற்றின்‌ பொருளை முறையே கூறி, இவ் வர்த்தங்களெல்லாம்‌ நிதியைப்‌ போல்‌ ஆச்சார்யர்களால்‌ சேமித்து வைக்கப் பட்டவை என்கிறார்‌.
அடுத்து த்வயச் சுருக்கு. த்வயம்‌ இரண்டு பாகமாக உள்ளது.-முதற்பாகம்‌ ௨பாயத்தையும்‌, இரண்டாம்‌ பாகம்‌ பலனையும்‌ வெளியிடுகிறது. அம்மந்திரத்தின்‌ அர்த்தத்தைச்‌ சுருக்கி வெளியிடுவதால்‌ த்வயச்‌ சுருக்கு எனப் பெயர்‌ பூண்டது. மந்திரத்தைப்‌ பத்துப்‌
பதமாகப்‌ பிரித்துக் கூறிப்பின்‌ அப்பத்து அர்த்தங்களையும்‌ ஒரு பாசுரத்தில்‌ சேர்த்துக் கூறி முடித்திருக்கிறார்‌.
தன தன்றிவையெனத்‌ தானென்றென மறைசொன்ன வெலாம்‌,
எனதென்றும்‌ யானென்று மெண்ணுதலால்‌ வருமீனமெலாம்‌,
மனதொன்றியின்று நமவென்றதே கொண்டு மாற்றுதலால்‌
தனதன்றி யொன்றுமிலாத்‌ தனித்தாதை சதிர்த்தனனே-
-என்பது சுருங்கியபொருள்‌. இதை அடுத்து சரம சுலோகச் சுருக்கு.
முதற்பாசுரத்தில்‌ சரம ஸ்லோகத்தின்‌ முழுத் தாத்பர்யத்‌ (சரணாகதிதத்துவம்‌) தையும்‌ அருளிச் செய்து பின் பத்துப்‌ பாசுரங்களில்‌ பாகங்களுக்கு வியாக்கியானமும்‌ செய்தருளுகிறார்‌.
கல்லாரகலும்‌ கருமமுஞானமுங்‌ காதலும்‌ மற்‌
றெல்லா நிலைகளுக்கேற்ப விதித்த கிரிசைகளும்‌
வல்லார்‌ முயல்க, வலியிழந்தாரென்றனைத்‌ தொழுகென்று
எல்லாத்‌ தருமமுரைத்தவன்‌ இன்னடி சேர்ந்தனமே
-என்பது திரண்ட பொருள்‌.

கீதார்த்த சங்கிரகம்‌ என்ற பகுதியில்‌ பதினெட்டு அத்யாயங்‌கொண்ட கீதையின்‌ ஒவ்வோர்‌ அத்யாயத்தின்‌ சாரத்தையும்‌ ஒவ்‌வோர்‌ ஸ்லோகத்தில்‌ ஆளவந்தார்‌ எழுதி யுள்ளவற்றைத்‌ தமிழில்‌ மொழி பெயர்த்துத்‌ தனித் தனியாக 21 பாசுரங்களில்‌ எழுதி யுள்ளார்‌.இவ்வாறு கீதை மொழிந்தருளிய வேதாந்த தேசிகனார்‌ இதை அடுத்து மும்மணிக்கோவை என்ற பிரபந்தத்தில்‌ முதலில்‌ பிராட்டியின்‌ பெருமையையும்‌, ஸ்ரீசப்தத்தின்‌ ஆறு பொருள்களையும்‌ பேசித் தெய்வநாயகனுடைய திருக் கல்யாண குணங்களைப்‌ புகழ்ந்து எல்லாப்‌ பொருளாயும்‌ எல்லாப்‌ பந்துவாயும்‌, இருப்பவன்‌ அவனே என்று காரணத்துடன்‌ கூறி அவனது பக்தர்கள்‌ அவனுக்குச்‌ சமமானவர்‌ என்று வெளியிடுகிறார்‌ தேசிகன்‌. மொத்தம்‌ முப்பது பாசுரங்கள்‌ இருக்க வேண்டிய இப்பிரபந்தத்தில்‌ பத்துப் பாகரங்‌களே காணப்படுகின்றன. அகவல்‌, வெண்பா, கட்டளைக் கலித்‌துறை என்று மூன்று வகைப் பாக்களால்‌ இப்பிரபந்தம்‌ அமைக்கப்‌பட்டு மூவகை மணிகளால்‌ அமைந்த ஹாரம்‌ போலிருத்தலின்‌ இதற்கு மும்மணிக் கோவை என்ற பெயர்‌ வந்தது என்று தெரிகிறது.அடுத்து வரும்‌ நவமணிமாலை (நவரத்னமாலையென்றும்‌ வழங்கப்படுவதுண்டு ) வெண்பா முதலிய பாக்கள்‌ ஒன்பது அமையப் பெற்ற இப்பகுதியில்‌ முதலில்‌ திருவயிந்திரபுரத்து எம்பெருமானின்‌ பெருமை பேசிப்பின்‌ அவன்‌ எடுத்த பத்து அவதார வரலாற்‌றையும்‌, பிரம்மா, கருடன்‌, அனந்தாழ்வான்‌, பூமி தேவி முதலியோர்‌ தீர்த்த உருக்கொண்டு அவன்‌ அருள்பெற்று அங்கிருக்கும்‌ வரலாற்றையும்‌ கூறி, மாசி மாதத்தில்‌ கடற்கரையில்‌ நடக்கும்‌ உத்சவத்தையும்‌ புகழ்ந்து, தம்முடைய அந்திம காலத்தில்‌ தமக்கு அபயமளிக்க வேண்டும்‌ என்று வேண்டிக் கொண்டு அவன்‌ தன்‌னைப் பாடப்‌ பணித்ததையும்‌ கூறி முடிக்கிறார்‌.
மஞ்சுலாவு சோலை சூழயிந்தை மன்னு மன்னுசீர்‌
வரையெடுத்து நிரையளித்த மாசில்‌ வாசுதேவனே
செஞ்சொலன்பர்‌ சிந்தை கொண்டு திதிலாத தூதனாய்த்‌
தேருமூர்ந்து தேசுயர்ந்த செல்வ! தெய்வ நாயக!
வெஞ்சொலாளர்‌ காலதூதர்‌ வீசுபாசம்‌ வந்தென்மேல்‌ விழுந்தழுந்தி யானயர்ந்து வீழ்வதற்கு முன்னர்‌ நீ
அஞ்சலஞ்ச லஞ்ச லென்றளிக்க வேண்டும்‌, அச்சுதா
அடியவர்க்குமருளியக்குமடியவர்க்கு மெய்யனே-என்று பாடிய பின்‌ இறுதிப் பாசுரத்தில்‌

அந்தமில்‌ சீரயிந்தை நகரமர்ந்த நாத, னடியினை மேல்‌ அடியுரையாலைம்பதேத்திச்‌
சிந்தை கவர்‌ பிராகிருதம்‌ நூறு கூறிச்‌
செழுந்தமிழ்‌ மும்மணிக்கோவை செறியச் சேர்த்துப்‌
பந்து கழல்‌ அம்மானை யூசலேசல்‌
பரவு நவமணிமாலை இவையுஞ்‌ சொன்னேன்‌.
முந்தை மறை மொழிய வழி மொழிநீயென்று
முகுந்தனருள்‌ பெற்ற பயன்‌ பெற்றேன்‌ நானே
-என்று தான்‌ முகுந்தனருளால்‌ பாடிய பாசுரங்களைத்‌ தொகுத்துக் கூறுகிறார்‌. பந்து கழல்‌ அம்மானை ஊசல்‌ ஏசல்‌, பரவு நவமணி மாலை இவையுஞ்‌ சொன்னேன்‌ என்று அருளியிருப்பதால்‌ அவர்‌ அருளிய மும்மணிக்கோவையில்‌ இருபது பாசுரங்களும்‌ பந்து, கழல்‌ முதலிய ஐந்து பிரபந்தங்களும்‌ மறைந்து விட்டன எனத் தெரிகிறோம்‌.
பிரபந்தசாரம்‌ என்ற இறுதிப்பகுதியில்‌, ஆழ்வார்கள்‌ அவதரித்த ஸ்தலம்‌, மாதம்‌, நட்சத்திரம்‌, அவர்கள்‌ பெருமை, அருளிச்‌ செய்த பிரபந்தங்களின்‌ பெயர்‌, அவற்றின்‌ பாசுர எண்‌ அவற்றின்‌சாரம்‌ இவற்றை வெளியிட்டு இறுதியில்‌ இரு பாசுரங்களில்‌
ஆழ்வார்கள்‌ திருநாமத்தையும்‌ அவர்கள்‌ அருளிய பாசுர எண்களையும்‌ கூறி ஒரு பாசுரத்தில்‌ ஒரே கோஷ்டியாக அவர்சுளை அனுபவித்து ‘தமிண் மறையோன்‌’ என்று தன்னை பெருமையாகப்‌ பேசி
இப்பிரபந்தத்தை அனுசந்திப்பவருக்கு எம்பெருமான்‌ கருணை யால்‌ சகல நன்மைகளும்‌ உண்டாகுமென்று கூறி முடிக்கிறார்‌.
ஆழ்வார்களது பிரபந்தத்தின்‌ சாரமாக அமைந்திருப்பதால்‌ இது
இப் பெயர்‌ பெற்றுள்ளது.
எண்ணின்‌ முதலாழ்வார்கள்‌ மூன்று நூறும்‌ 300
எழில் மழிசைப்பிரான்‌ இரு நூற்றொரு பத்தாறும்‌ 216
உண்மை மிகு மாறன்‌ மறையாயிரத்தோடு 1296
உற்ற இரு நூற்றுத்தொண்ணூறுமாறும்‌ 11 வண்மையுடை மதுர கவிபத்துமொன்றும்‌
வஞ்சியர்‌ கோன்‌ நூற்றைந்தும்‌, பட்டநாதன்‌ 105
பண்ணியல்‌ நானூற்றேழுபத்துமூன்றும்‌ 473
பார்க்கோதை நூற்றெழுபத்துமூன்றே 173
பத்தரடிப்பொடி பாடலைம்பத்தைந்தும்‌ 55
பாணர்புகல்‌ பத்துடனே பரகாலன்‌ சொல்‌ 10
அத்தனுயர்‌ வேங்கடமாற்காயிரத்தொடு 1253
ஆன இரு நூற்றோரைம்பத்து மூன்றும்‌ 108
முத்தி தரும்‌ எதிராசர்‌ பொன்னடிக்கே மொழிந்த வமுதர்‌ பாடல்‌ நூறுமெட்டும்‌ எத்திசையும்‌ வாழ
இவர்‌ பாடி வைத்த இவை நாலாயிரமும்‌ அடி யோங்கள்‌ வாழ்வே 4000
என்றும்‌ தொகுத்துத்‌ கொடுக்கிறார்‌. ஆகவே நாலாயிரப் பிரபந்தத்‌தில்‌ இராமானுச நூற்றந்தாதியையும்‌ அடக்கியே பெரியோர்‌ கணித்‌துள்ளனர்‌ எனத் தெரிகிறோம்‌.
ஆகார நியமம்‌: தேசிகரின்‌ கடைசித்தமிழ்‌ பிரபந்தம்‌ ஆகார நியதி பற்றிக் கூறுகிறது. ‘ஆகாரத்தில்‌ இருவகையாம்‌ நன்றுந்தீதும்‌,
அருமறை கொண்டெதிராசரிவை மொழிந்தார்‌ என ஆரம்பித்து,
ஆகாரத்தில்‌ சுத்த மில்லா விட்டால்‌ மனம்‌ தெளிவடைவதில்லை.
மனந் தெளியாதபோது எந்தவொரு நல்ல காரியத்தையும்‌ சிந்திக்‌கவோ செயல் படுத்தவோ முடியாது. ஆகவே முனிவர்கள்‌ சாஸ்‌திரங்களில்‌ கூறிய முறையைத்‌ தழுவி, உண்ணத் தகாத பதார்த்தங்‌களை எடுத்துக் காட்டி அவற்றை விலக்குமாறும்‌ உண்ணத் தக்கபதார்த்தங்களையும்‌ கூறி விளக்குகிறார்‌.
மாலமுது செய்யாமல்‌ வந்தவெல்லாம்‌
வருவிருந்தில்‌ வழங்காமல்‌ வைத்தவெல்லாம்‌
காலமிது வன்றென்று கழிந்தவெல்லாம்‌
கடையில்‌ வருங்கறி முதலாக்கழுவாவெல்லாம்‌
நூலிசையா வழிகளினால்‌ வந்தவெல்லாம்‌
சீலம்பிலாச்‌ சிறியோ ராக்கினவு, நல்லோர்‌
செல மலங்கள்‌ பட்டனவுந்தின்னார்தாமே
என்று கூறியவர்‌, உண்ண வேண்டியவை களையெல்லாம்‌ கூறும்‌ பொழுது,
தாதை நல்லாசிரியன்‌ முதற்றமையனெச்சில்‌
தரணிசுரர்‌ சோமத்திலருந்து மெச்சில்‌
மாதர்‌ கட்குக்‌ கணவனிதமான வெச்சில்‌
மயிர்‌ புழு நூல்‌ விழுந்தாலும்‌ புனிதம்‌
என்றார்‌. இவரைப் பற்றிப்‌ புகழ்ந்து இவர்‌ புதல்வர்‌ நாயினாராச்சாரியார்‌ அந்தாதித்‌ தொகையில்‌ பிள்ளையந்தாதி பாடியுள்ளார்‌. அதில்‌ தேசிகன்‌ பெருமைகளை யெல்லாம்‌ நன்கு விளக்கியுள்ளார்‌. அவர்‌ ஆராய்ந்து கண்ட சித்தாந்தம்‌, திருவேங்கடமுடையானே தேசிகனாக அவதரித்துள்ளான்‌. தேசிகன்‌ குணங்களைப் பாடி அவரை மனத்து இருத்தினால்‌ பாபங்கள்‌ பறந்து போகும்‌. அவரது ௮ருளன்றி உபாயமில்லை என்பதாம்‌. சுவாமி திருமேனி பல்லாண்டு
வாழும்படி வாழ்த்தி இந்தப்‌ பாசுரத்தைச்‌ சேவிப்பவர்‌ முடிவில்‌ தேசிகன்‌ திருவடிகளில்‌ விளங்கப் பெறுவர்‌ என்று பலன்‌ கூறி முடிக்கிறார்‌.
தொண்டருகக்குத்‌ துணையடி வாழி, நின்‌ தூமுறுவல்‌
கொண்ட முகம்‌ வாழி வாழி வியாக்கியா முத்திரைக்கை
வண்டிரு நாமமும்‌ வாழி மணிவட முப்புரிநூல்‌
கொண்ட சீர்‌ தூப்புற்குலமணியே வாழிநின்வடிவே.–என்று வாழ்த்துகிறார்‌. நாலயிரப் பிரபந்தத்தைப் போல்‌ தேசிகப்‌
பிரபந்தத்திலும்‌ சாத்துமுறைப் பாடல்கள்‌ உள்ளன.
நானிலமுந்தான்‌ வாழ நான்‌ மறைகள்‌ தாம்‌ வாழ
மாநகரின்‌ மாறன்‌ மறை வாழ – ஞானியர்கள்‌
சென்னி யணி சேர்‌ தூப்புல்‌ வேதாந்த தேசிகனே
இன்னுமொரு நூற்றாண்டிரும்‌

வஞ்சப்பரசமயம்‌ மாற்றவந்தோன்‌ வாழியே.
மன்னுபுகழ்ப்பூதூரான்‌ மனமுகப்போன்‌ வாழியே.
கஞ்சத்‌ திருமங்கை யுகக்க வந்தோன்‌ வாழியே.
கலியனுரை குடிகொண்ட கருத்துடையோன்‌ வாழியே.
செஞ்சொல்‌ தமிழ்மறைகள்‌ தெளிந்துரைப்போன்‌ வாழியே.
திருடிலைமால்‌ திருமணியாய்ச்‌ சிறக்க வந்தோன்‌ வாழியே.
தஞ்சப்பர கதியைத்‌ தந்தருள்வோன்‌ வாழியே.
தண்டமிழ்த்‌ தூப்புல்‌ திருவேங்கடவன்றாள்‌ வாழியே.

—————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ வேதாந்த தேசிகர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ ரஹஸ்ய நிஷ்கர்ஷம் -ஸ்ரீ வேதாந்த தேசிகர் ஸ்வாமிகள்-

October 23, 2025

ஸ்ரீ மான் வேங்கட நாதார்ய கவிதார்க்கிக கேஸரீ
வேதாந்தா சார்ய வர்யோ மே சந்நிதத்தாம் சதா ஹ்ருதி —

1-ஸம்ஸாரத்தை அடியறுக்கும் மந்த்ரங்கள் இரண்டு -குரு தரமான பக்தி யோகமும் -லகுதரமான ந்யாஸ யோகமும்

தோஷ சப்தகங்கள் –துக்க மூலம் -துக்க மிஸ்ரம் -துக்க உதர்க்கம் -அல்பம் -அஸ்திரம் -விபரீத அபிமான மூலத்வம் -ஸ்வாபாவிக ஆனந்த வ்ருத்தம் -அதாவது
துன்பத்திலிருந்து பிறப்பது – துன்பத்துடன் கலந்திருப்பது -துன்பத்தை உண்டாக்குவது-அளவில் மிகக் குறைவானது -நிலையற்றது -தகாத ஆசைக்கு கருவியாய் இருப்பது -எம்பெருமானை அனுபவிப்பது என்னும் இட்டுப் பிறந்து வைத்தால் இயற்க்கைக்கு மாறாக இருப்பது-ஆகிய ஏழுவித குறைகள் இல்லாத நிலையில்லா –பரிபூர்ண ப்ரஹ்ம அனுபவம் -இதற்குத்தடையாய் பிறப்பு இறப்பில் சுழன்று நிற்கும் கூடிய நரகமே இந்த ஸம்ஸாரம்-இதன் நின்றும் மீள பக்தியோகமும் பிரபத்தியும் இரண்டு மார்க்கங்கள்

2-இவற்றில் பக்தி யோகம் -யாதொருவனை இவன் வரிக்கிறானோ என்னும் ஸ்ருதி வாக்யத்தாலும் -பக்த்யா லப்ய து அநந்யயா -ஸ்ரீ கீதா வாக்யத்தாலும் -இத்யாதிகளாலும் ப்ரதிபாதிக்கப்படுகிறது

நாயமாத்ம ப்ரவசனேன லப்4யோ ந மேத4யா ந ப3ஹுனா ஶ்ரதேன |
யமேவைஷ வ்ருணுதே தேன லப்4யஸ்தஸ்யைஷ ஆத்மா விவ்ருணுதே தனூம்ஸ்வாம் ||
-கட ஸ்ருதி-23-ஈஸ்வரன் எதன் அடிப்படையில் மனிதனை ஆத்ம ஞானம் அடைவதற்கு தேர்ந்தெடுப்பார் என்றால் எவனொருவன் மோட்சத்தை அடைவதில் தீவிர வைராக்யத்துடன் இருக்கின்றானோ அவனைத் தான் தேர்ந்தெடுக்கின்றார்.   அவர்களுக்குத்தான் ஆத்ம ஞானத்தை அடைவதற்கு அனுக்கிரகம் செய்கின்றார்.

 பத்ரம் புஷ்பம் பலம் தோயம் யோ மே பக்த்யா ப்ரயச்சதி
ததஹம் பக்த்யுபஹ்ருதமஸ்நாமி ப்ரயதாத்மந
:-9-26-நல்ல மனமுடையாரது பக்திவலையொன்றில் மட்டும் அவன் படுகிறான்

சர்வாதிகாரமாய் -சர்வ அநிஷ்ட நிவர்த்தந ஷமமாய்-சர்வ இஷ்ட சாதனமாக வற்றாய்-
ஸூ கரமாய் -சக்ருத் கர்தவ்யமாய் -ஆசுகாரியாய் -ப்ரதிபன்னா நர்ஹமாய்
ப்ரஹ்மாஸ்த்ர பந்தம் போலே ஸ்வ பலத்திலே உபயாந்தர பிரயோக அசஹமாய் இருந்துள்ள ப்ரபத்தி

3-இத்தாலே -ஸ்வ கத ஸ்வீ கார அநுபாயத்வமும் -பரகத ஸ்வீ கார உபாயத்வமும் -சொல்லப்படுகின்றன என்று சிலர் சொன்னார்கள்கீழ் சொன்ன ஸ்ருதி வாக்யத்தை பக்தி பரமாக யோஜிக்கிற ஸ்ரீ பாஷ்ய ஸூக்திக்கும் விரோதிக்கும்

பலம் அத உபபத்தே —3-2-37--இவன் இடம் இருந்தே கர்ம பலன் பெறுகிறார்கள்
கர்மம் க்ஷணிகம்-ஸர்வஞ்ஞன்-ஸர்வசக்தன் -காருணிகன் -உதார குணம் -ஆதியும் அந்தமும் இல்லாதவன்-ஆகவே கர்மத்தால் ப்ரீதனாகி இவனே பலன் அருளுகிறார் -நாம் உபாஸனம் செய்யத் தேவையில்லை என்பது பொருந்தாது-

4-பக்தியால் அஹங்கார வாதம் -நான் செய்கிறேன் என்னும் வாதம் -விலக்கத்தக்கது -ஸ்வ ஆத்ம சரீரகதயா பரமாத்ம உபாஸந விதாயக -தன்னை சரீரமாக யுடையவனாக பகவானை உபாஸிக்கும் படி யாணையிடும் -ஸ்ருதி ஸூத்ர பாஷ்யாதி பரிசய வைதேசிகருக்கும் -தேர்ச்சி இல்லாதவருக்கும் கூட அருசிக்கும் -சுவைக்காது

அஹம் என்ற மாத்ரத்தாலே -என்பதாலே மட்டுமே -அஹங்காரம் வரில் -வரும் என்றால் -பகவத் கைங்கர்யாதிகளிலும் இது துஷ் பரிஹரமாம் -தவிர்க்க முடியாத ஓன்று அன்றோ -கைங்கர்யத்தையும் விட்டு விடலாமோ -கூடாதது அல்லவா-வ்யாஸாதிகளுடைய தன்னிஷ்டையும் -அதன் நிலைப்பும் -விரோதிக்கும் -வ்யாஸாதிகளுக்கும் பகவத் பாரதந்தர்ய ஞானத்தில் -தத் உபதேஸம் கடியாது –

கர்ம யோகங்கள் தேவதா அந்தர்யாமி -பரமாத்ம பரங்கள் -எம்பெருமானார் சரீரங்களாகக் கொள்பவை -ஆகையால் தத் அங்கத்வத்தால் -கர்ம யோகங்கள் அங்கமாக இருப்பதால் -வரும் அவத்யம் கேடு இல்லை -அவ்வாறு உண்டாகில் நைமித்திகங்களும் த்யாஜ்யமாம் -விட வேண்டியவையே –

இஷ்டாபத்தியில் -பிடித்த கர்மாக்களைச் செய்வதில் -மநீஷீ வைதிக ஆசாரம் மநஸாபி ந லங்கயேத் -லஷ்மீ தந்த்ரம் -17-94-அறிவுள்ளவன் வேதத்தில் விதித்த நடைமுறைகளை மனதாலும் மீறக்கூடாது -இத்யாதி பிரமாணங்களும் தந் நிஷ்டாசாரமும் -அதில் நிலைத்தவர்களின் செயலுக்கும் விரோதிக்கும்-

மஹா பாரதத்தில் -சாந்தி பர்வாவில் -யஞ்ஞ அக்ரஹர அத்தியாயத்தில் -தேவர்களைக்குறித்து செய்யும் யாகத்தின் ஹவிஸ்ஸை ஏற்றுக் கொண்டு அவர்களின் அந்தர்யாமியான எம்பெருமான் மகிழ்ந்து பாலன்ஸ் அளிக்கிறான் -அக்னி -அக்ரம் நயதி -முன் நின்றும் ஜீவர்களை நடத்திச் செல்பவன் என்றும் எம்பெருமானையே குறிக்கும் -இதே போலவே இந்திரன் சிவன் சப்தங்களும் அவனையே குறிக்கும் –
ஸாஷாத் அபி அவிரோதம் ஜைமினி -1-2-29–அனைத்துப் பெயர் சொற்களும் நேராகவே கூட எம்பெருமானையே குறிக்கும் எனக்கொள்வதில் முரண்பட்டு இல்லை என்கிறார் ஜைமினி
ஸ்ரீ ஹஸ்திகிரி மஹாத்ம்யத்திலும் ப்ரம்மா வேள்வியைச் செய்ய பரஞ்சுடர் உகந்து பேர் அருளாளன் ஆவிர்பவித்து அருளினார் அன்றோ –

பக்தி த்யாகத்தில் ஹேது -தத் அசக்தியும் விளம்ப அஷமதையும் அபிராப்தமாயுமாகையும் -ஆழ்வார்களில் விளம்ப அஷமதையும்-அபிராப்தமாயுமாகையும் -நம்மிடம் அசக்தியும் காணலாம்பாலாழி நீ கிடைக்கும் பண்பை யாம கேட்டேயும்
காலாழும் நெஞ்சு அழியும் கண் சுழலும்
நீலாழிச் சோதியாய் ஆதியாய் தொல்வினை என்பால் கடியும்
நீதியாய் நிற் சார்ந்து நின்று
ஆழ்வார்களும் பக்தி அனுஷ்டான அசக்தியும் சொல்லலாம்

அவபோதிதவாநிமாம் யதா
மயி நித்யாம் பவதீயதாம் ஸ்வயம் |
க்ருபயைததநந்ய போக்யதாம்
பகவந்! பக்திம் அபி ப்ரயச்ச மே ||
-ஶ்லோகம் 54 –

என் ஸ்வாமியே! எப்படி உன்னுடைய நிர்ஹேதுக க்ருபையால் என்னுடைய சேஷத்வத்தை எனக்கு அறிவுறுத்தினாயோ, அதேபோல வேறு எங்கும் கிடைக்காத, உன்னிடத்தில் பக்தி செய்யும் அந்த இனிய அனுபவத்தையும், நீயே அளிக்க வேண்டும்.

நநு ப்ரபந்நஸ் ஸக்ருதேவ நாத!
தவாஹம் அஸ்மீதி ச யாசமாந: |
தவாநுகம்ப்ய: ஸ்மரத: ப்ரதிஜ்ஞாம்
மதேகவர்ஜம் கிமிதம் வ்ரதம் தே ||
-ஶ்லோகம் 64 –

ஸ்வாமி! “நான் உன்னிடத்தில் ஒருமுறை சரணடைந்துள்ளேன்” என்றும்
“உனக்கே நான் தொண்டு செய்ய வேண்டும்” என்றும் சொல்லி,
நீ கடற்கரையில் விபீஷணன் சரணடைய வந்த ஸமயத்தில் செய்த சபதத்தை நினைக்கும் நான்,உன்னுடைய கருணையைப் பெறத் தகுந்தவன்; தேவரீருடைய சபதம் என் ஒருவனைத் தவிர்த்தோ?-ப்ரபன்னர் பக்தி பிரார்த்தனையும் ஸ்வயம் ப்ரயோஜநமாகவும்ரஸ்யதா அதிசயத்தாலே ஒழிய சாதந புத்தியால் அன்றுபஜந ஸூகம் ஏகஸ்ய விபுலம் -பல ரூபமான பக்தி மூலம் பெரும் பகவத் அனுபவம் அபரிச்சேதம்

யா ப்ரீதி அவிவேகாநாம் விஷயேஷு அநபாயிநீ த்வாம் அநு ஸ்மரத ஸா மே ஹ்ருதயாத் மாபஸர்ப்பது – ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-20-19-(விவேகம் அற்றவர்களுக்கு சிற்றின்பத்தில் மிக்க ஈடுபடக் உள்ளது போல் உன்னையே அனைவரதும் நினைத்துக்கொண்டு இருக்கும் அடியேனுக்கு உம்மிடம் ஈடுபடக் விலகாமல் இருக்காய் அருளிச் செய்யவேணும் -ப்ரஹ்லாதாழ்வான் பிரார்த்தனை –இத்யாதிகள் படியே) ரஜஸ் தமோ குண உன்மேஷம் இல்லாத -ஸத்வஸ்தருக்கு -சத்வ குணம் மிக்கிருப்பாருக்கே பக்தியானது ரஸ்ய தமமாய் இருக்கும் –
மின் கொள் சேர் புரி நூல் குறளாய் அகல் ஞாலம் கொண்ட
வன் கள்வ னடி மேல் குருகூர்ச் சடகோபன் சொன்ன
பண் கொள் ஆயிரத்துள் இவை பத்தும் திரு வண் வண்டூர்க்கு
இன் கொள் பாடல் வல்லார் மதனர்; மின்னிடை யவர்க்கே.
–6-1-11-காமினிகளுக்குக் காமுகர் எவ்வளவு, ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு அவ்வளவு ஆவர் இதனைக் கற்க வல்லவர்கள்.

பூர்வோக்த பக்தி பரித்யாக ஹேது -உடையவனுக்கு ப்ரபத்தியில் அதிகாரம்-பக்தியில் அசக்தியே ப்ரபத்திக்கு அதிகாரம் –
நயநே வ்ருஷாசல இந்தோ தாரா மைத்ரீம் ததா நயா கருணே
த்ருஷ்டஸ் த்வயா ஏவ ஜனிமான் அபவர்க்கம் அக்ருஷ்ட பச்ச்சயம் அநு பவதி —தயாசாதகம் -20-
தயா தேவியே! திருமலையில் உதித்த குளிர்ந்த சந்திரன் போன்ற ஸ்ரீநிவாஸனின் திருக்கண்களின் விழியினுடைய நட்பை நீ கொண்டுள்ளாய் . உன்னால் பார்க்கப் பட்ட மனிதன் ஒருவன், உழவு போன்ற சிரமம் இன்றி கிட்டும் பலன் போன்று, எந்த விதமான முயற்சியும் இன்றி மோக்ஷம் அடைகிறான்.

இப் பிரபத்தி தான்-அந்தணர் அந்தியர் எல்லையில் நின்ற அனைத்துலகுக்கும் – ஸர்வாதிகாரமாய் -ஸர்வ பல ப்ரதமாய் -சதுர்வித பலத்துக்கும் ஸாதனமாய் -ஆநு கூல்ய சங்கல்பம் -பிரதிகூல வர்ஜனம் -மஹா விஸ்வாஸம்-கார்ப்பண்யம் -கோப்த்ருத்வ வரணம் என்னும் அங்க பஞ்சக உபேதமாய் -இச்சா அநு குணமாக பிராரப்த கர்மங்களையும் போக்குவதாய் இருக்கும் –
தாவதார்த்தி ததாவாஞ்சா தாவந் மோஹா ததா அ ஸூகம் -யாவந் ந யாதி சரணம் த்வாம் அசேஷ அக நாஸகம்
-விஷ்ணு -1-9-73-சரணாகதி செய்யாத வரையில் தானே ஜீவர்களுக்கு இழந்த செல்வத்தைப் பெறவும் புதிதாக செல்வத்தைப் பெறவும் ஆத்ம அனுபவத்தை பெறவும் ஆசையும் அனுபவிக்கப் பெறாத நிலையும் கவலையும் இருக்கும்
மோக்ஷத்தையே மட்டுமே குறித்துச் செய்யும் பிரபத்திக்கு பல -சங்க -கர்த்ருத்வ த்ரிவித -தியாகமும் வேண்டும் –

ப்ராரப்தே தர பூர்வ பாபமகிலம் ப்ராமதிகம் சோத்தரம்
ந்யாசேன ஷபயன் நநப்யுபகத பிராரப்த கண்டம் ச ந
தீ பூர்வோத்தர பாப்மா நாமஜந நாஜ் ஜாதே அபி தன்நிஷ்க்ருதே
கௌடில்யே சந்திம் சிஷயா அப்ய நதயநம் க்ரோடீகரோதிம் ப்ரபு
–அபராத பரிஹார அதிகாரம்-18-

இவ்வர்த்தத்தில் ஸ்ரீ பாஞ்சராத்ரம் அத்யந்த ஜாகரூபமாய் இருக்கும் -இதனுடைய மஹாத்ம்யம் பாஞ்சராத்ரஸ்ய க்ருத்ஸ்நஸ்ய வக்தா நாராயண ஸ்வயம் -சாந்தி பர்வம் -359-58-இத்யாதிகளிலே கண்டுகொள்வது
-ஆநு கூலஸ்ய ஸங்கல்ப பிராதி கூலஸ்ய வர்ஜனம் ரஷிஷ்ய தீதி விஸ்வாஸ கோப்த்ருத்வ வரணம் ததா ஆத்மநிஷேப்ய கார்ப்பண்யே ஷட் விதா ஸரணாகதி அஹிர்புத்ந்யா ஸம்ஹிதை -37-28-29-
ஸத் கர்ம நிரதா ஸூத்தோ சாங்க்ய யோக விதஸ் ததா -நார்ஹந்தி சரணஸ் தஸ்ய கலாம் கோடி தமீமபி -லஷ்மீ தந்த்ர -16-62-
நிஷே பாபர பர்யாய ந்யாஸ பஞ்சாங்க ஸம்யுத ஸந் ந்யாஸ ஸத்யாக இத் யுக்த ஸரணாகதி ரித்யபி -லஷ்மீ தந்த்ர-17- 74-இத்யாதிகளைக் கொண்டு அறியலாம் –

தயிரில் வெண்ணெய் -உயிர் இனத்தில் அந்தணன் -வேதங்களில் ஆரண்யகம் -ஒவ்ஷதங்களில் அம்ருதம் – இதே போல் பாஞ்சராத்ரம் நான்கு வேதங்களுக்கும் சமம் -ஸாரம் –ஸ்வயமாக தானே அருளிச் செய்த ஏற்றமும் உண்டு -முனி ஸ்ரேஷ்டர்களால் ப்ரமாணமாகக் கொள்ளப்பட்டது -தர்க்கபாதம் –

ஸூத்ரம் –211-விஞ்ஞானாதி பாவே வா தத் அப்ரதிஷேத –2-2-41-வேதாந்தத்தில் கூறப்பட்ட பரம புருஷனின் உபாசனத்தையும் அவனை அர்ச்சிப்பதையும் பாஞ்ச ராத்ரம் விளக்குவதால் அது முழுவதுமே பிரமாணம் என்பது சித்தம் –ஸூத்ரம் –212–விப்ரதிஷேதாச் ச -2-2–42--இந்த பாஞ்சராத்ரத்திலும் ஜீவனின் உத்பத்தியை விசேஷமாக நிஷேதித்து இருப்பதால் இது வேதத்துக்கு முரண் அற்றது-அசேதநா பரார்த்த ச நித்யா சதத விக்ரியா த்ரி குணா கர்மிணாம் க்ஷேத்ரம் ப்ரக்ருதே ரூப முச்யதே வ்யாப்தி ரூபேண ஸம்பந்த தஸ் யாச்ச புருஷஸ் யச ஸஹ்ய நாதி ரநத் தச்ச பரமார்த்தே நிச்சித -என்று பாஞ்ச ராத்ரத்திலே ஜீவனுக்கு உத்பத்தி நிஷேதிக்கப்பட்டது ஆகையால் ஸ்ருதியுடன் சிறிதும் முரண்பாடு இல்லை-பாஞ்சராத்ரத்தின் அப்ரமாண்யம் பரபக்ஷமாகையாலே தந் நிராகரணமும் இப்பாத சங்கதமாகக் குறையில்லையே -இதை உத்சர்க்க அபவாத முறை –

பாஞ்ச ராத்ரே ச பவ்த்தே ச ஸ்காந்த புராணம் இத்யாதிகள் தாமஸகங்கள் ஆகையால் ஸாத்விக ப்ரதிபன்னமான ஏதத் ப்ராமண்யத்திற்கு பாதகங்களாக மாட்டா-

சிலர் ஸ்வார்த்த ப்ரபந்நன் -என்ற ஒரு அதிகாரி உண்டு என்றார்கள் -பூனைக்குட்டியைத் தாய்ப்பூனை காப்பது போல் அவனே நன்மை காத்தருள இருக்க-மோக்ஷ பலனுக்காகவும் நாமே செய்யும் ப்ரபத்தியும் கூடாதே –ஸ்வாதீந கர்த்ருத்வ போக்த்ருத்வ -ஸ்வார்த்த கர்த்ருத்வ போக்த்ருத்வ ப்ரம ரூபங்களான அஹங்கார மமகாரங்கள் அடி அறுத்தவர்களே -அஹங்கார ரஹிதர்களுக்கே முமுஷுத்வம் ஸாஸ்த்ர ஸித்தமாகையாலே மோஷார்த்த ப்ரபத்தியில் ஸ்வார்த்ததா ப்ரபத்திக்கு அவகாசமில்லை -ஆகையால் இது அத்யந்த ஹாஸ்யம்-என்பர்-ஆநு கூல்ய ஸங்கல்ப-ப்ராதி கூல்ய வர்ஜனங்கள் ஸம்பாவித ஸ்வபாவங்களாம் இத்தனை ஒழிய அங்கங்கள் அன்று என்று சிலர் சொன்னது -தத் அங்கத்வ போதக வசன ஸத பாதிதமாகையாலே அநுப பந்நம் -பிரபத்தி காலத்தில் இவை தேவைதான் -அதற்குப்பிறகு தொடர்பு நாட்களில் ஒருகால் இவை இல்லாது போனாலும் தகுந்த ப்ராயச்சித்தம் செய்து கொண்டால் செய்த பிரபத்திக்கு பலன் குறைவற்று இருக்கும் என்பதே தாத்பர்யம் –ஸாத்ய உபாய சோதன அதிகாரத்தில் தேசிகர் ஸாதித்து அருளுகிறார்-பராபேஷா ந வித்யதே -அங்கங்களை எதிர்பார்ப்பதில்லை -ஸநத்குமார ஸம்ஹிதை -என்றது பிரபத்தியைப் பற்றியது அல்ல -மற்ற உபாயங்களைப் பொறுத்தே விதிக்கப்பட்டவை -ஸாமான்ய நிஷேதத்துக்கு விஹித வ்யதிரிக்த விசேஷம் விஷயத்வம் -பொதுவானவற்றை விலக்குவதற்கு குறிப்பிட்டுச் சொல்லும் வசனம் -வேண்டுமிறே -இல்லையாகில் நிர்விசேஷ வாதம் பிரசங்கிக்கும்
பராபேஷா ந வித்யதே –இதற்கு முன்பு பிரபத்தே க்வசித்தபி ஏவம் என்றும் கீழ் பக்தியோகத்தின் அங்கங்களை விளக்கி மற்றொரு நிவ்ருத்தி தர்மமான ப்ரபத்திக்கும் அவ்விதம் இருக்கும்போதே என்கிற சங்கைக்கு பதிலாக அங்கங்களை எதிர்பார்க்காது என்றுள்ளது

விஸ்வாஸம் அங்கம் -மற்றவை அங்கங்கள் அன்று என்பதாலேயே – விஸ்வாஸ பூர்வகம் (பாஷ்யகாரரின் முக்தக வாக்யம் என்று நிஷேப ரக்ஷையில் பூர்வபக்ஷ ப்ரகரணத்தில் ) என்று அருளிச் செய்ததும் தத் ப்ரதான்ய அபிப்ராயத்தாலே தான் -இல்லையாகில் துல்ய நியாயதையாலே இதற்கும் அங்கத்வம் இல்லையாம் -ஸாஸ்த்ர பிரதிபன்னங்களில் -ஒன்றைச் சொன்னது ஹானோ பாதாந ந்யாயத்தாலே மற்றவைகளுக்கும் உப லக்ஷணம் -மந்திரத்தில் இவ் வுருப்புக்கள் இருக்கும்படியை ரஹஸ்ய த்ரய சாராதிகளிலே அருளிச் செய்கிறார் -த்வயத்தில் இவ்வைந்து அங்கங்களும் குறிப்பிட்டு இருக்கும்படியை ரஹஸ்ய த்ரய ஸாரம் -நிஷேப ரக்ஷை -சில்லறை ரஹஸ்யங்களிலும் அருளிச் செய்கிறார் –இதில் பர ந்யாஸம் ப்ரபத்தியின் அங்கிது சாங்க அனுஷ்டானத்துக்கு நடாதூரம்மாள்(இவர் ஸ்ரீ வாத்ஸ்ய வரதகுரு. தேசிகனின் ஆசார்யரான அப்புள்ளாரின் ஆசார்யர் ) அருளிச் செய்யும் சுருக்கு –அநாதி காலம் தேவரீருக்கு அநிஷ்டாசரணம் பண்ணுகையாலே சம்சரித்துப் போந்தேன்-இன்று முதல் அனுகூலனாய் வர்த்திக்கக் கடவேன் –பிரதிகூலாசரணம் பண்ணக் கடவேன் அல்லேன் –தேவரீரைப் பெறுகைக்கு என் கையில் ஒரு கைம் முதல் இல்லை –தேவரீரையே உபாயமாக அறுதி இட்டேன் –தேவரீரே உபாயமாக வேணும் –அநிஷ்ட நிவ்ருத்தி இலாதல் இஷ்ட ப்ராப்தி இலாதல் எனக்கு இனி பரமுண்டோ

க்வசித் ததஸ்கத்வ (அதுவே என ) வாதம் -உபாய கோப்த்ரு பத ஏகார்த்த அபிப்ராயம் தத் பேத வ்யபதேசம் (அவற்றுள் வேறுபாடு என்ற குறிப்பு ) உபாயே க்ருஹ ரஷித்ரோ இத்யாதி பிரமாண ஸித்தம் -அங்காதிகளுக்கு பிரமாண ஸம்ப்ரதாய அனுகுணமாக ஈஷத் பேதம் (சிறிது வேறுபாடு கண்டு கொள்வது ) -உபாயத்வ யாஸ்ந அங்கத்வம் சொல்லுகிற இடத்திலும் உபாய ஸப்தம் கோப்த்ருத்வ பரம் -கோப்த்ருத்வ வரண அங்கித்வம் சொல்லுகிற வசனங்களில் கோப்த்ருத்வ பரம் உபாயத்வ பரம்-பிரபத்யங்க பக்தி பலத்தை பிரபத்தி மாத்ரத்தாலே தருகையாலே ப்ரபன்னனுக்கு ஈஸ்வரன் விசேஷத-குறிப்பாக -உபாயம் -என்றது

பிரபத்தி மோக்ஷ உபாயம் அன்றாகில் பஹு பிரமாண ஸம்ப்ரதாய விரோதங்கள் ப்ரசங்கிக்கும் -ந்யாஸம் ஏஷாம் தபஸாம் அதிரிக்தம் ஆஹு -ஓமிதி ஆத்மாநம் யுஞ்ஜீத -பக்த்யா பரமயா வாபி ப்ரபத்யா வா மஹாமதே ப்ராப்யோஹம் -பல பிரமாணங்கள் உண்டு -அகலகில்லேன் இத்யாதியாலே ஆழ்வார் பிரபத்தி பண்ணுகிறார் -இதிலே த்வயத்தில் போலே பர ந்யாஸ ப்ரதிசம்பந்தி -சேஷி விசேஷண தயா பெரிய பிராட்டியாரைச் சொல்லுகையாலே அவனுக்கும் உபாயத்வம் தோற்றுகிறது

1-லஷ்ம்யா ஸஹ ஹ்ருஷீகேஸ தேவ்யா காருண்ய ரூபயா-ரஷக ஸர்வ சித்தாந்தே வேதாந்தேஷு ச கீயதே -லஷ்மீ தந்த்ரம் -ஆணையிடுபவன் எம்பெருமான் -கருணையே வடிவெடுத்தவளும் இந்த விபூதியில் விளையாட்டு நிலமாக்கி லீலா ரஸத்தை அனுபவிப்பவளுமான பெரிய பிராட்டியாருடன் கூடி நின்றே அனைத்தையுமே காப்பவனாகிறான் என்று எல்லா ஸித்தாந்தங்களாலும் உபநிஷத்துக்களாலும் புகழப்படுகிறான் –

2-ஆத்ம வித்யா தேவி த்வம் விமுக்தி பலதாயிநீ -விஷ்ணு புராணம் -ஹே தேவி மோக்ஷம் அடைவிக்கும் வித்யைக்கு அதிபதியானவளும் ஸம்ஸார பந்தத்தில் இருந்து விடுவிப்பவளும் நீயே

3-ஸர்வ ஐஸ்வர்ய குணோபேதா நித்யம் தத் தர்ம தர்மிணீ -லலிதா ஸஹஸ்ரநாமம்-அனைத்தையும் நியமிக்கும் குணமுடையவளும் -எல்லா நன்மைகளையும் பெற்றவளும் எப்போதும் எம்பெருமான் செயல்களையே ஒட்டியே நடப்பவளும் நீயே-4-ஸர்வேச்சா பரிபூரிகா -லலிதா ஸஹஸ்ரநாமம் -அனைத்து ஆசைகளையும் நிறைவேற்றும் திறன் உடையவளும் நீயே-5-தர்ம காமார்த்த மோக்ஷதா -லலிதா ஸஹஸ்ரநாமம் -அறம் பொருள் இன்பம் வீடு ஆகிய அனைத்து பலன்களை அளிப்பவள் நீயே -6-பர நிர்வாண தாயிநீ -லலிதா ஸஹஸ்ரநாமம் –உயர்ந்த பலமான மோக்ஷத்தையும் அளிப்பவளும் நீயே –

7-வாச பரம் ப்ரார்த்தயிதா பிரபத்யேத் நியத ஸ்ரியம் -சவ்ந ஸம்ஹிதை -வேதத்தில் சொன்ன உயர்ந்த புருஷார்த்தத்தைத் பெற விரும்புபவர்கள் தவறாமல் பெரிய பிராட்டியாரை சரணம் அடைய வேண்டும் –
8-ஸர்வ காம ப்ரதாம் ரம்யாம் ஸம்ஸார ஆர்ணவ தாரிணீம் -ஸ்வயாம்புவம் -அனைத்து ஆசைகளையும் நிறைவேற்றுபவளும் நம் ஹிதத்தை விரும்புபவளும் ஸம்ஸாரமாகிற கடலைக் கடத்து விப்பவளும் நீயே –
இத்யாதி பிரமாணங்களையும் இங்கே பராமர்சிப்பது -விசிஷ்டேண மோக்ஷ உபாயம் என்பதை நிரூபிக்க எட்டு பிரமாணங்களை நிரூபிக்கிறார் –

அகில புவந ஜன்ம ஸ்தேம பங்காதி லீலே!(1)
விநத விவித பூத விராத ரக்ஷைக தீக்க்ஷே |(2)
ஸ்ருதி சிரஸி விதீப்தே!(3) பிரஹ்மணி! (4) ஸ்ரீநிவாஸே !
பவது மம பரஸ்மிந் சேமுஷி பக்தி ரூபா ||ஸ்ரீ பாஷ்யம்-மங்கள ஸ்லோஹம்-

இஷ்ட தேவதையான ஸ்ரீநிவாஸனுக்குச் செய்யப்பட மங்கள ஸ்லோகம் இது.

1- ஸ்ரீ நிவாஸனுக்கு லோகங்களைப் படைத்தல் காத்தல் அழித்தல் விளையாட்டு போல் எளிதானவை
2-சிந்தனை எப்போதும் அடியார்களை ஸம் ரக்ஷணம் செய்வது மட்டுமே
3- வேதாந்தங்களில் இரத்தினம் போல் ஒளிவிடும் ப்ரஹ்மம் அவனே
4- மென்மையான அவனிடம் எனக்கு பக்தி ரூபாபன்ன ஞானம் உண்டாக அவன் அருளட்டும்

ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ரங்களில் எங்குமே ப்ரஹ்ம லக்ஷ்மீ சம்பந்தம் குறிப்பிடப்படக் காணோம்.
ஆகிலும் ஸ்ரீ எம்பெருமானார் நூல் சுருக்கமே போலத் தோற்றும் முதல் ச்லோகத்திலேயே ஸ்ரீ எம்பெருமானை ஸ்ரீ நிவாசன் என்றார்.
இது ஸ்ரீ ஆழ்வார்கள் எல்லார்க்கும் மிக்கோனான எம்பெருமானை ஸ்ரீரிய:பதி என்றே கண்டதாலும்,
திரு இல்லாத் தேவரைத் தேரேன்மின் தேவு என்றதாலுமே ஆகும்.

பிரஹ்மணி! ஸ்ரீநிவாஸே – அவனே ஸ்ரீநிவாஸ பர பிரஹ்மம் என்று
1. ஸ்ரீயப் பதித்தவம்;
2. ஸ்ருஷ்டி ஸ்திதி லயகாரகத்வம் ;
3. ஸர்வாத்ம ஸம்ரக்ஷகத்வம் ;
4. பிரஹ்மணத்வம்
இத்யாதி விசேஷண விசிஷ்ட பிரஹ்மம் ஸ்ரீநிவாஸன் என்பதாக தொடக்கத்தேலேயே
குணாஸ்ரய உபய லிங்க விசேஷ விசிஷ்ய பிரஹ்ம தத்வத்தை பிரதி பாதித்து
அத்வைதிகளின் மிடற்றைப் பிடிக்கிறார் ஸ்வாமி.
-ஐஸ்வர்யம் -உபய விபூதி நாதன் –

ஈஷத் த்வத் கருணா நிரீக்ஷண ஸுதா ஸந்துக்ஷணாத் ரக்ஷ்யதே
நஷ்டம் ப்ராக் ததலாபதஸ் த்ரிபுவனம் ஸம்ப்ரத்யனந்தோதயம்
ச்ரேயோ ந ஹ்யரவிந்த லோசனமன: காந்தா ப்ரஸாதாத்ருதே
ஸம்ஸ்ருத்யக்ஷர வைஷ்ணவாத் வஸுந்ருணாம் ஸம்பாவ்யதே கர்ஹிசித்“-ஸ்ரீ சதுஸ் ஸ்லோகீ – 3வது ஸ்லோகம்
“இந்த மூவுலகும் கொஞ்சம் கருணையுடன் கூடிய உன் பார்வை என்னும் அம்ருதத்தினுடைய நனைப்பதால் இரட்சிக்கப் படுகிறது.-அது கிடைக்காததால் முன்பு அழிந்தது. இப்போது பல வகையாகத் தோற்றமளிக்கிறது.-ஐஹிகம், கைவல்யம், பரமபதம், என்கிற மூவகையான சுகங்களும் மனிதர்களுக்குத் தாமரைக் கண்ணனுடைய திருவுள்ளத்துக்கு இனியவளான உன் திருவருளல்லது மேன்மை ஒரு போதும் எதிர் பார்க்கப் படுவதில்லை யன்றோ”

ஐச்வர்யம் அக்ஷர கதிம் பரமம் பதம் வா
கஸ்மைசித் அஞ்ஜலி பரம் வஹதே விதீர்ய
அஸ்மை ந கிஞ்சித் உசிதம் க்ருதம் இதி அத அம்ப
த்வம் லஜ்ஜஸே கதய க: அயம் உதாரபாவ:–58-

தாயே! ஸ்ரீரங்கநாயகீ! உனக்கு முன்னால் நின்று கொண்டு ஒருவன் தனது இரு கரங்களையும் தலைக்கு மேல் தூக்கி வணங்கினால் நீ துடித்துப் போகிறாய்! என்ன காரணம்? அவனது கைகள் நோகுமே என்றும், அந்தப் பாரத்தை அவன் தாங்குவானா என்றும் என்ணுகிறாய். இதனால் அவனுக்கு மிகுந்த செல்வமும், உனக்குக் கைங்கர்யம் செய்யும் வாய்ப்பையும், உயர்ந்த மோக்ஷத்தையும் அளிக்கிறாய்.
இத்தனை செய்த பின்னரும் உனது நிலை எப்படி உள்ளது? “ஐயோ! எதனை நினைத்து இந்தக் குழந்தை நம்மிடம் வந்தானோ? நாம் அளித்தது போதுமானதாக இருந்ததா? இதன் மூலம் இவனது வேண்டுதல் பலித்ததா? தெரியவில்லையே!
நாம் குறைவாகக் கொடுத்து விட்டோமோ?”, என்று பலவாறு எண்ணியபடி,
நீ வெட்கப்பட்டுத் தலையைச் சற்றே தாழ்த்தி அமர்ந்திருக்கிறாய்.
இத்தகைய உனது கொடைத்திறன் எத்தன்மை உடையது என்பதை நீயே கூறுவாயாக.

வாழ்த்தி யவனடியைப் பூ புனைந்து நின் தலையைத்
தாழ்த்தி இரு கை கூப்பு என்றால் கூப்பாத -பாழ்த்த விதி
எங்குற்றான் என்றவனை ஏத்தாத என்னெஞ்சமே
தங்க தான் ஆம் ஏலும் தங்கு
–84-

பகவத் விஷயத்திலே ஒன்றும் செய்யாத நெஞ்சே அவனை வாழ்த்தி அவன் திருவடிகளிலே பூக்களைப் புனைந்து உன் தலையை அவன் திருவடிகளில் தாழ்ந்து இரண்டு திருக்கையையும் கூப்பு என்றால் கூப்பாதே (தமது கைகளை திருக்கைகள் என்று வெறுப்பால் அருளிச் செய்கிறார் )பாழ்த்த விதி என்று தம்முடைய அகலுகையைச் சொல்லி வெறுக்கவுமாம் பிராப்தி பிரதிபந்தகமான கர்ம வைகல்யத்தைச் சொல்லவுமாம்

மாரி மாறாத தண் அம் மலை வேங்கடத்து அண்ணலை
வாரி மாறாத பைம்பூம் பொழில் சூழ் குருகூர் நகர்க்
காரி மாறன் சடகோபன் சொல் ஆயிரத்து இப்பத்தால்
வேரி மாறாத பூமேல் இருப்பாள் வினை தீர்க்குமே
–4-5-11-இத்திருவாய்மொழி கற்றார்க்குப் பலம் கொடுப்பாள் பெரிய பிராட்டி,’ என்கிறது

இவளை -ஸ்ரியம் தேவீம் தேவஜூஷ்டாம் உதாராம் -ஸ்ருதி பறை சாற்றும் -அப்படி இருக்க- மாம் ஏகம் சரணம் வ்ரஜ அஹம் த்வாம் ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மாஸூச -இத்யாதிகள் சேரும்படி எங்கனே என்னில் –விஸிஷ்ட தாத்பர்யத்தாலே கூடும் -இல்லையாகில் நிர்விசேஷ சரண்யதை பிரசங்கிக்குமே –விஸிஷ்ட அத்வைத ஸித்தாந்தம் அன்றோ வேதாந்த-நம் ஸித்தாந்தம்-ஆகையாலே ஸ்ரீ விஸிஷ்டனே மோக்ஷ உபாயம் எனத் தட்டில்லை -விஸிஷ்ட பரத்வமிறே பதங்களுக்கு ஸ்வபாவ ஸித்தம்ஸ்வரூபத்தைச் சொல்லும் போது அவ்வோ தர்மங்களைக் இட்டல்லது சொல்ல ஒண்ணாது -அவற்றைக் கழித்துப் பார்க்கில் ஸஸ விஷாண துல்யமாம் –தத்வத்ரய சிந்தன அதிகாரம்

ஸ்ருதி ஸ்ம்ருதி பாஞ்சராத்ர ஸம்ப்ரதாய விருத்தங்களாக -கேவல தர்க்கங்களாலே ஓர் அர்த்தம் ஸித்தியாது -ஸித்திக்குமாகில் ஸ்வ அபிமத புருஷகாரத்வாதிகளும் நிர்விசேஷங்களாக ப்ரசங்கிக்கும்
ஸ்ருதேஸ் து ஸப்த மூலத்வாத் –2-1-27-என்றார் இறே ஸூத்ரகாரர் -ப்ரஹ்மத்தை அவயவம் கிடையாதா போது பஹுஸ்யாம் -ப்ரஹ்மமே பலவாகக் ஆயிற்று என்பதை எவ்வாறு பொருந்தும் எனில் விலக்ஷணமான தர்மம் -பிராட்டிக்கு எப்போதும் சேர்ந்தே இருப்பது -என்று வேதம் சொல்வதைக் ஒத்துக் கொள்ளத் தானே வேண்டும் என்கிறது இதில்-

து சப்தம் பக்ஷத்தை விலக்குவது
ஸ்ருதேஸ்–ப்ரஹ்மத்தின் இருப்புக்கு ஸ்ருதியே பிரமாணம் ஆகையாலே -இப்படி நேராது
சப்த மூலத்வாத்-ஸ்ருதி என்னும் சப்தத்தையே ஆதாரமாக -நம்பிக்கை காரணமாக -ஏற்று இருப்பதால்-பிரமாணாந்தரங்களுக்கு விஷயமாகாத ப்ரஹ்மத்திற்கு ஸ்ருதி கூறியபடி
நிர் அவயவத்வம் -காரணத்வம் -சர்வ சக்தத்வம் -முதலிய தர்மங்களை ஏற்றுக் கொள்வதால் எல்லாம் பொருந்தும்-இதனால் விரோதம் இல்லை-ஆகையால் ஸ்ருதி ஸ்ம்ருதி பாஞ்சராத்ர ஸத் ஸம் ப்ரதாயாதி ஸித்தமான இவ்வர்த்தம் -ஸ்ரீ விஸிஷ்டமான எம்பெருமானே மோக்ஷ காரணம் -என்னும் இவ்வர்த்தம் -ஒருவராலும் ஒரு ஹேதுவாலும் சலிப்பிக்க ஒண்ணாது –
பரதேவதா பாரமார்த்யாதிகார ஆரம்ப ஸ்லோகத்தில்-

ஆத்மைக்யம் தேவதைக்யம் த்ரிகசமதிகதா துல்ய தைக்யம் த்ரயாணாம்
அந்யத்ர ஐஸ்வர்யம் இத்யாதி அநிபுணா பணிதீ ஆத்ரியந்தே ந சந்த
த்ரயந்தை ஏக கண்டை தத் அனுகுண மனு வியாச முக்ய உக்திபி ச
ஸ்ரீ மான் நாராயணோ ந பதி அகிலதநு முக்தித முக்த போக்ய
—சாஸ்த்ர அறிவு முற்றும் அற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் எனில் ,-ஆத்மாக்கள் எல்லாம் ஒன்றே ; தேவதைகள் யாவரும் ஒன்றே ; த்ரிமூர்த்திகளின் தன்மையும் ஒன்றே;-இவர்களின் ஆத்மஸ்வரூபமும் ஒன்றே; இந்த மூவரையும்விட மேலாக இருப்பவன் ஒருவனே ஈச்வரன். ஆனால், இது ஸாரமுள்ளது , இது ஸாரமில்லாதது என்று பிரித்து அறியும் வல்லமையுடையவர்கள், இவைகளை ஏற்பதில்லை-ஒரே கருத்தைச் சொல்லும் உபநிஷத்துக்களினாலும் ,அவைகளோடு ஒத்திருக்கிற , மநு , வ்யாஸர் முதலியவர்களின் ஸூக்திகளாலும் ,எல்லாவற்றையும் சரீரமாக உடையவனும் ,மோக்ஷத்தை அளிப்பவனும், முக்தர்களால் அநுபவிக்கப்படுபவனுமான பிராட்டியுடன் எப்போதும் பிரியாமல் இருக்கிற நாராயணனே , நமக்கும் அனைவருக்கும் எஜமானன் –சேஷீ என்பதாகும் 

அர்த்த ஸ்வபாவ அனுஷ்டாந லோக த்ருஷ்ட்டி குரூக்திபி -ஸ்ருதி ஸ்ம்ருப்தியாம் ஸம் ஸித்தம் கடகத்வம் ஸ்ரியோ விது –லஷ்மீ புருஷகாரத்வே நிர்திஷ்டா பரமர்ஷிபி -பிராட்டியுடைய புருஷகாரத்வத்தை நிரூபிக்கும் பிரமாணம் -ஆறு ஹேதுக்கள் –1-அர்த்த ஸ்வ பாவம் -பெயரின் பொருளால் கிடைப்பது –2-அனுஷ்டானம் -முன்னோர்கள் செய்து காட்டியது -3-லோக த்ருஷ்ட்டி -உலகு நடப்புப்படி நடப்பது –4-குரூக்தி -ஆழ்வார் முதலானோர்களின் அருளிச் செயல்கள் –5-ஸ்ருதிகள் சொல்லுவது –6-ஸ்ம்ருதிகள் சொல்லுவது-

ஸ்ரீயதே -ஸ்ரயதே -ஸீதா சமஷம் காகுத்ஸ்தம் இதம் வசனம் அப்ரவீத் –ரா -3-15-6-
நித்யம் அஞ்ஞான நிக்ரஹாம்-கிடந்த நாள் கிடந்தாய் எத்தனை காலம் கிடத்தி உன் திரு வுடம்பு அசைய தொடர்ந்து குற்றேவல் செய்து தொல்லடிமை வழி வரும் தொண்டரோர்க்கு அருளி தடம் கொள் தாமரைக் கண் விழித்து நீ எழுந்து உன் தாமரை மங்கையும் நீயும்
இடம் கொள் மூ வுலகும் தொழ விருந்து அருளாய்
திருப் புளிங்குடிக் கிடந்தானே–9-2-3-தேவஜூஷ்டாம் -ஸ்ருதி
வாசஸ் பரம் பிரார்த்தயிதா பிரபத்யேத் நியத ஸ்ரியம் -ஸ்ம்ருதி
அர்த்த ஸ்வ பாவ அனுஷ்டான லோக திருஷ்ட்டி குரூக்திபிர் -ஸ்ருத்யா ஸ்ம்ருத்யா ச ஸம் ஸித்தம் கடகார்த்த அவலம்பநம் -நிஷேப ரக்ஷை வசனம் –

ஸ்ரியம் கடக பாவேந ப்ரபத்ய ப்ரதமம் தத-
ஸ்ரீ மந் நாராயணஸ் யாங்க்ரி பஜேதா பீஷ்ட காங்ஷாய
-இத்யாதி பிரமாணங்களை இங்கே அனுசந்திப்பது –

இவ்விடத்தில் சிலர் காருண்ய ரூபையான இவள் விபரீதர் அளவாகவும் க்ருபார்த்த ஹ்ருதயை யாகையாலே இவளிடத்தில் சரண வரணம் பண்ண வேண்டுவதில்லை -என்றார்கள் —மாதர் மைதிலி ராக்ஷஸீஸ் த்வயி ததைவ ஆர்த்த அபராதஸ் த்வயா ரஷந்த்யா பவனாத்மஜாத் –லகுதரா ராமஸ்ய கோஷ்டீ க்ருதா –குணரத்னகோசம் -50-
இது அதிவாதம் ரஸோக்தி -அவளை சரணம் புகுந்த பின்பே அவனை சரணம் அடைய வேண்டும் -கத்யத்ரயத்திலும் பார்க்கிறோம் -அது-இவளிடத்தில் சரண வரணம் பண்ண வேண்டுவதில்லை என்பது – மந்த்ர ரத்ன பிரதம பத வ்யுத்பத்தி –ஸ்ரீ யதே இதி ஸ்ரீ -நம்மால் அடையப்படுபவள் -அதைச் சார்ந்த பிரமாண நிர்த்தேச வையர்த்த்ய ப்ரசங்கங்களாலே ஸூதராம் அப ஹாஸ்யம்
ஸ்ரீ நரஸிம்ஹ அவதார வ்ருத்தாந்தத்தில் கொண்ட சீற்றம் தணிக்க பிராட்டியாரை முன்னிட்டு வேண்டி நின்றதை நினைத்துப் பார்க்க வேண்டும் –
இவ்விடத்தில் இவளுக்கு ஈஸ்வரேண ஸ்வரூபத அபி நித்ய ஸம்ஸ்லேஷம் விவஷிதம் என்றும் ஸத்துக்கள்-அல்வழக்கில் நம்மைப் படிய ஒட்டாதவர்கள் – அருளிச் செய்வர்கள்

சாந்தானந்த மஹாவிபூதி பரமம் யத்ப்ரஹ்ம ரூபம் ஹரே:

மூர்த்தம் ப்ரஹ்ம ததோபி தத்ப்ரியதரம் ரூபம் யதத்யத்புதம்

யாந்யந்யானி யதாஸுகம் விஹரதோ ரூபாணி ஸர்வாணி தாநி

ஆஹுஸ்வைரநுரூபரூபவிபவைர் காடோப கூடாநி தேசது:ஶ்லோகீ – ஸ்லோகம் 4

“பகவானுடைய எல்லா வகையான உருவங்களிலும் உன் சம்பந்தம் உண்டென்பது இதில் பேசப்படுகிறது. அமைதியோடு முடிவில்லாத மகாவிபூதி என்னும் பரமபதத்தில் ஸ்ரீ மஹாவிஷ்ணுவுக்குத் திருமேனியாக உள்ள எந்த உருவமோ அதைவிட மிகவும் பிரியமான உருவம் எதுவோ, எது ஆச்சர்யமானதோ சுகத்துக்கேற்றவாறு அவ்வப்போது எடுக்கப்பட்ட லீலையாக எடுக்கின்ற வேறு பல உருவங்களோ அந்த எல்லா உருவங்களும் தனது தகுந்த உருவங்களுடன் பெருமையுடனும் அழுந்தி ஆலிங்கனம் செய்யப்பட்டவையே. இதனால் பகவானுடைய எல்லா நிலைகளிலும் பிராட்டியின் சேர்த்தி சொல்லப்பட்டது.”ப்ரபந்ந பாரிஜாதத்தில் வரத குரூபாத்தா -நடாதூர் அம்மாள் மேற்கோள் காட்டி அருளிய ஸ்ரீ விஷ்வக்ஸேன ஸம்ஹித ஸ்ரீ ஸூக்தியை இங்கே அனுசந்திப்பது

மயா யதா ₂ ஜக₃த்₃வ்யாப்தம் ஸ்வரூபேண ஸ்வபா₄வத ꞉ ।
தயா வ்யாப்த மித₃ம் ஸர்வம் நியந்த்ரீ ச ததே₂ஶ்வரீ ॥॥

மேற் சொல்லிய படி ஸ்வரூபத்தினாலும் குணத்தினாலும் என்னால் இவ்வுலகம் எவ்வாறு வியாபிக்கப்பட்டு இருக்கின்றதோ அவ்வாறே இம்மஹா லஷ்மியினாலும் வியாபிக்கப்பட்டு இருக்கின்றது -என்னைப் போலவே இவளும் இவ்வுலகத்துக்கு நியாமிகையாகவும் ஈஸ்வரியாகவும் இருக்கின்றாள் –

ஸ ஏகோ விபூ –எம்பெருமான் ஒருவனே வியாபித்து இருப்பவன் -என்னில் விபு -நியந்த்ரு பரம் -ஆளும் தன்மையைக் குறிக்கும் என்பதால் ப்ரக்ருத பாதமில்லை –இல்லையாகில் ஞான விபுத்வங்களும் ஸித்தியாது –எங்கும் பரந்து நிற்கும் பொருள்களிலும் ஞானத்தையும் சொல்கிறோமே -அதே கணக்கில் இவளுக்கு சொல்லலாம் அன்றோ –

அணுத்வே சதி சேதனத்வம் –மிதுன சேஷமே சேதன லக்ஷணமாகக் கடவது யதா ஸர்வகதோ விஷ்ணு : ததைவ இயம் த்விஜோத்தம”- என்பது, ஸ்ரீ விஷ்ணுபுராணம், 1. 8 : 17 -இத்யாதிகளை இங்கே அனுசந்திப்பது -ஈஸ்வரனைப் போலவே இவளையும் ஸூஷ்மை என்றால் -அவ்யாஹத ஸர்வாந்த ப்ரவேஸ சமர்த்தை -என்றதாம் -அளவில் சிறியவள் என்னும் பொருளில் இல்லை –எல்லா வஸ்துக்களிலும் உள்ளே புகுந்து நியமிக்கும் திறன் உள்ளவள் என்பதையே சொல்லிற்றாம் –

விப்வீ ச -எங்கும் பரந்தவள் என்றும் அபியுக்தர் சொன்னார்கள் –
வந்தே ஸர்வ கதாம் விஷ்ணு வல்லபாம் விஸ்வ ரூபிணீம் -எங்கும் நிறைந்த யாவுமாய் இருந்து எம்பெருமானுக்கு இனியவனாய் இருப்பவள் -என்று நஞ்சீயர் அருளிச் செய்தார் –
ஸ்ரீ ரிதி விஸ்வ வ்யாபிநீ லஷ்மீ அபி தீயதே -ததா விஷ்வக்ஸேன ஸம்ஹிதாதிஷு அபி தீயதே -உலகெங்கும் பரந்த பிராட்டிமார் ஸ்ரீ என அறியப்படுகிறாள் -இவ்விதமே விஷ்வக்ஸேன ஸம்ஹிதை முதலியவற்றால் அறியப்படுகிறாள் -என்று இவளுடைய விபுத்வத்தை அருளாளப்பெருமாள் எம்பெருமானாரும் த்வய விவரணத்திலே ஸமர்த்தித்தார் –

முகுந்தப்பெருமாளும் தத்வ நிரூபணத்தில் -ஸ்ரீரபி நாராயணவத ஏவ ஸ்வரூபேண குண தஸ்ச விப்வீ -யதா ஆஹ பராசர யதா ஸர்வ கதோ விஷ்ணு ததைவேயம் இதி -எம்பெருமானைப் போலவே இவளும் ஸ்வரூபத்தாலும் குணத்தாலும் எங்கும் பரந்தவள் -பராசரரும் விஷ்ணு புராணத்தில் இவ்வாறு அருளிச் செய்கிறார் -என்று ஸ்பஷ்டமாக இவளுடைய விபுத்வத்தை உபபாதித்தார் -கடாம்புப் பெருமாளும் -தஸ்மாத் ஸ்வரூபதஸ் ஸ்வபாவதஸ் ச ஸ்ரியா வ்யாப்த பரமபுருஷ இதி ஸித்தம் என்று மிதுன நிர்ணயத்தில் விஸ்தரமாக ப்ரதிபாதித்தார்-

சோமாசி யாண்டானும் தத்வ ஸங்க்ரஹத்தில் -ஸேயம் ஸ்ரீ பகவான் இவ முமுஷு உபாஸ்யா ஸர்வ வ்யாபிநீ ச இதி அவ கம்யதே -மோக்ஷ உபாய ஞான விஷயீ பூதஸ்ய பகவத ஸ்ரீ நிவாஸத்வே விசேஷணாத் -ஸ்ரீ யதே இதி ஸர்வ ஸமாஸ்ரயணீய தாயா ஸ்ரீ ஸப்தத ஏவ ப்ரதிபாதநாத் -என்று அந்த உபாசனத்துக்கு விஷயமான ஸ்ரீ நிவாஸனுடன் எப்போதும் கூடியிருப்பவள் என்பதால் மோக்ஷம் விரும்புபவர்களால் எம்பெருமானைப் போலே இந்தப் பிராட்டி மோக்ஷத்துக்கான அறிவுக்கு விஷயமான எம்பெருமான் ஸ்ரீ நிவாஸனின் விசேஷணமாக உபாசிக்கத் தகுந்தவள் -எங்கும் பரந்தவள் என எண்ணப்படுகிறவள் -ஸ்ரீ யதே இதி ஸ்ரீ -அடையப்படுபவள் -என்பதை பெயரே காட்டும் –

வேதார்த்த ஸங்க்ரஹே -பகவத் பாஷ்யகாரர் -பகவத் ஸ்வரூப அனுரூபத் வஸ்ய லஷ்ம்யா ப்ரதிபாதநாத்
ஐஸ்வர்யமபி கைவல்யம் பகவத ப்ராப்தி மேவ ச
ததாதி பஜதாம் ஏஷா தயிதா பரமாத்மந
தயா பரேண பும்ஸேவ வ்யாப்தம் ஏதத் சராசரம்
தயா தேநாபி ரஹிதம் வித்யதே நது கிஞ்சன
ப்ரீதா ஸா சரணாகத்யா ஸஹைவ பரமாத்மநா
போகான் அபவர்க்கம் ச விதரதி அனுகம்பயா
ஞானதஸ் ச ஸ்வரூபேண விஸ்வம் வியாப்ய வ்யவஸ்திதாம் ஞானதஸ் ச ஸ்வரூபேண வியாப்ய தேவ ஸ்திதோ ஹரி
வ்யாப்த ப்ரியாபி அந்யாபி ஞானத பரமேஸ்வர
ந ஸ்வரூபத இத்யேஷ விஸேஷோ ஹி ஸ்ரியோ அநயோ
ஸ்ரிய புருஷகாரத்வ ஸ்த்ரீத்வாத்யா பேதகா ஹரே
பத்யு தண்ட தரத்வாத்யா வதான்யத்வாதய ஸமா -இத்யாதி லஷ்மீ தந்த்ர பரிஸிஷ்ட பாரத்வாஜ ஸம்ஹிதா பரிஸிஷ்ட வசநை
யுக்தார்த்த த்வயஸ்யாபி ப்ரதிபாதநாத்
-என்று ஸ ப்ரமாணமாக லஷ்மீ ஸ்வரூபத்தை நிரூபித்தார்

ஸ்ருதியும் ஹ்ரீஸ் ச தே லஷ்மீஸ் ச பத்ந்யவ் –அஸ்ய ஈசானா ஜகத விஷ்ணு பத்நீ –-இவையும் பிரமாணங்கள்-லஷ்மீ தந்திரத்தில் அடங்கிய பாரத்வாஜ ஸம்ஹிதையிலும் -எம்பெருமானின் பிரிய மனைவியான பிராட்டிமார் தன்னை வணங்குபவருக்கு -செல்வம் கைவல்யம் மோக்ஷம் -ஆகிய அனைத்தையுமே வழங்குபவள் -எம்பெருமானைப் போலவே உலகனைத்தும் இவளால் சூழப்பட்டவை –அவர்கள் இருவராலும் சூழப்படாத வஸ்து ஒன்றுமில்லை -சரணாகதியால் எம்பெருமானிடம் சேர்ந்து அவளும் மகிழ்பவளாய் கருணையினால் இவ்வுலக மற்றும் மேல் வுலக இன்பங்களையும் அளித்து அருளுகிறவள் -தனது ஸ்வரூபத்தாலும் ஞானத்தாலும் உலகை சூழ்ந்து நடத்துகிறாள் -ஹரியும் இப்படியே தான் ஸ்வரூபத்தாலும் ஞானத்தாலும் உலகைச் சூழ்ந்து இருக்கிறான் -பிராட்டியினுடையவும் மற்றவர்களுடையவும் ஞானத்தால் எம்பெருமான் சூழப்பட்டு இருக்கிறானோ -ஞானத்திற்கு விஷயமாகிறான் – மற்றவர்கள் ஞானத்தால் மட்டுமே சூழ்கிறார்கள் -பிராட்டியைப் போல் ஸ்வரூபத்தால் அல்ல
ஹரியைக் காட்டிலும் இவள் வேறுபட்டு இருப்பது -பெண்களுக்கே உரிய தன்மையாலும் -பரிந்து பேசும் புருஷகாரத்வத்தாலும் -இவளைக் காட்டிலும் அவனுக்கு தண்டகரத்வம் உண்டு -இருவருக்குமே காருண்யம் பிரியவசனம் போன்றவை பொதுவானவை –
இவற்றால் பிராட்டியினுடைய ஸ்வரூபம் இன்னது என்றும் நிரூபிக்கப்பட்டது –

கூரத்தாழ்வானும் மந்த்ர விவரணத்திலே –அத்ர அயம் அகார அவ ரக்ஷணே இதி தாதோ நிஷ்பன்ன பரம புருஷம் அபிததாதி-அத்ர ஸ்ரீ மத்வம் விவஷிதம் ஸ்ரீ மத ஏவ ரக்ஷகத்வாத் -என்று திருமந்திர பிரகரணத்தில் அருளிச்செய்து –
த்வய பிரகரணத்திலும் –மந்த்ர அபிப்ரேதம் பகவதோ ரக்ஷகத்வ உபயுக்தம் விசேஷம் அத்ர கண்டத உபாதத்தே ஸ்ரீ மத் பதேந ப்ராப்யத்வம் இவ ப்ராபகத்வம் அபி ஹி ஸ்ரீ மதே ஏவம் -ஸ்ரீமாந் ஏவ ஹி ரக்ஷகோ பவதி -என்று அருளிச் செய்தார்-தேவத்வமும் ரக்ஷகத்வமும் -திருவுடன் சேர்ந்தவனுக்கே –ஸ்ரத்தயா தேவ தேவத்வம் அஸ்னுதே -திருவில்லாத்தாத் தேவரை தேறேன்மின் தேவு –
த்வயத்தில் ஸ்ரீ மத் பதம் -மந்திரத்தில் சொல்லப்பட்ட நாராயணனுக்கு ரக்ஷகத்வத்துக்குப் பொருத்தமான விசேஷணம் -அதாவது அடையப்படுபவனாகவும் அடைவிப்பவனாகவும் உள்ள தன்மை பிராட்டியுடன் சேர்ந்தவனுக்கே —பிராட்டியை யுடையவனே ரக்ஷகனாவான்

அவர் தாமே -சாரீரிக சாரத்தில் –ஆனந்தா தய ப்ரதாநஸ்ய -என்ற ஸூத்ரத்தில் -ஆதி சப்தேந -அத்ர ஸ்வரூப நிரூபகம் ஸ்ரீயபதித்தவம் ச பராம்ருஸ்யதே -அத ஸ்வரூப நிரூபகத்வாத் யத்ர யத்ர பகவான் அபிதீயதே தத்ர தத்ர ஸ்ரீரபி –ததா ச சகல பல ப்ரதோ ஹி விஷ்ணு (விஷ்ணு தர்மம் ) பலம் அத இத்யாதி ஷு அபி ஸா தத் விசேஷணம் பவதீதி -ததேவம் பகவத இவ அஸ்யா அபி சகல பல சாதனத்வம் அபி -என்று மோக்ஷ உபாயத்வத்தை அருளிச் செய்தார் –

ஆனந்தாதய ப்ரதா நஸய —3-3-11-ஞான ஆனந்த அமல அந்நதத்வ ரூபங்களான ஸ்வரூப நிரூபக தர்மங்கள் ஸர்வ பர வித்யைகளிலும் உப ஸம்ஹரிக்கத் தக்கவையா இல்லையா என்று சம்சயம்-ஒரு பிரகரணத்தில் உள்ள குணங்களை வேறு பிரகரணத்தில் உப ஸம்ஹரிக்கையில் பிரமாணம் இல்லாமையால் உப ஸம்ஹார்யங்கள் அன்று என்று பூர்வ பக்ஷம்

அதை நிரசிக்கிறார்-ஸர்வ அபேதாத் -என்ற ஸூத்ரத்தில் இருந்து -அபேதாத் -என்பது இங்கு அனுவர்த்திக்கிறது
ஆனந்தாதய ப்ரதா நஸய-ஆனந்தாதி குணங்கள் எல்லா வித்யைகளிலும் உப ஸம்ஹரிக்கத் தக்கவையே-ப்ரஹ்மத்துக்கு சர்வ வித்யைகளிலும் அபேதத்தாலே -ப்ரஹ்ம ஸ்வரூபத்துக்கு இன்றியமையாத ஆனந்தாதி குணங்கள் அனுசந்திக்கக் கூடியவையே
இதனால் ப்ரஹ்ம குணங்கள் அநந்தமாய் இருந்தாலும் உப ஸம்ஹரிக்கக் கூடியவையே என்று கருத்து –-ப்ரஹ்மத்தின் ஆனந்தம் போன்ற தன்மைகள் அனைத்து இடங்களிலும் பொருந்தும் –ஒரு சில குணங்களே சில வித்யைகளுக்கு கூறப்பட்டாலும் –அனைத்து குணங்களுன் கூடிய ப்ரஹ்மம் அனைத்து உபாசனைகளிலும் ஒன்றாகவே இருப்பதால்

எம்பெருமான் ஸ்வரூபத்தை நிரூபிக்கும் தன்மையாக பிராட்டி இருப்பதால் எங்கெல்லாம் அவன் சொல்லப்படுகிறானோ அங்கெல்லாம் இவளும் சொல்லப்பட்டவளாகிறாள் -ஆகையால் அனைத்து பலன்களை அளிப்பவன் விஷ்ணுவே -மாங்கல்ய ஸ்தவம் -49-
பலம் அத உபபத்தே —3-2-37–யாகாதிகளில் கர்மமே அபூர்வத்தின் மூலமாக பலன் தரும் என்று பூர்வ பக்ஷம்

பரம் பொருளின் இடம் இருந்தே பலம் கிட்டுகின்றன -இதுவே பொருந்தும் –
எங்கும் உள்ளவன் -அனைத்தும் அறிந்தவன் -சர்வ சக்தம் -உதாரன் –
யஜ்ஞம் தானம் ஹோமம் உபாசனம் இவற்றால் மகிழ்ந்து அளிக்கின்றான்
ஷணம் நேரம் அழியக் கூடிய கர்மங்கள் பலன்களை தர வல்லமை அற்றனவே என்றவாறு-

நிகரில் புகழாய் –என்று வாத்சல்யம் சொல்லப்படுகிறது -தோஷ போக்யத்வம் வாத்சல்யம் என்று சிலர் மிகையாகச் சொல்லில் -தோஷங்கள் உபாதேயங்களாகும் –தோஷ அதர்சித்வம் -என்றால் ஸார்வஞ்ஞ ப்ரதிபாதிக ஸ்ருதி -ஸ்ம்ருதிகள் விரோதிக்கும்-பக்த தோஷேஷு அதர்ஸனம்--பாவிதம் -நடிப்பு – -தயா சதகம் -அடியார்களின் குற்றங்களை பொருள் படுத்தாது இருக்கச் செய்யும் அன்பு-அவனது சரீரமாகிய நம் மேல் அவன் ஆசை கொள்ளாமல் இருப்பானோ -சாரீரிக மீமாம்ஸைக்கு இதுவே தாத்பர்ய விசேஷமாக இருக்கும் -முமுஷுக்களுக்கு நித்ய அனுபாவ்யமாய் இருக்கும் –

உலகம் மூன்றுடையாய் -என்று ஸ்வாமித்வம் சொல்கிறது –ஸ்வ ரக்ஷண ப்ரவ்ருத்தி அர்ஹன் -உடையவன் உடைமையை ரக்ஷிக்குமதே பிராப்தம் -பிரதான பிரதிதந்தர அதிகாரம் –

என்னை ஆள்வானே -ஸுசீல்யம் ப்ரதிபாதிக்கப்படுகிறது –மஹதோ மந்தை ஸஹ நீரந்த்ர ஸம்ஸ்லேஷ ஸ்வ பாவம் இறே -இது ஸர்வாதிகாரமான ந்யாஸத்தை -ஸரணாகதியை -உள் கொண்டு இருக்கிறபடியை வித்யாபேத அதிகரணத்திலும் -விகல்ப அதிகரணத்திலும் ப்ரஹ்ம ஸூத்ரத்தில் ஸ்பஷ்டமாகக் காணலாம் -பலவான ப்ரஹ்ம வித்யைகள் இருக்க ஏதேனும் ஒன்றைச்செய்ய வேணும் -ந்யாஸ விதியையும் இவற்றுள் ஓன்று –இவற்றுக்கு எல்லாமே ஸுசீல்ய குணம் உறுப்பாய் இருக்கும்

திருவேங்கடத்தானே-அர்ச்சாவதார ப்ரதிபாதகம் -ஸுலப்யம் —ஸ்ருதி ஸ்ம்ருதி பாகத்திலும் -விவஷித குண உப பத்தேஸ் ச இத்யாதி -1-2-2-ஸூத்ரம் தன்னிலும் ப்ரஸித்தம் -ஸூத்ரம் -34–விவஷித குணோபபத்தே —1-2-2-குணங்கள் பொருந்த வேண்டும் என்றால் பரம் பொருளைக் குறித்தே ஆக வேண்டும்-

புகுந்தேன் என்று பர ஸமர்ப்பணம் வ்யஞ்சிதம் ஆயிற்று -தத் அங்கமான விஸ்வாஸமும் இவ்விடத்தில் கண்டோக்தம்

அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே பிராதிகூல்ய வர்ஜனமும் ஆனுகூல்ய சங்கல்பம் திருவடியை நினைத்தாலே தோன்றும்படி -அபயமளிப்பதும் -அணுக எளியதாயும் -போக்யமாயும் -பாவனமாயும் -இருக்கும் திருவடிகளே–அவனும் அவளும் கைவிட்டாலும் விடாத திண் கழலாய் இருக்கும் அன்றோ-

புகல் ஒன்றில்லா -என்று கார்ப்பண்யமும் யுக்தமாயிற்று –புகுந்தேன் என்று அங்கி தோன்றுகிற விடத்தில் கோப்த்ருத்வம் வரணம் தோன்றும்-

இவையெல்லாம் யாமுநாதி சரணாதிகளிலும் உண்டு என்றும் ஸ்தோத்ர பாஷ்ய -ரஹஸ்யத்ரய சாரா -அபய பிரதான சாராதிகளிலே பிரபஞ்சித்தோம்

நிகமன காரிகை ஸ்லோகங்கள்
1-பக்த்யா வ்யாஸாதய ஸக்தா அஸக்தாஸ் ச ப்ரபத்தித
ப்ராப்நுவந்தி பரம் பூர்வே விலம்ப்ய ஸஹஸா அபரே

ஸக்தா-திறனுள்ளவர்களான
வ்யாஸாதய-வ்யாஸர் முதலானோர்
பக்த்யா-பக்தி யோகத்தாலும்
அஸக்தாஸ்-திறன் அற்றவர்கள்
ச ப்ரபத்தித-ப்ரபத்தியாலும்
ப்ராப்நுவந்தி பரம்-பரம புருஷனாலே எம்பெருமானை அடைகிறார்கள்
அதில்
பூர்வே -முதலில் சொன்ன பக்தி யோகிகள்
விலம்ப்ய -தாமதமாகவும்-இனிமையாக இருந்தாலும் -ப்ராரப்தம் அனுபவித்து கழித்த பின்பே-பல பிறவிகளில் பின்பே பலம்
அபரே -மற்றவரான ப்ரபன்னர்கள்
ஸஹஸா -தாமதம் இல்லாமலும் அடைகிறார்கள்
வேண்டிய பொழுதிலேயே பலனைத் தரும் இன்றே இசையின் இணையடி சேர்ப்பர் -இனிப் பிறவோம்

2- கேநாபி ஸூக்ருதேந ஆர்த்தி கேஷாஞ்சித் இஹ ஜாயதே
கேஷாஞ்சித் ததபாவேந ஸஹஸா ஸா ந ஜாயதே

இஹ-இவ்வுலகில்
கேநாபி ஸூக்ருதேந -ஏதோ ஒரு நல்வினையால்
ஆர்த்தி -இந்த ஷணத்திலேயே மோக்ஷம் வேணும் என்னும் துடிப்பு
கேஷாஞ்சித் ஜாயதே -எவருக்காவது பிறக்கும்
கேஷாஞ்சித் -மற்றவருக்கு
ததபாவேந -இவ்வித நல்வினை இல்லாமையால்
ஸா-இத்துடிப்பு
ஸஹஸா ஸா ந ஜாயதே -உடனே பிறப்பதில்லை

3-அத அதிகாரி பேதேந சாதன த்வய ஸம்பவ
பலே து நாநயோ பேத விகல்ப கில ஸூத்ரித

அத -ஆதலால்
அதிகாரி பேதேந-செய்யத் தகுதி உள்ளவர்களுக்குள் உள்ள வித்யாஸத்தைப் பொறுத்து
சாதன த்வய ஸம்பவ -இவ்விரு உபாயங்களும் நேரும்
விகல்ப கில ஸூத்ரித-ஸூத்ரத்தில் இதுவோ அதுவோ என்று சொல்லி யிருக்கிறது அல்லவோ -இது நியத விகல்பம்
பலே து ந அநயோ பேத -ஆனாலும் இருவருக்குள் பலனைப் பொருத்த வரையிலும் வித்யாஸமில்லை

4-கஸ்ஸித் க்ருதீ ஸ்வ யத்நேந நிஹத்ய ரிபு மண்டலம்
புங்க்தே போகான் மஹாராஜ தமேவ ஆஸ்ரித்ய கஸ்ஸன

கஸ்ஸித் க்ருதீ -ஒரு செயலைச் செய்யும்
மஹாராஜ-அரசன்
ஸ்வ யத்நேந-தன் முயற்சியினால்
நிஹத்ய ரிபு மண்டலம் -பகைவரின் கூட்டத்தை அழித்து
புங்க்தே போகான் -அதன் போகத்தை அனுபவிக்கிறான் –
அதே நேரத்திலே ஒரு உயர்ச்சியும் செய்யாமலே
தமேவ ஆஸ்ரித்ய கஸ்ஸன -அவனை அண்டியதாலேயே அப்பலனை அனுபவிக்கிறார்கள் அன்றோ

5-தஸ்மிந் ந்யஸ்த பர தேந துல்ய போகோ மஹீ பதே
தத்வத் பக்தே பிரபத்தேஸ் ச யுஜ்யதே துல்ய போகதா

தஸ்மிந் மஹீ பதே -அந்த எம்பெருமானிடத்தில்
ந்யஸ்த பர-பக்தி யோகம் செய்ய வேண்டிய பளுவை வைத்தானாகில்
தத்வத் தேந துல்ய போக யுஜ்யதே-உண்மையில் எம்பெருமானுக்கு நிகரான இன்பத்தை அடைகிறான் –
பக்தே பிரபத்தேஸ் ச -பக்தியோகம் செய்பவனுக்கும் பிரபத்தி செய்பவனுக்கும்
துல்ய போகதா -அனுபவம் ஒன்றே தான்

6-உபாஸித குணாதே யா ப்ராப்தாவபி அபஹிஷ்க்ரியா
ஸா தத் க்ரது நய க்ராஹ்யா நாகாராந்தர வர்ஜனம்

உபாஸித குணாதே -உபாஸிக்கப்பட்ட குணம் முதலியவைகள்
ப்ராப்தாவபி-பகவானை அனுபவிக்கும் போதும்
யா அபஹிஷ்க்ரியா -எப்படி தள்ளப்பட வில்லையோ
ஸா தத் க்ரது நய க்ராஹ்யா -அவை தத் க்ரது நியாயப்படி அறியத்தக்கது -அதாவது
நாகாராந்தர வர்ஜனம் -உபாஸிக்கப்படாத ஆகாரங்கள் இல்லை என்பது இல்லை –
இருதி நேரத்தில் உபாஸிக்கும் போது தியானித்த குணங்களையே அங்கும் அனுபவிக்கிறான் என்பதால் மற்ற குணங்கள் இல்லை என்பதை இல்லையே

7-க்ருதே த்யாயந் யஜந் யஜ்ஜை த்ரேதாயாம் த்வாபரே அர்ச்சயந்
யதாப்நோதி ததாப்நோதி கலவ் சங்கீர்த்ய கேஸவம்

க்ருதே த்யாயந் -க்ருத யுகத்தில் த்யானத்தாலும்
யஜந் யஜ்ஜை த்ரேதாயாம் -த்ரேதா யுகத்தில் யாகங்கள் செய்தும்
த்வாபரே அர்ச்சயந் –த்வாபர யுகத்தில் பூஜிப்பதாலும்
யதாப்நோதி -எவரை அடைவார்களோ
தத் கேஸவம்-அந்த கேஸவனை
தத் ஆப்நோதி கலவ் சங்கீர்த்ய -கலியுகத்தில் ஸ்தோத்ரம் செய்வதாலேயே ஒருவன் அடைகிறான் –
இவ்வாறு ஸ்தோத்ரம் செய்து பின்பு பக்தி யோகத்திலோ பிரபத்தியிலோ மூட்டி பலனை அளிக்கும் -ஆக பரம்பரை யாகக் காரணம் கொள்ள வேண்டும் –

8-நஹி ஸாஸ்த்ர விரோதேந கஸ்ஸின் ந்யாய ப்ரவர்த்ததே
தஸ்மான் ந முக்தி பேதோஸ்தி இத்யாஹு ஆகம வேதிந

ஸாஸ்த்ர விரோதேந-ஸாஸ்த்ரங்களுக்கு விரோதமாக
கஸ்ஸின் ந்யாய-நியாயங்கள் ஏதும்
நஹி ப்ரவர்த்ததே -சொல்ல இயலாது
தஸ்மான் –ஆகவே
முக்தி பேத-மோக்ஷத்தில் வித்யாஸம் ஏதும்
ந அஸ்தி இதி -இல்லை என்பதாக
யாஹு ஆகம வேதிந–ஆகமங்களை நன்கு அறிந்தவர்கள் கூறுகிறார்கள்
பரம்பரையாகக் காரணங்கள் சொல்வதே பொருத்தம் என்றவாறு –

—————————-

கவி தார்க்கிக ஸிம்ஹாய கல்யாண குண சாலிநே
ஸ்ரீமதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம —

———————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நயினாராச்சார்யர் சுவாமி திருவடிகளே சரணம்-
ஸ்ரீ வேதாந்த தேசிகன் சுவாமி திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ வேதாந்த தேசிகர் அருளிச் செய்த -ஸ்ரீ ரகஸ்ய த்ரய சுகளம் -ஸ்ரீ சார சங்க்ஷேபம் –

June 20, 2025

ஸ்ரீ மான் வேங்கட நாதார்ய கவிதார்க்கிக கேஸரீ
வேதாந்தா சார்ய வர்யோ மே சந்நிதத்தாம் சதா ஹ்ருதி —

திருமந்தராதிகாரம்‌ -முன்னுரை 
ஆசார்ய லக்ஷணங்கள்‌ நிறைந்த சிறந்த ஆசார்யனை அடைந்து அவன்‌ கடாக்ஷத்தால்‌ ஞானம்‌ பெற்று ப்ர பத்தியைச்‌ செய்தவனுக்கு அந்த ப்ரயத்திக்குப்‌ பின்‌ திருமந்த்ரம்‌ - த்வயம்‌ - சரம சுலோகம்‌ ஆகிய மூன்று ரஹஸ்யங்களை அதுஸந்தித்துக்‌ கொண்டும்‌ அவற்றின்‌ அர்த்தங்களை சிந்தித்துக்‌ கொண்டும்‌ இருப்பது எப்பொழுதும்‌ இன்பத்தைத்‌ தரும்‌.

திருமந்த்ரம்‌' சேதநன்‌ முக்கியமாய்‌ அறியவேண்டிய 'எல்லா விஷயங்களையும்‌
சருக்கமாய்த தெரிவிக்கும்‌. இது எட்டு அக்ஷரங்கள்‌ கொண்டது. இதில்‌ மூன்று பதங்கள்‌ உண்டு. முழுதும்‌ ஒரே வாக்யமாயிருக்கும்‌-இதில்‌ முதற்பதம்‌ ப்ரணவம்‌. இந்த ப்ரணவம்‌ எல்லா வேதங்களுக்கும்‌ மூலமானது. இதைச்‌ சொல்லிவிட்டுத்‌ தான்‌
வேதத்தைத்‌ தொடங்க வேண்டும்‌. இது ஒரே எழுத்தாக உள்ளது. வேதமும்‌ ஸ்ம்ருதிகளும்‌ இந்த ஒரெழுத்தான ப்ரணவத்தை மூன்று எழுத்துக்‌ கொண்டதாகக்‌ கூறி அந்த மூன்று அக்ஷரங்களையும்‌ மூன்று பதமாகப்‌ பிரித்து ஒரு வாக்யமாக வைத்துப்‌ பொருள்‌ கூறியுள்ளன.

இந்த ப்ரணவத்தில்‌ அ-உ-ம்‌ என்ற மூண்று எழுத்துக்கள்‌ உள்ளன. இதில்‌ முதல்‌ எழுத்தான ?௮ என்பது பிராட்டியைப்‌ பிரியாத எம்பெருமானைச்‌ சொல்லுகிறது. எத்தகைய எம்பெருமானை? எல்லாவற்றுக்கும்‌ காரணமாய்‌ எல்லோரையும்‌ காப்பவனாம்‌ எல்லோருக்கும்‌ சேஷியான எம்பெருமானைக்‌ காட்டும்‌. இந்த மூன்று அம்சங்களையும்‌ அகாரம்‌ எவ்வாறு காட்‌டுகின்றது என்பதை ஆராய்வோம்‌ - உலகில்‌ சொற்களும்‌ அச்சொற்களால்‌ கூறப்படும்‌ பொருள்களும்‌ உண்டல்லவா? சொற்களுக்கெல்லாம்‌ மூலமான எழுத்து அ என்பது. எழுத்துக்கள்‌ ௮” வில்‌ தானே தொடங்குகின்றன! இவ்வாறே சொற்கள்‌ கூறும்‌ பொருள்களுக்கெல்லாம்‌ மூல காரணமாயுள்ளவன்‌ எம்பெருமானே-இப்படி சொற்களுக்கு மூலமான அகாரம்‌ சொற்‌ பொருள்களுக்கு மூல காரணமான எம்பெருமானைக்‌ கூறுவது பொருத்தம்‌ தானே! இவ்வம்சத்தை வாமன புராணமும்‌ காட்டுகின்றது. ஆகவே ௮ என்பதால்‌ அனைத்துக்கும்‌ எம்பெருமான்‌ காரணம்‌ என்ற பொருள்‌ தேறியது. மேலும்‌ ?௮? என்னும்‌ எழுத்து "அவ்‌? என்ற தாதுவிலிருந்து தேறுகின்றது. ?அவ்‌? என்ற வினைப்பகுதி (தாது) காத்தல்‌ என்ற பொருளைக்‌ காட்டும்‌. இவ்வழியால்‌ எல்லோரையும்‌ காப்பவன்‌ என்ற பொருள்‌ தேறும்‌. மேலும்‌ இந்த ௮? என்னும்‌ எழுத்தின்‌ மேல்‌ ஆய: என்னும்‌ நான்காம்‌ வேற்றுமையுருபு ஏறிப்‌ பின்‌ மறைந்திருக்கின்றது. இந்த வேற்றுமை யுருபுக்கு அடிமைத்‌ தன்மை பொருளாகும்‌. இங்கு எம்பெருமானால்‌ காக்கப்படும்‌ ஜீவன்‌ அவனுக்கு அடியன்‌ என்று பொருள்‌ கிடைக்கின்றது. இப்படி ஜீவன்‌ அவனுக்குச்‌ சேஷன்‌ என்று ஏற்பட்டால்‌ எம்பெருமான்‌ ஜீவனுக்குச்‌ சேஷியாகின்றான்‌. ஆகவே எல்லாவற்றுக்கும்‌ காரணமாய்‌ எல்லோரையும்‌ காப்பவனாகத்‌ திகழும்‌ எம்பெருமான்‌ எல்லோர்க்கும்‌ சேஷியாகவும்‌ உள்ளானென்று அகாரத்தால்‌ தேறியது.-இப்படி ஜீவன்‌ அடியனாம்‌ எம்பெருமான்‌ தலைவனாய்‌
நிற்றலாகிய சேஷ சேஷிபாவமென்னும்‌ ஸம்பந்தம்‌ ஒருநாளும்‌ யாராலும்‌ நீக்க முடியாதாதலின்‌ இதனால்‌ ஜீவன்‌ சரீரமாயும்‌ எம்பெருமான்‌ ஆத்மாவாயும்‌ நிற்பதென்ற சரீர சரீரிபாவ ஸம்பந்தமும்‌ கூறப்பட்டதாகின்றது. சரீரத்தின்‌ இலக்கணத்தில்‌ சேஷதவம்‌ ஒரு பகுதியன்றோ!

வயத்தில்‌ பிராட்டியின்‌ சேர்க்கை வெளிப்படையாகவே கூறப்பட்டுள்ளது. இங்குக்‌
கருத்தாகக்‌ கொள்ள வேண்டியுள்ளது.ப்ரணவத்தில்‌ உ” என்பது நடுவெழுத்து. இதற்கு அவதாரணம்‌ பொருள்‌ என்பர்‌ வடநூலார்‌. அவதாரணத்தைத்‌ தமிழர்‌ தேற்றேகாரம்‌ என்பர்‌. இரண்டும்‌ பரியாயச்‌ சொற்கள்‌. அவதாரணமேென் பதற்கு அவனுக்கு மட்டும்‌” *இவனுக்கே என்ற முறையில்‌ வரையறுத்தலே பொருளாகும்‌. அ?” என்பதுடன்‌ ௨”
என்ற எழுத்துச்‌ சேரும்போது அகாரத்தால்‌ கூறப்படும்‌ எம்பெருமானுக்கே அடியன்‌ ஜீவன்‌ என்று வரையறுத்த பொருள்‌ தேறும்‌. இதனால்‌ எம்பெருமானையன்றி மற்றுள்ளாரோடு ஜீவனுக்கு இயற்கையான ஸம்பந்தம்‌ ஏதுமில்லையென்று தேறியது.
இதனால்‌ எம்பெருமானையன்றி மற்ற தேவதைகளை விலக்க வேண்டிய அவசியம்‌ ஏற்படுவதுடன்‌ மற்ற தெய்வங்களை நாடுமவர்களையும்‌ அணுகாது விலக்க வேண்டுமென்பதும்‌ தேறியது.

ம்‌” என்ற எழுத்து ஜீவனைக்‌ கூறும்‌ பொருளில்‌ உருவாவதற்கு இரண்டு வழிகள்‌ உள்ளன. (1) வடமொழியில்‌ மந்‌” என்ற ஒரு தாது (வினைப்பகுதி) உள்ளது. இந்தப்‌ பகுதிக்கு அறிவு என்பது பொருள்‌. இந்த வினைப்பகுதியினின்று வியாகரண முறைப்படி ம்‌ என்று தேறிவிடுகின்றது. அப்பொழுது ஞான வடிவான ஆத்மா
என்று பொருளாகும்‌. (2) மற்றொரு வழி - வடமொழியில்‌ அஸ்மத்‌ என்ற ஒரு சொல்‌ உண்டு. இது தன்மைப்‌ பொருளில்‌ வருவது. வேதத்திற்கு இலக்கணம்‌ தனி. அந்த இலக்கணத்தின்‌ படி *அஸ்‌.மத? என்ற சொல்லில்‌ முன்னே உள்ள அஸ்‌” என்பதுவும்‌ பின்னே உள்ள அத? என்பதுவும்‌ அழிகின்றன. எஞ்சியுள்ள பகுதி ?ம்‌* என்பதுவே. இப்படி அஸ்மத்‌? என்ற முழுப்பகுதியே *ம்‌* என்று அகியிருப்பதால்‌ அந்தப்‌ பொருளே இதற்கும்‌ உண்டு.

ம்‌” என்னும்‌ மகாரம்‌ ஜீவனைக்‌ கூறுவதாய்த தேறியது. மந்‌” என்றவினைப்பகுதியினின்று ஞான வடிவன்‌ ஜீவாத்மா என்று தேறியது போல்‌ அநந்த வடிவமாயுள்ளவன்‌ என்றும்‌ தேறும்‌. எவ்வாறெனில்‌ நான்‌ என்று ஒவ்வொருவனும்‌ உணரும்போது அந்த ஜீவன்‌ அநுகூலனாகவே தோன்றுகின்றான்‌. நூன்‌” என்று உணரும்‌ எவனுக்காவது தன்‌ ஆத்மா ப்ரதிகூலனாய்த தோன்றுவதுண்டா? ஆகவே இன்பவடிவமாகவே தோன்று கின்றான்‌ ஜீவன்‌. ஆதலின்‌ அநந்த வடிவமாயுமுள்ளவனென்றும்‌ தேறுகின்றது. இவ்வாற்றால்‌ ஞானவடிவனாய்‌ ஆநந்தவடிவனாய்‌ முன்கூறிய அடிமைத்‌ தன்மையுடையவனாயுள்ளவன்‌ ஜீவாத்மா என்று பொருள்‌ தீர்ந்தது. ப்ரணவத்தின்‌ முழுப்பொருள்‌ ப்ரணவத்தில்‌ இந்த மூன்று அக்ஷ்ரங்களின்‌ அர்த்தத்தையும்‌ சேர்த்து ஒரு பொருளாகப்‌ பார்க்கும்போது ஜீவனைப்‌ பற்றிய பின்வருமாறு உள்ள அநுஸதந்தாநம்‌ பலிக்கும்‌. அதாவது - "ஜீவாத்மா தன்னை அறிய வேறொரு ஞானம்‌ வேண்டாதபடி தானே நான்‌? என்று ப்ரகாசிப்பவன்‌; எப்பொழுதும்‌ அநுகூலனாகவே தோற்று. மவன்‌: தன்‌ ஞானத்தாலே வஸ்துக்களை அறிபவன்‌; தான்‌ ப்ரகாசிப்பதால்‌ வரும்‌ பயனைத்‌ தானே பெறுமவன்‌; (ப்ரக்ருதி - மஹாந்‌ - அஹங்காரம்‌ - ஜஞாநேந்தரியம்‌ ஐந்து - கர்மேந்த்ரியம்‌ ஐந்து - மனம்‌ - தந்மாத்ரங்கள்‌ ஐந்து - பூதங்கள்‌ ஐந்து ஆகிய) இருபத்துநான்கு அசேதந தத்துவங்களைக்‌ காட்டிலும்‌ வேறுபட்டவன்‌. இத்தகைய ஜீவாத்மா, எல்லாவற்றுக்கும்‌ காரணமாய்‌” எல்லோரையும்‌ காப்பவனாய்‌ எல்லோருக்கும்‌ தலைவனான சரிய: பதிக்கே இயற்கையில்‌ அடியனாயிருப்பவன்‌; வேறு எவனுக்கும்‌ அடியனாகத தகுதியூடையனல்லன்‌”. என்பதுவே. 'ப்ரணவத்தால்‌ இந்த அர்த்தத்தை அறிந்து சேதநன்‌ அநுஸந்திப்பான்‌. இப்படி ஜீவாத்மாவாகிய தான்‌ எம்பெருமானுக்குச்‌ சேஷமென்று தீர்ந்ததால்‌ தனக்கு உடைமையாயுள்ள ஸகல வஸ்துக்களும்‌ எம்பெருமானுக்கே சேஷமாயுள்ளனவென்றும்‌ தேறுகின்றது. உகாரத்திற்கே பொருள்‌ பிராட்டியென்று சுருதி முதலியன கூறுகின்றன. ஆகவே பரணவத்தில்‌ கடை எழுத்தான மகாரத்தால்‌ கூற.ப்படும்‌ ஜீவன்‌ முதலெழுத்தான அகாரத்தால்‌ கூறப்படும்‌
எம்பெருமானுக்கும்‌ நடு எழுத்தான உகாரத்தால்‌ கூறப்படும்‌ பிராட்‌ டிக்கும்‌ தாஸனாய்‌ நிற்பவன்‌ என்று பொருள்‌ தேறுகின்றது.ப்ரணவத்துக்கும்‌ நம: என்பதற்கும்‌ சேர்த்துப்‌ பொருளை ஆராய்ந்தால்‌ 'ஜீவ்னாஇய நானும்‌ என்னுடையனவாகக்‌ கூறப்படும்‌ பொருள்களும்‌ உண்மையில்‌ என்னுடையனவாகமாட்டா. பிறருக்கும்‌ இவற்றில்‌
சிறிதும்‌ - உரிமையில்லை. இவை அனைத்தும்‌ மற்றவருக்கு உரிமையில்லாதவாறு எம்பெருமானுக்கே சேஷமாயுள்ளன? என்று அநுஸந்திக்க வேண்டியதாய்‌ முடிந்தது.

திருமந்திரத்தின்‌ பதங்களை வாக்கியமாகச்‌ சேர்த்துப்‌ பொருள்‌ பூ கண்ட பெரியோர்கள்‌ பத்துவகை அர்த்தங்களை அநுஸந்திப்பர்‌. -அந்தப்‌ பத்துவகைப்‌ பொருள்களும்‌ ஸ்ரீமத்‌ ரஹஸ்யத்ரய ஸாரத்தில்‌ விளக்கமாய்க்‌ கூறப்பட்டுள்ளன-
முன்னோர்களான பெரியோர்கள்‌ 'திருமந்த்ரத்திலே பிறந்து த்வயத்திலே வளர்ந்து த்வயைக நிஷ்ட்‌ டரா£வீர்‌' என்று சிஷ்யர்களுக்கு உப்தேசித்தார்கள்‌.

—————————————-

கவி தார்க்கிக ஸிம்ஹாய கல்யாண குண சாலிநே
ஸ்ரீமதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம —

———————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நயினாராச்சார்யர் சுவாமி திருவடிகளே சரணம்-
ஸ்ரீ வேதாந்த தேசிகன் சுவாமி திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ வேதாந்த தேசிகர் அருளிச் செய்த -ஸ்ரீ தத்வ த்ரய சுகளம்-

June 20, 2025

ஸ்ரீ மான் வேங்கட நாதார்ய கவிதார்க்கிக கேஸரீ
வேதாந்தா சார்ய வர்யோ மே சந்நிதத்தாம் சதா ஹ்ருதி —

சுளகம்‌ என்ற சொல்லுக்கு உள்ளங்கை என்று அர்த்தமாகும்‌.. -அசேதநம்‌ - சேதநன்‌ - ஈச்வரன்‌ என்னும்‌ தத்துவங்களைப்‌ பற்றிய  விஷயங்களை உள்ளங்கையில்‌ வைத்தாற்‌ போல்‌ எளிதில்‌  காட்டுவதால்‌ இந்த ரஹஸ்யத்திற்கு இப்பெயர்‌ வந்தது -
ஸ்ரீ மந்‌ நாராயணன்‌ திருவடிகளே சேதநர்க்கு உபாயமாகனும்‌ -அதனால்‌ வரும்‌ பலனாகவும்‌ ஆகும்‌. இவ்வெண்ணத்துடன்‌ அவன்‌ திருவடிகளைப்‌ பற்ற வேண்டுமானால்‌ முதலில்‌ மூன்று தத்துவங்களைப்‌ பற்றிய உண்மைகளை விரிவாய்‌ அறிய வேண்டும்‌. இவற்றை அறிந்தால்‌ மட்டுமே சில விபரீத ஜ்ஞாநங்கள்‌ ஒழியும்‌. அவையாவன - (1) சரீரத்திலும்‌ ஆத்மா வேறு பட்டிருக்கும்‌ உண்மையை அறியாமல்‌ சரீரத்தையே ஆத்மாவராகக்‌ கருதுதல்‌. (2) எம்பெருமானுக்கு அடிமையாக இருக்கும்‌ ஆத்மாவை ஸ்வதந்த்ரனாக நினைத்தல்‌. மூன்று தத்துவங்களையும்‌ நன்கு அறிந்தால் தான்‌ இந்த விபரீத எண்ணங்களெல்லாம்‌ ஒழியும்‌.

அசேதந வஸ்து மூவகைப்படும்‌. (1) த்ரிகுணம்‌ (2 காலம்‌ -(3) சுத்த ஸத்துவம்‌. இந்த மூன்றுக்கும்‌ அறிவு கிடையாது. ஆதலால்‌ அசேதநமாகும்‌.
தர்மபூதஜ்ஞாநத்தின்‌ நிலை -இங்கு ஒரு கேள்வி - ஜீவனிடம்‌ உள்ள அறிவைத்‌ தர்ம
பூதஜஞாநம்‌ என்று கூறுகின்றோமே! அதற்கும்‌ அறிவு இல்லையே! அறிவுக்கு ஒர்‌ அறிவு ஏது? ஆதலின்‌ அதுவும்‌ ஒர்‌ அசேதந வஸ்துவாய்‌ உள்ளதே! இந்த மூன்றைப்‌ போல்‌ அதையும்‌ அசேதந வஸ்துவில்‌ சேர்த்து நான்காகக்‌ கூற வேண்டாமா? என்று

அசேதநங்களை விளக்குவதன்‌ பயன

இந்த மூன்றை மட்டும்‌ பிரித்து விளக்குவதன்‌ காரணத்தை ஆராய்வோம்‌. திரிகுணம்‌ என்னும்‌ ப்ரக்ருதியைப்‌ பற்றி விளக்கினால்‌ இருபத்தைந்தாவது தத்துவமாகிய ஜீவனைப்‌ பற்றி விளக்கமாய்‌ அறியமுடியும்‌. அந்த ப்ரக்ருகியின்‌ மாறுபாடாகிய
சரீரத்தினும்‌ ஜீவனுக்கு வேறுபாடு தெரியவேண்டுமன்றோ!
இவ்வாறே காலத்தைப்‌ பற்றிய விளக்கம்‌ தெரிந்தால்தான்‌ இம்மைச்‌ செல்வம்‌ நெடுங்காலம்‌ நிலைக்கக்கூடியதன்று என்ற விவேகம்‌ ஏற்படும்‌. மேலும்‌ இந்தக்‌ காலத்திற்குக்‌ கட்டுப்படாத பரமபதத்தில்‌ ஆசை உண்டாகும்‌. மேலும்‌ அந்த அந்தக்‌ காலத்தில்‌ செய்ய வேண்டிய காரியங்களை உரிய காலத்தில்‌ செம்வதற்கு எண்ணம்‌
கொள்ளவும்‌ காலத்தைப்‌ பற்றிய விளக்க அறிவு பயன்படும்‌. இங்ஙனமே சுத்த ஸததுவததைப்‌ பற்றிய விரிவான அறிவு உபாயமும்‌ பலனுமாய்‌ நிற்கும்‌ எம்பெருமானுடைய திருமேனி முதலியன சுத்த ஸத்துவ மயமாயிருப்பதை நன்கு அறியப்‌ பயன்படும்‌. இந்த மூன்று அசேதநங்களின்‌ விளக்க அறிவு பயன்படுமளவுக்குத்‌ தர்மயூதஜ்ஞாநத்தின்‌ விளக்கம்‌ பயன்படாதாகையாலும்‌ அதை இந்த மூன்று அசேதநங்களுடன்‌ சேர்க்கவில்லை.
ஸத்துவம்‌ - ரஜஸ்‌ - தமஸ்‌! என்னும்‌ மூன்று  குணங்களுக்கும்‌ இருப்பிடமான ப்ரக்ருதி, தரிகுணம்‌ என வழங்கும்‌.  இந்த ப்ரக்ருதி சேதநர்களுக்குப்‌ பகவானுடைய ஸ்வரூபத்தைக்‌ காட்டாமல்‌ மறைக்கின்றது. இன்னும்‌ பல தீங்குகளையும்‌ விளைவிக்கின்றது. -ஸத்துவம்‌ - இது உயர்ந்த குணம்‌. இது சேதநருக்கு 
வஸ்துக்களின்‌ உண்மையான நிலையைக்‌ காட்டும்‌. மனிதன்‌ ஸுகம்‌ பெறுதற்கும்‌ காரணமாகும்‌. இந்தக்‌ குணம்‌ சிலருக்கு . மிகவும்‌ அதிகமாகி விட்டால்‌ மோக்ஷத்துக்குச்‌ சாதனமான” செயலைச்‌ செய்யத்‌ தூண்டி உதவி புரியும்‌-ரஜஸ்‌ என்பது நடுத்தரமான ஒரு குணம்‌. இது சேதநருக்கு ஆசை - துன்பம்‌ - விபரீத ஜ்ஞாநம்‌ முதலியவற்றை உண்டாக்கும்‌. தமஸ்‌ என்பது இழிவான குணம்‌.
இது மனிதருக்குக்‌ கவனமில்லாமை - சோம்பல்‌ - உறக்கம்‌ - அஞ்ஞாநம்‌ முதலியவற்றைத்‌ தரும்‌.இந்த மூன்று குணங்களும்‌ ப்ரக்ருதியில்‌ ஏற்றக்‌ குறைவின்றி
ஸமமான அளவுக்கு இருக்கும்‌ ஸமயமே மஹாப்ரளயமாகும்‌. ஸ்வதந்தரனான எம்பெருமான்‌ ஸங்கல்‌.்பித்தால்தான்‌ இம்மூன்று குணங்களும்‌ ஸமமான அளவுக்குச்‌ சேரும்‌. எப்பொழுது அவன்‌ ஸங்கல்பிப்பான்‌ என்பதைச்‌ சாஸ்தரம்‌ கூறியுள்ளது. அந்த
ஸங்கலபத்துக்கு அவனே காலத்தைக்‌ குறிப்பிட்டுக்‌ கொள்வான்‌.இவ்வாறே இந்த மூன்று குணங்களும்‌ ப்ரக்ருதியில்‌ சில ஸமயத்தில்‌ ஒன்றுக்கொன்று ஏற்றக்‌ குறைவாய்‌ இருக்கும்‌. இந்த ப்ரக்ருதி அப்பொழுதுதான்‌ மஹாந்‌ அஹங்காரம்‌ முதலிய
மாறுபாடுகளை அடைகின்றது. அப்பொழுது தான்‌ உலகில்‌ ஸ்ருஷ்டி (படைப்பு) ஏற்படுகின்றது. நம்‌ சரீரத்தில்‌ வாதம்‌ - பித்தம்‌ - கபம்‌ என்ற தாதுக்களில்‌ ஒன்று குறைவதும்‌ மற்றொன்று கூடுவதுமாய்‌ இருக்கவில்லையா? அவ்வாறே ப்ரக்ருதியில்‌ இம்மூன்று குணங்களுள்‌ ஒன்று ஏறுவதும்‌ மற்றொன்று இறங்குவதுமாய்‌ இருப்பதுண்டு. அப்பொழுதுதான்‌ ப்ரக்ருதி பல வஸ்துக்களாய்‌ மாறுபாட்டை யடைகின்றது. இவ்வாறு குணங்களில்‌ ஏற்படும்‌ ஏற்றச்‌ சுருக்கங்களுக்கு அளவேயில்லை.

முற்கூறிய மூன்று குணங்களும்‌ ஸமமான நிலையில்‌ இருக்கப்‌ யெற்ற வஸ்துவே மூல ப்ரக்ருதி என வழங்குகின்றது. இந்த மூலபரக்ருதிக்கு அறிவு கிடையாது; அழிவு கிடையாது; பிறர்‌ பயனுக்காகவே ஏற்பட்டது. எப்பொழுதும்‌ மாறுபாடு அடைந்து
கொண்டேயிருப்பது. ஸ்ரீவைகுண்டம்‌ தவிர மற்ற இடங்களில்‌ இது இல்லாத இடம்‌ இல்லையென்னலாம்படி எங்கும்‌ பரவியுள்ளது. இந்த ப்ரக்ருதி மிவும்‌ ஸூக்ஷமமான சில மாறுபாட்டை அடையும்போது அதற்குத தமஸ்‌ முதலிய சில பெயர்ப்‌
பிரிவுகளைச்‌ சுருதி சொல்லுகின்றது.

இந்த ப்ரக்ருதி பல்வேறு வஸ்துக்களாய்‌ மாறு படும்போது வயக்தமெனப்‌ பெயர்‌ பெறும்‌. ஒரே வகையான மாறுபாட்டை அடையும்போது அவயக்தமெனப்‌ பெயர்‌ பெறும்‌. இந்த ப்ரக்ருதி மாறுபடும்‌ நிலையில்‌ வயக்தமெனப்‌ பெயர்‌ கொண்டு மஹாந்‌ முதல்‌ ப்ருதிவீ வரை உள்ள இருபத்துமூன்று தத்துவமாக மாறும்‌.
பரக்குதியின்‌ முழுப்‌ பகுதியும்‌ இப்படி இருபத்து மூன்று தத்துவங்களாக மாறுவதில்லை. அதில்‌ ஒரு பகுதியே இப்படி மாறுகின்றது. மற்ற பகுதி மாறாமல்‌ அப்படியே இருந்து கொண்டிருக்கும்‌. ப்ரக்ருதியில்‌ மற்ற வஸ்துக்களாக மாறுபடும்‌ பகுதி கடலில்‌ அலைகளையுடைய பகுதி போன்றதாகும்‌. மாறுபடாமல்‌
அப்படியே நிற்கும்‌ பகுதி கடலில்‌ அலையேயில்லாத இடம்‌ போன்றதாகும்‌. இப்படி மஹாத்‌ முதலிய மாறுபாட்டை அடையாமல்‌ அப்படியே நிற்கும்‌ ப்ரக்ருதியின்‌ பகுதியிலும்‌ கூட ப்ரளய நிலையில்யோல்‌ மிகவும்‌ ஸு்க்ஷூமமாய்‌ நமக்குப்‌
புலப்படாதனவாய்‌ ஒரே வகையான மாறுபாடுகள்‌ இருந்து கொண்டேயிருக்கும்‌.

இப்படி பரக்குதியில்‌ ஸத்துவம்‌ - ரஜஸ்‌ - தமஸ்‌ என்னும்‌ மூன்று குணங்களின்‌ ஏற்றச்‌ சுருக்கங்களால்‌ ஏற்படும்‌ மாறு பாடுகளில்‌ முதல்‌ மாறுபாடு மஹாந்‌ என்பது. ஜீவனுக்கு நிச்சயவடிவமான ஞானத்தை மநஸ்ஸுதான்‌ உண்டாக்குகின்றது.
அப்பொழுது இந்த மஹாந்‌ மனத்துக்குத்‌ துணையாயிருக்கும்‌. ஆதலால்‌ இநத மஹாந்‌ புத்தி என்று வழங்கப்பெறும்‌. இந்த மஹானும்‌ தன்னிடம்‌ உள்ள குணத்தைக்‌ கொண்டு மூன்று வகைப்படும்‌. மஹானில்‌ ஸத்துவகுணம்‌ அதிகமாயிருந்தால்‌
ஸாத்துவிக மஹாந்‌ என்றும்‌, ரஜோ குணம்‌ மிகுந்திருந்தால்‌ ராஜஸ மஹாந்‌ என்றும்‌, தமோ குணம்‌ அதிகமாயின்‌ தாமஸ மஹாந்‌ என்றும்‌ அழைக்கப்படும்‌.
இந்த மஹானிலிருந்து பிறக்கும்‌ தத்துவம்‌ அஹங்காரம்‌ என்பது. இதன்‌ செயல்‌ வருமாறு - ஜீவனிலும்‌ வேறுபட்ட சரீரத்தையே ஆத்மாவாக நினைத்து அதில்‌ நான்‌ என்ற எண்ணத்தை மனம்‌ உண்டாக்குகின்றது. அப்பொழுது மனத்துக்கு இந்த அஹங்காரம்‌ துணை புரிகின்றது. அதனாலேயே இதற்கு அஹங்காரம்‌ என்ற பெயர்‌ வந்தது. இந்த அஹங்காரமும்‌ தனக்குக்‌ காரணமான மஹான்‌ போலேஸாத்துவிகம்‌ - ராஜஸம்‌ - தாமஸம்‌ என்று குணங்களின்‌ மிகுதி குறைவுகளைக்‌ கொண்டு
மூவகைப்படும்‌. இவற்றுள்‌ ஸாத்தவிக அஹங்காரத்தினின்று இந்திரியங்கள்‌ பிறக்கின்றன. தாமஸ அஹங்காரத்தினின்று பின்‌ தரும்‌ விளக்கத்தின்படி பூதங்கள்‌ பிறக்கின்றன. இந்த இரண்டு அஹங்காரங்களும்‌ தத்தம்‌ காரியங்களைப்‌ பிறப்பிக்கும்போது ராஜஸ அஹங்காரம்‌ இவ்விரண்டுக்கும்‌ தூண்டித்‌ துணை புரியும்‌

ஸாத்துவிக அஹங்காரத்தினின்று பதினொன்று. இந்திரியங்களும்‌ பிறக்கின்றன. இந்த்ரியங்கள்‌ உள்‌  இந்திரியங்களென்றும்‌ புற இந்திரியங்களென்றும்‌ இருவகைப்படும்‌. -உள்‌ இந்திரியமென்பது மனம்தான்‌. இந்த மனம்‌ 
ஸம்ஸாரலோகத்தில்‌ உள்ள சேதநர்கள்‌ ஒன்றைச்‌ செய்ய ஸங்கல்பிப்பதற்கும்‌ ஒன்றை நினைத்தற்கும்‌ மற்றும்‌ சில எண்ணங்கள்‌ உண்டாவதற்கும்‌ காரணமாயிருக்கும்‌. வெளி இந்திரியங்கள்‌ தத்தம்‌ செயலைச்‌ செய்ய இந்த மனம்‌ துணையாய்‌ நிற்கும்‌. உலகில்‌ மனிதனுக்கு நிச்சயமான எண்ணம்‌ உண்டாகின்றதன்றோ! அந்த எண்ணத்துக்கு மனம்தான்‌ காரணமாகின்றது. அப்பொழுது மனம்‌ புத்தி என்று பெயரால்‌ வழங்கும்‌. மனிதன்‌ ஒன்றை வேறொன்றாகத்‌ தவறிக்‌ கருதுகின்றான்‌. அதற்கும்‌ மனம்‌ தானே காரணம்‌! அந்த நிலையில்‌ மனம்‌ அஹங்காரம்‌ என்ற பெயர்‌ பெறுகின்றது. மனிதன்‌ ஒரு விஷயத்தைப்‌ பற்றி ஆலோசிக்னெறான்‌. இந்த ஆலோசனைக்கும்‌ மனமே காரணம்‌. இந்த நிலையில்‌ மனம்‌ சிததம்‌ என்று
அழைக்கப்பெறும்‌.


ஜஞாநேந்திரியங்கள்‌ ஐந்தும்‌ தத்தும்‌ செயலைப்‌ புரியும்‌ போது அவற்றின்‌ சக்தியை ஐந்து பூதங்களும்‌ வளர்த்துப்‌ போஷிக்கின்றன. காதுக்கு ஆகாய மம்‌. ஸ்பரிசேந்திரியத்துக்கு வாயுவும்‌, கண்ணுக்குத்‌ தேஜஸ்ஸும்‌. நாவுக்கு ஜலமும்‌, மூக்குக்குப்‌ பூமியும்‌ துணைநின்று அவ்விந்திரியங்களின்‌ சக்தியை வளர்க்கின்றன. இவ்வாறே உள்ளிந்திரியமாகிய மனத்துக்குப்‌ பூமி என்னும்‌ பூதம்‌ போஷகமாயுள்ளது. ப்ராண வாயுவை ஜலம்‌ போஷிக்கிறது. வாக்குக்குத்‌ தேஜஸ்‌ போஷகமாகும்‌.

மஹாந்‌ என்ற தத்துவம்‌ தொடங்கி ப்ருதிவி வரையில்‌ உள்ள எம்பெருமானது படைப்பு ஸமஷ்டி ஸ்ருஷ்டியெனப்படும்‌. இந்த மஹான்‌ முதலிய தததுவங்களின்‌ பகுதிகளைக்‌ கொண்டு செய்யப்படும்‌ படைப்பு வ்யஷ்டி ஸ்ருஷ்டி எனப்படும்‌.

சுத்த ஸத்துவத்தின்‌ உருவத்தைப்‌ பற்றிச்‌ சில கருத்துவேற்றுமைகள்‌ உண்டு.
அவையாவன - சிலர்‌ இந்தச்‌ சுத்த ஸத்துவத்தை ப்ரக்ருதியையும்‌ காலத்தையும்‌ போல ஜடம்‌ என்கின்றனர்‌. அதாவது - தானே பரகாசிக்காமல்‌ வேறொன்றால்‌ புலப்படுத்த வேண்டியதாயுள்ள தென்கின்றனர்‌. சிலர்‌ சுத்த ஸத்துவத்தை ஸ்வயம்‌
ப்ரகாசமென்கின்றனர்‌. அதாவது - இதைக்‌ காண்பதற்குச்‌ சாதனமாய்‌ வேறொன்றும்‌ வேண்டியதில்லையென்றும்‌ தானே ப்ரகாசிததுக்‌ கொண்டிருக்குமென்றும்‌ கூறுகின்றனர்‌. தர்மபூதஜ்ஞாநம்‌, ஜீவாத்மா, அவனுடைய தர்மபூதஜ்ஞானம்‌, சுத்த ஸத்த்வம்‌ ஆகிய இவையெல்லாம்‌ ஸ்வயம்ப்ரகாசம்‌ என்று தேறுகின்றது. ஆத்மா *நான்” என்று எப்பொழுதும்‌ தோன்றிக்‌ கொண்டேயிருப்பதால்‌ இதை அறிய வேறு ஞானம்‌ வேண்டியதில்லை. ஆதலால்‌ _ஆதிமா ஸ்வயம்ப்ரகாசம்‌. ஆத்மாவிடம்‌ உள்ள ஞானம்‌ தர்மபூதஜ்ஞாநமெனப்படும்‌. இந்த ஞானம்‌ தன்னை அறிய வேறொரு ஞானம்‌
வேண்டாதபடி தானே ப்ரகாசிப்பதால்‌ இதுவும்‌ ஸ்வயம்ப்ர காசம்‌ என்னப்படுகின்றது. இவ்வாறே சுத்த ஸத்துவமும்‌ தன்னை அறிய வேறொரு ஞானம்‌ வேண்டாதபடி தானே ப்ரகாசிக்னெறது. ஆதலின்‌ இதுவும்‌ ஸ்வயம்‌ ப்ரகாசம்‌. ஆக ஆத்மாக்களும்‌ தர்மபூத ஜ்ஞாநமும்‌ சுத்த ஸத்த்வமும்‌ ஸ்வயம்‌ ப்ரகாசம்‌ என்ற முறையில்‌ ஒற்றுமையுடையன.

ஆயினும்‌ ஆத்மாவையும்‌ தர்மபூதஜ்ஞாநத்தையும்‌ காட்டிலும்‌ சுத்த ஸத்துவத்துக்குச்‌ சல வேற்றுமைகளும்‌ உண்டு. இந்த வேறுபாடுகள்‌ சாஸ்த்ரங்களால்‌ நிச்சயிக்கப்‌ பட்டனவாகும்‌. உதரஹரணமாம்‌ - ஆத்மாவுக்கு மாறுபாடு கிடையாது. சுத்த : ஸத்துவம்‌ வேறொரு வஸ்துவாய்‌ மாறுபாட்டை அடைவது. தர்ம பூதஜ்ஞாதம்‌ மற்றொரு
வஸ்துவைக்‌ காட்ட வல்லது. சுத்த ஸத்துவம்‌ தன்னை மட்டும்‌ காட்‌ டுமேயன்றி மற்றொரு வஸ்துவைக்‌ காட்ட வல்லதன்று. இப்படி சிற்சில வேற்றுமைகளையும்‌ சாஸ்தரமே வரையறுத்துள்ளது -ஆத்மா, தான் புலப்படுமேயன்றி மற்ற வஸ்துவைக்‌ காட்டாது. தர்‌மபூதஜ்ஞாநமோ தானே புலப்படுவதுடன்‌ மற்ற வஸ்துவையும்‌ காட்ட வல்லது.
ஆத்மா தான்‌ புலப்படுவதால்‌ வரும்‌ பயனைத்‌ -தானே பெறும்‌. தர்மபூத ஜ்ஞாநம்‌ தான்‌ புலப்படுவதால்‌ வரும்‌ பலனைத்‌ தான்‌ அடைய முடியாது. அசேதநம்தானே! ஆத்மாவுக்குச்‌ சுருக்கமோ மலர்ச்சியோ கிடையாது. தர்மபூதஜ்ஞாநம்‌ சுருங்குவதும்‌ மலருவதும்‌ உண்டு. இந்த வேற்றுமைகளையும்‌ சாஸ்தரம்‌ , வலியுறுத்திக்‌ கூறுவதால்‌ ஏற்றுக்‌ கொண்டேயாக வேண்டியிருக்கன்றதன்றோ! இவ்வாறே இந்த இரண்டிலும்‌ காட்டிலும்‌ இந்தச்‌ சுத்த ஸத்துவத்திற்குக்‌ ழ்க்‌ கூறியவாறு லை வேற்றுமைகளையும்‌ முன் கூறிய ப்ரமாணங்களை ஒத்த ப்ரமாணங்கள்‌ வலியுறுத்திக்‌ கூறுவதால்‌ இசைந்தேயாக வேண்டும்‌. -
சுத்த -ஸத்துவத்தின்‌ தன்மைகள்‌ நமக்கு மிகவும்‌ அநுகூலமாயிருப்பதால்‌ “சுத்த ஸத்துவத்தை ஆநந்தமயம்‌' என்றும்‌ கூறுவர்‌. இது எம்பெருமானுடைய ஞானம்‌ - சக்தி - பலம்‌: ஐச்வர்யம்‌. --வீர்யம்‌ - தேஜஸ்‌ ஆகிய ஆறு குணங்களும்‌! நமக்குப்‌ புலப்படும்படி செய்வதால்‌ ஷாட்குணயமயம்‌ என்றும்‌ அழைக்கப்படும்‌.

வாத்மாவைப்‌ பற்றிய விளக்கத்தை ஸ்ரீ ஆளவந்தார்‌ தாம்‌ அருளிச்‌ செய்த ஸித்தித்ரயத்தில்‌ ஆத்மஸித்து என்ற பகுதியில்‌ "தேஹேந்தரிம: என்று தொடங்கும்‌ சுலோகத்தில்‌ அருளிச்‌ செய்தார்‌ -தேறஹேந்த்ரிய மந: ப்ராணூ.ப்யோ 2ந்யோ 2நந்யாஸாததந: நித்யோ வ்யாபீ ப்ரதிக்ஷேத்ரமாத்மா பிந்ந: ஸ்வதஸ்ஸு-இதற்குச்‌ சுருக்கமான பொருள்‌ வருமாறு - ஜீவாத்மா, சரீரம்‌ - இந்தரியம்‌ - மநஸ்‌ - ப்ராண வாயு - தர்மபூதஜ்ஞாநம்‌ இவற்றிற காட்டிலும்‌ வேறுபட்டவன்‌. தானே ப்ரகாரிப்பவன்‌. அழிவற்றவன; எந்த அசேதநத்திலும்‌ உள்ளே புகவல்லவன்‌. சரீரம்தோறும்‌
வேறுபட்டவன்‌. இயற்கையில்‌ ஸுகஸ்வரூபனும்‌ ஸாகத்தைப்‌ பெறத்‌ தகுதி யுடையவனுமா யிருப்பவன்‌.

எம்பெருமானுக்கு இரண்டு வகைப்பட்ட தன்மைகள்‌ உண்டு. (1) ஸ்வரூப நிரூபக தர்மங்கள்‌ (2) நிரூபித ஸ்வரூப விசேஷணங்கள்‌.-ஸ்வரூப நிரூபகங்களாவன - ஒரு வஸ்துவின்‌ ஸ்வரூபத்தை எந்தத்‌ தன்மைகளையுடையதாகக்‌ கூறியே விளக்கினாலன்றி அந்த வஸ்துவை அறிய முடியாதோ அந்தத்‌ தன்மைகள்‌ எம்பெருமானுக்கு (1) ஸத்யத்வம்‌ (2) ஜ்ஞாநத்வம்‌ (3) அநந்தத்தவம்‌ (4) ஆநந்தத்வம்‌ (5) அமலத்வம்‌ என்னும்‌ ஐந்து தன்மைகளும்‌ ஸ்வரூப நிரூபக விசேஷணங்கள்‌. எம்பெருமானைப்‌ பற்றி அறிய முற்படும் யோது இந்தத்‌ தன்மைகளை அறிந்தே இவற்றுடன்‌ கூடியவனாக அவனை உணர வேண்டும்‌. இந்த ஐந்தையும்‌ சேர்க்காமல்‌ அவன்‌ ஸ்வரூபத்தை மட்டும்‌ அறியமுடியாது.
(1) ஸத்யத்வம்‌ - எப்பொழுதும்‌ மாறுபடாது ஒரே நிலையில்‌ நிற்றல்‌.
(2) ஜ்ஞாநதவம்‌ - எப்பொழுதும்‌ குறைவுபடாத ஞான வடிவனாயிருக்கும்‌ தன்மை.
(3) அநந்தத்வம்‌ - *இங்கு தான்‌ இருக்கின்றான்‌? என்று தேசததாலும்‌, இப்பொழுது தான்‌ இருக்கின்றான்‌? என்று காலத்தாலும்‌ இந்த வஸ்துவின்‌ அந்தர்யாமியாகத் தான்‌ இருக்கின்றான்‌, என்று வஸ்துவினாலும்‌ அளவிட முடியாதபடி எவ்விடத்திலும்‌ எக்காலத்திலும்‌ எந்த வஸ்துவையும்‌ சரீரமாகக்‌ கொண்டு நிற்கும்‌ தன்மை.
4) ஆநந்ததவம்‌ - ஆநந்த ஸ்வரூபனாய்‌ நிற்றல்‌-(5) அமலத்வம்‌ - தோஷங்களில்லாத தன்மை

நிரூபிதஸ்வரூபவிசேஷணம்‌ - ஒரு வஸ்துவின்‌ ஸ்வரூபத்தை விளக்கிய பின்‌ அதன்‌ பெருமை புலப்.படுவதற்குப்‌ புகழ்ந்து பேசும்‌ குணங்கள்‌. முற்கூறிய ஐந்து குணங்களு டனேயே எம்பெருமானை விளக்கிய பின்‌ அவன்‌ பெருமையை அதிவதற்காக அவனிடம்‌ உள்ள ஜ்ஞாநம்‌ - சக்தி முதலிய குணங்களும்‌ இவற்றின்‌ உட்பிரிவுகளான ஸெளசீல்யம்‌ (மிக மேம்பட்டவன்‌ தாழ்ந்தவர்களோடு இடையீடின்றிக்‌ கலந்து பழகும்‌ தன்மை) முதலிய தன்மைகளும்‌ கூறப்‌ படுகின்றன. இவையெல்லாம்‌ நிரூபித ஸ்வரூப விசேஷணங்களாகும்‌. இக்குணங்களின்‌ இலக்கணங்களையும்‌ இவை பயன்படும்‌ முறை முதலியவற்றையும்‌ விரிவாக அறிய வேண்டுமானால்‌ சாஸ்த்ரங்களின்‌ உதவியை நாடிக்‌ கொள்க.
ஸ்ரீபாஞ்சராத்ர ஸம்ஹிதையில்‌ முப்பத்தொன்ப; விபவரூபங்களுக்கும்‌ பெயர்கள்‌ கொடுக்கப் பட்டுள்ளன அவையாவன - (1) பத்மநாபன்‌ (2) ஸநத்குமாரன்‌ (8) தருவ 
(௧) அநந்தன்‌ (5) சக்த்யாத்மா (6) மதுஸூதநன்‌ (7) கபில (8) விச்வரூபன்‌ (9) விஹங்கமன்‌ (10) க்ரோடாதம (12) படபாவக்த்ரன்‌ (12) தர்மன்‌ (74) ஹயக்ரீவன்‌ (14) ஹம்ஸ (15) மத்ஸ்யம்‌ (16) கூர்மம்‌ (17) அம்ருநாூாஹரணன்‌ (18) வராஹ
(19) ந்ருஸிம்ஹன்‌ (20) ராஹுஜித (21) காலநேமிக்நன்‌ (22) பா ஜாதஹரன்‌ (23) தத்தாத்ரேயன்‌ (24) வடபத்ரசாயி (25) வாமன (26) த்ரிவிக்ரமன்‌ (27) நரநாராயணர்‌ (28) ஹரி (29) நாரத (30) ப்ருது (31) வ்ருஷபன்‌ (22) தந்வந்தரி (83) வ்யாஸ
(34) பாதாளசயநன்‌ (35) பரசுராமன்‌ (36) ராமன்‌ (67) பலராம (38) க்ருஷ்ணன்‌ (39) கல்கி என்பன.

எம்பெருமானுடைய அவதாரங்களைப்பற்றிய ஆறு ரஹஸ்யங்கள்‌ உண்டு. அவையாவன (3) எம்பெருமானுடைய அவதாரம்‌ ஒவ்வொன்றும்‌ இந்த்ரஜாலம்‌ போலன்றி உண்மையாயிருத்தல்‌ (2) அவதாரதசையிலும்‌ எம்பெருமானுக்கு
இயற்கையாயுள்ள தன்மைகளை விடாதிருக்கப்‌ பெறுதல்‌ (3) அவ தாரத்திலும்‌ உள்ள அவன்‌ திருமேனி! ரஜஸ்‌ - தமஸ்ஸுக்களின்‌ ஸ்ம்பந்தமேயில்லாது சுத்தஸத்துவமயமாகவேயிருத்தல்‌ (4) அவன்‌ இக்கர்மபூமியில்‌ அவதரிப்பதற்குக்‌ கர்மம்‌ முதலியவனவன்றின்‌ தன்‌ ஸங்கல்பமே காரணமாயிருத்தல்‌ (5) பூமியில்‌ தர்மம்‌ குறைந்து அதர்மம்‌ தலையெடுக்கும்யபேோது அவதரிக்கும்‌ தன்மை (6) ஸாதுக்களை ரக்ஷிப்பதே அவதாரத்திற்குப்‌ பலனாயிருத்தல்‌ என்பன.

எம்பெருமானுடைய எட்டு நிலைகள்‌ -(1) கர்த்தா (2) ப்ரேரகன்‌ (3) அநுமந்தா (4) ஸஹகாரி (5) ஸாக்ஷி! (6) பலப்ரதன்‌ (7) பலி (8) உதாஸீநன்‌ என்று அந்த அந்த நிலைகளில்‌ பெயர்‌ யெறுகின்றான்‌.-கர்த்தா - வஸ்துவினுள்‌ புகுந்து படைப்பு
முதலியவற்றைச்‌ செய்பவன்‌. -ப்ரேரகன்‌ - ஜீவனுக்கு அறிவைக்‌ கொடுத்து ஒரு
செயலைச்‌ செய்யுமாறு ஏவுபவன்‌.-அநுமந்தா - சேதநன்‌ செயலைச்‌ செய்யும்போது
அதைச்‌ செய்விப்பவன்‌.-ஸஹகாரி - சேதநன்‌ செய்யும்‌ செயலில்‌ தான்‌
யெரும்பகுதியை ஏற்றுத்‌ துணை செய்பவன்‌. -ஸாக்ஷி-சேதனன்‌ செய்யும்‌ செயலை நேரில்‌ பார்த்துக்‌ கொண்டிருப்பவன்‌.- பலப்ரதன்‌ - சேதநன்‌ செயல்களுக்குப்‌ பலனை
அளிப்பவன்‌.-பலி - அச்செயலின்‌ பலனை முக்கியமாய்ப்‌ யெறுமவன்‌-உதாஸீநன்‌ - சேதநன்‌ செய்யும்‌ செயலில்‌ தான்‌ விசேஷமான தொடர்பற்று ப்‌ பொதுக்‌ காரணமாக இருப்‌பவன்‌.

—————————————-

கவி தார்க்கிக ஸிம்ஹாய கல்யாண குண சாலிநே
ஸ்ரீமதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம —

———————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நயினாராச்சார்யர் சுவாமி திருவடிகளே சரணம்-
ஸ்ரீ வேதாந்த தேசிகன் சுவாமி திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

 

ஸ்ரீ சில்லரை ரகஸ்யங்கள்- ஸ்ரீ ரகஸ்ய ரத்னாவளி /ஸ்ரீ ரஹஸ்ய ரத்னாவளி ஹ்ருதயம்–

June 20, 2025

ஸ்ரீ மான் வேங்கட நாதார்ய கவிதார்க்கிக கேஸரீ
வேதாந்தா சார்ய வர்யோ மே சந்நிதத்தாம் சதா ஹ்ருதி —

ஸ்ரீ ரகஸ்ய ரத்னாவளி

ஒன்றே புகல் என்று உணர்ந்தவர் காட்டத் திருவருளால்
அன்றே அடைக்கலம் கொண்ட நம் அத்திகிரித் திருமால்
இன்றே இசையில் இணை அடி சேர்ப்பர் இனிப் பிறவோம்
நன்றே வருவது எல்லாம் நமக்கு பரம் ஓன்று இலதே

1—ஒரு ஜீவனுக்கு ஒரு ஜீவன் தஞ்சம் அல்லன்
2—ஸ்ரீ மானான நாராயணன் ஒருவனே சர்வ ஜீவர்களுக்கும் தஞ்சம்
3—இஜ் ஜீவன் அநாதி காலம் அனுபவிக்கப் பெறாதே ஸ்ரீ யபதியைப் பெறுகைக்கு ஹேதுவான உபாயத்தை
ரகஸ்ய த்ரய முகத்தாலே உபதேசித்து அவ்வழியாலே ஆசார்யன் இவனுக்கு தஞ்சமாகிறான்
4— சர்வ ஸ்வாமிநி யாய் -சர்வேஸ்வரனுக்கு சேஷ பூதையாய் ஸஹ தர்ம சாரிணியான பெரிய பிராட்டியார் இத்தலையிலே
வாத்சல்ய அதிசயத்தாலும் அத்தலையில் வால்லப்ய அதிசயத்தாலும் புருஷாகாரமாய்க் கொண்டு இஜ்ஜீவர்களுக்கு தஞ்சமாகிறாள்
5—இவளைப் புருஷாகாரமாக்க வேண்டுவது ஈஸ்வரன் தண்ட தரனாகையாலே
6—இத் தண்ட கரண்யம் அநாதியான அஞ்ஞான அதிலங்கனம்
7–இப்படி அபராத அநு ரூபமாக தண்ட தரனாய்ப் போருகிற சரண்யனுடைய வசீகரணங்களில் பிரதானம்
சர்வ அகிஞ்சன அதிகாரமான ஆத்ம ரக்ஷ பர சமர்ப்பணம்
8—இது ச பரிகரமாக ஸக்ருத் கர்தவ்யம்
9–இச் சமர்ப்பணத்தை தான் அனுஷ்ட்டிக்கவுமாம் -தனக்காக ஆச்சார்யாதிகள் அனுஷ்ட்டிக்கவுமாம்
10—இதற்குக் கோரின பலத்தைப் பற்றப் புந பிரபத்தி முதலான கர்தவ்ய சேஷம் இல்லை
11—இப்படி க்ருதக்ருத்யனான ப்ரபன்னனுக்கு வர்ண ஆஸ்ரமாதி தர்மங்கள் ஸ்வ தந்த்ர அஞ்ஞான சித்தங்களான கைங்கர்ய விசேஷங்கள்
12—இவனுக்கு ஆஞ்ஞா அனுஞ்ஞா சித்தங்களான கைங்கர்யங்கள் எல்லாம் ஸ்வயம் பிரயோஜனங்கள்
13—கரண அகரண ரூபங்களான அபசாரங்கள் புகுந்தாலும் பிரபன்னனுக்கு நரகாதிகள் இல்லை –
14—ராஜ குமாரனுக்கும் அவதானம் பண்ணி நடக்க வேண்டுமா போலே லகு ப்ரத்யவாயமும் வாராமைக்காக அபசாரங்கள் துரபரி ஹரணீ யங்கள்
15—பிரபத்திக்கு கோரின பலத்துக்கு ஒன்றாலும் பிரதிபந்தம் இல்லை
16—புத்தி பூர்வக அபசாரங்கள் புகுந்தாலும் பிராயச்சித்த விசேஷம் அதிகாரி விசேஷம் நியதம்
17—இப்படி பிராயச்சித்தத்திலே மூட்டுகிறதும் கடின ப்ரக்ருதிகளுக்கு காசை காட்டுவாரைப் போலே
அவன் பண்ணுகிற சிஷைகளும் எல்லாம் சரண்ய பிரசாத பலம்
18—இங்கு இருந்த காலம் தர்ம அனுபந்தியான போகத்திலும் போக புத்தியால் ப்ராவண்யம் பிறந்ததாகில் இது தான்
அதிகார அனுரூபமான கைங்கர்ய அம்ருத ரசத்துக்கு தண்ணீர்த் துரும்பு
19—இப்படி நிஷித்த போக பிராவண்யம் கைங்கர்ய அம்ருத ரஸ விருத்தம் ஆகையால் விஷம் போலே திரை பரி ஹரணீயம்
20—கைங்கர்யமாவது -ஸ்வாமி உகந்த ஏவல் தொழில் செய்கையாலே இது எதா சாஸ்திரம் பண்ணினாள் உகப்பாம்
21—பகவத் கைங்கர்யமும் பாகவத கைங்கர்யமும் சேர அனுஷ்ட்டிக்க அரிதான போது
பரம புருஷார்த்த காஷ்டையான பாகவத கைங்கர்யமே உபாதேயமாம்
22–இவை இரண்டிலும் பிரதானம் ஆச்சார்ய கைங்கர்யம்
23–இக் கைங்கர்ய பரனுக்கு பரமை காந்திகள் உகந்த இடமே உசித ஸ்தானம்
24—இப்படி துல்ய சீலரைக் கிடையாத போது விபரீத சம்சர்க்கம் ஏகாந்த வாச பரிஹார்யம்
25—இவனுக்கு அர்ச்சிராதி கதி சிந்தனைகள் சித்த சந்தோஷ ஹேது வான காலேயாபனம்-கால ஷேப கார்யம்
26—சாதக வ்ருத்தியான இவனுக்கு அந்திம ப்ரத்யயம் ஸ்வதந்த்ர சாத்தியம் அன்று
27—இப்படி க்ஷண க்ருத்யமான ஆத்ம சமர்ப்பன யாகத்துக்கு பகவத் சங்கல்ப சாத்தியமான தேக அவசானம் அவப்ரதம்
28—சதாசார்ய பரிக்ராகத்திற்கு முன்புள்ள அநாதி காலம் எல்லாம் ஒரு காள ராத்திரி
29—பின்பு தேச அவசனத்து அளவும் நல் விடிவு
30—மேல் முழுக்க ஸ்வ ச்சந்த கைங்கர்ய மஹோத்சவ திவசம்

இது சாத்விக ஹ்ருதயங்கையமான ரஹஸ்ய ரத்நா வளி

சிறு பயனில் படியாத தாக்கவோர் எம்மைச் சேர்க்க அடைக்கலம் கொண்ட திருமால் தானே
மறு பிறவி அறுத்து அழியா வானில் வைக்கும் மனமே நீ மகிழாத இருப்பது என் கொல்
உறுவது உனக்கு உரைக்கேன் இங்கு இருக்கும் காலம் ஒரு பிழையும் புகுதாத யுணர்த்தி வேண்டிப்
பெறுவது எல்லாம் இங்கே நாம் பெற்று வாழப் பேர் அடிமையாலே இது என்று இகழேல் நீயே

ரஷந்த்வ அநந்யார்ஹ ஷேயம் லகீயா சீமபி காரீயசீ சாந்த
லஷ்மீ ஸஹாய ஹ்ருதயம் ரஹஸ்ய ரத்ன வளீம் ரமேயம் –

——————————————

ஸ்ரீ ரஹஸ்ய ரத்னாவளி ஹ்ருதயம்-

இது அம்ருத ரஞ்ஜனீ ரஹஸ்யங்களில் பதினான்காவது.-காஞ்சீபுரத்தில் அருளிச்செய்யப்பட்டது

தத்த்வோபாயா புமர்த்தேஷ
அத்யாத்மவிதாம் விபாவநீயேஷ
ஸ்வயமேவ ஸூசயாமோ
ரஹஸ்யரத்நாவளீஹ்ருதயம் |

ஸ்தாசார்யோபதே பூர்வகமாக ஸர்வேஸ்வரன் திருவடிகளிலே ஸமர்ப்பித பரனான முமுக்ஷவினுடைய நிர்ப்பரத்வ அத்யவஸாயத்தைச் சொல்லுகிறது முதல் கவி

அத்யாத்மவிதாம் – வேதாந்த சாஸ்த்ரத்தைஅறிந்தவர்களுக்கு, விபாவநீயேஷ -அனுஸந்திக்கத் தக்கவைகளான, தத்வோபாயபுமர்த் தேஷ–தத்வம் ஹிதம் புருஷார்த்தம் இவைகளில், ரஹஸ்யரத்நாவளி ஹ்ருதயம் -ரஹஸ்ய ரத்நாவளி என்னும் க்ரந்தத்தின் தாத்பர்யத்தை –ஸ்வயமேவ – நாமே, சயாம: – ஸூசிப்பிக்கிறோம்.

இதில் ‘ ஒன்றே புகல்’ என்றது

ஒன்றே புகல் என்று உணர்ந்தவர் காட்டத் திருவருளால்
அன்றே அடைக்கலம் கொண்ட நம் அத்திகிரித் திருமால்
இன்றே இசையில் இணை அடி சேர்ப்பர் இனிப் பிறவோம்
நன்றே வருவது எல்லாம் நமக்கு பரம் ஓன்று இலதே

(நாரஸ்த்விதி ஸர்வ பும்ஸாம் ஸமூஹ: பரிகீர்த்தித: |
கதிராலம்பநம் தஸ்ய தேந நாராயண: ஸ்ம்ருத:
II)பாத்மோத்தரம்

ஸர்வபும்ஸாம் – எல்லா ஜீவாத்மாக்களுடைய, ஸ மூஹ: – கும்பல், நார: து இதி – நாரம் என்று, ப்ரகீர்த்தித: – சொலப்பட்டது, தஸ்ப – அந்தக் கும்பலுக்கு,கதி:-அடையவேண்டிய ப்ரயோஜனம், ஆலம்பனம் – ஆஸ்ரயிககவேண்டிய வஸ்து, தேந – ஆகையினால, நாராயண:இதி – நாராயணன் எனறு, ஸ்ம்ருத: – சொல்லப்பட்டான்.

(நாரோ நராணாம் ஸங்காத : தஸ்யாஹமயநம் கதி: )

நராணாம் – ஜீவாத்மாக்களுடைய, ஸ ங்க: – கும்பல், நார: – நார: (என்று சொல்லப்படுகிறது), தஸ்ய – அந்தக்கும்பலுக்கு, அஹம் – நான், அயநம கதி: – அடையவேண்டிய ப்ரயோஜனம்.(தேக – அத்தால், நாராயண இதி – நாராயணன் என்று,முநிபி-ரிஷிகளினால். ஈரித: – சொல்லப்பட்டவனாக,அஸ்மி – ஆகிறேன்,)

(ததேதததி துக்காநாம் ஆஸ்பதே து பவார்ணவே1 1
பத்தாம் கத்யதே ஸத்யம் விஷ்ணுரேக: பராயணம் ||

அதிதுக்காநாம் – அதிகமான துக்கங்களுக்கு, ஆஸ்பதே– இடமான, பவார்ணவே -ஸம்ஸாரமாகிற ஸமுத்ரத்தில், பததாம் – விழுகிறவர்களுக்கு,ஏக: விஷ்ணு: – விஷ்ணுஒருவனே, பராயணம் – முக்யமாக அடையவேண்டிய ப்ரயோஜனம, ததேதத் – அப்படிப்பட்ட இது, ஸத்யம் – உண்மையாக, கத்யதே – சொல்லப்படுகிறது.

(கர்மணாம் பரிபாகத்வாத் ஆவிரிஞ்சாதமங்களம்
இதி மத்வா விரக்தஸ்ய வாஸுதேவ: பரா கதி: ||- பாகவதம் – 11-19-18 )

கர்மணாம் – கர்மங்களுடைய, பரிபாகத்வாத் – பரிணாமமாக இருக்கிறபடியினால், ஆவிரிஞ்சாத் – ப்ரஹ்ம வரையிலும், அமங்களம் – பாபங்களைப் போக்கடிக்கக்கூடிய தன்மை
யாகிற சுபத்வம் இல்லாதவர்கள், இதி மத்வா – என்றுஎண்ணி, விரக் தஸ்ய -அவர்களிடத்தில் ஆசை இல்லாதவனுக்கு, வாஸு தேவ -பகவானே,பராகதி: – அடையவேண்டிய ப்ரயோஜனம்.

(யே ச வேதவிதோ விப்ரா: யே சாத்யாத்மவிதோ ஐநா: 1
தே வதந்தி மஹாத்மாநம் க்ருஷ்ணம் தர்மம் ஸநாதநம் |1)

யே ச – எந்த, விப்ரா: – ப்ராஹ்மணர்கள், வேதவித: – வேதத்தை அறிந்தவர்களோ,யேச-எவர்கள், அத்யாத்மவிதோஜநா:-வேதாந்த சாஸ்த்ரத்தை அறிந்தவர்களோ,தே – அவர்கள், மஹாத்மாநம் – மஹாத்மாவாகிய, க்ருஷ்ணம்-க்ருஷ்ணனை, ஸநாதநம் – நித்யமான,தர்மம் – தர்மமென்று, வதந்தி – சொல்லுகிறார்கள்.

(அம்ருதம் ஸாதநம் ஸாத்யம் தம் பஸ்யந்தி மநீஷிண:யஜ்ஞாக்யம் பரமாத்மாநம் விஷ்ணும் த்யாயந் ந ஸ்ததி )-விஷ்ணுதர்மம் – 72 – 4

தம் – அந்தப் பகவானை,மநீஷிண:பெரியோர்கள், அம்ருதம் – அழிவில்லாத, ஸாதனம் – உபாயமாகவும், ஸாத்யம் – பலனாகவும், பச்யந்தி – பார்க்கிறார்கள், யஜ்ஞாக்யம் – யஜ் ஞம் என்று சொல்லப்படுகிற, பரமாத்மாநம் – பரமாத்மாவாகிய, விஷ் ணும் – விஷ்ணுவை, த்யாயந் – த்யானித்து, ந ஸ்ததி – துக்கப்படுவ தில்லை.

நாகணை மிசை நம்பிரான் சரணே சரண் நமக்கு -திருவாய்-5-10-11- இத்யா திகளில் ஓர் அதிகாரி விசேஷத்திற்குப் பரம ப்ராப்யனான பரிய:பதி ஒருவனுமே வ்யாஜ விசேஷ வஸீகரணீயமான ஸித்தோபாயம் என்றபடி. உணர்ந்தவர்’ என்று ப்ரதிபுத்த அதிகாரி விசேஷத்தைச் சொல்லுகிறது.

(ப்ராப்யஸ்ய ப்ரஹ்மணோரூபம் ப்ராப்துச ப்ரத்யகாத்மம்:ப்ராப்த்யுபாயம் பலம் சைவ ததா ப்ராப்தி விரோதி ச !வதந்தி ஸகலா வேதா: ஸேதிஹாஸ புராணகா: )–ஹாரீத ஸம்ஹிதை.

ப்ராப்யஸ்ய – அடையவேண்டிய ப்ரயோ ஜனமாகிய, ப்ரஹ்மண: – ப்ரஹ்மத்தினுடைய, ரூபம்-ஸ்வரூபத்தையும், (ஸ்வபாவாதிகளையும்),ப்ராப்து: ச – அடைகிறவனாகிய – ப்ரத்யகாத்மந:- ஜீவாத்மாவினுடைய, (ஸ்வரூபாதிகளையும்). ப்ராப்த்யுபாயம் –அடைவதற்கு உபாயத்தையும், பலம் – பலத்தையும், ததா – அப்படியே, ப்ராப்தி விரோதிச – அடைவதற்குத் தடையாக நிற்கிற விரோதியையும், ஸேதிஹாஸ புராணகா: இதிஹாஸ புராணாதிகளோடு கூடிய, ஸகலா: – எல்லா, வேதா:- வேதங்களும், வதந்தி – சொல்லுகின்றன.

இத்யாதிகளிற் சொன்ன அர்த்த பஞ்சகத்தையும், சகார ஸமுச்சிதமான ஸம்பந்த விசேஷத்தையும், ஸத்த்வ நிஷ்ட்டருக்கு ஸ்ரோதவ்யபேஷமற உரைக்கலாம்படி திருந்தக் கண்டவர்களை ‘ப்ரதிபுத்தர் ‘ என்கிறது.

ப்ராப்யமான ப்ரஹ்மமாவது-(விஷ்ணோஸ் ஸகாஸாத் உத்பூதம் ஜகத் தத்ரைவ ச ஸ்திதம் |
ஸ்திதி ஸம்யம கர்த்தாஸௌ ஜகதோஸ்ய ஜகச்ச ஸ : I!
-விஷ்ணுபுராணம்- 1 – 8 – 17

விஷ்ணோ: ஸகாசாத் – விஷ்ணு விடத்திலிருந்து, உத்பூதம் – உண்டானது, தத்ரைவ -அவ்விடத்திலே ஸ்திதம்-நிலைபெற்றிருக்கிறது,அஸௌ-இவன்,ஸ்திதிஸம்யமகர்த்தா ஸ்திதி நியமநம் இவற்றைச் செய்பவன், ஸ :- அவன்,ஜகச்ச -அந்த லோகமாகவும் (இருக்கிறான்)

(க்ருஷ்ண ஏவ ஹி லோகாநாம் உத்பத்திரபி சாப்யய :-பார ஸபா – 38 – 26

க்ருஷ்ண ஏவ ஹி – க்ருஷ்ணன் ஒருவனே, லோகாநாம் – லோகங்களுக்கு, உத்பத்தி: -உண்டாகும் இடம், அபி சஅப்யய: -லயிக்கும் இடமும்.

(க்ருஷ்ணஸ்ய ஹி கருதே பூதமிதம் விஸ்வம் சராசரம்)பார – ஸபா – 41 – 23

இதம்– இந்த, பூதம் – ப்ராணியும், சரா சரம்-ஸ்த்தாவரஜங்கமரூபமான விச்வம் எல்லா லோகமும் க்ருஷ்ணஸ்ய ஏவஹி-க்ருஷ்ணனுக்காகவே, க்ருதம் – ஏற்பட்டதன்றோ.

இத்யாதிகளிற்படியே ஸர்வகார்யை காரணமாய், ஸத்யத்வ ஜ்ஞாநத்வாதி ஸ்வரூப நிரூபக தர்மங்களை யுடையனுமாய், ஜ்ஞாந சக்த்யாதி கல்யாண குண கண மஹோததியாய், ஸூத்தாஸூத்த விபூதி த்வயத்திற்கும் ஏக சேஷியாய்,

ஓருயிரேயோ உலகங்கட்கெல்லாம் ‘-திருவாய் – 8-1-5-என்னும்படி ஸர்வாந்தராத்மாவாய், பர வ்யூஹாதி பஞ்ச ப்ரகார திவ்ய மங்கள விக்ரஹ யுக்தனாய், ஸர்வாவஸ்த்தையிலும் ஸலக்ஷ்மீகனாய், ஸர்வலோக ஸரண்யனாய், ஸரணாகத வத்ஸலனாய், ஸர்வ
ப்ரகார நிரதிஸய போக்யனான நாராயணன்.

ப்ராப்தாவான ப்ரத்யகாத்மாவாவது-
(புமாந் ந தேவோ ந நரோ ந பஸூ : ந ச பாதப : ஸரீராக்ருதி பேதாஸ்து பூபைதே கர்மயோநய: (நாயம் தேவோ ந மர்த்யோவா ந திர்யக் ஸ்த்தாவரோபி வா
ஜ்ஞாநாநந்தமயஸ்த்வாத்மா ஸேஷோ ஹி பரமாத்மந
: II-விஷ்ணு புராணம் – 2 13-98

புமாந் – ஜீவாத்மா, ந தேவ -தேவனுமல்லன், ந நர: – மனிதனுமல்லன், ந பசு : – பசுவுமல்லன், ந சபாதப: – மரமுமல்லன், பூப – ஒ ! அரசனே, ஏதே – இவைகள், கர்ம யோநய :- கர்மங்களைக் காரணமாக வுடைய, சரீராக்ருதிபேதா சரீரத்தின் ஆகாரபேதத்தால் உண்டானவை.-அயம் – இந்த ஜீவாத்மா, தேவ -தேவனுமல்லன், ந மர்த்யோவா – மனுஷ்யனுமல்லன், ந திர்யக் – திர்
யக்குமல்லன், ந ஸ்த்தாவரோபிவா – ஸ்த்தாவரமுமல்லன், ஆத்மா -ஆத்மாவானவன், ஜ்ஞாநாநந்தமய: – ஜ்ஞாநத்தையும், ஆநந்தத்தையும் ஸ்வரூபமாக வுடையவன், பரமாத்மந: – பரமாத்மாவிற்கு,சேஷ :- சேஷபூதனாயிருப்பவன்.

இத்யாதிகளிற்படியே தேஹேந்த்ரியாதி விலக்ஷணனாய், ஜ்ஞாநாநந்த ஸ்வரூபனாய், ஸ்வயம் ப்ரகாசனாய், ஸ்வஸ்மை பாஸமானாய், அணுவாய்,ஜ்ஞாநா நந்த குண கன,பரசேஷதைக ரஸனாய், பராதீந ஸ்வரூப ஸ்த்திதி பிர வ்ருத்திகனாய், பரிபூர்ண பகவத
நுபவ யோக்யனாய, ஸ்வரூபாநுகுண ஸ்வச் சந்த கைங்கர்யார்த்தியான ஜீவன்.

ப்ராப்த்பாயமாவது-இஜ்ஜீவன் ஸம்ஸார ஸாகரத்தைக் கடந்து அக்கரைப்படுகைக்கு உபாயமாய், ஸாதநமாக ஸ்வ புத்தியாலே கோரும் (கோலும்)படி ஸாஸ்த்ர யுக்தமான அர்த்தம். இது ஸித்தம் என்றும் ஸாத்யம் என்றும் இரண்டு படியாயிருக்கும். ஸித்தோபாயமாவது-நித்ய ஸித்தங்களான ஸ்வரூப குணங்களை யுடையனாய், ஸர்வஜ்ஞனாகையாலே பரஹித வேதியாய், ஸர்வ சக்தி யாகையாலே ஸர்வாநிஷ்ட நிவாரண ஷமனாய், ஸர்வ பூத நிஸர்க்க ஸுஹ்ருத்தாகையாலே பராநிஷ்ட நிவாரணாதிகளில் ஸர்வதாபிமுகனாய்,( ஸர்வஜ்ஞோபி ஹி விஸ்வேஸ : ஸதா காருணிகோபி ஸந் |ஸம்ஸார தந்த்ர வாஹித்வாத் ரக்ஷ பேஷாம் ப்ரதீஷதே !-லஷ்மீதந்த்ரம் – 17 – விச்வேச – பகவான், ஸர்வஜ்ஞ :அபி – எல்லாம் அறிந்தவனாயிருந்த போதிலும், ஸதா – எப்பொழுதும்,காருணிகோபி ஸந் – கருணையுடன் கூடியவனாய் இருந்த போதிலும்,ஸம்ஸாரதந்த்ர வாஹித்வாத் – ஸம்ஸாரத்தை நடத்துகிறவனாகையினாலே. ரக்ஷாபேக்ஷாம் – ரக்ஷிக்க வேண்டும் என்கிற அபேக்ஷையை,ப்ரதீஷதே – எதிர் பார்க்கிறான்.)இத்யாதிகளிற் படியே அவஸர ப்ரதீக்ஷனாய், வ்யாஜ விசேஷ வஸீகரணீயனாய், ஸங்கல்பித விசேஷத்தில் ஸஹகாரி நிரபேக்ஷனாய், ஸ்வார்த்த ப்ரவருத்தனாய்,மோக்ஷ ப்ரதாநத்திற்கு அவ்யவஹித ஸங்கல்பாஸ்ரயனான ஸ்ரிய:பதி. ஸாத்யோபாயமாவது-புருஷனுக்குக் கர்த்தவ்யமாகச் சோதிதமான புருஷார்த்த ஸாதநம். மோக்ஷார்த்தமான ஸாத்யோபாயம் பக்தி என்றும் ப்ரபத்தி என்றும் இரண்டு படியாய் இருக்கும். பக்தி ரூபமான ஸாத்யோபாயம் கர்ம யோக ஜ்ஞாந யோக ஸம்ஸ்க்ருதாந்த:கரண ஸாத்யமாய், அஷ்டாங்க யோக ஸம்ஜ்தமாய்,வர்ணாதி நியதாதிகாரமாய், வர்ணாஸ்ரம தர்ம இதிகர்த்தவ்யதாகமாய்,க்ருச்ச்ர சாத்யமாய்,தைல தாராவத் அவிச்சிந்ந ஸ்ம்ருதி ஸந்ததி ரூபமாய், அஹரஹரப்யாஸாதேயாதிஸயமாய், ஆப்ரயாணம் அநுவர்த்தநீயமாய், ப்ராரப்தேதர புண்ய பாப நிவர்த்தகமாய், ஸ்வ யத்ந ஸாத்ய அந்திம ப்ரத்யய விசேஷமாயிருக்கும்.-ப்ரபத்தி ரூபமான ஸாத்யோபாயம் மஹா விஸ்வாஸாதி |
ஸம்ஸ்க்ருதாந்த:கரண ஸாத்யமாய், ஷடங்க யோக ஸம்ஜ்ஜிதமாய், அநந்யோபாய ஸர்வாதிகாரமாய், ஆனுகூல்ய ஸங்கல்பாதி மாத்ர பரிகரமாய், ஸுகரமாய், ப்ரார்த்தநாந்வித ஸக்ருத் பர ந்யாஸ ரூபமாய், அநாதேயாதிஸயமாய், ஆதேஹபாதம்
ஸ்வரூப ஆவருத்த்யாதி கர்த்தவ்ய சேஷ ரஹிதமாய், ப்ராரப்த கர்ம நிவர்த்தந க்ஷமமாய், ஸ்வ ப்ரயத்ந ஸாபேக்ஷ அந்திம ப்ரத்யய அநபேக்ஷமாயிருக்கும். ஸாத்யோபாயத்தில் அனுபாயத்வாதி வ்யபதேசம் பர ஸங்கல்ப ஸா பேக்ஷத்வாதி நிபந்தநம்.

இங்கு பலமாவது :
ஸ்வாதிகாராநுகுண வஸீகரண விஸேஷத்தாலே உத்தர பூர்வாக அஸ்லேஷ விநாஸங்கள் பிறந்து, ஸ்தூல சரீர நிவ்ருத்தி யுண்டாய் ஊர்த்வ கதி விஸேஷத்தாலே உத்க்ராந்தனாய்,
அர்ச்சிராதி மார்க்கத்தாலே ஆதி வாஹிகராலே அதிலங்கித த்ரிகுண மண்டலனாய், அவதூத ஸூஷ்ம சரீரனாய், அப்ராக்ருத தேஸ விஸேஷ ப்ரவிஷ்டனாய், ஆவிர்ப்பூத ஸ்வரூபனாய், அபஹத பாப்மத்வாதி குணாஷ்டக விஸிஷ்டனானவனுடைய

ப்ராப்தி விரோதியாவது–பீஜாங்குர ந்யாயத்தாலே அநாதியாக ப்ரவ்ருத்தமான அக்ருத்ய கரண கருத்யாகரண பிரவாஹத்தாலே உத்பந்நமாய், ப்ராயசித்தம் பண்ணாதார்க்கு அநதிலங்கரீய பலமாய், ஆகமைக ஸமதிகம்யமாய், அநுத் பரேக்ஷணீய விபாக ஸமயமாய், ஆ ப்ரஹ்ம ஸ்தம்ப பர்யந்தம் அபி வ்யாப்தமாய், அத்யந்த விஷம பிரவாஹமாய், அதி கோர நரகாதி அநர்த்த பரம்பரா ஹேதுவாய், சக்ரவத் பரிவர்த்தமாநமாய், ஆமோ ஷம அநுவிருத்தமான பகவந் நிக்ரஹ ஸந்தாநமும், அதின் கார்ய காரண வர்ககமும்.

இங்கு ஸம்பந்தமாவது- ப்ராப்தாவான ஜீவாத்மாவிற்கு ப்ராப்யனான பரமாத்மாவோடு உண்டான துவக்கு. இது ஆதேயத்வம் விதேயத்வம், அப்ருதக் ஸித்தத்வம், ஸேஷத்வம், சரீரத்வம், வயாப்யத்வம், ரஷ்யத்வம், கிங்கரத்வம், போக்யத்வம்,போக்த்ருத்வம் என்றிப்படி ஸாமாந்ய விசேஷாதி ரூபமாய்க் கொண்டு ப்ரமாணங்களாலே விவிதமாக விபக்தமாயிருக்கும்.

இப்படி மோக்ஷ ஸாஸ்த்ர ஸித்தமான ப்ராப்யத்தையும், ப்ராப்தாவையும், ப்ராப்த் யுபாயத்தையும் ப்ராப்தியையும்,ப்ராப்தி ப்ரதிபந்தகத்தையும், ஸம்பந்தத்தையும் ஸாஸ்த்ர த்ருஷ்டியாலே ஸம்யக்காக கண்டவர்களே ‘உணர்ந்தவர்’ என்கிறது.
உணர்ந்தவர் ஒன்றே புகல் என்று காட்ட’ என்று அந்வயம்

(தத்வித்தி ப்ரணிபாதேந பரி ப்ரஸ்நேந ஸேவயா
உபதேஷ் யந்தி தே ஜ்ஞாநம் ஜ்ஞாநிந: தத்த்வ தர்ஸிந:-கீதை – 4 – 34

தத் – அந்த ஜீவாத்ம தத்த்வத்தை, ப்ரணிபாதேந- நன்றாக ஸேவிப்பதினாலும், பரி ப்ரச்நேந-செவ்வையாகக் கேட்பதினாலும், ஸேவயா – ஸிஸ்ரூஷை செய்வதினாலும், வித்தி – அறிந்து கொள், தத்த்வதர்சி : -உண்மையை அறிந்த, ஞாநிந; – ஜ்ஞாநிகள் , தே – உனக்கு, ஜ்ஞாநம் – ஆத்மாவைப் பற்றிய ஜ்ஞாநத்தை, உப தேஷ் யந்தி – உபதேசிக்கப் போகிறார்கள்.

யே ஸந்துஷ்டா: ருதோபேதா: ஸத்யார்ஜவ தயாபரா: 1 ஜிதேந்த்ரியா ஜிதக்ரோதா : தா நுபாஸ்வச ப்ருச்சச11
யே – எவர்கள், ஸந்துஷ்டா: -(கிடைத்ததைக் கொண்டு) ஸந்தோஷத்தை யுடையவர்களாயும, ச்ருதோபேதா ( சாஸ்த்ரார்த்தங்களை முறைப்படி பெரியோர்களிடம் இருந்து) கேட்டுத் தெரிந்து கொண்டவர்களாயும், ஸத்ய ஆர்ஜவ தயா பரா:- ஸத்யம், கபடமில்லாமை, தயை இவைகளை யுடையவாகளாயும், ஜிதேநத்ரியா: – இந்த்ரியங்களை ஜயித்தவர்களாயும், ஜிதக்ரோதா – கோபத்தை ஐயித்தவர்களாயும் (இருக்கிறார்களோ , தாந்-அவர்களை,உபாஸ்வ – முறைப்படி ஆச்ரயி,ப்ருச்ச – (கேட்க வேண்டிய அர்த்தங்களைக்) கேட்டுக்கொள்-

(ஸர்வயோக்யமநாயாஸம் அப்ரமாதமநூபமம் |
ப்ரபந் நார்த்தி ஹரம் விஷ்ணும் ஸரணம் கந்துமர்ஹஸி |

ஸர்வயோக்யம் – எல்லோராலும் ஆச்ரயிக்கத் தக்கவனாயும், அநாயாஸம் – ஆச்ரயிப்பதில் ச்ரமம் ஒன்றும் இல்லாதவனாயும், அப்ரமாதம் – அஜாக்கிரதை முதலிய தோஷங்கள் இல்லாதவனாயும், அநூபமம் – தனக்கு ஸத்ருசனானவன் ஒருவனும் இல் லாதவனாயும், ரபந்நார்த்திஹரம் – ஆச்ரிதர்களுடைய துக்கத்தைப் போக்கடிக்கக்கூடியவனாயும்இருக்கிற, விஷ்ணும் விஷ்ணுவை, சரணம்- சரணமாக, கந்தும் – அடைவதற்கு, அர்ஹஸி – யோக்கியனாகிறாய்,-இத்யாதிகளிற்படியே நிரபாய ஸாத்யோபாய விசேஷத்தாலே
வஸீகரணீயமான ஸித்தோபாயத்தை வெளியிட என்றபடி.-இத்தாலே நானும் என்னை ரக்ஷித்துக் கொள்ள மாட்டேன், வேறு எனக்கு ரக்ஷகரில்லை, மேலே என்னுடைய வ்யாபார விசேஷத்தாலே அபேக்ஷை யற தேவரீரே என்னை ரக்ஷித்தருள வேணும் என்கிற பரந்யாஸ ரூப வஸீ கரண விசேஷா நுஷ்ட்டாநமும் பலிதம்

அங்ஙனன்றிக்கே ‘ஒன்றே புகல் என்று உணர்ந்தவர் ‘ என்று ஆசார்யர்களை விசேஷிக்கிறதாகவுமாம். அப்போது ‘காட்ட ‘என்றது-(தவ பரோஹ மகார்ஷி ஹி தார்மிகை-ஸ்ரீரங்கராஜஸ்தவம் – 2 – 102 அஹம் -நான், தவ – உமக்கு,-பர: – ரக்ஷிக்க வேண்டிய பரமாக, தார்மிகை: – தர்மிஷ்டர்களினால் (ஆசார்யர்களினால் ), அகார்ஷி-செய்யப்பட்டேன். )-இத்யாதிகளிற் படியே ஸர்வ ஸேஷி திருவடிகளிலே- ஆத்மாத்மீயம் ச யத்கிஞ்சித் துர்ப்பரம் துஸ்த்யஜம் மம 1 தத் ஸர்வம் தவ விந்யஸ்தம் பயோ: பாதபத்மயோ: II)-ஆத்மா- நானும், ஆத்மீயம் -என்னுடையதன் யிருக்கிற, யத்கிஞ்சித் -எது, மம – எனக்கு, துர்ப்பரம் – ரக்ஷிக்க முடியாததும், துஸ்த்யஜம் – விடமுடியாததாயும் இருக்கிறதோ, தத் ஸர்வம் அவை எல்லாமும், தவ – உம்முடைய, சுபயோ :-மங்கள கரங்களான, பாத பத்மயோ:- திருவடித் தாமரைகளில், விந்யஸ்தம், ஸமர்ப்பிக்கப்பட்டது.என்று ஆத்மீயரான நம்மை அநந்ய ரக்ஷ்யத்வே ஸமர்ப்பிக்க என்றபடி.

திருவருளால் எனறது-(ஸ தம் நிபதிதம் பூமௌ ஸரண்ய; ஸரணாகதம்-வதார்ஹமபி காகுத்ஸ்த்த: க்ருபயா பர்யபாலயத-)-ஸுந்தர – 38-34. சரண்ய: – சரண்யராகிய,ஸ:-அந்த, காகுத்ஸ்த்த: -ககுத்ஸ்த வம்சத்தில் அவதரித்த ராமன்,பூமௌ – பூமியில் நிபதிதம் – விழுந்தவனாயும், சரணாகதம் – சரணம் அடைந்தவனாயும் இருக்கிற, தம்-அந்தக் காகத்தை, வதார்ஹமபி – கொல்லத் தகுந்தவனாய் இருந்த போதிலும் க்ருபயா – க்ருபையினால், பர்யபாலயத் -நன்றாக ரக்ஷித்தார்.)-(க்ருபயா கேவலமாத்மஸாத்குரு-ஸ்தோ-48.க்ருபபா கேவலம் – (உம்முடைய) க்ருபை யினாலேயே, ஆத்மஸாத்குரு -உமக்கு அதீனமாகச் செய்துகொள்ளும்-(யாமாலம்ப்ய ஸுகேநேமம் துஸ்தரம் ஹி குணோததிம் 1 நிஸ்தரந்த்யசிரேணைவ வ்யக்த த்யாந பராயணா:-ஸ்ரீ ஸாத்வதம் – 12 – 34. வ்யக்த த்யாந பராயணம் – வ்யக்தம் என்று சொல்லப்படுகிற திவ்ய மங்கள விக்ரஹத்தை த்யானம் செய்து கொண்டிருக்குமவர்கள், யாம் – எந்த லக்ஷ்மியை, ஆலம்ப்ய – ஆச்ரயித்து, துஸ்தரம் – மற்ற ஒருவரால் தாண்ட முடியாத, இமம் – இந்த, குணோததிம்-குணங்களாகிற ஸமுத்திரத்தை, அதாவது குணங் களுக்கு ஆதாரமான ப்ரக்ருதியாகிற ஸமுத்திரத்தை, கேந – ஸுகமாக. நிஸ்தரந்தி – தாண்டுகிறார்களோ.)என்கிற ந்யாயத்தாலே அவிளம்பித அநாயாஸமாய் பலஸித்தி யுண்டாம்படி ஆஸ்ரித ரக்ஷணத்திலே ஆத்மவல்லபனை அபி முகனாக்குகிற அகில ஜகந்மாதாவினுடைய அநபாய க்ருபையாலே என்னவுமாம்.

அன்றே அடைக்கலம் கொண்ட‘ என்றது-அநேநைவ து மந்த்ரேண ஸ்வாத்மாநம் மயி நிக்ஷிபேத் -மயி நிக்ஷிப்த கர்த்தவ்ய க்ருதகருத்யோ பவிஷ்யதி !-“ஸாத்யகி தந்த்ரம் அநேநஏவதுமந்த்ரேண – இந்த மந்திரத்தினாலேயே, ஸ்வாத்மாநம் – தன்னுடைய ஆத்மாவை.மயி – என்னிடத்தில், நிக்ஷிபேத் – ஸமர்ப்பிக்கவேண்டும், மயி – என்னிடத்தில், நிதிப்த கர்த்தவ்ய: – ஸமர்ப்பிக்கப்பட்ட பரத்தையுடையவனானவன், க்ருதக்ருத்ய: – இனிச் செய்யவேண்டியகார்யத்தைச் செய்தவனாக, பலிஷ்யதி – ஆகப்போகிறான்.)என்றும்,-துராசாரோபி ஸர்வா கருத நோ நாஸ்திக புரா ஸமாரயேத் ஆதி தேவம் ப ரத்தயா ஸரணம் யதி !!நிர்த்தோஷம் வித்தி தம் ஐந்தும் ப்ரபாவாத் பரமாத்மந : -ஸாத்வதம் 16-23. புரா -(பகவானை ஆச்ரயிப்பதற்கு) முன்னால், துராசாரோபி – கெட்ட அநுஷ்டானத்தை யுடையவனாயும்,ஸர்வாசீ – (சாப்பிடத் தகாத ) எல்லாம் சாப்பிடுகிறவனாயும்,
க்ருதக்க:- பண்ணின உபகாரத்தை மறந்தவனாயும், நாஸ்திக: -தெய்வம் ஒன்று இல்லை என்று சொல்லுகிறவனாயும் இருந்தபோதிலும்,-ஆதிதேவம் – தேவதைகளுக்கு எல்லாம் முதல் தேவதையாகிய பகவானை,சரத்தயா – மஹா விச்வாஸத்துடன், ஸமாச்ரயேத்யதி – ஆச்ரயிப்பானேயாகில்,தம் – அந்த, ஜந்தும் – ப்ராணியை,’. பரமாத்மந: – பரமாத்மாவினுடைய,ப்ரபாவாத் – மஹிமையினால், நிர்த்தோஷம் ஒரு தோஷமும் இல்லாதவனாக, வித்தி – அறி.)என்றும்-த்யக்த்வா புத்ராம் ச தாராம்.ச ராகவம் மரணம் கத:-ராமா யுத்த 17-16. புத்ராந் ச – பிள்ளைகளையும், தாராந்ச – பத்தினிகளையும், த்யக்த்வா – விட்டுவிட்டு, ராகவம் – ஸ்ரீ ராமனை, சரணம்- சரணமாக, கத – அடைந்தேன்.)-என்றும்,ஆநயைநம் ஹரிஸ்ரேஷ்ட தத்தமஸ்யாபயம் மயா-ராமா – யுத்த – 18–34. ஹரிச்ரேஷ்ட -வானரச்ரேஷ்டனான ஒ ! ஸு க்ரீவனே. அஸ்ய – இவனுக்கு, மயா – என்னால், அபயம் – அபயமானது, தத்தம் – கொடுக்கப்பட்டது. ஏநம் – இவனை,ஆநய – அழைத்துக் கொண்டுவா.)-என்றும் சொல்லுகிறபடியே பர ஸமர்ப்பண ஸமநந்தரம் நமக்கு ஸ்வ ரக்ஷணார்த்த கர்த்தவய பேரஷம் இல்லாதபடி பர ஸ்வீகாரம் பண்ணினவர் என்றபடி.)

நம் அத்திகிரித் திருமால் ‘ என்றது-(வேகவத்யுத்தரே தீரே புண்யகோட்யாம் ஹரிஸ்ஸ்வயம் 1
வரதஸ் ஸர்வபூதாநாம் அத்யாபி பரித்ருயதே
IIஹஸ்திகிரீமாஹாத்ம்
யம் 15-16 வேகவத்யுத்தரே தீரே -வேகவதிஎன்னும் நதியின்வடகரையில், புண்ய கோட்யாம் – புண்யகோடி விமானத்தில், ஹரி: – பகவான், ஸ்வயம் – தானே, ஸர்வ பூதாநாம் – எல்லா ப்ராணிகளுக்கும்,வர த:- வரத்தைக் கொடுக்கிறவராக, அத்யாபி – இப்பொழுதும், பரித்ருச்யதே – எல்லோராலும் காணப்படுகிறார்.)என்றும்–நிகரில் புகழாய்! உலகம் மூன்றுடையாய்! என்னை யாள்வானே ! ‘-திருவாய்- 6–10–10)இத்யாதிகளிற் படியே ஆஸ்ரித ஸம்ரக்ஷணோபயுக்த ஸௌஸீல்ய வாத்ஸல்ய ஸ்வாமித்வ விஸிஷ்டனாய் நண்ணினவர்களுக்கு விண்ணுலகம் தர விரைந்து ரக்ஷாபேக்ஷா ப்ரதீக்ஷனாய் மண்ணுலகில் வந்து பலப்ரதாநோமுகனாய் நிற்கிற பெருமாள் என்றபடி.

இன்றே இசையில் இணையடி சேர்ப்பர் ‘ என்றது-க்வாஹம்அத்யந்த து புத்தி : க்கசாத்ம ஹித வீக்ஷணம்| யத் ஹிதம் மம தேவேச ததாஜ்ஞ பய மாதவ !
த்வாம் ப்ரபந்நோஸ்மி தாஸஸ் தே நாந்யா க்வாபி கதிர் மம | அத்யைவ கிங்கரீ க்ருத்ய நிதேஹி த்வத் பதாம்புஜே II-ஜிதந்தா ஸ்தோத்திரம் 1 – 18-
(அத்யந்த துர்புத்தி: –
மிகவும் கெட்ட புத்தியையுடைய, அஹம் – நான், க்வ-எங்கே, ஆத்மஹித வீசணம் – என்னுடைய ஹிதத்தை நானே யோசித்துக் கொள்வது என்பது, க்வ – எங்கே, அதாவது எனக்கும் அதற்கும் வெகு தூரம் என்றபடி, தேவேச – தேவதைகளுக் கெல்லாம் ஈசுவர
னாகிய, மாதவ – சரிய:பதியகிய பகவானே : மம – எனக்கு, யத் – எது,ஹிதம் – நன்மைபைக் கொடுக்கக் கூடியதோ, தத் – அதை, ஆஜ்ஞாபய – உத்தரவு செய்யும், த்வாம் – உ பை, ரபந்ந:- ஆச்ரயித்தவனாயும், தே – உமக்கு, தாஸ: – தாஸனாகவும், அஸ்மி – ஆகிறேன், மம – எனக்கு க்வாபி – ஓர் இடத்திலும், அந்யா – வேறு,கதி:- கதி, ந – இல்லை, அத்யைவ – இப்பொழுதே, கிங்கரீ க்ருத்ய -கிங்கரனாகச் செய்து, த்வத் பதா புரே – உம்முடைய திருவடித் தாமரையில், நிதேஹி – வைத்துக்கொள்ளும்.)இத்யாதிகளிற்படியே பரம புருஷார்த்தைகமஸ்கராமளவில் அப்போதே கொடு உலகு காட்டாதே கொழுஞ்சோதி உயரத்துக்கூட்டரிய திருவடி கூட்டி அருள்வர் என்றபடி.

இனிப் பிறவோம் ‘ என்றது-கண்டு கேட்டு -திருவாய்-4-9-10-இத்யாதிகளிற்படியே பராவர புருஷார்த்த விவேகத்தாலே ஐஸ்வர்ய கைவல்யங்களை ஒழித்த நாம் ஏதேனுமொரு பகவத் க்ஷேத்ர வாஸ கைங்கர்யாதி ஸங்கத்தாலே-இங்கேதிரிந்தேற்கு இழுக்குற்று என் ‘--திருவாய்- – 8- 10 -4-என்று த்வரையற்று இருக்குமளவிலும் சரணமாகும் தனதாள் அடைந்தார்க்கெல்லாம் மரண மானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான்த்யக்த்வா தேஹம் புநர்ஜந்ம நைதி மாமேதி ஸோர்ஜூந-கீதை – 4 -9 அர்ஜூன, ஸ: – அவன், தேஹம்- இந்தத் தேஹத்தை, த்யக்த்வா- விட்டுவிட்டு, புந: – மறுபடியும், ஐந்ம-பிறப்பை, நைதி – அடைவதில்லை, மாம் – என்னை, ஏதி – அடை கிறான்.)-‘கொள்ளக் குறைவிலன் வேண்டிற்றெல்லாம் தரும்-திருவாய் 3-9-5-இத்யாதிகளிற்படியே இனி எனக்கு ஒரு ஸரீர பரிக்ரஹம் உண்டாகாதபடி ப்ராரப்த கர்ம விசேஷத்தையும் ஒரு விரகாலே கழித்து ரக்ஷித்தருளுவர் என்றபடி.

நன்றே வருவதெல்லாம் ‘ என்றது இத்தேஹம் விடுமளவும்-(போகை: புண்யக்ஷயம் ததா -போகை: – ஸூகத்தின் அனுபவங்களினால் புண்யக்ஷயம் – புண்யகர்மத்தின் நாசத்தையும்.)என்கிறபடியே அநுகூலங்கள் வருமவை ப்ராரப்த புண்யரூப
நிகள நிவ்ருத்தியாகையாலும், ப்ரதிகூலங்கள் வருமவை-(ஹரிர்துக்காநி பக்தேப்யோ ஹிதபுத்யா கரோதிஹி ஸஸ்த்ரக்ஷாராக் கர்மாணி ஸ்வபுத்ராய யதா பிதா !-ஹரி: – பகவான், பக்தேய :- பக்தர் களுக்கு, துக்காநி – துக்கங்களை, பிதா – தகப்பனார், ஸ்வபுத்ராய –
தன்னுடைய பிள்ளைக்கு, சஸ்த்ர க்ஷாராக் கர்மாணி யதா -ஆயுதம் க்ஷாரம்,அக்னி, முதலியவைகளினால் செயயும் கார்யங்களைப் போல,ஹித புத்த்யா – நல்லது என்கிற எண்ணத்தினால், கரோதி – செய்கிறான்)(யஸ்யா நுக்ரஹம் இச்சாமி தஸ்ய வித்தம் ஹராம்யஹம்-பாகவதம். யஸ்ய – எவனுக்கு, அநுக்ரஹம் – அநுக்ரஹத்தை
இச்சாமி – வி ரும்புகிறேனோ, தஸ்ய – அவனுடைய, வித்தம் பணத்தை.அஹம் – நான், ஹராமி – அபஹரிக்கிறேன்.)-இத்யாதிகளிற்படியே ப்ராரப்த துஷ்க்ருதத்தில் சிகை
தீ(ர்த்த)ருகிற படியாலும்-(ரத்நபர்வதமாருஹ்ய யதா ரத்நம் நரோ முநே
ஸத்த்வா நுரூபமாதத்தே ததா க்ருஷ்ணாத் மநோரதாங்!)
(ஸங்கல்பாதேவ பகவாந் தத்த்வதோ பாவிதாத்மநாம்| வருதாந்தமகிலம் காலம் ஸேசயத்யம்ருதேந து II)இத்யா திகளிற்படியேகைங்கர்ய மநோரதத்துக்குப் பங்கம்
வாராமையாலும் யாவச்சரீரபாதம் நமக்கு வருமவை எல்லாம் ப்ரிய ஹித விநன்றே வருவதெல்லாம் ‘ என்றது இத்தேஹம் விடுமளவும்-(போகை: புண்யக்ஷயம் ததா -போகை: – ஸூகத்தின் அனுபவங்களினால் புண்யக்ஷயம் – புண்யகர்மத்தின் நாசத்தையும்.)என்கிறபடியே அநுகூலங்கள் வருமவை ப்ராரப்த புண்யரூப
நிகள நிவ்ருத்தியாகையாலும், ப்ரதிகூலங்கள் வருமவை-(ஹரிர்துக்காநி பக்தேப்யோ ஹிதபுத்யா கரோதிஹி ஸஸ்த்ரக்ஷாராக் கர்மாணி ஸ்வபுத்ராய யதா பிதா !-ஹரி: – பகவான், பக்தேய :- பக்தர் களுக்கு, துக்காநி – துக்கங்களை, பிதா – தகப்பனார், ஸ்வபுத்ராய –
தன்னுடைய பிள்ளைக்கு, சஸ்த்ர க்ஷாராக் கர்மாணி யதா -ஆயுதம் க்ஷாரம்,அக்னி, முதலியவைகளினால் செயயும் கார்யங்களைப் போல,ஹித புத்த்யா – நல்லது என்கிற எண்ணத்தினால், கரோதி – செய்கிறான்)(யஸ்யா நுக்ரஹம் இச்சாமி தஸ்ய வித்தம் ஹராம்யஹம்-பாகவதம். யஸ்ய – எவனுக்கு, அநுக்ரஹம் – அநுக்ரஹத்தை
இச்சாமி – விரும்புகிறேனோ, தஸ்ய – அவனுடைய, வித்தம் பணத்தை.அஹம் – நான், ஹராமி – அபஹரிக்கிறேன்.)-இத்யாதிகளிற்படியே ப்ராரப்த துஷ்க்ருதத்தில் சிகை
தீ(ர்த்த)ருகிற படியாலும்-(ரத்ந பர்வதமாருஹ்ய யதா ரத்நம் நரோ முநே
ஸத்த்வா நுரூபமாதத்தே ததா க்ருஷ்ணாத் மநோரதாங்!-
முநே – ஓ ! ரிஷியே ! நர :- மனிதன், யதா – எப்படி, ரத்ன பர்வதம் – ரத்னமயமான மலையை, ஆருஹ்ய- ஏறி, ரத்னம் – ரத் னத்தை, ஸத்த்வாநு ரூபம் – தன்னுடய சக்திக்குத் தகுந்தபடி, ஆதத்தே எடுத்துக் கொள்ளுகிறானோ,ததா – அபபடியே, கருஷ்ணாத் – க்ருஷ்ணனிடத்தில் இருந்து, மனோரதாந்- இஷ்டங்கள, ஆதததே -பெற்றுக் கொள்ளுகிறான்.)

(ஸங்கல்பாதேவ பகவாந் தத்த்வதோ பாவிதாத்மநாம்| வருதாந்தமகிலம் காலம் ஸேசயத்யம்ருதேந து -ஸ்ரீஸாத்வத ஸம்ஹிதை-பகவாந்- பகவானானவர், தத்த்வத: – உள்ள படியே, பாவிதாத் மநாம் -த னை தயானம் செய்பவாகளுக்கு, ஸங்கல் பாதேவ தன்னுடைய ஸங்கல்பத்தினாலேயே, வருதாந்தம் – இவனால் ராரததிக்கப்பட்டிருக்கும் வரையிலான, அகிலம – எல்லா, காலம்- காலததையும், அமருதே – அமருதத்துனால், ஸே சயது – நனைக்கிறார்.)இத்யா திகளிற்படியே கைங்கர்ய மநோரதத்துக்குப் பங்கம்
வாராமையாலும் யாவச் சரீரபாதம் நமக்கு வருமவை எல்லாம் ப்ரிய ஹித விஷங்கள் என்று ப்ரீதராகிறபடி.(ப்ரியமித்தரததாபி வா யத் யதா விதரஸி வரத ப்ரபோ த்வம ஹிமே-ததநுபவநமேவ யகதம் ஹி மே த்வயி நிஹிதபரோத்யஸோஹம் யத: -(வரதர. ஸதவம் – விபோ – ப்ரபுவாகிய, வரத – வரதனே த்வம்- நீர், மே எனக்கு, பரியம் – இஷ்டத்தையாவது, இதரத்- மற்றொன் ருகிய துக்கத்தையாவது, யத்- எதை,யதா -எப்படி, விதரஸி- கொடுக்கிறாயோ, மே – எனக்கு, ததறுபவமேவ – அதை அனுபவிப்பதே யுக்தம் ஹி – உசிதமன்றே, யத. – எந்தக்காரணத்தி ல், ஸோஹம் -அப்படிப்பட்ட நான், த்வயி-உம்மிடத்தில், நிஹிதபர: – வைக்கப்பட்டதான பரத்தை யுடையவனாக, அஸமி – ஆகிறேன.)என்றார்களிறே.

நமக்குப் பரம் ஒன்றிலதே’ என்றது ஸர்வஜ்ஞனுமாய் ஸர்வஸக்தனுமாய் பரம காருணிகனுமாய் பரம சேஷியுமான பெருமாள் பரஸ்வீகாரம் பண்ணி தேஹயாத்ரையை நம்முடைய கர்மா நுகுணமாக நடத்துகையாலும், ஆத்ம யாத்ரையைத் தம்முடைய ப்ரதாநரூப க்ருபா நுகுணமாக நிர்வஹிக்கையாலும்-(ஜநார்த்தநம் ப்ரணிபதிதோ ந ஸீததி-ஜநார்த்தநம் – பகவானை, ப்ரணிபதித: – ஆச்ரயித்தவன், ந ஸ்ததி – துக்கப்படுவதில்லை. )
(நவாஸுதேவபக்தாநாம் அபம் வித்யதே க்வசித்-நக்ரோதோ ந ச மாத்ஸர்யம் ந லோபோ நா பாமதி; பவந்தி க்ருதபுண்யாநாம் பக்தாநாம் புருஷோத்தமே )-ஆநுசா-254 – 133,135 வாஸுதேவபக்தாநாம் – பகவானி டத்தில் பக்து செய்பவர்களுக்கு, க்வசித் – ஓர் இடத்திலும், அசுபம் -அமங்களம், நவித்யதே – க ணப்படுவதல்ய க்ருத பு யானாம்-புண்யம் செய்தவர்களாயும், புருஷோத்தமே – பகவானிடத்தில், பக்தாநாம்-பக்தர்களாயும் இருப்பவர்களுக்கு,க்ரோத – கோபமானது, ந- இல்லை, மாத்ஸர்யம் – த்வேஷமானது, ந, லோப . – லோபமானது, ந – இல்லை)இத்யாதிகளிற் படியே புத்தி பூர்வமாக அபாயங்களில் இழிய ஓட்டாமையாலும், ப்ரவருத்தங்களாகில் ஏதேனும் ஒரு கண்ணழிவு செய்து விடுகையாலும, பராவர தத்த்வ விவேகத்தாலே பர தந்தர கர்திருத்வ பரதிபத்தியை யுடையவருமாய ஸகிஞ்சந அகிஞ்சந அதிகாரி விவேகத்தாலே ந்யஸ்த பரருமான நமக்கு ஆத்ம ரக்ஷார்த்தமாக இனி ஒரு கர்த்தவய லேஷம் இல்லை என்றபடி.

இனிப் பிறவோம் ‘ என்றும், ‘ நமக்கு ‘என்றும் பஹு -வசந ப்ரயோகத்தாலே -(பஸூர் மநுஷ்ய: பஷீ வா யே ச வைஷ்ணவ ஸம்ஸ்ரயா-தேநைவதே ப்ரயாஸ்யந்தி தத் விஷ்ணோ: பரமம்பதம் | )-சாண்டில்யஸ்ம்ருதி -1-15. பசு -பசுவானாலும், மனுஷ்ய.மனிதனானாலும், பஷீ வா-பக்ஷியானாலும், யே – எவைகள், வைஷ்ணவ ஸம்ச்ரயா: -வைஷ்ணவர்களை ஆச்ரயித்தவைகளோ, தே – அவைகள் தேநைவ – அந்த வைஷ்ணவர்களை ஆச்ரயித்ததினாலேயே, விஷ்ணோ பசுவானுடைய, தத் – அந்த, பரமம் பதம் – பரமபத்தை, ப்ரயாஸ் யந்தி – அடைகின்றன.இத்யாதிகளிற்படியே அநுபந்தி ரக்ஷணம் இங்கே ஸூசிதமாகிறது.

——————-

1-ஒரு ஜீவனுக்கு ஒரு ஜீவன் தஞ்சமல்லன் ‘ என்றது-ஸ்வயம் மருத்பிண்டபூதஸ்ய பரதந்த்ரஸ்யதேஹி :-ஸ்வரக்ஷணேப்ய க்தஸ்ய கோ ஹேது: பரரக்ஷணே|-இதிஹாஸ ஸ மு — 17 – 63 ஸ்வயம் – தான், மருத்பிண்ட பூதஸ்ய – மண்ணுருண்டைபோல் இருப்பவனாயும், பரதந்த்ரஸ்ய – பராதீனனாயும், ஸ்வரக்ஷணேபி – தன்னைக் காப்பாற்றிக் கொள்ளுவதிலும்,
அசக்தஸ்ய – சக்தி இல்லாதவனாயும் இருக்கிற, தேஹி : ஜீவாத்மா விற்கு, பரரக்ஷணே -அயலானைக் காப்பாற்றுவதில்,ஹேது :- காரணம்,க:- எது? இல்லை என்றபடி )ப்ரஹ்மாணம் மிதிகண்டம் ச யாசாந்யா தேவதா:ஸ்ம்ருதா -ப்ரதிபுத்தா நஸேவந்தே யஸ்மாத் பரிமிதம் பலம் -பார -சாந்தி – 350- 36 ப்ரஹ்மாணம்- ப்ரஹ்மாவையும், சிதி கண்டம் ச -ருத்திரனையும், யா: – எவர்கள், அந்யா: – இதரர்களான தேவதைகள், ஸ்ருதா: – சொல்லப்பட்டவர்களோ ( அவர்களையும்).ப்ரதி புத்தா: – நல்ல ஜ்ஞானமுடையவர்கள், நஸேவந்தே – ஸேவிப்பதில்லை, யஸ்மாத் எந்தக் காரணத்தினால்,(அவர்களால் கொடுக்கப் படுகிற) பலம் – ப்ரயோஜனம், பரிமிதம் – அல்பமாயிருக்கிறதோ.–(அநந்ய ஐஞாநவிரஹாத் அத்தா தேவதாகதா: -ப்ரஹ்மோநாதய : ஸர்வேஸ்வஸ்வாதந்த்ர்யேன கர்ஹிதா.-(தேவதாகதா:- தேவதைகளாய் இருக்கையை அடைந் திருக்கிற, ப்ரஹ்மேசாநாதய : – ப்ரஹ்மா, ருத்திரன்முதலிய, ஸர்வே- எல்லோரும், அநந்யஜ்ஞாந விரஹாத்- பகவானைத் தவிர வேறு ஒரு அடைய வேண்டிய ப்ரயோஜனம் இல்லை என்கிற ஜ்ஞாநம் இல்லாமையினால், அசுத்தா:- அபரிசுத்தர்கள், ஸ்வ ஸ்வாதந்த்ர்யேண-தாங்கள் ஸ்வதந்த்ரர்கள் என்று எண்ணி இருப்பதினால், கர்ஹிதா:- நிந்திக்கப் பட்டவர்கள், புருஷவ்யாக்ர – புருஷச்ரேஷ்டனே, அந்யே-மற்றவர்களான, யே- எவர்கள், சேதஸ : – மனத்திற்கு, வ்யபாச்ரயா: – த்யானத்திற்கு விஷயமாக இருக்கிறார்களோ, தே – அந்த, கர்ம யோநய : – கர்மத்தைக் காரணமாகவுடைய, தேவாத்யா :-தே தை முதலிய ஸமஸ்தா – எல்லோரும், அசுத்தா- அபரிசுத்தர்களாக,ஸ்பு:- ஆவார்கள்)(ஆப்ரஹ்மஸ்தம்பபர்யந்தா ஜகதந்தர்யவஸ்த்திதா:1 ப்ராணிந: கர்ம நித ஸம்ஸாரவ வர்த்தி :||-(யதஸ்த்தோ ந தேத்யாநே த்யாநிநாமுபகாரகா: 1 அவித்யாந்தர்கதா ஸர்வே தே ஹி ஸம்ஸார கோசரா :-(பஸ்ாதுத்பூதபோதாதுச த்யாநே நைவோபகாரக: 1
நைஸர்கிகோ ந வை போதஸ்தேஷாமப்யந்யதோ யத-விஷ்ணுதர்மம்-104 -33-
யத:- எந்தக்காரணத்தினால், ஆப்ரஹ்ம- ப்ரஹ் மாமுதல், ஸ்தம்ப பர்யந்தா – புழுவரையிலான, ஜகதந்தர் வீயவஸ்திதா:- லோசுங்களுக்கு உள்ளடங்கிய ப்ராணிகள், கர்மஜநித – கர்மத்தினால்-உண்டாக்கப்பட்ட, ஸம்ஸாரவசவர்த்தி : – ஸம்ஸாரத்திற்கு வசப்பட்டவர்களோ, தத: – ஆகையினால்,தே – அவர்கள்,த்யாநிநாம் – த்யானம் செய்பவர் களுக்கு, த்யாநே – த்யானத்தில், நஉபகாரகா: – உபகாரம் செய்கிறவர்களல்லர், அவித்யாந்தர்கதா- அவித்யைக்கு உட்பட்ட வர்களான,ஸம்ஸார கோசரா: ஸம்ஸாரத்திலுழலும், தே ஸர்வே-அவர்கள் எல்லோரும்,பச்சாத் – பிற்பாடு, உத்பூதபோதா: ச – ப்ரகாசத்தை அடைந்திருக்கிற ஜ்ஞாநத்தை யுடையவாகள்,த்யா-ேத்யாநத்தில், நைவோபகாரகா :உபகாரம் செய்கிறவர்களல்லர்,தேஷாமபி – அவர்களுக்கும் போத :- ஜ்ஞாநமானது, ந நைஸர்க்கிகஸ்பாவத்தில் ஏற்பட்டதன்று,யத: – எந்தக் காரணத்தினால், அந்யத:- வேறு ஒருவனால் உண்டாக்கப்பட்டதோ)(பஸவ: பாரிதா: பூர்வம் பரமேண ஸ்வ லீலயா
தேநைவ மோச யாஸ்தேநாந்யை மோசயிதும்க்ஷமா :
||-பசவ :- ஜீவாத்மாக்கள, பூர்வம் – முன்
னால், பரமேண – பரமாத்மாவினால், ஸ்வ லீலயா – தன்னுடைய விளையாட்டினாலே. பாசிதா: கட்டப்பட்ட வைகள், தே நைவ – அந்தப் பரமாத்மாவினாலேயே, தே – அவைகள், மோசநீயா: – விடுவிக்கத்தக்கவைகள், அந்யை: – மற்றவர்களினால், மோசயிதும் – விடுவிப்பதற்கு நக்ஷமா : – யோக்யர்களல்ல. ) இத்யாதிகளிற்படியே பரதந்தர சேதநர்களில் ஆரேனும் ஒருவன் தனக்கும் பிறர்க்கும் நிரபேக்ஷ ரக்ஷகனாக மாட்டான் என்றபடி. –

—————–

2-ஸ்ரீமானான நாராயணன் ஒருவனுமே ஸர்வஜீவர்களுக்கும் தஞ்சம் ‘ என்றது-(ஸ்ரீமந்நாராயண ஸ்வாமிந் அநந்ய ஸரணஸ் தவ –சரணௌ ரணம் யாத தவைவாஸ் யஹம் அச்யுத-த்வய மந்த்ராந்தரம் ஸ்ரீமந் – லக்ஷ்மியுடன் கூடியவனாயும். ஸ்வாமிங் – ஸ்வாமியாயும் இருக்கிற, நாராயண – நாராயணனே, அநந்ய சரண:- வேறு ஒரு ரக்ஷகனும் இல்லாதவனாகிய நான், தவ – உம்முடைய, சரணெள -திருவடிகளை, சரணம் – உபாயமாக, யாத : – அடைந்தேன், அச் யுத – ஆச்ரிதர்களை நழுவ விடாதவனாகிய பகவானே, அஹம் – நான், தவைவ – உமக்கே சேஷ பூதனாக, அஸ்மி – ஆகிறேன்.)(மாமேவ யே ப்ரபத்யந்தே மாயாமேதாம் தரந்தி தே-கீதை – 7 -14.யே – எவர்கள், மாமேவ – என்னை யே, ப்ரபத்யந்தே – ஆச்ரயிக்கிறார்களோ, தே – அவர்கள், ஏதாம் – இந்த மாயாம் – ப்ரக்ருதியை, தரந்தி – தரண்டுகிறார்கள்.)(தமேவ சாத்யம் புருஷம் ப்ரபத்யேத் யத ப்ரவ்ருத்தி: ப்ரஸ்ருதா புராணீ-கீதை – 15 – 4 யத: – எவனிடத்தில் இருந்து, புராணி- அநாதி யான, ப்ரவருத்தி: – லோகத்தினுடைய ப்ரவ்ருத்தி,ப்ர ஸ்ருதா – உண் டாயிற்றோ, தம் – அப்படிப்பட்ட, ஆத்யம் – முதலாவதாகிய, புருஷ மேவ – புருஷனையே, ப்ரபத்யேத் – ப்ரபத்தி செய்யக்கடவன்.)(தமேவ பரணம் கச்ச ஸர்வபாவேந பரர த ||தத்ப்ரஸாதாத் பராம்லாந்திம் ஸ்த்தாநம் ப்ராப்ஸ்யஸிஸாவதம்-கீதை 18-62 பாரத – அர்ஜுந, ஸர்வபாவேந – எல்லா அபிப்ராயத்தினாலும், தமேவ – அந்தப் பகவானையே, சரணம் – உபாய மாக, கச்ச – அடை, தத் ப்ரஸாதாத் – அவனுடைய அனுக்ரஹத் தினால், பராம் – உயர்ந்ததான, சாந்திம்-சாந்தியையும், சாச்வதம் -அழிவில்லாத, ஸ்தாநம் – இடத்தையும், ப்ராப்ஸ்யஸி – அடையப் போகிறாய்.)ஸம்ஸாரார்ணவமக்நாநாம் விஷயாக்ராந்தசேதஸாம்| விஷ்ணுபோதம் விநா நாந்யத் கிஞ்சிதஸ்தி பராயணம்!!-விஷ்ணு தர்மம் – 1 – 5 – 9 ஸ ம்ஸாரார்ணவ மக்காநாம் ஸம்ஸாரமாகிற ஸமுத்திரத்தில் முழுகினவர்களாயும், விஷயாக்ராந்த சேதஸரம் – சப்தம் முதலிய விஷயங்களினால் பீடிக்கப்பட்ட மனத்தை யுடையவர்களாயும் இருப்பவர்களுக்கு, விஷ்ணுபோதம் விநா- விஷ்ணுவாகிற தெப்பத்தைத் தவிர, அந்யத் – வேறு, கிஞ்சித் – ஒரு பராயணம் – அடையக் கூடிய ப்ரயோஜனம், நாஸ்தி-இல்லை.)(ஸம்ஸாரஸாகரம் கோரம் அநந்தக்லே பா ஜநம் |த்வாமேவ ரரணம் ப்ராப்ய நிஸ்தரந்தி மநீஷிண: 1-அநந்தக்லேசபாஜனம் -அளவில்லாத துக்கத்திற்கு இடமாயும், கோரம் – பயங்கரமா யுமிருக்கிற, ஸம்ஸார ஸாகரம் ஸம்ஸாரமாகிற ஸமுத்திரத்தை மநீ ண : – புத்திமான்கள், த்வாமேவ – உம்மையே, சரணம் – உபாயமாக ப்ராப்ய – அடைந்து, நிஸ்தரந்தி – தாண்டுகிறார்கள்.)ஸர்வலோக ரண்யாய ராகவாய மஹாத்மநே| நிவேதயத மாம் க்ஷிப்ரம்)-ராமா – யுத்த – 17-15 ஸர்வலோக சரண்யாய – எல்லோராலும் சரணமாக அடையத் தக்கவராயும், மஹாத்மநே – மஹாத்மாவாயும் இருக்கிற, ராகவாய – ஸ்ரீராமன் ; பொருட்டு, மாம் – என்னை,க்ஷிப்ரம் – சீக்கிரமாக, நிவேதயத – ஸமர்ப்பியுங்கள்.)-இத்யாதிகளின்படியே பத்நீஸம்பந்த குணவிபேஷ வி ஷ்டனான நாராயணன் ஒருவனுமே அகிஞ்சநராயும் ஸகிஞ்சநராயும் உள்ள ஸர்வ ஜீவர்களுக்கும் ஸ்வபுத்ய தீ ந ஸஹகார்யதிரிக் அபேக்ஷா ரஹிதமாக அநிஷ்ட நிவ்ருத்தியையும் -இஷ்டப்ராப்தியையும் பண்ணுவன் என்றபடி.

இவனைப் பற்றினவர்களை ஒருவரும் பாதிக்கமாட்டாதபடியையும், ஸ்வபாவதஸ் ஸர்வ ஸமனாய்-(ந மே த்வேஷ்யோஸ்தி-கீதை- 9 – 29 மே – எனக்கு, த்வேஷ்ய:- த்வேஷிக்கத்
தகுந்தவன், நாஸ்தி – இல்லை) என்கிற இவனுக்கு த்வேஷ்யராம்படி ஸாபராதரானாரை ஒருவரும் ரக்ஷிக்கமாட்டாத படியையும்-(கஜம் வா வீக்ஷ்ய ஸிம்ஹம் வா-அயோ 60 20. கஜம் வா – யானையையாவது, ஸிம்ஹம் வா -சிங்கத்தையாவது, வீய – பார்த்து, (ஸீதை பயப்படவில்லை.)(ப்ரஹ்மா ஸ்வயம்பூ:-ந்தர- 51- 45 ஸ்வயம்பூ: – தானே உண்டானவரான,ப்ர
ஹ்மா – ப்ரஹ்மாவும், (மற்ற ருத்திரனும் இந்திரனும் ராமனால் கொல்லத் தகுந்தவனாக ஏற்படுத்தப்பட்டவனை ரக்ஷிக்க சக்தி யுடையவாகளல்லா என்றுமேல்)என்கிற ஸ்லோகங்களில் தாத்பர்யத்திலும், ப்ரஹ்லாத ஸு முககாக ராவணாதி வருத்தாந்தங்களிலும் கண்டு கொள்வது.

———-

3-இஜ்ஜீவன் அநாதிகாலம் அநுபவிக்கப் பெறாத ஸ்ரீரிய,பதியைப் பெறுகைக்கு ஹேதுவான உபாயத்தை ரஹஸ்ய த்ரயமுகத்தாலே உபதேசித்து அவ்வழியாலே ஆசார்யன் இவனுக்குத் தஞ்சமாகிறான்” என்றது.தாஸபூதா: ஸ்வதஸ்ஸர்வே ஹ்யாத்மாந: பரமாத்ம :-மந்திர ராஜபதஸ்தோத்திரம் – ஸர்வே -ஆத்மா : – எல்ல ஆத்மாக்களும், ஸ்வத: -ஸ்வபாவத்தினாலேயே, பரமாத்மந:- பரமாத்மாவிற்கு, தாஸபூதா : – தாஸர்கள்.)
இத்யாதிகளில்படியே ஸுரிகளோடொக்க ஸ்வரூப யோக்யதை உண்டாயிருகக, ஸ்வாபராதத்தாலே ஸ்வத: ப்ராப்தமான பகவதநுபவத்தை இழந்த ஸம்ஸாரி சேதநன் இப்பேறு பெறுகைக்கு அவிநாபாவத்தாலே விஸ்வஸநீயமான உபாய விசேஷத்தை அத்யாத்ம பலாஸ்த்ர ஸாரமான மூலமந்த்ராதிகளாலே உபதேஸித்து,-(ஆசார்ய : ப்லாவிதா தஸ்ய ஜ்ஞாநம் ப்லவ இஹ உச்யதே-தஸ்ய – அப்படிப்பட்ட ஜீவாத்மாவிற்கு, இஹ – இந்த, ஸம்ஸார தசையில், ஆசார்ய: – ஆசார்யன், ப்லாவிதா – தெப்பக்காரன், ஜ்ஞாநம் ப்லவ: – ஜ்ஞாநமாவது தெப்பம், (என்று) உச்யதே- சொல்லப்பபடுகிறது.)-(ஸாக்ஷாந் நாராயணோ தேவ :க்ருத்வா மர்த்யமயீம் தநும்-மக்நாநுத்தரதே லோகாந் காருண்யாத் யாஸ்த்ரபாணிநா-ஜயா க்ய ஸம்ஹிதை – தேவ – தேவனாகிய.நாராயண:- நாரா யணன், ஸாக்ஷாத் – நேராகவே, மர்த்யமயீம் – மநுஷ்ய ரூபமான-தநும் சரீரத்தை,கருத்வா-செய்து கொண்டு, காருண்யாத்-க்ருபையினால், சாஸ்த்ர பாணிநா – சாஸ்த்ரமாகிறகையினால், மக்னாக் முழுகி இருக்கிற, லோகாந்- ஜனங்களை, உத்தரதே – உயரத் தூக்கிவிடுகிறார்.)இத்யாதிகளில்படியே ஆசார்யன் இவனுக்குப் பரம்பரயா மோக்ஷ ஸாதநமாகிறான் என்றபடி.-(பாபிஷ்ட்ட: க்ஷத்ரபந்துச புண்டரீகஸ்ச புண்யகருத் ஆசார்யவத்தயா முகதெள தஸ்மாதாசார்யவார் பவேத் -பாபிஷ்ட்ட :- மிகவும் பாபியான. த்ரபந்து: ச – க்ஷத்திர பந்துவும் புண்ய க்ருத் – புண்யம்செய்தவனாகிய புண்டரீக: ச – புண்டரீகனும், ஆசாயவத்தயா – ஆசார்யனை அடைந்திருக்கையாலே, முக்தெள -மோக்ஷத்தை அடைந்தார்கள்,தஸ்மாத்- அ கையினால், ஆசார்யவாந்பவேத் – ஆசராயனை அடைந்தவனாக ஆகவேண்டும்.)என்றதற்கும்இதுவே தாத்பர்யம்.

————–

4— சர்வ ஸ்வாமிநி யாய் -சர்வேஸ்வரனுக்கு சேஷ பூதையாய் ஸஹ தர்ம சாரிணியான பெரிய பிராட்டியார் இத்தலையிலே வாத்சல்ய அதிசயத்தாலும் அத்தலையில் வால்லப்ய அதிசயத்தாலும் புருஷாகாரமாய்க் கொண்டு இஜ்ஜீவர்களுக்கு தஞ்சமாகிறாள்–என்றது(ஸர்வேஷாமேவ லோகாநாம் ஈஸ்வரி மம வல்லபா-ஸர்வேஷாமேவ – எல்லா, லோகாநாம் – லோகங்களுக்கும்,மம – என்னுடைய, வல்லபா- பத்தினியாகிய லக்ஷமீ-ஈச்வரீ – யஜமானி.)(அஸ்யா மம ச லேஷம் ஹி விபூதிருபயாத்மிகா-.விஷ்வக்ஸேந ஸம்ஹிதை. உபயாத்மிகா – இரு வகைப்பட்ட, விபூதி: – விபூதியும், அஸ்யா – இந்த லக்ஷ்மிக்கும், மம ச – எனக்கும் சேஷம்ஹி- சேஷமல்லவா.)தேவதிர்யங் மநுஷயேஷு பு நாமா பகவாந்ஹரி:
(ஸ்த்ரீ நாம்நீ லக்ஷ்மீர் மைத்ரேய நாநயோர் வித்யதே பரம்|!-விஷ்ணு புராணம் 1 – 8 35
. தேவதிர்யங் மநுஷ்யேஷ தேவதைகள், மருகங்கள், மனுஷ்யர்கள், இவர்களுக்குள், பு நாமா –
புருஷன் என்று பெயர் உடையதெல்லாம், பகவாங் – பகவானாகிய ஹரி: – விஷ்ணு (வின்விபூதி), ஸ்த்ரீ நாம் – ஸ்த்ரீ என்று பெயருடைய தெல்லாம்,ல மீ:- லக்ஷ்மிக்கு, (சேஷபூதம்), மைத்ரேய – ஒ ! மைத்ரேயனே ! அநயோ : – இவ்விருவர்களைத் தவிர,பரம் – மேலான வஸ்து, நவித்யதே – இல்லை.)நித்யை வைஷா ஜகந்மதா விஷ்ணோ: ஸ்ரீரநபாயி-விஷ்ணு புராணம் – 1 – 8 – 17 ஜகந்மாதர – லோகங்களுக்கு எல்லாம் தாயாகிய, ஏஷா – இந்த லக்ஷமீ, விஷ்ணோ:- விஷ்ணுவிற்குநித்யைவ – எப்பொழுதும் இருப்பவள், அந பா யிங் – விட்டுப்பிரியாத வள்.)(யஜ்ஞவித்யா மஹாவித்யா குஹ்யவித்யா ச பேலாபநே|
ஆத்மவித்யா ச தேவி! த்வம் விமுக்தி பலதாயி || -விஷ்ணு புராணம் 1 – 9-120.சோபமே – மங்களகரமான லக்ஷ்மியே! த்வம் – நீ, யஜ்ஞவித்யா – யஜ்ஞவித்யை, மஹாவித்யா ச்ரேஷ்டமான வித்யை, குஹ்ய வித்யா – ரஹஸ்யமான வித்யை விமுக்தி பலதாயிநீ – மோக்ஷமாகிற பலத்தைக் கொடுக்கிற, ஆத்மவித்யாச – ஆத்ம வித்யையும், தேவி – ஒ தேவியே, த்வம் – நீயே, (ஆதம வித்டையும நீயே, மோக்ஷம்,கற பலத்தைக் கொடுப்பவளும்
நீயே என்றும் பொருள் டடும்.)(இயம் ஸ்தா மம ஸுதா ஸஹதர்மசரீ தவ-பால -87-32 இயம் ஸ்தா – இந்தஸ்தை, மம என்னுடைய, ஸுதா – பெண், தவ – உமக்கு, ஸஹதர்ம சரீ – சேர்ந் திருந்து தர்மா நுஷ்டாநம் செய்யக் கூடியவள்.)(ஸர்வைச்வர்ய குணோபேதா நித்ய தத்தர்ம தர்மி-ஸர்வைச்வர்ய குணோபேதா – எல்லா வற்றிற்கும் ஈச்வரியாய் இருக்கை யாகிற, குணத்தை யுடையவள், நித்யம் – எப்பொழுதும், தத் தர்ம தர்மிணி – பகவானுடைய ஸ்வபாவம் போன்ற ஸ்வபாவத்தை யுடையவள்)(கருணாஸ்ரா நதமுகீ கமலா ஸ்ப்ரபா|<கல்யாணவாஹிநீ கல்யா கலிகல்மஷநாலி|ஸர்வார்த்திநா நீ ஹ்ருஷ்டா ஸமுத்ரபரியோஷி |ஸர்வேச்சா பரிபூரிகா |ஆர்யா யபோதா | வஸுதா தர்மகாமார்த்த மோக்ஷதா||அப்ரமேயா க்ரியா ஸூஷ்மா பரநிர்வாணதாயிநீ -லக்ஷ்மீ ஸஹஸ்ரநாமம். கருணாஸ்ரா நதமுகீ – தயையினால் உண்டாகிய கண்ணீரை யுடையவளாயும், வணங்கின முகத்தை யுடையவளாயும் இருப்பவள்,கமலா – தாமரைப் புஷ்பம் போன்ற கண்களையுடையவள், சசி ப்ரபா – சந்த்ரன் போன்ற காந்தியுடையவள், கல்யாணவாஹி – மங்களங்களை உண்டாக்குகிறவள்,கல்யா-அப்படிச்செய்ய சக்தியுடையவள், கலிகல்மஷ நாசிநீ – கலியினாலுண்டான பாபத்தைப் போக்கடிப்பவள், ஸர்வார்த்தி நாசிநீ – எல்லோருடைய துக்கங்களையும் போக்கடிப்பவள், ஹ்ருஷ்டா – ஸந்தோஷத் தையுடையவள், ஸமுத்ரபரிசோஷிணீ – ஸமுத்ரத்தை வற்றும்படிசெய் யக்கூடியவள், ஸர்வேச்சா பரிபூரிகா – எல்லோருடைய ஆசையையும் பூர்த்திசெய்பவள், ஆர்யா – பூஜிக்கத்தகுந்தவள்,ய சோதா – யசஸ் ஸைக்கொடுக்கக்கூடியவள், வஸுதா – பணத்தைக் கொடுப்பவள, தர்மகாமார்த்த மோக்ஷதா – தர்மம், காமம், அர்த்தம், மோக்ஷம்ஆகிய நான்கு புருஷார்த்தங்களையும் கொடுப்பவள், அப்ரமேயா – அளவிட்டு அறியமுடியாதவள், அக்ரியா – (அவாப்த ஸமஸ்தகாமதையாலே) ஒரு வித கார்யமும் செய்யாதவள், அன்றிக்கே ‘க்ரியா’ என்று பகவானுடைய ஸர்வவ்யாபாரங்களுக்கும் நிர்வாஹகையானபடியினாலே க்ரியா ரூபி என்றபடியாகவுமாம், ஸூக்ஷ்மா ஸூக்ஷ்மமான ஸ்வரூபத்தை யுடையவள், பரநிர்வாணதா உயர்ந்ததான மோக்ஷத்தை கொடுப்பவள்)(வாச: பரம் பரார்த்தயிதா ப்ரபத்யேத் நியத ரியம் -செளநக ஸம்ஹிதை. வாச: பரம் – வாக்குக்கு எட்டா த தான,பலம் – பலத்தை, ப்ரார்த்தயிதா – வேண்டுகிறவன் அபேக்ஷிப்பவன்), நியத:- ஸாவதானனாய்க்கொண்டு, சரியம் – லக்ஷ்மியை, ப்ரபத்யேத் – சரணம் அடையவேண்டும்.)ப்ராய சித்த பரணங்கே து ஸர்வபாபஸமுத்பவே மாமேகாம் தேவதேவஸ்ய மஹிஷீம் ரணம் வரஜேத் I-லகுதந்த்ரம்-17 10 ஸர்வ பாப ஸ முத்பவே – எல்லாப்பாபங்கள் உண்டான போதிலும், ப்ராயச்சித்த ப்ரஸங்கே து – ப்ராயச்சித்தம்செய்து கொள்ள நேர்ந்தபோது, தேவதேவஸ்ய.- பகவானுடைய,மஹிஷீம் – பத்னியாகிய, மாமேகாம் – என்னை ஒருவளையுமே, சரணம் வ்ரஜேத் – சரணமாக அடைய வேணடும்.)(ஸர்வகாமப்ரதாம் ரம்யாம் ஸம்ஸாரார்ணவதாரிணீர்-க்ஷிப்ரப்ரஸாதிநீம் ல மீம் ரண்யாம சிநதயேத் -ஸ்வாயம்பு வசனம். ஸர்வகாமப்ரதாம் – எல்லா இஷ்டங்களை
யும் கொடுக்கக்கூடியவளாயும், ரம்யாம் – அழகானவளாயும், ஸம்ஸாரார்ணவ தாரி ம் – ஸம்ஸாரமாகிற ஸழுத்திரத்தைத் தாண்டிவைப்பவளாயும், க்ஷிப்ர ப்ரஸாதி நீம் – சீக்ரத்தில் அனுக்ரஹம் செய்பவளாயும் இருக்கிற, லக்ஷ்மீ – லக்ஷ்மியை, சரண்யாம் – சரணம் அடையத்தகுந்தவளாக, அநுசிந்தயேத் – நினைக்கவேண்டும்.)(ப்ரணிபாத ப்ரஸ நாஹி மைதில் ஜகாத்மஜா-ஸந்தர – 27-44 ஜநகாத்மஜா – ஜநகராஜன் பெண் ணாகிய, மைதில் – ஸ்தையானவள், ப்ரணிபாத ப்ரஸந்நாஹி – சரணாம் சுதிசெய்வதினால் அனுக்ரஹத்தைச் செய்யக்கூடியவளன்றோ)(அலமேஷா பரித்ராதும் ராக்ஷஸ்யோ மஹதோ பயாத்- ஸந்தர – 27-44 ஏஷா – இந்த ஸ்தை,ராக்ஷஸ்ய: –ஓ! ராக்ஷஸிகளே, மஹத : பயாத்-பெரிய பயத்திலிருந்து, பரித்ராதும் ரக்ஷிப்பதற்கு, அலம் – சக்தியுடையவள்.)(அலமேஷா பரித்ராதும் ராகவாத்ராக்ஷ கணம்-ராக்ஷ கணம்-ராக்ஷஸிகளையெல்லாம்,-ராகவாத் – ராமனிடமிருந்து, பரித்ராதும் -காப்பாற்றுவதற்கு, ஏஷா இவள் அலம் – சக்தியுடையவள்.)இத்யாதிகளிற் சொன்ன ஸர்வயேஷி வ்யதிரிக்த ஸர்வ பேஷித்வம் நிக்ரஹாஸமாநாதிகரண ஸர்வா நுக்ரஹவத்த்வம் இத்யாதிஸ்வபாவ விலேஷங்களையுடையளான பிராட்டி ஸாபராதரான
வர்கள் எல்லோருக்கும் பாஸிதாவான ஸர்வேஸ்வரன் அபிமுகம் கொள்ளமாட்டாதே தயங்காதபடி அவனுடைய பித்ருத்வப்ர யுத்தமான ஊஷமளீ பாவத்தை–உசிதை: உபாயை. விஸ்மார்ய-்குணரத்கோசம் – 52 உசிதை: – அததற்குத் தகுந்தவைகளான, உபயை – உபாயங்களினால், விஸ்மார்ய – மறக்கும்படிசெய்து,என்னும்படியாக்கி, இவர்களை அவன் திருவடிகளிலே சேர்த்து- தன் அடியார் திறத்தகததுத் தாமரையாளாகிலும்
சிதகுரைக்குமேல் என்அடியார் அது செய்யார்-பெரியாழ்வார் – 49 – 2-என்னும்படி பண்ணிக் கொண்டு-பவேயம் சரணம் ஹி வ: – சுந்தர – 58 90 வ: – உங்களுக்கு, சரணம் -உபாயமாக.
பவேயம் – ஆகக் கடவேன்.–என்றருளிச் செய்தபடியே இவர்களுக்கு ரக்ஷாஹேது ஆகிறாள்
என்றபடி.-

———–

5—இவளைப் புருஷாகாரமாக்க வேண்டுவது ஈஸ்வரன் தண்ட தரனாகையாலே-என்றது-அப்ரமேயோநியோஜ்யச யத்ர காமகமோ வசீ – பார் – ஸபா – 40 – 78 யத்ர காம கம: – தனக்கு இஷ்டமான இடத்தில் போகக் கூடியவன், வசீ – எல்லாவற்றையும் தனக்கு வசமாக உடையவன். அப்ரமேய: – அளவிட முடியாதவன், அநியோஜ்யருவராலும் நியமிக்கப்படக் கூடியவனல்லன்)ஸ்வாதந்த்ர்யாமைஸ்வரம் அபர்யநுயோஜ்யமாஹு:- வைகுண்ட ஸ்தவம் – 55 ஐச்வரம் – ஈச்வரனுடையதாகிய, ஸ் வாதந்த்ர்யம் – ஸ்வதந்த்ரனாயிருக்கும் தன்மையை அபர்ய யோஜ்யம்- வேறு ஒருவராலும் கேட்கமுடியாததாக, ஆஹு :-சொல்லுகிறார்கள்.)இத்யாதிகளில்படியே நிரங்குச ஸ்வதந்த்ரனான ஸர்வேஸ்வரன்-தஸ்மாத் Uாஸ்த்ரம் ப்ரமாணம் தே கார்யா கார்ய வ்யவஸ்திதௌ-கீதை- 16 – 24 தஸ்மாத் ஆகையினால், தே – உனக்கு,கார் யாகார்ய வ்யவஸ்திதௌ – இது செய்யத்தகுந்தது, இது செய்யத்தகாதது என்கிற ஏற்பாட்டில், சாஸ்த்ரம் – சாஸ்த்ரமானது, ப்ரமாணம்.-என்று க்ஷேத்ரஜ்ஞருக்கு கருத்யாகருத்ய வ்யவஸ்த்தாபகமான பலாஸ்த்ரத்தை அநாதியாக ப்ரவர்த்திப்பிக்க, ப்ரவாஹ அநாதி கர்ம ஸம்யுகதராய் ஆஜ்ஞாதிலங்கநம் பண்ணின
வர்களை இவன்- க்ஷிபாமி அஜஸ்ரம் அஸுபாந்-கீதை – 16 – 19 அஜஸ்ரம் – எப்பொழுதும், அசுபாந்- பாபம் செய்த அவர்களை, க்ஷிபாமி – (அஸுர ஸ்வபாவமுள்ள சரீரங்களில்) தள் ளுகிறேன்.–என்கிறபடியே நிக்ரஹித்துப் போருமவனாக ப்ரமாண ஸித்தமாகையாலே, ஸ்வாபராத பூயஸ்தையாலே பீதரானவர்களுக்கு அர்த்த ஸ்வபாவாதிகளாலே அநதிலங்கநீய வாக்யையான விஷ்ணு பத்நியைப் புருஷகாரமாக்க வேண்டுகிறது என்றபடி. 

————-

6—இத் தண்ட கரண்யம் அநாதியான அஞ்ஞான அதிலங்கனம்-என்றது-(ஸமோஹம் ஸர்வ பூதேஷ -கீதை 9 – 29 அஹம் – நான், ஸர்வபூதே – எல்லா ப்ராணி களிடங்களிலும், ஸம: – ஒரே விதமான மனதையுடையவன்-என்று ஸர்வ ஸமனான ஸர்வேஸ்வரன் தனக்கு வைஷம்ய நைர்க்ருண்யாதிகள் வாராதபடி வ்யவஸ்தித நிக்ரஹம் பண்ணு கைக்கு விலேஷ காரணம்

நிமித்தமாத்ரமேவாஸௌ ஸ்ருஜ்யாநாம் ஸர்க்க கர்மணி
ப்ரதாநகாரணீபூதா யதோ வை ஸ்ருஜ்யக்தய: !!(நிமித்தமாதரம் முகத்வைநம் நாந்யத் கிஞ்சிதபேக்ஷதே நீயதே தபதாம் ஸ்ரேஷ்ட ஸ்வக்த்யாவஸ்து வஸ்துதாம்-விஷ்ணு புராணம் – 1 – 4-51, 52
அஸெள – இந்தப் பகவான், ஸ்ருஜ்யா நாம் – ஸ்ருஷ்டிக்கப்படுகிற வஸ்துக்களினுடைய, ஸர்க்க கர் மணி – ஸ்ருஷ்டிப்பதாகிய கார்யத்தில், நிமித்தமாத்ரமேவ – பொதுவா கிய காரணம் மாத்திரம் தான், யத: – எந்தக்காரணத்தினால். ஸ்ருஜ்ய சக்தய:- ஸ்ருஷ்டிக்கப்படுகிற வஸ்துக்களின் சக்திகள், ( அதாவது முன் ஜன்மங்களில் செய்யப்பட்ட கர்மங்கள்), ப்ர தாந கார பூதா: – முக்யமான காரணங்களாக இருக்கின்றனவோ, இதம் – இந்த வஸ்து, நிமித்தமாத்ரம் முக்த்வா – பொதுவான காரணத்தைத் தவிர, அந்யத் கிஞ்சித் – வேறு ஒன்றையும், நாபேக்ஷதே – எதிர்பார்க்கிறதில்லை. வஸ்து – ஒரு வஸ்துவானது, தபதாம்ச்ரேஷ்ட – தபஸ் பண்ணுகிறவர் களுக்குள் ச்ரேஷ்டனே ! ஸ்வசக்த்யா-தன்னுடைய சக்தியினாலேயே (கர்மங்களினாலேயே), வஸ்துதாம்- அந்த வ ஸ்துவாய் இருக் கையை, நீயதே – அடைவிக்கப்படுகிறது)-கர்மபி: பாவிதா: பூர்வை: கு லாகு ஸலைஸ்து தா : -விஷ்ணுபுரா – 1-5-28 தா: – அந்த ஜனங்கள், பூர்வை:முன்பு செய்யப்பட்ட,குசலாகுசலை: – நல்லதாயும் கெட்டதாயும் இருக்கிற, கர்மபி: – கர்மங்களினால், பாவிதா:- உண்டாக்கப்பட்ட
வைகள்.-என்றும்-(ஹந்யதே தாத க: கேந யத: ஸ்வக்ருதபுக புமா -தாத – தகப்பனாரே, க: – எவன், கேந – எவனால், ஹந்யதே- கொல்லப்படுகிறான், யத:- எந்தக் காரணத்தினால், புமாந்-
மனிதன், ஸ்வக்ருதபு க் – தன்னால் செய்யப்பட்ட கர்மத்தின் பலனை அனுபவிக்கிறானோ- என்றும்( சுபேத்வஸௌ துஷ்யதி துஷ்க்ருதே து ந துஷ்யதேஸௌ-பரமஸ் சரீரீ சாந்தி-199-25. சரீரீ – எல்லா வஸ்துக்களையும் தனக்குச் சரீரமாகவுடைய, அஸௌ – இந்த, பரம்:- பரமாத்மா, சுபேது-நல்ல கர்மங்கள் செய்யும்பொழுது, துஷ்யதி – ஸந்தோஷப்படுகிறான், துஷ்க்ருதேது – பாப கர்மங்களைச் செய்யும்பொழுதோ எனில், நதுஷ் யதே- ஸந்தோஷப்படுவதில்லை. -) என்றும்,.-நானே நானாவித நரகம்புகும் பாவம் செய்தேன் ‘என்றும் ப்ரமாணஸித்தமாய், ப்ரவாஹாநாதியான விருத்தாநுஷ்ட்டானம் என்றபடி.

7–இப்படி அபராத அநு ரூபமாக தண்ட தரனாய்ப் போருகிற சரண்யனுடைய வசீகரணங்களில் பிரதானம் சர்வ அகிஞ்சன அதிகாரமான ஆத்ம ரக்ஷ பர சமர்ப்பணம்-என்றது-அநித்யமஸுகம் லோகம் இமம் ப்ராப்ய பஜஸ்வ மாம்-கீதை -9 33 அநித்யம் அழியக்கூடியதாயும், அஸ கம் – துக்க மயமாயும் இருக்கிற, இமம் – இந்த, லோகம் லோகத்தை, ப்ராப்ய – அடைந்திருக்கிற நீ, மாம் -என்னை, பஜஸ்வ – அடை.)
என்றும்,-(ஸர்வதர்மாந் பரித்யஜ்ய மாமேகம் ரணம் வ்ரஜ-கீதை-18-65. ஸர்வதர்மாந் – எல்லாத் தர்மங்களையும், பரி த்யஜ்ய – நன்றாய் விட்டுவிட்டு (அதாவது ப்ரபத்திக்கு அங்கமாக அனுஷ்டிக்காமல் என்றபடி), மாம் ஏகம் – என்னை ஒருவனையே, சரணம் சரணமாக, வ்ரஜ – அடை.)என்றும்-பிதரம் மாதரம் தாராந் புத்ரார் பந்தூந் ஸகீந குரூங் 1
ரத்நாநி தநதாந்யாநி க்ஷேத்ராணி ச கருஹாணி ச | ஸர்வதர்மாம்ஸ்ச ஸந்த்யஜ்ய ஸர்வகாமாம்ஸ் ச ஸாக்ஷராந்ங்1லோகவிகராந்த சரணெள பரணம் தே அவரஜம்விபோ! -ஜிதந்தாஸ்தோத்ரம்
பிதரம்-தகப்பனாரையும், மாதரம்- தாயாரை யும்,தாரா-பத்னி களையும்.புத்ரா பிள்ளைகளையும் பந்தூ – பந்துக்களையும் ஸகீர்-ஸகிகளையும், குரூந்-குருக்களையும்,ரத்நாநிரத்னங்களையும்தநதாந் யா -பணம்தாயங்களையும், க்ஷேத்ராணி-நிலங்களையும், க்ருஹாணிச – வீடுகளையும், ஸர்வதர்மாம்ச்ச- எல்லாத் தர்மங்களையும், ஸாக்ஷரார் -கைவல்யத்துடன் சேர்ந்த, ஸர்வகாமாச்ச – எல்லாக் காமங்களையும் (ஐச்வர்யங்களையும்), ஸந்த்யஜ்ய – விட்டுவிட்டு, விபோ -விபுவாகிய)என்றும்,(வ்ருதைவ பவதோ யாதா பூயஸ் ஜந்மஸந்ததி: 1தஸ்யாம் அந்யதரஜ்ஜந்ம ஸஞ்சிந்த்ய ஸ்ரணம் வ்ரஜேத்-சாண்டி – ஸ்ம்ருதி பவத: – உனக்கு, பூயஸ் – அதிகமான, ஜந்மஸந்ததி: – ஜன்மங்களின் பரம்பரை, வ்ருதைவ – வீனாகவே, யாதா – போய்விட்டது, தஸ்யாம் – அவற்றிற்குள், அந்யதரத் – ஒன்னாகிய, ஜந்ம – ன்மமாக, ஸஞ்சிந்த்ய – (இந்த ஜன்மத்தையும்) நினைத்துக் கொண்டு, சரணம் வ்ரஜேத் – சரணமாக அடை.)என்றும்,அஹமஸ்ம்யபராதாநாம் ஆலயோகிஞ்சநோகதி: 1தவமேவ உபாய பூதோ மே வேதி ப்ரார்த்தநாமதி: ஸரணாகதிரித்யுக்தா ஸாதேவேஸ்மிந் ப்ரயுஜ்யதாம் |தஸ்யாநுபந்தா : பாப்மாந ; ஸர்வே நய்யந்தி தத்க்ஷணாத|-அஹிர்புத்ந்ய ஸம்ஹிதை – 37 – 30. அஹம் – நான், அபராதாநாம் – குற்றங்களுக்கெல்லாம், ஆலய: – இருப்பிடமாகவும், அகிஞ்சந : – வேறு ஒரு உபாயம் இல்லாதவனாயும், அகதி: – வேறு ரக்ஷகாகள் இல்லாதவனாகவும், அஸ்மி – ஆகிறேன், த்வமேவ – நீரே, மே எனக்கு, உபாயபூத: – உபாயமாக, பவ – ஆகவேண்டும், இதி – என்கிற, ப்ரார்த்தநாமதி:- ப்ரார்த்திப்பதாகிய புத்தி, சரணாகதி:, இதி என்று, உக்தா – சொல்லப்பட்டது, ஸா – அது, அஸ்மிந் – இந்த,தேவே – தேவனாகிய பகவானிடத்தில், ப்ரயுஜ்யதாம் – ப்ரயோகிக்கத் தக்கது, தஸ்ய – இப்படிச் செய்தவனுக்கு, அநுபந்தா:- தடையாய் இருக்கிற, ஸர்வே – எல்லா, பா மா : – பாபங்களும், தத்க்ஷணாத்-அந்த க்ஷணத்திலேயே, நச்யந்தி – சித்து விடுகின்றன.)என்றும்,(பக்த்யா பரமயாவாபி ப்ரபத்த்யா வா மஹாமதேப்ராப்யோஹம் நாந்யதா ப்ராப்ய : மமகைங்கர்யலிப்ஸுபி: [!-மஹாமதே – புத்திமானாகிய ஓ! ரிஷியே, அஹம் – நான், மம -என்னுடைய, கைங்காபலிப்ஸுபி: – கைங்கர்யத்தைச் செய்யவேண்டும் என்கிற ஆசையுடையவாகளினால், பரமயா – உயர்ந்ததான, பக்த்யா- பக்தியினாலாவது, ப்ரபத்த்யாவா – ப்ரபத்தியினாலாவது,ப்ரா ப்ய: – அடையத் தகுந்தவன், அந்யதா – வேறு விதமாக, ந ப்ராப்ய: அடையத் தகுந்தவனல்ல.)என்றும்,

சரணம் தவாம் ப்ரபந்நா யே த்யா நயோக விவர்ஜிதா தேபி ம்ருத்யுமதிக்ரம்ய யாந்தி தத்வைஷ்ணவம் பதம் |1-த்யாநயோக விவர்ஜிதா: – த்யான யோகம் செய்யாதவர்களான,யே – எவர்கள், த்வாம்- உம்மை சரணம் ப்ர பந்நா: – சரணமாக அடைந்தார்களோ, தேபி – அவர்களும், ம்ருத்யும்- ஸம்ஸாரத்தை, அதிக்ரம்ய – தாண்டி, தத் – அந்த, வைஷ்ணவம் – விஷ்ணுவினுடையதான-பதம் – ஸ்தாநத்தை, யாந்தி – அடைகிறார்கள்.)என்றும்,

முமுக்ஷவுக்கு ஸரண்ய ப்ரஸாதநங்களாகச் சொல்லப்பட்ட உபாயங்களில் வைத்துக்கொண்டு,-நிக்ஷேபாபர பர்யாயோ ந்யாஸ: பஞ்சாங்க ஸம்யுத: ஸந்யாஸஸ் த்யாக இதயுக்த: லரணாகதிரித்யபி !!-லக்ஷ்மீதந்த்ரம் – 17-74 நிக்ஷேபாபர பர்யாய:- நிக்ஷேபம் என்று மற்றொரு பெயரையுடைய, பஞ்சாங்க ஸம்யுத: – ஐந்து அங்கங்களுடன் கூடிய, ந்யாஸ : – பரந்யாஸம், ஸந்யா :- ஸந்யாஸம்என்றும்,த்யாக இதி – த்யாகம் என்றும், சரணாகதிரித்யபி – சரணாகதி என்றும் உக்த:- சொல்லப்பட்டது.)-என்றும்,

ஆத்மாத்மீய பரந்யாஸோ ஹி ஆத்ம க்ஷேப உச்யதே–லக்ஷ்மீதந்த்ரம்-17 – 79. ஆத்மாத்மீய பரந்யாஸ.- தன்னுடையவும் தன்னைச் சேர்ந்த வஸ்துக்களினுடையவும் பரத்தை ஸமர்ப்பிப்பது(அவற்றைரக்ஷிக்க வேண்டிய பொறுப்பை பகவானிடம் ஸமர்ப்பிப்
பது), ஆத்மநிக்ஷேப – ஆத்ம நிக்ஷேபம் என்று, உச்யதே – சொல்லப்படுகிறது.என்றும் சொல்லப்பட்ட ஸ்வ ரக்ஷா பரஸமர்ப்பணம்,-(இதம் Uரணம் அஜ்ஞாநாம் இதமேவ விஜர்நதாம் 1இதம் திதீர்ஷதாம் பாரம் இதம் ஆநந்த்யமிச்சதாம்|1-லக்ஷ்மீதந்த்ரம் – 17-100. இதம் – இந்த சரணாகதி, அஜ்ஞாநாம் – ஜ்ஞாநம் இல்லாதவர்களுக்கும், சரணம் – உபாயம், விழாநதாம் – (பகவானுடைய ஸ்வரூபாதிகளை) விகேஷமாக அறிந்தவர்களுக்கும், இதமேவ – இதுவே (உபாயம் ), பாரம் – கரையை, திதீர்ஷதாம் – தாண்ட வேண்டும் என்கிற ஆசை யுடையவர்களுக்கும், இதம் இதுவே.உபாயம், ஆநந்த்யம் இச்சதாம் – (தர்ம பூதஜ்ஞானத்தின் வழியாக)அளவில்லாமல் இருப்பதை, இச்சதாம் -ஆசைப்படுகிறவர்களுக்கும், இதம் – இதுவே உபாயம்.)

(தாவதார்த்திஸ் ததாவாஞ்சா தாவந்மோஹ: ததா அஸுகம்-யாவந் ந யாதி பரணம் த்வாம் அனேஷாகநா நம்!!-விஷ்ணு புராணம் – 1-19-13. அசேஷாக நாசநம் – எல்லாப் பாபங்களையும் போக்கடிக்கக் கூடியவரான, த்வாம் உம்மை,யாவத்எதுவரையில், சரணம்- சரணமாக, நயாதி – அடையவில்லையோ,தாவத் – அது வரையில், ஆர்த்தி: (கையில் கிடைத்த பொருள் நாச)மடைவதினால் உண்டான) துக்கமும்,ததா – அப்படியே, வாஞ்சா- புதியஜச்வர்யாதிகளில் ஆசையும், தாவத் – அது வரையில், மோ: – ஆத்மஸ்வரூபத்தை அறியாமையும், தாவத் -அதுவரையில், ததா – அப்படியே, அஸுகம் – பகவதநுப்வமில்லாமையும்.)(ப்ரபத்தே : கவசிதபயேவம் பராபோ ந வித்யதே ஸா ஹி ஸர்வத்ர ஸர்வேஷாம் ஸர்வகாமபலப்ரதா உபாயபக்தி: ப்ராரப்த வ்யதிரிக்காகநாலிநீஸாத்யபக்திஸ் து ஸாஹந்த்ரீப்ராரப்தஸ்யாபி பூய 11)ஸநத் குமார ஸம்ஹிதை – ப்ரபத்தே: – ப்ரபத்திக்கு, க்வசிதபி – ஓர் இடத்திலும், ஏவம் – இவ்விதமாக, பராபேக்ஷா – வேறு உபாயத்தைப் பற்றிய அபேக்ஷை, ந வித்யதே – இல்லை. ஹி-எந்தக் காரணத்தினால், ஸா – அந்த ப்ரபத்தி, ஸர்வத்ர – எல்லா இடத்திலும், ஸர்வேஷாம் – எல்லோருக்கும், ஸர்வ காம பலப்ரதா-எல்லா இஷ்ட பலங்களையும் கொடுக்கக் கூடியதோ, உபாயபக்தி: -பக்தி யோகம், ப்ராரப்த வயதிரிக்தாகநாசி – பலன் கொடுக்க ஆரம்பித்த காமங்களைத் தவிர மற்ற கர்மங்களை நாசம் செய்யக் கூடியது, ஸா – அந்த, ஸாத்ய பக்திஸ்து – ப்ரபத்தியோ எனில், ப்ராரப் தஸ்யாபி – பலன் கொடுக்க ஆரம்பித்த கர்மத்திற்கும், பூயஸ் – மிகவும் பெரிதான, ஹந்த்ரீ – நாசம் செய்யக்கூடிய காரணம்.)

ஸத்கர்ம நிரதாஸ்த்தா: ஸாங்க்யயோகவிதஸ்ததா|-நார்ஹந்தி ரணஸ்தஸ்ய கலாம் கோடிதமீமபி1-லக்ஷ்மீ தந்த்ரம் – 17-62. ஸத்கர்ம நிரதா: – நல்ல கர்மங்களில் நிஷ்ட்டையுடையவர்களும் (கர்ம யோகிகளும்), சுத்தா : – அதின்பலமான மனதின் சுத்தியை அடைந்தவர்களும், ததா – அப்படியே, ஸாங்க்ய யோகவித – ஜ்ஞான யோகம் பக்தி யோகம் இவைகளை அநுஷ்ட்டிப்பவர்களும், சரணஸ்த்தஸ்ய – சரணாகதியில் நிஷ்ட்டை யுடையவனுடைய, கோடிதமீம் – கோடியில் ஒன்ாகிய, கலாமபி -பாகத்தையும். நார்ஹந்தி – பெறமாட்டார்கள்.)இத்யாதிகளில் சொல்லுகிறபடியே வர்ண விரேபஷாதி ரஹிதமாய், அத்யந்தாகிஞ்சநருக்கும் அதிகரிக்கையாலும், உபாயாந்தர பர்யந்த ஸகல ஸாதகமாகையாலும், ஆர்த்தியில் தாரதம்யத்துக்கு அநுகுணமாக ப்ராரப்த கர்மத்தையும்
கழிக்க வற்றாகையாலும், ஸுகரமாகையாலும், துஷ்கர பரிகரநிரபேக்ஷமாய் ஸக்ருத் கர்த்தவயமாகையாலும், ஸர்வருக்கும் ஸ்வாபிமத அவிளம்பித பலஸித்திக்கு இதுவே ப்ரதாநம் என்றபடி.-இதில் சொன்ன ப்ரபத்தி ரூபமான ஸ்வரக்ஷாபரஸமர்ப்பணமாவ து ஸ்வரக்ஷணார்த்த ஸ்வப்ரவருத்த்யபிமாந நிவ்ருத்தியோடும் ப்ரார்த்தனையோடும் கூடின ஸரண்யைக ஸாத்யஸ்வரக்ஷணத்வ அத்யவஸாய விஸஷம்.

————-

8-இது ஸபரிகரமாக ஸக்ருத் கர்த்தவ்யம் ‘ என்றது-ஸக்ருத் கருத; ஸாஸ்த்ரார்த்த :-சாஸ்த்ரார்த்த: – சாஸ்த்ரத்தின் அர்த்தமான கர்மம், ஸக்ருத் க்ருத: – ஒரு தடவையாலே செய்யப்பட்டதாகிறது.)என்கிற ஸாமாக்ய ப்ராப்தியாலும்,-ஆவருத்தி: அஸகருதுபதேஸாத் )
சாரீரக ஸூத்திரம் – 4- 1 – 1. அஸக்ருத் – அனேகம்தடவை, ஆவ்ருத்தி: – ஆவருத்தி செய்யத் தக்கது. உபதேசாத்அப்படி சாஸ்த்ரத்தில் சொல்லப்பட்டிருப்பதினால்.என்கிற வியேஷஹேது இல்லாமையாலும்,-ஸக்ருதேவ ப்ரபந்நாய தவாஸ்மீதி ச யாசதே 1 அபயம் ஸர்வபூதேப்ய: ததாம்யேதத் வ்ரதம் மம-யுத்த – 18 – 33. ஸக்ருதேவ – ஒரு தடவையே ப்ரபந்நாய – ப்ரபத்தி செய்தவனுக்கும், தவ – உனக்கு, அஸ்மி – தாஸனாக ஆகிறேன் இதி – என்று,யாசதே ச – பரார்த்திக்கிறவனுக்கும், ஸர்வபூதேப்ய: – எல்லாப்ராணிகளுக்கும், அன்றிக்கே எல்லா ப்ராணிகளிடமிருந்தும், அபயம் – பயம்இல்லாமையை, ததாமி – கொடுக்கிறேன், ஏதத் – இது, மம – என்னுடைய, வரதம்)ஸக்ருதேவஹி லாஸ்த்ரார்த்த: க்ருதோயம்தாரயேந் நரம்-லக்ஷ்மீதேந்த்ரம் – 17- 19. அயம் – இந்த . சாஸ்த்ரார்த்த: -சாஸ்த்திரத்தின் அர்த்தமான ப்ரபத்தி, ஸக்தேவ – ஒரு தடவை, கருத செய்யப்பட்டதாய்க் கொண்டு, நரம் – மனிதனை,தாரயேத் – ஸம்ஸாரத்தைத் தாண்டி வைக்கும்.)நநு ப்ரபந்ந: ஸக்ருதேவ நாத தவாஹமஸ்மீதி ச யாசமாந-ஸ்தோ – 4. நாத – ஓ! நாதனாகிய பகவானே, க்ரு
தேவ – ஒரு தடவை. ப்ரபந்ந: – ப்ரப நனாயும், தவ – உமக்கு, அஹம் – நான், அஸ்மி- தாஸனாக ஆகிறேன், இதி ச – என்றும், யாசமா : – ப்ரார்த்திக்கின்றவன்)ஸக்ருத்ப்ரார்த்தநா மாத்ரேண பேக்ஷிதம் தாஸ்யதி-ஸக்ருத் ப்ரார்த்தநா மாத்ரேண – ஒருதரம் ப்ரார்த்தித்தமாத்திரத்தினால், அபேக்ஷிதம் – இஷ்டத்தை,தாஸ்யதி – கொடுக்கப்போகிறான்.)இத்யாதி ப்ரமாண ஸம்ப்ரதாயங்களாலும், ப்ரபத்தி மந்த்ரங்களில் வர்த்தமாந வயபதேலம் அநுஷ்ட்டாநகால அபிப்ராயமாகையாலும், த்ரெளபதீ விபீஷண கஜேந்த்ர ஸமுக காககபோதாதி வருத்தாந்த விலேஷங்களாலும் ஆநுகூல்ய ஸங்கல்பாத்யங்க பஞ்சகஸம்யுக்தமான பரஸமர்ப்பணத்துக்கு ஸக்ருதநுஷ்ட்டாநமே லாஸ்த்ரீயம் என்றபடி.

(9) இஸ்ஸமர்ப்பணத்தைத் தான் அநுஷ்ட்டிக்கவுமாம், தனக்காக ஆசார்யாதிகள் அநுஷ்ட்டிக்கவுமாம் ‘ என்றது-சாஸ்த்ரபலம் ப்ரயோக்தரி-பூர்வமீமா-3-7-18 சாஸ்த்ரபலம் சாஸ்த்ரத்தின் ப்ரயோ ஜனம் அதாவது ஒரு கர்மத்தை அநுஷ்டிப்பதினால் உண்டாகும் பலன், ப்ரயோக்தரி – அந்தக் கர்மத்தை அநுஷ்டித்தவனிடத்தில் உண்டாகிறது.)என்று வ்யவஸ்தை உண்டாயிருக்கச் செய்தே புத்ராதிகளைப் பற்றவும் பித்ராதிகள் சில ஸுக்ருதங்களை அநுஷ்டிக்கை சாஸ்த்ரீயமாகையாலும்,-(ஸதிஸது பகவாங் அ ே ஷ பும்ஸாம் ஹரி: அபஜந்மஜராதி காம்ஸம்ருத்திம்-விஷ்ணு புராணம் 6. ஸ: – அந்தப் பகவானாகிய, ஹரி: – விஷ்ணு, அசேஷபும்ஸாம் – எல்லா ஜீவாத்மாக்களுக்கும், அபஜந்ம
ஜராதிகாம் – பிறப்பு கிழத்தனம் முதலியவை இல்லாததான, ஸம்ருத்திம் – ஸம்பத்தை, திசது – கொடுக்கட்டும்.)(மயாத்ய பக்த்யா பரமேஸ்வரேமே ஸ்ம்ருதே ஜகத்தாதரி வாஸுதேவே-செளநகஸம்ஹிதை. ஜகத்தாதரி-லோகங்கனை ஸ்ருஷ்டித்தவரான, பரமேச்வரேசே – ஈசுவரர்களுக்கெல்லாம் ஈசுவரனான, வாஸ தேவே. – வாஸ தேவன், மயா – என்னால், அத்ய – இப்பொழுது, பக்த்யா – பக்தியினால், ஸ்ம்ருதே (ஸதி) – த்யானம் செய்யப்பட்டிருக்கும் பொழுது)என்கிற பராபர பௌநக வாக்யங்களாலும்,மற்றும்பலமஹர்ஷிகளுடைய வருத்தாந்த ரகாரத்தாலும், ப்ரஹ்லாத விபீஷணதஸரத த்ரௌபதீ ப்ரப்ருதிகள் ஸ்வஸம்பந்திகளிலே சிலரைப்பற்ற ப்ரபத்தி பண்ணக் காண்கையாலும், லோகத்திலும்
(இவ்)அநுஷ்ட்டாநம் உண்டாகையாலும்,)வேதம் வல்லார்களைக் கொண்டு விண்ணோர் பெருமான் திருப்பாதம் பணிந்து இவள் நோயிது தீர்த்து (திருவாய் – 4-6 – 8)என்று ஆழ்வார் அருளிச் செய்த ந்யாயத்தாலும்,)வில்லிபுதுவை விட்டுசித்தர் தங்கள் தேவரை
வல்ல பரிசு வருவிப்பரேல் அது காண்டுமே -10-10.
-என்று நாச்சியார் அருளிச் செய்கையாலும், இப்படிப் பூர்வாசார்ய அநுஷ்ட்டாந ஸம்ப்ரதாயங்களாலும் இப்ரபத்தியைத்தான் அநுஷ்ட்டித்தால் பலஸித்தி யுண்டாமாப்போலே தனக்காக ஆசார்யாதிகள் அநுஷ்ட்டித்தாலும் பலஸித்திக்குக் குறைவில்லைஎன்றபடி.)த்வய்யாசார்யை: விநிஹிதபராஸ்தாவகா ரங்கநாத-ந்யாஸ திலகம் 11. ரங்கநாத – ஓ! ரங்கநாதனே, த்வயி -உம்மிடத்தில், ஆசார்யை: – ஆசார்யர்களினால், விநிஹிதபரா: -ஸமர்ப்பிக்கப்பட்ட பரத்தையுடையவர்களரன, தாவகா : – உன்னை ஆச்ரயித்தவர்களும் (உமது கைங்கர்யத்திலே ஆசையுடையவர்கள் முதலியவர்களும் எனக்கு ருசிக்கட்டும் என்றுமேல்)(அந்தோநந்த க்ரஹணவக:-ந்யாஸ திலகம் -21. அநந்த – குருடனல்லாதவனை, கா ஹண – பிடித்துக் கொள்ளுவதினால், வசக: – அவனுக்குப்பின் செல்லுகிற, அந்த: – குருடன் (எப்படி வழி நடக்கிறானோ , நொண்டி யாயிருப்பவன் ஓடத்தின் நடுவில் வைக்கப்பட்டவனாய் ஓடக்காரனால் எப்படி அக்கரைக்குக் கொண்டு போகப்படுகிறானோ, அப்படியே தயாளுவான ஆசார்யன் எனக்கு உம்மை அடைகிற விஷயத்தில் சக்தியுடையவனாகிறான் என்றுமேல்)என்கிற ந்யாஸ திலகத்தில் ல்லோகங்களையும் இங்கே அநுஸந்திப்பது.

————-

(10)இதற்குக் கோலி(ரி)ன பலத்தைப் பற்றப் புந: ப்ரபத்தி முதலான கர்த்தவ்ய ஸேஷமில்லை ‘ என்றது-( ஸக்ருதேவ ப்ரபங்நஸ்ய க்ருத்யம் நைவாஸ்தி கிஞ்சந-க்ருதேவ – ஒரே தடவை, ப்ரபங்கஸ்ய – ப்ரபத்தி செய்த வனுக்கு, க்ருத்யம் செய்ய வேண்டியது, கிஞ்சந – ஒன்றும், நை வாஸ்தி இல்லை.)இத்யாதிகளிற்படியே செய்த வேள்வியனான இவனுக்கு ஸ்வாபிமத பல விஸேஷத்தைப் பற்ற ஸாங்கமாகப் பண்ணின ப்ரபத் திக்கு ஸ்வரூபாவ்ருத்தி ரூபமாகவாதல் அங்கமாகவாதல் ஒரு கர்த்தவ்ய ஸேஷமில்லாமையாலே ஸ்வாதிகாராநுகுணமாக ஸ்வாமி ஸந்தோஷாதிஸய ஹேதுவாய்க் கொண்டு ஸ்வயம் ப்ரயோஜநமான கைங்கர்ய விஸேஷங்களுக்கும், பக்தி தத்த்வ ஜ்ஞாநாதிகளைப் பற்றவாதல், பகவத் பாகவத ஸம்ருத்யாதிகளைப் பற்றவாதல், விளம்பா மதையாலேயாதல்,-அபாயஸம்ப்லவே ஸத்ய: ப்ராயஸ்சித்தம் ஸமாசரேத் ப்ராயஸ்சித்திரியம் ஸாத்ர யத் புநர் ஸ்ரணம் வ்ரஜேத்-லக்ஷ்மீதந்த்ரம்-17-91. அபாய ஸம்ப்லவே – பாபம் நேர்ந்ததேயானால், ஸத்ய: – அப்பொழுதே, ப்ராயச் சித்தம் – ப்ராயச் சித்தத்தை. ஸமாசரேத் – செய்ய வேண்டும், இயம் – இந்த, ப்ராயச்சித்தி – ப்ராயச் சித்தமும், புந:- மறுபடியும், சரணம் வ்ரஜேத் -சரணமாக அடையவேண்டும், இதி யத் – என்று சொல்லப்படுகிற எந்தப் புரு:ப்ரபத்தியோ, ஸா – அது தான்.)என்கிற நைமித்திச வேஷத்தாலேயாதல், புந: ப்ரபத்தி பண்ணுமதுக்கும் பூர்வ ப்ரபத்தியினுடைய நைரபேக்ஷயத்தோடு விரோதமில்லை என்றபடி.

———————-

(11) . இப்படி கருதக்ருத்யனான ப்ரபங்கனுக்கு வர்ணாஸ்ரமாதி தர்மங்கள் ஸ்வதந்த் ராஜ்ஞாஸித்தங்களான கைங்கர்ய விஸேஷங்கள்’ என்றது-மற்றொரு பல விஸேஷத்தைப் பற்றவன்றிக்கே அகரணத்தில் ஆஜ்ஞாதி லங்கந தோஷம் வரும்படிகளாய்-செய்யேல் தீவினை என்று அருள் செய்யும்–திருவாய் மொழி – 2-9 – 3-என்று ஸ்வதந்த்ர பகவதாஜ்ஞாரூப லாஸ்த்ர விஹிதங்களான வர்ணாஸ்ரமாதி தர்மங்கள் தத்த்வ ஹித நிஷ்கர்ஷமுடையனாய்-(தேவர்ஷி பூதாத்ம ருணாம் பித்ரூணாம்-ந கிங்கரோ நாயம் ரிணீச ராஜங் ஸர்வாத்மநா யஸ்ரணம் மரண்யம் நாராயணம் லோக குரும் ப்ரபந்ந: II-பாகவதம் – 11-5 -41. ராஜந்-ஓ! ராஜாவே, ய:- எவன் சரண்யம் – சரணமாக அடையக் கூடியவனாயும், லோக குரும் – லோகங்களுக்கெல்லாம் குருவாயும் இருக்கிற, நாராயணம் – நாராயணனை, ஸர்வாத்மநா – எல்லா ப்ரகாரத்தாலும், சரணம் ப்ரபந்ந: -சரணமாக அடைந்தானோ, அயம் – இவன், தேவர்ஷிபூதாத்மந்ருணாம்-தேவதைகள், ரிஷிகள், ப்ராணிகள், தான், மனிதர்கள், இவர்களுக் கும், பித்ரூணாம் – பித்ருக்களுக்கும், ந கிங்கர: : வேலைக்காரனுமல்ல,
ந ரிணீ ச – கடன்காரனுமல்ல.)இத்யாதிகளிற்படியே அந்ய பஜநாதி தோஷரஹிதனான இவனுக்கு பக்தி வஞ்சநம் பண்ணாதே அவர்ஜநீயங்களான ஸ்வாமியுகந்த கைங்கர்யம் என்றபடி.

பகவத் கைங்கர்ய ரதியான ப்ரபங்கனைப் பற்றவே-(உபாயாபாய ஸந்த்யாக மத்யமாம் வருத்திமா ரித: |மாமேவ ரணம் ப்ராப்ய மாமேவாந்தே ஸமல்நுதே-லக்ஷ்மீதந்த்ரம். உபாய அபாய ஸந்த்யாகீ – (பலன்களுக்கு உபாயங்களான) காம்ய கர்மங்களையும், (அநிஷ்ட பலத்திற்குக்காரணமான ) பாபத்தையும் விட்டவனாய், மத்யமாம் – நடுவான, வ்ரு த்திம் – நிலையை, ஆச்ரித – அடைந்தவனாய், மாமேவ – என்னையே, சரணம்ப்ராப்ய – சரணமாக அடைந்து, மாமேவ – என்னையே, அந்தே- கடைசியில், ஸமச்நுதே -அநுபவிக்கிறான்.)என்றும்,அவிப்லவாய தர்மாணாம் பாலநாய குலஸ்யச 1 ஸங்கரஹாய ச லோகாநாம் மர்யாதா ஸ்த்தாபநாய ச || ப்ரியாய மம விஷ்ணோச தேவதேவஸ்ய லார்ங்கிண: 1 மநீஷீ வைதிகாசாரம் மநஸாபி நலங்கயேத் II-லக்ஷமீதந்த்ரம், 17 – 93-94. தர்மாணாம் – தர்மங்களுக்கு அவிப்லவாய – நாசம் உண்டாகாமல் இருப்பதற்காகவும், குலஸ்ய -குலத்தை,பாலநாய ச – ரக்ஷிப்பதற்காகவும், லோகாநாம் – லோகங்களை,ஸங்க்ரஹாய – சேர்ப்பதற்கும், மர்யாதாஸ்த்தாபநாயச -வர்ணாச்ரமங்களுடைய வ்யவஸ்தைபை ஸ்த்தாபிப்பதற்கும், தேவதேவ ஸ்ய -தேவதைகளுககெல்லாம் தேவனயும், சார்ங்கிண: – சார்ங்கம் என்னும் வில்லைத் தரித்துக் கொண்டவனாயும் இருக்கிற, விஷ்ணோ:- விஷ்ணுவிற்கும், மம ச – எனக்கும், ப்ரியாய – ப்ரியம் உண்டாவதற் காகவும், மநீஷீ – புத்திமானாகிய மனிதன், ஸ்வதிகாசாரம் – வேதங்களில் சொல்லப்படுகிற தர்மங்களின் அநுஷ்ட்டாகத்தை, மநஸாபி -மனதினாலும்கூட, நலங்கயேத் – தாண்டக்கூடாது.)என்றும் சொல்லுகிற ப்ரமாண வர்கத்தையும், ஸ்ரீபாஷ்யகாராதிக (ள்)ளும் அருளிச்செய்த நித்யங்களையும் இங்கே அநுஸந்திப்பது.

———-

(12) ‘ இவனுக்கு ஆஜ்ஞாநுஜ்ஞா ஸித்தங்களான கைங்கர்யங்கள் எல்லாம் ஸ்வயம் ப்ரயோஜநங்கள்’ என்றது–ஆஹாரத்தி ஆசார நியமம் அபராத பரிஹாரம் முதலான
முன்பு சொன்ன ஆஜ்ஞாஸித்தங்களான வர்ணாரமாதி தர்மங்களும்,-பண்டைநாளாலே நின்திருவருளும் பங்கயத்தாள் திருவருளும் கொண்டு நின்கோயில் சீய்த்து’-திருவாய்மொழி – 9-2-1.இத்யாதிகளில்படியே இச்சையுள்ளபோது செய்யவுமாம் அதில்லாதபோது தவிரவுமாம்படி ஏற்றமாகநிற்கிற அந்தராத்ம(ராந்தர )குணாநுஸந்தாந ஸ்துதி ஸங்கீர்த்தந ஸம்மார்ஜ்ஜந உபலேபந மாலாகரண தீபாரோபனாதி கைங்கர்யங்களுமெ(ளெல்லாம் ஸர்வவிதபந்துவான ஸர்வஸ்வாமியினுடைய ஸம்ப்ரீதி ஹேதுவாகையாலே அநுரக்த பார்யாதிகளுடைய ரூஷணாதிகள் போலவும், முகதனுடைய வ்யாபாரங்கள் போலவும்,-(ப்ரஹர்ஷயிஷ்யாமி-ஸ்தோ -48. ப்ரஹர்ஷயிஷ்யாமி ஸந்தோஷிப்பிக்கப் போகிறேன்.)என்னும் ப்ரயோஜநமொழிய மற்றொரு ப்ரயோஜந விஸேஷத்தைக் கணிசிகக வேண்டாதபடி,(துர்கதாவபி ஜாதாயாம்– துர்க்கதெள – கெட்ட தசை, ஜாதாயாமபி – உண்டாயிருந்த போதிலும், (உம் மிடத்திலேயே பக்தி இருக்கவேண்டும்)(காமயே வைஷ்ணவத்வம் து-ஜிதந்தா – 1 – 13. வைஷ்ணவத்வம் – வைஷ்ணவனாபிருக் கையை, காமயே – ஆசைப்படுகிறேன்)ஸர்வேஷு தேச காலேஷு-ஸர்வேஷு – எல்லா., தேச காலேஷு – தேசங்களிலும் காலங்களிலும் (உனக்குக் கைங்கர்யம் செய்யக் கடவேன்) இத்யாதிகளிற்படியே இவைதன்னை(ம்மை)யே உத்தேஸித்து ப்ரவ்ருத்திக்கும்படி ஸ்வரூபேண ஸ்வாதுக்களாயிருக்கும் என்றபடி

———-

(13) கரணாகரணரூபங்களான அபசாரங்கள்புகுந்தாலும் ப்ரபந்நனுக்கு நரகாதிகள் இல்லை ‘ என்றது-அங்கமாகவாதல் ஸ்வதந்த்ரமாகவாதல் பகவத் ப்ரபத்தியைக்
கைமுதலாகப் பற்றின பரமைகாந்திக்கு ப்ரபல ப்ராரப்த துஷ்க்ருத விஸேஷத்தாலே புத்தி பூர்வகமாக அக்ருத்யகரண க்ருத்யாகரண ரூபமான ஆஜ்ஞாதிலங்கநம் பிறந்ததாகில்-(த்ருஷ்டோ தர்மவ்யதிக்ரம: ஸாஹஸம் ச பூர்வேஷாம் தேஷாம் தேஜோவிசேஷேண ப்ரத்யவாயோ நவித்யதே 1-1கெளதம தாம ஸூத்ரம்.-பூர்வேஷாம் – முன்னோர்களுக்கு, தர்மவ்யதிக்ரம்:- தர்மத்தை மீறிநடப்பதும், ஸாஹஸம்ச – ஸாஹஸ கார்யமும், த்ருஷ்ட :- காணப் பட்டிருக்கிறது, )என்னும் விஷயமன்றிக்கே நம்மளவில்-(ததந்வீக்ஷ்ய ப்ரயுஞ்ஜாநஸ் ஸீதத்யவர:-2தேஷாம்- அவர்களுடைய, தேஜோ விசேஷேண – மி.குந்த தேஜஸஸினால், ப்ரத்யவாய:-தோஷம், ந வித்யதே – இல்லை. 2மனு பார்த்து, தத்- அந்தப் பெரியோர்களின் அதிக்ரமத்தை, அந் ய ப்ரயுஞ்ஜாந: – செய்கிற, அவர: – ஜ்ஞாநசக்த்யாதிகளால் தாழ்ந்தவனாயிருக்கும் மனிதன், ஸ்ததி – துக்கப்படுகிறான். )என்னும்படி நிற்கையாலும், தர்மாதிகரமம் பண்ணின மஹாத்மாக் களுககும் ஸுக்ருத விநாபாதி ப்ரத்யவாயம் சொல்லுகையாலும், அவ்வக்ருத்யகரணங்கள் ப்ரத்யவாய ஹேதுக்களாய் நின்றால்-ஸ்வபுருஷமபிவீக்ஷ்ய பாஹஸ்தம் வததி யம: கில தஸ்ய கர்ண மூலே பரிஹர மது தநப்ராப நாங் ப்ரபுரஹமந்ய நகுணாம் ந வைஷ்ணவாநாம் !-வாமந புராணம் – 94 31. பாசஹஸ்தம் – பாசத்தைக் கையில் வைத்துக் கொண்டிருக்கிற, ஸ்வபுருஷம் தன்னுடைய வேலைக் காரனை, அபிஷீஷ்ய பார்த்து யம: – யமன், தஸ்ய- அவனுடைய,கர்ணமூலே – காதின்ஸமீபத்தில், வததி – சொல்லுகிறான், மது தநப்ரபங்நாந்- மதுவைக் கொன்றவனாகிய பகவானை ஆச்ரயித்தவர்களை, பரிஹர – விட்டுவிடு, அஹம்-நான், அந்ய ந்ருணாம் – வேறுமனிதர்களுக்கு ப்ரபு: – யஜமாநன், வைஷ்ணவாநாம் -வைஷ்ணவர்களுக்கு, ந -(யஜமாநன்) அல்ல.

(தேவம் சார்ங்கதரம் விஷ்ணும் யே ப்ரபந்நா: பராயணம் ந தேஷாம் யமஸாலோக்யம் ந ச தே நரகௌக :-வாமந் புராணம் – 9443. யே – எவர்கள், சார்ங்கதரம் சார்ங்கத்தைத் தரித்துக்கொண்டவனாயும், தேவம்-தேவனாயும் இருக்கிற, விஷ்ணும் – விஷ்ணுவை, பராயணம் – பரமகதியாக, ப்ரபந்நா:ஆச்ரயித்திருக்கிறார்களோ, தேஷாம் – அவர்களுக்கு, யம ஸாலோக்யம்-யமலோகத்தில் வஸிக்கும் தன்மை, ந – இல்லை, தே – அவர்கள்
நரகௌகஸ் : நரகத்தில் இட முடையவர்களும் அதாவது வஸிப்பவர்களும், ந – அல்ல.)(யே ந்ரும்ஸா: துராத்மா : பாபாசார ரதாஸ்ததா தேபி யாந்தி பரம் தாம நரா நாராயணாரயா:-யே – எந்த மனிதர்கள், ந்ருசம்ஸா: – தயை இல்லாதவர்களோ, துராத்மா : – கெட்ட ஸ்வபாவமுடையவர்களோ, ததா – அப்படியே,பாபாசாரரதா: – பாபத்தைச் செய்வதிலேயே ஆசையுடையவ.களோ,தே – அந்த, நரா :அபி – மனிதர்களும், நாராயணாச்ரயா: நாராயணனை ஆச்ரயித்தவர்களாய்க் கொண்டு, பரம் – உயர்ந்ததாம- ஸ்தாநத்தை, யாந்தி – அடைகிறார்கள்.)இத்யாதிகளில்படியே நரகாதி மஹாக்லேசம் வாராதே யதா ஸம்பவம் அநுதாப ஸ்பிக்ஷா உபக்லேயங்களாலே அபராத நிஸ்தாரமுண்டாம் என்றபடி.

கிங்கரா தண்டபாபௌ வா நயமோ ந ச யாதநா : 1ஸமர்த்தாஸ்தஸ்ய யஸ்யாத்மா கோவாலம்பநஸ் ஸதா ||-யஸ்ய – எவனுடைய, ஆத்மா – ஆத்மாவானது, ஸதர் – எப்பொழுதும், கேசவாலம்ப :- பகவானை ஆச்ரயித்திருக்கிறதோ, தஸ்யஅவனுக்கு, (அதாவது அவனுக்குத் துக்கத்தை உண்டாக்கும் விஷயத்தில்), கிங்கரா: – கிங்கரர்களும், யம – யமனும், தண்ட பாசெளவாயமனுடைய தண்டமும் பாசமும்,யாதநா : -நரக துக்கங்களும், நஸமர்த்தா: – சக்தி உடையவர்களல்ல.-‘நமன்கூறு செய்து கொண்டிறந்த குற்றமெண்ணவல்லனே’-திருச்சந்தவிருத்தம் 116–நலியும் நரகமும் நைந்த நமனுக்கு இங்கு யாதொன்றுமில்லை-திருவாமொழி 5- 2-1-இத்யாதிகளையும் இங்கே அநுஸந்திப்பது..

————–

(14) ராஜகுமாரனுக்கும் அவதாநம் பண்ணி நடக்க வேண்டுமா போலே, லகு ப்ரத்யவாயமும் வாராமைககாக அபசாரங்கள்-தூர பரிஹரணீயங்கள் ‘ என்றது-(பிதாஸி லோகஸ்ய சராசரஸ்ய த்வமஸ்ய பூஜ்யசகுருர் கரியாந்)இத்யாதிகளில் சொல்லப்பட்ட ஸ்வபாவங்களு (ளையு)டைய பகவான் இவனைப் புத்ராதிகளைப் போலே பக்ஷபாதியாய் ரக்ஷிக்கும் படி நிற்கிற பாகவதனுக்கு யம விஷயகமநம் இல்லை என்றும் அபசாரங்கள் புகுந்தால் அவை நீங்குகைக்குச் சில உபக்லேஸங்கள் அளவும் பலமாய் விடும் என்றும் சொல்லுகிற ஸ்த்ரார்த்தங்களின்படியே புத்தி பூர்வாபராதம் பிறந்தால் அநுதாபம் பிறந்து, புந: ப்ரபத்தி பண்ணாதபோது க்ஷாரூப ப்ரத்யவாய விஸேஷங்கள் வரும்படியாயிருக்கையாலே,இப்படி ஈஸ்வர நிக்ரஹங்களுக்கு இலக்காகாமைக்காக,

த்வாரி யஸ்ய த்வாராணி ஸுகுப்தாநி மநீஷிண: 1 உபஸ்தம் உதரம் பாணி: வாக் சதுர்த்தீ ஸ வை புமாந் |-யஸ்ய – எந்த, மநீஷிண: – விவேகியாகிய புருஷனுக்கு, உபஸ்தம், உதரம்- வயிறு, பாணி: – கை, சதுர்த்தி – நான்காவதானவாக்கு – நாக்கு இவைகளான, வாராணி-பாபம் வருவதற்கு வழியானசத்வாரி-நான்கு இந்த்ரியங்களும், குப்தாநி – காப்பாற்றப் பட்டிருக்கிறதோ ஸவை – அவனே, புமாந் – மனிதன்.-இத்யாதிகளிற் சொன்ன அவதாந விஸேஷமுடையவனாய் அநாகதாநவீ (வேஷ)ணம் பண்ணின இவன்,-” நயவேன் பிறர் பொருளை நள்ளேன் கீழாரோடு ‘–முதல் திருவந்தாதி 64 ‘ செய்யாதன செய்யோம் தீக்குறளை சென்றோதோம்–திருப்பாவை 2-இத்யாதிகளிற்படியே ஏற்கவே அபராதங்கள் புகுராதபடி வர்த்திக்க ப்ராப்தம் என்றபடி.-(விஹிதே ப்ரதிஷித்தே ச யதாமதி யதாபலம் த்வய்யாஹிதபர: ஸ்ரீமந் வர்த்தே ராஜகுமாரவத் !-விஹிதே – சாஸ்த்ரங்களில் விதிக்கப்பட்ட கார்யத்திலும், ப்ரதிஷித்தே ச – தடுக்கப்பட்ட கார்யத்திலும் யதாமதி – என்னுடைய புத்திக்குத் தக்கபடியும் யதாபலம் – சக்திக்குத் தக்கபடியும், ஸ்ரீமக் ச்ரிய:பதியாகிய நாராயணனே ! த்வயி – உம் டத்தில், ஆஹிதபர: – ஸமர்ப்பிக்கப்பட்ட பரத்தை யுடையவனாக, ராஜ குமாரவத்- ராஜ குமாரனைப்போலே, வர்த்தே- இருக்கிறேன்.)என்கிற வசநத்துக்கு அவய கர்த்த யங்களில் ப்ரவ்ருத்தி ரூபமாகவும் பரிஹரணீயங்களில் நிவ்ருத்தி ரூபமாகவும் பண்ண வேண்டும் வ்ருத்தியில் எனக்குள்ள ஜ்ஞாந பலங்களுக்கு அநுரூபமாக உபாய புத்தியையும் அதிலங்கநத்தில் பரம பல ப்ரதிபந்தக புத்தியையும் விட்டு ப்ரவர்த்தியா நின்றேன் என்கையிலே தாத்பர்யம்.

————-

(15) ப்ரபத்திக்குக் கோலி(ரி)ன பலத்திற்கு ஒன்றாலும் ப்ரதிபந்தகமில்லை ‘ என்றதுமித்ர பாவேந ஸம்ப்ராப்தம் நத்யஜேயம் கதஞ்சந தோஷோ யத்யபி தஸ்ய ஸ்யாத் ஸதாமே தகர்ஹிதம் !!-யுத்த – 18 – 3 மித்ரபாவேக – ஸ்நேஹிதனா யிருக்க வேண்டும் என்கிற எண்ணத்தினால், ஸம்ப்ராப்தம் – நன்றாய் வந்து அடைந்தவனை, கதஞ்சந – ஒரு விதத்தினாலும், ந த்யஜேயம்- விடமாட்டேன். தஸ்ய- அவனுக்கு, தோஷ – தோஷம், யத்யபி ஸ்யாத் – இருந்தாலும் இருக்கட்டும், ஏதத் – இது (தோஷமிருப்பவனையும் காப்பாற்றுவது
என்பது), ஸதாம் – பெரியோர்களுக்கு, அகர்ஹிதம் – நிந்திக்கத்தகாதது (ஸ்தோத்ரம் பண்ணத்தக்கது என்றபடி)(கெளந்தேய ப்ரதிஜா ஹி ந மே பக்த: ப்ரணம்யதி-கீதை – 9-31 கெளந்தேய – ஓ! அர்ஜுந, மே – என்னுடைய, பக்த:- பக்தன், ந ப்ரணச்யதி – நாசமடைகிறதில்லை என்கிற விஷயத்தில், ப்ரதிஜா ஹி – நீ ப்ரதிஜ்ஞை செய்.)(ஸர்வதர்மாந்பரித்யஜ்ய மாமேகம் பரணம் வ்ரஜ | அஹம் த்வா ஸர்வபாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மாசுச: 11-கீதை 18 – 66 ஸர்வதர்ம ந்- எல்லாத் தர்மங்களையும், பரித்
யஜ்ய – விட்டுவிட்டு, ( அங்கமாக அநுஷ்ட்டிக்காமல் என்றபடி), மாமேகம் – என்னை ஒருவனையே, சரணம் – சரணமாக, வரஐ-அடை,அஹம்-நான், த்வாம் – உன்னை, ஸர்வபாபேப்ய: – எல்லாப் பாபங்களிலிருந்தும் மோக்ஷயிஷ்யாமி – விடுவிக்கிறேன், மா சுச: – நீ துக்கிக்காதே,)(மாமேகமேவ ரணமாத்மா நம் ஸர்வதேஹிநாம் | யாஹி ஸர்வாத்ம பாவேந யாஸ்யஸி ஹ்யகுதோபயம் || –ஸர்வதேஹிநாம் – எல்லா ப்ராணிகளுக்கும், ஆத்மாநம்-ஆத்மாவாகிய, மாம்- என்னை,ஏகம்-ஒருவனையே,ஸர்வாத்மபாவேந்
எல்லாவற்றிற்கும் இவன் அந்தராத்மா என்கிற புத்தியினால், சரணம்யாஹி – சரணமாக அடை, அகுதோ பயம் – ஒரு ப்ராணியிடத்திலிருந்தும் பயமில்லாமையை, யாஸ்யஸி – அடையப்போகிறாய்.) என்கிறபடியே சரண்யாபிப்ராய விசேஷத்தாலும்,)

(தேஷாம் து தபஸாம் ந்யாஸமதிரிக்தம் தப ஸ்ருதம் -அஹிர்புத்ந்யஸம்ஹிதை- 37 – 36 தேஷாம் – அந்த, தபஸாம்-தபஸ்ஸுக்களுக்குள், ந்யாஸம் – சரணாகதி, அதிரிக்கம் – மேற்பட்ட
தான,தப :- தபஸ்ஸாக, ச்ருதம் – சருதிகளில் சொல்லப்பட்டிருக்கிறது)என்கிற ப்ரபாவாதி யத்தாலும்,-(நேஹாபிக்ரம நாலோஸ்தி ப்ரத்யவாயோ நவித்யதே ஸ்வல்பமப்யஸ்ய தர்மஸ்ய த்ராயதே மஹதோ பயாத் | -கீதை – 2 – 40 இஹ – இந்தநிவ்ருத்தி தர்மமாக அனுஷ்ட்டிக்கப்படுமதில், அபிக்ரம நாச ள் – ஆரம்பிக்கப்பட்டதற்கு நாசம், நாஸ்தி-
இல்லை, (நடுவில் விட்டுப்போனாலும்), ப்ரத்யவாய : – தோ ஷம், நவித்யதே காணப்படவில்லை, – அஸ்ய- இந்த. தர்மஸ்ய – நிவ்ருத்திதர்மத் தினுடைய, ஸ்வல்பமபி, – கொஞ்சமும், மஹதோபயாத் – பெரிய பயத்திலிருந்து, த்ராயதே – காப்பாற்றுகிறது.) என்கிற நிவ்ருத்திதர்மாந்தரத்தில் சொன்ன நிஷ்கர்ஷம் நிஷ்காமனுடைய ப்ரபத்தியில் கைமுதிக நயாய ஸித்தமாகையாலும்,)(யாசநாத் நயதி தருவம்-யாசநாத் -(இதர பலன்களை யாசிப்பதினால்,த்ருவம் -நிச்சயமாக, நச்யதி -நாசமடைகிறான்.)(உபாயாபாய ஸம்யோகே நிஷ்ட்டயா ஹீயதேநயா-உபாயாபாய ஸம்யோகே – காம்யகர்மங்களுடையவும் நிஷித்த கர்மங்களினுடையவும் ஸம்பந்தம் ஏற்பட்டால், அநயா – இந்த, நிஷ்ட்டயா நிஷ்ட்டையினால், ஹீயந்த – குறைந்துவிடுகிறான்.)என்றது(ஏஷா ஸா வைதிகீ நிஷட்டாஹி உபாயாபாய மத்யமா-ஏஷா – இது, ஸா – அப்படிப்பட்ட, வைதிகீ- வேதத்தில் சொல்லப்பட்ட, உபாயாபாய மத்யமா – உபாயம் அபாயம் இவை இரண்டிற்கும் நடுவில் இருக்கிற, நிஷ்ட்டா – நிலைமை.)என்கிறபடியே உபாயாபாய த்யாக விரிஷ்ட மத்யம வருத்தியினுடைய விரேஷண வைகல்ய மாத்ர பரமாகையாலும்,

(ராக்ஷஸாநாம் அவிஸ்ரம்பாத் ஆஞ்ஜநேயஸ்ய பந்தநே யதா விகளிதா ஸத்ய: த்வமோகாப்யஸ்த்ரபந்தநா | ததா பும்ஸாமவிஸ்ரம்பாத் ப்ரபத்தி: ப்ரச்யுதா பவேத்
தமாத் விஸ்ரீம்பயுகதாநாம் முக்திம் தாஸ்யதிஸாசிராத் ;-ஸநத்குமார ஸம்ஹிதை
ஆஞ் நேயஸ்ய பந்தநே – ( ப்ரஹ் மாஸ்த்ரத்தினால்) ஹனுமாரைக்கட்டுவதில், ராக்ஷஸாநாம் – ரா ஸர் களினுடைய அவிஸ்ரம்பாத் – நம்பிக்கை யில்லாமையினால், அமோ காபி – வீண் போகாததாய் இருந்தபோதிலும், அஸ்த்ரபந்தநா-அஸ்த் ரத்தின் கட்டு, யதா – எப்படி, ஸத்ய: – அப்பொழுதே, விகளிதா – நழு விப்போய் விட்டதோ, ததா – அப்படியே, பும்ஸாம் – மனிதர்களுடைய, அவிஸ்ரம்பாத் – நம்பிக்கையில்லாமையினால், ப்ரபத்தி: – ப்ரபத்தியா
னது, ப்ரச்யுதா – நழுவினதாக, பவேத் – ஆகும், தஸ்மாத் – ஆகையி னால், விஸ்ரம்பயுக்தாநாம் – நம்பிக்கையுடையவர்களுக்கு,ஸா – அந்த, ப்ரபத்தி, அசிராத் – சீக்ரத்திலேயே, முக்திம் – மோஷத்தை,தாஸ்யதி- கொடுக்கப்போகிறது.) என்றது ப்ரபத்த்ய ஷ்ட்டாங் காலத்தில் விஸ்வாஸ ரூபாங்க வைகல்ய பரிஹார பரமாகையாலும்,

(யஜ்ஞோ அந்ருதேந க்ஷரதி தப: ‘க்ஷரதி விஸ்மயாத் ஆயு : விப்ராவமாநேந தாநம் க்ஷரதி கீர்த்தநாத் |-மனுஸ்ம்ருதி – 4 – 237 யஜ்ஞ: – யாகம், அந்ருதேந – பொய் சொல்லுவதினால், ரதி – நாசம் அடைகிறது, தப: – தபஸ்ஸு, விஸ் மயாத் – கர்வத்தினால், க்ஷரதி,ஆயு: – ஆயுஸ், விப்ராவமாநேந-ப்ராஹ்மணர்களை அவமதிப்பதினால், க்ஷரதி, தா நம் – தாநம் செய்வது, கீர்த் தநாத்- தானே சொல்லிக்கொள்ளுவதினால், க்ஷரதி-இத்யாதிகளில் போலே மற்றும் ப்ரபத்திக்கு விரேஷித்து ப்ரதிபந்தகாதிகளைச் சொல்லுவதொரு விபேஸஷ வசநமில்லா
மையாலும், லோகவேதங்களில் ஓர் இடத்திலும் ஸமர்த்த காருணிக விஷய ரணாகதிக்குப் பலஹாநி காணுணாமையாலும், அபவாத பீதரான ஸ்ரீ பரதாழ்வான்-சேஷ்யே புரஸ்தாத் பலாலாயா-அயோ – 111-14 சாலாயா (ஆச்ரமத்தின் ) பர்ணசாலையின்,vபுரஸ்தாத் – முன் பாகத்தில், சேஷ்யே- படுத்துக்கொள்ளபோகிறேன்.-(ரஸா யாசதஸ்தஸ்ய வசநம் நகருதம் மயா–யுத்- 124-19 சிரஸா – தலையினால்(வணங்கி)யாசத – ப்ரார்த்தித்த, தஸ்ய – அந்தப் பரதனுடைய, வசநம் – வார்த்தை,மயா -என்னால், ந க்ருதம் செய்யப்படவில்லை.)இத்யாதி மாத்ரத்தைக் கொண்டு ப்ரபத்தி பண்ணினார் என்று சொல்லுமதற்கு யதாபிப்ராயம் யதாகாலம் அபிமதஸித்தி யுண்டாகையாலும்,-(தாவதார்த்திஸ் ததா வாஞ்ச்சா தாவந்மோஹஸ் ததா ஸு கம் |யாவந்ந யாதி ரணம் த்வாமபே ஷாகநாயநம்
விஷ்ணு புராணம் – 1-19-13. அசேஷாக நாசநம் – எல்லாப்பாபங்களையும் போக்கடிக்கக் கூடியவரான, த்வாம் உம்மை,யாவத்எதுவரையில், சரணம்- சரணமாக, நயாதி – அடையவில்லையோ,தாவத் – அது வரையில், ஆர்த்தி: (கையில் கிடைத்த பொருள் நாசமடைவதினால் உண்டான) துக்கமும்,ததா – அப்படியே, வாஞ்சா- புதிய
ஜச்வர்யாதிகளில் ஆசையும், தாவத் – அது வரையில், மோ: – ஆத்மஸ்வரூபத்தை அறியாமையும், தாவத் – அதுவரையில், ததா – அப்படியே, அஸுகம் – பகவதநுப்வமில்லாமையும்.-என்று பகவத் ப்ரபந்நனுக்கு அபிமதபலம் அப்போதே ஸித்திக்கும்படி நிற்கையாலும், ஸர்வ க்தியாய்ப் பரம காருணிகனான ஸர்வே வரனைப் பற்றி ப்ரபத்தி பண்ணுகிறவன் யாதொரு காலத்திலே யாதொரு பலம் வரவேண்டுமென்று கோலி(K)னான், அந்தக் காலத்திலே அந்தப் பலம் அவனுக்கு வருகை நியதம்.நடுப்புகுந்த நிஷித்த காம்யங்களும் அதுககு பரதிபந்தகங்களன்றிக்கே அதிகாராநுகுண ப்ராயசித்தாதிகளதீர்ந்து விடும் என்றபடி.

———-

(16) ‘புத்திபூர்வ அபசாரங்கள் புகுந்தாலும் ப்ராயசித்த விசேஷம் அதிகாரி விசேஷ நியதம் ‘ என்றது-சரீரம் பலமாயம் ச வய: காலம் ச கர்மச ம் ஸமீக்ஷ்ய தர்மவித் புத்த்யா ப்ராயசித்தா நிர்த்திலேத்-சரீரம் – தேஹத்தையும், பலம் – பலத்தையும், ஆயம்ச- வரும் படியையும், வய:- வயதையும், காலம்ச – காலத்தையும், கர்மச – (ப்ரா யச்சித்தத்திற்குக் காரணமாக ஏற்பட்ட) கர்மத்தையும், புத்த்யா-தன்னுடைய புத்தியினால், ஸமீ ய – யோசித்து, தர்மவித் – தர்மத்தை அறிந்தவன், ப்ராயச்சித்தாநி – ப்ராயச்சித்தங்களை, நிர்த்திசேத் விதிக்கவேண்டும்.)அபி சேத்பாதகம் கிஞ்சித் யோகீ குர்யாத் ப்ரமாதத: யோகமேவஹி குர்வீத நாந்யம் யத்நம் ஸமாசரேத்-யோ – யோகம் செய்பவன், ப்ரமாதத: – அஜாக்ரதை யினால், கிஞ்சித் – ஒரு, பாதகம் – பாபத்தை, குர்யாத்சேத் – செய் வானேயாகில், யோகமேவ – யோகத்தையே, குர்வீத – செய்யக் கட வன், (அதற்குப் பரிஹாரமாக), அந்யம் – வேறு, யத்நம் – ப்ரயத்தின த்தை,ந ஸமாசரேத் – செய்யக்கூடாது.)(உப்பாதகயுக்தோபி மஹாபாதகவா பி 1 யாமிந்யா: பாதமேகம் து ப்ரஹ்மத்யாநம் ஸமாசரேத்-விஷ்ணு தர்மம்- 66-72. உ பாதக யுக்தோபி – உபபாத கத்தைச் செய்தவனாயிருந்தபோதிலும், மஹாபாதகவாநபி-மஹாபாத கத்தைச் செய்தவனாயிருந்தபோதிலும், யாமிந்யா:-ராத்திரியினுடைய,ஏகம் – ஒரு பாதம் – கால் பாகத்தில், ப்ரஹ்மத்யா நம் – பசுவானுடைய த்யானத்தை, ஸமாசரேத் – செய்யவேண்டும்,

(அத பாதகபீதஸ் த்வம் ஸர்வபாவோ பாரத விமுக்தாந்ய ஸமாரம்போ நாராயணபரோ பவ-அத – அப்படிக்கில்லா விடில், பாரத – ஓ ! யுதிஷ்டிரனே, பாதகபீத: – பாபங்களில் இருந்து பயந்தவனாகிய, த்வம் – நீ, ஸர்வபாவேந – எல்லாவித அபிப்ராயத்தினாலும், விமுக்தாந்ய ஸமாரம்ப : – வேறு ப்ரயத்தினங்களை விட்டு விட்டு,நாராயணபர:- நாராயணனை ஆச்ரயித்தவனாக,பவ – ஆகக்கடவாய்.)(மேருமந்தரமாத்ரோபி ராசி: பாபஸ்ய கர்மண: 1
கேசவம் வைத்யமாஸாத்ய துர்யாதிரிவ நச்யதி ||
-பாபஸ்யகர்மண: – பாபகர்மங்
களின், ராசி – கும்பல், மேருமந்தர மாத்ரோபி – மேரு பர்வதம், மந்தபர்வதம் இவைகளின் அளவாக இருந்தபோதிலும், கேசவம் -பகவானாகிய,வைத்யம் ஆஸ த்ய – வைத்யனை அ டைர்து (வைத்யனை அடைந்த )துர்வ்யாதிரிவ – கெட்டவ்யாதியைப் போல, நச்யதி – நசித்து விடுகிறது.)நாம்நஸ்தே யாவதீ லக்தி: பாபநிர்ஹரணேஹரே | ஸ்வபசோபி நர: கர்த்தும் மஸ்தாவந் ந கில்பிஷம்II-ரே – பகவானே ! தே – உம்முடைய, நாம்ந்: – திருநாமத்திற்கு, பாப நிர்ஹரணே – பாபத்தைப் போக்கடிப்பதில், யாவதீசக்தி:எவ்வளவு சக்தி, அஸ்தி – இருக்கிறதோ, தாவத் – அவ்வளவு, கில்பிஷம் – பாபத்தை, ச்வபச :- சண்டாளனாகிய, நர: அபி – மனிதனும்,கர்த்தும் – செய்வதற்கு, ந ம :- சக்தியுடையவனல்லன்.)அவ ேநாபி யந்நாம்நி கீர்த்திதே ஸர்வபாதகை: புமாங்விமுச்யதே ஸத்ய: ஸிம்ஹத்ரஸ்தை: ம்ருகைரிவ|1-விஷ்ணு புராணம் 6-8-19. யந்நாம்நி – எந்தப் பகவானுடைய திருநாமம், அவசேநாபி – எண்ணமில்லாமலே, கீர்த்திதே -சொல்லப் பட்டிருக்கு மளவில், புமாந் – மனிதன், ஸத்ய :- அப்பொழுதே,ஸிஹ்மத்ரஸ்தை: – ஸிஹ்மத்தினிடத்தில் இருந்து பயந்திருக்கிற, ம்ருகைரிவ – மருகங்களினாலே போல, ஸர்வபாதகை:- எல்லாப்பாபங்களினாலும் விழுச்யதே – விடப்படுகிறான்.)

(அயம்ஹி க்ருத நிர்வேபோ ஜந்மகோட்யம்ஹஸாமபி 1யத் வ்யாஜஹார விவபோ நாம ஸ்வஸ்த்யயநம் ஹரே:1-அயம் – இவன், ஐந்மகோட்யம்ஹஸாமபி-கோடி ஜன்மங்களில் செய்த பாபங்களுக்கும், க்ருத நிர்வேச: – ப்ராயச்சித்தம் செய்தவன், யத் – எந்தக் காரணத்தினால், விவச: – பரவசனாய், ஸ்வஸ்த்யயநம் – மங்களத்தைக் கொடுக்கக் கூடிய, ஹரே:- பகவானுடைய,நாம – திரு நாமத்தை,வயாஜஹார – சொன்னானோ.)(ப்ராயசித்தாந்யபேஷாணி தப: கர்மாத்மகாநி வை யாநி தேஷாம சேஷானாம் க்ருஷ்ணா நுஸ்மரணம் பரம் | 1-விஷ்ணு புராணம்- 5-6-39,40. அசேஷாணி – எல்லா, த :கர்மாத்மகாநி – தபஸ் , யாகம், முதலிய கர்மங்களாக இருக்கிற,யாநி -எந்த, ப்ராயச்சித்தாநி – ப்ராயச்சித்தங்களோ, அசேஷாணாம் தேஷாம் – அவைகள் எல்லாவற்றிற்கும், க்ருஷ்ணாநுஸ்மரணம்- க்ருஷ்ணனை நினைப்பது, பரம் – உயர்ந்தது. பாபே – பாபமானது க்ருதே – செய்யப்பட்டிருக்கும்பொழுது, யஸ்ய – எந்த, பும்ஸ: – மனிதனுக்கு,
அனுதாப : – அனுதாபமானது. ப்ரஜாயதே – உண்டாகிறதோ, தஸ்யஅவனுக்கு, ஏகம் – ஒன்றாகிய, ஹரிஸம்ஸ்மரணம் – பகவானை நினைப்பதே, பரம்- உயர்ந்தப்ராயச்சித்தம்.)

அதிபாப ப்ரஸக்தோபி த்யாயர் நிமிஷம் அச்யுதம் பூயஸ்தபஸ்வீ பவதி பங்க்தி பாவநபாவந:/!-தி பாப ப்ரஸக்தோபி – அதிகமான பாபத்துடன், கூடினவனாயிருந்த போதிலும், நிமிஷம் – ஒரு நிமிஷம் அச்யுதம் – பகவானை,த்யாயர் – த்யாநம் செய்கிறவன், பூய – அதிகமாக, தபஸ்வீ ரிஷியாகவும்,பங்க்திபாவந பாவந : – பங்க்திபைப்பரிசுத்தம் செய்யக்கூடியவர்களையும் பரிசுத்தம்செய்யக்கூடியவனாய், பவதி – ஆகிறான்)(நாராயணம் ஜபேர் நித்யம் ப்ரணம்ய புருஷோத்தமம்ஸ்வபர் நாராயணம் தேவம் கச்சந் நாராயணம் ததா 1-(புஞ்ஜந் நாராயணம் விப்ர: திஷ்ட்டர் ஜாக்ரத்ஸநாதநம் |உந்மிஷந் நிமிஷந் வாபி நமோ நாராயணேதி வை | )(போஜ்யம் பேயம் ச லேஹ்யம் ச நமோ நாராயணேதிய : 1அபிமந்த்ர்ய ஸ்ப்ரு ந் புங்க்தே ஸ யாதி பரமாம் கதிம் |ஸர்வபாப விநிர்முக்த: ப்ராப்நோதி பரமாம் கதிம்- நித்யம்- தினம்தோறும்,புருஷோத்தம -புருஷோத்தமனாகிய நாராயணம் – நாராயணனை, ப்ரணம்ய – ஸே வித்துவிட்டு, ஜபேத்-ஜபிக்க வேண்டும், விப்ர:- ப்ராஹ்மணன், ஸ்வபர்- தூங்கும்பொழுதும், தேவம்-தேவனாகிய, நாராயணம் – நாராயணனை,ததா – அப்படியே, கச்சந்- நடந்துபோய்க் கொண்டிருக்கும் பொழுதும், நாராயணம்- நாராயணனை, புஞ்ஜந் – சாப்பிடும்பொழுதும், நாராயணம் – நாராயணனை,திஷ்ட்டக் – நின்று கொண்டிருக்கும் பொழுதும், ஜாக்ரத் விழித்துக்
கொண்டிருக்கும் பொழுதும், உங்மிஷந்- கண்களைத் திறந்துகொண்டிருக்கும் பொழுதும், நிமிஷந்வாபி-மூடிக்கொண்டிருக்கும்பொழுதும்,-நமோநாராயணேதி – நமோ நாராயணா (என்ற அஸந்தாநம்செய்யவேண்டும்),போஜ்யம் – சாப்பிடக் கூடிய வஸ்துவையும், பேயம்சா – பருகக்கூடிய வஸ்துவையும், லே யம்ச – நக்கி சாப்பிடக்கூடியவைகளையும்,
ய: – எவன், நமோ நாராயணேதி – நமோ நாராயணா என்று, அபிமந்த்ர்ய – மந்திரத்தைச் சொல்லி, ஸ்ப்ருசந்- தொட்டுவிட்டு, புங்க்ே சாப்பிடுகிறானோ,ஸ : – அவன், பரமாகதிம் – உயர்ந்த கதியை, யாதி -அடைகிறான், ஸர்வபாப விநிர்முக்த: – எல்லாப் பாபங்களிலிருந்தும்
விடுபட்டவனாய், பரமாம் கதிம் – உயர்ந்த கதியை, யாதி – அடைகிறான். )இத்யாதிகளில் படியே ஏக நிமித்தம் தனக்கே வித்வத் அவிதவத் வர்ண ஆச்ரம வயோவஸ்த்தாதி வைஷம்யத்தாலே ப்ராயஸ்சித்தம் நாநா ப்ரகாரமாய்ப் போருகிறபடியே ப்ரபங்கனைப்பற்ற

(அபாயஸம்ப்லவே ஸத்ய: ப்ராயசித்தம்ஸமாசரேத்-ப்ராயஸ்சித்திரியம் ஸாத்ர யத்புந: ஸ்ரணம் வ்ரஜேத்1-லக்ஷ்மீதந்த்ரம்-17-91. அபாய ஸம்ப்லவே – பாபம் நேர்ந்ததேயானால், ஸத்ய: – அப்பொழுதே, ப்ராயச் சித்தம் – ப்ராயச் சித்தத்தை. ஸமாசரேத் – செய்ய வேண்டும், இயம் – இந்த, ப்ராயச்சித்தி – ப்ராயச் சித்தமும், புந:- மறுபடியும், சரணம் வ்ரஜேத் -சரணமாக அடையவேண்டும், இதி யத் – என்று சொல்லப்படுகிறஎந்தப் புரு:ப்ரபத்தியோ, ஸா – அது தான்.)என்றபடிக்கு விசேஷ வசநமுண்டாகையாலும்,

(யதி கிஞ்சித் அதிக்ராந்தம் விச்வாஸாத் ப்ரணயே வா ப்ரேஷ்யஸ்ய க்ஷமிதவ்யம் மே நகல்சிந்நாபராத்யதி 1 -கிஸ்கி-30-11. விச்வாஸாத் – நம்பிக்கையினா லாவது, ப்ரணயேந வா-ப்ரீ தியினாலாவது, ப்ரேஷ்யஸ்ய – தாஸனாகிய, மே – என்னுடைய, அதிக்ராந்தம் – மீறி நடந்தது தேவரீர் திருவுள்ளத் திற்கு கிஞ்சித்யதி-ஏதாவது ஒன்று இருந்தால், (அது), மிதவ்யம் – பொறுத்துக் கொள்ளத்தக்கது, கச்சித் – ஒருவனும், நாபராத்யதிஅபராதம் செய்வதில்லை என்பது, ந – இல்லை.) இத்யாதிகளிற் சொன்ன ந்யாயத்தாலும், இப்படிக்கு ஸத் ஸம்ப்ர தாயா நுஷ்ட்டாநம் உண்டாகையாலும், பரமாத்ம நிஷ்ட்டனுக்கு அக்ருத்ய கரண க்ருத்யாகரணங்களால் பாபம் பிறவாது என்கிற வாக்யமும் ஸ்துதிபரம், உத்தராக அஸ்லேஷ வசநமும் ப்ரா மாதிக விஷயமாக பாஷ்யாதிகளிலே ஸ்த்தாபிக்கையாலும்

(அநந்யஸாத்யே ஸ்வாபீஷ்டே மஹாவிச்வாஸபூர்வகம் 1 ததேகோபாயதா யாசநா ப்ரபத்தி : ரணாகதி: -பரதமுனி லக்ஷண வாக்யம். ஸ்வாபீஷ்டே – தன்னுடைய இஷ்ட பலம், அநந்ய ஸாத்யே – வேறு ஒன்றினாலும் ஸாதிக்கத்தகாத தாக இருக்கும் பக்ஷத்தில், மஹாவிச்வாஸ பூர்வகம் – மஹா விச்வா ஸத்தை முன்னிட்டு, ததேகோபாயதா யாச்நா – அந்தப் பகவான் ஒரு வனே உபாயமாக இருக்க வேண்டும் என்று யாசிப்பது, ப்ரபத்தி, சரணாகதி: – ப்ரபத்தி என்றும், சரணாகதி என்றும் சொல்லப்படுகிறது.)இத்யாதி ப்ரபத்தி லக்ஷண வாக்யா நுகுணமாகப் புத்தி பூர்வாபசாரங்கள் புகுந்ததாகிலும் அவற்றுக்கு ப்ரதிபதோக்த ப்ராயஸ்சித்த யோக்யதையில்லாதபோதும் ப்ரபந்நனுக்கும்,

(யத்யேநகாம காமே ந ஸாத்யம் ஸாதநாந்தரை: 1முமுக்ஷணா யத்ஸாங்க்க்யே யோகேந நச பக்தித: ||| ப்ராப்யதே பரமம் தாம யதோ நாவர்த்ததே யதி: 1தேந் தேநாப்யதே தத்தந் ந்யாஸேநைவமஹாமுநே !)(பரமாத்மா ச தேநைவ ஸாத்யதே புருஷோத்த.): 1-அஹிர்புத் ய ஸம்ஹிதை – 37-25. காம காமே – காம்யபலத்தை ஆசைப்படுகிற, யேந – எந்தப் புருஷனால், யத்-எந்தக் காம்யபலம், ஸாதநாந்தரை: – இதர உபாயங்களினால், நஸாத்யம் – ஸாதிக்கமுடியாததோ, மு க்ஷ னா – மோக்ஷத்தில் ஆசையுடையவனாகியமனிதனால், யத: – எந்தப் பலனிலிருந்து, யதி:- யதியானவன், நாவ த்ததே- திரும்பிவருகிறதில்லையோ, (அப்படிப்பட்ட) யத் – எந்த, பரம்தாம – பரமபதம், ஸாங்க்யே- ஐஞாந யோகத்தினாலும், பக்தித
பக்தியோகத்தினாலும், ந ப்ராப்யதே – அடையப்படுகிறதில்லையோ-தே தேந -அந்தந்த மனிதனால், தத்தத்- அந்தந்தப் பலன், மஹாமுநே-ஓ! மஹர்ஷியே, ந்யர்ஸேநைவ – சரணாகதியினாலேயே, ஆப்யதே -அடையப்படுகிறது புருஷோத்தம புருஷச்ரேஷ்டனான,பரமாத்மாசபரமாத்மாவும், தேநைவ – அந்தச்சரணாகதியினாலேயே, ப்ராப்யதே-அடையப்படுகிறான்.) என்றும்,(ஸா ஹி ஸர்வத்ர ஸர்வேஷாம் ஸர்வகாமபலப்ரதாஸநத்குமார ஸம்ஹிதை-ஹி எந்தக் காரணத்தினால், ஸா அந்தச் சரணாகதி,ஸர்வேஷாம் – எல்லா ஜனங்களுக்கும், ஸர்வத்ர – எல்லா இடத்திலும், ஸர்வகாம பலப்ரதா – எல்லாக்காம்ய பலன்களையும் கொடுக்கக் கூடியதோ.)என்றும் ப்ரதிபாதிதமான ப்ரபாவத்தையுடைத்தான ப்ரபத்தி தன்னையே மீண்டும் ப்ரயோகிக்கு மதுவே ஸ்வாதிகாராநு குணப்ராயசித்தமாகக் கடவது என்றபடி.

————–

(17) இப்படி ப்ராயசித்தத்திலே மூட்டுகிறதும் கடிந ப்ரக்ருதிகளுக்குக் கசை காட்டுவாரைப் போலே அவன் பண்ணுகிற சிக்ஷைகளும் எல்லாம் சரண்ய ப்ரஸாதபலம் ‘ என்றது-யம் ஹி ரக்ஷிதும் இச்சந்தி புத்த்யா ஸம்யோஜயந்தி தம்-யம் – எவனை, ரக்ஷிதும் -காப்பாற்றுவதற்கு, இச்சந்தி (தேவதைகள் விரும்புகி ர்களோ), தம் – அவனை, புத்த்யா – நல்ல புத்தியோடு, ஸம்யோஜயந்தி – சேர்க்கிறார்கள், அவனுக்கு நல்லபுத்தி யைக்கொடுக்கிறார்கள் என்றபடி.)-என்கிற ஸாமான்ய ந்யாயத்தாலும்,

(ரக்ஷதே பகவார்விஷ்ணு. பக்தாநாத்மா சரீரவத் |1-பகவார் – பகவானாகிய விஷ்ணு: – விஷ்ணு,பக்தாந் தன்னிடத்தில் பக்தியுடையவர்களை, ஆத்மசரீரவத் – தன்னுடைய சரீரத்தைப்போல,ரக்ஷதே – காப்பாற்றுகிறான்.)என்கிற விஸேஷ வசநத்தாலும் ஆர்விஷயத்தில் ஈய்வரன்செய்யுமவையெல்லாம் ப்ரஸாத பலமாக வேண்டுகையாலே ஹிதைஷிகளான பித்ராதிகளைப்போலே அநுதாபாதிகளை விளைப்பித்து,
பாஸ்த்ர முகத்தாலே ப்ராயசித்த விஸேஷத்தை அறிவித்து, ப்ராயஸ்சித்தத்திலே மூட்டுகிறதும், விநீதரல்லாத புத்ராதிகளைக் கசாதிகளாலே பயம் பிறப்பிக்குமாபோலே உபக்லோங்களை விளைவித்துபரதியை உண்டாக்குமதுவும் ஸர்வபூத நிஸர்க்க
ஸுஹ்ருத்தான ஸர்வலோக பரண்யனுடைய இரக்கமடியாக வருகிறது என்று க்ருதஜ்ஞராக ப்ராப்தம் என்றபடி.

———-

(18) இங்கு இருந்த காலம் தர்மா நுபந்தியான போகத்திலும் போக புத்தியாலே ப்ராவண்யம் பிறந்ததாகில் இது தன் அதிகாரா நுரூபமான கைங்கர்யாமருத ரஸத்திற்குத் தண்ணீர்த்
துரும்பு எ
ன்றது-(ராகாத்யபேதம் ஹ்ருதயம் வாகதுஷ்டார ருதா திநா ஹிம்ஸாதிரஹித: காய கேசவாராதநம் த்ரயம் 11-ராகாத்யபேதம் – காமம் முதலியவைகள் இல்லாத, ஹ்ருதயம் – மனதும், அந்ருதாதிநா – பொய் முதலியவைகளினால், அதுடா – தோஷத்தை யடையாத, வாக்-வாயும், ஹிம்ஸாதிரஹித:- அயலாருக்கு ஹிம்ஸை முதலியது செய்யாத, காய:- சரீரமும்,த்ரயம் – இந்த மூன்றும், கேசவாராதநம் – பகவானுடைய ப்ரீதிக்குக் காரணமானவைகள்)

அஸக்திரநபிஷ்வங்க: புத்ரதார கருஹாதிஷ-கீதை – 13-9. அஸக்தி – (ஆத்மாவைத் தவிர வேறு வஸ்துக்களில்) பற்று இல்லாமையும், புத்ரதார க்ருஹாதிஷ – பிள்ளை, பத்நீ வீடு முதலியவைகளில், அநபிஷ்வங்க: – அதிகப் பற்றில்லாமையும்.)இத்யாதிகளிற்படியே ஆத்மகுணயுக்தனாய் இருந்தா னொருவனாகிலும் க்ருஹஸ்த்தாவஸ்த்தையிலே தர்மாவிருத்த போகங்கள் ஸாஸ்த்ர பலத்தால் வரவேண்டி(யதாதலால்) அத்தால் முமுஷுவான இவனுக்கு,-(சரீரம் வ்ரணவத் பஸ்யத் அந்நம் து வரணலேப நம் வ்ர ணஸேசநவத் பாநம் வஸ்த்ரம்து வ்ரணபட்டவத் -சரீரம் – தேஹத்தை வரணவத் – புண்ணைப் போலவும், அந்நம் – ஆஹாரத்தை, ரணலேபநம்-புண்ணுக்குப் பூசும் ஒளஷதம் போலவும்,பாநம் தண்ணீர்முதலியவற்றைக்குடிப்பதை வரண ஸேசநவத்-புண்ணை நனைப்பது போலவும் வஸ்த்ரம் – துணியை, வ்ரணபட்டவத் -புண்ணுக்குக் கட்டுகிற கட்டைப் போலவும், பச்யேத் – பார்க்கவேண்டும் (எண்ணவேண்டும்).)இத்யாதிகளிற்படியே வைராக்ய ஜ்ஞாந பக்த்யாதிகளுக்கு அநுகூலமான ஒளஷதாதி கரமத்தாலே புத்திபண்ண ப்ராப்தமாயிருக்க, அநாதி துர்வாஸநா பரிபாக வியே ஷத்தாலே ப்ரயோஜ நாந்தர பரனுடைய விலக்கடி இவனுடைய புத்தியிலே வருமதாகில் இத்தால் வருவதொரு ப்ரதாந பல ப்ரதிபந்தம் இல்லையேயாகிலும் இபபோது இங்கு இருந்து அநுபவிக்கிற கைங்கர்ய ரஸத்துக்கு ஸகோசாதி ஹேதுவாகையாலே,

(யந் முஹுர்த்தம் க்ஷணம் வாபி வாஸுதேவோ ந சிந்தயதேஸாஹாநி: தந்மஹச்சித்ரம் ஸாப்ராந்தி: ஸா ச விகரியா |1-பாஞ்ச முஹூ த்தம் – ஒரு முஹூர்த்த காலமாவது. ணம்
வாபி – ஒரு க்ஷணகாலமாவது, வாஸுதேவ: – பகவான், நசிந்த்யதே சிந்திக்கப் படவில்லை என்பது, யத் – எதுவோ, ஸா – அதுவே, ஹாநி :- நஷ்டம், தத் – அது, மஹத்- பெரியதான, சித்ரம் – தோஷம்,-காமம் குரோதம் முதலியவைகள் புகுவதற்கு வழி என்றபடி, ஸா -அது , ப்ராந்தி: – ப்ரமம், ஸாச – அதுவே, விக்ரியா – ஆத்மாவிற்கு மாறுதல்.-ஆவி திகைக்க ஐவர் குமைக்கும் சிற்றின்பம் பாவியேனைப் பல காட்டிப் படுப்பாயோ-திருவாய்— 6-9-9-என்று பீதனாக ப்ராப்தம் என்றபடி.-ப்ருதிவீம் ரத்நஸம்பூர்ணாம் ய: க்ருஷ்ணாய ப்ரயச்சதி-தஸ்யாப்யந்ய மநஸ்கஸ்ய ஸுலபோ ந ஜநார்த்தந:-ய:- எவன், ரத்நஸம்பூாணாம் – ரத்நங்கள் நிறைந்த, ப்ருதிவீம் பூமியை. க்ருஷ்ணாய – ஸ்ரீ க்ருஷ்ணன் பொருட்டு, ப்ரயச்சதி கொடுக்கிறானோ, தஸ்யாபி – அப்படிப் பட்டவனாயிருந்த போதிலும். அந்யமநஸ்கஸ்ய – வேறு ப்ரயோஜநங்களில் ஆசையையுடைய மனித னுக்கு. ஜநார்த்த : – பகவான், ந ஸுல :அடையக் கூடியவனல்லன்-(பராங்முகாநாம் கோவிந்தே விஷயாக்ராந்த சேதஸாம் || தேஷாம் தத் பரமம் ப்ரஹ்மதூராத் தூரதரே ஸ்த்திதம்||-விஷ்ணு தர்மம்–99-13. கோவிந்தே – பகவானிடத்தில், பராங்முகாநாம-பக்தியிலலாதவாகளாயும், விஷயாக்ராந்த சேதஸாம் சபதாதி விஷயங்களினால் ஆக்ரமிக்கப்பட்டமனதை உடையவர்களாயும் இருக்கிற, தேஷாம் – அந்த மனிதர்களுக்கு, பரமம்ப்ரஹ்ம – பரப்ரஹ்மமானது, தூராத்தூரதரே – வெகு தூரத்தில், ஸ்திதம் – இருக்கிறது.)இத்யாதிகளில் (அ)வர் ஜ நீய போகங்களன்றிக்கே மோக்ஷ ருசியை விலக்கும்படியான ப்ரயோஜநாந்தரங்களில் ப்ராவண்யத்தை யுடையார்க்கு ஸர்வேஸ்வரன துர்லபன் என்கிறது.

(அதோபாய ப்ரஸ தோபி புக்த்வா போகாந் அநாமயாங்1 அந்தே விரகதி மாஸாத்ய விதே வைஷ்ணவம் பதம் |-க்ஷ்மீதந்த்ரம்-17- 103 அத- அப்படிக் கில்லாமல், உபாயப்ரஸக்தோபி –
காம்ய கர்மங்களை அனுஷ்ட்டித்துக் கொண்டிருப்பவனும்,அநாமயாந் – ஒரு தொந்தரவும் இல்லாத, போகாந்- போகங்களை, புக்த்வா- அனுபவித்து விட்டு, அந்தே – கடைசியில், விரக்திம் – வைராக்யத்தை, ஆஸாத்ய – அடைந்து, வைஷ்ணவம்பதம் – மோக்ஷத்தை,
விசதே – அடைவிறான். )என்றது மோக்ஷருசியும் ஸ்வர்ககாதி ருசியும் நடப்பார்க்கு விளம்
பம் வரும் என்கிறது,-அப்ராப்தித: பரிஹர ஸ்வபரை: ஸ்வரக்ஷாம் 1) என்கிற நிபேரக்ஷையில் ஸ்லோகத்தையும் இங்கே அநுஸந்திப்பது.(நிக்ஷேபாக்ஷை, ஸ்வபரை: தன்னாலும் அயலாராலும் ஸ்வரக்ஷாம் – தன்னை ரக்ஷித்துக்கொள்ளுவதை, அப்ராப்தித: – ப்ராப்தி இல்லாமையினாலே, அதாவது கடமை யில்லாமையினாலே, பரிஹரந் – பரிஹரித்தவனாயும், (பகவானுடைய பாயோஜனத்திற்காகவே எல்லா வஸ்துக்களும் ஏற்பட்டிருக்கின்றன என்கிற ஜ்ஞாநத்தினால் தன்னுடைய ப்ரயோஜநத்திற்காகவாவது மற்றவர்களுடைய ப்ரயோஜநத்திற்காகவாவது ஏற்பட்டது என்கிற புத்தியைப் பரிஹரித்தவனாய்,-பகவானுடைய ப்ரீ தியைத் தவிரத் தனக்கு வேறு ஒரு ஸுகம் இல்லா
மையினால் ஒரு விதத் தோஷமும் இல்லாத ப்ரபந்நன் தன்னுடைய ஸுகங்கள் எல்லாவற்றையும் ஸ்வாமியான பகவானுடைய அனுபவத்திற்கு உள்ளடங்கிய வாகவே அனுபவிக்கிறான் என்று மேல்)

(19) · இப்படி நிஷித்த போக ப்ராவண்யம் கைங்கர்யா ம்ருத ரஸத்துக்கு விருத்த மாகையாலே விஷம் போலே தூர பரிஹரணீயம்-என்றது-ஸத்த்வ நிஷ்ட்டனாய் ஸ் வா மிக்கு அநபிமதத்தில் விமுகனாக ப்ராப்தனாயிருக்க ஸர்வருக்கும் ஸ்வப்நாத்ய வஸ்த்தைகளிலே
நிஷித்த ப்ரவ்ருத்திகள் வருமா போலவும், அவஹிதரான ருஷிகளும் கூட ஓர் அளவுகளிலே தேவாதிகளினாலே மோஹிதராய் அகப்படுமா போலவும் முமு வுக்கு நிஷித்தபோக ப்ராவண்யம் வருமாகில்-(அபாயா விரத: ஸர்வத் மாம் சைவ ரணம் கத: 1
தநூக்ருத்யாகிலம் பாபம் மாம் ப்ராப்நோதி நர: நை : 1 -லக்ஷ்மீதந்த்ரம்– 17-102
.சச்வத் – அடிக்கடி, அபாய விரத-நி த்த கார்யங்களில் இருந்து ஓய்வை அடையாதவனாயும், மாம்
சைவ – என்னையே, சரணம்கத: – சரணமாக அடைந்தவனாயும் இருக்கிற, நர: – மனிதன், அகிலம் – எல்லா, பாபம் – பாபத்தையும், தநூக்ருத்ய – கழித்து விட்டு, ச ை – மெள்ள (தாமதமாக) மாம் – என்னைப்ராநோதி – அடைகிறான்.) இத்யாதிகளிற்படியே இங்கு ப்ராயசித்தம் தண்ட விபேஷங்கள் வருமதுக்குமேலே அஸத் கல்பனான தனக்கு உஜ்ஜீவ
நமுமாய், போகமுமாகையாலே அம்ருத கல்பமான கைங்கர்யா நுபவத்திற்கு அநதிகாராதிகளைப் பண்ணுகையாலே,-(விஷஸ்ய விஷயாணாம் ச தூரம் அத்யந்தமந்தரம் |உபபுக்தம் விஷம் ஹந்தி விஷயா: ஸ்மரணாதபி 11–விஷஸ்ய – விஷயத்திற்கும், விஷயாணாம் ச – சப்தம் முதலிய விஷயங்களுக்கும், அத்யந்தம் தூரம் – அதிகத் தூரமான, அந்தரம் -வித்யாசம் இருக்கிறது, விஷம் – விஷமானது, உபபுக்தம் – சாப்பிடப்பட்டதாய்க் கொண்டு, ஹந்தி – கொல்லுகிறது, விஷயா: – விஷயங்கள், ஸ்மரணாதபி – நினைப்பது, மாத்திரத்தினாலும், கொல்லுகின்றவை)இத்யாதிகளை அநுஸந்தித் து ஸந்நிதி பரித்யாகம் பண்ண வொட்டாத பாபத்தில் அகப்படாதபடி நிபுணநிரூபணம் பண்ணி ஸர்ப்பாதிகள் இல்லாத தேலங்களிலே வர்த்திக்குமா போலே நிஷித்தபோக ஸம்பாவனை இல்லாத தேலங்களிலே வர்த்திக்கவும்,

(பாபம் ப்ரஜ்ஞாம் நாயதி க்ரியமாணம் புந புந: 1 நஷ்ட ப்ரஜ்ஞ: பாபமேவ புநராரபதே நர: 1 -பார – உத்யோக — 35-73. பாபம் – பாபமானது, புந: புரு:- அடிக்கடி, க்ரியமாணம் -செய்யப்பட்டதாய்க்கொண்டு, ப்ரஜ்ஞாம் – புத்தியை, நாசயதி -நாசம் செய்கிறது, நஷ்டப்ரஜ்:-இழந்த புத்தியை யுடைய, நர: – மனிதன், புந: – மறுபடியும்,பாபமேவ – பாபத்தையே,
ஆரபதே – செய்ய ஆரம்பிக்கிறான்.)இத்யா திகளிற் சொன்ன பாபாரம்பக பாபத்துக்கும் ப்ராயஸ்சித்தமாக ஏற்கவே ப்ரபத்திபண்ணவும் ப்ராப்தம் என்றபடி இப்படி வர்த்திக்குமவன்-அஹேரிவ கணாத்த: ஸந்மா நாத் மரணாதிவ | குணபாதிவ ய: ஸ்த்ரீப்ய; தம் தேவா ப்ராஹ்மணம் விது: |!-பாரதம்-சாந்தி – 251-13 கணாத் – கும்பலிலிருந்து, அறேரிவ – பாம்பினிடத்திலிருந்து போலவும், ஸமாநாத் – ப மாநத்தில்இருந்து, மரணாதிவ – மரணத்தினிடத்திலிருந்து போலவும். ஸ்த்ரீப்ய:-ஸ்த்ரீகளிடமிருந்து, குணபாதிவ – பிணத்தின் இடத்தில் இருந்து போலவும், ய: – எவன், பீத: – பயப்படுகிறானோ, தம் – அவனை, தேவா :- தேவதைகள், ப்ராஹ்மணம் – ப்ராஹ்மணனாக விது: -அறிகிர்கள்.). இத்யாதிகளிற்படியே தேவர்களுக்கும் பஹுமாக விஷயமாம்.

(பரரந்த்ரேஷு ஜாத்யந்தா: பரதாரேஷ்வபும்ஸகா: பரிவாதேஷு யே மூகா: தேதீவ தயிதா மம-விஷ்ணு தர்மம்-78-22.யே- எவர்கள், பரரந்த்ரேஷ – அயலாருடைய தோஷங்களில், ஜாத்யந்தா: – பிறவிக் குருடர்களோ, பரதாரேஷு – பிறருடைய பார்யைகள் விஷயத்தில், அபும்ஸகா: – ந ம்ஸகர்ளோ, பரிவாதேஷ – மற்றர்க்ளை நிந்திக்கும் விஷயத்தில், மூகா:- மைகளோ. தே – அவர்கள், மே – னெக்கு, அதீவமிகவும், தயிதா: – ப்ரியமானவர்கள்.-தந்மயத்வேந கோவிந்தே யே நரா: ந்யஸ்தசேதஸ: 1 விஷயத்யாகிநஸ்தேஷாம் விஜ்ஞேயம் ச ததந்திகே !!-விஷ்ணு தர்மம்—99-15. யே – எந்த,நரா : – மனிதர்கள் கோவிந்தே- பகவானிடத்தில், தந்மயத்வேக – தந்மயமாய் இருப்பதினாலே (அவன் ஒருவனையே த்யானம் செய்து கொண்டிருப்பதினாலே)ந்யஸ்த சேதஸ: – ஸமர்ப்பிக்கப்பட்ட மனதையுடையவர்களாய், விஷ யத்யாகி : – சப்தாதி விஷயங்களை விட்டவர்களோ, தேஷாம் – அவர்களுக்கு, தத் – அந்தப் பரப்ரஹ்மம், அந்திகே – ஸமீபத் ல் இருப்ப தாக,விஜ்ஞேயம் – அறியத்தக்கது.)(க்ஷகேபிதே யத்விரஹோ திதுஸ்ஸஹ: -ஸ்தோ – 56. தே – உமக்கு, க்ஷணேபி – ஒரு க்ஷணப் பொழுதும், யத்விரஹ: – எவர்களுடைய பிரிவு. அதிதுஸ்ஸஹ: -மிகவும் பொறுக்கமுடியாததோ.)என்றபடி ஸர்வேஸ்வரனுக்கு நிரஸதிய ப்ரீதிஹேதுவாம்,

————-

(20) கைங்கர்யமாவது ஸ்வாமி உகந்த ஏவல்தொழில் செய்கையாகையாலே இது யதாயாஸ்த்ரம் பண்ணினால் உகப்பாம்-என்றது-நித்ய (ரும்)முக்தரும் பகவத் ப்ரீதிஹேதுக்களை நிரபேக்ஷ ஸர்வ விஷயஜ்ஞாநத்தாலே ஸாக்ஷாத்கரித்துக் கைங்கர்யம் பண்ணுமாபோலே யன்றிக்கே பத்த தசையில் கரணஸாபேக்ஷதை உண்
டாகையாலும், ப்ரத்யக்ஷாதிகளுக்கு நிலமல்லாத விஷயத்தில்-(பித்ரு தேவமநுஷ்யாணாம் வேதசக்ஷ : ஸநாதந: )பாகவதம் பித்ருதேவ மநுஷ்யாணாம்பித்-ருக்கள், தேவதைகள்’ மனிதர்கள் இவர்களுக்கு ஸநாத : – அநாதியான, வேத:- வேதமானது, சக்ஷ : -கண்.)மாநம் ப்ரதீபமிவ காருணிகோ ததாதி-ப்ரதீபமிவ – விளக்கைப்போல, மாநம் – சாஸ்திரத்தை,காரு
ணிக: – மிகுந்ததயை யுடைய பகவான்,ததாதி – கொடுக்கிறார்)இத்யாதிகளிற்படியே சாஸ்த்ர மொழியக் கண்ணும் கைவிளக்கும் இல்லாமையாலும்,(ய: சாஸ்த்ரவிதி முத்ஸ்ருஜ்ய வர்த்ததே காமகாரத: |ந ஸ ஸித்திமவாப்நோதி ந ஸுகம் ந பராம் கதிம் II)-கீதை 16 -23 ய :- எவன், சாஸ்த்ரவிதிம் – சாஸ்த்ரத்தில் சொல்லப்பட்டிருக்கும் விதியை, உத்ஸருஜ்ய – விட்டுவிட்டு, காம காரத:- தன் இஷ்டப்படி, வர்த்ததே – இருக்கிறானோ, ஸ: – அவன்,
ஸித்திம் – ஸித்திய்ை, நா அவாப்நோதி – அடைவதில்லை, ஸுகம் ஸுகத்தையும், ந – அடைவதில்லை, பராம்கதிம் – மோக்ஷத்தையும் நா – அடை வதில்லை.

(அ சாஸ்த்ரமாஸுரம் க்ருத்ஸ்நம்| -கீதார்த்த ஸங்க்ரஹம் —21 அசாஸ்த்ரம் – சாஸ்த்ரத்தில்
விதிக்கப்படாதது, கருத்ஸ்நம் – எல்லாம ஆஸுரம் – அ ரஸ்வபாவமுடையவர்களுக்குப் பொருத்தமானது-என்றருளிச் செய்தது இங்குத்தை ஸ்வயம் ப்ரயோஜந கைங்கர்யத்திலும் ஸமாந ந்யாயமாகையாலும்,-அறிவிலேனுக்கு அருளாய்‘-திருவாய்– 6-9- 8.-அறியாத பிள்ளைகளோம் ‘-திருப்பாவை — 28.-என்று நிற்க ப்ராப்தமான அவஸ்த்தையிலே ஸ்வாபிமதமாத்ரத்தாலே ஒன்றைக் கைங்கர்யம் என்று செய்தால் இது ஸ்வாமிக்கு அபிமதமாகையிலே நியமம் இல்லாமையாலும்,-லோகே ப்ரியதமாநி ஆத்மநச இஷ்டாநி பாஸ்த்ர அவிருத்தாநி-நித்யம்,லோகே – லோகத்தில், ப்ரியதமாநி – மிகவும் ப்ரியங்
களாயும், ஆத்ம : – தனக்கும், இஷ்டாநி – இஷ்டங்களாயும் -சாஸ்த்ர அவிருத்தாநி – சாஸ்த்ரத்திற்கு விரோத மில்லாததாகவும் இருக்கும் வஸ்துக்களைக் கொண்டு பகவானுக்கு ஆராதனம் செய்யவேண்டும்.)என்று நித்யத்திலே ஸ்ரீபாஷ்யகாரர் அருளிச் செய்கையாலும்,-(ஸ்வயம் துருசிரே தேபே க்ரியதாம் இதி மாம் வத)என்கிற கட்டளையிலே-(கிம்கரோமி-ஆரண், – ஸ்வயம்து – தர்மே. ருசிரே – அழகான, தேசே- இடத்தில், க்ரியதாம் – செய், இதி – என்று, மாம்- என்னை,வத – சொல்லும,)என்று தாஸன் நிற்க.-இதம் குரு ‘ என்று ஸ்வாமி சொல்லச் செய்யுமது கைங்கர்யமாக வேண்டுகையாலும், செய்த வேள்வியனான ப்ரபந்நனுக்கும் .யாவச் சரீரபாதம் யதாதிகாரம் யதா சாஸ்த்ரம் நடந்தால், இதுவும்-(ப்ரஹர்ஷயிஷ்யாமி)என்கிற ப்ரதாந பல பர்யந்தமாம் என்றபடி..

—————-

(21) ‘பகவத் கைங்கர்யமும் பாகவத கைங்கர்யமும் சேர அநுஷ்ட்டிக்க அரிதானபோது பரமபுருஷார்த்த காஷ்ட்டையான பாகவத கைங்கர்யமே உபாதேயதமம்‘ என்றது
ப்ரணவத்தில் க்ஷித ஸ்வரூபனாகையாலே சதுர்த்தியில் அபிப்ரேதமான பகவத் கைங்கர்யம் ஸ்வரூப ப்ராப்தமாய் நின்றது, ந மஸ்ஸிலே ஸுபபிக்ஷித ஸ்வரூபனாகையாலே பாகவத கைங்கர்யமும் இவனுக்கு ப்ராப்தமாயிருந்தது, இப்படியானால் இரண்டும் சேர அநுஷ்ட்டிக்க வரும்போது சேர அநுஷ்ட்டிக்கவும், இரண்டத்து ஒன்றைவிட வேண்டும் படியான ஆபத் தலையிலே,-தஸ்மாத் விஷ்ணுப்ரஸாதாய வைஷ்ணவாங் பரிதோஷயேத் ப்ரஸாதஸுமுகோ விஷ்ணு: தேநைவ ஸ்யாந் ந ஸம் ய: I|-இதிஹாஸ ஸ முச்சயம -27-27. தஸ்மாத் – ஆகையினால் விஷ்ணுப்ரஸாதாய – பகவானுடைய அனுக்ரஹம் உண்டாவதற்காக,-வைஷ்ணவாங் – வைஷ்ணவர்களை, பரிதோஷயேத் – ஸந்தோஷப் படுத்த வேண்டும், தேநைவ – அதினாலேயே, ப்ரஸாதஸ – முக:-அநுக்ரஹத்தினால் ஸ முகராய், விஷ்ணு: – பகவான், ஸ்யாத்- ஆவார். நஸம்சய:- ஸந்தேஹமில்லை.

(மம மத்பக்தபக்தேஷ ப்ரீதிரப்யதிகா பவேத் 1 தஸ்மாத் மத்பக்தபக்தாஸ்ச பூஜ யா விஸேஷத: II-பார -ஆச்வ – 116- 23. மம – எனக்கு, மத்பக்தபக்தேஷ என்னுடைய பக்தர்களிடத்தில் ப்ரீதி செய் வர்களிடம், ப்ரீதி: – ப்ரீதியானது, அப்யதிகா – மிக அதிகமாக, பவேத் – உண்டாகும், தஸ்மாத் ஆகையினால், மத்பக்தபக்தா:ச- என்னுடைய பக்தர்களின் பக்தர்களும், விசேஷத: – விசேஷமாக, பூஜரீயா::- பூஜிக்கத்தக்கவர்கள்.-ஆராதநாநாம் ஸர்வேஷாம் விஷ்ணோராராதநம் பரம் 1 தஸ்மாத் பரதரம் ப்ரோக்தம் ததீயாராதநம் பரம் I-பாத்மோ- 29 – 81 – ஸர்வேஷாம் – எல்லா, ஆரதநாநாம் ஆராதநங்களுக்கும், விஷ்ணோ: – விஷ்ணுவினுடைய, ஆராதநம், பரம் – ச்ரேஷ்டம், தஸ்மாத் – அந்த விஷ்ணுவினுடைய ஆராதத்தைக் காட்டிலும், பரம் – உயர்ந்ததான, தீயாராதநம் – பாகவதர்களுடைய ஆராதநம், பரதரம் – மிகவும் சிறந்ததாக, ரோக்தம் சொல்லப்பட்டது.-அநாத்ருதஸ்தம் கேஹீ புருஷம் நாபிநந்ததி 1ததாநர்ச்சித ஸத்பக்தம் பகவார் நாபிநந்ததி ||-சாண்டி- ஸ்ம்ருதி – 4-86. கே – க்ருஹஸ்தன், அநாத்ருத ஸுதம்-தன்னுடைய பிள்ளையை அநதரவு செய்த, புருஷம் – புருஷனைப் பற்றி, நாபிநந்ததி -(எப்படி) ஸந்தோஷிக்கிறதில்லையோ, ததா-அப்படியே, அநர்ச்சிதஸத்பக்தம் – தன்னுடைய பக்தனை ஆராதநம் செய்யாத புருஷனைப்பற்றி, பகவாந்- பகவான், நாபிநந்ததி – ஸந்தோவிக்கிற ல்லை.

ஸ்வாராதநம் விஹாயாபி ஸ்வபக்தாநர்ச்சயந்தி யே |தேப்ய: ப்ரஸந்நோபகவாந் ஸித்திமிஷ்டாம் ப்ரயச்சதி|-ஸ்வாராதநம் – தன்(பகவா)னுடைய ஆராதநத்தை, விஹா
யாபி – விட்டுவிட்டாவது, யே – எவர்கள், ஸ்வபக்தாங்-தன்னுடைய பக்தர்களை, அர்ச்சயந்தி- பூஜிக்கிறார்களோ, தேப்ய:- அவர்கள் விஷயத்தில், ப்ரஸந்த அநுக்ரஹத்தை யுடையவனாகிய, பகவாங், இஷ்டாம்- அவர்களுக்கு இஷ்டமான, ஸித்திம் ஸித்தியை, ப்ரயச்சதி- கொடுக்கிறார்.-இத்யாதி ப்ரமாண விலேஷங்களாலும்,
‘ஏத்தியிருப்பாரை வெல்லுமே மற்றவரைச் சாத்தியிருப்பார் தவம் ‘ -நான்.திருவந்தாதி-19-என்கிற ந்யாயம் ஸ்வயம் ப்ரயோஜந கைங்கர்யத்திலும் ஸமாமாகையாலும், பாகவத கைங்கர்யம் தன்னிலே பகவத் கைங்கர்யத்தைக் கண்டு கருதார்த்தனாய் இருக்க ப்ராப்தம் என்றபடி.

————

(22) ‘ இவை இரண்டிலும் ப்ரதாநம் ஆசார்யகைங்கர்யம் ‘ என்றது-பகவான் பக்கலிலேபோல ஆசார்யன் பக்கலிலும் அநுவர்த்திப்பான் என்று அதிதேசித்தவளவன்றிக்கே-(குரோர் குருதரம் நாஸ்தி குரோரந்யம் ந பாவயேத் ]குரோர் வார்த்தாம் கதாம் சைவ குரோர் நாம ஸதா ஜபேத்!!-(குருரேவ பரம் ப்ரஹ்ம குருரேவ பராகதி: 1குருரேவ பராவித்யா குருரேவ பரம் தநம்| )(குருரேவ பர:காம: குருரேவ பராயணம்-குரோ:- ஆசார்யனைக் காட்டிலும், குருதரம்-பெரிய (உயர்ந்த)வஸ்து, நாஸ்தி – இல்லை.குரோ – ஆசார்யனைக் காட்டிலும், அந்யம்-வேறு ஒருவனை,நபாவயேத் – நினைக்கக் கூடாது, குரோ :- ஆசார்யனுடைய, வார்த்தாம் உபதேச ரூபமான வார்த்தைகளையும், கதாம்சைவ – (அவருடைய) சரித்திரத்தையும் குரோ:, நாம -திருநாமத்தையும், ஸதா-எப்பொழுதும், ஜபேத்- ஜபிக்க வேண்டும்,குருரேவஆசார்யனே, பரம்ரஹ்ம் – பரப்ரஹ்மம், குருரேவ, பரா கதி அடையவேண்டிய உயர்ந்த ப்ரயோஜனம், குருரேவ, பரா வித்யா – உயர்ந்த(மோஷோபயோகமான ) வித்யை, குருரேவ, பரம் – உயர்ந்த
தநம் – பொருள், குருரேவ, பர – உயர்ந்த,காம:- ஆசைப்படவேண் டிய புருஷார்த்தம், குருரேவ, பராயணம் – ஆச்ரயிக்கப்பட வேண்டிய வஸ்து.–இத்யாதிகளிலே ஆசார்ய கைங்கர்ய ப்ராதாந்யம் ப்ரமிதமாகையாலும், பகவத் பாகவத கைங்கர்யங்களும் ஆசார்யா நுஜ்ஞை
யால் நடக்கவேண்டுகையாலே ஆசார்யகைங்காயத்தை நிரூபித்துப் பார்த்தால் இது பகவதாஜ்ஞா ஸித்தமாகையாலே பகவத் கைங்கர்யமும் ஆசார்யனுடைய பாகவதத்வ ஸாமாந்யத்தாலே இதுதானே பாகவத கைங்கர்யமுமாய் நிற்கையாலே

(சக்ஷ ர்கம் யம் குரும் த்யக்த்வா சாஸ்த்ரகம்யம் து ய: ஸ்மரேத் ஹஸ்தஸ்த்தமுதகம் த்யக்த்வா கநஸ்தமபிவாஞ்ச்சதி ||-சக்ஷ ர்கம்யம் – கண்ணுக்கு விஷயமாயுள்ள, குரும்-
ஆசார்யனை, த்யக்த்வா – விட்டுவிட்டு, சாஸ்த்ரகம்யம் – சாஸ்த்ரத்தினால் அறியப் படுகிற பரமாத்மாவை, ய: – எவன், ஸ்மரேத் – நினைப்பானோ, (அவன்) ஹஸ்தஸ்த்தம்- கையில் இருக்கிற, உதகம்-ஜலத்தை, த்யக்த்வா- விட்டுவிட்டு, கநஸ்த்தம் – மேகத்தில் இருக்
கும் ஒலத்தை, அபிவஞ்சதி – ஆசைப்படுகிறான். )-ஸுலபம் து குரும் த்யக்த்வா துர்லபம் உபாஸதே|லப்தம் த்யக்த்வா தநம் மூட: குப்தமந்வேதே க்ஷிதெள II-ஸூலபம் – ஸலபனாகிய, குரும் – ஆசார்யனை, த்யக்த்வா- விட்டுவிட்டு, ய: – எவன், துர்பைம் – துர்லபனான பகவானை, உமாஸதே – உபாஸிக்கிறானோ, அந்த மூடன், லப்தம் – கையில் கிடைத்த, தநம் – பணத்தை த்யக்த்வா – விட்டு விட்டு தௌ) இத்யாதிகளிற்படியே ஆசார்ய கைங்கர்யத்தை விட்டு பகவத் கைங்கர்யாதிகளிலே இழியக் கடவனல்லன்.

கண்ணி நுண் சிறுத்தாம்பின்படியே ஆசார்ய கைங்கர்ய ப்ரதாநனாய் நின்று-திரிதந்தாகிலும் தேவபிரானுடைக்
கரிய கோலத் திருவுருக்காண்பன் நான்
பெரிய வண்குருகூர் நகர் நம்பிக்கு ஆள்
உரியனாய் அடியேன் பெற்ற நன்மையே ‘-
இத்யாதிகளிற் படியே ஆசார்யாபிமதமென்று யதாகாலம் பகவத் பாகவத கைங்கர்யங்களை அநுபவிக்க ப்ராப்தம் என்றபடி.

————–

23-இக் கைங்கர்யபரனுக்குப் பரமைகாந்திகள் உகந்த இடமே உசித ஸ்த்தாநம் ‘ என்றது
தர்ம ஸீலரா யிருப்பார்க்கு வாஸஸ்த்தாநமாக ஸாஸ்த்ரங்கள் வகுத்த புண்ய தேஸங்கள் கலிகாலர்தி தோஷங்களாலே ம்லேச்சாதி பரிக்ருஹீதங்களாய்-(நாதர்மஜநபூயிஷ்ட்டம்-அதர்மங்களைச்செய்கிற ஜனங்களால் நிறைந்த இடத்தில் வாஸம் செய்யக்கூடாது.).
இத்யாதிகளிற்படியே பரித்யாஜ்யங்களாகையாலும், புண்ய தே ங்களுக்குச் சொல்லும் சில லக்ஷணங்களுக்கு அவ்யாப்தி அதிவ்யாப்திகள் உண்டாகையாலே இவை ப்ராயிகங்களாகையாலும்,-ஆத்மநஸ்துஷ்டிரேவ ச-ஆத்ம :- தனக்கு, துஷ்டி: ஏவச – ஸந்தோஷமுமான )இத்யாதிகளைப் பார்த்துத் தன் அபிமத மாத்ரத்தாலே ஒரு தே பலத்தை அறுதியிட்டுக் கொள்ளப் பார்த்தால் அது தப்பவும் கூடு மாகையாலும்,

மேலும்‌ பகவானுக்கோ பாகவதனுக்கோ கைங்கர்யங்கள்‌ செய்வதானால்‌ ஆசார்யனது அநுமதி பெற்றே செய்ய வேண்டும்‌ மேலும்‌ ஆசார்ய கைங்கர்யத்தைப்‌ பற்றி ஆராய்ந்து பார்த்தால்‌ இது எம்பெருமானுடைய கட்டனையாகிய சாஸ்தரங்கனால்‌ விதிக்கப்பட்டதாயுள்ளமை பற்றி ஆசார்ய கைங்கர்யமே பகவானுக்குச்‌ செய்யும்‌. கைங்கர்யமுமாகின்றது. அவனது நியமநத்தின்படி செய்வதுதானே அவனுக்குச்‌ செய்யும கைங்கர்யம்‌! மேலும்‌ ஆசார்யனுக்குச்‌ செய்யும்‌ கைங்கர்யமே பாகவத கைங்கர்யமுமாகி விடுகின்றது. ஆசார்யனும்‌ ஒரு பாகவதன்‌ தானே! இவ்வாறு ஆசார்யனுக்குச்‌ செய்யும்‌ கைங்கர்யமே பகவத்‌ கைங்கர்யம்‌ - பாகவத கைங்கர்யம்‌ என்ற இரண்டு உருவையும்‌ கொள்வதால்‌ இதுவே எல்லாவற்றினும்‌ முக்கியமானதாகும்‌. ஆசார்ய கைங்கர்யத்தை விட்டு பகவத்‌ கைங்கர்யத்தையோ பாகவத கைங்கர்யத்தையோ செய்யக்கூடாது.-சாஸ்தரங்களும்‌ கண்ணுக்கு இலக்காய்‌ மிக எனியனாய்‌  நிற்கும்‌ ஆசார்யனை விட்டுக்‌ கண்ணுக்குப்‌ புலப்படாது சாஸ்தரத்தாலேயே அறிய வேண்டியவனாய்‌ அரியனரம்‌ நிற்கும்‌ எம்பெருமானை விரும்பு மவன்‌ கையில்‌ உள்ள நீரைக்கொட்டி விட்‌டு மழை நீரை எதிர்பார்ப்பவனாகவும்‌ கையில்‌ உள்ள செல்வத்தை உதறிவிட்டுப்‌ பூமியில்‌ மறைந்துள்ள புதையலைத்‌ தேடுமவனாகவும்‌ கூறிப்‌ பழிக்கின்றன. ஸ்ரீமதுரகவிகளும்‌ கண்ணிநுண்‌ சிறுத்தாம்பு என்னும்‌ பிரபந்தத்தில்‌ தமக்கு ஆசார்மனாகிய ஆழ்வாருடைய  கைங்கர்யமே தமக்கு முக்கியமென விளக்கியுள்ளார்‌. மேலும்‌ அதில்‌ தம்‌ ஆசார்யனான ஆழ்வாருடைய' திருவு ள்ளத்துக்கு உகப்பாயிருக்கிற தென்பதற்காகவே எம்பெருமானைத்‌ தாம்‌  ஸேவிப்பதாகக்‌ கூறுகின்றார்‌. அவ்வாறே ஒவ்வொரு சேதநனும்‌ ஆசார்யனுக்குக்‌ கைங்கர்யம்‌ செய்வதையே முக்கியமாகக்‌ கொள்ள வேண்டும்‌. இதைச்‌ செய்ததுயோக எஞ்சிய காலங்களில்‌ ஆசார்யன்‌ திருவுள்ளத்துக்கு உகப்பான செயல்‌ என்று நினைத்து அந்த அந்தக்‌  காலத்துக்கு ஏற்றவாறு பகவானுக்கும்‌ பாரகவதர்களுக்கும்‌  கைங்கர்யம்‌ செய்து ஆநந்தத்தை அநுபவிப் பது சேதநனது கடமையாகும்‌.
--------------

23–இக் கைங்கர்ய பரனுக்கு பரமை காந்திகள் உகந்த இடமே உசித ஸ்தானம்.
தர்மத்தைச்‌ செய்தலையே கடமையாகக்‌ கொண்ட ஸாத்துவிகர்கண்‌ வசிப்பதற்கு. உரிய இடங்களாகச்‌ சில புண்ணியத்தலங்களைச்‌ சாஸ்த்ரங்கள்‌ வகுத்துள்ளன. அனால்‌ இது கலிகாலம்‌. இன்னும்‌ பல குற்றங்கள்‌, நல்ல புண்ணியத்‌ தலங்கனையெல்லாம்‌ ம்லேச்சர்‌ முதலியவர்கள்‌ ஆக்ரமித்துக்‌ 
கொண்டு விட்டனர்‌. ஆதலால்‌ சாஸ்த்ரங்கள்‌ குறிப்பிட்டதற்காக அவற்றில்‌ போய்‌ வசிக்க முடியுமா? அதலால்‌ அத்தலங்கள்‌  விலக்குதற்கு உரியனவேயாகும்‌-
மேலும்‌ புண்ணியத்தலத்துக்கு - இலக்கணங்கள்‌ (அடையாளங்கள்‌) நூல்களில்‌ கூறப்பட்டுள்ளன. ஆனால்‌ புண்ணியத்தலங்களென ஏற்றுக்‌ கொண்ட சில தலங்களில்‌ இந்த இலக்கணம்‌ பொருந்தவில்லை. புண்ணியத்‌ தலமாகக்‌ கொள்ளாத  சில இடங்களில்‌ புண்ணியத்‌ தலத்துக்குக்‌ கூறிய இலக்கணம்‌  பொருந்துகின்றது. ஆகவே இலக்கணத்தை வைத்துக்‌ கொண்டு  புண்ணியத்‌ தலத்தை நிச்சயித்துக்‌ கூற முடியாது. பெரும்பாலும்‌  புண்ணியத்‌ தலங்களுக்கு இந்த இலக்கணங்கள்‌ இருக்கக்‌  கூடுமென்ற கருத்தாலேயே இலக்கணம்‌ கூறப்பட்டதாகக்‌ கொள்ள வேண்டும்‌. 
தன்‌ மனம்‌ தடையின்றி! ஒரு தலத்தை விரும்பிச்‌  செல்வதாலேயே அதைப்‌ புண்ணியத்‌ தலமாகக்‌ கொண்டு  வசிக்கலாமே என்று கூறவும்‌ முடியவில்லை. மானிடராகிய நம்‌ அறிவைக்‌ கொண்டு ஒன்றை முடிவு செய்யப்‌ பார்ப்பதில்‌ தவறுதலும்‌ ஸம்பவிக்கக்‌ கூடுமன்றோ! புண்யமல்லாததையப்‌ 
புண்ணியத்‌ தலமென்று நாம்‌ முடிவு செய்து விடவும்‌ கூடுமே! மேலும்‌ ஒரு மனிதன்‌ தனியாய்‌ நின்று ஒரு முடிவைச்‌ செய்து விடக்கூடாதென்று சாஸ்தரமும்‌ தடை செய்கின்றதே! 
இன்னும்‌ சிலரைக்‌ கலந்து கொண்டு அவர்கள்‌ புண்ணியத்‌  தலமெனக்‌ குறிப்பிடுவதை ஏற்றுக்‌ கொள்ளலாமே என்று கூறலாம்‌. அனால்‌ அந்த மணிதர்கள்‌ ரஜேோ குணம்‌ தமேர குணம்‌ 
உடையராயிருக்கக்‌ கூடும்‌. அதனால்‌ அவர்கள்‌ அறிவு கலங்கித தவறான வழியைக்‌ காட்டவும்‌ கூடும்‌. சில ஸமயங்களில்‌ அவர்களின்‌ கலக்கம்‌ நமக்கு உள்ள தெளிவையும்‌ போக்கி நம்மையும்‌ கலக்கி 
விடக்கூடும்‌.பின்‌ எவ்வாறுதான்‌ புண்ணியத்தலத்தை நிர்ணயம்‌ செய்வது? இவ்வாறு - மஹான்கள்‌ தேர்ந்தெடுத்து எழுந்தருளியிருக்கும்‌ இடமே நமக்கு வஸிக்க ஏற்றதாகும்‌. எத்தகைய மஹான்கள்‌? ஒருவனுக்கு விசேஷமான ஞானம்‌ ஏற்பட வேண்டுமானால்‌ அவனுக்கு ஸத்துவ குணம்‌ தலையெடுக்க 
வேண்டும்‌. அவ்வாறு ஸத்துவ குணம்‌ தலையெடுக்க வேண்டும்‌. அவ்வாறு ஸத்துவ குணம்‌ நிரம்பிய பெரியோர்கள்‌ எம்பெருமானையன்றி வேறெருவருக்கும்‌ தங்களை அடியராகக்‌ கருதமாட்டார்கள்‌. ப்ரபத்தியையன்றி வேறோர்‌ உபாயத்தைக்‌ கைக்கொள்ள மாட்டார்கள்‌; மோக்ஷத்தையன்றி வேறொரு 
பயனையும்‌ நாடமாட்டார்கள்‌. இவ்வாறு நல்ல விவேகம்‌ பெற்ற பரமைகாந்திகள்‌ தங்களுக்குக்‌ கடமையாக ஏற்பட்ட பகவத்‌ கைங்கர்யத்தைச்‌ செய்வதற்கு இதுவே ஏற்ற இடமென்று ஓர்‌ 
ஆகோ்ஷேபமுமின்றி ஒருமுகமாய்‌ நிச்சயித்துக்‌ கொள்வார்கள்‌. அந்த இடத்தில்‌ மகிழ்ச்சியுடனும்‌ சிரத்தையுடனும்‌ வாஸம்‌ செய்யத்‌ தொடங்குவார்கள்‌. அதுவே புண்யகேகஷேத்ரமாகும்‌. அந்த இடம்‌ 
சாஸ்தரத்தில்‌ விதித்த ஆர்யாவர்த்தம்‌ முதலிய க்ஷேத்ரங்களில்‌ சேராதிருப்பினும்‌ தோஷமில்லை. இன்னும்‌ புண்ய க்ஷேத்ரங்களுக்குச்‌ சொல்லிய அடையாளங்கள்‌ இல்லாவிடினும்‌ பாதகமில்லை. 
மேலும்‌ இந்திரியங்களை வென்ற பாகவதன்‌ வஸிக்குமிடமே குருக்ஷேத்ரம்‌ - நைமிசம்‌ - புஷ்கரம்‌ அகிய எல்லா கோ்ஷேத்ரமுமாகுமென்றும்‌, பாகவதர்கள்‌ வஸிக்குமிடத்தில்‌ -எம்பெருமானும்‌ வஸிக்கிறனென்றும்‌, பாகவதர்கள்‌ அரை நிமிஷம்‌ வஸித்தாலும்‌ அந்த இடமே புண்ணியத்‌ தலமாகுமென்றும்‌ இவ்வாறெல்லாம்‌ சாஸ்த்ரங்கள்‌ கூறுகின்றன. ஆதவின்‌ பாகவதர்கள்‌ வஸிக்கும்‌ இடமே எல்லாத்‌ தலங்களிலும்‌ மேம்‌ பட்ட புண்ய க்ஷேத்ரமாகும்‌. ஆகவே வேறு பயனை நாடாது 
எம்பெருமான்‌ திருவுள்ளம்‌ உகப்பதையே பயனாகக்‌ கொண்டு பாகவத கைங்கர்யம்‌ - பாகவத கைங்கர்யம்‌ - ஆசார்ய கைங்கர்யம்‌ ஆகிய மூவகைக்‌ கைங்கர்யங்களிலும்‌ ஈடுபட்டுள்ள 
பரமைகாந்தியான ப்ரபந்நன்‌ ஸகல கைங்கர்யங்களையும்‌ செய்வதற்குப்‌ பரங்கான இடம்‌ அதுவேயாகும்‌. அந்த இடத்தின்‌ பருமை. எத்தகைய தடைவரினும்‌ அதைப்‌ போக்கிக்‌ 
கைங்கர்யத்தை நன்கு நடைபெறச்‌ செய்யும்‌.
பரமைகாந்தி என்பவன்‌ எத்தகையன்‌? மேம்பட்ட தத்துவம்‌ - மேம்பட்ட உபாயம்‌ - மேம்பட்ட பலன்‌ அகிய மூன்றும்‌ எம்பெருமானே என்ற உறுதியுடன்‌ ப்ரமாணங்கள்‌ கூறுகிறபடி அவனையன்றி வேறொருவனும்‌ அவ்வாறு ஆகமாட்டானென்ற விசேஷ உறுதியுடையவன்‌. பாகவதன்‌ - வைஷ்ணவன்‌ என்ற சொற்களுக்கும்‌ இத்தகைய உறுதியையுடைய பரமைகாந்தியே முக்கியப்‌ யொருளாவான்‌. 
-------------

24—இப்படி துல்ய சீலரைக் கிடையாத போது விபரீத சம்சர்க்கம் ஏகாந்த வாச பரிஹார்யம்

கெட்ட மனிதனிடம்‌ எத்தகைய கல்வி இருப்பினும்‌ அவனுடன்‌  பழகக்‌ கூடாது. பகவத பக்தி இல்லாத. துஷ்‌ டனுடன்‌ ஸஹவாஸம்‌  செய்வதைக்‌ காட்டிலும்‌ தீயின்‌ கொழுந்து நடுவே வஸிப்பது 
நல்லது என்று ப்ரமாணம்‌ கூறுகின்றது. கெட்டவனுடன்‌ பழகுவது பாம்புடன்‌ ஒரே வீட்டில்‌ வஸிப்பது போன்றது. துஷ்டர்களின்‌  ஸம்பந்தத்தை மிக்க தூரததிலேயே. விலக்க வேண்டும்‌.
நல்ல ஸாத்துவிகர்களுடன்‌ பழக வேண்டும்‌. நாடு மிகவும்‌ கெட்டிருப்பதால்‌ நல்லவர்கள்‌ கிடைப்ப்து கஷ்டமாயிருக்கலாம்‌. அப்படியானால்‌ ஏகாந்தமான இடத்தை நாடி அதில்‌ வஸிக்க வேண்டும்‌. அங்கு உறுதியான விரதங்கொண்டு உலக சுகங்களில்‌ அதிகமாய்‌ ஈடுபடாமல்‌ பிறரைத்‌ துன்புறுத்தாமல்‌ பரமாதமாவின்‌ தியானத்தில்‌ இருப்பவனுக்கு மோக்ஷம்‌ கிடைய்பது நிச்சயம்‌ என்று சாஸ்த்ரம்‌ கூறுவதன்‌ கருத்தை உணர வேண்டும்‌. நமக்கு எம்பெருமானையன்றி வேறு மனிதர்‌ துணையாக மாட்டாரென்று அறிந்து இயன்றவரை அவர்களிடமிருந்து விலகியிருக்க வேண்டும்‌. 
எம்பெருமானது ஸங்கல்பத்துக்கு வசப்பட்டிருப்பதை  அநுஸந்தித்துக்‌ கொண்டிருக்க வேண்டும்‌. நம்‌ உயிர்த்‌  துணைவனான எம்பெருமானுடன்‌ பரமபதத்தில்‌ கூடி வாழப்‌  போவதை நினைத்துக்‌ கொண்டேயிருக்க வேண்டும்‌.

25. இவனுக்குக்‌ கதிசிந்தநாதிகள்‌ சிததஸந்தோஷ  ஹேதுவான காலயாபநம்‌.

பக்தியோகம்‌ ப்ரஹ்மவித்யை என வழங்கும்‌. அவ்வாறே  ப்ரபத்தியும்‌ ப்ரஹ்மவித்யை எனப்படும்‌. இவை இரண்டுமே மோக்ஷத்துக்குச்‌ சாதனமாகும்‌. பக்தியோகமாகிய ப்ரஹ்ம வித்யையைச்‌ செய்பவனுக்குச்‌ சாஸ்த்ரங்கள்‌ பல அங்கங்களை விதித்துள்ளன.அவற்றுள்‌ சில முக்கியமான அம்சங்களை அடிக்கடி சிந்திக்க வேண்டுமென்றும்‌ இந்தச்‌ சிந்தனையும்‌ பக்தியோகத்துக்கு 
விசேஷமான அங்கமாகுமென்றும்‌ சாஸ்த்ரம்‌ கூறுகின்றது. அந்த அம்சங்களாவ - (1) பக்தியோகத்தைத்‌ தொடங்குமுன்‌ உள்ள பாபங்கள்‌ ஒழிந்துவிடுதலும்‌ பிறகு தெரியாமல்‌ செய்யும்‌ பாபங்கள்‌ ஒட்டாமையும்‌. (2) சரீரத்தினின்று ஜீவன்‌ வெளியேறும்‌ முறை. (3) முக்தி பெறும்‌ போது அவனுடைய புண்ய பாபங்கள்‌ கழிந்து புண்யங்கள்‌ அவனுடைய நண்பர்களிடமும்‌ பாபங்கள்‌ அவன்‌ 
பகைவர்களி டமும்‌ புகுதல்‌. (4) அக்நி முதலிய தேவர்கள்‌ வழி நடத்திக்‌ கொண்டு செல்லும்‌ முறை (5) மோக்ஷம்‌ சென்றபின்‌ பெறப்போகும்‌ அநுபவாநந்தம்‌ என்பன. இவ்வம்சங்களைப்‌ பக்தியோகம்‌ செய்பவன்‌ அடிக்கடி சிந்தித்தேயாக வேண்டும்‌. இதைச்‌ செய்யாவிடின்‌ அங்கங்கள்‌ நிறைவேறாததுடன்‌ 
அங்யொன பக்தி யோகமும்‌ நிறைவேறாது போய்விடும்‌.
ப்ரபத்தியும்‌ ஒரு ப்ரஹ்ம வித்யையாதலால்‌ இதைச்‌  செய்பவனும்‌ ழே கூறிய சிந்தனையை ப்ரபத்திக்கு அங்கமாகச்‌  செய்தாக வேண்டும்‌ எண்று ஊஹிக்கக்‌ கூடும்‌. உண்மை நிலை 
வேறு. ப்ரபத்திக்கு உரிய அங்கங்களைக்‌ கூறுமிடத்தில்‌ இந்தச்‌  சிந்தனையை விசேஷ அங்கமாகக்‌ கூறவில்லை. ஆநுகூல்ய  ஸங்கல்பம்‌ முதலிய ஐந்து அங்கங்களைத்‌ தான்‌ 
வெளிப்படையாய்ச்‌ சாஸ்த்ரம்‌ கூறியுள்ளது. இவற்றுடன்‌, தத்துவங்களை அறிந்து மோக்ஷத்தை மட்டுமே விரும்பி ப்ரபத்தி  செய்பவனுக்கு மற்றொன்றையும்‌ அங்கமாக விதித்துள்ளது.
அதாவது - தான்‌ ப்ரபத்தியை ஸ்வதந்தரமாகச்‌ செய்வதான எண்ணம்‌ - தன்‌ பயனுக்காகச்‌ செய்வதான எண்ணம்‌ முதலியவற்றை விடுகை. இதுவும்‌ மோக்ஷத்துக்காகச்‌ செய்யும்‌ ப்ர பத்திக்கு அங்கமாகும்‌. இவற்றைத்‌ தவிர ப்ரபத்திக்கு வேறு அங்கமே இடையாது. ப்ரபத்தி வேறு எதையுமே எதிர்பார்க்காது 
என்று கூறும்‌ ப்ரமாணத்துக்குக்‌ கீழே குறிப்பிட்ட ஐந்து அங்கங்களையன்றி வேறு அங்கங்களை எதிர்பாராது என்றே கருத்துக்‌ கூறியாக வேண்டும்‌. இன்னும்‌ சில அங்கங்களைச்‌ சேர்ததுக கொண்டு இந்த ப்ரமாணத்தைக்‌ குறுக்கிக்‌ கொள்ள வேண்டிய அவசியமும்‌ இல்லை. ஆகவே &ழ்க்‌ கூறிய ஐந்து 
அம்சங்களின்‌ சிந்தனை ப்ரபத்திக்கு அங்கமாகாது. 
அப்படி அவற்றால்‌ ப்ரபத்தி நிறைவேற உதவி ஒன்றும்‌ இல்லாவிடின்‌ அவற்றின்‌ நினைவுதான்‌ எதற்காக? என்று கேட்கலாம்‌. வரப்போகிற ஆநந்தங்களை இப்பொழுது இங்கு நினைத்துக கொள்வதால்‌ உள்ளத்துக்கு மகிழ்ச்சியன்றோ ஏற்படுகின்றது! அது தகுந்த முறையில்‌ நல்ல பொழுது 
பயோக்காகவு மன்றோ இருக்கும்‌! உலகில்‌ தன்‌ நாயகனைப்‌ பிரிந்து நிற்கும்‌ ஒரு தர்மபத்நி தூரதேசத்தினின்று திரும்பி) வரவிருக்கும்‌ நாயகனை நினைந்து கொண்டு மகிழ்ந்து இன்பமாய்ப்‌ பொழுது போக்குவதைக்‌ காண்கின்றோமே! அவ்வாறே இங்கும்‌. ஆழ்வார்‌ ஸ.்ரீவைகுண டத்தை ஸேவிப்பதற்குத்‌ தமது உள்ளம்‌ இரவு பகலென்ற வேற்றுமையன்றி எப்பொழுதும்‌ அதையே 
சிந்திப்பதாகக்‌ கூறுகின்றார்‌. 
இந்தச்‌ சிந்தனைகளெல்லாம்‌ ப்ரபத்திக்கு அங்கமாக மாட்டா என்பது உண்மைதான்‌. அதற்காக அவை வேண்டாமென்று புறக்கணித்து விட முடியுமா? நரம்‌ புறக்கணிக்க முயன்றாலும்‌ விலக்க முடியாதே! நமக்கென்று ஏற்பட்ட மோக்ஷ£நு.பவத்தில்‌ மனத்துக்கு ஏற்பட்ட ஈடுபாட்டின்‌ மிகுதியாலன்றோ 
அச்சிந்தனைகள்‌ தாமாகவே வருகின்றன! த்வயத்தை அர்த்தத்துடன்‌ எப்பொழுதும்‌ அநுஸந்திக்க வேண்டுமென்றும்‌, ஸ்ரீரங்கம்‌ முதலிய திவ்ய தேசங்களில்‌ சரீரம்‌ கழியுமளவும்‌ வஸிக்க வேண்டுமென்றும்‌, பகவதார ரதநம்‌ செய்து கொண்டே நாள்களைக்‌ கழிக்க வேண்டுமென்றும்‌ ப்ரமாணங்கள்‌ கூறுகின்றனவே! இவை எல்லாம்‌ ப்ரபத்திக்கு அங்கமா? அல்லவே! எதற்காக இவையெல்லாம்‌? என்று கேட்க முடியுமா? இவற்றிலெல்லாம்‌ ஆநந்தமான பொழுதுபயேோக்கையன்றேர காண்கின்றோம்‌! அசோக வனத்‌; சிறையிருந்த பிராட்டி தண்‌ உள்ளததாலேயே தூரத்திலிரு பெருமாளுக்கு அருகே செல்லப்‌ பாரித்ததையும்‌ அருகில்‌ அரக்கியரையேர பழுத்துக்‌ குலுங்குகின்ற கணி. முதலியவற்றையேோ பாராமல்‌ இராமனையே சிந்தித்‌; தேறுதலுற்றதையும்‌ இங்கு உவமானமாக அநுஸந்திக்கலாம்‌

26. சாதக விருததியான இவனுக்கு அந்திம ப்ரத்யயம் ஸ்வ யத்‌ந ஸாத்‌யமன்று. 
வராஹப்பெருமா பிராட்டிக்கு உபதேசித்த சரம சுலோகத்தில்‌ கூறியதாவது - சரீர இந்திரியம்‌ முதலியன நல்ல நிலையில்‌ இருக்கும்பேோ ப்ரபத்தியைச்‌ செய்தவனுக்கு மரண காலத்தில்‌ அவன முயற்சியின்றியே என்னைப்‌ பற்றிய நினைவு வரும்படி நாே செய்து மோக்ஷத்திற்கு அழைத்துச்‌ செல்வேன்‌ என்று. சரஸ்த்ரமு ப்ரபந்நன்‌ புண்ணியத்‌ தலத்திலோ இழிவான இடத்திலோ நல்‌ 
நினைவு இன்றி மரணமடைந்தாலும்‌ மோக்ஷத்தை அடைகின்றா என்று கூறுகின்றது. 

ஸ்ரீ சரணாகதி கதயததிலும்‌ ஸ்ரீ பாஷ்யகாரர்‌ எம்பெருமா வாக்யமாக அருளிச்‌ செய்யும்போது ப்ரபந்நன்‌ மரண காலத்தி தன்‌ ஸங்கல்பத்தால்‌ பூர்ணமான ஞானத்தோடு இருப்பானென்று முந்திய நல்ல நினைவுகள்‌ பழக்கம்‌ எல்லா மாறாமல்‌ இருக்கயெறுவானன்றும்‌ விளக்கியுள்ளார்‌. பெரியாழ்வாரும்‌ தம்‌ மரண  வேதனை ஸமயத்தில்‌ எம்பெருமானைப்‌ பற்றிய நினைவு வராமற்யோகுமென்றும்‌ அதற்காக இப்பொழுதே அவனை அநுஸந்தித்து விடுவதாயும்‌ அருளிச்‌ செய்துள்ளார்‌. 
இவற்றினாலெல்லாம்‌ நாம்‌ அறிந்து கொள்வது யாது? 
பரபந்நராகிய நாம்‌ எம்பெருமானிடம்‌ பொறுப்பை முன்பே ஸமர்ப்பித்து விட்டபடியால்‌ மோக்ஷம்‌ பெறும்‌ விஷயத்தில்‌ பொறுபப்பின்றிக்‌ கவலையின்றி இருக்கன்றோமே! அவ்வாறே மரண காலத்தில்‌ இறுதி நினைவு நல்லதாய்‌ வரவேண்டுமே என்ற கவலையும்‌ இல்லாதிருப்போம்‌. எம்பெருமான்‌ திருவருளால்‌ நல்ல நினைவு தானாகவே அவசியம்‌ வரும்‌. 
பக்தியோகம்‌ செய்பவர்கள்‌ மட்டுமே மரணகாலத்தில்‌ மிக்க முயற்சி கொண்டு எம்பெருமானை உள்ளத்தில்‌ இருத்திக்‌ கொண்டேயோக வேண்டும்‌ என்ற நிர்ப்பந்தம்‌ உண்டு. ப்ரபததியைச்‌ செய்தவருக்கு இந்த நிர்ப்பந்தம்‌ கிடையாதே! ப்ரபந்நன்‌ ப்ரபத்திக்குப்‌ பின்‌ மரணம்‌ வரையில்‌ இங்கு இருக்க வேண்டிய முறை என்ன? மழை நீரையே எதிர்பார்த்து அண்ணாந்து நிற்கும்‌ சாதகப்பறவை போல்‌ மோக்ஷம்‌ பெறுதற்குக்‌ கண்ணனாகிய காளமேகத்தின்‌ கருணையாகிய இனிய நீரை 
எதிர்பார்த்திருக்க வேண்டியது ஒன்றே இவனுக்கு உரிய கடமையாகும்‌. 
செய்ய வேண்டியன வருமாறு - ஸாததுவிகர்களான யெரியோர்களின்‌ திருவுள்ளம்‌ உகக்கச செய்ய வேண்டும்‌. ஸாதுக்களின்‌ செய்கையைப்‌ பின்பற்றி நடக்க வேண்டும்‌. 
ப்ரஹ்மவித்துக்களிடம்‌ அபசாரம்‌ செய்வதற்கு அஞ்ச வேண்டும்‌. 
அறம்‌ - பொருள்‌ - இன்பம்‌ அகியவற்றிலேயே ஈடுபட்டு . நிற்பவர்கனைத்‌ துரும்பாகக்‌ கருதிப்‌ புறக்கணிக்க வேண்டும்‌. 
எப்பொழுதும்‌ சேஷியாய்‌ எல்லாவற்றையும்‌ பொறுப்பவனாயுள்ள சீரிய: பதியிடம்‌ பொறுப்பையெல்லாம்‌ ஸமர்ப்பித்துவிட்டுச சாதகப்‌ பறவை போல்‌ நின்று க்ஷேமத்தையடைய வேண்டும்‌. 

27—இப்படி க்ஷண க்ருத்யமான ஆத்ம சமர்ப்பன யாகத்துக்கு பகவத் சங்கல்ப சாத்தியமான தேக அவசானம் அவப்ரதம்

ஆத்மாவை எம்பெருமானிடம்‌ ஸமர்ப்பிததலாகிய ப்ரபத்தியை ஒரு வேள்வியாக உபநிடதம்‌ விதிக்கின்றது.ஆத்மாவே ஒரு ஹவிஸ்ஸாகும்‌. அதை எம்பெருமானிடம்‌ ஸமர்ப்பிப்பதே ஒரு வேள்வியாகும்‌. இது ஒரே க்ஷணத்தில்‌ செய்யக்‌ கூடியதே. இந்த ப்ரபத்தியாகிய வேள்வியைச்‌ 
செய்தவனுக்கு இச்‌ சரீரம்‌ கழிவதை அவப்ருதமென்கிறது உபநிடதம்‌. ஒவ்வொரு யாகத்திற்கும்‌ முடிவுக்குப்‌ பிறகு செய்ய வேண்டியது அவப்ருத ஸ்நாநம்‌ எனப்படும்‌. அத்துடன்‌ யாகம்‌ பூர்த்தியாகும்‌. அவ்வாறே ப்ரபத்தியாகிய வேள்விக்குப்‌ பிறகு நேரும்‌ மரணம்‌ பூர்த்தியாகிய அவப்ருதமாகும்‌.
இங்கு ஒரு கேள்வி எழலாம்‌. மரணத்தை அவப்கருதமென்று  கூறுவதாயின்‌ வேள்வியின்‌ அவப்ருத ஸ்நாநம்‌ மனிதம்‌ செய்ய வேண்டியிருப்பது போல்‌ மரணமும்‌ மனிதன்‌ செய்ய வேண்டியதாகவன்றோ ஏற்படும்‌! மரணத்தை மனிதன்‌ எவ்வாறு செய்ய முடியும்‌? மரணம்‌ அவரவர்‌ கர்மத்துக்கு ஏற்றவாறு ஏதோ ஒரு காலத்திலோ பகவானுடைய ஸங்கல்பத்தால்‌ மட்டுமே தானே வரக்கூடியதன்றோ! இதை மனிதன்‌ செய்ய வேண்டியதான அவப்ருதமாக எவ்வாறு கூற முடியும்‌? என்பது. 
ஒருகால்‌ மரணத்தை அவப்ருதமாக மனத்தில்‌ நினைத்துக்‌ கொள்ள வேண்டும்‌ என்று விதிப்பதாய்க்‌ கூறிவிடலாமா? இதுவும்‌ யொருந்தாதே! அவன்‌ ஸங்கல்பத்தாலே தானே வரக்கூடிய மரணத்தை அதற்கு முரண்பாடாக மனிதன்‌ செய்ய வேண்டிய அவப்ருதமாக எப்படி நினைத்துக்‌ கொள்ள முடியும்‌? ப்ர பந்நர்கள்‌ மரணத்துக்கு அஞ்சாமல்‌ பிரியமான விருந்தாளியை வரவேற்பது யோல்‌ எதிர்பார்ப்பதாக ப்ரமாணம்‌ கூறுவதால்‌ மரணம்‌ தானே வருவதென்று தெரிகின்றதே! பின்‌ மரணத்தை அவப்ருதமாகக்‌ 
கூறியதன்‌ கருத்துயாதென்று பார்க்க வேண்டும்‌. 
அது வருமாறு - உபநிடதம்‌ ந்யாஸ வித்யை என்னும்‌ பர பத்தியை விதிக்கும்‌ இடங்களில்‌ அத்மாவை ஸமர்ப்பித்து ப்ரபத்தி செய்தலை ஒரு வேள்வியாகவே பேசியுள்ளது. மற்ற ப்ரமாணங்களும்‌ அந்த ப்ரபத்தியை அதற்கு ஏற்பட்ட அங்கங்களுடன்‌ ஒரே முறை செய்ய வேண்டுமென்று கூறுகின்றன. 
உபநிடதத்தில்‌ ப்ரபத்தியை விதித்துள்ள பகுதிக்குப்‌ பின்பகுதி பரபந்நன்‌ செய்ய வேண்டிய காரியங்கள்‌ அனைத்தும்‌ தாமே நன்கு நிறைவேறி விட்டனவாகும்‌ என்று புகழ்கன்றது. இந்தப்‌ புகழ்ச்சி எந்த அம்சத்தைக்‌ காட்டுகின்றது? என்று ஆராய்ந்தால்‌ முற்பகுதியில்‌ கூறிய ப்ரபத்தியைச்‌ செய்தவன்‌ அதன்‌ பலனுக்காக-இனிச்‌ செய்ய வேண்டிய எஞ்சிய செயல்‌ எதுவும்‌ இல்லையென்பதையே காட்டுகின்றது. ஆகவே மரணத்தை அவப்ருதமென்று கூறியதன்‌ தாற்பரியம்‌ இந்த ப்ரபத்தியாகிய யாகத்துக்கு வேறோர்‌ அவப்ருதம்‌ கிடையாதென்பதும்‌ சரீரம்‌ கழிந்தவுடனேயே ஸரீ வைகுண்டமென்னும்‌ திவ்யலோகத்தை 
அடைந்துவிடலாமேன்‌ பதுவுமேயாகும்‌. 

28—சதாசார்ய பரிக்ராகத்திற்கு முன்புள்ள அநாதி காலம் எல்லாம் ஒரு காள ராத்திரி

சேதநன்‌ இதுவரை எத்தனை பிறவிகளை எடுத்துள்ளான்‌ என்பதைக்‌ கூறமுடியுமா? முடியாது. மோக்ஷம்‌ பெறும்‌ வரை இவனுடைய கர்மங்களால்‌ ப்ரக்ருதி என்னும்‌ திரை இவனுக்கு நல்ல விஷயம்‌ புலப்படாமல்‌ மறைத்துக்‌ கொண்டேயிருக்கின்றது. இந்த ப்ரக்ருதி என்பது யாது? ஸத்துவம்‌ - ரஜஸ்‌ - தமஸ்‌ என்னும்‌ மூன்று  குணங்களையுடைய ஒரு வஸ்து. இது சேதநனுக்கு உள்ள அறிவ பயன்படாதபடி ஒரு திரையாய்‌ நின்று மறைத்து விடுகின்றது. 
விதையினால்‌ முனை உண்டாகின்றது. முளையினால்‌ விதை உண்டாகின்றது. எதற்கு எது காரணம்‌? எது முதலில்‌ வந்தது? விடை கூறமுடியூமா? காரணம்‌ கண்டுபிடிக்க முடியாமல்‌ அநாதியாய்‌ 
வருகின்றது இந்த முறை. அவவாறே சேதநனுக்குக்‌ கர்மத்தால்‌ அஜ்ஞாநம்‌ வருகின்றது - அஜ்ஞாநுதீதால்‌ கர்மங்களைச்‌ செய்கின்றான்‌. எதற்கு எது காரணம்‌ என்று கூறமுடியாமல்‌ 
அநாதியாய்க்‌ கர்மமும்‌ அஜ்ஞாநமும்‌ மாறி மாறித தொடர்ந்து வருகின்றது. சேதநன்‌ செய்கிற அபசாரத்துக்கு அளவில்லை. ஆற்று வெள்ளம்‌ தெடர்ந்து வருவதுபோல்‌ சேதநன்‌ செய்யும்‌ 
அபசாரங்களும்‌ தொடர்ந்தே நடைபெறுகின்றன. ஒரு நீண்ட சங்கிலித்‌ தொடரில்‌ ஒரு வளையத்தில்‌ மற்றொரு வளையமாகக்‌ கோத்துக்‌ கொண்டு தொடருவதுயோல்‌ ஓர்‌ அபசாரத்தின்‌ முடிவில்‌ 
மற்றோர்‌ அபசாரமாகச்‌ செய்து கொண்டே போகின்றான்‌ சேதநன்‌.
இவன்‌ இருக்கும்‌ இடமோ அஞ்ஞானத்தையே விளைவிக்கும்‌ பெரிய நிலமாகும்‌. அதில்‌ அகப்பட்டுத்‌ தவிக்கும்‌ இவனுக்குத திருமந்திரம்‌ - தவயம்‌ - சரம சுலோகம்‌ ஆகிய ரஹஸ்யங்களையோ 
அவற்றின்‌ பொருளையோ அறியும்‌ வாய்ப்பு ஏது? ஆகவே தன்‌ ஸ்வரூபத்தை எவ்வாறு அறிய முடியும்‌? தன்‌ அதமா தன்னை அறு வதற்கு வேறொரு ஞானத்தை எதிர்பாராமல்‌ ஸ்வயம்ப்ரகாசமாய்‌ அதாவது தானே ?நான்‌ நான்‌” என்று தோன்றிக்‌ கொண்டேடயிருக்கின்றதே! இந்த ஆத.மாவைப்‌ பற்றியுள்ள அம்சங்களை அறிகன்றானா? அதுவுமில்லை. தன்‌ அதமாவைப்‌ பற்றியே அறியமுடியாத இவன்‌ பரமாதமாவை எவ்வாறு அறிவான்‌? எல்லாக்‌ காலங்களிலும்‌ எல்லாவிடததிலும்‌ ஒர்‌ இடமும்‌ விடாது பரந்து விபுவாய்‌ நிற்கும்‌ எம்பெருமானாகிய அழியாத ஒரு சேமநிதி இவனிடமும்‌ அந்தர்யாமியாய்‌ 
இருக்கின்றதே! எப்பொழுதும்‌ அருகில்‌ உள்ள இதை அறிய முடிகின்றதா இவனால்‌? நல்ல அறிவைப்‌ பெறுவதற்குச்‌ சிறிது முயற்சி கூட இவனுக்கு இல்லையே! அகவே அநாதியான ஸம்ஸார ஸம்பந்தததால்‌ உறங்கிக்‌ கொண்டு கிடக்கும்‌ இவனுக்கு அநாதியான காலமெல்லாம்‌ பயங்கரமான 
காளராதரியாகவல்லவோ கழிந்துள்ளன! 
இவ்வாறு அஞ்ஞானவிருளில்‌ மூழ்கிக்‌ கிடக்கும்‌ இவனுக்கு  ஏதோ ஒரு ஸாக்ருத விசேஷத்தால்‌ இவன்‌ ஞானமெனும்‌ பகலைக்‌ காண ஒரு வழி ஏற்படுகின்றது. ஒரு சிறந்த அசார்யன்‌ வந்து இவனை ஏற்றுக்‌ கொள்கின்றான்‌. இது இவன்‌ பிறகு காணப்போகும்‌ பெரும்‌ பகலுக்கு அருணோதயம்‌ போலாகின்றது. 
அந்த ஆசார்யன்‌ இவனது அஞ்ஞானவிருளைப்‌ போக்க முற்படுகின்றான்‌; சாஸ்த்ரார்த்தங்களையெல்லம்‌ ஒன்று திரட்டி இவனுக்கு உபதேசிக்கின்றான்‌; இவனை நல்ல ஆசாரத்தில்‌ நிலைநிற்கும்படி செய்கின்றான்‌; தானும்‌ அநுஷ்டித்துக்‌ காட்‌ டுகின்றான்‌; ' இவனுடைய அஞ்ஞானவிருளையெல்லாம்‌ ஒழிக்க வல்ல ஞானமாகிய ஒளிவிளக்கைத்‌ தருகின்றான்‌. -இவவாது நல்வழிகாட்டி ஒப்பற்ற மஹோபகாரம்‌ செய்த ஆசார்யன்‌ விஷயத்திலே இவன்‌ எப்படி நடந்து கொள்ள வேண்டும்‌? அவன்‌ செய்த உதவிக்கு இவண்‌ எதாவது கைம்மாறு காணமுடியுமா? இவனுக்கு மேம்பட்ட தேவர்களுக்குமே 
காணமுடியாதே! ஆதலின்‌ இவன்‌ தன்னை ஆசார்யன்‌ விஷயத்தில்‌ எந்நாளும்‌ கடன்ப ட்டவனாகக்‌ கருத வேண்டும்‌. இந்த உணர்ச்சியை எந்நாளும்‌ உள்ளத்துக்‌ கொண்டு இந்த ஸம்ஸார லோகத்தில்‌ மட்‌டுமன்றி ஸ்ரீவைகுண்டம்‌ சென்றாலும்‌ இந்த ஆசார்யன்‌ திருவடிகளே தனக்குத்‌ தஞ்சம்‌ என்ற உறுதியுடன்‌ இருப்பதுவே இவன்‌ கடமையாகும்‌. 

29—பின்பு தேச அவசனத்து அளவும் நல் விடிவு

பலன்பெற முக்கிய காரணம்‌ ஆசார்யன்‌ சிஷ்யனை ஏற்றுக்‌ கொள்ளுதல்‌. ஆசார்யன்‌ ஏற்றுக்‌ கொண்டவடனேயே மோக்ஷம்‌ வந்து விடுனெறதா? இல்லை. சேதநன்‌ ப்ரபத்தி செய்யும்போது 
உடனே மோக்ஷத்தைக்‌ கேட்கவில்லையே! இச்சரீர முடிவில்‌ மோக்ஷம்‌ வந்தால்‌ போதுமென்றுதானே கேட்டு பிரபத்தி செய்கின்றான்‌. அதுவரையில்‌ இந்தச்‌ சரீரமாகிய சிறைக்கூடத்தில்‌ இவன்‌ இருந்துதானே தீர வேண்டும்‌! இந்தச்‌ சிறைக்‌ கூடத்துக்குத்‌ தூண்கள்‌ யாவை? சரீரத்தில்‌ உள்ள எலும்புகள்தாம்‌. இந்தச்‌ சேதநன்‌ அசார்யனருனால்‌ ஞானம்‌ யெற்றிருப்பினும்‌ அஞ்ஞான இருள்‌ கலவாது நடக்க முடிகின்றதா? 
இச்சரீரம்‌ உள்ளவரையில்‌ பலன்‌ கொடுக்கத்‌ தொடங்கிய கர்மங்களையும்‌ அவற்றால்‌ வரும்‌ பலன்களையும்‌ ப்ர பந்நன்‌ ஏற்றுக கொண்டுதானே இருக்கின்றான்‌. ஆதவின்‌ அக்கர்மங்களின்‌ 
விளைவாகச்‌ சிறிதளவாவது அஞ்ஞானவிருள்‌ கலந்துதான்‌ வாழ்க்கை நடத்த முடியும்‌. அதனால்‌ பெருந்தீ ங்கு ஒன்றும்‌ வந்துவிடாது, சிறந்த ஆசார்யனுடைய அநுக்ரஹத்தையன்றோ பெற்றிருக்கின்றான்‌! அதன்‌ வலிமையால்‌ இவனுக்கு ஞானமும்‌ வைராக்யமும்‌ பக்தியும்‌ பூ மலர்வது போல்‌ நிச்சயமாய்‌ மலரும்‌. இதனால்‌ வரும்‌ மகிழ்ச்சியையும்‌ அநுபவித்துக்‌ கொண்டிருப்பான்‌. 
இந்த நிலையில்‌ இவனது விவேகம்‌ இவனைத தட்‌டியெழுப்புகின்றது. ப்ரக்ருதி பல சிற்றின்பங்களைக்‌ காட்டி இதுவரை தன்னில்மயங்கிப்‌ படுத்திருக்கும்படி செய்திருந்தது - இப்பொவுதுஅவ்வுறக்கத்தினின்று விழித்துக்‌ கொள்கின்றான்‌. எம்பெருமானை அறிவதிலோ காண்பதிலோ அநுபவிப் பதிலோ 
சிறிதும்‌ ஐயமின்றி நிலையான மனவுறுதியோடு நிற்கின்றான்‌. 
உலக சுகங்களை உதறித்‌ தள்ளுகின்றான்‌. இச்சரீர முடிவில்‌ கார்மங்கள்‌ முதலிய எல்லாப்‌ பொல்லாங்குகளும்‌ நீங்கி எல்லையற்று பேரின்பமாகிய மோக்ஷம்‌ வரப்போவதை நினைத்துக்‌ கொண்டு 
இந்திரியங்களையெல்லாம்‌ எம்பெருமானிடமே ஈடுபடுத்திக்‌ கொண்டு இருக்க வேண்டியது ப்ரபந்நனது கடமையாகும்‌. ஆகவே இச்சீ ரம்‌ கழியுமளவும்‌ நல்ல விடியற்‌ காலப்பொழுதாகவே இருக்கும்‌.

30—மேல் முழுக்க ஸ்வ ச்சந்த கைங்கர்ய மஹோத்சவ திவசம்

முன்பு சேதநன்‌ செய்த ப்ரபததியாலே இவனைக கைவிடாமல்‌ காக்கப்பட வேண்டிய வஸ்துவாக எம்பெருமான்‌ ஏற்றுக்‌ கொண்டு விட்டான்‌. மோக்ஷம்‌ பெற ஆசைப்பட்டுத தாணே -சரணாகதி செய்தான்‌! ஆகவே செய்ய வேண்டிய கடமையை௫செய்து முடித்தவனாகி விட்டான்‌. உலகில்‌ ஒரு சுரங்கத்தினின்று ஒரு பெரிய இரத்தினத்தை எடுக்கும்போது சுற்றிலும்‌ மண்‌ பற்றுப்‌ பூசிக்கொண்டு ஒளி புலப்படாதிருக்கும்‌. மண்பற்றைக கழற்றிக்‌ கழுவி விட்டால்‌ அந்த இரத்தினத்தின்‌ ஒளி! எங்கும்‌ பரவும்‌. அவ்வாறே சுரங்கத்தினின்று எடுத்த இரத்தினம்‌ போல்‌ உள்ளான்‌ ப்ரக்ருதி ஸ.ம்பந்தத்தோடு கூடிய இந்தச்‌ சேதநன்‌. இவனுக்கு இச்சரீரம்‌ கழியுமளவும்‌ ஸ்தூலமான ப்ரக்ருதி ஸம்பந்தம்‌ உண்டு. 
இவன்‌ சரீரமே ப்ரக்ருதியால்‌ ஆனதுதானே! சரீரம்‌ கழிந்து பரமபதத்துக்குச்‌ செல்லும்‌ நிலையில்‌ விரஜாநதிக்குப்‌ யோகும்‌ வரை ஸூ்ஷ்ம்மான சரீரத்தின்‌ வடிவில்‌ ப்ரக்ருதி ஒட்டிக்‌ கொண்டேயிருக்கும்‌. இந்த ஸ்தூல - ஸகிக்ஷூமமான இரண்டு ஸம்பந்தத்தையும்‌ எம்பெருமான்‌ கழிப்பது இரததினத்தின்‌ 
மண்பற்றைக்‌ கழற்றுவது யோலாகும்‌. 
பின்‌ இவனுடைய ஞானம்‌ எல்லாவற்றையும்‌ அறியக்கூடியதாய்‌ மலர்ச்சி பெற்றுவிவிடும்படி செய்கின்றான்‌ எம்பெருமான்‌. இது இரத்தினம்‌ இயற்கையொளியைப்‌ புலப்படுததும்படி எம்பெருமான்‌ செய்வது போன்றதாகும்‌. திருமார்பில்‌ எப்பொழுதும்‌ அணிந்துள்ள கெளஸ்துப ரத்தம்‌ எப்படி எம்பெருமானுக்கு மகிழ்ச்சியை விளைவிக்கின்றதோ, அவ்வாறே அதன்‌ அம்சமான ஜீவனும்‌ அவனுக்கு மகிழ்ச்சியை வினைவிப்பான்‌. ச்ரிய:பதியான எம்பெருமான்‌ திருவடிகளில்‌ ஸ்ரீவைகுண்டத்தில்‌ எல்லா இடத்திலும்‌ எந்நாளும்‌ எந்த நிலையிலும்‌ எல்லாக்‌ கைங்கர்யங்களையும்‌ செய்து கொண்டிருப்பான்‌. 
எம்பெருமானுக்கு, இன்ன இடத்தில்தான்‌ இருப்பான்‌, இன்ன ஸமயத்தில்தான்‌ இருப்பான்‌, இன்ன வஸ்துவாகததான்‌ இருப்பான்‌ என்ற வரையறை எவ்வாறு இல்லையோ, அவ்வாறே சாஸ்த்ரங்களாலும்‌ ப்ரமாணங்களாலும்‌ காட்டப்பட்டுச்‌ சேதநன்‌ மோக்ஷத்தில்‌ செய்யும்‌ கைங்கர்யத்துக்கும்‌ வரையறை கிடையாது. இவ்வாறு பரமபதததில்‌ கைங்கர்யம்‌ செய்வதே ஒரு மஹோத்ஸவமாகும்‌. 
இந்த உதஸவத்தைத்‌ தரக்‌ காரணமாயுள்ளவன்‌ யாவன்‌? அவவெம்பெருமானே. உண்மையான அதமஸ்வரூபம்‌ அப்பொழுதே தோன்றும்‌. அது தோன்றுவதே ஒரு முறையே விடிந்து வந்த தொடர்ந்து நிற்கும்‌ நற்பகலாகும்‌. இந்தப்‌ பகலுக்குப்‌ பிறகு மாலைப்பொழுது வரவே வராது. இந்த நற்பகல்‌ வரக்காரணம்‌ யார்‌? அவ்வெம்பெருமானே. உலகில்‌ பகற்பொழுது  வரக்‌ காரணம்‌ யார்‌? சூரியன்தானே! இங்கு மோக்ஷ£நுபவமாகிய நற்பகல்‌ வருவதற்குக்‌ காரணம்‌ எம்பெருமானாகுிய சூரியனே என்று உணர வேண்டும்‌. 
உலகில்‌ உள்ள சூரியணுக்கு உதயம்‌ - அஸ்தமனம்‌ - இரகணம்‌ இவை எல்லாம்‌ உண்டு. இந்த எம்பெருமானாகிய மஹாஸ_ூர்யனுக்கோ அவை ஒன்றும்‌ கிடையாது. சூரியனை விட்டு ஒளி பிரியாதிருப்பதுபோல்‌ பிராட்டி அவனை விட்டுக்‌ கணப்பொழுதும்‌ பிரியாதிருக்கின்றாள்‌. உலகில்‌ உள்ள சூரியனது உருவத்தை அளவிட்டு விடலாம்‌. இந்த மஹாஸ_ூர்யனை அளவிட முடியாது. இந்த ஸூர்யன்‌ எப்பொழுதும்‌ ப்ரகாசித்தலே தனக்கு ஸர்வமங்களங்களையும்‌ சாச்வதமாகப்‌ பெறுதலாக அநுஸந்தித்துக்‌ கொண்டிருப்பதுவே சேதநனது கடமையாகும்‌. 
சிலர்‌ எம்பெருமான்‌ ஜீவனை அடைகின்றானேயன்றி ஜீவன்‌ எம்பெருமானை அடைவதில்லையென்றும்‌, லாபமும்‌, நஷ்டமும்‌ எம்பெருமானுக்கேயன்றி ஜீவனுக்கு இல்லையென்றும்‌ இன்னும்‌ இவ்வாறு பல கொள்கைகளைக்‌ கூறுகின்றனர்‌. இக்‌ கொள்கைகளைக்‌ கண்டிக்க வேண்டிய அவசியமில்லை. 
இக்கொள்கைகளின்‌ உட்கருத்தை நாம்‌ நல்லதாகவே கொண்டுவிட முடியும்‌. எவ்வாறெனில்‌ - ஜீவன்‌ எம்பெருமானுக்கு அடியனா யிருத்தலிலேயே சுவை கண்டவன்‌. மோக்ஷத்தில்‌ இவனுக்கு 
ஞானமலர்ச்சி முதலிய பல விசேஷங்கள்‌ வருகின்றன. இவையெல்லாம்‌ ஸர்வேசுவரனுக்கு மிகவம்‌ போக்யமாயுள்ளன. புஷ்பம்‌ சந்தனம்‌ முதலியவற்றைத்‌ தரித்தால்‌ அவற்றின்‌ மணம்‌ முதலியன தரிப்பவர்க்கே மகிழ்ச்சியை விளைவிப்பதுபோல்‌ ஆதமாக்களெல்லாம்‌ எம்பெருமானுக்கே சேஷமாயிருப்பதால்‌ ஜீவனுக்கு வரும்‌ விசேஷங்களால்‌ மகிழ்ச்சியடை பவனும்‌ ஸர்வேச்வரனேயோவான்‌ என்ற கருத்தைக்‌ கொண்டன. அவர்களின்‌ கொள்கைகள்‌ என்று கூறிவிடுதல்‌ நன்று.
 
சிறுபயனிற்‌ படியாத தகவோரெம்மைச்‌ சேர்க்கவடைக்கலங்கொண்ட திருமால்‌, தானே 
மறுபிறவியறுத்தழியா வானில்‌ வைக்கும்‌ மனமே நீ மகிழாதேயிருப்பதென்கொால்‌ 
உறுவதுனக்குரைக்கேனிங்கிருக்குங்காலம்‌ ஒரு பிழையும்‌ புகுதாத வுணர்த்தி வேண்டிப்‌ 
பெறுவதெலாமிங்கே நாம்‌ பெற்று வாழப்‌ பேரடிமையாலேதென்றிகழேல்‌ நீயே. 

ரக்ஷ்ந்த்வநந்யரக்ஷ்யாம்‌ லக யஸீமபி கரீயஸீம்‌ ஸந்த:1 

லக்ஷமீஸஹாய ஹ்ருத்யாம்‌ ரஹஸ்யரத்நாவளிம்‌ ரம்யாம்‌2 
பெரிய இரத்தின ஹாரத்தையும்‌ முத்துமாலையையும்‌ தண்‌ திகுமார்புக்கு ஏற்ற திருவாபரணமாகத்‌ தரித்திப்பதுபோல்‌ இந்த ரஹஸ்ய க்ரந்தமாகிய ஹாரத்தையும்‌ தன்‌ திருவுள்ளத்துக்கு உவப்பான அணியாகக்‌ கொள்ளும்படியிருக்கின்றது. 
இரததின.மாலை உருவில்‌ சிறியதாயிருப்பினும்‌ ப்ரகாசம்‌ விலை முதலியவற்றால்‌ மிக்க பெருமையுடையதாயிருக்கும்‌. அவ்வாறே இந்தக்‌ ரெந்தமும்‌ உருவில்‌ சிறியதாயிருப்பினும்‌ அவசியம்‌ அறிய வேண்டிய ஸகல ஸாரார்த்தங்களின்‌ சுருக்க.மாதலின்‌ மிகுத்த பெகுமையூடையதாயுள்ளது.-ஸாரம்‌ அஸாரம்‌ இவற்றைப்‌ பற்றிய பகுத்தறிவு மிக்கவர்களாய்ப்‌ பொறாமையற்றவர்களாய்ச்‌ 
சாஸ்தரங்களுக்கு வசப்பட்டவர்களான பெரியோர்களே இந்நூலை உரிய முறையில்‌ காப்பார்கள்‌

ஒன்றே புகலென்றுணர்ந்தவர்‌ காட்டத்‌ திருவருளால்‌ 
அன்றேயடைக்கலங்கொண்ட நம்மத்திகிரித்‌ திருமால்‌ * 
இன்றேயிசையினிணையடி சேர்ப்பரினிப்‌ பிறவோம்‌ 
நன்றே வருவதெலாம்‌ நமக்குப்‌ பரமொன்றிலதே.
ஒன்றே புகல்‌” என்ற பாசுரம்‌ இந்த ரஹஸ்யமாகிய இரத்தினஹாரத்தைக்‌ கோக்கும்‌ நூலின்‌ ஸ்தாநத்தில்‌ உள்ளது. இந்தப்‌ பாசுரத்தில்‌ ஆசார்யன்‌ மூலமாகப்‌ பிர பத்தியைச்‌ செய்து அந்தப்‌ பொறுப்பை எல்லாம்‌ ஸர்வேச்வரனிடம்‌ ஸமர்ப்‌ பித்துவிட்டு அந்தப்‌ பொறுப்பையும்‌ எம்பெருமானால்‌ 
ஏற்றுக்‌ கொள்ளப்‌ பெற்றவனான சேதநன்‌ தான்‌ ஒரு பொறுப்பும்‌ அற்றவனாய்த தன்னை நினைத்துக்‌ கொள்ள வேண்டிய நிலை காட்டப்‌ படுகின்றது 

—————————————-

கவி தார்க்கிக ஸிம்ஹாய கல்யாண குண சாலிநே
ஸ்ரீமதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம —

———————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நயினாராச்சார்யர் சுவாமி திருவடிகளே சரணம்-
ஸ்ரீ வேதாந்த தேசிகன் சுவாமி திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ தேசிகர் அருளிச் செய்த-ஸ்ரீதத்த்வ நவநீதம்-

June 19, 2025

ஸ்ரீ மான் வேங்கட நாதார்ய கவிதார்க்கிக கேஸரீ
வேதாந்தா சார்ய வர்யோ மே சந்நிதத்தாம் சதா ஹ்ருதி —

அம்ருத ரஞ்ஜனீ ரஹஸ்யங்களில் நாலாவது. இது காஞ்சீபுரத்தில் அருளிச்செய்யப்பட்டது.

[போக்த்ராதி விபாகம்-போக்த்ரு நிரூபணம்-போக்ய நிரூபணம் -த்ரிகுண நிரூபணம்-கால நிரூபணம்-சுத்த ஸத்த்வ நிரூபணம் -ப்ரேரித்ருநிரூபணம்-ப்ரஹ்ம த்ரைவித்ய நிரூபணம்.

உயிரும் உடலும் உடலாக ஓங்கித்
தயிர் வெண்ணெய் தாரணியோடுண்டான்*-பயிரில்
களைபோல் அசுரரைக் காய்ந்தான்தன் கையில்
வளைபோல் * எம் ஆசிரியர் வாக்கு.

நம் பூர்வாசார்யர்களுடைய ஸ்ரீஸூக்தி,ஜீவாத்மாக்களும் அவை களின் சரீரங்களும் தனக்குச் சரீரமாயிருக்கும்படி தான் சேஷியாய் ஸர்வோத்க்ருஷ்டனாய் நின்று, திருவாய்ப்பாடியில் தயிர் வெண்ணெய் முதலியவைகளை இந்தப் பூமியுடன், (இது மற்ற எல்லா லோகங்களுக்கும் உபலக்ஷணம்), அமுதுசெய்தவனாய், பயிரில் களையைப் போலே அஸுரர்களைக் கொன்றவனாகிய பகவானுடைய திருக்கையில் கடகத் (சங்கத்)தைப் போலே (அவற்றைத் தரிப்பவர்களுக்கும் பார்ப்பவர்களுக்கும் த்ருப்தியை உண்டு பண்ணுகிறாப் போலே இருக்கிறது,

ஸ்ரீ பாஞ்ச ஜன்யம் -ஹஸ்த ஆபரணம் போல் அன்றோ நம் ஆச்சார்யர் ஸ்ரீ ஸூக்திகள்

போக்த்ராதிவிபாகம் –ஸம்ஸ்க்ருத த்ராவிடருதி ஸ்மருதி இதிஹாஸ புராணங்களில் சொல்லுகிற தத்த்வ ஜ்ஞாந பூர்வகமாக மோக்ஷோபாயாநுஷ்ட்டாநம் வேண்டு(மா)கை
யாலே, முமுக்ஷவுக்கு விசேஷித்தறிய வேண்டும் சித் அசித் ஈஸ்வர தத்த்வங்களை போக்தா என்றும், போக்யம் என்றும், ப்ரேரிதா என்றும் உபநிஷத்துச் சொல்லிற்று.

போக்தாவா கையாவது-போகத்தையுடையனாகை. இது-ஸர்வேஸ்வரனுக்கும் பொதுவாயிருக்க, அவனை ப்ரேரிதா என்று பிரியச் சொல்லுகையாலே ஸர்வ ப்ரேரகத்வ மின்றிக்கே பராதீந போகனான ஜீவனை இங்கு போக்தா என்கிறது.

தேகாத்மா பிரமமும் ஸ்வ ஸ்வா தந்த்ர பிரமமும்-அந்நிய சேஷத்வ பிரமமும் – போக்க வேண்டுமே-ஜீவனுடைய போக்த்ருத்வம் -பரி பூர்ண நிரங்குச ஸ்வ தந்த்ரனான ஈஸ்வரன் சங்கல்பம் அடியாகவே –ஆகவே நியாந்தா ப்ரேரிதா -சர்வேஸ்வரன்

(அதிஷ்ட்டாநம் ததா கர்த்தா -கீதை -18-14 கரணம் ச ப்ருதக் விதம் | விவிதா ச ப்ருதக் சேஷ்டா தைவம் சைவாத்ர பஞ்சமம் ‘ என்று மேல் . (மனிதன் சரீரம் வாக்கு மனது இவைகளினால் எந்தக் கர்மத்தைச் செய்கிறானோ,அந்தக் கர்மத்திற்கு) சரீரம்,அப்படியே ஜீவாத்மா (வெவ்வேறாக இருக்கிற இந்த்ரியங்கள், அநேக விதமாயிருக்கிற வேறான வ்யாபாரத்தை யுடைய ப்ராண வாயு, இந்த விஷயத்தில் ஐந்தாவதாகிய பரமாத்மா,இவை ஐந்தும் காரணங்கள்.) என்கிற இடத்தில் கர்த்ரு பதம் பராதீந கர்த்தாவைச் சொல்லுகிறது. சித் அசித் ஈஸ்வரர்கள் என்னும் போது சித் சப்தமும் பராதீந சேதந விஷயம்.

( இச்சாத ஏவ தவ விஸ்வ பதார்த்த ஸத்தா -வைகுண்ட ஸ்தவம்-36. நித்யம் ப்ரியாஸ்தவ து கேசந தேஹி நித்யா: ‘ என்று மேல். உம்முடைய ஸங்கல்பத்தினாலேயே எல்லா
வஸ்துக்களினுடைய ஸ்வரூபம் உண்டாகிறது. ( எவை சில உமக்கு எப்பொழுதும் இஷ்டங்களோ அவை நித்யங்கள் என்னப்படுகின்றன.)இத்யாதிகளிற் படியே ஜீவனுடைய ஜ்ஞாநாநந்த ஸ்வரூபாதிகளும் பராதீநங்களாயிறே இருப்பது. இஜ்ஜீவ வர்க்கத்தில் பீஜாங்குர க்ரமத்தாலே அநாதியான அபராத ப்ரவாஹமடியாக முடிவில் பெரும் பாழான சிறைக்கூடத்திலே முப்பிரியான ஸத்வாதி குணங்களாலே கட்டுண்டு கழல விரகற்றுக் கிடக்கிறவர்கள் பத்தர்கள். இவர்களிலே மோக்ஷ ஸாஸ்த்ரங்களிற் சொல்லுகிறதொரு விரகாலே-(மோக்ஷயிஷ்யாமி) என்னும்படி முனிவு தீர்ந்து நித்யரோடொக்க முகப்பே கூவிப் பணி கொள்ளப் பெற்றவர்கள் முக்தர்கள். நித்ய பகவதனுபவத்தாலே நித்ய கைங்கர்ய பரரான சேஷ சேஷாஸநாதிகள் நித்யர்கள்.

போக்யநிரூபணம் –போக்யம் என்பது அநுபாவ்யம் என்றபடி. இது ஜீவேஸ்வரர்களுக்கும் பொதுவாகையாலே பூர்வாபரபதங்களிற் சொன்ன போக்த்ருத்வமும் நியந்த்ருத்வமும்
இல்லாத விஷயத்தை இங்கு’போக்யம் என்கிறது. இத்தை அசித்து என்றது ஜ்ஞாந ரஹிதம் என்றபடி. அசேதநத்வம் கேவல குணங்களுக்கும் தர்மபூத ஜ்ஞாநத்திற்கும் பொதுவாகிலும் இங்கு த்ரிவித அசேதனம் என்று பூர்வர்கள் நிரூபித்தவை த்ரிகுணமும் காலமும் ஸூத்த ஸத்த்வமும் என்கிற த்ரவ்ய விசேஷங்கள்.

த்ரிகுண நிரூபணம் -த்ரிகுணமாவது-பரிமித ஸுகத்திற்கும் துக்கத்திற்கும் மோஹத்திற்கும் விசேஷ காரணங்களான ஸத்த்வ ரஜஸ் தமஸ்ஸுக்களாகிற குணங்களுக்கு ஆஸ்ரயமான த்ரவ்யம். இது கேவல ப்ரக்ருதி என்றும், ப்ரக்ருதி விக்ருதி | என்றும், கேவல விக்ருதி என்றும் மூன்று வகையாய் இருபத்து நாலு தத்த்வ ரூபமாயிருக்கும். இவற்றில் ஸ்வபாவத்தாலும் பஞ்சீகரணாதிகளாலும் தேஸ கால பேதத்தாலே உண்டாம் விக்ருதிகளுக்கு எல்லை யில்லை.-மகான் அஹங்காரம் தன்மாத்திரைகள் -ஆகிய ஏழும் பிரகிருதி விக்ருதிகள்
பஞ்ச பூதங்களும் கர்ம ஞான பஞ்ச இந்திரியங்களும் மனஸ் ஆகிய இவை -16-கேவல விக்ருதிகள்-இவற்றில் ஸ்வ பாவத்தாலும் பஞ்சீ கரணாதிகளாலும் தேச கால பேதத்தாலே யுண்டாம் விக்ருதிகளுக்கு எல்லையில்லை –

கால நிரூபணம்–காலமாவது ஜடத்வ விபுத்வங்களை யுடைத்தாய் பால வ்ருத்தாதி வ்யவஸ்த்தைகளுக்கு விசேஷ காரணமான த்ரவ்யம். இது எப்போதும் அவ்வோ வஸ்துக்களுடைய பூத பவிஷ்யத் வர்த்தமாந வ்யபதேங்களுக்கும் தன் அவச்சேதங்களாலே நியாமகமாயிருக்கும். இதற்கு ஸத்த்வாதி குண த்ரயமின்றிக்கே இருக்க உபாதி விஸேஷங்களாலே ஸீத காலம் உஷ்ண காலம் என்னுமா போலே ஸாத்த்விக ராஜஸ தாஸாதி கால விபாகம் உண்டாகிறது. ப்ரஹ்ம திவஸம் முதலாக மனுஷ்ய திவஸ பர்யந்தமாக எங்கும் இது கண்டு கொள்வது. ஸூத்த ஸத்த்வத்தில் இப்படிப்பட்ட கால விபாகமின்றிக்கே பூர்வாபராதி விபாக மாத்ரமே யாயிருக்கும்.

சுத்தஸத்த்வ நிரூபணம்-சுத்த சத்வமாவது -ரஜஸ் தமஸ்ஸூக்கள் இன்றிக்கே -பிராகிருத சத்வ -விலக்ஷண சத்வத்துக்கு ஆஸ்ரயமான த்ரவ்யம்-இது ச பரிகாரனான ஸ்ரீ யபதிக்கு போக்ய-போக உபகரண -போக ஸ்தான ரூபமாய்க் கொண்டு அனந்த ஆச்சர்யமாய் ஹிரண்ய கர்ப்பாதி ஸ்தலங்கள் எல்லாம் நரகமாய்த் தோற்றும்படியான
ஆனுகூல்ய ப்ரகர்ஷத்தாலே பரமபத சப்த வாஸ்யமாய் இருக்கும்

ப்ரேரித்ருநிரூபணம்--இப்படி மூன்று வகையான சேதநாசேதநங்களுடைய ஸ்வரூப ஸ்த்திதி ப்ரவருத்திகள் மூன்றும் தானிட்ட வழக்காம்படி நிற்கிற ஸ்ரிய:பதியை ப்ரேரிதா என்கிறது. இவன் மூன்று ஸம்பந்த நியமத்தாலே ஸர்வ ஸரீரியாய்,மூன்று வ்யாபார விஸேஷங்களாலே ஸர்வ கார்யங்களுக்கும் ஸர்வ காரணமாய், மூன்று காலத்திலும் ஏகரூப ஸ்வரூப ரூபங்களை யுடையவனாய், மூன்று ஸ்த்தாநத்திலே நித்ய வாஸத்தை யுடையவனாய், மூன்று வகையான அர்ச்சாவதாரத்தை யுடையவனாய், மூன்று யுகத்திலே விஸேஷித்து ப்ரகாலிக்குமவனாய்,மூன்று குண யுகத்தாலும் த்ரியுகனாய், மூன்று வ்யூஹங்களாலே மூவிரண்டு ப்ரகாரங்களைப் பண்ணுமவனாய், மூன்று புருஷார்த்தங்களுக்கும் மூலமாய், மூன்று ப்ரமாணங்களாலும் ப்ரதி ஷேதமில்லாதவனாய், மூன்று மாத்திரையான ஒற்றை எழுத்திற்கு முக்க்யார்த்தமாய், மூன்று ரஹஸ்யங்களில் ஸிக்ஷையாலே விஸேஷித்தறியப்படும்.

ப்ரஹ்ம த்ரைவித்ய நிரூபணம் –-ப்ரஹ்மத்தற்கு உபநிஷத்துக்களிற் சொன்ன த்ரைவித்யம் போகத்ரு(த்வ) விஸிஷ்ட ரூபத்தாலும், போக்ய(த்) விஸிஷ்ட ரூபத்தாலும், ப்ரோகத்வ விஸிஷ்ட ரூபத்தாலும் உபபந்நம். தன்னையும் ப்ரேரிதாவையும் பிரிய-அறிந்து பற்றினவனுக்கு அவன் ப்ரஸாதத்தாலே மோக்ஷம் என்று இங்கே ஓதுகிறது. இப்படியே பஞ்சதஸாத் யாயாதிகளிற்படியே பராவர தத்த்வ விவேகம் பிறந்தால் (த்யேயோ நாராயணஸ் ஸதா- நரஸிம்ஹ புராணம்-18-34 நாராயணன் எப்பொழுதும் த்யானிக்கத் தக்கவன்,) என்றும்,ஸ்மர்த்தவ்ய:ஸததம் விஷ்ணு:- பாரதம்- விஷ்ணு எப்பொழுதும் ஸ்மரிக்கத் தக்கவன். )என்றும்,துஞ்சும்போதும் விடாது தொடர்-திருவாய்-1-10-4-என்றும் சொல்லுகிற ஸதா நுஸந்தாநம் கருத்ய பேஷமுடையவனுக்கு உபாயோபகார விதி(தை)யாலேவந்த போகம். க்ருதக்ருத்யனுக்கும் கைங்கர்யோபகார விதி(தையாலே வந்த போகம்] போக்யனாய் நித்ய ஸ்ரீயான ஸேஷி ஸமாதிக தரித்ரனானாற்போலே
போகமும் நிஸ் ஸமாப்யதிகமாம்.

அலையற்ற ஆரமுதக் கடல் அக்கடலுண்ட முகில் *
விலையற்ற நன்மணி வெற்பு வெயில் நிலவோங்குபகல்*
துலையொத்தன என்பர் தூய்மறைசூடும் துழாய்முடியாற்கு
இலையொத்தன அவன் பாதம் பணிந்தவர்க்கு எண்ணுதற்கே.

அலையில்லாத பூர்ணமான அம்ருதத்தையுடைய ஸமுத்திரம், அந்த அம்ருத ஸமுத்திரத்தை முழுதும் குடித்த மேகம், விலையில்லாததான உத்தம ரத்நமயமான மலை, வெயிலினாலும் நிலவினாலும் ப்ரகாசிக்கும் மத்தியான்னம் இவைகள் பரிசுத்தமான வேதங்களினாலே சிரஸ்ஸினால் சூடப்படுகிற துழாய் மாலையைக் கிரீடத்தில் தரித்துக் கொண்டிருக்கிற பகவானுக்கு ஸமமாயிருந்தன, அன்றிக்கே தூக்கிப் பார்ப்பதில் அதாவது நிறையில் ஸத்ருச்யமாயிருந்தன என்று ( பூர்வாசார்யர்கள்) சொல்லுவர்கள், அவனுடைய திருவடிகளை ஆச்ரயித்த பாகவதர்களுக்கு இவைகள் ஸமானம் என எண்ணுதற்கே ஸத்ருசமான வஸ்துக்கள் இல்லை

ஸத் ஸம்ப்ரதாய தத்நஸ் ஸமுத்த்ருதம் வேங்கடேரே ந |
தத்த்வநவநீதமேதத் தநுதே நவநீதநர்த்தகப்ரீதிம் |11

ஸத்ஸம்ப்ரதாயத்தில் உபதேச க்ரமமாக வந்த அர்த்தங்களாகிற தயிரிலிருந்து வேங்கடேசன் என்கிற திருநாமத்தை யுடைய ஆசார்யனால் எடுக்கப்பட்ட இந்தத் தத்த்வ நவநீதம் என்கிற க்ரந்தமானது நவநீதத்திற்காக (க்கோபர்களுடைய க்ருஹங்களில்) நர்த்தநம் பண்ணின பகவானுக்கு ப்ரீதியைச் செய்கிறது.

வரத விரசய த்வம் வாரிதாபேபஷதோஷாம்
புநருபசித புண்யாம் பூஷிதாம் புண்யகோட்யா |
ஸிதமுதித மநோபி: தாவகை: நித்ய ஸேவ்யாம்
ஹதரிபு ஜநயோகாம் ஹஸ்திதாம்நஸ் ஸம்ருத்திம் [1

ஸத்யவ்ரத க்ஷேத்ரத்தில் அர்ச்சாரூபம் கொண்டிருக்கும் வரதனே! போக்கடிக்கப்பட்ட எல்லாத் தோஷங்களையுடையதாயும், மேன்மேலும் வருத்திசெய்யப்பட்ட புண்யத்தையுடையதாயும், புண்யகோடி விமானத்தினால் அலங்கரிக்கப்பட்ட தாயும், பரிசுத்தமாயும், ஸந்தோஷத்தோடு கூடியதாயுமிருக்கிறமனத்தையுடைய உம்முடைய பக்தர்களினால் எப்பொழுதும் ஸேவிக்கத் தகுந்ததாயுமிருக்கிற ஹஸ்திகிரியினுடைய ஸம்பத்தைப் போக்கடிக்கப்பட்ட சத்ரு ஜனங்களுடைய ஸம்பந்தத்தையுடையதாக நீர் செய்துகொள்ளும்,

இப்படி கவிதார்க்கிக ஸிம்ஹமும் ஸர்வதந்த்ரஸ்வதந்திரரும் வேதாந்தாசார்யருமான ஸ்ரீமத்வேங்கடநாதரால் அருளிச்செய்யப்பட்ட ஸ்ரீ ஸூக்திகளுள் ஸ்ரீதத்த்வநவநீதம் முற்றிற்று.

—————————-

கவி தார்க்கிக ஸிம்ஹாய கல்யாண குண சாலிநே
ஸ்ரீமதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம —

———————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நயினாராச்சார்யர் சுவாமி திருவடிகளே சரணம்-
ஸ்ரீ வேதாந்த தேசிகன் சுவாமி திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ தேசிகர் அருளிச் செய்த-ஸ்ரீ ரகஸ்ய பதவி–

June 19, 2025

ஸ்ரீ மான் வேங்கட நாதார்ய கவிதார்க்கிக கேஸரீ
வேதாந்தா சார்ய வர்யோ மே சந்நிதத்தாம் சதா ஹ்ருதி —

அம்ருத ரஞ்ஜனீ ரஹஸ்யங்களில் மூன்றாவது.-[காஞ்சீபுரத்தில் அருளிச்செய்யப்பட்டது.)

ரகஸ்ய த்ரயங்கள் தத்வ ஹித புருஷார்த்தங்களை தெளிவாக காட்டி அளிக்கும் –

மூன்றில் ஒரு மூன்றும் மூவிரண்டும் முன் நான்கும் -தோன்றாத் தொலையும் துயர் –

தோன்றி தான் சூரியோதயம் இருளைத் தொலைக்கும் -இம் மூன்றும் தோன்றாமல் சம்சார துரிதங்களை போக்கி அருளும் என்றவாறு –

இதி தத்வ த்ரயஸ்ய ஏஷா ரகஸ்ய த்ரயஸ்ய ச பதவீ வேங்கடேசே
ந ப்ரத்யக் ப்ராச்சீ பிரதர்சிதா–ப்ரத்யக் ப்ராச்சீ-ஆத்ம ஸ்வரூப ஞானம்

ரகஸ்ய த்ரயர்த்தங்கள்
ஸ்ரீ யபதித்தவம் / ஜகத் காரணத்வம் / ஜகத் ரக்ஷகத்வம் / ஸ்வ பாவிக சேஷித்வம் /
ஜீவன் – அநந்யார்ஹ சேஷ பூதன் / ஜீவன் பாகவத -ததீய சேஷ பூதன்/
ஸமஸ்த ஜகத் பாலனத்வம் / ஞானாதி ஸுலப்யாதி குண விசிஷ்டன் / ஜீவன் அணு -பரமாத்மா விபு / ஜீவன் தேக இந்திரியாதி வி லக்ஷணம் /
அவன் சங்கல்பம் அடியாகவே ஜீவனுக்கு ஸ்வ தந்த்ர லேசம்/ ப்ரீதி காரித கைங்கர்யமே பரம புருஷார்த்தம் பிரபன்னனுக்கு /
ரகஸ்ய த்ரய ஞானமே உஜ்ஜீவன ஹேது

உபோத்காதம் -ப்ரணவ சப்தார்த்தம்- நம: சப்தார்த்தம்- நாராயண சப்தார்த்தம் -த்வயத்தில் பூர்வ கண்டார்த்தம் -த்வயத்தில் உத் த ர கண்டார்த்தம் -த்வயத்தின் திரண்டபொருள்-சரமச்லோகத்தில் பூர் வார்த்தவிவரணம்-சரம ச்லோகத்தில் உத்தரார்த்த விவரணம்- நிக மநம் ]

உபோத்காதம் அநாதிகாலம் ஸம்ஸரித்துப் போந்த ஜீவாத்மாக்களுடைய உஜ்ஜீவநார்த்தமாக அத்யாத்ம ஸாஸ்த்ரங்கள் தத்த்வ ஹித புருஷார்த்தங்களை ப்ரதிபாதிக்கும். அவற்றை ஸங்க்ரஹேண ரஹஸ்யத்ரயம் ப்ரகாமிப்பிக்கும்.

ப்ரணவ சப்தார்த்தம் -இவற்றில் திருமந்த்ரம், ஸர்வ ஸங்க்ரஹம். இது தான் மூன்று பதமாய் எட்டுத் திருவக்ஷ ரமாயிருக்கும். இதில் ப்ரதம பதமான ப்ரணவம் ஸாரதம ஸங்க்ர ஹம். இது மூன்று பதமாய் மூன்று அக்ஷரமாயிருக்கும். இதில் ப்ரதமாக்ஷரம் ஸர்வ காரண பூதனாய், ஸர்வ ரக்ஷகனாய் நித்ய நிருபாதிக சேஷத்வ ப்ரதி ஸம்பந்தியான ஸ்ரிய:பதியைச் சொல்லுகிறது. இதில் சதுர்த்தீ- சேஷத்வமாகிற ஸம்பந்
தத்தைக் காட்டுகிறது. மத்யமாகூரம் இஸ்ஸம்பந்தத்தை மற்றவரோடு துவக்கற நியமிக்கிறது. த்ருதீயாக்ஷரம் இஸ் ஸம்பந்தத்திற்கு ஆஸ்ரயனாய் ரக்ஷணீயனாய் ஜ்ஞாநாநந்த ஸ்வரூப குணனாய் அணுவாய் தேஹாதி விலக்ஷணனான ஜீவாத்மாவைச்
சொல்லுகிறது. ஆக இப் ப்ரணவத்தால்-கண்ணபுரமொன்று உடையானுக்கு அடியேன் + ஒருவர்க்குரியேனோ* * -(பெரிய திருமொழி-8-9-3)என்கிறபடியே இஜ்ஜீவாத்மா பகவதநந்யார்ஹ க்ஷேஷபூதன் என்றதாயிற்று.

நம : சப்தார்த்தம் -மத்யமபதமான நமஸ்ஸு இரண்டு அக்ஷரமாய் இரண்டு பதமாய் நான் எனக்கு உரியன் அல்லேன்,என் கார்யத்திற்கு நான் நிரபேக்ஷ ஸ்வதந்த்ரனும் அல்லேன் என்கிறது. இங்கே பாகவத சேஷத்வம் பலிதம். இந்நமஸ்ஸுக்கு
ஸரணாகதியிலும் தாத்பர்யம். அநிஷ்ட நிவ்ருத்தியை ப்ரார்த்திக்கிறதாகவுமாம். இப்படி நமஸ்ஸு தன்னிலே தத்த்வ ஹித| புருஷார்த்த ப்ரகாநமுண்டு.

நாராயண சப்தார்த்தம் -நாராயண ப்தம் நாரங்களுக்கு அயநம் என்றும், நாரங்களை அயநமாகவுடையவன் என்றும், ஸர்வாதாரத்வாதி விஸிஷ்டனான ஸ்ரிய:பதியைச்
சொல்லுகிறது. இதில் சதுர்த்தீ தாதர்த்த்யத்தை முன்னிட்டுக் கொண்டு, அதன் பலமான கைங்கர்யத்தைக் காட்டுகிறது. இத்தால்-ஒழிவில்காலமெல்லாம் உடனாய் மன்னி
வழுவிலா அடிமை செய்ய வேண்டும் நாம் –
திருவாய்-3-3-1-என்றதாயிற்று.-அகாரார்த்தாயைவ) என்கிற லோகத்தை இங்கே அநுஸந்திப்பது.

த்வயத்தில் பூர்வகண்டார்த்தம்-இப்படித் திருமந்த்ரத்தில் ஸங்க்ருஹீதங்களான தத்த்வ ஹித புருஷார்த்தங்களை விஸதமாக்குகிறது த்வயம். இதில் பூர்வ கண்டம் ஒரு வாக்யமாய் உபாயபரம். உத்தர கண்டம் இரண்டு வாக்யமாய் உபேயபரம், இவை ஓரொன்றும் மூன்று பதமாயிருக்கும். ப்ரதம கண்டத் தில் ப்ரதம பதம் மூன்று பதம் கூட ஸமஸ்த பதமாயிருக்கும்.

இதில் ஸ்ரீமத் ஸப்தம் ஸர்வருக்கும் ஆஸ்ரயணீயையாய் அகலகில்லேன்-(திருவாய்-6-10-10)
என்கிறபடியே தன்னை ஆஸ்ரயித்திருக்கிற பெரிய பிராட்டியா ரோடு பிரிவற்றவன் என்கிறது. நாராயண ஸப்தம்-நிகரில் புகழாய்-இத்யாதிகளிற் சொன்ன வாத்ஸல்ய ஸ்வாமித்வ ஸௌஸ்ரீல்ய ஸௌலப்யாதிகளை யுடையவனான ஸர்வேஸ்வரனைச் சொல்லுகிறது. ஸரண ஸப்தம் ஸ்ரண்ய விஷயத்தில் க்ருபோத்தம்பநாதி களுக்காக தாஸ பூதன் பற்றும் துறையான திருவடிகளைக் காட்டுகிறது. ‘ ஸரணம்’ என்கிற பதம் திருவடிகளுடைய உபாய பாவத்தைச் சொல்லுகிறது. ‘ப்ரபத்யே’ என்கிற பதம் அகிஞ்சநாதிகாரி மஹா விஸ்வாஸாதி விஸிஷ்ட ஸரண்யன் திருவடிகளை உபாயமாகக கொண்டு பரந்யாஸம் பண்ணுகிறபடியை ப்ரகாஸிப்பிக்கிறது.

த்வயத்தில் உத்தரகண்டார்த்தம் -‘ஸ்ரீமதே’ என்கிற பதம் ப்ராபகனான நாராயணன் ப்ராப்யனாய்க் கைங்கர்ய ப்ரதி ஸம்பந்தியாம் போது பத்நீ விஸிஷ்டனா யிருக்கும்படியைக் காட்டுகிறது. இங்குற்ற நாராயண பதம் ஸர்வ ப்ரகார விஷ்டனாய்க் கொண்டு நிரதிய போக்யனான ஸர்வ சேஷியை ப்ரதிபாதிக்கிறது. இதின் சதுர்த்தியிலும் திருமந்த்ரத்திற் போலே கைங்கர்ய ப்ரார்த்தனையைக் கண்டு கொள்ளுவது. இக்கைங்கர்யம் ஸர்வவிரோதி ரஹிதமான படியை இந் நமஸ்ஸு கணிசிக்கிறது.

த்வயத்தின் திரண்ட பொருள் -ஸ்ரீமானான நாராயணன் திருவடிகளில் களையற்ற நித்ய
கைங்கர்யம் பெறுகைக்கு ஸ்ரீமானான நாராயணன் திருவடிகள் இரண்டையும் ஸரணமாகப் பற்றுகிறேன் என்று இதில் திரண்ட பொருள்.

சரம ச்லோக பூர்வார்த்தவிளக்கம் -இப்படித் திருமந்த்ரத்திலும் த்வயத்திலும் ப்ரகாஸித்த உபாயத்துக்கு அகிஞ்சநாதிகாரித்வ நிரபேக்ஷத்வாதிகளைக் காட்டிக் கொண்டு விதி முகத்தாலே உப ப்ரும்ஹணம் பண்ணுகிறது சரம ஸ்லோகம். இது தான் மூன்று வாக்யமாய்ப் பன்னிரண்டு பதமாயிருக்கும். இப்படி ரஹஸ்ய த்ரயம் உத்தரோத்தரம் பதங்கள் இரட்டிப்பாய் விஸதீகரண மாயிருக்கும். இஸ் ஸ்லோகத்தில் ப்ரதம வாக்யம் உபாய விதாயகம்.மத்யம வாக்யம் பல ப்ரதி பாதகம். உத்தர வாக்யம் கருதக்ருத்யத்வாதி தத் பரம்.

ஸர்வ தர்மங்களையும் விட்டு‘ என்கிற இரண்டு பதங்களாலே ‘நின்னிலங்கு பாதமன்றி மற்றோர் பற்றிலேன் எம் ஈசனே (திருச்சந்த-90)என்கிறபடியே அபிமத ஸித்திக்கு உபாயாந்தரம் அற்று இருக்கிற அதிகாரி விசேஷத்தையாதல், ப்ர பத்தியினுடைய தர்மாந்தர நைரபேஷ்யாதிகளையாதல் சொல்லுகிறது. என்னை ஒருவனை ‘ என்கிற இரண்டு பதங்களாலே ஸௌலப்யாதி குண விஸிஷ்டமாய் ப்ரதாநோபாயத்வ நிரபேக்ஷத்வ ஸர்வ பல ப்ரதத்வாதி விஸிஷ்டமுமான ஸநாதந தர்மத்தைக் காட்டுகிறது.’ ஸரணமாகப் பற்று’ என்கிற இரண்டு பதங்களாலே மஹாவிஸ்வாஸாதி விஸிஷ்ட பர ந்யாஸத்தை விதிக்கிறது.

சரமச்லோக உத்தரார்த்தவிளக்கம்நான் உன்னை ‘ என்கிற இரண்டு பதங்களாலே பர ஸ்வீகாரம் பண்ணின ஸர்வ ஸக்தியையும், நயஸ்த பரனான சாதக வ்ருத்தியையும் சொல்லுகிறது. ‘எல்லாப் பாபங்களினின்றும் விடுவிக்கக் கடவேன் ‘ என்கிற இரண்டு பதங்களாலே கைங்கர்ய விரோதிகளை நிஸ்பே ஷமாகக் கழிக்கும்படியைச் சொல்லுகிறது. ஸோகிக்க வேண்டாம்’ என்கிற இரண்டு பதங்களாலே புகலற்றுத் தளும்பின பூர்வ தஸையை விலக்கி,-நிஸ் ஸம்யஸ் ஸுகமாஸ்ஸ்வ-(சரணாகதி கத்யம். ஸம்சயம் ஒன்றுமில்லாமல் ஸுகமாயிரு.)என்று அருளிச்செய்த உத்தர தசையை உபலக்ஷிக்கிறது.

த்வயத்தில் பூர்வோத்தர கண்டங்களுக்கு இதில் பூர்வோத் தரார்த்தங்கள் சேர்த்தி யாகின்றன.

மூன்றில் ஒரு மூன்றும் மூவிரண்டும் முந்நான்கும்
தோன்றத் தொலையும் துயர்.
–குறள் வெண்பா.

ரஹஸ்யத்ரயத்தில் அத்விதீயமான மூன்று பதங்கள் அடங்கிய திருமந்த்ரமும், அன்றிக்கே ஒரு அர்த்தத்தை ப்ரதிபாதிக்கிற மூன்று பதங்களையுடைய திருமந்த்ரமும், ஆறு பதங்களையுடைய த்வயமும், பன்னிரண்டு பதங்களையுடைய சரம ச்லோகமும் அர்த்தத்துடன் மனதில் ப்ரகாசிக்கத் துக்கங்கள் நசித்துவிடும்.

இதி தத்த்வத்ரயஸ்யைஷா ரஹஸ்யத்ரிதயஸ்ய ச |
பதவீ வேங்கடேசே ப்ரத்யக் ப்ராசீந ப்ர தர்ஸிலிதா |

இந்த சித், அசித், ஈசுவரன் என்கிற மூன்று தத்த்வங்களினுடையவும், திருமந்த்ரம், த்வயம், சரம ச்லோகம், என்கிற மூன்று ரஹஸ்யங்களினுடையவும் கிழக்கு மேற்காக இருக்கிற,அதாவது ப்ரத்யக் என்று சொல்லப்படும் ஜீவாத்மாவை அடைவதற்குக் காரணமாயி ருக்கிற ப்ரா சீந மார்க்கமானது வேங்கடேசன் என்கிற திருநாமமுடைய ஆசார்யனால் இந்த ப்ரகாரம் காட்டப்பட்டது. இங்கு வேங்கடேசே என்னும் பதம் இந்த க்ரந்தத்திற்கு வக்தா தாமல்லர், ப்ரதமாசார்யனான பகவானே என்கிற அர்த்தமும் த்வனிக்கிறது. ஒரு ஊரிலிருந்து பல இடங்களுக்குச் செல்லும் வழியைச் சுட்டிக் காட்டுகிறாப்போல இங்கும் திங் மாத்திரம் காட்டப்பட்டது என்று கருத்து. ப்ருதக்ப்ராசீ ‘ என்று பாடாந்தரம். அப்பொழுது ப்ராசீநமான இந்தவழி தனித்தனியே காட்டப்பட்டது என்று அர்த்தம்;

ஸ்ரீரங்க த்விரத வ் ருஷாத்ரி பூர்வகேஷு
ஸ்த்தாநேஷ ஸ்த்திரவிபவா பவத் ஸபர்யா
ஆகல்பம் வரத விதூத வைரிபக்ஷா
பூயஸ்யா பவதநுகம்பயைவ பூயாத்!

பக்தர்களுக்கு அபீஷ்டங்களைக் கொடுக்கும் பகவானே ! ஸ்ரீரங்கம், ஹஸ்திகிரி, வேங்கடாசலம் இவை முதலான உகந்தருளின திவ்யதேசங்களில் உம்முடைய திருவாராதனம் அதிகமான உம்முடையதான க்ருபையினால் கல்ப காலம் வரையிலும் போக்கடிக்கப்பட்ட சத்ருக்களினுடைய பக்ஷத்தை யுடையதாகவும் அழிவில்லாத ஐச்வர்யத்துடன் கூடியதாகவும் இருக்க வேண்டும்.

இப்படி கவிதார்க்கிகஸிம்ஹமும் ஸர்வதந்த்ர ஸ்வதந்த்ரரும் வேதாந்தாசார்யருமான ஸ்ரீமத்வேங்கடநாதரால் அருளிச் செய்யப்பட்ட ஸ்ரீ ஸூக்திகளுள் ஸ்ரீ ரஹஸ்ய பதவீ முற்றிற்று.

—————————————-

கவி தார்க்கிக ஸிம்ஹாய கல்யாண குண சாலிநே
ஸ்ரீமதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம —

———————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நயினாராச்சார்யர் சுவாமி திருவடிகளே சரணம்-
ஸ்ரீ வேதாந்த தேசிகன் சுவாமி திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ தேசிகர் அருளிச் செய்த-ஸ்ரீ தத்த்வ பதவீ

June 19, 2025

ஸ்ரீ மான் வேங்கட நாதார்ய கவிதார்க்கிக கேஸரீ
வேதாந்தா சார்ய வர்யோ மே சந்நிதத்தாம் சதா ஹ்ருதி —

——————-

அம்ருத ரஞ்ஜனீ ரஹஸ்யங்களில் இரண்டாவது. இது காஞ்சீபுரத்தில் அருளிச் செய்யப்பட்டது.

உபோத்காதம்- பர தத்த்வ நிரூபணம்-சேதநநிரூபணம்–அசேதந நிரூபணம் த்ரிகுண நிரூபணம்-கால நிரூபணம்-சுத்த ஸத்த்வ நிரூபணம்- தர்மபூத ஜ்ஞாந நிரூபணம் – முக்தி அடையும் ப்ரகாரம்.

ப்ரஸாதாத் தோரிகேந்த்ராணாம் பராவரவிபாகவித்
ப்ரப ந: பரமாத்மாநம் ப்ராப்கோதி பரமம் பதம் I

ஆசார்யர்களினுடைய அநுக்ரஹத்தினால் பர தத்த்வம் அவர தத்த்வம், அதாவது உயர்ந்த வஸ்து தாழ்ந்த வஸ்து, இவைகளின் பிரிவைத் தெரிந்து கொண்டவனாய் உயர்ந்த தத்த்வமாகிய சரிய:பதியினிடம் ப்ரபத்தி செய்தவன் பரமபதத்தை அடை கிறான்.

உபோத்காதம்-ஸதாசார்ய ப்ரஸாதத்தாலே பராவர தத்த்வ ஜ்ஞாநம் பிறந்து(தவன்) ஸர்வேஸ்வரன் திருவடிகளை உபாய உபேயங்களாகப் பற்றி உஜ்ஜீவிக்க வேண்டும்.

பர தத்த்வ நிரூபணம் -பரதத்த்வமாவது-ஸ்வ வ்யதிரிக்த வஸ்துக்கள் எல்லாவற்றுக்கும் தாரகனுமாய் நியந்தாவுமாய் சேஷியுமான ஸ்ரிய:பதி இவன் ஸ்வத:ஸர்வஜ்ஞனாய், ஸர்வக்தியாய், பரம காருணிகனாய், ஸர்வ ஸரண்யனாய், பரமோதாரனாய், மோக்ஷ ப்ரதனாய்,-முக்த ப்ராப்யனாய், பர வ்யூஹாதி பஞ்ச ப்ரகார பாஸ்ரய (திவ்ய மங்கௗ) விக்ரஹ விஷ்டனாயிருக்கும்.

இவனை ஒழிந்தவை அவர தத்த்வம். இது சேத மென்றும்,-அசேதநமென்றும் இரண்டு வகையாயிருககும்.

சேதந நிரூபணம் -சேதநமான அவர தத்த்வம் பரிச்சிநமான அஹமர்த்தம்)-இதற்கு ஜ்ஞாத்ருத்வ கர்த்ருத்வ போகத்ருத்வங்கள் பராயத்தங்களாயிருக்கும். இது பத்த முக்த
நித்ய ரூபத்தாலே த்ரிவிதம். பத்தராவார்-ஸம்ஸரிக்குமவர்கள்.-முக்தராவார் – ஸம்ஸாரம் கழிந்தவர்கள். நித்யராவார்-ஒரு காலத்திலும் ஸம்ஸாரமில்லாத நித்யஸூரிகள்.

அசேதந நிரூபணம் -அசேதநமாவது அறிவில்லாத வஸ்து. அசேதந த்ரவ்யம் த்ரிகுணம் என்றும், காலம் என்றும், த்தஸத்த்வம் என்றும், தர்மபூத ஜ்ஞாநம் என்றும் சதுர் விதமாயிருக்கும்.

த்ரிகுண நிரூபணம் -த்ரிகுணமாவது ஸத்த்வாதி குணத்ரயாஸ்ரயமான த்ரவ்யம். இது ப்ரக்ருதி விக்ருதி விபாகத்தாலே இருபத்து நாலு வகையாய் பகவல்லீலார்த்தமாக
க்ஷேத்ரஜ்ஞருக்குக் கார்ய கரணாதி ரூபேண பரிணமித்து பகவத் ஸ்வரூப திரோதாநாதிகளைப் பண்ணும்.

காலநிரூபணம்-காலமாவது-க்ஷணாதி விபாகத்தையுடைத்தாய் ஸர்வ கர்த்தாவான ஈஸ்வரனாலே ஸஹ காரியாக ஸ்வீக்ருதமாயிருக்கும் த்ரவ்யம்,

சுத்தஸத்த்வ நிரூபணம் –சுத்தஸத்த்வமாவது- ர ஜ ஸ் தமஸ்ஸுக்களின்றிக்கே
ஸத்த்வ குணாஸ்ரயமான த்ரவ்யம்.-இது ஈஸ்வரனுக்கும் நித்யருக்கும் முக்தருக்கும் விக்ரஹாதி ரூபேண விசித்ர (போக்ய)மாயிருக்கும்.

தர்மபூதஜ்ஞாந நிரூபணம் -தர்மபூத ஜ்ஞாநமாவது-பராவராத்மாககளுக்கு ஸ்வாத்மாவையும், ஸ்வ வ்யதிரிக்த வஸ்துக்களையும் ப்ரகாசிப்பிக்கவற்றான ஜ்ஞாநம். இந்த ஜ்ஞாநத்தாலே ஆத்மாக்களுக்கு ஜ்ஞாத்ருத்வ கர்த்ருத்வ போகத்ருத்வங்கள் உண்டாகின்றன.

முக்தி அடையும் ப்ரகாரம் -பத்தருக்கு நிஷித்த காம்ய கர்த்ருத்வம் ஸம்ஸார ஹேது,
தத்த்வஜ்ஞாநமூல நிவ்ருத்தி தர்ம கர்த்ருத்வம் மோக்ஷ ஹேது.
பத்தன் முன்பு பண்ணின பந்தகங்களுக்கெல்லாம் தன் அதிகாராநுகுணமாக ப்ரபத்த்யாதி
ப்ராயசித்தம் பண்ணி, மேல் அபராதம் பண்ணாதே ப்ராரப்த கர்மத்தையும் ஒரு வழியாலே கழித்து முக்தனாம்.

முத்திக்கு அருள்சூட மூன்றைத் தெளிமுன்னம்
இத்திக்கால் ஏற்கும் இதம்.

ோக்ஷத்திற்குக் காரணமாகிய பகவானுடைய க்ருபையை சிரஸா வஹிக்க முதலில் சித், அசித் , ஈச்வரன் என்கிற மூன்று தத்த்வங்களையும் அவைகளின் அஸாதாரண தர்மங்களுடன் நன்றாகத் தெரிந்துகொள், இந்த வழியாக உபாயம் அநுரூபமாக உண்டாகும்.

இப்படி கவிதார்க்கிக ஸிம்ஹமும் ஸர்வதந்த்ரஸ்வதந்த்ரரும் வேதாந்தாசார்யருமான ஸ்ரீமத்வேங்கடநாதரால் அருளிச்செய்யப்பட்ட ஸ்ரீ ஸூக்திகளுள் ஸ்ரீ தத்த்வ பதவீ முற்றிற்று.

————–

கவி தார்க்கிக ஸிம்ஹாய கல்யாண குண சாலிநே
ஸ்ரீமதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம —

—————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேதாந்த தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –