Archive for the ‘Boothath Aalvaar’ Category

ஸ்ரீ பூதத் ஆழ்வார் அருளிய இரண்டாம் திருவந்தாதி – -31-40– ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் —

February 23, 2015

இப்படி ஆபத் சகனானவன் திருவடிகளிலே புஷ்பாத் யுபகரணங்களைக் கொண்டு ஆஸ்ரயிக்குமவர்கள்
அவனுடைய அப்ராக்ருதமான திரு மேனியை ப்ரீதி பூர்வகமாக அனுபவிக்கப் பெறுவர் -என்கிறார்-

பிரான் என்று நாளும் பெரும் புலரி என்றும்
குரா நற் செழும் போது கொண்டு -வராகத்
தணி யுருவன் பாதம் பணியுமவர் கண்டீர்
மணி யுருவம் காண்பார் மகிழ்ந்து————31-

பதவுரை

பிரான் என்றும்–‘மஹோபகாரங்கள் பண்ணினவனே!’
பெரு புலரி என்றும்–‘இன்றே நல் விடிவு’ என்றும் (கொண்டாடிக் கொண்டு)
நாளும்–நாள்தோறும்
நல்குரா–நல்ல மணம் மிக்க
செழு–அழகிய
போது கொண்டு–புஷ்பங்களைக் கொண்டு,
வராகத்து அணி உருவன் பாதம்–அழகிய வராஹ வுருக் கொண்ட பெருமானுடைய திருவடிகளை
பணியுமவர் கண்டீர்–வணங்குபவர்களே
மணி உருவம்–(அப்பெருமானுடைய) திவ்ய மங்கள விக்ரஹத்தை
மகிழ்ந்து காண்பர்–ஸேவித்து ஆநந்திக்கப் பெறுவர்கள்.

பிரான் என்றும்
இவ்வாத்மாவுக்கு வகுத்த சேஷி -உபகாரகன் -என்றும்
தன்னையே வணங்கும்படி பண்ணினவன் -உணரும் போதே -என் நாயகன் செய்த படி என்-என்று உணருகை –

நாளும் பெரும் புலரி என்றும்-
மலட்டு சம்சாரத்திலே பாழே போக்குகிற காலத்திலே-பகவத் அனுபவத்துக்கு ஈடாய் இருப்பதொரு நாள் யுண்டாவதே-
இது ஒரு நல் விடிவு இருக்கும் படியே –
அத்ய மே சபலம் ஜன்ம ஸூ ப்ரபாதா ச மே நிசா -ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-17-3-என்கிறபடியே ஆதரித்துக் கொண்டு –

பிரான் என்றும் –
பிரான் பெரு நிலம் கீண்டவன் –திருவாய் -1-7-6-

பெரும் புலரி –
நல்லாண்டு என்று நவின்று உரைப்பார் -திருப்பல்லாண்டு -12

பெரும் புலரி –
ஷூத்ர ஜந்துக்களை  நினைத்துக் கழிக்கிற எனக்கு சர்வேஸ்வரனை நினைக்க ஒரு காலம் விடிவதே -என்று
வணங்குகைக்கு ஈடான  காலத்தைக் கொண்டாடுகிறார் –

குரா நற் செழும் போது கொண்டு –
இவன் இடுவது எல்லாம் பூவாம் படி தன்னை யமைத்துக் கொண்டு சந்நிஹிதனானவன் திருவடிகளிலே
அங்கு யுண்டான புஷ்பங்களைக் கொண்டு ஆஸ்ரயிக்குமவர்கள் கிடீர் –

குரா நற் செழும் போது-
குராவினுடைய நன்றாய் செவ்வியை  யுடைத்தான பூவைக் கொண்டு –
காட்டிலே வாழ்வார்க்குக் காட்டில் பூ வமையும் இறே-

வராகத் தணி யுருவன் பாதம் –
இன்ன புஷ்பம் கொண்டு என்னை ஆஸ்ரயிக்க வேணும் -என்று இராதே காட்டில் புஷ்பத்துக்கு சஜாதீயமான வடிவை யுடையவன் –

அணி யுருவன்
மஹா வராஹமான வடிவை யுடைத்தாய் -ஆபரணம் தேட வேண்டாதபடி -ஒரு படி சாத்தினாப் போலே இருக்கை-
அவன் கைக்கு எட்டின தொரு வடிவு கொண்டால் பூவும் கைக்கு எட்டித்து ஓன்று அமையும் இறே –

பணியுமவர் கண்டீர்-
ஸூ ஸூகம் கர்த்தும் அவ்யயம் –ஸ்ரீ கீதை -9-2-என்னும்படியே
சாதனா தசையிலே இனிதாய் இருக்கும் படி –
பலத்துக்குப் பலம் இ றே –

மணி யுருவம் காண்பார் மகிழ்ந்து-
அவர்கள் நீல ரத்னம் போலே குளிர்ந்து இருந்துள்ள வடிவை மகிழ்ந்து காணப் பெறலாம்

————————————————————————–

இவர் இப்படி உபதேசித்த அனந்தரம் -இவர் தம்முடைய கரணங்கள் உபதேச நிரபேஷமாக
அங்கே பிரவணமான படியை அருளிச் செய்கிறார் –
இவ் விஷயத்தில் என் மனோ வாக் காயங்கள் பிரவணம் ஆய்த்து-என்கிறார்-

மகிழ்ந்தது சிந்தை திருமாலே மற்றும்
மகிழ்ந்தது உன் பாதமே போற்றி -மகிழ்ந்தது
அழலாழி சங்கமவை பாடியாடும்
தொழிலாகும் சூழ்ந்து துணிந்து—————-32-

பதவுரை

திருமாலே!–லக்ஷ்மீபதியே!
சிந்தை–என் நெஞ்சமானது
மகிழ்ந்தது–(உன்னைச் சிந்தித்து அதனாலே) ஆநந்த முற்றது;
மற்றும்–நெஞ்சுக்கு அடுத்ததான வாக்கும்
உன் பாதமே போற்றி–உன் திருவடிகளையே துதித்து
மகிழ்ந்தது–ஆநந்திக்கப் பெற்றது;
ஆகம்–என்னுடைய தேஹமானது
அழல்–எதிரிகளின் மீது நெருப்பை உமிழ்கின்ற
ஆழி–திருவாழியையும்
சங்கம்–ஸ்ரீபாஞ்ச ஜந்யத்தையும்
அவை–மற்றுமுள்ள திவ்யா யுதங்களையும்
பாடி ஆடும்–கொண்டாடிப் பாடிய ஆடுகையாகிற
தொழில்–வியாபாரத்திலே
சூழ்ந்து–பொருந்தி
துணிந்து–இதுவே நமக்குக் காரியமென்று துணிவு கொண்டு
மகிழ்ந்தது–களிக்கப் பெற்றது.

மகிழ்ந்தது சிந்தை-
இதுக்கு முன்பு ப்ரீதி புதியது உண்டு அறியாத மனசானது -அவனை அனுசந்தித்து மகிழப் பெற்றது –
இத்தால் எனக்கு அங்குப் போய் மகிழ வேண்டா -என்கிறார் –

திருமாலே-
மகிழப் பண்ணின விஷயம் இருக்கிறபடி –ஆனந்தாவஹமாய் இறே ஸ்ரீ யபதித்வம் இருப்பது –

மற்றும் மகிழ்ந்தது உன் பாதமே போற்றி
மற்றை அவயவங்கள் –அனந்தரம் -வாக் இந்த்ரியமானது உன் திருவடிகளை ஏத்தி மகிழப் பெற்றது –

திருமாலே -என்றத்தை மேலோடு கூட்டி
ஸ்ரீ யபதியான உன்னுடைய திருவடிகளையே போற்றி மகிழப் பெற்றது –

மகிழ்ந்தது அழலாழி சங்கமவை பாடியாடும்தொழிலாகும் சூழ்ந்து துணிந்து-—–
பிரதிபஷத்தின்  மேலே அழன்று அக்னியை உமிழா நின்றுள்ள திருவாழி பாஞ்ச ஜன்யம் ஆகிற அவற்றைப் பாடி யாடுகை யாகிற
தொழிலாலே வ்யாப்தமான தேஹமானது துணிந்து மகிழ்ந்தது –

சூழ்ந்த ஆகமானது அத்யவசித்துக் கொண்டு உகக்கப் பெற்றது
சூழ்ந்து துணிந்து சிந்தை மகிழ்ந்தது –
சூழ்ந்து துணிந்து மற்றும் மகிழ்ந்தது -என்று
அந்வயிப்பது-

நின் பாதம் போற்றி என்றது எங்கும் அந்வயிக்க வுமாம் –

————————————————————————–

கீழ் அனுபவத்தால் பிறந்த ஹர்ஷம் சொல்லிற்று –
இதில் அவனை அனுபவிக்கையிலே மனோ வாக் காயங்கள் அத்யவசித்த படியை அருளிச் செய்கிறார் –
மகிழ்ந்த மாத்திரமேயோ -வேறு ஒரு இடத்துக்கு ஆகாதபடி ஆய்த்தின -என்கிறது –
இத்தால் அனந்யார்ஹம் ஆன படியைச் சொல்லுகிறது –

துணிந்தது சிந்தை துழாய் அலங்கல் அங்க
மணிந்தவன் பேருள்ளத்துப் பலகால் -பணிந்ததுவும்
வேய் பிறங்கு சாரல் விரல் வேங்கடவனையே
வாய் திறங்கள் சொல்லும் வகை—33–

பதவுரை

சிந்தை–என் மனமானது
துழாய் அலங்கல் அணிந்தவன் பேர்–திருத்துழாய் மாலையை அணிந்துள்ள பெருமானுடைய திருநாமங்களை
பல்கால்–பலமுறை
உள்ளத்து–நினைப்பதில்
துணிந்தது–த்ருடமாக அத்யவஸாயங் கொண்டது;
அங்கமும் (பல்கால்)–எனது உடலும் எப்போதும்
பணிந்தது–வணங்குவதாயிரா நின்றது;
வாயும்–என் வாக்கும்
வேய் பிறங்குசாரல்–மூங்கில் மிக்கிருக்குந் தாழ்வாரையை யுடைய
விறல் வேங்கடவனை–திருமலையிலெழுந்தருளி யிருக்கிற மிடுக்குடைய பெருமானது
திறங்களே-தன்மைகளையே
(பல்கால்)-எப்போதும்–
சொல்லும் வகை–சொல்லுகிற விதத்திலே
(துணிந்தது)–துணிவு கொண்டதாயிற்று.

துணிந்தது சிந்தை துழாய் அலங்கல் அங்கமணிந்தவன் பேருள்ளத்துப் –
திருத் துழாய் மாலையாலே அலங்க்ருத னானவன்-திரு நாமத்தை அனுசந்திக்கையிலே துணிந்தது ஹ்ருதயமானது -என்னுதல்-
உள்ளம் என்று லஷணையால்-அனுசந்தானத்தைச் சொல்லுகிறது –

அன்றிக்கே –
உள்ளத்து சிந்தனையானது -ஹ்ருதயத்திலே மநோ ரதமானது-
துழாய்  அலங்கல் அங்கம் அணிந்தவன் பேர் துணிந்தது -என்னுதல் –

துழாய் அலங்கல் அங்கம் –
துணிவித்துக் கொண்ட பரிகரம்-

அங்கம் அலங்கல் –
இனி அங்கமானது சரீரமானது எப்போதும் –

பலகால் -பணிந்ததுவும் வேய் பிறங்கு சாரல் விரல் வேங்கடவனையே-
வேய்களாலே பிறங்குகிற  -மிக்கு இருந்துள்ள சாரலுண்டு -பர்யந்தங்கள்-அவற்றை யுடைய திரு மலையிலே வர்த்திப்பானாய்
தன் அழகாலே  நம்மை ஈர்த்துக் கொண்டுள்ள திரு வேங்கடமுடையானையே –

வாய் திறங்கள் சொல்லும் வகை துணிந்தது –
என்னுடைய வாக் இந்த்ரியமானது அவனுடைய திறங்களைத் துணிந்தது –
அவனிடை யாட்டங்களைச் சொல்லும் பிரகாரத்திலே துணிந்தது –

வேங்கடவனையே –
நம்மை யல்லது அறியாது இருக்கிற அவனை அல்லது துணியாது –

துணிந்தது சிந்தை துழாய் அலங்கல் அங்கம் அணிந்தவன் பேர் உள்ளத்து –
அங்கம் பலகால் பணிந்ததுவும் வேய் பிறங்கு சாரல் வேங்கடவனையே –
அவன் திறங்களை வாய் சொல்லும் வகை துணிந்தது
என்று அநவயம்-

————————————————————————–

இப்படிப் பட்ட பெரிய பேறு தான் தேவருடைய கடாஷத்தாலே பெற்றேன் -என்கிறார் –

வகையால் அவனி இரந்து அளந்தாய் பாதம்
புகையால் நறு மலரால் முன்னே -மிக வாய்ந்த
அன்பாக்கி ஏத்தி அடிமைப் பட்டேன் உனக்கு
என் பாக்கியத்தால் இனி——————34-

பதவுரை

முன்னே–முற்காலத்திலே
வகையால்–உபாயத்தினால்
அவனி–பூமியை
இரத்து–(மாவலி பக்கல்) யாசித்து
அளந்தாய்–அளந்து கொண்ட வுன்னுடைய
பாதம் புகையால்–திருவடிகளை தூபங்கொண்டும்
நறுமலரால்–நல்ல பரிமளமுள்ள புஷ்பங்களைக்கொண்டும்
மிக வாய்ந்த அன்பு ஆக்கி–மிகுதியாக (நன்றாக)ப் பொருந்தின ப்ரீதியுடனே
ஏத்தி–துதித்து
இனி–மேலுள்ள காலமெல்லாம்
என் பாக்கியத்தால்–நீ என் மேல் பண்ணின விசேஷ கடாக்ஷமாகிற பாக்யத்தாலே
உனக்கு அடிமைப் பட்டேன்–உனக்குத் தொண்டனாய் விட்டேன்.

சௌந்தர்யத்துக்கு தோற்று  அடிமைப் படும்படி நீ என் முன்னே க்ருஷீ பண்ணினாய்  –
வகையால் அவனி இரந்து அளந்தாய் பாதம்-
ஆசூரப் பிரக்ருதியானவன் யாதொரு பிரகாரத்தினால்  இரங்கிக் கொடுக்கும் —
அந்தப் பிரகாரத்தாலே பண்டே பூமியை இரந்து அளந்து கொண்ட உன்னுடைய திருவடிகளை –

வகையால் –
ராவணனோ பாதி வத்யனாய் இருக்க  மஹா பலியானவனை அழியச் செய்யாதே
அவன் பக்கலிலே ஔதார்யம் கிடக்கையாலே
பாம்பும் சாவாமே கோலும் முறியாமே அவனும் தன்னது என்று தர வுகக்குமாகில் தருவான் –
நாமும் நமக்கு இல்லாதது ஓன்று பெற்றோம் ஆனால் ஆகாதோ –
பூமியை இரந்து கொள்வோம் –
ஆஸ்ரயித்த இந்த்ரனும் தன் கார்யம் பெறுவான் என்கிற வகைகளாலே விரகு பார்த்த படி –

இரந்து அளந்தாய் –
அன்புக்கு ஏற்கவே கிருஷி பண்ணின படி –

முன்னே வகையால் அவனி இரந்து அளந்தாய்
என்று அநவயம் –

புகையால் நறு மலரால் முன்னே -மிக வாய்ந்த அன்பாக்கி ஏத்தி அடிமைப் பட்டேன் உனக்கு-
புஷ்பாத் யுபகரணங்களைக் கொண்டு -மிகவும் செறிந்த ச்நேஹத்தை யுடையேனாய்க் கொண்டு
சௌந்தர்யத்துக்கும் நீர்மைக்கும் தோற்று ஸ்துதித்து தேவர் திருவடிகளிலே சரணம் புகுந்தேன் –
இதுக்கு அடி என் என்னில் –

என் பாக்கியத்தால் இனி–—
தேவருடைய கடாஷத்தாலே -என்னுதல் —
என்னுடைய விலக்காமை யாகிய பாக்கியத்தாலே -என்னுதல் –

————————————————————————–

அப்படித் தானே வந்து -அர்த்தியாய் -மேல் விழுகிற சர்வேஸ்வரனை விட்டு இதர விஷயங்களிலே
சங்கத்தைப் பண்ணி -துக்கானுபவம் பண்ணாதே
அவன் திருவடிகளிலே அல்ப அனுகூல்யம் பண்ணுவார்கள் ஆகில் அது தான் இவர்களுக்கு
என்றைக்கும் ரஷையாய்த் தலைக் கட்டும் என்கிறார் –

இவ்விஷயம் இருக்க சப்தாதி விஷயம் இனிது என்று ஜகத்து அனர்த்தப் படுவதே –என்று வெறுக்கிறார்-

இனிது என்பர் காமம் அதனிலு மாற்ற
இனிது என்பர் தண்ணீரும் எந்தாய் -இனிது என்று
காம நீர் வேளாது நின் பெருமை வேட்பரேல்
சேம நீர் ஆகும் சிறிது————–35-

பதவுரை

எந்தாய்–என் ஸ்வாமி யானவனே!
(பாமரர்கள்)
காமம்–ஹேயமான சப்தாதி விஷயங்களை
இனிது என்பர்–போக்யமாகக் கொள்பர்;
(விரக்தர்களுங்கூட)
தண்ணீர் அதனிலும் ஆற்றவும் இனிது என்பர்–அந்த சப்தாதி விஷயங்களிற் காட்டிலும் தண்ணீர் மிகவும் போக்யமென்பர்கள்;
காமம் நீர்–(கீழ்ச் சொல்லப்பட்ட) காமத்தையும் தண்ணீரையும்
இனிது என்று வேளாது–போக்யமாகக் கொண்டு அவற்றிலே ஆசை கொள்ளாமல்
நின் பெருமை சிறிது வேட்பர் ஏல்–உன்னுடைய போக்யதையே கொஞ்சமேனும் விரும்பி மேல் விழுவார்களாயின் (அது)
சேமம் நீர் ஆகும்–(எல்லா நிலைமையிலும்) ரக்ஷகமான தன்மையையுடையதாகும்

இனிது என்பர் காமம்-
நாட்டார் காமத்தை இனிதாகச் சொல்லா நின்றார்கள்
அது தானும் இவர் தேசிகர் வாயிலே கேட்டு அறியும் அத்தனை –

இனிது என்பர் என்றபடியாலே
தமக்கு இதில் அந்வயம் இன்றிக்கே இருந்தபடி –
காம தந்த்ரம் போமவர்கள் சொல்லும் அத்தனை -என்றபடி –
சோதரர் தாங்கள் தின்னுமவற்றை இனிது என்னுமா போலே –

அதனிலு மாற்ற இனிது என்பர் தண்ணீரும் –
அதில் காட்டிலும் இனிதாகச் சொல்லா நின்றார்கள் தண்ணீரை –
அதாகிறது காம ரசத்தில் காமராய்ப் போந்தவர்களும்
ஜலம் கொண்டு இறே பிராண தாரணம் பண்ணுவது –
அந்நாதிகள் பேதித்தாலும் பேதியாதே பொதுவாய் இருக்குமது இறே இது

ஆப ஏவ ஹி ஸூ மனச-என்னும்படியே
விரக்தரோடு அவிரக்தரோடு வாசி அறத் தண்ணீரில் வந்தால் பாகம்  ஸூ மனஸ் ஸூக்களாய் இருப்பார்கள் –
அதுவும் இவர்க்கு வேண்டா –

விஷய ப்ரவணர் காமத்தை இனிது என்னா நிற்பர்கள்-
சரீர போஷண பரர தண்ணீரை நன்று என்னா நிற்பர்கள்
இவர்க்கு இரண்டிலும் அந்வயம் இல்லை –
இவர் நின்ற இடம் அவர்களால் அறிய ஒண்ணாதாப் போலே இறே அவர்கள் நின்ற நிலை இவர்க்கு அறிய ஒண்ணாது இருக்கும் படி

என்பர் –
இவர் இந்த நாட்டிலும் இல்லையே

எந்தாய் –
இவருடைய காமமும் தண்ணீரும் இருக்கும் படி –
எல்லாம் ஒன்றேயான விஷயமாய்த்து இவர்க்கு –

வாஸூதேசஸ் சர்வம் -இதி ச மஹாத்மா -ஸ்ரீ கீதை -7-19-
உண்ணும் சோறு பருகும்  நீர் தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணன் -திருவாய் -7-1-1-

இனிது என்று-
அதஸ்மின் தத் புத்தி பண்ணி தண்ணீர் என்று அக்னியிலே ஒதுங்கி ஸ்ரமமார நினைப்பாரைப் போலே
பாக்ய ஹானியடியாக இறே சப்தாதி விஷயங்களிலே ருசி பிறப்பது –

காம நீர் வேளாது-
ஸ்வத இனிமை இன்றிக்கே இருக்க போகய புத்தி பண்ணி காமத்தையும் தண்ணீரையும் ஆசைப் படாதே

நின் பெருமை வேட்பரேல்-
உன்னுடைய குணங்களை ஆசைபடுவர்கள் ஆகில்

இது தான் பரிச்சின்ன போகமுமாய் –
தான் அனர்த்தாவஹமுமாய் இருக்கையாலே
இங்கு இருக்கும் நாளைக்கும் ஓன்று இன்றிக்கே இருக்கும்

அங்கன் அன்றிக்கே –
ஸ்மர்தவ்ய விஷயத்தின் யுடைய ரச்யதையாலே சாதன தசையே தொடங்கி ரசிப்பதை

இனி பிராப்தி சமயத்திலே வந்தால் அபரிமித போக்யமாய்க் கொண்டு இவனால் உண்டு அறுக்க ஒண்ணாத படி
ஏஷஹ்யேவா நந்தயாதி -தைத் ஆனந்த வல்லி -7-என்னும்படியாய் இருக்கும் –

நின் பெருமை வேட்பரேல்-
தவிர ஒண்ணா தாகில் அனுபவம் என்னாகிலும் செய்ய அன்றோ வடுப்பது –
அப்படிச் செய்கை அன்றிக்கே –

சிறிது நின் பெருமை வேட்பரேல்-
அதில் பரப்பு எல்லாம் ஆசைப்பட வேண்டாம்
அவன் நல்ல வளவை அனுசந்திக்கவே என்றும் ஒக்க ரஷகமாய் இருக்கும்
கீழில் அவை போலே ஒரு கை கால் முறியச் சென்று விழ வேண்டா –
இதுக்கு மித்ர பாவம் அமையும் –

சேம நீர் ஆகும் —
அது தான் ரஷகமான ஸ்வ பாவத்தை யுடைத்தாய் இருக்கும் –
ந த்யஜேயம் கதஞ்சன -யுத்த -18-3-என்று இருக்கும் இவ்விஷயத்தில்
ப்ராதிகூல நிவ்ருத்தி ரஷையாம்
மற்றைய விஷயத்தில் ஆனுகூல்யமும் விநாசம்

சப்தாதி விஷயங்களில் அபி நிவேசம் மிக்காலும் –
புத்தி நாசாத் ப்ரணச்யதி -ஸ்ரீ கீதை -6-3-என்னப்  பண்ணும் –

பகவத் விஷயத்தில் போலியான ஆசை யுன்டாகில் –
அபயம் சர்வ பூதேப்யோ ததாமி ஏதத் வ்ரதம் மம-யுத்த -18-3- என்று இருக்கும்

கௌந்தேய பிரதிஜாநீஹி  ந மே பக்த ப்ரணச்யதி -ஸ்ரீ கீதை -9-31–என்று
அர்ஜுனா நீ இவ்வர்த்தத்துக்கு பிரதிஜ்ஞை பண்ணு –

தோற்று ஓடிப் போகும் ருத்ராதிகளையோ பற்றுகிறது –
எதிரி கையிலே ஆஸ்ரிதனைக் காட்டிக் கொடுத்துப் போவாரையோ பற்றுகிறது –
அவன் மார்பில் அம்பைத் தன மார்விலே ஏற்கும் அவனை யன்றோ பற்றுகிறது –

————————————————————————–

நாட்டார் செய்கிறபடி செய்கிறார்கள் –
நெஞ்சே நீ முன்னம் அவனுடைய வியாபாரங்களை அனுசந்தித்துக் கொண்டு ஸூகமே இருக்கப் பார் -என்கிறார்
பூமிப்பார் பூமிக்கிறார்கள்-நீ இவ்வர்த்தத்தை பண்ணி -அவனை விச்வசித்து க்ருதக்ருத்யமாய் இரு –

சிறியார் பெருமை சிறிதின் கண் எய்தும்
அறியாரும் தாம் அறியார் ஆவர் -அறியாமை
மண் கொண்டு மண் உண்டு மண் உமிழ்ந்த மாயன் என்று
எண் கொண்டு எண் நெஞ்சே இரு–36-

பதவுரை

சிறியார்–(இயற்கையான மேன்மை சிறிதுமில்லாமல்) அற்பரான ஸம்ஸாரிகளுடைய
பெருமை–(நானே ஈச்வரன் என்று அஹங்கரிப்பதால் வருகிற) மேன்மையானது
சிறிதின் கண் எய்தும்–(தமக்குப் பழமையாயுள்ள) தாழ்விலேயே கொண்டு சேர்ப்பிக்கும்;
அறியாரும்–அவிவேகிகளும்
(தங்களை ஸர்வஜ்ஞராக நினைத்திருந்தார்களாகிலும்)
தாம் அறியார் ஆவர்–(நன்மை தீமைகளைத்) தாங்கள் அறியாதவர்களாகவே ஒழிந்திடுவர்;
என் நெஞ்சே–என் மனமே!.
அறியாமை–பிறர் அறியாதபடி
மண் கொண்டு–(மாவலி யிடத்தில்) பூமியைப் பெற்றவனாயும்
மண் உண்டு–இந்தப் பூமியை (ப்ரளயத்திலே)திருவயிற்றில் வைத்தவனாயும்
மண் உமிழ்ந்த–(பிறகு) அந்தப் பூமியை வெளிப்படுத்தினவனாயுமிருக்கிற
மாயன் என்று–ஆச்சர்யகரனான எம் பெருமான் என்று
எண் கொண்டு–இடைவிடாது கருதி
இரு–(அவனைப் பற்றின நமக்கு ஒரு குறை இல்லையென்று) நிர்ப்பரனாக இருப்பாயாக.

சிறியார் பெருமை சிறிதின் கண் எய்தும்-
அதி ஷூத்ர ரானர்கள் ஈச்வரோஹம் என்று தங்களைப் பெரியாராக அபிமாநித்தாலும்
பின்னையும் அது சிறுமையே யாய்த் தலைக் கட்டும் –

அறியாரும் தாம் அறியார் ஆவர் –
தாங்கள் அஜ்ஞராய் இருக்கச் செய்தேயும் தங்களை சர்வஜ்ஞராக அபிமானித்து இருக்குமது
பின்னையும்  பழைய அஜ்ஞானத்தோடே தலைக் கட்டும் –

அறியாரும் தான் அறியார் ஆவர் –
அவர்களுக்கு நாம் சாதிக்க வேண்டா -தாங்களே சாதித்து வைப்பார்கள்

அறியாமை-இத்யாதி
நாம் இனி அறிவுடையார் போன வழி போவோம்
பேராளன் பேரோதும் பெரியோரை ஒரு காலும் பிரிகிலேன -பெரிய திரு -7-4-4-
அதாவது –
அவனாலே அவனை அறிந்து -அவனாலே அவனைப் பெற விருக்கை –

அறியாமை –
சர்வேஸ்வரன் செயலைச் செய்தான் என்று தோற்றாத படி –

மண் கொண்டு –
பூமியை அளந்து கொண்டு

மண் உண்டு-
அனந்தரம்  அது தன்னை வயிற்றிலே வைத்து நோக்கி –

மண் உமிழ்ந்த-
பின்னையும்
அது தன்னை வெளி நாடு காணப் புறப்பட உமிழ்ந்து

இத்தால் தானே தன்னைத் தரும்படிக்கும்
சம்சாரப் பிரளயத்தில் நின்றும் எடுக்கும் படிக்கும் உதாஹரணம்

உண்டானை உலகு ஏழும் ஓர் மூவடி கொண்டானை -திருவாய் -1-10-5-

மாயன் என்று-
இவ்வளவே அன்றிக்கே ஆஸ்ரித விஷயங்களில் பண்ணும் ரஷணங்களுக்கு
எல்லை காண ஒண்ணாத ஆச்சர்ய சக்தி யுக்தன் -என்றபடி –

எண் கொண்டு-
அனவரதம் அனுசந்தித்து
ச்வீகார மாதரத்தையே பற்றி -என்றுமாம் –

எண் நெஞ்சே இரு
மாஸூச -என்ற அனந்தரம் இருக்குமா போலே நிர்ப்பரமாய்க் கொண்டு இருக்கப் பார்
எத்தினால் இடர்க்கடல் கிடத்தி ஏழை நெஞ்சமே -திருச்சந்த விருத்தம் -115-

நம் சக்தியைக் கொண்டு போயிருத்தல் –
அவன் சக்தியை அறியாதே இருத்தல் -செய்யில் அன்றோ அஞ்ச வேண்டுவது –

————————————————————————–

இப்படிப்பட்ட சர்வேஸ்வரனை ஆஸ்ரயியாத ஜன்மங்கள் அடைய வ்யர்த்தம் என்கீறார் –
சரண்யனைப் பற்றி ஆஸ்ரயியாதாகில் ஜன்மங்கள் வ்யர்த்தங்கள் என் தான் –
நம்மை ஆஸ்ரயியாத போது அவை யடங்க வ்யர்த்தமாக வேணுமோ என்னில் –
என்னிருந்த படி இதுவன்றோ -என்கிறார்-

இரும் தண் கமலத்து இரு மலரின் உள்ளே
திருந்து திசை மகனைத் தந்தாய் -பொருந்திய நின்
பாதங்கள் ஏத்திப் பணியாவேல் பல் பிறப்பும்
ஏதங்கள் எல்லாம் எமக்கு——————37-

பதவுரை

இரு–பெரிய
தண்–குளிர்ந்த
கமலத்து–திருநாபிக் கமலத்தின்
இரு மலரின் உள்ளே–பெருமை பொருந்திய பூவில்
திருந்து–ஸமர்த்தனான
திசைமுகனை–நான்முகக் கடவுளை
தந்தாய்–படைத்தருளின பெருமானே!
பொருந்திய–ஸர்வ லோக சரண்யனாகி எல்லாரோடும் பொருந்தி யிருக்கிற
நின்–உன்னுடைய
பாதங்கள்–திருவடிகளை
ஏத்தி–வாயாரத் துதித்து
பணியா ஏல்–வணங்கித் தொழுவதிற்கு உறுப்பாகா விட்டால்
எமக்கு–எங்கட்டு
பல் பிறப்பும் எல்லாம்–பலவகையாகப் பிறக்கின்ற பிறவிகளெல்லாம்
ஏதங்கள்–பயனற்றவையே யாம்

இரும் தண் கமலத்து இரு மலரின் உள்ளே-
மிகக் குளிர்த்தியை யுடைத்தாய் திரு நாபீ கமலத்தில் யுண்டான பெரிய மலரினுள்ளே –

இரு மலர் –
ப்ரஹ்மாவுக்கு இருக்கப் பரப்பு போந்து இருக்கை-அன்றிக்கே
இருமை பெருமையாய் பரப்பை யுடைத்தாய் –
குளிர்ந்து -இரு மலர் என்று விலஷணமான பூவினுள்ளே -என்றுமாம் –

அன்றிக்கே
திரு மலர் என்றாக்கி -அதனுடைய காந்தியைச் சொல்லுற்று ஆகிறது –

திருந்து திசை மகனைத் தந்தாய் –
இவ்வருகு யுண்டான ஸ்ருஷ்டியாதிகளைப் பண்ணும் இடத்தில் சர்வேஸ்வரன் அடிக்கடியும் கேட்க வேண்டாதபடி
சாமர்த்தியத்தை யுடைய சதுர்முகனைத் தந்தாய் –

சிருஷ்டிக்க உபக்ரமித்து போய்க் கேட்டு வர  வேண்டாதபடி 
யோ ப்ரஹ்மாணம் விததாதி பூர்வம் யோ வை வேதாம்ச்ச ப்ரஹிணோதி தஸ்மை —
முமுஷூர் வை சரணமஹம் ப்ரபத்யே -ஸ்வேதா -6-18-சரண்யன் என்றபடி –

தந்தாய் –
சிருஷ்டி நமக்கு உபகாரமாம்படி தமக்கு கார்யங்கள் ஆய்த்ததே –

பொருந்திய நின் பாதங்கள் ஏத்திப் பணியாவேல்-
புறம்பு உள்ளார் எல்லாம் ஒருவரோடு ஒருவர் பொருந்தி இரார்கள் –
எல்லாரும் பொருந்தும்படி இருப்பான் சர்வேஸ்வரனே யாய்த்து –
அவனை என்றும் பொருந்தி இறே இருப்பது –
இத்தலையிலே பணியே தேட்டம் –
இப்படிப்பட்ட அவன் திருவடிகளை ஏத்திப் பணியா வாகில் பல்வகைப் பட்ட ஜன்மங்களும் –

நின் பாதங்கள் ஏத்திப் பணியாவேல்
உன் நினைவைத் தப்பி உனக்கு உறுப்பாகாதே போமாகில்  –
ஸ்ருஷ்டத்வம் வனவாசாய -அயோத்யா -40-5-
அடிமை செய்யப் பெற்ற போது எந்நாளும் நாளாகும் -பணியும் அன்று இறே ஜன்ம பலமாவது-

பல் பிறப்பும்-
கர்ம நிபந்தனமாக பிறக்கும் பிறப்புக்கள் —
சென்று சென்றாகிலும் கண்டு -திருவாய் -3-9-10–
ஓன்று அல்லா ஓன்று பலிக்கும் என்று அன்றோ பல சிருஷ்டிகளைப் பண்ணுகிறது

ஏதங்கள் –
ஏதங்கள் -என்கிறது -புருஷ பேதம் தோறும் துக்கங்களும் பேதித்து இறே இருப்பது –
புருஷர்களுக்கு எல்லாம் யுண்டான துக்கங்கள் எனக்கு ஒருவனுக்கு யுண்டாம் –

பணியாவேல் –
முமுஷூர்வை சரணமஹம் ப்ரபத்யே -என்னா வாகில் -எமக்கு ஏதங்கள்  -வ்யர்த்தங்கள்-
ஜென்மத்துக்கு பிரயோஜனம் ஆகிறது உன்னை ஆஸ்ரயிக்கை இறே –
அதற்குப் புறம்பான பின்பு  அவை யடைய வ்யர்த்தம் என்கிறார் –

யத் முஹூர்த்தம் ஷணம் வாபி வா ஸூ தேவோ ந சிந்தயதே சா ஹாநி
தன்மஹச்சித்ரம் சா ப்ராந்திஸ் சா ச விக்ரியா -காருட பூர்வ -222-22-

————————————————————————–

இனி எந்த ஜன்ம பலமாகை யாகிறது -எங்கனே செய்தால் என்னில்
பிறர்க்கு ஆனவற்றைத் தனக்காக அபிமானித்து இருக்கை அன்றிக்கே
ஸ்ரீ யபதியுடைய திரு நாமங்களைச் சொல்லுகையே ஜென்மத்துக்கு பிரயோஜனமும்
நாம் கொள்ளும் காரியமும்
-என்கிறார்

அர்த்தத்தை புருஷார்த்தம் என்று புத்தி பண்ணி இராதே
ஸ்ரீ யபதியை அனுபவிக்குமதுவே எல்லார்க்கும் செய்யப் படுவது -என்கிறார்-

எமக்கு என்று இரு நிதியம் ஏமாந்து இராதே
தமக்கென்றும் சார்வம் அறிந்து -நமக்கென்றும்
மாதவனே என்னும் மனம் படைத்தது மற்றவன் பேர்
ஓதுவதே நாவினால் ஓத்து————-38-

பதவுரை

இரு நிதியம்–(இப்பொருளை எப்போது நாம் கொள்ளையடிக்கப் போகிறோம்’ என்று
அயலார் எதிர்பார்த்திருப்பதற்குக் காரணமான) பெருஞ்செல்வத்தை
எமக்கு என்று–தங்களுடையதாக நினைத்து
ஏமாந்து இராதே–மனச் செருக்குக் கொண்டிராமல்
தமக்கு என்றும் சார்வம் அறிந்து–தங்களுக்கு எப்போதும் ரக்ஷகமாயிருக்கக் கூடிய உபாயத்தை யறிந்து
நமக்கு என்றும் மாதவனே என்னும் மனம் படைத்து–‘நமக்கு எக்காலத்திலும் எம்பெருமானே சரணம்’ என்று
துணிந்திருக்கும் நெஞ்சை யுடையராய்
மற்று–அதற்குப் பின்பு
அவன் பேர்–அத்திருமாலினது திருநாமங்களை
ஓதுவதே–ஸங்கீர்த்தநம் பண்ணுவதே
நாவினால் ஒத்து–நாவுக்கு ஓதுவதற்கு உரிய விஷயம்.

எமக்கு என்று இரு நிதியம் ஏமாந்து இராதே-
இது ஒழித்து விநியோகம் கொள்ளுவார் இன்னார் என்று அறியாதே இவன் எனக்கு என்று கொண்டு இருக்கும் ஆய்த்து-

இரு நிதியம்  எமக்கு என்று ஏமாந்து இராதே-
பிறர்தான குருவான த்ரவ்யத்தை -தனக்காக அபிமானித்து -அனந்தரம் –
பகவத் பஜனம் பண்ணி யமாதிகள் தலையிலே அடி இட்டு
ந பிபேதி குதச்ச ந -தைத் ஆன -9-1- என்று இருப்பாரைப் போலே  நிர்ப்பரராய் இராதே

எமக்கு என்று –
தனக்கும் பிறருக்குமாய் இருப்பதை பற்றுவதே –
எம்பெருமானுக்கு என்று இருப்பதைத் தனக்கு என்று இருப்பதே –

இரு நிதியம் –
ஆனந்தம் ப்ரஹ்மணோ வித்வான் ந பிபேதி குதச்ச ந -தைத் ஆனா -9-1–என்கிற விஷயம் கிடக்க
துக்கோத்தரமான கழஞ்சு செம்பை ஆசைப்படுவதே -அது நினைத்த போதே பிடித்து துக்க ரூபம்
இங்கு அதசோ பயங்கதொ பவதி -தை ஆன -6-

தமக்கென்றும் சார்வம் அறிந்து –
எமக்கு என்றும் ஒக்க புகலிடமாய் இருக்கும் என்னும் இடத்தை புத்தி பண்ணு –
நமக்கு நித்தியமான ஆஸ்ரயம் என்று அறிந்து –
இவன் தனக்கு என்ன அறியாத காலத்திலும் -இவனைத் தனக்கு என்று இருக்குமவன் –

நமக்கென்றும் மாதவனே என்னும் மனம் படைத்தது –
நமக்கு என்றும் தஞ்சம் ஸ்ரீ யபதியே என்னும் மனசை யுடையராய் கொண்டு –
நமக்கு என்றும் அனுபாவ்யன் ஸ்ரீ யபதியே என்னும் நெஞ்சைப் படைத்து –
மாதவன் என்பதோர் அன்பு தனை யுற்று இருந்தேன் -நாச் -12-1-

மாதவன்
பிராப்ய ஸ்வரூபம்

மனம் படைத்து
விஜ்ஞானம் யதிதம் ப்ராப்தம் -ஜிதந்தே -அவர்களை இவன் இன்று படைக்க வேண்டா -சித்தம்

மற்றவன் பேர் ஓதுவதே நாவினால் ஓத்து-——
அவன் திரு நாமங்களைச் சொல்லுகையே நாவால் ஓதப்படுவதும் –
அம் மிதுனத்துக்கு வாசக சப்தத்தைச் சொல்லுகையே வாக் இந்த்ரியத்துக்கு ஏற்ற இது

உச்சரிக்கும் மந்த்ரம் வ்யவஸ்திதமாய் இருக்கை
ஹரிரேகஸ் சதாத் யேய -ஹரி வம்சம் -138-8-
மந்திரத்தை மந்திரத்தால் மறவாது என்றும் வாழுதியேல் வாழலாம் மட நெஞ்சமே-திரு நெடும் -4-

————————————————————————–

நாவினால் ஒதுகையாகிறது தான் எங்கனே செய்கை என்னில் –
சகல வேத சஙக்ரஹமான திரு மந்த்ரத்தை உச்சரித்துக் கொண்டு
வேதாந்தங்களில் சொல்லுகிற மரியாதை குறையாமல் ஆஸ்ரயிக்க வல்லார் அங்கனே யாஸ்ரயிப்பது –
அது மாட்டாதவர்கள்
அப்பரப்பு எல்லாத்தாலுமாக சங்க்ருஹீதமான அர்த்தம்  ஸ்ரீ யபதியானவனுடைய திரு நாமங்களைச் சொல்லுகையே –
ஆன பின்பு அவ்வழியாலே பற்றப் பாருங்கோள்-என்கிறார் –

இந்த்ராதிகளையும் ஆஸ்ரயணீயராக வேதாந்தங்களிலே சொல்லா நின்றனவே –
நீரும்  ப்ராமாணிகராய் இருந்து ஸ்ரீ லஷ்மீ பதியே சமாஸ்ரயணீயர் என்று சொல்லுகிற படி எங்கனே என்னில்
உங்களுக்கு அபிதா நவ்ருத்தியாய் தாத்பர்ய ஜ்ஞானம் இல்லாமல் சொல்லுகிறி கோள்-
தாத்பர்ய ஜ்ஞானம் யுன்டாகில் அவர்களைச் சொல்லுகிற இது 
விபூதி மானாய் சமாஸ்ரயணீயனாய் இருப்பான் ஸ்ரீ லஷ்மீ பதியே -என்று இருங்கோள் என்கிறார்  –

ஒத்தின் பொருள் முடிவும் இத்தனையே உத்தமன் பேர்
ஏத்தும் திறம் அறிமின் ஏழைகாள் -ஒத்ததனை
வல்லீரேல் நன்றதனை மாட்டீரேல் மாதவன் பேர்
சொல்லுவதே ஒத்தின் சுருக்கு —39-

பதவுரை

ஏழைகாள்–‘கண்ட கண்ட தேவதைகளின் கால்களிலெல்லாம் விழுகிற அறிவு கேடர்களே!,
ஓத்து அதனை–வேதமோதுவதாகிற காரியத்தை(ச் செய்ய)
வல்லீர் ஏல்–ஸமர்த்தர்களா யிருப்பீர்களாகில்
நன்று–அப்படியே வேதமோதுவது நல்லது;
அதனை மாட்டீர் ஏல்–அது செய்ய சக்தி யற்றவர்களாகில்
மாதவன் பேர்–திருமாலின் திருநாமங்களை
சொல்லுவதே–உச்சரிப்பதே
ஓத்தின் சுருக்கு–ஸகல வேதங்களின் ஸாரமாகும்;
ஓத்தின் பொருள் முடிவும் இத்தனையே–வேதத்தினுடைய அர்த்தங்களில் நிஷ்கர்ஷிக்கப்படடதும் இவ்வளவே; (ஆகையாலே)
உத்தமன்–புருஷோத்தமனான எம்பெருமானுடைய
பேர்–திருநாமங்களைக் கொண்டு
ஏத்தும் திறம்–(அவனைத்) துதிக்கும் வகையை
அறிமின்–தெரிந்து கொள்ளுங்கள்.

ஒத்தின் பொருள் முடிவும் இத்தனையே –
வேதத்தின் யுடைய அர்த்தம் எல்லாத்தாலும் கூட தாத்பர்யமாக நினைத்துத் தலைக் கட்டின அம்சம் –
நான் சொல்லப் புகுகிற இவ்வளவே –
வேதைஸ்ஸ சர்வை அஹமேவ வேத்ய -ஸ்ரீ கீதை -15-15–

பொருள் முடிவும் –
பிரயோஜனத்தின் எல்லை –

உத்தமன் பேர் ஏத்தும் திறம்-
வேறு ஒருக்கால் தனக்கும் பாங்கான போது அவனை அனுசந்திக்கப் -பின்பு இவன்  கலங்கின சமயத்திலும்
அவன் தானே தெளிந்து இருந்து இவனை அவ்வருக படுத்த வல்லவன்
திரு நாமங்களை ஸ்தோத்ரம் பண்ணும் பிரகாரம் –
ஸ்திதே மனசி ஸூ ஸ் வஸதே  சரீரே சதி யோ நர தாது சாம்யே ஸ்திதே ஸ்மர்த்தா விச்வரூபஞ்ச மாமஜம்-என்கிறபடியே
இவன் பக்கலிலே ஒரு கால் ஸ்ம்ருதி மாதரம் யுண்டாக
பின்னையும் இவனுக்கு ஸ்மரிக்க ஒண்ணாத தசையிலும் –
அஹம் ஸ்மராமி -என்கிறபடியே
உணர்ந்து இருந்து நோக்க வல்லவன் திரு நாமத்தைச் சொல்லுமதுவே –

உத்தமன் பேர் ஏத்தும் திறம்-
எல்லாவற்றுக்கும் பிரகாரியாய் இருந்துள்ள அவனுடைய திரு நாமத்தை ஏத்துகை –

உத்தமன் –
எல்லா இசையும் பன்னுமவன்
உத்தர்த்தும் அர்ஹசி ஹரே புருஷோத்தமோசி-முகுந்த மாலா -34-என்றும்
யோ மாமேவம் அசம்மூடோ ஜா நாதி புருஷோத்தமம்  ச சர்வவித் பஜதி மாம் சர்வ பாவேன பாரத -ஸ்ரீ கீதை -15-19-என்றபடி
தன்னை ஒழிந்தது அடைய பிரகாரமாக யுடைய பிரகாரி -என்று அறிகை

பேர் –
கீழ்ச் சொன்னபடிக்கு வாசக சப்தம் -அதாகிறது திரு மந்த்ரம் –
அவன் பக்கலிலே சர்வார்த்தமும் யுண்டானாப் போலே அதன் பக்கலிலே சர்வ சப்தமும் யுண்டு

சர்வம் அஷ்டாஷராந்தச்தம் -ஹாரீத ஸ்ம்ருதி -3-45-
ஒமிதீதம் சர்வம் -அகாரோவை சர்வா வாக் –

அறிமின் ஏழைகாள் –
வேறேயும் அறியப் படுவதொரு விஷயம் யுண்டாக  நினைத்து இருக்கிற சபலர்காள்-நீங்கள் இத்தை அறியுங்கோள்-

ஏழைகாள் –
இது உங்களுக்கு உபதேசிக்க வேண்டும்படியாய் இருப்பதே –
வகுத்த விஷயம் குறைவற்று இருக்க பாஹ்ய விஷயங்களிலே பிரவணராய் இருப்பதே –
சப்த மாதரத்தையே புத்தி பண்ணி தாத்பர்ய வ்ருத்தியாலே பர்யவசான வ்ருத்தி அறியாது இருக்கிற அஜ்ஞர் என்றுமாம் –

ஒத்ததனை வல்லீரேல்-
வேதத்தில் சொல்லுகிற மரியாதை குறையாமல் அனுஷ்டிக்க வல்லி  கோளாகில்-

அறிமின் –
அப்படி அறியுங்கோள்-சங்க அத்யயனம் பண்ணி வேதாந்த ஸ்ரவணத்தாலே  தாத்பர்யம் அறிய வல்லி கோளாகில் –

ஏழைகாள் -ஒத்தனை வல்லீரேல் உத்தமன் பேரோதும் திறமான இத்தனையே ஒத்தின் பொருள் முடிவும் -இத்தை புத்தி பண்ணுங்கோள் –

நன்றதனை மாட்டீரேல்-
நன்றாக அதில் சொல்லுகிறபடியே மாட்டி கோளாகில்
உப நயனாதி சம்ஸ்காரம் முன்னாக சங்க அத்யயனத்தைப் பண்ணி அதில் அர்த்த ஜ்ஞானத்தை யுடையி கோளாய்
பின்னை அவற்றில் சொல்லுகிறபடியே சாதனங்களை கண்ணழிவற அனுஷ்டித்த அனந்தரம் சாஷாத் கரிக்குமது மாட்டிற்றிலி கோளாகில்

மாதவன் பேர் சொல்லுவதே ஒத்தின் சுருக்கு –
அந்த அப்பரப்பு எல்லாவற்றாலும் கூட சங்ஷேபித்ததாய் யற்ற பொருள் ஸ்ரீ யபதியுடைய திரு நாமத்தைச் சொல்லுகையே –

மாதவன் –
நிரூபக தர்மம் -அவன் பிரசாதம் அடியாகப் பிறந்த ஜ்ஞானம் யுடையார் சொன்னத்தை அர்த்தம் என்று இருங்கோள் –
பகவத்  பிரசாதத்தாலே அவனைக் கண்ட என்னை விஸ்வசியுங்கள்-

இத்தைச் சுருக்கு என்கையாலே
நன்றதனை மாட்டீரேல் -என்ற இடத்திலும் பரப்பு எல்லாவற்றையும் நினைத்துச் சொல்லுகிறது –

————————————————————————–

கீழே வேதாந்தத்தால்   நிச்சயித்ததான அம்சம் இது என்றாரே -இதுவும் ஒரு வார்த்தா மாத்ரம் சொன்னான்
என்று இராதே அதில் அர்த்த பூதனைக் கடுக புத்தி பண்ணப் பாருங்கோள்-என்கிறார் –

அவனை ஒழிந்தது ஒன்றுக்கு ஒரு வஸ்துத்வம் இன்றிக்கே இருந்தது –
ஆன பின்பு பற்றப் படுவான் அவனேயாய் இருந்தது –
அது தானும் ஓரளவிலே வந்தவாறே செய்கிறோம் என்று இராதே கடுகச் செய்யப் பாருங்கோள்  -என்கிறார்-

சுருக்காக வாங்கிச் சுலாவி நின்று ஐயார்
நெருக்கா முன் நீர் நினைமின் கண்டீர் -திருப் பொலிந்த
ஆகத்தான் பாதம் அறிந்தும் அறியாத
போகத்தால் இல்லை பொருள்————–40-

பதவுரை

ஐயார்–கோழையானது
சுருக்காக வாங்கி–சரீரத்தைச் சுருங்க வலித்து
சுலாவி நின்று–உடம்பு முழுவதும் சூழ்ந்து கொண்டு நின்று
நெருக்காமுன்–(உயிர் போகும்போது கழுத்தளவிலே வந்து கூடி) நெருக்குவதற்கு முன்பே,
திரு பொலிந்த ஆகத்தான் பாதம்–பிராட்டியாலேர விளங்குகின்ற திருமார்பையுடைய பெருமானுடைய திருவடிகளை
நீர் நினைமின்–நீங்கள் சிந்தியுங்கோள்:
அறிந்தும்–பகவத் விஷயத்தை அறிந்தவர்களாயிருந்தும்
அறியாத–அறியாதவர்களாகவே உங்களைச் செய்யவல்ல
போகத்தால்–சப்தாதி விஷயங்களால்
பொருள் இல்லை–ஒரு ப்ரயோஜனமுமில்லை.

சுருக்காக வாங்கிச சுலாவி நின்று ஐயார் நெருக்கா முன் நீர் நினைமின் கண்டீர் –
சுலாவி நின்று -ஐயார் சுருக்காக   வாங்கி நெருக்கா முன் நீர் நினைமுன் –
எங்கும் ஒக்க வியாபித்து இருக்கிற ச்லேஷமானது -பிராண வியோக சமயத்திலே வந்து திரண்டு வலிக்கக் கடவதாய்  இருக்கும் –
அப்போது இவன் அவனை ஸ்மரிக்க ஆசைப்பட ஒண்ணாத படி கரணங்கள் அவிதேயமாய் இருப்பதொரு போதாயும் இருக்கும் இறே-
ஆன பின்பு அவ் வெளிமைப் படுவதற்கு முன்பே அவனை கடுக்க ஸ்மரித்துக் கொடு நிற்கப் பாருங்கோள்-

சுருக்காக வாங்கி –
பஞ்சவித வாயுவை யுடைத்தான சரீரம் -சுருக்குப்பை போலே ஒன்றாக சுருங்க வலிக்கை –

சுலாவி நின்று –
உடம்பு எங்கும் தானேயாம் படி  வியாபித்து இத்தால் தப்பாமே கொல்லுகை –

ஐயார் நெருக்கா முன் –
ச்லேஷமா வந்து நெருக்குவதற்கு முன்னே –

நீர் நினைமின் –
இத்தைப் புத்தி பண்ணுங்கோள்–செய்கிறோம் எண்ணப் பற்றாது என்கிறார்
மாளுமோர் இடத்திலும்  -வணக்கொடு மாள்வது வளமே -திருவாய் -1-3-8-
உபாசகனுக்கு அந்திம ஸ்ம்ருதி வேணும்
பிரபன்னனுக்கு காஷ்ட பாஷாண சந்நிபனாக வேணும்
இரண்டும் தப்பி நின்றார்க்கு
அந்திம தசையில் த்வயத்தின் யுடைய நினைவு பிறத்தல் கீழ்ச் சொன்ன வற்றிலும் நன்று
என் தான் இப்படி அவன் ஒரு கை கால் முறிய ஸ்மரிக்க வேண்டுகிறது என் என்னில் –

திருப் பொலிந்த ஆகத்தான் பாதம் –
மறந்து இருக்கலாம் படியோ அவ்வடிவு அழகு இருக்கிறது -என்கிறார்
நெடும் காலம் ஆஸ்ரயிக்கப் பெற்றிலோம் -அதுக்கு மேலே தோஷ பூயிஷ்டர் என்று அஞ்ச வேண்டாம்
ந கச்சின் ந அபராத்யதி -யுத்த -116-14-என்னுமவள் கூட இருக்கிறாள் –
பெரிய பிராட்டியாராலே விளங்கா நின்றுள்ள திருமேனியை யுடையவன் திருவடிகளை நினைமின் –

அறிந்தும் அறியாத போகத்தால் இல்லை பொருள்-
பகவத் விஷயத்தை அறிந்து வைத்தும் அறியாதாரோடு வ்யாவர்த்தமாகப் பண்ணக் கடவதான
ப்ராக்ருத போகங்களால் ஒரு பிரயோஜனம் இல்லை –
ஜ்ஞானாதிகனானவனையும் அஜ்ஞ்ஞானவனோடு ஒக்கச் சொல்லும்படிக்கு ஈடாகப் பண்ணுவித்துக் கொள்ளுகிற
சப்தாதி போகங்களால்  வரக் கடவதொரு பிரயோஜனம் இல்லை

மஹா ராஜற்கு ராம பக்தி குறைவற்று இருக்கச் செய்தேயும் நாலு நாள் போகப் பிராவண்யத்தாலே
அல்லாதாரோடு ஒக்க உணர்த்த வேண்டும்படியாய் விழுந்தது இறே

அன்றிக்கே –
பொல்லாது என்று அறிந்து இருக்கச் செய்தே கை விடப் போகாத வர்த்த ஸூகத்தால் பிரயோஜனம் இல்லை என்றுமாம் –

அங்கன் அன்றிக்கே –
அந்த சப்தாதி போகங்கள் தானே அவ்வளவு யுண்டு -அவ்வளவும் அறிந்தாலும்
பின்னையும் அறியாதார் படியேயாய்த் தலைக்கட்டும்படி
பண்ணக் கடவதான போகங்களில் வருவதொரு பிரயோஜனம் இல்லை –

அதாகிறது –
சந்த்ருச்யதே  வாப்ய கம்யதே வா தாஜ்ஞ்ஞானம் அஜ்ஞ்ஞானம் அதோன்யது துக்கம் -ஸ்ரீ விஷ்ணு புராணம் -6-5-87-என்னக் கடவது இறே
ப்ராப்த விஷயத்தைப் பற்றாத ஜ்ஞானம் அஜ்ஞ்ஞானம் என்னக் கடவது இறே
பகவத் வ்யதிரிக்தங்களை அடங்க அறிந்தானே யாகிலும் அது ஒன்றையும் அறியாது ஒழியவே அவனை அஜ்ஞ்ஞன் என்னக் கடவது இறே
வ்யதிரிக்த விஷயங்கள் ஒன்றும் அறியாதே ஒழிந்தாலும்
பகவத் விஷயம் ஒன்றையுமே அறியவும் அவன் சர்வஜ்ஞ்ஞனாகக் கடவன்

அதில் இங்கு நீர் நினைமின் என்ற மாத்திரமாய் இருந்தது
இங்கு அறிந்தும் என்று அதனிடைய எல்லை அளவும் சென்று நின்றது

அர்த்த ஸூகம் ஸூகம் அன்றோ என்னில்
உத்தேச்யத்தை அறியாதபடி அனர்த்தத்தைப் பண்ணும் –
தான் பிரயோஜனப் படாத மாத்திரமே அன்று -புருஷார்த்த விரோதியுமாம் -என்றபடி –

————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பூதத் ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ பூதத் ஆழ்வார் அருளிய இரண்டாம் திருவந்தாதி – -21-30– ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் —

February 22, 2015

இவர்களுடைய பரிகர சம்பத்தி இருந்தபடி -கண்டோமுக்கு நேர் கொடு நேர் நரகத்தில் புக வழி அற்று இருந்தது
இங்கனே இருக்கும் இவர்கள் விலக்கடி தேடிக் கொண்டு போய்ப் புகுகிறபடி என் என்று  விஸ்மயப் படுகிறார் –
நன்கு ஏத்தும் போது தாம் தாம் உண்டாக வேணுமே -என்னில்-

தாமுளரே தம் உள்ளம் உள் உளதே தாமரையின்
பூ உளதே ஏத்தும் பொழுது உண்டே -வாமன்
திரு மருவு தாள் மருவு சென்னியரே செவ்வே
அரு நரகம் சேர்வது அரிது—————–21–

பதவுரை

தாம் உளரே–(எம்பெruருமானைப் பணிவதற்குப் பாங்கான கரண களேபரங்களை யுடைய)
சேதநர் தாங்கள் ஏற்கனவே இருக்கின்றார்களே;
தம் உள்ளம் உள்உளதே–(எம்பெருமானைச் சிந்திப்பதற்கான) தங்களுடைய (மனமும் வெளியே போய்த் தேட வேண்டாதபடி)
தமக்குள்ளே யிருக்கின்றதே.
தாமரையின் பூ உளதே–(எம்பெருமான் திருவடிகளில் சாத்தந்தக்க) தாமரைப்பூ (குளங்கள் தோறும்) நிறைந்து கிடக்கின்றதே;
ஏத்தும் பொழுது உண்டே–அவனை வாய் விட்டுப் புகழ்வதற்கு ஏற்ற காலம் ஏராளமாக வுள்ளதே;
வாமன்–(தன் உடைமையைப் பெறுகைக்குத் தான் யாசகனாகச் சென்ற சீலமுள்ள) வாமந மூர்த்தியான ஸர்வேச்வரனுடைய
திரு மருவு தாள்–அழகிய திருவடிகளை
மருவு–பணிவதற்குப் பொருத்தமான
சென்னியரே–தலையை யுடையவர்களாக இருக்கின்றார்களே;
(இப்படி ஒன்றாலும் குறையின்றியே யிருக்கவும் இவ்வுலகத்தவர்கள்)
செவ்வே–நேராக
அரு நரகம்–கொடிய நரகத்தை
சேர்வது–அடைவதானது
அரிது–ஆச்சரியப்படத்தக்க அருமையான செயலாயிருக்கின்றது.

தாமுளரே -இத்யாதி
சத்தையை யுண்டாக்கி மற்றுள்ள உப கரணங்களையும் சேதனர்க்கு யுண்டாக்கிக் கொடுக்கையாலே  –
தந்தாமை யுண்டாக்கி -வைத்தானே –
விசித்ரா தேக சம்பந்தி ஈஸ்வராய நிவேதிதும் பூர்வமேவ க்ருதா ப்ரஹ்மன் ஹஸ்தா பாதாதி சம்யுதா -ஸ்ரீ விஷ்ணு தத்வம் -என்று
தேஹத்தை பண்டே தந்து வைத்தானே –
தங்களை சிருஷ்டித்துக் கொள்ள வேண்டாவே –

தம் உள்ளம் உள் உளதே –
சத்தை யுண்டானால் உண்டாம் ஹிருதயத்தையும் தேட வேண்டாதபடி  தனக்கு விதேயமாக்கி வைத்தானே –
தனக்குப் புறம்பு அன்றே ஹ்ருதயம் –
சித்தத்தைப் பற்றுவார்க்கு சித்தமே அமையுமே –
உள்ளுகை அரிது என்னில்

தாமரையின் பூ உளதே –
தாமரை புறம்பே யுண்டே –
அல்லோம் என்று இவன் போகிலும்-புறம்பே போக ஒண்ணாத படி பண்டே அவை யுண்டாய்த்தே –
ஆகிறது -தான் புறம்பே போய் தேடுமதான புஷ்பமும் -தனக்கே தேட வேண்டாத படி -அவன் குறைவறுத்து வைத்தானே –
இவனுடைய விபூதிக்கும் புறம்பு அன்றே பூ –

ஏத்தும் பொழுது உண்டே –
ஆஸ்ரயணீயத்துக்கு ஈடான காலமும் குறைவற்றுக் கிடந்ததே
பூப் பறிக்கச் சோம்பில் யேத்துகைக்கு ஈடான  காலமும் ஈஸ்வரன் தானே யுண்டாக்கி வைத்தானே –

வாமன் திரு மருவு தாள் மருவு சென்னியரே-
வாமனைக் குறைத்து வாமன் -என்கிறது -இவன் இடுமது கொள்ளுகைக்குத் தான் இரப்பாளனாய்
வருமவனுடைய ஐஸ்வர்ய பிரகாசமான திருவடிகளில் சேர்க்கும்படியான தலையை யுண்டாக்கி வைத்தானே

வாமன் –
எல்லார் தலையிலும் கால் வைக்க உகக்குமவனாய்த்-தன்னுடைமை பெறுகைக்கு அர்த்தியாய் வருவுமவன் –
மருவுகையே வேண்டுவது

திரு மருவு தாள் –
சங்க ரதாங்க கல்பக த்வஜ அரவிந்த அங்குச   வஜ்ரா லாஞ்சனம்-சரணாம் புஜத்வயம் -ஸ்தோத்ர ரத்னம் -31-என்கிறபடியே
சேஷித்வ பிரகாசமாய் இருக்கை –
திருப் பொலிந்த சேவடி -பெரியாழ்வார் திரு -5-4-7-என்னக் கடவது இறே –

மருவு சென்னியரே
சேஷத்வ ப்ரகாசகமான தலையை யுண்டாக்கி வைத்தானே –
திருவடிகளை வைத்தால் விலக்காத தொரு தலையை யுடையரே –
நான் என்று இருக்கை ராவணனோ பாதி -அடியேன் என்று இருக்கை விபீஷணனோ பாதி
இருந்தபடி இதுவான பின்பு

செவ்வே அரு நரகம் சேர்வது அரிது–
கொடிதான சம்சாரத்துக்கு வேர் வழி போகை அரிது -இங்கனே  இருக்க –
இவர்கள் தேடிக் கொண்டு போகிற வழி இருக்கிறபடி என் –
இப்படி உப கரணங்கள் குறைவற்று இருக்கச் செய்தே நரகத்துக்கு நேர் வழி கிடையாது

அரு நரகம் –
சம்சாரம் –
அஜ்ஞருக்கு இறே யமனுடைய நரகம் –
விவேகம் யுடையாருக்கு சம்சாரமே நரகம் –

நிரயோ யஸ் த்வயாவி நா -அயோத்யா -30-18-

தேஹ சேத ப்ரீதிமான் மூட பவிதா நரகேபி  ச -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-17-63-

அப்படி அல்லாமல் உடலிலே ஆசை அற்றவனாக இருப்பவனுக்கு சம்சாரத்துக்கு வழி காண் கிறிலோம்-

————————————————————————–

இப்படி அரிதாய் இருக்கச் செய்து கொண்டதிது-
இவர்களுக்கு ஒரு பரிகரம் இன்றிக்கே இருந்ததே யாகிலும் தன் பரத்தில் தான் ந்யச்த பரனாய் இருக்கவே –
எளிதாக இவர்கள் ஆஸ்ரயித்தாகளாய் கொண்டு  தலைக் கட்டலாய் இருக்கிறது கிடீர் –
சர்வேஸ்வரன் ப்ரபாவத்தைப் பார்த்த வாறே -என்கிறார் –

சம்சாரிகளுக்கு ஆஸ்ரயிக்கை எளிதாய் இருந்ததோ என்னில்
எளிதாம் வழி சொல்லுகிறார் –
சத்தையைப் பிடித்து நோக்கிக் கொண்டு போருவான் ஒரு சாமாஸ்ரயணீயனைப் பெற்றால்
எல்லாம் ஸூலபம் இறே என்கிறது-

அரியது எளிதாகும் ஆற்றலால் மாற்றி
பெருக முயல்வாரைப் பெற்றால் -கரியதோர்
வெண் கோட்டு மால் யானை வென்றி முடித்தது அன்றே
தண் கோட்டு மா மலரால் தாழ்ந்து—-22-

பதவுரை

(சேதநனுக்கு வேண்டிய ஸகல காரியங்களையும் தானே செய்வதாக என்று கொண்டு)
பெருக முயல்வாரை–மிகவும் உத்ஸாஹங் கொண்டிருக்கின்ற மஹாபுருஷனான எம்பெருமானை
பெற்றால்–கிடைக்கப் பெற்றால்
அரியது–செய்வதற்கு அருமையான செயலும்
எளிது ஆகும்–லகுவாய்விடும்; (இப்படியாக எங்கே கண்டோமென்னில்)
வெண் கோடு–வெண்ணிறமான தந்தங்களை யுடைய
மால்–பெரிய
கரியது ஓர் யானை–கருநிறமுள்ள கஜேந்திராழ்வான்
தண்–குளிர்ந்த
கோடு–பொய்கைக் கரையிலே
மா–சிறந்த
மலரால்–தாமரைப் பூக்களைக் கொண்டு
(மடுவின் கரையிலெழுந்தருளின எம்பெருமான் திருவடிகளிலே)
தாழ்ந்து–வணங்கி யடிமை செய்ததனால்
வென்று முடித்தன்றே–விரோதியை ஜயித்துத் தன் அபீஷ்டத்தை நிறைவேற்றிக் கொண்டதன்றோ.
ஆற்றலால்–தன்னுடைய சக்தியினால்
மாற்றி–சேதநன் செய்யும் முயற்சி ஒன்றும் வேண்டாவென்று விலக்கி

அரியது எளிதாகும் –
அரியதாவது -பெறுதற்கு அரிதான பகவல் லாபமும் -பகவத் பஜனமும் –
இவை இரண்டும் எளிதாகும் -என் செய்தால் -என்னில் –

ஆற்றலால் மாற்றி பெருக முயல்வாரைப் பெற்றால் –
ஆற்றலாலே -என்கிறது
சக்தியாலே -என்னுதல் –
பொறையாலே   என்னுதல் –

சக்தியான போது அவனுக்கு சக்தி வைகல்யம் இல்லாமையாலே இவன் பரத்தை தன் பக்கலிலே மாற்றிக் கொண்டு
இவனுடைய பேற்றுக்கு பிரதி பந்தகங்கள் ஆனவற்றையும் போக்கி
தன்னைக் கொடுக்கைக்கு யுடலாகிறது –
இவன் தலையிலே ஒரு தேவை இடுகிறது என் —
எல்லாம் நாமே ஏறிட்டுக் கொண்டு செய்வோம் என்பான் ஒரு பர சக்தியைப் பெற்றால் –
இவன் அசக்தி தீரத் தன் சக்தியைக் காட்டி ரஷிக்கை –

அன்றிக்கே -பொறை யானபோது –
இவன் பெறாமைக்கு பண்ணி வைக்கும் ப்ராதி கூல்யங்களை தன் கிருபையாலே
பொறுத்துக் கொடுக்கைக்கு யுடலாய் இருக்கை

மாற்றிப் பெருக முயல்வாரைப் பெற்றால் –
இவனுடைய சர்வ ரஷணங்களையும் தன் தோளிலே ஏறிட்டுக் கொண்டு இவனுக்குப் பேற்றிலே அந்வயமாம் படி –
தன் பேறாகக் கொண்டு ஆஸ்ரிதன் பக்கல் உள்ள அல்ப அனுகூல்யத்தை –
அஜ்ஞனாய் அசக்தனானவன் இத்துணை செய்து உகக்கப் பெற்றோம் -என்று
மிகவும் உத்சாஹிப்பாரைப் பெற்றால் அரியது எளியதாகும்

இத்தாலே
அவனாலே அவனைப் பெறுதல் -தம்மாலே அவனை இழத்தல் -என்றபடி

இதுக்குத் திருஷ்டாந்தம் –

கரியதோர் வெண் கோட்டு மால் யானை –
கறுத்த நிறத்தையும் வெளுத்த கொம்பையும் பெரிய வடிவையும் உடைத்தான ஆனையானது-
வென்றி முடித்தது அன்றே தண் கோட்டு மா மலரால் தாழ்ந்து-
பொய்கையிலே புக்கு பூவைப் பறித்த அவ்வ0ளவில் முதலையாலே நோவு பட்டு
பூவில் செவ்வி மாறுவதற்கு முன்னே அவன் திருவடிகளிலே இடப் பெற்றிலோம் என்னும் இழவு தீர
அவன் தான் அரை குலையத் தலை குலைய இவ்வளவும் வந்து
இத்தை எடுத்துக் கொடு போய் குளிர்ந்த கரையிலே வைக்க
அப்போதே அவன் திருவடிகளிலே பணிமாறித் தன் விரோதியையும் போக்கப் பெற்றது   இல்லையோ –
ஆனபின்பு அதிலும் ஒரு குறையில்லை –

வடிவில் கருப்பும் கொம்பிலே வெளுப்பும் கொண்டு கொள்ளுகிற பிரயோஜனம் என் என்னில்
பிரஜை கிணற்றில் விழுந்தால் அதின் வடிவு அழகும் -அவயவமும் மாதாவுக்கு ஸ்மாரகமாய்
இருக்குமாப் போலே இருக்கும்

கோட்டு என்று கரைக்குப் பேர்
தடம் -குளிர்த்தி

குளிர்ந்த கரையிலே மா மலரைக் கொண்டு தாழ்ந்தன்றே வென்றியை முடித்தது –
புஷ்பத்தைக் கொண்டு திருவடிகளிலே பணிந்தன்றே விஜயத்தைப் பெற்றது –
அவன் பிரசாதத்தாலே அன்றோ -என்கிறது

அன்றிக்கே –
தண் தொட்டு மலர் என்று பாடமான போது குளிர்ந்த இதழை யுதைத்தான பெரிய மலராலே என்கிறது –
எம்பெருமான் ஏறிட்டுக் கொள்ளாத போது முதலை வாயிலே கிடந்தான் –
அவன் ஏறிட்டுக் கொண்டவாறே துக்கம் நீங்கிற்று
அனுக்ரஹம் உள்ள போது ரஷ்யத்துக்கு மிடுக்காய் இருக்கும்
நிக்ரஹம் பிறந்த போது சத்ருக்களுக்கு மிடுக்காய் இருக்கும்

அனுக்ரஹம் உள்ள போது -தோஷாமஹம் சமுத்தர்த்தா ம்ருத்யு சம்சார சாகராத் -ஸ்ரீ கீதை -12-7-
நிக்ரஹம் உள்ள போது -ஷிபாமி அஜஸ்ரம ஸூபான் ஆஸூரீஷ் வேவ யோ நி ஷூ -ஸ்ரீ கீதை -16-19-

ஆதலால் -அரியது எளியதாகும் -எளிதாகைக்கு இவன் செய்வது என் என்னில் –
விலக்காமை

ஆற்றலால் மாற்றிப் பெருக முயல்வார் என்று லாபம் நம்மதான பின்பு எல்லாவற்றையும்
ஈஸ்வரன் பக்கலிலே  ஏறிடுகிறது என் –
நாமே பஜிப்போம் என்பான் ஒரு அதிகாரியைப் பெற்றால் -என்றுமாம் –

————————————————————————–

இப்படி ஆஸ்ரயணீயன் தானே தன்னை ஆஸ்ரயித்த இவனுடைய ப்ராப்தி விரோதியான பிரபல பிரதி பந்த கங்களையும் போக்கி
ஸூ லபனாய் இவனுக்கு அபிமத சித்தியையும் தானே பண்ணிக் கொடுக்கும் -என்கிறார் –
ஐஸ்வர்யம் அபேஷித்தார்க்கும் அத்தைக் கொடுக்கும் -கைவல்யம் அபேஷித்தார்க்கும் அத்தைக் கொடுக்கும் –
ஸ்வ ப்ராப்தி அபேஷித்தார்க்கும் அத்தைக் கொடுக்கும் -என்கிறார்-

தாழ்ந்து வரம் கொண்டு தக்க வகைகளால்
வாழ்ந்து கழிவாரை வாழ்விக்கும் -தாழ்ந்த
விளங்கனிக்கு கன்று எறிந்து வேற்றுருவாய் ஞாலம்
அளந்தடிக்கீழ் கொண்ட வவன்–23-

பதவுரை

தாழ்ந்த–(பழத்தின் கனத்தினால் கிளைகள்) தாழ்ந்து கிடந்த
விளா–விளா மரத்தினுடைய
கனிக்கு–பழங்களை உதிர்ப்பதற்காக
கன்று–கன்றை (எறி கோலாகக் கொண்டு) வீசி யெறிந்தவனாயும்
வேறு உரு ஆய்–(திருமாலான தன்னுடைய வடிவத்தை விட்டு யாசகனான வாமன மூர்த்தி வடிவமாய்
ஞாலம்–பூமியை
அளந்து–அளந்து
கொண்ட–அடங்கும்படி கொண்டவனாயுமுள்ள
அவன்–அந்த எம்பெருமான்
தாழ்ந்து–தனது திருவடிகளிலே வணங்கி
வரம் கொண்டு–(எங்கள் இஷ்டத்தை நீயே பூர்த்தி செய்து தரவேணுமென்று சொல்லித் தனது) திருவருளைப் பெற்று
தக்க வகைகளால்–(தங்கள் தங்கள் நிலைமைக்கு) ஏற்ற வண்ணமாக
வாழ்ந்து–ஐச்வரியத்தையோ கைவல்யத்தையோ பகவத் ப்ராப்தியையோ பெற்று
கழிவாரை–மேன்மேலும் ஸுகத்தை மிகுத்துக் கொள்ள வேணுமென்றிருக்கிற அந்தந்த அதிகாரிகளை
வாழ்விக்கும்–வாழ்விப்பான்.

தாழ்ந்து –
த்விதா பஜ்யேயமபி ந நமேயம் -யுத்த -36-11-என்கிற நிர்பந்தத்தை யுடையர் அன்றிக்கே –
அவன் திருவடிகளிலே வணங்கி –
இத்வயத்துக்குச் சேர்த்தி இல்லையே -அஜ் ஜென்மங்களுக்கு யுண்டாகை ஒழிய –
இறுமாப்பு தவிர்ந்து திருவடிகளிலே விழுகை –

வரம் கொண்டு –
இனி என்னுடைய அபிமத லாபம் என்னாலே பெறக் கடவேன் அல்லேன் -உன்னாலே பெறக் கடவேன் -என்று
அவன் பிரசாதத்தைக் கை தொடுமானமாய்க் கொண்டு –

வரம் கொண்டு –
ஒரு நாள் தாழ்ந்து விடுகை அன்றிக்கே முடியத் தாழும்படி வரம் கொடுக்கை அவன் பணி இறே  –

தக்க வகைகளால்-
இவ்வாத்மாவினுடைய ஸ்வரூபத்துக்கு அனுரூபமான பிரகாரங்களினாலே ஆஸ்ரயித்து-என்னுதல் –
சாஸ்த்ரங்களில் சொல்லுகிற பிரகாரங்களாலே -என்னுதல்
அதிகார அனுகுணமாக -என்னுதல்

தாழ்ந்து வரம் கொண்டு என்பான் என் என்னில் –
ஐஸ்வர் யாதிகளுக்கு ஐஸ்வர்ய விசிஷ்டனாக அனுசந்திக்கவும் பக்தி பண்ணவும் அந்திம ஸ்ம்ருதியும் வேணும்
கேவலனுக்கு ஸூத்தியை அனுசந்திக்க வேணும்
பகவத் பிராப்திக்கும் கல்யாண குண விசிஷ்டனாக அனுசந்திக்க வேணும்

வாழ்ந்து கழிவாரை -வாழ்விக்கும் –
வாழ்ந்ததாய்த் தலைக் கட்ட வேணும்  என்று இருப்பாரை வாழ்விக்கும் –
இது தானே வாழ்வாகக் காலத்தைப் போக்குவாரை ரஷிக்கும்-

தக்க வகைகளால் வாழ்ந்து கழிவாரை-
யாதொரு யாதொரு புருஷார்த்தங்களை பெற வேண்டும் என்றால்
அவ்வோ புருஷார்த்தங்களைக் கொடுத்து வாழ்விக்கும் -உதாரா -ஸ்ரீ கீதை -7-18-என்று தரும் –
இப்படி நினைத்து இருந்தாலும் தனக்கு விரோதியும் யுண்டாய் -அ
து தானும் செய்து தலைக் கட்டுகை அரிதாய் இருக்கில் செய்வது என் என்னில் –
அக்குறைகளும் அவனே பரிஹரித்து தரும் என்கிறது –

தாழ்ந்த விளங்கனிக்கு கன்று எறிந்து-
அடியே  தொடங்கித் தலை யளவும் செல்லப் பழுத்துக் கிடக்கிற விளாவினுடைய பழத்துக்கு கன்றை எறிந்து –
தீங்கு நினைத்த அத்தை -அது தன்னோடு போம்படி பண்ணின படி –

இத்தால்
வத்சாரூரனும் விளவாசூரனும் பட்டது படும் இத்தனை விரோதிகள் என்றபடி

வேற்று வுருவாய் –
அதுக்கு மேலே கோ சஹச்ர ப்ரதாதாரம் -யுத்த -21-7-என்று சொல்லுகிறபடியே
உதாரனான தான் தன்னை அர்த்தி யாக்கி நின்றபடி யாதல் –
ஸ்ரீ யபதியானவன் அர்த்தியாய் நின்றபடியாதல் –
சிறு காலைக் கட்டிப் பெரிய காலாலே அளந்து கொண்டபடி யாதல்

ஞாலம் அளந்து அடிக் கீழ்க் கொண்ட அவன் –
பூமியை அளந்து தன கால் கீழே இட்டுக் கொண்டவன் -வேணும் என்று இருப்பாரைப் பெற்றால் விடுமோ –

ஞாலம் அளந்து அடிக்கீழ் கொண்ட –
உறங்குகிற பிரஜையை தாய் கட்டிக் கொடு கிடக்குமா போலே
ஞாலம் அளந்து அடிக் கீழ் கொண்டவன் வாழ்விக்கும் –

————————————————————————–

இவனுண்டான பின்பு -இவன் அபேஷிதம் கொடுத்தான் என்று இது ஒரு ஏற்றமோ –
அடியே துடங்கி இவன் சத்தையை நோக்கிக் கொண்டு போருகிறவனுக்கு-என்கிறார்-

அவன் கண்டாய் நன் நெஞ்சே யார் அருளும்கேடும்
அவன் கண்டாய் ஐம் புலனாய் நின்றான் -அவன் கண்டாய்
காற்றுத் தீ நீர் வான் கருவரை மண் காரோதச்
சீற்றத் தீ யாவானும் சென்று —24-

பதவுரை

நல்நெஞ்சே–நல்ல மனமே!
ஆர் அருளும்–பரி பூர்ண க்ருபையாலே உண்டாகக் கூடிய மோக்ஷமும்
கேடும்-நிக்ரஹத்தால் வரக் கூடியதான ஸம்ஸாரமும்
(ஆகிய இரண்டுக்கும் நிர்வாஹகன்
அவன் கண்டாய்–அந்த எம்பெருமானே யாவன்;
ஐம்புலன்–பஞ்சேந்திரிய வடிவமான சரீரத்திற்கு உத்பாதகங்களான
காற்று தீ நீர் வான் மண் ஆய் நின்றான் அவன் கண்டாய் –பஞ்ச பூதங்களாய் நிற்பவனும் அந்த எம்பெருமானே யாவன்;
கரு வரை–கறுத்த மலைகளும்
(அவன் கண்டாய்)–அவனேயாம்;
சென்று–(இந்தப் பிரபஞ்சத்தை யழிக்கத் திருவுள்ளம்) ப்ரஸரித்து
கார் ஓதம் சீற்றம் தீ ஆவானும்–கறுத்த கடலைச் சீறிச் சுடவல்ல படபாக்நி யாகுமவனும்
அவன் கண்டாய்–அந்த எம்பெருமானேயாம்.

அவன் கண்டாய் நன் நெஞ்சே யார் அருளும் கேடும்-
சேதனனுடைய உஜ்ஜீவனத்துக்கு வெறும் இவனுடைய அனுஷ்டானமே அன்று கிடாய் –
இவனுடைய நன்மைக்கு அடி அவனுடைய பிரசாதம் கிடாய் –
வெறும் இவனுடைய க்ரியா மாத்ரமே யன்று என்றும் 
இவனுடைய நன்மைக்கு அடி –அவனுடைய நிர் ஹேதுக விஷயீ காரமே –
இவனுடைய அனர்த்தத்துக்கு அடி  அவனுடைய நிக்ரஹமே-

ஆக –
இவனுடைய நன்மை தீமைக்கு அடி அவனுடைய நிக்ரஹ அனுஹ்ரங்களை ஒழிய
வேறு புண்ய பாபங்கள் இல்லை என்கிறார் –

சம்சார மோஷங்கள் என்றுமாம் –

நன்னெஞ்சே –
அவன் புண்ய பாபங்களுக்கு அடி என்றால் 
அதுக்கு உடன்படும்படியாய் விதேயமான நெஞ்சே –
பகவத் விஷயம் சொல்லப் பாங்காய் இருக்கிற நெஞ்சே –

அவன் கண்டாய் ஐம் புலனாய் நின்றான் –
நமக்கு வேணும் என்னப் பண்னுவானும் அவன் கிடாய் –
தன்னைப் பெறுகைக்கும் இழக்கைக்கும் பொதுவான இந்த்ரியங்களுமாய் நின்றானும் அவன் கிடாய் –
நாமே உளன் என்ற போதைக்கும்
ஒரு ஈஸ்வரன் உளன் என்ற போதைக்கும் 
பொதுவான இந்த்ரியங்களும் அவனிட்ட வழக்கு –

இந்த்ரியங்களை விஷயப் பிரவணம் ஆக்கி கெடுப்பாரைக் கெடுக்கவுமாம்-
தன் பக்கலிலே ப்ரவணமாக்கி ரஷிப்பாரை ரஷிக்கவுமாம் –
விலங்கும் அவன் கையது முடியும் அவன் கையது-
ததாமி புத்தி யோகம் தம் யேன மாம் உபாயந்தி தே-ஸ்ரீ கீதை 10-10- -என்னவுமாம்
தா நஹம் த்விஷத க்ரூரான் சம்சாரேஷூ நரதமான் ஷிபாமி அஜஸ்ரம் அஸூ பான்
ஆ ஸூ ரீஷ்வேவ யோ நிஷ-ஸ்ரீ கீதை -16-10-என்னவுமாம்

அவன் கண்டாய் காற்றுத் தீ நீர் வான் கருவரை மண் –
தன்னை இழக்கைக்கு பரிகரமான பஞ்ச கங்களையும் உபகரணமாகக் கொண்டு –
இவற்றை யுண்டாக்குவானும் அவன் கிடாய் –

காற்று இத்யாதி –
தவிர்க்க வேண்டும்படியான யான வுடம்பு -சம்சார ப்ரவர்த்தகனும் அவன் என்கிறது –
தைவீஹ் ஏஷா குணமயீ மம மாயா துரத்யயா    மாமேவ யே ப்ரபத் யந்தே  மாயா மேதாம் தரந்தி தே -ஸ்ரீ கீதை -7-14-
என்னும் அவனையே பற்றியே சம்சார சம்பந்தம் அறுக்க வேணும் என்கிறது –

காற்று -இத்யாதி
சம்சார மோஷங்கள் இரண்டுக்கும் பொதுவான சரீரத்துக்கு ஆரம்ப கங்களான
வாயு அக்னி ஜல ஆகாச பூமிகள் ஆகிற பூத பஞ்சகம் –
தத் கார்யமான பெரிய பர்வதங்கள் ஆகிற அவற்றை அடியிலே யுண்டாக்குவானும் அவன் கிடாய் –

காரோதச் சீற்றத் தீ யாவானும் சென்று —
சம்ஹார   காலத்தில் யுகாந்தாக்னியாய் கொண்டு சென்று இவற்றை சம்ஹரிப்பானும் அவன் கிடாய்
காரோதச் சீற்றத் தீ -என்கிறது
படபா முகாக்னியை
அதாவது
தன்னை அவிக்க கடவதான நீரை யகப்பட தஹிப்பது இன்று இயுகாந்தாக்னியாய் கொண்டு சென்று
இவற்றை சம்ஹரிப்பானும் அவன் கிடாய்

காரோதச் சீற்றத் தீ -என்கிறது படபா முகாக்னியை
அதாவது தன்னை அவிக்க கடவதான நீரை யகப்பட தஹிப்பது இன்று இறே

ஆக
த்யாஜ்ய உபாதேயங்கள் இரண்டுக்கும் நிர்வாஹகன் அவன் என்றபடி

————————————————————————–

அவன்  சர்வ சாதாரணனாய்க் கொண்டு நின்றபடியை சொல்லிற்று கீழ் –
இங்கு ஆஸ்ரித விஷயத்தில் அவனுக்கு யுண்டான பஷபாதம் இருக்கும்படி சொல்லுகிறது –

சென்றது இலங்கை மேல் செவ்வே தன் சீற்றத்தால்
கொன்றது இராவணனைக் கூறுங்கால் -நின்றதுவும்
வேயோங்கு தண் சாரல் வேங்கடமே விண்ணவர் தம்
வாயோங்கு தொல் புகழான் வந்து –25-

பதவுரை

விண்ணவர் தம் வாய்–தேவர்களின் வாயினால்
ஓங்கு தொல் புகழான்–உயர்வாகக் கூறப்படுகின்ற பழமையான புகழை யுடைய எம்பெருமான்
செவ்வே–நேராக
சென்றது–சீறிச் சென்றது
இலங்கை மேல்–லங்காபுரியின் மேலாகும்;
தன் சீற்றத்தால்–தனக்கு வந்தேறியான கோபத்தால்
கொன்றது–ஸம்ஹரித்தது
இராவணனை–ராவணனையாம்;
கூறுங்கால்–சொல்லுமிடத்து
வந்து நின்றதுவும்–(சேதநர் எக்காலத்தும் உஜ்ஜீவிக்கவேணுமென்று கருதி) வந்து
வேய் ஓங்கு தண் சாரல் வேங்கடமே–மூங்கில்கள் ஓங்கி வளர்ந்துள்ள குளிர்ந்த சாரலையுடைய திருவேங்கடமலையேயாம்.

சென்றது இலங்கை மேல் செவ்வே –
மாயா மிருகத்தைக் காட்டி வழி எல்லா வழியே கொண்டு போனவனைப் போல் அன்றியே
பத்தும் பத்தான தன் ஆண் பிள்ளைத் தனத்தாலே வேறே காண எடுத்து விட்டு அழித்த படி –

சென்றது இலங்கை மேல் செவ்வே —
சங்கல்ப்பத்தால் அன்றிக்கே நேரே கால் நடையை இலங்கையிலே நடந்தது -அபியாதா -அயோத் -1-29- என்றபடி –

இலங்கை மேல் –
இந்த்ராதிகளும் பேர் சொல்ல வயிறு பிடிக்கும் ஊரிலே நதியாதே எடுத்துச் சென்றான் -வீரமே துணையாகச் சென்ற படி –
தன் சீற்றத்தால்  கொன்றது இராவணனைக் –
ப்ரஹர்த்தா ச -அயோத்யா -1-29- என்கிறபடியே
வர பலத்தாலே பூண் கட்டின பையல் தலைகளைத் தன் கோபத்தால் அறுத்துப் பொகட்டான் ஆயிற்று –

தன் சீற்றத்தால் –
கோபம் தானிட்ட வழக்காய் இருக்கிறவன் -தான் கோபமிட்ட வழக்காய் முடித்தது இராவணனை –
ஈஸ்வரத்வம் பின்னாட்டிலிரே -சங்கல்பம் உதவுவது –
அவதாரத்தின் மெய்ப்பாட்டாலே சீற்றம் உதவிற்று –

கூறுங்கால் –
அவன் படிகளைச் சொல்லப் புக்கால் –

நின்றதுவும் வேயோங்கு தண் சாரல் வேங்கடமே –
அவ்வோ காலங்களில் உதவாதார்க்கும் இழக்க வேண்டாத படி அவன் சந்நிஹிதனாய்க் கொண்டு நின்றதுவும் –
ஓங்கின வேய்களையுடைத்தாய்ச் ஸ்ரமஹரமான பர்யந்தங்களையும் உடைய திரு மலையே –

நின்றதும் வேங்கடமே –
அவதாரத்துக்கு பிற்பாடர்   ஆனவர்கள்  இழக்க ஒண்ணாது என்று
அவர்கள் விரோதியைப் போக்குகைக்காக திரு மலையிலே வந்து நின்றது –
பிராட்டியை மீட்டாப் போலே ஆத்மாபஹாரம் மீட்கைக்கு எடுத்து விட்டு நிற்கிறபடி –

விண்ணவர் தம்  வாயோங்கு தொல் புகழான் –
இங்கு வருவதற்கு முன்பு அவன் இருக்கும் இடம் சொல்லுகிறது –
நித்ய ஸூரிகளுடைய ஸ்தோத்ரத்தாலே ஓங்கின ஸ்வா பாவிகமான  புகழை யுடையவன் –
நித்ய ஸூரிகளாலே ஸ்துதிக்கப் படுகிற பழைய புகழை யுடையவன் -என்றுமாம் –
திரு மலையிலே நீர்மைக்கு ஸ்திதுக்கிம் படி யாக வுமாம்

அன்றிக்கே
கீழ்; ராமாவாதாரம் ஆகையாலே -ராவண வத சமநந்தரம் ப்ரஹ்மாதிகளாலே-
சீதா லஷ்மி பவான் விஷ்ணு -யுத்த-117-27-என்று
ஸ்துதிக்கப் படுகிற புகழை யுடையவன் என்றுமாம் –

வந்து –
தன்னைக் கொடுக்கைக்கு அர்த்தியாய் வந்தபடி –
விண்ணவர் தம் வாயோங்கு தொல் புகழான் வந்து நின்றதுவும்
வேயோங்கு தண் சாரல் வேங்கடமே –

————————————————————————–

கீழ் ப்ரஸ்துதமான மலை தான் பின்னையும் இவர்க்கு ஆகர்ஷகமாய் அங்கே-திரு உள்ளம் சென்று –
திருமலைக்கு உள்ள ஐஸ்வர்யம்
சொல்லுகிறார் –

வந்தித்து அவனை வழி நின்ற ஐம்பூதம்
ஐந்தும் அகத்தடக்கி ஆர்வமாய் -உந்திப்
படி யமரர் வேலையான் பண்டு அமரர்க்கு ஈந்த
படி யமரர் வாழும் பதி—-26

பதவுரை

படி அமரர்–நிலத் தேவரான பிராமணர்கள்
வாழும்–நித்யவாஸம் பண்ணுகிற
பதி–திருப்பதியாகிய திருமலை யென்பது,
வழி நின்ற–(எம்பெருமானை ஆச்ரயிப்பதற்குத் தடங்கலாய்) குறுக்கே நிற்பனவான
ஐம்பூதம் ஐந்தும்–பஞ்ச பூதங்களையும் பஞ்சேந்திரியங்களையும்
அகத்து அடக்கி–வெளியிற் போக வொண்ணாதபடி நியமித்து
அவனை–அவ் வெம்பெருமானை
வந்தித்து–வணங்கி
ஆர்வம் செய்–பக்தி யுடையவர்களாய்
உந்தி–ஒருவரை யொருவர் தள்ளிக் கொண்டு மேல் விழுந்து
படி–வந்து படிகின்ற
அமரர்–தேவர்களுக்காக
வேலையான்–திருப்பாற்கடலிலுள்ள பெருமான்
பண்டு அமரர்க்கு ஈந்த–முன்னைத் தேவர்களான நிர்ய ஸுரிகட்கும் (அநுபாவ்யமாகக்) கொடுத்த தலமாகும்.

வந்தித்து –
அவனை வந்தித்து -அபிமதமான ஸூந்யராய் அவனை ஆஸ்ரயித்து-

அவனை வழி நின்ற ஐம்பூதம் ஐந்தும் அகத்தடக்கி
பகவத் ப்ராப்திக்கு விரோதிகளாய்க் லொண்டு வழி நின்ற நடுவே நின்று தகைக்கிற ஸ்ரோத்ராதி விஷயங்களில்
போகாத படி உபசயாத்மகமுமாய் அஸ்திரமான தேஹத்துக்கு உள்ளேயாம் படி நியமித்து –

ஐம்பூதம் ஐந்தும் –
பூதங்களையும் இந்த்ரியங்களையும் ஜெயித்து –

ஆர்வமாய் –
அவன் பக்கலிலே அபி நிவேசத்தை யுடையராய்

உந்திப்படி  யமரர் வேலையான் –
அஹமஹமிகயா ஒருவருக்கு ஒருவர் ஆஸ்ரயிக்கிற ப்ரஹ்மாதி தேவதைகளுக்கு ஆஸ்ரயணீயனாய்க் கொண்டு  
திருப் பாற் கடலிலே கண் வளர்ந்து அருளுகிற சர்வேஸ்வரன் –

பண்டு அமரர்க்கு ஈந்த
பழை  யரான நித்ய ஸூரிகளுக்குக் கொடுத்து -என்னுதல்
முன்பு அவர்களுக்கு கொடுத்தது -என்னுதல்
கீழ் ஆஸ்ரயித்தவர்களுக்கு-

படி யமரர் வாழும் பதி –
பூ ஸூரரான வைஷ்ணவர்கள்  வர்த்திக்கிற திரு மலை –
அவர்கள் அனுபவித்து வாழுகிற திருமலை
வழி நின்ற ஐம்பூதம் ஐந்தும் அகத்தடக்கி ஆர்வமாய் வந்தித்து  உந்திப் படியமரர் வேலையான்

படியமரர் வாழும் பதி கிடீர் -பண்டு அமரர்க்கு ஈந்தது -என்று அந்வயம்-

இது பிள்ளை அமுதனார்க்கு பட்டர் அருளிச் செய்த பாட்டு-

————————————————————————–

அவன் இருந்த எல்லை அளவும் வந்தவாறே இவர் திரு உள்ளம் அவன் இருந்த அளவும்
செல்லக் கொழுந்து ஓடின படி சொல்லுகிறது –
கீழ்த் திரு மலையில் நின்றபடியை அனுசந்தித்தார் –
அங்கு நினைத்த படி பரிமாற்றம் கிடையாமையாலே –
நினைத்த படி பரிமாறலாம் பரம பதத்தில் இருக்கும் சர்வேஸ்வரனைத் தேடா நின்றது என் நெஞ்சு -என்கிறார் –

பதி யமைந்து நாடிப் பருத்து எழுந்த சிந்தை
மதி உரிஞ்சி வான் முகடு நோக்கி -கதி மிகுத்தங்கு
கோல் தேடி யோடும் கொழுந்ததே போன்றதே
மால் தேடி ஓடும் மனம்————-27-

பதவுரை

பதி–திருமலைத் திருப்பதியிலே
அமைந்து–வேரூன்றி நின்று
நாடி–எங்கே யென்று தேடிக் கொண்டு
பருத்து எழுந்த சிந்தை
மிகவும் வளர்ந்து மேற்கிளர்ந்த மனோ ரதத்தை யுடையதாய்
மதி உரிஞ்சி–சந்திர பதத்தையும் உராய்ந்து கொண்டு
வான் முகடு நோக்கி–(அப்பால்) அண்ட முகட்டையும் பார்த்து விட்டு
(அங்கும் நில்லாமல்)
மால் தேடி–பரமபத நாதனைத் தேடிக் கொண்டு
கதி மிகுத்து ஓடும்–விரைவு மிகுந்து செல்லுகின்ற
மனம்–என்னெஞ்சமானது
அம் கோல் தேடி ஓடும்–அழகிய கொள் கொம்பைத் தேடிக் கொண்டு பரந்து செல்லுகின்ற
கொழுந்து அது போன்றது–கொடியை ஒத்திரா நின்றது.

பதி யமைந்து நாடிப் –
ஸ்தானத்திலே யூன்றி –
திருமலையிலே பொருந்தி –
பரம ப்ராப்யமான தேசம் இன்னது என்று நிச்சயித்து என்றுமாம் –

பதி -என்று ஹிருதயமாய் -ஹ்ருதயத்தாலே –
அஹம் சர்வம் கரிஷ்யாமி –அயோத்யா -31-25-என்று அத்யவசித்து -என்றுமாம்

நாடி –
ஆராய்ந்து எங்கே எங்கே என்று தேடி –

பருத்து எழுந்த சிந்தை-
அதடியாகப் பணித்துக் கொண்டு கிளருகிற மநோ ரதமானது-

பருத்து எழுந்த –
விஸ்த்ருதமாய்க் கிளர்ந்த –

மதி உரிஞ்சி –
சந்திர பதத்துக்கு அவ்வருகு பட்டு –

வான் முகடு நோக்கி –
அண்ட பித்தியில் சென்று கடாஷித்து

கதி மிகுத்து –
வேகத்தை மிகுத்து என்னுதல்-
கதிர் மிகுத்து
என்று பாடமாகில் ஒளியை மிகுத்து என்னுதல் –

அங்கு கோல் தேடி யோடும் கொழுந்ததே போன்றதே-
அழகிய கொள் கொம்பைத் தேடிக் கொண்டு படருகிற கொழுந்து போலே யாய்த்து –

மால் தேடி ஓடும் மனம் –
சர்வேஸ்வரனைத் தேடிக் கொண்டு -மேல் விழுகிற திரு உள்ளமானது இருக்கிறபடி –

மால் –
கரை கட்டாக் காவேரி போலே பூர்ணனாய் -சர்வாதிகனான சர்வேஸ்வரனைத் தேடின படி –

மால் தேடி ஓடும் மனம் –
மாக வைகுந்தம் காண்பதற்கு என் மனம் ஏகம் எண்ணும்-திருவாய் -9-3-7-என்னுமா போலே –

————————————————————————–

இவர் திரு உள்ளம் இப்படி அபி நிவேசித்த வாறே –
பார்த்த இடம் எங்கும் தனக்கு வாஸ ஸ்தானமாய் இருக்கச் செய்தே
அவ்விடங்கள் போல் அன்றிக்கே இவர் திரு உள்ளத்தை தனக்கு இருப்பிடமாக
ஆதரித்துக் கொண்டு வந்து புகுந்தானாய் இருக்கிறது –

இவர் திரு உள்ளத்துக்கு அவ்வருகு போக்கு இன்றிக்கே இருக்கிற படி யாவது –
இவர் அவன் பிரியா நிலத்தை விரும்பிப் புக்க வாறே
அவன் இவருடைய மனஸை விரும்பினான் -என்கிறது-

மனத்துள்ளான் வேங்கடத்தான் மா கடலான் மற்றும்
நினைப்பரிய நீள் அரங்கதுள்ளான்-எனைப்பலரும்
தேவாதி தேவன் எனப்படுவான் முன்னொரு நாள்
மாவாய் பிளந்த மகன் ————-28-

பதவுரை

எனை பலரும்–கணக்கில்லாத வைதிக புருஷர் யாவராலும்
தேவாதி தேவன் எனப்படுவான்–தேவர்கட்கும் தேவவென்று ப்ரஸித்தமாகச் சொல்லப்படா நிற்பவனும்
மா கடலான்–பரந்த திருப்பாற் கடலிலே பள்ளி கொண்டிருப்பவனும்
முன் ஒரு நாள்–முன்பொரு காலத்தில்
(ஸ்ரீகிருஷ்ணனா யவதரித்தபோது)
மா வாய் பிளந்த–குதிரை யுருக் கொண்டு வந்த கேசியின் வாயைக் கீண்ட
மகன்–சிறு பிள்ளை யானவனும்
மற்றும்–பின்னும்
நினைப்பு அரிய நீள் அரங்கத்து உள்ளான்–நினைப்பதற்கும் அருமையான யோக்யதை மிக்கிருந்துள்ள கோயிலிலே பள்ளி கொள்பவனுமாகி
வேங்கடத்தான்–திருமலையிலே (ஸர்வ ஸுலபனாய்க் கொண்டு) எழுந்தருளி நிற்பவன்
(இப்போது)
மனத்து உள்ளாள்–என் மநஸ்ஸிலே நித்ய வாஸம் பண்ணா நின்றான்.

மனத்துள்ளான்-
இட வகைகள் இகழ்ந்திட்டு என்பால் இடவகை கொண்டனையே -பெரியாழ்வார் -5-4-10-என்னும்படியே –

வேங்கடத்தான் மா கடலான்-
இதுக்கு உறுப்பாக முன்பு வர்த்தித்த திருப் பாற் கடலும் திரு மலையும் இருக்கிறபடி –
திருமலையில் நிற்கைக்காக திருப் பாற் கடலிலே சாய்ந்தாப் போலே யாய்த்து
இவர் திரு உள்ளத்தே புகுருகைக்காகத் திரு மலையிலே நின்று அருளின படியும் –

மற்றும் நினைப்பரிய நீள் அரங்கதுள்ளான்-
கீழ்ச் சொன்ன இவை போலே  ஓன்று இட்டுச் சொல்ல ஒண்ணாத படியான
போக்யதையால் மிக்க  பெரிய கோயிலிலே வந்து கண் வளர்ந்து அருளின படி
இங்குத்தைக்கு சத்ருசமாக அருளிச் செய்த படி என் தான் –
சம்சாரிகளைப் பெற்று அல்லது போகேன் என்று வளைப்புக் கிடக்கிற படி –
அப்ராப்ய மநஸா சஹ –தை ஆனா -9-1-என்கிற வித்தை நினைக்கிலும் இவ்விடம் நினைக்கப் போகாது –

நீள் அரங்கம் –
பரப்பை யுடைய கோயில் -என்னவுமாம் –

எனைப் பலரும் தேவாதி தேவன் எனப்படுவான் –
வேதங்களும் வைதிக புருஷர்களும்  எல்லாம் -தமீச்வராணம் பரமம் மகேஸ்வரம் -ஸ்வே -6-7-என்றும்
அயர்வறும் அமரர்கள் அதிபதி -என்றும் பிரசித்தமாகச் சொல்லப் படுகிறவன்

முன்னொரு நாள் மாவாய் பிளந்த மகன்
முன்பு ஒரு கால விசேஷத்திலே கேசி வாயைக் கிழித்த பிள்ளை -என்னுதல்
மனிச்சு என்னுதல் –
நெஞ்சிலே புகுராமைக்கு வரும் விக்நம் போக்குவானும் தானே

தேவா திதேவன் எனப்படுவானாய் —
மா கடல் நீர் உள்ளானாய்-
மா வாய் பிளந்த மகனாய் –
நினைப்பரிய நீள் அரங்கத்து உள்ளானாய் –
வேங்கடத்தானவன் மனத்து உளனானவன் –

நித்ய ஸூரிகளுக்கு நிர்வாஹகனானவன் -ஜகத் ரஷணத்துக்காக திருப் பாற் கடலிலே கண் வளர்ந்து –
கிருஷ்ணனாய் வந்து அவதரித்து
விரோதி நிரசனம் பண்ணி -தேவாதி தேவன் என்று பரிச்சேதிக்கப் போகாதபடி
பரப்புடைய கோயிலிலே கண் வளர்ந்து அருளிப் போவது வருவதாக ஒண்ணாது என்று
திரு மலையிலே நின்று அருளினவன் என் நெஞ்சு விரும்பிப் போகிறிலன் –

————————————————————————–

மாவாய் பிளந்த என்று ஸ்ரீ கிருஷ்ணாவதாரம்  ப்ரஸ்துதம் ஆனவாறே –
அது தன்னிலும் திரியட்டும் கால் தாழ்ந்து சுழி யாறு படுகிறார் –

மகனாக கொண்டு எடுத்தாள் மாண்பாய கொங்கை
அகனார உண்பன் என்று உண்டு -மகனைத் தாய்
தேறாத வண்ணம் திருத்தினாய் தென்னிலங்கை
நீறாக வெய்தழித்தாய் நீ——————-29-

பதவுரை

தென் இலங்கை–அழகிய லங்காபுரி
நீறு ஆக–நீறாகி யொழியும்படி
எய்து–அம்புகளைச் செலுத்தி
அழித்தாய்–முடித்தவனே!
நீ-:மகன் ஆக கொண்டு எடுத்தாள்
உன்னைப் புத்திர பாவனை செய்து (பரிவுகாட்டி முலை கொடுக்க) எடுத்துக்கொண்ட பூதனையினுடைய
மாண்பு ஆய கொங்கை–அழகான முலையை
அகன் ஆர உண்பன் என்று உண்டு–வயிறார உண்ணக் கடவேனென்று சொல்லி (பாலோடு அவளுயிரையும்) குடித்து
மகனை–புத்ரனான உன் விஷயத்திலே
தாய்–உனது தாயாகிய யசோதை
தேறாத வண்ணம்–நம்பிக்கை யற்றிருக்கும்படி
திருத்தினாய்–செய்து விட்டாய்.

மகனாக கொண்டு எடுத்தாள்-
ஒரு வாசி தோற்றாத படி தாயாரே ஒசழக்காக எடுக்குமா போலே வந்து எடுத்துக் கொண்டாள் ஆய்த்து-
ஸ்ரீ மதுரையிலே புக்கு மகனாய் -திரு வாய்ப்பாடியிலே மகனான அத்தைக் கொண்டு
இவளும் பிள்ளையாக அனுகரித்துக் கொண்டாள் ஆயிற்று –

மாண்பாய கொங்கை-
நெஞ்சாலே நிறைந்தத்தை பாலாலே நிறைந்ததாகப் பண்ணி –
அத்தாலே தர்ச நீயமான கொங்கையை -அழகியதான முலையை –

அகனார உண்பன் என்று உண்டு –
இவனும் ஒரு வாசி தோற்றாதபடி உண்டான் ஆய்த்து -அவள் நிலை இறே இவனதும்
அவள் முலை கொடுத்து அல்லது தரியாதாள் ஆனாப் போலே  இவனும் முலை யுண்டு அல்லது தரியாதானாய் உண்டபடி –

வயிறு நிறைய உண்பன் என்று யுண்டான் யாய்த்து –
மகனைத் தாய் தேறாத வண்ணம் திருத்தினாய் –
மகனான உன்னைத் தாயான யசோதைப் பிராட்டி விஸ்வசியாத படி தொட்டாய்-
மகன் என்றாலும் -தாய் -என்றாலும் கிருஷ்ணன் பக்கலிலும் யசோதைப் பிராட்டி பக்கலிலும் நிற்கும்
புத்திர ச்நேஹம் என்றால் சக்கரவர்த்தி பக்கலிலே கிடக்குமா போலே –
அவனும் விரும்பி முலை யுண்ணா நிற்க -இவளும் விரும்பி முலை கொடா நிற்கிலும்
பூதனை மடியிலே இருந்தானாகத் துணுக்குத் துணுக்கு என்னும்படி பண்ணினாய் –
நீ வளர்ந்த பின்பும் உன்னை நினைத்து வயிறு எரியும்படி பண்ணினாய்
அன்றிக்கே –
நாட்டில் ஒரு பிள்ளைகளையும் ஒரு தாய்மாரும் விஸ்வசியாத படி பண்ணினாய் -என்றுமாம்
அதாகிறது –
பிள்ளையைப் பெற்ற அனந்தரமே இவன் பூதனை கையிலே அகப்பட்டான் -நாம் இழந்தோம் -என்று
அஞ்சும்படியாய் இருக்கை-

திருத்தினாய் –
தொட்டுக் கொண்டாய்

தென்னிலங்கை நீறாக வெய்தழித்தாய் நீ—-—-
பருவமும் நிரம்பி -ஆச்சர்ய ஸ்ரமங்களும் பண்ணிச் செய்தாய் அது –
பருவம் நிரம்புவதற்கு முன்னே இச் செயலைச் செய்தாய் என்று பயப்படுகிறார்
அப்படி வளர்ந்து இச் செயலைச் செய்தாலோ என்ன –
என் பிள்ளை போனவன் பூசலிலே வென்று மீளும் என்று தோற்றும் படியான  பருவத்திலே தான் செய்யப் பெற்றதோ

கூரம்பன் அல்லால் -நான் முகன் -8-என்று மார்பிலே கை வைத்து இருக்கலாமே
கீர்த்தி பூதாம் பதாகாம் யோ லோகே ப்ரமயதி கின்நாம துர்லபம் தஸ்ய -அயோத்யா -44-7- என்று
சொல்லும்படியான -இலங்கையைப் பொடிபடும்படி வில்லைக் கொண்டு வ்யாபரித்து அழித்த நீ –
மகனைத் தேறாத வண்ணம் திருத்தினாய் –

————————————————————————–

கீழே ஸ்ரீ கிருஷ்ண விஜயத்தையும் ஸ்ரீ ராம விஜயத்தையும் அனுசந்தித்தார் –
அநந்தரம்-அத்தோடு சேர்ந்த அவதாரங்களையும் பல சேஷ்டிதங்களையும் அனுசந்தித்துப் ப்ரீதர் ஆகிறார்-

நீ அன்று உலகளந்தாய் நீண்ட திருமாலே
நீ அன்று உலகு இடந்தாய் என்பரால் -நீ யன்று
காரோத முன் கடைந்து பின் அடைத்தாய் மா கடலை
பேரோத மேனிப் பிரான்—————-30-

பதவுரை

பேர் ஓதம் மேனி பிரான்–பெரிய கடல் போன்ற திருமேனியை யுடைய பெருமானே!
நீண்ட திருமாலே–எண்ணுதற்கு அரிய பெருமை படைத்த திருமாலே
நீ–இப்படிப்பட்ட நீ
அன்று–முன்பொருகால்
உலகு–உலகங்களை
அளந்தாய்–(திரிவிக்கிரமனாகி) அளந்து கொண்டாய் (என்றும்)
நீ–நீ
அன்று–மற்றுமொரு காலத்தில்
உலகு–பூமியை
இடந்தாய்–(மஹாவராஹமாகி) அண்டபித்தியில் நின்றும் ஒட்டு விடுவித்துக் கொணர்ந்தாய் (என்றும்)
நீ அன்று-;
கார் ஓதம் முன் கடைந்து-கரிய கடலை முன்னே கடைந்தா யென்றும்
மா கடலை–(அந்தப் பெரிய கடல் தன்னையே)
பின்–பிறகு (ராமவதாரத்திலே)
அடைத்தாய்–அணை கட்டித் தூர்த்தாயென்றும்
என்பர்–(மஹர்ஷிகள்) சொல்லுகின்றனர்.

நீ அன்று உலகளந்தாய் –
கொடுக்க உகப்பானான மஹா பலி பக்கலிலே உன்னை இரப்பாளனாய் ஆக்கிச் சென்று -ஜகத்தை அடங்க இரந்து-
திருவடிகளாலே அளந்து கொண்டாய் என்னா நின்றார்கள் –
இத்தால்
மேலே எல்லாரோடும் வரையாதே கை தொட்டுப் பரிமாறின அவதாரம் ப்ரஸ்துதம்  ஆகையாலே
வரையாதே எல்லார் தலையிலும் ஒக்கத் திருவடிகளை வைத்த அவதாரத்தைச் சொல்லுகிறது –

நீண்ட திருமாலே-
அபரிச்சேத்யனான ஸ்ரீ யபதியானவனே-

நீண்ட திரு மாலே –
நீ பெறாதது பெற்றாப் போலே பூமியை அளந்தாய்
அபரிச்சேத்யனான உன்னைப் பரிச்சேதிக்கும் படி பண்ணுவதே  –
ஸ்ரீ யபதியான நீ பிச்சை மாணி யாவதே –

நீ அன்று உலகு இடந்தாய் என்பரால் –
அப்படி இரந்து செல்லுகைக்கும் ஒருவர் இல்லாமையாலே பிரளயம் கொண்டு அண்ட பித்தியிலே
ஒட்டிக் கிடந்த பூமியை ஒட்டு விடுவித்து எடுக்கைக்காக
நீருக்கும் சேற்றுக்கும் இறாயாத வடிவைக் கொண்டு புக்கு இடந்து ஏறினாய் என்று பிரமாணிகர் சொல்லா நின்றார்கள்

நீ யன்று காரோத முன் கடைந்து பின் அடைத்தாய் –
பிராட்டிக்காக செய்த செயல்களைச் சொல்லுகிறது –
சர்வ விஷயமாக பண்ணின வியாபாரங்க ளோடு  வாசி அற நினைத்து இருக்கிறபடி
துர்வாச சாபத்தால் நஷ்ட ஸ்ரீ கராய் கொண்டு இந்த்ராதிகள் சரணம் புக்க அன்று சர்வ சக்தியான நீ
கருத்த நிறத்தை யுடைத்தான கடலை பிராட்டியை லபிக்கைக்காக முற்படக் கடைந்து
அது தன்னை அடைப்பதும் செய்தாய்

பின் அடைத்தாய் மா கடலை
அப்படிக் கடைந்த கடல் தன்னையும் அவள் தனக்காக அடைத்தாய் –

பேரோத மேனிப் பிரான்–
கடைகிற போதும் அடைக்கிற போதும் ஒரு கடல் ஒரு கடலை நின்று அலைத்தால் போலே இருக்கை

பேரோத மேனி
கடைந்த கடல் இவ்வடிவைப் பார்க்க குளப்படியாய் இருந்தபடி

பிரான் –
கடல் கடைந்து ஆக்க வேண்டாதபடி இவருக்கு கொடுத்த அம்ருதம் இருக்கிறபடி
கடைந்து ஆராவமுதத்தை இவருக்குக் கொடுத்தான்

அன்றிக்கே –
மா கடல் பெரும் கடல்
நீர் வெள்ளம் போலே இருந்துள்ள வடிவு அழகை யுடைய உபகாரகனே என்னவுமாம்

பேரோத மேனிப் பிரான் நீ அன்று உலகு அளந்தாய்
இவ் வுடம்பைக் கொண்டோ காடும் மோடையும் அளப்பது –

————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பூதத் ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ பூதத் ஆழ்வார் அருளிய இரண்டாம் திருவந்தாதி – -11-20– ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் —

February 21, 2015

கா என்று கொண்டு வெறுமனே தலையிலே  ஏறிடுகிறது என் –
தந்தாமுக்கு என்னவும் ஒரு நன்மை வேண்டாவோ என்ன
இதர தேவதைகளை ஆஸ்ரயித்து ஷூத்ர புருஷார்த்தமான ஸ்வர்க்கத்தைப் பெற்று விடுகை போக்கி
அபரிச்சேத்யமான உன்னை ஒருவரால் அறிந்து ஆஸ்ரயிக்கப் போமோ -என்கிறார்  –

தேவதாந்தரங்களை அனுவர்த்திக்கப் பட்ட அனர்த்தத்தை பரிஹரி என்ன –
இப்படிச் செய்வார் உண்டோ என்னில் –
அடைய இப்படிச் செய்து அன்றோ அனர்த்தப் படுகிறது -என்கிறார்-

கடை நின்று அமரர் கழல் தொழுது நாளும்
இடை நின்ற வின்பத்தராவர் -புடை நின்ற
நீரோத மேனி நெடுமாலே நின்னடியை
யாரோத வல்லார் அவர்———11-

பதவுரை

(பாழும் ஸம்ஸாரிகளானவர்கள்)
அமரக் கடை நின்று–தேவதாந்தரங்களின் வாசல்களைப் பற்றி நின்று
நாளும் கழல் தொழுது–நெடுங்காலம் வரையில் (அவர்களுடைய) காலில் விழுந்து
(பரமாநந்தம் பெற மாட்டாமல்)
இடைநின்ற இன்பத்தர் ஆவர்–நடுவே கிடக்கிற (சுவர்க்கம் முதலிய) சுகத்தைப் பெற்றொழிவர்கள்;
புடைநின்ற நீர் ஓதம் மேனி நெடுமாலே–(இவ்வுலகைச்) சூழ்ந்து கிடக்கிற கடல் போன்ற திருமேனியையுடைய ஸர்வேச்வரனே!,
நின் அடியை–உனது திருவடிகளை
ஓதவல்லாரவர் ஆர்–அநுஸந்திக்கவல்லார் ஆரேனு முண்டோ? (யாருமில்லையே!)

கடை நின்று -இத்யாதி
ஜகத்தடையக் கடையாய் கிடக்கிறபடியை அனுசந்திக்கிறார் –
கா என்ன மாட்டாதார் படும் பாடு –

கடை நின்று –
அவ்வோ  தேவதைகளின்   வாசல்களைப் பற்றி நின்று –
கடைத்தலை இருக்கை இங்கே யாவதே –

அமரர் கழல் தொழுது நாளும்-
நாள் தோறும் அவ்வோ தேவதைகளின் காலிலே குனிந்து

அமரர் –
தன்னில் காட்டில் நாலு நாள் சாவாதே இருந்ததுவே ஹேதுவாக –

கழல் தொழுது –
ஆருடைய கடல் தொழக் கடவவன் –
யாவந்த சரனௌ பிராது –சிரசா தாரயிஷ்யாமி நமே சாந்திர் பவிஷ்யதி -அயோத்யா -98-8-என்று
வகுத்த கழல் ஒழிய –

நாளும் –
சக்ருதேவ -என்று இருக்க ஒண்ணாதே
அந்ய சேஷத்வம் ப்ராமாதிக  மாகவும் பெறாது ஒழிவதே

உபாயங்களால் பெருத்து -உபேயங்களால் சிறுத்து இருக்கும் இதர விஷயத்தில்
பகவத் விஷயத்தில் உபாயம் வெருமனாய் உபேயம் கனத்து இருக்கும்
அதுக்கடி அங்கு பிச்சைத் தலையணைப் பிச்சைத் தலையர் ஆஸ்ரயிக்கிறார்கள்
இங்கு ஸ்ரீ யபதியை அடிமைக்கு இட்டுப் பிறந்தவர்கள் ஆஸ்ரயிக்கிறார்கள் –
அவர்கள் பக்கலிலே

இடை நின்ற வின்பத்தராவர் –
நிரதிசய ஸூக ரூபமான போக பூமியிலே போய்ப் புகுமத்தையும் இழந்து
அதுக்கு யோக்யதை யுடைத்தான சம்சாரத்திலும், நிலையும் குலைந்து
நடுவே யுண்டாய் -அவர்கள் கொடுக்க வல்ல ஸ்வல்ப பலத்தை ப்ராபிப்பர்

அதாகிறது 
அஸ்த்திரமான ஸூகத்தை ப்ராபியா நிற்பார்
அந்தமில் பேரின்பத்துக்கு இட்டுப் பிறந்த ஜந்து சிற்றின்பத்தை ஆசைப்படுவதே
சம்சாரத்தில் வாசி இழக்கிறோம் என்றும்
போக பூமியில் புகப் பெறு கிறிலோம் என்றும்
அவற்றை லந்த நெஞ்சாறாலாலே அந்ய பரனானவன்
துஸ் சீல தேவதைகளாலே உன் பசலை அறுத்துத் தா எனபது
ஆட்டை அறுத்துத் தா
இடைவிடாதே ஆஸ்ரயி என்பார்கள்
கரணம் தப்பில் மரணம் இறே-

அங்கன் அன்றிக்கே
கடை நின்று அமரர் கழல் தொழுது நாளும் இடை நின்ற வின்பத்தராவர் –
தேவதாந்த்ரங்களும் திரு வாசலில் நின்று உன் திருவடிகளைத் தொழுது
உன்னைப் பெறுகையே பிரயோஜனமாக ஆஸ்ரயிக்கை அன்றிக்கே –
ஷூத்ரமான பிரயோஜனங்களைக் கொண்டு போவார் -என்றுமாம் –

புடை நின்ற நீரோத மேனி –
பூமியைச் சூழப் போந்து கிடக்கிற கடல் ஓதம் போலே இருக்கிற வடிவை யுடையையாய் –

நெடுமாலே-
அபரிச்சேத்யனானவனே-
ஆஸ்ரித வ்யாமுக்தன் ஆனவனே -என்றுமாம் –

நின்னடியை யாரோத வல்லார் அவர்–
தேவர் திருவடிகளில் அழகை அறிந்து ஆஸ்ரயிக்க வல்லார் தான் ஆர் –
ப்ராப்யமானவன் திருவடிகளை அறிந்து ஆஸ்ரயிக்க வல்லார் ஆர் –
உன் நீர்மையை அறிந்து ஆஸ்ரயிக்க வல்லார் ஆர் –

————————————————————————–

ஆனால் -பின்னை அந்த தேவதைகளை ஆஸ்ரயிக்க கடவது அன்றோ –
அவர்களை ஷேபிக்கிறது என் என்னில் –
அவர்கள் தாங்களும் தங்களுடைய அதிகார நிமித்தமாக சர்வேஸ்வரனை ஆஸ்ரயித்து
தந்தாம் அபிமதங்களைப் பெற்றுப் போகா நின்ற பின்பு
இனி -நமக்கு மேல் எல்லாம் ஆஸ்ரயிக்க வடுப்பது அவன் திருவடிகளை அன்றோ –என்கிறார் –
மற்றை நிர்வாஹத்துக்கு அவர்களும் அவனைப் பற்றியோ திரிவது என்னில் –
அங்கனே அன்றோ செய்வது -என்கிறார்-

அவர் இவர் என்று இல்லை அரவணையான் பாதம்
எவர் வணங்கி ஏத்தாதார் எண்ணில்-பவரும்
செழும் கதிரோன் ஒண் மலரோன் கண்ணுதலோன் என்றே
தொழும் தகையார் நாளும் தொடர்ந்து———12-

பதவுரை

எண்ணில்–(எம்பெருமானை ஆச்ரயித்து ஸ்வரூப ஸித்தி பெறுகிறவர்கள் ஆரார்?’ என்று) ஆராயுமளவில்
அவர் இவர் என்று இல்லை–இன்னார் தாம் ஆச்ரயிப்பவர்கள், இன்னார் ஆச்ரயிக்காதவர்களென்ற ஒருவாசி யில்லை;
அரவு அணையான் பாதம்–சேஷசாயியான அப்பெருமானுடைய திருவடிகளை
வணங்கி–தொழுது
ஏத்தாதார்–துதியாதவர்கள்
எவர்–யாவர்? (ஒருவருமிலர்)
பவரும் செழுகதிரோன்–பரவின அழகிய ஆயிரங் கிரணங்களை யுடையவனான ஸூரியனும்
ஒள் மலரோன்–அழகிய (திருநாபிக் கமல) மலரை இருப்பிடமாக வுடைய பிரமனும்
கண் நுதலோன்–நெற்றிக் கண்ணனான ருத்ரனும்
(ஆகிய, நாட்டிலுள்ளவர்களால் ஆச்ரயிக்கப்படுகிறவர்களென்று பிரசித்தரான இவர்கள்)
நாளும்–நாள்தோறும்
தொடர்ந்து தொழும் தகையார் அன்றே–அப்பெருமானெழுந்தருளி யிருக்கின்ற இடத்தைத் தேடி ஆச்ரயிக்கும் ஸ்வபாவமுள்ளவர்களன்றோ?

அவர் இவர் என்று இல்லை –
சிறியார் பெரியார் என்று இல்லை –
ஆஸ்ரயணீயராக பிரசித்தரான தேவர்களோடு -அவர்களை ஆஸ்ரயித்த மனுஷ்யரோடு வாசி அற-
பெற்ற தாய்க்கு ஆகாத பிரஜை யுண்டோ –

அரவணையான் பாதம்-
ஷீரார்ணவ சாயியான சர்வேஸ்வரன் திருவடிகளை –
சர்வேஸ்வரத்வ லஷணம் ஆவது -அநந்த சாயித்வம் போலே காணும் –
புருஷகாரம் அங்கே யுண்டு -யத்ர ராமஸ் ஸ லஷ்மண-யுத்த -17-1-என்றும்
நாகணை மிசை நம்பிரான் சரணே சரண் -திருவாய் -5-10-11- என்றும்
நாகணைக்கே சென்று -நாச் -10-9- என்றும் சொல்லக் கடவது இறே

எவர் வணங்கி ஏத்தாதார் –
ஆஸ்ரயியாதார் ஆர் -வேறு ஒருவன் காலிலே விழாத படியான
வைபவம் யுடையவனைப் பற்ற வேண்டாவோ –

எண்ணில்-
ஆராயில் –

பவரும்-இத்யாதி –
இவர்கள் அன்றோ நாட்டுக்கு ஆஸ்ரயணீயாராய் பிரசித்தராகிறார் –
இவர்கள் தாங்கள் செய்கிறபடி இது வன்றோ –

பவரும் செழும் கதிரோன்-
பரம்பின அழகிய  சஹச்ர க்ரணனான ஆதித்யன் –

ஒண் மலரோன்-
திரு நாபீ கமலா ஸ்தானனான ப்ரஹ்மா-

கண்ணுதலோன் -என்றே
லலாட நேத்ரனான ருத்ரன் -இவர்கள் அன்றோ

தொழும் தகையார் நாளும் தொடர்ந்து—-
நாடோறும்   அவன் புக்கிடம் புக்கு -வடிம்பிட்டு -அவனையே ஆஸ்ரயிக்கையே
ஸ்வ பாவமாக யுடையராய் -இருக்கிறார்

நாளும் தொழும் தகையார் –
முறுக்கொழியில் கொட்டொழியும் என்று -தொழுகை மாறில் பிரயோஜனங்களும் மாறும்
என்று தொழும் தகையார்
தொழுகையே ஸ்வ பாவமாக இருக்கச் செய்தே -இது வகுத்தது என்று இராதே –
பிரயோஜனங்களைக் கொண்டு இழப்பதே –
பலத்தைக் கூலியாக்கி த்யாஜ்யமான ஐஸ்வர்யத்தைப் பலமாகக் கொள்வதே -என்ன தர்ம ஹாநி-

————————————————————————–

ஆனால் பின்னை அதிக்ருதாதிகாரமோ –
அளவுடைய தேவர்கள் ஆஸ்ரயித்து -அல்லாதார் இழந்து போம் அத்தனையோ -என்னில்
அதில் ஒரு நிர்பந்தமும் இல்லை –
எத்தனையேனும் செல்ல -ஜன்ம வ்ருத்தாதிகளால் குறைய நின்ற திர்யக் யோநியிலே  உள்ளது ஓன்று அன்றோ –
அவன் திருவடிகளை ஆஸ்ரயித்து -பிரதிபந்தகம் அவனாலே நீங்கி
அவன் தேசத்தைப் பெற்றுப் போந்தது -என்கிறார்
ஓர் ஆனைக்கன்றோ எளியன் யாய்த்து
கீழ் -பிரயோஜனத்துக்காக ஆஸ்ரயிப்பார்க்கு பிரயோஜனங்களைக் கொடுக்கும் படி சொல்லிற்று –
இதில் -தன்னைக் காண வேணும் என்று தொழுவார்க்குத் தன்னைக் கொடுக்கும்படி சொல்லுகிறது

தொடரெடுத்த மால் யானை சூழ் கயம் புக்கு அஞ்சி
படரெடுத்த பைங்கமலம் கொண்டு -அன்று இடர் அடுக்க
ஆழியான் பாதம் பணிந்து அன்றே வானவர் கோன்
பாழி தான் எய்திற்றுப பண்டு————–13–

பதவுரை

தொடர் எடுத்த மால் யானை–காற்சங்கிலியை முறித்துக் கையிற்கொண்டு பதறியோடுந் தன்மையதான மதயானை யானது
சூழ் கயம் புக்கு–(கரை காண வொண்ணாதபடி) விசாலமாயிருந்த பொய்கையிலே இழிந்து
படர் எடுதுத பை கமலம் கொண்டு–மலர்ந்து ஓங்கியிருக்கிற அழகிய தாமரைப் பூவை (எம்பெருமானுக்கு ஸமர்ப்பிப்பதற்காக)க் கையிற் கொண்டு
அன்று இடர் அடுக்க–அந்த நிலைமையிலே (முதலையின் வாயிலகப்பட்டு விடுவித்துக் கொள்ள முடியாத) பெருந்துன்பமுண்டாக
அஞ்சி–(செவ்வி யழிவதற்கு முன்னே இந்த மலர்களை எம்பெருமானுக்கு ஸமர்ப்பிக்க முடியாமற் போய் விடுமோவென்று) மனம் பதறி,
ஆழியான் பாதம்–(முதலையைத் துணிக்குங் கருவியான) திருவாழியைக் கையிலேந்தின
எம்பெருமானுடைய திருவடிகளை (தியானித்து) வணங்கியதனாலன்றோ
தான்–அந்த கஜேந்திரம்
பண்டு–முற்காலத்தில்
வானவர் கோன்பாழி–தேவாதி தேவனுடைய இருப்பிடமான பரமபதத்தை
எய்திற்று–அடைந்தது.

தொடரெடுத்த மால் யானை –
வல்லியை முறித்துக் கையிலே கொண்டு ச்வரை சஞ்சாரம் பண்ணுகிற மத்த கஜமானது
விலங்கை முறித்து எடுத்துப் பொகட்டுத்   திரியும் பெரிய யானை -என்றுமாம்

மால் யானை –
மத்தித்து இருந்துள்ள யானை –
பாடாற்ற மாட்டாமை -என்றுமாம் –

சூழ் கயம் புக்கு –
பெரிய பரப்பை யுடைத்தாய் -கண்ணால் கரை காண ஒண்ணாத பொய்கையிலே புக்கு

சூழ் கயம் –
புக்காரை துஷ்ட சத்வங்களாலே சூழ்க்க வல்ல கயம்-

கயம் புக்கு –
தன்னிலம் அல்லாத வேற்று நிலத்திலே புக்கு –

அஞ்சி-
முதலையால் வந்த இடருக்குப் பயப்பட்டு -ஸ்வ பலம் உள்ள போது-அதுவும் ப்ரஹ்மாதிகளோடு ஒக்கும்
பரமாபதமாபன்ன-ஸ்ரீ விஷ்ணு தர்மம் -69-47–அவனிலும் சீரிய ஆபத்து
சர்வ சக்தியில் காலோடு கட்ட வல்ல ஆபத்து இறே
இவன் தன்னைப் பொகட்ட வாறே  அவனும் தன்னைப் பொகட்டான்-

படரெடுத்த பைங்கமலம் கொண்டு –
படர் -படர்ந்து -பரப்பு மாற அலர்ந்து –
எடுத்த -ஓங்கிய
பைங்கமலம் -அழகியதாய் இருந்த தாமரை -என்னுதல்
அன்றிக்கே –
குளிர்ந்து இருந்துள்ள பூவை அத்யாதரத்தோடே வாங்கி

அன்று இடர் அடுக்க-
அங்கே முதலையாலே  ஆபத்தானது வந்து ப்ரஸ்துதமாக
இடர்-வேறு பரிஹாரம் இல்லாத துக்கம் –

அஞ்சி
அநந்தரம் இப்பூவில் செவ்வி மாறுவதற்கு முன்னே அவன் திருவடிகளிலே பணிமாறப் பெறு கிறிலோம்-என்று
அஞ்சி -அதுக்குப் பரிகாரமாக

ஆழியான் பாதம் பணிந்து அன்றே –
சர்வேஸ்வரன் திருவடிகளை ஆஸ்ரயித்தது அன்றோ –

ஆழியான் –
க்ராஹம் சக்ரேண  மாதவ -ஸ்ரீ விஷ்ணு தர்மம் -69-81–அனந்யப் பிரயோஜனர் திறத்து இருக்கும் படி –
பைங்கமலம் -பூவைப் பூவாக வாங்கின படி
ஆழியான் -துரிதம் போக்குகைக்கு பரிகரம் யுடையவன் –

வானவர் கோன் பாழி தான் எய்திற்றுப பண்டு–
முன்பு அயர்வறும் அமரரர்கள் அதிபதி யானவனுடைய ஸ்தானமான பரம பதத்தைப் பிராபித்தது –
நித்ய ஸூரிகளோடே கூடி இருக்கிறவனுடைய படுக்கையிலே ஏறப் பெற்றது
ஆன பின்பு -இன்னார் ஆவார் இன்னார் ஆகார் என்கிற நியதி யுண்டோ –
அவனை ஆஸ்ரயிக்கும் இடத்தில் சர்வாதிகாரம் அன்றோ -என்கிறார் –

————————————————————————–

இங்கனே அவன் சர்வ சமாஸ்ரயணீயனாயற்ற பின்பு -சம்சார வர்த்தகரான ஷூத்ரரை ஸ்தோத்ரம் பண்ணாதே
பகவத் பஜனத்தைப்  பண்ணி -உங்கள் சஞ்சாரத்தாலே ஜகத்தும் அடங்க பாவனமாம்படி பண்ணுங்கோள்-என்கிறார் –

அவன் படி இதுவான பின்பு –
சம்சாரிகளை எத்தித் திரியாதே -அவன் திருவடிகளிலே பணிந்து –
திரு நாமங்களைச் சொல்லி -உங்களிடைய ஸ்பர்சத்தாலே லோகத்தை ஸூத்தம் ஆக்குங்கோள் -என்கிறார் –

பண்டிப்பெரும் பதியை யாக்கி பழி பாவம்
கொண்டிங்கு வாழ்வாரைக் கூறாதே எண்டிசையும்
பேர்த்த கர நான்குடையான் பேரோதிப் பேதைகாள்
தீர்த்த கரராமின் திரிந்து—14-

பதவுரை

பேதைகாள்–அவிவேகிகளே!,
பண்டியை–வயிற்றை
பெரு பதி ஆக்கி–பெரிய ஊர் போலக் கண்டதையுங் கொண்டு நிரம்பச் செய்து வளர்த்து
பழி பாவம் கொண்டு–தெரியாமல் விளையுங் குற்றங்களையும் தெரிந்து செய்யுங் குற்றங்களையும் மேன்மேலும் வளர்த்துக் கொண்டு
இங்கு–இவ்வுலகில்
வாழ்வாரை–வாழ்கின்ற ஸம்ஸாரிகளை
கூறாதே–புகழ்ந்து பேசுகை தவிர்ந்து,
எண் திசையும் பேர்த்த கரம் நான்கு உடையான்–(உலகளந்த காலத்தில்) எட்டுத் திக்குக்களையும் பேர்த்துப் போடும்படி
விம்மி வளர்ந்த நான்கு திருத் தோள்களை யுடையனான பெருமானுடைய
பேர்–திருநாமங்களை
ஓதி–இடைவிடாது சொல்லிக் கொண்டு
திரிந்து–திவ்ய தேசங்கள் தோறும் ஸஞ்சரித்து
தீர்த்தகரர் ஆமின்–(உங்கள் ஸஞ்சாரத்தாலே நாடு முழுவதும்) பரிசுத்தமாம்படி செய்ய வல்லவராக ஆகுங்கோள்.

பண்டிப்பெரும் பதியை யாக்கி-
முன்பு இந்த சம்சாரத்தை வர்த்திப்பித்து -என்னுதல்-
பழையதான சம்சாரத்தை வளர்த்து -என்னுதல்  –
அன்றிக்கே –
பண்டி -ஆகிற பெரிய ஸ்த்தானத்தை யுண்டாக்கி –
அதாகிறது
பெரிய ஊர் போலே வயிற்றைப் பெருக்கி -என்னுதல் –

பண்டு ஒருத்தர் -இதாகிறது -ஜங்கம விமானம் காண் என்று சொல்லித் திரியும் -என்று
நஞ்சீயர் அருளிச் செய்வர் –
ஈஸ்வரனையும் ஆத்மாவையும் அழிய மாறி உடம்பை வளர்ப்பதே -என்கை-

பழி பாவம் கொண்டு –
ததர்த்தமாக பழிகளும்  பாபங்களும் கொண்டு -வளர்க்கிறதும்
யுடம்பை –தேடுகிறது பழியும் பாவமும் –

அமூலமாயும் -சமூலமாயும் வருமவற்றுக்கு எல்லாம் ஒரு ஆஸ்ரயமாய்-
பிரமாதிகமாக வருமவற்றையும் -பிரகிருதி வச்யனாய் புத்தி பூர்வகமாக வருமவற்றையும்
ஏறிட்டுக் கொண்டு இருப்பர்கள் இறே-

பழியாவது ஏறிடுமது-
பாவமாகிறது நிஷித்தமாக அனுஷ்டிக்குமது –

பழி-அந்ய சேஷத்வம் –
பாவம் ஸ்வ ஸ்வாதந்த்ர்யம் –

இங்கு வாழ்வாரைக் கூறாதே –
இஹ லோகத்திலே வாழும் மனிசரை ஏத்தித் திரியாதே –
தேஹாதிரிக்த வஸ்துவும் ஓன்று உண்டு என்று இருக்கில் –
அவ்வருகே பரலோக பிராப்தியும் -அங்கே ஒரு போகமுமாய் இருப்பது –
காண்கிறத்துக்கு அவ்வருகு இல்லை என்று இருக்கையாலே
இங்குற்றை நாலு நாளை வாழ்வே யாய் இருக்கும் இறே –
இப்படிப்பட்ட ஹேயரை ஸ்தோத்ரம் பண்ணாதே –
உனக்கு ஒரு பழி யுண்டோ பாவம் யுண்டோ என்று அவர்களை ஸ்தோத்ரம் பண்ணாதே –

இங்கு வாழ்வாரை –
துக்கத்திலே ஸூக பிரதிபத்தி பண்ணுகை-

பேதைகாள் –
மதி கேடர்காள்-கண்டது அல்லது அறியாதே இருக்குமவர்காள் –
த்ருஷ்டத்தில் ஐஸ்வர்யத்தையும் ஒன்றாக நினைத்து இருக்கிற அறிவு கேடர்காள்-

எண்டிசையும் பேர்த்த கர நான்குடையான் பேரோதிப் –
திருக் கைகள் எட்டுத் திக்கிலும் போய் வியாபித்து விம்ம வளர்ந்த படி –
திக்குகளானவை அழித்துப் பண்ண வேண்டும்படியாய் வந்து விழுந்தது ஆய்த்து
இப்படி ஜகத் ரஷண அர்த்தமாக திரு வுலகு அளந்து அருளினவனுடைய திரு நாமத்தைச் சொல்லி –

தீர்த்த கரராமின் திரிந்து-
ஜகத்துக்கு அடங்க ஸூபாவஹமாய்க் கொண்டு திரியுங்கோள் –
திரிதலால் தவமுடைத்து இத்தரணி தானே -பெருமாள் திருமொழி -10-5
தீதில் நன்னெறி காட்டி எங்கும் திரிந்து -பெருமாள் திருமொழி -2-6-
அவனாலும் செல்லாத -திருத்த முடியாத -நிலத்தை அவன் பேரைக் கொண்டு செலுத்திடு கோள்-
அவர்கள் தாங்களும் கெட்டு பிறரையும் கெடுக்குமா போலே
இவர்கள் தாங்களும் க்ருதார்த்தராய் நாட்டையும் க்ருதார்த்தம் ஆக்குகிறபடி –

யமோ வைவஸ்வதோ ராஜா யஸ்தவைவ ஹ்ருதி ஸ்தித தேந சேத விவாத ஸ்தே மா கங்காம் மா குரூன் க ம -மனு -8-92-

திரிந்து தீர்த்தக்காரர் ஆமின் –
உங்களுடைய சஞ்சாரத்தாலே லோகத்தை பாவனம் ஆக்குங்கோள்-

பிள்ளானுக்கு மூத்த தேவப் பிள்ளை பட்டரைக் கண்டு  -பந்துக்களான நீங்கள் இங்கே இருக்க
ஆர் முகத்திலே விழிக்க மேனாட்டுக்குப் போகிறேன் -என்று அழ –
பட்டர் -த்ருணத்துக்கும் அகப்பட பரமபதம் கொடுத்த சக்கரவர்த்தி திருமகனுக்கு பிள்ளைகளுக்கு -குசலவர்களுக்கு –
திரு நாடு கொடுக்கையில் அருமை இல்லை இறே-
ஜகத்தை ரஷிப்பிக்கைக்கு அன்றோ பிள்ளைகளை வைத்துப் போயிற்று –
அப்படி அத் தேசத்துக்கு ஒருவர் இல்லையே -என்று அருளிச் செய்து அருளினார் –

————————————————————————–

ஸ்ரீ வாமன அவதார பிரசங்கத்தாலே -இப்படி இருக்கிற ஆஸ்ரிதருடைய ரஷண அர்த்தமாக கிடீர் –
அவன் தன்னை இப்படி அழிய மாறிற்று -என்று
கிருஷ்ண அவதாரத்திலும் ராம அவதாரத்திலும் பட்ட மிறுக்குகளை நினைத்து
அதி ஸூகுமாரனான அவனுக்கு இங்கனே பட வேண்டுவதே -என்கிறார் –
இவர்கள் தங்கள் உடம்பைப் பேணா- இவர்களுக்காக அவன் தன்னைப் பேணாதே துக்கப் படுவதே -என்று வெறுக்கிறார்-

திரிந்தது வெஞ்சமத்துத் தேர் கடவி அன்று
பிரிந்தது சீதையை மான் பின் போய்-புரிந்ததுவும்
கண் பள்ளி கொள்ள அழகியதே நாகத்தின்
தண் பள்ளி கொள்வான் தனக்கு—————–15-

பதவுரை

வெம் சமத்து–கொடிய (பாரத) யுத்தத்திலே
தேர் கடவி–(பார்த்த ஸாரதியாகித்) தேரை நடத்திக் கொண்டு
திரிந்ததும்–அலைந்ததும்,
அன்று–இராமனாகத் திருவவதரித்த காலத்து
மான்பின் போய்–மாரிசனாகிற மாயமானின் பின்னே சென்று
சீதையை பிரிந்ததும்–பிராட்டியைப் பிரிந்து அலைச்சற்பட்டதும்,
கண்–தரையிலே
பள்ளி கொள்ள–படுத்துக் கொள்ளும்படி
புரிந்ததுவும்–ஆசை கொண்டதும்
(ஆகிய இச்செயல்கள் யாவும்)
நாகத்தின் தண் பள்ளி கொள்வான் தனக்கு–திருவனந்தாழ்வான் மேலே குளிரப் பள்ளி கொண்டிருக்க வேண்டிய பெருமானுக்கு
அழகியதே–ஏற்றவையோ?

திரிந்தது வெஞ்சமத்துத் தேர் கடவி –
கொடிதான யுத்தத்திலே சாரத்யம் பண்ணியும் -படை  பொருத்தியும் சஞ்சரித்தது –
அது தன்னிலும் தான் பிரதானனாய்ச்  சிலரைக் கார்யம் கொண்டு தெரியப் பெற்றதோ –
ஜயம் உள்ளது அவன் தலையிலேயாய் -அம்பு விழுவது தன் மேலேயாம்படி முன் நின்றான் ஆயிற்று –
இனி யுத்தத்திலே ரதியைச் சீற நினைத்தவன் சாரதியை இறே முந்துற தலை அழிப்பது
அவனை உயர வைத்து -எதிரிகள் சாயுதராய் வர –
தான் உடம்புக்கு ஈடிடாதே சாரத்யம் பண்ணித் திரிந்தான் ஆயிற்று –

வெஞ்சமத்துத் தேர் கடவி -திரிந்தது-
படை பொருத்தித் திரிந்தான் ஆயிற்று -பகதத்தன் விட்ட அம்பு திரு மேனியிலே பட்டது இறே –
உரஸா பிரதி ஜக்ராஹ பார்த்தம் சஞ்சாத்ய மாதவ -பார -த்ரோண-29-18-
அர்ஜுனன் மார்பில் அம்பு படாமல் தன் மார்பையோக்க –
அவன் மார்பில் அம்பு படாமல் பிராட்டி மார்பை ஏற்றபடி –

அக்ரதஸ் தே கமிஷ்யாமி -அயோத்யா -27-7-அடியாரைக் காக்க முன் செல்பவள் -என்னுமவள் இறே
அன்று பிரிந்தது சீதையை மான் பின் போய்-
மாயா மிருகத்தின் பின் போய் தன்னுயிரை யாய்த்துப் பிரித்தது –
கிளர் பொறிய மறி திரிய அதனின் பின்னே படர்ந்தானை -பெரிய திருமொழி -2-5-6-என்னக் கடவது இறே  –
பிராட்டிக்கு ஆகர்ஷமான பொறியை -புள்ளியை -யுடைத்தான மறியானது திரிய –
அத்தைப் பிராட்டி பிடித்துத் தர வேணும் -என்ன
துஷ்ட மிருகம் ஆகையாலே பிடி கொடாதே கை கழியப் போக -தானும் அதன் பின்னே ஓடித் திரியக் கார்யம் பார்த்தான் ஆய்த்து-
பிராட்டியோட்டை பிரிவளவும் செல்ல விளைத்தது இறே

மான் பின் போய்ப் பிரிந்தது சீதையை –
ரஷிக்கிற இடத்தில் இருவரும் கூட இருந்து ரஷிக்கப் பெற்றோமோ –
கூடி இருப்பதுவும் பரார்த்தமாக –பிரிவதுவும் பரார்த்தமாக –

சீதையை –
பிராட்டியை -ப்ராணேப்யோ கரீயசீ -ஆர -10-21-என்னும் விஷயத்தை –

புரிந்ததுவும் கண் பள்ளி கொள்ள-
அனுஷ்டித்ததுவும் -என்னுதல்-ஆதரித்ததும் என்னுதல் –

கண் பள்ளி கொள்ள –
கண் -என்றது இடமாய் -அதாவது
தறைக்  கிடை  –
த்ருணா சயனே அநு சிதே-பால -22-23-என்று என்றும் கூப்பிடும் படியானவன் இறே
இருப்பதுவும் கூடத் தேட்டமாம்படி கிடக்கிறான் —

காட்டிலும் அடைவு படத் திரியப் பெறாது ஒழிவதே –
கல்லணை மேல் கண் துயிலக் கற்றனையோ காகுத்தா -பெருமாள் திரு -9-3-
இன்று இப்படி போகவிட வல்ல நான் அறிந்து பொறுக்கும் படிக்கு ஈடாக வளர்க்கப் பெற்றிலேன் –

கண் பள்ளி கொள்ள –
பிராட்டியைப் பிரிந்த சோகத்தாலே இளைய பெருமாள் பர்ண சய்யையைப் படுக்க
அதுவும் அறியாதே தறை யிலே கண் வளர

அழகியதே நாகத்தின் தண் பள்ளி கொள்வான் தனக்கு–
திரு அநந்த ஆழ்வான் மேலே சாய்ந்தாலும் திரு மேனிக்கு என் வருகிறதோ  என்று
அனுகூலர் அஞ்சும்படியான சௌகுமார்யம் உடையவனுக்கு அழகிதாக வந்து விழுந்தது –

படுத்த பைந்நாகணைப் பள்ளி கொண்டானுக்கு -திருப் பல்லாண்டு -9- என்னா நின்றார்கள் இறே

தாளால் உலகம் அளந்த அசைவே கொல் வாளா கிடந்து அருளும்  வாய் திறவான் –
நீளோதம் வந்தலைக்கும் மா மயிலை மா வல்லிக் கேணியான் ஐந்தலை வாய் நாகத் தணை – நான்முகன் -35-
குளிர்ந்த இடத்தே படுக்கைக்கு அடி ஸ்ரமத்தின் யுடைய அதிசயம் என்று இருக்கிராறிவர்

அழகியதே –
இஜ் ஜகத் ரஷணம் பண்ணப் பெறாதே யாய்த்து இருக்கிறது –

அழகியதே நாகத்தின் தண் பள்ளி கொள்வான் தனக்கு –
திரு வநந்த ஆழ்வான் மேல் பள்ளிக் கொள்ளக் கடவ ஸூகுமாரனானவனுக்கு
தறைக் கிடை கிடக்க வேண்டுவது –
நல்லுயிரைப் பிரிந்து திரிவது
அயல் யேசும்படி யுத்தத்திலே திரிவதாய் ஜகத் ரஷணம் பண்ணுகை சால அழகியதாய் இருந்ததீ
இஃது  ஒரு ஆஸ்ரித ரஷணம் இருக்கும்படியே
முதல் அழியவோ ஆஸ்ரித ரஷணம் பண்ணுவது -என்று நோவு படுகிறார் —

————————————————————————–

அவனுடைய செயல் இதுவான பின்பு இனி அவனுடைய யத்னத்தாலே பெறுமத்தனை போக்கி
நம்முடைய யத்னம் கொண்டு பெறுகை என்று ஓன்று உண்டோ –
இப்படி இவர்களுக்காக அவன் இருந்தால்
இவர்கள் சைதன்யத்துக்கு அவனைப் பெற வேணும் என்று இருக்க வேண்டாவோ -என்கிறார் –

எம்பெருமான் நம்மைப் பெறுகைக்கு யத்னம் பண்ணா நிற்க
நமக்கு யத்னம் பண்ண வேண்டாவோ -என்கிறார் –

அகர்ம வச்யனானவன் கர்மவச்யர் படாதவையும் கூடப் படுகிறது நமக்காக அன்றோ –
ஆன பின்பு இனி நமக்கு ஒரு குறை யுண்டோ-

தனக்கு அடிமைப் பட்டது தான் அறியான் ஏலும்
மனத்தடைய வைப்பதாம் மாலை -வனதிடரை
ஏரியாம் வண்ணம் இயற்றும் இது வல்லால்
மாரி யார் பெய்கிற்பார் மற்று——————16-

பதவுரை

தனக்கு–சேதநனாகிய தனக்கு
அடிமை–சேஷத்வமென்பது
பட்டது–அமைந்திருக்கின்ற தென்பதை
தான் அறியான் ஏலும்–தான்தெரிந்து கொள்ள அசக்தனாயிருதாலும்
(எம்பெருமான் தானாகவே)
மனத்து–மனத்திலே
அடைய–வந்து சேர்ந்த வளவில்
மாலை–அப்பெருமானை
வைப்பது–இடங்கொடுத்து வைத்துக்கொள்வது தகும்;
(இவனுக்கு இவ்வளவு ருசிமாத்திரம் உண்டானால் விரோதியைப் போக்கித் தன்னைத் தானே
தந்தருள்வன் எம்பெருமான்; அது எங்ஙனே யென்னில்;)
வனம் திடரை–காடெழுந்து கிடக்கிற மேட்டு நிலத்தை
ஏரி ஆம் வண்ணம் இயற்றும் இது அல்லால்–(பெய்யும் மழைநீர் அப்பால் போகாமல் தடையின்றி வந்து புகும்படி)
ஏரியாகக் குழி வெட்டுதல் செய்யக்கூடுமேயன்றி
மற்று-பின்னும்
மாரி–மழையை
பெய்கிற்பார்–பெய்யும்படி செய்விக்க வல்லவர்கள்
யார்–யாவருளர்? (மழை பெய்ய வேண்டுவது பகவத்ஸங்கள் பத்தாலன்றோ?.)

தனக்கு அடிமைப் பட்டது தான் அறியான் ஏலும்-
பரவா நஸ்மி -ஆரண்ய -15-7- என்றும் –
தவாஸ்மி-ஸ்தோத்ர ரத்னம் -60 -என்றும் –
ஸ்வத்வம் ஆத்மனி சஞ்ஜாதம் ஸ்வாமித்வம் ப்ரஹ்மணி ஸ்த்திதம் -ஸ்ரீ விஷ்ணு தத்வம் -என்கிறபடியே
இவ்வாத்மா தனக்குக் கூருபட்டது சேஷத்வம் –
எம்பெருமானுக்கு கூருபட்டது சேஷித்வம் -என்னும் இம்முறை அறியானே யாகிலும் –
ஆத்மதாச்யம் ஹரேஷ் ஸ்வாம்யம் -ஸ்ரீ விஷ்ணு தர்மம் -என்னக் கடவது இறே-

தான் அறியானேலும்-
இப்படி இவருடைய ஸ்வரூபத்தையும் அறிந்திலேன் ஆகிலும் –
தனக்கு சேஷத்வ ஞானம் இன்றிக்கே ஒழிந்ததே யாகிலும் –
சமயக் ஞானம் இன்றிக்கே இருந்ததே யாகிலும்

தான் அறியானேலும் –
இப்படி பிரமாண பிர சித்தியாலும்
ஆச்சார்ய சேவையாலும் -இருந்தபடிகள்   எல்லாம் அறிய மாட்டானேயாகிலும்-

மனத்தடைய வைப்பதாம்-
செய்கிறார் செய்யும் இத்தைக் கண்டாகிலும்
எம்பெருமானை ஆஸ்ரயிப்பது-
யத் யதாசரதி ஸ்ரேஷ்ட தத்ததே வேதரோ ஜன -ஸ்ரீ கீதை -3-21-என்னும்படி யாகிலும்
சர்வேஸ்வரனை ஹ்ருதயத்திலே வைப்பது –

அங்கனே அன்றிக்கே
மனத்து அடைய வைப்பதாம்  மாலை –
இங்கனே இருக்கச் செய்தே  இவனுடைய ஹ்ருதயத்திலே சர்வேஸ்வரன் தன உடைமையைப் பெறுவானாக வந்து
புகுரப் புக்கால் விலக்காத மாத்ரமே உண்டாய் இருப்பது –
அவன் மால் இறே -அவன் வ்யாமுக்தன் ஆகையாலே தானே வந்து மேல் விழப் புக்கால்
அப்போது இடம் கொடுப்பது இவ்வளவே இறே இவனுக்கு வேண்டுவது
இனி மேல் உள்ளது அவனுக்கே பரமாய் இருக்கும் இறே –

வடுக நம்பி -எம்பெருமானைப் பெறுகைக்கு சாதனங்கள் ஒன்றும் தேட வேண்டா –
அசலகத்திலே ஸ்ரீ வைஷ்ணவன் திருநாமம் இட சஹிக்க அமையும் -என்றார் –

ந ச மாம் யோப்ய ஸூ யதி-ஸ்ரீ கீதை -18-67-

நஞ்சீயர் -திருவரங்கப் பெருமாள் தாசர்க்கு -எம்பெருமான் என்றால் நெஞ்சு நமக்குத் தகையாதபடி பண்ணின
இத்தை மறவாதே கொள்ளும் -என்று அருளிச் செய்தாராம் –

இத்தால் –
ஒரு ருசி மாதரம் இவன் தலையில் உண்டாமது ஒழிய பிராப்தி இவனால் உண்டாக்கிக் கொள்ளப் போமோ என்றபடி
இதுக்குத் திருஷ்டாந்தம் மேல் -அதாகிறபடி எங்கனே -என்னில்

வனத்திடரை  ஏரியாம் வண்ணம் இயற்றும் இது வல்லாள் –
காடான திடரை ஏரியாகப் ப்ரவர்த்தித்து -வருகிற நீரைப் புறம்பு போகாத படி
தகைததுக் கொள்ள வேண்டுவதே யன்றோ ஏரிக்கு உள்ளது

இத்தனை போக்கி -மாரி யார் பெய்கிற்பார் மற்று –
வர்ஷம் இவன் அதீனமோ –
அதுக்குக் கடவனான பர்ஜான்யன் -அன்றோ என்கிறார்
இவன் சேதனனான வாசிக்கு அத்வேஷ மாதரம் உண்டானால்
அவ்வருகான ப்ராப்தியைப் பண்ணித் தர்வான் அவன் அன்றோ –

அன்றிக்கே
இங்கனே ஒருபடியாக நிர்வஹிப்பாரும் உண்டு –
யஸ் சர்வஜ்ஞஸ் சர்வவித் -முண்டக -1-1-10- என்றும்
ஸ்வா பாவிகீ ஜ்ஞான பலக்ரியா ச -ஸ்வே-6-8-என்றும் சொல்லுகிறபடியே
ச்வதஸ் சர்வஜ்ஞன் ஆனவனுக்கு இவன் அடிமை யானதும் -சர்வ நிர்வாஹகன் ஆனதும் –
இவன் அறியாத படியாலே தனக்கு சேஷத்வ ஜ்ஞானம் இன்றிக்கே ஒழிந்ததே யாகிலும்
சர்வேஸ்வரனை தன்னுடைய ஹ்ருதயத்திலே கொடு வந்து வைப்பதாமீ -என்று ஷேபமாக்கி

அவன் ஆஸ்ரித வ்யாமுக்தனாய் இருக்க -இவன் தான் அவனை மனத்தடைய வைப்பதாம் –
இவனாலே அவனை மனசிலே வைக்கப் போமோ –
இவன் அவனை அறிக்கையும் ஆஸ்ரயிக்கையும் என்று ஓன்று உண்டோ

அவன் தானே ருசி ஜனகனாயும்
பிராப்தியும் பண்ணித் தரும் அத்தனை போக்கி
இவன் யத்நிக்கை என்று ஒரு பொருள் உண்டோ -என்றபடி

வனத்திடரை ஏரியாம் வண்ணம் இயற்றுமிது
மனுஷ்யரை பிரேரித்து ஏரி கல்லுவிப்பானும்
அல்லால் மாரி யார் பெய்கிற்பார் மற்று –
இந்த்ரனை இடுவித்து மழை பெய்விப்பானும் அவன் தானே அன்றோ –

வனத்திடரை ஏரியாம் வண்ணம் இயற்றுமிது –
ஹிருதயத்தில் அவித்ய கர்ம வாசன ருசிகளைத் தவிர்க்குமது இ றே-அவன் செய்யுமது
அதுவும்
மாரி யார் பெய்கிற்பார் மற்று –
குணாவிஷ்காரம் பண்ணுவானும் அவனே அன்றோ
வனத்திடரை ஏரியாம் வண்ணம் இயற்றும் இது அல்லால் மாரி பெய்கிற்பார் மற்று யார் -என்று
பொருள் சொல்லும் போது திருஷ்டாந்தம் கிடையாது –
பகவத் பராவண்ய அனுசந்தானம் கனத்து இருப்பார்க்குச் சொல்லில் பரிக்ரஹிக்கும் அத்தனை போக்கி அல்லது –
நினைத்தபடி சொல்லலாம் பொருள் அன்று

அதவா
எம்பெருமான் தனக்கு இவன் அடிமைப் பட்டது அறிந்திலனே ஆகிலும் -தனக்கு அடைத்தத்தைச் செய்வான்
வேதாந்தத்தில் பழக்கத்தாலே சேதன அசேதனங்கள் அவனுக்கு சரீரம் என்று அறிந்து இருந்தால் என்றுமாம்

மனத்தடைய வைப்பதாம் என்றதற்கு செய்வார் செய்தவற்றை கண்டு ஆஸ்ரயிக்கை என்றும்
ருசி மாத்ரமே உடையானாகை என்றும்
ருசியும் அவன் பிறப்பிப்பான் என்றும் மூன்று பொருள்

ஓன்று பட்டரது
ஓன்று திருமலை நம்பியது
ஓன்று ஆழ்வானது-

————————————————————————–

இப்படி இருக்கிற இவனை ஒழிய மற்று ஆஸ்ரயணீயர் இல்லை என்கிறார் –
நாட்டில் ஆஸ்ரயணீயராய் பிரசித்தரான ப்ரஹ்மாதிகளும் சர்வேஸ்வரனை ஆஸ்ரயித்து தந்தாம் அபிமத லாபம் பெற்ற பின்பு
இனி நமக்குஎல்லாம் ஆஸ்ரயணீயன்   அவனே அன்றோ என்கிறார்

ச ப்ரஹ்மா ச சிவஸ் சேந்திர -மகா நாராயண உபநிஷத் -11-13-என்றபடி
இவர்களும் அவனுக்கு பிரகார பூதராய் கொண்டு அவனை ஆஸ்ரயித்து அன்றோ
லப்த ஸ்வரூபர் ஆகிறது என்று கீழே -12 பாசுரத்தில் சொல்லிற்று  –
பவரும் செழும் கதிரோன் ஒண் மலரோன் -என்கிறத்திலே

ஒன்றிலே சேஷிகள் இல்லை என்கிறது அங்கு
இங்கு ஆஸ்ரயணீயர் இல்லை என்கிறது

அங்கு ஆதித்யன் தொடக்கமான தேவ சாமான்யத்தைச் சொல்லிற்று
இங்கு அதிகாரி புருஷர்களான ப்ரஹ்மாதிகளைச் சொல்லுகிறது
பெரிய கிழாய் கிழாயானாரும் வெறுமை காட்டி அன்றோ பெறுகிறது -என்கிறார்-

மற்று ஆர் இயலாவார் வானவர் கோன் மா மலரோன்
சுற்றும் வணங்கும் தொழிலானை -ஒற்றைப்
பிறை யிருந்த செஞ்சடையான் பின் சென்று மாலைக்
குறை யிரந்து தான் முடித்தான் கொண்டு———–17-

பதவுரை

வானவர் கோன்–தேவர்கட்குத் தலைவனான இந்திரனும்
மா மலரோன்–(எம்பெருமானது) சிறந்த (திருநாபிக் கமலத்தை இருப்பிடமாகவுடைய பிரமனும்
சுற்றும் வணங்கும் தொழிலானை–பக்கங்களிற் சூழ்ந்துகொண்டு ஆச்ரயிப்பதற்கேற்ற சேஷ்டிதங்களை யுடையனான
மாலை–எம்பெருமானை
ஒற்றை பிறை இருந்த செம்சடையான்–ஓருகலாமாத்திரமான சந்திரனைத் தரித்த சிவந்த சடையையுடைய ருத்ரன்
பின் சென்று–அநுவர்த்தித்து
இரந்து-(பல்லைக் காட்டி) யாசித்து
குறை–தனது குறையை
தான் முடித்து கொண்டான்–தான் நிறைவேற்றிக் கொண்டான்;
(ஆனபின்பு)
இயல் ஆவார்–ஆச்ரயிக்கலாம்படி தகுதியுடையவர்
மற்று ஆர்-அந்த ஸர்வேச்வரனைத் தவிர வேறு யாவர்?

மற்று ஆர் இயலாவார் –
சர்வேஸ்வரனை ஒழியஓர் இயற்றியால் அறியப்படிவார் யார் –
வேறு ஆஸ்ரயிக்கப் படுவார் யார்
இத்தாலே அவனே ஆஸ்ரயணீயன் -என்றபடி

வானவர் கோன் மா மலரோன்-
தேவர்களுக்கு எல்லாம் பிரதானனான இந்த்ரன் –
திரு நாபி கமலத்தை வாச ஸ்தானமாக யுடைய ப்ரஹ்மா –

சுற்றும் வணங்கும் தொழிலானை –
நேர் கொடு நேர் ஆஸ்ரயிக்கப் பெறாதே கடக்க நின்று பாடே பக்கமே  ஆஸ்ரயிக்கும் படியான
தொழிலை யுடையவன் -என்னுதல்
அனுகூல வ்ருத்திகளைப் பண்ணும் தொழிலை  யுடையவன் என்னுதல்
ஈஸ்வரனுடைய சேஷ்டிதங்களை அவர்கள் சுற்றி வணங்குவர் என்னுதல்
இவர்களும் அவனை ஆஸ்ரயித்து இறே தந்தாம் அபிமதம் பெறுகிறது –

தொழிலானை –
ஆஸ்ரயணீய பிரகாரங்களை யுடையவனை -இவர்கள் இப்படிப் படா நிற்க

மாற்றார் இயலாவார் –
வேறு யத்னம் பண்ண வல்லார் யார் -என்றுமாம்

ஒற்றைப்பிறை யிருந்த செஞ்சடையான் –
ஒற்றைப்பிறை -தனிப்பிறை -ஒப்பிலாத பிறை என்றபடி
ஒரு பிறையை சிவந்த ஜடையிலே தரித்தானாய் -ஸூக பிரதானனான ருத்ரன் ஆவவன்

பின் சென்று மாலைக் கொண்டு –
தன் நெஞ்சிலே மாலைக் கொண்டு -சர்வேஸ்வரனை தன்னுடைய ஹ்ருதயத்திலே கொண்டு

பின் சென்று –
அவனை அனுவர்த்தித்து

குறை இரந்து-
அநந்தரம்-தன்னுடைய குறையை அபேஷிதது

தான் முடித்தான் –
அத்தைத் தலைக் கட்டப் பெற்றான் –
தன்னுடைய அபேஷிதங்களைப் பெற்றான் –

ஆன பின்பு அவனை ஒழிய ஆஸ்ரயணீயர் உண்டோ என்கிறார் –

————————————————————————–

தான் சர்வேஸ்வரனாய்-சர்வ சமாஸ்ரயணீயனாய் இருந்தானே யாகிலும்
ஆஸ்ரித சம் ரஷணத்தில் வந்தால் தன்னை அழிய மாறியும் நோக்கும் ஸ்வபாவன் என்கிறார் –
அவனை ஒழிந்த அல்லாதார் சிலர் நோக்கும் போது தந்தாம் ஸ்வரூபம் குறையாதே நின்று நோக்குவார்கள் –
அங்கன் அன்றிக்கே தன்னை அழிய மாறி நோக்கும் -என்கிறது

கொண்டது உலகம் குறள் உருவாய் கோளரியாய்
ஒண் திறலோன் மார்வத்து உகிர் வைத்தது -உண்டதுவும்
தான் கடந்த ஏழ் உலகே தாமரைக் கண் மால் ஒரு நாள்
வான் கடந்தான் செய்த வழக்கு–18-

பதவுரை

குறள் உரு ஆய்–வாமந ரூபியாய் மாவலியிடஞ் சென்று யாசித்து
உலகம–பூமி முதலிய லோகங்களை
கொண்டத–ஆக்ரமித்துக் கொண்டதும்,
கோள் அரி ஆய்–மிடுக்கையுடைய நரசிங்கமாகி
ஒண்திறலோன் மார்வத்து–மஹா பலசாலியான இரணியனுடைய மார்பிலே
உகிர் வைத்தது–தனது நகங்களை யழுத்திக் கீண்டொழித்ததும்
ஒருநாள்–ஒருகாலத்திலே
தான் கடந்த–தான் அளந்து கொண்ட
ஏழ் உலகே–எல்லா வுலகங்களையும்
உண்டதுவும்–(பிரளயங் கொள்ளாதபடி) திருவயிற்றிலே வைத்துக் கொண்டதும்
(ஆகிய இச்செயல்கள்)
வான் கடந்தான்–ஆகாசத்தை யளவிட்டாலும் அளவிட வொண்ணாத படியுள்ள பெருமையை யுடையவனும்
தாமரை கண்–செந்தாமரைக் கண்ணனுமாகிய
மால்–எம்பெருமான்
செய்த–செய்தருளின
வழக்கு–நியாயமான செயல்களாம்

கொண்டது இத்யாதி –
அவன் ஜகத் ரஷணம் பண்ணும் படிகள் சொல்லுகிறது –
அரியத்தைச் செய்து -இது பிராப்தம் செய்தோம் -என்று இரா நின்றான் –

கொண்டது உலகம் குறள் உருவாய் –
ஆஸ்ரிதர்க்காக வாமன வேஷத்தைக் கொண்டு -தன்னை அர்த்தி யாக்கி யாய்த்து லோகத்தை கொண்டது –
தன்னது தான் கொள்ளும்போது இரந்து கொள்ள வேணுமோ –
இரந்து கொள்ளும் போது தானே நின்று கொண்டால் ஆகாதோ –

கோளரியாய் ஒண் திறலோன் மார்வத்து உகிர் வைத்தது –
நாட்டில் ஒருவர் கொள்ளாத நரசிம்ஹ வேஷத்தைக் கொண்டாய்த்து –
பெரு மிடுக்கனான ஹிரண்யன் மார்பில் உகிரை நாட்டிற்று –

கோள் அரி-பெரு மிடுக்கன் ஆன நரசிம்ஹம்-
ஒரு வடிவைக் கொண்டு இவ்விரோதியைப் போக்கல் ஆகாதோ

ஒண் திறலோன் –
ஒள்ளிய மிடுக்கு

மார்வத்து உகிர் வைத்து –
கை தொட்டு ஆஸ்ரிதர் விரோதிகளைப் போக்கும் படி

உகிர் வைத்து –
திரு ஆழியை இட்டுக் கீண்டால் ஆகாதோ –
இத்தனை விவேகம் உண்டாகில் சங்கல்பமே யமையாதோ –

உண்டதுவும் தான் கடந்த ஏழ் உலகே –
ஒரு அனுகூலர்க்கு பிரகலாதனுக்கு -உதவவிட்டால் ஆகாதோ –
வயிற்றிலே வைத்ததுவும் ஒரு நாள் தன் திருவடிகளுக்கு உட்பட்ட பூமியையே –

அன்றிக்கே ஒரு-
தாமரைக்கண் மால் –
புண்டரீ காஷனான சர்வேஸ்வரன் -அனைத்துலகும் உடைய அரவிந்த லோசன்னை -திருவாய் -6-5-10-

ஸ்ரீ வாமனனாய் இரந்து கொண்டது பூமியை –
ஸ்ரீ நரசிம்ஹமமாய் ஹிரண்யனுடைய  மார்பைக் கீண்டது
ஒரு நாள் தான் அளந்து கொண்ட  ஏழுலகை உண்டது –
வான் கடந்தான் –
அபரிச்சேத்யனானவன்-

வானிலும் பெரியன வல்லன் -திருவாய் -1-3-10-என்கிறபடியே
ஆகாசத்தை அளவிடிலும் தன்னை அளவிட ஒண்ணாதவன் –

அன்றிக்கே –
வான் -என்று வானில் உள்ளாரை ஆக்கி நித்ய ஸூரிகளுக்கும் அவ்வருகானவன் -என்றுமாம்
வை லஷண்யம் பார்த்தால் நித்ய ஸூரிகளுக்கும் அவ்வருகு

அன்றிக்கே –
வான் கடந்தான் -வானை அளந்தவன் -ஸ்வர்க்கத்தை  யளவிட்டவன் -என்றுமாம் –

செய்த வழக்கு
இப்படி தான் செய்ததை தான் ரஷகன் ஆகையாலே
தன்னுடமைக்காகச் செய்கையால் ப்ராப்தம் செய்தோம் -என்று இரா நின்றான்

வான் கடந்தான் செய்தனவானவை ப்ராப்தம் –
அதாகிறது –
பிறர்க்கு ஒரு செயல் செய்தானே இருக்கை அன்றிக்கே கடவப்படி செய்தான் என்று தோற்றி இருக்கை-
ஸ்வாமி யான முறையாலே செய்தான் –
உடையவன் உடைமையை ரஷிக்கை பிராப்தம் இறே –

————————————————————————–

அவனாய்த்து இத்தைப் பிராப்தம் என்று நினைத்து இருக்கிறான் –
இவர் அவனுடைய சௌகுமார்யத்தை அனுசந்தித்து -இது அப்ராப்தம் -என்று இருக்கிறார் –

வழக்கன்று கண்டாய் வலி சகடம் செற்றாய்
வழக்கு என்று நீ மதிக்க வேண்டா -குழக்கு அன்று
தீ விளவின் காய்க்கு எறிந்த தீமை திரு மாலே
பார் விளங்கச் செய்தாய் பழி——————19-

பதவுரை

திருமாலே! ; நீ;
(கிருஷ்ண சிசுவாயிருந்த போது)
வலி சகடம்-வலிதான சகடத்தை
செற்றாய்–உதைத்து முறித்துத் தள்ளினாய்;
வழக்கு அன்று கண்டாய்–இது உனக்குத் தகுதியன்று காண்;
வழக்கு என்று நீ மதிக்க வேண்டா–இது நமக்குத் தகுந்ததே யென்று நினைக்கலாகாது;
(இப்படிப்பட்ட ஸாஹஸச் செயல் செய்ததோடு நில்லாமல்)
குழ கன்று–(அஸுரனான) இளங்கன்றை
தீ விளவின் காய்க்கு எறிந்த–தீய விளங்காயை உகுக்கும் பொருட்டு வீசிப்போட்ட
தீமை–இந்தத் தீம்பான செயல்
பார் விளங்க–பூமியிலே பிரகாசிக்கும்படி
பழி செய்தாய்–தவறு செய்தாய்

வழக்கன்று கண்டாய் வலி சகடம் செற்றாய்-
ரஷணம் பண்ணுகை வழக்கே யாகிலும் -ஸ்ரீ வாமனனாய் நிரதிசய ஸூ குமாரனான நீ
வலிதான சகடத்தை நிரசித்தது  அப்ராப்தம் கிடாய் –
பிள்ளையாய் இருந்து பெரிய சகடத்தை முறித்தது வழக்கன்று –

வலி சகடம் செற்றாய் –
வலியாலே சகடத்தை பங்கம் பண்ணினாய் -என்றுமாம்
இத்தால் செய்தது வழக்காமோ -என்றபடி

செற்றாய் –
வெற்றி உண்டானது பாக்கியம் –
வழக்கு என்று நீ மதிக்க வேண்டா –
செய்ததற இது உற்றது -இனி ப்ராப்தமாம் இத்தனை அன்றோ என்னில் -இது இறே நானும் வேண்டா என்கிறது
அது செய்தற்றேதே யாகிலும் அத்தைப் பிராப்தமாக புத்தி பண்ண வேண்டா

நீ மதிக்க வேண்டா –
இத்தைச் செய்தால் அனுதாபம் இன்றிக்கே ஒழிவதே –
இவரும் இது பிராப்தம் என்று அனுமதி பண்ணுவார் ஆகில் அவன் இன்னம் அதிலே கை வளரத் தொடங்குமே

புழுக் குறித்தது எழுத்தான மாத்திரம் அது –
ஒருக்கால் இங்கனே வாய்த்ததாகில் இது கடவதோ
குழக்கு அன்று தீ விளவின் காய்க்கு எறிந்த தீமை –
அதுக்கு மேலே நீ ஒன்றைக் கொண்டு ஒன்றை எறிந்தாயான படி எங்கனே –
அவை இரண்டுக்கும் நினைவு ஒன்றே அன்றோ –
ஒரு அசுரனான குழக் கன்றைக் கொண்டு அசுரவடிவேத் தீதான விளவின் காய்க்கு எறிந்தாயான இது தப்பு
இருவரும் கூடி கிருத சங்கே தரை வந்து தீங்கு செய்யிலோ என்று வயிறு பிடிக்கிறார்

திரு மாலே-
பிராட்டியும் நீயுமாய் இருந்து போது போக்கை அன்றோ உன் சௌகுமார்யத்துக்கு சேர்ந்த செயல்
இவை யுனக்குப் போருமோ
அன்றிக்கே
பிராட்டி பரிய இருக்கும் விஷயம் படும் பாடே என்றும்
திருமாலே -ஜகத்து அநாயகம் ஆகாதோ
மங்களாந்ய பிதத் யுஷீ -பால -16-21-

பார் விளங்கச் செய்தாய் பழி——
பாரிலே -பூமியிலே பிரகாசிக்கும்படி பழியைச் செய்தாய் -தப்பைச் செய்தாய்

பழி-
விபூதியிலே ஏக தேசத்தை ரஷிக்கப் புக்கு  உபய விபூதியையும் இழக்கப் பார்த்தாய்
தம்முடைய ச்நேஹத்தால் வழக்கன்று -பழி என்று இருக்கிறார்
எம்பெருமான் தான் புகழ் என்று இரா நின்றான் –
இவர் இது அந்யதா ஜ்ஞானம் என்று இருக்கிறார் –

————————————————————————–

பகவத்  பஜனத்திலே அடி இட்டாரோடு –
தலைக் கட்டப் பெற்றாரோடு -வாசி அற
எல்லாரும் க்ருதக்ருத்யர் -என்கிறார் –
கீழில்-ஜகத் ரஷணத்தை அனுசந்தித்து –
இவனை ஆஸ்ரயித்தவர்கள் அன்றோ வாழ்வார்-என்கிறார் –

பழி பாவம் கை யகற்றிப் பல் காலும் நின்னை
வழி வாழ்வார் வாழ்வராம் மாதோ -வழுவின்றி
நாரணன் தன் நாமங்கள் நன்குணர்ந்து நன்கேத்தும்
காரணங்கள் தாமுடையார் தாம்-20-

பதவுரை

பழி–அபகீர்த்தியையும்
பாவம்–பாவங்களையும்
கை அகற்றி–நீக்கி
பல்காலும்–எப்போதும்
நின்னை–உன்னை
வழி வாழ்வார்–வழிப்பட்டு ஆச்ரயிக்குமவர்களும்
நாரணன் தன்–நாராயணனான வுன்னுடைய
நாமங்கள்–திருநாமங்களை
நன்கு உணர்ந்து–நன்றாக அறிந்து
வழு இன்றி–இடைவீடின்றி
நன்கு ஏத்தும் காரணங்கள் உடையார் தாம்–அழகாகத் துதிப்பதற்கேற்ற உபகரணங்களை யுடையவர்களும்
(ஆகிய இவ்விருகை யதிகாரிகளும்)
வாழ்னராம்–மகிழ்ந்து வாழப் பெறுவர்கள்.
(மாதோ- அசை).

பழி பாவம் கை யகற்றிப் –
நாட்டார் பழி சொல்லுமவையும் -அதன் நிபந்தனையும் தவிர்த்து

பழி பாவம் –
தான் செய்யாது இருக்க வந்தேருவதான அப கீர்த்தியும் –
புத்தி பூர்வகமாகப் பர ஹிம்சா ரூபமாக அனுஷ்டிக்கையால் வந்த பாபமுமான -இவற்றைக் கை கழியப் பண்ணி –

அடி யுண்டாயும்-அடி இன்றிக்கேயும் உள்ள விரோதிகளைப் போக்கி –
இவன் செய்யாதே இருக்கச் செய்தே வந்தேறுமதுக்கு பலம் புஜிக்க வேணுமோ என்னில் –
அது தானும் ஒரு பாப பலம் இறே-
ஆகையாலே அது தனக்கு யோக்யமான நிலையைக் குலைத்துக் கொண்டு நிற்க வேணுமே

பல் காலும் நின்னை வழி வாழ்வார் வாழ்வராம்-
எப்போதும் உன்னை சாஸ்த்ரங்களில் சொல்லுகிறபடியே வழி பட்டு நின்றாராய்-
ஆஸ்ரயிப்பார் வாழ்வராம் – -அவர்கள் வாழ்வு பெறுவாராம் –
உபாய அனுஷ்டானம் வாழ்வாய் -புருஷார்த்த சித்தியும் வாழ்வாய் இருக்கை-
ந ஸூகாத் ஸூகம் லப்யதே -என்கிறது இல்லையாகாதே -சாதனா சாத்திய விபாகம் இல்லை –

மாதோ –அந்தோ –
இஃது ஒரு இடைச் சொல் இருக்கிறபடி –
இது அவ்விஷயமாய்  ஒரு ஆச்சர்யம் இருந்தபடி என் என்கிறது –

வழுவின்றி-இத்யாதி –
சர்வேசவரனுடைய திரு நாமங்களை விச்சேதம் இல்லாத படி -அழகிதாக அனுசந்தித்து
அழகிதாகச் சொல்லுகைக்கு அடியான -வழுவு இன்றி -பழுது   இன்றிக்கே இருக்கிற
நாராயணன் உடைய திருநாமங்கள் –

நாரணன் தன் நாமங்கள் –
தாய் பேர் சொல்லுமா போலே –

நன்குணர்ந்து –
பக்தியாலே உணர்ந்து

நன்கேத்தும்-
ஏத்தினால் அல்லது செல்லாமை –

காரணங்கள் –
ஹேதுக்கள்-அவை யாவன –
இதுக்கடியான பக்தியை யுடையராய் –
அதுக்கடியான ருசியை யுடையராய் –
அதுக்கடியான ஸூ க்ருதத்தை யுடையராய் –
அதுக்கடியான பகவத் கடாஷத்தை யுடையவர் ஆனவர்களும்

பழி பாவம் கை யகற்றி -பலகாலும் நின்னை வழி வாழ்வார் ஆனவர்களும் வாழப் பெறுவார்
இவ்விரண்டு அதிகாரிகளும் அழகியதாக அனுசந்திக்கப் பெறுவர்கள்-

இத்தால் –
உனக்குப் பரியப் பிறந்தார் உன் பிரசாதம் உடையார் அன்றோ -என்றபடி

தாரணங்கள் தாமுடையார் –
என்ற பாடமான போது-தாரணம் -என்றது த்ருதி யுடையார் –
அதாவது
பகவத் விஷயத்திலே யூன்றி த்ருதியை உடையராய் இதர விஷயங்களால் சலிப்பிக்க ஒண்ணாதே இருக்கை –

————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பூதத் ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ பூதத் ஆழ்வார் அருளிய இரண்டாம் திருவந்தாதி – -1-10– ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் —

February 20, 2015

அவதாரிகை –
கீழில் திருவந்தாதியில்
ஆழ்வார் உபய விபூதி உக்தனுடைய சேஷித்வத்தை பிரகாசித்தாராய் நின்றார்
அது போய் –
இவருடைய சேஷத்வ ஜ்ஞானத்துக்கு உறுப்பாய் –
அந்த ஜ்ஞானம் தான் போய் –பக்தி ரூபா பன்னமாய்த்து –
அது ஜ்ஞான விஷயம் -இது பக்தி விஷயம் –
பக்தியாலே வழிந்து புறப்பட்ட சொல்லாய் இருக்கிறது –

அவர்க்குப் பக்தி இல்லையோ என்னில் -உண்டு
கார்ய காரண ரூபமான அவஸ்தா பேதமே உள்ளது
உபய விபூதியையும் அனுசந்தித்துப் பிறந்த ஜ்ஞானம் அவரது –
அது பக்வமாய் -பக்தி ரூபாபன்ன படி இவரது

கீழில் திருவந்தாதியில்
அவர் விபூதி விஷயமாக அனுசந்தித்து -பரப்படங்கலும்-
இவர்
தம் மனசின்  யுள்ளே அனுசந்தித்து
அந்த பக்தி பாரவச்யத்தாலே பிறந்த பாசுரமானது ஒரு பிரபந்தமாய்க் கொண்டு தலைக் கட்டிற்றாய் இருக்கிறது –

கீழில் திருவந்தாதியில்
ஜகத்துக்கு ஈஸ்வரன் சேஷியாய்-ஜகத்து அவனுக்கு சேஷமாய் இருக்கும் என்று
பரத்வ ஜ்ஞானத்தைச் சொல்லிற்று –
அந்த பரத்வ ஜ்ஞானம் தானே ஸ்வ ப்ராப்த்யுபாயம் என்றது –

உபாயம் வேறு ஒன்றாய் உபேயமும் வேறு ஒன்றோ காண்கிறது லோகத்தில் –
இப்படியாகக் கூடுமோ என்னில்

சர்வ சக்தி ஆகையினாலே -தானே உபாயமும் உபேயமும் –
நிமித்த காரணமும் சஹ காரி காரணமும் வெவ் வேறாக இருக்கக் காணா நிற்கச் செய்தே
த்ரிவித காரணமும் அவனேயாய் இரா நின்றானே -சர்வ சக்தி யாகையாலே -அப்படியே இதுவும் கூடும்
அவன் ஜகத் அந்தர்யாமியாய் -தாமும் ஜகததர்ப்பூதர் -ஆகையாலே
தாமும் சேஷ பூதராய்த் தமக்கு உபாயம் அவனேயாய் இருக்கிறது-

சாமான்யத்தில் உள்ளது விசேஷத்திலும் உண்டாய் இருக்குமே
அகில ஜகத் ஸ்வாமின் -என்றால்
அஸ்மின் ஸ்வாமின் -என்னக் கடவது இறே-

சாதனம் தம் தலையில்  இன்றியிலே அவனே யாகையாலே
இனி ஒரு பாகம் பிறக்கும் அளவும் பார்த்து இருக்க வேண்டாவோ

குருகைக் காவலப்பன் பக்கலிலே பரமேஸ்வர மங்கலத்து ஆண்டான் சென்று –
ஜகத்துக்கும் ஈஸ்வரனுக்கும் சம்பந்தம் இருக்கிறபடி என்-என்று கேட்க –

எஜ் ஜகத்துக்கும் எவ் வீஸ்வரனுக்கும்-என்று கேட்கத் –
த்ருப்தனாய் போனான் –

அதாகிறது –
ஆத்மாவையும் ஈஸ்வரன் என்று பிரமாணம் சொல்லக் கடவது –

சரீரம் ஆத்மாவுக்கு சேஷமானாப் போலே
ஜகத்தும் ஈஸ்வரனைக் குறித்து சரீரமாய் இருக்கக் கடவது –

அவர் -பொய்கை ஆழ்வார் -பதிம் விச்வச்ய-என்றார் –
இவருக்கும் ஒக்குமே இது -அவ்வர்த்தத்தையே அனுபவிக்கிறார் –

ஏக கர்த்ருகமாக இருக்க வேண்டாவோ -பின்ன கர்த்ருகமாய் அத்திருவந்தாதி ஒருத்தரதுமாய்
இத்திருவந்தாதி ஒருத்தரதுமாய் அன்றோ இருக்கிறது
அதினுடைய அநந்தரம் பிறந்த அவஸ்தையைச் சொல்லுவான் என் என்னில்

த்ரிமுனி வ்யாகரனமும் மூவர் கூடச் செய்யச் செய்தே ஏக சாஸ்த்ரமாய்த்து இறே ப்ரேமேயைக்யத்தாலே –
ஜைமினியும் -வியாசனும் கூட மீமாம்சையைப் பன்னிரண்டு அத்யாயம்
ஜைமினியும் வியாசன் நாலு அத்யாயமுமாய்ச் செய்யச் செய்தே
பூர்வ மீமாம்சையும் உத்தர மீமாம்சையையும் ப்ரேமேயைக் யத்தாலே
ஏக சாஸ்த்ரமாய்த்து இறே –
அப்படியேயாய் இருக்கிறது –

அதில்–விசித்திர ஜ்ஞான சக்தி யுக்தன் -ஜகத் காரண பூதன் -அவனாகிறான் –
சங்க சக்ர கதாதரன் -என்றது இறே –
இதுவும் பக்தி யாகிறது -முன்பு உண்டாய் இருந்தது ஓன்று இன்றியே இருக்கையாலே
இப்போது உண்டாக்கின படியாலே சொல்லுகிறது –
அவனே உபாயமான படியாலே பக்தி உத்பாதகனும் அவனேயாய் இருக்கிறபடி சொல்லுகிறது –

ஜகத் வைசித்ரியினுடைய நிர்வாஹகத்வம் போரும் என்னைத் திருத்தின படி என்று அனுசந்திக்கிறார் –

அவர்க்கு உள்ளது பரத்வ ஜ்ஞானமோ என்னில் –
எல்லார்க்கும் எல்லாம் உண்டு –
அவர்கள் பரிக்ரஹித்த அம்சங்களைச் சொல்லுகிறது
ஆழ்வார்கள் ஒருவருக்கு ஒருத்தர் பாவஜ்ஞராய் பரிமாறுகையாலே ஏக கண்டராய் இறே இருப்பது –
திரு வநந்த ஆழ்வானுக்கு மிடறு ஒன்றாய் தலை பலவானாப் போலே –

(பூதம் சிரஸ்ஸூ -நம்மாழ்வார் அவயவி
இரும் தமிழ் நூல் புலவர் -இவர் ஸ்ரீ ஸூக்தி கொண்டே –
யானே இரும் தமிழ் நன் மாலை இணை அடிக்கே சொன்னேன் பெரும் தமிழன் நல்லேன் பெரிது –74
இறையும் அகலகில்லேன் -செவ்விப் படிக் கோலம் கண்டு அகலாள் –82-இவரது
அலர் மேல் மங்கை உறை மார்பா -திருமங்கை நின்று அருளும் தெய்வம் -57-
மாலே நெடியானே –100
போன்ற பல ஸ்ரீ ஸூ க்திகள் கொண்டே நம்மாழ்வார் ஸ்ரீ ஸூக்திகளுக்கு இவரதே மூலம்
அன்பிலே ஞானத்தமிழ் -இரும் தமிழ் -தானே கொண்டாடும் படி இவர் திவ்ய பிரபந்தம் )

————————————————————————–

ப்ராப்த விஷயத்தில் பிறந்த பிரேம பரம்பரைகளாலே பிரகாசமான
தம்முடைய சேஷத்வத்தையும்-
அவனுடைய சேஷித்வத்தையும் -சொல்லுகிறது
அனுமானத்தாலே கீழ் வஸ்து நிர்த்தேசம் பண்ணினாப் போலே இருக்கிறது –

அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக
இன்புருகு சிந்தை இடு திரியா -நன்புருகி
ஞானச் சுடர் விளக்கு ஏற்றினேன் நாரணற்கு
ஞானத் தமிழ் புரிந்தேன் நான்–1-

பதவுரை

ஞானம் தமிழ் புரிந்த நான்–பகவத் விஷய ஜ்ஞானத்தைத் தருமதாய் த்ராவிட பாஷா ரூபமான
திருவந்தாதிப் பிரபந்தத்தை (உலகத்தார்க்கு) விரும்பி வெளியிட்ட அடியேன்.
அன்பே தகளி ஆ–(பரபக்தியின் ஆரம்ப தசையான) ஸ்நேஹம் தகளியாகவும்
ஆர்வமே நெய் ஆக–(அந்த ஸ்நேஹம் மூலமாகப் பிறந்த) அபிநிவேசம் நெய்யாகவும்
இன்பு உருகு சிந்தை இடுதிரி ஆ–(பகவத் விஷயத்தின்) இனிமையாலே நீர்ப் பண்டமாக உருகுகின்ற
மனமானது (விளக்குக்கு) இடப்படுகிற திரியாகவுங்கொண்டு
நன்பு உருக–ஆத்மாவும் உருகப் பெற்று
நாரணற்கு–ஸ்ரீமந் நாராயணனுக்கு
ஞானம் சுடர் விளக்கு ஏற்றினேன்–பரஜ்ஞானமாகிற பிரகாசமான தீபத்தை ஏற்றினேன்.

அன்பே தகளியா-
வையம் தகளியா -என்று லோகப் பரப்பை அடையத் தம்முடைய பக்தியாலே அனுசந்தித்து –
பக்தியைத் தகளியாகக் கொள்ளுகிறார் –

அதாவது –
வையம் தகளி -கேட்கையாலே எம்பெருமான் பக்கல் பிறந்த ச்நேஹமே தகளியாக –
அன்பு ஆகிறது
பக்தி -தைல வர்த்திகளுக்கு ஒரு ஆதாரம் வேணும் இறே
ஒன்றால் அழியக் கடவது அல்லாத பக்தியானது போய்-ஒரு தகளியாய்ப் புக்கது -என்றபடி ஆகிறது –
மேலிதுக்கு எல்லாம் ஆதாரமாய் இருக்கிறபடி –

கீழில் ஜ்ஞானப் பரப்பை அடைய பக்தியாய்ப் பழுத்த படி
பக்தி ரூபாபன்னமாய் இறே ஜ்ஞானம் இருப்பது –
ஆகை இறே மயர்வற மதி நலம் அருளினான் -என்றது-

ஆர்வமே நெய்யாக-
அது பாகமான படி -அந்த அன்பையே அடியாக யுடைத்தாய்
பெற்று அனுபவித்து அல்லது தரிக்க மாட்டாத அடியான அபி நிவேசமானது
அதுக்கு உட்பட்ட நெய்யாய்ப் புக்கது –

ஆர்வம் ஆகிறது -அன்பினுடைய த்விதீய பர்வம்
அன்பாகிறது சிநேக கார்யமான அத்தலைக்குப் பரியும் பரிவு
ஆர்வம் ஆகிறது -அன்புக்கு விஷயம் ஆனவனுக்கு ஸ்மாரகமாய்
அவ்விஷயத்தை விட்டுக் கால் வாங்க ஒண்ணாத படியாகப் பிறப்பதொரு அவஸ்தை –

அன்றிக்கே
அன்பு அத்தலைக்கு பரியும் பரிவாய்
ஆர்வம் ஆகிறது அதுக்கு அடியான அபி நிவேசம் -என்றுமாம் –

ஆவல் அன்புடையார் தம்  மனத்தன்றி மேலவன் -நாச் -4-8-என்னக் கடவது இறே-

இன்புருகு சிந்தை இடு திரியா –
இவ்விரண்டையும் அடியாக யுடைத்தாய்
அநுபாவ்ய விஷயத்தினுடைய ரச்யதையாலே சிதிலமாகிற மனசானது அதுக்கு இட்ட திரியாக –
ப்ராப்தியாலும் –
குணாதிக விஷயம் ஆகையாலும் –
த்யேய வஸ்துவை விடாதே உருகி இனிதாய் இருக்கிற
மநோ ரதம் காரணமான திரியாக –
சிந்தைக்கு அடியாக இறே மனஸ் இருப்பது –

நன்புருகி-
நன்பு என்கிறது
ஆத்மாவுக்கு சஹஜமான தர்ம பூத ஜ்ஞானமாய் -அத்தாலே –
தத் குண சாரத்வாத் தத் வ்யபதேச ப்ராஜ்ஞவத் -ப்ரஹ்ம ஸூதரம் -2-3-29-என்கிறபடியே –
ஜ்ஞாதாவை நினைக்கிறதாதல்-

அன்றிக்கே
நன்பு -என்கிறது
ஆத்மாவாய்-அதுக்கு நன்மையாவது
அல்ப அஸ்த்திரமான அசேதனத்தில் காட்டில் வேறுபட்டு
ஜ்ஞானனந்த லஷணமாய்-
நித்தியமாய் –
ஈஸ்வர சேஷமாய் -இருக்கை –

உருகி என்கிறது –
அசேத்யமாய்-
அதாஹ்யமாய் –
அக்லேத்யமாய் -இருக்கக் கடவதான ஆத்மவஸ்து -த்ரவ த்ரவ்யம் பட்டது பட்டது –

நித்ய வஸ்து உருகுகையாவது என் என்னில்
அவ் விஷயத்தில் தான் இழியும்படி அவகாஹித்த படியைச் சொல்லுகிறது –
ந விவேதாத்மநோ காத்ரம் -தத் ஸ்ம்ருத் யாஹ்லாத சம்ஸ்தித -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-7-39-என்னும் படியே
பிரஹலாதன் பாம்புகள் கடித்ததையும் உணராமல்
எம்பெருமானை நினைந்து மகிழ்ந்து இருந்தானே –

ஆக
இவை எல்லாவற்றாலும் சொல்லிற்று ஆயத்து –
விஷயா தீனமாகப் பிறந்த பக்தியிலே சில அவஸ்தா விசேஷங்கள் இருந்தபடி
பரபக்திக்கு அநந்தரம் பரஜ்ஞானம் ஆய்த்து
பின்னைப் போய்ப் பரம பக்தி பர்யந்தம் ஆய்த்து –
இங்கனே இருக்கக் கடவ தொரு க்ரமம் உண்டு இறே-

ஞானச் சுடர் விளக்கு ஏற்றினேன் –
அவ் வளவிலே பகவத் பிரசாத லப்தமான பர ஜ்ஞானம் ஆகிற உஜ்வல தீபத்தை ஆரோபித்தேன் –
விளக்கு ஆகிறது
தன்னையும் தானே காட்டிப் பிறரையும் காட்ட வற்றாய் இருப்பது
அப்படியே –
பக்தி ரூபாபன்ன ஜ்ஞானம் ஆனது
தன் சேஷத்வத்தையும் காட்ட வற்றாய் –
அவன் தன் சேஷித்வத்தையும் காட்ட வற்றாய் இருக்கும் –

விளக்கேற்றினேன் –
அவ் வழியாலே அடிமை செய்கிறேன்-

நாரணற்கு-
சர்வ சேஷியான சர்வேஸ்வரனுக்கு-
அசேவ்ய சேவையைத் தவிர்க்கிறது –

ஞானத் தமிழ் புரிந்தேன் நான்–
ஜ்ஞான ஸ்வரூபமான தமிழைப் பண்ணின நான் –

பக்திஸ்ஸ ஜ்ஞான விசேஷ -வேதார்த்த சங்க்ரஹம்-என்று
பக்தி ரூபாபன்ன ஜ்ஞான பிரபந்த ப்ரவர்த்தகனான நான்  –

ஞானத் தமிழ் புரிந்தேன் நான்–ஞானச் சுடர் விளக்கு ஏற்றினேன் –
ஆப்ததமனான நான் சொன்னேன் –
காதல் குருகூர்ச் சடகோபன் சொன்ன –திருவாய் -2-1-1-என்னுமா போலே –
சோக ஸ்லோகத்வமாகத-பால -2-40-என்னக்  கடவது இறே

என்னளவிலே யாய்ப் போகை அன்றியே –
நாட்டார்க்கும்  எல்லாம் பக்தி பிரகாசிக்கும் படி பண்ணினேன்
தமக்கு உண்டான சாஷாத்காரம் இப் பிரபந்தம் கற்றார்க்கும் உண்டாக்கவற்று –

இனி இத்தால்
தம்முடைய பக்தி இருந்தபடியையும்
அபி நிவேசம் இருந்த படியையும்
இதுக்கு அடியான விஷயத்தின் உடைய ரச்யத்தை இருந்தபடியையும்
சேஷத்வ ஜ்ஞான அநு சந்தானத்துக்கு யோக்யமாம் படி ஆத்மா போய் தாந்தமான படியையும்
அவன் பக்கல் உண்டான சேஷத்வ பிரதிபத்தி இருந்த படியையும்
இவை எல்லாவற்றையும் சொல்லிற்று ஆகிறது-

————————————————————————–

அவதாரிகை –
இப்படிப்பட்ட பக்தியை யுடையவராய் –
அவன் திரு நாமத்தை அக்ரமமாக வாக்கிலும் சொல்லிக் கூப்பிடுமவர்களுக்கு

சர்வேஸ்வரன் கொடுக்கும் தரம் இருக்கும்படி –
நித்ய சம்சாரியானவனை -நித்ய ஸூரிகளோடே ஒரு கோவை யாக்கும் -என்கிறார்-

ஞானத்தால் நன்கு உணர்ந்து நாரணன் தன் நாமங்கள்
தானத்தால் மற்றவன் பேர் சாற்றினால் வானத்
தணியமரர் ஆக்குவிக்கும் அஃது அன்றே நங்கள்
பணியமரர் கோமான் பரிசு-2-

பதவுரை

நாரணன் தன்–ஸ்ரீமந் நாராயணனுடைய
நாமங்கள்–(திருமேனி முதலியவற்றிற்கு வாசகமான) திருநாமங்களையும்
மற்று–மற்றும்
அவன் பேர்–அப்பெருமானுடைய (விபூதி விஸ்தாரங்களுக்கு வாசகமான) திருநாமங்களையும்
ஞானத்தால்–(ப்ரேம ரூபமான) ஜ்ஞானத்தாலே
நன்கு உணர்ந்து–உள்ளபடி யறிந்து
தானத்தால்–(ப்ரேமத்தின் முடிவெல்லையான) ஸ்தானத்திலே நின்று
சாற்றினால்–அநுஸந்தித்தால்,
நங்கள் பணி அமரர் கோமான் பரிசு–நமக்கு பந்துக்களையும் எப்போதும் கைங்கர்ய பரர்களாயுமுள்ள
நித்ய ஸூரிகளுக்குத் தலைவனான எம்பெருமானுடைய தன்மையாவது,
வானத்து அணி அமரர் ஆக்குவிக்கும் அ”து அன்றே–பரம பதத்திற்கு அலங்காரமான
நித்ய ஸூரிகளாக (நம்மை)ச் செய்து வைக்கு மதுவேயாம்

நாரணன் தன் நாமங்கள்–மற்றவன் பேர் -ஞானத்தால் நன்கு உணர்ந்து-தானத்தால்-சாற்றினால்-
நாராயணன் உடைய அசாதாரணமான திரு நாமங்களையும்-மற்றும் பிரகார வாசியான திரு நாமங்களையும் –
யுக்தமான படியே பக்தி பூர்வமாக யுணர்ந்து -மேற்பட உச்சமான ஸ்தானத்திலே சாற்றினால் –

ஞானத்தால் நன்கு உணர்ந்து-
பக்தியாலே அழகியதாக உணர்ந்து –
இருவர் கூட ஞானத்தை அப்யசிக்கச் செய்தே
சஞ்சயனுக்கு பக்தி யுண்டாய் -திருதராஷ்டிரன் வரி யடையவே கற்றுப்   போனான் இறே
இருவர் கூட அப்யசித்தோம் -உனக்கு ஞானம் உண்டாய்த் தோற்றுவான் என்-
எனக்கு தோற்றாது ஒழிவான் என் -என்ன
உன்னைப் போலே வரியடைவே கற்கை அன்றிக்கே
நான் பக்தியை உடையேனாய்க் காண் அப்யசித்தது -என்றான் இறே –

நன்கு உணர்ந்து-
உறவை அறிந்து பேரைச் சொல்ல வேணும் –
அதாகிறது –
ஈஸ்வர ஸ்வரூபம் இருக்கும்படியையும்
ஸ்வ ஸ்வரூபம் இருக்கும்படியையும் -அழகிதாக அனுசந்திதித்து –
அவன் சேஷித்வத்தையும் தன் சேஷத்வத்தையும் அனுசந்தித்து –

நாரணன் தன் நாமங்கள்-
அல்லாத திரு நாமங்களில் காட்டில் இதுக்கு வ்யாவ்ருத்தி
ஜ்ஞான ஆனந்தங்கள் ஸ்வரூப நிரூபகமாய் -அல்லாத ஜ்ஞான சக்தியாதிகள் குணமானாப் போலே யாயிற்று
திருமந்தரம் ஸ்வரூப நிரூபகமாய் அல்லாதவை திரு நாமங்களாய் இருக்கிறது –

பேர் ஆயிரம் கொண்டதோர் பீடுடையன் -அவன் யார் என்னில் -நாராயணன் -திருவாய் -9-3-1-என்றது இறே
நாமம் பல சொல்லி நாராயணா – மூன்றாம் திரு -8-என்றது இறே

நாரணன் தன் நாமங்கள் –
வகுத்த சேஷியானவனுடைய திரு நாமங்கள் –

தானத்தால் –
பிரயோஜன நாந்தர பரனாய்ச் சொல்லுதல் –
பிரயோஜன நிரபேஷனாய்த் தவிருதல் -செய்கை அன்றிக்கே சொல்லுகை –
சொல்லி அல்லது நிற்க மாட்டாமையாலே சொல்லுகை –
சொல்லி அல்லது நிற்க மாட்டாமை
பக்தியினுடைய ஸ்தானத்திலே –
பக்திக்கு அனந்தரமான ஸ்தானம் ஆகையாவது விவசராய்க் கூப்பிடுகை –

மற்று –
அவ்யயமாய்ப் பொருள் இன்றிக்கே நிற்றல் -அசை நிலை –
மற்று ஓன்று பக்திக்கு மேலே திரு நாமத்தையும் சொன்னால் –

அவன் பேர் –
விபூதிக்கு வாசகமாயும் –
குணங்களுக்கு வாசகமாயும் உள்ள திரு நாமங்கள்

பேர் -சடங்கு வேண்டாமை

தானத்தால் சாற்றினால் –
அவன் பக்கல் உண்டான பக்தி வழிந்த சொல்லாலே பெரும் தானத்தைச் சொல்லிக் கூப்பிட்டால் என்றாதல் –

அன்றிக்கே
கீழ்ச் சொன்ன பக்திக்கு அனுரூபமாக அடைவு கெடக் கூப்பிட்டு-என்னுதல்-
பேர் பல சொல்லிப் பிதற்றி -திருவாய் -3-5-8-என்னக் கடவது இறே

நன்கு உணர்ந்து சாற்றுகை யாவது –
நெஞ்சாலே உணர்ந்து அப் பேரை வாயாலும் சொல்லுகை –

சாற்றினால்
உகவாதார் மண் உண்ணவும் உகப்பார் களிக்கவும் கேட்கச் சொல்லிக் கூப்பிடுகை –

பின்னை அவன் செய்யுமது என் என்னில்
வானத்தணியமரர் ஆக்குவிக்கும் அஃது அன்றே –
நித்ய விபூதிக்கும் இவன்  சம்பந்தத்தால் ஒரு நிறம் உண்டாம்படி பண்ணி –
நித்ய ஸூரிகளோடே ஒரு கோவையாம்படி பண்ணுமதன்றோ-என்னுதல் –

அன்றிக்கே
அவர்களைக் கொண்டு போய் ஸ்ரீ வைகுண்டத்திலே அங்கு உள்ளார்க்கு
பூஷணமான  தேவர்கள் ஆக்குகை அன்றோ -என்னுதல்

மலி புகழ் வானவர்க்காவர் நற்கோவை -திருவாய் -4-2-11-என்னும்படியே
அடியார்கள் குழாங்களை —உடன் கூடுவது என்று கொலோ-திருவாய் -2-3-10- என்று இறே
இவர்கள் பிரார்த்தனை –

வானத்து அணி அமரர் –
பரமபதத்துக்கு விசேஷம் அச்ப்ருஷ்ட தோஷ கந்தரான நித்ய ஸூரிகளை உடைத்தாகை –
சம்சாரிகளை நித்ய ஸூரிகளை ஆபரணமாக யுடைத்தான பரம பதத்திலே கொண்டு போய் வைக்கும் என்றுமாம்
பேர் ஆர் ஓதுவார் ஆரார் அமரரே -திருவாய்-10-5-8-என்னக் கடவது இறே

இப்படிச் செய்கிறது தன்னை ஆஸ்ரயிப்பார் இல்லாமையோ என்னில்
நங்கள் பணி யமரர் கோமான் பரிசு-
நமக்கு நிருபாதிக பந்துக்களாய்-நித்யாஞ்சலி புடா ஹ்ருஷ்டா நம இத்யேவ வாதிந-பார -சாந்தி -344-45-என்கிறபடியே
அவன் திருவடிகளிலே பணிகையே யாத்ரையாக யுடையரான அநந்த வைனதேயாதிகள் உள்ளிட்ட
நித்ய சித்த புருஷர்களுக்கு ஸ்வாமியானவனுடைய பிரகாரம்

பணி யமரர்  –
வேறு பணியை யறியாதே -ஒரு நாள் பணிந்து ஒரு நாள் பணியாது இராதே
அவனைப் பணிகையே ஸ்வரூபமாய் இருக்கை-

பணி யமரர் –
முக்தரையும் முமுஷூக்களையும் போலே சில நாள் புறம்பே பணிந்து –
பின்னை தெளிந்து
அழுக்கு உடம்பு எச்சில் வாயால்  -திருக் குறும் தாண் -12-என்றும்
காவடியேன் பட்ட கடை -இரண்டாம் திரு -10-என்றும்
சொல்ல வேண்டாதார்

பணி யமரர் கோமான் பரிசு வானத்து அணி அமரர் ஆக்குவிக்கும் அக்தன்றே-
அடைவுகெடக் கூப்பிடும் கோஷ்டியிலே வைக்கும் -என்றபடி –

————————————————————————–

கீழே வானத்து அணி யமரர் ஆக்குவிக்கும் -என்றாரே –
அவ் வழியாலே -இங்கே சம்சாரியானவர்கள் தாங்கள் இருந்த தேசத்திலே
ப்ராக்ருதமான புஷ்பாதிகளைக் கொண்டு ஆஸ்ரயிக்கலாம் படி ஆபிமுக்யம் பண்ணி
அவன் திருவடிகளை ஆஸ்ரயித்தவர்கள்
அயர்வறும் அமரர்கள் அதிபதி யானவன் தன் ஸ்ரீ வைகுண்டத்தைப் போய் புகப் பெறுவராம்-
இக்தோர் ஆச்சர்யம் இருந்தபடி என் -என்கிறார் –
அவன் செயலிலே தாம் ஈடுபடுகிறார் ஆதல் –
அவன் படி கிடக்கப் புகப் பெறுவராம் படியை அனுசந்திக்கிறார் ஆதல் –

பரிசு நறு மலரால் பாற்கடலான் பாதம்
புரிவார் புகப்பெறுவர் போலாம் -புரிவார்கள்
தொல்லமரர் கேள்வித் துலங்கொளி சேர் தோற்றத்து
நல்லமரர் கோமான் நகர் -3-

பதவுரை

பால் கடலான் பாதம்–க்ஷீராப்தி நாதனுடைய திருவடிகளை
பரிசு நறுமலரால்–செவ்வி குன்றாத பரிமளம் மிக்க புஷ்பங்களைக் கொண்டு
புரிவார்–விரும்பித் தொழுமவர்கள்,
புரிவார்கள் தொல் அமரர்–ஸாதநாநுஷ்டாந பரர்களான (இந்திரன் முதலிய) பழைய தேவர்களுக்கும்
கேள்வி–(கண்ணால் காண முடியாமல்) காதால் மாத்திரம் கேட்டுக் கொண்டிருக்கக் கூடியதும்
துலங்கு ஒளி சேர் தோற்றத்து–மிக விளங்குகின்ற ஒளி பொருந்தித் தோன்றுதலையுடையதுமான
நல் அமரர் கோமான் நகர்–நித்யஸூரி நாதனுடைய திவ்யநகரமான பரமபதத்தை
புகப்பெறுவர் போலாம்–அடையப் பெறுவர்கள்

பரிசு நறு மலரால் பாற்கடலான் பாதம்
அழகிய செவ்விப் பூக்களைக் கொண்டு
நமக்கு ஆஸ்ரயிக்கலாம் படி எளியனாய் அவதாரங்களுக்கு எல்லாம் அடியான
திருப் பாற் கடலிலே அநிருத்த ஆழ்வானாய் இறே கண் வளர்ந்து அருளுகிறது –

வாஸூதேவ -சங்கர்ஷண-பிரத்யும்ன -அநிருத்தர்களில் கடைக் குட்டியான அநிருத்த ஆழ்வானாய்
திருப் பாற் கடலிலே கண் வளர்ந்து அருளுகிறவன் திருவடிகளை –
சம்சாரிகளை அக்கரைப் படுத்த வேணும் என்று திருப் பாற் கடலிலே கண் வளர்ந்து அருளுகிறவனுடைய திருவடிகளை
பூர்வஜன் -நமக்காக தானே முற்பட்டவன் -என்றபடி –

பரிசு புரிவார் –
சாஸ்திர உக்தமான படியே ஆஸ்ரயிப்பார் ஆவது –
பக்தி பிரகாரத்தாலே -ஏற்றபடி –

புகப் பெறுவர் போலாம் –
புகப் பெறுவாராமீ பேற்றில் குறை யில்லை –ஆஸ்ரயியாதே 
இழப்பார் இழக்கும் அத்தனை -என்கிறது –

புகப் பெறுவர் போலாம் –
தாம் புகப் பெறாத வெறுப்புச் சொல்கிறது –

இப்படிக் கொள்கிறது தன்னை ஆஸ்ரயிக்கைக்கு ஆள் இல்லாமையாலோ என்னில்
புரிவார்கள்-இத்யாதி
எப்படிப்பட்ட எவ்விடத்தே தான்-என்னில் –
புரிகை யாகிறது -செயலாதல் -விருப்பமாதல் –

புரிவார்கள் –
சாதகராய்த் திருவடிகளை ஆஸ்ரயிப்பார் -சபிப்பார் -ஜடை பின்னுவராய்
சம்சாரிகளில் பழையரான பிரம்மாதி தேவர்கள் –

தொல்லமரர் –
நாலு நாள் முற்பாடரானவர்கள்

கேள்வித் –
காண ஒண்ணாதே என்றும் கேட்டே போம் இத்தனை –
யாம் ந தேவோ முனய ந சாஹம் ந ச சங்கர ஜாநந்தி பரமேசச்ய
தத் விஷ்ணோ பரமம் பதம் -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-9-55-

துலங்கொளி சேர் தோற்றத்து-
அத்யர்க்கா நல தீப்தம் தத் ஸத்தா நம் -பார -ஆரண்ய -136-18-என்கிறபடியே
நிரவதிக தேஜோ ரூபமாய்க் கொண்டு தோற்றுவதான
ஆதித்ய வர்ணம் தமாசா பரஸ்தாத் -ஸ்வே-3-8- என்றும்
மேல் தோன்றும் சோதி வேத முதல்வர் -நாச் -10-2-இத்யாதி வத்

நல்லமரர் கோமான் நகர் –
சிலநாள் சம்சார ஸ்பர்சம் உண்டாய்ப் பின்பு ஒரு ஸூஹ்ருத விசேஷத்தாலே
அது கழிந்து க்ரமத்தாலே பெறுவார்கள் அன்றிக்கே
அச்ப்ருஷ்ட சம்சார கந்தராய்  ஸ்வ பாவ சித்தரான பெரிய திருவடி திரு அநந்த ஆழ்வான் உள்ளிட்ட
அயர்வறும் அமரர்களுக்கு நாயகன் ஆனவனுடைய நகரத்தை

நல்லமரர் கோமான் –
நாலு நாள் சாவாதே இருந்து பேர் படைத்த சாதகர் ஆனவர்கள் அன்றிக்கே சாத்யராய்
பிரியில் தரியாதே இருக்கும்படியான நித்ய ஸூரிகளுக்கு அதிபதி என்று அவனுக்கு ஸ்வரூபம் –
அவனுக்கு ஸ்வரூபம் கொடுக்க வல்லவர்கள்  நகர் –

நிர் விசேஷம் என்று போகாமே –
ஒரு திவ்ய தேசமும் –
திவ்ய புருஷர்களும் -தானுமாய் இருக்கப் பெறுவதே

நல்லமரர் கோமான் நகர் பாற் கடலான் பாதம் நறு மலரால் பரிசு புரிவார் புகப் பெறுவர் போலாம் –
இத்தால் –
அர்ச்சாவதாரத்திலே  ஆஸ்ரயித்து
பின்னை விபவமாய்
அநந்தரம் வியூஹமாய்
அநந்தரம் மோஷமாய்-பரமபதம் பெறுவார்கள் -என்று சொல்லுகிறார் –

சொல்லுகிறது ஆழ்வார்களுக்கு உப லஷணம் அல்ல என்னும் இடமும்
தங்கள் பிரதிபத்தியின் அளவுக்கு ஈடாகச் சொல்லுகிறார் என்னும் இடம் தோற்றுகிறது-

கடைக்குட்டி அநிருத்த ஆழ்வான் ஆகிற திருப் பாற் கடலிலே ஆச்ரயித்தவன் பரமபதம் பெறும் என்றது இறே
ஆகையால் அவற்றிலே எங்கேனும் ஓர் இடத்திலே ஆஸ்ரயித்தால்
அநந்தரம் பேறு சித்தம் -என்னும் இடம் தோற்றுகிறது-

————————————————————————–

கீழ் தமக்குப் பிறந்த பக்தியினுடைய பிரகாரத்தைச் சொன்னாராதல் –
அன்றிக்கே –
இங்கனே நடப்பதொரு ஆஸ்ரயணத்தை கற்பித்து இருக்கிறபடியைத் தெரிவிக்கிறாராதல்-
இதில் அவனுடைய நீர்மையை அனுசந்தித்து நிர்மமராய் வணங்குகிறார்-

நகர் இழைத்து நித்திலத்து நாள் மலர் கொண்டு ஆங்கே
திகழும் மணி வயிரஞ் சேர்த்து -நிகரில்லாப்
பைங்கமல மேந்திப் பணிந்தேன் பனி மலராள்
அங்கம் வலம் கொண்டான் அடி-4–

பதவுரை

நகர் இழைத்து–என்னுடைய நெஞ்சை எம்பெருமான் வாழக்கூடிய திருமண்டபமாக அமைத்து
நித்திலத்து நாள் மலர் கொண்டு–(அதிலே) ஸ்நேஹமாகிற முத்தை செவ்வி குன்றாத புறவிதழாக அமைத்து
திகழும் மணி வயிரம் சேர்த்து–ஸங்கம காமம் என்கிற நல்ல மாணிக்கத்தையும் வயிரத்தையும் அல்லியும் தாதுமாக வைத்து
நிகர் இல்லா–ஒப்பில்லாத
பைங் கமலம் ஏந்தி–பக்தியாகிற அழகிய தாமரைப் பூவைத் தரித்துக் கொண்டு
பனி மலராள் அங்கம் வலம் கொண்டான்–குளிர்ந்த தாமரைப் பூவிற் பிறந்த பிராட்டியை
வல மார்பினில் வைத்துக் கொண்டிருக்கும் பெருமானுடைய
அடி–திருவடிகளை
பணிந்தேன்–வணங்கினேன்.

நகர் இழைத்து நித்திலத்து நாள் மலர் கொண்டு –
பக்தியைச் சொல்லுகிறது-என்னவுமாம்
ஏவம் விதமான பூவை யுண்டாக்கி ஆஸ்ரயிக்க-என்னவுமாம் –

அன்பே தகளியா -என்று ஒரு விளக்கை ரூபித்தால் போலே
ஒரு புஷ்பமாக ரூபித்து அத்தைக் கொண்டு ஆஸ்ரயிக்கிறார்

நகர் இழைத்து-
எம்பெருமானுக்குப் பாங்காக தம்முடைய ஹ்ருதயத்திலே அவனுக்கு ஒரு வாச ஸ்தானத்தைக் கற்பித்து

நகர் -என்றது
நகரமாய் -கோயில் என்றபடி

நித்திலத்து நாண் மலர் கொண்டு –
நீர்மையை யுடைத்தான முத்தை  செவ்வியை உடைத்தான இதழாக புத்தி பண்ணி
சிநேக ரூபமாகிற இதழை யுடைத்தாக்கி

நித்திலத்து நாண் மலர் –
குளிர்ந்து பரிமளிதமாய் இருக்கை-
குளிர்த்தி யாகிறது த்விதா பஜயேயமப் யேவம் ந நமேயம் -யுத்த -36-11-என்னாது இருக்கை

நாண் மலர் -போக்யமாய் இருக்கை

ஆங்கே -அதிலே

திகழும் மணி வயிரஞ் சேர்த்து –
அபி நிவேசம் ஆகிற உஜ்வலமாகா நின்ற ரத்னங்களும் வைரங்களும் ஆகிற அல்லியையும் தாதியும் சேர்த்து யுண்டாக்கி
திகழா நின்றுள்ள மணியும் வைரமும் ஆகிறது -பக்தி விசேஷமாய் இருக்கிறபடி

நிகரில்லாப் பைங்கமல மேந்திப் பணிந்தேன் –
இப்படி உபமான ரஹிதமாய் இருப்பதொரு பாவ புஷ்பம் ஆகிற தாமரைப் பூவை தரித்துக் கொண்டு
பணிந்தேன் -ஆஸ்ரயித்தேன்-

பைங்கமலம் -பரந்த பூ
ஹ்ருதய கமலத்தைக் கொண்டு பணிந்தேன் –
மற்றுள்ள கமலங்களுக்கு ஒப்புண்டு போலே காணும்

இந்த ரூபத்தில் முத்தை நினைக்கிறது ச்நேஹத்தை
மணியும் வைரமுமாக நினைக்கிறது அபி நிவேசத்தை

நாடாத மலர் நாடி -திருவாய் -1-4-9- என்னக் கடவது இறே
பூசும் சாந்து என் நெஞ்சமே -திருவாய் -4-3-2-
பக்தியைப் பாவ புஷ்பமாக நிரூபிக்கைக்கு காரணம்
பெரிய பிராட்டியாரோடு எம்பெருமானை அனுபவிக்கையால் பிறந்த விபாகம்
ஆரைத் தான்  ஆஸ்ரயிக்கிறது என்னில்

பனி மலராள் அங்கம் வலம் கொண்டான் அடி-
நிரதிசய போக்யையான பெரிய பிராட்டியாரை வலத் திரு மார்பிலே அணைத்துக் கொண்டுள்ள
சர்வேஸ்வரனுடைய திருவடிகளிலே விழுந்தேன்

இத்தால்
ஆஸ்ரயணீய வஸ்து லஷ்மீ பதியான வேஷம் -என்கை-
பணிவுக்கு விஷயமாவான் ஸ்ரீ யபதி இறே
அவளுடைய சந்நிதியிலே அபுஷ்கலமான சமாஸ்ரயணமும் புஷ்கலமாம் இறே
ஆஸ்ரயிப்பார் உடைய நன்மை தீமை கணக்கிட ஒட்டாளே
நன்மைக்குப் பரிகை நம் உறவுக்குப் போகாது என்னும்
பனி மலராள் அங்கம் வலம் கொண்டான் அடி நிகரில்லாப் பைங்கமலம் ஏந்திப் பணிந்தேன்  –

————————————————————————–

பக்தியைத் தீபமாகப் பேசினார் –
நகரம் கோயிலாகப் பேசினார் –
இதில் பக்தி தன்னைச் சொல்லுகிறார் –

அன்றிக்கே
பக்திமான்களுக்கு ஸூலபனாம்படி யாக வுமாம் –

நிகரில்லாப் பைங்கமலம் ஏந்திப் பணிந்தேன் -என்றாரே –
ஆழ்வீர்-நீர் நம்மைப் பணிந்தீரோ என்ன
ஒன்றைச் சொன்னேன் அத்தனை -இப்படிப்பட்ட உன்னை ஒருவராலும் பரிச்சேதிக்கலாய் இருந்ததோ -என்று
கீழ்ப் பாட்டில் சொன்ன நீர்மையை அறியப் போமோ -என்கிறார் –
பணிந்தார்க்குத் தரம் செய்யும் படியாக வுமாம் –

அடி மூன்றால் இவ்வுலகம் அன்று அளந்தாய் போலும்
அடி மூன்று இரந்து அவனி கொண்டாய் -படி நின்ற
நீரோத மேனி நெடுமாலே நின்னடியை
யாரோத வல்லார் அறிந்து-5-

பதவுரை

படி நின்ற–பூமியிலே அவதரித்து நின்ற
நீர் ஓதம் மேனி நெடுமாலே–கடல் வண்ணனான ஸர்வேச்வரனே!,
அன்று இ உலகம்–முன்பொரு காலத்தில் இவ் வுலகத்தை
அடி மூன்றில் அளந்தாய் போலும்–மூவடியாலே அளந்து கொள்பவன் போல
அடி மூன்று அவனி–மூவடி நிலத்தை
இரந்து கொண்டாய்–(மாவலி யிடத்தில்) யாசித்துப் பெற்றாய்;
நின் அடியை–இப்படிப்பட்ட உனது திருவடிகளை
அறிந்து–நன்றாகத் தெரிந்து கொண்டு
ஓத வல்லார் ஆர்–பேச வல்லவர்கள் யாவருளர்? (யாவருமில்லை)

அடி மூன்றால் இவ்வுலகம் அன்று அளந்தாய் போலும்-
இப்படி பக்திமான்களுக்காக வந்து திரு வவதாரம் பண்ணி -அவர்கள் பக்கல் உண்டான பஷ பாதம் தோற்றும்படி
மூன்று அடிக்கு உள்ளே அளப்பதாகத் திரு உள்ளத்தாலே கணிசித்து
அதுக்கு ஈடாக ஏற்கவே மூன்றடியை அபேஷித்தான் ஆய்த்து-
அடி மூன்றாலே இரந்து லோகத்தை அன்று அளந்து கொண்டாய்-

அதாகிறது –
தன்னதைத் தான் கொண்டானாகை யன்றிக்கே  
பிறரத்தைத் தான் கொண்டான் என்று தோற்றுகைக்காக-

அடி மூன்று இரந்து அவனி கொண்டாய் –
பூமியை உனக்காக்கிக் கொள்ளுகைக்காக அளக்கைக்காக மூன்றடியை யாசித்து
இரண்டு திருவடிகளாலே இந்த லோகத்தை அன்று அளந்து கொண்டாய்

அளக்கைக்காக அடி மூன்றையும் பெற்று உடையாய்க் கொண்டு
இரண்டு அடியாலே லோகங்களை அன்று அளந்து கொண்டாய்
அதுக்கடியாக சிற்றடியாலே மூன்று அடிக்கு பூமியை இரந்து ப்ராப்தி பண்ணிக் கொண்டாய்
தூர தர்சி யாகையாலே இரண்டு அடியாலே அளந்து ஓரடிக்குச் சிறையிட்டு வைப்பதாக மூன்று அடியை இரந்தாய்
உன்னுடைய இந்த நினைவை ஒருவராலே அறியலாய் இருந்ததோ

படி நின்ற-
பூமியிலே ரஷகனாய்ச் செவ்வே நின்ற –
அன்றிக்கே
ஒப்பாய் நின்ற ஸ்வ பாவமாய் நின்ற என்றுமாம் –

நீரோத மேனி நெடுமாலே –
ஓதம் கிளர்ந்த கடல் போலே இருக்கிற வடிவு அழகை யுடையையாய் -சர்வாதிகனான சர்வேஸ்வரனே

நெடுமாலே –
மிக ஓங்கின வடிவை யுடையவனே -ஆஸ்ரித வ்யாமுக்தன் ஆனவனே -என்றுமாம் –

நீரோத மேனி நெடுமாலே –
அழகுக்கு எல்லை காணிலும் வ்யா மோஹத்துக்கு எல்லையைக் காணப் போகாது

நின்னடியை யாரோத வல்லார் அறிந்து-
உன் திருவடிகளினுடைய நீர்மையை அறிந்து ஓத வல்லார் ஆர் –
ஆர் அறிந்து பேச வல்லார் -என்கிறார்
என்னைப் போலே அறிவு கெட்டுப் பேசில் பேசும் அத்தனை
அபரிச்சேத்யனான உன் திருவடிகளை அறிந்து ஆஸ்ரயிக்க வல்லார் இல்லை -என்கிறார்

நீ மஹா பலி பக்கல் சென்று இரந்து பூமியை அளந்து கொண்ட அச் செயலை பர்ச்சேதிக்கில் அன்றோ –
உன்னைச் சிலராலே பரிச்சேதித்து ஆஸ்ரயிக்கலாவது-என்கிறார்
உன் மேன்மையை எல்லை காணிலும் நீர்மையை எல்லை காண ஒண்ணாது -என்றபடி

————————————————————————–

அறியப்  போமோ -என்றாரே –
ஜ்ஞானத்துக்கு அவிஷயமாய்த் துச்சமாய் அறியப் போகாது என்றார் அன்று –
இயத்தா ராஹித்யத்தை சொல்லுகிறார் –
ஆகில் பின்னை இங்கனே எல்லோரும்  அறியாதே இகழ்ந்து போம் இத்தனையோ என்னில் –
அது வேண்டா

இதர விஷயங்களில் ருசி அற்று அவன் திரு நாமங்களைச் சொல்லி ஸ்தோத்ரம் பண்ணுமவர்கள்
அவன் திருவடிகளை காணப் பெறுவார் என்கிறார் –
அபி நிவேசத்தை யுடையராய் ஆஸ்ரயிக்க வல்ல மஹா பாக்யவான்கள் அறிய வல்லார் -என்னுதல் –
அவன் தானே காட்டக் காண்பார்க்கு அறியலாம் -என்னுதல்-

அறிந்து ஐந்தும் உள்ளடிக்கி யாய் மலர் கொண்டு ஆர்வம்
செறிந்த மனத்தராய் செவ்வே -அறிந்தவன் தன்
பேரோதி ஏத்தும் பெரும் தவத்தோர் காண்பரே
காரோத வண்ணன் கழல்-6-

பதவுரை

அறிந்து–(எம்பெருமானுடைய வைலக்ஷண் யத்தையும் விஷயங்களின் கெடுதல்களையும் நன்றாக) அறிந்து கொண்டு
பஞ்சேந்திரியங்களையும்–பஞ்சேந்திரியங்களையும்
உள் அடக்கி–(பட்டிமேய வொண்ணாதபடி தடுத்து) பகவத் விஷயத்திலே ஊன்றும்படி நியமித்து
ஆய் மலர் கொண்டு–(பகவானுக்கு ஏற்கும்படி) ஆராய்ந்த புஷ்பங்களை ஸம்பாதித்துக் கொண்டு
ஆர்வம் செறிந்த மனத்தர் ஆய்–பக்திமிகுந்த மனத்தை யுடையராகி
செவ்வே அறிந்து–(எம்பெருமானுக்கும் தமக்குமுள்ள முறைமையை) நன்றாக அறிந்து
அவன்தன் பேர்–அப்பெருமானது திருநாமங்களை
ஓதி–இடைவிடாமற் சொல்லிக் கொண்டு
ஏத்தும்–துதிக்கின்ற
பெரும் தவத்தோர்–மஹாபாக்யசாலிகள்
கார் ஓதம் வண்ணன் கழல்–கருங்கடல் வண்ணனான அப்பெருமானுடைய திருவடிகளை
காண்பர்–கண்டு அநுபவிக்கப் பெறுவார்கள்.

அறிந்து –
ஹேய உபாதேய விபாகத்தைப் புத்தி பண்ணி –
பகவத் விஷயத்தினுடைய வை லஷண்யத்தையும் –
சப்தாதி விஷயங்களினுடைய  பொல்லாங்கையும் அறிந்து –
சரீரத்தினுடைய ஹேயதையை அறிந்து -என்றுமாம் –
ஐந்தும் உள்ளடிக்கி-
அந்த ஹேயமான சப்தாதி விஷயங்களிலே ஸ்ரோத்ராதி அஞ்சு  இந்த்ரியங்களும் போகாதபடி நியமித்து பிரத்யகாக்கி -உள்ளே விஷயம் காட்டிக் கொடுக்கிறபடி
பட்டிப் பசுவுக்கு அகத்தே கட்டி இரையிடுமாப் போலே அவன் வடிவு அழகிலே மூட்டுகை –
யாய் மலர் கொண்டு –
சத்ருசமான புஷ்பாதி உபகரணங்களைக் கொண்டு -செவ்விப் பூக்களைக் கொண்டு –
ஆர்வம் செறிந்த மனத்தராய்-
ச்நேஹம் மிக்க
மனசை யுடையராய் அபி நிவேசம் நெருங்கின மனஸ் ஸூ
செவ்வே அறிந்து –
அவன் சேஷீ-நாம் சேஷ பூதர் -என்கிற முறையை நேரே புத்தி பண்ணி
அவன் தன்பேரோதி ஏத்தும் பெரும் தவத்தோர்-
அவன் திரு நாமங்களைச் சொல்லி அவனை ஸ்தோத்ரம் பண்ணும் பாக்யாதிகர்-இதுவே யாத்ரையாக இருக்குமவர்கள் –
காண்பரே காரோத வண்ணன் கழல்-
ஸ்ரமஹரமான கருத்த கடல் போலே இருக்கிற வடிவை யுடையனானவன் திருவடிகளைக் காணப் பெறுவார் –
காண்பரே –
தம்முடைய நோயாசை -நப்பாசை –
காரோத வண்ணன் –
அயர்வறும் அமரர்களுடைய சாத்துப்படியான உடம்பு –
காண்பரே –
இது நிச்சயம் –

————————————————————————–

இருந்தபடி இதுவான பின்பு -அவர்களில் ஆஸ்ரயிப்பார் ஆர் -என்று அறிந்து நீயும் விடாதே
அவன் திருவடிகளை ப்ரீதி பூர்வகமாக அனுசந்திக்கப் பார் -என்று 
தம் திரு உள்ளத்தைக் குறித்து அருளிச் செய்கிறார்
அவனையே உகந்தார் காண்பாரான பின்பு நீயும் அவனையே உகந்து ஆஸ்ரயி-என்கிறார் –
பிரதி பந்தகம் யுண்டாகில் செய்வது என்-என்னில் நமுசி படுமது படும் இத்தனை –

கழல் எடுத்து வாய் மடித்துக் கண் சுழன்று மாற்றார்
அழல் எடுத்த சிந்தையராய் அஞ்ச -தழல் எடுத்த
போராழி ஏந்தினான் பொன் மலர்ச் சேவடியே
ஓராழி நெஞ்சே உகந்து-7-

பதவுரை

ஆழிநெஞ்சே–ஆழ்ந்த மனமே!
முன்பு த்ரிவிக்ரமாவதாரம் செய்தருளின போது)
கழல் எடுத்து–திருவடிகளை உயரத் தூக்கினவனாயும்,
மாற்றார்–எதிரிட்ட நமுசி முதலானவர்கள்
அழல் எடுத்த சிந்தையர் ஆய் அஞ்ச–பயாக்னி கொளுந்தின நெஞ்சை யுடையவர்களாய் நடுங்கும்படியாக
வாய் மடித்து–உதட்டை மடித்துக் கடித்துக்கொண்டு
கண் சுழன்று–(பார்க்கிற பார்வையிலேயே அவ்வெதிரிகள் சுருண்டு விழும்படி) கண்கள் வட்டமிட
தழல் எடுத்த போர் ஆழி–நெருப்பையுமிழ்கிற போர் செய்யவல்ல திருவாழியாழ்வானை
ஏந்தினான்–தரித்தவனாயுமிருக்கிற எம்பெருமானுடைய,
பொன்மலர் சே அடியே–அழகிய மலர்போன்ற திருவடிகளையே,
உகந்து ஓர்–விரும்பி அநுஸந்திப்பாயாக.

கழல் எடுத்து-
திரு யுலகு அளந்து அருளின போது-ஒரு திருவடிகளை மேலே எடுத்து –
இத்தால் ஆஸ்ரயித்தாரை வாழ்வித்த படி –
மேல் -அநாஸ்ரிதரைக் கெடுத்த   படி

வாய் மடித்துக் கண் சுழன்று மாற்றார் அழல் எடுத்த சிந்தையராய் அஞ்ச –
தழல் எடுத்த போராழி ஏந்தினான் –
வாய் மடித்துச் சுழலா நின்றுள்ள கண்களை யுடையராய் –
ஹ்ருதயத்தில் கொளுத்தின பயாக்னியை உடையரான நமுசி பிரப்ருதிகள் அஞ்சும்படி –
அவர்கள் மேலே விழுமாப் போலே இருக்கிற திரு ஆழியை ஏந்தினான் -என்றபடி

பொன் மலர்ச் சேவடியே –
பொன் போலேயும் மலர் போலேயும் ஸ்ப்ருஹணீயமுமாய் ஸ்லாக்யமுமான திருவடிகளையே

ஓர் –
அனுசந்திப்பாய்

ஆழி நெஞ்சே –
அளவுடைய நெஞ்சே -அது செய்யும் இடத்து

உகந்து ஓர் –
விருப்பத்தோடு அனுசந்திக்கப் பார்
உன் அளவுடைமை கொண்டு ஓராதே -உகப்பைக் கொண்டே ஓர் –
தேவைக்காக ஒண்ணாது –

ஓர் –
ஆஸ்ரயிக்கப் பார் -என்றபடி-

————————————————————————–

ஆன பின்பு -இது செய்யும் இடத்து சாத்ரவம் அநு வர்த்தியாதபடி செய்யப் பார் –
அதாவது –
பொய் யுகப்பு பாத்யமாம்படி சொல்லுகிறது –
ஆஸ்ரயிக்கும் இடத்தில் ப்ரதிபந்தகம் உண்டானாலோ என்ன
பூதனையை முடித்தாப் போலே நீ ஆஸ்ரயிக்க –
அவன் தானே விரோதியைப் போக்கும் என்கிறார் –

நமுசி பக்கல் பண்ணின வைமுக்ய பிரசங்கத்தாலே
பூதனையை முடித்த படியை நினைத்து அருளிச் செய்கிறார்-

உகந்து உன்னை வாங்கி ஒளி நிறம் கொள் கொங்கை
அகம் குளிர உண் என்று அளாவி உகந்து
முலை  யுண்பாய் போலே முனிந்து உண்டாய் நீயும்
அலை பண்பா லானமையால் அன்று—8-

பதவுரை

(பூதனை யானவள்)
உகந்து–யசோதைப் பிராட்டியைப் போல அன்புடையவளாக அபிநயஞ்செய்து
உன்னை வாங்கி–(நீ தூங்கும்போது வந்து) உன்னைத்தூக்கியெடுத்து
ஒளிநிறம் கொள் கொங்கை–(பால் விம்மியிருத்தலால்) ஒளிவிட்டு அழகு பெற்றுள்ள (தனது) ஸ்தனத்தை
அகம் குளிர உண் என்றான்–(‘குழந்தாய்!) மனமகிழ்ந்து உண்ணு’ என்று சொல்லி வாயிலே வைத்தாள்.
ஆனமையால்–ஆகையினாலே,
அன்று–அவள் முலைதந்த; அக்காலத்தில்
நீயும்–சிறு குழந்தையான நீயும்
அலை பண்பால்–அலையெறிகிற (அதிகமான) உன் ஸௌலப்ய குணத்தினாலே
முலை உண்பாய் போலே–மெய்யே ஸ்தன்யபானஞ்செய்பவனைப் போலே
உகந்து–(பெறாப்பேறு பெற்றாற் போலே) மகிழ்ந்துகொண்டு
முனிந்து–(மனத்தில்) சீற்றங் கொண்டு
ஆவி–(அந்தப் பூதனையின்) உயிரை
உண்டாய்–உறிஞ்சி உட்கொண்டாய்.

உகந்து –
தாய் வடிவு கொண்டு வந்தவள் ஆகையாலே தாயார் உகக்குமா போலே பொய்யே உகந்து –
யசோதைப் பிராட்டி உகக்குமா போலே உகந்து –
உள்ளே முனிவு கிடக்க -உகப்பை மெய்யாக பாவித்த படி –
மெய்யாகா விடில் முலை சுரவாதே-நெஞ்சு இல்லையாகில் இல்லையே –

உன்னை வாங்கி –
யசோதைப் பிராட்டி சநேஹத்தோடே தூக்கி எடுக்குமா போலே -உறக்கத்திலே தூக்கி எடுத்து –
அவள் பரிவாலே ஒசழக்காக எடுக்குமா போலே எடுத்து –

ஒளி நிறம் கொள் கொங்கை-
யசோதைப் பிராட்டி யுடைய முலை போலே பாலாலே விம்மி உஜ்வலமாகா நின்ற முலைகளை –
முலைப்பால் நெறித்து அத்தாலே புகர் பெற்றபடி –

அகம் குளிர உண் என்றாள்-
தாய்மார் ஆனவர்கள் எடுப்பதற்கு முன்பே பிள்ளைகளுடைய ஸ்ரமம் ஆறும்படி -தந்தாமுடைய உகப்பு தோற்ற –
வயிறு நிறைய உண் என்று சொல்லுவான சில சொற்கள் உண்டு -அவற்றைச் சொன்னாள்-
உண்டு அல்லது நிற்க ஒண்ணாத படி ஹ்ருதயம் குளிரும்படிக்கு ஈடாகச் சொன்னாள் –
முலை யுண்ண வேண்டாதே பேச்சிலே வயிறு நிறையும்படி

ஆவி-
அவளுடைய பிராணனை

நீயும் உகந்து முலை  யுண்பாய் போலே முனிந்து உண்டாய் –
நீயும் உகந்து முலை யுண்பாரைப் போலே முனிந்து முடித்தாய் –
அவள் பொய்யே யுகந்து முடிக்க நினைத்தால் போலே
நீயும் பொய்யே உகந்து முலை யுண்பாரைப் போலே முனிந்து முடித்தாய் –
இவனும் முனிவு தெரியாதபடி உகந்தபடி
அவளும் முலை கொடா விடில் தரியாதாளாய் வந்தாள்-
இவனும் முலை யுண்ணா விடில் தரியாதானாய் யுண்டான்

முனிந்து யுண்கை யாகிறது
அகாலத்திலே முலை கொடுத்தால் பிள்ளைகள் சீறுவர்கள் ஆய்த்து-
நம்முடைய பரமபக்தியும் பிரபத்தியும் எல்லாம் நிரூபித்தால் பூதனையுடைய உகப்பு போலே பொய்யாய் இருக்கும் –

அலை பண்பா லானமையால் அன்று—
அவள் அப்படி முதல் அழியக் கார்யம் பார்த்த அன்று நீ இப்படிச் செய்தது –
நீ அலைத்த பண்பை யுடையை ஆகையாலே இறே-
மிக்க நீர்மையை யுடையை ஆகையாலே இறே –
மிக்க குணத்தை யுடையை ஆகையாலே இறே –

அலை பண்பால் –
பெரும் குண சமுத்ரம் ஆகையால் –
உனக்கு ரஷிக்க மித்ர பாவம் அமைந்து இருக்கச் செய்தே -பூதனை தன்னை முடித்து –
ஜகத்துக்கு சேஷியான யுன்னை யுண்டாக்கித் தந்தது -நீ குணாதிகனாகை இறே
அவளை முடித்து உன்னைத் தந்தது ஆஸ்ரிதர் பக்கல் உனக்கு உண்டான ஓரம் இறே என்னுதல்-
தங்களை வாழ்விக்கைக்காக இறே என்னுதல்

அங்கன் அன்றிக்கே
அலை பண்பால் –
அழிந்த  நீர்மையை யுடையளாய் என்று அவள் பக்கலிலே பொகடவுமாம்

உகந்து உன்னை வாங்கி ஓளி நிறம் கொள் கொங்கை அகம் குளிர
உண் என்றாள்  ஆனமையால்
அன்று நீயும் உகந்து முலை யுண்பாய் போல் முனிந்து
ஆவி யுண்டாய் அலை பண்பால் –
என்று அந்வயம்-

————————————————————————–

வேணுமாகில் இவ்விஷயத்தில் நிலை நின்ற பக்தியை யுடைய யசோதைப் பிராட்டியைச் சொல்லீர் -என்கிறார் –
இவளுடைய ஸ்நேஹத்துக்கு உபமானம் உண்டோ -என்கை-
பூதனையை அனுசந்தித்த நெஞ்சாறல் தீர யசோதைப் பிராட்டியும் ஒருத்தியே -என்று உகக்குகிறார் –

அன்றது கண்டு அஞ்சாத ஆய்ச்சி உனக்கு இரங்கி
நின்று முலை தந்த இந்நீர்மைக்கு -அன்று
வரன் முறையால் நீ  யளந்த மா கடல் ஞாலம்
பெரு முறையால் எய்துமோ பேர்த்து—9-

பதவுரை

அன்று–(பூதனை பிணமாக விழும்படி நீ முலையுண்டு அவளுயிரை முடித்த) அக்காலத்தில்
அது கண்டு–முலை கொடுத்த அவள் செத்துக்கிடந்த அச் செய்தியைக் கண்ணாலே பார்த்தும்
அஞ்சாத–‘முலை கொடுக்கிற நாமும் ஒருகால் செத்துப் போவோமோ!’ என்று பயப்படாத
ஆய்ச்சி–யசோதைப் பிராட்டியானவள்
நன்று–தரித்து நன்று
அந்தப் பூதனையின் (விஷத்திற்கு மாற்றாக)–
உனக்கு இரங்கி முலை தந்த–உன்னிடத்துப் பரிவு கொண்டு முலை கொடுத்த
இ நீர்மைக்கு–இந்தப் பெருங் குணத்திற்கு,
அன்று நீ வரன்முறையால் அளந்த மா கடல் சூழ் ஞாலம்–முன்பு நீ சிறந்த உறவினாலே அளந்து கொண்ட கடல் சூழ்ந்த இவ்வுலகமானது
பெருமுறையால் எய்துமோ–இன்னது பெரியதென்று பார்க்கும் முறையில் ஒப்பாகப் பொருந்துமோ?

அன்றது கண்டு அஞ்சாத ஆய்ச்சி-
தனக்கு அஞ்சுகை தவிர்ந்து -அத்தலைக்கு அஞ்சினபடி –

உனக்கு இரங்கி-
பரிவாலே வயிறு பிடித்த படி
நின்று முலை தந்த இந் நீர்மைக்கு –
தளராதே கால் தரையிலே பாவும்படி நின்று முலை தந்த இந்த ஸ்வ பாவத்துக்கு
மோஹிக்க வேண்டும் தசையிலே தரித்து நின்று -ரஷை பார்த்த படி

அன்று வரன் முறையால் நீ  யளந்த –
அன்று வரிஷ்டமான க்ரமத்தாலே -ஸ்வா பாவிகமான ஸ்வாமி த்வ ப்ராப்தியாலே நீ அளந்து கொண்ட –
பெற்ற தாயான முறையாலே ஜகத்துக்கு முலை கொடுத்த படி –
முறையால் இவ் வுலகு எல்லாம் படைத்து அளந்தாய் -திருவாய் -3-1-10- இத்யாதி வத்

மா கடல் ஞாலம்-
பெரிய கடல் சூழ்ந்த பூமியானது –

பெரு முறையால் எய்துமோ பேர்த்து–
பெருமைக்கு ஒப்பாக முன்னிட்டால் போருமோ -என்கிறார் –
அதுவும் பெரிய செயல் –
இதுவும் பெரிய செயல்
ஆனாலும் அந்த ஸ்வ பாவத்துக்கு
இது மறித்துப் பார்க்கும் போதுபெருமைக்கு ஒப்பாகப் போருமோ –

இதில் இது பெரிது என்று ஒன்றுக்கு ஓன்று பெருக்கினால் பூமியை அளந்தது  இந் நீர்மைக்கு ஒக்குமோ -என்கிறார் –
பின்னைச் செய்த செயல் விஞ்சி இருக்கும் இறே-

பேர்த்து–பெரு முறையால் எய்துமோ –
அவளுடைய ஸ்வ பாவத்துக்கு நீ பெரிதாகச் செய்த செயல் தெரியட்டும் ஒப்பன்று என்கிறது –

பேர்த்து –
பேர்த்தால் -எண்ணினால் -என்னவுமாம் –

————————————————————————–

ஆக -இருந்தபடி இதுவாகையால்
இந்த யசோதைப் பிராட்டியினுடைய பக்தியை முதலிலே தேவர் பக்கலிலே பண்ண விறே எடுப்பது –
அந்த ஸ்நேஹம் இன்றிக்கே இருக்கச் செய்தே உன் பக்கலிலே ப்ராவண்யம் உண்டாய்த்து
இனி அநாதி காலம் தேவதாந்த்ரங்கள் கால் கடையிலே துவண்டு பட்ட தண்மை
இனி ஒரு காலமும் வாராத படி தேவர் நோக்கி யருள வேணும் -என்கிறார் –

பேர்த்தனை மா சகடம் பிள்ளையாய் மண்ணிரந்து
காத்தனை பல்லுயிரும் காவலனே -ஏத்திய
நா வுடையேன் பூ வுடையேன் நின்னுள்ளி நின்றமையால்
கா அடியேன் பட்ட கடை———-10-

பதவுரை

காவலனே–ஸர்வ ரக்ஷகனே!,
பிள்ளைஆய்–சிறு குழந்தையாயிருந்து
மா சகடம்–(அஸுராவேசமுள்ள) பெரிய வொரு வண்டியை
பர்த்தனை–கட்டழியும்படி உதைத்துத் தள்ளினாய்;
மண்–பூமியை
இரந்து–(மஹாபலியினிடத்தில்) யாசித்துப் பெற்று
(திருவடியாலே குளிரத்தடவி)
பல் உயிரும்–எல்லா ஆத்மாக்களையும்
காத்தனை–ரக்ஷித்தருளினாய்;
நின்–(இப்படி ரக்ஷகனான) உன்னை
உள்ளி நின்றமையால்–(ஆச்ரயிக்கத் தக்கவனாக) மனப்பூர்வமாக எண்ணியிருப்பதனால்
ஏத்திய நா உடையேன்–உன்னைத் துதிப்பதையே ஸ்வபாவமாகவுள்ள நாக்கை யுடையவனாயிருக்கிறேன்;
பூ உடையேன்–(அர்ச்சிப்பதற்கு உரிய) புஷ்பங்களையுமுடையவனாயிருக்கிறேன்;
(ஆனபின்பு)
அடியேன்–உனக்கு அடியவனாயிருக்கும் பெரும் பதவியைப் பெற்றிருக்கிற நான்
பட்ட–வெகுகாலமாக அடைந்துள்ள
கடை–தாழ்வுகளை
கா–போக்கி யருள வேணும்.

பேர்த்தனை மா சகடம் பிள்ளையாய்-
பிள்ளையான தன்மையில் குறைவற்று இருக்கச் செய்தே
ஒன்றால் சலிப்பிக்க அரிதான பெரிய சகடத்தை கட்டழியத் தள்ளிப் பொகட்டாய் –

மா சகடம் –
அது இவன் அருகில் வரில் என்பட கடவோம்

மண்ணிரந்து காத்தனை  பல்லுயிரும்-
உன் உடைமையைப் பறித்துக் கொள்ள இந்த்ரனுக்காக அர்த்தித்வத்தில் குறையாதே நின்று பெற்று
உன் திருவடிகளாலே எல்லார் தலையிலும் ஸ்பர்சித்து அளந்து கொண்டு
சேதன வர்க்கத்தை அடைய நோக்கி உஜ்ஜீவிப்பித்தாய் –

காவலனே –
இங்கனே செய்ய வேண்டுகைக்கு அடி என் என்னில் -ரஷகன் ஆகையாலே
ரஷை அவனுக்கு ஸ்வரூபம் ஆனால் போலே
ரஷ்யத்துக்கு அடிமை செய்வது ஸ்வ பாவம் –
காவலன் ஆவதின் கார்யம் காக்கை -சேஷத்வத்தின் கார்யம் சேஷ வ்ருத்தி-
ஆனால் நீர் இவை கொண்டு கொள்ளப் புகுகிற கார்யம் என் என்னில்  –

நின்னுள்ளி நின்றமையால்-
இப்படிப்பட்ட ஸ்வ பாவத்தை யுடையனான உன் பக்கலிலே வைக்கப் பட்ட
அனுசந்தானத்தை யுடையேன் ஆகையாலே –

ஏத்திய நா வுடையேன் பூ வுடையேன் –
உன்னை ஸ்துதிக்கிற வாக் இந்த்ரியத்தையும்
உன் பக்கலிலேயான காயிக வியாபாரத்தையும் -யுடையேன் ஆனேன் –

உடையேன் என்கையாலே
அடிமை செய்கைக்கு உப கரணமான ஏந்திய வா வுடையேன் –
தனத்துத் தானே யேத்துகைக்கு ஈடான நாவை யுடையேன் ஆனேன்

பூ வுடையேன் – என்கையாலே
அடிமை செய்கைக்கு உப கரணமான பூவையும் யுடையேன் ஆனேன் –

நின்னுள்ளி நின்றமையால் -ஏந்திய நா வுடையேன் பூ வுடையேன் –
உன்னை சமாஸ்ரயணீயனாக யுடையேன் ஆகையாலே
ஆஸ்ரயிக்கும் கரணங்களையும் த்ரவ்யங்களையும் புஷ்கலமாக  உடையேன் ஆனேன் –

ப்ராப்த விஷயத்தை நினைக்கையாலே பரிபூர்ண சமாஸ்ரயணம் பண்ணினேன் ஆனேன் –
அனுசந்திக்கப் படுகிற விஷயம் நீ யாகையாலே எனக்கு ஒரு குறை இல்லை
ஆனாலும் செய்ய வேண்டுவது ஓன்று உண்டு –

கா அடியேன் பட்ட கடை –
உனக்கு அடியேனான நான் அப்ராப்த விஷயங்களான இதர தேவதைகளின் காலிலே விழுந்து
தாழ்வு செய்கையால் வந்த தண்மை
இனி முன்னம் வாராதபடி தேவர் பார்த்து அருள வேணும்

அடியேன் பட்ட கடை கா –
அடிமை யாகிற பெருமையை யுடைய நான்

தலையான நான்
கடையான அடிமைப்பட்ட எளிமை இனி வாராதபடி பார்த்து அருள வேணும்

அடியேன் பட்ட கடை –
அனந்யார்ஹ வஸ்து பட்ட பாடே –

————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பூதத் ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

இரண்டாம் திருவந்தாதி -பாசுரங்கள் -81-100-திவ்யார்த்த தீபிகை சாரம்–

October 4, 2014

எம்பெருமானுடைய ஸாக்ஷாத்காரம் தமக்கு வாய்த்த படியை வாயாரப் பேசுகிறார்.

பகல் கண்டேன் நாரணனைக் கண்டேன் கனவில்
மிகக் கண்டேன் மீண்டவனை மெய்யே -மிகக் கண்டேன்
ஊன் திகழும் நேமி யொளி திகழும் சேவடியான்
வான் திகழும் சோதி வடிவு -81-

பதவுரை

பகல் கண்டேன்–இராக்காலம் கலசாமல் ஒரே பகற் போதாய்ச் செல்லுகிற நல் விடிவைக் கண்டேன். (அதாவது என்னவென்றால்)
நாரணனை கண்டேன்–ஸ்ரீமந் நாராயணனாகிற என்று மஸ்தமியாத ஆதிதயனைக் கண்டேன்,
மீண்டு–இன்னமும்,
கனவில்–மாநஸ ஸாக்ஷாத் காரத்திற் காட்டிலும்
மிக மெய்யே–மிகவும் ப்ரத்யக்ஷமாக
ஊன் திகழும் நேமி–திருமேனியில் விளங்குகின்ற திருவாழியை யுடையவனும்
ஒளி திகழும் சே அடியான்–பிரகாசம் மிக்க திருவடிகளை யுடையவனுமான அப்பெருமானுடைய
வான் திகழும்–பரமபதத்திலே விளங்குகின்ற
சோதி வடிவு–சோதி மயமான வடிவத்தை
மிக கண்டேன்-(இங்கே) நன்று ஸேவிக்கப் பெற்றேன்.

இந்த ஸம்ஸாரத்தில் முப்பது நாழகைக்கு ஒருமுறை இராப்பொழுதும் பகற்பொழுதும் மாறி மாறி வந்தாலும்
எம்பெருமானுடைய ஸேவை கிடைக்கப்பெறாத காலத்தைக் காளராத்திரியாகவே ஞானிகள் கருதுவர்கள்.
ஸூரியன் விளங்குங்காலம் பகற்பொழுது என்றும், அங்ஙனல்லாத காலம் இராப்பொழுதென்றும்
ஸாமாந்யர்கள் நினைத்திருப்பர்களாயினும், விஷேச ஞானிகள் அங்ஙனம் நினைத்திரார்கள்.
பகவத் ஸேவை வாய்க்குங்காலம் எதுவோ, அதுவே பகல், மற்றது இரவு – என்பதை இவர்களது ஸித்தாந்தம்.
அதனை அடியொற்று ஆழ்வார் “பகற் கண்டேன்“ என்கிறார். எம்பெருமானை ஸேவிக்கப் பெற்றேன் என்பது இதன் கருத்து.
இக்கருத்தை பிறர் தெரிந்து கொள்ளுதல் அரிதாகையாலே தாமே இதனை விவரணஞ் செய்தருள வேண்டி
“நாரணனைக் கண்டேன்“ என்கிறார்.

இவ்விடத்தில் பெரியவாச்சான்பிள்ளை வியாக்கியானவருளிச் செயல்காண்மின் –
“(பகற்கண்டேன் தாளராத்ரியாய்ச் செல்லாதே விடியக் கண்டேன் வடுகர் வார்த்தை போலே தெரிகிறதில்லை,
எங்களுக்குத் தெரியும்படி சொல்லீரென்ன, (நாரணனைக் கண்டேன்) அஸ்தமியாத ஆதித்யனைக் கண்டேன்.

இப்படி இவர் “பகற்கண்டேன்“ என்றும் “நாரணனைக் கண்டேன்“ என்றும் சொல்லக் கேட்டவர்கள்
‘நீர் அடிக்கடி கண்டேன் கண்னே என்கிறதெல்லாம் கனவுபோல நெஞசில் தோற்றுகிற தோற்றத்தை தானே
சொல்லுகிறீர் இப்போது கண்டேனென்கிறதும் அப்படிப்பட்ட தோற்றத்தானே‘ என்ன
இப்போது நான் விலக்ஷணமாகக் கண்டேனென்கிறார் மற்ற அடிகளால்,
பரமபதத்திலே “ஸதா பச்யந்தி ஸூரய“ என்று நித்யஸூரியர்கள் கண்டுகொண்டிருக்கும்
திவ்யமங்கள விக்ரஹத்தை மெய்யே காணப்பெற்றே னென்றாராயிற்று.

வான் திகழும் சோதிவடிவு கைகின்ற சோதி வடிவை என்று முரைப்பர்.

————————————————————————–

வடிக்கோல வாள் நெடுங்கண் மா மலராள் செவ்விப்
படிக்கோலம் கண்டு அகலாள் பன்னாள்-அடிக்கோலி
ஞாலத்தாள் பின்னும் நலம் புரிந்தது என் கொலோ
கோலத்தால் இல்லை குறை–82–

பதவுரை

வடி கோலம்–வடிக் கட்டின அழகை யுடையவளும்
வாள நெடுங்கண்–ஒளி பொருந்திய நீண்ட திருக்கண்களை யுடையவளும்
மாமலராள்–சிறந்த தாமரை மலரில் பிறந்தவளுமான பெரிய பிராட்டியார்
செல்வி படிகோலம்–சிறப்புற்ற (அவனது) திருமேனியின் அழகை கண்ணால் அநுபவித்து
பல் நாள் அகலாள்–க்ஷண காலமும் விட்டுப் பிரியாமல் எப்போதும் கூடியே யிருக்கின்றாள்
பின்னும்–எம்பெருமானுடைய அழகிலே பிராட்டி ஆழங்காற்பட்டு அழுந்துகிற படியைக் கண்டுவைத்தும்
ஞாலத்தாள்–பூமிப்பிராட்டியானவள்
அடிக்கோலி–பாரித்துக்கொண்டு
நலம் புரிந்தது என் கொலோ–அப்பெருமானிடத்தில் ஆசையைப் பெருக்கிக் கொண்டிருப்பது என்னோ
கோலத்தால் குறை இல்லை–(எத்தனை பேர்கள் அநுபவித்தாலும் ஏற்றியிருக்கும்படியான அழகினால் குறையில்லையன்றோ.
அழகு அ ஆசைப்பட நேர்கின்றது (அளவற்றிருப்பதானல் பலரும் எம்பெருமானிடத்தில்)

கீழ்ப்பாட்டில் “நாரணனைக் கண்டேன்“ என்றாரே, ப்ரஹ்மசாரி நாராயணனைக் கண்டேனல்லேன்,
திருமடந்தை மண்மடந்தைகட்குக் கொழுநனான திருமாலைக் கண்டேனென்கிறார் இதில்.
இவ்வார்த்தை நேரே அருளிச்செய்யாமல் ஒரு சமத்காரம் பொலியப் பேசுகிற அழகு காண்மின்.

பூவிற்பிறந்த பெரிய பிராட்டியார் எம்பெருமானுடைய அளவிறந்த போக்யதையிலே ஆழங்காற்பட்டு
‘உன்னை ஒரு நொடிபொழுதும் விட்டுப்பிரியமாட்டேன். உன்னை ஒரு நொடிப்பொழுதும் விட்டு அகலமாட்டேன்‘ என்றே
வாய்வெருவிக்கொண்டு அவனுடைய போக்யதையாகிற அமுத வெள்ளத்திலே கிடந்து தத்தளிக்கின்றாள்.
அநுபவத்தில் பெரிய கைகாரியான பிராட்டியின் நிலைமையே இதுவாயின் அவளிலும கீழ்ப்பட்டவளான பூமிப்பிராட்டி
‘நாம் அணுகுவதற்கும் நமக்கு யோக்யதையில்லை, ஒன்றான பிராட்டியே குமிழ் நீருண்ணும் விஷயத்திலே நாம் கைவைக்கத்தகுமோ? என்று
உதாஸீநையாய் விலக வேண்டியிருக்கவும் அந்த எம்பெருமான் விஷயத்திலே தானும் அபிநிவேசங்கொண்டு அணுகுகின்றாளே, இஃது என்கொல்?

இதற்குத் தாமே ஸமாதாந மருளிச்செய்கிறார் ஈற்றடியால், (கோலத்தால் குறை இல்லை) உலகத்தில் க்ஷுத்ர விஷயங்களிலே
ஒரு வஸ்துவில் ஒருவன் ஆசை வைத்துவிட்டால் அதை மற்றொருவன் ஆசைப்பட நினையாதிருப்பதுண்டு,
அதற்குக் காரணம் ஏதென்னில், அந்த விஷயங்களில் போக்யத்தை மிகவும் அறபராகையாலே
ஒருவன் அநுபவிப்பதற்கே போதும் போதாதாயிருக்கும், சிறயதொரு குட்டையில் தண்ணீர் குடிக்க ஒருவன் இறங்கினால்
“அவ்னொருவனுக்கே போராததான அதிலே நாமும் இற“குவதேன்? என்று மற்றையோர் அதனை உபேக்ஷித்துப் போவர்.
அதுவே ஒரு பெரு வெள்ளமாயிருந்தால் ‘இஃது எல்லார்க்கும் ஈடு கொடுக்கும்‘ என்று அனைவரும் அதிலே இறங்கி அநுபவிப்பரகள்,
அதுபோல் பகவத்விஷயமானது “கொள்ளமாளாவின்ப வெள்ளமாதலால் எத்தனைபேர் அநுபவித்தாலும் பாங்காகவே யிருக்குமாகையாலே
பூமிப்பிராட்டியும் மேல்விழும்படி யிருக்கின்றது என்று – எம்பெருமானுடைய போக்யதையின் அளவின்மை சொன்னவாறு.

இங்கே வியாக்சியான ஸ்ரீஸூக்தி வருமாறு – “தன்னில் மிடுக்கனானவன் அழுந்தப் புக்கால் கரையிலே நிற்கிறவன் புகாதே போகவன்றோ அடுப்பது,
எல்லாரிலும் அளவுடைய பெரியபிராட்டியார் குமிழ் நீருண்ணும் விஷயமானால் இவள் அகலப்பாராதே அகப்படுகைக்கு ஹேதுவென்னென்னில்,
ஹேது சொல்லுகிறது (கோலத்தால் இத்யாதி). நின்றார் நின்ற நிலைகளில் அகப்பட வேண்டும் அழகு குறைவற்றிருக்கையாலே யென்கை.
இதரவிஷயங்கள் இருவர்க்கும் அநுபவிக்கப் போராமையாலே சீறுபாறென்கறது. கிண்ணகத்தி லிழியுமாபோலே
எல்லாரும் திறவநுபவிக்க வேண்டும் பரப்பு உண்டாகையாலே இவ்விஷயத்தை யநுபவிப்பார்க்கு ப்ரியமே யுள்ளது.“

வடிக்கோல் வாள் நெடுங்கண் – வடி – கூர்மை பொருந்தியதும்,
கோலம் – அழசியதுமான, வாள் – வாள்போன்ற நெடுங்கண்களையுடைய மாமலராள என்று முரைக்கலாம்.
“அடிக்கோலி“ என்பதற்குப் பெரியவாச்சான்பிள்ளை வியாக்கியானத்தில் ‘அகலப்பாரித்து‘ என்று பொருள் காண்கிறது.
அதாவது ‘இலையகலப் பாரித்து‘ என்றபடி. ச்ரார்த்தத்தில் நிமந்த்ரண் முண்ணப்போகிறவன்
‘அப்படி உண்ணவேணும்‘ இப்படி உண்ணவேணும், வடையை நெய்யில் தோய்த்து உண்ண அதுபோல,
பூமிப்பிராட்டியார் எம்பெருமானை அநுபவிப்பதற்கு மநோரதிக்கும் படியை ‘அடிக்கோலி‘ என்றதனால் சொல்லிற்றென்க.
அரும்பதவுரைகாரர் “அடிகோலுகை – அகலுக்கு உத்யோகிக்கை“ என்று வரைந்து வைத்தது என்னோ அறியோம்.

————————————————————————–

கீழ் எழுபத்துநான்காம் பாசுரத்தில் “யானே இத்தமிழ் நன்மால யிணையடிக்கே சொன்னேன், பெருந்தமிழன் நல்லேன் என்று
பகவத்விஷயத்தில் நாம் கவிபாடப் பெற்றமைக்கு மகிழ்ந்து பேசினவர்
கீழ்ப்பாட்டிற்படியே நாய்ச்சிமாரும் பெருமாளாகக் கூடியிருக்கும் சேர்த்தியழைகைக் கண்டவாறே அந்தோ!
இச் சேர்த்தி யழகுக்குப் பொருத்தமாகச் கவிபாடத் தெரியவில்லை எனக்கு செவிக்கினிய
“செஞ்சொற்களால் நிறையப் பாடுகையின்றியே கடுஞ்சொற்களால் ஏதே அரைகுறையாகப் பாடினேனே!,
இப்படி பாடினது மல்லாமல் நம்முடைய பாடலுக்கு ஏதோ வெகுமதி கிடைக்கப்பொகிறதென்று
கைம்மாறு தன்னையுங் கருதிக்கிடந்தேனே! என்று அநுதபிக்கிறார்.

குறையாக வெம் சொற்கள் கூறினேன் கூறி
மறை யாங்கு என உரைத்த மாலை -இறையேனும்
ஈயுங்கொல் என்றே இருந்தேன் எனைப்பகலும்
மாயன் கண் சென்ற வரம் -83-

பதவுரை

மறை–வேதங்களும்
ஆங்கு என உரைத்த மாலை–ப்ரத்யக்ஷித்துச் சொல்ல மாட்டாமல் பரோக்ஷமாகவே சொன்ன எம்பெருமான (அல்பஜ்ஞனான நான்)
மாயன் கண் சென்ற வரம்–அப்பெருமானிடத்தில் தங்கியிருக்கின்ற அநுக்ரஹமானது.
இறையேனும்–ஸ்வல்பமான பலனையாகிலும்
குறை ஆக–குறையுண்டாம்படி
வெம் சொற்கள்–செவிசுடும்படியான சொற்களால்
கூறினேன்–பேசினேன்
கூறி–அப்படி பேசினது மல்லாமல்
ஈயும் கொல் என்றே–(நமக்குக்) கொடுக்குமோ என்று (பலனையும் எதிர்பார்த்துக் கொண்டு)
எனைப் பகலும்–வெகுகாலமாக
இருந்தேன்–இருக்கின்றேன்.

மறை ஆங்கெனவுரைத்தமாலை – ப்ரக்யக்ஷ நிர்த்தேசமென்றும் பரோக்ஷ நிர்தேசமென்றும் இருவகையான வ்யவுஹாரங்களுண்டு.
‘அவன் அங்கே யிருக்கின்றான் அது அப்படிப்பட்டது என்றாற்போன்ற வ்யவ்ஹாரங்களை பரோக்ஷ திர்த்தேசமெனப்படும்
இவன் இதோஇருக்கின்றான் இது இப்படிப்பட்ட என்றாற் போன்ற வ்யாவஹாரங்கள் ப்ரத்யக்ஷ நிர்த்தேசமெனப்படும்.
“யதோ வாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய மநஸா ஸஹ“ என்று – எம்பெருமானுடைய தனமை சிறிதுங் கண்டறியமாட்டாமல்
வேதங்களும் மீள்கின்றன என்கையாலே வேதபுருஷனும் ப்ரத்யக்ஷிக்க பேசுகின்றானென்பதை மறை ஆங்கெனவுரைத்த‘ என்றதனாற் காட்டினபடி.

‘அவன்படிகளை உள்ளபடி தரை கண்டு பேச வொருப்பட்ட வேதங்களானவை அது என்று சொல்லுமித்தனை போக்கி
இதம் மென்று பரிச்சோதிச்சுச் சொல்லமாட்டாதபெருமையையுடைய ஸர்வேச்வரனை“ என்பது முன்னோருரை வாக்கியம்.

மாயன் கண்சென்ற வரம் இறையேனும் ஈயுங்கொலென்றே இருந்தேன் – எம்பெருமானுடைய அநுக்ரஹமானது நாம்
பாடின பாட்டுக்குப் பரிசாக ஏதாவதொரு பலனைத் தந்திடுமன்றோவென்று ப்ரயோஜநாபேக்ஷியாயு மிருந்தேனே! என்றவாறு.

ஆக இப்பாட்டில், திருமாலின் வைலக்ஷணயத்திற்குத் தகுந்தவாறு கவிபாடப் பெறாமைக்கு அநுதாபமும்,
பச்சையை நச்சிப்பாடினத்திற்கு அநுதாபமும் ஆக இரண்டு அநுதாபங்கள் முறையே முன்னடிகளிலும் பின்னடிகளிலும் விளங்கும்.

————————————————————————–

வரம் கருதி தன்னை வணங்காத வன்மை
உரம் கருது மூர்க்கத்தவனை -நரம் கலந்த
சிங்கமாய்க் கீண்ட திருவன் அடி இணையே
அங்கண் மா ஞாலத்து அமுது–84-

பதவுரை

வரம் கருதி–(தேவர்களிடத்துப் பெற்ற) வரத்தை மதித்து
தன்னை வணங்காத–(ஸர்வேச்வரனான) தன்னை வணங்காதிருந்தவனும்
வன்மை உரம் கருதி–(தன்னுடைய) மன வலிமையையும் நினைத்து
மூர்க்க தவனை–மூர்க்கத்தனம் கொண்டிருந்தவனுமான இரணியனை
நரம் கலந்த சிங்கம் ஆய்கீண்ட–நரசிங்க வுருக்கொண்டு பிளந்தொழிந்த
திருவன்–அழகனுடைய
அடி இணையே-உபய பாதமே
அம் கண் மா ஞாலத்து–அழகிய இடமுடைத் தான இம்மாநிலத்தில்
அமுது–(போக்யமான) அம்ருதமாகும்.

ஆழ்வார்!, “குறைவாக வெஞ்சொற்கள் கூறினேன்“ என்று அநுதாபமாகச் சொல்லிக்கொண்டே மேன்மேலும் கவிபாடாநின்றீரே,
உமது சொற்கள் வெஞ்சொற்களாயின் கவிபாடுதலை நிறுத்திக்கொள்ளலாமே‘ என்று சிலர் சொல்லக்கூடு மென்றெண்ணி
ஒரு போக்கியமான வஸ்துவைக்கண்டால் நாமும் இதில் சிறிது வாய்வைக்க வேணுமென்று தோன்றுவதுபோல,
எம்பெருமான் பரமபோக்ய னென்ற்றிந்தவாறே அதில் வாய்வைக்காதிருக்க முடியவில்லை“ என்று விடையளிக்க விரும்பி
இரணியனை நரசிங்க மாகிக்கிழித்த அழகியானுடைய அடியினை இவ்வுலகத்து அமுதம் போன்றுள்ளது என்று
பகவத் விஷய போக்யத்தையை பேசுகிறாரிதில்.

நாங்கலந்த சிங்கத்தினால் கிழித்தெறியப்பட்ட இரணியன் எப்படிப்பட்டவனென்றால்,
அவன் பரம மூர்க்கனாயிருந்தவனென்பன முன்னடிகள்
வரபலத்தினாலம் புஜபலத்தினாலும் மனக் கொடுமையினாலும் வணங்க முடி மன்னனாயிருந்த மூட அரக்கனும் இரணியன்.

————————————————————————–

கீழ் எண்பத்து மூன்றாம் பாட்டில் “குறையாத வெஞ்சொற்கள் கூறினேன். என்று தாம் புன்மையான சொற்களைத் தொடுத்துக்
கவிபாடினதற்கு அநுதபித்தார், ‘இப்படி அநுதாப்படுகிற நீர் வாய்மூடிக்கிடவாமல் மேன்மேலும் கவிபாடி கொண்டே யிருப்பானேன்?‘
என்று கேட்டவர்கட்கு உத்தரமாக ‘பகவத்விஷயம் பரமபோக்யமாயிருப்பதனாலே அதில் வாய் வைத்தே தீரவேண்டியிருக்கின்றது‘
என்பவர்போல பகவத்விஷயத்தின் பரமபோக்யதையைக் கீழ்ப்பாட்டில் அருளிச்செய்தார்.
அப்படி பரமபோக்யமான விஷயத்தைப்பற்றின பாடலாகையாலே என்னுடைய வெஞ்சொற்களும்
அமுதன்ன சொல்மலைபாய் விட்டன என்கிறாரிப்பாட்டில்.

அமுதென்றும் தேன் என்றும் ஆழியான் என்றும்
அமுது அன்று கொண்டு உகந்தான் என்றும் -அமுதன்ன
சொன்மாலை ஏத்தித் தொழுதேன் சொலப்பட்ட
நன்மாலை ஏத்தி நவின்று –85-

பதவுரை

அமுது என்றும்–அமிருதம் போன்றவனென்றும்
தேன் என்றும்–தேன் போன்றவனென்றும்
ஆழியான் என்றும்–திருவாழியை யுடையவனென்றும்
அன்று அமுது கொண்டு உகந்தான் என்றும்–முற்காலத்தில் (கடல் கடைந்து) அமுதமெடுத்தளித்து மகிழ்ந்தவனென்றும்
சொல்லப்பட்ட–சொல்லப்பட்டிருக்கின்ற
நல் மாலை–விலக்ஷணனான எம்பெருமானை
அமுது அன்ன சொல் மாலை–அம்ருதம் போன்ற இப்பாசுரங்களினால்
ஏத்தி ஏத்தி நவின்று தொழுதேன்–பலகாலும் துதித்துச் சொல்லி வணங்கினேன்.

அமுதென்றும் தேனென்றும் ஆழியானென்றும் அன்று அமுதுகொண்டுகந்தானென்றும் சொலப்பட்ட நன்மாலை
அமுதன்ன சொன்மாலை (கொண்டு) ஏத்தியேத்தி நவின்று தொழுதேன் – என்று அந்வயிப்பது,
சக்ரபாணி என்பதும் கடல்கடைந்தமுதங்கொண்டவனென்பதும் எம்பெருமானுக்கு எப்படி திருநாமங்களோ
அப்படியே ‘அமுது‘ என்பதும் ‘தேன்‘ என்பதும் அவனுக்குத் திருநாமங்களாமென்க. “ரஸோ வைஸ“ என்றாள் வேதபுருஷன்.
“தேனைநன்பாலைக் கன்னலையமுதை“ “எனக்குத் தேனே பாலே கன்னலே யமுதே
திருமாலிருஞ் சோலைக் கோனேயாகி நின்றொழிந்தான்“ என்பர் ஆழ்வாரக்ள்.
இப்படி அமுதுந்தேனுமான எம்பெருமானைப் பாடுகின்ற பால்களும் அமுத மயமாகக் குறையில்லையென்பார்
‘அமுதன்ன சொன்மாலை‘ என்றார்.

“அமுது அன்று கொண்டு உகந்தான்“ – தன்னை வந்து அடிபணிந்தவர்கட்குக் காரியம் நிறைவேறினால்
அவர்கள் மகிழ்வதிலுங்காட்டில் அதிகமாக மகிழ்வன் எம்பெருமான், ‘நம் ஆச்ரிதருடைய குறையைத்தீர்க்கப்பெற்றோமே!‘ என்று மகிழ்வனாம்.
அதுதோன்ற ‘உகந்தான்‘ எனப்பட்டது.

————————————————————————–

எம்பெருமானைக் காணவேணுமென்று சிலர் ஸாதநாநுஷ்டாநம் பண்ணுவதுண்டு,
எம்பெருமான் தானே சிலர்க்குக் காட்சி தந்தருளவேணுமென்று பாரிப்பதுண்டு,
இவற்றுள், பரகதஸ்வீகாரமெனப்படுகிற எம்பெருமான் தானே பற்றும் பற்று பலிக்குமேயன்றி, சேதநர் பண்ணுகிற
ஸாதநாநுஷ்டாநம் பலிக்கமாட்டாது என்கிறாரிதில்.
எம்பெருமான் தானே தனது நிரஹேதுகிருபையினாலே தன்படிகளையெல்லாம் எனக்குக்காட்டி யருள நான் காணப்பெற்றேன்,
வேறு எந்த ஸாதநாநுஷ்டாநம் பண்ணியும் நான் காணப்பெற்றேனல்லேன்,
ஆகையாலே, ஸாதநாநுஷ்டாநம்பண்ணிக் காண்கிறவர்கள் என்னோடு ஓப்பர்களோ? என்கை.

நவின்றுரைத்த நாவலர்கள் நாண் மலர் கொண்டு ஆங்கே
பயின்றதனால் பெற்ற பயன் என் கொல் -பயின்றார் தம்
மெய்த் தவத்தால் காண்பரிய மேக மணிவண்ணனை யான்
எத்த்வத்தால் காண்பன் கொல் இன்று –86-

பதவுரை

நவின்று உரைத்த–(அவனது திரு நாமங்களைப்) பலகாலுஞ் சொல்லுகின்ற
நாவலர்கள்–கவிகள்
நாள் மலர் கொண்டு–அப்போதலர்ந்த புஷ்பங்களைக் கொண்டு
ஆங்கே பயின்று–அந்த ஸர்வேச்வரனிடத்தில் நெருங்கி யாச்ரயித்து
அதனால் பெற்ற பயன் என்சொல்–அதனால் (அவர்கள்) பெற்ற பிரயோஜ நம் என்னோ
(எம்பெருமான் தானே நிர்ஹேதுகமாக அநுக்ரஹித்தாலன்றி, இவர்களுடைய ஸ்வப்ரயத்நத்தால் என்ன பேறு பெறமுடியும் என்கை.)
பயின்றார் தம்–நெருங்கி ஸாதநா நுஷ்டாநம் பண்ணுமவர்களுடைய
மெய் தவத்தால்–சரீரம் நொந்து செய்கிற தபஸ்ஸினால்
காண்பு அரிய–காணமுடியாதவனும்
மேகம் மணி வண்ணனை–மேகத்தையும் நீல மணியையும் போன்றநிறத்தை யுடையனுமான எம்பெருமானை
யான்–அடியேன்
இன்று–இப்போது
எத் தவத்தால் கொல் காண்பன்–எந்தத் தபஸ்ஸினால் காணப்பெற்றேன்?
(அவனே காட்டிக்கொடுக்கக் கண்டேனேயொழிய, ஒரு தவஞ்செய்து கண்டவனல்லேனென்கை)

நாம் ஒரு உபாயத்தை அநுஷ்டித்தே எம்பெருமானைப் பெறவேணுமென்கிற எண்ணத்துடன் திருநாமங்களைப் பலகால்
ஸங்கீர்த்தனம் பண்ணியும் புஷ்பம் முதலியவற்றைப் பலகால் கொண்டு ஆராதித்தும் ஆகவிப்படி செய்யும்
உபாயாநுஷ்டாநங்கள் பயனற்றவை என்பன-முன்னடிகள்.

அப்படி உபாயாநுஷ்டநாம் பண்ணினவர்களுக்கும் காண்பதற்கு அரியனான எம்பெருமானைத் தாம் கண்டபடியையும்,
‘அப்படி கண்டது ஒரு தவத்தினாலன்று, அவனது நிர்ஹேதுக கிருபையினாலே‘ என்பதையும் தெரிவிப்பன – பின்னடிகளில்.

தவம் – உடம்பினால் வருத்தப்பட்டுச் செய்யும் காரியம். யான் எத்தவத்தால் காண்பன்கொல் இன்று – நான் ஒரு ஸாதநமும்
அநுஷ்டியாமல் இன்று காணப்பெற்றேன் என்றவாறு.

————————————————————————–

இப்பாட்டும் கீழ்ப்பாட்டுக்கு சேஷபூதமானதேயாம் எம்பெருமானது திருவருளால் தமக்குண்டான வைலக்ஷண்யத்தைப் பேசுகிறார்.
நான் கர்ப்பவாஸம் செய்யும்போதே பிடித்து எம்பெருமானால் நிர்ஹேதுகமாகக் கடாக்ஷிக்கப்பெற்றுத் தன்னுடைய
ஸ்வரூப ரூபகுண் விபூதிகளையெல்லாம் அவன் தானே காட்டக்கண்டு
“ஜாயமாநம் ஹி புருஷம் யம் பச்யேத் மதுஸூதந ஸாத்லிகஸ் ஸது விஜ்ஞேயஸ் ஸவை மோக்ஷார்த்த சிந்தக –
(கர்ப்பத்திலேயே எம்பெருமான் எவனைக் கடாக்ஷித்தருள்வனோ அவனே ஸாத்விகன், அவனே முழுக்ஷுவாவான்)
என்கிறபடியே சுத்த ஸாத்விகனாய் அப்பெருமானுடைய திருக்கல்யாண குணம் முதலியவற்றை
ஸ்வயம் அநுபவிப்பதும் பிறர்க்கு எடுத்து உபதேசிப்பதுமாக இவற்றையே காலக்ஷேபமாகக் கொண்டிருந்தவன்,
எல்லாரும் பகவானை மறந்திருக்கும்படியான கர்ப்பவாஸ காலத்திலுங்கூட அடியேன் அவனை மறவாது
வாழ்த்தக்கொண்டிருந்தேனாகையால், நான் எம்பெருமானை நெடுநாளாகவே அறிந்தவனே யன்றி இன்று புதிதாக அறிந்தவனல்லேன்.

இன்றா அறிகின்றேன் அல்லேன் இரு நிலத்தைச்
சென்று ஆங்கு அளந்த திருவடியை -அன்று
கருக் கோட்டியுள் கிடந்தது கை தொழுதேன் கண்டேன்
திருக் கோட்டி எந்தை திறம் -87-

பதவுரை

அன்று கரு கோட்டியுன் கிடந்து–முன்பு கர்ப்ப ஸ்தானத்துக்குள்ளே கிடந்து
திருக்கோட்டி எந்தை திறம்–திருக்கோட்டியூர்ப் பெருமானுடைய தன்மைகளை
கண்டேன்–கண்டு அநுபவிக்கப் பெற்றேன்
கை தொழுதேன்–கை தொழவும் பெற்றேன், (ஆனபின்பு)
இரு நிலத்தை–விசாலமான இந்நிலத்தை
ஆங்கு சென்று அளந்த திரு அடியை–அங்கங்கே தானே வியாபித்து முழுதும் அளந்து கொண்ட திருவடியை
இன்று ஆ அறிகின்றேன் அல்லேன்–இன்றைக்குத்தான் அறிந்து கொண்டே னென்பதில்லை. (கர்ப்பவாஸமே தொடங்கி அறிவேன்)

இருநிலத்தைச் சென்று ஆங்களந்த திருவடியை என்றது இங்கு விசேஷாபிப்ராயத்தோடு கூடியது,
“அவன் அளக்கிற விடத்திலே பூமி சென்றதோ? பூமி கிடந்தவிடமெல்லாம் தானே சென்று அளந்தானித்தனையன்றோ“
என்பது பெரியவாச்சான் பிள்ளை வியாக்கியான ஸ்ரீஸூக்தி.
உலகமுள்ள விடமெல்லாம் தானே சென்று அடிப்படுத்திக் கொண்டதுபோல
அவன் தானே மேல்விழுந்து விஷயீகரிக்கப்பெற்றேனடியேன் என்றவாறு.

இதில் முன்றாமடியில் ஒரு சங்கை பிறக்கும், அதாவது – குருக்கத்திப் பந்தரிலே ஒரு குருக்கத்திமலரிலே திருவவதரித்தத்தனால்
அயோநிஜராகிய இவ்வாழ்வார்க்கு கர்ப்பவாஸமென்பது கிடையாதே,
அப்படியிருக்க “கருக்கோட்டியுள் கிடந்து“ என்று இவர் தாம் எங்ஙனே அருளிச்செய்கிறாரென்று.

இதற்கு உத்தரமாவது – ‘கருக்கோட்டியுள் கிடந்து‘ என்ற விகனால்
* தீண்டாவழும்பும் செந்நீரும் சீயும் நரம்பும் செறிதசையும் வேண்டாநாற்றம் மிக்கிருக்கிற கர்ப்பத்தும்பையில்நின்றும்
ஆழ்வார் பிறந்தாரென்று கொள்ளவேண்டிய அவசியம் யாதுமில்லை, எவ்விடத்தில் நின்று அவதரித்தாரோ அவ்விடமே கர்ப்ப ஸ்தாநமாகும்.
‘நான் இவ்விருள் தருமாஞாலத்தில் வந்து தோன்றுவதற்கு முன்னமே எம்பெருமானுடைய கடாக்ஷம் பெற்றவன்‘ என்று
சொல்லுவதே இங்கு விவக்ஷிதம். “அன்று நான் பிறந்திலேன் பிறந்தபின் மறந்திலேன்“ என்றாற்போலுமாம்.

————————————————————————-

எம்பெருமானே வேறொன்றை எதிர்பாரத உபாயபூதன் என்று நன்குணர்ந்து அவ்வுணர்ச்சியின்படியே நடந்து
கொள்ளுமவர்களே ஸம்ஸாரபந்தத்தை அறுத்துக் கொண்டு வைகுந்த நின்வாசலினுள்ளே புகப்பெறுவர்,
மற்றையோர்களுக்கு வைகுந்த வாசற்கதவு திறவாதே மூடிக்கொள்ளு மென்கிறார்.

திறம்பிற்று இனி அறிந்தேன் தென்னரங்கத்து எந்தை
திறம்பா வழி சென்றார்க்கு அல்லால் -திறம்பாச்
செடி நரகை நீக்கித் தான் செல்வதன் முன் வானோர்
கடி நகர வாசற் கதவு–88-

பதவுரை

தென் அரங்கத்து எந்தை–தென்னரங்கத்தில் பள்ளிகொண்டிருக்கு மெம்பெருமானுடைய
திறம்பா வழி–பிசகாத மார்க்கத்திலே (அவனே உபாயோபேயம் என்னும் நெறியிலே)
சென்றார்க்கு அல்லால்–நிற்பவர்களுக்குத் தவிர (மற்றை யோர்க்கு)
தாம்–தாமாகவே
திறம்பா செடி நரகை நீக்கி–அறுக்க முடியாத புதர் போன்ற ஸம்ஸார பந்தங்களை அறுத்துக் கொண்டு
செல்வதன் முன்–போவதற்குள்ளே
வானோர்–நித்ய ஸூரிகளுடையதும்
கடி–அரணை யுடையதானதுமான
நகரம்–வைகுந்தமா நகரத்தினுடைய
வாசல் கதவு–வாசற் கதவானது
திறம் பிற்று–மூடிக்கொண்டதாகும்
இனி அறிந்தேன்–(இதை) இப்போது அறிந்து கொண்டேன்

திறம்பிற்று –எதிர்காலப்பொருளில் இறந்தகாலமாகச் சொன்னது காலவழுவமைதி.

————————————————————————–

எம்பெருமானே! நீ ஆச்ரிதர்களுக்குக் காரியஞ்செய்வதென்று மனம்வைத்துவிட்டால் அருமையான காரியங்களையும்
எளிதாகச்செய்து முடிப்பவன்ன்றோ என்ன வேண்டி, அடியவர்க்காச்செய்த சில காரியங்களை எடுத்துரைக்கின்றாரிதில்.

கதவிக் கதஞ்சிறந்த கஞ்சனை முன் காய்ந்து
அதவிப் போர் யானை ஒசித்துப -பதவியாய்
பாணியால் நீரேற்றுப பண்டு ஒரு நாள் மாவலியை
மாணியாய் கொண்டிலையே மண்–89-

பதவுரை

முன்–முற்காலத்தில்
கதம் சிறந்த–கோபம் மிகுந்த
கஞ்சனை–கம்ஸனை
கதவி காய்ந்து–கோபித்து முடித்து
போர் யானை–போர் செய்வதாக எதிர்த்து வந்த குவலயாபீடமென்னும் யானையை
ஒசித்து–கொம்பு முறித்து
அதவி–கொன்று,
பண்டு ஒரு கால்–முன்னொரு காலத்தில்
பதவியாய்–நீர்மையை யுடையனாயக்கொண்டு
மாணி ஆய்–பிரமசாரியாகி
மாவலியை–மஹாபலியினிடத்திலே
பாணியால்–கையினாலே
நீர் ஏற்று–தானம் வாங்கி
மண் கொண்டிலையே–பூமியைப் பெற்றாயல்லையோ?

“சாதுசனத்தை நலியுங்கஞ்சன்“ என்கிறபடியே பாகவதர்களுக்கெல்லாம் கொடுமையியற்று மவனாயிருந்த கம்ஸனைச் சீறி முடித்தாய்,
பாகவதற்களுக்கு உயிரான உன்னைக் கொல்லுமாறு அக்கஞ்சனால் ஏவிநிறுத்தப்பட்டிருந்த மதயானையை முடித்தாய்,
இந்திரனுக்கா மாவலிபக்கல் மூவடிமண் நீரேற்றுப்பெற்று மூவுலகங்களையும் அடிப்படுத்தி வாழ்வித்தாய்.
ஆக இப்படிப்பட்ட காரியங்கள் செய்தவனல்லையோ நீ.

அதவுதல் – ஹதம்பண்ணுதல். “அதவிப் போர்யானையொசித்து“ என்பதே வியாக்கியானத்துக்கிணங்கிய ஆன்றோர் பாடம்,
“உதவிப் போர்யானை“ என்றும் சிலர் ஓதுவர்களாம், இப்பாடம் மோனையின்பத்துக்குச் சேர்ந்திருக்கு மென்னலாமாயினும்
முன்னோர் விரும்பியபாடமன்று கம்ஸனுக்கு உதவியாயிருந்த யானையை ஒசித்து என்று பொருள் கூறலாம்.

பதவியாய் –“***“ என்னும் வடசொல்லாகக் கொண்டு ‘வழியாகவே‘ என்று பொரு கொள்வதம் தகும். பாணி –வடசொல்.

————————————————————————–

‘ஆழ்வீர்! நாம் முன்பு செய்த காரியங்களை எடுத்துரைக்கிறீர், அஃது இருக்கட்டும். இப்போது நாம் உமக்குச் செய்ய
வேண்டிய காரியம் ஏதேனுமுண்டாகில் சொல்லிக் காணீர்‘ என்று ஆழ்வாரை நோக்கி எம்பெருமான் அருளிச்செய்ய,
பிரானே! உன்னை ஆச்ரயித்தபோதே எல்லாப் புருஷார்த்தங்களும் பெற்றேனோனேன்காண்,
மண்ணுலகத்தோடு விண்ணுலகத்தோடு வாசியற உபயவிபூதியும் நானிட்டவழக்காம்படி ஆள்வதற்கு உதியேனானபின்!
இனி எனக்குச் செய்யவேண்டுவதொன்றுண்டோ? என்றாராயிற்று.

மண்ணுலகம் ஆளேனே வானவர்க்கும் வானவனாய்
விண்ணுலகம் தன்னகத்து மேவேனே -நண்ணித்
திருமாலை செங்கண் நெடியானை எங்கள்
பெருமானைக் கை தொழுத பின்-90-

பதவுரை

திருமாலை–பிராட்டியினடத்தில் வியாமோஹமுடவனும்
செம் கண்–செந்தாமரை போன்ற திருக்கண்களை யுடையவனும்
நெடியானை–ஸர்வேச்வரனுமான
எங்கள் பெருமானை–எம்பெருமானை
நண்ணி–கிட்டி
கை தொழுத பின்–அஞ்ஜலி பண்ணி ஆச்ரயித்த பின்பு
மண் உலகம் ஆளேளே–இவ்விபூதியை நானிட்டவழக்காக நிர்வஹிக்கமாட்டேனோ?
வானவர்க்கும் வானவன் ஆய்–தேவாதிதேவனாய்க் கொண்டு
விண் உலகம் தன் அகத்து–நித்ய விபூதியிலே
மேவேனே–நித்யாநந்த மநுபவிக்க மாட்டேனோ?

————————————————————————–

இப்பாட்டுத் தொடங்கி மேல் நான்கு பாட்டுக்களாலே பரோபதேசம் பண்ணுகிறார்.
உலகத்தவர்களே! நீங்கள் செய்யும் காரியங்களைப் பார்த்தால் நரக மார்க்கத்திற்கே செல்லப் பார்க்கிறீர்களென்று
நினைக்கும்படியா யிராநின்றது. ‘நரகவேதனை நமக்குக் கிடைத்தால் என்செய்வோம்‘ என்று கலங்கி நிற்கிறீர்களாகில்
அதைத் தப்புவதற்கு இப்போதே உபாயம் சொல்லுகிறேன் கேளுங்கள், உலகளந்த பெருமானுடைய சேவடியை
வணங்குதற்கு முயற்சி செய்தீர்களாகில் பின்னால் அருநரகம் சேராமல் பிழைக்கலாம் என்கிறார்.

பின்னால் அரு நரகம் சேராமல் பேதுறுவீர்
முன்னால் வணங்க முயல்மினோ -பன்னூல்
அளந்தான் இக்கார் கடல் சூழ் ஞாலத்தை எல்லாம்
அளந்தான் அவன் சேவடி –91-

பதவுரை

பின்னால்–சரீரம் விழுந்த பின்பு
அரு நகரம்–கடினமான நரகத்தை
சேராமல்–அடையாமலிருக்கும் படிக்கு
பேதுறுவீர்–மனங்கலங்கியிருக்கும் மனிசர்களே!
பல் நூல்–பலவகைப்பட்ட சாஸ்த்ரங்களினால்
அளந்தானை–நிச்சயிக்கப்படுபவனும்
கார் கடல்சூழ் ஞாலத்தை எல்லாம் அளந்தானவன்–கரிய கடல் சூழப்பட்ட பூமியையெல்லாம் அளந்து கொண்டவனுமான எம்பெருமானுடைய
சே அடி–செவ்விய திருவடிகளை
முன்னால்–இப்போதே
வணங்க–வணங்குமாறு
முயல்மின்–முயற்சிசெய்யுங்கள்.

‘சேவடியை வணய்குமினோ‘ என்னாமல் – ‘வணங்க முயல்மினோ‘ என்றமையால் – எம்பெருமான் திருவடிகளை
வணங்க வேணுமென்னும் முயற்சியுண்டான மாத்திரமே நரகம் தவிரும் என்பது விளங்கும்.

————————————————————————–

எம்பெருமானது திருவடிகளை வணங்க முயன்றால் நரகயாதனை தவிருமென்றார் கீழ்ப்பாட்டில்,
அவனுடைய திருநாமங்களைக் கீர்த்தனம்பண்ணினால் நீங்கள் விரும்புகின்ற புருஷார்த்தங்களெல்லாம் கைபுகுமென்கிறாரிதில்.

அடியால் முன் கஞ்சனைச் செற்று அமரர் ஏத்தும்
படியான் கொடி மேல் புள் கொண்டான் நெடியான் தன்
நாமமே ஏத்துமின்கள் ஏத்தினால் தாம் வேண்டும்
காமமே காட்டும் கடிது–92-

பதவுரை

முன்–முன்னே
அடியால்–திருவடியினால்
கஞசனே–கம்ஸனை
செற்று–உதைத்துக் கொன்றதனாலே
அமரர் ஏத்தும் படியான்–தேவர்கள் துதிக்கும் படியாக வுள்ளவனும்
கொடிமேல் புள் கொண்டான்–த்வஜத்திலே கருடபக்ஷியையுடைய வனுமான
நெடியான் தன்–ஸர்வேச்வரனுடைய
நாமமே–திருநாமங்களையே கொண்டு
ஏத்துமின்கள்–ஸ்தோத்ரம் பண்ணுங்கள்
ஏத்தினால்–அப்படி ஸ்தோத்ரம் பண்ணினால்
தாம் வேண்டும் காமம்–தாங்கள் அபேக்ஷிக்கும் புருஷார்த்தத்தை
கடிது–விரைவாக
காட்டும்–(அத்திருநாமம்) பெறுவிக்கும்

உயர்ந்த சிங்காசனத்தின் மீது வீற்றிருந்த கம்ஸனைத் தலைமயிர் பற்றியிழுத்துக் கிரீடம் சிதறக் கீழேநள்ளித் திருவடியால்
உதைத்து முடித்ததனால்இந்த வீரச்செயலிலே ஈடுபட்டுத் தேவர்கள் துதிக்கநின்ற கருடத்வஜனுடைய திருநாமங்களையே சொல்லுங்கள்,
சொன்னால், சொன்ன வாய் மூடுவதற்குள்ளே தாம் தாம் விரும்பும் புருஷார்த்தங்களை அத்திருநாமமே பெறுவிக்கு மென்றாராயிற்று.

————————————————————————-

உலகத்தவர்களே!, ‘நரகம்‘ என்கிற சொல் காதல் பட்டமாத்திரத்திலே ஒவ்வொருவருடைய உடலும் நடுங்கும்,
அதற்குமேல், அந்த நரகத்தில் யமபடர்கள் செய்கிற நலிவுகளைக் கேட்டாலோ இடிவிழுந்தாற்போலாகும்.
இப்படி கோரமான நரகவேதனைகட்கு இடமுண்டாவதற்கு முன்னே, விரோதி நிரஸத சீலனான
எம்பெருமானுடைய தோத்திரத்திலே மூளுங்கோள் என்கிறார்.

கடிது கொடு நரகம் பிற்காலும் செய்கை
கொடிது என்றது கூடா முன்னம் -வடி சங்கம்
கொண்டானைக் கூந்தல் வாய் கீண்டானைக் கொங்கை நஞ்சு
உண்டானை ஏத்துமினோ உற்று–93-

பதவுரை

கொடுநரகம்-க்ரூரமான நரகமானது
கடிது–கண்கொண்டு காணவொண்ணாதபடி கோரமாயிருக்கும்
பிற்காலும்–அதற்குமேலும்
செய்கை–(அங்கு யமபடர்கள் செய்யும் யாதனைச்) செயல்கள்
கொடிது–பொறுக்க முடியாதனவாயிருக்கும்,
என்று–என்று தெரிந்து கொண்டு
அது கூடா முன்னம்–அந்த நரகவேதனை நேராதபடி
வடி சங்கம் கொண்டானை–கூர்மையான த்வநியையுடைய சங்கைத் திருக்கையிலே உடையவனும்
கூந்தல் வாய் கீண்டானை–கேசியின்வாயைக் கீண்டொழித் தவனும்
கொங்கை நஞ்சு உண்டானை–(பேய்ச்சின்) மூலையில் தடவியிருந்த விஷத்தை உண்டவனுமான எம்பெருமானை
உற்று–பொருந்தி
ஏத்துமின்–ஸ்தோத்திரம் பண்ணுங்கள்

கூந்தல்வாய் கீண்டானை – தலைமயிர்க்கு வாசகமான கூந்தலென்னுஞ்சொல் ‘லக்ஷிதலக்ஷணை‘ என்னும் வழியால்
கேசியென்பவனைக் குறிக்கும். எங்ஙனேயென்னில், கூந்தல் என்பதற்கு வடமொழிநாமம் கேசமாகும்.
அச்சொல் கேசியை நினைப்பூட்டும். வில்லிப்புத்தூரார் பாரதத்தில் புத்திஸேதனைச் சொல்லவேண்டுமிடத்து, ‘
திங்கள் சேர் பெயரினான்“ என்றதுகாண்க.
(திங்கள் – சந்திரன், தமிழில் மதி என்னுஞ்சொல்லும் சந்திரனைச் சொல்லும், ‘மதி‘ என்கிற அச்சொல்
வடமொழியாய்க்கொண்டு புத்தியென்னும் பொருள் தரும். ஆகவே, புத்திஸேநன் என்ற பெயர் திங்கள் சேர் பெயராயிற்று,
இங்ஙனே தமிழ்ப் பிரயோகங்கள் பலவுள) கம்ஸனுடைய ஏவுதனினால் குதிரைவடிவங்கொண்டு
கண்ணபிரானைக் கொல்லவந்த கேசி யன்னுமஸுரனை வாய்பிளந்து முடித்தவரலாறு ப்ரஸித்தம்.

————————————————————————–

உற்று வணங்கித் தொழுமின் உலகு ஏழும்
முற்றும் விழுங்கும் முகில் வண்ணன் -பற்றிப்
பொருந்தா தான் மார்பிடந்து பூம் பாடகத்துள்
இருந்தானை ஏத்தும் என் நெஞ்சு–94-

பதவுரை

உலகு எழும் முற்றும் விழுங்கும்–உலகங்களை யெல்லாம் (பிரளயங்கொள்ளாதபடி) அமுது செய்தவனும்
முகில் வண்ணன்–மேகம் போன்ற வடிவையுடையவனும்
பொருந்தா தான்–(ப்ரஹ்லாதனுக்கு) சத்ருவான் இரணியனுடைய
மார்பு–மார்வை
பற்றி–பிடித்து
இடந்து–கிழித்தவனும்
பூ பாடகத்துள் இருந்தானை–அழகிய திருப்பாடகமென்னுந் திருப்பதியில் வீற்றிருப்பவனுமான எம்பெருமானை
என் நெஞ்சு–என் மனமானது
ஏத்தும்–துதிக்கும் (நீங்களும் இப்படியே)
உற்று வணங்கி தொழுமின்–பொருந்தி வணங்கி ஆச்ரயியுங்கோள்.

பண்டொருகால் உலகமெல்லாம் பிரளயப்பெருங்கடலிலே அழிந்து போவதாயிருக்கையில் அவற்றையெல்லாம்
திருவயிற்றிலே யெடுத்துவைத்தடக்கிக் காத்தருளின சிரமம் தீரவும், ப்ரஹ்லாதாழ்வானைப் பாதுகாத்தருளவேண்டி
இரணியன் மார்பிடந்த சிரமம் தீரவும் கச்சிநகரில் திருப்பாடகமென்னுந் திருப்பதியில்
இனிதாக எழுந்தருளியிருக்கு மெம்பெருமானை என்நெஞ்சு ஏத்துகின்றது,
நீங்களும் அவனையே வணங்கி வாழுங்கள் என்று உலகத்தவர்க்கு உபதேசித்தாராயிற்று.

பாடகம் –பெரியகாஞ்சீபுரத்திலுள்ள பாண்டவதூதர் ஸந்நிதி. ‘பாடு அகம்‘ என்று பிரிக்க.
பெருமைதோற்ற எழுந்தருளியிருக்கும். தலம் என்கை.
கண்ணன் பாண்டவதூதனாய்த துரியோதனனிடஞ் சென்றபொழுது துர்யோதநன் ரஹஸ்யமாகத் தனது ஸபாமண்டபத்தில்
மிகப்பெரிய நிலவறையொன்றைத் தோண்டுவித்து அதில் அனேகமல்லர்களை ஆயுதபாணிகளாய் உள்ளேயிருக்கவைத்து
அப்படுகுழியைப் பிறர் அறியவொண்ணாதபடி மூங்கிற்பிளப்புகளால் மேலேமூடி அதன்மேற் சிறந்த ரத்நாஸநமொன்றை அமைத்து
அவ்வாஸனத்தில் கண்ணனை வீற்றிருக்கச் சொல்ல, அங்ஙனமே ஸ்ரீகிருஷ்ணன் அதன்மேல் ஏறினமாத்திரத்திலே
மூங்கிற் பிளப்புக்கள் முறிபட்டு ஆசனம் உள்ளிறங்கிப் பிலவறையிற் செல்லுமளவில், அப்பெருமான் மிகப்பெரிதாக
விச்வரூபமெடுத்துப் பல கைகளையும் கால்களையுங்கெண்டு எதிர்க்கவே, அப்பிலவறையிலிருந்த மல்லர்கள் அழிந்தனர்.
அப்போது கொண்ட விச்வரூபத்திருக்கோலத்திற்கு ஸ்மாரமாகப் பெரிய திருமேனியோடே ஸேவைஸாதிக்குமிடம் பாடகம்.
பாடு –பெருமை. (“அரவுநீள் கொடியோனவையுளாசனத்தை அஞ்சிடாதேயிட அதற்குப் பெரியமாமேனி
அண்டமூடுருவப் பெருந்திசை யடங்கிட நிமிர்ந்தோன்“ என்ற பெரிய திருமொழிப்பாசுரத்தில்
அநுஸந்திக்கப்பட்ட திருமேனிவளர்த்தியோடே ஸேவைஸாதிக்கு மாறுகாண்க.

————————————————————————–

பெருமாள் கோயில் ஸ்ரீஹஸ்திசைல சிகரோஜ்வல பாரிஜாதமான பேர்ருளாளனை
மங்களாசரஸநம் பண்ணும் பாசுரங்கள் – இப்பாட்டும் மேற்பாட்டும்.

என் நெஞ்சமேயான் என் சென்னியான் தானவனை
வன்னெஞ்சம் கீண்ட மணி வண்ணன் -முன்னம் சேய்
ஊழியான் ஊழி பெயர்த்தான் உலகு ஏத்தும்
ஆழியான் அத்தி ஊரான் -95-

பதவுரை

தானவனை–இரணியனாகிற அகரனுடைய
வல் நெஞ்சம்-வலிய மார்வை
கீண்ட–கிழித்தொழித்தவனும்
மணி வண்ணன்–நீலமணிபோன்ற நிறத்தை யுடையவனும்
முன்னம் செய் ஊழியான்–நெடுங்காலமாக வுள்ளவனும்
ஊழி பெயர்த்தான்–காலம் முதலிய ஸகல வஸ்துக்களையு முண்டாக்கினவனும்
உலகு ஏத்தும் ஆழியான்–உலகத்தவரால் துதிக்கப்பட்டவனாய்க் கொண்டு திருப்பாற்கடலில் பள்ளி கொண்டிருப்பவனும்
அத்தியூரான்–ஹஸ்திகிரியில் எழுந்தருளியிருப்பவனுமான எம்பெருமான்
என் நெஞசம் மேயான்–என்னுடைய நெஞ்சிலே பொருந்தியிரா நின்றான்
என் சென்னியான்–என்னுடைய தலையிலே உள்ளான்.

‘எங்குமுளன் கண்ணன்‘ என்று சொன்ன ப்ரஹ்லாதாழ்வானைப் பலபடிகளாலும் நலிந்த இரணியாசுரனுடைய
முரட்டுடலைப்பினைந்தொழித்தவனும், இவ்விதமாக பக்தபரிபாலனம் செய்யப்பெற்றதனாலே திருமேனி புகர்பெற்றவனும்,
அநாதிகாலமாகவே பிறப்பிறப்பு மூப்புகள் ஒன்றுமின்றி யிருப்பவனும், ஸகல பதார்த்தங்களையும் இவ்வுலகில் தோன்றுவித்தவனும்,
உலகத்தவரால் துதிக்கப்பட்டவனாய்த் திருப்பாற்கடலில் துயில் கொண்டிருப்பவனுமான எம்பெருமான் அத்தியூர் என்னப்படுகிற
ஸ்ரீஹஸ்திகிரி க்ஷேத்ரத்தில் எழுந்தருளியிராநின்றான், அவன் இன்று எனது நெஞ்சினுள்ளும் தலையின் மீதும்
வந்து சேர்ந்து மகிழ்விக்கின்றான் காண்மின் என்கிறார்.

திருவாய்மொழியில் “இவையு மவையு முவையும்“ என்ற திருவாய்மொழியில் ஆழ்வார் தம்முடைய ஒவ்வொரு அவயவத்திலும்
எம்பெருமான் வந்து சேர்ந்ததாக அநுஸந்தித்ததுபோலவே இப்பாட்டிலும் அநுஸந்தேயம்,
நெஞ்சு, தலை என்ற இரண்டிடங்களை மாத்திரம் சொன்னது மற்ற ஒக்கலை, கண், மார்பு, தோள் முதலிய அவயவங்கட்கும் உபலக்ஷணமென்க.

ஸ்ரீஹஸ்திகிரியின் கீழே நரஸிம்ஹ மூர்த்தியாக ஸேவை ஸாதிக்கும் பெருமானைத் தானவனை
வன்னெஞ்சங்கீண்ட மணிவண்ணன் என்றதனால் மங்களாசாஸநம் செய்கிறாரென்னலாம்.

முன்னம் சேயூழியான் – ‘சேய்‘ என்றது வெகுதூரம் என்றபடி. ஊழியாவது காலம்.
முன்னமே பிடித்து வெகுதூரமான காலத்திலு உள்ளான் எனவே, அநாதிஸித்தன் என்றதாம்.

ஊழி பெயர்த்தான் –இங்கும் ஊழியென்று காலத்தைச் சொல்லுகிறது. பரமபதமாகிய நித்யவிபூதியில் காலமென்பது கிடையாது,
அஃது உள்ளது இவ்விபூதியில் மாத்திரமே ஆகவே, இங்குக் காலத்தைச்சொன்னது மற்றும் இவ்விபூதியிலுள்ள வஸ்துக்களையெல்லாம் சொன்னபடி.
பெயர்த்தல் – உண்டாக்குதல். “உலகேத்து மாழியான்“ என்பதற்கு –உலகம் புகழும் திருவாழி யாழ்வானையுடையவன் என்றும் பொருள்கொள்ளலாம்.

அத்தியூரான் – ‘ஹஸ்தி‘ என்னும் வடசொல் அத்தியெனத்திரியும். ஹஸ்திக்ஷேத்ர மென்றபடி.
ஹஸ்திகிரி மஹாத்மியத்தில் முதலதயாயத்திற் சொல்லப்பட்டுள்ளமை காண்க. பண்டு இந்த க்ஷேத்ரத்தல் திக்கஜங்கள் வந்து
‘எம்பெருமானை ஆராதித்தமையால் அதுபற்றி ஹஸ்திகிரி யென்று திருநாம்மாயிற்றாம். மற்றும் சில வகையாகவும் நிர்வஹிப்பதுண்டு.

————————————————————————–

தென்னத்தியூரரான போருளாளப் பெருமான் மங்களாசாஸநம் செய்தருளு மிப்பாசுரத்தில் ‘புள்ளையூர்வான்‘ என்று
ஆழ்வார் திருவாய்மலர்ந்தருளவேதான் இப்பெருமானுடைய கருடோத்ஸவம் இமவந்தந் தொடங்கி
இருங்கடலளவும் பிரஸித்தமாகப் பெருமேன்மை வாய்ந்ததாயிற்றென்று பெரியோர் பணிப்பர்.

அத்தி யூரான் புள்ளை யூர்வான் அணி மணியின்
துத்தி சேர் நாகத்தின் மேல் துயில்வான் -முத்தீ
மறையாவான் மா கடல் நஞ்சுண்டான் தனக்கும்
இறையாவான் எங்கள் பிரான் –96-

பதவுரை

புள்ளை ஊர்வான்–பெரிய திருவடியை வாஹனமாகக் கொண்டு நடந்து மவனும்
அணி மணியின் துத்திசேர் நாகத்தின் மேல் துயில்வான்–அழகிய மாணிக்கங்களோடு கூடினவனாய்
படப்பொறிகளை யுடையனான ஆதிசேஷன் மேல் பள்ளி கொள்பவனும்
முத்தீ ஆவான்–மூன்று அக்நிகளாலே ஆராதிக்கப்படுகிறவனும்
மறை ஆவான்–வேதங்களால் பிரதிபாதிக்கப்படுகிறவனும்
மா கடல் நஞ்சு உண்டான் தனக்கும் இறை ஆவான்–பெரிய கடலில் நின்று உண்டான விஷத்தை
உட்கொண்டவனான ருத்ரனுக்கும் ஸ்வாமியாயிருப்பவனுமான
எங்கள் பிரான்–எம்பெருமான்
அத்தியூரான்–ஸ்ரீஹஸ்திகிரியிலே எழுந்தருளி யிருக்கிறான்.

நாகத்தின்மேல் துயில்வான் –திருப்பாற்கடலில் திருவனந்தாழ்வான் மீது பள்ளிகொள்ளும் பெருமானே ஸ்ரீஹஸ்திகிரியிலும்
ஸேவை ஸாதித்தருள்வதாக அநுஸந்திக்கிறார். இந்த விசேஷணம் கூரத்தாழ்வான் திருவுள்ளத்திலே புகுந்திருந்து,
வரதராஜஸ்தவத்தில் “நீலமேக நிபம்“ என்னும் ச்லோகத்தில் ‘அநந்தசயம் த்வாம்‘ என்றருளிச் செய்வதற்குக் காரணமாயிற்றென்க.
என்ற வேதாந்த தேசிக திவ்யஸூக்தியும் ஸ்மரிக்கத்தகுமிங்கு.

துத்தி –படங்களிலுள்ள பொறி, இலக்கணையால் படத்தையும் சொல்லுமென்ப.
“முத்தீ மறையாவான்“ “முத்தி மறையாவனா“ என்பன பாடபேதங்கள். முந்தின பாடத்தில், முத்தீ ஹோமம் செய்யும் முகத்தாலே
ஆராதிக்கப்படுகவனும் வேதங்களால் பிரதிபாதிக்கப்படுபவனுமான பெருமான் என்க.
அன்றியே, த்ரேதாக்நிகளைச் சொல்லுகிற வேதங்களாலே பிரதிபாதிக்கப்படுமவன் என்றுமாம்.
இனி, “முத்திமறையாவான்“ என்ற பாடத்தில், மோக்ஷத்தைப் பிரதிபாதிக்கின்ற வேதங்களாலே சொல்லப்படுமவன் என்கை.

கால் இல்லா யானை மேல் பறந்து காட்டி விரோதிகளை நிரசித்த ஐதிக்யம் –
ஏகாம்பரர் கோயிலில் முன்பே -இன்றும் யானை வாகன ஏசல் கண்டு அருளுகிறார்
யானை வாஹனத்துக்கு கால் இல்லை இங்கு

————————————————————————–

எம்பெருமானே! என்போன்ற அடியார்களை விஷயீ கரிப்பதற்காகவன்றோ திருக்குடந்தையிலே
வந்து சாய்ந்தருளா நின்றாய் என்கிறார்.
‘கும்பகோணம்‘ என்ற வடசொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல் குடமூக்கு என்பதாம்.
(கும்பம் –குடம், கோணம் –மூக்கு) இல் –க்ருஹம்.

எங்கள் பெருமான் இமையோர் தலைமகன் நீ
செங்கண் நெடுமால் திரு மார்பா -பொங்கு
பட மூக்கின் ஆயிர வாய்ப் பாம்பணை மேல் சேர்ந்தாய்
குட மூக்கில் கோயிலாகக் கொண்டு–97-

பதவுரை

செம் கண் நெடுமால்–சிவந்த திருக்கண்களையுடைய ஸர்வேச்வரனே!
திருமார்பா-பிராட்டியைத் திருமார்பிலுடையவனே!
இமையோர் தலை மகன் நீ–நித்யஸூரிகளுக்குத் தலைவனான நீ
எங்கள் பெருமான்–எங்களுக்கு ரக்ஷகனாய்க் கொண்டு
குடமூக்கு இல்–கும்பகோண க்ஷேத்ரத்தை
கோயில் ஆ கொண்டு–கோயிலாகத் திருவுள்ளம்பற்றி
பொங்கு படம் மூக்கின்–விகஸித்தபடங்களையும் மூக்கையுமுடையவனும்
ஆயிரம் வாய்–ஆயிரம் வாயையுடையவனுமான
பாம்பு–ஆதிசேஷனாகிற
அணை மேல்–படுக்கையின் மீது
சேர்ந்தாய்–பள்ளி கொண்டருளினாய்.

————————————————————————–

தம்மை விஷயீகரித்த எம்பெருமானுடைய சில திவ்ய சேஷ்டிதங்களை அநுபவிக்கிறார்.

கொண்டு வளர்க்கக் குழவியாய் தான் வளர்ந்தது
உண்டது உலகு ஏழும் உள் ஒடுங்கக் கொண்டு
குடமாடிக் கோவலனாய் மேவி என்நெஞ்சம்
இடமாகக் கொண்டவிறை-98-

பதவுரை

கோவலன் ஆய்–இடையனாய் வந்து பிறந்து
குடம் கொண்டு ஆடி–குடங்களைக் கையிலே கொண்டு கூத்தாடி (அதனாலுண்டான ஆயாஸம் தீர)
என் நெஞசம் மேவி–என்னுடைய ஹ்ருதயத்திலே பொருந்தி
இடம் ஆக கொண்ட இறை–(எனது நெஞ்சையெ) நித்ய வாஸஸ்த்தாநமாகக் கொண்ட ஸ்வாமி
கொண்டு வளர்க்க–சிலர் கையிலெடுத்துச் சீராட்டி வளர்க்க வேண்டும்படியான
குழவி ஆய்–சிறுகுழந்தையாய்
தான் வளர்ந்தது–தான் வளர்ந்த அப்படிப்பட்ட மிகச்சிறிய பருவத்திலே
உலகு ஏழும்–ஸப்த லோகங்களும்
உள் ஓடுங்க–தன்னுள்ளே ஒடுங்கும்படி
உண்டது!–உட்கொண்டது (என்ன ஆச்சரியம்)

இடையனாய் வந்து பறந்தருளி அந்த ஜாதியின் மெய்ப்பாட்டுக்காகக் குடக்கூத்தாடி அதனாலுண்டான சிரமந்தீர
என்னெஞ்சிலேவந்து இளைப்பாறு மெம்பெருமான், முன்னே செய்தவொரு அற்புதச்செயலை என்னவென்று சொல்லுவேன்,
அது யாதெனில், மிகச்சிறிய குழந்தையாக இருக்கும் பருவத்திலே ஏழுலங்களும் தனது சிறிய திருவயிற்றிலுள்ளே
ஒடுங்கும்படி செய்த விசித்திரம். இவன் வளர்ந்ததோ கொண்டு வளர்க்கக் குழவியாய்,
உண்டதோ உலகேழுமுன்ளொடுங்க, இது என்ன மாயம்.

ஸ்வாதீநமாக ஒருகாரியமும் செய்யமுடியாத மிகச்சிறிய குழந்தைப்பருவம் என்று காட்டுதற்காகக்
கொண்டு வளர்க்கக் குழவியாய் என்றது

குடமாடி – தலையில் அடுக்குக்குடமிருக்க, இருதோள்களிலும் அங்ஙனே அடுக்குக்குடமிருக்க இவை சிறிதும்
சலியாதபடி இரண்டுகைகளாலும் குடங்களை மாறிமாறியெறிந்து ஆடுவதொரு கூத்து குடக்கூத்தெனப்படும்.

‘கோபாலன்‘ என்பது கோவலனாயிற்று.

————————————————————————–

எம்பெருமான் செய்தருளின அவதாரங்கள் பலபல கிடந்தாலும் த்ரிவிக்ரமாவதாரத்திலும் க்ருஷ்ணாவதாரத்திலுமே
இவ்வாழ்வார் திருவுள்ளம் மிக ஈடுபட்டிருக்குமென்பது சாத்துப் பாசுரமாகிய இப்பாட்டிலும் மேற்பாட்டிலும் விளங்கும்.

இறை எம்பெருமான் அருள் என்று இமையோர்
முறை நின்று மொய் மலர்கள் தூவ -அறை கழல
சேவடியான் செங்கண் நெடியான் குறளுருவாய்
மாவலியை மண் கொண்டான் மால் –99-

பதவுரை

இமையோர்–(பிரமன் முதலான) தேவர்கள்
எம்பெருமான்–‘எம்பெருமானே!‘ (எங்கள் விஷயத்தில்)
இறை–கொஞ்சம்
அருள் என்று–கிருபை பண்ண வேணும் என்று சொல்லி
முறை நின்று–அடிமைக்கு ஏற்ப நின்று
மொய் மலர்கள்–அழகிய புஷ்பங்களை
தூவ–பணிமாறும்படியாக,
அறை கழல சே அடியான்–ஒலிக்கின்ற வீரக்கழலையுடைய திருவடிகளை யுடையவனும்
செம் கண்–செந்தாமரைக் கண்ணனும்
நெடியான்–எல்லாரிலும் மேம்பட்டவனுமான
மால்–திருமால்
குறள் உரு ஆய்–(மாவலி பக்கல்) வாமந ரூபியான் வந்து தோன்றி
மா வடிவின்–பெரிய வடிவினாலே
மண் கொண்டான்–பூமியை அளந்து கொண்டான்.

உலகங்களை வியாபிக்கும்போது ஓங்கிவளர்ந்த திருவடியைக் கண்டு அதற்குமுன் அஹங்காரிகளாயிருந்த
தேவர்களெல்லாரும் ‘ஸ்வாமிந்! எமக்கு சிறிது அருள் புரியவேணும்‘ என்று இரந்து புஷ்பங்களை ஸமர்ப்பித்து
வழிபாடுகள் செய்தமை முன்னடிகளின் கருத்து.

இப்படி தேவர்களெல்லாரும் ஆச்ரயிக்கும்படியாக எம்பெருமான் உலகளந்தான் என்று சொல்லிவிட்டதானது –
அத்திருவடிகளே நமக்கும் ஆச்ரயணீயம் என்றபடி.

————————————————————————–

அமுதம்போன்ற பல விளிகளாலே எம்பெருமானை யழைத்து “என்றனளவென்றால் யானுடையவன்பு“ என்று
சொல்லித் தலைக்கட்டுகிற இவ்வாழ்வாருடைய கருத்து யாதெனில், பிரானே! பிரயோஜநாந்தரங்களை விரும்புகின்ற
தேவர்களுக்கு நீ படாதன்பட்டு உடம்பு நோவக் காரியங்கள் செய்தான், எனக்காக அப்படி ஒருகாரியமும் செய்யவேண்டா,
என்னால் தாங்கமுடியாதபடி வளர்ந்து செல்லுகிற எனது காதலை அடக்கித் தந்தாயாகில்
இதுவே எனக்குப் பாமோபகாரம் செய்ததாகும் என்கை. இதனால், பகவத்விஷயத்தல் தமக்கு அளவுகடந்த அன்பு
விளைந்திருக்கும்படியைச் சொல்லி, இப்பிரபந்தம் கற்பார்க்கும் இப்படிப்பட்ட அன்பு விளையும் என்று ஸூசிப்பிக்கிறபடி.

மாலே நெடியானே கண்ணனே விண்ணவர்க்கு
மேலா வியன் துழாய்க் கண்ணியனே -மேலாய்
விளவின் காய் கன்றினால் வீழ்த்தவனே என்தன்
அளவன்றால் யானுடைய வன்பு –100-

பதவுரை

மாலே–(அடியாரிடத்தில்) வியாமோஹ முள்ளவனே!
நெடியோனே–ஸர்வஸ்மாத்பரனே!
கண்ணனே–ஸ்ரீக்ருஷ்ணனே!
விண்ணவர்க்கு மேலா–நித்யஸூரிகளுக்குத் தலைவனே!
வியன் துழாய் கண்ணியனே–அழகிய திருத்துழாய் மாலையை அணிந்துள்ளவனே!
மேலால்–முன்னொரு காலத்தில்
விளவின்காய்–விளங்காயை
கன்றினால்–ஒரு கன்றைக் கொண்டு
வீழ்த்தவனே–உதிர்த்துத்தள்ளினவனே!,
யான் உடை– (உன்னிடத்தில்) அடியேன் வைத்திருக்கிற
அன்பு–அன்பானது
என்தன் அளவு அன்று–என்னளவில்அடங்கி நிற்பதன்று.

இப்பாசுரந்தன்னையே திருமங்கையாழ்வார் திருக்குறுந்தாண்டகத்தில்
“சித்தமும் செவ்வைநில்லாது என்செய்கேன் தீவினை யேன், பத்திமைக்கு அன்புடையேனாவதே பணியாய் எந்தாய்!“
என்று விரித்துரைத்தனர் போலும்.

இஷ்டங்களைக் கொடுப்பதற்கும் அநிஷ்டங்களைத் தவிர்ப்பதற்கும் கடவனான எம்பெருமானே
அன்புக்கு உரியவன் என்று சொல்லிப் பிரபந்தத்தைத் தலைக்கட்டினாராயிற்று.

————————————————————————–

அன்பே தகளியாய் ஆர்வமே நெய்யாக
இன்புருகும் சிந்தை இடுதிரியாக நன்புருகி
ஞானச் சுடர் விளக்கு ஏற்றினேன் நாரணற்கு
ஞானத் தமிழ் பிரிந்த நான் -1

————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பூதத் ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

இரண்டாம் திருவந்தாதி -பாசுரங்கள் -41-60-திவ்யார்த்த தீபிகை சாரம்–

October 3, 2014

முன்னடிகட்குப் பலவகையாகப் பொருள்கொள்ள இடமுண்டு.
கீழ்ப்பாட்டில் காம புருஷார்த்தத்தை நிந்தித்தார்: விஷய போகங்கள் கர்ம புருஷார்த்தத்தைச் சேர்ந்தவையாதலால்
அவற்றை ஹேயமென்பது காம புருஷார்த்தத்தை ஹேயமென்ற வாறாம். இப்பாட்டில் அர்த்த புருஷார்த்தத்தை நிந்திக்கிறார்.
விசேஷமாகப் பொருள்களை ஸம்பாதித்து அவற்றால் யஜ்ஞாயாகங்களைப் பண்ணி அவற்றின் பலனாக
ஸ்வர்க்கலோகத்தை யடைந்து ஸுகிப்பது – என்றொரு வழியுண்டே; அவ்வழியையும் மேற்கொள்ளவேண்டா வென்கிறது.

பொருளால் அமர் உலகம் புக்கி இயலல் ஆகாது
அருளால் அறம் அருளும் அன்றே -அருளாலே
மா மறையோர்க்கு ஈந்த மணி வண்ணன் பாதமே
நீ மறவேல் நெஞ்சே நினை—–41–

பதவுரை

அமருலகம்–சுவர்க்க லோகத்தை
பொருளால்–‘இதுவும் ஒரு புருஷார்த்தம்’ என்கிற எண்ணத்துடன்
புக்கு இயலல் ஆகாது–போய்ச் சேர முயல்வது தகாது;
அருளான்–பரம தயாளுவான எம் பெருமான்
அறம்–புண்யத்தின் பயனான சுவர்க்க லோகத்தை
அருளும் அன்றே–தன் க்ருபையாலே கிடைக்கச் செய்வனாம்;
அருளாலே–கிருபையினாலே
மா மறை யோர்க்கு–மஹர்ஷிகளுக்கு
ஈந்த–முக்தி யளித்த
மணி வண்ணன் பாதமே-நீலமணி நிறத்தவனான எம்பெருமானது திருவடிகளையே
நெஞ்சே நீ மறவேல்–நெஞ்சே! நீ மறவாதே
நினை–தியானித்துக் கொண்டிரு.

பொருளால் அமருலகம் புக்கியலாகாது = அர்த்த புருஷார்த்த மென்கிற திரவியங்களைக் கொண்டு ஸ்வர்க்கலோகத்தைப்
பெறுவோமென்று அதற்கு முயற்சி செய்யலாகாது என்றபடி.
அன்றியே, பொருளால் = இது நமக்குப் புருஷார்த்தம் என்னும் புத்தியோடே, ஸ்வர்க்கலோக ப்ராப்தியை விரும்பி
அதற்காக நீங்கள் எம் பெருமானையே அடிபணிந்தால் அவன் கருத்தறிந்து காரியஞ்செய்யுமவனாகையால்
‘நம்மை அடுத்திருக்கு மிவர்களுக்கு ஸ்வர்க்கத்தில் நசையாகில் அதையும் அநுபவித்துத் தீரட்டும்’ என்று கிருபை பண்ணியருள்வன்;
அதற்காக நீங்கள் தனிப்பட ஒரு ப்ரயாஸங்கொள்ள வேண்டா; எது வேணுமானாலும் மணிவண்ணன் பாதமே நினைக்கத்தகும் – என்கிறார்.

“நெஞ்சே!- நீ மறவேல்” என்று தம்முடைய திருவுள்ளத்தை நோக்கிச் சொல்லுவதாயிருந்தாலும்
இதை அந்யாப தேசமாகக் கொள்ளவேணும்;
பிறரைக் குறித்துச் சொல்ல வேண்டுவதையும் தம்மை நோக்கிச் சொல்லிக்கொள்வதுண்டு:
திருவாய்மொழியில் (8- 3 -2) “சரணமாகிய நான்முறை நூல்களுஞ் சாராதே, மரணந்தோற்றம் வான்பிணி
மூப்பொன்றி வைமாய்த்தோம்” என்றவிடங்காண்க.
இங்கு, முன்னிலையாகச் சொல்ல வேண்டியதைத் தன்மையாகச் சொல்லியிருத்தல் உணர்க.

அமருலகம் – ‘அமரருலகம்’ என்பதன் விகாரம். ‘அறம்’ என்பது தர்மத்துக்குப் பேராயினும் தர்மத்தினால் ஸாத்யமான
புண்யலோகத்தைச் சொல்லுகிறது. இங்கு அருளும் = செய்யுமென்முற்று.

மூன்றாமடியில் “மாமறையோர்க்கு” என்றும் “மாமறையோற்கு” என்றும் பாடபேதமுண்டு;
முந்தின பாடத்தில் பன்மை; பிந்தின பாடத்தில் ஒருமை, பன்மையாகில் தண்காரண்ய வாஸிகளான முனிகளைச் சொல்லுகிறது;
சுகர், வாமதேவர் முதலிய ரிஷிகளைச் சொல்லவுமாம்; ஒருமையாகில், மார்க்கண்டேயனைச் சொல்லுகிறதாம்.
முத்தி யளிக்கவல்ல முகுந்தன் பாதமே பற்றினால் முதலில் ஸ்வர்க்கத்தையும் பெறலாம்;
காலக் கிரமத்தில் முத்தியையும் பெற்று வாழலாம் என்பதும் இதில் தொனிக்கும்.

முதலடியில் ‘அமருலகம்’ என்றதும் இரண்டாமடியில் ‘அறம்’ என்றதும் மோஷலோகத்தையே சொல்லுவதாகவும் ஒரு யோஜநையுண்டு.
அப்போது, ‘பொருளால்’ என்றது – ஸாதநாநுஷ்டதத்தினால் என்றபடி;
ஆக, மோக்ஷத்துக்காக ஒரு ஸாதநாநுஷ்டாநம் பண்ணவேணுமென்பதில்லை;
பரம தயாளுவான எம்பெருமான் அதை நிர்ஹேதுக கிருபையினாலே தந்தருள்வன்;
அப்படியே பல வைதிகர்களுக்கு அவன் அருளியிருக்கிறான்; இப்படியாகில் எல்லார்க்கும் மோக்ஷமளிக்க வேண்டிவருமே யென்னில்,
இந்த ஸர்வமுக்தி ப்ரஸங்கம் வாராமைக்காக அந்த மணிவண்ணனது திருவடிகளைச் சிந்தித்தல் வேண்டும் – என்பதாகக் கருத்துக் கொள்ளலாம்.

————————————————————————–

ஸம்ஸார போகங்களைத் துறந்து அவனை அநுஸந்திக்குமவர்களே பிறவிகளை அடியறுக்க வல்லவரென்கிறார்.

நினைப்பன் திருமாலை நீண்ட தோள் காண
நினைப்பார் பிறப்பொன்றும் நேரார் -மனைப்பால்
பிறந்தார் பிறந்து எய்தும் பேரின்பம் எல்லாம்
துறந்தார் தொழுதாரத் தோள்–42–

பதவுரை

திருமாலை–லக்ஷ்மீநாதனான எம்பெருமானை
நீண்ட தோள் காண நினைப்பான்–(அவனது) சிறந்த திருத்தோள் களைக் கண்டு அநுபவிப்பதற்காக நினைக்கின்றேன்.
நினைப்பார்–இப்படி நினைப்பவர்கள்
ஒன்று பிறப்பும் நேரார்–ஒருவகை யோனிப் பிறப்பையும் அடைய மாட்டார்கள்
அத்தோள்–அந்தத் திருத்தோள்களை
தொழுதார்–தொழுமவர்கள்
மனைப்பால் பிறந்தார் பிறந்து எய்தும் பேர் இன்பம் எல்லாம துறந்தார்–ஸம்ஸாரத்தில் பிறந்தவர்கள் ஜன்ம மெடுத்ததனால்
அடையக்கூடிய சிற்றின்பங்களை யெல்லாம் வெறுப்பவராவர்.

திருமாலை நீண்ட தோள் காண நினைப்பன் – ஐச்வரிய மளிக்க வேணுமென்றும் ஸந்தான மளிக்க வேணுமென்றும்
பல பல கோரிக்கைகளை முன்னிட்டு எம்பெருமானைப் பலர் அடிபணிவ ராகிலும்
நான் அப்படி ஒரு கோரிக்கையும் கருதினவனல்லேன்,
“தோள் கண்டார் தோளே கண்டார்“ என்னும் படியான அவனது தோளழகை ஸேவிக்கப்பெற வேணுமென்பது தவிர
வேறோராசையும் எனக்கில்லை என்றவாறு,
இப்படி எம்பெருமானுடைய திவ்யாவயவத்தை ஸ்லயம் போக்யமாக நினைப்பவர்கள்
“பொய்ந்நின்ற ஞானமும் பொல்லா வொழுக்கு மழுக்குடம்பு மிந்நின்ற நீர்மை இனியாமுறாமை“ என்று
ஆழ்வார் பிரார்த்தித்த பிறப்பின்மையைப் பெற்று நித்ய முக்தராய் வாழ்ந்திடுவர்.

இனிமேல் பிறக்கமாட்டார்களென்பதுந்தவிர, இப்பிறவியிலும் ஸம்ஸாரிகள் உகக்கிற சிற்றின்பங்களை உகவாதே
அவற்றைக் காறியுமிழ்ந்து கைவிடும்படியான விரக்தியும் பெறுவார்கள்
அவனது திருத்தோள்களை ஸேவிக்குமவர்கள் – என்கிறார் பின்னடிகளில்.

பின்னடிகளை இரண்டு வகையாக யோஜிக்கலாம். அத்தோள் தொழுதார் (எவரோ அவரே) மனைப்பால் பிறந்தார்
பிறந்தெய்தும் பேரின்பமெல்லாம் துறந்தாராவர், மனைப்பால் பிறந்தார் பிறந்தெய்தும் பேரின்பமெல்லாம் துறந்தார்
எவரோ அவரே அத்தோள் தொழுதாராவர் – என்று. சிற்றின்பங்களை வெறுத்தவர்களே எம்பெருமானுடைய
வடிவழகில் ஈடுபட்டவராவர், எம்பெருமானுடைய வடிவழகில் ஈடுபட்டவர்களே சிற்றின்பங்களை வெறுக்க வல்லவராவர் – என்றவாறு.

மனைப்பால் – பால –ஏழனுருபு. சிற்றின்பத்தைப் பேரின்பம் என்றுசொல்லாற் சொன்னது எதிர்மறை யிலக்கணையாம்,
ஸம்ஸாரிகளுடைய நினைவாலே பேரின்ப மென்கிறது.

எம்பெருமானார் ஒரு நாள் உச்சிப் போதில் திருக் காவிரியிலே மாத்யாஹ்நிகம் அநுஷ்டித்துக் கொண்டிருக்கையில்
ஒருகாமுகன் தன்னுடைய மனைவியை அழைத்துக் கொண்டு அக்கரையில் நின்றும் ஆற்றிலே வரும்போது
வெய்யிலின் கடுமையினால் அவளுக்கு வாட்டம் வாராமைக்காக அவன் அவளுக்கு நடைபாவாடை போட்டுக்கொண்டும்
குடைபிடித்துக் கொண்டும் மற்றும் பல உபசாரங்கள் செய்து கொண்டும் மிக்க ஆதரந்தோற்ற அழைத்துக் கொண்டு
வருவதை எம்பெருமானார் கண்டு ‘அப்படி! இவ்வளவு உபசாரங்கள் பண்ணுகிறாயே, என்ன விசேஷம்?‘ என்று கேட்டருள,
இவளுடைய கண்ணழகிலே நான் மிகவும் ஈடுபட்டிருப்பேன், அதற்கொரு குறைபாடு நேராமைக்காக
உபசாரங்களைப் பண்ணி வருகிறேன். என்று அவன் விடையளிக்க, அதை எம்பெருமானார் கேட்டு
‘இதனிலும் விஞ்சிய அழகுவாய்ந்த கண்களை நீ கண்டதில்லையோ?‘ என்ன,
‘எங்குங் கண்டதில்லை‘ என்று அவன் சொல்ல,
‘அப்படிப்பட்ட கண்களைக்காட்டினால் என்ன செய்வாய?‘ என்று உடையவர் கேட்க,
‘இங்ஙனே ஸகல உபசாரங்களும் அங்கே பண்ணக்கடவேன்‘ என்று விடையளிக்க,
அப்போதே நம்பெருமாள் ஸ்ந்நிதியி னுள்ளே அழைத்துக்கொண் டெழுந்தருளி
“அரங்கத்தமலன் முகத்துக் கரியவாகிப்புடை பேதைமை செய்தனவே“ என்னப்பட்ட திருக்கண்களை ஸேவிக்கப் பண்ணினவாறே
அத் தம்பதிகளிருவரும் அத்திருக்கண்களுக்கு அற்றுத் தீர்ந்தனர் என்றொரு இதிஹாஸம் ப்ரஸித்தம்
இதனை இப்பாட்டின் பின்னடிகளுக்குப் பொருத்தமாக அநுஸந்திப்பது.

————————————————————————–

எம்பெருமானுடைய திருத்தோள்களைத் தொழுவதைப் புருஷார்த்தமாகக் கீழ்ப்பாட்டி லருளிச்செய்தார், ‘
அவனுடைய திருத்தோள்களைத் தொழவேணுமென்னும் நிர்ப்பந்தம் எனக்கில்லை,
அவனுடைய திருவடிகளைத் தொழுமவர் எவரோ அவருடைய திருவடிகளைத் தொழுவதே எனக்குப் புருஷார்த்தம் என்கிறார்.
இப்பாட்டில் எம்பெருமானிடத்து அன்பு செய்வதிற்காட்டிலும பாகவதர்களிடத்து அன்பு செய்வதே
சிறந்த தென்னும் நூற் கொள்கை இதில் தழுவப்பட்டதென்க.

“ஸித்தர் பவதிவா நேதி ஸம்சயோ ச்யுதஸேவிநாம் நஸம் கியோ ஸ்தி தத்பக்தபரிசர்யாதாத்மநாம்“
எம்பெருமானை அடிபணிந்தவர்களுக்குப் பேறு தப்பாமல் கிடைக்குமென்று துணிந்து சொல்லமுடியாது, ஸந்தேஹமுண்டு.
பாகவதர்களை அடிபணிந்தவர்களுக்கு அப்படிப்பட்ட ஸந்தேஹத்திற்கிடமில்லை. பேறு கை புகுந்தே தீரும்“ என்று
சாஸ்த்ரங்களிற் சொல்லியிருப்பது

தோள் இரண்டும் எட்டு ஏழும் மூன்றும் முடி அனைத்தும்
தாள் இரண்டும் வீழச் சரம் துணிந்தான் -தாள் இரண்டும்
ஆர் தொழுவார் பாதம் அவை தொழுவது அன்றே என்
சீர் கெழு தோள் செய்யும் சிறப்பு —43-

பதவுரை

தோள் இரண்டு எட்டு ஏழும் மூன்றும்–இருபது தோள்களும்
வீழ–முடியும்படி
சரம் துரந்தான்–அம்புகளைச் செலுத்தின பெருமானுடைய
தாள் இரண்டும்–இரண்டு திருவடிகளையும்
தொழுவார் ஆர்–தொழுகிறவர்கள் எவரோ (அவர்களது)
முடி அனைத்தும்–(பத்தாகிய) எல்லாத் தலைகளும்
தாள் இரண்டும்–இரண்டு கால்களும்
பாதம் அவை–திருவடிகளை
தொழுவது அன்றே–ஸேவிப்பதன்றோ
என் சீர் கெழு தோள் செய்யும் சிறப்பு–எனது அழகிய தோள்கள் (எனக்குச்) செய்யும் உபகாரமாம்.

தோள் இரண்டு எட்டு ஏழும் மூன்றும் வீழ–இருபது தோள்களும் முடியும்படி
ஆக இப்படி சித்திரவதம் செய்தமையைத் தெரிவிக்கிறபடி.

என்சீர்கெழுதோள் செய்யுஞ் சிறப்பு – உலகத்தில் எல்லா மனிதர்களுக்கும் பொருளைக் கவர்தல், நல்லாரைக் கொல்லுதல்
முதலிய தொழில்களைச் செய்து கொள்வர் எனது கைகள் அப்படிப்பட்ட தொழில்களில் எனக்கு உதவிபுரிய வேண்டா,
பாகவதர்களைத் தொழுவதற்கு உறுப்பாகுமேல் இதுவே எனக்குச் செய்த மஹோபகாரமென்கிறார்.

————————————————————————–

சிறந்தார்க்கு எழு துணையாம் செங்கண் மால் நாமம்
மறந்தாரை மானிடமா வையேன் –அறம் தாங்கும்
மாதவனே என்னும் மனம் படைத்தது மற்றவன் பேர்
ஓதுவதே நாவினால் உள்ளு ——-44–

பதவுரை

சிறந்தார்க்கு–ஸ்ரீவைஷ்ணவோத்தமர்களுக்கு
எழுதுணை ஆம்–உஜ்ஜீவந ஹேதுவான துணையாகின்ற
நாமம்–திருநாமத்தை
மறந்தாரை–மறப்பவர்களை
மானிடம் ஆ–மநுஷ்ய யோனியிற் பிறந்தவர்களாக
வையேன்–என்னெஞ்சில் கொள்ள மாட்டேன்
அறம் தாங்கும் மாதவனே என்னும் மனம் படைத்து–“தர்ம ஸ்தாபநம் பண்ண வல்ல திருமாலே!“ என்று கூவியழைக்கும்படி யான அத்யவஸாயங்கொண்டு
செம் கண்மால்–செந்தாமரைக் கண்ணனான பெருமானுடைய
மற்று–மேலும்
அவன் பேர்–அவனது திருநாமத்தை
நாவினால் ஓதுவதே–நாவினால் சொல்லுவதையே
உள்ளு–(ப்ராப்தமென்று) அநுஸந்தித்திரு. (நெஞ்சமே! என்று விளி வருவித்துக் கொள்க)

‘சிறந்தார்‘ என்றது – பகவத்கீதையில் “ஜ்ஞாநீத்வாத்மைவ மே மதம் – ஞானியானவ் எனக்கே உயிராயிருப்பன்” என்று
கீதாசார்யனான தானே அருளிச்செய்யும்படி அவனுடைய உகப்புக்கு இலக்கான மாஞானிகளை.
அப்படிப்பட்டவர்கள் உஜ்ஜீவிப்பதற்கு உரிய துணையான எம்பெருமானுடைய திருநாமத்தை
ஸர்வகாலமும் ஸ்மரிக்கவேண்டியது கடமையாயிருக்க, எவர்கள் மறந்திருக்கின்றார்களோ, அவர்களை
மநுஷ்யகோடியில் இட்டு எண்ணமாட்டேன் – என்கிறார் முன்னடிகளில்
“ஆன்விடையேழன்ற டர்த்தாற்கு ஆளானாரல்லாதார், மானிடவரல்லரென்று என் மனத்தே வைத்தேனே“ என்றார் திருமங்கை யாழ்வாரும்.

தாம் இருக்க வேண்டும்படியைத் தம்முடைய நெஞ்சுக்கு உரைக்கிறார் பின்னடிகளில்.
“நெஞ்சே“ என்னும் விளி வருவித்துக்கொள்வது. நெஞ்சே! தர்ம ஸம்ஸ்தாபநம் பண்ணுவதற்காக அவதரிக்கிறேன் என்று
தானே சொல்லிக் கொண்டபடி வேண்டியபோது திருவவதரித்துக் தருமநெறியைத் தாங்குகின்ற மாதவனே! என்று சொல்லி
எம்பெருமானுடைய தன்மைகளையே அநுஸந்திக்கும்படியான உறுதிக்கொண்டு
அவனது திருநாமங்களை ஓதுவதே உரியதென்று கொண்டிரு – என்று உபதேசித்தாராயிற்று.

————————————————————————–

பாகவதர்களின் பெருமையைப் பேசுகிறார். ஸகல வேதங்களினாலும் பரம்பொருளாகப் பிரதிபாதிக்கப்பட்டவனும்,
அந்த மேன்மை விளங்குமாறு திருமலையில் வந்து நித்ய ஸ்ந்நிதி பண்ணியிருப்பவனும்,
அங்கே நித்யஸூரிகளும் வந்து அடிபணிய நிற்பவனுமான எம்பெருமானுடைய திருவடிகளிற் பழகுகின்ற
பாகவதர்கள் செல்வம் படைத்தாலும் ‘நாம் செல்வம் படைக்கப் பெற்றோம், நம்மோடு ஒத்தாரும் மிக்காருமில்லை‘ என்று
செருக்குக் கொள்ளமாட்டார்கள்,
இருந்த செல்வம் அழிந்து போனாலும் ‘ஐயோ! ஏழைமை வந்து விட்டதே!‘ என்று சிறிதும் தளர்ச்சியடையமாட்டார்கள்
“களிப்புங் கவர்வுமற்று“ என்ற பாசுரத்திற் சொன்னபடி லாபநஷ்டங்களில் ஒருபடிப்பட்ட சிந்தை நிலைமையை யுடையராயிருப்பர்
“முனியார் துயரங்கள் முந்திலும், இன்பங்கள் மொய்த்திடினுங் கனியார் மனம்… எங்களிராமாநுசனை வந்தெய்தினர்“ என்ற
ஸ்ரீ ராமாநுஜபக்தர்களைப் போன்றிருப்பர்களாம் பகவத் பக்தர்களும்.

உளது என்று இறுமாவார் உண்டு இல்லை என்று
தளர்தலதனருகும் சாரார் -அளவரிய
வேதத்தான் வேங்கடத்தான் விண்ணோர் முடி தோயும்
பாதத்தான் பாதம் பயின்று —45-

பதவுரை

அளவு அரிய வேதத்தான்–அளவிட முடியாதபடி அந்நதமாயுள்ள வேதங்களினால் பிரதிபாதிக்கப்படுபவனும்
வேங்கடத் தான்–திருமலையிலே வந்து நிற்பவனும்
பயின்று–பழகி (இருக்குமவர்கள்)
உளது என்று இறுமாவார்–தமக்குச் செல்வமுள்ள தென்று செருக்குக் கொள்ள மாட்டார்கள்
உண்டு இல்லை என்று–(செல்வம்) நேற்று இருந்து இன்று அழிந்த போயிற்றென்று
விண்ணோர் முடிதோயும் பாதத்தான்–நித்ய ஸூரிகளின் முடிகள் பணியப் பெற்ற திருவடிகளை யுடையனுமான எம்பெருமானுடைய
பாதம்–திருவடிகளிலே
தளர்தல் அதன் அருகும் சாரார்–தளர்ச்சி யடையும் ஸ்வபாவத்தின் கிட்டவும் செல்ல மாட்டார்கள்.

உண்டில்லை யென்று – செல்வம் அடியோடு இல்லாதவர்களுக்கு அவ்வளவாகத் தளர்ச்சி இராது,
சிலநாள் இருந்து கழிந்தவர்களுக்கு அளவற்ற தளர்ச்சி உண்டாக ப்ரஸக்தியுண்டே அப்படிப்பட்ட நிலைமையிலும்
தளரமாட்டார்கள் என்கைக்காக “உண்டில்லை யென்று“ என்றார்.
‘நேற்று உண்டாயிருந்தது, இன்று இல்லையா யொழிந்தது‘ என்று தளரமாட்டார்கள் என்கை.

அளவரிய வேதத்தான் – வேதங்களுக்கு அளவில்லை யென்பது வேதத்திலேயே விளங்கக் காட்டப்பட்டுள்ளது.
க்ருஷ்ண யஜுர் வேதத்தின் ப்ராஹமணத்தில் ஒரு பகுதியான ‘கடாகம்‘ என்னும் சாகையில்
முதல் ப்ரச்நத்தில் பதினோராவது அநுவாகத்தில் ஓர் உபாக்கியானம் ஓதப்பட்டிருக்கின்றது, அதாவது –
முன்பொரு கால் ‘பரத்வாஜர்‘ என்னும் மஹர்ஷியானவர் ஸகலவேதங்களையும் ஓதி முடிக்க வேணுமென்ற முயற்சிகொண்டு
அதற்குரிய ஆயுஸ்ஸைப் பெறுவதற்காக இந்திரனைக் குறித்து உபாஸநைசெய்து அவனை ப்ரஸந்நனாக்கி
அவனுடைய அநுக்ரஹத்தால் ஒரு புருஷாயுஸ்ஸுக்கு நூறாண்டு விழுக்காடு முந்நூறாண்டுகொண்ட மூன்று ஆயுஸ்ஸுக்களை
வரம்பெற்று அந்த வாழ்நாளில் குருகுலவாஸஞ் செய்து வேதமோதிவந்தார். முந்நூறாண்டும் முடிந்து ஜீர்ண சரீரராய்
கிழத்தனமடைந்து சரமகாலமணுகிப் படுத்திருக்கும் அம்முனிவரை இந்திரன் வந்துகிட்டி
‘ஓ பரத்வாஜ் முனிவரே! மீண்டும் ஒரு நூறாண்டுகொண்ட ஆயுளை உமக்கு நான் கொடுப்பேனாகில் அந்த வாழ்நாளை நீர்
எவ்விதமாகக் கழிக்க உத்தேசிக்கிறீர்? அந்த ஆயுஸ்ஸில் நீர் ஸாதிக்கவிரும்பும் புருஷார்த்தம் யாது? என்று கேட்க,
முனிவர் ‘வேறு நான் என்ன செய்யப் போகிறேன்? அந்த ஆயுஸ்ஸிலும் வேதாத்யயநமே செய்யக்கடவேன் என்றார்.
அதைக் கேட்ட இந்தரன் ‘ஓ‘ இவர் இதுவரை கழிந்த மூன்று ஆயுஸ்ஸில் மூன்று வேதங்களையும் பூர்த்தியாக ஓதிவிட்டதாகவும்
இன்னமும் ஒரு வேதம் குறைபட்டிருப்பதாகவும், அதையும் இந்த நான்காவது ஆயுஸ்ஸில் ஓதிவிட்டால் சதுர்வேதீ என்று
விருது பெற்றுவிடலாமென்றும் இவர் ஆசைப்படுகிறார் போலும், இவருடைய ப்ரமத்தை நீக்குவோம்‘ என்றெண்ணி,
ருக்வேதம், யஜுர் வேதம், ஸாமவேதம் என்ற மூன்று வேதங்களையும் தம்முடைய யோக ஸாமர்த்தியத்தினால் மூன்று மலைகளாக்கி
இதற்கு முன் அம்முனிவர் கண்டறியாத மலைவடிவமான அந்த வேதங்களை அவருக்குக் காட்டினான்.
பிறகு அவற்றுள் ஒவ்வொரு மலையினின்றும் ஒவ்வொரு முஷ்டியால் தூள்களையெடுத்து அங்ஙனம் மூன்று முஷ்டிகளெடுத்துக் காட்டி
‘ஓ முனிவரே! இம்மூன்று மலைகளும் வேதங்களை அதில் ஒவ்வொரு துகளும் ஒவ்வொரு வேதமாதலால்
வேதங்களுக்கு எல்லையே கிடையாது‘ என்றான் இவ் வார்த்தையைக் கேட்ட முனிவர்
‘இப்படியாகில் இன்றளவும் நாம் செய்த வேதாத்யயநம் எவ்வளவாயிருக்கும்‘ எனச் சிந்தை கொண்டபடியேக் குறிப்பாலறிந்த இந்திரன்
‘முன்வரே! இம்மூன்று முஷ்டிகளில் அடங்கியுள்ள வேதராசிமைத்தான் நீர் இதுவரை முந்நூறாண்டுகளாக் குருகுல வாஸஞ்செய்து ஓதினிர்,
இதோ மலைமலையாகக் கிடக்கும் வேதங்கள் உம்மால் ஓதப்படவில்லை‘ என்றானாம்.

————————————————————————–

பாகவதர்கள் லாப நஷ்டங்களில் உகப்பும் வெறுப்புங் கொள்ளாதிருக்கும்படி எம்பெருமான் பல திவ்யதேசங்களில்
ஸந்நிதி பண்ணி க்ருஷி பண்ணினானாகையாலே அப்படிப்பட்ட திவ்ய தேசங்களில் சிலவற்றைப் பேசி அநுபவிக்கிறார்.
திருவரங்கம் பெரிய கோவில், திருக்கோட்டியூர், திருவேங்கடம் திருநீர்மலை என்னுமித் திருப்பதிகளிலே
எம்பெருமான் நெடுங்காலமாக வாழ்கின்றானென்கிறார்.

பயின்றது அரங்கம் திருக்கோட்டி பன்னாள்
பயின்றதுவும் வேங்கடமே பன்னாள் -பயின்ற
தணி திகழும் சோலை யணி நீர் மலையே
மணி திகழும் வண் தடக்கை மால் —46-

பதவுரை

மணி திகழும்–நீல மணிபோல் விளங்குமவனும்
வண் தடக்கை–உதாரமாய் நீண்ட திருக்கைகளை உடையனுமான
மால்–எம்பெருமான்
பயின்றது–நித்ய வாஸம் செய்தருளுமிடம்
அரங்கம் திருக்கோட்டி–திருவரங்கமும் திருக்கோட்டியூருமாம்
பல் நாள்–அநாதி காலம்
பயின்றதுவும்-நித்ய வாஸம் செய்யுமிடமும்
வேங்கடமே–திருமலையாம் (பல்நாள் பயின்றதுவும்)
அணி திகழும் சோலை–அழகு விளங்குகின்ற சோலைகளை யுடைத்தாய்
அணி–இந் நிலவுலகுக்கு அலங்காரமான
நீர்மலை–திருநீர்மலையாம்.

ஆச்ரிதர்கள் திருந்துவதற்காக எம்பெருமான் உகந்து வர்த்திக்கும் திருப்பதிகள் இங்ஙனே பல்லாயிரமுள்ளன,
அவற்றுக்கு ஓர் வரையறையில்லை – என்றவாறு.

“அணிதிகழுஞ் சோலை“ என்றதை நீர்மலைக்கு விசேஷணமாக்காமல்
தனி விசேஷயமாகக் கொண்டு திருமாலிருஞ்சோலை யென்றுரைத்தலு மொக்கும்.

————————————————————————–

மாலை யரி உருவன் பாத மலர் அணிந்து
காலை தொழுது எழுமின் கைகோலி-ஞாலம்
அளந்து இடந்து உண்டு உமிழ்ந்த அண்ணலை மற்று அல்லால்
உளம் கிடந்த வாற்றால் உணர்ந்து ———47-

பதவுரை

ஞாலம்–பூமி முழுவதையும்
அளந்து–ஒரு கால் அளந்தும்
இடந்து–மற்றொருகால் (வராஹமாகி) இடந்தும்
உண்டு–(பிரளயத்தில்) திருவயிற்றினுள் வைத்தும்
உமிழ்ந்த–பிறகு வெளிப்படுத்தியும்
இப்படி யெல்லாம் (ரக்ஷணத் தொழில்) செய்த
அண்ணலை–ஸர்வ ஸ்வாமியான எம்பெருமானை
மற்று அல்லால்–கீழ்ச்சொன்ன வகையான ரக்ஷணத் தொழில்கள் தவிரவும்
உளம் கிடந்த ஆற்றல்–(அன்பருடைய நெஞ்சை உருக்கிக்கொண்டு அவர்களுடைய) நெஞ்சிலே கிடக்கும் விதங்களோடுகூட
உணர்ந்து–அநுஸந்தித்து, (முன்பொருகால் ப்ரஹ்லாதனுக்கருள் செய்வதற்காக)
மாலை–மாலைப் பொழுதிலே
அரி உருவன்–நரசிங்க மூர்த்தியாய்த் தோன்றின அப்பெருமானுடைய
பாதம்–திருவடிகளை
மலர்–புஷ்பங்களாலே
அணிந்து–அலங்கரித்து
காலை–சிற்றஞ சிறுகாலையில்
கைகோலி தொழுது–கைகூப்பிவணங்கி
எழுமின்–உஜ்ஜீவியுங்கள்

கீழ்ப்பாட்டிற் கூறியபடியே பல திருப்பதிகளில் கோயில் கொண்டெழுந்தருளி யிருக்குமவனுடைய திருவடிகளிலே
புஷ்பார்ச்சனை பண்ணி “சிற்றஞ்சிறுகாலே வந்துன்னைச் சேவித்து உன் பொற்றாமரையடியே போற்றும்“ என்கிற
படியிலும் ஒவ்வொரு விபவாவதாரத் திருமேனியோடே ஸேவை ஸாதித்தருளுகின்ற னாகையால் உபலக்ஷணமாக
ஒரு திருமேனியை யெடுத்துக் கூறுகின்றார்
‘அரியுருவன்‘ என்று. எம்பெருமானை ஆராதிக்கும்போது ‘இது நமக்கு ஸ்வரூப ப்ராப்தம்‘ என்றே
ஆராதிக்க வேண்டுமாயினும் குணைர்தாஸ்ய முபாகத“ என்கிறபடியே திருக்குணங்களுக்குத் தோற்று அடிமை செய்யும்
முறைமையும் ஒன்றுண்டாகையாலே அத்திருக்குணங்களுக்கு ப்ரகாசமாக அப்பெருமான் செய்தருளின
பெரு நன்றிகளைப் பாராட்டிக் கொண்டே அடி பணிய வேணுமென்கைக்காக ஞாலமளந்திடந் துண்டுமிழ்ந்த அண்ணலை‘ என்கிறார்.
மாவலியைச் செருக்கடக்கி மண்ணளந்த மஹாகுணத்தையும் ஹிரண்யாக்ஷனைக் கொன்று பூமியைமீட்டுக் கொணர்ந்த
மஹோபகாரத்தையும் பிரளயங்கொள்ளாதபடி உலகங்களைத் திருவயிற்றிலே அடக்கிக் காத்தருளின
பெரு நன்றியையும், பிறகு வெளிப்படுத்தின குணத்தையுமு வாய்வெருவிக்கொண்டு தொழுதெழுங்கள் என்றவாறு.

இப்படி நாட்டுக்குப் பொதுவாகச் செய்த உபகாரங்கள் மாத்திரமன்றியே –
“மருவித்தொழும் மனமேதந்தாய்“ –
“என்னைத் தீமனங்கெடுத்தாய்“ என்றிப்படி பெரியார் மனமுருகி அநுஸந்திக்கும் ஐகாந்திகமான
உபகாரங்களும் பலவுண்டாகையால் அப்படிப்பட்ட மஹோபகாரங்களையுங்கூட அநுஸந்திக்கவேணு மென்கிறது ஈற்றடி.
“எத்திறம்! உரலினோ மணைந்திருந் தேங்கிய வெளிவே!“ என்றும்
“பிறந்தவாறும் வளர்ந்தவாறும்!“ என்றும் மிக ஈடுபட்டு அநுஸந்திக்கும் குண சேஷ்டிதங்களும் ஈற்றடிக்குப் பொருளாம்.

————————————————————————–

கீழ்ப் பாட்டில் “உளங்கிடந்த வாற்றாலுணர்ந்து“ என்றதை விவரிப்பது போலும் இப்பாட்டு.
‘அன்பர் மறக்க முடியாதபடி அவர்களுடைய நெஞ்சைக் கொள்ளை கொண்டிருக்கு முபகாரம் நான் என்ன செய்திருக்கிறேன்?‘
என்று எம்பெருமான் கேட்பதாகக் கொண்டு, பிரானே! நீ செய்தருளின மஹோபகாரங்கள் சொல்லாற் கூறும் பரமோ?
கண்ணில்லாதவர்களுக்குக் கண் கொடுத்தாற்போலே வேதங்களையெல்லாம் வெளியிட்டருளினாய்.
அந்த வேதங்களின் அரும்பெரும் பொருள்களை விவரிப்பனவாய் வேதோபப்ரும்ஹணமென்று பேர்பெற்றனவான்
ஸ்ம்ருதீதிஹாஸ புராணதிகளையும் முனிவர்களைக் கொண்டு பிரவசதும் செய்தருளினாய்,
ஆச்ரீதர்களுடைய குற்றங்களையும் நற்றமாக உபபாதிக்கவல்ல பெரிய பிராட்டியான ஒரு நொடிப்பொழுதும் விட்டுப் பிரியாதிருக்கின்றாய்,
திருமலை முதலிய திருப்பதிகளிலே படுகாடு கிடக்கின்றாய்,
இப்படியாக நீ செய்தருளும் பெருநன்றிகளுக்கு எல்லையுண்டோ, என்றாராயிற்று.

உணர்ந்தாய் மறை நான்கும் ஓதினாய் நீதி
மணந்தாய் மலர்மகள் தோள் மாலே -மணந்தாய் போய்
வேயிரும் சாரல் வியலிரு ஞாலம் சூழ்
மா யிரும் சோலை மலை——48-

பதவுரை

மாலே–ஸர்வேச்வரனே!
மறை நான்கும்–நான்கு வேதங்களையும்
உணர்ந்தாய்–(பிரளயந்தோறும்) ஞாபகத்தில் வைத்துக் கொண்டிருந்து பிறகு வெளியிடுகின்றாய்
நீதி–அந்த வேதங்களின் பொருளை விவரிக்க வல்ல ஸ்ம்ருதி முதலிய உபப்ரும்ஹண நூல்களையும்
ஓதினாய்–(மநு முதலிய மஹர்ஷிகள் முகமாக) அருளிச் செய்கின்றாய்
மலர் மகள்–பூவிற்பிறந்த பெரிய பிராட்டியாருடைய
தோள்–திருத் தோளோடே
மணந்தாய்–கூடி வாழ்கின்றாய்
வேய் இரும் சாரல்–மூங்கில்கள் நிறைந்த தாழ்வரையை யுடையதும்
இரு ஞாலம் சூழ்–பரந்த இப் பூமியிலுள்ளவர்களால் பிரதக்ஷிணஞ் செய்யப்படுவதுமான
மாயிருஞ் சோல மலை போய்–திருமாலிருஞ் சோலை மலையிலே வந்து
மணந்தாய்–திருவுள்ளமுவந்து வாழ்கின்றாய்

உணர்ந்தாய் மறைநான்கும் – வேதங்கள் எம்பெருமானால் ஸ்ருஷ்டிக்கப்பட்டனவென்று சிலர் மயங்கிக்கிடப்பதுண்டு,
ஸ்ருஷ்டியின் தொடக்கத்தில் எம்பெருமான் நான்முகனுக்கு வேதோபதேசம் செய்வதாகச் சொல்லப்படுகிறதே,
ஸ்ருஷ்டிக்கு முன்பு வேதம் இருக்கமுடியாதே, ஆதலால் ஈச்வரனால்தான் வேதம் செய்யப்பட்டிருக்கவேணும் என்று
சில வைதிகர்களுங்கூட மயங்குவதுண்டு. உண்மை யாதெனில்,
வேதத்துக்கு நாம் எப்படி கர்த்தாக்களல்லவோ அப்படியே எம்பெருமானும் கர்த்தாவல்லன், உலகத்தின் ஸ்ருஷ்டியானது
ஒன்றன்பின் ஒன்றாக ஆநாதிகாலமாய் நடந்து வருகிறது. ஒவ்வொரு கல்பத்தின் ஆரம்பத்திலும்
ஈச்வரன் நான்முகனுக்கு வேதத்தை உபதேசிக்கிறான், ஆனால் முன்கல்பத்தில் வேதம் எவ்விதமான ஆநுபூர்வியோடு இருந்த்தோ,
அவ்விதமேயான ஆநுபூர்வியுடையதாகவே மறுகல்பத்தின் ஆரம்பத்திலும் உபதேசிக்கிறான்.
பூர்வபூர்வ அநுபூர்விகளே அப்படியே எம்பெருமான் திருவுள்ளத்தில் ஸ்மரித்துக்கொண்டிருந்து எவ்விதமான மாறுதலும் செய்யாமல்
இப்படியே அநாதிகாலமாக உபதேசித்து வருகிறான்.
இவ்வர்த்தம் விளங்கவே இங்கு ஆழ்வார் “மறை நான்கும் உர்ந்தாய்“ என்கிறார்.
ஸ்ரீரங்கராஜஸ்தவ உத்தரசதகத்தில் “ஸம்ஸ்காரம் ப்ரதிஸ்ஞ்சரேஷு நிததத் – வேதா. ப்ரமாணம் தக“ என்ற
ச்லோகத்தில் இவ்விஷயம் ஸாரமாக அருளிச் செய்யப்பட்டுள்ளது.

“மாயிருஞ் சோலைமலை“ என்றது
திருமாலிருஞ்சோலைமலையை என்றாவது திருவேங்கடமலையை என்றாவது கொள்ளலாம்.

————————————————————————–

நெஞ்சே! எம்பெருமான் செய்தருளின மஹோபகாரங்களை எடுத்துரைக்கக் கேட்டாயன்றோ,
இப்படிப்பட்ட மஹோபகாரங்களை அநுஸந்தித்தால் நாம் வாயடைத்துக் கிடக்கக் கூடுமோ?
உலகங்களெல்லாம் அதிரும்படி அப்பெருமான் திருநாமங்களைச் சொல்லிக் கதறவேண்டாவோ,
மிகபெரியோனான் அவனை மிக நீசரான நாம் எப்படி வாய்கொண்டு பேசலாம் என்று நீ அஞ்சியிருக்கிறாய் போலும்,
அச்சத்தை ஒழித்திட்டு உரக்கக் கூப்பிட்டழை என்கிறார்.

மலை ஏழும் மா நிலங்கள் ஏழும் அதிர
குலை சூழ் குரை கடல்கள் ஏழும் -முலை சூழ்ந்த
நஞ்சுரத்த பெண்ணை நவின்று உண்ட நாவன் என்று
அஞ்சாதே என்நெஞ்சே அழை—49-

பதவுரை

என் நெஞ்சே–எனது மனமே!
மலை ஏழும்–ஸப்த குல பர்வதங்களும்
மா நிலங்கள் ஏழும்–ஸப்த த்வீபங்களும்
குலை சூழ் குரை கடல்கள் ஏழும்–கரையாலே சூழப்பட்டு ஒலி செய்கிற ஸப்த ஸாகரங்களும்
அதிர–அதிரும்படியாக
நாவன் என்று-திருப்பவளத்தை யுடையவளே!“ என்று சொல்லி
முலை சூழ்ந்த நஞ்சு உரத்து பெண்ணை–“முலையில் வியாபித்த விஷத்தாலுண்டான கொடுமையை யுடைய (பூதனை யென்னும்) பேய் மகளை
நவின்று–(முலையுண்ணும்போது) இடையிடையே மழலைச் சொற்கள் சொல்லிக் கொண்டே
உணட–உண்டுமுடித்த
அஞ்சாது–கூசாமல்
அழை–வாய் விட்டுக் கூப்பிடு-

‘மலையேழும் மாநிலங்களேழும் குலைசூழ் குலைகடல்களேழும் அதிர‘ என்ற விது
‘அழை‘ என்ற வினைமுற்றிலே அந்வயிக்கும். “விண்ணெல்லாங் கேட்க அழுதிட்டாய்“ என்றாற்போலே
ஸப்த லோகமுங்கேட்கக் கூப்பிடவேணுமென்கிறார். நாடு நகரமும் நன்கறிய பகவத் கீர்த்தநம் பண்ணவேணுமென்கை.

மலையேழும் – ஸப்தகுல பர்வதங்களாவன – “இமயம், மந்தரம், கைலை, வடவிந்தம், நிடதம், ஏமகூடம், நீலகிரியெனக்,
குலவரையேழுங் கூறுமென்ப“ என்று திவாகரத்திற் சொல்லப்பட்டவை.

மாநிலங்களேழும் – ஸப்தத்வீபங்களைச் சொல்லுகிறது அவையாவன –
“நாவலந்தீவே இறலித்தீவே, குசையின்தீவே கிரவுஞ்சத்தீவே, சான்மலித்தீவே தெங்கின்தீவே, புட்கரத்தீவே யெனத்தீவேழே.“ எனப்பட்டவை.

குரைகடல்களேழும் – “உவரோடு கரும்பு மது நெய் தயிர் பால் புனல் மா கடலேழென வகுத்தனர் புலவர்.“

நவின்றுண்ட நாவன் – சிறுபிள்ளைகள் தாயினிடத்து முலையுண்ணும்போது ஸந்தோஷமிகுதியினால் இடையிடையே
குதலைச் சொற்களைச் சொல்லிக்கொண்டு முலையுண்பதுபோல், கண்ணபிரானும் பூதனையை மெய்த்தாயாகவே பாவித்து
மகிழ்ச்சியுடன் முலையுண்பதாகக் காட்டிக்கொள்ள மழலைச் சொற்களைச் சொன்னமையை
‘நவின்று‘ என்றதனால் வெளியிடுகிறார். நாவன் – அண்மைவிளி, நாவனே என்கை.

————————————————————————–

கீழ்ப் பாட்டில் “முலைசூழ்ந்த நஞ்சுரத்துப் பெண்ணை நவின்றுண்டநாவன்“ என்று திருவாய்ப்பாடியில் நடந்த
பேய்ச்சி முலைசுவைத்த கதையைப் பேசினபடியால் இப்பாட்டில் “ஆங்கு அவர்கள்“ என்றதற்கு
அத் திருவாய்ப்பாடியிலுள்ள ஆய்ச்சிகள் என்று பொருளாகக் குறையில்லை பிரகரண பலத்தினாலென்க-

அழைப்பன் திருமாலை ஆங்கு அவர்கள் சொன்ன
பிழைப்பில் பெரும் பெயரே பேசி -இழைப்பரிய
வாயவனே யாதவனே என்றவனை யார்முகப்பும்
மாயவனே என்று மதித்து —50-

பதவுரை

இழைப்பு அரிய–ஆராய்வதற்கு அருமையான ஸ்வரூப ஸ்வபாவங்களையுடைய
ஆயவனே என்றும்–கோபால க்ருஷ்ணனே!என்றும்
மாயவனே என்றும்–(குண சேஷ்டிதங்களினால்) ஆச்சரிய பூதனே என்றும்!
மதித்து–அநுஸந்தித்துக் கொண்டு
ஆங்கு அவர்கள் சொன்ன–அத் திருவாய்ப் பாடியிலுள்ளவர்கள் சொல்லி யழைத்த யது குலத்தில்
யாதவனே என்றும்–(வஸுதேவர் மகனாய்த்) தோன்றினவனே என்றும்!
பிழைப்பு இல்பெரு பெயரே பேசி–குற்றமற்ற சிறந்த திருநாமங்களையே பேசி
யார் முகப்பும்–எல்லாரெதிலும்
திருமாலை அவனை–திருமாலாகிய அப்பெருமானை
அழைப்பன்–கூப்பிடா நின்றேன்.

ஆங்கவர்கள் சொன்ன பிழைப்பில் பெரும் பெயர்களாவன –
கற்றினம் மேய்த்தவன். வெண்ணெய்த்திருடன், தாம்பாலாப்புண்டவன்,
உரலிடைக்கட்டுண்டவன் என்றிவைபோன்ற திருநாங்களாம்.
இவை பெரும்பெயர்களாகுமோ, சிறுபெயர்களன்றோ இவை என்று சிலர் நினைப்பர்.
அவதாரத்தில் எளிமைக் குணத்தைக் காட்டி நிறும்பெற நினைத்த கண்ணபிரானது திருவுள்ளத்தால்
நாராயணாதி நாமங்களே சிறுபேர் என்றும் கோவிந்த, நவநீதசோராதி நாமங்களே பெரும்பேரென்றும். நிச்சயிக்கத்தகும்.
திருப்பாவையில் ஆய்ச்சிகள் கண்ணபிரானை நோக்கி அடிக்கடி ‘நாராயணன்‘ என்று சிறு பேரையிட்டுச் சொன்னதற்கு
அநுதபித்து உன்றன்னைச் சிறுபே ரழைத்தனவுஞ் சிறியருளாதே“ என்று பொறுப்பித்துக்கொண்டது காண்க.
அவன் திருவுள்ளமுகக்குந் திருநாமமேயன்றோ பெரும்பேர் ஆவது!
“திவத்திலும் பசுநிரை மேய்ப்பு உவத்தி செங்கனிவா யெங்களாயர் தேவே“ என்னப்படுகின்ற எம்பெருமான்
திருவுள்ளமுகக்குந் திருநாமம் நாராயணாதி நாமங்களாக எப்படியாகும்? கோவிந்த கோபாலாதி நாமங்களேயாகுமென்க.

பிழைப்பு இல் பெரும் பெரே – ‘பிழைப்பு‘ என்பதற்கு ‘ஜீவித்தல்‘ என்றும் பொருள் கொள்ளலாம்,
விட்டு உயிர்தரிக்க முடியாத பெரும்பெயர் என்றவாறு.
“ஒருத்திமகனாய்ப் பிறந்து ஓரிரவிலொருத்தி மகனாய் ஒளித்துவளர“ என்கிறபடியே
யதுகுலத்திற் பிறந்து இடைக்குலத்தில் வளர்ந்ததற்கேற்ப “யாதவனே! ஆயவனே! என்றது.

————————————————————————–

இப்பாட்டில் ‘நெஞ்சே!‘ என்று நெஞ்சை மாத்திரம் விளிப்பதாயிருந்தாலும். நெஞ்சுக்கு அடுத்ததான வாக்கையும்,
வாக்குக்கு அடுதத்தான உடலையும் விளிப்பதாகவுங் கொள்ளவேணும்
“யத் மநஸா த்யாயதி தத் வரிசா வததி தத் கர்மணா கரோதி“ என்று வேதமுரைத்த கட்டளையிலே
மன மொழி மெய்களுக்கு ஒரு சேர்த்தியுண்டு. அம்மூன்று கரணங்களுக்கும் காரியம் விதிக் கிறாரிப்பாட்டில்.

மதிக்கண்டாய் நெஞ்சே மணி வண்ணன் பாதம்
மதிக்கண்டாய் மற்றவன் பேர் தன்னை -மதிக்கண்டாய்
பேராழி நின்று பெயர்ந்து கடல் கடைந்த
நீராழி வண்ணன் நிறம்———51–

பதவுரை

நெஞ்சே–மனமே!
மணி வண்ணன் பாதம்–நீல மணி வண்ணனான எம்பெருமானது திருவடிகளே
மதி கண்டாய்–அநுஸந்திக்கக்கடவாய்
பேர் ஆழி நின்று பெயர்ந்து–பெரிய திருப் பாற் கடலில் நின்றும் துயில் விட்டெழுந்து
கடல் கடைந்த–தேவர்களுக்கு அமுதங்கொடுக்க அக் கடலைக் கடைந்த
மதிக் கண்டாய்–சிந்திக்கக் கடவாய்
மற்று–இன்னமும்
அவன் பேர் தன்னை–அப்பெருமானது திருநாமங்களை
நீராழி வண்ணன் நிறம்–கடல் வண்ணனான அப்பெருமானுடைய திருமேனி நிறத்தை
மதிக் கண்டாய்–நினைக்கக் கடவாய்-

‘மதிக்கண்டாய்‘ என்பதே மூன்றிடத்தும் க்ரியாபதமாயினும் இடத்துக்குத் தக்கபடி பொருள் வாசி கொள்ள வேணும்
மனமே! நீராழிவண்ணனது திருமேனி நிறத்தையே நீ சிந்திக்கக்கடவாய்
வாக்கே! மணிவண்ணன் திருநாமங்களையே நீ சொல்லிக் கொண்டிருக்கக் கடவாய்,
தலையே! மணி வண்ணன் திருவடிகளையே நீ அணிந்து கொண்டிருக்கக் கடவாய் என்று இங்ஙனே யோஜிப்பது அழகியதாம்.

பேராழிநின்று பெயர்ந்து கடல்கடைந்த
“அறிதுயி லலைகடல் நடுவே ஆயிரஞ்சுடர்வாய் அரவணைத்துயின்றான்“ என்கிறப்படியே
திருப்பாற்கடலில் சேஷசயனத்தின் மீது திருக்கண்வளர்ந்தருளுமழகைக்கண்டு
“ஏரார்கோலநதிகழக கிடந்தாய் கண்டேனெம்மானே! “என்றும்.
“அம்மாமலர்க்கண் வளாகின்றானே என்னான செய்கேனே“ என்றும் ஈடுபட்டு
மங்களாசாஸ்நம் பண்ணவேண்டியிருக்க அது செய்யாது.
“பேணலமில்லாவரக்கர் முந்நீர பெரும்பதிவாய் நீண்கர் நிளொரிவைத்தருளா யென்று,
நின்னை விண்ணோர் தாள் நிலைத்தோய்ந்து தொழுவர் நிர்மூர்த்தி பலகூற்றிலொன்று காணுலுமாங்கொலென்றே?“ என்று
நம்மாழ்வார் வயிறுபிடித்துப் பேசினபடியே
தேவதைகள் சென்று பெருமானே! எழுந்திருந்து உடம்புநோவாக் காரியஞ்செய்து எங்கட்கு ஆகவேண்டியதைத்
தலைக்கட்டிக்கொடு என்று பிரார்த்திப்பவர்களேயன்றி
ஸ்வப்ரயோஜநத்தோடுகூட எம்பெருமான் திருமேனியிலும் சிறிது கண் வைப்பவர்களேயல்லர்,
அமுதமளிக்கக் கடல்கடைந் தருளுங்காலத்தில் ‘உப்புச்சாறு எப்போது கிளரப்போகிறது!‘ என்று
தேவதைகள் கண்ணைக் கவிந்துகொண்டு அதைக் கண்டு கொண்டிருந்தார்களே யன்றி,
தோளுந் தோள்மாலையுமாக எம்பெருமான் கடல் கடைந்தருளுமழகைச் சற்றேனும் உற்று நோக்கினவர்களல்லர்
அக்குறைதீர அப்போதைய அழகை நெஞ்சே! இன்று நீ சிந்தியாய் என்கிறார்.

————————————————————————–

கொடியவர்களிடத்தும் ஈரநெஞ்சுடையனாயிருக்கை யென்னுங்குணம் ஆந்ருசம்ஸ்யம்‘ எனப்படும்,
அதாவது ஒருவர்க்குத் தீங்கு செய்யாமை. இக்குணம் எம்பெருமானிடத்தில் அமைந்திருக்கும்படியை
ஒரு த்ருஷ்டாந்த முகத்தாற் கூறுகின்றாரிதில்.

நிறம் கரியன் செய்ய நெடு மலராள் மார்வன்
அறம் பெரியனார் அது அறிவார் -மறம் புரிந்த
வாள் அரக்கன் போல்வானை வானவர் கோன் தானத்து
நீள் இருக்கைக்கு உய்த்தான் நெறி —52–

பதவுரை

நிறம் கரியன்–(காளமேகம் போல்) கருநிறமுள்ளவனும்
செய்ய நெடு மலராள் மார்வன்–சிவந்த நிறத்தையுடையளாய்ப் பெரிய தாமரைப்பூவை யிருப்பிடமாக வுடையளான
பெரிய பிராட்டியாரைத் திருமார்விலே யுடையனுமான எம்பெருமான்
அறம் பெரியன்–அருளில் பெருத்தவன்
மறம் புரிந்த வாள்–பகை பாராட்டின
அரக்கன் போல்வானை–வாட்கையனான இராவணன் போன்ற மஹாபலியை
(இராவனைப் போலவே தலையறுக்க வேண்டியிருந்தும் அது செய்யாமல்)
வானவர் கோன் தானத்து–தேவேந்திரனுடைய லோகமான ஸ்வர்க்கம்போலே விலக்ஷணமான பாதாள லோகத்தில்
நீள் இருக்கைக்கு–நீண்டகாலம் வாழும்படியாக
உய்த்தான்–செலுத்தின அப்பெருமானுடைய
நெறி அது–அவ் வருள் வகையை
ஆர் அறிவார்–யார் தெரிந்து கொள்ளவல்லர்?

காளமேகத்திருவுருவனாயும். அகலகில்லே னிறையுமென் றலர்மேல் மங்கையுரை மார்பனாயுமிருக்கிற ஸர்வேச்வரன்.
அறம் பெரியன் –‘ஆந்ருசம்ஸ்யம்‘ (தயை) என்னுங் குணம் பெரிது முடையான். இஃது எங்ஙனே தெரிகின்ற தென்னில்,
கேண்மின், எம்பெருமான் ஸர்வபூதஸு ஹ்ருத்தாகையாலே அவனுக்கு நேரே ஒருவனும் பகைவனல்லன்,
ஆச்ரிதர்களுக்கு எவன் விரோதியோ, அவனையே எம்பெருமான் தனக்கு விரோதியாகக் கருதுவன்.
கண்ணபிரானாய்த் தூதுபோமிடத்துத் துரியோதனை நோக்கிச் சொல்லும்போது எனது உயிர்நிலையான பாண்டவர்களுக்கு நீ
விரோதியாகையாலே எனக்கு நீ விரோதியாகின்றாய், என்றருளிச் செய்துள்ளது குறிக்கொள்ளத்தக்கது.
ஆகவே, ஆச்ரிதனான அம்முகத்தாலே எம்பெருமானுக்கும் விரோதியாயினன்.
இப்படிப்பட்ட மாவலியை இராவணனைப்போலவே தலையறுத்து ஒழிக்கவேண்டியது ப்ராப்தமாயிருந்தும்
ஔதார்யமென்னும் ஒரு குணத்தைக் கைக்கொண்டிருந்தானென்று இதனை ஒரு வியாஜமாக்கி அவனைத் தலைதுணித்திடாது
நெடுங்காலம் பாதாளத்தில் குடிசெய்து வாழுமாறு விட்டருளின பெருங்குணத்தை நோக்குங்கால்
ஸ்ரீமந்நாராயணனில் விஞ்சின தயாளு இல்லை‘ என்பது விளங்குமே என்கிறார்.

“வானவர்கோன் தானத்து“ – வானவர்கோன் தானமென்று ஸ்வர்க்கலோகத்திற்குப் பெயராயினும்,
அதுபோல் விலக்ஷணமான பாதாளலோகமென்பது இவ்விடத்திற்குப் பொருள்.

————————————————————————–

திருவேங்கடமலையை ஒரு சமத்காரம் பொலிய வருணிக்கிறார்.

நெறியார் குழல் கற்றை முன்னின்று பின் தாழ்ந்து
அறியாது இளங்கரி என்று எண்ணிப் -பிரியாது
பூங்கொடிக்கள் வைக்கும் பொரு புனல் குன்று என்னும்
வேங்கடமே யாம் விரும்பும் வெற்பு –53–

பதவுரை

நெறியார்–திருமலை வழியிலேயே ஊன்றியிருப்பவர்களுடைய
சூழல் கற்றை முன் நின்று பின் தாழ்ந்து அறியாது–கேச பாச மானது முன்னே முளைத்துப் பின்னே
தொங்கிக் கொண்டிருக்கவும் இது மநுஷ்ய வ்யக்தியென்று தெரிந்து கொள்ளாமல்
இள கிரி என்று எண்ணி–இது ஒரு சிறுமலை யென்று எண்ணிக் கொண்டு
பூங்கொடிகள்–பூங்கொடிகளானவை
பிரியாது–அவ்விடம் விட்டு நீங்காமல்
வைகும்–நித்யவாஸம் பண்ணப் பெற்றதாய்
பொரு புனல் குன்று என்னும்–அலை யெறிகின்ற ஜலஸம்ருத்தியை யுடைத்தான திருமலையென்று ப்ரஸித்தமான
வேங்கடமே–திருவேங்கடமே
யாம் விரும்பும்–நாம் ஆசைப்படவுரிய
வெற்பு–திருமலையாகும்.

திருமலை யாத்திரையாக வருகின்ற மஹான்கள் பலர்
‘வெறியார்தண்சோலைத் திருவேங்கடமலைமேல், நெறியாய் கிடக்கும் நிலையுடையேனாவேனே” என்று
ஸ்ரீ குலசேகரப் பெருமாள் விரும்பினபடியே திருமலையேறும் வழியிலே மிக்க ஆதரம் வைத்து,
திருமலைமேற்சென்று வாழ்வதிற்காட்டிலும் திருமலைவழியிற் கிடப்பதையே பரம உத்தேச்யமாகக்கொண்டு
அவ்வழியிலே வீற்றிருந்து எம்பெருமானைச் சிந்தை செய்கின்றனர்.
அப்போது, மூச்சுவிடுதல் உடம்பு அசைத்தல் முதலியன ஒன்றுஞ் செய்யாதே வால்மீகி முதலிய மஹர்ஷிகளைப்போலே
யோக நிலையில் ஆழ்ந்து கிடக்கின்றனர். அன்னவர்களது கூந்தல் ‘கற்றையானது முன்னின்று பின் தாழ்ந்திருப்பதைக் கண்ட
பூங்கொடிகளானவை சில மனிதர்கள் வீற்றிருக்கின்றார்கள்‘ என்றும் ‘அவர்களுடைய சூழல்கற்றை தாழ்ந்திருக்கின்றது‘ என்றும்
தெரிந்து கொள்ளாமல் வான்மீகிமுனிவர் மீது புற்று மூடினாற்போலே
இந்த பக்தர்களின் மேலும் பூங்கொடிகள் படர்ந்திருப்பது அற்புதமானவொரு காட்சியாயமைந்தது.
இப்படிப் பட்ட காட்சிக்கு இடமான திருமலையே நாம் விரும்பத்தக்க மலையாம் என்றாராயிற்று
கிரி – வடசொல்.

————————————————————————–

எம்பெருமான் திருவுள்ளமுவந்து வாழுந் திருப்பதிகளில் எவர் விருப்பம் பண்ணுக்கின்றனரோ,
அவர்களுடைய நெஞ்சிலே எம்பெருமான் உவந்து வந்து எழுந்தருளியிருப்பனன்றோ,
அப்படியே திருமலை முதலிய திருப்பதிகளில் ஆதரம் விஞ்சப்பெற்ற இவ்வாழ்வாருடைய திருவுள்ளத்தில்
எம்பெருமான் வந்து சேர்ந்து “தென்னனுயர் பொருப்புந் தெய்வவடமலையும்“ என்னப்படுகிற
திருமாலிருஞ சோலைமலை திருவேங்கட மலைகளில் தான் பண்ணிப்போந்த விருப்பத்தை
இவர் தம்முடைய திருவுள்ளத்திலே செய்து போருகிறபடியே ஒரு சமத்காரமாக வெளியிடுகிறார்.

வெற்பு என்று இரும் சோலை வேங்கடம் என்று இவ்விரண்டும்
நிற்பென்று நீ மதிக்கும் நீர்மை போல் -நிற்பென்று
உளம் கோயில் உள்ளம் வைத்து உள்ளினேன் வெள்ளத்து
இளம் கோயில் கை விடேல் என்று –54-

பதவுரை

வெற்பு என்ற–(தெற்கு) திருமலை யென்னப்படுகிற
இருஞ்சோலை–திருமாலிருஞ் சோலை யென்ன
வேங்கடம்–திருவேங்கடமென்ன
என்ன இவ் இரண்டும்–ஆகிய இத் திருமலைகளிரண்டும்
நிற்பு என்று–நாம் உகந்து வாழுமிடமென்று
நீ மதிக்கும் நீர்மை போல்–நீ திருவுள்ளம் பற்றி யிருக்குந் தன்மையை உடைத்தாயிருப்பது போலவே
உளம் கோயில்–(என்னுடைய) ஹ்ருதயமாகிற கோயிலும்
நிற்பு என்று–நீ உகந்து வாழுமிடமென்று
உள்ளம் வைத்து–பிரதிபத்தி பண்ணி
வெள்ளத்து இள கோவில்–திருப்பாற்கடலாகிற பாலாலயத்தை
கைவிடேல் என்று–கைவிட வேண்டா என்ற
உள்ளினேன்–பிரார்த்திக்கின்றேன்.

ஸ்ரீவசநபூஷணத்தில் –“கல்லுங்கனைகடலு மென்கிறபடியே இது ஸித்தித்தால் அவற்றில் ஆதரம் மட்டமாயிருக்கும்.
இளங்கோயில் கைவிடேல் என்று இவன் பிரார்த்திக்க வேண்டும்படியாயிருக்கும்“
என்றருளிச் செய்தது இப்பாசுரத்தை உட்கொண்டதேயாம்.

திருமாலிருஞ் சோலைமலையென்றும் திருவேங்கடமலை யென்றுஞ் சொல்லப்படுகிறது இரண்டு திருமலைகளில்
நீ எவ்வளவு மகிழ்ச்சியுடன் வாழ்கின்றாயோ அவ்வளவு மகிழ்ச்சியோடே என்னுடைய ஹ்ருதபமாகிற கோயிலிலும் வாழ்கின்றாய்
என்று கண்டறிந்த அடியென் “வெள்ளத் திளங்கோயில் கைவிடேல்“ என்று பிரார்த்திக்கின்றேனென்கிறார்.
இதன் கருத்துயாதெனில் –
திருப்பாற்கடலானது எல்லா அவதாரங்களுக்கும் மூலக்கிழங்கு எனப்படும்
“ஏஷ நாராயண ஸ்ரீமாந் க்ஷீரார்ணவநிகேதந நாகபர்யங்க முதஸ்ருஜ்ய ஹ்யாகதோ மதுராம் புரீம் –
திருப்பாற்கடல் நாதனான ஸ்ரீமந்நாராயணன் சேஷசயனத்தை விட்டிட்டு வடமதுரையில் வந்து பிறந்தான்“ என்றாற்போலே
ராமக்ருஷ்ணாதி விபவாவதாரங்களும் மற்றும் அர்ச்சசாவதாரங்களுமெல்லாம் திருப்பாற்கடல் மூலமாகவே
நிகழ்வதாகக் கொள்ளுங்கொள்கை வைதிகர்களுக்கு உள்ளது.
இக்காரணம்பற்றித் திருப்பாற்கடல் இளங்கோவில்“ எனப்படும்.
(அதாவது – பாலாலயம் என்றபடி, இக்காலத்தும் திருகோயில்களில் எம்பெருமான் திருமேனியை ஜீர்ணோத்தாரணம் செய்ய
நேரும்போது பாலாலயப்ரதிஷ்டை செய்வது வழக்கமாயிருப்பது காண்க. வேறொரு பெருங்கோயிலிற் சென்று சேர்வதற்கு
உறுப்பாக (பூர்வமாக) சிறுகக் கொள்ளுங் கோயிலை பாலாலய மென்கிறது)
திருமலை முதலிய திவ்யதேசங்களும் அன்பருடைய ஹ்ருதயமுமாகிற பெருங்கோயில்களிற்சென்று சேர்ந்து வாழ்வதற்குப்
பூர்வாங்கமாகவே எம்பெருமான் திருப்பாற்கடலில் வாழ்வதாக ஆழ்வார்கள் அநுஸந்திப்பர்களாதலால்
இந்த அநுஸந்தானத்திற்கு இணங்க. திருப்பாற்கடலை இளங்கோயில் (பாலாலயம்) ஆகச் சொல்லுதல் பொருத்தமுடைத்தே
பெருங் கோயிலிற்சென்று சேர்ந்த பின்பு இளங்கோயிலில் ஆதரம் இருக்க ப்ரஸக்தியில்லாமையாலே எம்பெருமானுக்கும்
தமது திருள்ளமாகிற பெருங்கோயிலில் வாழ்ச்சி அமைந்தபின்பு இளங்கோயிலாகிய திருப்பாற்கடலில் ஆதரம்
குறைந்துவிடுமென்றறிந்த ஆழ்வார். ‘பிரானே! அவ்விளங்கோயிலில் நீ ஆதரத்தைக் குறைத்துக் கொள்ளலாகாது.
என்னுள்ளத்தில் வந்து சேர்வதற்கு அவ்விடம் பூர்வாங்கமாயிருததனால் அதுதன்னில் அடியேன் நன்றி பாராட்டக் கடவனாதலால்
அந்த நன்றியறிவின் காரியமாகப் பிரார்த்திக்கின்றேன் – அவ்விடத்தை நீ ஒரு நாளும் கைவிடலாகாது‘ என்று – என்கிறார்.

இதனால் “பனிக்கடலிற் பள்ளிகோளைப் பழகவிட்டு ஓடிவந்தென் மனக்கடலில் வாழவல்ல மாயமணாள நம்பீ!“ என்னுமாபோலே
திருப்பாற்கடைலையும் உபேக்ஷித்துவிட்டுத் தம் ஹ்ருதயத்திலே வந்து சேரும்படியான வ்யாமோஹம் எம்பெருமானுக்கு
விளைந்தமை வெளியிடப்பட்டதாயிற்று. ப்ரஸக்தியுள்ளதற்கே ப்ரதிஷேதங்கூடும்“ என்பது சாஸ்த்ரஜ்ஞர் வார்த்தையாகையால், ‘
வெள்ளத்திளங் கோயில் கைவிடேல்‘ என்று ஆழ்வார் பிரதிஷேதிக்கும் போது
எம்பெருமான் திருப்பாற்கடலைக் கைவிடத் தொடங்கினான் என்பது அவசியம் விளங்குகின்றமையால்
இப்படி திருப்பாற்கடலையும் கைவிடும்படியான விபாமோஹம் அவனுக்கு உண்டாயிற்றென்பதைத் தெரிவிப்பதே
இப்பாசுரத்தின் பரமதாற்பரியமாகுமென்க.

————————————————————————–

பிரானே! இவ்விருள் தருமா ஞாலத்தில் உன்னை நினைப்பதென்பது எளிதில் கைகூடாத காரியம்,
ஆனாலும் “எதிர்சூழல் புக்கு எனைத்தோர் பிறப்பு மெனக்கே யருள்கள் செய்ய,
விதிசூழ்ந்ததா லெனக்கேலம்மான் திரிவிக்கிரமனையே“ என்றாற்போலே எப்படியாவது என்னை
அகப்படுத்திக் கொள்ள வேணுமென்று நீ நெடு நாளாகவே க்ருஷி பண்ணிப் போகையாலே உன்னுடைய நினைவு
என்மேல் இடையறாது இருப்பதனாலே என்னுடைய நினைவும் உன்மேல் நிரந்தரமாக இருக்கின்றது.
ஆனால் இவ்வளவோடு நான் திருப்தியடைபவ வல்லேன்.
“அந்தமில் பேரின்பத்து அடியரோருந்தமை“ என்னப்படுகிற இன்பக் கடலையும் அவாஹிக்கப் பெறவேணுமென்று
ஆவல் கொண்டிருக்கும்படியேனை அந்த இன்பக் கடலிலும் அழுந்தச் செய்தருளாய் – என்கிறார்.

என்றும் மறந்து அறியேன் ஏழ் பிறப்பும் எப்பொழுதும்
நின்று நினைப்பு ஒழியா நீர்மையால் -வென்றி
அடல் ஆழி கொண்ட வறிவனே இன்பக்
கடலாழி நீ யருளிக் காண்–55-

பதவுரை

வென்றி–ஜய சீலமாய்
அடல்–தீக்ஷணமான
ஆழி–சக்கரத்தை
அறிவனே–ஸர்வஜ்ஞனான பெருமானே!
ஏழ் பிறப்பும்–இப்படியிருக்கிற நீ எல்லா ஜன்மங்களிலும்
எப்பொழுதும்–எல்லா அவஸ்தைகளிலும்
நின்று நினைப்பு ஒழியா நீர்மையால்–ஒரு படிப்பட நின்று என்னைப் பற்றின நினைவு தப்பாமலிருந்ததனால்
என்றும் மறந்தறியேன்–உன்னை ஒருநாளும் மறப் பனல்லேன்
இன்பம் கடல் ஆழி–ஆநந்த ஸாகரத்தையும்
அருளிக் காண்–எனக்கு அருள வேணும்.

“இன்பக்கடல்“ என்னுமளவே போதுமாயிருக்க “கடலாழி“ என்றது அப்பரமாநந்தத்தின் அளவில்லாமையை நன்கு காட்டுதற்கென்க.
“இன்பம் ஆழிகடல்“ என்று இயைத்து, இன்பமாகிற ஆழ்கடல் என்று முரைக்கலாம் உன்னையே எப்போதும்
சிந்தித்துக் கொண்டிருக்கு மடியேனை உன் திருவடிகளிற் சேர்த்துக் கொள்ளவேணு மென்றதாயிற்று இப்பாட்டால்.

“நின்று நினைப்பொழியா நீர்மையால்“ என்றது –எம்பெருமான் இவ்வாழ்வார்தம்மையே நினைத்துக் கொண்டிருக்கிற
படியைக் கூறுவதாக உரைக்கப்பட்டது. இனி இவ்வாழ்வார் எம்பெருமானையே நினைத்துக் கொண்டிருப்பதைக்
கூறுவதாகவே உரைக்கவுமாம். எல்லாப் பிறவிகளிலும் அடியேன் உன்னையே நினைத்துக் கொண்டிருக்கும்படியான
தன்மை எனக்கு வாய்ந்திருப்பதனால் உன்னை யொருகாலும் மறந்தறியேன் என்றவாறு.

வென்றியடலாழிகொண்ட அறிவனே! – நீ ஸர்வ சக்தனாயும் ஸர்வஜ்ஞனாயுமிருக்கையாலே என் காரியத்தைச் செய்து
தலைக்கட்டுகை உனக்கு அரிதன்றேன் என்று குறிப்பிடுகிறார்போலும்.
“வென்றியிடலாழிகொண்ட“ என்றது – ஸர்வ சக்தி யுக்தனென்றபடி
அருளிக்காண் அருள்செய் என்கை.

————————————————————————–

கீழ்ப்பாட்டில் “இன்பக்கடலாழி நீயருளிக்காண்“ என்று பிரார்த்தித்தார்,
எல்லாப்பாட்டிலும் பாரதந்திரியமே வடிவாயிருக்குமவர் “எம்பெருமான் திருவுள்ளமானபடி செய்கிறான்“ என்று
ஆறியிருக்க வேணுமே யன்றி இன்னது நீ செய்ய வேணுமென்று அவனை நிர்ப்பந்திப்பது தகுதியோ என்று
ஒரு சங்கை பிறக்குமாதலால் அந்த சங்கைக்குப் பரிஹாரமாக இப்பாசுர மருளிச்செய்கிறாரென்க.

காணக் கழி காதல் கை மிக்குக் காட்டினால்
நாணப் படும் என்றால் நாணுமே –பேணிக்
கருமாலைப் பொன் மேனி காட்டா முன் காட்டும்
திருமாலை நாங்கள் திரு —56-

பதவுரை

திருமாலை காண கழி காதல்–எம்பெருமானை ஸேவிக்க வேணுமென்று மிகுந்த விருப்பம்
கை மிக்கு காட்டினால் நாணப்பம என்றால்–மேன்மேலும் அதிகரித்தால் அடங்கியிருக்க வேணுமென்றால் அடங்கி யிருக்க முடியுமோ?
கருமாலை–கரிய திருமாலாகிய அப்பெருமானை
பொன் மேனி காட்டா முன்–அவனது அழகிய திருமேனி தானே காட்டிக் கொடுப்பதற்கு முன்னே
நாங்கள் திரு–நமக்குப் புருஷகார பூதையான் பிராட்டி
பேணி–விரும்பி
காட்டும்–காட்டிக் கொடுப்பன்

அவனைப் பரிபூர்ணமாக ஸாக்ஷாத்கரித்து அநுபவிக்க வேணுமென்னுங்காதல் கிளராதிருக்குமாயின்
நம்முடைய பாரதந்திரியம் ஜீவிக்கும் அக்காதல் அளவற விஞ்சிவிட்டால் ஸ்வரூபத்தை நோக்கி
அடங்கியிருக்கவேணுமென்றால் யாரால் அடங்கியிருக்க முடியும்?
ஸ்வரூவுணர்ச்சியினால் எவர் பதறாது அடங்கியிருக்கின்றனரோ, அவர்க்குக் காதல் உண்டாக வில்லையென்று
கொள்ளவேணுமேயன்றி காதலுள்ளவர்கள் ஸ்வரூபவுணர்ச்சியினால் அடங்கியிருக்கிறார்களென்பது
ஒருநாளுமில்லை. – என்பது முன்னடிகளின் கருத்து.

காதலின் கனத்தால் நீர் பதறினாலும் அப்பெருமான் தானாகவே நிர்ஹேதுகமாக அருள்செய்து தனது திருமேனியைக்
காட்டிக் கொடுத்தாலன்றோ நீர்கண்டு அநுபவிக்கலாம், உம்முடைய பதற்றத்தினால் என்ன ஆகும்?
வனத் திடரை ஏரியாம் வண்ணமியற்றுமிதுவல்லால், மாரியார்பெய்கிற்பார் மற்று“ என்று நீர் தாமே சொல்லிவைத்திருக்கிறீரே‘
என்று சிலர் சொல்ல, எம்பெருமான் தனது திருமேனியைத் தானே காட்டிக்கொடாவிடினும்.
ஸகல லோகமர்தாவாயிருக்கிற முறைமையினாலும், நிக்ரஹம் கலசாது அநுக்ரஹமே வடிவாயிக்குந் தன்மையினாலும்.
அபராதங்களைப் பார்த்துச் சீறியிருக்கு மெம்பெருமானுடைய திருவுள்ளத்தையும் திருத்திச் சேதநர்களை அங்கீகரிப்பிக்கும்
புருஷகார பூதையான பிராட்டியானவள் தானே அவனைக் காட்டித் தருவள், அதிலொருகுறையில்லை – என்கிறார் பின்னடிகளில்

“காணக்கழிகாதல்“ என்றவிடத்து ‘கழி‘ என்பதை உரிச்சொல்லாகக் கொண்டால் அதிகமா காதல் என்று பொருள்படும்.
அன்றி, ‘கழிகாதல்‘ என்று வினைத்தொகையாகக் கொண்டால் ‘கண்டே கழியக்கடவதான காதல்‘ என்று பொருள்படும்.
“கண்ணாரக்கண்டு கழிவதோர் காதலுற்றார்க்கும்“ என்றது காண்க.

நாணுதல் – அடங்குதல், கருமால் பொன்மேனியை, அக்கருமால் காட்டாமுன் நங்கள் திரு காட்டும்.

————————————————————————–

திருமங்கை நின்றருளும் தெய்வம் நா வாழ்த்தும்
கருமம் கடைப்படிமின் கண்டீர் -உரிமையால்
ஏத்தினோம் பாதம் இரும் தடக்கை எந்தை பேர்
நாற்றிசையும் கேட்டீரே நாம்–57-

பதவுரை

திரு மங்கை–பெரிய பிராட்டியார்
நின்றருளும் தெய்வம்–நித்யவாஸஞ் செய்யப் பெற்ற எம்பெருமானை
நா வாழ்த்தும் கருமம்–நாவினாலே வாழத்துகையாகிற காரியத்தை
பாதம்–திருவடிகளையும்
பேர்–திருநாமங்களையும்
உரிமையால்–ஸ்வரூப ப்ராப்தியாலே
ஏத்தினோம்–போற்றுமவர்களாயிராநின்றோம்
கடைப்பிடி மின் கண்டீர்–உறுதியாகப் பற்றுங்கள்
நாம்–நாமோவென்றால்
இரும் தடக்கை எந்தை–மிக நீண்ட திருக்கைகளை யுடையனான எம்பெருமானுடைய (இவ்விஷயத்தை)
நால் திசையும்–நான்கு திசைகளிலுமுள்ளீர்!
கேட்டீரே–கேட்டீர்களோ?

எந்த தெய்வத்தை ஸ்ரீமஹாலக்ஷமி விரும்புகின்றாளோ அதுவே பரதத்துவம் என்பது வேதாந்த ஸிந்தாந்தம்,
ஸ்ரீகுணரத்நகோசத்திலே பட்டர் “வேதாந்தாஸ் தத்வசிந்தாம் முரபிதுரஸி யத்பாதசிஹ்நைஸ் தரந்தி“
(அதாவது, இன்னது பரதத்துவம் என்று நிஷ்கர்ஷிக்கமாட்டாமல் கவலை கொண்டிருந்த வேதாந்தங்கள்
ஸ்ரீமந்நாராயணனுடைய திருமார்பில் பிராட்டியின் அடிச்சுவடுகண்டு இவனே பரதத்துவமென்று நிர்ணயித்துக் கவலை தீர்ந்தன“)
என்றருளிச் செய்த்துங்காண்க. ஆகப் பிராட்டி ஸம்பந்தத்தாலே மேன்மை பெற்ற தைவம் யாதொன்றுண்டு –
ஸ்ரீமந்நாரயணன், அவனை நாவினால் வாழ்த்துந் தொழிலையே உறுதியாகக் கைப்பற்றுங்கோளென்கிறார் முன்னடிகளில்.

பிறர்க்கு உபதேசிப்பவர் தாம்முந்துற அநுஷ்டித்துக் காட்டவேணுமே, ஆதலால் ஸ்வாநுஷ்டானத்தை வெளியிடுகிறார் பின்னடிகளில்

உரிமையால் –சேஷ சேஷித்வமாகிற ஸம்பந்த முறைமை கொண்டு என்றபடி.
நாற்றிசையுங் கேட்டீரே – இதனை எல்லாருமறியவேணுமென்றவாறு.

————————————————————————-

நாம் பெற்ற நன்மையையும் நா மங்கை நன்னெஞ்சத்து
ஓம்பி இருந்து எம்மை ஓதுவித்து -வேம்பின்
பொருள் நீர்மை யாயினும் பொன்னாழி பாடென்று
அருள் நீர்மை தந்த வருள்–58-

பதவுரை

வேம்பு பொருளின் நீர்மை ஆயினும்–(எம்பெருமானைப் பாடுவதானது) வேம்பு என்னும்
வஸ்துவின் ஸ்வபாவம் போலே கைப்பதாகத் தோன்றினாலும்
பொன் ஆழி–அழகிய திருவாழியை (கையுந்திருவாழியுமான சோத்தி யழகை)
பாடு என்று–பாடக் கடவாய் என்று
நா மங்கை–ஸரஸ்வதியானவள்
நெஞ்சத்து–(நமது) நல்ல நெஞ்சிலே
ஒம்பி இருந்து–ஆதரித்து இருந்து
எம்மை–நீர்மைக் கொண்டு
ஓது வித்து–பகவத் விஷயத்தைப் பாடச் செய்ததனால்
நாம் பெற்று நன்மையும்–தாம் அடைந்த ஸுஹ்ருதமும் (எதனாலே வந்ததென்னில்)
அருள் நீர்மை தந்த அருள்–அருளையே இயல்வாகவுடைய ஸர்வேச்வரன் அருளிய க்ருபையினாலே வந்தது.

“எனக்குத் தேனே பாலே நன்னலேயமுதே திருமாலிருஞ்சோலைக் கோனோகி“ என்று மஹான்களுக்கு
எம்பெருமான் பரம போக்யனாயிருப்பனாயினும் அரஸகனான பாவியேனுக்கு வேம்பாயிப்பன்,
ஆயினும் “இந்த பகவத் விஷயத்தை நீ பாடக்கடவை“ என்று எம்பெருமான் தானாகவே திருவருள் கூர்ந்து நியமித்ததன்
பலனாகவே ஸரஸ்வதியானவள் நம்முடைய ஹருதயத்திலே வீற்றியிருந்து சப்தாரிகளைத் தொடுக்கச் செய்தாளென்கிறார்.

நாமங்கை – நாவில் வாழும் பெண், ஸரஸ்வதி,
பொன்னாழிபாடு –பொன்னாழியைப்பாடு எனினும், பொன்னாழியையுடைய எம்பெருமானைப்பாடு எனினும் ஒக்கும்.

———-

எம்பெருமானுடைய நிர்ஹேதுக விஷயீகாரத்தையே பேசுகிறார் –

அருள் புரிந்த சிந்தை அடியார் மேல் வைத்து
பொருள் தெரிந்து காண்குற்ற வப்போது –இருள் திரிந்து
நோக்கினேன் நோக்கி நினைந்தேன் தொண் கமலம்
ஓக்கினேன் என்னையும் அங்கு ஓர்ந்து–59-

பதவுரை

அருள் புரிந்த சிந்தை–அருளோடு கூடின திருவுள்ளத்தை
அடியார் மேல் வைத்து–அடியவராகிய எங்கள் மேலே வைத்து
பொருள் தெரிந்து–அபதார்த்தமாகத் திருவுள்ளம் பற்றி
காண்குற்ற அப்போது–கடாக்ஷித்தருளுகிற காலத்திலே
இருள் இரிந்து–அஜ்ஞான விருள் நீங்கப் பெற்று
நோக்கினேன்–ஸ்வரூபத்தை ஆராய்ந்தேன்
நோக்கி–அப்படி ஆராய்ந்து
ஒண் கமலம் அது–அழகிய தாமரை மலர்களை என்னலாம் படியுள்ள அத்திருவடிகளை
நினைந்தேன்–(ப்ராப்யமாக அநுஸ்ந்தித்தேன்
ஓர்ந்து–(இத்திருவடிகள் தவிர நமக்கு வேறு புகலில்லை யென்று நிரூபித்து
என்னையும்–ஆத்மாவையும்
அங்கு–அத் திருவடிகளிலே
ஒக்கினேன்–ஸமர்ப்பித்தேன்.

தாய் தந்தையர்க்கு மக்களிடத்தில் இயற்கையாக வாத்ஸல்யமிருப்பது போல எம்பெருமானும் அடியவராகிய நம்மிடத்து
ஸஹஜமான வாத்ஸல்யத்தை நிலை நிறுத்தி அபதார்த்தமாய்க் கிடந்த நம்மைப் பதார்த்தமாக்கிக் கடாக்ஷித்தருளின படியாலே.
எம்பெருமானுக்கும் நமக்குமுள்ள அநாதி ஸம்பந்தத்தை அறிய வொட்டாமல் தடையாய்க் கிடந்த அஜ்ஞான விருள் தொலையப் பெற்று
ஸ்வரூப ஜ்ஞாநம் பெற்று அவனுடைய திருவடித் தாமரைகளை அநுஸந்திக்கப் பெற்றேன்,
அத் திருவடிகளிலேயே ஆத்ம ஸமர்ப்பணமும் பண்ணப் பெற்றேன் என்றாராயிற்று.

“அடியார்மேல் வைத்து“ என்று படர்க்கையாயிருந்தாலும் தன்மையில் நோக்கென்று கொள்க‘
அடியேன்மேல் வைத்து‘ என்பதே கருத்தாகும்.
“பொருள் தெரிந்து“ – “பொருளல்லாத வென்னைப் பொருளாக்கி யடிமைகொண்டாய் என்றவாறு.
இனி, “பொருள் தெரிந்து“ என்பதற்கு –
அர்த்த பஞ்சகத்தை நாங்கள் தெரிந்துகொள்ளுமாறு என்றும் பொருள் கொள்ளலாம்.
நம்மால் அடையத்தக்க எம்பெருமானுடைய ஸ்வரூபம் எம்பெருமானை அடையுமவனான சேதநனுடைய ஸ்வரூபம்,
அடைவதற்கான உபாயம், அடைந்து பெறும்பேறு அப்பேற்றை அடையவொட்டாமல் நடைசெய்கிற விரோதிகளின் தன்மை –
ஆகிய இவை ஐந்தும் அர்த்தபஞ்சகமெனப்படும்.
இவற்றை நாங்கள் தெரிந்து கொள்ளும்படி கடாக்ஷித்தருளினமையாலே அகவிருள் நீங்கி அடியவரானோம் என்கை.

இரண்டாமடியின் தனிச்சீர் “இருள் திரிந்து“ என்று ஓதப்பட்டு வருமாயினும் இருளிரிந்து என்ற பாடமே புராதமும் சிறந்ததுமாம்.
ஒண் கமலம் – ஒண் கமலம் போன்ற திருவடி என்றபடி, முற்றுவமை.

————————————————————————–

கீழ்பாட்டிற் கூறியபடி எம்பெருமான் தன் பெருமையைப் பாராமல் எளிமையையே பிரகாசப்படுத்தித்
தம்மை விஷயீகரித்த நீர்மையை அநுஸந்திக்கையாலே, எம்பெருமானுக்கு ஸ்வாதத்திரியமே வடிவு என்று
நினைத்திருக்கும் நினைவு தவிர்ந்து அவனுக்கு ஆச்ரித பாரதந்திரியமே வடிவு என்று
அனைவரும் நினைக்க வேணு மென்கிறாரிதில்.

ஓர் உருவன் அல்லை ஒளி உருவம் நின் உருவம்
ஈர் உருவன் என்பர் இரு நிலத்தோர் -ஓர் உருவம்
ஆதியாம் வண்ணம் அறிந்தார் அவர் கண்டீர்
நீதியால் மண் காப்பார் நின்று–60-

பதவுரை

ஓர் உருவம் அல்லை–(எம்பெருமானே) பரத்வமே வடியாக இருப்பவனன்று நீ,
ஒளி உருவம்–ஆச்ரித பரதந்த்ரமாய்க் கொண்டு ஒளி பெற்றிருக்கிற ஸ்வரூபம
நின் உருவம்–உனது வடியாம் (இப்படி ஆச்ரித பாரதந்திரியமே வடியாவிருக்கிற உன்னை)
இரு நிலத்தோர்–இப் பெரிய பூமண்டலத்திலுள்ளவர்கள்
ஈர் உருவன் என்பர்–பரத்வமாகிற பெரிய வடிவை யுடையனாகச் சொல்லு கின்றனர்
ஓர் உருவம்–ஆச்ரித பாரதந்திரிய மாகிய ஒரு வடிவே
ஆதி ஆம் வண்ணம்–எல்லார்க்கும் உஜ்ஜீவந ஹேதுவாயிருக்கு மென்பதை
அறிந்தாரவர் கண்டீர்–தெரிந்து கொள்ளுமவர்களே
நீதியால்–நியாயப்படி
நின்று–நிலைத்து நின்று
மண் காப்பார்–உலகத்தை ரக்ஷிக்க வல்லவராவர்.

இப்பாட்டு எம்பெருமானை நோக்கிக் கூறுவதாம். விளி வருவித்துக் கொள்க
நீ ஒருருவனல்லை – உனக்குப் பரத்வமே வடிவு என்று சாஸ்த்ரங்களைக்கொண்டு பலர் பேசுவர், அஃது அப்படியன்று.
பரத்வத்தையே நீ வடிவாக வுடையை யல்லை யென்றபடி. இதில் ஓருரு என்றது பரத்வமாகிற வடிவைக் கருதினபடி
எனக்குப் பரத்வம் வடிவன்றாகில், பின்னை எது வடிவு என்கிறாயோ?
ஒளியுருவம் நின்னுருவம் –இருட்டறையில் விளக்குப்போலே இவ்விருள் தருமா ஞாலத்தில் ஒளிபெற்று விளங்குமதான
உனது ஸௌப்ய குணமே உனக்கு வடிவாயிருக்கும். நீ ஸ்வதந்திரனன்று, ஆச்ரிதபரதந்திரன் என்கை.

ஆழ்வீர் எனக்கு ஆச்ரித பாரதந்திரியமே ஸ்வருபமென்று நீர் சொல்லுகின்றீரே,
இது நீரொருவர்மாத்திரம் சொல்லுகிறவார்த்தையா? மற்றுள்ளாரெல்லாரும் இப்படியே கருதியிருக்கின்றார்களா?
என்று எம்பெருமான் கேட்டருள,
அதற்கு உத்தரமுரைக்கின்றார் ஈருருவனென்ப ரிருநிலத்தோர் என்று,

உன்னுடைய ஸௌப்யகுணம் என்மேல் ஏறிப் பாய்ந்தபடியாலே இவ்வுண்மையை நானொருவன் தெரிந்து
சொல்லுகிறேனத்தனை இக்குணத்தைக் கனவிலுங் கண்டறியாத உலகத்தவர்கள்
உன்னைப் பரத்வமே வடிவாக வுடையனாகத்தான் சொல்லுகின்றனர் என்கை.
இதில் ஈருருவன் என்றவிடத்து ஈர் என்றது ‘இரண்டு‘ என்னும் பொருளில் வந்த்தன்று,
‘பெருமை‘ என்னும் பொருளில் வந்தது. பரத்வமாகிற பெரிய வடிவுள்ளவனாக இவ்வுலகத்தவர் உன்னைச் சொல்லுகின்றனர் என்கை.

ஸௌலப்ய குணத்திலீடுபடாத உலகத்தவர்கள் கிரஸித்திருக்கிறபடி யல்லாமல் அக்குணத்தை அநுபவித்த
தாம் அறிந்திருக்கிறபடியே ‘எம்பெருமானுக்கு ஆச்ரிதரிட் வழக்காயிருக்குந் தன்மையே நிலைநின்ற வடிவு‘ என்று
எவர் தெரிந்து கொள்வரோ அவர்களே இவ்வுலகில் மேம்பட்டிருப்பர் என்கிறார் பின்னடிகளில்.

இப்பாட்டுக்கு மற்றொருவதையாகவும் பொருள் கொள்ளலாம் –
ஒருருவனல்ல – “உயிரளிப்பான் எந்நின்ற யோனியுமாய்ப் பிறந்தா யிமையோர் தலைவா!“ என்கிறபடியே
அடியவர்களைக் காத்தருள்வதற்காக நீ பலபல யோதிகளில் திருவவதரித்தாயாதலால் பரவாஸுதேவனாயிருக்கையாகிற
ஒரு உருவத்தையே நீ உடைமையல்லை
ஒளியுருவம் நின்னுருவம் – மீனாகவும், ஆமையாகவும் பன்றியாகவும் பலவுருக்கள் நீ கொண்டாலும்
அவை அழுக்குடம்பு அல்ல, நீ பிறக்கு முருவங்களும் சுத்த ஸத்வமயமாய்க் கொண்டு நிரவதிகதே ஜோரூபமாகவே யிருக்கும்.
ஈருருவனென்ப நிருநிலத்தோர் – ஆக விப்படி அஸாதாரண விக்ரஹம், அவதார விக்ரஹம் என்று இருபடிப்பட்ட
திருமேனியையுடையனாக உன்னை இவ்வுலகத்தவர் தெரிந்து கொண்டிருக்கின்றனர்.
ஆயினும் அஸாதாரண விக்ரஹத்திற் காட்டிலும் அவதார விக்ரஹமே ஸகல லோக உஜ்ஜீவந ஹேது என்று
அறிந்து கொள்வதே சிறப்பு என்கிறார் பின்னடிகளில்.

————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பூதத் ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

இரண்டாம் திருவந்தாதி -பாசுரங்கள் -21-40–திவ்யார்த்த தீபிகை சாரம்–

October 3, 2014

முதல் திருவந்தாதியில் “நாவாயிலுண்டே நமோநாராணாயவென்று ஓவாதுரைக்கு முரையுண்டே,
மூவாத மாக்கதிக்கண் செல்லும் வகையுண்டே என்னொருவர் தீக்கதிக்கண் செல்லுந்திறம்”(9”) என்ற
பாசுரத்தின் கருத்தைப் பெரும்பாலும் தழுவியதாமிப்பாசுரம்.

தாமுளரே தம் உள்ளம் உள் உளதே தாமரையின்
பூ உளதே ஏத்தும் பொழுது உண்டே -வாமன்
திரு மருவு தாள் மருவு சென்னியரே செவ்வே
அரு நரகம் சேர்வது அரிது—————–21-

பதவுரை

தாம் உளரே–(எம்பெruருமானைப் பணிவதற்குப் பாங்கான கரண களேபரங்களை யுடைய)
சேதநர் தாங்கள் ஏற்கனவே இருக்கின்றார்களே;
தம் உள்ளம் உள்உளதே–(எம்பெருமானைச் சிந்திப்பதற்கான) தங்களுடைய (மனமும் வெளியே போய்த் தேட வேண்டாதபடி)
தமக்குள்ளே யிருக்கின்றதே.
தாமரையின் பூ உளதே–(எம்பெருமான் திருவடிகளில் சாத்தந்தக்க) தாமரைப்பூ (குளங்கள் தோறும்) நிறைந்து கிடக்கின்றதே;
ஏத்தும் பொழுது உண்டே–அவனை வாய் விட்டுப் புகழ்வதற்கு ஏற்ற காலம் ஏராளமாக வுள்ளதே;
வாமன்–(தன் உடைமையைப் பெறுகைக்குத் தான் யாசகனாகச் சென்ற சீலமுள்ள) வாமந மூர்த்தியான ஸர்வேச்வரனுடைய
திரு மருவு தாள்–அழகிய திருவடிகளை
மருவு–பணிவதற்குப் பொருத்தமான
சென்னியரே–தலையை யுடையவர்களாக இருக்கின்றார்களே;
(இப்படி ஒன்றாலும் குறையின்றியே யிருக்கவும் இவ்வுலகத்தவர்கள்)
செவ்வே–நேராக
அரு நரகம்–கொடிய நரகத்தை
சேர்வது–அடைவதானது
அரிது–ஆச்சரியப்படத்தக்க அருமையான செயலாயிருக்கின்றது.

எம்பெருமானை ஏத்துவதற்கு ஏற்ற ஸாமகரிகள் குறைவற்றிருக்கச் செய்தேயும் இவ்வுலகத்தவர் விலக்கடி தேடிக்கொண்டு
நரகத்திற்சென்று சேருகின்றார்களே! இஃது என்னோ! என்று வயிறெரிகிறார்.
“ஜிஹவே! கீர்த்தய கேசவம் முரரிபும்” என்ற முகுந்தமாலை ச்லோகத்திற் சொல்லுகிறபடியே எம்பெருமானைப் பணிவதற்கு
ஏற்ற கரசரணாதி அவயங்களோடு கூடியிருக்கின்றார்களே;
இனி புதிதாகத் தங்களைத் தாம் ஸ்ருஷ்டிபண்ணிக் கொள்ள வேண்டியதில்லையே;
எல்லாவற்றிறுக்கும் மூல காரணமான நெஞ்தானும் வெளியிற் சென்று தேடவேண்டாதபடி உள்ளே அமைந்து கிடக்கின்றதே;
அர்ச்சிப்பதற்கு உரிய தாமரை மலர்கள் தடாகங்கள்தோறும் மலிந்து கிடக்கின்றனவே;
‘போதுபோகவில்லை; போதுபோகவில்லையே’ என்று பாழும் ஸம்ஸாரிகள் தவிக்க வேண்டும்படி பொழுதும் ஏராளமாகவுண்டே
பகவானைத் துதிப்பதற்கு; தலைபடைத்த ப்ரயோஜனம் பெற அவனை வணங்கலாமே; இப்படி ஒன்றாலொன்று குறையின்றியிருக்க,
இவர்கள் நித்ய ஸம்ஸாரிகளாகவேயிருக்க வழிதேடுவது என்ன கேடுகாலமோ வென்றவாறு,
“நாராயணேதி சப்தோஸ்தி வாகஸ்தி வசவர்த்தி நீ- ததாபி நரகே கோரே பதந்தீதி கிமத்புதம்” என்ற
புராண ச்லோகமும் இப்பாட்டுக்கு ஒரு புடை சார்பாக அநுஸந்திக்கத்தகும்.

————————————————————————–

அரியது எளிதாகும் ஆற்றலால் மாற்றி
பெருக முயல்வாரைப் பெற்றால் -கரியதோர்
வெண் கோட்டு மால் யானை வென்றி முடித்தது அன்றே
தண் கோட்டு மா மலரால் தாழ்ந்து——22-

பதவுரை

(சேதநனுக்கு வேண்டிய ஸகல காரியங்களையும் தானே செய்வதாக என்று கொண்டு)
பெருக முயல்வாரை–மிகவும் உத்ஸாஹங் கொண்டிருக்கின்ற மஹாபுருஷனான எம்பெருமானை
பெற்றால்–கிடைக்கப் பெற்றால்
அரியது–செய்வதற்கு அருமையான செயலும்
எளிது ஆகும்–லகுவாய்விடும்; (இப்படியாக எங்கே கண்டோமென்னில்)
வெண்கோடு–வெண்ணிறமான தந்தங்களையுடைய
மால்–பெரிய
கரியது ஓர் யானை–கருநிறமுள்ள கஜேந்திராழ்வான்
தண்–குளிர்ந்த
கோடு–பொய்கைக் கரையிலே
மா–சிறந்த
மலரால்–தாமரைப் பூக்களைக் கொண்டு
(மடுவின் கரையிலெழுந்தருளின எம்பெருமான் திருவடிகளிலே)
தாழ்ந்து–வணங்கி யடிமை செய்ததனால்
வென்று முடித்தன்றே–விரோதியை ஜயித்துத் தன் அபீஷ்டத்தை நிறைவேற்றிக் கொண்டதன்றோ.
ஆற்றலால்–தன்னுடைய சக்தியினால்
மாற்றி–சேதநன் செய்யும் முயற்சி ஒன்றும் வேண்டாவென்று விலக்கி

எம்பெருமான் ஸர்வசக்தனென்பதை யறிந்து கொண்டு, அப்படி ஸர்வசக்தனான அவனே நம்முடைய பாரங்களைத்
தன் தலைமீது ஏற்றுக்கொண்டு நமக்காகவேண்டிய ஸகலகாரியங்களையுஞ் செய்து தலைக்கட்டத்தானே
உத்ஸாஹங் கொண்டிருக்கிறானென்பதையறிந்து அவனுடைய ப்ரவ்ருத்திக்கு விலக்கான நம்முடைய ப்ரவ்ருத்தியை
நிறுத்திக்கொள்வோமாயின் நமக்குப் பெறமுடியாத தொன்றுமில்லை, எல்லாம் எளிதேயாம்;
இதற்கு உதாஹரணமுங் காண்மின்; முதலையின் வாயிலகப்பட்ட கஜேந்திராழ்வான் தனது சக்தியைக்கொண்டு
அவ்வாபத்தைப் போக்கிக்கொள்ள நினைத்துத் தானாக முயற்சிசெய்து கொண்டிருந்தவரையில் துன்பம் நீங்கப்பெற்றதில்லை;
‘தன்னாலானமட்டும் ஒரு கை பார்க்கட்டும்’ என்று எம்பெருமான் விலகியே நின்றான்;
இனி நம்மாலாகாதென்று துணிந்து ஸ்வப்ரவ்ருத்தியைவிட்டு ‘ஆதிமூலமே!’ என்றழைத்த பின் தன்காரியமாகக் கொண்ட
எம்பெருமான் அரைகுலையத் தலை குலைய மடுவின் கரையிலே ஓடிவந்து வினைதீர்த்தொழித்தானன்றோ.

ஆற்றலால் மாற்றிறப் பெருக முயல்வாரைப் பெற்றால் அரியது எளிதாகும் –
ஆற்றலாவது சக்தி; எம்பெருமானுடைய சக்தியைச் சொன்னபடி,
மாற்றி – சேதகனுடைய ப்ரவ்ருத்திகளை விலக்கி என்றபடி.
சேதநன் தன்னுடைய முயற்சியை நீக்கிக்கொண்டு எம்பெருமானுடைய சக்தியே ஓங்கும்படி நின்றால்
அரிய காரியமும் எளிதாக முடியுமென்பது தேர்ந்த கருத்து.

ஈற்றடியிலுள்ள ‘கோடு’ என்னுஞ் சொல் நீர்க்கரையென்னும் பொருளது.
“தண் தோட்டு மாமலரால்” என்றும் பாடமுண்டாம்; தோடு – அகவிதழ்; மலர்க்கு விசேஷணம்.

————————————————————————–

எம்பெருமான் தன்னை ஆச்ரயிப்பவர்களின் இடையூறுகளைத் தொலைத்து அவரவர் மேன்மேலும் விரும்புகின்ற
இஷ்டங்களையுந் தந்தருள்வனென்கிறது.

தாழ்ந்து வரம் கொண்டு தக்க வகைகளால்
வாழ்ந்து கழிவாரை வாழ்விக்கும் -தாழ்ந்த
விளங்கனிக்கு கன்று எறிந்து வேற்றுருவாய் ஞாலம்
அளந்தடிக்கீழ் கொண்ட வவன்—-23-

பதவுரை

தாழ்ந்த–(பழத்தின் கனத்தினால் கிளைகள்) தாழ்ந்து கிடந்த
விளா–விளா மரத்தினுடைய
கனிக்கு–பழங்களை உதிர்ப்பதற்காக
கன்று–கன்றை (எறி கோலாகக் கொண்டு) வீசி யெறிந்தவனாயும்
வேறு உரு ஆய்–(திருமாலான தன்னுடைய வடிவத்தை விட்டு யாசகனான வாமன மூர்த்தி வடிவமாய்
ஞாலம்–பூமியை
அளந்து–அளந்து
கொண்ட–அடங்கும்படி கொண்டவனாயுமுள்ள
அவன்–அந்த எம்பெருமான்
தாழ்ந்து–தனது திருவடிகளிலே வணங்கி
வரம் கொண்டு–(எங்கள் இஷ்டத்தை நீயே பூர்த்தி செய்து தரவேணுமென்று சொல்லித் தனது) திருவருளைப் பெற்று
தக்க வகைகளால்–(தங்கள் தங்கள் நிலைமைக்கு) ஏற்ற வண்ணமாக
வாழ்ந்து–ஐச்வரியத்தையோ கைவல்யத்தையோ பகவத் ப்ராப்தியையோ பெற்று
கழிவாரை–மேன்மேலும் ஸுகத்தை மிகுத்துக் கொள்ள வேணுமென்றிருக்கிற அந்தந்த அதிகாரிகளை
வாழ்விக்கும்–வாழ்விப்பான்.

பின்னடிகளில் கபித்தாஸுர வத்ஸாஸுரர்களைக் கொன்றழித்ததையும் மாவலியின் கொழுப்பையடக்கியதையும் பேசினதன் கருத்தாவது –
துரஹங்சாரியான மாவலியின் கையில் அகப்பட்டக் கிடந்த பூமியைத் தன் திருவடிகளிலே கொண்டு வாழ்வித்தவன்,
வணங்கினவர்களின் விரோதிகள் கபித்தாஸுரனும் வத்ஸாஸரனும் பட்டபாடுபாடும்படி போக்கிக் கர்ப்பனென்பதாம்.

வேற்றுருவாய் -திருமகள் கொழுநனாயிருக்கும் உருவத்தை விட்டு யாசக ப்ரஹ்மசாரியின் உருவத்தை யேறிட்டுக்கொண்டு என்றபடி.
அன்றி, இரக்கும் போது சிறியகாலைக்காட்டி, அளக்கும்போது பெரியகாலைக் கொண்டு என்றுமாம்.

————————————————————————–

எம்பெருமான் தன்னை வணங்கினவர்களை வாழ்விப்பனென்று கீழ்ப்பாசுரத்திலருளிச் செய்த ஆழ்வார்.
அடியே பிடித்து சேதநனுடைய ஸத்தையை நோக்கிக் கொண்டு போருகிற எம்பெருமானுக்கு
இஃது ஓரேற்றமே வென்கிறார் போலு மிப்பாட்டால்.

அவன் கண்டாய் நன் நெஞ்சே யார் அருளும்கேடும்
அவன் கண்டாய் ஐம் புலனாய் நின்றான் -அவன் கண்டாய்
காற்றுத் தீ நீர் வான் கருவரை மண் காரோதச்
சீற்றத் தீ யாவானும் சென்று —24-

பதவுரை

நல்நெஞ்சே–நல்ல மனமே!
ஆர் அருளும்–பரி பூர்ண க்ருபையாலே உண்டாகக் கூடிய மோக்ஷமும்
கேடும்-நிக்ரஹத்தால் வரக் கூடியதான ஸம்ஸாரமும்
(ஆகிய இரண்டுக்கும் நிர்வாஹகன்
அவன் கண்டாய்–அந்த எம்பெருமானே யாவன்;
ஐம்புலன்–பஞ்சேந்திரிய வடிவமான சரீரத்திற்கு உத்பாதகங்களான
காற்று தீ நீர் வான் மண் ஆய் நின்றான் அவன் கண்டாய் –பஞ்ச பூதங்களாய் நிற்பவனும் அந்த எம்பெருமானே யாவன்;
கரு வரை–கறுத்த மலைகளும்
(அவன் கண்டாய்)–அவனேயாம்;
சென்று–(இந்தப் பிரபஞ்சத்தை யழிக்கத் திருவுள்ளம்) ப்ரஸரித்து
கார் ஓதம் சீற்றம் தீ ஆவானும்–கறுத்த கடலைச் சீறிச் சுடவல்ல படபாக்நி யாகுமவனும்
அவன் கண்டாய்–அந்த எம்பெருமானேயாம்.

ஆரளுங் கேடும் அவன் கண்டாய் இந்த ஸம்ஸாரத்தை ப்ரவர்த்திப்பித்தவன் எம்பெருமானே யாதலால்
சேதன வர்க்கங்களைக் காக்க வேண்டியதும் அவனுக்குப் பாரமாயிற்று;
ஆகவே, கண்ணபிரானே கரணகளேபரங்களைக் கொடுத்து ஸம்ஸாரத்தில் ப்ரவர்த்திப்பித்த
அவதாரிகளைத் தன்னுடைய மாயையான ஸம்ஸாரத்தில் நின்றும் மீளச் செய்வானாம் என்றவாறு-
மாமேவ யே ப்ரபத்யந்தே மாயாமேதாம் தரந்தி தே” என்று சோதி வாய்திறந்து பணித்ததும் உணர்க.

————————————————————————–

“ஈச்வரன் அவதரித்துப் பண்ணின ஆனைத்தொழில்களெல்லாம் பாகவதாபசாரம் பொறாமையென்று ஜீயரருளிச்செய்வர்”
என்பது ஸ்ரீவசநபூஷணம் அதாவது – ஸங்கல்பமாத்திரத்தாலே எல்லாவற்றையும் நிர்வஹிக்கவல்ல ஸர்வசக்தியான ஸர்வேச்வரன்
தன்னை யழியமாறி மநுஷ்யர்களைப்போன்று அவதரித்துக் கைதொடனாய்நின்று செய்த ராவணாதிநிரஸநரூபமான
அதிமாநுஷருத்யங்களெல்லாம் மஹர்ஷிகள் முதலான பாகவதர்திறத்தில் அவ்வவர் பண்ணின அபசாரம் ஸஹியாமையாலே
என்று நஞ்சீயரருளிச் செய்வராம்
திருவாழி யாழ்வானைக் கூட ஏவாமல் ஸங்கல்பமாத்திரத்தாலே காரியஞ் செய்யவல்லமை எம்பெருமானுக்கிருந்தாலும்
ஆச்ரிதர்களுக்காகத் தான் உடம்பு நோவக் காரியஞ் செய்தாலன்றித் தனக்கு த்ருப்தி பிறவாதாகையால்
தானே நேரில்வந்து தோன்றிக் கைதொட்டுக் காரியஞ்செய்கின்றானாம்.

சென்றதிலங்கை மேல் செவ்வே தன் சீற்றத்தால்
கொன்றது ராவணனை கூறுங்கால் -நின்றதுவும்
வேயோங்கு தண் சாரல் வேங்கடமே விண்ணவர் தம்
வாயோங்கு தொல் புகழான் வந்து—-25—

பதவுரை

விண்ணவர் தம் வாய்–தேவர்களின் வாயினால்
ஓங்கு தொல் புகழான்–உயர்வாகக் கூறப்படுகின்ற பழமையான புகழை யுடைய எம்பெருமான்
செவ்வே–நேராக
சென்றது–சீறிச் சென்றது
இலங்கை மேல்–லங்காபுரியின் மேலாகும்;
தன் சீற்றத்தால்–தனக்கு வந்தேறியான கோபத்தால்
கொன்றது–ஸம்ஹரித்தது
இராவணனை–ராவணனையாம்;
கூறுங்கால்–சொல்லுமிடத்து
வந்து நின்றதுவும்–(சேதநர் எக்காலத்தும் உஜ்ஜீவிக்கவேணுமென்று கருதி) வந்து
வேய் ஓங்கு தண் சாரல் வேங்கடமே–மூங்கில்கள் ஓங்கி வளர்ந்துள்ள குளிர்ந்த சாரலையுடைய திருவேங்கடமலையேயாம்.

படாதபாடுகள் பட்டு இலங்கையை நோக்கிச் செல்லாமலே “பஸ்மீபவது ராவண:” என்றாற்போன்ற வொரு
ஸங்கல்பமாத் கிடத்தாலே இராவணனை நீறாக்கி யொழித்திருக்கலாமே;
அப்படியிருக்கவும், வந்து பிறந்து இலங்கையை நோக்கிப் படைதிரட்டிச் சென்றதும்
இராவணனைப் போர்க்களத்திலே கொன்றதும் என்னோ?

இராவணன் முதலிய துஷ்டர்களை ஸங்கல்பமாத்திரத்தாலே நிக்ரஹித்து விடக்கூடுமாயினும்,
“பரித்ராணாய ஸாதூநாம்” என்று சொல்லப்பட்ட ஸாதுபரித்ராணம் (சிஷ்டர்களை வாழ்விப்பது) ஸங்கல்பத்தால் தலைக்கட்டாது;
திவ்யமங்கள விக்ரஹத்தினழகைக் கண்ணாரக் காண வேணுமென்றும் அனைத்துக்கொள்ள வேணுமென்றும்
அன்பர்கொள்ளும் ஆவலை நேரில் வந்தவதரித்தே தீர்க்கவேணுமேயன்றி ஸங்கல்பத்தால் தீர்க்கப்போகாதாகையாலே
“பரித்ராணாய ஸாதூநாம் விநாசாய ச துஷ்க்ருதாம் – தர்ம ஸம்ஸ்தாபநார்த்தாய ஸம்பவாமி யுகேயுகே” என்று
சொல்லப்பட்ட அவதார ப்ரயோஜநங்கள மூன்றனுள் முக்கியமாக ஸாதுபரித்ராண மொன்றுக்காகவே
விபவாவதாரங்களும் அர்ச்சாவதாரங்களும் செய்தருள்கிறானென்பதை வெளியிடுதலே இப்பாட்டின் பரம தாத்பர்யமாம்.

விண்ணவர்தம் வாயோங்கு தொல்புகழான் – ராவண ஸம்ஹாரம் முடிந்த பின் பிரமன் முதலிய தேவர்கள் வந்து
தோத்திரஞ்செய்ததைக் கூறிற்றாகவுங் கொள்ளலாம்.

————————————————————————–

கீழ்ப்பாட்டில், “நின்றதுவும் வேயோங்கு தண்சாரல் வேங்கடேமே” என்று திருமலையின் ப்ரஸ்தாவம் வந்ததனால்
அத்திருமலையிலேயே இவ்வாழ்வார்க்கு இன்னமும் திருவுள்ளம் அவகாஹித்து அதன் வைலக்ஷண்யத்தை யருளிச் செய்கிறார்.

வந்தித்து அவனை வழி நின்ற ஐம்பூதம்
ஐந்தும் அகத்தடக்கி ஆர்வமாய் -உந்திப்
படி யமரர் வேலையான் பண்டு அமரர்க்கு ஈந்த
படி யமரர் வாழும் பதி—-26–

பதவுரை

படி அமரர்–நிலத் தேவரான பிராமணர்கள்
வாழும்–நித்யவாஸம் பண்ணுகிற
பதி–திருப்பதியாகிய திருமலை யென்பது,
வழி நின்ற–(எம்பெருமானை ஆச்ரயிப்பதற்குத் தடங்கலாய்) குறுக்கே நிற்பனவான
ஐம்பூதம் ஐந்தும்–பஞ்ச பூதங்களையும் பஞ்சேந்திரியங்களையும்
அகத்து அடக்கி–வெளியிற் போக வொண்ணாதபடி நியமித்து
அவனை–அவ் வெம்பெருமானை
வந்தித்து–வணங்கி
ஆர்வம் செய்–பக்தி யுடையவர்களாய்
உந்தி–ஒருவரை யொருவர் தள்ளிக் கொண்டு மேல் விழுந்து
படி–வந்து படிகின்ற
அமரர்–தேவர்களுக்காக
வேலையான்–திருப்பாற்கடலிலுள்ள பெருமான்
பண்டு அமரர்க்கு ஈந்த–முன்னைத் தேவர்களான நிர்ய ஸுரிகட்கும் (அநுபாவ்யமாகக்) கொடுத்த தலமாகும்.

இரண்டரை யடிகளால் க்ஷீராப்தி நாதனை வருணித்தாராயிற்று. தேவர்கள் ஜிதேந்திரியர்களாய்க் கொண்டு
நான் முன்னே நான் முன்னே யென்று ஒருவரையொருவர் தள்ளிக்கொண்டு வந்து படியுமிடமான திருபபாற்கடலிலே
பள்ளிகொள்ளும் பெருமான், இந்நிலவுலகத்தில் ஸ்ரீவைஷ்ணவர்கள் அநுபவித்து வாழுமிடமான திருவேங்கடமலையை
நித்யஸூரிகளுக்குத் தந்தான் – என்ற விதன கருத்து யாதெனில்;
“தண்ணருவி வேங்கடமே வானோர்க்கும் மண்ணோர்க்கும் வைப்பு” என்று திருமழிசைப்பிரானும் ,.
“மந்திபாய் வடவேங்கடமாமலை வானவர்கள் சந்தி செய்ய நின்றான்” என்று திருப்பாணாழ்வாரும் அருளிச் செய்தபடியே
இத்திருமலை இவ்விபூதியிலுள்ளார்க்கு மாத்திரமேயல்லாமல் அவ்விபூதியிலுள்ள நித்யஸுரிகளுக்கும் எட்டிப் பிடித்தாற்போல்
வந்து பணியுமாறு அமைக்கப்பட்ட திருப்பதியாமென்பதே. “
சுமந்து மாமலர் நீர்சுடர் தூபங்கொண்டு, அமர்ந்து வானவர் வானவர்கோனொடும்,
நமன்றெழுந் திருவேங்கடம்” என்ற திருவாய்மொழியுங் காண்க.

வந்தித்து – வடமொழித்தாது வடியாகப் பிறந்த வினையெச்சம்.
உந்தி – வினையெச்சம்; ‘உந்து’ என்பது வினைப்பகுதி.
மூன்றாமடியில், படியமரர் – வினைத்தொகை.
வேலை – கடற்கரையை யுணர்த்தும் வடசொல்லாகிய ‘வேலா’ என்பது ஐயீறாகி இலக்கணையால் கடலையுணர்த்திற்று.
ஈந்த – ‘ஈந்தது’ என்பதன் விகாரம். படியமரர் வாழும் = படி – பூமி; வானுலகத்தில் தேவர்கள் விளங்குவது போல
இருள்தருமா ஞாலமான இந்தப்பூமியில் விளங்குபவர்; எனவே, அந்தணர்களையும் ஸ்ரீவைஷ்ணவர்களையும் சொல்லிற்றாம்.

————————————————————————–

பதி யமைந்து நாடிப் பருத்து எழுந்த சிந்தை
மதி உரிஞ்சி வான் முகடு நோக்கி -கதி மிகுத்தங்கு
கோல் தேடி யோடும் கொழுந்ததே போன்றதே
மால் தேடி ஓடும் மனம்——27-

பதவுரை

பதி–திருமலைத் திருப்பதியிலே
அமைந்து–வேரூன்றி நின்று
நாடி–எங்கே யென்று தேடிக் கொண்டு
பருத்து எழுந்த சிந்தை
மிகவும் வளர்ந்து மேற்கிளர்ந்த மனோ ரதத்தை யுடையதாய்
மதி உரிஞ்சி–சந்திர பதத்தையும் உராய்ந்து கொண்டு
வான் முகடு நோக்கி–(அப்பால்) அண்ட முகட்டையும் பார்த்து விட்டு
(அங்கும் நில்லாமல்)
மால் தேடி–பரமபத நாதனைத் தேடிக் கொண்டு
கதி மிகுத்து ஓடும்–விரைவு மிகுந்து செல்லுகின்ற
மனம்–என்னெஞ்சமானது
அம் கோல் தேடி ஓடும்–அழகிய கொள் கொம்பைத் தேடிக் கொண்டு பரந்து செல்லுகின்ற
கொழுந்து அது போன்றது–கொடியை ஒத்திரா நின்றது.

கீழிரண்டு பாசுரங்களில் எம்பெருமானுடைய திருமலையிலிருப்பை அநுஸந்தித்த ஆழ்வார்
இவ்விடத்தில் தாம் தம்முடைய ஆசைதீர அப்பெருமானோடு பரிமாற வேணுமென்று பாரித்தார்;
அர்ச்சாவதாரமாகையாலே அப்படிப்பட்ட பரிமாற்றம் ஒன்றும் பெற்றிலர்;
விபவாவதாரங்கள் காலாதீதமாய்ப் போகையாலே இனி பரமபதநாதனோயேயாகிலும் கலந்து பரிமாறப் பெறலாமோ
என்று பார்த்துத் தம் திருவுள்ளம் பரமபதத்தளவும் பதறிச் செல்லும்படியைப் பேசுகிறாரிப் பாசுரத்தில்.

முதலடியில் முடிவிலுள்ள ‘சிந்தை’ என்னுஞ்சொல் எழுவாய் போலத் தோற்றுமாயினும் அஃது எழுவாய் அன்று;
பாட்டின் முடிவிலுள்ள மனமே எழுவாய்; சிந்தை அதற்கு விசேஷணமாய் அந்வயிக்கும்
எனது மனமானது திருவேங்கட மலையிலே சென்று சேர்ந்து தன் ஆவல் தோற்றும்படி எங்கே யெங்கே யென்று திருமாலைத் தேடி
அங்குத் தன் நினைவு தலைக் கட்டப் பெறாமையாலே மிகவும் வளர்ந்து மேற்கிளர்ந்த மனோ ரகத்தை யுடையதாகி
மேலே மேலே சென்று திருநாட்டுத் தலைவனைத் தேடியோடா நின்றது;
இஃது, அழகிய கொள் கொம்பைத் தேடிக் கொண்டு பரந்து செல்கின்ற கொடியைப் போன்றுள்ளது – என்றாராயிற்று.

————————————————————————–

கீழ்ப்பாட்டில் “கோல் தேடியோடுங் கொழுந்ததே போன்றதே மால் தேடியோடும் மனம்” என்னும்படியாக
ஆசை கரைபுரண்டு செல்லப்பெற்ற மதமுடைய திருவுள்ளத்திலே திருவேங்கடமுடையான் அழகிய மணவாளன்
திருப்பாற்கடல் நாதன் பரமபதநாதன் ஆகிய எம்பெருமான்க ளெல்லாரும் வந்து குடிகொண்டபடியைக் கூறுகின்றாரிதில்.

மனத்துள்ளான் வேங்கடத்தான் மா கடலான் மற்றும்
நினைப்பரிய நீள் அரங்கதுள்ளான்-எனைப்பலரும்
தேவாதி தேவன் எனப்படுவான் முன்னொரு நாள்
மாவாய் பிளந்த மகன் —-28-

பதவுரை

எனை பலரும்–கணக்கில்லாத வைதிக புருஷர் யாவராலும்
தேவாதி தேவன் எனப்படுவான்–தேவர்கட்கும் தேவவென்று ப்ரஸித்தமாகச் சொல்லப்படா நிற்பவனும்
மா கடலான்–பரந்த திருப்பாற் கடலிலே பள்ளி கொண்டிருப்பவனும்
முன் ஒரு நாள்–முன்பொரு காலத்தில்
(ஸ்ரீகிருஷ்ணனா யவதரித்தபோது)
மா வாய் பிளந்த–குதிரை யுருக் கொண்டு வந்த கேசியின் வாயைக் கீண்ட
மகன்–சிறு பிள்ளை யானவனும்
மற்றும்–பின்னும்
நினைப்பு அரிய நீள் அரங்கத்து உள்ளான்–நினைப்பதற்கும் அருமையான யோக்யதை மிக்கிருந்துள்ள கோயிலிலே பள்ளி கொள்பவனுமாகி
வேங்கடத்தான்–திருமலையிலே (ஸர்வ ஸுலபனாய்க் கொண்டு) எழுந்தருளி நிற்பவன்
(இப்போது)
மனத்து உள்ளாள்–என் மநஸ்ஸிலே நித்ய வாஸம் பண்ணா நின்றான்.

தேவாதிதேவனான பரமபத நிலயன் ஜகத்ரக்ஷணார்த்தமாக முதலில் திருப்பாற்கடலில் வந்து தங்கிப் பின்பு
ஸ்ரீக்ருஷ்ணனாயவதரித்து ‘இப்படி நாம் வருவதும்போவதுமாக இராமல் ஸ்திர ப்ரதிஷ்டையாக இருந்து
ஸம்ஸாரிகளைக் காக்க வேணும்’ என்று திருவுள்ளம் பற்றிக் கோயில் திருமலை முதலிய திருப்பதிகளிலே
யெழுந்தருளியிருந்து இப்போது என்னெஞ்சிலே வந்து கிடக்கிறானென்கிறார்.

இப்பாட்டில் ‘மனத்துள்ளான்’ என்பது முதலிலேயிருந்தாலும் அர்த்தஸ்வாரஸ்யம் நோக்கி அது முடிவு சொல்லாகக் கொள்ளப்படும்.

தேவாதி தேவன் – வடசொல் தொடர்.

மாவாய்ப்பிளந்த வரலாறு – கண்ணபிரானைக் கொல்லும்படி கம்ஸனாலேவப்பட்டிருந்த அஸுரர்களில் ஒருவனான
கேசியென்பவன் குதிரையினுருவங் கொண்டு ஆயர்கள் அஞ்சி நடுங்கும்படி களைத்துத் துரத்திக்கொண்டு
கண்ணன் மேற்பாய்ந்துவர, அப்பெருமான் தன் திருக்கையை நன்றாகப்பெருக்கி நீட்டி அதன் வாயிற்கொடுத்துத் தாக்கிப்
பற்களையுதிர்த்து உதட்டைப்பிளந்து அதனுடம்பையும் இருபிளவாக வகிர்ந்து தள்ளினன் என்பதாம்.

————————————————————————–

கிருஷ்ணாவதாரம் நினைவுக்கு வந்துவிட்டால் ஆழ்வார்கள் விரைவில் ஓயமாட்டார்களே!
கீழ்ப்பாட்டில் “முன்னொருநாள் மாவாய்பிளந்த மகன்” என்று கிருஷ்ணாவதாரம் ப்ரஸக்தமானபடியால்
அது தன்னிலேயே திருவுள்ளம் அவகாஹித்து அநுபவித்து இப்பாசுரம் பேசுகிறார்.

மகனாக கொண்டு எடுத்தாள் மாண்பாய கொங்கை
அகனார உண்பன் என்று உண்டு -மகனைத் தாய்
தேறாத வண்ணம் திருத்தினாய் தென்னிலங்கை
நீறாக வெய்தழித்தாய் நீ——-29-

பதவுரை

தென் இலங்கை–அழகிய லங்காபுரி
நீறு ஆக–நீறாகி யொழியும்படி
எய்து–அம்புகளைச் செலுத்தி
அழித்தாய்–முடித்தவனே!
நீ-:மகன் ஆக கொண்டு எடுத்தாள்
உன்னைப் புத்திர பாவனை செய்து (பரிவுகாட்டி முலை கொடுக்க) எடுத்துக்கொண்ட பூதனையினுடைய
மாண்பு ஆய கொங்கை–அழகான முலையை
அகன் ஆர உண்பன் என்று உண்டு–வயிறார உண்ணக் கடவேனென்று சொல்லி (பாலோடு அவளுயிரையும்) குடித்து
மகனை–புத்ரனான உன் விஷயத்திலே
தாய்–உனது தாயாகிய யசோதை
தேறாத வண்ணம்–நம்பிக்கை யற்றிருக்கும்படி
திருத்தினாய்–செய்துவிட்டாய்.

விஷந்தடவின முலையைக் கொடுத்து உன்னைக் கொல்லவந்த பேய்ச்சியானவள் மெய்யே தாய் போன்று பரிவு காட்டி
உன்னை வாரியெடுத்தணைத்து முலைகொடுத்தாள்; நீயும் மெய்யே குழந்தையாகவே பாவனைகாட்டி ,
பாலின் கனத்தாலே விம்மி விளங்குகின்ற அம்முலையைச் சுவைத்துண்பவன் போல அவளுயிரையே உறிஞ்சியுண்டாய்;
அது முதலாக உனது மெய்த்தாயான யசோதைப்பிராட்டிக்கு உன்னிடத்தில் நம்பிக்கையுண்டாக இடமில்லாமலே போயிற்று;
‘இவனை நாம் சிறு குழந்தையென்று நம்பவே கூடாது’ என்று எப்போதும் துணுக்குத்துணுக்கென்று அவள்
அஞ்சியிருக்கும் வண்ணமே செய்துவிட்டாய் என்றாராயிற்று.

அகன் – அகம்; மகரனசுரப்போலி.

“தேன்னிலங்கை நீறாக எய்தழித்தாய்” என்ற விளியின் கருத்தாவது – க்ருஷ்ணாவதாரத்தில் மாத்திரமே இப்படி
நம்பிக்கையற்று அஞ்சியிருக்க வேணுமேயொழிய ராமாவதாரத்தில் இப்படிப்பட்ட அச்சத்திற்கு அவகாசமில்லை;
பருவம் முற்றினபின்பே ராவண ஸம்ஹாரம் முதலிய அரிய பெரிய செயல்களைச் செய்தாயாகையாலே – என்பதாம்.

தென்னிலங்கை – தென் திசையிலுள்ள இலங்கை என்றுமாம். தென் – அழகுக்கும் பெயர்.

————————————————————————–

எம்பெருமானுடைய சில திவ்ய சேஷ்டிதங்களை நினைந்து வாயாரப் பேசி யேத்துகிறார்.
திரிவிக்கிரமனாகி உலகளந்தாய்; மஹாவராஹமாகி உலகிடந்தாய்; வங்கக்கடல் கடைந்தாய்;
அக்கடலிலே அணைகட்டினாய் என்று மஹர்ஷிகள் கூறுகின்றார்களென்கிறார்.

நீ அன்று உலகளந்தாய் நீண்ட திருமாலே
நீ அன்று உலகு இடந்தாய் என்பரால் -நீ யன்று
காரோத முன் கடைந்து பின் அடைத்தாய் மா கடலை
பேரோத மேனிப் பிரான்—30-

பதவுரை

பேர் ஓதம் மேனி பிரான்–பெரிய கடல் போன்ற திருமேனியை யுடைய பெருமானே!
நீண்ட திருமாலே–எண்ணுதற்கு அரிய பெருமை படைத்த திருமாலே
நீ–இப்படிப்பட்ட நீ
அன்று–முன்பொருகால்
உலகு–உலகங்களை
அளந்தாய்–(திரிவிக்கிரமனாகி) அளந்து கொண்டாய் (என்றும்)
நீ–நீ
அன்று–மற்றுமொரு காலத்தில்
உலகு–பூமியை
இடந்தாய்–(மஹாவராஹமாகி) அண்டபித்தியில் நின்றும் ஒட்டு விடுவித்துக் கொணர்ந்தாய் (என்றும்)
நீ அன்று-;
கார் ஓதம் முன் கடைந்து-கரிய கடலை முன்னே கடைந்தா யென்றும்
மா கடலை–(அந்தப் பெரிய கடல் தன்னையே)
பின்–பிறகு (ராமவதாரத்திலே)
அடைத்தாய்–அணை கட்டித் தூர்த்தாயென்றும்
என்பர்–(மஹர்ஷிகள்) சொல்லுகின்றனர்.

காரோதம் கடைந்த வரலாறு : – முன்னொருகாலத்தில், இவ்வண்டகோளத்திற்கு அப்புறத்திலுள்ள விஷ்ணுலோகத்துக்குச்
சென்று திருமகளைப் புகழ்ந்து பாடி அவளால் ஒரு பூமாலை ப்ரஸாதிக்கப்பெற்ற ஒரு வித்யாதரமகள்,
மகிழ்ச்சியோடு அம்மாலையைத் தன் கைவீணையில் தரித்துக்கொண்டு பிரமலோக வழியாய் மீண்டு வருகையில்
தூர்வாஸ மஹாமுநி எதிர்ப்பட்டு அவளை வணங்கித் துதிக்க; அவ்விஞ்சை மங்கை அம்மாலையை அம்முனிவனுக்கு அளித்திட்டாள்.
அதன் பெருமையையுணர்ந்து அதனைச் சிரமேற்கொண்ட அம் முனிவன் ஆநந்தத்தோடு தேவலோகத்திற்கு வந்து,
அப்பொழுது அங்கு வெகு உல்லாஸமாக ஐராவத யானையின் மேற் பவனி வந்து கொண்டிருந்த இந்திரனைக் கண்டு
அவனுக்கு அம்மாலையைக் கை நீட்டிக் கொடுக்க, அவன் அதனை மாவட்டியினால் வாங்கி
அந்த யானையின் பிடரியின் மேல் வைத்தவளவில் அம்மதயானை அதனைத் துதிக்கையாற் பிடித்திழுத்துக் கீழெறிந்து
காலால் மிதித்துத் துவைத்தது; அது கண்டு முநிவரன் கடுங்கோபங்கொண்டு இந்திரனை நோக்கி
‘இவ்வாறு செல்வச் செருக்குற்ற உன்னுடைய ஐச்வரியங்களெல்லாம் கடலில் ஒளிந்து விடக்கடவன’ என்று சபிக்க,
உடனே தேவர்களின் செல்வம் யாவும் ஒழிந்தன; ஒழியவே அசுரர் வந்து பொருது அமரரை வென்றனர்.
பின்பு இந்திரன் தேவர்களோடு திருமாலைச் சரணமடைந்து அப்பிரான் அபயமளித்துக் கட்டளையிட்டபடி
அசுரர்களையுந் துணைகொண்டு மந்தரமலையை மத்தாக நாட்டி வாஸுகி யெனனும் மஹாநாகத்தைக் கடைகயிறாகப்பூட்டிப்
பாற்கடலைக் கடையலாயினர். அப்பொழுது மத்தாகிய மந்தரகிரி கடலினுள்ளே அழுந்திவிட, தேவர்களின் வேண்டுகோளினால்
திருமால் பெரியதோர் ஆமைவடிவமெடுத்து அம்மலையின் கீழேசென்று அதனைத் தனது முதுகின் மீது கொண்டு தாங்கி
அம்மலை கடலில் அழுந்திவிடாமல் கடைதற்கு உபயோகமாம்படி அதற்கு ஆதாரமாக எழுந்தருளியிருந்தனன்.
இப்படி ஸ்ரீமந்நாராயணன் அக்கடலினிடையே மஹா கூர்மமாய் மந்தரபர்வதத்திற்கு ஆதாரமாய் எழுந்தருளியிருக்க,
வாஸுகியின் வாலைப்பிடித்துக் கொண்ட தேவர்களும் தலையைப்பிடித்துக் கொண்ட அசுரர்களும் ஆகிய இரு திறத்தாரும்
அதனை வலியப்பிடித்து இழுத்துக் கடையவல்ல வலிமையில்லாதவராய் நிற்க, அது நோக்கி அத்திருமால் தான்
ஒரு திருமேனியைத் தரித்துத் தேவர்கள் பக்கத்திலேயும் நின்று வாஸுகியின் வாலையும் தலையையும் பிடித்து
வலமும் இடமுமாக இழுத்துக் கடைந்தனன் என்பதாம்.

கடலடைத்த வரலாறு :- விபீஷணாழ்வான் இராமபிரான் பக்கல் வந்து சேர்ந்து உய்ந்தபின் பெருமாளைப் பார்த்து
‘ஸ்வாமிந்! இந்த நம்முடைய ஸேனைகள் கடலைக்கடந்து அப்பாற் செல்லவேண்டுமாதலால்
அதற்காகக் கடலரசனை நீர் சரணம் புகவேணும்’ என்ன; இராமபிரான் “கடலைக்கடக்க உபாயம் சொல்ல வேண்டும்” என்று
கடலரசனாகிய வருணனைப் பிரார்த்தித்துத் தர்ப்பசயனத்திலே படுத்து மூன்று நாளளவும் ப்ராயோபவேசமாகக் கிடக்க,
ஸமுத்ரராஜன் அப்பெருமானது மஹிமையைக் கருதாமல் உபேக்ஷையாயிருந்துவிடவே ஸ்ரீராமன் அது கண்டு கோபங்கொண்டு
‘அனைவரும் நடந்தேசெல்லும்படி கடலை வற்றச் செய்வேன்’ என்று ஆக்நேயாஸத்ரத்தைத் தொடுக்கத் தொடங்கியவளவிலே
வருணன் அஞ்சி நடுங்கி ஓடிவந்து இராமபிரானைச் சரணமடைந்து கடல் வடிவமான தன்மேல் அணைகட்டுதற்கு உடன்பட்டு
நளன் கையினால் நீரில் போகட்ட கற்களும் மிதக்குமென்று அவனுக்கு அவன் தகப்பனார் வரமளித்திருக்கிறாராகையால்
அவனைக் கொண்டு ஸேது கட்டவேணுமென்று சொல்லிவிட்டு மறைந்துவிட்டான். இராகவனும் அப்படியே
மற்ற வானரங்கள் சுற்றுமுள்ள மலைகளைப் பிடுங்கிக் கொண்டுவந்து நளன் கையில் கொடுக்கச் செய்து
நளன் கையினால் அம்மலைகளை நீரில் போகடுவித்து ஸேது கட்டுவித்தான்.
அவ்வழியாய் வானரப்படைகளோடு இராமபிரான் இலங்கை சேர்ந்து அந்நகரையும் இராவணனுள்ளிட்ட
அரக்கர் குலத்தையும் நீறுபடுத்தின வரலாறு ப்ரஸித்தம்.

“பேராத மேனிப்பிரான் – காரோத முன்கடைந்து” என்ற சொல்லாற்றலால், கடல் கடைகிறபோது
ஒரு கடலை மற்றொரு கடல் நின்று கடைந்தாற் போலே யிருந்ததென்பது தொனிக்கும்.
‘என்பர்’ என்பது “அளந்தாய்” இடந்தாய், அடைத்தாய்” என்ற மூன்றிடத்தும் அந்வயிக்கும்.

முதலடியில், ‘நீண்ட, என்றது – திரிவிக்கிரமனாய் நீண்ட என்றபடியுமாம்.

————————————————————————–

ஆபத் பந்துவான பகவானுடைய திருவடிகளில் செண்பக மல்லிகையோடு செங்கழுநீரிருவாட்சி
முதலிய புஷ்பங்களைப் பணிமாறித் தொழுமவர்கள்
அப்ராக்ருதமான அப்பரமனது திருமேனியை ஸேவித்து நித்யாநந்தம் அநுபவிக்கப் பெறுவர்களென்கிறார்.

பிரான் என்று நாளும் பெரும் புலரி என்றும்
குரா நற் செழும் போது கொண்டு -வராகத்
தணி யுருவன் பாதம் பணியுமவர் கண்டீர்
மணி யுருவம் காண்பார் மகிழ்ந்து—31–

பதவுரை

பிரான் என்றும்–‘மஹோபகாரங்கள் பண்ணினவனே!’
பெரு புலரி என்றும்–‘இன்றே நல் விடிவு’ என்றும் (கொண்டாடிக் கொண்டு)
நாளும்–நாள்தோறும்
நல்குரா–நல்ல மணம் மிக்க
செழு–அழகிய
போது கொண்டு–புஷ்பங்களைக் கொண்டு,
வராகத்து அணி உருவன் பாதம்–அழகிய வரா ஹவுருக் கொண்ட பெருமானுடைய திருவடிகளை
பணியுமவர் கண்டீர்–வணங்குபவர்களே
மணி உருவம்–(அப்பெருமானுடைய) திவ்ய மங்கள விக்ரஹத்தை
மகிழ்ந்து காண்பர்–ஸேவித்து ஆநந்திக்கப் பெறுவர்கள்.

(பிரானென்னும் பெரும்புலரியென்றும் பணியுமவர் கண்டீர்.)
ஸ்ரீவசநபூஷணத்திலே – “அஜ்ஞரான மநுஷ்யர்கள் வாளா தந்தானென்றிருப்பர்கள்;
ஜ்ஞாநவான்கள் ‘இன்றென்னைப் பொருளாக்கித் தன்னையென்னுள்வைத்தான் – எந்நன்றி செய்தேனோ என்னெஞ்சில் திகழ்வதுவே –
நடுவே வந்து உய்யக்கொள்கின்ற நாதன் – அறிய தனவறிவித்த அத்தா நீ செய்தன அடியேனறியேனே –
பொருளல்லாத வென்னைப் பொருளாக்கி அடிமைகொண்டாய் –
என்னைத் தீமனங்கெடுத்தாய் – மருவித்தொழும் மனமே தந்தாய்’ என்று ஈடுபடா நிற்பார்கள்”
என்றருளிசி செய்தவை இங்கு அநுஸந்திக்கத்தக்கன.

பிரானே! என்றும் பெரும்புலரி என்றும் சொல்லிக் கொண்டு எம்பெருமான் பாதம்பணிய வேணுமென்கிறாரிவ்வாழ்வார்.
‘இன்றளவும் மாறிமாறிப் பலபிறப்பும் பிறந்து விஷயாந்தரங்களிலே ஆழ்ந்து உண்டியே உடையே உகந்தோடித்
திரிந்தவென்னை இன்று உன் திருவடிகளிலே கொண்டு கூட்டினையே!, இதனிலும் மிக்க வுபகாரமுண்டோ?, என்று
பெருநன்றி பாராட்டவேணுமென்பது “பிரானென்றும்” என்பதன் கருத்து. (பிரான் – உபகாரசன்; இங்கே இது ஸம்போதநம்.)

பெரும்புலரி என்றும் =“பழுதே போயின” என்கிறபடியே பாழாய்க் கழிந்த பல நாள்களுக்குள்ளே பகவத் விஷயத்திலிழியும்படி
விடிந்த இந்நாளே நல்ல நாள்! என்று நாளைக் கொண்டாட வேணுமென்கிறது.
கம்ஸன் தனது வேலைக்காரனான அக்ரூரனை யழைத்து ‘நீ போய்க் கண்ணபிரானை யழைத்து வா’ என்று
கட்டளையிட்டனுப்ப அவனும் புறப்பட்டு வரும்போது ,.
“அத்ய மேஸ பலம் ஜந்ம ஸுப்ரபாதாச் மே நிசா – யதுந்நித்ராப்ஜபத்ராக்ஷம் விஷ்ணோ! த்ரக்ஷ்யாம்யஹம் முகம்.”
கம்ஸன் சோறுண்டு வளர்ந்த வெனக்கும் இன்று எம் பெருமான் திருமுகத்திலே விழிக்கப்பெறும் பாக்கியம் நேர்கின்றமையாலே
இன்றே என் பிறவி பயன்பெற்றது; இன்றே நல்விடிவு என்று கனிந்து கூறினது போலவும்,
“மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்” என்று ஆய்ச்சிகள் நாளைக் கொண்டாடினது போலவும்.

குராநற் செழும்போது = ‘குரா’ என்று பரிமளத்திற்கும் ஒரு புஷ்ப விசேஷத்திற்கும் பெயர்.
இங்கே அவ்விரண்டு பொருளுங்கொள்வர்,
காண்பர் மகிழ்ந்து = கண்டு மகிழ்வர் என்றவாறு.

————————————————————————–

தம்முடைய ‘மனமொழிமெய்கள் மூன்றும் பகவத் விஷயத்திலேயே ஊன்றினபடியைப் பேசுகிறார்’.

மகிழ்ந்தது சிந்தை திருமாலே மற்றும்
மகிழ்ந்தது உன் பாதமே போற்றி -மகிழ்ந்தது
அழலாழி சங்கமவை பாடியாடும்
தொழிலாகும் சூழ்ந்து துணிந்து—-32–

பதவுரை

திருமாலே!–லக்ஷ்மீபதியே!
சிந்தை–என் நெஞ்சமானது
மகிழ்ந்தது–(உன்னைச் சிந்தித்து அதனாலே) ஆநந்த முற்றது;
மற்றும்–நெஞ்சுக்கு அடுத்ததான வாக்கும்
உன் பாதமே போற்றி–உன் திருவடிகளையே துதித்து
மகிழ்ந்தது–ஆநந்திக்கப் பெற்றது;
ஆகம்–என்னுடைய தேஹமானது
அழல்–எதிரிகளின் மீது நெருப்பை உமிழ்கின்ற
ஆழி–திருவாழியையும்
சங்கம்–ஸ்ரீபாஞ்ச ஜந்யத்தையும்
அவை–மற்றுமுள்ள திவ்யா யுதங்களையும்
பாடி ஆடும்–கொண்டாடிப்பாடிய ஆடுகையாகிற
தொழில்–வியாபாரத்திலே
சூழ்ந்து–பொருந்தி
துணிந்து–இதுவே நமக்குக் காரியமென்று துணிவு கொண்டு
மகிழ்ந்தது–களிக்கப் பெற்றது.

திருமாலே! சிந்தை மகிழ்ந்தது = நாட்டாருடைய மனம் விஷயாந்தரங்களிலே ஊன்றி அதனால் ஆநந்தமடையும்;
என்னுடைய சிந்தை அப்படியன்றியே அவற்றைக் காறியுமிழ்ந்து, நீயும் பிராட்டியுமாகச் சேர்ந்திருக்கும்
சேர்த்தியைச் சிந்தித்த மாத்திரத்தில் மகிழ்ச்சியடையா நின்றது.

மற்றும் உன் பாதமே போற்றி மகிழ்ந்தது = மனம் நினைத்ததை வாய் சொல்லக்கடவ தாகையாலே
மனத்துக்கு அடுத்ததான வாக்கை ‘மற்றும்’ என்கிறது.
நாட்டாருடைய வாக்கு விஷயாந்தரங்களை வருணித்து அதனாலே களிப்புறும்;
என்னுடைய வாக்கு அப்படியன்றியே உனது திருவடிகட்கு வாழ்த்துக்கூறி மகிழ்வுறுகின்றது.
இனி, பின்னடிகளால் சரீரத்தின் தொழிலுறுதியைக் கூறுகின்றார்.
திருவாழி திருச்சங்கு முதலிய திவ்யாயுதங்களோடே நீ சேர்ந்து விளங்குகின்ற அழகை வருணித்து வாய் பாட,
அப்பாடலுக்குத் தகுதியாக ஆடுவதையே என்னுடைய சரீரம் தொழிலாகக் கொண்டுள்ளது என்றாராயிற்று.

————————————————————————–

“யத் ஹி மநஸா த்யாயதி தத் வாசா வததி தத் கர்மணா கரோதி” என்று வேதத்திற் சொல்லுகிறபடியே
முதலில் சிந்தை சிந்திப்பது பிறகு வாய் சொல்லுவது, அதன்பிறகு உடல் செய்வது என்றிப்படி
மனமொழி மெய்களின் செயல்முறைமை ஏற்பட்டிருக்கும் விதமாகத் தமக்கு அந்த மூன்று கரணங்களும்
பகவத் விஷயத்தில் அவகாஹித்தபடியைக் கீழ்ப்பாசுரத்திற் பேசினர்;
இந்த முறைமையின்படியே ஒழுகாது, வாக்குக்கு முன்னே சரீரம் முந்துகிறபடியை இப்பாசுரத்தில் மொழிகின்றார்.
‘நான் முன்னே நான் முன்னே’ என்று தம்முடைய இந்திரியங்கள் பகவத் விஷயாநுபவத்துக்கு முற்படும்படியைத் தெரிவித்தவாறு.
கீழ்ப்பாட்டில் மனமொழி மெய்களை வரிசையாகச் சொல்லி,
இப்பாட்டில் ‘சிந்தை, அங்கம், வாய், என்று மாறுபடக் கூறியிருத்தல் காண்க.

துணிந்தது சிந்தை துழாய் அலங்கல் அங்க
மணிந்தவன் பேருள்ளத்துப் பலகால் -பணிந்ததுவும்
வேய் பிறங்கு சாரல் விரல் வேங்கடவனையே
வாய் திறங்கள் சொல்லும் வகை——-33–

பதவுரை

சிந்தை–என் மனமானது
துழாய் அலங்கல் அணிந்தவன் பேர்–திருத்துழாய் மாலையை அணிந்துள்ள பெருமானுடைய திருநாமங்களை
பல்கால்–பலமுறை
உள்ளத்து–நினைப்பதில்
துணிந்தது–த்ருடமாக அத்யவஸாயங் கொண்டது;
அங்கமும் (பல்கால்)–எனது உடலும் எப்போதும்
பணிந்தது–வணங்குவதாயிரா நின்றது;
வாயும்–என் வாக்கும்
வேய் பிறங்குசாரல்–மூங்கில் மிக்கிருக்குந் தாழ்வாரையையுடைய
விறல் வேங்கடவனை–திருமலையிலெழுந்தருளியிருக்கிற மிடுக்குடைய பெருமானது
திறங்களே-தன்மைகளையே
(பல்கால்)-எப்போதும்–
சொல்லும் வகை–சொல்லுகிற விதத்திலே
(துணிந்தது)–துணிவு கொண்டதாயிற்று.

“வேய் பிறங்கு சாரல்” என்ற விசேஷணம் ‘வேங்கடவனை என்பதில் ஏக தேசமான வேங்கடத்தில் அந்வயிக்கும்;
‘விறல்’ என்ற விசேஷணம் வேங்கடவனுக்கு அந்வயிக்கும். விறல் – பெருமை, வலி, வீரம், வெற்றி.

திறம் – குணம், சாமர்த்தியம், தன்மை, மேன்மை முதலியன.
திருவேங்கடமுடையானுடைய ஸ்வரூபகுண விபூதிகளைச் சொல்லிக் கொண்டிருப்பதிலே வாய்துணிவு கொண்டதென்கை.

————————————————————————–

கீழருளிச் செய்தபடி தம்முடைய மதோவாக்காயங்கள் எம்பெருமான் பக்கலிலேயே ஊனமுற்றதற்குக் காரணம் –
அந்த எம்பெருமான் மஹாபலியிடத்தினின்று பூமியை மீட்டு இந்திரனுக்குத் தருவதென்கிற வியாஜத்தால்
எல்லார் தலையிலும் திருவடியை வைத்து வாழ்வித்தது போல,
தம் தலைமேலும் திருவடிகளை வைத்து விசேஷகடாக்ஷஞ் செய்தருளினதேயாமென்பது இப்பாட்டில் தோன்றும்.

வகையால் அவனி இரந்து அளந்தாய் பாதம்
புகையால் நறு மலரால் முன்னே -மிக வாய்ந்த
அன்பாக்கி ஏத்தி அடிமைப் பட்டேன் உனக்கு
என் பாக்கியத்தால் இனி—–34–

பதவுரை

முன்னே–முற்காலத்திலே
வகையால்–உபாயத்தினால்
அவனி–பூமியை
இரத்து–(மாவலிபக்கல்) யாசித்து
அளந்தாய்–அளந்து கொண்ட வுன்னுடைய
பாதம் புகையால்–திருவடிகளை தூபங்கொண்டும்
நறுமலரால்–நல்ல பரிமளமுள்ள புஷ்பங்களைக்கொண்டும்
மிக வாய்ந்த அன்பு ஆக்கி–மிகுதியாக (நன்றாக)ப் பொருந்தின ப்ரீதியுடனே
ஏத்தி–துதித்து
இனி–மேலுள்ள காலமெல்லாம்
என் பாக்கியத்தால்–நீ என்மேல் பண்ணின விசேஷ கடாக்ஷமாகிற பாக்யத்தாலே
உனக்கு அடிமைப்பட்டேன்–உனக்குத் தொண்டனாய் விட்டேன்.

வகையால் – தந்திரத்தாலே யென்றபடி; இராவணன் போலவே மாவலியும் தேவர்களுக்குத் தீங்கிழைத்தவனாதலால்
ராவணனைக் கொன்றொழித்தது போலவே இவனையுங் கொல்ல வேண்டியிருந்தும்,
இவன் உதாரகுணமொன்றை மேற்கொண்டிருந்ததனால் இவனைக் கொல்லவேண்டாவென்று கொண்டு
மூவடியிரந்து பெறுகிற இச்செயலிலேயே பூமியை இந்திரனுக்குச் சேர்ப்பித்தலும் மாவலியை அடக்குதலுமாகிற இரண்டும்
எளிதிற் கைகூடுமென்று நினைத்துச் செய்த தந்திரம் அறிக.

இனி, வகையால் என்பதற்கு வடிவழகு, மழலைச்சொல், மனத்தைக் கவரவல்ல செயல் முதலிய வகைகளாலே என்றுரைக்கவுமாம்.

அவநி – வடசொல்.

என் பாக்கியத்தால் = நான் செய்த பாக்கியத்தால் என்று பொருளன்று எனக்கு நேர்ந்த பாக்கியத்தால் என்கை
எம்பெருமானார் காலத்திலே திருவரங்கம் பெரிய கோயிலில் ஒருநாள் நம் பெருமாள் புறப்பாட்டை எதிர்பார்த்துக் கொண்டு
பெரிய திருமண்டபத்துக்குக் கீழாக மஹாஜ்ஞாதாக்களான முதலிகளெல்லாரும் திரளவிருந்தவளவிலே ஒரு ஸ்ரீ வைஷ்ணவர்
“நாம் அநாதிகாலமாக ஆர்வீட்டு வாசலிலே எவனுடைய புறப்பாட்டை எதிர்பார்த்துக்கொண்டு கிடந்தோமோ தெரியாது,
இன்று ப்ராப்த சேஷியான பெருமாளுடைய புறப்பாடு பார்த்து வந்திருக்க என்ன பாக்கியம் பண்ணினோமோ!’ என்ன,
அந்த ப்ரஸங்கத்திலே நித்ய ஸம்ஸாரியாய்ப் போந்தவனுக்கு ஒருநாள் பகவத் விஷயத்திலே ருசிபிறப்பதற்குக் காரணமென்ன?’
என்று விசாரிக்கச்செய்தே ‘யாத்ருச்சிகஸுக்ருதம்’ என்று சிலரும் ‘அஜ்ஞாதஸுக்ருதம்’ என்று சிலருமாய் இப்படி வார்த்தைகள் உண்டாக,
அவ்வளவில் அங்கிருந்த கிடாம்பிப்பெருமாள் ‘நமக்கு பகவத் விஷயம் போலே ஸுக்ருததேவர் என்றும் ஒருவர் ஆச்ரயணீயருண்டோ?’ என்ன
அதற்குப் பிள்ளை திருநறையூரரையர் ‘ஸுக்ருத மென்று சொல்லுகிறதும் வேறொன்றையன்று. பகவத் விஷயத்தையே காண்’ என்றாராம்.

ஸ்ருஷ்டி அவதாரம் முதலியவற்றாலே எம்பெருமான் பண்ணின க்ருஷியின் பயனாகவே ஒரு நாளடைவில் நமக்கு
பகவத் விஷயத்தில் ருசி பிறக்கிறபடியாலே அந்த பகவத் கடாக்ஷந்தன்னையே பாக்கியமென்கிறது.
இவ்வர்த்தத்தையே ஸ்ரீமத்வேதாந்த தேசிகனும் ரஹஸ்யத்ரயஸாரத்திலே
“உபாய: ஸ்வப்ராப்தேருபநிஷததீத: ஸ பகவாந், ப்ரஸத்த்யை தஸ்யோக்தே ப்ரபதந நிதித்யாஸநகதீ ததாரோஹ:
பும்ஸாம் ஸுக்ருத பரிபாகேந மஹதா. நிதாநம் தத்ராபி ஸ்வயமகில நிர்மாணநிபுண:” என்று தெளிவருளிச் செய்தார்.

“எதிர் சூழல்புக்கு எனைத்தோர் பிறப்பும் எனக்கே அருள்கள் செய்ய விதி சூழ்ந்ததா லெனக்கேலம்மான் திரிவிக்கிரமனையே” என்று –
எம்பெருமான் ஸர்வலோக வ்யாபியானது தம்மைக் கைப்பற்றிக் கொள்வதற்காகவேயென்று நம்மாழ்வார் அநுஸந்தித்தது போல
இவ்வாழ்வாரும் அநுஸந்திக்கின்றமை முதலடியிலே நன்கு விளங்கும்.

————————————————————————–

“உண்ணுஞ்சோறு பருகுநீர் தின்னும் வெற்றிலையுமெல்வாங் கண்ணன்” என்கிறபடியே
பரம போக்யனான நீயிருக்கையில்’ நாட்டிலுள்ளவர் உன்னையே நாரக போஷக போக்யங்களாகப் பற்றாமல்
சப்தாதிவிஷயங்களை விரும்பித் திரிகின்றார்களே! என்று உலகத்தார் செயலை வெறுத்து
உன்னைப் பற்றுவதே எல்லார்க்கும் தஞ்சமென்று கூறுகிறார்.

இனிது என்பர் காமம் அதனிலு மாற்ற
இனிது என்பர் தண்ணீரும் எந்தாய் -இனிது என்று
காம நீர் வேளாது நின் பெருமை வேட்பரேல்
சேம நீர் ஆகும் சிறிது—–35–

பதவுரை

எந்தாய்–என் ஸ்வாமி யானவனே!
(பாமரர்கள்)
காமம்–ஹேயமான சப்தாதி விஷயங்களை
இனிது என்பர்–போக்யமாகக் கொள்பர்;
(விரக்தர்களுங்கூட)
தண்ணீர் அதனிலும் ஆற்றவும் இனிது என்பர்–அந்த சப்தாதி விஷயங்களிற் காட்டிலும் தண்ணீர் மிகவும் போக்யமென்பர்கள்;
காமம் நீர்–(கீழ்ச் சொல்லப்பட்ட) காமத்தையும் தண்ணீரையும்
இனிது என்று வேளாது–போக்யமாகக் கொண்டு அவற்றிலே ஆசை கொள்ளாமல்
நின் பெருமை சிறிது வேட்பர் ஏல்–உன்னுடைய போக்யதையே கொஞ்சமேனும் விரும்பி மேல் விழுவார்களாயின் (அது)
சேமம் நீர் ஆகும்–(எல்லா நிலைமையிலும்) ரக்ஷகமான தன்மையை யுடையதாகும்

‘காமம்’ என்பது ஆசைக்குப் பேராயினும் ஆசைபடுவதற்கு உரிய விஷயாந்தரங்களையும் சொல்லக் கடவது:
கூத்துப் பார்ப்பது, பாட்டுக்கேட்பது, பூச்சூடுவது சாந்து பூசுவது, மாதர்களை யணைவது முதலியவை விஷயாந்தரங்க ளெனப்படும்.
இவையே போக்யமென்று ஒழிவர் பலர்; மற்றும் பலர் விஷயாந்தர விரக்தர்களென்று பெயர் சுமந்தும்
சோற்றையுந் தண்ணீரையும் விட்டிருக்கமாட்டாமல் அவற்றை போக்யமாகக் கொள்வர்.
அநந்ய போக்யத்வத்தை ஸ்வரூபமாக வுடைய அதிகாரிகள் முதலடியிற் சொன்ன விஷயாந்தரங்களையும்
இரண்டாமடியிற் சொன்ன தண்ணீர் முதலியவற்றையும் போக்யமாகக் கொள்ளாது
“எனக்குத் தேனே பாலே கன்னலே யமுதே” என்று பரமபோக்யனாகச் சொல்லப்படுகிற உன்னையே
விரும்பப்பெறில் இவ்விருப்பமே அவர்கட்குச் செமமாகும் என்றாராயிற்று.

இரண்டாமடியிற் ‘தண்ணீர்’ என்றதும் மூன்றாமடியில் ‘நீர்’ என்றதும் – சோறு, வெற்றிலை முதலியவற்றுக்கும் உபலக்ஷணமென்க.
“வாஸூதேவஸ்ஸர்வமிதி ஸ மஹாத்மா ஸுதுர்லப.” என்று பகவத் கீதையிலே துர்பலனாகச் சொல்லப்பட்டுள்ள
மஹாத்மாவாக இருக்குமவர்கட்கே குறைவற்ற சேமமுண்டாகுமென்றதாயிற்று.

சேமநீர் = ‘க்ஷேமம்’ என்னும் வடசொல் சேமமெனத் திரிந்தது.
நீர் – நீர்மையையுடையது; நீர்மையாவது தன்மை.

————————————————————————–

சிறியார் பெருமை சிறிதின் கண் எய்தும்
அறியாரும் தாம் அறியார் ஆவர் -அறியாமை
மண் கொண்டு மண் உண்டு மண் உமிழ்ந்த மாயன் என்று
எண் கொண்டு எண் நெஞ்சே இரு–36–

பதவுரை

சிறியார்–(இயற்கையான மேன்மை சிறிதுமில்லாமல்) அற்பரான ஸம்ஸாரிகளுடைய
பெருமை–(நானே ஈச்வரன் என்று அஹங்கரிப்பதால் வருகிற) மேன்மையானது
சிறிதின் கண் எய்தும்–(தமக்குப் பழமையாயுள்ள) தாழ்விலேயே கொண்டு சேர்ப்பிக்கும்;
அறியாரும்–அவிவேகிகளும்
(தங்களை ஸர்வஜ்ஞராக நினைத்திருந்தார்களாகிலும்)
தாம் அறியார் ஆவர்–(நன்மை தீமைகளைத்) தாங்கள் அறியாதவர்களாகவே ஒழிந்திடுவர்;
என் நெஞ்சே–என் மனமே!.
அறியாமை–பிறர் அறியாதபடி
மண் கொண்டு–(மாவலியிடத்தில்) பூமியைப் பெற்றவனாயும்
மண் உண்டு–இந்தப் பூமியை (ப்ரளயத்திலே)திருவயிற்றில் வைத்தவனாயும்
மண் உமிழ்ந்த–(பிறகு) அந்தப்பூமியை வெளிப்படுத்தினவனாயுமிருக்கிற
மாயன் என்று–ஆச்சர்யகரனான எம் பெருமான் என்று
எண் கொண்டு–இடைவிடாது கருதி
இரு–(அவனைப்பற்றின நமக்கு ஒரு குறை இல்லையென்று) நிர்ப்பரனாக இருப்பாயாக.

சிறியார் பெருமை சிறிதின்கண் எய்தும் = உலகத்தில், இயற்கையாகச் சிறிதேனும் மேன்மையுடையவர்களாயிருந்தால் அவர்கள அதிகப்படியாக மேன்மையை ஏறிட்டுக்கொண்டாலும் ஒருவாறு ஏற்கும்; சிறிதும் மேன்மையற்றவர்கள் ‘நாமே பெரியோம்; நம்மிற் பெரியாரில்லை’ என்று மார்பு நெறித்தால் அந்த அஹங்காரமானது அவர்களுடைய சிறுமையை நன்கு ஸ்தாபித்துவிடும். ஆகையாலே அற்ப தேவைகளான பிரமன் முதலியோரைப் பெருந்தலைமை யுடையவராக மதிப்பது நம்மைத் தாழ்ந்த நிலைமையிற் சேர்ப்பிக்கு மென்றவாறுமாம். எய்தும் – எய்துவிக்கும்; பிறவினையில் வந்த தன்வினை. இவ்வாறு வருவதனை வடநூலார் ‘அந்தர்ப்பாவிதணிச்’ என்பர்.

அறியாரும் தாமறியாராவார் = ஒன்றுந் தெரியாத மூடர்கள் எல்லாமறிந்தவர்கள் போலப் பாவித்திருந்தார்களாகிலும், அப்படிப்பட்டவர்கள் நன்மைகளைத் தாங்களுமறியார்கள்; பிறர் போதித்தாலும் கேட்டு உணரமாட்டார்கள்; ஆகவிப்படி சிறியாரும் அறியாரும் மலிந்து கிடக்கிற இந்நிலத்திலே, நெஞ்சே! நீ அவர்களின் வகுப்பில் சேராமல் பகவத் விஷயத்தையே சிந்தித்திரு – என்கிறார் பின்னடிகளால்.

அறியாமை = எதிர்மறை வினையெச்சம்.
‘திருமால்தான் இப்படி வாமந வேஷங்கொண்டு யாசகனாய் வந்தா’ னென்று பிறர் அறியாத வண்ணம் என்றபடி.

————————————————————————–

கீழ்ப்பாட்டிலருளிச் செய்தபடி எம்பெருமானிடத்து அந்வயிப்பதற்குப் பாங்கல்லாத பிறவிகள் வீண் என்கிறார்.
எம்பெருமான் ஆத்மாக்களுக்குப் பல ஜன்மங்களை யுண்டாக்குவது ஒரு ஜன்மததிலில்லாவிட்டாலும்
ஒரு ஜன்மத்திலாவது இவை நம்மை ஆச்ரயித்து ஈடேறவேணுமென்னும் விருப்பத்தினாலேயே
இந்த விருப்பம் நிறைவேறாவிடில் ஆத்மாக்களுக்கு நேர்கின்ற பிறவிகளெல்லாம் வியர்த்தமே யென்க.

இரும் தண் கமலத்து இரு மலரின் உள்ளே
திருந்து திசை மகனைத் தந்தாய் -பொருந்திய நின்
பாதங்கள் ஏத்திப் பணியாவேல் பல் பிறப்பும்
ஏதங்கள் எல்லாம் எமக்கு—-37-

பதவுரை

இரு–பெரிய
தண்–குளிர்ந்த
கமலத்து–திருநாபிக் கமலத்தின்
இரு மலரின் உள்ளே–பெருமை பொருந்திய பூவில்
திருந்து–ஸமர்த்தனான
திசைமுகனை–நான்முகக் கடவுளை
தந்தாய்–படைத்தருளின பெருமானே!
பொருந்திய–ஸர்வ லோக சரண்யனாகி எல்லாரோடும் பொருந்தி யிருக்கிற
நின்–உன்னுடைய
பாதங்கள்–திருவடிகளை
ஏத்தி–வாயாரத் துதித்து
பணியா ஏல்–வணங்கித் தொழுவதிற்கு உறுப்பாகா விட்டால்
எமக்கு–எங்கட்டு
பல் பிறப்பும் எல்லாம்–பலவகையாகப் பிறக்கின்ற பிறவிகளெல்லாம்
ஏதங்கள்–பயனற்றவையே யாம்

பின்னடிகளுக்கு வேறு வகையாகவுங் கருத்துரைக்கலாம்; எனக்கு நேர்ந்த பல பிறவிகளும் உன் நினைவின்படி
உன்னை ஆச்ரயிப்பதற்கு உறுப்பாகவேணும். அங்ஙனம் ஆகாவிடில், உலகத்திலே பிறக்கின்ற உயிர்களின்
துயரமெல்லாம் என்னொருவனுக்கு உண்டாகும் – என்று இக்கருத்தில், ஏதங்கள் – துக்கங்கள் என்கை.

முன்னடிகளில், ‘ நான்முகனை உந்திக்கமலத்தில் தோற்றுவித்தவனே!’ என விளித்தது –
முமுக்ஷûக்கள் சரணம் பற்றுதற்கு உரியவனே! என்றபடி; இப்பொருள் எங்ஙனே கிடைக்குமெனில்;
“யோ ப்ரஹ்மாணம் விததாதி பூர்வம்… முமுக்ஷûர்வை சரணமஹம் ப்ரபத்யே”
(முதலில் பிரமனைப் படைப்பவன்யாவனோ அப்பெருமானை முமுக்ஷுவாகிய நான் சரணம் புகுகின்றேன்)
என்பதாக உபநிஷத்தில் ஓதியிருப்பதுகொண்டு இப்பொருள் கிடைக்குமென்பது பெரியவாச்சான்பிள்ளை திருவுள்ளம்.

திருத்து திசைமுகன் = ஸ்ருஷ்டி செய்யவேண்டும் விதத்தை ஒருமுறை சொல்லிக்கொடுத்துவிட்டால்
அதில் அடிக்கடி ஸந்தேகங் கொண்டிராமல் புத்தி சாதுர்யத்தாலே முற்றும் நிர்வஹிக்கவல்ல நான்முகன்.

————————————————————————–

உலகத்தில் தனவான்களென்று பேர் படைத்துள்ள பலர் ‘நமக்கு ஏராளமான செல்வமிருக்கும்போது என்ன குறை-
இதுவே நமக்கு ஆபத்பந்து’ என்றெண்ணி எம்பெருமானை நெஞ்சிலும் நினையாதே பணத்தையே தொட்டுத் தொட்டுப்
பார்த்துக் கொண்டு காலங்கழிப்பதுண்டே; அன்னவர்களுடைய நெஞ்சிலே உறுத்தும்படி இப்பாசுர மருளிச்செய்கிறார்.
‘ஒரு நாயகமாய் ஓட வுலகுடனாண்டவர், கருநாய் கவர்ந்த காலர் சிதைகியபானையர் பெருநாடுகாண
இம்மையிதே பிச்சைதாங் கொள்வர்” என்று தொடங்கிப் பல பாசுரங்களிலே நம்மாழ்வாரருளிச் செய்த
செல்வ நிலையாமையை இவர் ஓரடியால் சுருங்க வருளிச் செய்தனரென்க.

எமக்கு என்று இரு நிதியம் ஏமாந்து இராதே
தமக்கென்றும் சார்வம் அறிந்து -நமக்கென்றும்
மாதவனே என்னும் மனம் படைத்தது மற்றவன் பேர்
ஓதுவதே நாவினால் ஓத்து—38-

பதவுரை

இரு நிதியம்–(இப்பொருளை எப்போது நாம் கொள்ளையடிக்கப் போகிறோம்’ என்று
அயலார் எதிர்பார்த்திருப்பதற்குக் காரணமான) பெருஞ்செல்வத்தை
எமக்கு என்று–தங்களுடையதாக நினைத்து
ஏமாந்து இராதே–மனச் செருக்குக் கொண்டிராமல்
தமக்கு என்றும் சார்வம் அறிந்து–தங்களுக்கு எப்போதும் ரக்ஷகமாயிருக்கக் கூடிய உபாயத்தை யறிந்து
நமக்கு என்றும் மாதவனே என்னும் மனம் படைத்து–‘நமக்கு எக்காலத்திலும் எம்பெருமானே சரணம்’ என்று
துணிந்திருக்கும் நெஞ்சையுடையராய்
மற்று–அதற்குப் பின்பு
அவன் பேர்–அத்திருமாலினது திருநாமங்களை
ஓதுவதே–ஸங்கீர்த்தநம் பண்ணுவதே
நாவினால் ஒத்து–நாவுக்கு ஓதுவதற்கு உரிய விஷயம்.

இடத்தைவிட்டுச் செல்வதையே இயல்வாகவுடையதாதல் பற்றியே ஸம்பத்துக்குச் செல்வமென்று பெயரிடப்பட்டதாதலால்
இப்படி நிலையற்றதான செல்வத்தை நம்பிச் செருக்குக் கொண்டிராதே ‘எப்போதும் ஸ்திரமாயிருக்கக்கூடிய பற்றுக்கோடு எது?’
என்று ஆராய்ந்து பார்த்து ‘திருமகள் கொழுநனான எம்பெருமானே நமக்கு என்றும் சார்வம்’ என்கிற
தெளிவுபெற்று அவனுடைய திருநாமங்களை ஓதுவதே உறும் – என்றாராயிற்று.

நிதியம் = ‘நிதி’ என்னுஞ் சொல் ‘அம்’ சாரியை பெற்று வந்துள்ளது.
இரு நிதி – பெருத்தநிதி. ஏமாத்தல் – களித்தல். சார்வம் – ‘சார்வு’ என்னுஞ் சொல் ‘அம்’ சாரியை பெற்றது.

————————————————————————–

ஸகல வேத வேதாந்த விழுப்பொருளை உங்கட்குச் சுருக்கமாகச் சொல்லுகின்றேன் கேளுங்கள்;
சக்தி யுண்டாகில் வேதங்களை அதிகரித்து அவற்றின் மூலமாக ஸ்ரீமந்நாராயணனது திருநாமங்களை ஸங்கீர்த்தனம் பண்ணுங்கள்
“வேதாக்ஷராணி யாவந்தி படிதாநி த்விஜாதிபி: தாவந்தி ஹரிநாமாநி கீர்த்திதாநி ந ஸம்சய:”
(அதாவது – அந்தணர்களால் வேதத்தின் எத்தனை அக்ஷரங்கள் ஓதப்படுகின்றனவோ அத்தனையும்
பகவந் நாமங்களே ஓதப்பட்டனவவ் என்றாற்போலே வேதாக்ஷரங்களைக் கொண்டே ஹரிநாம ஸங்கீர்த்தநம் பண்ணுங்கள் என்றவாறு)
அதில் சக்தியும் அதிகாரமுமில்லா தவர்களா யிருப்பின் ‘கேசவா!, கோவிந்தா!, மாதவா!, மதுஸூதநா!’
என்றாவது சொல்லிக் கொண்டிருங்கள். எவ்வகையினாலாவது எம்பெருமானது திருநாமங்களை
ஸங்கீர்த்தநம் பண்ணவேணுமென்பதே ஸகல்வேத தாத்பர்யமாகும்.

ஒத்தின் பொருள் முடிவும் இத்தனையே உத்தமன் பேர்
ஏத்தும் திறம் அறிமின் ஏழைகாள் -ஒத்ததனை
வல்லீரேல் நன்றதனை மாட்டீரேல் மாதவன் பேர்
சொல்லுவதே ஒத்தின் சுருக்கு —39–

பதவுரை

ஏழைகாள்–‘கண்ட கண்ட தேவதைகளின் கால்களிலெல்லாம் விழுகிற அறிவு கேடர்களே!,
ஓத்து அதனை–வேதமோதுவதாகிற காரியத்தை(ச் செய்ய)
வல்லீர் ஏல்–ஸமர்த்தர்களா யிருப்பீர்களாகில்
நன்று–அப்படியே வேதமோதுவது நல்லது;
அதனை மாட்டீர் ஏல்–அது செய்ய சக்தி யற்றவர்களாகில்
மாதவன் பேர்–திருமாலின் திருநாமங்களை
சொல்லுவதே–உச்சரிப்பதே
ஓத்தின் சுருக்கு–ஸகல வேதங்களின் ஸாரமாகும்;
ஓத்தின் பொருள் முடிவும் இத்தனையே–வேதத்தினுடைய அர்த்தங்களில் நிஷ்கர்ஷிக்கப்படடதும் இவ்வளவே; (ஆகையாலே)
உத்தமன்–புருஷோத்தமனான எம்பெருமானுடைய
பேர்–திருநாமங்களைக் கொண்டு
ஏத்தும் திறம்–(அவனைத்) துதிக்கும் வகையை
அறிமின்–தெரிந்து கொள்ளுங்கள்.

“த்யாயந் க்ருதே யஜந் யஜ்ஞை: த்ரேதாயாம் த்வாபரே ர்ச்சயந் யதர்ப்நோதி ததாப்நோதி கலௌ ஸங்கீர்த்ய கேசவம்”
கிருதயுகத்தில் தியானஞ் செய்வதாலும் த்ரேதாயுகத்தில் வேள்விகள் செய்வதாலும்,
த்வாபரயுகத்தில் அர்ச்சிப்பதாலும் எவ்விதமான பேற்றைப் பெறுகிறானோ, அவ்விதமான பேற்றை கலியுகத்தில்
திருநாம ஸங்கீர்த்நத்தினால் பெறுகிறான் என்று சாஸ்த்ரங்களிற் சொல்லப்பட்டுள்ளது காண்க:
இதுபற்றியே “ஓத்தின் பொருள்முடிவு மித்தனையே” என்றும்
“மாதவன் பேர் சொல்லுவதே ஓத்தின்சுருக்கு” என்றும் இதிற் சொல்லப்பட்டது.

வேதத்தில், இந்திரன் சந்திரன் வருணன் என்றிப்படி பலப்பல நாமங்கள் வந்தாலும் அந்தந்த தேவதைகளுக்கு
அந்தர்யாமியான ஸ்ரீமந்நாராயணன் வரையிற் சென்று அர்த்தஜ்ஞாந முண்டாக வேணுமென்பது வேதாந்திகளின் கொள்கை.
ஆகவே “வேதை: ச ஸர்வைரஹமேவ வேத்ய:” ஸகல வேதங்களாலும் அறியப்படுபவன் நானே” என்று
அப்பெருமானே சோதி வாய்திறந்து அருளிச் செய்திருப்பதற் கிணங்க வேதங்களிலுள்ள ஸகல தேவதா நாமங்களையும்
பகவத்பரமாக நிர்வஹித்து அநுஸந்திப்பதே வேததாத்பர்ய ஸாரமாகும்.
இதற்கு சாஸ்த்ரஜ்ஞாநம் விசேஷமாக வேண்டியிருப்பதால் அவ்வளவுக்கு அதிகாரிகளல்லாதவர்கள் திருமகள்நாதனை
ஸ்பஷ்டமாகத் தெரிவிக்கிற ‘மாதவன்’ முதலிய திருநாமங்களைக் கொண்டே ஏத்தலாம் என்பதும் இப்பாசரத்தின் கருத்தாகும்.

————————————————————————–

சிற்றின்பங்களில் ஆழ்ந்து திரிகின்ற விஷயப்ரவணர்களை விளித்து ‘நீங்கள் இப்படி விஷய போகங்ள் செய்வதனால்
சிறிதும் பலனில்லை; லக்ஷ்மீநாதனான எம்பெருமானுடைய திருவடிகளையே சிந்தித்திருங்கள்;
ஆனால் நீங்கள் என்ன நினைக்கலாமென்றால்,எம்பெருமானைச் சிந்திப்பதற்கு இப்போது என்ன அவஸரம்?
போகப்போகப் பார்த்துக்கொள்வோம் என்று நினைத்திருக்கலாம்; இவ்வழுக்குடம்பின் தன்மை உங்களுக்குத் தெரியாதோ?
கோழையானது சரீரமெங்கும் சூழ்ந்து கொண்டு உடம்பைச் சுருங்கடித்து ஒன்றைச் சிந்திக்கவும் ஒன்றைச் சொல்லவும்
முடியாதபடி திடீரென்று பண்ணிவிடும்;
“ப்ராணப்ரயாணஸமயே கபவாதபித்தை: கண்டாவரோதநவிதௌ ஸ்மரணம் குதஸ்தே” = உயிர்போகுங்காலத்தில் கபம், வாயு, பித்தம்
முதலியவற்றால் கழுத்து அடைபட்டுவிட்டால் உன்னைச் சிந்திக்கமுடியுமோ?” (முகுந்தமாலை) என்று
ஞானிகளும் சொல்லிவைத்திருக்கிறார்கள்: நமக்கு இன்னமும் நீண்ட ஆயுள் இருக்கின்றதென்று நம்பியிருக்க இடமுண்டோ? இல்லை;
ஆதலால் சிலேஷ்மம் வந்து கட்டி வருத்துவதற்கு முன்னமே திருமகள் கொழுநனுடைய திருப்பாதங்களைச் சிந்தித்து வாழுங்கள்.
நீங்கள் பற்றியிருக்கிற விஷயபோகங்கள் எப்படிப்பட்டவை யென்றால், பகவத் விஷயஜ்ஞாநம் சிறிது இருந்தாலும் அதனை உருமாய்க்குமவை;
ஆகவே அப்படிப்பட்ட விஷயபோகங்களால் உங்களுக்கு அநர்த்தமே பலிக்குமே யன்றி வேறொரு நன்மையும் நேரிடாது என்று உபதேசித்தாராயிற்று.

சுருக்காக வாங்கிச் சுலாவி நின்று ஐயார்
நெருக்கா முன் நீர் நினைமின் கண்டீர் -திருப் பொலிந்த
ஆகத்தான் பாதம் அறிந்தும் அறியாத
போகத்தால் இல்லை பொருள்—-40–

பதவுரை

ஐயார்–கோழையானது
சுருக்காக வாங்கி–சரீரத்தைச் சுருங்க வலித்து
சுலாவி நின்று–உடம்பு முழுவதும் சூழ்ந்து கொண்டு நின்று
நெருக்காமுன்–(உயிர் போகும்போது கழுத்தளவிலே வந்து கூடி) நெருக்குவதற்கு முன்பே,
திரு பொலிந்த ஆகத்தான் பாதம்–பிராட்டியாலேர விளங்குகின்ற திருமார்பையுடைய பெருமானுடைய திருவடிகளை
நீர் நினைமின்–நீங்கள் சிந்தியுங்கோள்:
அறிந்தும்–பகவத் விஷயத்தை அறிந்தவர்களாயிருந்தும்
அறியாத–அறியாதவர்களாகவே உங்களைச் செய்யவல்ல
போகத்தால்–சப்தாதி விஷயங்களால்
பொருள் இல்லை–ஒரு ப்ரயோஜனமுமில்லை.

ஐயார் = ‘ஐ’ என்று கோழைக்குப் பெயர்; ‘ஆர்’ விகுதி – இழிவு சிறப்பு. கலாவுதல் -சூழ்ந்து கொள்ளுதல்.

அறிந்துமறியாத போகத்தால் = விவேகிகளையும் அவிவேகிகளாகச் செய்யவல்ல விஷயபோகம் என்கை.
அன்றியே; ‘விஷயபோகம் பொல்லாதது’ என்று தெரிந்துகொண்டாலும் அந்த அறிவின் பலனாக அதை விட்டுத் தொலைக்கணுமே;
அப்படி விடமுடியாத போகம் – என்றும்பொருள் கூறுவர்.
இப்பொருளில், ‘அறியாத’ என்றது – அறிவின் காரியமான விடுகையைப் பெறமாட்டாத என்றபடி.
மஹாகவிகளின் பிரயோகங்களில், சொல்மிகச் சுருங்கிப் பொருள் மிக விரிந்திருக்குமே.

————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பூதத் ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ பூதத் ஆழ்வார் அருளிய இரண்டாம் திருவந்தாதி -91-100–பெரிய வாச்சான் பிள்ளை அருளிச் செய்த வியாக்யானம் –

September 20, 2013

நான்கு பாசுரங்கள் பர உபதேசம் -இதில் அநிஷ்ட நிவ்ருத்திக்கும் அடுத்ததில் இஷ்ட ப்ராப்திக்கும் உபதேசம்

இவை இரண்டும் ஆஸ்திக புத்தி உள்ளவர்
அடுத்ததில் நாஸ்திகர் சாரு வாகர் -லோகாயுதம் -உபதேசம்
அடுத்ததில் தம்மை ஒத்த முமுஷுக்களுக்கு உபதேசம்

அடுத்த ஆறும் தான் பெற்ற பேற்றைச் சொல்லி நிகமிக்கிறார்

———–

அர்த்தஸ் சமய ப்ராப்தா -என்கிறபடியே-ஒன்றிலே எல்லாம் உண்டான விஷயம் –
பிரகிருதி வச்யரான பின்பு நரகம் ஒருவனைத் தப்பாது -அவ் விஷயத்தை வணங்கப் பாருங்கோள்-

பின்னால் அரு நரகம் சேராமல் பேதுறுவீர்
முன்னால் வணங்க முயல்மினோ -பன்னூல்
அளந்தான் இக்கார் கடல் சூழ் ஞாலத்தை எல்லாம்
அளந்தான் அவன் சேவடி –91-

பதவுரை

பின்னால்–சரீரம் விழுந்த பின்பு
அரு நகரம்–கடினமான நரகத்தை
சேராமல்–அடையாமலிருக்கும் படிக்கு
பேதுறுவீர்–மனங்கலங்கியிருக்கும் மனிசர்களே!-இதனால் ஆஸ்திக புத்தி உள்ளவர்களே என்றவாறு
பல் நூல்–பலவகைப்பட்ட சாஸ்த்ரங்களினால்
அளந்தானை–நிச்சயிக்கப்படுபவனும்-வேதைக சமைதி கம்யன் அன்றோ –
கார் கடல்சூழ் ஞாலத்தை எல்லாம் அளந்தானவன்–கரிய கடல் சூழப்பட்ட பூமியையெல்லாம்
அளந்து கொண்டவனுமான எம்பெருமானுடைய
சே அடி–செவ்விய திருவடிகளை
முன்னால்–இப்போதே
வணங்க–வணங்குமாறு
முயல்மின்–முயற்சி செய்யுங்கள்.-உலகம் அளந்த பொன்னடியே அடைந்து உய்மின் என்றவாறு

பன்னூல் அளந்தானை –
எல்லா பிரமாணங்களாலும் ஜிஞ்ஞா சிக்கப் பட்டவனை

(அறிய ஆசை கொண்டு -அளவிட முடியாதவன் என்று அளந்து முடித்தன -யதோ வாசோ நிவர்த்தந்தே –

பரத்வம் சொல்லி -ஆஸ்ரித கார்ய ஆபாத கல்யாண குண விசிஷ்டன் என்றதாயிற்று )

இக்கார் கடல் சூழ் ஞாலத்தை எல்லாம் அளந்தான் அவன் சேவடி –
வேதைக சமைதி கம்யமாய்
அரிதாய் இருக்குமோ வென்னில் –
வரையாதே எல்லார் தலையிலும் அடியை வைத்த
சுலபனுடைய திருவடிகளை

(இத்தால் ஸுலப்ய ஸுசீல்யம் -ஆஸ்ரித ஸுகர்ய ஆபாத குண விசிஷ்டன் என்றதாயிற்று )

பின்னால் அரு நரகம் சேராமல் பேதுறுவீர் முன்னால் வணங்க முயல்மினோ –
முன்னடி தோற்றாதே பாபத்தைப் பண்ணி
பின்னை அனுதாபம் பிறந்து
பேதுற்று இருக்கிற நீங்கள்
சரீர சமனந்தரம் வடிம்பிட்டு நிற்கிறது
பின்னைச் செய்கிறோம் என்று ஆறி இருக்க ஒண்ணாது –
முற்பட வணங்கி( ஆத்ம உஜ்ஜீவனத்துக்கு -இத்தால் பக்தியையும் ப்ரபத்தியையும் சொன்னவாறு )
பின்னை தேக யாத்ரை பண்ணப் பாருங்கோள்-

(பரம காருணிகர் ஆகையாலே ஸம்ஸாரிகள் இழந்து போகலாகாது என்று நான்கு பாட்டால அவர்களுக்கு உபதேசிக்கிறார்
அளந்தான் –யதோ வாஸோ நிவர்த்தந்தே -ஸ்ருதி ஸ்ம்ருதி இதிஹாஸ புராணங்களால் ஒரு மிடறாக அளத்ததற்கு அரியவன் என்று அளக்கப்பட்டவன்
யஸ்யா மதம் தஸ்ய மதம்
வேதா ஹமேதம் புருஷம் மஹாந்தம்
ச பூமிம் விஸ்வதோ வ்ருத்வா
இவனை வணங்குவதே தக்கது என்று உபதேசிக்கிறார் இதில் -)

————————————————————————–

சேவடி வணங்கி அநிஷ்ட நிவ்ருத்தி கீழ்
இதில் திரு நாமம் ஏத்தி இஷ்ட பிராப்தி பெற உபதேசம்

அநிஷ்ட நிவ்ருத்திக்கும் -இஷ்ட ப்ராப்திக்கும் இது தானே –ரக்ஷணத்துக்கும்- இதற்காகவே கொடி கட்டி சேவை சாதிக்கிறான்

திரு நாம சங்கீர்த்தனம் -உபாயமாக சொல்லி ப்ரயோஜனாந்தரங்களைப் பெற சாமான்ய ஆஸ்ரிதர்களைக் கூட்டி மேலே உயர்த்தி
மேல் 94- பாசுரத்தில் தம்மைப் போன்றவர்களுக்கு உபதேசம்

அடியால் முன் கஞ்சனைச் செற்று அமரர் ஏத்தும்
படியான் கொடி மேல் புள் கொண்டான் நெடியான் தன்
நாமமே ஏத்துமின்கள் ஏத்தினால் தாம் வேண்டும்
காமமே காட்டும் கடிது–92-

பதவுரை

முன்–முன்னே
அடியால்–திருவடியினால்
கஞசனே–கம்ஸனை
செற்று–உதைத்துக் கொன்றதனாலே
அமரர் ஏத்தும் படியான்–தேவர்கள் துதிக்கும் படியாக வுள்ளவனும்
கொடி மேல் புள் கொண்டான்–த்வஜத்திலே கருட பக்ஷியையுடைய வனுமான
நெடியான் தன்–ஸர்வேஸ்வரனுடைய
நாமமே–திருநாமங்களையே கொண்டு
ஏத்துமின்கள்–ஸ்தோத்ரம் பண்ணுங்கள்
ஏத்தினால்–அப்படி ஸ்தோத்ரம் பண்ணினால்
தாம் வேண்டும் காமம்–தாங்கள் அபேக்ஷிக்கும் புருஷார்த்தத்தை
கடிது–விரைவாக
காட்டும்–(அத் திருநாமம்) பெறுவிக்கும்

அடியால் முன் கஞ்சனைச் செற்று
கம்சன் ஈஸ்வரனை வஞ்சிக்க நினைத்ததை
அவனுக்கு முன்னே கோலித்
திருவடிகளாலே மார்பிலே ஏறி முடித்தவன் –

அமரர் ஏத்தும் படியான் –
குடி இருப்பு பெற்றோம் என்று
ப்ரஹ்மாதிகள் ஏத்தும் ஸ்வபாவத்தை உடையவன் –

கொடி மேல் புள் கொண்டான் –
ரஷணத்துக்கு கொடி கட்டி இருக்கிறவன்

நெடியான் தன் நாமமே ஏத்துமின்கள் –
ஒரு நாள் ஒரு திரு நாமம் சொன்னவனை
ஒரு நாளும் மறவாதவனுடைய
திரு நாமங்களை ஏத்துங்கோள் –

ஏத்தினால் தாம் வேண்டும் காமமே காட்டும்
1-பிரதிபந்தகம் போக்குகை-
2-ஐஸ்வர்யம் -3-ஆத்ம லாபம்- 4-தன்னைத் தருகை- எல்லாம் கிடைக்கும்-

(ஸகல பல ப்ரதோ விஷ்ணு அன்றோ)

கடிது —
தேவதாந்தர பஜனம் போலே-பலத்துக்கு விளம்பம் இல்லை-அது கூடா முன்னம்-

(படிக்களவாக நிமிர்த்த நின் பாத பங்கயமே தலைக்கு அணியாய் -திருவாய் -9-2-2-
அநிஷ்ட நிவ்ருத்தியையும் இஷ்ட ப்ராப்தியையும் அளித்து ரக்ஷிப்பவன் இவனே என்று
ஸூ பர்ணோ அஸி கருத்மான் -வேதாத்மா விஹகேஸ்வரனை கொடி கட்டிக் கொண்டு இருப்பவன்
சேவல் அம் கொடியோய்
செவ்வாய் உவணத்து உயர் கொடியோனே
புள்ளின் நிவந்து ஓங்கி உயர் கொடிச் சேவலோய்
அவிழ் துழாய் மலர் தரு செல்வத்துப் புள் மிசைக் கொடியோனும்
என்று பரிபாடல் கோஷிக்குமே
ஆசிய ஜா நந்தோ நாம சித்த விவக்தந
த்ருவாஸோ அஸ்ய கீரயோ ஜனாஸ
ஐஹ லௌகிகம் ஐஸ்வர்யம் ஸ்வர்க்காத்யம் பார லௌகிகம்
கைவல்யம் பகவந்தம் ச மந்த்ரோயம் சாதயிஷ்யதி
ப்ரயோஜனாந்தர பரர்களும் இவனையே ஸ்துதிக்க வேண்டும் என்கிறார் ஆயிற்று–)

————————————————————————

கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்று இருக்கிறோம் நீங்கள் நம்பினாலும் இல்லா விட்டாலும்
உண்மை நிலை -நரகமும் போவீர்கள் -அங்கு யமபடர் நலிவர்கள் என்ன
எங்களுக்கோ -பிரதிபந்தகங்கள் மிக்கு உள்ளனவே என்ன
அவற்றைப் போக்க பரிகரம் உள்ளவன் –
முன்னமே சிறு பாலகனாய் இருக்கச் செய்தே பூதனா தொடக்கமாக கேசி பர்யந்தமாக
ஸமஸ்த விரோதிகளை போக்கி அருளினவன் அன்றோ
அவனை ஏத்துங்கோள் -என்று உபதேசிக்கிறார் இதில்


ஆஸ்ரயிக்கைக்கு ஒரு உபாயம் சொல்லுகிறது-

கடிது கொடு நரகம் பிற்காலும் செய்கை
கொடிது என்றது கூடா முன்னம் -வடி சங்கம்
கொண்டானைக் கூந்தல் வாய் கீண்டானைக் கொங்கை நஞ்சு
உண்டானை ஏத்துமினோ உற்று–93-

பதவுரை

கொடு நரகம்-க்ரூரமான நரகமானது
கடிது–கண் கொண்டு காணவொண்ணாதபடி கோரமாயிருக்கும்
பிற்காலும்–அதற்குமேலும்
செய்கை–(அங்கு யம படர்கள் செய்யும் யாதனைச்) செயல்கள்
கொடிது–பொறுக்க முடியாதனவாயிருக்கும்,
என்று–என்று தெரிந்து கொண்டு
அது கூடா முன்னம்–அந்த நரக வேதனை நேராதபடி
வடி சங்கம் கொண்டானை–கூர்மையான த்வநியை யுடைய சங்கைத் திருக் கையிலே உடையவனும்
கூந்தல் வாய் கீண்டானை–கேசியின் வாயைக் கீண்டொழித் தவனும்
கொங்கை நஞ்சு உண்டானை–(பேய்ச்சின்) மூலையில் தடவி யிருந்த விஷத்தை உண்டவனுமான எம்பெருமானை
உற்று–பொருந்தி
ஏத்துமின்–ஸ்தோத்திரம் பண்ணுங்கள்

கூந்தல் -கேசியினுடைய

கடிது இத்யாதி
நரக தர்சனமோ கடிது
பின்பு அங்குச் செயல்களோ கொடிது –
ருதிரவாறுகளிலே புகடுகை
வாள் போன்று இருந்துள்ள கோரைகளிலே ஏறிடுகை
xஇவற்றை அனுசந்தித்து

என்றது கூடா முன்னம்
அவை கிட்டுவதுக்கு முன்னே

வடி சங்கம் கொண்டானை
கூரிய ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தை
கையிலே ஆயுதமாக கொண்டவனை

கூந்தல் வாய் கீண்டானை
கேசியின் வாயைக் கிழித்தவனை

கொங்கை நஞ்சு உண்டானை
பூதனையை முடிதவனை

ஏத்துமினோ உற்று –
நரகம் கொடிது என்று அனுசந்திக்க
விரோதி நிரசன சீலனானவனைக் கிட்டி ஏத்தலாம்-

(தென்னவன் தமர் செப்பம் இலாதார் சேவதக்குவார்(சே தாக்குவார் -காளைக்கு காயடிப்பார் ) போலப் புகுந்து பின்னும்
வன் கயிற்றால் பிணித்து எற்றிப் பின் முன்னாக இழுப்பதன் முன்னம் -பெரியாழ்வார் -4-5-7-
நமன் தமர் செய்யும் வேதனைக்கு ஒடுங்கி நடுங்கினேன் -பெரிய திருமொழி -1-6-3-
நமன் தமர் பற்றி எற்றி வைத்து எரி எழுகின்ற செம்பினால் இயன்ற பாவையைப் பாவீ தழுவு என மொழிவதற்கு அங்கி -1-6-4-
ச கோஷா தார்த்தராஷ்ட்ராணாம் ஹ்ருதயாணி வ்யதாரயத்
வரி வளையால் குறைவில்லாப் பெரு முழக்கால் அடங்காரை எரி அழலம் புக ஊதி இரு நிலம் முன் துயர் தவிர்த்த –விரி புகழான் -திருவாய் -4-8-8-
கூந்தல் -கேசி
கூந்தல் எரி சினம் கொன்றாய் –பரிபாடல்
மேவார் விடுத்தந்த கூந்தற் குதிரையை வாய் படுத்திட்டு -கலித்தொகை
கூந்தன் மா கொன்று குடமாடிக் கோவலனாய் -முத்தொள்ளாயிரம்
இப்படி விரோதிகளை நிரஸனம் பண்ணி அருளியது போல் உங்கள் நரக பயத்தையும் போக்க வல்லவன் அவன் ஒருவனே என்கிறார்
நாஸ்திகர்கள் பகவத் சமாஸ்ரயணம் பண்ணுவதற்கு உபாயம் நரக பயத்தை அனுசந்திக்கை என்றபடி -)

————————————————————————–

தம் போல்வார் -அர்ச்சாவதாரங்களில் மண்டி இருப்பதற்குத் தக்க
திருப்பாடகம் ஸ்வயம் பிரயோஜனமாக ஏத்தி இருப்பவர்கள் அன்றோ
பாடு பெருமை -அகம் -பெருமை தோற்ற வீற்று இருப்பவன் –
இவர் படியைக் காட்டி முமுஷுக்களுக்கு உபதேசம்

என்னுடைய நெஞ்சு ஏத்துகிறாற் போலே-நீங்களும் ஏத்துங்கோள் என்கிறார் –
தான் நமஸ்கரித்துக் காட்டி பிரஜையை நமஸ்கரிப்பாரைப் போலே

உற்று வணங்கித் தொழுமின் உலகு ஏழும்
முற்றும் விழுங்கும் முகில் வண்ணன் -பற்றிப்
பொருந்தா தான் மார்பிடந்து பூம் பாடகத்துள்
இருந்தானை ஏத்தும் என் நெஞ்சு–94-

பதவுரை

உலகு எழும் முற்றும் விழுங்கும்–உலகங்களை யெல்லாம் (பிரளயங்கொள்ளாதபடி) அமுது செய்தவனும்
முகில் வண்ணன்–மேகம் போன்ற வடிவை யுடையவனும்
பொருந்தா தான்–(ப்ரஹ்லாதனுக்கு) சத்ருவான் இரணியனுடைய
மார்பு–மார்வை
பற்றி–பிடித்து
இடந்து–கிழித்தவனும்
பூ பாடகத்துள் இருந்தானை–அழகிய திருப் பாடகமென்னுந் திருப்பதியில் வீற்றிருப்பவனுமான எம்பெருமானை
என் நெஞ்சு–என் மனமானது
ஏத்தும்–துதிக்கும் (நீங்களும் இப்படியே)
உற்று வணங்கி தொழுமின்–பொருந்தி வணங்கி ஆஸ்ரயியுங்கோள்.

உற்று வணங்கித் தொழுமின் –
கிட்டி அபிமான சூன்யராய் தொழுங்கோள்

(வணங்கி தொழுது -அஹங்காரம் தொலைவது வணக்கம் -தொழுவது அஞ்சலி )

உலகு ஏழும் முற்றும் விழுங்கும் முகில் வண்ணன்    
லோகம் ஒன்றும் பிரி கதிர் படாதபடி
தன் வயிற்றிலே வைத்து ரஷித்து
பிரஜை பால் குடித்தால் தாய் உடம்பு நிறம் பெறுமா போலே
ஸ்ரமஹரமான வடிவை உடையவனாய்

பற்றிப் பொருந்தாதான் மார்பிடந்து  –
(திருத்தவே முடியாத )பொருந்தாத ஹிரண்யன் மார்பை பற்றி இடந்து

பூம் பாடகத்துள் இருந்தானை ஏத்தும் என் நெஞ்சு –
பின்னும் ஆஸ்ரித விரோதிகளைப் போக்க வேணும் என்று
திருப் பாடகத்திலே எழுந்தருளி இருக்கிறவனை
ஏத்தா நின்றது என் நெஞ்சு-

(தான் நமஸ்கரித்துக் காட்டிக் குழந்தைகளை பழக்கி வைக்கும் தாய் போல் முமுஷுக்களாய் இருப்பவருக்கு நமஸ்கரித்துக் காட்டி அருளுகிறார் –
வள வேழ் உலகில் போல் அகலாமல் தொழுமின்
ஒரு பொருள் புறப்பாடு இன்றி திரு வயிற்றில் வைத்து ரஷித்த சர்வாதிகன் இவனே
உளம் தொட்டு –பெரியாழ்வார் -1-6-9- அவனுக்கும் நெஞ்சில் ஈரப்பசை உண்டோ என்று தேடுமவன் –
பாடகம் –பாடு அகம் -பெருமை தோற்ற வீற்று இருக்கும் திவ்ய தேசம்
பூம் பாடகம் -இனிமை
உலகு ஏழும் முற்றும் விழுங்கும் முகில் வண்ணன் -ஸர்வ ரக்ஷகத்வம்
பொருந்தாதான் மார்பு இடந்து -ஸ்வா பாவிக -ஆஸ்ரித விரோதி நிரசன சீலன் )

————————————————————————-

என் நெஞ்சமேயான் என் சென்னியான் தானவனை
வன்னெஞ்சம் கீண்ட மணி வண்ணன் -முன்னம் சேய்
ஊழியான் ஊழி பெயர்த்தான் உலகு ஏத்தும்
ஆழியான் அத்தி ஊரான் -95-

பதவுரை

தானவனை–இரணியனாகிற அகரனுடைய
வல் நெஞ்சம்-வலிய மார்வை
கீண்ட–கிழித்தொழித்தவனும்
மணி வண்ணன்–நீல மணி போன்ற நிறத்தை யுடையவனும்
முன்னம் செய் ஊழியான்–நெடுங்காலமாக வுள்ளவனும்-கால உபலஷிதமான சகல -சேதன அசேதனங்களை ஸூஷ்ம மாகக் கொண்டவன்
ஊழி பெயர்த்தான்–காலம் முதலிய ஸகல வஸ்துக்களையும் உண்டாக்கினவனும்
உலகு ஏத்தும் ஆழியான்–உலகத்தவரால் துதிக்கப் பட்டவனாய்க் கொண்டு திருப்பாற்கடலில் பள்ளி கொண்டிருப்பவனும்
அத்தியூரான்–ஹஸ்தி கிரியில் எழுந்தருளி யிருப்பவனுமான எம்பெருமான்
என் நெஞசம் மேயான்–என்னுடைய நெஞ்சிலே பொருந்தி யிரா நின்றான்-பூதத்தாழ்வார் இன்றும் இவ்வாறே சேவை காஞ்சியில்
என் சென்னியான்–என்னுடைய தலையிலே உள்ளான்.

முன்னம் சேய் ஊழியான்
ஊழி பெயர்த்தான்
உலகு ஏத்தும் ஆழியான்
தானவனை வன்னெஞ்சம் கீண்ட மணி வண்ணன்
அத்தி ஊரான்
என் நெஞ்சமேயான் –
என் சென்னியான் -என்று அந்வய க்ரமம்

சேய்-அழகிய

ஹிரண்யனுடைய -ஈஸ்வரோஹம் –
என்ற திண்ணிய நெஞ்சைக் கீண்டு
சிறுக்கன் விரோதி போயிற்று என்று
புகர்த்த வடிவை உடையவன் –

முன்னம் இத்யாதி –
தன்னாலே ஸ்ருஷ்டமான ஜகத்திலே உள்ளான் –

ஊழி இத்யாதி –
காலோபலஷித சகல பதார்த்தங்களையும்
உண்டாக்கினவன் -(அப்பிள்ளை ஸ்ருஷ்டியும் சம்ஹாரத்தையும் சொல்லிற்று என்பர் )
எல்லாரும் ஏத்தும்படி திருப் பாற் கடலிலே
கண் வளர்ந்து அருளுகிறவன் -(அநிருத்த வ்யூஹ நாராயணன் )
திரு அத்தியூரில் வசிக்கிறவன் –

என் நெஞ்சின் உள்ளான் –
தலை மேல் தாளிணைகள் நிலை பேரான்
என் நெஞ்சத்து(10-6-திருவட்டாறு எம்பெருமான் ) -என்கிறபடியே-

(ஸ்வஸ்தி ஹஸ்தி கிரி மஸ்த சேகர சந்த நோது மயி சந்ததம் ஹரி
நிஸ் சமாப்யதிக மப்ய தத்த யம் தேவம் ஓவ்பநிஷதீ ஸரஸ்வதீ–ஸ்ரீ வரத ராஜ ஸ்தவம்1–

ஓவ்பநிஷதீ ஸரஸ்வதீ–ஒவ்பநிஷத்துக்களின் வாக்கானது
யம் தேவம் -யாவன் ஒரு எம்பெருமானை
நிஸ் சம அப்யதிகம் அப்ய தத்த -ஓத்தாரும் மிக்காணும் இல்லாதவனாக ஓதிற்றோ
ஹஸ்தி கிரி மஸ்த சேகர-ஸ்ரீ ஹஸ்திகிரி சிகரத்தின் ஆபரணமாய் உள்ள
ஸ ஹரி -அந்த ப்ரணதார்த்தி ஹர ஸ்ரீ வரதன்
மயி-அடியேன் மீது
சந்ததம்-எப்போதும்
ஸ்வஸ்தி சந்த நோது -நன்மையை நிரம்பச் செய்ய வேணும்)

(சதேவ சோம்ய இதம் அக்ர ஆஸீத்
ஏகோ ஹவை நாராயண ஆஸீத் ந ப்ரஹ்மா ந ஈஸாந
பஹுஸ்யாம் ப்ரஜாயேயத்
த்ரி பாதூர்த்வ உதைத் புருஷ பாதோஸ் யேஹாபவாத் புந
ததோ விஷ்வங் வயக்ராமத் சாஸநா நஸேந அபி
ந ச ராக்ஷஸ சேஷ்டித
அனந்தன் பாலும் கருடன் பாலும் ஐது நொய்தாக வைத்து என்
மனந்தனுள்ளே வந்து வைகி வாழ செய்தாய் எம்பிரான்
நினைந்து என்னுள்ளே நின்று நெக்கு கண்கள் அசும்பு ஒழுக
நினைந்து இருந்தே சிரமம் தீர்த்தேன் நேமி நெடியவனே – 5-4 -8-

பனிக்கடலில் பள்ளி கோளைப் பழக விட்டு ஓடி வந்து என்
மனக்கடலில் வாழ வல்ல மாய மணாளா நம்பீ
தனிக்கடலே தனிச் சுடரே தனி உலகே என்று என்று
உனக்கு இடமாய் இருக்க என்னை உனக்கு உரித்து ஆக்கினையே -5- 4-9 –

தட வரை வாய் மிளிர்ந்து மின்னும் தவள நெடும் கொடி போலே
சுடர் ஒளியாய் நெஞ்சின் உள்ளே தோன்றும் என் சோதி நம்பீ
வட தடமும் வைகுந்தமும் மதிள் த்வராவதியும்
இடவகைகள் இகழ்ந்திட்டு என்பால் இடவகை கொண்டனையே -5 -4-10 –

கல்லும் கனை கடலும் வைகுந்த வானாடும்
புல்லென்று ஒழிந்தன கொல் ஏ பாவம் வெல்ல
நெடியான் நிறம் கரியான் உள் புகுந்து நீங்கான்
அடியேனது உள்ளத் தகம்–-பெரிய திருவந்தாதி -68-

தலை மேலே தாளிணைகள் –நிலை பேரான் என் நெஞ்சத்து -திருவாய் -10-6-6-
இவையும் அவையும் -திருவாய் -1-9- சாத்மிக்க சாத்மிக்க போகத்தை அளிப்பவன் கிருஷி பண்ணி பரம புருஷார்த்தம் பெறப் பெற்றானே
இத்தகைய பராத் பரன் மிகத் தாழ்ந்த என் பக்கலிலே காட்டி அருளும் அபிநிவேச அதிசயம் இருந்த படி என் என்று விஸ்மிதர் ஆகிறார் -)

ஆழ்வார் திருவடி என்று அனுசந்திக்கவே நம்முள்ளும் இருப்பதை உணர்வோம் -அவன் வியாப்தி எங்கும் உண்டே –

அத்தை நாம் உணர்ந்து ஆஸ்ரயிக்கவே நமக்கும் பேறு ஸித்தம் என்று

————————————————————————–

(பிள்ளை யூர்வான் அத்தி யூரான் -கருட வாஹனம் பிரசித்தம் -பரத்வ ஸுலப்ய ஆகிய )இரண்டாலும் -கருட வாகனத்வம் -சேஷ சாயித்வம் -சர்வேஸ்வரன் என்றபடி –

அத்தி யூரான் புள்ளை யூர்வான் அணி மணியின்
துத்தி சேர் நாகத்தின் மேல் துயில்வான் -முத்தீ
மறையாவான் மா கடல் நஞ்சுண்டான் தனக்கும்
இறையாவான் எங்கள் பிரான் –96-

பதவுரை

புள்ளை ஊர்வான்–பெரிய திருவடியை வாஹனமாகக் கொண்டு நடந்து மவனும்
அணி மணியின் துத்தி சேர் நாகத்தின் மேல் துயில்வான்–அழகிய மாணிக்கங்களோடு கூடினவனாய்
படப் பொறிகளை யுடையனான ஆதிசேஷன் மேல் பள்ளி கொள்பவனும்
முத்தீ ஆவான்–மூன்று அக்நிகளாலே ஆராதிக்கப்படுகிறவனும்
மறை ஆவான்–வேதங்களால் பிரதிபாதிக்கப்படுகிறவனும்
மா கடல் நஞ்சு உண்டான் தனக்கும் இறை ஆவான்–பெரிய கடலில் நின்று உண்டான விஷத்தை
உட்கொண்டவனான ருத்ரனுக்கும் ஸ்வாமியாயிருப்பவனுமான
எங்கள் பிரான்–எம்பெருமான்
அத்தியூரான்–ஸ்ரீஹஸ்திகிரியிலே எழுந்தருளி யிருக்கிறான்.

(எங்கள் பிரான் ஆகைக்காக அவன் சாதிக்கும் பட்டியல்
மா கடல் நஞ்சு உண்டான் தனக்கும் இறை ஆவான்– தேவாதி தேவன் ஆனவன்
முத்தீ மறையாவான் -வேதைக சமைதி காம்யன் ஆனான்
அணி மணியின் துத்தி சேர் நாகத்தின் மேல் துயில்வான் -வ்யூஹ வாஸூ தேவன் ஆனான்
புள்ளை யூர்வான் -கருட வாஹனானான்
அத்தி யூரான் -திவ்ய தேசங்கள் தோறும் சேவை சாதிக்கிறான்
தத் -அவ்வளவு பெரியவன்
த்வம் -இவ்வளவு எளியன்
அஸி -ஆகிறான்
ஸ்ரீ ரெங்க நாதன் மம நாதன்
அரங்கமாளி என்னை ஆளி
ஆஸி)

முத்தீ மறையாவான் –மூன்று அக்னி யையும் சொல்லப்படா நின்ற
வேதத்தாலே சமாராத்ரயதயா பிரதிபாதிகப் பட்டவன்

முத்தி மறையாவான் -என்று பாடமாகில்
மோஷ ப்ரதிபாதக வேதத்தாலே பிரதிபாத்யன் என்றபடி –

மா கடல் இத்யாதி
அபிமானியான ருத்ரனுக்கும் ஈஸ்வரன் ஆனவன்
எங்கள் பிரான் ஆகைக்காக திரு அத்தியூரில் நின்றான்-

(முத்தீ மறை -கர்ம காண்டம் சர்வ கர்ம ஆராதணீயன் –
வேதாந்தம் -முத்தி மறை -மோக்ஷ பிரதன் வேதாந்த சித்தம் அன்றோ
ஆக இரண்டையும் சொன்னவாறு -இரண்டும் சேர்ந்தே வேதங்கள்)

(கால் இல்லா யானை மேல் பறந்து காட்டி விரோதிகளை நிரசித்த ஐதிக்யம் –
ஏகாம்பரர் கோயிலில் முன்பே -இன்றும் யானை வாகன ஏசல் கண்டு அருளுகிறார்
யானை வாஹனத்துக்கு கால் இல்லை இங்கு )

(ஆதி ராஜ்யம் அதிகம் புவநாநாம் ஈஸதே பிஸூ நயன் கில மௌளி -ஸ்ரீ வரதராஜ ஸ்தவம் -25-
ஓடும் புள்ளேறி -திருவாய் -1-8-1-
நாகத்தின் மேல் துயில்வான் -அமி தவ்ஜா பர்யங்க தஸ்மிந் ப்ரஹ்ம ஆஸ்தே –கௌஷீதகி
முத்தீ மறை யாவான் -என்று முத்தி மறையாவான் என்றும் –
வேதத்து மறை நீ -பரிபாடல்
கேஸீ விஷஸ்ய பாத்ரேண யத் ருத்ரேண அபிபத் ஸஹ -ருக் மண்டலம் -இவன் உள்ளே இருந்ததாலே நீல கண்டன் ஆலஹால விஷம் உண்ண முடிந்தது -பாத்திரம் போல் அன்றோ ருத்ரனும் –
எங்கள் பிரான் அத்தியூரான் -எங்கள் என்று -கேசவன் தமர் கீழ் மேல் எமர் ஏழு ஏழு பிறப்பும் -2-7-1- -சம்பந்த சம்பந்திகளையும் கூட்டிச் சொல்கிறார்
அனைவரையும் உபகரித்து அருளவே ஸ்ரீ ஹஸ்தகிரியில் நித்ய வாஸம் செய்து அருளுகிறார் என்கிறார் – )

————————————————————————–

(எங்கள் பிரான் ஆவதற்காகவே -நின்ற திருக்கோலம் –
பரத்வமும் சயன திருக்கோலம் -ஆஸ்ரித பாரதந்தர்யம் ஸுலப்ய சவுந்தர்யங்களையும் காட்டி
சம்சாரம் கிழங்கு எடுத்தால் அல்லது பேரேன் என்று உள்ளான்

அங்கு நின்று எழுதி வாங்கிக் கொண்டு அத்தை திடப்படுத்த இங்கே சயனம் என்றுமாம் )

எங்கள் பெருமான் இமையோர் தலைமகன் நீ
செங்கண் நெடுமால் திரு மார்பா -பொங்கு
பட மூக்கின் ஆயிர வாய்ப் பாம்பணை மேல் சேர்ந்தாய்
குட மூக்கில் கோயிலாகக் கொண்டு–97-

பதவுரை

செம் கண் நெடுமால்–சிவந்த திருக் கண்களை யுடைய ஸர்வேச்வரனே!
திரு மார்பா-பிராட்டியைத் திரு மார்பிலுடையவனே!
இமையோர் தலை மகன் நீ–நித்ய ஸூரிகளுக்குத் தலைவனான நீ
எங்கள் பெருமான்–எங்களுக்கு ரக்ஷகனாய்க் கொண்டு
குடமூக்கு இல்–கும்பகோண க்ஷேத்ரத்தை-இல்லமாகக் கொண்டு
கோயில் ஆ கொண்டு–கோயிலாகத் திருவுள்ளம் பற்றி
பொங்கு படம் மூக்கின்–விகஸித்த படங்களையும் மூக்கையுமுடையவனும்
ஆயிரம் வாய்–ஆயிரம் வாயையுடையவனுமான
பாம்பு–ஆதி சேஷனாகிற
அணை மேல்–படுக்கையின் மீது
சேர்ந்தாய்–பள்ளி கொண்டருளினாய்.

எங்களுக்கு ஸ்வாமியான-
சௌலப்யத்துக்கு மேலே-
நித்ய ஸூரி போக்யனாய்-
ஸ்ருதி பிரசித்தமான கண்ணை உடையவனாய்-
ஸ்ரீ ய பதியானவனே-
விஸ்த்ருதமான படங்களையும்
மூக்கையும் உடையனான
திரு வநந்த ஆழ்வான் மேல் கண் வளர்ந்தாய்
திருக் குடந்தையைக் கோயிலாகக் கொண்டு
பாம்பணை மேல் சேர்ந்தாய்
என்று அந்வயம்-

(திருமார்பா-பரத்வ ஸுலப்யங்களுக்கு நிதானம் -புருஷகாரம் நமக்கு உபாய உபேயங்களுக்கு -நித்ய முக்தர்களுக்கு கைங்கர்ய விருத்திக்கே)

(நீ ஒவ்வொன்றிலும் சேர்த்து வியாக்யானம்
எங்கள் பெருமான்நீ
இமையோர் தலைமகன் நீ
செங்கண் நெடுமால் நீ
திரு மார்பா நீ –
பொங்கு பட மூக்கின் ஆயிர வாய்ப் பாம்பணை மேல் சேர்ந்தாய் நீ
குட மூக்கில் கோயிலாகக் கொண்டாய் நீ

(எங்கள் பிரான் ஆவதற்காகவே திருவத்தியூரில் நின்றதோடு நில்லாமல்
சம்சாரத்தை கிழங்கு எடுத்தால் அல்லது எழுந்து இருக்க மாட்டேன் என்பவன் போல்
திருக்குடந்தை போன்ற திவ்ய தேசங்களிலும் படுக்கையை விரித்துப் பள்ளி கொண்டும் அருளுகிறார் அன்றோ
திரு மார்பா -வேதாந்தாஸ் தத்வ சிந்தாம் முரபிதுரஸி யத் பாத சிஹ்நைஸ் தரந்தி -ஸ்ரீ குணரத்ன கோசம் -44-
ஹ்ரீஸ் ஸ தே லஷ்மீஸ் ச பத்ன்யவ்
தத் விஷ்ணோ பரமம் பதம் ஸதா பஸ்யந்தி ஸூரய
தஸ்ய யதா கப்யாஸம் புண்டரீகம் ஏவம் அக்ஷிணீ)

————–

(அர்ச்சை நிலைகளால் அடிமை கொண்டது கீழ் இரண்டு பாசுரங்களில்
விபவ சேஷ்டிதங்களைக் காட்டி அடிமை கொண்டான் என்கிறார் இதில்)

கொண்டு வளர்க்கக் குழவியாய் தான் வளர்ந்தது
உண்டது உலகு ஏழும் உள் ஒடுங்கக் கொண்டு
குடமாடிக் கோவலனாய் மேவி என்நெஞ்சம்
இடமாகக் கொண்டவிறை-98-

பதவுரை

கோவலன் ஆய்–இடையனாய் வந்து பிறந்து
குடம் கொண்டு ஆடி–குடங்களைக் கையிலே கொண்டு கூத்தாடி (அதனாலுண்டான ஆயாஸம் தீர)
என் நெஞசம் மேவி–என்னுடைய ஹ்ருதயத்திலே பொருந்தி
இடம் ஆக கொண்ட இறை–(எனது நெஞ்சையெ) நித்ய வாஸ ஸ்த்தாநமாகக் கொண்ட ஸ்வாமி
கொண்டு வளர்க்க–சிலர் கையிலெடுத்துச் சீராட்டி வளர்க்க வேண்டும்படியான
குழவி ஆய்–சிறு குழந்தையாய்
தான் வளர்ந்தது–தான் வளர்ந்த அப்படிப்பட்ட மிகச் சிறிய பருவத்திலே
உலகு ஏழும்–ஸப்த லோகங்களும்
உள் ஓடுங்க–தன்னுள்ளே ஒடுங்கும்படி
உண்டது!–உட் கொண்டது (என்ன ஆச்சரியம்)

கொண்டு வளர்க்கக் குழவியாய் தான் வளர்ந்தது-உண்டது உலகு ஏழும் உள் ஒடுங்கக் கொண்டு
எடுத்து வளர்க்க வேண்டும்படி
குழவியாய் தான் வளர்ந்தது
ஸ்த் நந்தய அவஸ்தையிலே
வயிற்றிலே வைத்தது அடங்க உலகு ஏழும் –
தனக்கு ரஷகர் வேண்டி இருக்கிற அவஸ்தையிலே
லோகத்துக்கு ரஷகன் ஆனான் –

குடமாடிக் கோவலனாய் மேவி என் நெஞ்சம் இடமாகக் கொண்டவிறை –
இடையனாய்
ஜாதிக்கு உசிதமான கூத்தை யாடி
என் நெஞ்சிலே பொருந்தி
இரங்கப் பண்ணி
என் நெஞ்சைக் கோயிலாகக் கொண்ட
ஈஸ்வரன் உண்டது உலகு ஏழும் உள் ஒடுங்க-

(ந அஹம் தேவோ ந கந்தர்வோ ந யஷோ ந ச ராக்ஷஸ
அஹம் வோ பாந்தவ ஜாத நைதச் சிந்த யமிதோன்-ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-13-13-
பாலனாய் ஏழு உலகுண்டு பரிவின்றி ஆலிலை அன்னவசம் செய்யும் அண்ணலார் -திருவாய் -4-2-1-
அடியார்ந்த வையமுண்டு ஆலிலை அன்னவசம் செய்யும் படி யாதுமில் குழவி -8-7-10-
பாலன் றனதுருவாய் யேழுலகுண்டு ஆலிலையின்
மேலன்று நீ வளர்ந்த மெய்யன்பர் ஆலன்று
வேலைநீ ருள்ளதோ விண்ணதோ மண்ணதோ
சோலை சூழ் குன்றெடுத்தாய் சொல்லு —முதல் திருவந்தாதி –69-)


(ப்ரயோஜனாந்தர பரர்களுக்கும் கார்யம் செய்து -இவற்றை பெற்று பின் ஒரு காலமாவது
அநந்ய ப்ரயோஜனர் ஆவார் என்னும் நப்பாசையில் அன்றோ செய்து அருளுகிறார் )

இறை எம்பெருமான் அருள் என்று இமையோர்
முறை நின்று மொய் மலர்கள் தூவ -அறை கழல
சேவடியான் செங்கண் நெடியான் குறளுருவாய்
மாவலியை மண் கொண்டான் மால் –99-

பதவுரை

இமையோர்–(பிரமன் முதலான) தேவர்கள்
எம்பெருமான்–‘எம்பெருமானே!‘ (எங்கள் விஷயத்தில்)
இறை–கொஞ்சம்
அருள் என்று–கிருபை பண்ண வேணும் என்று சொல்லி
முறை நின்று–சேஷத்வ ஞானத்தால் -அடிமைக்கு ஏற்ப நின்று
மொய் மலர்கள்–அழகிய புஷ்பங்களை
தூவ–பணிமாறும் படியாக,-(வாசிகம் -காயிகம் இரண்டாலும் )
அறை கழல சே அடியான்–ஒலிக்கின்ற வீரக் கழலை யுடைய திருவடிகளை யுடையவனும்
செம் கண்–செந்தாமரைக் கண்ணனும்
நெடியான்–எல்லாரிலும் மேம்பட்டவனுமான
மால்–திருமால்
குறள் உரு ஆய்–(மாவலி பக்கல்) வாமந ரூபியான் வந்து தோன்றி
மா வடிவின்–பெரிய வடிவினாலே
மண் கொண்டான்–பூமியை அளந்து கொண்டான்.

மா வடிவில் என்றும் –மா வலியை என்றும்-பாட பேதம்

இறை எம்பெருமான் அருள் என்று இமையோர் முறை நின்று மொய் மலர்கள் தூவ –
அஸ்மத் ஸ்வாமியான ஈஸ்வரனே
அருள் என்று ஓன்று கெட்ட வன்றாகப்
பாடி காப்பாரை வளைப்பாரைப் போலே
ஈஸ்வரோஹம் -என்று ஊதின காளங்களைப் பொகட்டு
தேவர்கள் புஷ்பம் தூவி ஆஸ்ரயிக்க

அறை கழல சேவடியான் –
த்வனியா நின்ற வீரக் கழலை உடைய
சிவந்த திருவடிகளை உடையவன் –
எல்லா ஆபரணங்களுக்கும் உப லஷணம்-

செங்கண் நெடியான் குறளுருவாய் –
சர்வேஸ்வரன் குறளுருவாய்ச் சென்று –

மாவலியை மண் கொண்டான் மால் –
ஆஸ்ரித அர்த்தமாக
சுருக்கின வடிவை உடையவனாய்
மகாபலி பக்கலிலே மண் கொண்ட
வ்யாமுக்தன்-(இந்திரன் இடம் மால் -மகாபலி இடமும் மால் நம் அனைவர் இடமும் மால் -எங்கும் மால் )

(இதனால் தான் அடுத்த பாசுரத்தில் -என் தன் அளவன்றால் யானுடைய வன்பு –அவன் அன்பால் இவர் அன்பு பெருக்கெடுக்குமே –
வ்யாமோஹம் -தப்புக்களைப் பார்க்காமல் ஓத்தே இல்லாத அதிகாரிகள் கொண்ட காதல்)

(அகில ஜகத் ஸ்வாமிந் -அஸ்மத் ஸ்வாமின்
கள்வா எம்மையும் ஏழு உலகும் நின் உள்ளே தோற்றிய இறைவா–வெள்ளேறன் நான்முகன் இந்திரன் வானவர் –திருவாய் -2-2-10-
ஈஸ்வரோஹம் –
தமீஸ்வராணாம் பரமம் மஹேஸ்வரம் தம் தேவதா நாம்
பரமஞ்ச தைவதம் -ஸ்வேதாஸ்வர –
மா வலியை மண் கொண்டான் மால் என்று கொண்டு தாழ விட்டு வாத்சல்யம் காட்டி அருளினான் என்று ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளையும்
மா வடிவில் மண் கொண்டான் என்று கொண்டு மிகப் பெரிய வடிவைக் கொண்டு உலகு அனைத்தையும் தீண்டினான் என்பர் ஸ்ரீ அப்பிள்ளை
சுருக்குவாரை இன்றியே சுருங்கினாய் சுருங்கியும் பெருக்குவாரை இன்றியே பெரும்மம் எய்து பெற்றியோய் -திருச்சந்த -109-)

————————

(சுருக்குவாரை இன்றி சுருக்கினாயே –
ஓங்கி உலகு அளந்தவன் போல் மிகப் பெரியதான அன்பை
வாமன் போல் சுருக்கி அருள வேணும் என்கிறார்)

மாலே நெடியானே கண்ணனே விண்ணவர்க்கு
மேலா வியன் துழாய்க் கண்ணியனே -மேலாய்
விளவின் காய் கன்றினால் வீழ்த்தவனே என் தன்
அளவன்றால் யானுடைய வன்பு –100-

பதவுரை

மாலே–(அடியாரிடத்தில்) வியாமோஹ முள்ளவனே!
நெடியோனே–ஸர்வ ஸ்மாத் பரனே!
கண்ணனே–ஸ்ரீக்ருஷ்ணனே!
விண்ணவர்க்கு மேலா–நித்ய ஸூரிகளுக்குத் தலைவனே!
வியன் துழாய் கண்ணியனே–அழகிய திருத்துழாய் மாலையை அணிந்துள்ளவனே!
மேலால்–முன்னொரு காலத்தில்
விளவின்காய்–விளங்காயை
கன்றினால்–ஒரு கன்றைக் கொண்டு
வீழ்த்தவனே–உதிர்த்துத் தள்ளினவனே!,
யான் உடை– (உன்னிடத்தில்) அடியேன் வைத்திருக்கிற
அன்பு–அன்பானது
என் தன் அளவு அன்று–என்னளவில் அடங்கி நிற்பதன்று.

மாலே
சர்வாதிகனே

நெடியானே
அபரிச்சேத்யனானவனே

விண்ணவர்க்கு மேலா வியன் துழாய்க் கண்ணியனே-
நித்ய ஸூரிகளுக்கு அவ்வருகாய்
ஐஸ்வர்ய ஸூ சகமான திருத் துழாய் மாலையை
உடையையாய்

மேலாய் விளவின் காய் கன்றினால் வீழ்த்தவனே
பண்டு கன்றாலே விளங்காயை வீழ விட்டவனே

கண்ணனே

என்தன் அளவன்றால் யானுடைய வன்பு –
என் ஆஸ்ரயத்தின் அளவன்று
உன் பக்கல் ஸ்நேஹம்
இத்தை யகஞ்சுரிப் படுத்த வேணும்

(விபுவான ஆத்மாவின் தர்ம பூத ஞானத்தையும் விஞ்சிற்று)

(பிரார்த்தனை அவ்யக்தம் -பிரார்த்தனா கர்ப்ப பிரபத்தி
தேவரீர் அடியேனுக்கு உபாயமாக இருக்க வேண்டும் -திருமந்திரம் ஓம் நமோ நாராயணுக்காக -மட்டுமே உள்ளது
பிரார்த்தனாய சதுர்த்தி போல் இங்கும்)

ஆல்-ஆச்சர்யம் –

(கொள் கொம்பு மூடப் படர்ந்தது போலே என்னுடைய அன்பானது என் ஸ்வரூபத்தையும் விஞ்சி பெருகி
தளர்ச்சியை யுண்டாக்கி உன்னை அனுபவிக்க ஒட்டாமல் தடுக்கிறதே
அவ் வன்பை அடியேன் பொறுக்கும் அளவு சுருக்கி அருள வேண்டும் -என்கிறார் –
அதனில் பெரிய என் அவா அறச் சூழ்ந்தாயே -10-10-10-
கண்ணாவான் என்றும் மண்ணோர் விண்ணோர்க்கு -1-8-3-
விளவின் காய் கன்றினால் வீழ்த்தவனே கண்ணனே -என்றும் அந்வயம் கொள்ளலாம்
தம்மை விஷயீ கரித்து அருளிய நீர்மைக்கு ஆறு விளிகள்-ஆறும் பரத்வமாகவும் ஸுலப்யமாகவும் கொண்டு வியாக்யானம் –
மாலே -நெடியோனே -கண்ணனே -விண்ணோர்க்கு மேலா – வியன் துழாய் கண்ணியனே -மேலால் விளவின் காய் குன்றினால் வீழ்த்தவனே -என்தன் அளவன்றால் யானுடைய வன்பு -என்பதை ஒவ்வொன்றிலும் சேர்க்க வேண்டும்

இமையோர் தமக்கும் நெஞ்சால் நினைப்பரிதால் வெண்ணெய் ஊண் என்னும் ஈனச் சொல்லே -திரு விருத்தம் -98-
ரக்ஷணத்துக்கு அசாதாரண தனி மாலை சாத்திக் கொண்டு இருப்பானே
காலாழும் நெஞ்சு அழியும் கண் சுழலும் -பெரிய திருவந்தாதி -34-
சித்தமும் செவ்வை நில்லாது–பத்திமைக்கு அன்பு யுடையனாவதே பணியாய் எந்தாய் -திருக்குறும் தாண்டகம் -10-

ஆக அன்பே தகளியாக -என்று தொடங்கி
மேன் மேலாகப் பெருகி வந்த அன்பை அளவுபடுத்தித் தந்து
அனுபவிப்பிக்க அருள வேண்டும் என்ற பிரார்த்தனை யுடன் தலைக் கட்டி அருளுகிறார் -)

————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பூதத் ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ பூதத் ஆழ்வார் அருளிய இரண்டாம் திருவந்தாதி -31-40–பெரிய வாச்சான் பிள்ளை அருளிச் செய்த வியாக்யானம் –

September 12, 2013

தன்னையே வணங்கும்படி பண்ணினவனையும்-
வணங்குகைக்கு ஈடான காலத்தையும் கொண்டாடுகிறார்

(அர்ச்சனைக்குப் பலம் தர்சனம் என்று -பலத்தாலேயே பலத்தைப் பெற்று மகிழலாம் -நன்றி செலுத்தவே பூக்களைக் கொண்டு அர்ச்சித்து —

பெரிய உபகாரகங்கள் செய்தார்
அதுக்கு பிரானே என்று கொண்டாடி
பூக்களைக் கொண்டு அர்ச்சித்து திருவடி வணங்கி
திவ்ய மங்கள விகிரஹம் உகப்புடன் சேவிக்கப் பெறலாம் -இப்படி நான்கும் இதில் ஸ்வயம் பிரயோஜனம் -ஸ்ரம ஸாத்யம் அல்லவே

தன்னையே வணங்கும் படி செய்து அருளியதும் மஹா உபகாரம் தானே சென்னாள் –அந்நாள் உன பாதம் பிடிக்கும் நாளே )-)

பிரான் என்று நாளும் பெரும் புலரி என்றும்
குரா நற் செழும் போது கொண்டு -வராகத்
தணி யுருவன் பாதம் பணியுமவர் கண்டீர்
மணி யுருவம் காண்பார் மகிழ்ந்து—31–

பதவுரை

பிரான் என்றும்–‘மஹோபகாரங்கள் பண்ணினவனே!’
பெரு புலரி என்றும்–‘இன்றே நல் விடிவு’ என்றும் (கொண்டாடிக் கொண்டு)-புலர்தல் -விடிவு –
நாளும்–நாள்தோறும்
நல்குரா–நல்ல மணம் மிக்க
செழு–அழகிய
போது கொண்டு–புஷ்பங்களைக் கொண்டு,
வராகத்து அணி உருவன் பாதம்–அழகிய வராஹ வுருக் கொண்ட பெருமானுடைய திருவடிகளை
பணியுமவர் கண்டீர்–வணங்குபவர்களே
மணி உருவம்–(அப்பெருமானுடைய) திவ்ய மங்கள விக்ரஹத்தை
மகிழ்ந்து காண்பர்–ஸேவித்து ஆநந்திக்கப் பெறுவர்கள்.

நாளும் பிரான் என்றும் –
கை கழிந்து போன என்னை தன் பக்கலிலே-ஆபிமுக்யம் பண்ணுவித்து
ருசியை பிறப்பித்த-உபகாரகன் என்றும் –

பெரும் புலரி என்றும் குராநற் செழும் போது கொண்டு –
குராவினுடைய நன்றாய் செவ்வியை உடைத்தான-பூவினைக் கொண்டு

வராகத் தணி யுருவன் பாதம் பணியுமவர் கண்டீர் –
இன்ன புஷ்பம் கொண்டு என்னை ஆஸ்ரயிக்க-வேணும் என்று இராதே
நாட்டில் புஷ்பத்துக்கு சஜாதீயமான வடிவை உடையவன்-திருவடிகளை பணியுமவர்கள்

மகிழ்ந்து -மணி யுருவம் காண்பார் –
பலத்துக்கு பலம் இறே-ஸூ ஸூகம் கர்த்துமவ்யயம் -என்கிறபடியே-
சாதன தசையிலே இனிதாய் இருக்கை-

புலரி என்று
நாளாய் பெரும் புலரி என்று கொண்டாட்டம் –

(ஸூ ப்ரபாதா ச மே நிஸா -ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-17-3-எனக்கு இன்று இரவு நன்றாக விடிந்தது
காட்டில் உள்ள குரா மலரைக் கொண்டே அர்ச்சிக்கலாம் படி ஸ்ரீ வராஹ உருவைக் கொண்டான்
ஸூ ஸூகம் கர்த்தும் அவ்யயம் -ஸ்ரீ கீதை -9-2- சாதன தசையோடே ஸாத்ய தசையோடே வாசி யற இனிதாய் இருக்குமே -பலத்துக்கு பலமாகுமே -)

————————————————————————–

இவ் விஷயத்தில் நீர் செய்தது என் என்னில்-மநோ வாக் காயங்கள் அங்கே
பிரவணம் ஆயிற்று என்கிறார்

(முடியானே கரணங்கள் போல் – ஒவ்வொன்றும் மற்றவற்றை ஆசைப்பட்டன- 1-சிந்தை -2-மற்றும் -வாக்கு -ஆகம் -சரீரம்-மூன்றுக்கும் தனித்தனியாக மகிழ்ந்தது ஸப்த பிரயோகம் -சிந்தை மகிழ்ந்தது வாக்கு மகிழ்ந்தது -உடல் காயம் மகிழ்வது எப்படி என்னில் -ஆத்மா தானே மகிழும் -பகவத் விஷயத்தில் எல்லாம் பொருந்தும்
ஞான பிரசரம் மனம்-வாக்கு பாட பாட ஞானம் அது வழியாகப் போகுமே -உடல் மயிர் கூச்செரித்து -நடுங்கி கை கால் தள்ளாடி -கால் ஆளும் நெஞ்சு அழியும் கண் சுழலுமே )

மகிழ்ந்தது சிந்தை திருமாலே மற்றும்
மகிழ்ந்தது உன் பாதமே போற்றி -மகிழ்ந்தது
அழலாழி சங்கமவை பாடியாடும்
தொழிலாகம் சூழ்ந்து துணிந்து—-32–

பதவுரை

திருமாலே!–லக்ஷ்மீபதியே!
சிந்தை–என் நெஞ்சமானது
மகிழ்ந்தது–(உன்னைச் சிந்தித்து அதனாலே) ஆநந்த முற்றது;
மற்றும்–நெஞ்சுக்கு அடுத்ததான வாக்கும்
உன் பாதமே போற்றி–உன் திருவடிகளையே துதித்து
மகிழ்ந்தது–ஆநந்திக்கப் பெற்றது;
ஆகம்–என்னுடைய தேஹமானது
அழல்–எதிரிகளின் மீது நெருப்பை உமிழ்கின்ற
ஆழி–திருவாழியையும்
சங்கம்–ஸ்ரீபாஞ்ச ஜந்யத்தையும்
அவை–மற்றுமுள்ள திவ்யா யுதங்களையும்
பாடி ஆடும்–கொண்டாடிப் பாடி ஆடுகையாகிற
தொழில்–வியாபாரத்திலே
சூழ்ந்து–பொருந்தி
துணிந்து–இதுவே நமக்குக் காரியமென்று துணிவு கொண்டு
மகிழ்ந்தது–களிக்கப் பெற்றது.

திருமாலே சிந்தை சூழ்ந்து துணிந்து நின் பாதமே போற்றி -மகிழ்ந்தது
என்னுடைய மனஸ் தத்வம் மநோ ரதித்து-அத்யவசித்து
ஸ்ரீயபதி யானவனுடைய திருவடிகளைப் போற்றி மகிழ்ந்தது

(சிந்தை சூழ்ந்து ஆசைப்பட்டு -துணிந்து உறுதியாக -மனமார போற்றி வாக்கின் வியாபாரம் செய்து மகிழ்ந்தது)

மற்றும்
என்றது வாக்கும் என்றபடி

மகிழ்ந்தது அழலாழி சங்கமவை பாடி
மிகவும் பிரதி பஷத்திலே அக்நி உமிழா நின்றுள்ள-திரு ஆழியையும்
ஸ்ரீ பாஞ்ச ஜன்யதையும் பாடி மகிழ்ந்தது

தொழிலாகம் சூழ்ந்து துணிந்து
ஆகம் ஆடுகை யாகிற தொழிலிலே மகிழ்ந்தது

மகிழ்கையே தொழிலாயிற்று-(எனவே மூன்று தடவை –
உபாயம் அவனே -அறிந்து கைங்கர்யமாக செய்தாலே மகிழ்ச்சி தானே கிட்டும் )

(முடியானே -3-8- திருவாய் மொழியிலே ஆழ்வாரின் கரணங்கள் பட்ட பாட்டைப் படுகின்றன இதில் இவ்வாழ்வாரின் கரணங்கள்
மநோ பூர்வக வாக் உத்தர -உன் பாதமே போற்றி -சிந்தைக்கும் சேரும் -ஞான ப்ரஸுர த்வாரமாய் இருக்கையாலே
மகிழ்ச்சியின் காரணமான மயிர்க்கூச்சு எறிவதால் உடலுக்கும் அது பொருந்தும் –
ஆகம் பாடி யாடும் -சரீரம் ஆடுவதும் பாடுவதும் தொழிலாகக் கொண்டு உள்ளது)

————————————————————————-

மகிழ்ந்த மாத்ரமேயோ–வேறொரு இடத்துக்கு ஆகாத படி யாயிற்று -என்கிறார்

(இதிலும் முக்கரணங்கள் -மகிழ்ந்தது கீழ் -துணிந்தது இங்கு
வறட்டு ஞானத்தால் அத்யாவசியம் -ரிஷிகள்
ஞானம் முதிர்ந்து பக்தியாய் இனிமையால் துணிந்தது -அனுபவத்தாலேயே -மகிழ்ச்சியாலேயே வந்த துணிவு ஆழ்வார்கள் பரம் -)

துணிந்தது சிந்தை துழாய் அலங்கல் அங்க
மணிந்தவன் பேருள்ளத்துப் பலகால் -பணிந்ததுவும்
வேய் பிறங்கு சாரல் விரல் வேங்கடவனையே
வாய் திறங்கள் சொல்லும் வகை—33–

பதவுரை

சிந்தை–என் மனமானது
துழாய் அலங்கல் அணிந்தவன் பேர்–திருத்துழாய் மாலையை அணிந்துள்ள பெருமானுடைய திருநாமங்களை
பல்கால்–பலமுறை
உள்ளத்து–நினைப்பதில்
துணிந்தது–த்ருடமாக அத்யவஸாயங் கொண்டது;
அங்கமும் (பல் கால்)–எனது உடலும் எப்போதும்
பணிந்தது–வணங்குவதாயிரா நின்றது;
வாயும்–என் வாக்கும்
வேய் பிறங்குசாரல்–மூங்கில் மிக்கிருக்குந் தாழ்வாரையையுடைய
விரல் வேங்கடவனை–திருமலையிலெழுந்தருளியிருக்கிற மிடுக்குடைய பெருமானது
திறங்களே-தன்மைகளையே
(பல்கால்)-எப்போதும்–
சொல்லும் வகை–சொல்லுகிற விதத்திலே
(துணிந்தது)–துணிவு கொண்டதாயிற்று.

துழாய் அலங்கல் அங்க மணிந்தவன் பேருள்ளத்துப் பலகால் துணிந்தது
திருத் துழாய் மாலையை திரு மேனியிலே அணிந்தவனுடைய
பேரைப் பல காலும் உள்ளுகையிலே-சிந்தை துணிந்தது –

அங்கம் -பணிந்ததுவும் வேய் பிறங்கு சாரல் விரல் வேங்கடவனையே –
சரீரம் பணிந்ததுவும் திருமலையிலே நிற்கிற சர்வேஸ்வரனையே

வாய் திறங்கள் சொல்லும் வகை துணிந்து –
வாக்கானது அவனுடைய திறங்களை-சொல்லுகையிலே துணிந்தது

(உள்ளத்து என்றது உள்ளுகை என்றும் மனத்திலுள்ள மநோ ரதம் என்றுமாம்
வேங்கடவனையே -ஏவ காரம் அத்யவசாயத்தைக் காட்டும்
வாக்கானது அவனுடைய ஸத்யத்வ ஞானத்வாதி ஸ்வரூப நிரூபிக்க குணங்களையும் –
ஸுசீல்ய வாத்சல்யாதி நிரூபித்த ஸ்வரூப விசேஷணமான குணங்களையும் சொல்லும் வகைகளிலே உறுதி பூண்டது –
துணிந்தது என்னும் சொல் சிந்தைக்கும் வாக்குக்கும் கூட்டிக் கொள்ள வேண்டும் -)

————————————————————————–

உன் சௌந்தர்யத்துக்கு தோற்று-அடிமைப்படும்படி நீயே முன்னே-
கிருஷி பண்ணினாய் என்கிறது

(ஈஸ்வரனுடைய நிர்ஹேதுக கடாக்ஷம் தானே என் பாக்யம் -தானும் அறியாதே சாஸ்திரமும் சம்மதியாதே – அவன் நினைவாலே –
ஸூஹ்ருத தேவர் நம் பெருமாளே தானே -அவரையே என் பாக்யம்
விதி வாய்க்கின்றது காப்பார் யார் -மாற்ற முடியாத ஓன்று தானே இது த-அதுவே அவனது நிர்ஹேதுக கடாஷம் -கிருபா விசேஷம் –
அவனது கிருஷி பலனாகவே இவை பெறப்பெற்றேன்-அன்பே தகளி -தொடங்கி இதில் மிக வாய்ந்த அன்பாக்கி ஏத்தி அடிமைப் பட்டேன் -ஆதாரம் பெறுக வைத்த அழகன் அன்றோ )

வகையால் அவனி இரந்து அளந்தாய் பாதம்
புகையால் நறு மலரால் முன்னே -மிக வாய்ந்த
அன்பாக்கி ஏத்தி அடிமைப் பட்டேன் உனக்கு
என் பாக்கியத்தால் இனி—–34–

பதவுரை

முன்னே–முற் காலத்திலே
வகையால்–உபாயத்தினால்
அவனி–பூமியை
இரத்து–(மாவலி பக்கல்) யாசித்து
அளந்தாய்–அளந்து கொண்ட வுன்னுடைய
பாதம் புகையால்–திருவடிகளை தூபங் கொண்டும்
நறுமலரால்–நல்ல பரிமளமுள்ள புஷ்பங்களைக் கொண்டும்
மிக வாய்ந்த அன்பு ஆக்கி–மிகுதியாக (நன்றாக)ப் பொருந்தின ப்ரீதியுடனே
ஏத்தி–துதித்து
இனி–மேலுள்ள காலமெல்லாம்
என் பாக்கியத்தால்–நீ என் மேல் பண்ணின விசேஷ கடாக்ஷமாகிற பாக்யத்தாலே
உனக்கு அடிமைப் பட்டேன்–உனக்குத் தொண்டனாய் விட்டேன்.

வகையால் அவனி இரந்து அளந்தாய் பாதம் –
ராவணனோபாதி வத்யனாய் இருக்க-
மகாபலியும் -இவன் பக்கல்-ஔதார்யம் குணம் கிடைக்கையாலே-
அவனும் தன்னதாக்கி தருவனாவான் –
நாமும் பூமியை அவனதாக்கிக் கொள்வோம்-ஆஸ்ரயித்த இந்த்ரனும் தன் கார்யம் பெறுவான்
என்கிற வகைகளாலே அவனி இரந்து அளந்த உன் திருவடிகளை

(வகையால்–உபாயத்தினால்-வடிவு அழகு -முக்த ஜல்பிதம் -மநோ ஹரமான திவ்ய சேஷ்டிதம் -தொடக்கமான பிரகாரங்களாலே -என்பர் அப்பிள்ளை)

புகையால் நறு மலரால் –
உன் திருவடிகளை புகையால் நறு மலரால்–மிக வாய்ந்த அன்பாக்கி ஏத்தி அடிமைப் பட்டேன் –
புஷ்பாதி உபகரணங்களைக் கொண்டு-மிக்க அன்பை உடையேனாய்
சௌந்தர்யத்துக்கு தோற்று அடிமைப் பட்டேன்-இனி என் பாக்கியத்தால்
இப்போது (உனது கிருபை என் மேல் வெள்ளம் இட்டுப் பாய்கையாலே)
என்னுடைய ஸூக்ருதத்தாலே-இஸ் ஸூ க்ருதத்துக்கு அடியாக
முன்பே பூமியை அளந்து கிருஷி பண்ணி வைத்தாய்-

(முன்னே -முற் காலத்திலேயே என்றும்
உனது ஸந்நிதியில் என்றும்
புகை நறு மலர்களைச் சொன்னது மற்ற ஆராதன உப கரணங்களுக்கும் உப லக்ஷணம்
என் பாக்யத்தால் என்றது -உனது நிர்ஹேதுக கிருபை என் பாக்கள் வெள்ளம் இட்ட தாகிற அத்ருஷ்டத்தால் என்றும்
என்னுடைய அப்ரதிஷேதத்தால் என்றும்
இப்புண்ணியத்துக்கும் மூல காரணம் நீ அவதாராதி முகத்தாலே பட்ட பாடுகளே என்பதையே -வகையால் அவனி இரந்து அளந்தாய் -என்னும் விளியாலே காட்டி அருளுகிறார் -)

————————————————————————–

இவ்விஷயம் கிடக்க-சப்தாதி விஷயங்கள் இனிது என்று இருப்பதே
என்று வெறுக்கிறார் –

இனிது என்பர் காமம் அதனிலு மாற்ற
இனிது என்பர் தண்ணீரும் எந்தாய் -இனிது என்று
காம நீர் வேளாது நின் பெருமை வேட்பரேல்
சேம நீர் ஆகும் சிறிது—–35–

பதவுரை

எந்தாய்–என் ஸ்வாமி யானவனே!
(பாமரர்கள்)
காமம்–ஹேயமான சப்தாதி விஷயங்களை
இனிது என்பர்–போக்யமாகக் கொள்வர்;
(விரக்தர்களுங்கூட)
தண்ணீர் அதனிலும் ஆற்றவும் இனிது என்பர்–அந்த சப்தாதி விஷயங்களிற் காட்டிலும் தண்ணீர் மிகவும் போக்யமென்பர்கள்;
காமம் நீர்–(கீழ்ச் சொல்லப்பட்ட) காமத்தையும் தண்ணீரையும்
இனிது என்று வேளாது–போக்யமாகக் கொண்டு அவற்றிலே ஆசை கொள்ளாமல்
நின் பெருமை சிறிது வேட்பர் ஏல்–உன்னுடைய போக்யதையே கொஞ்சமேனும் விரும்பி மேல் விழுவார்களாயின் (அது)
சேமம் நீர் ஆகும்–(எல்லா நிலைமையிலும்) ரக்ஷகமான தன்மையை யுடையதாகும்

இனிது என்பர் காமம்
காமத்தையும் அழகியது என்பர்

என்பர் -என்கிறதாலே
தமக்கு இதில் அந்வயம் இன்றிக்கே இருக்கிறபடி
காம தந்த்ரம் போமவர்கள் காம தந்த்ரம் இனிது என்று சொல்லுவார்கள் –

அதனிலு மாற்ற இனிது என்பர் தண்ணீரும் –
காமத்திலும் மிக இனிது தண்ணீர் என்று சொல்லா நிற்பார்கள்
விரக்தருக்கும் வேணும் இறே தண்ணீர்
ஆப ஏவ ஹி ஸூ மனஸா-என்கிறபடியே
விரக்தரோடே அவிரக்தரோடு வாசி யற
தண்ணீரில் வந்தால் எல்லாரும் ஸூ மனஸ்ஸூக்களாய் இருப்பர்கள்-

எந்தாய் –
இவருடைய தண்ணீரும் காமமும்-வாசுதேவஸ் சர்வம்-உண்ணும் சோறு -இத்யாதிவத்

இனிது என்று காம நீர் வேளாது நின் பெருமை வேட்பரேல் சேம நீர் ஆகும் –
பாஹ்ய ஹானி அடியாக இறே
அதஸ்மின் தத் புத்தி பண்ணி சப்தாதி விஷயங்களில்
ருசி பிறப்பது –
ஸ்வ பாவத இனிமை இன்றிக்கே இருக்கிலும்
காமத்திலும் தண்ணீரிலும் ஆசைப்படாதே
உன்னுடைய குணங்களில் அல்ப ஆசைப்படுபவர் ஆகில்
ரஷையே ஸ்வ பாவமாம்

புத்தி நாசாத் ப்ரணஸ்யதி-என்கிறபடி
சப்தாதிகளில் ஆசை விநாசத்தை பலிப்பிக்கும்

மித்ர பாவேன -என்று
பகவத் விஷயத்தில் போலியான ஆசை உண்டாகில்
நத்யஜேயம் கதஞ்சன -என்று இருக்குமவன்
எல்லா ஆசையும் உண்டாகிலும் கிடையாது சப்தாதிகள்
ஓர் அடி வர நிற்கில் அவனதேயாம் பகவத் விஷயம்-

(ஆப ஏவ ஹி ஸூ மனச -ஸாஸ்த்ரமும் தண்ணீரில் அனைவரும் அபேக்ஷை யுடையவர்களாயே இருப்பார்கள் –
வாஸூ தேவஸ் ஸர்வமிதி ச மஹாத்மா ஸூ துர்லப -ஸ்ரீ கீதை -7-19-
உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலை -தாரக போஷக போக்யங்கள் -எல்லாமே கண்ணனே
ததேவ ப்ரீதயே பூத்வா புனர் துக்காய ஜாயதே
ததேவ கோபாய யதஸ் ப்ரஸாதய ச ஜாயதே
தஸ்மாத் துக்காத்மகம் நாஸ்தி ந ச கிஞ்சித் ஸூகாத்மகம் –ஸ்ரீ விஷ்ணு புராணம் -2-6-46-47-
ஒரே விஷயமே இன்பமாயும் பின்பு துன்பமாயும் இருக்குமே -எனவே இயற்கையில் துன்பமயமாயும் இன்பமயமாயும் இருப்பது ஒன்றும் இல்லை
ஆத்ம நஸ்து காமாய ஸர்வம் ப்ரியம் பவது -ப்ருஹதாரண்யம் -6-5-6-பகவத் சங்கல்பத்தால் ஏற்படும் இனிமையும் அல்பமாயும் அஸ்திரமாயுமே இருக்கும்
சிறிது வேட்பரேல் -இவற்றில் வைக்கும் ஆசையில் சிறிது உன் பக்கல் வைத்தாலே உஜ்ஜீவனம் ஆகுமே

யா ப்ரீதிர் அவிவேகா நாம் விஷ யேஷ்வநபாயி நீ
த்வாம் அநு ஸ்மரதஸ் சா மே ஹ்ருதயான் மாப சர்ப்பது –ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-20-19-ஸ்ரீ ப்ரஹ்லாதனின் பிரார்த்தனை

த்யாயதோ விஷயாந் பும்ஸஸ் ஸங்கஸ் தேஷூபஜாயதே.—
ஸங்காத் ஸம் ஜாயதே காம-காமாத் க்ரோதோபி ஜாயதே—৷৷2.62৷৷

சப்தம் முதலான ஐந்து புலன்களையும் சிந்திப்பவனாய் -என்னை த்யானிக்காத அதிகாரிக்கு அப்புலன்களில் பற்று வளர்கிறது -அப் பற்றினால் காமம் ஏற்படுகிறது –
விஷயங்களில் பற்று -கொண்டு -சங்கம்-முதிர்ந்த பழுத்த ஆசையே காமம்
இது இல்லாமல் தரிக்காத தசை ஆபன்னன் அடைந்தவன் காமத்தினால் கோபம் பரவலாக உண்டாகிறது

க்ரோதாத்பவதி ஸம்மோஹ ஸம்மோஹாத் ஸ்ம்ருதி விப்ரம—
ஸ்ம்ருதி ப்ரம்ஸாத் புத்தி நாஸோ புத்தி நாஸாத் ப்ரணஸ்யதி—৷৷2.63৷৷

கோபத்தினால் பகுத்து அறிவின்மை உண்டாகிறது –
பகுத்து அறிவின்மையால் நினைவின் அழிவு ஏற்படுகிறது –
நினைவின் அழிவினால் அறிவின் அழிவு உண்டாகிறது –
அறிவின் அழிவினால் சம்சாரத்தில் மூழ்கி அழிகிறான்

சப்தாதி விஷய ப்ராவண்யமே அழிவையே உண்டாக்கும்-படிக்கட்டு காட்டி அருளுகிறார் இந்த இரண்டு ஸ்லோகங்களால்

மித்ர பாவேந ஸம் ப்ராப்தம் ந த்யஜேயம் கதஞ்சன -யுத்த -18-3-

எல்லா ஆசையும் உண்டானாலும் சப்தாதி விஷயங்கள் இவன் விரும்பும் அளவு கிடைக்க மாட்டா
அல்ப ஆசை யுண்டானாலும் பரமபுருஷன் இவனுக்கு கையாளாக நிற்பானே –
இந்த அரிய கருத்தை உள்ளடக்கிய பாசுரம் இது -)

————————————————————————–

பிரமிப்பார் பிரமிக்கிறார் -விஷயங்களிலும் தேவதாந்தரங்களிலும்
நீ இவ் வர்த்தத்தை புத்தி பண்ணி இரு -என்கிறார்

சிறியார் பெருமை சிறிதின் கண் எய்தும்
அறியாரும் தாம் அறியார் ஆவர் -அறியாமை
மண் கொண்டு மண் உண்டு மண் உமிழ்ந்த மாயன் என்று
எண் கொண்டு எண் நெஞ்சே இரு–36–

பதவுரை

சிறியார்–(இயற்கையான மேன்மை சிறிதுமில்லாமல்) அற்பரான ஸம்ஸாரிகளுடைய
பெருமை–(நானே ஈஸ்வரன் என்று அஹங்கரிப்பதால் வருகிற) மேன்மையானது
சிறிதின் கண் எய்தும்–(தமக்குப் பழமையாயுள்ள) தாழ்விலேயே கொண்டு சேர்ப்பிக்கும்;
அறியாரும்–த்யாஜ்ய உபாதேய விவேக ஞானம் இல்லாத =அவிவேகிகளும்
(தங்களை ஸர்வஜ்ஞராக நினைத்திருந்தார்களாகிலும்)
தாம் அறியார் ஆவர்–(நன்மை தீமைகளைத்) தாங்கள் அறியாதவர்களாகவே ஒழிந்திடுவர்;
என் நெஞ்சே–என் மனமே!.
அறியாமை–பிறர் அறியாதபடி
மண் கொண்டு–(மாவலியிடத்தில்) பூமியைப் பெற்றவனாயும்
மண் உண்டு–இந்தப் பூமியை (ப்ரளயத்திலே)திரு வயிற்றில் வைத்தவனாயும்
மண் உமிழ்ந்த–(பிறகு) அந்தப் பூமியை வெளிப் படுத்தினவனாயுமிருக்கிற
மாயன் என்று–ஆச்சர்ய கரனான எம் பெருமான் என்று
எண் கொண்டு–இடைவிடாது கருதி
இரு–(அவனைப் பற்றின நமக்கு ஒரு குறை இல்லை யென்று) நிர்ப் பரனாக இருப்பாயாக.

சிறியார் பெருமை சிறிதின் கண் எய்தும் –
தாங்களே சிறியாராய் இருந்து வைத்து
தங்களைச் சொல்லும் பெருமை ஸ்வரூபத்திலே நிற்கும்

(ஸ்வரூபம் சிறுமை தானே -அதிலேயே கொண்டு சேரும்
சிறுமையின் கண் எய்தும் என்றும்
நரகங்களில்
ஷூத்ர தெய்வங்களைப் பற்றி ஷாத்ர பலன்களையே பெற்று ஒழிவர்)

அறியாரும் தாம் அறியார் ஆவர் –
அவ்விடத்திலே தமக்கு மிடை இல்லை

(தேவதாந்த்ரங்களிலும் விஷயாந்தரங்களிலும் நன்மை தீமை பற்றிய அறிவு இல்லாமல் இருப்பவர் இடம் நமக்கு சம்பந்தம் வேண்டாமே)

அறியாமை மண் கொண்டு மண் உண்டு மண் உமிழ்ந்த மாயன் என்று எண் கொண்டு எண் நெஞ்சே இரு –
நெஞ்சே நீ பெரியார் கோடியிலே இரு
பேராளன் பேரோதும் பெரியோரை -என்னும்படி ஒருவனோ என்கிறது
மாஸூச -என்னும்படியே-

(சிறியராயும் அறியாதாராயும் இல்லாமல்
பெரியவராயும் அறிந்தவனாயுமே இரு என்று உபதேசிக்கிறார்)

(ஈஸ்வரோஹம் அஹம் போகீ சித்தோஹம் பலவான் ஸூகீ
ஆட்யோ அபி ஜநவாநஸ்மி கோ அந்யோ அஸ்தி சத்ருஸோ மயா -ஸ்ரீ கீதை -16-14-15-என்கிறபடி அபிமானித்து இருப்பது –
ப்ரஹ்மாணம் ஸிதி கண்டஞ்ச யாஸ் சான்யா தேவதா ஸ்ம்ருதா
ப்ரதி புத்தாந ஸே வந்தே யஸ்மாத் பரிமிதம் பலம்-சாந்தி பர்வம் -350-86-
திருவுக்கும் திருவாய் இருப்பவன் மாணியாய் இரந்த பேராளன் பேர் ஓதும் பெரியோர் -பெரிய திருமொழி -7-4-4-
மாஸூச என்று தனது நெஞ்சுக்கு பயம் அற்று வாழ வழி காட்டுகிறார் -)

(மண் அளந்து மண் உண்ட உமிழ்ந்த -மூன்றிலும் எல்லாத் தேவதைகளும் உண்டே –

இதனாலேயே -தேவதாந்த்ர சம்பந்தத்துக்கு வழியே இல்லையே என்கிறார்)

————————————————————————–

சரண்யனைப் பற்றி ஆஸ்ரயியாகில்–ஜன்மங்கள் எனக்கு துக்கம்-என்கிறார்

(எமக்கு-பாசுர பதம் -தானே பற்றாமல் போன பிறவிகளில் -இனி சம்சாரிகள் இழவால் துக்கம்)

(சர்வேஸ்வரன் -ஸர்வ சமாஸ்ரயணீயன் -என்று அறிந்தும் இழந்து போகிறார்களே)

இரும் தண் கமலத்து இரு மலரின் உள்ளே
திருந்து திசை மகனைத் தந்தாய் -பொருந்திய நின்
பாதங்கள் ஏத்திப் பணியாவேல் பல் பிறப்பும்
ஏதங்கள் எல்லாம் எமக்கு—-37–

பதவுரை

இரு– அளவில் பெரிய
தண்–குளிர்ந்த
கமலத்து–திரு நாபிக் கமலத்தின்
இரு மலரின் உள்ளே–இரு -பெருமையில் பெரிய -பெருமை பொருந்திய பூவில்
திருந்து–ஸமர்த்தனான
திசைமுகனை–நான்முகக் கடவுளை
தந்தாய்–படைத்தருளின பெருமானே!
பொருந்திய–ஸர்வ லோக சரண்யனாகி எல்லாரோடும் பொருந்தி யிருக்கிற-பிரமனும் பொருந்திய பாதங்கள் -பெருமை -நாம் விலக ஆரானும் பற்றிய நீங்கி விரதம் கொள்வோமே என்று எல்லாரும் பொருந்தும்படி எளியவன் என்கிறார் –
நின்–உன்னுடைய
பாதங்கள்–திருவடிகளை
ஏத்தி–வாயாரத் துதித்து
பணியா ஏல்–வணங்கித் தொழுவதிற்கு உறுப்பாகா விட்டால்
எமக்கு–எங்கட்டு-எங்களுக்கு என்று -சம்சாரிகளுடைய இழவு தங்களாதகாகக் கொள்ளும் ஆழ்வார் -பர துக்க துக்கித்தவம் கொண்டவர்கள் அன்றோ
பல் பிறப்பும் எல்லாம்–பலவகையாகப் பிறக்கின்ற பிறவிகளெல்லாம்
ஏதங்கள்–பயனற்றவையே யாம்

இரும் தண் கமலத்து இரு மலரின் உள்ளே திருந்து திசை மகனைத் தந்தாய் –
பொருந்திய நின் பாதங்கள் ஏத்திப் பணியாவேல்-

ப்ரஹ்மாவுக்கு இருக்கப் பரப்பு போந்து
குளிர்ந்து விலஷணமான பூவின் உள்ளே ஸ்ருஷ்டிக்கவும்-
பிரமித்துப் போய் கேட்டு வரவும் வேண்டாதபடி
தானே சமர்த்தனாக ப்ரஹ்மாவை ஸ்ருஷ்டித்து-
அவன் பொருந்திய உன் திருவடிகளை ஏத்தி
பணியாவாகில்

எமக்கு பல் பிறப்பும் எல்லாம் ஏதங்கள் –
பல ஜன்மங்களையும் நீ பண்ணுவிக்கிறது
ஓன்று அல்லா ஓன்று பகவத் சமாஸ்ரயணத்துக்கு உறுப்பாம் என்று

ஏதங்கள் என்கிறது –
புருஷ பேதங்கள் தோறும்
துக்கங்களும் பேதித்து இறே இருப்பது –
ஸ்ருஷ்டிக்கு பிரயோஜனம் -நீ நினைத்தபடி அன்றாகில்
அப் புருஷர்களுக்கு எல்லாம் உண்டான
துக்கங்கள் எனக்கு ஒருவனுக்கு உண்டாகும்

ப்ரஹ்மாவை ஸ்ருஷ்டித்தாய் என்கிற இத்தால்
(ஸர்வ )சரண்யன் என்கிறது
யோ ப்ரஹ்மாநாம் விததாதி பூர்வம்
முமுஷூர் வை சரணம் அஹம் ப்ரபத்யே
என்கிறபடியே-

(புஷ்கர பர்ணே ஸம்பவத் -நாபியில் நான்முகனைப் படைத்தான்
யோ ப்ரஹ்மாணம் விததாதி பூர்வம் முமுஷுர் வை சரணம் அஹம் ப்ரபத்யே -ஸ்வேதர -6-18-
பர துக்க துக்கித்தவமே கருணையில் மேல் எல்லை
நீ சம்சாரிகளை பெற முயலும் அவற்றை அறிந்தும் சம்சாரிகள் உன்னை இழந்து உழல்வதே என்று வருந்துகிறார் -)

(ஆஸ்ரயித்தால் கிருபைக்கு விஷயம் ஆவோம்
ஆஸ்ரயிக்கா விடில் கர்மத்துக்கே விஷயம் ஆவோமே)

————————————————————————–

எமக்கு என்று இத்யாதி –அர்த்தத்தை புருஷார்த்தமாக புத்தி பண்ணி இராதே
ஸ்ரீயபதியை ஆஸ்ரயித்து இரு என்கிறார்-

(செல்வத்தின் மேல் உள்ள ப்ராவண்யம் செல்வ நாராயணன் -திரு நாராயணன் -மேல் வைத்து உஜ்ஜீவிக்கலாமே)

எமக்கு என்று இரு நிதியம் ஏமாந்து இராதே
தமக்கென்றும் சார்வம் அறிந்து -நமக்கென்றும்
மாதவனே என்னும் மனம் படைத்தது மற்றவன் பேர்
ஓதுவதே நாவினால் ஓத்து—38–

பதவுரை

இரு நிதியம்–(இப் பொருளை எப்போது நாம் கொள்ளையடிக்கப் போகிறோம்’ என்று
அயலார் எதிர்பார்த்திருப்பதற்குக் காரணமான) பெருஞ்செல்வத்தை
எமக்கு என்று–தங்களுடையதாக நினைத்து
ஏமாந்து இராதே–மனச் செருக்குக் கொண்டிராமல்
தமக்கு என்றும் சார்வம் அறிந்து–தங்களுக்கு எப்போதும் ரக்ஷகமாயிருக்கக் கூடிய உபாயத்தை யறிந்து
நமக்கு என்றும் மாதவனே என்னும் மனம் படைத்து–‘நமக்கு எக் காலத்திலும் எம்பெருமானே சரணம்’ என்று
துணிந்திருக்கும் நெஞ்சை யுடையராய்
மற்று–அதற்குப் பின்பு
அவன் பேர்–அத் திருமாலினது திரு நாமங்களை
ஓதுவதே–ஸங்கீர்த்தநம் பண்ணுவதே
நாவினால் ஒத்து–நாவுக்கு ஓதுவதற்கு உரிய விஷயம்.

எமக்கு என்று இரு நிதியம் ஏமாந்து இராதே
கழஞ்சு பொன் உண்டு என்று அறிந்து
சர்வேஸ்வரனைப் பற்றி
நிர்ப் பரராய் இருப்பாரைப் போலே இராதே

(விட வேண்டியத்தைச் சொல்லி மேல் பற்ற வேண்டியத்தை
உபாயமாயும் உபேயமாகவும் தாரக போஷாக போக்யமாகப் பற்ற வேண்டியவன் -பற்றி அருளிச் செய்கிறார்)

தமக்கென்றும் சார்வம் அறிந்து –
தமக்கு நித்தியமான ஆஸ்ரயம் என்று அறிந்து

நமக்கென்றும் மாதவனே என்னும் மனம் படைத்தது மற்றவன் பேர் ஓதுவதே நாவினால் ஓத்து-
நமக்கு என்றும் அனுபாவ்யம் ஸ்ரீயபதி என்னும்
நெஞ்சைப் படைத்தது
அம் மிதுனத்துக்கு வாசகமான
சப்தத்தை சொல்லுகை வாக் இந்த்ரியத்துக்கு ஒத்து ஆவது-

(கொள் என்று கிளர்ந்து எழுந்த பெரும் செல்வம் நெருப்பு -திருவாய் -4-9-4-
ந பிபேதி குதஸ் சந -தைத்ரியம் -பரம புருஷனைப் பற்றி இருப்பவன் எத்தைக் கண்டும் பயப்பட மாட்டான்
சேதனர் அனைவர்க்கும் அறிந்த நிலையோடு அறியாத நிலையோடு வாசி இல்லாமல் நிரந்தரமான பற்றுக் கொம்பு தானே அவன்
எல்லாக் காலத்திலும் அவனே தாரக போஷக போக்யம் -உபாயம் உபேயம் என்ற துணிந்த மனத்துடன்
மாதவன் ஸ்ரீ தரன் போன்ற இம் மிதுனத்தின் பெயரைச் சொல்வதே நாவுக்கு ஓதத் தக்கது -)

(புருஷார்த்தமாக அவளும் ப்ராப்யமாக அவனும் ப்ராபகமாக மிதுனமும்)

————————————————————————–

இந்த்ராதிகளையும் ஆஸ்ரயணீயாராகச் சொல்லா நிற்கச் செய்தே-நீரும் பிரமாணிகராய் இருந்து-
லஷ்மி பதியே சமாஸ்ரயணீயன் என்று சொல்லுகிறபடி-எங்கனே என்னில்

உங்களுக்கு அபிதான வ்ருத்தியேயாய்-(சொல்லுக்கு மேம்போன பொருள் )தாத்பர்ய ஞானம் இல்லாமையாலே சொல்லுகிறிகோள்-
தாத்பர்ய ஞானம் உண்டாகில்-அவர்களைச் சொல்லுகிறது விபூதித்வேந –
விபூதிமானாய் சமாஸ்ரயணீயனாய் இருப்பான்-லஷ்மி பதியே என்று இருங்கோள் என்கிறார்-

(உயிரான பாசுரம் -மேம் பொருள் பாசுரம் போல்)

ஒத்தின் பொருள் முடிவும் இத்தனையே உத்தமன் பேர்
ஏத்தும் திறம் அறிமின் ஏழைகாள் -ஒத்ததனை
வல்லீரேல் நன்றதனை மாட்டீரேல் மாதவன் பேர்
சொல்லுவதே ஒத்தின் சுருக்கு —39–

பதவுரை

ஏழைகாள்–‘கண்ட கண்ட தேவதைகளின் கால்களிலெல்லாம் விழுகிற அறிவு கேடர்களே!,
ஓத்து அதனை–வேதமோதுவதாகிற காரியத்தை(ச் செய்ய)
வல்லீர் ஏல்–ஸமர்த்தர்களா யிருப்பீர்களாகில்
நன்று–அப்படியே வேதமோதுவது நல்லது;
அதனை மாட்டீர் ஏல்–அது செய்ய சக்தி யற்றவர்களாகில்
மாதவன் பேர்–திருமாலின் திருநாமங்களை
சொல்லுவதே–உச்சரிப்பதே
ஓத்தின் சுருக்கு–ஸகல வேதங்களின் ஸாரமாகும்;
ஓத்தின் பொருள் முடிவும் இத்தனையே–வேதத்தினுடைய அர்த்தங்களில் நிஷ்கர்ஷிக்கப்படடதும் இவ்வளவே; (ஆகையாலே)
உத்தமன்–புருஷோத்தமனான எம்பெருமானுடைய
பேர்–திரு நாமங்களைக் கொண்டு
ஏத்தும் திறம்–(அவனைத்) துதிக்கும் வகையை
அறிமின்–தெரிந்து கொள்ளுங்கள்.

ஒத்தின் பொருள் முடிவும் இத்தனையே –
வேதார்த்தின் முடிவும் இதுவே
அது ஏது என்னில்

உத்தமன் பேர் ஏத்தும் திறம் –
எல்லாத்துக்கும் பிரகாரியாய் இருந்துள்ளவனுடைய
திரு நாமத்தை யேத்துகை

அறிமின் ஏழைகாள் -ஒத்ததனை வல்லீரேல் –
சாங்க அத்யயனத்தைப் பண்ணி
வேதைஸ் ச சர்வை ரஹமேவ வேத்ய -என்கிறபடியே
வல்லீர்கள் ஆகில் அறியுங்கோள்

நன்றதனை மாட்டீரேல் –
அப்படி அறிய மாட்டிகோள் ஆகில்

மாதவன் பேர் சொல்லுவதே ஒத்தின் சுருக்கு –
ஒத்தினுடைய சங்கரஹம்
லஷ்மி பதியினுடைய திரு நாமத்தை சொல்லுகை

அவன் பிரசாதம் அடியாக பிறந்த ஞானம் உடையார்
சொன்னத்தை அர்த்தம் என்று இருங்கோள் –

(அவரவர் விதி வழி அடைய நின்றனர் -அந்தர்யாமியாக இவன் உண்டே -நின்று பலன் கொடுக்க- நியமிக்கிறவன் புருஷோத்தமன் தானே)

(மாநஸமே சரணாகதி -சொல்லுவதே -வாய் வார்த்தையாக -புத்தியில் படாமல் சொன்னாலும் -அதுவும் உனது ப்ரஸாதத்தாலே)

(வேத அக்ஷராணி யா வந்தி படிதாநி த்விஜாதிபி
தா வந்தி ஹரி நாமாநி கீர்த்திதாநி ந ஸம்சய
வேதைஸ் ச சர்வைர் அஹமேவ வேத்ய -15-15-
திருமாலின் பெயரைச் சொல்வதே வேத சாரம்

திருமந்த்ரத்தைச் சொல்லியும்
‘த்வயத்தைச் சொல்லியும் ஆஸ்ரியிப்பார்
வல்லீரேல் -அர்த்த ஞானமும் அனுஷ்டானமும் துர்லபம்
கர்ம ஞான பக்திகளிலே இழிந்தவருக்கு விரோதியைப் போக்கி அவற்றைத் தலைக்கட்டிக் கொடுக்கும் –
திருமந்திரம் பக்திக்கு அங்கம்
இதில் பிரபத்தி பண்ணும் அதிகாரிகள் மூவர் -அஞ்ஞரும் ஞானாதிகரும் பக்தி பரவசரும் –
அஞ்ஞானத்தாலே ப்ரபன்னர் அஸ்மதாதிகள்
ஞானாதிக்யத்தாலே ப்ரபன்னர் பூர்வாச்சார்யர்கள்
பக்தி பாரவஸ்யத்தாலே ப்ரபன்னர் ஆழ்வார்கள்
தஸ்மாத் ந்யாஸம் ஏஷாம் தபஸாம் அதிரிக்தம் ஆஹு – )

————————————————————————–

நீங்கள் நிற்கிற நிலை பொல்லாது-கடுக ஸ்ரீயபதியினுடைய திருவடிகளை நினையுங்கோள்-

சுருக்காக வாங்கிச் சுலாவி நின்று ஐயார்
நெருக்கா முன் நீர் நினைமின் கண்டீர் -திருப் பொலிந்த
ஆகத்தான் பாதம் அறிந்தும் அறியாத
போகத்தால் இல்லை பொருள்—-40–

பதவுரை

ஐயார்–கோழையானது
சுருக்காக வாங்கி–சரீரத்தைச் சுருங்க வலித்து
சுலாவி நின்று–உடம்பு முழுவதும் சூழ்ந்து கொண்டு நின்று
நெருக்காமுன்–(உயிர் போகும் போது கழுத்தளவிலே வந்து கூடி) நெருக்குவதற்கு முன்பே,
திரு பொலிந்த ஆகத்தான் பாதம்–பிராட்டியாலே விளங்குகின்ற திரு மார்பை யுடைய பெருமானுடைய திருவடிகளை
நீர் நினைமின்–நீங்கள் சிந்தியுங்கோள்:
அறிந்தும்–பகவத் விஷயத்தை அறிந்தவர்களாயிருந்தும்
அறியாத–அறியாதவர்களாகவே உங்களைச் செய்ய வல்ல
போகத்தால்–சப்தாதி விஷயங்களால்
பொருள் இல்லை–ஒரு ப்ரயோஜனமுமில்லை.

(ஞானத்தை அனுஷ்டான பர்யந்தமாக ஆக்க போகம் தடுக்கும் -ஆகவே பாதம் அறிந்தும் -போகாததால் அறியாத என்கிறார்

நினைமின் -போகாததால் லாபம் இல்லை என்று நினைமின்
சரீரம் ஸ்பஷ்டமாக இருக்கும் போதே நினைமின்)

சுருக்காக வாங்கிச சுலாவி நின்று ஐயார்நெருக்கா முன் நீர் நினைமின் கண்டீர் –
பஞ்சதாவான சரீரத்தை சுருங்க வலித்து
உடம்பு எங்கும் தானே யாம்படி வியாபித்து
ஸ்லேஷ் மாவானது நெருக்குவதுக்கு முன்பே
நினையும் கோள்
அர்த்த சுகம் சுகம் அன்றோ என்னில் –
உத்தேச்யத்தை அறியாதபடி அனர்த்தத்தைப் பண்ணும்

திருப் பொலிந்த ஆகத்தான் பாதம் –
சர்வேஸ்வரனுடைய திருவடிகளை
அறிந்து இருக்கச் செய்தே
அறிந்ததாக ஒட்டாத போகத்தால்

அறிந்தும் அறியாத போகத்தால் இல்லை பொருள்
பொல்லாது என்று இருக்கச் செய்தே கை விடப் போகாத
அர்த்த சுகத்தால் பிரயோஜனம் இல்லை என்றுமாம்

நெருக்கா முன் திருப் பொலிந்த வாகத்தான் பாதம் நீர் நினைமின் கண்டீர் –

நினைமின் என்கிற இது
இரண்டு இடத்திலும் கிடக்கிறது

(நெருக்கா முன் நினைமின்
திருப்பொலிந்த ஆகம் நினைமின்)

(ப்ராண ப்ரயாண ஸமயே கப வாத பித்தைர் கண்டா வரோதந விதவ் ஸ்மரணம் குதஸ்தே -முகுந்தமாலை
ஸ்ரத்தயா தேவோ தேவத்வம் அஸ்நுதே
உத்தம ராஜ கன்யயாஸமே யிவான் அதீவ ராம ஸூ ஷுபே விபு ஸ்ரியா விஷ்ணு ரிவாம ரேஸ்வர-பால -77-99-
வடிவாய் நின் வள மார்பினில் வாழ்கின்ற
திகழ்கின்ற திரு மார்பில் திரு மங்கை தன்னோடும் திகழ்கின்ற திருமாலார்–திருவாய் -10-6-9-
விஷய போகத்தைக் கை விட்டுத் திருப்பொலிந்த ஆகத்தான் பாதத்தை சரண் அடையுங்கோள் என்கிறார் -)

————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பூதத் ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ பூதத் ஆழ்வார் அருளிய இரண்டாம் திருவந்தாதி -11-20–பெரிய வாச்சான் பிள்ளை அருளிச் செய்த வியாக்யானம் –

September 9, 2013

தேவதாந்தரங்களை அனுவர்தித்து பட்ட-அனர்த்தத்தை பரிஹரி என்ன(என்று ஆழ்வார் விண்ணப்பம் கீழே செய்ய )
இப்படி செய்வார் உண்டோ என்னில்-(சக்ரவர்த்தியாக தேவபிரான் நான் நிற்க மற்ற தெய்வம் நாடுவார் உண்டோ என்று அவன் கேட்க )
அவர் (அனைவருமே -தேவர்களும் சம்சாரிகளும் )இப்படி செய்து அன்றோ அனர்த்தப்படுகிறார்

கடை நின்று அமரர் கழல் தொழுது நாளும்
இடை நின்ற வின்பத்தராவர் -புடை நின்ற
நீரோத மேனி நெடுமாலே நின்னடியை
யாரோத வல்லார் அவர்———11-

பதவுரை

(பாழும் ஸம்ஸாரிகளானவர்கள்)
அமரக் கடை நின்று–தேவதாந்தரங்களின் வாசல்களைப் பற்றி நின்று-அமரர்களும் தேவரீர் கடையிலே நின்று பிரயோஜநாந்தரங்களைப் பெற்றுப் போகிறார்களே
நாளும் கழல் தொழுது–நெடுங்காலம் வரையில் (அவர்களுடைய) காலில் விழுந்து
(பரமாநந்தம் பெற மாட்டாமல்)-தேவதாந்தரங்கள் உனது திருவடிகளைப் பற்றி -அதன் பிரபாவம் முழுவதும் அறியாமலேயே -ப்ரயோஜனாந்தரங்களைப் பெற்றுப் போவார்கள் என்றுமாம் -கடலுக்குள் உள்ள திமிங்கலம் போல் அவர்கள் ஆளவந்தார் –
இடைநின்ற இன்பத்தர் ஆவர்–நடுவே கிடக்கிற (ஸ்வர்க்கம் முதலிய) சுகத்தைப் பெற்றொழிவர்கள்;
புடைநின்ற நீர் ஓதம் மேனி நெடுமாலே–(இவ்வுலகைச்) சூழ்ந்து கிடக்கிற கடல் போன்ற திருமேனியையுடைய ஸர்வேஸ்வரனே!,-இரண்டாலும் திருமேனி -ஸ்வரூபம் இரண்டையும் சொன்னபடி
நின் அடியை–உனது திருவடிகளை
ஓதவல்லாரவர் ஆர்–அநுஸந்திக்கவல்லார் ஆரேனு முண்டோ? (யாருமில்லையே!)

வியாக்யானம் –
கடை நின்று அமரர் கழல் தொழுது நாளும் இடை நின்ற வின்பத்தராவர் –
தேவதாந்தரங்கள் வாசலிலே நின்று
அவர்களை நாள் தோறும் தொழுது
மத்யம புருஷார்த்தமான சுகத்தைப் பெறுவர் –

புடை நின்ற நீரோத மேனி நெடுமாலே நின்னடியை யாரோத வல்லார் அவர் –
எங்கும் புக்க நின்ற நீரை உடைத்தான கடலிலே நிறத்தை உடைய சர்வேஸ்வரனே
ப்ராப்யமான உன்னுடைய திருவடிகளை அறிந்து (ப்ராபகமாகவும் அறிந்து )ஆஸ்ரயிக்க வல்லார் ஆர்-

(நெடுமாலே-ஸர்வேஸ்வரனே இங்கு -அப்பிள்ளை சர்வாதிகனே என்றும் அபரிச்சேத்யன் என்றும் அருளிச் செய்வார்)

(ந ப்ரஹ்மா ந ஈஸாநா -ஸ்ருதி அர்த்தம் அறியாமல் என்றுமே சாகாது இருப்பவர்கள் என்று தப்பாக நினைக்கிறார்கள் –
பையனை அறுத்துத் தா போல் ஆராதனைக்கு அரியவர்கள் அன்றோ இவர்கள் –
பத்ரம் புஷ்பாம் பலம் தோயம் –ஸ்ரீ கீதை -9-26- என்னுமவனைப் போல் அல்லரே
இடை நின்ற இன்பம் இங்கும் இல்லாமல் அங்கும் இல்லாமல் திரிசங்கு சுவர்க்கம் போல் கால்கட்டாகவே இருக்குமே
கடிக்கமலத்துள் இருந்தும் காண்கிலான் கண்ணன் அடிக்கமலம் தன்னை அயன் -முதல் திருவந்தாதி -56
ப்ரஹ்மாவால் இழந்தே போவது
உன்னை ஆஸ்ரயித்து உஜ்ஜீவிக்கவும் வழி இல்லாமல்
கழுத்துக்கு கட்டியாயே இருக்குமே
வாஸூ தேவஸ் ஸர்வமிதி ஸ மஹாத்மா ஸூ துர்லப-7-19-
உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலை எல்லாமே கண்ணன் என்னும் மஹாத்மா கிடைத்தற்கு அரியவர் அன்றோ
கற்பக வ்ருக்ஷத்திடம் கௌபீந பிக்ஷை கேட்டுப் பெறுவாரைப் போலே அன்றோ இவர்கள்
நின்னை விண்ணோர் தாள் நிலம் தோய்ந்து தொழுவர் நின் மூர்த்தி பல் கூற்றில் ஒன்றும் காணலுமாம் கொலோ என்றே வைகல் காலையும் மாலையும் -திரு விருத்தம் -92-)

————————————————————————–

சிறியார் பெரியார் என்னாதே-சர்வேஸ்வரன் திருவடிகளை ஆஸ்ரயியாதார் எவர் –

அவர் இவர் என்று இல்லை அரவணையான் பாதம்
எவர் வணங்கி ஏத்தாதார் எண்ணில்-பவரும்
செழும் கதிரோன் ஒண் மலரோன் கண்ணுதலோன் என்றே
தொழும் தகையார் நாளும் தொடர்ந்து——12-

பதவுரை

எண்ணில்–(எம்பெருமானை ஆஸ்ரயித்து ஸ்வரூப ஸித்தி பெறுகிறவர்கள் ஆரார்?’ என்று) ஆராயுமளவில்
அவர் இவர் என்று இல்லை–இன்னார் தாம் ஆஸ்ரயிப்பவர்கள், இன்னார் ஆஸ்ரயிக்காதவர்களென்ற ஒருவாசி யில்லை;
அரவு அணையான் பாதம்–சேஷசாயியான அப்பெருமானுடைய திருவடிகளை
வணங்கி–தொழுது
ஏத்தாதார்–ஸ்துதியாதவர்கள்
எவர்–யாவர்? (ஒருவருமிலர்)
பவரும் செழுகதிரோன்–பரவின அழகிய ஆயிரங் கிரணங்களை யுடையவனான ஸூரியனும்
ஒள் மலரோன்–அழகிய (திருநாபிக் கமல) மலரை இருப்பிடமாக வுடைய பிரமனும்
கண் நுதலோன்–நெற்றிக் கண்ணனான ருத்ரனும்
(ஆகிய, நாட்டிலுள்ளவர்களால் ஆஸ்ரயிக்கப்படுகிறவர்களென்று பிரசித்தரான இவர்கள்)
நாளும்–நாள்தோறும்
தொடர்ந்து தொழும் தகையார் அன்றே–அப்பெருமானெழுந்தருளியிருக்கின்ற இடத்தைத் தேடி ஆஸ்ரயிக்கும் ஸ்வபாவமுள்ளவர்களன்றோ?

வியாக்யானம் –

அவர் இவர் என்று இல்லை அரவணையான் பாதம் எவர் வணங்கி ஏத்தாதார் –
எல்லாரும் அவனையே ஆஸ்ரயிக்கிறதோ என்னில்
பிரசித்தமான ப்ரஹ்மாதிகளும் அவனைத் தொழும் ஸ்வபாவராய் அன்றோ இருக்கிறது

எண்ணில்-பவரும் செழும் கதிரோன் ஒண் மலரோன் கண்ணுதலோன் என்றே
பரந்து அழகியதான கிரணங்களை உடைய ஆதித்யனும்
ப்ரஹ்மாவும் லலாட நேத்ரனும்

நாளும் தொடர்ந்து தொழும் தகையார் —
தொழும் ஸ்வ பாவத்தை உடையவர் ஆவர்-

(கீழ்ப் பாட்டில் -நெடுமாலே நின்னடியை யார் ஓத வல்லாரவர் -என்று சொல்லி வைத்து
இதில் -அவர் இவர் என்று இல்லை அரவணையான் பாதம்-எவர் வணங்கி ஏத்தாதார்-என்று அருளி இருப்பது முரண் அல்லவோ
எனில் முரண் ஆகாது
சென்ற பாசுரத்தில் பரம புருஷனுடைய திருவடிகளை ப்ராப்யமாக அறிந்து அவனை ஸ்துதிப்பவர்கள் அருமைப்பட்டு இருப்பர் என்று அருளினார்
இப்பாசுரத்தில் இதர பலன்களுக்காக ப்ரஹ்மாதி தேவர்களும் மனிதர்களும் வாசி இல்லாமல் அனைவருமே அவனை ஸ்துதிப்பவர்கள்
ஆகையால் ஒரு முரணும் இல்லை -)

(நாடி நீர் வணங்கும் தெய்வமும் உம்மையும் படைத்தான் -ஸர்வ காரணத்வம் சொல்லி
ஸர்வரும் உன்னை ஆஸ்ரயிக்கிறார்கள் -என்றாலும்
எழுவார் விடைகொள்வாருமே மிக்கு
வைகல் தொழுது உன் இடமே இருப்பார் சிலரே என்கிறார் –

பவான் நாராயண ஸ்ரீ ராமாயணம்
உவராய் வந்து நிற்பார்கள்
அந்திக்காப்பு இடுகிறோம் -)

————————————————————————–

விலஷண அதிகாரம் ஆகில் கிடையாதோ என்னில்-
ஓர் ஆனைக்கன்றோ எளிதாய் தோன்றுகிறது –

(தேவர்கள்-விலஷண அதிகாரம்- அன்றோ பற்றினார் என்று நாம் விலக
ஸ்ரீ கஜேந்திர மோக்ஷம் பற்றி அருள
நாங்கள் விலங்கு இல்லையே என்று யாதானும் பற்றி விலக அன்றோ பார்க்கிறோம்)

தொடரெடுத்த மால் யானை சூழ் கயம் புக்கு அஞ்சி
படரெடுத்த பைங்கமலம் கொண்டு -அன்று இடர் அடுக்க
ஆழியான் பாதம் பணிந்து அன்றே வானவர் கோன்
பாழி தான் எய்திற்றுப பண்டு—-13-

பதவுரை

தொடர் எடுத்த மால் யானை–காற்சங்கிலியை முறித்துக் கையிற்கொண்டு பதறியோடுந் தன்மையதான மதயானையானது(ஸ்துதிக்கையே ஸ்வரூபமான துதிக்கை அன்றோ )
சூழ் கயம் புக்கு–(கரைகாண வொண்ணாதபடி) விசாலமாயிருந்த பொய்கையிலே இழிந்து
படர் எடுதுத பை கமலம் கொண்டு–மலர்ந்து ஓங்கியிருக்கிற அழகிய தாமரைப் பூவை (எம்பெருமானுக்கு ஸமர்ப்பிப்பதற்காக)க் கையிற் கொண்டு-தொழும் காதல் களிறு அன்றோ
அன்று இடர் அடுக்க–அந்த நிலைமையிலே (முதலையின் வாயிலகப்பட்டு விடுவித்துக் கொள்ள முடியாத) பெருந்துன்பமுண்டாக
அஞ்சி–(செவ்வி யழிவதற்கு முன்னே இந்த மலர்களை எம்பெருமானுக்கு ஸமர்ப்பிக்க முடியாமற் போய் விடுமோவென்று) மனம் பதறி,
ஆழியான் பாதம்–(முதலையைத் துணிக்குங் கருவியான) திருவாழியைக் கையிலேந்தின எம்பெருமானுடைய திருவடிகளை (தியானித்து) வணங்கியதனாலன்றோ-நாராயணா மணி வண்ணா என் ஆர் இடரை நீக்காய் –
தான்–அந்த கஜேந்திரம்
பண்டு–முற்காலத்தில்
வானவர் கோன்பாழி–தேவாதி தேவனுடைய இருப்பிடமான பரமபதத்தை
எய்திற்று–அடைந்தது.(ஸ்ரீ கஜேந்திர மோக்ஷம் பிரசித்தம் அன்றோ )

வியாக்யானம் –
தொடரெடுத்த மால் யானை –
வல்லியை முறித்து கையில் கொண்ட ஆனை
மதித்து இருந்துள்ள (மதம் கொண்ட )ஆனை

சூழ் கயம் புக்கு –
பரந்த பொய்கையிலே புக்கு

இடர் அடுக்க அஞ்சி –
முதலையால் வந்த இடருக்கு பயப்பட்டு

படரெடுத்த பைங்கமலம் கொண்டு –
(முன் ஜென்ம வாசனையால்-ச து நாக வர ஸ்ரீ மான் நாராயண பாராயண )படர்ந்து ஓங்கி குளிர்ந்த தாமரைப் பூவைக் கொண்டு

அன்று-ஆழியான் பாதம் பணிந்து அன்றே வானவர் கோன் பாழி தான் எய்திற்றுப பண்டு-
(அன்று-க்ருத யுக சரித்திரம் அன்றோ )சர்வேஸ்வரன் உடைய திருவடிகளில் விழுந்து அன்றோ
நித்ய ஸூரிகளோடே கூடி இருக்கிறவனுடைய படுக்கையிலே
(இந்த சரீரம் விட்டு ஸ்வரூப ஆவிர்பாவம் பெற்று )ஏறப் பெற்றது-

(கஜ ஆகர்ஷ தீரே –க்ராஹ ஆகர்ஷதே ஜலே -ஸ்ரீ விஷ்ணு தர்மம் -69-46-

நாஹம் கலே பரஸ் யாஸ்யா த்ராணார்த்தம் மது ஸூதந
கரஸ்த கமலாந்யேவ பாதயோ ரர்ப்பிதம் தவ –

அதிகாரி நியமம் இன்றிக்கே ஒழிந்தபடி என் என்னில் –
தர்ம புத்ராதிகளும்
திரௌபதியும்
காகமும்
காளியனும்
ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானும்
ஸ்ரீ விபீஷண ஆழ்வானும்
பெருமாளும்
இளைய பெருமாளும்
தொடக்கமானவர்கள்
சரணம் புகுருகையாலே
அதிகாரி நியமம் இல்லை–ஸ்ரீ வசன பூஷணம் –சூரணை -32-)

————————————————————————-

அவன் படி இதுவான பின்பு (சர்வ சமாஸ்ரணீயன் )-சம்சாரிகளை ஏற்றித் திரியாதே
அவன் திருவடிகளிலே பணிந்து-திரு நாமங்களைச் சொல்லி
உங்களுடைய ஸ்பர்சத்தாலே லோகத்தை-சுத்தமாக்கிக் கொள்ளுங்கோள்-என்கிறார்
அன்றிக்கே
வயிறாகிய பெரும் பதியை உண்டாக்கி என்னவுமாம்

பண்டிப்பெரும் பதியை யாக்கி பழி பாவம்
கொண்டிங்கு வாழ்வாரைக் கூறாதே எண்டிசையும்
பேர்த்த கர நான்குடையான் பேரோதிப் பேதைகாள்
தீர்த்த கரராமின் திரிந்து—14-

பதவுரை

பேதைகாள்–அவிவேகிகளே!,
பண்டியை–வயிற்றை-அநாதி காலம் இருக்கும் சம்சாரம் ஆக்கி வளர்த்து என்றுமாம் -ஆக்கியவர்-ஸ்ருஷ்டித்த கரம் நான்கு உடையவன் -என்றுமாம்
பெரு பதி ஆக்கி–பெரிய ஊர் போலக் கண்டதையுங் கொண்டு நிரம்பச் செய்து வளர்த்து(பண்டி -பண்டு -யை பண்டு இப் பெரும் பதி ஆக்கி –பண்டியை )
பழி பாவம் கொண்டு–தெரியாமல் விளையுங் குற்றங்களையும் தெரிந்து செய்யுங் குற்றங்களையும் மேன்மேலும் வளர்த்துக் கொண்டு-செய்யாத குற்றத்தை ஏறிட்டு சொல்வது பழி -பண்ணுவதை நிரூபித்து சொல்வது பாவம் என்றுமாம் –
இங்கு–இவ்வுலகில்
வாழ்வாரை–வாழ்கின்ற ஸம்ஸாரிகளை
கூறாதே–புகழ்ந்து பேசுகை தவிர்ந்து,
எண் திசையும் பேர்த்த கரம் நான்கு உடையான்–(உலகளந்த காலத்தில்) எட்டுத் திக்குக்களையும் பேர்த்துப் போடும்படி-வியாபித்து-
விம்மி வளர்ந்த நான்கு திருத் தோள்களையுடையனான பெருமானுடைய
பேர்–திருநாமங்களை
ஓதி–இடைவிடாது சொல்லிக் கொண்டு-ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி -ஆண்டாள் சுலபமாக அருளிச் செய்தாள் அன்றோ -ஸ்வயம் பிரயோஜனமாக என்பதால் ஓதி -சொல்லி பாடி என்று இல்லாமல்
திரிந்து–திவ்ய தேசங்கள் தோறும் ஸஞ்சரித்து
தீர்த்தகரர் ஆமின்–(உங்கள் ஸஞ்சாரத்தாலே நாடு முழுவதும்) பரிசுத்தமாம்படி செய்ய வல்லவராக ஆகுங்கோள்.

வியாக்யானம் –
பழி பாவம் கொண்டிங்கு வாழ்வாரைக் கூறாதே
அடி (காரணம்)உண்டாயும்
அடி (காரணம்)இன்றிகே யாயுமான பாபமே

வாழ்வாக இருப்பாரைப் பேசாதே
பழி –பிறரால் ஏற்பட்ட தீமைகள்
பாவம் -புத்தி பூர்வகமாக செய்த தீமைகள்

எண்டிசையும் பேர்த்த கர நான்குடையான் பேரோதிப் பேதைகாள் தீர்த்த கரராமின் திரிந்து
எட்டுத் திக்கும் விம்ம வளர்ந்த நாலு தோள்களை-உடையவன் உடைய திரு நாமங்களைச் சொல்லி –

பெரும் பதியை ஆக்கி லோகத்தை உண்டாக்கி என்று-அதுக்கு ஆபத்து வர
எண் திசையும் பேர்த்த கரம் நான்கு உடையான் என்று
அவனுக்கு விசேஷணம் ஆக்குதல்
அன்றிக்கே-
பண்டியாகிய வயிற்றைப் பெருக்கப் பண்ணி என்னவுமாம்-

(தீர்த்தம் கரோதீதி தீர்த்த கர -பிறரைப் பரிசுத்தப் படுத்துபவர்

அதி பாதக யுக்தோபி த்யாயன் நிமிஷம் அச்யுதம்
பூயஸ் தபஸ்வீ பவதி பங்க்தி பாவந பாவந
மஹா பாவங்களை செய்தவனாயினும் -அச்யுதனை ஒரு க்ஷணம் நினைத்தாலே மஹா தபஸ்ஸைச் செய்தவனாயும்
தன் ஸம்பந்தத்தாலேயே ஒரு பங்க்தி-வரிசை முழுவதையும் பாவனம் செய்யும் பங்க்தி பாவனர்களையும் பரிசுத்தப் படுபவனாயும் ஆகிறான்

ஞானதோ அஞ்ஞானதோ வா அபி வாஸூ தேவஸ்ய கீர்த்த நாத்
தத் ஸர்வம் விலயம் யாதி தோயஸ்தம் லவணம் யதா
தெரிந்து தெரியாமலோ வாஸூ தேவனை சங்கீர்த்தனம் செய்வதன் மூலம் மனிதனுடைய பாபம் எல்லாம்
தண்ணீரில் உள்ள உப்பு போலவே கரைந்து விடும்

யன் நாம கீர்த்தனம் பக்த்யா விலாயநம நுத்தமம்
மைத்ரேய அசேஷ பாபா நாம் தாதூ நாமிவ பாவக
மைத்ரேயரே -என்னுடைய நாமத்தை அன்புடன் கீர்த்தனம் செய்வது தாதுக்களை அழிக்கும் நெருப்பு போலவே
எல்லா பாபங்களையும் அழித்து ஒழிப்பதாய் இருக்குமது அன்றோ

ஸமா யாலம் ஜலம் வஹ்நேஸ் தமஸோ பாஸ்கர உதயா
சாந்தி கலேர கௌ கஸ்ய நாம சங்கீர்த்தனம் ஹரே
நெருப்பை அணைக்க நீரும் -இருட்டை நீக்க ஸூர்ய உதயமும் போதும் அன்றோ
அதே போலவே கலியின் பாபக் கூட்டங்களை அழிக்க ஹரியின் திரு நாம சங்கீர்த்தனத்தாலேயே இயலும் –
என்று சாஸ்த்ரங்கள் கோஷிக்குமே-

ஆதி அந்தம் அநந்தம் அற்புதம் ஆன வானவர் தம்பிரான்
பாத மா மலர் சூடும் பத்தி இலாத பாவிகள் உய்ந்திட
தீதில் நல் நெறி காட்டி எங்கும் திரிந்து அரங்கன் எம்மானுக்கே
காதல் செய் தொண்டர்க்கு எப் பிறப்பிலும் காதல் செய்யும் என் நெஞ்சமே –பெருமாள் திருமொழி -2-6-)

(மழை மேகம் போல் முதல் ஆழ்வார்கள் மூவரும் எங்கும் சென்று உலகத்தை திருத்தி அருளினார்கள் அன்றோ கொண்டல் அனைய வண்மையாலேயே -)

————————————————————————–

திரு உலகு அளந்தபடி ப்ரஸ்துதம் ஆகையால்–அல்லாத அவதாரங்களிலும்
ஆஸ்ரித அர்த்தமாக மிகைப் பட்ட-மிறுக்குகளை நினைத்து வெறுக்கிறார்

(த்ரிவிக்ரமன் ராமன் கிருஷ்ண -மூன்று அவதாரங்களும் திருப்பாவையில் போல் முன் பாசுரத்திலும் -இப் பாசுரத்திலும் மூன்றும் உண்டே-அருகில் உள்ள அவதாரமான கிருஷ்ணாவதாரம் சொல்லி ராமாவதாரம் –
தேஹ போஷணம் பண்ணும் சம்சாரிகளுக்காகவாச இப்படி அவதாரம் செய்வது -என்கிறார்-இப்படி இரண்டு சங்கதி -)

திரிந்தது வெஞ்சமத்துத் தேர் கடவி அன்று
பிரிந்தது சீதையை மான் பின் போய்-புரிந்ததுவும்
கண் பள்ளி கொள்ள அழகியதே நாகத்தின்
தண் பள்ளி கொள்வான் தனக்கு—-15-

பதவுரை

வெம் சமத்து–கொடிய (பாரத) யுத்தத்திலே
தேர் கடவி–(பார்த்த ஸாரதியாகித்) தேரை நடத்திக் கொண்டு
திரிந்ததும்–அலைந்ததும்,
அன்று–இராமனாகத் திருவவதரித்த காலத்து
மான்பின் போய்–மாரிசனாகிற மாயமானின் பின்னே சென்று
சீதையை பிரிந்ததும்–பிராட்டியைப் பிரிந்து அலைச்சற்பட்டதும்,
கண்–தரையிலே
பள்ளி கொள்ள–படுத்துக் கொள்ளும்படி
புரிந்ததுவும்–ஆசை கொண்டதும்
(ஆகிய இச்செயல்கள் யாவும்)
நாகத்தின் தண் பள்ளி கொள்வான் தனக்கு–திருவனந்தாழ்வான் மேலே குளிரப் பள்ளி கொண்டிருக்க வேண்டிய பெருமானுக்கு
அழகியதே–ஏற்றவையோ?

கண் பள்ளி கொள்ள —தரையிலே பள்ளி கொண்ட தலை சயனப்பெருமாளை அனுசந்தித்து என்றும்
பெருமாள் தரையிலே பள்ளி கொண்டதுவும் என்றதுவாம்

வியாக்யானம் –
திரிந்தது வெஞ்சமத்துத் தேர் கடவி –
யுத்தத்திலே
உடம்புக்கு ஈடிடாதே(ஈடு -கவசம் திருவாய் மொழிக்கு பாதுகாக்கும் கவசம் போல் ஈடு  )
உன்னை அழிய மாறி(ரதியானவன் சாரதி ஆனான் அன்றோ )
படை பொருது -தேர் கடாவித் திரிந்தது -(சித்திரத்தேர் வலவா -மாயப்போர் தேர்ப்பாகனாய் )

அன்று -பிரிந்தது சீதையை மான் பின் போய்-

ரஷிக்கும் இடத்தில் இருவரும் கூட இருந்து-ரஷிக்கப் பெற்றோமோ –

புரிந்ததுவும் கண் பள்ளி கொள்ள அழகியதே –
தரையிலே பள்ளி கொள்ளக் கற்றது

நாகத்தின் தண் பள்ளி கொள்வான் தனக்கு –
திரு வநந்த வாழ்வான் மேலே
கண் வளர்ந்து அருளப் பெற்ற சௌவ்குமார்யத்தை
உடையனானவனுக்கு ஜகத் ரஷணம்
சால அழகியதாய் இருந்ததே-

(தேர் கடாவி –
ஆத்மாநம் ரதிநம் வித்தி சரீரம் ரதமேவ ச
புத்திம் து சாரதிம் வித்தி மனஸ் ப்ரக்ரஹ மேவ ச
இந்திரியாணி ஹயாநா ஹுர் விஷயாம்ஸ் தே ஷு கோசரான் –கடவல்லி -1-3-34-
அனைவரையும் நடத்தி செல்பவன் அன்றோ இங்கு ஒரு ரதிக்கு அடங்கி சாரதி யாகிறேனே

ராமாவதாரத்தில்
மா ச லஷ்மண ஸந்தாபம் கார்ஷீர் லஷ்ம்யா விபர்யயே
ராஜ்ஜியம் வா வன வாஸோ வா வன வாஸோ மஹோதய –ஆரண்ய 2-29-
வன வாசமே அரசாள்வதை விட சிறந்ததாகும் என்றானே

மேலும் பிராட்டியைப் பிரிந்து
ராஜ்யாத் ப்ரம்சோ வன வாஸ ஸீதா நஷ்டா ஹதோ த்விஜ
ஈத்ரு ஸீயம் மம அலஷ்மீர் நிர்த ஹேதபி பாவகம் -ஆரண்ய -67-24-
இப்படி வந்த துன்பங்கள் எல்லாம் நெருப்பையும் எரிக்கும்படி அன்றோ)

————————————————————————–

(பர கத ஸ்வீ காரம் அருளிச் செய்ய வந்த பாசுரம்)

தனக்கு அடிமைப் பட்டது தான் அறியான் ஏலும்
மனத்தடைய வைப்பதாம் மாலை -வனதிடரை
ஏரியாம் வண்ணம் இயற்றும் இது வல்லால்
மாரி யார் பெய்கிற்பார் மற்று—–16-

பதவுரை

தனக்கு–சேதநனாகிய தனக்கு
அடிமை–சேஷத்வமென்பது
பட்டது–பொருந்தி அமைந்திருக்கின்ற தென்பதை
தான் அறியான் ஏலும்–தான்தெரிந்து கொள்ள அசக்தனாயிருந்தாலும்-யானே என்னை அறியகில்லாத -அடிமைப்பட்டது -சேஷத்வம் -ஆத்மாவை சேஷத்வமே என்று ஆதரிக்கும்
பூவுக்கு மணம் -ரத்னத்துக்கு ஒளி போல்
(எம்பெருமான் தானாகவே)
மனத்து–மனத்திலே
அடைய–வந்து சேர்ந்த வளவில்-சொத்தை தேடி ஸ்வாமி வந்த அளவிலே —
மாலை–அப்பெருமானை-மால் -ஆஸ்ரித வ்யாமோஹம் -பித்தன்–மால் பெரியவன் கருமை -அழகன் -பாலைக் குடிக்க காலைப்பிடிக்க வேண்டுமோ
வைப்பது–இடங்கொடுத்து வைத்துக்கொள்வது -ஆம்-தகும்;-இத்தால் ஸ்வீ காரத்தில் உபாய பாவத்தைத் தவிர்க்கிறது -அதிகாரி விசேஷணம் இது –
(இவனுக்கு -யானே என்னை அறிய கில்லாமல் இருந்தாலும் -இவ்வளவு ருசிமாத்திரம் உண்டானால் விரோதியைப் போக்கித் தன்னைத் தானே
தந்தருள்வன் எம்பெருமான்; அது எங்ஙனே யென்னில்–ந்யாஸ இதி ப்ரஹ்ம -சரணாகதி பிரபத்தி செயல் அல்ல -அவனே -ஈஸ்வரனே உபாயம் என்னும் திட அத்யவசாயம்-போஜனத்துக்கு ஸூத்து போல் பசி போல்—வைப்பது ஆம் இதுவே பொருத்தம் –பல அனுபவ யோக்யதா ஆபத்வம்-பசி போல் விலக்காமை -வைப்பதாம் -என்கிறது 😉
வனம் திடரை–காடெழுந்து கிடக்கிற மேட்டு நிலத்தை
ஏரி ஆம் வண்ணம் இயற்றும் இது அல்லால்–(பெய்யும் மழைநீர் அப்பால் போகாமல் தடையின்றி வந்து புகும்படி)
ஏரியாகக் குழி வெட்டுதல் செய்யக்கூடுமேயன்றி
மற்று-பின்னும்
மாரி–மழையை
பெய்கிற்பார்–பெய்யும்படி செய்விக்க வல்லவர்கள்
யார்–யாவருளர்? (மழை பெய்ய வேண்டுவது பகவத் ஸங்கல்பத்தாலன்றோ?.)

தனக்கு அடிமைப் பட்டது தான் அறியான் ஏலும்
ஸ்வ த்வாத்மா நி சஞ்சதம் ஸ்வாமித்வம் ப்ரஹ்மணி ஸ்திதம்
என்னும்படி விசதமாக அறியான் ஏலும்(அறிந்து அனுஷ்டான பர்யந்தமாக செய்து _

மனத்தடைய வைப்பதாம் மாலை –
யத்ய தாசரதி ஸ்ரேஷ்ட என்னும்படி யாகிலும்
சர்வேஸ்வரனை (நெஞ்சமே நீள் நகராக -மேல் விழுந்து அவன் வர )ஹிருதயத்திலே வைப்பதாம்

வனதிடரை ஏரியாம் வண்ணம் இயற்றும் இது வல்லால்மாரி யார் பெய்கிற்பார் மற்று –
காட்டில் திடரை கல்லிக் குளமாக்கும் அது ஒழிய
வர்ஷத்தை இவனால் பெய்விக்கப் போமோ

இத்தால்
ருசி மாத்ரம் இவன் தலையிலே உண்டாம் இத்தனை
ஒழிய
ப்ராப்தி இவனால் உண்டாக்கிக் கொள்ளப் போமோ என்றது ஆயிற்று -(பெரிய திருமலை நம்பி நிர்வாஹம் இது -ருசி -குளம் வெட்டுவது -மழை பெய்வது ப்ராப்தி )

அன்றிக்கே
ஏரியாம் வண்ணம் இயற்றுமது
மற்று வர்ஷிப்பிக்குமது
இரண்டும் செய்யப் போமோ -என்னவுமாம்

ருசி உத்பாதகனும் தானே
பிராப்தியைப் பண்ணிக் கொடுப்பவனும் தானே என்னவுமாம்

(ருசியை விளைவிப்பானும் அவனே -கூரத்தாழ்வான் நிர்வாஹம் -அஹம் ஹி ஸர்வ யஞ்ஞானாம்–போக்தா ச பிரபு -செய்யும் கிரிசைகளும் – செய்வார்களைச் செய்வானும் யானே என்னும் -இத்யாதி)

(ருசி ஜனக விபவ லாவண்யம் வைஷ்ணவ வாமனத்தில் பூர்ணம் –திருக்குறுங்குடியில்
ருசி விவசர்க்கு -உதார குணம் -பாதத்தையே சரண் ஆக்கி அருளுபவர் -பிராப்தி வானமா மலை
நடுவில் கடல் ஞாலம் -)

(அவனைப் பெற ருசி ஒன்றே போதும் -முயல வேண்டா -பரகத ஸ்வீ காரத்தின் சிறப்பைத் தெளிவிக்கும் பாசுரம் இது –
ஸ்வத்வ மாத்மநி ஸஞ்ஜாதம் ஸ்வாமித்வம் ப்ரஹ்மணி ஸ்திதம் -உடைமையாய் இருக்கை ஜீவாத்மாவின் இடமும் உடையவனாய் இருக்கை பரமாத்மாவிடமும் உள்ளன –
ஆத்ம தாஸ்யம் ஹரே ஸ்வாம்யம் ஸ்பாவஞ்ச ஸதா ஸ்மர –ஆத்மாவின் தாசத்தன்மையும் ஹரியின் ஸ்வாமித் தன்மையும் இயற்க்கை என்பதை எப்போதும் அறிவாயாக
அவனே நெஞ்சமே நீள் நகராகக் கொண்டு வாழ அபிநிவேசத்துடன் வந்து அடையும் போது
திருவாணை இட்டுத் தடுக்காமல் பொருந்து இருக்கும் படி இடம் கொடுக்க வேண்டுமே –
யத்ய தாசாரதி ஸ்ரேஷ்ட தத் ததே வேத ரோஜந -3-21–அறிவாளர்கள் அனுஷ்டிப்பதை அறிவில் குறைந்தவனும் பின்பற்றி அனுஷ்டிக்கிறான்
இவனுடைய விலக்காமையையும் ருசியையும் கொண்டு விரோதியைப் போக்கித் தன்னையே தந்து அருளுபவர் அவன்
ருசி மாத்திரம் -திருமலை நம்பி நிர்வாஹம்
ருசியையும் உண்டாக்கிக் தன்னைத் தந்து அருளுபவன் -ஆழ்வான் நிர்வாஹம்-என் உணர்வினுள்ளே இருத்தினேன் அதுவும் அவனது இன்னருளே -எல்லாமே அவனாலே –

மனத்தடைய –மேல் விழும் முயற்சி மாலது அவனது-பக்தி உழவன் அன்றோ
வைப்பதாம் –இதுவே நமது கர்தவ்யம்

அருள் மழையைப் பொழிய வரும் போது -அஞ்ஞானம் கர்மா வாசனை போன்ற புதர்களை அழித்து
ருசியாகிய விதையை விதைத்து
அத்தை பேர் அமர் காதல் பின் நின்ற காதல் -கடல் புரைய -அதனிலும் பெரிய அவாவாக்க தனது கல்யாண குணங்களாகிற மழையைப் பொழிந்து
வித்தும் இட வேண்டும் கொலோ விடை யடர்த்த பத்தி யுழவன் பழம் புனத்து -நான்முகன் -23-
உபாய உபேயத்வே ததிஹ தவ தத்துவம் ந து குணவ் -ரெங்க ராஜ ஸ்தவம் -2-87-உபாயத்வமும் உபேயாத்வமும் உனக்கு ஸ்வரூப நிரூபனம்
மற்றவை போல் நிரூபித்த ஸ்வரூப குணங்கள் அல்ல-ஞான பலாதி ஆறு குணங்களும் ஸ்வரூப நிரூபக குணங்கள்
பெரிய பெருமாளை நிரூபிக்கவே உபாயத்வமும் உபேயத்வமும் – என்கிறார் பட்டர் -)

————————————————————————–

இவனே ஆஸ்ரயணீயன் என்பான்  என் என்னில்-வேறு ஒருவர் இல்லாமை என்கிறது

மற்று ஆர் இயலாவார் வானவர் கோன் மா மலரோன்
சுற்றும் வணங்கும் தொழிலானை -ஒற்றைப்
பிறை யிருந்த செஞ்சடையான் பின் சென்று மாலைக்
குறை யிரந்து தான் முடித்தான் கொண்டு—–17-

பதவுரை

வானவர் கோன்–தேவர்கட்குத் தலைவனான இந்திரனும்
மா மலரோன்–(எம்பெருமானது) சிறந்த (திருநாபிக் கமலத்தை இருப்பிடமாகவுடைய பிரமனும்
சுற்றும் வணங்கும் தொழிலானை–பக்கங்களிற் சூழ்ந்துகொண்டு ஆஸ்ரயிப்பதற்கேற்ற சேஷ்டிதங்களை யுடையனான
மாலை–எம்பெருமானை
ஒற்றை பிறை இருந்த செம்சடையான்–ஓரு கலா மாத்திரமான சந்திரனைத் தரித்த சிவந்த சடையையுடைய ருத்ரன்
பின் சென்று–அநுவர்த்தித்து
இரந்து-(பல்லைக் காட்டி) யாசித்து
குறை–தனது குறையை
தான் முடித்து கொண்டான்–தான் நிறைவேற்றிக் கொண்டான்;
(ஆன பின்பு)
இயல் ஆவார்–ஆஸ்ரயிக்கலாம்படி தகுதியுடையவர்
மற்று ஆர்-அந்த ஸர்வேஸ்வரனைத் தவிர வேறு யாவர்?

மற்று ஆர் இயலாவார் –
மற்று ஆஸ்ரயணீயர் ஆவார் ஆர் –

வானவர் கோன் மா மலரோன் சுற்றும் வணங்கும் தொழிலானை –
லோகத்தில் பிரதானனான இந்த்ரனோடு கூடின ப்ரஹ்மாதிகள் இறே
அவர்களும் அவனை ஆஸ்ரயித்து இறே தம்தாமுடைய
அபிமதங்கள் பெறுகிறது
இந்த்ரன் ப்ரஹ்மா நேர் கொடு நேர் ஆஸ்ரயிகப் போகாதே
பாடே பக்கே சென்று வணங்கும் ஆஸ்ரயண பிரகாரங்களை
உடையனாவனை -(தொழிலானை-குண சேஷ்டிதங்கள் உடையவனை )
ஈஸ்வரனுடைய சேஷ்டிதங்களை அவர்கள் சுற்றி-வணங்குவார் என்னவுமாம்

(விரோதி நிரசன சாமர்த்தியம் குணம் -கேசி அழித்தவன்-சேஷ்டிதம்
சர்வ ஆதாரன் குணம் – -கோவர்த்தந தாரி -சேஷ்டிதம் போல்)

ஒற்றைப் பிறை யிருந்த செஞ்சடையான் பின் சென்று –
சடையிலே பிறையைத் தரித்தானாய்
சுக பிரதானான ருத்ரன் பின்னே சென்று -அனுவர்தித்து

மாலை
சர்வேஸ்வரனை

குறை யிரந்து தான் முடித்தான் கொண்டு
ஹிருதயத்திலே கொண்டு –
குறைகளை இரந்து
தன்னுடைய அபேஷிதங்களைப் பெற்றான்-

(அபிதஸ் பாவ கோபமம் -அயோத்யா -99-26- சுற்றிலும் தீயைப் போல அணுக ஒண்ணாதவன்
கடிக்கமலத்துள் இருந்தும் காண் கிலான் கண்ணன் அடிக்கமலம் தன்னை அயன் -முதல் திரு -56-
பின் சென்று -நேராக விழிக்க ஒண்ணாமையால் என்றும்
நெஞ்சிலே உள்ள துற அகங்காரத்தை விட்டுப் பின் பற்றி அனுவர்த்தித்து -என்றுமாம்
ப்ரஹ்மாதி தேவர்களும் இவனை ஆஸ்ரயித்து குறைகள் தீரப் பெற்றார்கள் -எனவே
இவனைப் போல் ஆஸ்ரயிக்கத் தக்கவர் வேறே யார் என்று கீழோடே அந்வயம்)

வேதாபஹார குருபாதக தைத்யபீடாதி
ஆபத் விமோசந மஹிஷ்ட பல ப்ரதாநை: |
கோ’ந்ய: ப்ரஜா பஶு பதீ பரிபாதி கஸ்ய
பாதோதகேந ஸ ஶிவஸ் ஸ்வ ஶிரோத்ருதேந ||–ஸ்தோத்ர ரத்னம் -13-

ப்ரஜாபதி என்று சொல்லப்படும் பிரமனையும், பசுபதி என்று சொல்லப்படும் ருத்ரனையும் மற்றும் இந்திரனையும்
முறையே அவர்களுக்கு வந்த ஆபத்தான வேதம் திருடப்பட்டு அதை இழந்ததையும்,
தன்னுடைய தந்தையின் தலையைக் கிள்ளிய பாபத்தையும், அஸுரர்களால் ஏற்பட்ட துன்பத்தையும் போக்கியவன் யார்?
யாருடைய ஸ்ரீபாத தீர்த்தத்தைத் தலையில் தாங்கி, ருத்ரன் புனிதத் தன்மையை அடைந்தான்?

————————————————————————–

இவன் ஜகத் ரஷணம் பண்ணும்படி சொல்லுகிறது-

கொண்டது உலகம் குறள் உருவாய் கோளரியாய்
ஒண் திறலோன் மார்வத்து உகிர் வைத்தது -உண்டதுவும்
தான் கடந்த ஏழ் உலகே தாமரைக் கண் மால் ஒரு நாள்
வான் கடந்தான் செய்த வழக்கு——-18-

பதவுரை

குறள்உரு ஆய்–வாமந ரூபியாய் மாவலியிடஞ் சென்று யாசித்து
உலகம்–பூமி முதலிய லோகங்களை
கொண்டது–ஆக்ரமித்துக் கொண்டதும்,
கோள் அரி ஆய்–மிடுக்கையுடைய நரசிங்கமாகி
ஒண்திறலோன் மார்வத்து–மஹா பலசாலியான இரணியனுடைய மார்பிலே
உகிர் வைத்தது–தனது நகங்களை யழுத்திக் கீண்டொழித்ததும்
ஒருநாள்–ஒருகாலத்திலே
தான் கடந்த–தான் அளந்து கொண்ட
ஏழ் உலகே–எல்லா வுலகங்களையும்
உண்டதுவும்–(பிரளயங் கொள்ளாதபடி) திருவயிற்றிலே வைத்துக் கொண்டதும்
(ஆகிய இச் செயல்கள்)
வான் கடந்தான்–ஆகாசத்தை யளவிட்டாலும் அளவிட வொண்ணாத படியுள்ள பெருமையை யுடையவனும்-
தாமரை கண்–செந்தாமரைக் கண்ணனுமாகிய
மால்–எம்பெருமான்
செய்த–செய்தருளின
வழக்கு–நியாயமான செயல்களாம்-பிராப்தம் -சர்வாதிகன் -சர்வேஸ்வரன் -அன்றோ எனவே வகுத்ததே –

கொண்டது உலகம் குறள் உருவாய் –
ஸ்ரீ வாமனனாய் உலகம் அளந்து கொண்டது(ஸகல பலப்ரதன் இரந்து போனது பிராப்தமோ )

கோளரியாய் ஒண் திறலோன் மார்வத்து உகிர் வைத்தது –
(ஸங்கல்ப மாத்திரத்தாலே அழிக்கும் சக்தனாய் இருந்தாலும் தானே )கை தொட்டு ஆஸ்ரித விரோதிகளை போக்கும்படி (பிராப்தமோ) –

உண்டதுவும் தான் கடந்த ஏழ் உலகே
தன் திருவடிகளிலே அடங்கின
லோகங்களையே திரு வயிற்றில் வைத்ததுவும்

(தன் நிர்மிதா ஜடராதா ச தவ த்ரி லோகீ கிம் பிஷணாதி -வேஷம் போட்டாயே -சாஸ்திரம் ரிஷிகள் பேச அவல் கொடுத்தாய் அன்றோ -கூரத்தாழ்வான்
அளந்த மரக்கால் கொண்டே அளந்து அனைத்தும் உள்ளதா முக்த சிஸூ -)

தாமரைக் கண் மால்
புண்டரீகாஷனான ஈஸ்வரன்(ஆஸ்ரித பக்ஷ பாதி -)

(கஶ்ஶ்ரீ: ஶ்ரிய: பரமஸத்வ ஸமாஶ்ரய: க:
க: புண்டரீகநயந: புருஷோத்தம: க: |
கஸ்யாயுதாயுத ஶதைக கலாம்ஶகாம்ஶே
விஶ்வம் விசித்ர சிதசித் ப்ரவிபாக வ்ருத்தம்||-ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னம் -ஶ்லோகம் 12 –

ஸ்ரீ: என்று சொல்லப்படும் ஸ்ரீ மஹாலக்ஷ்மியின் செல்வம் யார்? யாரிடத்தில் சுத்த ஸத்வம் உள்ளது?
யார் புண்டரீகாக்ஷன்? யார் புருஷோத்தமன் என்று சொல்லப்படுபவன்? யாருடைய ஸங்கல்பத்தின் ஒரு சிறு பகுதி,
பலவகைப்பட்ட சேதனர்கள் மற்றும் அசேதனப்பொருள்களாக விரிந்திருக்கும் இவ்வுலகத்தைத் தாங்குகிறது?)

ஒரு நாள் வான் கடந்தான் –
நித்ய ஸூரிகளுக்கு அவ்வருகு ஆனவன்
ஸ்வர்க்கத்தை அளந்தவன் என்றுமாம்–(அபரிச்சின்ன ஸ்வ பாவன் -கீழே பார்த்தோம்)

செய்த வழக்கு –
தன்னுடமையை ரஷிக்க பிராப்தம் இறே

(சேஷ பூதனுக்கு கைங்கர்யம் வகுத்தது போல் சேஷிக்கு ரக்ஷணமே பிராப்தம் அன்றோ
அவனுக்கு பரீஷை களே -திரௌபதி கஜேந்திரன் விபீஷணன் -பிரகலாதன் விருத்தாந்தம்)

(தாமரைக் கண் மால் –
ஆஸ்ரித பக்ஷபாதத்தையும்
ஸர்வ ஸ்வாமித்வத்தையும் கோட் சொல்லும் திருக்கண்கள்
வான் கடந்தான் –
அங்குள்ள நித்ய ஸூரிகளாலும் அளவிட முடியாதபடி இருப்பவன்
ஒரு நாள் வான் கடந்தான்
உலகு அளந்த வ்ருத்தாந்தம் என்றும் கொள்ளலாம்
அடியார்களுக்காகச் செய்தவையானாலும் தனது காரியமாகவே உகந்து செய்து அருளினான்
அபி ஷிச்ய ச லங்கா யாம் ராக்ஷ ஸே ந்தரம் வீபீஷணம்
க்ருதக்ருத்யஸ் ததா ராம விஜ்வர பிரமுமோத ஹ
உடைமையை ரக்ஷிப்பது உடையவனுக்கே அன்றோ ப்ராப்தம்)

————————————————————————–

நீ ஜகத் ரஷணம் பண்ணுகிறது பழியாய் விட்டது -(நியாயம் இல்லை என்கிறார் -உனது ஸுகுமார்யத்துக்குச் மார்த்வத்துக்குச் சேராத செயல்கள் அன்றோ-உனது திருமேனி உன்னதே அல்லவே -பக்தா நாம் ப்ரகாஸதே அன்றோ )

(கொண்ட பெண்டிர் மக்களே -உத்தேச்யம் என்று முடித்து -அடுத்த பாசுரம் கொண்ட பெண்டிர் த்யாஜ்யம் என்று மாற்றி அருளிச் செய்தது போல்
வழக்கு பிராப்தம் என்று முடித்து அடுத்த பாசுரத்தில் தகுந்தது அல்லவே என்கிறார்)

வழக்கன்று கண்டாய் வலி சகடம் செற்றாய்
வழக்கு என்று நீ மதிக்க வேண்டா -குழக்கு அன்று
தீ விளவின் காய்க்கு எறிந்த தீமை திரு மாலே
பார் விளங்கச் செய்தாய் பழி—-19-

பதவுரை

திருமாலே! ; நீ;
(கிருஷ்ண சிசுவாயிருந்த போது-இந் நம்பி பிறந்த ஏழு திங்களில் )
வலி சகடம்-வலிதான சகடத்தை
செற்றாய்–உதைத்து முறித்துத் தள்ளினாய்;
வழக்கு அன்று கண்டாய்–இது உனக்குத் தகுதியன்று காண்;
வழக்கு என்று நீ மதிக்க வேண்டா–இது நமக்குத் தகுந்ததே யென்று நினைக்கலாகாது;
(இப்படிப்பட்ட ஸாஹஸச் செயல் செய்ததோடு நில்லாமல்)
குழ கன்று–(அஸுரனான) இளங்கன்றை
தீ விளவின் காய்க்கு எறிந்த–தீய விளங்காயை உகுக்கும் பொருட்டு வீசிப் போட்ட
தீமை–இந்தத் தீம்பான செயல்
பார் விளங்க–பூமியிலே பிரகாசிக்கும்படி
பழி செய்தாய்–தவறு செய்தாய்

வழக்கன்று கண்டாய் வலி சகடம் செற்றாய் –
பிள்ளையாய் இருந்து பெரிய சகடத்தை முறித்ததும்
வழக்கு அன்று
அது செய்தோம் இறே என்னில்
இது இறே நானும் வேண்டா என்கிறது

வழக்கு என்று நீ மதிக்க வேண்டா –
இது வழக்கு என்று நீ புத்தி பண்ணி இருக்க வேண்டா(ஸர்வ ரக்ஷகன் செய்தேன் என்றால் -ஆஸ்ரிதர் வழக்காய் இருக்க வேண்டாமோ என்றபடி )

குழக்கு அன்று தீ விளவின் காய்க்கு எறிந்த தீமை
அசுரனான கன்றும்
விளாவான அசுரனும்
தன்னிலே ஒத்து உள்ளறிந்த உன்னை நலிந்ததாகில்
செய்வது என் என்று
பயப்படுகிறார் –

திரு மாலே –
இருவரும் கூட இருக்கிறது அன்றோ
தகுவது

பார் விளங்கச் செய்தாய் பழி –
பூமி அடங்கலும் பிரகாசிக்கும் படி பழி செய்தாய்
விபூதியில் ஏக தேசத்தை ரஷிக்கப் புக்கு
அவ் விபூதியையும் அழிக்கப் பார்த்தாய்-

(கதே ஜலே சேது பந்தனம் -பய நிவர்த்தகங்களுக்கு பயப்படுகை -அநிமிஷரை உறகல் என்பவர்கள் அன்றோ
ஆநிரை -விபூதியில் ஏக தேசம் தானே-அவ்விபூதியும் -என்றது உபய விபூதியும் என்றவாறு )

தனக்கு ஒரு ஹானி வந்தால் அவ் விபூதி அழியும் என்றபடி
இது அவன் செய்த பழி யாவது-

(பிறந்த எழு திங்களில் –சேடன் -திரு மறு மார்பன் கிடந்து திருவடியால் -மலை போல் ஓடும் சகடத்தை சாடிய -பெரிய திருமொழி -10-7-9-இங்கும் திருமாலே –
தலை நீர்ப்பாட்டிலே இருந்து சர்வேஸ்வரனுடைய பெருமை எல்லாம் அறியும் பிராட்டியே அஸ்தானே பய சங்கையாலே வயிறு பிடித்தாள்
முலை வரவு தாழ்த்து உதைத்தாய் போலும் -பொன்றச் சகடம் உத்தரித்தாய் புகழ் போற்றி என்ற அநந்தரம்
அதிலும் சாஹசம் மிக்க -கன்று குணிலா எறிந்தாய் கழல் போற்றி –
பழி -அவன் புகழ் என்று எண்ணி இருப்பதை பய சங்கையால் பழி என்கிறார் –

மார்பில் கிடக்கிறவர்கள் -மண்ணில் இருப்பவர்கள் வாசி இல்லாமல் இருவரும் தவிக்கும் படி செய்த செயல்கள் அன்றோ -திருப்பாவை வியாக்யானத்தில்
கிருஷ்ணாவதாரத்தில் மாதா பிதாக்கள் சாது இடையர்களாய்
ஊர் இடைச்சேரியாய்
கம்ஸாதிகள் எதிரிகளாய்
ஸ்ரீ பிருந்தா வனத்தில் முளைத்து எழும் பூண்டுகள் எல்லாம் அஸூரர்களாய்
தமையன் ஒரு கணம் தப்பில் தான் பாம்பின் வாயில் விழும் தீம்பனாய்
பூதநாதிகளால் பிறந்த அபாயங்களை ஓர் எல்லை இல்லாமையால் மங்களா சாசனம் ஒழியக்
காவல் இல்லாமையாலே ஆழ்வார்கள் கண்ணனுக்கு மங்களா ஸாஸனம் செய்வதிலேயே மண்டி இருப்பர்கள் என்பர் பட்டர்)

————————————————————————–

ஜகத் ரஷணத்தை அனுசந்தித்து-அவனை ஆஸ்ரயித்தவர்கள் அன்றோ
வாழ்வர்கள் -என்கிறது –

(ஸ்ரீ பாஷ்யம் -கற்று -மாட்டிற்றிலன் ஆகில் -கீழே கீழே போனால் போல் -எல்லா படிகளில் உள்ளாருக்கும் ஒரே பூர்ண பலன்)

பழி பாவம் கை யகற்றிப் பல் காலும் நின்னை
வழி வாழ்வார் வாழ்வராம் மாதோ -வழுவின்றி
நாரணன் தன் நாமங்கள் நன்குணர்ந்து நன்கேத்தும்
காரணங்கள் தாமுடையார் தாம்———–20-

பதவுரை

பழி–அபகீர்த்தியையும்
பாவம்–பாவங்களையும்
கை அகற்றி–நீக்கி
பல்காலும்–எப்போதும்
நின்னை–உன்னை
வழி வாழ்வார்–வழிப்பட்டு -ஸாஸ்த்ர வழியில் பூர்ணமாக -ஆஸ்ரயிக்குமவர்களும்
நாரணன் தன்–நாராயணனான வுன்னுடைய
நாமங்கள்–திருநாமங்களை
நன்கு உணர்ந்து–நன்றாக அறிந்து
வழு இன்றி–இடைவீடின்றி
நன்கு ஏத்தும் காரணங்கள் உடையார் தாம்–அழகாகத் துதிப்பதற்கேற்ற உபகரணங்களை யுடையவர்களும்-அத்வேஷம் ஆபி முக்கியம் பாகவத சமாஹம் போன்ற காரணங்கள்
(ஆகிய இவ்விருகை யதிகாரிகளும்)
வாழ்வராம்–மகிழ்ந்து வாழப் பெறுவர்கள்.
(மாதோ- அசை).ஆச்சர்யம் என்றுமாம்

பழி பாவம் கை யகற்றிப் –
அடி உண்டாயும் அடி இன்றிக்கேயும் உள்ள விரோதங்களைப் போக்கி

பழி
அபுத்தி பூர்வகமாக செய்யும் தப்பு

பாவம்
புத்தி பூர்வகமாக செய்யும் தப்பு

பல் காலும் நின்னை
என்றும் உன்னை ஆஸ்ரயித்து வாழ்வார்

வாழ்ந்தே போவார் வழி வாழ்வார் வாழ்வராம்-
ந ஸூ லப்யதே சுகம் –என்கிறது இவனை ஆகாதே –

(ஸூகம் மேலே ஸூகத்திலே விட வேண்டும் நிர்பந்தம் இல்லை லௌகிகத்தில் -இங்கு அப்படி இல்லையே)

மாதோ –
இது இடைச் சொல்லு(ஆச்சர்யம் என்றபடி )

வழுவின்றி நாரணன் தன் நாமங்கள் நன்குணர்ந்து நன்கேத்தும்
வழு இன்றிக்கே இருக்கிற நாராயணனுடைய திரு நாமங்களை
பக்தியாலே உணர்ந்து நன்றாகவே ஏத்தும்(வழுவின்றி நன்குணர்ந்து–வழுவின்றி நன்கேத்தும்)

காரணங்கள் -தாமுடையார் தாம் –
ஹேதுக்கள் -ஏத்துகைக்கு அடியான பக்தி- ருசி -ஆநு கூல்யம்
பகவத் கடாஷம் -ஸூக்ருதம்(இந்த படிக்கட்டில் எது இருந்தாலும் வாழ்வாராம் )

தாரணங்கள் தாமுடையார் என்ற போது
தாரணம் என்று த்ருதி உடையார் என்றபடி -(தைர்யம் பலசாலி -நாயமாத்மா பல ஹீந -உபநிஷத் -உள்ளத்தில் பலமான உறுதி மஹா விஸ்வாஸம் வேண்டுமே )

சுகத்துக்கு அநந்தரம் துக்கம் என்கிற ந்யாயம்
இங்கு இல்லை யாகாதே என்கிறது –
முடிய வாழ்வேயாய் இருக்கும் பகவத் சமாஸ்ரயணம் என்றபடி-

(ராஜ வித்யா  –ஸூ ஸூ கம் கர்த்தும் அவ்யயம் -ஸ்ரீ கீதை -9-2-பக்தி யோகம் அனுஷ்ட்டிக்கவே இனியதாய் இருக்கும்
வாழ்வராம் -நல்ல பாதத்தால் மனை வாழ்வார் கொண்டபெண்டிர் மக்களே -திருவாய் -8-10-11-
இங்கும் வாழ்ச்சி பெற்று பின்பு பேர் இன்பமும் பெறப் பெறுவர்
ந ஸூ கால் லப்யதே ஸூகம் -இன்பத்துக்குப் பின் எப்போதுமே இன்பமே உண்டாகும் என்பது இல்லை என்னும் லௌகிக விஷயம் போல் அல்லவே பகவத் விஷயம்
மாதோ -ஆச்சார்யம் -ஸர்வ காலமும் ஆஸ்ரயிப்பார் பெரும் பேற்றை உன்னை ஆஸ்ரயிக்கத் தொடங்கி இருப்பாராம் பெறும்படி இருப்பதே –
பரிபூர்ணமாக ஆஸ்ரயித்தவர்களைப் போலே இவர்களும் பேறு பெறுவது நிச்சயமே
நேஹாபி க்ரம நாஸோஸ்தி –ஸ்ரீ கீதை -2-40-இட்ட படை கற் படை என்று கண்ணன் தானே அருளிச் செய்தான் அன்றோ –
காரணங்கள் என்று காரண பரம்பரைகளைச் சொன்னவாறு –
தாரணங்கள் பாட பேதம் -த்ருதி என்னும் மன உறுதியை யுடையவர் அவனை அடைவது நிச்சயம் என்றவாறு –
நாயமாத்மா பல ஹீநேந லப்யா -மநோ பலம் அற்றவனால் இவன் அடையப்பட மாட்டான் என்பதையே
தாரணங்கள் தாமுடையார் தாம் வாழ்வாராம் -என்று அந்வய முகத்தால் அருளிச் செய்கிறார் -)

————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பூதத் ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.