திருக்கடல் மல்லையில் குருக்கத்திப் பூவில் திரு அவதாரம் -அயோநிஜர்
பூதம் -உண்மை -ஆத்மா -ஞாநீத் ஆத்மைவ மே மதம் –
சித்தார்த்தி சம்வஸ்தரம்-ஐப்பசி மாசம் -சுக்ல நவமி -புதன் கிழமை -அவிட்ட நஷத்ரம்
ஸ்ரீ கௌமோதிகியின் அம்சம்
இவர் மங்களா சாசனம் –கோயில் திருமலை திருக்கடல்மலை திருக்கோவலூர்
(பூதம் சிரஸ்ஸூ -நம்மாழ்வார் அவயவி
இரும் தமிழ் நூல் புலவர் -இவர் ஸ்ரீ ஸூக்தி கொண்டே –
யானே இரும் தமிழ் நன் மாலை இணை அடிக்கே சொன்னேன் பெரும் தமிழன் நல்லேன் பெரிது –74
இறையும் அகலகில்லேன் -செவ்விப் படிக் கோலம் கண்டு அகலாள் –82-இவரது
அலர் மேல் மங்கை உறை மார்பா -திருமங்கை நின்று அருளும் தெய்வம் -57-
மாலே நெடியானே –100
போன்ற பல ஸ்ரீ ஸூ க்திகள் கொண்டே நம்மாழ்வார் ஸ்ரீ ஸூக்திகளுக்கு இவரதே மூலம்
அன்பிலே ஞானத்தமிழ் -இரும் தமிழ் -தானே கொண்டாடும் படி இவர் திவ்ய பிரபந்தம் )
————————————————————————–
அன்பே தகழி நூறும் அருளினான் வாழியே
ஐப்பசியில் அவிட்டத்தில் அவதரித்தான் வாழியே
நன் புகழ் சேர் குருக்கத்தி நாண் மலரோன் வாழியே
நல்ல திருக்கடல் மலை நாதனார் வாழியே
இன்புருகு சிந்தை திரி இட்ட பிரான் வாழியே
எழில் ஞானச் சுடர் விளக்கை ஏற்றினான் வாழியே
பொன் புரையும் திருவரங்கன் புகழ் உரைப்போன் வாழியே
பூதத்தார் தாளிணை இப்பூதலதில் வாழியே
————————————————————————–
திரு குருகைப் பிரான் பிள்ளான் அருளிச் செய்த தனியன் –
என் பிறவி தீர இறைஞ்சினேன் இன்னமுதா
அன்பே தகழி யளித்தானை -நன் புகழ் சேர்
சீதத்தார் முத்துக்கள் சேரும் கடல் மலை பூதத்தார்
பொன் அம் கழல் –
என் பிறவி தீர இன்னமுதா-இனிய அமுதம் -சாகா அம்ருதம் போல் அல்லவே -மீளாத பேர் இன்பம் அளிக்குமே
அன்பே தகழி யளித்தானை –
நன் புகழ் சேர்-நல்ல கீர்த்தி சேர்ந்த -பெருமாள் ஆழ்வார் ஆச்சார்யர்கள் சேர்ந்த
சீதத்தார் முத்துக்கள் சேரும் -குளிர்ந்த -கடல் முத்துக்கள் தண்ணீர் ஸ்பர்சம் –
கடல் மலை பூதத்தார்
பொன் அம் கழல் -ஸ்ப்ருஹணீயம் -விரும்பத்தக்க அழகிய திருவடிகள் -பாவன போக்யத்வங்கள் இரண்டும் உண்டே –
இறைஞ்சினேன்-முக் கரணங்களாலும் ஸ்துதித்தேன்
இதில் திவ்ய பிரபந்த ப்ரதாதாவுமாய் -திவ்ய தேசத்தை ஜென்ம தேசமாக யுடையாருமாய் இருக்கிற பூதத்தாருடைய
ஸ்ப்ருஹணீயமான திருவடிகளை ஜென்ம சம்பந்தம் அறும் படி (முக்கரணங்களாலும் )பஜித்தேன் என்கிறது –
(திருமங்கை ஆழ்வார் பாகவத சேஷத்வம் அருளிச் செய்த நன்மை
பொன் முத்துக்கள் சேரும் –பெருமாளும் – முக்த பிராயரும் சேர்
கடல் மல்லை பூதத்தார் -கடல் மல்லை தலை சயனப்பெருமாள் -சேஷி சேஷன் இருவருக்கும் நிரூபகமான நன்மை
கடல் வண்ணன் பூதங்கள் -மலிய-கலி கெடுமே )
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிய வியாக்யானம்-
என் பிறவி தீர இறைஞ்சினேன் –
என் பிறவி யாவது -இவர் தாம் -இது கண்டாய் நன்னெஞ்சே இப்பிறவி யாவது -66-என்று அருளிச் செய்தபடியே
மாறி மாறி பல பிறப்பும் பிறந்து -(திருவாய் -2-6-8-)
பல் பிறவியில் படிந்து (படிக்கின்ற யான் -திருவாய் -3-2-2-)
பிறவிப் பெரும் கடலிலே (பெரிய திருமொழி -8-9-8-)
உடலாழி பிறப்பிலே (திருவாய் -1-4-10)புக்கு உழலுகை
ஏவம் விதமான ஜென்ம பரம்பரைகள்(புனரபி ஜனநம் புனரபி மரணம் என்று ) தீரும்படி ஜென்ம வைபவத்தை யுடைய பூதத்தார் பொன்னம் கழலை இறைஞ்சினேன் என்கிறது
இறைஞ்சுதல் -பஜிக்கை -அதாவது சேவிக்கை என்றபடி (முக்கரணங்களாலும் வணங்குகை )
பொது நின்ற பொன்னம் கழலே தொழுமின் முழு வினைகள் முன்னம் களாலும் முடிந்து -(மூன்றாம் திருவந்தாதி -88)என்னுமா போலே
பூதத்தாழ்வார் பொன்னம் கழற்கு ஆன ஜன்மம் (அத்தாள்களை நெஞ்சத்து உறைத்து இருப்பவர்களுக்கு பிறப்பு இறப்புக்கள் )கழலும் இறே
இனி அவர் உபகார கத்வ வைபவம் சொல்லுகிறது –
இன்னமுதா அன்பே தகளி அளிக்கையாவது–
(அளிக்கை யாவது கொடுக்கை -அதாவது
விலை மதிப்பற்ற மாணிக்கத்தைக் கூவிக் கொடுப்பாரைப் போலே
உத்தமன் பேர் ஏத்தும் திறம் அறிமின் -39-என்று மேல் விழுந்து உபகரிக்கை)
அமுதன்ன சொன்மாலையான-இரும்தமிழ் நன் மாலை இணை அடிக்கே சொன்னேன் -என்றும்
நாரணற்கு ஞானத் தமிழ் புரிந்த நான் – என்னும்படியான
அன்பே தகளியா -என்னும் திவ்ய பிரபந்தத்தை
உத்தமன் பேர் ஏத்தும் திறம் அறிமின் -என்னும்படி உபகரிக்கை –
இன்னமுதா அன்பே தகளி அளிக்கையாவது
அமுதன்ன சொன்மாலையான-(இரண்டாம் திருவந்தாதி -85)(தொண்டர்க்கு அமுது என்ன சொன் மாலைகள் சொன்னேன் -திருவாய் -9-4-9 )
இரும்தமிழ் நன் மாலை இணை அடிக்கே சொன்னேன் பெரும் தமிழன் நல்லேன் (14)-என்றும்
நாரணற்கு ஞானத் தமிழ் புரிந்த நான் (1)- என்னும்படியான
அன்பே தகளியா -என்னும் திவ்ய பிரபந்தத்தை
உத்தமன் பேர் ஏத்தும் திறம் அறிமின்(39) -என்னும்படி உபகரிக்கை –
அன்றிக்கே
கொடுக்கை –
கீழே ஞான வைபவம் சொல்லிற்று
இனி ஜன்ம வைபவம் சொல்கிறது மேலே-நன் புகழ் சேர்-சீதத்தார் முத்துக்கள் சேரும் கடல் மலை பூதத்தார்-என்று
அதாவது -ஸ்லாக்யமான யஸஸ்ஸூ சேரும் ஊருமாய் –
சீதள அதிசய முக்தாமணிகள் சேரும்படியாய் இருக்குமூர் -சீதக் கடலில் பிறந்த முக்தாதிகளும் சீதளமாய் இருக்கும் இறே
சீதக்கடல் -(பெரியாழ்வார் -1-2-1)என்று குளிர்த்தி நிறைந்த கடலில் தோன்றும் முத்துக்கள் சீதத்தார் முத்துக்களாய் இருக்கும் அன்றோ
நன் புகழ் ஆவது –
(பெருமாள் -புண்டரீக மஹ ரிஷிகள் -ஆழ்வார் -ஆச்சார்யர்கள் சேரும் திவ்ய தேசம் )
நிவாஸ வ்ருஷ ஸாதூ நாம் யசஸ் சைக பாஜனம் (புகழுக்கு ஒரே இருப்பிடமாய் இருப்பவன் ராமபிரான் கிஷ்கிந்தா -15-19-)
சேரும் கொடை புகழ் எல்லை இலானை(திருவாய் -3-9-7)
அந்தமில் புகழ் கார் எழில் அண்ணலே(திருவாய் -3-3-2)
எண்ணிறந்த புகழினானை (பெரிய திருமொழி -2-5-8) -என்னும்படியான
கடல் மலை தல சயனத்து உறைவாரையும்-(தல சயனப் பெருமாளையும் )
எப் புவியும் பேசும் புகழ் (உபதேச ரத்ன மாலை -6)பூதத்தாரையும் உடைத்ததாகையாலும் – உண்டான முத்துக்கள்
(சீதள அதிசய முக்தா மணிகள் சேரும்படியான ஸ்தலம் –
திசைவில் வீசும் செழு மா மணிகள் சேரும் திருக்குடந்தை (திருவாய் -5-8-9-)என்கிறபடியே
முத்துக்களும்
மணிகளும்
ஸ்வாபதேசத்தில்
ஞானச் சிறப்பாலே உலகம் எங்கும் ஒளி வீசும் பாகவத உத்தமர்களை குறிக்கின்றன
சம தமாதி குணங்களை யுடையவராகையாலே அவர்களையும் சீதத்தார் முத்துக்கள் என்னலாம்
சீதத்தார் முத்துக்கள் சேரும் -இந்நிலத்திலே உண்டான முத்துக்கள்)
இதன் கரையிலே
வந்துதித்த வெண்டிரைகள் வெண் முத்தத்தை கொழிக்கை(மூன்றாம் திருவந்தாதி -16)
மா மணி வந்து உந்து முந்நீர் மல்லையிலே-(திரு நெடும் தாண்டகம் -9)
சங்கிடம் கொள் முத்து ஒன்றும்
கரை கடந்த முத்தொன்றும் -சேரும் ஸ்தலம் –
(சங்கிடம் கொள் முத்து ஒன்றும்-சங்கை இடக்கையில் கொண்ட எம்பெருமான்
சங்கில் முளைத்த முத்து என்றுமாம்
கரை கடந்த முத்தாகிற ஆழ்வார் -இருவரும் சேரும் இடம்)
இக்கரை ஏறி -என்னக் கடவது இறே(அக்கரை என்னும் அநர்த்தக் கடலுள் அழுந்திக் கிடந்தேனை உன் பேர் அருளால் இக்கரை ஏறி -பெரியாழ்வார் -5-3-7))
கரை கண்டார் என்னும்படியான முக்தர் ஆயிற்று இவரும்
கடல் மலை –
விலஷண வஸ்துக்கள் சேரும் ஸ்தலம் –
சங்கு தங்கு தடம் கடல் கடல் மல்லை (யுள் கிடந்தாய் -பெரிய திருமொழி-2-5-8 ) இறே
மா மல்லை என்று இறே இவர் தாமும் மண்டி இருப்பது
(திருமங்கை மன்னன் அருளிச் செய்த பெருமையால் இவரும் தமர் உள்ளும் மா மல்லை (70 )-என்று ஈடுபட்டார் )
கச்சிக் கிடந்தவனூர் கடல் மலை தல சயனம் -(பெரிய திருமொழி -2-6-5 )என்று (கச்சியையும் கடல் மல்லையையும் )அடுத்தடுத்து படிக்கும் படி தேசமாக இறே பாடினார்–ஆகையால் அவன் படுகாடு கிடக்கும் தேசம் என்கிறது-
(பொய்கையார் பூதத்தார் -அடுத்து அடுத்து அவதாரம் -அவன் படுகாடு கிடந்தது இவர்களை அவதரிப்பித்து நம்மை அடைய கோர மா தவம் செய்கிறான்)
கடல் மலை பூதத்தார் –
தடம் கடல் பள்ளிப் பெருமான் தன்னுடைப்பூதம் –
பாற்கடல் மேல் பாம்பணை மேல் பள்ளிக் கொண்டு அருளும்
சீதனையே தொழுவார் விண்ணுளாரிலும் சீரியரே –
இண்டை கொண்டு தொண்டர் ஏத்த வெவ்வுள் கிடந்தான் என்கிறபடியே
மிக்க சீர் தொண்டரான புண்டரீகர் -வண்டு கொண்டு நறும் துழாய் அலங்கல் கொண்டு சாத்தக் கிடந்த இடம் இறே
கடல் மல்லை பூதத்தார் –
தடம் கடல் பள்ளிப் பெருமான் தன்னுடைப் பூதம் -(திருவாய் -5-2-4)
பாற்கடல் மேல் பாம்பணை மேல் பள்ளிக் கொண்டு அருளும்
சீதனையே தொழுவார் விண்ணுளாரிலும் சீரியரே -(திரு விருத்தம் -79)என்னக் கடவது இறே
இண்டை கொண்டு தொண்டர் ஏத்த வெவ்வுள் கிடந்தான் (பெரிய திருமொழி -2-2-10)என்கிறபடியே
மிக்க சீர் தொண்டரான (பெரிய திருமொழி-11-1-9)புண்டரீகர் –
வண்டு கிண்டு நறும் துழாய் அலங்கல் கொண்டு (பெருமாள் திரு மொழி -2-8)சாத்தக் கிடந்த இடம் இறே
கடல் மல்லை பூதத்தார் –
திருக்கடல் மல்லையிலே குருக்கத்திப் பூவிலே ஐப்பசிஅவிட்டத்தில் திருவவதாரம்
இவரும் இரும் தமிழ் நன் மாலை இணை அடிக்கே சூட்டினார் (74-புண்டரீகர் பூ மாலை சூட்ட )இறே –
அத்தை இட்டு –கடல் மல்லை பூதத்தார் -என்கிறது
அவனுக்கும் -கடல் மலை தல சயனது உறைவார் -( பெரிய திருமொழி -2-6-4)என்று இறே நிரூபகம்
பூதத்தார் பொன் அம் கழல் இறைஞ்சினேன் –
மேவினேன் அவன் பொன்னடி (கண்ணி-2)-என்னுமா போலே
தமிழ் தலைவன் பொன்னடி (இராமானுச -10 )-என்னக் கடவது இறே
பொன் அம் கழல் என் பிறவி தீர இறைஞ்சினேன் –
இவர் பொன்னடி யடியாக விறே ஜன்ம சம்சார பந்தம் நீங்குவது
இத்தால்
பூதத்தார் பாதத்தை பணியவே பிறப்பறும் என்றதாயிற்று
————————————————————————–
அவதாரிகை –
கீழில் திருவந்தாதியில்
உபய விபூதி உக்தனானவன் ஜகத்துக்கு சேஷி என்றார் –
இவர் அவ் உபய விபூதியையும் தம்முடைய பக்தியாலே அனுசந்தித்து பக்தி பரவசராய் கவி பாடுகிறார் –
(சேமுஷீ பக்தி ரூபம் -மதி நலம் -பொய்கையார் பூதத்தார் )அவருக்கு இந்த பக்தி இல்லையோ என்னில் -உண்டு
காரண கார்ய ரூபமான அவஸ்தா பேதமே உள்ளது –
உபய விபூதியையும் அனுசந்தித்து பிறந்த ஞானம் அவரது-அது பக்வமாய்
பக்தி ரூபாபன்ன மான படி இவரது-
ஆழ்வார்கள் ஒருவருக்கு ஒருத்தர் பாவஞ்ஞராய் இறே பரிமாறுவது –
அவர் ஞான விஷயத்தை தகளி யாக்கினார்
இவர் ஞான விசேஷத்தை தகளி ஆக்குகிறார்-
(திருக்கண்டேன் பொன் மேனி கண்டேன் -1-
இன்றே கழல் கண்டேன் -2-
காண் கான் என விரும்பும் கண்கள் -35-
பங்கயமே நீள் நெடும் கண் காட்டும் -55-
நெடுமால் நிறம் போலேக் கார் வானம் காட்டும் கலந்து -86-
கண்ணா நின் மேனி மலர்ந்து மரகதமே காட்டும் –தண் துலாய்க் கோமானை அந்தி வான் காட்டும் -87-
உணர்வு என்னும் ஒளி கொள் விளக்கு ஏற்றி வைத்தவனை நாடி வலைப்படுத்தேன் -94
என்று முதலிலும் நடுவிலும் முடிவிலும் அருளியபடி
ஞான
பக்திகள் முற்றி
சாஷாத்கார நிலையை உடையவராய் விளங்கினார் அன்றோ பேயாழ்வார்
ஆக மூன்று திருவந்தாதிகளிலும் ஞான பக்தி சாஷாத்காரங்கள் மூன்றுமே விளக்கப்பட்டன -)
————————————————————————–
ஜகத் வைசித்ரி யினுடைய (விசித்ரமான உலகை )நிர்வாஹகத்வம் போரும் என்னை திருத்தினபடி என்று
அனுசந்திக்கிறார் -விசித்ரம் ஆக்கினான்-(அன்பு ஆர்வம் உண்டாக்கி என்னைத் நிறுத்தியதை பார்த்தால் அதிலும் விசித்ரம் அன்றோ )
(அவன் அருளாலே நிர்ஹேதுகமாக யுண்டான தனது அன்பின் நிலைகளைத் தகளியாகவும் நெய்யுமாகவும் உருவகப்படுத்தி
ஸமஸ்த சர்வாதிகனான பரம புருஷனான நாராயணனுக்கு
பிரஞ்ஞானம் ஆகிற கொழுந்து விட்டு எரியும் விளக்கை ஏற்றி ‘அடிமை செய்யப் பெற்றேன் என்கிறார் )
அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக
இன்புருகு சிந்தை இடு திரியா -நன்புருகி
ஞானச் சுடர் விளக்கு ஏற்றினேன் நாரணற்கு
ஞானத் தமிழ் புரிந்த நான்-1-
பதவுரை
ஞானம் தமிழ் புரிந்த நான்–பகவத் விஷய ஜ்ஞானத்தைத் தருமதாய் த்ராவிட பாஷா ரூபமான
திருவந்தாதிப் பிரபந்தத்தை (உலகத்தார்க்கு) விரும்பி வெளியிட்ட அடியேன்.-பேர் ஊர் சொல்லிக் கொள்ளாத ஆழ்வார் அன்றோ இவர்
அன்பே தகளி ஆ–(பரபக்தியின் ஆரம்ப தசையான) ஸ்நேஹம் தகளியாகவும்
ஆர்வமே நெய் ஆக–(அந்த ஸ்நேஹம் மூலமாகப் பிறந்த) அபிநிவேசம் நெய்யாகவும்
இன்பு உருகு சிந்தை இடுதிரி ஆ–(பகவத் விஷயத்தின்) இனிமையாலே நீர்ப் பண்டமாக உருகுகின்ற
மனமானது (விளக்குக்கு) இடப் படுகிற திரியாகவுங்கொண்டு
நன்பு உருக–ஞானம் என்றே சொல்லலாம் படி ஞான ஸ்வரூபமான ஆத்மாவும் உருகப் பெற்று
நாரணற்கு–ஸ்ரீமந் நாராயணனுக்கு
ஞானம் சுடர் விளக்கு ஏற்றினேன்–பரஜ்ஞானமாகிற பிரகாசமான தீபத்தை ஏற்றினேன்.
அகல் -அன்பு தொடக்க நிலை பக்தி ஆதாரம் -அதில் தான் பர பக்தி -அது வளர்ந்து பர ஞானம் ஆக வேண்டுமே
வியாக்யானம் –
அன்பே தகளியா –
வையம் தகளியா என்று வையத்தை தம்முடைய
பக்தியிலே அனுசந்தித்து பக்தியை தகளியாகக் கொள்ளுகிறார் –
தைல(நெய் ஆர்வம்)
வர்திகளுக்கு (திரி சிந்தை )ஒரு ஆதாரம் வேணுமே –
ஆர்வமே நெய்யாக –
அதடியாக பிறந்த அபிநிவேசமே நெய்யாக –
ஆர்வம் ஆகிறது –
அன்பினுடைய த்விதீய பர்வம் –
இன்புருகு சிந்தை இடு திரியா –
விஷயத்தின் உடைய ரஸ்யதையாலே சிதிலமான ஹ்ருதயம் திரியாக –
(நான் ஏற்றிய ஞானச் சுடர் விளக்குக்கு அன்பே அகலாகவும் –ஆர்வமே நெய்யாகவும் -மனம் த்ரியாகவும் ஆயிற்று என்கிறார் –
அகலை ஆதாரமாகக் கொண்ட நெய்யைப் போலே -பக்தியை ஆதாரமாகக் கொண்டு வளர்ந்த -பக்தி முற்றின நிலையான பர பக்தி நெய்யாயிற்று
ஆர்வம் -பக்திக்கும் பர ஞானத்துக்கும் நடுவில் உள்ள அன்பின் நிலை –
அஸ்தாநே பயசங்கை பண்ணி -பொங்கும் பரிவாலே பல்லாண்டு பாடும் அவஸ்தை
மேலே ஏற்றப்போகும் பரஞானம் ஆகிய விளக்குக்கு உபாதானமாய் -அத்தை வளர்க்கும் நெய்யாக பரபக்தி
பகவத் போக்யதா அனுசந்தானத்தால் வரும் ஆனந்தத்தால் உருகி நனைந்து இருக்கும் மனம் -இந்த பரஞானம் ஆகிய விளக்குக்குத் திரி
பக்தி பரபக்தியாக வளர்ந்து மனத்தைப் பற்றி நின்று பரஞானம் என்னும் நிலையை அடைகிறது என்று கருத்து -)
நன்புருகி –
நன்பு என்று ஞானம்
தத் குண சாரத்வாத் து தத் வியபதேசாத் -என்கிறபடி ஞாதாவைக் காட்டுகிறது -(விஞ்ஞானம் யஜ்ஜம் செய்கிறான் -விஞ்ஞானம் உடையவன் என்று சொல்லாமல் )( நன்பு –நன்மை என்று கொண்டு சேஷத்வமே ஆத்மாவுக்கு பிரதானம்-தர்ம பூத ஞானத்தின் அவஸ்தையே பர பக்தியாதிகள் -மண்ணை இருந்து துழாவி வாமனன் மண் என்னும் அவஸ்தை ஞானம் முற்றி பக்தி முற்றி ப்ரேம அவஸ்தையில் தானே வரும் )
அதாஹ்ய என்கிற ஆத்மா
இந்த பக்திக்கு அனுரூபமான சம்பந்தத்தை உடையவருக்கு(நாரங்களுக்கு அயனமாய் இருக்கும் நாரணற்கு )
ஞானச் சுடர் விளக்கு ஏற்றினேன் –
பர பக்தி (பர ஞானம் )ஆகிற விளக்கு ஏற்றினேன்
நாரணற்கு-ஞானத் தமிழ் புரிந்தேன் நான் –
பரபக்தி பரவசனாய் கவி பாடுகிற நான் –
(பகவத் குணாம்ருதமான மதுவைப் பருகி -காலாளும் நெஞ்சு அழியும் கண் சுழலும் –பெரிய திருவந்தாதி -34- என்னும் நிலைக்கும் மேலே சென்று
எரிக்க முடியாத ஆத்மா நீர்ப்பண்டமானதே –
ஆர்வமான நெய்யும் உருகிற்று
சிந்தையும் உருகிற்று
அனைத்துக்கும் ஆதாரமான ஆத்மாவும் உருகிற்று –
பகவத் குணங்கள் படுத்தும் பாடு இது –
நாரணற்கு -விளக்கு ஏற்றத் தகுந்தவனுக்கு -ஸமஸ்த ஸகல பதார்த்தங்களையும் தன்னுள் கொண்டவனை
ரத்தினங்கள் அடங்கிய பெட்டியை விளக்கு ஏற்றிக் கண்டு அனுபவிப்பாரைப் போலே அனுபவித்தேன்
ஞானத்தமிழ் -பகவானின் யாதாத்ம்ய அறிவை விளைக்கும் -அனைவரும் கற்கலாம் படியான அமுதினிலும் இனிய தமிழ் நூல்
அம் தமிழ் இன்பப்பாவினை அவ்வடமொழியை -பெருமாள் -1-4-என்றும்
செந்திறத்த தமிழ் ஓசை வடசொல்லாகி -திரு நெடும் தாண்டகம் -4-
புரிந்த -விரும்பிச் செய்கை -தனது பேறாக உபகரிக்கை –
புரிந்த -உபக்ரமத்திலேயே முடிந்தது போல் -ஸத்ய ஸங்கல்பன் பேசுவிப்பதாலும்
பிரபந்தத்தை முடிக்காமல் நிற்க மாட்டாத தனது ஸ்வ பாவத்தாலும்
இயற்றிய -என்று இறந்தகால பத பிரயோகம் )
————————————————————————–
பக்தி பரவசராய் கவி பாடினார்க்கு அவன் கொடுக்கும் பரிசு சொல்லுகிறது -(சததம் கீர்த்த யந்த நித்ய யுக்த -கீதை )
நிஷ் கல்மஷைர் நிஹத ஜென்ம ஜரா விகாரைர்
பூயிஷ்ட பக்தி விபவை அபவை அவாப்யம்
அந்யைர் அதந்ய புருஷைர் மநசாபி அநாப்யம்
வைகுண்ட நாம தவ தாம தத் ஆம நந்தி –ஸ்ரீ வைகுண்ட ஸ்தவம் -45-
கல்மஷம் அற்றவர்களாயும் -பிறப்பு மூப்பு முதலிய விகாரங்களைத் தொலைத்தவர்களாயும்
பக்திச் செல்வம் மிகுந்தவர்களாயும் உள்ள முமுஷுக்களாலே அடையத் தகுந்ததாய்
மற்றையோர்களான தரித்ரர்களாலே நெஞ்சினாலும் அணுகத் தகாததாய் உள்ள -அப்படிப்பட்ட
ஸ்ரீ வைகுண்டம் என்னும் ஸ்தானத்தை -எம்பெருமானே -தேவரீருடைய இருப்பிடமாகச் சொல்லுகின்றார்கள் –
ஞானத்தால் நன்கு உணர்ந்து நாரணன் தன் நாமங்கள்
தானத்தால் மற்றவன் பேர் சாற்றினால் வானத்
தணியமரர் ஆக்குவிக்கும் அஃது அன்றே நங்கள்
பணியமரர் கோமான் பரிசு-2-
பதவுரை
நாரணன் தன்–ஸ்ரீமந் நாராயணனுடைய
நாமங்கள்–(திருமேனி முதலியவற்றிற்கு வாசகமான) திரு நாமங்களையும்
மற்று–மற்றும்
அவன் பேர்–அப்பெருமானுடைய (விபூதி விஸ்தாரங்களுக்கு வாசகமான) திரு நாமங்களையும்
ஞானத்தால்–(ப்ரேம ரூபமான) ஜ்ஞானத்தாலே-அன்பே உருவான அறிவாலே -பக்தியால் -அறிவும் அன்பும் கலந்தால் பக்தி ஆகுமே
நன்கு உணர்ந்து–உள்ளபடி யறிந்து
தானத்தால்–(ப்ரேமத்தின் முடிவெல்லையான) ஸ்தானத்திலே நின்று
சாற்றினால்–அநுஸந்தித்தால்,
நங்கள் பணி அமரர் கோமான் பரிசு–நமக்கு பந்துக்களாயும் எப்போதும் கைங்கர்ய பரர்களாயுமுள்ள
நித்ய ஸூரிகளுக்குத் தலைவனான எம்பெருமானுடைய தன்மையாவது,
வானத்து அணி அமரர் ஆக்குவிக்கும் அ”து அன்றே–பரம பதத்திற்கு அலங்காரமான நித்ய ஸூரிகளாக (நம்மை)ச் செய்து வைக்கு மதுவேயாம்
(இங்கே இருக்கும் பொழுது திரு நாமங்களை முறை கெட்டு பிதற்ற– முறையுடன் சொல்லும் -நீதி வானவர்-கோஷ்ட்டியில் ஒரு கோவையாக்குமே -கண்ட பேர் முன் பணியாத அமரர் நித்யர் )
வியாக்யானம் –
ஞானத்தால் நன்கு உணர்ந்து
பக்தியாலே நன்றாக உணர்ந்து
நாரணன் தன் நாமங்கள் –
அசாதாராணமான நாராயணாதி நாமங்களை –
விபூதி யோகத்தைப் பற்றின நாமங்களை –
(அசாதாரண திரு நாமங்கள் -நாராயணன் விஷ்ணு ஹரி போன்றவை
பர வாஸூ தேவன் அநிருத்தன் ராமன் கிருஷ்ணன் போன்ற அவன் விக்ரஹ திரு நாமங்கள்)
தானத்தால் மற்றவன் பேர் சாற்றினால்-
பக்தியாலே உணர்ந்த படியே சொன்னால் –
(பிரமன் ருத்ரன் இந்திரன் வாயு ஆகாசம் போன்றவை அவனுடைய விபூதிகளைக் காட்டி -சரீரீ யான அவன் அளவும் பர்யவசிக்குமே)
(சாற்றினால் –
அத்யந்த பக்தி யுக்தஸ்ய ந ஸாஸ்த்ரம் நைவ ச க்ரம -என்றபடி முறை கெடக் கூப்பிட்டால்
அல்லது அறிந்த அளவு சொல்லுதல்)
தானம் –
ஸ்தானம் -பக்தி ஸ்தானம்
மற்று –
இதைக் காட்டிலும் வேறான குண யோகத்தை காட்டும்
வானத் தணியமரர் ஆக்குவிக்கும் அஃது அன்றே –
பரம பதத்துக்கு ஆபரணமான நித்ய ஸூரிகளோடே
ஒரு கோவையிலே நோக்கும் அது இறே
நங்கள் பணியமரர் கோமான் பரிசு –
ஒரு நாள் பணிந்து ஒரு நாள் பணியாது இராதே
பணிகையே ஸ்வபாவமான
அமரர் கோன் உடைய படி –
நங்கள்-நமக்கு பந்துவாய்
பணி -கைங்கர்ய பரருமாய்
பரிசு -பிரகாரம்
(நங்கள் அமரர் -ஸ்வா பாவிக ஸம்பந்தம் உடையவர்
பணி அமரர் -கைங்கர்யம் செய்வதையே யாத்ரையாகக் கொண்டவர்
என்பதால் நித்ய ஸூ ரிகளைச் சொன்னவாறு)
————————————————————————–
அவன் செய்ததிலே தாம் ஈடுபடுகிறார்-
(கீழ்ப் பாட்டின் விவரணமாக இப் பாசுரம் -நல்லமரர் கோமான் நகர் நமக்கு பரிசாகக் கிடைக்கும்
பத்ரம் புஷ்ப்பம் பலம் தோயம் -இதுக்கே இப் பலம்-புகப்பெறுவர் போலாம்-என்ன ஆச்சர்யம் )
பரிசு நறு மலரால் பாற்கடலான் பாதம்
புரிவார் புகப் பெறுவர் போலாம் -புரிவார்கள்
தொல்லமரர் கேள்வித் துலங்கொளி சேர் தோற்றத்து
நல்லமரர் கோமான் நகர் -3-
பதவுரை
பால் கடலான் பாதம்–க்ஷீராப்தி நாதனுடைய திருவடிகளை
பரிசு நறு மலரால்–செவ்வி குன்றாத பரிமளம் மிக்க புஷ்பங்களைக் கொண்டு
புரிவார்–விரும்பித் தொழுமவர்கள்,
புரிவார்கள் தொல் அமரர்–ஸாதநாநுஷ்டாந பரர்களான (இந்திரன் முதலிய) பழைய தேவர்களுக்கும்
கேள்வி–(கண்ணால் காண முடியாமல்) காதால் மாத்திரம் கேட்டுக் கொண்டிருக்கக் கூடியதும்
துலங்கு ஒளி சேர் தோற்றத்து–மிக விளங்குகின்ற ஒளி பொருந்தித் தோன்றுதலையுடையதுமான
நல் அமரர் கோமான் நகர்–நித்யஸூரி நாதனுடைய திவ்ய நகரமான பரமபதத்தை
புகப்பெறுவர் போலாம்–அடையப் பெறுவர்கள்
பரிசு -இளசான
புரிவார் -விரும்புவார்கள்
வியாக்யானம் –
பரிசு நறு மலரால் –
பக்தி பிரகாரத்தாலே செவ்விப் பூவைக் கொண்டு
பாற்கடலான் பாதம் புரிவார் –
சம்சாரிகளை (விரஜைக்கு) அக்கரைப் படுத்த வேணும் என்று
திருப்பாற் கடலிலே கண் வளர்ந்து அருளுகிறவனுடைய
திருவடிகளை ஆஸ்ரயிக்குமவர்கள்
(பாதம் புரிவார் -புரிகை விரும்பி அடைகை -திருவடிகளை உபாயமாக விரும்பி அடைபவர்கள்
இத்தால் ஞானத்தால் என்று கீழ் பாசுரத்தில்
பரிசு என்று இப்பாசுரத்திலும்
சொல்லும் பக்தி -ஸாத்ய பக்தியே -சாதன பக்தி அன்று -ஸ்வயம் பிரயோஜனமாக பக்தி –
கீழே திரு நாம சங்கீர்த்தனமும் நன்கு உணர்ந்து என்று ஞான பூரவகமாக சொல்லுகையால் பல ரூபமாகவே -ஸ்வயம் ப்ரயோஜனமாகவே இருக்கும் –
இதில் பூக்களைக் கொண்டு ஆஸ்ரயிப்பதும் இதுவே)
புகப் பெறுவர் போலாம் –புரிவார்கள் தொல்லமரர் கேள்வித் –
சாதகராய் முற்பட நாலு நாள் இருந்துள்ள (அவனை ஒப்பிட இது-ஆயிரம் சதுர் யுக காலங்களும் நாலு நாள் என்றே சொல்லும் படி )
ப்ரஹ்மாதிகள் என்றும்
கேட்டே போவதாம் -(புரிவார்கள் -முயல்கிறவர்கள்)
துலங்கொளி சேர் தோற்றத்து –
அத்யர்க்க அநல தீப்தன்கத் -என்றும் ஒளியை உடைத்தாய் இருந்துள்ள
நல்லமரர் கோமான் நகர் –
என்றும் சாத்யரான நித்ய ஸூரிகளுக்கு(யத்ர பூர்வே ஸாத்ய சந்த்யா தேவா )
சேஷியாய் இருந்துள்ளவனுடைய நகரை –
பரிசு நறு மலரால் பாற்கடலான் பாதம் புரிவார் புகப் பெறுவர் போலே –
என்ன ஆச்சர்யமோ என்று ஈடுபடுகிறார்-
(கேள்வி நகர்
யந் ந தேவா ந முநயோ ந ச அஹம் ந ச சங்கர
ஜா நந்தி பரமேஸஸ்ய தத் விஷ்ணோ பரமம் பதம் -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-9-55-என்கிறபடியே
ப்ரஹ்மாதிகளாலும் கேட்டே போகுமது -காண முடியாதது அன்றோ –
ஸ்ரீ பத்ம நாப ஸ்ரீ யா -பிறந்த குழந்தை நான்முகன் உளறுகிறது -ஜல்பிக்க -யாரும் பார்த்தது இல்லை -கேட்டு உய்க்கும் அனந்தஸாயி -தேசிகன்
அத்யர்க்க அநல தீப்தம் தத் ஸ்தாநம் விஷ்ணோர் மஹாத்மன
ஸ்வ யைவ ப்ரபயா ராஜன் துஷ் ப்ரேஷம் தேவதாநவை -பாரதம் -ஆரண்ய -186-18-
நல் அமரர்
ந ச ஸீதா த்வயா ஹீநா ந ச அஹம் அபி ராகவா -அயோத்யா -53-31-என்கிறபடியே
அக்குளத்தில் மீன் போல் க்ஷணம் விஸ்லேஷம் வந்தாலும் சத்தையை இழப்பவர்கள்
யத்ர பூர்வே ஸாத்யா சந்தி தேவா -நித்ய ஸூரிகளே நல் அமரர்கள்
ப்ரபன்னர்களுக்கு ஒரு முயற்சியும் செய்ய வேண்டாமல் பரம புருஷார்த்தத்தை தனது பேறாகவே அளிக்கிறான்)
————————————————————————–
அன்பே தகளியா -என்று ஒரு விளக்கு ரூபித்தால் போலே
ஒரு புஷ்பமாக ரூபித்து-அத்தைக் கொண்டு ஆஸ்ரயிக்கிறார்-(அது பிரகாசம் இங்கு பரிமளம் )
நகரம் நித்திலம் மணியான மாணிக்கம் வயிரம்
நாள் மலர் -பைம் கமலம் -புற இதழ் -உள் இதழான அல்லி -தாது
ஆழ்வார் திரு உள்ளம்-நெஞ்சம் -ஸ்நேஹம் சங்கமாகிய பற்று -காமம்
விதிப்படி ஸ்வாமி சேஷி அறிந்து பற்றி இனிமை அறிந்து காதல் அபி நேசம் -ரூபக அதிசய யுக்தி )
(ஸ்ரீ மன் நாராயண சரணவ் சரணம் நம — பனி மலராள் அங்கம் வலம் கொண்டான் அடி பைங்கமல மேந்திப் பணிந்தேன்)
நகர் இழைத்து நித்திலத்து நாள் மலர் கொண்டு ஆங்கே
திகழும் மணி வயிரஞ் சேர்த்து -நிகரில்லாப்
பைங்கமல மேந்திப் பணிந்தேன் பனி மலராள்
அங்கம் வலம் கொண்டான் அடி-4-
பதவுரை
நகர் இழைத்து–என்னுடைய நெஞ்சை எம்பெருமான் வாழக் கூடிய திருமண்டபமாக அமைத்து
நித்திலத்து நாள் மலர் கொண்டு–(அதிலே) ஸ்நேஹமாகிற முத்தை செவ்வி குன்றாத புற விதழாக அமைத்து
திகழும் மணி வயிரம் சேர்த்து–ஸங்கம் காமம் என்கிற நல்ல மாணிக்கத்தையும் வயிரத்தையும் அல்லியும் தாதுமாக வைத்து
நிகர் இல்லா–ஒப்பில்லாத
பைங் கமலம் ஏந்தி–பக்தியாகிற அழகிய தாமரைப் பூவைத் தரித்துக் கொண்டு
பனி மலராள் அங்கம் வலம் கொண்டான்–குளிர்ந்த தாமரைப் பூவிற் பிறந்த பிராட்டியை வல மார்பினில் வைத்துக் கொண்டிருக்கும் பெருமானுடைய
அடி–திருவடிகளை
பணிந்தேன்–வணங்கினேன்.
வியாக்யானம் –
நகர் இழைத்து –
நெஞ்சைக் கோயிலாகக் கொண்டு
(விஸ்வதோ ஆயதனம் மஹத்
நெஞ்சமே நீள் நகர் -5-8-2–உபமேயத்தை மறைத்து உபமானமாகவே சொல்லுகையாலே ரூபாய் அதிசயித்த யுக்தி -அணி அலங்காரம் ஆகும்)
நித்திலத்து நாள் மலர் கொண்டு –
குளிர்ந்த முத்தை இதழாக கொண்டு –
(சாதன பக்தி நிஷ்டர்களின் ஸ்நேஹம் -ஸ்வா தந்தர்யமாகிய வெப்பத்துடன் இருக்கும்
இங்கோ பாரதந்தர்யமாகிய தண்மை குளிர்த்தி இருப்பதால் பக்தியின் தொடக்க நிலையான (இதனாலே புற இதழ் )ஸ்நேஹத்தைக் குளிர்ந்த முத்தாலே கூறுகிறார் -)
(நித்திலத்து நாள் மலர் கொண்டு–(அதிலே) ஸ்நேஹமாகிற முத்தை செவ்வி குன்றாத புறவிதழாக அமைத்து
மேலே பைம் கமலம் என்று மலரும்
‘மணி வயிரம் -அல்லி ஆகிற அக இதழும்
இங்கு மலர் என்று புற இதழும் சொல்லப்படுகின்றன)
ஆங்கே திகழும் மணி வயிரஞ் சேர்த்து –
அதிலே திகழா நின்றுள்ள
மணி வயிரங்கள் ஆகிற
அல்லியையும் உண்டாக்கி
(ப்ராப்தியையும் வை லக்ஷண்யத்தையும் விஷயீ கரித்து (பிராப்தி அறிந்து சங்கம் வருமே -வை லக்ஷண்யம் அறிந்து காமம் வருமே )இரண்டு கூறாக எழுந்து இருக்கிற அபிநிவேசம் ஆகிற)
நிகரில்லாப் பைங்கமல மேந்திப் பணிந்தேன் –
ஒப்பின்றிகே இருந்துள்ள
ஆர்வமாகிற புஷ்பத்தைக் கொண்டு-பணிந்தேன் –
(ஆங்கே திகழும் மணி வயிரம் சேர்த்து -ஸ்நேஹம் -அடுத்து -சங்கம் -காஜாமம் –
சர்வேஸ்வரன் வகுத்த ஸ்வாமி என்று அனுசந்திக்க சங்கம் ஏற்படும்
அவனது போக்யதையை அனுசந்திக்க காமம் எனப்படும் பக்தி நிலை – ஏற்படும் –
இரண்டும் சேர்ந்து அபி நிவேசம் காதல் ஏற்படும்
பரஞான பக்தி தசையே நிகர் இல்லா பைம் கமலம்)
பனி மலராள் அங்கம் வலம் கொண்டான் அடி
பணிவுக்கு விஷயமாவான் ஸ்ரீயபதி இறே
அவளுடைய சந்நிதியிலே
அபுஷ்கலமான சமாஸ்ரயணமும்-புஷ்கலமாம் இறே-
(நகர் முத்து மாணிக்கம் வயிரங்களை யுடைத்தால் போலே நெஞ்சில் பக்தியின் முன் நிலைகளை ஸ்நேஹம் சங்கம் காமம் யுடையதாய் இருக்குமே –
நெஞ்சை நீள் நகரம் என்றது ஸ்ரீ வைகுண்டத்தி திவ்ய தேசங்கள் அனைத்துடன் ஸ்ரீ பூமி நீளா தேவிமார்களுடனும் நித்ய ஸூரிகளுடன் புகுந்து
அவை எல்லாம் இளம் கோயில் என்னும் படி பெரிய விசாலமான நகரமாய் இருக்குமே
பக்தி பகவத் அனுபவ உபகரணமாகவும் -தானே ஸ்வயம் பிரயோஜனமாக அனுபவிக்கத் தக்கதாயும் –
பிற இன்பங்கள் அனுபவிக்கத் தக்கதாயும் இருப்பதால் தாமரையாக உருவகம்)
(அந்தாமத்து அன்பு செய்து என்னாவி சேர் அம்மான் அன்றோ)
————————————————————————–
அவனுடைய உத்கர்ஷம் சிறிது அறியும் அத்தனை அல்லது
சௌலப்யம் ஒருவரும் அறிவார் இல்லை-என்கிறது –
(பணி அமரர் -நித்ய ஸூரிகளில் ஒருவராக இருந்தாலும் ஏவம் விதமான அவனது நீர்மை யாராலும் பரிச்சேதிக்க ஒண்ணாதே
என்னும் இடத்துக்கு உலகு அளந்த விருத்தாந்தம் காட்டி அருளுகிறார்
நன்கு உணர்ந்து பேர் சாற்றினால் -2- என்றும்
பாதம் புரிவார் புகப்பெறுவர் -3-என்றும்
அடி பணிந்தேன் -4-என்றும் என்று உரைத்தீரே
நீர் நம்மை நன்கு உணர்ந்து பணிந்தீரோ என்ன
உன்னை முழுவதும் அறிய ஒருவராலும் முடியாதே
உனது மேன்மையைச் சிறிது அறிந்தாலும் நீர்மையை யாவராலும் அறிய முடியாதே என்கிறார் )
அடி மூன்றால் இவ்வுலகம் அன்று அளந்தாய் போலும்
அடி மூன்று இரந்து அவனி கொண்டாய் -படி நின்ற
நீரோத மேனி நெடுமாலே நின்னடியை
யாரோத வல்லார் அறிந்து–5–
பதவுரை
படி நின்ற–அத்யந்த ஸூ லபனாய் -தேவர்கள் கால் பாவாத -பூமியிலே அவதரித்து நின்ற
நீர் ஓதம் மேனி நெடுமாலே–கடல் வண்ணனான ஸர்வேச்வரனே!,
அன்று இ உலகம்–முன்பொரு காலத்தில் இவ்வுலகத்தை
அடி மூன்றில் அளந்தாய் போலும்–மூவடியாலே அளந்து கொள்பவன் போல
அடி மூன்று அவனி–மூவடி நிலத்தை
இரந்து கொண்டாய்–(மாவலியிடத்தில்) யாசித்துப் பெற்றாய்;
நின் அடியை–இப்படிப்பட்ட சர்வ ஸூ லபனான உனது திருவடிகளை
அறிந்து–நன்றாகத் தெரிந்து கொண்டு
ஓத வல்லார் ஆர்–பேச வல்லவர்கள் யாவருளர்? (யாவருமில்லை)
வியாக்யானம் –
அடி மூன்றால் இவ்வுலகம் அன்று அளந்தாய் போலும் –
மூன்று அடியில் இரண்டு அடியால்
லோகத்தை அளந்தாய்
(அளந்து கொண்டாய் என்றும் அளந்து கொண்டவனே -என்று சம்போதகம் ஆகவுமாம்)
அடி மூன்று இரந்து அவனி கொண்டாய் –
அளக்கைக்கு அடியாக
மூன்று அடியை இரந்து
பூமியைக் கொண்டாய் –
(மாவலியை சிறையில் இட்டு வைக்கவே இச்செயல் என்று நிந்தா ஸ்துதி என்றுமாம்)
படி நின்ற –
பூமியிலே ஸ்வா பாவிகமாக நின்ற -என்றுமாம்-அளக்கிற போதே பூமியிலே நின்ற என்னவுமாம் –
(மற்ற தேவதைகளை போல் இங்கு தண்மையால் கால் பாவாமல் நிற்கை அன்றிக்கே
தேவாதி தேவனான நீ -தனது உடைமையான இதன் இடம் உள்ள அதி வ்யா மோஹத்தாலே
இதுவே இவனுக்கு வந்தேறியாக இல்லாமல் இயற்கையான இருப்பிடம் என்று காண்பார் கருதும்படி கால் தோய்ந்து நின்றமையால் ஈடுபட்டு அருளிச் செய்கிறார்)
(படி நின்ற நீர்-நீர்மை என்றும்
நீரோதம் -நீர் நிறைந்த கடல் என்றும் கொண்டு கூட்டிப் பொருள்)
நீரோத மேனி நெடுமாலே –
கடலோதம் போலே இருந்து உள்ள திருமேனியை உடையனாய் வளர்ந்தவனே –
வ்யாமோஹத்தை உடையவன் என்றுமாம்
நின்னடியை யாரோத வல்லார் அறிந்து –
உன்னுடைய சௌலப்யத்தை அறிந்து-சிலராலே ஆஸ்ரயிக்க போமோ-
(இப்படி நீர்மையே வடிவான உன்னுடைய திருவடிகளின் பெருமையை என்னைப் போல் அறிவு கலங்கியவர்கள் பேசலாம் ஒழிய
அது இல்லாதவர்களால் இவ்வளவு என்று அளவிட்டுப் பேச முடியுமோ என்றுமாம்)
த்வே இதஸ்ய க்ரமேண ஸ்வர் த்ருசோ அபிக்யாய மர்த்யோ புரண்யதி
த்ருதீய மஸ்ய நகிரா ததர்ஷதி வயஸ்சந பத யந்தஸ் பதத்ரிண -ருக் அஷ்டகம் -2-2-25-
பரமபதத்தைக் காண்பவனான விஷ்ணுவினுடைய இரண்டு அடி வைப்புக்களையே மனிதன் நன்கு அறிந்து பஜிக்கிறான்
இந்த விஷ்ணுவின் மூன்றாவது அடி வைப்பை ஒரு போதும் அறிய வல்லன் அல்லன்
அந்த ஆகாசத்தில் எங்கும் வீசும் வாயுக்களும் பறக்கும் பறவைகளும் அறிய வல்லன வல்ல-
பரோ மாத்ராய தன்வா வ்ருதாந ந தே மஹித்வ மன்வஸ் நுவந்தி
உபதே வித்ம ரஜஸீ ப்ருதிவ்யா விஷ்ணோ தேவ த்வம் பரமஸ்ய வித்ஸே –ருக் அஷ்டகம் -5-5-24-
ஓங்கு உலகு அளந்த உத்தமனே -நீ மிகப் பெரியவன் -உனது பெருமையை அளவிட்டு அனுபவிக்க – அறிய வல்லார் யாருமே இல்லையே
பூமியில் இருந்து தொடங்கிய உன்னுடைய இரண்டு பாத ஸ்தானங்களை அறிகிறோம்
அதற்கு மேற்பட்ட மூன்றாவது அடி வைப்பை நீயே அறிகிறாய்
என்கிற ஸ்ருதி சாயையில் மூன்றாவது அடி வைப்பை எவராலும் அறிய முடியாது என்கிறார் ஆகவுமாம்)
————————————————————————–
ஞானத்துக்கு விஷயம் அன்றாகில்-சூன்யம் ஆகிறதோ என்னில்
அபிநிவேசத்தை உடையராய் ஆஸ்ரயிக்க வல்ல-பாக்யவான்கள் அறிவர் -என்கிறது –
(கீழே அவனை ஆறும் அறியார் என்றது -எத்தனை அளவுடையராய் இருந்தாரே யாகிலும் அவனை அளவிட்டு அறிய முடியாது என்றார்
இதில் அன்புடன் அவனை ஆஸ்ரயிப்பவர்களுக்குத் தானே தன்னைக் காட்டி அருளுவான் என்கிறார்
ஆகையால் யாதும் விரோதம் இல்லை
யாதும் ஒரு நிலைமையன் என அறிவரிய எம்பெருமானே
யாதும் ஓர் நிலைமையன் என அறிவெளிய எம்பெருமான் அன்றோ)
அறிந்து ஐந்தும் உள்ளடிக்கி யாய் மலர் கொண்டு ஆர்வம்
செறிந்த மனத்தராய் செவ்வே -அறிந்தவன் தன்
பேரோதி ஏத்தும் பெரும் தவத்தோர் காண்பரே
காரோத வண்ணன் கழல்-6-
பதவுரை
அறிந்து–(எம்பெருமானுடைய வைலக்ஷண் யத்தையும் விஷயங்களின் கெடுதல்களையும் நன்றாக) அறிந்து கொண்டு
பஞ்சேந்திரியங்களையும்–பஞ்சேந்திரியங்களையும்
உள் அடக்கி–(பட்டி மேய வொண்ணாதபடி தடுத்து) பகவத் விஷயத்திலே ஊன்றும்படி நியமித்து
ஆய் மலர் கொண்டு–(பகவானுக்கு ஏற்கும்படி) ஆராய்ந்த புஷ்பங்களை ஸம்பாதித்துக் கொண்டு
ஆர்வம் செறிந்த மனத்தர் ஆய்–பக்தி மிகுந்த மனத்தை யுடையராகி
செவ்வே அறிந்து–(எம்பெருமானுக்கும் தமக்குமுள்ள சேஷ சேஷி பாவத்தை -முறைமையை) நன்றாக அறிந்து
அவன் தன் பேர்–அப்பெருமானது திரு நாமங்களை
ஓதி–இடைவிடாமற் சொல்லிக் கொண்டு
ஏத்தும்–துதிக்கின்ற
பெரும் தவத்தோர்–மஹா பாக்யசாலிகள்
கார்ஓதம் வண்ணன் கழல்–கருங்கடல் வண்ணனான அப்பெருமானுடைய திருவடிகளை
காண்பர்–கண்டு அநுபவிக்கப் பெறுவார்கள்.
வியாக்யானம் –
அறிந்து –
சப்தாதிகள் த்யாஜ்யம் என்று அறிந்து
ஐந்தும் உள்ளடிக்கி-
விஷயங்களில் நின்றும் இந்த்ரியங்களை மீட்டு
பிரத்யக்காக்கி
(கடையற பாசங்கள் விட்ட பின்னை யன்றி அவனவை காண் கொடானே -திருவாய் -8-2-8-
சப்தாதிகள் -இந்திரியங்கள் -மனஸ் -புத்தி ஆத்மா -மேல் மேல் உயர்ந்த நிலை )
யாய் மலர் கொண்டு-
செவ்விப் பூ கொண்டு
ஆர்வம் செறிந்த மனத்தராய்-
அபிநிவேசம் நெருங்கின மனசை உடையராய்
செவ்வே அறிந்து –
நாம் சேஷம் -அவன் ஸ்வாமி என்னுமிடத்தை அறிந்து
அவன் தன் பேரோதி ஏத்தும் பெரும் தவத்தோர் –
அவனுடைய திரு நாமங்களை சொல்லி
ஏத்துகிற பாக்யவான்கள்
(புரிவதுவும் புகை பூவே -திருவாய் -1-6-1-
‘கள்ளார் துழாயும் கணவலரும் கூ விளையும் முள்ளார் முலரியும் ஆம்பலும் -பெரிய திருமொழி -11-7-6-என்று இருந்தாலும்
பொங்கும் பரிவாலே அசாரமான பூக்களைக் கழித்து ஸூ குமாரமான திருமேனிக்குத் தக்கதாய் அன்று அலர்ந்தபூக்களைக் கொண்டு ஆராதிக்க வேண்டுமே
இத்தையும் விஹிதம் என்று எண்ணாமல் -பெரும் காதல் நிறைந்த மனத்தோடு இதினிலும் இனியது இல்லை என்ற எண்ணத்துடன் –
உபாய புத்தியைச் சிறிதும் வைக்காமல் -நம் கார்யம் செய்பவன் ஸ்வாமியான அவனே என்ற எண்ணத்துடன்
குண சேஷ்டிதங்களுக்கு வாசகமான திரு நாமங்களை ஸ்வயம் ப்ரயோஜனமாகக் கீர்த்தனை பண்ணி
நியாஸம் ஏஷாம் தபஸாம் அதிக்ரிதமாஹு -என்று
சரணமாகப் பற்றுகிறவர்கள் பாக்கியசாலிகள் என்கிறார் -)
காண்பரே –
நிச்சிதம்
காரோத வண்ணன் கழல் –
கடல் உதாஹரணமான வடிவை உடைய-திருவடிகளை –
(திருவடிகளையே உபாயமாகப் பற்றி திருவடிகளையே அடைவார்கள் என்கிறார்)
————————————————————————–
அவனை உகந்தார் காண்பரான பின்பு-நீயும் அவனையே உகந்து ஆஸ்ரயி என்று
திரு உள்ளத்தைப் பார்த்து சொல்லுகிறார் –
பிரதிபந்தகம் உண்டாகில் செய்வது என் என்னில்-நமுசி பட்டது படும் அத்தனை –
கழல் எடுத்து வாய் மடித்துக் கண் சுழன்று மாற்றார்
அழல் எடுத்த சிந்தையராய் அஞ்ச -தழல் எடுத்த
போராழி ஏந்தினான் பொன் மலர்ச் சேவடியே
ஓராழி நெஞ்சே உகந்து-7-
பதவுரை
ஆழிநெஞ்சே–ஆழ்ந்த மனமே!
முன்பு த்ரிவிக்ரமாவதாரம் செய்தருளின போது)
கழல் எடுத்து–திருவடிகளை உயரத் தூக்கினவனாயும்,
மாற்றார்–எதிரிட்ட நமுசி முதலானவர்கள்
அழல் எடுத்த சிந்தையர் ஆய் அஞ்ச–பயாக்னி கொளுந்தின நெஞ்சை யுடையவர்களாய் நடுங்கும்படியாக
வாய் மடித்து–உதட்டை மடித்துக் கடித்துக்கொண்டு
கண் சுழன்று–(பார்க்கிற பார்வையிலேயே அவ்வெதிரிகள் சுருண்டு விழும்படி) கண்கள் வட்டமிட
தழல் எடுத்த போர் ஆழி–நெருப்பையுமிழ்கிற போர் செய்யவல்ல திருவாழியாழ்வானை
ஏந்தினான்–தரித்தவனாயுமிருக்கிற எம்பெருமானுடைய,
பொன்மலர் சே அடியே–அழகிய மலர்போன்ற திருவடிகளையே,
உகந்து ஓர்–விரும்பி அநுஸந்திப்பாயாக.
கழல் எடுத்து வாய் மடித்துக் கண் சுழன்று மாற்றார் அழல் எடுத்த சிந்தையராய் அஞ்ச –
அஞ்ச கழல் எடுத்து வாய் மடித்து
சுழலா நின்ற கண்களை உடைய
நமுசி பிரக்ருதிகள் ஹிருதயத்திலே கொளுத்தின
பய அக்னியை உடையராய் அஞ்சும்படி திருவடியை எடுத்து –
கழல் எடுத்து -என்று ஈஸ்வர விசேஷணம் ஆகவுமாம்-
(கழல் எடுத்து -நமுசி பிரக்ருதிகள் அஞ்சும்படி பூமி அதிரும்படி என்றும்
அடியார் வாழும்படி திருவடியைத் தூக்கி உலகு அளந்தான் என்றும் கொள்ளலாம்)
தழல் எடுத்த போராழி ஏந்தினான் பொன் மலர்ச் சேவடியை –
அக்னியை உமிழா நின்றுள்ள
திரு வாழியைக் கையிலே எந்தினவனுடைய
ஸ்ப்ருஹணீயமான திருவடிகளையே
ஓராழி நெஞ்சே உகந்து
அளவுடைய நெஞ்சே உகந்து ஆஸ்ரயி
கம்பீரமான நெஞ்சே என்னவுமாம்-
(வாமனனுக்கு ஆழி உண்டோ என்னில் திரிவிக்ரமனுக்கு உண்டே -ஆழி எழ இத்யாதி)
(ஆழி நெஞ்சே -கடல் போலே ஆலமுடைய கம்பீரமான நெஞ்சே -உனது ஆழத்தை எந்நாளும் அறிய முயல் அன்றோ
முந்துற்ற நெஞ்சான உனக்கு நான் உபதேசிக்க வேண்டுகிறது
பொன் மலர்ச் சேவடியே உகந்து ஓர் -இது கடன் விதி என்ற புத்தி இல்லாமல் அன்புடன் ப்ரீதி மண்டி
கைக் குழந்தைக்குத் தாய் முலை போலே சேஷ பூதனுக்கு இனிதாய் தாரகமாய் இருக்கும் சேஷி யுடைய திருவடிகளைப்
பற்றச் சொல்லி நான் உபதேசிக்க வேண்டுமோ
பால் குடிக்கக் கால் பிடிக்க வேண்டுமோ
என்னிலும் முந்துற்று நீயே உகந்து பற்ற வேண்டிய விஷயம் அன்றோ திருவடிகள் என்கிறார் – )
————————————————————————–
பொய் உகப்பு பாதகமாம் படி சொல்லுகிறது –
உகந்து உன்னை வாங்கி ஒளி நிறம் கொள் கொங்கை
அகம் குளிர உண் என்ற அவளாவி உகந்து
முலை யுண்பாய் போலே முனிந்து உண்டாய் நீயும்
அலை பண்பா லானமையால் அன்று—8
பதவுரை
(பூதனையானவள்)
உகந்து–யசோதைப் பிராட்டியைப் போல அன்புடையவளாக அபிநயஞ்செய்து
உன்னை வாங்கி–(நீ தூங்கும் போது வந்து) உன்னைத் தூக்கி யெடுத்து
ஒளி நிறம் கொள் கொங்கை–(பால் விம்மி யிருத்தலால்) ஒளி விட்டு அழகு பெற்றுள்ள (தனது) ஸ்தனத்தை
அகம் குளிர உண் என்றாள்–(‘குழந்தாய்!) மனமகிழ்ந்து உண்ணு’ என்று சொல்லி வாயிலே வைத்தாள்.
ஆனமையால்–ஆகையினாலே,
அன்று–அவள் முலை தந்த; அக் காலத்தில்
நீயும்–சிறு குழந்தையான நீயும்
அலை பண்பால்–அலை யெறிகிற (அதிகமான) உன் ஸௌலப்ய குணத்தினாலே
முலை உண்பாய் போலே–மெய்யே ஸ்தன்ய பானஞ்செய்பவனைப் போலே
உகந்து–(பெறாப் பேறு பெற்றாற் போலே) மகிழ்ந்து கொண்டு
முனிந்து–(மனத்தில்) சீற்றங் கொண்டு
ஆவி–(அந்தப் பூதனையின்) உயிரை
உண்டாய்–உறிஞ்சி உட் கொண்டாய்.
(பொத்த உரலும் பூதனை விஷப்பாலும் அவனுக்கே என்று அற்று தீர்ந்து இருப்பதால் திரு உள்ளம் உகப்பானே
விஷமே அம்ருதமான வேளையில் திரு அவதாரம் அன்றோ
அலை பண்பால்-கண்ணனுக்கும் பூதனைக்கும் -அலைகிற பண்பு குழந்தைத் தனம்-அலை எறிகிற குணத்தால் -தாழ்ந்த குணம்
கையார் சக்கரத்து–போனாய் மா மருதின் நடுவே -தேனே இன்னமுதே என்று என்று சில கூத்துக்கள் சொல்ல
மெய்யே பெற்று ஒழிந்தேன்
பாசுரத்தில் உகந்து இரண்டு தடவை -அவளும் இவனும் )
வியாக்யானம்
உகந்து –
யசோதை பிராட்டி உகக்குமா போலே உகந்து
உன்னை வாங்கி-
அவள் ஒசழக்காக வெடுக்குமா போலே எடுத்து –
ஒளி நிறம் கொள் கொங்கை –
முலைப்பாலாலே நெறித்து
அத்தாலே புகர் உடைத்தான கொங்கை
அகம் குளிர உண் என்று அவளாவி-
உண்டு அல்லது நிற்கப் போகாதபடி
ஹிருதயம் குளிரும்படிக்கு ஈடாக
சொன்னவளுடைய பிராணனை
உகந்து முலை யுண்பாய் போலே முனிந்து உண்டாய் நீயும் –
அவள் பொய்யே உகந்து முடிக்க நினைத்தாற் போலே
நீயும் பொய்யே உகந்து
முலை உண்ணுமா போலே
முனிந்து முடிக்க நினைத்தாய்
நீர்மையை உடைய
அலை பண்பா லானமையால் அன்று –
அவள் பொய்யே உகந்து முடிக்க நினைத்தாற் போல்
நீயும் பொய்யே உகந்து மிக்க நீர்மை உடையை
ஆகையால் அன்று
உனக்கு மித்ர பாவமும் அமைந்து இருக்கச் செய்தே
அவளை முடித்து உன்னை தந்தது
ஆஸ்ரிதர் பக்கல் உண்டான ஓரம் இறே-
(மித்ர பாவேந ஸம் ப்ராப்தம் ந த்யஜேயம் -என்கிற நீ
வெளி வேஷ அன்பை யுடையாளாய் வந்த பூதனையையும்
ரக்ஷித்து உன்னிடம் சேர்த்துக் கொண்டு இருப்பாய்
அப்படிச் செய்யாமல் அவளை அழித்தது -உன்னை ஒழிய சத்தை நிலை இல்லாத அடியார் இடம் உனக்குள்ள பக்ஷ பாதத்தால் அன்றோ )
————————————————————————–
யசோதை பிராட்டி உடைய-ஸ்நேஹத்துக்கு உபமானம் உண்டோ-என்கிறது –
அன்றது கண்டு அஞ்சாத ஆய்ச்சி உனக்கு இரங்கி
நின்று முலை தந்த இந் நீர்மைக்கு -அன்று
வரன் முறையால் நீ யளந்த மா கடல் ஞாலம்
பெரு முறையால் எய்துமோ பேர்த்து—9-
பதவுரை
அன்று–(பூதனை பிணமாக விழும்படி நீ முலை யுண்டு அவளுயிரை முடித்த) அக் காலத்தில்
அது கண்டு–முலை கொடுத்த அவள் செத்துக் கிடந்த அச் செய்தியைக் கண்ணாலே பார்த்தும்
அஞ்சாத–‘முலை கொடுக்கிற நாமும் ஒருகால் செத்துப் போவோமோ!’ என்று பயப்படாத
ஆய்ச்சி–யசோதைப் பிராட்டியானவள்
நன்று–தரித்து நன்று
அந்தப் பூதனையின் (விஷத்திற்கு மாற்றாக)–
உனக்கு இரங்கி முலை தந்த–உன்னிடத்துப் பரிவு கொண்டு முலை கொடுத்த
இ நீர்மைக்கு–இந்தப் பெருங் குணத்திற்கு,
அன்று நீ வரன்முறையால் அளந்த மா கடல் சூழ் ஞாலம்–முன்பு நீ சிறந்த உறவினாலே அளந்து கொண்ட கடல் சூழ்ந்த இவ்வுலகமானது
பெருமுறையால் எய்துமோ–இன்னது பெரியதென்று பார்க்கும் முறையில் ஒப்பாகப் பொருந்துமோ?
வியாக்யானம் –
அன்றது கண்டு அஞ்சாத ஆய்ச்சி-
அப்பெரிய விசனத்தைக் கண்டு பயப்படாத தாயார்
உனக்கு இரங்கி –
உன் பக்கலிலே சிதிலையாய்
நின்று முலை தந்த இந்நீர்மைக்கு -அன்று –
தரையில் கால் பாவி
முலை தந்த ஸ்வ பாவத்துக்கு
வரன் முறையால்-
ஈஸ்வரனான ப்ரப்தியாலே
நீ யளந்த மா கடல் ஞாலம் பெரு முறையால் எய்துமோ பேர்த்து –
நீ அளந்த பெரிய கடல் சூழ்ந்த பெரிய பூமியானது
பெரு முறையாலே எய்துமோ அவளுடைய ஸ்வ பாவத்துக்கு-
இந்த பூமியானது திரியட்டு இது பெரியது-இது பெரியது என்னும் முறையாலே எதிர்க்குமோ
அவளுடைய ஸ்வ பாவத்துக்கு நீ பெரியதாகச் செய்ததும்-ஒப்பு அன்று என்கிறது
எய்துமோ –
நீர்மைக்கு பூமி சத்ருசமோ என்னுதல்
உன்னுடைய அளந்த வியாபாரம் தான் ஒக்குமோ என்னுதல்
(இவ்வுலகம் எல்லாம் யசோதைப் பிராட்டியின் இந்த குணத்துக்கு ஒப்பாகுமோ
பொங்கும் பரிவாலே கொழு மோர் காய்ச்சி ஐம்படைத்தாலி போல்வன சாத்தி பின்பு தானம் முலை கொடுத்து-பரே சப்தம் கௌஸ்துபம் போல்வன பறை சாற்றை -கூர்ம வியாக்ரம் -ஸுலப்யம் பறை சாற்றுமே
அப்ராக்ருத குணக்கடலான உனது பெருமையும் பிராகிருத சம்பந்தம் யுடையவளாய் இருந்தும் இப்படிச் செய்த இவள் குணத்துக்கு ஒப்பாகுமோ
இத்தால் யசோதை பிராட்டிக்கு கண்ணன் மீது உள்ள அன்பின் மஹாத்ம்யம் சொல்லிற்று)
————————————————————————–
பேர்த்தனை மா சகடம் பிள்ளையாய் மண்ணிரந்து
காத்தனை பல்லுயிரும் காவலனே -ஏத்திய
நா வுடையேன் பூ வுடையேன் நின்னுள்ளி நின்றமையால்
கா அடியேன் பட்ட கடை———-10-
பதவுரை
காவலனே–ஸர்வ ரக்ஷகனே!,
பிள்ளைஆய்–சிறு குழந்தையாயிருந்து
மா சகடம்–(அஸுராவேசமுள்ள) பெரிய வொரு வண்டியை
பர்த்தனை–கட்டழியும்படி உதைத்துத் தள்ளினாய்;
மண்–பூமியை
இரந்து–(மஹாபலியினிடத்தில்) யாசித்துப் பெற்று
(திருவடியாலே குளிரத் தடவி)
பல் உயிரும்–எல்லா ஆத்மாக்களையும்
காத்தனை–ரக்ஷித்தருளினாய்;
நின்–(இப்படி ரக்ஷகனான) உன்னை
உள்ளி நின்றமையால்–(ஆஸ்ரயிக்கத் தக்கவனாக) மனப் பூர்வமாக எண்ணியிருப்பதனால்
ஏத்திய நா உடையேன்–உன்னை ஸ்துதிப்பதையே ஸ்வபாவமாகவுள்ள நாக்கை யுடையவனாயிருக்கிறேன்;
பூ உடையேன்–(அர்ச்சிப்பதற்கு உரிய) புஷ்பங்களையுமுடையவனாயிருக்கிறேன்;
(ஆன பின்பு)
அடியேன்–உனக்கு அடியவனாயிருக்கும் பெரும் பதவியைப் பெற்றிருக்கிற நான்
பட்ட–வெகு காலமாக அடைந்துள்ள
கடை–தாழ்வுகளை
கா–காப்பாற்று போக்கி யருள வேணும்.
வியாக்யானம் –
பேர்த்தனை மா சகடம் பிள்ளையாய் –
பிள்ளையாய் இருந்து பெரிய சகடத்தை உதைத்தாய்
மண்ணிரந்து காத்தனை பல்லுயிரும்
மகா பலியாலே நோவு படாமே
பூமியை இரந்து ரஷித்தாய்
இப்படி ரஷிக்கைக்கு அடி என் என்னில்
காவலனே –
எல்லாவற்றையும் உடையவனாகை(ஸமஸ்த வஸ்துக்களுக்கும் ஸர்வ காலத்திலும் ஸர்வ
பிரகாரங்களில் ஸ்வா பாவிக ரக்ஷகன் )
நின்னுள்ளி நின்றமையால் -ஏத்திய நா வுடையேன் பூ வுடையேன்-
உன்னை சமாஸ்ரயணீயனாக உடையேன் ஆகையாலே-
ஆஸ்ரயிக்கும் த்ரவ்யங்களையும்-
இந்த்ரியங்களையும் புஷ்கலமாக உடையேன் ஆனேன் –
அடியேன் பட்ட கடை –
உன்னுடையேனாய் இருந்து வைத்து நான் முன்பு
தேவதாந்தரங்களை அனுவர்த்தித்துப் பட்ட
பொல்லாங்கு இனிப் படாதபடி காத்தருள வேணும்-
(நீ ஸர்வ ரக்ஷகன் என்பதை உனது ஒவ்வொரு செயலும் பறை சாற்றுகிறதே -உன்னால் அத்தை மறைக்கப் போமோ
பிள்ளையாய் ஆன திசையிலும் ஸர்வ ரக்ஷகத்வத்தை மறைக்கப் போமோ
ஸர்வ ரக்ஷகத்வம் ஸ்வா பாவிக ஸ்வரூபம் அன்றோ உனக்கு
இதனால் அன்றோ பல பிரதனான உனது ஸ்வரூபத்தை மாற்றிக் கொண்டு மாணியாய் இரந்து
அத்தை வியாஜ்யமாக்கி -தாய் பிரஜையை தனது பேறாகவே அணைத்துக் கொள்வது போல் அன்றோ
நீ ஸமஸ்த லோகங்களையும் அளந்து அருளினாய்
இந்த ரக்ஷகத்வத்தை அனுசந்தித்து
என்னிலும் முந்துற்ற கரணங்கள் -உன்னி -ஏத்திய நா -பூ உடையேன் -என்பதால் மநோ வாக் காயங்கள் மூன்றும்
பகவத் விஷயத்தில் ஈடுபட்டமையை வெளியிட்டு அருளுகிறார் –
அடியேன் பட்ட கடை கா
இவ்வாறு உனக்கே அநந்யார்ஹ சேஷ பூதனான அடியேன் முன்பு அநாதி காலம் தாழ்ந்த -கடை என்றது தாழ்வைக் குறிக்கும்
அடுத்த பாசுரத்தில் -அமரர் கழல் தொழுது நாளும் இடை நின்ற இன்பத்தராவர்-என்று தேவதாந்த்ர பஜநம் சொல்வதால்
இங்கும் கடை என்று அத்தையே சொல்லிற்று எனக் கொள்ளலாம்
கா -ஸர்வ ரக்ஷகனான நீயே இப்படிப்பட்ட தாழ்வுகளை -அல் வழக்குகளை -இனிப்படாமல் ரக்ஷித்து அருள வேணும் என்கிறார் -)
————————————————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பூதத் ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.