Archive for the ‘ராமானுஜ நூற்றந்தாதி’ Category

ஸ்ரீ திருமலை நல்லான் சக்ரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண அய்யங்கார் ஸ்ரீ ஸூக்தி- அமுத விருந்து–29-38–

December 9, 2021

கீழ் எம்பெருமானார் ஸ்ரீ கிருஷ்ண அனுபவத்தில் ஆழ்ந்து
கார் போலே தம்மை ஆட்க்கொண்டு அருளியதை
எட்டு பாசுரங்களால் அருளிச் செய்தார் –

இனி ஸ்ரீ கிருஷ்ண த்ருஷ்ண தத்துவமான ஆழ்வார் -அவரது அருளிச் செயல்களில் ஈடுபட்ட
ஸ்ரீ உடையவர் தமக்குச் செய்து அருளிய உபகார பரம்பரைகளைப் பட்டியல் இடுகிறார் –

ஸ்ரீ பாஷ்ய ஸூத்ரங்களை இது கொண்டு ஒருங்க விட்டு அருளியதையும் –
ஸ்ரீ பாஷ்யம் அருள ஸம்ப்ராயத்துக்கு ஸ்ரீ ஆளவந்தார் ஆ முதல்வன் இவன் என்று கடாக்ஷித்து அதற்காகவே
சரண் அடைந்த ஸ்ரீ தேவப்பெருமாள் கழல் இணைக் கீழ் பூண்ட அன்பாளராய் இருந்தமையும் –

எம்பெருமானாரைச் சேரும் அவர்க்கு செறு கலியால் வருந்திய ஞாலத்தை வண்மையினால் வந்து எடுத்து அளித்தமையும் –
அவர்க்கு ஆத்ம குணங்கள் தாமாகவே வந்து சேரும் என்பதையும் –

ஆத்ம குணங்களை உண்டாக்குவதற்கு-இவருக்கு ஏற்ப்பட்டு உள்ள சகாய பலமும்-

உலகை ரஷித்த படியால் எம்பெருமானார் குணங்கள்-பிரகாசிக்க வில்லை –
தன் வினை யனைத்தையும் விலக்கிய பின்னரே அவை பிரகாசித்தன -என்பதையும் –

பிரகிருதி சம்பந்தத்தாலே இன்னமும் வினைகள் தம்மை அடர்க்க வழி இல்லை என்பதையும் –

நாமும் ஆஸ்ரயிக்கும் படி எம்பெருமானார் ஸ்வபாவத்தை அருளிச் செய்தும் –

நான் அறிந்து பற்றினேன் அல்லேன் –அவர் திருவடிகளில் சம்பந்தம் உடையவர்களே -உத்தேச்யர் என்றும் இருக்குமவர்கள் –
என்னையும் அங்குத்தைக்கு சேஷம் ஆக்கினார்கள்-என்பதையும் –

அவரை நோக்கி இன்று என்னைப்-பொருள் ஆக்குவதற்கும் முன்பு என்னைப் புறத்து இட்டதற்கும்
என்ன ஹேது என்று வினவுகிறார் –38-என்பதையும் –

————

கூட்டும் விதி என்று கூடும் கொலோ தென் குருகைப் பிரான்
பாட்டு என்னும் வேதப் பசும் தமிழ் தன்னை தன் பத்தி என்னும்
வீட்டின் கண் வைத்த இராமானுசன் புகழ் மெய் உணர்ந்தோர்
ஈட்டங்கள் தன்னை என்னாட்டங்கள் கண்டு இன்பம் எய்திடவே -29 –

கூட்டும் விதி –
என்றேனும் பேற்றினைச் சேர்விப்பதான விதி –
இவர் தமக்கு பேற்றுக்கு அடியான பாக்யமாக நினைத்து இருப்பது -எம்பெருமானார் உடைய கிருபையையே –
விதி -இங்கே எம்பெருமானார் கிருபையையே -என்க –
தம்மாலும் எம்பெருமானாராலுமே விலக்க இயலாமையின் கிருபையை விதி என்றார் –
கூட்டும் விதி -என்பதனால்-அதன் விளைவு தவிர்க்க ஒண்ணாதது என்பது புலனாகிறது
நம் ஆழ்வாரும் -விதி வாய்க்கின்று காப்பார் யார் -திருவாய் மொழி -5 1-1 – -என்று தவிர்க்க இயலாமையை –
ஐயோ கண்ண பிரான் அறையோ இனிப் போனாலே -என்று விளக்கி காட்டி-இருப்பது இங்கு உணரத் தக்கது

தன் பத்தி என்னும் வீடு -என்றார் –
பிறர் கன்னம் இட ஒண்ணாமை இவ்வீட்டுக்கு தனி சிறப்பு
பிறர்-பிரமாணமான வேதத்தை தூஷிப்பவர்களும் பிரமேயான இறைவனைத் தூஷிப்பவர்களும் –

புகழ் மெய் உணர்ந்தோர் ஈட்டங்கள் தன்னை –
அதனை வளர்த்த தாய் இராமானுசன்
அதன் விளையாட்டு எல்லாம் கண்டிடப் பெற்ற பெருமையால் வந்தது அவரது புகழ்-
கண்ணன் குழந்தையாய் இருந்தும் அதி மானுஷமாக விளையாடினது போல திருவாய் மொழியும்
எளிய செம் தமிழாய் அமைந்தும் வட மொழியில் அமைந்து தெளிவு படாத மறைகளை தெளிவு படுத்தியும் –
வேத வியாசர் இயற்றிய பிரம ஸூத்தரதிற்கு உண்மைப் பொருளை உணர்த்தியும் –
கட்புலனாகாத இறைவனை காணுமாறு முன்னே கொணர்ந்து நிறுத்தியும் –
அதி வேதமான -வேதத்தை விஞ்சின -விளையாட்டுக்கள் புரிவதை எல்லாம் கண்டிடப் பெற்றமையால்
அசோதை போல் எம்பெருமானார் புகழ் படைத்தவர் -என்க –

என் நாட்டங்கள் கண்டு இன்பம் எய்திடவே –கூட்டும் விதி என்று கூடும் கொலோ
மெய்யடியார்கள் தம் ஈட்டம் கண்டிட கூடுமேல் அது காணும் கண்பயனாவதே -பெருமாள் திருமொழி – – 2-1 –என்றார் குலசேகரப் பெருமாள்-
எம்பெருமானார் காலத்திலே அவர் பக்கலிலே அமுதனார் இருப்பவர் ஆதலின்
காண்கையில் அன்று இவர்க்கு தேட்டம்-கண்டதும் களிப்பினால் கண்கள்
மலர்ந்து இன்புறுதல் இவருக்கு தேட்டம் -இன்புறுதலுக்கு அடியான அன்புடைமை
எம்பெருமானார் அருளாலே தமக்கு வாய்க்க வேணும் -என்கிறார் –
உன் தொண்டர்கட்கே அன்பு உற்று இருக்கும்படி என்னை ஆக்கி அங்கு ஆட்படுத்தே -என்று
மேலும் இவர் பிரார்த்திப்பது காண்க –பரம புருஷார்த்தமான இது அர்த்தித்துத் தானே பெற வேண்டும் –

————–

இன்பம் தரு பெரு வீடு வந்து எய்தில் என் எண்ணிறந்த
துன்பம் தரு நிரயம் பழ சூழில் என் தொல் உலகில்
மன் பல் உயிர் கட்கு இறையவன் மாயன் என மொழிந்த
அன்பன் அனகன் இராமானுசன் என்னை ஆண்டனனே – -30 –

இன்பம் தரு பெரு வீடு
அத்வைதிகளின் உடைய மோஷத்தை -விலக்குவதற்காக -இன்பம் தரு-என்று பெரு வீட்டினை –விசேடித்தத்தார்

தொல் உலகு -என்பதனால் -உலகு அநாதி என்று உணர்த்தப்படுகிறது –
பிரகிருதி தத்துவத்தின் மாறுபாடாக ஆவதும் -அழிவதுமாய் -தொடர்ந்து படைக்கப்பட்டு
பிரவாஹம் போலே வருகின்ற இவ் உலகிலே -என்றபடி –
இதனால் மாறுபடும் இயல்பினதாய் -இறைவனுக்கு உரிய அசித் தத்துவம் கூறப்பட்டது –

மன் பல் உயிர் -என்பதனால் -சித் தத்துவம் கூறப்படுகிறது-
மன் -என்பதனால்–உயிரினுடைய ஸ்வரூபம் நித்யம் -என்று கூறப்படுகிறது –
பல் உயிர்கள் என்பதனால்-சித் எனப்படும் ஜீவாத்மாக்கள் ஒன்றுக்கு ஓன்று வேறுபட்டு –பலவாய் இருத்தல்-புலப்படுத்தப் படுகிறது –
உயிர்கள் என்னும் பன்மையினாலே -அவை ஒன்றுக்கு ஓன்று வேறு பட்டமை-புலப்ப்படுமாயினும் –
பல -என்று மிகை பட கூறியது -ஆன்ம தத்துவம் உண்மையில் ஒன்றே -தேகங்கள் வேறு பட்டு இருப்பது பற்றி
அவற்றில் உள்ள ஆன்ம தத்துவம் வேறு பட்டதாக காணப்படுகிறது -என்கிற -ஏகாத்ம வாதிகளின்-கொள்கையை உதறித் தள்ளுகிறது –

இறைவன் -சேஷி -அதாவது யாவற்றையும் தான் விருப்பபடி பயன் படுத்தக் கொள்ளும்
உரிமை வாய்ந்தவன் -இதனால் ஈஸ்வர தத்வம் பேசப்பட்டது
ஆக தத்வ த்ரயமும் பேசப்பட்டது –இவைகளில் அசித்தும் சித்தும் உரிமைப்பட்டன -மாயன்-உரியவன் –
மாயன்-ஆச்சர்ய படத் தக்க குணம் செய்கை இவைகளை உடையவன் –

உயிர் அனைத்துக்கும் சர்வேஸ்வரன் சேஷி என்பதையே ஸ்ரீ பாஷ்யம் சாரமாக உணர்த்துகிறது-என்பர் ஸ்ரீ பாஷ்யம் வல்லோர் –
ப்ரபத்யே ப்ரணவாகாரம் பாஷ்யம் ரங்க மிவாபரம்
பரஸ்ய ப்ரஹ்மணோ யத்ர சேஷித்வம் ஸ்ப்புடம் ஈஷ்யதே -என்று
எவ்விடத்தில் பரப்ரமம் தெளிவாய் சேஷி-சேஷனை உடையவன்-உரியவன்-ஆக காணப்படுகிறதோ –
அந்த இரண்டாவது ஸ்ரீ ரங்க விமானம் போன்ற பிரணவ ஆகாரமான ஸ்ரீ பாஷ்யத்தை வந்தனை செய்கிறேன் –

அகில புவன -என்று முதலில் அ காரத்தில் தொடங்கியும் –
இடையில் மூன்றாம் அத்யாயத்தில் -மூன்றாம் பாதத்தில் -உக்தம் -என்னும் சொல்லில் உ காரியத்தை அமைத்தும்
கடையில் சமஞ்ஜசம் என்று ம காரத்தில் முடித்தும் -ஸ்ரீ பாஷ்ய காரர் தம் நூல் பிரணவ அர்த்தத்தை உட கொண்டது
என்பதை ஸூ சகமாக காட்டி இருப்பது இங்கு அறிய தக்கது –

நரகம் ஆகிய-சம்சாரம் இந்த ஞானத்துக்கு விரோதி ஆகையாலே இங்கு இருக்க அஞ்சுகின்றேன் –
பரம பதத்துக்கு கொண்டு போக-வேணும் என்று இறைவனை இரக்கிறார் –நம் ஆழ்வார்

யானும் நீ தானே ஆவதோ மெய்யே-அரு நரகு-அவையும் நீ -ஆனால்
வான் உயர் இன்பம் எய்தில் என் -மற்றை-நரகமே எய்தில் என் எனினும்
யானும் நீ தானாய்த் தெளி தோறும் நன்றும்-அஞ்சுவன் நரகம் நான் அடைதல்
வான் உயர் இன்பம்மன்னி வீற்று இருந்தாய்-அருளு நின் தாள்களை எனக்கே -8 1-9 – – எனபது அவர் அருளிய பாசுரம் –

அவருடைய உறுதிப்பாட்டினும் அமுதனாருடைய உறுதிப்பாடு அதிசயிக்கத் தக்கதாக உள்ளது –

இவர் பேரனான பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் திருவரங்கக் கலம்பகத்திலே –
நான் அந்த வைகுந்த நாடு எய்தி வாழில் என் ஞாலத்து அன்றி
ஈனந்த வாத நிரயத்து வீழில் என் யான் அடைந்தேன்
கோனந்தன் மைந்தனை நான்முகன் தந்தையைக் கோயிலச்சு
தானந்தனை எனக்காரா வமுதை அரங்கனையே -என்றுபாடிய பாடலை இதனோடு ஒப்பிடுக –

—————

ஆண்டுகள் நாள் திங்களாய் நிகழ் காலம் எல்லாம் மனமே
ஈண்டு பல் யோநிகள் தோற் உழல்வோம் இன்று ஓர் எண் இன்றியே
காண்டகு தோள் அண்ணல் தென்னத்தியூரர் கழல் இணைக் கீழ்
பூண்ட அன்பாளன் இராமானுசனைப் பொருந்தினமே – 31-

தேனோங்கு நீழற் றிருவேம்கடம் என்றும்
வானோங்கு சோலை மலை என்றும் -தானோங்கு
தென்னரங்க மென்றும் திரு வத்தி யூரென்றும்
சொன்னவர்க்கும் உண்டோ துயர் -பாரதம் பாடிய பெறும் தேவனார் –

வரம் தரு மா மணி வண்ணன் -அருளாளப் பெருமாள்-இடம் மணி மாடங்கள் சூழ்ந்து அழகாய கச்சி -பெரிய திரு மொழி -2 9-3 –

பிரமதேவன் பூஜித்த இடம் ஆதலின் காஞ்சி -என்று பேர் ஏற்பட்டது –
அப்பேரை விட விலங்கு இனங்களாகிய யானைகள் பூசித்த இடம் ஆதலின்
தேவப் பிரான் உடைய-எளிமையை விளக்குவதாக அமைந்த அத்தியூர் என்னும் பேரே சிறந்தது
என்னும் கருத்துடன் அப்பேரினையே-கையாண்டார்

மேலும் ஊரகம் பாடகம் முதலிய பல திருப்பதிகளைத் தன்னகத்தே கொண்ட நகருக்கு
காஞ்சி -என்பது பொதுப் பெயராக-வழங்கப்படுகிறது –
அத்தியூர் -என்பதோ -தேவப்பெருமாள் நித்ய வாசம் செய்யும் பகுதிக்கே சிறப்பு பெயராய்
அமைந்து உள்ளது -ஆதல் பற்றியும் அப்பெயரினையே கையாண்டார் –

கழல் இணைக் கீழ் பூண்ட அன்பாளன்
அவன் தாள் இணைக் கீழ் புகும் காதலன் -திரு வாய் மொழி – 3-9 8– -என்றபடி
கழல் இணையின் கீழே பூண்ட அன்பை ஆளுகின்றார்-

பூண்ட அன்பு –
பூட்கை யாவது -வலிமை –வலிமை வாய்ந்த அன்பாவது விலகாது அடிக்கீழ் நிலை பெற்று இருத்தல்-
பிணிப்புண்ட சிநேகம் -என்று உரைப்பர் பெரிய ஜீயர் –
திருவாளன் என்பது போலே அன்பாளன் என்கிறார் –
திருவரங்கத்தில் எழுந்து அருளி இருக்கும் போதும் தேவப் பெருமாளையே
திரு வாராதனப் பெருமாளாகக் கொண்டு தென்னத்தி யூரர் கழல் இணைக் கீழ் பூண்ட
அன்பாளராய் அன்றோ எம்பெருமானார் இருந்தார் –

இனி காண் தகு தோள் அண்ணல் என்பதை
எம்பெருமானாருக்கு அடை ஆக்கலுமாம்-
இதனால் திரு மேனி குணமும்
அன்பாளன் என்பதனால்
ஆத்ம குணமும் அனுசந்திக்கப் படுகின்றன –

பற்பம் எனத் திகழ் பைங்கழல் உந்தன் பல்லவமே விரலும்
பாவனம் ஆகிய பைந்துவராடை பதிந்த மருங்கழகும்
முப்புரி நூலொடு முன் கையில் ஏந்திய முக்கோல் தன்னழகும்
முன்னவர் தந்திடு மொழிகள் நிறைந்திடு முறுவல் நிலா அழகும்
கற்பகமே விழி கருணை பொழிந்திடு கமலக்கண்ணழகும்
காரிசுதன் கழல் சூடியமுடியும்,கனக நற்சிகைமுடியும்
எப்பொழுதும் எதிராசன் வடிவழகு என் இதயத்துளதால்
இல்லை எனக்கெதிர் இல்லை எனக்கெதிர் இல்லை எனக்கெதிரே.

இராமானுசனைப் பொருந்தினமே
பொருந்திவிட்டோம்-இனிப் பிரிந்திடற்கு வழி இல்லை
மேவினேன் அவன் பொன்னடி -கண் நுண் சிறு தாம்பு – 2- என்றபடி
இம்மையிலும் மறுமையிலும் பிரிவிலாது பொறுந்தி விட்டோம் என்றது ஆயிற்று –

————–

பொருந்திய தேசும் பொறையும் திறலும் புகழும் நல்ல
திருந்திய ஞானமும் செல்வமும் சேரும் செறு கலியால்
வருந்திய ஞாலத்தை வண்மையினால் வந்து எடுத்து அளித்த
அரும் தவன் எங்கள் இராமானுசனை அடைபவர்க்கே – 32-

தனமாய தானே கை கூடும் -முதல் திருவந்தாதி -43 -என்றார் பொய்கையாரும் –
இவ் ஆத்ம குணங்கள் தேட வேண்டியவைகள் அல்ல –எம்பெருமானாரைச் சேரும் அவர்க்கு தாமாகவே வந்து சேரும் என்கிறார் –
தேஜ துர்ஜனை அனபிபவநீய த்வம்-என்று
தேஜசாவது தீயோரால் அடர்க்கபடாமை என்னும் கீதா பாஷ்யமும் – 16-3 –

ஏனைய அவதாரங்கள் -தேவர் இரக்க வந்தவை –
எம்பெருமானார் ஆகிய ஆச்சார்ய அவதாரமோ -இரப்பார் இல்லாமலே தானே வந்தது –
ஞானக் கை தந்து மேலே எடுப்பவர் ஏனைய ஆசார்யர்கள் –
மக்நான் உத்தரதே லோகான் காருண்யாச் சாஸ்திர பாணி நா –
அழுந்தினவர்களை சாஸ்திரக்-கையினால் தூக்கி விடுகிறார் -என்று கூறப்படுவதும் காண்க –
எம்பெருமானார் ஆகிற ஆசார்யரோ தம் அரிய தவத்தின் வலுவினால் ஞாலத்தாரை எடுத்து-மீண்டும் விழாது -காத்து அருளுகிறார் –
அத்தகைய அரிய தவம் அவரது –
இங்கு தவம் என்பது-தவங்களுள் சிறந்தது சரணாகதி -என்று சிறந்த தவமாக-ஓதப்படுகின்ற சரணாகதியே
எம்பெருமானார் செய்த சரணாகதியின் பயனாக அவர் தொடர்பை எவ்வகையாலேனும் பெற்ற-
ஞாலத்தவர் -உய்வு பெற்று விடுகிறார்கள்-இவ் வரிய உண்மை அமுதனாரால் இங்கு உணர்த்தப் படுகிறது –

வந்தெடுத்தளித்த அருந்தவன்- க்ருபா மாத்திர ஆசார்யனரான எம்பெருமானார் இன்னருளால் யாவரையும் உய்வித்தது அறிந்ததே .
பல்லுயிர்க்கும் வீடளிப்பான் எம்மிராமானுசன் மண்ணின் தலத்துதித்து என்று பின் வரும் பாசுரமும் காணலாம்.
இப்படி காரேய் கருணை இராமானுசனைப் பொருந்திய பின் நமக்கு வரும் மேன்மையை சொல்லி யருள்கிறார் அமுதனார்

———–

அடையார் கமலத்து அலர் மகள் கேள்வன் கை யாழி என்னும்
படையோடு நாந்தகமும் படர் தாண்டும் ஒண் சார்ங்கமும் வில்லும்
படையார் புரி சங்கமும் இந்தப் பூதலம் காப்பதற்கு என்று
இடையே இராமானுச முனியாயின விந் நிலத்தே -33 –

அடையார் கமலத்து அலர் மகள் கேள்வன்
அழிக்கும் ஆயுதங்கள் – அளிப்பனவாயின என்பது -எல்லாம் பிராட்டி சந்நிதியால் வரும் மற்றம் தான் இது

இராமானுச முனி இடையே யாயின –
இராமானுச முனிவன் -உலகினை காப்பதையே எப்போதும் மனனம் செய்து -கொண்டு இருப்பவர் –
அவரது காக்கும் நினைவுக்கு ஏற்ப துணை புரிதலே இராமானுச முனி பக்கலிலே-ஆயினமை-என்க-

இனி இடையே -என்பதற்கு -நடுவே -என்று பொருள் கொண்டு –
இந்நிலத்தே இடையே இராமானுச முனி யாக ஆயின – -வந்து அவதரித்தன-
கலியை நீக்க வல்ல இராமனுசராக எம்பெருமானின் திவ்யாயுதங்கள் வந்தவதரித்தன-

ஒரே திரு மேனியில் ஐந்து ஆயுத புருஷர்களும்-ஆத்மாவாகவே இருப்பது இசையாமையாலே –
அவ் ஐவருடையவும் ஆவேச அவதாரமாகவே-எம்பெருமானாரைக் கொள்வது மணவாள மா முனிகளின் திரு உள்ளம் –
இங்கனம் கொண்டால்-ஆதி சேஷனுடைய சாஷாத் அவதாரமாகவும் –
பஞ்ச ஆயுத ஆழ்வார்கள் முதலியவர்களின்- ஆவேச அவதாரமாகவும் கொள்வதில் யாதொரு முரண்பாடும் இல்லை –

———-

நிலத்தை செறுத்து உண்ணும் நீசக் கலியை நினைப்பரிய
பலத்தைச் செறுத்தும் பிறங்கிய தில்லை என் பெய் வினைதென்
புலத்தில் பொறித்த வப்புத்தகச் சும்மை பொறுக்கிய பின்
நலத்தைப் பெறுத்தது இராமானுசன் தன நயப் புகழே -34 –

இறைவனாலும் காக்க முடியாத படி அன்றோ கலி செறுகிறது
இத்தகைய கலியின் பலத்தை செறுத்து அதை ஒடுக்கினால் இராமானுசன் புகழ் எவ்வளவு பிறந்கியதாக வேண்டும் –

பொலிக பொலிக பொலிக போயிற்று வல்லுயிர் சாபம்
நலியும் நரகமும் நைந்த நமனுக்கு இங்கு யாது ஒன்றும் இல்லை
கலியும் கெடும் கண்டு கொண்மின் கடல் வண்ணன் பூதங்கள் மண் மேல்
மலியப் புகுந்து இசைபாடி ஆடி உழி தரக் கண்டோம் -திரு வாய் மொழி -5 2-1 – – என்று
நம் ஆழ்வாரும் இவரால் கலி கெடுவதை அருளிச் செய்தார் –

பகவன் நாமத்தை அண்டை கொண்டவர்க்கே கலி தன்னைக் கடக்கப் பாய்ந்து
நமன் தமர் தலைகள் மீது நாவல் இட்டு உழி தர முடியுமானால் இராமானுசனை
அண்டை கொண்டவர்க்கு கேட்க வேணுமா –
இவ்வாறு கலியின் மிடுக்கை ஒடுக்கியதால் இராமானுசன் புகழ் பிறந்கியது இல்லையாம்-
ஏன் எனில் அவருக்கு இது ஒரு பெரிய காரியம் அன்றாம் –
பின்னையோ எனின் –
என் பெய் வினை பொறுத்தது –
இவரால் வினைகள் ஒவ் ஒன்றாக செய்யப்படுவன அல்ல – ஒரு பொழுதில் பல வினைகள் பெய்யப் படுகின்றனவாம் –
புத்தகச் சும்மை
யம லோகத்தில் சுமை சுமையாக புத்தகத்தில்-எழுதப் பட்ட என் வினைகளைப் பொசுக்கியதாலேயே
அது பெருமை பெற்று விளங்குகிறது-எனபது அமுதனார் கருத்து

———-

நயவேன் ஒரு தெய்வம் நானிலத்தே சில மானிடத்தை
புயலே எனக் கவி போற்றி செய்யேன் பொன்னரங்கம் என்னில்
மயலே பெருகும் இராமானுசன் மன்னு மா மலர்த் தாள்
அயரேன் அருவினை என்னை எவ்வாறு இன்று அடர்ப்பதுவே -35 –

நயவேன் ஒரு தெய்வம்
எம்பெருமானாரே தெய்வம் என்பர்-கண்ணனைக் காட்டித் தரினும் வேண்டேன் என்று இருப்பார் –
இத்தகைய நிலை வடுக நம்பிக்கும் வாய்த்து இருந்தது –
அந்நிலையை மணவாள மா முனிகள்-
உன்னை ஒழிய ஒரு தெய்வம் மற்று அறியா மன்னு புகழ் சேர் வடுக நம்பி -தன்னிலையை
என் தனக்கு நீ தந்து எதிராசா எந்நாளும் உன் தனக்கே ஆட் கொள் உகந்து -என்று வேண்டுகிறார் –

சில மானிடத்தை
மானிடரை என்று உயர் தினையால் கூறுதற்கும் அருஹதை அற்றவர் என்று கருதி -சில மானிடத்தை –என்று அஃறிணையால் கூறுகிறார் –
வாய் கொண்டு மானிடம் பாட வந்த கவியேன் அல்லேன் -திருவாய் மொழி – 3-9 9- -என்றார் நம் ஆழ்வாரும் –
அசேதனங்களை சொல்லும் படியிலே சொல்லுகிறார்

கவி போற்றி செய்யேன் –
கவியால் போற்றி செய்யேன் -கவிகள் சொல்லித் துதியேன்-என்றபடி –
இனி கவி செய்யேன்–போற்றி செய்யேன்-என்னவுமாம் –
கவி செய்கையாவது -அவர்களை கவி பாடுகை
போற்றுகை யாவது -அல்லாத சொற்களால் புகழுகை –

இத்துறவி வேந்தற்கு வியாமோகம் பொன்னரங்கத்திலே
உலகில் அனைத்தையும் த்ருணமாக அற்பமாக –
இவர் மதிப்பது அச்யுதனுடைய பொன்னடிகளிலே-உள்ள வ்யாமோகத்தாலே என்கிறார் ஆழ்வான் –
அச்யுத பதாம் புஜ யுக்மருக்ம வ்யாமோஹத –என்பது அவரது திரு வாக்கு –
பொன்னரங்கத்தில் மயல் பெருகுகிறது என்கிறார் அவர் சிஷ்யரான அமுதனார் –

இனி திருவரங்கம் என்னும் பொருளில் பொன்னரங்கம் என்றார் ஆகவுமம் –
பொன் -திரு அவளுடைய அரங்கம் -நாட்டியம் ஆடும் இடம் என்னும் பொருளில் பொன்னரங்கம் என்றார் என்க-
பெண்ணாளன் பேணுமூர் பேரும் அரங்கமே -நாச்சியார் திரு மொழி -11 9- – என்னும் இடத்தில்-
பெரியவாச்சான் பிள்ளை -அவ்வூரின் பேரும் பெரிய பிராடியாருக்கு ந்ருத்த ஸ்த்தானம் -என்று-
வியாக்யானம் அருளி செய்து இருப்பது இங்கு அறியத் தக்கது –

அரங்கமே எனபது இவள் தனக்கு ஆசையே -பெரிய திருமொழி -8 2-7 – – என்னும் திரு மங்கை மன்னன் ஸ்ரீ ஸூக்தி
வ்யாக்யானத்தில் -நகச்சின்னா பராத்யதி -என்னும் பெண்ணரசி இறே-என்று
பெரியவாச்சான் பிள்ளை-அருளிச் செய்து இருப்பது அறிதற்கு உரியது –

இறைவன் திருநாமங்கள் பல இருக்க பொன்னரங்கம் என்னும் ஊரின் பேரிலே எம்பெருமானாருக்கு-மயல் பெருக காரணம் –
தம் ஆசார்யராகிய ஆழ்வார் திருவரங்க பெருமாள் அரையர் உகந்த திருப்பேராய்-இருத்தலே என்பர் பெரியோர் –
இவ்விஷயம்பெரிய ஜீயரால் பெரியாழ்வார் திருமொழி -4 4-1 – – வ்யாக்யானத்தில் ஓர் ஐதிஹ்யம் மூலம் நன்கு விளக்கப் பட்டு உள்ளது –
ஆழ்வார் திருவரங்கப்பெருமாள் அரையர் சரம காலத்தில்-உடையவர் எழுந்து அருளி –
இப்போது திரு உள்ளத்தில் அனுசந்தானம் எது -என்று கேட்க –
பகவன் நாமங்களாய் இருப்பன அநேகம் திரு நாமங்கள் உண்டாய் இருக்க –
திருவரங்கம்-என்கிற நாலைந்து திரு அஷரமும் கோப்பு உண்ட படியே -என்று நினைத்து இருந்தேன் காணும் -என்று அருளிச் செய்ய –
அத்தை ஆழ்வார் திருவரங்கப் பெருமாள் அரையர் விரும்பின திரு நாமம் என்று உடையவர் விரும்பி இருப்பர் –

நயவேன் பிறர் பொருளை நல்லேன் கீழாரோடு
உய்வேன் உயர்ந்தவரோ டல்லால்-வியவேன்
திருமாலை யல்லது தெய்வம் என்று ஏத்தேன்
வருமாறு என் நம்மேல் வினை –பொய்கை யாழ்வார் – 35- -என்ற பாசுரத்தொடு இதனை ஒப்பிடுக –

1-பிறர் பொருளை விரும்பேன்-
2-கீழாரோடு சேரேன் –
3–மேலார்கள் உடனேயே பழகுவேன் –
4–திருமாலின் அரிய சீர்மை கண்டு வியக்க மாட்டேன் –
5-திருமாலை அல்லது வேறு தெய்வத்தை ஏத்த மாட்டேன் -நம் மேல் வினை எவ்வாறு வரும்

————–

அடல் கொண்ட நேமியன் ஆருயிர் நாதன் அன்று ஆரணச் சொல்
கடல் கொண்ட ஒண் பொருள் கண்டு அளிப்ப பின்னும் காசினியோர்
இடரின் கண் வீழ்ந்திட தானும் அவ் ஒண் பொருள் கொண்டு அவர் பின்
படரும் குணன் எம் இராமானுசன் தன் படி இதுவே -36 –

பின்னும் காசினியோர் இடரின் கண் வீழ்ந்திட -என்கையாலே –
முன்னும் அவர்கள் இடரின் கண்-வீழ்ந்து கிடந்தமை புலனாகிறது –
ஆக -அர்ஜுனனை வியாஜமாக கொண்டு உலகிற்கு ஆருயிர் நாதன்-கீதை அருளினான் -என்றது ஆயிற்று –
எல்லாம் அறிந்த இறைவனும் -விலஷனமான வேதங்களை ஆராய்ந்து –கண்டு அளித்தான் -என்பது தோன்ற –
கண்டளிப்ப-என்கிறார் –
நெறி யுள்ளி யுரைத்த கணக்கறு நலத்தனன் -என்றார் நம் ஆழ்வாரும்

விஸ்வரூபம் சேவித்த பிறகு அர்ஜுனன் பழைய படி-கையும் சக்கரமும் ஆக உன்னைக் காண விரும்புகிறேன் என்கையாலே –
அடல் கொண்ட நேமியனாக-சேவை தந்து கண்ணன் கீதை உபதேசித்தான் என்று தெரிகிறது –

கையிலே ஆயுதம் பிடிப்பவன் வேதர்த்தத்தை உபதேசித்தால் அது எங்கனம் பயப்படும் -என்று-
ரசமான பொருளும் இங்கே தோன்றுவதை சுவைத்து இன்புருக –

ஆருயிர் நாதன் என்று பாடம் –
இந்த உயிர் ஆன்மா அவனுக்கு வசப்பட்டது. என்னும் இயல்பான பொருள் கண்டு அளித்தது புலப்படும்.

சர்வேஸ்வரன் கண்டு அளித்த பின்னரும் -இடரின் கண் காசினியோர் வீழ்ந்தனரே -இது என்ன விந்தை -என்கிறார் –
தானும் அவ் ஒண் பொருள் கொண்டு –
கீதை சொன ஆருயிர் நாதன் -அர்ஜுனன் சோகத்தை பார்த்து அந்த வாசத்தில் கீதை யருளினான்-
கீதா பாஷ்யம் அருளிய எம்பெருமானார் காசினியோர் இடரைக் கண்டு அவ் ஒண் பொருளையே விளக்கி –யருளினார் –
சர்வ சக்தனும் முயன்றும் காசினியோர்க்கு பயன்படாமல் போயிற்று –
எம்பெருமானார் தம் பரம கிருபையினால் அவ் விஷயத்திலே முயன்று -வெற்றி காண முற்படுகிறார் –

———

படி கொண்ட கீர்த்தி இராமாயணம் என்னும் பக்தி வெள்ளம்
குடி கொண்ட கோயிலில் இராமானுசன் குணம் கூறும்
கடி கொண்ட மா மலர்த்தாள் கலந்து உள்ளம் கனியும் நல்லோர்
அடி கண்டு கொண்டு உகந்து என்னையும் ஆள் அவர்க்கு ஆக்கினரே – 37-

படியிலே கீர்த்தி கொண்ட இராமாயணம் என்று கூட்டி -மற்ற முனிவர்கள் இயற்றிய-இராமாயணங்களை விட
பிரசித்தி பெற்ற ஸ்ரீ வால்மீகி இராமாயணத்தை கூறிற்றாகவுமாம் –
வால்மீகி முனிவருடைய ஸ்ரீ ராம பக்தி உள் அடங்காது வெளிப்பட்டமை பற்றி -பக்தி வெள்ளம் –என்றார் ஆகவுமாம்-

வால்மீகி கிரி சம்பூதா ராம சாகரகாமி நீ
புனாதி புவனம் புண்யா இராமாயண மகா நதீ–என்று
வால்மீகி என்னும் மலையில் தோன்றி இராமபிரான் என்னும் கடலை நோக்கி செல்லும்
இராமாயணம் என்னும் புண்ணிய நதி உலகத்தை சுத்தம் ஆக்குகிறது -என்று
வெள்ளமாக-இராமயணத்தை முன்னோர் உருவகம் செய்து உள்ளமை காண்க –

வெள்ளம் -கடலுமாம் –வெள்ளத்தின் உள்ளானும் – 99- என்று பொய்கை ஆழ்வாரால் கடல்-வெள்ளமாக சொல்லப்பட்டமை காண்க –
ஸ்லோக சார சமாகீர்ணம் சர்வ கல்லோல சங்குலம்-காண்டாக்ராஹா மகாமீனம் வந்தே இராமாயண ஆர்ணவம் -என்று
ஸ்லோகங்களின் சாரத்தினால் நிறைந்ததும்-சர்க்கம் என்கிற அலைகள் நெருன்கினதும்
காண்டம் ஆகிற முதலையாம் பெரு மீன்கள் உடையதுமான இராமயணமாம் கடலினை வந்திக்கிறேன் -என்று
இராமாயணம் கடலாக உருவகம் செய்யப்பட்டு உள்ளமையும் காண்க –

எம்பெருமானாரின் நெஞ்சம் பள்ளமடையாதலால். இந்த பக்தி வெள்ளம் சென்று இராமனச்ர் மனதில் குடி கொண்டது.
அவரும் இராமனின் குணங்களில் ஆழங்கால் பட்டு அதை தன நெஞ்சில் கொண்டு
நம் சம்பிரதாயத்தில் இதன் ஊடே ஆழ்ந்திருந்தது தெரிந்ததே.

ப்ரேமேயத்துக்கு கல் அரணாய் அமைந்த கோயிலே போதும் –
பிரமாணத்துக்கோ அறிவார்ந்த எம்பெருமானாரே அரணாக அமைய வேண்டி இருக்கிறது –
பிரமாணம் அல்லது பிரமேயம் சித்தி யாமையாலே பிரபல பிரமாணமான இராமாயணத்துக்கு
கல் அரணாம் கோயிலாக எம்பெருமானாரே அமைகிறார் -.ஸ்ரீ வைஷ்ணவ சித்தாந்தம்

ய பிபன்சத்தம் ராம சரிதாம் ருத சாகரம் அத்ருப்தச்தம் முனிம் வந்தே ப்ராசெதசம கல்மஷம் -என்று
எவர் எப்பொழுதும் ராம சரித்ரம் ஆகிய அமுதக்கடலை குடித்தும் -போதும் என்று திருப்திஅடையாது இருக்கிறாரோ –
குற்றம் அற்ற அந்த வால்மீகியை வணங்குகிறேன் -என்றபடி வால்மீகி போலே
எம்பெருமானாரும் பக்தி அமுதக் கடலை குடித்து தெவிட்டாதவர்-என்க –

இனி கோயில் இராமானுசன் என்பதற்கு
கோயிலில் -ஸ்ரீ ரங்கத்தில் -வாழும் இராமானுசன் என்று-பொருள் ஆகவுமாம் –
இதனால் அயோத்தியில் வாழ்ந்த இராமானுசனை -இளைய பெருமாளை -விலக்குகிறது
கோயில் அண்ணன் -என்று ஆண்டாள் அருளிச் செய்ததற்கு இது பொருந்தி இருப்பது காண்க –

அடி கண்டு கொண்டு உகந்து
இவ் ஆத்மா வஸ்துவும் எம்பெருமானார்க்கு சேஷப் பட்டது அன்றோ -என்று இதனுடைய
அடியாகிய சேஷத்வத்தை தர்சித்து அந்த சம்பந்தமே ஹேதுவாக விரும்பி அங்கீகரித்து -என்றபடி-

என்னையும் ஆள் அவர்க்கு ஆக்கினர் –
உம்மை-எச்ச உம்மை-என்னையும் தங்களைப் போலே அவர்க்கு ஆள் ஆக்கினர் என்றபடி –

——-

ஆக்கி யடிமை நிலைப்பித்தனை என்னை யின்றவமே
போக்கிப் புறத்திட்ட தென் பொருளா முன்பு புண்ணியர் தம்
வாக்கில் பிரியா விராமானுச நின்னருளின் வண்ணம்
நோக்கில் தெரிவரிதால் உரையாய் இந்த நுண் பொருளே – 38-

ஆக்கி-என்கிறார் -திருத்தி -என்கின்றிலர்-அவர்க்கே புதிய பொருளாகத் தோற்றுகிறது-
இப்பொழுது-அருள் புரிதற்கும் முன்பு அருள் புரியாததற்கும் ஒரு காரணம் புரிய வில்லையே –
இது நுண் பொருளாய் இரா நின்றது -நீரே அருளிச் செய்ய வேண்டும் என்கிறார் –

இன்று என்னைப் பொருள் ஆக்கித் தன்னை என்னுள் வைத்தான்
அன்று என்னைப் புறம் போகப் புணர்த்தது என் செய்வான் -திரு வாய் மொழி10-8 9- – என்று-
நம் ஆழ்வார் அருளி இருப்பது இங்கு அனுசந்திக்கத் தக்கது–

பொருள் ஆக்கித் தன்னை என்னுள் வைத்தான்-என்றாலே -ஆக்கி யடிமை நிலைப்பித்தது தானே
ஆசாரிய ஹ்ருதயத்தில் இரண்டாவது ப்ரகரணத்ததில் (102)
“இடகிலேன் நோன்பறிவிலேன் கிற்பன் கீழ்நாள்களென்கையாலே ஸாதநத்ரய் பூர்வாப்யாஸஜ மல்ல” என்று தொடங்கி (113)
“வரலாற்றில்லை வெறிதே யென்றறுதியிட்டபின் வாழ்முதலென்கிற ஸூக்ருத மொழியக் கற்பிபக்கலாவதில்லை” என்கிற சூர்ணை
நானகாம ப்ரகரணத்தில் (228) “இன்று அஹேதுகமாக ஆதாரித்த நீ அநாத்யாநாதரஹேது சொல்லென்று மடியைப் பிடிக்க ……
இதுவும் நிருத்தர மென்று கவிழ்ந்து நிற்க”

அருள் புரிந்தாலும் அத்வேஷமும் இசைவும் இருக்க வேணுமே ?அதற்கும் இந்த அருள் தானே மூலம்.

—————————————————————————————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ திருமலை நல்லான் சக்ரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண அய்யங்கார் ஸ்ரீ ஸூக்தி- அமுத விருந்து–22-28–

December 9, 2021

எம்பெருமானார் ஸ்ரீ கிருஷ்ண அனுபவத்தில் ஆழ்ந்து
கார் போலே தம்மை ஆட்க்கொண்டு அருளியதை மேல்
எட்டு பாசுரங்களால் அருளிச் செய்கிறார் –

வாணன் பிழை பொறுத்த தீர்த்தனை ஏத்தும் இராமானுசன் என் தன் சேம வைப்பே – 22- –என்று உபக்ரமித்து
வஞ்ச நெஞ்சில் வைத்து முப்போதும் வாழ்த்துவன் என்னாம் இது அவன் மொய் புகழக்கே -23 –என்று நைச்யம் பாவித்து
இன்று கண்டு உயர்ந்தேன்– இராமானுசன் என்னும் கார் தன்னையே – 24- –என்று தேறி
நீ என்னை யுத்த பின் உன் சீரே உயிர்க்கு உயிராய் அடியேற்கு இன்று தித்திக்குமே -25 –என்று
போக்யதையில் ஆழங்கால் பட்டு
எக்குற்றவாளர் எது பிறப்பே எது இயல்வாக நின்றோர் அக்குற்றம் அப்பிறப்பு அவ்வியல்வே நம்மை ஆள் கொள்ளுமே –26- –என்று
ததீய சேஷத்வ நிஷ்டையில் ஆழ்ந்து
வெள்ளைச் சுடர் விடுமுன் பெரு மேன்மைக்கு இழுக்கு இது என்று தள்ளுற்று இரங்கும் இராமானுச என் தனி நெஞ்சமே -27-என்று
மீண்டும் நைச்யம் தலையெடுத்துப் பேசி
பின்னை தன் காதலன் பாதம் நண்ணா வஞ்சர்க்கு அரிய இராமானுசன் புகழ் அன்றி என் வாய்
கொஞ்சிப் பரவ கில்லாது என்ன வாழ்வின்று கூடியதே – -28 – என்று ஹ்ருஷ்டமாய் அருளிச் செய்கிறார் –

———–

கார்த்திகையானும் கரி முகத்தானும் முக்கண்
மூர்த்தியும் மோடியும் வெப்பும் முதிகிட்டு மூவுலகும்
பூத்தவனே என்று போற்றிட வாணன் பிழை பொறுத்த
தீர்த்தனை ஏத்தும் இராமானுசன் என் தன் சேம வைப்பே – 22- –

கீழ் கூறிய ஆழ்வார் -நாத முனிகள் -ஆளவந்தார் -இவர்கள் பர தேவதையாக வழி பட்ட கண்ணன் இடத்தில் –
அவருக்கு உள்ள ஈடுபாடு பேசப்படுகிறது –இந்த பாசுரத்தில் –

அமுதனார் -இங்கே முதுகிட்டு -போற்றிட -என்னும் சொல் அமைப்பாலே
முதுகிட்டமையால் பிரபாவத்தை அறிந்து -போற்றினதை உய்த்து உணர வைத்தார் –
போற்றிட வாணன் பிழை பொறுத்த -என்றமையின் போற்றின முக் கண்ணனுக்காக வாணன் பிழை
பொறுத்தமை தோற்றுகிறது
மூ வுலகும் பூத்தவனே என்று போற்றிட –
இந்த மூ வுலகு எனபது -பூ லோகம் -ஸ்வர்க்க லோகம்-பாதாள லோகம் என்னும் மூ வுலகைக் குறிப்பிட வில்லை –
எல்லா வுலகும் கண்ணன் படைப்பு ஆதலின் -ஆனவே அணைத்து உலகங்களையும் அடக்குவதற்காக –
கிருதகம்-அகிருதகம் -கிருதகா கிருதகம் –என்னும் மூ வகைப்பட்ட வுலகம் என்று கொள்ள வேணும் –
இந்த அண்டத்தையே -என்றதாயிற்று –
மூ வுலகும் பூத்தவனே -பொறுத்து அருள்க -எனபது சொல் எச்சம் -பிறப்பித்தவன் நீ -பிறந்தவர்கள் நாங்கள் –

தீர்த்தனை ஏத்தும் இராமானுசன் என் தன் சேம வைப்பே
அனுபவித்தோ அல்லது பிராயச்சித்தம் செய்தோ தீர்க்க வேண்டிய அபராதங்களையும் பகைவர் திறத்தும்
போக்கியும் போக்கி அவர்களை தூயராக்கிய தூய்மையை கருதி -தீர்த்தன் -என்கிறார் –
ஆபத்துக் காலத்திலேயே உதவிய கண்ணனது தூய்மையினை ஏத்தும் எம்பெருமானாரோ
எனக்கு ஆபத்து காலத்தில் உதவுவதற்காக சேமித்து வைத்த செல்வம் என்றார் ஆயிற்று –

———-

வைப்பாய வான் பொருள் என்று நல்லன்பர் மனத்தகத்தே
எப்போதும் வைக்கும் இராமானுசனை இரு நிலத்தில்
ஒப்பார் இலாத வுறுவினையேன் வஞ்ச நெஞ்சில் வைத்து
முப்போதும் வாழ்த்துவன் என்னாம் இது அவன் மொய் புகழக்கே -23 –

வைப்பாய –இராமானுசனை –
மது சூதனையே ஆழ்வார் வைத்த மா நிதியாக கொள்வது போலே –
நல்லன்பர் எம்பெருமானாரையே வைப்பாய வான் பொருளாக கொள்கின்றனர் என்க —
எனக்கு எய்ப்பினில் வைப்பினை -பெரிய திரு மொழி – 7-10 4- – -என்றபடி
மற்ற நிதி , வைப்பு, எல்லாம் பயன் படுத்த பயன் படுத்தக் குறைந்து போகும்.
எம்பெருமானார் என்னும் நிதி அள்ள அள்ளக் குறையாது .

நல்லன்பர்
என்னைப் போல வஞ்ச நெஞ்சர் அல்லர் இவ்வன்பர் -குற்றம் அற்றவர் -என்றபடி –
இனி நல்லதான அன்பை உடையவர் என்னலுமாம் –
அன்புக்கு நன்மையாவது -வேறு பயன் ஒன்றும் கருதாமை

மனத்தகத்தே வைக்கும் –
அருமை தெரிந்து அன்பு பூண்டவர் ஆதலின் -சீரிய பொருளை செப்பிலே வைப்பது போலே
உள்ளே வைத்து பேணுகின்றனர் -என்க

எப்போதும் வைக்கும் –
அல்லும் பகலும் என்றபடி-
எக்காலத்திலும் வெளியே வைக்கத் தக்க பொருள் அன்றே இது –
எப்போதும் -அகிஞ்சனராகிய நம்மைக் காப்பவர் எம்பெருமானாரே என்று
ப்ரீதி உடன் இடைவிடாது நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள்-எனபது கருத்து –

வஞ்ச நெஞ்சில் வைத்து முப்போதும் வாழ்த்துவன் –
வஞ்சிப்பது பிறரை மாத்ரம் அன்று -எம்பெருமானாரையே வஞ்சிக்க வல்லது என் நெஞ்சு என்கிறார் –
உன்னையும் வஞ்சிக்கும் கள்ள மனம் -திருவாய் மொழி – 5-1 3- –

————–

மொய்த்த வெம் தீ வினையால் பல்லுடல் தோறும் மூத்து அதனால்
எய்த்து ஒழிந்தேன் முன நாள்கள் எல்லாம் இன்று கண்டு உயர்ந்தேன்
பொய்த் தவம் போற்றும் புலைச் சமயங்கள் நிலத்து அவிய
கைத்த மெய் ஞானத்து இராமானுசன் என்னும் கார் தன்னையே – 24- –

விஷயங்களுக்கே இடம் கொடுத்து –
வஞ்சகனாகவே இருந்தேன் -அந்நிலையிலே எம்பெருமானாரை வைப்பாய வான் பொருளாக
வஞ்ச நெஞ்சில் வைத்து முப்போதும் வாழ்த்துவதாக நடித்தேன் -நெஞ்சில் வைத்ததும் -வாழ்த்தியதும் –
பொய்யே யாயினும் எம்பெருமானார் தன் வண்மையினால் தன்னை உள்ளபடி காட்டி
இந்நிலையை உண்மை நிலை யாக்கி விட்டார் -அவர் காட்டக் கண்ட நான் இப்பொழுது உயர்ந்தவனாகி
விட்டேன் -என்கிறார் அமுதனார் இப்பாசுரத்தில் –
பொய்யே கைம்மை சொல்லிப் புறமே புறமே ஆடி மெய்யே பெற்று ஒழிந்தேன் -திருவாய் மொழி – 5-1 1- –

அடை மொழி இட்டு காரனைய இராமானுசனை என்றோ கூறாது -இராமானுசன் என்னும் கார் தன்னையே -என்று
மேக மாகவே வருணிப்பது இவ் உபகாரத்தின் முக்கிய தன்மையை அமுதனார் கருத்தில் கொண்டு உள்ளார்
என்று நமக்கு புலப்படுகிறது –வள்ளல் தனத்தினால் வல் வினையேன் மனம் நீ புகுந்தாய் – 27- என்று மேலே இதனை
வெளிப்படையாக இவரே கூறுவதும் காண்க –

ஈஸ்வர விபூதியில் ஒருவனை ஹிம்சித்தாரை சொல்லுகிற பாபங்களுக்கு அவதி இல்லை -ஈஸ்வரனையும் –
ஈஸ்வர விபூதியையும் -அஞ்ஞா நாசியாலே -அறியாமை என்னும் வாளாலே -அழிக்கப் பார்க்கிறவர்கள் இறே-
புலை சமயம்-நீச சமயம்
நீச சமயங்கள் மாண்டன –என்பர் மேலும் –

வஞ்ச நெஞ்சில் வைத்து முப்போதும் தன்னை வாழ்த்துபவனாக நடிக்கும் என்னை -உள்ளபடி தன்னைக் காட்டி
மெய்யே நெஞ்சில் வைத்து முப்போதும் வாழ்த்தும்படி -உபகரித்ததில் வியப்பு ஒன்றும் இல்லை
என்னும் கருத்துடன் புலைச் சமயங்கள் நிலத்து அவிய கைத்த மெய்ஞ் ஞானத்தராக அமுதனார் அவரைக் கூறினார் என்க

———–

காரேய் கருணை இராமானுசா இக்கடல் இடத்தில்
ஆரே யறிபவர் நின்னருளின் தன்மை அல்லலுக்கு
நேரே யுறைவிடம் நான் வந்து நீ என்னை யுத்த பின் உன்
சீரே உயிர்க்கு உயிராய் அடியேற்கு இன்று தித்திக்குமே -25 – –

நின் அருளின் தன்மை-
இராமானுசா என்று விளித்து கூறி-நின் -என்று மேலும் -கூறுவதால் அருள் உடைய அவரது சிறப்பு தோற்றும் –
இறைவனது அருளின் தன்மை அறிவு எளிதாயினும் எம்பெருமானாரது அருளின் தன்மை அறிவு அரிதே –என்றபடி –
இறைவனது அருள் ஸ்வா தந்த்ரியத்தால் தடை படுவதற்கு உரியது –
எம்பெருமானார் அருளோ -தடை ஏதும் இன்றி என்றும் பெருகும் தன்மையது -என்க –
தானாக வந்து என் அல்லல்களை தீர்த்து தன் பேறாக என்னை ஏற்று அருளினார்-

வந்து நீ என்னை உற்ற பின் -என்னும் இடத்தில்
வந்தமையால்-சௌலப்யமும்
அல்லல் உள்ள இடத்தில் வந்தமையால்-வாத்சல்யமும்
என்னை உற்றமையால்-சௌசீல்யமும்-
தன் பேறாக ஹேது எதுவும் இன்றி -என்னை உற்றமையால்-ஸ்வாமித்வமும்
கருணை இராமானுசா -என்றமையால் வருவதற்கு ஹேதுவான கிருபையும் –
எம்பெருமானார் இடம் உள்ளமை தோற்றுகிறது –

உன் சீரே –அடியேற்கு இன்று தித்திக்கும் –
உன் சீர் –இறைவனுடைய சீர்கள் அல்ல –
உயிர்க்கு உயிராய் -ஆத்மாவுக்கு உயிராய் –தாரகமாய் -ஜீவனமாய்
இதனால் தாரகமும் போஷகமும் சீரே என்றது ஆயிற்று
தித்திக்கும் என்கையாலே போக்யமும் அதுவே என்றது ஆயிற்று –
உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலையும் எல்லாம் கண்ணன் -என்றார் நம் ஆழ்வார் –
அமுதனார் அவை எல்லாம் எம்பெருமானார் குணங்களே என்கிறார் –

அடியேற்கு
இயல்பான அடிமை இன்பம் உணரப் பெற்ற எனக்கு –
இனி சீரே உயிர்க்கு உயிராய் அடியேற்கு- என்கையாலே
கீழ் கூறிய சௌலப்யாதி குணங்களுக்கு தோற்று -அடிமை யானதும் தோற்றுகிறது –
இன்று –
எங்கோ என்றோ போய் சரீர சம்பந்தம் நீங்கின பிறகு பெரும் பகவத் குணா அனுபவம் அன்று –
இங்கேயே இப்பொழுதே இவ் உடலோடேயே ஆசார்ய குணம் அனுபவம் ஆகிற பெரும் பேறு
வாய்க்க பெற்றேன் என்று களிக்கிறார் –

————-

திக்குற்ற கீர்த்தி இராமானுசனை என் செய்வினையாம்
மெய்க்குற்றம் நீக்கி விளங்கிய மேகத்தை மேவும் நல்லோர்
எக்குற்றவாளர் எது பிறப்பே எது இயல்வாக நின்றோர்
அக்குற்றம் அப்பிறப்பு அவ்வியல்வே நம்மை ஆள் கொள்ளுமே –26- –

மெய்க் குற்றம்
ஆளவந்தார் போன்ற முன்னவர் சொன்ன நைச்ய அனுசந்தானம் போன்றது -அன்று –
மெய்யாகவே உள்ள குற்றம்
சரீர சம்பந்தத்தால் வரும் அஹங்கார மமகாரங்கள் ஆகிற குற்றம் என்னலுமாம் –
அப்பொழுது வினையாம்-என்பதற்கு
வினையினால் உண்டான -என்று பொருள் கொள்ள வேண்டும் –
என்னால் செய்யப்பட்ட கர்மங்களினால் ஆகிய தேக சம்பந்தத்தால் உண்டான அஹங்காராதி தோஷத்தை
என்றது ஆயிற்று –

விளங்கிய மேகத்தை
சேதன லாபம் ஈச்வாரனுக்கு என்னுமா போலே , அமுதனார் கிடைக்கப் பெற்று எம்பெருமானார் உகந்தார்.
இதைத்தான் விளங்கிய மேகம் என்று எம்பெருமானரைக் குறிக்கிறார் அமுதனார்

மேவும் நல்லோர் –என்னை ஆட் கொள்ளுமே –
மேவுதல்-நிழல் போலே விட்டுப் பிரியாது இருத்தல்-
எம்பெருமானாரை மேவுகையே நலம்
அத்தகைய நலம் வாய்ந்தவர் நல்லோர்
அந் நலத்தினால் அவர் பால் இருந்த குறை -அறிவினாலோ பிறப்பினாலோ -நடத்தையினாலோ-
ஏற்ப்பட்டு இருபினும் அதுவும் நலமாகவே ஆக்கப்பட்டு -என்னை ஆட் கொண்டு விடுகிறது -என்கிறார் –

வாத்சல்யத்தால் நம்மை அறிவுறுத்தி -அவ் வழிப் படுத்துவதற்காகவே –
அந் நல்லோர் அறிவு பிறப்பு நடத்தைகளில் இழிவான தன்மைகளை தங்கள் இடம் ஏறிட்டு கொண்டு நம்மை அணைந்து உள்ளனர் –
ஈஸ்வரன் தானே தன் இச்சையால் தாழ விட்டுக் கொள்வது போலே –
இவர்களும் தம்மைத் தாழ விட்டுக் கொண்டு உள்ளனரே அன்றி -கர்மத்தால் இன் நிலைக்கு உட்பட்டவர்கள் அல்லர்
என்று அமுதனார் கருதுவதால்-
ஈஸ்வரனுடைய எளிமையினுக்கு அடியார்கள் ஆட்படுவது போலே –
இவர்கள் உடைய எளிமையினுக்கும் அவர் ஆட்படுகின்றார் -என்க
வம்ச பூமிகளை உத்தரிக்க கீழ் குலம் புக்க வராஹா கபாலரைப் போலே –
இவரும் நமக்நரை-உயர்த்த தாழ இழிந்தார் –சூரணை -84 – என்று ஆச்சார்ய ஹ்ருதயத்தில் கூறியபடி

இராமானுசனை மேவும் நல்லோர் -அஹங்காரத்துக்கு ஹேது ஆதலின் –
உயர் குடிப்பிறப்பும் – அறிவுடைமையும் -ஒழுக்கம் உடைமையும் -தள்ளத்தக்கன –
அஹங்காரத்துக்கு இடம் தராத இழி குலப் பிறப்பும் -அறிவின்மையும் -ஒழுக்கம் இன்மையுமே அமையும் என்று கருதுகின்றனர்

அவ் இயலவே -ஏகாரத்தை அக்குற்றமே அப்பிறப்பே என மற்றை இரண்டுடன் கூட்டுக –
இதனால் ஒவ் ஒன்றே ஆள் கொள்ளுவது புலனாம் –

———-

கொள்ளக் குறைவற்று இலங்கிக் கொழுந்து விட்டு ஓங்கிய உன்
வள்ளல் தனத்தினால் வல் வினையேன் மனம் நீ புகுந்தாய்
வெள்ளைச் சுடர் விடுமுன் பெரு மேன்மைக்கு இழுக்கு இது என்று
தள்ளுற்று இரங்கும் இராமானுச என் தனி நெஞ்சமே -27-

இராமானுசன் என்னும் கார் -தன் வள்ளன்மையால் -தன்னைக் காட்டி நான் கண்டு -உயரும்படி செய்தது என்றார் கீழ்-
இங்கே காட்டியதோடு அமையாமல் -நெஞ்சத்திலே தன்னை நிரந்தரமாக நிலை நாட்டியதன் மூலம் –
அவ் வள்ளல் தன்மை கொழுந்து விட்டு ஓங்கினமை புலன் ஆகிறது -என்கிறார் –

வெள்ளை சுடர் –இழுக்கு இது என்று –
என் சிறுமையையும் -தன் பெருமையையும் -ஒப்பிட்டு பாராதே உட் புகுந்தது அவருக்கு இழுக்காய் முடியுமே
என்று பயப்படுகிறார் -தான் மிக உயர்வது பற்றி அமுதனார் மகிழ் உற வில்லை –
எம்பெருமானார் பெருமைக்கு மாசு நேர்ந்து விடல் ஆகாதே என்று கலங்குகிறார் –

தள்ளுற்று இரங்கும் தனி நெஞ்சமே –
அச்சத்தால் தள்ளாடிய நெஞ்சம் துணையாக -தேற்றுவார் இன்றி தத்தளிக்கிறது என்கிறார் –
இனி -எம்பெருமானார் தாமே வந்து வல் வினையை லஷ்யம் செய்யாது புகுந்த
நெஞ்சம் வேறு ஓன்று இன்மையின் –தனி நெஞ்சம் -என்றார் ஆகவுமம் –
இனி தமக்கு வரும் சீர்மைக்கு மகிழாது -பிறருக்கு நேரும் இழுக்குக்காக தள்ளாடும் நெஞ்சம்-
மற்று ஓன்று இன்மையின் –தனி நெஞ்சம்-என்றார் ஆகவுமாம்

————–

நெஞ்சில் கறை கொண்ட கஞ்சனைக் காய்ந்த நிமலன் நங்கள்
பஞ்சித் திருவடிப் பின்னை தன் காதலன் பாதம் நண்ணா
வஞ்சர்க்கு அரிய இராமானுசன் புகழ் அன்றி என் வாய்
கொஞ்சிப் பரவ கில்லாது என்ன வாழ்வின்று கூடியதே – -28 –

நெஞ்சில் கறை கொண்ட கஞ்சனைக் காய்ந்த நிமலன்
சொல் அளவில் கறை கண்டு கை விடாதே -நெஞ்சில் பொல்லாங்கு சோதித்து அறிந்த பின்னரே –
காய்ந்து கை விடுகிறான் கண்ணன்-
கைக் கொள்ளும் இடத்து -கழுத்துக்கு மேலும் அமையும் –
கை விடும் இடத்தில் அகவாயில் உண்டு என்று-என்று அறிந்தால் அல்லது கை விடான்-
தீங்கு நினைந்த -கருத்தைப் பிழைப்பித்து கஞ்சன் வயிற்றில்-நெருப்பு அன்ன நின்ற நெடுமாலே – என்றாள்
ஆண்டாள் திருப்பாவை யிலே –
உன்னைச் சிந்தனையால் இகழ்ந்த இரணியனது அகல் மார்பம் கீண்ட என் முன்னைக் கோளரியே –
திரு வாய் மொழி – 2-6 6- –என்றார் நம் ஆழ்வாரும் –

கஞ்சனைக் காய்ந்த -என்றமையின்
சீறின-மாத்திரத்தில் ஆயுதம் இன்றி தானே எதிரியை அழித்தமை தோற்றுகிறது -சக்கரவர்த்தி திருமகன் போலே
ஆளிட்டு -அனுமனைக் கொண்டு –தென்னிலங்கையை தீக்கு இரையாக ஊட்டுதல் –
வாளியினால் மாளச் செய்தல் இல்லாமல் -தானே நெருப்பாக கஞ்சன் வயிற்றில் பற்றி நின்றும் –
குஞ்சி பிடித்து இழுத்து -மஞ்சத்தில் இருந்து -அக்கஞ்சனை கீழே தள்ளி -அவன் மேலே தானே விழுந்தும்-
வதம் செய்தமையால் –கண்ணன் தூயன் ஆனான் –என்னும் கருத்துடன் –காய்ந்த நிமலன்-என்றதாகவும் கொள்ளலாம்

பொன்னன் பைம் பூண் நெஞ்சிடந்து குருதியுக உகிர் வேலாண்ட நின்மலன் –பெரிய திருமொழி -3 4-4- –
என்னும் திரு மங்கை மன்னன் ஸ்ரீ ஸூக்தியையும் –
ஆளிட்டு செய்தல்–ஆயுதத்தால் அழிய செய்தல்-செய்கை அன்றிக்கே -ஆஸ்ரித விரோதியை தானே கை தொட்டு திரு உகிராகிற
வேலாலே அழிய செய்து -அத்தாலே வந்த சுத்தியை -உடையவன்-என்று அதன் வியாக்யானமும் அனுசந்திக்க தக்கன –

நிமலன் -என்பதால்-ஹேய பிரத்யநீகத்வமும் -குற்றம் ஒழிக்கும் பெற்றிமையும் –
காதலன்-என்பதால்-நல் குணம் உடைமையும் பேசப்படுகின்றன –

பாதம் நண்ணா வஞ்சர்க்கு அரிய இராமானுசன் –
பின்னை தன் கேள்வன் தாள் கண்டு கொண்டு என் தலை மேல் புனைந்தேனே -திரு வாய் மொழி 10-4 3- – -என்றபடி..
திருவடிகளைக் கண்டு தலை மேல் புனைதற்கு காமுறாது கண்ணன் திறத்து பர தந்திரனான -உரியனான –தன்னை –
ஆத்மா ஸ்வரூபத்தை -ஸ்வ தந்திரனாக -தனக்கே உரியனாக -கொள்வது வஞ்சம் ஆயிற்று –
இதுவே ஆத்ம அபஹாரம் எனப்படும்
தன்னை உணர்ந்து ஆட் செய்தற்கு இசைபவரே எம்பெருமானாரைக் கிட்டுதற்கு அருகதை உடையவர் –என்பது கருத்து –

புகழ் அன்றி பரவ கில்லாது –
வாய் அவனை அல்லது வாழ்த்தாது -முதல் திருவந்தாதி –
அமுதனாரோ குழந்தை மழலை மொழியிலே அடைவின்றிக் குழறுவது போலே அன்பு ததும்ப
எம்பெருமானார் புகழையே-என் வாய் புகழ்ந்து யேத்துமே -அன்றி -மற்று ஒன்றான –
பின்னை தன் காதலன் புகழையும்-பரவ கொள்ளாது -என்கிறார் –
இதனால் தனது சரம பர்வ நிஷ்டை வெளி இட்டபடி –

அவர் பாதம் அன்றிப் பின்னை தன் காதலன் பாதம் நண்ணாது –
அவர் புகழ் அன்றி அவன் புகழ் பரவ கில்லாத நிலை எய்தப் பெற்றேன்-
என்னே எனக்கு இன்று கிடைத்த வாழ்வு -என்று வியக்கிறார் –
பிரதம பர்வமும் அறியாத நான்-எதிர்பாராது சரம பர்வத்தின் எல்லை நிலம் எய்தப் பெற்றது-
வியக்க தக்கது என்பது கருத்து –

—————————————————————————————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ திருமலை நல்லான் சக்ரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண அய்யங்கார் ஸ்ரீ ஸூக்தி- அமுத விருந்து-8-21–

December 9, 2021

வருத்தும் புற இருள் மாற்ற எம் பொய்கைப் பிரான் மறையின்
குருத்தின் பொருளையும் செம்தமிழ் தன்னையும் கூட்டி ஒன்றத்
திரித்து அன்று எரித்த திரு விளக்கைத் தன் திரு உள்ளத்தே
யிருத்தும் பரமன் இராமானுசன் எம் இறையவனே -8 –

பூதத் தாழ்வார் தம் விளக்குக்கு திரியாக சிந்தையை உருவகம் செய்தது போலே
பொய்கை ஆழ்வார் திரியாக எதையும் உருவகம் செய்ய வில்லை –

வையம் தகளியா வார் கடலே நெய்யாக
வெய்ய கதிரோன் விளக்காக -செய்ய
சுடர் ஆழியான் அடிக்கே சூட்டினேன் சொன்மாலை
இடர் ஆழி நீங்குகவே யென்று -1-

அமுதனார் மறைக் குருத்தின் பொருளையும் செம் தமிழையும் ஒன்றாய் திரியாகத் திரித்து –
அவ் விளக்குக்குத் திரியை உபயோகப் படுத்தினதாக நயம் படக் கூறுகிறார் –

இருளைப் போக்கும் குருவாதலின்-எம்பெருமானாரை-பரமன் -என்கிறார் –
குருரேவ பரம் பிரம -குருவே பரம் பொருள் -என்றபடி -எம்பெருமானாரே பரமனாயினார் -என்க –
எம் இறைவன் –
தம்மைப் போன்ற சரம பர்வ நிஷ்டர்களையும் சேர்த்து -எங்களுக்கு இறையவன் -என்கிறார் –

மறை என்பது மறைத்துச் சொல்லும் வேதம். அதாவது வேதத்தின் தாத்பர்யம் நேராக
தெளிவாக இல்லாமல் மறைத்துச் சொல்லப்படுவதனால் இது மறை என்று சொல்லப்படுகிறது .
மறையின் குருத்து என்பது மறையின் சாரம் -அதாவது உபநிடதங்கள் .
இந்த உபநிடதங்கள் எம்பெருமானைப் பற்றி , அவன் கல்யாண குணங்கள் பற்றி தெரிவிக்கின்றன.
செந்தமிழ் பாடுவார் என்றும், பாலேய் தமிழர் என்றும், முதலாழ்வார்களை செந்தமிழ் பாடுவார் என்றிறே நாம் சொல்கிறோம்.

மரத்தில் குருத்து போலே -வேத மரத்தில் உண்டான -குருத்து முக்கியப் பகுதியான வேதாந்தம் -என்க –
வேதத்தின் பிரிவுகள் உலகில் -சாகை -கிளை களாகப் பேசப் படுதலின் வேதம் மரமாக உருவகம்-செய்யப் படுகிறது –
மகாதோ வேத வ்ருஷஸ்ய மூல பூதஸ் சநாதன-ஸ்கந்த பூதா ருகா த்யாஸ் தே சாகாபூதாஸ் ததாபரே -கீதை -15 1- – என்று
கிருத யுக வேதம்-பிரிவு படாத ஒரே வேதம் ஆதலின் பெரிய மரமாகவும் -கிருத யுக தர்மத்தை கூறும்
பகுதி மூலமாகவும் -அதாவது -வேராகவும்-ருக் முதலானவை அடித் தண்டாகவும் –
மற்றவை கிளைகளாகவும் -கூறப் படுவதும் இங்கு நினைவுறத் தக்கது –

வடமொழி வேதத்தின் பொருள் வேறு மொழியினால்
பேசப்படுகிறது என்று தோற்றாமல்-முதல் திருவந்தாதி -என்னும் செம்தமிழ் வடிவமாகவே
வேதம் அமைந்து இருக்கிறது என்று தோன்றுகிறது என்னவுமாம் –

கீதையில் – 10-11 கூறுகிறான் –அஹம் அஞ்ஞானம் தம நாசயாம் யாத்மா பாவஸ்த்த-ஞாநதீபேன- பாஸ்வதா -என்பது கீதை
எம்பெருமானார் பொய்கை ஆழ்வார் ஏற்றின திவ்ய ப்ரபந்தம் என்னும் பிரகாசிக்கும் விளக்கை
அணையாதபடி தன் அகத்தே வைத்து -மற்றவர்க்கும் அந்நிலையை உண்டாக்கி இருளைக் கடிகிறார்-
இத்தைக் கொண்டே ஸூத்ரங்களை ஒருங்க விட்டார் ஸ்ரீ பாஷ்யகாரர்

வருத்தும் புற இருள் மாற்ற எம் பொய்கைப் பிரான் மறையின் குருத்தின் பொருளையும்
செம்தமிழ் தன்னையும் கூட்டி ஒன்றத் திரித்து அன்று எரித்த திரு விளக்கு காட்டும் பொருள்கள் சில–

அன்று அது அடைத்து உடைத்துக் கண் படுத்த வாழி இது நீ படைத்து இடந்து உண்டு உமிழ்ந்த பார் ——-2-
நெறி வாசல் தானேயாய் நின்றானை-4-
உலகளந்த மூர்த்தி யுருவே முதல் –14-
பெற்றார் தளை கழலப் பேர்ந்தோர் குறளுருவாய்ச் செற்றார் படி கடந்த செங்கண் மால்-20-
செய்ய மறையான் நின்னுந்தியான் மா மதிள் மூன்று எய்த இறையான் நின்னாகத் திறை ——–28-
வேதியர்கள் சென்று இறைஞ்சும் வேங்கடமே வெண் சங்கம் ஊதிய வாய் மால் உகந்த ஊர் –37—
பூமேய மாதவத்தோன் தாள் பணிந்த வாளரக்கன் நீண் முடியை பாதமத்தால் எண்ணினான் பண்பு –45-
அரியா யிருந்தான் திருநாமம் எண்——-51–
நமன் தமரால் ஆராயப் பட்டு அறியார் கண்டீர் அரவணை மேல் பேராயற்கு ஆட்பட்டார் பேர் ——-55-
நேரே கடிக்கமலத் துள்ளிருந்தும் காண்கிலான் கண்ணனடிக் கமலம் தன்னை யயன் ——56-
நன்மாலை கொண்டு நமோ நாரணா வென்னும் சொன்மாலை கற்றேன் தொழுது ——57-
ஏழுலகத் தாயினவு மெண்டிசையும் போயினவும் சூழரவப் பொன் கணையான் தோள் ——-62-
திரு மாலை யல்லது தெய்வம் என்று ஏத்தேன் வருமாறு என் என் மேல் வினை —–64–
ஒண் தாமரையாள் கேள்வன் ஒருவனையே நோக்கும் உணர்வு –67-
ஆலன்று வேலைநீ ருள்ளதோ விண்ணதோ மண்ணதோ சோலை சூழ் குன்றெடுத்தாய் சொல்லு —–69-
என்றும் விடலாழி நெஞ்சமே வேண்டினேன் கண்டாய் அடலாழி கொண்டான் மாட்டன்பு —–71–
மூப்புன்னைச் சிந்திப்பார்க்கு இல்லை திரு மாலே நின்னடியை வந்திப்பார் காண்பர் வழி ———–75-
பழுதொன்றும் வாராத வண்ணமே விண் கொடுக்கும் மண்ணளந்த சீரான் திருவேங்கடம் -76-
நின்றான் இருந்தான் கிடந்தான் நடந்தானே என்றால் கெடுமா மிடர் ———77-
மா மேனி மாயவனுக்கு அல்லாது மாவரோ ஆள் -80-
வேங்கடமே லோரு நாள் மானமாய வெய்தான் வரை -82-
வராகத் தெயிற்று அளவு போதாவா றென்கொலோ எந்தை அடிக்களவு போந்த படி –84-
பொன்னடியே சூடுவேற்கு என்னாகில் என்னே எனக்கு –88-
ஏனத் துருவா யுலகிடந்த ஊழியான் பாதம் மருவதார்க்கு உண்டாமோ வான் —-91-
ஆனாய்ச்சி வெண்ணெய் விழுங்க நிறையுமே முன்னொரு நாள் மண்ணை யுமிழ்ந்த வயிறு -92-
மாயவனை யல்லால் இறையேனும் ஏத்தாது என் நா -94-
வெள்ளத்தில் உள்ளானும் வேங்கடத்து மேயானும் உள்ளத்தில் உள்ளான் என்று ஓர் -99-
ஓரடியில் தாயவனைக் கேசவனைத் தண் துழாய் மாலை சேர் மாயவனையே மனத்து வை -100-

—————

இறைவனைக் காணும் இதயத்து இருள் கெட ஞானம் என்னும்
நிறை விளக்கு ஏற்றிய பூதத் திருவடி தாள்கள் நெஞ்சத்து
உறைய வைத்து ஆளும் இராமானுசன் புகழோதும் நல்லோர்
மறையினைக் காத்து இந்த மண்ணகத்தே மன்ன வைப்பவரே – 9-

காணும் இதயம் -காணும் கண் எனபது போலக் காண்பதற்குக் கருவியான இதயம் என்றபடி –
இதயத்து இருள் -இதயத்தின் உள்ள பொருளைப் பற்றிய அறியாமை என்றபடி —
ஏற்றினது நிறை விளக்கு ஆதலின் இருள் மீள வழி இல்லை -என்பார் –கெட -என்றார்
ஞானம் என்னும் நிறை விளக்கு ஏற்றிய –
நிறை விளக்கு என்பதற்கு ஏற்ப ஞானம் -அதாவது பர ஞானம் -என்று கொள்க –
பர ஞானம் ஆவது -காணாத ஏக்கம் தீரக் கண்டு இன்புறும் வேட்கை முதிர்ச்சியால் ஏற்படும் சாஷாத் காரம் –
நிறை விளக்கு நேரே பொருள்களை தெளியக் காட்டுவது போலப் பர ஞானமும் –ஜீவ பரமான்ம தத்துவங்களை
நேரே தெளியக் காட்டுகின்றது என்க-

ஞான சுடர் விளக்கு ஏற்றினேன் -என்னும் பூதத்தாழ்வார் திரு வாக்கை -ஞானம் என்னும் நிறை
விளக்கு ஏற்றிய -என்று அமுதனார் பொருளோடு அச் சொல்லாலே பொன்னே போல் போற்றிக் கையாளுகிறார் –
சுடர் விளக்கு -என்பதை –நிறை விளக்கு -என்கிறார் –

திருவடி–
பெரியோர்களைத் திருவடிகள் என்று மதிப்பு தோன்றக் கூருவது மரபு –
வட மொழியிலும் தந்தையை -தாத பாதா-என்றும்
குருவை-ஆசார்ய பாதர் -என்றும் வழங்குவது உண்டு –
திரு மங்கை ஆழ்வார் -உம் தம் அடிகள் முனிவர் – என்று யசோதை கண்ணனைப் பார்த்து
பேசும் பொது தந்தையாகிய நந்த கோபரை -அடிகள் -என்று குறிப்பிடுவதாக காட்டி உள்ளார் –
உங்கள் முதலியார் சீறுவர் கிடீர் – என்பது அத் திருமொழிக்கு பெரிய வாச்சான் பிள்ளை அருளிய வியாக்யானம் –
நம் ஆழ்வார் -மலர் மகள் விரும்பும் நமரும் பெறலடிகள் -என்று எம்பெருமானை குறிப்பிடுகிறார் –
அடிகள்-ஸ்வாமிகள் என்பது வியாக்யானம் –
உயர்வு பன்மையில் வரும் இச் சொல் ஒருமையிலும் வருவது உண்டு –
என் பிழைத்தாள் திருவடியின் தகவினுக்கு -என்று நம் ஆழ்வாரும்
திருவடி தன் நாமம் மறந்தும் – என்று திரு மழிசைப் பிரானும் -ஒருமையில் வழங்கியது போல்-அமுதனாரும் -பூதத் திருவடி -என்கிறார்
ஆழ்வார் என்பதும் அடிகள் என்பதும் ஒரே பொருள் கொண்டவை என்பது அமுதனார் கருத்து –

கடல் வண்ணன் பூதங்கள் மண் மேல் இரியப் புகுந்து இசை பாடி யாடி யூழி தரக் கண்டோம் –என்றும்
மாதவன் பூதங்கள் மண் மேல் இரியப் புகுந்து இசை பாடி எங்கும் இடம் கொண்டனவே -என்றும்
இவ்வாறே திருவாய் மொழியிலும் வழங்கி உள்ளமை காணத் தக்கது –
இம்முறையில் சஞ்சாரம் செய்து கொண்டு இருந்தமையின் பூதம் என்னும் பெயர் ஆழ்வாருக்கு வழங்கல் ஆயிற்று

பண்டிப் பெரும் பதியை யாக்கிப் பழி பாவம்–கொண்டு இங்கு வாழ்வாரைக் கூறாதே -எண் திசையும்
பேர்த்தகரம் நான்குடையான் பேரோதிப் பேதைகாள்-தீர்த்தகர ராமின் திரிந்து -என்பது இவரது உபதேசம் –

திரிந்து தீர்த்த கரர் ஆமின் -திரிவதனால் உங்கள் பாத தூளி பட்டுப் புனிதம் ஆகும்படி செய்யுங்கள் -என்பது கருத்து –
நாதனை நரசிங்கனை நவின்று எத்துவார்கள் உழக்கிய பாத தூளி படுதலால் இவ் உலகம் பாக்கியம் செய்ததே -என்று
பெரியாழ்வார் திரு மொழி – 4-4 6– என்பதும் காண்க –
இந்த உபதேசப் பாசுரத்தில் -பேர்த்தகரம் நான்குடையான் பேரோதித் திரிந்து தீர்த்த கரர் ஆமின் -என்னும்
சொல் தொடர் மிகவும் சுவை உடைத்து –
திசை அளப்பான் எண் திசையும் பேர்த்தகரம் நான்குடையான் திரு மேனி சம்பந்தத்தால் உலகம் தூயதா கிலது –
அதனை அவன் பேரோதித் திரிந்து அவனினும் பெரியோர்களாகிய நீங்கள் உங்கள் பாத தூளியினால்
புனிதம் ஆக்குங்கள் -என்று பாகவதர்களின் சிறப்பை உணர்த்திச் சுவை தருவதுதைத் துய்த்து இன்புறுக –

நல்லோர் மறையினைக் காத்து மன்ன வைப்பவர்
அந்த வேதத்தை காத்ததோடு அமையாமல் -நிலை நிற்கவும் செய்கிறார்கள் -என்றபடி –
இவ் இருள் தரும் மா ஞாலத்தில் இது செயற்கு அறிய செயல் என்பது தோன்ற -இந்த மண்ணகத்தே -என்றார் –
முழுமை வாய்ந்த ஆசார்யர் எம்பெருமானாரே –
ஆதலின் அவரே வேதத்தின் உள் பொருள் –
அவரைப் பற்றி நிற்றலே வேத மார்க்கம் என்றும்
மற்றவர்களை அங்கனம் பற்றி நிற்க செய்தாலே வேத மார்க்கத்தை பிரதிஷ்ட்டாபனம் செய்தல் -நிலை நிறுத்துதல் –
என்றும் சம்ப்ரதாயம் வல்லோர் கருதுகின்றனர் –
ஆகையால் ஸ்ரீ மத் வேத மார்க்க பிரதிஷ்டாப நாசாரியர் என்று எம்பெருமானார் சம்பந்தம் உடைய
ஆசார்ர்யர்களை இன்றும் உலகில் வழங்கி வருகிறார்கள் –
இதனையே அமுதனார் -நல்லோர் மறையினைக் காத்து மன்ன வைப்பவர் -என்பதனால்
அருளி செய்கிறார் என்பது உணரத் தக்கது-

இதயத்து இருள் கெட என்று ஆழ்வார் சாதித்தது சில காண்போம்.
ஞானச் சுடர் விளக்கு ஏற்றினேன் நாரணற்கு ஞானத் தமிழ் புரிந்தேன் நான்-1-
நீரோத மேனி நெடுமாலே நின்னடியை யாரோத வல்லார் அறிந்து-5-
ஏத்திய நா வுடையேன் பூ வுடையேன் நின்னுள்ளி நின்றமையால் கா அடியேன் பட்ட கடை—-10-
வனதிடரை ஏரியாம் வண்ணம் இயற்றும் இது வல்லால் மாரி யார் பெய்கிற்பார் மற்று——16-
தாமுளரே தம் உள்ளம் உள் உளதே தாமரையின் பூ உளதே ஏத்தும் பொழுது உண்டே -வாமன்
திரு மருவு தாள் மருவு சென்னியரே செவ்வே அரு நரகம் சேர்வது அரிது—————–21–
கோல் தேடி யோடும் கொழுந்ததே போன்றதே மால் தேடி ஓடும் மனம்—-27-
நமக்கென்றும் மாதவனே என்னும் மனம் படைத்தது மற்றவன் பேர் ஓதுவதே நாவினால் ஓத்து————-38-
மாதவன் பேர் சொல்லுவதே ஒத்தின் சுருக்கு —39-
அறம் தாங்கும் மாதவனே என்னும் மனம் படைத்தது மற்றவன் பேர் ஓதுவதே நாவினால் உள்ளு ——-44-
வேங்கடமே யாம் விரும்பும் வெற்பு –53–
நிற்பென்று உளம் கோயில் உள்ளம் வைத்து உள்ளினேன் வெள்ளத்து இளம் கோயில் கை விடேல் என்று –54-
பணிந்தேன் திரு மேனி பைங்கமலம் கையால் அணிந்தேன் உன் சேவடி மேல் அன்பாய்த் துணிந்தேன்–65-
கண்டேன் திருமேனி யான் கனவில் ஆங்கு அவன் கைக்
கண்டேன் கனலும் சுடர் ஆழி -கண்டேன்
உறு நோய் வினை இரண்டும் ஓட்டுவித்துப பின்னும்
மறு நோய் செறுவான் வலி-67-
யானே இரும் தமிழ் நன்மாலை இணை யடிக்கே சொன்னேன் பெரும் தமிழன் அல்லேன் பெரிது-74-
அருகிருந்த தேன் கலந்து நீட்டும் திருவேங்கடம் கண்டீர் வான் கலந்த வண்ணன் வரை-75-
பகல் கண்டேன் நாரணனைக் கண்டேன் கனவில்
மிகக் கண்டேன் மீண்டவனை மெய்யே -மிகக் கண்டேன்
ஊன் திகழும் நேமி யொளி திகழும் சேவடியான்
வான் திகழும் சோதி வடிவு -81-
நரம் கலந்த சிங்கமாய்க் கீண்ட திருவன் அடி இணையே அங்கண் மா ஞாலத்து அமுது–84-
அமுதன்ன சொன்மாலை ஏத்தித் தொழுதேன் சொலப்பட்ட நன்மாலை ஏத்தி நவின்று –85-
அன்று கருக் கோட்டியுள் கிடந்தது கை தொழுதேன் கண்டேன் திருக் கோட்டி எந்தை திறம் -87-
உலகு ஏத்தும் ஆழியான் அத்தி ஊரான் -95-
அத்தி யூரான் புள்ளை யூர்வான் அணி மணியின்
துத்தி சேர் நாகத்தின் மேல் துயில்வான் -முத்தீ
மறையாவான் மா கடல் நஞ்சுண்டான் தனக்கும்
இறையாவான் எங்கள் பிரான் –96-
மேலாய் விளவின் காய் கன்றினால் வீழ்த்தவனே என்தன் அளவன்றால் யானுடைய வன்பு –100-

——————-

மன்னிய பேரிருள் மாண்ட பின் கோவலுள் மா மலராள்
தன்னோடு மாயனைக் கண்டமை காட்டும் தமிழ்த் தலைவன்
பொன்னடி போற்றும் இராமானுசற்கு அன்பு பூண்டவர் தாள்
சென்னியில் சூடும் திரு உடையார் என்றும் சீரியரே – 10-

மன்னிய பேரிருள் மாண்ட பின் –
பேராத திண்மை வாய்ந்த இந்தப் பெரிய இருள் -பொய்கையாரும் பூதத்தாரும் ஏற்றிய விளக்கின் ஒளியால் பேர்ந்து ஒழிந்தது –
பேரிருள் முன்பு பண்புத் தொகையாய்ப் பெருமை-வாய்ந்து இருந்தது-
இப்பொழுது அந்தப் பேரிருள் வினைத் தொகையாய் பேர்கின்ற இருளாய் மாண்டது –
இவ்விருளுக்கு ஆதி இல்லை -அந்தம் உண்டு -மன்னிய இருள் ஆதி இல்லாதது -பேர்கின்ற இருள் அந்தம் உள்ளது –
இருளை மாண்டதாகக் கூறவே மீண்டு வாராது அடியோடு ஒழிந்தமை பெற்றாம்-

கண்ணன் இடையன் -இவனும் இடை கழியில் சேவை சாதித்து -இடையன் –
இடைப்பட்டவன் -நெருக்கு உகந்த படியால் இடையன் –

பொன்னடி போற்றும் –
உலகமளந்த பொன்னடியில் ஈடுபாடு மட்டுப்பட்டு –தமிழ்த் தலைவன் பொன்னடியில் மிகவும் ஈடுபட்டுப் போற்றுகிறார் எம்பெருமானார் –
அச்சுதன் பதாம் புஜமாம் பொன் மீது வ்யாமோஹம் கொண்டு மற்றவைகளை தருணமாக
மதிக்கும் எம்பெருமானார் -தமிழ்த் தலைவன் பொன்னடியைப் போற்றுகிறார் –
இப்போது மா மலராளோடு கூடி ஆயனாய் எளிமை பட்ட பரம் பொருளைக் காட்டித் தந்த
பரம உபகாரம் அங்கனம் போற்றும்படி செய்கிறது –
மது நின்ற தண் துழாய் மார்வன் பொது நின்ற பொன் அம் கழலே தொழுமின் -மூன்றாம் திருவந்தாதி -89 –
என்று உபதேசிக்கிறார் பேய் ஆழ்வார்
அங்கனம் உபதேசித்து எம்பெருமானைக் காட்டும் தமிழ்த் தலைவன் பொன்னடிகளைப் போற்றுகிறார் எம்பெருமானார்

அன்பு பூண்டவர்
ஞான பக்தி வைராக்யங்களை ஆன்ம தத்துவத்துக்கு அணிகளாக வருணிக்கும் மரபு பற்றி-அன்பு பூண்டவர் -என்றார் –
இனி அன்பு பூண்டவர் -என்றது அன்பிலே பூட்சியை உடையவர்கள்-அதிலே ஊன்றி இருக்குமவர்கள்
என்னலுமாம் -என்று மணவாள மா முனிகள் உரைத்து இருப்பதும் இங்கு அறியத் தக்கது –

அரசு அமர்ந்தான் அடி சூடும் அரசை யல்லால்-அரசாக எண்ணேன் மற்றரசு தானே -என்று
குலசேகர பெருமாள் அருளியதும் இங்கு அறியத் தக்கது –
பரதனும் குலசேகரப் பெருமாளும் சூடிய அடிமுடி -பகவான் திறத்து அவர்கட்க்கு உள்ள பாரதந்திரிய
செல்வத்தை புலப்படுத்தும் –
நீள் முடியாய் – பகவத் கைங்கர்ய சாம்ராஜ்யம் அவர்கள் கைப் பட்டு இருப்பதைக்-காட்டுகிறது –
அமுதனார் காட்டும் அவர்கள் சென்னியில் சூடிய அடி முடியோ –
பகவானைக் காட்டித் தரும் ஆசார்யனான எம்பெருமானார் அளவோடு நில்லாது –
அவர்க்கு அன்பு பூண்டவர் திறத்தும் அவர்கட்கு உள்ள பார தந்திரிய செல்வதை புலப்படுத்தும்
துளங்கு நீள் முடியாய் -பாகவத கைங்கர்யத்தின் முடிவு எல்லையாய் -பரம புருஷார்த்தமான
ஆசார்ய பக்த கைங்கர்ய சாம்ராஜ்யமே -அவர்கள் கைப் பட்டு இருப்பதைக் காட்டுகிறது

பகவத் பாரதந்த்ரியம் -செல்வம்
பாகவத பாரதந்த்ரியம் -ஆச்சார்ய பாரதந்த்ரியம் -பெரும் செல்வம் –
ஆச்சார்ய பக்த பாரதந்திரியம் மிகப் பெரும் செல்வம் –என்றது ஆயிற்று –
ஏனைய திரு உடையார் போல் அல்லாது-இனி மேலும் பெற வேண்டிய செல்வம்
இல்லாமையின் இந்நிலையிலேயே நிலை நிற்றல் பற்றி என்றும் சீரியர் -என்கிறார்-

———–

சீரிய நான் மறைச் செம் பொருள் செம் தமிழால் அளித்த
பாரியிலும் புகழ்ப் பாண் பெருமாள் சரணாம் பதுமத்
தாரியல் சென்னி யிராமானுசன் தன்னைச் சார்ந்தவர் தம்
காரிய வண்மை என்னால் சொல்ல ஒண்ணாது இக்கடலிடத்தே – 11- –

சீரிய நான் மறைச் செம் பொருள் செம் தமிழால் அளித்த
அமலனாதி பிரான் -என்கிற முதல் பாசுரத்திலே –
ஆதி -என்று காரணமான பரமாத்ம ஸ்வரூபமும்
விண்ணவர் கோன் -என்பதனால் நித்ய ஸூரிகள் சேவிக்கும் பர ரூபமும் –
வேம்கடவன் -என்பதனாலும் -அரங்கத்தம்மான் -என்பதனாலும் அர்ச்சாரூபமும் –
அமலன் நிமலன் -முதலிய சொற்களினால் ஹேய ப்ரத்ய நீகத்வம் -மாசு நீக்கித் தூய்மை படுத்துதல் -முதலிய குணங்களும்
கமல பாதம் -என்பதனால் திரு மேனிக்கு உண்டான அழகும் மென்மை குளிர்ச்சி முதலிய குணங்களும்
நீதி வானவன் -என்பதனால் -பரம பதமாகிய நித்ய விபூதி செல்வமும்
அடியார்க்கு என்னை ஆள் படுத்த -என்பதனால் லீலா விபூதி என்னும் இவ் உலக செல்வமும்-
சேரச் சொல்லப் பட்டு உள்ளமை காண்க –

பாண் பெருமாள்
ஆழ்வார்கள் பதின்மருள் குலசேகரரும் பாணருமே -பெருமாள் -என்று நூல்களில் வழங்கப் படுகின்றனர்
குலசேகரர்-அருளி செய்த திருமொழி -பெருமாள் திருமொழி -என்று வழங்கப் படுவது காண்க
இங்கே அமுதனார் -பாண் பெருமாள்-என்று வழங்குகிறார் திருப் பாண் ஆழ்வாரை –
இவரை அடி ஒற்றி இவர் குலத்தவரான ஐயங்கார் திருவரங்கத் தந்தாதியில் -அருள் பாண் பெருமாள் -என்கிறார் –
வேதாந்த தேசிகன் முனி வாஹன போகத்தில் -கண்ணனையே கண்டு உரைத்தக கடிய காதல் பாண் பெருமாள் -என்று
அருளி இருப்பதும் அறியத் தக்கது

பாணனார் திண்ண மிருக்க இனி இவள் நாணுமோ -பெரிய திரு மொழி – 8-2 2- – என்னும்
திரு மங்கை மன்னன் திரு வாக்கும்
இங்கு பாணனார் ஆகிறார் சேதனருக்கு ஸ்வா தத்ரியத்தால் வந்த மறத்தைப் போக்கி –
சேஷத்வ ஞானத்தை உணர்த்தி சேர விடும் ஆசார்யன் இறே -பாணனார் -என்கிறாள் காணும் இவள் –
என்பது வியாக்யான ஸ்ரீ ஸூக்தி –
வேதாந்த தேசிகன் -அமலன் -என்கிறது மல பிரதிபடன் -என்றபடி -இத்தால் மோஷ ப்ரதத்வம் சொல்லிற்று ஆயிற்று –
என்று முனி வாஹன போகத்திலே அருளி செய்துள்ளமை காண்க

இராமானுசன் தன்னை சார்ந்தவர் தம் காரிய வண்மை –
அரங்கத் தம்மான் தன்னைக் காட்ட பட்டதனால் கண்டு வாழ்ந்தார் பாணர் –
பாணர் அடி முதல் முடி வரை தாம் கண்டதை பாட்டினால் காட்ட -எம்பெருமானார் கண்டு
பிறருக்கும் அரங்கத் தம்மானுடைய அவ் அரும் கட்சியை அப் பாட்டினாலேயே காட்டிக் கொடுத்தார் –
அரங்கனை தமக்கு காட்டிய பாணர் சரணங்களை தலை மேல் புனைந்தார் எம்பெருமானார் –
அத்தகைய எம்பெருமானார் பாணர் பாட்டினாலேயே அரங்கனை காட்டித் தருதலின் -ஆசார்யராகிய அவரையே
தமக்கு சார்வாக கொண்டனர் சில சால்புடையோர் –
அவர்கள் அங்கனம் கொண்டதோடு ஆச்சார்யா அபிமான நிஷ்டையில் வழுவாது -ஒழுகி நிலை நிற்றல்
அமுதனாருக்கு மிக்க வியப்பும் நயப்பும் தருகிறது –

இக்கடல் இடத்தே இராமானுசன் தன்னை சார்ந்தவர்
பகவானை பற்றுவதற்கு கூட இசைவார் இல்லாத இவ் உலகிலே அதனுடைய
எல்லை நிலத்தளவும் வந்து எம்பெருமானாரைப் பற்றி நிற்கும் பெற்றிமை வாய்ந்தவர்கள் என்றது ஆயிற்று –

காரியல் வண்மை -என்றுமொரு பாடம் உண்டு
அப்பொழுது காரினுடைய இயல்பை உடைத்தான வள்ளன்மை என்று பொருள் படும் .அதாவது
மேகம் நீர் நிலம் என்ற வேறுபாடு இன்றி மழை பொழிவது போலே எம்பெருமானாரை சார்ந்தவர்களும்
வேண்டுபவர் வேண்டாதவர் என்ற வேறு பாடு இன்றி எம்பெருமானார் திவ்ய குணங்களை பொழியும் வள்ளன்மை -என்றபடி –

——–

இடம் கொண்ட கீர்த்தி மழிசைக்கு இறைவன் இணை அடிப் போது
அடங்கும் இதயத்து இராமானுசன் அம் பொன் பாதம் என்னும்
கடம் கொண்டு இறைஞ்சும் திரு முனிவர்க்கு அன்றி காதல் செய்யாத்
திடம் கொண்ட ஞானியர்க்கே அடியேன் அன்பு செய்வதுவே —12-

இடம் கொண்ட கீர்த்தி மழிசைக்கு இறைவன் –
இடம் என்று பொதுப்பட சொல்லுகையாலே இவ் உலகினையும் சரி -விண் உலகினையும் சரி –
இவர் கீர்த்தி எல்லா இடங்களையும் தன்னுள் கொண்டமை புலனாகிறது
மகா விஷ்ணு போன்றது பக்தரான திரு மழிசை பிரான் கீர்த்தியும்
விஷ்ணு வ்யாபிப்பான் -இவர் கீர்த்தியும் எங்கும் உளதாய் இருக்கிறது

எனக்கு ஆவார் ஆர் ஒருவரே எம்பெருமான்
தனக்காவான் தானே மற்று அல்லால் -புனக்காயா
வண்ணனே உன்னைப் பிறர் அறியார் என் மதிக்கு
விண்ணெல்லாம் உண்டோ விலை -நான் முகன்திருவந்தாதி – 5-

இவருடைய மதியைத் -துய்ய மதி -என்று மணவாள மாமுனிகள் போற்றிப்-புகழுகிறார் உபதேச ரத்ன மாலையிலே –

இடம் கொண்ட கீர்த்தி -விரிவடைந்த கீர்த்தி எனினுமாம்
இவர் சொன்னபடி எம்பெருமான் தான் இருக்கும் இடத்தைக் கொண்டமையால் வந்த கீர்த்தி என்னலுமாம் –
மணி வண்ணா நீ கிடக்க வேண்டும் பைந்நாகப் பாய் படுத்துக்கொள் -என்று
இவர் சொன்ன படி-திரு வெக்காவில் எம்பெருமான் மீண்டும் இடம் கொண்டு -சொன்ன வண்ணம் செய்த பெருமாள்-என்று
பேர் பெற்று விளங்கும் ஐதிஹ்யம் காண்க –

இனி எம்பெருமான் தான் கோயில் கொண்டு உள்ள ஊரகம் பாடகம் திரு வெக்கா என்னும்-தளங்களை விட்டு –
இவர் திரு உள்ளத்திலே இடம் கொண்டமையால் வந்த கீர்த்தியை சொல்லலுமாம் –
நின்றதும் -இருந்ததும் -கிடந்ததும் -என் நெஞ்சுளே -திருச் சந்த விருத்தம் -64 -என்றது காண்க

இனி இடம் கொண்ட கீர்த்தியை –
மழிசைக்கு அடை ஆக்கலுமாம் –
உலகும் மழிசை யும் புகழ்க் கோலால் தூக்க உலகு தன்னை வைத்தெடுத்த பக்கத்தினும்
மழிசையை வைத்து எடுத்த பக்கமே வலிதான புகழ் உடைமை திரு மழிசைக்கு கூறப்பட்டதாகிறது –
உலகின் மகிமைகளை எல்லாம் தன்னுள் கொண்டது திரு மழிசை -என்க-
மஹீசார ஷேத்ரம் மழிசை எனப்படுகிறது –

இணை அடிப் போது அடங்கும் இதயம் –
ஒரு சிறிய மலரிலே இரண்டு பெரிய மலர்கள் அடங்குகின்றன –
இதய மலர் சிறிது –இணை அடிப் போதுகள் பெரியன-
அழகிய இரண்டு திருவடிகளையும் இதயத்திலே வைத்து த்யானம் செய்கிறார் எம்பெருமானார் -என்றபடி .

அம் பொன் பாதம் –
தங்கப் பாத்தரத்தை எவர் தீண்டினும் மாசு படாது –
எம்பெருமானார் பாதத்தை எவர் பற்றினாலும் குற்றம் அன்று –
சர்வ சமாஸ்ரயநீயம்-என்ற படி

இறைஞ்சும் திரு -இறைஞ்சுதலே திரு என்க-
எம்பெருமானாரை இறைஞ்சுதலே செல்வம் என்றது ஆயிற்று –
எம்பெருமானை இறைஞ்சுதலும் செல்வமே யாயினும் -கஜாந்தம் ஐஸ்வர்யம் -என்று-
யானையைக் கட்டித் தீனி போடுவதை இறுதியாகக் கொண்டது ஐஸ்வர்யம் -என்பது போலே-
ஆசார்யன் அளவும் இறைஞ்சுதல் சென்றால் தான் செல்வம் ஆகும் -என்க –

முனிவர் –
எம்பெருமானாரையே இடை விடாது மனனம் பண்ணும் இயல்பினர் –
எம்பெருமானார் இதயத்திலே மழிசைக்கு இறைவன் இணை அடிப் போதுகளையே
த்யானிப்பது போலே – இத் திருவாளர்கள் இராமானுசன் அம் பொன் பாதத்தையே நினைந்த-வண்ணம் இருக்கின்றனர் -என்க –

திருமழிசைப்பிரான் மறந்தும் புறம் தொழா மாந்தர் என்று எம்பெருமான் விஷயத்தில் சாதித்தார்.
இவர் எம்பெருமானார் மிசை பற்றுள்ளவர் விஷயத்தில் மறந்தும் புறம் தொழேன் என்கிறது இங்கு
திருமுனிவர்க்கு அன்றி என்று சொற்களால் புலப்படுவது குறிப்பிடத்தக்கது

————-

செய்யும் பசும் துளவத் தொழில் மாலையும் செம் தமிழில்
பெய்யும் மறைத் தமிழ் மாலையும் பேராத சீர் ரங்கத்
தய்யன் கழல்க்கு அணியும் பரன் தாள் அன்றி ஆதரியா
மெய்யன் இராமானுசன் சரணே கதி வேறு எனக்கே – 13-

செய்யும் மறைத் தமிழ் மாலையும் –
தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் இருவகை மாலைகளை அரங்கத்து ஐயனுக்கு சமர்ப்பிக்கின்றார் –
ஒருவகை -திரு துழாய் மாலை
மற்று ஒரு வகை -தமிழ் மாலை
ஆண்டாளும் அரங்கனுக்கு பா மாலையும் பூ மாலையும் சமர்பித்து உள்ளாள்-
ஆயின் அப்பூ மாலை அவளால் தொடுக்கப் பட்டது அன்று -சூடி சமர்பிக்கப் பட்டது தான்
திருத் துழாய் மாலையோ தொண்டர் அடி பொடி ஆழ்வார் தம் கையினாலேயே தொடுத்தது –ஆதலின் –
செய்யும் துளப மாலை -என்றார் –

ஆழ்வார் தாம் தொண்டர் ஆனமைக்கு ஏற்ப கழலில் அணிவித்ததும்
அவர் பத்தி கண்டு மயங்கிக் கிடக்கிறான் போலும் ஐயன் அரங்கத்திலே -இனி ஆழ்வார் இடம் உள்ள மதிப்பினால்
மாற்றாது அங்கனமே கழலில் அணிந்து இருந்தான் ஆகவுமாம்-
இனி கழலில் அணிந்தது உப லஷணமாய்-தோள் இணை மேலும் -திருவாய் மொழி -1 9-7 – -என்ற
பாசுரப்படி அந்த அந்த-அவயவங்களிலே புனைந்தான் ஆகலுமாம் –

கெண்டை ஒண் கணும் துயிலும் என் நிறம்
பண்டு பண்டு போல் ஒக்கும் மிக்க சீர்த்
தொண்டர் இட்ட பூம் துளவின் வாசமே
வண்டு கொண்டு வந்தூதுமாகிலே -பெரிய திருமொழி -11 1-9 – –

இங்கு மிக்க சீர்த் தொண்டர் எனபது -தமக்கு ஒரு பயன் கருதாது -பரிவுடன் அரங்கனை பரிந்து-காப்பவரைக் குறிக்கிறது –
பூம் துளவு அவர் இட்டதாயின் வருந்த வேண்டியது இல்லை –
பிரிந்து வருந்தும் தலைவிக்கு தான் இன்பம் காண வில்லையே என்பதனால் அன்று ஏக்கம் –
தான் பிரிந்த நிலையில் தலைவனை அருகில் இருந்து பாதுகாப்பார் யாரும் இல்லையே
என்பதனால் ஆயது அது –மிக்க சீர் தொண்டர் பக்கத்தில் இருப்பது தெரிந்தால் அவ் ஏக்கம் நீங்குகிறது என்க-
அத்தகைய மிக்க சீர் தொண்டர் தொண்டர் அடிப் பொடி ஆழ்வாரே

பசும் துளவ மாலை
துழாய் வாடும் -இவ் ஆழ்வார் கைப் படினோ-புதுக் கணிக்கிறது திருத் துழாய் -அதற்க்கு காரணம்
அரங்கனுக்கு அணி செய்ய திருத் துழாய் வடிவத்தில் நித்ய ஸூரியே வந்து இருப்பதால் –
தனக்கு தொண்டு பட்ட ஆழ்வார் உடைய திருக் கரம் பட்டதும் புத்துணர்ச்சி ஏற்பட்டு புதுக் கணிப்பு உண்டாகிறது –
அது பசுமை நிறத்தாலே வெளிப்படுகிறது -அது தோன்ற -பசும் துளவ மாலை -என்கிறார் –

அரங்கனுக்கு இவர் துளவ மாலை அணிவித்தாலும் இவர் செய்வது அரங்கன் தொண்டு அன்று -துளவத் தொண்டே –
அதாவது திருத் துழாய் ஆழ்வாருக்கு புரியும் தொண்டே எனபது அறிய தக்கது –
துளவத் தொண்டரே -இவர் -துளவத் தொண்டாய் -என்று இவர் கூறிக் கொள்வது காண்க –
திருத் துழாய் ஆழ்வாருக்கு புரியும் தொண்டு அவருக்கு ஆள் பட்ட தொண்டர் அனைவருக்கும்
புரியும் தொண்டாய் தலைக் கட்டும்

செம் தமிழில் பெய்யும் மறைத் தமிழ் மாலை
மறையின் குருத்தின் பொருளையும் செம் தமிழையும் ஒன்றாக திரித்தி பாடினார் -பொய்கை ஆழ்வார் –
நான் மறை செம் பொருளை செம் தமிழால் அளித்தார் பாண் பெருமாள்-
இவரோ மற்று ஒரு பாஷையாய் இராது தமிழாகவே ஆகி விட்ட வேதம் என்னும்படியான
தமிழ் மாலையை தொடுத்து அளிக்கிறார் –

பேராத சீர் அரங்கத்து ஐயன் –
பேராத -நீங்காத
சீர் -கல்யாண குணங்கள்
வீடில் சீர்ப் புகழ் ஆதிப் பிரான் -என்றார் நம் ஆழ்வாரும்
இனி சீர் ரங்கம் என்பதை ஸ்ரீ ரங்கமாக கொண்டு -அத் திரு வரங்கத்துக்கு -பேராத – என்பதை
அடை மொழி யாக்கலுமாம் -பேராத -நகராத
திரு அயோத்யையில் இருந்து ஸ்ரீ விபீஷண ஆழ்வான் ஸ்ரீ ரங்க விமானத்தை எழுந்து அருளப் பண்ணிக்
கொண்டு போகும் பொழுது இங்கு காவேரிக் கரையிலிருந்து விபீடணற்கு பெறாமல் இருந்தது பிரசித்தம் –
இனி சத்ய லோகத்தில் இருந்தும் -அயோத்திக்கும் -அங்கு இருந்து விபீடணன் மூலம் காவிரி ஆற்று இடை க்கும்
பேர்ந்து வந்தது போலே -இங்கு இருந்து வேறு ஓர் இடத்துக்கு எக்காலத்தும் பெறாமல் இருத்தல்
பற்றி –பேராத சீர்ரங்கம் -என்றார் ஆகவுமாம்-

அவனும் சீர் அரங்கம் விட்டுப்பேராமல் இருக்க
தானும் சீர் அரங்கம் விட்டுப் பேராமல் மங்களா சாசனம் செய்தார் அன்றோ

தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் அருளியதையே முன் பின்னாக மாற்றி
அரங்கத்து ஐயன் – என்று அருளி செய்கிறார் அமுதனார்

பரன்
சேஷித்வத்தின் எல்லை நிலையில் இருந்து தனக்கு மேற்பட்டவர் இல்லாமையாலே
எம்பெருமானை –பரன் -என்பது போலே -சேஷத்வத்தின் எல்லையில் இருந்து தனக்கு
மேம்பட்டவர் இல்லாமையாலே தொண்டர் அடிப் பொடி ஆழ்வாரை -பரன் -என்கிறார் –

பரன் தாள் அன்றி ஆதரியா மெய்யன்
ஆழ்வார் தொடர்களுடைய அடிப் பொடியை ஆதரித்து அதனையே தனக்கு
நிரூபகமாக கொண்டார் -எம்பெருமானார் அடிப் பொடியின் அடியை அன்றி -ஆதரியாதவர் ஆனார் –
பரனாக ஆழ்வாரையே கொண்டமையின் –அவன் தாள் அன்றி
பரன் என்று பேர் கொண்ட எம்பெருமான் தாள்களையும் ஆதரியார் -என்னுமாம் –
ஆழ்வார்கள் அனைவரும் ஒரே சமஷ்டியாய் -ஒரே தரத்தினராய் இருத்தலின் – அவர்கள் திருவடிகளையும் –
அவர்கள் தந்த ஞானத்தால் உய்ந்த அவர்களுடைய சீடரான நாதமுனி முதலிய ஆசார்யர்கள் உடைய திருவடிகளையும்
எம்பெருமானார் ஆதரிப்பது இதற்கு முரண் படாது -என்க –

மெய்யன்
பரன் தாள் அன்றி ஆதரியாதது போலே மெய்யை அன்றி ஆதரியாதவர் எம்பெருமானார் -என்க –
பொய்யை சுரக்கும் பொருளை துரந்து மெய்யைப் புரக்கும் இராமானுசன் -79 என்பர் மேலும் –

சரணே கதி வேறு எனக்கு –
வேறு கதி -தனி சிறப்புற்ற பேறு
எம்பெருமானுடைய திருவடி -பேறு
ஆச்சார்யராம் எம்பெருமானாருடைய திருவடியோ-சிறப்பு வாய்ந்த வேறு பேறு -என்று உணர்க –
திருத் துழாய் ஆழ்வாருக்கு ப்ராப்யம் அரங்கத்து ஐயன் திருவடி –
அணிவிப்பவரான ஆழ்வாருக்கு பிராப்யம் திரு துழாய் ஆழ்வாருக்கு அடிமை புரிவதால் உகக்கும் தொண்டர்கள் அடி
எம்பெருமானாருக்கு ப்ராப்யம் பரரான ஆழ்வாருடைய திருவடி
அமுதனார்க்கு ப்ராப்யம் ஆசார்யரான எம்பெருமானார் திருவடி-என்றது ஆயிற்று-

திருமாலை அறியாதார் திருமாலை அறியார் என்று வழங்குவது காண்கிறோம்.
கற்றினம் மேய்த்த எந்தை கழலிணைப் பணியும் என்றும்,
காட்டினான் திருவரங்கம் உய்பவர்க்கு உய்யும் வண்ணம், என்றும்
அடைதற்கு உரியவன் அரங்கனே என்று தெள்ளத் தெளிவாகச் சொல்லி ,
அய்யனே அரங்கனே உன் அருள் என்று அவன் அருளே உபயம் என்று நிச்சயித்து ,
வாழும் சோம்பர் என்று அவன் அருளையே நோக்கி இருப்பது ஆத்ம ஸ்வருபம் என்று நிர்ணயித்து ,
அதற்க்கு மேலில் பாட்டுக்களில் எல்லை நிலமான ததீய சேஷத்வதைச் சொல்லி அருளிய செந்தமிழ் அன்றோ இவரது .
தமது சொற்களை மலராகவும் நூலை மாலையாகவும் கொண்டாரிறே இவர் .
பெய்யும மறைத் தமிழ் மாலை –செய்யும் சங்கத் தமிழ் மாலை என்னுமா போலே

————–

கதிக்குப் பதறி வெம்கானமும் கல்லும் கடலும் எல்லாம்
கொதிக்க தவம் செய்யும் கொள்கை ஆற்றேன் கொல்லி காவகன் சொல்
பதிக்கும் கலைக் கவி பாடும் பெரியவர் பாதங்களே
துதிக்கும் பரமன் இராமானுசனைச் சொர்விலனே -14 –

கலை சொல் பதிக்கும் கவி என்று கூட்டுக
சாஸ்திர சொற்களை அமைத்து திரு மொழி அருளி செய்து உள்ளாராம் குலசேகர பெருமாள் –
திருக் கண்ண புரத்தில் உள்ளவர் பேசும் வார்த்தைகளிலே சாஸ்திரங்கள் இலங்கும் என்கிறார்
திருமங்கை ஆழ்வார் –கலை இலங்கு மொழி யாளர் -8 1-1 – -என்பது அவர் திரு மொழி
கட்புலன் ஆகாதவைகளான பகவானுடைய ஸ்வரூப ரூப குண விபவங்களை சாஸ்திரங்கள் நமக்கு தெரிவிப்பது போலே –
அவர்கள் பேசும் வார்த்தைகளும் நமக்கு அவற்றை உணர்த்து வனவாய் இருத்தலின் –
கலை இலங்கு மொழி யாளர் –என்றார் ஆழ்வார் –
அங்கனமே குலசேகர பெருமாள் திவ்ய பிரபந்தத்திலும் சொற்கள் சாஸ்திரம் போலே அவற்றை அறியுமாறு செய்தலின்
கலை சொல் என்று வருணிக்கிறார் அமுதனார்

இடம் அறிந்து ரத்னங்களை பதிப்பது போலத் தக்கவாறு பெருமாள் திரு மொழியில் சொற்கள் பதிக்கப் பட்டு உள்ளன
பதிக்கும் என்பதால்
சொல்லை ரத்னமாகவும் -கவியை ஆரமாகவும் -உருவகம் செய்தமை போதரும் –ஏக தேச உருவகம்
ஹாரத்தில் ரத்னங்கள் போலத் தமிழ் மாலையில் சொற்கள் பதிக்கப் பட்டு உள்ளன –

கலைச் சொல் என்று கொண்டு கூட்டாது இருந்தபடியே கலை என்பதைக் கவிக்கு அடையாக்கிப் பொருள் கூறலுமாம் –
கலையாகிய கவி என்று இரு பெயரொட்டுப் பண்புத் தொகை-சாஸ்த்ரமான பெருமாள் திரு மொழி -என்றபடி –
இதனால் கொல்லி காவலன் தனது அனுபவம் உள் அடங்காது -வெளிப்படும் தன சொற்களை ரத்னங்களைப் பதித்து
வைத்தால் போன்று அழகு பட இணையக் கொத்து வைத்த சாஸ்திர ரூபமான கவி -என்றதாயிற்று –

வன்பெரு வானகம் உய்ய , அமரருய்ய ,மண்ணுய்ய ,மண்ணுலகில் மனிசருய்ய ,
துன்பமிகு துயர்கல அயர்வொன்றில்லாச் சுகம் வளர –அன்பொடு தென் திசை நோக்கிப் பள்ளி கொள்ளும்
வ்யூஹ நிலையின் திருக் குணமான சொஹார்தத்தை இங்கு சொல்கிறது
இருளிரிய சுடர்மணிகள் என்றும், இனிதாக திருக்கண்கள் வளர்கின்ற –என்றும் அவனுடைய ரூபத்தை சாதித்தருள்கிறார்.
அடுத்த திருமொழியில் தேட்டறும் திரள் என்று ததீய சேஷத்வத்தை பரக்கப் பேசுகிறார்.
அரசாக எண்ணேன் மற்றரசுதானே என்று அனந்யார்ஹ சேஷதவத்தை அறிவிக்கிறார்.
மெய்யில் வாழ்க்கையை மெய்யெனக் கொள்ளும் இவ்வையம் என்று இந்த உலகதிதின் நிலையில்லாத் தன்மையை குறிப்பிடுகிறார்
இவ்வான்மாவுக்கு எம்பெருமானுக்கும் நமக்கும் இருக்கும் சம்பந்தம் பல த்ருஷ்டாந்தங்கள் வாயிலாக கொடுதருள்கிறார்.
தருதுயரம் என்னும் திருமொழ்யில் . இதில் தலைவன், தாய், மருதத்துவன் என்று பல உறவுகள் கொண்டு நிரூபித்தருள்கிறார் இவ்வாழ்வார்.
அவனைத் தவிர வேறொன்றும் வேண்டாம் என்று ‘நின்னையே தான் வேண்டி நிற்பன் அடியேனே ‘என்பதைக் காணலாம்.
இதற்க்கு எல்லாம் திலதமாய் , எம்பெருமான் ஈசன் திருமலையில் ஏதேனும் ஆக இருக்கும் நிலையை பாரிக்கிறார்
எம்பெருமான் சம்பந்தமே பேறு என்று இருப்பவர்கள்
‘படியாய்க் கிடந்து உன் பவள வாய்க்காண்பேனே ‘ என்று கைங்கர்யததில் களை அறுக்கிறார்

பாடும் பெரியவர் –
பெருமாள் திருமொழியை அனுசந்திக்கும் போது-கவி இன்பத்துடன் அது தரும் இறை உணர்வின் இன்பமும் சேர்ந்து
பேரின்பக் கடலில் திளைத்துப் பாடத் தொடங்குகிறார்கள் ரசிகர்கள் –
அவர்களைப் பாடும் பெரியவர் -என்கிறார் அமுதனார் –
இனி -இன்னிசையில் மேவிச் சொல்லிய இன் தமிழ் — 6-10 – என்றபடி
இன்னிசை மேவியதாலின் பாடுகின்றனர் என்னலுமாம் –
பாடுவதே பெருமை என்க –

பாதங்களே துதிக்கும் பரமன்
குலசேகரப் பெருமாள் அடியிலும் இடையிலும் முடிவிலும் முறையே
பொன்னி வருடும் அடியையும்-1-11
முடி மேல் மாலடியையும் –7 11- –
அரசு அமர்ந்தான் அடியையும் – 10-7 -சொல்லி
நலம் திகழ் நாரணன் அடிக்கீழ் நண்ணுவதையே முதலிலும் இறுதியிலும் பலனாக அமைத்து துதிக்கிறார் –

அடித் துதியான கலை கவியாம் சொல்லின் இன் தமிழ் மாலை வல்லவர்க்கு தொண்டர் தொண்டரான
எம்பெருமானாரோ
அவர்கள் பாதங்களையே துதிக்கிறார் –
அதனால் தொண்டர்கள் திறத்துக் கொண்ட ஈடுபாட்டில் தமக்கு மேற் பட்டார் எவருமே இல்லாத நிலையை
எய்தினமையின் எம்பெருமானாரை பரமன் -என்கிறார் – பரமன் -தனக்கு மேற் பட்டவர் இல்லாதவன்

————–

சோராத காதல் பெரும் சுழிப்பால் தொல்லை மாலை யொன்றும்
பாராதவனைப் பல்லாண்டு என்று காப்பிடும் பான்மையன் தாள்
பேராத வுள்ளத்து இராமானுசன் தன் பிறங்கிய சீர்
சாரா மனிசரைச் சேரேன் எனக்கு என்ன தாழ்வு இனியே -15 –

அழகை மட்டும் கண்டு அவனது ரஷிக்கும் ஆற்றலைக் காணாமையின் அச்சத்தில் ஆழ்ந்தவர் எழுந்து இலர் –
பான்மை -இயல்பு
இறைவனாலும் போக்க ஒண்ணாதபடி அன்பினால் விளைந்த-அச்சம் ஆழ்வாரது இயல்பு
விஷ்ணு பிரவணர்-ஈடுபட்டவர் ஆழ்வார் -விஷ்ணு சித்த பிரவணர் எம்பெருமானார் –
எனக்கு என்ன தாழ்வு இனியே
இனி-சேராமை உறுதிப் பட்ட பின்பு
சாரா மனிசரை சேர்ந்தால் அன்றோ தாழ்வு வாரா நிற்கும்
சாரும் மகான்களை சாராதவரை சேராமையாலே எனக்கு தாழ்வு வர வழி இல்லை அன்றோ –
அதுவே நான் பெற்ற பேறு என்கிறார் –

————-

தாழ்வு ஓன்று இல்லா மறை தாழ்ந்து தல முழுதும் கலியே
யாள்கின்ற நாள் வந்து அளித்தவன் காண்மின் அரங்கர் மௌலி
சூழ்கின்ற மாலையை சூடிக் கொடுத்தவள் தொல் அருளால்
வாழ்கின்ற வள்ளல் இராமானுசன் என்னும் மா முனியே – -16 –

மறை தாழ்ந்து தலம் முழுதும் கலியே ஆள்கின்ற நாள்
கலி புருஷன் தலம் முழுவதும் தன் ஆட்சியை பரப்பி நிலை நாட்டிக் கொண்டு விட்டான் -இதனைக் காட்டுகிறது –
மறை தாழ்ந்து தலம் முழுதும் கலியே ஆள்கின்ற நாள்-என்னும் சொற்தொடர் –
மழை பெய்து நெல் விளைந்தது என்னும் இடத்து போலே –
தாழ்ந்து ஆள்கின்ற நாள் –
என்னும் இடத்துத் தாழ்ந்ததனால் ஆள்கின்ற நாள் -என்று பொருள் படுத்தல் காண்க
கலியே –
ஏகாரம் பிரிநிலை கண் வந்தது -மறை ஆட்சி முழுதும் மறைந்தது -கலி ஆட்சி காலூன்றி நின்றது –
இருளும் ஒளியும் சேர்ந்து இருக்க இயலாது அன்றோ –

அளித்தால் ஆவது –
கலியும் கெடும் கண்டு கொண்மின் -என்று திருவாய்மொழி -5 2-1 – – கலியை கெடுத்து உய்யும் வழியை புலப்படுத்தும்
மறையை தாழ்வுற்ற நிலையிலிருந்து மேம்பட உயர்த்தி அது காட்டும் வீட்டு நெறிக்கண் செலுத்துதல்-
வீடளிப்பான் மண்ணின் தலத்து உதித்து உய்மறை நாலும் வளர்த்த -96 – என்று மேலே இவரே கூறுவதும் காண்க –

காண்மின் –
இது அனுபவத்திலே கண்ட உண்மை அன்றோ -நான் உபதேசித்து தெரிந்து கொள்ள
வேண்டும்படி யாவோ இருக்கிறது என்கிறார் –
எனவே நீங்கள் ஒவ் ஒருவரும் -எனக்கு என்ன தாழ்வு இனி -என்னும்படி என்னைப் போலே
அடியார் அளவும் பெருகும் வண்ணம் எம்பெருமானார் இடம் ஈடுபடுவதே அடுப்பது என்னும்
கருத்தும் தோற்றுகிறது-இது குறிப்பு எச்சம் –

அரங்கர் -என்று பன்மையில்
முக்தி அடைந்தவர்கள் தங்கள் இன்பத்துக்கு போக்கு வீடாக எம்பெருமானுக்கு கைங்கர்யம் செய்யப்
பல வடிவங்கள் கொள்வது போலே -அரங்கனும் ஆண்டாள் மீது உள்ள காதல் மிகுதியால்
ஸ்ரீ ரங்கத்தில் உள்ள வடிவோடு அமையாது அவளது அவதார ஸ்தலமான ஸ்ரீ வில்லிபுத்தூரிலும்
வட பெரும் கோயில் உடையான் வடிவம் கொண்டு காத்துக் கிடத்தலின் அரங்கர் -என்று பன்மையில் கூறினார்
தலையரங்கம் -இரண்டாம் திருவந்தாதி – 79- -என்றபடி திருவரங்கமே தலைமையகமாகவும்
ஏனைய திவ்ய தேசங்கள் கிளை யகங்களாகவும்-அரங்கனே எல்லா இடங்களிலும் எழுந்து அருளி இருந்து
அருள் புரிவதாகவும் கூறப்படும் சம்ப்ரதாயமும் இங்கு உணரத் தக்கது –

இயல்பாய் அமைந்த கூந்தல் மணத்துக்கு மேலே -நாடாத மலர் -திருவாய் மொழி – 1-4 9- –எனப்படும்
ஆத்ம புஷ்பத்தின் உடைய ஆசார்ய பாரதத்ரியம் என்னும் மணமும் கூடவே ஆண்டாள் சூடிய மாலை
நிகரற்ற நறு மணம் கமழுவது ஆயிற்று
இங்கனம் செழும் குழல் மேல் மாலைத் தொடை தென்னரங்கற்கு ஈயும் மதிப்பு உடையவள் ஆனாள் ஆண்டாள் –
இதனையே -தன்னுடைய திருக் குழலிலே சூடி வாசிதமாக்கி கொடுத்த வைபவத்தை உடையவள் -என்று
இவ்விடத்திலே உரையை அருளி செய்தார் பெரிய ஜீயர்
ஆண்டாள் பேர் அவாவுடன் சூடிக் கொடுத்த மாலையை தலையாலே தாங்குகிறான் அரங்கன் –
தலையாய மணத்தை தலையாலே தானே தாங்க வேணும்

மௌலி சூழ்கின்ற மாலை
முற்றப் புவனம் எல்லாம் உண்ட முகில் வண்ணன்
கற்றத் துழாய் சேர் கழல் அன்றி -மற்று ஒன்றை
இச்சியா அன்பர் தனக்கு எங்கனே செய்திடினும்
உச்சியால் ஏற்கும் உகந்து -ஞான சாரம் – 8- –
என்கிறபடி பயன் கருதாத பரமைகாந்திகள் செய்வது அனைத்தையும் உச்சியால் ஏற்கும் அவன்
காதலியான காரிகை சூடிக் கொடுத்ததை தலையாலே தாங்கக் கேட்க வேணுமோ –
சூடிக் கொடுத்த மாலையை திரு முடியிலே ஒரு புறத்திலே மட்டும் தாங்கினால் போதாதாம் -திருப்தி இல்லை
ஆசை தீர முடி எங்கும் படும்படி சூழ்கின்றதாக அந்த மாலையை தாங்க வேண்டுமாம் –
அது தோன்ற-மௌலி சூழ்கின்ற மாலை-என்றார்
சூடிக் கொடுத்தவள் -எனபது பாடிக் கொடுத்தவள் என்பதற்கும் உப லஷணம்-
இன்னிசையால் பாடிக் கொடுத்தால் நற்பா மாலை பூ மாலை சூடிக் கொடுத்தாள்-என்னும் பிரசித்தி காண்க –
பூ மாலையை மௌலி யில் சூடுகின்றான்-பா மாலையை தலையில் வைத்து கொண்டாடி இன்ப வெள்ளத்தில் ஆழகின்றான் –

வேதம் காட்டும் தூய அற நெறி –
நாராயணனே நமக்கேபறை தருவான் – என்னும் தொடக்கத்திலேயே அவருக்குத் துலங்கி விட்டது –
அத் தூய நெறி நாராயணனே – அந் நெறி நமக்காக ஏற்பட்டது -நாம் அந் நெறியிலே நடக்க வேண்டும் –
புண்ணியம் யாம் உடையோம்- மற்றை நம் காமங்கள் மாற்று- குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது-
அந் நெறி பறையிலே- கைங்கர்யம் என்னும் பேற்றிலே – நம்மைக் கொண்டு போய்ச் சேர்க்கும் –
அந் நெறியிலே நடப்பதாவது-நாராயணன் திருவடிகளையே தஞ்சமாகப் பற்றி நிற்கை -இதுவே தூய நெறி
எம்பெருமானார் -உபநிஷத்துக்களில் தெளிவற்ற நிலையில் சொல்லப்படும் பொருள்கள் தெள்ளத் தெளிய
திருப்பாவை யாகிய கோதோ உபநிஷத்தில் சொல்லப் பட்டு இருப்பது கண்டு விசேஷித்து
அதனில் மிக்க ஈடுபாடு கொண்டார் –
சந்நியாசிகள் உபநிஷத்தை அனுசந்திக்க வேண்டும் என்னும் முறைக்கு ஏற்ப எம்பெருமானார் அனுசந்திக்கும்
உபநிஷத்தாய் அமைந்தது -திருப்பாவை –அதனால்-திருப்பாவை ஜீயர் -என்ற பிரசித்தி அவருக்கு ஏற்பட்டது

தொல் அருளால் வாழ்கின்ற
ஆண்டாள் தொல் அருளே எம்பெருமானார் வாழ்வுக்கு எல்லாம் அடித்தளமாய் அமைந்தமை பற்றித் –
தொல் அருளால் வாழ்கின்ற -என்றார் –
இராமானுசன் என்னும் மா முனி –மா முனி என்னும் இராமானுசன் என்று மாற்றுக –
இராமானுசனே இந் நூலில் எங்கும் அடை கொளி யாய் இருத்தலில் இங்கும் அங்கனமே கொண்டு
முநி ஸ்ரேஷ்டரான எம்பெருமானார் -என்று உரை அருளினார் மணவாள மா முனிகள் –
வாழ்கின்ற வள்ளல் என்று இராமானுசன் தனக்குக் கிடைத்ததை இவ்வுலகிற்கும் ,
யாவருக்கும் வழங்கி அருளியதை கண்டோமே. ‘இன்னருளால் ‘ ‘ஆசை உடையோருக்கு ‘என்று
மாமுனிகள் தானும் அருளிச் செய்தாரிறே
மாமுனியே : முனி ஸ்ரேஷ்டர் என்று மாமுனிகள் இதற்கு அழகாக உரை இட்டருளியது நோக்க வேணும்

———–

முனியார் துயரங்கள் முந்திலும் இன்பங்கள் மொய்த்திடினும்
கனியார் மனம் கண்ண மங்கை நின்றானைக் கலை பரவும்
தனியானைக் தண் தமிழ் செய்த நீலன் தனக்கு உலகில்
இனியானை எங்கள் இராமானுசனை வெந்து எய்தினரே -17 –

கண்ண மங்கை நின்றானைக் கலை பரவும் தனியானை
வெஞ்சினக் களிற்றை -பெரிய திருமொழி – 7-10 8-
முத்தின் திரள் கோவையை -பத்தராவியை -நித்திலத்தொத்தினை –யரும்பினை யலரை -யடியேன் மனத்தாசையை
அமுதம் பொதியும் சுவைக் கரும்பினை -கனியை-சென்று நாடி -கண்ண மங்கையுள் கொண்டு கொண்டேனே

திருமங்கை ஆழ்வாரும்-தனி யானையைப் பாடுகிறார் -அதனைப் பரிசிலாகப் பெறுவது இவர்க்கும் நோக்கமாகும் –
இந்த யானையை கொடுப்பார் வேறு எவரும் இலர் -தன்னையே தான் தருவது இது –
தன்னைத் தந்த கற்பகம் -என்னும் நம் ஆழ்வார் திரு வாக்கும் காண்க
கண மங்கை கற்பகத்தை -எனபது திரு மங்கை ஆழ்வார் அருளிய பெரிய திரு மடல் –

கலை பரவும் பீடு படைத்த அவ் எம்பெருமான் திரு மங்கை ஆழ்வார் உடைய
ஈடு இல்லாத தண் தமிழ்க் கவியைக் கண்டு வியக்கிறான்
நின் தனக்கும் குறிப்பாகில் கற்கலாம் கவியின் பொருள் தானே -என்கிறார் ஆழ்வார்
இங்கனம் செருக்குற்ற சர்வேஸ்வரனையும் கற்பிக்கலாம் படியான கவிதை எனபது தோன்ற –
தனியானைத் தண் தமிழ் செய்த – என்கிறார் –

தண் தமிழ்
ஸ்வரூபம் ரூபம் குணம் விபவம் என்னும் இவை அனைத்தும் இறைவன் காட்ட –
தம் கண்டபடியே
கற்பவர் மனத்தில் பதியும் படியும் -உலகிலுள்ள பொருள்கள் அனைத்தும் அவனுக்கு போலி யாயும் –
பிரியாது இணைந்த பிரகாரமாயும் இருப்பதை உணரும் படியும் -அவனது இனிமையை நுகரும்படியும் செய்து –
சம்சார தாபத்தை அறவே போக்கி குளிர வைப்பதாய் இருத்தல் பற்றி –தண் தமிழ் -என்கிறார் –

எய்தினர் முனியார் மனம் கனியார்
நீலன் பத்தராவிப் பெருமாளையே கண்களார அளவும் நின்று -கண்ண மங்கையுள் காண வேண்டும்படியான
காதல் விஞ்சியவராய் -காணாது பிரிந்து இருப்பதையே துன்பமாகவும் -கண்டு கொண்டு கிட்டி இருப்பதையே
இன்பமாகவும் கொண்டு இருத்தலின் -ப்ராக்ருதமான -தேக சம்பந்தத்தால் ஆன-முனிவும் கனிவும் அற்றவர் ஆனார் –
எம்பெருமானாரும் அந்நீலன் தண் தமிழ் இன்பத்திலேயே மூழ்கி -அவருக்கு இனியராய் -அத்தகையரானார்-
அவரைப் பற்றினவர்களும் தண் தமிழ் இன்பத்தைக் காட்டின நீலனுக்கு இனிய ஆசார்யன் திறத்து உரிமைப் பட்டு
இருத்தலாம் பேரின்பத்திலே திளைத்து -அத்தகையார் ஆனார் -என்க-
எய்தினர் முனியார் மனம் கனியார் -என்று கூட்டிப் பொருள் கூறுக

———–

எய்தற்கு அரிய மறைகளை ஆயிரம் இன் தமிழால்
செய்தற்கு உலகில் வரும் சடகோபனைச் சிந்தை யுள்ளே
பெய்தற்கு இசையும் பெரியவர் சீரை உயிர்கள் எல்லாம்
உய்தற்கு உதவும் இராமானுசன் எம் உறு துணையே – 18- –

இப்பாசுரம் ஸ்ரீ மதுர கவி ஆழ்வாரை பற்றியதாலின் அவர் அருளி செய்த
அரு மறையின் பொருள் ஆயிரம் இன் தமிழ்ப் பாடினான் -என்பதை அடி ஓற்றின படி

தெரிய சொன்ன ஆயிரம்
மறைந்த மறைகளை மீட்பதற்காகவே இறைவன் அவதாரம் செய்தான் ஹயக்ரீவனாக –
உபநிடந்தங்களின் கருத்துக்களை எல்லாம் இனிதாகத் திரட்டி கீதை என்னும் அமுதத்தை
ஊட்டுவதற்காகவே அவ இறைவன் அவதரித்தான் கண்ணனாக –
உய்யும் வழி தெளியாது பவக்காட்டிலே வழி திகைத்து அலமந்த மாந்தர்க்கு வழி காட்டுவதற்காகவே
காட்டின் இடையே ஆநிரை காக்கும் ஆயனாக ஆயினான் எம்பெருமான் என்பர் –
ஒரு ஆறு ஒருவன் புகாவாறு உருமாறும் ஆயவர் -பெரிய திருவந்தாதி – 56- என்றார் நம் ஆழ்வார் .
தவறான வழியில் போய் தடுமாறாத படி நல் வழி -கீதையின் மூலம் -காட்டுவதற்காகவே ஆயன்
உருவகமாக மாறினான்
கீதை அருளி செய்வதற்காகவே கண்ணன் அவதரித்தது போலே -நம் ஆழ்வார் ஆயிரம் இன் தமிழான
திருவாய்மொழி அருளி செய்வதற்காகவே அவதரித்தார் –
கண்ணன் வட மொழியிலே கீதை தந்தான் –
நம் ஆழ்வார் இன் தமிழிலே திருவாய்மொழி தந்தார் –
கீதை அர்ஜுனனையும் மயங்கச் செய்தது –
திருவாய்மொழி அனைவர்க்கும் தெரியச் சொன்ன ஆயிரம்
எம்பெருமானின் பரத்வம் , காரணத்வம், வ்யாபகத்வம் , கல்யானகுணங்கள்,ஆர்த்தி ஹரத்வம் என்று
பல திவ்ய குணங்களை நமக்கு பத்துக்கள் தோறும் ஈந்து அருளினார் இவர்.

சிந்தை யுள்ளே பெய்தற்கு இசையும் பெரியவர் –
நம் ஆழ்வார் பெரியன் -மதுர கவி ஆழ்வார் பெரியார் -பெரியனைப் பெரியராலே தான் தன்னுள்ளே-வைக்க முடியும் –
புவியும் -லீலா விபூதியும் -இருவிசும்பும் -நித்ய விபூதியும் -தன்னகத்தே கொண்டவன் –பெரியோனாகிய மாயன் –
அவன் செவியின் வழியே புகுந்து நம் ஆழ்வார் உள்ளத்திலே நின்றான் –
அதனால் பெரியோனையும் உள்ளடக்கிய பெரியரானார் நம் ஆழ்வார் –
அத்தகைய நம் ஆழ்வாரையும் சிந்தை உள்ளே பெய்தற்கு இசைந்து இருக்கிறது
மதுர கவி ஆழ்வாருக்கு உள்ள பெருமை –ஆதலின் அவரைப் பெரியவர் என்றே குறிப்பிடுகிறார் –
இறைவனை தம் உள்ளத்திலே வைத்துக் கொள்ளுதல் முதல் நிலையாகும் –
அது எல்லா ஆழ்வார்களுக்கும் பொதுவானது –
ஆசார்யனை தம் உள்ளத்தில் வைத்துக் கொள்ளுதல் இறுதி நிலையாகும் –
அது ஏனையோருக்கு அன்றி மதுர கவி ஆழ்வாருக்கே அமைந்தது ஒன்றாகும் –
இது பற்றியே -பத்துப் பேரையும் -பத்து ஆழ்வார்களையும் – சிரித்து இருப்பார் ஒருவர் -என்றார் இவரை ஸ்ரீ வசன பூஷண காரர் –

இனி பெரியவர் என்று பொது சொல்லால் குறிப்பிடிதலின் -தம் நெஞ்சினால் நம் ஆழ்வாரை அன்றி
வேறு ஒன்றும் அறியாத -பெரியவர்கள் எல்லோரையும் சொல்லலுமாம் –
சீர்-ஞானம் முதலிய குணங்கள்
இனி ஆச்சார்ய நிஷ்டை யாகிய சிறப்பை கூறலுமாம்
உயிர்கள் எல்லாம் உய்வதற்கு உதவும்
எல்லோரையும் உய்விப்பதற்காக மதுரகவி ஆழ்வாருடைய குணங்களை அல்லது அவரது ஆசார்ய நிஷ்டையை
தாம்-மாறனடி உய்ந்து காட்டியும் -உபதேசத்தால் கேட்பவர்களும் கைக் கொள்ளலாம் படி வழங்கியும்
உபகரித்து அருளினார் எம்பெருமானார்

உயிர்கள் எல்லாம் உய்வதற்கு உதவும்
ஆசார்ய நிஷ்டைக்கு அதிகார நியமம் இல்லை ஆதலால் உயிர்கள் எல்லாம் என்று திருவாக்கு .
தேக சமபந்த துறையில் அதிகார நியமம் இருக்கலாம் . ஆத்ம சம்பந்த விஷயத்தில் இல்லை என்றபடி
சுவாமி வேதாந்த தேசிகனும்
” துன்புற்ற மதுரகவி தோன்றக் காட்டும் தொல் வழியே நல்வழிகள் துணிவார்கட்கே’என்று
குருபரம்பரா சாரத்தில் அருளியது காணலாம்
மணவாள மா முனிகள்-
மதுரகவி சொல் படியே நிலையாகப் பெற்றோம் -ஆர்த்தி பிரபந்தம் -55 – என்று
இவ் ஆசார்ய நிஷ்டையில் நிலைத்து நிற்பதும் -எம்பெருமானார் உய்வதற்கு உதவியதன் பயனே என்று அறிக –

தாமாகவே உற்று துணையாகி நம்மிடையே எம் முயற்சியும் இல்லாத நிலையிலும்
தமது இயல்பான அருளாலே நாம் உய்வதற்கு உதவுதலின் –
எம்பெருமானார் உறு துணை யாயினார் என்னலுமாம் -உறுகின்ற துணை உறு துணை –
பெரிய ஜீயர் உரையில் ‘என் உறு துணையே ‘ என்று இருப்பதால்
அப்படி பாடம் இருக்கலாம் என்று சுவாமி நல்லான் சக்கரவர்த்தி ராமகிருஷ்ண ஐயங்கார் திருவுள்ளம்

———-

உறு பெரும் செல்வமும் தந்தையும் தாயும் உயர் குருவும்
வெறி தரு பூ மகள் நாதனும் மாறன் விளங்கிய சீர்
நெறி தரும் செம் தமிழ் ஆரணமே என்று இந் நீள் நிலத்தோர்
அறிதர நின்ற இராமானுசன் எனக்கு ஆரமுதே – – 19-

இதுகாறும் எம்பெருமானாருக்கு ஆழ்வார்கள் இடத்திலும் அவர்களுடைய திவ்ய பிரபந்தங்களிலும்
உள்ள ஈடுபாடு கூறப் பட்டது –
முதல் ஆழ்வார்கள் முதலில் வரிசையாகப் பேசப் பட்டு உள்ளனர் –
தாம் இருக்கும் இடத்தில் வந்து இறைவனால் காட்ஷி கொடுக்கப் பட்டவர்கள் பேசப்பட்டனர் முன்னர் –
அர்ச்சை நிலையில் தாம் இருக்கும் இடத்துக்கு வருவிக்கப்பட்டு காட்சி கொடுக்கப் பட்டவரான
திருப் பாண் ஆழ்வார் பேசப்பட்டார் பின்னர்
சொன்ன வண்ணம் செய்த பெருமாளாய் -அர்ச்சை நிலையில் காட்சி கொடுக்கப் பட்டவர் பாணற்கு அடுத்து பேசப்படுகிறார் –
திருப் பாண் ஆழ்வார் –
அர்ச்சை எம்பெருமான் சொன்ன வண்ணம் செய்து ஆட்செய்தவன் மூலம் உகப்பித்த மழிசைக்கு இறைவனை அடுத்து
அழகைக் காட்டி ஆதரம் பெருக வைத்து அர்ச்சை எம்பெருமானாம் அரங்கனால் ஆட்கொள்ளப்பட்ட
துளவத் தொண்டரைப் பேசுவது -முறை தானே -ஆட்செய்தான் அங்கே -ஆட்கொண்டான் இங்கே –
பிறகு அவ்வரங்கனை -கண்டு கொண்டு என் கண் இணைகள் என்று கொலோ களிக்கும் நாளே -என்னும்
வேட்கை மீதூர்ந்த குலசேகரப் பெருமாள் பேசப்படுகிறார்
பின்னர் பெரி யாழ்வார் பேசப்படுகிறார்
அரங்கன் அழகைக் கண்டு ஆதரம் பெருகி ஆட் செய்தவருக்கு பிறகு
வீரம் கேட்டு வீணே பயப்பட்டு விரைந்து படையுடன் ஆட்செய்யப் புறப்பட்டவரை பேசுவது பொருத்தம் அன்றோ –
பொங்கும் பரிவாலே அவன் அறிவாற்றல் ஒன்றும் பாராது -அவனைத் தான் காப்பாற்ற போவதாக மயங்கி
படை எடுத்து -புறப்பட்ட குலசேகர பெருமாளுக்கு பின்னர் –
சர்வேஸ்வரன் உடைய அழகு மென்மைகளையே பார்த்து தொல்லை மாலை ஒன்றும் பாராது மயங்கிப்
பல்லாண்டு என்று காப்பிடும் பான்மையரைப் பேசுவது தகும் அன்றோ –
பெரியாழ்வாரை சார்ந்து இருப்பவளான ஆண்டாளை அவரை அடுத்துப் பேசினார் –

நம் ஆழ்வார் இடமும் திரு மங்கை ஆழ்வார் இடம் உள்ள ஈடுபாடு
தொடக்கத்திலேயே முதல் இரண்டு பாசுரங்களினால் பேசப் பட்டு இருந்தாலும் –
அவர்களுடைய ப்ராதான்யம் கருதி –
இறுதியில் நாத முனியை பேசத் தொடங்கும் முன் அவர்களைப் பற்றி பேசினார் –
அவர்களிலும் திரு மங்கை ஆழ்வாரைப் பற்றி ஒரு பாசுரமும் –
நம் ஆழ்வாரைப் பற்றி இரண்டு பாசுரங்களும் அருளி செய்தார் –
நம் ஆழ்வாருக்கு உள்ள மிக முக்கிய தன்மையை நோக்கி அவரை இறுதியிலே பேசினார் –
அவ்விரு பாசுரங்களில் முறையே –
நம் ஆழ்வாரை அன்றி வேறு ஓன்று அறியாத மதுர கவி ஆழ்வார் உடைய வீறுடைமையும் –
பரபக்தி முதலியவற்றின் அடைவிலே அருளி செய்த திருவாய் மொழியினுடைய சீர்மையையும் அருளி செய்து முடித்தார் –

ஏனைய செல்வம் போலே அளவுக்கு உட்படாது வாரி வாரி வழங்கத் துய்க்கத் துய்க்கத் குறைவு படாதது
இத் திருவாய்மொழியாம் செல்வம் என்பது தோன்ற –பெரும் செல்வம்-என்கிறார் –
ஏனைய செல்வம் -அறனீனும் இன்பமுமீனும் -இச் செல்வமோ வீட்டு இன்பத்தையும் தருதலின் அதனினும்
மிக்கது என்பது தோன்ற –உறு பெரும் செல்வம் -என்றார்-
அறியக் கற்று -வல்லார் வைட்ணவர்-என்றபடி -ஞான ஜென்மத்தை தந்து -வைஷ்ணவராக மதிக்கப்பட செய்து -உயர்
குலத்தாரையும் -அறிவுடையாரையும் -அவர் பால் சென்று அருளை-பாகவத அனுக்ரகத்தை-நாடி நிற்கச் செய்தலின்
உறு பெரும் செல்வமாகப் போற்றப் படுகின்றது

உயர் குரு
இங்கு கூறப் படும் குருவோ -சம்சார நிவர்தகமான பெரிய திரு மந்த்ரத்தை உபதேசித்தவன்
வெறி தரு பூ மகள் நாதனும்
திரு மகள் கேள்வன் -நமக்குப் பிராட்டி புருஷகாரமாய் இருத்தலின் உபாயமாய்ப் பேறு
தருவான் ஆகிறான் -பிராட்டியோடு கூடி இருந்து நாம் செய்யும் கைங்கர்யத்தை ஏற்பதனால் ப்ராப்யனாகவும்
பெறும் பேறாகவும் -ஆகிறான்
திருவாய் மொழியும் -இவை பத்தும் வீடே – 1-1 11- – என்ற படி வீடு அளிப்பதாலின் உபாயமாகவும் –
கேட்டாரார் வானவர்கள் செவிக்கு இனிய செம் சொல்லே –10 6-11 – -என்றபடி வீட்டில் உள்ளாறும்
கேட்டு இன்புறும்படி இருத்தலின் ப்ராப்யமாகவும் ஆதலின் -பூ மகள் நாதன் -ஆயிற்று –

———–

ஆரப் பொழில் தென் குருகைப் பிரான் அமுதத் திருவாய்
ஈரத் தமிழ் இன் இசை யுணர்ந்தோர்கட்கு இனியவர் தம்
சீரைப் பயின்று உய்யும் சீலம் கொள் நாதமுனியை நெஞ்சால்
வாரிப் பருகும் இராமானுசன் என்தன் மா நிதியே – -20 –

திருவாய் ஈரத் தமிழ்
மனத்தால் மட்டும் நினையாமல் , மனதிலிருக்கும் எண்ணம் , எண்ணோட்டம் ,
வாய் வழியாக வழிந்து திருவாய்மொழியாக வெளி வந்தாதால் திருவாய்மொழி
வாய் வெருவின மொழி வாய் மொழி -என்க –
இவள் இராப்பகல் வாய் வெருவி-திரு வாய் மொழி -2 4 5- – – என்னும் இடத்தில்
ஈட்டில் –அவதானம் பண்ணி சொல்லுகிறது ஒன்றும் இல்லை -வாசனையே உபாத்யாயராக சொல்லுகிற இத்தனை –

ஈரத் தமிழ்
சம்சாரிகள் வெப்பத்தை தணிக்கும் ஈரமான தமிழ் ஆதலால் ஈரத் தமிழ்
மேலும் அமுதம் போல் இனித்து ஈரமான தமிழ்

இன் இசை யுணர்ந்தோர்கட்கு இனியவர் தம் சீரைப் பயின்று உய்யும் சீலம் கொள் நாதமுனியை நெஞ்சால் வாரிப் பருகும் –
மதுர கவி ஆழ்வாருக்கு இனியவர் -அவர் பரம்பரையில் வந்தவரும் –
நாத முனிகளுக்கு கண்ணி நுண் சிறு தாம்பை உபதேசித்தவருமான பராங்குச நம்பி–
அவர் சீர் -அருள் மிக்கு உபதேசித்து அருளின வள்ளன்மை ,ஞான பக்திகள் ,இசை உணர்வு -முதலியன
இசை உணர்ந்தோர்க்கு இனியவர் –சீர் பயின்றதாக கூறுவதால் -இன்னிசை பாடித் திரியும் அவர்
பரம்பரையினரான பராங்குச நம்பி -இசையோடு கண்ணி நுண் சிறு தாம்பை உபதேசித்ததாக தெரிகிறது –

நெஞ்சால் வாரிப் பருகும் –
சம காலத்தவர் ஆயின் -கண்ணால் அள்ளிப் பருகி இருப்பார் –
எம்பெருமானார் பிற் காலத்தவர் ஆதலின் நெஞ்சால் நினைந்து நினைந்து அவரை அள்ளிப் பருகுகிறார் -என்றபடி –
பருகுதல் கூறவே -நாத முனிகள் நீராய் உருகினமை பெறப்படும் –
இனியவர் தம் சீரைப் பயின்று நீராய் உருகினார் -நாதமுனிகள்-
அத்தகைய நீரைப் பருகி விடாய் தீர்த்து இன்புறுகிறார் எம்பெருமானார் –
நாத முனிகளை ஆர்வத்துடன் நெஞ்சால் நினைந்து இனிது அனுபவிக்கிறார் எம்பெருமானார் -என்பது கருத்து –

என் தன் மா நிதி –
ஏனைய நிதிகள் போலே அழிவுறாத புதையல் எம்பெருமானார் –
ஆழ்வான் உதவிய ஞானக் கண்ணால் அப் புதையலைக் கண்டு எடுத்து ஆண்டு அனுபவிக்கும் தனது பாக்கியம்
தோற்ற –என் தன் மா நிதி -என்கிறார் –

———-

நிதியைப் பொழியும் முகில் என்ன நீசர் தம் வாசல் பற்றித்
துதி கற்று உலகில் துவள் கின்றிலேன் இனித் தூய் நெறி சேர்
எதிகட்கு இறைவன் யமுனைத் துறைவன் இணை அடியாம்
கதி பெற்றுடைய இராமானுசன் என்னைக் காத்தனனே – 21- –

தூய் நெறி சேர் எதிகட் கிறைவன் –
இவ்வடை மொழி யமுனைத் துறைவற்கும் இசையும் -இராமனுசற்கும் இசையும் –நெறி-ஒழுக்கம் -உபாயமுமாம்
ஒழுக்கம் –ஆவது அனுஷ்டானம் -அது சாத்விக த்யாகத்துடன் -பகவான் என்னைக் கொண்டு தன் பணியை
தன் உகப்புக்காக செய்து கொள்கிறான் என்றும் நினைப்புடன் -அனுஷ்டிக்கப் படுதலின் தூயதாயிற்று -என்க –
இனி அஹங்காரக் கலப்பினால் மாசுற்ற மற்ற உபாயங்களை விட்டுத் தூயதான சித்த உபாயத்தின்
எல்லை நிலமான ஆசார்யனையே உபாயமாக கொள்ளலின் தூய் நெறி என்றார் ஆகவுமாம் –
ஆளவந்தார் நாத முநிகளையே உபாயமாகவும்-
எம்பெருமானார் ஆளவந்தாரையே உபாயமாகவும் -கொண்டு உள்ளமையின் தூய் நெறி சேர்ந்தவர்கள் ஆயினர் என்க –

இனி யமுனைத் துறைவர் இணை யடி -என்பது ஆளவந்தார் திருவடியான பெரிய நம்பியை
குறிப்பால் உணர்த்துகிறது என்றும் கூறுவர்-இவ் விஷயம் லஷ்மீ நாத -பத்ய வ்யாக்யானத்தில் ஸ்பஷ்டம் –

யமுனைத் துறைவன் இணை அடியாம் கதி பெற்று உடைய இராமானுசன் ஆகையாலே
ஆளவந்தாருக்கு சரணத்வயம் என்னலாம்படியான பெரிய நம்பியும் ஸூசிதர்
இளையாழ்வாரை விஷயீ கரித்த அனந்தரத்திலே-
இளையாழ்வீர் பெருமாள் ஸ்ரீ தண்ட காரண்யத்துக்கு எழுந்து அருளும் போது-
மரவடியை தம்பிக்கு வான் பணையம் வைத்து போய் வானோர் வாழ எழுந்து அருளினாப் போலே
மேலை வானோர் வாழ இவரும் தமக்கு அடியேனான அடியேனை அப்படியும் யுமக்கு வைத்து
திரு நாட்டுக்கு எழுந்து அருளினார் -என்று அவர் அருளிச் செய்தார்

என்னைக் காத்தனன் –
என்னைக் காக்கும் பொறுப்பைத் தாமே எம்பெருமானார் ஏற்றுக் கொண்டு நிறைவேற்றி விட்ட படியால்
நான் என்னைக் காப்பாற்றிக் கொள்வதற்காக அலைந்து துவள வேண்டியது இல்லை-என்றது ஆயிற்று –

—————————————————————————————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ திருமலை நல்லான் சக்ரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண அய்யங்கார் ஸ்ரீ ஸூக்தி- அமுத விருந்து-1-7

December 9, 2021

ஸ்ரீ திருமலை நல்லான் சக்ரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண அய்யங்கார்
அடியேனுடைய திருத்தாயாருக்கு மாமா என்பதால் தேஹ பந்து
திருவவதாரம் –1911–சித்திரை விசாகம்
தர்ம பத்னி ஆழ்வார் அம்மாள்
திருவாராதன பெருமாள் ஸ்ரீனிவாசனுக்கு புரட்டாசி திருவோணம் தோறும் 10 நாள்கள்
உத்சவங்கள் நடத்தி உபன்யாசங்கள் வழங்கி மகிழ்ந்தவர்
தம்முடைய 72 திரு நக்ஷத்ரம்–1982- -துந்துபி வருஷம் ஆவணி மாதம் கிருஷ்ண பஞ்சமியில் திருநாட்டுக்கு எழுந்து அருளினார்

நம் ஸ்வாமி சாதித்து அருளிய கிரந்தங்கள்
1-ஸதுஸ் லோஹியும் ஸ்ரீ ஸ்தவமும் -பொன்னுரை என்ற விளக்க உரை
2-ஸ்ரீ ஸ்துதி -அர்த்த தாரா -என்ற விரி உரை
3-ஸ்ரீ குணரத்ன கோஸம் -ஸூவர்ண குஞ்சிகா விரி உரை
4-ஸ்ரீ கோதா தண்டகம்
5-ஸ்ரீ வரத தண்டகம்
6-ஸ்ரீ ஆண்டாள் திருமணம் -நாடகம்
7-ஸ்ரீ தாசாரதி குரு ஸூப்ர பாதம்
8-ஸ்ரீ ஆழ்வார்கள் கண்ட ஸ்ரீ திரு அல்லிக்கேணி
9-ஸ்ரீ முதலியாண்டான் வைபவம்
10-ஸ்ரீ முதலியாண்டான் அந்தாதி
11-ஸ்ரீ திருக்கச்சி நம்பி நான்மணி மாலை
12-ஸ்ரீ ராமானுஜ நூற்று அந்தாதிக்கு அமுத விருந்து விரி உரை

————

இந்த அமுத விருந்து உரையில் இருக்குறது சில அமுத ஸ்ரீ ஸூக்திகளைப் பார்ப்போம் –

பூ மன்னு மாது பொருந்திய மார்பன் புகழ் மலிந்த
பா மன்னு மாறனடி பணிந்து உய்ந்தவன் பல்கலையோர்
தாம் மன்ன வந்த விராமானுசன் சரணார விந்தம்
நாம் மன்னி வாழ நெஞ்சே சொல்லுவோம் அவன் நாமங்களே -1 –

பூ மன்னு மாது பொருந்திய மார்பன்
மாதுக்கு புக்ககமே சொந்தமாய் பொருந்தி நிற்கும் இடம்
பிறந்தகமோ புக்ககம் புகும் அளவும் ஒதுங்கி தங்கும் இடமே என்பது தோன்ற –
பூ மன்னு மாது பொருந்திய மார்பன் -என்னும் அழகு காண்க –

இங்கு –
புக்கில மைந்தின்று கொல்லோ உடம்பினுள் துச்சில் இருந்த உயிர்க்கு -என்னும்-குறள் நோக்க தக்கது
துச்சு-ஒதுக்கு -உடம்புகளில் ஒதுங்கி இருந்தே போந்த ஆன்மாவிற்கு என்றும்
புகுந்து இருப்பதோர் இல் இதுகாறும் அமைந்தது இல்லை போலும் என்பது இக் குறளின் பொருளாகும் –

இக் குறளின் உரையில் பரி மேல் அழகர் –
வாதம் முதலிய வற்றின் இல்லாகிய உடம்பு என்றும்
அந் நோய்கள் இருக்க அமைந்த ஞான்று இருந்தும் வெகுண்ட ஞான்று போயும் ஓர் உடம்பிலும்
நிலை பெறாது வருதலால் -துச்சில் இருந்த -என்றார் -என்றும்

பின் புறப்படாது புக்கே விடும் இல் -மீட்சஈல்லாத முக்தி -அமைந்ததாயின்
பிறர் இதற்குள் ஒதுக்கி இரார் என்பதாம் -என்றும் உரைத்து ஈண்டு உணர்தல் பாலது –

பிறந்தகமாம் சம்சாரத்தை விட்டு பின் புறப்படாது புக்கே விடும் ஜீவான்மா மீண்டும்
சம்சாரத்துக்கு திரும்பாதது போலே –
பிராட்டியும் பிறந்தகத்தை விட்டு மார்பகம் புக்கவள்-மீண்டும் தாமரைக்கு திரும்பாள் -என்க –

பனி மலராள் வந்து இருக்கும் மார்பன் -என்றார் திரு மங்கை ஆழ்வார்
தாமரைப் பூவை பிறந்தகமாக உடைய பெரிய பிராட்டியார் அப் பூ நெருஞ்சிக் காடோபாதியாய்
திரு மார்பிலே வந்து இருக்கிற வைபவத்தை உடையவன் -என்பது அவ்விடத்தில் வியாக்யானம் .

விட்டுப் போகும் பூப் போன்றதன்று இருக்கும் மார்வு-அகலகில்லேன் என்று அன்றோ அவள் மார்பில் உறைவது

மாதரடிக்கு நெருஞ்சிப் பழம்-என்றபடி தன் திருவடிக்கு நெருஞ்சி முள் போன்ற மலரை விட்டவள்
எந்த குற்றம் அற்றதும் எல்லா நலமும் வாய்ந்ததுமான மார்பகத்தை விட வழி இல்லை யன்றோ –

இனி பூவின் பரிமளமே வடிவு எடுத்தது போன்ற பிராட்டிக்குப்
பூவும் வன்மை வாய்ந்து பொருந்தாது ஆயிற்று –

மார்போ –
மெல்லியதாய் –
இடமுடைத்தாய் –
இயைந்து பொருந்துவதாயிற்று என்னும் கருத்துப் பட-
பொருந்திய மார்பன் -என்றதுமாம்

பொலிந்து இருண்ட கார் வானிலே மின்னே போல்-மார்பில் திரு இருந்தது பொருந்தி உள்ளது என்க
விஷ்ணோர் தேக அநுரூபாம் வை கரோத் யேஷாகத் மனஸ்தநூம்
இந்த பிராட்டி எம்பெருமான் திரு மேனிக்கு ஏற்ப தன திருமேனியை அமைத்து கொள்கிறாள் -என்றபடி –
திரு மார்புக்கு ஏற்பப்-பிராட்டியின் திருமேனி அமைந்து பொருந்தி உள்ளது என்க –

இந்த நித்ய சம்ச்லேஷமே மதுப்பின் அர்த்தத்திற்கு சேர த்வ்யார்தமும் என்று மூதலிக்கிறார்-

————

மன்னி வாழ –
ஆஸ்ரயித்து வாழும்படியாக என்றபடி –
ஆஸ்ரயித்து என்னும் இடத்து மன்னி -என்றார் –
பயன் பெற்றவாறே விடுகை அன்றிக்கே என்றும் பற்று விடாது பொருந்தி நிற்றல் தோற்றற்கு-
வேறு பயனைக் கருதாதவனாய் -அநந்ய பிரயோஜனனாய்-ஆஸ்ரயித்து என்றபடி –
மன்னியதற்க்கு பிறகு வாழ்வு
என்றோ வருவது அன்று –
இரண்டும் ஒன்றாய் இணைந்தவையே என்பது தோன்ற –
மன்னி வாழ -என்று
இரண்டு சொற்களும்-இணைந்து நிற்கும் அழகு காண்க –

——–

சரணாரவிந்தம் நாம் மன்னி வாழ அவன் நாமங்கள் சொல்லுவோம் -என்ற
சொற்களின் அமைப்பை நோக்கும் போது –
நாமங்கள் சொல்வது -வாழ்வாகிய எம்பெருமானார் திருவடிகளை அடைதற்கு சாதனமாக தோற்றுகிறது –

அங்கனமே சிலர் எம்பெருமானுடைய சரணாரவிந்த ப்ராப்திக்கு சாதனம்
அவருடைய திரு நாம சங்கீர்தனமேயாம் -என்று-வரை உறைந்தும் உள்ளனர் –
ஆயின் அது ஏற்புடைத்தன்று –

எம்பெருமானார் திருவடிகளை அடைதற்கு அத்திருவடிகள் தவிர வேறு ஒன்றும் சாதனமாக மாட்டாது-
என்னும் துணிவு உடையவர் அன்றோ அமுதனார் –
பேறு ஓன்று மற்றும் இல்லை நின் சரண் அன்றி –அப் பேறு அளித்தற்கு
ஆறு ஒன்றும் இல்லை மற்றச் சரண் அன்றி -என்று மேலே – -45 இவர் தாமே-அருளி செய்து இருப்பது கவனித்தற்கு உரியது –

ஆக எம்பெருமானார் திரு நாமங்களை சொல்வது-சாதனமாக மாட்டாது –
போக ரூபமானது என்பது உணரத் தக்கது –

நெஞ்சே சொல்லுவோம் அவன் நாமங்களே –
இராமானுச நூற்று அந்தாதியை அனுசந்திக்க இசைந்த நெஞ்சைக் கூட்டிக் கொண்ட படி –
இராமானுச நாமம் ஒன்றுமே பாட்டுத் தோறும் சொல்லப் பட்டு இருப்பினும் –
நாமங்கள்
என்று பன்மையில் கூறியது நிர் வசன பேதத்தாலே -ஒரு நாமம் பலவாய் தோற்றுதல் பற்றி என்க –

ஓர் ஆயிரமாய் உலகு அளிக்கும் பேர் -என்றது காண்க –

எம்பெருமான் திரு நாமங்களில் -நாராயணன் என்னும் திரு நாமம் போன்றது
எம்பெருமானார் திரு நாமங்களிலோ -ராமானுஜன் -என்னும் திரு நாமம் -என்க —

இனி நாமங்கள் என்பது இப்ப்ரபந்தத்தில் உள்ள பாசுரங்களை கூறலுமாம் –
நாமங்கள் குணங்களையும் செயல்களையும் கூறுவது போலே -பாசுரங்கள்
அவைகளை கூறுதலின் பாசுரங்கள் நாமங்கள் எனப்பட்டன -என்க —
திருவாய் மொழி ஆயிரம் பாசுரங்களையும் -நாமங்கள் ஆயிரம் -5 8-11 – – என்றார் நம் ஆழ்வார் –
அவனுக்கு திரு நாமங்கள் போலே குண சேஷ்டி தாதிகளுக்கு பிரதிபாதகமான ஆயிரத்திலும் –என்பது
அவ்விடத்து வியாக்யான ஸ்ரீ ஸூக்தி-

———–

பூ மன்னு மாது–என்பதால் ஸ்ரீ சப்தமும்
பொருந்திய -என்பதால் நித்ய யோகத்தையும் -காட்டும் -மதுப் ப்ரத்யயமும்-
புகழ் மலிந்த என்பதால் குணம் உடைமை கூறும் நாராயண சப்தமும் –
மார்பன் -என்பதால் திரு மேனிக்கு உப லஷணமான சரண சப்தமும் –
பணிந்து -என்பதால்-சரணம் பிரபத்யே -என்னும் சப்தங்களும் –
உய்ந்தவன் -என்பதால் பிற் பகுதியில் கூறும் பயனும் தோன்ற
அமுதனார் சொற்களை-அமைத்து உள்ளமை காண்க –

சரம பர்வ ப்ரபந்தம் என்பது தோன்ற எம்பெருமானை அடி பணிவதாக கூறாது-
எம்பெருமான் பாவில் மன்னும் மாறன் அடி பணிந்ததாக அமுதனார் அருளிய-நயம் வியந்து இன்புறத் தக்கது

மந்த்ரத்தின் தாத்பர்யம் தோன்ற-மாறன் அடி பணிந்து –என்றார் அமுதனார் -என்க –

————-

கள்ளார் பொழில் தென் அரங்கன் கமலப் பதங்கள் நெஞ்சில்
கொள்ளா மனிசரை நீங்கிக் குறையல் பிரான் அடிக்கீழ்
விள்ளாத வன்பன் இராமானுசன் மிக்க சீலம் அல்லால்
உள்ளாது என் நெஞ்சு ஓன்று அறியேன் எனக்குற்ற பேர் இயல்வே – 2-

கள்ளார் பொழில் தென் அரங்கன் –
நித்யம் த்வன் மதுபான மத்த மதுப-என்று பிராட்டியை தேனாக பட்டர் ஸ்ரீ குண ரத்ன கோசத்தில்-
உருவகம் செய்து இருப்பதை நினைவு கூறக –
அடியார்கட்கு போக்யதை மிகுந்து விடாய் தீர்க்கும்-பரம பதம் போன்றது அரங்கனுக்கு இப் பொழில்

உபய விபூதிகளும் உடையான் என்பதை பார்க்கிலும் –
தென் அரங்கம் உடையான் என்பது-
அவனுக்கு ஏற்றமாய் இருக்கிறது –

நெஞ்சில் கொள்ளா மனிசரை –
தங்கள் இதய தாமரையிலே -திருவடித் தாமரையை சேர்த்து வைத்து கொளாத மனிசர்களை –
மலரை மலரோடு சேர்த்து வைப்பது அன்றோ முறை –

குறையல் பிரான் அடிக் கீழ் விள்ளாத அன்பன் –
குறைகள் இல்லாத ஆழ்வார் -திவ்யதேசங்கள் விடாமல் -நான்கு கவிகள் -மதிள் கைங்கர்யம்-
வாள் வீசி படித்துறை -நம்போல்வாருக்கும் -உஜ்ஜீவிக்க அருளிய பிரான் –

இராம பிரானுக்கும் குறையல் பிரானுக்கும் தென் அரங்கன் கமலப் பதங்கள் கீழ் விள்ளாத அன்பு –
ராமானுசனுக்கோ-லஷ்மண னுக்கோ -இராம பிரான் அடிக் கீழ் விள்ளாத அன்பு –
இவ் இராமானுசக்கோ குறையல் பிரான் அடிக் கீழ் விள்ளாத அன்பு-
திருநகரியில் இன்றும் திருமங்கை ஆழ்வார் அடிக்கீழ் எம்பெருமானாரை சேவிக்கிறோமே –

மிக்க சீலம் –
உயர்ந்தோர் தாழ்ந்தோர் இடம் வேற்றுமை ஏதும் இன்றி கலந்து பழகும் பழக்கம் சீலம் -எனப்படும் –
மிக்க உயர்ந்த இராமானுசன் மிக்க தாழ்ந்த என்னிடம் நெருங்கிப் பழகுவது மிக்க சீலம் அன்றோ –என்கிறார் அமுதனார் –

————-

பேரியல் நெஞ்சே அடி பணிந்தேன் உன்னைப் பேய்ப் பிறவிப்
பூரியரோடு உள்ள சுற்றம் புலத்திப் பொருவரும் சீர்
ஆரியன் செம்மை இராமானுசன் முனிக்கு அன்பு செய்யும்
சீரிய பேறு உடையார் அடிக் கீழ் என்னைச் சேர்ததற்கே -3-

பேரியல் நெஞ்சே –
வள்ளலே -என்று வாரி வழங்குவாரை விளிப்பது போலப் -பேரியல் நெஞ்சே -என்று
நன்றி அறிவுடன் விளிக்கிறார்

இங்கு பெறுபவர் என்பெறினும் கொள்வர் கொடுப்பவர் தாம் அறிவார் தம் கொடையின் சீர் -என்னும் –
ஔவையார் பாடலை நினைவு கூறுகிறார்

சிரப்பான் மணிமவுலிச் சேரமான் தன்னைச்
சுரப்பாடு யான் கேட்கப் பொன்னாடொன் றீந்தான்
இரப்பவர் என்பெறினும் கொள்வர் கொடுப்பவர்
தாமறிவார் தம்கொடையின் சீர்.

“தலைமேலாக மணிகள் இழைத்த கிரீடத்தைச் சூட்டி யிருக்கும் சேரமானிடத்தே பால் தரும் ஆடு ஒன்றினை யான் கேட்டேன்.
அவனோ, பொன்னாற் செய்த ஆடொன்றைத் தந்தான். இரப்பவர்கள் என்ன கிடைத்தாலும் ஏற்றுக் கொள்வார்கள்.
ஆனால் தம் கொடையின் சிறப்பு எங்ஙனமாக இருக்க வேண்டும் என்பதனைக் கொடுப்பவர்கள் தாம் அறிந்து செய்வார்கள்” என்பது பொருள்.

அடி பணிந்தேன் உன்னை
நெஞ்சை பலர் கொண்டாடி உள்ளனர் -அடி பணிந்திலர் –அமுதனார் நெஞ்சு தனிப்பட்டது
ஆழ்வார்களுடைய நெஞ்சிலும் அது தனி சிறப்புற்றது –
இவர்களை விட்டு தான் மட்டும் எம்பெருமான் நாண் மலர்ப்பாதம் அடைவதும் உண்டு –
அத்தகைய குறை ஒன்றும் இன்றி எம்பெருமானார் அன்பர் அடிக் கீழ் தாள் சேர்த்ததோடு
அமுதனாரையும் அவ்விடத்திலே சேர்த்து வைக்கிறது நெஞ்சு –
அப் பேருதவிக்காக நெஞ்சின் அடிகளிலே விழுகிறார் அமுதனார்

பேய்ப் பிறவி யாரோடு உள்ள சுற்றம் புலத்தி என்றாலே போதுமாய் இருக்க –
பூரியர் என்று மேலும் கூறியதற்கு கருத்து என் –என்னில் கூறுதும் –
உலகத்தவர் கண்ணால் காணும் இன்பத்தை ஒழிய வேறே ஓன்று உண்டு என்று
பகவத் விஷயத்தை பற்றி விடாப் பிடியாய் -நிற்றலைப் பேய்ப் பிறவி என்பர்
ஞானிகட்கு உலகத்தவர் பேய்ப் பிறவியர் –
உலகத்தவர்க்கு ஞானியர் பேய்ப் பிறவியர் பேயரே எனக்கு யாவரும் யானுமோர் பேயனே எவர்க்கும் -என்றார் குலசேகரப் பெருமாள் –
உலகத்தவர் சொல்லும் பேய்ப் பிறவியை நீக்கல் பொருட்டு மேலும் பூரியர் என்று கூறினார்
பிறப்பின் கண் உள்ள நோவு மிகுதியை நன்கு புலப் படுத்ததற்கு மேலும்
பூரியர் என்றார் என்க -ஊறி -தோஷம் -அதாவது அஹங்காரம் மமகாரம் முதலிய பொல்லாங்கு –
இனி பூரியரோடு உள்ள சுற்றம் புலத்தி என்றாலே போதுமாய் இருக்க
பேய்ப் பிறவிப் பூரியர் என்று -விசேடித்தது ஏன்-என்னில் –
தோஷம் சேர்க்கையால் வந்த தன்று பிறவிக் குணம் –
உபதேசாதிகளால் நீங்காது என்று தோஷத்தின் கொடுமை காட்டுவதற்காக அங்கன் விசேடித்தார் என்க –

ஆரியன் செம்மை இராமானுசன்
ஆரியன் இச் சொல்லுக்கு –
சமதிகத சர்வ சாஸ்த்ரராய் –சாஸ்திரம் அனைத்தும் நன்கு அறிந்தவராய்–என்று உரை அருளினார் பெரிய ஜீயர்
அதற்க்கு அடி -அநார்ய ஜூஷ்ட மச்வர்க்யம்-என்னும் இடத்தில் கீதா பாஷ்யத்தில்-
ஆர்ய பதத்துக்கு வித்வான் -என்று வியாக்யானம் செய்யப் பட்டு இருக்கிறது –
ஆர்ய என்னும் சொல் வித்வான் என்னும் பொருளை எங்கனம் தருகிறது என்பதை-
தாத்பர்ய சந்த்ரிகையில் வேதாந்த தேசிகன் –
அதத்த் வேப்யோ தூராத்யாதா புத்தி ஏஷாம் தே ஆர்யா –
தத்துவம் அல்லாதவைகளில் நின்றும் தூர விலகின புத்தி உள்ளவர்கள் ஆர்யர்கள் -என்று விளககித் தந்துள்ளார் –
சாஸ்த்ரங்களில் சொன்ன தத்துவத்தில் ஊன்றி –அல்லாதவற்றில் புத்தியை செலுத்தாத தத்துவ தர்சிகள் ஆர்யர் என்றது ஆயிற்று

பேறு உடையார் அடிக் கீழ் என்னை சேர்த்ததற்கு
எம்பெருமான் விஷயத்தில் அன்பு செய்வது பேறு
எம்பெருமானார் விஷயத்தில் அன்பு செய்வது சீரிய பேறு
சீரிய பேறு உடையார் ஆழ்வான்
அவர் அடிக் கீழ் சேர்த்தல் -அவரை ஆஸ்ரயிக்கும் படி செய்தல்
இனி பேறு உடையார் என்று இராமானுசன் அடியார் எல்லோரையும் சொன்னலுமாம்-
அடிக் கீழ் சேர்ந்த பேருதவிக்கு பொருத்தமாக நெஞ்சின் அடிக் கீழ் பணிகிறார் அமுதனார் என்க
நம் ஆழ்வார் தம்முடைய முந்துற்ற நெஞ்சை -எம்மோடு நீ கூடி இயற்றுவாய் -என்று –
தம்மையும் கூட்டிக் கொண்டு போக வேணும் என்கிறார் –
அமுதனாரோ தம்மைக் கூட்டிக் கொண்டு சரம பர்வத்தின் எல்லையில் சேர்த்து விட்டதாகவே கூறுகிறார் –

————–

என்னைப் புவியில் ஒரு பொருளாக்கி மருள் சுரந்த
முன்னைப் பழ வினை வேர் அறுத்து ஊழி முதல்வனையே
பன்னப் பணித்த இராமானுசன் பரன் பாதமும் என்
சென்னித் தரிக்க வைத்தான் எனக்கு ஏதும் சிதை வில்லையே -4 –

முன்பு ஓன்று அறியேன் எனக்கு உற்ற பேரியில்வே-என்று உபாயம் தெரிய வில்லை என்றார் –
இப்பொழுது உபாயம் எம்பெருமானாரே என்று தெளிந்து காட்டுகிறார்

என்னைப் புவியில் ஒரு பொருள் ஆக்கி-
அடியேன் வாய் வார்த்தையாக கூட சொல்ல தெரியாமல் இருந்த என்னை –

மருள் சுரந்த -மருளாலே சுரக்கப் பட்ட என்றபடி –
மருளாவது -பொருள் அல்லாதவற்றை பொருள் என்று உணர்தல் –
இனி மருளை சுரந்த வினை என்னலுமாம் –
முன்பு அவித்தை வினைக்கு ஹேதுவாயிற்று –
இப் பொழுது வினை அவித்யைக்கு ஹேது வாகிறது –
மருளால் வினை -எனபது விதையால் மரம் -எனபது போன்றது –
வினையால் மருள் எனபது மரத்தால் விதை எனபது போன்றது –

முன்பு அநாதி எனபது தவிர வேறு இல்லை –அதனைக் கூறுகிறார் -முன்னைப் பழ வினை -என்று
முன் -பழைமை -இரண்டும் ஒரே பொருளை சொல்வன –
இவ் இரு சொற்களும் மீ மிசை எனபது போலே மிக்க பழைமையை உணர்த்தி
வேர் எனபது வாசனையை –
வாசனையை வேராக உருவினை செய்யவே -வினை மரம் என்பது பெற்றோம் –இது ஏக தேச உருவகம் –

ஊழி முதல்வனையே பன்னப் பணித்த –
எம்பெருமானார் பணித்தது ஸ்ரீ பாஷ்யத்திலே –மா முனிகள் ஸ்ரீ பாஷ்யம் மட்டுமே காட்டி அருள
பிள்ளை லோகம் ஜீயர் ஸ்ரீ பாஷ்யம் ஸ்ரீ கீதா பாஷ்யம் இரண்டையும் காட்டி அருளுகிறார் –
முதலினையே -என்னாது முதல்வனையே -என்று உயர் திணையாக கூறினது –
காரணமாய் இருத்தல் பிரமத்துக்கு இயையும் என்பதை கூறும்-சமன்வய அத்யாயத்தின் பொருள்
பன்ன -என்பதால்-முதல்வனையே ஆராயும்படி -அம் முதன்மை -காரணத்வத்தையே உறுதிப்படுத்துவதால் –
பிறர் கூறும் குற்றங்களால் பாதிக்க படாமை கூறும் இரண்டாவதான-அவிரோத அத்யாயத்தின் பொருள் கருதப் படுகிறது –
இனி
பன்னுதல் விவேகித்து -அனுசந்தித்தலாதலின் உபாயம் தோற்றலின்-
மூன்றாவதான -சாதன அத்யாயத்தின் பொருளையும் இங்கேயே கருதுவதற்கும் இடமுண்டு –
இனி
பன்னுதல்-நெருங்குதலாய் -பர பிரமத்தை கிட்டுதல் -கூறுவதாக-கொண்டு
இங்கேயே நான்காவதான பல அத்யாயத்தின் பொருளையும் கூறுவதாக-கருதுவதற்கும் இடம் உண்டு –

பணித்த இராமானுசன் பரன் –
ஆசார்யன் உபதேசிக்கப் படும் எம்பெருமானை விட மிக மேம்பாடு உடையவன் –என்றபடி
ஆக்கை கொடுத்து அளித்த ஊழி முதல்வன் இவர்க்குப் பரன் அல்லன் –
ஆவி -ஆத்ம தத்வம் -கொடுத்து அளித்த இராமானுசனே இவர்க்குப் பரனாக தோன்றுகிறார்
நித்ய சம்சாரிகளாய் இருந்த தங்களை நித்ய ஸூரிகளுக்கு ஒப்பப் பொருள் ஆககினமை
கண்டு பரன் எனப் பற்றினர் ஆழ்வார்கள் ஊழி முதல்வனை –
அவனாலும் ஆகாது கை விடப் பட்ட தம்மை -விண்ணுளாரிலும் சீரிய ஒரு பொருளாக
இப்புவியில் ஆக்கினமை கண்டு எம்பெருமானாரையே பரன் எனப் பற்றுகிறார் அமுதனார் –

பாதமும் என் சென்னித் தரிக்க வைத்தான் –
பாதமும் -உயர்வு சிறப்பு உம்மை
என் -என்று தம் இழிவை எல்லாம் எண்ணிப் பார்க்கிறார்

பரன் பாதமும் -பரம-புருஷனாகிய ரெங்க நாதன் திருவடிகளையும்
பரம புருஷனான ரெங்க நாதனும் எம்பெருமானாருக்கு-வசப்பட்டு இருத்தலின் –
அவன் திருவடிகளை வைத்து அருளுவதாக அமுதனார் அருளி செய்கிறார்

அரங்கன் செய்ய தாள் இணையோடு ஆர்த்தான் -என்று மேலே இவர் அருளி செய்வதற்கு ஏற்ப
பரன் என்பதற்கு-ரங்க நாதன் என்று பொருள் உரைக்கப் பட்டது –

தரிக்க -தாங்க
இதனால் வைத்ததும் திருவடியை எடுக்காமல் நெடு நேரம் வைத்து இருந்த சுகத்தை அனுபவித்து பேசுவது தெரிகிறது –
இனி –தரிக்க -என்பதற்கு
இவர் தலை மேல் வைக்காமையினால் நிலை கொள்ளாது துடித்த
திருவடிகள் நிலை நிற்று தரிப்புக் கொள்ளும்படி என்று பொருள் கூறலுமாம்

திருப்பாதம் என்னாது பாதம் என்றது –
தலையில் வைபதர்க்கு முன்பு அதற்க்கான-சீர்மை அறியாமையினால் என்க –
இனி சென்னியில் வைத்த பாதத்தை தரிப்பது குணம் கண்டு அன்று –
சத்தா பிரயுக்தம் -இயல்பாக அமைந்தது -என்னும் கருத்துடன் அங்கனம் கூறினார் ஆகவுமாம்-

பரன் பாதம் என்று ப்ராப்தி -சம்பந்தம் கூறப் பட்டது
பரன் -என்று எம்பெருமானார் மேன்மையையும்
பாதம் வைத்தான் -என்று எளிமையையும்
என் சென்னியில் தரிக்க வைத்தான் -என்று சீலமும் அருளும் தோற்றுகின்றன –

எம்பெருமானார் தாமாகவே வந்து தமது நிர்ஹேதுக கிருபையால் தம் திருவடிகளை-
சென்னியில் தரிக்க வைத்து உய்வித்தல் அரங்கமாளி விஷயத்திலும் கண்டு அறிந்ததாம் –

————

எனக்கு உற்ற செல்வம் இராமானுசன் என்று இசையகில்லா
மனக்குற்ற மாந்தர் பழிக்கில் புகழ் அவன் மன்னிய சீர்
தனக்குற்ற அன்பர் அவன் திரு நாமங்கள் சாற்றும் என் பா
இனக்குற்றம் காணகில்லார் பத்தி ஏய்ந்த இயல்விது என்றே -5 –

உற்ற செல்வம்
செல்வம் தான் பயன் ஆவதோடு -பயனைப் பெறுதற்கு சாதனமும் ஆவது போலே-
எம்பெருமானார் தாம் ப்ராப்யர் ஆவதுடன் -பெறத் தக்க பேறாவதுடன் -ப்ராபகமும் -சாதனமுமாய்
இருத்தல் பற்றி செல்வகமாக உருவகம் செய்கிறார்
இராமானுச செல்வமோ -அங்கன் உயிர் மாய்வதற்கு ஹேதுவாகாத தோடு உயிர் சத்தை பெற்று-
தரித்து நிற்பதற்கும் ஹேதுவாதல் பற்றி-உற்ற செல்வம் -ஆயிற்று
பண்டைய இராமானுசன்-லஷ்மணன்-லஷ்மனோ லஷ்மி சம்பன்ன -என்று செல்வம்-படைத்தவனாக கூறப் பட்டான்
இன்றைய இராமானுசனோ செல்வமாகவே கூறப் படுகிறார் –

அவன் மன்னிய சீர் தனக்குற்ற அன்பர் –
எம்பெருமானார் இடம் உள்ள குணங்கள் வந்தேறின வல்ல –இயல்பாய் அமைந்தவை என்பார் -மன்னிய சீர் -என்றார் –
கீழே செல்வம் என்று இராமானுசனைக் கூறி இங்குச் சீர் தனக்கு உற்ற அன்பர் என்கையாலே
பொன்னின் மாற்று உயர்வுக்கு ஏற்ப அதனை விரும்புவது போல சீருக்கு ஏற்ப அன்புருகின்றனர் –
என்னும் கருத்து நயம்பட விளங்குவது காண்க .

சீர் பெரியதுமாய் அன்பு குறைவுமாய் இல்லாமல் சீருக்கு ஏற்ற அன்பு.
இங்கு அன்பு என்பது பக்தியைச் சொல்லுகிறது. அதாவது பக்தி என்பது ஜாதி குலம் வர்ணாஸ்ரமம் பார்த்து வருவதில்லை.
இங்கு ராமானுசன் என்னும் செல்வம் யாருக்கும் ஜாதி குலம் வர்ணாஸ்ரமம் பார்த்து வருவதில்லை –அவன் இயல்பான சீர் இதற்க்கு ஹேது .

குற்றம் காணகில்லார்
அன்புடைமை –தனக்குற்ற அன்பர்
திரு நாமங்கள் சாற்றுதல்
பக்தி ஏய்ந்த இயல்வு –
இம் மூன்றும் குற்றம்-காண கில்லாமைக்கு ஹேதுக்களாம்-

——–

இயலும் பொருளும் இசையத் தொடுத்து ஈன் கவிகள் அன்பால்
மயல் கொண்டு வாழ்த்தும் இராமானுசனை மதியின்மையால்
பயிலும் கவிகளில் பக்தி இல்லாத வென்பாவி நெஞ்சால்
முயல்கின்றனன் அவன் தன் பெரும்கீர்த்து மொழிந்திடவே – 6 –

இயலும் பொருளும் இசையத் தொடுத்து –
தொடுத்து என்னும் சொல் -வல்லவன் மாலையில் பூத் தொடுப்பது போலச் சொற்களையும் படி-கோப்பதை கூறுகிறது ..
நறிய நல் மலர் நாடி -என்று நம் ஆழ்வாரும் சொற்களை மலராக கூறினமை காண்க –
இப்பாசுரத்திலே சொல் என்னும் பொருளில் இயல் என்னும் சொல்லை அமுதனார் தொடுத்து இருப்பதைக் காண்க .
இச் சொல் அன்றி வேறு எந்தச் சொல்லை வழங்கினும் இங்கு இசையாமை காண்க .

ஈன் கவிகள்
கேட்கும் பொழுதே சுவை ததும்ப பாடும் அவர்கள் ஈன் கவிகள்…இன் கவிகள் என்பதன் நீட்டல் விகாரம் .-இனி
ஈனுகின்ற கவிகள் என்று வினை தொகை-ஆகலுமாம் -ஈனுதல்-உண்டு பண்ணுதல் -அதாவது அழிவற்ற காவிய உலகினைப் படைத்தல்
ஈன் கவிகள் என்னும் இடத்தில் கவிகள் என்றது கவி புனைபவர் என்றபடி –
இன் கவி பாடும் பரம கவிகள் -என்னும் இடத்தில் இரு பொருளினும் கவி என்னும் சொல்-வழங்கப் பட்டுள்ளமை காண்க –

அவன் தன் பெரும் கீர்த்தி –
அவன் கீர்த்தி என்னாது அவன் தன் கீர்த்தி -என்றது -எம்பெருமானார் ஒருவர்க்கே பெரும் கீர்த்தி-சொந்தமானது என்றபடி-
பெரும் கீர்த்தி -பேசி அளவிட முடியாத கீர்த்தி -திக்குற்ற கீர்த்தி என்பர் பின்னும் இவரே
ஏய்ந்த பெரும் கீர்த்தி இராமானுச முனி -என்றதும் காண்க –
எண் திசையும் ஏத்தும் எதிராசன் -என்கிற படியே-மகா தனமான கீர்த்தியை-

முன்னர்ப் பேரியல் நெஞ்சு-என்று கொண்டாடப் பட்ட நெஞ்சு –
இப் பொழுது
பக்தி இல்லாத என் பாவி நெஞ்சு -என்று இகழ்ந்து உரைக்கப் படுகிறது
பக்தி இருந்தால் பெரும் கீர்த்தியை மொழிந்திட நெஞ்சு இடம் தந்து இராது-அது இன்மையால் முயல வேண்டியது ஆயிற்று
நெஞ்சில் பக்தி இல்லாமைக்கு ஹேது அது பாவியாய் இருத்தல்
ஆல் என்பது ஓடு என்னும் பொருளில் வந்ததாக கொண்டு நெஞ்சோடு என்னலுமாம் ..
ஈன் கவிகள் அன்பினால் வாழ்த்துவர்
பக்தி இல்லாத நெஞ்சுடன் கூடிய யானோ -பெரும் கீர்த்தியை மொழிந்திட முயல்கின்றேன் –
அன்பினாலான மயல் ஈன் கவிகள் உடையது –
இயல்பான அறியாமை என்னது –
வாழ்த்தல் அன்பினால் ஆகிய மயலால் வந்தது
மொழிந்திட முயலுதல் பக்தி இல்லாத நெஞ்சுடன் கூடிய என் அறியாமையால் வந்தது -என்றபடி
தகுதி அற்ற தான் மொழிந்திட முற்பட்டதன் மூலம் -பக்தி இல்லாத நெஞ்சாலும் பேசும் திறத்தது-
எம்பெருமானார் பெருமை -என்னும் இழுக்கை தேடித் தருதலின் நெஞ்சைப் பாவி என்கிறார் –
இது அமுதனார் நைச்ய அநுசந்தானம் செய்து கொண்ட படி –

——-

மொழியைக் கடக்கும் பெரும் புகழான் வஞ்ச முக்குறும்பாம்
குழியைக் கடக்கும் நம் கூரத் ஆழ்வான் சரண் கூடிய பின்
பழியைக் கடத்தும் இராமானுசன் புகழ் பாடி எல்லா
வழியைக் கடத்தல் எனக்கு இனி யாதும் வருத்தம் அன்றே -7-

நம் கூரத் ஆழ்வான்
என்னும் இவ் இடத்தில் உள்ள சொல் தொடரில் -கூரம் என்பதால் குலச் சிறப்பும்
அறிவில் ஆழம் உடைமையைக் காட்டும் ஆழ்வான் என்பதால் கல்விச் செருப்பும் –
இரட்டுற மொழிதலால் அச் சொல்லாலேயே அறிவின் பயனைய இறை அனுபவத்தில் ஆழம்-உற்றமை தோற்றுதலால்
அறிவுக்கு தக்க படி ஒழுகுதலும் தோன்றுகின்றன –
பின்பற்ற தக்க நாதனாம் உறவு முறையைக் காட்டும் நம் -என்பதால் -அந்த ஒழுக்கத்தின் சிறப்புத் தோன்றுவதும் காண்க

மணவாள மா முனிகள் -அபிஜன வித்யா வ்ருத்தங்கள் ஆகிற படு குழியை -என்று உரை அருளி உள்ளார் –
சிலர் வ்ருத்ததுக்கு-ஒழுக்கத்துக்கு -பதில் செல்வத்தை சேர்ப்பார் –
ஆழ்வானும் ஸ்ரீ வைகுண்ட ஸ்தவத்தில்-வித்யா தன அபிஜன ஜன்ம மதேன -என்று
செல்வ செருக்கை தான் கூறி உள்ளார் –ஒழுக்கத்தை சொல்லவில்லை –
ஆயினும் இவ்விடத்தில் செல்வச் செருக்கை சொல்லுவது ஏற்ப்புடைதாகுமா எனபது சிந்தித்ததற்கு உரியது –
பொன் வட்டில் தனை எறிந்த புகழுடன் ஸ்ரீ ரங்கத்தில் உஞ்ச விருத்தி பண்ணிக் கொண்டு இருக்கும் போது அன்றோ-
அமுதனார் ஆழ்வான் சரண் கூடியது –
ஸ்ரீ வைகுண்ட ஸ்தவத்தில் நைச்ய அனுசந்தானமாக கூறியது-பழைய நிலையை பொறுத்ததாகும் –

பழியைக் கடத்தும் இராமானுசன்
பழி -பாவம்

பழியஞ்சிப் பாத்தூ ணுடைத்தாயின் வாழ்க்கை
வழியெஞ்ச லெஞ்ஞான்று மில்–(திருக்குறள்: 44)

பழி அஞ்சிப் பாத்து ஊண் வாழ்க்கை உடைத்தாயின் — பொருள் செய்யுங்கால் பாவத்தை யஞ்சி யீட்டி,
அப்பொருளை இயல்புடைய மூவர் முதலாயினார்க்கும், தென்புலத்தார் முதலிய நால்வர்க்கும்
பகுத்துத் தானுண்டலை ஒருவனில் வாழ்க்கை உடைத்தாயின்;
வழி எஞ்ஞான்றும் எஞ்சல் இல் — அவன் வழி உலகத் தெஞ்ஞான்றும் நிற்றலல்லது இறத்தலில்லை.
இங்கு பாவம் என்னும் பொருளில் பழி எனபது பரிமேலழகர் உரை

செயற்பாலதொரு மரனே ஒருவற்கு உயர்பாலதோரும் பழி -திரு குறள்-அறன் வலி வுறுத்தல் –
என்னும் இடத்தில் அறனுக்கு எதிர் சொல்லாக பழி என்னும் சொல் வழங்கப் பட்டு உள்ளது அறன் -நல் வினை
பழி -தீ வினை
பழிக்கப் படுவதனைப் பழி என்றார் -என்பர் பரிமேல் அழகர்

பெரும்பாலும் ஒழுக்க நெறியினின்றும் பிறழ்ந்தார்கே பழி-நேரிடக் கூடும் –
இழுக்கத்தின் எய்துவர் எய்தா பழி -என்றார் வள்ளுவனாரும்–

மணவாள மா முனிகள் பிராரப்த கர்மத்தையும் தொலைக்க வல்லவர் என்னும் கருத்துப் பட-
பழியை உவமை ஆகு பெயராக கொண்டு -பழி போலே அவஸ்யம் அனுபோக்தவ்யமான –அனுபவித்தே தீர வேண்டிய –
பாப கர்மங்கள்-என்று உரை அருளி உள்ளார் –
தீச் செயலில் முழுகி அழுந்தாதபடி கை தூக்கி விடுதலின் –பழியைக் கடத்தும் இராமானுசன் -என்றார் –
சக்தஸ் ஸ்வ கீய ஜன பாப விமோசன த்வம் -என்று -தன்னை சேர்ந்த மக்களின்
பாபங்களைப்-போக்குவதில் வல்லவர் தேவரீர் -என்றார் மணவாள மா முனிகளும் -யதிராஜ விம்சதியில் –
இனி பழி பாவம் கையகற்றி -இரண்டாம் திருவந்தாதி – -20 -என்னும் இடத்தில் போலே
காரணம் இன்றி வரும் நிந்தையை பழி என்னலுமாம் –
பாவம் செய்யா விடினும் செய்ததாக ஏறிட்டு கூறும் அபவாதம் பழி என்க-

அதாவது
அனுபவித்தே தீர வேண்டிய பாபங்களிலிருந்தும் கூட இராமானுசன் நம்மை கை தூக்கி விடுகிறார் என்றபடி .
காரணம் இன்றி வரும் நிந்தை- பழியிலிருந்தும் நம்மைக் காப்பற்ற வல்லது இராமானுசன் திருவடிகள் என்னும் படி இஃது.

இப்படி அனுபவித்து தீர வேண்டிய பாபங்கள் கழிந்த இடங்கள் உண்டா என்றால் ,
ஆச்சார்ய ஹ்ருத்யத்தில் , –
ஸ்ரமணீ , விதுரர் , ருஷிபத்நிகளைப் பூதராக்கின நெடுநோக்குப் பார்வை என்னும் ஸூர்ணிகையில்
எம்பெருமானுடைய கடாக்ஷம் இவர்கள் மேல் விழுந்து இவர்கள் பாபம் நசித்தது என்று காண்கிறோம்.

அங்கண் இரண்டும் கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல் எங்கள் மேல் சாபம் இழிந்து
என்னும் பாசுர உரையிலும் இது காணலாம்.
சார்ந்த இரு வல்வினை சரித்து என்று ஆழ்வாரும் அருளிச் செயதாரிறே.

எனக்கு இனி யாதும் வருத்தம் அன்றே
எனக்கு -சரண் கூடிப் புகழ் பாடி அல் வழியைக் கடக்கும் தகுதி வாய்ந்த எனக்கு-
சரண் கூடும் போது தாம் ஒரு பொருளாகத் தோற்றாமையின் தம்மைக் கண்டிலர் –
அதனால் -நான் -சரண் கூடிய பின் -என்றிலர் கீழே –
இப்பொழுது தாம் ஒரு பொருளாகி விட்ட படியால் எனக்கு வருத்தம் அன்று -என்கிறார்

—————————————————————————————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ ராமானுஜ நூற்றந்தாதியில் ஸ்ரீ அமுதனார் திவ்ய தேச மங்களா சாசனம் /ஸ்ரீ விபவ அவதார அனுபவம் /ஸ்ரீ யபதித்தவம் –/ ஸ்ரீ ஸ்வாமி குண அனுபவம் -/ஸ்ரீ ஆழ்வார்கள் ஈடுபாடு /ஸ்ரீ ஸ்வாமி அருளிச் செய்த ஸ்ரீ ஸூக்திகள் – —

June 5, 2020

இந்த பிரபந்தத்தில் 9 திவ்ய தேசங்கள் —ஆழ்வார் அவதார ஸ்தலங்கள் -3–மங்களா சாசனம் செய்கிறார் ஸ்ரீ அமுதனார்-

ஆழ்வார் அவதார ஸ்தலங்கள்
திரு மழிசை-மழிசைக்கு இறைவன் 1
திரு கொல்லி நகர் 1
திரு குறையலூர் 1

திவ்ய தேசங்கள்
1-திரு குருகூர் மூன்று பாசுரங்கள்
2-திரு அரங்கம் 14 பாசுரங்கள்
3-திரு வேங்கடம் -2 பாசுரங்கள்
4-திருக் கச்சி- 1 –
5-திரு கோவலூருக்கு -1-
6-திரு மால் இரும் சோலை -1-
7-திரு கண்ண மங்கை நின்றான்–1-
8-திரு பாற்கடல் 2-
9-திரு பரம பதம் -2-

—————-

இராமானுச நூற்றந்தாதியில்-12- திவ்ய தேச மங்களா சாசனம் –

1-திருவரங்கம் –14-பாசுரங்களில் / கள்ளார்-2-/தாழ்வு -16-/ நயவேன் -35-/ஆயிழை -42-/
இறைஞ்சப்படும் -47-/ஆனது -49-/பார்த்தான் -52-/கண்டவர் -55-/மற்றொரு -57-/சிந்தையினோடு -69-/
செய்த்தலை -75-/சோர்வின்றி -81-/மருள் சுரந்து -91-/அங்கயல் -108-

2-திருவேங்கடம் -2-பாசுரங்கள் /நின்ற வண் -76-/இருப்பிடம் -106-

3-திருக்கச்சி -1-பாசுரம் –ஆண்டுகள் -31-

4—திருக் கோவலூர் -1-/ மன்னிய -10-

5—திருக் குறையலூர் -1-/ கலி மிக்க -88-

6—திரு மழிசை -1-/ இடம் கொண்ட -12-

7–கொல்லி நகர் -1-/ கதிக்கு -14-

8—திருமால் இரும் சோலை -1-/ இருப்பிடம் -106-

9—திருக்கண்ண மங்கை -1-/ முனியார் –17-

10—திருக் குருகூர் –3-பாசுரங்கள் /ஆரப் பொழில் -20-/காட்டும் /நாட்டிய -54-

11—திருப்பாற் கடல் -2-பாசுரங்கள் / நின்ற வண் -76-/ செழும் திரை -105-

12—திரு பரம பதம் -2-பாசுரங்கள் / நின்ற வண் -76-/ இருப்பிடம் -106-

மா மலராள் புணர்ந்த பொன் மார்பன் பொருந்தும் பதி-60-திவ்ய தேச சாமான்ய பாசுரம்
தானுகந்த ஊர் –திரு நெடும் தாண் -6-போலே –

————–

ஸ்ரீ விபவ அவதார அனுபவம்–14-பாசுரங்கள்-

ஸ்ரீ கிருஷ்ணாவதாரம் -7-பாசுரங்கள்
ஸ்ரீ ராமாவதாரம் -1- பாசுரம்
ஸ்ரீ பரசுராமவதாரம் -1-பாசுரம்
ஸ்ரீ நரஸிம்ஹ அவதாரம் -1-பாசுரம்
ஸ்ரீ திருப் பாற் கடல் -திரு அவதார கந்தம் -2-பாசுரங்கள்
அனைத்து அவதாரங்களும் சேர -2-பாசுரங்கள் –

ஸ்ரீ கிருஷ்ணாவதாரம் -7-பாசுரங்கள்-

1-கார்த்திகையானும் கரி முகத்தானும் முக்கண்
மூர்த்தியும் மோடியும் வெப்பும் முதிகிட்டு மூவுலகும்
பூத்தவனே என்று போற்றிட வாணன் பிழை பொறுத்த
தீர்த்தனை ஏத்தும் இராமானுசன் என் தன் சேம வைப்பே – 22- –

2-நெஞ்சில் கறை கொண்ட கஞ்சனைக் காய்ந்த நிமலன் நங்கள்
பஞ்சித் திருவடிப் பின்னை தன் காதலன் பாதம் நண்ணா
வஞ்சர்க்கு அரிய இராமானுசன் புகழ் அன்றி என் வாய்
கொஞ்சிப் பரவ கில்லாது என்ன வாழ்வின்று கூடியதே – -28 –

3-அடல் கொண்ட நேமியன் ஆருயிர் நாதன் அன்று ஆரணச் சொல்
கடல் கொண்ட ஒண் பொருள் கண்டு அளிப்ப பின்னும் காசினியோர்
இடரின் கண் வீழ்ந்திட தானும் அவ் ஒண் பொருள் கொண்டு அவர் பின்
படரும் குணன் எம் இராமானுசன் தன் படி இதுவே -36 –

4-அடியைத் தொடர்ந்து எழும் ஐவர் கட்காய் அன்று பாரதப்போர்
முடியப் பரி நெடும் தேர் விடும் கோனை முழுது உணர்ந்த
அடியர்க்கு அமுதம் இராமானுசன் என்னை யாள வந்திப்
படியில் பிறந்தது மற்றில்லை காரணம் பார்த்திடிலே –51 –

5-சரண மடைந்த தருமனுக்காப் பண்டு நூற்றுவரை
மரண மடைவித்த மாயவன் தன்னை வணங்க வைத்த
கரண மிவை வுமக் கன்று என்று இராமானுசன் உயிர் கட்
கரணங்கு அமைத்திலனேல் அரணார் மற்று இவ் வார் உயிர்க்கே – 67- –

6-ஆரெனக்கின்று நிகர் சொல்லில் மாயன் அன்று ஐவர் தெய்வத்
தேரினில் செப்பிய கீதையின் செம்மைப் பொருள் தெரியப்
பாரினில் சொன்ன விராமானுசனைப் பணியும் நல்லோர்
சீரினில் சென்று பணிந்தது என்னாவியும் சிந்தையுமே – 68-

7-கையில் கனி என்னக் கண்ணனைக் காட்டித் தரிலும் உன்தன்
மெய்யில் பிறங்கிய சீரன்றி வேண்டிலன் யான் நிரயத்
தொய்யில் கிடக்கிலும் சோதி விண் சேரிலும் இவ்வருள் நீ
செய்யில் தரிப்பன் இராமானுச என் செழும் கொண்டலே – – -104 –

———

ஸ்ரீ ராமாவதாரம்-1-பாசுரம்

1-படி கொண்ட கீர்த்தி இராமாயணம் என்னும் பக்தி வெள்ளம்
குடி கொண்ட கோயிலில் இராமானுசன் குணம் கூறும்
கடி கொண்ட மா மலர்த்தாள் கலந்து உள்ளம் கனியும் நல்லோர்
அடி கண்டு கொண்டு உகந்து என்னையும் ஆள் அவர்க்கு ஆக்கினரே – 37-

————

ஸ்ரீ பரசுராமவதாரம் -1-பாசுரம்

கோக்குல மன்னரை மூ வெழு கால் ஒரு கூர் மழுவால்
போக்கிய தேவனைப் போற்றும் புனிதன் புவனம் எங்கும்
ஆக்கிய கீர்த்தி இராமானுசனை யடைந்த பின் என்
வாக்குரையாது என் மனம் நினையாது இனி மற்று ஒன்றையே -56-

——————

ஸ்ரீ நரஸிம்ஹ அவதாரம் -1-பாசுரம்

வளர்ந்த வெங்கோப மடங்க லொன்றாய் அன்று வாளவுணன்
கிளர்ந்த பொன்னாகம் கிழித்தவன் கீர்த்திப் பயி ரெழுந்து
விளைந்திடும் சிந்தை யிராமானுசன் என்தன் மெய் வினை நோய்
களைந்து நன்ஞானம் அளித்தனன் கையில் கனி என்னவே – – 103-

————–

ஸ்ரீ திருப் பாற் கடல் -திரு அவதார கந்தம் -2-பாசுரங்கள்-

நின்ற வண் கீர்த்தியும் நீள் புனலும் நிறை வேங்கடப் பொற்
குன்றமும் வைகுண்ட நாடும் குலவிய பாற் கடலும்
உன்றனக் கெத்தனை இன்பந்தரு முன்னிணை மலர்த்தாள்
என்றனக்கு மது இராமானுசா !இவை ஈந்தருளே – -76 –

செழும் திரைப் பாற்கடல் கண்டுயில்மாயன் திருவடிக் கீழ்
விழுந்திருப்பார் நெஞ்சில் மேவு நன்ஞானி நல் வேதியர்கள்
தொழும் திருப்பாதன் இராமானுசனைத் தொழும் பெரியோர்
எழுந் திரைத்தாடுமிடம் அடியேனுக் கிருப்பிடமே – – -105 –

——————

அனைத்து அவதாரங்களும் சேர -2-பாசுரங்கள் –

மண் மிசை யோநிகள் தோறும் பிறந்து எங்கள் மாதவனே
கண்ணுற நிற்கிலும் காணகில்லா உலகோர்கள் எல்லாம்
அண்ணல் இராமானுசன் வந்து தோன்றிய வப்பொழுதே
நண்ணரு ஞானம் தலைக் கொண்டு நாரணற்கு ஆயினரே – 41-

தேரார் மறையின் திறமென்று மாயவன் தீயவரைக்
கூராழி கொண்டு குறைப்பது கொண்டலனைய வண்மை
ஏரார் குணத் தெம்மி ராமானுசன் அவ் எழில் மறையில்
சேராதவரைச் சிதைப்பது அப்போதொரு சிந்தை செய்தே – -74- –

—————-

ஸ்ரீ யபதித்தவம்

அடையார் கமலத்து அலர் மகள் கேள்வன் ஸ்ரீ வல்லபன் ..
முதலில் பூ மன்னு மாது பொருந்திய மார்பன் -ஆரம்பித்தார் ..கடைசியிலும் சொல்லுவார்.-
ஒவ் ஒரு திருவாய் மொழியிலும் .7 வது பாசுரமாக கொண்டு போனால்
திரு வாய் மொழி-முழுவதிலும் புதுசாக சாராம்சம் கிடைக்கும்-

பூ மன்னு-1- அலர்மகள் கேள்வன் -33-/வானம் கொடுப்பது மாதவன் -66-/ பங்கய மா மலர்ப் பாவை -108-/
திருமகள் சம்பந்தம் விடாமல் அன்றோ அருளிச் செய்கிறார் –

1-பூ மன்னு மாது பொருந்திய மார்பன் -1-
2-கோவிலுள் மா மலராள் தன்னோடு மாயனைக் கண்டமை காட்டும் தமிழ்த்தலைவன் -10-
3-அரங்கர் மௌலி சூழ்கின்ற மாலையைச் சூடிக் கொடுத்தவள் தொல்லருளால் வாழ்கின்ற வள்ளல் -16-
4-வெறி தரு பூ மகள் நாதனும் விளங்கிய சீர் நெறி தரும் செந்தமிழ் ஆரணமே-19-
5-நாங்கள் பஞ்சித் திருவடிப் பின்னை தன் காதலன் பாதம் நண்ணா வஞ்சர்க்கு அரிய இராமானுசன் -28-
6-அடையார் கமலத்து அலர் மகள் கேள்வன் -33-
7-மண்மிசை யோனிகள் தோறும் பிறந்து எங்கள் மாதவன் கண்ணுற நிற்கிலும் காண கில்லா உலகோர்கள்-41-
8-மா மலராள் நாயகன் எல்லா யுயிர்கட்கும் நாதன் அரங்கன் என்னும் தூயவன் -42-
9-மா மலராள் புணர்ந்த பொன் மார்வன் பொருந்தும் பதி தொறும் புக்கு நிற்கும் குணம் திகழ் கொண்டல் இராமானுசன் -60-
10-ஞானம் கனிந்த நலம் கொண்டு நாள் தொறும் நைபவர்க்கு வானம் கொடுப்பது மாதவன் -66-
11-மிக வஞ்சித்து நீ இந்த மண்ணகத்தே திருத்தித் திருமகள் கேள்வனுக்கு ஆக்கிய பின் -78-
12-அங்கயல் பாய் வயல் தென்னரங்கன் அணியாகம் மன்னும் பங்கய மா மலர்ப்பாவையைப் போற்றுதும் -108-

———-

சொல்லுவோம் அவன் நாமங்கள் -குணங்களை சொல்வதே திரு நாமம் -அருளிச் செய்த குணங்கள் –

1-மிக்க சீலம் /
2-பொருவரும் சீர் /
3-மன்னிய சீர் /
4-பெரும் கீர்த்தி
5-பிறங்கிய சீர் /
6-வள்ளல் தனம் /
7-நயப் புகழ் /
8-தன் ஈறில் பெரும் புகழ்
9-வாமனன் சீலன் இராமானுசன் /
10-தூயவன் தீதில் இராமானுசன் /
11-திசை அனைத்தும் ஏறும் குணனை
12-தொல் சீர் எதித்தலை நாதன் /
13-அற்புதன் -என்னை ஆள வந்த கற்பகம் /மண்ணுலகில் ஈட்டிய சீலத்து
14-பார்த்து அருளும் கொண்டல் /
15-உத்தமன்
16-புவனம் எங்கும் ஆக்கிய கீர்த்தி
17-சுடர் மிக்கு எழுந்த தொல் புகழ்
18-உன் பெரும் கருணை
19-வண்மை இராமானுசர்
20-மிக்க வண்மை
21-வண்மை –மா தகவு /மதி புரையும் தண்மை/
22-கொண்டல் அனைய வண்மை
23-மொய்த்து அலைக்கும் நின் புகழே
24-சீர் ஒன்றிய கருணை
25-தெரிவுற்ற கீர்த்தி
26-கார் கொண்ட வண்மை
27-சீர் வெள்ள வாரி
28-உணர்வின் மிக்கோர் தெரியும் வண் கீர்த்தி
29-போற்ற யரும் சீலம்
30-ஈண்டிய சீர்
32-அனைத்தும் தரும் அவன் சீர்
33-கடல் புடை சூழ் வையம் இதனில் உன் வண்மை என்பால் என் வளர்ந்ததுவே
34-மெய்யில் பிறங்கிய சீர்
35-இன்புற்ற சீலம்
36-பொங்கிய கீர்த்தி

———————-

ஸ்ரீ இராமானுசன் குண அனுபவம் –

மிக்க சீலம் அல்லால் உள்ளது என் நெஞ்சு -2-

பொரு வரும் சீர் ஆரியன் செம்மை -3-

அவன் மன்னிய சீர் தனக்கு உற்ற அன்பன் -4-

பழியைக் கடத்தும் இராமானுசன் புகழ் –7-

பல்லாண்டு என்று காப்பிடும் பான்மையன் தாள் பேராத வுள்ளத்து இராமானுசன் தன் பிறங்கிய சீர்–15-

மெய் ஞானத்து இராமானுசன் என்னும் கார் தன்னையே – 24- –

காரேய் கருணை இராமானுசா–வந்து நீ என்னை யுய்த்த பின் உன் சீரே உயிர்க்கு உயிராய் அடியேற்கு இன்று தித்திக்குமே -25 –

என் செய்வினையாம் மெய்க்குற்றம் நீக்கி விளங்கிய மேகத்தை–26-

உன் வள்ளல் தனத்தினால் வல் வினையேன் மனம் நீ புகுந்தாய்–27-

பின்னை தன் காதலன் பாதம் நண்ணா வஞ்சர்க்கு அரிய இராமானுசன் புகழ்–28-

தென் குருகைப்பிரான் பாட்டு என்னும் வேதப் பசும் தமிழ் தன்னை தன் பத்தி என்னும்
வீட்டின் கண் வைத்த இராமானுசன் புகழ்–29-

அன்பன் அனகன்–30-

அன்பாளன்–31–

ஞாலத்தை வண்மையினால் வந்து எடுத்து அளித்த அரும் தவன்–32-

நயப் புகழே -34 –

நின்னருளின் வண்ணம் நோக்கில் தெரிவரிதால் –38-

தன்னீறில பெரும் புகழே தெருளும் தெருள் தந்து இராமானுசன் செய்யும் சேமங்களே -39 –

வாமனன் சீலன்–40-

தூயவன் தீதில் இராமானுசன்–42-

சொல்லார் தமிழ் ஒரு மூன்றும் சுருதிகள் நான்கும் எல்லை யில்லா வற நெறி யாவும் தெரிந்தவன்–44-

அவர்க்கும் எனக்கும் உனைத் தந்த செம்மை சொல்லாற் கூறும் பரம் அன்று–45-

மாறன் பணித்த மறை யுணர்ந்தோனை மதியிலியேன்
தேறும்படி என் மனம் புகுந்தானைத் திசை யனைத்தும் ஏறும் குணனை –46-

நிகரின்றி நின்ற வென் நீசதைக்கு நின்னருளின் கண் அன்றிப் புகல் ஒன்றும் இல்லை–48-

தேர் விடும் கோனை முழுது உணர்ந்த அடியர்க்கு அமுதம் –51-

அற்புதன் செம்மை இராமானுசன் என்னை யாளவந்த கற்பகம் கற்றவர் காமுறு சீலன் –53–

மண்ணுலகில் ஈட்டிய சீலத்து இராமானுசன்–54-

தொகை யிறந்த பண்டரு வேதங்கள் பார் மேல் நிலவிடப் பார்த்தருளும் கொண்டலை–55–

புனிதன் புவனம் எங்கும் ஆக்கிய கீர்த்தி இராமானுசனை–56-

உத்தமனை நற்றவர் போற்றும் இராமானுசனை–57-

எம் இராமானுசன் மெய்ம் மதிக் கடலே – 58–

குணம் திகழ் கொண்டல் இராமானுசன் என்னும் குலக் கொழுந்தே – -60 –

எம் இராமானுசன் தன புகழ் சுடர்மிக்கு எழுந்தது அத்தால் நல்லதிசயம் கண்ட திரு நிலமே – 61-

மிக்க பண்டிதனே – 63- –

யுன் பெரும் கருணை–70-

வண்மை யிராமானுசா ! எம் பெரும்தகையே !–71-

நிறை புகழோருடனே வைத்தனன் என்னை இராமானுசன் மிக்க வண்மை செய்தே -72-

வண்மை யினாலும் தன் மாதகவாலும் மதி புரையும் தண்மை யினாலும் இத்தாரணி யோர்கட்குத் தான் சரணாய்
உண்மை நன் ஞானம் உரைத்த விராமானுசனை–73-

கொண்டலனைய வண்மை ஏரார் குணத் தெம்மி ராமானுசன்–74-

நின் புகழே மொய்த்தலைக்கும் வந்து இராமானுசா ! வென்னை முற்று நின்றே – – 75-

யுன் சீரொன்றிய கருணைக்கு இல்லைமாறு தெரிவுறிலே – – 81–

என்ன புண்ணியனோ ! தெரிவுற்ற கீர்த்தி இராமானுசன் என்னும் சீர் முகிலே – – 82- –

கார் கொண்ட வண்மை –83-

அவன் சீர் வெள்ள வாரியை–84-

தன் குணம் கட்கு உரிய சொல்லென்றும் உடையவன் என்று என்றென்று உணர்வில் மிக்கோர்
தெரியும் வண் கீர்த்தி யிராமானுசன் –87-

போற்றரும் சீலத்து இராமானுச–89-

தான் ஈண்டிய சீர் அருள் சுரந் தெல்லாவுயிர் கட்கும் நாதன் அரங்கன் என்னும்
பொருள் சுரந்தான் எம்மிராமானுசன் மிக்க புண்ணியனே – – -91 –

நூற் புலவர்க் கெண்ணரும் கீர்த்தி இராமானுச !–92-

இராமானுசன் என்னும் மெய்த்தவனே – – -93 –

உவந்தருந்தேன் அவன் சீரன்றி யான் ஒன்றும் உள் கலந்தே – – – 94- –

தன் தகவால் தன்னை வுற்றாரன்றித் தன்மை வுற்றாரில்லை என்றறிந்து
தன்னை உற்றாரை இராமானுசன் குணம் சாற்றிடுமே – – -97 –

பொற் கற்பகம் எம்மிராமானுச முனி–99-

உனதடிப் போதில் ஒண் சீராம் தெளி தேனுண்டமர்ந்திட வேண்டி–100-

நையும் மனமுன் குணங்களை வுன்னி என் நா விருந்தெம்
ஐயன் இராமானுசன் என்று அழைக்கும் அருவினையேன்
கையும் தொழும் கண் கருதிடும் காணக் கடல் புடை சூழ்
வையமிதனில் உன் வண்மை என்பால் என் வளர்ந்ததுவே – – 102-

கையில் கனி என்னக் கண்ணனைக் காட்டித் தரிலும் உன்தன்
மெய்யில் பிறங்கிய சீரன்றி வேண்டிலன் யான் நிரயத்
தொய்யில் கிடக்கிலும் சோதி விண் சேரிலும் இவ்வருள் நீ
செய்யில் தரிப்பன் இராமானுச என் செழும் கொண்டலே – – -104 –

இன்புற்ற சீலத்து இராமானுச –107-

அங்கயல் பாய் வயல் தென்னரங்கன் அணியாக மன்னும்
பங்கய மா மலர்ப் பாவையைப் போற்றுதும் பத்தி யெல்லாம்
தங்கிய தென்னத் தழைத்து நெஞ்சே நம் தலை மிசையே
பொங்கிய கீர்த்தி இராமானுசனடிப் பூ மன்னவே – – 108-

————————

ஸ்ரீ இராமானுசன் திரு உள்ள மகிமை –

பொய்கைப் பிரான் –அன்று எரித்த திரு விளக்கைத் தன் திரு உள்ளத்தே இருத்தும் பரமன் -8-

பூதத் திருவடி தாள்கள் நெஞ்சத்து உறைய வைத்து ஆளும் இராமானுசன் -9-

மழிசைக்கு இறைவன் இணை அடிப் போது அடங்கும் இதயத்து இராமானுசன் -12-

பல்லாண்டு என்று காப்பிடும் பான்மையன் தாள் பேராத வுள்ளத்து இராமானுசன் தன் பிறங்கிய சீர்–15-

சீலம் கொள் நாதமுனியை நெஞ்சால் வாரிப் பருகும் இராமானுசன்–20-

தென் குருகைப்பிரான் பாட்டு என்னும் வேதப் பசும் தமிழ் தன்னை தன் பத்தி என்னும்
வீட்டின் கண் வைத்த இராமானுசன் புகழ்–29-

பொன்னரங்கம் என்னில் மயலே பெருகும் –35-

ஒண் பொருள் கொண்டு அவர் பின் படரும் குணன்–36-

இராமாயணம் என்னும் பக்தி வெள்ளம் குடி கொண்ட கோயிலில்–37-

வளர்ந்த வெங்கோப மடங்க லொன்றாய் அன்று வாளவுணன் கிளர்ந்த பொன்னாகம் கிழித்தவன்
கீர்த்திப் பயி ரெழுந்து விளைந்திடும் சிந்தை யிராமானுசன்–103-

———————–

ஸ்ரீ ஆழ்வார்கள் ஈடுபாடு-

இதத்தாய் ராமானுஜன் –
மறை யதனின் பொருள் அனைத்தும் வாய் மொழிந்தான் வாழியே –
மாறன் உரை செய்த தமிழ் மறை வளர்த்தோன் வாழியே –
மா முனிகளாக புனர் அவதாரத்தில் செய்து அருளினாரே

சடகோபன் செந்தமிழ் வேதம் தரிக்கும் பேராத உள்ளம் பெற –
ஏய்ந்த பெரும் கீர்த்தி ராமானுஜ முனி தன்
வாய்ந்த மலர்ப்பாதம் அன்றோ அனந்தாழ்வான் வணங்குகிறார்

இராமானுச முனியே –மங்கையர் கோன் ஈந்த மறை யாயிரம் அனைத்தும் தங்கும் மனம்
நீ எனக்குத் தா -எம்பார் பிரார்திக்கிறார்-

இராமானுச நூற்றந்தாதியில் -25-பாசுரங்களில் ஆழ்வார் திருவடிகளில்– அருளிச் செயலில்
திருவாய் மொழியின் மணம் தரும் இன்னிசை மன்னும் இடம் தோறும் புக்கும் இராமானுசன் –

புகழ் மலிந்த பா மன்னு மாறனடி பணிந்து உய்ந்தவன்–1-

சடகோபனைச் சிந்தை யுள்ளே பெய்தற்கு இசையும் பெரியவர் சீரை உயிர்கள் எல்லாம் உய்தற்கு உதவும் –18-

உறு பெரும் செல்வமும் தந்தையும் தாயும் உயர் குருவும் வெறி தரு பூ மகள் நாதனும் மாறன் விளங்கிய சீர்
நெறி தரும் செம் தமிழ் ஆரணமே என்று இந் நீள் நிலத்தோர் அறிதர நின்ற இராமானுசன்–19-

திருவாய் ஈரத் தமிழ் இன் இசை யுணர்ந்தோர்கட்கு இனியவர் தம் சீரைப் பயின்று உய்யும்
சீலம் கொள் நாதமுனியை நெஞ்சால் வாரிப் பருகும் –20-

தென் குருகைப்பிரான் பாட்டு என்னும் வேதப் பசும் தமிழ் தன்னை தன் பத்தி என்னும்
வீட்டின் கண் வைத்த இராமானுசன் புகழ்-29-

மாறன் பணித்த மறை யுணர்ந்தோனை மதியிலியேன்
தேறும்படி என் மனம் புகுந்தானைத் திசை யனைத்தும் ஏறும் குணனை –46-

தென் குருகை வள்ளல் வாட்டமிலா வண் தமிழ் மறை வாழ்ந்தது மண்ணுலகில்
ஈட்டிய சீலத்து இராமானுசன் தன்னியல்வு கண்டே – 54- –

திரு வாய் மொழியின் மணம் தரும் இன்னிசை மன்னும் இடம் தொறும் மா மலராள் புணர்ந்த பொன் மார்பன்
பொருந்தும் பதி தொறும் புக்கு நிற்கும் குணம் திகழ் கொண்டல் இராமானுசன் என்னும் குலக் கொழுந்தே – -60 –

பண்டரு மாறன் பசும் தமிழ் ஆனந்தம் பாய் மதமாய் விண்டிட எங்கள் இராமானுச முனி வேழம்–64-

—–

குறையல் பிரான் அடிக்கீழ் விள்ளாத வன்பன் –2-

நீலன் தனக்கு உலகில் இனியானை–17-

கலைப் பெருமாள் ஒலி மிக்க பாடலைக் வுண்டு தன்னுள்ளம் தடித்து அதனால் வலி மிக்க சீயம் இராமானுசன் –88-

—-

பொய்கைப் பிரான் –அன்று எரித்த திரு விளக்கைத் தன் திரு உள்ளத்தே இருத்தும் பரமன் -8-

பூதத் திருவடி தாள்கள் நெஞ்சத்து உறைய வைத்து ஆளும் இராமானுசன் -9-

மழிசைக்கு இறைவன் இணை அடிப் போது அடங்கும் இதயத்து இராமானுசன் -12-

சீரரங்கத் தய்யன் கழற்கு அணியும் பரன் தாள் அன்றி ஆதரியா மெய்யன்–13-

கொல்லி காவகன் சொல் பதிக்கும் கலைக் கவி பாடும் பெரியவர் பாதங்களே துதிக்கும் பரமன்–14-

பல்லாண்டு என்று காப்பிடும் பான்மையன் தாள் பேராத வுள்ளத்து இராமானுசன் தன் பிறங்கிய சீர்–15-

சூடிக் கொடுத்தவள் தொல் அருளால் வாழ்கின்ற வள்ளல் –16-

சொல்லார் தமிழ் ஒரு மூன்றும் சுருதிகள் நான்கும் எல்லை யில்லா வற நெறி யாவும் தெரிந்தவன்–44-

—————

ஸ்ரீ ஸ்வாமி அருளிச் செய்த ஸ்ரீ ஸூக்திகள் –

தொல் உலகில் மன் பல் உயிர் கட்கு இறையவன் மாயன் என மொழிந்த
அன்பன் அனகன் இராமானுசன் என்னை ஆண்டனனே – -30 –

நான்கினும் கண்ணனுக்கே யாமது காமம் அறம் பொருள் வீடி தற்கென்று உரைத்தான்
வாமனன் சீலன் இராமானுசன் இந்த மண் மிசையே -40 –

மா மலராள் நாயகன் எல்லா வுயிர் கட்கும் நாதன் அரங்கன் என்னும்
தூயவன் தீதில் இராமானுசன் தொல்லருள் சுரந்தே -42 –

இறைஞ்சப்படும் பரன் ஈசன் அரங்கன் என்று இவ்வுலகத் தறம் செப்பும் அண்ணல் இராமானுசன்–47-

கருதரிய பற் பல்லுயிர்களும் பல்லுலகி யாவும் பரன தென்னும் நற் பொருள் தன்னை
இந்நானிலத்தே வந்து நாட்டினனே – -53 –

உயிர்கள் மெய் விட்டு ஆதிப் பிரானோடு ஒன்றாம் என்று சொல்லும் அவ்வல்லல் எல்லாம்
வாதில் வென்றான் எம் இராமானுசன் மெய்ம் மதிக் கடலே – 58-

தன்னை வணங்க வைத்த கரண மிவை வுமக் கன்று என்று இராமானுசன் உயிர் கட்
கரணங்கு அமைத்திலனேல் அரணார் மற்று இவ் வார் உயிர்க்கே – 67- –

மாயன் அன்று ஐவர் தெய்வத் தேரினில் செப்பிய கீதையின் செம்மைப் பொருள் தெரியப்
பாரினில் சொன்ன விராமானுசனை–68-

வண்மை யினாலும் தன் மாதகவாலும் மதி புரையும் தண்மை யினாலும் இத்தாரணி யோர்கட்குத் தான் சரணாய்
உண்மை நன் ஞானம் உரைத்த விராமானுசனை–73-

இந்தப் பூதலத்தே மெய்யைப் புரக்கும் இராமானுசன் –79-

தான் ஈண்டிய சீர் அருள் சுரந் தெல்லாவுயிர் கட்கும் நாதன் அரங்கன் என்னும்
பொருள் சுரந்தான் எம்மிராமானுசன் மிக்க புண்ணியனே – – -91 –

———————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ ராமானுஜ நூற்றந்தாதி பாசுரமும்- ஸ்ரீ ஆழ்வார் பாசுரங்களும் –108–அங்கயல் பாய் வயல் தென்னரங்கன் அணியாக மன்னும் பங்கய மா மலர்ப் பாவையைப் போற்றுதும்-இத்யாதி –

June 5, 2020

ஸ்ரீ பெரிய ஜீயர் அருளிய உரை ––அவதாரிகை –

நிகமத்தில்
இப்ப்ரபந்த ஆரம்பத்திலே
ஸ்ரீ இராமானுசன் சரணார விந்தம் நாம் மன்னி வாழ -1 – என்ற ப்ராப்யம்
தமக்கு யாவதாத்மபாவியாம்படி கை புகுருகையும் –
அந்த ப்ராப்ய ருசி ரூப பக்தி பௌஷ்கல்யமே தமக்கு அபேஷிதமாகையாலே –
தத் உபய சித்யர்த்தமாக ஸ்ரீ ஆகையாலே –
தேன் அமரும் பூ மேல் திரு நமக்கு என்றும் சார்வு -ஸ்ரீ மூன்றாம் திருவந்தாதி-100 –என்கிறபடியே
சர்வாத்மாக்களுக்கும் என்றும் ஒக்க சார்வாய் -சம்பத் ப்ரதையான ஸ்ரீ பெரிய பிராட்டியாரை ஆஸ்ரயிப்போம்-என்கிறார் .

ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை–அவதாரிகை–

ஸ்ரீ மதே ரம்ய ஜாமாத்ர முநயே விததே நம யச்மர்திஸ் சர்வ ஸித்தீ நாமந்தராய நிவர்ரணே –
நிகமத்தில் –
கீழ் இரண்டு பாட்டிலும் ஸ்ரீ எம்பெருமானார் தம்மை நிர்ஹேதுகமாக அபிமானித்து தம்முடைய திரு உள்ளத்திலே
எழுந்து அருளி இருந்து நித்ய வாசம் பண்ணுகிற படியையும் –
அநந்தரம் தமக்கு ததீய பர்யந்தமாக ப்ரேமம் பிறந்து -அவர்கள் விஷயத்தில் அசேஷ சேஷ வ்ர்த்திகளும்
பண்ணிக் கொண்டு போரும்படி என்னை கடாஷித்து அருள வேணும் என்று தம்முடைய அபிமத்தை அருளிச் செய்து –
இப்பாட்டிலே –
ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகள் ஆகிற செவ்விப்பூவை நம்முடைய தலை மேலே கலம்பகன் மாலை அலங்கரிப்பாரைப் போலே
அலங்கரித்து ஸ்தாவர பிரதிஷ்டையாக நிறுத்தி அருளினார் ஆகையாலே –அந்த பரிக்ரஹ அதிசயத்தை கொண்டு
திவ்ய தம்பதிகளான- ஸ்ரீ -ஸ்ரீயபதிகளை மங்களா சாசனம் பண்ணுவோம் என்று
பக்தி தத்வம் எல்லாம் தன்னளவிலே குடி கொண்டது என்னும்படி அத்ய அபி வர்த்தமான
தம்முடைய திரு உள்ளத்தோடு கூடி-பலத்தை சொல்லித் தலைக் கட்டுகிறார் –

ஸ்ரீ அமுது விருந்து-ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள்-அருளிய உரை–அவதாரிகை-

இந்தப் பிரபந்தத்தைப் பூர்த்தி செய்பவராய்த்-தொடங்கும் போது –
ஸ்ரீ இராமானுசன் சரணாரவிந்தம் நாம் மன்னி வாழ -என்று
தாம் அருளிச் செய்த பேறு– தமக்கு ஆத்மா உள்ள அளவும் கைப்படவும் –
அப் பேற்றினைப் பெறும் வேட்கை வடிவமான பக்தி தழைக்கவும் -விரும்பி-
அவ் விரண்டும் தமக்கு கை கூடுவதற்காக –ஸ்ரீ தேவி யாதலின் -அனைவராலும் ஆச்ரயிக்கப் படுவாளாய் –
அதனுக்கு ஏற்ப -தேன் அமரும் பூ மேல் திரு நமக்கு என்றும் சார்வு -ஸ்ரீ மூன்றாம் திருவந்தாதி – 100-என்றபடி
உயரினம் அனைத்துக்கும் சார்வாகிச் செல்வம் அளிப்பவளான-ஸ்ரீ பெரிய பிராட்டியாரை ஆஸ்ரயிப்போம் என்று
ஸ்ரீ அமுதனார் தம் நெஞ்சை நோக்கிக் கூறுகிறார்

அங்கயல் பாய் வயல் தென்னரங்கன் அணியாக மன்னும்
பங்கய மா மலர்ப் பாவையைப் போற்றுதும் பத்தி யெல்லாம்
தங்கிய தென்னத் தழைத்து நெஞ்சே நம் தலை மிசையே
பொங்கிய கீர்த்தி இராமானுசனடிப் பூ மன்னவே – – 108-

பத உரை –
நெஞ்சே -மனமே
பக்தி யெல்லாம் –-பக்தி யானது முழுதும்
தங்கியது என்ன -நம்மிடமே குடி கொண்டு விட்டது என்று சொல்லும்படி
தழைத்து -செழித்து
பொங்கிய -விரிவடைந்த
கீர்த்தி -புகழ் வாய்ந்த
இராமானுசன் -ஸ்ரீ எம்பெருமானார் உடைய
அடிப்பூ-திருவடிகளாகிற மலர்
நம் தலை மிசை –நம்முடைய தலையின் மீது
மன்ன-பொருந்தி எப்பொழுதும் இருக்கும் படியாக
அம் கயல் -அழகிய மீன்கள்
பாய் -பாய்கிற
வயல் -வயல்களை உடைய
தென் அரங்கன் -அழகிய ஸ்ரீ திரு வரங்கத்தின் கண் உள்ள ஸ்ரீ பெரிய பெருமாள் உடைய
அணி ஆகம் -அழகிய திரு மார்பிலே
மன்னும் -எப்பொழுதும் பொருந்தி இருப்பவளும் –
பங்கயம் -தாமரை என்னும்
மா மலர் -சீரிய பூவிலே பிறப்பினை உடையவளுமான
பாவையை -பெண் மணியான ஸ்ரீ ரங்க நாச்சியாரை
போற்றுதும் -ஆஸ்ரயிப்போம்

வியாக்யானம் –
நெஞ்சே -பக்தி தத்வமானது
(ப்ராப்ய ருசியை பக்தி என்கிறார் -கைங்கர்ய உபயோகி என்றபடி -போஜனத்துக்கு ஷூத்து போலே )
நிரவசேஷமாக -(மிச்சம் இல்லாமல் முழுவதுமாக )-நம் அளவிலே குடி கொண்டது என்னும்படி
சம்ருத்தமாய் விஸ்ருதையான கீர்த்தியை உடையரான எம்பெருமானார் உடைய திருவடிகள் ஆகிற செவ்விப் பூ –
(ப்ராப்ய ருசி என்னும் செடி தழைக்க -ராமானுசன் அடி பூ முளைக்க-அத்தை சென்னியில் சூடுவோம் -என்றபடி )
மயிர் கழுவிப் பூ சூட விருப்பாரைப் போலே எப்போதோ என்று
ஆசைப் பட்டு இருக்கிற நம் தலை மேலே நித்ய வாசம் பண்ணும்படியாக –
செங்கயல் பாய் நீர்த் திருவரங்கம் -திரு வாய் மொழி -7 2-1- -என்கிறபடியே
ஜல சம்ருதியாலே அழகிய தர்சநீயமான கோயல்கள் உகளா நின்றுள்ள -வயல்களை உடைத்தாய் –தர்சநீயமான கோயிலையே
தமக்கு நிரூபகமாக உடையரான ஸ்ரீ பெரிய பெருமாளுடைய அழகிய திரு மார்விலே –
இறையும் அகலகில்லேன் -ஸ்ரீ திரு வாய் மொழி -6 10-10 – என்று நித்ய வாசம் பண்ணா நிற்பாளாய்–
ஸ்லாக்கியமான தாமரைப் பூவை பிறப்பிடமாக வுடையாளாய் – நிரூபாதிக ஸ்த்ரீத்வத்தை வுடையாளான
ஸ்ரீ ரங்க நாச்சியாரை ஆஸ்ரயிப்போம் —

போற்றுதல் -வணங்குதல் –புகழ்தலுமாம்-

அடியில் பூ மன்னு மாது – 1-என்றார் –இங்கே பங்கய மா மலர் பாவை -108- என்றார்
அங்கே பொருந்திய – – என்றார் –இங்கு –அணி யாக மன்னும் — – என்றார்
அங்கு –இராமானுசன் உன் சரணாரவிந்தம் நாம் மன்னி வாழ –1- – என்றார்–
இங்கு –தலை மிசையே இராமானுசனடிப் பூ மன்ன – 108- என்றார் –
அங்கு நெஞ்சே – 1- என்று திரு உள்ளத்தையும் கூட்டிக் கொண்டு உபக்ரமித்தார் –
இங்கு —நெஞ்சே – 108- என்று திரு உள்ளத்தோடு கூட அனுசந்தித்து தலைக் கட்டினார் .

இத்தால்
1-ப்ராப்ய ருசி வ்ருத்தியும்–
ப்ராப்ய சித்தியும் ஆகிற –ஸ்வரூப அநு ரூப சம்பத் சித்திக்கடி –
சகல ஆத்மாக்களுக்கும் -தத் தத் அதிகார அநு குணமாக அபேஷித்த சம்பத் விசேஷங்களை-ஸ்வ கடாஷ விசேஷங்களாலே
உண்டாக்கி யருளும் –ஸ்ரீ பெரிய பிராட்டியார் என்றும் –
2-ப்ராப்யம் தான் ஸ்ரீ ஆசார்ய சரணாரவிந்தம் -என்றும் –
3-அத்ரபரத்ர சாபி நித்யம் -ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னம் – 2- என்கிறபடியே
யாவதாத்மம் விச்லேஷம் அற்று இருக்கை என்றும் –
4-இதுக்கு அதிகாரிகளும் இந்த ப்ராப்யத்தில் சஹ்ருதயமான ப்ராவண்யம் உடையவர்கள் என்றும் சொல்லிற்றாயிற்று –

பங்கய மா மலர் பாவையை போற்றி -அனைத்தும் பெறலாமே –
மண்டல அந்தாதி -திருவில் ஆரம்பித்து திருவில் முடித்து
வீட்டுடைத்த தலைவி தானே ப்ராப்யம் அருளுவாள்-ஆச்சார்ய கைங்கர்யம் -யவாதாத்மபாவி –
ஸ்ரீ பிராட்டிக்கு விசேஷணம் ஸ்ரீ தென்னரங்கன் -பிராட்டி இருப்பிடம் என்றே ஸ்ரீ தென்னரங்கன் –
பிரபை-ஸூரியன்–ஆகம் மன்னும் -மாது பொருந்திய மார்பன் –
பாவையைப் போற்றுதும் -திவ்ய தம்பதியைப் போற்றுதும் -சூழ்ந்து இருந்து ஏத்துவோம் பல்லாண்டு
சரணாரவிந்தம் நாம் மன்னி வாழ –இதுவே கர்தவ்யம் -சதாசார்ய பிரசாதத்தால் -திவ்ய தேச கைங்கர்யம் –
நிர்ஹேதுகமாக பரம கிருபையால் பரகத ஸ்வீகார பாத்திரமான பின்பு மங்களா சாசன பரராக இருந்தோம் என்று
திரு உள்ளத்தை குறித்து அருளிச் செய்து இத்தால்
நாமும் இப்பிரபந்தம் சொல்லி இப் பேறு பெறுவோம் என்று அருளிச் செய்கிறார் –
பதஞ்சலி யோகம் பலன் உத்சவங்கள் மூலம் நாம் பெரும் படி பண்ணி அருளிய ஸ்ரீ ஸ்வாமி கீர்த்தி எண் திசையும் பரவி உள்ளதே
திருவடி பூ சென்னியில் மன்ன வேண்டி யன்றோ -பூ மன்னு மாது மார்பிலே பொருந்தி இறையும் அகலகில்லேன் என்று
நித்ய வாசம் செய்து அருளுகிறாள் –

இப் பிரபந்த ஆதியிலே தமக்கு உசாத் துணையாக தம்முடைய மனசைக் கூட்டிக் கொண்டு –
ஸ்ரீ எம்பெருமானார் உடைய திரு நாமத்தை சொல்லுவோம் வா என்று -உத்யோகித்தபடியே செய்து –
அத்தாலே தமக்கு பலித்த அம்சத்தை -இருவர் கூடி ஒரு கார்யத்தை பண்ண ஒருப்பட்டு -அது தலைக் கட்டினவாறே
அதிலே ஒருவன் தனக்கு தோழனான இரண்டாம் அவனுக்கு அந்த செய்தியை சொல்லுமா போலே
இவரும் தமக்கு சகாவான திரு உள்ளத்தை சம்போதித்து சொல்லுகிறார் –
அடியிலே நெஞ்சு என்னும் திரு உள்ளத்தைக் கூட்டிக் கொண்டு உபக்ரமித்தார் ஆகையாலே –
இங்கே நெஞ்சே என்று தம் திரு உள்ளதோடு கூடி அனுபவித்து தலை கட்டுகிறார் –

1-பத்தி எல்லாம் தங்கிய தென்னத்து தழைத்து நெஞ்சே –
பக்தி சப்த வாச்யம் எல்லாம் ஏக ரூபமாய் கொண்டு உன்னளவிலே சேர்ந்து குடி கொண்டு இருந்தது என்னும் படி
சம்ர்த்தமாய் இருக்கிற நெஞ்சே –
போந்தது என் நெஞ்சு என்னும் பொன் வண்டு -உனதடிப் போதில் ஒண் சீராம்-தெளி தேன் உண்டு அமர்ந்திட வேண்டி
நின்பால் –என்று இவர் தாமே தம்முடைய திரு உள்ளம் பக்த பரிதம் என்னும் இடத்தை கீழே அருளிச் செய்தார் இறே –

அன்றிக்கே –
2–பக்தி எல்லாம் தங்கிய தென்னத்து தழைத்து -என்கிற இத்தை
ஸ்ரீ எம்பருமானார் திருவடிகளுக்கு விசேஷணம் ஆக்கவுமாம்– –
பக்தி எல்லாம் தங்கிய தென்னத் தழைத்து -சஹ்யத்தில் ஜலம் எல்லாம் கீழே குதித்து ஒரு மடுவாகத் தங்கினால் போலே –
என்னுடைய பக்தி ரசம் எல்லாம் பரம பக்தி ரூபமாய்க் கொண்டு பரி பக்குவமாய் படிந்து –
ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளிலே தங்கிற்று -என்னும் படி தழைத்து இருக்கிற –

(பக்தி தங்கினது நெஞ்சிலும் ஸ்ரீ எம்பெருமானார் இடமும் என்று இரண்டு நிர்வாகம் –
ஸ்ரீ ஸ்வாமி தானே ஸ்ரீ அமுதனார் திரு உள்ளத்திலே ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ திருவேங்கடம் ஸ்ரீ திருமால் இரும் சோலை
அவை தன்னோடும் அன்றோ நித்ய வாசம் செய்து அருளுகிறார் )

பொங்கிய கீர்த்தி —
ஏய்ந்த பெரும் கீர்த்தி -என்கிறபடியே பரம பதத்தின் அளவும் வளர்ந்து கொண்டு ஓங்கி இருக்கிற கீர்த்தியை உடையரான –

இராமானுசன் –
ஸ்ரீ எம்பெருமானாருடைய –

உபக்ரமத்திலே -கலை இலங்கு மொழியாளர் –பல்கலையோர் தாம் மன்ன வந்த இராமானுசன் -என்கிறார் ஆகையாலே –
இங்கு பொங்கிய கீர்த்தி இராமானுசன் -என்கிறார் –
அடிப்பூ–கீழ் சொன்ன தழைப்பதோடு கூடி இருக்கிற ஸ்ரீ எம்பெருமானாருடைய-திருவடித் தாமரைகள் –
அடியிலே சரணாரவிந்தம் -என்கிறார் ஆகையாலே -இங்கே அடிப்பூ என்கிறார் -(திருவடியில் உபக்ரமித்து உப சம்ஹாரம் )
யாவதாத்மபாவி ஸூபிரதிஷ்டமாய் இருக்கையாலே —மன்னவே ––

அம் கயல் பாய் வயல் தென்னரங்கன் –
அணி யாகம் மன்னும் -செங்கயல் பாய் நீர்த் திருவரங்கத்தாய் -என்கிறபடியே உபய காவேரி களினுடையவும்
ஜல சம்ர்த்தியாலே வளர்ந்த மத்ச்யங்கள் உகளா நின்றுள்ள -கேதாரங்களாலே சூழப்பட்டு -அத்யந்த தர்சநீயமான –
அரங்கத்துக்கு நிர்வாஹனாய் -அத்தையே நிரூபகமாக உடையரான -ஸ்ரீ பெரிய பெருமாளையும் –
அவர் தம்முடைய அழகிய திரு மார்பிலே அலங்கார பூதையாய் -இறையும் அகலகில்லேன் -என்றும்
அப்ரமேயம் ஹிதத் தேஜோ யச்யஸா ஜனகாத்மஜா -என்கிறபடியே பிரபையும் ப்ரபாவனையும் போலே –
அப்ர்தக் சித்தையாய்-ஸ்வரூப நிரூபகையாய் -கொண்டு நித்ய வாசம் பண்ணுமவளாய் –
உபக்ரமத்திலே –பொருந்திய மார்பன் -என்றார் ஆகையாலே –இங்கே மன்னும் -என்கிறார் –

அம் -அழகு
கயல்-மத்ஸ்யம் –
பாய்தல்-சலித்தல்
வயல்-கழனி
அணி -அலங்காரம் –
ஆகம்-மார்பு
மன்னுதல் -பொருந்துதல் –

பங்கய மா மலர் பாவையை –
தாமரை மலரிலே பெரிய பிராட்டியார் அவதரிக்கையாலே அத்தை கடாஷித்து அதற்கு ஒரு மகத்வத்தை சொல்லுகிறார் –
அப்படிப்பட்ட தாமரைப்பூவை பிறப்பிடமாகவும் நிரூபகமாவும் உடையவளாய் –
பால்ய யவன மத்யச்தையான ஸ்ரீ ரெங்க நாயகியாரையும் -அலர்மேல் மங்கை என்னக் கடவது இறே –
பாவை -ஸ்திரீ –
அடியிலே பூ மன்னு மாது என்றார் ஆகையாலே இங்கு பங்கய மாமலர் பாவையை -என்கிறார் –

போற்றுதும் –
இப்படி இருந்துள்ள திவ்ய தம்பதிகளை – மங்களா சாசனம் பண்ணுவோம் –
போற்றுதல்-புகழ்தல் –

ஆசார்யன் சிஷ்யனை திருத்துவது –
சூழ்ந்து இருந்து ஏத்துவர் பல்லாண்டு -என்கிறபடியே -பகவத் விஷயத்திலே யாவதாத்மா பாவியாக-
மங்களா சாசனம் பண்ணிக் கொண்டு போருகை -இறே –
உகந்து அருளின நிலங்களிலே-ஆதர அதிசயமும் -மங்களா சாசனமும் சதாசார்ய பிரசாதத்தாலே வர்த்திக்கும்படி
பண்ணிக்-கொண்டு போரக் கடவன் -என்று ஸ்ரீ வசன பூஷணத்திலே ஸ்ரீ பிள்ளையும் அருளிச் செய்தார் இறே –

ஆக இத்தாலே –
ஸ்ரீ எம்பெருமானார் தம்முடைய நிர்ஹேதுக பரம கிருபையாலே பரகத ஸ்வீகார பாத்ரனான-பின்பு –
அதற்கு பலமாக -இப்படி மங்களா சாசன பரராய் இருந்தோம் என்று –
தாம் பெற்ற பேற்றை-தம் திரு உள்ளத்தை குறித்து அருளிச் செய்து -இப்பிரபந்தத்தை தலை கட்டி அருளினார் ஆய்த்து –

அம் கயல் –போற்றுதும் –
நெஞ்சே பக்தி யெல்லாம் தங்கியது –என்னத் தழைத்து -நம் தலை மிசை -அடிப் பூ மன்ன
பாவையைப் போற்றுதும் -என்று கூட்டிப் பொருள் கொள்க –
ஸ்ரீ திருவரங்கத்தில் நீர் வளம் மிக்கு இருத்தலின் வயல்களிலும் நீர் வற்றாமையினால் அழகிய மீன்கள் –
ஓங்கு பெரும் சென்னலூடு கயல் உகள -ஸ்ரீ திருப்பாவை – 3- என்றபடி உகளா நிற்கின்றன .
செங்கயல் பாய் நீர்த் திருவரங்கம் -என்றார் ஸ்ரீ நம் ஆழ்வாரும் .
ஸ்ரீ தென்னரங்கன் அணி ஆகத்தில் இறையும் அகலகில்லாது மகிழ்ந்து மன்னி உறைகிறாள் –பாவை
வயல்களிலே நீரை விட்டு அகலகில்லாது களித்து உகளா நிற்கின்றன -கயல்கள் –
ஜலான் மத்ஸ்யா விவோத்திரு தெவ்-என்று மீனின் இயல்பு கொண்டவளாகப் ஸ்ரீ பிராட்டியும் கூறப்படுவது காண்க .
நீர் உளது எனின் உளது மீன்
மார்பு உளது எனின் உளள் ஸ்ரீ மா மலர்ப் பாவை
நாரத்தை நீரை பற்றி உள்ளன கயல்கள்
ஸ்ரீ நாராயணனைப் பற்றி உளள் ஸ்ரீ பங்கயப் பாவை –

அணி யாகம் மன்னும் -என்கையாலே பகவானை-ஸ்ரயதே –ஆஸ்ரயிக்கிறாள் என்னும் பொருளும்-
போற்றுதும் -என்கையாலே சேதனர்கள் ஆகிற நம்மாலே ஆஸ்ரயிக்கப் படுகிறாள்-என்னும் பொருளும்
ஸ்ரீ சப்தத்துக்கு காட்டப் பட்டன –
இதனால் சேதனர்கள் உடைய விருப்பத்தை இறைவனைக் கொண்டு நிறைவேற்றித் தரும் தன்மை –
புருஷகாரமாய் இருக்கும் தன்மை-ஸ்ரீ பிராட்டி இடம் உள்ளமை உணர்த்தப் படுகிறது ..
தாமரையைப் பிறப்பிடமாக உடையவள் அதனை விட்டு மார்பிலே மன்னி விட்டாள் –
இதனை விட்டு இனி அகலாள்-அதற்கு ஹேது மார்பின் அழகுடைமை
இது தோற்ற அணி ஆகம் -என்றார் –
பாவை பதுமை போல கணவனுக்கு பர தந்திரையாய் இருத்தல் பற்றி -பெண்களுக்கு உவமை ஆகு பெயர் –

ஸ்ரீ தென்னரங்கனை போற்றிடில் ஸ்வ தந்த்ரன் ஆதலின் -ஒரு கால் நம்மை உதறித் தள்ளவும் கூடும் –
ஸ்ரீ பாவையைப் போற்றிடிலோ -உதறித் தள்ள வழி இல்லை –
ஸ்ரீ பகவானுக்கு பர தந்த்ரையாய் -அவனுக்கு குறை நேராதவாறு நடந்து கொள்வாள்
ஆதலின் –போற்றுதல் பயன் பெற்றே தீரும் -என்பது கருத்து .

பக்தி யெல்லாம் தங்கியது என்னத் தழைத்து –
இங்கே பக்தி என்பது பேற்றினைப் பெறற்கு சாதனமாகக் கைக் கொள்ளும் சாதனா பக்தி யன்று -.
போஜனத்திற்கு பசி போலே பேற்றினைத் துய்த்துதற்கு -தேவைப் படுகின்ற வேட்கை யாகும் –
இது ப்ராப்ய ருசி -எனப்படும் –
அந்த ப்ராப்ய ருசி எந்த விதம் யெல்லாம் வர வேண்டுமோ -எவ்வளவு வர வேண்டுமோ –
அவ்விதம் அவ்வளவு -முழுவதும் நிறைவேற வேண்டும் .
பிராப்ய ருசி முழுதும் நம்மிடம் குடி புகுந்து விட்டது -என்று சொல்லலாம்படி தழைத்து இருக்க வேண்டும் –
என்று அமுதனார் ஆசைப் படுகிறார்

இவர்க்கு பிராப்யம் -ஸ்ரீ எம்பெருமானார் அடிப்பூ மன்னுதல் –
அதனுக்கு ஏற்ப பூரணமாக ப்ராப்ய ருசியை வேண்டுகிறார் .
தழைத்து மன்ன -என இயைக்க –
பசித்து உண்ண -என்பது போன்றது இது –
நெஞ்சே -பேற்றினைப் பெற அவாவுகின்ற நெஞ்சே
போந்தது என் நெஞ்சு என்னும் பொன் வண்டு உனதடிப் போதில் ஒண் சீராம் தெளிதேன் உண்டு அமர்ந்திட வேண்டி -100 –
என்று இப் பேற்றின் சுவையைத் துய்ப்பதற்கு -தம் நெஞ்சு முற்பட்டதை முன்னரே கூறினார் அன்றோ –

நெஞ்சே சரணாரவிந்தம் நாம் மன்னி வாழ -என்று தொடங்கினவர்
நெஞ்சே நம் தலை மிசை அடிப்பூ மன்ன -என்று முடிக்கிறார் .
நம் தலை மிசை –அடிப்பூ மன்–நம் தலை மிசை -தலை குளித்து பூசூட விரும்புவர் போன்று சரணாரவிந்தம்
எப்போதோ என்று ஆசைப் பட்டுக் கொண்டு இருக்கிற நம் தலையிலே -என்றபடி
பொங்கிய கீர்த்தி -பரந்த புகழ் –திக்குற்ற கீர்த்தி –என்றார் முன்னம் –

அடிப்பூ நம் தலைமிசை மன்ன –மன்னும் பாவையைப் போற்றுதும் -என்கிறார் –
தான் அணி யாகத்தில் மன்னி இருப்பது போலே நம் தலை மிசை அடிப்பூ மன்னி இருக்கும்படி
செய்வதற்காக பாவையை ஆஸ்ரயிப்போம் என்கிறார் .
போற்றுதல்-ஆஸ்ரயித்தல்-புகழுதலும் ஆம் –
உயரினங்கள் அனைத்துக்கும் தம் தம் தகுதிக்கு ஏற்ப -கோரும் அவ்வச் செல்வங்களை –
தன கருணோக்தங்களால் உண்டாக்கி -அளிக்க வல்லவளான ஸ்ரீ பிராட்டியே
சரம பர்வ நிஷ்டர் – தம் தகுதிக்கு ஏற்ப கோரும் ப்ராப்ய ருசி எனப்படும் –
பக்தியின் வளப்பமும்-ப்ராப்யமான -அடிப்பூவுமாகிற செல்வங்களை தந்து அருளால் வேண்டும் என்பதையும் –
சரம பர்வ நிஷ்டருக்கு ப்ராப்யம் ஆசார்ய சரணாரவிந்தம் என்பதையும் –
அது –அதர பரத்ர சாபி நித்யம் யதீய சரணவ் சரணம் மதியம் –ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னம் -3 –
இங்கும் பரம பதத்திலும் எவருடைய திருவடிகள் என்றும் எனது சரணாம் -என்றபடி
பிரிவின்றி நிரந்தரமாய் உள்ளதொன்று என்பதையும்
இத்தகைய பேற்றினில் மிக்க ஈடுபாடு உடையோர் ஆசார்ய நிஷ்டைக்கு அதிகாரிகள்
என்பதையும் இங்கே ஸ்ரீ அமுதனார் காட்டி அருளினார் ஆயிற்று –

வந்து அருளி நெஞ்சில் இடம் கொண்டதுக்கு இதுவே பலன்
சரணார விந்தம் நாம் மன்னி வாழ -அடி பூ மன்ன -பலன் பாவையை போற்றுவதே என்கிறார்–

முதல் பாசுரத்தில் தொடங்கிய வண்ணமே -இந்த பாசுரத்திலும் முடித்து இருக்கும் அழகுகண்டு களிக்கத் தக்கது .-
பூ மன்னு மாது தொடக்கத்தில் வருகிறாள் –
பங்கய மா மலர் பாவை முடிவிலே வருகிறாள் .
அங்கே மார்பிலே போருந்தினவல் வருகிறாள்
இங்கே அணி யாகத்திலே மன்னுமவள் வருகிறாள் .
அங்கே மன்னி வாழ சரணாரவிந்தம் வருகிறது –
இங்கே மன்ன அடிப்பூ முடியிலே அடியிட வருகிறது –
இரண்டு இடங்களிலும் நெஞ்சு பாங்காய் அமைகிறது .
இராமானுசன் சரணாரவிந்தம் -நம் தலை மிசை மன்ன -மலர் சூடி மங்கள வாழ்க்கை பெற்று –
நிரந்தரமாக வீற்று இருப்பதற்கு -மங்கள வடிவினளான மலர் மகளை போற்றிடுவோம் என்பது
இந்தப் பிரபந்தத்தின் திரண்ட பொருளாகும்

குருகூரன் மாறன் அடி பணிந்துய்ந்த குருவரன் தான்-தரு கூரன் பார்ந்த திருமலை நல்லவன் தந்தனனால்-
குருகூரர் நாதன் சரண் சேரமுதன் குலவு தமிழ்-முருகூரந்தாதி யமிழ்தினை இப்பார் முழுதுக்குமே – –

குருவரன் -சிறந்த ஆசாரினாகிய ஸ்ரீ எம்பெருமானார் –
கூரன்பு -மிக்க அன்பு
ஆர்தல் -நிறைதல்
திருமலை நல்லவன் -ஸ்ரீ திரு மலை நல்லான்
குருகூர் நாதன்-குருவான ஸ்ரீ கூரத் ஆழ்வான்
அமுதன் -ஸ்ரீ திருவரங்கத் தமுதனார்
குலவுதல்-கொண்டாடுதல் -பழகுதலுமாம்
முருகு -மணம் -தேனுமாம் –
நல்லவன் அமிழ்தினை இப்பார் முழுதுக்கும் தந்தனன் -என்று கூட்டி முடிக்க –

——————–

தேன் அமரும் பூ மேல் திரு நமக்கு என்றும் சார்வு -மூன்றாம் திருவந்தாதி – 100-

செங்கயல் பாய் நீர்த் திருவரங்கம் -திரு வாய் மொழி -7 2-1-

நங்கள் திரு (இரண்டாம் திருவந்தாதி -56-திருமாலை முன் பேணிக் காட்டும் -பொன் மேனி காட்டா முன் ) என்றும்
உன் திரு (திரு வாய் மொழி 10-10-2 -மார்வத்து மாலை -உனக்கே திரு என்றும் உன் திரு -விஷ்ணுவுக்கும் சொத்து) –
என்னலாம் படி இரண்டு இடத்திலும் விட ஒண்ணாத பந்தம் உண்டு ..

செல்வர் பெரியர் (நாய்ச்சியார் திருமொழி 10-10-சிறு மானிடர் நாம் )
அவன் எவ் இடத்தான் நான் யார் ( அம்மான் ஆழிப் பிரான்-திரு வாய் மொழி 5-1-7 ) என்றும் –
செய் வினையோ பெரிதால் (திரு வாய் மொழி 4-7-1 ) என்று
(சீலமில்லாச் சிறியனேலும்–ஆத்மா அணு மட்டுமே உள்ளது ஞானம் மறைந்து -செய்வினையோ தத்வத்ரயத்தை விட பெரியதாக இருப்பதால் -)
அவன் பெருமையையும் , தங்கள் தண்மையையும் அபராதத்தின் கனத்தையும் நினைத்து அஞ்சினவர்கள்

இலக்குமணனோடு மைதிலியும் ( பெரிய திரு மொழி 2-3-7 ) என்னும் படி ,
தன்னோடு ஒரு கோவையான இளைய பெருமாளோ பாதி
கீழ் மகன் மற்றோரு சாதி ( பெரிய திருமொழி 5-8-1 ) பிரதம பதார்த்தம் ..

சிறு காக்கை ( பெரியாழ்வார் திரு மொழி 3-10-6 )
புன்மையாளன் (பெரிய திரு மொழி 10-2-8 )
அடியார் ( பெரியாழ்வார் திரு மொழி 4-9-2 ) என்று தண்மை பாராமல்

நாடும் காடும் மேடும் கல்லும் கடலும் ஒரு வெளுப்பாம் படி ,
பங்கயத்தாள் திரு வருள் (திரு வாய் மொழி 9-2-1 ) என்கிற தன்னுடைய காருண்ய வர்ஷத்தைச் சொல்லுகிற

மழைக் கண்களுடைய ( திரு விருத்தம் -52 )
பார் வண்ண மட மங்கையாய் ( ) அசரண்ய சரண்யையான இவளே நமக்கு புகல் என்று
புகுந்து கைங்கர்ய பிராப்த உபாயத்தில் அபேக்ஷிக்கல் தோற்ற விண்ணப்பம் செய்யும் வார்த்தைகளைக் கேட்டு –

அஸ்து தே என்று தொடங்கி இவர்கள் வினைகள் தீர்த்து
தூவி சேர் அன்னமான (பெரிய திருமொழி 3-7-9 ) தன் சிறகிலே இட்டுக் கொண்டு ,
ஈஸ்வரன் இத்தலையிலே பிழைகளை நினைத்து
எரி பொங்கி (நான்முகன் திருவந்தாதி -21 )
அழல விழித்து (பெரியாழ்வார் திருமொழி 1-8-5 )
சலம் புரிந்து ( திரு நெடும் தாண்டகம் -6 ) அங்கு அருள் இன்றிக்கே சீறி – கலங்கின அளவிலே

நன் நெஞ்சவன்ன மன்னமை தோற்ற (பெரிய திருமொழி 7-2-7 ) கால் வாங்கி கடக்க நின்று இரண்டு தலையும் பட்டது பட
நம் கோலரியான குடி இருப்பை முதல் திருத்த வேணும் என்று பார்த்து

ஹிரண்ய வர்ணனையான தன்னுடைய பாண் மொழிகளாலே (பெரியாழ்வார் திரு மொழி 3-10-5 )
பிரிய ஹிதங்கள் குலையாதபடி இடம் அற வார்த்தை சொல்லி ஆர விட்டு

வடி கோல வாள் நெடும் கண்களாலே ( ) தேற்றி

திரு மகட்கே தீர்ந்த வாறு ( முதல் திரு வந்தாதி -42 ) என்னும் படி
திரு உள்ளம் மாறாடின அளவிலே ஓடம் ஏற்றி கூலி கொள்வாரைப் போல அபராதங்களைப் பொறுப்பித்து

பொன் பாவை ஆனமை (நான் முகன் திருவந்தாதி -59 ) தோற்றும் படி விளக்குப் பொன் போல
இரண்டு தலையையும் பொருந்த விட்டு

நமக்கும் பூவின் மிசை நங்கைக்கும் இன்பன் (திரு வாய் மொழி 4-5-8 ) என்னும் படி ஏக ரசமாக்கி பின்பு
அந்தப்புரத்தில் ஆளாய் நின்று

இரந்து உரைப்பது உண்டு (திருச்சந்த விருத்தம்-101 )
வேறே கூறுவது உண்டு ( பெரிய திரு மொழி 6-3-7 )
நின்று கேட்டு அருளாய் (திரு விருத்தம் -1 )
போற்றும் பொருள் கேளாய் (திருப் பாவை -29 ) என்று இவன் விண்ணப்பம் செய்யும் வார்த்தைகளை

திரு மங்கை தங்கிய (நாய்ச்சியார் திரு மொழி -84)
என் திரு மார்வற்கு (திரு வாய் மொழி 6-8-10 )
ஒரு வாய் சொல் (திரு வாய் மொழி 1-4-7 )
என் வாய் மாற்றம் ( திரு வாய் மொழி 9-7-6) என்னும் படி சேர இருந்து
திருச் செவி சாத்துகையாலே ஸ் ருணோதி /ஸ்ரா வயதி -என்கிற இரண்டாலும்
புருஷகாரமான இவளுடைய செயல்களைச் சொல்லுகிறது ..

செய் தகவினுக்கு இல்லை கைம்மாறு ( பெரிய திருமொழி 5-8-2 ) என்று இரண்டு தலைக்கும் தலை தடுமாறாக உபகரித்து
தன் சொல் வழி போக வேண்டும் படியான திருவடியோடே மறுதலிக்கும் அவள்

தான் முயங்கும் படியான போக்கியதைக்குத் தோற்று (மூன்றாம் திருவந்தாதி -100 ) எத்தைச் செய்வோம் என்று தலை தடுமாறி

நின் அன்பின் வழி நின்று ( பெரியாழ்வார் திரு மொழி 3-10-7)
அதனின் பின்னே படர்ந்தான் ( பெரிய திரு மொழி 2-5-6 ) என்னும் படி ,

விளைவது அறியாதே முறுவலுக்குத் தோற்று தன் சொல் வழி வரும் அவனைப் பொறுப்பிக்கும்
என்னும் இடம் சொல்ல வேண்டா இறே ..

—————————————————————————————————————————————————–———————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ ராமானுஜ நூற்றந்தாதி பாசுரமும்- ஸ்ரீ ஆழ்வார் பாசுரங்களும் –107–இன்புற்ற சீலத்து இராமானுச என்றும் எவ்விடத்தும்-இத்யாதி –

June 4, 2020

ஸ்ரீ பெரிய ஜீயர் அருளிய உரை ––அவதாரிகை –

இப்படி தம் பக்கலிலே வ்யாமோஹத்தை பண்ணா நிற்கிற ஸ்ரீ எம்பெருமானார் உடைய திரு முகத்தைப் பார்த்து –
தேவரீருக்கு விண்ணப்பம் செய்ய வேண்டுவது ஓன்று உண்டு -என்று தம்முடைய அபேஷிதத்தை விண்ணப்பம் செய்கிறார் –

ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை–அவதாரிகை–

கீழ்ப் பாட்டிலே ஸ்ரீ எம்பெருமானார் தம்முடைய திரு உள்ளத்திலே புகுந்து நிரதிசய ப்ரீதி யோடு கூட
நித்ய வாசம் பண்ணா நின்றார் -என்று தம் அளவிலே அவர் பண்ணின விஷயீ காரத்தை அனுசந்தித்து –
இதிலே
அப்படி பட்ட வியாமோஹத்தையும் நிரவதிக சௌசீல்யத்தையும் உடையவரே என்று சம்போதித்து –
அஸ்திகதமாய் நின்று நலிய கடவ வியாதிகளுக்கு பாஜநமான சரீரங்கள் தோறும் ஜநிப்பது மரிப்பதாய் கொண்டு –
அசங்க்யேயமான துக்கங்களை அனுபவித்து உரு மாய்ந்து முடியிலும் –சர்வ தேச சர்வ கால சர்வ அவச்தைகளிலும்—
தேவரீருக்கு அனந்யார்ஹராய் இருக்குமவர்கள் பக்கலிலே அதி வ்யாமுக்தனாய் -அவர்களுக்கு க்ரய விக்ரய அர்ஹனாய்
கொண்டு அடிமைப் படும் படி அடியேனைப் பண்ணி அருள வேண்டும் என்று தம்முடைய அபேஷிதத்தை விண்ணப்பம்-செய்கிறார் –

ஸ்ரீ அமுது விருந்து-ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள்-அருளிய உரை–அவதாரிகை-

தன்னுடைய மேன்மையைப் பாராது -எனது தண்ணிய இதயத்து உள்ளே இன்பமாய் இடம் கொண்டு இருக்க வேண்டுமானால் –
ஸ்ரீ எம்பெருமானாருக்கு என் மீது எவ்வளவு வ்யாமோஹம் இருக்க வேண்டும் என்று –
அவரது வ்யாமோஹத்திலும் சீல குணத்திலும் தாம் ஈடுபட்டமை தோற்ற – அவரை விளித்து –
தாம் ஒரு விண்ணப்பம் செய்யப் போவதாகச் சொல்லி –
எத்தகைய துன்பம் நேரும் காலத்திலும் தேவரீர் தொண்டர்கட்கு அன்புடன் நான் ஆட்படும்படி யாக
அருள் புரிய வேண்டும் என்று தமக்கு வேண்டியதை விண்ணப்பம் செய்கிறார் .

இன்புற்ற சீலத்து இராமானுச என்றும் எவ்விடத்தும்
என்புற்ற நோய் உடல் தோறும் பிறந்திறந்து எண்ணரிய
துன்புற்றுவீயினும் சொல்லுவது ஓன்று உண்டு உன் தொண்டர்கட்கே
அன்புற்று இருக்கும்படி என்னை யாக்கி யங்கு யாட்படுத்தே – – – 107- –

பத உரை –
இன்புற்ற -தண்ணிய என் இதயத்தில் இடம் பெற்று ஆனந்தம் அடைந்த
சீலத்து -பழகும் இயல்பு வாயந்துள்ள
இராமானுச -ஸ்ரீ எம்பெருமானாரே
சொல்லுவது -தேவரீரிடம் விண்ணப்பம் செய்வது
ஓன்று உண்டு -ஒரு விஷயமிருக்கிறது
அது யாது எனில் –
என்பு உற்ற நோய் -எலும்பைப் பற்றி நின்று வருத்தும் நோய்கள் உடையதான
உடல் தோறும் -ஒவ்வொரு சரீரத்திலும்
பிறந்திறந்து -பிறப்பதும் சாவதுமாய்
எண் அறிய -எண் இல்லாத
துன்பு உற்று –துன்பம் அடைந்து
வீயினும் -ஒழிந்தாலும்
என்றும் -எக் காலத்திலும்
எவ்விடத்தும் -எல்லா இடத்திலும்
உன் தொண்டர்கட்கே -தேவரீருடைய அடியார்களுக்கே
அன்புற்று இருக்கும்படி -அன்பு உடையேனாய் இருக்கும்படியாக
ஆக்கி -செய்து
என்னை-அடியேனை
அங்கு -அவ்வடியார்கள் திறத்திலே
ஆட்படுத்து -அடிமையாம்படி பண்ணி யருள வேணும்

வியாக்யானம் –
எத்தனையேனும் தண்ணியனான என்னுடைய ஹ்ருதயத்திலே வந்து புகுந்து – அது தன்னைப் பெறாப் பேறாக நினைத்து –
ஆநந்த நிர்பரராய் -எழுந்து அருளி இருக்கிற சௌசீல்யத்தை உடையவரே –
இப்படி இருக்கிற தேவரீருக்கு விண்ணப்பம் செய்ய வேண்டுவது-ஒரு கார்யம் உண்டு –
அது ஏது என்னில் –
ஐயார் கண்டமடைக்கிலும் நின் கழல் எய்யாது ஏத்த –என்னுமா போலே -ஸ்ரீ திரு வாய் மொழி -2 9-3 – –
தோற்புரையே போமதன்றியிலே அஸ்த்திகதமாய் இன்று நலிய கடவ வியாதிகளுக்கு பாஜனமான சரீரங்கள் தோறும் –
ஜநிப்பது மரிப்பதாய் – அசங்க்யேய துக்கங்களை அனுபவித்து முடியிலும்
சர்வ காலத்திலும் -சர்வ தேசத்திலும் -தேவரீருக்கு அனந்யார்ஹ்ராய் இருக்கும் அவர்களுக்கே மாறுபாடுருவின
ஸ்நேஹத்தை உடையேனாய் இருக்கும்படியாக செய்து என்னை அவர்கள் திருவடிகளிலே அடிமையாம்படி பண்ணி யருள வேணும் .
இதுவே அடியேனுக்கு புருஷார்த்தம் -என்று கருத்து .

இன்பு -சுகம்
சீலமாவது -பெரியவன் தண்ணியன் உடன் புரையறக் கலக்கும் ஸ்வபாவம்
என்பு -எலும்பு
துன்பு -துக்கம் –

தொண்டர்கட்கே –ஏவகாரம் -உமக்கும் ஸ்ரீ ஆழ்வாருக்கும் அவனுக்கும் இன்றி –
அடியார் அடியார் -அவர்க்கே அல்லால் -அவர்க்கே குடிகளாய் செல்லும் நல்ல கோட்ப்பாடு என்னைப் பண்ணி –
அங்கு ஆள்படுத்தே –கிரய விக்ர அர்ஹமாகும் படி –
இப்பொழுது தான் விண்ணப்பம் செய்ய -முன்பு சொன்னது எல்லாம் இதற்கு தயார் பண்ணி –
ஸ்ரீ கீதாச்சார்யன் -அர்ஜுனனை தயார் பண்ணி அருளிச் செய்தால் போலே –குஹ்ய தமம் –
பக்தி பண்ணி சொல்ல -மன்மனா பாவ இத்யாதி –
ஸ்ரீ பெரும் பூதூர் மட்டும் இல்லை -ஸ்ரீ எம்பார் ஸ்ரீ முதலியாண்டான் ஸ்ரீ கூரத் ஆழ்வான் ஸ்ரீ திருப் கட்சி நம்பி
திருவவதார ஸ்தலங்களுக்கு போக வேண்டுமே –
2-பாசுரத்தில் உபக்ரமித்து மிக்க சீலம் அல்லால் இதிலும் -இன்புற்ற சீலத்து இஇராமாநுச என்று உப சம்ஹரிக்கிறர் –
ஆக்கி ஆள்படுத்தி- மனசில் உணரவைத்து கைங்கர்யமும் கொள்ள வேணுமே –
அடியேன் செய்ய விண்ணப்பம் ஸ்ரீ ஆழ்வார் தொடங்கும் பொழுதே பிரார்த்தித்து –
இங்கு ஸ்ரீ அமுதனார் விண்ணப்பம் செய்த உடனே தலைக் கட்டி அருளுகிறார் ஸ்வாமி –
23-பாசுரம் -யாம் வந்த கார்யம் ஆராய்ந்து அருள் -பிரார்த்தனை –அச்சமயத்தில் சொல்லும் அசடு இல்லையே –
29-பாசுரத்தில் உற்றோமே ஆவோம் -உனக்கே ஆட் செய்வோம் –கைங்கர்ய பிரார்த்தனை -சரணாகதிக்கு அப்புறம் தானே –
இங்கு சொல்லுவது ஓன்று உண்டு சொல்லி அடுத்த வரியில் -என்ன என்கிறார் -இன்புற்ற சீலவான் ஸ்வாமி என்பதால் –
தொண்டர்களுக்கே -ஏக -சப்தம் தானும் பிறருமான -தானும் இவனுமான நிலையையும் கழித்து
வெளி உள் இரண்டையும் கழித்து என்றபடி –
உபாய பரமாக இல்லை ப்ராப்ய பரமாக

இன்புற்ற சீலத்து இராமானுசா –
ஸ்ரீ திரு வேம்கட முடையானுக்கும் ஸ்ரீ திரு குறும்குடி நம்பிக்கும்
திரு இலச்சினையும் -ஸ்ரீ பாஷ்யதையும் பிரசாதித்த ஸ்ரீ ஆசார்யராகவும் –
ஸ்ரீ செல்லப் பிள்ளைக்கு பிதாவாயுமாய் இருக்கிற தேவரீருடைய மதிக்கையும் –
அத்யந்த பாபிஷ்டனான என்னுடைய தண்மையையும் பாராதே –
என்னை தேவரீருக்கு அவ்வருவாக எண்ணி -என்னுடைய ஹிருதயத்திலே வந்து புகுந்து –
அது தன்னையே பெறாப் பேறாக நினைத்து – ஆனந்த நிர்பரராய் எழுந்து அருளி இருக்கிற சௌசீல்யத்தை
உடைய ஸ்ரீ எம்பெருமானாரே –
இன்பு -ஸூகம்
சீலமாவது பெரியவன் தண்ணியரோடு புரை யறப் பரிமாறும் ஸ்வாபம் –
இப்போதாக காணும் இவருடைய-சீலம் அமுதனாருக்கு வெளியாகத் தொடங்கிற்று-

இன்புற்ற சீலத்து இராமானுச
மிகத் தண்ணியனான எனது இதயத்துள்ளே இருப்பதை பெறாப் பேறாக கருதி இன்பத்துடன்
எழுந்து அருளி வுள்ளமையால் -என்னிடம் உள்ள வ்யாமோஹம் வெளிப்படுகிறது
இந்த வ்யாமோஹம் எவ்வளவு குற்றங்கள் நிறைந்து இருந்தாலும் அவற்றை நற்றமாக தோற்றும்படி செய்து விடுகிறது
ஸ்ரீ சர்வேஸ்வரன் சேதனர்கள் இடம் உள்ள வ்யாமோஹத்தாலே அவர்களோடு மிகப் புல்லிய இதயத்திலே குற்றம் தோற்றாமல்
அது நற்றமாக தோன்ற எழுந்து அருளி இருப்பது போன்றது இதுவும் என்க-
அனைவருக்கும் ஈசானன் மத்தியில் இதயத்தில் கட்டை விரல் அளவினனாய் எழுந்து அருளி உள்ளான் .

ஸ்ரீ ஈச்வரனே இருப்பதால் அருவருப்பதில்லை -என்னும் உபநிஷத்தும்
தத பூத பவ்ய ஈச்வரத்வாதேவ வாத்சல்யாதிசயாத் தேக கதாநபி தோஷான் போக்யதயா பச்யதீத்யர்த்த -என்று
ஆகையினாலே முற்காலத்தவருக்கும் பிற்காலத்தவருக்கும் ஸ்ரீ ஈச்வரனே இருப்பதனாலேயே வாத்சல்யம் மிக்கதனால்
தேஹத்தில் உள்ள தோஷங்களையும் போக்யமாகப் பார்க்கிறான் -என்று பொருள்

ஸ்ரீ வேதாந்த தேசிகனும் –
ஔதன்வதே மதி சத்மனி பாசாமானே ச்லாக்க்யே ச திவ்ய சதனே தமஸ பரஸ்தாத்
அந்த களேபரமிதம் சூஷிரம் சூசூஷ்மம் கரீச கதமா தர்ண ஸ்பதம் தே -ஸ்ரீ வரதராஜ பஞ்சாசத் – 21-
ஸ்ரீ திருப்பாற்கடலின் கண் உள்ள பெரிய இல்லம் இலங்கிக் கொண்டு இருக்கும் போது –
பிரகிருதி மண்டலத்துக்கு அப்பால் கொண்டாடத் தக்க அப்ராக்ருதமான திரு மாளிகையும் துலங்கிக் கொண்டு இருக்கும் போது –
சரீரத்துக்கு உள்ளே மிகவும் நுண்ணிய இந்தப் பொந்து-ஸ்ரீ அத்திகிரிப் பெருமாளே -எப்படி நீ ஆதரிக்கும் இடம் ஆயிற்று –
என்று அருளிய ஸ்லோகமும் நினைவிற்கு வருகின்றன –

ஸ்ரீ இறைவனும் தம் இதயத்தில் இடம் தேடி வரும்படியான ஏற்றம் வாய்ந்த ஸ்ரீ எம்பெருமானார் –தமது மென்மையை-மேன்மையை –
நோக்காது -மிகத் தாழ்ந்தவனான எனது இதயத்து உள்ளே –பதிந்து உரையும்படியாக -என்னோடு பழகினால் –
அந்த சீல குணத்தை என் என்பது -என்று
வ்யாமோஹம் -அதானாலாய வாத்சல்யம் சீலம் -என்னும் குணங்களில் ஈடுபட்டு இன்புற்ற சீலத்து இராமானுச –என்று விளிக்கிறார் .
தாம் சீரிய புருஷார்த்தத்தை பெற விண்ணப்பிக்கப் போவது வீணாகாது -பயனுறும் -என்னும்
தமது துணிபு தோன்ற இங்கனம் விளிக்கின்றார் -என்று அறிக –
சீலமாவது-பெரியவன் சிறியவனோடு வேற்றுமை தோன்றாமல் பழகுதல் –
மிக்க சீலமல்லால் உள்ளாதென்நெஞ்சு– 2- என்று முதலில் சீல குணத்தில் ஈடுபட்டவர் முடிவிலும் ஈடுபடுகிறார் .

சொல்லுவது ஓன்று உண்டு –
சர்வஞ்ஞாரான தேவரீருக்கு விண்ணப்பம் செய்ய வேண்டுவது ஓன்று உண்டு –
நத்வே வாஹம் -என்று தொடங்கி- கர்ம ஞான பக்திகளை பரக்க உபதேசித்து கொண்டு போந்து –
சர்வ குஹ்ய தமம்-பூய ஸ்ருணுமே பரமம் வச -என்று உபதேசிக்கும் போது ஸ்ரீ கீதச்சர்யன் அருளிச் செய்தால் போலே இவரும் –
இராமானுசா இது என் விண்ணப்பமே -என்கிறபடியே இவ்வளவும் தம்முடைய அபிநிவேசம் எல்லாம் விண்ணப்பம் செய்து
இப்பாட்டிலே தம்முடைய அபேஷிதத்தை நிஷ்கரிஷித்து அருளிச் செய்கிறார் –
அங்கு சேஷி உடைய உக்தி –இங்கு சேஷ பூதனுடைய அபேஷிதம் –
ஒரு பிரயோஜனம் உண்டு என்றீர் அது என் என்ன –

சொல்லுவது ஓன்று உண்டு
என்றும் எவ்விடத்தும் —அங்கு ஆட்படுத்து –தாம் அறுதி இட்டு இருக்கிற புருஷார்த்தத்தை திரு உள்ளத்திலே இறுதியாகப்
படும்படி செய்து கார்யத்தை நிறைவேற்றிக் கொள்வதற்காக நயந்து -சொல்லுவது ஓன்று உண்டு -என்கிறார் –
இரந்து உரைப்பது உண்டு -திரு சந்த விருத்தம் – 101- என்று ஸ்ரீ எம்பெருமானிடம் ஸ்ரீ திரு மழிசைப் பிரான்-
விண்ணப்பித்தது போலே விண்ணப்பிக்கிறார் ..
எத்தனை கஷ்டம் நேர்ந்தாலும் சித்தம் சிதறாது தேவரீர் தொண்டர்கள் இடம் அன்பு மாறாமல் அவர்களுக்கே அடிமை
செய்யும்படியான நிலைமையை அடியேனுக்கு அளித்து அருள வேணும் – என்று புருஷார்த்தத்தை வடி கட்டி அபேஷிக்கிறார் .

என்புற்ற நோயுடல் தோறும்-பிறந்து இறந்து எண்ணரிய துன்புற்று –
நோய் -வியாதி -அதாகிறது -ஆத்யாத்மிகாதி துக்கங்கள் –
அந்த நோயானது அந்தர்பஹிந்திரிய வியாபார ரூப ஸ்வ க்ரத கர்ம பலம் ஆகையாலே தோற்புரையே போமது அன்றிக்கே –
அஸ்திகதமாய் கொண்டு இருக்கையாலும் ஆத்மா நாசகம் ஆகையாலும் –என்புற்ற –என்று விசேஷிக்கிறார் –

என்பு -எலும்பு –
உறுகை -அத்தைப் பற்றி நிற்கை –
உடல் தோறும் -அப்படி அஸ்திகதங்களாய் கொண்டு நலியக்-கடவ வியாதிகளுக்கு பாஜநமான சரீரம் தோறும் –
துர்வார துரித மூலம் துஸ்தர துக்காநாம் பந்த நீ ரந்தரம்வபு -என்னக் கடவது இறே –
அன்றிக்கே –
நோயெல்லாம் பெய்ததோர் ஆக்கை –என்கிறபடியே
அந்த வியாதி தானே உருக் கொண்டு இருக்கிற -தேவ திர்யக் மனுஷ்ய ஸ்தாவர ரூபமான சரீரங்கள் என்று என்னுதல்-
ஜன்ம பரம்பரைகள் தோறும் -என்றபடி-பிறந்து இறந்து என்ற இது மற்ற அவஸ்த தாந்தரங்களுக்கும் உப லஷணம் –
இறப்பு -நாசம் –

என்புற்று நோய் உடல் தோறும்
தோல் அளவோடு நில்லாது எலும்பைப் பற்றி நின்று வாட்டும் தாபம் -ஷயம் முதலிய வியாதிகளுக்கு
இடமான ஒவ்வொரு சரீரத்திலும் -என்றபடி –
நோயெல்லாம் பெய்ததோர் ஆக்கை -ஸ்ரீ பெரிய திரு மொழி – 9-7 7- – என்றார் ஸ்ரீ திரு மங்கை மன்னனும் .
நோய்களினால் நலிவு விரும் உடல் வாய்ந்த பிறப்புக்கள் தோறும் -என்றது ஆயிற்று –
தேவரீர் தொண்டர்கட்கே அன்புற்று ஆட்படுத்தப் பெறுவேன் ஆயின்
நோய்களினால் நலிவுறும் பல பிறப்புக்கள் நேரினும் நல்லதே -என்று கருத்து –

பிறந்து இறந்து எண்ணற்ற துன்புற்று வீயினும் –
அவ்வவ ஜன்மங்களிலே ஜநிப்பது-மரிப்பது தொடக்கமான அவஸ்தா சப்தகத்திலும் விரலை மடக்கி ஓன்று இரண்டு என்று
எண்ணப் புக்கால்-அது கால தத்வம் உள்ள அளவும் எண்ணினாலும் எண்ணித் தலைக் கட்ட அரிதான துக்கங்களை ஒன்றும்-
பிறிகதிர் படாதபடி அனுபவித்து முடியிலும் –
போற்றலும் சீலத்து இராமானுச –என்கிறபடியே
தேவரீர் உடைய-சீல குணத்தை அளவிட்டு சொல்லினும் -இஸ் சரீர அனுபந்தியான துக்கத்தை அளவிட்டு
சொல்ல ஒண்ணாது என்கிறார் காணும் –
துன்பு –துக்கம் –

பிறந்து இறந்து எண்ணரிய -துன்புற்று வீயினும்
பிறப்பு இறப்புகளை சொன்னது ஏனைய இருத்தல் -மாறுபடுதல்-வளர்த்தல் தேய்தல் என்னும்
விகாரங்களுக்கும் உப லஷணம்.
ஆக பொருள்களுக்கு உள்ள ஆறு விகாரங்களும் கூறப் பட்டன ஆகின்றன .
இனி அவஸ்தாசப்தகம் எனப்படும்
கர்ப்பம் ஜன்மம் பால்யம் யவ்வனம் வார்த்தகம் மரணம் நரகம் என்னும் இவைகளைக்
கூறப்பட்டனவாகக் கொள்ளலுமாம் .
இந்த விகாரங்களுக்கு உள்ளாவதோடு எண்ணற்கு அரிய துன்பங்களால் தாக்கப்பட்டு படு-
நாசத்துக்கு உள்ளாக்கும் நிலை ஏற்படினும் ஏற்படுக –
தேவரீர் தொண்டர்கட்கே அன்பனாய்-அடிமை யாக்கப் பெறின் அவைகளும் ஏற்கத் தக்கனவே -என்கிறார் .
இறத்தல் சரீரத்திற்கு நேருவது–வீதல் ஆத்மாவுக்கு நேரிடும் உழலுதலாகிற படு நாசத்தை கூறுகிறது -என்று வேற்றுமை அறிக

நான் பிறப்பு இறப்பு வேண்டாம் துன்புற்று வீதல் ஆகாது என்று தேவரீர் இடம் விண்ணப்பிக்கிறேன் அல்லேன் –
எத்தகைய நிலை ஏற்படினும் தேவரீர் தொண்டர்கட்கே அடிமை செய்யும் படி அருள் புரிய வேணும் -என்று
விண்ணப்பிக்கிறேன் என்றார் ஆயிற்று –
பிராணன் பிரியும் போது கபம் தொண்டையை அடைக்கும் காலத்தும் –
நின் கழல் எய்யா தேத்த அருள்-செய் எனக்கே -திருவாய் மொழி -2 9-3 – என்று ஸ்ரீ நம் ஆழ்வார்
பிரார்தித்ததை இங்கு நினைவு கூர்க–
எம்பெருமானார் தொண்டர்கட்கே ஆட்பட்டோருக்கு – உடல் தோறும் பிறந்து இறந்து துன்புற்று வீதல் நேரவே மாட்டா –
நேரினும் ஆட்படும் இன்பத்தை நோக்க அவைகள் இருந்த இடம் தெரியாமல் மறைந்து ஒழியும் என்க –

என்றும் –
எல்லா காலத்திலும் –

எவ்விடத்தும் –
எல்லா இடத்திலும் –

என்றும் எவ்விடத்தும் –
இந்த காலம் இந்த இடம் என்கிற வரையறை இன்றி ஆட்படுத்தப்பட வேணும் -என்க

உன் தொண்டர் கட்கே –
பந்த மோஷங்கள் இரண்டுக்கும் பொதுவாய் இராதே மோஷ-பிரதான தீஷிதராய் அன்றோ –
இவ்வளவாக திருத்தி என்னுடைய ஹிருதயத்திலே புகுந்து நித்ய வாசம் பண்ணா நிற்கிற தேவரீருக்கு
அனந்யார்ஹ சேஷமாய் இருக்கும் அவர்களுக்கே –
அவதாரணத்தாலே –அந்யயோக வ்யவச்சேதம் பண்ணுகிறார் –
உனக்கே நாம் ஆட் செய்வோம் –
தனக்கே யாக எனைக் கொள்ளும் ஈதே —
ஆறேனக்கு நின் பாதமே சரணாக தந்து ஒழிந்தாய் – என்றும்
தமேவ சாத்யம் புருஷம் பிரபத்யே -என்றும் பிரதம பர்வத்தில் சொல்லுகிறபடியே –

குருரேவ பரம் பிரம்ம -என்றும் –
உபாய உபேயே பாவேன தமேவ சரணம் வ்ரஜேத் -என்றும்
தேவு மற்று அறியேன் -என்றும்
தீதில் சரணா கதி தந்த தன் இறைவன் தாளே அரணாக மன்னுமது – என்றும்
சரம பர்வத்தில் சொல்லுகிறபடியே சொல்லுவித்தார் -இறே –

அன்புற்று இருக்கும் படி –
நிரவதிக-பிரேம யுக்தனாய் இருக்கும்படி –
அன்பு -ஸ்நேஹம் –என்னை ஆக்கி -தேவரீருக்கு கிருபா விஷய பூதன் ஆகும் படி என்னைப் பண்ணி –

அங்கு ஆள்படுத்தே –
பவதீயர் திருவடிகளில் விஷயமான எல்லா அடிமைகளிலும் அன்வயித்து-க்ர்த்தார்த்தனாம் படி
பண்ணி அருள வேணும் என்கிறார் –
ஐயார் கண்டம் அடைக்கிலும் நின் கழல் நீங்காது ஏத்த அருள் செய் எனக்கே என்று இப்படியே
ஸ்ரீ ஆழ்வாரும் அருளிச் செய்தார் இறே –

உன் தொண்டர்கட்கே
இன்னார் இணையார் என்று இல்லை –
தேவரீர் தொண்டர்களாய் இருத்தலே வேண்டுவது
தேவரீருக்கு பிரியும் தொண்டினையே குறிக் கோளாக கொண்டவர்களுக்கே என்னை
ஆட்படுத்த வேணும் . அன்புற்று இருக்கும் படி –அங்கனம் ஆட்படுதல் நிலை நின்று முதிர்ந்த அன்பினால்
ஆயதாய் இருத்தல் வேண்டும் .

என்னை யாக்கி அங்கு ஆட்படுத்து –
அன்புடையவனாய் இருக்கும்படியும் செய்ய வேணும் –
ஆட்செய்யும்படியாகவும் பண்ண வேணும்
இரண்டும் வேண்டிப் பெற வேண்டிய புருஷார்த்தங்கள் ஆகும் எனக்கு -என்பது கருத்து –

அன்பின் பயனாய் அடிமை தானே அமையாதோ-எனின் –
இவன் அடிமை செய்திடுக -என்று தேவரீர் இரங்கி தந்ததாய் இருத்தல் வேண்டும் என்கிறார் –
உன் அடியார்க்கு ஆட்படுத்தாய் -திரு பள்ளி எழுச்சி – 10- என்னும் ஸ்ரீ தொண்டர் அடிப் பொடியார்
திருவாக்கினை இங்கு நினைவு கூர்க –

தொண்டர்கட்கே –ஆட்படுத்து –
உனக்கே நாமாட் செய்வோம் –திருப்பாவை – 29- என்று ஸ்ரீ ஆண்டாளும்
தனக்கேயாக எனைக் கொள்ளுமீதே -திருவாய் மொழி -2 -9 -4 – என்று ஸ்ரீ நம் ஆழ்வாரும்
போலப் புருஷார்த்தத்தை நிஷ்கர்ஷித்துத் –தொண்டர்கட்கே ஆட்படுத்து -என்கிறார்

முன்னைய பாசுரங்களில் முன்னிலையாகப் பேசி வந்த ஸ்ரீ நம் ஆழ்வார்
புருஷார்த்தத்தை நிஷ்கர்ஷிக்கும் போது மட்டும் ஸ்ரீ எம்பெருமான் திரு முகத்தை நோக்கி முன்னிலையில் கூறாது –
தனக்கேயாக -என்றது –
முகத்தை நோக்கில் புருஷார்த்தத்தில் கொண்ட துணிவு அவ் அழகினால் குலைவுறும்
என்று கவிழ்ந்து இருந்தமையினால் என்று ரசமாக பணிப்பர் ஸ்ரீ ஆச்சார்யர்கள் –
ஸ்ரீ ஆண்டாள் அங்கன் அன்றிப் புருஷார்த்தத்தை நிஷ்கர்ஷிக்கும் போது அதனில் ஊன்றி நிற்பவள் ஆதலின் –
புருஷார்த்தத்தில் தான் கொண்ட துணிவு குலைவுறுமோ என்னும் அச்சம் ஏற்பட வழி இல்லாமையால் –
ஸ்ரீ கோவிந்தன் முகத்தை நோக்கி –
உனக்கே நாம் ஆட்செய்வோம் -என்று நிஷ்கர்ஷம் செய்து அருளினாள் –
ஸ்ரீ அமுதனாரோ -பிரதம பர்வத்தில் ஸ்ரீ ஆண்டாள் நிஷ்கர்ஷித்தது போல சரம பர்வத்தில் எம்பெருமானார்-திரு முகத்தை நோக்கி –
உன் தொண்டர்கட்கே ஆட்படுத்து -என்று நிஷ்கர்ஷிக்கிறார் .

தொண்டர்கட்கே அன்பும் -ஆட்படுதலும் உபயோகப் படுவனவாய் அமைய வேண்டும் .
தொண்டர்கட்கும் பிறர்க்குமாக ஒண்ணாது
தொண்டர் கட்கே யாக வேணும்
தொண்டர்கட்கும் எனக்குமாக ஒண்ணாது
தொண்டர்கட்கே யாக வேணும் என்பது ஸ்ரீ அமுதனார் செய்யும் புருஷார்த்த நிஷ்கர்ஷமாகும் –

தேவு மற்று அறியேன்- சரணாகதி அருளியவன் தாளே அரணாக மன்னும் அது-
பிரேம யுக்தனாய் -அன்பு-ஆக்கி ஆட் படுத்து என்று பிரார்த்திக்கிறார்–

ஸ்ரீ எறும்பி அப்பா ஸ்ரீ வரவர முனி சம்பந்திகளின் சம்பந்தம் வேண்டும் என்றார்-

———–

குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா உன் தன்னோடு உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது –திருப்பாவை -28-

நீ குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது இற்றைப் பறை கொள்வான் அன்று காண் கோவிந்தா எற்றைக்கும்
ஏழு ஏழு பிறவிக்கும் உன் தன்னோடு உற்றோமே யாவோம் உனக்கே நாம் ஆள் செய்வோம் மற்றை நம் காமங்கள் மாற்று -29-

உனக்குப் பணி செய்து இருக்கும் தவம் உடையேன் இனிப் போய் ஒருவன்
தனக்குப் பணிந்து கடைத்தலை நிற்கை நின் சாயை அழிவு கண்டாய்
புனத்தினை கிள்ளிப் புதுவவி காட்டி உன் பொன்னடி வாழ்க வென்று
இனக்குறவர் புதியது உண்ணும் எழில் மாலிருஞ்சோலை எந்தாய்–பெரியாழ்வார் திருமொழி- 5-3-3-

தனிக்கடலே தனிச்சுடரே தனியுலகே என்று என்று உனக்கு இடமாய் இருக்க என்னை யுனக்கு யுரித்து ஆக்கினையே -5-4-9-

அணி அரங்கத்து அரவணையில் பள்ளி கொள்ளும் அம்மான் தன் அடி இணைக் கீழ் அலர்கள் இட்டு
அங்கு அடியவரோடு என்று கொலோ அணுகு நாளே –பெருமாள் திருமொழி -1-3-

என் அரங்கனுக்கு அடியார்களாய் நாத்தழும்பு எழ நாரணா என்று அழைத்து மெய் தழும்பத் தொழுது ஏத்தி
இன்புறும் தொண்டர் சேவடி ஏத்தி வாழ்த்தும் என் நெஞ்சமே -2-4-

அரங்கன் எம்மானுக்கே மாலையுற்றிடும் தொண்டர் வாழ்வுக்கு மாலையுற்றது என் நெஞ்சமே -2-8-

தில்லை நகர்த் திருச் சித்ர கூடம் தன்னுள் அரசு அமர்ந்தான் அடி சூடும் அரசை அல்லால்
அரசாக எண்ணேன் மற்ற அரசு தானே -10-7-

அத்தனாகி யன்னையாகி ஆளும் எம்பிரானுமாய் ஒத்து ஒவ்வாத பல் பிறப்பு ஒழித்து நம்மை ஆள் கொள்வான்
முத்தனார் முகுந்தனார் புகுந்து நம்முள் மேவினார் எத்தினால் இடர்க் கடல் கிடத்தி ஏழை நெஞ்சமே -திருச்சந்த-115-

மரங்கள் போல் வலிய நெஞ்சம் வஞ்சனேன் நெஞ்சு தன்னால் அரங்கனார்க்கு
ஆள் செய்யாதே அளியத்தேன் அயர்க்கின்றேனே -திருமாலை-27-

எம்பிராற்கு ஆள் செய்யாதே என் செய்வான் தோன்றினேனே -28-

எம்மா வீட்டுத் திறமும் செப்பம்;நின்
செம்மா பாத பற்புத் தலை சேர்த்து;ஒல்லை
கைம்மாத் துன்பம் கடிந்த பிரானே!
அம்மா! அடியேன் வேண்டுவது இஃதே–2-9-1-

செய்யேல் தீவினை என்று அருள் செய்யும் என்
கையார் சக்கரக் கண்ண பிரானே!
ஐயார் கண்டம் அடைக்கிலும் நின்கழல்
எய்யாது ஏத்த அருள் செய் எனக்கே–2-9-3-

தொடை ஒத்த துளவமும் கூடையும் பொலிந்து தோன்றிய தோள் தொண்டர் அடிப் பொடி என்னும் அடியனை
அளியன் என்று அருளி யுன் அடியார்க்கு ஆள் படுத்தாய் பள்ளி எழுந்து அருளாயே –திருப் பள்ளி எழுச்சி -11-

குடி குடியாகக் கூடி நின்று அமரர் குணங்களே பிதற்றி நின்று ஏத்த
அடியவர்க்கு அருளி அரவணைத் துயின்ற ஆழியான் -பெரிய திருமொழி-4-10-9-

தாராளும் வரை மார்பன் தண் சேறை எம்பெருமான் உம்பராளும் பேராளன் பேரோதும்
பெரியோரை ஒரு காலும் பிரிகிலேனே -7-4-4-

தண் சேறை எம்பெருமான் தாளை நாளும் உள்ளத்தே வைப்பாருக்கு இது காணீர் என்னுள்ளம் உருகுமாரே -7-4-9-

நோயெல்லாம் பெய்ததோர் ஆக்கை -பெரிய திரு மொழி – 9-7 7- –

அமலன் ஆதி பிரான் அடியார்க்கு என்னை ஆள் படுத்த விமலன் –அமலனாதி -1-
மனக்கே ஆட் செய் எக் காலத்தும்’ என்று,என்
மனக்கே வந்து இடை வீடு இன்றி மன்னித்
தனக்கே யாக எனைக் கொள்ளும் ஈதே;
எனக்கே கண்ணனை யான் கொள் சிறப்பே–2-9-4-

பயிலும் சுடரொளி மூர்த்தியைப் பங்கயக் கண்ணனைப்
பயில இனிய நம் பாற் கடற் சேர்ந்த பரமனைப்
பயிலும் திரு வுடையார் எவரேலும் அவர் கண்டீர்
பயிலும் பிறப்பிடைதோறு எம்மை ஆளும் பரமரே–3-7-1-

ஆளும் பரமனைக் கண்ணனை ஆழிப் பிரான் தன்னைத்
தோளும் ஓர் நான்குடைத் தூ மணிவண்ணன் எம்மான் தன்னைத்
தாளும் தடக்கையும் கூப்பிப் பணியுமவர் கண்டீர்
நாளும் பிறப்பிடை தோறு எம்மை ஆளுடை நாதரே–3-7-2-

நாதனை ஞாலமும் வானமும் ஏத்தும் நறுந்துழாய்ப்
போதனைப் பொன்னெடுஞ் சக்கரத்து எந்தை பிரான் தன்னைப்
பாதம் பணிய வல்லாரைப் பணியுமவர் கண்டீர்
ஓதும் பிறப்பிடை தோறு எம்மை ஆளுடையார்களே–3-7-3-

குலந்தாங்கு சாதிகள் நாலிலும் கீழ் இழிந்து எத்தனை
நலந்தான் இலாத சண்டாள சண்டாளர்கள் ஆகிலும்
வலந்தாங்கு சக்கரத்து அண்ணல் மணி வண்ணற்கு ஆள் என்று உள்
கலந்தார் அடியார் தம் மடியார் எம் அடிகளே–3-7-9-

அடி ஆர்ந்த வையம் உண்டு ஆலிலை அன்ன வசஞ்செயும்
படியாதும் இல் குழவிப் படி எந்தை பிரான் தனக்கு
அடியார் அடியார் தம் மடியார் அடியார் தமக்கு
அடியார் அடியார் தம் மடியார் அடியோங்களே–3-7-10-

வியன் மூ வுலகு பெறினும் போய்த் தானே தானே ஆனாலும்
புயல் மேகம் போல் திருமேனி அம்மான் புனை பூம் கழல் அடிக் கீழ்
சயமே அடிமை தலை நின்றார் திருத்தாள் வணங்கி இம்மையே
பயனே இன்பம் யான் பெற்றது உறுமோ பாவியேனுக்கே–8-10-2-

தமர்கள் கூட்ட வல்வினையை நாசம் செய்யும் சதிர் மூர்த்தி
அமர் கொள் ஆழி சங்கு வாள் வில் தண்டாதி பல்படையன்
குமரன் கோல வைங்கணை வேள் தாதை கோதில் அடியார் தம்
தமர்கள் தமர்கள் தாமர்களாம் சதிரே வாய்க்க தமியேற்கே–8-10-9-

வாய்க்க தமியேற்கு ஊழி தோறு ஊழி ஊழி மா காயாம்
பூக் கொள் மேனி நான்கு தோள் பொன்னாழிக் கை என்னம்மான்
நீக்க மில்லா வடியார் தம் அடியார் அடியார் அடியார் எம் கோக்கள்
அவர்க்கே குடிகளாய்ச் செல்லும் நல்ல கோட்பாடே–8-10-10-

ஆண்மின்கள் வானகம் ஆழியான் தமர் என்று -10-9-6-

—————————————————————————————————————————————————–———————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ ராமானுஜ நூற்றந்தாதி பாசுரமும்- ஸ்ரீ ஆழ்வார் பாசுரங்களும் –106–இருப்பிடம் வைகுந்தம் வேங்கடம் மாலிரும் சோலை யென்னும் பொருப்பிடம்–இத்யாதி –

June 4, 2020

ஸ்ரீ பெரிய ஜீயர் அருளிய உரை ––அவதாரிகை –

இப்படி இவர் தமக்கு -தம் பக்கல் உண்டான அதி மாத்திர ப்ராவண்யத்தை கண்டு –
ஸ்ரீ எம்பெருமானார் -இவர் திரு உள்ளத்தை மிகவும் விரும்பி யருள –
அத்தைக் கண்டு உகந்து அருளிச் செய்கிறார் .

ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை–அவதாரிகை–

திருவடிகளை ஆஸ்ரயித்த மகாத்மாக்கள் -அவர் தம்முடைய குண அனுபவ ஜனித ஹர்ஷ பிரகர்ஷத்தாலே களித்து
ச சம்ப்ர்ம ந்ர்த்தம் பண்ணும் இடம் தமக்கு வாசஸ்தானம் என்று கீழ்ப்பாட்டில் அருளிச் செய்து –
இப்பாட்டிலே –
வேத -தத் உப ப்ரஹ்மணாதிகளாலே பரிசீலனத்தை பண்ணி இருக்குமவர்கள்
ஸ்ரீ சர்வேஸ்வரனுக்கு உகந்து அருளின நிலங்களாக சொல்லுகிற -ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வட திருமலை ஸ்ரீ தென் திருமலை
தொடக்கமான ஸ்ரீ திவ்ய தேசங்களோடு கூட ஸ்ரீ எம்பெருமானாருடைய திரு உள்ளத்திலே அவன் மிக விரும்பி வர்த்திக்குமா போலே –
இப்போது -அந்த ஸ்ரீ திவ்ய தேசங்களோடும் – அந்த ஸ்ரீ திவ்ய தேசங்களுக்கு நிர்வாஹனான ஸ்ரீ சர்வேச்வரனுடனும் கூட வந்து
ஸ்ரீ எம்பெருமானார் தாமும் நிரதிசய சுகமாக எழுது அருளி இருக்கிற ஸ்தலம்
தம்முடைய திரு உள்ளம் என்று அனுசந்தித்து பிரீதர் ஆகிறார்

ஸ்ரீ அமுது விருந்து-ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள்-அருளிய உரை–அவதாரிகை-

இப்படித் தம்பால் எல்லை கடந்த ஈடுபாட்டினை கண்ட ஸ்ரீ எம்பெருமானார் –
ஸ்ரீ அமுதனாருடைய திரு உள்ளத்தை மிகவும் விரும்பி யருள -அதனை நோக்கி –அக மகிழ்ந்து அருளிச் செய்கிறார்

இருப்பிடம் வைகுந்தம் வேங்கடம் மாலிரும் சோலை யென்னும்
பொருப்பிடம் மாயனுக்கென்பர் நல்லோர் -அவை தன்னொடும் வந்
திருப்பிடம் மாய னிராமானுசன் மனத்தின்றவன் வந்
திருப்பிடம் என் தனி தயத்துள்ளே தனக்கின்புறவே – – 106- –

பத உரை –
நல்லோர் -நல்லவர்
மாயவனுக்கு -ஆச்சர்யப் படும் தன்மை வாய்ந்தவனான ஸ்ரீ சர்வேச்வரனுக்கு
இருப்பிடம்-குடி இருக்கும் இடம்
வைகுந்தம் -ஸ்ரீ வைகுண்டமும்
வேங்கடம் -ஸ்ரீ திரு வேங்கடமும்
மால் இரும் சோலை -ஸ்ரீ திரு மால் இரும் சோலை
யென்னும் -என்று உலகினரால் வழங்கப்படும்
பொருப்பு இடம் -ஸ்ரீ திருமலையாகிற இடமும்
என்பர் -என்று சொல்வார்கள்
மாயன் -அந்த ஆச்சர்யப் படத்தக்க ஸ்ரீ சர்வேஸ்வரன்
அவை தன்னொடும் -அந்த இடங்களோடு கூட
வந்து -எழுந்து அருளி
இருப்பிடம் -குடி கொண்ட இடம்
இராமானுசன் மனத்து -ஸ்ரீ எம்பெருமானார் திரு உள்ளத்திலே
அவன் -அந்த ஸ்ரீ எம்பெருமானார்
இன்று -இப்பொழுது
வந்து -எழுந்து அருளி
தனக்கு இன்புற -தமக்கு இன்பம் உண்டாக
இருப்பிடம் -வசிக்கும் இடம்
என் தன் இதயத்து உள்ளே -என்னுடைய இதயத்துக்கு உள்ளேயாம் –

வியாக்யானம்-
ஸ்வரூப ரூப குண விபூதிகளால் – ஆச்சர்ய பூதனான ஸ்ரீ சர்வேச்வரனுக்கு வச்தவ்ய தேசம்
ஸ்ரீ வைகுண்டமும் -ஸ்ரீ வடக்குத் திரு மலையும் -ஸ்ரீ திரு மால் இரும் சோலை என்று பிரசித்தமான -ஸ்ரீ திருமலை யாகிற –
(என்னும் -திருநாமத்துக்கே -திரு மால் இரும் சோலை மலை என்னே என்னே என் மனம் புகுந்தான் –
அதனால் தான் இதற்கு மட்டும் என்னும் -ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வேங்கடம் -இரண்டுக்கும் சொல்லாமல் -) ஸ்த்தலமுமாக-
வைகுந்தம் கோயில் கொண்ட -திருவாய் மொழி – 8-6 5-
வேங்கடம் கோயில் கொண்டு -திருவாய் மொழி – 2-1 7-
அழகர் தம் கோயில் -திருவாய்மொழி – -2 9-3 – என்று சொல்லா நிற்பவர்கள்-
(நித்யர் / மண்ணோர் திர்யக் -அவனுக்கு என்று இருப்பவர்களுக்கு /
விமுகனுக்கும்-மலையத்வஜனை சேர்த்துக் கொண்டாயே -இப்படி மூன்றும் )
பகவத் தத்வத்தை சாஷாத்கரித்து இருக்கிற விலஷணரானவர்கள் —
அப்படிபட்டு இருந்துள்ள ஸ்ரீ சர்வேஸ்வரன் –
அழகிய பாற்கடலோடும் -ஸ்ரீ பெரிய திருமொழி 5-2 10– என்கிறபடியே
அந்த ஸ்த்தலங்கள் தன்னோடே கூட வந்து எழுந்து அருளி இருக்கிற ஸ்த்தலம் என்னுடைய ஹ்ருதயத்துக்குள்ளே –

ஸ்ரீ பெரிய கோயில் நம்பி -ஸ்ரீ திருவரங்கத்து அமுதனார் – 74 சிம்ஹாசனபதிகள் பொக்கிஷம் -இந்த ஸ்ரீ பிரபன்ன காயத்ரி உடன் –
சப்தாவரண-புறப்பாடு -ஏழாவது பிரகாரம் சித்திரை விதி -இன்றும் ஸ்ரீ நம் பெருமாள் -இத்தை கேட்டு அருளுகிறார் –
கோஷ்ட்டியில் உடையவரை மடத்தில் விடச் சொல்லி -ஆனந்தமாக கேட்டார் அன்றே
ஸ்ரீ அமுதனார் திரு உள்ளத்தில்– தானான– தமர் உகந்த– தான் உகந்த–எல்லா திருமேனிகளையும் சேவிக்கலாம்
மாயன் ராமானுசன் -சேஷி சேஷ ராமானுசன்-இருவரும் மாயன்-என்பர் –ஸ்ரீ ஆழ்வார்-நல்லோர் -ஸ்ரீ ஆச்சார்யர்கள்
நான் -கேள்வி பட்டேன் -அடியேன் அறிந்தது இப்பொழுது என் நெஞ்சத்துள்
இன்று -நாம் ஆச்சார்ய சம்பந்தம் பெற்ற அன்று -நாமும் இத்தை அனுபவிக்கலாம் -ரஷா பரம் இரங்கி –
திவ்ய தேச ஸ்ரீ எம்பெருமான் ஸ்ரீ எம்பெருமானார் உடன் மகிழ்ந்து உள்ளே இருப்பார்களே -என் இதயம் -என் தன் இதயம் -தாழ்ந்த நீசன் –
கண்ணுக்கு இனியன கண்டோம் -கலியும் கெடும் -ஸ்ரீ ஆழ்வார் அன்றே ஸ்ரீ எம்பெருமானார் திரு உள்ளத்திலே ஸ்ரீ வைகுண்டம் இத்யாதி கண்டார் என்றுமாம்

சர்வ மங்கள விக்ரஹயா ஸமஸ்த பரிவாரங்கள் உடன் -நித்யம் சொல்லுவோமே –
ஞானி து ஆத்மைவ மே மதம் -நித்ய யுக்தா -ஆதி சேஷனே ராமானுஜர் -படுக்கையில் சயனம் -சாக்ஷி நேரே உண்டே –
சிந்தாமணி -மாணிக்கம் உமிழ்ந்து கண் கொத்தி பாம்பு -பார்த்துக் கொண்டே பரிவாலே –
புறப்பாடு நடந்து ஆஸ்தானம் போகும் வரை அத்யாபகர்கள் பரிந்து —
அடியார் திரு உள்ளமே ஸூ ரக்ஷணமான வாஸஸ் ஸ்தானம் –
என் தன் இதயத்து உள்ளே – தம்முடைய திரு உள்ளம் போல் பக்தி ரச சந்துஷிதமாய் -நிச்ச்சலமாய் – விஷய விரக்தமாய் –
இருக்கை அன்றிக்கே -சுஷ்கமாய் -சஞ்சலமாய் -விஷய சங்கியான உள்ளம் –
திரு முடி சேவை -ஆழ்வார் திருநகரி -பொலிந்து நின்ற பிரான் -அவை தன்னோடும் வந்து இருப்பிடம் காட்டி அருளி –
மற்று எங்கும் திரு வடி தொழுதல் சேவை–சேஷி மாயன் -விபு வானவன் ஏகதேசம் இருப்பதே –சேஷ மாயன் –
பரனும் பரிவிலானாம் படி அன்றோ எல்லா உலகோரையும் விண் மீது அளிப்பான் வீடு திருத்த விண்ணின் தலை நின்றும் மண்ணின் தலை மிசை உதித்தார்

ஸ்ரீ திருப்பேர் நகர் ஸ்வாமித்வம் காட்டி -திருமால் இருஞ்சோலை -இன்று வந்து ஆழ்வார் திரு உள்ளம்–
ஸ்ரீ அயோத்தியை ஸ்ரீ சித்ர கூடம் -ஜடாயு சிறகின் கீழே இருக்க பெருமாள் ஆசை -இப்படி மூன்று மூன்றாக நிறைய பார்க்கலாமே –
ஸ்ரீ வைகுண்டம் -திருப்பாற்கடல் -ஸ்ரீ வடமதுரை -ஸ்ரீ சத்ய லோகம்-ஸ்ரீ அயோத்தியை -ஸ்ரீ ரெங்கம் போலே –
நின்றும் இருந்தும் கிடந்தும் -நெஞ்சமே நீண் நகர் -இடம் இருக்கவே அவை தன்னோடும் வந்து
ஸ்ரீ அமுதனார் இதயத்துக்குள் ஸ்தாவர ப்ரதிஷ்டையாக இருந்தாரே
ஸ்ரீ ஆதிசேஷன் -ஸ்ரீ இளைய பெருமாள் -ஸ்ரீ பலராமன் – கைங்கர்யம் எல்லா அவஸ்தைகளிலும் –
சேஷ சேஷ பாவம் மாறாமல் -யசோதை தாயாக இருந்தாலும் சேஷி தானே –
ஸ்ரீ வைகுண்டம் -ஆதி சேஷன் தானே கைங்கர்யம் -சென்றால் குடையாம் படி -ஸ்ரீ திருவேங்கடம் -சேஷாத்ரி –
ஸ்ரீ அஹோபிலம் -நடு பகுதி ஸ்ரீ கூர்மம் ஸ்ரீ சிம்காசலம் முடிந்து – பிரியாமல் இருந்து கைங்கர்யம் –
ஸ்ரீ வைகுண்டம் கைங்கர்யம் ஆசைப்பட்ட ஆழ்வார் – கீழ் உரைத்த பேறு கிடைக்க –
எம்மா வீட்டில் பேறு-திருமால் இரும்சோலை ஆஸ்ரயிக்கிறார் -முன்னோர் நிர்வாகம் –
ஸ்ரீ எம்பெருமானார் -இருள் தரும் மா ஞாலம் தடங்கல் இல்லாமல் அனுபவிக்க ஸ்ரீ வைகுண்டம் -நித்யர்களும்
அந்த கண்ணும் காதையும் வைத்து அனுபவிக்க முடியாமல் அழுதுண்டு இருக்க -இருக்கும் இடத்திலே –
ஞாலத்தூடே நடத்து உளக்கி பார்த்து இந்த ஏகாந்த ஸ்தலம் -காட்டி அருள – அதற்காக சென்றார் –
காலக் கழிவு செய்யேல் என்றாரே –உகந்து அருளினை நிலம் -ப்ராப்யம் -ஸ்ரீஆச்சார்யர் திருவடி பரம ப்ராப்யம் –

வைகுந்தம் –
அவ்யாஹதளம் கல்பம் வஸ்து லஷ்மி தரம் விது -என்கிறபடியே –
1-சமஸ்த சங்கல்ப்பங்களும் மாறாதே செல்லுக்கைக்கு உடலான தேசமாய் –நலமந்த மில்லதோர் நாடு -என்று
ஸ்லாக்கிக்கப் படுமதான ஸ்ரீ வைகுண்டமும் –
அன்றிக்கே–2- –தர்ம பூத ஞானத்துக்கு திரோதானம் இல்லாத தேசம் என்னுதல் –

வேங்கடம் –
கண்ணாவான் என்றும் மண்ணோர் விண்ணோர்க்கு தண்ணார் வேம்கட விண்ணோர் வெற்பு -என்றும்
பரன் சென்று சேர் திரு வேங்கட மா மலை -என்றும் சொல்லுகிறபடியே –
இரண்டு பிரஜையை பெற்ற மாதாவானவள் இருவருக்கும் முலை கொடுக்க பாங்காக நடுவே கிடைக்குமா போலே –
நித்ய சூரிகளுக்கும் நித்ய சம்சாரிகளுக்கும் ஒக்க முகம் கொடுக்கைக்காக -அவன் நின்று அருளின திரு மலையும்

மாலிரும் சோலை என்னும் பொருப்பிடம் –
புயல் மழை வண்ணர் புரிந்துறை கோயில் -என்றும் –
வலம் செய்யும் வானோர் மாலிரும் சோலை -என்றும் –
கிளர் ஒளி சேர் கீழ் உரைத்த பேறு கிடைக்க-வளர் ஒளி மால் சோலை மலை –என்றும் சொல்லுகிறபடியே –
திருமால் இரும் சோலை என்னும்-பேரை உடைத்தாய் -ஆழ்வார் பிரார்த்தித்து அருளின படியே உகந்து வர்திக்கைக்கு
ஏகாந்த ஸ்தலம்-என்று அவன் விருப்பத்தோடு வர்த்திக்கிற தென் திருமலை ஆகிய ஸ்தலமும் –
பொருப்பு -பர்வதம்

இருப்பிடம் –
ஆவாஸ ஸ்தானம் –

மாயனுக்கு –
யதோ வாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய மனஸா சஹா -என்றும்
நமே விதுஸ் ஸூ ர கணா-என்றும் –
பிரபவன்ன மகர்ஷய -என்றும் –
யவர்க்கும் சிந்தைக்கும் கோசரம் அல்லன் –என்றும் சொல்லுகிற படியே அசிந்த்ய ஸ்வபாவனாய்-
ததை ஷத பஹூச்யாம் பிரஜாயேயேதி-என்றும்
தான் ஒரு உருவாய் தனி வித்தாய் -என்றும் -சொல்லுகிறபடியே சர்வ காரண பூதனாய் –
ஸ்வரூப ரூப குண விபூதிகளால் ஆச்சர்ய பூதனான சர்வேஸ்வரனுக்கு –

நல்லோர் –
மகாத்மா ந சதுமாம் பார்த்த தைவீம் ப்ரகர்தி மாஸ்திதா -பஜன்த்ய நன்ய மனசொஜ்ஞாத்வா பூதாதி மவ்யயம் -என்கிறபடியே
பரா வரதத்வயா தாத்ம்ய விதக்ரே ஸ்ரரான மக ரிஷிகள் –

என்பர் –
சொல்லுவார்கள் –
வைகுண்டேது பார் லோகே ஸ்ரீ யா சார்த்தம் ஜகத்பதி –ஆச்தே விஷ்ணுர சிந்த்யா த்மா பக்தைர் பாகவதஸ் சஹா –
இத்யாதியாலே பிரதிபாதிப்பர் -என்றபடி
அன்றிக்கே –
நல்லோர் -மயர்வற மதி நலம் அருளப் பெற்ற ஆழ்வார்கள் அருளிச் செய்வார்கள் என்றுமாம் –
அயர்வறும் அமரர்கள் அதிபதி -என்றும் –
திரு மால் வைகுந்தம் -என்றும் –
தெண்ணல் அருவி மணி பொன் முத்து அலைக்கும் திரு வேம்கடத்தான் -என்றும் –
வளர் ஒளி மாயோன் மருவிய கோயில் வளர் இளம் பொழில் சூழ் மால் இரும் சோலை -என்றும் –
விண் தோய் சிகரத் திருவேங்கடம் -என்றும் –
சீராரும் மால் இரும் சோலை –என்றும் –
வேங்கடத்து மாயோன் -என்றும் –
விரை திரை நீர் வேங்கடம் –என்றும் –
மங்குல் தோய் சென்னி வட வேங்கடத்தான் -என்றும் –
வெற்பு என்று இரும் சோலை வேங்கடம் -என்றும் இத்யாதிகளாலே அருளிச் செய்வார்கள் -என்றபடி –

இருப்பிடம் –என்பர் நல்லோர் –
எம்பெருமான் சாந்நித்யம் கொண்டு அருளும் மூன்று திவ்ய ஸ்தலங்கள் இங்கே பேசப்படுகின்றன .-
முதலாவதாகப் பேசப்படுவது ஸ்ரீ வைகுண்டம் —
இது பிரகிருதி மண்டலத்துக்கு அப்பால் உள்ளது -முக்தி பெற்றோர் போய்ச் சேரும் இடமானது –வைகுண்டம் என்பது வடமொழி பெயர் –
விகுண்டருடைய இடம் வைகுண்டம் -விகுண்டர் -மழுங்காத ஞானம் உடையவர்களான நித்ய சூரிகள் –
இவர்களுடைய இடம் ஆதலின் வைகுண்டம் -என்ப-
அடியார் நிலாகின்ற வைகுந்தம் -திரு விருத்தம் -என்பர் நம் ஆழ்வார் .
வைகுண்ட நாடு அவர்கள் உடையதாய் இருத்தல் பற்றியே நித்ய சூரிகள் விண்ணாட்டவர்-எனப்படுகின்றனர்
மாயன் இந்த வைகுந்தத்திலே நித்ய சூரிகள் கண் வட்டத்திலே இருந்து தன்னை மேவினவர்களுக்கு
வீவில் இன்பம் தந்து கொண்டு இருக்கிறான் –

இரண்டாவதாக பேசப்படுவது வேங்கடம்
நித்ய சூரிகளிடையே விளங்கா நிற்கும் மாயன் -சம்சாரிகளையும் விடமாட்டாத வாத்சல்யத்தாலே –
அங்கு நின்று வந்து இறங்கிய இடம் வேங்கடம் .
விண்ணவர் கோன் விரையார் பொழில் வேங்கடவன் -என்றார் பாண் பெருமாள் .
நித்ய சூரிகளுக்கும் சம்சாரிகளுக்கும் ஒக்க அருள் புரியும் நோக்கத்துடன் இரண்டு குழந்தைகளுக்கு இடையே கிடந்தது
பாலூட்டும் தாய் போலே – தரையிலும் இறங்காமல் -விண்ணகத்திலும் தங்காமல் -இடையே வேங்கடம் எனப்படும்
வடமா மலையின் உச்சியாய் விளங்குகிறான் அம்மாயன் –
வானோர்க்கும் மண்ணோர்க்கும் வைப்பு -என்றும்
கண்ணாவான் என்றும் மண்ணோர் விண்ணோர் க்குத் தண்ணார் வேங்கட விண்ணோர் வெற்பனே -திருவாய் மொழி -1 8- 3- என்றும்
இருவருக்கும் பொதுவாக கூறப்பட்டமை நோக்குக –
வைகுந்தத்தின் நின்றும் திரு வேங்கடத்துக்கு வந்து தன்னை அடைந்தார் திறத்து தன் வாத்சல்யத்தை காட்டி -கொண்டு இருக்கும் –

அம் மாயன் –
உகப்பின் மிகுதியால் சரண் அடையாதவர் இடத்தும் வ்யாமோஹம் வாய்ந்தவனாய் –
வலுவிலே பிடித்து இழுத்து ஆட் கொள்ள வேண்டும் யென்னும் கருத்துடன் –
திரு மால் இரும் சோலையில் கோயில் கொண்டான் –
மலயத்வஜ பாண்டியன் கங்கை நீராடப் போகும் போது – தானே அவனை வலுவில் இழுத்து -நூபுர கங்கையிலே நீராட செய்து –
தன்பால் ஈடுபடும்படி செய்ததாக சொல்லப் படுவதில் இருந்து இவ் உண்மையை உணரலாம் ..
தென்னன் திரு மால் இரும் சோலை -திருவாய் மொழி – 10-7 3- -என்று நம் ஆழ்வாரும்
தென்னன் கொண்டாடும் தென் திரு மால் இரும் சோலையே -பெரியாழ்வார் திருமொழி – 4-2 7- என்று
பெரியாழ்வாரும் இந்த பாண்டியனைப் பற்றி குறிப்பிட்டு உள்ளார்கள் –

கூரத் ஆழ்வான் – இந்த பாண்டியன் விருத்தாந்தத்தை சிறிது விளக்கமாக அருளிச் செய்கிறார்
இதமிமே ஸ்ருணுமோ மலயத்த்வஜம் ந்ருபமிஹா ச்வயமேவஹி சுந்தர சரண சாத்க்ருதவாநிதி
தத்வயம் வனகிரீச்வர ஜாதமநோரதா -சுந்தர பாஹூஸ்தவம் -125 -எனபது அவர் திரு வாக்கு
திரு மால் இரும்சோலைக்கு ஈஸ்வரனாகிய அழகரே – மலயத்த்வஜா பாண்டியனை தானாகவே இங்கே
திருவடிக்கு ஆளாக்கி கொண்ட விருத்தாந்தத்தை நாங்களும் கேள்விப் படுகிறோம் -ஆகையினால் எங்கள்
விருப்பம் அந்த முறையில் நிறை வேறப் பெற்றவர்களாக ஆகி விட்டோம் –
இந்த பாண்டியன் வரலாற்றினாலே உயிர் இனங்களை உறு துயரினின்றும் தானாகவே காப்பதற்கு
என்றே எம்பெருமான் மிக்க அன்புடன் இங்கே எழுந்து அருளி இருக்கிறான் என்பது புலனாகும் .

இங்கு –
மன்பதை மறுக்கத் துன்பம் களைவோன் அன்புதுமேயே யிரும் குன்றத்து இருந்தான் -பரிபாடல் -15 51- 52- –என்னும் பரிபாடலும் –
மால் இரும் சோலை தன்னைக் கருதி உறைகின்ற கார்க்கடல் வண்ணன் அம்மான் தன்னை -என்னும்
பெரியாழ்வார் திருமொழி யும் -4 2-11 –காணத் தக்கன –
திரு மால் இரும் சோலை யென்னும் பெயர் அழகார்ந்ததும் -சோலைகள் நிறைந்துதுமான
மாலின் -அடியாரிடம் வ்யாமோஹம் கொண்டவனின் -பெருமை வாய்ந்த மலை யென்னும் பொருள் கொண்டது .
திரு மால் இரும் சோலை மலை யென்னும் இப் பெயரே தனி இனிமை வாய்ந்தது –
அதன் மகிமை நாடு எங்கும் பரவியது -விரும்பும் பயனைத் தர வல்லது –
இதனைச் சொல்வது விரும்பிய பயனுக்கு விதைப்பதாகும் -விளைவை -பயனை -உடனே எதிர்பார்க்கலாம் என்கிறது பரி பாடல் –

சிலம்பாறு அணிந்த சீர் கெழு திருவில்
சோலை யொடு தொடர் மொழி மாலிரும் குன்றம்
தாம் வீழ் காமம் வித்தி விளைக்கும்
நாமத் தன்மை நன் கனம்படி எழ
யாமத் தன்மையில் வையிரும் குன்றத்து – 15- 22-26 –
அழகு பொருந்திய திரு யென்னும் சொல்லோடும் சோலை யென்னும் சொல்லோடும்
மால் இரும் குன்றம் யென்னும் சொல் தொடர்ந்த மொழி யாகிய திரு மால் இரும் சோலை மலை யென்னும்
நாமத்தினது பெரும் தன்மை நன்றாக பூமியின் கண் பரக்க –
மகளிரும் மைந்தரும் தாம் வீழ் காமத்தை வித்தி விளைக்கும் யாமத்தியல்பை உடைய இவ்வையிரும் குன்றத்து எனக் கூட்டுக –
எனபது பரிமேல் அழகர் உரையாகும் .

பயன் கருதாது இப்பெயரை நம் ஆழ்வார் கூறினமையில் வீடு பேறு பெற்றனர் -என்பர் .’
பெயருக்கு உள்ள இத்தகைய பிரசித்தி தோற்ற –மால் இரும் சோலை -யென்னும் பொருப்பு என்று அருளிச் செய்தார் –

பொருப்பிடம் –
பொருப்பாகிற இடம்- இரு பெயரொட்டுப் பண்புத் தொகை –
வைகுந்தம் வேங்கடம் பொருப்பிடம் யென்னும் இவற்றில் உம்மைகள் தொக்கன –
மாயனுக்கு -ஸ்வரூபம் ரூபம் குணம் விபூதி -அனைத்திலும் வியக்கத்தக்கவனான சர்வேஸ்வரனுக்கு
மாயனுக்கு வைகுந்தமும் -வேங்கடமும்-பொருப்பிடமும் இருப்பிடம் -என இயைக்க –

என்பர் நல்லோர் –
இம் மூன்று திவ்ய தேசமும் மாயன் கோயில் கொண்டுள்ள இடமாக சொல்லா நிற்பார் -நல்லவர்கள் என்றபடி ..
நல்லவர்கள் சர்வேஸ்வரனை சாஷாத்காரம் செய்ய வல்ல ஆழ்வார்கள் –
வைகுந்தம் கோயில் கொண்ட -திருவாய் மொழி – -8 6-5 – –
வேங்கடம் கோயில் கொண்டு – பெரிய திரு மொழி – 2-1 7- –
அழகர் தம் கோயில் -திருவாய் மொழி – 2-10 2- – என்று
ஆழ்வார்கள் கோயிலாக இம் மூன்றினையும் குறிப்பிட்டு உள்ளமை காண்க –
இம் மூன்று இடங்களையும் ஒக்க எடுத்தது மாயனுக்கும் அடியார்களுக்கும் இன்பம் பயப்பதாய் ப்ராப்யம் -பேறாகப் பெறத் தக்கது –
பிராப்யமாய் ஆம் இடமாய் இருத்தல் பற்றி -என்க-
வைகுண்டத்தில் போலே வேங்கடத்தில் நித்ய சூரிகள் அடிமையினை ஏற்பதோடு அமையாமல் –
நீணிலத்தில் உள்ளார் அடிமையினையும் ஏற்று முக்த அநுபூதியை மாயன் வழங்கிக் கொண்டு இருப்பதால் –
அதுவும் பிராப்ய பூமி ஆயிற்று என்க –
அடிமையில் விடாய் கொண்டவர்கள் மலையேறி வருந்தாது நினைத்த போதே அடிமை செய்யலாம்படி
அம்மாயன் வந்து மலை அடிவாரத்தில் அடிமையினை எதிர்பார்த்து இருக்கும் இடம் திரு மால் இரும் சோலை மலை –

நம் ஆழ்வார் தாம் வடிகட்டின அடிமையை உடனே பெற்றாக வேண்டும் படியான விடாய் கொண்டு –
காலக் கழிவு செய்யேல் –என்று ஆத்திரப் படுவது கண்டு -சரீரம் நீங்கும் வரை அடிமை செய்ய காத்து இருக்க
இவரால் இயலாது என்று சரீரத்தோடேயே- நினைத்த கணத்திலேயே அடிமை கொள்ள இந்த இடம் சால ஏகாந்த ஸ்த்தலமாய்
இருந்தது என்று -திரு மால் இரும் சோலை மலையிலே எழுந்து அருளின நிலையைக் காட்டி
பகவான் அவரை அனுபவிப்பித்து இனியர் ஆக்கினான் -என்று அருளிச் செய்வர் எம்பெருமானார் .
கிளர் ஒளி ஈட்டு அவதாரிகை -காண்க .

அவை தன்னொடும் –
அந்த வைகுண்டம் வேங்கடம் மால் இரும் சோலை தொடக்கமான திவ்ய தேசங்களோடு கூட-வந்து -பர கத சுவீகாரம் —
அழகிய பாற்கடலோடும் –என்கிறபடியே-
அந்த திவ்ய தேசங்களில் –
1–அவரைப் பெறுகைக்கும்-
2-ஜகத் ரஷணம் பண்ணுகைக்கும் -உறுப்பாகையாலே அந்த கிருதக்ஜ்ஜையாலும் –
3-தனக்கு பிராப்யரான-இவர் தம்முடைய ப்ரீதி விஷயங்கள் ஆகையாலும் -அவற்றை பிரிய மாட்டாதே –
அந்த திவ்ய தேசங்களோடு கூடே தானே வந்து –

மாயன் –
சுவையன் என்னும்படி நிரதிசய போக்யனான சர்வேஸ்வரனுக்கு –
1- ஜ்ஞாநீத்வாத் மைவமே மதம் -என்று அவன் தானே சொல்லும்படி –தாரகராய் இருக்குமவர் –
அன்றிக்கே –
2-என் நின்ற யோனியுமாய் பிறந்தாய் -என்கிறபடி சர்வேஸ்வரன் தானே வந்து உபகரித்து -படாதன பட்டு –
உபதேசித்தாலும் திருந்தாத ப்ராக்ருத ஜனங்களை எல்லாம்-அநாயாசேன திருத்திப் பணி கொண்ட ஆச்சர்ய பூதர் -என்னுதல் –

இராமானுசன் –
இப்படிப் பட்ட எம்பெருமானாருடைய –

மனத்து –
திரு உள்ளத்திலே வாசஸ்தானமாக எழுந்து அருளி இருந்தார் -என்றபடி –

இன்று–அடியேனை
அந்தரங்கராக கைக் கொண்ட இப்போது –

என் தன் இதயத்து உள்ளே –
தம்முடைய திரு உள்ளம் போல் -1-பக்தி ரச சந்துஷிதமாய் -2–நிச்ச்சலமாய் -3- விஷய விரக்தமாய் -இருக்கை அன்றிக்கே –
1-சுஷ்கமாய் –2-சஞ்சலமாய் –3-விஷய சங்கியான –என்னுடைய ஹ்ருதயத்திலே –

தனக்கு இன்புறவே –
அந்த எம்பெருமானார் தமக்கு -யமைவைஷ வர்நுந்தேதேலப்ய – என்னும்படி நிரவதிக பிரீதி யோடு-எழுந்து அருளி இருக்கும் இடம் —

காமினி உடம்பில் அழுக்கை காமுகன் உகக்குமா போலே என் -பக்கல்-வ்யாமோஹத்தாலே என் ஹ்ர்தயத்தை விட்டு
மற்று ஒன்றை விரும்பார் என்றபடி –
உச்சி உள்ளே நிற்கும் -என்னும் படி சர்வேஸ்வரன் ஆழ்வார் திரு முடிக்கு அவ்வருகு போக்கு இல்லை என்று அங்கே
தானே நின்றால் போலே எம்பெருமானாரும் இவர் திரு உள்ளத்துக்கு அவ்வருகே போக்கு ஓன்று இல்லை என்று திரு உள்ளமாய் –
அங்கே தான் ஸ்தாவர பிரதிஷ்டையாக எழுந்து அருளி இருந்தார் காணும் –

அவை தன்னொடும் வந்து இருப்பிடம் மாயன் இராமானுசன் மனத்து
அர்ச்சிராதி வழியே வந்து உடலம் நீங்கினவர்க்கு அடிமை செய்ய பாங்கான இடம் என்று வைகுந்தத்தையும் –
போவான் வழி கொண்டு – -சிகரம் -வந்தடைந்த நீணிலத்தில் உள்ளார்கட்கும்
அடிமைத் தொழில் பூண்பதற்கு பாங்கான இடம் என்று திரு வேங்கடத்தையும்
போவான் வழிக் கொள்வதற்கும் -சிகரத்தில் ஏறுவதற்கும் -திறன் அற்றார்க்கும் விடாய்த்த உடனே
உடலோடு அடிமை செய்வதற்கு பாங்கான இடம் என்று திரு மால் இரும் சோலை மலையையும்
தனக்கு கோயில்களாக கொண்டது போலே –
மாயன் –எம்பெருமானார் இதயத்தையும் தனக்கு கோயிலாக கொண்டான்

இவ்விடம் ஒரே காலத்தில் பல்லாயிரம் பேர்கள் ஆட்பட்டு அடிமை புரிவதற்கு -பாங்காக அமையும் எனபது மாயனது அவா –
ஆயின் ஏனைய இடங்கள் போன்றது அன்று எம்பெருமானார் உடைய இதயம்
வேங்கடத்தை இடமாக கொண்ட போது -த்யக்த்வா வைகுண்டம் உத்தமம் -சீரிய வைகுண்டத்தை விட்டு –
என்றபடி வைகுண்டத்தை துறந்தான் –
இங்கனமே திரு மால் இரும் சோலையை இடமாக கொள்ளும் போது ஏனைய இரண்டினையும் விட வேண்டியதாயிற்று –
இம் மூன்று இடங்களிலுமே இருப்பவன் மாயன் ஒருவனே -ஆயின் இடங்கள் வெவ்வேறு பட்டன –
அவ்வவ இடங்களிலே வாசம் பண்ணினதன் பயன் இவர் இதயத்தில் வாசம் பண்ண வேண்டியதாயிற்று –
அங்கனம் வாசம் பண்ண வரும் போது –
தான் கோயில் கொண்டு இருந்த மூன்று இடங்களையும் கூடவே கொணர்ந்து இங்கே குடி புகுந்தானாம் அம் மாயன் –

ஏனைய இடங்கள் அவன் இருப்பதற்கே போதுமானவை –மற்ற இடங்களைக் கொணர்ந்தால் இடம் போதாது –
எம்பெருமானார் இதயமோ இன்னும் எத்தனை இடங்களோடு வந்தாலும் இடம் கொடுக்கும் -அவ்வளவு விசாலமானது –
இது போன்ற இதயம் இருப்பிடம் என்னாது -இதயத்து இருப்பிடம் -என்ற அழகு பாரீர் –
வைகுந்தம் முதலியன இருப்பிடமாயின எம்பெருமானார் இதயத்தில் ஒரு பகுதி அவற்றோடு மாயன் இருப்பதற்கு இடம் ஆயிற்று -என்றபடி –
மேலும் பூதத் ஆழ்வார்
தமது உள்ளத்தை -திரு மால் இரும் சோலை மலை -திரு வேங்கடம் இவற்றைப் போலே கோயில் கொள்ளக் கருதியதை
அறிந்து பகவானே நீ என் உள்ளத்தில் குடிபுக பாலாலயமாகக் கொண்ட திருப்பாற்கடலை கை விட்டு விடாதே என்று
வெற்பு என்று இரும் சோலை வேங்கடம் என்று இவ் இரண்டும்
நிற்பு என்று நீ மதிக்கும் நீர்மைபோல் -நிற்பென்று
உளம் கோயில் உள்ளம் வைத்து உள்ளினேன் வெள்ளத்து
இளம் கோயில் கை விடேல் என்று – -54 – என்னும் பாசுரத்தில் வேண்டிக் கொண்டதற்கு ஏற்ப
பெரியாழ்வார் திரு உள்ளத்திலே
அழகிய பாற்கடலோடும் -5 -2 10- -புகுந்து பள்ளி கொண்டது போலவும்
கோயில்கொண்டான் திருக் கடித்தானத்தை கோயில் கொண்டான் அதனோடும் என்நெஞ்சகம் –திரு வாய் மொழி -8 6-5 – –
என்றபடி நம் ஆழ்வார் திரு உள்ளத்தில் திருக் கடித்தானத்தோடு கோயில் கொண்டது போலவும் –
எம்பெருமானார் திரு உள்ளத்திலும் அந்த வைகுந்தம் முதலிய வற்றோடு எழுந்து அருளி இடம் கொண்டான் -என்க .

பொருந்தாதவற்றையும் பொருந்த விட வல்ல மாயன் ஆதலின் -அளவிடற்கரிய த்ரிபாத் விபூதியான வைகுந்தத்தையும்
இதயத்துக்கு உள்ளே அடக்க வல்லனாயினான் -என்னலுமாம்

இன்று அவன் வந்து இருப்பிடம் –தனக்கின்புற –
இன்று –
ஈடுபாடு உடையவனாக்கி -என்னை ஆட் கொண்ட இன்று –
அவன்
வைகுந்தம் முதலிய வற்றோடு மாயனை இதயத்திலே ஓர் இடத்திலே ஒதுக்கி வைத்து கொண்டு இருக்கிற எம்பெருமானார் .
அத்தகைய எம்பெருமானார் தாம் இன்புறும்படி –
தாமே வந்து -என் தன் இதயத்துக்கு உள்ளே இடம் கொண்டார் என்கிறார் –
இத்தகைய இதயம் படைத்த பீடு -தோன்ற -என் தன் -இதயம் -என்கிறார் –
மாயன் இருப்பிடம் எம்பெருமானார் இதயத்திலே
அந்த எம்பெருமானார் இருப்பிடம் என்னுடைய இதயத்துக்கு உள்ளே -என்றது கவனிக்கத் தக்கது –
இதனால் எம்பெருமானார் இதயத்திலும் அமுதனார் இதயம் இடம் உடைத்தாய் உள்ளமை புலன் ஆகின்றது அன்றோ

கீழ் இரண்டு பாட்டுக்களாலே
எம்பெருமானார் திரு மேனி குணங்களின் அனுபவம் இன்றேல் ப்ராப்யமான வைகுந்தம் சேரினும்
கால் பாவி நிற்க மாட்டேன் என்றும் –
எம்பெருமானாரைத் தொழும் பெரியவர் களிக் கூத்தாடும் இடமே தனக்கு பிராப்யமான இடம் என்றும்
சர்வேஸ்வரனோடு ஒட்டு அறுத்து பேசினவர் –
இங்கே பிராப்யமான இடத்தோடு மாயனையும் தன்னோடு சேர்த்துக் கொண்டு எம்பெருமானார்-தன் இதயத்துக்கு உள்ளே
எழுந்து அருளி இருப்பதாக அருளிச் செய்து இருப்பது கவனத்திற்கு உரியது –
ஆசார்ய சம்பந்த்தினுடைய மகிமை –
இவர் கால் பாவ மாட்டேன் என்று ஒதுக்கின இடமும் –
ஆசார்யனோடும்
அவன் உகந்த ஈச்வரனோடும்
தானாகவே இவரை நாடி வருகிறது –
ஆசார்யன் உகந்த இடமும் -அவன் உகந்த எம்பெருமானும் ஆசார்யன் முக மலர்ச்சிக்காக
நெஞ்சார ஆதரிக்கத் தக்க எய்தி விடுவதை இது புலப் படுத்து கிறது .

இதனால் ஆசார்யனைப் பற்றுகை -பகவானை பற்றுவதினின்றும் வேறு பட்டது அன்று –
பேற்றினை எளிதில் தர வல்லது எனபது தெளிவாகின்றது –
இங்கே -ஈஸ்வரனை பற்றுகை கையைப் பிடித்து கார்யம்கொள்ளுமோபாதி
ஆசார்யனைப் பற்றுகை காலைப் பிடித்து கார்யம் கொள்ளுமோபாதி –-47 – என்னும்
ஸ்ரீ வசன பூஷணமும் அதன் வியாக்யானமும் சேவிக்கத் தக்கன —

—————————————————————————————————————————————————–———————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ ராமானுஜ நூற்றந்தாதி பாசுரமும்- ஸ்ரீ ஆழ்வார் பாசுரங்களும் –105–செழும் திரைப் பாற்கடல் கண்டுயில்மாயன் திருவடி-இத்யாதி –

June 3, 2020

ஸ்ரீ பெரிய ஜீயர் அருளிய உரை ––அவதாரிகை –

எல்லாரும் சம்சாரம் த்யாஜ்யம் ஸ்ரீ பரம பதம் உபாதேயம் என்று அறுதி இட்டு வஸ்தவ்யதேசம் அதுவே என்று
அங்கே போக ஆசைப்படா நிற்க –
நீர் ஸ்ரீ பரம பதத்தையும் சம்சாரத்தையும் சஹபடியா நின்றீர் –
உமக்கு வஸ்தவ்ய தேசமாக நீர் தாம் அறுதி இட்டு இருப்பது எது -என்ன அருளிச் செய்கிறார் –

ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை–அவதாரிகை–

கீழே -ஸ்ரீ எம்பெருமானார் தமக்கு பண்ணி அருளின உபகாரத்தை அனுசந்தித்து
மகா உதாரரான ஸ்ரீ எம்பெருமானாரே -என்று அவரை சம்போதித்து-தேவரீர் சுலபனான ஸ்ரீ கிருஷ்ணனை
கரதலாமலகமாக பண்ணிக் கொடுத்தாலும் –அவன் நித்ய வாசம் பண்ணுகிற பரம பதத்தையே கொடுத்தாலும் –
அவனுக்கு கிரீடாகந்துக ஸ்தாநீயமான இந்த லீலா விபூதியைக் கொடுத்தாலும் -தேவரீர் உடைய திவ்ய மங்கள விக்ரக
அனுபவம் ஒழிய அவற்றில் ஒன்றும் எனக்கு வேண்டுவது இல்லை -ஆகையால் இவ் அனுபவம் எனக்கு எப்போதும்
நடக்கும்படி கிருபை பண்ணில் தரிப்பன் – இல்லை யாகில் ஜலாதுத்தர்த்த மத்ஸ்யம் போலே தரிக்க மாட்டேன் என்ன –
அத்தைக் கேட்டவர்கள் –
ஜநி ம்ருதி துரித நிதவ் மே ஜகதி ஜிஹா சாந்த்ரஜாம் பிதா பவத -பவ நு ச நபசி பரஸ்மின் நிரவதிக
அநந்த நிர்ப்பரே லிப்ச – என்கிறபடியே
லோகத்தார் எல்லாரும் சம்சாரம் த்யாஜ்யம் என்றும் -ஸ்ரீ பரம பதம் உபாதேயம் என்றும் -அறுதி இட்டு அங்கே போக
ஆசைப்படா நிற்க -நீர் இவ்விரண்டையும் சஹ படித்து சொன்னீர் –
இனி உமக்கு வஸ்தவ்ய தேசமாக அறுதி இட்டு இருப்பது என் என்று கேட்க –
ஸ்ரீ திருப்பாற் கடலிலே கண் வளர்ந்து அருளின ஸ்ரீ சர்வேஸ்வரனுடைய குணங்களில் ஈடுபட்டு –
கலக்கமில்லா நல் தவ முனிவராலே விரும்பப்பட்ட விலஷண ஞானத்தை உடையரான -பரம வைதிகராலே –
தொழுது முப்போதும் -என்கிறபடியே-(உபாயமாக பற்றி -நடு நிலை -மேலே ப்ராப்ய பூதராக)
அநவரதம் சேவிக்கப் படா நின்றுள்ள திருவடிகளை உடைய ஸ்ரீ எம்பெருமானாரை –
தேவும் மற்று அறியேன் – என்று சதா அனுபவம் பண்ணிக் கொண்டு இருக்குமவர்கள் எழுந்து அருளி இருக்குமிடம் அவர்கள்
(ஸ்ரீ ஆழ்வான் போல்வார் அன்றோ ப்ராப்யமாக சதா அனுபவம் பண்ணிக் கொண்டு இருப்பவர்கள் )
அடியேனான-எனக்கு வஸ்தவ்ய தேசம் என்று கீழே தாம் சொன்ன ப்ராப்யத்தை நிஷ்கர்ஷித்து அருளுகிறார் –
(மெய்யில் பிறங்கிய சீர் அன்றி வேண்டிலேன் என்றாரே -அத்தை பெற இது அன்றோ வஸ்வ்யம்)-

ஸ்ரீ அமுது விருந்து-ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள்-அருளிய உரை–அவதாரிகை-

எல்லாரும் தோஷம் நிறைந்த சம்சாரத்தை அருவருத்து -ஸ்ரீ பரம பத்திலே போய் இருக்க ஆசைப்படா நிற்பர் –
நீரோ -சம்சாரத்தையும் ஸ்ரீ பரம பதத்தையும் ஓன்று போலே பேசா நின்றீர் -எங்கு இருப்பினும் சரியே என்றீர் .
நீர் போய் இருக்க ஆசைப்படும் இடம் தான் எது -அதனை சொல்லீர் -என்ன –அது தன்னை அருளிச் செய்கிறார்

செழும் திரைப் பாற்கடல் கண்டுயில்மாயன் திருவடிக் கீழ்
விழுந்திருப்பார் நெஞ்சில் மேவு நன்ஞானி நல் வேதியர்கள்
தொழும் திருப்பாதன் இராமானுசனைத் தொழும் பெரியோர்
எழுந் திரைத்தாடுமிடம் அடியேனுக் கிருப்பிடமே – – -105 – –

பத உரை –
செழும் திரைப் பாற்கடல் -அழகிய அலைகளை உடைய ஸ்ரீ திருப்பாற் கடலிலே
கண்துயில் மாயன் -உறங்குகிறவன் போல் உள்ள ஆச்ச்சரியப் படத்தக்க ஸ்ரீ சர்வேஸ்வரனுடைய
திருவடிக் கீழ் -திருவடிகளின் கீழே
விழுந்து இருப்பார் -மாயன் குணத்திற்கு தோற்று விழுந்து -அந்நிலை யினிலே நிலை நிற்பவர்களான முனிவர்களுடைய
நெஞ்சில் -உள்ளத்தில்
மேவும் -பொருந்தி உள்ள
நல் ஞானி -நல்ல ஞானத்தை உடையவரும்
நல் வேதியர்கள் -சீரிய வைதிகர்கள்
தொழும் திருப்பாதன் -தொழுகின்ற திருவடிகளை உடைய வருமாகிய
இராமானுசனை -ஸ்ரீ எம்பெருமானாரை
தொழும் பெரியோர் -தொழுது கொண்டு இருக்கும் பெரியவர்கள்
யெழுந்து -களிப்பின் மிகுதியால் கிளம்பி
இரைத்து-ஆரவாரம் செய்து
ஆடும் இடம் -கூத்தாடுகின்ற இடம்
அடியேனுக்கு -அன்னார் அடியானான எனக்கு
இருப்பிடம் -குடி இருக்கும் இடமாகும்

வியாக்யானம் –
அழகிய திரைகளை வுடைத்தான ஸ்ரீ திருப்பாற் கடலிலே –
கடலோதம் காலலைப்ப கண் வளரும் -ஸ்ரீ திருவந்தாதி – 16- என்கிறபடியே துடை குத்த உறங்குவாரைப் போலே –
அத் திரைகளானவை திருவடிகளை அநு கூலமாக அசைக்க -கண் வளரா நிற்பானாய் –
உறங்குவான் போல் -ஸ்ரீ திருவாய்மொழி -5 4- 11- – யோகு செய்கிற ஆச்சர்யத்தை உடையவனான
ஸ்ரீ சர்வேஸ்வரனுடைய குணத்தில் ஈடுபட்டு –
ஜிதந்தே -என்று திருவடிகளின் கீழே விழுந்திருந்த ஸ்வபாவத்துக்கு ஒருகாலும் சலனம் அற்று இருக்கிற
கலக்கமில்லா நல் தவ முனிவரும் -திருவாய் மொழி -8-3 10– இது ஒரு ஞான வைபவமே என்று இத்தையே
(இவரை -சொல்லாமல் இத்தை -ஞானத்தை -மேவுவது ஞானம் ஞானி அல்லன்– ) பல காலும் ஸ்லாகித்துக் கொண்டு
போருகையாலே -அவர்கள் நெஞ்சிலே மேவப்பட்ட விலஷணமான ஜ்ஞானத்தை உடையவராய் –
பரம வைதிகரானவர்கள் ப்ராணாமாத்ய அநு வர்த்தங்களைக் பண்ணா நின்றுள்ள திருவடிகளை வுடையரான ஸ்ரீ எம்பெருமானாரை
நித்யாஞ்சலி புடாஹ்ருஷ்டா -பார மோஷ -என்கிறபடியே சதா அனுபவம் பண்ணா நின்று உள்ள வைபவத்தை உடையவர்கள் –
(தூங்கும் கண்ணன் -கண் துயில் மாயன் -கண் வளரும் கமலக் கண்ணன் -பற்றாமல் உண்டோ கண்கள் துஞ்சுதலே –
இவரை பற்ற அன்றோ அடுப்பது-)-அவ் அனுபவ ஜனித ஹர்ஷ பிரகர்ஷத்தாலே உடம்பு இருந்த இடத்தில் இராதே
கிளர்ந்து கடல் இரைத்தால் போலே இரைத்துக் கொண்டு சசம்பிரம வியாபாரங்களை பண்ணும் இடம்
அவர்கள் அடியனான எனக்கு வஸ்த்வ்ய தேசம்

செழுமை -அழகு பெருமையுமாம்
பாற்கடல் பள்ளி கொள் மாயன் -என்றும் பாடம் சொல்லுவர்–
தன் இருப்பிடம் ஸ்ரீ அமுதனார் சொல்லிக் கொள்ள -போட்டி போட்டு ஸ்ரீ திவ்ய தேச பெருமாள்கள் அடுத்த பாசுரம் –

நீள் ஓதம் வந்து அலைக்கும் -அவன் திருவடி தீண்ட -கண் துயில் மாயன் -உறங்குவான் போல் யோகம் செய்து –
அனைத்தையும் செய்து அருளி –
பாவோ நான்யத்ர கச்சதி –நெஞ்சில் -மேவு நல் ஞானி ஸ்ரீ ராமானுஜன் -திருவடி விழுந்த பலன் ராமானுஜரை
நெஞ்சிலே பிரதிஷ்டை செய்து அருளுவான் -பிரதம பர்வம் பற்றினால் சரம பர்வத்தில் மூட்டும்-
மேவு நல் ஞானம் -ஆராய்ந்து விரும்பிய ஞானம் -படைத்த ஞானி ஸ்ரீ எம்பெருமானார் -அது என்ன ஞானம் -சரம பர்வ நிஷ்டை –
மஹா பாரத ஸாரஸ்வத் -ரிஷிகளும் பரிஹிரத்து -ஸ்ரீ வியாசர் அருளி ஸ்ரீ பீஷ்மர் தொகுத்து -ஸ்ரீ கீதை அர்த்தம் ஏகார்த்தம் இதில் –
சரம ஸ்லோகம் -பற்ற சொல்லி -பக்தியால் கீர்த்தி பண்ணுவதே மேலே ஸ்ரீ சகஸ்ர நாமம் திரு நாம சங்கீர்த்தனம் –
போன்ற ஏற்றம் ஸ்ரீ பட்டர் காட்டி -செழும் பொருள் இதுவே –
துஷ்யந்த ச ரமந்தச சததம் கீர்த்தி யஞ்ச – இதுவே செழும் பொருள் -பிரிய ஞானி அத்யந்த பிரியத்தமம் —

நல் ஞானி -ஸ்ரீ ஆச்சார்ய அபிமான பெருமை உணர்ந்தவர் –
நல் வேதியர் -வேதத்தின் யதார்த்த ஞானம் அறிந்து பாகவத சேஷத்வம் போக்யதை அறிந்தவர் –
அடியோரோடு இருந்தமை –ஸ்ரீ ஆழ்வார் ஆசைப்பட்டார்
தொழும் பெரியோர் -எழுந்து இரைத்து ஆடும் இடமே அடியேனுக்கு இருப்பிடம் —
ஸ்ரீ ராமானுஜனை தொழுதே பெரியோர் ஆனவர்கள் -இரண்டாவது கோஷ்ட்டி -அதனால் பிரித்து அருளுகிறார்
நல் வேதியர் -வேறே -இவர்கள் வேறே -நல் வேதியர் தொழுவார்கள் -தொழுவதனால் பெரியோர் ஆனவர்கள் திருப்பாதம் –
ஸ்ரீ ஆழ்வார் பாசுரம் பிரமாணம் -வேதம் பிரமாணம் -வேதம் தமிழ் செய்த மாறன் –
நல் வேதியர் -தொழாமல் இருக்கலாம் – தொழும் பெரியோர் நல் வேதியராக இருக்காமல் இருக்கலாம்
கடல் ஆர்பரித்தால் போலே ஸ்ரீ எதிராஜா ஸ்ரீ ராமானுஜர் -மால்; கொள் சிந்தையராய் –ஈட்டம்
செழும் –திரைக்கு கடலுக்கும் மாயனுக்கும் -விசேஷணம் -ஏஷ நாராயண ஸ்ரீ மான்
தன்னை உற்றாரை ஆட் செய்ய அன்றோ அவர் அருள் புரிந்தது –
அடியார் எழுந்து இரைத்து ஆடும் இடமே ஸ்ரீ ராமானுஜர் இருப்பிடம் -புலவர் நெருக்கு உகந்த ஸ்ரீ பெருமான் போலே தானே ஸ்ரீ ஸ்வாமியும் –
பாட்டு கேட்கும் இடம் –கூப் பாடு கேட்கும் இடம் வளைத்த இடம் குதித்த இடம் எல்லாம் வகுத்த இடமே-
இது அன்றோ எழில் ஆலி –ஸ்ரீ பரகால நாயகி இருக்கும் இடமே –திருவடி தாமரையே என்று காட்டினானாம் –
இங்கு ஸ்ரீ அமுதனார் ஸ்வாமியை தொழும் பெரியோர் எழுந்து இரைத்து ஆடும் இடமே அடியேனுக்கு இருப்பிடம் என்கிறார்-
ஞானிகள் -பக்தி நிஷ்டர்கள் – ஆச்சார்ய அபிமானம் அறிந்து அனுஷ்டானத்தில் இருந்தவர் -இப்படி மூன்று நிலை –
ஆச்சார்யரைப் பெற்றதே பகவத் அனுக்ரகம் -ஆச்சார்யர் திரு உள்ளம் உகக்குமே –
ஸ்ரீ பகவத் வைபவம் சொல்லியே பாசுரம் தோறும் ஸ்ரீ எம்பெருமானார் வைபவம் பேசுவார் பாட்டு தோறும் —

செழும் திரை பாற்கடல் கண் துயில் மாயன் –
செழும் என்றது -திரைக்கு விசேஷணம் ஆகவுமாம்-கடலுக்கு-விசேஷணம் ஆகவுமாம் —
திரைக்கு விசேஷணம் ஆனபோது –செழுமை –அழகியதாய் -பால் கிளருமா போலே-ஒன்றுக்கு ஒன்றாக திரண்டு வருகிற
இவற்றினுடைய சமுதாய சோபையை சொன்னபடி –
கடலுக்கு-விசேஷணம் ஆன போது-செழுமை -பெருமையாய் -நளி நீர் கடலைப் படைத்து தன் தாளும் தோளும் முடிகளும்-
சமனிலாத பல பரப்பி -என்கிறபடி –
ஸ்ரீ சர்வேஸ்வரனுக்கு இடங்கை வலங்கை கொண்டு கண் வளருகைக்கு-ஈடான பரப்பை உடைய கடல் என்றபடி –
அன்றிக்கே –
செழுமை ஸ்ரீ மாயவனுக்கு விசேஷணம் ஆகவுமாம் –

இப்படிப் பட்ட ஸ்ரீ திரு பாற் கடலிலே –
கடலோதம் கால் அழைப்ப கண் வளரும் –என்கிறபடி துடை குத்த உறங்குவாரைப் போலே –
திரைகளானவை திருவடிகளை அனுகூலமாக அலைக்க – ஊஞ்சலிலே கண் வளருமவனைப் போலே –
கண் வளரா நிற்பானாய் –உறங்குவான் போலே யோகு செய்கிற -ஆச்சர்யத்தை உடையனான ஸ்ரீ சர்வேஸ்வரன் –
ஏஷ நாராயணஸ் ஸ்ரீ மான் -ஷீரார்ணவ நிகேதன -என்றும் –
வெள்ளத்தரவில் துயில் அமர்ந்த வித்தினை -என்றும் சொல்லுகிறபடி அநந்த அவதார கந்தமாய்க் கொண்டு
ஸ்ரீ திருப்பாற் கடலிலே கண் வளர்ந்து அருளுகிற ஸ்ரீ சர்வேஸ்வரன் -என்றபடி –

செழும் திரை பாற்கடல் பள்ளி கொள் மாயன் –என்றும் பாடம் சொல்லுவார்கள் –
திருவடிக் கீழ் விழுந்து இருப்பார் -பாற் கடலான் பாதம் வழுவா வகை நினைந்து – என்கிறபடியே
அப்படிப் பட்ட ஸ்ரீ சர்வேஸ்வரனுடைய கல்யாண குணங்களை அனுபவித்து -அவற்றிலே ஈடுபட்டு –
உன் அடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே -என்றபடி –
அவனுடைய திருவடிகளின் கீழே நிழலும் அடி தாறும் போலே பிரியாதே விழுந்து இருக்குமவர்களான –
கலக்கமிலா நல் தவ முனிவராலே —

நெஞ்சில் மேவும் நல் ஞானி –
இது ஒரு ஞான வைபவமே என்று இத்தையே பலகாலும் அவர்கள் ஸ்லாகித்துக் கொண்டு – போருகையாலே அவர்கள்
நெஞ்சிலே வைக்கப்பட்ட ஞான வைலஷன்யத்தை உடையவராய் –
மேவுதல் -விரும்புதல் –

செழும் திரை — மேவு நன் ஞானி
தனக்கு ஸ்ரீ எம்பெருமானார் உபதேசித்த நன் ஞானம் –பாற்கடல் கண் துயிலும் ஸ்ரீ மாயன் குணங்களிலே ஈடுபட்டு –
அதன் கண்ணே நிலை நிற்கும் -ரசிகர்களான ஸ்ரீ சனகாதி முனிவர்களாலும் –
ஸ்ரீ எம்பெருமானாருக்கு வாய்த்த இந்த சாஸ்திர தாத்பர்ய ஞானத்தின் சீர்மை இருந்தபடி என் -என்று
நெஞ்சார எப்பொழுதும் கொண்டாடும்படி உள்ளதாம் – அத்தகைய ஞானம் வாய்ந்தவர் ஸ்ரீ எம்பெருமானார் -என்கிறார் .

ஸ்ரீ எம்பெருமான் கண் துயிலும் ஸ்ரீ திருப்பாற் கடலிலே அலைகள் செழுமை வாய்ந்து உள்ளன –
செழுமை -அழகு -பெருமையுமாம் –
கோலக் கருமேனி செங்கண் மால் திரு மேனியைத் தீண்டப் பெற்ற பெரும் களிப்பினால் –
கைகளைத் தூக்கி ஆரவாரத்துடன் ஆடுவது போன்று உள்ளது அந்தக் கடல் –
அங்கே போய் ஸ்ரீ மாயனை வழி படுகின்றனர் ஸ்ரீ ப்ரஹ்ம பாவனையில் நிற்பவர்களான சனகாதி முனிவர்கள் –
தன்னிடம் வந்து பள்ளி கொண்ட ஸ்ரீ பரமனை கடல் தன் அலைகள் ஆகிற கைகளாலே திருவடிகளை அலைத்து –
ஊஞ்சலில் ஆட்டி உறங்கும்படி -செய்வதனால் ஸ்ரீ எம்பெருமான் கண் துயில்வதாக தோற்றுகிறது -பக்தர்களுக்கு –

கடலோதம் தம் கால் அலைப்ப கண் வளரும் -ஸ்ரீ முதல் திருவந்தாதி – 13- என்றார் ஸ்ரீ பொய்கை ஆழ்வாரும் .
உண்மையில் உறங்குகிறானா அவன் – அவனுறங்கி விட்டால் உலகின் கதி என்னாவது -ஸ்ரீ மாயன் அல்லனோ –
பொய் உறக்கம் கொள்கிறான் -உறங்குவான் போல் உலகு உய்யும் வழியை யோசனை செய்கிறான் –
உறங்குவான் போல் யோகு செய்வதாக கூறுகிறார் ஸ்ரீ திருவாய் மொழியில் ஸ்ரீ நம் ஆழ்வார் –
நித்ராசி ஜாகர்யயா -விழிப்புடன் உறங்குகின்றாய் -ஸ்ரீ ரங்கராஜ ஸ்தவம் -என்று ஸ்ரீ பட்டர் அருளிச் செய்த படி –
உலகினை காக்கும் விஷயத்தில் விழிப்புடன் உறங்குகின்ற ஆச்சர்யத்தில் ஈடுபட்டு –
ஜிதந்தே புண்டரீகாஷா -ஸ்ரீ தாமரைக் கண்ணனே உன் அழகுக்கு தோற்றோம் -என்றபடி
குணத்திற்கு தோற்று திருவடிகளிலே விழுகிறார்கள் அந்த ஸ்ரீ சனகாதி முனிவர்கள் –

இது ஒரு நாள் நிகழும் நிகழ்ச்சி யன்று –
பாற்கடலான் பாதம் வழுவா வகை நினைந்து வைகல் தொழுவாரை -ஸ்ரீ நான்முகன் திருவந்தாதி – 89- என்றபடி
நாள் தோறும் நடை பெரும் நிகழ்ச்சியாகும் –
ஆகவே வரும் போதெல்லாம் வியக்கத்தக்க குணத்திற்கு தோற்று திருவடிக் கீழ் விழுவதும் அவர்கட்கு மாறாத இயல்பாகி விட்டது –
இது தோற்ற -ஸ்ரீ மாயன் திருவடிக் கீழ் விழுந்திருப்பார் -என்று அருளிச் செய்தார் –
ஸ்ரீ மாயன்-ஆச்சர்யப் படத் தக்கவன்
பாற்கடல் பள்ளிகொள் மாயன் -என்றும் ஒரு பாடம் உண்டு

இங்கனம் மாயன் குணத்திற்கு தோற்று திருவடிக் கீழ் வீழ்தலின் இருப்பு உடையார் உள்ள -ஸ்ரீ சனகாதி முனிவர்கள் –
மயர்வற மதிநலம் அருளப் பெற்ற ஸ்ரீ நம் ஆழ்வாரால் –
கலக்கமில்லா நல் தவ முனிவர் -ஸ்ரீ திருவாய் மொழி – 8 3-10 – என்று போற்றப்படும் ஏற்றமுடைய தங்களது நெஞ்சிலே
ஸ்ரீ எம்பெருமானாருடைய நல் ஞானம் மேவுதற்கும் இடம் ஏற்பட்டு விடுகிறதாம் –
பல காலும் அவர்கள் ஸ்ரீ எம்பெருமானார் உடைய நல் ஞானத்தை கொண்டாடிப் பேசுகையாலே –அவர்கள் நெஞ்சிலே
அந்த ஞானம் இடம் கொண்டமை தெரிகிறது .
நூல்களிலே ஸ்ரீ சனகாதி முனிவர் பேச்சுக்களாய் வரும் இடங்களிலே சரம பர்வ விஷயமாக ஸ்ரீ எம்பெருமானார் அளித்த
ஞானமே பலகாலும் கொண்டாடப் பட்டுள்ளமையைக் கண்டு ஸ்ரீ அமுதனார் இங்கனம் கூறுகிறார் -என்க –
மேவு நல் ஞானி ஸ்ரீ எம்பெருமானது குணத்தை ரசித்து அனுபவிக்கும் நெஞ்சிலும் இந்த நல் ஞானம்
ரசிக்க தக்கதாய் இருத்தலின் பலகால் கொண்டாடும்படி இடம் பெறுகிறது .
மேவுவது விசேஷணமான ஞானம்-அதனை உடையவன் ஞானி அல்லன் .

நல் வேதியர் –
பரம வைதிகர் ஆனவர்கள் –தொழும் திருப் பாதன் –
லஷ்மணாய முநயே தஸ்மை நமஸ் குர்மஹே- என்றும் –
தஸ்மை ராமானுஜார்யாய நம பரம யோகினே -என்றும் –
பிரமாணம் லஷ்மண முநி ப்ரதி க்ர்ஹ்ணா து மாமாம் – என்றும் –
ராமானுஜம் யதிபதிம் ப்ரணமாமி மூர்த்த்நா-என்றும் சொல்லுகிறபடியே
பிரணமாத்ய அனுவர்த்தனந்களை பண்ணா நின்றுள்ள திருவடிகளை உடையனான –

இராமானுசனை –
ஸ்ரீ எம்பெருமானாரை –

தொழும் பெரியோர் –
நித்யாஞ்சலி புடா ஹ்ர்ஷ்டா -என்றும் –
புணர்த்தகையனராய் – என்றும் –
கைகள் கூப்பிச் சொல்லீர் -என்றும் – சொல்லுகிறபடியே சர்வ காலமும் சேவித்துக் கொண்டு இரா நின்றுள்ள பெருமையை உடையவர்கள் –

எழுந் திரைத்தாடுமிடம் –
அவ் அனுபவ ஜநிதமான ஹர்ஷம் உந் மஸ்தகமாய் -அத்தாலே உடம்பு இருந்த இடத்தில் இராதே கிளர்ந்து
கடல் இரைத்தால் போல் இரைத்துக் கொண்டு – ச சம்ப்ரம வியாபாரங்களை பண்ணுமிடம்-

அடியேனுக்கு இருப்பிடமே –
தன்னை உற்றாட் செய்யும் தன்மையினோர்-மன்னு தாமரைத் தாள் தன்னை உற்றாட் செய்ய என்னை உற்றான் -என்கிறபடியே
அவர்களுக்கு-சரமாவதி தாசனான அடியேனுக்கு வஸ்தவ்ய தேசம் –
ஸ்ரீ சிரீதரன் தொல் புகழ் பாடி கும்பிடு-நட்டமிட்டாடி கோகுகட்டுண்டு உழலுகிற -பிரதம பர்வ நிஷ்டரைப் போலே –
இச் சரம பர்வதத்திலும் எழுந்து இரைத்து ஆடுமவர்கள் இருக்குமிடம் அடியேனுக்கு இருப்பிடம் என்கிறார் –

யா வைகுண்ட கதா ஸூ தாரச புஜாம் ரோசேத நோ சேதசே-என்றும் –
வாஸ ஸ்தானம் ததிஹ க்ர்தி-நா பாதி வைகுண்ட கல்பம் –என்றும் –
வஸ்தவ்யம் ஆசார்ய சந்நிதியும் -என்னக் கடவது இறே-

நல் வேதியர்கள் தொழும் திருப்பாதன்-
வேதியர்களான ஸ்ரீ சனகாதி முனிவர்கள் நெஞ்சில் ஸ்ரீ எம்பெருமானாருடைய ஞானம் மாத்ரம் மேவுகிறது —
நல் வேதியர்களோ அந்த ஞானத்தை தங்கள் அனுஷ்டானத்தில் கொண்டு ஸ்ரீ எம்பெருமானார் பாதங்களை-தொழுகின்றனர் –
நல் வேதியர் –
வேதத்தின் தாத்பர்யப் பொருளை உணர்ந்து -சரம பர்வத்தில் நிலை நிற்பவர்கள் .

ஸ்ரீ மாயன் திருவடிக் கீழ் விழுமவர் வேதியர்
ஸ்ரீ எம்பெருமானாரை தொழுமவர் நல் வேதியர் என்றது ஆயிற்று –
ஸ்ரீ மாயன் திருவடிக் கீழ் வேதியர் விழுந்து இருப்பார் .
விழும் திருவடிகளை உடைய ஸ்ரீ மாயனோ கண் துயில்பவன் .
ஸ்ரீ எம்பெருமானார் பாதத்தை தொழுது பணி புரிபவராய் இருப்பர் நல் வேதியர் .
தொழப்படும் ஸ்ரீ எம்பெருமானாரோ -காதலுற்றார்க்கும் உண்டோ கண்கள் துஞ்சுதலே -திரு விருத்தம் – 98- என்றபடி கண் துயிலாதவர் .

இராமானுசனை தொழும் பெரியார் –இருப்பிடம்
எப்பொழுதும் இமையோர்கள் குழாம் -நித்யாஞ்சலி ப்டாஹ்ருஷ்டா -எப்பொழுதும் கை கூப்பினவர்களாய் களிப்புடையவர்களாக -என்றபடி
தொழுவது -சூழ்வது-பிரதஷிணம் செய்வது – முதலிய செய்து -ஸ்ரீ பரம பத நாதனை வழி படுவது போலே –
ஸ்ரீ எம்பெருமானாரை தொழுவது -சூழ்வது – முதலியன செய்து எப்பொழுதும் அனுபவித்து கொண்டே இருக்கும் பெருமை வாய்ந்த பெரியோர்கள் –
அவ் அனுபவத்தால் உண்டான களிப்பு -உள் அடங்காது -இருந்த படியே இருக்க ஒண்ணாது
கிளர்ந்து எழுந்து ஆரவாரங்களைப் பண்ணிக் கொண்டு -பிரதம பர்வத்தில் –
கும்பிடு நட்ட மிட்டாடி – ஸ்ரீ திருவாய் மொழி – 3-5 3- என்றபடி –கூத்தாடுகின்ற இடம் –
அவர்களது அந்நிலைக்கு அடிமை பட்டு விட்டவனாகிய-எனக்கு வாழும் இடம் ஆகும் -என்கிறார் .
அடியார்கள் குழாங்களுடன் அனுபவித்தற்கு ஸ்ரீ வைகுந்தத்தில் வாழ -ஏனையோர் விரும்புவது போலே –
தொழும் பெரியோருடன் ஸ்ரீ எம்பெருமானாரை அனுபவிப்பதற்கு அவர் எழுந்து அருளி உள்ள இடமே-
எனக்கு பேறான மோஷ பூமி -என்றது ஆயிற்று –

நல் வேதியர் ஞானம் கனிந்து பக்தி மார்க்கத்தில் வந்த நல் வேதியர்கள்-
ஸ்ரீ கூரநாத ஸ்ரீ குருகேசர் ஸ்ரீ பிள்ளான் ஸ்ரீ எம்பார் ஸ்ரீ ஆண்டான் ஸ்ரீ கிடாம்பி ஆச்சான் ஸ்ரீ வகுட நம்பி போல்வார்-
அங்கு உற்றேன் அல்லேன் இங்கு உற்றேன் அல்லேன்-ஸ்ரீ ஆழ்வார் தவிக்கிறார்
ஸ்ரீ அமுதனார் கதறவில்லை இதே இருப்பிடம் என்கிறார்–எது இருப்பிடம் என்று தைரியமாக அருளுகிறார் இதில்-
பாட்டு கேட்கும் இடம் –கூப் பாடு கேட்கும் இடம் வளைத்த இடம் குதித்த இடம் எல்லாம் வகுத்த இடமே-

—————–

கடலோதம் தம் கால் அலைப்ப கண் வளரும் -முதல் திருவந்தாதி – 13- என்றார் பொய்கை ஆழ்வாரும் .

பாற்கடலான் பாதம் வழுவா வகை நினைந்து வைகல் தொழுவாரை -நான்முகன் திருவந்தாதி – 89-

உறங்குவான் போல் யோகு செய்த பெருமானைச்
சிறந்த பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன் சொல்
நிறங் கிளர்ந்த அந்தாதி ஆயிரத்துள் இப் பத்தால்
இறந்து போய் வைகுந்தம் சேராவாறு எங்ஙனேயோ?–5-4-11-

கலக்கமில்லா நல் தவ முனிவர் கரை கண்டோர்
துளக்கமில்லா வானவர் எல்லாம் தொழுவார்கள்
மலக்கமெய்த மா கடல் தன்னைக் கடைந்தானை
உலக்க நாம் புகழ் கிற்பது என் செய்வதுரையீரே–8-3-10-

காதலுற்றார்க்கும் உண்டோ கண்கள் துஞ்சுதலே -திரு விருத்தம் – 98-

—————————————————————————————————————————————————–———————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ ராமானுஜ நூற்றந்தாதி பாசுரமும்- ஸ்ரீ ஆழ்வார் பாசுரங்களும் –104-கையில் கனி என்னக் கண்ணனைக் காட்டித் தரிலும்–இத்யாதி –

June 3, 2020

ஸ்ரீ பெரிய ஜீயர் அருளிய உரை ––அவதாரிகை –

உபதேச ஜ்ஞான லாப மாத்ரம் ரசிக்கிற படி கண்டால் -ஸ்ரீ பகவத் விஷயத்தை சாஷாத் கரித்தீர் ஆகில்
உமக்கு எப்படி ரசிக்கிறதோ என்று -ஸ்ரீ எம்பெருமானாருக்கு கருத்தாகக் கொண்டு –
பகவத் விஷயத்தை விசதமாகக் காட்டித் தரிலும் –
தேவரீர் திரு மேனியில் பிரகாசிக்கிற குணங்கள் ஒழிய நான் வேண்டேன்
இதுக்கு ஈடான பிரசாதத்தை செய்து அருளில் இரண்டு விபூதியிலும் கால் பாவுவன் –
அல்லது தரியேன் -என்கிறார்

ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை–அவதாரிகை–

கீழ்ப் பாட்டில் தத்வ ஹித புருஷார்த்த தத் யாதாம்ய ஞானத்தை சுவ்யக்தமாம்படி
உபதேசித்தார் என்று இவர் இனியராய் இருந்தவாறே –
அத்தைக் கண்டு உபதேச மாத்ரத்துக்கே இப்படி இனியராய்க் கொண்டு ரசித்து இருந்தீர் –
பகவத் விஷயத்தை சாஷாத் கரிக்கும்படி பண்ணிக் கொடுத்தோம் ஆகில் எப்படி ரசித்து இனியராக கடவீரோ
என்று ஸ்ரீ எம்பெருமானாருக்கு கருத்தாக நினைத்து -தேவரீர்-
சகல ஜன மநோ ஹாரி -திவ்ய சேஷ்டிதங்களைப் பண்ணிக் கொண்டு போந்த-ஸ்ரீ கிருஷ்ணனை கரதலாமலகமாக-
காட்டித் தரிலும் தேவரீர் உடைய திவ்ய மங்கள விக்ரகத்திலே பிரகாசியா நின்றுள்ள கல்யாண குணங்களை ஒழிய
அடியேன் வேறு ஒரு விஷயத்தை வேண்டேன் என்ன –
இவன் இப்படி மூர்க்கு பேசலாமோ என்று சீறிப்பாறு செய்து அடியேனை சம்சாரமாகிற நரகத்தில் விழப் பண்ணினாலும் –
நம்மையே பற்றி இருக்கிறான் இறே என்று -கிருபையாலே -நிரவதிக தேஜோ ரூபமான பரம பதத்திலே கொண்டு போய் சேர்த்திடிலும்-
வர்ஷூ கவலாஹம் போலே பரம உதாரரான ஸ்ரீ எம்பெருமானாரே –
தேவரீர் உடைய திவ்ய மங்கள விக்ரகத்தை அனுபவிக்கைக்கு உடலான நிர்ஹேதுக பரம கிருபையாலே தேவரீர்
செய்து அருளின விபூதி த்வயத்திலும் வைத்துக் கொண்டு –
ஏதேனும் ஓர் இடத்தில் கால் பாவி நின்று தரிப்பன் – இல்லை யாகில் தரிக்க மாட்டேன் என்று
ஸ்வ ப்ராப்யத்தை நிஷ்கர்ஷித்து அருளுகிறார் –

ஸ்ரீ அமுது விருந்து-ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள்-அருளிய உரை–அவதாரிகை-

உபதேசித்த ஞானமே இப்படி ரசிக்கும்படி இருப்பின் -நேரே ஸ்ரீ கண்ணனைக் காட்டிக் கொடுத்து விட்டால்
எங்கனம் நீர் ரசிப்பீரோ -என்று ஸ்ரீ எம்பெருமானாருக்கு கருத்தாகக் கொண்டு –
ஸ்ரீ கண்ணனை நன்றாக காட்டித் தந்தாலும் -தேவரீர் திரு மேனியில் விளங்கும் குணங்களை ஒழிய நான் வேண்டேன் –
இந் நிலையினுக்கு ஏற்றவாறு அருள் புரிந்தால் –சம்சாரத்திலும் பரம பதத்திலும் கால் பாவி நிற்பன் –
இன்றேல் தரித்து இருக்க வல்லேன் அல்லேன் -என்கிறார் .

கையில் கனி என்னக் கண்ணனைக் காட்டித் தரிலும் உன்தன்
மெய்யில் பிறங்கிய சீரன்றி வேண்டிலன் யான் நிரயத்
தொய்யில் கிடக்கிலும் சோதி விண் சேரிலும் இவ்வருள் நீ
செய்யில் தரிப்பன் இராமானுச என் செழும் கொண்டலே – – -104 –

பத உரை –
எம் செழும் கொண்டல் -எங்களுக்கு தன் வன்மையை வெளிப்படுத்தி
செழுமை வாய்ந்த மேகம் போல் -விரும்புமவற்றை பொழியுமவரான
இராமானுச -ஸ்ரீ எம்பெருமானாரே
கண்ணனை -எளிமை வாய்ந்த ஸ்ரீ எம்பெருமானை
கையில் கனி என்ன -உள்ளங்கையில் உள்ள நெல்லிக் கனி போலே
காட்டித் தரிலும் -நேரே காணுமாறு செய்து கொடுத்தாலும்
உன் தன் -தேவரீருடைய
மெய்யில் -திரு மேனியில்
பிறங்கிய -விளங்கிய
சீர் அன்றி -குணங்களைத் தவிர
யான் வேண்டிலேன் -நான் விரும்ப மாட்டேன்
நிரயத் தொய்யில் -நரகச் சேற்றிலே
கிடக்கிலும் -கிடந்தாலும்
சோதி -ஒளி மயமான
விண் -பரம பதத்தில்
சேரிலும் -சேர்ந்தாலும்
இ அருள் -இந்த மெய்யில் பிறங்கிய சீரை அனுபவிப்பதற்கு உறுப்பான அருளை
நீ செய்யில் -தேவரீர் செய்து அருளினால்
தரிப்பன் -தரித்து இருப்பேன் –

வியாக்யானம் –
விலஷணமான மேகம் போலே பரமோதாரராய் அது தன்னை எங்களுக்கு பிரகாசிப்பித்தது அருளினவரே —
ஆஸ்ரித சுலபனான ஸ்ரீ சர்வேஸ்வரனை உள்ளங்கை நெல்லிக் கனி போலே சாஷாத் கரிப்பித்து தரிலும்
தேவரீருடைய திவ்ய விக்கிரகத்தில் பிரகாசிக்கிற ஸௌந்தர்யாதி குணங்கள் ஒழிய நான் வேண்டேன் –
சம்சார கர்த்தமத்தில் முழுகி -அழுந்திக் கிடக்க்கவுமாம் –
சுத்த சத்வ குணம் -குண மயம் -ஆகையாலே -நிரவதிக தேஜோ ரூபமான பரம பதத்தை ப்ராபிக்கவுமாம் –
தேவரீருடைய திரு மேனி குணத்தையே அனுபவித்து இருக்கை யாகிற இதுக்கு உறுப்பான பிரசாதத்தை
தேவரீர் செய்து அருளில் ஏதேனும் ஓர் இடத்திலும் கால் பாவி நிற்பன் –
அல்லாத போது தரிக்க மாட்டேன் -என்று கருத்து .

பிறங்குதல்-பிரகாசம்
நிரயம்-விடியா வெந்நரகம் -ஸ்ரீ திருவாய் மொழி-2-9-7 – என்கிற சம்சாரம்
தொய்யில் –சேறு-
தொய்யில் என்கிற இடத்தில் ஏழாம் வேற்றுமை குறைந்து கிடக்கிறது –

நிரயத் தொய்யில் கிடக்கிலென் சோதி விண் சேரிலென் -என்று பாடமாகில்-
சம்சாரத்தில் கிடக்கில் என் -ஸ்ரீ பரம பதத்தில் போகில் என் –
இவை இரண்டும் கொண்டு எனக்கு கார்யம் இல்லை .
சம்சாரத்தின் உடைய தோஷத்தையும் ஸ்ரீ பரம பதத்தின் உடைய வைலஷண்யத்தையும் அனுசந்தித்து
இத்தை விட்டு அத்தைப் பெற விருக்கிறேன் அல்லேன் .
இவ் வனுபவத்தை தேவரீர் தரில் சம்சாரத்திலும் தரிப்பன்
இது இல்லையாகில் ஸ்ரீ பரம பதத்திலும் தரியேன் -என்கை-

செழும் கொண்டல் –பார்த்து பார்த்து அருளுபவர் –செழுமை மாறாத கொண்டல்-கருணை குறையாத -விலஷனமான மேகம்-
ஸ்ரீ வைகுண்டம் சென்றாலும் தவிப்பேன் -அங்கும் உம் திருவடி பெற்றால் தரிப்பேன் –
ஸ்ரீ ராமானுஜர் குண அனுபவம் பெற்றார் சம்சாரமும் நித்ய விபூதியும் ஒன்றாகவே கொள்ளுவார்கள்
உன் தன் மெய்யில் -அவன் பொது -உம்மையே அனுபவிப்பேன் -உம்மாலே கரை மரம் சேர பெற்றேன் –
முமுஷுதை அவனால் பாண்டவர்கள் பெற வில்லை -அவன் தண்டகரன் –உம் அபிமானம் உத்தாரகம் –
ஸ்ரீ ஆச்சார்ய சம்பந்தம் இல்லாமல் உணர்த்துவான் -தாமரை நீரில் இல்லா விடில் ஆதித்யன் உலர்த்தும்

பாலும் சக்கரையும் சேர்த்து -பால் என்கோ-ஆசார்யன் சக்கரை சேர்த்து பருகி இன்பம் -பெற்ற பின் -வெறும் பால் சுவைக்குமோ
கீழ் பாசுரத்தில் ஸ்ரீ நரசிம்ஹர் கீர்த்தி-பின் வாசல் ஸ்ரீ தெள்ளிய சிங்கர்-
இங்கு ஸ்ரீ கிருஷ்ண பக்தி -முன் வாசல்-ஸ்ரீ பார்த்த சாரதி அனுபவம் -ஸ்ரீ ஸ்வாமி தானே அவனும் –
எம்மா வீடு -சிற்றம் சிறுகாலை -இந்த பாசுரம் -மூன்றும் ஏக அபிப்ராயம் -ப்ராப்ய நிஷ்கர்ஷம்-

எங்கும் உளன் கண்ணன் –சர்வ வியாபியை கையில் ஏக தேசத்தில் காட்டித் தரிலும் –
ஸ்ரீ ப்ரஹ்மம் –காட்டித் தரும் வைபவம் உமக்கு அன்றோ –மலை –போல நீர் -நெல்லிக்கனி போலே அன்றோ ஸ்ரீ கண்ணன் –
அதனால் மெய்யில் பிறங்கிய சீர் –ஞானம் தர்சன பிராப்தி -பக்தி தானே காட்டி தரும் -கிருஷ்ண பக்தி தானே ஸ்ரீ ஸ்வாமி –
ஸ்வரூப குணங்கள் -மகரிஷிகள் ஆழ்வார்கள் -நம் போல்வார் மெய்யில் பிறங்கிய சீர் –
ரூப குணங்கள் -ஸ்வரூப குணங்கள் விட ரூப குணங்கள் பெரியதே பக்த பக்தர்களுக்கு தானே உயர்ந்தவற்றை அருளுவீர் –

இவருடைய அவிததத விஷயாந்தரம் இருக்கும் படி -உந்தன் ரூப அனுபவமே -ஸ்ரீ கண்ணன் ரூப அனுபவம் வேண்டாம் –
ஸ்ரீ நம்பியை நான் கண்ட பின் என்னை முனிவது என் -என் நெஞ்சினால் நோக்கி கண்ணீர் -ப்ராப்ய த்வரையில் தலை மகள் –
இருள் தரும் ஞாலத்தில் இருள் அன்ன மா மேனி –அம்போஜ விகாசாய –ஸ்ரீ ராமானுஜ திவாகரர் -ஸ்ரீ அச்யுத பானு –
ஆயர் குலத்தில் தோன்றிய அணி விளக்கு அன்றோ அவனும் -மெய்யில் பிறங்கிய சீர் -ஸ்வரூபத்தால் பிரகாசம் சொன்னாலும் –
ரூபத்தால் -ஒப்புமை என்றபடி -ஸ்வயம் பிரகாசம் -மாலாகாரர் போல்வாருக்கு காட்ட வேண்டிற்றே -இங்கு அப்படி இல்லையே –
சம்சாரப்பற்று பயந்து விட்டேன் அல்லேன் -பரமபதம் வைலஷ்ணண்யம் அறிந்து செல்ல பிரயாசப்பட்டேன் அல்லேன் –
உனது மெய்யில் பிறங்கிய சீர் ஒன்றிலே ஒன்றினேன்

எம் செழும் கொண்டல் –
ஒரு பாட்டம் மழை குறைச்சலாய் இருந்தால் முகம் வாடிக் கிடக்கும்-பயிர் போலே –
வித்யா நயா சில்பனை புணம் – என்கிறபடியே –
செருப்புக் குத்தக் கற்றனவோபாதியான-சாஸ்த்ரங்களையே அப்யசித்துக் கொண்டு போந்து –
சாவித்யா யாவிமுக்யதே -என்கிற தத்வ-ஞானத்தை பிராபிக்க பெறாதே –
வாடினேன் வாடி -என்கிறபடியே உஜ்ஜீவன ஹேது அன்றிக்கே முகம் வாடி கிடக்கிற எங்களுக்கு
ஒரு பாட்டம் மழை பொழிந்தால் போலே விலஷணமான தம் திருவடிகளில் சம்பந்தத்தை உண்டாக்கி –
ஞான உபதேசம் பண்ணி ஜீவனத்தைக் கொடுத்து –சத்தையை உண்டாக்கினவர் ஆகையாலே -செழும் கொண்டல் -என்கிறார் –

தூமஜ்யோ திச்சலில மருதாம் சந்நிபாதத்தாலே உண்டானதாய் ப்ராக்ருதமாய் அபேஷித்தவர்களுக்கு வர்ஷியாதே –
அபேஷியாத சமுத்ராதிகளிலே வர்ஷித்து கொண்டு போருகிற மேகம் போல் அன்றிக்கே –
தத்வ யாதாம்ய ஞானங்களிலே தலைவராய் -அபேஷா நிரபேஷமாக –லோகத்தாரை எல்லாம் உஜ்ஜீவிப்பிக்க கடவோம் என்று-
தீஷித்து கொண்டு -அவதரித்த கல்யாண குண வைலஷண்யத்தை உடையவர் ஆகையாலே-செழும் கொண்டல் -என்கிறார் –

இராமானுசா –
இப்படிப் பட்ட ஸ்ரீ எம்பெருமானாரே –

கையில் கனி யன்ன கண்ணன் காட்டித் தரிலும் –
பத்துடை அடியவர்க்கு எளியவன் -என்கிறபடியே
ஆஸ்ரித பாரதந்த்ர்யனாய்க் கொண்டு -தூத்ய சாரத்யங்கள் பண்ணுகையும் –
கண்ணிக் குரும் கையிற்றால் கட்டுண்டான் காணேடி -என்கிறபடியே –
ஒரு அறுதல் கயிற்றால் கட்டுண்டும் அடி உண்டும் இருக்கையும் –
கொற்றக் குடையாக ஏத்தி நின்ற கோவர்த்தனத்து என்னை உய்த்திடுமின் -என்கிறபடியே
கோவர்த்தன உத்தாராணம் பண்ணுகையும் –
திண்ணன் வீடு முதல் முழுதுமாய் -என்கிறபடியே
சர்வ ஸ்மாத் பரனுமாகிய ஆச்சர்ய குண சேஷ்டிதங்களை உடையனான ஸ்ரீ கிருஷ்ணனை உள்ளம் கை
நெல்லிக் கனி போல் சாஷாத் கரிப்பித்து தரிலும் –

கையில் —-காட்டித் தரிலும் –
கண்ணன் –ஸ்ரீ கிருஷ்ணன்
எல்லாருடைய நெஞ்சையும் இழுக்கிறவன்
அத்தகைய பேர் அழகனை கையில் கொடுத்து அனுபவிக்க சொன்னாலும் வேண்டேன் -என்கிறார் –

கண்ணன் -கருப்பன்
இருள் அன்ன மா மேனி எனக்கு வேண்டாம் –
உத்யத்தி நேசனி பமுல்லச தூர்த்த்வ புண்டரம் ரூபம் தவாஸ்து எதி ராஜ த்ருசோர் மமாக்ரே -என்று
உதிக்கும் சூர்யனை ஒத்ததும் திரு மண் காப்பு துலங்குவதுமான தேவரீர்
திரு மேனி ஸ்ரீ எதிராஜரே -என் கண் எதிரே தோன்றுக -என்றபடி
உதிக்கும் கதிரவனை ஒத்த திருமேனியையே நான் அனுபவிக்க வேண்டும் -என்கிறார் –

திரு மகள் கேள்வனாய் பெருமை உடையவனாய் இருப்பினும் கையில் கனி என்ன காட்டித் தருவதற்கு பாங்காய் –
கையாளாய்-எளிமைப்பட்டு இருத்தல் தோன்றக் –கண்ணன் -என்கிறார் –
கண்ணன் -எளிமையில் கையாளானவன்-
ஸ்ரீ திரு விருத்தம் -63 -ஆம் பாசுரத்தில் கண்ணன் திருமால் -என்பதற்கு
ஸ்ரீய பதி யாகையால் ஆஸ்ரிதருக்கு கையாள் ஆனவன் -என்று ஸ்ரீ ஆசார்யர்கள் வியாக்யானம் செய்து இருப்பது காண்க .

எங்கும் உளன் கண்ணன்
கண்ட கண்ட எல்லா இடமும் தனக்கு இருப்பிடமாக கொண்டவன் ஸ்ரீ கண்ணன் -எங்கும் உள்ள வ்யாபகனான ஸ்ரீ கண்ணனை
கையில் கனியைப் போலே உள்ளங்கையில் அடக்கி அனுபவிக்கக் கொடுத்தாலும் நான் வேண்டேன் -என்கிறார் .

உன் தன் மெய்யில் பிறங்கிய சீர் அன்றி வேண்டிலன் யான் –
பதிம் விச்வச்ய -என்றும் –
தேவாநாம் தானவா நாஞ்ச சாமான்ய மதிதைவதம் –என்றும் –
உலகுக்கு ஓர் முந்தைத் தாய் தந்தை – என்றும் சொல்லுகிறபடியே
எல்லாருக்கும் பொதுவானவன் விஷயத்தில் சக்தன் ஆனேனோ –
அனந்யார்ஹ நிஷ்டர்க்கே ஸ்வாமியான தேவரீர் பக்கலில் அன்றோ நான் சக்தன் ஆனது –
எப்போதும் பிரீதி விஷயமான வஸ்துவிலே அன்றோ ருசி பிறப்பது –
ஆகையாலே என்னுடைய ப்ரீதி விஷயமான தேவரீர் திவ்ய மங்கள விக்கிரகத்தில் பிரகாசிக்கிற
சௌந்தர்யா லாவண்யாதி குணங்களை ஒழிய வேறு ஒன்றை நான் அபேஷியேன் –
அத்தை பிரசங்கிப்பதும் செய்யேன் –
பிறங்குதல்-பிரகாசித்தல் –

அது என் -சர்வ சமாஸ்ரயநீயனான ஸ்ரீ சர்வேஸ்வரன் ப்ராப்யன் என்றும்
சேதனரான நீர் ப்ராப்தா என்றும் –
ப்ராப்யஸ்ய ப்ரம்மணோ ரூபம் -இத்யாதி சாஸ்த்ரங்களிலே சொல்லா நிற்க செய்தே -நீர் இங்கனே சொல்லக் கூடுமோ என்னில் –

1–ப்ராப்யனான ஸ்ரீ சர்வேஸ்வரன் நித்யனாய் –
எனக்கு அந்தராத்மாவாய் இருக்கச் செய்தேயும் -அநாதி காலம் பிடித்து இவ்வளவும் நான் சம்சாரத்தின் உடைய
கரை கண்டு கொண்டேன் அல்லேன் –
நான் இன்று தேவரீரை லபித்த பின்பு கரை மரம் சேரப் பெற்றேன் – ஆகையால் தேவரீரே எனக்கு பிராப்யம் என்று கருத்து –

அன்றிக்கே–
2- ஸ்ரீ கிருஷ்ணன் தூத்ய சாரத்யங்களை பண்ணும் தசையில் –
தன்னுடைய விஸ்வ ரூபத்தை-அனுகூல பிரதி கூல விபாகம் அற- தர்சிப்பித்த அளவிலும் –
திருத் தேர் தட்டில் இருந்து –தத்வ ஹித-புருஷார்த்தங்களை உபதேசித்த அளவிலும் -ஒருவருக்கு ஆகிலும் முமுஷை ஜனித்ததில்லை –
தேவரீரை சேவித்த மாத்ரத்திலே ஊமைக்கு முமுஷை பிறந்தவாறே தேவரீர் உடைய விக்ரக வைலஷணயத்தை-சாஷாத்கரிப்பித்து அருளி
அவன் தனக்கு வீட்டை அப்போதே கொடுத்து அருளிற்று என்னும்-இச் செய்தியை ஆழ்வான் கேட்டு அருளி –
இனி நமக்கு பேறு கிடையாது ஆகாதே என்று தம்மை வெறுத்துக்-கொண்டார் என்று பிரசித்தம் இறே –
இப்புடைகளாலே பகவத் விஷயத்துக்கும் தேவரீருக்கும் நெடு வாசி உண்டாகையாலே-இப்படி அத்யவசித்தேன் என்றார் என்னவுமாம் –

அங்கனும் அன்றிக்கே –
3–சுலபனான ஸ்ரீ சர்வேஸ்வரனை காட்டித்-தரிலும் –அவன் தண்டதரன் ஆகையாலே -என் தண்மையை பார்த்து விபரீதனாய் இருப்பான் –
ஆகையால்-தேவரீர் அபிமானமே உத்தாரகம் என்று அத்யவசித்து இருந்தேன் –

நாராயணோ பிவிகிர் திம் குரோ பிரச்யுதஸ் யதுர்புத்தே கமலம் ஜலாத பேதம் சோஷயதிரவிர் ந போஷயதி –என்னக் கடவது இறே –

அன்றிக்கே –
4–பிராப்யன் அவனே யாகிலும் அவனை அனுபவிக்கும் போது –
பகவத் வந்தனம் ச்வாத்யம் குரு வந்தன பூர்வகம் -ஷீரம் சர்கரயா யுக்தம் ஸ்வததே ஹி விசேஷத -என்கையாலே
ரசிகரான நமக்கு ஸ்ரீ ஆச்சார்ய விக்ரகத்தை முன்னிட்டு கொண்டே இறே இருக்க அடுப்பது –
அப்படியே அடியேனும் தேவரீர் உடைய விஷயீகாரத்தாலே இந்த வாசி அறிந்தேன் –

(இப்படி நான்கு வாசிகள் உண்டே-அப்யமக வாதம் -நான்காவது -ஸ்ரீ ஸ்வாமி பேச்சாக கொண்டு –
சக்கரையும் வேணுமே பாலை அனுபவிக்க -குரு வந்தனம் முன்னிட்டு பகவத் அனுபவம் )ஆகையால்
தேவரீர் திவ்ய விக்ரகத்தோடே கூடி அனுபவிக்குமது ஒழிய -தனியே அவனை அனுபவிக்க இசைந்தேன்-அல்லேன் என்கிறார் என்னவுமாம் –

உன் தன் மெய்யில் பிறங்கிய சீர் அன்றி வேண்டிலன் யான் –
உன் தன் மெய் -தேவரீருடைய அசாதாரணமான திரு மேனி -அப்ராக்ருத திருமேனி -என்றபடி –
அதனில் பிறங்கிய சீர்-பிறங்குதல் –பிரகாசித்தல்-சீர் -அழகு மென்மை முதலிய குணங்கள் –
ஸ்ரீ கண்ணன் தன் ஸௌந்தர்யத்தை அக்ரூரர் மாலாகாரர் முதலியவர்களுக்கு வெளிப்படுத்தியது போலே வெளிப்படுத்த வேண்டாம் –
தாமே அவை பிரகாசிக்கின்றன –
இதனால் சிஷ்யன் ஸ்ரீ ஆசார்யனுடைய திருமேனியையே சுபாஸ்ரயமாக கொண்டு பேணி ஆதரித்தல் வேண்டும் -என்னும்
நுண் பொருளை ஸ்ரீ அமுதனார் உணர்த்தினார் ஆயிற்று

இவன் இப்படி ஸ்வரூப அனுரூபமாக ஸ்வா தந்த்ர்யத்தை ஏறிட்டு கொண்டான்-என்று தேவரீர் சீறி அருளி என்னை –
நிரயத் தொய்யில் கிடக்கிலும் –
விடியா வென் நரகான சம்சார கர்த்தமத்திலே அழுந்திக் கிடக்கும் படி பண்ணவுமாம் –
தொய்யில் -சேறு –
நிரயம் என்றது -துக்க கரத்வத்தாலே-சம்சாரத்தை சொல்லுகிறது –

அன்றிக்கே நம்முடையவன் அன்றோ என்று தேவரீர் கிருபை செய்து அருளி என்னை
சோதி விண் சேர்க்கிலும் –
சுத்த சத்வ மயமாகையாலே நிரவதிக தேஜோ ரூபமான பரம பதத்தில் கொண்டு போய் சேர்க்க்கவுமாம் –

நிரயத் தொய்யில் கிடக்கில் என் -சோதி விண் சேரில் என் –என்று பாடமான போது
சம்சாரத்தில் இருக்கில் என் -பரம பதத்தில் போய் சேரில் என் -அவை இரண்டும் கொண்டு எனக்கு
கார்யம் இல்லை என்று பொருளாக கடவது –

நிரயத் தொய்யில் இத்யாதிகளுக்கு –நான் சம்சார கர்த்தமத்தில் மூழ்கிக் கிடக்க்கவுமாம் –
சுத்த சத்வ மயம் ஆகையாலே நிரவதிக தேஜோ ரூபமான பரம பதத்தை ப்ராபிக்க்கவுமாம் என்றும் பொருளாகவுமாம் –

இவ் அருள் நீ செய்யில் தரிப்பன் –தேவரீர் உடைய திவ்ய விக்ரக குணங்களான சௌந்தர்யாதிகளை -முற்றூட்டாக
அனுபவித்துக் கொண்டு இருக்கைக்கு உடலான நிர்கேதுக கிருபையை பொகட்டு என-செய்தனில் தரிப்பேன் –
இவ் அனுபவத்தை தேவரீர் தரில் சம்சாரத்திலும் தரிப்பன் -இல்லையாகில் பரம பதத்திலும் தரியேன் -என்கிறார் காணும் –

தரியேன் இனி உன் சரணம் தந்து என் சன்மம் களையாயே –
களைவாய் துன்பம் களையாது ஒழிவாய் களை கண் மற்று இலேன் – என்றும் –
நதேஹம் ந பிராணான் ந சக சுகமே சேஷாபி லஷிதம் ந சாத்மா நான்யத்கி மபிதவ சேஷத் வபி பவாத் –பஹிர்ப் பூதன்
நாத ஷனமபி சஹேயாது சததா வினர்சந்தத் சத்யம் மதுமதன விஜ்ஞாப நமிதம் -என்றும் –
நரகும் ஸ்வர்க்கவும் நாண் மலராள் கோனைப் பிரிவும் பிரியாமையும் -என்று பிரதம பர்வத்தில்
ஸ்ரீ ஆழ்வாரும் ஸ்ரீ ஆளவந்தாரும் ஸ்ரீ அருளாள பெருமாள் எம்பெருமானாரும் அனுசந்தித்தாப் போலே
அமுதனாரும் சரம பர்வத்தில் அனுசந்தித்தார் ஆய்த்து –

நிரய —செய்யில் தரிப்பன் –
நிரயம் -நரகம் -சம்சாரத்தை நரகம் என்கிறார்
நிரயோய ஸ்த்வயா விநா-ராம உன்னை விட்டுப் பிரிந்து இருப்பதே நரகம் – என்று ஸ்ரீ சீதா பிராட்டி கூறினது போலே
ஸ்ரீ பகவானுடைய அனுபவத்தை விட்டுப் பிரிந்து இருக்கும் இடம் ஆதலின் சம்சாரம் நரகமாக சொல்லப்படுகிறது –
விடியா வெம் நரகம் -ஸ்ரீ திருவாய் மொழி – 2-7 7- என்று ஸ்ரீ நம் ஆழ்வாரும் சம்சாரத்தை நரகமாக திருவாய் – மலர்ந்து அருளினார்
தொய்யில் -சேறு

தொய்யில் கிடக்கிலும் -தொய்யிலின் கண் கிடக்கிலும் வண் சேற்று அள்ளல் பொய் நிலம் -ஸ்ரீ திரு விருத்தம் -100 –
என்றபடி சம்சார நரக சேற்றிலே தப்ப ஒண்ணாதபடி அழுந்திக் கிடந்தாலும் -என்றபடி –
தேவரீர் திரு மேனியின் குணங்களை அனுபவிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைக்குமாயின்
சம்சார சேற்றிலும் வருந்திக் கொண்டு இராது கால் பொருந்தி தரித்து இருப்பேன் -என்பது கருத்து –

சோதி விண் சேரி லும் –
பிரகிருதி மண்டலம் போலே சத்த்வம் ரஜஸ் தமஸ் என்னும் முக்குணங்கள் வாய்ந்ததாய் அல்லாமல்
சுத்த சத்வமாய் -ஒளி மயமாய் -உள்ளமை பற்றி -பரம ஆகாசம் எனப்படும் ஸ்ரீ பரம பதத்தை சோதி விண் -என்கிறார் .
அங்குச் சென்றாலும் தேவரீர் திரு மேனிக் குணங்களை அனுபவிக்கும் வாய்ப்பினை
எனக்கு கிடைக்கச் செய்தால் அள்ளல் இல்லாத இன்ப வெள்ளத்தில் அங்குத் திளைக்காது –
தேவரீர் திரு மேனிக் குணங்களையே அனுபவித்து கால் பாவித் தரித்து இருப்பேன் -என்பது கருத்து –

நிரயத் தொய்யில் கிடக்கிலென் சோதி விண் சேரிலென் -என்றும் ஒரு பாடம் உண்டு
வானுயர் இன்பமே எய்திலென் மற்றை நரகமே எய்திலென் -ஸ்ரீ திருவாய் மொழி -என்னும் ஸ்ரீ நம் ஆழ்வார்
ஸ்ரீ ஸூக்தி யடி ஒற்றியது இந்தப் பாடம் –
சம்சாரத்திலேயே கிடந்தால் என்ன பரம பதத்திற்குப் போனால் என்ன –
எனக்கு இவற்றால் ஒரு தீமையோ அன்றி நன்மையோ இல்லை –இரண்டும் ஒரே மாதிரிதான் –
தொய்யில் என்று சம்சாரத்தை விடுகிலேன்-சோதி விண் என்று பரமபத சீர்மை கண்டு விரும்பப் பற்ற கிலேன் –
எம்பெருமானார் திரு மேனிக் குணங்களை அனுபவிக்க பெறின் சம்சாரத்திலும் தரித்து இருப்பேன் –
அவ் அனுபவம் பெறாவிடில் பரம பதத்திலும் தரித்து இருக்க மாட்டேன் -என்றது ஆயிற்று –

ஸ்ரீ ஆள வந்தார் சேவை கிடைக்க வில்லை என்று ஸ்ரீ அரங்கனை சேவிக்காமல் போனீரே-
உம் படி தான் நடந்தேன் என்கிறார் ஸ்ரீ அமுதனார்–
மற்றை காட்டி மயக்கேல்–இதை கொண்டே தரிப்பேன்-கால் பாவுவேன் எங்கும் –இதுவே புருஷார்த்தம்-

எம் செழும் கொண்டல் –
இதனால் ஸ்ரீ எம்பெருமானாருடைய வண்மையை அனுசந்தித்தார் ஆயிற்று .
அவரது வண்மை இன்றித் தாம் உய்வதற்கு வேறு வழி இல்லாமையினாலே அதனையே ஸ்ரீ அமுதனார்
மீண்டும் மீண்டும் அனுசந்திக்கிறார் .
இவ்வருள் செய்வதற்கு – தன்பால் தகுதி எதுவும் இல்லை –
தம் வண்மை கொண்டே இவ்வருள் புரிதல் வேண்டும் -என்பது கருத்து –

செழும் கொண்டல் –
ஏனைய கொண்டல்கள் தாம் கொண்ட நீரைப் பொழிந்த பின்னர் செழுமை நீங்கி வெளுத்துப் போம் –
ஸ்ரீ எம்பெருமானாரோ எவ்வளவு பொழிந்தாலும் கொண்ட கருணை குறை வுறாமையால் செழுமை மாறாது
பண்டைய வண்ணமே நிற்றலால் செழும் கொண்டல் போன்றவராகக் கூறப் படுகிறார் –

————

சிறப்பில் வீடு சுவர்க்கம் நரகம்
இறப்பில் எய்துக, எய்தற்க; யானும்
பிறப்பு இல் பல் பிறவிப் பெருமானை
மறப்பு ஒன்று இன்றி என்றும் மகிழ்வனே––திருவாய் மொழி–2-9-5-

இன்பமில் வெந்நரகாகி -3-10-7-

வானுயர் இன்பமே எய்திலென் மற்றை நரகமே எய்திலென் -திருவாய் மொழி -என்னும் நம் ஆழ்வார் ஸ்ரீ ஸூக்தி

நெடுமாற்கு அடிமை செய்வன் போல் அவனைக் கருத வஞ்சித்து
தடுமாற்றற்ற தீக் கதிகள் முற்றும் தவிர்ந்த சதிர் நினைந்தால்
கொடு மா வினையேன் அவன் அடியார் அடியே கூடும் இது வல்லால்
விடுமாறு எனபது என்னந்தோ வியன் மூ வுலகு பெறினுமே—8-10-1-

வழி பட்டு ஓட அருள் பெற்று மாயன் கோல மலர் அடிக்கீழ்
சுழி பட்டு ஓடும் சுடர்ச் சோதி வெள்ளத்து இன்புற்று இருந்தாலும்
இழி பட்டு ஓடும் உடலினில் பிறந்து தன் சீர் யான் கற்று
மொழி பட்டு ஓடும் கவி அமுதம் நுகர்ச்சி உறுமோ முழுதுமே–8-10-5-

வன் சேற்று அள்ளல் பொய் நிலம் -திரு விருத்தம் -100 –

————————————————————————–———————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-