ஸ்ரீமத் க்ருஷ்ண ஸமாஹ்வாய நமோ யாமுதஸூநவே |
யத்கடாக்ஷைக லக்ஷ்யாணாம் ஸுலப: ஸ்ரீதர: ஸதா ||–தனியன்
ஸ்ரீ பால காண்டம்
1-திரு அவதாரம்
2-தாடகா வதம்
3-விச்வா மித்ரா யாக ரக்ஷணம்
4-ஸூபாஹூ வதம்
5-ஸ்ரீ சீதா விவாஹம்
——
1-திரு அவதாரம்
திருமடந்தை மண்மடந்தை இருபாலும் திகழ
நலம் அந்தம் இல்லதோர் நாட்டில்
அந்தம் இல் பேரின்பத்து அடியரோடு
ஏழுலகம் தனிக் கோல் செல்ல விற்று இருக்கும்
அயர்வறும்அமரர்கள் அதிபதி யான அணியார் பொழில்சூழ்அரங்கநகரப்பன்
அலைநீர்க்கடலுள்அழுந்தும்நாவாய்போல் ஆவார் ஆர்துணை என்று துளங்கும்
நல் அமரர்
துயர் தீர
வல்லரக்கர் இலங்கை பாழ்படுப்பதற்கு எண்ணி
மண் உய்ய மண்ணுலகில் மனிசர் உய்ய
அயோத்தி என்னும் அணி நகரத்து
வெங்கதிரோன் குலத்துக்கு ஓர் விளக்காய்க்
கௌசலை தன் குல மதலையாய்த்
தயரதன் தன் மகனாய்த் தோன்றிக்
ஸ்ரீ பால காண்டம் .–25 பாசுரங்கள்..திரு மடந்தை மண் மடந்தை -தொடங்கி
திருமடந்தை மண்மடந்தை இருபாலும் திகழத் தீவினைகள் போயகல அடியவர்கட்கு என்றும்
அருள் நடந்து இவ்வேழு லகத்தவர்பணிய வானோர் அமர்ந்தேத்த இருந்த இடம்
பெரும்புகழ் வேதியர் வாழ் தரும் இடங்கள் மலர்கள் மிகுகைதைகள் செங்கழுநீர் தாமரைகள் தடங்கள்தொறும் இடங்கள்தொறும் திகழ
அருவிடங்கள் பொழில் தழுவி எழில் திகழும் நாங்கூர் அரிமேய விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே!–3-10-
திருமடந்தை மண் மடந்தை இரு பாலும் திகழ
ந கச்சின் ந அபராத்யதி -என்று குற்றத்தைப் பொறுப்பிக்கும் பிராட்டியும்
முதலில் குற்றம் தன்னை காண்கிறது என்–பின்னைப் பொறுக்கிறது என் -என்று
குற்றம் கண்டு பொறுக்கையும் கூட மிகையாம்படி இருக்கிற ஸ்ரீ பூமிப் பிராட்டியும்
இரண்டு இடத்திலும் விளங்க –குற்றத்தைப் பொறுப்பிக்கைக்கு பிராட்டி –
குற்றம் கண்டு கைவிட ஒண்ணாத இடத்தில்-குற்றம் கணக்கிடும் இதுக்கு பலம் என் -என்று இருக்கும் ஸ்ரீ பூமிப் பிராட்டி-இப்படிப் பட்ட பிராட்டிமார் உடைய நித்ய சன்னதியாலே
சர்வேஸ்வரனுக்கு ஆஸ்ரித விஷயத்து
சம்சாரேஷூ நராதமான் ஷிபாமி -என்கைக்கு
விஷயம் அற்று இருக்கும் ஆயிற்று –
பொறுப்பிக்கும் அவளும் பொறைக்கு உவாத்தானவளும் (தூண்டி விட்டு காரணமாக இருப்பவளும் ) எப்போதும் ஒக்க அருகே இருக்கையாலே ஆஸ்ரிதர் பக்கல் எப்போதும் அவன் அருளே நடந்து அத்தாலே கொடிய அபராதங்கள் இவ்வோ விடங்கள் நமக்கு இருப்பிடம் அல்ல என்று விட்டு ஓட –
———-
புலன் ஐந்து மேயும் பொறி ஐந்து நீங்கி
நலமந்த மில்லதோர் நாடு புகுவீர்
அலமந்து வீய அசுரரைச் செற்றான்
பலமுந்து சீரில் படிமின் ஓவாதே –2-8-4-
நலமந்த மில்லதோர் நாடு–ஆனந்தம் அளவில்லாமல் — சாம்யா பத்தி உண்டே – அத்விதீயமான தேசம்-மாயாவாதி சாருவாகன் போலே-யன்றிக்கே ஆப்த தமரான இவர் நன்மைக்கு முடிவில்லாததொரு தேசவிசேஷம் உண்டாக அருளிச் செய்தார் இறே –உயிர்கள் ஆதிப்பரன் உடன் ஒன்றும் –அல்லல் எல்லாம் வாதில் வென்றான் – –
தத் பதம் பிராப்து காமா –ஆனந்த மயா லோகா -போகா -அநந்த லஷணம் -பரமானந்த லஷணம் –
இவ் விபூதி அநந்த கிலேச பாஜநமாய் இருக்குமா போலே முடிவிறந்த போக்யதையை உடைத்தாய் இருக்கை–நாடு –என்கையாலே -அவித்யாதி நிவ்ருத்தியாதிகள் அன்று -மோக்ஷம் என்கை –-புகுவீர் என்கையாலே -அர்ச்சிராதி மார்க்கத்தாலே தேச பிராப்தியையும் -அதுக்கு இச்சையே அதிகாரம் என்னும் இடத்தையும் சொல்லுகிறது –இசைவு அதிகாரம் தான் -உபாயம் இல்லை -அவன் இரக்கமே உபாயம் -இனிமை தானே உபேயம் –அது ஒரு நாடு உண்டாய் – அத்தை பெற வேணும் என்ற நசை உண்டானாலும் பிரபல விரோதிகள் கிடக்குமாகில் பிரயோஜனம் இல்லையே
———–
வந்தவர் எதிர் கொள்ள மா மணி மண்டபத்து
அந்தமில் பேர் இன்பத்து அடியரொடு இருந்தமை
கொந்து அலர் பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன் சொல்
சந்தங்கள் ஆயிரத்து இவை வல்லார் முனிவரே–10-9-11-
அந்தமில் பேர் இன்பத்து –
அநந்த கிலேச பாஜநம் சம்சாரம் –எல்லை இல்லாத கிலேசங்களுக்கு எல்லாம் எதிர் தட்டே அன்றோ –இந்த உலக வாழ்க்கையில் சுகம் என்று மயங்கும் இத்தனையே உள்ளது துக்கமேயாம்-அநந்த ஸ்திர பலம் -இது -அல்ப அஸ்திர பலம் அது-யவாதாத்ம பாவியாய் நிரதிசயமான ஆனந்தத்தை யுடையராய்க் கொண்டு -ஆனந்த நிர்ப்பரராய்க் கொண்டு –சம்சாரத்தில் துக்கத்துக்கு எல்லை யுண்டாகில் யாய்த்து -அஸ் ஸூகத்துக்கு அவதி சொல்லலாவது ––அடியரொடு இருந்தமை –அடியார்கள் குழாம் களை உடன் கூடுவது என்று கொலோ -2-8-10 என்று ஆசைப் பட்டபடியே இருந்தமை -அவர்களும் தங்களுக்கு போதயந்த பரஸ்பரம் பண்ணுகைக்கு துணை தேடி இறே இருப்பது–பர்வத பரமாணு வாசி இதனால் தானே -ரிஷிகள் -ஆழ்வார் -பெரியாழ்வார் -ஆண்டாள் -மதுரகவி ஆழ்வார் —
—————-
வீற்றிருந்து ஏழுலகும் தனிக்கோல் செல்ல, வீவு இல் சீர்
ஆற்றல் மிக்கு ஆளும் அம்மானை வெம்மா பிளந்தான்றனைப்
போற்றி என்றே கைகள் ஆரத் தொழுது,சொல் மாலைகள்
ஏற்ற நோற்றேற்கு இனி என்ன குறை எழுமையுமே?–4-5-1-
வீற்றிருந்து –
வீற்று என்று வேறுபாடாய், தன் வேறுபாடு அடங்கலும் தோற்ற இருந்து.
ஈண்டு ‘வேறுபாடு’ என்றது, தன்னினின்று வேறுபட்ட எல்லாப் பொருள்களும் தனக்கு அடிமையாகத் தான்
இறைவன் ஆகையாலே வந்த வேறுபாட்டினை. இங்ஙன் அன்றாகில்,
ஒன்றற்கு ஒன்று வேறுபாடு எல்லாப் பொருள்கட்கும் உண்டே அன்றோ?
ஆதலால், இங்கு ‘வேறுபாடு’ என்றது, உயர்த்தியால் வந்த வேறுபாட்டினையே என்க.
எல்லா ஆத்துமாக்களுக்கும் ஞானமே வடிவமாய் இருப்பதாலே, அவனோடு ஒப்புமை உண்டாயிருக்கச் செய்தேயும்,
எங்கும் பரந்திருத்தல், எல்லாப்பொருள்கட்கும் இறைவனாயிருத்தல்,
எல்லாப் பொருள்களையும் ஏவுகின்றவனாயிருத்தல் ஆகிய
இவை அந்தச் சர்வேசுவரன் ஒருவனிடத்திலேயே கிடக்குமவை அல்லவோ?’
தன்னை ஒழிந்தார் அடையத் தனக்கு அடிமை செய்யக்கடவனாய், தான் எங்கும் பரந்திருப்பவனாய்,
ஆகாசம் பரந்திருத்தலைப் போல அன்றிக்கே,
ஜாதி பொருள்கள் தோறும் நிறைந்திருக்குமாறுபோலே இருக்கக்கடவனாய், இப்படிப் பரந்திருத்தல் தான் ஏவுவதற்காக அன்றோ?
இவ்வருகுள்ளாரை அடையக் கலங்கும்படி செய்யக்கூடியவைகளான அஞ்ஞானம் முதலானவைகள்-
தர்மாதீ பீடம் ஞான அஜ்ஞ்ஞான –தர்ம அதர்ம –வைராக்ய -அவைராக்ய –ஐஸ்வர்யம் அநஸ்வர்யம்-எட்டு கால்கள் –
முழுதும் தன் ஆசனத்திலே கீழே அமுக்குண்ணும்படி அவற்றை அதிஷ்டித்துக்கொண்டு இருக்கும் படியைத் தெரிவிப்பார்,
‘இருந்து’ என்கிறார்.
அன்றிக்கே, ‘தன்னினின்றும் வேறுபட்ட எல்லாப் பொருள்களையும் உடையவன் ஆகையால்
வந்த ஆனந்தம் தோற்ற இருக்கிற இருப்பைச் சொல்லுகிறது’ என்னுதல்.
ஏழ் உலகும் தனிக்கோல் செல்ல –
சுற்றுப்பயணம் வந்து உலகத்தையெல்லாம் நிர்வாகம் செய்கையன்றிக்கே, இருந்த இருப்பிலே
உலகமடையச் செங்கோல் செல்லும் படியாக ஆயிற்று இருப்பது. ‘ஏழ் உலகு’ என்று பரமபதமும் அதற்குக் கீழே உள்ள
உலகங்களுமான இரு வகை உலகங்களையும் சொல்லிற்றாதல்;
பரமபதத்திற்கு இப்பால் உள்ள உலகங்கள் மாத்திரத்தைச் சொல்லிற்றாதல். இரு வகையான உலகங்களையும் சொல்லும் போது
மூன்று வகையான ஆத்துமாக்களையும் நான்கு வகையான பிரகிருதியையும் சொல்லுகிறது.
நான்கு வகையான பிரகிருதிகளாவன : காரிய காரண உருவமான இரு வகைப்பட்ட பிரிவுகள் அங்கு;
இங்கும், அப்படியுண்டான இரு வகைப்பட்ட பிரிவுகள். லீலாவிபூதி மாத்திரத்தைச் சொன்னபோது,
கீழேயுள்ள உலகங்களையும் பூமியையும் கூட்டி ஒன்று ஆக்கி, பரமபதத்திற்கு இப்பாலுள்ள உலகங்களை ஆறு ஆக்கி,
ஆக ஏழையும் சொல்லுகிறது என்று கொள்க.
——————–
அணியார் பொழில் சூழ் அரங்க நகரப்பா
துணியேன் இனி நின்னருளால் அல்லது யெனக்கு
மணியே மணி மாணிக்கமே மது சூதா
பணியாய் யெனக்கு உய்யும் வகை பரஞ்சோதி –11-8-8-
அணியார் பொழில் சூழ் –
அழகு மிக்கு இருந்துள்ள பொழில் -என்னுதல்-
திரட்சி மிக்க பொழில் -என்னுதல் –
அரங்க நரகரப்பா –
நிருபாதிக பந்துவானவன் நித்ய வாஸம் பண்ணுகிற தேசம் ஆகையாலே உத்தேச்யம் –
வாசஸ் ஸ்தானமான தேசம் தான் நிரதிசய போக்கியம் ஆகையாலும் உத்தேச்யம் –
————
ஆவார் ஆர் துணை? என்று அலை நீர்க் கடலுளழந்தும்
நாவாய் போல் பிறவிக் கடலுள் நின்று நான் துளங்கத்
தேவார் கோலத் தொடும் திருச் சக்கரம் சங்கினொடும்
ஆஆ! என்று அருள் செய்து அடியேனொடும் ஆனானே.–5-1-9–
நான் சம்சாரத்தில் பட்ட கிலேசம் எல்லாம் தீரும்படி தன் கிருபையால்
பிரகிருதி சம்பந்தம் இல்லாத வடிவோடே வந்து கலந்தான் என்கிறார்
துணை ஆவார் ஆர் என்று – துணை ஆவார் யார்? என்று.-அலை நீர்க் கடலுள் அழுந்தும் நாவாய் போல் பிறவிக் கடலுள் நின்று நான் துளங்க–கொந்தளிப்பையுடைய கடலுக்குள்ளே அழுந்துகிற நாவாய் போலே, பிறவிப் பெருங்கடலிலே நின்று நான் நடுங்க.
நாவாய் போல்’ என்கிற இடத்தில், நாவாய் மாத்திரத்தை நினைத்த போது, ‘ஆவார் ஆர் துணை’ என்றதனைக் கரையிலே நின்றவர்களுடைய வார்த்தை ஆக்குக. அதற்குக் கருத்து, நோவு படா நிற்கவும் உணர்த்தி அற்று இருந்தபடியைத் தெரிவித்தபடி.
நடுங்குகையாவது, அசைந்து வருகை.-மானஸ சலனம் நாவாயில் உள்ளோரை குறிக்கும் பொழுது –திரு நாவாய் – –பிரிந்த துன்பக் கடல் கடத்தும் விஷ்ணு போத ஆன்ரு சம்சயம் நாவாயிலே நிழல் எழும் –சூர்ணிகை -180-
அன்றிக்கே, ‘நாவாய் போல்’ என்பதனைக் ‘கட்டில் கத்துகிறது’ என்பது போன்று ஆகு பெயராகக் கொண்டு, ‘நாவாய்’ என்பதற்கு, நாவாயிலே இருக்கின்ற மக்கள் என்று பொருள் கோடலுமாம்.
—————–
நாமடைந்த நல்லரண் நமக்கென்று நல்லமரர்
தீமை செய்யும் வல்லசுரரை அஞ்சிச் சென்றடைந்தால்
காம ரூபம் கொண்டு எழுந்து அளிப்பான் திருமோகூர்
நாமமே நவின்று எண்ணுமின் ஏத்துமின் நமர்காள்–10-1-10-
நல்லமரர் –தங்கள் ஆபத்துக்கு இவனே உபாயம் என்று அறிகையாலே-நல் அமரர் -என்கிறார் –அசுரர்களைக் காட்டிலும் வேறுபாடு இத்துனையே யாம் –
ஈஸ்வர அபிமானிகளாக இருந்தாலும் நல் அமரர் என்கிறது இத்தைப் பற்றி இறே-
————–
வானவர் தம் துயர் தீர வந்து தோன்றி மாண் உருவாய் மூவடி மாவலியை வேண்டித்
தானமர வேழலகு மளந்த வென்றித் தணி முதல் சக்கரப் படை என் தலைவன் காண்மின்
தேனமரும் பொழில் தழுவும் எழில் கோள் வீதிச் செழு மாட மாளிகைகள் கூடம் தோறும்
ஆன தொல் சீர் மறையாளர் பயிலும் செல்வத் தணி யழுந்தூர் நின்றுகந்த வமரர் கோவே -7-8-6-
வானவர் தம்-ஈஸ்வரோஹம் -என்றும் வான் உலகம் அடைவதே ப்ராப்யம் என்று இருக்கும் தேவர்கள் –துயர் தீர வந்து தோன்றி –அவனை அல்லாது அறியாத-தொடை யொத்த துளபமும் கூடையும் பொலிந்து தோன்றுமவர்களுக்குக்காக அன்றிக்கே
கார்யம் செய்து தலைக் கட்டின அநந்தரம்-நான் ஈஸ்வரன் என்னும் தேவர்களுக்கு
அசூரர்களால் வந்த துக்கம் போம்படி வந்து அவதரித்து –
—-
துயர் கெடும் கடிது அடைந்து வந்து அடியவர் தொழுமின்
உயர் கொள் சோலை ஒண் தட மணி யொளி திரு மோகூர்
பெயர்கள் ஆயிரம் உடைய வல்லரக்கர் புக்கு அழுந்த
தயரதன் பெற்ற மரகத மணித் தடத்தினையே–10-1-8-
பெரு மிடுக்கரான அசுரர்கள் புக்கு-அழுந்தும்படி –சக்கரவர்த்தி பெற்ற-நீல மணி போலே எல்லாருக்கும் இனியனை-அடியவர்கட்கு பாதுகாவலனாய்- ருக்கிற-தடாகத்தை-அடைந்து வந்து அடியவர் தொழுமின்-மயா த்வம் சம் அநுஜ்ஞாத கச்ச லோகன் அநுத்தமான்-ஆரண்ய -68-30- என்னால் நீவிர் அனுமதிக்கப் பட்டவராய் மேலான உலகத்தை அடைவீராக-என்கிறபடியே -பறவையையும் -ஜடாயுவையும் –வழி நடத்துமவன் அன்றோ -–-சம்ஹாரிணா ராகவ சாகரேன ப்ரச்சாத்யமானா தாச பவத்பி- யுக்தஸ்து அயம் தாரயிதம் சமேத்ய காகுஸ்த பாதாளமுகே பதான் ச -யுத்த -14-20–இராமபிரான் ஆகிற வடவாமுகாக்னியில் விழுகின்றவனான-அந்த இராவணன் -என்கிறபடியே விரும்பாத பகைவர்க்கு அழிவினைத் தரத் தக்கவனாய்-அன்றோ இருப்பது
———–
சுரி குழல் கனி வாய்த் திருவினைப் பிரித்த கொடுமையில் கடுவிசை யரக்கன்
எரி விழித்து இலங்கு மணி முடி பொடி செய்து இலங்கை பாழ் படுப்பதற்கு எண்ணி
வரி சிலை வளைய வடு சரம் துரந்து மறிகடல் நெறிபட மலையால்
அரி குலம் பணி கொண்டு அலைகடல் அடைத்தான் அரங்க மா நகர் அமர்ந்தானே-5-7-7-
இலங்கை மூலையடியே நாயும் நரியும் போம்படியாக பாழ் படுத்தும்படி மநோ ரதித்து-தர்ச நீயமான வில்லு வளைய-கொலை யம்புகளை நடத்தி-பெரிய ஷோபத்தை உடைத்தான கடல் வந்து முகம் காட்டி நான் முதுகு காட்டிச் செறிந்து தருகிறேன் -அடைத்துக் கொடு போவது என்று வழி பட –
—–
வன் பெரு வானகம் உய்ய அமரர் உய்ய மண் உய்ய மண் உலகில் மனிசர் உய்ய
துன்பம் மிகு துயர் அகல அயர் ஒன்றில்லா சுகம் வளர அக மகிழும் தொண்டர் வாழ
அன்போடு தென் திசை நோக்கி பள்ளி கொள்ளும் அணி அரங்கன் திரு முற்றத்து அடியார் தங்கள்
இன்ப மிகு பெரும் குழுவு கண்டு யானும் இசைந்த உடனே என்று கொலோ விருக்கும் நாளே ?—1-10-
ஸ்ரீ விபீஷண ஆழ்வானுக்காக-அங்கு நின்றும் இங்கு ஏற எழுந்து அருளுகையாலே
பூமியும் பூமியில் உண்டான சேதனரும் உஜ்ஜீவிக்க–நித்ய துக்கத்தை விளைப்பதான பாபங்கள் அகல-துக்கம் விஸ்ரமியாத நித்யமான ஸூகம் வளர-பகவத் அனுபவத்தாலே நிரதிசய ஆனந்த உக்தரான ஸ்ரீ வைஷ்ணவர்கள் வாழ-ஸ்ரீ விபீஷண ஆழ்வானுக்கு ராஜ்யத்தைக் கொடுத்து – அத் திக்கைப் பார்த்து கண் வளர்ந்து அருளுகிற ஸ்ரீ பெரிய பெருமாளுடைய உள்ளில் திரு முற்றத்திலே
————-
அம் கண் நெடு மதில் புடை சூழ் அயோத்தி என்னும்
அணி நகரத்து உலகு அனைத்தும் விளக்கும் சோதி
வெம் கதிரோன் குலத்துக்கோர் விளக்காய் தோன்றி
விண் முழுதும் உய்ய கொண்ட வீரன் தன்னை
செம் கண் நெடும் கரு முகிலை ராமன் தன்னை
தில்லை நகர் திரு சித்திர கூடம் தன்னுள்
எங்கள் தனி முதல்வனை எம்பெருமான் தன்னை
என்று கொலோ? கண் குளிர காணும் நாளே— 10-1-
போக்ய போக உபகரண போக ஸ்தானங்களை உடைத்தாய் ஆகாச அவகாசம் எல்லாம் தானேயாம்படி நிமிர்ந்த மதிளாலே சூழப் பட்ட ஸ்ரீ அயோத்யை–அபராஜிதை என்று சொல்லுகிற ஸ்ரீ பரமபதம் போலே சத்ருக்களுக்கு கணிசிக்க ஒண்ணாத ஊர்
என்னும் – ஸ்ரீ பரம பதம் போல் சிலர் அறிந்து சிலர் அறியாதாய் இருக்கை யன்றிக்கே
சர்வ லோக பிரசித்தமாய் இருக்கை –அலங்காரங்களால் குறைவற்ற ஊர் -என்னுதல்-
சர்வ லோகங்களையும் தன் தேஜஸ்ஸாலே -நாராயண பரஞ்சோதி -என்கிறபடியே பரஞ்ஜோதிஸ்ஸாய் உள்ளது-ஜகத்தில் அந்தகாரம் எல்லாம் நீக்கக் கடவ ஆதித்யன் வம்சத்திலே -அவனைப் போலே இரவு கலவாத அத்விதீயமான தேஜஸ்ஸாய் வந்து உதித்து-தன் வீர்ய குணத்தாலே தேவ ஜாதியடைய உஜ்ஜீவிப்பித்தவனை
————
கொங்கு மலி கரும் குழலாள் கௌசலை தன் குல முதலாய் !
தங்கு பெரும் புகழ் சனகன் திரு மருகா ! தாசரதீ !
கங்கையிலும் தீர்த்த மலி கண புரத்து என் கரு மணியே
எங்கள் குலத்தின் இன் அமுதே !ராகவனே !தாலேலோ !—8-3–
மிக்க பரிமளத்தைப் புறப்பட விடுகிற இருண்ட குழலை உடைய ஸ்ரீ கௌசலையாருடைய
குலத்துக்கு உத்தாரகன் ஆனவனே-புகழ் என்று பிறந்தவை எல்லாம் தங்கும் படி பெரிய புகழை உடைய ஸ்ரீ ஜனக ராஜனுக்கு மருமகன் ஆனவனே-அவனோடு சத்ர்ச சம்பந்தம் பண்ணலாம் படியான பிறப்பை உடையவனே-காதசித்க சம்பந்தத்தால் வரும் ஸூ த்தி யோகம் இறே கங்கைக்கு உள்ளது-சம்பந்தம் நித்யமாகையாலே அதிலும் ஸூத்தி மிக்கு இருக்கிற ஸ்ரீ திருப் பொய்கையை உடைய ஸ்ரீ திருக் கண்ணபுரத்திலே ஸூலபன் ஆனவனே-எங்கள் வம்சத்துக்காக போகய பூதன் ஆனவனே –
———
தில்லை நகர் திரு சித்ர கூடம் தன்னுள்
திறல் விளங்கு மாருதியோடு அமர்ந்தான் தன்னை
எல்லையில் சீர் தயரதன் தான் மகனாய் தோன்றிற்று
அது முதலா தன் உலகம் புக்கது
கொல் இயலும் படை தானை கொற்ற ஒள் வாள்
கோழியூர் கோன் குடை குலசேகரன் சொல் செய்த
நல் இயல் இன் தமிழ் மாலை பத்தும் வல்லார்
நலம் திகழ் நாரணன் அடி கீழ் நண்ணுவாரே–10-11–
பாவோ நான்யத்ர கச்சதி -என்று அங்குப் போகேன் என்ற ஸ்ரீ திருவடியை விட மாட்டாமே இங்கே வந்து நித்ய வாஸம் பண்ணுகிறவனை-பஹூ குணனான ஸ்ரீ சக்கரவர்த்திக்கு -பிதரம் ரோசயாமாச – என்று பிள்ளையாய் பிறந்தது தொடக்கமாக ஸ்ரீ பரமபதம் புக்கது முடிவாக யுண்டான ஸ்ரீ இராமாயண கதையை
———-
2-தாடகா வதம்
3-விச்வா மித்ரா யாக ரக்ஷணம்
4-ஸூபாஹூ வதம்
குணம் திகழ் கொண்டலாய்
மந்திரம் கொள் மறை முனிவன் வேள்வி காக்க நடந்து,
வந்து எதிர்த்த தாடகை தன் உரத்தைக் கீறி
வல் அரக்கர் உயிர் உண்டு
கல்லைப் பெண்ணாக்கிக்
உணர்ந்த மெய்ஞ்ஞானியர் யோகம் தொறும் திரு வாய் மொழியின்
மணம் தரும் இன்னிசை மன்னும் இடம் தொறும் மா மலராள்
புணர்ந்த பொன் மார்பன் பொருந்தும் பதி தொறும் புக்கு நிற்கும்
குணம் திகழ் கொண்டல் இராமானுசன் என்னும் குலக் கொழுந்தே – -60 –
இப்படிப்பட்ட பக்தி யாகிற மகா குணம் -தன்னிடத்திலே சென்று நிறம் பெற்று பிரகாசிக்கவே –முகச் சோதி வாழியே -என்கிறபடியே தம்முடைய ஞான பக்தி வைராக்யங்களையும் –அந்த பிரமாதக்களுடைய பிரபாவத்தையும் -அந்த பிரமாணத்தின் உடைய பிரபாவத்தையும் –அப்ரமேயம் ஹிதத்தேஜோ யச்யஸா ஜனகாத்மஜா -என்கிற பெரிய பிராட்டியாரையும் -மையல் ஏற்றி மயக்க வல்ல பிரேமத்தினுடைய பிரபாவத்தையும் -ஜல ஸ்தலவிபாகம் அற வர்ஷிக்கும் வர்ஷூ கவலாஹகம் போலே -சர்வாதிகாரமாக சர்வ ஜனங்களுக்கும் சர்வதா கொடுத்தும் உபதேசித்தும் உபகரித்து அருளும் பரமோதாரான இராமானுசன் –எம்பெருமானார் எம் குலக் கொழுந்தே -எங்குலம்-ஸ்ரீ வைஷ்ணவ குலம் – அதுக்கு கொழுந்து -என்றது -வ்ர்ஷமாய் பலிக்கைக்கும் -கொடியாய் படர்ந்து பலிக்கைக்கும் -மூலம்–கொழுந்து ஆகையாலே -எங்கள் குலத்துக்கு எல்லாம் மூலமானவர் -என்ற படி –கொழுந்து-தலை –அன்றிக்கே -எங்குலக் கொழுந்து -என்றது –எங்கள் குலம் அடங்கலும் ஒரு வேராய் –அதுக்கு எம்பெருமானார் தாம் கொழுந்தாய் கொண்டு -வேருக்கு வெக்கை தட்டினால் கொழுந்து முற்பட வாடுமா போலே -எங்கள் குலத்துக்கு ஒரு குறை வந்தால் முற்பட தம்முடைய முகம் வாடி இருக்கும் அவர் என்னவுமாம் –குணம் திகழ் கொண்டலாய் -எங்கள் குலக் கொழுந்தான -இராமானுசன் -பதி தோறும்-புக்கு நிற்கும் –என்று இங்கனே யோஜிக்கவுமாம் –
கல்லைப் பெண்ணாக்கி -ஆழ்வார் பாசுரங்கள் இல்லை
பெண்மணி ஒருத்தி பரிபவப் பட்டமையை பாட திரு உள்ளம் கொண்டவர்கள் அல்லர்
ஸ்ரீ பெருமாள் காலால் தீண்டவில்லை –அடித் துகள் கதுவாமுன்னம்.-திருவடி துகள்கள் பட்டே அகலிகை விமோசனம்-நெஞ்சினால் பிழைக்கிலள்-கம்பர் -இந்திரனே வந்தானே என்று அறிந்தவள்
அஞ்சன வண்ணத்தான்தன் அடித் துகள் கதுவாமுன்னம்.
வஞ்சிபோல் இடையாள் முன்னை வண்ணத்தள் ஆகிநின்றாள்;
நெஞ்சினால் பிழைப்பு இலாளை நீ அழைத்திடுக!’ என்ன.
கஞ்ச மா மலரோன் அன்ன முனிவனும். கருத்துள் கொண்டான்.*
அஞ்சன = அஞ்சனம் என்றால் மை. மை போன்ற
வண்ணத்தான்தன் = வண்ணம் கொண்ட இராமனின்
அடித் துகள் = திருவடி துகள்–திருவடியால் கூட வேறே பெண்ணைத் தீண்டாத ஏக பத்னீ விரதன் அன்றோ பெருமாள்
கதுவா முன்னம்.= படுவதற்கு முன்
வஞ்சி போல் = வஞ்சிக் கொடி போன்ற
இடையாள் = இடையை உள்ள அகலிகை
முன்னை வண்ணத்தள் = முன்பு இருந்ததை போன்ற வண்ணத்துடன்
ஆகி நின்றாள்; = மாறி நின்றாள்
நெஞ்சினால் பிழைப்பு இலாளை = மனதால் தவறு செய்யாதவளை
நீ அழைத்திடுக!’ என்ன. = நீ (கௌதமனாகிய நீ) அவளை ஏற்றுக் கொள் என்று கூறினான்
கஞ்ச மா மலரோன் அன்ன = தாமரை மலரில் உள்ள பிரமனை போன்ற
முனிவனும்.= கௌதமனும்
கருத்துள் கொண்டான் = மனத்தில் கொண்டான்
இராமன் பாதத்துளி பட்டு கல்லுருவாய் இருந்த அகலிகை பெண் உரு பெற்றாள்.
இராமன், விஸ்வாமித்திரன், கௌதமன், லக்ஷ்மணன், அகலிகை என ஐந்து பேரும் நிற்கும் இடம்.
இராமன் அகலிகையை வணங்கி, உன் கணவனோடு சேர்ந்து வாழ் என்று சொல்லி விடை கொடுத்து அனுப்புகிறான்.
முடிவாக விஸ்வாமித்திரன் இந்த படலத்தை முடிக்கிறான்…
“இவள் மனத்தால் பிழை ஏதும் செய்யாதவள். இவளை நீ ஏற்றுக் கொள்ளவேண்டும்” என்று கௌதமனிடம் விஸ்வாமித்திரன் சொல்கிறான்.
அதை கௌதமனும் ஏற்றுக் கொள்கிறான் என்பதோடு அகலிகை கதை முடிவுக்கு வருகிறது.
அ + ஹல்யா = மாசு அற்றவள்!
கை வண்ணம் அங்குக் கண்டேன்= உன் கை வண்ணம், தாடகை அழிப்பிலே கண்டேன்!
கால் வண்ணம் இங்குக் கண்டேன்= உன் கால் வண்ணம், அகலிகை வாழ்விலே கண்டேன்!
வால்மீகி= “உடல் உணர்ச்சி”
கம்பன்= “உள்ள உணர்ச்சியால் உடல் உணர்ச்சி”
அவன் திருவடி பெருமையை சொல்ல இத்தைச் சொல்ல வேண்டுமே
————
வந்து எதிர்ந்த தாடகை தன் உரத்தை கீறி வரு குருதி பொழி தர வன் கணை ஒன்றேவி
மந்திரம் கொள் மறை முனிவன் வேள்வி காத்து வல் அரக்கர் உயிர் உண்ட மைந்தன் காண்மின்
செந்தளிர் வாய் மலர் நகை சேர் செழும் தண் சோலை தில்லை நகர் திரு சித்ர கூடம் தன்னுள்
அந்தணர்கள் ஒரு மூவாயிரவர் ஏத்த அணி மணி யாசனத்து இருந்த அம்மான் தானே– 10-2–
தான் மிகைத்து வந்து மேலிட்ட தாடகையை -நக்ர்த்திக்கு-சந்நிவேசத்துக்கு – ஒப்பில்லாதவள் – தன்னிகர் ஒன்றில்லாத தாடகை இறே –ஸ்ரீ பெருமாள் பக்கல் பொல்லாங்கு நினைத்த நெஞ்சை -மலை போலே பிளந்து-செம்பாட்டுத் தரையிலே-செம்மண் தரையிலே- மலை யருவி விழுந்தால் போலே ருதிரம் வந்து கொழிக்க –
வலிக்கு ஒப்பில்லாத திருச் சரத்தை நடத்தி-ரிஷி தனக்கே தனக்கு என்னாதபடி நிர்ப்பரனாய்த் தன்னுடைய அனுஷ்டானங்கள் எல்லாம் அடைவே அனுஷ்டித்து
யாகத்தைத் தலைக் கட்டும்படி பண்ணி-யஜ்ஞ் விக்னரரான மாரீச ஸூபாஹூகளைக் முடித்த பிள்ளைத் தனத்தை உடையவனை-மாரீசன் பட்டானோ என்னில் -பின்னை இருந்த இருப்பு ம்ருத ப்ராயன் என்று கருத்து
————
5-ஸ்ரீ சீதா விவாஹம்
காரார் திண் சிலை இறுத்து
மைதிலியை மணம் புணர்ந்து
வாராரும் இளம் கொங்கை மைதிலியை மணம் புணர்வான்
காரார் திண் சிலை இறுத்த தனிக் காளை கருதும் இடம்
ஏராரும் பெரும் செல்வத் தெழில் மறையோர் நாங்கை தன்னுள்
சீராரும் மலர்ப் பொழில் சூழ் திருத் தேவனார் தொகையே—4-1-8-
தோற்றுகிற போதே வாராலே தாங்க வேண்டும்படியான முலையை உடைய ஸ்ரீ ஜனக ராஜன் திருமகளை மணம் புணருகைக்காக-பதி சம்யோக சுலபம் வயோ த்ருஷ்ட்வா சமேபிதா சிந்தார்ணவகத பாரம் நாசசாதாப் லவோயதா -அயோத்யா காண்டம்-வயிரம் பற்றி ஒருவரால் சலிப்பிக்க ஒண்ணாது இருக்கிற வில்லை முறித்த உபமான ரஹிதமான பருவத்தை உடையவன் வர்த்திக்கிற தேசம்
———–
இருபத்தொரு கால் அரசு களை கட்ட
மழுவாளேந்தி வெவ்வரி நற் சிலை வாங்கி வென்றி கொண்டு
அவன் தவத்தை முற்றும் செற்று,
அம் பொன் நெடு மணி மாட அயோத்தி எய்தி
அரியணை மேல்
மன்னன் ஆவான் நிற்க;
நின்றிலங்கு முடியினாய்! இருபத்தோர் கால் அரசு களை கட்ட
வென்றி நீள் மழுவா? வியன் ஞாலம் முன் படைத்தாய்!
இன்றிவ் வாயர் குலத்தை வீடுய்யத் தோன்றிய கரு மாணிக்கச் சுடர்!
நின்றன்னால் நலிவே படுவோம் என்றும் ஆய்ச்சியோமே.–6-2-10-
மிடுக்கரான அரசர்களை இருபத்தொருபடிகால் வென்ற உனக்கு அபலைகளான எங்களை வெல்லுகை பெரிய பணியோ?
“எனக்கு” என்று இருப்பாரையும் உனக்கு ஆக்கிக் கொள்ளவல்ல உனக்கு உனக்கேயாய் இருப்பாரை வெல்லுகை பெரிய ஏற்றமோ?
இராஜாக்களை வென்ற உனக்கு ஆய்ச்சியர்களை வென்றாய் என்பது ஓர் ஏற்றமோ?
அசுரத்தன்மை வாய்ந்தவர்களாய் நாட்டினைப் பட அடித்துத் திரிந்த க்ஷத்திரிய குலத்தைக் கிழங்கு எடுத்த மிடுக்கனே!
களை கட்டுகையாவது – எடுத்துப் பொகடுகை.
ஜீவ ஸ்வா தந்த்ரமே மறம் கிருஷி பலன் பெற்றோம் என்று மகிழ்வானே
————
செவ்வரி நல் கரு நெடும் கண் சீதைக்காகி
சின விடையோன் சிலை இருத்து மழு வாள் ஏந்தி
செவ்வரி நல் சிலை வாங்கி வென்றி கொண்டு
வேல் வேந்தர் பகை தடிந்த வீரன் தன்னை
தெவ்வர் அஞ்சு நெடும் புரிசை வுயர்ந்த பாங்கர்த்
தில்லை நகர் திரு சித்ர கூடம் தன்னுள்
எவ்வரு வெஞ்சிலை தடக் கை ராமன் தன்னை
இறைஞ்சுவார் இணை அடியே இறைஞ்சினேனே—-10-3-
ஸ்ரீ பிராட்டியை திருமணம் புணர்ந்து எழுந்து அருளா நிற்க வழியிலே வந்து தோற்றின -தன் க்ரைர்யத்துக்குத் தக்க மழுவாகிற ஆயுதத்தையும் உடைய ஸ்ரீ பரசுராம ஆழ்வானுடைய-வெம்மையை உடைத்தாய் தர்ச நீயமான வில்லை வாங்கி இவனை வென்று தான் திருவவதாரம் பண்ணின ஷத்ரிய குலத்துக்கு பகை தீர்ந்த வீரத்தை யுடையவனை
——–
முன் ஒரு நாள் மழு வாளி சிலை வாங்கி
அவன் தவத்தை முற்றும் செற்றாய்
உன்னையும் உன் அருமையையும் உன் நோயின்
வருத்தமும் ஒன்றாக கொள்ளாது
என்னையும் என் மெய் உரையும் மெய்யாக
கொண்டு வனம் புக்க எந்தாய்!
நின்னையே மகனாய் பெற பெறுவேன்
ஏழ் பிறப்பும் நெடும் தோள் வேந்தே —9-9-
முன் ஒரு காலத்திலே மழுவை ஆயுதமாக உடைய ஸ்ரீ பரசுராமன் கையிலே
ஸ்ரீ சார்ங்கத் திரு வில்லை வாங்கி-அவன் லோகாந்தரங்களை ப்ராபிக்கக் கடவதாக ஆர்ஜித்த தபஸ்ஸை அவ்வம்பாலே அழித்துப் பொகட்டாய்-
———-
அம் பொன் நெடு மணி மாட அயோத்தி எய்தி
அரசு எய்தி அகத்தியன் வாய் தான் முன் கொன்றான்
தன் பெரும் தொல் கதை கேட்டு மிதிலை செல்வி
உலகு உய்யத் திரு வயிறு வாய்த்த மக்கள்
செம் பவள திறல் வாய் தன் சரிதை கேட்டான்
தில்லை நகர் சித்ர கூடம் தன்னுள்
எம்பெருமான் தான் சரிதை செவியால் கண்ணால்
பருகுவோம் இன் அமுதம் மதியோம் அன்றே— 10-8–
திரு அபிஷேகத்துக்கு ஈடாக அலங்கரித்து -தர்ச நீயமாய் ஒக்கத்தை உடைத்தாய் நல்ல ரத்னங்களாலே சமைக்கப் பட்ட மாடங்களை உடைய ஸ்ரீ திரு அயோத்யையிலே ஜகத்தை எல்லாம் உகக்கும் படி மீண்டு எழுந்து அருளிப் புகுந்து-ராஜ்யம் புநரவாப்தவான் -என்னும்படியாக ஜகத்தை எல்லாம் வாழும்படியாக சாம்ராஜ்யத்திலே அதிகரித்து
———
வன் தாள் இணை வணங்கி வள நகரம்
தொழுது ஏத்த மன்னனாவான்
நின்றாயை அரி அணை மேல் இருந்தாயை
நெடும் கானம் படர போகு
வென்றாள் எம்மி ராமாவோ!
உன்னை பயந்த கைகேசி தன் சொல் கேட்டு
நன்றாக நானிலத்தை ஆள்வித்தேன்
நன் மகனே! உன்னை நானே—- 9-1–
தானும் ராஜ்ய பரப்பை எல்லாம் ஆண்டானாய் இருக்கச் செய்தே-அவ்வளவன்றியே –
வண் புகழ் நாரணன் திண் கழல்-என்னுமா போலே ஆஸ்ரிதரை எல்லா அவஸ்தையிலும் விடேன் என்னும் திருவடிகளை வழி பட்டு-திரு அபிஷேகத்துக்கு அலங்கரித்து இருக்கிற -ஸ்ரீ திரு நகரியிலே அப்படி இருக்கிற ஸ்ரீ திரு நகரி தொழுது ஏத்த-திரு அபிஷேகத்துக்கு முன்புள்ள கர்த்தவ்யங்கள் எல்லாம் தலைக் கட்டி திரு அபிஷேகம் பண்ணுகைக்கு
திருக் காப்பு நாண் சாத்தி நிற்கிற யுன்னை-சிம்ஹாசனத்திலே பதஸ்தனாய் இருந்தான் என்னும் படி தோற்றச் சமைந்து இருக்கிற யுன்னை-இப்படி ராஜாக்கள் அல்லாதாரும் புக மாட்டாத காட்டை -தேவ நேந வனம் கத்வா -என்னுமா போலே இவ் ஊரில் நின்றும் புறப்பட்டு
வழியே போய்க் காட்டிலே புகுமது அன்றியே காட்டிலே போம்படியாய்- நெடிய காட்டிலே இறே போகச் சொல்லிற்று-நினைக்கவும் -சொல்லவும் -காணவும் -தாபம் போம்படியான உம்மை இறே போகச் சொல்லிற்று-
————-
ஸ்ரீ அயோத்தியா காண்டம்
6-வன கமனம்
கொங்கை வன் கூனி சொற் கொண்டு
கொடிய கைகேயி வரம் வேண்ட
கொடியவள் வாய்க் கடிய சொற் கேட்டு
மலக்கிய மா மனத்தினனாய் மன்னவனும் மறாது ஒழிய
குலக் குமரா ! காடுறையப் போ என்று விடை கொடுப்ப
இரு நிலத்தை வேண்டாது
ஈன்று எடுத்த தாயரையும் இராச்சியமும் ஆங்கொழிந்து
மைவாய களிறொழிந்து மா ஓழிந்து தேர் ஒழிந்து
கலன் அணியாது அங்கங்கள் அழகு மாறி
அங்கங்கள் அழகு மாறி
மான் அமரும் மெல் நோக்கி வைதேகி இன் துணையா
இளங்கோவும் வாளும் வில்லும் கொண்டு பின் செல்லக்
கலையும் கரியும் பரிமாவும் திரியும் கானம் நடந்து போய்ப்
கொங்கை வன் கூனி சொற் கொண்டு
குவலயத் துங்கக் கரியும் பரியும் இராச்சியமும்
எங்கும் பரதற் கருளிவன் கானடை
அங்கண்ணன் அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான்–2-1-8-
முதுகிலே முலை புறப்பட்டால் போலே -திரண்டு கிளர்ந்து வலிய கூனை
உடையளான மந்தரை உடைய வசனத்தை கொண்டு –காட்டுக்கு போயிற்று பித்ரு வசனம் கொண்டாய் இருக்க – குப்ஜை உடைய வசனம் கொண்டு என்பான் என்னில் –
ந மந்த்ர்யாயா ந ச மாதுரச்யா தோஷோ தோஷோ நு ராஜ்ஜா -என்கிறபடியே –
வன ப்ரேவேச ஹேதுக்கள் சொல்லுகிற இடத்தில் முந்துற எடுத்தது இவளை இறே-இவளுடைய வசனத்தாலே –கலக்கிய மா மனத்தனளாய் இறே கைகேசி வரம் வேண்டிற்று –
அதடியாக இறே சக்ரவர்த்தி போக சொல்லி வேண்டிற்றும் – ஆகையால் எல்லாவற்றுக்கும் மூலம் இதுவாகையாலே இவளுடைய சொல் கொண்டு போனார் என்கிறது –
————–
தேனகுமா மலர் கொந்தாள் கௌசலையும்
சுமித்ரையும் சிந்தை நோவ
கூன் உருவில் கொடும் தொழுத்தை சொல் கேட்ட
கொடியவள் தன் சொல் கொண்டு இன்று
கானகமே மிக விரும்பி நீ துறந்த
வள நகரைதுறந்து நானும்
வானகமே மிக விரும்பி போகின்றேன்
மனு குலத்தார் தங்கள் கோவே! —9-10–
தேனைப் புறப்பட்டுவிக்கிற மலரோடு கூடின மயிர் முடியை உடைய ஸ்ரீ கௌசலையாரும்-
ஸ்ரீ ஸூமத்ரையாரும் நெஞ்சு நோவ-வடிவிலே வக்ரம் போலே நெஞ்சம் வக்கிரமாய் திண்ணிதான கூனியை யுடைய வார்த்தையைக் கேட்ட கைகேயி யுடைய வார்த்தையிலே அகப்பட்டு
————-
கூந்தொழுத்தை சிதகுரைப்பக் கொடியவள் வாய்க் கடிய சொல் கேட்டு
ஈன்றெடுத்த தாயாரையும் இராச்சியமும் ஆங்கொழிய
கான் தொடுத்த நெறி போகிக் கண்டகரைக் களைந்தானூர்
தேந்தொடுத்த மலர்ச் சோலைத் திருவரங்க மென்பதுவே–4-8-4-
கூனியாகிற அடியாட்டி ஆனவள் – திரு அபிஷேக மகோத்சவத்துக்கு அழிவான துருக்திகளை சொல்ல –அதாவது –ஜ்ஞாதி தாசீ யதோ ஜாத கைகேயாச்து சஹோஷிதா –
பிரசாதம் சந்த்ர சங்காஸம் ஆருரோஹா யதார்ச்சயா -என்கிறபடியே -ஜ்ஞாதி தாசியான இவள் யதார்ச்சிகமாக மாளிகை தளத்தின் மேலே ஏறிப் பார்த்தவாறே –பெருமாளுடைய திரு அபிஷேகத்துக்கு திருப் படை வீடு எல்லாம் கோடித்து கிடக்கிற படியையும் –ப்ருந்தம் ப்ருந்தம் அயோத்யாயாம் -என்கிறபடியே திரள் திரளாக வந்து கிடக்கிற ஜன சம்ருதத்தையும் –மங்கள வாத்திய கோஷங்களையும் கண்டு சஹிக்க மாட்டாதே தளத்தின் நின்றும் இறங்கி வந்து -கைகேயியை பர்த்சித்து -உன் மாற்றாட்டி மகன் அபிஷேகம் செய்ய தேடுகிறான் -உன் மகன் அவனுக்கு இனி இழி தொழில் செய்து இருக்கும் அத்தனை இறே
இத்தைப் பார்த்து கொண்டு நீ இருக்கிறது ஏது-அவனுடைய அபிஷேகத்தை குலைத்து உன் மகனை அபிஷேகம் பண்ணுவிக்கும்படி ராஜாவோடே சொல்லு –அதுக்கு உபாயம் –
முன்பே உனக்கு தந்து இருப்பது இரண்டு வரம் உண்டே அவை இரண்டையும் உன் மகனை அபிஷேகம் பண்ணுவிக்கையும் ராமனை காடேற போக விடுகையும் -என்று வேண்டிக் கொள் -சத்ய தர்ம பரரான ராஜாவால் செய்யாது ஒழியப் போகாது காண் -என்று
திரு அபிஷேகத்துக்கு விக்நமான துருக்திகளை சொன்னாள் இறே -இப்படி குப்ஜை சொன்ன வார்த்தையாலே கலங்கி -பின்பு ராஜா உடனே முன்பு சொன்ன இரண்டு வரமும் எனக்கு இப்போது தர வேணும் -அதாவது – என் மகனை அபிஷேகம் பண்ணுவிக்கையும்
ராமனை பதினாலு சம்வத்சரம் வனவாச அர்த்தமாக போக விடுகையும் -என்ன –இத்தை கேட்டு ராஜா அதுக்கு இசையாமை தோற்ற இருக்க –அறுபதினாயிரம் சம்வத்சரம் சத்ய தர்மத்தை தப்பாமல் நடத்தி போந்தவன் -இப்போது சத்தியத்தை அதிகிரமிக்கிறான்
சகல தேவதைகளுக்கும் இத்தை – அறிவியுங்கோள்-என்று இவள் கூப்பிட்ட வாறே –அவன் -செயல் அற்றுப் போய் – செய்வதற்கு அனுமதி பண்ண அவ்வளவிலே அவள் சுமந்த்ரனை போக விட்டு பெருமாளை அழைத்து விட-அவர் எழுந்து அருளி வந்து -சக்கரவர்த்தி கலங்கிக் கிடக்கிற படியை கண்டு இதுக்கு அடி என் -என்று இவளைக் கேட்க –இச் செய்திகளை எல்லாம் சொல்லி – உம்மை காடேற போக விடுவதாக அழைத்து விட்டார் -உம்மை கண்ட வாறே சொல்ல மாட்டாமல் கிடக்கிறார் இத்தனை –உங்கள் ஐயர் சத்ய தர்மத்தை நோக்கவும் -நீர் அவருக்கு பிரியம் செய்யவும் வேண்டி இருந்தீர் ஆகில் -அவர் நினைவு நான் சொல்லுகிறேன் – நீர் கடுகக் காடேறிப் போம் -என்று சொன்ன கொடுமையை உடையளான கைகேயி வாயில் இந்த வெட்டிய சொல்லை கேட்டு
——–
கலக்கிய மா மனத்தனளாய்க் கைகேசி வரம் வேண்ட
மலக்கிய மா மனத்தனனாய் மன்னவனும் மறாதொழிய
குலக்குமரா காடுறையப் போ என்று விடை கொடுப்ப
இலக்குமணன் தன்னொடும் அங்கு ஏகியது ஓரடையாளம்–3-10-3-
குப்ஜையாலே கலக்கப் பட்ட பெரிய மனசை யுடையளாய் – முன்பு புத்ரனான ஸ்ரீ பரதாழ்வானைக் காட்டில் பெருமாள் பக்கல் ஸ்நேஹிநியாய் பர்த்தாவான சக்கரவர்த்தியினுடைய ப்ரியமே செய்து போந்தவளாகையாலே – பெரிய மனசை யுடையவள் -என்கிறது –இப்படி இருக்கிற மனசை மந்த்ரம் கடலைக் கலக்கினது போலே மந்தரை கலக்கின படி –அதாவது முற்பட -இவள் சொன்னவை எல்லாம் அநிஷ்டமாய் –
இப்படிச் சொல்லலாகாது காண் -என்று பெருமாள் பக்கல் தனக்கு யுண்டான ஸ்நேஹத்தைச் சொல்லியும் பெருமாளுடைய குணங்களைச் சொல்லியும் இருந்தவளை-உத்தர உத்தரம் தான் சொல்லுகிற வசனங்களால் பெருமாள் பக்கல் ஸ்நேஹத்தைக் குலைத்து- அவரை அபிஷேகம் பண்ண ஒண்ணாது-என் மகனை அபிஷேகம் பண்ண வேணும் -என்று சொல்லும் படி ஆக்கினாள் இவளே இறே-இப்படி கலக்கப் பட்ட மனசை யுடையளாய்க் கொண்டு கைகேயியானவள் தனக்கு முன்பே தருவதாகச் சொல்லி கிடக்கிற வரம் இரண்டையும் இப்போது தர வேணும் என்றும் – அது தான் பதினாலு சம்வத்சரம் பெருமாளை காட்டில் போக விடுகையும் – ஸ்வ புத்ரனான பரதனை அபிஷேகம் பண்ணுகையும் – என்று சொல்லி அபேக்ஷிக்க-அதுக்கு அவன் இசையாமையாலே
அறுபதினாயிரம் ஆண்டு சத்ய ப்ரதிஞ்ஞனாய்ப் போந்த நீ அசத்ய ப்ரதிஞ்ஞனானாயோ -என்றும் நீ இது செய்யாயாகில் நான் என் பிராணனை விடுவேன் என்றும் அதி குபிதையாய்க் கொண்டு இவள் சொன்ன சொலவுகளாலே-மலக்கப்பட்ட மஹா மனசை யுடையனாய்க் கொண்டு ராஜாவானவனும் மறுக்க மாட்டாது ஒழிய மா மனனத்தனாய் -என்றது-அறுபதினாயிரம் ஆண்டு வசிஷ்டாதிகளைச் சேவித்து தர்ம அதர்மங்கள் எல்லாம் அறிந்து ராஜ்யத்தில் ஒருவர் ஒரு பழுதும் செய்யாத படி நோக்கிக் கொண்டு போந்தவன் ஆகையால் ஒருவரால் கலக்க ஒண்ணாத படியான மனசில் இடமுடையவன் என்றபடி –இப்படி இருக்கிற மனசையும் தன்னுடைய யுக்தி சேஷ்டிதங்களாலே -என் செய்வோம் -என்று
தெகுடாடும்படி பண்ணினாள் ஆய்த்து கைகேயி-மந்தரை தன் மனசை கலக்கினால் போலே ஆய்த்து இவள் அவன் மனசைக் கலக்கினபடி-இப்படியான மனசை யுடையவனாய் இவள் சொன்னதுக்கு மறுத்து ஒன்றும் சொல்ல மாட்டாது இருக்க –மறுக்க மாட்டாமையாலே ராஜாவானவன் சோகித்துக் கிடக்கச் செய்தே – பெருமாளை அழைத்துக் கொண்டு வா என்று ஸூமந்த்ரனைப் பார்த்துச் சொல்வதாக நினைத்து சோக வேகத்தால் அது தானும் மாட்டாது ஒழிய-இவள் அருகே இருந்து – ராஜா ராத்ரி எல்லாம் உத்சவ பராக்கிலே நித்திரை அற்று இருக்கையாலே ஸ்ராந்தராய் சற்று உறங்குகிறார்-நீ கடுகப் போய் பெருமாளை அழைத்துக் கொண்டு வா என்று போக விடுகையாலே-அவன் போய் பெருமாளை எழுந்து அருளுவித்துக் கொண்டு வந்த அளவில்-பிதாவானவன் சோகித்துக் கிடக்கிறபடியைக் கண்டு – இதுக்கு அடி என் என்று கிலேசப்பட்டுக் கேட்டவாறே-முன்பே எனக்கு இரண்டு வரம் தந்து இருப்பர் -அது இரண்டும் எனக்கு இப்போது தர வேணும் –
அதாவது பதினாலு சம்வத்சரம் உம்மைக் காட்டிலே போக விட வேண்டும்
பரதனை அபிஷேகம் செய்ய வேணும் என்று நான் சொன்னேன்
சத்ய தர்ம பராயணன் ஆகையால் மறுக்க மாட்டாமல் அனுமதி செய்து
உம்மைக் காட்டில் போக விடுவதாக அழைத்து விட்டார்
உம்மைக் கண்டவாறே வாய் திறந்து சொல்ல மாட்டாமல் கிடக்கிறார் காணும் என்ன-என்னை நியமிக்கும் போதைக்கும் இப்படி கிலேசிக்க வேணுமோ –
யாதொன்று திரு உள்ளமான படி செய்யேனோ நான் – என்ன-ஆனால் இக்குலம் விளங்க வந்து பிறந்த குமாரரான நீர் உங்கள் ஐயரை சத்ய ப்ரதிஞ்ஞராக்க வேண்டியிருந்தீர் ஆகில்
அவருடைய வசன பரி பாலகராய்க் கொண்டு வன வாசம் பண்ணும் படியாகப் போம் -என்று
போக்கிலே ஒருப்படுத்த-ப்ராகேவது மஹா பாகஸ் ஸுமித்ரிர் மித்ர நந்தன பூர்வஜஸ் யாநுயாத்ரார்த்தே த்ரும சீரை ரலந்க்ருத்த -என்கிறபடியே தான் புறப்படுவதுக்கு முன்னே
இளைய பெருமாளோடே காடேற எழுந்து அருளினது ஓர் அடையாளம் –
———–
வெவ்வாயேன் வெவ்வுரை கேட்டு இரு நிலத்தை
வேண்டாதே விரைந்து ,வென்றி
மைவாய களிறு ஒழிந்து தேர் ஒழிந்து
மா ஒழிந்து வானமே மேவி
நெய் வாய வேல் நெடும் கண் நேர் இழையும்
இளம் கோவும் பின்பு போக
எவ்வாறு நடந்தனை? எம்மி ராமாவோ!
எம்பெருமான்! என் செய்கேனே ?– 9-2–
அநலாஸ்யனான என்னுடைய -காடு ஏறப் போம் -ராஜ்யத்தைத் தவிரும் -என்ற
என் வார்த்தையைக் கேட்டு-உம்மைப் பிரியில் முடிவோம் -என்று வளைப்புக் கிடக்கிற நகர ஜனங்களை எல்லாம் ஒளித்து- அவர்களைக் கை விட்டு-போகிறோம் -என்று விளம்பிப் போமாகில் -ராஜ்யத்தில் நசையாலே நின்றோம் என்று கைகேயி நினைக்கும் -என்று விரைந்து
————-
கூந்தொழுத்தை சிதகுரைப்பக் கொடியவள் வாய்க் கடிய சொல் கேட்டு
ஈன்றெடுத்த தாயாரையும் இராச்சியமும் ஆங்கொழிய
கான் தொடுத்த நெறி போகிக் கண்டகரைக் களைந்தானூர்
தேந்தொடுத்த மலர்ச் சோலைத் திருவரங்க மென்பதுவே–4-8-4-
கூன் தொழுத்தை சிதகுரைப்ப –கூனியாகிற அடியாட்டி ஆனவள் –
திரு அபிஷேக மகோத்சவத்துக்கு அழிவான துருக்திகளை சொல்ல அதாவது –
ஜ்ஞாதி தாசீ யதோ ஜாத கைகேயாச்து சஹோஷிதா –
பிரசாதம் சந்த்ர சங்காஸம் ஆருரோஹா யதார்ச்சயா -என்கிறபடியே
ஜ்ஞாதி தாசியான இவள் யதார்ச்சிகமாக மாளிகை தளத்தின் மேலே ஏறிப் பார்த்தவாறே –பெருமாளுடைய திரு அபிஷேகத்துக்கு
திருப் படை வீடு எல்லாம் கோடித்து கிடக்கிற படியையும் –
ப்ருந்தம் ப்ருந்தம் அயோத்யாயாம் -என்கிறபடியே
திரள் திரளாக வந்து கிடக்கிற ஜன சம்ருதத்தையும் –
மங்கள வாத்திய கோஷங்களையும்
கண்டு சஹிக்க மாட்டாதே தளத்தின் நின்றும் இறங்கி வந்து -கைகேயியை பர்த்சித்து -உன் மாற்றாட்டி மகன் அபிஷேகம் செய்ய தேடுகிறான்
உன் மகன் அவனுக்கு இனி இழி தொழில் செய்து இருக்கும் அத்தனை இறே
இத்தைப் பார்த்து கொண்டு நீ இருக்கிறது ஏது
அவனுடைய அபிஷேகத்தை குலைத்து உன் மகனை அபிஷேகம் பண்ணுவிக்கும்படி
ராஜாவோடே சொல்லு –அதுக்கு உபாயம் –
முன்பே உனக்கு தந்து இருப்பது இரண்டு வரம் உண்டே
அவை இரண்டையும் உன் மகனை அபிஷேகம் பண்ணுவிக்கையும்
ராமனை காடேற போக விடுகையும் -என்று வேண்டிக் கொள் -சத்ய தர்ம பரரான ராஜாவால் செய்யாது ஒழியப் போகாது காண் -என்று
திரு அபிஷேகத்துக்கு விக்நமான
துருக்திகளை சொன்னாள் இறே -கொடியவள் வாய் கடிய சொல் கேட்டு –
இப்படி குப்ஜை சொன்ன வார்த்தையாலே கலங்கி
பின்பு ராஜா உடனே
முன்பு சொன்ன இரண்டு வரமும் எனக்கு இப்போது தர வேணும் -அதாவது –
என் மகனை அபிஷேகம் பண்ணுவிக்கையும்
ராமனை பதினாலு சம்வத்சரம் வனவாச அர்த்தமாக போக விடுகையும் -என்ன இத்தை கேட்டு ராஜா அதுக்கு இசையாமை தோற்ற இருக்க –அறுபதினாயிரம் சம்வத்சரம் சத்ய தர்மத்தை தப்பாமல் நடத்தி போந்தவன்
இப்போது சத்தியத்தை அதிகிரமிக்கிறான்
சகல தேவதைகளுக்கும் இத்தை – அறிவியுங்கோள்-என்று இவள் கூப்பிட்ட வாறே –அவன் -செயல் அற்றுப் போய் – செய்வதற்கு அனுமதி பண்ண
அவ்வளவிலே அவள் சுமந்த்ரனை போக விட்டு பெருமாளை அழைத்து விட-அவர் எழுந்து அருளி வந்து -சக்கரவர்த்தி கலங்கிக் கிடக்கிற படியை கண்டு
இதுக்கு அடி என் -என்று இவளைக் கேட்க –இச் செய்திகளை எல்லாம் சொல்லி –
உம்மை காடேற போக விடுவதாக அழைத்து விட்டார்
உம்மை கண்ட வாறே சொல்ல மாட்டாமல் கிடக்கிறார் இத்தனை –உங்கள் ஐயர் சத்ய தர்மத்தை நோக்கவும்
நீர் அவருக்கு பிரியம் செய்யவும்
வேண்டி இருந்தீர் ஆகில் -அவர் நினைவு நான் சொல்லுகிறேன் –
நீர் கடுகக் காடேறிப் போம் -என்று சொன்ன
கொடுமையை உடையளான கைகேயி வாயில் இந்த வெட்டிய சொல்லை கேட்டு -ஈன்று எடுத்த தாயாரையும் இராச்சியமும் ஆங்கு ஒழிய –
ஏக புத்ரையான நான் உம்மை பிரிந்து இருக்க மாட்டேன் -கூடப் போரும் இத்தனை –
என்று பின் தொடர்ந்த பெற்ற தாயாரான கௌசல்யை யாரையும்
ஸ்தாவரங்களோடு ஜங்கமங்களோடு வாசி அற
தன் குணங்களில் ஈடுபட்டு
பிரியில் தரிக்க மாட்டாத படி இருக்கிற இராச்சியத்தையும் கை விட்டு -கான் தொடுத்த நெறி போகி –
தே வநேனே வனம் கத்வா-என்கிறபடியே –
காட்டோடு காடு தொடுத்து கிடக்கிற வழியிலே -போகி –
நெய்வாய வேல் நெடும் கண் நேர் இழையும் இளம் கோவும் பின்பு போக -என்கிற படியே
பிராட்டியும் இளைய பெருமாளும் பின்னே சேவித்து கொண்டு வர
ஸ்ரீ தண்ட காரண்யத்தில் எழுந்து அருளி -கண்டகரை களைந்தான் –
ஏஹீ பஸ்ய சரீராணி –என்கிறபடியே
ராஷசர் தின்ற உடம்பை காட்டி வந்து நின்ற தண்ட காரண்ய வாசிகளான ரிஷிகளுக்காக –
அவர்களை நித்ய பீடை செய்து போந்த
கண்டகராய் ஜனஸ்தான வாசிகளான ராஷசர் முதலானரை நிரசித்து அருளினவன் ஊர் –
——————
வெவ்வாயேன் வெவ்வுரை கேட்டு இரு நிலத்தை
வேண்டாதே விரைந்து ,வென்றி
மைவாய களிறு ஒழிந்து தேர் ஒழிந்து
மா ஒழிந்து வானமே மேவி
நெய் வாய வேல் நெடும் கண் நேர் இழையும்
இளம் கோவும் பின்பு போக
எவ்வாறு நடந்தனை? எம்மி ராமாவோ!
எம்பெருமான்! என் செய்கேனே ?– 9-2–
வென்றியை விளைப்பதாய்-அஞ்சன கிரி போலே பெரிய வடிவை உடைத்தாய் இருக்கிற ஆனை என்ன -தேர் என்ன -குதிரை என்ன -இவற்றை ஒழிந்து-இவற்றை ஒழிந்தால் இந்த தேசத்துக்கு போலியான தேசத்திலே போய்ப் புகாதே வனமே மேவி-நீர் போய்ப் புக்காலும் புகுகைக்கு தகாதவர்களை கூடக் கொண்டு-கால் நடை நடந்து அறியாத நீர் இவர்களையும் கூடக் கொண்டு பொல்லாத காட்டிலே போனீர் – என்னாயனே நான் என் செய்கேன் –
———–
பூ மருவி நறும் குஞ்சி சடையா புனைந்து
பூம் துகில் சேர் அல்குல்
காமர் எழில் விழல் உடுத்து கலன் அணியாது
அங்கங்கள் அழகு மாறி
ஏமரு தோள் என் புதல்வன் யான் இன்று
செல தக்க வனம் தான் சேர்த்தல்
தூ மறையீர்! இது தகவோ? சுமந்திரனே!
வசிட்டனே! சொல்லீர் நீரே –9-7-
பூ மாறாதே இருப்பதாய் பரிமளத்தைப் புறப்பட விடா நிற்கும் திருக் குழலை –
மனுஷ்யர்க்குப் பார்க்க ஒண்ணாத படி ஜடையாக்கி-அறுபதினாயிரம் ஆண்டு தேடின திருப் பரியட்டங்களில் நல்லவை எல்லாம் சாத்தக் கடவ திருவரையிலே –
கண்டார் விரும்பும் படி விச்வாமித்ரத்தைக் கயிறாக முறுக்கிச் சாத்தி-ஸ்வா பாவிகமான அழகு ஒழியத் திரு ஆபரணங்கள் சாத்தாமையாலே அத்தாலே வரும் அழகு இன்றியே-விக்நம் பண்ணினாரை அழியச் செய்து அபிஷேகம் பண்ண வல்ல என் மகன்-அறுபதினாயிரம் ஆண்டு போகங்களை புஜித்து-வீத ராகனான நான் போகக் கடவ காட்டிலே
ஸூகுமாரராய்-போக யோக்யரான தாம் போகை-
—————
மானமரும் மென்னோக்கி வைதேவி இன் துணையா
கானமரும் கல்லதர் போய்க் காடுறைந்தான் காணேடீ
கானமரும் கல்லதர் போய்க் காடுறைந்த பொன்னடிகள்
வானவர் தம் சென்னி மலர் கண்டாய் சாழலே –11-5-1-
ஒண் டொடியாள் திரு மகளும் நீயுமே நிலா நிற்ப (திருவாய் )-என்கிறபடியே –
தனக்கும் அவளுக்கும் யோக்யமான நிலத்திலே – நிரதிசய ஆநந்த யுக்தனாய் இருக்கக் கடவ வவன் – அங்கு நின்றும் போந்து –அவதரித்து – திரு அயோத்யையும் அவ்விடத்தோபாதி காற்கடைக் கொண்டு – தங்களுக்கு அயோக்யமான காட்டிலே –
மானோடு ஒத்து இருப்பதாய் -மிருதுவான நோக்கை உடைய விதேக ராஜன் புத்ரியை தனக்கு இனிய துணையாக காட்டிலே முளைத்தால் போலே இருக்கிற கல் வழியே போய் –
இவ் வெய்யில் வெம்மைக்கும் பாலை நிலத்தின் வெம்மைக்கும் பரிஹாரமான நீரும் நிழலும் எல்லாம் இவளேயாய்ப் போனார் –
———
வெவ்வாயேன் வெவ்வுரை கேட்டு இரு நிலத்தை
வேண்டாதே விரைந்து ,வென்றி
மைவாய களிறு ஒழிந்து தேர் ஒழிந்து
மா ஒழிந்து வானமே மேவி
நெய் வாய வேல் நெடும் கண் நேர் இழையும்
இளம் கோவும் பின்பு போக
எவ்வாறு நடந்தனை? எம்மி ராமாவோ!
எம்பெருமான்! என் செய்கேனே ?– 9-2–
இவற்றை ஒழிந்தால் இந்த தேசத்துக்கு போலியான தேசத்திலே போய்ப் புகாதே வனமே மேவி-நீர் போய்ப் புக்காலும் புகுகைக்கு தகாதவர்களை கூடக் கொண்டு-கால் நடை நடந்து அறியாத நீர் இவர்களையும் கூடக் கொண்டு பொல்லாத காட்டிலே போனீர் –
————–
ஆளுமாளார் ஆழியும் சங்கும் சுமப்பார் தாம்
வாளும் வில்லும் கொண்டு பின் செல்வார் மற்றில்லை
தாளும் தோளும் கைகளை யாரத் தொழக் காணேன்
நாளும் நாளும் நாடுவன் அடியேன் ஞாலத்தே–8-3-3-
ஆபரணமான திவ்ய ஆயுதங்கள் -அவனுடைய மிருதுத் தன்மையினாலே
மலை எடுத்தாப் போலே சுமையாகத் தோன்றுகிறது இவர்க்கு-
பகைவர்களுக்கு ஆயுதங்களாய் -அனுபவிப்பார்க்கு ஆபரணமாய் இருக்கிறவை –தம்மைப் பார்த்துக் கொள்ள வேண்டாவோ-எப்போதும் கை கழலா நேமியான் அன்றோ –
அவனுக்கு நிரூபகங்களான இவை சுமையோ -என்ன-
இவருக்கு அடையாளமாகவும் தோன்றும் -இப்படி சுமப்பதாகவும் பண்ணும் -நீயே தான் இப்படி எல்லாம் பாட வைக்கிறாய்-அது தான் செய்கிறது –வாளும் வில்லும் கொண்டு-
எதற்கு பஞ்சாயுதங்கள் -பரம ஸ்வாமி கொண்டாட்டம் வாங்கிக் கொள்ளவோ –
இளைய பெருமாளைப் போலே ஒருவர் பின்னே கொடு சென்றால் ஆகாதோ-ஆளுமாளார் -சுமப்பார் தாம்– பின் செல்வார் மற்றில்லை -என்கிறது பரிவரான நீர் அவற்றுக்கு அன்றோ -என்று தம்மை ஏவுகைக்காக
————-
கலையும் கரியும் பரிமாவும் திரியும் கானம் கடந்து போய்
சிலையும் கணையும் துணையாகச் சென்றான் வென்றிச் செருக்களத்து
மலை கொண்டலை நீரணை கட்டி மதிள் நீர் இலங்கை வாள் அரக்கர்
தலைவன் தலை பத்து அறுத்து உகந்தான் சாளக்ராமம் அடை நெஞ்சே —-1-5-1-
கலை முதலாக –வர்த்திக்கக் கடவதான காட்டைக் கடந்து போய்-தே வநே ந வநம் கத்வா -என்கிறபடியே படை வீட்டில் நின்றும் காட்டிலே புகுகை அன்றிக்கே காட்டில் நின்றும் ஆயிற்று காட்டிலே வந்து புகுந்தது-(கைகேயி நாட்டில் இருந்து காட்டுக்கு செல்ல ஆணை– இவர் காட்டில் இருந்து காட்டுக்கு -)அப்படியே இங்கும் துஷ்ட சத்வ பிரசுரமான காட்டை கழிந்து பின்னை யுத்த பூமியிலே யாயிற்று வந்து புகுந்தது
கலைகளையும் ஆனைகளையும் குதிரைகளையும் உடைத்தாய் இருக்கிற காட்டைக் கடந்து போய் வென்றிச் செருக் களத்திலே வந்து புகுந்தான்(கர தூஷணாதிகளை கொல்ல முடியாதே -கடந்து போய் என்பதால் இலங்கைக்கு சென்று என்றே கொள்ள வேண்டும்-)
———-
7-குஹ ஸஹ்யம்
8-பரத கமனம்
9-ஸ்ரீ பாதுகா பிரதானம்
பக்தி யுடைக் குகன் கடத்தக் கங்கை தன்னைக் கடந்து
வனம் போய்ப் புக்கு காயோடு நீடு கனி உண்டு
வியன் கானம் மரத்தின் நீழல்
கல்லணை மேல் கண் துயின்று
சித்திரக்கூடத்து இருப்ப, தயரதன் தான்
நின் மகன் மேல் பழி விளைத்திட்டு
என்னையும் நீள் வானில் போக்க
என் பெற்றாய் கைகேசீ!
நானும் வானகமே மிக விரும்பிப் போகின்றேன்
என்று வான் ஏறத்
தேன் அமரும் பொழில் சாரல் சித்திர கூடத்து
ஆனை புரவி தேரோடு காலாள்
அணி கொண்ட சேனை சுமந்திரன்
வசிட்டருடன் பரத நம்பி பணியத்
தம்பிக்கு மரவடியை வான் பணையம் வைத்துக் குவலயமும்
துங்கக் கரியும் பரியும் இராச்சியமும்
எங்கும் பரதற்கு அருளி விடை கொடுத்துத்
திருவுடை திசைக் கருமம் திருந்தப் போய்த்
தண்ட காரண்யம் புகுந்து
தொத்தலர் பூம் சுரி குழல் கைகேசி சொல்லால்
தொன் நகரம் துறந்து துறை கங்கை தன்னை
பத்தி உடை குகன் கடத்த வனம் போய் புக்கு
பரதனுக்கு பாதுகமும் அரசும் ஈந்து
சித்ர கூடத்து இருந்தான் தன்னை இன்று
தில்லை நகர் திரு சித்ர கூடம் தன்னுள்
எத்தனையும் கண் குளிர காண பெற்ற
இரு நிலத்தார்க்கு இமையவர் நேர் ஒவ்வார் தாமே— 10-4–
கங்கையின் துறை தன்னை பத்தி உடை குகன் கடத்த
தம்பிமாரைக் காட்டில் ஸ்நேஹத்தை உடையனாய் -பிரியில் தரியாத படி ஸ்ரீ பெருமாள் நியமிக்கையாலே நின்றவனுமாய்
ஸ்ரீ பரத ஆழ்வானையும் கூட அசிர்க்கும் படியான ஸ்ரீ குஹப் பெருமான் கங்கையைக் கடத்த
வனம் போய் புக்கு-
மனுஷ்ய சஞ்சாரம் இன்றியே துஷ்ட ம்ருஹங்களேயான காட்டிலே போய்ப் புக்கு –
———–
காயோடு நீடு கனி யுண்டு வீசு கடுங்கால் நுகர்ந்து நெடுங்காலம் ஐந்து
தீயோடு நின்று தவம் செய்ய வேண்டா திரு மார்பனைச் சிந்தையுள் வைத்தும் என்பீர்
வாயோது வேதம் மலிகின்ற தொல் சீர் மறையாளர் நாளும் முறையால் வளர்த்த
தீயோங்க வோங்கப் புகழ் ஓங்கு தில்லைத் திருச் சித்ரகூடம் சென்று சேர்மின்களே–3-2-2-
பருவம் இளைதான காய்களையும் வெய்யிலிலும் காற்றிலும் உலர்ந்து பசையற்ற கனிகளையும் புஜித்து வீசின வெட்டிய காற்றைப் பருகி நெடும் காலம் பஞ்சாக்னி மத்யஸ்தராய் நின்று தபஸு பண்ண வேண்டா-ஸ்ரீயபதியை ஹிருதயத்தில் பிரியாதபடி வைத்துக் கொள்வோம் என்பீர்(வைப்பவர்கள் இல்லை -வைக்க நினைத்தாலே போதும் அவன் உள்ளே புக தான் காத்துக் கொண்டு இருக்கிறானே விலக்காமையே வேண்டுவது )
———-
கொல் அணை வேல் வரி நெடும் கண் கௌசலை தன் குலமதலாய்! குனி வில்லேந்தும்
மல்லணைந்த வரை தோளா! வல் வினையேன் மனம் உருக்கும் வகையே கற்றாய்
மெல்லணை மேல் முன் துயின்றாய் இன்று இனி போய் வியன் கான மரத்தின் நீழல்
கல்லணை மேல் கண் துயில கற்றனையோ? காகுத்தா! கரிய கோவே! —–9-3–
கொலையிலே அணைந்த வேல் போலே புகரை உடைத்தாய் – செவ்வரி கருவரியையும் உடைத்தாய் பரப்பையும் உடைத்தான கண்ணை யுடைய ஸ்ரீ கௌசலையாருடைய உத்தாரகர் ஆனவனே –வீரர்கள் வில் ஒருக்கால் நாணி இறங்கிடாமையாலே வளைந்த படியே இருக்கும் இறே – அந்த வில் தானும் மிகை என்னும் படி மலை போலே பெரிய மிடுக்கை உடைய தோளையும் உடையவனே-ஆயுத அழகாலும் தோள் அழகாலும் என் நெஞ்சை அழிக்கவே கற்றவனே-அழகிய படுக்கையிலே முற்காலம் எல்லாம் கண் வளர்ந்த நீர் –பல மாளிகைகளிலே பல படுக்கைகளிலே கண் வளர்ந்த நீர் இன்றாக இனிப் போய்-காட்டில் வர்த்திப்பார் தாங்களும் வெருவும்படி-காட்டிலே -இலை இல்லாத மரத்தின் நிழலின் கீழே-பாறைகளை யணையாகக் கண் வளரும் படி கற்றீரோ-இச் செயல்கள் உம்முடைய குடிப்பிறப்புக்கும் சேராது -உம்முடைய வடிவு அழகுக்கும் சேராது –
———
சித்ர கூடத்து இருப்பச் சிறு காக்கை முலை தீண்ட
அத்திரமே கொண்டெறிய வனைத்துலகும் திரிந்தோடி
வித்தகனே இராமா ஓ நின்னபயம் என்று அழைப்ப
அத்திரமே அதன் கண்ணை யறுத்ததும் ஓர் அடையாளம் –3-10-6-
சோலைகளும் ஆறுகளும் சிலாதலங்களுமாய்க் கொண்டு போக ஸ்தானமாய் இருக்கும் சித்ர கூட பிரதேசத்தில்-தஸ்யோ பவந ஷண்டேஷூ நாநா புஷ்ப ஸூகந்திஷூ விஹ்ர்த்ய சவில க்லிந்நாத வாங்கே சமுபாவிசம்-என்கிறபடியே பெருமாளும் தேவரீருமாய்க் கொண்டு ஏகாந்த ரசம் அனுபவித்து ஒருவருக்கு ஒருவர் மாறி மாறி மடியிலே கண் வளர்ந்து ரஸோத்தரராய் இரா நிற்கச் செய்தே
———-
தில்லை நகர் திரு சித்ர கூடம் தன்னுள்
திறல் விளங்கு மாருதியோடு அமர்ந்தான் தன்னை
எல்லையில் சீர் தயரதன் தான் மகனாய் தோன்றிற்று
அது முதலா தன் உலகம் புக்கது
கொல் இயலும் படை தானை கொற்ற ஒள் வாள்
கோழியூர் கோன் குடை குலசேகரன் சொல் செய்த
நல் இயல் இன் தமிழ் மாலை பத்தும் வல்லார்
நலம் திகழ் நாரணன் அடி கீழ் நண்னுவாரே–10-11–
பாவோ நான்யத்ர கச்சதி -என்று அங்குப் போகேன் என்ற ஸ்ரீ திருவடியை விட மாட்டாமே இங்கே வந்து நித்ய வாஸம் பண்ணுகிறவனை-பஹூ குணனான ஸ்ரீ சக்கரவர்த்திக்கு -பிதரம் ரோசயாமாச – என்று பிள்ளையாய் பிறந்தது தொடக்கமாக ஸ்ரீ பரமபதம் புக்கது முடிவாக யுண்டான ஸ்ரீ இராமாயண கதையை
——
பொன் பெற்றார் எழில் வேத புதல்வனையும் தம்பியையும் பூவை போலும்
மின் பற்றா நுண் மருங்குல் மெல்லியல் என் மருகியையும் வனத்தில் போக்கி
நின் பற்றா நின் மகன் மேல் பழி விளைத்திட்டு என்னையும் நீள் வானில் போக்க
என் பெற்றாய்? கைகேசி! இரு நிலத்தில் இனிதாக இருக்கின்றாயே– 9-8-
தந்யர் என்று எல்லாரும் சொல்லும் படி இருக்கிற உபாயாத்யர்கள் கீழே இருந்து அழகிய சகல வேத சாஸ்திரங்களையும் ஓதி இருக்கிற ஸ்ரீ பெருமாளையும் -அவரை அல்லாது அறியாத தம்பியாரையும்-பூவை போலே இருப்பாளுமாய் -மின்னுக்கு ஒப்பான இடையை யுடையாளுமாய் ம்ருது ஸ்வபாவையுமான என் மருமகளான பிராட்டியையும்-காட்டிலே போக விட்டு-உன்னை அல்லது வேறு ஒருவரை தாய் என்று இராத ஸ்ரீ பெருமாளையும் ஸ்ரீ இளைய பெருமாளையும் வனத்திலே போக விட்டு-இச் செயல்கள் எல்லாம் செய்து நீ பெற்ற பிரயோஜனம் என்-சம்சார ஸூகம் ஆகிறது -புத்ரர்களோடும் பர்த்தாவோடும் கூடி இருக்கை யாய்த்து –உனக்கு புத்ரரான ஸ்ரீ பெருமாளைக் காட்டிலே போக்கி என்னையும் ஸ்வர்க்கத்திலே போக்குகையாலே சம்சார ஸூகம் அழகியதாக அனுபவிக்கக் கடவை இறே
———
தேனகுமா மலர் கொந்தாள் கௌசலையும் சுமித்ரையும் சிந்தை நோவ
கூன் உருவில் கொடும் தொழுத்தை சொல் கேட்ட கொடியவள் தன் சொல் கொண்டு இன்று
கானகமே மிக விரும்பி நீ துறந்த வள நகரைதுறந்து நானும்
வானகமே மிக விரும்பி போகின்றேன் மனு குலத்தார் தங்கள் கோவே! —9-10–
தேனைப் புறப்பட்டு விக்கிற மலரோடு கூடின மயிர் முடியை உடைய ஸ்ரீ கௌசலையாரும்-
ஸ்ரீ ஸூமத்ரையாரும் நெஞ்சு நோவ-வடிவிலே வக்ரம் போலே நெஞ்சம் வக்கிரமாய் திண்ணிதான கூனியை யுடைய வார்த்தையைக் கேட்ட கைகேயியுடைய வார்த்தையிலே அகப்பட்டு-நான் போகச் சொன்னேன் -என்னுமத்தையே கொண்டு ஒருவர்க்கும் சஞ்சரிக்க அரிதான காட்டை விரும்பி – திரு அபிஷேகத்துக்கு அலங்கரித்து இருக்கிற ஊரை நீ கை விட்டாய் என்று நானும் ஸ்ரீ திரு அயோதயையைத் துறந்து-நீ இல்லாத நகரி இறே -அத்தாலே ஸ்வர்க்கமே யாகிலும் நீ இல்லாத ஊரை விட்டுப் போகின்றேன்-மநு குலோத்பவனானவனே–
————-
மானமரும் மென்னோக்கி வைதேவீ விண்ணப்பம்
கானமரும் கல்லதர் போய்க் காடுறைந்த காலத்துத்
தேனமரும் பொழில் சாரல் சித்திர கூடத்து இருப்பப்
பான் மொழியாய் பரத நம்பி பணிந்ததுமோர் அடையாளம் –3-10-5-
காடு செறிந்து இருப்பதாய் கல் நிறைந்து கிடப்பதான வழியிலே
திருவடிகளின் மார்த்வம் பாராதே போய் வனவாசம் பண்ணின காலத்தில்-வண்டுகள் மாறாமல் பொருந்திக் கிடக்கிற பொழில்களோடே சேர்ந்த பர்யந்தத்தை யுடைய
சித்ர கூட பர்வதத்தில் –(காமத கிரி -கிரி ராஜ் இதுவே ராமாயணத்தில்-கிருஷ்ண அவதாரத்தில் கோவர்த்தனம் கிரி ராஜ் )உடஜே ராம மாசீ நம் ஜடா மண்டல தாரிணம் கிருஷ்ணாஜிநதரம் தந்து சீர வல்கல வாஸஸம் -என்கிறபடியே இளைய பெருமாள் சமைத்த ஸ்ரீ பர்ண சாலையிலே எழுந்து அருளி இரா நிற்க-பால் போலே ரசாவகமான பேச்சை யுடையவளே – இதுக்கு முன்பு இவள் சொன்ன வார்த்தைகளில் ரஸ்யத்தையாலும்-
இது கேட்க்கையில் யுண்டான ஆதார அதிசயத்தாலும் சொல்லுகிறான்-பாரதந்தர்யத்தால் பூர்ணனான ஸ்ரீ பரதாழ்வான் வந்து – மீண்டு எழுந்து அருள வேணும் – என்று பிரபத்தி பண்ணினதும் ஓர் அடையாளம் –
———
ஆனைப் புரவித் தேரொடு காலாள் அணி கொண்ட
சேனைத் தொகையைச் சாடி இலங்கை செற்றானூர்
மீனைத் தழுவி வீழ்ந்து எழும் மள்ளர்க்கு அலமர்ந்து
நானப் புதலில் ஆமை யொளிக்கும் நறையூரே–6-5-3-
ராவணனுடைய படை எழுச்சியை அந்த க்ரமத்திலே பேசுகிறார் –
மலைகள் நடந்தால் போலே யானைகளைப் புறப்பட விட்டு அநந்தரம் – குதிரைகளை விட்டு
அநந்தரம் தேர்களாலே அலங்கரித்து – இவை அத்தனைக்கும் காவலாக காலாளைப் புறப்பட விட்டு இப்படிப் பட்ட சேனா சமூஹத்தை துகைத்து கழித்து இலங்கையை அழியச் செய்த தசரதாத் மஜன் வர்த்திக்கிற ஊர் – (ஒரு வில்லால் செற்றவன்-தாசாரதி பெயரே உகக்கும் பெருமாள் – )
———
சுமந்திரன் வசிட்டருடன்
மானமரும் மென்னோக்கி வைதேவீ விண்ணப்பம்
கானமரும் கல்லதர் போய்க் காடுறைந்த காலத்துத்
தேனமரும் பொழில் சாரல் சித்திர கூடத்து இருப்பப்
பான் மொழியாய் பரத நம்பி பணிந்ததுமோர் அடையாளம் –3-10-5-
காடு செறிந்து இருப்பதாய் கல் நிறைந்து கிடப்பதான வழியிலே
திருவடிகளின் மார்த்வம் பாராதே போய் வனவாசம் பண்ணின காலத்தில்-வண்டுகள் மாறாமல் பொருந்திக் கிடக்கிற பொழில்களோடே சேர்ந்த பர்யந்தத்தை யுடைய
சித்ர கூட பர்வதத்தில் –(காமத கிரி -கிரி ராஜ் இதுவே ராமாயணத்தில்-கிருஷ்ண அவதாரத்தில் கோவர்த்தனம் கிரி ராஜ் )உடஜே ராம மாசீ நம் ஜடா மண்டல தாரிணம் கிருஷ்ணாஜிநதரம் தந்து சீர வல்கல வாஸஸம் -என்கிறபடியே இளைய பெருமாள் சமைத்த ஸ்ரீ பர்ண சாலையிலே எழுந்து அருளி இரா நிற்க-பால் போலே ரசாவகமான பேச்சை யுடையவளே – இதுக்கு முன்பு இவள் சொன்ன வார்த்தைகளில் ரஸ்யத்தையாலும்-
இது கேட்க்கையில் யுண்டான ஆதார அதிசயத்தாலும் சொல்லுகிறான்-பாரதந்தர்யத்தால் பூர்ணனான ஸ்ரீ பரதாழ்வான் வந்து – மீண்டு எழுந்து அருள வேணும் – என்று பிரபத்தி பண்ணினதும் ஓர் அடையாளம் –
———-
மரவடியை தம்பிக்கு வான் பணயம் வைத்து போய் வானோர் வாழ
செரு உடைய திசைக் கருமம் திருத்தி வந்து உலகாண்ட திருமால் கோயில்
திருவடி தன் திரு உருவமும் திருமங்கை மலர் கண்ணும் காட்டி நின்று
உருவுடைய மலர் நீலம் காற்றாட்ட வோசலிக்கும் ஒளி அரங்கமே – 4-9 1-
கைகேயி -ராஜன் -என்று ஸ்வா தந்த்ர்யத்தை ஆரோபித்து வார்த்தை சொன்ன போதே பிடித்து தத் கத சித்தனாய் இருந்து – ஸ்ரீ சக்கரவர்த்திக்கு சாஸ்த்ரார்தங்களை பண்ணி விட்ட அநந்தரம் தன்னை அபிஷேகம் செய்வதாக உத்யோகித்து கொண்டு இருந்த ராஜ லோகத்தில் உள்ளாறும் – பௌரஜான பதந்க்களுமாய் உள்ள சபா மத்யத்திலே வந்து –தன்னுடைய ஆற்றாமை தோற்ற பிரலாபித்து புரோஹிதனான வசிஷ்ட பகவானையும் கர்கித்து ஸ்ரீ பெருமாளுக்கு சேஷ பூதனான நான் -முடி சூடி ராஜ்யம் பண்ணுகைக்கு அர்ஹன் அல்லேன் – என்னும் இடத்தை அறிவித்து –பின்பு எல்லாரையும் கூட்டிக் கொண்டு – ஸ்ரீ திருச் சித்ர கூடத்தில் வந்து தன்னுடைய ஆர்த்தி தோற்ற திருவடிகளில் விழுந்து சரணம் புகுந்து – தான் விண்ணப்பம் செய்தது மாறாமல் செய்கைக்கு ஈடான ப்ராப்திகளை எல்லாம் புரஸ்கரித்து- தேவரீர் மீண்டு எழுந்து அருளி திரு அபிஷேகம் பண்ணி அருள வேணும் -என்று கண்ணும் கண்ணீருமாய் கொண்டு பிரார்த்தித்த தம்பியான ஸ்ரீ பரத ஆழ்வானுக்கு –பிள்ளாய் நீ நம்மை நிர்பந்திக்க கடவை அல்ல –
உன்னை ஸ்வதந்த்ரனாக்கி வார்த்தை சொன்னார் எதிரே உன் ஸ்வரூப அனுரூபமான பாரதந்த்ர்யத்தை பெற்று நீ போ– நான் பதினாலு சம்வத்சரமும் கழிந்தால் ஒழிய மீளுவது இல்லை – என்று ஒருபடிப்பட அருளிச் செய்கையாலே –திரு உள்ளக் கருத்து இது –ஆன பின்பு நாம் இனி நிர்பந்திக்க கடவோம் அல்லோம் -என்று மனசு மீண்டு அடியேனுடைய ஸ்வா தந்த்ர்யா நிவ்ருத்திக்கும் – தேவரீர் மீண்டு எழுந்து அருளி விடுவீர் என்னும் விச்வாசத்துக்கும் ஹேதுவானது தான் ஏது-என்ன-இரண்டுக்குமாக இத்தைக் கொண்டு போ -என்று திருவடி நிலைகளைக் கொடுத்து-பாதுகேசாஸ்ய ராஜ்யாய ந்யாசம் தத்வா புன புன நிவர்த்தயா மாச ததோ பரதம் பரதாக்ரஜ -என்கிறபடியே இத்தை பலகாலும் அருளிச் செய்து – ஸ்ரீ பரத ஆழ்வானை உகப்பித்து -மீள விட்டு -எழுந்து அருளுகையாலே – -மரவடியை தம்பிக்கு வான் பணையம் வைத்து போய் -என்கிறார் –பணயம் ஆவது –விஸ்வாச ஹேதுவாய் உள்ளது–வான் பணையம் -என்கையாலே -மகா விஸ்வாச ஹேதுவாய் உள்ளது என்னும் இடம் தோற்றுகிறது-வான் -என்று வலியதால் – பெருமை யாதல் –
———
கொங்கை வன் கூனி சொல் கொண்டு குவலயத்
துங்க கரியும் பரியும் இராச்சியமும்
எங்கும் பரதற்கு அருளி வான் கானடை
அம் கண்ணன் அப் பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப் பூச்சி காட்டுகின்றான் -2 1-8 –
முதுகிலே முலை புறப்பட்டால் போலே -திரண்டு கிளர்ந்து வலிய கூனை
உடையளான மந்தரை உடைய வசனத்தை கொண்டு –காட்டுக்கு போயிற்று பித்ரு வசனம் கொண்டாய் இருக்க – குப்ஜை உடைய வசனம் கொண்டு என்பான் என்னில் –
ந மந்த்ர்யாயா ந ச மாதுரச்யா தோஷோ தோஷோ நு ராஜ்ஜா -என்கிறபடியே –
வன ப்ரேவேச ஹேதுக்கள் சொல்லுகிற இடத்தில் முந்துற எடுத்தது இவளை இறே-இவளுடைய வசனத்தாலே -கலக்கிய மா மனத்தனளாய் இறே கைகேசி வரம் வேண்டிற்று –
அதடியாக இறே சக்ரவர்த்தி போக சொல்லி வேண்டிற்றும் – ஆகையால் எல்லாவற்றுக்கும் மூலம் இதுவாகையாலே இவளுடைய சொல் கொண்டு போனார் என்கிறது –குவலய துங்க கரியும் – பூமியில் யானைகள் எல்லாவற்றிலும் -விஞ்சின சத்ருஜ்ஜயன் முதலான யானைகளும் – பரியும் -அப்படியே லோக விலஷனமான குதிரைகளும் –
இராச்சியமும் -அகண்டகமான ராஜ்யமும்-எங்கும் -இஷ்வாகூணா மியம் பூமி ஸ்சைல வன காநனா-என்கிறபடியே எழுந்து அருளுகிற காடு தானும் – பரதற்கு அருளி –
கைகேயி வர அனுகுணமாக சக்ரவர்த்தி வசனத்தின் படியே ஸ்ரீ பரதாழ்வானுக்கு கொடுத்து -ஒருவரால் ப்ரேவேசிக்க அரிதான -வலிய காட்டை அடைந்த-அழகிய சுலபனானவன் -கட்டின காப்போடே காடேறப் போக சொன்ன இடத்தில்
முகத்தில் கருகுதல் இன்றிக்கே -முடியை தவிர்ந்து ஜடையை புனைந்து நாட்டை விட்டு
காடேறப் போன படியை நினைத்து – அழகிய சுலபன் -என்கிறது –அன்றிக்கே –
ராம கமல பத்ராஷா-என்கிறபடி அழகிய திருக் கண்களை உடையவன் -என்னவுமாம் –
அப்போது-ராஜ்ய ஐஸ்வர்யத்தை விட்டு காட்டுக்கு போந்தோம் -என்ற க்லேசம் இன்றிக்கே –
அக வாயில் ஹர்ஷம் திருக் கண்களில் தோன்றும் படியாக போன படியை சொல்கிறது –அழகிய எளியவன் -கண்ணை உடையவன் என்று இரண்டு நிர்வாகங்கள்
அப்போது அலர்ந்த செந்தாமரையை வென்றதம்மா-ராஜ்ய நாசம் இருள் வளர வளர ராமசந்திரன் ஒளி விஞ்சி இருந்ததே
———-
விடை கொடுத்துத்
மரவடியை தம்பிக்கு வான் பணயம் வைத்து போய் வானோர் வாழ
செரு உடைய திசைக் கருமம் திருத்தி வந்து உலகாண்ட திருமால் கோயில்
திருவடி தன் திரு உருவமும் திருமங்கை மலர் கண்ணும் காட்டி நின்று
உருவுடைய மலர் நீலம் காற்றாட்ட வோசலிக்கும் ஒளி அரங்கமே – 4-9 1-
செரு -என்று யுத்தம்-செரு உடைய திசை-என்று தஷிண திக்கை சொல்லுகிறது
இத் திக்கிலே இறே ராவணாதி ராஷசர் எல்லாம் கூடிக் கொண்டு இருந்தது-இந்த திசைக் கருமம் திருத்துகை யாவது – நாட்டை நலியும் அரக்கரை நாடித் தடிந்திட்டு (திருவாய் -7-5 )-என்கிறபடியே-தன்னுடைய அபிமான அந்தர்பூதமான நாட்டை நலிந்து திரிகிற ராஷசர் ஆனவர்களை இருந்த இருந்த இடங்களிலே தேடிச் சென்று கொன்று -(சென்று கொன்ற வீரனார் ) ஜனஸ்தானத்தில் இருந்த ராஷசரை முதலற முடித்த விசேஷத்தைக் கேட்டு –ராவணன் வந்து – ஸ்ரீ தண்ட காரண்யத்தில் எழுந்து அருளி இருக்கச் செய்தே –
ஸ்ரீ பிராட்டியை பிடித்துக் கொண்டு போக –-அது நிமித்தமாக-கரிஷ்யே மைதிலீ ஹேதோர் அபிசாசம ராஷசம் –என்று சங்கல்பித்து –அவர்களை தேடித் திரியச் செய்தே –
ராஜ்ய தாரங்களை இழந்து ஜூரம் (சுரம் -ருஷ்ய சிங்க மலை என்றுமாம் )அடைந்து கிடந்த
ஸ்ரீ மகாராஜரைக் கண்டு -அவரோடு உறவு கொண்டு – அவருக்கு சத்ருவான வாலியை நிரசித்து – அவரை ராஜ்ய தாரங்களோடு கூட்டி –பின்பு அவரையும் அவரது பரிகிரகத்தையும் துணையாகக் கொண்டு கடலை அணை செய்து –மறுகரை அதனாலே ஏறி (பெருமாள் திருமொழி )-என்கிறபடியே அவ் வழியாலே இலங்கையிலே போய் புக்கு
எரி நடு வேல் அரக்கரோடும் இலங்கை வேந்தன் இன்னுயிர் கொண்டு -என்கிறபடியே
இலங்கை பாழ் ஆம் படி ராவணனுடைய பரிகரமான ராஷசரை அடையக் கொன்று
பின்பு ராவணன் தன்னையும் முடித்து – இலங்கைக்கு ராஜாவாக ஸ்ரீ விபீஷண ஆழ்வானை அபிஷேகம் பண்ணுவிக்கை-ராவண வத அநந்தரம் பிராட்டியோடு கூடி அருளி –
சதுர்த்தே சேஹி சம்பூர்னே வர்ஷேஹனி ரகூத்வஹம் ந த்ரஷ்யாமி யதித்வாந்து பிரவேஷ்யாமி ஹூதாசனம் -என்று பிரதிக்ஜை பண்ணிப் போந்த ஸ்ரீ பரத ஆழ்வானை அழியக் கொடுக்க ஒண்ணாது-என்று – புஷ்பக விமானத்திலே ஏறி -பெரிய த்வரையோடு மீண்டு – ஸ்ரீ திரு அயோத்யையிலே எழுந்து அருளி
————-
போய்த் தண்ட காரண்யம் புகுந்து
தண்ட காரணியம் புகுந்து அன்று தையலைத் தகவிலி எங்கோமான்
கொண்டு போந்து கெட்டான் எமக்கு இங்கோர் குற்றமில்லை கொல்லேல் குல வேந்தே
பெண்டிரால் கெடும் இக் குடி தன்னைப் பேசுகின்றது என் தாசரதீ உன்
அண்ட வாணர் உகப்பதே செய்தாய் அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ —-10-2-3-
தான் இருந்த இடத்திலே அவர் வந்து அடை மதிள் படுத்த அபகாரம் பண்ணினான் அன்று –
காட்டிலே தாபச வேஷத்தோடு திரியா நிற்க அங்கே வந்து பிராட்டியைப் பிரித்து
நிர்க் க்ருணனான பையல் கேட்டுப் போனான் –
————–
ஸ்ரீ ஆரண்ய காண்டம்
10-காகாஸூர பங்கம்
11-விராத வதம்
12-சூர்பணகா பங்கம்
13-கர தூஷண வதம்
தயங்கு மறை முனிவர்க்கு ‘அஞ்சேன்மின் !’என்று அருள் கொடுத்திட்டு
இருளகற்றும் எரி கதிரோன் மண்டலத்தோடு ஏற்றி வைத்து ஏணி வாங்கி
அருள் கொடுத்திட்டு அடியவரை ஆள்கொள்வான் அமருமூர் அணி அரங்கமே – 4-9- 3-
புனராவ்ருத்ய அபாவத்துக்கும் – நித்ய கைங்கர்ய லாபத்துக்கும் உடலான தன்னுடைய பிரசாதத்தை இவர்களுக்கு கொடுத்து
—
வெங்கண் விறல் விராதன் உக வில் குனித்து
பைம் கண் விறல் செம் முகத்து வாலி மாளப் படர் வனத்துக் கவந்தனொடும் படையார் திண் கை
செங்கண் விறல் விராதன் உக வில் குனித்த விண்ணவர் கோன் தாள் அணைகிற்பீர் வெற்புப் போலும்
துங்க முக மாளிகை மேல் ஆயம் கூறும் துடி யிடையார் முகக் கமலச் சோதி தன்னால்
திங்கள் முகம் பனி படைக்கும் அழகார் காழிச் சீராம விண்ணகரே சேர்மின் நீரே–3-4-6-
ஜாதி பிரயுக்தமான கண்ணில் பசுமையையும் மிடுக்கையும் சீற்றத்தாலே சிவந்த முகத்தையும் உடைய வாலி முடியும்படியாக-பரந்த காட்டிலே உண்டான சத்வங்களை அடைய
இரண்டு கையாலும் வாரி பஷித்துக் கொண்டு வருகிற கபந்தனோடு கூட-திண்ணிய படையார்ந்த கை வெவ்விய கண்களையும் மிடுக்கையும் உடைய விராதன் முடியும்படியாக வில்லை வளைத்த (ராகவ் ராம லஷ்மன் இருவரும் -கட்கம் கொண்டு விராதனை முடித்ததாக ஸ்லோகம்-வில் என்றது உப லக்ஷணம் )விரோதியைப் போக்கி தேவ ஜாதிக்கு குடி இருப்பைப் பண்ணிக் கொடுத்த சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளை ஆஸ்ரயிக்க வேண்டி இருப்பீர்
வண் தமிழ் மா முனி கொடுத்த வரி வில் வாங்கி
புலர்ந்து எழுந்த காமத்தால் சுடுசினத்துச் சூர்ப்பணகா
பொன்னிறம் கொண்ட சீதைக்கு நேராவன் என்று வரக்
கொடி மூக்கும் காது இரண்டும் கூரார்ந்த வாளால் ஈரா விடுத்துக்
கரனொடு தூடணன் தன் உயிரை வாங்க அவள் கதறித்
தலையில் அங்கை வைத்து மலை இலங்கை ஓடிப் புக,
வலி வணக்கு வரை நெடும் தோள் விராதை கொன்று
வண் தமிழ் மா முனி கொடுத்த வரி வில் வாங்கி
கலை வணக்கு நோக்கரக்கி மூக்கை நீக்கி
கரனோடு தூடணன் தன் உயிரை வாங்கி
சிலை வணக்கி மான் மறிய வெய்தான் தன்னை
தில்லை நகர் திரு சித்ர கூடம் தன்னுள்
தலை வணக்கி கை கூப்பி ஏத்த வல்லார்
திரிதலால் தவமுடைத்து தரணி தானே —10-5–
எதிரிகள் வலியைத் தோற்பிக்கக் கடவதாய்-மலை போலே திண்ணியதான தோள்களையும் உடைய விராதனைக் கொன்று-ஸ்ரீ அகஸ்த்யன் கொடுத்த தர்ச நீயமான வில்லை வாங்கி-கலை நோக்கைத் தோற்பிக்கும் படியான நோக்கை உடைய ஸூர்ப்பணகி யுடைய மூக்கை வாங்கி-இவளுடைய ரூப வைரூப்யம் கண்டு பொறுக்க மாட்டாத வந்த கர தூஷணர்களை ப்ராணன்களை ஹரித்து-அது கேட்டுப் பொறாதே-ராவணனாலே ப்ரேரிதனாய் வந்த மாரீசனான மாயா ம்ருகத்ததை எய்து கொன்றவனை-அக்காலத்திலே காணப் பெறாத இழவு எல்லாம் தீரத் தலை யுண்டான பிரயோஜனம் பெற வணங்கி -கை யுண்டான
பிரயோஜனம் பெறத் தொழுது -வாயுண்டான பிரயோஜனம் பெற பெற ஏத்த வல்லார்-இவர்களுடைய சஞ்சாரத்துக்கு விஷயமாகையாலே பூமியானது பாக்யத்தை உடையது –
தன் சீதைக்கு நேராவன் என்று ஓர் நிசாசரி தான் வந்தாளை
கூரார்ந்த வாளால் கொடி மூக்கும் காது இரண்டும்
ஈரா விடுத்து அவட்கு மூத்தோனை வெந்நரகம்
சேரா வகையே சிலை குனித்தான்
தன் சீதைக்கு நேராவன் -இத்யாதி-பிராட்டியோடு சாம்யை -சத்ருசை -யாவன் என்று வந்த சூர்ப்பணகை விரூபை யாக்கி விட அவள் போய் கரன் காலிலே விழ சபரிகரனாய் வந்த கரனை நிரசித்த படியைச் சொல்லுகிறது –தன் சீதை ––ராகவோமர்ஹதி வைதேஹீம் –தனக்கு உயரம் சொல்லிலும் அவளைச் சொல்லித் தன்னைச் சொல்ல வேண்டும்படி இருக்கும் பிராட்டிக்குக் காணும் சத்ருசையாவேன் என்று வந்தது –நேராவன் என்று-சர்வ லஷணத்தாலும்-விலஷணை யான பிராட்டிக்கு விரூபையாய் இருக்கிற தான் காணும் ஒப்பாவன் என்று வந்தாள் –ஓர் நிசாசரி – பெற்ற தாயோடு சீறு பாறு என்று வந்தவள் என்று
பிணம் தின்னி என்கிறாள் -காணும் இவள் –தான் –பெருமாளுக்கு மேலான பிராட்டிக்குப்
பெருமாளோடும் ஒவ்வாத தான் காணும் ஒப்பாவான் என்று வந்தாள் –தன் சீதைக்கு நேராவன் என்று ஓர் நிசாசரி தான் வந்தாளை –த்ரை லோக்ய ராஜ்யம் சகலம் சீதாயா நாப்நுயாத் கலாம் -என்று பெருமாள் தாமும் தம் விபூதியும் ஒரு தட்டுக்கும் கூட போராது இருக்கக் காணும் தான் நேராவன் என்று வந்தது –வந்தாளை – பெருமாள் பாடே வந்தவாறே
நான் ஏக தார வ்ரதனாய் இருப்பன் – அக்ருத விவாஹராய் இருக்கிற இளைய பெருமாள் பாடே போ -என்ன-அங்கே சென்றவாறே அவர் -நான் தாசனாய் இருப்பன்-எனக்கு நீ கடவை யானால் நீயும் தாசியாய் அன்வயிக்கும் அத்தனை அன்றோ-பெருமாள் பாடே சென்றால் அன்றோ உனக்குப் பட்டம் கட்டி ஏக சிம்ஹாசனத்திலே இருக்கலாவது -என்ன அங்கே போவது இங்கே வருவதாய்த் திரிந்தவாறே இவள் அன்றோ இது எல்லாம் ஒட்டாது ஒழிகிறாள் -என்று பிராட்டி யுடைய பாடே வந்து உன்னைத் தின்னும் இத்தனை -என்று விழ
கூரார்ந்த வாளால் -இத்யாதி
தம்முடைய கையாலே இ றே தண்டிப்பது-ராமஸ்ய தஷிணோ பா ஹூ-தம்முடைய தோளாய் இருக்கிற இளைய பெருமாளை இடுவித்து தண்டிப்பித்தார்-கூரார்ந்த வாளால் – கூர்மை மிக்கு இருக்கிற வாளாலே முரட்டு உடம்பிலே வ்யாபரியா நின்றால் ரக்த ஸ்பர்சம் இல்லாதபடி வ்யாபரிக்கலாம் வாள்-கொடி மூக்கும் காது இரண்டும் ஈரா விடுத்து – பிராட்டியோடு ஒப்பாக்கி அங்க விசேஷங்களைப் பேணி வர அவற்றைப் போக்கி விட்டார்-ஈரா விடுத்து – வாளின் கூர்மை சொல்லுகைக்காக –கூரார்ந்த வாள் -என்றது அங்கு
ஈர்ந்தது என்கையாலே ஈருகைக்கு அரிதான உடம்பின் திண்மை சொல்லிற்று இங்கு-ஈரா விடுத்து – பிறந்தகத்தில் நின்றும் புக்ககத்திற்கு வந்தாள் போல் அன்றியே
புக்ககத்தில் நின்றும் பிறந்த கத்திற்கு போம் போது ஓர் ஆதிக்யம் பண்ணி விட வேணும் இறே – பெருமாளை ஆசைப் படச் செய்தேயும் பிராட்டி பக்கல் அபராதம் பண்ணுகையால்விரூபை யானாள் இறே-ஆகையாலே இவ் விஷயத்தில் ஆசை உண்டானாலும் ததீயர் பக்கலிலே அபராதம் உண்டானால் பலிக்கும் பலம்
சூர்பணகை பலம் என்கை- இவள் ஆசைப் பட்ட விஷயம் இ றே சிந்த யந்தியும் ஆசைப் பட்டது இப்படி அபராதம் இல்லாமையாலே அவள் பெற்றுப் போனாள் இறே-விடுத்து
தருனௌ ரூபா சம்பன்னௌ-என்று கரன் காலிலே விழும்படி பண்ணி –
தென்னிலங்கை யாட்டி யரக்கர் குலப்பாவை
மன்னன் இராவணன் தன நல் தங்கை வாள் எயிற்றுத்——144
துன்னு சுடு சினத்துச் சூர்பணகாச் சோர்வெய்திப்
பொன்னிறம் கொண்டு புலர்ந்து எழுந்த காமத்தால்—-145
தன்னை நயந்தாளைத் தான் முனிந்து மூக்கரிந்து
சொல்லீர் அவள் ஒருத்தியை அவளைப் போலே பிறந்தாரும் உண்டோ ராவணன் என்று ஓர் பேர் மாத்ரமாய் அவள் அன்றோ அப்படை வீட்டுக்கு நிர்வாஹகையாய் போந்தாள்-
ஜனகச்ய குலே ஜாதா-என்னுமா போலே ராஷச குலத்துக்கு நிதி போலே யுள்ளாள்-மன்னன் இராவணன் தன நல் தங்கை வாள் எயிற்றுத்-—சொல்லாய் ராஜ ராஜனை -அவனைப் போலே வாழ்ந்தார் உண்டோ-அவனுக்கு நல்ல ஜீவன் போலே வேறே தங்கை சொல்லீர் எயிற்றின் ஒளியை-ஸ்திரீ யாகில் அங்கன் இருக்க வேண்டாவோ தான்-துன்னு சுடு சினத்துச் சூர்பணகாச் சோர்வெய்திப்-எயிற்றின் ஒளி போலேயோ அகவையில் த்வேஷம் வெள்ளம் இருக்கிறபடி சூர்ப்பம் போன்ற நகத்தை யுடையவள்-பெருமாளோடு தான் நினைத்து வந்த படி பரிமாறப் பெறாமையாலே சோர்ந்து பூமியிலே விழ –
பொன்னிறம் கொண்டு புலர்ந்து எழுந்த காமத்தால்-— அபிமதம் பெறாமையாலே விவர்ணமான உடம்பை யுடையளாய் – கிளர்ந்து எழுந்த காமத்தை யுடையளாய்-தன்னை நயந்தாளைத் தான் முனிந்து மூக்கரிந்து-தன்னை ஆசைப்பட்ட இது அன்றோ அவள் செய்த த்ரோஹம்-தன்னை ஆசைப் பட்டாரை முனியக் கடவதோ-ஆசைப் பட்டாரை ஒக்க ஆசைப் படும் அது ஒழிய அது செய்யா விட்டால் பின்னை முனியவும் வேணுமோ-முனிந்து விட்டு விடப் பெற்றதோ அவளுக்கு வைரூப்யத்தையும் விளைத்து விட வேணுமோ
——
14-மாரீச வதம்
15-சீதா வியோகம்
16-ஜடாயு மோக்ஷம்
17-கபந்த வதம்
கொடுமையில்கடுவிசை அரக்கன்
அலைமலிவேற்கண்ணாளைஅகல்விப்பான்
ஓர் உருவு ஆயமானை அமைத்து சிற்றெயிற்று
முற்றல் மூங்கில் மூன்று தண்டத்தனாய் வஞ்சித்து
இலைக் குரம்பையில் தனி இருப்பில்
கனிவாய்த் திருவினைப் பிரித்து
நீள்கடல் சூழ் இலங்கையில்
அரக்கர் குடிக்கு நஞ்சாகக்கொடுபோந்து
வம்புலாமகடிகாவில்சிறையா வைக்க
அயோத்தியர் கோன் மாயமான்மாயச்செற்று
அலைமலிவேற் கண்ணாளை அகன்று தளர்வைய்தி
சடாயுவை வைகுந்தத்து எற்றிக்
கங்குலும்பகலும்கண்துயில் இன்றிக்
கானகப்படி உலாவி உலாவிக்
கணை ஒன்றினால்கவந்தனை மடித்துச்
சவரி தந்த கனி உவந்து,
சுரிகுழல் கனி வாய்த் திருவினைப் பிரித்த* கொடுமையின் கடு விசை அரக்கன்*
எரிவிழித்து இலங்கும் மணி முடி பொடிசெய்து* இலங்கை பாழ்படுப்பதற்கு எண்ணி*
வரிசிலை வளைய அடு சரம் துரந்து* மறி கடல் நெறிபட மலையால்*
அரிகுலம் பணிகொண்டு அலை கடல் அடைத்தான்* அரங்க மா நகர் அமர்ந்தானே.5-7-7-
ஸூ கேச்யா-என்றும் சாரு கேசீம் – என்றும் சொல்லுகிறபடியே அழகிய திருக் குழலையும்
கனிந்த அதரத்தையும் உடையளான பிராட்டியை –அனந்யா ராகவேணாஹம்-என்றும்
அனந்யா ஹி மயா சீதாபாஸ்கரேண ப்ரபா தயா -என்றும்-இரண்டு தலையும் சொல்லாம்படி இருக்கிற இருவரையும் இரண்டு இடத்திலே யாம்படி பண்ணி-க்ரௌர்யத்தையும் பெரிய வேகத்தையும் உடையனான ராவணன் உடைய அக்னி கல்பமாய்க் கொண்டு விளங்கா நின்றுள்ள ரத்னங்களாலே செய்யப் பட்ட முடிகளை பொடி செய்து -என்னுதல்
அன்றிக்கே எரி விழித்து –திருவினைப் பிரித்த என்னுதல் –இலங்கை மூலையடியே நாயும் நரியும் போம்படியாக பாழ் படுத்தும்படி மநோ ரதித்து
————
இலை மலி பள்ளி யெய்தி யிது மாயம் யென்ன இன மாய மான் பின் எழில் சேர்
அலை மலி வேற் கணாளை அகல்விப்பதற்கு ஓருருவாய மானை யமையா
கொலை மலி வெய்துவித்த கொடியோன் இலங்கை பொடியாக வென்றி யமருள்
சிலை மலி செஞ்சரங்கள் செல வுய்த்த நங்கள் திருமால் நமக்கோர் அரணே –11-4-7-
பர்ண சாலையிலே இருந்தும் இது ஒரு ஆச்சர்யம் இருந்த படி என் -என்னும்படியாக
இனத்தின் மான்களோடு கூடி வரில் அவை வெருவும் யென்று அவற்றின் பின்னே -ஆஸ்ரமத்வார மாகம்ய -இத்யாதி –எழிலை உடையாளாய் இலக்கானாரை அழித்து பிணிப்புண்ணப் பண்ண வற்றாய் ஓர் ஆளும் ஓர் நோக்கும் நேராம் படி இருக்கிற பிராட்டியை பிரிக்கைக்கு ஈடாய் இருப்பதொரு வடிவைக் கொண்டு வந்த மாயா மிருகத்தை நிரசித்து –பர ஹிம்சையே யாத்ரையாக திரியும் அதி க்ரூரரான பையல் உடைய இலங்கை பொடியாம் படி வெற்றியை விளைப்பதான சமர பூமியிலே-ஆயிரம் இரண்டாயிரமுமாக ஒரு தொடையிலே தொடை யுண்ணும் செவ்விய அம்புகளை நடத்தின – இதடையச் செய்தது -பிராட்டி பக்கல் பிச்சாலே இறே-இப்படி தம் மார்பிலே அம்பை ஏற்று ரஷிக்குமவர்
நமக்கு ரஷகர் நமக்கு மேல் ஒரு குறை உண்டோ –
———-
பொற்றை உற்ற முற்றல் யானை போர் எதிர்ந்து வந்த்தைப்
பற்றி உற்று மற்று அதன் மருப்பு ஒசித்த பாகன் ஊர்,
சிற்றெயிற்று முற்றல் மூங்கில் மூன்று தண்டர் ஒன்றினர்,
அற்ற பற்றர், சுற்றி வாழும் அந்தண் நிர் அரங்கமே.–52-
கற்பாறையிலே வர்த்திக்கையாலே திண்ணிதான ஆனை-மனுஷ்ய சஞ்சாரம் இன்றிக்கே மரங்களால் நெருங்கின காட்டிலே வர்த்திக்கையாலே மநுஷ்யரைக் கண்டு கண் கலங்கி வர்த்திக்கிற ஆனை என்றுமாம் –ரஜகனைப் போல் அன்றியே யுத்தத்தில் எதிர்த்து வந்ததை-மதியாதே சென்று பற்று -நாலு காலுக்கும் உள்ளான அதன் உடலிலே புக்கு நுழைந்து-அதுக்கு மேலே அதின் ஹிம்ச பரிகரமான கொம்பை அநாயேசேந முறித்த பாகன்
வர்த்திக்கிற தேசம் –அதின் அளவு அறிந்து -இடம் கொள்ளுமா போலே இடம் கொண்டு அத்தை அழித்த-படியாலே சொல்லுகிறது-இத்தால் க்ருஷ்ணாவதாரத்தில் பிற்பாடர் ஆனார்க்கு -பெருமாள் ஸ்வ அநுபவ விரோதி வர்க்கத்தை குவலயாபீடத்தை அழித்தால் போலே -அழியச் செய்யுமவர் என்கை –ஸ்ரீ வசுதேவரும் தேவகிப் பிராட்டியாரும் ஸ்ரீ மதுரையில் பெண்களும் ரங்க மத்யத்திலே க்ருஷ்ணனைக் காண ஆசைப்பட்டு இருக்க-வாசலிலே இடைச் சுவராய் இறே குவலயாபீடம் நின்றது – சக்ய பஸ்யதே -வஸூ தேவோ பூத் ப்ராதுர ஸீஜ்ஜ நார்த்தந -என்னக் கடவது இறே-சிறுகின கண்களை உடைத்தாய் -திண்ணியதான மூங்கில் தண்டு மூன்று தரித்த – சந்ன்யாசிகள் –மூங்கில் மூன்று -தண்டர் -என்கிற இத்தால் -கீழ் உள்ள ஆஸ்ரம த்ரயத்தையும் வ்யாவர்த்திக்கிறது –
சிற்று எயிற்று முற்றல் -என்ற இத்தால் – ஏகேந ப்ரஹ்ம தண்டேந சர்வாஸ் த்ராணி ஹதா நிமே -என்கிற ந்யாயத்தால் எதிர்த்த விரோதி வர்க்கத்தை தானே யழிய செய்யவற்றாய் -தனக்கு அழிவு அன்றிக்கே இருக்கும் என்னும் அத்தை நினைக்கிறார் –பகவத் விஷயத்தில் ஏகாந்த ஹ்ர்தயர் ஆனவர்கள் என்னுதல்-தேசாந்தரங்களை விட்டு இத் தேசமே ப்ராப்யம் என்று வந்து சேர்ந்தவர்கள் –என்னுதல்-புருஷார்த்தாந்தரங்களிலும் சாதநாந்தரங்களிலும் பற்று அற்று பெரிய பெருமாளே ப்ராப்யமும் ப்ராபகமும் என்று இருக்குமவர்கள்-த்ரிதண்ட தாரிகளாய் பகவத் விஷயத்தில் ஏகாந்த ஹ்ர்தயராய்
பகவத் வ்யதிர்க்தங்களை த்ரணமாக புத்தி பண்ணும் சந்நியாசிகள் என்றுமாம்-சர்வ அவஸ்தையிலும் விடாதே கோயில் வாசமே வாழ்வாக இருக்குமவர்கள்
என்னுதல் -தேச ஸம்ர்த்தியை மநோரதித்து அதுவே போக்யமாக நினைத்து இருக்குமவர்கள் என்னுதல் –சுற்றல்-எண்ணல்-அம் தண் நீர் அரங்கமே –– தர்சநீயமாய் ஸ்ரமஹரமான ஜல ஸம்ர்த்தியை வுடைய கோயில் –
யான் ஒட்டி என்னுள் இருத்துவன் என்றிலன் தான் ஒட்டி வந்து என் தனி நெஞ்சை வஞ்சித்து
ஊனொட்டி நின்று என்னுயிரில் கலந்து இயல் வானொட்டுமோ இனி என்னை நெகிழ்க்கவே–1-7-7–
வஞ்சித்து
தன்னுடைய சீலாதி குணங்களாலும் வடிவு அழகாலும் என்னை அறியாமே அகப்படுத்தி
நீள்கடல் சூழ் இலங்கையில்
அரக்கர் குடிக்கு நஞ்சாகக்கொடுபோந்து
வம்புலாமகடிகாவில்சிறையா வைக்க
அயோத்தியர் கோன் மாயமான்மாயச்செற்று
அலைமலிவேற் கண்ணாளை அகன்று தளர்வைய்தி
சடாயுவை வைகுந்தத்து எற்றிக்
கங்குலும்பகலும்கண்துயில் இன்றிக்
கானகப்படி உலாவி உலாவிக்
கணை ஒன்றினால்கவந்தனை மடித்துச்
சவரி தந்த கனி உவந்து,
நீள்கடல் சூழிலங் கைக் கோன்
தோள்கள் தலை துணி செய்தான்
தாள்கள் தலையில் வணங்கி
நாள்கள் தலைக் கழிமினே.-1-6-7-
‘பரந்த கடலை அகழியாக வுடைத்தாய், அது தானும் மிகையாம் படியான அரண்களை யுடைத்தாய் இருந்துள்ள இலங்கைக்குத் தலைவன் அல்லனோ?’ என்னும் கெட்ட அகங்காரத்தாலே ‘சக்கரவர்த்தி திருமகன்’ என்று மதியாமல் எதிரிட்ட பையலுடைய.
அரக்கர் குடிக்கு நஞ்சாகக் கொடு போந்து
எஞ்சலில் இலங்கைக்கு இறை எங்கோன் தன்னை முன் பணிந்து எங்கள் கண் முகப்பே
நஞ்சு தான் அரக்கர் குடிக்கு என்று நங்கையை அவன் தம்பியே சொன்னான்
விஞ்சி வானவர் வேண்டிற்றே பட்டோம் வேரிவார் பொழில் மா மயிலன்ன
அஞ்சலோதியைக் கொண்டு நடமின் அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ –10-2-4-
கல்யாண குணங்களால் பூரணையாய் இருக்கிற இவளை ராஷச குலத்துக்கு நஞ்சு கிடாய் -என்று ஸ்ரீ விபீஷண ஆழ்வான் சொன்னான் –
வம்புலா கடிகாவில் சிறையா வைக்க
செம்பொன் நீண் முடி எங்கள் ராவணன் சீதை என்பதோர் தெய்வம் கொணர்ந்து
வம்புலாம் கடிகாவில் சிறையா வைத்ததே குற்றமாயிற்றுக் காணீர்
கும்பனொடு நிகும்பனும் பட்டான் கூற்றம் மானிடமாய் வந்து தோன்றி
அம்பினால் எம்மைக் கொன்றிடுகின்றது அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ—-10-2-5-
புதுமை மாறாதே இருப்பதாய் பரிமளத்தை உடைத்தான அசோக வநிகையிலே
பெருமாளுக்கும் அவளுக்கும் ஏகாந்தமாக அனுபவிக்கலாம் தேசத்திலே (பஞ்சவடியிலே )அவர் பக்கலில் நின்றும் பிரித்து அவளைத் தனிய வைத்த இது குற்றமாய்
அயோத்தியர் கோன் மாயமான் மாயச் செற்ற
மைத் தகு மா மலர்க் குழலாய் வைதேவீ விண்ணப்பம்
ஒத்த புகழ் வானரக் கோன் உடன் இருந்து நினைத் தேட
அத் தகு சீர் அயோத்தியர் கோன் அடையாளம் இவை மொழிந்தான்
இத் தகையால் அடையாளம் ஈது அவன் கை மோதிரமே–3-10-8-
தேவரீரைப் பிரிந்த பின்பு -ஊணும் உறக்கமும் அற்றும்-கடித்ததும் ஊர்ந்ததும் அறியாதே –
ஏதேனும் ஒரு போக்கிய பதார்த்தத்தைக் கண்டால்-தேவரீரை நினைந்து ஈடுபட நின்றுள்ள அந் நிலைக்குத் தகுதியான பிரணயித்வ குணத்தை யுடையவராய்-ஸ்ரீ பரதாழ்வான்-அடி சூடும் அரசாய்த் திருவடி நிலை கொண்டு போகையாலே-திரு அயோத்யையில் உள்ளார்க்குத் தாமே ராஜாவான பெருமாள் விண்ணப்பம் செய்த அடையாளங்கள் எல்லாம்
அடியேனுக்குத் தம்முடைய திருப் பவளத்தாலே அருளிச் செய்தார் –
மாயமான் மாயச் செற்று மருது இற நடந்து வையம்
தாய மா பரவை பொங்கத் தட வரை திரித்து வானோர்க்கு
ஈயுமால் எம்பிரானார்க்கு என்னுடைச் சொற்கள் என்னும்
தூய மா மாலை கொண்டு சூட்டுவன் தொண்டனேனே -16-
பொல்லா ராவணன் -என்றதுக்கு அடியான ஜந்து விசேஷம் இறே –முன்பு போலே தொற்றம்பாக விடாதே பிணத்தையும் மாய்த்து – பிணமும் காணாதபடி -நசிப்பித்து –அடல் சேர் இணை மருது இற்று வீழ நடை கற்றவன் -இறே –தளர் நடை இடுகிற போதே –
ஒன்னார்-ஒண்ணார்-தளர அடி இட்ட படி –
இலை மலி பள்ளி யெய்தி யிது மாயம் யென்ன இன மாய மான் பின் எழில் சேர்
அலை மலி வேற் கணாளை அகல்விப்பதற்கு ஓருருவாய மானை யமையா
கொலை மலி வெய்துவித்த கொடியோன் இலங்கை பொடியாக வென்றி யமருள்
சிலை மலி செஞ்சரங்கள் செல வுய்த்த நங்கள் திருமால் நமக்கோர் அரணே –11-4-7-
பர்ண சாலையிலே இருந்தும் இது ஒரு ஆச்சர்யம் இருந்த படி என் -என்னும்படியாக
இனத்தின் மான்களோடு கூடி வரில் அவை வெருவும் யென்று அவற்றின் பின்னே -ஆஸ்ரமத்வார மாகம்ய -இத்யாதி –எழிலை உடையாளாய் இலக்கானாரை அழித்து பிணிப்புண்ணப் பண்ண வற்றாய்-ஓர் ஆளும் ஓர் நோக்கும் நேராம் படி இருக்கிற பிராட்டியை பிரிக்கைக்கு ஈடாய் இருப்பதொரு வடிவைக் கொண்டு வந்த மாயா மிருகத்தை நிரசித்து
தன மருவு வைதேகி பிரியல் உற்று
தளர்வெய்தி சடாயுவை வைகுந்தத்து ஏற்றி
வன மருவு கவி அரசன் காதல் கொண்டு
வாலியை கொன்று இலங்கை நகர் அரக்கர் கோமான்
சினம் அடங்க மாருதியால் சுடுவித்தானை
தில்லை நகர் திரு சித்ர கூடம் தன்னுள்
இனிது அமர்ந்த வம்மானை ராமன் தன்னை
ஏத்துவார் இணை அடியே யேத்தினேனே –10-6–
திரு முலைத் தடத்தின் அழகாலும் -ஆபிஜாத்யத்தாலும் -பிரியத் தகாத ஸ்ரீ பிராட்டி பிரிவாலே – ஸ்ரீ பெருமாள் தம்மளவிலே நோவு பட்டு ஸ்ரீ பிராட்டிக்காக ராவணனோடு யுத்தம் பண்ணி -பிராணனை விட்ட ஸ்ரீ பெரிய உடையாரை ஸ்ரீ பரம பதத்து ஏறப் போக விட்டு –தனமருவு வைதேகி -என்று விஷ்ணோ ஸ்ரீ -என்கிறபடியே ஸ்ரீ பெருமாளுக்குத் தனமான ஸ்ரீ பிராட்டி என்றுமாம் –
திரு முலைத் தடத்தின் அழகாலும் -ஆபிஜாத்யத்தாலும் -பிரியத் தகாத ஸ்ரீ பிராட்டி பிரிவாலே – ஸ்ரீ பெருமாள் தம்மளவிலே நோவு பட்டு ஸ்ரீ பிராட்டிக்காக ராவணனோடு யுத்தம் பண்ணி -பிராணனை விட்ட ஸ்ரீ பெரிய உடையாரை ஸ்ரீ பரம பதத்து ஏறப் போக விட்டு – தனமருவு வைதேகி -என்று விஷ்ணோ ஸ்ரீ -என்கிறபடியே ஸ்ரீ பெருமாளுக்குத் தனமான ஸ்ரீ பிராட்டி என்றுமாம் –
கங்குலும் பகலும் கண் துயில் இன்றிக்
கானகப்படி உலாவி உலாவிக்
கங்குலும் பகலும் கண்துயில் அறியாள்
கண்ண நீர் கைகளால் இறைக்கும்;
‘சங்கு சக்கரங்கள்’ என்று கை கூப்பும்;
‘தாமரைக் கண்’ என்றே தளரும்;
‘எங்ஙனே தரிக்கேன் உன்னை விட்டு!’ என்னும்;
இரு நிலம் கைதுழா இருக்கும்;
செங்கயல்பாய் நீர்த் திருவரங்கத்தாய்!
இவள் திறந்து என் செய்கின்றாயே?–7-2-1-
இவளை எப்போது கண் துயிலப் பண்ண இருக்கிறீர்?-விரஹிணிகளுக்கு ஓடுகிற வியசனம் மாற்றுகைக்காக ‘இரவு, பகல்’ என்று ஒரு வரம்பு கட்டின இத்தனை அன்றோ?
அது இவளுக்குக் காரியமாகிறது இல்லை; இரவில் விஷய லாபத்தாலே போது போக்கவும்,
பகலில் இந்திரியங்களானவை வேறு விஷயங்களிலே கொடுபுக்கு மூட்டி, ‘அப்போது ஆயிற்று, இப்போது ஆயிற்று’ என்று காலத்தைக் கழிப்பதற்கு உடலாயிருக்கவும் ஆமன்றோ?-எங்ஙனே தரிக்கேன் உன்னை விட்டு!’ என்று சொல்லுகையாகலே,
இவளுக்கு அங்ஙன் ஒன்று சொல்லித் தரிக்க ஒண்ணாதே.-ஆகையாலே, தனக்கு ஆறியிருத்தற்குக் காரணமாகச் செய்து வைத்த இரவு பகல் என்ற வேறுபாடும் அறிகின்றிலள்.-பகலும் இரவோடு ஒக்க உறங்கக் கண்டது அன்றோ? ‘யாங்ஙனம்?’ எனின்,
‘யௌவனம் குடி புகுந்தால் இரவில் நாயகனுக்கு அலை கொடுக்கையாலே உறக்கம் இல்லை; அந்த இழவுக்கும் எற்றி உறங்குவது பகல் அன்றோ! அதுவும் பெறுகிறது இல்லை’ என்றபடி.-பெருமாள் எப்பொழுதும் உறக்கம் இல்லாதவராய் இருக்கிறார்,
’‘அநித்ர: ஸததம் ராம:’ என்பது, ஸ்ரீராமா. சுந். 36:44. என்கிறபடியே,
இவளையும் தன் படி ஆக்கினான். என்றது, மேலான ஒப்புமையை அடைகிறான்’
‘பரமம் ஸாம்யம் உபைதி’ என்பது, முண்டகோபநிடதம்.-என்கிறபடியே, தம்மோடு ஒத்தபடியைக் கொடுத்தபடி.-கலவியில் அவன் உறங்க ஒட்டான்; பிரிவில் விரஹ நோய் உறங்க ஒட்டாது; ஆகையாலே, இவளுக்கு இரண்டு படியாலும் உறக்கம் இல்லாமையாலே
‘கண் துயில் கொள்ளாள்’ என்னாமல், ‘கண் துயில் அறியாள்’ என்கிறாள்.
கானகப்படி உலாவி உலாவிக்
கணை ஒன்றினால் கவந்தனை மடித்துச்
சவரி தந்த கனி உவந்து,
கறை வளர் வேல் கரன் முதலாகக் கவந்தன் வாலி கணை யொன்றினால் மடிய இலங்கை தன்னுள்
பிறை எயிற்று வாள் அரக்கர் சேனை எல்லாம் பெருந்தகையோடு உடன் துணித்த பெம்மான் தன்னை
மறை வளரப் புகழ் வளர மாடந்தோரும் மண்டபம் ஒண் தொளி யனைத்தும் வாரமோத
சிறை யணைந்த பொழில் அணைந்த தென்றல் வீசும் திருக் கோவலூர் அதனுள் கண்டேன் நானே-2-10-5-
பர ஹிம்சையில் த்வரையாலும் எப்போதும் ஒக்க சத்ரு நிரசனம் பண்ணுகையாலும்
கறை கழுவுகைக்கு அவகாசம் இன்றிக்கே இருக்கையாலே மிக்க கறையை உடைத்தாய் இருக்கிற வேலை உடைய கரன் துடக்கமாக கபந்தன் வாலி -என்கிற இவர்கள் –
கரன் விராதன் இவர்கள் வந்து தோற்றுகிற போது சிம்ஹங்கள் புலிகள் இவற்றை சூலத்திலே கோத்துக் கொண்டு வந்து இறே தோற்றுவது –கைக்கு எட்டிற்று ஓர் அம்பாலே முடித்தான் இறே தலைக் காவல்( -முதலாளிகள்-) இருந்தவர்கள் பட்டது இது-
சவரி தந்த கனி உவந்து,
————
ஸ்ரீ கிஷ்கிந்தா காண்டம்
வன மருவு கவி அரசன் தன்னோடு காதல் கொண்டு–
தன மருவு வைதேகி பிரியல் உற்று
தளர்வெய்தி சடாயுவை வைகுந்தத்து ஏற்றி
வன மருவு கவி அரசன் காதல் கொண்டு
வாலியை கொன்று இலங்கை நகர் அரக்கர் கோமான்
சினம் அடங்க மாருதியால் சுடுவித்தானை
தில்லை நகர் திரு சித்ர கூடம் தன்னுள்
இனிது அமர்ந்த வம்மானை ராமன் தன்னை
ஏத்துவார் இணை அடியே யேத்தினேனே –(பெருமாள் 10-6)
வாலிக்கு அஞ்சி காட்டிலே மறைந்து கிடக்கிற குரங்குகளுக்கு ராஜாவான ஸ்ரீ ஸூக்ரீவனை
சிநேக பூர்வகமாகக் கட்சி கொண்டு –அதற்காக அதிபல பராக்ரமான வாலியை நிரசித்து-
மராமரங்கள் ஏழும் எய்து
எய்தான் மராமரம் ஏழும் இராமனாய்
எய்தான் அம்மான் மறிய ஏந்திழைக்காய் -எய்ததுவும்
தென்னிலங்கைக் கோன் வீழச் சென்று குறளுருவாய்
முன்னிலம் கைக் கொண்டான் முயன்று —மூன்றாம் திருவந்தாதி—-52-
இராமனாய் ஆஸ்ரிதர்க்காக மராமரம் ஏழையும் எய்தான் –மான் குட்டி என்று பாராதே பிராட்டி சொன்னாள் என்று எய்தான் -(நின் அன்பின் வழி நின்றே -பெரியாழ்வார் )
பிரான் பெரு நிலம் கீண்டவன் பின்னும் விராய் மலர்த்துழாய் வேய்ந்த முடியன்
மராமரம் எய்த மாயவன் என்னுள் இரான் எனில் பின்னை யான் ஒட்டுவேனோ –1-7-6-
மஹாராஜர், வாலி மிடுக்கையும் பெருமாள் மென்மையையும் நினைத்து,
‘நீர் வாலியைக் கொல்ல மாட்டீர்’ என்ன, ‘நான் வல்லேன்’ என்று
மழுவேந்திக் கொடுத்துக் காரியஞ்செய்யும் அன்புடையவன்.
இது-ஆஸ்ரிதர் – அடியார் விஷயமாகச் செய்த உபகாரம்.-என்னுடைய கர்ம பாரதந்திரியம் போலே, அவனுடைய ஆஸ்ரித பாரதந்திரியத்துக்கும் ஏதேனும் கண்ணழிவு உண்டோ?
ஆதலால், என்னுடைய இசைவு இன்றிக்கே இருக்க, அவனாலே போகப் போமோ?’ என்பதாம்.
உருத்து ஏழு வாலி மார்பில் ஒரு கணை உருவ ஓட்டி–கருத்துடைத் தம்பிக்கு இன்பக் கதிர் முடி அரசு அளித்து-
உருத்தெழு வாலி மார்வில் ஒரு கணை யுருவ வோட்டிக்
கருத்துடைத் தம்பிக்கு இன்பக் கதிர் முடி யரசளித்தாய்
பருத்தெழு பலவும் மாவும் பழம் விழுந்து ஒழுகு நாங்கைக்
கருத்தனே காவளந் தண் பாடியாய் களை கண் நீயே –4-6-3-
எழு உருத்து வாலி -வ்ருத்தி அடையா நின்ற கோபத்தை உடையனான வாலி-உருவென்று சீற்றம்-வெஞ்சினத்த வேழ வெண் மருப்பு ஒசித்து உருத்த மா கஞ்சனைக் கடந்து -திருச்சந்த -என்றது இறே-மிக்க சீற்றத்தை உடையனாய்-அகாலத்திலே வந்து அறை கூறுகிறவன் தான் யார் -என்று பெரிய கிளர்த்தியோடே வந்து தோற்றின
(அங்கே நாமி பலம் இங்கே நாம பலம் திருமாலை வியாக்யானத்தில் )-விட்டார் விட்ட அம்புகள் அடங்கலும் வாய் மடிந்து போம் இத்தனையாய்-தனக்கு ஓர் அழிவு இல்லாதபடி இருக்கிற வாலியுடைய திண்ணிய மார்விலே- ஏகேந மகேஷூணா-என்கிறபடியே கைக்கு எட்டிற்று ஓர் அம்பை வாங்கி மறுபாட உருவும்படி நடத்தி ஒசழக்காக -அஸ்ரத்தையாக-விட்ட அம்பு தானே மறுபாடு உருவம்படி நடத்தி (ஏழு பெயர் உள்ள மலைகள் கடல்கள் பாதாள லோகங்கள் நடுங்கும் படி )வாலி செலுத்திப் போந்த ராஜ்யத்தை அப்படி நடத்துகைக்கு ஈடான கருத்தை உடையவன் -என்னுதல்-வாலி பேர் கேட்க வனம் அடைந்து கிடந்த சுக்ரீவன் தன்னையே (ஆளாக்கி ஜெயிப்பித்தாய் ) (இதே போலவே அர்ஜுனனுக்கு உதவினவன் )-ந காங்ஷே விஜயம் கிருஷ்ண -என்னச் செய்தே இறே-பின்னையும் அவர்களை ஜெயிப்பித்தது உனது திரு உள்ளம் படியே உன் திரு உள்ளம் உடைய மகா ராஜர்க்கு என்றுமாம்-ஸூக்ரீவம் ஏவ -தத் ராஜ்யே – சிம்ஹம் நின்ற முழைஞ்சிலே மான் பேடையை கொடு புக்கு நிறுத்தினால் போலே யாய்த்து-ராகவ –-அளவுடையார் அளவில்லாதார் என்று ஒரு வாசி இன்றிக்கே ஆரேனுமாக தாங்கள் கொடுத்தாரது ராஜ்ஜியம் ஆம்படி மதிப்புடைய குடியில் பிறந்தவர்-ஸ்ரீ மதா ராஜ ராஜேன லங்காயாம் அபிஷேசித-என்றார்கள் இறே
அவன் தன் பரிகரமான சுக சாரணர் தாங்களே-ஸ்ரீ மதா-உனக்கு முடி தந்த ப்ரஹ்மாதிகள் உடைய ஐஸ்வர்யம் போல் அன்றிக்கே ஊற்று மாறாத சம்பத்து உடையவன் ஆகையாலே காண் அவன் முடி பெற்றது-ராஜ ராஜேன-உனக்கு முடி தந்தவர்களுக்கு முடி கொடுக்கப் பிறந்தவன் ஆகையாலே காண் –லங்காயாம் அபிஷேசித – இனி உனக்கு ஒரு குடி இருப்பு தேடிக் கொள்ளாய்-அவன் பரிகரமாய் இருந்து வைத்து அவன் மிடுக்கையும் ஐஸ்வர்யத்தையும் காணா நிற்கச் செய்தே இப்படி சொல்லுகைக்கு அடி அவர் கையும் வில்லும் கண்டு போந்த நாள் அணுமையாலே இக் கொசுகு நம்மை என் செய்யப் புகா நின்றதோ -என்று இவன் மதிப்பற நினைத்து இருந்த படியாலே-இன்பத்தை விளைப்பதாய்
ஆனந்தாவஹமாய் மதிப்புடைத்தான முடியையும் அதுக்கு விஷயமான ராஜ்யத்தையும் கொடுத்து அருளினாய்-
வானரக் கோன் உடன் இருந்து வைதேகி தனைத் தேட
மைத் தகு மா மலர்க் குழலாய் வைதேவீ விண்ணப்பம்
ஒத்த புகழ் வானரக் கோன் உடன் இருந்து நினைத் தேட
அத் தகு சீர் அயோத்தியர் கோன் அடையாளம் இவை மொழிந்தான்
இத் தகையால் அடையாளம் ஈது அவன் கை மோதிரமே–3-10-8-
வைதேவீ-தேஹத்தை உபேஷித்து இருக்கிற படியைக் கொண்டு சொல்கிறான் –
காண்பதுக்கு முன்னே –ஸூக்ரீவம் நாதம் இச்சதி -ஸூக்ரீவம் சரணம் கத -என்று
இளையபெருமாள் அருளிச் செய்யும் படி-தானே பஹு மானம் பண்ணிக் கொண்டு வந்து கண்ட பின்பு அக்னி சாஷிகமாக ஸஹ்யம் பண்ணி-த்வம் வயஸ்யோசி ஹ்ருத்யோ மேஹ் யேகம் துக்கம் ஸூகஞ்சநவ் -என்று இளைய பெருமாள் அருளிச் செய்த பின்பு
பெருமாளோடு சோக ஹர்ஷங்கள் ஒத்துப் போந்தவர் என்னும் புகழை யுடையராய்
வாநராதி பதி என்றது சாபிப் ராயம் —அதாவது தேவரீரைத் தேடுகைக்காக –யாம் கபீ நாம் சஹஸ்ராணி -என்கிறபடியே – திக்குகள் தோறும் திரள் திரளாகப் போக விடத் தக்க வானர சேனையை யுடையவர் என்கை-மால்யவானிலும் கிஷ்கிந்தையிலுமாகப் பிரிந்து இருந்து போய் பெருமாளுடன் கூடி இருந்து தேவரீரைத் தேடுகைக்காக சர்வ திக்குகளிலும் ஆள் விடுகிற அளவிலே – விசேஷேண து ஸூக்ரீவோ ஹநூமத்த்யர்த்தம் உக்தவான் -என்கிறபடியே எல்லாரையும் போல் அன்றிக்கே விசேஷித்து என்னை அபிமானித்து –
இவன் இக்காரியத்துக்கு சமர்த்தன் -என்று மஹா ராஜர் திரு உள்ளம் பற்றின அநந்தரம்
விடுத்த திசைக் கருமம் திருத்திக்
உடுத்துக் களைந்த நின் பீதகவாடை உடுத்துக் கலத்ததுண்டு
தொடுத்த துழாய் முடி சூடிக் களைந்தன சூடும் இத் தொண்டர்களோம்
விடுத்த திசைக் கருமம் திருத்தித் திருவோணத் திரு விழவில்
படுத்த பைந்நாகணைப் பள்ளி கொண்டானுக்கு பல்லாண்டு கூறுதுமே –9
ஸ்வாமி சந்தேச காரிகளாய் கொண்டு -இப்படி தேக யாத்ரை நடத்துமவர்கள் இறே நாங்கள்-க்ரியதாம் -என்கிற சந்தேசமே தாரகமாக ஏவின கார்யத்தை செய்து தலைக் கட்டுகை –
ஸ்வாமி ஏவின கார்யத்தை குறையச் செய்யுமவன் அதமன் –
அத்தை குறையாமல் செய்து தலைக் கட்டுமவன் மத்யமன் –
அதுக்கு மேலே அதுக்கு அவிருத்தமான கார்யங்களையும் விசாரித்து செய்து தலைக் கட்டுமவன் உத்தமன் –
கார்யே கர்மணி நிர்த்ஷ்டேயோப ஹூந்ய பிசாதயேத்
பூர்வ கார்யா விரோதே ந ஸ கார்யம் கர்த்துமர்ஹதி -என்கிற திருவடி இறே அவன் ஆகிறான்
பிராட்டி இருந்த இடம் அறிந்து வா -என்று விட –
இருந்த இடமும் அறிந்து -அவன் பலம் இருந்தபடி என் -என்று பெருமாள் கேட்டருளினால்
அறிந்திலேன் என்ன ஒண்ணாது -என்று அத்தலையிலே பல பரிஷையும் பண்ணி
ஊரில் அரணையும் தலை அழித்து -மூலையடியே போம் படி பண்ணி வந்தான் இறே
திறல் விளங்கு மாருதியும்
தில்லை நகர் திரு சித்ர கூடம் தன்னுள்
திறல் விளங்கு மாருதியோடு அமர்ந்தான் தன்னை
எல்லையில் சீர் தயரதன் தான் மகனாய் தோன்றிற்று
அது முதலா தன் உலகம் புக்கது
கொல் இயலும் படை தானை கொற்ற ஒள் வாள்
கோழியூர் கோன் குடை குலசேகரன் சொல் செய்த
நல் இயல் இன் தமிழ் மாலை பத்தும் வல்லார்
நலம் திகழ் நாரணன் அடி கீழ் நண்னுவாரே–10-11–
பாவோ நான்யத்ர கச்சதி -என்று அங்குப் போகேன் என்ற ஸ்ரீ திருவடியை விட மாட்டாமே இங்கே வந்து நித்ய வாஸம் பண்ணுகிறவனை-பஹூ குணனான ஸ்ரீ சக்கரவர்த்திக்கு -பிதரம் ரோசயாமாச – என்று பிள்ளையாய் பிறந்தது தொடக்கமாக ஸ்ரீ பரமபதம் புக்கது முடிவாக யுண்டான ஸ்ரீ இராமாயண கதையை-கொலையை முயலா நின்றுள்ள வேலையை யுடையராய் –வெற்றியையும் அழகையும் உடைய வாளையும் உடைய கோழியர்க்குக் கோன்-கோழி -ஸ்ரீ உறையூர் -சோழ ராஜாவானவன் – வெண் கொற்றக் குடையை உடையரான ஸ்ரீ குலசேகரப் பெருமாள் அருளிச் செய்த அழகிய இயலை உடைய தமிழ் மாலை பத்தும் வல்லார் –ஸ்ரீ பரமபதத்திலே விளங்கா நின்றுள்ள ஸ்ரீ சர்வேஸ்வரன் திருவடிகளைக் கிட்டப் பெறுவார் –
மாயோன் தூது உரைத்தல் செய்ய
செங்கமலத் திருமகளும் புவியும் செம் பொன் திருவடியின் இணை வருட முனிவர் ஏத்த
வங்கமலி தடம் கடலுள் அநந்தன் என்னும் வரி அரவின் அணைத் துயின்ற மாயோன் காண்மின்
எங்கும் மலி நிறை புகழ் நால் வேதம் ஐந்து வேள்விகளும் கேள்விகளும் இயன்ற தன்மை
அங்கமலத் தயன் அனையார் பயிலும் செல்வத் தணி யழுந்தூர் நின்றுகந்த வமரர் கோவே –7-8-1-
ஆஸ்ரிதர் உடைய சர்வ அபராதங்களையும் பொறுப்பிக்கும் பெரிய பிராட்டியாரும் –அப் பொறைக்கு உவாத்தான ஸ்ரீ பூமிப் பிராட்டியாரும் –ஸ்ப்ருஹணீயமாய்
ஒன்றுக்கு ஓன்று ஒப்பான திருவடிகளை வருட –சனகாதிகள் நின்று ஸ்துதிக்க –மரக் கலங்களால் மிக்கு இருக்கிற பெரிய கடலுள்-திரு வநந்த வாழ்வான் என்று பிரசித்தனாய் இருக்கிறவன் மேலே –சர்வேஸ்வரனையும்-அநந்தன் -என்னக் கடவது இறே-த்ரிவித பரிச்சேத ராஹித்யத்தாலே –அநந்தன் தன்னையும் விளாக்குலை கொள்ள வல்லனாய் இருக்கையாலே அநந்தன் -என்று பிரசித்தியை உடையனான –குன்றிச் சூடு-(மயில் தோகைக் கற்று ) போலே சர்வேஸ்வரனுக்கு வைத்த கண் மாறாதே கண்டு கொண்டே இருக்க வேண்டும் படி தர்ச நீயமான வரிகளை உடையனாய் சைத்ய சௌரப்யாதிகளை பிரக்ருதியாக உடைய திரு வநந்த வாழ்வான் மேலே கண் வளர்ந்து அருளின சர்வேஸ்வரன் கிடீர் கோள் இங்கு வந்து நிற்கிறவன் –
தூது உரைத்தல் செய்ய–
தூதுரைத்தல் செப்புமின்கள்-தூ மொழி வாய் வண்டினங்காள்
போதிரைத்து மது நுகரும்-பொழில் மூழிக் களத்து உறையும்
மாதரைத் தம் மார்பகத்தே-வைத்தார்க்கு என் வாய் மாற்றம்
தூதுரைத்தல் செப்புதிரேல்-சுடர் வளையும் கலையுமே–9-7-6-
என் தூது வார்த்தையை அறிவிக்க அமையும் –கொண்டு வர வேண்டா -இனிய பேச்சை உடைய வண்டுகாள் –அவன் விரும்பானாகிலும் உங்கள் பேச்சு இனிமையாலே-வர வேண்டும்படி அன்றோ பேச்சு இருப்பது ––என் வார்த்தையான தூது வார்த்தையைச் சொல்லப் பார்த்தீர் கோள் ஆகில் என்னுடைய அழகிய வளையும் கலையும் சீர்கேடு-அடைந்தபடியைச் சொல்லும் கோள்-அன்றிக்கே-செப்புதிரே யாகில் -அது தானே எனக்கு சுடர் வளையும் கலையும் ஆம் -என்னுதல் அறிவிக்கும் அதுவே குறை-அவன் வரவு தப்பாது –
செய்ய–
பெய்யு மா முகில் போல் வண்ணா உன்தன் பேச்சும் செய்கையும் எங்களை
மையல் ஏற்றி மயக்க உன்முகம் மாய மந்திரம் தான் கொலோ
நொய்யர் பிள்ளைகள் என்பதற்கு உன்னை நோவ நாங்கள் உரைக்கிலோம்
செய்ய தாமரைக் கண்ணினாய் எங்கள் சிற்றில் வந்து சிதையேலே–2-4-
கண்ணாலே எங்கள் அபிசந்தியைக் குலையாதே கொள் – அபிசந்தி -அந்ய பரதை காலாலே எங்கள் சிற்றிலை அழியாதே கொள் -என்கிறார்கள்
———-
ஸ்ரீ சுந்தர காண்டம்
சீராரும் திறல் அனுமன்
வாராரும் முலை மடவாள் வைதேவி தனைக் கண்டு
சீராரும் திறல் அனுமன் தெரிந்து உரைத்த அடையாளம்
பாராரும் புகழ்ப் புதுவைப் பட்டர் பிரான் பாடல் வல்லார்
ஏராரும் வைகுந்தத்து இமையவரோடு இருப்பாரே –3-10-10-
வாரொடு சேர்ந்து இருக்கைக்கு யோக்யமாய் இருக்கச் செய்தே – இப்போது வெறும் புறத்தில் இரா நிற்பதாக முலையை யுடையளாய் – விரஹத்தால் வந்த துவட்சியும் யுடையளாய் –தேஹத்திலே உபேக்ஷையாலே விதேஹ புத்ரியானமை தோற்ற இருக்கிற ஸ்ரீ பிராட்டியைக் கண்டு-முதலிகள் எல்லாரும் யுண்டாய் இருக்க – இவனே இக்காரியம் செய்ய வல்லான் -என்று ஸ்ரீ பெருமாள் திரு உள்ளம் பற்றி – அடையாளங்களும் சொல்லி –
திருவாழி மோதிரமும் கொடுத்து விடும்படி ஞானாதி குணங்களால் பரி பூர்ணனாய் –
நினைத்தது முடிக்க வல்ல சக்திமானாய் இருக்கிற ஸ்ரீ திருவடி –பெருமாள் அருளிச் செய்த படிகளில் ஒன்றும் தப்பாமல் ஆராய்ந்து ஸ்ரீ பிராட்டிக்கு விஸ்வசநீயமாக விண்ணப்பம் செய்த அடையாளங்களை –பூமி எங்கும் நிறைந்த புகழை யுடையரான ஸ்ரீ வில்லி புத்தூருக்கு நிர்வாஹகரான ஸ்ரீ பெரியாழ்வார் அருளிச் செய்த பாடலான இவற்றை சாபிப்ராயமாக வல்லவர்கள் எல்லா நன்மைகளும் சேர்ந்த பரம பதத்தில் –
அடியாரோடு இருந்தமை -என்கிறபடியேநிரந்தர பகவத் அனுபவ பரரான ஸ்ரீ நித்ய ஸூரிகளோடு ஒரு கோவையாக இருக்கப் பெறுவர் –
மா கடலைக் கடந்தேறி-
ஓத மா கடலைக் கடந்தேறி யுயர் கொள் மாக் கடிகாவை யிறுத்துக்
காதல் மக்களும் சுற்றமும் கொன்று கடி யிலங்கை மலங்க எரித்துத்
தூது வந்த குரங்குக்கே உங்கள் தோன்றல் தேவியை விட்டுக் கொடாதே
ஆதர் நின்று படுகின்றது அந்தோ அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ–10-2-6-
அலை எறிகிற பெரும் கடலை தன் கவட்டின் கீழே யாம்படி கடந்து அக்கரைப் பட்டு –
மும் மதிள் நீள் –
ஒரு பேர் உந்தி இரு மலர்த் தவிசில் ஒரு முறையானை ஈன்றனை –
ஒரு முறை இரு சுடர் மீதினிலியங்கா மும் மதிளிலங்கை இரு கால் வளைய ஒரு சிலை-திரு எழு கூற்று இருக்கை
கிரி துர்க்க ஜல துர்க்க வன துர்க்க என்கிற மூன்றையும் உடைத்தான நினைத்தாற்கு அஞ்ச வேண்டும்படியான ராஷசர் குளவிக் கூடு சேர்ந்தால் போலே சேர்த்து அம்மணக் கூத்தடிக்கும் தேசம் –ஒரு கால் சந்த்ர ஸூர்யர்களும் கூட மேலே சஞ்சரிக்கவும் அஞ்சும்படியாய் காட்டரண் மலை யரண் நீர் அரண் என்கிற மூன்று வகைப்பட்ட அரணை யுடைத்தாய் இருக்கிற இலங்கையை-
இலங்கை புக்குக்
காரார் கடலை அடைத்திட்டு இலங்கை புக்கு
ஓராதான் பொன் முடி ஒன்பதோடு ஒன்றையும்
நேரா அவன் தம்பிக்கே நீள் அரசு ஈந்த
ஆராவமுதனைப் பாடிப் பற
அயோத்தியர் வேந்தனைப் பாடிப் பற – 3-9- 10-
ஆழத்தின் மிகுதியாலே கருமை மிக்கு இருந்துள்ள கடலை –அகடிதகடநா சாமர்த்தியம் தோற்றும்படி நீரைக் கண்டவாறே -ஆழக் கடவ -அமிழுந்து போகக் கடவ- மலைகளை இட்டு
குரங்குளைக் கொண்டு அடைத்து –லங்காம் ராவண பாலிதாம் -என்கிறபடியே
மண்பாடு தானே (துர்க த்ரயம் )ஒருவருக்கும் பிரவேசிக்க அரியதாய் அதுக்கு மேலே உள்ளு நின்று நோக்குகிறவனுடைய பலத்தையும் உடைத்தாய் ஆகையாலே – துஷ் ப்ராபகமாய் இருக்கிற இலங்கையில் – எழுபது வெள்ளம் வானர சேனையையும் கொண்டு – சென்று புக்கு –
கடிகாவில்
செம்பொன் நீண் முடி எங்கள் ராவணன் சீதை என்பதோர் தெய்வம் கொணர்ந்து
வம்புலாம் கடிகாவில் சிறையா வைத்ததே குற்றமாயிற்றுக் காணீர்
கும்பனொடு நிகும்பனும் பட்டான் கூற்றம் மானிடமாய் வந்து தோன்றி
அம்பினால் எம்மைக் கொன்றிடுகின்றது அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ—-10-2-5-
ஸ்லாக்கியமான-திக் விஜயம் பண்ணிக் கவித்த முடியை உடையனான எங்கள் ராவணன் பிராட்டி என்ற ஒரு தேவதையை கொண்டு வந்து –புதுமை மாறாதே இருப்பதாய்
பரிமளத்தை உடைத்தான அசோக வநிகையிலே பெருமாளுக்கும் அவளுக்கும் ஏகாந்தமாக அனுபவிக்கலாம் தேசத்திலே (பஞ்சவடியிலே )அவர் பக்கலில் நின்றும் பிரித்து அவளைத் தனிய வைத்த இது குற்றமாய்-அதுவே ஹேதுவாக கும்ப நிகும்பர்கள் பட்டார்கள் ராவணன் கையிலே முன்பு தோற்ற ம்ருத்யு வானவன் வந்து ராவணன் தேவர்களை நெருக்கி வரக் கொண்டு மனுஷ்யர்களை அநாதரித்தான்- அத்தாலே அந்த ம்ருத்யு மானுஷ வேஷத்தை பரிஹரித்து தோன்றி அந்த மனிச்சுக்கு ஏகாந்தமான அம்பாலே எங்களை கொல்லுகிற இத்தனை –
வாராரும் முலை மடவாள் வைதேகி தனைக் கண்டு-
வாராரும் முலை மடவாள் வைதேவி தனைக் கண்டு
சீராரும் திறல் அனுமன் தெரிந்து உரைத்த அடையாளம்
பாராரும் புகழ்ப் புதுவைப் பட்டர் பிரான் பாடல் வல்லார்
ஏராரும் வைகுந்தத்து இமையவரோடு இருப்பாரே –3-10-10-
வாரொடு சேர்ந்து இருக்கைக்கு யோக்யமாய் இருக்கச் செய்தே – இப்போது வெறும் புறத்தில் இரா நிற்பதாக முலையை யுடையளாய் – விரஹத்தால் வந்த துவட்சியும் யுடையளாய் –தேஹத்திலே உபேக்ஷையாலே விதேஹ புத்ரியானமை தோற்ற இருக்கிற ஸ்ரீ பிராட்டியைக் கண்டு-முதலிகள் எல்லாரும் யுண்டாய் இருக்க – இவனே இக்காரியம் செய்ய வல்லான் -என்று ஸ்ரீ பெருமாள் திரு உள்ளம் பற்றி – அடையாளங்களும் சொல்லி –
திருவாழி மோதிரமும் கொடுத்து விடும்படி ஞானாதி குணங்களால் பரி பூர்ணனாய் –
நினைத்தது முடிக்க வல்ல சக்திமானாய் இருக்கிற ஸ்ரீ திருவடி –பெருமாள் அருளிச் செய்த படிகளில் ஒன்றும் தப்பாமல் ஆராய்ந்து ஸ்ரீ பிராட்டிக்கு விஸ்வசநீயமாக விண்ணப்பம் செய்த அடையாளங்களை –பூமி எங்கும் நிறைந்த புகழை யுடையரான ஸ்ரீ வில்லி புத்தூருக்கு நிர்வாஹகரான ஸ்ரீ பெரியாழ்வார் அருளிச் செய்த பாடலான இவற்றை சாபிப்ராயமாக வல்லவர்கள் எல்லா நன்மைகளும் சேர்ந்த பரம பதத்தில் –
அடியாரோடு இருந்தமை -என்கிறபடியேநிரந்தர பகவத் அனுபவ பரரான ஸ்ரீ நித்ய ஸூரிகளோடு ஒரு கோவையாக இருக்கப் பெறுவர் –
‘நின் அடியேன் விண்ணப்பம்-
நெறிந்த குழல் மடவாய் நின்னடியேன் விண்ணப்பம்
செறிந்த மணி முடிச் சனகன் சிலையிறுத்து நினைக் கொணர்ந்த
தறிந்து அரசு களை கட்ட வரும் தவத்தோன் இடை விலங்கச்
செறிந்த சிலை கொடு தவத்தைச் சிதைத்ததும் ஓர் அடையாளம் –3-10-1-
நெறித்துக் கருகின குழலையும் -மடப்பத்தையும் -யுடையவளே-கோரை மயிராய் இராதே –
சுருண்டு கடை அளவும் செல்ல இருண்டு இருக்கை இறே குழலுக்கு ஏற்றம் –
இது தான் பூர்வத்தில் படியை இட்டுச் சொல்லுகிற படி –
(நீண்டு சுருண்டு –இத்யாதி சொல்லி ஈண்டு சடையாயினவே -என்றார் அன்றோ பெருமாளுடைய திருக்குழல் )நீல நாகா பயா வேண்யா ஜகனம் கதயை கயா–(ஸூ ந்தர -11-25) -என்னும் படி இறே இப்போது கிடக்கிறது –(நீல-நைல்யம் -சமஸ்க்ருதம் -கருமை என்றவாறு )நாயகரான பெருமாளோடே கூடிச் செவ்வை தோற்றச் செருக்கி இருக்க ப்ராப்த்தையாய் இருக்க – அவரைப் பிரிந்த கிலேசத்தாலே துவண்டு ஒடுங்கி இருக்கிற படியைப் பற்றி -மடவாய் -என்கிறான்-அதவா– மடப்பமாவது -பற்றிற்று விடாமையாய் -இங்கே இருக்கச் செய்தேயும் – அஸ்யா தேவ்யா மநஸ் தஸ்மிந்-(ஸூ ந்தர-15-52 )-என்கிறபடியே பெருமாளையே நினைத்துக் கொண்டு மற்று ஓன்று அறியாமல்
இருக்கிறபடியைச் சொல்லுகிறான் ஆகவுமாம்-தாஸோஹம் கோசலேந்த்ரஸ்ய –என்று பெருமாளுக்கு அடியனான போதே இவளுக்கும் அடியனாகையாலே உனக்கு அடியனான என்னுடைய விண்ணப்பம் என்கிறான் –இத்தால் உனக்கு அடியேனான நான் விண்ணப்பம் செய்கிற வார்த்தையைக் கேட்டு அருள வேணும் என்கை –
கேட்டருளாய்!
பொய் நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும் அழுக்கு உடம்பும்
இந் நின்ற நீர்மை இனி யாம் உறாமை உயிர் அளிப்பான்
எந் நின்ற யோனியுமாய்ப்ப் பிறந்தாய் இமையோர் தலைவா
மெய்ந் நின்று கேட்டருளாய் அடியேன் செய்யும் விண்ணப்பமே –திரு விருத்தம் -1–
எம்பெருமான் பேரா நிற்க போக நின்று கேட்டு அருள வேணும்-என்னுடைய சர்வ துக்கங்களும் போகும்-இவர் உக்தியால் இவர் ஸ்வரூபம் அறியலாம் என்று நின்று கேட்க
அடியேன்-என்றதும் -ஸ்வரூபம் அறிந்தவர்-மெய்ப்பாடு அறியலாம்-இந்த அபேக்ஷைக்கு மேல் வேறே ஒன்றும் இல்லை-என்றுமே இதே வார்த்தை என்றுமே மாறாது விண்ணப்பம் வாசா கைங்கர்யம் கொண்டு அருள வேணும் என்கிறார் –
அல்லியம் பூ மலர்க் கோதாய் அடி பணிந்தேன் விண்ணப்பம்
சொல்லுகேன் கேட்டருளாய் துணை மலர்க் கண் மடமானே
எல்லியம் போது இனிதிருத்தல் இருந்தது ஓர் இட வகையில்
மல்லிகை மா மாலை கொண்டு அங்கு ஆர்த்ததும் ஓர் அடையாளம் –3-10-2-
என்னுடைய ஸ்வரூப அநு ரூபமாக தேவரீர் திருவடிகளில் வணங்கி தலை படைத்த பிரயோஜனம் பெற்றேன்(அடி பணிந்தேன் -காயிக விருத்தி-விண்ணப்பம் -வாசிக விருத்தி )
இனி வாய் படைத்த பிரயோஜனம் பெறும்படி விண்ணப்பம் செய்யத் தக்கது ஓன்று உண்டு என்ன-அது கேட்க்கையில் யுண்டான ஆதரம் தோற்றக் கடாஷித்திக் கொண்டு இருக்கிற-
சொல்லுகேன் கேட்டருளாய்- என்கிறான் –என் பக்கல் வாத்சல்யம் தோன்ற என்னைக் கடாஷித்திக் கொண்டு இருக்கையாலும் – பவ்யதையாலும்-(மடமானே) இணை மலர் போலே இருக்கிற கண்களை யுடையளாய் மடப்பத்தையும் யுடைத்தான மான் போலே இருக்கிறவளே – அந்த விண்ணப்பம் தன்னைச் சொல்லுகிறேன் -கேட்டு அருள வேணும் -என்கை –
வாரணிந்த முலை மடவாய் வைதேவீ விண்ணப்பம்
தேரணிந்த வயோத்தியர் கோன் பெரும் தேவீ கேட்டருளாய்
கூரணிந்த வேல் வலவன் குகனோடும் கங்கை தன்னில்
சீரணிந்த தோழமை கொண்டதும் ஓர் அடையாளம் –3-10-4-
தேர்களால் அலங்க்ருதமான திரு அயோத்யையில் உள்ளவருக்கு நிர்வாஹகரான
பெருமாளுடைய பெருமைக்குத் தகுதியான தேவீ-துல்ய சீல வயோ வ்ருத்தாம் துல்ய அபி ஜன லக்ஷணாம் ராகவோ அர்ஹதி வைதேஹீம் தஞ்சேயம் அஸி தேஷணா-என்னக் கடவது இறே-அல்லது ஒரு சிறு தேவி யுண்டாய் பெரும் தேவி என்கிறது அன்று இறே –
பெருமாள் ஏக தார வ்ரதராகையாலே-நான் விண்ணப்பம் செய்கிற இத்தைக் கேட்டு அருள வேணும்-
அயோத்தி தன்னில் ஓர்,
இடவகையில் எல்லி அம்போது இனிது இருக்க
மல்லிகை மா மாலை கொண்டு அங்கு ஆர்த்ததுவும்;
மேட்டு இள மேதிகள் தளை விடும் ஆயர்கள்
வேயம் குழல் ஓசையும் விடை மணி குரலும்
ஈட்டிய இசை திசை பரந்தன வயலுள்
இரிந்தன சுரும்பினம் இலங்கையர் குலத்தை
வாட்டிய வரி சிலை வானவர் ஏறே
மாமுனி வேள்வியை காத்து அவபிரதம்
ஆட்டிய அடு திறல் அயோத்தி எம் அரசே!
அரங்கத்தம்மா! பள்ளி எழுந்து அருளாயே–4-
மாமுனி வேள்வி யைக் காத்தது, அவபிரதம் ஆட்டுவித்தது ஆகியவற்றைத் திறலின் செயலாகவும் கொள்ளலாம். அல்லது அயோத்திக்கு அரசனின் செயல் என்றும் கூறலாம். “அவரைக் கொண்டே” என்று பெரிய வாச்சான் பிள்ளை அருளியதற்கு ‘பெருமாளைக் கொண்டு’ என்று அரும்பத உரையில் விவரிக்கப்பட்டது. “எம் அரசே” என்றதால் அந்த ராம பிரானைப் போலே ஒரு காலத்தில் அவதாரத்தை முடித்துக் கொண்டு பரம பதத்திற்கு எழுந்தருளாமல், பிற்பட்ட எங்களைப் போன்றவர்களும் அநுபவிக்கலாம் படியாகக் கோயிலிலே பள்ளி கொண்டிருக்கும் இதற்குப் பயன் வேண்டாமோ?
அல்லியம் பூ மலர்க் கோதாய் அடி பணிந்தேன் விண்ணப்பம்
சொல்லுகேன் கேட்டருளாய் துணை மலர்க் கண் மடமானே
எல்லியம் போது இனிதிருத்தல் இருந்தது ஓர் இட வகையில்
மல்லிகை மா மாலை கொண்டு அங்கு ஆர்த்ததும் ஓர் அடையாளம் –3-10-2-
ராத்ரி காலத்தில் பெருமாளும் தேவரீருமாய் ரஸோத்தரமான இருப்பாக இருந்த தொரு ஸ்தலத்திலே-ஸ்லாக்கியமான மல்லிகை மாலையைக் கொண்டு பெருமாளை பந்தி வைத்ததும் ஓர் அடையாளம்-பெருமாளுடைய- பிரணயித்வ-பாரதந்த்ர ப்ரயுக்தமாய் -போக தசையில் நடப்பதொரு ரசமாய்த்து இது ஆகையால் அல்லாத அடையாளங்கள் போல் அன்றிக்கே அத்யந்த ரஹஸ்யமாய் இருப்பது ஓன்று இறே இது தான்-ஸமா த்வாதச தத்ராஹம் ராகவஸ்ய நிவேசநே -புஞ்ஜாநா அமானுஷாந் போகான் சர்வ காம ஸம்ருத்தி நீ -என்று இவள் தானும் பெருமாளும் அறியும் அத்தனை இறே –
கலக்கிய மா மனத்தினளாய் கைகேயி வரம் வேண்ட
மலக்கிய மா மனத்தினனாய் மன்னவனும் மறாதொழியக்
‘குலக்குமரா! காடு உறையப்போ என்று விடை கொடுப்ப
இலக்குமணன் தன்னோடு அங்கு ஏகியதும்
கலக்கிய மா மனத்தளளாய்க் கைகேசி வரம் வேண்ட
மலக்கிய மா மனத்தனனாய் மன்னவனும் மாறாது ஒழியக்
குலக்குமரா காடுறையப் போ வென்று விடை கொடுப்ப
இலக்குமணன் தன்னொடும் அங்கு ஏகியதும் ஓர் அடையாளம் –3-10-3-
குப்ஜையாலே கலக்கப் பட்ட பெரிய மனசை யுடையளாய் – முன்பு புத்ரனான ஸ்ரீ பரதாழ்வானைக் காட்டில் பெருமாள் பக்கல் ஸ்நேஹிநியாய் பர்த்தாவான சக்கரவர்த்தியினுடைய ப்ரியமே செய்து போந்தவளாகையாலே – பெரிய மனசை யுடையவள் -என்கிறது –இப்படி இருக்கிற மனசை மந்த்ரம் கடலைக் கலக்கினது போலே மந்தரை கலக்கின படி – அதாவது முற்பட -இவள் சொன்னவை எல்லாம் அநிஷ்டமாய் – இப்படிச் சொல்லலாகாது காண் -என்று பெருமாள் பக்கல் தனக்கு யுண்டான ஸ்நேஹத்தைச் சொல்லியும் பெருமாளுடைய குணங்களைச் சொல்லியும் இருந்தவளை-உத்தர உத்தரம் தான் சொல்லுகிற வசனங்களால் பெருமாள் பக்கல் ஸ்நேஹத்தைக் குலைத்து- அவரை அபிஷேகம் பண்ண ஒண்ணாது என் மகனை அபிஷேகம் பண்ண வேணும் -என்று சொல்லும் படி ஆக்கினாள் இவளே இறே-இப்படி கலக்கப் பட்ட மனசை யுடையளாய்க் கொண்டு கைகேயியானவள் தனக்கு முன்பே தருவதாகச் சொல்லி கிடக்கிற வரம் இரண்டையும் இப்போது தர வேணும் என்றும் – அது தான் பதினாலு சம்வத்சரம் பெருமாளை காட்டில் போக விடுகையும் – ஸ்வ புத்ரனான பரதனை அபிஷேகம் பண்ணுகையும் – என்று சொல்லி அபேக்ஷிக்க-அதுக்கு அவன் இசையாமையாலே
அறுபதினாயிரம் ஆண்டு சத்ய ப்ரதிஞ்ஞனாய்ப் போந்த நீ அசத்ய ப்ரதிஞ்ஞனானாயோ -என்றும்-நீ இது செய்யாயாகில் நான் என் பிராணனை விடுவேன் என்றும் அதி குபிதையாய்க் கொண்டு இவள் சொன்ன சொலவுகளாலே-மலக்கப்பட்ட மஹா மனசை யுடையனாய்க் கொண்டு ராஜாவானவனும் மறுக்க மாட்டாது ஒழிய
மா மனனத்தனாய் –என்றது அறுபதினாயிரம் ஆண்டு வசிஷ்டாதிகளைச் சேவித்து தர்ம அதர்மங்கள் எல்லாம் அறிந்து ராஜ்யத்தில் ஒருவர் ஒரு பழுதும் செய்யாத படி நோக்கிக் கொண்டு போந்தவன் ஆகையால் ஒருவரால் கலக்க ஒண்ணாத படியான மனசில் இடமுடையவன் என்றபடி –-இப்படி இருக்கிற மனசையும் தன்னுடைய யுக்தி சேஷ்டிதங்களாலே -என் செய்வோம் -என்று
தெகுடாடும்படி பண்ணினாள் ஆய்த்து கைகேயி-மந்தரை தன் மனசை கலக்கினால் போலே ஆய்த்து இவள் அவன் மனசைக் கலக்கினபடி
இப்படியான மனசை யுடையவனாய் இவள் சொன்னதுக்கு மறுத்து ஒன்றும் சொல்ல மாட்டாது இருக்க –மறுக்க மாட்டாமையாலே ராஜாவானவன் சோகித்துக் கிடக்கச் செய்தே –
பெருமாளை அழைத்துக் கொண்டு வா என்று ஸூமந்த்ரனைப் பார்த்துச் சொல்வதாக நினைத்து சோக வேகத்தால் அது தானும் மாட்டாது ஒழிய-இவள் அருகே இருந்து – ராஜா ராத்ரி எல்லாம் உத்சவ பராக்கிலே நித்திரை அற்று இருக்கையாலே ஸ்ராந்தராய் சற்று உறங்குகிறார்-நீ கடுகப் போய் பெருமாளை அழைத்துக் கொண்டு வா என்று போக விடுகையாலே அவன் போய் பெருமாளை எழுந்து அருளுவித்துக் கொண்டு வந்த அளவில்-பிதாவானவன் சோகித்துக் கிடக்கிறபடியைக் கண்டு – இதுக்கு அடி என் என்று கிலேசப்பட்டுக் கேட்டவாறே முன்பே எனக்கு இரண்டு வரம் தந்து இருப்பர் -அது இரண்டும் எனக்கு இப்போது தர வேணும் – அதாவது பதினாலு சம்வத்சரம் உம்மைக் காட்டிலே போக விட வேண்டும் பரதனை அபிஷேகம் செய்ய வேணும் என்று நான் சொன்னேன் சத்ய தர்ம பராயணன் ஆகையால் மறுக்க மாட்டாமல் அனுமதி செய்து உம்மைக் காட்டில் போக விடுவதாக அழைத்து விட்டார்-உம்மைக் கண்டவாறே வாய் திறந்து சொல்ல மாட்டாமல் கிடக்கிறார் காணும் என்ன-என்னை நியமிக்கும் போதைக்கும் இப்படி கிலேசிக்க வேணுமோ –யாதொன்று திரு உள்ளமான படி செய்யேனோ நான் – என்ன-ஆனால் இக்குலம் விளங்க வந்து பிறந்த குமாரரான நீர் உங்கள் ஐயரை சத்ய ப்ரதிஞ்ஞராக்க வேண்டியிருந்தீர் ஆகில்
அவருடைய வசன பரி பாலகராய்க் கொண்டு வன வாசம் பண்ணும் படியாகப் போம் -என்று
போக்கிலே ஒருப்படுத்த-ப்ராகேவது மஹா பாகஸ் ஸுமித்ரிர் மித்ர நந்தன பூர்வஜஸ் யாநுயாத்ரார்த்தே த்ரும சீரை ரலந்க்ருத்த -என்கிறபடியே தான் புறப்படுவதுக்கு முன்னே
இளைய பெருமாளோடே காடேற எழுந்து அருளினது ஓர் அடையாளம் –
கங்கை தன்னில்
கூர் அணிந்த வேல் வலவன் குகனோடு
சீர் அணிந்த தோழமை கொண்டதுவும்;
வாரணிந்த முலை மடவாய் வைதேவீ விண்ணப்பம்
தேரணிந்த வயோத்தியர் கோன் பெரும் தேவீ கேட்டருளாய்
கூரணிந்த வேல் வலவன் குகனோடும் கங்கை தன்னில்
சீரணிந்த தோழமை கொண்டதும் ஓர் அடையாளம் –3-10-4-
மிகக் கூர்மையை யுடைய வேல் தொழில் வல்லவன் – ஸ்ரீ குஹப் பெருமாள் வேல் வாங்கினார் என்றால் சத்ரு பக்ஷம் மண் உண்ணும்படி யாய்த்து இவருடைய ஸுர்யம் இருப்பது-இப்படி வேலும் கையுமாய்த் திரியுமது ஒழிய –ஏழை ஏதலன் -இத்யாதிப் படியே –
(ஏழை ஏதலன் கீழ் மகன் என்னாது—சொல்லிக் கொள்ளவும் இல்லையே )
அபிஜன வித்யா வ்ருத்தங்கள் ஒன்றும் இல்லாத ஸ்ரீ குஹப் பெருமாளோடே –
மாழை மான் மட நோக்கி உன் தோழி உம்பி எம்பி தோழன் நீ எனக்கு -என்று அருளிச் செய்த படியே குணத்தோடு கூடின தோழமை கொண்டதும் ஓர் அடையாளம் –(சீர் -குணம்
சரணம் -வந்தவன் தனது தாழ்வுகளைச் சொல்லாமல் வந்தாலும்– நான் உகந்த தோழன் –என்று கொண்ட குணம்-உம்பி எம்பி-உன் தம்பி என் தம்பி இளைய பெருமாள் கருத்தால் என்பர் )
சித்திர கூடத்து இருப்பப் பரத நம்பி பணிந்ததுவும்;
மானமரும் மென்னோக்கி வைதேவீ விண்ணப்பம்
கானமரும் கல்லதர் போய்க் காடுறைந்த காலத்துத்
தேனமரும் பொழில் சாரல் சித்திர கூடத்து இருப்பப்
பான் மொழியாய் பரத நம்பி பணிந்ததுமோர் அடையாளம் –3-10-5-
வண்டுகள் மாறாமல் பொருந்திக் கிடக்கிற பொழில்களோடே சேர்ந்த பர்யந்தத்தை யுடைய
சித்ர கூட பர்வதத்தில் –(காமத கிரி -கிரி ராஜ் இதுவே ராமாயணத்தில் கிருஷ்ண அவதாரத்தில் கோவர்த்தனம் கிரி ராஜ் )தேன்- வண்டு-உடஜே ராம மாசீ நம் ஜடா மண்டல தாரிணம் கிருஷ்ணாஜிநதரம் தந்து சீர வல்கல வாஸஸம் -என்கிறபடியே
இளைய பெருமாள் சமைத்த ஸ்ரீ பர்ண சாலையிலே எழுந்து அருளி இரா நிற்க-பால் போலே ரசாவகமான பேச்சை யுடையவளே – இதுக்கு முன்பு இவள் சொன்ன வார்த்தைகளில் ரஸ்யத்தையாலும்- இது கேட்க்கையில் யுண்டான ஆதார அதிசயத்தாலும் சொல்லுகிறான்-பாரதந்தர்யத்தால் பூர்ணனான ஸ்ரீ பரதாழ்வான் வந்து – மீண்டு எழுந்து அருள வேணும் –
என்று பிரபத்தி பண்ணினதும் ஓர் அடையாளம்
சிறு காக்கை முலை தீண்ட அனைத்துலகம் திரிந்து ஓடி
‘வித்தகனே !ராமவோ ! நின்அபயம் ! ‘ என்ன
அத்திரமே அதன் கண்ணை அறுத்ததுவும்;
சித்ர கூடத்து இருப்பச் சிறு காக்கை முலை தீண்ட
அத்திரமே கொண்டெறிய வனைத்துலகும் திரிந்தோடி
வித்தகனே இராமா ஓ நின்னபயம் என்று அழைப்ப
அத்திரமே அதன் கண்ணை யறுத்ததும் ஓர் அடையாளம் –3-10-6-
சோலைகளும் ஆறுகளும் சிலாதலங்களுமாய்க் கொண்டு போக ஸ்தானமாய் இருக்கும் சித்ர கூட பிரதேசத்தில்-தஸ்யோ பவந ஷண்டேஷூ நாநா புஷ்ப ஸூகந்திஷூ விஹ்ர்த்ய சவில க்லிந்நாத வாங்கே சமுபாவிசம்-என்கிறபடியே-பெருமாளும் தேவரீருமாய்க் கொண்டு ஏகாந்த ரசம் அனுபவித்து ஒருவருக்கு ஒருவர் மாறி மாறி மடியிலே கண் வளர்ந்து ரஸோத்தரராய் இரா நிற்கச் செய்தே-இந்திரன் மகனான ஜெயந்தன் தமோ குண பிரசுரனாகையாலே-ப்ராப்த அப்ராப்த விவேக சூன்யனாய்-தேவ வேஷத்தை மறைத்து ஷூத்ரமான காக வேஷத்தைப் பரிகரித்துக் கொண்டு வந்து-பெருமாள் -மடியில் கண் வளர்ந்து அருளா நிற்கச் செய்தே –வாயசஸ் ஸஹஸா கம்ய விததாரஸ் தநாந்தரே – என்கிறபடியே-ஜனனி என்று அறியாதே தேவரீர் திரு முலைத் தடத்திலே நலிய-அவ்வளவில் பெருமாள் உணர்ந்து அருளி –
க்ரீடதி ஸரோஷேனை பஞ்ச வக்த்ரேண போகிநா -என்று அதி க்ருத்தராய்
ச தர்ப்பம் ஸம்ஸ்தரா த்க்ர்ஹ்ய ப்ராஹ்மணாஸ்த்ரேண யோஜயத் –ச தீப்த இவை காலாக்னி ஜஜ் வாலாபி முகோ த்விஜம் –ச தம் ப்ரதீப்தம் சிஷேப தர்ப்பந்தம் வாயசம் பிரதி -என்கிறபடியே-ஒரு தர்ப்பத்தை எடுத்து -அதில் ப்ரஹ்மாஸ்திரத்தை யோஜித்து-அத்தை அந்த காகத்தின் மேலே செலுத்தி விட-அந்த அஸ்திரம் மந்த கதியாய் விடுகையாலே பின் தொடர்ந்து செல்ல-அத்தைத் தப்ப வழி தேடி-ச பித்ராச பரித்யக்த ஸ்ஸூரைஸ் ச ச மஹரிஷிபி த்ரீந் லோகான் சம்பரிக்ரம்ய-என்கிறபடியே
முந்துற பித்ரு கிரஹத்தில் சென்ற அளவில் பிதாவாலும் மாதாவாலும் கை விடப்பட்டு-பந்துக்களானவர்கள் தான் கைக் கொள்ளுவார்களோ-என்று அவர்கள் பக்கலிலே சென்ற அளவிலே அவர்களிலும் பரித்யக்தனாய்-ஆன்ரு சம்சய பிரதானரான ரிஷிகள் தான் கைக் கொள்ளுவார்களோ என்று அவர்கள் பக்கலிலே சென்ற அளவிலே அவர்களும் கை விடுகையாலே-திறந்து கிடந்த வாசல்கள் தோறும் ஒரு கால் நுழைந்தால் போலே-ஒன்பதில் கால் நுழைந்து மூன்று லோகங்களையும்-வளைய ஓடித் திரிந்த இடத்திலும் ஒருவரும் கைக் கொள்ளாமையாலே-தமேவ சரணம் கத என்கிறபடியே-சீறினாலும் காலைக் கட்டிக் கொள்ளலாம் படி இருக்கும் கிருபாவானாகையாலே விசமய நீயனாய்-
எல்லாரையும் குணத்தால் ரமிப்பிக்க வல்லவனே என்று சரண்யனான பெருமாள் குணத்தைச் சொல்லி ஓ என்று தன்னுடைய அநந்ய கதித்வத்தை முன்னிட்டுக் கொண்டு –-உனக்கு அபயம் -என்று சரணாகதனானமை தோற்றக் கூப்பிட-இப்படி சரணம் புகுகையாலே
சதம் நி பதிதம் பூமவ் சரண்யச் சரணாகதம் –
வதார்ஹம் அபி காகுத்ஸ கிருபயா பர்யபாலயத் -என்கிறபடியே கிருபையால் பெருமாள் ரஷித்து அருளுகிற அளவில்
காகத்துக்கு பிராண பிரதானம் பண்ணி-அஸ்திரத்துக்கு ஒரு கண் அழிவு கற்பிக்கையாலே-முன்பு தலை அறுப்பதாக தொடர்ந்த அஸ்திரம் தானே அதனுடைய ஒரு கண்ணை அறுத்து விட்டதும் ஓர் அடையாளம்
பொன் ஒத்த மான் ஒன்று புகுந்து இனிது விளையாட
நின் அன்பின் வழி நின்று சிலை பிடித்து எம்பிரான் ஏகப்
பின்னே அங்கு இலக்குமணன் பிரிந்ததுவும்
மின்னொத்த நுண்ணிடையாய் மெய்யடியேன் விண்ணப்பம்
பொன்னொத்த மான் ஓன்று புகுந்து இனிது விளையாட
நின் அன்பின் வழி நின்று சிலை பிடித்து எம்பிரான் ஏகப்
பின்னே யங்கு இலக்குமணன் பிரிந்ததும் ஓர் அடையாளம் -3-10-7-
மின்னோடு ஒத்து இருந்துள்ள நுண்ணிய இடையை யுடையாய் –இடையினுடைய நுண்ணிமையும் விரக தசையில் நோவு பாடாற்ற ஒண்ணாமைக்கு உடலாய் இருக்கும் இறே-அத்தைப் பற்றிச் சொல்லுகிறான்-புரையற்ற சேஷ பூதனான நான் விண்ணப்பம் செய்கிறதை திரு உள்ளம் பற்றி அருள வேணும் –
மெய்யடியானாகை யாவது –-எதிர்த் தலையிலே ஸம்ருத்தியே புருஷார்த்தமாய் இருக்குமது ஒழிய-ஸ்வ ப்ரயோஜன பரன் இன்றிக்கே இருக்கை-மாயாவியான மாரீசன் இதுக்கு முன்பு லோகத்தில் கண்டு அறியாத ஒரு வடிவை எடுத்துக் கொண்டதாகையாலே-பொன் போலே இருக்கிற நிறத்தையும்-நாநா ரத்தினங்கள் போல் இருக்கிற புள்ளியையும் மற்றும் அநேகம் வைசித்தரியையும் யுடைத்தாய்
இருபத்தொரு மானானது எழுந்து அருளி இருக்கிற ஆஸ்ரமத்தின் முன்னே வந்து மநோ ஹரமாம் படி நின்று துள்ளி விளையாட –இத்தைப் பிடித்துத் தர வேணும் -என்று பெருமாளைப் பார்த்து தேவரீர் அருளிச் செய்த இடத்தில் – இளைய பெருமாள் அருகே நின்று – லோகத்தில் இப்படி இருபத்தொரு மிருகம் இல்லை – மாரீசன் இங்கனே சில மாயா ரூபங்களைக் கொண்டு திரியும் என்று பிரசித்தம் ஆகையால் இது மாயா மிருகம் – என்னா நிற்கச் செய்தேயும் – தேவரீருடைய ஆசையின் வழியிலே நின்று-இளைய பெருமாளை இங்குத்தைக்குக் காவலாக நிறுத்தி-திருக் கையிலே பிடித்த வில்லும் தாமுமாய்க் கொண்டு அத்தைப் பிடிப்பதாகப் பெருமாள் நெடும் தூரம் எழுந்து அருள – பின்பு தங்களை எல்லாரையும் விஷயீ கரித்த உபகாரத்தை நினைத்து –எம்பிரான் -என்கிறான் – நெடும் தூரம் பின் பற்றிப் போன இடத்திலும் பிடி கொடாமல் அது தப்பித் திரிகையாலே – இது மாயா மிருகம் என்று திரு உள்ளம் பற்றி அதின் மேல் சரத்தை விட – அது பட்டு விழுகிற போது – ஹா சீதே ஹா லஷ்மணா -என்று பெருமாள் மிடற்று ஓசை போலே கூப்பிட்டுக் கொண்டு விழ-அத்தை தேவரீர் கேட்டு அருளி பெருமாளுக்கு ஏதேனும் அபாயம் வந்ததாக நினைத்து – இத்தைச் சடக்கென போய் அறியும் -என்று தேவரீர் அருளிச் செய்யச் செய்தேயும் –இங்குத்தைக்குக் காவலாக நிறுத்திப் போகையாலும்-பெருமாளுடைய ஸுர்யத்தை அறிகையாலும்-அங்குத்தைக்கு ஒன்றும் வாராது தேவரீர் பயப்பட்டு அருள வேண்டா -என்று விண்ணப்பம் செய்து – தாம் போக மாட்டாமல் சுற்றிக் கொண்டு நிற்க –அவர் நில்லாமல் போக வேண்டும்படி தேவரீர் சில அருளிச் செய்கையாலே பிற்பாடு அங்கே இளைய பெருமாள் பிரிந்து போனதும் ஓர் அடையாளம் –
‘அயோத்தியர் கோன் உரைத்த அடையாளம்;
‘ஈது அவன் கை மோதிரமே’என்று
மைத் தகு மா மலர்க் குழலாய் வைதேவீ விண்ணப்பம்
ஒத்த புகழ் வானரக் கோன் உடன் இருந்து நினைத் தேட
அத் தகு சீர் அயோத்தியர் கோன் அடையாளம் இவை மொழிந்தான்
இத் தகையால் அடையாளம் ஈது அவன் கை மோதிரமே–3-10-8-ஆறு அடையாளங்கள் சொல்லும் பொருளும்
தேவரீரைப் பிரிந்த பின்பு -ஊணும் உறக்கமும் அற்றும்-கடித்ததும் ஊர்ந்ததும் அறியாதே –ஏதேனும் ஒரு போக்கிய பதார்த்தத்தைக் கண்டால்-தேவரீரை நினைந்து ஈடுபட நின்றுள்ள அந் நிலைக்குத் தகுதியான பிரணயித்வ குணத்தை யுடையவராய்-ஸ்ரீ பரதாழ்வான்-அடி சூடும் அரசாய்த் திருவடி நிலை கொண்டு போகையாலே திரு அயோத்யையில் உள்ளார்க்குத் தாமே ராஜாவான பெருமாள் விண்ணப்பம் செய்த அடையாளங்கள் எல்லாம்
அடியேனுக்குத் தம்முடைய திருப் பவளத்தாலே அருளிச் செய்தார் –
அல்லாது போது-மல்லிகை மா மாலை கொண்டு அங்கு ஆர்த்தது அடியேனுக்கு அறியக் கூடுமோ-ஆன பின்பு விண்ணப்பம் செய்த அடையாளம் இத்தனையும் இந்த பிரகாரத்தாலே வந்தது என்று அறிவித்து-இது அவர் திருக் கையிலே திருவாழி மோதிரம் என்று –
ராம நாமாங்கிதஞ்சேதம் பஸ்யதே வ்யங்குளீயகம் -என்கிறபடியே பெருமாளுடைய திரு நாமத்தாலே அங்கிதமாய் இருக்கிற திருவாழி மோதிரத்தைக் கொடுத்தான் ஆய்த்து –
அடையாளம் தெரிந்து உரைக்க,
மலர்க் குழளால் சீதையும்,
வில் இறுத்தான் மோதிரம் கண்டு
அனுமான் அடையாளம் ஒக்கும் என்று
உச்சி மேல் வைத்து உகக்க,
திக்கு நிறை புகழாளன் தீ வேள்விச் சென்ற நாள்
மிக்க பெரும் சவை நடுவே வில்லிறுத்தான் மோதிரம் கண்டு
ஒக்குமால் அடையாளம் அனுமான் என்று உச்சி மேல்
வைத்துக் கொண்டு உகந்தனளால் மலர்க் குழலாள் சீதையுமே–3-10-9-
தத்வ ஞானத்தாலும் – பிராகிருத விஷய வைராக்யத்தாலும் – முமுஷுவாய் பல அபி சந்தி ரஹிதமாக கர்ம அனுஷ்டானங்களைப் பண்ணிக் கொண்டு போருகையாலும்- சர்வ திக்குகளிலும் நிறைந்த புகழை யுடையனான ஸ்ரீ ஜனக ராஜனுடைய ஆஹவநீயாத் யக்நி த்ரயத்தோடே பண்ணும் யாகத்தில் விச்வாமித்ர மகரிஷி கொண்டு செல்ல எழுந்து அருளின காலத்தில்-மிகவும் பெரிய சபா மத்யத்திலே-தனக்கு சுல்கமாகக் கல்பித்து இருந்த வில்லை முறித்த பெருமாளுடைய திருக் கையிலே அப்போது கிடந்ததாய்-பின்பு பாணி கிரஹணம் பண்ணுகிற போது தன் கையில் உறுத்தினதாய்-சர்வ காலமும் பெருமாள் திருக் கையில் கிடக்குமதான திருவாழி மோதிரத்தைக் கண்டு அநுமானே நீ முன்பு சொன்ன அடையாளங்களும் திருவாழி மோதிரத்தின் அடையாளமும் ஒக்கும் என்று அவன் முகத்தைப் பார்த்துச் சொல்லி-க்ருஹீத்வா ப்ரேஷா மாணா சா பர்த்து கர விபூஷணம் -பர்த்தாராம் இவ ஸம் ப்ராப்தா ஜானகீம் உதிதாபவத் -என்கிறபடியே அத் திருவாழி மோதிரத்தை வாங்கி அதினுடைய கௌரவமும் -தன்னுடைய ஆதரமும் தோற்றத் தலை மேல் வைத்துக் கொண்டு –பின்னை அத்தைக் கையிலே ஏந்தி -வைத்த கண் மாறாமல் பார்த்துக் கொண்டு இருக்கையாலே –அத் திருவாழி மோதிரத்தோடே சேர்ந்த திரு விரலையும் –அத்தோடு சேர்ந்த -திருக் கையையும் –அத்தோடு சேர்ந்த திருத் தோள்களையும் நினையா நின்று கொண்டு-அவ் வழியாலே திருமேனி எல்லாவற்றையும் நினைத்து பாவநா ப்ரகரஷத்தாலே (நினைவின் முதிர்ச்சியாலே )பெருமாள் அலங்கரிக்கப் பூ முடித்து ஒரு படுக்கையிலே இருந்தால் போலே தோன்றி
பிராட்டி மிகவும் ப்ரீதையானாள் என்று ஆச்சர்யப்பட்டு அருளிச் செய்கிறார் –ஆல்-ஆச்சர்யம் –(ஸம் ப்ராப்தா-நன்கு அடைந்தாள் என்று வால்மீகி நெடு வீணை முலை மேல் தங்கி -வீணையை சாத்திக் கொண்டு பரகால நாயகியைக் கண்ட தாயார் போல் இங்கும் )
வாராரும் முலை மடவாள் வைதேவி தனைக் கண்டு
சீராரும் திறல் அனுமன் தெரிந்து உரைத்த அடையாளம்
பாராரும் புகழ்ப் புதுவைப் பட்டர் பிரான் பாடல் வல்லார்
ஏராரும் வைகுந்தத்து இமையவரோடு இருப்பாரே –3-10-10-
முதலிகள் எல்லாரும் யுண்டாய் இருக்க – இவனே இக்காரியம் செய்ய வல்லான்-என்று ஸ்ரீ பெருமாள் திரு உள்ளம் பற்றி – அடையாளங்களும் சொல்லி –திருவாழி மோதிரமும் கொடுத்து விடும்படி ஞானாதி குணங்களால் பரி பூர்ணனாய் –நினைத்தது முடிக்க வல்ல சக்திமானாய் இருக்கிற ஸ்ரீ திருவடி –பெருமாள் அருளிச் செய்த படிகளில் ஒன்றும் தப்பாமல் ஆராய்ந்து ஸ்ரீ பிராட்டிக்கு விஸ்வசநீயமாக விண்ணப்பம் செய்த அடையாளங்களை-பூமி எங்கும் நிறைந்த புகழை யுடையரான ஸ்ரீ வில்லி புத்தூருக்கு நிர்வாஹகரான ஸ்ரீ பெரியாழ்வார் அருளிச் செய்த பாடலான இவற்றை சாபிப்ராயமாக வல்லவர்கள் எல்லா நன்மைகளும் சேர்ந்த பரம பதத்தில் –அடியாரோடு இருந்தமை -என்கிறபடியே -நிரந்தர பகவத் அனுபவ பரரான ஸ்ரீ நித்ய ஸூரிகளோடு ஒரு கோவையாக இருக்கப் பெறுவர் –
திறல் விளங்கு மாருதியும்-
தில்லை நகர் திரு சித்ர கூடம் தன்னுள்
திறல் விளங்கு மாருதியோடு அமர்ந்தான் தன்னை
எல்லையில் சீர் தயரதன் தான் மகனாய் தோன்றிற்று
அது முதலா தன் உலகம் புக்கது
கொல் இயலும் படை தானை கொற்ற ஒள் வாள்
கோழியூர் கோன் குடை குலசேகரன் சொல் செய்த
நல் இயல் இன் தமிழ் மாலை பத்தும் வல்லார்
நலம் திகழ் நாரணன் அடி கீழ் நண்னுவாரே–10-11–
பாவோ நான்யத்ர கச்சதி -என்று அங்குப் போகேன் என்ற ஸ்ரீ திருவடியை விட மாட்டாமே இங்கே வந்து நித்ய வாஸம் பண்ணுகிறவனை
இலங்கையர் கோன்-
கலங்க மாக் கடல் கடைந்து அடைத்து இலங்கையர் கோனது வரை யாகம்
மலங்க வெஞ்சமத்து அடு சரம் துரந்த எம்மடிகளும் வாரானால்
இலங்கு வெங்கதிர் இள மதி யதனொடும் விடை மணி யடும் ஆயன்
விலங்கல் வேயினது ஓசையுமாய் இனி விளைவது ஓன்று அறியேனே —8-5-7-
ஒருவராலும் பரிச்சேதிக்க அரிதான கடலானது கீழ் மண் கொண்டு மேல் மண் எறியும் படி
பிராட்டிக்காக கடைந்து – அவள் தனக்காக அடைத்து – இலங்கைக்கு நிர்வாஹகன் ஆனவன் உடைய வரை போலே திண்ணியதான மார்விலே
மாக் கடிகாவை இறுத்துக் காதல் மக்களும் சுற்றமும் கொன்று-
கடி இலங்கை மலங்க எரித்து
ஓத மா கடலைக் கடந்தேறி யுயர் கொள் மாக் கடிகாவை யிறுத்துக்
காதல் மக்களும் சுற்றமும் கொன்று கடி யிலங்கை மலங்க எரித்துத்
தூது வந்த குரங்குக்கே உங்கள் தோன்றல் தேவியை விட்டுக் கொடாதே
ஆதர் நின்று படுகின்றது அந்தோ அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ–10-2-6-
அலை எறிகிற பெரும் கடலை தன் கவட்டின் கீழேயாம்படி கடந்து அக்கரைப் பட்டு –ஒக்கத்தை உடைத்தாய் பரந்து பரிமளிதமாய் இருந்துள்ள சோலையை உடைய அசோக வநிகை -அத்தை முறித்து –ராவணனுக்கு சிநேக விஷயமான அஷய குமாரன் தொடக்கமான புத்ரர்களையும் அவனுக்கு அந்தரங்கரான கிங்கரர் தொடக்க மானவரையும் கொன்று –(ஸப்த மந்திரி ஸூதான் -வால்மீகி -ஏழு மந்திரி குமாரர்கள் )அரணை உடைத்தாய்
அக்னியும் புகுர அஞ்சி இருக்கும் இவ்வூர்-ஒருவர் கூறை எழுவர் உடுக்கும் படி அக்னியை பிரவேசிப்பித்து –(வாயு குமாரன் -அக்னி பெற்றதாயும் குமாரனும் சேர்ந்து வந்து -வாயு அக்னி பெற்றது அன்றோ -)வெறும் கையே தூது வந்தான் ஒருவன் செய்தது இதுவானால் –
நாம் இவளைக் கொண்டு இருப்போம் அல்லோம் என்று அவன் கையிலே பிராட்டியை விட்டுக் கொடாதே-ஆதர் -என்று இளிம்பர் என்றபடி-இளிம்பரான நாங்கள் இப்படிப் படா நின்றோம் –அச்சம் அல்லாத அன்று பட்டத்தை இன்று பட வேணுமோ
அரக்கர் கோன்-
ஒரு வில்லால் ஓங்கு முந்நீர் அடைத்து உலகங்கள் உய்யச்
செருவிலே யரக்கர் கோனைச் செற்ற நம் சேவகனார்
மருவிய பெரிய கோயில் மதிள் திருவரங்கம் என்னா
கருவிலே திரு விலாதீர் காலத்தைக் கழிக்கின்றீரே-11-
மாயா ம்ருகத்தைக் காட்டி ராஜ புத்ரர்களை அகற்றி-திறந்து கிடந்த வாசலிலே நாய் புகுருமா போலே-தனி இருப்பிலே வந்து பிரித்த கோழைப் பையலைப் போலே-அன்றியே பத்தும் பத்தாக யுத்தத்திலே –நான் ராஜச ராஜன் என்று தன பரிகரத்தைப் பார்த்து அபிமானித்து இருந்தவனை தானே அதிக்கிரமம் பண்ணும் அளவு அன்றியே துர் வர்க்கத்துக்கு அடைய ஒதுங்க நிழலாய் இருந்தவனை –அவன் கண் முகப்பே பரிகர பூதரை அழித்து
பிரஜைகளை அழித்து தன் தலை தரையிலே புரள கண்ணாலே காண்பார் இல்லையாம் படி இருக்க தானே காணும்படி ஒரோ தலையாக அறுத்து இறே அழியச் செய்தது – கச்ச அநு ஜாநாமி –ஈஸ்வரத்தாலே -சேவகனார் -என்கிறார் அல்லர் -சேவக வாசி யாலே –
அதாகிறது – கை இலக்கைக்கு சேவிக்கும் அவன் -என்கை –
அதாகிறது-ஓர் அஞ்சலிக்கும் தான் உள்ளதனையும் இவனை சேவிக்கும் -என்கை –தாய்த்தலை யற்று யற்று வீழத் தொடுத்த தலைவன் இறே
அநந்ய கதியான நம் விரோதி வர்க்கத்தை பிராட்டியோடே சம்ஸ்லேஷ விரோதியைப் போக்கினால் போலே போக்கும் ஆண் பிள்ளை -என்னுதல் –எல்லார்க்கும் தஞ்சமான பிராட்டிக்கு உதவுகையாலே நமக்கு உதவினான் என்று எல்லார்க்கும் சொல்லலாம் படி இருக்கையாலே –நம் சேவகனார் -என்னுதல் –
சினம் அழித்து,-
குன்றால் மாரி பழுதாக்கிக் கொடியேர் இடையாள் பொருட்டாக
வன் தாள் விடை ஏழு அன்று அடர்த்த வானோர் பெருமான் மா மாயன்
சென்றான் தூது பஞ்சவர்க்காய்த் திரிகால் சகடம் சினம் அழித்துக்
கன்றால் விளங்காய் எறிந்தானூர் கண்ண புரம் நாம் தொழுதுமே —8-6-9-
அயர்வறும் அமரர்கள் அதிபதி –தன்னைப் பேணாதே கால் நடையே கழுத்திலே ஓலை கட்டி
பாண்டவர்களுக்காக துரியோதனன் பக்கலிலே தூது போனவன் –ஊருகிற காலை உடைத்தான சகடத்தின் உடைய சினத்தை போக்கி –இருவரும் தங்களிலே க்ருத சங்கேதரராய் ஒருவனைக் கொண்டு ஒருவனை நிரசித்தவன் – கண்ண புரம் நாம் தொழுதுமே –
மீண்டு, அன்பினால்,
முன்பொலா ராவணன் தன் முது மதிள் லங்கை வேவித்து
அன்பினால் அனுமன் வந்து ஆங்கு அடியிணை பணிய நின்றார்க்கு
என்பொலாம் உருகி யுக்கிட்டு என்னுடை நெஞ்சம் என்னும்
அன்பினால் ஞான நீர் கொண்டு ஆட்டுவன் அடியனேனே -15-
திருவடி வாலில் நெருப்பாலே சுடுவித்து –நெருப்பும் காற்றும் கூடினால் போலே இறே
வாயு புத்திரன் வாலில் -நெருப்பு –(இட்டு வா என்றால் சுட்டு வர வேண்டுமே-கணையாழியை இட்டு வா சொல்லி-இலங்கையை சுட்டு -வேவித்து வந்தான்)காலால் அன்று போலே –அந ஸனம் தீஷித்தும் –கடல் கடந்தும் –யுத்தம் பண்ணியும் –இளைத்து இருக்கச் செய்தேயும் பிராட்டி திருவடியைத் தொழுது –த்ரஷ்டா சீதா -என்று பெரிய ப்ரீதி யோடு இறே வந்தது –
அயோத்தியர் கோன் தளிர் புரையும் அடி இணை பணிய;
மைத் தகு மா மலர்க் குழலாய் வைதேவீ விண்ணப்பம்
ஒத்த புகழ் வானரக் கோன் உடன் இருந்து நினைத் தேட
அத் தகு சீர் அயோத்தியர் கோன் அடையாளம் இவை மொழிந்தான்
இத் தகையால் அடையாளம் ஈது அவன் கை மோதிரமே–3-10-8-
தேவரீரைப் பிரிந்த பின்பு -ஊணும் உறக்கமும் அற்றும்-கடித்ததும் ஊர்ந்ததும் அறியாதே –
ஏதேனும் ஒரு போக்கிய பதார்த்தத்தைக் கண்டால் தேவரீரை நினைந்து ஈடுபட நின்றுள்ள அந் நிலைக்குத் தகுதியான பிரணயித்வ குணத்தை யுடையவராய்-ஸ்ரீ பரதாழ்வான்-அடி சூடும் அரசாய்த் திருவடி நிலை கொண்டு போகையாலே திரு அயோத்யையில் உள்ளார்க்குத் தாமே ராஜாவான பெருமாள் விண்ணப்பம் செய்த அடையாளங்கள் எல்லாம்
அடியேனுக்குத் தம்முடைய திருப் பவளத்தாலே அருளிச் செய்தார் – அல்லாது போது
மல்லிகை மா மாலை கொண்டு அங்கு ஆர்த்தது அடியேனுக்கு அறியக் கூடுமோ-
மின்னுருவாய் முன்னுருவில் வேத நான்காய்
விளக்கொளியாய் முளைத்து எழுந்த திங்கள் தானாய்
பின்னுருவாய் முன்னுருவில் பிணி மூப்பில்லாப்
பிறப்பிலியாய் இறப்பதற்கே எண்ணாது எண்ணும்
பொன்னுருவாய் மணிவுருவில் பூதமைந்தாய்
புனலுருவாய் அனல் வுருவில் திகழும் சோதி
தன்னுருவாய் என்னுருவில் நின்ற எந்தாய்
தளிர் புரையும் திருவடி என் தலை மேலவே—-1-
என் தலை மேலவே –தளிர் புரையும் அடி – அமரர் சென்னிப் பூவான -திருவடிகளே கிடீர் எனக்கு சிரோ பூஷணம் ஆய்த்து –ஆருடைய கால் இருந்த தலையிலே ஆருடைய திருவடிகள் இருக்கிறது –இவர் தலையிலே திருவடிகளை வைத்த பின்பு
அவன்-சத்தையும் சேஷித்வமும் விக்ரஹமும் பெற்றானாய் -இருக்கிறபடி –(நின்ற எந்தை திருவடி -நின்ற சத்தை -எந்தை -ஸ்வாமி -சேஷித்வம் -திருவடி -விக்ரஹம்)
இப் பாட்டால்
1-தத்வ த்ரயங்களின் உடைய நிஷ்க்ர்ஷ்டமான ஸ்வ ரூபமும்
2-அவை மூன்றும் புருஷார்த்தம் என்னும் இடமும்
(சாமான்யேன தேகாத்ம அபிமானிக்கும் -கேவலனுக்கும் -பகவத் பரனுக்கும் -மூவருக்கும்
மூன்று தத்துவமும் புருஷார்த்தம் என்றபடி )
3-அவற்றில் ஒன்றே ஸ்வரூப பிரயுக்தமான முக்ய புருஷார்த்தம் –
4-அல்லாதவை நிஹீன புருஷார்த்தம் என்னும் இடமும் -(ஆத்மாவை நிஹீனம் என்றது கைவல்யத்துக்கு உறுப்பாகையாலே )
5-அந்த முக்ய புருஷார்த்த பூதனான ஈஸ்வரன் உடைய-ஸ்வரூப ரூப குணங்களின் உடைய வை லஷண்யமும்-
6-அவற்றை ஈஸ்வரன் தன் ஆஸ்ரிதர்க்குக் காட்டும் போது தன் பேறாக காட்டும் படியையும்-சொல்லுகிறது –
————
ஸ்ரீ யுத்த காண்டம்–38 பாசுரங்கள்
காண எண்கும் குரங்கும் முசுவும் படையாக்
கான வெண்கும் குரங்கும் முசுவும் படையா அடல் அரக்கர்
மானம் அழித்து நின்ற வென்றி யம்மான் எனக்கு என்றும்
தேனும் பாலும் அமுதுமாய திருமால் திரு நாமம்
நானும் சொன்னேன் நமரும் உரைமின் நமோ நாராயணமே —6-10-6-
முசுவும்-கோலாங்கூலம் -நீண்ட வால்களைக் கொண்ட குரங்கு வகை –இந்த்ராதி தேவதைகள் முதுகிட்டு போமது ஒழிய எதிர் நிற்க மாட்டாத படி பண்ணும் மிடுக்கை உடையனான ராவணன் உடைய துர்மாநத்தை போக்கும் இடத்தில் –
இடக்கை வலக்கை வாசி அறியாதே என்றும் காட்டிலே வர்த்திக்குமது ஒழிய
பூசல் கண்டு அறியாத –எண்கும் -கரடியும்-குரங்கையும் முசுவையும் சேனையாகக் கொண்டு
திக்பாலாதிகளை அழியச் செய்த மிடுக்கை உடைய ராவணன் உடைய துர்மாநத்தைப் போக்கின சர்வாதிகன் –
கொடியோன் இலங்கை புகலுற்று-
மல்லை முந்நீர் அதர்பட வரி வெஞ்சிலை கால் வளைவித்துக்
கொல்லை விலங்கு பணி செய்யக் கொடியோன் இலங்கை புகலுற்றுத்
தொல்லை மரங்கள் புகப் பெய்து துவலை நிமிர்ந்து வான் அணவக்
கல்லால் கடலை அடைத்தானூர் கண்ண புரம் நாம் தொழுதுமே —-8-6-4-
ஒரு காலும் பூசல் கண்டு அறியாதே என்றும் ஒக்க பணை யிலே திரியக் கடவ குரங்குகள் பணி செய்ய அஸ்ப்ருஷ்ட சம்சார கந்தரான திருவடி திரு வநந்த ஆழ்வான் தொடக்கமனவர் செய்யக் கடவ கைங்கர்யத்தை இடக்கை வலக்கை வாசி அறியாத திர்யக்குகள் செய்ய –அவன் பண்ணின க்ரௌர்யத்தை திரு உள்ளத்தாலே
முன்னோட்டுக் கொண்டு கொடியோன் என்கிறார் – ஜனகனும் ஜனநியும் ஓர் இடத்தில் இருக்கப் பொறாத க்ரௌர்யம் இறே –இதுக்கு முன்பு பறியுண்டு அறியாத பழைய மரங்கள் அடைய பறியுண்டு போம்படி அதிலே பிரவேசிப்பித்து-அடைக்கிற போதை திவலைகள் ஆனவை கிளர்ந்து ஆகாச அவகாசத்தை இடம் அடைக்க –நீரிலே இட்டால் ஆழக் கடவ மலைகளைக் கொண்டு கடலை அடைத்த சக்கரவர்த்தி திரு மகனுக்கு வாசஸ் ஸ்தானமான
கண்ண புரம் நாம் தொழுதுமே –
அலையார் கடற்கரை வீற்றிருந்து
கொலை யானை கொம்பு பறித்துக் கூடலர் சேனை பொருது அழியச்
சிலையால் மராமரம் எய்த தேவனைச் சிக்கென நாடுதிரேல்
தலையால் குரக்கினம் தாங்கிச் சென்று தடவரை கொண்டு அடைப்ப
அலையார் கடல் கரை வீற்று இருந்தானை அங்குத்தை கண்டார் உளர் -4- 1-3 –
ஸ்ரீ வானர வீரர்கள் உடைய திரள்கள் ஆனவை – ஸ்ரீ பெருமாள் திருவடிகள் படப் புகுகிறது அன்றோ -என்னும் கௌரவ புத்தியாலே சிரசா வஹித்துக் கொண்டு சென்று –பெரிய மலைகளைக் கொண்டு கடலை ஊடருத்து (இடைவெளி இல்லாமல் )அணியாக அடைக்க (அணில்கள் நுண் மணலைக் கொண்டு வந்து -சிற்றாள் வேலை வானர வீரர்கள் )அலை மிக்கு இருந்துள்ள கடல் கரையிலே -அவ் வலை தெறிக்கும்படி ஆசந்னமாக
அவர்கள் செய்கிற அடிமையைப் பார்த்து உகந்து கொண்டு –அவர்களை அடிமை கொள்ளுகையால் வந்த வ்யாவ்ர்த்தி தோற்ற எழுந்து அருளி இருந்தவனை அந்த ஸ்தலத்தில் கண்டவர்கள் உளர் –
கல்லார் மதிள் சூழ் கடி இலங்கைக் கார் அரக்கன்
வல்லாகம் கீள வரி வெஞ்சரம் துரந்த
வில்லானைச் செல்வ விபீடணற்கு வேறாக
நல்லானை நாடி நறையூரில் கண்டேனே –6-8-5-
ப்ரஹ்மாஸ்த்ராதிகளுக்கும் சிளையாத படி வரபலத்தாலே திண்ணியதான உடல் கிழியும்படிக்கு ஈடாக தர்ச நீயமாய் தீப்த பாவக சங்காசை -என்கிறபடியே தொடுத்து விடும் போது அம்பாய் சத்ருக்கள் சரீரங்களில் அக்னியாய் பிரவேசிக்கும் அம்பை நடத்தின வில் வலியை உடையவனை –ராவண பவனத்தை விட்டு ஆகாச ஸ்தானனானன் ஆன போதே
அந்தரிஷ கதஸ் ஸ்ரீ மான் –என்கிறபடியே ஸ்ரீ ராம சம்பந்தத்தால் வந்த ஐஸ்வர்யம் குடி கொண்டாய்த்து –வருகிற விபீஷணன் புகுரக் கடவன் அல்லன் என்று
மகா ராஜர் உள்ளிட்டார் நிரோதிக்க அவனைக் கைக் கொள்ளுகை தவிரோம் – என்று
பெருமாளும் நிர்பந்திக்க-ஆகில் கிஷ்கிந்தையில் பரிகரம் இங்கனே விடை கொள்ளுகிறது -என்ன வேணுமாகில் அது செய்கிறது -இது ஒரு படியாலும் தவிரோம் (கதஞ்சன -நத்வதேயம் ) என்று அவன் பக்கலிலே விசேஷித்து சங்கத்தைப் பண்ணினவனை-நான் அவனைத் தேடி நறையூரிலே காணப் பெற்றேன் –
விரி நீர் இலங்கை அருளிச்
காண்டுங் கொலோ நெஞ்சமே!கடிய வினையே முயலும்
ஆண் திறல் மீளி மொய்ம்பில் அரக்கன் குலத்தைத் தடிந்து
மீண்டு மவன் தம்பிக்கே விரி நீர் இலங்கை அருளி
ஆண்டு தன் சோதி புக்க அமரர் அரி ஏற்றினையே?–7-6-9-
இராவணன் தானேயாகிலும்’ என்கிறபடியே, ‘சரணம்’ என்ற சொல் அழகியதாய் இருந்தது,
விபீஷணோ வா ஸூக்ரீவ யதிவா ராவண: ஸ்வயம்’-என்பது, ஸ்ரீராமா. யுத். 18 : 34.-‘அவனோடு சம்பந்தமுடையான் ஒருவன் வந்தானாகை அன்றிக்கே,
அவன் தானே வரப் பெறுவது காண்’ என்று செவி சீப்பாய்ந்து இருந்தார் அன்றோ?-‘அங்கு நின்றும் வந்தான் ஒருவனைக் கைக் கொண்டாராக அமையாதோ? இந் நிர்பந்தம் என்?’ என்னில், அவனோடு சம்பந்தமுடையான் ஒருவனைக் கைக் கொண்டால், அவன் தானும் நான்கு பேருமாகப் போம்; அவன் தானே வரப் பெற்றதாகில் துருப்புக் கூடாக நோக்கிற்று ஆகலாம் அன்றோ?-மேலும், பகைமையில் முதிர நின்றானும் அவனே ஆகையாலே,
‘காப்பாற்றுமவனாக வேண்டும்’ என்ற விருப்பம் உள்ளதும் அவனிடத்திலே அன்றோ?
இப்படி அவனை அங்கீகரிப்பதற்குக் கோலிப் பெறாத இழவு தீர்ந்தது இவனைக் கைக் கொண்ட பின்பாயிற்று.-அநுஜ; ரநவணஸ்ய அஹம் தேநச அஸ்மி அவமாநித:
பவந்தம் ஸர்வ பூதாநாம் ஸரண்யம் ஸரணம் கத:’-என்பது, ஸ்ரீராமா யுத் 19 : 4.-‘நான் இராவணனுக்குப் பின் பிறந்தவன்’ என்று அவன் வர,-இவரும் ‘அவன் தம்பியே’ என்றாயிற்று அவனைக் கைக் கொண்டது.-‘பஞ்செனச் சிவக்கும் மென்கால் தேவியைப் பிரித்த பாவி வஞ்சனுக்கு இளைய என்னை வருக என்றருள் செய் தானோ?’-என்றார் கம்பரும்.-கடல் சூழ்ந்த இலங்கையைக் கொடுத்தருளி.
சரண் புக்க
குரை கடலை அடலம்பால் மறுக எய்து,
குரை கடலை அடல் அம்பால் மறுக வெய்து
குலை கட்டி மறு கரையை அதனால் ஏறி
எரி நெடு வேல் அரக்கரோடும் இலங்கை வேந்தன்
இன் உயிர் கொண்டவன் தமிபிக்கு அரசும் ஈந்து
திரு மகளோடு இனிது அமர்ந்த செல்வன் தன்னை
தில்லை நகர் திரு சித்ர கூடம் தன்னுள்
அரசு அமர்ந்தான் அடி சூடும் அரசை அல்லால்
அரசு ஆக எண்ணேன் மற்று அரசு தானே— 10-8-
கோஷத்தை உடைத்தான கடலை -சத்ருக்கள் என்றால் எப்போதோ என்று மேல் விழக் கடவதான அம்பை விட்டு மருகும்படியாக செய்து-அஞ்சின கடலானது என் மேலே தூர்த்துக் கொள்ளீர் என்ன அதன் மேலே மலைகளை இட்டுத் தூர்த்து வழி செய்து அந்தக் கரையிலே போய்
கொல்லை விலங்கு பணி செய்ய-
மல்லை முந்நீர் அதர்பட வரி வெஞ்சிலை கால் வளைவித்துக்
கொல்லை விலங்கு பணி செய்யக் கொடியோன் இலங்கை புகலுற்றுத்
தொல்லை மரங்கள் புகப் பெய்து துவலை நிமிர்ந்து வான் அணவக்
கல்லால் கடலை அடைத்தானூர் கண்ண புரம் நாம் தொழுதுமே —-8-6-4-
ஒரு காலும் பூசல் கண்டு அறியாதே என்றும் ஒக்க பணை யிலே திரியக் கடவ குரங்குகள் பணி செய்ய-அஸ்ப்ருஷ்ட சம்சார கந்தரான திருவடி திரு வநந்த ஆழ்வான் தொடக்கமனவர் செய்யக் கடவ கைங்கர்யத்தை இடக்கை வலக்கை வாசி அறியாத திர்யக்குகள் செய்ய –
மலையதனால் அணை கட்டி-
மலை அதனால் அணை கட்டி மதிள் இலங்கை அழித்தவனே!
அலை கடலை கடைந்து அமரர்க்கு அருளி செய்தவனே!
கலை வலவர் தாம் வாழும் கண புரத்து என் கரு மணியே!
சிலை வலவா! சேவகனே! சீ ராமா! தாலேலோ– 8-8-
நிலத்திலே வர மலையைக் கொண்டு -அரணான மலையை -அணையாகக் கட்டி
நீர் தானே மிகை என்னும் படியான அரணையும் உடைத்தான இலங்கையை மூலையடியெ வழி போக்கினவனே
மறு கரையை ஏறி-10-7
குரை கடலை அடல் அம்பால் மறுக வெய்து
குலை கட்டி மறு கரையை அதனால் ஏறி
எரி நெடு வேல் அரக்கரோடும் இலங்கை வேந்தன்
இன் உயிர் கொண்டவன் தமிபிக்கு அரசும் ஈந்து
திரு மகளோடு இனிது அமர்ந்த செல்வன் தன்னை
தில்லை நகர் திரு சித்ர கூடம் தன்னுள்
அரசு அமர்ந்தான் அடி சூடும் அரசை அல்லால்
அரசு ஆக எண்ணேன் மற்று அரசு தானே— 10-8-
கோஷத்தை உடைத்தான கடலை -சத்ருக்கள் என்றால் எப்போதோ என்று மேல் விழக் கடவதான அம்பை விட்டு மருகும்படியாக செய்து-அஞ்சின கடலானது என் மேலே தூர்த்துக் கொள்ளீர் என்ன அதன் மேலே மலைகளை இட்டுத் தூர்த்து வழி செய்து அந்தக் கரையிலே போய்
(வால்மீகி-கும்பகர்ணன் முதலில்-இந்திரஜித் 5 நாள்-இராவணன் 7 நாள்–கம்பராமாயணம் மாறுபாடு உண்டு–இங்கு ஆழ்வார் பாசுரப்படி)
இலங்கை பொடி பொடியாகச்-
ஆரால் இவ்வையம் அடியளப்புண்டது காண் –
ஆரால் இலங்கை பொடி பொடியா வீழ்ந்தது –
மற்று ஆராலே கல்மாரி காத்தது தான்
ஆழி நீர் ஆரால் கடைந்திடப் பட்டது -அவன் காண்மின்
வரபல புஜ பலங்களாலே மிக்க இலங்கை யாராலே துகளாயிற்று –
சிலைமலி நெஞ்சரங்கள் செல உய்த்துக்
இலை மலி பள்ளி யெய்தி யிது மாயம் யென்ன இன மாய மான் பின் எழில் சேர்
அலை மலி வேற் கணாளை அகல்விப்பதற்கு ஓருருவாய மானை யமையா
கொலை மலி வெய்துவித்த கொடியோன் இலங்கை பொடியாக வென்றி யமருள்
சிலை மலி செஞ்சரங்கள் செல வுய்த்த நங்கள் திருமால் நமக்கோர் அரணே –11-4-7-
பர ஹிம்சையே யாத்ரையாக திரியும் அதி க்ரூரரான பையல் உடைய இலங்கை பொடியாம் படி வெற்றியை விளைப்பதான சமர பூமியிலே ஆயிரம் இரண்டாயிரமுமாக ஒரு தொடையிலே தொடை யுண்ணும் செவ்விய அம்புகளை நடத்தின – இதடையச் செய்தது -பிராட்டி பக்கல் பிச்சாலே இறே-இப்படி தம் மார்பிலே அம்பை ஏற்று ரஷிக்குமவர்
நமக்கு ரஷகர்-நமக்கு மேல் ஒரு குறை உண்டோ –
கும்பனோடு நிகும்பனும் பட
செம்பொன் நீண் முடி எங்கள் ராவணன் சீதை என்பதோர் தெய்வம் கொணர்ந்து
வம்புலாம் கடிகாவில் சிறையா வைத்ததே குற்றமாயிற்றுக் காணீர்
கும்பனொடு நிகும்பனும் பட்டான் கூற்றம் மானிடமாய் வந்து தோன்றி
அம்பினால் எம்மைக் கொன்றிடுகின்றது அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ—-10-2-5-
புதுமை மாறாதே இருப்பதாய் பரிமளத்தை உடைத்தான அசோக வநிகையிலே
பெருமாளுக்கும் அவளுக்கும் ஏகாந்தமாக அனுபவிக்கலாம் தேசத்திலே (பஞ்சவடியிலே )அவர் பக்கலில் நின்றும் பிரித்து அவளைத் தனிய வைத்த இது குற்றமாய்-அதுவே ஹேதுவாக கும்ப நிகும்பர்கள் பட்டார்கள் –ராவணன் கையிலே முன்பு தோற்ற ம்ருத்யு வானவன் வந்து ராவணன் தேவர்களை நெருக்கி வரக் கொண்டு மனுஷ்யர்களை அநாதரித்தான்- அத்தாலே அந்த ம்ருத்யு மானுஷ வேஷத்தை பரிஹரித்து தோன்றி –அந்த மனிச்சுக்கு ஏகாந்தமான அம்பாலே எங்களை கொல்லுகிற இத்தனை –
அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ-
இந்திரசித்தழியக் கும்பகர்ணன் பட-
எம்பிரானே என்னை ஆள்வா என்று என்று அலற்றாதே
அம்பின் வாய்ப்பட்டு ஆற்ற கில்லாது இந்த்ரஜித் அழிந்தான்
நம்பி அனுமா சுக்ரீவா வங்கதனே நளனே
கும்பகர்ணன் பட்டுப் போனான் குழமணி தூரமே —10-3-2-
எனக்கு உபகாரகன் ஆனவனே –என்னை அடிமை கொள்ளுகிறவனே-என்ற
இப் பாசுரங்கள் பாடாமையாலே –தான் அம்பில் வாயில் அகப்பட்டு ஆற்ற மாட்டாமை முடிந்து போனான் இந்த்ரஜித் –மகாராஜர் -வத்த்யதாம் -என்றாலும் இத் தேசத்தில்
இக் காலத்திலே வந்தான் என்று சொல்லுமவரோடும் அலைந்து கைக் கொள்ளப் பண்ணும்படி அன்றோ உன் பூர்த்தி –(ராமோ விக்ரஹவான் தர்ம -தர்மத்துக்காகப் பேசினார் திருவடி – இனிமையாக எளிமையாக பொருள் உள்ளதாக பொருத்தம் உடையதாகப் பேசினார் ராமருடைய கௌரவத்துக்காக பேசினார் )கும்பகர்ணன் பட்டுப் போனான் எங்களுக்கு வேறு சிலர் ரஷகர் உண்டு என்று நினைத்து நலிய வேண்டியது இல்லை –
அரக்கர் ஆவி மாள,
அரக்கராவி மாள வன்று ஆழ் கடல் சூழ் இலங்கை செற்ற
குரக்கரசன் என்றும் கோல வில்லி என்றும் மா மதியை
நெருக்கு மாட நீடு நாங்கை நின்மலன் என்று என்று ஓதி
பரக்கு அழிந்தாள் என் மடந்தை பார்த்தன் பள்ளி பாடுவாளே —4-8-5-
பிரித்த பையல் ஒருவனை அழித்த மாத்ரம் இல்லாமல் ராக்ஷஸ ஜாதி அடங்க மாளும் படி
ராவணன் எதிர்த்த அன்று அகாதமான கடலால் -இதுவே அரண் -அத்தை அழியச் செய்த வானவர் ஜாதிக்கு நிர்வாகன் – வானர ஜாதியைக் கொண்டு வென்றவன் –
அரசன் -நிர்வாககன்-ப்ரஹ்மாதிகள் குடி இருப்பை அழித்த ராவணன் குடி இருப்பை அழித்து
இடக்கை வலக்கை அறியாத வானர ஜாதிகளை பரிகரமாகக் கொண்டு ஆய்த்து
அரக்கர் கூத்தர் போலக் குழமணி தூரம் ஆட,-10-3-1-
இலங்கை மன்னன் முடி ஒருபதும் தோள் இருபதும் போய் உதிரச்-
மின்னணைய நுண் மருங்குல் மெல்லியற்கா இலங்கை
வேந்தன் முடி யொருபதும் தோள் இருபதும் போய் உதிர
தன்னிகரில் சிலை வளைத்து அன்று இலங்கை பொடி செய்த
தடந்தோளன் மகிழ்ந்து இனிது மருவி யுறை கோயில்
செந்நெலொடு செங்கமலம் சேல் கயல்கள் வாளை
செங்கழு நீரொடும் இடைந்து கழனி திகழ்ந்து எங்கும்
மன்னு புகழ் வேதியர்கள் மலிவெய்து நாங்கூர்
வைகுந்த விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே–3-9-5-
மின் போலே இருக்கிற நேரிய இடையை உடையளாய் மிருது ஸ்வ பாவையாய் இருக்கிற பிராட்டிக்காக இலங்கைக்கு நிர்வாஹகனாய் இருக்கிற ராவணன் உடைய பத்துத் தலையும்
இருபது தோளும் போய் உதிரும்படியாக தனக்கு ஒப்பு உண்டாகிலும் உபமான ரஹிதமாய் இருக்கிற வில்லை வளைத்து அன்று இலங்கையை பொடி படுத்திய தோள் மிடுக்கை உடைய-பிராட்டிக்கு பண்ணின வியாபாரத்தை ஆஸ்ரிதர் எல்லாருக்கும் ஒக்கப் பண்ணினது போலே அவன் பிரீதியோடே வர்த்திக்கிற தேசம் ஆகையாலே கண்டார்க்கு எல்லாம் இனிதாமோபடி இருக்கிற தேசம்
சிலை வளைத்துச்-
ஏழு மா மரம் துளை படச் சிலை வளைத்து இலங்கையை மலங்குவித்த
ஆழியான் நமக்கு அருளிய அருளொடும் பகல் எல்லை கழிகின்றதால்
தோழி நாம் இதற்கு என் செய்தும் துணை இல்லை சுடர் படு முது நீரில்
ஆழ வாழ்கின்ற வாவியை யடுவதோர் அந்தி வந்து அடைகின்றதே –8-5-5-
பிறரை விஸ்வசிப்பித்து கார்யம் செய்யுமவன் கிடீர் விஸ்வசித்து ஆசையோடு இருக்கிற எனக்கு உதவாது ஒழிகிறான்
சரமழை பொழிந்து-
ஆழி மழைக் கண்ணா ஓன்று நீ கை கரவேல்
ஆழி யுட்புக்கு முகந்து கொடு ஆர்த்தேறி
ஊழி முதல்வன் உருவம் போல் மெய் கறுத்துப்
பாழியம் தோளுடைப் பற்பநாபன் கையில்
ஆழி போல் மின்னி வலம் புரி போல் நின்று அதிர்ந்து
தாழாதே சார்ங்கம் உதைத்த சர மழை போல்
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்–4–
இரை பெறாத பாம்பு போலே-முன்பு விஷயம் இல்லாமையாலே அடங்கி இருந்த ஸ்ரீ சார்ங்கம்- சக்கரவர்த்தி திருமகன் கடைக் கணித்த வாறே நூறாயிரம் சர வ்ருஷ்டியைத் தானே பண்ணிற்று – எய் வண்ண வெஞ்சிலை இறே -உடையவன் அம்பு பெருக்கி இடுகை –சர வர்ஷம் வவர்ஷ ஹ–என்று தானே சர வ்ருஷடி பண்ண வற்று-அவிச்சின்னமாக சார்ங்கம் வர்ஷித்த பாண வர்ஷம் போலே- பிரணவத்தில் சேஷ சேஷி பாவ சம்பந்த பிரயுக்தமான- பகவத் காருண்ய வர்ஷத்தை
சல மா முகில் பல் கணப் போர் களத்து சர மாரி பொழிந்து எங்கும் பூசலிட்டு
நலிவான் உறக் கேடகம் கோப்பவன் போல் நாராயணன் முன் முகம் காத்த மலை
இலை வேய் குரம்பை தவ மா முனிவர் இருந்தார் நடுவே சென்று அணார் சொறிய
கொலை வாய்ச் சின வேங்கை கண் நின்று உறங்கும் கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே -3-5-8 –
பல திரளாய் கடலை வாளாகப் பருகி நீர் கொண்டு எழுந்த மகா மேகங்கள் ஆனவை
யுத்த பூமியில் சர வர்ஷம் போலே வர்ஷித்துக் கொண்டு – திரு ஆய்ப்பாடியிலே ஊரோடு பசுக்கள் மேயும் இடத்தோடு வாசி அற எங்கும் – எங்களை தப்ப வல்லார் உண்டோ -என்று இடித்து முழங்கி பூசலிட்டு நலிவதாக ஒருப்பட்ட அளவிலே-அந்த சர வர்ஷத்தை தகைக்கைக்கு கடகு கோத்து பிடிக்குமவன் போலே சர்வ ரஷகனான நாராயணன் -தன் கையிலே எடுத்துக் கொண்டு – முந்தி வருகிற வர்ஷ முகத்தை தகைந்த மலை –
(கரம் துணிந்து பாட பேதம் )
என்ன இயற்கைகளால் எங்ஙனே நின்றிட்டாய் என் கண்ணா
துன்னு கர சரணம் முதலாக எல்லா உறுப்பும்
உன்னு சுவை ஒளி ஊறு ஒலி நாற்றம் முற்றும் நீயே
உன்னை உணர உறில் உலப்பில்லை நுணுக்கங்களே.–7-8-9-
ஞானேந்திரியங்களும் கர்மேந்திரியங்களும் ஐம்புலன்களும் அவனுக்கு விபூதியாக இருக்கிற இருப்பை அருளிச் செய்கிறார்.-நெருங்கி இருந்துள்ள கைகள் கால்கள் தொடக்கமான எல்லா அவயவங்களுக்கும், நினைக்கப் படுவனவாய் ஆசைப்படப் படுவனவாய் இருக்கின்ற ஐம்புலன்களுக்கு கடவையாய் இருந்தாய்.
வெற்பால் மாரி பழுதாக்கி விறல் வாள் அரக்கர் தலைவன் தன்
வற்பார் திரள் தோள் ஐ நான்கும் துணித்த வல் வில் ராமனிடம்
கற்பார் புரிசை செய் குன்றம் கவினார் கூடம் மாளிகைகள்
பொற்பார் மாடம் எழிலாரும் புள்ளம் பூதங்குடி தானே —5-1-4-
பெரும் மிடுக்கராய் சாயுதருமாய் இருந்துள்ள ராஷசர்க்கு எல்லாம் வழி யடித்துப் புக்கு
ஒதுங்கலாம் படி அஞ்சினான் புகலிடமாய் இருந்துள்ள வனுடைய (பயந்தவர்களுக்கு அபய பிரதானம் பண்ணுபவன் )வன்மை மிக்கு திரண்டு இருந்துள்ள தோள்கள் இருபதையும் துணித்த மிடுக்கை உடைத்தான வில்லை உடைய சக்கரவர்த்தி திரு மகன் வர்த்திக்கிற தேசம் –
வென்றி கொண்ட செருக் களத்து
முருக் கிலங்கு கனித் துவர் வாய் பின்னை கேள்வன் மன்னெல்லாம் முன்னவியச் சென்று வென்றிச்
செருக் களத்து திறல் அழியச் செற்ற வேந்தன் சிரம் துணித்தான் திருவடி நும் சென்னி வைப்பீர்
இருக் கிலங்கு திரு மொழி வாய் எண் தோள் ஈசற்கு எழில் மாடம் எழுபது செய்து உலகம் ஆண்ட
திருக் குலத்து வளச் சோழன் சேர்ந்த கோயில் திரு நறையூர் மணி மாடம் சேர்மின்களே –6-6-8-
முருக்கம் பூ போலேயும் விளங்கா நின்றுள்ள கனி போலேயும் இருக்கிற அதரத்தை உடைய
நப்பின்னை பிராட்டிக்கு வல்லபன் –ராஜ லோகம் அடங்க வழிப் போக்கிலே முடியும் படி
யுத்த பூமியிலே சென்று கிட்டி –இந்த பிராதி கூல்யத்துக்கு ஹேது பூதனான
சஹஸ்ர பாஹூ வர்ஜுனன் உடைய மிடுக்கு எல்லாம் போய் அவன் முடிந்து போம் படிக்கு ஈடாக தலைகளைத் துணித்த சர்வேஸ்வரன் திருவடிகளை உங்கள் தலை மேலே வைக்க வேண்டி இருப்பீர் –
கடிக்கமல நான்முகனும் கண் மூன்றத்தானும்-
சென்று வணங்குமினோ சேணுயர் வேங்கடத்தை
நின்று வினை கெடுக்கும் நீர்மையால் -என்றும்
கடிக்கமல நான்முகனும் கண் மூன்றத்தானும்
அடிக்கமலம் இட்டு ஏத்தும் அங்கு-42-
சகல துக்கங்களையும் கெடுக்கும் ஸ்வ பாவத்தாலே திரு நாபி கமலத்திலே பிறந்த சதுர்முகனும் த்ரி நேத்ரனும் திருவடிகளிலே-தாமரைப் பூவைக் கொண்டு நிரந்தரமாக ஆஸ்ரயியா நின்று அவ்விடத்திலே கிஞ்சித் கரித்து ஸ்தோத்ரம் பண்ணுவர்கள் –திருவேங்கடமுடையானை பிரயோஜனாந்தரபரும் ஆஸ்ரியா நிற்பார்கள் –
அநந்ய பிரயோஜனரான நீங்கள் திருமலையை ஆஸ்ரயியுங்கள் என்கிறார் ஆகவுமாம் –
எண்மர் பதினொருவர் ஈரறுவர் ஓரிருவர்-
எண்மர் பதினொருவர் ஈரறுவர் ஓரிருவர்
வண்ண மலரேந்தி வைகலும் நண்ணி
ஒரு மாலையால் பரவி யோவாது எப்போதும்
திரு மாலைக் கை தொழுவர் சென்று —-52–
அஷ்ட வஸூக்களும் ஏகாதச ருத்ரர்களும் த்வாதச ஆதித்யர்களும் அஸ்வினி தேவதைகளுமான இவர்கள் –நாநா விதமான புஷ்பங்களை தரித்துக் கொண்டு –எப்போதும் கிட்டி-விலஷணமான புருஷ ஸூக்தாதிகளைக் கொண்டு அக்ரமாக ஸ்தோத்ரம் பண்ணி-எப்போதும் – விச்சேதிக்கக் கடவதன்றிக்கே –திருமால் – வேண்டிற்று எல்லாம் பெறுகைக்கு அடி-எல்லாரும் நம் வாசலிலே வரும் இத்தனை -என்று அபிமானித்து இருக்கக் கடவர்கள்-அவையடங்க அழிந்து தாங்களே சென்று ஆஸ்ரயிப்பார்கள்-
மற்றுமுள்ள வானவர்-
நெற்றி பெற்ற கண்ணன் விண்ணின் நாதனோடு போதின் மேல்
நல் தவத்த நாதனோடு மற்றும் உள்ள வானவர்
கற்ற பெற்றியால் வணங்கு பாத நாத வேத நின்
பற்று அலால் ஓர் பற்று மற்ற துற்றிலேன் உரைக்கிலே –87-
ஸ்வர்க்கத்துக்கு நிர்வாஹகரான இந்த்ரனோடே திரு நாபி கமலத்தை பிறப்பாகவும் ஸ்தாநமாகவும் உடையனாய் துஷ்கரமான தபச்சாலே சதுர் தச புவன ஸ்ர்ஷ்டாவுமாய்-அதுக்கு நிர்வாஹகனான ப்ரஹ்மாவோடே ஹவிர்பாக புக்குக்களான சகல தேவதைகள் – சம்ப்ரதிபன்ன ஷேத்ரஞ்ஞரான தேவர்களோடும் இந்த்ரனோடும் கூட
ப்ரஹ்ம ருத்ரர்களைச் சொல்லிற்று -அவர்களோபாதி இவர்களும் ஷேத்ரஞ்ஞர் என்று தோற்றுகைக்காக-
மலர்மழை பொழிந்து-
தொழுதனர் உலகர்கள் தூப நல் மலர் மழை
பொழிவனர் பூமி அன்று அளந்தவன் தமர் முன்னே
எழுமின் என்று இருமருங்கு இசைத்தனர் முனிவர்கள்
வழி இது வைகுந்தர்க்கு -என்று வந்து எதிரே–10-9-3-
ஆதி வாஹிக லோகங்களில் உள்ளார்-எதிரே வந்து மலர் மழையைப் பொழிந்து-கொண்டாடுகிற படியை-அருளிச் செய்கிறார்-உலகர்கள் தூப நல் மலர் மழை பொழிவனர்–தொழுதனர்- ஆதி வாஹிக லோகங்களில் உள்ளார் -கை படைத்த பிரயோஜனத்தைப் பெற்றோம் -என்று- தூபத்தையும் நல்ல மலர் மழையையும்-பொழிந்து-தொழா நின்றார்கள் –
மணி முடி பணிதர அடியிணை வணங்கக்
பணங்கள் ஆயிரம் உடைய நல் அரவணைப் பள்ளி கொள் பரமா வென்று
இணங்கி வானவர் மணி முடி பணி தர இருந்த நல் இமயத்து
மணம் கொள் மாதவி நெடும் கொடி விசும்புற நிமிர்ந்தவை முகில் பற்ற
பிணங்கு பூம் பொழில் நுழைந்து வண்டிசை சொலும் பிரிதி சென்று அடை நெஞ்சே -1-2-6-
ப்ராமணிகளைப் போலே யாயிற்று தேவர்களும் ப்ரஹ்ம ஹத்யை சொல்லிப் பழி இடுவாரும் தலை அறுப்பாரும் – தலை அறுப்புண்பாருமாய் இறே இருப்பது-இப்படி இருப்பவர்கள் கிண்ணகத்தில் இழிவாரைப் போலே ஒரு மிடறராய் இருப்பார்கள் ஆயிற்று
தேவர்கள் அடங்கலும் திரண்டு இறுமாப்பாலே வணங்கோம் -என்று இருக்குமது தவிர்ந்து –
பக்ந அபிமாநராய் திருவடிகளிலே தலைகள் பட வணங்கும்படி ஆயிற்று-அங்கு எழுந்து அருளி இருக்கிறது-பரத்வத்தில் வணங்கதார் எல்லாரும் சீலம் கண்டு வணங்கும்படியாக இருக்கிற தேசம் ஆயிற்று-
வெந்திறல் களிறும் வேலை வாய் அமுதும் விண்ணோடு விண்ணவர்க்கு அரசும்
இந்திரர்க்கு அருளி எமக்கும் ஈந்து அருளும் எந்தை எம்மடிகள் எம்பெருமான்
அந்தரத்து அமரர் அடி இணை வணங்க ஆயிர முகத்தினால் அருளி
மந்தரத்து இழிந்த கங்கையின் கரை மேல் வதரி யாச்சிராமத்துள்ளானே–1-4-7-
எனக்கு தந்தை-காரண பூதன்-எனக்கு ஸ்வாமி-இவற்றாலே என்னை அனன்யார்ஹன் ஆக்கினான்-ஸ்வர்க்கத்தில் தேவர்கள் திருவடிகளை ஆஸ்ரயிக்க – ஒரு முகம் செய்து வந்து புகில் கடல் பொறாது என்று பார்த்து ஆயிரம் முகத்தினால் போய்ப் புகு என்று -சர்வேஸ்வரன் திரு உள்ளமாய் அருள அப்படி மந்திர பர்வதத்தில் நின்றும் வந்து இழிந்தது ஆயிற்று – அன்றிக்கே – கங்கை தன்னை ஆஸ்ரயிக்க அது தான் அருளுகையாகவுமாம் –
கோலத், திரு மா மகளோடு-
ஞாலத் தூடே நடந்தும் நின்றும் கிடந்திருந்தும்
சாலப் பலநாள் உகந்தோறு உயிர்கள் காப்பானே!
கோலத் திருமா மகளோடு உன்னைக் கூடாதே
சாலப் பலநாள் அடியேன் இன்னும் தளர்வேனோ?–6-9-3-
தாயும் தமப்பனும் கூட இருக்கக் கிட்டப் பெறாதே, பால் குடிக்கும் குழந்தை நாக்கு ஒட்டிக் கிடந்து துடிக்குமாறு போலே இருக்கிறது காணும்.-“வேறாகாதவள்” என்கிறபடியே, அவனும் அவளுமான சேர்த்தி யன்றோ இவர்க்குப் பேறு.-முன்னம் அநாதி காலம் இழந்த நான் இன்னம் – அநந்த -பல காலம் இழக்கவோ?-அது கிடக்க, “உன்னாலே இழந்தாய்” என்று சொல்லிக் கை விடலாம் என்று இருக்கிறாயோ?-“ஒரு மிதுநம் எனக்குப் பேறு” என்று அறிந்த பின்பும் தளருமத்தனையோ? ‘நீ ரக்ஷகன்’ என்று அறியாதொழிதல், ‘வேறு எனக்கு ரக்ஷகமுண்டு’ என்றிருத்தல், ‘லக்ஷ்மிக்கு நாயகனாயுள்ள வஸ்து பிராப்யம்’ என்று அறியாதொழிதல், அனுபவமும் எனக்கு -‘எனக்கு நான் உரியேன்’ என்று இருத்தல் செய்தேனோ இழக்கைக்கு;-ருசி பிறந்த பின்பு இழக்கவோ?-இப் பாசுரத்தால், அகாரத்தின் பொருளை முறைப்படி வியாக்கியானம் செய்கிறார்;
“அவ-ரக்ஷணே” -(காப்பான் )அன்றோ தாது. ரக்ஷிக்குமிடத்தில், எல்லா வகையாலும் ரக்ஷிக்க வேண்டும்;-அது தான் எல்லாக் காலமும் ரக்ஷிக்க வேண்டும்; அப்படி ரக்ஷிக்குமிடத்தில் எல்லாரையும் ரக்ஷிக்கிறவனாக வேண்டும்;-இப்படி வரையாதே ரக்ஷிக்குமிடத்தில், “குற்றம் செய்யாதார் ஒருவரும் இலர்” என்னுமவளும், “என்னடியார் அது செய்யார்” என்னுமவனும்கூட ஆயிற்று;-ஆகையாலே, அகாரம், மிதுநத்துக்கு வாசகமாயிற்று.-“ஞாலத்தூடே நடந்தும் நின்றும் கிடந்திருந்தும் காப்பானே” என்கையாலே,
எல்லா வகையாலும் ரக்ஷகத்வம் சொல்லிற்று;-“சாலப் பலநாள் யுகந்தோறும்” என்கையாலே, எல்லாக் காலத்திலும் ரக்ஷகத்வம் சொல்லிற்று;-“உயிர்கள்” என்கையாலே, சர்வ ரக்ஷகத்வம் சொல்லிற்று; ‘கோலத் திருமாமகளோடு உன்னைக் கூட’ என்கையாலே, திருமகள் கேள்வனே பிராப்யம் என்றது.-அகாரத்தின் விவரணமான திருமந்திரத்தின் பொருளும்-அர்த்த பஞ்சகமும் – சொல்லுகிறது;
“கோலத் திரு மா மகளோடு உன்னை” என்கையாலே பிரஹ்ம ஸ்வரூபம் சொல்லிற்று;
“அடியேன்” என்கையாலே, ஜீவாத்ம ஸ்வரூபம் சொல்லிற்று;
‘உயிர்கள் காப்பான்’ என்கையாலே, உபாயம் சொல்லிற்று;
‘உன்னைக் கூட’ என்கையாலே, பலம் சொல்லிற்று,
‘உன்னைக் கூடாதே – தளர்வேனோ’ என்கையாலே விரோதி ஸ்வரூபம் சொல்லிற்று.
செல்வ வீடணன்-
கல்லார் மதிள் சூழ் கடி இலங்கைக் கார் அரக்கன்
வல்லாகம் கீள வரி வெஞ்சரம் துரந்த
வில்லானைச் செல்வ விபீடணற்கு வேறாக
நல்லானை நாடி நறையூரில் கண்டேனே –6-8-5-
ராவண பவனத்தை விட்டு ஆகாச ஸ்தானனானன் ஆன போதே அந்தரிஷ கதஸ் ஸ்ரீ மான் -என்கிறபடியே ஸ்ரீ ராம சம்பந்தத்தால் வந்த ஐஸ்வர்யம் குடி கொண்டாய்த்து –வருகிற விபீஷணன் புகுரக் கடவன் அல்லன் என்று மகா ராஜர் உள்ளிட்டார் நிரோதிக்க-அவனைக் கைக் கொள்ளுகை தவிரோம் – என்று பெருமாளும் நிர்பந்திக்க ஆகில் கிஷ்கிந்தையில் பரிகரம் இங்கனே விடை கொள்ளுகிறது -என்ன வேணுமாகில் அது செய்கிறது -இது ஒரு படியாலும் தவிரோம் (கதஞ்சன -நத்வதேயம் ) என்று அவன் பக்கலிலே விசேஷித்து சங்கத்தைப் பண்ணினவனை-
வானரக் கோனுடன்-
மைத் தகு மா மலர்க் குழலாய் வைதேவீ விண்ணப்பம்
ஒத்த புகழ் வானரக் கோன் உடன் இருந்து நினைத் தேட
அத் தகு சீர் அயோத்தியர் கோன் அடையாளம் இவை மொழிந்தான்
இத் தகையால் அடையாளம் ஈது அவன் கை மோதிரமே–3-10-8-
காண்பதுக்கு முன்னே –ஸூக்ரீவம் நாதம் இச்சதி -ஸூக்ரீவம் சரணம் கத -என்று
இளையபெருமாள் அருளிச் செய்யும் படி-தானே பஹு மானம் பண்ணிக் கொண்டு வந்து கண்ட பின்பு அக்னி சாஷிகமாக ஸஹ்யம் பண்ணி-த்வம் வயஸ்யோசி ஹ்ருத்யோ மேஹ் யேகம் துக்கம் ஸூகஞ்சநவ் -என்று-இளைய பெருமாள் அருளிச் செய்த பின்பு
பெருமாளோடு சோக ஹர்ஷங்கள் ஒத்துப் போந்தவர் என்னும் புகழை யுடையராய்
வாநராதி பதி என்றது சாபிப் ராயம் —-அதாவதுதேவரீரைத் தேடுகைக்காக –யாம் கபீ நாம் சஹஸ்ராணி -என்கிறபடியே –-திக்குகள் தோறும் திரள் திரளாகப் போக விடத் தக்க வானர சேனையை யுடையவர் என்கை
இலகும்-
தெளி விசும்பு கடித்து ஓடித் தீ வளைத்து மின் இலகும்
ஒளி முகில்காள் திரு மூழிக் களத்து உறையும் ஒண் சுடர்குத்
தெளிவிசும்பு திரு நாடாத் தீ வினையேன் மனத்து உறையும்
துளிவார்கள் குழலார்க்கு என் தூதுரைத்தல் செப்புமினே–9-7-5-
கொள்ளி வட்டம் போலே மின் விளங்குகின்ற-தன் வடிவில் இருட்சிக்கு கை விளக்கினை கொண்டு- திரிவாரைப் போலே ஆயிற்று –மின்னிக் கொண்டு சஞ்சரிக்கிற படி –
அணி நெடுந்தேர் ஏறிச்
வெஞ்சுடரில் தானடுமால் வீங்கிருளின் நுண் துளியாய்
அஞ்சுடர வெய்யோன் அணி நெடுந்தேர் தோன்றாதால்
செஞ்சுடர்த் தாமரைக் கண் செல்வனும் வாரானால்
நெஞ்சிடர் தீர்ப்பாரினி யார்? நின்று ருகுகின்றேனே.–5-4-9–
தன்னுடைய தோற்றரவிலே துன்பங்களை எல்லாம் போக்குதலை யுடைய அழகிய சுடர் பொருந்திய சூரியனும் வருகின்றிலன்.-இது, இளைய பெருமாள் அகல நின்றாற்போலே ஆயிற்று. பிரளயத்தில் சிறிது தூரம் எஞ்சி இருக்க நீந்தி கரையைக் கிட்டினோமோ, கிட்டினோமோ!’ என்று பார்ப்பாரைப் போலே காணும், இரவு முழுவதும் நோவுபட்டு, ‘விடிந்ததோ, விடிந்ததோ, என்று பார்க்கிறபடி.
சீரணிந்த குகனோடு கூடி-
வாரணிந்த முலை மடவாய் வைதேவீ விண்ணப்பம்
தேரணிந்த வயோத்தியர் கோன் பெரும் தேவீ கேட்டருளாய்
கூரணிந்த வேல் வலவன் குகனோடும் கங்கை தன்னில்
சீரணிந்த தோழமை கொண்டதும் ஓர் அடையாளம் –3-10-4-
மிகக் கூர்மையை யுடைய வேல் தொழில் வல்லவன் – ஸ்ரீ குஹப் பெருமாள் வேல் வாங்கினார் என்றால் சத்ரு பக்ஷம் மண் உண்ணும்படி யாய்த்து இவருடைய ஸுர்யம் இருப்பது-இப்படி வேலும் கையுமாய்த் திரியுமது ஒழிய – ஏழை ஏதலன் -இத்யாதிப் படியே –
(ஏழை ஏதலன் கீழ் மகன் என்னாது—சொல்லிக் கொள்ளவும் இல்லையே )
அபிஜன வித்யா வ்ருத்தங்கள் ஒன்றும் இல்லாத ஸ்ரீ குஹப் பெருமாளோடே –
மாழை மான் மட நோக்கி உன் தோழி உம்பி எம்பி தோழன் நீ எனக்கு -என்று அருளிச் செய்த படியே குணத்தோடு கூடின தோழமை கொண்டதும் ஓர் அடையாளம் –(சீர் -குணம்
சரணம் -வந்தவன் தனது தாழ்வுகளைச் சொல்லாமல் வந்தாலும்– நான் உகந்த தோழன் –என்று கொண்ட குணம்-உம்பி எம்பி-உன் தம்பி என் தம்பி இளைய பெருமாள் கருத்தால் என்பர் )
அங்கண் நெடு மதிள் புடை சூழ் அயோத்தி எய்தி-
அம் கண் நெடு மதில் புடை சூழ் அயோத்தி என்னும்
அணி நகரத்து உலகு அனைத்தும் விளக்கும் சோதி
வெம் கதிரோன் குலத்துக்கோர் விளக்காய் தோன்றி
விண் முழுதும் உய்ய கொண்ட வீரன் தன்னை
செம் கண் நெடும் கரு முகிலை ராமன் தன்னை
தில்லை நகர் திரு சித்திர கூடம் தன்னுள்
எங்கள் தனி முதல்வனை எம்பெருமான் தன்னை
என்று கொலோ? கண் குளிர காணும் நாளே— 10-1-
போக்ய போக உபகரண போக ஸ்தானங்களை உடைத்தாய்-ஆகாச அவகாசம் எல்லாம் தானேயாம்படி நிமிர்ந்த மதிளாலே சூழப் பட்ட ஸ்ரீ அயோத்யை- அபராஜிதை என்று சொல்லுகிற ஸ்ரீ பரமபதம் போலே சத்ருக்களுக்கு கணிசிக்க ஒண்ணாத ஊர்
என்னும் –ஸ்ரீ பரம பதம் போல் சிலர் அறிந்து சிலர் அறியாதாய் இருக்கை யன்றிக்கே
சர்வ லோக பிரசித்தமாய் இருக்கை –அலங்காரங்களால் குறைவற்ற ஊர் -என்னுதல்-
சர்வ லோகங்களையும் தன் தேஜஸ்ஸாலே -நாராயண பரஞ்சோதி -என்கிறபடியே பரஞ்ஜோதிஸ்ஸாய் உள்ளது
நன்னீராடிப்-
சூட்டு நன் மாலைகள் தூயன ஏந்தி வானோர்கள் நன்னீர்
ஆட்டி அம் தூபம் தரா நிற்கவே அங்கு ஓர் மாயையினால்
ஈட்டிய வெண்ணெய் தொடு உண்ண போந்தி மிலேற்றுவன் கூன்
கூட்டிடை ஆடின கூத்து அடல் ஆயர் தம் கொம்பினுக்கே –21-
இங்குத்தைக்கு சத்ருசமாய்- ஸ்ப்ருஹணீயமாய் இருக்கும் -மிக்க சீர் தொண்டர் இட்ட
தொண்டர் -லௌகிக ப்ரயோஜனாந்தரர்-சீர் தொண்டர் -மோக்ஷம் உபாசகர்-மிக்க சீர் தொண்டர் ஸ்வயம் பிரயோஜனம்-அங்குற்றைக்கு இஷ்ட விநியோக அர்ஹத்வமே ஸ்வரூபம் என்கிற படி —மஞ்சளும் செம்கழு நீரும் வாசிகையும்–பெரியாழ்வார் திரு மொழி -2-4-4–என்கிறபடி -கொண்டு வைத்தேன் -இதுவே நம் கர்தவ்யம்-ஏற்றுக் கொள்வது அவன் இச்சை-இஷ்ட விநியோக அர்ஹத்வமே ஸ்வரூபம்
திருவாராதனம் விளக்க வந்த பாசுரம்-அமர்ந்து திருவாராதனம் ஏற்றுக் கொள்கிறான்
1-அந்தூபம் தாரா நிற்கவே -அங்கு -ஆஸ்தே -மந்த்ராஸனம்
2-நன்னீராட்டி -ஸ்நாநாசனம்
3-நன்மாலைகள் தூயன ஏந்தி அலங்காராசனம்
4-வெண்ணெய் தொடு உண்ணப் போந்து போஜ்யாசனம்
5-புனர் மந்த்ராஸனம் -இப்பாசுர அனுசந்தானம்
6-ஸய்யாசனம் -நப்பின்னைப் பிராட்டியை அணைக்க -அடல் ஆயர் தம் கொம்பினுக்கே
ஆகவே இப்பாசுரம் நித்ய அனுசந்தானமாகக் கொள்கிறோம்
பொங்கிள ஆடை அரையில் சாத்தித்-perumaal 6-9
மங்கல நல் வனமாலை மார்வில் இலங்க
மயில் தழை பீலி சூடி
பொங்கிள வாடை அரையில் சாத்தி
பூம் கொத்து காதில் புணர பெய்து
கொங்கு நறும் குழலார்களோடு
குழைந்து குழல் இனிது ஊதி வந்தாய்
எங்களுக்கே ஒரு நாள் வந்தூத
உன் குழலின் இன் இசை போதராதே– 6-9-
மங்களம் என்று சொல்லப் பட்டவை எல்லாம் உடைத்தாய் – தர்ச நீயமுமாய் இருக்கிற வனமாலை-மை போல் நெடு வரைவாய் தாழும் அருவி போல் தார் கிடப்ப -என்னுமா போலே
திரு மார்விலே விளங்க-தழைத்த பீலியை திரு முடியிலே சுற்றி-மிகவும் மெல்லிய ஆடையைத் திரு வரையிலே சாத்தி-பூம் கொத்தை காதிலே மிகவும் பொருந்த விட்டுத் தேனையும் நறு நாற்றத்தையும் உடைய குழலை உடையவர்களோடு குழைந்து-கலந்து-நெகிழ்ந்தவர்களோடே ஒரு நீராகக் கலந்து – அக் கலவியால் பிறந்த ஹர்ஷம் எல்லாம் தோற்றும்படியாக இனிதாக குழலூதி வந்தாய்
திருச்செய்ய முடியும் ஆரமும் குழையும் –
திருச் செங்குன்றூரில் திருச் சிற்றாறு அதனுள் கண்ட
அத்திருவடி என்றும்
திருச் செய்ய கமலக் கண்ணும் செவ்வாயும்
செவ்வடியும் செய்ய கையும்
திருச் செய்ய கமல வுந்தியும் செய்ய கமலை மார்பும்
செய்ய வுடையும்
திருச் செய்ய முடியும் ஆரமும் படையும்
திகழ வென்ன சிந்தை யுளானே–8-4-7-
திருமேனிக்கு பரபாகமான தன்மையைக் குறிப்பதான திருப் பீதாம்பரமும் –அப்படி திரு மேனிக்கு பரபாகமாய் அச்சம் தீரும்படி காப்பதற்கு அறிகுறியான திரு முடியும் –பெரிய வரை மார்பில் பேராரம் பூண்டு -மூன்றாம் திருவந்தாதி -55 -என்கிறபடியே திருமார்புக்கு தகுதியான திரு ஆரமும் –வினைத் தலையில் ஆயுதமாய்– போக நிலையில் ஆபரணமாய்–
இருந்துள்ள திவ்ய ஆயுதங்களும் –ஜாதி ஏக வசனம் –தண்ட காரண்யம் முழுதும் அழகிய சோபை விளங்கச் செய்து -என்றபடியே–சோபயஸ் தண்டகாரண்யம் தீப்தேன ஸ்வேன தேஜஸா அத்ருச்யத் ததா ராமோ பால சந்திர இவோதித –ஆரண்யம் -38-15-
என்கிறபடியே -விளங்க –அவன் என்றும் ஒக்க என் சிந்தையிலே வசிக்கையாலே
அச்சத்துக்கு ஒதுங்க இடம் இல்லை – அழகுடன் மறக்க ஒண்ணாத படி நெஞ்சில் புகுந்தான்
செங்கமலக் கழலில் சிற்று இதழ் போல் விரலில்
சேர் திகழ் ஆழிகளும் கிண்கிணியும் அறையில்
தங்கிய பொன் வடமும் தாள நன் மாதுளையின்
பூவொடு பொன் மணியும் மோதிரமும் கிறியும்
மங்கல ஐம் படையும் தோள் வளையும் குழையும்
மகரமும் வாளிகளும் சுட்டியும் ஒத்து இலக
எங்கள் குடிக்கரசே ஆடுக செங்கீரை
யேழ் உலகும் உடையாய் ஆடுக ஆடுகவே – 1-5 10- –
திரு மார்பில் சாத்தின மங்கள அவஹமான ஸ்ரீ பஞ்சாயுதமும் – அதுக்கு பரபாகமாக கொண்டு இரண்டு அருகும் விளங்கா நின்றுள்ள திருத் தோள் வளைகளும்
திருக் காது பணிகளும் -திரு மகரக் குழைகளும்-திருச் செவி மடல் மேல் சாத்தின வாளிகளும் – திருக் குழலில் சாத்தி திரு நெற்றிக்கு அலங்காரமாக -நாலும் -தொங்குகின்ற -சுட்டியும் –இரண்டு அருகும் அசைந்து ஆடுகையாலே -எல்லாம் சேர ஒளி விட என்னுதல்-திரு மேனிக்கு தகுதியாக பிரகாசிக்க என்னுதல் –
முதலா மேதகு பல் கலன் அணிந்து-
செக்கர் மா முகில் உடுத்து மிக்க செம் சுடர்
பரிதி சூடி அம் சுடர் மதியம் பூண்டு
பல சுடர் புனைந்த பவள செவ்வாய்
திகழ பசும் சோதி மரகத குன்றம்
கடலோன் கை மிசை கண் வளர்வது போல்
பீதக ஆடை முடி பூண் முதலா
மேதகு பல் கலன் அணிந்து சோதி
வாயவும் கண்ணவும் சிவப்ப மீது இட்டு
பச்சை மேனி மிக பகைப்ப
நச்சு வினை கவர் தலை அரவின் அமளி ஏறி
எறி கடல் நடுவுள் அறி துயில் அமர்ந்து
சிவன் அயன் இந்திரன் இவர் முதல் அனைத்தோர்
தெய்வ குழாங்கள் கை தொழ கிடந்த
தாமரை வுந்தி தனி பெரு நாயக
மூ வுலகு அளந்த சேவடியோயே –1–
பீதக ஆடை –செக்கர் மா முகில் உடுத்து -என்கிறது-முடி –செஞ்சுடர் பரிதி சூடி -என்கிறது
பூண் –அஞ்சுடர் மதியம் பூண்டு -என்கிறது -முதலா மேதகு பல் கலன் அணிந்து –பல சுடர் புனைந்த என்றத்தை-மேதகு ஸ்வரூப அனுரூபம் என்னும்படியாய் இருக்கை – மேன்மைக்குத் தக்கபடி என்றபடி – மேவித் தகுதியாக என்றுமாம்-கீழ்ச் சொன்னவை முதலாகத் தகுதியாய் இருந்துள்ள பல ஆபரணங்களையும் அணிந்து –
அவன் விபூதியைப் பரிச்சேதிக்கிலும் பரிச்சேதிக்கப் போகாததாய் இருக்கை
பல பலவே ஆபரணம் –திருவாய் -2-5-6- ஸ்ரீ பாஷ்யகாரர் அநேக பூஷணங்களை அருளிச் செய்து பின்னையும்–நூபுராத் யபரிமித திவ்ய பூஷண–ஸ்ரீ சரணாகதி கத்யம் –
(நூபுரம் முதலாகிய கணக்கற்ற திவ்ய ஆபரணங்களை யுடையவன் )
ஆதி சப்தத்தால் தலைக் கட்டுமா போலே-இங்கும் பல் கலன்கள்-என்று தலைக் கட்டுகிறார்
சூட்டு நன் மாலைகள் அணிந்து-
சூட்டு நன் மாலைகள் தூயன ஏந்தி வானோர்கள் நன்னீர்
ஆட்டி அம் தூபம் தரா நிற்கவே அங்கு ஓர் மாயையினால்
ஈட்டிய வெண்ணெய் தொடு உண்ண போந்தி மிலேற்றுவன் கூன்
கூட்டிடை ஆடின கூத்து அடல் ஆயர் தம் கொம்பினுக்கே –21-
சிரோ பூஷணமாய் இருப்பது ஒன்றுக்கு பேர்-ஆஸ்ரிதர் காலில் -காலால் – இட்டாலும் ,-
கிருஷ்ணாதி சிரசா ஸ்வயம்-என்றபடி யாலே-ஏற்பது தன் தலையால் இருக்கையாலே-பிள்ளை உறங்கா வல்லி தாசர் பொன் நாச்சியாருக்கு அருளிச் செய்த வார்த்தை–
பத்ரம் புஷ்பம் கீதை -9-26–இலை ,மலர் ,தண்ணீர் என எதனை அன்புடன் அளித்தாலும்
ஏற்பேன் என்று அருளியதை சொல்லி காட்டினார்–-அஸ்நாமி-என்னுமா போலே-பொன் ஆச்சியார் கேட்டதுக்கு தாஸர் பதில்-எத்தைக் கொடுத்தாலும் உண்ணுவது போல் போக்யமாகக் கொள்ளுபவன்-நன் மாலைகள் — இவன் ஆதரிக்கும் என்னா-எருக்கும் தும்பையுமாக தேடி இடும் அளவு இன்றிக்கே , இங்குத்தைக்கு சத்ருசமாய்- ஸ்ப்ருஹணீயமாய் இருக்கும் -பத்ரம் புஷ்ப்பம் பலம் தோயா -என்றும் – கள்ளார் துழாய் -என்றும் நூறு தடா வெண்ணெய் நூறு தடா அக்கார வடிசில் சொல்லுவது எவ்வாறு பொருந்தும்-அந்யத் பூர்ணத்துக்கும் அதமம் -அவனைப் பார்த்தால்-மாலைகள் —
ஈரம் கொல்லியை கொன்று திரு பரியட்டம் சாத்தி-ஸ்ரீ மாலாகாரர் கிருகத்திலே எழுந்து அருளி- திரு பள்ளி தாமம் சாத்தி ,-அநந்ய பிரயோஜனர் இடுமதாய் இருக்கை–
பரதனும் தம்பி சத்துருக்கனனும் இலக்குமணனோடு இரவும் நன் பகலும்-
பரதனும் தம்பி சத்ருக்கனனும் இலக்குமனோடு மைதிலியும்
இரவு நன் பகலும் துதி செய்ய நின்ற இராவணாந்தகனை யெம்மானை
குரவமே கமழும் குளிர் பொழிலூடு குயிலொடு மயில்கள் நின்றால
இரவியின் கதிர்கள் நுழைதல் செய்தறியாத் திருவல்லிக்கேணிக் கண்டேனே—2-3-7–
காட்டுக்கு கூட சென்றவர்களும் செல்லாதவர்களும் பிரித்து-ஸ்ரீ பரதாழ்வானும்
அவனோடே கையடைப்பான ஸ்ரீ சத்ருக்ந ஆழ்வானும் –(கச்சதா மாதுல குலம் அநக -என்பதால் இங்கு தம்பி-உடைவாள் போல்வான் )-இதுவும் இங்கனே ஒரு சேர்த்தி –
ஸீதே ஸ லஷ்மணாம் -என்கிறபடியே தாயும் பிள்ளையுமாய் இருக்கிற சேர்த்தி –
பெருமாளைப் பிரியில் தரியாமையால் உண்டான சேர்த்தியுமாம் -( அக்குளத்தில் மீன் முஹுர்த்தம் அபி ஜீவிதம் ) ராவண வதத்தின் அன்று விஜய கோஷத்தின் சடக்கு கேட்டு இருக்கையில் உண்டான சேர்த்தியுமாம் –சமரம் காலத்திலே கண்டு அனுபவித்தார்களோடு –கேட்டார் வாய் கேட்டாரோடு வாசி யற ஏத்தா நிற்பர்கள் ஆயிற்று –தேசிகர் அடங்கலும் திரள் திரளாக நின்றாயிற்று ஏத்துவது –(சத்ருக்களும் கொண்டாடும் பெருமாள் -வேண்டியவர்களுக்கு கை விடுவார்கள் கண்ணனை–தீர்த்த யாத்திரை போனார் நம்பி மூத்தபிரான் –-கேட்டார் கேட்ட வாய் ஸ்தோத்ரம் பரத சத்ருக்னர்கள்-ராவண விஜயம் கேட்டவர்களும்-கேட்ட வாய் கேட்டவர்களும்-முதலிகளும் தேவர்களும் ரிஷிகளும் )-நமக்கும் ஓர் காலம் நெஞ்சு ஒழிந்த போது ஏத்துவது என்று ஓன்று அன்றோ
அங்கன் இன்றிக்கே-திவ ராத்ர விபாகமற கிட்டினதனையும் ஆழம் கால் படுகைக்கு
உடலான வித்தனை -( கண்டு அறிவாரும் கேட்டு அறிவாரும் )-இப்படி ஏத்துவது தான் ராவண வதம் பண்ணின அபதானம் ஒன்றுமே ஆயிற்று –அவர்களோபாதி நானும் தோற்று
ஏத்தும்படி -பண்ணினவனை-ஸ்ரமஹரமான பொழிலின் ஊடே குயில்களோடே கூட
மயில்கள் ஸ ஸம் ப்ரம ந்ருத்தம் பண்ண –ஈஸ்வர ஆஞ்ஞை நடை யாடாத தேசம் ஆயிற்று –
பீஷோ தேதி -தைத்ரியம் -என்றது அவ்விடத்தை ஒழிய யாயிற்று-
(ராவணனுக்கு அஞ்சிய ஸூர்யன் ராவணாந்தகனுக்கு அஞ்சுவது சொல்ல வேண்டுமோ-
பகதர்கள் பாகவதர்கள் ஆணை நடமாடும் இடம் )
வடிவிணை இல்லாச்
கொடு வினைப் படைகள் வல்லையாய்
அமரர்க்கிடர் கெட வசுரர்கட்கிடர் செய்
கடு வினை நஞ்சே என்னுடை யமுதே
கலி வயல் திருப் புளிங்குடியாய்
வடி விணை யில்லா மலர்மகள்
மற்றை நிலமகள் பிடிக்கும் மெல்லடியை
கொடு வினையேனும் பிடிக்க நீ யொருநாள்
கூவுதல் வருதல் செய்யாயே–9-2-10-
வடிவில் வந்தால் ஒப்பு இன்றிக்கே இருக்கும் -என்றது-பகவானும் ஒப்பு ஆகான் -என்றபடி
துல்ய சீல வயோ வ்ருத்தாம் துல்யாபி ஜன லஷணாம்-ராகவ அர்ஹதி வைதேஹீம் தம் ச இயம் அஸி தேஷணா-சுந்தர -16-5–பெருமாளுக்கு கருத்த கண்களை உடைய வளான இந்தப் பிராட்டியும் தகுந்தவள்-என்கிறபடியே-எற்றமாயே நின்றது அன்றோ –இந்த விதமான ஏற்றத்தை உடைய பூமிப் பிராட்டியும்-அவர்களும் திருவடிகளைப் பிடிக்கப் புக்கால்-பூத்தொடுவாரைப் போலே-கன்றி விடுமோ -என்று கூசித் தொட வேண்டும்படி ஆயிற்று மிருதுத் தன்மை இருப்பது –அப்படிப் பட்ட திருவடிகளை –
சங்கு தங்கு முன்கை நங்கை-
சங்கு தங்கு முன்கை நங்கை கொங்கை தங்கல் உற்றவன்
அங்க மங்க வன்று சென்று அடர்த்து எறிந்த வாழியான்
கொங்கு தங்கு வார் குழல் மடைந்தமார் குடைந்த நீர்
பொங்கு தண் குடந்தையுள் கிடந்த புண்டரீகனே –57-
வளை கழலாதே இருந்துள்ள முன்கையை உடையவள் – அவன் கொண்டாடும் வளை- முன் கை வளை – யாகையாலே வ்யதிரேகத்தில் கழலுவதும் அதுவே இறே -இத்தால் -நித்ய அநபாயிநி -என்கை –ரூப குணத்தாலும் ஆத்ம குணத்தாலும் பூர்ணை யானவள் –
துல்ய சீல வயோ வ்ர்த்தாம் துல்ய அபி ஜந லஷணாம் -என்கிற பிராட்டி பக்கலிலே –
மலர்க் குழலாள் சீதையும் தானும்-
திக்கு நிறை புகழாளன் தீ வேள்விச் சென்ற நாள்
மிக்க பெரும் சவை நடுவே வில்லிறுத்தான் மோதிரம் கண்டு
ஒக்குமால் அடையாளம் அனுமான் என்று உச்சி மேல்
வைத்துக் கொண்டு உகந்தனளால் மலர்க் குழலாள் சீதையுமே–3-10-9-
அத்தைக் கையிலே ஏந்தி -வைத்த கண் மாறாமல் பார்த்துக் கொண்டு இருக்கையாலே –
அத் திருவாழி மோதிரத்தோடே சேர்ந்த திரு விரலையும் – அத்தோடு சேர்ந்த -திருக் கையையும் – அத்தோடு சேர்ந்த திருத் தோள்களையும் நினையா நின்று கொண்டு-அவ் வழியாலே திருமேனி எல்லாவற்றையும் நினைத்து-பாவநா ப்ரகரஷத்தாலே (நினைவின் முதிர்ச்சியாலே )பெருமாள் அலங்கரிக்கப் பூ முடித்து ஒரு படுக்கையிலே இருந்தால் போலே தோன்றி பிராட்டி மிகவும் ப்ரீதையானாள் என்று ஆச்சர்யப்பட்டு அருளிச் செய்கிறார் –
ஆல்-ஆச்சர்யம் – (ஸம் ப்ராப்தா-நன்கு அடைந்தாள் என்று வால்மீகி நெடு வீணை முலை மேல் தங்கி -வீணையை சாத்திக் கொண்டு பரகால நாயகியைக் கண்ட தாயார் போல் இங்கும் )
கோப்புடைய சீரிய சிங்காதனத்திருந்து
மாரி மலை முழஞ்சில் மன்னிக் கிடந்து உறங்கும்
சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீ விழித்து
வேரி மயிர் பொங்க வெப்பாடும் பேர்ந்துதறி
மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டு
போதருமா போலே நீ பூவைப் பூ வண்ணா வுன்
கோயில் நின்று இங்கனே போந்தருளிக் கோப்புடைய
சீரிய சிங்காசனத்து இருந்து யாம் வந்த
கார்யம் ஆராய்ந்து அருளேலோ ரெம்பாவாய்-23
சராசரங்களை அடைய தொழிலாக வகுப்புண்டிருக்கை – உபய விபூதியும் தொழிலாக வகுப்புண்டிருக்கை -என்னவுமாம்-தர்ம ஜ்ஞானாதிகளாலும்-அதர்ம அஜ்ஞானாதிகளாலும்
கோப்புடைய சிம்ஹாசனம் -என்றுமாம் –-படுக்கையில் வார்த்தையாக ஒண்ணாது-இந்த சிம்ஹாசனத்தில் இருந்து நினைப்பிட்டது என்றால் அறுதியாய் இருக்கை – கடல் கரையில் வார்த்தை என்னுமா போலேயும் தேர்த் தட்டில் வார்த்தை என்னுமா போலேயும் பெண்களும் கிருஷ்ணனுமாய் இருந்து சொல்லிலும் அமோகமாய் இருக்கை –அணுவாகிலும் கிருஷ்ணனோடு ஒத்த வரிசையைக் கொடுக்க வற்றான சிம்ஹாசனம் என்றுமாம் –நடை அழகு போலே இருப்பில் வேண்டற்ப்பாட்டையும் காண வேணும் -என்கை –கண்ணினைக் குளிரப் புது மல ராகத்தைப் பருக -இருந்திடாய் -என்னுமா போலே-உன்னைக் காண விடாய்த்த கண்களின் விடாய் கெட்டு அனுபவிக்கலாம் படி இருந்து –சீரிய சிங்கத்துக்கு சத்ருசமான ஆசனம்-பெண்களுக்கு பொய் குறிக்கும் கிருஷ்ணனே யாகிலும்
இவ்வாசனத்திலே இருந்தால் பொய் சொல்ல ஒண்ணாதே –சொன்னது அமோகமாய் இருக்கை –கடல் கரை வெளியிலே வானர சஹாசத்திலே வார்த்தை போலேயும் –
பூசல் களரியிலே தேர்த் தட்டில் வார்த்தை போலேயும்-பெண்கள் திரளில் திவ்ய சிம்ஹாசனத்தில் இருந்து பொய் நம்பியான கிருஷ்ணன் சொன்னதே யாகிலும்
ஆசன விசேஷத்தாலே பழுது போகாத படி யாய் இருக்கும் –தர்ம ஆசனத்தில் இருந்தால் தோற்றிற்றுச் சொல்ல ஒண்ணாது இறே – இது தான் தர்மாதி பீடம் இறே –
ராஜாக்கள் மெய்க்காட்டுக்கு இன்ன மண்டபத்திலே இன்ன ஆசனத்தில் இருந்து நினைப்பிட்டது என்றால் தப்பாதால் போலே
ஏழுலகம் தனிக் கோல் செல்ல–
வீற்றிருந்து ஏழுலகும் தனிக்கோல் செல்ல, வீவு இல் சீர்
ஆற்றல் மிக்கு ஆளும் அம்மானை வெம்மா பிளந்தான்றனைப்
போற்றி என்றே கைகள் ஆரத் தொழுது,சொல் மாலைகள்
ஏற்ற நோற்றேற்கு இனி என்ன குறை எழுமையுமே?–4-5-1-
சுற்றுப்பயணம் வந்து உலகத்தையெல்லாம் நிர்வாகம் செய்கையன்றிக்கே, இருந்த இருப்பிலே உலகமடையச் செங்கோல் செல்லும் படியாக ஆயிற்று இருப்பது. ‘ஏழ் உலகு’ என்று பரமபதமும் அதற்குக் கீழே உள்ள உலகங்களுமான இரு வகை உலகங்களையும் சொல்லிற்றாதல்;-பரமபதத்திற்கு இப்பால் உள்ள உலகங்கள் மாத்திரத்தைச் சொல்லிற்றாதல். இரு வகையான உலகங்களையும் சொல்லும் போது மூன்று வகையான ஆத்துமாக்களையும் நான்கு வகையான பிரகிருதியையும் சொல்லுகிறது.நான்கு வகையான பிரகிருதிகளாவன : காரிய காரண உருவமான இரு வகைப்பட்ட பிரிவுகள் அங்கு;இங்கும், அப்படியுண்டான இரு வகைப்பட்ட பிரிவுகள். லீலாவிபூதி மாத்திரத்தைச் சொன்னபோது,கீழேயுள்ள உலகங்களையும் பூமியையும் கூட்டி ஒன்று ஆக்கி, பரமபதத்திற்கு இப்பாலுள்ள உலகங்களை ஆறு ஆக்கி,ஆக ஏழையும் சொல்லுகிறது என்று கொள்க.
வாழ்வித்தருளினார்.”–
எத்தனை காலமும் எத்தனை ஊழியும் இன்றோடு நாளை என்றே
யித்தனை காலமும் போய்க் கிறி பட்டேன் இனி உன்னைப் போகல் ஒட்டேன்
மைத்துனன் மார்களை வாழ்வித்து மாற்றலர் நூற்றுவரைக் கெடுத்தாய்
சித்த நின் பாலது அறிதி அன்றே திரு மால் இரும் சோலை எந்தாய் -5- 3-8 –
நீ ஆஸ்ரித சம்ஸ்லேஷ ஏக ஸ்வபாவன்-தோற் புரையில் ஒரு சம்பந்தம் அன்றோ உள்ளது –திருமாலே நானும் உனக்கு பழ அடியேன் -என்று ஒழிக்க ஒழியாதபடி –
மஜ்ஜாவிலே (எலும்புக்குள்ளே மாமிசத்தில் )தட்டின உறவு அன்றோ இது –
அணைத்த வேலும் -தொழுத கையும் -அழுந்திய திருநாமமும்-ஓம் என்ற வாயும் -உயர்ந்த மூக்கும் -குளிர்ந்த முகமும்-பரந்த விழியும் -பதிந்த நெற்றியும் – நெறித்த புருவமும் சுருண்ட குழலும் -வடிந்த காதும் -அசைந்த காதுகாப்பும் தாழ்ந்த செவியும்- சரிந்த கழுத்தும் -அகன்ற மார்பும்-திரண்ட தோளும் -நெளித்த முதுகும் -குவிந்த இடையும்-அல்லிக் கயிறும் -அழுந்திய சீராவும் -தூக்கிய கரும் கோவையும்-தொங்கலும் தனிமாலையும்-தளிரும் மிளிருமாய் நிற்கிற நிலையம்-சாற்றிய திருத் தண்டையும்-சதிரான வீரக் கழலும்-தஞ்சமான தாளிணையும் குந்தியிட்ட கணைக் காலும்-குளிர வைத்த திருவடி மலரும் வாய்த்த மணம் கொல்லையும்-வயலாலி மணவாளனும் வாடினேன் வாடி என்று-வாழ்வித்தருளிய நீலக் கலிகன்றி மருவலர்தம் உடல் துணிய-வாள் வீசும் பரகாலன் மங்கை மன்னனான வடிவே –
————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஹனுமத் பரத சத்ருக்ந லஷ்மண ஸீதாப் பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply