1-ஸ்ரீ ராம அவதாரம்-2-தாடகை வதம்-3-விச்வாமித்ரர் வேள்வி காத்தல்-4-ஸ்ரீ சீதா விவாஹம்-5-பரசுராமன் கர்வம் அடக்குதல்-6-கூனி கூனை நிமிர்த்தல்–
——–
1-ஸ்ரீ ராம அவதாரம்
திருமடந்தை மண்மடந்தை இருபாலும் திகழத் தீவினைகள் போயகல அடியவர்கட்கு என்றும்
அருள் நடந்து இவ்வேழு லகத்தவர்பணிய வானோர் அமர்ந்தேத்த-3-10-
ந கச்சின் ந அபராத்யதி -என்று குற்றத்தைப் பொறுப்பிக்கும் பிராட்டியும்
முதலில் குற்றம் தன்னை காண்கிறது என்–பின்னைப் பொறுக்கிறது என் -என்று
குற்றம் கண்டு பொறுக்கையும் கூட மிகையாம்படி இருக்கிற ஸ்ரீ பூமிப் பிராட்டியும்
இரண்டு இடத்திலும் விளங்க –குற்றத்தைப் பொறுப்பிக்கைக்கு பிராட்டி –
குற்றம் கண்டு கைவிட ஒண்ணாத இடத்தில்-குற்றம் கணக்கிடும் இதுக்கு பலம் என் -என்று இருக்கும் ஸ்ரீ பூமிப் பிராட்டி-இப்படிப் பட்ட பிராட்டிமார் உடைய நித்ய சன்னதியாலே
சர்வேஸ்வரனுக்கு ஆஸ்ரித விஷயத்து சம்சாரேஷூ நராதமான் ஷிபாமி -என்கைக்கு
விஷயம் அற்று இருக்கும் ஆயிற்று –பொறுப்பிக்கும் அவளும் பொறைக்கு உவாத்தானவளும் (தூண்டி விட்டு காரணமாக இருப்பவளும் ) எப்போதும் ஒக்க அருகே இருக்கையாலே ஆஸ்ரிதர் பக்கல் எப்போதும் அவன் அருளே நடந்து அத்தாலே கொடிய அபராதங்கள் இவ்வோ விடங்கள் நமக்கு இருப்பிடம் அல்ல என்று விட்டு ஓட –
கொங்கு மலி கரும் குழலாள் கௌசலை தன் குல மதலையாய் தங்கு பெரும் புகழ் சனகன் திரு மருகா தாசரதீ –பெருமாள் திரு –8–3-
மிக்க பரிமளத்தைப் புறப்பட விடுகிற இருண்ட குழலை உடைய ஸ்ரீ கௌசலையாருடைய
குலத்துக்கு உத்தாரகன் ஆனவனே-புகழ் என்று பிறந்தவை எல்லாம் தங்கும் படி பெரிய புகழை உடைய ஸ்ரீ ஜனக ராஜனுக்கு மருமகன் ஆனவனே-அவனோடு சத்ர்ச சம்பந்தம் பண்ணலாம் படியான பிறப்பை உடையவனே-
தயரதன் தன் மா மதலாய் மைதிலி தன் மணவாளா –8–4-
அறுபதினாயிரம் ஆண்டு மலடு நின்ற ஸ்ரீ சக்கரவர்த்தியினுடைய மலடு தீரப் பிறந்தவனே –பிள்ளை பெற்றத்தின் மேலும் பிறப்பில் வந்த ஏற்றத்துக்கு மேலே —யச்யஸா ஜனகாத்மஜா -என்று ஸ்ரீ பிராட்டியை உனக்கு என்று இட்டுப் பிறந்த மேன்மையை உடையவனே
அம் கண் நெடு மதில் புடை சூழ் அயோத்தி என்னும்
அணி நகரத்து உலகு அனைத்தும் விளக்கும் சோதி
வெம் கதிரோன் குலத்துக்கோர் விளக்காய் தோன்றி
விண் முழுதும் உய்ய கொண்ட வீரன் தன்னை–10-1-
போக்ய போக உபகரண போக ஸ்தானங்களை உடைத்தாய்-ஆகாச அவகாசம் எல்லாம் தானேயாம்படி நிமிர்ந்த மதிளாலே சூழப் பட்ட ஸ்ரீ அயோத்யை- அபராஜிதை என்று சொல்லுகிற ஸ்ரீ பரமபதம் போலே சத்ருக்களுக்கு கணிசிக்க ஒண்ணாத ஊர்-ஸ்ரீ பரம பதம் போல் சிலர் அறிந்து சிலர் அறியாதாய் இருக்கை யன்றிக்கே சர்வ லோக பிரசித்தமாய் இருக்கை – அலங்காரங்களால் குறைவற்ற ஊர் -என்னுதல்- சர்வ லோகங்களையும் தன் தேஜஸ்ஸாலே –நாராயண பரஞ்சோதி –என்கிறபடியே பரஞ்ஜோதிஸ்ஸாய் உள்ளது-ஜகத்தில் அந்தகாரம் எல்லாம் நீக்கக் கடவ ஆதித்யன் வம்சத்திலே -அவனைப் போலே இரவு கலவாத அத்விதீயமான தேஜஸ்ஸாய் வந்து உதித்து –தன் வீர்ய குணத்தாலே தேவ ஜாதியடைய உஜ்ஜீவிப்பித்தவனை-தேவ ஜாதி யன்றிக்கே ஜகத்தை அடைய ரஷிப்பதாக-கடலிலே மணலே சேஷமாக பருகின காளமேகத்தினுடைய வடிவையும் ஸ்ரீ சர்வேஸ்வரத்வ லஷணமான புண்டரீகாஷத்வங்களையும் உடையவன்-வடிவு அழகாலும் கண் அழகாலும் அபிராமத்தாலும் அனுகூல பிரதிகூல விபாகம் இன்றியே தோற்ப்பிக்குமவனை –
எல்லையில் சீர் தயரதன் தன் மகனாய்த் தோன்றிற்று –10–11-
பஹூ குணனான ஸ்ரீ சக்கரவர்த்திக்கு –பிதரம் ரோசயாமாச – என்று பிள்ளையாய் பிறந்தது தொடக்கமாக
தயரதற்கு மகன் தன்னை யன்றி மற்றிலேன் தஞ்சமாகவே –3–6–8-
ராவண வத சமனந்தரத்திலே முதலிகளிலே சிலரை காணாது ஒழிய தேவதைகளைக் கொண்டு மீட்டும்-ஒரு பாலனுக்கு அகால ம்ருத்யு வர அம்பாலே மீட்டுக் கொடுத்தும் செய்த சக்கரவர்த்தி திருமகனை அன்றி –ததவ் கௌசிக புத்ராய -என்று ராஜ்யத்தை தந்தேன் என்னா அத்தை தவிர்ந்து காடு ஏறப் போம் என்னா ஒரு சம்சாரிக்கு இஷ்ட விநியோக அர்ஹன் ஆனவனை –பவான் நாராயணோ தேவ -என்று ஈஸ்வர அபிமானிகள் தங்கள் வந்து சொன்னால் ஆத்மா நம் மானுஷம் மன்யே என்னுமவன் – மற்றிலேன் தஞ்சமாகவே.-
மற்று என்று பகவத் வியக்த்ரந்தரங்களை நினைக்கிறார் –தஞ்சம் -ஆபத் தனம் –
காயும் கடும் சிலை காகுத்தன் வாரானால் -5–4–3-
முடி சூடி நோக்கும் குடியிலே பிறந்தவனுக்கு வரத் தட்டு என்? ககுஸ்த குலத்தில் பிறந்தவனும் வாராது ஒழிவதே!-பகைவர்கள் வரப் போர் செய்ய இருக்கை அன்றிக்கே, தானே எடுத்து விட்டுச் சென்று பொருமவனும் வருகின்றிலன்-குற்றம் ஒன்றும் இல்லாத கோவலன் —தானே செல்பவன் அன்றோ இவன் -மூன்று குற்றங்கள் இல்லாமல் –
1-வாரணாஸ்ரம தர்மம் நிறைந்தவன் –2-தானே சென்று –3-ஆயுதம் இல்லாதவரை அடிக்க மாட்டார் –
காண் பெரும் தோற்றத்து எம் காகுத்த நம்பிக்கு –6–6–9-
கண்ணுக்கு இனியதாய் அபரிச்சேத்யமான போக்யமான சந்நிதியை யுடையவன் என்னுதல் –ஜென்ம ராமஸ்ய ஸூ மஹத் -என்கிற அவதாரம் ஆதல் -குண பூரணமான சக்கரவர்த்தி திருமகனுக்கு –
குரங்கை யாள் உகந்த வெந்தை கூறு தேற வேறிதே –21-
ராவணனை தேவரீரே அழியச் செய்து -பிரதிபஷத்தை வென்று தந்தாரார்களாக- ஸ்ரீ வானர வீரர்களை ஆதரித்தது போலே–நித்ய ஸூரிகளை அடிமை கொள்ளும் ஏற்றத்தை உடையனாய் வைத்து திர்யக்குகள் என்று இகழாதே அடிமை கொண்ட இத்தை தனது பேறாக நினைத்து இருக்கையாலே என் நாதனே என்கிறார் –
ஏமருவும் வெம் சிலை வலவா! ராகவனே! தாலேலோ– 8-4–
ஆரேனும் பிடிக்கிலும் ஏவிலே மீட்டும் ஸ்ரீ சார்ங்கத்தை உன் நினைவிலே வரும் படி செலுத்த வல்லவனே –
பெயர்கள் ஆயிரம் யுடைய வல்லரக்கர் புக்கு அழுந்தத் தயரதன் பெற்ற மரகத மணித் தடம் -10- 1-8-
பெரு மிடுக்கரான அசுரர்கள் புக்கு-அழுந்தும்படி –சக்கரவர்த்தி பெற்ற-நீல மணி போலே எல்லாருக்கும் இனியனை-அடியவர்கட்கு பாதுகாவலனாய்- ருக்கிற-தடாகத்தை-அடைந்து வந்து அடியவர் தொழுமின்-மயா த்வம் சம் அநுஜ்ஞாத கச்ச லோகன் அநுத்தமான்-ஆரண்ய -68-30- என்னால் நீவிர் அனுமதிக்கப் பட்டவராய் மேலான உலகத்தை அடைவீராக-என்கிறபடியே -பறவையையும் -ஜடாயுவையும் –வழி நடத்துமவன் அன்றோ -–-சம்ஹாரிணா ராகவ சாகரேன ப்ரச்சாத்யமானா தாச பவத்பி- யுக்தஸ்து அயம் தாரயிதம் சமேத்ய காகுஸ்த பாதாளமுகே பதான் ச -யுத்த -14-20–இராமபிரான் ஆகிற வடவாமுகாக்னியில் விழுகின்றவனான-அந்த இராவணன் -என்கிறபடியே விரும்பாத பகைவர்க்கு அழிவினைத் தரத் தக்கவனாய்-அன்றோ இருப்பது
சக்கரவர்த்தி பெற்ற-நீல மணி போலே இருக்கிற-தடாகத்தை-அடைந்து வந்து அடியவர் தொழுமின்–பதி தரு மரு வாபீ வாரிவத் சர்வ போக்கியம் -பிரமாணம்–மரு பூமி -நீரும் நிழலும் இல்லாத இடம்-வழியில் உள்ள மரம் என்ன-மரு பூமியில் உள்ள தண்ணீர் என்ன-இவற்றைப் போன்று எல்லாருக்கும் இனியனை -என்கிறபடியே-அடியவர்கட்கு பாதுகாவலனாய்-சம்ஹாரிணா ராகவ சாகரேன ப்ரச்சாத்யமானா தாச பவத்பி-யுக்தஸ்து அயம் தாரயிதம் சமேத்ய காகுஸ்த பாதாளமுகே பதான் ச -யுத்த -14-20-இராமபிரான் ஆகிற வடவாமுகாக்னியில் விழுகின்றவனான-அந்த இராவணன் -என்கிறபடியே விரும்பாத பகைவர்க்கு அழிவினைத் தரத் தக்கவனாய்-அன்றோ இருப்பது மயா த்வம் சம் அநுஜ்ஞாத கச்ச லோகன் அநுத்தமான்-ஆரண்ய -68-30-என்னால் நீவிர் அனுமதிக்கப் பட்டவராய் மேலான உலகத்தை அடைவீராக-என்கிறபடியே -பறவையையும் -ஜடாயுவையும் –வழி நடத்துமவன் அன்றோ –
—————-
தாடகை வதம்
முன் வில் வலித்து முது பெண் உயிர் உண்டான் தன் வில்லின் வன்மையைப் பாடிப் பற
தாசரதி தன்மையைப் பாடிப் பற – 3-9-2- –
விஸ்வாமித்ர மகரிஷியினுடைய அத்ரவா த்ராணார்த்தமாக-(யாக ரக்ஷணத்துக்காக )
மகரிஷியோடே கூட எழுந்து அருளின அளவிலே
திண் திற லாள் தாடகை தன் உரம் உருவ சிலை வளைத்தாய்!–8-2-
திரு நாபீ கமலத்திலே லோகம் எல்லாம் ஸ்ருஷ்டித்தவனே-ஸ்ருஷ்டிக்குமது அன்றியே -பயிரைச் செய்து களை பிடுங்குமா போலே ஆசூர வர்க்கத்தைப் போக்கின படி
திண்ணிய திறலை உடையளான தாடகை உரத்தை மாறுபாடு உருவ வில்லை வளைத்தவனே-யாகங்களையும் பிராமணரையும் -தபச்சுக்களையும் – அழித்துக்
கொண்டு திரியும் -ராஷசியான தாடகை – அதிரக் கூப்பிட்டு கைகளையும் எடுத்துக் கொண்டு -மிருந்த மிகுந்த கோபத்தோடு நலிவதாக அடர்ந்து வர –ஸ்ரீ விஸ்வாமித்ர நியோகத்தாலே -திருக் கையில் வில் வளைத்து அவளுடைய பிராணனை முடித்தவன் –அவன் தன்னுடைய வில்லின் வன்மையை பாடிக் கொண்டு பற என்று எதிரியைப் பார்த்து சொல்லுகிறாள்-காயும் கடும் சிலை -என்கிற படியே-பிரதிபஷ நிரசனத்திலே -பெருமாள் கண் பார்க்கிலும் கண் பாராமல் கார்யம் செய்யும் திண்மை —இத்தால்- இவ் அதி மானுஷ சேஷ்டிதங்களை செய்யா நிற்கச் செய்தேயும் மீளவும் ஈஸ்வர கந்தம் அற ஐயர் மகன் -என்றே தன்னை நினைத்து நின்று கார்யம் செய்த குணத்தை சொல்லுகிறது
வந்து எதிர்ந்த தாடகை தன் உரத்தை கீறி வரு குருதி பொழி தர வன் கணை ஒன்றேவி
மந்திரம் கொள் மறை முனிவன் வேள்வி காத்து வல் அரக்கர் உயிர் உண்ட மைந்தன் காண்மின்–– 10-2–
தான் மிகைத்து வந்து மேலிட்ட தாடகையை -நக்ர்த்திக்கு-சந்நிவேசத்துக்கு – ஒப்பில்லாதவள் – தன்னிகர் ஒன்றில்லாத தாடகை இறே –ஸ்ரீ பெருமாள் பக்கல் பொல்லாங்கு நினைத்த நெஞ்சை -மலை போலே பிளந்து-செம்பாட்டுத் தரையிலே-செம்மண் தரையிலே- மலை யருவி விழுந்தால் போலே ருதிரம் வந்து கொழிக்க –
வலிக்கு ஒப்பில்லாத திருச் சரத்தை நடத்தி-ரிஷி தனக்கே தனக்கு என்னாதபடி நிர்ப்பரனாய்த் தன்னுடைய அனுஷ்டானங்கள் எல்லாம் அடைவே அனுஷ்டித்து
யாகத்தைத் தலைக் கட்டும்படி பண்ணி-யஜ்ஞ் விக்னரரான மாரீச ஸூபாஹூகளைக் முடித்த பிள்ளைத் தனத்தை உடையவனை-மாரீசன் பட்டானோ என்னில் -பின்னை இருந்த இருப்பு ம்ருத ப்ராயன் என்று கருத்து
வல்லாளரக்கர் குலப்பாவை வாட முனி தன் வேள்வியைக்
கல்விச் சிலையால் காத்தானூர் கண்ண புரம் நாம் தொழுதுமே —8-6-3-
வலிய ஆண்மையை உடைய ராஷச ஜாதிக்காக கண் காட்டி யானவள் முடியும்படியாக –பாவை -மரப்பாவை -அத்தைப்போலே தர்சனீயம் –கண் காட்டி -ராக்ஷஸர்களுக்கு முதலில் இருந்து காட்டிய தாடகை அன்றோ -ருஷியினுடைய யாகத்தை – ஸ்ரீ பரசுராமன் ஆழ்வானை வென்று தன்னைதான வில்லை ( வைஷ்ணவ சாபம் ) வாங்குவதற்கு முன்பே
பிடித்த வில்லைக் கொண்டு காத்தானூர் –
சுடு சரமடு சிலைத் துரந்து நீர்மையிலாத தாடகை மாள நினைந்தவர் –9-8-4-
எதிரிகள் மேலே நெருப்பைத் தூவிக் கொண்டு சென்று விழுகிற அம்புகளை முடிக்க வற்றான வில்லிலே தொடுத்து விட்டு –ஸ்த்ரீத்வ பிரயுக்தமான மென்மை இல்லாத தாடகை முடியும்படியாக ஒரு ருஷி வாக்யத்தையே கொண்டு ஸ்திரீ வதம் என்று பிற்காலியாதே
ரஷகரான நமக்கு ரஷ்ய வர்க்கத்தின் உடைய ரஷணத்துக்கு ஏகாந்தமானது செய்ய வேண்டாவோ -என்று அவள் முடியும்படி திரு உள்ளத்திலே கொண்டவன் –
தன்னிகர் ஓன்று இல்லாத தாடகையை மா முனிக்காத்
தென்னுலகம் ஏற்றுவித்த திண் திறலும் மற்றிவை தான்—–147
தனக்கு ஒப்பார் இன்றிக்கே பெரிய மலை போலே இருக்கிற வடிவை யுடைய தாடகையை-
ஸ்திரீ வதம் பண்ணிற்று -என்று மடியைக் கோத்துப் பிடித்து கேட்டால்-ஒரு பார்ப்பான் சொல்லச் செய்தேன் -என்று ஆயிற்றுச் சொல்லுவது-இது பட்டர் அருளிச் செய்யக் கேட்டேன் -என்று பிள்ளை அருளிச் செய்வர்-அவன் ஒருவன் படி இருந்த படி என்-ஸ்ரீ ஜனக ராஜன் திருமகள் உடைய ஆற்றாமைக்கு உதவ கடுகக் கொடு சென்றவன் கையும் மடலுமாய் இருக்கிற என் ஆற்றாமைக்கு உதவக் கொடு வராது ஒழிவதே –
—————
3-விச்வாமித்ரர் வேள்வி காத்தல்-
மாமுனி வேள்வியை காத்து அவபிரதம்
ஆட்டிய அடு திறல் அயோத்தி எம் அரசே!
அரங்கத்தம்மா! பள்ளி எழுந்து அருளாயே--4-
விஸ்வாமித்ர ப,கவானுடைய யாக,த்துக்கு விக்ந கர்த்தாக்களாய், ராவண வதத்துக்கு அடியான தாடகாதாட கேயரை நிரஸித்து.(அவபிரதமாட்டிய ) ஸ்மாராதக ரூபமான கர்த்தவ்யம் தலைக் கட்டி ஸத்ரு பக்ஷம் மண்ணுண்ணும்படியான மிடுக்கை உடையராய்,திரு வயோத்யைக்கு நிர்வாஹகராய் வைத்து அவ் வவதாரத்துக்குப் பிற்பாடருமிழக்க வேண்டாதபடி திரு வயோத்யையிலுங் காட்டில் கோயிலை விரும்பின ஸர்வாதிகரான தேவரீர் உணர்ந்தருளி அடிமை கொண்டருள வேணும் என்கிறார்.
லங்கையை அழிக்கைக் கடியான வீர ஸ்ரத்தையைச் சொல்லுகிறார். தந்தாம் கார்யங்களைத் தாந்தாமே மநநம் பண்ணுமவர்கள் முனிகள்; இவனுக்கு மா முனித்வமாவது-தன்னுடைய தபஸ்ஸை யழிய மாறி அவர்களை ஸபித்து, தன்னுடைய பாரதந்த்ர்யத்தையும் அழித்து, பக,வத் ஸ்வாதந்த்ர்யத்தையும் அழியாதே-சக்ரவர்த்தித் திருமகனைக் கொண்டே கார்யம் தலைக் கட்டிக் கொள்ளுகை. (மாமுனியான வில்வமித்திரருடைய யாகத்தை ரக்ஷித்து. ‘முனிவர்’ என்னும் பதம் எப்பொழுதும் மனனம்(சிந்தனம்) செய்பவரைக் குறிக்கும் நினைந்திருந்தே சிரமந் தீர்ந்தேன்” [பெரியாழ் திரு 5-4 8] என்கிறபடியே எம்பெருமானையே மனனம் செய்து அவனாலே தங்களுடைய தாபங்களை ஆற்றிக் கொள்கிறவர்கள் மாமுனிகள்’ ஆகிறார்கள்.)
வந்து எதிர்ந்த தாடகை தன் உரத்தை கீறி
வரு குருதி பொழி தர வன் கணை ஒன்றேவி
மந்திரம் கொள் மறை முனிவன் வேள்வி காத்து
வல் அரக்கர் உயிர் உண்ட மைந்தன் காண்மின்–10-2-
தான் மிகைத்து வந்து மேலிட்ட தாடகையை -நக்ர்த்திக்கு-சந்நிவேசத்துக்கு –ஒப்பில்லாதவள் – தன்னிகர் ஒன்றில்லாத தாடகை இறே –ஸ்ரீ பெருமாள் பக்கல் பொல்லாங்கு நினைத்த நெஞ்சை -மலை போலே பிளந்து-செம்பாட்டுத் தரையிலே-செம்மண் தரையிலே- மலை யருவி விழுந்தால் போலே ருதிரம் வந்து கொழிக்க –
வலிக்கு ஒப்பில்லாத திருச் சரத்தை நடத்தி-ரிஷி தனக்கே தனக்கு என்னாதபடி நிர்ப்பரனாய்த் தன்னுடைய அனுஷ்டானங்கள் எல்லாம் அடைவே அனுஷ்டித்து
யாகத்தைத் தலைக் கட்டும்படி பண்ணி-யஜ்ஞ் விக்னரரான மாரீச ஸூபாஹூகளைக் முடித்த பிள்ளைத் தனத்தை உடையவனை-மாரீசன் பட்டானோ என்னில் -பின்னை இருந்த இருப்பு ம்ருத ப்ராயன் என்று கருத்து
முனி தன் வேள்வியைக் கல்விச் சிலையால் காத்தானூர் கண்ண புரம் நாம் தொழுதுமே —8-6-3-
வலிய ஆண்மையை உடைய ராஷச ஜாதிக்காக கண் காட்டி யானவள் முடியும்படியாக –பாவை -மரப்பாவை -அத்தைப்போலே தர்சனீயம் – கண் காட்டி -ராக்ஷஸர்களுக்கு முதலில் இருந்து காட்டிய தாடகை அன்றோ -ருஷியினுடைய யாகத்தை – ஸ்ரீ பரசுராமன் ஆழ்வானை வென்று தன்னைதான வில்லை ( வைஷ்ணவ சாபம் ) வாங்குவதற்கு முன்பே பிடித்த வில்லைக் கொண்டு காத்தானூர் –
————-
4-ஸ்ரீ சீதா விவாஹம்-
சிலை ஓன்று இறுத்தாய் –2-3-7-
ஸ்ரீ ஜனக ராஜன் திரு மகளுக்கு சுல்கமாக விட்டதாய் -ஒருவரால் பேர்க்க எடுக்க
ஒண்ணாதபடி -அத்வீதியமாய் இருந்துள்ள -ரவ்த்ரமான வில்லை இறுத்தவனே
(வில் விழா –அந்த வில் -ஓன்று -அத்விதீயம் இல்லையே ஆகையால் இங்கு இந்த வியாக்யானம் )
என் சிற்றாயர் சிங்கமே சீதை மணாளா –3-3-5-
எனக்கு பவ்யனாய் -தன்னேராயிரம் பிள்ளைகள் -என்கிற சிறு பிள்ளைகளோடு
சிம்ஹக் கன்று போலே -மேணானிப்பு தோற்ற விளையாடித் திரிகிறவனே –பிரதிகூல நிரசனமும் அனுகூல ரஷணமும் கண்டால் –பார்த்தாரம் பரிஷஸ்வஜே -என்கிறபடியே –
உகந்து அணைக்கும் ஸ்ரீ ஜனகராஜன் திரு மகளுக்கு வல்லபன் ஆனவனே
செறிந்த மணி முடிச் சனகன் சிலையிறுத்து நினைக் கொணர்ந்த தறிந்து -3-10-1-
நெருங்கின ரத்னங்களோடே கூடின அபிஷேகத்தை யுடைய ஜனக ராஜன் –
தேவரீருக்கு சுல்கமாக விட்டு வில்லை முறித்து-இந்த வில்லை வளைத்தாருக்கு இவளைக் கொடுக்கக் கடவோம் -என்று வீர்ய சுல்கமாக அவன் கல்பித்து வைத்த வில் இறே அது –அப்படி இருக்கிற வில்லை வளைக்கத் தானும் லோகத்தில் ஆள் இன்றிக்கே இருக்க திருக் கையில் பலத்துக்கு இலக்குப் போராமையாலே-அத்தை முறித்து(எடுத்தது கண்டனர் இற்றது கேட்டனர் )-நினைக் கொணர்ந்த தறிந்து இயம் ஸீதா மமஸூதா ஸஹ தர்ம சரீதவ-ப்ரதீச்ச சைநாம் -பத்ரந்தே – பாணிம் க்ருஹணீஷ்வ பாணிநா (பால) என்கிறபடியே இவளைக் கைக் கொண்டு அருள வேணும் என்று சமர்ப்பிக்க தேவரீரை பாணி கிரஹணம் பண்ணிக் கொண்டு போந்த சேதியை அறிந்து
காந்தள் முகிழ் விரல் சீதைக்காகிக் கடும் சிலை சென்று இறுக்க
வேந்தர் தலைவன் ஜனக ராஜன் தன் வேள்வியில் கண்டார் உளர் –4- 1-2 –
செங்காந்தள் முகிழ் இதழ் போல் இருக்கிற திரு விரல்களை உடைய ஸ்ரீ பிராட்டிக்காக -விச்வமித்ர மஹரிஷி கொடு செல்லச் சென்று –ரௌத்ரமாய் ஒருவரால் எடுக்கவும் வளைக்கவும் அரிது என்று கிடந்த வலிய வில்லை முறிக்க (ருத்ரனுடைய வில் அன்றோ )-ராஜ தர்மத்தோடு தத்வ ஞான அனுஷ்டானங்களையும் உடையவன் ஆகையாலே (ராஜ ரிஷி அன்றோ )ராஜக்களுக்கு எல்லாம் தலைவனான ஸ்ரீ ஜனக ராஜன் உடைய யாகத்திலே கண்டார் உளர்
காரார் திண் சிலை இறுத்து மைதிலியை மணம் புணர்ந்து
வாராரும் இளம் கொங்கை மைதிலியை மணம் புணர்வான் காரார் திண் சிலை இறுத்த-4-1-8-
தோற்றுகிற போதே வாராலே தாங்க வேண்டும்படியான முலையை உடைய ஸ்ரீ ஜனக ராஜன் திருமகளை மணம் புணருகைக்காக-பதி சம்யோக சுலபம் வயோ த்ருஷ்ட்வா சமேபிதா சிந்தார்ணவகத பாரம் நாசசாதாப் லவோயதா -அயோத்யா காண்டம்-வயிரம் பற்றி ஒருவரால் சலிப்பிக்க ஒண்ணாது இருக்கிற வில்லை முறித்த உபமான ரஹிதமான பருவத்தை உடையவன் வர்த்திக்கிற தேசம்
சீதை வாய் அமுதம் உண்டாய் எங்கள் சிற்றில் நீ சிதையேல் என்று–2-10-
கதா நு சாறு பிம்போஷ்டம் தஸ்யா பத்ம மிவாநனம்-
ஈஷதுன் நம்ய பாஸ்யாமி ரசாய நமிவோத்தமம் -யுத்த -5-13-என்கிறபடியே
பருவம் நிரம்பினவளோடே இத் தீம்புகள் செய்தால் அன்றோ உனக்கு பிரயோஜனம் உள்ளது – உன் நினைவு அறிந்து பரிமாறுகைக்கு அளவில்லாத எங்கள் சிற்றிலை வந்து சிதையாதே கொள -என்று
தயரதன் தன் மா முதலாய்! மைதிலி தன் மணவாளா -8-4-
அறுபதினாயிரம் ஆண்டு மலடு நின்ற ஸ்ரீ சக்கரவர்த்தியினுடைய மலடு தீரப் பிறந்தவனே –பிள்ளை பெற்றத்தின் மேலும் பிறப்பில் வந்த ஏற்றத்துக்கு மேலே — யச்யஸா ஜனகாத்மஜா -என்று ஸ்ரீ பிராட்டியை உனக்கு என்று இட்டுப் பிறந்த மேன்மையை உடையவனே
வேய் போலும் எழில் தோளி தன் பொருட்டா விடையோன் தன் வில்லை செற்றாய்!–9-4-
பசுமைக்கும் சுற்றுடைமைக்கும் ஒழுகு நீட்சிக்கும் வேய் போலே இருக்கிற அழகிய தோளை
உடையாளாய் இருக்கிற ஸ்ரீ பிராட்டி நிமித்தமாக –பெரு மிடுக்கனான ருத்ரனுடைய வில்லை முறித்தவனே
செவ்வரி நல் கரு நெடும் கண் சீதைக்காகி சின விடையோன் சிலை இருத்து-10-3-
அஸி தேஷணா -என்கிறபடியே -கண் அழகிலே தோற்று சினத்தை உடைய ரிஷபத்தை
தனக்கு வாஹநமான ருத்ரனுடைய வில்லை ஒருவரால் கிட்ட ஒண்ணாதே வில்லை அநாயாசேன முறித்து அச் செயலிலே தோற்ற ஸ்ரீ பிராட்டியை திருமணம் புணர்ந்து
மின்னின் நுண் இடை மடக்கொடி காரணம் விலங்கலின் மிசை இலங்கை
மன்னன் நீள் முடி பொடி செய்த மைந்தன்-3-1-7-
ஆத்ம குணங்களுக்கு எல்லாம் தானே ஆஸ்ரயமாய் ஒரு உபக்னத்தோடே சேர்க்க வேண்டும்படியான பருவத்தை உடைய ஸ்ரீ ஜனகராஜன் திருமகள் ஹேதுவாக –
பிரிவில் ரஷகனை இவ்வார்த்தை சொல்லுவிக்கும்படியான அழகு இறே-ஸூ வேல சைலமாய் -அதின் மேலே த்ரி கூடமாய் -அதின் மேலே படைவீடாய் இறே இருப்பது இப்படி ஒருவரால் அழிக்க ஒண்ணாத படை வீட்டுக்கு நான் ராஜா அல்லனோ என்று அபிமானித்து இருக்கிற பையலுடைய- தேவதைகள் உடைய வரங்களால் பூண் கட்டி இருக்கிற முடிகள் பத்தும் துகளாம்படி பண்ணின மிடுக்கனானவான்
விரை கமழ்ந்த மென் கரும் குழல் காரணம் வில்லிறுத்து –கலியன் —3–1–8-
நறு நாற்றம் கமழா நிற்பதுமாய் மிருதுவான கரும் குழலை உடைய ஸ்ரீ ஜனக ராஜன் திரு மகள் ஹேதுவாக வில்லை முறித்து –
வாராரும் இளம் கொங்கை மைதிலியை மணம் புணர்வான்
காரார் திண் சிலை இறுத்த தனிக் காளை கருதும் இடம்-4-1-8-
ஸ்ரீ ஜனக ராஜன் திருமகளை மணம் புணருகைக்காக-பதி சம்யோக சுலபம் வயோ த்ருஷ்ட்வா சமேபிதா சிந்தார்ணவகத பாரம் நாசசாதாப் லவோயதா -அயோத்யா காண்டம்-வயிரம் பற்றி ஒருவரால் சலிப்பிக்க ஒண்ணாது இருக்கிற வில்லை முறித்த உபமான ரஹிதமான பருவத்தை உடையவன் வர்த்திக்கிற தேசம்
நெறித்திட்ட மென் கூழை நன்னேரிழையோடு உடனாய வில்லென்ன வல்லேயதனை
இருத்திட்டவள் இன்பம் அன்போடணைந்தித்திட்டு இளங் கொற்றவனாய்–—10-6-8-
நெறித்து மிருதுவான மயிர் முடியை உடையளாய் விலஷணமான ஆபரணங்களாலே அலங்க்ருதையான பிராட்டியோடு ஒக்கப் பிறந்த தனுஸ் பிரசித்தியை உடைத்தாய் மிடுக்கை உடைத்தாய் இருக்கிற அந்த வில்லை – இவ் வில்லை முறித்தாருக்கு இவளைக் கொடுக்கக் கடவதாக நியமித்த படியாலே உடையனாய் -என்கிறது-அல் -என்று இருளாய் -இருண்ட வில் என்னவுமாம்-அந்த வில்லை முறித்து அவளோட்டை சம்ஸ்லேஷ சுகத்தை ப்ரீதியோடு லபித்து யுவ ராஜாவாய்
வில்லிறுத்து மெல்லியல் தோள் தோய்ந்தாய் என்னும்–13-
பிராட்டியை லபிக்கைக்கு இடைச் சுவரான வில்லை முறித்து –அவ் வாண் பிள்ளைத் தனத்தைக் காட்டி ஸ்த்ரீத்வத்தால் வந்த அபிமானத்தையும் போக்கி பிரக்ருத்யா ம்ர்துவாய் இருந்துள்ள பிராட்டியோடு சம்ஸ்லேஷித்தவனே-ஸ்ரீ ஜனக சக்கரவர்த்தி இவ் வில்லை முறித்தார்க்கு இவளைக் கொடுக்கக் கடவோம் -என்று பிரதிஞ்ஞை பண்ணுகையாலே வில்லை எடுத்து நாண் ஏறிட்டு வலிக்கப் புக்க அளவிலே வில்லை முறித்து அவ் வளவிலே பொற் கிண்டியைக் கொண்டு உதகம் பண்ணப் புக ராஜ குமாரர் ஆகையாலே வீர வாசி கொண்டாட வந்தோம் இத்தனை ஒழிய விவாஹம் தாழ்த்து பெண் தேடி வந்தோமோ நாங்கள் –அத்தை வசிஷ்டாதிகளையும் ஐயரையும் கேட்பது என்ன –வில்லை முறித்த ஆண் பிள்ளைத் தனத்தையும் வார்த்தை சொன்ன சீர்மையையும் கண்டு நீராடினாள் பிராட்டி – அவ் வில் முறித்த ஆயாசத்தாலே வந்த ஸ்ரமம் தீர அவள் தோளில் முழுகினான் -ஆய்த்து-விபுத்வம் ஏக அவயவத்தில் அடங்கினபடி – அல்லாத அவயவங்களும் ஆத்ம குணங்களும் குமர் இருந்து போம் இத்தனை –இத்தால் – நித்ய அநபாயிநியான பிராட்டியைப் பிரிந்தாலும் உதகம் பண்ணுவாறும் சேர்ப்பாரும் வேண்டி இருக்கிறபடி – சேதனனுக்கும் இவளோபாதி அனந்யார்ஹத்வம் ஸ்வரூபத்தில் உண்டானாலும் ஆச்சார்யா சமாஸ்ரயணனும் புருஷகார அபேஷையும் உண்டாய் இறே ஈஸ்வர விஷயீ காரத்துக்கும் இருப்பது – உன்னைப் பிரிந்து தனி இருப்பாருடைய ஆபத்தை போக்கின நீ என் தனிமையால் வந்த ஆபத்தை போக்காது ஒழிவதே –
5-பரசுராமன் கர்வம் அடக்குதல்
இருபத்தொரு கால் அரசு களை கட்ட-மழுவாளேந்தி வெவ்வரி நற் சிலை வாங்கி வென்றி கொண்டுஅவன் தவத்தை முற்றும் செற்று,அம் பொன் நெடு மணி மாட அயோத்தி எய்தி அரியணை மேல் மன்னன் ஆவான் நிற்க;
இருபத்தோர் கால் அரசு களை கட்ட வென்றி நீள் மழுவா? -6-2-10-
மிடுக்கரான அரசர்களை இருபத்தொருபடிகால் வென்ற உனக்கு அபலைகளான எங்களை வெல்லுகை பெரிய பணியோ?-“எனக்கு” என்று இருப்பாரையும் உனக்கு ஆக்கிக் கொள்ளவல்ல உனக்கு உனக்கேயாய் இருப்பாரை வெல்லுகை பெரிய ஏற்றமோ?-இராஜாக்களை வென்ற உனக்கு ஆய்ச்சியர்களை வென்றாய் என்பது ஓர் ஏற்றமோ?-அசுரத்தன்மை வாய்ந்தவர்களாய் நாட்டினைப் பட அடித்துத் திரிந்த க்ஷத்திரிய குலத்தைக் கிழங்கு எடுத்த மிடுக்கனே!-களை கட்டுகையாவது – எடுத்துப் பொகடுகை-ஜீவ ஸ்வா தந்த்ரமே மறம் கிருஷி பலன் பெற்றோம் என்று மகிழ்வானே
மழு வாள் ஏந்தி செவ்வரி நல் சிலை வாங்கி வென்றி கொண்டு வேல் வேந்தர் பகை தடிந்த வீரன் தன்னை-10-3-
ஸ்ரீ பிராட்டியை திருமணம் புணர்ந்து எழுந்து அருளா நிற்க வழியிலே வந்து தோற்றின -தன் க்ரைர்யத்துக்குத் தக்க மழுவாகிற ஆயுதத்தையும் உடைய ஸ்ரீ பரசுராம ஆழ்வானுடைய-வெம்மையை உடைத்தாய் தர்ச நீயமான வில்லை வாங்கி இவனை வென்று தான் திருவவதாரம் பண்ணின ஷத்ரிய குலத்துக்கு பகை தீர்ந்த வீரத்தை யுடையவனை
முன் ஒரு நாள் மழு வாளி சிலை வாங்கி அவன் தவத்தை முற்றும் செற்றாய்-9-9-
முன் ஒரு காலத்திலே மழுவை ஆயுதமாக உடைய ஸ்ரீ பரசுராமன் கையிலே
ஸ்ரீ சார்ங்கத் திரு வில்லை வாங்கி-அவன் லோகாந்தரங்களை ப்ராபிக்கக் கடவதாக ஆர்ஜித்த தபஸ்ஸை அவ்வம்பாலே அழித்துப் பொகட்டாய்-
என் வில் வலி கண்டு போ என்று எதிர் வந்தான்
தன் வில்லினோடும் தவத்தை எதிர் வாங்கி
முன் வில் வலித்து முது பெண் உயிர் உண்டான்
தன் வில்லின் வன்மையைப் பாடிப் பற
தாசரதி தன்மையைப் பாடிப் பற – 3-9-2- –
பெருமாள் திரு மணம் புரிந்து (புணைந்து) மீண்டு எழுந்து அருளா நிற்கச் செய்தே
ஒரு சொத்தை வில்லை வளைத்தாய் -முரித்தாய் -என்றால் போல் சொல்லுகிறது
இது ஓர் ஏற்றமோ -என்று சில வன்மைகளைச் சொல்லித் தன் தப பலமாய் இருபத்தொரு ஆவேச சக்தி விசேஷத்தாலே எடுத்த கார்யம் பலித்துப் போந்த கர்வத்தாலே எதிரே வந்து
என் வில் வலி கண்டு போனாயானால் நீ சமர்த்தன் -என்ற பரசுராமனுடைய-இது ஒரு தபஸ்ஸை வியாஜமாக்கி பல பிரதானம் பண்ணின அவனை அறியாமை இறே
தன் வில் -என்ன வேண்டிற்று தபஸ்ஸைத் தானும் இவன் தன்னது என்று நினைத்து இருக்கிறது (கர்த்ருத்வ மமதா பல தியாகம் மூன்றும் இருக்க வேண்டுமே )-வாங்கும் போது
ஹேதுவான தபஸ்ஸூ முன்னாக வாங்க வேண்டி இருக்க வில் முன்னாக அருளிச் செய்ய வேண்டிற்று தபஸ்சிலும் தபஸ் பல கர்வமாகையாலே-வாங்கும் போது ஹேதுவான தபஸ்ஸூ முன்னாக வாங்க வேண்டி இருக்க வில் முன்னாக அருளிச் செய்ய வேண்டிற்று
தபஸ்சிலும் தபஸ் பல கர்வமாகையாலே-இது தான் வாங்கும் போது தபஸ் பல போக ஆரம்ப மத்யம நிகமன (முக் ) காலங்களில் அத்யுத்கடம் (நியாயம் மீறும் செயல்கள்) ப்ரவ்ருத்தமானால் வாங்கலுமாய் இருக்கும் இறே
அதி மானுஷ சேஷ்டைகளிலே ஸ்ரத்தாளுக்களாய் (ஈடுபாடு கொண்டவர்களாய் )-
ஈஸ்வர சக்தி ஆவேச பல ஸா பேஷராய்த் தபஸ்ஸூ பண்ணி தபஸ் பலமான ஆவேசம் நீங்கினாலும் ஸ்வயம் க்ருத கர்வத்தாலே தத் ப்ரவ்ருத்தி பாபம் அனுபவிக்க வேணும் என்னும் பீதியாலே ஸ்வரூப ஆவேச ஸா பேஷனாய் ஸ்வ விரோதி நிரசன சமநந்தர காலத்தில் ஸ்வ கர்த்ருத்வ கர்மம் உண்டானாலும் தத் ப்ரவ்ருத்தி பாப பலம் அனுபவிக்கக் கடவன் அல்லேன் -என்று இதுக்கு ஈடான துஷ்கர தபஸ்ஸைப் பூர்வ மேவ செய்கையாலே இறே இவனை தசாவதார மத்யே பரிகணித்து
அம் பொன் நெடு மணி மாட அயோத்தி எய்தி-10-8-
திரு அபிஷேகத்துக்கு ஈடாக அலங்கரித்து -தர்ச நீயமாய் ஒக்கத்தை உடைத்தாய் நல்ல ரத்னங்களாலே சமைக்கப் பட்ட மாடங்களை உடைய ஸ்ரீ திரு அயோத்யையிலே ஜகத்தை எல்லாம் உகக்கும் படி எழுந்து அருளி
6-கூனி கூனை நிமிர்த்தல்
கூனகம் புகத் தெறிந்த சொற்ற வில்லி யல்லையே –திருச்சந்த –30-
கூனி உடைய கூன் உள்ளே அடங்கும்படி யாகச் சுண்டு வில்லைத் தெறித்த
இத்தால் -அவதாரத்தில் மெய்ப்பாட்டால் வந்த மௌக்த்யமும் ரஷகமாய் இருக்கும் என்கை –
ரஷக வஸ்துவானால் அதில் உள்ளது எல்லாம் ரஷகமாய் இறே இருப்பது-வில் பிடித்த போது -அக்கையையும் வில்லையும் கண்ட போதே ராவணாதிகள் குடல்
குழம்பும்படியான வீர ஸ்ரீ யைச் சொல்லுகிறது –கொற்றம் -வென்றியும் -வலியும்
கொண்டை கொண்ட கோதை மீது தேனுலாவு கூனி கூன்
உண்டை கொண்டு அரங்கவோட்டி யுண் மகிழ்ந்த நாதனூர்–49-
மயிர் முடியிலே உண்டான மாலையின் மேல் வண்டுகள் சஞ்சரிக்கும்படியான
ஒப்பனையாலே ஸ்ப்ர்ஹணீய வேஷை யான கூனி – இத்தால் –சேதனனுடைய நிஷ்க்ர்ஷ்ட ஸ்வரூபம் ஸ்ரீ கௌஸ்துபம் போலே ஈஸ்வரனுக்கு ஸ்ப்ர்ஹணீ யம் என்று கருத்து –கீழ்ச் சொன்ன வடிவுக்கும் ஒப்பனைக்கும் சேராதே அவளுக்கு நிரூபகமாகப் போந்த கூனை
இத்தால் -ஸ்வரூப விரோதியாய் -தேவோஹம் மனுஷ்யோஹம் –என்று நிரூபகமாய்
ஸ்வரூபத்துக்கு அவத்யமுமாய் இருந்துள்ள அஹங்காரத்தை நினைக்கிறார்-லீலார்தமாக வில்லிலே உண்டியை வைத்து கூனை உள்ளே புகும்படி ஒட்டித் தெறித்து அவத்யமான அஹங்காரத்தை அநாயேசேநப் போக்க வல்ல சக்தியை நினைக்கிறார்-ஆஸ்ரிதருக்கு அவத்யமான அஹங்காரத்தை அநாயாசேநப் போக்குகையாலே ஹ்ர்ஷ்டனாய் -அச் செயலாலே என்னை எழுதிக் கொண்ட சக்கரவர்த்தி திருமகன்
வர்த்திக்கிற தேசம் -இத்தால் -ஆஸ்ரிதருடைய அவத்யங்களைப் போக்கி உகப்பானும் தானே என்கை –
ஒரு கால் நின்றுண்டை கொண்டோட்டி வன் கூன் நிமிர நினைந்த பெருமான்-10-6-2-
முன்பு நின்ற நிலையிலே நின்று வில்லில் உண்டான உண்டைகளை நடத்தி வலிய கூன் நிமிரும்படி செய்த சர்வேஸ்வரன் –(கண்ணனுக்கு முன்பு நின்ற நிலை -ராமனின் சேஷ்டிதம் என்றும் உண்டை வில் தெரித்தாய் கோவிந்தா )
கூனே சிதைய உண்டை வில் நிறத்தில் தெறித்தாய் கோவிந்தா!-1-5-5-
வன வாசத்திற்குக் காரணமான -ஹேதுபூதையான- குப்ஜையைச் சொல்லிற்றாய்,
இளமையில் சுண்டு வில் கொண்டு திரிகிற காலத்தில் பெருமாள் லீலாரசம் அனுபவித்தார் என்பது ஒன்று உண்டு; அதனை நோக்கிச் சொல்லுகிறார்.-அப்போது ‘கோவிந்தா’ என்றதற்குப் ‘பூமியைக் காப்பவன்’ என்பது பொருள். அவளுடைய மற்றை உறுப்புகட்கு ஒரு வாட்டம் வாராதபடி நிமிர்த்தானாதலின், ‘கூனே சிதைய’ என்கிறார்.-தீம்பு சேர்வது கிருஷ்ணனுக்கே ஆகையாலே ‘போம்பழி எல்லாம் அமணன் தலையோடே’ என்னுமாறு போன்று,கிருஷ்ணன் தலையிலே ஏறிட்டுச் சொல்லுகிறார் என்றலுமாம்-இனி, சாந்து கொடுத்த கூனி தன்னையே சொல்லிற்றாய், வருத்தம் அறச் சுண்டு வில் நிமிர்க்குமாறு போன்று கூனை நிமிர்த்தவன் என்றலும் ஒன்று.
———————————————–———————————————–
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வால்மீகி பகவான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஹனுமத் பரத சத்ருக்ந லஷ்மண ஸீதாப் பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply