தாரித்து நூற்றுவர் தந்தை சொற் கொள்ளாது போருய்த்து வந்து புகுந்தவர் மண்ணாளப் பாரித்த மன்னர் படப்
பஞ்சவர்க்கு அன்று தேருய்த்த கைகளால் சப்பாணி தேவகி சிங்கமே சப்பாணி
பஞ்சவர் தூதனாய்ப் பாரதம் கை செய்து –அஞ்சன வண்ணனே அச்சோவச்சோ ஆயர் பெருமானே அச்சோவச்சோ
கழல் மன்னர் சூழக் கதிர் போல் விளங்கி எழலுற்று மீண்டே இருந்துன்னை நோக்கும் சுழலைப் பரிதுடைச்
சுச்சோதனனை அழல விளித்தானே அச்சோவச்சோ ஆயர் பெருமானே அச்சோவச்சோ
போரொக்கப் பண்ணி இப்பூமி பொறை தீர்ப்பான் தேரொக்க ஊர்ந்தாய் செழுந்தார் விசயற்காய் காரொக்கு மேனிக்
கரும் பெரும் கண்ணனே ஆரத் தழுவா வந்து அச்சோவச்சோ ஆயர்கள் போரேறே அச்சோவச்சோ
மெச்சூது சங்கமிடத்தான் நல்வேயூதி பொய்ச்சூதில் தோற்ற பொறை யுடை மன்னர்க்காய் பத்தூர் பெறாதன்று
பாரதம் கை செய்த அத்தூதன் அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான்
மலை புரை தோள் மன்னவரும் மாரதரும் மற்றும் பலர் குலைய நூற்றுவரும் பட்டழிய பார்த்தன் சிலை வளையத்
திண்தேர் மேல் முன் நின்ற செங்கண் அலவலை வந்து அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான்
துரியோதனன் பக்கல் சென்று அங்குப் பாரதம் கை எறிந்தானுக்கு கன்றுகள் மேய்ப்பதோர் கோல் கொண்டு வா
சீரொன்று தூதாய்த் துரியோதனன் பக்கல் ஊரொன்று வேண்டிப் பெறாத வுரோடத்தால் பாரொன்றிப் பாரதம் கை
செய்து பார்த்தற்குத் தேர் ஒன்றை யூர்ந்தாற்கோர் கோல் கொண்டு வா தேவ பிரானுக்கோர் கோல் கொண்டு வா
பாலப்பிராயத்தே பாரதற்கு அருள் செய்த கோலப் பிரானுக்கொர் கோல் கொண்டு வா குடந்தைக் கிடந்தார்க்கோர் கோல் கொண்டு வா
பற்றார் நடுங்க முன் பாஞ்ச சன்னியத்தை வாய் வைத்த போரேறே என் சிற்றாயர் சிங்கமே
பஞ்சவர் தூதனாய்ப் பாரதம் கை செய்து
மன்னர் மறுக மைத்துனன் மார்க்கு ஒரு தேரின் மேல் முன்னங்கு நின்று மோழை எழுவித்தவன் மலை –திருமால் இரும் சோலையே
பாண்டவர் தம்முடைய பாஞ்சாலி மறுக்கம் எல்லாம் ஆண்டு அங்கு நூற்றுவர் தன பெண்டிர் மேல் வைத்த
அப்பன் மலை –தொல்லை மால் இரும் சோலையதே
மருமகன் தன சந்ததியை உயிர் மீட்டு மைத்துனன் மார் உருமகத்தே வீழாமே குருமுகமாய்க் காத்தானூர் –புனல் அரங்கம் என்பதுவே
மைத்துனன் மார் காதலியை மயிர் முடிப்பித்து அவர்களையே மன்னராக்கி உத்தரை தன சிறுவனையும் உய்யக் கொண்ட
உயிராளன் உறையும் கோயில் –திருவரங்கமே
தூது சென்றாய் குரு பாண்டவர்க்காய் அங்கோர் போய்ச் சுற்றம் பேசிச் சென்று பேதம் செய்து
எங்கும் பிணம் படுத்தாய் திரு மால் இரும் சோலை எந்தாய்
மைத்துனன்மார்களை வாழ்வித்து மாற்றலர் நூற்றுவரைக் கெடுத்தாய் சித்தம் நின்பாலதறிதி யன்றே திருமால் இரும் சோலை எந்தாய்
பார் மிகுத்த பாரம் முன் ஒழிச்சுவான் அருச்சுனன் தேர் மிகுத்து மாயமாக்கி நின்று கொன்று வென்றி சேர்
மாரதர்க்கு வான் கொடுத்து வையம் ஐவர் பாலதாம் சீர் மிகுத்த நின்னல்லால் ஒரு தெய்வம் நான் மதிப்பனே
அருள் கொண்டாடும் அடியவர் இன்புற அருளினான் அவ்வருமறையின் பொருள்
அருள் கொண்டு ஆயிரம் இன்தமிழ் பாடினான் அருள் கண்டீர் இவ்வுலகினில் மிக்கதே
———————————-
பார்த்தர்காய் அன்று பாரதம் கை செய்திட்டு வென்ற பரஞ்சுடர்
முன் ஓர் தூது வானரத்தின் வாயில் மொழிந்து அரக்கன் மன்னூர் தன்னை வாளியினால் மாள முனிந்து
அவனே பின் ஓர் தூது ஆதி மன்னர்க்காகி பெரு நிலத்தார் இன்னார் தூதன் என நின்றான் எவ்வுள் கிடந்தானே
பற்றாளர் வீயக் கோல் கையில் கொண்டு பார்த்தன் தன தேர் முன் நின்றானை –திரு வல்லிக் கேணி கண்டேனே
அந்தகன் சிறுவன் அரசர் தம் அரசற்கு இளையவன் அணி இழையைச் சென்று எந்தமக்கு உரிமை செய் எனத் தரியாது எம்பெருமான் அருள் என்ன
சந்தமல் குழலாள் அலக்கண் நூற்றுவர் தம் பெண்டிரும் எய்தி நூல் இழப்ப இந்திரன் சிறுவன் தேர் முன் நின்றானைத் திரு வல்லிக் கேணி கண்டேனே
பொறை தீர முன நாள் அடு வாளமரில் பல மன்னர் படச் சுடராழியினைப் பகலோன் மறையப் பணி கொண்டு
அணி சேர் நில மன்னனுமாய் உலகாண்டவனுக்கு இடம் மா மலையாவது நீர் மலையே
வென்றி கொள் வாளமரில் பாங்காக முன் ஐவரோடு அன்பளவிப் பதிற்றைந்திரட்டிப் படை வேந்தர் பட
நீங்காச் செருவில் நிறை காத்தவனுக்கு இடம் மா மலையாவது நீர் மலையே
பாரேறு பெரும் பாரம் தீரப் பண்டு பாரதத்துத் தூதியங்கி பார்த்தன் செல்வத் தேரேறு சாரதியாய் எதிர்ந்தார் சேனை
செருக்களத்துத் திறல் அழியச் செற்றான் தன்னை –செல்வத் திருக் கோவலூர் அதனுள் கண்டேன் நானே
வேல் கொள் கைத்தலத்து அரசர் வெம் போரினில் விசயனுக்காய் மணித் தேர் கோல் கொள் கைத்தலத்து எந்தை பெம்மானிடம் –திருவயிந்திர புரமே
ஏது அவன் தொல் பிறப்பு இளையவன் வளையூதி மன்னர் தூதுவனாயவனூர் சொல்லுவீர்கள் -சொலீர் அறியேன் –
மாற்றரசர் மணி முடியும் திறலும் தேசும் மற்றவர் தம் காதலிமார் குழையும் தந்தை கால் தளையும் கழல வந்து தோன்றிக்
கத நாகம் காத்தளித்த கண்ணர் மூத்தவருக்கு அரசு வேண்டி முன்பு தூது எழுந்து அருளி மாத்தமர் பாகன் வீழ மத கரி மருப்பு
ஒசித்தாய் –நாங்கை காத்தனே காவளந்தண் பாடியாய் களை கண் நீயே
கரையார் நெடு வேல் மற மன்னர் வீய விசயன் தேர் கடவி –புள்ளம் பூதங்குடி தானே
வாம்பரியுக மன்னர் தம் உயிர் செக ஐவர்கட்கு அரசளித்த காம்பினார் திரு வேங்கடப் பொருப்ப–திரு வெள்ளறை நின்றானே
வெள்ளப் புரவித் தேர் விசயற்காய் விறல் வியூகம் விள்ள சிந்துக்கோன் விழ ஊர்ந்த விமலனூர் –நறையூரே
பாரையூரும் பாரம் தீரப் பார்த்தன் தன தேரை யூரும் தேவதேவன் சேருமூர் –நறையூரே
மிடையா வந்த வேல் மன்னர் வீய விசயன் தேர் கடவி –நறையூர் நின்ற நம்பியே
பந்தார் விரலாள் பாஞ்சாலி கூந்தல் முடிக்கப் பாரதத்து கந்தார் களிற்றுக் கழல் மன்னர் கலங்கச் சங்கம்
வாய் வைத்தான் –நறையூர் நின்ற நம்பியே
மண்ணின் பாரம் கெடுப்பான் மற மன்னர் பண்ணின் மேல் வந்த படை எல்லாம் பாரதத்து விண்ணின் மீதேற விசயன்
தேரூர்ந்தானை நண்ணி நான் நாடி நறையூரில் கண்டேனே
உரங்களால் இயன்ற மன்னர் மாளப் பாரதத்து ஒரு தேரை ஐவர்க்காய்ச் சென்று இரங்கி யூர்ந்து அவர்க்கு இன்னருள் செய்யும் எம்பிரானை
துவரிக்கனி வாய் நிலமங்கை துயர் தீர்ந்துய்ய பாரதத்துள் இவரித்தரசர் தடுமாற இருள் நாள் பிறந்த அம்மானை
அன்று பார்மகள் பயலை தீர்த்தவன் பஞ்சவர் பாகன் ஒன்றலா உருவத்து உலப்பில் காலத்து –திருக் கண்ணங்குடியுள் நின்றானே
அரவு நீள் கொடியோன் அவையுள் ஆசனத்தை அஞ்சிடாதேயிட அதற்குப் பெரிய மா மேனி அண்ட மூடுருவப் பெரும் திசை யடங்கிட நிமிர்ந்தோன் –திருக்கண்ணங்குடியுள் நின்றானே
பண்ணிய பாரம் பார்மகட்கு ஒழியப் பாரத மா பெரும் போரில் மன்னர்கள் மடிய மணி நெடும் திண் தேர் மைத்துனற்கு உய்த்த மா மாயன் –திருக்கண்ணங்குடியுள் நின்றானே
கவ்வைக் களிற்று மன்னர் மாளக் கலிமான் தேர் ஐவர்க்காய் அன்று அமரில் உய்த்தான் ஊர் போலும் –குறுங்குடியே
பார்த்தனுக்கு அன்று அருளிப் பாரதத்து ஒரு தேர் முன் நின்று காத்தவன் தன்னை விண்ணோர் கரு மாணிக்க மா மலையை —
செரு வழியாத மன்னர்கள் மாளத் தேர் வலம் கொண்டு அவர் செல்லும் அரு வழி வானம் அதர் படக் கண்ட ஆண்மை கொலோ அறியேன் நான் –
அன்று பாரதத்து ஐவர் தூதனாய் சென்ற மாயனைச் செங்கண் மாலினை –
மன்னிலங்கு பாரதத்து தேரூர்ந்து –தேவர்க்கு
பார் மன்னர் மங்கப் படை தொட்டு வெஞ்சமத்து தேர் மன்னர்க்காய் அன்று தேரூர்ந்தான் காணேடீ
தேர் மன்னர்க்காய் அன்று தேரூர்ந்தான் ஆகிலும் தார் மன்னர் தங்கள் தலை மேலான் சாழலே
தேரால் மன்னிலங்கு பாரதத்தை மாள ஊர்ந்த வரையுருவின் மா களிற்றைத் தோழீ –
—————————————————————-
மயங்க வலம்புரி வாய் வைத்து வானத்து இயங்கும் எறி கதிரோன் தன்னை முயங்க மருள் தேர் ஆழியால்
மறைத்தது என் நீ திரு மாலே பேர் ஆழிக் கையால் பொருது –
சேயன் அணியன் சிறியன் மிகப் பெரியன் ஆயன் துவரைக் கோனாய் நின்ற மாயன் அன்று
ஓதிய வாக்கதனைக் கல்லார் உலகத்தில் ஏதிலராய் மெய்ஞ்ஞானமில்
மன்னர் பெரும் சவையுள் வாழ்வேந்தர் தூதனாய் தன்னை இகழ்ந்துரைப்பத் தான் முன நாள் சென்றதுவும்
———————————————————————————————————
கொல்லா மாக்கோல் கொலை செய்து பாரதப்போர் எல்லாச் சேனையும் இரு நிலத்து அவித்த வெந்தாய் –
நீர்மையில் நூற்றுவர் வீய ஐவர்க்கு அருள் செய்ய நின்று பார் மல்கு சேனை யவித்த பரஞ்சுடரை
அடியோங்கு நூற்றுவர் வீய அன்று ஐவர்க்கு அருள் செய்த நெடியோனை
இடர் இன்றியே ஒரு நாள் ஒரு போழ்தில் எல்லா வுலகும் கழிய படர் புகழ்ப் பார்த்தனும் வைதிகனும் உடனேறத் திண் தேர் கடவி
சுடர் ஒளியாய் நின்ற தன்னுடைச் சோதியில் வைதிகன் பிள்ளைகளை உடலோடும் கொண்டு கொடுத்தவனைப் பற்றி ஒன்றும் துயர் இலனே
அறிவினால் குறைவில்லா அகல் ஞாலத்தவர் அறிய நெறி எல்லாம் எடுத்துரைத்த நிறை ஞானத்து ஒரு மூர்த்தி
மாறு சேர் படை நூற்றுவர் மங்க ஓர் ஐவர்க்காய் அன்று மாயப்போர் பண்ணி நீறு செய்த வெந்தாய்
மண் மிசைப் பெரும் பாரம் நீங்க ஓர் பாரத மா பெரும் போர் பண்ணி மாயங்கள் செய்து சேனையைப் பாழ்படநூற்றிட்டுப் போய்
விண் மிசைத் தான தாமமே புக மேவிய சோதி தன தாள் நண்ணி நான் வணங்கப் பெற்றேன் எனக்கார் பிறர் நாயகரே
நாடுடை மன்னர்க்குத் தூது செல் நம்பிக்கு என் பாடுடை யல்குல் இழந்தது பண்பே
தென் திருப் பேரெயில் வீற்று இருந்த மகர நெடும் குழைக் காதன் மாயன் நூற்றுவரை யன்று மங்க நூற்ற
நிகரில் முகில் வண்ணன் நேமியான் என் நெஞ்சம் கவர்ந்து எனை யூழியானே
ஊணுடை மல்லர் தகித்த ஒலி மன்னர் ஆணுடைச் சேனை நடுங்குமொலி விண்ணுள் ஏணுடைத் தேவர்
வெளிப்பட்ட வொலி அப்பன் காணுடைப் பாரதம் கையறை போழ்தே
மாயம் அறிபவர் மாயவற்கு ஆளன்றி யாவரோ தாயம் செறும் ஒரு நூற்றுவர் மங்க ஓர் தேசம் அறிய வோர்
சாரதியாய் சென்று சேனையை நாசம் செய்திட்டு நடந்த நல வார்த்தை அறிந்துமே –
வார்த்தை அறிபவர் மாயவற்கு ஆளன்றி யாவரோ –
ஐவர்க்காய் கொடும் சேனை தடிந்து ஆற்றல் மிக்கானை பெரிய பரஞ்சோதி புக்க வரியே
சித்திரத் தேர் வலவா திருச் சக்கரத்தாய் அருளாய்
பிறந்த மாயா பாரதம் பொருத மாயா –உன்னை எங்கே காண்கேனே
கண்ணன் அல்லால் இல்லை கண்டீர் சரண் அது நிற்க வந்து மண்ணின் பாரம் நீக்குதற்கே வடமதுரைப் பிறந்தான்
திண்ணமா நும்முடைமை யுண்டேல் அவனடி சேர்ந்து உய்ம்மினோ எண்ண வேண்டா நும்மதாதும் அவனன்றி மற்றில்லையே –
மன்னஞ்சப் பாரதத்துப் பாண்டவர்க்காகப் படை தொட்டான் நல் நெஞ்சே நம் பெருமான் நமக்கு அருள் தான் செய்வானே
———————————————————-
அடியைத் தொடர்ந்து எழும் ஐ வர்கட்காய் அன்று பாரதப்போர் முடியப் பரி நெடும் தேர் விடும் கோனை முழுது உணர்ந்த
அடியவர்க்கு அமுதம் இராமானுசன் என்னை யாள வந்து இப்படியில் பிறந்தது மற்றில்லை காரணம் பார்த்திடிலே
சரணம் அடைந்த தருமனுக்கா பண்டு நூற்றுவரை மரணம் அடைவித்த மாயவன் தன்னை வணங்க வைத்த கரணம்
இவையும் அக்கென்று இராமானுசன் உயிர்கட்கு அரண் அங்கு அமைத்திலனேல் அரணார் மற்று இவ்வார் உயிர்க்கே —
ஆர் எனக்கின்று நிகர் சொல்லில் மாயன் அன்று ஐவர் தெய்வத் தேரினில் செப்பிய கீதையின் செம்மைப் பொருள் தெரியப்
பாரினில் சொன்ன இராமானுசனைப் பணியும் நல்லோர் சீரினில் சென்று பணிந்தது என் ஆவியும் சிந்தையுமே
——————————————————————–
கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்
ஆசார்யர்கள் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply