Archive for the ‘தனியன் வ்யாக்யானம்’ Category

ஸ்ரீ பூர்வ ஆச்சார்யர்களின் -ஸ்ரீ மன் நாத -யாமுன முனிகள்–ஸ்துதிகள் –

February 14, 2024

ஸ்ரீ லக்ஷ்மி நாதாக்ய சிந்தௌ சடாரிபு ஜலதஹா ப்ராப்ய காருண்ய நீரம்!
நாதா த்ரவப் க்ஷிஞ்சன் ததானு ரகுவரம் போஜ ஷக்சுர் ஜலாப்யம்!!
கத்வதாம் யாமுநாக்யம் சரிதாமத் யதீந்த்ராக்ய பாத்மாகாரேந்திரம்!
ஸம்பூர்ய ப்ராணி சாஸ்யே ப்ரவஹத பஹூதா தேசிகேந்த்ர பிரமேகைஹி.”!!

ஸ்ரீ லட்சுமி நாதன் ஒரு பெரிய கடல்.  நம்மாழ்வார் ஒரு மேகம்.
இந்த கருமேகம் ஆழ்வார் கடலில் இருந்து தண்ணீரை (ஞானம்/அறிவு) எடுத்து மலைகளில் மழையாக (பாசுரங்கள்) பொழிந்தார்.
மலை என்பது ஸ்வாமி நாதமுனிகல் என்று குறிப்பிடப்படுகிறது.
இரண்டு நீர்வீழ்ச்சிகளாக நீர் விழுகிறது,
இந்த நீர் வீழ்ச்சி ஸ்வாமி உய்யக்கொண்டார் மற்றும் ஸ்வாமி மணக்கால் நம்பி என்று குறிப்பிடப்படுகிறது,
இந்த நீர் அருவி ஸ்ரீ ஆளவந்தார் என்ற பெரிய ஆற்றை அடைந்தது.
அப்போது ஏரியில் தண்ணீர் தேங்கியது.
இந்த ஏரி ஸ்வாமி ராமானுஜரால் குறிப்பிடப்படுகிறது.
ஏரியில் இருந்து 74 கால்வாய்கள் மூலம் தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது.

———

ஸ்ரீ பூர்வ ஆச்சார்யர்களின் -ஸ்ரீ மன் நாத  முனிகள்–ஸ்துதிகள்

ஸ்ரீ ஆளவந்தார் அருளிச் செய்த ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னத்துக்குள் ஸ்ரீ மன் நாதமுனிகள் விஷயமாக சதுஸ் ஸ்லோஹி –

யத் பதாம் போருஹ த்யாந வித்வஸ்த அசேஷ கல்மஷ
வஸ்து தாம் உபயாதோ அஹம் யாமுநேயம் நமாமி தம்

எவர் உடைய திருவடித் தாமரையை தியானிப்பதால் எல்லா பாபங்களும் அழியப் பெற்று
அடியேன் ஒரு பொருள் ஆனேனோ அத்தகைய ஸ்ரீ யாமுனாசார்யரை வணங்குகிறேன் –

———

ஸ்வாதயன் நிஹா சர்வேஷாம் த்ரய்யந் தார்த்தம் ஸூ துர் க்ரஹம்
ஸ்தோத்ர யாமாஸ யோகீந்திர தம் வந்தே யாமுநாஹ் வயம்-

ஸ்வாதயன்-அனுபவத்திக் கொண்டே –
யன் ப்ரத்யயம் -அனுபவிப்பித்து-
இஹ -இந்த காலத்தில் -இத்தைச் சொல்லும் பொழுது -இதில் –
சர்வேஷாம்-சர்வாதிகாரம் இந்த ஸ்தோத்ரம் -ஸ்ரத்தையே வேண்டுவது
ஸூ துர்க் ரஹம்–த்ரய்யந் தார்த்தம்-அறிவரிய வேதாந்தார்த்தங்களை
ஸ்தோத்ர யாமாஸ-ஸ்தோத்ர ரூபமாக வெளியிட்டு அருளினாரோ
யோகீந்திர-எந்த யோகி ஸ்ரேஷ்டர்–எதிகட்கு இறைவன் யமுனைத் துறைவனான ஆளவந்தார் –

————

நமோ நமோ யாமுநாயா யாமுநாய நமோ நம
நமோ நமோ யாமுநாயா யாமுநாய நமோ நம

நமோ நமோ யாமுநாயா-அஷ்டாக்ஷர மந்த்ரம் போல் இதுவே-

———————————————————

ஸ்ரீமத் கிருஷ்ண சமாஹ்வாய நமோ யாமுன ஸூ நவே
யத் கடாஷைக லஷ்யாணாம் ஸூ லாபஸ் ஸ்ரீ தர்ஸ்சதா –

அபயப்ரதா நாமா நமஸ் மதகுரு மஹம் பஜே
யத் கடாஷா தயம் ஜந்துர புநர் ஜன்மதாம் கத

————————————————-

ஸ்ரீ பகவத் ஸ்தோத்ரம் பண்ணப் புக்கவர்
ஆசார்ய ஸ்துதியிலே பார்ப்பான் என் -என்னில்
கர்னே ஸ்ப்ருஷ்டே கடிம் சாலயதி -போலே அசங்கதம் -என்னில்
ஸ்ரீ பகவத் விஷயத்தைத் தமக்கு ஸ்துதி விஷயம் ஆக்கிக் கொடுத்த உபகார ஸ்ம்ருதியாலும்
ஸ்தோத்ரம் பண்ணுகைக்கு அடியான ஜ்ஞான வைசத்யார்த்தமாகவும்
அவிக்ன பரி சமாப்த் யர்த்தமாகவும் -பண்ணுகிறார் -ஆகையாலே சங்கதம் –

ஆனால் மானசமாக அமையாதோ -என்னில்
இப் பிரபந்தத்தை அதிகரிப்பார்க்கு உபகாரம் ஆகையாலே வாசிகம் ஆக்கினதும் யுக்தம் –

உபகார ச்ம்ருதியாலே வந்த ஆசார்ய அனுவர்த்தனம் பிரமாண பிரசித்தம் –
ஆசார்ய தேவோ பவ -என்றும்
நம ருஷிப்யோ மந்திர க்ருத்ப்ய -என்றும்
ச ஹி வித்யா தஸ்தம் ஜநயதி தச் ஸ்ரேஷ்டம் ஜன்ம -என்றும்
மந்த்ரே தத் தேவதா யாஞ்ச ததா மந்திர பிரதே குரௌ -என்றும்
ஒரு ரத்னத்தை ஒருவன் கொடுத்தால் அதனுடைய மஹார்க்கத்தை அறியக் கொடுத்தவனை
ஆதரிக்க பிரமாணம் வேண்டுமோ -ஆகையால் இது உபபன்னம் –

ஜ்ஞான வைசத் யார்த்தமாக ஆசார்ய அனுவர்த்தனம் சிஷ்டாசார ப்ராப்தம் –
அபி வந்தா குரு நாதௌ-சிஷ்யதீ பதமி நீர வீன் –இது மீமாம்சகா -என்றும்
யதா கனன் கனித்ரேண-இதி மனு -என்றும்
யஸ்ய பிரசாதாத் வஷ்யாமி நாராயண கதாமிமாம் -இதி வைசம்பாயன -என்றும்
லௌகிகம் வைதிகம் வாபி -இதி மனு -என்றும்

அங்கனே ஆகில்
ஸ்வ ஆசார்யனை விட்டு அவர் குருக்களை பற்றுவான் என் என்னில்
ஆசார்ய ஸ்துதியிலும் ஆசார்ய பிரியம் இறே உத்தேச்யம் –
ஸ்வாஸ்ரயணத்தில் காட்டில் ஸ்ரீ பெரிய முதலியாரை ஆஸ்ரயிக்கும் இடத்தில்
ப்ரீதி மிக்கு இருக்கையாலே அதைப் பேசுகிறார் –

ஸ்ரீ பெரிய முதலியார் ஸ்ரீ ஆழ்வாருக்கு பகவத் ப்ராவண்யம் அடியாக பிறந்த ஜ்ஞாநத்தை
ஸ்ரீ ஆழ்வார் பிரசாதத்தாலெ பெற்று -தம் அளவிலே பர்யவசிக்கை அன்றிக்கே
பின்பு உள்ளார்க்கும் உபகாரமாம் படி
இந்த தர்சன ஸ்தாபகர் ஆனபடியாலும் –
ஸ்ரீ மணக்கால் நம்பி -பெரிய முதலியார் உடைய அர்த்தம் இது
உம்முடைய பேற்றுக்கு எல்லாம் அவருடைய திருவடிகளிலே சம்பந்தமே -என்கையாலும்
அவரை ஆஸ்ரயிக்கிறார்

இதை நினைத்து இறே ஸ்ரீ பட்டர் – ப்ரதமமபி குரும் நாத மீடே -என்றதும் .
வேத காரணமான பிரணவம் வேதாத் யந்தம் களிலே ஆனால் போலே –

இங்கும் ஆதி அந்தம் களிலே ஆசார்ய ஸ்துதி யாய்
நடுவிலே பகவத் ஸ்தோத்ரம் ஆக இருக்கிறது –

முதலிட்டு மூன்று ஸ்லோகத்தாலே
ஸ்ரீ பெரிய முதலியாரை நமஸ்கரிக்கிறார் –

————————————————————————

ஸ்லோகம் -1- அவதாரிகை –

முதல் ஸ்லோகத்தில் ஒருவனைக் கவி பாடப் புக்கால்
அவன் ஐஸ்வர்யத்தைச் சொல்லிக் கவி பாடுமா போலே
ஸ்ரீ வைஷ்ணவனுக்கு ஐஸ்வர்யமான ஜ்ஞான வைராக்யங்கள் உடைய பிரகர்ஷத்தை சொல்லி நமஸ்கரிக்கிறார் –

மனமாசு தீரும் அருவினையும் சாரா
தனமாய தானே கை கூடும் –புனமேய
பூந்துழாயான் அடிக்கே போதொடு நீர் ஏந்தி
தாம் தொழா நிற்பார் தமர் -முதல் திருவந்தாதி -43-என்று
ஸ்ரீ வைஷ்ணவனுக்கு தனம் பக்த்யாதிகள் என்று சொல்லிற்று இறே –

நமோ அசிந்த்ய அத்புத அக்லிஷ்ட ஜ்ஞான வைராக்ய ராசயே
நாதாயா முநயே அகாத பகவத் பக்தி சிந்தவே–1-

நமோ –
அஹம் அபி ந மம பகவத ஏவ அஹம் அஸ்மீத் ஏவம் அமமதாம் யோஜயத்யதோ நம இதி -என்கிறபடியே
எனக்கு உரியேன் அல்லேன் –
பெரிய முதலியாருக்கு சேஷம் -என்கிறார் –

நமோ விஷ்ணவே -என்கிறாப் போலே –
நமோ நாதாயா -என்கிறார் உபகார ஸ்ம்ருதி யாலே –

ஓம் நமோ விஷ்ணவே (ஷடத் அக்ஷரீ )-என்றும்
நம இத்யேவ வாதி ந -என்றும்
நம ரிஷிப்யோ மந்த்ர க்ருத்ப்ய -என்றும்
தேஷாமபி நமோ நம -என்றும் சொல்லக் கடவது இறே –

ஸ்ரீ ஈஸ்வர முனிகள் -ஸ்ரீ ரங்க நாதன் என்று திருநாமம் சாற்றுகையாலே
நாதன் என்று திரு நாமம் ஆகிறது –
எப்படிப் பட்டவர் -என்னும் அபேஷையில் சொல்லுகிறது –

அசிந்த்ய –
இவருடைய ஜ்ஞானாதிகள் இன்னாருடைய ஜ்ஞானாதிகள் போலே இருக்கும் என்று
நினைக்க ஒண்ணாது -என்னுதல்
இவ்வளவு என்று ஜ்ஞானாதிகராலும் -பரிச்சேதிக்க ஒண்ணாது -என்கை

அத்புத –
கீழ் இயத்தா ராஹித்யத்தைச் சொல்லுகையாலே-க்ருஹீதாம்சம் அனுசந்தித்தார்க்கு
ஆச்சர்ய அவஹமாய் இருக்கும் -என்கை –
அமுதூரும் என்றக்கால் -இத்யாதியில் க்ருஹீதாம்சம் இனிதாய் இருக்கும் என்றது இறே –

அக்லிஷ்ட –
வ்யாசாதிகளைப் போலே ஸ்வ யதன சாத்திய தபஸ்ஸாலே வந்தது அன்றிக்கே
ததாமி புத்தி யோகம் தம் -என்றும்
மயர்வற மதி நலம் அருளினன் -என்றும் சொல்லுகிறபடியே
பகவத் பிரசாத லப்தம் ஆகையாலே வருத்தம் அற்று இருக்கை-

ஜ்ஞான –
ஜ்ஞானம் ஆவது -சித் அசித் ஈஸ்வர தத்தவங்களை விஷயமாக உடைத்தாய் இருக்கை –
அதாவது –
ஆத்மா ஈஸ்வரனுக்கு அனன்யார்ஹ சேஷம் என்றும்
அசித் ஸ்வரூபம் த்யாஜ்யம் என்றும் –
ஈஸ்வரன் உபயோர் நியந்தா என்றும் -அறிகை –

ஜ்ஞானம் என்றால் இவ் விசேஷத்தைக் காட்டுகிறது
தத் ஜ்ஞானம் அஜ்ஞானம் அதோ அந்ய துக்தம்-என்றும்
வித்ய அந்ய அசில் பனை புணம் -என்றும்
வ்யதிரிக்த விஷய ஜ்ஞானம் அநர்த்தா வஹம் என்றும் அதி சூத்ரம் என்றும் -சொல்லிற்று இறே –

வைராக்ய –
இவ் விலஷண ஜ்ஞானத்தாலே பகவத் வ்யதிரிக்தங்களில்
நிஸ்ப்ருஹராய் இருக்கை –
வேண்டேன் மனை வாழ்க்கையை -பெரிய திருமொழி -6-1-

ராசயே –
ராசி என்று சமூஹம்-
ஜ்ஞான இராசே –வைராக்ய ராசயே –
ஜ்ஞான வைராக்யங்கள் ஒன்றாய் இருக்க ராசயே -என்பான் என் -என்னில் –
ஸ்ரீ பகவத் ஸ்வரூபாதிகள் ஜ்ஞான விஷயங்கள் ஆகையாலே பல –
பிதரம் மாதரம் -என்று த்யாஜ்ய விஷயங்களும் பலவாகையாலே சொல்லலாம் –

லோகத்தில் விலஷணர் உடைய ஜ்ஞான வைராக்யங்கள் எல்லாம் இவருடைய
ஜ்ஞான வைராக்யங்களிலே அந்தர்ப்பூதம் ஆம்படி இருக்கையாலே சொல்லுகிறது -என்றுமாம் –

யத் கிஞ்சித் சாது குர்வந்தி யஸ் தத் வேத யத்ச வேத ச மயைத துக்த இதி –
யத் கிஞ்சித் சாத்வ நுஷ்டிதம் கர்ம யச்ச சர்வ சேதன கதம்
விஜ்ஞானம் ததுபயம் யதி யஜ்ஞான கர்மாந்தர்கதம் ச ரைக்வ -இதி -என்றும்
லோகத்தில் அனுஷ்டிதமான கர்மங்களும் ஞானங்களும் யாவன் ஒருத்தன் உடைய
கர்ம ஞானங்களிலே அந்தர் கதமாய் இருக்கும் -அவன் தானே கிடீர் ரைக்வன் -என்று பார்த்து சொல்லுமா போலே

முநயே –
ந விவேதாத்மநோ காத்ரம் -என்றும்
பஸ்யந்நபி ந த்ருஷ்ட்வான் -என்கிறபடியே
த்தேய வஸ்துவை சர்வதா சாஷாத் கரிக்கை

ஏது செய்தால் மறக்கேன் மனனே -பெரிய திரு மொழி -9-3-3- என்றும்
என் நெஞ்சம் அவன் என்றே கிடக்கும் -திருவாய் மொழி -7-3-6- என்றும்
இவர் கிருஷ்ணனை அனுசந்தித்து இருக்க ராஜாவாலும் சமாதி பங்கம் பண்ணப் போயிற்று இல்லை –

ராம மேவா நுபச்யந்த -என்னுமா போலே –

அகாத பகவத் பக்தி சிந்தவே –
பக்தியாவது ஜ்ஞான விசேஷமாய் இருக்க -பக்தியைப் பிரித்துச் சொல்லிற்று –
அதினுடைய ப்ராசுர்யம் சொல்லுகைக்காகவும் –
ப்ரதான்யம் சொல்லுகை தோற்றுகைக்காகவும் –

பக்தி யாகிறது -சிநேக பூர்வம் அனு த்யானம் பக்தி -என்றும்
ஸ்வாமிநி தாசச்ய சிநேக மயீ ஸ்திதி -என்றும் சொல்லுகிறபடியே-
அனுபவ ஆசை -அனுபவிப்பதில் விருப்பம் –

பகவச் சப்தத்தாலே பரம பதத்தில் இருப்பைச் சொல்கிறது –
வாஸூ தேவோ அஸி பூர்ண – என்று ஷாட் குணிய பூர்ணனாய் இறே இருப்பது

அகாத
அஷோப்ய-கலக்க ஒண்ணாத –
அர்த்தாந்தரம் -பரிச்சேதிக்க ஒண்ணாது இருக்கை –
ஒருவரால் நிலை கொள்ள ஒண்ணாது இருக்கை –

சிந்தவே –
காதல் கடலின் மிகப் பெரிது –திருவாய்மொழி -7-3-6-என்றும்
ஆசை என்னும் கடல் -பெரிய திருமொழி -4-9-3- என்றும்
ஈஸ்வரனுக்கும் நிலை கொள்ள ஒண்ணாதே
தாம் அதில் புக்கு அமிழ்ந்தபடியாய் இருக்கை –

அசிந்த்ய அத்புத அக்லிஷ்ட ஜ்ஞான வைராக்ய ராசயே
முனயே அகாத பகவத் பக்தி சிந்தவே நாதாய நம -என்று அந்வயம் –

இப்படிப்பட்ட எம்பெருமானுடைய ஸ்வரூபம் ரூபம் குணம் விபூதி இவற்றைப் பற்றிய ஞானம் -ஞானமாவது தத்வ த்ரய -சித் அசித் ஈஸ்வர தத்தவங்களை விஷயமாக உடைத்தாய் இருக்கை-அர்த்த பஞ்சக ஞானம் என்றுமாம்
அன்னை அத்தன் புத்ரன் பூமி வாசவார் குழலார் இவர்களைப் பற்றிய வைராக்யங்கள் -இரண்டுமே கும்பலாகக் குவிந்து இவராக ஆயிற்று

(பகவத் பக்தி ரசத்துக்கு -ஆழ்ந்ததோர் கடல் போலே இருப்பாரே -கலக்க முடியாதபடி –
பகவத் பக்திக்கு சமுத்திரம் என்றும்
பகவத் பக்தி யாகிற சமுத்திரத்தை தம்மிடம் கொண்டவர் என்றுமாம் )

————————————————————————–

ஸ்லோகம் -2- அவதாரிகை
முதல் ஸ்லோகத்தாலே பரத்வ விஷயமான ஜ்ஞானாதிகள் உடைய பிரகர்ஷம் சொல்லிற்று
இந்த ஸ்லோகத்தாலே அவதார விஷயமான ஜ்ஞானாதிகள் ஆகையாலே
அதினுடைய ப்ரக்ருஷ்ட தரத்வம் சொல்லுகிறது

அன்றிக்கே
கீழ் சொன்ன ஜ்ஞானாதிகள் தம்மளவில் பர்யவசியாதே
என்னளவும் வர வெள்ளம் கோத்தது –
என்னவுமாம் –

தஸ்மை நமோ மது ஜிதங்க்ரி ஸரோஜா தத்தவ
ஜ்ஞான அனுராக மஹிமா அதிசய அந்த ஸீம்நே
நாதாயா நாத முநயே அத்ர பரத்ர சாபி
நித்யம் யதீய சரனௌ சரணம் மதீயம்-2-

மது ஜிதங்க்ரி ஸரோஜா -எம்பெருமானுடைய திருவடித் தாமரைகளைப் பற்றின
தத்தவ ஜ்ஞான–உண்மை உணர்ச்சி என்ன
அனுராக –ஆசை என்ன
மஹிமா அதிசய அந்த ஸீம்நே–இவற்றின் பெரு மேன்மைக்கு எல்லை நிலமாயும்
நாதாயா-எனக்கு நாதராயும் இருக்கிற
தஸ்மை நாத முநயே நமோ–அந்த நாத முனிகளுக்கு நமஸ்காரம்
அத்ர பரத்ர சாபி-இவ்வுலகத்திலும் மேல் உலகத்திலும்
நித்யம் யதீய சரனௌ-எப்போதும் -எந்த ஸ்ரீமந் நாதமுனிகளுடைய திருவடிகள்

தஸ்மை நமோ –
நமஸ் தஸ்மை நமஸ் தஸ்மை -என்றும்
நமோ நமஸ்தே ஆஸ்து சஹஸ்ர க்ருத்வ-என்றும் சொல்லுகிறபடியே –
இன்னம் அவர்க்கு அடியேன் -என்கிறார் –

மது ஜீத் –
அநிருத்தராய் வந்து அவதரித்து
முதல் களையான மதுவை நிரசித்தால் போலே
பகவத் ப்ராப்தி பந்தகங்களைப் போக்குமவன் -என்கை –

அங்க்ரி –
அந்த ஸ்வ பாவத்திலே -குணைர் தாஸ்யம் உபாகத -என்று பெரிய முதலியார் தோற்று இருக்கும் படியையும்
அவருடைய அனன்யார்ஹ சேஷத்வமும் சொல்லுகிறது –

ஸரோஜ –
சம்பந்தம் இல்லா விடிலும் விட ஒண்ணாத போக்யதையைச் சொல்லுகிறது –
விகாசம் செவ்வி குளிர்ச்சி பரிமளம் முதலான வற்றுக்குத் தாமரையை ஒரு படிக்குப் போலியாகச்
சொல்லலாய் இருக்கை –

தத்தவ ஜ்ஞான –
தத்வ ஜ்ஞானம் ஆவது –
அவதார விஷய ஜ்ஞானமும்
ஆஸ்ரித பாரதந்த்ர்ய விஷய ஜ்ஞானமும் –
ஜன்ம கர்ம ஸ மே திவ்யம் ஏவம் யோ வேத்தி தத்த்வத
த்யக்த்வா தேகம் புநர் ஜன்ம நைதி மாமேதி ஸோ அர்ஜுன -ஸ்ரீ கீதை -4-9-என்று
தானே அருளிச் செய்தான் இறே –

தஸ்ய தீரா பரிஜா நந்தி யோநிம் -என்றும்
அஹத்வா ராவணம் சங்க்யே-என்றும்
யத் விநா பரதம் த்வாஞ்ச சத்ருக் நஞ்சாபி மாந்த
பவேன் மம ஸூகம் கிஞ்சித் பஸ்மாசாத் குருதாம் சிகி -என்று அருளிச் செய்தான் இறே சக்கரவர்த்தி திருமகன் –
அப்யஹம் ஜீவிதம் ஜ்ஹ்யாம் -என்றும்
ஆத்மாநாம் நாதி வர்த்தேதா -இத்யாதி

அனு ராக-
அனு ராகம் ஆவது -இவற்றை எல்லாவற்றையும் அனுபவித்தால் அல்லது நிற்க ஒண்ணாத ப்ரேமம் –

மஹிமா அதிசய அந்த ஸீம்நே –
ஜ்ஞான அநு ராகங்கள் உடைய மஹத்த்வத்தின் முடிவே எல்லையாய் இருக்குமவர்க்கு
மஹிமா -மஹத்த்வம் –
மனுஷ்ய ஆனந்தமே தொடங்கி-தே யே சதம் – என்கிற க்ரமத்தாலே
ஈஸ்வர ஆனந்தத்திற்கு எல்லையாய் இருக்கும் இருப்பு போலே
இவருக்கும் தத் விஷய ப்ரேமத்துக்கு எல்லையாய் இருக்கும் இருப்பு –

நாதாயா –
அஸ்மத் நாதாயா –

நாத முநயே –
இத் தர்சனத்துக்கு நாதனே -என்று
மது சூதனை யன்றி மற்று இலேன் -திருவாய்மொழி -2-7-6-என்று இருக்கும்
மஹாத்மாக்களாலே கொண்டாடப் படுவாராய் ஆயிற்று –
தத்வ ஹிதங்களை திரு வுள்ளத்திலே கூடு பூரிக்குமவர் –
தஸ்மை நம -என்று அந்வயம் –

உபகார ஸம்ருதியாலே அவரை ஆதரித்தீர் ஆகில்
ஐஹிக ஆமுஷ்மிகங்களுக்கு வேண்டாவோ -என்று பகவத் அபிப்ராயமாக அருளிச் செய்கிறார் –
அத்ர பரத்ர சாபி –
சம்சாரத்திலும்
பிராப்யமான நித்ய விபூதியிலும் –

நித்யம் –
நித்ய அக்னி ஹோத்ரம் போல் அன்றிக்கே
அனவரதம் -என்கை –

யதீய சரனௌ –
என்னை இவ் வவஸ்தாபன்னனாக்கிய திருவடிகள் –

சரணம் –
உபாய உபேயங்கள் இரண்டும்

மதீயம் –
பெரிய முதலியார் திருவடிகள் ஆகில் எனக்கு இரண்டுமாய் இருக்கும் -என்கை –
அதாவது -சம்சார தசையிலே பகவானே உபாயம் என்று உபதேசித்து
உபாயாத்யவசாயத்துக்கு அடியான ஸ்வ அனுக்ரஹத்தாலே
பகவத் பிராவணயத்தை விளைத்தும்
பிராப்ய தேசத்தில் சென்றால் நித்ய ஸூரிகள் கோஷ்டியில் பிரவேசிப்பித்தும்
பின்பு நித்ய ஸூரிகளோபாதி உத்தேச்யமாய் இருக்கையாலும் -அப்படிச் சொல்கிறது –

அத்ர பரத்ர சாபி நித்யம் யதீய சரனௌ மதீயம் சரணம்
மது ஜிதங்க்ரி சரோஜ தத்தவ ஜ்ஞான அனுராக மஹிம
அதிசய அந்த சீம்னே நாதாய தஸ்மை
நாத முனயே நம -என்று அந்வயம் –

அடியார்கள் குழாங்களை உடன் கூடுவது என்று கொலோ —
வானவர் நாடு –
ஆச்சார்யர் திருவடிகளே உத்தேச்யம்
சரணம் -உபாயம் உபேயம் இரண்டுமே என்றபடி -)

பகவத் தத்வ ஞானமும் பகவத் அநு ராகமும் இவர் இடம் சேர்ந்து விசரமித்தன போலும் -ஆகவே இவற்றுக்கு இவரே ஸீமா பூமி –

மனுஷ்ய ஆனந்தமே தொடங்கி-தே யே சதம் – என்கிற க்ரமத்தாலே
ஈஸ்வர ஆனந்தத்திற்கு எல்லையாய் இருக்கும் இருப்பு போலே
இவருக்கும் தத் விஷய ப்ரேமத்துக்கு எல்லையாய் இருக்கும் இருப்பு –

——————————————————————————-

ஸ்லோகம் -3- அவதாரிகை –

த்ருஷார்த்தனுக்குத் தண்ணீர் குடிக்கப் பர்யாப்தி பிறவாதாப் போலே
பின்னையும் அவர்க்கு அடியேன் -என்கிறார்

ஆஸ்ரிதரை ஒரு காலும் நழுவ விடாத அச்யுத விஷயத்திலே
ஜ்ஞான பக்த்யாதிகள் ஆகையாலே
தம்மளவில் பர்யவசியாதே
பகவத் விஷயத்துக்கு அபூமியான சம்சாரம் எங்கும்
வெள்ளம் இடும்படியான இவர் உடைய
ஜ்ஞான பக்திகள் உடைய
பிரக்ருஷ்டதையைச் சொல்லுகிறது –

பூயோ நமோ அபரிமித அச்யுத பக்தி தத்தவ
ஜ்ஞாநாம் ருதாப்தி பரிவாஹ ஸூ பைர் வசோபி
லோகே அவதீர்ண பரமார்த்த சமக்ர பக்தி
யோகாய நாத முநயே யமிநாம் வராய-3-

அபரிமித அச்யுத பக்தி –அளவில்லாத பகவத் பக்தி என்ன
அபரிமித தத்தவ ஜ்ஞாநம்–அளவில்லாத தத்வ ஞானம் என்ன
அம்ருதாப்தி பரிவாஹ ஸூபைர்–இவை யாகிற அமுதக் கடலின் பரிவாஹம் போன்று பிரசன்ன சீதளங்களான
வசோபி-ஸ்ரீ ஸூக்தி களாலே
லோகே -இவ் வுலகத்தில்
அவதீர்ண பரமார்த்த –அவதாரம் செய்து இருக்கிற பரம புருஷார்த்தமாயும்
சமக்ர பக்தி யோகாய –பரி பூர்ணமாயும் இருக்கிற பக்தி யோகத்தை உடையவராய்
யமிநாம் வராய–யோகிகளின் சிறந்தவரான
நாத முநயே -பூயோ நமோ—நாத முனிகளுக்கு மறுபடியும் நமஸ்காரம்

பூயோ நமோ
புனஸ்ஸ நம
நமோ நமஸ்தே -என்கிறபடியே

அபரிமித –
கிடந்த பாயிலே வெள்ளம் கோத்தால் போலே
இருந்த இடங்களிலே வந்து கிட்டும்படி
எல்லை இறந்து இருக்கை –

அச்யுத –
நியந்த்ருத்வ ஸ்வாமித்வாதி கல்யாண குணங்களாலே குறை வற்று இருக்கை -என்னுதல் –
ஏக ரூபமாய் இருக்கும் -என்னுதல்
என்றும் ஆஸ்ரித அர்த்தமாய் இருக்கும் இருப்பை நழுவ விடாதவன் -என்னுதல் –
ஆர்ந்த புகழ் அச்சுதன் -திருவாய்மொழி -3-5-11- என்றும்
நமன் தமர்க்கு அரு நஞ்சினை அச்சுதன் தன்னை -திருவாய்மொழி -3-6-8-என்கிறபடியே
ஆஸ்ரிதரை தம் தாம் கையிலும் பிறர் கையிலும் காட்டிக் கொடாதவன் -என்னுதல் –

பக்தி தத்தவ ஜ்ஞாநாம் ருதாப்தி பரிவாஹ ஸூபைர் வசோபி –
பக்தி தத்வ ஜ்ஞானங்கள் ஆகிற
அம்ருதாப்தி யினுடைய பரிவாஹ ரூபமான
ஸூபமான வசஸ் ஸூக்களாலே-
உபாயம் ஈஸ்வரன் ஆகையாலே ஜ்ஞான பக்திகள் போக ரூபமாய்
அபரிச்சின்னமாய் இருக்கும் -என்கை –

பரிவாஹம் ஆவது -அவ்வவ ரஷண அர்த்தமாக
அதிக ஜல நிர்க்க மனஸ் ரோதஸ்ஸூ –
வசஸ் ஸூக்களுக்கு ஸூபத்வம் ஆவது –
அவிஸ் தர்ம சந்திக்தம் -இத்யாதிகளை உடைத்தாய் இருக்கை

லோகே –
பகவத் பக்திக்கு மேட்டு மடையான சம்சாரத்திலே
சைஷா பார்க்கவீ வாருணீ வித்யா பரமே வ்யோமன் ப்ரதிஷ்ட்டிதா -என்று
பரம பதத்தில் பரிமாறக் கடவ பக்தியை
நான் முகனார் பெற்ற நாட்டுளே நற்பாலுக்கு உய்த்தனன் -திருவாய்மொழி -7-5-1-என்கிறபடியே
சம்சாரத்தில் நடையாடும்படி பண்ணினபடி –

அவதீர்ண –
ஈஸ்வராவதாரம் போலே இறே
ஸ்வயம் பிரயோஜனமான பக்த்யவதாரம் –

பரமார்த்த –
பரம பிரயோஜன ரூபமாய் இருக்கை –
சமக்ர –
அதனில் பெரிய அவா -என்னும்படி குறைவற்று இருக்கை –

பக்தி யோகாய –
பக்தியை உடையரான –
உக்தமான பக்தி தத்வ ஜ்ஞானங்கள் இரண்டையும்
பக்தி சப்தத்தாலே சொல்லிற்று

நாத முநயே யமிநாம் வராய –
முடியானே -திருவாய்மொழி -3-8- யில் சொல்லுகிற படியே
அவனை அல்லது அறியாத கரணங்களை உடையராய் இருப்பார்க்குத் தலைவர் ஆனவருக்கு
வாய் அவனை அல்லது வாழ்த்தாது -முதல் திருவந்தாதி -11-என்று
இருக்கும் அவர்களுக்கு வரணீயராய் இருக்குமவர் -என்றுமாம்-

அபரிமித அச்யுத பக்தி தத்வ ஜ்ஞானம்
அம்ருதாப்தி பரிவாஹ ஸூ பைர் வசோபி
லோகே அவதீர்ண பரமார்த்த சமக்ர பக்தி யோகாய
யமிநாம் வராய நாத முனயே பூயோ நம -என்று அந்வயம்-

ஸ்ரீ ஸூக்திகளை பக்தி பரிவாஹம் என்றது –சொல்லாவிடில் சரீரம் தரிக்க முடியாது -பக்தி பலாத்காரத்தாலே அவதரித்த சொற்கள்
அம்ருத பரிவாஹம் -பிரசன்னமாயும் மதுரமாயும் சீதளமாயும்
ஸ்ரீ நியாய தத்வம் போன்ற இப்பொழுது லுப்தமான கிரந்தங்களும்-நித்ய காலக்ஷேப ஸ்ரீ ஸூக்திகளும் -இவையே பின்பு ஏடு படுத்தப் பட்டு நம்மளவும் வந்தனவே
யோகம் -குருகைக் காவல் அப்பன் அளவு மட்டுமே –
பக்தி -நெஞ்சு கனிந்து ப்ரீதி ரூபமான த்யானம் -பரமார்த்த சமக்ர -இரண்டு விசேஷங்கள் -ஸ்வயம் பிரயோஜனம் -என்றும் அவனை பிராபிக்க பர்யாபதமான உபகரணம் என்றது ஆயிற்று –
அவதீர்ண –
ஈச்வராவதாரம் போலே இறே
ஸ்வயம் பிரயோஜனமான பக்த்யவதாரம் –
பரமார்த்த –
பரம பிரயோஜன ரூபமாய் இருக்கை –
சமக்ர –
அதனில் பெரிய அவா -என்னும்படி குறைவற்று இருக்கை –

(வசோபி – ஸ்ரீ -ந்யாய தத்வம் -கிரந்தம் ஸ்ரீ தேசிகன் போன்றார் காட்டி அருளி உள்ளார்கள்
நித்ய கால ஷேப ஸ்ரீ ஸூக்திகளும் உண்டே
பக்தி யோகம் -ஸ்ரீ -குருகை காவல் அப்பனுக்கு பிரசாதித்து அருளிய யோக சாஸ்திரமும் –
ஸ்ரீ -மணக்கால் நம்பி போல்வாருக்கு சாதித்து அருளிய பிரபத்தி சாஸ்திரமும் –
பரமார்த்த -சமக்ர -இரண்டு விசேஷணங்கள்-பரம புருஷார்த்தம் என்றும் -பரி பூர்ணம் -என்றும் –
ஸ்வயம் பிரயோஜனம் என்றதாயிற்று -)

———————————————————————————

ஸ்தோத்ரம் -65-அவதாரிகை –

ராமோ த்விர் நாபி பாஷதே-என்கிற சங்கல்பத்தை விட்டீரே யாகிலும்
ஸ்ரீ பெரிய முதலியாரோடு வித்யையாலும்
ஜன்மத்தாலும் உண்டான சம்பந்தத்தையே பார்த்து அருளி –
என்னுடைய நன்மை தீமைகளைப் பாராதே
விஷயீ கரிக்க வேணும் -என்ன

அதுக்குக் கண்ணழிவு இல்லாமையாலே
அப்படிச் செய்கிறோம் -என்று ஈஸ்வரன் அனுமதி பண்ண

தாம் அனுமதி பெற்றாராய்
ஸ்தோத்ரம் தலைக் கட்டுகிறது –

அக்ருத்ரிம த்வச் சரணார விந்த
ப்ரேம ப்ரகர்ஷாவதி மாத்மவந்தம்
பிதாமஹம் நாத முநிம் விலோக்ய
ப்ரஸீத மத் வ்ருத்தம சிந்தயித்வா–65-

அக்ருத்ரிம –
க்ரியயா நிர்வ்ருத்த க்ருத்ரிம தத் ரஹித அக்ருத்ரிம
ஸ்வாபாவிக -இத்யர்த்த –
ஒரு செய்கையால் உண்டாக்கப் பட்டது க்ருத்ரிமம் -செயற்கை
அப்படி அற்றது அக்ருத்ரிமம் -இயற்கையானது –
குலம் தானே யோகி குலம் ஆகையாலே
நை சர்க்கிகம் -என்கை –
மெய்யான ப்ரேமம் -என்னவுமாம் –

தவச் –
ப்ராப்த சேஷியான உன்னுடைய

சரணார விந்த –
ஆஸ்ரிதருக்கு இழியும் துறையை போக்யமான
திருவடிகளை –

ப்ரேம ப்ரகர்ஷாவதிம்-
ப்ரேமாதிஸய ஸீமா பூமி யானவர்
நமக்கு இதர விஷயங்களில் ப்ரேமம் எல்லாம்
இவர்க்கு வகுத்த விஷயத்திலே இறே இருப்பது –

மாத்மவந்தம் –
பகவத் சேஷத்வம் ஸ்வரூமாகவே
ஆத்மா யாதாம்ய ஜ்ஞானம் உடையவர் -என்கை –
தநவந்தம் -என்னுமா போலே –

பிதாமஹம் நாத முநிம் –
குடல் துடக்கை உடையராய்
பகவத் ஜ்ஞான நிதியாய்
உள்ளவரை –

விலோக்ய –
கடாஷித்து

ப்ரஸீத –
அபராதங்களைப் பொறுத்து அருள வேணும் –

மத் வ்ருத்தம சிந்தயித்வா –
அஸ்த் கர்மத்தை விஸ்மரிக்கக் கடவராக வேணும் -என்கை –

மத் வ்ருத்தம் -என்று
சத் கர்மத்தை நினைக்கிறது –
வ்ருத்தவான் என்றால் சத் கர்ம யுக்தனை இறே சொல்லுகிறது –

ஸ்வ கதமான வற்றை அநாதரித்து
பெரிய முதலியார் சம்பந்தம் எனக்குத் தஞ்சமாக வேணும் என்று பிரார்த்தித்து
ஸ்தோத்ரத்தைத் தலைக் கட்டுகிறார் –

(பிதாமஹத்வம் வித்யையாலும் ஜென்மத்தாலும் –ஸ்ரீ ஈஸ்வர பட்டாழ்வார் இவர் திருத் தந்தை – )

—————————————————————————–

ப்ரஹர்ஷயிஷ்யாமி என்கிற இத்தால் பரார்த்த கைங்கர்யமே பரம புருஷார்த்தம் என்ற ஸம்ப்ரதாய தாத்பர்யத்தை அறுதி யிட்டார்

த்வயத்தில் உத்தர வாக்கியத்தில் நமஸ் ஸப்தம் கைங்கர்யத்தில் களை அறுக்கிறது
களையாவது தனக்கு என்னப் பண்ணுகை
ஸ்வயம் துருசிரே தேசே க்ரியதாம் இதி மாம் வத -என்று இளைய பெருமாளும்
தனக்கே யாக எனைக்கொள்ளுமீதே எனக்கே கண்ணனை யான் கொள் சிறப்பே -என்று ஆழ்வாரும்
மற்றை நம் காமன்கள் மாற்று -என்று நாச்சியாரும்
ஐம்புலன் அகத்தடக்கி -என்று தொண்டர் அடிப்பொடி ஆழ்வாரும்
ப்ராப்தாவும் ப்ராபகனும் பிராப்திக்கு உகப்பானும் அவனே -என்று ஸ்ரீ மத் லோகாச்சார்யாரும்
அஹம் அந்நாத -என்ற போக்த்ருத்வத்துக்கு முன்னே அஹம் அன்னம் என்று

தன்னுடைய போக்யத்வத்தை அன்றோ முக்தன் சொல்லுவதாக ஸ்ருதியும் ஓதிற்று
போக்த்ருத்வமும் போக்யத்வாய விறே
புங்க்தே ஸ்வ போகம் அகிலம் பதி போக சேஷம் -என்னா நின்றது இறே –

—————–

இப்படிப்பட்ட புருஷார்த்தத்துக்கு உபாயமாக அவன் தன்னையே பற்றுகிறார் ஆளவந்தார்-

ந தர்ம நிஷ் டோஸ்மி -என்று கர்ம ஞானாதிகளைக் கை விட்டது அஞ்ஞான அசக்திகளால் அன்று
பல விலம்பம் என்றும் அல்ல
அவதார ரஹஸ்ய ஞான ஸஹ க்ருத பக்தி ரூப உபாயாந்தரம் தேஹ அவசானத்திலே பலிக்கும் என்று
ஏவம் யோ வேத்தி தத்த்வத த்யக்த்வா தேஹம் புனர் ஜென்ம நைதி மாமேதி -என்று கீதாச்சார்யன் அருளிச் செய்தான் அன்றோ
அவ்வழியாலும் கை வையாதே எம்பெருமானையே தஞ்சமாகப் பற்றியது உபாயாந்தர சாமான்யம் அப்ராப்தம் என்று அன்றோ —

ஸ்வரூப விருத்தம் என்று இறே கை விட்டது
ப்ரபாகாந்தர்ப் பரித்யாகத்துக்கும் அஞ்ஞான சக்திகள் அன்று
ஸ்வரூப விரோதமே பிரதான ஹேது -என்று அன்றோ ஸ்ரீ வசன பூஷண நிஷ் கர்ஷம்
ஆகையால் அன்றோ விதி ரஹஸ்யத்தில் பரித்யஜ்ய என்று உபாயாந்தர பரித்யாகத்தை விதித்தான்
ஸ்நாத்வா புஞ்ஜீத -என்னுமா போலே விட்டே பற்ற வேண்டும் -என்று இறே சம்பிரதாய நிஷ் கர்ஷம் –

——————-

இதில் ஆதி அந்தங்களில் பிதா மஹாரான ஸ்ரீ மன் நாதமுனிகளை நிர்தேசித்து உள்ளார்

ஸ்ரீ காட்டு மன்னார் கோயில் கோபால ரத்னத்தைத் தனக்குத் தந்த மஹா உபகாரகரான ஆச்சார்யன்

என்று முதற் கண் மூன்று ஸ்லோகங்களாலே ஸ்துதித்தார்

தன்னுடைய சரணாகதி தர்மத்தையும் அநாதரித்து அவர் சம்பந்தமான கண்ணழிவு அற்ற உபாயத்தையே பார்த்து
அடியேனைக் கடாக்ஷிக்க வேண்டும் என்று விண்ணப்பித்து தலைக் கட்டுகிறார்

தனமாய தானே கை கூடும் -என்று ஸ்ரீ வைஷ்ணவ தனமான ஞான பக்தி வைராக்யங்களோடே
பகவத் கைங்கர்ய சாம்ராஜ்யத்தோடே வாசியற எல்லாமே ஆச்சார்ய அதீநம் என்றபடி

ஆச்சார்ய வைபவத்தில் உபக்ரமித்து ஆச்சார்ய வைபவத்தில் உப ஸம்ஹாரம் செய்யும் உத்க்ருஷ்ட ஸ்தோத்ர ரத்னம் –

————————————————————

ஸ்ரீ வத்ஸ சிஹ்ன மிஸ்ரேப்யோ நம யுக்தி மதீ மஹே
யத் யுக்தஸ் த்ரயீ கண்டே யாந்தி மங்கள ஸூத்ரதாம்

அர்வாஞ்சோ யத் பத ஸரஸி த்வந்தம் ஆஸ்ரித்வ பூர்வே
மூர்த்ரா யஸ்ய அந்வயம் உபகதா தேசிகா முக்திமாபு
சோயம் ராமானுஜ முனிர் அபி ஸ்வீய முக்திம் காரஸ்தம்
யத் சம்பந்தாத் அனுமத கதம் வர்ணயதே கூர நாத

ராமானுஜ அங்க்ரி சரணோஸ்மி குல ப்ரதீபத்வ ஆஸீத் ச யமுந முநேஸ் ச ச நாத வம்ஸ்யஸ்
பராங்குச முநேஸ் ச ச ஸோபி தேவ்யாஸ் தாஸஸ் தவேதி வரதாஸ்மி தவே ஷணீயஸ் –ஸ்ரீ வரதராஜ ஸ்தவம்-102-

வரத
ராமானுஜ அங்க்ரி சரணோஸ்மி –அடியேன் எம்பெருமானாருடைய திருவடிகளைச் சரணமாக அடைந்தவன்
விப்ரர்க்கு கோத்ர சரண ஸூத்ர கூடஸ்தர் பராசர பாராசர்ய போதாய நாதிகள் –
ப்ரபந்ந ஜன கூடஸ்தர் பராங்குச பரகால யதிவராதிகள்

ச து –அந்த எம்பெருமானாரோ
யமுந முநேஸ் குல ப்ரதீபத்வ ஆஸீத் –ஆளவந்தாருடைய வித்யா வம்சத்துக்கு அணி விளக்காக ஆனார்
ராமானுஜரும் –தூய் நெறி சேர் எதிகட்கு இறைவன் யமுனைத் துறைவன் இணையடியாம் கதி பெற்று உடையன் அன்றோ –

ச ச –அந்த ஆளவந்தார் தாமும்
நாத வம்ஸ்யஸ் –வித்யா அந் வயத்தாலும் குடல் துடைக்காலும் ஸ்ரீ மந் நாதமுனிகளுடைய வம்சத்தவர்
பிதா மஹம் நாத முனிம் விலோக்ய ப்ரஸீத மத் வ்ருத்தம் அசிந்தயித்வா -என்ற குடல் துவக்கும் உண்டே

ச ச -அந்த நாதமுனிகளும்
பராங்குச முநேஸ் வம்ஸ்யஸ் –நம்மாழ்வாருடைய வம்சத்தவர்
குருகையில் வந்த குல முனிவனுடைய குலக் கொழுந்து
ஆரப் பொழில் தென் குருகைப் பிரான் அமுதத் திரு வாய் ஈரத் தமிழின் இசை உணர்ந்தோர்கட்க்கு
இனியவர் தம் சீரைப் பயின்று உய்யும் சீலம் கொள் நாத முனி அன்றோ

ச ச ஸோபி–அந்த ஆழ்வாரும்
தவ தேவ்யாஸ் தாஸஸ் –உனது பிராட்டிக்கு அடியவர்
ஆழ்வாரும் உனக்குப் படுக்கைப் பற்று அன்றோ –
பங்கயத்தாள் திரு அருளும் கொண்டவர் அன்றோ

இதி தவ கடாக்ஷணீயஸ் அஸ்மி –இந்த பாரம்பர்யத்தாலே தேவரீருக்கு அடியேன் கடாக்ஷிக்கத்
தகுந்தவன் ஆகின்றேன் அன்றோ

நிகமத்தில் தம்மைக் கடாக்ஷித்து அருள வேண்டுவது பேர் அருளாளனும் அவர்ஜநீயம்
என்னும் இடத்தை மூதலிக்கிறார்

சித்திர் பவதி வாநேதி சம்சய அச்யுதபி சேவிநாம்
ந சம்சய யோஸீத் தத் பக்த பரிசர்யாரதாத்மநாம் –அந்தப்புர பரிகரத்தை நோக்காது இருக்கப் போகாதே
யஸ்யா வீஷ்ய முகம் தத் இங்கித பராதீனோ விதத்தே அகிலம்
ச்ருத்வா வரம் தத் அநு பந்த மதாவலிப்தே நித்யம் ப்ரஸீத பகவான் மயி ரெங்கநாத –தேசிகன்

இந்த ஸ்லோகம் வசந்த திலக வ்ருத்தம் –

————

ஸ்ரீ பராசர பட்டார்யா ஸ்ரீ ரெங்கேச புரோஹி
ஸ்ரீ வத் சாங்க ஸூதா ஸ்ரீ மாந் ஸ்ரயசே மேஸ்து பூயஸே

நவ்மி நாத முனிம் நாம ஜீமுதம் பக்தி அவக்ரஹே
வைராக்ய பகவத் தத்வ ஞான பக்தி அபி வர்ஷுகம் –ஸ்ரீ ரெங்க ராஜ ஸ்தவம்––1-5-

நவ்மி நாத முனிம் நாம ஜீமுதம் -ஸ்ரீ நாதமுனிகள் என்ற பிரசித்தமான மேகத்தை ஸ்துதிக்கிறேன்
பக்தி அவக்ரஹே-பக்தியாகிற தீர்த்தம் அருமைப்பட்டு இருந்த துர் பிஷ காலத்தில்
வைராக்ய பகவத் தத்வ ஞான பக்தி அபி வர்ஷுகம் –பகவத் வியதிரிக்த விஷயாந்தரங்களில் விரக்தியில் என்ன –பகவத் ஞான பக்திகள் என்ன ஆகிய இவற்றை எங்கும் வர்ஷிக்க வல்ல

—————

ஸ்ரீ மான் வேங்கட நாதார்ய கவிதார்க்கிக கேசரீ
வேதாந்தாசார்ய வர்யோமே சந்நிதத்தாம் சதா ஹ்ருதி —

நாதேந முனிநா தேந பவேயம் நாதவா நஹம்
யஸ்ய நைகமிகம் தத்த்வம் ஹஸ்தாமலகதாம் கதாம் –ஸ்ரீ யதிராஜ சப்ததி—ஸ்ரீ வேதாந்த தேசிகன் ஸ்வாமி–5-

வேதங்களில் பொதிந்துள்ள உண்மைகள் அனைத்தும் அவரிட்மன் உள்ளங்கை நெல்லிக்கனி போன்று தெளிவாக நிற்கும் நிலை பெற்றது
அப்படிப்பட்ட நாதமுனிகள் மூலம் நான் உயர்ந்த நல்லவரை அடைவேன் ஆவேன்

நாதமுனியை எனது நாதராக (எஜமானர்) நான் வைத்திருக்கிறேன்,
யாருடைய கைகளில் வேதங்களின் அடிப்படையான கருவானது புரிதலின் தெளிவைப் பெற்றதோ –
இதை ஹஸ்தாஅமலகா என்று அழைக்கலாம்,
இந்த நாதத்தைக் கொண்டு ஒருவர் கூறுவது போல், நான் ” அநாத ” (ஸ்வாமி இல்லாமல் )  இருக்க முடியாது.

தேவாதி நாத கமலா ப்ருதனேசா பூர்வாம்
திபிதந்தரம் வகுளா பூஷணா நாதா முக்யை
ராமானுஜ ப்ரப்ருதிபி பரி பூஷிதாக்ராம்
கோப்த்ரீம் ஜகந்தி குரு பங்க்தி அஹம் ப்ரபத்யே -ஸ்ரீ தேவ நாயக பஞ்சாசத்-2-

குரு பரம்பரை -தேவாதி நாதன் தொடங்கி -கமலா -ப்ருதனேசர் -ஸ்ரீ விஷ்வக்சேனர் -வகுளா பூஷணர்-
நாதா முக்யை-ஸ்ரீ நாத முனிகள் தொடக்கமாக -பெரிய நம்பி -ஸ்ரீ ராமானுஜர்-அஸ்மத் ஆச்சார்யர் வரை – –குரு பங்க்தி-

பரதாய பரம் நமோஸ்து தஸ்மை
ப்ரதமோதாஹரணாய பக்தி பாஜாம்
யத் உபஞ்ஞம் அசேஷ த: ப்ருதிவ்யாம்
ப்ரதிதோ ராகவ பாதுகா ப்ரபாவ:–ஸ்ரீ பாதுகா சஹஸ்ரம்-1-ப்ரஸ்தாவ பத்ததி –விஷயம் அறிமுகம் -2-

பரதாய பரம் நமோ அஸ்து -அந்த பரதாழ்வான் பொருட்டு நமஸ்காரங்கள் –
ஜடா பரதர் துஷ்யந்த மகனும் பரதன் -நாட்டிய சாஸ்திரம் அருளிய பரதன் -போன்ற பலர் உண்டே
தஸ்மை பிரதமோதாஹரணாய பக்தி பாஜாம் -பக்தர்களுக்கு முதல் உதாரணம் -மற்றவர்களை வியாவர்த்தித்து –
ஆயிரம் ராமர் நின் கேழ் ஆவரோ -கோடி ராமரும் அண்ணல் உனக்கு ஒப்போ கௌசல்யை –
யத் உபஞ்ஞம் அசேஷத ப்ருதிவ்யாம் பிரதிதோ ராகவ பாதுகா பிரபாவ-பாதுகையின் பெருமையை உலகோர் அறியும்படி

ஸ்ரீ ராமனுடைய ஸ்ரீ பாதுகைகளுக்கு இவ்வளவு சக்தி உள்ளதை உலகுக்கு எடுத்துக் காட்டிய
பரம பாகவதனாகிய பரதனை சேவிக்கின்றேன்

பரதன் -என்றது ஸ்ரீ நாத முனிகளையும் குறிக்கும் -பாவ ராக தாள கொண்டு அருளிச் செயலை அளித்தார் அன்றோ –
தாளம் வழங்கி தமிழ் மறை இன்னிசை தந்த வள்ளல் ஸ்ரீ நாத முனி-
பாதுகையான நம்மாழ்வார் பெருமை உலோகர் இவரால் தானே பரவப் பெற்றது
ஸ்ரீ நம்மாழ்வாரையும் திருவாய் மொழியும் தானே உலகை உஜ்ஜீவிக்கும் பரம சக்திகள்

ஸ்ரீபரதாழ்வானால் தான் ஸ்ரீராமானுடைய பாதுகைகளுக்கு இவ்வளவு சக்தியிருக்கிற தென்பது எல்லா வுலகத்திற்கும் தெரிந்தது.
ஆகையால் ஸ்ரீபரதாழ்வாரைத் தான் ஸேவிக்கிறேன்.

ஸங்கல்ப ஸூர்யோதயத்தில் முதல் அங்கத்தில் இருபத்தைந்தாவது ஸ்லோகத்தில்
“பரத” என்பது நாதமுனிகளைச் சொல்லுகிறது.
அதனால், ஸ்ரீநம்மாழ்வாருடைய பெருமை ஸ்ரீநாதமுனிகளால் தான் உலகத்திற்கு தெரிந்தது
“பரத” என்பதால் தெரியப்படுத்தபட்டதில் பாவ, ராக, தாள் என்கிற மூன்று ஸங்கதிகளிலேயும்
மஹா பண்டிதராகிய நாதமுனிகளை ஸேவிக்கிறேன்

——————-

ஸ்ரீ பூர்வ ஆச்சார்யர்களின் -ஸ்ரீ யாமுன முனிகள்–ஸ்துதிகள் –

ஸ்ரீ கீதா பாஷ்யத்தின் தொடக்கத்தில் உள்ள ஸ்வாமி ஸ்ரீ ஆளவந்தார் பற்றிய தனியன்—

யத் பதாம்போருஹ-த்யான வித்வஸ்தாசேஷ-கல்மஷ
வஸ்துதாம்-உபயாதோ-ஹம் யாமுநேயம் நமாமி தம்.

“யத்பதாம்போருஹ ” எனும் சொல்
ய், அ, த், ப், அ, த், அ, ம், ப், ஒ, ர், உ, ஹ், அ எனப் பதிநான்கு பகுதிகளாலானது.
அதாவது ஏழு ஜோடித் திருவடிகளைக் குறிப்பதாகக் கொள்ளலாம்.

இந்த ஏழு இணைத் திருவடிகள் ஸ்வாமியின் ஐந்து ஆசார்யர்கள்,
ஸ்ரீ ஆழ்வார், ஸ்ரீ ஆளவந்தாரையே குறிப்பனவாகக் கொள்ள வேணும்.

இதை வேறு விதமும் காணலாம்.
இந்த “யத்பதாம்போருஹ ” சப்தத்தை ஷஷ்டி தத்புருஷ ஸமாஸமாக எடுத்து,
யஸ்ய பதாம்போருஹே எனக் கொண்டு,
யாவருடைய தாமரைத் திருவடிகளில் என விளக்கம் பெற்று,
மேலும் அதை இப்படி மூவகைகளில் நிர்வஹிக்கலாம்:

ஸ்ரீ ஆளவந்தாரின் திருவடித் தாமரைகள் அவரது திருமேனியிலே வணங்கப்படுகின்றன.
ஸ்ரீ ஆளவந்தாரின் திருவடிகள் – அவரால் தொழப்பட்ட எம்பெருமான், ஆழ்வார், நாதமுனிகளின் திருவடிகள்,

ஸ்ரீ ஆளவந்தாரின் திருவடிகள் –
அவர் தம் சிஷ்யர்கள், சிஷ்யர்களைத் திருவடிகளாகக் கூறுதல் மரபாதலால். ஆகவே அவர்தம் ஐந்து சிஷ்யர்களைக் குறிக்கும்.

ஸ்ரீ ஸ்வாமியின் இத் தனியன் “பதாம்போருஹ” என “ப” சப்தத்தோடு தொடங்குகிறது.
ஸ்ரீ பெரிய நம்பிகள் தாம் ஸ்வாமிக்குப் பஞ்ச சம்ஸ்காரங்கள் செய்து மந்த்ரோபதேசமும் அர்த்த உபதேசமும் செய்து வைத்தார்.
ஆகவே அவர்க்கு ஸ்வாமியின் ஆசார்ய பரம்பரையில் விசேஷ இடமுண்டு.
அவர் திருநாமம் ஸ்ரீ பராங்குச தாசர் என்பது “ப”வில் தொடங்குவது.
ஸ்ரீ பராங்குசர் என்பது முதலிலேயே நம்மாழ்வார் திருநாமம்.
இவ்வாறாக, ஸ்ரீ இராமாநுசர் தம் ஆசார்யன் தனியனில் குருபரம்பரை முழுமையையும் துதித்தாராயிற்று.

ஸ்ரீ ஆழ்வானின் சிஷ்யரும் சுவாமியின் சமகாலத்தவருமான ஸ்ரீ அமுதனார் தம் க்ரந்தத்தில்
ஸ்ரீ இராமானுசருக்கு அவர் முன்னோருடனான தொடர்பையே விசேஷித்துப் பாடினார்.

இதுவே ஒரு பேரறிவாளனுக்கான அடையாளம்.
ஒரு சாதாரண வித்வான் சொல்லுக்கு, தானே உள்ள பொருளோடு நிற்பார்.
ஸ்ரீ சுவாமியின் ஈடு இணையற்ற மேதா விலாசம் நமக்கு அவரது ஒரு சொல்லில் பல பொருள்களைக் காட்டுகிறது.
ஸ்ரீ எம்பெருமானாரின் க்ரந்தங்கள், சொற்கள் பழையதாகி வருகின்றன, ஆனால் பொருளோ தினமும் இளமையாய் உள்ளது.

யோ நித்ய அச்யுத பதாம் புஜ யுக்ம ருக்ம வ்யாஹாமோஹதஸ் ததிராணி த்ருணாய மேனே
அஸ்மத் குரோர் பகவதோஸ்ய தயைக சிந்தோ ராமானுஜஸ்ய சரனௌ சரணம் ப்ரபத்யே —

ஸ்ரீ பாஷ்ய மங்கள ஸ்லோகம்
அகில புவந ஜன்ம ஸ்தேம பங்காதி லீலே!(1)
விநத விவித பூத விராத ரக்ஷைக தீக்க்ஷே |(2)
ஸ்ருதி சிரஸி விதீப்தே!(3) பிரஹ்மணி! (4) ஸ்ரீநிவாஸே !
பவது மம பரஸ்மிந் சேமுஷி பக்தி ரூபா ||

இஷ்ட தேவதையான ஸ்ரீநிவாஸனுக்குச் செய்யப்பட மங்கள ஸ்லோகம் இது.
அகில புவன–ஆசீர் வசனம் ஆசீர்வாத ரூப -வஸ்து நிர்த்தேச-இரண்டும்
அசேஷ -விஷ்ணவே நம -நமஸ்கார ரூப
வஸ்து நிர்த்தேச மங்களா சாசனம் -இரண்டும்
ஆக மூன்று வகை

இரண்டாவது மங்கள ச்லோஹம்-
பாராசர்ய வசஸ் ஸுதாம் (1)
உபநிஷத் துத்தாப்தி மத்யோ திருதாம் (2)
ஸம்சாராக்நி விதீபன வியபகத பிராணாத்ம சஞ்சீவனீம் (3) |
பூர்வாசார்ய ஸுரக்ஷிதாம் (4)
பகுமதிம் வியாஸாத தூரஸ்திதாம் (5)
அநீதாந்து நிஜாக்ஷரைஹி மனஸோ பௌமாஸ்து பிபந்வஹம் ||

ஸ்ரீ வேதாந்த ஸங்க்ரஹ மங்கள ஸ்லோகம்
அசேஷ சித் அசித் வஸ்து சேஷினே –சேஷ ஸாயினே-
நிர்மல ஆனந்த கல்யாணைதயே -விஷ்ணவே நம –

பரம் ப்ரம்ஹைவாஞம் ப்ரம பரிகதம் ஸம் ஸ ரதி தத்
பரோபாத்ய லீடம் விவசம் அசுபஸ் யாஸ் பதமிதி
சுருதி ந்யாயா பேதம் ஜகதி வித்தம் மோஹனமிதம்
தமோ யே நா பாஸ்தம் சஹி விஜயதே யாமுன முனி —

ஸ்ரீ கீதா பாஷ்யத்தில் ஸ்ரீ ஸ்வாமி ஸ்ரீ ஆளவந்தாருக்கு அருளிச் செய்த தனியன்

யத்பதாம் போருஹ த்யாநா வித்வஸ்தா சேஷ கல்மஷ
வஸ்துதாம் உபயாதோஹம் யாமுநேயம் நமாமி தம் –

ஸ்ரீ ஆளவந்தார் உடைய இரண்டு திருவடிகளை மட்டும் உத்தேசிக்கப் படுகின்றன அல்ல
யதோதாம் போருஹ –ஆறு எழுத்துக்களுக்கு வர்ணக்ரமம் சொன்னால் 14 எழுத்துக்கள் தேறும்
யகார -அகார -தகார -பகார -அகார – ககார -ஆகார -மகார-மாகார ஓகார -ரெப -உகார -ஹகார -அகார
ஸ்ரீ நம் ஆழ்வார் -ஸ்ரீ ஆளவந்தார் -தம்முடைய பஞ்ச ஆச்சார்யர்கள் திருவடிகளை
யஸ்ய பதாம் போரு ஹி -சம்பந்த சாமானே ஷஷ்டி –
மாதா பிதா -வகுளாபிராமம் ஸ்ரீ மத் ததங்க்ரி யுகளம் ப்ரணமாமி மூர்த்த்னா
பத -ஸ்ரீ ஆளவந்தார் திருவடிகளை சொல்லி
அம்போருஹ-தாமரைக்கு வாசகமான -தம்முடைய பஞ்ச ஆச்சார்யர்களையும்
தாவி வையம் கொண்ட தடம் தாமரைகட்கே போலே
ஸ்ரீ பராங்குச தாசர் -பெரிய நம்பி–என்று ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் காட்டி அருளுகிறார்

ஸ்ரீ கீதா பாஷ்யம் -தடங்கல் இல்லாமல் நிறைவு பெறவும் -உலகில் பரவவும் தமது ஆச்சார்யரை நமஸ்கரிக்கிறார்
ஸ்ரீ கீதார்த்த ஸங்க்ரஹம் அருளிச் செய்த ஸ்ரீ ஆளவந்தாரை ஸ்துதிக்கும் மங்கள ஸ்லோகம்

யத் -என்னும் பதம்
எந்த -என்று பிரசித்தமான -ஆச்சார்ய குண பூர்த்தி உள்ள மேன்மையைக் காட்டும்
பத -அம் போருஹ-
தாமரை மலர் போன்ற என்ற உதாஹரணம் -அந்த திருவடிகள் அனுபவிக்க வல்லவை
அந்த த்யானம் மகிழ்வோடு இணைந்து உள்ளதால் பக்தி என்றும் கூறப்படும்
த்யான
துரோணாச்சார்யாருக்கு ஏகலைவன் போலே தான் ஸ்ரீ ஆளவந்தாருக்கு என்றத்தைக் காட்டும்

த்யான வித்வஸ்த அசேஷ கல்மஷ
அழிக்கப்பட்ட அனைத்து பாபங்களையும் கொண்ட -என்பதால்
ஒரு முறை கடாக்ஷ லேசத்தாலே பலவிதமான பாபங்களும் அழிக்கப் பட்டன –
அதன் பின்னர் இடைவிடாமல் அந்த ஸ்ரீ ஆளவந்தாருடைய திருவடித் தாமரைகளையே எண்ணி இருப்பதால்
அவை வாசனையோடு முழுமையாக நீக்கப் பட்டன -என்றவாறு

வஸ்துதாம்
வஸ்துவாக இருத்தல் –
அஸ்தி ப்ரஹ்மேதி சேத் வேத சந்த மேநம் ததோ விது –தைத்ரியம் -2-6-1-ப்ரஹ்மத்தை அறிந்து கொண்டவன்
என்றால் அவனை இருக்கிறவனாக அறிகிறார்கள்
அஹம் வஸ்துதாம் உபயாத
நான் அடைந்துள்ளேனா -என்ற வியப்பால் அருளிச் செய்கிறார்
இப்படியாக தனது அநிஷ்டங்களும் அப்ராப்தங்களும் நீங்கப்பெற்று இஷ்டப் பிராப்தி அருளியதற்கு
மனம் வாக்கு காயம் -முக்கரணங்களாலும் ஏவப்பட்டு நமஸ்காரம் செய்கிறார்
இதைக் கேட்பவர்களுக்கும் அநேக மங்களங்களும் உண்டாகும்
இத்தால் ஆச்சார்ய வந்தனம் குரு பரம்பரயா த்யானம் பூர்வகமாக பக்தி செய்ய வேண்டும்
என்று உணர்த்தப்பட்டது

யதா பதாம் —அம்போருஹம் தாமரை திருவடிகளை தியானித்து
அசேஷ கல்மஷம்
வஸ்துத்வத்வம் அடைந்தேன் -இரண்டும்
த்யாநேன–கண்டு -இடைவிடாமல் நினைப்பதே-விமல சரீர சேவையால்
ஸ்ரீ ஆளவந்தாரை குறித்து மட்டும்

விஷயா விநிவர்தந்தே நிராஹாரஸ்ய தேஹிந–.
ரஸவர்ஜம் ரஸோப்யஸ்ய பரம் தரிஷ்ட்வா நிவர்ததே–৷৷2.59৷৷

விஷயங்களில் இருந்து இந்திரியங்களை இழுத்த ஜீவனுக்கு விஷயங்கள் நீங்குகின்றன
ஆனால் விஷயங்களில் ஆசை நீங்குவது இல்லை –
ஞான யோக நிஷ்டனுக்கு மேலான ஆத்ம ஸ்வரூபத்தைக் கண்டவுடன் இவ்வாசையும் நீங்குகிறது
ஆத்ம தரிசனத்தால் இந்திரியங்கள் அடக்கலாம் -ஏக ஆஸ்ரய தோஷம் –

ஆத்மாவை கண்டாலே போகும்
முயன்றாலும் -இந்திரியங்கள் மனத்தை இழுத்து செல்லும்
அன்யோன்ய ஆஸ்ரயம் வரும்
இத்தை போக்க அடுத்த ஸ்லோகம்

யததோ ஹ்யபி கௌந்தேய புருஷஸ்ய விபஷ்சத.–
இந்த்ரியாணி ப்ரமாதீநி ஹரந்தி ப்ரஸபம் மந—৷৷2.60৷৷

இந்திரியங்கள் அடக்கி ஆத்ம தர்சனம் -என்கிறான் –
பிரத்யனம் செய்தாலும் –இந்திரியங்கள் பலமானவை -மனசை பலாத்காரமாக இழுக்கும் –

இந்திரியங்களை விலக்கி என்னிடம் செலுத்து -த்யானம் பண்ண பண்ண சத்வ குணம் வளர்ந்து
ஸூபாஸ்ரயமான திவ்ய மங்கள விக்ரஹத்தை வைத்து
அதே போலே திருவடித் தாமரை த்யானம்
வஸ்துத்வம் அடைந்தது -அடுத்த நிலை
இருப்பு -தன்மையுடன் -ஸத்வித்யா பிரகரணம் -சங்கல்பித்து ஸ்ருஷ்ட்டி செய்தது -சங்காத்வம்-உள்ளே புகுந்து
தேறி இருத்தல் -சஸாபி ராம –பரிஷத் கத சனையி அனுபவிக்க ஆசை உடன் –
பூ சத்தாயாம் சத்தை பெற ஸ்ரீ ராமாயணம் கேட்க இறங்கி-

கீதா பாஷ்யத்தின் தொடக்கத்தில் உள்ள ஸ்வாமியின் ஆளவந்தார் பற்றிய தனியன்”

யத் பதாம்போருஹ-த்யான வித்வஸ்தாசேஷ-கல்மஷ
வஸ்துதாம்-உபயாதோ-ஹம் யாமுநேயம் நமாமி தம்–

“யத்பதாம்போருஹ ” எனும் சொல்
ய், அ, த், ப், அ, த், அ, ம், ப், ஒ, ர், உ, ஹ், அ எனப் பதிநான்கு பகுதிகளாலானது.
அதாவது ஏழு ஜோடித் திருவடிகளைக் குறிப்பதாகக் கொள்ளலாம்.
இந்த ஏழு இணைத் திருவடிகள் ஸ்வாமியின் ஐந்து ஆசார்யர்கள், ஸ்ரீ ஆழ்வார், ஸ்ரீ ஆளவந்தாரையே
குறிப்பனவாகக் கொள்ள வேணும்.

இதை வேறு விதமும் காணலாம்.
இந்த “யத்பதாம்போருஹ ” சப்தத்தை ஷஷ்டி தத்புருஷ ஸமாஸமாக எடுத்து,
யஸ்ய பதாம்போருஹே எனக் கொண்டு, யாவருடைய தாமரைத் திருவடிகளில் என விளக்கம் பெற்று,
மேலும் அதை இப்படி மூவகைகளில் நிர்வஹிக்கலாம்:

ஸ்ரீ ஆளவந்தாரின் திருவடித் தாமரைகள் அவரது திருமேனியிலே வணங்கப்படுகின்றன.
ஸ்ரீ ஆளவந்தாரின் திருவடிகள் – அவரால் தொழப்பட்ட ஸ்ரீ எம்பெருமான், ஸ்ரீ ஆழ்வார், ஸ்ரீ நாதமுனிகளின் திருவடிகள்,
ஸ்ரீ ஆளவந்தாரின் திருவடிகள் – அவர்தம் சிஷ்யர்கள், சிஷ்யர்களைத் திருவடிகளாகக் கூறுதல் மரபாதலால்.
ஆகவே அவர்தம் ஐந்து சிஷ்யர்களைக் குறிக்கும்.

ஸ்ரீ ஸ்வாமியின் இத்தனியன் “பதாம்போருஹ” என “ப” சப்தத்தோடு தொடங்குகிறது.
ஸ்ரீ பெரிய நம்பிகள் தாம் ஸ்வாமிக்குப் பஞ்ச சம்ஸ்காரங்கள் செய்து மந்த்ரோபதேசமும் அர்த்த உபதேசமும் செய்து வைத்தார்.
ஆகவே அவர்க்கு ஸ்ரீ ஸ்வாமியின் ஆசார்ய பரம்பரையில் விசேஷ இடமுண்டு.
அவர் திருநாமம் ஸ்ரீ பராங்குச தாசர் என்பது “ப”வில் தொடங்குவது.
ஸ்ரீ பராங்குசர் என்பது முதலிலேயே ஸ்ரீ நம்மாழ்வார் திருநாமம்.

இவ்வாறாக, ஸ்ரீ இராமாநுசர் தம் ஆசார்யன் தனியனில் குருபரம்பரை முழுமையையும் துதித்தாராயிற்று.
ஸ்ரீ ஆழ்வானின் சிஷ்யரும் ஸ்ரீ சுவாமியின் சமகாலத்தவருமான ஸ்ரீ அமுதனார் தம் க்ரந்தத்தில் ஸ்ரீ இராமானுசருக்கு
அவர் முன்னோருடனான தொடர்பையே விசேஷித்துப் பாடினார்.

இதுவே ஒரு பேரறிவாளனுக்கான அடையாளம். ஒரு சாதாரண வித்வான் சொல்லுக்கு, தானே உள்ள பொருளோடு நிற்பார்.
ஸ்ரீ சுவாமியின் ஈடு இணையற்ற மேதாவிலாசம் நமக்கு அவரது ஒரு சொல்லில் பல பொருள்களைக் காட்டுகிறது.
ஸ்ரீ எம்பெருமானாரின் க்ரந்தங்கள், சொற்கள் பழையதாகி வருகின்றன, ஆனால் பொருளோ தினமும் இளமையாய் உள்ளது.

பொருள் அல்லாத என்னை பொருள் ஆக்கி அடிமை கொண்டாய்
தமியேனுக்கு அருளாய் முந்திய பாசுரம்
அறிவித்து சத்தாக ஆக்கி
வஸ்துவை உருவாக்கி உஜ்ஜீவனமும் கொடுத்து
அசந்நேவ பவதி–
நான்கு நிலைகள் பார்த்தோம்
1-இருத்தல் 2-நிலை பெருத்து இருத்தல் -3-பகவத் ஞானம் -4-கைங்கர்யம்

என்னைப் புவியில் ஒரு பொருளாக்கி மருள் சுரந்த
முன்னைப் பழ வினை வேர் அறுத்து ஊழி முதல்வனையே
பன்னப் பணித்த இராமானுசன் பரன் பாதமும் என்
சென்னித் தரிக்க வைத்தான் எனக்கு ஏதும் சிதை வில்லையே ஸ்ரீ ராமானுஜ நூற்று அந்தாதி -4 –

மருள் சுரந்த முன்னை வினை -சூழலாக அஞ்ஞானம் கர்மா இரண்டும் உண்டே –
வேர் அறுத்து அசேஷ -சவாசனமாக ருசி யுடன் போக்கி
பன்ன பணித்த –ஆராய -பரன் பாதம் சென்னியில் தரிக்க வைத்தான்
பொருள் ஆக்குதல் இல்லை -ஒரு பொருள் -அத்விதீயமாய் -ஒருத்தி மகனாய் போலே
சேஷ பூதனாக அறிந்து அடிமை
ஆச்சார்ய நிஷ்டை ஸ்ரீ வடுக நம்பி நிலை
ஸ்ரீ அமுதனார் -அதுக்கும் மேலே -அன்பு செய்யும் சீரிய பேறுடையார் அடிக்கீழ் –
இந்த தனித்தன்மை ஒரு பொருள் பாகவத சேஷத்வம்

ஸ்ரீ ஸ்வாமி தனித்தன்மையுடன் அழகாக பிரமாணங்களைத் தொகுத்து அருளிச் செய்தார்
ஆச்சார்யர் கடாக்ஷத்தாலும் வாக் அம்ருத வர்ஷீயான இவர் பிதா மஹரின் ஆசீர்வாதத்தாலும்
இவர் பிதாவின் ஆசீர்வாதத்தாலும் ஸ்ரீ ஸ்வாமி நம்மை எல்லாம்
அமுத மொழிகளால் நீண்ட ஆண்டுகள் நனைக்கட்டும்

———–

பரம் ப்ரஹ்மை வாஞ்ஞம் ப்ரம பரிகதம் ஸம்ஸரதி தத்
பரோ பாத்யா லீடம் விவசம் அசுபஸ்யாஸ் பதமிதி I
ஸ்ருதி நியாயா பேதம் ஜகதி விததம் மோஹனமிதம்
தமோ யேநாபாஸ்தம் ஸஹி விஜயதே யாமுன முனி: II–ஆச்சார்ய நமஸ்கார ரூபம்-

இந்த ஸ்லோகம் ஸ்ரீ யாமுநாசார்யரைப் புகழ்ந்து ஸமர்ப்பிக்கப்பட்டது.

அவர் காலத்தில் வேதங்களின் உள்ளுறைப் பொருளைப் புரிந்து கொள்வதில் இருந்த குழப்பங்களை நீக்குவதில்
அவரது பெரும்பங்கு இதில் வற்புறுத்தப் படுகிறது.
வேதங்களின் நிலைப்பாட்டை விளக்க
ஸ்ரீ யாமுநாசார்யர் ஸித்தித்ரயம் மற்றும் ஆகமப் ப்ராமாண்யம் போன்ற க்ரந்தங்களை சாதித்தருளினார்.

இந்த ஸ்லோகத்தில் எம்பெருமானார் தம் காலத்தில் இருந்த
மூன்று ப்ரதான வேதாந்தக் கோட்பாடுகளைக் குறிப்பிடுகிறார்.
இம் மூன்று கோட்பாடுகளையும் ஏற்பதில் உள்ள பெரும் ப்ரச்சினைகளைச் சுருக்கமாகக் கோடிட்டுக் காட்டுகிறார்.
இவ்வாறாக, மாற்றுக் கோட்பாடுகளைப் பற்றிய ஒரு சிறு விமர்சத்தை நமக்கு வைக்கிறார்.

சங்கர பாஸ்கர யாதவ பிரகாச மதங்களை நிரசித்தும்
தம்மை ஆ முதல்வன் இவன் என்று கடாக்ஷித்து அருளிய
ஸ்ரீ ஆளவந்தாரை நமஸ்கரிக்கிறேன் என்கிறார் இதில்

(i) பரம் ப்ரஹ்மைவாஞ்ஞம் ப்ரம பரிகதம் ஸம்ஸரதி

ப்ரஹ்மம் நிர்விசேஷ சின் மாத்திரம் -ஞான மயம் -ஸ்வயம் பிரகாசம் -மற்றவை அனைத்தும் மித்யா –
அந்த ப்ரஹ்மமே மாயையால் அஞ்ஞானத்தால் ஜகத்தாகத் தோற்றம் அளித்து
ஜென்ம ஜரா மரணாதி துக்கங்களை அடைகிறது என்பர் அத்வைதிகள்

அத்வைதத்தில் பர ப்ரஹ்மமே குழம்பியுள்ளது, ஸம்ஸாரத்தில் அந்வயிக்கிறது.

“பரம்” எனும் சொல் எல்லா வகையிலும் மேன்மையைக் குறிக்கும்.
வேதங்களில் ப்ரஹ்மத்தின் மேன்மை விளக்கப் படுகிறது.

ப்ரஹ்மம் எல்லா மங்களங்களாலும் நிறைந்தது, ஒரு குறையுமற்றது.
ஆகவே தான் அது ப்ரஹ்மம் எனப்படுகிறது,
அறியப்பட வேண்டியது என ஓதப்படுகிறது.
தன்னை உபாசிப்போர் குறைகளைப் போக்கி,
அவர்களுக்கு வேண்டிய நன்மைகளைச் செய்கிறது.

அத்வைதத்தில் இரு முரண்பாடுகள் உள்ளன –
(i) எல்லா வகையிலும் மேன்மையுற்ற ப்ரஹ்மமே அஞ்ஞானத்தில் மூழ்குமாயின் அதை
ப்ரஹ்மம் என்றழைக்க அதன் மேன்மை தான் யாது?
(ii) எல்லாரையும் உஜ்ஜீவிப்பிக்க வேண்டிய ப்ரஹ்மம் சோகிக்குமாயின் அதை உய்விப்பார் யார்?

”ஏவ” எனும் சொல் இந்த முரண்பாடுகளை வலியுறுத்துகிறது.
எப்பொழுதும் தனக்குத் தானே பிரகாசித்துக் கொண்டு இருக்கும் ப்ரஹ்மத்துக்கு தன்னை அறியாமையாகிய
அவித்யை எப்படி சம்பவிக்கும் -என்கிற விரோதமும்
ப்ரஹ்மமே சம்சாரம் அடைந்தால் மோக்ஷம் பெற வேதாந்த ஸ்ரவணாதிகள்
செய்ய வேண்டி இருக்கும் விரோதமும் உண்டாகுமே

தனக்கு ஏற்படும் அஞ்ஞானத்தினால் ப்ரஹ்மம் மாயையில் சிக்குண்கிறது
(ப்ரம பரிகதம்) இம்மாயையே பார்வையில் வேறுபாட்டை விளைக்கிறது.

அத்வைதத்தில் ப்ரஹ்மம் ஒன்றே உணர்வுள்ளதாக ஒப்புக் கொள்ளப் படுவதால் வேறுபாடு பற்றிய
உணர்வு பூர்வமான அநுபவம் மட்டுமே இருக்க முடியும்.

ப்ரஹ்மம் மாயையை அனுபவிப்பதில்லை,
பிற யாவும் அனுபவிக்கின்றன என அத்வைதியால் வாதாட இயலாது.
ப்ரஹ்மம் தவிர்த்த ஏனைய யாவும் மாயையின் பாற்பட்டனவே.

மாயையினால் உண்டான ஒன்று மாயையை அனுபவிப்பது என்பது முரண்பாடாகும்.

முதலில் தான் ஸ்ருஷ்டித்த மாயையின் விளைவு தன் மாயையைத் தானே உருவாக்க முடியாது.
மாயையின் பொருள்களை அநுபவிக்க வேண்டுமாயின் அம்மாயை முன்பே இருக்க வேண்டும்.
ஆகவே, ப்ரஹ்மம் தானே அதை முதலில் அநுபவித்தாக வேண்டும்.

(ii) தத் பரோபாத்யாலீடம் விவசம்

ப்ரஹ்மன் மாற்றம் விளைப்பவற்றால் கட்டுண்டு கிடக்கிறது.

இது பாஸ்கராசார்யரின் கொள்கையை விளக்குகிறது.
தான் மட்டுமே ஸத்யமாயுள்ள ப்ரஹ்மத்தை மாயை-அவித்யை எவ்வாறோ குழப்புகிறது
என்பதை நிலை நிறுத்துவதில் உள்ள ஸ்ரமங்களை பாஸ்கரர் உணர்ந்திருந்தார்.

“பர” என்றதால்
இயல்வுகள் யாவும் தனிப்பட்டவை, உண்மையானவை என்பதும் பெறப்படுகிறது.
இவ் வியல்புகள் ப்ரஹ்மத்திலிருந்து வேறுபட்டவை.
இவற்றால் தளை யுண்டு ப்ரஹ்மம் கர்ம சக்கரத்தில் மாட்டிக்கொள்கிறது.

மேலும் இவ் விளக்கத்தில், மேம்பட்ட ஒரு ப்ரஹ்மம் தானே கட்டுண்பதும்
துக்கத்தில் உழல்வதுமான முரண்பாடும் உள்ளது.

(iii) அசுபஸ் யாஸ் பதம் = ப்ரஹ்மம் அசுபங்களின் இருப்பிடமாகிறது

இது யாதவ ப்ரகாசரின் கொள்கையை விளக்குகிறது.

யாதவ ப்ரகாசர் ப்ரஹ்மமே அறிவுள்ளன-அறிவற்றன இரண்டுமாகவும் பிரிந்திருப்பதாகவும்,
ஆகவே அசுபங்களின் இடமாய் இருப்பதாகவும் கருதினார்.

அறிவற்றனவின் அசுபத்தன்மை அவை எப்போதும் மாறிக் கொண்டே இருப்பதாலும்,
நிலை நில்லாமையாலும் ஏற்படுகிறது.

அறிவுள்ளனவற்றின் அசுபத் தன்மை அவை கர்ம ஸாகரத்தில் மாட்டிக் கொள்வதாலும்
அவ்வினைகளால் துன்புறுவதாலும் ஏற்படுகிறது.

வேதங்களில் சொல்லப்படும் ப்ரஹ்மம்
“ஸ்வேதர-ஸமஸ்த-வஸ்து-விலக்ஷண”மாய் , அதாவது
மற்றெல்லாப் பொருள்களிலிருந்தும் வேறுபட்டும்,
அவற்றின் அசுபங்கள்/அமங்கலங்கள் யாதொன்றும் இல்லாமலும் இருக்கிறது.

ஆனால், யாதவப்ரகாசரின் யோஜனையில், வேதக் கோட்பாட்டுக்கு விருத்தமாக,
ப்ரஹ்மமே அமங்கலங்களின் இருப்பிடமாய் உள்ளது.

”பரம் ப்ரஹ்மைவ” எனும் சொற்கள் இம்மூன்று கோட்பாடுகளுக்குமே பொருந்தும்.
அதாவது
எல்லாப் பொருள்களுக்கும் மேலானதும்
எல்லா வகைகளிலும் மேம்பட்டதும்
ஆனந்த ஸ்வரூபமானதும்
குறைகளே அற்றதும்
எல்லாவகைகளிலும் மங்கலமானதும் பரிசுத்தமானதும் ஆன ஒன்றை
சங்கரர், பாஸ்கரர், யாதவப்ரகாசர் மூவருமே
அஞ்ஞானம், அமங்கலங்கள், துக்கம் இவற்றால் உழல்வதாகக் கருதுகிறார்கள்.

(iv) ச்ருதி ந்யாயா பேதம் ஜகதி விததம் மோஹநம் இதம் தம:

ப்ரஹ்மத்தை பூர்ணம் என்றும், பூர்ணமன்று என்றும் இவ் விளக்கங்களால் அறிந்து கொள்வது
தவறான அறிவும், அறியாமையும் ஆகும்.

“இதம் தம:” என்றது இதையே.
இத்தகைய புரிந்து கொள்ளல் தர்க்க நெறிகளுக்கு முரணானது.
வேதங்களைப் புரிந்து கொள்ள உதவும் நியாய சாஸ்த்ரத்துக்கு முரணானது ஆகும்.

கேள்வி: இவை யாவும் தவறான புரிந்து கொள்ளல், வேதங்களுக்கு விரோதமானவை,
வேதங்களின் அங்கங்களான நெறிகளுக்கு முரணானவை….எனில், இவற்றை விமர்சிப்பான் என்?

விடை: ஏனென்றால், அவைகளும், “ஜகதி விததம்” உலகம் முழுதும் பரவிக் கிடக்கின்றன,
பலரும் இக் கொள்கைகளால் மயங்கியும் கிளர்ச்சியுற்றும் உள்ளனர்.

அவ்வாறே இருக்கட்டுமே.
இக்கருத்துகள் தவறானவை, மறைகளின் கருத்துக்கு முரணானவை, தமக்குள்ளும் முரண்பாடுகளைக் கொண்டவை
பலராலும் பின்பற்றப் படுபவை…..இருக்கட்டுமே!
நாம் ஏன் அவற்றை விமர்சிக்க வேண்டும்?

விடை: ஏனெனில் இப் பாதைகளைப் பின்பற்றினால் பற்றுவோர் வழி தவறிப் போவர்.
இக் கருத்துகள் “மோஹநம்” = மதி மயக்குபவை.
ஆகவே, அறியாமை இருள் விமர்சிக்கத் தக்கதே.

இப்படிச் சொல்லி, ஆசிரியர் இவ் விமர்சத்தைத் தாம் செய்ய மேற்கொண்ட பின்னணியை விளக்கி யருளுகிறார்.

வேதங்களுக்குத் தவறான விளக்கங்களை ஸ்வாமி தம் கருணையினால் மறுத்துரைக்கிறார்.

ஞானம் பெற்றவர் பெறாதோருக்கு அறிவுறுத்தி நெறிப் படுத்துவது கடமையாகும்.

ஆகிலும் ஸ்வாமி இதைத் தம் ஆசார்யரான
ஆளவந்தார் மேல் ஏறிட்டு ஸாதிக்கிறார்:

(v) யே நா பாஸ்தம் ஸ ஹி விஜயதே யாமுன முநி:
இச் சொன்ன அறியாமை இருளை நீக்கும் யாமுன முநி வென்று நிற்பாராக!

தர்க்க விரோதமானதும் சாஸ்த்ர விரோதமானதுமான கோட்பாடுகளை மறுத்து ஒழிப்பதில் தம்
ஆசார்ய அருள் பெரும் பணியினை நினைவு கூறுகிறார்.

தம் ஆசார்யருக்கு இவ்விஷயத்தில் ஜய கோஷம் இடுகிறார்.

வேதார்த்த ஸங்க்ரஹத்தின் மூலம் யாமுநாசார்யரின் வெற்றியை ஸ்வாமி நிரந்தரமாக்கியுள்ளார் என்ன வேண்டும்.

தம் குருவின் திருவுள்ளத்தை சீடர் இக் க்ரந்தம் முழுக்கத் தெளிவாக அர்த்த புஷ்டி யுள்ளதாக்கி யுள்ளார்.

————————

பிரணம்ய சிரஸா ஆச்சார்யாம் தத் ஆதிஷ்டேன வர்த்தமான
ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ர பதாம் தஸ்த வேதாந்த வாக்யார்த்தம் பிரகாசித்யதே–இரண்டாவது மங்கள ஸ்லோகம்

அடுத்து ஆசார்ய வந்தனங்கள் -குரு பரம்பரை
வேதாந்தார்த்த அர்த்தம் அறிய

பிரணமய ஆச்சார்ய சிரஸா —வணங்கிய பின் –

தத் ஆதிஷ்டேன வர்த்தமான மார்க்கம் –அவர்கள் அனுஷ்டானம் படியே நடந்து

ப்ரஹ்ம ஸூத்ர பதாம் தஸ்த வேதாந்த வாக்யார்த்தம் பிரகாசித்யதே –
தெளிவாக காட்டப் படுகிறது
தத்வ ஹித புருஷார்த்தம் காட்டும் வேதாந்த அர்த்தங்கள்

ப்ரஹ்ம ஸூத்ரங்கள் பதங்களில் உள்ளடங்கி –
கிருபா மாத்திர ஞான அனுஷ்டான ஆசார்யர்களால் -பிரகாசிப்பிக்கிறோம் –

ஸ்ரீ பாஷ்யம் -156–அதிகரணங்கள்–545- ஸூத்ரங்கள் –

அத்ர இயமேவ வேத விதாம் ப்ரக்ரியா –இதுவே வேத வித்துக்கள் உடைய பிரகிரியை –
சேதன அசேதன விலக்ஷணன் பர ப்ரஹ்மம் என்பது

அசித் வஸ்துந -ஸ்வரூபத்தாலும் ஸ்வாபவத்தாலும் –
ஜடம் பராக் -விகாரங்கள்-சரீர பூதம் –

ப்ரத்யக் ஆத்மா -பத்தன் முக்தன் நித்யன்–ஞான ஆஸ்ரயம் ஆத்ம பூதன்-சேதனன் –

இவர்களை விட அத்யந்த விலக்ஷணன் –

ஹேய ப்ரத்ய நீகத்வம் –
கல்யாணை குணம் –
வியாப்யம் –
தாரகம்
நியாந்தா
சேஷி -இவற்றால் -விலக்ஷணன்

யதோ பகவதா யுக்தம் -ஸ்ரீ கீதாச்சார்யனால் சொல்லப் பட்டது -15-புருஷோத்தம வித்யை –
மூன்று ஸ்லோகங்கள் உதாகரித்து
பக்தி யோக நிஷ்டனுக்கு -விளம்பம் இல்லா பலன் -அவதார ரகஸ்யமும் இந்த புருஷோத்தம வித்யையும் –

க்ஷரம்-அக்ஷரம் -விட வேறு பட்டவன் –
சேதன வர்க்கம் இரு வகை –விகாரம் -ஸ்வ பாவத்தால் –
லோகே-ஸ்ருதி ஸ்ம்ருதி ரூபமான சாஸ்திரத்தில் என்றபடி –

இங்கு –
உத்தம புருஷன் அந்நியன் –பரமாத்மா -உதகரிக்கப் பட்டு
லோகே -சாஸ்திரத்தில் -இப்படி சொல்லப் பட்டதே –

லோக த்ரயம் -சேதன அசேதன -லோகம் -ஆதித்யே –அநு பிரவேசித்து -வியாபித்து -தாங்கி–ஐஸ்வர்ய நியமித்து-

ததாபி – -அவ்யய -ஒட்டாமல் -0வியாப்யகத தோஷம் தட்டாமல்
இவை எல்லாம் -ஸ்வாபாவிகம்-வந்தேறி இல்லை -ஸ்வ பாவ சித்தம் –
யஸ்மாத் விலக்ஷணன் –புருஷோத்தமன் -பிரசித்தி -உடையவன் -இதனால்

வாஸூதேவ -விஷ்ணு -புருஷோத்தமன் -ப்ரஹ்ம நாராயண சப்தம் -ஸ்ம்ருதி புராண ஸ்ருதிகள் கோஷிக்குமே –

ஸ்ருதி ச -பிரதான க்ஷேத்ர –பயோக பதி -சேஷி –

குணே ச –சேஷ சேஷி பாவத்துடன் தத்வ த்ரயம்

பதிம் விஸ்வஸ்ய ஆத்மேஸ்வரீம் -ஜகத்பதி -தனக்கே தான் நியந்தா -ஸ்வாமி -ஸூநிஷ்டன்

அந்தர் பஹிஸ்ஸா தத் சர்வம் வியாப்ய நாராயண -சர்வ ஆதாரன்-சர்வ நியாந்தா –

——————-

ஸ்ரீ பராசர பட்டார்யா ஸ்ரீ ரெங்கேச புரோஹித
ஸ்ரீ வத் சாங்க ஸூதா ஸ்ரீ மாந் ஸ்ரயசே மேஸ்து பூயஸே

விதாய வைதிகம் மார்க்கம் அகௌதஸ் க்ருத கண்டகம்
நே தாரம் பகவத் பக்தேர் யாமுநம் மநவாமஹை –ஸ்ரீ ரெங்க ராஜ ஸ்தவம்–பூர்வ சதகம்-4-

விதாய வைதிகம் மார்க்கம் -வைதிக நெறியை செய்து அருளி

அகௌதஸ் க்ருத கண்டகம் விதாய -தூர்வாதிகள் ஆகிற முள் அற்றதாக செய்து அருளி
சித்தி த்ரயம் -ஆகம பிராமண்யம் -ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னம் இத்யாதி திவ்ய பிரபந்தங்களைச் செய்து அருளி -என்றவாறு
குத குத அது என் இது என் என்று துர் ஆக்ஷேபங்கள் செய்து கொண்டு இருக்கும் தூர்வாதிகளே கௌதஸ்குதர்-

நே தாரம் பகவத் பக்தேர் -ஸ்ரீ பகவத் பக்தியை தழைத்து ஒங்கச் செய்து அருளிய
யாமுநம் மநவாமஹை -ஸ்ரீ ஆளவந்தாரை த்யானிக்கக் கடவோம்

வேதமார்க்க பிரதிஷ்டாபன ஆச்சார்யரான ஸ்ரீ யமுனைத் துறைவனை சிந்திக்கக் கடவோம் என்றதாயிற்று

குண அனுபவத்தால் தமக்கு பிறந்த நாநா பாவத்தால் ஸ்வ கீயரையும் கூட்டிக் கொண்டு பஹு வசனம் –

———-

விகாஹே யாமுனம் தீர்த்தம் சாது ப்ருந்தாவனே ஸ்த்திதம்
நிரஸ்த ஜிஹ்மக ஸ்பர்சே யத்ர கிருஷ்ணா க்ருதாதர —ஸ்ரீ யதிராஜ சப்ததி—ஸ்ரீ வேதாந்த தேசிகன் ஸ்வாமி–8-

உலகத்தில் மிகவும் உயர்ந்த இடமான பிருந்தாவனத்தில் உள்ள யமுனை நதியிடம் மிகவும் அன்புடன் கிருஷ்ணன் இருந்தான்
அந்த நீரில் இருந்து காளியனை அவ்விடத்து விட்டு விலக்கினான்
இந்த யமுனை நதி போன்றே அடியார்களைக் காப்பாற்றவும் தீய புத்தியை விலக்கவும் உறுதியுடையவர் ஆளவந்தார் ஆவார்
அப்படிப்பட்ட அவரிடம் நான் ஆழ்ந்து உள்ளேன்
இந்த ஸ்லோகத்தில் யாமுனம் யமுனை ஆற்றையும் ஆளவந்தாரையும் குறிக்கும் –

யமுனையின் புனித நீரில் ( ஆளவந்தார் ) நீராடுவோம்,
அவர் சராசரி மோகம் மற்றும் பற்றுதல் ஆகியவற்றுடன் அனைத்து தொடர்புகளையும் துண்டித்தவர்,
சாதுக்களைப் பாதுகாப்பதில் உறுதியாக நின்றவர்,
மற்றும் கிருஷ்ணரால் வலியுறுத்தப்பட்ட விஷயங்கள் மிகச் சரியாக இருந்தன .
(இரண்டாவது பொருள்: பிருந்தாவனத்திற்கு அருகில் உள்ள விஷப் பாம்பு அகற்றப்பட்ட யமுனை நதியின்
புனித நீரில் ஸ்நானம் செய்வோம், அதில் கிருஷ்ணர் ஆர்வம் காட்டினார்.)

———————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஆளவந்தார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

——————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆளவந்தார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ கூரத்தாழ்வான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பராசர பட்டர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேதாந்த தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்

ஸ்ரீ இராமாயண – -தனி ஸ்லோக- வியாக்யானம் -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை அருளிச் செய்தது–பாபாநாம் வா ஶுபா4நாம் வா–யுத்த காண்டம் ஸர்க்கம்-116; ஶ்லோகம்-44-

January 17, 2024

பாபாநாம் வா ஸூபாநாம் வா வதார்ஹாணாம் பிலவங்கம
கார்யம் கருண கார்யேண ந கச்சின் நாபராத்யதி –116-44-

பாபாநாம் வா ஸூபாநாம் வா -பாபிகள்  விஷயத்திலும் புண்ணியவான்கள் விஷயத்திலும்
வதார்ஹாணாம் -கொல்லத் தக்கவர் விஷயத்திலும்
பிலவங்கம-வானரனே
கார்யம் கருண கார்யேண-நல்லோனாலே கருணை யானது செய்யத் தக்கது
ந கச்சின் நாபராத்யதி-எவனும்  குற்றம் செய்ய வில்லை எனபது இல்லையே –

அவதாரிகை –
ராவணனும் பட்டுப் பெருமாளும் விஜயிகளானார்என்று பெரிய பிரியத்தைப் பிராட்டிக்குத் திருவடி விண்ணப்பம் செய்ய
பிராட்டியும் ப்ரீதி பிரகர்ஷத்தாலே விம்மல் பொருமலாய் ஸ்தப்தையாய் இருக்க
இவனும் விக்கலுக்கு வெம்மாற்றம் போலே
கிந்நு சிந்தயசே தேவி கிம் தவம் மாம் நாபி பாஷசே -116-16- என்று
பெரிய பிரியத்தை விண்ணப்பம் செய்த எனக்கு ஒரு மறு மாற்றம் சொல்லாதே தேவர் எழுந்து அருளி இருக்கிற இருப்பு என் தான் -என்று திருவடி விண்ணப்பம் செய்ய
பிராட்டியும் உனக்கு சத்ருசமாகத் தரலாவது ஓன்று இல்லாமை காண்நான் பேசாது இருந்தது என்ன
இவனும் இவ்வளவில் நம் அபேஷிதத்தை விண்ணப்பம் செய்து கொள்வோம் என்று பார்த்து
தேவரை சுற்று முற்றும் நலிந்த ராஷசிகள் ஆகிறார்-க்ரூரைகளாய் தத் அநு குண பாவைகளாய் ஆயிற்று –
ராவணனுக்கு முன்னே கொல்ல வேண்டுவது இப்பெண் பிள்ளைகளை யாயிற்று –
அவனும் இவர்களோபாதி கேடன் அல்லன் –
இவர்கள் இப்போது பாம்பு படம் அடங்கினால் போலே இருக்கிறார்கள் அத்தனை ஆயிற்று
இவர்களை பஹூ பிரகாரமாக ஹிம்சிக்கப் பாரா நின்றேன் –
முஷ்டிபி பாணிபிஸ் சைவ -116-33- என்று கையாலே குத்தியும் காலாலே துகைத்தும் நகங்களாலே சேதித்தும் பற்களாலே கடித்தும் துடித்தும்
சின்னம் பின்னம் சரைர் தக்தம் -94-22-என்று பெருமாள் திருச் சரங்கள் செய்தது எல்லாம் நானே பண்ணப் பாரா நின்றேன்
முன்பு வந்த போது இடம் இல்லாமல் விட்டுப் போனேன் இத்தனை
இப்போது எனக்கு எல்லா பிரத்யுபகாரங்களும் பண்ணி அருளிற்று ஆகலாம் -இத்தனையும் திரு உள்ளமாக வேணும் -என்ன -பாபா நாம் வா -என்று அருளிச் செய்கிறாள் –

பாபாநாம் வா ஸூபாநாம் வா –
இவர்கள் நீ நினைத்து இருக்கிறபடியே பாபைகள் ஆக வுமாம் –
நான் நினைத்து இருக்கிறபடியே ஸூபைகள் ஆக வுமாம் –
அது தானே யன்றே உத்தேச்யம் –
தோஷோ யத்யபி தஸ்ய ஸ்யாத்-என்றால் போலே அழுக்கு உடையவன் அன்றோ குளிக்க ப்ராப்தி யுடையான்
அவர்கள் பாபைகள் ஆகில் அன்றோ நாம் முகம் கொடுக்க வேண்டுவது
சுபைகள் ஆகில் உன் வால் வேணுமோ –அவர்கள் புண்யங்களே கை கொடுக்குமே –
கை முதல் இல்லார்தார்க்கு அன்றோ கை முதலாக வேண்டுவது -என்றாள்-

வதார்ஹாணாம்
தண்ட்யனை தண்டிக்கவும் அல்லாதாரைத் தவிரவும் சொல்லுகிற தர்ம சாஸ்திரம் தேவரீரைத் தோற்றி கிழுத்துப்  பொகடக் கடவதோ -என்கிறாள் –

ப்லவங்கம்-
பின்னையும் அவன் புத்தி திரிய விடாமையாலே -ஹரி ஹரி -என்கிறாள் –
அன்றிக்கே -ப்லவங்கம் -என்று
நச்சினத்தை நச்சும் ஜாதி யானமை கண்டோம் -என்கிறாள் –
வசிஷ்ட ப்ரப்ருதிகள் மந்த்ரிக்கும் படியான இஷ்வாகு வம்சத்தில் பிறந்தாய் அல்லை –
யோகிகளாய் ஜனக குலத்திலே பிறந்தாய் அல்லை –
காட்டிலே பணை யோடு பணை தாவித் திரிகிற ஜாதியிலே இ றே பிறந்தது –
அங்கன் ஒத்தாருக்கு சரணாகதியோட்டையது தெரியாது -என்கிறாள் –
வா நரோத்தம -16-18-என்றவள் தானே இ றே ப்லவங்கம் -என்றாள்
ராஜாக்க்களுமாய் மூலையடியெ நடக்க யுரியருமாய் இருக்கிற பெருமாளும் எங்கள் முன் இத்தனை கோபித்து அறியார்
நீ வா நர ஜாதியாய் இருந்து வைத்து இங்கனே கோபிக்கக் கடவையோ –

கார்யம் கருண கார்யேண –
இவர்கள் புண்ய பாபம் கிடக்க இப்போது ஓடுகிற தய நீய தசையைப் பாராய் –
இவர்களுக்கு ஒரு ரஷகன் அல்லையே
இப்போது இவ்வளவிலே நாம் இரங்க வேணும் காண் –
ஆர்யேண-நல்லோனாலே –
இவை எல்லாம் இப்போது நான்  கற்பிக்க வேண்டும்படி யாவதே உனக்கு –
ஆர்யேண-
ஐந்த்ரவ்யாகரண  பண்டிதன் என்கிறது பொய்யோ –
அவையும் எல்லாம் கற்றுக் கேட்டு இருக்கச் செய்தேயும் இப்போது ராம கோஷ்டியில் பரிசயமான படி யாகாதே
அந்த கோஷ்டியில் பரிசயம் பழக்கம் இ றே நீ இங்கனே சொல்ல வல்லை யாயிற்று
நான் பிரிந்த பின்பு அக் கோஷ்டி இங்கனே நீர்த்தது ஆகாதே -நீர் விடப் பட்ட பால் போலே -என்று கருத்து –
ந கச்சின் நாபராத்யதி -குற்றம் செய்யாதவன் ஒருத்தனும் இல்லை –
சம்சாரத்தில் குற்றம் இல்லாதார் யார் –
திரை நீக்கிக் கடலாடப் போமோ
நல குதிரையாக பாவித்து இருக்கிற பெருமாள் தான் குற்றவாளர் அல்லரோ
நான் தான் குற்றப்பட்டவள் அல்லேனோ-
பெருமாள் குற்றவாளர் ஆனபடி என் என்னில்  -தாம் காடேறப் போனார் -அவர் பின்னே மடலூருவாரைப் போலே இளைய பெருமாளும் போந்தார்
தம்மோடு ஏகாந்த போகம் பண்ணக் கடவதாக இலையகலப் படுத்திக் கொண்டு நானும் போந்தேன்-
என்னைப் பிரிந்து பத்து மாசம் இருந்தார்
நான் வராவிட்டால் தன்னதோரம்பு இயங்க மாட்டாமை இல்லை இ றே
இவ்வழி இத்தனை நாள் பிரிந்து இருக்க வல்லரான போதுபெருமாள் பக்கலிலே யல்லவே குற்றம்
பார தந்த்ர்யத்துக்கு அநுகுணமாக பேசாது இராதே அது தன்னைச் சொன்ன என் பக்கலில் அன்றோ குற்றம்
இந் நாயகன் சொன்ன கார்யம் செய்த அடியாரை தண்டிக்கப் பார்த்த அன்று பெருமாள் அருளிச் செய்த கார்யம் செய்யப் போந்த உன்னை முற்பட தண்டித்து கொண்டு அன்றோ
ராவணன் சொன்ன கார்யம் செய்த இவர்களை தண்டிப்பது
ஆகையால் நீ அல்லையோ குற்றவாளன்
எல்லாப் படியாலும் பெருமாள் ஒரு விஷயத்தை முனிந்த அன்று ஆற விடுகைக்கு நான் உண்டு
நானும் அவர் வழி யோடு போக வேண்டி இருந்த அன்று எனக்கு நீ யுண்டு -என்று இருந்தேன்
நீயும் இங்கனே யானால் அபராதம் செய்வார்க்குப் புகலாவார் உண்டோ -என்கிறாள் –

அஜ்ஞாத நிக்ரஹ -கோபம் என்பதையே அறியாதவள் -நம் போல்வாருக்கு தஞ்சம் ஆவது பெருமாள் உடைய சரம ஸ்லோகம் அன்று
பிராட்டி யுடைய இந்த சரம ஸ்லோகமே நமக்கு தஞ்சமாகக் கடவது –

மாதர் மைதிலி  ராஷசீஸ் த்வயி ததை வார்த்ராபராதாஸ் த்வயா
ரஷந்த்யா பவநாத்மஜால் லகுதரா ராமஸ்ய கோஷ்டி க்ருதா
காகம் தம் ச விபீஷணம் சரணமித் யுக்தி ஷமௌ ரஷத
ஸா ந சாந்திர மஹாக ஸ ஸூ காது ஷாந்திஸ் தவாகஸ்மிகீ-ஸ்ரீ குணரத்ன கோசம் -50-

—————————————

பாபாநாம் வா ஶுபா4நாம் வா வதா4ர்ஹாநாம் ப்லவங்க3ம|

கார்யம் கருணமார்யேண  ந கஶ்சிந் நாபராத்4யதி ||

பொழிப்புரை:
வானரனே! பாபிகள் விஷயத்திலும், புண்ணியவான்கள் விஷயத்திலும்,கொல்லத்தக்கவர் விஷயத்திலும்
நல்லோனாலே கருணையானது செய்யத்தக்கது. எவனும் குற்றம் செய்யவில்லை என்பது இல்லையே.

இராவணன் அழிந்து, இராமபிரான் போரில் ஜயித்தார் என்னும் இனிய செய்தியை ஸீதா பிராட்டியிடம் அநுமன் விண்ணப்பம் செய்ய,
பிராட்டியும் உகப்பின் மிகுதியாலே, விம்மல், பொருமல்கள் ஏற்பட்டு செயலற்றவளாயிருக்க, ‘தேவி! என்ன நினைக்கிறீர்? தேவரீர் எதனால் என்னோடு பேசவில்லை?’
[கிந்நு சிந்தயஸே தே3வி, கிம் த்வம் மாம் நாபி4பா4ஷஸே; யுத்.கா. 116-16 ] என்று வினவினான்.
தேவியும் பதிலிறுத்தாள்
‘நீ செய்த பேருபகாரத்துக்குத் தக்கபடி தரக்கூடியதொன்றில்லையே என்று நினைத்தே பேசாமலிருந்தேன்’ என்று கூற
அநுமனும், ‘தேவரீரைச் சூழ்ந்திருந்து துன்புறுத்திய இந்த அரக்கிகள் ராவணனைக் காட்டிலும் கொடியவர்கள்,
ராவணனுக்கு முன்னமேயே இவர்களைக் கொன்றிருக்க வேண்டும். ராவணன் இப்பொழுது உயிருடன் இல்லை என்பதனால் அடங்கி இருக்கிறார்கள்.
இவர்களை என் கையால் துன்புறுத்திக் கொல்வதற்கு தேவரீர் அநுமதி தரவேண்டும்
பகவானிடம் அபசாரம் செய்தவர்களையும், பாகவதாபசாரம் செய்தவர்களையும் தண்டிக்கும் ரீதியிலே தண்டிக்க முயற்சிக்கிறேன்.
முன்பு வந்தபோது அவகாஶமின்மையாலே விட்டுப்போனேன்.
இபோது இந்த வரத்தை எனக்குக் கொடுத்தருள வேண்டும்’ என்று பிரார்த்திக்கிறார்.
இதைக் கேட்ட பிராட்டி பதிலிறுக்கும் வண்ணம் இந்த ஶ்லோகத்தை அருளிச் செய்கிறார்.

பாபிகளானும், பரிஶுத்தர்களானாலும்
(பாபாநாம் வா ஶுபா4நாம் வா) நீ நினைக்கிறபடி பாபமே செய்தவர்களாக இருப்பினும் சரி,
நான் நினைத்தபடி பரிஶுத்தர்களாக இருப்பினும் சரி, எப்படியிருந்தாலும் கருணை காட்டவேண்டியதே.
பரிஶுத்தர்களாகில் கருணை காட்டவேண்டும் என்பதை நீயே அறிவாய்.
பாபிகள் பக்ஷத்திலும் கருணையே காட்டப்படவேண்டும் என்பதை நான் இப்போது நிரூபித்துக் காட்டுகிறேன்.
‘கருணை காட்டுவதற்கு மஹாபாபிகள் கிடைக்கமாட்டார்களா?’ என்று எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள் நல்லோர்கள்.
‘குற்றமுளதாகில் மிகவும் நன்று’ [ தோ3ஷோ யத்3யபி தஸ்ய ஸ்யாத்; யுத்.கா.18-3] என்ற இராமபிரானைப் போலே,
அழுக்குடையவனைத்தானே குளிப்பாட்ட வேண்டும்.  அதுபோலவே பாபமாகிற அழுக்குடையவர்கள் அகப்பட்டால்,
கருணையான குளிர்நீராலே அவர்களைக் குளிப்பாட்ட வேண்டியிருக்கும்.
ஆகையால் ராக்ஷஸிகள் பாபம் செய்திருப்பதால்தான் அவர்களுக்குக் கருணை முகம் காட்டவேண்டும்.
பாபமற்றவராகில் அவர்கள் தாமாகவே கடைத்தேறிவிடுவார்கள்.
தங்களைக் கடைத்தேற்றிக் கொள்ளத் தம் கையில் ஒன்றும் இல்லாதவர்களையன்றோ நல்லோர்கள்  கைதூக்கி விடவேண்டும்.
இதைக்கேட்ட அநுமன், ‘அப்படியென்றால் தர்ம ஶாஸ்திரங்களைத் தூக்கி எறிய வேண்டுமோ?’ என வினவ,
அதற்கு பிராட்டி சொன்னாள், ‘கொல்லத்தக்கவரானாலும் (வதா4ர்ஹாணாம்) நீ சொன்னது ஸாமாந்ய ஶாஸ்திரம்’.
ஆகையால், கொல்லத்தக்கவனாயினும் ஶரணமடைந்தவனைக் கைவிடுவதில்லை’
[தஸ்மாத3பி வத்3யம் ப்ரபந்நம் ப்ரதிப்ரயச்சந்தி; யஜு.ஸம்.6-5-20] என்கிற விஶேஷ ஶாஸ்திரத்தைக் கிழித்துப் போடவேண்டுமே’.
ஸாமாந்ய ஶாஸ்திரத்துக்கும், விஶேஷ ஶாஸ்திரத்துக்கும் விரோதம் வந்தால், ஸாமாந்ய ஶாஸ்திரத்தைத் தள்ளி
விஶேஷ ஶாஸ்திரத்தைக் கைக்கொள்ளவேண்டும் என்கிறாள் பிராட்டி.
இதைக் கேட்டும் அநுமன் தன் கருத்தை மாற்றிக் கொள்ளாமையாலே, பிராட்டி, ‘ஹரி, ஹரி’ என்கிறாள்.
பிடித்த பிடியை விடாத உன் குரங்கு புத்தியைத்தான் உன் செயலில் காண்கிறேன்.
வஸிஷ்டர், வாமதேவர் முதலானோர் மந்த்ராலோசனை வழங்கக்கூடிய இக்ஷ்வாகு வம்ஶத்தில் பிறந்தவன் அல்லையே நீ.
கர்மயோகியான ஜனகரின் வம்ஶமுமன்று.
காட்டில் கிளைக்குக் கிளை தாவித்திரியும் ஜாதியிலன்றோ நீ பிறந்தது!
அப்பேர்பட்ட உனக்கு ஶரணாகதியின் பெருமை எப்படித் தெரியும்?
பேருபகாரம் செய்த அநுமனை இப்படிப் பிராட்டி நிந்திக்கலாமோவெனில்,
அன்று அவன் செய்த பேருபகாரத்துக்குத் தோற்று ‘வானரோத்தம’ என்றவள்,
இன்று அவன் அடாத செயல் புரிவதில் பிடிவாதமாய் இருப்பதைக் காண்கையாலே, அவனைத் திருத்துமுகமாக
‘குரங்கே’ என்று நிந்திக்கிறாள் என்று கொண்டால் குற்றமில்லை.
ராஜாவாய், இஷ்டப்படி நடக்கத்தக்க ஸ்வாதந்த்ரியமுடைய இராமபிரானும் எங்கள்முன் இத்தனை கோபமாகப் பேசியறியார்.
நீ கேவலம் ஒரு குரங்காயிருந்து என்முன்னம் இத்தனை கோபமாய்ப் பேசலாமோ?

நல்லோனால் கருணை காட்டப்படவேண்டும் (கார்யம் கருணமார்யேண).
இவர்களுடைய புண்ணிய பாபத்தைப் பற்றிய ஆராய்ச்சி இப்போது எதற்கு? அது நிற்க.
இப்போது இவர்களுடைய வருந்தத்தக்க நிலையைப் பார். உன்னைப்போல் ஒருவன் இவர்களைத் துன்புறுத்தினால், ரக்ஷிப்பதற்கு இங்கு ஒருவருமில்லை.
இப்படிப்பட்ட ஸமயத்தில் இவர்களுக்காகவன்றோ நாம் இரங்க வேண்டும்.
நல்லோனன உனக்கு நான் இப்போது இவையெல்லாம் சொல்லித்தரவேண்டியுள்ளதே!
நீ ஐந்திர வியாகரணம் கற்றிலையோ? இப்படி எல்லா ஶாஸ்திரமும் கற்றிருந்தும், ராம கோஷ்டியில் பழகின பின்னர் இத்தன்மையுடையனானாய் போலும்!
நான் பிரிந்த பின்னர் பெருமாளுடைய கோஷ்டி நீர் விடப்பட்ட  பால்போலே தரம் குறைந்து போயிற்று போலும்!

குற்றம் செய்யாதவன் ஒருவனுமில்லையே (ந கஶ்சிந் நாபராத்4யதி)
இந்த உலக வாழ்க்கையில் குற்றமில்லாதவர் யார்?
அலைபோனபின்பு கடலில் குளிக்கலாம் என்று சொல்லமுடியுமோ?
அதுபோலவே, குற்றமில்லாதாரைப் பார்த்து கருணை காட்டுவேன் என்று சொன்னால்,
கருணை காட்டுவதற்கு ஒருவருமே அகப்படமாட்டார்களன்றோ?
குதிரைகளில் சிறந்த குதிரை ‘நற்குதிரை’ என்பதுபோலே, ‘நன்மனிதர்’ என்று மனிதரில் சிறந்தவராகத் வேஷமிட்டுக்
கொண்டிருக்கும் இராமபிரான் மட்டும் குற்றம் செய்யாதவரா?
நான்தான் குற்றம் செய்யாதவளா?
நீதான் குற்றம் செய்யாதவனோ?

ராமபிரான் என்ன குற்றம் செய்தார்-எனில்,
அவர் காடு சென்றார். மடலூருவாரைபோலே இலக்ஷ்மணனும் இவர் சென்றவிடமெல்லாம் சென்றார்.
இராமபிரானோடு காட்டில் இஷ்டப்படியெல்லாம் திரிந்து விளையாடலாம் என்று நானும் அவரைப் பின்தொடர்ந்தேன்.
இப்படிப்பட்ட என்னைப் பிரிந்து பத்து மாஸம் இருந்தார்.
ஓர் அம்பைவிட்டு ராவணனை நினைத்த மாத்திரத்தில் ஏன் மாய்க்கவில்லை?
இதைச் செய்ய வல்லவராயிருந்தும் என்னைப்பிரிந்தே இருக்க வல்லவரானபோதே பெருமாள் குற்றம் செய்தவர் என்பது தெரியவில்லையா?

என்னுடைய பாரதந்திரியத்துக்குத் தக்கவாறு அவர் என்ன செய்தபோதிலும் நான் பேசாமலிராமல்,
அவர் குற்றத்தை உன்னிடம் சொன்னபோதே, நானும் குற்றவாளியாகிறேன்.

தன் தலைவனான ராவணன் கட்டளையை நிறைவேற்ற இந்த அரக்கிகளை நீ தண்டிக்க நினைத்தால்,
முதலில் நீ உன் தலைவனான ராமனின் கட்டளையைச் செய்வதால் உன்னையன்றோ முதலில் தண்டிக்க வேண்டும்!

ஆகையால், நீ சொல்லுகின்ற காரணத்தை வைத்துக் கொண்டு பார்த்தால் நீயும் குற்றம் செய்தவனாகிறாய்.

ஆகவிப்படி, ராமபிரானும், நானும், நீயும் குற்றவாளிகள் ஆனபடியால், உலகில் குற்றம் செய்யாதவர்கள் யார்?
அதாவது, எல்லாவிதத்திலும் ஒரு சேதனனைப் பெருமாள் கோபித்தபோது, அந்தக் கோபத்தை ஆற்றிவிடுவதற்காக (புருஷகார பூ4தையான) நான் உண்டு.
நானும் அவர் வழியிலே சென்று ஒரு சேதனனைக் கைவிடுமேயானால் ஆசார்யனான நீ உண்டு
அச்சேதனனையும் எங்களையும் திருத்திச் சேர்ப்பிப்பதற்கு என்று நினைத்திருந்தேன்.
நீயும் இப்படிக் கருணையற்றவனானால் குற்றம் செய்தவற்கு யார் புகல்? என்கிறாள்
கோபம் என்பதையே அறியாதவள் (அஜ்ஞாத நிக்3ரஹா), கருணையே வடிவெடுத்தவள் (கருணா) என்று ஶாஸ்திரங்களில் பேசப்படும் பிராட்டி.

அரக்கிகளிலும் கொடிய நம்மைப் போன்ற மஹாபாபிகளுக்குத் தஞ்சமாவது பெருமாளுடைய சரமஶ்லோகங்களல்ல; பிராட்டியினுடைய இந்தச் சரமஶ்லோகமே நமக்கு எப்போதும் தஞ்சமாகக் கடவது.

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

ஸ்ரீ சீதா ராம ஜெயம் –

————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார்  ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ இராமாயண -அபய பிரதான சாரம் -தனி ஸ்லோக- வியாக்யானம் -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை அருளிச் செய்தது -ஸக்ருதேவ ப்ரபன்னாய –யுத்த -18-33 —

January 17, 2024

ஸக்ருதேவ ப்ரபன்னாய தவாஸ் மீதி ஸ யாசதே
அபயம் சர்வ பூதேப்யோ ததாம்  யேதத் வ்ரதம் மம –யுத்த -18-33-

ஸக்ருதேவ -ஒரு தரமே
ப்ரபன்னாய -பிரபத்தி பண்ணினவன் பொருட்டும்
தவாஸ் மீதி ஸ யாசதே -தவ -உனக்கு அடியேனாய் -அஸ்மி -ஆகிறேன் -இனி -என்று -யாசதே -யாசிக்கிறவன் பொருட்டும்
சர்வ பூதேப்யோ-எல்லா பிராணிகள் இடத்தில் நின்றும்
அபயம் -பயம் இன்மையை
ததாமி-பண்ணிக் கொடுக்கிறேன்
யேதத் வ்ரதம் மம –இது எனக்கு விட முடியாத சங்கல்பம் –

அவதாரிகை –
இப்படி சொன்ன இடத்திலும் மஹா ராஜர் நேராகத் தெளியாதே சலித ஹ்ருதயராய் இருக்கிற படியைக் கண்டு அருளி
ப்ரக்ருத்யநுகுணமாக ப்ரபன்ன பரித்ராண பிரதிஜ்ஞையைப் பண்ணி அருளுகிறார் -ஸக்ருதேவ -என்கிற ஸ்லோகத்தாலே –
மித்ர பாவேந -என்கிற ஸ்லோகத்தில் பிரகிருதி -தன்மையை -அருளிச் செய்தார் –
இதில் தத் அநு குணமாக பிரதிஜ்ஞையைப் பண்ணுகிறார்-
ஸக்ருதேவ ப்ரபன்னாய-
ஸக்ருச் சப்தத்துக்கு -சஹஸா ஆதேஸமாய் –சஹ சைவ ப்ரபன்னாய -உடனே-என்கிறபடி
அதாகிறது -தன் அயோக்யதையைப் பார்த்துத் தே-இது ஆள்வான் நிர்வாஹம் –
கீழ் அநாதிகாலம் சம்சரித்துப் போந்தவன்  மேல் அநந்த காலம் பல அநு பவம் பண்ணப் புகுகிறவன் ஆகையாலே
யாவதாயுஷம் அநு வர்த்தித்தாலும் -சக்ருத் -என்கைக்கு போரும் அத்தனை அன்றோ -என்று எம்பார் நிர்வாஹம் –
ஈஸ்வர விஷயீ காரத்துக்கு ஒரு கால் அமையும்
ஆவர்த்திக்கிறது உபாய வைபவத்தால் வந்த ரஸ்யதை யாகையாலே -என்று பட்டர் நிர்வாஹம் –
ஸக்ருதேவ -என்கையாலே உபாயத்துக்கு விஹிதமான அசக்ருதா வ்ருத்தியை வ்யாவர்த்திக்கிறது –
தவாஸ் மீதி ஸ யாசதே –
இதுக்கு மேல் உனக்கு அடியேனாக வேணும் என்று உபேயத்தையும் ப்ரார்த்திக்குமவனுக்கு –
ஸக்ருதேவ  ப்ரபன்னாய -என்கிறது பிரபத்தி
தவாஸ் மீதி ச யாசதே -என்கிற வர்த்தமான நிர்த்தேசத்தால் -அநவரத பாவநா ரூபமான பக்தியைச் சொல்லுகிறது என்று நிர்வஹிப்பாரும் உண்டு
அபயம் சர்வ பூதேப்யோ ததாமி-
சர்வ பூதங்கள் நிமித்தமாக பய நிவ்ருத்தியைப் பண்ணிக் கொடுப்பன் –
பீத்ரார்த்தா நாம் பய ஹேது -பாணினி ஸூ த்த்ரம் -1-4-25-
இதி  ஹேதௌ பஞ்சமீ –
மஹா ராஜர் எதிரிடிலும் காட்டக் கொடோம் என்றபடி
யேதத் வ்ரதம் மம —
நமக்கு அநு பால நீயமான சங்கல்பம் இது
அமோக சங்கல்பரான நமக்கு சங்கல்பங்கள் அடையக் குலையிலும் குலையாத சங்கல்பமாகும் இது –

————————————————————————————————————————————————————————————-

தனி ஸ்லோக- வியாக்யானம்-

அவதாரிகை –
ஸ ராவண -யுத்த -11-33-என்று பெருமாளும் பரிகரமுமாகக் கடல் கரையிலே குறுகி வந்து விட்டார்கள என்று கேட்ட ராவணன்
சசிவசா மந்த மந்த்ரி புரோஹிதாதி வர்க்கத்தைக் குறைவறக் கூட்டி
பவித்பிர் -12-26-என்று நியமித்து கார்ய விசாரம் பண்ணுகிறவன்
தான் செய்து நின்ற நிலைகளையும் செய்ய வேணும் கார்யங்களையும் சொல்லி
தஸ்ய காம பரி தஸ்ய -12-27-என்று இத்தைக் கேட்ட கும்ப கர்ணனும் குபிதனாய்
யதா து ராமஸ்ய -12-28-என்று இவன் அபஹரித்த வன்றே இப்படி விளையும் என்று அறுதி இட்டோமே என்று
ஸ்வ புத்தி சம்வாதத்தை சம்வதித்து
சர்வமேத -12-29-என்று செருக்கி நான் செய்த வற்றுக்கு ஒப்புண்டோ என்ற ராவணனை  அதி ஷேபித்து
எங்கள் சொல் கேட்டுச் செய்ய இருந்தாய் ஆகில் இந்த சீதா அபஹாரத்துக்கு முன்பே அன்றோ செய்வது -என்றும்
ய -பஸ்சாத்-12-32- என்று பூர்வ உத்தர கார்யங்களை க்ரம ஹீனமாகப் பண்ணுகிறவன் நயாப நயங்களை அறியான் என்றும்
திஷ்ட்யா-12-34-என்று நஞ்சூட்டின பழம் போலே இனியராய் இருக்கச் செய்தேயும் அறக் கொடியர் பெருமாள்
அவர் உன்னைக் கொல்லாது ஒழிந்தது உன் புண்யம் -என்றும்
அதில் கோபித்து இவன் வெறுக்க ஒண்ணாது என்று சமீ கரிஷ்யாமி -12-35-என்று
பள்ளத்துக்கு மேட்டை நிரவுமா போலே உன் அநீதியை என் தோள் வலியாலே ஒக்க விடுகிறேன் -என்று சமாதானம் பண்ண
மஹா பார்ச்வனும் அவனுக்கு பிரியமாக சில வார்த்தைகளைச் சொல்லி -நிசாசர-14-1- என்று
அவர்கள் நிரர்த்தகமாகப் பிதற்றின வார்த்தைகளைக் கேட்டு விபீஷணப் பெருமாள் ஹிதரூபமாக
வ்ருதோ-14-2-என்று பாம்போடு ஒரு கூரையிலே பயிலுவாரைப் போலே -பெரிய திருமொழி -11-8-3-சீதை யாகிற பெரும் பாம்பின் அருகே கையை நீட்டுவார் உண்டோ –
யாவந்த -14-3/4-என்று தொடங்கி-குரங்குகள் கடலை அடைத்துப் படை வீட்டை அடைக்கப் பார்க்க புகுகிறார்கள்
ராம சரங்கள் குறும் தெருவும் நெடும் தெருவுமாக புகுந்து தலைகளைத் திருகப் புகுகிறது
அதுக்கு முன்னே பிராட்டியைப் பெருமாள் பக்கலிலே போக விடாய்-என்றால் போலே சில வார்த்தைகளைச் சொல்ல
ப்ரகுஅச்த இந்த்ரஜித் ப்ரப்ருதிகளும் அதுக்கு விபரீதமாக சில வார்த்தைகளைச் சொல்ல
ஸ்ரீ விபீஷணப் பெருமாளும் குபிதராய் -ந தாத -15-9/10/11-என்று தொடங்கி உனக்கு இவற்றில் அபியோகம் இல்லை
பெற்ற பிள்ளை நீ தான் புத்ரன் என்று ஒரு சத்ருவாய் இருந்தாய்
தகப்பனார் அனர்த்தத்தை இப்படி இசைவார் உண்டோ
சத்ருக்களைக் கொல்லில் முற்பட உன்னைக் கொல்ல வேண்டும் என்று வார்த்தை சொல்லி
த நாநி -15-14-என்று உபஹார புரஸ் சாரமாகப் பிராட்டியை உடையவன் வசத்திலே விட்டு உங்கள் முடியோடு நெஞ்சாறல் கெட்டிருக்கப்  பாருங்கோள்-என்றுசர்வர்க்கும் ஹிதம் சொல்ல
இத்தைக் கேட்ட ராவணன் ஸூ நிவிஷ்டம் -16-1-என்று இப்படி ஹிதம் சொன்னால் என்னைத் தீ மனம் கெடுத்தாய் உனக்கு என் செய்கேன் -திருவாய்-2-7-8–என்றும்
அறியாதன அறிவித்த   அத்தா நீ செய்தன -திருவாய் -2-3-2- என்றும்
காலிலே விழப் பிரார்தமாய் இருக்க தன் வசம் இன்றியிலே கால பரவசனான படியாலே பருஷங்களைச் சொல்லி
த்வாம்  து திக் குல பாம்சனம் –16-16-என்று திக்கரிக்க
உத்பபாத கதா பாணி -16-17-என்று
சோதர ப்ராதாவுமாய் ஹித உபதேசம் பண்ணின என்னை இப்படிச் சொன்ன இவன் என் படப் புகுகிறான் -என்று
தளர்ந்து தடியூன்றி எழுந்து இருந்து தனக்கு பவ்யராய் இருப்பார் நாலு பேரோடு கிளம்பி
ஆத்மானம் -16-26- என்று நாலு வார்த்தை சொல்லி
ஆஜகாம முஹூர்த்தே ந -17-1-என்று
நின்றவா நில்லா நெஞ்சு -பெரிய திருமொழி -1-1-4-புரிவதற்கு முன்னே தம்பி சொல்லு ஜீவியாத ராவண கோஷ்டியில் நின்றும்
தம்பி சொல்லு ஜீவிக்கிற ராம கோஷ்டியை நோக்கி வந்து
நிவேதயாத மாம் ஷிப்ரம் ராகவாய மகாத்மனே -17-15-என்று
நெறி கெட மடுத்துக் கொண்டு  புகலாகாது
அதி சங்கையும் பண்ணுவார்கள்
த்வார சேஷிகளை கொண்டு பெருமாளுக்கு விண்ணப்பம் செய்து ஆனய-18-34-என்னப் புக வேணும்  என்று நின்ற நிலையிலே நின்று விண்ணப்பம் செய்ய
இத்தைக் கேட்ட மஹா ராஜர் -யேதத்து -17-16-என்று இவன் வார்த்தையைக்  கேட்டு
பெருமாள் முற்பாடராய் வருவதற்கு முன்னே தாம் நடை இட்டுச் சென்று ராஜ்ய கார்யங்கள் விசாரிக்க வேண்டாவோ -ஓய்ற்றரியோ போக விட வேண்டாவோ -நம்மிலும் அவர்கள் முற்பட்டார்கள் –
ப்ரணிதீ -17-20-என்று இங்கு ஆகாசத்திலே   நிற்கிற இவன் ஒற்றனாக வேணும்  -ராவணன் தமி -மூர்க்கன் -நலிய வந்தவன்
இவனைக் கழுத்திலும் காலிலும் கோக்க அடுக்கும் -எனபது -அது பெருமாள் செவிக்குப் பொறுத்த வாறே -வந்தவனையும் அவனையும் கொள்ள பிராப்தம் -என்று சொல்ல
இத்தைக் கேட்டு அருளின பெருமாள் திரு உள்ளம் தளும்பி முதலிகளைப் பார்த்து -யதுக்தம் -17-30-என்று முதலிகளைப் பார்த்து
தோழனார் ராஜாக்களாய்ச் செருக்கிச் சொன்ன வார்த்தையை சரணாகத ரஷணம் பண்ணின ஜாதியிலே பிறந்த நீங்களும் கேட்டிகோளே-உங்கள் நினைவுகளை சொல்லுங்கோள்-என்ன
ஸ்வம் ஸ்வம் -17-32-என்று மாட்டார்கள் -மகா ராஜர்க்காக மாட்டார்கள் உபயாவிருத்தமாகப் பரீஷித்து
ஒழுக விசாரித்துக் கைக் கொள்ள பிராப்தம் -என்று சொல்லித் தலைக் கட்ட –
இத்தைக் கேட்ட திருவடியும் எழுந்து இருந்து ந வாதான் -17-50-என்று இப் பஷங்களை அழிக்கப் புகுகிறவன் ஆகையாலே
சிலரோடு பிணக்கு யுண்டாய் அல்ல -சிலரோடு வெறுப்பு யுண்டாய் அல்ல -எல்லார்க்கும் மேலாய் நியாமகனாய் அல்ல -பிரதிபன்ன வாதி யல்ல –
அப்யஹம் ஜீவிதம் ஐ ஹ்யாம்  -ஆரண்ய -10-19-என்கிற பெருமாளை இழக்க வரும் என்று பெருமாள் பக்கல் ஆதாரத்தால் சொல்லுகிறேன் -என்று அவை அடக்கம் சொல்லி
புகுர விட்டால் பரீஷிப்பது -பரீஷித்தால் புகுர விடுவது என்று அந்யோந்ய ஆஸ்ரயணம் வரும்
தாத்ரா -17-58-என்று சாம பேதம் பண்ணிக் குலைத்து அழைக்க ப்ராப்தமாய் இருக்க
தன்னடையே விஸ்வசித்து வந்தவனை அதிசங்கை பண்ணினால் குலைந்து போம் அப்போது ராஜ நீதி அல்ல -சாஸ்திர விருத்தம் -என்று பர பஷ தூஷணம்  சொல்லி
ந த்வச்ய-17-60/61-என்றும் இப்புடைகளிலே ஸ்வ பஷ ஸ்தாபனத்தையும் பண்ணி
திரு முன்பே நாமும் சில அறிந்தோமாகஒண்ணாது என்று யதா சக்தி -17-66-என்று
அடியேனுக்குத் தோன்றின அளவு விண்ணப்பம் செய்தேன் இத்தனை
நல்லார் அறிவீர் தீயார் அறிவீர் இவ்வுலகத்து எல்லாம் அறிவீர் -என்று தேவரீர்திரு உள்ளத்தில் அகலத்துக்கு இது எங்கே -இனி திரு உள்ளமான படி செய்து அருளீர் என்று தலைக் கட்ட
அத ராம-18-1-என்று  காற்றின் மகனான திருவடியாலே லப்த சத்தரான பெருமாள் தன் திரு உள்ளத்தில் கிடந்தது அருளிச் செய்வதாகக் கோலி
மித்ர பாவேந -18-3-என்கிற ஸ்லோகத்தாலே
மித்ர பாவேந சம்ப்ராப்தன் சதோஷனே யாகிலும்    கை விடேன் என்று சொல்லி
தஸ்யாநு பந்தா பாபமாந சர்வே நச்யந்தி தத் ஷணாத்-அஹிர்புத்த -37-33-என்று பிரபன்னன் ஆனபோதே நிர்த்தோஷன்
இப்படி -பிரபன்னனாய் நிர்த்தோஷன் ஆனவனுக்கு -உம்மாலும் என்னாலும் பிறராலும் வரும் பயன்களைக் போக்கக் கடவேன் -என்கிறார் இந்த ஸ்லோகத்தால்
வேதோ உபப்ப்ரும்ஹணா ர்த்தாய தாவக்ராஹயாத பிரபு -பால -4-6-என்று வேத ப்ரும்ஹண ப்ரவண ப்ரபந்தம் அன்றோ இது
இவ்விடத்தில் உபப்ரும்ஹிக்கிற வேதார்த்தம் எது -வேத வாக்கியம் தான் எது -என்னில் –
தம் ஹி தேவமாத்மபுத்தி பிரசாதம் முமுஷூவை சரணம் அஹம் ப்ரபத்யே -ஸ்வே-6-18-என்றும்
ப்ரயத பாணி சரணமஹம் ப்ரபத்யே ஸ்வஸ்தி சம்பாதேஷ்வபயம் நோ அஸ்து-ருக்வேத -என்றும் சொல்லுகிற
பிரபத்புபாய வைபவம் இவ்விடம் உபப்ரும்ஹிக்கிறது
வாக்யமும் ப்ரயதபாணி சரணமஹம் ப்ரபத்யே என்கிற இது சரனௌ சரணமஹம் ப்ரபத்யே –என்று த்வயம்
சரணம் காடம் நிபீட்ய–அயோ என்றும் திருவடிகளைக் கையாலே பிடிக்கும் போது ஸூ த்த ஹச்தனாக வேணும்
அந்தஸூ த்த ஹஸ்ததையாவது -சர்வ தர்மான் பரித்யஜ்ய -என்றும்
பிதரம் மாதரம் தாரான் புத்ரான் பந்தூன் சகீன் குரூன்
ரத் நாதி  தந தான்யாநி ஷேத்ராணி ச க்ருஹாணி ச
சர்வ தர்மாமச்ச சந்த்யஜ்ய சர்வ காமாம்ச்ச சாஷரான்
லோக விக்ராந்த சரணு சரணம் தேவராஜம் விபோ -விஹா கேஸ்வர சம்ஹிதை -என்றும்
வீடு மின் முற்றவும் -திருவாய் -1-2-1- என்றும் மற்றாரும் பற்றிலேன் -பெரிய திருமொழி -8-10-5-என்றும் உபாயாந்தரங்களை விட்டுப் பற்றுகை –
அத்தை இ றே ப்ரயதபாணி -என்கிறது –
மாம் வ்ரஜ -சரணம் ப்ரபத்யே -பிரார்த்தனா மதி சரணாகதி -என்று உபாய பிரார்த நாரூப ஜ்ஞானத்தை -சரணம் பிரபத்யே -என்கிறது –
இவ்வாக்யத்தை இந்த ஸ்லோகம் உபப்ரும்ஹித்தபடி ஏன் என்னில்
சக்ருத் ஏவ -என்கிற பதங்களால்  அசக்ருதாவ்ருத்தி சாபேஷையான பக்தியை வ்யாவர்த்திக்கையாலே சர்வ தர்ம தாக பூர்வகமான ப்ரயுத பாணி என்கிற பதத்தையும்
பிரபன்னாய-என்கிற பதத்தாலே சரணம் பிரபத்யே -என்கிற பதங்களையும்
த்வாஸ் மீதி ச யாசதே -என்கிற பதங்களாலே ஸ்வஸ் த்யஸ்து -என்கிற பதங்களையும்
அபயம் ததாமி -என்கிற பதங்களாலே அபயமஸ்து-என்கிற பதங்களையும் உபப்ரும்ஹிக்கிறது
ஆகிறது -ப்ரபத்யே  என்கிற பிரபதன தசையில் ஏக வசனமாய் இரா நின்றது
பல தசையிலே ந என்று-எங்களுக்கு என்று – பஹூ வசனமாய் இரா நின்றது -இது செய்யும்படி ஏன் என்னில்
வைஷ்ணவோ ந குலே ஜாத என்று ஏக வசனமாகச் சொல்லி
தே சர்வே முகத்திமா யாந்தி -என்று பஹூ வசாமாகவும்
யே ச வைஷ்ணவ சம்ஸ்ரயா தே நைவ தே பிராஸ் யந்தி -என்று ஏக வசன பஹூ வசனங்களாலும்
இப்படி பஹூ பிரமாணங்கள் உண்டாகையாலும் –
லோகத்தில் ஒருவன் ராஜ சேவை க்ருஷ்யாதிகளைப் பண்ண
அவன் யதன பலமான அன்ன தான தான்யா வஸ்த்ராதி பலங்களை அவன் அபிமானத்திலே பார்யா புத்திர சிஷ்ய தாசாதிகள் வருத்தமற புஜிக்கக் காங்கையாலும்
இப்படி லோக வேதங்களிலே அநு பூத சரமாகையாலே
ஒருவன் பிரபன்னனாக அவன் அபிமானத்திலே ஒதுங்கினார்க்கு எல்லாம்  பலமாகக் கடவது -என்கிறது –

ஆகிறது -பிரபத்த்யுபாயம் எனபது எம்பெருமான் உபாயம் என்பதாகா நின்றது –
பிரபத்தியாவது -த்வமேவோ பாய பூதோ மே பவதி -ப்ரார்த்த நா மதி -சரணாகதி -என்று
சேதனனுடைய ப்ரார்த்த நா ரூப ஜ்ஞானமாய் இரா நின்றது –
எம்பெருமான் ஆகிறான் ப்ரார்த்த நீயானாய் இருப்பான் ஒருவன் பரம சேதனனாய் இரா நின்றது -இது செய்யும்படி என் என்ன –
ப்ராம்ருஷ்ட லிங்கம் அநு  மானமாய் இருக்க -லிங்க பராமர்சோ அநு மானம் -என்று  பராமர்ச ப்ராதான்யத்தைப் பற்ற ஔ பசாரிகமாகப் பராமர்சத்தைச் சொன்னால் போலவும்
நீலாம் ஜ்ஞானம் பேதம் ஜ்ஞானம் என்றால் ஜ்ஞானத்துக்கு ஒரு நைல்ய பீதி மாதிகள் அற்று இருக்க விஷயகதமான நைல்ய பீதி மாதிகளை விஷயியான ஜ்ஞானத்திலே உபசரித்து
நீளம் ஜ்ஞானம் பேதம் ஜ்ஞானம் -என்றால் போலேயும் ச்வீகார ப்ராதான்யத்தைப் பற்ற சவீ கார விஷயமான பகவத் கத உபாய வ்யவஹாரத்தை விஷயியான ச்வீகார ரூப பிரபத்தி ஜ்ஞானத்திலே உபசரித்து சொல்லுகிறது ஆகையால் ஒரு விரோதமும் இல்லை –

மலை நெருப்பை யுடையது புகை இருப்பதால் -அநு மானம்
மலை -பஷம்
-நெருப்பு சாத்தியம்
ஹேது -லிங்கம் -அடையாளம் காரணம் -ஆகிறது-ஸ  ஸ்வேநைவ பலப்ரத ஸ்வே நைவ நாராயண -அனர்க்க ராகவம் -3-20-என்றும்
மாம்  வ்ரஜ -ஸ்ரீகீதை -18-66-என்றும்
மாமேவைஷ்யசி -ஸ்ரீ கீதை -18-65-என்றும்
இறைவா நீ தாராய் பறை -என்றும்
உன் தன்னோடு உற்றோமே யாவோம் உனக்கே நான் ஆட் செய்யோம் -என்றும்
எம்பெருமானே உபாயமும் உபேயமும் என்று இ றே சொல்லுகிறது -அந்த உபாய உபேயங்கள் ஆகிறது கார்ய காரணங்கள் இ றே
யத நந்தரம் யத்த்ருச்யதே தத் தஸ்ய காரணம் -என்றும்
நியத பூர்வ பாவி காரணம் -என்றும்
பூர்வ பாவியுமாய் பூர்வ காலத்திலேயே சத்துமாய் இ றே காரணம் இருப்பது
நியத பஸ்சாத் பாவித்வம் ச கார்யத்வம் -என்றும்
ப்ராக சத்  சத்தா யோகித்வம் கார்யத்வம் -என்றும்
பூர்வ காலத்திலேயே சத்துமாய் இராதே
அத்தாலே பிறக்கக் கடவதுமாய் பஸ்சாத் பாவியுமாய் இ றே கார்யம் இருப்பது
இப்படி இருக்க
நித்யம் விபும் -என்றும்
சத்யம் ஜ்ஞானம் என்றும்
ஏகமே யத்விதீயம் -என்றும்
நித்யமுமாய் ஏகமுமாய் இருக்கிற பகவத் வஸ்துவுக்கு பரஸ்பர விருத்தமான பாவ அபாவத்மகத்வம் கூடும்படி என் -என்னில் –
ஸ தேவ சோம்யேத மக்ர ஆசீதே கமேவாத் விதீயம்ம்,-என்றும்
அவிகாரமுமாய்  நித்யமுமாய் ஏகமுமான ப்ரஹ்மத்துக்கு
ப்ரஹ்ம வனம் ப்ரஹ்ம ஸ வ்ருஷ ஆஸீத் -என்றும்
ஸோ ஆகாமயத பஹூச்யாம் ப்ரஜாயேயேதி -என்றும்
ஸ ஏவ ஸ்ருஜ்ய ஸ ஸ சரக்க கர்த்தா ஸ ஏவ பாத்யத்தி ஸ பால்யதே -ஸ -என்றும்
த்ரிவித காரணத்வமும் சருஷ்டுஸ்ருஜ்யத்வமும் பரஸ்பர விருத்தமுமாய் இருக்க
ஸூ ஷ்ம சிதசித் விசிஷ்ட பிரமம் காரணம்
ஸ்தூல சிதசித விசிஷ்ட ப்ரஹ்மம் கார்யம் -என்று
அவ்விருத்த தர்மங்கள் விசேஷணங்களிலே யாய் -விசிஷ்ட ஐக்யத்தாலே நிர்வஹித்தால் போலே
இங்கும் -தாது ப்ரசாதான் மஹிமா நமீ சம்-என்றும்
தஸ்மின் பிரசன்னே க்லேச  சங்ஷய -என்றும்
ப்ரஹர்ஷயாமி-என்றும்
த்வத் ப்ரீதயே-என்றும்
திரு உள்ளம் இடர் கெடும் தோறும் வியக்க இன்புறுதும்-என்றும்
பிரசாத விசிஷ்டன் உபாயம்
ப்ரீதி விசிஷ்டன் உபேயம்
என்று விசேஷண பேதம் கிடக்கச் செய்தே விசிஷ்ட ஐ க்யத்தாலே
உபாய உபேய எம்பெருமான் என்கிறது ஆகையாலே எல்லாம் கூடும்
இரக்கம் உபாயம் -இனிமை உபேயம் -என்று இ றே ஜீயர் அருளிச் செய்யும் படி –

அநந்ய சாத்யே ஸ்வா பீஷ்டே -என்று பிரபத்யாதி சாத்யம் இ றே மோஷம்
சாத்யம் ஆவது முன்பு இன்றியிலே பின்பு உத்பன்னம் ஆவது
உத்பன்னச்ய வினாச யோகாத் -என்று உத்பன்னமாய் நசிக்கும் ஆகில் உபேயமான பகவத் ப்ராப்தி ரூப மோஷ நசிக்குமாய் இருந்ததே என்னில் நசியாது
இதுக்கு இரண்டு பிரகாரம் உண்டு –
அதில் ஓன்று சாத்யம் தான்- உத்பாத்யம் என்றும் -ப்ராப்யம் என்றும் -விகார்யம் -என்றும் சம்ஸ்கார்யம் -என்றும் நாலு பிரகாரமாய் இருக்கும்
உண்டு பண்ணப் படுவது -அடையப்படுவது -விகாரம் அடைவிக்கப் படுவது -சம்சரிக்கப் படுவது -சாதிக்கப் படுபவை நான்குவகை –
அவற்றில் உத்பாத்யமாவது -கடம்  கரோதி -படம் கரோதி போலே முன்பு இன்றியிலே பின்பு உண்டாவது
ப்ராப்யம் ஆவது -க்ராமம் கச்சதி ராஜா நம் கச்சதி -என்றும் காம் தோக்தி பய -என்று முன்பே சித்த ரூபமான வஸ்துவை அதிகாரிக்கு இடுகை –
விகார்யம் ஆவது -ஷீரமப் யஞ்ஜயதி -என்றும் தரபுசீசே ஆவர்த்தயதி -பாலைத் தயிர் ஆக்குகையும் ஈயங்கள்  உருக்குகையும்
சம்ஸ்கார்யம் ஆவது வ்ரீஹீன் ப்ரோஷதி -என்றும் வ்ரீஹீ நவ ஹந்தி -என்று தன்னைக் கார்யாந்தர யோக்யமாகப் பண்ணுகை-மந்திர ஜலத்தால் பிரிஷித்து -நெல்லை உரலில் இட்டு குத்தி போல்வன
இங்கும்
ப்ரஹ்ம விதாப் நோதி பரம் -என்றும்
பராத்பரம் புருஷம் உபைதி திவ்யம் -என்றும்
பரம் ஜ்யோதிரூப சம்பாத்திய -என்றும்
உன்னை எய்தி -என்றும்
பண்டே சித்த ரூபனான பரமாத்மாவை இவன் கிட்டுகையாலே ப்ராப்யம் நித்தியமே யாகிறது
இனி மற்றை இரண்டாவதுபிரகாரம் -நிதிப் நித்யா நாம் -என்றும் அஜோஹ்யேக-என்றும்
ந ஹாய் விஜ்ஞாதூர் விஜ்ஞாதேர் விபரிலோபோ வித்யதே -என்றும்
பர நல மலர்ச் சோதி -என்றும்
ஆத்மாக்கள் நித்யர் ஆகையாலும் இவர்களுக்கு தர்மமான ஜ்ஞானா நந்தாதிகள் நித்யங்கள் ஆகையாலும்
தமஸா கூட மக்ரே பிரகேதம் -என்றும்
தயா திரோஹிதத் வாச்ச சக்தி ஷேத்ரஜ்ஞ  சம்ஜ்ஞிதா-என்றும்
ஆத்ம ஸ்வரூப   தர்மங்களுக்குத் திரோ தாயகமாய் பிரகிருதி சம்சர்க்கம் போய்
ஸ்வே ந ரூபே ணாபி நிஷ்பத்யதே -என்றும்
ஆவுர்ப்பூதஸ்வ ரூபஸ்து-என்றும்
அவபோதா தயோ குணா பிரகாஸ் யந்தே ந ஜன்யந்தே நித்யா ஏவாத்மநோ  ஹி தே-என்றும்
ஸ்வா பாவிகாரம் விஸ்த்ருதமாய் உத்பாத்யம் அன்றிக்கே ஒலிகையாலும் நித்யம் ஆகிறது என்ற பிரகாரம் –
அவையும் அப்படி ஆகிறது -இப்பிரதேசம் பிரபத்த்யுபப்ரும் ஹணம் பண்ணுகிறதாகில்
அஹம் அஸ்மா அபராதானாம் ஆலய –என்கிற  பிரபத்தி லஷணம் கிடந்ததோ என்னில்
ராவணோநாம துர்வ்ருத்தோ -17-19-என்று ராவண சம்பத்தாலும்
பீஷ யசே ஸ்மபீரோ-15-4-என்று நாம நிர்வசனத்தாலும் ஸ்வ தோஷத்தை முன்னிடுகையாலே -அஹம் அஸ்ம்ய  அபராதானாம்  ஆலய -என்னும் அர்த்தம் சொல்லுகிறது –
ராஜ்யம் ப்ரார்த்தயமா நச்ச-17-65- என்று தனக்கு ராஜ்யம் வேண்டி வந்தவனாய் பெருமாளுக்கு கிஞ்சித்காரம் பண்ண வந்தவன் அல்லாமையாலே அகிஞ்சன -என்னும் அர்த்தம் சொல்லுகிறது
த்வாம் து திக் குல பாம்சநம் -16-15- என்று தள்ளி விடும்படி ஸோ தரப்ராதாவுக்கு உட்பட ஆளன்றிக்கே போருகையாலே அகதி என்னும் அர்த்தம் சொல்லுகிறது
பவந்தம் சரணம் -19-4- என்கையாலே  த்வமேவ   உபாய பூதோ மே பவதி  ப்ரார்த்த நா மதி சரணாகதி -என்னும் அர்த்தம் சொல்லுகிறது
பாதயோ சரணான் வேஷீ நிபபாத -19-2- என்கையாலே  சா தேவே அஸ்மின் பிரயுஜ்யதாம் -என்னும் அர்த்தம் சொல்லலுகிறது
ஆகையால் இது நேராகக் கிடந்தது
ஆநு கூல்ய சங்கல்பாதிகளும்  கிடந்ததோ என்னில் -இந்த லஷணமும் புஷ்கலம்
ஆத்மாநாம் -16-25-என்று ராவணனுக்கும் படை வீட்டுக்கும் நன்மையை ஆசாசிக்கையாலே ஆநு கூல்ய சங்கல்பம் சொல்லிற்று
உத்பபாத கதா பாணி -16-16- என்று கையிலே தடி இருக்க பரிபவித்தனை கரைய வடித்து போராமையாலே ப்ராதி கூல்ய வர்ஜனம் சொல்லிற்று –
வாலி நஞ்ச –17-6-என்று ஸோ தா ஹரணமாக ராஜ்யம் த்ரவ்யம் என்று அறுதி இட்டு வருகையாலே ரஷிஷ்யதீதி விஸ்வாசம் சொல்லிற்று
பவந்தம் சரணம் கத -19-4-என்று சொல்லுகையாலே கோப்த்ருத்வ வரணம் சொல்லிற்று
பவத்கதம் -19-5-என்று அகில பர சமர்ப்பணம் பண்ணுகையாலே ஆத்ம நிஷேபம் சொல்லிற்று –
பிராணா தச்ச-18-14-என்று ஸ்வரத்தில் தளர்த்தியாலும்
சீக்ரம் -17-7- என்று பெருமாள் பக்கல் போக ஒண்ணாத படி நடு வழியிலே கொல்ல நிற்கையாலும்
தைந்யம் கார்ப்பண்யம் உச்யதே -என்கிற கார்ப்பண்யம் சொல்லிற்று
ஆகையாலே இந்த லஷணமும் புஷ்கலம் –

இப்படி
புஷ்கல லஷணையான பிரபத்தியைப் பண்ணி
இதுக்குப் பலமாக கொள்ளைக் குப்புக்கு கூலம் எடுத்தவோ பாதி
நாம் இருக்க பலாந்தரங்களை ஆசைப்படாதே  நம்மையே உகந்து வந்தவனுக்கு சகல பய நிவ்ருத்தியும் பண்ணுவேன்
இது நமக்கு வ்ரதம் என்கிறார் இந்த ஸ்லோகத்தாலே –

———————

இப்படி அபய பிரதானம் பண்ணுவது ஆருக்கு என்னில் –
சக்ருதேவ பிரபன்னாய –
ச லஷண பிரபத்தி பண்ணினவனுக்கு -அதாவது -சக்ருதேவ பிரபன்னனாய் இருக்கை-
சக்ருத்-தனக்குப் பொருள் என் என்றால் –
ஆவ்ருத்தி ரசக்ருதுபதே சாத் -என்றும் அநேக ஜன்ம சமசித்த -என்றும் பக்தி போலே ஸ்வரூப நிஷ்பத்தியும் பல நிஷ்பத்தியும் சிரகால சாதியை யன்றிக்கே
தத் த்வயம்  சக்ருத் உச்சாரோ பவது -கடவல்லி -என்றும்
உபாயோசயம் சதிர்த்தஸ்தே ப்ரோக்த சீக்ர பலப்ரத-லஷ்மி தந்த்ரம் -17-76-என்றும்
ஸ்வரூப நிஷ்பத்தியும் பல நிஷ்பத்தியும் ஒரு காலேயாய் இருக்கை –
சக்ருதேவ -என்கிற அவதாரணம் -பிரபன்னனே-என்றும்
ஒருகாலே -இருகால் மாட்டில்லை -என்றும் அயோக வ்யவச் சேதமோ -அந்யயோக வ்ய்வச் சேதமோ
சங்கு வெளுப்பே –அயோக வ்யவச் சேதம் -அப்பொருள் அங்கெ இருக்கிறது போலே
பார்த்தன் ஒருவனுமே வில்லாளி –  ஒருவன் தான் என்பதை குறிக்கும் அந்ய யோக வயவச் சேதம் –
பிரபன்னனே -என்ற போது பிரபன்னனை அநு வதித்து அவனுக்கு அபய பிரதானம் பண்ணுவன் என்று வாக்யத்துக்கு விதேயம் இத்தனை போக்கி
பிரபன்னனோ அபய பிரபன்னனோஎன்று விமர்சமாய் பிரபன்னனே என்று விதயம் அல்லாமையாலும் -அயோக வ்யவச் சேத பொருள் பொருந்தாது
சக்ருச்சாரோ பவதி -என்றும் சக்ருதேவ ஹி சாஸ்த்ரார்த்த -என்றும் பிரபத்தியாகில் சக்ருத் பிரயோஜ்யையாய் -அசக்ருத் பிரயோஜ்யை அல்லாமையாலே சக்ருத்தா வ்ருத்தியாய் இருப்பதொரு பிரபத்தியில் வ்யவச் சேதம் இல்லாமையாலும்
அயோக வ்யவச் சேதம் இல்லாமையாலும்
அபயங்கதோ பவதி என்று அப்பிரபன்னனான   பக்தி நிஷ்டனுக்கும்  அபாய பிரதானம் பண்ணின படியாலே அந்ய யோக வ்யவச் சேதம் அல்லாமையாலும்
வ்யாவர்த்தம் இல்லை என்று இட்டு வ்யர்த்தம்
இனி சக்ருதேவ -என்று இங்கே கூட்டின போது-சக்ருதேவ குர்யான் ந அசக்ருத் -என்று
பிரபத்தி ஸ்வரூப அபிதானம் பண்ணுகிறது அன்றிக்கே
பிரபன்னன் அநூத்யனாய்
அபாய பிரதானத்திலே  தாத்பர்யம் ஆகையாலே சக்ருத்தோடே கூட்டிலும் வ்யர்த்தம்
இந்த உபபத்திகளாலே சக்ருத் பிரயோகமும் வ்யர்த்தம்
சக்ருதேவா பயம் ததாமி -என்று இங்கே அன்வயித்தாலோ   என்னில்
ஒரு சரீரிக்குப் பிறக்கக் கடவ பயன்கள் எல்லாம் ஒரு காலே சஹிதமாய்  அவற்றினுடைய நிவ்ருத்தியை ஒரு காலே பண்ணுகிறதல்ல-
பூத காலத்தில் பயங்கள் பண்டே அனுபவித்துப் போயிற்றன –
ஆகாமி காலத்தில் பயங்கள் உத்பன்னம் அல்லாமையாலே நிவ்ருத்தி இப்போது பண்ண ஒண்ணாது
இன்னமும் ததாமி -என்று ப்ராரப்தமாய் -நிகழ கால பிரயோகம் -பரிசமாப்தம் அல்லாத பயங்கள்  உத்பன்னங்கள் அல்லாமையாலே மேல் வரும் அவை அடைய வர வரப் போக்குகிறேன் என்கிற வர்த்தமானத்துக்கும்
ஒரு கால் என்கிற சக்ருத் பதத்துக்கும் வ்யாஹதியும் வரும்
அபாய பிரதானம் பண்ணுகிற இன்று தொடங்கி ராவண வத பர்யந்தமாகவும் பயங்களுக்கும் பரிஹாரங்களுக்கும் அவதி இல்லாமையாலே அனுஷ்டான விருத்தமும் ஆகையாலே
சக்ருத் என்றும் ஏவ என்றும் ப்ரஸ்துத பதங்களுக்கு வையர்த்யம் வரும் என்னில்
வாராது –
1- சக்ருத் ஏவ –
பிரபன்னன் என்றார் பெருமாள் –அதுக்கு அனுபபத்தியாக மஹா ராஜர் சக்ருத் பிரயோஜ்யை யான ப்ரபத்தியை –
ராகவம் சரணம் கத –17-14- என்றும்
பவந்தம் சரணம் கத-19-4- என்றும்
பாதயோ சரணான் வேஷீ நிபபாத -19-2- என்றும்
முக்கால் பண்ணி பிரபத்தி லஷண ஹாநியும்
ப்ரபத்த்ரு ஸ்வரூப ஹாநி யும்
பிரபத்தவ்ய ஸ்வரூப ஹாநி யும் -பண்ணினான் என்று தூஷணம் சொல்ல
சக்ருதேவ பிரபன்னாய -அவன் பலகால் பண்ணிற்று இலன் -ஒரு கால் பண்ணினான் -என்கிறார்-
நாலு மூன்று பண்ணை பண்ணிற்றாக எடுத்த பிரமாணங்கள் செய்யும்படி என் என்னில்
ராஷசோ -17-5- என்று அபிசாபம் -கடும் சொல் -சொன்ன உங்களைப்   பார்த்து
ஸோ அஹம் —ராகவம் சரணம் கத -17-14- என்கிறபடி விரோதியாய் வந்தவன் அல்லேன்
அவன் தானே பரிபவித்து போகச் சொல்ல -அவனோட்டை சம்பந்தங்களையும் விட்டு பெருமாளை சரணம் புக வந்தேன்
என்று தன அருள்பாடுசொன்னான்  முற்பட -சரணம் கத-என்கிற நிஷ்டை
உம்முடைய வார்த்தைகளாலே கலங்கினோமே என்று சங்கித்து நம்மைத் தெளிய விடுகைக்கு
பவந்தம் சரணம் கத -என்று விண்ணப்பம் செய்த படி
பாதகனாய் வந்தவன் அல்லன்  உம்மை சரணம் புகுவதாக வந்தவன் என்று நமக்கு பட்டாங்கு சொன்னான் இரண்டாம் பண்ணை –
ஆ நய-18-34-மேல் -என்று நாமும் அழைத்து அஸ்மாபிஸ் துல்யோ பவது –18-38-என்றும்
ஸ்கித் வஞ்சாப்யுபைது ந-என்று நீர் அனுமதி   பண்ணின பின்பாயிற்று –
காத் பபாதாவ நிம் -19-1- என்று பூமியிலே இழிந்து
பாதயோ சரணான் வேஷீ நிபபாத -19-2-என்று நம் காலிலே விழுந்தது ஆகையாலே ஒரு காலே யாயிற்று அவன் சரணம் புகுந்தது –
ஒரு ஹானியும் பண்ணிற்று இலன் -என்கிறார் -ஆகையாலே சக்ருதேவ -என்கிற பதம் பிரயோஜனம் ஆகிறது
2-அன்றியிலே -சக்ருதேவ பிரபன்னாய -என்று
அநேகஸ்மாத வ்யாவ்ருத்தோ தர்ம –அநேக தர்ம -என்கிறாப் போலே
சக்ருத்வ நிச்சித்ய ப்ரபன்னன்-என்றாய் -மத்யம பத லோபி யான சமாசமாய் -விசார்யா ச புன புன -என்று
துஷ்டனோ அதுஷ்டனோ -மித்ரனோ அமித்ரனோ வத்யனோ அவத்யனோ -ச்வீகாரனோ பஹிஷ்கார்யானோ
என்று நாம் பட்டால் போலே லங்கா மித்ர நாதிகளை விடுவேனோ பற்றுவேனோ
ராவணனை விடுவேனோ பற்றுவேனோ -போகிற இடத்தில் கைக் கொள்ளுவார்களோ தள்ளுவார்களோ ராஜ்யம் கிடைக்குமோ கிடையாதோ என்று
இப்புடைகளிலே பஹூ முகமாய் விசாரித்து அளப்பது முகப்பதாகை அன்றிக்கே
சக்ருத் சமீஷ்யைவ  ஸூ நிச்சிதம் ததா -யுத்த -12-28-போலே ஒரு காலே அறுதியிட்டு வந்தவன் என்கிறார் ஆகவுமாம் –
3- அன்றியிலே சஹஸா சப்தத்துக்கு சக்ருதேசமாய் -சஹஹைவ பிரபன்னாய -என்றாய் -அதாவது ஆஜகாம முஹூர்த்தேந -17-1-என்றும்
ஒல்லை நீ போதாய் -என்றும் சொல்லுகிறபடியே -நின்றவா நில்லா நெஞ்சில் பிறந்த ஆநு கூல்யம் புரிவதற்கு  முன்பே வந்தான் -என்கை
4- அன்றியிலே -சரணாகத ரஷணம்பண்ணுகிறீர் ஆகில் அடியேன்
சஹஸா பிரபன்னாயா -என்று ஒன்றையும் நிரூபியாதே சாஹசிகனாய் வந்தான் -அதாவது
ராவணன் கோஷ்டியில் நின்று கடல் கரையில் இருக்கிற பெருமாளை சரணம் புக்கால் அவர் பிடித்துக் கொண்டு போய் விலங்கிலே இடில் செய்வதென் -என்று
பயப்படாதே பட்டது படுகிறது என்று அவன் வந்த சாஹசம் காணும் என்கிறார் ஆக வுமாம் –
5- இப்படி  சரணாகதியில் சர்ப்பம்ருதி யுண்டோ என்ன -சஹாச பிரபன்னாய –
அன்று ஈன்ற கன்றுக்காக முன்னீன்ற கன்றைக் கொம்பிலும் குளம்பிலும் கொள்ளும்  தாயைப் போலே பால்பாயப் பாய சரனாகதனாய் பலமும் பெறாத இவனுக்கே
யாம் அத்தனை போக்கி பூர்வ சரணாகதனாய் ராஜ்ய தார பலமும் பெற்ற உமக்காகோம் –
இப்படியாவது அவன் தான் சரனாகத்தான் ஆகில் அன்றோ –
சீக்ரம் 17-7- என்றும் வத்யதாம் -17-27- என்றும்
நாங்கள் சொன்ன வார்த்தையிக் கேட்டு வெருவிப் போக நிற்கிறவன் அன்றோ -என்ன
1- பிரபன்னா யைவ –
நாம் இப்படி விபரத்தி பின்னர் ஆனா அளவிலும் அவன் பிரபண்ணனே -போகான் காணும் -என்கிறார்
பிரபன்னனே காணும் என்று அருளிச் செய்யா  நின்றீர் -அவன் பக்தி நிஷ்டனைப் போலே அங்கமாக சில தர்ம அனுஷ்டானம் பண்ணி -ப்ரதீயதாம் தாசரதாய மைதிலீ -14-3/4- என்று நல்வார்த்தி சொல்லுவதும்
தூத வதம் ஆகாது என்பதும் -தன் மகள் அநலையை இட்டு நல் வார்த்தை சொல்லுவதுமாய்
அநேகம் புனஸ் சரணம் பண்ணி அன்றோ வந்தது -ஆனபின்பு அவன் பக்தி நிஷ்டன் என்றார் மஹா ராஜர் -பெருமாள் -2- பிரபன்னா யைவ –
அவன் நல் வார்த்தை சொல்லிற்று நமக்காக அல்ல –
விபீஷணஸ்து-17-24-என்று ப்ரக்ருத்யா தார்மிகன் ஆகையாலும்
குருத்வாத்தி தமிச்சதா -என்று தமையன் விஷயத்தில் ஹித பரன் ஆகையாலும்
ஆநு கூல்யச்ய சங்கல்ப -என்று பிரபத்த்யாதி காரியாகச் சொன்னான் இத்தனை –
ஆகையால் இது அந்யா சித்தம் -பக்தி நிஷ்டன் என்ன ஒண்ணாது
சேனயோர் உபயோர் மத்யே ரதம் சதாபய -ஸ்ரீ கீதை -1-21-என்று பள்ளரும் பறையரும் பார்ப்பாரும் பார்க்கருமான இரு படைக்கு நடுவே தேரை நிறுத்திச்
சரம ஸ்லோகம் உபதேசித்த போது அர்ஜுனன்
எங்கே குளித்து குலை  குடுமியும் தோதவத்தியுமாய் நின்றான் –
-வெளுத்த உடுப்பை -தோதவத்தித் தூய மறையோர் -பெரியாழ்வார் -4-8-1-
இன்னமும் உறங்குதியோ -என்ன நங்கைமீர் போதர்கின்றேன் -என்றும்
தூயோமாய் வந்தோம் துயில் எழப் பாடுவான் -என்றும்
திருவாய்ப்பாடியிலே பெண்கள் நோன்புக்கு போகிற போது அனந்தலிலே-தூக்கக் கலகத்தாலே -கண்ணையும் கடை வாயையும்
துடைத்து வந்தார்கள் அத்தனை போக்கி எந்த உவர்க் குழியிலே குளித்து வந்தார்கள் –
அப்படியே இவனும்  -யோ விஷ்ணும் சததம த்வேஷ்டிதம் வித்யா தந்த்யரே தசம் -என்று
விஷ்ணு த்வெஷியாய் கர்ம சண்டாளனான ராவணன் கோஷ்டியில் நின்று போருகிற போது
கஸ்ய ஏவ வ்யதிஷ்டத -17-8-என்று ஆகாசத்திலே நின்றான் இத்தனை போக்கி என்ன கடலாடி புனலாடி வந்தான்
யதஹரேவ விரஜேத் ததஹரேவ பிரவ்ரஜேத்-ஜாபால உபநிஷத் -என்றும்
நாஸ்தி  நஷத்ர சம்பந்தோ ந நிமித்த பரீஷணம் ஸ்ரத்தைவ காரணம் நித்ய மஷ்டாஷர பரிக்ரஹே-நாராதீய கல்பம் -என்றும்
போதுவீர் போதுமினோ -என்றும்
ருசி பிறந்த போதே வந்தான் அத்தனை –
கங்கை ஆடுவாருக்கு ஒரு உவர் குழியிலே குளிக்க வேணுமோ
பகவான்  பவித்ரம் வாசு தேவ பவித்ரம் -பவித்ராணாம் பவித்ரம் – பாவனா சர்வ லோகா நாம் த்வமேவ ரகு நந்தன -என்று
பேசப்பட்ட நம் பக்கல் வருகிறவனுக்கு பெரு புரச் சரணம் வேண்டா -ப்ரபன்னன் ஆகில் -என்கிறார்
அது இருந்தபடி ஏன் –பக்திக்கு சாஸ்திர விஹிதம் வர்ணாஸ்ரம தர்மங்கள் உண்டாய் இரா நின்றது -இதுக்கு
சர்வ தரமான் பரித்யஜ்ய -என்று உள்ள தர்மங்களையும் விடச் சொல்லா நின்றது
ஆகையாலே பிரபத்தியில் பக்தி விலஷனையாய் தொடரா நின்றதீ என்னில் -அது சொல்ல ஒண்ணாது
சப்த பிரமாணகே  ஹ்யர்த்தே யதாசப்தம் வ்யவஸ்திதி-என்று சாஸ்திர பிரமாண கரானால் அது சொன்ன படி கொள்ளக் கடவோம்
அதாவது -பஹவோ ஹி யதா  மார்க்கா  விசந்த யேகம் மஹா புறம் -ததா ஜ்ஞாநாநி  சர்வாணி ப்ரவிசந்தி தமீச்வரம் -என்று
ஓர் ஊருக்குப் போகா வென்றால் பல வழியாய் இருக்குமாப் போலே
பகவத் ப்ராப்திக்கு பல உபாயங்கள் உண்டு என்று சொல்லி
ஒரு உபாயம் ஸ்வயம் அசக்தம் ஆகையாலே சில சஹ கார்யாந்தரங்களை விதித்து –
ஒரு உபாயம் சர்வ சக்தி யாகையாலே சஹ கார்யாந்தரங்களை வேண்டா என்கிறது
பிரகார பேதத்தாலே ஒன்றுக்கு ஓன்று வை லஷண்யம் வாராது
ஸ்வரூப நிரூபக தர்மங்கள் என்றும் நிரூபித்த ஸ்வரூபத்துக்கு விசேஷ சமர்ப்பக தர்மங்கள் என்றும் யுண்டு
அநேக விசேஷ சமர்ப்பகங்களைப் பார்த்தால் பிரபத்தியே விலஷனை -எங்கனே என்னில்
ஸோ அன்வேஷ்டவ்ய ச விஜிஜ்ஞாசி தவ்ய-என்றும்
ப்ரஹ்ம விடாப் நொதி பரம் -என்றும்
ஜ்ஞாத்வா தேவம் முச்யதே சர்வபாசை -என்றும்
தமேவைகம் ஜானதாத்மானம் அந்யா வாசோ விமுஞ்ச்சத அம்ருதச்யைஷ சேது -என்றும்
முமுஷூர்வை சரணமஹம் ப்ரபத்யே -என்றும் வேதாந்த விஹிதத்வமும் மொஷாதி சாதனத்வமும் ஒத்து இருக்கச் செய்தேயும்
பக்த்யாபாய ஸ்வரூபம் போலே சாத்திய பக்தயேக சோசா என்று இவனாலே சாத்தியமாக அன்றிக்கே பிரபத்ய்யுபாய ஸ்வரூபம்
சித்தரூபம் பரம் ப்ரஹ்ம -என்றும்
நித்யம் நித்யாக்ருதிதரம் -என்றும்
பண்டே சித்த ரூபமாய்   த்யாயீத -என்றும்- தருவா  ஸ்ம்ருதி என்றும்
ஸ்ம்ருதி சந்தான ரூப ஜ்ஞானமாய் அசேதனமாகை அன்றிக்கே
யஸ் சர்வஜ்ஞ சர்வவித் -சத்யம் ஜ்ஞானம் –சர்வம் சர்வத்ர சர்வதா ஜாநாதி -என்று
ஜ்ஞாதாவாய் சதாதன ஜ்ஞான ஸ்வரூபமாய்   -சுவீகரிக்கும் இடத்தில்
ஆவ்ருத்திர சக்ருதுபதேசாத் -என்று அநேக ஜன்ம சித்தமாய் சிரகால சாத்தியமாய் இருக்கை அன்றிக்கே
தத் த்வயம் சக்ருத் உச்சாரோ பவதி –உபாய பூதோ மே பவதி  ப்ரார்த்த நா மதி சரணா கதி –
தஸ்ய தாவதேவ சிரம் -யாவததிகாரம் -என்று விளம்பித பலப்ரதமாகை அன்றிக்கே
உபாயோ அயம் சதுர்த்த் தஸ்தே ப்ரோக்த சீகர பலப்ரத –
தாவதார்த்திஸ் ததா வாஞ்ச தாவன் மோஹஸ் ததா ஸூ கம் யாவன்னயாதி சரணம் -என்று
சீகர பல பிரதமாய்
தபஸா அ நாஸ கேன் -யஜ்ஞோ தானம் தபஸ் சைவ -பஞ்சாக் நயோ யே ச திரிணா சிகேதா -தபஸ் சந்தாப லப்தச்தே ஸோ அயம் தர்ம பரிக்ரஹ –
கார்யஸ் த்ரிஸ்வபி ஷேகச்ச காலே காலே ச நித்யச-என்றும்
ஓதி ஆமாம் குளித்து உச்சி தன்னால் ஒளி மா மலர்ப்பாதம் நாளும் பணிவோம் -என்றும்
மாரி கோடை இன்றியிலே  உப்பு நீரிலும் உவர் நீரிலும் சுட்ட நீரிலும் சுனை நீரிலும் தோய்ந்தும் க்லேசிக்கும்படி யாகை அன்றிக்கே
ஆனந்தோ ப்ரஹ்ம –ஆனந்தம் ப்ரஹ்ம –கம் ப்ரஹ்ம கம் ப்ரஹ்ம -என்றும்
சர்வகந்த சர்வராசா என்றும் ஸூ கரூபமாய்
மித்யா பிரயிக்தோ யஜமானம் ஹி நஸ்தி -என்றும்
ஜ்ஞான தோஷ பரிப்ரஷ்டஸ் சண்டாளீம் யோனி மா கத -என்றும் அல்ப்பம் தப்பில் கர்த்தா நசிக்கை அன்றிக்கே
யதா ததா வாபி சக்ருத் க்ருதோஞ்சலி ததைவ முஷ்ணாத்ய ஸூ பான்ய சேஷத ஸூ பாநி புஷ்ணாதி ந ஜாது ஹீயதே -என்றும்
துராசாரோபி சர்வாசீ கருதக் நோ நாஸ்திக புறா -சமாஸ்ரயே தாதி தேவம் சரத்தா சரணம் யது நிர்தோஷம் வித்தி தம் ஜந்தும் ப்ரபாவாத் பரமாத்மன -என்றும்
பயனன்றாகிலும் பாங்கலர் ஆகிலும் செயல் நன்றாகத் திருத்திப் பணி கொள்வான் -என்றும்
அடைவு கெடப் பண்ணினாலும் தோஷங்களைப் போக்கி திருத்தி அனுஷ்டாதாவை உஜ்ஜீவிப்பிக்கக் கடவதாய்
அவித்யயா ம்ருத்யும் தீர்த்தவா வித்யயா   அம்ருத மஸ் நுதே -என்றும்
கஷாய பக்தி கர்மாணி ஜ்ஞானம் து பரமாகதி -கஷாய கர்மபி பக்வே ததா ஜ்ஞானம் ப்ரவர்த்ததே-என்றும்
தரத்தும் ம்ருத்யு மவித்யயா -என்றும் -ஸ்வ உத்பத்தி பிரதிபந்தக நிவர்தகமாய்
அந்தவதே வாஸ்ய தத்பவதி -என்றும்
ந ஹ்யத்ருவை பராப்யதே -என்றும் பலவா ஹ்யேதே அத்ரூடா யஜ்ஞரூபா -என்றும் நச்யத் த்ரவ்ய உபகரணமாய்-நச்வர க்ரியாரூபமுமாய் -ஸ்வயம சக்த தேவதாத்மகமுமாய் ஸ்வர்க்க பசு புத்ராதி  சாதாரணமான கர்மாதிகளை அங்கமாக அபேஷிக்கை அன்றிக்கே
தமேவைகம் ஜானதாத்மான மன்யா வாசோ விமுஞ்சத் -என்றும்
சர்வ தர்மான்பரித்யஜ்ய மாமேகம் சரணம் வ்ரஜ -என்றும் ததே கோபாயதாயாச்ஞா  -என்றும்
மாமேவைஷ்யசி என்றும்
சிருஷ்டியில் த்ரிவித காராணமும் தானே யாகிறாப்  போலே
ஆத்யந்திக பிரளயமான மோஷத்திலும் அங்கமும் அங்கியும் உபாயமும் உபேயமும் ஒன்றேயாய்
சர்வ முக்தி வை ஷம்யம் நைர்க்ருண்யாதிகள் வாராமைக்காக அதிகாரி ஸ்வரூப யோக்யதாபாதகமான ஆநு கூல்ய சங்கல்பாதி மாத்ர சாபேஷையாய்
இப்படிக்கொத்த அநேக குண பௌஷ் கல்யங்களாலே பக்தியில் பிரபத்தியே அத்யந்த விலஷணை -இப்படிகொத்த பிரபத்தியைப் பண்ணினவனுக்கு –
3- பிரபன்னா யைவ –
மந்திர வ்யூஹே நயே சாரே யுக்தோ பவிதுமர்ஹதி-17-18–என்று கர்ம யோக நிஷ்டரான உமக்கும் ஆகோம்-
ஜாம்பவாம்ஸ் த்வதசம்ப்றேஷ்ய சாஸ்திர புத்த்யா விசஷண   -17-43-என்கிற ஜ்ஞான யோக நிஷ்டரான ஜாம்பவானுக்கும் ஆகோம்
பக்திச்ச நியதா வீர -உத்தர -40-16-என்கிற பக்தி யோக நிஷ்டரான ஹனுமானுக்கும் ஆகோம்
ராகவம் சரணம் கத -17-14- என்று பிரபன்னனான விபீஷணனுக்கே ஆகக் கடவோம்  –
4- பிரபன்னா யைவ –
அகார்த்தாயைவ -அஷ்டச்லோகீ-3 என்றும்
தனக்கே யாக எனைக் கொள்ளுமீதே -திருவாய் -2-9-4-என்றும் அவன் நமக்கேயாய் இருக்குமா போலே
எனக்கே தந்தைத் தந்த கற்பகம் -திருவாய் -2-7-11-என்று அபியுக்தர் சொன்னபடியே பிரபன்னனுக்கே யாகக் கடவோம்
அவன் பிரபன்னனாவது ஷூத்ர பிரயோஜனத்துக்காக அன்றோ
ராஜ்ய -17-66-என்று உம்முடையஹ்னுமான் அன்றோ சொன்னான் -என்ன
1-தவாஸ் மீதி ச யாசதே -உனக்கே யாவேன் என்று யாசிப்பவனுக்கு
அநந்ய பிரயோஜனநாயே வந்தான் காணும் -என்கிறார்
அதாவது-ச காரம் அவதாரண அர்த்தமாய் -தூத வதம் ஆகாது என்று தனக்குப் பண்ணின உபகாரத்துக்கு பிரத்யுபகாரமாக ராஜ்யம் கொடுக்க வேணும் என்று  அபிப்ராயமாக ஹனுமான் சொன்னான் அத்தனை போக்கி
விபீஷணன் சொன்னானோ –
ந தேவலோகா க்ரமணம் நா மரத்வமஹம் வ்ருனே ஐஸ்வர்யம் வாபி லோகா நாம் காமே ந த்வயா வி நா -என்றும்
உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன் -திருவாய் -5-8-3- என்றும் லஷ்மணனும் சடகோபனும் சொன்னால் போலே
த்யக்த்வா புத்ராம்ச்ச தாராம்ச்ச -17-14- என்றும்
பரித்யக்தா -19-5-என்றும் புறம்பு உள்ளவற்றை அடைய விட்டுச்
சேலேய் கண்ணியரும் பெரும் செல்வமும் நன் மக்களும் மேலாத் தாய் தந்தையும் தாமேயாக-திருவாய் -5-1-8- வந்தவன் -என்கிறார் –
2- தவாஸ்மீதி ச யாசதே –
தவை வாச்ம்யஹ மச்யுத -என்றும்
உன் தன்னோடு உற்றோமே யாவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம் -என்றும் அநந்ய பிரயோஜனனாயே வந்தான் –
3- தவாஸ்மி
ந மம-ந ராவணஸ்ய-ஸ்வா தந்த்ர்யமும் இல்லை -பர பாரதந்த்ர்யமும் இல்லை
மத பாரதந்த்ர்யமே ஏவ ஸ்வரூபம் -என்று வந்தவன் –
4-தவைவாஸ்மி-
அவன் நம்மை நோக்கி தவைவாஸ்மி -என்றான் -நாமும்
புக்த்வா ச போகான் விபுலான் ததோ அந்தே மத பிரசாதாதாதா -மம அநுஸ்மரணம் ப்ராப்ய மம லோகம் ச கச்சதி -என்றும்
போகம் நீ எய்திப் பின்னும் நம்மிடைக்கே போதுவாய்-பெரிய திரு மொழி -5-8-5-என்று லாங்கா ராஜ்யமும் கைங்கர்ய சாம்ராஜ்யமும் -தவைவாஸ்து -என்னக் கடவோம் –
ஸ்ரீ மதா ராஜராஜோ லங்காயாம் அபிஷேசித-யுத்த -28-27-என்றும்
விபீஷண விதேயம் ஹி லங்கா ஐஸ்வர்யம் இதம் க்ருதம் -யுத்த -116-13-என்றும்
லப்த்வா குலதனம் ராஜா லங்காம்   ப்ராயாத விபீஷண -யுத்த -131-9-என்றும்
இப்படி இரண்டும் கொடுத்து விட்டு அருளினான் இ றே-
குலதனம் என்னக் கோயில் ஆழ்வாரைக் காட்டுகிறபடி   என்-என்னில்
இதம் விமானம் ஆச்சர்யம் இஷ்வாகு குலதைவதம் -என்றும்
மநு வம்ச ப்ரசூதா நாம் ஷத்ரியாணாம் இதம் தனம் காமகம் காமதம் விமானம் ரங்க சம்ஜ்ஞிதம்-என்றும்
உப புராணத்திலும் ப்ரஹ்மாண்ட புராணத்திலும் ஸ்பஷ்டமானத்தை இங்கே அநு வதிக்கிறது ஆகையாலே குறை இல்லை –
5- தவாஸ்மி –
ஸ்தித மாத்மநி  சேஷத்வம் -என்றும் -ஸ்வத்வமாத்மநி சஞ்ஜாதம -என்றும்  -ஆத்மதாஸ்யம் -என்றும்
ஆத்மசத்தையுண்டாகிற போதே சேஷமாய் அன்றோ இருப்பது –
6- தவாஸ்மி –
அஹம் ப்ரஹ்மாஸ்மி -போலேசாமா நாதி கரண்யத்தாலே சொன்னாலும் சேஷ சேஷி பாவம் சித்திக்கும் இ றே
அப்படிச் சொல்லாதே வ்யதிகரணமாகச்  சொல்லிற்று -பூர்வாபரங்களாலும் பிரமாணாந்தரங்களாலும் உபபாதிக்க வேண்டி ஆபாதத்தில் ஸ்வரூப ஐக்கியம் போலே தோன்றி பிரமிக்க ஒண்ணாது என்று ஜீவ பரமாத்மா பேதமும் வ்யக்தம் ஆகைக்காக
1-இதி –
இப்பாசுரம் ரசித்த  படியாலே -தவாஸ்மி-என்ற  பிரகாரத்தைச்  சொல்லுவதே -என்று அநுபாஷித்து ப்ரீதராகிறார் –
2- இதி –
இத்யாஹா மால்யோப ஜீவந-என்றால் போலே யாராகச் சொல்லக் கடவ பாசுரத்தை யார் சொல்லுகிறார் –
புலஸ்த்யன் புல ஹாதிகள் இதி ஹாசமாகச் சொல்லக் கடவ பாசுரத்தை ஒரு ராஷசன் சொல்லுவதே –
-ச –
உபாய மாத்ரத்தை அபெஷித்து விடாமே பலத்தையும் வேண்டுவதே -என்று சமுச்ச்யார்த்த மாக வுமாம்
–1-தவாஸ்மீதி ச –
சதுர்விதா பஜந்தே மாம் ஜநா-என்று பல சதுஷ்ட்ய சாதாரணமான உபாயத்தை அபேஷித்தால் உபேயங்களில் த்ரிவர்க்கத்தை அபேஷியாதே பரம புருஷார்த்தமான அபவர்க்கத்தை அபேஷிப்பதே-
2- தவாஸ்மீதி ச –
பூர்வார்த்தத்தில் உபாயத்தை அபேஷித்து-சரணாகதனாய்ப் போகாதே -உக்த அர்த்தத்தில் கைகர்யத்தையும் அபேஷித்து த்வய நிஷ்டன் ஆவதே –
3-தவாஸ்மீதி ச –
த்வாஸ்மீத் யபி என்றாய் -அதாவது -பரிபாலய நோ ராஜன் வத்யமாநான் நிசாசரை-என்ற ரிஷிகளையும்
த்ராணகாம இமாம் லோகம் சர்வம் வை விசசார ஹ -என்றும்
தரீன் லோகன் சம்பரிக்ரம்ய தமேவ சரணம் கத -என்ற ஜெயந்தனைப் போலே ஷூத்ர சரீர ரஷணத்துக்காக அன்றிக்கே -ஸ்வரூப அநு ரூபமான புருஷார்த்தமான நம்மை -என்கை-
ஸ்வரூப அநு ரூபமான புருஷார்த்தம் -ஸ்ரீ மதே நாராயணாய -என்றும் –
சஹ வைதேஹ்யா–அஹம் சர்வம் கரிஷ்யாமி -என்று இருவருமான சேர்த்தியிலே அன்றோ –
தனித்து இருக்கிறது உமக்கு சேஷமானால் ஏகா யனனாகானோ -என்ன –
பித்ரா ச பரித்யக்த -என்கிற இடத்தில் -மாத்ரா ச பரித்யக்த -என்று அநுக்த சமுச்சயமானால் போலே இங்கும் தவாஸ்மீதி ச -என்றது –
வைதேஹ்யாஸ் சாஸ்மி அநுக்த சமுச்சயமாய் மிதுன விஷயத்திலே காணும் அபேஷித்தது என்கை-
அன்றியிலே-
உங்களைப் போலே சாகா ம்ருகமாய் சாகைக்கு மேலே சஞ்சரிக்கை அன்றிக்கே
அக்னி ஹோத்ராச்ச வேதாச்ச ராஷசானாம் க்ருஹே  க்ருஹே -என்றும்
ஸூ ஸ் ராவ ப்ரஹ்ம கோஷாம்ச்ச விராத்ரே ப்ரஹ்ம ரஷசாம் -என்றும்
அகத்துக்கு உள்லேசாகா சஞ்சாரியாய் -வேதம் ஓதி -இருப்பவனுக்குத் தெரியும் காணும்
அதாவது -ஸ்ரத்தயா தேவோ தேவத்வம் அஸ்நுதே -என்றும்
நித்யைவைஷாநபாயிநீ  -என்றும்
அனன்யா ராகவேணாஹம் பாஸ்கரேண பிரபா யதா -என்றும்
அப்ருதக் சித்த நித்ய தர்மமே-ச -வ்வுக்கு உள்ளே உண்டு என்று அறிந்து சொன்னான் காணும் -என்கிறார் ஆக வுமாம் –
இப்படி  எல்லாம் அறிந்து இருக்கிற இவன் பர தந்த்ரனாய் செய்தபடி கண்டிருக்க ப்ராப்தம் இத்தனை போக்கி நிர்பந்திக்கப் பெறுமோ -என்னில்
1- யாசதே –
தனக்கு இது அபிமதம் என்னும் இடம் தோற்ற இரந்தான்-இத்தனை –
2- யாசதே –
ரஷா பேஷாம் ப்ரதீஷதே -என்றும்
அர்த்திதோ –ஜஜ்ஞே -என்றும்
வேண்டித் தேவர் -இரக்க-திருவாய் -6-4-5-என்றும்
அத்தலையிலே இரப்பை நாம் பாரித்து இருந்த படியாலே இரந்தான் –
3- யாசதே –
கதாஹமை காந்திக நித்ய கிங்கரர் பிரகர்ஷ்யிஷ்யாமி -ஸ்தோத்ர ரத்னம் -46-என்றும்
வழு விலா அடிமை செய்ய வேண்டும் நாம் -திருவாய் -3-3-1- என்றும் பிரார்த்திக்கிறான்
அவன் கண் குழியும் பையாப்பும் கண்டால் ஆர்க்கு மறுக்கலாம்
இப்படி இருந்தால்  அவனுக்குச் செய்து அருளப் புகுகிறது ஏது என்னில்
1-அபயம் ததாமி –
அத ஸோ பயங்க தோ பவதி -என்னும்படி பண்ணுவன்
அபயம் -தத் அந்ய– தத் அபாவ -தத் விரோதிகளை இ றே கூட்டுவது –
ஆகையால் -2-தத் அந்யமான  மங்க ளங்களை கொடுப்பன்
3-தத் அபாவமான அச்சம் இல்லாமையைப் பண்ணுவன்
4-பரகரிஷ்யமான ஆபச் சிந்தை இ றே பயம் -தத் விரோதியான இவன் புஜபல ரஞ்சிதரான பரரால் பண்ணப் படுகிற உபகார சந்துஷ்டியை உடையவனாம் படி பண்ணுவன் –
5-அபயம் –
அதீதே ஸோ க வர்த்தமா நே வ்யதா ஆகாமி நி பயம் -என்று இ றே லஷணம்
சோகம் இறந்தகால துன்பம் –வ்யதை-வதை – நிகழ் கால துன்பம்  -பயம் வரும்கால துன்பம்  –
ஆகையால் மேல் ஒரு அநர்த்தம் வாராதபடி பண்ணுவன் –
ஆர் நிமித்தமாக-பய நிவ்ருத்தி பண்ணுவது -என்ன –
1- சர்வ பூதேப்ய –
ஏதேனுமாக பய ஸ்தானமாய் உள்ளவை எல்லாம் -நிமித்தமாக –
2- சர்வ பூதேப்ய –
பூதங்கள் ஆகின்றன அசித் சம்ஸ்ருஷ்டங்கள் இ றே-அதாவது தேவ திர்யக் மனுஷ்ய ஸ்தாவராத்மகமாய் இ றே இருப்பது –
இவை இத்தனையும் நலியாதபடி பண்ணுவன் –
3- சர்வ பூதேப்ய –
ராவணனால் பட்ட  பரிபவத்தாலே -அவன் தம்பி என்றும் இந்த்ராதிகளால் வருமது-
நம் பக்கலிலே பரிவாலே  -வத்யதாம் -17-27-என்று திர்யக்கான உம்மால் வருமது –
ராவண விஜயத்தாலே பரிபூதரான மருத்தன்  தொடக்கமான மனுஷ்ய ராஜாக்களால் வருமது –
பீடத்தோடு பிடுங்குண்ட ஸ்தாவரமான கைலாசம் அடியாக வரும் இவ்வாபத்தை அடியைப் பரிஹரிபபன்-
4- சர்வ பூதேப்ய –ஸ்ரீ விஷ்ணு புராணம் -6-7-11- என்றும்
பௌதிகா நீந்த்ரியாண் யாகூ-என்னும் பிரக்ரியையால்
ப்ருதிவ்யாதி பூத கார்யமான சரீரேந்த்ரிய விஷயாதிகள் நலியிலும் பரிஹரிப்பன் –
5- சர்வ பூதேப்ய –
நானே நாநா வித நரகம் புகும் பாவம் செய்தேன் -பெரிய திருமொழி -1-9-2- என்ற உன்னால் வரும் பயமும்
ஜகத் சசைலபரிவர்த்தயாமி -ஆரண்ய -64-7- என்றும்
ஷிபாமி -ந  ஷமாமி -என்றும் நம்மால் வரும் பயமும்
ஹிரண்ய ராவனாதி பித்ரு பிராத்ரு திகளால் வரும் பயமும் பரிஹரிபபன்
5- சர்வ பூதேப்ய –
என்று அசேதனமான பாபங்களும் -அவ்வோ பாபங்கள் அடியாக  பாதிக்கும் ஜந்துக்களும் -இதடியாக வரும் பயமும் அடையப் போக்குவான்
இப்படி பீத்ரார்த்தானாம் பய ஹேது -பஞ்சமி யாக வுமாம்
அன்றியிலே
சதுர்த்தியாய் -பிரபன்னனாய் -தவாஸ்மீதி ச  யாசதே -என்று சரனாகதனாய் -பலார்த்தியான விபீஷணன் ஒருவனுக்குமோ  பய நிவ்ருத்தி பண்ணுவன் -என்றால்
இதி ச -என்கிற சவ்வை இங்கே கூட்டி
6-சர்வ பூதேப்யச ச –
அவனுக்கே அல்ல -சதுர்ப்பிஸ் சஹ ராஷசை -17-5- என்று அவனோடு கூட வந்தவர்களுக்கும் -அவர் தங்களைப் பற்றினார்க்கும் -அபய பிரதானம் பண்ணுவன் என்றாக வுமாம் –
பய நிமித்தம் சொல்ல வேண்டாவோ -என்னில் -ராகவேணாபயே தத்தே -19-1-என்கிற இடத்தில் உண்டோ
பயம் பா நாம்ப ஹாரிணி -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-17-36-என்கிற இடத்தில் உண்டோ
அது தன்னடையே வரும் –
அன்றியிலே -பிரபன்னாய -என்று பிரபன்னருக்கயோ பண்ணுவது -பக்தி நிஷ்டருக்கும் புருஷகார நிஷ்டருக்கும் இல்லையோ –
7- சர்வ பூதேப்ய –
பக்தி நிஷ்டரோடு புருஷகார நிஷ்டரோடு வாசி அற-அஸ்தி ப்ரஹ்மேதி சேத்வேத சந்தமேனம் ததோ விது-என்று
பகவத் ஜ்ஞானத்தாலே சத்தை பெற்றார் எல்லார்க்குமாம்
இப்படி கைம்முதல் உடையரான விலஷண அதிகாரிகளுக்கோ கொடுத்து அருளுவது –
சரணாகதர் -பக்தர் -ஆச்சார்யநிஷ்டர் -பகவத் ஞானம் உள்ளோர்  -போன்றாருக்கு மட்டுமா -கிம் பஹூ நா-பல சொல்லி என்
8-சர்வ பூதேப்ய
ச லஷண உபாய நிஷ்டராக வேண்டா -அதிப்ரசங்கம் வாராதபடி பவத் விஷய வாசிந-ஆரண்ய -1-20- என்று நம் எல்லைக்குள் கிடக்கையே உள்ளது –
யதி வா ராவண ஸ்வயம் -18-34- என்று சத்ருவான ராவணனோடு
பாத மூலம் கமிஷ்யாமி யா நஹம் பர்யசாரிஷம் -ஆரண்ய -4-14- என்று-உதாசீனையான சபரியோடு
ஆவஹத் பரமாம் கதிம் -கிஷ்கிந்தா -17-8-என்று மிருகமான வாலியோடு
கச்ச லோகா ந நுத்தமான் -ஆரண்ய -68-30- என்று பஷியான ஜடாயுவோடு
பாஷாண கௌதம வதூ வபுராப்தி ஹேது -என்று ஸ்தாவரமான அஹல்யா சிலையோடு
பிரதிபேதே ஸ்வ மாலையம் -சுந்தர -38-38- என்று ஜங்கமமான ஜெயந்தனோடு
புற்பா முதலாப் புல் எறும்பாதி ஓன்று இன்றியே -நற்பால் அயோத்தியில் வாழும்
சராசரம் முற்றவும் நற்பாலுக்கு உய்த்தனன் -திருவாய் -7-5-1-என்று த்ருண குல்ம வீருதாதிகளோடு
பிதாமஹபுரோகாம்ஸ் தான் –பால -15-26-என்று அடியிலே நம்மைப் பெற வேணும் என்று அபேஷித்த ப்ரஹ்மாதிகளோடு
வாசி அற -ப்ரஹ்மாதி பிபீலீகாந்தமான  சர்வ வச்துக்களுக்குமாம்
இவர்களுக்கு செய்து அருளுவது என் என்னில்
1- ததாமி –
த்யாகமும் அல்ல -ஔ தார்யமும் அல்ல -உபகாரமும் அல்ல -தானமாகவே பண்ணுவேன் –
த்யாகமாவது -கீர்த்தி முத்திச்ய யோகயே  யோக்ய  சமர்ப்பணம் -என்று பிறர் அபேஷித்ததை கீர்த்தி பலமாக பசையறக் கொடுக்கை
ஔ தார்யமாவது -சர்வ விஷய விதாரணம் ஔ தார்யம் -என்று விஷய வைஷம்யம் பாராதே முலைக் கடுப்பு தீரச் சுரக்குமா போலே தன் பேறாகக் கொடுக்கை
உபகாரமாவது -பிரத்யுபகாரதியா பந்து க்ருதிருபகார -என்று பிரத்யுபகார பிரயோஜனமாக ஆசன்னருக்குக் கொடுக்கை –
அத்ருஷ்ட முத்திச்ய யோகயே யோக்ய சமர்ப்பணம் தானம் -என்று விலஷண விஷயத்தில் விலஷண பதார்த்தங்களை அத்ருஷ்ட பலமாகக் கொடுக்கை
2- ததாமி –
மோஷயிஷ்யாமி போலே -தாஸ்யாமி-என்று கால விளம்பனம் பண்ணோம் -வரும்கால பிரயோகம் செய்ய மாட்டேன்
3- ததாமி -கொடுக்கிறேன் –
தமேவம் வித்வான் அம்ருத இஹ   பவதி -போலே -உபாசன ப்ராரம்பே மோஷ ப்ராரம்ப -என்று அவன் நம்மை நோக்கிக் கிளம்பின போதே நாமும் உபக்ரமித்தோம்
இது யாவதாத்மா பாவியாகக் கடவது
ப்ராரப்தோ ஸ்பரிசமாப் தஸ்ச வர்த்தமான -தொடங்கியதாய்முடியாமல் இருப்பது ங்கள் காலம் -இ றே-
4- பிரபன்னாய ததாமி –
நியாச மேஷாம் தபஸா மதிரிக்தமா ஹூ -என்றும்
தேஷாம் து தபஸாம் நியாச மதிரிக்தம் தபஸ்ருதம் -என்றும் –
இதர உபாயங்களில் பிரபத்தி விலஷணை யானால் போலே –
நார் ஹந்தி சரணஸ் தஸ்ய கலாம் கோடிதமீமபி -என்று அல்லாத அதிகாரிகளில் ப்ரபன்ன அதிகாரி விலஷணனாய் இ றே இருப்பது –
இவ்விலஷண அதிகாரியைக் கண்டால் தானம் பண்ணாது இருக்கப் போமோ –
அது தான் பாஷிகமோ -நியமம் உண்டோ -என்னில்
1- ஏதத் வ்ரதம் மம-
இது நமக்கு நியத அநு ஷ்டேயம்-
2-ஏதத் -பிரபன்னனுக்குப் பண்ணுகிற அபய பிரதானம்  -அநு பல நீயஸ் ஸ-என்று ஏறிட்டுக் கொண்டால்
முடியும் அளவும் விடாதே நடக்குமது இ றே வ்ரதம் ஆகிறது
ந து பிரதிஜ்ஞாம் சம்ஸ்ருத்ய ப்ராஹ்மணேப்யோ விசேஷத -ஆரண்ய -10-19-என்று அடியிலே சொன்னோமே
3-ஏதத் வ்ரதம் –
பரித்ராணாய சாதூநாம் –சம்பவாமி –ஸ்ரீ கீதை -4-8-என்றும்
சரீரக்ர ஹணம் வ்யாபின் தர்மத் ராணாய கேவலம் – ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-1-50-என்றும்
பொழில் ஏழும் காவல் பூண்ட -திரு நெடும் -10-என்றும்
காக்கும் இயல்விணன் -திருவாய் -2-2-9- என்றும்
இது நமக்கு சத்தா பிரயுக்தம் –
இது அனுஷ்டேயம் ஆருக்கு என்ன
1- மம-
அர்த்திதோ மா நுஷே லோகே -அயோத்ய -1-7-என்றும்
வேண்டித் தேவர் இரக்க வந்து பிறந்ததும் -திருவாய் -6-4-5- என்றும் பராபேஷையாய் அதுக்கு இட்டுப் பிறந்த நமக்கு –
2- மம –
ஸ்ரஷ்டாவான ப்ரஹ்மாவுக்கும் பணி அல்ல -சம்ஹர்த்தாவான ருத்ரனுக்கும் பணி யல்ல
நஹி பாலன சாமர்த்யம் ருதே  சர்வேஸ்வராத்ஹரே -ஸ்ரீ விஷ்ணு புறா -1-22-21- என்றும்
ரஷார்த்தம் சர்வ லோகா நாம் விஷ்ணுத்வம் உபஜக் மிவான் -உத்தர -104-9-என்றும்
ரஷணை நமக்கே பணி என்கிறார் –
3- மமைதத் வ்ரதம் –
நம் பக்கல் பரிவாலே விலக்குகையும் உனக்குப் பணி யானால் போலே ஆ ஸ்ரீ தா ரஷணமும்  நமக்குத் தொழில் காணும்
4- ஏதத் வ்ரதம் மம –
சதா மேத்த கர்ஹிதம் -18-3-போலே சத்தா பிரயிக்தத்துக்கு பிரயோஜனம் இல்லை
செய்யாத போது கபோத வானர விச்வாமித்ராதிகள் இருந்து எங்கள் குழுவினில் புகுதல் ஒட்டோம் என்று கதவை அடைப்பார்கள்-
அது செய்யாதே சாது கோட்டியுள் கொள்ளப் படுகிறதே பிரயோஜனமாக இது நமக்கு அனுஷ்டேயம் என்கிறார்
5-ஏதத் வ்ரதம் மம –
இது நமக்கு அனுஷ்டேயம் -இத்தத் தலைக் கட்டித் தாரீர் என்று மஹா ராஜரை இரக்கிறார்-
இப்படி பெருமாள் மஹா ராஜரைப் பார்த்து அபய பிரதானம் பண்ணி ஆ ஸ்ரீ தனான விபீஷண ரஷணம் பண்ண வேணும் என்று
இந்த ஸ்லோகத்தில் தாத்பர்யார்த்தம் அருளிச் செய்தார் ஆயிற்று –

————————————————

ஸக்ருதே3வ ப்ரபந்நாய தவாஸ்மீதி ச யாசதே|

அப4யம் ஸர்வ பூ4தேப்யோ த3தா3ம்யேதத்3 வ்ரதம் மம ||

பொழிப்புரை:
ஒரு முறையே ப்ரபத்தி பண்ணினவன் பொருட்டும்,  உனக்கு (அடியேனாய்) ஆகிறேன் என்று யாசிக்கிறவன் பொருட்டும்
எல்லா பிராணிகளிடத்திலிருந்தும்  பயமின்மையைப் பண்ணிக்கொடுக்கிறேன். இது எனக்குவிடமுடியாத ஸங்கல்பம்.

விபீ4ஷணன் ஶரணாக3திக்கு வந்த ஸமயம், ஸுக்3ரீவன் அந்த ஶரணாக3தியை ஏற்கக்கூடாது என்று பேசி வந்த நிலையில்,
பெருமாள் தன் தன்மைக்குத் தகுந்தபடி ஶரணாக3திரக்ஷண ப்ரதிஜ்ஞையைச் செய்தருளுகிறார்.
‘நண்பனின் பா4வத்தோடு வந்த இவனை (விபீ4ஷணனை) தோஷமிருந்தாலும் கைவிடேன்’
[மித்ர பா4வேந ஸம்ப்ராப்தம் ந த்யஜேயம் கத2ஞ்சந । தோ3ஷோ யத்3யபி தஸ்ய ஸ்யாத் ஸதாமேத3தக3ர்ஹிதம்।। யுத்.கா. 18-3 ]
என்று முன்னம் தன் தன்மையைத் தெரிவித்தார். இங்கு அதைத் தொடர்ந்து, அத்தன்மைக்கேற்ற
பிரதிஜ்ஞை செய்வதால், இவ்விரண்டு ஶ்லோகங்களும் ராம சரம ஶ்லோகங்கள் எனப்படுகின்றன.

ஸஹஸா (சடக்கென) என்கிற ஶப்3த3த்துக்கு
‘ஸக்ருதேவ’ என்கிற ஶப்3த3ம் வருகையாலே, ஸக்ருதேவ ப்ரபந்நாய என்பதற்கு, ஒரு தரம் ஶரணம் புகுந்தவனுக்கு,
அல்லது சடக்கென ஶரணம் புகுந்தவனுக்கு என்று இருவிதமாகவும் பொருள் கொள்ளலாம்.
தனது அயோக்யதையை எண்ணித் தயங்கி நிற்காமல், ஸ்வாமியினுடைய குணங்களையே முன்வைத்து
சடக்கென ஶரணம் புகுதல் என்பது கூரத்தாழ்வான் நிர்வாஹம்.
ஒரு தரம் என்று பொருள் கொண்டால், அதற்கு எம்பார் என்னும் ஆசாரியர் விளக்கம் கூறுகிறார்.
இதுவரை ஸம்ஸார ஸாக3ரத்தில் மூழ்கியிருந்தவன் ஶரணாக3தி செய்த பிறகு முடிவிலாக்காலம்
ப4க3வத3நுப4வமாகிற ப2லத்தைப் பெறப்போகிறான் என்பதாலே, ஆயுளுள்ளவரை பலமுறை ஶரணம் புகுந்தாலும்,
முதல்முறை ஶரணாக3தி செய்தவுடன் ப4க3வத3நுப4வம் பெறுவதாலே ஒரு தரம் என்று பொருள் கொள்வதில் குறையில்லை.
அடுத்து, கீழ்ச்சொன்ன இரு பொருட்களையும் ஒருசேர அநுபவிக்க பராஶர பட்டரின் நிர்வாஹம் காணலாம்.
ஒரு தடவை என்பது ஸர்வேஶ்வரன் இவனை ஸ்வீகரிப்பதற்கு ஒரு முறையே போதுமானது என்பதைக் காட்டுகிறது.
எவ்வாறு த்வயத்தை ஆயுளுள்ளவரை அதன் இனிமையின் பொருட்டு ப்ரபந்நர்கள் பலமுறை அநுஸந்தா4நம் செய்கிறார்களோ
அதுபோலே இங்கேயும், ஒருதரம் ப்ரபத்தி செய்தால் போதாது என்கிற நினைவாலே யல்லாமல்
இனிமை கருதிப் பலமுறை செய்யலாம் என்றும் நிர்வாஹம் செய்யலாம்.

விபீ4ஷணன் ஶரணாக3திக்கு முன்பாக, இராமபிரான் அருகே இருந்த அநுமன், ஜாம்ப4வான், ஸுக்3ரீவன், லக்ஷ்மணன்
முதலானோர் அவரவர் உள்ளத்தில் நினைத்திருந்ததை இராமபிரானிடம் தெரிவித்தனர்.
அவர் ஒவ்வொருக்கும் தக்கவாறு ஸமாதா4நம் சொல்கிறார் இராமபிரான்.

‘அவன் ஶரணமடைந்தது தாழ்ந்த பலனைக் கருதியன்றோ? அரசை வேண்டி புத்தி பூர்வமாகவே இங்கு வந்தான்’
[ராஜ்யம் ப்ராத்த2யமாநஶ்ச பு3த்3தி4பூர்வமிஹாக3த: யுத்.கா. 17-65] என்று அநுமன் சொன்னான்.

இதற்கு ஸமாதா4நமாக இராமன் சொன்னவை.

1) உனக்கேயாவேன் (தவாஸ்மீதி ச யாசதே)
என்னைத் தவிர வேறு பலனைக் கருதாதவனாகவே வந்தான் என்கிறார்.
தூதனைக் கொல்லலாகாது என்று எடுத்துக்கூறித் தன்னை அன்று ராவணன் ஸபையிலே காத்துக்கொடுத்த
விபீ4ஷணனுக்குக் கைம்மாறாக ராஜ்யத்தைக் கொடுக்கவேண்டும் என்ற கருத்திலே
‘ராஜ்யத்தை வேண்டி வந்தான்’ என்று அநுமன் சொன்னானேவொழிய, விபீ4ஷணன் தன் வாயாலே ராஜ்யம் வேண்டும் என்று சொன்னானோ ?
‘உன்னாலல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன்’ [திருவாய் 5-8-3] என்று நம் ஶடகோபன் சொன்னாற்போலே
‘பெண்டு பிள்ளைகளை விட்டு’ [த்யக்த்வா புத்ராம்ஶ்ச தா3ராம்ஶ்ச; யுத்.கா.17-14 ] என்றும்,
‘என்னால் லங்கையும், செல்வங்களும், நண்பர்களும் விடப்பட்டனர். என் உயிரும் அரசும் செல்வமும் தேவரீரிடத்திலேயே உள்ளது’
[பரித்யக்தா மயா லங்கா மித்ராணி ச த4நாநி ச । ப4வத் க3தம் மே ராஜ்யஞ்ச ஜீவிதஞ்ச ஸுகா2நி வை।। யுத். கா. 19-5] என்றும்
மற்ற பலன்கள் அனைத்தையும் விட்டு,
‘சேலேய் கண்ணியரும் பெருஞ்செல்வமும் நன்மக்களும் மேலாத்தாய் தந்தையும்’ [திருவாய் 5-1-8]ஆகிய
எல்லாம் இராம்பிரானே என்று நினைத்து வந்தவனன்றோ விபீ4ஷணன் என்கிறார்.

2) ‘உந்தன்னோடு உற்றோமேயாவோம் உனக்கேநாம் ஆட்செய்வோம்’ [திருப்பாவை 29] என்று கைங்கர்யத்தையன்றி வேறு பலனை அறியாதவனாய் வந்தான்.

3) உனக்கேயாவேன் என்று சொல்லி வந்தது, ‘எனக்காக ஆகேன், ராவணனுக்கும் ஆகேன்’ என்று பொருள்படும்படி, ஸ்வாதந்த்ரியமும், பிறருக்கு பாரதந்த்ரியமும் இல்லாமல், எனக்குப் பரதந்திரனாயிருப்பதை மட்டுமே நினைத்து வந்தவன்.

4) விபீ4ஷணன் உனக்கேயாவேன் என்றான். அதற்கு நாமும், ‘போகம் நீ எய்திப் பின்னும்  நம்மிடைக்கே போதுவாய்’ [பெரிய திருமொழி 5-8-5] என்றும், ‘இலங்கை முடிசூடும் அரசும், அடிசூடும் அரசும் உனக்கே ஆகக்கடவது’ என்போம்.

5) ஆத்மாவிடம் ஶேஷத்வம் இயற்கையாகவே உள்ளது. ஆத்மாவிடம் உடைமையாயிருக்கும் தன்மையும் இயற்கையிலே உள்ளது. இப்படி ஆத்மஞாநம் வந்த அளவிலே ஶரணாக3திக்குப் பாத்திரமானவன்.

6) உபாயமாக மட்டும் என்னை வரித்தது மட்டுமின்றி, பரமப2லமாகிற கைங்கர்யத்தையும் சேர்த்து அபேக்ஷித்தான்.

7) ‘நாலுவகைப்பட்ட ஜனங்கள் என்னிடம் பக்தி செய்கிறார்கள்’ [சதுர்விதா4 ப4ஜந்தே மாம் ஜநா: கீதை 7-16] என்கிறபடி, நாலு ப2லத்துக்கும்  உபாயமான என்னைப் பற்றும்போது, உபேயங்களில் மற்ற மூன்றையும் விரும்பாமல், பரம புருஷார்த்தமான மோக்ஷத்தையன்றோ விரும்புகிறான்.

8) ரிஷிகளைப்போலே ஶரீர ரக்ஷணத்திற்காக மட்டும் [பரிபாலய நோ ராஜந் வத்4யமாநாந் நிஶாசரை: ஆர.கா. 6-19] என்று கேட்காமல், ‘மூன்று உலகும் சுற்றிவிட்டுக் காப்பார் வேறு எவருமிலர் என்று அறிந்து என்னிடம் ஶரண் புகுந்த காகாஸுரன்’ [த்ரீன் லோகான் ஸம்பரிக்ரம்ய தமேவ ஶ்ரணம் க3த: ஸு.கா. 38-34 ] போலன்றியும் ஸ்வரூபத்துக்குத் தக்கப2லனான என்னையன்றோ ஶரண் புகுந்தது?

9) ‘தவாஸ்மீதி ச’ என்னுமிடத்தில், ‘ச-காரம்’ இருப்பதால், பிராட்டியையும் சேர்த்து மிதுன விஷயத்திலேயே கைங்கர்ய ப்ரார்த்தனை இருக்கிறது என்கிறார்.

10) ‘உங்களைப் போலே மரத்துக்கு மரம் தாவும் குரங்கு ஜாதியில் இல்லாமல், வேதமறிந்த ப்ராம்மணனாக அல்லவோ இருக்கிறான்’.
‘ஶ்ரத்தை எனப்படும் பிராட்டியின் சேர்த்தியால் பெருமான் தேவனாகிறான்’ [ஶ்ரத்3த4யா தே3வோ தே,வத்மஶ்நுதே; யஜுர். காடகம் 3-3-9-12 ],
‘ஜகந்மாதா என்றும் இருப்பவள்; பிரானை ஒருகணமும் பிரியாள்’ [நித்யைவேஷா அநபாயிநீ; வி.புரா. 1-8-17] என்றபடி
சகாரத்துக்குள்ளே பிராட்டியின் ஸம்பந்தமும் உண்டு என்று அறிந்து சொன்னான் என்றும் கொள்ளலாம்.

இவ்வளவு பக்ஷபாதம் அவனிடமிருந்தால் அவனுக்கு என்ன செய்யப் போகிறீர்? எனில்,
‘அப4யம் அளிக்கப் போகிறேன்’ (அப4யம் த3தா3மி) என்கிறார்.
அதற்குப்பின் அவன் ப4யமற்றவனாகிறான் [அத2 ஸோப4யங்க3தோ ப4வதி; தைத். ஆ.7 ] ந-ப4யம் என்பது அப4யம் என்று வ்யுத்பத்தி சொல்லியிருப்பதால்,
‘நஞ்’ என்கிற உபஸர்க3த்துக்கு வேறுபாடு, இல்லாமை, விரோதி4 என்கிற மூன்றுவிதமான பொருட்கள் சொல்லப்பட்டுள்ளன.
1. ப4யத்தினின்றும் வேறுபட்ட மங்களங்களைக் கொடுப்பேன்.
2. ப4யமே இல்லாமையாகிற ப4யமின்மையைக் கொடுப்பேன்.
3. விரோதி4களால் எதிர்காலத்தில் ஏற்படும் ஆப4த்தின் நினைவே நிகழ்காலத்தில் ப4யமாக இருப்பதால்,
எதிரிகளால் செய்யப்படும் உபகாரத்தினால் உண்டாகும் த்ருப்தியாக ஆகும்படி செய்வேன்.
அதாவது, இனி வரும் காலமெல்லாம் ஒரு துன்பம் வராதபடி பண்ணுவேன் என்று கொள்ளலாம்.

யாரால் வரும் ப4யத்தைப் போக்குவது? எனில்,
எல்லா பூ4தங்களினின்றும் (ஸர்வ பூ4தேப்4ய:)
ப4யமளிப்பது எதுவாயினும், வரக்கூடிய ப4யத்தைப் போக்குவேன்.
அசேதநங்களோடு தேவர், விலங்கு, மநுஷ்யர், ஸ்தா2வரம் முதலான நான்கு வகை பூ4தங்களினின்றும் வரும் துன்பங்களைப் போக்குவேன்.
பஞ்ச பூ4தங்களாலான தே3ஹத்தால், பஞ்ச பூ4தங்களால் போஷிக்கப்படுகிற இந்திரியங்களால் வரும் துன்பங்களைப் போக்குவேன்.

இதுவரை பூ4தேப்4ய: என்பதை ஐந்தாம் வேற்றுமையாகக் கொண்டு பொருள் சொல்லப்பட்டது.
இதேபோல், பூ4தேப்4ய: என்பதை நான்காம் வேற்றுமையாகக் கொண்டால், வேறு விதமாகவும் பொருள் சொல்லலாம்.

அப4யம் உனக்கு ஒருவனுக்கு மட்டுமின்றி உன்னுடன் வந்த நால்வருக்கும்
[சதுர்பி4ஸ் ஸஹ ராக்ஷஸை: யுத்.கா. 17-5] என்று ப3ஹுவசனத்தில் பொருள் கொள்ளலாம்.
மேலும், ஶரணாக3தன் மட்டுமின்றி, பக்தி நிஷ்டர், ஆசார்ய நிஷ்டர் மற்றும் ப்ரஹ்ம ஞாநிகள் என்று
அனைவருக்கும் என்றும் ப3ஹுவசனத்தில் பொருள் கொள்ளலாம்.
‘புற்பாமுதலாப் புல்லெறும்பாதி ஒன்றின்றியே நற்பாலயோத்தியில் வாழும் சராசரம் முற்றவும் நற்பாலுக்குய்த்தவன்’ [திருவாய் 7-5-1] என்று

———————————————————————————————————
ஸ்ரீ சீதா ராம ஜெயம் .
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்

ஸ்ரீ காயத்ரி ராமாயணம்–ஸ்ரீ இராமாயண ரஹஸ்யங்கள்–

November 24, 2023

ஸ்ரீ திருமலை நம்பி தனியன் –
பிதா மஹஸ் யாபி பிதா மஹாய ப்ராசேத–சாதேச பலப்ரதாய
ஸ்ரீ பாஷ்கர உத்தம தேசிகாய ஸ்ரீ சைல பூர்ணாய நமோ நமஸ்து —

ஸ்ரீ வைதேஹீ ஸஹிதம் ஸூரத்ரும -தலே ஹைமே மஹா மாண்டபே
மத்யே புஷ்ப்பக மாசநே மணி மயே வீராசநே ஸம்ஸ்திதம்
அக்ரே வாசயதி பிரபஞ்சன ஸூதே தத்வம் முனிப்ய பரம்
வ்யாக்யாந்தம் பராதிபி பரிவ்ருதம் ராமம் பஜே ஸ்யாமளம்

வீர ஆசனத்தில் ஸ்ரீ பெருமாள் -ஸ்ரீ வாயு குமாரர் ஸ்ரீ ராமாயணம் சாதித்து அருள –
ஸ்ரீ பெருமாள் வியாக்யானம் சாதித்து அருளி -இதுவே நம் பூர்வர்கள் ஸ்ரீ குரு பரம்பரை மூலம் பெற்ற நிதி

———–

நாடிய பொருள் கை கூடும் ஞானமும் புகழும் உண்டாம்
வீடியல் வழியாதாக்கும் வேரி யங் கமலை நோக்கும்
நீடிய அரக்கர் சேதன நீறு பட்டுழிய வாகை
சூடிய சிலை இராமன் தோள் வலி கூறுவோர்க்கு

நன்மையையும் செல்வமும் நாளும் நல்குமே
திண்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
சென்மமும் மரணமும் இன்றித் தீருமே
இம்மையே ராம வென்ற இரண்டு எழுத்தினால்

ஆபதாம் அபஹர்தாரம் தாதாரம் ஸர்வ ஸம்பதாம்
லோகாபிராமம் ஸ்ரீ ராமம் பூயோ பூயோ நமாம்யஹம்

———–

ஸ்ரீ கூஜந்தம் ராம ராமேதி மதுரம் மதுராக்ஷரம்
ஆருஹ்ய கவிதா சாகாம் வந்தே வால்மீகி கோகிலம்

ஸ்ரீ வால்மீகேர் முனிஸிம்ஹஸ்ய கவிதா வனசாரிண:
ச்ருண்வன் ராமகதா நாதம் கோ ந யாதி பராங்கதிம்

ய: பிபன் ஸததம் ராம சரிதாம்ருத ஸாகரம்
அத்ருப்தஸ்தம் முனிம் வந்தே ப்ராசேதஸ மகல்மஷம்

கோஷ்பதீக்ருத வாராசிம் மசகீக்ருத ராக்ஷஸம்
ஸ்ரீ ராமாயண மஹாமாலா ரத்னம் வந்தே(அ) நிலாத்மஜம்

அஞ்ஜனா நந்தனம் வீரம் ஜானகீசோக நாசனம்
கபீச மக்ஷஹந்தாரம் வந்தே லங்கா பயங்கரம்

உல்லங்க்ய ஸிந்தோ: ஸலிலம் ய: சோகவஹ்னிம் ஜனகாத்மஜாயா:
ஆதாய தேனைவ ததாஹ லங்காம் நமாமி தம் ப்ராஞ்ஜலி ராஞ்சனேயம்8

ஆஞ்ஜனேய மதிபாடலாலனம் காஞ்சனாத்ரி கமனீய விக்ரஹம்
பாரிஜாத தருமூல வாஸினம் பாவயாமி பவமான நந்தனம்

யத்ர யத்ர ரகுநாத கீர்த்தனம் தத்ர தத்ர க்ருத மஸ்தகாஞ்ஜலிம்
பாஷ்பவாரி பரிபூர்ணலோசனம் மாருதிம் நமத ராக்ஷஸாந்தகம்

மனோஜவம் மாருத துல்ய வேகம் ஜிதேந்த்ரியம் புத்திமதாம் வரிஷ்டம்
வாதாத்மஜம் வாநரயூத முக்யம் ஸ்ரீராமதூதம் சிரஸா நமாமி

புத்திர்பலம் யசோ தைர்யம் நிர்ப்பயத்வ மரோகதா
அஜாட்யம் வாக்படுத்வஞ்ச ஹனூமத் ஸ்மரணாத் பவேத்

க்யாத: ஸ்ரீராமதூத: பவனதனுபவ: பிங்கலாக்ஷ: சிகாவான்
ஸீதா சோகாபஹாரீ தசமுக விஜயீ லக்ஷ்மண: ப்ராணதாதா
ஆநேதா பேஷஜாத்ரேர் லவணஜலநிதேர் லங்கனே தீக்ஷிதோ ய:
வீர: ஸ்ரீமான் ஹனூமான் மம மனஸி வஸன் கார்யஸித்திம் தநோது

தூவரிக்ருத ஸீதார்த்தி: ப்ரகடீக்ருத ராம வைபவ ஸ்பூர்த்தி:
தாரித தசமுக கீர்த்தி: புரதோ மம பாது ஹனுமதோ மூர்த்தி:

ஸ்ரீ வால்மீகி கிரிஸம்பூதா ராமஸாகர காமினீ
புனாது புவனம் புண்யா ராமாயண மஹாநதீ

ஸ்ரீ வேதவேத்யே பரே பும்ஸி ஜாதே தசரதாத்மஜே
வேத: ப்ரசேதஸா தாஸீத் ஸாக்ஷாத் ராமாயணாத்மனா

வைதேஹீ ஸஹிதம் ஸுரத்ருமதலே ஹைமே மஹாமண்டபே
மத்த்யே புஷ்பகமாஸனே மணிமயே வீராஸனே ஸுஸ்திதம்
அக்ரே வாசயதி ப்ரபஞ்ஜன ஸுதே தத்வம் முனிப்ப்ய: பரம்
வ்யாக்க்யாந்தம் பரதாதிபி: பரிவ்ருதம் ராமம் பஜே ச்யாமளம்

நமோ(அ)ஸ்து ராமாய ஸலக்ஷ்மணாய
தேவ்யை ச தஸ்யை ஜனகாத்மஜாயை
நமோ(அ)ஸ்து ருத்ரேந்த்ர யமாநிலேப்ப்யோ
நமோ(அ)ஸ்து சந்த்ரார்க்க மருத்கணேப்ப்ய:

————

ஸுமுகஸ்ச ஏகதந்தஸ்ச கபிலோ கஜகர்ணக: |
லம்போதரஸ்ச விகட: விக்னராஜோ விநாயக: ||
தூம்ரகேது: கணாத்யக்ஷ: பாலசந்த்ரோ கஜானன: |
வக்ரதுண்ட: சூர்ப்பகர்ண: ஹேரம்ப: ஸ்கந்தபூர்வஜ: ||

————

வேத3 வேத்3யே பரே பும்ஸி ஜாதே த3ஸரதாத்மஜே |
வேத3 : ப்ராசேதஸா தா3ஸீத்3 ஸாக்ஷாத்3 ராமயணாத்மநா ||

வேதத்தினால் சூட்டப்படும் பரம்பொருள் பூமியிலே ஸ்ரீ ராமனாக அவதாரம் பண்ண உடனே,
வேதம், ஸ்ரீ வால்மீகி முனிவர் வழியாக ஸ்ரீ ராமாயணமாக வெளிவந்துவிட்டது

———

ஸ்ரீ ராமம் ரகு குல திலகம்
சிவ தனு சாக்ரிஹத ஸீதா ஹஸ்த கரம்
அங்குல்யா பரண ஸோபிதம்
சூடாமணி தர்சன கரம்
ஆஞ்சநேய ஆஸ்ரயம்
வைதேஹி மநோ ஹரம்
வானர ஸைன்ய ஸேவிதம்
சர்வ மங்கள கார்ய அநுகூலம்
ஸததம் ஸ்ரீ ராமசந்த்ர பாலயமாம்

—————-

ஸ்ரீ காயத்ரி ராமாயணம்

ஸ்ரீ காயத்ரி -சந்தஸாம் மாதா -இதிஹாச ஸ்ரேஷிடம் ஸ்ரீ ராமாயணம் –

ஒவ்வொரு ஆயிரமாகப் பிரித்து முதல் ஸ்லோகமாக எடுத்து வந்த ஸ்ரீ ராமாயணம் ஸ்ரீ காயத்ரி ராமாயணம்

இந்த ஸ்ரீ காயத்ரி ராமாயணத்தை படிப்பதால் ஸ்ரீ காயத்ரி ஜபம் செய்த புண்யமும்
ஸ்ரீ ராமாயணம் முழுவதும் படித்த பலனையும் பெறலாம்

——-

தபஸ்ஸ்வாத்யாயநிரதம் தபஸ்வீ வாக்விதாம் வரம்
நாரதம் ப்ரிபப்ரச்ச வால்மீகிர் முநிபுங்கவம் –-1-

வேத வேதாங்காதி ஸகல வித்யா பாராங்கதராய்
விரத நியம ஜபாதி அநுஷ்டான ஸம்பன்னராய்
வேதார்த்த வித்துக்களில் சிறந்தவராய்
முனி ஸ்ரேஷ்டரான நாரதரைக் குறித்து
உயர்ந்த தவமுடைய வால்மீகி மஹரிஷி ப்ரஸ்னம் பண்ணினார்

நாரதோ அஹம் மந ப்ராப்த -த்வத் தர்சன குதூஹலாத் பிரபவோ பகவத் பக்தா மாத்ருஸாம் ஸததம் த்விஜ
நாரதர் என்று சொல்லப்படும் அடியேன் உம்மைக் காணும் ஆசையினால் வந்தடைந்தேன்
ப்ராஹ்மண உத்தம -என்னைப்போல் உள்ளவர்களுக்கு பகவத் பக்தர்கள் எப்பொழுதும் பிரபுக்கள்

தும்புரு நாரதர் புகுந்தனர்

பகவத் பாகவத ஸந்தர்சன ப்ரணாம ஸல்லாபமே தபஸ்

தத் வித்தி ப்ரணிபாதேந பரி ப்ரஸ்நேந ஸேவயா

தபஸ்வாத்யாய நிரதம் –என்று காயிக ஸூத்தியையும்
வாக்விதாம் வரம் என்று வாக் ஸூத்தியையும்
முனி புங்கவம் என்று மனஸ் ஸூத்தியையும் சொல்லிற்று

தபோ நிரதம்’ – தபஸில் ஈடுபட்டவராய் இருக்க வேண்டும்.
‘ஸ்வாத்யாய நிரதம்’ – தனது படிப்பில் திரும்பத் திரும்ப மனசை செலுத்துவதில் விருப்பம் உள்ளவரை இருக்க வேண்டும்.
‘வாக் விதாம் வரம்’ – வாக்கிற்கு என்ன பிரயோஜனம்? பகவானை பற்றி பேசிக் கொண்டிருப்பது. அதைச் செய்து கொண்டிருப்பவர்.
‘முனி புங்கவம்’ – மௌனமாய் இருக்ககூடிய முனி புங்கவருக்குள் ஸ்ரேஷ்ட்டர்.

“த‌ப‌சு, வேத‌வேதாந்த‌ங்க‌ள் இவைக‌ளைப் பூர‌ண‌மாக‌ அடைந்த‌வ‌ரும், உப‌தேசிப்ப‌வ‌ர்க‌ளுக்குள் மேலான‌வ‌ரும்,
முனி ஶ்ரேஷ்ட‌ருமான‌ நார‌த‌ ம‌ஹ‌ரிஷியை, த‌வ‌த்தோடுகூடிய‌ வான்மீகி முனிவ‌ர் தெண்ட‌ம் ச‌ம‌ர்ப்பித்து வினாவினார்.”

1) த‌போநிர‌த‌ம் :– த‌வ‌த்தைப் பூர‌ண‌மாக‌ அடைந்த‌வ‌ர் என்ற‌தினால் அவ‌ர் ச‌ர்வ‌ச‌க்தி வாய்ந்த‌வ‌ர் என்ப‌து ஸூச‌க‌ம்.
“ய‌த்துஸ்த‌ர‌ம் ய‌த்துராப‌ம் ய‌த்துர்க‌ம் ய‌ச்ச‌துஷ்க‌ர‌ம்|
தத் ஸ‌ர்வ‌ம் த‌ப‌ஸாஸாத்ய‌ம் த‌போஹி துர‌திக்ர‌மம் ||”
“எது க‌ட‌க்க‌முடியாததோ, எது பெற‌ முடியாததோ, எது செய்ய‌முடியாததோ அதெல்லாம் த‌வ‌த்தால் சாதிக்க‌முடியும்.
ஆகையால் த‌வ‌த்தை வெல்வ‌த‌ரிது.”
“வேண்டிய‌ வேண்டியாங் கெய்த‌லாற்செய்த‌வ‌ மீண்டு முய‌ல‌ப் ப‌டும்.
கூற்ற‌ங் குதித்த‌லும் கைகூடு நோற்ற‌லி னாற்ற‌ ற‌லைப்ப‌ட் ட‌வ‌ர்க்கு” (திருக்குற‌ள்) என்ற‌ ஆதார‌ங்க‌ள் நோக்க‌த்த‌க்க‌ன‌.

2) ஸ்வாத்யாய‌ நிர‌த‌ம்:– வேத‌வேதாந்த‌ங்க‌ளைப் பூர்ண‌மாக‌ அடைந்த‌வ‌ர், என்ற‌தினால்
நார‌த‌ர் சொல்வ‌தெல்லாம் த‌ரும‌த்தோடு பொருந்திய‌ வ‌ச‌ன‌ம் என்ப‌து ஸூச‌க‌ம்.

3) வாக்விதாம்வ‌ர‌ம் :– உப‌தேசிப்ப‌வ‌ர்க‌ளுக்குள் மேலான‌வ‌ர், என்ற‌தினால் சிற‌ந்த‌ போத‌னாச‌க்தி வாய்ந்த‌வ‌ரெனவும்,
வ்யாக‌ர‌ண‌ம் முத‌லான‌ ச‌க‌ல‌ சாஸ்திர‌ங்க‌ளையும் ந‌ன்றாக‌ அறிந்த‌வ‌ரென‌வும் பொருள்ப‌டும்.

4) முனி புங்க‌வ‌ம்:– முனிஶ்ரேஷ்ட‌ர் என்ற‌தினால் இந்திரிய‌ நிக்கிர‌க‌முள்ள‌வ‌ர் என்ப‌தும்,
ப‌க‌வ‌த்யான‌த்தோடு கூடிய‌வ‌ரென்ப‌தும், திரிகால‌ வ‌ர்த்த‌மான‌ங்க‌ளை அறிய‌க்கூடிய‌வ‌ரென்ப‌தும் , ஸ‌தா ஜ‌பப‌ரரென்ப‌தும் ஸூச‌க‌ம்.

5)நார‌த‌ம்:– நார‌த‌ ம‌ஹ‌ரிஷியை, என்ற‌தினால், நார‌ம் – ஜ்ஞான‌ம், அதைக் கொடுக்கக் கூடிய‌வ‌ர் என்ப‌தும்,
நார‌ம் – அஜ்ஞான‌ம், அதை நிவ‌ர்த்தி செய்ய‌க்கூடிய‌வ‌ ரென்ப‌தும், த்ரிலோக‌ ஸ‌ஞ்சாரியான‌ப‌டியால்,
மூன்று லோக‌த்திலுள்ள‌ வ‌ர்த்த‌மான‌ங்க‌ளை அறிப‌வ‌ரென்ப‌தும், பிர‌ம்ம‌ புத்திரரான‌ப‌டியால் உத்த‌ம‌ குல‌த்தைச் சேர்ந்த‌வ‌ரென்ப‌தும் ஸூசக‌ம்.

ஆக‌வே, இந்த‌ ஐந்து ப‌த‌ங்க‌ளினால், ஆசார்ய‌ன் பூர்ண‌மான‌ த‌ப‌ஸை யுடைய‌வ‌ராக‌வும்,
வேத‌வேதாந்த‌ங்க‌ளையும் வ்யாக‌ர‌ண‌ம் முத‌லான‌ ஸ‌க‌ல‌ ஶாஸ்திர‌ங்க‌ளையும் உண‌ர்ந்த‌வ‌ராக‌வும்,
ப‌க‌வ‌த் ப‌க்தியுட‌ன் அந‌வ‌ர‌த‌ ஜ‌பப‌ரராக‌வும் சிஷ்ய‌னுடைய‌ அஜ்ஞான‌த்தைப் போக்கி, ஜ்ஞான‌த்தைக் கொடுத்துப்
ப‌ர‌மாத்ம‌ ஸ்வ‌ரூப‌த்தை உப‌தேசிக்க‌வ‌ல்ல‌வ‌ராக‌வும், ஜிதேந்திரிய‌ராக‌வும், உத்த‌ம‌ குல‌த்த‌வ‌ராக‌வுமிருக்க‌வேணும்
எனறு ஆசார்ய‌ ல‌க்ஷ‌ண‌ம் சொல்ல‌ப்ப‌ட்ட‌தாயிற்று.

“குஶ‌ப்த‌ஸ் த்வ‌ந்த‌கார‌ஸ்யாத் ருகார‌ஸ்த‌ந் நிவ‌ர்த‌க‌:|
அந்த‌கார‌ நிரோதித்வாத் குருரித்ய‌பி தீய‌தே||”

“கு என்ப‌து அஜ்ஞான‌த்தையும், ரு என்ப‌து அத‌ன் நிவ‌ர்த்தியையும் சொல்லுகிற‌ ப‌டியால்
ம‌ன‌தின் க‌ண்ணுள்ள‌ அஜ்ஞான‌மாகிற‌ இருளை நீக்கி மெய்ஞ்ஞான‌மாகிற‌ பிர‌காச‌த்தைத் த‌ருவ‌தால் குரு வென‌ச் சாற்ற‌ப்ப‌டுகின்ற‌ன‌ர்.

குல‌ன‌ருள் தெய்வ‌ங்கொள்கை மேன்மை
க‌லைப‌யில் தெளிவு க‌ட்டுரை வ‌ண்மை
நில‌ம‌லை நிறைகோல் ம‌ல‌ர் நிக‌ர் மாட்சியும்
உல‌கிய‌ல‌றிவோ டுய‌ர்குண‌ மினைய‌வும்
அமைப‌வ‌ன் நூலுரையாசிரிய‌ன்னே.” என்ற‌ ந‌ன்னூல் இங்கு நோக்க‌த் த‌க்க‌து.

தப -என்று
பாபத்தைப் போக்கி ஊணை வாட்டி இந்திரியங்களை வசமாக்கிக் கொடுக்க வல்ல க்ருச்ரம் சந்த்ராயணம் முதலிய கர்மத்துக்கும்
யம நியம ஆஸன பிராணாயாம ப்ரத்யாஹார தாரண தியானங்களை அங்கங்களாக யுடைய ஸமாதி என்கிற யோகத்திற்கும்
வேதத்துக்கும்
பர ப்ரஹ்மத்திற்கும்
தபோ விசேஷமான ந்யாஸத்திற்கும் பெயர்

ஸ்வாத்யாயம் -என்று
வேதத்திற்கும் ஜெபத்திற்கும் பெயர்

வாக் என்று
வியாகரணம் சிஷை சந்தஸ் நிருத்தம் ஜ்யோதிஷம் கல்பம் என்ற ஆறு அங்கங்களும்
வித்யா சாமான்யத்திற்கும்
அந்த வந்த சமயத்துக்கு வேண்டும் அர்த்தங்களை போதிக்க வல்ல சப்தத்துக்கும்
ஸரஸ்வதிக்கும் பெயர்

முனி என்று
மனனம்-அதாவது த்யானம் பண்ணுகிறவர்களுக்குப் பெயர்

நார என்று
ப்ரஹ்மத்தையும்
அஞ்ஞானத்தையும் சொல்லும்

ஆக
தபஸ்வாத்யாய நிரதம் தபஸ்வி வாக் விதாம் வரம் நாரதம் — முனி புங்கவம்-என்கிற பதங்களினால்
ஆச்சார்யன்
கர்மயோக ஞானயோக பக்தி யோகங்களிலும் ப்ரபத்தியிலும் ஊற்றம் யுடையவனாய்
வேத வேதாங்களையும் அங்கங்களையும் நியாய மீமாம்ஸாதி ஸகல ஸாஸ்த்ரங்களையும் சம்ஸயம் விபர்யயம் அற உணர்ந்தவனாய்
அனவ்ரத ஜெப பரனாய்
ஸிஷ்யனுடைய சம்சயம் அறும் படி உபதேசிக்க வல்லனாய்
ப்ரஹ்ம வித் அக்ரேரராய்
அஞ்ஞானத்தைப் போக்கி ஞானத்தைக் கொடுத்து பரமாத்ம ஸ்வரூபத்தை உபதேசிக்க வல்லனாய்
ஜிதேந்த்ரியனாய்
ஸத் குல ப்ரஸூதனாய்
ஸ்ரவண மனன நிதித்யாஸன தத் பரனாய் இருக்க வேண்டும் என்று சொல்கிறது –

நாரதோ அஹம் மந ப்ராப்த -த்வத் தர்சன குதூஹலாத் பிரபவோ பகவத் பக்தா மாத்ருஸாம் ஸததம் த்விஜ
நாரதர் என்று சொல்லப்படும் அடியேன் உம்மைக் காணும் ஆசையினால் வந்தடைந்தேன்
ப்ராஹ்மண உத்தம -என்னைப்போல் உள்ளவர்களுக்கு பகவத் பக்தர்கள் எப்பொழுதும் பிரபுக்கள்

தும்புரு நாரதர் புகுந்தனர்

பகவத் பாகவத ஸந்தர்சன ப்ரணாம ஸல்லாபமே தபஸ்

தத் வித்தி ப்ரணிபாதேந பரி ப்ரஸ்நேந ஸேவயா

தபஸ்வாத்யாய நிரதம் –என்று காயிக ஸூத்தியையும்
வாக்விதாம் வரம் என்று வாக் ஸூத்தியையும்
முனி புங்கவம் என்று மனஸ் ஸூத்தியையும் சொல்லிற்று

——–

சிஷ்ய‌ ல‌க்ஷ‌ண‌ம்

1) த‌ப‌ஸ்வீ: – என்ற‌தினால் ப‌க‌வ‌த் ஸ்வ‌ரூப‌த்தை அறிய‌ ஆவ‌ல்கொண்டவ‌ரென்ப‌தும்,
ப‌ல‌ விர‌த‌ங்க‌ளை அனுஷ்டித்த‌வ‌ரென்ப‌தும், ஶ‌ம‌த‌மாதி ஸ‌ம்ப‌ந்த‌ங்க‌ளை அடைந்த‌வ‌ரென்ப‌தும்,
ஜீவ‌காருண்ய‌முடைய‌வ‌ரென்ப‌தும், க‌ள‌ங்க‌ம‌ற்ற‌ இருத‌ய‌முடைய‌வ‌ரென்ப‌தும் ஸூச‌க‌ம்.

“உற்ற‌நோய் நோன்ற‌லுயிர்க்குறுக‌ண் செய்யாமை
ய‌ற்றே த‌வ‌த்திற்குரு” (திருக்குற‌ள்)

2) ப‌ரிபப்ர‌ச்ச‌ – என்ற‌தினால் விதிவ‌துப‌ஸ‌ந்ந‌: என்ப‌து பொருள். அதாவ‌து,
உப‌தேச‌ம் பெற்றுக் கொள்ள‌, குருவைத் தேடிப்போய், த‌ண்ட‌ம் ஸ‌ம‌ர்ப்பித்து, விதி ப்ர‌கார‌ம் கேட்க‌வேண்டுமென்ப‌து

தத்வித்தி ப்ர‌ணிபாதேந‌ ப‌ரிப்ர‌ஶ்நேந‌ ஸேவ‌யா|
உப‌தேக்ஷ்ய‌ந்தி தே ஜ்ஞான‌ம் ஜ்ஞாநிந‌ஸ் தத்வ‌த‌ர்ஶிந‌: ||

“அந்த‌ ஆத்ம‌ ஜ்ஞான‌த்தை, குருவைத் தேடிப்போய், த‌ண்ட‌ம் ஸ‌ம‌ர்ப்பித்து, விதிப்ர‌கார‌மான‌ கேள்வியினாலும்,
ஶுஶ்ருக்ஷையினாலும் அறிந்துகொள்ள‌க் க‌ட‌வாய். தத்வ‌ம‌றிந்த‌ ப‌ண்டித‌ர்க‌ள் உன‌க்கு ஜ்ஞான‌த்தை போதிப்பார்க‌ள்.”
என்று அர்ஜுனனை நோக்கி அருளிச் செய்த‌ ஸ்ரீகிருஷ்ண‌ ப‌க‌வானுடைய‌ வ‌ச‌ன‌ம் இங்கு க‌வ‌னிக்க‌த் த‌க்க‌து.

ஆக‌வே, த‌ப‌ஸ்வீ, ப‌ரிப்ர‌ச்ச‌ என்ற‌ ப‌த‌ங்க‌ளினால் சிஷ்ய‌ ல‌க்ஷ‌ண‌ம் சொல்ல‌ப்ப‌ட்ட‌தாயிற்று.

ஸ‌த்புத்திஸ் ஸாது ஸேவீ ஸ‌முசித‌ ச‌ரித‌ஸ் தத்வ‌ போதாபிலாஷீ|
ஶுஶ்ருஷுஸ் த்ய‌க்த‌மாந‌: ப்ர‌ணி ப‌த‌ந‌ ப‌ர‌: ப்ர‌ஶ்ந‌ கால‌ ப்ர‌தீக்ஷ‌:||
ஶாந்தோ தாந்தோ ந‌ஸூயுஸ் ஸ‌ர‌ண‌முப‌க‌த‌ஸ் ஶாஸ்த்ர‌ விஶ்வாஸ‌ஶாலி|
ஶிஷ்ய‌:ப்ராப்த‌: ப‌ரீக்ஷாங் க்ருத‌வி த‌பிம‌த‌ம் தத்வ‌த‌ஸ் ஸிக்ஷ‌ணீய‌:

“ந‌ற்புத்தியுட‌ன் ஸாது ஸேவை உடைய‌வ‌னாகி, ந‌ன்ன‌ட‌த்தை உடைய‌வ‌னும், உண்மை ஞான‌த்தை அறிவ‌தில்
அபிலாஷை உடைய‌வ‌னும், ப‌ணிவிடைக்கார‌னும், மானாவ‌மான‌ மென்ப‌த‌ற்ற‌வ‌னும், ப்ர‌ஶ்ந‌ கால‌த்தை எதிர்பார்ப்ப‌வ‌னும்,
சாந்த‌னும், அஸூயை இல்லாத‌வ‌னும், ச‌ர‌ணாக‌தி ய‌டைந்த‌வ‌னும், சாஸ்திர‌ விஶ்வாச‌முடைய‌வ‌னுமே
சிஷ்ய‌னாக‌ அங்கீக‌ரிக்க‌த் த‌குந்த‌வ‌ன்” என்ப‌து நோக்க‌த் த‌க்க‌து.

தபஸ்வீ-என்று சிஷ்ய லக்ஷணம் சொல்கிறது
அதாவது
பரமாத்ம ஞான சாதனமான உயர்ந்த தபஸ்ஸையும்
வேதத்தில் கர்ம காண்டங்களை பரிசீலித்து ஸ்வர்க்காதி ஷூத்ர பலன்களில் வைராக்யம் யுடையவனாய்
மோக்ஷத்தில் அபிருசி யுடையவனாய்
ஜிதேந்த்ரியனாய்
சாந்தனாய் –இருக்க வேண்டும் என்று சொல்கிறது
இதனால் ஆச்சார்யாத் தைவ வித்யா விதி தாஸாதிஷ்டம் ப்ரபாத் –என்று
சதாச்சார்யன் இடத்தில் நின்றும் நியம பூர்வகமாகக் கற்ற வித்யையே மோக்ஷ உபயோகியாம் என்னுமது வெளியிடப்பட்டது-
ஆச்சார்யன் உபதேசம் அவரது ஆச்சார்யருக்கு ப்ரீதிக்கு உறுப்பாக என்று மேல் மேல் ஸ்ரீ லஷ்மீ நாதன் பர்யந்தம் போகுமே

வால்மீகி ப‌க‌வான் ப்ருகு வ‌ம்ச‌த்தில் அவ‌த‌ரித்த‌வ‌ர். இவ‌ர் (வ‌ல்மீக‌ம் = புற்று) புற்றிலிருந்து வெளி வ‌ந்ததினால்–வால்மீகி என்று பெய‌ர். இவ‌ர்க்கு “ப்ராசேத‌ஸ‌ர்” (அதாவ‌து வ‌ருண‌னுடைய‌ புத்திரர்) என்னும் பெய‌ருண்டு.

இவர் ஓர் இடத்தில் சரியாமல் உடகார்ந்து மெய் மறந்து தபஸ்ஸு பண்ணிக் கொண்டு இருக்கையில் இவர் மேல் புற்று மூடிப் போய் விட்டது
வருண தேவன் மழை பொழிந்து அப் புற்றைக் கரைத்து விட அங்கு நின்றும் புறப்பட்டார்
ஆகவே வால்மீகி புற்றில் நின்றும் வெளிப்பட வருணன் காரணமானதால் ப்ராசேதனர் -வருண புத்ரன் என்றும் செல்லப்படுகிறார்

——-

ஸ ஹத்வா ராக்ஷஸாந் ஸர்வான் யக்ஞக்நான் ரகு நந்தன:
ரிஷிபி: பூஜித: ஸம்யக் யதேந்த்ரோ விஜயீ புரா –2-

முன்பு தேவாஸூர யுத்தத்தில் அஸூரர்களை வெல்லும் போது இந்திரன் அஸூரர்களைக் கொன்றது போலே
அந்த சித்தாஸ்ரமத்தில் விச்வாமித்ரருடைய யாகத்தை அழிக்க வந்த அரக்கர்கள் அனைவரையும்
ஸ்ரீ ராகவன் கொன்று ருஷிகளினால் பூஜிக்கப் பட்டார்

———

விஸ்வாமித்ரஸ்து தர்மாத்மா ஸ்ருத்வா ஜனகபாஷித:
வத்ஸராம் தனு: பஸ்ய இதி ராகவம் ப்ரவீத் –3-

இந்த வில்லை ஒருவராலும் நாண் ஏற்ற முடியாது என்று ஜனக மஹாராஜர் மொழிந்தத்தைக் கேட்டு
தர்மாத்வாகிய விச்வாமித்ரர் இராகவனைப் பார்த்து குழந்தாய் ஸ்ரீ ராகவ அந்த வில்லை நீர் பாரும் என்று பணித்தார் –

——-

துஷ்டாவாஸ்ய ததா வம்ஸம் ப்ரவிஸ்ய ஸ விஸாம்புதே
ஸயநீயம் நரேந்த்ரஸ்ய ததாசாத்ய வ்யதிஷ்டத —4-

ஸூ மந்த்ரர் என்பவர் தசரத மஹா ராஜருடைய அரண்மனையில் நுழைந்து சயன க்ருஹத்தை அடைந்து நின்று
அப்பொழுது அந்த தசரத மஹாராஜருடைய வம்ஸா வழியைச் சொல்லி ஸ்துதித்தார்

———–

வனவாசம் ஹி ஸங்க்யாய வாஸாம்ஸ்யாபரணானி ச
பர்தார மனுகச் சந்த்யை சீதாயை ஸ்வ ஸுரோ ததௌ –-5-

இராகவனுடன் கூட வனவாஸம் போக நிச்சயித்துத் தன் பார்த்தாவைப் பின் சென்று போகிற சீதாப் பிராட்டியாருக்கு
மாமனாராகிய தசரத மஹா ராஜர் வஸ்திரங்களையும் ஆபரணங்களையும் கொடுத்தார்

——–

ராஜா ஸத்யம் ச தர்ம்ஸ்ச ராஜா குலவதாம் குலம்
ராஜா மாதா பிதா சைவ ராஜா ஹிதகரோ ந்ருணாம் –6-

உலகத்தில் சத்தியத்தையும் தர்மத்தையும் நடப்பிக்க வைப்பவன் அரசன்
நற் குலத்தில் பிறந்தவர்களுடைய குலாச்சாரத்தையும் நடப்பிக்க வல்லவன் அரசன்
ஜனங்களுக்குத் தாயும் தந்தையும் ஹிதம் செய்பவன் அரசனே என்று பரதன் சொல்லுகிறான்

—————-

நிரீக்ஷ்ய ஸ முஹூர்த்தம் து ததர்ஸ பரதோ குரும்
உடஜே ராமமாசீனம் ஜடா மண்டல தாரிணம் –7-

பரதன் சித்ர கூடத்தில் பர்ண சாலையில் ஜடையைச் சக்ராதாரமாகக் கட்டிக் கொண்டு வீற்று இருக்கும் ஸ்ரீ ராமனைப் பார்த்து
ஜடாதாரியாகிற இம் மஹாநுபாவன் யாராய் இருக்கலாம் -என்று சிறிது நேரம் நிதானித்துப் பார்த்துப் பின்பு
இவர் நம் குருவாகிய ராகவன் என்று அறிந்தார்

———

யதி: புத்தி: த்ருஷ்டும் அகஸ்த்யம் தம் மஹாமுனிம்
அத்யைவக மனே புத்திம் ரோசயஸ்வ மஹாயஸ: –8-

பெரும் புகழ் படைத்த ஸ்ரீ ராகவனே நீர் முனி ஸ்ரேஷ்டராகிய அகஸ்திய மஹ ரிஷியைப் பார்க்க விரும்பினீராகில்
இப்பொழுதே அவருடைய ஆஸ்ரமத்தைக் குறித்துச் செல்ல மனம் வையும் என்று ஸூ தீஷ்ணர் சொன்னார்

————-

பரதஸ் யார்யபுத்ரஸ்ய ஸ்வஸ்ரூணாம் மம ச ப்ரபோ
ம்ருக ரூபமிதம் வ்யக்தம் விஸ்மயம் ஜனயிஷ்யதி –-9-

ஓ ஸ்வாமீ அதி விசித்ரமாகிய இந்த மானான் உமக்கும் பரதனுக்கும் என் மாமிமார்களுக்கும் எனக்கும்
வெகு ஆச்சர்யத்தை உண்டு பண்ணுமாகையாலே இதைப் பிடித்துத் தாரும் என சீதாப்பிராட்டியார் வேண்டுகிறார்

————

கச்ச ஸீக்ரமிதோ ராம ஸுக்ரீவ.ந்தம் மஹா பலம்
வ்யஸ்ய.ந்தம் குரு க்ஷிப்ரம் இதோ கத்வாத்ய ராகவ:–10-

ரகுகுல நாதனாகிய ஓ இராமனே நீர் இங்கு நின்றும் சீக்கிரம் புறப்பட்டுப் போய் மஹா பலசாலியாகிய
ஸூக்ரீவன் என்கிற வானர அதிபதியான அக்னி ஸாக்ஷிகமாக ஸ்நேஹன் ஆக்கிக் கொள்ளும் என்று கபந்தன் சொன்னான்

——

தேஸகாலௌ ப்ரதீக்ஷஸ்வ சமமாண: ப்ரியாப்ரியே
ஸுகது:க்கஸஹ: காலே ஸுக்ரீவ வஸகோ பவ: –11-பஜஸ் வாத்ய –-பாட பேதம்

அப்பா அங்கதனே இனி நீ தேச காலங்களை ஆலோசித்து –இந்த தேசத்தில் இந்தக் காலத்தில் இம் மாதிரி இருக்க வேண்டும்
மற்றப் பொழுது மற்றப் படியாக இருக்க வேண்டும் என்று விசாரித்து அநிஷ்டம் நேர்ந்ததாகில் அதை இஷ்டம் போலவும்
துக்கம் நேர்ந்தால் அதை ஸூகம் போலவும் பாவித்துப் பொறை -பொறுமை அடக்கம் யுற்றவனாய்க் கொண்டு
ஸூ க்ரீவனுக்கு அதீனமாக இருக்கக் கடவாய் என்று வாலி சொன்னான் –

———–

வந்த்யாஸ்தே து தபஸ் ஸித்தாஸ் தாபஸா வீத கல்மஷா:
ப்ரஷ்டவ்யா சாபி சீதயா: ப்ரவ்ருத்திர் வினையான் விதை:–12-

ஓ வானர வீரர்களே தபஸ்ஸினால் பாபம் அற்றவர்களாய் அதனால் அணிமாதி ஸித்தியை அடைந்து இருக்கிற
அந்த மஹரிஷிகளை நீங்கள் பணிந்து விநயத்துடனே சீதா தேவி இருக்கும் இடத்தை
அவர்களைக் கேளுங்கோள் என்று ஸூக்ரீவன் சொன்னான்

———

ஸ நிர்ஜித்ய புரீம் ஸ்ரேஷ்டாம் லங்காம் தாம் காம்ரூபிணீம்
விக்ரமேண மஹா: தேஜா: ஹநுமான் மாருதாத்மஜ: –13-

வாயு புத்ரராய் மிக்க தேஜஸ்ஸை யுடையவைராக்கிய அந்த ஹனுமான் வேண்டும் உருவம் கொள்ள வல்லவனாய்
சிறந்த அந்த லங்கா புரிக்கு தேவதையாகிய இலங்கியை பராக்ரமத்தினால் வென்றார்

———

தன்யா தேவா: ஸகந்தர்வா: ஸ்த்தாஸ்ச பரமர்ஷய:
மம பஸ்யந்தி யே நாதம் ராமம் ராஜீவ லோசனம் –-14-

என்னைப் பிரிந்த சோகத்தினால் தேவ லோகத்தை அடைந்த என்னுடைய பர்த்தாவாகிய செந்தாமரைப் பூ போன்ற
கண்களை உடைய இராகவனை அங்குள்ள எந்த தேவர்களும் கந்தர்வர்களும் சித்தர்களும் மஹ ரிஷிகளும் பார்க்கிறார்களோ
அவர்கள் மஹா பாக்யம் செய்தவர்கள் என்று ஸீதா தேவி சொல்கிறார்

————

மங்களாபிமுகே தஸ்ய ஸா ததாஸீன்மஹாகபே
உபதஸ்தே விஸாலாக்ஷீ ப்ரயதா ஹவ்யவாஹனம் –15-

அப்பொழுது பரந்த கண்களை யுடைய அந்த ஸீதா தேவி வாநரோத்தமனாகிற அந்த ஹநுமானுக்கு
வாலில் நெருப்புச் சுடாமல் இருக்க வேண்டும் என்ற ஸ்ருதி பரிசுத்தையாய்க் கொண்டு அக்னியைக் கிட்டிப் பிரார்த்தித்தாள்

———

ஹிதம் மஹார்த்தம் ம்ருது பூர்வ ஸமிதம் வ்யதீத காலாயதி ஸம் ப்ரதிக்ஷமம்
நிஸம்ய தத் வாக்ய முபஸ்தித ஜ்வர ப்ரஸங்க வானுத்தர மேதத ப்ரவீத் –16-ம்ருது ஹேது –பாட பேதம்

பிற் காலத்தில் நன்மையை விளைக்குமதாய் அக்கணமே ஸூக ஜனகமாய் யுக்தி யுக்தமாய் பூத பவிஷ்யத் வர்த்த மாநங்கள்
என்கிற மூன்று காலங்களுக்கும் உரியதாய் நல் வார்த்தையாய்ச் சொன்ன விபீஷணன் சொல்லைக் கேட்டு
தன் கோரிக்கையில் பிடிவாதம் உடைய இராவணன் சினம் உள்ளவனாய்க் கொண்டு
இதை மேற் கூறியபடி உத்தரம் பதில் சொன்னான்

————-

தர்மாத்மா ரக்ஷஸாம் ஸ்ரேஷ்ட: ஸம் ப்ராப்தோsயம் விபீஷண:
லங்கைஸ்வர்யம் த்ருவம் ஸ்ரீமா நயம் ப்ராப்நோத்ய கண்டகம் –17-

தர்ம சிந்தை யுடையவனாய் ராக்ஷஸ ஸ்ரேஷ்டனான இந்த விபீஷணன் என்னை அடைந்தான்
ஆகையால் இவ்வளவு அனுகூல்யமுடைய இந்த விபீஷணன் இப்பொழுதே தடையின்றி இலங்கையினுடைய ஐஸ்வர்யத்தை
அடையப் போகிறேன் என்று இராகவன் பணித்தார்

——–

யோ வஜ்ர பாதாஸனி ஸன்னிபாதாத் ந சுக்ஷூபே நாபி ச்சால ராஜா
ஸ ராம பாணார்பிஹதோ ப்ருஸார்த்த: சசால சாபம் ச முமோச வீர: –18-

எந்த இராவணன் முன்பு இந்திரனுடைய வஜ்ர ஆயுதத்தினாலும் அடி உண்டவனாய்க் கொண்டு
ஆனால் ஒரு வருத்தத்தையும் யடைய வில்லையோ சலிக்கவும் கூட வில்லையோ
அந்த ராவணன் இராகவனுடைய பாணத்தினால் அடிக்கப் பட்டவனாய்க் கொண்டு அதனால் மிக வருத்தம் உள்ளவனாய் நடுங்கினான்
கையிலிருந்து வில்லையும் நழுவ விட்டான்

——-

யஸ்ய விக்ரமமாஸாத்ய ராக்ஷஸா நிதனம் கதா:
தம் மந்யே ராகவம் வீரம் நாராயணம்னாமயம் –-19-

எந்த இராகவனுடைய பராக்ரமத்திற்கு முன்னே நின்று அரக்கர்கள் மாண்டு விட்டார்களோ அந்த வீரனாகிய
இராகவனை நான் ஒரு பத்திரமற்ற நாராயணனாக எண்ணுகிறேன் என்று இராவணன் சொன்னான்

——–

ந தே தத்ருஸிரே ராமம் தஹந்தமரிவாஹினீம்
மோஹிதா: பரமாஸ்த்ரேன காந்தர்வேண மஹாதமனா –20-

இராகவன் பிரயோகித்த பெரும் தன்மையை யுடைய சிறந்த அந்த காந்தர்வம் என்கிற அஸ்திரத்தினால்
அரக்கர்கள் மோஹம் அடைந்தவர்களாய் சத்ரு ஸைன்யத்தை பாணத்தினால் கொளுத்துகிற இராகவனை காணாதவர்கள் ஆனார்கள்

————

ப்ரணம்ய தேவதாப்யஸ்ச்ச ப்ராஹ்மணே ப்யஸ்ச மைத்லீ
பத்தாஞ்ஜலி புடா சேதமுவாசாக்.நிஸமீபத: —21-

மிதிலேசனுடைய பெண்ணான ஸீதா தேவி அக்னி ப்ரவேஸ காலத்தில் தேவர்களையும் ப்ராஹ்மணர்களையும்
நமஸ்கரித்து கையைக் கூப்பிக் கொண்டு நெருப்பின் அருகில் நின்று இதை மேற் கூறியபடி மொழிந்தாள்

———

சலநாத் பர்வதேந்த்ரஸ்ய கணா தேவாஸ்ச கம்பிதா:
சசால பார்வதீ சாபி ததாஸ்லிஷ்டா மஹேஸ்வரம் –22

இராவணன் கைலாஸ மலையை அசைக்கும் போது அங்குள்ள மஹா தேவனுடைய பரிவார கணங்கள்
எல்லாம் நடுங்கிப் போயின -பார்வதியும் நடுக்கம் உற்றவளாய் அப்பொழுது
தன் பதியாகிய மஹா தேவனைத் தழுவிக் கொண்டனள்

———-

தாரா: புத்ரா: புரம் ராஷ்ற்றம் போகாச்சாதனபாஜனம்
ஸர்வமேவாவிபக்.நம் நோ பவிஷ்யதி ஹரீஸ்வர: –-23-

ஓ வானர உத்தமனாகிற வாலியே இது முதல் உனக்கும் உனக்கும் பெண்டாட்டிகள் பிள்ளைகள் நகரம் இராச்சியம்
கந்த கு ஸூ மாதிகள் ஊண் உடை ஆகிய இவைகளில் ப்ரீதி பேதம் இன்றி நடக்க வேண்டும்
இதில் சம்சயம் இல்லை என்று இராவணன் சொன்னான்

——–

யாமேவ ராத்ரிம் ஸத்ருக்ன: பர்ணஸாலாம் ஸமாவிஸத்
தாமேவ ராத்ரிம் சீதாபுஇ ப்ரஸூதா தாரகத்வயம் –24-

லவணாசுரனுடைய வாதார்த்தமாகப் போம் போது எந்த ராத்திரியில் சத்ருக்கனன் வால்மீகி மஹ ரிஷியினுடைய
ஆஸ்ரமத்தின் பர்ண சாலையைப் பிரவேசித்தாரோ
அந்த ராத்திரியிலே ஸீதா தேவியும் இரண்டு குழந்தைகளைப் பெற்றனள்

———-

இதம் ராமாயணம் க்ருத்ஸ்னம் காயத்ரீ பீஜ ஸம்யுதம்
த்ரிஸந்த்யம் ய: படே.ந் நித்யம் ஸர்வ பாபை: ப்ரமுச்யதே 

காயத்ரியின் பீஜ அக்ஷரங்களோடு கூடிய இந்த காயத்ரி ராமாயணத்தை முழுதும் யாவன் ஒருவன்
மூன்று ஸந்த்யா காலங்களிலும் தினம் தோறும் பாடம் செய்கிறானோ
அவன் எல்லாப் பாபங்களிலும் இருந்தும் விடப்பட்டவன் ஆவான் –

ஸ்ரீ காயத்ரீ ராமாயணம் ஸம்பூர்ணம்

————-

‘காயந்தம் த்ராயதே இதி காயத்ரி.’தன்னை ஓதுபவரைக் காப்பது காயத்ரி.

ஓம் பூர்புவஸ் ஸுவ:
தத் ஸவிதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோ யோன: ப்ரசோதயாத் |–இது தான் காயத்ரி மந்திரம்.

ஓம்
பூர், புவ, ஸுவ: – உடல், ஆன்மீக, தெய்வீக வாழ்வுக்குரிய
ஸவிதுர் – உலகங்களுக்கு மூலாதாரமாக உள்ள
வரேண்யம், தேவஸ்ய – போற்றுதலுக்குரிய , யாவரிலும் மேலான, தெய்வீக மெய்ம்மையின்
பர்கோ – தெய்வீகப் பேரொளி மீது
தீ மஹி – நாம் தியானிக்கின்றோம்
தத் – நாம் மேலான உண்மையை உணரும்படி அந்த மேலான தெய்வம்
நஹ – நம்
தியோ – அறிவுக்கு
ப்ரசோதயாத் – ஒளி ஊட்டட்டும்

அறிவைத் தரும் ஆற்றலினைத் தருகிறது காயத்ரி. அத்தோடு காயத்ரி மந்திரம் சர்வ ரோக நிவாரணி.
எல்லா நோய்களையும் போக்க வல்லது. சர்வ துக்க பரிவாரிணி காயத்ரி!
அது அனைத்து துன்பங்களையும் கவலைகளையும் போக்குகிறது. சர்வ வாஞ்சா பலஸ்ரீ காயத்ரி.
அனைத்து விருப்பங்களையும் நிறைவேற்றுவது காயத்ரி.

——–

அக்ஷரங்களின் பயன்!

ஒவ்வொரு அக்ஷரமும் ஒவ்வொரு பயனைத் தரும்.
தத் என்பது ப்ரஹ்ம ஞானத்தையும்
‘ஸ’ என்பது சக்தியை நல்வழியில் பயன்படுத்தலையும்,
‘வி’ என்பது நல்ல வழியில் செல்வத்தைப் பயன்படுத்தலையும்,
‘து’ என்பது தைரியத்தையும்,
‘வ’ என்பது பெண்மையின் சிறப்பையும்,
’ரே’ என்பது வீட்டிற்கு வரப் போகும் இல்லத்தரசியையும் அவள் குடும்பத்திற்கு கொண்டு வரும் நலனையும்,
‘ண்யம்’ என்பது இயற்கையை வழிபடுதலையும்,
‘பர்’ என்பது நிலையான மனத்தின் கட்டுப்பாட்டையும்,
‘கோ’என்பது ஒத்துழைப்பு மற்றும் பொறுமையையும்,
தே என்பது எல்லாப் புலன்களும் கட்டுப்பாட்டிற்குள் இருப்பதையும்,
‘வ’ என்பது தூய்மையான வாழ்க்கையையும்,
‘ஸ்ய’ என்பது மனிதன் இறைவனுடன் ஒன்றுபடுவதையும்,
‘தீ’ என்பது எல்லாத் துறைகளிலும் எல்லாவித வெற்றி பெறுதலையும்,
‘ம’ என்பது இறைவனது நீதி மற்றும் ஒழுக்கக் கட்டுப்பாட்டையும்
‘ஹி’ என்பது நுண்ணறிவையும்,
‘தி’ என்பது வாழ்க்கை மற்றும் மரணத்தையும்,
‘யோ’ என்பது தர்ம நெறிப்படியான வாழ்க்கையைப் பின்பற்றுவதையும்,
‘யோ’ என்பது வாழ்க்கை சேமிப்பையும்
‘நஹ’ என்பது எச்சரிக்கை மற்றும் பாதுகாப்பையும்,
’ப்ர’ என்பது நடக்கப்போவதை அறிவது மற்றும் நல்ல காரியங்களுக்கு உதவி செய்வதையும்,
‘சோ’ என்பது அறநெறி நூல்களைப் படிப்பதையும் மகான்களின் தொடர்பு ஏற்படுதலையும்
‘த’ என்பது ஆன்மாவை அறிதல் மற்றும் ஆத்மானந்தத்தையும்
‘யா’ என்பது சத் மக்கட்பேற்றையும்
‘த்’ என்பது வாழ்க்கையில் உள்ள ஒழுக்கக்கட்டுப்பாட்டையும் ஒத்துழைப்பையும் குறிக்கிறது.

காயத்ரி மந்திர தேவதைகள்!

ஆக்னேயம், பிரஜாபத்தியம், ஸௌம்யம், ஸமானம், சாவித்திரம், ஆதித்யம், பார்ஹஸ்பத்யம்,
மைத்ராவருணம், பகதெய்வதம், ஆர்யமைஸ்வரம், கணேசம், துவாஷ்ட் ரம், பௌஷ்ணம், ஐந்திராக்னம்,
வாயவ்யம், வாமதேவ்யம், மைத்ராவருணி, வைஸ்வதேவம், மாத்ருகம், வைஷ்ணவம், வததெய்வம்ஸும்,
ருத்ரதெய்வதம், கௌபேரம், ஆஸ்வினம் ஆகியவை காயத்ரி மந்திரத்திற்குள்ள 24 தேவதைகள்.

தேவி பாகவதத்தில் பன்னிரெண்டாம் ஸ்கந்தத்தில் முதல் அத்தியாயத்தில் தரப்படும் அபூர்வமான விவரங்களாகும்.

———–

காயத்ரி மந்திரம் கீழ்க்கண்ட சொற்களைக் கொண்டது:

­­­­“ஓம் பூர் புவஸ்ஸுவஹ தத் ஸவிதுர் வரேண்யம்

பர்க்கோ தேவஸ்ய தீமஹி தியோயோன ப்ரசோதயாத்.”

இதன் பொருள்:

மண்ணுலகம், விண்ணுலகம், சொர்க்கம் ஆகிய மூன்றையும் படைக்க காரணமான ஒளி பொருந்திய, வணக்கத்திற்குரியவரை, நாங்கள் தியானிக்கிறோம். நாங்கள் மேலான உண்மையை உணர, அந்தப் பரம்பொருள் எங்களது அறிவை ஊக்குவிக்கட்டும்.

காயத்திரி மந்திரத்தின் பொருளைப் மகாகவி பாரதியார் தான் பாடிய பாஞ்சாலி சபதத்தில் பின்வருமாறு பாடியுள்ளார்.

“செங்கதிர்த் தேவன் சிறந்த ஒளியினைத் தேர்கின்றோம்

அவன் எங்களறிவினைத் தூண்டி நடத்துக”

 நல்லனவெல்லாம் எத்திசையிலிருந்து வந்தாலும், எம்மொழியிலிருந்து வந்தாலும் அவற்றை ஏற்று நாம் பயன் பெறுவோமாக

ஓம் பூர்ப்புவ ஸ்ஸீவ தத் ஸவிதுர் வரேண்யம்

பர்கோ தேவஸ் தீமஹி தியோ யோன: ப்ரசோதயாத்

இதுவே காயத்ரீ மந்திரம். இந்த காயத்ரீ மந்திரத்தில் முதல் வரியான ஓம் பூர்ப்புவஸ்ஸீவ-இதில் ஓம் என்பது பிரணவம் ஆகும். பூர்ப்புவஸ்ஸீவ என்பது பூலோகம், புவர்லோகம், சொர்க்கலோகம் ஆகும். தத் எனும் இரண்டாவது வரியிலிருந்து ஒவ்வொரு எழுத்துக்கும் ஒவ்வொரு பொருளும், சக்தியும் உண்டு.

தத் – என்ற சொல் தபினி என்ற அம்பிகையைக் குறிக்கிறது. வெற்றியைத் தருபவள்.

ச – என்ற எழுத்து சாமுண்டியை குறிக்கும். இவள் வீரத்தையும், வலிமையையும் அளிப்பாள்.

வி – என்ற எழுத்து விஸ்வா என்ற சக்தியைக் குறிக்கிறது. இவள் நல்ல பலன்களைத் தருவாள்.

துர் – என்ற சொல் துஷ்டி என்ற சக்தியைக் குறிக்கிறது. இவள் சுக வாழ்வு தருவாள்.

வ – என்ற எழுத்து வரதாம்பிகையைக் குறிக்கும். இவள் யோகத்தினைக் கொடுப்பாள்.

ரே – என்ற எழுத்து ரேவதியைக் குறிக்கிறது. இவள் திருமணம் நடத்தி வைக்கவும், தம்பதியருக்குள் அன்பை உருவாக்கும் தேவியாவாள்.

ணி – எழுத்து சூக்ஷ்மா என்ற அம்பிகை ஆவாள். செல்வம் வழங்குவாள்

யம் – ஞானாம்பிகையைக் குறிக்கும். அழகை அளிப்பாள்.

பர் – கார்கவியைக் குறிக்கும். இவள் மக்களுக்கு பாதுகாப்பு அளிக்கிறாள்.

கோ – கோமதி ஆவாள். இவள் நல்ல அறிவையும், ஞானத்தையும் தருவாள்.

தே – தேவிகாவைக் குறிக்கும். இவள் தீய சக்திகளை அழிப்பாள்

வ – வராகியைக் குறிக்கும். தவயோகம் தருவாள்.

ஸ்ய – சின்ஹனியைக் குறிக்கும். இருப்பதை காக்கும் சக்தி படைத்தவள்.

தீ – தியானாம்பிகையைக் குறிக்கும். இவள் நீண்ட ஆயுளைக் கொடுப்பவள்.

ம – மர்யாதா என்ற அம்பிகை ஆவாள். இவள் புலனடக்கம் அளிப்பாள்.

ஹி – ஸ்புட நாயகியைக் குறிக்கிறது. எடுத்த காரியத்தை நிறைவேற்றும் சக்தி கொண்டவள்.

தி – மேதா அம்பிகையைக் குறிக்கிறது. இவள் வருங்காலத்தை உணர்த்துவாள்

யோ – யோகமாயா ஆவாள். விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவாள்.

யோன – யோனியைக் குறிக்கும். உணவு உற்பத்தியையும், விவசாய விருத்தியையும் கவனிப்பாள்.

நஹ் – தாரணியைக் குறிக்கிறது. இவள் சுக வாழ்வு அளிப்பாள்.

ப்ர் – ப்ரபவா என்ற அம்பிகை ஆவாள். குறிக்கோளை அடைய உதவுவாள்.

சோ – ஊஷ்மா தேவியைக் குறிக்கும். இவள் அச்சத்தைப் போக்கி தைரியத்தை அளிப்பாள்.

த் – த்ரஷ்யா என்ற அம்பிகை ஆவாள். இவள் நல்லறிவு, விவேகம் தருவாள்.

யாத் – நிரஞ்சனா தேவியைக் குறிக்கும். இவள் தொண்டு செய்யும் மனதை தருவாள்.

இந்த மகத்தான மந்திரத்தை ஜபித்து அனைவரும் பலன் பெறலாம்.

————

ஓம் பூர்ப்புவஸ்ஸுவ: தத் ஸவிதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி | தியோ யோ ந: ப்ரசோதயாத் ||

ஓம். யார் நம் அறிவைத் தூண்டுகிறாரோ அந்த சுடர்க் கடவுளின் மேலான ஒளியைத் தியானிப்போமாக.

இது பிரம்ம காயத்ரீ அல்லது சூரிய காயத்ரீ. இதுவே நம் தேசியப் பிரார்த்தனை. இதுவே நம் தேசிய மந்திரம். பல்லாயிரம் ஆண்டுகளாகக் காஷ்மீரத்திலிருந்து கன்னியாகுமரி வரை இது கையாளப் பட்டு வந்துள்ளது.

ஓம் அல்லது ஓங்காரம் ஓசைகள் அனைத்துக்கும் முதல் காரணம். இது நாதப் பிரம்மம் என்று இயம்பப் பெறுகிறது. பரவஸ்து ஓசை வடிவத்தில் இலங்குகிறது. அகிலாண்டத்தின் இயக்கம் ஓசையை உண்டுபண்ணுகிறது. அந்த ஓசையே ஓங்காரம். ஓங்கார ஓசை இயற்கை முழுவதிலும் ஓவாது ஒலித்துக் கொண்டிருக்கிறது. “ஓவாத சத்தத்து ஒலியே போற்றி” என்று இது போற்றப் படுகிறது. ஓம் என்பது பீஜ மந்திரம். இதன் திரிவுகளாக ஏனைய மந்திரங்கள் வந்துள்ளன. ஓங்காரத்தை உச்சரிப்பதற்கு ஏற்ப மனிதன் மேன்மையுறுகிறான். இயற்கை முழுதுக்கும் பொதுவாக அண்டமெங்கும் ஒலித்துக் கொண்டிருக்கின்ற இம்மந்திரத்தை யாரோ சிலர் தான் உச்சரிக்க வேண்டும் என்னும் கட்டுப்பாடு எதற்காக? சுவாசிக்கும் காற்று எல்லார்க்கும் பொதுவாக இருப்பது போன்று இந்த ஓசையும் பொது.

ஓங்காரத்தை உச்சரித்த பிறகே ஏனைய மந்திரங்களை உச்சரிப்பது ஐதிகம். ஏனென்றால் மந்திரங்கள் அனைத்திற்கும் மூலமந்திரமாக அல்லது பீஜமந்திரமாக இருப்பது ஓங்காரம்.

பூ: , புவ:, ஸுவ: ஆகிய மூன்று சொற்கள் பூலோகம், புவர்லோகம், ஸ்வர்க்கம் எனப் பொருள்படுகின்றன. இம்மூவுலகங்கள் அகத்திலும் இருக்கின்றன, புறத்திலும் இருக்கின்றன. பண்பாடு அடையாதவர்களுக்கு அம் மூவுலகும் புறத்தில் உள என்னும் கொள்கை ஏற்புடையதாகிறது. அகத்திலேயே அம்மூன்றும் அமைந்துள்ளன என்னும் கொள்கை சிறிது பரிபாகம் அடைந்தவர்களுக்கே விளங்குகிறது.

நம்மிடையே இம்மூவுலகங்களும் எப்படி அமைந்திருக்கின்றன என்று பார்ப்போம். ஜாக்ரதாவஸ்தை, சொப்பனாவஸ்தை, சுஷுப்தி அவஸ்தை ஆகிய மூன்று அவஸ்தைகளும் (நிலைகள்) நம்மிடத்து மாறி மாறி அமைகின்றன. மக்கள் மட்டும் அல்லர்; பறவைகளும், விலங்குகளும் இந்த மூன்று நிலைகளை அனுபவிக்கின்றன.

நனவு அல்லது விழித்திருந்து புறவுலகோடு இணக்கம் வைப்பது ஜாக்ரதாவஸ்தை. நனவு நிலையில் உடல், உள்ளம் ஆகிய இரண்டும் வேலை செய்கின்றன. கனவு என்பது சொப்பனாவஸ்தை. கனவு நிலையில் புறவுலகோடு தொடர்பு வைப்பதில்லை. ஸ்தூல சரீரத்துக்கும் அங்கு வேலையில்லை. அகக் கரணமாகிய மனதே கற்பனையில் ஸ்தூல சரீரத்தையும், புறவுலகத்தையும், அதிலுள்ள உயிர்வகைகளையும் கற்பனை பண்ணிக் கொண்டு வியவகாரம் பண்ணுகிறது. அந்நிலையில் இருக்கின்ற பொழுது அது யாண்டும் ஜாக்ரதாவஸ்தைக்கு நிகராகத் தோன்றுகின்றது. கனவற்ற உறக்கம் சுஷுப்தி அவஸ்தை எனப்படுகிறது. அந்த அவஸ்தையில் அகவுலகம் இல்லை; புறவுலகம் இல்லை. மனதும் செயலற்றுக் கிடக்கிறது. பிரக்ஞை மட்டும் தமோகுணத்தால் [மூவகைக் குணங்களில் ஒன்றான இருள் இயல்பு] மூடப்பட்டிருப்பது போன்று தன்மயமாய் எஞ்சியிருக்கிறது.

இம்மூன்று அவஸ்தைகளிலும் நாம் மாறிமாறி இருக்கின்றோம். இருபத்து நான்கு மணி நேரத்துக்குள் இந்த மூன்று உலகங்களிலும் சற்று ஏறத்தாழ வசித்து வருகிறோம். இந்த மூன்று அவஸ்தைகளே பூலோகம், புவர்லோகம், ஸுவர்லோகம் என்று இயம்பப் பெறுகின்றன. நாம் எந்த அவஸ்தையில் இருந்தாலும் சரி, அதாவது எந்த லோகத்தில் இருந்தாலும் சரி, இந்த காயத்ரி மந்திரத்தினுடைய கருத்தையுணர்ந்து அதைப் பயன்படுத்திக் கொண்டு வருகிற அளவு ஆன்மிகத் துறையில் முன்னேற்றமடைகிறோம்.

விழித்திருக்கின்ற பொழுது நாம் சுவாசிக்கின்றோம்; கனவு காண்கின்ற பொழுதும் சுவாசிக்கின்றோம்; கனவற்ற உறக்கத்திலும் சுவாசிக்கின்றோம். சுவாசிப்பதை நிறுத்துவதில்லை. நிறுத்தினால் ஒழிந்துபட்டுப் போவோம். நிர்விகல்ப சமாதியில் (அனைத்து உணர்வுகளும் ஒடுங்கும் ஒருமை நிலை) இருப்பவர்கள் மட்டும் சுவாசிக்காதும், அழிந்துபட்டுப் போகாமலும் இருக்கின்றனர். மூன்று அவஸ்தைகளிலும் நிறுத்தாது நாம் சுவாசித்து வருவது போன்று மூன்று அவஸ்தைகளிலும் காயத்ரியில் அடங்கியிருக்கிற கருத்துக்கேற்ப நம்முடைய மனத்தைப் பெரிய நிலையில் வைப்போமானால் அதற்கேற்றவாறு ஆத்ம பரிபாகம் நமக்கு வாய்க்கிறது.

சுஷுப்தி அவஸ்தையில் தமோகுணம் ஆதிக்கம் செய்கிறது. தமோகுணத்தில் மூன்று நிலைகள் உண்டு – தமஸில் தமஸ், தமஸில் ரஜஸ், தமஸில் சத்துவம் என அம்மூன்று நிலைகள் விளக்கப் படுகின்றன. ஆத்ம பரிபாகம் அடைந்தவர்கள் தமஸில் சத்துவத்துக்கு மேலோங்க முடியும். அது அறிதுயில் அல்லது யோகநித்திரை எனப்படுகிறது. அந்நிலையை எட்டுகிறவர்கள் காயத்ரீ தத்துவத்தைக் கையாண்டவர்கள் ஆகின்றனர். அந்நிலையை எட்டுவதே குறிக்கோள்.

இனி, ஜாக்ரதாவஸ்தையிலேயே பூலோகம், புவர்லோகம், சுவர்லோகம் ஆகிய மூன்று உலகங்களையும் நமக்கு நாம் அமைத்துக் கொள்ள முடியும். உடல் வாழ்க்கையை ஒழுங்காக நடத்துவது பூலோக வாழ்க்கையாகிறது. உள்ளத்தை மேலான எண்ணங்களில் செலுத்துவது புவர்லோகமாகிறது. எண்ணத்தைக் கடவுள் பால் செலுத்துவது ஸ்வர்க்கலோகமாகிறது. அதிகாலையில் எழுந்திருந்து இரவு படுக்கப் போகும் வரையில் வாழ்வாங்கு வாழ்கிற மனிதன் மூவுலகிலும் முறையாக வாழ்ந்தவன் ஆகின்றான்.

இந்த மூன்று லோகங்களிலும் அல்லது மூன்று அவஸ்தைகளிலும் பாரமார்த்திகப் பெருநிலையிலேயே இருந்து பழகுபவன் இரண்டாவது பிறப்பெடுத்தவன் ஆகின்றான்.  இருபிறப்பாளன் அல்லது துவிஜன் யாண்டும் போற்றுதலுக்குரியவன் ஆகின்றான்.

செய்யுள் மயமாக அமைந்துள்ள காயத்ரியில் உள்ள பதங்களை இப்பொழுது உரைநடைக்குரிய பதங்களாகப் பிரித்து அமைப்போம் –

ஓம் தத் ஸவிது: வரேண்யம் பர்க: தேவஸ்ய தீமஹி |திய: ய: ந: ப்ரசோதயாத் ||

य: ய: – யார், न: ந: – நம்முடைய, धिय: திய: அறிவை, प्रचोदयात् ப்ரசோதயாத் – தூண்டுகிறாரோ, तत् தத் – அந்த, देवस्य தேவஸ்ய – சுடருடைய, सवितु: ஸவிது: கடவுளின், वरेण्यम् வரேண்யம் – மேலான, भर्ग: பர்க: – ஒளியை, धीमहि தீமஹி – தியானிப்போமாக.

ஓம். யார் நம் அறிவைத் தூண்டுகிறாரோ அந்த சுடர்க் கடவுளின் மேலான ஒளியைத் தியானிப்போமாக.

சரியாக அமைந்துள்ள காயத்ரி மந்திரத்தில் பரம்பொருளின் சொரூபத்தை விளக்குவதற்கான பதங்கள் மூன்று அமைந்திருக்கும். ஜீவப் பிரயத்தனத்தையும், தெய்வத்தின் அருளையும் விளக்குவதற்கென்று அமைந்துள்ள வினைச்சொற்கள் மூன்று இருக்கும். இப்பேரியல்புகள் காயத்ரீ மந்திரங்கள் அனைத்துக்குமே பொதுவானவைகள்.

இம்மந்திரத்தில் பரம்பொருளுக்கு விளக்கமாக அமைந்துள்ள மூன்று சொற்களை எடுத்துக் கொள்வோம். ஸவிது: என்னும் சொல் ஸவித்ரு என்னும் சொல்லின் ஆறாம் வேற்றுமையாகும். ஸவித்ரு என்னும் சொல் உயிர்தருகிற, உற்சாகம் ஊட்டுகிற, வாழ்வைச் செப்பனிடுகிற பொருள் என்று சொல்லப் படுகிறது. உலக நடைமுறையில் சூரியன் இச்சொல்லுக்கு இலக்காகிறது. பரதத்துவத்தில் பரமாத்மாவுக்குப் பொருந்தியதாக இப்பதம் அமைகிறது. ஸவித்ரு என்னும் சொல்லைப் பெண்பால் ஆக்குகின்ற பொழுது, அது ஸாவித்ரீ என்று சொல்லப் படுகிறது. காயத்ரீ, ஸாவித்ரீ ஆகிய இரண்டு பெயர்களும் சக்தி தெய்வத்துக்கு உரியவைகள் ஆகின்றன. இந்த இரண்டு பெயர்களுள் ஒன்றிற்குப் பதிலாக மற்றொன்றை மொழியுமிடத்து அது இழுக்கு ஆகாது.

வழிபடுகின்றவர்களுடைய வசதிக்காக ஒரு தெய்வம் ஆண்பாலாகவோ, பெண்பாலாகவோ கருதப் படுகிறது. சிவ என்பது ஆண்பால்; சிவா என்பது பெண்பால். ஸவித்ரு என்பது ஆண்பால்; ஸாவித்ரீ என்பது பெண்பால். ஆணாகவோ, பெண்ணாகவோ, அலியாகவோ எப்படி வைத்துக் கொண்டாலும், அது உயிர்க்கு உயிராய் இருக்கின்ற பரம்பொருள் ஆகிறது

பிரபஞ்சத்துக்கும், ஜீவகோடிகளுக்கும் ஆதாரமாகவும், மூலப் பொருளாகவும், முதல் காரணமாகவும் இருப்பது பரம்பொருள். பரம்பொருளுக்குப் புறம்பாக ஜீவர்களுடைய ஜீவ வியக்தி இல்லை. ஜகத்துக்குத் தோற்றம் என்பது இல்லை. கடலில் தோன்றி, கடலின்மீது அலைகள் உருண்டோடி விளையாடுவது போன்று ஜகத்தும் ஜீவனும் பரத்தில் தோன்றி பரத்தில் நிலைபெற்றிருக்கின்றன. (: தன்னுளே திரைத்தெழும் தரங்க வெண் தடங்கடல், தன்னுளே திரைத்தெழுந்தடங்குகின்ற தன்மை போல் – நின்னுளே பிறந்திறந்து நிற்பவும் திரிபவும், நின்னுளே அடங்குகின்ற நீர்மை நின்கண் நின்றதே : திருமழிசையாழ்வார், நாலாயிர திவ்யப் பிரபந்தம்).

ஆக, ஜகத்துக்கும் ஜீவனுக்கும் தூண்டுதல் அளிக்கும் பாங்கில் இருக்கிற பரவஸ்து (பரம்பொருள்) ஸவித்ரு என்று சொல்லப் படுகிறது. கட்புலனாகிற சூரியன் இச்செயலைப் பிரபஞ்ச நிலையில் செய்து வருவதால் சூரிய நாராயணனும் ஸவித்ரு என்று சொல்லப் படுகிறார். ஆனால் இதன் லட்சியார்த்தம் (குறியீட்டுப் பொருள்) பரமாத்மாவையே குறிக்கிறது.

பரம்பொருளை விளக்குவதற்கு அமைந்துள்ள இரண்டாவது சொல் தேவ: என்பதாகும். தேவஸ்ய என்பது இதன் ஆறாம் வேற்றுமை. தேவ: என்னும் சொல் திவ்யமானவன், பிரகாசமானவன், மேலாம் நிலையில் இருப்பவன் என்றெல்லாம் பொருள் படுகிறது. பிரகாசத்தோடு கூடியிருப்பது மூலநிலை, யதார்த்த நிலை. பிரகாசத்தை இழந்த நிலை கீழ்மைக்கு வந்துள்ள நிலையாகும். ஜகத்தில் ஜடமாய் இருப்பதெல்லாம் மூலநிலையை விட்டு வழுவிக் கீழ்நிலைக்கு வந்தவைகளாம்.

சான்று ஒன்று எடுத்துக் கொள்வோம். சூரியன் சுயப்பிரகாசம் வாய்ந்தவன். சூரியனிடமிருந்து சிதறி வந்துள்ள பூமியும், சந்திரனும் சுயப்பிரகாசத்தை இழந்தைவைகள். இந்த இரண்டு கோளங்களையும் எடுத்து மீண்டும் சூரியனுள் போட்டால் முன்னிருந்தபடி இவைகளுக்குச் சுயப்பிரகாசம் வந்துவிடும். ஜகத் (பருப்பொருள் உலகம்) ஜடமயமாக இருக்கிறது. ஜீவர்களோ ஜடம், சேதனம் (உணர்வு) ஆகிய இரண்டும் கலந்தவைகளாக இருக்கின்றன. பின்பு பரமனோ தனது சுயப் பிரகாசத்தை இழந்துவிடாது யாண்டும் பூரணமாகவே இருப்பவன். தேவ: என்னும் சொல் இப்பேருண்மையை விளக்குகிறது. பரம்பொருள் யாண்டும் சுயம்ஜோதி என்பது இதன் பொருள்.

இனி, பரவஸ்துவைக் குறிக்கின்ற மூன்றாவது பதம் பர்க: என்பதாகிறது. பர்க: என்பது ருத்ரனுக்கும், சிவனுக்கும் அமைந்த மற்றொரு பெயர். ருத்ரனாகக் கருதுமிடத்து அழுகையின் வாயிலாக அழுக்கைப் போக்கக் கூடியவன் என்று பொருள்படுகிறது. சிவனாகக் கருதுமிடத்து ஞானப் பிரகாசத்தின் வாயிலாக அக்ஞான இருளைப் போக்குபவன் என்று பொருள்படுகிறது. பரம்பொருளின் சொரூபத்தை ஜீவர்கள் கிரகித்துக் கொள்வதற்கே இந்த அடைமொழி வந்துள்ளது. ஸ்தூல உலகில் சூரியன் தான் இருக்குமிடத்தைத் தானே விளக்குகின்றான். தன் வெளிச்சத்தைக் கொண்டு ஏனைய பொருள்களையும் விளக்குகின்றான். அங்ஙனம் ஞான சொரூபியாகிய பரமாத்மா தன்னைத் தானே விளக்குகின்றான். அவனுடைய சன்னிதானத்தின் விசேஷத்தால் ஜகத்தும், ஜீவர்களும் ஞானக்காட்சிக்கு இலக்காகின்றன.

இங்ஙனம் ஸவித்ரு, தேவ:, பர்க: ஆகிய மூன்று சொற்களையும் நாம் உச்சரிக்கின்ற பொழுது, அச்சொற்களுக்கு இலக்காக இருக்கிற பரமாத்மாவையே பாவனை பண்ண வேண்டும். . பரமனைப் பற்றிய பதங்களைப் பேசுகின்ற பொழுது, அப்பதங்களின் அடிப்படைக் கருத்து உள்ளத்தில் உதயமாக வேண்டும். அப்பொழுது தான் உச்சரிக்கின்ற மந்திரத்துக்கு வலிவு வருகிறது.

காயத்ரீக்கு இன்றியமையாத மூன்று வினைச்சொற்களை இனி ஆராய்வோம். வரேண்யம் என்பது வர்ணித்தல் எனும் வினையின் விகாரமாம். வரேண்யன் என்னும் சொல் போற்றுதற்குரியது என்றும், வர்ணிப்பதற்குரியது என்றும், விளக்குதற்குரியது என்றும் பொருள்படுகிறது. தங்கம், வெள்ளி முதலிய தாதுக்களை விளக்க விளக்க அவைகள் சுடர்விடுகின்றன. பரமனை விளக்குவதற்கு ஏற்ப ஜீவாத்மனிடம் ஞானச் சுடர் வளருகிறது. பரமனை விளக்குதலே ஆராதனையாகிறது. பரமனைப் பற்றிய விளக்கத்தைப் “பொருள்சேர் புகழ்” என்று பொய்யாமொழிப் புலவர் வள்ளுவர் போற்றுகிறார். நரஸ்துதி பொருள் சேராத புகழ். பரம்பொருளைப் பற்றிய ஸ்துதி பொருள் சேர்ந்த புகழ். ஆயிரம் ஆயிரமாக சொற்களை வாரிக் கொட்டிப் புகழ்ந்து கொண்டு போனாலும் அதனுடைய புகழுக்கு முடிவில்லை. பரமனை இடையறாது புகழ்ந்துகொண்டிருக்க வேண்டும் என்னும் கோட்பாட்டை வரேண்யம் என்னும் பதம் விளக்குகிறது.

வினைச்சொல் தீமஹி. தியானிப்போமாக என்பது இதன் பொருள். ஆத்ம சாதனங்களுள் இது தலை சிறந்தது. அஷ்டாங்க யோகத்தில் ஏழாவது அங்கமாக இருப்பது தியானம். இது முதிர்ந்தால் சமாதியாகப் பூர்த்தியாகிறது. காயத்ரி மந்திரத்தைப் பயன்படுத்துகிற பொழுது சிறிது நேரம் தியானம் பண்ணுவது அவசியமாகிறது.

தியானத்துக்காக நிமிர்ந்து உட்காரவேண்டும். சிரசு, கழுத்து, நெஞ்சு ஆகியவை நேராக இருக்கவேண்டும். உள்ளத்தைச் சுடர்விட்டு ஒளிர்ந்து கொண்டிருக்கின்ற தாமரை மலராகக் கருதவேண்டும். அதில் சுயம் ஜோதி சொரூபமாக வழிபடு தெய்வம் வீற்றிருப்பதாக உணர்தல் வேண்டும். இந்த உணர்வில் நிலைத்திருப்பது தியானமாகிறது. இங்ஙனம் ஐந்து நிமிஷத்துக்குக் குறையாமல் அரைமணி நேரம் வரையில் தியானத்தில் அமர்ந்திருக்க வேண்டும். தியானம் நமது தேசியப் பண்பு. பல்லாயிரம் ஆண்டுகளாக பரதகண்டத்துப் பெருமக்கள் காலையிலும், மாலையிலும் சந்தியா நேரங்களில் ஆழ்ந்து தியானத்திலிருந்து பழகி வந்திருக்கிறார்கள். இந்தப் பண்பில் ஊறியிருப்பதற்கேற்ப ஆன்மிகம் மக்களிடத்து ஓங்குகிறது.

ஈண்டு இயம்பியுள்ள இரண்டு நல்வினைகளுள் ஒன்று நாவால் போற்றுவது; மற்றது மனத்தால் எண்ணுவது. ஜீவாத்மன் செய்கின்ற செயல்களுள் இவையிரண்டும் பாரமார்த்திகப் பண்பாட்டுக்கு உரியவைகள். ஆத்ம சாதகன் இவ்விரண்டையும் ஊக்கத்தோடு அனுஷ்டுக்கக் கடமைப் பட்டிருக்கிறான்.

ப்ரசோதயாத் என்னும் வினைச்சொல் மூன்றாவதாக வந்தமைகிறது. தூண்டுகிற என்பது இதன் பொருள். இச்செயல் ஜீவாத்மனுடையதன்று. உள்ளத்தினுள்ளே வீற்றிருக்கின்ற பரமாத்மனுடைய செயல் ஆகின்றது இது. ஜீவாத்மனுடைய செயலுக்குத் துவக்கமும், முடிவும் உண்டு. ஆனால் பரமாத்மனுடைய செயலுக்கோ ஆதி அந்தம் இல்லை. இச்செயலைத் தான் ஆன்றோர்கள் அருள் என்று அழைக்கின்றனர். அருளின் பாங்கு சர்வகாலமும் உள்ளத்தினுள்ளே நிலைபெற்றிருக்கிறது. ஆத்ம போதத்தில் விழிப்படைந்து வருகிறவர்களுக்கு அது விளங்குகிறது. அருளின் பாங்கை உள்ளத்தினுள்ளே உணர்பவனைத் தான் இருபிறப்பாளன் என்று சொல்லவேண்டும். வெறும் உபநயனச் சடங்கால் இந்த உணர்வு உருவெடுக்காது. பரிபாகத்தின் விளைவாகவே இது உருவெடுக்கிறது.

இந்தக் காயத்ரீ மந்திரத்தில் இறைவனுடைய அருளும், ஜீவப் பிரயத்தனமும் இடம் பெற்றிருக்கின்றன. இவ்விரண்டையும் ஒன்று படுத்துவது தான் யோகம். ஆக, பாரமார்த்திகப் பெருவாழ்வுக்குத் தகுதியுடையவர்களே காயத்ரீ மந்திரத்தைச் சரியாகப் பயன்படுத்த வல்லவர்கள் ஆகின்றார்கள்.

காயத்ரீ மந்திரத்தில் மெய்யெழுத்தை நீக்கிவிட்டு உயிரெழுத்தும், உயிர்மெய் எழுத்தும் சேர்ந்து இருபத்து நான்கு அக்ஷரங்கள் இருக்கும். இவை மூன்று வரிகளாகப் பிரிக்கப் பட்டு ஒவ்வொரு வரியிலும் எட்டு எழுத்துக்கள் அமையப் பெற்றிருக்கும். இதுவே காயத்ரீ அமைப்பின் முறைமையாகும். இம்முறைமை வேதங்களில் முக்கிய இடம் பெறுகிறது.

வேதங்களின் உட்கருத்துக்களெல்லாம் காயத்ரீயில் அடங்கியிருக்கின்றன என்பது ஐதிகம். காயத்ரீயில் அடங்கியிருக்கிற கருத்து யாது என்று ஆராய்ந்து பார்க்குமிடத்து, பரம்பொருளுக்கும், ஜீவாத்மனுக்கும் இடையில் உள்ள இணக்கத்தை அது ஞாபகமூட்டுகிறது. ஜீவாத்மனைப் பரமாத்மன் மயமாகப் பண்படுத்துதற்கு அது வழிகாட்டித் தருகிறது. ஆக, ஜீவாத்மன் பரிணமித்து மேலோங்கி வந்து பரமாத்மனைச் சேர்வது குறிக்கோள். இது வேதங்களின் திட்டம். மானுட வாழ்க்கையின் முடிந்த நோக்கம் இதுவேயாம். இந்த நோக்கத்தைச் சுருக்கமாக காயத்ரீ மந்திரம் தெளிவுபடுத்துகிறது. ஆதலால் தான் காயத்ரீ மந்திரத்தை வேதங்களின் சாரம் என்று சான்றோர் சாட்டியிருக்கின்றனர்.

———

ஸ்ரீராம காயத்ரி–ஓம் தாசரதாய வித்மஹே  சீதா வல்லபாய தீமஹி தந்நோ ராம ப்ரச்சோதயாத்

ஸ்ரீ சீதா காயத்ரி–ஓம் ஜனக புத்ரியை வித்மஹே ராம ப்ரியாய தீமஹி தந்நோ சீதா ப்ரச்சோதயாத்

ஸ்ரீராம பாத காயத்ரி–ஓம் ராம பாதாய வித்மஹே ஸ்ரீராமபாதாய தீமஹி தந்நோ ராம பாதப் ப்ரச்சோதயாத்

விபீஷண காயத்ரி மந்திரம்.. “ஓம் ராம பக்தாய வித்மஹே சர்வாஸ்ரயாய தீமஹி தந்நோ விபீஷண ப்ரசோதயாத்”

—————-

அனாயேனம் ஹரிஸ்ரேஷ்ட தத்தம் அஸ்யா அபயம் மம:
விபீஷனோவா சுக்ரீவ யதி வா ராவண ஸ்வயம் ||– வால்மீகி ராமாயணம், யுத்த காண்டம்

சிவனும் அம்புய மலரில் அயனும் இந்திரை கொழுநன்
அவனும் வந்திட உதவும் அரி எனும் பிரமம் அது
துவளும் அஞ்சன உருவு தொடரு செங் கமல மலர்
உவமை கொண்டு இதில் ஒருவன் உலகில் வந்ததுகொல~ கம்பராமாயணம், அனுமபடலம்

————–

ஆயுர்வேத, சித்த மருந்துகள் மட்டும் அல்லாது ஆங்கில மருந்துகளை ஏற்போரும் மருந்துகளை விழுங்கும் முன்னால்,
ஸ்ரீ ராமபாணம் ஸ்ரீ ராமபாணம் ஸ்ரீ ராமபாணம் பாஹிமாம்
ஸ்ரீ ராமபாணம் ஸ்ரீ ராமபாணம் ஸ்ரீ ராமபாணம் ரக்ஷமாம் —என்று ஓதி மருந்துகளை,
மாத்திரைகளை, டானிக்குகளை உட்கொள்வதால் அந்த மருந்துகளின் முழுப் பலனையும் பெற்று உடனடி நிவாரணம் பெறலாம்.

————-

காயத்ரி வேதஜனனி காயத்ரி பாபநாசினி
காயத்ர்யாஸ்து பரம்  நாஸ்தி திவி சேஹ ச பாவநம்- –யோகரிஷி யஞ்யவல்க்யர்
காயத்ரி தேவி  வேதத்தின் தாய். இந்த மாதா பாவங்களை அழிப்பவள். பூலோகத்திலும்  தேவலோகத்திலும்,  காயத்ரி மாதாவிற்கு ஈடு இல்லை.

கூர்ம புராணம், காயத்ரி தேவியை போற்றும் பொழுது,  இதையே சொல்கிறது

காயத்ரி வேதஜனனி  காயத்ரி லோகபாவனி
வேதத்தின் தாய், உலகை  புனிதமாக்குபவள்
ந காயத்ர்யா:  பரம் ஜப்யம் ஏதத்  விந்ஞானமுச்யதே மந்திரத்தை விட   உயர்ந்த மந்திரம் இல்லை

—————-

ஸ்ரீ இராமாயண ரஹஸ்யங்கள்–

ஸ்ரீ நாரதர் மோகித்து குணவான் இத்யாதிக்கு பதில் சொல்லும் முன்பு –
காமன் உடல் கொண்ட தவத்தார்க்கு உண்மை உணர்த்த –ஆனந்த கண்ணீர் பெருகி –
ஸ்ரீ வால்மீகியும் அதே நிலையிலே -தெரிந்து கேட்ட கேள்வி அன்றோ –
ஸ்ரீ ராமன் சரித்திரம் இன்னும் ஒருவர் சொல்லிக் கேட்க ஆசையால் கேட்க்கிறார்

சித்ர கூடம் எழுந்து அருளும் பொழுது முதலிலே வால்மீகி ஆஸ்ரமம் தானே –
ஸ்ரீ பரத்வாஜர் சொல்லி ஸ்ரீ பெருமாள் போனார் -ஸ்ரீ வால்மீகீம் அபிவாதயே அயோத்யா -56-மகரிஷி
பிரமுதிக-ஸ்ரீ ராகவன் ப்ரீதி சம்யுக்தம் வசனம் -அருளியது உண்டே
காட்டுக்கு வந்த விஷயம் அறிவேன் என்றாரே –
ஸ்ரீ வால்மீகி ஆஸ்ரமத்துக்கு தமஸா தீரத்தில் உள்ளது -அங்கே கொண்டு போக ஸ்ரீ பெருமாள் ஸ்ரீ லஷ்மணனுக்கு சொல்லி அனுப்பினார்
நம் தமப்பனாருக்கு ஆத்ம சஹா என்றும் சொல்கிறார் அந்தக் கட்டத்தில்

சோகமே ஸ்லோகம் -ஸ்ரீ ராம சரித்திரம் –ராமனை வாழ்த்துவதாக மா நிஷாதா -முதல் ஸ்லோகம் -ஆதி காவ்யம் தானே இது

ஸ்ரீ கம்பர் -அண்ணலும் நோக்கினான் –
சீதை பிராட்டியை குடிலோடே கூட்டி போனதாக சொன்னவை வால்மீகி சொல்ல வில்லை -வால்மீகி சொன்னதே பிரமாணம்
ஸ்ரீ கம்பன் -கம்பத்தில் வந்தது -இவர் பரம ஸ்ரீ வைஷ்ணவர் -ஹிரண்ய வதைப்படலம் -230-
ஸ்ரீ ஆழ்வார்கள் ஸ்ரீ வால்மீகி சொல்லாததை சொல்வதும் பிரமாணம் –
அங்குல்யா அக்ர தாம் ஹன்யா –ஸ்ரீ பெருமாள் சொன்னதை விவரித்து -ஸ்ரீ கம்பர் -தம் குல தைவம் சரித்திரம்
லஷ்மண ரேகா -எந்த ராமாயணத்திலும் இல்லை — கர்ணபரம்பரை
அணில் கைங்கர்யம் ஸ்ரீ ஆழ்வார் பாசுரங்களில் மட்டும் உண்டே

யவ்வனம் தன சம்பத் பிரபுத்வம் அவி விவேகம் -சர்வ நாசகாரம் சதுஷ்ட்யம்
தேவர்கள் அர்த்திக்க ராமம் மானுஜம் ஜெகநா -ராவண சம்ஹாரம்
பவித்ராணாம் சாதூனாம் விநாசாய துஷ் க்ருதாம் தர்ம ஸம்ஸ்தாபநார்த்த மூன்றும் தானே சொல்லி
மழுங்காத –தொழும் காதல் –
முதலை முதலை என்று கதறினாலும் முதலே தன்னை கூப்பிட்டது போலே வந்தான் –
அ என்று கதறினான் -அகாரார்த்தம் தன்னை என்று வந்தான்
எண்ணிலும் வரும் என் இனி வேண்டுவன்-
தான் அறிந்த சம்பந்தமே ஹேதுவாக வருவான் -26-பொருளே தெரியாமல் சொன்னாலும் பலன் கிட்டும் –
அர்த்தம் நமக்கு தெரியாது இருந்தாலும் பலன் -வணக்கம் பிரதம மந்திரி சொல்ல கேட்ட நாம் மகிழ்வது போலே
அகாரார்த்தம் தெரியாமல் அ என்றாலும் வந்தானே
நாராயணன் நாகணை மிசை நம்பிரான் மணி வண்ணன் இவ்வளவு அகாரத்துக்கும் உண்டே

ஹூங்காரம் -மாட்டுவண்டிக் காரன் ஹாவ் ஹாவ் சொல்லுவது போலே – ஹஸ்தத்தால் -அடித்து -அக்ரி -காலால் உதைத்து –
இவ்வளவும் கருடனுக்கு பண்ணி த்வரைக்கு நமஸ்தே
துதிக்கை ஸ்துதிக்க கை -தொழும் காதல் அன்றோ –
கரஸ்த கமலாநி -தானே கையாலே பறித்த புஷ்பத்தை தனது கையாலே சமர்ப்பிக்க ஆசை கொண்டதே
சாது பரித்ராணம் -சாது லக்ஷணம் க்ஷண கால விஸ்லேஷம் கல்ப கோடியாக நினைப்பவர்
கம்பர் -கரா–அரவணைத்த துயில்வோய் என்று அழைத்த அந்த மெய்ப்பொருளை ராமன் பெயர் -காட்டிக் கொடுத்து
அவதாரம் -அவ தரத்தி கீழே இறங்கி பரமபதத்தில் இருந்தும் என்றும் -தாழ எளிமையாக என்றும் இரக்கம் கொண்டு இறங்குதல் –
க்ருத்ஸ்னம் சீதாயாக சரித்திரம் மஹத் -முழுவதுமாக -பெருமையானது -நாடு நயமாக சொல்லி
பவ்லஸ்ய வதம் என்றும் – இராம சரித்திரம் –
திருவினை பிரித்ததால் பவ் லஸ்ய வதமும் இவளுக்காக
ராமாயணம் ராமஸ்ய அயனம் -ரமா
என்பதை ராமாயாக அயனம் -சிறை இருந்தவள் ஏற்றம் சொல்லுகிறது

பால காண்டம் -5-சர்க்கம் கதை – -18 சர்க்கம் அவதாரம்-அவதாரம் -9-ஸ்லோகம் –
அதிலே சில ஸ்லோகங்கள் பின்பு விசுவாமித்திரர் வந்தது
700-சர்க்கம் ராமாயணம்
ரிஷ்ய சிங்கர் -உனக்கு கொம்பு முளைத்து இருக்கா வசனம் இதனால்
புனர்வசு -புஷ்யம் -ஆயில்யம்

இயம் சீதா மம ஸூதா ஸஹ தர்ம சாரீதவ–ப்ரதீச்ச ச ஏனாம் பத்ரம் தே பாணிம் க்ரீஹணீஸ்வ பாணினா–1-73-26-

சக்ரவர்த்தி கலப்பை உழுவது எதனால் -கர்ம யோக நிஷ்டர் அன்றோ -யாக பூமியை சுத்தி யஜமானனே செய்ய வேண்டுமே
இவனே தர்மம் -இதை நிலை நாட்டவே அவதாரம் -தர்மஞ்ஞா- சரணாகத வத்சலன் இதி விதித

முன் சென்று கல்லையும் முள்ளையும் அகற்றுவேன் –
கல் நெஞ்சு உள்ளாரையும் முள் போன்ற கருத்து உள்ளாரையும் திருத்தவே சுக்ரீவாதிகளை ஆபரணம் மூலம் திருத்தி
அதனால் தான் ஆண் உடை உடுத்திய பெண் போன்ற வார்த்தைகளை சொல்லி
ராமா மகா ஸஹ கச்சா-நீ பின் வா உறுதியாக
ஸஹ தர்ம சரிதா பவ -ராமனும் சொல்லி கூட்டிச் சென்றான்
இவள் சந்நிதியும் அசந்நிதியும் பெருமாள் ரஷிக்கவும்-வதம் செய்யவும் –
ஆவியை -ஜனகன் பெற்ற அன்னத்தை -அமுதினிலும் வந்த தேவியை பிரிந்து திகைத்தனையே -வாலி

———-

கச்ச மாதுல குலம் பரதேந ததா அநக -சத்ருக்நோ நித்ய சத்ருக்நோ நீத ப்ரீதி புரஸ் க்ருத –2-1-1-அயோத்யா காண்டம்
சத்ருக்ந ஆழ்வான் படி பாகவத சேஷத்வம்
அநக – அயோத்யையில் பாபம் இல்லாதவன் இவன் ஒருவன் இறே -உத்தேச்ய விரோதியே பாபம் –
ராம பக்தியான பாபம் -இஷ்ட பிராப்திக்குத் தடையானது தானே பாபம்

ராவணன் பண்ணிய பாபமே தசரதனுக்கு முடியில் நரை -அது கண்டு ராமனை பட்டாபிஷேகம்-இத்யாதி
ராவணன் செய்த தீமை தான் இந்த நரை -கம்பர்
பேதமைத்தாய் வரும்-இராமனுக்கு இராத மன்னனாக்கி பரதனுக்கு ராஜ்ஜியம் நல்கி பிறப்பை நீத்துவான் –
புத்ர சோகம் -வானத்தை நண்ணுவேன் -வான பிரவேசம் சொல்ல வந்ததாகவும்
பெருமாள் காட்டுக்கு போவதையும் வைத்து கம்பர்
பூ பழம் இரண்டையும் பார்க்க பூவை மறந்து பழத்தைக் கொள்ளுவாராய் போலே
ராமனைக் கொண்டு தசரதரனை மறந்தார் அயோத்யா வாசிகள் -துளசிதாசர் ராமாயணம்

பரதன் இல்லாத சமயம் இதுவே ப்ராப்த காலம் உனக்கு பட்டாபிஷேகம் –
மனஸ் ஒரு நிலையில் இருக்காதே -தசரதன் வார்த்தை -வால்மீகி
கைகேயி தமப்பனார் இடம் தசரதர் முன்பே அவள் பிள்ளைக்கு ராஜ்ஜியம் தருவதாக சொல்லி இருப்பதை நினைத்து
இந்த விஷயத்தை ராமனே சித்ரகூடத்தில் பரதனுக்கு சொல்லி –
சத்யம் காக்க வந்த தசரதர் -இப்படி செய்யலாமோ
ராமரும் அன்று எதற்கு இத்தை சொல்ல வில்லை என்றும் கேள்வியும் வருமே
கல்யாண காலத்தில் பண்ணும் சத்ய வாக்கியம் -மனைவியுடன் கூடிய காலம் -தர்மத்துக்காக –
உயிரைக் காப்பாற்ற -அடியவர்க்காக பொய் சொல்லலாம் icu-dr பார்க்கலாம் நான் dr பார்க்க முடியுமோ
நன்மை பயந்தால் பொய்மையும் -சரியே வள்ளுவர்
கைகேயி கல்யாணம் பொழுது பிள்ளையே இல்லையே
தர்ம சாஸ்திரம் மூத்த பிள்ளைக்கே -இவனுக்கு தர இவருக்கு அதிகாரம் இல்லையே
இந்த மாதிரி பேசி சமாதானம் பண்ண வேண்டி இருக்குமே அதனால் தசரதன் சொன்னார்

ராமர் சொல்லாத காரணம்
சொல்லி இருந்தால் வனவாசம் நின்று இருக்குமே –
பெரிய பெருமாளுக்கும் ராமருக்கும் சம்வாதம் -பட்டாபிஷேகம் நின்று போக கூனியை அனுப்பி
திரும்பி வந்த பின் ராமருக்கு ராஜ்ஜியம் திரும்ப தருவதாக சொல்ல வில்லையே -பரதனுக்கு அரசு இல்லையே நியாயமா –
சித்ர கூடம்-மூத்தவன் இருக்க இளையவள் ஆண்டால் நரகம் -சாஸ்திரம் -என் ராஜ்ஜியம் தானே –
என் உடைமையை நான் என்ன வேண்டுமானாலும் பண்ணலாமே -உமக்கு சமர்ப்பிக்கிறேன் –
தர்மம் ஏற்று கொள்ளாமல் இருக்க கூடாதே -வனவாசம் முடித்து வந்தபின்பு கொள்கிறேன் -பிரதி நிதியாக பாதுகையை வைத்து –
இயம்பினன் அரசன் என்றாள் -நும் பணி மறுப்பனோ -பின்னவன் பெற்ற செல்வம் அடியனேன் பெற்றது அன்றோ –
இதுதான் பரதனுக்கு நீ வாங்கிக்கொடுத்துள்ளாய் –
மன்னவன் பணி அன்று -ஆகிலும் நும் பணி மறுப்பனோ

யாதோ ஜாதா -எங்கேயோ பிறந்தவள் கூனி -அயோத்யையில் பிறந்தவளாக இருந்தால் கெடுக்க மாட்டாள்
ராவணன் தீமையே கூன் வடிவில் கம்பர்
எதனால் கூனி செய்தால் என்பது வால்மீகி ராமாயணத்தில் இல்லை

பாதுகை முன்பு எங்கு இருந்தது
தகப்பனார் பட்டாபிஷேகத்துக்காக சேகரித்த சர்வமும் கொண்டு காண வந்தான் –
சித்ர கூடத்தில் பண்ணப் போகிறேன் -ஸ்லோகம் உண்டே
ராஜாவாகவே அழைத்து வர எண்ணி போனான் –
அதில் முக்கியமானவை செங்கோல் கிரீடம் தங்க கவசம் போட்ட பாதுகை -உண்டே
ராஜ்யத்தை அங்கீ கரிக்கவே பாதுகையில் ஏறி அருளினார் பெருமாள்
ஆரூரோஹ ரதம் ஹ்ருஷ்டா மகிழ்ந்து திரும்பினான் -மரவாடியை தம்பிக்கு வான் பணையம் வைத்து போய்

ஆழ்வார் பாசுரத்தில் உண்டே -அதனால் கம்பரும் காட்டுகிறார்
கூனி சிதைய உண்டை வில் –கோவிந்தா -கொண்ட கொண்ட அரங்க ஒட்டி -போன்றவை உண்டே
வால்மீகி –சொல்லாதது -சீதையா சரித்திரம் சொல்ல வந்ததே
12-வயசில் திருக் கல்யாணம் -24-வயசில் தண்டகாரண்யம் செல்ல
இவற்றை விவரிக்க வில்லையே வால்மீகி
14-வருஷம் பார்க்காமல் இருந்தால் செத்ததுக்கு சமம் -13-வருஷம் த்ரேதா யுகம் -12-வருஷம் கலியுகம் இன்றும் உண்டே

இப்போது எம்மனாரால் இயம்புவதற்கு எளிதோ -என்று கம்பர் எழுதாமல் மயங்கி விழ
ராமர் திரு முகம் காட்டி அருள –அப்போது அலர்ந்த செந்தாமரையை வென்றது
முள் கிரீடம் முன்பு -ஏறு போன்று மகிழ்ந்தான்
ஸுசீல்ய சாகரம் -ராமனை தேசிகன் கொண்டாடி -சீர் அணிந்த குகனோடு தோழமை கொண்ட அடையாளம்
அதிக நியதம் பிரபாவாத் பாதுகா சஹஸ்ரம்

தன் ஜோதியில் விரி ஜோதியில் மறைய பொய்யோ என இடையாளொடும் இளையானொடும் போனான்
மரகதமோ –மையோ -மரகதமோ மரி கடலோ மழை முகிலோ-ஐயோ இவன் வடிவு என்பதோர் அழியா அழகு உடையான்
திருக்கண்ணபுரம் பாசுரம் அடி ஒற்றி கம்பர்

12-வருஷங்கள் தண்டகாரண்யம் இருந்தவற்றையும் விவரமாக வால்மீகி சொல்லவில்லை
பிரிவை க்ஷணமும் சஹியாத பெருமாள் என்று -12-வருஷங்கள் இருந்து உணர்ந்த பிராட்டி –
வந்த கார்யம் செய்ய இப்படி வார்த்தை -எதுக்கு வீண் வம்பு ஸ்தூணா நிகன நியாயம்
ப்ரதிஜ்ஜை -உயிரை விட்டாலும் உன்னை விட்டாலும் இளைய பெருமாளை விட்டாலும்
ரக்ஷண தர்மத்தை விட மாட்டேன் -பெருமாளை சொல்ல வைக்க –
தன் அடியார் -சேர்க்கும் முன்பு அவள் மன்றாட பின்பு அவன் மன்றாட -இப்படி அன்றோ நாம்
ஆச்சார்ய -பாபம் இல்லாதவனே கங்கையில் இறங்கி ரஷிக்க முடியும் ஒருவனே செய்ய –
கங்கையில் முழிக்கினால் பாபம் போகும் நீர் சொன்னீரே அத்தை மனசில் வைத்து ரஷித்தேன் -கதை
அங்கீ கரித்த பின்பு பாபம் இல்லை -உன் அடியார் இருக்க பாபம் இருந்தாலும் என் அடியாராக பின்பு பாபம் இல்லையே

யாதிருச்சியா வந்தவர் கூனியும் சூர்பனகையும் -இருவராலும் காண்டங்கள் மாற
அழகான வடிவாக வந்ததாக ஆழ்வார் -அதை அடி ஒட்டியே -கம்பர் -கலை வணக்கு நோக்கு அரக்கி -ஆழ்வார் மான் போன்ற கண்
நடக்கிற அழகு பாட்டில் -கம்பர் -வஞ்சி என நஞ்சம் என வந்தாள்
ஹாஸ்ய ரசம் -இவ்விடத்தில் வால்மீகி
சூர்பனகையை வதம் பண்ணாமல் விட்டது -தாரையை வதம் பண்ண அங்கு விசுவாமித்திரர் –
அடுத்து பிராட்டி அருகில் இருக்க வதம் பண்ண முடியாதே
ஆத்மாய ஜமாந
தருணவ் ரூப சம்பன்னவ் -போலே கம்பரும் கர தூஷணாதிகள் –
மூக்கை அறுக்காமல் நாக்கை அறுத்து இருக்க வேண்டும் என்றார்களாம்

பெருமாளே பிராட்டியை பிரித்து கர தூஷணாதிகளை முடித்தார்
புஸ்தகம் எழுதினர்-dedicated to wife -இல்லாத படியால் எழுத முடிந்தது கதை போலே

மாரீசன் முதல் உபதேசம் பலிக்க சூர்ப்பனகை வந்து காமத்தை கிளப்ப மீண்டும் மாரீசன் இடம் சென்று –
சொன்னபடி செய்யா விட்டால் கொல்லுவேன் என்ன

அருந்தி விரும்பி வைத்தேன் -சபரி -அருந்தின கனிகளைக் கொடுக்க விரும்பி பெருமாள் கொண்டான்
கம்பர் நாதமுனிகள் காலம் -பட்டர் காலம் -கூட்டம் கூட்டமாக திருவாய் மொழி அனுபவம் சடகோப அபந்தாதியில் இருப்பதால்
பட்டர் காலமே என்பர் காஞ்சி ஸ்வாமிகள்
திருவடி -சப்த பிரயோகமும் கம்பர்
ஆஸ்ரித வாத்சல்யத்தால் ஸ்ரீ திரு மழிசை பிரான் அமுது செய்த பிரசாதம் ஸ்ரீ ஆராவமுத ஆழ்வார்
அமுது செய்தார் -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை
சூடிக் கொடுத்த மாலையை சூடுவானே
ரகுகுல திலகர் ஆச்சார்ய பிரதரான பெருமாள் -வேடுவச்சி -குரு ஸூஸ்ருஷையால் –
நாவுக்கு இனிதான பல மூலாதிகளை –தன் கையால் அமுது செய்யப் பண்ண விரும்பி அமுது செய்தார்
வண்டு கடித்த பழம் இனிமையாக இருக்குமே
வேதக்கடலே –சொல்லின் செல்வன் -கம்பர் /சொல்லில் செல்வோம் இப்பொழுது
விரிஞ்சனோ விடை ஏறியோ -விஷ்ணு தான் இல்லையே –

தரணி ஸூத சுக்ரீவன் சூர்யன் பிள்ளை இடம் சரணாகதி -ஸ்வாதந்தர்யத்தால் பரதந்தர்யத்தை
ஏறிட்டுக் கொண்டு நாதம் இச்சாமி
சுக்ரீவன் இடம் தான் பிராட்டி கடாக்ஷம் வாலி இடம் இல்லையே அதனால் தான்
முனிவர்கள் நியமனமும் சுக்ரீவனை இடம் செல்ல உபதேசம்
தம்பி மனைவி கொண்டதால் அதர்மம் –
அக்னி சாக்ஷியால் வாலி இராவணன் நட்பு உத்தர காண்டம்
துந்துபி சரீரம் வாலி எறிய மதங்க முனிவர் ஆஸ்ரமம் ரத்தம் விழா சாபம் -அதனால் நுழைய முடியவில்லை வாலியால்
நித்யம் பாதாதி வந்தனம் -லஷ்மணன் நூபுரம் ஒன்றே அறிவேன்
இப்படிப்பட்டவனை அந்த வார்த்தை சொன்னது -ஸ்த்ரீயம் புருஷ விக்ரஹம் பெருமாள் இடம் சொன்னது போலே
ராவணன் வரும் பொழுது பெருமாள் இளைய பெருமாள் இருக்கக் கூடாதே
மாரீசன் கூச்சல் பண்ணினது ராவணை முடிக்கவே
ராவணன் சீதையை கொண்டு போனதை அறிந்தும் நாலு திக்குகளிலும் அனுப்பியது
மூன்று லோகங்களையும் வென்றவன் எங்கு வைத்து இருப்பான் தெரியாதே

துஷ்கரம் க்ருதவான் ராகவா ஜீவாதி தாராயத்தி ஆத்மனோ தேகம் –
இது ஏதேனும் இரவல் உடம்போ சுமந்து கொண்டு இருக்க -ஸ்ரீ நம்பிள்ளை
நம் உடம்பு எம்பெருமானுக்கு சரீரம் நம் ஆத்மாவை போலே
மதுராம் வார்த்தை-தேவ பாஷையால் பேசாமல் மதுர பாஷையால் -தமிழில் திருவடி -இனிமையும் நீர்மையும் தமிழ் நிகண்டு
தமிழ் தமிழ் திரும்ப சொல்ல -அமிழ்து-ஸ்ரீ வால்மீகிக்கும் தமிழ் தெரியும்
புறநானூறு வால்மீகியார் என்பவர் உண்டே-திருவினை விட்டார் அனைத்தையும் விட்டார் –
இவள் சந்நிதியால் காகம் தலைப்பெற்றது -என்பதையே இவ்வாறு அருளிச் செய்கிறார்-
வால்மீகி தமிழிலும் ஆதி கவி
சிரத்தினால் தாங்கி மெலிந்தாள் -குளிர்ந்தாள்-கணையாழி பெற்ற நிலை கம்பர்

சரணாகதி சாஸ்திரம் -காண்டங்கள் தோறும் சரணாகதி உண்டே
சுக்ரீவம் சரணாகதி நாதம் இச்சாமி பலிக்க வில்லை -பயமூட்டி கார்யம் நான்கு மாதங்கள் கழித்து உதவினான் –
இது கிஷ்கிந்தா காண்ட சரணாகதி
சுந்தர காண்டத்தில் தான் காகாசூரன் சரணாகதி காட்டுகிறார் -வால்மீகி -அயோத்யா காண்டத்தில் நடந்ததை
விபீஷணஸ்து தர்மாத்மா ந து ராக்ஷஸ சேஷ்டித்த சூர்ப்பணகை ஷேப யுக்தியாக -வசவாக -சொல்லக் கேட்டு
என்று பார்ப்போம் என்று பாரித்து இருந்தார் பெருமாள் -மறக்குடி அறம் செய்யக் கெடும் –
இட்டு வா என்றால் சுட்டு வரணும் -மோதிரம் இட்டு வந்தவர் இலங்கையை எரித்து விட்டு வந்தார்
மீண்டும் ஒரு தூது -அங்கதன் -அவன் பேசின பேச்சு வால்மீகி ராமாயணத்தில் இல்லை
வாலில் நெருப்பு வைத்து அனுப்பிய குரங்கா -அத்தை துரத்தி விட்டோம்
வால் தானே குரங்குக்கு பிரதான அங்கம் என்றதுமே கதி கலங்கினான் ராவணன்
தீயிடை –குதித்த -அவள் வாய் சொல் வேகவதி வார்த்தை -பெண்ணால் அழிவு உனக்கு-
அவ் வணங்கை விட்டு விடு விபீஷணன்-அறிவில் மிக்கான் – சுட்டிக் காண்கிறான்

மடியில் கனம் இருந்தால் வழியில் பயம் -பழ மொழி ஸ்ரீ கூரத்தாழ்வான் பொன் வட்டில் எறிந்த பின்பே –
பெரும் செல்வம் நெருப்பாக -ஆழ்வார் -நெருப்பு இல்லாமல் வாழ்க்கை இல்லை –
உலகு வாழ்வுக்கு கொஞ்சம் செல்வம் வேண்டுமே -பெரும் செல்வராய் திருமால் அடியாரைப் பூசிக்க நோற்றார்கள்
நெருப்பும் செல்வமும் அளவோடு இருக்க வேண்டும் திருக்குறளும் உண்டே
உடையார் -சக்கரவர்த்தி / பெரிய உடையார் -ஜடாயு -/மங்களா சாசனம் செய்ததாலும் பெரிய -ஸ்ரீ பெரியாழ்வார் போலே
இவர் ஆயுஷ்மான் என்று வாழ்த்தினதால் தான் ஸ்ரீ பெருமாள் ஸ்ரீ சீதா பிராட்டியை விட்டு உயிருடன் இருந்தார் என்பர்
ஆச்சார பிரதானர் -சமுத்திரம் கடலைத் தாண்டக் கூடாது -ஸாஸ்த்ர விதி -ஆகையால் சேது

அபராத பிராயச்சித்தார்த்தமாக சுக்ரீவனையே இட்டு ஸ்ரீ விபீஷணனை அழைத்து வரச் சொல்லி
என் மீது வைத்த காதலால் சொன்னாய் ஆகிலும்
குகனோடும் ஐவரானோம் –நின்னோடும் எழுவரானோம் —
புகல் யரும் கானம் தந்து புதல்வரால் பொலிந்தான் உந்தை -உம்பி எம்பி ஆழ்வார் பாசுரம் படியே

இங்கேயே ஸ்ரீ விபீஷணனுக்கு பட்டாபிஷேகம் என்றால் ராவணன் திருந்தி வந்தால்
பிரதிசிஷ்யே மஹோ தயயே -வால்மீகி கருணை என்னும் கடல் கிடந்தனன் கரும் கடல் நோக்கி -கம்பர் –
ஸ்ரீ நஞ்சீயர் இத்தை மேற்கோள் காட்டி அருளுகிறார்
அதிகாரம் சம்பாதிக்க வேண்டாம் நின்ற நிலையிலே -சர்வாதிகாரம் -ஸ்ரீ வேல் வெட்டிப்பிள்ளைக்கு-
பட்டுப்புடவை தோய்க்கக் கெடும்–நூல் புடவை தோயாமல் கெடும் மடி-சுத்தம் –
த்ருஷ்டாந்தம் இதுக்கு வார்த்தாமாலையில் காட்டி –
கூரப்புடவை நனைக்காமல் -பிள்ளைக்கு நூல் புடவை நினைத்தே கல்யாணத்தில்
புறம் தூய்மை நீரால் அமையும் அகம் தூய்மை வாய்மையால் அமையும் -வள்ளுவர்

சரணா கதி பண்ணினதால் வரவில்லை -சமுத்திர ராஜன்
மொட்டைத்தலையன் இதிகாசம் ஸ்தோத்ரம் பண்ண மனுஷ்யனே மயங்கும் பொழுது பரமாத்மாவுக்கு சொல்ல வேண்டுமோ
அபராதம் மறந்து விரோதிகள் இடம் அம்பை விட்டு
மனுஷ்ய பாவனை ஏறிட்டுக் கொண்டு -ஸ்ரீ பெருமாள் -அதனால் தான் ஸ்ரீ சுக்ரீவன் இடமும் சமுத்திர ராஜனிடமும்
மிரட்டி தான் கார்யம் -ஆகிஞ்சன்யம் அநந்ய கதித்வம் இல்லாமல் பலிக்காதே
அணிலம் போல கைங்கர்யம் ஆழ்வார் மட்டும் -குரங்குகள் மலையை நோக்க -உபாத்தியாயர் ஊசி போலே
குளிக்க குளிக்க சமுத்திரம் குறையும் -என்பது அன்றோ அணில்கள் பாரிப்பு
மணலை ஒட்டி ஒட்டி அணை கட்டும் -என்பது அன்றோ அணில்கள் பாரிப்பு
ஓடி -ஓடினால் நிறைய மணல் ஒட்டிக்கும்
கைங்கர்ய பாரிப்பு
தரங்க நீர் -அலை உள்ள கடல் –
தோள்களின் மேல் மேல் பெருமாளை தூக்கி யுத்தம் என்பதால் திருவடி பெயர்

உனக்கு இவன் எப்படியோ அப்படியே என்பக்கம் நாம் கார்யம் செய்கிறேன்
எனக்கு நீ அப்படியே அப்படியே அவனும் என்னாமல் -அடியவன் என்னாமல் –
ஸ்ரீ பரதன் இடம் செய்தி சொல்லி திரும்பி வந்து ஸஹ போஜனம் வால்மீகி ராமாயணத்தில் இல்லை –
ஆகவே காய்கறிகள் இத்யாதி அந்தப்பக்கம் அன்னம் பருப்பு இந்தப்பக்கம் இன்றும் சாதிக்கிறோம்

அஞ்சிலே ஓன்று பெற்றான் -பஞ்ச சம்ஸ்காரம் திருமந்திரம் உபதேசம் அருளி
அஞ்சிலே ஒன்றைத் தாண்டி விரோதி ஸ்வரூபம் தாண்டி
அஞ்சிலே ஓன்று ஆறு ஆக -உபாயம்
அணங்கு-பிராட்டி புருஷகாரம்
பூ லோக வைகுண்டம் காட்டிக் கொடுக்கிறார் இத்தால்
அவன் நம்மை அளித்துக் காப்பான் –ஆச்சார்ய அபிமானம் உத்தாரகம்

ரஹஸ்யமாக ராவணன் சரணம் -அனைத்தையும் தொலைத்து தன்னையே சமர்ப்பித்து
ஆகாசம் சாகரம் ராவண யுத்தம் -பூமியில் விழுந்த விதியில் ஏற்றுக் கொண்டான் – லீலை தானே –
இது த்வார பாலகர்களில் ஒருவன் தானே -விபீஷணன் வெளிப்படையாக காட்டி இவன் அந்தரங்கமாக காட்டி -என்பர்-

————————————-————————————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வால்மீகி பகவான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ ஆதித்ய ஹ்ருதய ஸ்லோகங்கள் / ஸ்ரீ ராம மங்களம்–

November 24, 2023

ஸ்ரீ ஆதித்ய ஹ்ருதய ஸ்லோகங்கள்

ஸ்ரீ ஆதித்ய ஹிருதய ஸ்தோத்ரம் ஸ்ரீ ஸூர்ய மண்டலா வர்த்தியான ஸ்ரீ மன் நாராயணனுடைய அருளைப் பெறுத்தும்
என்பதாலேயே ஸ்ரீ கோவிந்த ராஜர் இதற்கும் வியாக்யானம் செய்து அருளி உள்ளார்

ஆதித்ய ஹ்ருதய சர்க்கத்தின் முதல் 2 ஸ்லோகங்கள் அகத்தியர் இராமபிரானை அணுகுதல்.
மூன்றாவது ஸ்லோகம் அகத்தியர் இராமபிரானை விளித்துக் கூறுவதாக அமைந்திருக்கிறது.
ஆதித்ய ஹ்ருதய மந்திரம் 4வது ஸ்லோகம் முதல் 26 வரை வெளிப்படுத்த பட்டுள்ளது.
ஸ்லோகங்கள் 4,5 ஆதித்யஹ்ருதயத்தின் பெருமைகள்.
ஸ்லோகங்கள் 6-15 சூரியனின் பெருமைகள், ஆத்ம போதம், உள்ளிருப்பதும் வெளியிலிருப்பதும் ஒன்றே என நிறுவுதல்
ஸ்லோகங்கள் 16-20 மந்திர ஜபம்
ஸ்லோகங்கள் 21-24 சூரிய போற்றிகள்
ஸ்லோகங்கள் 25, 26 பலன்கள், ஜபிக்கும் முறை
27-30 ஸ்லோகங்கள் ராமர் ஜபித்த முறையை கூறுகிறது.
முப்பத்தி ஒன்றாம் ஸ்லோகம் இந்தத் துதியால் மகிழ்ந்த சூரியன் இராமனை வாழ்த்துவதைக் கூறுவதாக அமைந்திருக்கிறது.

———

ஓம் அஸ்யஸ்ரீ, ஆதித்ய ஹ்ருதய ஸ்தோத்ர மஹா மந்த்ரஸ்ய,
அகஸ்த்யோ பகவான் ரிஷிஹி, அனுஷ்டுப் சந்தஹ:
ஸ்ரீ ஆதி ஆத்மா சூர்ய நாராயணோ தேவதா, நிரஸ்தா சேஷ விக்நதயா
பிரம்ம வித்யாதி ஸித்யர்த்தே, ஸர்வத்ர ஜெய ஸித்யர்த்தே ஜபே விதியோகஹ

—————-

ஜயது ஜயது ஸூர்யம் சப்த லோகைக தீபம் |
கிரண ஷமித பாப க்லேஷ துக்கஸ்ய நாஷம் ||
அருண கிரண கம்யம் ஆதிம் ஆதித்ய மூர்த்திம் |
சகல புவன வந்த்யம் பாஸ்கரம் தம் நமாமி ||–பூர்வாங்க ஸ்தோத்ரம் / தியானம்

வெற்றி வெற்றி (தரும்) கர்ம வீரமே (ஸூர்யம்), ஏழு உலகங்களின் தீபமே
ஒளிக்கதிர்களால் பாபங்களையும், கவலைகளையும் (உடல்வலி பற்றிய எண்ணங்களையும்), துக்கங்களையும் போக்குபவனே.
கிரணங்களால் ஆட் கொள்பவனே. ஆதி முதல்வனே. பரமாத்மனே
ஸகல உலகங்களாலும் வணங்க படுபவனே. ஒளி வீசுபவனே உனக்கு நமஸ்காரம்.

ஏழு உலகங்கள்- பூலோகம், புவர், ஸ்வர், மஹர, ஜனர், தபோ, ஸத்ய லோகம்

———

ததோ யுத்த பரிஷ்ராந்தம் ஸமரே சிந்தயா ஸ்திதம் |
ராவணம்ச-அக்ரதோ த்ருஷ்ட்வா யுத்தாய ஸமுபஸ்திதம் || 1

போர்க்களத்தில் போரினால் களைப்படைந்து,போர் குறித்த ஆழ்ந்த சிந்தனைகளுடன் இராமன் நின்றார்
இராவணன் தயாராகி களத்தில் முன்னிலையில் நின்று பலமுடையவனாக தோன்றினான்.

———–

தெய்வ-தைஷ்ச ஸமாகம்ய த்ருஷ்டுமப்யாக தோரணம் |
உபாகம்ய-அப்ரவீத் ராமம் அகஸ்த்யோ பகவான் ர்ஷி(ஹி): || 2

தேவர்கள் அணைவரும் ஒன்று கூடி போரைப் பார்க்க இருந்தனர்
தேவர்களுடன் இருந்த அகஸ்த்ய பகவான்,போருக்கு முயன்று நிற்கும் ராமரை அருகில் அணுகி சொன்னார்.

———

ராமராம மஹாபாஹோ ஷ்ருனு குஹ்யம் ஸனாதனம் |
யேன-சர்வான்-நரீன், வத்ஸ, ஸமரே விஜயி-ஷ்யஸி || 3

இராமா, இராமா! பெரும் தோள் வலிமை கொண்டவனே! கேள் இரகசியத்தை,(அது) காலம் காலமாக என்றுமுள்ளது
எல்லா மக்களும் விரும்பி பயன்படுத்துவது. குழந்தாய், அது போரில் வெற்றி தருவது

————

ஆதித்யஹ்ருதயம் புண்யம் ஸர்வசத்ரு விநாசனம் |
ஜயா-வஹம் ஜபே-ந்நித்யம் அக்ஷய்யம் பரமம் சிவம்|| 4

ஸர்வ மங்கல மாங்கல்யம், ஸர்வ-பாப-ப்ரணாசனம் |
சிந்தா-சோக-ப்ரசமனம் ஆயுsர்-வர்தனம் உத்தமம் || 5

ஆதித்யஹ்ருதயம் புண்யம்- ஆதிபரமனின் ஹிருதயம் – மந்திரம் நல்வினைகளைத் தருவது
ஸர்வசத்ரு விநாசனம் – உட்பகை, வெளிப்பகை என் அனைத்து எதிரிகளையும் நசிக்க-அழிக்க வல்லது
ஜயாவஹம்-வெற்றி தருவது
ஜபே ந்நித்யம் – எப்போதும் ஜபிக்க கூடியது
அக்ஷய்யம்- பொங்கி பெருகி கொண்டே இருப்பது (அழிவற்றது)
பரமம் – மிகப் பெருமை கொண்டது
சிவம் – மங்களம் தருவது. விடுதலையை தருவது
ஸர்வ மங்கள மாங்கல்யம் – அனைத்து நலன்களுகெல்லாம் நலன்களையும் தருவது. நிலையான பேரின்பம் தருவது
ஸர்வ பாப ப்ரணாஸனம் – அனைத்து பாவங்களையும் போக்குவது
சிந்தா சோக ப்ரஸமனம் – மனக் கவலைகளையும் குழப்பங்களையும் நீக்குவது
ஆயுர்வர்த்தனம் – நீண்ட ஆயுளைத் தர வல்லது
உத்தமம் – சிறந்தது

———–

ஆதித்யரின் தன்மைகள் – பெருமைகள்

ரஷ்மி-மந்தம் ஸமுத்யந்தம் தேவாசுர நமஸ்க்ருதம் |
பூஜையஸ்வ-விவஸ்வந்தம் பாஸ்கரம் புவனேஸ்வரம் || 6 ||

ரஷ்மி-மந்தம் (இதமான) பொன்னிறக் கதிர்களை பிரதிபலிப்பவர்.
ஸமுத்யந்தம் – பிரபஞசத்தின் எல்லையாக விளங்குபவர்
தேவாசுர நமஸ்க்ருதம்- தேவர்களாலும், அசுரர்களாலும், (நன்மை, தீமை செய்பவர்கள்) வணங்கப் படுபவர்.
பூஜயஸ்வ-வணங்கத் தகுந்தவர்.
விவஸ்வந்தம் – பரமசிவம்
பாஸ்கரம் – எல்லா ஞானத்தையும்- ஒளியையும் (மதி, அக்னி உள்பட) உருவாக்குவது.
புவனேஸ்வரம் – புவனத்தின் தலைமை.

இரகசியம்-3 ஒளி-சுயம்/ஆத்மன்/பிரமம், இருட்டு-மாயை/சுய அறிவின்மை.
கட உபநிசத் (II.ii.15) சூரியனோ சந்திரனோ, நட்சத்திரங்களோ ஒளிர்பவையல்ல.
பராமத்மனே அந்தர்யாமியாய் அணைத்திலும் ஒளிர்கிறான்.
எந்தவித வேறுபாடும் இல்லாமல் எல்லோருக்கும் சமமாக ஒளி தருபவர்.
(அதனால்) தேவர்களாலும் அசுரர்களாலும், எல்லோராலும் வணங்கப் படுபவர்.
பூஜயஸ்வ-கடமைக்கு நேரடி எடுத்துக்காட்டாக இருப்பதால் வணங்கத் தகுந்தவர்.

ஸகல லோகங்களுக்கும் ஸ்வாமியான அந்த ஸூர்ய மண்டல அந்தரவர்த்தியான ஸ்ரீ மன் நாராயணி நீர் பூஜியும்

————–

ஸர்வ தேவாத்மகோஹி ஏஷ ஹ: தேஜஸ்வீ ரஸ்மி பாவனஹ: |
ஏஷ தேவாசுர கணான் லோகான் பாதி-கபஸ்திபி ஹி:|| 7

எல்லா தேவர்களின் வடிவம்
ப்ரகாசங்க்களிலும் ப்ரகாசமானது. அதே நேரத்தில் இதமானப் பொன்னிறக் கதிர்களை வெளிப்படுத்துவது.
இவரே தேவர்களும் அசுரர்களும் எல்லா உலகங்களையும் கதிர் கரங்களால் காப்பாற்றுபவர்.

எல்லா வஸ்துக்களையும் பிரகாசிக்க வல்ல கிரணங்களை யுடையவன்
தனது கிரணங்களாலே தேவாதி ஸர்வ பூதங்களையும் ரக்ஷித்து அருளுகிறான்
ஆகையாலே ரஸ்மி பாவந -என்னும் திரு நாமம் உடையவன்

—————-

ஏஷ ப்ரஹ்மா ச விஷ்ணு ச சிவ-ஸ்கந்த: ப்ரஜாபதிஹி:|
மஹேந்த்ரோ-தனத: காலோ யம-ஸோமோஹ் அபாம்பதி ஹி:||8

ஸூர்ய பகவானே பிரும்மா(ஆக்குபவர்- ப்ரஹம என்றால் பெரிதிலும் பெரிதானவனும்),
விஷ்ணு(காப்பவர் விஷ்ணு என்றால் எங்கும் நிறைந்தது ),
சிவன் (அழிப்பவர் சிவ என்றால் மங்கலம்),
ஸ்கந்தன் (ஸ்கந்த என்றால் இணைப்பு & ஊற்று=, அன்பிற்கும் அறிவிற்கும் அணைத்திற்கும் ஊற்றாக இருப்பவனும்),
ப்ரஜாபதி-ஜீவ ராசிகளின் தலைவர்,
இந்திரன் (புலங்களின் அதிபதி),
தனத – குபேரன் (செல்வத்தின் அதிபதி),
காலோ – காலத்தை (நேரத்தை) உண்டாக்குவன்,
யமன்(இறப்பின் அதிபதி, தண்டிப்பவன், நல்வழிபடுத்துபவன்),
ஸோமோ -சந்திரன்(ஊட்டத்தின் அதிபதி),
அபாம் பதிஹி – தண்ணீருக்கு அதிபதி (வருணன்).

அனைவரும் இவனே -ஸர்வம் கல்விதம் ப்ரஹ்மம் –

————-

பிதரோ வஸவ: ஸாத்யா ஹ அஷ்வினௌ மருதோ மனுஹு: |
வாயு அஹ்னி: ப்ரஜா ப்ராணஹ: ருதுகர்த்தா ப்ரபாகரஹ: || 9-ருது கர்த்ர ப்ரபாகரஹ–பாட பேதம்

பிதரோ -மூதாதை(முன்னோர்கள், வம்சம், குலம்),
வஸவ-எல்லா செல்வங்களும் ஆன அஷ்டவசுக்கள்,
சாத்யர்கள்-கருமவசப்படாத நித்யர்களும்,
அச்வினி தேவர்கள் (தேவலோக வைத்தியர்கள்),
மருத்துக்கள் (காற்றின் துணைவர்களான மருத் தேவர்களும்- தென்றல், புயல்),
மனு (மனிதர்களின் தந்தை),
வாயு-காற்று, அக்னி-நெருப்பு,
ப்ரஜா ப்ராணன்-மக்களின் உயிர்க் காற்று,
ருதுகர்த்தா- பருவங்களை (மாற்றங்களை) உண்டாக்குபவர்.
ப்ரபாகர: – உதயத்தை ஏற்படுத்துகிரார்; புகழைத் தருபவர்

எட்டு வசுக்கள் – அபன், துருவன், சோமன், தரன், அனிலன், அனலன், ப்ரத்யுஷா, ப்ரபாசா
சாத்யா – அனந்தன், கருடன், விஸ்வக்சேனன், பாஞ்சஜன்யன், சுதர்சனன் போன்றவர்கள்
ஆறு பருவங்கள், கோடை, மழை, முன்பனி, கடும்பனி, இலையுதிர், வசந்தம்

ஸாஷாத் விஷ்ணுவே பாலந கர்த்தாவாக இந்த ஸமஸ்த தேவதைகளுக்கு எல்லாம் அந்தர்யாமியாய் இருந்து அருளுகிறவன்

—————-

இப்படி ஸ்வரூபத்தை அருளிச் செய்து ஸ்தோத்ரம் அருளிச் செய்கிறார்

ஆதித்ய ஸவிதா ஸூர்யஹ: கக: பூஷா கபஸ்திமான் |
ஸூவர்ண ஸத்ர்சோ பானு: ஹிரண்யரெதா திவாகரஹ:|| 10–ஸூ வர்ண ஸ்தபநோ பாநு –-பாட பேதம்

ஆதித்ய–, மூலப் பரம் பொருள்
ஸவிதா – உயிரை உருவாக்குபவர்
ஸூர்ய-செயல் வீரர் செயலாற்றத் தூண்டுபவனும்
கக-வானத்துப் பறவை வானவெளியில் நடமாடுபவனும்
பூஷா -வளர்ப்பவனும்-மழையால் வளர்ச்சி தருபவர் அனைவருக்கும் உணவளித்து வளர்ப்பவனும்
கபஸ்திமான் -ஒளிக் கதிரோன்
ஸ¤வர்ண ஸத்ருசோ- பொன்னிறத்தோன்
பானு- ஒளிக் காந்தியுள்ளவன்
ஹிரண்யரேதோ – அனைத்தையும் படைக்கும் திறன் கொண்டவனும்
திவாகர – பிரகாசமான பகலொளியை தோற்றுவிப்பவர்

————–

ஹரித்-அஸ்வ ஸஹஸ்ரார்சிஹி: ஸப்த ஸப்திர் மரீசிமான் |
திமிரோன்மதன: ஷம்பு த்வஷ்டா மார்தாண்ட அம்ஷுமான்|| 11-

ஹரித் அஸ்வ – வெற்றியை வாகனமாக உடையவர்–பச்சைக் குதிரையுடையவர் (பச்சை வெற்றியின் சின்னம்).-பச்சைப்பயிர்களை வளர்ப்பவன்
ஸஹ்ஸ்ரார்ச்சி – ஆயிரம் கரங்களால் எல்லா செயல்களையும் செய்பவர்-
ஆயிரம் கிரணங்களை (தீ நாக்குகள்) கொண்டு இந்த உலகத்தின் அனைத்துச் செயல்களையும் நடத்துகிறான்
ஸப்த ஸப்தி-ஏழு குதிரைகள் / உலகங்கள் / நிறங்கள் / நாட்கள் உடையவர்
மரீசிமான் -ஓளிக்கிரணங்கள் கொண்டவர்.உலக இயக்கங்களுக்கெல்லாம் மூலகாரணம் இவனது கதிர்கள் தானே.
திமிரோன் மதன – இருளை / அறியாமையையை போக்குவர்
ஷம்பு -மங்களம் அளிப்பவர்.அனைத்தையும் குறைப்பவன்.
ஸ்த்வஷ்ட துரத்ரிஷ்டத்தை விரட்டுகிறவர்–இறந்த உடல்களையும் தாவரங்களையும் மங்கச் செய்வதன் மூலம் அடுத்த சுழற்சிக்கு வழி வகுக்கிறான்.
மார்தாண்ட – மிகுந்த வலிமை உடையவன். உலகத்தில் எல்லா பொருட்களும் உயிர்களும் இவனிடமிருந்தே வலிமையைப் பெறுகின்றன.
அம்சுமான் -மேகம் மறைத்து நிற்கும் போதும் தன் உருவத்தை உயிர்கள் பார்க்க இயலாத போதும்
தன் கதிர்களால் எங்கும் பரவி உலக இயக்கத்தை நடத்துபவன்.

———–

ஹிரண்யகர்ப்ப ஷிஷிர தபனோ, பாஸ்கரோ ரவி(ஹி): |
அக்னிகர்ப்பா அதிதிபுத்ர-(ஹ): ஷன்க ஷிஷிர நாஷன (ஹ): || 12

ஹிரண்ய கர்ப்ப-சூக்ஷ்ம ஸரீரமுள்ளவர் ஞானத்திற்கும், வளர்ச்சிக்கும் காரணமானவர்.-பொன்மயமான கருப்பையை உடையவன்.
உலகத் தோற்றம் ஹிரண்யகர்ப்பம் என்ற பொன்முட்டையிலிருந்து நிகழ்ந்ததாக சொல்வது மரபு.
ஷிஷிர- கடுங்குளிரை உருவாக்குபவர். கதிர்கள் குறைவாக இருக்கும் நிலையே குளிர் நிலை.
அதனால் இவனே குளிரைத் தருபவனாகவும் இருக்கிறான்.
ஸ்தாபனோ-சூடாகவும், நெருப்பாய் எரிபவர்.
பாஸ்கரோ -ஒளியானவர்/ஞானமானவர். உலகத்தில் இருக்கும் எல்லா பொருட்களும் ஒளிர்வது இவனது கதிர்களால் தான்.
ரவி- எல்லாவற்றையும் உருவாக்குபவன். எல்லோராலும் புகழ்ப்படுபவர்.
அக்னி கர்ப்போ தீயை தன்னுடலாகக் கொண்டவன்.
அதிதே: புத்ர அதிதியின் புதல்வர்
ஷன்க- ஆனந்த மயமானவன் மறையும் போது குளிர்ச்சியாக தோற்றமளிப்பவர்
ஷிஷிர நாஷன- குளிரை விலக்குபவர்

————–

வ்யோம நாத ஸ் தமோ பேதீ, ருக் யஜு ஸ்ஸாம பாரக ஹ: |
கனவ்ரிஷ்டிர் அபாம் மித்ரோ: விந்த்ய வீதீ ப்லவங்கமஹ: || 13-விந்த்ய பீதீ ப்லவங்கமஹ–பாட பேதம்

ஸூர்ய பகவான் ஸூர்ய பகவான் அண்ட வெளியின் தலைவன்.
அஞ்ஞான இருளை அகற்றி தீமைகளையும் மரண பயத்தையும் போக்குகிறார். வேதங்களை கரை கண்டவர்.
கதிர்கள் ஏற்படுத்தும் வெப்ப நிலை மாற்றங்களால் பெரும் மழையை பொழிவிக்கிறார்.
அபாம் மித்ர – நீர் நிலைகளை நேசிக்கிறார்.
விந்த்ய வீதி ப்லவங்கம- விந்த்ய மலைகளை தெய்வீகமாக – விரைவாக கடக்கிறார்.-தஷிணாயத்தில் விந்த்யத்தின் வழியாகப் போகிறவன்

(ருக், யஜுர், சாமம் எனப்படும் மூன்று வேதங்களையும் கண்டு உலகிற்குச் சொன்னவன்.
வேதங்கள் யாராலும் உருவாக்கப்படவில்லை; அதனால் அதனை அபௌருஷேயம் என்று சொல்வார்கள்.
அவை என்றும் இருப்பவை. ரிஷிகள் அவற்றைக் கண்டு சொன்னார்கள்.
அதனால் அவர்களுக்கு மந்த்ர த்ரஷ்டா (மந்திரத்தைக் கண்டவர்கள்) என்று பெயர்.)

—————

ஆதபீ மண்டலீ ம்ருத்யு ஹு: பிங்கல: ஸர்வ தாபன ஹ: |
கவிர் விஷ்வா மஹாதேஜா ஹ: ரக்த: ஸர்வ-பவோத்பவ ஹ: || 14

அவரே வெப்பத்தை கொடுக்கிறார். உயிர்களின் முதலும் முடிவும் அவரே. அவரே அகிலத்தை இயக்குகிறார்.
எங்கும் நிறைந்து இருக்கிறார். அவரது செங்கதிர்கள் உலகத்தை உயிரினங்களை வாழ வைக்கின்றன.

ஆதபீ -வெப்பத்தை உருவாக்குபவர் கொளுத்துபவன்
மண்டலீ – வட்ட வடிவானவர்
ம்ருத்யு- மரணவடிவானவன்
பிங்கல-பொன் நிறத்தோன்
ஸர்வதாபன- எல்லாவற்றையும் எரிப்பவர்
கவி அனைத்தையும் அறிந்தவன்.
விஷ்வோ- அண்ட வடிவானவன்.
மஹா தேஜா- மிகப்பெரும் ஒளிவடிவானவன்.-சிவந்த வண்ணம் கொண்டவன்.
ரக்த-எல்லோரிடத்தும் அன்பானவர்
ஸர்வபவோத்பவ- எல்லா உயிர்களும் பொருட்களும் தோன்றுமிடமானவன்.

———

ஆதித்யருக்கு நமஸ்காரங்கள் / சூரிய துதி

நக்ஷத்ர-க்ரஹ தாராணாம் அதிபோ விஷ்வ பாவன ஹ: |
தேஜஸாம் அபிதேஜஸ்வீ த்வாதசாத்மன் நமோஸ்து தே || 15

வானில் ஒளிவீசும் பொருட்களுக்கெல்லாம் பால்வெளிக்கும் தலைவர். அவரே அண்டத்தின் வடிவம்.
ஒளி வீசுபவர்களுக்கெல்லாம் ஒளியானவன் பன்னிரெண்டு உருவில் ஒளி மயமானவரே நமஸ்காரம்.

ஒரு மாதத்திற்கு ஒன்றாக  பன்னிரண்டு மூர்த்திகளின் பெயர்கள்
இந்திரன், தாதா , பகன், பூஷா, மித்ரன், வருணண் அர்யமான், அர்சிஸ், விவஸ்வான், த்வஷ்டா, சவிதா – விஷ்ணு.

————–

நம: பூர்வாய கிரயே பச்சி-மா-த்ரயே நம ஹ: |
ஜ்யோதிர் கணாணாம் பதயே தினாதிபதயே நம ஹ: || 16-

வணங்குகிறேன் உதிப்பவரே உதயத்தை தருபவரே மறைபவரே நிறைவை தருபவரே வணக்கம்.
ஓளிர் தன்மை படைத்தவர்களுக்கு அதிபதியே
ஒவ்வொரு நாளின் அதிபதியே வணக்கம்.
வணங்குகிறேன் கிழக்கு மலையில் உதிப்பவரே மேற்கு திசையில் மறைபவரே வணக்கம்.

———–

ஜயாய ஜயபத்ராய ஹர்யஷ்வாய நமோ நம ஹ: |
நமோ நம-ஸஹஸ்ராம்சோ ஆதித்யாய நமோ நம ஹ: || 17

வெற்றி வடிவானவருக்கு, வெற்றியின் மங்களங்களை தருபவருக்கு நமஸ்காரம்.
பச்சை குதிரையை -வெற்றியை – வளத்தை உடையவருக்கு மீண்டும் மீண்டும் வணக்கங்கள்
ஆயிரம் கதிர்களினால் அணைப்பவருக்கு எல்லையில்லா அம்சமுள்ளவர் நமஸ்காரம் நமஸ்காரம்.
ஆதி முதல்வனுக்கு நமஸ்காரம் நமஸ்காரம்-அதிதியின் பிள்ளையான உனக்கு நமஸ்காரங்கள்

————-

நம உக்ராய வீராய சாரங்காய நமோ நம ஹ: |
நம-பத்ம-ப்ரபோதாய மார்த்தண்டாய நமோ நம ஹ: || 18-

கடுமையானவருக்கு (உக்ரம்) வீரருக்கு வணக்கம். சீரானவர்க்கும் தடைகளற்றவனுக்கு நமஸ்காரம்
பல வண்ண கதிர்கள் ஏவும் வில்லை உடையவருக்கு வணக்கம்.
தாமரைகளை மலரச் செய்பவனுக்கு நமஸ்காரம்
மிக்க வலிமை பொருந்தியவருக்கு – அழிக்கவும் பின் அவற்றை உருவாக்கவும் வல்லமை கொண்ட ஸூர்யனுக்கு நமஸ்காரம்.

————

ப்ரஹ்ம்-ஈஷான்-அச்யுத்-ஈஷாய ஸூர்யாய ஆதித்ய வர்சஸே |
பாஸ்வதே ஸ்ர்வ பக்ஷாய ரௌத்ராய-வபுஷெ நம ஹ: || 19 ||

ப்ரம்மா, ஷிவன், விஷ்ணு மூவருக்கும் தலைவரே
செயல் வீரனே, ஆதி முதல்வனே எங்கும் வியாபித்து இருக்கும் பேரெழிலானவருக்கு நமஸ்காரம்.
மிகுந்த ஒளி – காந்தி படைத்தவனுக்கு,
எல்லாவாற்றையும் விழுங்குபவனுக்கு – கால உருவானவருக்கு,
ருத்ரனின் உருவங்கொண்டவனுக்கு நமஸ்காரம்.

—————

தமோக்னாய ஹிமக்னாய ஷத்ருக்னாய அமிதாத்மனே |
க்ருதக்னக்னாய தேவாய ஜ்யோதிஷாம்-பதயே நம ஹ: || 20-

இருளை (அறியாமை) அழிப்பவருக்கு
குளிரை அழிப்பவருக்கு, எதிரிகளை அழிப்பவருக்கு, எல்லா உயிர்களுக்கும் ஆத்மாவாய் இருப்பவருக்கு
செய்நன்றி மறந்தவர்களை அழிப்பவருக்கு
ஒளி வீசுபவரே
பிரபஞ்சத்தின் மூலம் – ஒளிகளுக்கெல்லாம் தலைவருக்கு நமஸ்காரம்

————-

தப்த சாமி கராபாய வஹ்னயே விஷ்வகர்மனே |
நம(ஸ்) தமோ-(அ)பினிக்னாய ருசயே லோக ஸாக்ஷினே || 21 ||

உருக்கப்பட்ட தங்கம் போல் ஒளிப்பிழம்பானவர்க்கு,
தீ வடிவானவருக்கு -அணைத்தையும் எரிப்பவர்,
உலகத்தை படைத்தவருக்கு- அதன் அணைத்து செயல்களுக்கும் காரகர்,
இருளை நீக்குபவருக்கு,-ஜனங்களுடைய புண்ய பாப ரூப கர்மங்களுக்கு சாஷியானவரே உமக்கு நமஸ்காரங்கள்
உலகத்தில் ஒளியை எல்லாம் உடையவருக்கு, உலக சாட்சியானவருக்கு நமஸ்காரம்.

————-

இப்படி ஸ்தோத்திரங்களை அருளிச் செய்து
மேலும் அவனது ஸ்வரூபத்தைப் பற்றி அருளிச் செய்கிறார்

நாச-யத்யேஷ வை-பூதம் ததேவ-ஸ்ருஜதி ப்ரபு ஹு: |
பாயத்யேஷ தபத்யேஷ வர்ஷத்யேஷ கபஸ்திபி ஹி: || 22

உயிர்களை எல்லாம் அழிக்க வல்லவரும் அவரே. அவருக்கு நமஸ்காரம்.
அவரது அவற்றை இவனே பிறப்பிக்கிறான் இறைவன் இவனே
இவனே காக்கிறான்
தன்னுடைய ஒளி பொருந்திய கதிர்களால் இவனே வெயிலாக காய்கிறான். மழையாகப் பொழிகிறான்

————-

ஏஷ-ஸுப்தேஷு ஜாகர்த்தி பூதேஷு பரிநிஷ்தித ஹ: |
ஏஷ-ஷேவாக்னி-ஹோத்ரம் ச பலம் சைவாக்னி ஹோத்ரிணாம் || 23-

ஸூர்ய பகவான் உலகத்து எல்லா உயிர்களின் இருதயத்தில்-ஜீவனாக இருந்து விழிப்பாக நிலை நிற்கிறான்.
இவர் தான் வேள்வித் தீ. தீ வழிபாட்டின் வடிவம் – வேள்வியின் நிவேதனமும் பலனும் அவரே.

———-

வேதாஸ்-ச க்ரத-வஷ்சைவ க்ர்தூனாம் பலம்-ஏவ ச |
யானி-க்ருத்யானி லோகேஷு ஸர்வ ஏஷ ரவி: ப்ரபு ஹு: || 24

வேதங்களின் சாரத்தில் இருக்கிறார்.
தத்தம் கடமைகளாகவும் – சடங்குகளாகவும்
உண்மையுடன் செய்பவர்களுக்கு,சடங்குகளின் கடமையின் பலனாக இருக்கிறார்.
என்ன என்ன செயல்கள் செய்யப்படுகின்றனவோ இவ்வுலகத்தில்
அவை எல்லாமும் ஒளி படைத்தவன் அவரே இறைவன்-தலைவன்

——————-

ஆதித்ய ஹ்ருதய ஸ்தோத்ரத்தின் பெருமைகள்: பலஸ்ருதி

ஏனம் ஆபத்ஸு க்ருச்ரேஷு கான்தாரேஷு பயேஷு ச |
கீர்த்தயன் புருஷ: கச்சிந்-நாவ-ஸீததி ராகவ || 25-

ராகவா ரவி, எல்லாவித ஆபத்து நேரங்களிலும்(உடல், மன, ஆன்மீக காரணிகளால்), அவமானத்திலோ,
பயமுறுத்தும் நேரங்களிலும், துன்பங்களிலும் வழிபடுவோரை எப்போதும் கைவிடமாட்டான்.
இந்த ஸ்தோத்திரத்தை ஜபித்தால், நிச்சயமாக அவற்றிலிருந்து மீண்டு வருவார்கள்.

————–

பூஜ-யஸ்-வைனம் ஏகாக்ரோ: தேவதேவம் ஜகத்பதிம் |
ஏதத் த்ரிகுணிதம் ஜப்த்வா யுத்தேஷு விஜயி ஷ்யஸி || 26-

ஒருமிக்க மனதுடன் வணங்குவாய்
தேவர்களுக்கும் தெய்வமானவனை உலகத்தின் நாதரை
இந்த ஆதித்ய ஹ்ருதயத்தை மும்முறை ஜபித்து
போரில் கண்டிப்பாக வெற்றி அடைவாய்.

——————–

இராமர் மந்திரம் ஓதி மனத்தெளிவு பெறுதல்

அஸ்மின் க்ஷணே மஹா பாஹோ ராவணம் த்வம் வதிஷ்யஸி|
ஏவம் உக்த்வா ததா அகஸ்த்யோ ஜகாம-ச-யதா-கதம் || 27

இந்த நொடியிலேயே, வலிமையான தோள்கள் உள்ளவனே,
இராவணனை நீ வதைப்பாய்
என்று கூறி அங்கிருந்த அக்ஸ்த்ய முனிவர்
எப்படி வந்தாரோ அப்படியே சென்றார்

————–

ஏதஸ் ஸ்ருத்வா மஹா தேஜா நஷ்ட சோகோ-பவத்-ததா |
தாரயாமாஸ-ஸுப்ரிதோ ராகவ: ப்ரய-தாத்மவான்(உ) || 28-

அருள் மொழிகளைக் கேட்ட, மிகுந்த தேஜஸ்வி ராகவன்
அப்போதே கவலைகள் எல்லாம் நீங்கியவன் ஆனான்
நோக்கத்தில் உறுதியுள்ளவனும், மிகவும் மகிழ்ந்தவனும் ஆனான் முயற்சிகளில் சிறந்தவன் ஆன இராகவன்

—————

ஆதித்யம் ப்ரேக்ஷ்ய ஜப்த்வா து பரம் ஹர்ஷ-மவாப்தவான் (உ) |
த்ரிர்-ஆசம்ய ஷுசிர்பூத்வா தனுராதயாய வீர்யவான் (உ) || 29-

ஆதித்யனைப் பார்த்துக் கொண்டே (ஸ்தோத்ரத்தை) ஜபித்து
மிகவும் மேலான மகிழ்ச்சியை அடைந்தான்
மும்முறை ஆசமனீயம் செய்து உடலை பரிசுத்தம் செய்துகொண்டு, வில்லை ஏந்தினான் வீரத்தில் சிறந்தவன்

————-

ராவணம் ப்ரேக்ஷ்ய ஹ்ருஷ்தாத்மா யுத்தாய ஸமுபா-கமத் (உ) |
ஸர்வ யத்னேன-மஹதா வதே-தஸ்ய த்ர்தோ-பவது || 30

இராவணன் போர் செய்யும் நோக்கத்துடன் வருவதை பார்த்து
மேலான எல்லா முயற்சிகளுடனும்
அவனை (இராவணனை) வதைப்பதற்கான உறுதியைக் கொண்டான் (இராகவன்).

—————–

சூரியன் ஆசி வழங்குதல்

அத-ரவி: ரவதத் நிரீக்ஷ்ய ராமம் முதித மனா: பரமம் ப்ரஹ்ருஷ்யமான ஹ: |
நிசி-சரபதி ஸம்க்ஷயம் அன்கி-விதித்வா ஸுரகண மத்யகதோ வசஸ்த்-வ்ரேதி || 31

அப்போது ரவி ‘விரைவில் நடத்துவாய் இராமா’ என்று மிகவும் மகிழ்ந்த மனத்துடன்,
மிக உயர்ந்த திருப்தியை அடைந்தவனாக, இருட்டில் உழல்பவர்களின் முதல்வனின்
அழிவு நேரம் நெருங்கியதை அறிந்து, தேவர்களின் மையத்திலிருந்து அருளினார்.

———-

முடிவு துதி

பானோ பாஸ்கர மார்தாண்ட ச்சண்ட ரஸ்மை திவாகர
ஆயுர் ஆரோக்யம் ஐஸ்வர்யம் வித்யாம் தேஹி நமஸ்துதே

ராமாயணத்தில் சர்க்க முடிவு

இத்யார்ஷே ஸ்ரீமத் ராமாயணே வால்மீகீயே ஆதிகாவ்யே யுத்த காண்டே
ஆதித்ய ஹ்ருதயம் நாம சப்தோத்தரசததம: சர்க்க: ||

இவ்வாறு வால்மீகியின் ஆதிகாவியம் ஸ்ரீமத் ராமாயணத்தில் யுத்த காண்டத்தில்
ஆதித்ய ஹிருதயம் எனப்படும் நூற்றேழாவது சர்க்கம் நிறைவடைந்தது.

———

மகிமைகள்
ஆதித்ய ஹ்ருதயம் எவ்வளவு மகிமை பொருந்தியது என்பதை இராமாயணத்தில் காணலாம்.
ஆதித்ய ஹ்ருதயம் புண்யம் – அது நல்வினைப்பயன்களைத் தருவது
ஸர்வ சத்ரு விநாசனம் (உட்பகை, வெளிப்பகை என் அனைத்து எதிரிகளையும் அழிக்க வல்லது)
ஜயாவஹம் (வெற்றி தருவது)
ஜபேத் நித்யம் – நாள்தோறும் சொல்லக்கூடியது (ஜபிக்கக்கூடியது)
அக்ஷயம் – அழிவற்றது பொங்கி பெருக கூடியது.
பரமம் – மிகப்பெருமை கொண்டது
சிவம் – மங்களம் தருவது
ஸர்வ மங்கள மாங்கல்யம் (அனைத்து நலன்களுகெல்லாம் நலன்களையும் தருவது)
ஸர்வ பாப ப்ரணாஸனம் (அனைத்து பாவங்களையும் போக்குவது)
சிந்தா சோக ப்ரஸமனம் (மனக்கவலைகளையும் குழப்பங்களையும் நீக்குவது)
ஆயுர்வர்த்தனம் (நீண்ட ஆயுளைத் தர வல்லது)
உத்தமம் – சிறந்தது

———–

வத்ரு வைலக்ஷண்யம் ,ஸ்தல வைலக்ஷண்யத்துடன் கூடிய அவதாரிகையுடன் – முன்னுரையுடன்
ஆதித்ய மண்டலத்தில் மத்யமத்தில் எழுந்தருளியிருக்கும் சூரியநாராயணன் பீடு கொண்டு அத்புதமாய் உதயமானார் .
ஆதித்ய ஹ்ருதயத்தை அருளிய அகஸ்தியர் மஹரிஷி நாமம் மற்றும் ஆதித்ய ஹ்ருதயம் பிறந்த கதை – விவரணம் அருமை .
ஆரோக்கியத்திற்கு – பாஸ்கரரையும் ,
ஞானத்திற்கு – ஈஸ்வரனையும்
தனத்திற்கு – அக்னிபகவானையும் மற்றும் மோக்ஷத்தை கொடுக்கும் வல்லமை படைத்த ஜனார்தனனான
நாராயணனையும் மோக்ஷபலத்திற்கு ஸ்துதிக்க வேண்டும் .தன்யோஸ்மின் .

சுந்தர காண்டத்தில் குறிப்பிட்டது போல் ஹனுமன் சீதாப்பிராட்டியுடன் உரையாட அருமையான
பொன்மொழியாகிற செந்தமிழை தேர்ந்தெடுத்து பேச தீர்மானித்ததின் மூலம் செம்மொழியாகிற
செந்தமிழ் – தீந்தமிழின் ஏற்றம் உலகுக்கு புலப்படும் .
ஸ்ரீ ராமாயணத்தில் ராவணனுடன் ராமன் போர் புரியும்போது சற்று சோர்வு அடைந்த தருணத்தில்
அகஸ்தியர் மகரிஷியால் ராமருக்கு புத்துணர்ச்சி ஊட்ட உத்திராயண புண்ய காலத்தில் ஆதித்ய ஹ்ருதயம் உபதேசிக்கபட்டது
ஆதித்ய ஹ்ருதயத்தில் முதல் இரு ஸ்லோகத்தின் அர்த்தவிசேஷங்கள் அருமை .
உலகமெங்கும் சூரியனாருக்கென்று ப்ரத்யோகமாய் பல கோவில்கள் எழுப்பப்பட்டுள்ள – அரிய பெரிய தகவல்கள்
விவரம் மற்றும் சூரியபகவானை ஆராதனை தெய்வகமாக கருதி வணங்கும் சௌராஷ்டிர வகுப்பினர் செய்தி அத்புதம் .

ரிக் வேதத்தில் சொல்லப்பட்ட’ சூரிய ஸுக்தம் ‘ ,ஸ்ரீ இராமாயணத்தில் அகஸ்திய மகரிஷியால் வழஙகப்பட்ட ஆதித்ய ஹ்ருதயம் ,
மஹாபாரதத்தில் பஞ்ச பாண்டவர்களும் ,த்ரௌபதியும் கூறிய சூரிய அஷ்டோத்தர சத நாமாவளி மற்றும்
மஹநீயர் அப்பய்ய தீக்ஷிதராரால் இயற்றப்பட்ட சூரிய சதகம் – இவைகள் சூரியநாயனாரின் பெருமைகளை உணர்த்தவல்லது .

ஆதித்யஹ்ருதயத்திற்கு கோவிந்த ராஜ்ஜிய பூஷணம் என்ற பெயரில் தனி வ்யாக்யானம் மற்றும்
மஹேஸ்வர தீர்த்தர் அருளிய ‘தத்துவ தீபிகா ‘ போன்ற பெரிய வ்யாக்யாத்தாக்களால் போற்றப்பட்ட
ஆதித்ய ஹ்ருதயம் ஸ்லோகம் என்பதின் மூலம் இந்த ஸ்லோகத்தின் ப்ராதான்யத்தை ஆஸ்த்ரிகர்களுக்கு தெரியப்படுத்தப்படுகிறது .

சூரியனை சஞ்சாரிக்கும் பாதை ஒரு எல்லைக்குள் உட்படாத நீண்ட பாதையாக இருப்பதாலும் ,
சூர்ய ரதத்திற்கு ஏக சக்ரம் அதை சாரத்யம் செய்யும் கருடனின் தமையனார் அங்க ஹீனம் கொண்ட அருணன் ,
அதில் பூட்டப்பட்ட 7 குதிரைகளுக்கு ஓரே ஒருசக்ரம் என பொருத்தமில்லாமல் சூரிய ரதத்தை செலுத்தும் பிரபாவம்
நமக்கு எந்த கடினமான சூழ்நிலையையும் எளிதில் வென்று விடலாம் என்ற உத்வேகத்தை கொடுக்க வல்லது
சூரியநாயனாரின் பிண்ணனி என்பது வெட்ட வெளிச்சம் .ஆதித்ய ஹ்ருதயத்திற்கு குரு அகஸ்திய மகரிஷி .
இது போன்ற பலபல அரிய பெருமைகளை அறிய வைக்கும் ஆதித்ய ஹ்ருதயம்

கும்பகோணத்தைச் சுற்றி சோழர்கள் கால நவக்ரஹ ஸ்தலங்களைப்போலவே சென்னையச் சுற்றி
பல்லவர் கால நவக்ரஹ ஸ்தலங்கள் ௨ள்ளன.கொளப்பாக்கத்தில் சூரிய ஸ்தலம். ௮கஸ்த்தீஸ்வரர் ஆலயம்.
நல்ல வேலை கிடைக்க இப்போதும் இளைஞர் கூட்டம் ௮லைமோதும்.

வந்தவாசியில் உள்ள இஞ்சிமேடு பெரிய மலை சிவன் கோவில் திருமணிச்சேறையில் அகஸ்திய முனிவர் குகை உள்ளது.
அவர் தெற்கு நோக்கி வந்த போது அந்த மலையில் கால் பதித்து தெற்கை தாழச்செய்து சமப்படுத்தியதாக கூறப்படுகிறது

ஆதித்ய ஸ்தோத்ர ரத்னம் -அப்பயா தீக்ஷிதர்
வால்மீகி பெயராலே திருவான்மியூர்
திரு நீர் மலை எழுந்து அருளு உள்ளார்
பூஷணம் கோவிந்தராஜர் -ஸ்ரீ ராமாயண வியாக்யானம்

ப்ரணவத்துடன் சேர்த்து ஸ்மரிக்கும் இம்மந்திரம் காம க்ரோத மத மாத்ஸயலயாதிகள் உட்பட
எல்லா விரோதிகளையும் போக்க வல்லது .
இந்த ஸ்லோகத்தை ஜபிப்போருக்கு அழிவு இல்லாத பலத்தையும் பரம மங்களத்தையும் கொடுக்கும் .
இதை கேட்பவருக்கு கவலை ,துக்கம் ஒழிந்து, பக்தி ரூபாவண்ண ஞானம் பிறந்து ,
நல்ல ஆரோக்யத்துடன் கூடிய தீர்காயுசை பெற்றுத்தரும் .
இந்த ஸ்லோகத்தை சொன்னவர் – அகஸ்திய மகரிஷி கேட்டவர் – ராமர் ,
இதை தொகுத்தவர் தபஸ்வி வாலமீகி.ஜ்வாஜலயமாய் – அதீத பிரகாசத்துடன் ஸ்வர்ணத்தை ஒத்த எண்ணற்ற
சூர்ய கிரணங்கள் பஞ்ச இந்திரியங்கள் வழியாய் – சரீரத்திற்குள் ஊடூரூவி சைதன்யமான- ஞானத்தை பிறப்பிக்கிறது .
அக்னி ,இந்திரன் ,வருணாதிகள் போன்ற தேவர்களுக்கு மிஸ்ர ஸத்வத்தையும் அசுரர்களை ரஜஸ் தமஸ் போன்ற குணங்களையும் கொடுத்து
தேவர்கள் ,இந்திரர்களால் ஏக ஸ்துதியாய் போற்றப்படுபவனாகவும் ஆதித்யன் திகழ்கிறான் .
இங்கனம் அவனை துதிப்போருக்கு நல்ஞானத்தை கொடுக்க வல்ல சூரிய பகவானை நமஸ்கரிக்கிறேன் .

தேவாஸுர நமஸ்க்ருத்தாய நமஹ வைவஸ்தே நமஹ ,பாஸ்கராய நமஹ ,புவனேஸ்வராய நமஹ ,தேஜஸ்வியே நமஹ ,
ரஷ்மி பாவ்னாயே நமஹ ,ப்ரஹ்மணே நமஹ ,ப்ரஜாபதியே நமஹ மஹேந்திராய நமஹா –
இந்த ஆதித்யனாய் விளங்கும் சூரிய நாராயணனை குறிக்கும் நவ நாமாவளிகளின் அணிவரிசை –
அவைகளின் அர்த்த விசேஷங்கள் அத்புதம் .தன்யோஸ்மின் .

எவன் ஒருவன் – யஞயத்திற்கு ப்ரஜாபதியாய் இருப்பதாலும் (ப்ரஜாபதியே நமஹ ),இந்திரனின் ஐராவத மஸ்தகத்தில்
சூர்யகிரணங்கள் பட்டு தெறித்து அக்கற்றைகள் தாமரைத்தடாகம் வரை பரவி அதையும் பிரகாசிக்க வைப்பதால் –
மஹேந்திராய நமஹ என போற்றப்படுவதாய் , ஸ்வாமி திலகர் வ்யாக்யானத்தின் படி தனம் என்ற ஞானத்தை பெற்று தந்து ,
பின் தனதான்யத்தையும் குபேரன் போல் கொடுப்பதால் தநதாந்யய் நமஹ எனவும் ,

செவந்தகமணி ப்ரபாவத்தை எடுத்துரைத்து – அதற்கு உடையவனான சத்யஜித் அதனுடன் நடந்தது வரும் தோற்றம் –
சூரியன் ஆகாசத்திலிருந்து இறங்கி பூமியில் பவனி வரும் தோற்றத்தை ஒத்து இருந்தது என அதன் பெருமைகளையும் கூறி ,
காலனாயும் சூரியன் இருப்பதால் கால மண்டல ஸ்பந்தனாய நமஹ எனவும் போற்றப்பட்டு ,
பின் ம்ருத்யுக்கும் ம்ருத்யுவையை சூர்யநாராயணனாய் திகழ்வதால் எமனாய நமஹ எனவும் ,
சோமனாகிய சந்திரனும் சூரியனிடத்திலிருந்து ஒளிக் கற்றைகளை பெற்று தான் பிரகாசிப்பதாலும் ,
சிவனார் தன் உடலின் பாதி பாகத்தை உமையவளைக்கு கொடுத்து அர்த்தநாரீஸ்வரர் என பெயர் பெற்று
தன் சக்தியை வெளிப்படுத்திய- சக்தியுடன் கூடிய ஆதித்யனாய் கருதுவதாலும் -சோமாய நமஹ என ஸ்துதிக்க படுகிறார் ஆதித்யன் .

இங்கனம் அக்னியாய ,திவாகராய பித்ருதேவதாய மருதமூர்த்தாய ,வசுமூர்த்திய சத்ய மூர்த்தியே ,வாயுவே ,ப்ராணாய ,
ருது கர்த்தயே ,பிரபாகராய , ஆதித்யாய சவித்ரே ,ஸ்வர்ணசத்ருயை பானுவே பூஷனோ ,கபஸ்திதே ,பானுவேஷாய ,
திவகராய சாயாதிபதே – போன்ற பற்பல ப்ரபாவத்தை உள்ளடக்கியதால் பல்வேறு பெருமைகள் வாய்ந்த
திரு நாமங்களால் சூர்ய நாராயணனை அந்தர்யாமியாகக் கொண்ட ஆதித்யன் போற்றப்படுகிறார் என்பதை அழகாய் ஸ்வாமி வருணித்தார் .

As per Rig Veda (8:72:16) says :
Adhukshat pipyushimisham urjam saptapadimarih Suryasya sapta rashmibhih
It means, 7 different colors of rays emitting from Sun, will give 7 different energies.
Sun temples built in Konark etc places in india are seen with 7 colored horses chariot.

ஆரோக்கியத்திற்கு பாஸ்கரனையும் ,தனதான்ய வ்ருத்திக்கு அக்னி பகவானையும் ,ஞானத்திற்கு சிவபெருமானையும் பிரார்தித்தாலும்
இவர்கள் அனைத்துள்ளும் அந்தர்யாமியாக ஸ்ரீமன் நாராயணன் உறைந்து அவரவர் தம்தம் தொழில்களை புரிய வைக்கிறார் என்றும்
மோக்ஷத்தை பெற்றுத்தர ஜனார்தனனான ஸ்ரீமந் நாராயணன் அனுகிரஹிக்கிறார்

ஸ்வாமி மயூர கவி அருளிய சூரிய சதகம் சதஸ் – ஸ்வாமி வேதாந்த தேசிகரின் கருட பஞ்சாசத்த்தை
ஓத்து இருப்பதை கோடிட்டு .கூர்நாராயணஜீயர் சாதித்த சுதர்ஷன் சதகமும் ஆதித்யனின் பெருமைகளை குறிப்பிட்டிருக்கிறது என்றார் .
மேலும் அகஞானம் என்கின்ற இருளை போக்குவதால் திமிரோன் மதனாய நமஹ என ஆதித்யன் போற்றப்படுகிறார்.
மற்றும் ,ரக்ஷிமிப்பதயே நமஹ,ஹரிதஸ் வஹாய நமஹ ,த்வவுட்ரே நமஹ மார்த்தாண்டாய நமஹ ,ஹயன சந்தயே நமஹ
அம்சுபதயே நமஹ ,ஹிரண்ய கர்ப்பாய

ஹரண்யகர்ப்பாயை ,சிசிராய ,தபாநாய யஸ்கரோ ரவிகி or பாஸ்கரோ ரவிகி ,ரவயே ,அக்னிகர்ப்ப ,அதிதே புத்ராய ,
சங்காய ,சிசிரநாசன ,வ்யோமநாதாய ,
தபோபேதியை ,ரிக் யஜுர் சாம பாரகாயை ,கண்வருஷ்டயே ,அபா மித்ராயே ,விந்த்யவீதி ப் ல வங்க மாணாய ,
ஆத்மீனே ,மண்டலினே ,ம்ருத்யவே ,பிங்களாய ,ஸர்வதாபனாயே ,
கவயே , விஸ்வஸ்மை, மஹாதேஜஸே சர்வேஷ்வரேலூ ரக்தக ,ரக்தாய ,ஸர்வ ப்யோத்பலாயே ,சூரியனாவே ,விஸ்வபாலனாக –
போன்ற இந்த நாமக்களுடன் ‘நமஸ் ‘ சப்தத்தை கூட்டி நாமாவளியாக நாராயணனை அந்தர்யாமியாக கொண்ட
சூரியபாகவனை ஸ்துதி செய்யக்கடவோம் என்றார் .

இந்த விஸ்வத்தில் ப்ரத்யக்ஷமாய் அனைவராலும் அங்கீகரிக்கப்பட்டு ஸ்வரூப ரூபமாக ஒளிவிட்டு காப்பதால்
விஸ்வபாலனாயே நமஹா என போற்றப் படுகிறார் .
மஹா தேஜஸ்வியாய் ஒளியை கொடுக்கும் ஸ்ரீமன் நாராயணனை அந்தர்யாமியாய் கொண்ட தேஜஸ்வியான
சூரியபகவான் என்றபடியால் தேஜஸாமபி தேஜஸ்வி என அழைக்கப்படுகிறார் .
இதுபோல் துவாதச மாதங்களுக்கும் சுடர் விடும் பெரும் ஜ்யோதியாய் – நாயகனாய் திகழ்வதால் த்வதசாத்மனே என ஸ்துதிக்கப்படுகிறார் .

நம பூர்வாய நமஹ – தொண்டரடிபொடி ஆழவார் திருமாலை என்ற திவ்யப்ரபந்தத்தில் சாதித்தபடி
குடதிசை முடியை வைத்து குணதிசை பாதம் நீட்டி என்றாற்போல் திருவரங்கப்பெருமான் –
குணதிசையாக போற்றப்படும் கிழக்கு திசையில் தன் திருவடிதாமரைகளை நீட்டிக்கொண்டு அடியார்களுக்கு திருவடி சேவை சாதிப்பதாலும் ,
மேலும் எம்பெருமானின் கால்களை தொழ ஹேதுவாய் சூரியன் காலையில் கிழக்குத்திசையில் உதித்தும் ,
பின் மாலை வேளையில் மால் ஆன திருமாலின் கடாக்ஷம் பெற்று மேற்கு திசையில் அஸ்தமிக்கிறார் என்கிற வேங்கடகவியின் கூற்றை .

இந்த வகையான காரணங்களால் சூரியன் முறையே – பூர்வாயாகிரனே நமஹ என்றும் ,பஸ் சிமாத்ரயே நமஹ எனவும்
அழைக்கிக்கப்படுகிறார் .வாரத்தின் எழு நாட்களுக்கும் அதிபதியாய் விளங்குவதில் தினாதிபதியே என வணங்கப்படுகிறார்.
மேலும் ஜெயமூர்த்தயே ,ஜெயபத்ராய ,ஹர்யஸ்வாய ,ஸ்யமாஸ் வாய வாய, சஹஸ்ராக்ஷீ ,ஆதித்யாய,உக்ராய ,வீராய சாரங்காய ,பத்மபிரதாய
பிரசாண்டாய ,ப்ரஹ்மாவிஷ்ணு சிவாத் மிகாயை ,- ஏஷ நாராயனாக – ப்ரஹ்மாச்சுத்தாயே ,பாஸ்வதே ,சர்வபக்ஷயாயே ,ரௌத்ரவடிவே ,தமோக் நாய ,ஹிமக் நாய சத்ருக்கினாயே என அந்தந்த நாமாவளிக்கு ஏற்ப அர்த்தங்களை தாங்கிக்கொண்டு ஜ்வாஜால்யமாய் பிரகாசிக்கிறார்

ஆதித்யா கிருதய நாமாவளியை நிறைவாய் வரிசைப்படுத்தியத்திலிருந்து –
சத்ருக்னாயே ,அமிதாத்மினே ,க்ருதகனனாகி ,தேவாய ,ஜ்யோதிஷயாம் பதயே ,தப்தகாமிக்கரா பாய ,
ஹரவே விஸ்வகர்மனே ,தபோயீ நிர்ணாயே ,ருசயே ,லோகஸாக்ஷினே ,பூதநாஸாயே ,பூத சிரஷ்டரே ,ப்ரபவே பாத யே ,
தபதே ,வர்ஷதே சுக் தேவி ஜாக்ரதே ,அந்தர்யாமிஸ்திதாயே ,அக்னிஹோத்ராயா ,அக்னிஹோத்ரபலப்ரதா யே
பதுமஸ்ம்ருத்தாயே பகவதே ப்ரஹ்மணே ,ருதேஹு விஜயஸ் யசு நிசந்தேகமாயே – போன்ற இந்த நாமாக்களை
‘நமஸ் ‘ சப்தத்தைக்கூட்டி 125-நாமாவளியாக்கி ஸ்வாமி ராமவர்மா என்ற திலகர் ,ஸ்வாமி சுதாகர் போன்றோரின் வ்யாக்யானத்த –

மேலும் அகஸ்திய மகரிஷி அருளிய இந்த ஸ்லோகம் ஸ்ரீராமாயணத்தில் ஒரு முக்கிய அங்கமாக இடம்பெறுகிறது.
மஹாபாரதத்தில் பஞ்சபாண்டவர்கள் சூரியநாராயணனை அந்தர்யாமியாகக் கொண்ட சூரியபகவானை ப்ரார்தித்து
அக்ஷய பாத்திரத்தை பெற்றதாலும் சூரியசதகத்தில் இதன் ப்ராதான்யத்தைக் குறிப்பிட்டதாலும் –
இதிகாசங்கள் புராணங்களில் இதன் முக்கிய பங்கு அனைவரும் அறியும் வண்ணம் புலப்படுகிறது .
இத்தகைய பெருமைகள் வாய்ந்த ஆதித்ய ஹ்ருதயத்தின் ச்லோகர்த்தங்களை எளிமைப்படுத்தி
ஆஸ்த்ரிகர்கள் அனைவரும் ஆச்ரயிக்கும் வண்ணம் அத்புதமாய் இதன் முக்கியத்துவத்தையும் பலாப லனையும் உணர வேண்டும்

——

ஸ்ரீ ராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே
சஹஸ்ர நாம தத்துல்யம் ராம நாம வரானனே

“ஸ்ரீ ராம்” என்று ஒரு முறை சொல்லப்படும் நாமம் ஸ்ரீ மஹாவிஷ்ணுவின் ஆயிரம் நாமங்களுக்கு நிகரானது.
எனவே ஒவ்வொரு நாளும் “ஸ்ரீ ராம்” என்று நாம் பாராயாணம் செய்யும் போது
அது முழு விஷ்ணு சஹஸ்ர நாமத்தையும் பாராயாணம் செய்வதற்கு நிகரானது.

————–

9 வரிகளை கொண்ட ஶ்ரீ ராமாயணம் ஸ்லோகம்

ஸ்ரீ ராமம் ரகுகுல திலகம்
சிவதனு சாக்ரிஹத சீதா ஹஸ்தகரம்
அங்குல்யா பரண சோபிதம்
சூடாமணி தர்சன கரம்
ஆஞ்சநேய மாஸ்ரயம்
வைதேஹி மனோ கரம்
வானர சைன்ய சேவிதம்
சர்வ மங்கள கார்யானுகூலம்
சததம் ஸ்ரீ ராமச் சந்திர பாலயமாம்

———————

ஏக ஸ்லோக ஶ்ரீ ராமாயணம்

ஆதெள ராம தபோ வனாதிகமனம்
ஹத்வா ம்ருகம் காஞ்சனம்
வைதேஹி ஹரணம் ஜடாயு மரணம் சுக்ரீவ சம்பாஷனம்
வாலீநிர்தலனம் சமுத்ர தரணம் லங்காபுரீ தாஹனம்
பஸ்சாத் ராவண கும்பகர்ண ஹனனம் ஏதத்தி ராமாயணம்

—————–

*ஶ்ரீ ராம ரக்ஷா ஸ்தோத்ரம்*

ஓம் அஸ்ய ஶ்ரீ ராமரக்ஷா ஸ்தோத்ரமம்த்ரஸ்ய புதகௌஶிக றுஷிஃ
ஶ்ரீ ஸீதாராம சம்த்ரோதேவதா
அனுஷ்டுப் சம்தஃ
ஸீதா ஶக்திஃ
ஶ்ரீமான் ஹனுமான் கீலகம்
ஶ்ரீராமசம்த்ர ப்ரீத்யர்தே ராமரக்ஷா ஸ்தோத்ரஜபே வினியோகஃ

த்யானம்
த்யாயேதாஜானுபாஹும் த்றுதஶர தனுஷம் பத்த பத்மாஸனஸ்தம்
பீதம் வாஸோவஸானம் னவகமல தளஸ்பர்தி னேத்ரம் ப்ரஸன்னம்
வாமாம்காரூட ஸீதாமுக கமல மிலல்லோசனம் னீரதாபம்
னானாலம்கார தீப்தம் தததமுரு ஜடாமம்டலம் ராமசம்த்ரம்

ஸ்தோத்ரம்
சரிதம் ரகுனாதஸ்ய ஶதகோடி ப்ரவிஸ்தரம்
ஏகைகமக்ஷரம் பும்ஸாம் மஹாபாதக னாஶனம்

த்யாத்வா னீலோத்பல ஶ்யாமம் ராமம் ராஜீவலோசனம்
ஜானகீ லக்ஷ்மணோபேதம் ஜடாமுகுட மம்டிதம்

ஸாஸிதூண தனுர்பாண பாணிம் னக்தம் சராம்தகம்
ஸ்வலீலயா ஜகத்ராது மாவிர்பூதமஜம் விபும்

ராமரக்ஷாம் படேத்ப்ராஜ்ஞஃ பாபக்னீம் ஸர்வகாமதாம்
ஶிரோ மே ராகவஃ பாதுபாலம் தஶரதாத்மஜஃ

கௌஸல்யேயோ த்றுஶௌபாது விஶ்வாமித்ர ப்ரியஃ ஶ்றுதீ
க்ராணம் பாது மகத்ராதா முகம் ஸௌமித்ரிவத்ஸலஃ

ஜிஹ்வாம் வித்யானிதிஃ பாது கம்டம் பரத வம்திதஃ
ஸ்கம்தௌ திவ்யாயுதஃ பாது புஜௌ பக்னேஶகார்முகஃ

கரௌ ஸீதாபதிஃ பாது ஹ்றுதயம் ஜாமதக்ன்யஜித்
மத்யம் பாது கரத்வம்ஸீ னாபிம் ஜாம்பவதாஶ்ரயஃ

ஸுக்ரீவேஶஃ கடீபாது ஸக்தினீ ஹனுமத்-ப்ரபுஃ
ஊரூ ரகூத்தமஃ பாது ரக்ஷகுல வினாஶக்றுத்

ஜானுனீ ஸேதுக்றுத் பாது ஜம்கே தஶமுகாம்தகஃ
பாதௌவிபீஷண ஶ்ரீதஃபாது ராமோ‌உகிலம் வபுஃ

ஏதாம் ராமபலோபேதாம் ரக்ஷாம் யஃ ஸுக்றுதீ படேத்
ஸசிராயுஃ ஸுகீ புத்ரீ விஜயீ வினயீ பவேத்

பாதாள பூதல வ்யோம சாரிணஶ்-சத்ம சாரிணஃ
ன த்ரஷ்டுமபி ஶக்தாஸ்தே ரக்ஷிதம் ராமனாமபிஃ

ராமேதி ராமபத்ரேதி ராமசம்த்ரேதி வாஸ்மரன்
னரோ னலிப்யதே பாபைர்புக்திம் முக்திம் ச விம்ததி

ஜகஜ்ஜைத்ரைக மம்த்ரேண ராமனாம்னாபி ரக்ஷிதம்
யஃ கம்டே தாரயேத்தஸ்ய கரஸ்தாஃ ஸர்வ ஸித்தயஃ

வஜ்ரபம்ஜர னாமேதம் யோ ராமகவசம் ஸ்மரேத்
அவ்யாஹதாஜ்ஞஃ ஸர்வத்ர லபதே ஜய மம்களம்

ஆதிஷ்டவான் யதாஸ்வப்னே ராம ரக்ஷா மிமாம் ஹரஃ
ததா லிகிதவான் ப்ராதஃ ப்ரபுத்தௌ புதகௌஶிகஃ

ஆராமஃ கல்பவ்றுக்ஷாணாம் விராமஃ ஸகலாபதாம்
அபிராம ஸ்த்ரிலோகானாம் ராமஃ ஶ்ரீமான்ஸனஃ ப்ரபுஃ

தருணௌ ரூபஸம்பன்னௌ ஸுகுமாரௌ மஹாபலௌ
பும்டரீக விஶாலாக்ஷௌ சீரக்றுஷ்ணா ஜினாம்பரௌ

பலமூலாஸினௌ தாம்தௌ தாபஸௌ ப்ரஹ்மசாரிணௌ
புத்ரௌ தஶரதஸ்யைதௌ ப்ராதரௌ ராமலக்ஷ்மணௌ

ஶரண்யௌ ஸர்வஸத்வானாம் ஶ்ரேஷ்டா ஸர்வ தனுஷ்மதாம்
ரக்ஷஃகுல னிஹம்தாரௌ த்ராயேதாம் னோ ரகூத்தமௌ

ஆத்த ஸஜ்ய தனுஷா விஷுஸ்ப்றுஶா வக்ஷயாஶுக னிஷம்க ஸம்கினௌ
ரக்ஷணாய மம ராமலக்ஷணாவக்ரதஃ பதிஸதைவ கச்சதாம்

ஸன்னத்தஃ கவசீ கட்கீ சாபபாணதரோ யுவா
கச்சன் மனோரதான்னஶ்ச ராமஃ பாது ஸ லக்ஷ்மணஃ

ராமோ தாஶரதி ஶ்ஶூரோ லக்ஷ்மணானுசரோ பலீ
காகுத்ஸஃ புருஷஃ பூர்ணஃ கௌஸல்யேயோ ரகூத்தமஃ

வேதாம்த வேத்யோ யஜ்ஞேஶஃ புராண புருஷோத்தமஃ
ஜானகீவல்லபஃ ஶ்ரீமானப்ரமேய பராக்ரமஃ

இத்யேதானி ஜபேன்னித்யம் மத்பக்தஃ ஶ்ரத்தயான்விதஃ
அஶ்வமேதாதிகம் புண்யம் ஸம்ப்ராப்னோதி னஸம்ஶயஃ

ராமம் தூர்வாதள ஶ்யாமம் பத்மாக்ஷம் பீதாவாஸஸம்
ஸ்துவம்தி னாபிர்-திவ்யைர்-னதே ஸம்ஸாரிணோ னராஃ

ராமம் லக்ஷ்மண பூர்வஜம் ரகுவரம் ஸீதாபதிம் ஸும்தரம்
காகுத்ஸம் கருணார்ணவம் குணனிதிம் விப்ரப்ரியம் தார்மிகம்

ராஜேம்த்ரம் ஸத்யஸம்தம் தஶரததனயம் ஶ்யாமலம் ஶாம்தமூர்திம்
வம்தேலோகாபிராமம் ரகுகுல திலகம் ராகவம் ராவணாரிம்

ராமாய ராமபத்ராய ராமசம்த்ராய வேதஸே
ரகுனாதாய னாதாய ஸீதாயாஃ பதயே னமஃ

ஶ்ரீராம ராம ரகுனம்தன ராம ராம
ஶ்ரீராம ராம பரதாக்ரஜ ராம ராம
ஶ்ரீராம ராம ரணகர்கஶ ராம ராம
ஶ்ரீராம ராம ஶரணம் பவ ராம ராம

ஶ்ரீராம சம்த்ர சரணௌ மனஸா ஸ்மராமி
ஶ்ரீராம சம்த்ர சரணௌ வசஸா க்றுஹ்ணாமி
ஶ்ரீராம சம்த்ர சரணௌ ஶிரஸா னமாமி
ஶ்ரீராம சம்த்ர சரணௌ ஶரணம் ப்ரபத்யே

மாதாராமோ மத்-பிதா ராமசம்த்ரஃ
ஸ்வாமீ ராமோ மத்-ஸகா ராமசம்த்ரஃ
ஸர்வஸ்வம் மே ராமசம்த்ரோ தயாளுஃ
னான்யம் ஜானே னைவ ன ஜானே

தக்ஷிணேலக்ஷ்மணோ யஸ்ய வாமே ச ஜனகாத்மஜா
புரதோமாருதிர்-யஸ்ய தம் வம்தே ரகுவம்தனம்

லோகாபிராமம் ரணரம்கதீரம்
ராஜீவனேத்ரம் ரகுவம்ஶனாதம்
காருண்யரூபம் கருணாகரம் தம்
ஶ்ரீராமசம்த்ரம் ஶரண்யம் ப்ரபத்யே

மனோஜவம் மாருத துல்ய வேகம்
ஜிதேம்த்ரியம் புத்திமதாம் வரிஷ்டம்
வாதாத்மஜம் வானரயூத முக்யம்
ஶ்ரீராமதூதம் ஶரணம் ப்ரபத்யே

கூஜம்தம் ராமராமேதி மதுரம் மதுராக்ஷரம்
ஆருஹ்யகவிதா ஶாகாம் வம்தே வால்மீகி கோகிலம்

ஆபதாமபஹர்தாரம் தாதாரம் ஸர்வஸம்பதாம்
லோகாபிராமம் ஶ்ரீராமம் பூயோபூயோ னமாம்யஹம்

பர்ஜனம் பவபீஜானாமர்ஜனம் ஸுகஸம்பதாம்
தர்ஜனம் யமதூதானாம் ராம ராமேதி கர்ஜனம்

ராமோ ராஜமணிஃ ஸதா விஜயதே ராமம் ரமேஶம் பஜே
ராமேணாபிஹதா னிஶாசரசமூ ராமாய தஸ்மை னமஃ
ராமான்னாஸ்தி பராயணம் பரதரம் ராமஸ்ய தாஸோஸ்ம்யஹம்
ராமே சித்தலயஃ ஸதா பவது மே போ ராம மாமுத்தர

ஶ்ரீராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே
ஸஹஸ்ரனாம தத்துல்யம் ராம னாம வரானனே

இதி ஶ்ரீபுதகௌஶிகமுனி விரசிதம் ஶ்ரீராம ரக்ஷாஸ்தோத்ரம் ஸம்பூர்ணம்

———-

*ஶ்ரீ ராமாயண ஜெய மந்திரம்*

ஜயத்யதிபலோ ராமோ லக்ஷ்மணஶ்ச மஹாபலஃ
ராஜா ஜயதி ஸுக்ரீவோ ராகவேணாபிபாலிதஃ |

தாஸோஹம் கோஸலேம்த்ரஸ்ய ராமஸ்யாக்லிஷ்டகர்மணஃ
ஹனுமான் ஶத்ருஸைன்யானாம் னிஹம்தா மாருதாத்மஜஃ ||

ன ராவண ஸஹஸ்ரம் மே யுத்தே ப்ரதிபலம் பவேத்
ஶிலாபிஸ்து ப்ரஹரதஃ பாதபைஶ்ச ஸஹஸ்ரஶஃ |
அர்தயித்வா புரீம் லம்காமபிவாத்ய ச மைதிலீம்
ஸம்றுத்தார்தோ கமிஷ்யாமி மிஷதாம் ஸர்வரக்ஷஸாம் ||

———

ஸ்ரீ ராம மங்களம்

ஸகல சௌபாக்கியங்களையும் அளிக்கும் மந்திரம்.

மங்களம் கோஸலேந்த்ராய மஹநீய குணாப்தயே
சக்ரவர்த்தி தநூஜாய ஸார்வபௌமாய மங்களம்

வேதவேதாந்தவேத்யாய மேகஸ்யாமல மூர்த்தயே
பும்ஸாம் மோஹநரூபாய புண்யஸ்லோகாய மங்களம்

விஸ்வாமித்ராந்தரங்காய மிதிலா நகரீபதே:
பாக்யாநாம் பரிபாகாய பவ்யரூபாய மங்களம்

பித்ருபக்தாய ஸததம் ப்ராத்ருபி: ஸஹ ஸீதயா
நந்திதாகில லோகாய ராமபத்ராய மங்களம்

த்யக்த ஸாகேதவாஸாய சித்ரகூட விஹாரிணே
ஸேவ்யாய ஸர்வயமிநாம் தீரோதாராய மங்களம்

ஸௌமித்ரிணா ச ஜாநக்யா சாபபாணாஸி தாரிணே
ஸம்ஸேவ்யாய ஸதா பக்த்யா ஸ்வாமிநே மம மங்களம்

தண்டகாரண்ய வாஸாய கண்டிதாமர ஶத்ரவே
க்ருத்ரராஜாய பக்தாய முக்திதாயாஸ்(அ)ஸ்து மங்களம்

ஸாதரம் ஸபரீதத்த பலமூலாபிலாஷிணே
ஸௌலப்ய பரிபூர்ணாய ஸத்வோத்ரிக்தாய மங்களம்

ஹநூமத் ஸமவேதாய ஹரீஶாபீஷ்டதாயிநே
வாலிப்ரமதநாயா (அ)ஸ்து மஹாதீராய மங்களம்

ஸ்ரீமதே ரகுவீராய ஸேதூலங்கித ஸிந்தவே
ஜிதராக்ஷஸ ராஜாய ரணதீராய மங்களம்

ஆஸாத்ய நகரீம் திவ்யா மபிஷிக்தாய ஸீதயா
ராஜாதிராஜ ராஜாய ராமபத்ராய மங்களம்

மங்களாஶாஸந பரைர் மதாசார்ய புரோகமை:
ஸர்வைஸ்ச பூர்வைராசார்யை: ஸத்க்ருதாயாஸ்து மங்களம்

———–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ அகஸ்திய மகரிஷி திருவடிகளே சரணம்
ஸ்ரீ சீதாப் பிராட்டி லஷ்மண பரத சத்ருக்ந திருவடி சமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

தப ஸ்வாத்யாய நிரதம் தபஸ்வி வாக் விதாம் வரம் நாரதம் பரி பப்ரச்ச வால்மீகி முனி புங்கவம் –இஷ்டா தேவதா நமஸ்கார மங்கள ஸ்லோகம் —

November 20, 2023

பிதாமஹஸ்யாபி பிதாமஹாய ப்ராசேதஸாதேசபலப்ரதாய
ஸ்ரீபாஷ்யகாரோத்தம தேசிகாய ஸ்ரீசைலபூர்ணாய நமோ நம: ஸ்தாத்–ஸ்ரீ பெரிய திருமலை நம்பியின் தனியன்

ஸ்ரீ மத் கிருஷ்ண ஸமாஹ்வாய நமோ யாமுன ஸூநவே
யத் கடாக்ஷைக லஷ்யணாம் ஸூலபஸ் ஸ்ரீ தரஸ் ஸதா

ஸ்ரீ வைதேஹீ ஸஹிதம் ஸூரத்ரும -தலே ஹைமே மஹா மாண்டபே
மத்யே புஷ்ப்பக மாசநே மணி மயே வீராசநே ஸம்ஸ்திதம்
அக்ரே வாசயதி பிரபஞ்சன ஸூதே தத்வம் முனிப்ய பரம்
வ்யாக்யாந்தம் பராதிபி பரிவ்ருதம் ராமம் பஜே ஸ்யாமளம்

வீர ஆசனத்தில் ஸ்ரீ பெருமாள் -ஸ்ரீ வாயு குமாரர் ஸ்ரீ ராமாயணம் சாதித்து அருள –
ஸ்ரீ பெருமாள் வியாக்யானம் சாதித்து அருளி -இதுவே நம் பூர்வர்கள் ஸ்ரீ குரு பரம்பரை மூலம் பெற்ற நிதி

——–

நாடிய பொருள் கை கூடும் ஞானமும் புகழும் உண்டாம்
வீடியல் வழியாதாக்கும் வேரி யங் கமலை நோக்கும்
நீடிய அரக்கர் சேதன நீறு பட்டுழிய வாகை
சூடிய சிலை இராமன் தோள் வலி கூறுவோர்க்கு

நன்மையையும் செல்வமும் நாளும் நல்குமே
திண்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
சென்மமும் மரணமும் இன்றித் தீருமே
இம்மையே ராம வென்ற இரண்டு எழுத்தினால்

ஆபதாம் அபஹர்தாரம் தாதாரம் ஸர்வ ஸம்பதாம்
லோகாபிராமம் ஸ்ரீ ராமம் பூயோ பூயோ நமாம்யஹம்

————-

ஸ்ரீ கூஜந்தம் ராம ராமேதி மதுரம் மதுராக்ஷரம்
ஆருஹ்ய கவிதா சாகாம் வந்தே வால்மீகி கோகிலம்

ஸ்ரீ வால்மீகேர் முனிஸிம்ஹஸ்ய கவிதா வனசாரிண:
ச்ருண்வன் ராமகதா நாதம் கோ ந யாதி பராங்கதிம்

ய: பிபன் ஸததம் ராம சரிதாம்ருத ஸாகரம்
அத்ருப்தஸ்தம் முனிம் வந்தே ப்ராசேதஸ மகல்மஷம்

கோஷ்பதீக்ருத வாராசிம் மசகீக்ருத ராக்ஷஸம்
ஸ்ரீ ராமாயண மஹாமாலா ரத்னம் வந்தே(அ) நிலாத்மஜம்

அஞ்ஜனா நந்தனம் வீரம் ஜானகீசோக நாசனம்
கபீச மக்ஷஹந்தாரம் வந்தே லங்கா பயங்கரம்

உல்லங்க்ய ஸிந்தோ: ஸலிலம் ய: சோகவஹ்னிம் ஜனகாத்மஜாயா:
ஆதாய தேனைவ ததாஹ லங்காம் நமாமி தம் ப்ராஞ்ஜலி ராஞ்சனேயம்8

ஆஞ்ஜனேய மதிபாடலாலனம் காஞ்சனாத்ரி கமனீய விக்ரஹம்
பாரிஜாத தருமூல வாஸினம் பாவயாமி பவமான நந்தனம்

யத்ர யத்ர ரகுநாத கீர்த்தனம் தத்ர தத்ர க்ருத மஸ்தகாஞ்ஜலிம்
பாஷ்பவாரி பரிபூர்ணலோசனம் மாருதிம் நமத ராக்ஷஸாந்தகம்

மனோஜவம் மாருத துல்ய வேகம் ஜிதேந்த்ரியம் புத்திமதாம் வரிஷ்டம்
வாதாத்மஜம் வாநரயூத முக்யம் ஸ்ரீராமதூதம் சிரஸா நமாமி

புத்திர்பலம் யசோ தைர்யம் நிர்ப்பயத்வ மரோகதா
அஜாட்யம் வாக்படுத்வஞ்ச ஹனூமத் ஸ்மரணாத் பவேத்

க்யாத: ஸ்ரீராமதூத: பவனதனுபவ: பிங்கலாக்ஷ: சிகாவான்
ஸீதா சோகாபஹாரீ தசமுக விஜயீ லக்ஷ்மண: ப்ராணதாதா
ஆநேதா பேஷஜாத்ரேர் லவணஜலநிதேர் லங்கனே தீக்ஷிதோ ய:
வீர: ஸ்ரீமான் ஹனூமான் மம மனஸி வஸன் கார்யஸித்திம் தநோது

தூவரிக்ருத ஸீதார்த்தி: ப்ரகடீக்ருத ராம வைபவ ஸ்பூர்த்தி:
தாரித தசமுக கீர்த்தி: புரதோ மம பாது ஹனுமதோ மூர்த்தி:

ஸ்ரீ வால்மீகி கிரிஸம்பூதா ராமஸாகர காமினீ
புனாது புவனம் புண்யா ராமாயண மஹாநதீ

ஸ்ரீ வேதவேத்யே பரே பும்ஸி ஜாதே தசரதாத்மஜே
வேத: ப்ரசேதஸா தாஸீத் ஸாக்ஷாத் ராமாயணாத்மனா

வைதேஹீ ஸஹிதம் ஸுரத்ருமதலே ஹைமே மஹாமண்டபே
மத்த்யே புஷ்பகமாஸனே மணிமயே வீராஸனே ஸுஸ்திதம்
அக்ரே வாசயதி ப்ரபஞ்ஜன ஸுதே தத்வம் முனிப்ப்ய: பரம்
வ்யாக்க்யாந்தம் பரதாதிபி: பரிவ்ருதம் ராமம் பஜே ச்யாமளம்

நமோ(அ)ஸ்து ராமாய ஸலக்ஷ்மணாய
தேவ்யை ச தஸ்யை ஜனகாத்மஜாயை
நமோ(அ)ஸ்து ருத்ரேந்த்ர யமாநிலேப்ப்யோ
நமோ(அ)ஸ்து சந்த்ரார்க்க மருத்கணேப்ப்ய:

————

ஸுமுகஸ்ச ஏகதந்தஸ்ச கபிலோ கஜகர்ணக: |
லம்போதரஸ்ச விகட: விக்னராஜோ விநாயக: ||
தூம்ரகேது: கணாத்யக்ஷ: பாலசந்த்ரோ கஜானன: |
வக்ரதுண்ட: சூர்ப்பகர்ண: ஹேரம்ப: ஸ்கந்தபூர்வஜ: ||

————

வேத3 வேத்3யே பரே பும்ஸி ஜாதே த3ஸரதாத்மஜே |
வேத3 : ப்ராசேதஸா தா3ஸீத்3 ஸாக்ஷாத்3 ராமயணாத்மநா ||

வேதத்தினால் சூட்டப்படும் பரம்பொருள் பூமியிலே ஸ்ரீ ராமனாக அவதாரம் பண்ண உடனே,
வேதம், ஸ்ரீ வால்மீகி முனிவர் வழியாக ஸ்ரீ ராமாயணமாக வெளிவந்துவிட்டது

———

ஸ்ரீ ராமம் ரகு குல திலகம்
சிவ தனு சாக்ரிஹத ஸீதா ஹஸ்த கரம்
அங்குல்யா பரண ஸோபிதம்
சூடாமணி தர்சன கரம்
ஆஞ்சநேய ஆஸ்ரயம்
வைதேஹி மநோ ஹரம்
வானர ஸைன்ய ஸேவிதம்
சர்வ மங்கள கார்ய அநுகூலம்
ஸததம் ஸ்ரீ ராமசந்த்ர பாலயமாம்

—————-

தபஸ்வாத்யாய நிரதம் தபஸ்வி வாக் விதாம் வரம்
நாரதம் பரி பப்ரச்ச வால்மீகி முனி புங்கவம் –1-இஷ்டா தேவதா நமஸ்கார மங்கள ஸ்லோகம்

தாத்பர்யம்
உயர்ந்த தவமுடைய வால்மீகி பகவான் –
கர்ம யோகாதி அனுஷ்டானம் -வேத அத்யயன ஜபாதி நிஷ்டை -முதலியவைகளை யுடையவராய்
வேதார்த்த வித்துக்களில் உயர்ந்தவராய் -ஸகல வித்யைகளை அறிந்தவர்களும் சிறந்தவராய்
ஸரஸ்வதி புத்திரர்கள் ஆகிய அத்ரி மரீசி முதலியவர்களின் மேன்மை யுடையவராய்
முனி ஸ்ரேஷ்டராய் இருக்கிற நாரத மஹரிஷியைக் குறித்து பிரஸ்னம் பண்ணினார்-

தபோ நிரதம்’, ‘ஸ்வாத்யாய நிரதம்’, ‘வாக் விதாம்வரம்’ ‘முனிபுங்கவம்’, என்று
ஸ்ரீ நாரத மகரிஷிக்கு நாலு அடைமொழி கொடுத்து, இந்த ஸ்ரீ நாரத மகரிஷியிடம்,
ஸ்ரீ வால்மீகி பகவான் ஒரு விஷயத்தை கேட்கிறார் என்று ஆரம்பிக்கிறது.

தபோ நிரதம்’ – தபஸில் ஈடுபட்டவராய் இருக்க வேண்டும்.
‘ஸ்வாத்யாய நிரதம்’ – தனது படிப்பில் திரும்பத் திரும்ப மனசை செலுத்துவதில் விருப்பம் உள்ளவரை இருக்க வேண்டும்.
‘வாக் விதாம் வரம்’ – வாக்கிற்கு என்ன பிரயோஜனம்? பகவானை பற்றி பேசிக் கொண்டிருப்பது. அதைச் செய்து கொண்டிருப்பவர்.
‘முனி புங்கவம்’ – மௌனமாய் இருக்ககூடிய முனி புங்கவருக்குள் ஸ்ரேஷ்ட்டர்.

“த‌ப‌சு, வேத‌வேதாந்த‌ங்க‌ள் இவைக‌ளைப் பூர‌ண‌மாக‌ அடைந்த‌வ‌ரும், உப‌தேசிப்ப‌வ‌ர்க‌ளுக்குள் மேலான‌வ‌ரும்,
முனி ஶ்ரேஷ்ட‌ருமான‌ நார‌த‌ ம‌ஹ‌ரிஷியை, த‌வ‌த்தோடுகூடிய‌ வான்மீகி முனிவ‌ர் தெண்ட‌ம் ச‌ம‌ர்ப்பித்து வினாவினார்.”

இது இராமாய‌ண‌த்தின் முத‌ல் சுலோக‌ம். இத‌னால் குரு சிஷ்ய‌ ல‌க்ஷ‌ண‌ம் சொல்ல‌ப்ப‌ட்ட‌தாகிற‌து.

1) த‌போநிர‌த‌ம் :– த‌வ‌த்தைப் பூர‌ண‌மாக‌ அடைந்த‌வ‌ர் என்ற‌தினால் அவ‌ர் ச‌ர்வ‌ச‌க்தி வாய்ந்த‌வ‌ர் என்ப‌து ஸூச‌க‌ம்.
“ய‌த்துஸ்த‌ர‌ம் ய‌த்துராப‌ம் ய‌த்துர்க‌ம் ய‌ச்ச‌துஷ்க‌ர‌ம்|
தத் ஸ‌ர்வ‌ம் த‌ப‌ஸாஸாத்ய‌ம் த‌போஹி துர‌திக்ர‌மம் ||”
“எது க‌ட‌க்க‌முடியாததோ, எது பெற‌ முடியாததோ, எது செய்ய‌முடியாததோ அதெல்லாம் த‌வ‌த்தால் சாதிக்க‌முடியும்.
ஆகையால் த‌வ‌த்தை வெல்வ‌த‌ரிது.”
“வேண்டிய‌ வேண்டியாங் கெய்த‌லாற்செய்த‌வ‌ மீண்டு முய‌ல‌ப் ப‌டும்.
கூற்ற‌ங் குதித்த‌லும் கைகூடு நோற்ற‌லி னாற்ற‌ ற‌லைப்ப‌ட் ட‌வ‌ர்க்கு” (திருக்குற‌ள்) என்ற‌ ஆதார‌ங்க‌ள் நோக்க‌த்த‌க்க‌ன‌.

2) ஸ்வாத்யாய‌ நிர‌த‌ம்:– வேத‌வேதாந்த‌ங்க‌ளைப் பூர்ண‌மாக‌ அடைந்த‌வ‌ர், என்ற‌தினால்
நார‌த‌ர் சொல்வ‌தெல்லாம் த‌ரும‌த்தோடு பொருந்திய‌ வ‌ச‌ன‌ம் என்ப‌து ஸூச‌க‌ம்.

3) வாக்விதாம்வ‌ர‌ம் :– உப‌தேசிப்ப‌வ‌ர்க‌ளுக்குள் மேலான‌வ‌ர், என்ற‌தினால் சிற‌ந்த‌ போத‌னாச‌க்தி வாய்ந்த‌வ‌ரெனவும்,
வ்யாக‌ர‌ண‌ம் முத‌லான‌ ச‌க‌ல‌ சாஸ்திர‌ங்க‌ளையும் ந‌ன்றாக‌ அறிந்த‌வ‌ரென‌வும் பொருள்ப‌டும்.

4) முனி புங்க‌வ‌ம்:– முனிஶ்ரேஷ்ட‌ர் என்ற‌தினால் இந்திரிய‌ நிக்கிர‌க‌முள்ள‌வ‌ர் என்ப‌தும்,
ப‌க‌வ‌த்யான‌த்தோடு கூடிய‌வ‌ரென்ப‌தும், திரிகால‌ வ‌ர்த்த‌மான‌ங்க‌ளை அறிய‌க்கூடிய‌வ‌ரென்ப‌தும் , ஸ‌தா ஜ‌பப‌ரரென்ப‌தும் ஸூச‌க‌ம்.

5)நார‌த‌ம்:– நார‌த‌ ம‌ஹ‌ரிஷியை, என்ற‌தினால், நார‌ம் – ஜ்ஞான‌ம், அதைக் கொடுக்கக் கூடிய‌வ‌ர் என்ப‌தும்,
நார‌ம் – அஜ்ஞான‌ம், அதை நிவ‌ர்த்தி செய்ய‌க்கூடிய‌வ‌ ரென்ப‌தும், த்ரிலோக‌ ஸ‌ஞ்சாரியான‌ப‌டியால்,
மூன்று லோக‌த்திலுள்ள‌ வ‌ர்த்த‌மான‌ங்க‌ளை அறிப‌வ‌ரென்ப‌தும், பிர‌ம்ம‌ புத்திரரான‌ப‌டியால் உத்த‌ம‌ குல‌த்தைச் சேர்ந்த‌வ‌ரென்ப‌தும் ஸூசக‌ம்.

ஆக‌வே, இந்த‌ ஐந்து ப‌த‌ங்க‌ளினால், ஆசார்ய‌ன் பூர்ண‌மான‌ த‌ப‌ஸை யுடைய‌வ‌ராக‌வும்,
வேத‌வேதாந்த‌ங்க‌ளையும் வ்யாக‌ர‌ண‌ம் முத‌லான‌ ஸ‌க‌ல‌ ஶாஸ்திர‌ங்க‌ளையும் உண‌ர்ந்த‌வ‌ராக‌வும்,
ப‌க‌வ‌த் ப‌க்தியுட‌ன் அந‌வ‌ர‌த‌ ஜ‌பப‌ரராக‌வும் சிஷ்ய‌னுடைய‌ அஜ்ஞான‌த்தைப் போக்கி, ஜ்ஞான‌த்தைக் கொடுத்துப்
ப‌ர‌மாத்ம‌ ஸ்வ‌ரூப‌த்தை உப‌தேசிக்க‌வ‌ல்ல‌வ‌ராக‌வும், ஜிதேந்திரிய‌ராக‌வும், உத்த‌ம‌ குல‌த்த‌வ‌ராக‌வுமிருக்க‌வேணும்
எனறு ஆசார்ய‌ ல‌க்ஷ‌ண‌ம் சொல்ல‌ப்ப‌ட்ட‌தாயிற்று.

“குஶ‌ப்த‌ஸ் த்வ‌ந்த‌கார‌ஸ்யாத் ருகார‌ஸ்த‌ந் நிவ‌ர்த‌க‌:|
அந்த‌கார‌ நிரோதித்வாத் குருரித்ய‌பி தீய‌தே||”

“கு என்ப‌து அஜ்ஞான‌த்தையும், ரு என்ப‌து அத‌ன் நிவ‌ர்த்தியையும் சொல்லுகிற‌ ப‌டியால்
ம‌ன‌தின் க‌ண்ணுள்ள‌ அஜ்ஞான‌மாகிற‌ இருளை நீக்கி மெய்ஞ்ஞான‌மாகிற‌ பிர‌காச‌த்தைத் த‌ருவ‌தால் குரு வென‌ச் சாற்ற‌ப்ப‌டுகின்ற‌ன‌ர்.

குல‌ன‌ருள் தெய்வ‌ங்கொள்கை மேன்மை
க‌லைப‌யில் தெளிவு க‌ட்டுரை வ‌ண்மை
நில‌ம‌லை நிறைகோல் ம‌ல‌ர் நிக‌ர் மாட்சியும்
உல‌கிய‌ல‌றிவோ டுய‌ர்குண‌ மினைய‌வும்
அமைப‌வ‌ன் நூலுரையாசிரிய‌ன்னே.” என்ற‌ ந‌ன்னூல் இங்கு நோக்க‌த் த‌க்க‌து.

தப -என்று
பாபத்தைப் போக்கி ஊணை வாட்டி இந்திரியங்களை வசமாக்கிக் கொடுக்க வல்ல க்ருச்ரம் சந்த்ராயணம் முதலிய கர்மத்துக்கும்
யம நியம ஆஸன பிராணாயாம ப்ரத்யாஹார தாரண தியானங்களை அங்கங்களாக யுடைய ஸமாதி என்கிற யோகத்திற்கும்
வேதத்துக்கும்
பர ப்ரஹ்மத்திற்கும்
தபோ விசேஷமான ந்யாஸத்திற்கும் பெயர்

ஸ்வாத்யாயம் -என்று
வேதத்திற்கும் ஜெபத்திற்கும் பெயர்

வாக் என்று
வியாகரணம் சிஷை சந்தஸ் நிருத்தம் ஜ்யோதிஷம் கல்பம் என்ற ஆறு அங்கங்களும்
வித்யா சாமான்யத்திற்கும்
அந்த வந்த சமயத்துக்கு வேண்டும் அர்த்தங்களை போதிக்க வல்ல சப்தத்துக்கும்
ஸரஸ்வதிக்கும் பெயர்

முனி என்று
மனனம்-அதாவது த்யானம் பண்ணுகிறவர்களுக்குப் பெயர்

நார என்று
ப்ரஹ்மத்தையும்
அஞ்ஞானத்தையும் சொல்லும்

ஆக
தபஸ்வாத்யாய நிரதம் தபஸ்வி வாக் விதாம் வரம் நாரதம் — முனி புங்கவம்-என்கிற பதங்களினால்
ஆச்சார்யன்
கர்மயோக ஞானயோக பக்தி யோகங்களிலும் ப்ரபத்தியிலும் ஊற்றம் யுடையவனாய்
வேத வேதாங்களையும் அங்கங்களையும் நியாய மீமாம்ஸாதி ஸகல ஸாஸ்த்ரங்களையும் சம்ஸயம் விபர்யயம் அற உணர்ந்தவனாய்
அனவ்ரத ஜெப பரனாய்
ஸிஷ்யனுடைய சம்சயம் அறும் படி உபதேசிக்க வல்லனாய்
ப்ரஹ்ம வித் அக்ரேரராய்
அஞ்ஞானத்தைப் போக்கி ஞானத்தைக் கொடுத்து பரமாத்ம ஸ்வரூபத்தை உபதேசிக்க வல்லனாய்
ஜிதேந்த்ரியனாய்
ஸத் குல ப்ரஸூதனாய்
ஸ்ரவண மனன நிதித்யாஸன தத் பரனாய் இருக்க வேண்டும் என்று சொல்கிறது –

நாரதோ அஹம் மந ப்ராப்த -த்வத் தர்சன குதூஹலாத் பிரபவோ பகவத் பக்தா மாத்ருஸாம் ஸததம் த்விஜ
நாரதர் என்று சொல்லப்படும் அடியேன் உம்மைக் காணும் ஆசையினால் வந்தடைந்தேன்
ப்ராஹ்மண உத்தம -என்னைப்போல் உள்ளவர்களுக்கு பகவத் பக்தர்கள் எப்பொழுதும் பிரபுக்கள்

தும்புரு நாரதர் புகுந்தனர்

பகவத் பாகவத ஸந்தர்சன ப்ரணாம ஸல்லாபமே தபஸ்

தத் வித்தி ப்ரணிபாதேந பரி ப்ரஸ்நேந ஸேவயா

தபஸ்வாத்யாய நிரதம் –என்று காயிக ஸூத்தியையும்
வாக்விதாம் வரம் என்று வாக் ஸூத்தியையும்
முனி புங்கவம் என்று மனஸ் ஸூத்தியையும் சொல்லிற்று

——–

சிஷ்ய‌ ல‌க்ஷ‌ண‌ம்

1) த‌ப‌ஸ்வீ: – என்ற‌தினால் ப‌க‌வ‌த் ஸ்வ‌ரூப‌த்தை அறிய‌ ஆவ‌ல்கொண்டவ‌ரென்ப‌தும்,
ப‌ல‌ விர‌த‌ங்க‌ளை அனுஷ்டித்த‌வ‌ரென்ப‌தும், ஶ‌ம‌த‌மாதி ஸ‌ம்ப‌ந்த‌ங்க‌ளை அடைந்த‌வ‌ரென்ப‌தும்,
ஜீவ‌காருண்ய‌முடைய‌வ‌ரென்ப‌தும், க‌ள‌ங்க‌ம‌ற்ற‌ இருத‌ய‌முடைய‌வ‌ரென்ப‌தும் ஸூச‌க‌ம்.

“உற்ற‌நோய் நோன்ற‌லுயிர்க்குறுக‌ண் செய்யாமை
ய‌ற்றே த‌வ‌த்திற்குரு” (திருக்குற‌ள்)

2) ப‌ரிபப்ர‌ச்ச‌ – என்ற‌தினால் விதிவ‌துப‌ஸ‌ந்ந‌: என்ப‌து பொருள். அதாவ‌து,
உப‌தேச‌ம் பெற்றுக் கொள்ள‌, குருவைத் தேடிப்போய், த‌ண்ட‌ம் ஸ‌ம‌ர்ப்பித்து, விதி ப்ர‌கார‌ம் கேட்க‌வேண்டுமென்ப‌து

தத்வித்தி ப்ர‌ணிபாதேந‌ ப‌ரிப்ர‌ஶ்நேந‌ ஸேவ‌யா|
உப‌தேக்ஷ்ய‌ந்தி தே ஜ்ஞான‌ம் ஜ்ஞாநிந‌ஸ் தத்வ‌த‌ர்ஶிந‌: ||

“அந்த‌ ஆத்ம‌ ஜ்ஞான‌த்தை, குருவைத் தேடிப்போய், த‌ண்ட‌ம் ஸ‌ம‌ர்ப்பித்து, விதிப்ர‌கார‌மான‌ கேள்வியினாலும்,
ஶுஶ்ருக்ஷையினாலும் அறிந்துகொள்ள‌க் க‌ட‌வாய். தத்வ‌ம‌றிந்த‌ ப‌ண்டித‌ர்க‌ள் உன‌க்கு ஜ்ஞான‌த்தை போதிப்பார்க‌ள்.”
என்று அர்ஜுனனை நோக்கி அருளிச் செய்த‌ ஸ்ரீகிருஷ்ண‌ ப‌க‌வானுடைய‌ வ‌ச‌ன‌ம் இங்கு க‌வ‌னிக்க‌த் த‌க்க‌து.

ஆக‌வே, த‌ப‌ஸ்வீ, ப‌ரிப்ர‌ச்ச‌ என்ற‌ ப‌த‌ங்க‌ளினால் சிஷ்ய‌ ல‌க்ஷ‌ண‌ம் சொல்ல‌ப்ப‌ட்ட‌தாயிற்று.

ஸ‌த்புத்திஸ் ஸாது ஸேவீ ஸ‌முசித‌ ச‌ரித‌ஸ் தத்வ‌ போதாபிலாஷீ|
ஶுஶ்ருஷுஸ் த்ய‌க்த‌மாந‌: ப்ர‌ணி ப‌த‌ந‌ ப‌ர‌: ப்ர‌ஶ்ந‌ கால‌ ப்ர‌தீக்ஷ‌:||
ஶாந்தோ தாந்தோ ந‌ஸூயுஸ் ஸ‌ர‌ண‌முப‌க‌த‌ஸ் ஶாஸ்த்ர‌ விஶ்வாஸ‌ஶாலி|
ஶிஷ்ய‌:ப்ராப்த‌: ப‌ரீக்ஷாங் க்ருத‌வி த‌பிம‌த‌ம் தத்வ‌த‌ஸ் ஸிக்ஷ‌ணீய‌:

“ந‌ற்புத்தியுட‌ன் ஸாது ஸேவை உடைய‌வ‌னாகி, ந‌ன்ன‌ட‌த்தை உடைய‌வ‌னும், உண்மை ஞான‌த்தை அறிவ‌தில்
அபிலாஷை உடைய‌வ‌னும், ப‌ணிவிடைக்கார‌னும், மானாவ‌மான‌ மென்ப‌த‌ற்ற‌வ‌னும், ப்ர‌ஶ்ந‌ கால‌த்தை எதிர்பார்ப்ப‌வ‌னும்,
சாந்த‌னும், அஸூயை இல்லாத‌வ‌னும், ச‌ர‌ணாக‌தி ய‌டைந்த‌வ‌னும், சாஸ்திர‌ விஶ்வாச‌முடைய‌வ‌னுமே
சிஷ்ய‌னாக‌ அங்கீக‌ரிக்க‌த் த‌குந்த‌வ‌ன்” என்ப‌து நோக்க‌த் த‌க்க‌து.

தபஸ்வீ-என்று சிஷ்ய லக்ஷணம் சொல்கிறது
அதாவது
பரமாத்ம ஞான சாதனமான உயர்ந்த தபஸ்ஸையும்
வேதத்தில் கர்ம காண்டங்களை பரிசீலித்து ஸ்வர்க்காதி ஷூத்ர பலன்களில் வைராக்யம் யுடையவனாய்
மோக்ஷத்தில் அபிருசி யுடையவனாய்
ஜிதேந்த்ரியனாய்
சாந்தனாய் –இருக்க வேண்டும் என்று சொல்கிறது
இதனால் ஆச்சார்யாத் தைவ வித்யா விதி தாஸாதிஷ்டம் ப்ரபாத் –என்று
சதாச்சார்யன் இடத்தில் நின்றும் நியம பூர்வகமாகக் கற்ற வித்யையே மோக்ஷ உபயோகியாம் என்னுமது வெளியிடப்பட்டது-
ஆச்சார்யன் உபதேசம் அவரது ஆச்சார்யருக்கு ப்ரீதிக்கு உறுப்பாக என்று மேல் மேல் ஸ்ரீ லஷ்மீ நாதன் பர்யந்தம் போகுமே

வால்மீகி ப‌க‌வான் ப்ருகு வ‌ம்ச‌த்தில் அவ‌த‌ரித்த‌வ‌ர். இவ‌ர் (வ‌ல்மீக‌ம் = புற்று) புற்றிலிருந்து வெளி வ‌ந்ததினால்
வால்மீகி என்று பெய‌ர். இவ‌ர்க்கு “ப்ராசேத‌ஸ‌ர்” (அதாவ‌து வ‌ருண‌னுடைய‌ புத்திரர்) என்னும் பெய‌ருண்டு.

இவர் ஓர் இடத்தில் சரியாமல் உடகார்ந்து மெய் மறந்து தபஸ்ஸு பண்ணிக் கொண்டு இருக்கையில் இவர் மேல் புற்று மூடிப் போய் விட்டது
வருண தேவன் மழை பொழிந்து அப் புற்றைக் கரைத்து விட அங்கு நின்றும் புறப்பட்டார்
ஆகவே வால்மீகி புற்றில் நின்றும் வெளிப்பட வருணன் காரணமானதால் ப்ராசேதனர் -வருண புத்ரன் என்றும் செல்லப்படுகிறார்

——–————————————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வால்மீகி பகவான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பகவத் குண தர்ப்பணம்–அவதாரிகை –

October 31, 2023

ஸ்ரீ பராசர பட்டார்ய ஸ்ரீ ரங்கேச புரோஹித
ஸ்ரீவத் ஸாங்க ஸூதா ஸ்ரீமான் ஸ்ரேயசே மே அஸ்து பூயஸே

ஸ்ரீ ரெங்க நாதனுக்குப் ப்ரோஹிதரும்
ஸ்ரீ வத்சாங்கர் எனப்படும் கூரத்தாழ்வானுடைய திருக் குமாரரும்
ஞான லஷ்மீ பொருந்தியவருமான
ஸ்ரீ பராசர பட்டர் எனப்படும் ஸ்வாமி
எனக்கு மேன்மேலும் ஸ்ரேயஸ்ஸைக் கொடுத்து அருளட்டும்

——–

ஸ்ரீ வத்ஸ சிஹ்ன மிஸ்ரேப்யோ நம யுக்தி மதீ மஹே
யத் யுக்தஸ் த்ரயீ கண்டே யாந்தி மங்கள ஸூத்ரதாம்

அர்வாஞ்சோ யத் பத ஸரஸி த்வந்தம் ஆஸ்ரித்வ பூர்வே
மூர்த்ரா யஸ்ய அந்வயம் உபகதா தேசிகா முக்திமாபு
சோயம் ராமானுஜ முனிர் அபி ஸ்வீய முக்திம் காரஸ்தம்
யத் சம்பந்தாத் அனுமத கதம் வர்ணயதே கூர நாத

—————

வந்தே கோவிந்த தாதௌ முநிமத மநவை லஷ்மணார்யம்-மஹாந்தம்
த்யாயேயம் யாமுநார்யம் மம ஹ்ருதி தாநவை ராமமேவாபியாயாம்
பத்மாஷம் ப்ரேஷிஷீய ப்ரதமமபி முநிம் நாதமீடே சடாரிம்
ஸ்தௌமி ப்ரேஷேய லஷ்மீம் சரணம் சரண ஸ்ரீ தரம் சம்ஸ்ரயேயம்–ஸ்ரீ குரு பரம்பரா வணக்கம்

வந்தே கோவிந்த தாதௌ முநிமத மநவை லஷ்மணார்யம்-மஹாந்தம் த்யாயேயம் –
ஆச்சார்யரான ஸ்ரீ கோவிந்தர் என்னும் ஸ்ரீ எம்பார் -தந்தையான ஸ்ரீ கூரத்தாழ்வான் –
த்வந்த ஸமாஸம் -சம பிரதானம் இல்லை -அர்த்த கௌரவத்தால் கோவிந்த முதலில்
இதிஹாச புராணம் -அத்தாலே அது முற்பட்டது -பிரபலம் போல் இங்கும்

ஸ்ரீ லஷ்மண முனியான ஸ்ரீ எம்பெருமானார் –இவர்களைத் த்யானிக்கிறேன்

யாமுநார்யம் மம ஹ்ருதி தாநவை
என் மனம் ஸ்ரீ யாமுனாச்சார்யர் எனப்படும் ஸ்ரீ ஆளவந்தாரால் நிறைந்து இருக்கட்டும் –

ராமமேவாபியாயாம் பத்மாஷம் ப்ரேஷிஷீய —
ஸ்ரீராம மிஸ்ரர் என்னும் ஸ்ரீ மணக்கால் நம்பியையும் ஸ்ரீ புண்டரீகாக்ஷர் எனும் ஸ்ரீ உய்யக் கொண்டாரையும்
நான் பணிவுடன் அணுகுகிறேன்

ப்ரதமமபி முநிம் நாதமீடே சடாரிம் ஸ்தௌமி -ப்ரேஷேய-லஷ்மீம் சரணம் சரண ஸ்ரீ தரம் சாம்ச்ரயேயம்-
நமது பிரதம ஆச்சார்யரான ஸ்ரீ மந் நாதமுனிகளை வணங்குகிறேன் –
ஸ்ரீ எம்பெருமானின் ஸ்ரீ சடாரி எனப்படும் ஸ்ரீ நம்மாழ்வாரை போற்றுகிறேன்
ஸ்ரீ பெரிய பிராட்டியாரின் திருக்கண் கடாக்ஷம் எனக்குக் கிட்ட வேணும்
அநந்ய கதியான அடியேன் ஸ்ரீதரனான ஸ்ரீ பெரிய பெருமாள் இடம் சரண் அடைகிறேன்

ஸ்ரீ கோவிந்த பட்டரையும்
என் பிதாவான ஸ்ரீ வத்ஸாங்க மிஸ்ரரையும்
வந்தனம் செய்கிறேன்
அதன் பிறகு ஸ்ரீ மத் ராமானுஜ முனிவரை எப்போதும் சிந்திக்கக் கடவேன்
பெரிய நம்பியை த்யானம் செய்வேன்
யாமுனாச்சார்யரை ஹ்ருதயத்தில் வைக்கக் கட வேன்
ராம மிஸ்ரரை அடையக் கடவேன்
புண்டரீகாக்ஷரைப் பார்க்கக் கடவேன்
சம்பிரதாயத்துக்கு பிரதம ஆச்சார்யரான ஸ்ரீ மன் நாதமுனிகளை ஸ்துதிக்கிறேன்
நம்மாழ்வாரைப் புகழ்கிறேன்
ஸ்ரீ மஹா லஷ்மியைத் தர்சிக்கக் கடவேன்
வேறு சரணம் இல்லாதவனாய் ஸ்ரீ யபதியை சரணம் அடைகிறேன் –

————–

அஸ்மத் குரு ஸமாரம்பாம் -தொடங்கி -ஸ்ரீயப்பதி பர்யந்தம் சொல்லி
ஸ்ரீ விஷ்வக் சேனருக்குத் தனியாக எடுத்து அருளிச் செய்கிறார்

———–

ஓம் நமோ கஜவக்த்ராத்யை பாரிஷத்யை ப்ரசாஸதே
ஸ்ரீ ரங்கராஜ ஸேநான்யே ஸூத்ரவத்யா ஸமே யுஷே–ஸ்ரீ விஷ்வக் சேனர் ஸ்துதி

கஜானன்
ஜயத்ஸேனன்
ஹரி வக்த்ரன்
கால ப்ரக்ருதி ஸம் ஜ்ஞகன்
என்னும் நான்கு பரிவாரங்களோடு கூடி ஆஜ்ஜையை செலுத்துபவரும்
ஸூத்ரவதி என்னும் பத்னியுடன் கூடியவரும்
ஸ்ரீ ரெங்கராஜருடைய சேனாபதியுமான-சேஷாசனர் -சேஷ அசனர் இவரே –
விஷ்வக் சேனருக்கு ஓம் என்று சொல்லி நமஸ்கரிக்கிறேன்

—————-

நமோ நாராயணாயேதம் கிருஷ்ண த்வைபாய நாத்மகே
யதாமுஷ்யாயணா வேதா மகா பாரத பஞ்சமா–ஸ்ரீ வேத வ்யாஸர் நமஸ்காரம்

ஸ்ரீ மஹா பாரதம் ஐந்தாவது வேதமாகச் சேர்ந்த நான்கு வேதங்களும்
எவரால் வெளிப்பட்டனவோ -எவருடைய வம்சத்தில் பிறந்தனவோ –
அந்த கிருஷ்ண த்வைபாயன ரூபமாக அவதரித்த நாராயணற்கு என்னுடைய நமஸ்காரங்கள்

வ்யாஸம் வஸிஷ்ட நப்தாரம் ஸக்தே பவுத்ர மகல்மஷம்
பராசராத்மஜம் வந்தே ஸூக தாதம் தபோ நிதம்–

வசிஷ்டர் பிள்ளை சக்தி /அவர் பிள்ளை பராசரர்/ அவர் பிள்ளை வியாசர் ( கிருஷ்ண த்வைபாயனர் )/அவர் பிள்ளை சுகப் ப்ரஹ்மம்

க்ருஶ்ண த்வைபாயனம் வ்யாஸம் ஸர்வ லோக ஹிதே ரதம்|
வேதாப்ஜ பாஸ்கரம் வந்தே ஷமாதி நிலையம் முனிம்||

அனைத்து உலகிற்கும் (அனைத்துலக மக்களுக்கும்) நன்மையையே வேண்டுபவரே! வேதமெனும் தாமரைக்கு (அதை மலர்விக்கும்) கதிரவன் போன்றவரே! பற்றற்று தவ நெறியில் நிலைத்திருப்பவரே! க்ருஷ்ண த்வைபாயனர் என்ற வ்யாஸரே! உம்மை வணங்குகிறேன்!!

—————–

ஜாதோ லஷ்மண மிஸ்ர ஸம்ஸ்ரய தநாத் ஸ்ரீ வத்ஸ சிஹ்நாத் ருஷே
பூயோ பட்ட பராசரேதி பணித ஸ்ரீரங்க பர்த்ரா ஸ்வயம்
ஸ்ரீ ஸ்ரீரங்கபதி ப்ரஸாத த்ருஷயா ஸ்ரீ ரங்க நாதாஹ்வய
ஸ்ரீ ரங்கேஸ்வர காரிதோ விவ்ருணுதே நாம் நாம் ஸஹஸ்ரம் ஹரே–ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம பாஷ்யம் செய்து அருளியவர்

ஸ்ரீ மத் ராமானுஜ முனிவர் எனப்படும் யதிராஜரை அடுத்து இருப்பதே தனமாகப் பெற்ற
ஸ்ரீ வத்சாங்க மிஸ்ரர் என்னும் ரிஷியிடம் ஜெனித்தவரும்
ஸாஷாத் பெரிய பெருமாளாலேயே பராசர பட்டர் என்று திருநாமம் சாத்தப்பட்டவரும்
ஸ்ரீ ரெங்கநாதன் என்றும் பெயர் பெற்றவருமான இந்த பட்டர் (படர்கையாக தம்மையே சொல்லிக் கொள்கிறார் )
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம பாஷ்யத்தை
ஸ்ரீ ரெங்கநாதனாலேயே செய்யப் பெற்று
ஸ்ரீ ரெங்கநாதனுடைய அனுக்ரஹத்தில் உள்ள பெரு அபி நிவேசத்தினால் செய்து அருளுகிறார் –

———–

சம்சாரோ அயம் அபண்டிதோ பகவதி ப்ராகேவ பூய கலௌ
பூர்ணம் மன்யதமே ஜானே ஸ்ருதி சிரோ குஹ்யம் ப்ருவே சாஹசாத்
தத்ர ஸ்தோத்ர மிதம் பிரகாசயதி யஸ் துத்யஸ்ஸ யஸ்தா வுபௌ
வியாச காருணிகோ ஹரிஸ்ஸ ததிதம் மௌர்க்யம் சஹேதாம் மம–அவை யடக்கம் -விநய யுக்தி

இந்த ஸம்ஸாரம் -பிறவியின் தொடர்ச்சி பகவத் ஸ்வரூப விஷயத்தில் முன்னமே அறிவில்லாதது –
கலியில் இன்னும் அதிகம்-எல்லாம் தெரிந்து நிரம்பினதாக நினைத்துக் கொண்டு இருக்கும் ஜனங்கள் இடத்தில்
வேதாந்த ரஹஸ்யத்தை நான் சொல்லுவது ஸாஹஸம்
இந்த விஷயத்தில் இந்த ஸ்தோத்ரத்தை வெளியிட்டவரும்-இதனால் ஸ்துதி செய்யப்படுபவருமாகிய
தயாளுக்களான ஸ்ரீ வியாஸ பகவானும் ஸ்ரீ மன் நாராயணனும்
இப்படிப்பட்ட என்னுடைய அறியாமையைப் பொறுக்கக் கடவர்

பாடின கண்ணனும் பாடப்பட்ட கண்ணனும் பொறுத்து அருளட்டும்

————

அர்த்தே ஹரௌ ததபிதாயிநி நாம வர்கே
தத் வ்யஞ்ஜகே மயி ச பந்த விசேஷ மேத்ய
ஸேவதவமேத தம்ருதம் ப்ரணிபத்ய யாசே
மத்யஸ்த மத் ஸரிஜநா இஹ மாச பூவன் –

ஸஹஸ்ர நாமத்தின் பொருளாகிய ஸ்ரீ யபதியினிடத்திலும்
அவரைச் சொல்லும் ஸஹஸ்ர நாமங்களினிடத்திலும்
அவற்றுக்கு உரை செய்யும் என்னிடத்தில் ஒரு வகையாக அன்பு வைத்து
இந்த அமுதத்தை உட்க் கொள்ளுங்கோள்-நமஸ்கரித்துப் பிரார்த்திக்கிறேன்

யாரும் இந்த விஷயத்தில் உதாசீனர்களாயும் விரோதம் உள்ளவர்களாயும் ஆக வேண்டாம்

———————

ஸஹஸ்ர மூர்த்தே: புருஶோத்தமஸ்ய ஸஹஸ்ர நேத்ரானன பாத பாஹோ:|
ஸஹஸ்ர நாம்னாம் ஸ்தவனம் ப்ரஶஸ்தம் நிருச்யதே ஜன்ம ஜராதி ஷாந்த்யை||

ஆயிரக்கணக்கான முகங்களும், ஆயிரக்கணக்கான கண்களும், ஆயிரக்கணக்கான கை கால்களும் ஆயிரக்கணக்கான உருவங்களும் கொண்ட புருஷோத்தமனான பகவானின் ஆயிரம் திருநாமங்கள் கொண்ட, புகழ் வாய்ந்த, (ஸ்ரீ விஶ்ணு ஸஹஸ்ரநாமமெனும்) துதிக்கு, பிறப்பு மற்றும் மூப்பென்னும் பிணிகளைப் போக்க, இந்த விளக்கவுரை (பாஷ்யம்) எழுதப்படுகிறது.

—————–

மஹா பாரத ஸாரத்வாத் ரிஷிபி பரிகாநன
வேதாசார்ய ஸமா ஹாராத் பீஷ்மோத்க்ருஷ்ட மதத்வத
பரிக்ரஹாதிசயதோ கீதாதியைகார்த்தஸ்ஸ ந
ஸஹஸ்ர நாமாத்யாய உபாதேய தமோ மத–ஸ்ரீ ஸஹஸ்ர நாம அத்தியாயத்தின் சிறப்பு-

1-மகா பாரத சாரத்துவாத்–சாரமானது.

“மதி மந்தாநம் ஆவித்ய யேநாஸௌ ஶ்ருதி ஸாகராத்| ஜகத்திதாய ஜநிதோ மஹா பாரத சந்த்ரமா: ||”

வ்யாஸ பகவான் தமது புத்தி என்னும் மத்தை வேதம் என்னும் கடலிலே செலுத்திக் கடைந்து
உலகோர் நன்மைக்காக மஹா பாரதம் என்னும் சந்திரனை எடுத்து அளித்தார்
என்று வாயு புராணம் சைவ புராணம் சொல்லும்

கிருஷ்ணனும் -கிருஷ்ண த்வைபாயனார் –கிருஷ்ண த்ருஷ்ணா தத்வம் -மூவரும் கடைந்து
அம்ருதம் -ப்ரஹ்ம ஸூத்ரம் -திருவாய் மொழி அருளினார்கள் அன்றோ

மறைப்பாற் கடலை திரு நாவின் மந்தரத்தால் கடைந்து
துறைப்பால் படுத்தி தமிழ் ஆயிரத்தின் சுவை அமிர்தம்
கறைப் பாம்பு அணைப் பள்ளியான் அன்பர் ஈட்டம் களித்து அருந்த
நிறைப்பான் கழல் அன்றி சன்ம விடாய்க்கு நிழல் இல்லையே –

பவிஷ்யத் புராணே
“பிபேதி கஹநாத் சாஸ்த்ராத் நரஸ் தீவ்ராதி வௌஷதாத் |
பாரத: ஶாஸ்த்ர ஸாரோ அயமத: காவ்யாத்மநா க்ருத:||“

மனிதன் கடினமான ஸாஸ்த்ரத்தைக் கண்டு கடுமையான மருந்தைக் கண்டது போல் பயப்படுகிறான் -ஆதலால் எல்லா ஸாஸ்த்ரங்களின் ஸாரமாகிய இம் மஹா பாரதம் காவ்யா ரூபமாகச் செய்யப்பட்டுள்ளது -என்றும்

மாத்ஸ்யே
“யஸ்ய த்வை பாயந: புத்ர: ஸ்வயம் விஷ்ணு ரஜாயத |
ப்ரகாஸோ ஜநிதோ யேந மஹா பாரத சந்த்ரமா:||

மஹா பாரதம் என்னும் சந்த்ரனால் உலகத்துக்கு வெளிச்சம் கொடுத்தவராகிய த்வைபாயனர்-த்வீபத்தில் பிறந்தவர் என்னும்
புத்ரராக ஸாஷாத் விஷ்ணுவே பராசரருக்குப் பிறந்தார் என்று மத்ஸ்ய புராணத்திலும்-

“வைஷ்ணவே “
க்ருஷ்ண த்வை பாயநம் வ்யாஸம் வித்தி நாராயணம் ப்ரபும் | கோ ஹ்யந்யோ புவி மைத்ரேய மஹா பாரத க்ருத் பகவத் ||“;மூன்றாம் அம்சம் 

மைத்ரேயர் கிருஷ்ண த்வை பாயனர் என்னப்படும் வியாஸரைப் பிரபுவான நாராயணர் என்றே அறி
பூமியில் வேறு எவன் மஹா பாரத்தத்தைச் செய்வான் ஆவான் -என்று ஸ்ரீ விஷ்ணு புராணத்திலும்-பாரசார்யர்-பராசரர் பிள்ளை -பராசரரே கொண்டாடிப் பேசுகிறார்

மார்கண்டேய
“வ்யாஸ வாக்ய ஜலௌகேந குதர்ம தரு ஹாரிணா |
வேத ஸைல அவதீர்ணேந நீரஜஸ்கா மஹீ க்ருதா||“ இத்யாதிபி:;

கெட்ட தர்மங்கள் ஆகிய மரங்களைக் களைவதும் வேதம் என்னும் மலையின் நின்றும் இறங்கியதுமாகிய
வ்யாஸர் வாக்யம் என்னும் ஜல ப்ரவாஹத்தால் பூமியானது
பாவம் இல்லாதாகச் செய்யப்பட்டது என்று மார்க்கண்டேய புராணத்திலும் சொல்லப்பட்டு இருப்பதாலும்

ஸ்வஸ்மிம்ஶ்ச“யோ வித்யாச் சதுரோ வேதாந் ஸாங்கே உபநிஷதாந் த்விஜ:|
ந சாக்யாநமிதம் வித்யாந் நைவ ஸ ஸ்யாத் விசக்ஷண:||“

நாலு வேதங்களையும்-வேதாந்தங்களையும் -உபநிஷத்துக்களையும் அறிந்தும் இம் மஹா பாரதத்தை அறியாத பிராமணன் எவனோ அவன் அறிவித்த தேற்றம் உள்ளவன் ஆகான் என்று ஸ்ரீ மஹா பாரதத்திலும் சொல்லப்படுவதாலும்

இதுவரை மஹா பாரத ஏற்றம் சாத்தி அருளி
அதில் சாரமான ஸஹஸ்ர நாம அத்யாயம் அருளிச் செய்கிறார்

தத்ராபி ஸ்வ ஹ்ருதய பூதே ஆநு ஶாஸநிகே பர்வணி தாந தர்மேஷு
ஸமஸ்த ஶாஸ்த்ரார்த்தே நிஷ் க்ருஷ்ய நிகம்யமாநே, ஸார ஸங்க்ரஹ  ரூபேண
கல்வயம் ஸஹஸ்ர நாம்நாமத்யாயோ அவதாரித: |

இம் மஹா பார்த்ததுக்கு உள்ளம் போன்றதாகிய சாந்தி பர்வத்தில்
தான தர்ம முதலிய எல்லா சாஸ்திரங்களின் பொருள்களையும் சாரமாக எடுத்து முடிக்கும் இடத்தில்
இந்த சஹஸ்ர நாம அத்யாயம் எல்லாவற்றினுடைய சார அம்சங்களின் ஸங்க்ரஹமாக அன்றோ நிச்சயிக்கப் பட்டு இருக்கிறது

—–

2-ரிஷிபி : பரிகாநதா:பரிகானன=வக்த்ரு வைலக்ஷண்யம்
சநகர்,சனநந்தர் சனத் குமாரர் ,சனத் சுஜாதர், நாரதர் போன்றோர் பாடிய திரு நாமங்களை வியாசர் தொகுத்து அளிக்கிறார்

ததா ருஷிபி: பரிகாநத: —
ருஷிபி: பரிகீதாநி இத்யேதத் விவரண அவஸர
ஏவைஷ ஹேது ருப உபாதயிஷ்யதே ||

ரிஷிகளினால் ஓதப்பட்டமை-seeyar -இயற்றுபவர் அல்லர் -கண்டு வெளியிட்டவர் ரிஷிகள்-
வேதார்த்த தமங்கள் எல்லாவற்றையும் நேராகக் கண்டு அறிந்த சனகர் சனத்குமாரர் நாரதர்
முதலான மஹரிஷிகளினால் இவ் வாயிர நாமங்கள் சொல் பொருள்களின் தத்துவங்களை அறிந்து கீர்த்தனம் செய்யப்பட்டவையே
இந்த நாமங்கள் வேத வ்யாஸ பகவானால் ஸ்தோத்ர ரூபமாகத் தொகுத்துக் கூறப்பட்டு
ஸம்ப்ரதாய வரிசையில் நமக்குக் கிடைத்து இருக்கின்றன –

———–

3-வேதாச்சர்யா சமா ஹாராத்–பரம ஆப்த தமர் வியாசர்..

கிஞ்ச, வேதாசார்ய ஸமாஹாராத்- பகவாந் ஹி வேதாசார்ய: க்ருஷ்ண த்வைபாயந: பரம ஆப்த தம:,
பகவந் நாராயண அவதாரத்வேந
நிரதிஶய ஜ்ஞாந ஐஶ்வர்யாதி கல்யாண குண கண தயா
நிரஸ்த ஸமஸ்த விப்ரலம்பாதி தோஷ ஸம்பாவநத்வாத்,

கலி பல மந்த அதிகாரி மநுஷ்ய அநு க்ரஹாய
வ்யஸ்த ஸமஸ்த வேதத்வாத்,

வேதார்தயோ :தத்த்வ அநுஷ்டாநயோ :
அஜ்ஞாந ஸம்ஶய விபர்யய பரிஜி ஹீர்ஷயா
ப்ரணீத பஞ்சம வேதத்வாத்,

வியாசர் பகவன் நாமங்களைத் தொகுத்தமை-(ஏழு பெருமைகள் அருளிச் செய்கிறார் )
ஸ்ரீ வேத வ்யாஸ பகவான் வேதாச்சார்யராக அவதரித்த மஹரிஷி யாதலின்
அவரது ஞானம் சக்தி முதலிய கல்யாண குணங்கள் எல்லாவற்றிலும் சிறந்தவை
மயக்கம் பிறரை மயங்கச் செய்வது ஊக்கம் இன்மை சொல்லும் திறமை இல்லாமை ஆகிய குற்றங்கள்
ஒரு சிறிதும் அவர் இடத்தில் இருக்கக் கூடும் என்று நினைப்பதற்கே இடம் இல்லாமையால்
அவர் சொல்வன எல்லாமே ப்ரமாணமே
கலி காலத்தில் சக்தி குறைந்த மனிதர்களின் மேல் அனுக்ரஹம் வைத்து வேதங்களை வகுத்து வேதங்களின் முக்கிய விஷயங்களாகிய
தத்வ ஞானம் அனுஷ்டானம் இவை இரண்டிலும் அஞ்ஞானம் சம்சயம் விபரீத ஞானம் இவற்றைப்
பரிகரிப்பதற்காக ஐந்தாம் வேதமாகிய மஹா பாரதத்தை அவர் இயற்றி அருளினார்

ஸ்வ வசநேந க்ஷத்த்ரியம் விஶ்வாமித்ரம்
ப்ராஹ்மணீ க்ருத வதோ பகவகதோ வஸிஷ்டஸ்ய நப்த்ருத்வாத்,

வஸிஷ்ட புலஸ்த்ய வர ப்ரதாந லப்த தேவதா பாரமார்த்ய ஜ்ஞாந புராண 
ஸம்ஹிதா கர்த்ருத்வாதி விஷய வர அதிஶயவத்தயா லைங்காதிஷ்வபி
புராணேஷு ப்ரஸித்தஸ்ய பகவத: பராஶரஸ்ய ச அப யத்வாத்,
அநந்ய ஸாதாரண தபஸ் ஸமாதி விஸேஷஶ்ச அஸேஷ பரமர்ஷி பரிஷத் பூஜிதத் வாச்ச| 

மேலும் அவர் ஷத்ரிய ஜாதியில் பிறந்த விச்வாமித்ரரை தமது சொல்லினால் ப்ராமணராகச் செய்த
வஸிஷ்ட பகவானது பிரபவ்வ்த்ரர் -பேரரின் குமாரர் -(வஸிஷ்டர் சக்தி பராசரர் வியாசர் )
வசிஷ்டரும் புலஸ்தியரும் வரம் அளித்ததனால் பர தேவதையின் உண்மை ஸ்வரூபத்தை அறிந்து
புராண ஸம்ஹிதை செய்வது முதலிய மகிமைகளை அடைந்தவர் என்று லிங்க புராணத்தில் சிறப்பித்துக் கூறப்பட்ட பராசரருடைய புதல்வர்–மற்றவர்களுக்கு இல்லாத தவம் தியானங்கள் சிறப்பால் மற்ற மஹ ரிஷி சபைகளால் பூஜிக்கப் பெற்றவர்

ஏவம் விதேந அநேந ருஷிபி: பரி கீதாநாமேவ
பகவந் நாம் நாம் அத்ர ஏதத் ஸ்தோத்ர ரூபேண ஸமாஹ்ருதத்வாச் ச அயம் உபாதேய தம:||

மேற்கூறிய ஸநகாதி மஹரிஷிகளால் ஓதப்பட்ட பகவத் திரு நாமங்களையே கொண்டு
ஸ்தோத்ர ரூபமாக இவர் தொகுத்து அருளி இருப்பதாலும் இந்த ஸஹஸ்ர நாம அத்யாயம்
அனுகூலமாகக் கொள்வதில் அனைத்திலும் மிகவும் -ஸ்ரேஷ்டம்

ஜனமேயன் பரீக்ஷித் திருக் குமாரர் -வைசம்பாயனர் இடம் கேட்டு அறிகிறார் -வேத வியாஸர் அருளிச் செய்தவற்றை உபதேசம்
பாகவதம் வேத வியாசர் அருளி -பரிக்ஷித்துக்கு ஸூகாச்சார்யார் உபதேசம்
அதையே மீண்டும் ஸூத பவ்ராணிகர் சனகாதிகளுக்கு உபதேசம் நைமிசாரண்யத்தில்-இப்படி ஒன்றுக்குள் ஓன்று சம்வாதம்

—————-

4-பீஷ்ம உத் க்ருஷ்ட மதத்வத:-அனைத்திலும் சிறந்த தர்மம் என்று பீஷ்மர் நினைத்து இருந்த சிறப்பு

அபி ச பீஷ்ம உத் க்ருஷ்ட மதத்வத:- பீஷ்மோ அபி ஹி (ப்ரத்யாயித) ப்ரதீத தம: |
ததா ஹி, ராஜ தர்மேஷு தர்ம ராஜாய பகவதா வ்யாஸேந

பீஷ்மர் தமது மதமாக ஒப்புக் கொண்டமை(பீஷ்ம வைபவத்துக்கு 10 பிரமாணங்கள் காட்டி அருளுகிறார் )
பீஷ்மாச்சார்யரும் மிகவும் ஆப்த தமர் -மிகவும் நம்பத் தக்கவர்
வேத வ்யாஸ பகவானே தர்ம புத்ரரை நோக்கி(ஆளவந்தார் பராசர மஹரிஷியைக் கொண்டாடினார்
-பராசரர் வ்யாசரைக் கொண்டாடினார் -அந்த வ்யாஸர் பீஷ்மரைக் கொண்டாடுகிறார் )

ஶ்ரோதும் இச்சஸி சேத் தர்மாந் நிகிலேந நராதிப |
ப்ரைஹி பீஷ்மம் மஹா பாஹோ வ்ருத்தம் குரு பிதா மஹம் ||
ஸ தே ஸர்வ ரஹஸ்யேஷு ஸம்ஶயாந் மநஸி ஸ்திதாந் |
சேத்தா பாகீரதீ புத்ர: ஸர்வஜ்ஞ: ஸர்வ தத்த்வ வித் ||
ஸாக்ஷாத் ததர்ஶ யோ தேவாந் ஸர்வாந் ஶக்ர புராேக மாந் ||“இத்யாததௌ,

சிறந்த பராக்ரமசாலியான அரசனே- தர்மங்கள் எல்லாவற்றையும் கேட்க விருப்பம் இருந்தால்
கௌரவர்களின் பிதாமஹரும் பெரியவருமான பீஷ்மரிடம் செல்
ஸர்வஞ்ஞரும் -எல்லாவற்றிலும் உண்மை தெரிந்த கங்கா புத்திரர் -ஸூஷ்ம விஷயங்கள்
எல்லாவற்றிலும் உனது மனத்தில் உள்ள சந்தேகங்களை எல்லாம் அறுத்து விடுவர்
அவர் இந்திராதி தேவர்களை நேராகவே கண்டவர்-
அவர் சபையில் பரிசுத்தரான ப்ரஹ்ம ரிஷிகள் எக் காலத்திலும் ச பிரியர்களாக இருந்தனர்

யஸ்ய ப்ரஹ்ம ர்ஷய: புண்யா நித்யமாஸந் ஸபாஸத:|
யஸ்ய ந அவிதிதம் கிம்சித் ஜ்ஞாநம் ஜ்ஜேயேஷு வித்யதே ||
ஸ தே வக்ஷ்யதி தர்மஜ்ஜோ தர்மாந் ஸூக்ஷ்மார்த்த தத்த்வ வித் ||இத்யாததௌ ச, “(சாந்தி பர்வம் )

ஸ்வயம் ச பேவதா
ஶர தல்பகதோ பீஷ்ம: ஶாம்யந்நிவ ஹுதாஶந:|
மாம் த்யாதி புருஷ வ்யாக்ர: ததோ மே தத் கதம் மந:||
திவ்யாஸ்த்ராணி மஹா தேஜா யோ தாரயதி புத்திமாந் |
ஸாங்காம்ஶ்ச சதுரோ வேதாம்ஸ் தமஸ்மி மநஸா கதா 😐
ஸ ஹி பூதம் பவிஷ்யச்ச பவச்ச பரதர்ஷப |
வேத்தி தர்ம ப்ருதாம் ஶ்ரேஷ்ட: ததோ மே தத்கதம் மந:||
தஸ்மிந் நஸ்தமிதே பீஷ்மே கௌரவாணாம் துரம்தரே |
ஜ்ஞாநாந்யல்பீ பவிஷ்யந்தி தஸ்மாத் த்வாம் சோதயாம் யஹம் ||“இத்யாததௌ ச,

கிருஷ்ண பகவானும்
பீஷ்மர் சர தல்பத்தில் படுத்து அக்னி ஆறுவது போல் இருக்கிறார்
புருஷ ஸ்ரேஷ்டரான இவர் இப்போது என்னையே த்யானம் செய்கிறார்
ஆதலால் என் மனம் அவர் இடம் சென்றது
சிறந்த சக்தி புத்தி உள்ளவரான அவர் நான்கு வேதங்களையும் வேதாந்தங்களை தம் மனத்தில் வைத்து இருக்கிறார்
நானும் என் மனத்தினால் அவரைச் சேர்ந்து இருக்கிறேன்
பரத ஸ்ரேஷ்டரே -தர்ம அனுஷ்டானம் செய்பவர்களில் சிறந்தவராகிய அவர்
முக்காலமும் அறிந்தவர் என்பதாலேயே அவர் இடம் எனது மனமும் சென்றது
குரு வம்ஸ தலைவராகிய அவர் அஸ்தனமாகி விட்டால் ஞானங்கள் குறைந்து போகும்
ஆதலால் நான் உம்மைத் தூண்டுகிறேன் -என்றும்

“யச்ச த்வம் வக்ஷ்யஸே பீஷ்ம பாண்டவாய அநுப்ருச்சதே |
வேத ப்ரலாபா இவ தே ஸ்தாஸ்யந்தி வஸுதாதலே || “ இத்யாததௌ,

பீஷ்மரைப் பார்த்து
ஓ பீஷ்மரே- அறிய வேண்டும் என்று கேட்க்கும் தர்மராஜருக்கு நீர் என்ன சொல்லப் போகிறீரோ
அவை எல்லாம் வேத வாக்கியங்களை போலவே பூமியிலே நிலை நிற்கப் போகின்றன -என்றும்

“யத்தி பூதம் பவிஷ்யச்ச பவச்ச பரதர்ஷப|
ஸர்வம் தத் ஜ்ஞாந வ்ருத்தஸ்ய தவ பாணாவிவாஹிதம் ||
அஹம் ச த்வா அபிஜாநாமி ஸ்வயம் புருஷ ஸத்தம ||
தபஸாஹி பவாந் ஶக்த: ஸ்ரஷ்டும் லாேகாம்ஶ் சராசராந்-“ இத்யாததௌ ச,

ஓ பரத ஸ்ரேஷ்டரே -பூத பவிஷ்யத் வர்த்தமானங்களை எல்லாம் அறிவில் முதிர்ந்தவராகிய உமக்கு
உள்ளங்கையில் வைக்கப்பட்ட நெல்லிக்கனி போல் இருக்கின்றன
புருஷர்களின் சிறந்தவரே -நானும் நேராகவே உம்மை அறிந்து இருக்கிறேன்
நீர் தவத்தினால் சராசரங்கள் அடங்கி இருக்கும் உலகங்களை படைக்கவும் வல்லீர்

“ந கத க்லாநிர் ந தே மூர்ச்சா” இத் யுபக்ரம்ய “ஸத்த்வஸ்தம் ச மநோ நித்யம் தவ பீஷ்ம பவிஷ்யதி |
ரஜஸ் தமோப்யாம் அஸ்ப்ருஷ்டம் கநைர் முக்த இவோடுராட் ||“இத்யாததௌ ச,

உமக்கு களைப்பும் இல்லை மூப்பும் இல்லை மூர்ச்சையும் இல்லை
உமது மனம் எப்போதும் ஸத்வ குணத்திலேயே நிலை பெற்று ரஜோ குணம் தமோ குணம் அற்று
மேகங்களால் விடுபட்ட சந்திரன் போல் இருக்கிறீர் என்றும் சொல்லி இருக்கிறார்

பகவதா நாரதேந ச “க்ருத்ஸ்நாந் ஹி விவிதாந்
தர்மாம்ஶ் சாதுர் வர்ண்யஸ்ய வேத்த்யயம் ||
தச் சீக்ர மநு யுஞ்ஜீத்வம் ஸம்ஶயாந் மநஸி ஸ்திதாந் ||“ இத்யாததௌ ச ப்ரபஞ்ச்ய,

நாரத பகவானும்-நான்கு வர்ணங்களுக்கும் உள்ள பல வகைத் தர்மங்களை எல்லாம் இவர் நன்கு அறிந்தவர்
ஆதலால் உள்ளத்தில் உள்ள சம்சயங்களை விரைவில் இவர் இடம் வினவுங்கோள் என்று தொடங்கி விரிவாகச் சொல்லி

ஏநம் பஹு மஹர்ஷி வ்ருத்த ஸேவா -தீர்க ப்ரஹ்ம சர்ய தபஸ் -ஸமாதி லப்த -ஸர்வ ஸாக்ஷாத் காராதி ப்ரபாவ விஸேஷவத்தயா ப்ரஶஸ்ய,
பர தத்த்வ தர்ம ப்ரவர்த கதயா வராந் விதீர்ய நியுக்தத்வாத், மாதா பித்ரு ஶுஶ்ரூஷண தத் ப்ரஸாத வர லாப ஸௌபாக்யாத், 

பர தத்துவத்தையும்
பர தத்வ ஞானத்தையும்
தர்ம அனுஷ்டானத்தையும்
வெளியிடும்படி வரம் அளித்தார்

பீஷ்மர் மாதா பிதாக்களுக்குப் பணிவிடை செய்து அவர்கள் மனம் மகிழ்ந்து அளித்த வரத்தையும் பெற்று இருக்கிறார்

ஸ்வயம் ச-“தாஹோ மோஹ: ஶ்ரமஶ் ஸைவ க்லமோ க்லாநிஸ் ததா ருஜ:|
தவ ப்ரஸாதாத் கோவிந்த ஸத்யோ வ்யப கதாநி மே ||
யச்ச பூதம் பவிஷ்யச்ச பவஶ்ச்ச பரமச்யுத |
தத் ஸர்வம் அநு பஶ்யாமி பாணௌ பலமிவாஹிதம் ||
வேதா உக்தாஶ் ஸைவ யே தர்மா: வேதாந்த நியதாஶ்ச யே |
தாந் ஸர்வாந் ஸம் ப்ரபஶ்யாமி வரதாநாத் தவாச்யுத ||“ இத்யாததௌ,

அவர் -ஓ கோவிந்தரே உமது அனுக்ரஹத்தினாலே எனக்குத் தாபமும் மயக்கமும் மனச் சோர்வும் ஓய்வும் வாட்டமும் நோய்களுமாகிய எல்லாம் உடனே போய் விட்டன
அச்யுதரே -பூத பவிஷ்ய வர்த்தமானங்களை எல்லாம் அவற்றுக்கு மேம்பட்ட பரம் பொருளையும்
உள்ளங்கை நெல்லிக்கனி போல் பார்க்கிறேன்-இது தான் ஏக விஞ்ஞானம் ஸர்வ விஞ்ஞானம் ஆழ்வாரைப் போல் ப்ரஹ்மம் சாஷாத்கரித்த பலன்
வேதங்களில் சொல்லப்பட்ட ப்ரவ்ருத்தி தர்மங்களையும் வேதாந்தங்களில் மட்டும் உள்ள விஷயங்களையும்
உமது ப்ரஸாதத்தால் எனது கண் முன் இருக்கின்றன என்றும்
ஜனார்தனாரே -உம்மையே இடைவிடாது த்யானம் செய்ததன் பலனாக எப்போதுமே இளமைப் பருவத்திலேயே இருப்பவனாகி உள்ளேன்
என்றும் தாமே கூறி இருக்கிறார்

“யுவேவ சாஸ்மி ஸம் வ்ருத்த: த்வத் அநுத்யாந ப்ரும்ஹித:|
வக்தும் ஶ்ரேய: ஸமர்தோ அஸ்மி த்வத் ப்ரஸாதாஜ் ஜநார்தந ||“
இத்யாததௌ ச, ப்ரதி ஸம்ஹித யதோக்த ஸ்வ பரமார்த கத்வாச்ச |
ஏவம் விதஸ்ய பீஷ்மஸ்ய “ஏஷ மே ஸர்வ தர்மாணாம் தர்மோ அதி கதமோ மத:” இத்யாதிநா
அதிக தேய தம:||

இப்படி தத்வ ஞானத்தை யதாவாக அறிந்த பீஷ்மர்
இது தான் எல்லாத் தர்மங்களிலும் சிறந்த தர்மமாக யான் நினைப்பது என்று தொடங்கி
இந்த ஸஹஸ்ர நாம கீர்த்தனம் தமது மிகவும் சிறந்த தர்மமாகச் சொல்வதானால்
இந்த அத்யாயம் அனுகூலமாக கொள்ளும் அனைத்திலும் சாலச் சிறந்தது என்றதாயிற்று –

——————–

5-பரிகிரஹா திசயதோ-விலக்ஷணமான அங்கீ காரம் பெற்றது

பரிக்ரஹ அதிஶைத :-
பரிக்ரகஹோ ஹி ஸார்வ பௌமோ பகவந் நாம ஸஹஸ்ரஸ்ய |
ஶாஸ்த்ரேஷு தாவத் ஸபா பர்வணி-“தேவோ நாம ஸஹஸ்ரவாந்” இதி பகவாநபி நாம ஸஹஸ்ர ஸம்பந்தேந பூஷ்யதே |

பெரியோர் பலராலும் அங்கீ கரிக்கப் பட்டமை
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் எல்லாரும் அங்கீ கரிக்கப் பட்டுள்ளது
அன்றியும் ஸபா பர்வத்தில் -பகவான் ஆயிரம் நாமங்களை யுடையவர் -என்றும்

ஶ்ரீவிஷ்ணுதர்மே ச
ஸ்ரீ கஜேந்த்ர மோஷேண
“ஸஹஸ்ர ஶுப நாமா நம் ஆதி தேவம் அஜம் விபும்” இதி |

விஷ்ணு தர்மத்தில் கஜேந்திர மோக்ஷ ப்ரகரணத்தில்
ஆயிரம் மங்களகரமான நாமங்களை யுடையவரும் -ஆதி தேவரும் -ஜனநம் இல்லாதவருமான பிரபுவை என்றும்
ஆயிரம் நாமங்களை பற்றிய சிறப்பு கூறப்பட்டுள்ளது –

அத்ர ச உபோத்காத பல ஶ்ருத்யோ : குண ப்ரபஞ்சோ த்ருஶ்யதே |
ஆயுர் வேதாதிஷு ச த்ருஷ்டாத்ருஷ்ட ஶாஸ்த்ரேஷு, யதா சரக ஸம் ஹிதாயாம்
“விஷ்ணும் ஸஹஸ்ர மூர்தாநம் சராசர பதிம் விபும் |
ஸ்துவந் நாம ஸஹஸ்ரேண ஜ்வராந் ஸர்வாந் வ்யபோஹதி ||

இந்த ஸ்தோத்ரத்தில் ஆரம்பம் முடிவிலும் பலன் சொல்லும் இடத்திலும் இதன் குணங்கள் மிக விரிவாக வெளியிடப்பட்டுள்ளன
வைத்திய ஸாஸ்த்ரம் முதலியவற்றிலும் இதன் விசேஷம் சொல்லப்பட்டுள்ளது –
வைத்திய சாஸ்திரமாகிய சரக ஸம்ஹிதையில்
ஆயிரம் தலைகளை யுடையவரும் -சராசரங்களுக்கு ஸ்வாமியும் ஸர்வ வ்யாபியான விஷ்ணுவை
இந்த ஸஹஸ்ர நாம ஸ்தோத்ரம் கொண்டு ஸ்துதிப்பதால் எல்லா வித ஜ்வரங்களையும் போக்கிக் கொள்ளலாம் என்று கூறப் பட்டுள்ளது

இதி| அத்யதேந ச நாநா விப்ர கீர்ண மூலே  மேஹஸ்ய ப்ராயஶ் சித்தே ,
“ஜப்யம் புருஷ ஸூக்தகம்” இத்யாரப்ய “ததைவ பகவந் நாம ஸஹஸ்ரம்
பாரதோதிதம்”, 

அவ்வாறே நவீனமான ஒரு வைத்திய நூலும் மேக ரோகத்துக்குப் பிராயச் சித்தம் செல்லுகையில்
புருஷ ஸூக்தம் ஜபிக்க வேண்டும் என்றும் சொல்லி மேல்
ஸஹஸ்ர நாமத்தையும் ஜபிக்க வேண்டும் என்றும் கூறுகிறது

யக்ஷ்மண:“ததைவ பகவந் நாம ஸஹஸ்ரம் பரிகீர்தயேத்”,
ஜ்வர விஸேஷஸ்ய,
“ஹோமஸ்து பூர்வ வஜ் ஜப்யம் விஷ்ணோர் நாம ஸஹஸ்ரகம்”,
க்ரஹாதே : “ஆஸத் மதம் மருத் ஸூக்தம் விஷ்ணோர் நாம ஸஹஸ்ரகம்
அந்யத்ர ஸ ஏ வம்விதம் அந்வேஷ்டவ்யம் | ப்ராக்ருதா:கவயோ அபீதம்
ஸர்வ ஜீவ ரக்ஷாத்வேந வர்ணயந்தி | யதாஸ் ஸஹ

க்ஷய ரோகத்துக்கு சிகித்சை சொல்லுவதிலும் ஸஹஸ்ர நாம கீர்த்தனம் செய்ய வேண்டும் என்றும் சொல்கிறது
கிரஹ சாந்தி சொல்லும் இடத்திலும் வாயு ஸூக்தமும் ஸஹஸ்ர நாம கீர்த்தனமும் செய்ய வேண்டும் என்றும்
இப்படி அநேக இடங்களில் சொல்லப்பட்டு இருப்பதைக் காணலாம்

பட்டபாண: ஸூதிகா க்ருஹ வர்ணநே அவிச்சிந்ந பட்ய மாந நாராயண நாம ஸஹஸ்ரம்” இதி |
லோகே ச க்ரஹண தாரண ஶ்ரவண ஜப ஸம் கீர்தந லேகந வ்யாக்யாந தந் நிஷ்ட பூஜந ப்ரப்ருதிபி:
விஷ-பிஶாச-வ்யாதி-க்ரஹ -து:ஸ்வப்ந-துர் நிமித்தாத் யஶிய உப ஶமநாய,
மஹா பாதகாதி ப்ராயஶ் சித்தாய,

ஐஹிக ஆமுஷ்மிக அப்யுதய ஸித்தயே , ஸம்ஸார॒ க்ரந்தி விஸ்ரம் ஸநாய,
வைஷ்ணவ பரமபத அவாப்தயே , தாதாத் விக பகவத்
குண ஸுதாஸ்வாத ஸுகாய ஆபால மூக மூர்க ஸ்த்ரீ நாஸ்திகைக பேஷஜம்

நிரதிஶய ஶ்ரத்தா பக்தி விஶ்வாஸ பூர்வகம் பரி க்ருஹ்யதே |
ந ஸ ஏவம் வித: பரிக்ரகஹோ வேதாநாமபி; தேஷாம் மூர்காதிபி: அபரிக்ரஹாத்,
குல சரண கோத்ராதி வ்யவஸ்தயா ப்ரதி ஶாகம் பரிக்ரஹ விபாகாச்ச |
ஏவம் பரிக்ரஹ அதிஶயாதப்யஸ்ய உபாதேய தமத்வம் ||

லௌகிகர்களான கவிகளிலும் பட்ட பாண கவி ப்ரஸவ க்ரஹத்தை வர்ணிக்கும் போது
நாராயணனுடைய ஸஹஸ்ர நாம கீர்த்தனம் இடைவிடாமல் செய்கிறார்கள் என்கிறார்

இப்போதும் உலகத்தில் அவ்விதமாக அநேகம் வியாதிகளுக்கும் பாபங்களும் பரிகாரமாக
ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ர நாம பாராயணம் பண்ணுவதைக் காண்கிறோம்
விஷம் பிசாசம் வியாதி க்ரஹம் தீய கனவு அப சகுனம் முதலான வற்றுக்கு சாந்தி செய்வதற்கும்
மஹா பாதகம் முதலான பாதங்களுக்கு ப்ராயச்சித்திக்கும்
இம்மையிலும் மறுமையிலும் மேன்மைகள் கிடைப்பதற்கும்
ஜனனம் மரணம் என்னும் சம்சார விலங்கை விடுவதற்கும்
அவ் விலங்கை விட்டுப் பரம பதம் அடைவதற்கும்
தத் காலத்தில் பகவத் குணங்கள் என்னும் அமுதை உண்டு ஸூகம் பெறுவதற்கும்
குழந்தைகள் ஊமைகள் பித்தர் பெண்கள் நாஸ்திகர் முதலியோரும் மிக்க சிரத்தை பக்தி நம்பிக்கைகளுடன் இத்தை அனுஷ்டிப்பதைக் காண்கிறோம்
இப்படி அங்கீ கரிப்பதற்கு வேதங்களும் இல்லை-மூர்க்கர் வேதங்களை எடுத்துக் கொள்வதும் இல்லை
அந்த அந்த குலம் கோத்ரம் முதலியவற்றுக்கு அந்த அந்த வேத சாகைகள் என்று பிரிக்கப்பட்டு இருப்பதினாலும்
ஒரு சாகையையும் யாவரும் இப்படி கிரகிப்பது இல்லையே

வாஸ்ய பிரபாவம் போல் அல்லவே வாசக பிரபாவம்-

இன்றும் சர்வாதிகாரமாக ஸஹஸ்ர நாம பாராயணம் அனைத்துக்கும் பரிகாரமாக செய்வதைக் கண் கூடாகவே காண்கிறோம்
வேத அத்யயனம் செய்யாதவர்களுக்கு இதுவே கை வந்த மருந்தாகக் காண்கிறோம்

——–

6-கீதாத்யை கார்த்தஸ்ஸ ந:-பகவத் கீதை போன்ற பல நூல்கள் உடன் பொருள் பொருத்தம் உடைய சிறப்பு

கீதாத்யைகார்த்தைஶ்ச –
பாரத ஸித்தாந்த பூத பகவத் கீதா நாராயணீய
யாந ஸந்தி அக்ர பூஜ உத்தம அநுஶாஸந ப்ரப்ருதி ப்ரதேஶாந்தர தாத்பர்ய
நிஷ்கர்ஷ ரூபத்வேந தத் ஏகத அர்தத்வாச்ச|

ஸ்ரீ மத் பகவத் கீதை முதலியவற்றுடன் பொருள் ஒற்றுமை
பகவத் கீதை
நாராயணீயம்
யான சந்தி பர்வம்
அக்ர பூஜை
உத்தம தர்ம அநு ஸாஸனம்
முதலான அநேக இடங்களிலும் தாத்பர்யத்தை இது சுருங்கக் கோருவதால் அவற்றோடு பொருள் ஒற்றுமை இதுக்கு உண்டு

—–

ஏவமேபி: ஷட்பிர் ஹேதுபி: ப்ரேக்ஷா பூர்வ காரிணாம்
பரம உபாதேய தயா நிர்ணீதம்,
வ்யாஸ தேவஶ்ரவோ தேவ ஸ்தாந நாரத
வாத்ஸ்ய அஶ்ம ஸுமந்து ப்ரப்ருதிபி:
ஸகல வித்யா தேஶிகை : ப்ரஹ்ம த்ருஶ்வபி: தேவ ப்ரஹ்ம ரிஷிபி:

ஸ்வயம் ச பகவதா ஸர்வேஶ்வரேண கீத உபநிஷதாசார்யேண பூர்வேஷாமபி குருணா
புண்டரீக விலோசநேந ஶ்ரோத்ரு கோடி நிவிஷ்டேந
பீஷ்மாத் ஸ்ருத்வா அநு மோதிதம் ஶ்ரீமந் நாம ஸஹஸ்ராத்யாயம் பகவத் குண தத்த்வ
ப்ரதி பத்தய வ்யாகுர்மஹே ||

இவ்விதம் ஆறு காரணங்களாலும்
விவேகத்தோடு கார்யங்களை அனுஷ்டிப்பார்களுக்கு இது எல்லாவற்றிலும் சிறந்ததாகவே நிச்சயிக்கப் பட்டு இருக்கிறது
எல்லா வித்யைகளுக்கும் ஆச்சார்யர்களும் ப்ரஹ்ம சாஷாத்காரம் பெற்றவருமான
வ்யாஸர் -தேவ வியாஸரஸ் -தேவ ஸ்தானர் -நாரதர் வாத்ஸ்யர் -அஸ்மர்-ஸூமந்து முதலான
தேவ ரிஷிகளாலும் -ப்ரஹ்ம ரிஷிகளாலும் சொல்லப்பட்டதும்-

பைலர் –வைசம்பாயனர் யஜ்ஜா வர்க்யர்- ஜைமினி போல்வாரைக் கொண்டே வேத பிரிவுகளை பிரசாரம் )

இனி ஏழாவது பெருமை -ஸர்வேஸ்வரனான கீதாச்சார்யனும் முன்னோரான குருக்களுக்கும் குருவான தாமரைக் கண்ணனுமான ஸாஷாத் பகவானே கேட்பவரோடே கூட உட்கார்ந்து கேட்டு அருளி-அங்கீ கரித்து அருளிய இந்த ஸஹஸ்ர நாம அத்யாயத்துக்கு
பகவத் குணங்களின் தத்வ ஞானம் உண்டாவதற்காக வியாக்யானம் செய்கிறோம்

மிதிலைச் செல்வி –தன் சரிதை கேட்டான் பெருமாள்
இன்பம் பயக்க எழில் மாதரும் தாமும் -மிதுனமாக திருவாறண் விளையிலே கேட்டு அருளினார்கள் அன்றோ

பகவத் குண தத்த்வ–பகவத் குண தர்ப்பணம் இதனாலே திரு நாமம்
தொண்டைமான் சக்கரவர்த்திக்கு அங்கு ஏழு நாழிகையில் ஏழு அர்த்தங்கள்
அஷ்ட ஸ்லோஹி யில் -ஆறு சொல்லி -ஏழாவது தனியாக
தேஹாத்ம பிரமம் நிவ்ருத்தி
ஸ்வ ஸ்வா தந்தர்ய நிவ்ருத்தி
அந்நிய சேஷத்வ நிவ்ருத்தி –மூன்றும் ஓங்காரம்
ஸ்வ யத்ன நிவ்ருத்தி -நமஸ்
அபந்து -ஆபாச பந்துக்கள் நிவ்ருத்தி நாராயண
விஷய நிவ்ருத்தி ஆய -கைங்கர்ய பிராத்தனை
இப்படி ஆறையும் சொல்லி
நமஸ்ஸில் ஆந்திர அர்த்தமான பாகவத சேஷத்வம் ஏழாவது
அதே போல் இங்கும் பிரதானமாக கண்ணன் தானே அமர்ந்து கேட்டது –

————

இந்த ஏழு காரணங்களால்-:சஹஸ்ர நாம அத்யாய உபாதேய தமோ மத :

உத் = தோஷம் அற்றவன் -தோஷங்களை போக்கடிப்பவன் –
வேதனம் உபாசனம் த்யானம்  தர்சனம்/ பஜனம் /சேவை  அனைத்துக்கும் விஷயம் அவனது சுபாஸ்ரியமான  பகவத் விக்ரகம் தான் —
குஹ்ய  தமம் ரஹஸ்யங்களில் உயர்ந்தது திரு நாம சங்கீர்த்தனம்

தேவோ நாம ஸஹஸ்ரவான் -ஸ்ரீ விஷ்ணு தர்மம் –
தோள்கள் ஆயிரத்தாய் முடிகள் ஆயிரத்தாய் துணை மலர்க் கண்கள் ஆயிரத்தாய்
தாள்கள் ஆயிரத்தாய் பேர்கள் ஆயிரத்தாய் தமியனேன் பெரிய வப்பனே –திருவாய் 8-1-10-
தமர் உகந்தது எப்பேர் அப்பேர் –

—————————————————————

ஆறாவது கேள்விக்கு பீஷ்மர் பதில் முதலில்
ஜகத்ப்ரபும் தேவதேவம் அநந்தம் புருஷோத்தமம்
ஸ்துவன் நாம ஸ்ஹஸ்ரேண புருஷ ஸததோத்தித
பழுதே பகலும் போயின என்று அஞ்சி அழுதேன் –
அசந்நேவ ஸ் பவதி –

அடுத்து 3/4 கேள்விகளுக்கு பதில்
தமேவ சார்ச்யந்நித்யம் பக்த்யா புருஷமவ்யயம்
த்யாயன் ஸ்துவன் நமஸ் யம்ஸ்ஸ யஜமாநஸ்த மேவச –சர்வ துக்காதி கோ பவேத்
ஜப ஆலம்பனம்-ஸஹஸ்ர நாமம்
பக்த்யா அர்ச்சயன்
பக்த்யா த்யாயன்
பக்த்யா ஸ்துவன்
பக்த்யா நமஸ்யன்
அச்சுதா அமரர் ஏறே –என்னும் இச்சுவை
பக்திஸ்ஸ ஜ்ஞான விசேஷ –
சார்வே தவ நெறிக்கு தாமோதரன் தாள்கள் -திருவாய் -10-4-1-
வணக்குடை தவ நெறி -1-3-5-
ஸ்ததம் கீர்த்தயந்தோமாம் நமஸ் யந்தஸ் சமாம் பக்த்யா -ஸ்ரீ கீதை -9-14
மன்மநாபவ மத்பக்தோ மத்யாஜி மாம் நமஸ்குரு -ஸ்ரீ கீதை -9-4
காரணந்து த்யேய
கண்ணன் கழலினை நண்ணும் மனம் உடையீர் எண்ணும் திருநாமம் திண்ணம் நாரணமே —
நாரணன் எம்மான் பாரணங்காளன் வாரணம் தொலைத்த காரணன் தானே –
தானே யுலகெல்லாம் -தானே படைத்திடந்து தானே யுண்டுமிழ்ந்து தானே யாள்வானே
தமேவம் வித்வான் அம்ருத இஹ பவதி
ப்ரஹ்ம வித் ஆப்நோதி பரம்
யஜ்ஞென தானேன தபஸா நோசகேன-
வியாசரும் -ஆலோத்யா சர்வ சாஸ்த்ராணி விசார்யச புன புன
இதமேகம் ஸூ நிஷ்பந்தம் த்யேயோ நாராயணஸ் சதா –
ஆலம்பனம் -கூராழி வெண் சங்கேந்தி
வேர் சூடுமவர் மண் பற்று கழற்றாதாப் போலே
ஜ்ஞானியை விக்ரஹத்தோடே ஆதரிக்கும் –

தர்மரின் மூன்றாவது கேள்விக்கு -கம் ஸ்துவந்த –
பீஷ்மர் –
தமேவ சார்ச்யந்நித்யம் பக்த்யா புருஷமவ்யயம்
த்யாயன் ஸ்துவன் நமஸ் யம்ஸ்ஸ யஜமாநஸ்த மேவச –
அநாதிநிதனம் விஷ்ணும் சர்வலோக மகேஸ்வரம்
லோகாத் யஷம் ஸ்துவன் நித்யம் சர்வ துக்காதிகோ பவேத் –
ப்ரஹ்மணயம் சர்வ தர்மஜ்ஞம் லோகாநாம் கீர்த்தி வர்த்தநம்
லோகநாதம் மஹத் பூதம் சர்வ பூத பவோத் பவம் –
10 அடை மொழிகள்
1-அநாதிநிதனம் -ஆதி அந்தம் இல்லாதவன் -தேச கால வஸ்து பரிச்சேதன்
2-விஷ்ணும் -வ்யாப்தி
3-சர்வலோக மகேஸ்வரம்
4-லோகாத் யஷம் -அனைத்தையும் கண்களால் காண்பவன்

5-ப்ரஹ்மணயம் -வேத பிரதிபாத்யன்
6-சர்வ தர்மஜ்ஞம் –
7-லோகாநாதம்
8-மஹத் பூத்
9-கீர்த்தி வர்த்தநம்
10- சர்வ பூத பவோத் பவம் -ஆதி காரணன் –
ஸ்துவன் நித்யம் சர்வ துக்காதிகோ பவேத் -ஸ்துவந்த கம் கேள்விக்கு இப்படி பீஷ்மர் பதில் அருளுகிறார்
யதாததாவபி குண சங்கீர்த்த்தனம் குர்வன்-ஏதோ ஒரு முறையில் திவ்ய நாம திருக் குணங்களைப் பாடுதல் –

இனி ஐந்தாம் கேள்விக்கு -கோ தர்ம சர்வ தர்மாணாம் -பதில்
ஏஷ மே சர்வ தர்மாணாம் தர்மோதி கதமோ மத ‘
யத் பக்த்யா புண்டரீ காஷம் ஸ்தவைரச் சேன்நரஸ் ஸதா –
ஏஷ -மேலே சொல்லப்பட்ட அர்ச்சன ஸ்தவ நாதிகளால்-அன்புடன் பூஜிக்கை –
அதிகதம -மிகச் சிறந்த தர்மம்
யத் பக்த்யா -ப்ரீதி உட் கொண்ட -ஸூ ஸூகம் கர்த்தும் அவ்யயம் –
அர்ச்சேத் -ஆராதிப்பவன்
பத்துடை அடியவர்க்கு எளியவன்
சதா -கால தேச சுத்தி வேண்டா
அபஹத பாப்மா -அமலன் -விமலன் -நிமலன் -நின்மலன் –
அவன் திரு உள்ளம் உகந்து -விதி வாய்க்கின்று காப்பாரார் –
ஸ்வாராதன் –
கலௌ சங்கீர்த்ய கேசவம் –

அடுத்து கிம் வாப்யேகம் பராயணம் –உபேயம் பற்றி கேள்விக்கு பதில் –
1-பரமம் யோ மஹத் தேஜ–பரம் -மஹத் இரண்டு விசேஷணங்கள்-கோடி சூர்ய சம ப்ரப-
2- பரமம் மஹத் தப -தப -நியந்தா பொருளில்
பீஷாஸ்மாத் வாத பவதே பீஷோ தேதி ஸூர்ய
3-பரமம் மஹத் ப்ரஹ்ம -ஸ்வரூப ப்ருஹத்வம் குண ப்ருஹத்வம் –
ப்ரஹ்மணத்வம் -தன்னை கிட்டியவரை தன்னைப் போலே பெரிதாக்க வல்லவன் –
4-பரமம் பராயணம்
5-பவித்ரானாம் பவித்ரம்
மாதவன் என்று ஓத வல்லீரேல் தீதொன்றும் சாரா
வாயினால் பாடி -..போய பிழையும் புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசாகும்

ஹரிர் ஹரதி பாபானி
தத்யதா இஷீக தூல மக்நௌ ப்ரோதம் ப்ரதூயதே -சாந்தோக்யம்
பவித்ரங்களுக்கும் பவித்ரம் அவனே
6- மங்களா நாஞ்ச மங்களம் –

இனி கிமேகம் தைவதம் லோகே -முதல் கேள்விக்கு பதில் –

தைவதம் தேவதா நாம் ஸ -என்று தொடங்கி
மனிதர்க்குத் தேவர் போலே தேவர்க்கும் தேவாவோ -திருவாய் -8-1-5-
லோக ப்ரதானச்ய – ஜகன்நாதச்ய
சர்வ பாபபயாபஹம் நாம சஹச்ரம்

ஸ்ருணுமே-கேள் -தர்மா -தட்டி எழுப்பி சொல்கிறார் பீஷ்மர்
கௌணாநி -குண சேஷ்டிதங்கள்
விக்யாதாநி -பிரசித்தமானவை
ரிஷிபி -சநகர் நாரதர் போல்வார்
பரிகதாநி -எல்லா திக்குகளிலும் அத்யந்த சிநேக பக்திகளுடன் பாடப்பட்டவை
பூதயே -வாழ்ச்சியின் பொருட்டு
பூ சத்தாயாம்
கடல் வண்ணன் பூதங்கள் -திருவாய் -5-2-1-
மஹாத்மநா-தனக்கும் தன் தன்மை அறிவரியான் –
அஹம் வேத்மி மகாத்மா
அப்ரமேயம் ஹி தத்தேஜ –

கிம் ஜபன் முச்ச்யதே உபோத்காதம்

பத்தோ முச்யேத பந்த நாத்யாதி ப்ரஹ்ம ஸநாதநம் -என்று
சம்சார பந்தம் நிவ்ருதியும்
ப்ரஹ்ம பிராப்தியும்
பலமாக சொல்லி முடிகிறது

யதோபாசனம் பலம்
சூழ்ந்து இருத்து ஏத்துவர் பல்லாண்டு -பல்லாண்டு இங்கே -அதே பலன் அங்கும்

———

ஸூபாஸ்ரியமான பகவத் விக்ரகம் தான் —
குக்ய தமம் ரஹச்யங்களில் உயர்ந்தது திரு நாம சங்கீர்த்தனம்

தேவோ நாம ஸஹஸ்ரவான் -ஸ்ரீ விஷ்ணு தர்மம் –

தோள்கள் ஆயிரத்தாய் முடிகள் ஆயிரத்தாய் துணை மலர்க் கண்கள் ஆயிரத்தாய்
தாள்கள் ஆயிரத்தாய் பேர்கள் ஆயிரத்தாய் தமியனேன் பெரிய வப்பனே –திருவாய் 8-1-10-

தமர் உகந்தது எப்பேர் அப்பேர் –

அமரர் நன்னாட்டு அரசு ஆள பேர் ஆயிரமும் ஓதுமின்கள் -ஸ்ரீ பெரிய திருமொழி -1-5-10–

இனமலர் எட்டும் இட்டு இமையோர்கள் பேர்கள் ஆயிரம் பரவி நின்று அடி தொழும்
பிரிதி சென்று அடை நெஞ்சே –ஸ்ரீ பெரிய திருமொழி –1-2-7-

ஓதி ஆயிர நாமங்கள் உணர்ந்தவர்க்கு உறு துயர் அடையாமல் ஏதமின்றி நின்று அருளும்
நம் பெரும் தகை இருந்த நல் இமயத்து -1-2-9-

பேர் ஆயிரமுடையான் பிறங்கு சிறை வண்டு அறைகின்ற தாரான் தாரா வயல் சூழ்ந்த சாளக்கிராமம் அடை நெஞ்சே -1-5-4-

பாரு நீர் எரி காற்றினோடு ஆகாசமும் இவையாயினான் பேருமோர் ஆயிரம்
பேச நின்ற பிறப்பிலி பெருக்குமிடம் –திருவேங்கடம் -1-9-7–

வென்றி கொள் வாள் அவுணன் பகராத அவன் ஆயிர நாமம்-2-4-7-

வருமா நிலம் அன்று அளப்பான் குறளாய் அவுணன் பெரு வேள்வியில் சென்று இரந்த பெருமான்
திரு நாமம் பிதற்றி நுந்தம் பிறவித் துயர் நீங்குதும் என்னகிற்பீர் -3-2-4-

அண்டரும் வானத்தவரும் ஆயிர நாமங்களோடே திண் திறல் பாட வருவான் சித்திர கூடத்துள்ளானே -3-3-3–

ஓதி ஆயிர நாமமும் பணிந்து ஏத்தி நின்னடைந்தேற்கு -3-5-9-

எண்ணில் பேராளன் பேர் அல்லால் பேசாள் -5-5-7-

ஆயிரம் பெயரால் அமரர் சென்று இறைஞ்ச அறி துயில் அலை கடல் நடுவே
ஆயிரம் சுடர் வாய் அரவணைத் துயின்றான் அரங்க மா நகர் அமர்ந்தான் -5-7-6–

தாராளன் தண்ணரங்க வாளன் பூ மேல் தனியாளன் முனியாளார் ஏத்த நின்ற பேராளன்
ஆயிரம் பேருடைய வாளன் பின்னைக்கும் மணவாளன் பெருமை -6-6-9-

அமுதம் கொண்ட பெருமான் திரு மார்பன் –நாமம் சொல்லில் நமோ நாராயணமே -6-10-3–

தேனும் பாலும் அமுதமாய் திருமால் திரு நாமம் நானும் சொன்னேன் நமரும் உரைமின் நமோ நாராயணமே -6-10-6-

பேர் ஆயிரமுடைய பேராளன் பேராளன் என்கின்றாளால் -8-1-6-

திருக் கண்ணபுரத்து உறையும் பேராளன் ஆயிரம் பேர் ஆயிர வாய் அரவணை மேல்
பேராளர் பெருமானுக்கு இழந்தேன் என் பெய் வளையே -8-3-9–

ஆயிரம் பேரானைப் பேர் நினைந்து –11-3-8-

பெற்றாரார் ஆயிரம் பேரானை பேர் பாடப் பெற்றான் கலியன் ஒலி செய் தமிழ் மாலை -11-3-10-

உலகு அளந்த யும்பர் கோமான் பேராளன் பேரான பேர்கள் ஆயிரங்களுமே பேசீர்களே -11-6-5-

————————–

திருக் கோட்டியூர் கேசவா புருடோத்தமா கிளர் சோதியாய் குறளா வென்று பேசுவார் அடியார்கள்
எந்தம்மை விற்கவும் பெறுவார்களே-பெரியாழ்வார் திருமொழி-4-4-19-

கேசவா புருடோத்தமா வென்றும் கேழலாகிய கேடிலீ என்றும் பேசுவார் எய்தும்
பெருமை பேசுவான் புகில் நம் பரம் அன்றே -பெரியாழ்வார் திருமொழி-4-5-1–

—————————-

பேரும் ஓர் ஆயிரம் பிற பலவுடைய எம்பெருமான் பேரும் ஓர் உருவமும்
உளதில்லை இலதில்லை பிணக்கே -ஸ்ரீ திருவாய்மொழி-1-3-4-

பலபலவே யாபரணம் பேரும் பலபலவே பலபலவே சோதி வடிவு பண்பு எண்ணில் பல பல -2-5-6–

நாமங்கள் ஆயிரமுடைய நம் பெருமான் -5-8-11-

ஊரும் நாடும் உலகமும் தன்னைப்போல் அவனுடைய பேரும் தார்களுமே பிதற்ற–6 -7 -2 –

ஓர் ஆயிரமாய் உலகு ஏழு அளிக்கும் பேர் ஆயிரம் கொண்டதோர் பீடுடையன் காராயின
காள நன்மேனியினன் நாராயணன் நங்கள் பிரானே -9-3-1-

ஆயிரம் பேருடை யம்மான் நலம் கொள் நான்மறை வாணர்கள் வாழ் திரு மோகூர்
நலம் கழல் அவன் அடி நிழல் தடம் அன்றி அறியோமே-10-1-2–

சாரா ஏதங்கள் நீரார் முகில் வண்ணன் பேர் ஆர் ஓதுவார் ஆரார் அமரரே -10-5-8–

——————–

நின்றதுவும் வேங்கடமே பேர் ஓத வண்ணர் பெரிது-ஸ்ரீ முதல் திருவந்தாதி -39-

நினைத்தற்கு அரியானைச் சேயானை ஆயிரம் பேர் செங்கண் கரியானைக் கை தொழுதக்கால் -65-

ஆய்ந்து உரைப்பன் ஆயிரம் பேர்– ஸ்ரீ இரண்டாம்-73-

நாமம் பல சொல்லி நாராயணா வென்று நாம் அங்கையால் தொழுதும் நன்னெஞ்சே –ஸ்ரீ மூன்றாம் -8-

தேசம் திறலும் திருவும் உருவமும் மாசில் குடிப்பிறப்பும் மற்றவையும் பேசில்
வலம் புரிந்த வான் சங்கம் கொண்டான் பேரோத நலம் புரிந்து சென்று அடையும் நன்கு -10-

தான் ஒரு கை பற்றி அலையாமல் பீறக்கடைந்த பெருமான் திரு நாமம் கூறுவதே யாவர்க்கும் கூற்று–ஸ்ரீ நான்முகன் -49-

பேர் பாடி செயல் தீரச் சிந்தித்து வாழ்வாரே வாழ்வார் -88-

—————–

திரைக் கண் வளரும் பேராளன் பேரோதச் சிந்திக்க -ஸ்ரீ பெரிய திருவந்தாதி–59-

—————

பேர் ஆயிரமுடையான் என்றாள்—பேர் ஆயிரமுடையான் பேய்ப்பெண்டீர் நும் மகளை தீரா நோய் செய்தான் என உரைத்தாள் —
செங்கண் நெடியானைத் தேன் துழாய்த் தாரானை தாமரை போல் கண்ணானை எண்ணரும் சீர்ப் பேர் ஆயிரமும் பிதற்றி
பெரும் தெருவே ஊரார் இகழிலும் ஊராது ஒழியேன் நான் வாரார் பூம் பெண்ணை மடல் –ஸ்ரீ சிறிய திருமடல்

———————————————————————

கிமேகம் தைவதம் லோகே -பவத பரமோ மத –ஒப்பற்ற தெய்வம் யார்
கிம்வாபி ஏகம் பராயணம் -பவத பரமோ மத –அடையத் தக்க பிராப்யம் எது
ஆக பிராப்யம் பற்றி முதல் இரண்டு கேள்விகள் –

ஸ்துவந்த கம் -பவத பரமோ மத -யாரை குண சங்கீர்த்தனம் பண்ணி பூஜித்து
கம் அர்ச்சந்த மாநவா சுபம் ப்ராப்நுயு -பவத பரமோ மத -யாரை பக்தியுடன் உபாசித்து இஹ பர இன்பங்கள் அடைகிறார்கள் –
கோ தர்மஸ் சர்வ தர்மாணாம் -பவத பரமோ மத -தேவரீர் ஸ்வீகரித்த மேலான தர்மம் எது –

கிம் ஜபன் முச்யதே ஜந்து ஜன சம்சார பந்தநாத் -பவத பரமோ மத -எந்த மந்திர ஜபத்தால் பந்தம் அறும்
இவை உபாயம் பற்றிய நான்கு கேள்விகள்

பவத பரமோ மத -உமது அபிப்ராயத்தால் –ப்ரியதமமான பலனையும் ஹிததமமான உபாயத்தையும் கேட்கிறார்

ஆறாவது கேள்விக்கு பீஷ்மர் பதில் முதலில்
ஜகத்ப்ரபும் தேவதேவம் அநந்தம் புருஷோத்தமம்
ஸ்துவன் நாம ஸ்ஹஸ்ரேண புருஷ ஸததோத்தித
பழுதே பகலும் போயின என்று அஞ்சி அழுதேன் –
அசந்நேவ ஸ் பவதி –

அடுத்து 3/4 கேள்விகளுக்கு பதில்
தமேவ சார்ச்யந்நித்யம் பக்த்யா புருஷமவ்யயம்
த்யாயன் ஸ்துவன் நமஸ் யம்ஸ்ஸ யஜமாநஸ்த மேவச –சர்வ துக்காதி கோ பவேத்
ஜப ஆலம்பனம்-ஸஹஸ்ர நாமம்
பக்த்யா அர்ச்சயன்
பக்த்யா த்யாயன்
பக்த்யா ஸ்துவன்
பக்த்யா நமஸ்யன்
அச்சுதா அமரர் ஏறே –என்னும் இச்சுவை
பக்திஸ்ஸ ஜ்ஞான விசேஷ –
சார்வே தவ நெறிக்கு தாமோதரன் தாள்கள் -திருவாய் -10-4-1-
வணக்குடை தவ நெறி -1-3-5-
ஸ்ததம் கீர்த்தயந்தோமாம் நமஸ் யந்தஸ் சமாம் பக்த்யா -ஸ்ரீ கீதை -9-14
மன்மநாபவ மத்பக்தோ மத்யாஜி மாம் நமஸ்குரு -ஸ்ரீ கீதை -9-4
காரணந்து த்யேய
கண்ணன் கழலினை நண்ணும் மனம் உடையீர் எண்ணும் திருநாமம் திண்ணம் நாரணமே —
நாரணன் எம்மான் பாரணங்காளன் வாரணம் தொலைத்த காரணன் தானே –
தானே யுலகெல்லாம் -தானே படைத்திடந்து தானே யுண்டுமிழ்ந்து தானே யாள்வானே
தமேவம் வித்வான் அம்ருத இஹ பவதி
ப்ரஹ்ம வித் ஆப்நோதி பரம்
யஜ்ஞென தானேன தபஸா நோசகேன-
வியாசரும் -ஆலோத்யா சர்வ சாஸ்த்ராணி விசார்யச புன புன
இதமேகம் ஸூ நிஷ்பந்தம் த்யேயோ நாராயணஸ் சதா –
ஆலம்பனம் -கூராழி வெண் சங்கேந்தி
வேர் சூடுமவர் மண் பற்று கழற்றாதாப் போலே
ஜ்ஞானியை விக்ரஹத்தோடே ஆதரிக்கும் –

தர்மரின் மூன்றாவது கேள்விக்கு -கம் ஸ்துவந்த –
பீஷ்மர் –
தமேவ சார்ச்யந்நித்யம் பக்த்யா புருஷமவ்யயம்
த்யாயன் ஸ்துவன் நமஸ் யம்ஸ்ஸ யஜமாநஸ்த மேவச –
அநாதிநிதனம் விஷ்ணும் சர்வலோக மகேஸ்வரம்
லோகாத் யஷம் ஸ்துவன் நித்யம் சர்வ துக்காதிகோ பவேத் –
ப்ரஹ்மணயம் சர்வ தர்மஜ்ஞம் லோகாநாம் கீர்த்தி வர்த்தநம்
லோகநாதம் மஹத் பூதம் சர்வ பூத பவோத் பவம் –
10 அடை மொழிகள்
1-அநாதிநிதனம் -ஆதி அந்தம் இல்லாதவன் -தேச கால வஸ்து பரிச்சேதன்
2-விஷ்ணும் -வ்யாப்தி
3-சர்வலோக மகேஸ்வரம்
4-லோகாத் யஷம் -அனைத்தையும் கண்களால் காண்பவன்

5-ப்ரஹ்மணயம் -வேத பிரதிபாத்யன்
6-சர்வ தர்மஜ்ஞம் –
7-லோகாநாதம்
8-மஹத் பூத்
9-கீர்த்தி வர்த்தநம்
10- சர்வ பூத பவோத் பவம் -ஆதி காரணன் –
ஸ்துவன் நித்யம் சர்வ துக்காதிகோ பவேத் -ஸ்துவந்த கம் கேள்விக்கு இப்படி பீஷ்மர் பதில் அருளுகிறார்
யதாததாவபி குண சங்கீர்த்த்தனம் குர்வன்-ஏதோ ஒரு முறையில் திவ்ய நாம திருக் குணங்களைப் பாடுதல் –

இனி ஐந்தாம் கேள்விக்கு -கோ தர்ம சர் தர்மாணாம் -பதில்
ஏஷ மே சர்வ தர்மாணாம் தர்மோதி கதமோ மத ‘
யத் பக்த்யா புண்டரீ காஷம் ஸ்தவைரச் சேன்நரஸ் ஸதா –
ஏஷ -மேலே சொல்லப்பட்ட அர்ச்சன ஸ்தவ நாதிகளால்-அன்புடன் பூஜிக்கை –
அதிகதம -மிகச் சிறந்த தர்மம்
யத் பக்த்யா -ப்ரீதி உட் கொண்ட -ஸூ ஸூகம் கர்த்தும் அவ்யயம் –
அர்ச்சேத் -ஆராதிப்பவன்
பத்துடை அடியவர்க்கு எளியவன்
சதா -கால தேச சுத்தி வேண்டா
அபஹத பாப்மா -அமலன் -விமலன் -நிமலன் -நின்மலன் –
அவன் திரு உள்ளம் உகந்து -விதி வாய்க்கின்று காப்பாரார் –
ஸ்வாராதன் –
கலௌ சங்கீர்த்ய கேசவம் –

அடுத்து கிம் வாப்யேகம் பராயணம் –உபேயம் பற்றி கேள்விக்கு பதில் –
1-பரமம் யோ மஹத் தேஜ–பரம் -மஹத் இரண்டு விசெஷணங்கள்-கோடி சூர்ய சம ப்ரப-
2- பரமம் மஹத் தப -தப -நியந்தா பொருளில்
பீஷாஸ்மாத் வாத பவதே பீஷோ தேதி ஸூர்ய
3-பரமம் மஹத் ப்ரஹ்ம -ஸ்வரூப ப்ருஹத்வம் குண ப்ருஹத்வம் –
ப்ரஹ்மணத்வம் -தன்னை கிட்டியவரை தன்னைப் போலே பெரிதாக்க வல்லவன் –
4-பரமம் பராயணம்
5-பவித்ரானாம் பவித்ரம்
மாதவன் என்று ஓத வல்லீரேல் தீதொன்றும் சாரா
வாயினால் பாடி -..போய பிழையும் புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசாகும்

ஹரிர் ஹரதி பாபானி
தத்யதா இஷீக தூல மக்நௌ ப்ரோதம் ப்ரதூயதே -சாந்தோக்யம்
பவித்ரங்களுக்கும் பவித்ரம் அவனே
6- மங்களா நாஞ்ச மங்களம் –

இனி கிமேகம் தைவதம் லோகே -முதல் கேள்விக்கு பதில் –

தைவதம் தேவதா நாம் ஸ -என்று தொடங்கி
மனிதர்க்குத் தேவர் போலே தேவர்க்கும் தேவாவோ -திருவாய் -8-1-5-
லோக ப்ரதானச்ய – ஜகன்நாதச்ய
சர்வ பாபபயாபஹம் நாம சஹச்ரம்
ஸ்ருணுமே-கேள் -தர்மா -தட்டி எழுப்பி சொல்கிறார் பீஷ்மர்
கௌணாநி -குண செஷ்டிதங்கள்
விக்யாதாநி -பிரசித்தமானவை
ரிஷிபி -சநகர் நாரதர் போல்வார்
பரிகதாநி -எல்லா திக்குகளிலும் அத்யந்த சிநேக பக்திகளுடன் பாடப்பட்டவை
பூதயே -வாழ்ச்சியின் பொருட்டு
பூ சத்தாயாம்
கடல் வண்ணன் பூதங்கள் -திருவாய் -5-2-1-
மஹாத்மநா-தனக்கும் தன தன்மை அறிவரியான் –
அஹம் வேதமி மகாத்மா
அப்ரமேயம் ஹி தத்தேஜ –
கிம் ஜபன் முச்ச்யதே உபோத்காதம்
பத்தோ முச்யேத பந்த நாத்யாதி ப்ரஹ்ம ஸநாதநம் -என்று
சம்சார பந்தம் நிவ்ருதியும்
ப்ரஹ்ம பிராப்தியும்
பலமாக சொல்லி முடிகிறது
யதோபாசனம் பலம்
சூழ்ந்து இருத்து ஏத்துவர் பல்லாண்டு -பல்லாண்டு இங்கே -அதே பலன் அங்கும்

அனுஷ்டுப் சந்தஸ் -32 உயிர் எழுத்துக்கள் கொண்ட ஸ்லோகங்கள்
தேவதை –தேவகி நந்தனன் ஸ்ரீ கிருஷ்ணன் -சக்தி
அம்ருதாம்சூத்பவோபாநு -சந்திர வம்சத்தில் உதித்த சூர்யன் -குல விளக்கு – பீஜம் -ஆதாரம் -மூல காரணம்
த்ரிசாமா -சாம ருக்குகளால் பாடப் பட்டவன் -எனபது ஹிருதயம்
சாந்தி அடைவது -பலன் -எல்லா தோஷ நிவாரணம் -ப்ரஹ்ம பிராப்தி –
உத்பவ ஷோபணோ தேவ -எனபது இதின் உயர்ந்த மந்த்ரம் –
சங்க ப்ருந் நந்தகீ சக்ரீ -இதுக்கு கீலகம் -அச்சாணி
இதின் கவசம் -காப்பு -த்ரிசாமாசாமக
யோநி கர்ப்பம் -ஆநந்தம் பரப்ரஹ்ம எனபது
ருதுஸ் ஸூதர்சன கால -எனபது திக்குகளை அடக்கிய பரப்பு
ஸ்ரீ விஸ்வ ரூபம் தான விஷயம்
ஸ்ரீ மஹா விஷ்ணு கைங்கர்ய ரூபே சஹஸ்ரநாம ஜபே விநியோக

———————————————————————————————————————-

82- திருநாமங்கள் இரண்டு முறையும்
15- திரு நாமங்கள் மூன்று முறையும்(அச்யுத-அஜ -பிராண-பத்ம நாப -மாதவ -வீரஹா-ஸ்ரீமான்-வாசு தேவ-விஷ்ணு-வீர:-சௌரி -பாவந-.போக்தா-வஸூ-சத்ய)
2 -திரு நாமங்கள் நான்கு முறையும் வரும்–(நிவ்ருத் தாத்மா–பிராணத)

பிரகரணம் படி இவற்றுக்கு அர்த்தங்களை சாதிக்கிறார்

———–

திரு நாமத் தொகுப்பு
1—பரத்வ பரமான திரு நாமங்கள் -1-122-

1-1-வ்யாப்தி -சர்வேஸ்வரத்வம்-1-4-குணத்தால் நிறைந்தவன் -எங்கும் பரந்து ஆள்பவன் –

1-2-சர்வ சேஷித்வம் -5-9-தானே உலகு எல்லாம் –தானே படைத்து அழித்துக் காப்பவன்

1-3-தோஷம் தட்டாத பரமாத்மா -10-11-குற்றம் அற்றவன் -ஒப்பிலி அப்பன் –

1-4-முக்தர்களுக்கு பரம கதி -12-17-முக்தர்களால் அடையத் தக்கவன் –

1-5-முக்திக்கு உபாயம்-18-19-முக்திக்கு வழி –

1-6-சேதன அசேதன நியாமகன் -20-முக்திக்கு வழி –

1-7-சமஸ்த இதர விலஷணன் -21-65-அனைத்தும் தானே –ஆனால் அவற்றிலும் உயர்ந்தவன் –

1-8-த்ரிவித சேதன வ்யதிரிக்தனும் நியாமகனும் 66-88-அனைத்தும் தானே –ஆனால் அவற்றிலும் உயர்ந்தவன் –

1-9-உபாய உபேய ஸ்வரூபி -89-100-ஆறும் பேறும் அவனே -மருந்தும் விருந்தும் அவனே –

1-10-ஆஸ்ரித வத்சலன் -101-122-ஆறும் பேறும் அவனே -மருந்தும் விருந்தும் அவனே –

————————

2—வ்யூஹ நிலை பரமான திரு நாமங்கள் -123-146-
123-128 -ஆறு குணங்கள் –129-138-மூவரின் முத் தொழில்கள் – 139-146-நால்வரின் நான்கு தன்மைகள் –

சங்கர்ஷணன் ——–123-124——–2 திரு நாமங்கள்
பிரத்யும்னன் ———125-126———2 திரு நாமங்கள்
அநிருத்தன் ———-127-146———20 திரு நாமங்கள்

—————————–

விஷ்ணு —————-147-170——–24 திரு நாமங்கள்
ஷாட்குண்யம் ———–171-187———17 திரு நாமங்கள்
ஹம்சாவதாரம் ———-188-194———-7 திரு நாமங்கள்
பத்ம நாபன் ————195-199———-5 திரு நாமங்கள் –
நரசிம்ஹ அவதாரம் ——200-210———11 திரு நாமங்கள்
மத்ஸ்யாவதாரம் ———–211-225——15 திரு நாமங்கள்
உபநிஷத் திரு நாமங்கள் —226–246—–21 திரு நாமங்கள்
நாராயணன் ————–247–271—–25 திரு நாமங்கள் –
விஸ்வரூபன் ———————272–300—–29 திரு நாமங்கள் –
வடபத்ரசாயீ —————301–313—–13 திரு நாமங்கள் –
பரசுராமாவதாரம் ———-314-321——-8 திரு நாமங்கள் –
கூர்மாவதாரம் ————-322–332—–11 திரு நாமங்கள் –
வாஸூ தேவன் ————333–344—–12 திரு நாமங்கள் –
திவ்ய மங்கள விக்ரஹம் —-345–350——6 திரு நாமங்கள் –
பகவானின் ஐஸ்வர்யம் ———-351–360——10 திரு நாமங்கள்
ஸ்ரீ லஷ்மீபதி ——————361–384——-24 திரு நாமங்கள்
த்ருவ நாராயணன் ————-385–389——–5 திரு நாமங்கள்
ஸ்ரீ ராமாவதாரம் —————380–421——-32 திரு நாமங்கள் –

———————————————————————-

3-1–விஷ்ணு அவதாரம் -147-152-ஸ்ரீ மஹா விஷ்ணு -முதல் அவதாரம் -முதலாம் திரு உருவம் –முதலாவான் ஒருவனே –

3-2- வாமன அவதாரம் -153-164-

3-3-துஷ்ட நிக்ரஹ சிஷ்ட பரிபாலனம் -165-170-அவதரித்துக் காப்பவன் -இனியவன் –

3-4-பர வ்யூஹ விபவ மூன்றுக்கும் பொதுவான ஞான பலாதி ஆறு குணங்கள் உள்ளமை சொல்வது -171-181-

3-5-குணங்களுக்கு ஏற்ற செயல்களைச் சொல்வது -182-186-குணங்களுக்கு ஏற்ற அவதாரச் செயல்கள் –

3-6- ஹம்சா அவதாரம் -187-194-

3-7- பத்ம நாப அவதாரம் -195-199- -உந்தித் தாமரை யான் –

3-8-ஸ்ரீ நரசிம்ம அவதாரம் -200-210-

3-9-ஸ்ரீ மத்ஸ்ய அவதாரம் -211-225-

3-10- உபநிஷத் பிரதிபாத்ய விராட் ஸ்வரூபம் -226-247-புருஷ சூக்தத்தில் விளக்கப்பட்ட திரு நாமங்கள் –

3-11-சித் அசித் இவைகளாலான ஐஸ்வர்ய பூர்த்தி -248-271-யானே நீ என்னுடைமையும் நீயே —

3-12-விஸ்வரூபம் -272-300-பெருமைகளை வெளிப்படுத்தும் விஸ்வரூபம் –

3-13-ஸ்ரீ வடபத்ர சாயி -301-313-ஆலமா மரத்தின் இல்லை மேல் ஒரு பாலகன் –

3-14-ஸ்ரீ பரசுராம ஆவேச சக்தி அவதாரம் -314-321-பரசுராமரா -அல்லது கோபத்தின் உருவமா –

3-15-ஸ்ரீ கூர்ம அவதாரம் -322-327-அனைத்தையும் தாங்கும் ஆமை –

3-16-ஸ்ரீ பர வாசுதேவன் -குண வாசகம் -333-344-ஸ்ரீ பர வாசூதேவனின் குணங்கள் –

3-17–ஸ்ரீ பர வாசுதேவன் -ரூப வாசகம் -345-350-ஸ்ரீ பர வாசூதேவனின் திருமேனி –

3-18-ஸ்ரீ பர வாசுதேவன் -விபூதி -351-360-ஸ்ரீ பர வாசூதேவனின் – செல்வம் –

3-19-ஸ்ரீ பர வாசுதேவன் -ஸ்ரீ லஷ்மி பதித்வம் -361-379-ஸ்ரீ பர வாசூதேவன் -ஸ்ரீ யபதி -திருமகள் கேள்வன் –

3-20-சேதனர் உடன் இணைந்து இருக்கும் ஒட்டின்மை -380-384-கருவியும் காரணமும் இயக்குமவனும் செய்பவனும் அவனே-

3-22-ஸ்ரீ த்ருவ -385-389-ஸ்ரீ த்ருவனும் நஷத்ர மண்டலமும் –

3-23-ஸ்ரீ ராம அவதார -390-421-மாண்டவரையும் உயிர்ப்பிக்கும் ஸ்ரீ இராமன் –

————————–
ஸ்ரீ கல்கி அவதார——-422-435–13 திரு நாமங்கள்
ஸ்ரீ பகவானின் முயற்சி —-436–452—–17 திரு நாமங்கள் –
ஸ்ரீ நரன் —————–453-456——-4 திரு நாமங்கள் –
அம்ருத மதனம்———457–470—–14 திரு நாமங்கள் –
தர்ம ஸ்வரூபி ———471-528——58 திரு நாமங்கள் –

—————————–

3-24-ஸ்ரீ கல்கி -422-436-

3-25-ஜ்யோதிர் மண்டல பிரவ்ருத்தி தர்ம ப்ரவர்தகன் -437-445-நஷத்ரங்களும் சிம்சூமார சக்கரமும் –

3-26-யஞ்ஞ ஸ்வரூபன் 446-450-

3-27-ஸ்ரீ நர ஸ்ரீ நாராயண -451-457-

3-28- அலை கடல் கடைந்த -458-470-அலைகடல் கடைந்த ஆரமுதம் –

3-29-தர்ம சாஸ்திர -471-502-தர்மத்தின் வடிவம்

3-30-ஸ்ரீ ராம தர்ம ரஷகன் -503-513-தர்மத்தைக் காக்கும் ஸ்ரீ இராமன் –

3-31-பாகவத சாத்வத ரஷகன் -514-519-பாகவதர்களைக் காப்பவன் –

3-32-ஸ்ரீ கூர்ம -520-521-ஸ்ரீ ஆதி சேஷமும் ஸ்ரீ கூர்மமும் –

3-33-ஸ்ரீ அநந்த சாயி -522-523-

3-34-ஸ்ரீ பிரணவ ஸ்வரூபி -524-528-ஸ்ரீ பிரணவ ஓங்கார வடிவினன் –

——————————–

ஸ்ரீ கபில மூர்த்தி -529-543————————–15 திரு நாமங்கள்
சுத்த சத்வம் -544-562————————––19 திரு நாமங்கள்
மஹ நீய கல்யாண குணங்கள் -563-574—————————12 திரு நாமங்கள்
ஸ்ரீ வியாசர் -575-607——————————————————— 33 திரு நாமங்கள்
சுபத் தன்மை -608-625—————————— 18 திரு நாமங்கள்
ஸ்ரீ அர்ச்சாவதாரம் -626-643————————-18 திரு நாமங்கள்
புண்ய ஷேத்ரங்கள் -644-660——————17 திரு நாமங்கள்
சக்திபரம் -661-696—————————————–36 திரு நாமங்கள்

——————

3-35-ஸ்ரீ கபில -அம்ச அவதாரம் -529-538-

3-36- ஸ்ரீ வராஹ -539-543-

3-37-சுத்த சத்வ ஸ்வரூபி -544-568-மேன்மை சொல்லும் ரஹஸ்யமான திரு நாமங்கள் –

3-38-ஸ்ரீ நாராயண -569-574-

3-39-ஸ்ரீ வியாச -575-589-

3-40-தர்மப்படி பலன் அளிப்பவன் -590-606-

3-41-ஸ்ரீ சம்பந்த மங்கள ப்ரதன் -607-629-ஸ்ரீ யபதியே ஸ்ரீ பர ப்ரஹ்மம்-

3-42-ஸ்ரீ அர்ச்சாவதார -630-696–ஸ்ரீ அர்ச்சாவதாரம் -கண்களுக்கு புலப்படும் சௌலப்யம் /சகதீச அவதாரம்
ஸ்ரீ பர ப்ரஹ்மம் பூஜிக்கத் தக்க நற் பண்புகளை உடையவர் –
ஸ்தோத்ரத்தை ஏற்கும் தகுதி உடையவன் –

——————————————-

ஸ்ரீ கிருஷ்ணாவதாரம் -697-786———————90 திரு நாமங்கள்
ஸ்ரீ புத்தாவதாரம் -787-810———————————-24 திரு நாமங்கள்
சாஸ்திர வச்யர்களை அனுக்ரஹித்தல் -811-827——————17 திரு நாமங்கள்
பிற விபவங்கள் ————————————828-837—————–10 திரு நாமங்கள்
அஷ்ட சித்திகள்————————————-838-870—————33 திரு நாமங்கள்

————————————–

4-1-ஸ்ரீ கிருஷ்ண அவதாரம் -697-786-( 770-786-அவதாரத்துக்கு காரணமான ஸ்ரீ வ்யூஹம் -)

4-2-ஸ்ரீ புத்த அவதாரம் -787-810-ஸ்ரீ புத்த அவதாரம் -அசூர நிக்ரஹம் –

4-3-சிஷ்ட பரிபாலனம் -811-825-சாத்விகர்களுக்கு அருளுபவன் –

4-4-அனு பிரவேச ரஷணம் -826-838-எண்ணும் எழுத்தும் –

4-5-அஷ்ட ஐஸ்வர்யங்களை உடையவன் -839-848-ஸ்ரீ அஷ்ட ஐஸ்வர்யங்களை அருளுபவன் –

——————————

அஷ்ட சித்திகள்———-838-870———33 திரு நாமங்கள்
மோஷ ப்ரதத்வம்——-871-911——–41 திரு நாமங்கள்
ஸ்ரீ கஜேந்திர வரதன் ——912-945——–34 திரு நாமங்கள்

———————————–

5-1-இமையோர் தலைவன் -849-850-

5-2-யோகியர் தலைவன் -851-854-

5-3-யோகத்தில் இருந்து நழுவியவரை உத்தரிப்பவன்–855-861-ஜீவர்களை ஆளுபவன் –

5-4-துஷ்டர்களை நிக்ரஹிப்பவன் -862-870–தீயவர்களுக்கு யமன்

5-5-சாத்விகர் தலைவன் -871-880–சத்வ குணத்தை வளர்ப்பவன் –

5-6-அர்ச்சிராதி -881-891-நெடும் கால ஆசை அர்ச்சிராதி மார்க்கம் –

5-7-மோஷ ஆநந்தம் தருபவன் -892-911-நலம் அந்தமில்லாத நாடு –

5-8-ஸ்ரீ கஜேந்திர மோஷம் -912-945-

———————————

ஜகத் வியாபாரம் ———————–946-992—————47 திரு நாமங்கள்
திவ்யாயூத தாரீ -993-1000———8- திரு நாமங்கள்

——————————–

6- பகவான் செய்யும் செயல்களின் பிரயோஜனம் -946-992-ஸ்ரீ அவதாரத்துக்கும் திரு விளையாடல்களுக்கும் பயன் –
( 971-982-வேள்வியும் பயனும் /983-9920ஸ்ரீ தேவகீ நந்தன் -)

7-திவ்ய ஆயுதங்கள் ஏந்திய திவ்ய மங்கள விக்ரஹ யுக்தன் -993-1000-திவ்ய ஆயுதமே திவ்ய ஆபரணம் -கண்ணுள் நின்று அகலாத திரு உருவம் –

——————————————————————————

1-பரத்வ நிலை–1-122

2–வியூக நிலை–123-144

3-விபவ நிலை-

3-1..ஸ்ரீ விஷ்ணு அவதாரம்–145- 152

3-2..ஸ்ரீ வாமன அவதாரம்–153-164

3-3..துஷ்ட நிக்ரஹ சிஷ்ட பரிபாலனம்–165-170

3-4–பகவத் குணங்கள் பேசும் திரு நாமங்கள்..

3-5..பரம் வியூகம் விபவம் மூன்றுக்கும் பொதுவான ஆறு குணங்கள் உள்ளமை சொல்வது–171-181

3-6– குணங்களுக்கு ஏற்ப அவதார செயல்களை சொல்வது–182-186

3-7 –ஸ்ரீ ஹம்ச அவதாரம்–187-194

3-8..ஸ்ரீ பத்ம நாப –ஸ்ரீ விஷ்ணு அவதாரம்-195-199

3-9. ஸ்ரீ நரசிம்ஹ அவதாரம்–200-210

3-10 -ஸ்ரீ மத்ஸ்ய அவதாரம்–211-225

3-11—புருஷ சுத்த உபநிஷத் பிரதி பாதித விராட் ஸ்வரூபம்–226-247

3-12.-சித் அசித் இவைகளால் ஆன ஐஸ்வர்ய பூர்த்தி–.248-271

3-13- எல்லை அற்ற பெருமை காட்டும் விஸ்வ ரூபம்-272-300

3-14–ஸ்ரீ வட பத்ர சாயி பிரளய ஆர்ணவத்தில் ஆல் இலை மேல் துயின்றவன்-301-313

3-15- ஸ்ரீ பரசு ராம -ஆவேச சக்த்ய -அவதாரம்–314-321

3-16—ஸ்ரீ கூர்ம அவதாரம்–322-332

3-17–ஸ்ரீ பர வாசுதேவன் -குண வாசகம்–333-344

3-18–ஸ்ரீ பர வாசுதேவன்-ரூப வாசகம்–345 -350

3-19–ஸ்ரீ பர வாசுதேவன்-விபூதி ( செல்வம் ) வாசகம்–351-360

3-20— ஸ்ரீ பர வாசுதேவன்- லக்ஷ்மி பதித்வம்–361 -379

3-21—சேதனர்கள் உடன் இணைந்து இருக்கும் ஒட்டின்மை–380-384

3-22— நட்சத்திர மண்டலத்துக்கு ஆதாரமான துருவ மூர்த்தி-385-389

3-23— மிருத சஞ்சீவனமான ஸ்ரீ ராம அவதாரம்-390-405

3-24— மேலும் ஸ்ரீ ராம அவதாரம்–406-421-

3-25-1—தர்ம சொரூபி வேத விகித தர்மங்களை தானும் அனுஷ்டித்து பிறரையும் அனுஷ்டிக்க பண்ணுபவன்–423-502

3-25-2- ஸ்ரீ ராமனாய் தர்ம ரக்ஷகன்—503-513

3-25-3—பாகவத (சாத்வத ) ரட்சகன்-514-519-

3-25-4—ஸ்ரீ கூர்ம ரூபி–520-521

3-25-5– ஸ்ரீ அநந்த சாயி–522-523

3-25-6.-ஸ்ரீ பிரணவ ஸ்வரூபி–524-528

3-25-7—ஸ்ரீ கபில அவதாரமாய் ரட்ஷணம் ( அம்ச அவதாரம்)–529-538

3-25-8– ஸ்ரீ வராஹ அவதாரம்—539-543-

3-25-9- -சுத்த சத்வ சொரூபி பெரு மேன்மை–544 -568

3-25-10– ஸ்ரீ நாராயண விஷயம் அவதாரம்–569-574

3-26– -ஸ்ரீ வியாச அவதாரம் ( வேத சாஸ்திர பிரதாதா )–575-589

3-27- -தருமம் படி பலன் அளிப்பவன்–590-606

3-28-1 -மங்கள பிரதன்- ஸ்ரீ சம்பத்தால் வரும் பரத்வம்-607-625

3-28-2 –மங்கள பிரதன்- ஸ்ரீ சம்பத்தால் வரும் குண யோகம்-626-629

3-29-1-ஸ்ரீ அர்ச்சா அவதாரம் சேதனருக்கு தன்னை காட்டுவது-630-660

3-29-2.-சகதீசன் -.661-664

3-29-3 -எல்லை அற்ற குண விபூதிமான் -மனசினாலும் செய்கை யாலும் ஆராதிக்க படுகை -665-683

3-29-4- -வாத்சல்ய குண பெருக்கு வாக்காலே ஆராதிக்க படுகை–684-696

4-துஷ்ட நிக்ரஹ சிஷ்ட பரிபாலனம்

4-1–ஸ்ரீ கிருஷ்ண அவதாரம்-684-786

4-2..ஸ்ரீ புத்த அவதாரம் அசூர நிக்ரகம்-787-810

4-3–தைவ சம்பதுள்ள சிஷ்ட பரி பாலனம் 811-825

4-4–ஜீவன்களை அனுபிரவேசித்து சத் ரட்ஷனம்–826-838

4-5– அஷ்ட ஐஸ்வர்யங்களை உடையவன்/ அவற்றை தருபவன்–839-848

5–ஜீவாத்மாக்களை நிர்வகிக்கும் மேம்பாடு சொல்பவை

5-1-நல்லோர்களை வாழ்ச்சி பெரும் படி செய்யும் திரு நாமங்கள்

5-1-1..நித்யர்களை ஆளும் இமையோர் தலைவன் 849-850

5-1-2–யோகியர் தலைவன்–851-854

5-1-3–யோகத்தில் இருந்து நழுவியவரை உத்தரிப்பவன் 855-861

5-1-4-துஷ்டர்களை நிக்ரகிப்பவன் 862-870

5-2–சத்வ குணத்தை வளர்ப்பவன் -சாத்விகர் தலைவன்–871-880

5-3–ஸ்ரீஅர்ச்சிராதி மார்க்கம் மூலம் முக்தனை வழி நடத்தும் பரமன் 881-891

5-4-முக்தருக்கு மோட்ஷா நந்தம் தரும் ஸ்ரீ வைகுண்ட நாதன் 892-911

5-5-ஆனைக்கு அன்று அருள் ஈந்தவன்- கஜேந்திர மோட்ஷம்-912-945

6-பகவான் செய்யும் செயல்களின் பிரயோஜனம் சொல்பவை -946-992

7-திவ்ய ஆயதங்கள் ஏந்திய திவ்ய மங்கள விக்ரக யுக்தன் -993 -1000

——————————-——————————————————————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பராசர பட்டர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பீஷ்மர் திருவடிகளிலே சரணம்
ஸ்ரீ வியாச பகவான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ பகவத் குண தர்ப்பணம்–ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம வியாக்கியானங்கள் -ஸ்ரீ த்யான ஸ்லோகங்கள் —

October 31, 2023

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் – ஸ்ரீ மஹா பாரதம் அநுசாஸன பர்வம்-தான தர்ம பர்வம்- பகுதி – அத்யாயம் 149-

ஆன்மிகம் என்று மட்டும் இல்லாமல் மருத்துவத் துறையிலும் பழங்காலத்தில் தீர்க்கவியலா சில நோய்களுக்கு
இந்த ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமத்தைப் படித்தல் என்பதையே வைத்தியமாக விதித்துள்ளனர் என்பதைச் சரக ஸம்ஹிதை என்னும் பழங்காலப் பெரும் மருத்துவ கிரந்தத்தைப் பார்த்தாலே தெரியும்.
( ‘விஷ்ணும் ஸஹஸ்ரமூர்தானம் சராசரபதிம் விபும் | ஸ்துவந் நாம ஸஹஸ்ரேண ஜ்வராந் ஸர்வாந் அபோஹதி ||’ –சரக ஸம்ஹிதா, சிகித்ஸா ஸ்தானம், ஜ்வர சிகித்ஸா). மனோ வியாதிகள், தீய கனவுத் தொல்லைகள், பீதியினால் ஏற்படும் உள்ளக் கோளாறுகள் என்று பலவற்றிற்கும் கைகண்ட மருந்தாக வழிவழி மக்களின் அனுபவமாக இருப்பது
ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம படனம்.
உலக ஆசைகள் என்னும் பவ நோயை விடக் கொடிய நோய் என்ன உண்டு?
அறியாமை இருளை விடப் பேய் பிசாசுகளின் பிறப்பிடம் வேறு என்ன வேண்டும்?
இந்த நோயை அகற்றும் உன்னத மருந்தும், இந்த இருளை ஓட்டும் உத்தம ஒளியும் ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாமம் என்று நிச்சயம் சொல்லலாம்.

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமத்திற்கு Aufrecht அவர்களின் கணக்குப்படி 15 வியாக்கியானங்கள் பட்டியலிடப்படுகின்றன என்று தகவல் தருகிறார் ஸ்ரீ அநந்தகிருஷ்ண சாஸ்திரியார். அவை –

1) ப்ருஹத் பாஷ்யம்
2) விஷ்ணு வல்லபம்
3) ஆநந்த தீர்த்தரின் உரை
4) கிருஷ்ணாநந்தரின் உரை
5) கங்காதர யோகீந்திரரின் உரை
6) பாரசர பட்டரின் பாஷ்யம்
7) மஹாதேவ வேதாந்தியின் உரை
8) ரங்கநாதாசாரியரின் உரை
9) ராமாநந்த தீர்த்தரின் உரை
10) ஸ்ரீராமாநுஜரின் உரை
11) வித்யாரண்ய தீர்த்தரின் உரை
12) பிரஹ்மாநந்த பாரதியின் உரை
13) ஸ்ரீ சங்கராசாரியரின் உரை
14) சுதர்சன பட்டரின் உரை
15) கோவிந்த பட்டரின் உரை

இவையும் சிலவே. இவை தவிர சுலோக ரூபத்தில் நாமங்களை விளக்கிக் காரிகைகளாகச் செய்யப்பட்ட நூல்களும் உண்டு.

—————–

ஸ்ரீ பராசர பட்டார்ய ஸ்ரீ ரங்கேச புரோஹித
ஸ்ரீவத் ஸாங்க ஸூதா ஸ்ரீமான் ஸ்ரேயசே மே அஸ்து பூயஸே

வந்தே கோவிந்த தாதௌ முநிமத மநவை லஷ்மணார்யம்-மஹாந்தம்
த்யாயேயம் யாமுநார்யம் மம ஹ்ருதி தாநவை ராமமேவாபியாயாம்
பத்மாஷம் ப்ரேஷிஷீய ப்ரதமமபி முநிம் நாதமீடே சடாரிம்
ஸ்தௌமி ப்ரேஷேய லஷ்மீம் சரணம் சரண ஸ்ரீ தரம் சம்ஸ்ரயேயம்–ஸ்ரீ குரு பரம்பரா வணக்கம்

ஓம் நமோ கஜ வக்த்ராத்யை பாரிஷத்யை ப்ரசாஸதே
ஸ்ரீ ரங்கராஜ ஸேநான்யே ஸூத்ரவத்யா ஸமே யுஷே–ஸ்ரீ விஷ்வக் சேனர் ஸ்துதி

நமோ நாராயணாயேதம் கிருஷ்ண த்வைபாய நாத்மகே
யதாமுஷ்யாயணா வேதா மகா பாரத பஞ்சமா–ஸ்ரீ வேத வ்யாஸர் நமஸ்காரம்

வ்யாஸம் வஸிஷ்ட நப்தாரம் ஸக்தே பவுத்ர மகல்மஷம்
பராசராத்மஜம் வந்தே ஸூக தாதம் தபோ நிதம்–

க்ருஶ்ண த்வைபாயனம் வ்யாஸம் ஸர்வ லோக ஹிதே ரதம்|
வேதாப்ஜ பாஸ்கரம் வந்தே ஷமாதி நிலையம் முனிம்||

ஜாதோ லஷ்மண மிஸ்ர ஸம்ஸ்ரய தநாத் ஸ்ரீ வத்ஸ சிஹ்நாத் ருஷே
பூயோ பட்ட பராசரேதி பணித ஸ்ரீரங்க பர்த்ரா ஸ்வயம்
ஸ்ரீ ஸ்ரீரங்கபதி ப்ரஸாத த்ருஷயா ஸ்ரீ ரங்க நாதாஹ்வய
ஸ்ரீ ரங்கேஸ்வர காரிதோ விவ்ருணுதே நாம் நாம் ஸஹஸ்ரம் ஹரே–ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம பாஷ்யம் செய்து அருளியவர்

ஸஹஸ்ர மூர்த்தே: புருஶோத்தமஸ்ய ஸஹஸ்ர நேத்ரானன பாத பாஹோ:|
ஸஹஸ்ர நாம்னாம் ஸ்தவனம் ப்ரஶஸ்தம் நிருச்யதே ஜன்ம ஜராதி ஷாந்த்யை||

———–

ஸூக்லாம் பரதரம் விஷ்ணும் சசி வர்ணம் சதுர்ப்புஜம்
ப்ரஸன்ன வதனம் த்யாயேத் ஸர்வ விக்நோப ஸாந்தயே–1-

யஸ்ய த்விரத வக்த்ராயா பாரி ஷத்யா பரச் சதம்
விக்நம் நிக் நந்தி ஸததம் விஷ்வக் ஸேநம் தாமாஸ்ரயே–2-

வ்யாஸம் வஸிஷ்ட நப்தாரம் ஸக்தே பவுத்ர மகல்மஷம்
பராசராத்மஜம் வந்தே ஸூக தாதம் தபோ நிதம்–3-

வ்யாஸாய விஷ்ணு ரூபாய வ்யாஸ ரூபாய விஷ்ணவே
நமோ வை ப்ரஹ்ம நிதயே வாஸிஷ்டாய நமோ நம-4

அவிகாராய ஸூத்தாய நித்யாய பரமாத்மநே
ஸதக ரூப ரூபாய விஷ்ணவே ஸர்வ ஜிஷ்ணவே-5

யஸ்ய ஸ்மரண மாத்ரேண ஜன்ம ஸம்ஸார பந்த நாத்
விமுச்யதே நமஸ் தஸ்மை விஷ்ணவே ப்ரப விஷ்ணவே-6-

ஓம் நமோ விஷ்ணவே ப்ரப விஷ்ணவே

இங்கும் ஆறு ஸ்லோகங்கள்
ஆறு பத்துக்களில் திருவாய் மொழியில் எல்லாம் உண்டே

—————

ஸூக்லாம் பரதரம் விஷ்ணும் சசி வர்ணம் சதுர்ப்புஜம்
ப்ரஸன்ன வதனம் த்யாயேத் ஸர்வ விக்ந உப ஸாந்தயே –1

ஸர்வ விக்னம் உபசாந்தி அர்த்தத்துக்கு-வெண் பட்டாடை அணிந்து-எங்கும் நிறைந்து
சந்த்ர வர்ணன் -ஆஹ்லாத கரத்வம்-நான்கு திருத்தோள்கள் உடன் விளங்கி
பிரஸன்ன வதனம் -மதுர வீக்ஷணம் -பேசத் துடிக்கும் அதரம் –
த்யாயேத் -த்யானிப்பாய்
அதுக்கு ஏற்ற ஸூபாஸ்ரய திரு மேனியை வர்ணித்து –வேப்பங்குடி நீரையோ குடிக்கச் சொல்கிறது-பாலைக் குடிக்கக் காலைப் பிடிக்கிறார்

வெண்மையான (தூய்மையான) ஆடை தரித்தவரும், எங்கும் நிறைந்திருப்பவரும், வெண்மதியைப் போன்ற நிறமுடையவரும், நான்கு கரங்கள் உடையவரும், புன்சிரிப்புடன் கூடிய மலர்ந்த முகத்தை உடையவருமான பகவானை நமது துயர்களைத் தீர்க்க தியானிப்போம்.

——–

யஸ்ய த்விரத வக்த்ராய பாரி ஷத்யா பரச்சதம்
விக்நம் நிக்நந்தி ஸததம் விஷ்வக் ஸேநம் தமாஸ்ரயே –2

யஸ்யத் விரத -யானை முகம் -கஜேந்திர -மங்கள ஸ்லோகம் -விஷ்வக் சேனர் –
நூறு நூறு பிரதானர்கள் கொண்டவர்
வாசல் காப்பார் உடன் கூடிய விஷ்வக் சேனரை ஆஸ்ரயிப்போம்
விக்னங்கள் தொலையவே விஷ்வக் சேனர் ஆராதனம் தொடங்குகிறோம்
முதல் ஸ்ரீ வைஷ்ணவர் இவரே
நம்மாழ்வார் தொண்டர் தொண்டர் சடகோபன் பெருமை கொண்டவர்

———

வ்யாஸம் வஸிஷ்ட நப்தாரம் ஸக்தே பவுத்ரம் அகல்மஷம்
பராசராத்மஜம் வந்தே ஸூக தாதம் தபோ நிதம்–3-

வசிஷ்டர் பிள்ளை சக்தி /அவர் பிள்ளை பராசரர்/ அவர் பிள்ளை வியாசர் ( கிருஷ்ண த்வைபாயனர் )/அவர் பிள்ளை சுகப் ப்ரஹ்மம்

வ்யாஸம் -கிரந்த கர்த்தா பரம்பரை -வந்தே கிரியா பதம்
வசிஷ்ட நப்தாரம் -பேரனுக்குப் பிள்ளை
ப்ரஹ்மா வசிஷ்டர் தொடங்கி -சக்திக்கு பேரன்-அகல்மஷம் குற்றம் அற்ற -பராசர மகரிஷிக்கு பிள்ளை

வஶிஶ்டரின் கொள்ளுப் பேரரும், ஷக்தியின் பேரரும், பராஶரரின் புதல்வரும், சுகரின் தந்தையும், மாசுகளற்றவரும், தவத்தில் சிறந்தவருமான முனிவர் வியாசரை வணங்குகிறேன்.

———

வ்யாஸாய விஷ்ணு ரூபாய வ்யாஸ ரூபாய விஷ்ணவே
நமோ வை ப்ரஹ்ம நிதயே வாஸிஷ்டாய நமோ நம–4-

வ்யாஸாய –நமோ நம -மீண்டும் நமஸ்காரம்
வசிஷ்டர் குலம் -விஷ்ணு அவதாரம் -விஷ்ணு ரூபாயா நம
முக்ய அவதாரம் –
ஸ்வரூப ஆவேச -சக்தி ஆவேச அவதாரங்கள்
வ்யாஸ ரூபாய விஷ்ணுவே நம
ப்ரஹ்ம ஞானம் நிதி இவரே

வியாஸரே விஶ்ணு வடிவானவர்; அந்த பகவான் விஶ்ணுவே வ்யாஸராக அவதரித்தார். பர ப்ரஹ்மத்தை உள்ளபடி அறிந்தவரும், அந்த பர ப்ரஹ்மமே ஒரு நிதியாய் திரண்டார் போன்ற வடிவினரும், வஶிஶ்டரின் குலத்திலே தோன்றிய வியாஸரை நான் மீண்டும் மீண்டும் வணங்குகிறேன்.

———

அவிகாராய ஸூத்தாய நித்யாய பரமாத்மநே
சதைக ரூப ரூபாய விஷ்ணவே ஸர்வ ஜிஷ்ணவே–5-

அவிகாராய -ஸ்வரூபத்தாலும் ஸ்வ பாவத்தாலும் -ரூபத்தாலும் விகாரம் இல்லையே
ஆத்மாவுக்கு ஸ்வரூப விகாரம் இல்லை –
தளிர் புரையும் -ஸ ஏகாகி ந ரமேத -கர்மாதீனம் இல்லை கிருபாதீனம் இவை
ஸூத்தாயா
நித்யாய –
பத்த முக்த நித்ய இதர ஸமஸ்த விலக்ஷணன்
பரமாத்மனே -இவன் ஒருவனே
நம
ஸதா ஏக ரூப ரூபாய -ஸ்வரூபம் உருவான -அந்தாம –கண்கள் சிவந்து -விஜூர ப்ரமோத -பக்தர் அதீனம்
விஷ்ணவே -சர்வ ஜிஷ்ணவே -எங்கும் வியாபித்து வெற்றி அளிப்பவன்

எவ்வித மாறுபாடுகளும் அற்றவராய், தூய்மையானவராய், என்றும் (எக்காலத்தும்) நீங்காது இருப்பவராய், எப்பொழுதும் (மாறுபாடில்லாத) ஒரே வடிவத்தை உடையவராய், அனைத்தையும் வெல்பவரான அந்த பரமாத்மா விஶ்ணுவை (த்யானிக்கின்றேன்).

——–

யஸ்ய ஸ்மரண மாத்ரேண ஜன்ம ஸம்ஸார பந்தநாத்
விமுச்யதே நமஸ் தஸ்மை விஷ்ணவே ப்ரப விஷ்ணவே–6-

ஓம் நமோ விஷ்ணவே ப்ரப விஷ்ணவே

யஸ்ய ஸ்மரணம் மாத்ரத்தால் ஜென்ம ஸம்ஸார பந்தம் விமுச்யதே
நமஸ் தஸ்மை விஷ்ணவே நம

இங்கும் ஆறு ஸ்லோகங்கள்
ஆறு பத்துக்களில் திருவாய் மொழியில் எல்லாம் உண்டே

——–

தத்ர ப்ராகேவ பௌந:புந்யேந தத்ர தத்ர பர தத்த்வ பரேஷு
ப்ரதேஸேஷு அஸேஷார்த- நிர்ணய ஶ்ரவணாத் துஷ்டம் மந்ய தயா
ஸ்வயமப்ருச்சதே ஜநமேஜயாய பரம ஸௌஹார்தாத் அந்யத் குஹ்ய தமம் க்ராஹயந் ஸ்வயமேவ,

ஶ்ரீவைஶம்பாயந உவாச-

ஶ்ருத்வாதர்மாந ஸேஷேண பாவநாநி ச ஸர்வஶ:| யுதிஷ்டிர: ஶாந்தநவம் புநரே வாப்ய பாஷத || 1 ||

அதில் முதலிலேயே பலமுறை பரதத்வத்தைச் சொல்லுகிற பல இடங்களிலே விசேஷ அர்த்தங்களை
நிச்சயித்துக் கேட்டுத் திருப்தி யானதாக நினைத்துக் கொண்டு இருப்பதனால் வினவாமல் இருக்கும் ஜனமேஜயருக்கு
அவர் இடம் உள்ள பேர் அன்பினால் மற்றொரு மிக்க ரஹஸ்யத்தைத் தெரிவிப்பதற்காக வைசம்பாயனர் தாமாகவே சொல்லாத தொடங்குகிறார்
ஜனமேஜர் வினவினார் என்று இல்லாமல் வைசம்பாயனர் தானே சொல்லாத தொடங்கினார் என்று தொடங்கி இருப்பதைக் காணலாம்

பூமா வித்யை சனத்குமாரர் நாரதருக்கு உபதேசம் -இதே போல்
கண்ணன் -ஆறு அத்யாயம் சொல்லி பக்தி யோகம் பற்றி அர்ஜுனன் கேட்க்காமலேயே 7 அத்யாயம் சொல்லி
மீண்டும் 10 அத்யாயம் சொல்லத் தொடங்கியது போல்
மூவர் அனுபவம்

ஶ்ருத்வேத்யாதி|தர்மாந் ஶ்ருதி ஸ்ம்ருத்யாதி சோதநா லக்ஷணாப்யுதயநி:
ஶ்ரேயஸ பலாந் ராஜ மோஷ தாந தர்ம ரூபேண பஹூந் |
அஸேஷேண- கார்த்ஸ்ந்யேந,
யே ச யாவந்த: தாவதஶ்ச இத்யர்த:|
பாவ நாநிச தபஸ் தீர்த ஸேவாதீநி ஶுத்தி கராணி ச |
ஸர்வஶ:—–— ஸர்வ ப்ரகாரம்; பலத:அங்கத: ஸ்வரூபத: அதிகார தஶ்ச |ஶ்ருத்வா யுதிஷ்டிர:-
ஸாக்ஷாத் தர்ம ஸூநு:|ஶாந்தநவம் ஶந்தநோர் கங்காயாம் ஜாதத்வேந அபிஜாத தமம்|

ஸ்ரீ வைசம்பாயனர் உவாஸ –சொல்லலானார்
ஸ்ருத்வா தர்மான் –அப்ய பாஷத
யுதிஷ்ட்ரர் -ராஜ தர்மம் -மோக்ஷ தர்மம் -தான தர்மம் போன்ற ஸாஸ்த்ர விஹிதமான தர்மங்களையும்
தவம் தீர்த்த யாத்திரை முதலிய பாவனார்த்தமானவற்றையும்
அவற்றின் அங்கங்கள் செய்யும் முறை -அதிகாரி ஸ்வரூபம் எல்லாவற்றையும் கேட்டபிறகு
பீஷ்மரை நோக்கித் திரும்பவும் வினவலானார்
கேட்டவர் சாஷாத் தர்ம தேவதையின் புதல்வர்
சொன்னவர் சந்தனுவுக்கு கங்கையிடம் பிறந்தவர்
இருவரும் உத்தம குலத்தில் பிறந்தவர்கள்

வைசம்பாயனோ ஜனமேஜயமுவாச:

ஶ்ருத்வா தர்மானஷேஷேன பாவனானி ச ஸர்வஶ: |

யுதிஷ்டிர: ஷாந்தனவம் புனரேவாப்யபாஷத||

தர்மான் அப்யுதய நி:ஷ்ரேயஸோத்பத்தி ஹேதுபூதான் சோதனாலக்ஷணான் -அனைத்து மங்களங்களையும் அதிகரிக்க வல்லதும்
அஷேஷேன கார்த்ஸ்ன்யேன முழுமையாக (ஒன்றும் குறைவின்றி)
பாவனானி பாபக்ஷயகரானி தர்மரஹஸ்யானி பவித்ரமானதும் பாவங்களை அழிக்க வல்லதுமான தர்ம ரஹஸ்யங்களை
ச ஸர்வஷ ஸர்வ ப்ரகாரை: அனைத்தும் ஷ்ருத்வா யுதிஷ்டிரோ தர்மபுத்ர: தர்மபுத்ரனான யுதிஷ்டிரன்
ஷாந்தனவ ஷந்தனுசுதம் பீஷ்மம் ஸகல புருஷார்த்த சாதனம் ஸுக ஸம்பாத்யம் அல்ப ப்ரயாசம் அனல்ப ஃபலம் அனுக்தமிதி க்ருத்வா –ஷந்தனு புத்திரரான பீஷ்மரிடம் கேட்டறிந்த பின்பும், அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய அடையத்தகுந்த அனைத்தையும் அளிக்கவல்லதும்
(இவ்வுலக மற்றும் அவ்வுலக) இன்பத்தை தரவல்லதும் எளிமையானதும் ஆனால் மிகச்சிறந்த பலன்களை கொடுக்க வல்லதுமான எந்த ஒரு உபாயத்தையும்
பீஷ்மர் கூறவில்லை என்று கருதியதால் புன: பூய மறுபடியும் (யுதிஷ்டிரன்) ஏவ அப்ய பாஷத ப்ரஶ்னம் க்ருதவான் அவரிடம் (பீஷ்மரிடம்) கேள்விகள் கேட்டார் ||1||

வைசம்பாயனர் ஜனமேஜயனிடம் கூறுகிறார்:-கேட்பவரின் மனதை தூய்மை படுத்த வல்லதும், பாவங்களை போக்க வல்லதுமான
அனைத்து தர்மங்களையும் முழுமையாக (பீஷ்மரிடமிருந்து) கேட்டறிந்த பின்னரும், யுதிஷ்டிரர் மீண்டும்
ஷந்தனுவின் புதல்வரிடம் (பீஷ்மரிடம், பின்வருமாறு) கேள்விகளைக் கேட்டார்.

—————-

புநரே வாப்ய பாஷத –
புநஶ்ச பப்ரச்ச | புந:ப்ருச்சா ச பீஷ்மேண
ஆத்மநீநதயா ஸ்வீக்ருதமதம் ஜ்ஞாதும்;
‘ கோ தர்ம: ஸர்வ தர்மாணாம் பவத: பரமோ மத:’ இத்யநந்தரோக்தே 😐
தச்ச ஸதாசார ப்ராவண்யாத் |
ஸந்தோ ஹ்யாசார்யநிஷ்டாம் அந்விஷ்ய தத் ருசி பரிக்ருஹீத மேவ
தத்த்வம் ஹிதம் ச ரோசயந்தே ; ந து ப்ராமாணிகத்வ மாத்கரண ||1 ||

சாதுக்கள் தம் ஆச்சார்யர் உகந்து அனுஷ்டிப்பதையே அனுஷ்டிப்பார்களே யல்லாமல் பிரமாணத்தை மாத்திரம் ஆதாரமாகக் கொள்வதை விரும்ப மாட்டார்கள்
ஆகையால் பீஷ்மர் தமக்கு ஹிதமாகக் கொண்டு இருக்கும் ஆசாரத்தை தெரிந்து கொள்ளும் விருப்பத்தினால் திரும்பவும் வினவலானார்-என்றார்-

மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல் -ஆச்சார்ய ருசி பரிக்ருஹீதமாய் இருக்க வேண்டுமே
பவத பரமோ மத என்று மேலே வருவதால் இது நன்கு விளங்கும்
யுதிஷ்ட்ரர் சதாசார்யத்தில் ஈடுபட்டவர் ஆதலால் இங்கனம் கேட்கலானார் –

வைசம்பாயனோ ஜனமேஜயமுவாச:

ஶ்ருத்வா தர்மானஷேஷேன பாவனானி ச ஸர்வஶ: |

யுதிஷ்டிர: ஷாந்தனவம் புனரேவாப்யபாஷத||

பயிலும் சுடர் ஒளி மூர்த்தி- நெடுமாற்கு அடிமை கேட்டு- மதுரகவி நிஷ்டை
திரிபுரா தேவி -உடையவர் காட்டும் பரம் பொருளையே ஆஸ்ரயிப்போம்

தர்மான் அப்யுதய நி:ஷ்ரேயஸோத்பத்தி ஹேதுபூதான் சோதனாலக்ஷணான் அனைத்து மங்களங்களையும் அதிகரிக்க வல்லதும்
அஷேஷேன கார்த்ஸ்ன்யேன முழுமையாக (ஒன்றும் குறைவின்றி)
பாவனானி பாபக்ஷயகரானி தர்மரஹஸ்யானி பவித்ரமானதும் பாவங்களை அழிக்க வல்லதுமான தர்ம ரஹஸ்யங்களை
ச ஸர்வஷ ஸர்வ ப்ரகாரை: அனைத்தும்
ஷ்ருத்வா யுதிஷ்டிரோ தர்மபுத்ர: தர்மபுத்ரனான யுதிஷ்டிரன்
ஷாந்தனவ ஷந்தனுசுதம் பீஷ்மம் ஸகல புருஷார்த்த சாதனம் ஸுக ஸம்பாத்யம்
அல்ப ப்ரயாசம் அனல்ப ஃபலம் அனுக்தமிதி க்ருத்வா ஷந்தனு புத்திரரான பீஷ்மரிடம் கேட்டறிந்த பின்பும், அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய அடையத்தகுந்த அனைத்தையும் அளிக்கவல்லதும்
(இவ்வுலக மற்றும் அவ்வுலக) இன்பத்தை தரவல்லதும் எளிமையானதும் ஆனால் மிகச்சிறந்த பலன்களை கொடுக்க வல்லதுமான
எந்த ஒரு உபாயத்தையும் பீஷ்மர் கூறவில்லை என்று கருதியதால்
புன: பூய மறுபடியும் (யுதிஷ்டிரன்)
ஏவ அப்ய பாஷத ப்ரஶ்னம் க்ருதவான் அவரிடம் (பீஷ்மரிடம்) கேள்விகள் கேட்டார் ||1||

வைசம்பாயனர் ஜனமேஜயனிடம் கூறுகிறார்:-கேட்பவரின் மனதை தூய்மை படுத்த வல்லதும், பாவங்களை போக்க வல்லதுமான
அனைத்து தர்மங்களையும் முழுமையாக (பீஷ்மரிடமிருந்து) கேட்டறிந்த பின்னரும், யுதிஷ்டிரர் மீண்டும் ஷந்தனுவின் புதல்வரிடம் (பீஷ்மரிடம், பின்வருமாறு) கேள்விகளைக் கேட்டார்.

———–

தத்ரேதம் ஆதாமேவ உதைரிராம—ப்ரேக்ஷாவத்பிஸ் : ப்ரமாணேந பரிச்ச்த்ய
அநுகூலம் ப்ரமேயம் உபாதேயமிதி | தச்ச த்வைதம் வர்ததே உபாயா உபேயாத்மநா |

விவேகிகள் ப்ரமாணத்தைக் கொண்டு -ப்ரமேயத்தை -விஷயத்தை பகுத்து அறிந்து அதில்
அனுகூலமான ப்ரமேயத்தை ஆதரிப்பார்கள் என்று முன்னமே அவதாரிகையில் சொல்லப் பட்டது

தத்வம் ஹிதம் புருஷார்த்தம் மூன்றுமே அறிய வேண்டுவது-அதுவே உபாயம் உபேயம் இரண்டாகும்
அப்படிப்பட்ட ப்ரமேயம் உபாயம் உபேயம் என்று இரண்டு வகைப்படும்
உபாயம் -சாதனம் -காரியத்துக்கு இன்றியமையாதது
உபேயமாவது ஸாத்யம் -பயன் –

உபேயம் ச ப்ரிய ப்ரிய தர ப்ரிய தம ரூபேண த்ரைதம்|
உபாயஶ்ச ஹித ஹித தர ஹித தம ரூபேண|
தத்ர உபேயஸ்ய ஜந்ம ருத்தி பரிணாமா நித்யத்வாதய:, சேதந தர்மா: க்லேஶ கர்ம விபாகா ஆஶயாஶ்ச கதோஷா:;
குணாஶ்ச தோஷ அஸம்பேத ருசிரத்வ ஸ்தாவரத்வ பூயஸ்த்வ விஶிஷ்டா:
ஸம்வித ஆநந்வ ஐஶ்வர்ய விபூதி விஸேஷாதய:|
உபாயஸ்ய து வ்ய யாயாஸ பூயஸ்த்வ வ்யபிசாரித்வ பல்கு பலத்வாதகயா தோஷா:|
குணாஶ்ச நியத நிரபாய லகு தர பஹு பலேத்வாதய:|

உபாயம் -ஹிதம் ஹித தரம் ஹித தமம்-என்று மூன்று வகைப்படும்
உபேயம் -பிரியம் பிரிய தரம் பிரிய தமம்-என்று மூன்று வகைப்படும்
உபேயத்துக்கு பிறப்பு வளர்ச்சி மாறுபாடு அழிவு போன்ற தர்மங்களும்
கிலேசம் கர்மம் -விபாகம் -அதாவது கர்ம பலங்களான -ஜென்மம் ஆயுள் போகம் முதலியவையும்
ஆசயம் -மனத்தின் கண் உள்ள ஸம்ஸ்காரம் முதலிய சேதனர்களுக்கு உரிய தர்மங்களும் தோஷங்களாகும் –

குணங்களோ -தோஷம் கலவாமல் -ருசிரத்வ -அதாவது அழகு அமைந்து அழிவில்லாது மேம்பாடுடைய-பேர் அறிவு ஆனந்தம் ஐஸ்வர்யம் முதலிய விபூதி விசேஷங்களாம்

உபாயத்துக்கு -பெரும் செலவு செய்வதற்கு அருமை கருதிய பயனைப் பயவாமை- சிறு பயனுடைமை ஆகியவை தோஷங்களாகும்

குணங்களோ பயணித்த தவறாது அளித்தல் -அபாயம் இல்லாமை -செய்வதற்கு எளிமை -மிகு பயன் அளித்தல் போன்றவையும்

ஏவம் வித தோஷ ஹாந குணவத்த்வ தார தம்யேந உபாக உபேயயயோ : தர தம பாவ: உபயத்ராபி ஸம் பவதி |
உத்க்ருஷ்ட தமே உத்க்ருஷ்ட உத்க்ருஷ்ட தரயோ : நிக்ருஷ்டவத் வர்ஜநீயத்வமேவ |

உபாய உபேயங்களில் இப்படிப்பட்ட குண தோஷங்கள் ஏறக்குறைய இருப்பதால் தாரதம்யம் உண்டாகக் கூடும்
குணங்களைக் கொள்ளுதலில் மேல் உள்ளத்தை நோக்க கீழ் உள்ளவை குறைந்தவையாகத் தோன்றும்
ஆதலால் உத்க்ருஷ்ட தமத்தை நோக்க உத்க்ருஷ்ட தரமும் உத்க்ருஷ்டமும் நிஷ்க்ருஷ்டங்கள் போலவே விடத் தக்கவையே யாகும்

அசாரம் -அல்ப சாரஞ்ச -சாரம் -சார தரம்- தள்ளி -சார தமம் கொள்ள வேண்டுமே

தத்ர அநிஷ்டேப்ய: இஷ்டேப்யோ அபி நிக்ருஷ்டேப்ய: நிஷ் க்ருஷ்ய உத் க்ருடதமமுபாதாதும் உபாய உபேயௌ ஹை தாரதம்யேந ப்ரஷ்டவ்யௌ |
தௌ ச விவக்ஷாவஸேந ஷோடா விபஜ்ய ப்ருச்சந் யுதிஷ்டிர உவாச, கிமேகமிதி ஶ்லாேக த்வயேந |

ஆகையால் யுதிஷ்ட்ரர்
அநிஷ்டத்தையும்
இஷ்டத்தில் தாழ்ந்தவையையும் -விலக்கி
மிகச் சிறந்த இஷ்டத்தைக் கைக் கொள்ள விரும்பி
உபாய உபேயங்களைத் தாரதம்யப்படி நன்றாகக் கேட்டுத் தெளிய வேண்டும் என்னும் கருத்துடன்
அவற்றை ஆறு விதமாகப் பிரித்து
இரண்டு ஸ்லோகங்களாலே கேட்க்கிறார் –

கிமேகம் தைவதம் லோகே கிம் வாப் யேகம் பராயணம்
ஸ்துவந்த கம் கமர்ச்சந்த ப்ராப்யுனுயுர் மாநவா ஸூபம்

கோ தர்ம: ஸர்வ தர்மாணாம் பவத: பரமோ மத: |
கிம் ஜபன் முச்யதே ஜந்துர் ஜன்ம ஸம்ஸார பந்தனாத் ||

இங்கு இரண்டு ஸ்லோகங்களில் ஆறு கேள்விகள்
நாலு ஸ்லோகங்களில் ஆறு அவதார ரஹஸ்யங்கள் கண்ணன் கீதையில்

ரஹஸ்ய சிகாமணி -வராஹ சரம ஸ்லோகம் -இரண்டு ஸ்லோகங்களில் ஐந்து அர்த்தங்கள் -மூவர் அனுபவம் இங்கும்

பீஷ்ம உவாச –
ஜகத் ப்ரபும் தேவ தேவம் அநந்தம் புருஷோத்தமம் |
ஸ்துவந் நாம ஸஹஸ்ரேண புருஷ : ஸததோத்தித:||4||

தமேவ ச அர்சயந் நித்யம் பக்த்யா புருஷம் அவ்யயம் |
த்யாயம் ஸ்துவந் நமஸ் யம்ஶ்ச யஜமாநஸ்த மேவ ச ||5||

அநாதி நிதனம் விஶ்ணும் ஸர்வலோக மஹேஶ்வரம் |
லோகாத்யக்ஷம் ஸ்துவன் நித்யம் ஸர்வது:காதிகோபவேத் ||–6-

ப்ரஹ்மண்யம் ஸர்வ தர்மஞ்யம் லோகானாம் கீர்த்தி வர்த்தனம் |
லோக நாதம் மஹத் பூதம் ஸர்வபூத பவோத்பவம்||–7-(பத்து பெருமைகளைக் கொண்டவனை நித்தியமாக ஸ்தோத்ரம் பண்ணி )

ஏஶ மே ஸர்வ தர்மாம் தர்மோ அதி கதமோ மத: |
யத் பக்த்யா புண்டரீகாக்ஷம் ஸ்தவைர் அர்சன நர: ஸதா||–8-(இதில் நாலாவது ஸ்தவன் )

பரமம் யோ மஹத் தேஜ: பரமம் யோ மஹத் தப: |
பரமம் யோ மஹத் ப்ரஹ்ம பரமம் ய: பராயணம் ||–9-

பவித்ராணாம் பவித்ரம் யோ மங்களாணாம் ச மங்களம் |
தைவதம் தேவதானாம் ச பூதானாம் ய அவ்யய: பிதா ||–10-

யத:, ஸர்வாணி, பூதானி, பவந்தி, ஆதியுகாகமே |
யஸ்மின், ச, ப்ரளயம், யாந்தி, புன:, ஏவ, யுகக்ஷயே ||–11-

தஸ்ய, லோக ப்ரதானஸ்ய, ஜகன்னாதஸ்ய, பூபதே |
விஶ்ணோ:, நாம ஸஹஸ்ரம், மே, ஶ்ருணு, பாபபயாபஹம் ||–12-

தாமே விரும்பிக் கேட்டுக் கொண்டு இருக்கும் அரசரை நோக்கி பீஷ்மர்
அரசனே கேள் என்று மீண்டும் அழைத்தல்
இந்தப் பகவத் விஷயத்தைச் சொல்லுபவருக்கு கேட்பவர் கிடைத்த சிறப்பைச் சொல்கிறது

அத வக்தும் ப்ரதிஜாநீதே யாநீதி –

யாநி நாமானி கௌணானி விக்யாதானி மஹாத்மன: |
ரிஶிபி: பரிகீதானி தானி வக்ஷ்யாமி பூதயே || 13 ||(பூ பதே ஸ்ரு ணு -காது கொடுத்தால் போதும் -ஆசை ஒன்றே வேண்டும் -யானி –தானி )

இஹ சதுஷ்டயீ ஹி ஶப்தாநாம் ப்ரவத்தி: 1-த்ரவ்ய2-ஜாதி3- குண4-க்ரியா விஷய பேதேந (நான்கையும் குறிக்கும்) |
தத்ர [அ]த்ரவ்யோபாதித்வேந [அ]ஸாதாரண்யேந ச [அ]த்ரவ்ய ஜாதி நிமிதத்வாத் 
ப்ரக்ருஷ்ட குண கர்ம நிமித்தத்வமேவ பகவந் நாம்நாம் ப்ரவீதி கௌணாநி இதி |(த்ரவ்யம் ஜாதி இவற்றை விட குணம் கர்மம் இவற்றால் சிறப்பு)

குணேப்ய: கர்மப் யஶ்ச நிமித்த பூதேப்ய: ஆகதாநி; யௌகிகாநீத்யர்த:|
குண ஶப்த: கர்மணோ அபி ப்ரதர்ஶக: |

பதச் சேர்க்கையால் வந்த அர்த்தம் -யவ்விகிதம்
பங்கஜம் சேற்றில் பிறந்த செந்தாமரை
காளான் நாய் குடையையும் சொல்லலாமே
ரூடி அர்த்தம் -தாமரை பிரஸித்த அர்த்தம்

“[ப்ரஸந்நாத் மாத்மநோ ] ப்ரவதந் நாத்மநோ நாம்நாம் நிருக்தம் குண கர்மணாம்”;
பகவாந் “கௌணாநி மம நாமாநி கீர்திதாநி ச காநிசித்”,பாரதம் 
“நாம கர்மார் தவித் தாத”,பாரதம்-உத்யோக பர்வம் 
“நிருக்தம் கர்மஜாநாம் ச ஶ்ருணுஷ்வ ப்ரயதோ அநக” இத்யாதி வசநாத் |பாரதம்-சாந்தி பர்வம் 

ந ஸைஷாம் யத்ருச்சா ஶப்தத்வம்; விவக்ஷித அவயவ அர்தத்வாத் (அவயவங்கள் அர்த்தம் )ஸாங்கேதிகத்வாச்ச-(அடையாள அர்த்தம் )||(நமக்கு அவன் பெயர் சேஷத்வம் அடியாக கொண்டுள்ளோம் )
விக்யாதாநி(ப்ரஸித்தம் )சந்தோ பாஷயோ : ப்ரவ்ருத்த் யாதீநாம் ப்ரயோக பூயஸ்த்வாத்
தத் அஸாதாரண்யேந ப்ரஸித்தாநி; ரூடாநீத்யர்த: |

யோகாதிநா அர்தாந்தர வ்ருத்தி ஸம்பவே அபி ஏகத்ர நியதத்வம் ஹி நாமத்வம் |(கேசவன் ப்ரஸஸ்த கேஸ பாஸம் கொண்டவன் -சேராமல் திருமால் ஒருவன் இடமே சேரும் ரூடியாக பிரசித்தமாக இருப்பதால்)

ருஷிபிர் : அஸேஷ வேதார்த தர்ஶிபி: ஸநக ஸநத்குமார நாரத ப்ரப்ருதிபி:|

பரிகீதாநி ஏவம் ரூபாணி ஏவம் நிமித்தாநி ஏதத் வாசகாநீதி

பரித: துக்த தேநுவத் அபிநிவிஶ மாநை :(பால் கொடுக்கும் பசு காம்புகள் வழியாக பாலைக் கொடுக்குமா போல்)
ப்ரீத்யா ப்ரயுக்தாநி யாநி நாமாநி தேப்ய: ஏகைக ஸ்மாத் ஏகைகம் மது கரக்ரமேண (தேன் வண்டு போல் சேமித்து )ஸமா ஹ்ருத்ய பகவதா வ்யாஸேந
ஸ்தோத்ர ரூபேண கீர்திதாநி ஸம்ப்ரதாய பாரம்பர்யேண அஸ்மத் பர்யந்தம் ஸம் ப்ராப்தாநி துப்யம் வக்ஷ்யாமி |(ஸம்ப்ரதாய பரம்பரையாக வந்து உணர்ந்து- உனக்கு அறிய கூறுகிறேன்)

கிமர்தம்? பூதயே , பூதி: பவநம் ஸத்தா; அநாதி ஸம்ஸார த்ருஷ்டி விநாஷ்டாத்மந புநருஜ் ஜீவநா யேத்யர்த: ||

சத்தைக்காகவும் உஜ்ஜஜீவனத்துக்காகவும் -இழந்தோம் என்ற இழவும் இன்றிக்கே உழன்று இருக்கும் நமக்காக

ஶ்ரூயதே ஹி ஏவம் ஆத்மந : ஸதஸத்பாவௌ

“அஸந்நேவ ஸ பவதி அஸத் ப்ரஹ்மேதி வேத சேத், அஸ்தி ப்ரஹ்மேதி சேத் வேத ஸந்தமேநம் ததோ விது:” இதி |
அபரிமித மஹாத்ம்ய தயா அபரிமித அபிஜ்ஞத்வாத் பகவதோ யத்யபி க்ருத்ஸ்ந நாம க்ரஹண அஸம்பவ:;

பிரபாவம் மஹாத்ம்யம் -அவனைச் சொல்லி முடிக்க முடியாதே -முழுமையாக சொல்லா விட்டாலும் முடிந்த அளவு சொல்கிறேன்

“ஶ்ருதம் ஏதஸ்ய தேவஸ்ய நாம நிர்வசநம் ஶுபம்|
யாவத் தத்ர அபிஜாநேஹம் அப்ரமேயோ ஹி கேஶவ:||”(புரிந்து கொள்ள முடியாமல் -புத்திக்கு அப்பால் பட்டவன் என்று அறியவே சொல்கிறோம் கேட்க்கிறோம்)
இதி ப்ரகாரேண புபூஷதாம் (அறிய ஆசை ஒன்றே வேண்டும் )து விஷ்ணு நாம ஸஹஸ்ரேண ஆத்ம லாபோ பவதீதி த்வந யதி மஹாத்மந இதி |

ஏவ மேஷாம் குண[கர்ம ]நிமித்தத்வாத் ஏதததிகாரிபி: பகவத் குண தஸ்கரா ந வ்யவஹார்யா: |
“அஸ்த்வியம் ஸ குண ப்ரஹ்ம வித்யா அர்வாசீந பலாதிகாரிணாம், நிர்குண வித்யா து முமுக்ஷூணாமேவ ஹி” இதிசேத்,(தாழ்ந்த பலத்துக்கு ச குணம் சொல்லும் பக்ஷவாதிகள் வாதம் பலம் சொல்வதிலேயே நிரஸனம் )
திக் தவாம் பதிரம் ய: அஸ்யா ஏவ “முச்யதே ஜந்து:ஜந்ம ஸம்ஸார பந்தநாத்”,
“யாதி ப்ரஹ்ம ஸநாதநம்” இத்யுபாயத்வம் குஷ்யமாணம் ந ஶ்ருணோஷி |

கிம் ச ஸ குண நிர் குணே த்வே ப்ரஹ்மணீ ப்ரஸஜ்யே யாதாம் இத்யத்வைதம் விபத்யதே |(இரண்டு ப்ரஹ்மம் சொல்வதாலேயே அத்வைதம் நிரஸனம் -பொய்யான ச குண உபாஸனம் செய்வதால் பலன் கிட்டுமோ)

“பரமோ மத” இதி,
“அதிகதமோ மத” இதி ஸர்வ ஶாஸ்த்ரார்தாதிக தர ஸார ஸமுத்தார ஏக ப்ரயோஜநாதா அதிக்ருதஸ்ய
அர்வாசீந விஷய த்வோக்தௌ க்வ அந்யத்ர அநர்வாசீந ஸித்தி: அநயோ : வித்யயோ :?(|ச குண உபாசனம் தாழ்ந்த பலனைக் கொடுக்கும் என்றால் பீஷ்மர் அறிந்த வற்றில் இதுவே உயர்ந்தது -வேறே எந்த வித்யை கொடுக்கும் )

ஸ குணா நிர் குணார் தேதி மாச வாசால வோசதா: |
ந விருத்தார்தயோ : யஸ்மாத் உபாய உபேய தயா த்வயோ : ||(வார்த்தைப்பாடு பண்ணாதே -விருத்தமான இரண்டும் உபாயம் உபேயம் ஆகாதே )

மஹாத்மாவான பகவானுக்கு எந்த நாமங்கள் குணங்களாலும் செய்கைகளாலும்
குணம் என்றதால் செயகைகளையும் கொள்ள வேண்டுமே –
வந்தனவாகப் பிரஸித்தி பெற்றனவோ
ரிஷிகளால் நன்றாகக் கீர்த்தனம் செய்யப்பட்டவையோ
ப்ரஸித்தி -இந்த நாமங்கள் வேதங்களிலும் லோகத்திலும் மிகுதியாக வழங்கப் பெற்று பகவானையே குறிப்பன என்ற பிரசித்தி –
வேதார்த்தங்களை உள்ளபடி தரிசிக்க வல்ல ஸநக ஸனத் குமார நாரதாதி ரிஷிகள்
இன்ன திரு நாமம் இன்ன காரணத்தால் வந்தன-இன்ன அர்த்தங்களை சொல்லுகின்றன என்று
கறவைப் பசுக்கள் தம் கன்றுகளுக்கு பாலைத் தாமே விரும்பிக் கொடுப்பது போலே
மனம் உவந்து ஆங்காங்கு திரு நாமங்களை ஸங்கீர்த்தனம் செய்தார்கள்
அவற்றை ஒவ்வோர் இடங்களில் இருந்து ஒவ்வொன்றாக மதுரகர நியாயமாகச் சேர்த்து
ஸ்ரீ வ்யாஸ பகவான் இந்த ஸ்தோத்ர ரூபமாகச் செய்து அருள
அவரிடம் இருந்து பீஷ்மருக்கு கிடைக்கப் பெற்றன –

ஆத்ம உஜ்ஜீவனத்துக்காக என்றமையால்
அநாதி காலமாக ஸம்ஸாரத்தில் அகப்பட்டு அறிவு அழிந்து கிடக்கும் ஆத்மாக்கள் சத்தை பெற்று உஜ்ஜீவிப்பதற்காக உனக்குச் சொல்லுகிறேன் என்றும்
மஹாத்மா என்றதனால்
இப்படிப்பட்ட பரம புருஷனை அறிவதால் ஸத் பாவமும் அறியாமையினால் அஸத் பாவமும் உண்டாவதாக ஸ்ருதிகள் சொல்லுகின்றன
எம்பெருமான் அளவற்ற அறிவுடைய -ஸர்வஞ்ஞன் -யாகையாலும்
அளவற்ற மஹாத்ம்யம் யுடையவராகையாலும்
அவருக்குத் தக்கபடி அவனுடைய திரு நாமங்களை அளவற்ற மஹாத்ம்யம் யுடையவையாய் இருக்குமே
அவற்றை எல்லாம் அறிவது முடியாதாயினும் கேட்ட வரையிலும் தெரிந்து கொண்டு இருக்கிறேன்
அவனுடைய திரு நாமங்களைக் கேட்ட வரையில் ஆத்ம லாபம் யுண்டு -என்றும் கூறினார் என்க

மனஸில் அழுக்கு இருந்தால் -கலக்கம் உண்டாகி -பாதிப்பு ஏற்பட அறிகிறோம் –
உடம்புக்கு கவசம் போல் மனஸ்ஸுக்கு திரு நாம சங்கீர்த்தனம்-

தாய்க்கும் மகனுக்கும் இவருக்கும் –இவர் அடி பணிந்தாருக்கும்-பரம காருண்யத்தால் –
திருநாமங்களை பற்றிக் கேள்வி கேட்க்காமலேயே திரு நாமங்களையும் அருளிச் செய்கிறார்-

பிறகு ஸ குண நிர்க் குண வாதத்தைப் பற்றி விரிவாக விசாரித்து இருக்கிறது –

அபி ச நிர் குணஸ்ய கிம் மூலம் குண ப்ரதீதே:?(ஓன்று மற்று ஒன்றாகத் தோற்றுமா போல் -வெள்ளி முத்துச் சிப்பி -போல் நிர்குண ச குண ப்ரஹ்மம் )
ஸா அவித்யேதி சேத், ஜநி ம்ருதித மோஹாதி பவ தோஷ விஷ மூர்ச்சி தஸ்ய முமூர்ஷோ :
பரம பேஷஜம் ப்ரஹ்மைவ அவித்யா- ப்ர மாத்யதேஷ தோஷ ஆஸ்பதம் (ப்ரஹ்மத்துக்கே அவித்யாதி தோஷம் உண்டு என்பாய் ஆனால் )
அநாக்ராத குண கணிகம் சேதி மநோ ஹரம் இதம் வேத ரஹஸ்யம் |

ப்ரஹ்ம தோஷா ம்ருஷா சேத் (ப்ரஹ்ம தோஷம் பொய்யானால் )தே நைர் குண்யம் ச ம்ருஷா மதம் |
நைர் தோஷ்ய ஸ குணத்வே தே ஸத்யே ஸ்யாதாம் ந சேச்சஸி ||(ப்ரஹ்மத்துக்கு நிர் குணத்வம் என்றாலே நிர்குணத்வமும் பொய்யாகும் அன்றோ-ஸ குணத்வம் சித்தமாகுமே )

(ப்ரஹ்மம் மட்டுமே சத்யம் ஜகத் மித்யா- ஜீவனும் ப்ரஹ்மமும் ஒன்றே- ஞானமே ஓன்று- ஞானம் உடையவன் இல்லை என்பாய் ஆனால்
ப்ரஹ்மமே அவித்யா என்றால் ஸ்வரூபமே -போக்கவே முடியாதே
ப்ரஹ்மத்துக்கு அவித்யா என்றால் அத்வைதம் போகுமே)

கோ வா ப்ரஹ்ம அவித்யாம் இமம் உபஹந்யாத்?
அத்வைத வித்யா நிஷ்ட இதி சேத் , இதம் ததோ அபி மநோ ஹரம் யத் பரம் ப்ரஹ்ம பம் ப்ரமீதி
ஸம்ஸாரீ ததுத்தாரயதீதி |
ப்ரஹ்மத்துக்கு அவித்யை யார் போக்குவார் என்றால் அத்வைதம் அறிந்த ஜீவன் போக்குவான் என்பாய் என்றால் -இந்த வாதமும் மநோ ஹராமாய இருக்கும் ப்ரஹ்மம் உழன்று இருக்க ஜீவன் மீட்ப்பார் என்கிறாயே

அபி ச ஸ குண வாக்யம் கஸ்ய ஹேதோ: நிரர்தகம்?
நிர் குண வாக்ய பாத் யத்வாத் இதி சேத், விபரீதம் கஸ்மாந்ந ஸ்யாத்?
ஸம மேவ ஹ்யுபயோ : ப்ராமாண்யம் விராேதஶ்ச |

ஒன்றுக்கு மற்ற ஓன்று விரோதம் என்றால் இரண்டு வாதிகளும் சமமாகும்

அந்யச்ச குணாஶ்சேத் நிஷேத்தவ்யா:, கிம் தபஸ்விந்யா குண ஶ்ருத்யா?
ப்ரதிஷேத்ய குண ப்ரஸஞ்ஜிகா ஸேதி சேத், மா ச பூத் ப்ரதிஷேத்யம் |

குணம் உண்டு என்று ப்ரஸக்தி இருந்தால் தானே இல்லை என்று நிஷேதிக்க
பின்னால் சொன்னதே பிரபலம் -ஆகவே குணம் இல்லை என்பாய் ஆனால்

ந ஹ்ய ப்ரஸக்தம் ப்ரஸஜ்ய ததேவ ப்ரதிஷேதது ஸாஸ்த்ரமிதி காசித் லலாட பட்டே லிபி: |
ப்ரக்ஷால நாத்தி பங்கஸ்ய தூர தஸ் பர்ஸநம் வரம் |

சேறு இருந்தால் தானே நீரால் அலம்ப முடியும்
அதனால் சேற்றைப் பூசிக்கொள்வார் உண்டோ
தூரமாக தள்ளிப் போவதே உசிதம் அன்றோ

நச “பௌர்வாபர்யே பூர்வ தவ்ர்பல்யம் ப்ரக்ருதிவத்” இதி ஸார்வத்ரிகோ ந்யாய: |
ந ஹி ப்ராக்தநம் இஹ அஸ்தீதி ஜ்ஞாநம் ந அஸ்தீதி பரஸ்தாத்த ந ஸப்தோ ஹி நஸ்தி |

ப்ரக்ருதி ஷட்கம் விக்ருதி ஷட்கம் -ஆக 12 அத்தியாயங்கள் பூர்வ மீமாம்ஸை

இல்லை என்றால் இப்போது இல்லை -என்பதே தேறும் முன்பு இருந்தது என்பதை நிஷேதிக்காதே

பவமா நா அபச்சேதே ப்ராக்ருத தர்ம ப்ராப்தவ் ச பூர்வ தவ்ர்பல்ய, பூர்வம் அநுப ம்ருத்ய பரஸ்ய உத்பத்த்ய அஸம்பவாத் |
இஹ து ஸம்பவோ வக்ஷ்யதே |

கச்சம் விட்டால் பிராயச்சித்தம் சொல்லும்
உத்காதா விட்டால் கர்மாவை நிறுத்த வேண்டும் -முதலில் இருந்து பண்ண வேண்டும்
ப்ரதிஹத்தா விட்டால் யாகத்துக்கு உண்டான தக்ஷிணை முழுவதுமே கொடுக்க வேண்டும் –
இருவரும் விட்டால் -இரண்டும் பண்ண முடியாதே
எந்த விதி வாக்கியம் பிரபலம் -பின் சொன்ன வாக்யமே பிரபலம்
இந்த விதியை அத்வைதி கொள்கிறார் இங்கு
இது பொருந்தாது -அநியதம் -நியதம்-இரண்டும் உண்டே-வேதம் அநாதி -அனைத்து வாக்கியங்களும் நித்யம் -முன் பின் என்பதே வராதே

இங்கு விரோதமே இல்லை -ச குண வாக்கியமும் நிர் குண வாக்கியமும் விரோதம் இல்லாதவையே

யதி பரத்வாத் நிர் குண வசநம் குண அம்சம் நிஹ்நுதே, ப்ரஹ்ம ஸ்வரூப அம்சம் அபி
“ஸூந்ய மேவ தத்வம்” இதி வாக்யம் பாததாம், பரத்வாத் |
தத் புத்த ப்ர மூலத்வாத் ந வைதிகம் வஸ்து பாததே இதி சேத், ந, வேதோ அபி
ஹி தே ப்ரஹ்ம ப்ரமூல ஏவேதி கோ விசேஷோ அநயோ : ?

தத்வம் ப்ரஹ்மம் வேதம் முன் சொல்ல புத்தர் பின் சொல்ல -இது அத்தை அளிக்குமோ
ப்ரஹ்மத்தின் பிரமத்தால் வந்தது என்று நீ சொல்வதற்கும் இதுக்கும் வாசி இல்லையே

கிம் ச ப்ரத்யுதே குண ஸாஸ்த்ர மேவ பரம் த்ருஷ்டம்; தேஹாத்ம துர் குண நிதேஷே பர நிர் குண வசந பூர்வம் பகவதி ஹேய குணாந் ப்ரதிஷித்ய
கல்யாண குண விதி பரத்வஸ்ய “அபஹத பாப்மா விஜர:” இத்யாத வுபலம்பாத்|
அபி ச தத்ய- மித்யா விஷய வ்யவஸ்தயா ஸ குண நிர் குண ஶ்ருத்தயோ : பரித்ராணமிதி விப்ரலம்ப: |
பங்க ஏவ ஹி மித்யா விஷயத்வே ப்ரமாணஸ்ய, யதா அலீக கலதவ்க க்ரஹஸ்ய |
ஸ குண நிஷேதோ அபி மித்யா விஷய ஏவ த்வந் மதே இதி, தஸ்ய வா கதம் தத்த்வ விஷயத்வம் இத் யலம் அஸம்பாஷ்ய ஸம்பாஷணேந ||

நல்ல குணங்கள் உண்டு கெட்ட குணங்கள் இல்லை இரண்டுமே உண்மையாகும்-தேக குணம் ஆத்மாவைப் பாதிக்காதது போல் –

அத்ரேயம் தத்த்வ விதாம் வ்யவஸ்தா | ஜ்ஞாந சக்த்யாதி ஶ்ருதி: கல்யாண குண விஷயா, நிர் குண ஶ்ருதி: ராக த்வேஷாதி விஷயேதி;
“ஸத்ய காமஸ் ஸத்ய ஸங்கல்ப:”(சாந்தோக்யம் )இத்யாதே: மங்கல விஷயத்வ தர்ஸநாத்,
நிர் குணமிதி ஸாமாந்ய நிஷேதஸ்ய ததந்ய விஷயத்வேந கார்தார்த்ய ஸம்பவாச்ச | (கெட்ட பண்புகள் இல்லை -என்று சுருக்கியே அர்த்தம் கொள்ள வேண்டும் )

ஏவமேவ பதாஹவநீய-ப்ராஹ்மண பரி வ்ராஜக – ப்ராஹ் மண கௌண்டிந்ய-கோபலீ வர்த -ப்ரப்ருதி ந்யாயோ நிரங்குஸ : |
ததா கலே பாதிகயா தோஷ விஷயோ நிஷேத : குண விஷயோ விதிஶ்வ ஏகஸ்மிந் வாக்யே “அபஹத பாப்மா ” இத்யாதி:,
“ஸத்ய காமஸ் ஸத்ய ஸங்கல்ப:”இத்யந்த :;(ஒரே வாக்கியத்தில் ஆறு விஷயங்கள்-கெட்ட குணங்கள் இல்லை என்றும்- இரண்டு குணங்கள் உண்டு என்றும் சொல்லும்)

“யத் ததத் ரேஶ்யம்” இத்யாரப்ய “நித்யம் விபும் ஸர்வகதம்
ஸு ஸூக்ஷ்மம் ததவ்யயம் யத் பூதயோம் பரிபஶ்யந்தி தீரா:” இத்யந்தஶ்ச|(கோத்ரம் இல்லாதவர் அனைவரும் அவரே -எல்லாம் நிறைந்தவர்)

ந சைவம் விதே ந்யாய அபேக்ஷயா விஷய வ்யவஸ்தா , ஸ்தம்போ அஸ்தி கும்போ நாஸ்தீதிவத் |(ஸ்தம்பம் -தூண் இருக்கு -கும்பம் குடம் இல்லை -விருத்தம் இல்லையே-வாக்யங்களுக்கு விஷயங்களே வேறே வேறே தானே )

த்ருஶ்யத்வாதி நிஷேதம் தத் விருத்த மங்கல குண பரம் ஸூத்ர காரோ விவவ்ரே
“அத்ருஶ்யத்வாதி குணகக தர்மோக்தே:” இதி (1-2-22)|

குண உப ஸம்ஹார பாதே ச
சாண்டில்ய- உபகோஸல -தஹர-புருஷ-பர்யங்க வித்யா வேத்யாநாம்
குண ப்ரபந்தாநாம் புத்தி மாத்ர ஸாரத்வம் ஆசங்கய ச பர்ய ஹார்ஷீத்“ஆதராதலோப:” இதி |(ஒரு குணமும் விடக் கூடாது என்பதற்காகவே சொல்லிற்று)

ஸ்பஷ்டம் ச பகவாந் பராஸர: “ஸத்த்வாதயோ ந ஸந்தீஸே யத்ர ச ப்ராக்ரு தா குணா:”,
“ஸமஸ்த கல்யாண குணாத் மகோ அஸௌ”   இத் யாதவ் இமா மேவ ச வ்யவஸ்தாம் ஆதஸ்தே |(விஷ்ணு புராணம் )

அகில ஹேய ப்ரத்ய நீக
கல்யாணை ஏக குண தானத்வம்
உபய லிங்கமும் உபய விபூதியும் இவனுக்கு உண்டே

——————–

ததா ச
தோஷா வத்யுபதா ஸம்க்யா விருத்தை மங்கலை : குணை : |
பரிபூர்ணம் பரம் ப்ரஹ்ம சாஸ்த்ரை : ஜோகுஷ்ய தேதராம் ||

மங்களமான கல்யாண குணங்களால் நிறைந்து -தோஷங்கள் இல்லாமை -அளவு இல்லாமல் எண்ணிக்கை இல்லாமல் -கோஷிக்கும் இல்லை வாக்கியங்களும் உண்டே

“ஏதம் ஹி ஸர்வாணி வாமாநி அபி ஸம்விஸந்தி”,(வாமாநி-வாமனன் ஸூ கம் நல்ல குணங்கள்)

சீறி அருளாதே -அவன் இடம் எது இருந்தாலும் நல்ல குணமே -அவனை அடைந்து குணங்கள் நல்ல பண்பை அடைகின்றன

“ஸர்வஸ்ய வஶீ ஸர்வஸ் யேஸாந:”(ப்ரஹதாரண்யம் -அடக்கி ஆள்கிறான்)
“ஸத்ய காமஸ் ஸத்ய ஸங்கல்ப:”,
“யஸ் ஸர்வஜ்ஞஸ் ஸர்வ வித்”,(சாந்தோக்யம் -அனைத்தையும் அறிந்து புரிந்தவன்)
“பரா அஸ்ய ஸக்திர் விவிதைவ ஶ்ரூயதே ஸ்வாபாவிகீ ஜ்ஞாந பல க்ரியா ச”,(ஸ்வேதாஸ்ரம்)
“ மாதா பிதா ப்ராதா நிவாஸஶ் ஸரணம் ஸுஹ்ருத் கதி: நாராயண:”,(ஸூபால)
“ஸர்வ கர்மா ஸர்வ கந்தஸ் ஸர்வ ரஸ:”;(நின்றனர் இருந்தனர் –பிரவிருத்தி நிவ்ருத்தி இவன் அதீனம் )
ஆநந்த வல்லயாம் ச “ஜ்ஞாந பல யௌவநாதீநாம் இயத்தா ராஹித்யேந
தத் விஷய ஆநந்தாத் வாங் மநஸ நிவ்ருத்தி: மீமாம்ஸிதா ;

(மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி மேல் மேல் -உபரி உபரி -பிரம்மா ஆனந்தம் வரை சென்று -அவரை கீழே மனுஷ்ய ஆனந்தத்தில் வைத்து
மேல் மேல் சென்றாலும் எட்ட முடியாத ஆனந்தம் அவனது அன்றோ
உயர்வற உயர் நலம் உடையவன் அவன்)

வைஷ்ணவே ச–பகவச் சப்த நிர் வசந ப்ரகரணே “ஸூத்தே மஹா விபூத் யாக்தய” இத்யாதி ச ஸாகல்யேந;(விஷ்ணு புராணம் -ப க வ அன் -குணவான் -இயற்கையில் இவனுக்கே -சாகல்யேந முழுமை இவனுக்கே)
ஸபா பர்வணி பீஷ்ம : “ஜ்ஞாந வ்ருத்தா மயா ராஜந் பஹவ: பர்யுபாஸிதா 😐
தேஷாம் குண வதாம் ஸுவ்ரே : அஹம் குண வதோ குணாந் ||
ஸமா கதாநாம் அஶ் ரௌஷம் பஹூந் பஹு மதாந் ஸதாம்| குணைரந்யாந் அதிக்ரம்ய ஹரி: அர்ச்ய தமோ மத ||”;(அர்ச்சய தமம் இவனே )

கர்ண பர்வணி ஸ:
“வர்ஷாயுதைர் யஸ்ய குணா ந சக்யா வக்தும் ஸமேதைரபி ஸர்வ லோகை :|(ஏத்த ஏத்த எங்கு எய்தும் )
மஹாத்மந: சங்க சக்ர அஸி பாணே : விஷ்ணோர் ஜிஷ்ணோர் வஸுதேவாத்மஜஸ்ய||”;

ஶ்ரீவாராஹே
“சதுர்முகாயுர் யதி கோடி வக்த்ரோ பவேந்நர: காபி விஸூத்த சேசதா : |
ஸ தே குணா நாம யுதைகமம்ஸம் வதேந்ந வா தேவ வர ப்ரஸீத |”;(பெருமை சொல்ல முடியாது என்பதுக்கு கோடி வாய் சதுர்முகன் ஆயுஸ் ஸூத்த மனஸும் வேண்டும்-நீயே ப்ரசாதீத்து அருள வேண்டும் )

மாத்ஸ்யே
“யதா ரத்நாநி ஜலதேர ஸம்க்யேயாநி புத்ரக |
ததா குணா ஹ்யநந்தஸ்ய அஸம்க்யேயா மஹாத்மந: ||”;

வைஷ்ணவே தர்மே “ந ஹி தஸ்ய குணாஸ் ஸர்வே ஸர்வைர் முநி கணைரபி |
வக்தும் ஸக்யா வியுக்தஸ்ய ஸத்த்வாத்யை : அகிலைர் குணை : ||” இத்யாதிபி: |
ப்ராயேண ஶ்ரீமத் ராமாயண பாரதாப்யாம் ச |குப்யேயு: |(சங்கரர் பாஸ்கரர் இவரைப் பார்த்து கோபித்துக் கொள்ளும் )

பரம் ப்ரம்ஹைவாஞம் ப்ரம பரிகதம் ஸம் ஸ ரதி தத்
பரோபாத்ய லீடம் விவசம் அசுபஸ் யாஸ் பதமிதி
சுருதி ந்யாயா பேதம் ஜகதி வித்தம் மோஹனமிதம்
தமோ யே நா பாஸ்தம் சஹி விஜயதே யாமுன முனி —ஸ்ரீ வேதார்த்த சங்க்ரஹம்

பரம் ப்ரம்ஹைவாஞம் ப்ரம பரிகதம் ஸம்ஸரதி தத் –பர ப்ரஹ்மம் அஞ்ஞானம் அந்தகாரத்தால் சூழப்பட்டு சம்சாரத்தில்
ஆழ்கின்றது என்கிற சங்கர மத அத்வைதிகளையும்
பரோபாத்ய லீடம் விவசம் -பர ப்ரஹ்மம் அசக்தன் -வேறே ஒருவரால் ஆட்டிப் படைக்கப் படுகிறது என்னும் பாசக்கார மதம்
அசுபஸ் யாஸ் பதமிதி -சித் அசித் போலே அசுபங்களால் வருந்து -யாதவ பிரகாசர் மதம் –
சுருதி ந்யாயா பேதம் ஜகதி வித்தம் மோஹனமிதம் -ஸ்ருதிகளில் இல்லாத வற்றையும் -நியாய சாஸ்திரங்களை ஒவ்வாத படியும்
தமோ யே நா பாஸ்தம் சஹி விஜயதே யாமுன முனி –தமஸ் -குணத்தால் வந்த அஞ்ஞானங்களை போக்கி அருளி
விசிஷ்டாத்வைத ஸ்தாபனம் பண்ணி அருளி வெற்றி கொண்ட ஸ்ரீ யாமுன முனிக்கு மங்களம் –

ந ச “யதோ வாசோ நிவர்தந்தே” இத்யாதி
ப்ரஹ்மணோ அப்ராமாணிகத்வ பரம்; தஸ்ய துச்சத்வ ப்ரஸங்காத்,
“யதோ வாச:”,
ஆநந்தம் ப்ரஹ்மண:” இத்யாதி தர்ம நிர்தேஸ விராேதாத், ததா வாங் மநஸ நிவ்ருத்தி வசநஸ்ய அநுபபத்தே:,
ப்ரஹ்ம ப்ரமாபக ஸாஸ்த்ர வையர்த்ய ப்ரஸக்தே:,

“அதாபதோ ப்ரஹ்ம ஜிஜ்ஞாஸா” இதி
ப்ரஹ்ம மீமாம்ஸ அந ஆரம்பணீயத்வ ப்ரஸங்காத்,

“வசஸாம் வாச்ய முத்தமம்”,
“ந அவேதவித் மநுதே தம் ப்ருஹந்தம்”,
“ஸாஸ்த்ர யோநித்வாத்” -(1-1-3 )இத்யாதி வாக்ய ந்யாய வ்யாத கோப ப்ரஸங்காத்,

“ஸைஷா அநந்தஸ்ய மீமாம்ஸா பவதி” இத் யுபக்ரமேண “தே தய சதம்” இத்யாதிநா
சதுர்முக ஆநந்த அநுக்ரம ஸம்ரம்ப விராேதாச்ச |

அத : “ப்ரக்ருதை தாவத்த்வம் ஹி” (3-2-21 )இதி ஸூத்ர ந்யாயேந
ஆநந்தே யத்தா ராஹித் பரமேவ மதம் ||(இருக்கும் ஆனந்தம் அளவிட முடியாது என்றே சொல்கிறது)

வ்யாஜஹ்நிரே ஸைவம் ஏதத் தாதபாத(தந்தை கூரத்தாழ்வானும் )“ஶ்ருதிஸ் தவாநந்த முகாந் ஹரேர் குணாநியத்தயா மாதுமிவோத்யதா ஸதீ |

உவாச வாஸோ மநஸா ஸஹோசிதாம் நிவ்ருத்தி மேவ த்வவதே: அஸம்பவாத்||” இதி |

அத : “ந யத்ர நாத வித்யந்தே நாம ஜாத்யாதி கல்பநா:” இத்யபி வ்யாக்யாநம் |(கல்பிக்க வேண்டாம் நாதனே -சொன்ன பின்பு நாமம் ஜாதி நிஜம் என்பதையே சொல்லிற்று)

கிம் ச, நாம ஜாத்யாதீநாம் கல்பநா நிஷேதே அகால்பநிக பாரமார்திக நாம ரூபம் ச
பகவத : ப்ரதிபாதிநம் ஸ்யாதிதி த்வம் நிகலபாஸம் த்வமேவ ப்ரயச்சஸி |

நிகலபாஸம்-காலுக்கு நீயே பாசக் கயிற்றை தேடிக்கொள்ளாதே

கதம் ச நாதேதி நாம க்ரஹணம் நாம ப்ரூயாத்| “அஸப்த கோசரஸ்யாபி”இத்யேதேந கதா |
அதோ விஶ்வ விலக்ஷண ஸ்வ அநுரூப நாம கதயா பரிமித வாச்ய வாசக ப்ரதி ஷேத பரம் |
ஸ்பஷ்டம் ப்ரதேஸாந்தரே
“நாம கர்ம ஸ்வரூபாணி ந பரிச்சேத கோசரே | யஸ்யாகில ப்ரமாணாநி ஸ விஷ்ணு: கர்பக: தவ||” இதி |(5 அம்சம்-அளவிட முடியாத அவன் உனது கர்ப்பத்தில் உள்ளான் )

ஆஹ — “நாம ஸு அவயவார்தாநாம் ந ப்ரவத்தி நிமித்தத்வம்,
நிமித்தத்வே அபி ந தத்ர ப்ராமாண்யம் தாத்பர்யாபாவாதிதி |
தததிஸ் தவீய:,ததர்த ப்ரதீதே: ஸ்வதஸ் : ப்ராமாண்யாத், அநபவாதத்வாத்,
“யாநி நாமாநி கௌணாநி”,
“ஆஸ்ய ஜாநந்தோ நாம சித்விவக்தந” இத்யாதிநா பகவத் குண ஜ்ஞாபந தாத்பர்யாவகமாச்ச

மந்த்ரவத் ஸாஸ்த்ராந்ர ப்ரமிதி பகவத் குண ஸ்மாரகத்தவ அபி ந குணாபஹார:, ஸுத்ருட ப்ரமாண ஸித்தத்வாத் |
அத ஏவஹ் யத்ர உபோத்கத நிமநயோ : குணாதி ப்ரகர்ஷம் ப்ரதிபாத்ய- ஸுத்ரடய்ய ச மத்யே தத் ஸ்மரணாய நாமாநி விதீயந்தே |
அமீஷு நாம ஸு அந்யதமமபி ஸர்வஸ்மை பலாய கல்பதே |

அவதாரிகையிலே குணங்களை சொல்லி –
மத்யத்தில் நாமங்களை பட்டியல் இட்டு
ஒவ்வொரு நாம சங்கீர்த்தனத்துக்கும் சர்வ பலனும் உண்டு என்று சொல்லி அமைத்துள்ளார்

ஏக தரஸ்ய பகவச் சாஸ்த்ராதிஷு த்வாதச அஷ்ட ஷட க்ஷராதிஷு மூலமூலி மந்த்ர ரூபேண பரிண மய்ய
ஸ்வாதந்த்ர்யேண ஸர்வார்தேஷு விநியோகாத் “நாம சித் விவக்தந” இத்யே கவசந ஸாஞ்ஜஸ்யாச்ச |
உச்சாரண மாத்ரேண உபகாரிணா மபி(சொன்னாலே -கேசவா என்ன இடர் ஆயன எல்லாம் போகுமே )
நிர்வசநேந குண ப்ரகாஸநே ஜடிதி மந:ப்ரஸாத நத்வம் பாவநத்வம் ச,(அர்த்தம் அறிந்து மனஸ்ஸு தூய்மை அடைந்து சாந்தியும் அடையும் )

நாம நிர் வசநாத் யாயேஷு “அஸ்தவ் ஷீத் நாமபி: வ்யாஸ: ஸைஶிஷ்யோ மதுஸூதநம் |
ஏஷாம் நிருக்தம் பகவந் பரமம் வக்து மர்ஹஸி ||
ஸூஶ்ரூஷோ : ஶ்ரத்ததா நஸ்ய ப்ரஜாபதிபதே: ஹரே : |
ஶ்ருத்வா பவேயம் யத் பூத : ஸ்ரச் சந்த்ர இவா மல: ||”.(சாந்தி பர்வம்)

த்ருத ராஷ்ட்ர: – “பூயோ மே புண்டரீகாக்ஷம் ஸம்ஜய ஆசக்ஷ்வ ப்ருச்சதே | நாம கர்மார்த வித்தாத
ப்ராப்நுயாம் புருஷோத்தமம் ||” இத்யாதவ் த்ரஷ்டவ்யம் |
விநியோகஶ்ச ஏஷாம் லிங்கத : உத்யோக- மோக்ஷ தர்மத வைஷ்ணவ தர்ம நிர் வசநாத் யாயேஷு தத் தந் மந்த்ர கல்பேஷு வசநேப்யஶ்ச அகவந்தவ்ய:|| 13 ||

————

உச்சாரண மாத்ரத்தாலேயே உபகரிப்பவைகளாகிலும் அவற்றின் அர்த்தங்களை ஆராய்ந்து குணங்களை வெளியிடுவதனால்
சீக்கிரம் மனம் தெளிவடைந்து பரம பரிசுத்தமாகும் என்பது
நாம நிர்வசன அத்தியாயங்களில் கண்டு கொள்க
இவற்றை உபயோகிக்கும் முறையை
ஸ்ரீ மஹா பாரதம்
உத்யோக பர்வத்திலும்
மோக்ஷ தர்மத்திலும்
வைஷ்ணவ தர்மத்திலும் உள்ள நிர்வசன அத்யாயங்களிலும்
அந்த அந்த மந்த்ர கல்பங்களிலும் உள்ள வசனங்களினால் தெரிந்து கொள்க

————

விஷ்ணோர் நாம ஸஹஸ்ரஸ்ய வேத வ்யாஸோ மஹான் ரிஷி
ஸந்தோ அனுஷ்டுப் ததா தேவோ பகவான் தேவகீ ஸூத-14-

அம்ருதாம் ஸூத் பவோ பீஜம் சக்திர் தேவகி நந்தன
த்ரி ஸாமா ஹ்ருதயம் தஸ்ய சாந்த்யர்த்தே விநி யுஜ்யதே–15-

இத் யுபோத்தாத ப்ரகரணம்
அத பஞ்ச ஸித்தாந்த நிஷ்டா நிர்ணயேந, பர வ்யூஹ விவிஸேஷேஷு ஸ்வ நாம -பவ அர்த ப்ரகரண ஒவ்சித்ய-அபௌந ருக்த்ய-ப்ரப்ருதிபி:
ந்யாயைஸ் : வ்யவஸ்தாப்ய, வ்யாகரண-நிருக்த -ஆர்ஷ நிர்வசந ப்ரஸ்தா நேந நாமாநி நிருச்யந்தே |

விஷ்ணும் ஜிஷ்ணும் மஹா விஷ்ணும் பிரப விஷ்ணும் மஹேஸ்வரம்
அநேக ரூப தைத்யாந்தம் நமாமி புருஷோத்தமம் —

ரிஷிர் நாம் நாம் –விநி யுஜ்யதே

வேத வ்யாஸர் ஸஹஸ்ர நாமத்தைக் கண்டு அறிந்த ரிஷி
பாதம் ஒன்றுக்கு எட்டு உயிர் எழுத்துக்கள் கொண்ட அனுஷ்டுப் சந்தஸ்ஸில் இது உள்ளது
இதுக்கு பகவான் விஷ்ணு தேவதை -உத்தேசியமான விசேஷம்
அம்ருதாம் ஸூத் பவ -என்பது இம்மந்திரத்துக்கு பீஜம் -ஆதாரம்
தேவகீ நந்தன -என்பது சக்தி –வன்மை
த்ரி ஸாமா -என்பது ஹ்ருதடம் -மையம்
ஸர்வ தோஷ நிவாரணம் என்னும் ப்ரயோஜனத்தில் இம்மந்திரத்துக்கு உபயோகம்

ஆயுதத்துக்கு எக்கு போன்றவை பீஜம்
முனை சக்தி
மையம் ஹ்ருதயம்
சத்ரு வாதம் போன்றவற்றுக்குப் ப்ரயோகம்
இதே போல் மந்திரங்களுக்கும் உண்டே

——————

யத: ஸர்வாணி பூதானி பவந்த்யாதியுகாகமே |
யஸ்மிம்ஸ்ச ப்ரளயம் யாந்தி புனரேவ யுகக்ஷயே || 11 ||

யத:, ஸர்வாணி, பூதானி, பவந்தி, ஆதியுகாகமே |

யஸ்மின், ச, ப்ரளயம், யாந்தி, புன:, ஏவ, யுகக்ஷயே ||

எவரிடமிருந்து, கல்பத்தின் தொடக்கத்தில் ஜீவராசிகள் தோன்றினவோ, அவரிடமே (அந்த முழுமுதற் கடவுளான ஸ்ரீமன்நாராயணனிடமே) கல்பத்தின் முடிவில், மஹாபிரளயத்தில் சென்று லயமடைகின்றன.

யத: யஸ்மாத் எவரிடமிருந்து ஸர்வாணி பூதானி பவந்தி உத்பவந்தி அனைத்து ஜீவராசிகளும் தோன்றினவோ ஆதியுகாகமே கல்பாதௌ கல்பத்தின் தொடக்கத்தில் (அதாவது முதல் யுகமான க்ருத யுகத்தில்) | கல்பத்தின் தொடக்கத்தில் முதல் யுகமான க்ருத யுகத்தில் யாரிடமிருந்து அனைத்து ஜீவராசிகளும் தோன்றினவோ |

யஸ்மிம்ஸ்ச ப்ரளயம் விலயம் (கல்பம், யுகம் முடிவில்) ப்ரளய காலத்தில் யாந்தி விநாஶம் கச்சந்தி அழிவை அடைகின்றனவோ புன: பூய:, மறுபடியும் ஏவ இத்யவதாரணார்த்த:, நான்யஸ்மின்னித்யர்த்த: இங்கு ஏவ என்பதன் அர்த்தம் எந்த ஒருவரிடமிருந்து அனைத்தும் தோன்றியதோ அந்த ஒருவரிடமே லயமடைகிறது, வேறொருவரிடம் இல்லை, யுகக்ஷயே மகாப்ரளையே மஹாப்ரளய காலத்தில் | மஹாப்ரளய காலத்தில் எவரிடம் (எவரிடமிருந்து தோன்றியதோ, அவரிடமே) அனைத்தும் சென்று லயமடைகிறதோ |

சகாரான்மத்யேSபி யஸ்மிம்ஸ்திஷ்டந்தி | (இந்த ஸ்லோகத்தில் வரும்) ‘ச’காரத்தின் அர்த்தம் என்னவெனில், (கல்ப, யுக தொடக்கம், மற்றும் ப்ரளயத்தின்) இடையினிலும் அவரிடமே நிலைபெற்று இருக்கின்றன என்பதாகும்.

யதோ வா இமானி பூதானி ஜாயந்தே யேன ஜாதானி ஜீவந்தி யத் ப்ரயந்த்யபிஸம்விஷந்தி|| (தைத்ரிய உபநிஶத் 3.1)

ஸ்ரீ தைத்ரிய உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது:-எதனிடமிருந்து இந்த ஜீவராசிகள் தோன்றுகின்றனவோ, எதனால் வாழ்கின்றனவோ, இறப்பவை எதனை சென்றடைகின்றனவோ…

தஸ்ய,  லோகப்ரதானஸ்ய, ஜகன்னாதஸ்ய, பூபதே |

விஶ்ணோ:, நாமஸஹஸ்ரம், மே, ஶ்ருணு, பாபபயாபஹம் ||

ஹே பூவுலகின் அரசனே (யுதிஷ்டிரனே)! மேற்சொன்ன இத்தகைய லக்ஷணங்களால் குறிப்பிடப்படும் அந்த ஒரே முழுமுதற் கடவுளும், அனைத்து உலகங்களும் தோன்றுவதற்குக் காரணமாகவும், ஞானத்தினால் அறியப்படுபவரும், அனைத்துலகின் ஸ்வாமியும், மாயைகள் அற்றவரும், எங்கும் நிறைந்துள்ளவருமான, பகவான் ஸ்ரீ விஶ்ணுவின் – “நமது தீவினையால் உருவான பாபங்களைப் போக்குவதும், சம்ஸார பயத்தைப் போக்குவதுமான” – ஆயிரம் திருநாமங்களை என்னிடமிருந்து கேட்பாயாக; (அவற்றை நீ) ஒருமித்த சிந்தையுடன் க்ரஹித்துக் கொள்வாயாக.

தஸ்ய ஏவம் லக்ஷணலக்ஷிதஸ்ய ஏகதைவஸ்ய மேற்சொன்ன இத்தகைய லக்ஷணங்களால் குறிப்பிடப்படும் அந்த ஒரே முழுமுதற் கடவுளும் 

லோகப்ரதானஸ்ய லோகனஹேதுபி: வித்யாஸ்ஸ்தானை: பிரதிபாத்யமானஸ்ய அனைத்து உலகங்களும் தோன்றுவதற்குக் காரணமாகவும், ஞானத்தினால் அறியப்படுபவரும்,

ஜகன்னாதஸ்ய ஜகதாம் நாத: ஸ்வாமி மாயாஷபல: பரமாத்மா நிர்லேபஸ்ச தஸ்ய அனைத்துலகின் ஸ்வாமியும், மாயைகள் அற்றவரும்,

பூபதே மஹிபால பூவுலகின் அரசனே

விஶ்ணோ: வ்யாபனஷீலஸ்ய எங்கும் நிறைந்துள்ளவருமான, பகவான் ஸ்ரீ விஶ்ணுவின் 

நாமஸஹஸ்ரம் நாம்னாம் ஸஹஸ்ரம் ஆயிரம் திருநாமங்களை 

பாபபயாபஹம் அஶுபகர்மக்ருதம் பாபம் ஸம்ஸாரலக்ஷணபயம் சாபஹந்தீதி, நமது தீவினையால் உருவான பாபங்களைப் போக்குவதும், சம்ஸார பயத்தைப் போக்குவதுமான

த்வம் மே மத்த: ஶ்ருணு என்னிடமிருந்துக் கேட்பாயாக ஏகாக்ராமணா பூத்வாவதாரயேத்யர்த்த: ஒருமித்த சிந்தையுடன் அதை நீ க்ரஹித்துக் கொள்வாயாக

ஏகஸ்யைவ ஸமஸ்தஸ்ய ப்ரஹ்ணோ த்விஜஸத்தம |  

நாம்னாம் பஹுத்வம் லோகானாமுபகாரகரம் ஶ்ருணு ||–ஸ்ரீ விஶ்ணு தர்மத்தில் கூறப்பட்டுள்ளது:

இருபிறப்புடையோரில் சிறந்தவனே (அந்தணனே)!! எங்கும் நிறைந்துள்ள அந்த ஒரே பரப்ரஹ்மத்தின் பல திருநாமங்கள் உலகிற்கு (உலக மக்களுக்கு) நன்மை தருவனவாகும். அவற்றை கேட்பாயாக!!

நிமித்தஶக்தயோ நாம்னாம் பேதின்யஸ்ததுதீரனாத் |

விபின்னான்யேவ சாத்யந்தே ஃபலானி த்விஜஸத்தம ||-ஸ்ரீ விஶ்ணு தர்மத்தில் கூறப்பட்டுள்ளது:

இருபிறப்புடையோரில் சிறந்தவனே (அந்தணனே)!! இந்த திருநாமங்களை வெவ்வேறாக உச்சரித்துத் த்யானிப்பதர்க்கு அவற்றின் (வெவ்வேறான) நிமித்த சக்திகளே காரணமாகும். எனவே, ஒவ்வொரு நாமத்திற்கும் அதன் நிமித்த சக்தியை பொறுத்தும், த்யானிப்பவரின் தன்மையை பொறுத்தும் வெவ்வேறான பலன்கள் கிடைக்கின்றன.

யச்சக்தி நாம யத்தஸ்ய தத்தஸ்மின்னேவ வஸ்துனி |

சாதகம் புருஶவயாக்ர சௌம்யே க்ரூரேஶு வஸ்துஶு ||

ஸ்ரீ விஶ்ணு தர்மத்தில் கூறப்பட்டுள்ளது:

ஹே மனிதர்களில் புலி போன்றவனே!!! ஒவ்வொரு திருநாமத்திற்கும் உள்ள சக்தியானது, (த்யானிப்பவரின்) மன நிலையை பொறுத்து மென்மையான அல்லது கடினமான உருக்கொள்கிறது.

இதி விஶ்ணுதர்மவசனாத்யத்யபி பரஸ்ய ப்ரஹ்மண: ஶஶ்டிகுணக்ரியாஜாதிரூடீனாம் ஶப்தப்ரவ்ருத்திஹேதுபூதானாம் நிமித்தஶக்தினாம் ஸ அஸம்பவ:

இந்த விஶ்ணுதர்மோத்தர புராணத்தின் வாக்கியத்தின் படி, (நிர்குண, நிர்விஷேஷன) பரப்ரஹ்மத்தை உறவு, குணம், செயல், ஜாதி மற்றும் குறிப்பு சொற்கள் (போன்ற நாமங்களால்) மூலம் விவரிக்க இயலாது.

ததாபி ஸகுணே ப்ரஹ்மணி ஸவிகாரே ச ஸர்வாத்மகத்வாத்தேஶாம் ஶப்தப்ரவ்ருத்திஹேதூநாம் ஸம்பவாத் ஸர்வே ஶப்தா: பரஸ்மின் பும்ஸி வர்தந்தே ||

ஆயினும் பரப்ரஹ்மம் அனைத்துமாய் இருப்பதனால் சகுண ப்ரஹ்மத்தை இத்தகைய நாமங்களால் விவரிக்க இயலும். அனைத்தும் ப்ரஹ்மமேயாதலால், அனைத்தும் நாமங்களும் அந்த ஒப்பற்ற பரம்பொருளையே குறிக்கும்.

தத்ர அவற்றுள் எந்தெந்த திருநாமங்களை கூறுகிறார் என்பதை பீஶ்மாசார்யார் அடுத்த ஸ்லோகத்தில் விளக்குகிறார்.

யானி நாமானி கௌணானி விக்யாதானி மஹாத்மன: |

ரிஶிபி: பரிகீதானி தானி வக்ஷ்யாமி பூதயே || 13 ||

யானி, நாமானி, கௌணானி, விக்யாதானி, மஹாத்மன: |

ரிஶிபி:, பரிகீதானி, தானி, வக்ஷ்யாமி, பூதயே ||

(அந்த பரப்ரஹ்மத்தின் திருநாமங்களுள்) அவரது குணங்களினின்று தோன்றியதும், (அந்த குணங்களை வர்ணிக்கும் திருநாமங்களுள்) மிகவும் புகழ் பெற்றதும், (அவ்வாறு குணங்களை வர்ணித்தும், பிரசித்தி பெற்றதுமான திருநாமங்களுள்) மந்திர சித்தி பெற்ற முனிவர்களாலும் மற்றும் பகவானின் அவதாரங்களை வர்ணிக்கும் புராணக்கதைகளில் பாடபெற்றதும், நான்கு வித புருஷார்த்தங்களையும் அளிக்கவல்லதான திருநாமங்களை, (அந்த புருஷார்த்தங்களை) அடைவிக்கும் பொருட்டு உனக்கு நான் உபதேசிக்கிறேன்.

யானி நாமானி கௌனானி குண ஸம்பந்தீனி குணயோகாத் ப்ரவ்ருத்தானி தேஶு ச யானி (அந்த பர ப்ரஹ்மத்தின்) குணங்களினின்று தோன்றியதும்

விக்யாதானி ப்ரஸித்தானி (அந்த குணங்களினின்று தோன்றிய திருநாமங்களில்) மிகவும் புகழ் பெற்றதும்,

ரிஶிபி: மந்த்ரைஸ்தத்தர்ஶிபிஶ்ஸ்ச (அவ்வாறு குணங்களை வர்ணித்தும், பிரசித்தி பெற்றதுமான திருநாமங்களுள்) மந்திர சித்தி பெற்ற முனிவர்களால்

பரிகீதானி பரித: ஸமந்தத: பரமேஶ்வராக்யானேஶு தத்ர தத்ர கீதானி மஹாம்ஸ்சாஸாவாத்மேதி பகவானின் அவதாரங்களை வர்ணிக்கும் புராணக்கதைகளில் பாடபெற்றதும் மஹாத்மா தஸ்யாசிந்த்யப்ரபாவஸ்ய அந்த மஹாத்மாவின் நினைத்தற்கரிய பெருமைகளை

தானி வக்ஷ்யாமி பூதயே புருஶார்த்தசதுஷ்ட்யஸித்யை பூதயே புருஶார்த்த சதுஷ்ட்யார்தினாமிதி நான்கு வித புருஷார்த்தங்களையும் அளிக்கவல்லதான திருநாமங்களை, (அந்த புருஷார்த்தங்களை) அடைவிக்கும் பொருட்டு உனக்கு நான் உபதேசிக்கிறேன்.

மஹாத்மா

யச்சாப்னோதி யதாதத்தே யச்சாத்தி விஶயாநிஹ |

யச்சாஸ்தி சந்ததோ பாவஸ்தஸ்மாதாத்மேதி கீர்த்யதே || (லிங்க புராணம் 1.70.96)

ஸ்ரீ லிங்க புராணத்தில் கூறப்பட்டுள்ளது:-அந்த புருஶன் ஸுஷுப்தி தசையில் ப்ரஹ்மத்தை உணர்கிறான், ஸ்வப்ன தசையில் இந்த்ரியங்கள் இல்லாமலே விஷய சுகத்தை அனுபவிக்கிறான் மற்றும் ஜாக்ரத தசையில் (இந்த்ரியங்களோடு) விஷயங்களை அனுபவிக்கிறான், இவ்வாறு எப்பொழுதும் அவன் நிகழ் காலத்திலேயே இருப்பதால் அந்த புருஶனை ஆத்மா என்று அழைக்கிறார்கள்.

இதி வசனாதயமேவ மஹாநாத்மா இந்த லிங்க புராண வாக்யத்தின் மூலம் அந்த பரப்ரஹ்மமே மஹாத்மா என்று அறியப்படுகிறார்.

ரிஶிர் நாம்னாம் ஸஹஸ்ரஸ்ய வேத வ்யாஸோ மஹாமுனி: |
சந்தோனுஶ்டுப்  ததா தேவோ பகவான் தேவகி ஸுத: ||
இந்த ஸஹஸ்ரநாமத்தை நமக்கு அளித்தவர் மஹா முனிவரான (தபஸ்வியான) வேத வ்யாஸர். இதை (ஒரு ஸ்லோகத்திற்கு எட்டு பதங்களைக் கொண்ட) அனுஶ்டுப் சந்தத்தில் அமைத்துள்ளார். இந்த ஸ்தோத்ரத்திற்கு உரிய தெய்வம் தேவகி ஸுதனான பகவான் க்ருஶ்ண பரமாத்மா ஆவார்.
விஶ்ணு ஸஹஸ்ரநாமமாக இருப்பினும், இதை நேரடியாக கேட்டு, ஆமோதித்தவர் பகவான் ஸ்ரீக்ருஶ்ணன் ஆவார்.

அம்ருதாம்ஸூத்பவோ பீஜம் ஶக்திர் தேவகி நந்தன: |
த்ரிஸாமா ஹ்ருதயம் தஸ்ய ஶாந்த்யர்த்தே வினியுஜ்யதே || 
இந்த ஸ்லோகம் ந்யாஸத்தை விளக்குவதாக அமைந்துள்ளது. ஸஹஸ்ரநாமத்திலுள்ள சில திருநாமங்களை பீஜ ஆகியவற்றை குறிப்பதாக இந்த ஸ்லோகம் உரைக்கிறது. ந்யாஸம் மற்றும் இந்த ஸ்லோகங்களுக்கு பெரியவர்களிடம் அர்த்தத்தை கேட்டு தெரிந்து கொள்வோமாக.

விஷ்ணும் ஜிஷ்ணும் மஹா விஷ்ணும் பிரப விஷ்ணும் மஹேஸ்வரம்
அநேக ரூப தைத்யாந்தம் நமாமி புருஷோத்தமம் —

எங்கும் நிறைந்துள்ளவரும், அனைவரையும் வெல்பவரும், மஹேஸ்வரனும், பற்பல வடிவெடுத்து (அல்லது பற்பல வடிவம் கொண்ட) அஸுரர்களை அழிப்பவரும், புருஷோத்தமனுமான பகவான் மஹாவிஷ்ணுவை நான் வணங்குகிறேன்.

விஶ்ணும் – எங்கும் நிறைந்திருப்பவரே- பொதுவாக விஷ்ணு என்றால் எங்கும் நிறைந்துள்ளவர் அல்லது எங்கும் வியாபித்துள்ளவர் என்று பொருள்.

ஜிஶ்ணும் – அனைவரையும் வெல்பவரே. பகவான் அன்பு மற்றும் அழகினால் அடியவர்களையும், பராக்ரமத்தால் அசுரர்களையும் வெல்கிறார்

மஹாவிஶ்ணும் – மகாவிஷ்ணுவே!!

ப்ரபவிஶ்ணும் – அனைவரையும் அடக்கி ஆள்பவரே. (ப்ரபவிஷ்ணு என்றால் அனைவரின் மேலும் ஆதிக்கம் செலுத்துவது. பகவான் ப்ரஹ்மா முதலானோரையும் அடக்கி ஆள்கிறார்)

மஹேஶ்வரம் – ஒப்புயர்வற்ற இறைவனே. ஸஹஸ்ரநாமத்தில் ‘பூதமஹேஸ்வர:’ என்ற திருநாமத்தில், இந்த பதத்திற்கு  ‘மஹான்’ (ஒப்புயர்வற்ற, சிறந்த) ‘ஈஸ்வரன்’ (இறைவன் அல்லது ஆள்பவர்) என்று விளக்கம் அளித்துள்ளார்.

அனேக ரூப தைத்யாந்தம் – பற்பல வடிவெடுத்து (அவதரித்து) அசுரர்களை அழிப்பவரே. பகவான் வராஹ, நரசிம்மர் போன்ற பல்வேறு வடிவெடுத்து அசுரர்களை அழிக்கிறார். அல்லது, இதை வேறுவிதமாகவும் பொருள் கொள்ளலாம் – வண்டிக்குள் இருந்த அசுரன் (சகடாசுரன்), காற்று வடிவில் இருந்த அசுரன் (த்ருணாவர்த்தன்), காக்கை வடிவ அசுரன் (காகாசுரன்), பாம்பு வடிவெடுத்த அசுரன் (அகாசுரன்), கழுதை / நரி வடிவில் வந்த தேனுகாசுரன், கொக்கு வடிவில் வந்த பகாசுரன் என்று பல்வேறு வடிவெடுத்து வந்தாலும் அசுரர்களை பகவான் அழிக்கிறார்

நமாமி – உம்மை வணங்குகிறேன்

புவனேஶ்வரம் – இந்த பிரபஞ்சத்தின் தலைவரே!

எங்கும் நிறைந்திருப்பவரே, அனைவரையும் வெல்பவரே, அனைவரையும் அடக்கி ஆள்பவரே, ஒப்புயர்வற்ற இறைவனே, பற்பல வடிவெடுத்து (அவதரித்து) அசுரர்களை அழிப்பவரே, இந்த பிரபஞ்சத்தின் தலைவரே, மகாவிஷ்ணுவே!! உம்மை வணங்குகிறேன்.

————

அஸ்ய  ஸ்ரீ விஷ்ணோர் திவ்ய ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர மஹா மந்த்ரஸ்ய
ஸ்ரீ வேத வ்யாஸோ பகவான் ரிஷி அனுஷ்டுப் சந்த

ஸ்ரீ மஹா விஷ்ணு பரமாத்மா ஸ்ரீ மன் நாராயணோ தேவதா

அம்ருதம் ஸூத்பவோ பாநுரிதி பீஜம்
தேவகீ நந்தனஸ் ஸ்ரஷ்டேதி சக்தி
உத்பவ ஷோபணோ தேவ இதி பரமோ மந்த்ர
சங்க ப்ருந் நந்தகீ சக்ரீதி கீலகம்
சார்ங்க தந்வா கதா தர இத்யஸ்த்ரம்
ரதாங்க பாணி ரஷோப்ய இதி நேத்ரம்
த்ரி ஸாமா ஸாமக ஸாமீதி கவசம்
ஆனந்தம் பர ப்ரஹ்மேதி யோநி
ருது ஸூ தர்சநஸ் கால இதி திக் பந்த
ஸ்ரீ விஸ்வரூப இதி த்யானம்
ஸ்ரீ மஹா விஷ்ணு கைங்கர்ய ரூபே ஸ்ரீ சஹஸ்ர நாம ஜபே விநியோக –

————————

த்யானம்

ஷீரோ தந்வத் பிரதேச சுசி மணி விலஸத் ஸைகதே மௌக்தி நாம்
மாலா க்லுப்தாஸ நஸ்த ஸ்படிக மணி நிபைர் மௌக்திகைர் மண்டிதாங்க–

சுப்ரை ரதப்ரை ருபரி விரசிதைர் முக்த பீயூஷ வர்ஷை
ஆனந்தீ நஸ் புநீயாதரி நளின கதா சங்க பாணிர் முகுந்த–

1-ஷீரோ தந்வத் பிரதேச —முகுந்த-

பரிசுத்தமான ரத்னங்களாலே பிரகாசிக்கிற மணல் குன்றுகளை யுடைய திருப்பாற் கடலில்
முத்து மாலைகளால் அலங்கரிக்கப் பட்ட திவ்ய ஆஸனத்தில் எழுந்து அருளி இருப்பவரும்
ஸ்படிக மணி போல் விளங்குகிற முத்து மாலைகளால் அலங்கரிக்கப் பட்ட திரு மேனியை யுடையவரும்
மேலே ஸஞ்சரிக்கிற வெண்மையான அநேக மேகங்களால் வர்ஷிக்கப் பட்ட –பீயூஷ வர்ஷை-அம்ருத தாரைகளாலே ஸந்தோஷிப்பவரும்
சக்ரம் பத்மம் கதை சங்கம் ஆகிய இவைகளைத் திருக் கரங்களில் யுடையவரும்
பக்தர்களுக்கு முகுந்த-போக மோக்ஷங்களை அளிப்பவருமான
ஸ்ரீ மன் நாராயணன் நம்மைப் பரிசுத்தம் ஆக்க வேண்டும்

க்ஷீரோ தன்வத் பிரதேஷே – திருப்பாற்கடலில்-பாற்கடலின் கரையில் அமர்ந்திருக்கிறது

சுசிமணி விலாசத் சைகதேர் – அழகிய மணிகளின் ஒளியால் (நிறைந்த)-வைரங்களைப் போல ஒளிரும் மணல் பரப்பு-ஸைகதே – மணற்பரப்பில் (பாற்கடலின் கரையில்)

மௌக்திகானாம் மாலா க்லுப்தாஸ னஸ்தா – முத்துக்களால் அலங்கரிக்கப்பட்ட-முத்து மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட ஆசனத்தில்

ஸ்படிகமணிநிபைர் மௌக்திகைர் மண்டிடாங்க – ஒளிரும் வெள்ளைப் படிகங்கள்-ஸ்படிகத்திற்கு ஒப்பான முத்துக்களால் அலங்கரிக்கப்பட்ட-அவயவங்களை உடையவரும்

ஶுப்ர: – தூய (வெண்மையான)

அப்ர: – மேகங்கள்

அதப்ரை: – பொழியும்

முக்தபீயூஶ வர்ஶை: – அமுத மழையை

சுப்ரை ராப்ரை ராதாப்ராய் – பல வெள்ளை மேகங்களிலிருந்து

ரூபாரிவிராச்சிதைர் – ஒரு வளைவில் மேலே வட்டமிடுகிறது

முக்தா பீயூஷ வர்ஷைஹி – அமிர்தத்தை ஊற்றுகிறது

ஆனந்தீ – மகிழ்பவரும்

ந: புநீயாத் – என்னை புனிதமாக்கட்டும்

ஆனந்தீ நஹ் புனீயாத் – ஆனந்தமாக சுத்திகரிப்பு

தாரி நளினா கடா – வட்டு, தாமரை மற்றும் சூலாயுதம் ஆகியவற்றைப் பிடித்திருக்கும் கைகளால்

சங்கு பாணீர் முகுந்தா – முக்தியை அளிப்பவரான முகுந்த பகவான் வைத்திருக்கும் சங்கு

இந்த ஸ்லோகத்தில் அடிப்படைக் கருவானது ‘முகுந்த நஹ் புனீயாத்‘ அதாவது ‘முகுந்த பகவான் நம்மைத் தூய்மைப்படுத்தட்டும்’ என்பதாகும். முகுந்தா என்பது மகாவிஷ்ணுவின் பெயர், அதாவது ‘முக்தி அல்லது விடுதலை அளிப்பவர்’. முகுந்தாவை பாடமாக அடையாளம் கண்டுகொண்டதன் மூலம், மற்ற அனைத்து சொற்றொடர்களும் முகுந்தாவின் வெவ்வேறு அம்சங்களை விவரிக்கும் பெயரடைகள் மட்டுமே என்பதைக் காணலாம்.

முதல் விளக்கம் அவர் ‘ஆசனஸ்தா’ அல்லது ஒரு பீடத்தில் அமர்ந்திருக்கிறார்.

அவர் எங்கே அமர்ந்திருக்கிறார்? எந்த பீடத்தில்?

‘க்ஷீரோ தன்வத் பிரதேஷே’ – பாற்கடலின் கரையில்;

‘மௌக்திகானம் மாலா க்லுப்தா’ – இது முத்து மாலைகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது;

‘சுசிமணி விலாசத் சைகதே’ – தூய வைரங்கள் பதிக்கப்பட்ட பளபளக்கும் மணல் பரப்பில்; மற்ற பெருங்கடல்களில் மணலில் சிலிக்கா படிகங்கள் மட்டுமே உள்ளன ஆனால் பால் பெருங்கடலின் கரையில் மணலில் திகைப்பூட்டும் வைரங்கள் உள்ளன.

ஸ்ரீ மஹாவிஷ்ணு, பாற்கடலின் வைரம் பதிக்கப்பட்ட மணற்பரப்பில் முத்து மாலையுடன் கூடிய ஆசனத்தில் அமர்ந்திருக்கிறார்.

அவரைப் பற்றி இன்னும் என்ன சொல்ல முடியும்?

 அவர் ‘மௌக்திகைர் மண்டித அங்கஹ்’. அவரது உடல் முத்துக்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

வெள்ளைப் படிகங்களைப் போல ஒளிரும் ‘ஸ்பத்திக மணி நிபைஹி’.

அவர் ஆனந்தி, ஆனந்தம் மற்றும் மகிழ்ச்சி.

வேறு எதனுடன்?

முக்தா பீயூஷ வர்ஷைஹி – அமிர்தத்தை ஊற்றுகிறது.

சுப்ரைரப்ரை ராதாபைஹி – பலதரப்பட்ட தூய வெள்ளை மேகங்களிலிருந்து.

உபரி விரச்சிதைஹி – அலங்கரித்த வளைவைப் போல கரையின் மேல் சுற்றிக்கொண்டு, சிறப்பாக வடிவமைக்கப்பட்ட விதானம் போல கரையில் மிதக்கும் தூய வெண்மையான மேகங்களில் இருந்து பொழியும் அமிர்த மழையை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்.

அவர் என்ன வைத்திருக்கிறார்?

தாரி நளினா கடா ஷங்க பாணிஹி – அவர் தனது கையில் தனது சக்ரா அல்லது டிஸ்கஸ், நளினா அல்லது தாமரை, கடா அல்லது மெஸ் மற்றும் சங்கு அல்லது சங்கு ஆகியவற்றைப் பிடித்துள்ளார். இவையே அவனுடைய தனித் தன்மைகள்!

“முகுந்தா, பாற்கடலின் கரையில் கம்பீரமாக அமர்ந்திருப்பவர், மேற்பரப்பு மணலை வைரங்களைப் போல மின்னும், பளபளப்பான முத்து மாலையை அலங்கரிக்கிறார்; தூய வெண்ணிற மேகங்கள் மேலே மிதந்து கொண்டு, அமிர்த மழை பொழியும் மகிழ்ச்சியிலும் பரவசத்திலும் இருக்கும் அவர். வட்டு (சுதர்சன சக்கரம்), கதாயுதம் (கௌமோதகி கதா), சங்கு (பாஞ்சஜன்ய சங்கமம்) மற்றும் தாமரை ஆகியவற்றைக் கைகளில் ஏந்தியிருக்கும் முகுந்தன், நம்மைத் தூய்மைப்படுத்தி விடுவிக்கட்டும்”.

வைரம் போன்று மின்னும் மணல் துகள்களைக் கொண்ட பாற்கடலின் கரைகளிலே, உயர்ந்த முத்து மலைகளால் அலங்கரிக்கப்பெற்றவரும், அவருக்கு மேலே சூழ்ந்துள்ள வெண்மேகங்கள் அமுத மழையைப் பொழியவும், ஆனந்தமே வடிவானவரும், தனது திருக்கரங்களில் கதை, சங்கு மற்றும் சக்கரங்களை ஏந்தியவரும், அனைவருக்கும் முக்தியை அளிப்பதால் முகுந்தன் என்று பெயருடையவருமான பகவான் (ஸ்ரீமந்நாராயணன்) நம்மை புனிதப்படுத்தட்டும்.

———

2-பூ பாதவ் யஸ்ய நாபிர் வியத ஸூரா நிலஸ் சந்த்ர ஸூர்யவ் ச நேத்ரே
கர்ணா வாஸாஸ் சிரோ த்யவ்ர் முகமபி தஹநோ யஸ்ய வாஸ்தேயமப்தி

அந்தஸ்தம் யஸ்ய விஸ்வம் ஸூர நரகககோ போகி கந்தர்வ தைத்யை
சித்ரம் ரம் ரம்யதே தம் த்ரி புவந வபுஷம் விஷ்ணும் ஈசம் நமாமி-

பூ பாதவ் யஸ்ய —விஷ்ணும் ஈஸம் நமாமி

யாருக்கு பூமி திருவடிகளோ
ஆகாசம் நாபியோ
வாயு பிராணனோ
சந்த்ர ஸூர்யர்கள் கண்களோ
திசைகள் காதுகளோ
ஸ்வர்க்கம் திருமுடியோ
அக்னி திரு முக மண்டலமோ
கடல் நாபியின் கீழ் பாகமோ –வாஸோயம் என்பது பதம் -இந்தக்கடல் யாருக்கு ஆடையோ
தேவர்கள் மனிதர்கள் பக்ஷிகள் பசுக்கள் பாம்புகள் கந்தர்வர்கள் அஸூரர்கள் இவர்களால்
பலதரப்பட்ட இந்த உலகு எவருடைய உதரத்தில் களிப்புடன் இருக்கின்றதோ
மூன்று புவனங்களையும் திருமேனியாக யுடையவரும்
ஸர்வ ரக்ஷகரான ஸ்ரீ விஷ்ணுவை நமஸ்கரிக்கிறேன் –

எங்கும் நிறை பரம்பொருளாம், அனைவர்க்கும் ஈசனாம் பகவான் விஷ்ணுவை மூவுலகின் வடிவிலே தியானிக்கின்றேன். (இந்த விராட் வடிவில்) பூமியே அவரது திருவடிகளாக, சுவர்க்கம் அல்லது ஆகாயமே அவரது நாபியாக (தொப்புள் பகுதி), திங்களும், கதிரவனும் அவரது இரு திருக்கண்களாக, திசையே அவரது காதுகளாக, சூரியமண்டலமே அவரது தலையாக, அக்னி அவர் வாயாக (அல்லது முகம் என்றும் கூறுவர்), கடல்கள் அவரது வயிறாக (உள்ளது). அவருக்குள் தேவர்கள் (ஸுரர்), மனிதர்கள் (நர), கக (பாம்புகள்), கோ (பசுக்கள், கால்நடைகள்), கந்தர்வர்கள் மற்றும் அசுரர்கள் ஆகிய அனைவரும் சஞ்சரிக்கின்றனர்.

விராட் ஸ்வரூப வர்ணனை -தியானிக்க விஸ்வ ரூபம் -தெரியாத 14 லோகங்களைக் கொண்டு தியானிக்க முடியாதே
கோல மேனி -திவ்ய மங்கள விக்ரஹம் தியானிக்க -பரிக்ஷித்துக்கு ஸூகர்-

பவ்வ நீருடை யாடையாகச் சுற்றிப் பாரகலம் திருவடியாப் பவனம் மெய்யா
செவ்வி மாதிரமெட்டும்  தோளா வண்டம் திரு முடியா நின்றான் பால் செல்ல கிற்பீர்
கவ்வை மா களிருந்தி விண்ணி ஏற்றிக் கழல்  மன்னர் மணி முடி மேல் காகமேறத்
தெய்வ வாள் வலங்கொண்ட சோழன்  சேர்ந்த திரு நறையூர் மணி மாடம், சேர்மின்களே –6-6-3-திருநறையூர் எம்பெருமானை மங்களாசாசனம்

திருமுடியா நின்றான் (6. 6: 3) (பவ்வம் – கடல்: உடை ஆடை – அரையில் உடுத்தும் பீதாம்பரம்; பார் அகலம்-பூமிப்பரப்பு; பவனம்-வாயு மெய்-திருமேனி, செவ்வி-அழகிய, மாதிரம்-திசை; தோள்-புயம்; அண்டம்-அண்ட பித்தி; திருமுடி-திருஅபிஷேகம்! என்று அவன் ஜகத்ஸ்வரூபியாய் இருக்கும் தன்மையை அழகிய உருவகத்தால் அநுபவித்து மகிழ்கின்றார். எங்கும் பரவி (விபு) நிற்கும் எம்பெருமானுக்குக் கடல் நீர் அரையில் உடுக்கும் பீதாம்பரமாகின்றது; பூமிப் பரப் பெல்லாம் திருவடியாகின்றது; வாயுவெல்லாம் திருமேனி யாகின்றது; எட்டுத் திசைகளும் திருத்தோள்களாகின் றன; அண்டகடாகம் திருமுடியாகின்றது. ஆக இவ் வகைகளினால் ஜகத்ரூபியாயிருக்கின்ற எம்பெருமான்

பூஹ் பதௌ யஸ்ய’ – அவருடைய பாதங்கள் பூமி கிரகம்–பூமியே அவரது திருவடிகள். இந்த பூமியில் வாழும் நாம் அனைவரும் ஏற்கனவே அவரது திருவடிகளில் தான் இருக்கிறோம். அதை உணர்ந்து தவறிழைக்காது வாழ்ந்தாலே போதும். அதுவே தவம். வேறொன்றும் வேண்டாம்.

‘நாபிர் வியட்’ஆசு அனிலா’ – அவரது தொப்புள் வானம்-‘ – அவரது சுவாசக் கருவி வாயு (காற்று)-எவருடைய (அவரது) தொப்புள் பகுதியே தேவர்கள் சஞ்சரிக்கும் ஆகாயம்

‘சந்திர சூர்யௌ ச நேத்ரே’ – அவருடைய கண்கள் சூரியனும் சந்திரனும்-பகலில் நம்மை காத்து, இரவில் நம்மை மகிழ்விக்கும் சந்திர, சூரியர்களே அவரது இரு கண்கள். இதன் தத்துவம் என்னவென்றால், பகவான் ஒரே நேரத்தில் சூரியன் போன்ற விழியால் நமது பாபங்களை எரிக்கிறார், சந்திரன் போன்ற விழியால் நமது துன்பங்களை போக்கி மகிழ்விக்கிறார் (கதிர்மதியம் போல் முகத்தான் – திருப்பாவை 1). மேலும், சந்திரன், சூரியன் என்ற இரு விழிகளின் மூலம் இரவு, பகல் ஆகிய இரு வேளைகளிலும் நாம் செய்யும் கர்மங்களை அவர் பார்த்துக்கொண்டே இருக்கிறார்.

‘கர்ணௌ ஆவாஷா’ – அவரது காதுகள் திசைகள்–அவரது செவிகளே திசைகள். அவருக்கு எல்லாம் கேட்கும். அவருக்குத் தெரியாத இரகசியம் இந்த பிரபஞ்சத்திலேயே கிடையாது

‘ஷிரோ த்யௌ’ – அவருடைய தலை தேவலோகம்-த்யௌ எனப்படும் சூரிய மண்டலமே அவரது தலை (சிலர் த்யௌ என்பதற்கு ஆகாயம் என்றும் கூறுவர். இரண்டும் ஏற்புடைய அர்த்தங்களே)

‘முகம் தகனா’ – அவரது வாய் நெருப்பு (அக்னி)-அக்னி அவரது வாயில் இருக்கிறார். தனது கிருஷ்ணாவதாரத்தில் ஒருமுறை பகவான் அக்னியை வாயினால் பருகி தமது இடையர் குல நண்பர்களை காத்தான். அக்னி அவனது வாய்க்குள் அடக்கம் என்பதை ஒரு திருவிளையாடலாகவே காட்டி அருளினான்.

‘வாஸ்தேயம் அப்திஹ்’ – அவரது வயிறு பெருங்கடல்–கடல்களே அவரது வயிறு

‘அந்தஸ்தம் யஸ்ய விஸ்வம்’ – முழுப் பிரபஞ்சமும் அவனில் உள்ளது.-அவருக்குள்ளே இந்த உலகமே அடங்கியுள்ளது

சூர-நர-கக-கந்தர்வ-தைத்யைஹி சித்ரம் ரம்ரம்யதே – பிரபஞ்சம், இது தேவர்கள், மனிதர்கள், பறவைகள், விலங்குகள், பாம்புகள், கந்தர்வர்கள் மற்றும் பேய்கள் போன்ற பலவிதமான வாழ்க்கை வடிவங்களின் மகிழ்ச்சியான விளையாட்டு மைதானமாகும்.-கக – பாம்புகள் (இங்கு பாம்புகள் என்பது ஊர்வனவற்றை குறிப்பது)கோ – மாடுகள் (இது அனைத்து மிருகங்களையும் குறிக்கும்-கந்தர்வ – கந்தர்வர்கள் (இது மனிதர்களை தவிர்த்த, தேவர்களுக்கும்-மனிதர்களுக்கும் இடையிலுள்ள மற்ற இனத்தவர்களை குறிக்கும்)

சித்ரம் – பல்வேறு (இவ்வாறு பல்வேறு வகையான ஜீவன்களும்)

ரம்ரம்யதேதம் – ரமிக்கின்றன (இன்புறுகின்றன)

‘ சித்ரம் ரம்ரம்யதே‘ என்பது ‘ரம்’ என்று மூன்று முறை திரும்பத் திரும்பக் கூறப்பட்ட ஒரு அழகான கட்டுமானமாகும்.

இறுதியாக ‘திரிபுவன வபுஷம்’ என்றால் ‘அவர் மூன்று உலகங்களின் உருவம்’.

இவை அனைத்தையும் ஒன்றாகக் கொண்டு, எங்களிடம் முழுமையான சட்டகம் உள்ளது:

த்ரிபுவன வபுஶம் – இத்தகைய மூவுலக வடிவினரான

விஶ்ணுமீஶம் – அனைவருக்கும் ஈஸ்வரனான பகவான் விஷ்ணுவை

நமாமி – அவரது இந்த விராட் ரூபத்தில் வணங்குகிறேன்.

பகவானை உள்ளபடி தியானிக்க வேண்டுமென்றால் இவ்வாறான விராட் ரூபத்தில் தான் தியானிக்க வேண்டும். ஆனால், இது அனைவராலும் இயலாத காரியம். எனவே தான் அந்த பரம்பொருள் “நமது உள்ளத்திற்கும்” விளங்குமாறு ஒரு எளிய வடிவை ஏற்கிறார்.

இது நற்றிணையில் கடவுள் வாழ்த்து. இந்த செய்யுளின் பொருளுக்கும், மேற்கண்ட தியான சுலோகத்திற்கும் உள்ள ஒற்றுமையை பாருங்கள்.

‘மா நிலம் சேவடி ஆக, தூ நீர் வளை நரல் பௌவம் உடுக்கை ஆக,

விசும்பு மெய் ஆக, திசை கை ஆக, பசுங் கதிர் மதியமொடு சுடர் கண் ஆக,

இயன்ற எல்லாம் பயின்று, அகத்து அடக்கிய வேத முதல்வன்’ – என்ப-

‘தீது அற விளங்கிய திகிரியோனே.’

நிலமே சேவடி, ஆகாயமே உடல், மதியும், கதிரவனுமே திருக்கண்கள் … அவனே வேத முதல்வன் என்று தெளிவுறக் கூறுகிறார் “பாரதம் பாடிய பெருந்தேவனார்”.

 மூவுலகையும் தன் உடலாகக் கொண்ட மகாவிஷ்ணுவை வணங்குகிறேன் . பூமி அவருடைய பாதங்கள், வானம் அவருடைய தொப்புள். காற்று அவனுடைய மூச்சு, சூரியனும் சந்திரனும் அவனுடைய கண்கள். திசைகள் அவரது காதுகள் மற்றும் சொர்க்கம் அவரது தலை. நெருப்பு அவனுடைய முகம் மற்றும் பெருங்கடல் அவனுடைய வயிறு. பலவகையான தேவர்கள், மனிதர்கள், பறவைகள், கால்நடைகள், பாம்புகள், கந்தர்வர்கள் மற்றும் தைத்தியர்கள் (அசுரர்கள்) என பலவகையான தேவர்கள் கொண்ட பிரபஞ்சம் அவரில் அமைந்துள்ளது – அனைவரும் மகிழ்ச்சியான வாழ்க்கையை அனுபவிக்கிறார்கள்.

விஸ்வரூபம் அல்லது பிரபஞ்ச வடிவம் சாதாரண மனிதர்களுக்குக் காட்சிப்படுத்துவதும் சிந்திப்பதும் மிகவும் கடினம். கிருஷ்ணரின் பிரபஞ்ச வடிவத்தை அனுபவிக்க அர்ஜுனனுக்கு தெய்வீக தரிசனம் (திவ்ய சஷுஸ்) வழங்கப்பட்டது. அர்ஜுனன் பார்த்தான்:

‘தத்ரைகஸ்தம் ஜகத்கৃத்ஸ்னம் ப்ரவிபக்தம் அநேகதா
அபஷ்யத் தேவதேவஸ்ய ஷரீரே பாண்டவஸ் ததா’

அர்ஜுனன், முழுப் பிரபஞ்சமும் அதன் பன்மடங்கு பிளவுகளுடன் ஒரே இடத்தில் ஒடுங்கியதைக் கண்டான்.

—————–

3-சாந்தாகாரம் புஜக சயனம் பத்ம நாபம் ஸூரேசம்
விஸ்வா தாரம் ககந ஸத்ருசம் மேக வர்ணம் ஸூப அங்கம்

லஷ்மீ காந்தம் கமல நயனம் யோகி ஹ்ருத் த்யான கம்யம்
வந்தே விஷ்ணும் பவ பய ஹரம் ஸர்வ லோக ஏக நாதம்

சாந்தாகாரம் —–ஸர்வ லோக ஏக நாதம்
சாந்தமான ஆகாரத்தை யுடையவரும்
ஆதி சேஷன் மீது பள்ளி கொண்டவரும்
தாமரை பூத்த திரு நாபியை யுடையவரும்
தேவர்களுக்குத் தலைவரும்
விச்வா தாரம் -விஸ்வத்துக்கு ஆதாரமாக -விஸ்வமே வடிவாக யுடையவரும்
ஆகாசத்தைப் போல் எங்கும் நிரம்பி இருப்பவரும்
நீல மேகம் போன்ற வடிவம் யுடையவரும்
உத்தம லக்ஷணங்கள் பொருந்திய அங்கங்கள் யுடையவரும்
லஷ்மீ பதியும்
செந்தாமரை மலர் போன்ற திருக் கண்களை யுடையவரும்
யோகிபிர் த்யான கம்யம் -யோகிகளால் தியானத்தால் அடையப்படுபவரும் என்றும்
யோகிகளுடைய ஹ்ருதயத்தில் தியானத்தினால் அறியப்படுபவரும்
பிறவியின் பயத்தைப் போக்குபவரும்
ஸகல லோகங்களுக்கும் தலைவருமான
விஷ்ணுவை நமஸ்கரிக்கிறேன்

சாந்தகாரம் – அமைதியான வடிவானவரும்-அவர் சாந்தத்தின் உருவம் அல்லது உருவகம் – பகவான் விஷ்ணு சாந்தம் மட்டும் அல்ல, அவர் தனது பக்தர்களுக்கு இந்த உயர்ந்த குணத்தை அருளுகிறார். அவருடைய பக்தர்களுக்கு எல்லாம் உண்டு, அவருடைய சாந்தத்தின் பேரின்பத்தை எப்போதும் அனுபவிக்கிறார்கள்.

புஜகஷயனம் – புஜகா என்றால் பாம்பு என்றும், ஷயனம் என்றால் படுக்கை என்றும் பொருள். அவர் படுக்கையாக ஒரு பாம்பு உள்ளது-பாம்பணையில் பள்ளி கொண்டுள்ளவரும்–. ‘புஜைஹி கச்சதி‘ – தன் கரங்களில் நகர்வதால் பாம்பு புஜகா என்று அழைக்கப்படுகிறது.

பத்மநாபம் – ‘பத்மம் நாபௌ யஸ்ய சஹா‘ அதாவது தொப்புளில் தாமரையை உடையவர்.-கொப்பூழில் எழுகமல பூவழகர் (உந்தித் தாமரை படைத்தவரும்) விஷ்ணுவின் தொப்புளுடன் இணைக்கப்பட்ட தாமரையின் மீது படைப்பாளர் பிரம்மா அமர்ந்திருக்கிறார். முக்கிய சஹஸ்ரநாமத்தில் நாம பத்மநாபமும் மூன்று முறை தோன்றுகிறார்.

சுரேசம் – -சுரர்களுக்கு (தேவர்களுக்கு) ஈஸ்வரன், அதாவது தேவாதி தேவன்–‘சூரானாம் ஈஸ்வர‘ என்றால் தேவர்களின் இறைவன்.

விஸ்வாகரம் – அவர் விஸ்வா அல்லது பிரபஞ்சத்தின் உருவகம். -சென்ற சுலோகத்தில் அனுபவித்தார் போல இந்த பிரபஞ்சமே தனக்கு திருவுடலாக உடையவர்–சில பதிப்புகள் இதை ‘விஷ்வாதாரம்‘ என்று கொடுக்கின்றன, அதாவது பிரபஞ்சத்தின் அடித்தளம் அல்லது மூல காரணம்.-இந்த பிரபஞ்சத்திற்கு ஆதாரமாய் இருப்பவர்.

ககன சத்ருஷம் – ககன என்பது ஆகாயம் மற்றும் சத்ருஷம் என்றால் ஒப்பிடத்தக்கது அல்லது அவர் வானத்தைப் போன்றவர். ஆகாயம் போன்றவர் (எங்கும் பரந்துள்ளவர்)-அவர் நீல நிறத்தில் இருக்கிறார். அவர் எங்கும் இருக்கிறார். அவர் வல்லமையுள்ளவர், அவர் பெரியவர். அனைத்தும் அவனில் வாழ்கின்றன.

மேகவர்ணம் – கார்மேக வண்ணத்தர் (கண்ணன் என்னும் கருந்தெய்வம்…)-இது ககன சத்ருஷத்தில் இருந்து மேலும் எடுக்கப்பட்டது. மேகம் என்பது மேகம், வர்ணம் என்பது நிறம். பகவான் மேகம் போன்ற கருநீல நிறத்தில் இருக்கிறார், குறிப்பாக மழை பொழியும் மேகம்.

சுப அங்கம் – அழகிய அவயவங்களை உடையவர் (என்னரங்கத் தின்னமுதர் குழலழகர் வாயழகர் கண்ணழகர் கொப்பூழில் எழுகமலப் பூவழகர்)சுப என்றால் அழகான மற்றும் மங்களகரமானது, அங்க என்றால் உடல் உறுப்புகள். விஷ்ணு பகவான் வசீகரிக்கும் வடிவம் கொண்டவர், அது பக்தர்களின் மீது தனது அருளைப் பொழிகிறது.

லக்ஷ்மிகாந்தம் – திருமகள் கேள்வன்!=இந்த நாமம் என்றால் அவர் லட்சுமி தேவியின் மனைவி என்று அர்த்தம். பாற்கடல் அமிர்தத்திற்காக சலசலக்கும் போது, ​​லட்சுமி தேவி கையில் மாலையுடன் வெளிப்பட்டபோது, ​​​​அவள் விஷ்ணுவின் மீது கண்களை வைத்து, மற்ற தேவர்களைப் புறக்கணிக்காமல் உடனடியாக மாலையை அவருக்கு வழங்கினாள். அன்றிலிருந்து விஷ்ணு லட்சுமிகாந்தன் ஆனார். லட்சுமி விஷ்ணுவின் மார்பில் வசிக்கும் ‘விஷ்ணுவக்ஷஸ்தலாலயா‘ என்று அழைக்கப்படுகிறார்.

கமல நயனம் – தாமரை இதழை ஒத்த திருக்கண்களை உடையவர்-கமல என்றால் தாமரை, நயனம் என்றால் கண். அவர் அழகான தாமரை போன்ற கண்களை உடையவர்.

யோகிஹ்ரித்யானகாம்யம் – யோகி என்பது பகவானின் மீது முழு கவனம் செலுத்துபவர், ஹ்ரித் என்பது இதயம். தியானம் என்பது தியானம், கம்யா என்றால் அடையக்கூடியது. எனவே முழு அர்த்தம் என்னவென்றால், பகவான் விஷ்ணுவை யோகியின் இதயத்தில் தியானிப்பதன் மூலம் அடைய முடியும்.-தியானத்தில் திளைக்கும் யோகிகளின் உள்ளத் தாமரையில் வீற்றிருப்பவர்

‘தபஸ்விப்யோதிகோ யோகி ஞானநிப்யோபி மதோதிக:
கர்மிப்யஸ்சாதிகோ யோகி தஸ்மாத் யோகி பார்ஜுன‘- பகவத் கீதையின் 6வது அத்தியாயம் 46வது வசனத்தில் பகவான் கிருஷ்ணர் கூறுகிறார் –

யோகியானவன் கேவல தபஸ்ஸை செய்பவர்களைக் காட்டிலும் சிறப்புற்றவனாக எண்ணப் படுகிறான் –
ஆத்ம ஞானம் தவிர்ந்த மற்ற அறிவுடையவர்களைக் காட்டிலும் சிறப்புற்றவனாக எண்ணப் படுகிறான் –
யோகியானவன் கேவல கர்மங்களைச் செய்பவர்களைக் காட்டிலும் சிறப்புற்றவனாக எண்ணப் படுகிறான் –-எனவே, ஓ அர்ஜுனா, எல்லாச் சூழ்நிலைகளிலும் நீ யோகி யாகு’. ஒரு  யோகி இறைவனை இதயத்தில் தியானிப்பதன் மூலம் அடைய முடியும்.

சில பதிப்புகளில் யோகி ஹிருத் தியான காம்யம் யோகிபிர் தியான காம்யம் என்று எடுத்துக் கொள்ளப்படுகிறது. தியானத்தால் யோகிகளை அடையக் கூடியவர் என்பது இதன் பொருள்.

வந்தே விஷ்ணும் – நான் பகவான் விஷ்ணுவை வணங்குகிறேன்

பவபயஹரம் – பவ என்றால் உலக இருப்பு. பய என்பது பயம். ஹரம் அழிப்பான். மீண்டும் மீண்டும் பிறப்பு இறப்பு என்ற இருத்தலின் பயத்தை இறைவன் அழிக்கிறான். அவர் மீண்டும் மீண்டும் வரும் சம்சார சுழற்சியிலிருந்து விடுதலை அளிக்கிறார்.  அவர் ‘முக்தானாம் பரமா கதிஹி’ என்று அழைக்கப்படுகிறார், இது முக்தி பெற்றவர்களின் இறுதி ரிசார்ட் ஆகும்.

சம்சார அச்சத்தை போக்குபவர்-இந்த சம்சாரத்தில் புல், பூண்டு முதற்கொண்டு தேவராய், அசுரராய், தாவர ஜங்கமமாய், எல்லா பிறப்பும் பிறந்து, நிலையில்லா இன்ப-துன்பங்களில் உழல்பவர்களுக்கு தமது திருவடி நிழல் அளித்து, மீளா இன்பமான முக்தியை நல்குகிறார்.

ஆ ப்ரஹ்ம புவநால் லோகா புநராவர்திநோர்ஜுந.–
மாமுபேத்ய து கௌந்தேய புநர் ஜந்ம ந வித்யதே–-৷৷8.16৷৷

அர்ஜுனா ப்ரஹ்மாண்டத்தினுள் இருக்கும் ப்ரஹ்ம லோகம் வரையில் உள்ள எல்லா உலகங்களும்
அழிவை உடையவை –ஆப்ரஹ்ம-அது உட்பட -அது வரை என்றபடி –

குந்தீ புத்திரனே என்னை அடைந்த பின்போ எனில் மறு பிறப்பு இல்லை

——————-

4– மேகஸ்யாமம் பீத கௌஸேயா வாஸம் ஸ்ரீ வத் சாங்கம் கௌஸ்துப உத்பாஸி தாங்கம்
புண்யோபேதம் புண்டரீகாய தாக்ஷம் விஷ்ணும் வந்தே ஸர்வ லோக ஏக நாதம் —

மேகஸ்யாமம் –ஸர்வ லோக ஏக நாதம்
நீல மேகம் போன்ற கரிய திரு மேனியை யுடையவரும்
பீதாம்பரத்தைத் தரித்தவரும்
ஸ்ரீ வத்ஸம் என்னும் மறுவை அடையாளமாக யுடையவரும்
கௌஸ்துபம் என்னும் மணியினால் பிரகாசிக்கின்ற அங்கத்தை யுடையவரும்
புண்ய புருஷர்களால் சூழப் பட்டவரும்
தாமரை மலர் போன்ற விசாலமான திருக் கண்களை யுடையவரும்
ஸர்வ லோகங்களுக்கும் ஒப்பற்ற தலைவருமான
ஸ்ரீ யபதியை நமஸ்கரிக்கிறேன் –

முந்தைய தியான ஸ்லோகத்தைப் போலவே, இதிலும் அடிப்படைக் கருவானது ‘விஷ்ணும் வந்தே’ அதாவது ‘நான் விஷ்ணுவை வணங்குகிறேன்’. முந்தைய ஸ்லோகத்தின் தொடர்ச்சியாக, நம் மனதில் பகவான் விஷ்ணுவின் தெளிவான உருவத்தை உருவாக்க வேத வியாசர் மேலும் ஒரு ஸ்லோகத்தை நாடினார்.

மேகஷ்யாமம் – -நீருண்ட கார்மேகம் போன்ற மேனி நிறம் கொண்டவரும்–முந்தைய ஸ்லோகத்தில், அவர் ‘மேக வர்ணம்’ என்று வர்ணிக்கப்பட்டார், அவரது நிறம் ஒரு மழை மேகத்தைப் போன்றது. இந்த ஸ்லோகத்தில் இந்த அம்சம் மீண்டும் வலியுறுத்தப்படுகிறது, அதில் அவர் மேகஷ்யாமாம் என்று வர்ணிக்கப்படுகிறார், அதாவது அவர் ஆழமான அடர் நீல நிறத்தில் இருக்கிறார், அது கருப்பு நிறத்திற்கு அருகில்  இருக்கிறார்

பீத கௌஷேயவாசம் – பீத என்றால் மஞ்சள் மற்றும் கௌஷா என்பது பட்டுப் புழுவின் கூட்டு, எனவே கௌஷேயா என்றால் பட்டு, வாசம் என்றால் உடை என்று பொருள். அவர் மஞ்சள் பட்டு உடையில் (வஸ்திரம்) அலங்கரிக்கப்பட்டுள்ளார்.-உருக்கிய பொன்போன்ற மஞ்சள் பட்டாடையை உடுத்தியுள்ளவரும்

ஸ்ரீவத் சாங்கம் – அங்கம் என்பது ஒரு குறி. அவர் லட்சுமி தேவியின் இருப்பைக் குறிக்கும் வகையில் அவரது மார்பின் வலது பக்கத்தில் ஸ்ரீவட்சம் என்ற முக்கிய அடையாளத்தை ஏந்தியுள்ளார். எனவே அவர் ஸ்ரீவத்ஸன் அல்லது ஸ்ரீவத்ஸம் தாங்குபவர் ஸ்ரீவத்ஸவாஸ் என்றும் அழைக்கப்படுகிறார்.

  1. அவரது மார்பின் வலது பக்கத்தில் ஒரு முடி பூட்டு.
  2. அவரது மார்பில் லட்சுமியின் இருக்கை.
  3. . மகரிஷி பிருகுவின் உதையின் பலனாகக் கிடைத்த குறி

கௌஸ்துபோத்பாசிதாங்கம் – கௌஸ்துபம் என்பது ரத்தினம், உத்பாசிதா என்றால் அலங்கரிக்கப்பட்ட மற்றும் அங்க என்பது உடலின் ஒரு பகுதியாகும், இது இந்த நிகழ்வில் மார்பைக் குறிக்கிறது. அவரது மார்பில் அற்புதமான கௌஸ்துப ரத்தினம் அலங்கரிக்கப்பட்டுள்ளது. தேவர்களும் அசுரர்களும் அமிர்தத்தைப் பெறுவதற்காகப் பாற்கடலைக் கலக்கியதால் தோன்றிய பதின்மூன்று பொக்கிஷங்களில் ஐந்தாவது பொக்கிஷம் கௌஸ்துபம். அது இறைவனின் மார்பை அலங்கரித்து அவரது உருவப்படத்தின் ஒரு பகுதியாக இருந்து வருகிறது.

பகவானின் திருமார்பில் அவருக்கென்றே உள்ள இரு அடையாளங்கள், ஸ்ரீவத்ஸம் என்னும் மரு மற்றும் கௌஸ்துபம் என்ற மணி. கௌஸ்துப மணி திருப்பாற்கடலை கடையும் பொழுது அதிலிருந்து தோன்றியதாக புராணங்கள் கூறுகின்றன

புண்யோபேதம் – புண்யா என்பது ஆசீர்வதிக்கப்பட்ட நபர்களைக் குறிக்கிறது. உபேதம் என்றால் சூழப்பட்டுள்ளது. ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் அல்லது நீதியான செயல்களைச் செய்து புண்ணியத்தைப் பெற்றவர்கள் அவரைச் சூழ்ந்துள்ளனர். பல பிறவிகளின் புண்ணியம் அல்லது நற்செயல்கள் உள்ளவர்கள் மட்டுமே அவரை அடைய முடியும் என்பது கருத்து.-புண்ணியமே ஒரு வடிவெடுத்தாற்போல உள்ளவரும் (அல்லது புண்ணியம் செய்தவர்களால் சூழப்பட்டுள்ளவரும்)

புண்டரீகாயாதாக்ஷம் – இது கடந்த ஸ்லோகத்தில் நாம் பார்த்த ‘கமலநயனம்’ என்ற சொல்லின் விரிவாக்கம். புண்டரீக என்றால் தாமரை, ஆயதா என்றால் நீளம் மற்றும் அகலம் மற்றும் அக்ஷ என்றால் கண். புண்டரீகாயடாக்ஷம் என்றால் – தாமரை மலரைப் போல கண்கள் நீளமாகவும் அகலமாகவும் அழகாக இருக்கின்றன.-“தஸ்ய யதா காப்யாசம் புண்டரீகம் ஏவம் அக்ஷிணி.“-தாமரை இதழ் போன்ற திருக்கண்களை உடையவரும்

வந்தே விஷ்ணும் – நான் பகவான் விஷ்ணுவை வணங்குகிறேன்.

சர்வலோகநாதம் – (ஸர்வ லோக ஏக நாதம்) – ஈரேழ் பதினான்கு உலகங்களுக்கும் ஒரே கடவுளான (கிமேகம் தைவதம் லோகே?)நாம் ஏற்கனவே கடந்த ஸ்லோகத்தில் பார்த்தது போல், சர்வ என்றால் அனைத்து; லோக என்றால் உலகம்; ஏகா என்றால் மட்டும் என்றும் நாதா என்றால் தலைவன் அல்லது தலை என்றும் பொருள். அவர் அனைத்து உலகங்களுக்கும் ஒரே தலைவர், அதாவது பிரபஞ்சத்தின் இறைவன்.

நான் மகா விஷ்ணுவை வணங்குகிறேன்:

  • மழை மேகங்களின் ஆழமான கருநீல நிறத்தை உடையவர்;
  • கவர்ச்சிகரமான மஞ்சள் நிற பட்டு உடையில் அலங்கரிக்கப்பட்டவர்;
  • மார்பில் அற்புதமான ஸ்ரீ வத்ச முத்திரையால் அலங்கரிக்கப்பட்டவர்;
  • தன் உடம்பில் கௌஸ்துப ரத்தினத்தின் பிரகாசத்தை ஒளிரச் செய்பவன்;
  • ஆசீர்வதிக்கப்பட்ட மக்களால் தொடர்ந்து கலந்துகொள்பவர்;
  • யாருடைய கண்கள் தாமரை மலரைப் போல நீளமாகவும் அகலமாகவும் அழகாகவும் இருக்கும்
  • பிரபஞ்சத்தின் மறுக்கமுடியாத இறைவன் யார்.

நீருண்ட கார்மேக வண்ணரும், மஞ்சள் பட்டாடை உடுத்தியவரும், ஸ்ரீவத்ஸம் என்னும் மருவை மார்பில் தாங்கியுள்ளவரும், மார்பில் கௌஸ்துப மணியை அணிந்துள்ளவரும், புண்ணியம் செய்தவர்களால் சூழப்பட்டுள்ளவரும், தாமரைக் கண்ணனும், அனைத்துலகின் ஒரே ஒப்பற்ற நாதனுமான பகவான் விஷ்ணுவை வணங்குகின்றேன்.

—————–

நம: ஸமஸ்த பூதானாம் ஆதி பூதாய பூப்ருதே |
அநேக ரூப ரூபாய விஶ்ணவே ப்ரபவிஶ்ணவே ||

நம: – வணங்குகிறேன்

ஸமஸ்த பூதானாம் ஆதிபூதாய – அனைத்து பருப்பொருட்களுக்கும் ஆதியானவராய் இருப்பவரும். இந்த ப்ரபஞ்சமாய் நமக்கு தெரியும் அனைத்துமே, மூல பிரகிருதி என்னும் சூக்ஷ்ம சக்தியிலிருந்து தோன்றியவை ஆகும். மூல பிரகிருதி பகவானிடமிருந்து தோன்றுகிறது. எனவே, நாம் காணும் அனைத்திற்கும் ஆதியானவர் பகவானே

பூப்ருதே – இந்த பிரபஞ்சத்தை தாங்குபவரும் (பகவான் ஆதிசேட வடிவில் தனது ஆயிரம் பணாமுடிகளால் இந்த ஈரேழு பதினான்கு உலகங்களையும் தாங்குகிறார். வராஹ அவதாரத்தில் பூமியை தாங்கினார்)

அநேகரூப ரூபாய – பல்வேறு வடிவங்களை ஏற்பவரும் (பகவான் நல்லோரை காக்கவும், தீயோரை தண்டிக்கவும், அறத்தை நிலைநாட்டவும் பகவான் பல்வேறு வடிவங்களில் தோன்றுகிறார்)

விஶ்ணவே – எங்கும் நிறை பரப்ரஹ்மமான விஷ்ணுவை

ப்ரப விஶ்ணவே – அனைவருக்கும் பிரபுவானவருமான (நான்முகன் முதலானோருக்கும் பிரபு பகவான்)

அனைத்து ஜீவராசிகளுக்கும் ஆதியாய் (அவை உருவாவதற்குக் காரணமாய்), இந்தப் ப்ரபஞ்சத்தைத் தாங்குபவராய் (பூ என்ற சொல் பொதுவாக பூமியைக் குறித்தாலும், இங்கு பிரபஞ்சம் என்று பொருள் கொள்வதே தகும்) பற்பல வடிவங்களைத் தாங்குபவராய், எங்கும் நிறைந்தவரான பகவான் விஶ்ணுவை நான் வணங்குகிறேன்.

———–

ஸ சங்க சக்ரம் ஸ கிரீட குண்டலம் ஸ பீத வஸ்த்ரம் ஸராஸீ ருஹ ஈஷணம்
ஸ ஹார வக்ஷஸ்தல ஸோபி கௌஸ்துபம் நமாமி விஷ்ணும் சிரஸா சதுர்ப்புஜம்

திவ்ய ஆயுதங்கள்
திவ்ய ஆபரணங்கள்
மஞ்சள் பட்டாடை சாத்தி
ஸ்ரீ கௌஸ்துபம் சாத்தி
விஷ்ணுவை வணங்குவோம்

இந்த தியான ஸ்லோகத்தின் சாராம்சம்  ‘விஷ்ணும் நமாமி’ – ‘நான் விஷ்ணுவுக்கு வணக்கம் செலுத்துகிறேன்’.

சிரசா நமாமி – நான் அவருக்கு தலை குனிந்து வணங்குகிறேன். உடலின் அனைத்து உறுப்புகளிலும் தலை மிகவும் முக்கியமானது. இது கண், காது, மூக்கு மற்றும் வாய் ஆகிய ஐந்து புலன்களில் நான்கைக் கொண்டுள்ளது. தோலாகிய ஐந்தாம் அறிவு உறுப்பு கூட தலையில் உள்ளது. தலையில் இரண்டு முக்கியமான குண்டலினி ஆற்றல் மையங்களான ஆஜ்னா சக்கரம் மற்றும் சஹஸ்ரார சக்கரம் உள்ளன. எனவே, விஷ்ணுவுக்கு தலை வணங்குவதன் மூலம், பக்தன் தனது முழு சுயத்தையும் அவரிடம் திறம்படச் சமர்ப்பிக்கிறான்

சஷங்கச்சக்கரம் – ஒரு கையில் சங்கு (சங்கம்) மற்றும் மற்றொரு கையில் ஒரு வட்டு (சக்கரம்) ஏந்தி.-பாஞ்சசன்யம் என்னும் சங்கத்தையும், சுதர்சனம் என்னும் சக்கரத்தையும் இரு கைகளில் ஏந்தி

சகிரீடகுண்டலம் – -அழகிய கிரீடம் மற்றும் குண்டலங்களை தரித்துக்கொண்டு–தலையில் அழகான கிரீடத்தை ஏந்தி, காதுகளில் தொங்கும் பளபளப்பான மோதிரங்களை அணிந்திருப்பவர்.

சபீத வஸ்திரம் – அழகிய மஞ்சள் பட்டாடை உடுத்திக்கொண்டு–அழகான மஞ்சள் நிற பட்டு உடையை அணிந்தவர். தியான ஸ்லோகம் 4 இல் நாம் பார்த்த பீத கௌஷேயவாசம் போன்றதே இதுவாகும். அவர் தொடர்ந்து பீதாம்பரதாரி என்று குறிப்பிடப்படுகிறார். மிக உயர்ந்த தரமான துணியால் செய்யப்பட்ட மிகச்சிறந்த உடைகளில் தன்னை அலங்கரித்துக் கொள்வதில் அவருக்கு விருப்பம் உள்ளது.

சரஸீருஹேக்ஷணம் – தாமரை இதழை ஒத்த இரு திருக்கண்களுடன்–சரஸீருஹா என்பது தாமரை, ஏனெனில் இது குளம் அல்லது நீர் குளமாகிய சரஸில் வளர்கிறது. ஈக்ஷணம் என்றால் கண் என்றும், இறைவனின் கண்கள் தாமரை மலரைப் போல அழகானவை என்றும் பொருள்படும்-‘கமலநயனம்‘ மற்றும் ‘புண்டரீகாயதாக்ஷம்‘-

சஹார வக்ஷஸ்தலஷோபிகௌஸ்துபம் – சஹாரா என்றால் மாலை அல்லது கழுத்தணி, வக்ஷஸ்தலம் என்றால் மார்பு, ஷோபி என்றால் ஜொலிக்கும் மற்றும் கௌஸ்துபம் என்பது அற்புதமான ரத்தினம். பளபளக்கும் கௌஸ்துபம் ரத்தினத்தின் சிறப்பை அதிகரிக்கும் மாலையை அவர் அணிந்துள்ளார்-திருமார்பில் அழகிய ஆரங்கள் (தங்க மாலைகள்) மற்றும் கௌஸ்துபம் என்னும் மணியை தரித்துக்கொண்டு-

சதுர்புஜம் – சதுர் என்பது நான்கு மற்றும் புஜம் என்பது விஷ்ணுவின் நான்கு கைகளை விவரிக்கிறது

“கேயூரவான் மகரகுண்டலவான் கிரீடி ஹாரீ
ஹிரண்மய வபுஹ் த்ரித சங்க சக்ரஹ்
சங்க சக்ர கதா பாணே துவாரகா நீலய அச்யுதா
கோவிந்த புண்டரீகாக்ஷ ரக்ஷ மாம் சரணாகதம்” திரௌபதி தனது துயரத்தின் தருணத்தை எதிர் கொள்ளும் போது கிருஷ்ணரை அழைக்கச் சொன்ன பிரார்த்தனையும் இதுதான்.

நான் என் தலையைக் குனிந்து என் விஷ்ணுவை வணங்குகிறேன், ஒருவருக்கு:

– ஒரு கையில் சங்கு (பாஞ்சஜன்ய சங்க) மற்றும் மற்றொரு கையில் வட்டு (சுதர்சன சக்ரா) ஏந்தியவர்.

– பளபளப்பான கிரீடம் மற்றும் அழகான காது வளையங்களை அணிந்தவர்

– மஞ்சள் பட்டு வஸ்திரத்தில் (உடை) அலங்கரிக்கப்பட்டவர்

– அழகான தாமரை போன்ற கண்களை உடையவர்

– பளபளப்பான கௌஸ்துப ரத்தினம் மற்றும் மார்பில் நகையை அணிந்தவர்

– நான்கு கைகளை உடையவர்.

கையில் நன்மையை பயக்கவல்ல சங்கும், சக்கரமும் ஏந்தியுள்ளவரும், அழகிய கிரீடம் மற்றும் குண்டலத்தை தரித்துள்ளவரும், மஞ்சள் பட்டாடை அணிந்துள்ளவரும், தாமரைக் கண்ணனும், அழகிய மாலைகளாலும், தனது திருமார்பில் கௌஸ்துபம் எனும் மணியாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளவரும், நான்கு திருக் கைகளை உடையவருமான பகவான் விஷ்ணுவை எனது தலையால் வணங்குகிறேன்.

——–

சாயாயாம் பாரி ஜாதஸ்ய ஹேம ஸிம்ஹாஸ நோபரி
ஆஸீநமம் புதஸ் யாமம் ஆயாதாஷாம் அலங்க்ருதம்

சந்த்ராநநம் சதுர் பாஹும் ஸ்ரீ வத் ஸாங்கித வக்ஷஸம்
ருக்மிணீ ஸத்ய பாமாப்யம் ஸஹிதம் கிருஷ்ணம் ஆஸ்ரயே –

தங்க ஸிம்ஹாஸனம்
பாரிஜாத கொடிக்கு கீழே
மேக ஸ்யாமளன்
ஆயாதாஷா -நீண்ட அப் பெரிய வாய திருக் கண்கள்
நான்கு திருத்தோள்கள்
ஸ்ரீ வத்ஸவம் திரு மார்பில்
ருக்மிணி சத்ய பாமை பிராட்டிமார் ஸஹிதம்

கிருஷ்ணம் ஆஸ்ரயே’ அதாவது “நான் கிருஷ்ணரிடம் தஞ்சம் அடைகிறேன்”

சாயாயாம் பாரிஜாதஸ்ய – பாரிஜாத மரத்தின் நிழலில்

பாரிஜாத மரத்திற்கு தனி முக்கியத்துவம் உண்டு. இது பனி வெள்ளை இதழ்கள் மற்றும் ஒரு சிவப்பு தண்டு கொண்ட அழகான மணம் பூக்கள் தாங்கி ஒரு சிறிய மரம். இந்த மலர் இரவில் மட்டுமே பூக்கும் மற்றும் ஸூரிய உதயத்திற்கு முன் மரத்தில் இருந்து விழும்.

ஹேம சிம்ஹாஸனோபரி – தூய தங்கத்தால் செய்யப்பட்ட சிம்மாசனத்தில்

ஆசீனம் – கம்பீரமாக வீற்றிருப்பவரும்

அம்புதாஷ்யாமம் – நீருண்ட கார்மேகம் போன்ற மேனி வண்ணம் கொண்டவரும்-அம்புதா என்றால் தண்ணீர் கொடுப்பவர், மேகம் என்று பொருள். எனவே அம்புதாஷ்யாமம் என்றால் மழை பொழியும் மேகத்தின் கருநீல நிறத்தை உடையவர் என்று பொருள். ‘மேக வர்ணம் மற்றும் ‘மேக ஸ்யாமம்‘ போன்ற சொற்றொடர்களை மற்ற ஸ்லோகங்களில் ஏற்கனவே பார்த்திருக்கிறோம். அம்புதாஷ்யாமம் இதே ஒளிக்கு இணையான மற்றொரு கவிதை.

ஆயதாக்ஷம் – ஆயத என்றால் நீளமானது மற்றும் அகலமானது. அக்ஷ என்றால் கண். எனவே ஆயதாக்ஷா என்பது நீண்ட மற்றும் அகலமான அழகான கண்களை உடையவர். ‘கமல நயனம்’ மற்றும் ‘புண்டரீகாக்ஷம்’ போன்ற சொற்றொடர்கள் இதே போன்ற உணர்வை வெளிப்படுத்துவதை நாம் ஏற்கனவே பார்த்திருக்கிறோம்-.நீண்ட திருக்கண்களை உடையவரும் (கரிய வாகிப் புடைபரந்து மிளிர்ந்து செவ்வரி யோடி நீண்டவப்பெரியவாய கண்கள்)

ஆலம்கிருதம் – (அழகிய திருவாபரணங்கள் மற்றும் வனமாலை ஆகியவற்றால்) நன்கு அலங்கரிக்கப்பெற்றவரும்-பல்வேறு அலங்காரங்கள் அல்லது அலங்காரங்களை சுமந்தவர் என்று பொருள். விஷ்ணு பகவான் அலங்காரப்ரியா, ஒவ்வொரு வகை ஆபரணங்கள் மற்றும் அலங்காரங்கள், பட்டு ஆடைகள், நகைகள், மாலைகள், வாசனை திரவியங்கள் மற்றும் உடல் அடையாளங்கள் – இவை அனைத்தும் அலங்காரத்தின் ஒரு பகுதியாக இருப்பதைக் கண்டோம். பகவான் விஷ்ணு இவை அனைத்தையும் அனுபவிக்கிறார், எனவே அவர் ஆலம்கிருதராக இருக்கிறார்.

சந்திராநனம் – சந்திரனைப் போன்ற முகம் உடையவர். அவரது முகத்தை சந்திரனுடன் ஒப்பிடும் போது, ​​சந்திரனின் அழகு மட்டுமல்ல, சந்திரனில் இருந்து வெளிப்படும் குளிர்ச்சியான கதிர்களும் குறிப்பிடப்படுகின்றன. பக்தர் அவருடைய முகத்தைப் பார்க்கும்போது, ​​பக்தர்களின் கலக்கம் மறைந்து, அவர்கள் முகத்தில் ஒரு அமைதி தோன்றி, அவர்கள் மீண்டும் அமைதி பெறுகிறார்கள்.–முழுமதியை போன்ற குளிர்ந்த திருமுகத்தை உடையவரும் (நீருண்ட மேகத்தை மேனிநிறத்திற்கு ஒப்புமை கூறிவிட்டு படியால் இங்கு சந்திரனை அதன் குளிர்ந்த தன்மைக்கு ஒப்புமை கூறுவதே தகும்)

சதுர்பாஹும் – அவருக்கு நான்கு கைகள் உள்ளன–(சங்கு, சக்கரம், கதை மற்றும் தாமரையை ஏந்திய) நான்கு திருக்கரங்களை உடையவரும்-. நமாமி விஷ்ணும் சிரசா சதுர்புஜம்’ என்பதை முந்தைய தியான ஸ்லோகத்தில் ஏற்கனவே பார்த்தோம் . முக்கிய சஹஸ்ரநாமத்தில், ‘சதுர்மூர்த்தி சதுர்பாஹஸ் சதுர்வ்யூஹஸ் சதுர் கதிஹி‘ என்ற வரியையும் காண்போம்.

ஶ்ரீவத்ஸாங்கித வக்ஷஸம் – அவருடைய மார்பில் ‘ஸ்ரீவத்ஸா’ என்ற அழகிய முத்திரை உள்ளது. விஷ்ணுவின் மார்பில் ஸ்ரீவத்ச முத்திரையின் தோற்றம் பற்றி ஏற்கனவே விரிவாகப் பார்த்தோம் (பிருகு முனிவர் கதை).ஸ்ரீவத்ஸம் என்னும் மருவுடன் கூடிய திருமார்புடையவரும்

ருக்மிணி சத்யபாமாப்யாம் ஸஹிதம் – இவருடன் அவரது இரு துணைவிகளான ருக்மிணி மற்றும் சத்யபாமா ஆகியோர் உள்ளனர்.-திருமகளாம் ருக்மிணியும், பூதேவியான ஸத்யபாமையுடனும் சேர்ந்து திருக்காட்சி தரும்

ஸ்ரீகிருஷ்ணம் ஆஶ்ரயே – நான் கிருஷ்ணரிடம் தஞ்சம் அடைகிறேன் -! இது விஷ்ணு ஸஹஸ்ரநாமமாய் இருப்பினும், இதை நேரடியாக கேட்டு மகிழ்ந்தவர் கண்ணன்–எனவே, இந்த சஹஸ்ர நாமத்திலுள்ள திருநாமங்களை அனுபவிப்பதற்கு முன்னர் கண்ணனின் கழலினைத் தொழுது, அவனையே சரணடைவோம்.

  • பாரிஜாத மரத்தின் நிழலில் தங்க சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பவர்
  • மழை பொழியும் மேகம் போன்ற கருநீல நிறத்தில் இருப்பவர்
  • நீண்ட அகலமான அழகிய கண்களை உடையவர்
  • ஒவ்வொரு விதமான அலங்காரங்களால் மூடப்பட்டவர்
  • சந்திரனைப் போல் அழகும் குளிர்ச்சியும் உடையவர் முகம்
  • நான்கு கரங்களை உடையவர்
  • யாருடைய மார்பில் ஸ்ரீவட்ச முத்திரை உள்ளது மற்றும்
  • அவனது அரசிகளான ருக்மிணி மற்றும் சத்யபாமா ஆகியோருடன் வந்தவர்
    பாரிஜாத மரத்தினடியில் உள்ளதொரு பொன்மயமான ஸிம்மாஸனத்தில் வீற்றுள்ளவரும், நீருண்ட கார்மேகத்தை ஒத்த திருமேனி வண்ணம் கொண்டவரும், நீண்ட, பெரிய திருக்கண்களை உடையவரும், திருமேனி எங்கும் தக்க ஆபரணங்களால் அலங்கரிக்கப்பெற்றவரும், வெண்மதியைப் போன்ற குளிர்ந்த திருமுகம் உடையவரும், நான்கு திருக்கைகளை உடையவரும், ஸ்ரீவத்ஸம் எனும் மறுவால் அலங்கரிக்கப் பெற்ற திருமார்பை உடையவரும், ருக்மிணீ பிராட்டியாரும், ஸத்யபாமையும் உடனிருக்கும் பகவான் ஸ்ரீகிருஷ்ணரை நான் சரணடைகிறேன்.
    ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாமமாய் இருப்பினும், இது ஸ்ரீகிருஶ்ணாவதாரத்தில் தான் நமக்கு  கிடைத்தது. எனவே, ஸஹஸ்ரநாமம் தொடங்கும் முன்பாக பகவான் ஸ்ரீகிருஶ்ணரின் திருவடி தொழுவது உசிதம்——————————————————————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பராசர பட்டர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பீஷ்மர் திருவடிகளிலே சரணம்
ஸ்ரீ வியாச பகவான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ சீதாப்பிராட்டியுடைய சரம ஸ்லோகம்=

October 23, 2023

பாபாநாம் வா ஸூபாநாம் வா வதார்ஹாணாம் பிலவங்கம
கார்யம் கருண கார்யேண ந கச்சின் நாபராத்யதி –116-44-

பாபாநாம் வா ஸூபாநாம் வா -பாபிகள்  விஷயத்திலும் புண்ணியவான்கள் விஷயத்திலும்
வதார்ஹாணாம் -கொல்லத் தக்கவர் விஷயத்திலும்
பிலவங்கம-வானரனே
கார்யம் கருண கார்யேண-நல்லோனாலே கருணை யானது செய்யத் தக்கது
ந கச்சின் நாபராத்யதி-எவனும்  குற்றம் செய்ய வில்லை எனபது இல்லையே –

அவதாரிகை –
ராவணனும் பட்டுப் பெருமாளும் விஜயிகளானார்என்று பெரிய பிரியத்தைப் பிராட்டிக்குத் திருவடி விண்ணப்பம் செய்ய
பிராட்டியும் ப்ரீதி பிரகர்ஷத்தாலே விம்மல் பொருமலாய் ஸ்தப்தையாய் இருக்க
இவனும் விக்கலுக்கு வெம்மாற்றம் போலே
கிந்நு சிந்தயசே தேவி கிம் தவம் மாம் நாபி பாஷசே -116-16- என்று
பெரிய பிரியத்தை விண்ணப்பம் செய்த எனக்கு ஒரு மறு மாற்றம் சொல்லாதே தேவர் எழுந்து அருளி இருக்கிற இருப்பு என் தான் -என்று திருவடி விண்ணப்பம் செய்ய
பிராட்டியும் உனக்கு சத்ருசமாகத் தரலாவது ஓன்று இல்லாமை காண்நான் பேசாது இருந்தது என்ன
இவனும் இவ்வளவில் நம் அபேஷிதத்தை விண்ணப்பம் செய்து கொள்வோம் என்று பார்த்து
தேவரை சுற்று முற்றும் நலிந்த ராஷசிகள் ஆகிறார்-க்ரூரைகளாய் தத் அநு குண பாவைகளாய் ஆயிற்று –
ராவணனுக்கு முன்னே கொல்ல வேண்டுவது இப்பெண் பிள்ளைகளை யாயிற்று –
அவனும் இவர்களோபாதி கேடன் அல்லன் –
இவர்கள் இப்போது பாம்பு படம் அடங்கினால் போலே இருக்கிறார்கள் அத்தனை ஆயிற்று
இவர்களை பஹூ பிரகாரமாக ஹிம்சிக்கப் பாரா நின்றேன் –
முஷ்டிபி பாணிபிஸ் சைவ -116-33- என்று கையாலே குத்தியும் காலாலே துகைத்தும் நகங்களாலே சேதித்தும் பற்களாலே கடித்தும் துடித்தும்
சின்னம் பின்னம் சரைர் தக்தம் -94-22-என்று பெருமாள் திருச் சரங்கள் செய்தது எல்லாம் நானே பண்ணப் பாரா நின்றேன்
முன்பு வந்த போது இடம் இல்லாமல் விட்டுப் போனேன் இத்தனை
இப்போது எனக்கு எல்லா பிரத்யுபகாரங்களும் பண்ணி அருளிற்று ஆகலாம் -இத்தனையும் திரு உள்ளமாக வேணும் -என்ன -பாபா நாம் வா -என்று அருளிச் செய்கிறாள் –

பாபாநாம் வா ஸூபாநாம் வா –
இவர்கள் நீ நினைத்து இருக்கிறபடியே பாபைகள் ஆக வுமாம் –
நான் நினைத்து இருக்கிறபடியே ஸூபைகள் ஆக வுமாம் –
அது தானே யன்றே உத்தேச்யம் –
தோஷோ யத்யபி தஸ்ய ஸ்யாத்-என்றால் போலே அழுக்கு உடையவன் அன்றோ குளிக்க ப்ராப்தி யுடையான்
அவர்கள் பாபைகள் ஆகில் அன்றோ நாம் முகம் கொடுக்க வேண்டுவது
சுபைகள் ஆகில் உன் வால் வேணுமோ –அவர்கள் புண்யங்களே கை கொடுக்குமே –
கை முதல் இல்லார்தார்க்கு அன்றோ கை முதலாக வேண்டுவது -என்றாள்-

வதார்ஹாணாம்
தண்ட்யனை தண்டிக்கவும் அல்லாதாரைத் தவிரவும் சொல்லுகிற தர்ம சாஸ்திரம் தேவரீரைத் தோற்றி கிழுத்துப்  பொகடக் கடவதோ -என்கிறாள் –

ப்லவங்கம்–
பின்னையும் அவன் புத்தி திரிய விடாமையாலே –ஹரி ஹரி -என்கிறாள் –
அன்றிக்கே –ப்லவங்கம் -என்று
நச்சினத்தை நச்சும் ஜாதி யானமை கண்டோம் -என்கிறாள் –
வசிஷ்ட ப்ரப்ருதிகள் மந்த்ரிக்கும் படியான இஷ்வாகு வம்சத்தில் பிறந்தாய் அல்லை –
யோகிகளாய் ஜனக குலத்திலே பிறந்தாய் அல்லை –
காட்டிலே பணை யோடு பணை தாவித் திரிகிற ஜாதியிலே இறே பிறந்தது –
அங்கன் ஒத்தாருக்கு சரணாகதியோட்டையது தெரியாது -என்கிறாள் –
வா நரோத்தம -16-18-என்றவள் தானே இறே ப்லவங்கம் -என்றாள்
ராஜாக்க்களுமாய் மூலையடியெ நடக்க யுரியருமாய் இருக்கிற பெருமாளும் எங்கள் முன் இத்தனை கோபித்து அறியார்
நீ வாநர ஜாதியாய் இருந்து வைத்து இங்கனே கோபிக்கக் கடவையோ –

கார்யம் கருண கார்யேண –
இவர்கள் புண்ய பாபம் கிடக்க இப்போது ஓடுகிற தய நீய தசையைப் பாராய் –
இவர்களுக்கு ஒரு ரஷகன் அல்லையே
இப்போது இவ்வளவிலே நாம் இரங்க வேணும் காண் –

ஆர்யேண-நல்லோனாலே –
இவை எல்லாம் இப்போது நான்  கற்பிக்க வேண்டும்படி யாவதே உனக்கு –
ஆர்யேண-
ஐந்த்ரவ்யாகரண  பண்டிதன் என்கிறது பொய்யோ –
அவையும் எல்லாம் கற்றுக் கேட்டு இருக்கச் செய்தேயும் இப்போது ராம கோஷ்டியில் பரிசயமான படி யாகாதே
அந்த கோஷ்டியில் பரிசயம் பழக்கம் இறே நீ இங்கனே சொல்ல வல்லை யாயிற்று
நான் பிரிந்த பின்பு அக் கோஷ்டி இங்கனே நீர்த்தது ஆகாதே -நீர் விடப் பட்ட பால் போலே -என்று கருத்து –

ந கச்சின் நாபராத்யதி -குற்றம் செய்யாதவன் ஒருத்தனும் இல்லை –
சம்சாரத்தில் குற்றம் இல்லாதார் யார் –
திரை நீக்கிக் கடலாடப் போமோ
நல குதிரையாக பாவித்து இருக்கிற பெருமாள் தான் குற்றவாளர் அல்லரோ
நான் தான் குற்றப்பட்டவள் அல்லேனோ-
பெருமாள் குற்றவாளர் ஆனபடி என் என்னில்  -தாம் காடேறப் போனார் -அவர் பின்னே மடலூருவாரைப் போலே இளைய பெருமாளும் போந்தார்
தம்மோடு ஏகாந்த போகம் பண்ணக் கடவதாக இலையகலப் படுத்திக் கொண்டு நானும் போந்தேன்-
என்னைப் பிரிந்து பத்து மாசம் இருந்தார்
நான் வராவிட்டால் தன்னதோரம்பு இயங்க மாட்டாமை இல்லை இறே
இவ்வழி இத்தனை நாள் பிரிந்து இருக்க வல்லரான போதுபெருமாள் பக்கலிலே யல்லவே குற்றம்
பார தந்த்ர்யத்துக்கு அநுகுணமாக பேசாது இராதே அது தன்னைச் சொன்ன என் பக்கலில் அன்றோ குற்றம்
இந் நாயகன் சொன்ன கார்யம் செய்த அடியாரை தண்டிக்கப் பார்த்த அன்று பெருமாள் அருளிச் செய்த கார்யம் செய்யப் போந்த உன்னை முற்பட தண்டித்து கொண்டு அன்றோ
ராவணன் சொன்ன கார்யம் செய்த இவர்களை தண்டிப்பது
ஆகையால் நீ அல்லையோ குற்றவாளன்
எல்லாப் படியாலும் பெருமாள் ஒரு விஷயத்தை முனிந்த அன்று ஆற விடுகைக்கு நான் உண்டு
நானும் அவர் வழி யோடு போக வேண்டி இருந்த அன்று எனக்கு நீ யுண்டு -என்று இருந்தேன்
நீயும் இங்கனே யானால் அபராதம் செய்வார்க்குப் புகலாவார் உண்டோ -என்கிறாள் –

அஜ்ஞாத நிக்ரஹ -கோபம் என்பதையே அறியாதவள் –நம் போல்வாருக்கு தஞ்சம் ஆவது பெருமாள் உடைய சரம ஸ்லோகம் அன்று
பிராட்டி யுடைய இந்த சரம ஸ்லோகமே நமக்கு தஞ்சமாகக் கடவது –


யுத்த  காண்டம்

ஸர்க்கம்-116; ஶ்லோகம்-44

பாபாநாம் வா ஶுபா4நாம் வா வதா4ர்ஹாநாம் ப்லவங்க3ம|

கார்யம் கருணமார்யேண  ந கஶ்சிந் நாபராத்4யதி ||

பொழிப்புரை: வானரனே! பாபிகள் விஷயத்திலும், புண்ணியவான்கள் விஷயத்திலும்,கொல்லத்தக்கவர் விஷயத்திலும் நல்லோனாலே கருணையானது செய்யத்தக்கது. எவனும் குற்றம் செய்யவில்லை என்பது இல்லையே.

இராவணன் அழிந்து, இராமபிரான் போரில் ஜயித்தார் என்னும் இனிய செய்தியை ஸீதா பிராட்டியிடம் அநுமன் விண்ணப்பம் செய்ய, பிராட்டியும் உகப்பின் மிகுதியாலே, விம்மல், பொருமல்கள் ஏற்பட்டு செயலற்றவளாயிருக்க, ‘தேவி! என்ன நினைக்கிறீர்? தேவரீர் எதனால் என்னோடு பேசவில்லை?’ [கிந்நு சிந்தயஸே தே3வி, கிம் த்வம் மாம் நாபி4பா4ஷஸே; யுத்.கா. 116-16 ] என்று வினவினான். தேவியும் பதிலிறுத்தாள் ‘நீ செய்த பேருபகாரத்துக்குத் தக்கபடி தரக்கூடியதொன்றில்லையே என்று நினைத்தே பேசாமலிருந்தேன்’ என்று கூற அநுமனும், ‘தேவரீரைச் சூழ்ந்திருந்து துன்புறுத்திய இந்த அரக்கிகள் ராவணனைக் காட்டிலும் கொடியவர்கள், ராவணனுக்கு முன்னமேயே இவர்களைக் கொன்றிருக்க வேண்டும். ராவணன் இப்பொழுது உயிருடன் இல்லை என்பதனால் அடங்கி இருக்கிறார்கள். இவர்களை என் கையால் துன்புறுத்திக் கொல்வதற்கு தேவரீர் அநுமதி தரவேண்டும்   பகவானிடம் அபசாரம் செய்தவர்களையும், பாகவதாபசாரம் செய்தவர்களையும் தண்டிக்கும் ரீதியிலே தண்டிக்க முயற்சிக்கிறேன். முன்பு வந்தபோது அவகாஶமின்மையாலே விட்டுப்போனேன். இபோது இந்த வரத்தை எனக்குக் கொடுத்தருள வேண்டும்’ என்று பிரார்த்திக்கிறார். இதைக் கேட்ட பிராட்டி பதிலிறுக்கும் வண்ணம் இந்த ஶ்லோகத்தை அருளிச் செய்கிறார்.

பாபிகளானும், பரிஶுத்தர்களானாலும் (பாபாநாம் வா ஶுபா4நாம் வா) நீ நினைக்கிறபடி பாபமே செய்தவர்களாக இருப்பினும் சரி, நான் நினைத்தபடி பரிஶுத்தர்களாக இருப்பினும் சரி, எப்படியிருந்தாலும் கருணை காட்டவேண்டியதே. பரிஶுத்தர்களாகில் கருணை காட்டவேண்டும் என்பதை நீயே அறிவாய். பாபிகள் பக்ஷத்திலும் கருணையே காட்டப்படவேண்டும் என்பதை நான் இப்போது நிரூபித்துக் காட்டுகிறேன். ‘கருணை காட்டுவதற்கு மஹாபாபிகள் கிடைக்கமாட்டார்களா?’ என்று எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள் நல்லோர்கள். ‘குற்றமுளதாகில் மிகவும் நன்று’ [ தோ3ஷோ யத்3யபி தஸ்ய ஸ்யாத்; யுத்.கா.18-3] என்ற இராமபிரானைப் போலே, அழுக்குடையவனைத்தானே குளிப்பாட்ட வேண்டும்.  அதுபோலவே பாபமாகிற அழுக்குடையவர்கள் அகப்பட்டால், கருணையான குளிர்நீராலே அவர்களைக் குளிப்பாட்ட வேண்டியிருக்கும். ஆகையால் ராக்ஷஸிகள் பாபம் செய்திருப்பதால்தான் அவர்களுக்குக் கருணை முகம் காட்டவேண்டும். பாபமற்றவராகில் அவர்கள் தாமாகவே கடைத்தேறிவிடுவார்கள். தங்களைக் கடைத்தேற்றிக் கொள்ளத் தம் கையில் ஒன்றும் இல்லாதவர்களையன்றோ நல்லோர்கள்  கைதூக்கி விடவேண்டும். இதைக்கேட்ட அநுமன், ‘அப்படியென்றால் தர்ம ஶாஸ்திரங்களைத் தூக்கி எறிய வேண்டுமோ?’ என வினவ, அதற்கு பிராட்டி சொன்னாள், ‘கொல்லத்தக்கவரானாலும் (வதா4ர்ஹாணாம்) நீ சொன்னது ஸாமாந்ய ஶாஸ்திரம்’. ஆகையால், கொல்லத்தக்கவனாயினும் ஶரணமடைந்தவனைக் கைவிடுவதில்லை’ [தஸ்மாத3பி வத்3யம் ப்ரபந்நம் ப்ரதிப்ரயச்சந்தி; யஜு.ஸம்.6-5-20] என்கிற விஶேஷ ஶாஸ்திரத்தைக் கிழித்துப் போடவேண்டுமே’. ஸாமாந்ய ஶாஸ்திரத்துக்கும், விஶேஷ ஶாஸ்திரத்துக்கும் விரோதம் வந்தால், ஸாமாந்ய ஶாஸ்திரத்தைத் தள்ளி விஶேஷ ஶாஸ்திரத்தைக் கைக்கொள்ளவேண்டும் என்கிறாள் பிராட்டி. இதைக் கேட்டும் அநுமன் தன் கருத்தை மாற்றிக் கொள்ளாமையாலே, பிராட்டி, ‘ஹரி, ஹரி’ என்கிறாள். பிடித்த பிடியை விடாத உன் குரங்கு புத்தியைத்தான் உன் செயலில் காண்கிறேன். வஸிஷ்டர், வாமதேவர் முதலானோர் மந்த்ராலோசனை வழங்கக்கூடிய இக்ஷ்வாகு வம்ஶத்தில் பிறந்தவன் அல்லையே நீ. கர்மயோகியான ஜனகரின் வம்ஶமுமன்று. காட்டில் கிளைக்குக்கிளை தாவித்திரியும் ஜாதியிலன்றோ நீ பிறந்தது! அப்பேர்பட்ட உனக்கு ஶரணாகதியின் பெருமை எப்படித் தெரியும்? பேருபகாரம் செய்த அநுமனை இப்படிப் பிராட்டி நிந்திக்கலாமோவெனில், அன்று அவன் செய்த பேருபகாரத்துக்குத் தோற்று ‘வானரோத்தம’ என்றவள், இன்று அவன் அடாத செயல் புரிவதில் பிடிவாதமாய் இருப்பதைக் காண்கையாலே, அவனைத் திருத்துமுகமாக ‘குரங்கே’ என்று நிந்திக்கிறாள் என்று கொண்டால் குற்றமில்லை. ராஜாவாய், இஷ்டப்படி நடக்கத்தக்க ஸ்வாதந்த்ரியமுடைய இராமபிரானும் எங்கள்முன் இத்தனை கோபமாகப் பேசியறியார். நீ கேவலம் ஒரு குரங்காயிருந்து என்முன்னம் இத்தனை கோபமாய்ப் பேசலாமோ?

நல்லோனால் கருணை காட்டப்படவேண்டும் (கார்யம் கருணமார்யேண). இவர்களுடைய புண்ணிய பாபத்தைப் பற்றிய ஆராய்ச்சி இப்போது எதற்கு? அது நிற்க. இப்போது இவர்களுடைய வருந்தத்தக்க நிலையைப் பார். உன்னைப்போல் ஒருவன் இவர்களைத் துன்புறுத்தினால், ரக்ஷிப்பதற்கு இங்கு ஒருவருமில்லை. இப்படிப்பட்ட ஸமயத்தில் இவர்களுக்காகவன்றோ நாம் இரங்க வேண்டும். நல்லோனன உனக்கு நான் இப்போது இவையெல்லாம் சொல்லித்தரவேண்டியுள்ளதே! நீ ஐந்திர வியாகரணம் கற்றிலையோ? இப்படி எல்லா ஶாஸ்திரமும் கற்றிருந்தும், ராம கோஷ்டியில் பழகின பின்னர் இத்தன்மையுடையனானாய் போலும்! நான் பிரிந்த பின்னர் பெருமாளுடைய கோஷ்டி நீர் விடப்பட்ட  பால்போலே தரம் குறைந்து போயிற்று போலும்!

குற்றம் செய்யாதவன் ஒருவனுமில்லையே (ந கஶ்சிந் நாபராத்4யதி) இந்த உலக வாழ்க்கையில் குற்றமில்லாதவர் யார்? அலைபோனபின்பு கடலில் குளிக்கலாம் என்று சொல்லமுடியுமோ? அதுபோலவே, குற்றமில்லாதாரைப் பார்த்து கருணை காட்டுவேன் என்று சொன்னால், கருணை காட்டுவதற்கு ஒருவருமே அகப்படமாட்டார்களன்றோ? குதிரைகளில் சிறந்த குதிரை ‘நற்குதிரை’ என்பதுபோலே, ‘நன்மனிதர்’ என்று மனிதரில் சிறந்தவராகத் வேஷமிட்டுக் கொண்டிருக்கும் இராமபிரான் மட்டும் குற்றம் செய்யாதவரா? நான்தான் குற்றம் செய்யாதவளா? நீதான் குற்றம் செய்யாதவனோ?

ராமபிரான் என்ன குற்றம் செய்தார்-எனில், அவர் காடு சென்றார். மடலூருவாரைபோலே இலக்ஷ்மணனும் இவர் சென்றவிடமெல்லாம் சென்றார். இராமபிரானோடு காட்டில் இஷ்டப்படியெல்லாம் திரிந்து விளையாடலாம் என்று நானும் அவரைப் பின்தொடர்ந்தேன். இப்படிப்பட்ட என்னைப் பிரிந்து பத்து மாஸம் இருந்தார். ஓர் அம்பைவிட்டு ராவணனை நினைத்த மாத்திரத்தில் ஏன் மாய்க்கவில்லை? இதைச் செய்ய வல்லவராயிருந்தும் என்னைப்பிரிந்தே இருக்க வல்லவரானபோதே பெருமாள் குற்றம் செய்தவர் என்பது தெரியவில்லையா? என்னுடைய பாரதந்திரியத்துக்குத் தக்கவாறு அவர் என்ன செய்தபோதிலும் நான் பேசாமலிராமல், அவர் குற்றத்தை உன்னிடம் சொன்னபோதே, நானும் குற்றவாளியாகிறேன். தன் தலைவனான ராவணன் கட்டளையை நிறைவேற்ற இந்த அரக்கிகளை நீ தண்டிக்க நினைத்தால், முதலில் நீ உன் தலைவனான ராமனின் கட்டளையைச் செய்வதால் உன்னையன்றோ முதலில் தண்டிக்க வேண்டும்! ஆகையால், நீ சொல்லுகின்ற காரணத்தை வைத்துக் கொண்டு பார்த்தால் நீயும் குற்றம் செய்தவனாகிறாய். ஆகவிப்படி, ராமபிரானும், நானும், நீயும் குற்றவாளிகள் ஆனபடியால், உலகில் குற்றம் செய்யாதவர்கள் யார்? அதாவது, எல்லாவிதத்திலும் ஒரு சேதனனைப் பெருமாள் கோபித்தபோது, அந்தக் கோபத்தை ஆற்றிவிடுவதற்காக (புருஷகார பூ4தையான) நான் உண்டு. நானும் அவர் வழியிலே சென்று ஒரு சேதனனைக் கைவிடுமேயானால் ஆசார்யனான நீ உண்டு அச்சேதனனையும் எங்களையும் திருத்திச் சேர்ப்பிப்பதற்கு என்று நினைத்திருந்தேன். நீயும் இப்படிக் கருணையற்றவனானால் குற்றம் செய்தவற்கு யார் புகல்? என்கிறாள் கோபம் என்பதையே அறியாதவள் (அஜ்ஞாத நிக்3ரஹா), கருணையே வடிவெடுத்தவள் (கருணா) என்று ஶாஸ்திரங்களில் பேசப்படும் பிராட்டி.

அரக்கிகளிலும் கொடிய நம்மைப் போன்ற மஹாபாபிகளுக்குத் தஞ்சமாவது பெருமாளுடைய சரமஶ்லோகங்களல்ல; பிராட்டியினுடைய இந்தச் சரமஶ்லோகமே நமக்கு எப்போதும் தஞ்சமாகக் கடவது.

————

ஸ்ரீ சீதாவதாரத்தில் விளங்கிய பிராட்டியின் ஈடற்ற பொறுமை மஹா அபராதிகளான நம்மை
இன்புறுத்துவதாகக் கூறுகிறார் —

மாதர் மைதிலி  ராஷசீஸ் த்வயி ததை வார்த்ராபராதாஸ் த்வயா
ரஷந்த்யா பவநாத்மஜால் லகுதரா ராமஸ்ய கோஷ்டி க்ருதா
காகம் தம் ச விபீஷணம் சரணமித் யுக்தி ஷமௌ ரஷத
ஸா ந சாந்திர மஹாக ஸ ஸூ காது ஷாந்திஸ் தவாகஸ்மிகீ-ஸ்ரீ குணரத்ன கோசம் -50-

மாதர் மைதிலி -தாயே -ஜனகன் திருமகளாய் திரு வவதரித்து அருளியவளே –
தாயின் பொறை தகப்பன் பொறையை விட விஞ்சியே இருக்கும் அன்றோ
அவனையும் பெற்ற தாய் நீயே -என்பாரேலும் சிறிது வன்மை உண்டே ஆண் மகனான அவனிடம்
உபசரித்துக் கூறினும் இயல்பான தாயின் தன்மை சிறந்தது அன்றோ –
இயல்பான குணமும் படைத்த குணமும் சேர்ந்து அற விஞ்சியது என்பதால் மைதிலி என விளிக்கிறார்

ராக்ஷஸீ: த்வயி ததைவ ஆர்த்ராபராதா: த்வயா -நின் திறத்து அப்பொழுதே
ஆர்த்ராபராதா -குற்றங்கள் புரிந்த வண்ணமாய் யுள்ள -அரக்கியரை –

ரஷந்த்யா பவநாத் மஜால் லகுதரா ராமஸ்ய கோஷ்டி க்ருதா காகம் தஞ்ச விபீஷணம் சரணம் இதி உக்தி ஷமௌ ரஷத
வாயு குமாரனான ஹனுமானிடம் இருந்து காப்பாற்றுகிற உன்னால்
சரணம் இதி -சரணம் என்று–
உக்தி ஷமௌ -சொல்லுவதில் தகுதி வாய்ந்த
காகாசுரனையும் பிரசித்தமான விபீஷணனையும் காப்பாற்றுகிற ராமனுடைய கோஷ்டியானது மிகவும் எளியதாக செய்யப் பட்டு விட்டது –
ததைவ –ராவண வதத்தைச் சொல்ல வருகின்ற அந்த சமயத்திலே -என்றபடி –
அப்பொழுதும் ராஷசிகள் துன்புறுத்திக் கொண்டே இருந்தும் காத்தனளே-
கொண்ட பிடியை விடாத குரங்கின் இடம் இருந்து காப்பது அரிது அன்றோ –
தந்தையான வாயு போலே தடுத்தற்கு அரியவன் -பவ நாத் மஜன் -என்கிறார் –
நேரே ராமனைக் கூற கூசி இராம கோஷ்டியை மிகவும் எளிமைப் படுத்தி விட்டதாகக் கூறுகிறார் –

த்ரீன் லோகன் சம்பரிக்ரம்ய தமேவ சரணம் கதா -என்றும்
த்யக்த்வா புத்ராம்ச்ச தாராம்ச்ச ராகவம் சரணம் கத -என்றும் சரணம் அடைந்தவர்கள் அன்றோ அவர்கள் –
பலி புஜி–குண லவ சஹவாசாத் த்வத் சாமா சங்கு சந்தி -ஸ்ரீ ரங்கராஜ ஸ்தவம்
உக்தி ஷமௌ -சரணம் என்று சொல்ல தகுதி வாய்ந்தவர்கள் -என்பதால் காகத்தையும் சேர்த்து என்னலாம்
வித்தகனே இராமாவோ நின்னபயம் என்று அழைப்ப -என்பதால் சரண் அடைந்ததும் சொன்னதாகவும் கொள்ளலாம் —
நின்னபயம் என்று அடைய சொல்லவில்லை பெரியாழ்வார் அதனாலே உக்தி ஷமௌ இங்கே
அப்பொழுது -உக்த்யா ஷமௌ -ரஷிப்பதற்கு தகுதி உள்ளவர்கள் என்று கொள்ள வேண்டும்
தீங்கு இளைத்த ஜெயந்தனை காகம் என்றே அருளுகிறார் ஆளவந்தாரும் வாயசமாக இவனைக் குறிப்பிட்டார்
சொல்லை பற்றாசாகக் கொண்டு ரஷித்த பெருமாளை விட யாதொரு பற்றாசும் இன்றி ரஷித்த பிராட்டியின் ஏற்றம் –
சம்பந்தமே ஹேதுவாக சரண்யை இவள் -கத்ய வியாக்யானத்தில் பெரிய வாச்சான் பிள்ளை –

ஸாநஸ் சாந்த்ர மஹா கஸஸ் ஸூகயது ஷாந்திஸ் தவாகஸ்மிகீ–
அத்தகைய நிர்ஹேதுகமான நினது பொறுமையானது
நெருங்கின மஹத்தான அபராதங்களை யுடைய எம்மை இன்புறுத்துவதாக-

ஆகச்மிகீ நிர்ஹேதுகம் என்றபடி
திரிஜடை சொல்லியும் கேளாத ராஷசிகளை ரஷித்த பெருமை உண்டே
ராஷசர் நால்வரும் சரண் அடையாவிடிலும் விபீஷணன் செய்த சரணாகதி பலித்தது அவர்களுக்கும்
சிஷ்யன் அனுகூலித்து வரா விடில் இவனுக்காக ஆசார்யன் செய்த பிரபத்தியும் பயனில்லதாம்
பிராட்டி வியாஜ்யம் இன்றி காப்பது ஆகிஞ்சன்யம் உடையவர்களையே யாதலின் சர்வ முக்தி பிரசங்கம் வாராது –

தாயே! இராமபிரானின் நாயகியே! ஸ்ரீரங்கநாயகீ! உனது நாயகனாக உதித்த இராமன்
தன்னைச் சரணம் என்று புகுந்த விபீஷணனையும், காகம் ஒன்றையும் மட்டுமே காப்பாற்றினான்.
ஆனால் நீயோ குற்றங்கள் பல புரிந்த அரக்கிகளை, அவர்கள் உன்னிடத்தில் சரணம் என்று புகாமலேயே அனுமனிடம் இருந்து காப்பாற்றினாய்.
இதன் மூலம் இராமனின் புகழ் தாழ்ந்தது.
ஆக இப்படியாகத் தனக்குத் துன்பம் விளைவிப்பவர்களையும் காக்கும்
உனது பொறுமைக் குணமானது பல விதமான குற்றங்கள் உடைய எங்கள் மீது படர வேண்டும்.

விபீஷணன் இராமனிடம் – த்யக்த்வா புத்ராம்ச்ச தாராம்ச்ச ராகவம் சரணம் கத: –
எனது மனைவி, குழைந்தைகளையும் விட்டு இராமனிடம் சரணம் புகுந்தேன் – என்றான்.
காகத்தின் வடிவில் வந்தவன் – த்ரீந் லோகாந் ஸம்பரிக்ரம்ய தமேவ சரணம் கத: –
மூன்று உலகமும் சுற்றிப் புகலிடம் கிடைக்காததால் இராமனிடம் புகுந்தேன் – என்றான்.
ஆக, தகுந்த காரணம் இருந்தால் மட்டுமே இராமன் சரணம் அளித்தான்.
ஆனால் தன்னிடம் கொடுமையாக நடந்துகொண்ட அரக்கியர்களை, அவர்களை இகழாமல், அனுமனிடமிருந்து சீதை காப்பாற்றினாள்.

அன்னை சீர் மைதிலியே அரக்கியர்கள் அன்றைக்கும் பைங்குற்றம் புரியா நிற்ப
அன்னாரை யளித்த நுமன் அழியா வண்ணம் அழித்தனையால் இராமனது குழுவின் மேன்மை
தந்நாவில் சரணம் எனத் தகுதி வாய்ந்த தசமுகனின் தம்பியொடு காகம் காத்த
தென்னாவது இரும் குற்றம் இழைக்கின்றோ முக்கின்பம முனதியல்பான பொறுமை நல்க –50

பைங்குற்றம் -பசுமையான நாள் படாத அப்பொழுதே செய்த குற்றம் –

———

பண்டை நாளாலே நின் திரு வருளும் பங்கயத்தாள் திருவருளும்
கொண்டு நின் கோயில் சீய்த்துப் பல்படிகால் குடி குடி வழி வந்து ஆள் செய்யும்
தொண்டரோர்க்கு அருளிச் சோதி வாய் திறந்து உன் தாமரைக் கண்களால் நோக்காய்
தெண் திரைப் பொருநல் தண் பணை சூழ்ந்ததிருப் புளிங்குடிக் கிடந்தானே--9-2-1-

பண்டை நாளாலே நின் திரு வருளும் –
பல நாள்களாக செய்து போந்த உன் திரு வருளையும் -என்றது
நீ நேற்று இன்று செய்து போந்த கிருஷியின் பலமோ -இது –
எதிர் சூழல் புக்கு பல நாள் பட்ட கிலேசத்தின் பலம் அன்றோ இந்த கைங்கர்யம் -என்றபடி –
நெடுநாள் கிருஷியை செய்து-பல வேளையில் கை விடவோ -என்கிறார்-

பங்கயத்தாள் திருவருளும் -கொண்டு –
அவன் அருளுக்கு காரணமான பெரிய பிராட்டியார் திருவருளையும் கொண்டு-
அவனுடைய அருளின் ஸ்வாதந்த்ரியத்தை தவிர்க்கும் அருள் –
காதல் காரணமாக வந்த பாரதந்த்ரியமே அன்றோ ஸ்வாதந்த்ர்யத்தை தவிர்ப்பது -என்றது-
அவன் அருளின் ஸ்வாதந்த்ர்யத்தின் வாசனையை தவிர்க்குமவன் அருளும்படியாக அன்றோ வந்தது –
ஆதலால் அவள் அருள் அவன் ஸ்வாதந்த்ர்யத்தை பின் செல்லாதபடி செய்யும் ஆயிற்று -என்றபடி-
நன்று -அங்கனமாயின் –
அவனுடைய பாரதந்த்ர்யம் அவள் காதல் காரணமாக வந்தது அன்றோ –அது நிலை நிற்குமோ –
ஸ்வா தந்த்ர்யமே அன்றோ அவனுக்கு இயற்க்கை –அதற்கு நாம் அஞ்ச வேண்டாமோ-எனின் -அஞ்ச வேண்டா
அவள் அருகே நிற்க ஸ்வாதந்த்ர்யம் நிலை நிற்காது-
ஆகையால் அன்றோ த்வயத்தில் முன் வாக்யத்தில் அவள் புருஷகாரமாக பற்றுகிறது
இனி
பண்டை நாளில் நின் திருவருளும் பங்கயத்தாள் திருவருளும் -என்பதற்கு
என் அடியார் அது செய்யார் -பெரியாழ்வார் திருமொழி -4-9-2-என்னும் உன் திரு அருளையும் –
பாபாநாம் வா ஸூ பாநாம் வா வதார்ஹாணாம் ப்லவங்கம்-
கார்யம் கருணம் ஆர்யேண நகஸ்சின் ந அபராத்யதி -யுத்தம் -116-44 -என்று
குற்றம் செய்யாதவர் யாவர் -என்னும் அவள் திருவருளையும் பெற்று -என்றலுமாம் –
அன்றிக்கே –
சதம் நிபபதிம் பூமௌ சரண்ய சரணாகதம்-வதார்ஹமாபி காகுஸ்த க்ருபயா பர்யபாலயத் -சுந்தர -38-34-
கொல்லத் தக்கவனாய் இருந்தும் பேரருளால் அந்த காகாசுரனைக் காப்பாற்றினார் -என்கிறபடியே-
கிருபைக்கு பரதந்த்ரப் பட்டவனான உன்னுடைய திருவருளையும்-
அந்த பரதந்த்ரத்துக்கு காரணமான அவள் திருவருளையும் பெற்று என்றலுமாம் –

நின் திரு அருள் -பங்கயத்தாளுக்கு திரு வருள் -ஆழ்வார் திருமகள் -பக்ஷ பாதி -இயம் சீதா -உன் கையால் இவள் கையைப் பிடிக்க
உன் தாமரைக் கண்ணால் நோக்காய் –செந்தாமரைக் கையால் -சீரார் வளை ஒலிப்ப – அணி மிகு தாமரைக்கு கையை அந்தோ
ஸ்வா தந்தர்யம் போக்கும் பார தந்தர்யம் -பாபங்களைக் கண்டு பயப்படாமல் இருக்க அபாய ஹஸ்தம் வைத்து இருக்கும்
அவனைக் கண்டு பயப்படாதே என்னும் திருக் கை அன்றோ -இவளது –

———————————————————————————————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ பகவத் கீதா தியான ஸ்லோகங்கள்:

October 9, 2023

ஸ்ரீ கஸ்தூரி திலகம் -லலாட பாடலே வக்ஷஸ்தலே கௌஸ்துபம் நாஸாக்ரே முத்து பல்லாக்கு —
கர தலே வேணு -கரே கங்கணம் -ஸர்வாங்கே ஹரி சந்தனம்
ஸூ லலிதம் -கண்டேஸ் முக்தா வலீ கோப ஸ்த்ரீ பரி வேஷ்டிதோ விஜயதே கோபால சூடாமணி –
விஜய சாரதி -பார்த்த சாரதி தேரோட்டி ஆசைப்பட்டு -தேர்ப்பாகு –

———

ஓம் பார்தாய ப்ரதிபோதிதாம் பகவதா நாராயணேன ஸ்வயம் |

வ்யாஸேன க்ரதிதாம் புராண முனினா மத்யே மஹாபாரதம் |

அத்வைதாம்ருத வர்ஷிணீம் பகவதீமஷ்டா தஶாத்யாயினீம் |

அம்ப த்வாம் அனுஸந்ததாமி பகவத்கீதே பவத்வேஷிணீம் ||–1-

புராண முனிவராகிய வியாசரால் மஹாபாரதத்தின் நடுவில் வைக்கப்பட்டவளும், அர்ஜுனனுக்காக பகவான் நாராயணனாலேயே உபதேசிக்கப்பட்டவளும், அத்வைதமாகிய அமுதத்தை வர்ஷிப்பவளும், பதினெட்டு அத்தியாயங்களைக் கொண்டவளும், சம்சார சாகரத்தின் எதிரியும் ஆன பகவத் கீதா என்ற அன்னையை நமஸ்கரிக்கிறேன்.

பதினெட்டு அத்தியாயங்கள் கொண்டது கீதை. பதினெட்டு என்ற எண் தனிச்சிறப்பு வாய்ந்தது.மகாபாரத யுத்தம் நடந்தது பதினெட்டு நாட்கள். பாகவதபுராணம் பதினெட்டாயிரம் ஸ்லோகங்கள் கொண்டது. ஒன்று எட்டு இவற்றின் கூட்டுத்தொகை ஒன்பது. மாறாத நம்பர். அத்துடன் எதைக் கூட்டினாலும் அந்த எண்களின் கூட்டுத்தொகை 9 ஆகவே இருக்கும்

.பஞ்ச பூதங்கள், பத்து இந்த்ரியங்கள், மனம், புத்தி அஹங்காரம் இவை மொத்தம் பதினெட்டு. இவைகளின் மூலம்தான் சம்சார பந்தம் ஏற்படுகிறது.இதை அகற்றுவதால் சம்சார சாகரத்தின் எதிரி எனப்படுவது கீதை. ஒரு அன்னையைப் போல் நல்வழி காட்டுவதால் அன்னை என்று கூறலாம்.

——

நமோஸ்து தே வ்யாஸ விஶால புத்தே புல்லாரவிந்தாயத பத்ர நேத்ர ||

யேன த்வயா பாரத தைல பூர்ண: ப்ரஜ்வாலிதோ ஞானமய ப்ரதீப: ||-2-

அளவற்ற ஞானம் உடைய விரிந்த தாமரைக்கண்களை உடைய வ்யாசகுருவே , உமக்கு நமஸ்காரம். உங்களால் ஞானமாகிற தீபம் பாரதம் என்கிற தைலத்தால் நிரப்பப்பட்டு ஒளிவீசுகிறது.

இந்த பிரபஞ்சம் ஒரு விளக்கு என்றால் அதில் தர்மம் என்பது தைலம். புத்தி என்கிற திரி இறையருள் என்ற நெருப்பால் ஏற்றப்பட்டால் உலக அறிவு எரிந்து ஞான ஒளியாக மாறுகிறது. மகாபாரதத்தை உலகுக்கு அளித்ததன் மூலம் இதை செய்தவர் வியாசர். அதனால் அவரை வணங்க வேண்டும். வேதத்தை தொகுத்து அளித்ததனால் வேத வியாசர எனப்படும் இவரை நினைவுகூருவதே குரு பூர்ணிமா. அதனால்தான் இது வ்யாசபூர்ணிமா எனப்படுகிறது.

———-

ப்ரபன்ன பாரிஜாதாய தோத்ர வேத்ரைக பாணயே |

ஞான முத்ராய க்ருஷ்ணாய கீதாம்ருத  துஹே நம: ||–3-

ஆச்ரயித்தவர்களுக்கு கற்பகத்தருவைப்போல் வேண்டுவதையும் மேலும் அவர்க்கு நன்மை தரும் எல்லாவற்றையும் அளிக்கும், சாட்டைக்குச்சியையும் கடிவாளத்தையும் கையில் கொண்டு பார்த்தசாரதியாக , இன்னொரு கையில் ஞானமுத்திரையுடன், கீதை என்கிற பாலைக்கறந்து,அர்ஜுனனுக்கு உபதேசம் அளித்த கிருஷ்ணனுக்கு நமஸ்காரம்.

—-

ஸர்வோபனிஷதோ காவோ, தோக்தா கோபால நந்தன: |

பார்தோ வத்ஸ: ஸுதீர் போக்தா துக்தம் கீதாம்ருதம் மஹத் ||-4-

உபநிஷத்துக்களே பசுக்களாக இருக்க கோபால நந்தனன் கறப்போனாக , அர்ஜுனனே கன்றாக, உலகில் உள்ள நல்லோர் பருகுவதற்காக கீதை என்கிற அம்ருதம் கறக்கப்பட்டது.

பசு கன்றைப் பார்த்தால் எளிதில் பால் கறக்கும். அர்ஜுனன்தான் கன்று என்கிறார். அர்ஜூனன் அறிவுத்தாகம் எடுத்த மனிதன். ‘அதாதோ பிரம்ம ஜிக்ஞாசா,’ என்று பிரம்ம சூத்திரத்தில் கூறியபடி, யாருக்கு பிரம்மததைப்பற்றி அறிய வேண்டும் என்ற வேட்கை இருக்கிறதோ அவருக்குத்தான் அந்த ஞானத்தைப் பெற தகுதியுள்ளது. அர்ஜுனன் பரம் விசுவாசத்துடன் கேட்டதனால் அவனை பசுவின் கன்றாக உவமை கூறுகிறார்.

பாலைக் கறந்தபின் அது முழுவதும் கன்றுக்காக அல்லவே. உலகில் எல்லோருடைய உபயோகத்திற்காகவே அல்லவா? அதனால் ஸுதீ: நல்ல மதியுடையவர் இதை அனுபவிக்கிறார்கள் என்கிறார் . அருமையான உருவகம்.

ஸ்ரீ பகவத் கீதை பாலை ஸ்ரீ கிருஷ்ணன் நமக்கு அளிக்கிறான் -உபநிஷத் பசு மாட்டு பாலை அர்ஜுனன் கன்றாக வியாஜ்யம்
-சர்வ உபநிஷத் காவ -கோபால நந்தன் இடைப்பிள்ளை -பார்த்தோ வத்ஸா —ஞானான் மோக்ஷம் -வேதாந்தம் –
கீதா ஸூ கீதா கர்த்தவ்ய -கிம் அந்யயைகி சாஸ்திரம் -இதை அறிந்தால் வேற வேண்டாம் –
ஸ்வயம் பத்ம நாபஸ்ய முக பத்மத் -திரு முகமே தாமரை

சேயன் –மாயன் அன்று ஓதிய வாக்கு -நெறி எல்லாம் எடுத்து உரைத்த நிறை ஞாலத்து ஒரு மூர்த்தி –
தத்வம் ஹிதம் புருஷார்த்தம் -மூன்றையும் விசதமாக்கி காட்டி அருளும் –
தத்வ த்ரயம் -ஒவ் ஒன்றை பிரதானம் -கொண்டு –தத்வ ஹித புருஷார்த்தம் -ஹரி நாராயண ஸ்ம்ருதி –
ஆலோக்ய சர்வ சாஸ்த்ராணி விசார புன புன –ஹரி ஒன்றே தத்வம்

——–

வஸுதேவ ஸுதம் தேவம் கம்ஸ சாணூர மர்தனம் |

தேவகீ பரமா நந்தம் க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும் ||–5-

இந்த ஸ்லோகம் கீதாசார்யனின் நிஜ ஸ்வரூபத்தை விளக்கும் ஒன்று.

வசுதேவரின் மகன் ஆனால் தேவன். அதாவது பகவானே கிருஷ்ணனாக அவதரித்தான் என்பதை சுட்டுகிறது. . கம்சன் சாணூரன் இவர்களை அழித்தவன்., இது அவன் அவதார நோக்கமான துஷ்டசம்ஹாரம். தேவகியின் பரமானந்தத்திற்குக் காரணம் ஆனவன். இது அவன் பால லீலைகளால் தேவகிக்கு மட்டும் அல்ல யசோதைக்கும் மற்றும் எல்லோருக்கும் இந்த உலகத்துக்குமே ஆனந்தத்தை கொடுத்தது. கடைசியில் ஜகத்குருவான க்ருஷ்ணனை நமஸ்கரிக்கிறேன் என்று அவன் யார் என்பதை காட்டுகிறார்.

ஜகத்குரு . முதலில் பிரம்மாவுக்கு உபதேசம் செய்தவரான பரம்பொருள். இங்கு கீதாசார்யனாக உலகுக்கு உபதேசம் செய்கிறார்.

——

பீஷ்மத்ரோண தடா ,ஜயத்ரத ஜலா ,காந்தார நீலோத்பலா |

ஶல்யக்ராஹவதீ க்ருபேண வஹனீ , கர்ணேன வேலாகுலா||

அஶ்வத்தாம விகர்ண கோர மகரா துர்யோதனாவர்தினீ ,

ஸோத்தீர்ணா கலு பாண்டவைர் ரண நதீ, கைவர்தகே கேஶவே ||-6-

பூபாரம் தீர்க்க வந்தவர் கிருஷ்ணன். அதன் விளைவு மகாபாரதப்போர் . இந்த ச்லோகம் ஒரு அதிசய உருவகத்தின் மூலம் அதை வர்ணிக்கிறது.

இந்த யுத்தம் ஒரு ரத்த ஆறாக வர்ணிக்கப்படுகிறது. இதில் பீஷ்மரும் துரோணரும் கரைகள். கரைகளைப் போல் வெள்ளத்தை கட்டுப்படுத்துவதால். ஜெயத்ரதன் கௌரவரின் ஒரே சஹோதரியின் கணவன். இவன்தான் அபிமன்யுவின் வதத்திற்கு மூல காரணம்.அவனை நதியின் நீர் என்று கூறுகிறார்.

சகுனி நீலதாமரை. பார்ப்பதற்கு சாதாணமானவன் ஆனால் உள்ளே விஷத்தன்மை உடையவன். நீல நிறம் விஷத்தைக் குறிக்கும்.சல்லியன் முதலையாகவும் கிருபர் நதியின் வேகமாகவும் கர்ணன் அந்த நதியின் அலை போலவும் அஸ்வத்தாமன விகர்ணன் இவர்கள் சுறாமீன்கள் எனவும் உருவகப்படுத்தப்பட்டுள்ளார்கள்.

துரியோதனன் நீர்ச்சுழலுக்கு ஒப்பானவன் ஏனென்றால் அவன்தான் எல்லோரையும் தன்னுள் இழுத்துக்கொண்டு அழிக்கிறான். அப்படிப்பட்ட ரத்த ஆறானது பாண்டவர்களால் கேசவன் என்ற ஓடக்காரனின் உதவியால் கடக்கப்பட்டது.

கேசவன் என்ற சொல்லின் பொருள் மும்மூர்த்திகளையும் தம்முள் அடக்கிய பரம்பொருள் என்பது. அதுவே அழகிய கேசங்கள் உடைய கண்ணனாக வந்து பாண்டவர்களுக்குதவியது. பவசாகரம் கடக்கவே உதவும் பகவான் யுத்தமாகிய ரண நதியைக் கடக்க உதவியதில் என்ன ஆச்சரியம்!

—-

பாராஶார்ய வச: ஸரோஜமமலம்  கீதார்த கந்தோத்கடம் | நானாக்யானக கேஸரம் ஹரிகதா ஸம்போதனா போதிதம் ||

லோகே ஸஜ்ஜன ஷட்பதைரஹரஹ: பேபீயமானம் முதா |

பூயாத் பாரத பங்கஜம் கலிமல ப்ரத்வம்ஸி ந: ஶ்ரேயஸே ||

அடுத்து ஒரு அழகான உருவகம். மகாபாரதம் ஒரு மலர்ந்த தாமரையாக சித்தரிக்கப்படுகிறது. அது வியாசரின் வாக்கென்ற ஏரியில் மலர்ந்திருக்கிறது. அதிலிருந்து கீர்த்தி என்னும் நறுமணம் வீசுகிறது. பலப்பல கதைகள் அதன் கேசரங்கள். ஹரியின் கதை என்ற சூரியனால் முழுவதும் மலர்ந்துள்ளது. இந்த தாமரையின் தேனை அடிக்கடி மகிழ்ந்து பருகும் வண்டுகள் நல்லோராவர். இது கலியின் தீமைகளைப் போக்கி நன்மை விளைவிக்கும்.

—-

மூகம் கரோதி வாசாலம் பங்கும் லங்கயதே கிரிம் |

யத் க்ருபா தமஹம் வந்தே பரமாநந்த மாதவம் ||

யாருடைய கருணை ஊமையை பேச்சாளனாக்கி முடவனுக்கு மலை ஏறும் திறன் அளிக்குமோ அந்த பரமானந்தசாகரம் ஆகிய மாதவனை வணங்குகிறேன். மாதவன் என்றால் மாயா: தவ: (மா என்றால் லக்ஷ்மி) லக்ஷ்மி பதி என்று பொருள்,. தாயாரின் கருணை ஊமையை பேசவைக்கும்குருடனைக் காணவைக்கும் முடவனை ஓட வைக்கும் அல்லவா? அவளை ஹ்ருதயத்தில் வைத்த பகவானின் கிருபை அதனால் மிகப்பெரிது.

—-

யம் ப்ரஹ்மா வருணேந்த்ர ருத்ர மருத: ஸ்துன்வந்தி திவ்யை: ஸ்தவை: | வேதை: ஸாங்கபத க்ரமோபனிஷதை: காயந்தி யம் ஸாமகா: | த்யானாவஸ்திதேன மனஸா பஶ்யந்தி யம் யோகினோ | யஸயாந்தம் ந விது: ஸுராஸுர கணா: தேவாய தஸ்மை நம: ||

இந்த ஸ்லோகத்தில் கிருஷ்ணனை பரப்ரம்மமாகவே வந்தனைசெலுத்துகிறார். பிரம்ம ருத்ரன் வருணன் இந்திரன் வாயு முதலியோர் யாரை திவ்ய ஸ்தோத்திரங்களால் துதிக்கிறார்களோ., சாம வேத கானம் செய்வோர் வேதாங்கங்கள் , உபநிஷத் இவைகளுடன் கூடிய வேதத்தால் கானம் செய்கிறார்களோ , யோகிகள் த்யானத்தின் மூலம் ஒருமுகப்பட்ட மனதால் யாரைப் பார்க்கிறார்களோ எவருடைய ஆதியும் அந்தமும் தேவர்களும் அசுரர்களும் அறியார்களோ, அந்த பகவானுக்கு நமஸ்காரம்.

—————————————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-