Archive for the ‘இரண்டாம் திருவந்தாதி’ Category

ஸ்ரீ பூதத் ஆழ்வார் அருளிய இரண்டாம் திருவந்தாதி – -81-90– ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் —

February 27, 2015

முன்பு இவனைக் காணப் பெற்றவர்கள் என் பட்டார்களோ என்றாரே –
அவன் தன்னைத் தான் காணப் பெற்றுப் படுகிற பாட்டைச்  சொல்லுகிறார் –

கீழ் ஸ்ரீ தண்ட காரண்யத்தில் அக்காலத்தில் காணப் பெற்றவர்களுக்கு எங்கனே இருக்கிறதோ என்கிறார் என்றுமாம் –
அவர்களுக்கே அல்ல -எனக்கும் விடிந்தது என்கிறார் –

பகல் கண்டேன் நாரணனைக் கண்டேன் கனவில்
மிகக் கண்டேன் மீண்டவனை மெய்யே -மிகக் கண்டேன்
ஊன் திகழும் நேமி யொளி திகழும் சேவடியான்
வான் திகழும் சோதி வடிவு -81-

பதவுரை

பகல் கண்டேன்–இராக்காலம் கலசாமல் ஒரே பகற் போதாய்ச் செல்லுகிற நல் விடிவைக் கண்டேன்.
(அதாவது என்னவென்றால்)
நாரணனை கண்டேன்–ஸ்ரீமந் நாராயணனாகிற என்று மஸ்தமியாத ஆதிதயனைக் கண்டேன்,
மீண்டு–இன்னமும்,
கனவில்–மாநஸ ஸாக்ஷாத் காரத்திற் காட்டிலும்
மிக மெய்யே–மிகவும் ப்ரத்யக்ஷமாக
ஊன் திகழும் நேமி–திருமேனியில் விளங்குகின்ற திருவாழியை யுடையவனும்
ஒளி திகழும் சே அடியான்–பிரகாசம் மிக்க திருவடிகளை யுடையவனுமான அப்பெருமானுடைய
வான் திகழும்–பரமபதத்திலே விளங்குகின்ற
சோதி வடிவு–சோதி மயமான வடிவத்தை
மிக கண்டேன்-(இங்கே) நன்று ஸேவிக்கப் பெற்றேன்.

பகல் கண்டேன் –
விடிவு கண்டேன் –
முன்படங்க இருள் போலே காணும் –
காளராத்திரியாய்ச் செல்லாதே விடியக் கண்டேன் –
ஸூ ப்ரபாதா ச மே நிசா -ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-17-2-

ஓர் இரவும் ஒரு பகலுமே யுள்ளது -எம்பெருமானை அறிவதற்கு முன்பும் பின்பும் –
முன்பு பகல் கலவாது –
பின்பு இரவு கலவாது –

நாரணனைக் கண்டேன்-
வடுகர்   வார்த்தை போலே  தெரிகிறது இல்லை –
எங்களுக்குத்  தெரியும்படி சொல்லீர் -என்னச் சொல்லுகிறார் –

அஸ்தமியாத ஆதித்யனைக் கண்டேன் –
உறங்காத என்னையும் கண்டேன் –
அநாதி மயயா ஸூ ப்த-என்கிற உறக்கம் பிரகிருதி அன்று இறே
இளைய பெருமாளுடைய ஸ்தா நீயன் ஆத்மா –
அங்கும் -சதா பஸ்யந்தி ஜாக்ருவாம் சமிந்ததே -ருக் அஷ்ட -1-2-7-

சவிபூதிகனான சர்வேஸ்வரனை  கண்டேன் –
உபய விபூதி யுக்தன் இறே -போக்குவரத்து இல்லாத ஆதித்யன் –
நியாம்யனானவன் அல்லன் -நியாமகன் –
பீஷோதேதி ஸூர்ய-தைத் ஆன -8-என்றும் –
சாஸ்தா ஜனா நாம் -தைத் ஆற -3-11-என்றும் சொல்லக் கடவது இறே –

கனவில் மிகக் கண்டேன் மீண்டவனை-
இந்த்ரியங்கள் சஹ காரியாய் அவ் வழியாலே காஷியாகை அன்றிக்கே
நெஞ்சாலே முழு மிடறு செய்து காணப் பெற்றேன் –
இந்த்ரியங்களால் கலக்க ஒண்ணாத படி மானசத்தால் யுள்ள ஜ்ஞானத்தாலே அழகிதாகக் கண்டேன் –

மெய்யே -மிகக் கண்டேன்-
பிரத்யபி ஜ்ஞார்ஹமாம்படி அழகிதாகக் காணப் பெற்றேன் –
எத்தைக் கண்டது என்னில் –

ஊன் திகழும் நேமி –
அழகிய வடிவைக் கொண்டு இருப்பதான திரு வாழி-என்னுதல்-
சத்ருக்களைக் கொன்று சத்ரு சரீரங்க ளிலேவிளங்கும் -என்னுதல் –
எம்பெருமான் திரு மேனியிலே விளங்கும் என்னுதல் –
வடிவார் சோதி வலத்துறையும் சுடராழி -திருப்பல்லாண்டு 2-

யொளி திகழும் சேவடியான்-
ஒளி திகழா நின்ற திருவடிகளையுமுடையவனாய்-

வான் திகழும் சோதி வடிவு –
வானிலே நித்ய  விபூதியிலே நிரவதிக தேஜோ ரூபமான வடிவு அழகு யுடையவனானவனைக் காணப் பெற்றேன் –

அன்றிக்கே –
வான் திகழும் என்றது –
மேகத்தோடு ஒக்கத் திகழா நின்றுள்ள வடிவை என்றதாக வுமாம் –
வானிலே திகழும் சோதி வடிவு கிடீர் இங்கே இருக்கக் காணப் பெற்றது –

——————————————————————————-

அவ் வடிவு அழகைக் கண்ட மாத்திரமேயோ –
அவ் வடிவிற்குத் தகுதியான நாச்சியாரையும் கூட காணப் பெற்றேன் -என்கிறார் –
கீழ் -நாராயணனைக் கண்டார் -என்றார் –
இப்போது  ஸ்ரீ லஷமீ சநாதானாகக் காணப் பெற்றேன் -என்கிறார் –
வெறும் நாராயணனை அல்ல –
திரு நாரணனைக் காணப் பெற்றேன் -என்கிறார் –
பிரபையோடே காணப் பெற்றேன் –

வடிக்கோல வாள் நெடுங்கண் மா மலராள் செவ்விப்
படிக்கோலம் கண்டு அகலாள் பன்னாள்-அடிக்கோலி
ஞாலத்தாள் பின்னும் நலம் புரிந்தது என் கொலோ
கோலத்தால் இல்லை குறை–82-

பதவுரை

வடி கோலம்–வடிக் கட்டின அழகை யுடையவளும்
வாள நெடுங்கண்–ஒளி பொருந்திய நீண்ட திருக்கண்களை யுடையவளும்
மாமலராள்–சிறந்த தாமரை மலரில் பிறந்தவளுமான பெரிய பிராட்டியார்
செல்வி படிகோலம்–சிறப்புற்ற (அவனது) திருமேனியின் அழகை கண்ணால் அநுபவித்து
பல் நாள் அகலாள்–க்ஷண காலமும் விட்டுப் பிரியாமல் எப்போதும் கூடியே யிருக்கின்றாள்
பின்னும்–எம்பெருமானுடைய அழகிலே பிராட்டி ஆழங்காற்பட்டு அழுந்துகிற படியைக் கண்டுவைத்தும்
ஞாலத்தாள்–பூமிப்பிராட்டியானவள்
அடிக்கோலி–பாரித்துக்கொண்டு
நலம் புரிந்தது என் கொலோ–அப்பெருமானிடத்தில் ஆசையைப் பெருக்கிக் கொண்டிருப்பது என்னோ
கோலத்தால் குறை இல்லை–(எத்தனை பேர்கள் அநுபவித்தாலும் ஏற்றியிருக்கும்படியான அழகினால் குறையில்லையன்றோ.
அழகு அ ஆசைப்பட நேர்கின்றது (அளவற்றிருப்பதானல் பலரும் எம்பெருமானிடத்தில்)

வடிக்கோலம்-
கோலம் தனை வடித்து –
அதில் நன்றான அம்சம் ஆய்த்து
இங்குத்தை அழகாய் இருப்பது –

இதில் ருஷீஷாம்சமான கோலமுடையார் யாரோ -என்று அருளிச் செய்வர் நஞ்சீயர் –
ஜகத்தில் அழகு எல்லாம் கோதாகப் பிறந்தவன் அழகு இங்குத்தைக் கோது –

வாள் நெடுங்கண் மா மலராள்-
இப்படிப்பட்ட வடிவு அழகையும் ஒளியையும் யுடைத்தாய்ப் பரந்து இருந்துள்ள கண்களையும் யுடையளாய்
போக்யதைக வேஷையுமாய் யுள்ள பெரிய பிராட்டியார் ஆனவள் –

வாள் -ஒளி –
ஓர் ஆளும் ஒரு நோக்கும் நேரான கண்கள் –
போக்தாக்களுக்கு எல்லை காண முடியாமை –
த்ரைலோக்ய ராஜ்யம் சகலம் சீதாயா நாப் நுயாத் கலாம் -சுந்தர -16-14-
வாள் நெடுங்கண்  என்று வடிவிலே வாசி –

மா மலராள்-
பரிமளம் உபாதானம் ஆனவள் –
சௌகுமார்யத்தையும்
சௌகந்த்யத்தையும் சொல்லுகிறது –

செவ்விப் படிக்கோலம் கண்டு அகலாள் பன்னாள்-
எம்பெருமானுடைய செவ்வியே படியான கோலத்தைக் கண்டு ஒரு நாளும் விட மாட்டாதே வர்த்திக்கும் ஆய்த்து –

செவ்வி –
அப்போது அலருகிற பூப் போலே இருக்கை –

படிக் கோலம் –
ஸ்வா பாவிகமான கோலத்தைக் கண்டு –
அரும்பினை அலரை  -திருவாய் -7-10-1-என்றும்
சதைக ரூபரூபாய -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-2-1-என்றும்
சொல்லுகிறபடியே அவ் வடிவு அழகு தான் இருப்பது –

கண்டு அகலாள் பன்னாள்-
நித்ய அனுபவம் பண்ணா நிற்கச் செய்தேயும் —
இறையும் அகலகில்லேன்  –என்று ஷண காலமும் பிரிய சக்தி அன்றிக்கே இருக்கும் ஆய்த்து –
கண்டு பல நாளும் அனுபவியா நிற்கச் செய்தே அகல மாட்டாள் ஆய்த்து –
ஒரு தேவையாலே அகலாது இருக்கிறாளோ என்னில் -அன்று –
வைத்த கண் வாங்க மாட்டாமையும் –
கால் வாங்க மாட்டாமையும் –

அடிக்கோலி ஞாலத்தாள் –
ஸ்ரீ பூமிப் பிராட்டி யானவள் அவனை அனுபவிக்கையிலே அடிக்கோலி இழிந்தாள் ஆய்த்து –
அதாகிறது –
பெரிய பிராட்டியாருக்கு விஷயம் அவன் ஒருவனும் இறே
இவளுக்கு அனுபாவ்ய வஸ்து அச் சேர்த்தி யாகையாலே
அதுக்கு ஈடாக அகலப் பாரித்துக் கொண்டு இழிந்தாள் ஆய்த்து –
அவள் கண்ணுக்கு விஷயம் அவன் ஒருவனுமே –
இவளுக்கு விசிஷ்டமாக அவளோடு கூடினவன் என்று விஷய பூயஸ்தையாலே அடிக்கோலி -என்கிறது –

ஞாலத்தாள்-
ஷமையே வடிவானவன்  –

பின்னும் நலம் புரிந்தது என் கொலோ-
பெரிய பிராட்டியார் தண்ணீர் தண்ணீர் என்கிற விஷயம் என்று அறிந்த பின்பும் –
ஆழங்கால் என்று அறிந்தே கிடீர்
தன்னில் மிடுக்கானவன் அழுந்தப் புக்கால் கரையில் நிற்கிறவனுக்கு புகாதே போக வன்றோ வடுப்பது –
எல்லாரிலும் அளவுடையளான பெரிய பிராட்டியார் குமிழ் நீருண்ணும் விஷயமானால்
இவள் அகலப் போக அன்றோ அடுப்பது –
இங்கனே இருக்கச் செய்தே இவள் பின்னையும் மிக்க விருப்பத்தைப் பண்ணுகைக்கு ஹேது ஏதோ என்னில் –
ஹேது சொல்லுகிறது –
மேல் அறிந்தோம் இறே இதுக்கடி –

கோலத்தால் இல்லை குறை-
இருவர் கூடினால் பாத்தம் போராத படியான விஷயம் இன்றிக்கே
எல்லாரும் திரண்டு வந்து அனுபவியா நின்றாலும் எல்லை காண ஒண்ணாத படி
புக்கார் புக்காரை எல்லாம் கொண்டு முழுகும்படி அழகு குறைவற்று இருக்கும் இறே
கரையிலே நிற்பாரையும் இழுத்துக் கொள்ள வற்றான வடிவு அழகு இருக்கிறபடி

தருனௌ ரூப சம்பன்னௌ-ஆரண்ய -19-14-என்று
இலளோ –தன் பிரக்ருதியாலே கெட்டாள்-
நின்றார் நின்ற நிலைகளிலே அகப்படும் விஷயம் –
இதர விஷயங்கள் இருவருக்கு அனுபவிக்கப் போராமையாலே சீறு பாறு என்கிறது –
கிண்ணகத்திலே இழிவாரைப் போலே எல்லாரும் திரள அனுபவிக்க வேண்டும்படி பரப்பு யுண்டாகையாலே
இவ்விஷயத்தை அனுபவிப்பார்க்கு பிரியமே யுள்ளது –

——————————————————————

கீழே -74- பெரும் தமிழன் நல்லேன்   பெரிது -என்று தம்மை மதித்து அநந்தரம் கவி பாடுவதும் செய்தார் –
இங்கே நாச்சியாரும் அவனுமான சேர்த்தியை அனுசந்தித்துக் கூசி –
நாம் இவ் விஷயத்திலேயோ கவி பாட இழிவது –
என்ன சாஹசிகனோ  -என்று கீழ்ச் செய்த செயலுக்கு அனுதபிக்கிறார் –

அங்கு சர்வ விசஜாதீய வஸ்துவைப் பேசுகையாலே என்னோடு ஒப்பார் உண்டோ என்றார் –
இப்போது அவ் வஸ்து தன்னை ஸ்ரீ லஷமீ ச நாதமாக அனுசந்திக்கையாலே
அங்குத்தைக்கு விசத்ருசமாகச் சொன்னேன் -என்கிறார் –

பூவின் மேல் மாது வாழ் மார்பினாய் உன்னை என் சொல்லி யான் வாழ்த்துவனே -திருவாய் -3-1-6-

நல்லேன் பெரிது  -என்றார்
ஐஸ்வர் யத்தைக் கண்டு வெருவித்- தீயேன் என்கிறார் –

பேசிற்றும் தப்பாய்
பலம் ஆசைப்பட்டதும் தப்பாய்த்து –

குறையாக வெம் சொற்கள் கூறினேன் கூறி
மறை யாங்கு என உரைத்த மாலை -இறையேனும்
ஈயுங்கொல் என்றே இருந்தேன் எனைப்பகலும்
மாயன் கண் சென்ற வரம் -83-

பதவுரை

மறை–வேதங்களும்
ஆங்கு என உரைத்த மாலை–ப்ரத்யக்ஷித்துச் சொல்ல மாட்டாமல் பரோக்ஷமாகவே சொன்ன எம்பெருமான (அல்பஜ்ஞனான நான்)
மாயன் கண் சென்ற வரம்–அப்பெருமானிடத்தில் தங்கியிருக்கின்ற அநுக்ரஹமானது.
இறையேனும்–ஸ்வல்பமான பலனையாகிலும்
குறை ஆக–குறையுண்டாம்படி
வெம் சொற்கள்–செவிசுடும்படியான சொற்களால்
கூறினேன்–பேசினேன்
கூறி–அப்படி பேசினது மல்லாமல்
ஈயும் கொல் என்றே–(நமக்குக்) கொடுக்குமோ என்று (பலனையும் எதிர்பார்த்துக் கொண்டு)
எனைப் பகலும்–வெகுகாலமாக
இருந்தேன்–இருக்கின்றேன்.

குறையாக வெம் சொற்கள் கூறினேன் கூறி-
இது இறே நான் செய்தபடி என்கிறார் –
குறையாகக் கூறினேன் –
வெஞ்சொற்கள் கூறினேன் –
பரிபூர்ண விஷயத்தை அபரிபூர்ணமாகச் சொன்னேன் –
அதுக்கு மேல் கேட்டார் செவி கன்றும்படி வெட்டிதாகவும் சொன்னேன் –

குறையாக –
கடலைக் கண்டான் என்னும் காட்டில் கரை கண்டான் ஆகான் இறே –
அத்தலையில் பெருமையாலும் -இத்தலையில் சிறுமையாலும் குறை-

வெம் சொற்கள் –
அவன் திரு உள்ளம் நோம்படி யாக வார்த்தை சொன்னேன் –

கூறினேன் –
காணப் பெறாத விஷயத்தைக் கிடீர் பேசித்து பரிச்சேதித்தேன்-

கூறி –
இங்கனே செய்தாலும் இறே –
அநந்தரம்
சைதன்ய க்ருத்யமாய் இருப்பதொரு அனுதாபம் ஆகிலும் விளையப் பெற்றதாகில் –
இது தன்னை கர்த்தவ்யம் என்றும் இருந்தேன் –

மறை யாங்கு என உரைத்த மாலை –
இவை  எல்லாத்தாலும் வருவது ஓன்று இல்லை இறே –
சொல்லப் பட்டவன் தான் மறப்பான் ஒருவனாகப் பெற்றதாகில்
வாய் திறந்து ஏதேனும் ஒன்றைச் சொன்னான் ஆகில் –
அது வேத சப்தமாம்படி இருப்பான் ஒரு சர்வேஸ்வரன் ஆய்த்து
வாக் விவ்ருதாஸ் ச வேதா -முண்டகம் -2-1-4-என்று சொல்லப் படுகிற சர்வாதிகனை –

அங்கன் அன்றிக்கே –
அர்த்தங்களை யுள்ளபடி சொல்லப் போந்த வேதங்களும் அது என்று சொல்லும் அத்தனை போக்கி
இது என்று கொண்டு  பரிச்சேதித்துச் சொல்ல மாட்டாத பிரபாவத்தை யுடைய சர்வேஸ்வரனை –

வேதங்கள் ஆங்கு என்று சொல்லிப் போனவனை என்றுமாம் –

இறையேனும் ஈயுங்கொல் என்றே இருந்தேன் –
நான் பாடின கவி பாட்டுக்குத் தரமாக இவற்றால் ஆவது ஓன்று இல்லை இறே
ஆகிலும் ஏதேனும் ஒன்றைப் பரிசிலாக எனக்குத் தாராது ஒழியுமோ என்று இருந்தேன் –
விசத்ருசமாகச் சொன்ன அளவேயோ —
ஓன்று சொன்னேனாய் அதுக்குப் பிரத்யுபகாரமும் வேணும் என்று இருந்தேன் –

எனைப் பகலும்-
அநேக நாள் எல்லாம் –

மாயன் கண் சென்ற வரம் –
ஆச்சர்ய பூதனான அவன் பக்கல் யுண்டான பிரசாதம் –

இறையேனும் ஈயுங்கொல் என்றே இருந்தேன் –
பண்டு கவி பாடினார்க்கு அவன் கொடுத்து வருமத்தைக் கொண்டு
நம் பக்கலிலும் ஏதேனும் செய்யானோ என்று இருந்தேன் –

இவர் பின்னை ஒரு பிரயோஜனத்துக்காக கவி பாடுவாரோ என்னில்
இக் கவி பாட்டுக்காக அவன் ஒரு விசேஷ கடாஷம் பண்ணும் -அதுவும் ஸ்வரூபம் என்று இருப்பரே

சென்ற வரம் –
வரத்தை இறையேனும் ஈயுங்கொல் என்றே இருந்தேன் -என்கிறார் -என்றுமாம் –

—————————————————————-

மற்றவை எல்லாம் செய்தபடி செய்ய ரசிக்கும் விஷயம் இதுவே கிடி கோள் என்கிறார் –
அவனை விட்டு வர ஒண்ணாமைக்கு ஹேது இருக்கிற படி –
ஒரு ஆஸ்ரிதனுக்குத் தன்னைக் கொடுத்த படி கண்டவாறே
வெருவுதல் தீர்ந்து நம்மது என்று அனுபவிக்கிறார் –

வரம் கருதி தன்னை வணங்காத வன்மை
உரம் கருது மூர்க்கத்தவனை -நரம் கலந்த
சிங்கமாய்க் கீண்ட திருவன் அடி இணையே
அங்கண் மா ஞாலத்து அமுது–84-

பதவுரை

வரம் கருதி–(தேவர்களிடத்துப் பெற்ற) வரத்தை மதித்து
தன்னை வணங்காத–(ஸர்வேச்வரனான) தன்னை வணங்காதிருந்தவனும்
வன்மை உரம் கருதி–(தன்னுடைய) மன வலிமையையும் நினைத்து
மூர்க்க தவனை–மூர்க்கத்தனம் கொண்டிருந்தவனுமான இரணியனை
நரம் கலந்த சிங்கம் ஆய்கீண்ட–நரசிங்க வுருக்கொண்டு பிளந்தொழிந்த
திருவன்–அழகனுடைய
அடி இணையே-உபய பாதமே
அம் கண் மா ஞாலத்து–அழகிய இடமுடைத் தான இம்மாநிலத்தில்
அமுது–(போக்யமான) அம்ருதமாகும்.

வரம் கருதி-
தேவதைகள் பக்கல் தான் பெற்ற வரபலத்தை புத்தி பண்ணி –
ஓட்டை ஓடத்தை விஸ்வசிக்குமா போலே –

தன்னை வணங்காத வன்மை-
அத தேவதைகளுக்கும் அடியாய்
சர்வேஸ்வரனான தன்னை வணங்கக் கடவன் அல்லன் என்னும் அபிசந்தியை யுடையனான
த்விதா பஜ்யேயம் அப்யேவம் ந நமேயந்து கஸ்யசித் -யுத்த -36-11-

உரம் கருதும்-
தன்னுடைய வெட்டிமையால் வந்த மிடுக்கை புத்தி பண்ணி இருக்கிற

ஊக்கத்தவனை –
வரபல புஜ பலங்களை யுடையனாகையாலே வந்த மேணாணிப்பை யுடையவனை —
துரபிமானத்தை யுடையவனை –
ஊக்கம் என்று நிலை

மூர்க்கத்தவனை –
என்ற பாடமான போது மௌர்க்யத்தை யுடையவனை –

நரம் கலந்த சிங்கமாய்க் கீண்ட –
இதுக்கு முன்பு யுள்ளது ஒன்றாலும் படாது இருப்பேன் என்று வேண்டிக் கொள்ள –
முன்பு இல்லாத நரத்வ சிம்ஹத்வங்களைக்  கொண்டு தோற்றி அவனை நிரசித்து அருளின பெருமை –
இரண்டையும் பிணைத்துக் கொண்டு தோற்றுகை –

நரம் கலந்த சிங்கம் –
சேர்ப்பாலும்   கண்ட சக்கரையும் சேர்ந்தாப் போலே இருக்கை –
வெறும் மனிச்சாதல் -சிம்ஹமாதல் காணிலும் உபேஷிக்க வேண்டி இருக்கை –

திருவன் –
விருத்தமான வடிவு அழகு இரண்டையும் சேர்ந்த பின்பும் காந்தி மிகைத்துத் தோற்றின படி –
ஸ்ரீ மத்தாய் இருக்கை –
அழகியதாய் இருக்கை
அழகியான்  தானே  அரி யுருவன் தானே -நான்முகன் -22-
நார சிம்ஹவபு ஸ்ரீ மான் -என்னும்படியே –

அடி இணையே-
அவனுடைய ஒன்றுக்கு ஓன்று ஒப்பான திருவடிகளே –

அங்கண் மா ஞாலத்து அமுது–
அழகிய இடத்தை யுடைத்தான  மஹா ப்ருதிவியிலே புஜிக்கப் பெற்ற அம்ருதம் -என்கிறார் –
ஒரு தேச விசேஷத்திலே போனால் புஜிக்கத் தக்க  அம்ருதம் சம்சாரத்திலே மிகவும் போக்யம் என்கிறார் –

திருவன் –
பிரஜைகள் யுடைய விரோதி போக்குவது தாய்க்காகவே என்றுமாம் –
பர்த்தாரம் பரிஷச்வஜே -ஆரண்ய -30-39-

அங்கண் மா ஞாலம் –
திரு அவதாரத்துக்கு ஈடான நிலம் –

——————————————————–

அவனுடைய ரச்யதையை அனுசந்தித்தவாறே அமுதன்ன சொன்மாலை ஏத்தித் தொழுதேன் -என்கிறார்-

அமுதென்றும் தேன் என்றும் ஆழியான் என்றும்
அமுது அன்று கொண்டு உகந்தான் என்றும் -அமுதன்ன
சொன்மாலை ஏத்தித் தொழுதேன் சொலப்பட்ட
நன்மாலை ஏத்தி நவின்று –85-

பதவுரை

அமுது என்றும்–அமிருதம் போன்றவனென்றும்
தேன் என்றும்–தேன் போன்றவனென்றும்
ஆழியான் என்றும்–திருவாழியை யுடையவனென்றும்
அன்று அமுது கொண்டு உகந்தான் என்றும்–முற்காலத்தில் (கடல் கடைந்து) அமுதமெடுத்தளித்து மகிழ்ந்தவனென்றும்
சொல்லப்பட்ட–சொல்லப்பட்டிருக்கின்ற
நல் மாலை–விலக்ஷணனான எம்பெருமானை
அமுது அன்ன சொல் மாலை–அம்ருதம் போன்ற இப்பாசுரங்களினால்
ஏத்தி ஏத்தி நவின்று தொழுதேன்–பலகாலும் துதித்துச் சொல்லி வணங்கினேன்.

அமுதென்றும் –
ரசோ வை ச -தை ஆன -7-1-என்றும் –

தேன் என்றும் –
விஷ்ணோ பதே பரமே மத்வ உத்ச -ருக் மண்டலம் -1-21-154-என்றும் –

ஆழியான் என்றும்-
போக்யனுமாய் விரோதி நிரசன ஸ்வ பாவனுமாய் இருக்கை –

அமுதென்றும் இத்யாதி –
அம்ருதத்தோடும் தேனோடும் பர்யாய சப்தம் போலே காணும் ஆழியான் -என்கை-

அமுது அன்று கொண்டு உகந்தான் என்றும் –
அஸூர பய பீதராய் தேவர்கள் சரணம் புக்க அன்று கடலைக் கடைந்து
பிரயோஜனாந்தர பரர்காக அம்ருதத்தைக் கொண்டு கொடுத்தவன்
தன்னை வேண்டா உப்புச் சாறு வேணும் என்றவர்களுக்கு -அது தேடிக் கொடுக்குமவன் –

உகந்தான் –
தன்னை உகந்திலர் என்று முனியாதே  
ஏதேனுமாக நம்மை அர்த்திப்பதே  என்று அதுக்குத் தான் உகக்கை –
உதாரா  சர்வ ஏவை தே-ஸ்ரீ கீதை -7-18-

அமுதன்ன சொன் மாலை ஏத்தித் தொழுதேன் –
அவனையும் தேவர்கள் அம்ருதத்தையும் ஒழிய இவருடைய அம்ருதம் -அவனைப் பேசும் சொல்லு –

சொன் மாலை –
அவை -எம்பெருமானும் அமுதமும் -கோதாம்படியான சொல்லு –
எல்லா போக்யதையும் தன்னுடைய போக்யதையிலே பொதிந்து இருக்கையாலே அவனை அமுது என்கிறது –
இது அவன் தன்னையும் பொதிந்து கொண்டு இருக்கையாலே
அம்ருதம் போலே நிரதிசய போக்யமாய் இருந்துள்ள சப்த சந்தர்ப்பங்களாலே புகழ்ந்து
திருவடிகளிலே நிர்மமனாய் விழுந்தேன் –

ஏத்தித் தொழுதேன் –
அறிந்து கவி பாடினேன் அல்லேன் –
ஏத்தித் தொழவே எம்பெருமான் அபிசந்தியாலே கவி யாய்த்து –

சொலப்பட்ட நன்மாலை ஏத்தி நவின்று –
யஸ்மின் அக்ருத்ரிமகிராம் கதிரேகண்டா-என்று
பிரமாணங்களாலே சொல்லப் பட்ட நன் மாலை –
விலஷணமான எம்பெருமானை சர்வ சப்தங்களுக்கும் வாச்யனானவனை
வசஸாம் வாச்யமுத்தமம் -ஜிதந்தே -9-

ஏத்தி நவின்று –
மிகவும் ஆதரித்து ஏத்தினேன் –
ஆதராதிசயம் தோற்றப் புகழ்ந்து கொண்டு சொல்லி நன் மாலை ஏத்தித் தொழுதேன் –

—————————————————————–

அவன் தானே காட்டக் கண்ட என்னோடு ஒப்பர்களோ சாதன அனுஷ்டானம் பண்ணிக் கண்டவர்கள் -என்கிறார் –
சமாதிக தரித்ரமான  வஸ்துவை ப்ராபிக்கை -சமாதிக தரித்ரமான உபாயத்தாலே யாக வேண்டாவோ –
பண்டு ஆஸ்ரயித்தவர்கள் ஒன்றும் பெற்றிலர்கள் நான் பெற்ற பேற்றைப் பார்க்க-என்று கருத்து-

நவின்றுரைத்த நாவலர்கள் நாண் மலர் கொண்டு ஆங்கே
பயின்றதனால் பெற்ற பயன் என் கொல் -பயின்றார் தம்
மெய்த் தவத்தால் காண்பரிய மேக மணிவண்ணனை யான்
எத்த்வத்தால் காண்பன் கொல் இன்று –86-

பதவுரை

நவின்று உரைத்த–(அவனது திரு நாமங்களைப்) பலகாலுஞ் சொல்லுகின்ற
நாவலர்கள்–கவிகள்
நாள் மலர் கொண்டு–அப்போதலர்ந்த புஷ்பங்களைக் கொண்டு
ஆங்கே பயின்று–அந்த ஸர்வேச்வரனிடத்தில் நெருங்கி யாச்ரயித்து
அதனால் பெற்ற பயன் என்சொல்–அதனால் (அவர்கள்) பெற்ற பிரயோஜ நம் என்னோ
(எம்பெருமான் தானே நிர்ஹேதுகமாக அநுக்ரஹித்தாலன்றி, இவர்களுடைய ஸ்வப்ரயத்நத்தால் என்ன பேறு பெறமுடியும் என்கை.)
பயின்றார் தம்–நெருங்கி ஸாதநா நுஷ்டாநம் பண்ணுமவர்களுடைய
மெய் தவத்தால்–சரீரம் நொந்து செய்கிற தபஸ்ஸினால்
காண்பு அரிய–காணமுடியாதவனும்
மேகம் மணி வண்ணனை–மேகத்தையும் நீல மணியையும் போன்றநிறத்தை யுடையனுமான எம்பெருமானை
யான்–அடியேன்
இன்று–இப்போது
எத் தவத்தால் கொல் காண்பன்–எந்தத் தபஸ்ஸினால் காணப்பெற்றேன்?
(அவனே காட்டிக்கொடுக்கக் கண்டேனேயொழிய, ஒரு தவஞ்செய்து கண்டவனல்லேனென்கை)

நவின்றுரைத்து-
மிகவும் ஆதரித்துத் திரு நாமங்களைப் பலகால் சொல்லி –

நாவலர்கள்-
பிரயோஜனாந்தர பரரான ப்ரஹ்மாதிகள்-

நாண் மலர் கொண்டு-
புஷ்பாத் யுபகரணங்களைக் கொண்டு -செவ்விப் பூக்களைக் கொண்டு –

ஆங்கே பயின்றதனால் பெற்ற பயன் என் கொல் –
அவ்விடத்தே ஆஸ்ரயித்தவர்கள் என்ன பிரயோஜனம் பெற்றார்கள் –
பெற்றார் தான் சாதன அனுஷ்டானம் பண்ணிப் பெறும் பேறு என்ன பேறு –

பயின்றார் தம்-
இப்படி நெருங்கி  சாதன  அனுஷ்டானம் பண்ணினார் யுடைய –
பயின்றார் ஆகிறார் பயின்றவர்கள் -ஆஸ்ரயிக்கிறவர்கள் –

மெய்த் தவத்தால் –
ஸ்வ யத்னத்தால் உடம்பு நோவப்  பண்ணின தபஸ் ஸால்-

காண்பரிய மேக மணி வண்ணனை-
ஸ்வ யத்னத்தால் காண்பரிய மேக– மேகம் போலேயும்
நீல மணி போலேயும் ஸ்ரமஹரமான வடிவை யுடையவனை –

யான் எத் த்வத்தால் காண்பன் கொல் இன்று-
அதி ஷூத்ரனான நான் நின்று என்ன தபஸ் ஸூ பண்ணிக் கண்டேன் –
அவன் காட்ட கண்டேன் இத்தனை இறே
ஒரு தபஸ்ஸூ பண்ணாதே நிர்ஹேதுகமாகப் பெற்றேன் என்கிறார்
யாவர் நிகர் அகல் வானத்தே -திருவாய் -4-5-8-
வானக்  கோனைக் கவி சொல்ல வல்லேற்கு இனி மாறுண்டே-திருவாய் -4-5-9-

காண்பன் கொல் இன்று –
நேற்று நினைக்கில் அன்றோ இன்று அடி அறியலாவது  –

—————————————————————-

உம்முடைய பேற்றுக்கு ஏற்றம் என் என்னில் –
நான் கர்ப்ப காலமே தொடங்கி அடிமைச் சுவடோடு கூட
அவன் படியை அனுபவித்துப் போருகிறேன் -என்கிறார் –
இப் பேறு இன்று பெற்றேன் அல்லேன்  என்கிறார்-

இன்றா அறிகின்றேன் அல்லேன் இரு நிலத்தைச்
சென்று ஆங்கு அளந்த திருவடியை -அன்று
கருக் கோட்டியுள் கிடந்தது கை தொழுதேன் கண்டேன்
திருக் கோட்டி எந்தை திறம் -87-

பதவுரை

அன்று கரு கோட்டியுன் கிடந்து–முன்பு கர்ப்ப ஸ்தானத்துக்குள்ளே கிடந்து
திருக்கோட்டி எந்தை திறம்–திருக்கோட்டியூர்ப் பெருமானுடைய தன்மைகளை
கண்டேன்–கண்டு அநுபவிக்கப் பெற்றேன்
கை தொழுதேன்–கை தொழவும் பெற்றேன், (ஆனபின்பு)
இரு நிலத்தை–விசாலமான இந்நிலத்தை
ஆங்கு சென்று அளந்த திரு அடியை–அங்கங்கே தானே வியாபித்து முழுதும் அளந்து கொண்ட திருவடியை
இன்று ஆ அறிகின்றேன் அல்லேன்–இன்றைக்குத்தான் அறிந்து கொண்டே னென்பதில்லை. (கர்ப்பவாஸமே தொடங்கி அறிவேன்)

இன்றா அறிகின்றேன் அல்லேன் –
இன்றாக அறிகிறேனோ –
இப்போது அறியத் தொடங்கினேன் அல்லேன் –
பண்டே அவனுடைய பிரசாதம் யுடையேன் –

இரு நிலத்தைச் சென்று ஆங்கு அளந்த திருவடியை –
இம் மஹா ப்ருதிவியை ஒருவர் இரக்க அன்றியே தானே சென்று அளந்த திருவடியை –
அவன் அளக்கிற இடத்திலே பூமி சென்றதோ –
பூமி கிடந்த இடம் எல்லாம் தான் சென்று அளந்தான் அத்தனை அன்றோ –

அன்று-
பண்டே சாதன அனுஷ்டானத்துக்கு யோக்யதையும் இல்லாத அன்று –

கருக் கோட்டியுள் கிடந்தது கை தொழுதேன் கண்டேன்-
கர்ப்ப ஸ்தானத்திலே கிடக்கச் செய்த கண்டேன் –

கண்டேன் கை தொழுதேன் –
அனுபவத்துக்குப் போக்கு வீடாகக் கை தொழுகை முதலான அடிமைத் தொழிலும் அன்வயிக்கப் பெற்றேன் –
அறியாக் காலத்துள்ளே -அடிமைக் கண் அன்பு செய்வித்து -திருவாய் -2-3-3-
கர்ப்ப பூதாஸ் தபோத நா -ஆரண்ய -1-21-
ஜாயமா நம் ஹி புருஷம் யம் பச்யேத் மது ஸூதந சாத்விகஸ் சாது விஜ்ஞேய ச வை மோஷார்த்த சிந்தக -பார -சாந்தி -358-73-

திருக் கோட்டி எந்தை –
திருக் கோட்டியூரிலே நின்று என்னுடைய கர்ப்ப ஸ்தானத்தில் தய நீயதை கண்டு விஷயீ கரித்தது -என்கை-

திருக் கோட்டி எந்தை –
ஸ்ரீ வைகுண்டத்தில் மேன்மை மாத்திரம் கண்டேனோ -முதல் காட்ஷியிலே   பூரணமாகக் கண்டேன் –

எந்தை திறம் –
என் ஸ்வாமி இடையாட்டம் –

—————————————————————————————

அவன் தானே விஷயீ கரித்தாற்கு அவனைக் கிடைக்கும் அத்தனை அல்லது
வேறு சிலருக்குக் கிடையாது என்கிறது-

திறம்பிற்று இனி அறிந்தேன் தென்னரங்கத்து எந்தை
திறம்பா வழி சென்றார்க்கு அல்லால் -திறம்பாச்
செடி நரகை நீக்கித் தான் செல்வதன் முன் வானோர்
கடி நகர வாசற் கதவு–88-

பதவுரை

தென் அரங்கத்து எந்தை–தென்னரங்கத்தில் பள்ளிகொண்டிருக்கு மெம்பெருமானுடைய
திறம்பா வழி–பிசகாத மார்க்கத்திலே (அவனே உபாயோபேயம் என்னும் நெறியிலே)
சென்றார்க்கு அல்லால்–நிற்பவர்களுக்குத் தவிர (மற்றை யோர்க்கு)
தாம்–தாமாகவே
திறம்பா செடி நரகை நீக்கி–அறுக்க முடியாத புதர் போன்ற ஸம்ஸார பந்தங்களை அறுத்துக் கொண்டு
செல்வதன் முன்–போவதற்குள்ளே
வானோர்–நித்ய ஸூரிகளுடையதும்
கடி–அரணை யுடையதானதுமான
நகரம்–வைகுந்தமா நகரத்தினுடைய
வாசல் கதவு–வாசற் கதவானது
திறம் பிற்று–மூடிக்கொண்டதாகும்
இனி அறிந்தேன்–(இதை) இப்போது அறிந்து கொண்டேன்

திறம்பிற்று –
ஸ்வ யத்னத்தால் பெறுவோம் என்றவர்களுக்குத் தப்பிற்று –

இனி அறிந்தேன் –
இப்போது அறிந்தேன் –

தென்னரங்கத்து எந்தை-
அர்ஜூனனுக்கு மாமேகம் என்று உன்னால் சாதிக்கப்படும் அசேதனமான க்ரியா கலாபங்களை விட்டு
பரம சேதனனாய் உன்னைப் பெறுகைக்கு  யத்னம் பண்ணுகிற சித்த ஸ்வரூபனான என்னையே பற்று -என்றான் –
அது ஒருவனுக்கு ஒரு காலத்திலே என்னாத படி சர்வர்க்கும் சர்வ காலத்திலும் –
மாமேகம் -என்று இருக்கிறவர் -பெரிய பெருமாள் –

மாம் -என்ற சௌலப்யத்திலும்-இங்கு சௌலப்ய காஷ்டையைச் சொல்லுகிறது –
மாம் -என்ற சௌலப்யத்தை -வென்று ஓட வைத்த -புடம் போட்ட -மாம் –

செம்மை யுடைய திருவரங்கர் -நாச் -11-10-
செங்கோலுடைய திருவரங்கச் செல்வனார் -நாச் -11-3-
அவ்விடம் பெறுவார்க்கும் இவர் நினைப்பிட வேணும்  –

திறம்பா வழி சென்றார்க்கு அல்லால் –
அவனையே யுபாயமாகப் பற்றினர்வர்களுக்கு அல்லால் –

திறம்பா வழி-
ஏக பதத்தால் நிர்ணயித்த வழி –
பர வியூஹ  விபவங்களுக்கு நித்ய முக்தர் முக்த ப்ராயர் பாக்யவான்கள் பக்கலிலே 
கண்ணழிவு  சொல்லி ஆஸ்ரயணம் தவிரலாம் –
அர்ச்சாவதாரத்திலே ஆஸ்ரயணத்துக்கு அங்கனே கண் அழிவு இல்லை என்று கருத்து –
தேவதாந்த்ரங்கள் என்றுமாம் –

திறம்பாச் செடி நரகை –
தானே தூறு மண்டப் பண்ணின சம்சாரத்தை –

திறம்பா –
அனுபவிக்க அனுபவிக்க மாளாதே இருக்கை-

நீக்கித் தான் செல்வதன் முன் –
இத்தைக் கழித்து  போமவர்களுக்கு -இப்படி செல்வதற்கு முன்பே –

தான் செல்வதன் முன் –
இஸ் சர்வஜ்ஞன் சர்வ சக்தி இவ்வெளிய பிரதி பந்தகங்களைக் கடந்து செல்லாது ஒழிகிறானே-
தானே சம்சாரத்தை நீக்கிச் செல்லுகைக்கு இவனுக்குக் காலம் போராது-
பாபம் பண்ணின காலம் அநாதி யாகையாலே –

வானோர் கடி நகர வாசற் கதவு-
நித்ய ஸூரிகளுடைய அரணை யுடைத்தாய் இருந்துள்ள கலங்கா  பெரு நகரில்  வாசல் கதவு –

அரண் -என்று காவலாய் –
அத்தால்
ஸ்வ யத்ன சாத்தியம் அல்லாத வான் -என்றபடி
நயாமி பரமாம் கதிம் —
அநே நைவ வஹி –
அப்ரதிஷேதம் கொண்டு பெற பெற மாட்டாதே ஸ்வரூபத்தை அழித்துக் கொண்டு பேற்றை இழப்பதே –

கடி நகரம் –
கடி என்று பரிமளமாய்-போக்யதை யாகவு மாம் –
ஒளியை யுடைத்தான நகரம் என்றுமாம் –

இது திறம்பிற்று -இனி அறிந்தேன் -தப்பிற்று  என்னும் இடம் அறிந்தேன் –
அவனாலே அவனைப் பெறுதல் 
அவனாலும் தன்னாலுமாக அவனை இழத்தல் -த
ன்னாலே அவனை இழத்தல் –
பிரதிகூலராய் இழப்பாரும்
அனுகூலர் என்று பேரிட்டு கொண்டு பிரதிகூலராய் இழப்பாரும்
ஆக இழக்கை இரண்டு விதம் –

—————————————————————-

நீர் இப்படிச் சொல்ல நம்மையே பற்றினாருக்கு உதவினோமோ என்ன -செய்திலையோ -என்கிறார் –
இசைந்தாருக்குச் கர்மம் செய்யும்படி சொல்லுகிறார் –
பிரதிகூல நிரசனம் பண்ணும் படியையும் ஆஸ்ரித கார்யம் செய்யும் படியையும் சொல்லுகிறார் —

கதவிக் கதஞ்சிறந்த கஞ்சனை முன் காய்ந்து
அதவிப் போர் யானை ஒசித்துப -பதவியாய்
பாணியால் நீரேற்றுப பண்டு ஒரு நாள் மாவலியை
மாணியாய் கொண்டிலையே மண்–89-

பதவுரை

முன்–முற்காலத்தில்
கதம் சிறந்த–கோபம் மிகுந்த
கஞ்சனை–கம்ஸனை
கதவி காய்ந்து–கோபித்து முடித்து
போர் யானை–போர் செய்வதாக எதிர்த்து வந்த குவலயாபீடமென்னும் யானையை
ஒசித்து–கொம்பு முறித்து
அதவி–கொன்று,
பண்டு ஒரு கால்–முன்னொரு காலத்தில்
பதவியாய்–நீர்மையை யுடையனாயக்கொண்டு
மாணி ஆய்–பிரமசாரியாகி
மாவலியை–மஹாபலியினிடத்திலே
பாணியால்–கையினாலே
நீர் ஏற்று–தானம் வாங்கி
மண் கொண்டிலையே–பூமியைப் பெற்றாயல்லையோ?

கதவிக் கதஞ்சிறந்த கஞ்சனை முன் காய்ந்து-
சீற்றத்தை யுடைய கம்சனை -தலை மயிரைப் பற்றி முன்னே முடித்து என்னவுமாம் –

கதவி –
நெருப்புக் கதுவித்து என்னுமா போலே –

முன் காய்ந்து –
அவன் நினைத்தவற்றை அவன் தன்னோடு போம்படி பண்ணி -அன்றிக்கே
கதவி -கோபித்து
கதம் சிறந்து -என்று அச் சினம் தானே அழகியதாய் இருக்கை என்றுமாம் –

அதவிப் போர் யானை ஒசித்துப –
ஆனை வ்யாபரியாத படிக்கு ஈடாக அடர்த்துக் கொம்பை ஒசித்து –
எற்றுவது-ஓட்டுவதாய் -இளைக்கப் பண்ணிக் கொம்பை வருத்தமற வாங்குகை-
இது தேவகியாருக்கும் ஸ்ரீ வஸூ தேவருக்கும் உபகரித்தபடி –

பதவியாய்-
பதவியையாய்-நீர்மையை யுடையையாய் –
அம்மிடுக்கை யுடைய நீ குணம் காண்கையாலே நீர்மையை யுடையையாய் -அன்றிக்கே –
கம்சனைக் கொன்றாப் போலே மூலை யடி அன்றிக்கே வழிபாடுடனே -என்றுமாம் –

பாணியால் –
கொடுத்து வளர்ந்த கையாலே –

நீரேற்றுப-
தன்னத்தைப் பெறாப் பேறாகக் கொள்வதே –
பண்டு ஒரு நாள் மாவலியை மாணியாய் கொண்டிலையே மண்
ஒரு கால் -என்றும் பாடம்
ஐஸ்வர் யம் தோற்றக் கொண்டாயோ -அர்த்தித்வம் தோற்ற -மாணியாய் அன்றோ கொண்டது –

மாணியாய் –
இரப்பிலே தகண் ஏறின படி -ஸ்ரீ வைகுண்டமே தொடங்கி இரப்பிலே மநோ ரதித்தான் –
பாணியால் நீர் ஏற்றுப் பண்டு ஒரு நாள் மாவலியை மாணியாய் கொண்டிலையே மண்-
கொடுத்து வளர்ந்த கையாலே -உதக ஜலத்தை ஏற்று வாங்கி –
முன்பு ஒரு காலத்திலே கொடுக்கையில் தீஷித்து இருந்த மஹா பலியை
இரப்பிலே தகண் ஏறின ப்ரஹ்ம சாரியாய் கொண்டு பூமியை அவன் பக்கல் நின்றும் வாங்கிக் கொண்டிலையோ –
உன்னை ஆஸ்ரயித்த இந்த்ரன் விரோதியைப் போக்கிக் கார்யம் செய்திலையோ -என்றபடி –

—————————————————————————————-

கம்சனைக் கொன்றோம் -ஆனையைக் கொன்றோம் -பூமியை அளந்தோம் -என்று
நம்முடைய செயல்களையே சொல்லும் இத்தனையோ –
உமக்குப் பெற வேண்டுவது சொல்லீர் என்ன –
எல்லா புருஷார்த்தங்களையும் அனுபவித்தேன் அன்றோ என்கிறார் –

மண்ணுலகம் ஆளேனே வானவர்க்கும் வானவனாய்
விண்ணுலகம் தன்னகத்து மேவேனே -நண்ணித்
திருமாலை செங்கண் நெடியானை எங்கள்
பெருமானைக் கை தொழுத பின்-90-

பதவுரை

திருமாலை–பிராட்டியினடத்தில் வியாமோஹமுடவனும்
செம் கண்–செந்தாமரை போன்ற திருக்கண்களை யுடையவனும்
நெடியானை–ஸர்வேச்வரனுமான
எங்கள் பெருமானை–எம்பெருமானை
நண்ணி–கிட்டி
கை தொழுத பின்–அஞ்ஜலி பண்ணி ஆச்ரயித்த பின்பு
மண் உலகம் ஆளேளே–இவ்விபூதியை நானிட்டவழக்காக நிர்வஹிக்கமாட்டேனோ?
வானவர்க்கும் வானவன் ஆய்–தேவாதிதேவனாய்க் கொண்டு
விண் உலகம் தன் அகத்து–நித்ய விபூதியிலே
மேவேனே–நித்யாநந்த மநுபவிக்க மாட்டேனோ?

மண்ணுலகம் ஆளேனே-
ஓரடி வர நின்றால் பூமியை ஆளுகை எனக்கு ஒரு பணியோ–
அதுவும் பெற்றேனே அன்றோ என்கை-

வானவர்க்கும் வானவனாய்- விண்ணுலகம் தன்னகத்து மேவேனே –
நித்ய ஸூ ரிகளுக்கும் அவ்வருகாய் பரமபதத்தே இருக்கை பணியுண்டோ –

வானவர்க்கும் வானவனே –
நித்ய ஸூரிகளுக்கும் சம்சாரிகளுக்கும் யுண்டான வாசி யுண்டாகை-

மேவனே –
ஸ்ரீ பரத ஆழ்வானைப் போலே -ஸ்ரீ வைகுண்ட நாதன் தாட்பாலைக் கொடுத்து விடும் அத்தனை –
வையம் மன்னி வீற்று இருந்து விண்ணும் ஆள்வர் மண்ணூடே -திருவாய் -4-3-11–
இரண்டும் இவனுக்கு விதேயமாக்குகை –
அர்த்த தச்ச  இத்யாதிவத் -யுத்த 116-24-

அன்றிக்கே –
வானவர்க்கும் வானவனே –
ப்ரஹ்மாதிகள் ஐஸ்வர்யம் பெற்றேன் அன்றோ என்றுமாம் –

திருமாலை செங்கண் நெடியானை எங்கள் பெருமானை-நண்ணி-கை தொழுத பின்-
ஸ்ரீ யபதியாய்- வத்சலனாய் -எங்களுக்கு ஸ்வாமி யானவனைக் கிட்டிக் கை தொழுத  பின் போக மோஷத்தில்
எனக்கு ஒரு குறை யுண்டோ -ஒன்றிலே எல்லாம் யுண்டான விஷயம் –

திருமாலை –
ப்ரஹ்மசாரி எம்பெருமானையோ நான் பற்றியது –

செங்கண் நெடியானை –
தலை சாய்ந்தாரை நோக்கும் படியும் -ருணம் பிரவ்ருத்தமிவ மே-பார உத் -47-22-என்று
இருக்கும் படியும்

எங்கள் பெருமானை-
அப்ராப்த விஷயத்தைப் பற்றினேனோ -அஸ்மத் ஸ்வாமின்  –

கை தொழுதேன் –
உபய விபூதியும் தன்னதாகை தொழுகையோடு வ்யாப்தம் –

———————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பூதத் ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ பூதத் ஆழ்வார் அருளிய இரண்டாம் திருவந்தாதி – -71-80– ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் —

February 26, 2015

சர்வேஸ்வரன் ஆஸ்ரித அர்த்தமாய்ப் போந்து அவதரித்துப் பண்ணும் வியாபாரங்களை அனுசந்தித்து
நித்ய ஸூரிகள் அஸ்தானே பய சங்கி களாய்க் கொண்டு அவர்கள் படும்பாடு சொல்லுகிறது –

ஆக இப்படிப் பரிவர் இல்லாத இடங்களிலே வந்து சந்நிஹிதனானவன் –
அங்கு அப்படிப் பரிவரோடே இருக்குமவன் கிடீர் என்கிறார் –

கீழ் இவன் தான் உகந்தபடி சொல்லிற்று –
இதில் இவனையே உகக்கும் நித்ய ஸூரிகள் படி சொல்லுகிறது –

அவன் இங்கு வந்தாலும் அங்கு உள்ளாரே பரியும் அத்தனை –
இங்குப் பரிவார் இல்லை -அது யார் அறியப் படுகிறார் என்கிறார் –

சர்வ காலத்திலும் ஸூலபனான படியை அனுசந்தித்தார் கீழ்
சர்வ தேசத்திலும் ஸூலபனான படியை அனுசந்திக்கிறார் இதில்

இடங்கை வலம்புரி நின்றார்ப்ப எரி கான்று
அடங்கார் ஒடுங்குவித்த தாழி-விடம்காலும்
தீவாய் அரவணை மேல் தோன்றல் திசை யளப்பான்
பூவாரடி நிமிர்த்த போது–71-

பதவுரை

விடம் காலும்–விஷத்தைக் கக்குகின்ற
தீ வாய்–பயங்கரமான வாயையுடைய
அரவு–திருவனத்தாழ்வானாகிய
அணை மேல்–சயனத்தின் மீது (பள்ளி கொண்டிருக்கின்ற)
தோன்றல்–ஸர்வேச்வரன்
வலம்புரி–சங்கானது
இடங்கை–இடத் திருக்கையில்
நின்று–இருந்து கொண்டு
ஆர்ப்ப–முழங்க
ஆழி–திருவாழியானது
திசை–எல்லாவிடங்களையும்
அளப்பான்–அளந்து கொள்வதற்காக
பூ ஆர் அடி–பூப்போன்ற திருவடியை
நிமிர்த்த போது–உயரத் தூக்கி யருளின காலத்து
எரி கான்று–நெருப்பை உமிழா நின்று கொண்டு
அடங்கார்–எதிரிகளாய் நின்ற நமுசி முதலானவர்களை
ஒடுங்குவித்து–வாய் மாளப் பண்ணிற்று

இடங்கை வலம்புரி நின்றார்ப்ப –
இடத் திருக் கையிலே ஸ்ரீ பாஞ்ச ஜன்யமானது சர்வேஸ்வரனுடைய
திரு உலகு அளந்து அருளின  விஜயத்தாலே வந்த
ஹர்ஷத்துக்குப் போக்கு வீடாக நின்று ஆர்த்துக்  கொண்டதாய்த்து –
உகவாதார் அடைய அந்த த்வநியிலே மண் உண்ணும் படிக்கீடாக நின்று கோஷித்த தாய்த்து-

எரி கான்று அடங்கார் ஒடுங்குவித்த தாழி-
திரு ஆழியானது அப்படியே ஆர்த்துக் கொள்ள அவசரம் இன்றிக்கே 
நெருப்பை உமிழா நின்று கொண்டு நமுசி பிரப்ருதிகளை  வாய் வாய் என்று முடித்த தாய்த்து –

விடம்காலும் தீவாய் அரவணை மேல் தோன்றல் –
திரு வனந்த வாழ்வான் தனக்குப் படுக்கையான நிலை குலையாது இருக்கச் செய்தே
ப்ரதிபஷ நிரசனம் பண்ணிற்றாக வேணும் இறே பரிச்சலாலே-
அதுக்கு உறுப்பாகக் கிடந்த இடத்தே கிடந்து விஷத்தை உமிழா நின்றுள்ள பயாவஹமான வாயை உடையனான
திரு வநந்த வாழ்வான்  மேலே சாய்ந்து அருளக் கடவனான பிரதானனானவன் –

திரு வநந்த ஆழ்வான் மேலே கண் வளர்ந்து அருளா நின்றாலும்
இவன் திரு மேனிக்கு என் வருகிறதோ என்று
அனுகூலர் அஞ்ச வேண்டும்படியான சௌகுமார்யத்தை உடையனானவன் –

திசை யளப்பான்-
காடு மோடையுமான திக்குகளை அளக்கைக்காக –

பூவாரடி நிமிர்த்த போது-
புஷ்பஹாச ஸூ குமாரமான திருவடிகளைப் பரப்பின போது
இடங்கை வலம்புரி நின்றார்ப்ப இப்படிப் பட்டார்கள் என்கிறது –

பூவாரடி –
வெருமனிருக்கிலும் வயிறு எரிய வேண்டி இருக்கிற படியாலே பிராட்டிமார் பரியும் திருவடிகள் –
மலர்மகள் மற்றை நிலமகள் பிடிக்கும் மெல்லடி -திருவாய் -9-2-10–
பரிமளமும் பொறையும் தொடப் பொறாது ஒழிவதே –
மெல்லடி ஆற்றாமையாலே தொட வேண்டித் தொடப் பொறாமை யாலே கூச வேண்டும்படி இருக்கை-
பூவைப் பரப்பினால் போலே இருக்கை –

(ஈட்டு ஸ்ரீ ஸூ க்திகள் -7-4-1-ஆழி எழ

‘இடங்கை வலம்புரி நின்று ஆர்ப்ப-இரண்டாந். 71.
இவனுடைய வடிவழகினை நினைந்து ஸ்ரீ பாஞ்சஜன்யமானது நின்று ஆர்ப்ப.

எரி கான்று அடங்கார் ஒடுங்குவித்தது ஆழி-
அவனைப் போல் ஆர்த்துக் கொள்ளுதற்குக் காலம் அற்று நெருப்பினை உமிழ்ந்து கொண்டு
நமுசி முதலானவர்களை வாய் வாய் என்றது திருவாழி.

விடம் காலும் தீவாய் அரவு
கிடந்த இடத்தே கிடந்து பகைவர்கள் மேலே விஷமாகிய நெருப்பினை
உமிழுமத்தனை அன்றோ திருவனந்தாழ்வானாலாவது?

அரவணை மேல் தோன்றல் –
திருவனந்தாழ்வானைப் படுக்கையாகவுடைய பிரதானன்.

திசை அளப்பான் பூவார் அடி நிமிர்த்த போது-
ஒரு பூவினைக் கொண்டே அன்றோ காடும் ஓடையும் அளந்து.கொண்டது?
பூவை இட்டுப் பூவை கொண்டான் காணும். )

——————————————————————————

அளவுடையரான நித்ய ஸூரிகளும் கூட இப்படிப் படுகிற விஷயமான பின்பு
எனக்குச் சென்று ஆஸ்ரயிக்கைக்கு யோக்யதை உண்டோ என்று திரு உள்ளம் பிற்காலிக்க-
அது வேண்டா காண்-
திர்யக்குகளும் கூட ஆஸ்ரயிக்கலாம் படி ஸூலபன் காண் –
ஆன பின்பு நீயும் அதிலே ஒருப்படு -என்கிறார் –

போதறிந்து வானரங்கள் பூஞ்சுனை புக்கு ஆங்கு அலர்ந்த
போதரிந்து கொண்டேத்தும் போது உள்ளம் -போது
மணி வேங்கடவன் மலரடிக்கே செல்ல
அணி வேங்கடவன் பேராய்ந்து-72-

பதவுரை

வானரங்கள்–குரங்குகளானவை
போது அறிந்து–விடியற்கால முணர்ந்து (எழுந்து போய்)
பூ சுனை புக்கு–புஷ்பித்த நீர் நிலைகளிலே புகுந்து (நீராடி)
ஏத்தும்–தோத்திரஞ் செய்யா நின்றன
உள்ளம்–மனமே!
போது–(நீயும் அப்படி செய்ய) வா
அணி வேங்கடவன்–அழகிய திருமலையிலுள்ள பெருமானுடைய
பேர்–திருநாமங்களை
ஆங்கு அலர்ந்த–அப்போதே மலர்ந்த
போது–புஷ்பங்களை
அரிந்து கொண்டு–பறித்துக் கொண்டு வந்து ஸமர்ப்பித்து
ஆய்ந்து–அநுஸந்தித்துக் கொண்டு
வேங்கடன் மலர் அடிக்கே செல்ல–அத்திருவேங்கட முடையானுடைய திருவடி தாமரைகட்கே சென்று சேரும்படியாக
போதும்–புஷ்பங்களையும்
அணி–ஸமர்ப்பிக்கக் கடவர்

போதறிந்து –
காலம் அறிந்து –
ரஜஸ் தமஸ் ஸூ க்கள் கழித்து சத்வ நிஷ்டரான ரிஷிகள் ப்ராஹ்மமான முஹூர்த்தத்திலே யுணருமா போலே
வானரங்கள் ஆனவை காலம் அறிந்து உணர்ந்து போய்-ஏகாகிளைப் போலே உறக்கம் இல்லை –

வானரங்கள் –
நித்ய ஸூரிகள் பரியும் இடத்தே –

பூஞ்சுனை புக்கு –
பூத்த சுனைகளிலே புக்கு –
ரிஷிகள் குளிரைப் பாராதே அகமர்ஷணம் பண்ணுமா போலே –

ஆங்கு-
அவ்விடம் தன்னிலும் –

அலர்ந்தபோது –
கடுமொட்டாதல் -கழிய அலருதல் செய்யாமே செவ்விப் பூக்களை –

அரிந்து-
பறித்துக்

கொண்டு ஏத்தும் –
இவற்றைக் கொண்டு ஆஸ்ரயியா நிற்கும் -ஆனபின்பு

உள்ளம் -போது-
போது உள்ளம் –
உள்ள மேனியும் பிற்காலியாதே போது –
நாம் போய் செய்வது என் என்றால் நீயும் அப்படியே செவ்விப் பூக்களைக் கொண்டு –

மணி வேங்கடவன் மலரடிக்கே செல்ல-
நீல மணி போலே இருக்கிற நிறத்தை யுடையனான திருவேங்கடமுடையானுடைய 
செவ்வித் திருவடிகளிலே கிட்டும்படி –

அணி-
அது செய்யும் இடத்தில் –

வேங்கடவன் பேராய்ந்து-கொண்டு
திருவேங்கடமுடையானுடைய திரு நாமங்களை அனுசந்தித்துக் கொண்டு
இது என்ன நீர்மை என்று கொண்டு
அவன் திருவடிகளிலே கிட்டும்படி போதை யணிவோம்-
பூவைக் கொண்டு ஆஸ்ரயிப்போம்-
அன்றிக்கே –
அணி வேங்கடவன் என்று சம்சாரத்துக்கு ஆபரணமான திருவேங்கடமுடையான் என்றாய்
வேங்கடவன் மலரடிக்கே செல்லும் போதும்  அணி என்றுமாம் –

————————————————

அவன் இப்படி சர்வ சமாஸ்ரயணீயனான நிலையை அனுசந்தித்து –
அவன் திருவடிகளிலே நித்ய கைங்கர்யம் பண்ணுவதாக வ்யவசிதரான படியை அருளிச் செய்கிறார் –

ஆய்ந்து உரைப்பன் ஆயிரம் பேர் ஆதி நடு அந்திவாய்
வாய்ந்த மலர் தூவி வைகலும் -ஏய்ந்த
பிறை கோட்டுச் செங்கண் கரி விடுத்த பெம்மான்
இறைக்கு ஆட்பட துணிந்த யான் –73-

பதவுரை

பிறை ஏய்ந்த கோடு–சந்திரகலை போன்ற தந்தத்தையும்
செம் கண்–சிவந்த கண்களையுமுடைய
கரி–கஜேந்திராழ்வானை
விடுத்த–முதலை வாயில் நினறு விடுவித்தருளின
பெம்மான்–ஸர்வேச்வரனான
இறைக்கு–ஸ்ரீமந் நாராயணனுக்கு
ஆள்பட–அடிமை செய்ய
துணிந்த யான்–உறுதிகொண்ட யான்
ஆதி நடு அந்திவாய் கைகலும்–காலை பகல் மாலை முதலிய எல்லா காலங்கள் எல்லா காலங்களிலும்
வாய்ந்த மலர்–கிடைத்த புஷ்பங்களை
ஆயிரம் பேர்–ஸஹஸ்ர பேரைகளை
உய்ந்து உரைப்பான்–ஆராய்ந்து

ஆய்ந்து உரைப்பன் –
அனுசந்தித்துக் கொண்டு செல்லா நிற்பன் -அவன் திரு நாமங்களை –

ஆயிரம் பேர் –
அது தன்னில் இன்ன திரு நாமங்கள் சொல்லக் கடவோம் –
இன்ன திரு நாமத்தை விடக் கடவோம் -என்ற ஒரு நியதி இல்லை –
தாய் பேர் சொல்லக் காலமும் தேசமும் பார்க்க வேணுமோ –
ஐஸ்வர் யாதிகளில் கை வைத்தார்க்கு இறே நியதி உள்ளது –
கைக்கு எட்டித்த ஒரு கண்ட சர்க்கரையை வாயிலுடுமா போலே –

ஆதி நடு அந்திவாய்-
முதலும் நடுவும் முடிவுமான போதிலே –
அப்படியவை செய்யும் இடத்திலே காலத்திலும் ஒரு நியதி  இல்லை –
த்ரிசந்தையிலும் என்றபடி –

வாய்ந்த மலர்-
புஷ்பங்களிலும் இன்னத்தைக் கொண்டு என்ற ஒரு நியதி அன்றியிலே
கிட்டின புஷ்பங்களைக் கொண்டு –

தூவி –
அடைவு கெடப் பரிமாறி –

வைகலும் –
இப்படி ஆஸ்ரயிக்கும் இடத்தில் என்றும் ஒக்க ஆஸ்ரயிப்பன்-
காலம் எல்லாம் என்றபடி –
நாள் தோறும் உண்ண வேண்டுமாப் போலே –

ஏய்ந்த பிறை கோட்டுச் செங்கண் கரி விடுத்த பெம்மான்-
சேர்ந்து பிறை போலே இருந்துள்ள கொம்புகளையும் சிவந்த கண்களையும் யுடைத்தான
குவலயா பீடத்தை நிரசித்த படியாகவு மாம் –

அன்றிக்கே –
ஏய்ந்த என்று
பிறை போலே ஏய்ந்து இருந்துள்ள கொம்புகளையும்
தர்ச நீயமான கண்களையும் யுடைத்தான
ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானை நோக்கின படியைச் சொல்லுகிறதாக வுமாம் –

குவலயா பீடத்தை யானபோது
ஆஸ்ரயிப்பாருடைய விரோதிகளைப் போக்குகைக்கு உப லஷணம் ஆகிறது –

ஸ்ரீ கஜேந்த ஆழ்வானை யானபோது
ஆஸ்ரிதர் விஷயத்தில் அவனுக்கு யுண்டான வாத்சல்யத்தைச் சொல்லுகிறது –

கரி விடுத்த –
ஒரு பூ இழக்க மாட்டாமை முதலையின் வாயினின்றும் விடுத்த

பெம்மான் –
ஸ்வாமிக்கு–சர்வேஸ்வரனான -என் ஆயனுக்கு –
சேஷத்வ ஜ்ஞானம் துணியப் பண்ணுகிறபடி-

இறைக்கு –
வகுத்த ஸ்வாமிக்கு –

ஆட்பட துணிந்த யான்-
அடிமை செய்கையிலே அத்யவசித்து உள்ள நான் –
ப்ராப்யமான அடிமை செய்யத் துணிந்த அடியேனான நான் –

அவன் பிரதிபந்தகம் போக்க -நான் அடிமை செய்தேன் -என்கிறார் –

இப்படி விரோதி  நிரசன சீலன் ஆனவனுக்கு அடிமை செய்யத் துணிந்த யான் –
வாய்ந்த மலர் தூவி ஆய்ந்து உரைப்பன்
ஆயிரம் பேர் ஆதி நாடு அந்தி வாய் வைகலும் -என்று அந்வயம்-

——————————————————————–

இப்படி கைங்கர்யம் பண்ணுகையால் வந்த ஹர்ஷத்தாலே அவனுக்கு சத்ருசமாகக் கவி பாடும்படியான
ஸூஹ்ருதம் பண்ணினேன்  நானே -என்கிறார்
நம் ஆழ்வார் வானவர் கோனைக் கவி சொல்ல வல்லேற்கு இனி மாறுண்டே-திருவாய் 4-5-9-
என்றாப் போலே யாயத்து இவர்க்கும் இது –

யானே தவம் செய்தேன் ஏழ் பிறப்பும் எப்பொழுதும்
யானே தவம் உடையேன் எம்பெருமான் -யானே
இரும் தமிழ் நன்மாலை இணை யடிக்கே சொன்னேன்
பெரும் தமிழன் அல்லேன் பெரிது-74-

பதவுரை

எம்பெருமான்–ஸர்வ ஸ்வாமிந்!
ஏழ் பிறப்பும்–எல்லா ஜன்மங்களிலும்
எப்பொழுதும்–எல்லா அவஸ்தைகளிலும்
தவம் செய்தேன்–தவம் புரிந்தவன்
யானே–நானே
தவம் உடையேன் யானே–அந்தத் தபஸ்ஸின் பலனைப் பெற்றவனும் யானே
இரும் தமிழ் நல்மாலை–சிறந்த தமிழ்ப் பாஷையினாலாகிய நல்ல சொல்மாலைகளை
இணை அடிக்கே–(உனது) உபய பாதங்களிலே
சொன்னேன்–விஜ்ஞாபித்தவனாய்
பெரும் தமிழன்–பெரிய தமிழ்க் கலையில் வல்லவனாய்
பெரிது–மிகவும்
நல்லேன்–உனக்கு நல்லவனாயிருப்பவன்
யானே–அடியேனே

யானே தவம் செய்தேன் –
நானே தபஸ் சைப் பண்ணினேன் ஆகிறேன் -சம்சாரிகளில் வாசி –

ஏழ் பிறப்பும் எப்பொழுதும்-
எல்லா ஜன்மங்களிலும் எல்லா அவச்தைகளிலும்
பகவத் சமாஸ்ரயணீயமான கவி  பாடுகை யாகிற இந்த லாபத்துக்கு அடியான
இந்த தபஸ்சைப் பண்ணினேன் நானே  –

பிராட்டி -ஈத்ருசன் து புண்யபாபம் -என்றாள்-
அளவில்லாத துக்கத்தைக் கண்டு இதுக்கடி யுண்டாக வேணும் என்றாள் இறே –
பாபமாவது இவளுக்கு அவர் நிக்ரஹம் இறே –

அப்படியே இவரும் இந் நன்மைக்கு அடி யுண்டு என்கிறார் –
பலத்தைக் கொண்டு நிச்சயிக்கிறார் –
எனக்கே அருள்கள் செய்ய விதி சூழ்ந்ததால் -திருவாய் -2-7-6–

யானே தவம் உடையேன் –
அந்த தபஸ் ஸூ க்கு பலமான பேறு பெற்றேனும் நானே –

எம்பெருமான் –
இதுக்கடி இவன் எனக்கு சேஷி ஆகையாலே –

இவருடைய தபஸ்ஸூம் பலமும் இருக்கிறபடி –
போந்தேன் புண்ணியனே -பெரிய திருமொழி -6-3-4–
நாயன் புண்ணியமே இறே எனக்கும் புண்யம் –
நீ ஸ்வாமி யான பின்பு எனக்கு இவற்றில் இழக்க வேண்டுவது ஓன்று யுண்டோ –
தபஸ்ஸூம் தபஸ் சினுடைய பலமும் நானே யுடையேன் -என்கிறது -எத்தாலே என்னில் –

யானே இரும் தமிழ் நன் மாலை –
வேத நன்மாலையில் வாசி -சர்வாதிகாரம் –

யானே தவம் உடையேன்  யானே இரும் தமிழ் நன்மாலை இணை யடிக்கே சொன்னேன்-
அந்த தப பலமான லஷண லஷ்யங்களிலே குறைவற்று இருக்கும் பெருமையை யுடைத்தாய் –
சர்வாதிகாரமாய் -அத்யந்த விலஷணமான சப்த சந்தர்ப்பங்களையும் யுடைய
விலஷணமான தமிழாகிற மாலையைச்
சேர்த்தி அழகை யுடைத்தான தேவர் திருவடிகளுக்கே சொல்லப் பெற்றேன்   ஆனேன் –

பெரும் தமிழன்-அல்லேன் பெரிது –
த்ரமிட  சாஸ்த்ரத்தில் என்தனை அவகாஹித்தார் இல்லை –
வேறு சிலவர் எனக்கு ஒப்பு அல்லர் என்று சொல்லும் அவ்வளவேயோ தான் –

பெரிது-நல்லேன்-
நான் அறக் கை விஞ்சினேன் அல்லேன் –
என்னாகியே தப்புதல் இன்றி தனிக் கவி தான் சொல்லி -திருவாய் -7-9-4-என்கிற
இத்தை நினைத்து அருளிச் செய்கிறார் –

நல்லேன் பெரிது –
யாவர் நிகர் அகல் வானத்தே -திருவாய் -4-5-8–
நித்ய முக்தரும் அடைவு கெட்டுச் சொல்லுவார்கள் –
நானும் அடைவு கெட்டுச் சொல்லுவேன்
என் பிரபந்தம் அடைவு பட்டு இருக்கை-அவர்களில் ஏற்றம் –
ஏதத் சாம காயன் நாஸ்தே -தை ப்ருகு -10-5- -இங்கே இருக்க யுண்டானபடி –

—————————————————————

நான் போர நல்லேன் என்றாரே -ஆகில் நீர் ஒரு கவி சொல்லிக் காணீர் என்ன –
அப்போது சொன்ன கவி தான் இருக்கிறபடி –
ஸ்ரீ வால்மீகி பகவானுடைய கவி பாட்டுக்கு உள்ளாக ஸ்ரீ ராம வ்ருத்தாந்தம் நேர் பட்டாப் போலே யாயத்து –
இவருடைய கவி பாட்டுக்கு உள்ளீடாக திருமலை யிடை யாட்டம் நேர் பட்டபடி-

பெருகு மத வேழம் மாப்பிடிக்கு முன்னின்று
இரு கண் இள மூங்கில் வாங்கி -அருகிருந்த
தேன் கலந்து நீட்டும் திருவேங்கடம் கண்டீர்
வான் கலந்த வண்ணன் வரை-75-

பதவுரை

பெருகும்–பெருகுகின்ற
மதம்–மத நீரை யுடைத்தான
வேழம்–யானையானது
மா பிடிக்கு முன் நின்று–(தனது) சிறந்த பேடையின் முன்னே நின்று
இரு கண் இள மூங்கில் வாங்கி–இரண்டு கணுக்களை யுடைத்தாய் இளையதான மூங்கில் குருத்தைப்பிடுங்கி
அருகு இருந்த தேன் கலந்து–(அந்த மூங்கிற் குருத்தை) ஸமீபத்திலுள்ள தேனிலே தோய்த்து
நீட்டும்–(பேடைக்குக்) கொடுப்பதாகக் கையை நீட்டப் பெற்ற
திருவேங்கடம் கண்டீர்–திருமலையன்றோ
வான் கலந்த வண்ணன் வரை–மேகத்தோடொத்த நிறத்தனான பெருமானுடைய (வாஸஸ்தான மான) பர்வதம்.

பெருகு மத வேழம் –
ஒரு வரையிடக் கடவது அன்றிக்கே
ஆற்றுப் பெருக்குப் போலே மேன்மேலே எனப் பெருகா நின்றுள்ள மதத்தை யுடைத்தான ஆனை யாய்த்து-
மும்மதம் என்ற ஒரு பிரதேச நியமம் இன்றிக்கே
கிண்ணகம் போலேயாய் சிம்ஹம் அஞ்ச வேண்டும்படி இருக்கை –
மதித்துச் சமைந்ததாகில் சிறிது அறிவுண்டாம் –
அறிவு கெட்ட சமயத்திலே ஒன்றால் தணியப் பண்ண ஒண்ணாத படியான மதத்தை யுடைத்தான ஆனையானது –

மாப்பிடிக்கு முன்னின்று-
ஸ்லாக்யமான பிடிக்கு முன் நிற்கும் ஆய்த்து-
அதுக்குப் பெருமை யாவது என் என்னில் –
இப்படி மத்த கஜமான இத்தைக் கையாளாக்கை-
எல்லா அளவிலும் இத்தைத் தனக்கு கையாளாக்கிக் கார்யம் கொள்ள வற்றாய் இருக்கை –

மாப்பிடி –
இத்தை இன்னதனைப் பட்டினி கொள்ளவற்று என்கை-
அதுக்குச் சாணைச் சீரையாய் இருக்கை –

முன் நின்று –
மதம் மிக்க சமயத்திலும் -க்ரியதாம் இதி மாம் வத -ஆரண்ய -15-7-என்று
அத்தை அனுவர்த்தித்துக் கொண்டு நிற்கை -ப்ருகுடி படரைப் போலே நிற்கை –
இதினுடைய வியாபாரம் அதினுடைய புத்யதீனமாய் இருக்கை –
சர்வ நியந்தா வானவன் பாண்டவர்களுக்கு நியாம்யனானாப் போலே –

மாப்பிடிக்கு முன் நின்று –
தம்முடைய ஸ்வா தந்த்ரியத்துக்கும் ஈஸ்வர ஸ்வா தந்த்ரியத்துக்கும் அஞ்சாமைக்குப் பற்றாக –
அஞ்சாத மாத்ரமே அல்ல -அவன் ஸ்வா தந்த்ர்யமே நமக்கு உடலாகைக்கு அடி –
தம் த்ருஷ்ட்வா சத்ரு ஹந்தாரம்-ஆரண்ய -30-39-

இரு கண் இள மூங்கில் வாங்கி –
நான் உணர்த்தி அற்ற சமயத்திலும் அதுக்கு உகப்பு தேடா நிற்கும் ஆய்த்து-
இரண்டு கண் ஏறி இருப்பதாய் அத்தால் வரும் முற்றளவை யுடைத்தது அன்றிக்கே இருந்துள்ள மூங்கில் குருத்து –

இரு கண் –
பாதாளத்தில் கிட்டினாலும்  கண் இரண்டே

வாங்கி –
மலைகள் பொடியாம்படியான சமயமாய் இருக்கச் செய்தேயும் பிடிக்கு கார்யம் செய்கிறது ஆகையாலே
அவதானத்தோடு வைத்து வாங்குவாரைப் போலே வாங்கும் ஆய்த்து
மூங்கிலினுடைய மேன்மையையும்  களிற்றினுடைய ஸாவ தானத்தையும்  சொல்லுகிறது –
வெண்ணெய் வாங்கினாப் போலே -அதில் செவ்வியிலே சிறிது குறையில் அது கொள்ளாது என்று இருக்குமே –

அருகிருந்த தேன் கலந்து –
திருமஞ்சனத்துக்கு வேண்டும் உபகரணங்கள்  அவ்வவ் இடங்களிலே குறைவற்று இருக்குமாப் போலே
அங்கு பார்த்த பார்த்த இடம் எங்கும் போகய த்ரவ்யங்கள் குறைவற்று கிடக்குமாய்த்து –
மலை முளன்சு களிலே நிறைந்து நின்ற தேனிலே தோய்த்து –

கலந்து என்கையாலே
மூங்கிலும் தேனும் த்ரவ்ய த்ரவ்யங்கள் இரண்டு சேர்ந்தாப் போலே இருக்கை-

நீட்டும் –
அது முகத்தை மாற வைத்துக் கொண்டு ஸ்வீகரியாதே அநாதரித்து நிற்க –
இது கொடுத்தபடியே நிற்குமாய்த்து –
இதுக்குக் கொடுக்கையே புருஷார்த்தமாய் இருக்கிறபடி –
உனக்கு வேண்டுவார்க்குக் கொடாய்-என்னுமா போலே யாய்த்து அதுக்குக் கருத்து –
இரந்து அது கொள்ளும்படி கொடுக்கும் –

நீட்டும் –
இதம் மேத்யம் இதம் ஸ்வாது -அயோத்யா -96-2-என்னுமா போலே

திருவேங்கடம் கண்டீர் –
இப்படிப்பட்ட திருமலை கிடீர் –

வான் கலந்த வண்ணன் வரை –
மூங்கில் குருத்தும் தேனும் ஏக ரசமாய்க் கொண்டு கலந்தால் போலே யாய்த்து
இங்கும் மேகத்தோடு கலந்து சேர்ந்த வடிவு இருக்கிறபடி –
மேகத்தினுடைய நிறத்துக்கும் அவனுடைய வடிவுக்கும் வாசி அறிந்து சொல்ல ஒண்ணாத படியாய் இருக்கும்
உபமான உபமேயங்கள் சத்ருசமாய் இருக்கை –

வான் கலந்த வண்ணன் வரை திருவேங்கடம் கண்டீர் -என்று அந்வயம்-

——————————————————————————–

கவி பாட்டு இனிதானாப் போலே அங்குத்தைக்கு ஈடான சமாராதன உபகரணங்களைச் சமைத்துக் கொண்டு
இப்படி சந்நிஹிதனாய் -வகுத்தவனானவன்  திருவடிகளிலே அடிமை செய்யுமதுவே
இவ்வாத்மாவுக்கு ஹிதம் என்கிறார்-

வரைச் சந்தன குழம்பும் வான் கலனும் பட்டும்
விரைப் பொலிந்த வெண் மல்லிகையும் -நிறைத்துக் கொண்டு
ஆதிக்கண் நின்ற வறிவன் அடி இணையே
ஓதிப் பணிவது உறும் —76-

பதவுரை

வரை சந்தனம் குழம்பும்–(மலய) பர்வதத்தினின்று முண்டான சந்தனத்தின் குழம்பையும்
வான் கலனும்–சிறந்த ஆபரணங்களையும்
பட்டும்–பட்டுப் பீதாம்பரங்களையும்
விரை பொலிந்த–பரிமளம் விஞ்சி யிருக்கப் பெற்ற
வெண் மல்லிகையும்–வெளுத்த மல்லிகை மலர்களையும்
நிறைத்துக் கொண்டு–சேரித்துக் கொண்டு
ஆதிக்கண் நின்ற அறிவன்–ஸகல ஜகத் காரண பூதனாய் ஸர்வஜ்ஞனான பெருமானுடைய
அடி இணையே–உபய பாதங்களையே
ஓதி–வாயாரத் துதித்து
பணிவது–தலையார வணங்குவது
உறும்–ஸ்வரூபத்துக்குச் சேரும்.

வரைச் சந்தன குழம்பும் –
நல்ல ஆகரத்தில் யுண்டான சந்தனக் குழம்பும் -நாற்றம் குறைவறும்படி அபிஜாதமான சந்தனமும் –
தென்னன் பொதியில் செழும் சந்தனக் குழம்பும்  -பெரிய திருமடல் –

வான் கலனும்-
அங்குத்தைக்கு ஈடான பெரு விலையனான வழகிய  திரு வாபரணங்களும் –
தேசமான அணிகலனும் -திருவாய் -4-3-2-

பட்டும்-
திருவரைக்குத் தகுதியாக சௌகுமார்யத்துக்கு சேரும்படியான நல்ல பட்டுக்களும் –

விரைப் பொலிந்த வெண் மல்லிகையும் –
பரிமளத்தால் மிக்கு இருப்பதாய்  தர்ச நீயமான வெளுத்த நிறத்தை யுடைய மல்லிகையும் –
சூட வேண்டாதே காண அமையும் –

நிறைத்துக் கொண்டு-
இவற்றை அடங்க கண்ட காட்சியிலே அவனுக்கு ஆதாரம் பிறக்கும் படிக்கு ஈடாக பாரித்துக் கொண்டு –
யசோதைப் பிராட்டி -அஞ்சனமும் கொண்டு வைத்தேன் -பெரியாழ்வார் -2-4-4-என்று
திருமஞ்சனத்துக்குப் பாரிக்குமா போலே –
சூட்டு நன்மாலைகள் தூயன ஏந்தி -திருவிருத்தம் -21-என்னும்படி
அடைவே எடுக்கும் முறையிலே எடுத்துக் கொண்டு –

ஆதிக்கண் நின்ற-
ஆதி காலத்திலே நின்றுள்ளவன்-

இத்தால்
இவை இழந்த வன்று தான் உளனாய் இருப்பானாய்-அதுக்கு மேலே –
இவற்றுக்கு அடங்கத் தான் காரண பூதனாய் யுள்ளவன் -என்றபடி

உபாய  வஸ்து ஏது என்ன –
காரணந்து த்யேய -என்று ஜகத் காரண வஸ்து என்கிறதே –

வறிவன்-
இப்படி உபாச்யனுமாய் –
இவன் ஒருநாள் அல்ப அனுகூல்யம் பண்ணினால் பின்னை
கோவிந்தேதி யதாக்ரந்தத் கிருஷ்ணா மாம் தூர வாசிநம் ருணம் ப்ரவ்ருத்த மிவ -பார உத் -47-22-என்கிறபடியே
பின்னை ஒரு நாளும் மறக்கக் கடவன் அல்லாத சர்வஜ்ஞ்ஞனும் ஆவான் -இத்தனை செய்தானாகில்
இதுக்கு மேற்பட இவன் செய்வது என் என்னும் ஜ்ஞானத்தை யுடையவன் –

அடி இணையே-
அவனுடைய ஒன்றுக்கு ஓன்று ஒப்பான திருவடிகளையே

ஓதிப் பணிவது உறும் —
ஸ்தோத்ரம் பண்ணி வணங்குவது உறும் –
ஸ்தோத்ரம் பண்ணித் தலையாலே வணங்கும் இது இவ் வாத்மாவுக்குச் சால  யுறும் -என்கிறார் –

உறும் –
சீரியதாய் – இப்போதும் இனிதாய் -என்றும் இனிதாம் –
கருப்புக் கட்டி தின்னக் கண்ட சர்க்கரை கூலி என்கை-

அப்ராக்ருத வஸ்துவை ஆஸ்ரயிக்கும் போது
அப்ராக்ருத த்ரவ்யங்கள் வேணும் என்று அஞ்ச வேண்டா கிடி கோள்-என்கிறார்  –

—————————————————————————–

இப்படி ஆஸ்ரயணத்தை அடைவு பட அனுசந்தித்து இவர் தமக்கு அது ரசித்தவாறே –
திரு உள்ளத்தைக் குறித்து
அவன் லப்தனானால் பிறக்கும் அனுபவத்தில் காட்டிலும்
சாதன தசையில் பிறக்கும் ரசமே அமையும் கிடாய் -என்கிறார்-

உறும் கண்டாய் நல் நெஞ்சே உத்தமன் நல் பாதம்
உறும் கண்டாய் ஒண் கமலம் தன்னால் -உறும் கண்டாய்
ஏத்திப் பணிந்தவன் பேர் ஈர் ஐஞஜூறு எப்பொழுதும்
சாத்தி உரைத்தல் தவம்-77-

பதவுரை

நல் நெஞ்சே–நல்ல மனமே!
உத்தமன்–புருஷோத்தமனுடைய
நல் பாதம்–சிறந்த திருவடிகள்
உறும் கண்டாய்–நமக்கு ப்ராப்த மானவை காண்க (அப்படிப்பட்ட திருவடிகளை)
ஓண் கமலம் தன்னால்–அழகிய தாமரை மலர்களினால் (ஆராதிப்பதானது)
உறும் கண்டாய்–நமக்கு உரியது காண்
சாத்தி–(அத் தாமரை மலர்களை) ஸமர்ப்பித்து
ஏத்தி–துதித்து
பணிந்து–நமஸ்கரித்து
அவன் பேர் ஈர் ஐந்நூறு–அவனது ஸஹஸ்ர நாமங்களையும்
எப்பொழுதும்–அநவரதமும் ஸங்கீர்த்தனம் பண்ணுகையாகிற
தவம்–தபஸ்ஸானது
உறும் கண்டாய்–உரியது காண்.

உறும் கண்டாய் –
உறுதும் -என்கிற இத்தைக் குறைத்து உறும் என்று கிடக்கிறதாக்கி
பழைய உறுதும் என்கிற வற்றையே கொண்டு அவன் திருவடிகளை நாம் ப்ராபிப்போம் -என்றாதல் –
அன்றிக்கே –
இத்தை இதர லாபங்கள் அளவாக புத்தி பண்ணாதே -இதாகிறது சாலச் சீரி யது என்று கிடாய் –
இத்தைப் புத்தி பண்ணு -என்றது ஆகவுமாம் –

உறும் கண்டாய் –
ஷூத்ர புருஷார்த்தங்கள் யுடைய காலைப் பற்றிக் கொண்டு திரிந்த யுனக்கு
ஸூஹ் ருதானவனுடைய திருவடிகளை பற்றுகை உறும் –
அநாதி காலம் நாம் இளிம்பு பட்டபடியை அறிதி –

நல் நெஞ்சே –
எனக்குப் பாங்கான நெஞ்சே -என்னுதல்-
எனக்கு முன்பே பதறி வரும் நெஞ்சே -என்னுதல் –

உத்தமன் –
தன பேறாக வடிவைக் கொள்ளக் கடவ சர்வேஸ்வரன் –
நாம் வேண்டாத நாளும் நம்மைத் தொடர்ந்து திரிந்தவன் –

நல் பாதம்-
நமக்கும் அவனுக்கும் உள்ள வாசி போரும்
அவனுக்கும் திருவடிகளுக்கும் –

பொது நின்ற பொன்னங்கழல் -மூன்றாம் திரு -88-
சோஹம் தே தேவ தேவேச நார்ச்சனா தௌ ந ச  சாமர்த்யவான் க்ருபா மாத்ர  மநோ வ்ருத்தி ப்ரசீத மே-ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-7-10-
தானே வந்து தலையிலே இருக்கும் திருவடிகள் –

உத்தமன் நற் பாதம் உறும் கண்டாய் ஒண் கமலம் தன்னால்-
அழகியதாய்  இருப்பது ஒரு தாமரைப் பூவாலே அவன் திருவடிகளைக் கிட்டலாம் கிடாய் –

இத்தால்
கனக்க ஓன்று கொண்டு ஆஸ்ரயிக்க வேண்டா என்றபடி –
அப்ராக்ருத புஷ்பம் தேடித் போக வேண்டா –
உறும் கண்டாய் ஏத்திப் பணிந்தவன் பேர் ஈர் ஐஞஜூறு எப்பொழுதும் சாத்தி உரைத்தல் தவம்-

இத்தால் 
ஆஸ்ரய வஸ்துவைப் ப்ராபிப்பதிலும்
ஆஸ்ரயணம் தானே நன்று என்னும் இடத்தை சொல்லுகிறது –
சாத்ய தசையிலும் சாதன தசைதான் நன்றாகச் சொல்லக் கடவது இறே

சாற்றி உரைத்தலான தவம் உறும் கண்டாய் –
இத்தைத் தவமாகச் சொல்லுகிறது ஈஸ்வரன் கருத்தாலே –

—————————————————————–

இப்படிப்பட்ட தபஸ் சை அனுசந்தித்து சர்வேஸ்வரன் திருவடிகளை வருத்தம் அற
லபிக்கப் பெற்றான் சதுர்முகன் ஒருவனுமே கிடீர் -என்கிறார்-

தவம் செய்து நான்முகனே பெற்றான் தரணி
நிவர்ந்து அளப்ப நீட்டிய பொற்  பாதம் -சிவந்த தன்
கை யனைத்தும் ஆரக் கழுவினான் கங்கை நீர்
பெய்தனைத்துப பேர் மொழிந்து பின்-78-

பதவுரை

தரணி–பூமியை
அளப்ப நிவர்ந்து–தாவி யளப்பதாகத் தொடங்கின த்ரிவிக்ரமாவதார காலத்தலே
நீட்டிய–பரப்பின
பொன் பாதம்–அழகிய திருவடியை
கங்கை நீர் பெய்து–கங்க தீர்த்தமாகப் பெருகின கமண்டல தீர்த்தத்தைப் பணி மாறி
அனைத்து பேர் மொழிந்து–(பரமனுடைய) எல்லாத் திருநாமங்களையும் வாயாரச் சொல்லி
பின்–பிறகு
தன் சிவந்த கை அனைத்தும் ஆர–தனது அழகிய கைகளெல்லாம் ஸபலமாகும்படி
கழுவினான்–திருவடி விளக்கியவனான
நான் முகனே–பிரமனொருவனெ
தவம் செய்து பெற்றான்–தவப் பயன் பெற்றவனாயினான்.

தவம் செய்து நான்முகனே பெற்றான் –
அநேகம் பேர் தபசைப்   பண்ணினார்களே யாகிலும் -அவை ஒன்றும் பலத்தோடு வ்யாப்தமாகப் பெற்றது இல்லை
ப்ரஹ்மா ஒருவனுமே தான் பண்ணின தபஸ்ஸூ  பலத்தோடு வ்யாப்தமாகப் பெற்றான் –

இவன் இனியது செய்ய
அவன் தவம் என்று இருக்கும் –
வணக்குடை தவ நெறி -திருவாய் -1-3-5–என்னக் கடவது இறே –

தரணி நிவர்ந்து அளப்ப –
சர்வேஸ்வரன் அந்ய அர்த்தமாகச் செய்த செயல் 
அவனுடைய தபஸ்ஸூக்குப் பிரயோஜன ரூபமாகக் கொண்டு தலைக் கட்டப் பெற்றது –
யாரேனுக்கும் கார்யம் செய்ய யாரேனுக்கும் பலித்துப் போவதே –

நான்முகனே   பெற்றான் –
ப்ரஹ்மாவைப் போலே தபஸ்ஸூ பண்ணிப் பலம் பெற்றார் யுண்டோ –

நீட்டிய பொற்  பாதம் –
பூமியை வளர்ந்து அளக்கைக்காக  நீட்டின ஸ்லாக்கியமான திருவடிகள் –
எட்டாதபடி பரணிட்டு இருக்கக் கிடீர் பலித்தது என்கை-

சிவந்த தன் கை யனைத்தும் ஆரக் கழுவினான் –
தன்னுடைய சிவந்த கைகள் அனைத்தும் ஆரும்படி விளக்கினான் –
அநேகம் கை படைத்ததால் உள்ள லாபம் பெற்றான் –

கை அனைத்தும் ஆர-
வயிறார என்னுமா போலே விளக்கின படி தான் ஏன் என்னில் –

கங்கை நீர் பெய்து –
கங்கையில் நீரை வார்த்து க்ருஹீத்வா தர்மபா நீயம் -ஈஸ்வர சம்ஹிதை -என்று
திருவடிகளை விளக்க அபேஷிதமான வாறே -தர்ம ஜலமானதைக் கையிலே கொண்டு –

அனைத்துப் பேர் மொழிந்து –
அவனுடைய எல்லா திரு நாமங்களையும் சொல்லி —
வாய் படைத்த பிரயோஜனம் பெற்றான் –

பின் –
பின்பு தபஸ் பலம் பெற்றான் அவன் ஒருவனுமே என்கிறார் –

கங்கை நீர் பெய்து- அனைத்துப் பேர் மொழிந்து –
சிவந்த தன் கை அனைத்தும் ஆரக் கழுவினான் –
பின் தவம் செய்து நான் முகனே பெற்றான் –
பின்னைத் திருவடிகளை விளக்கினான் -என்றுமாம் –

———————————————————————–

ஜகத்தை அளந்து கொண்ட செயலுடைய ஸ்ரீ வாமனனுடைய வ்ருத்தாந்தமானது –
தாயார் அபேஷிக்க மறுத்துக் காடேறப் போன
சக்ரவர்த்தி திருமகனுடைய இத்தன்மைக்கு ஒக்கும் -என்கிறார்-

பின்னின்று தாய் இரப்பக் கேளான் பெரும் பணைத் தோள்
முன்னின்று தான் இரப்பாள் மொய்ம்மலராள் -சொல் நின்ற
தோள் நலந்தான் நேரில்லாத் தோன்றல் அவன் அளந்த
நீள் நிலம் தான் அனைத்துக்கும் நேர்-79–

பதவுரை

தாய்–மாதாவான கௌஸல்யை
பின் நின்று–பின் தொடர்ந்து
இரப்ப–(என்னை விட்டு நீ காட்டுக்குப் போகலாகாது) என்று பிரார்த்திக்கவும்
கேளான்–அதனை ஏற்றுக் கொள்ளளாதவனாயும்
பெரு பணை தோள்–சிறந்த முங்கில் போன் திருத் தோள்களை யுடையளாய்
சொல் நின்ற-தந்தையின் நியமனமாகிய சொல் ஒன்றிலேயே தீவ்ரமாக நின்ற
தோள் நலத்தான்–புஜ பலத்தை யுடையனும்
நேர் இல்லா தோன்றல்–ஒப்பற்ற ஸ்வாமியுமான இராமபிரானுடைய
மொய் மலராள் தான்–அழகிய தாமரைப்பூவில் பிறந்தவளான பிராட்டியின் அம்சமான ஸீதையானவள்
முன் நின்று–முன்னை நின்று
இரப்பாள்–(இந்த ஸுகுமாரமான திருமேனியைக் கொண்டு காட்டுக்குப் போவது வேண்டா என்று) பிரார்த்தித்த வளவிலும்
அத்தனைக்கும்–(காட்டின் கொடுமையைப் பாராமல் தைரியமாகக் காட்டுக்கு எழுந்தருளின்) அப்படிப்பட்ட செயலுக்கு
அவன் அளந்த நீள் நீலம் தான் நேர்–அப்பெருமான் மிகப்பெரிய இவ்வுலகத்தை அளந்த செயல் ஒன்றே ஒத்தது.

பின்னின்று தாய் இரப்பக் கேளான்-
தாயாரான ஸ்ரீ கௌசல்யார் பின்தொடர்ந்து நின்று –
பிள்ளாய் நான் ஏக புத்ரையானவள் -உன்னைப் பிரிந்தால் ஜீவிக்க  வல்லேனோ –
நீ காட்டுக்குப் போக வேண்டா -என்று அர்த்திக்க –
அத்தைக் கேளாதே புறப்பட்டுப் போனான் -அதுக்கு மேலே –

பெரும் பணைத் தோள் முன்னின்று தான் இரப்பாள் மொய்ம்மலராள் –
அத்யந்தம் ஸூகுமாரியான பெரிய பிராட்டியாரானவள் –
பாஹூ ராமஸ்ய சம்ஸ்ரிதா -ஆரண்ய -60-20-என்கிறபடியே –
இத்தோளை அணைந்த நான் பிரிந்து இருந்தும் ஜீவிக்க வல்லேனோ -என்று கொண்டு –
அக்ரதஸ் தேகமிஷ்யாமி -அயோத்யா -27-7–என்கிறபடியே
முற்பட்டு நின்று அர்த்தித்தாள் ஆய்த்து-
யஸ் த்வயா சஹ சச்வர்க்கோ நிரயோ யஸ் த்வயா விநா -அயோத்யா -30-18-
பெரும் பணைத் தோள் மொய்ம்மலராள் தன்னை இரக்க வேண்டும்படியான அழகும் சௌகுமார்யமும்-

இரப்பாள்   –
பெருமாள் ஆகிற கருமுகை மாலையைச் செவ்வி பெறுத்த வேணும் என்று
நெருப்பிலே இடுமா போலே இந்த அதி ஸூ குமாரமான திருமேனியைக் கொண்டோ காடேறப் போகிறது -என்று
உம்மைப் பிரிந்து இருக்க மாட்டேன் –
உமக்கு முன்னே போகக் கடவேன் என்று ப்ரார்த்தியா நிற்க –

பெருமாள் கருமுகை மாலையை வெய்யிலிலே இடவோ என்று இருந்தார் –
அவள் தன்னை மறந்து பெருமாளையே நினைந்து இருந்தாள்-

சொல் நின்ற தோள் நலந்தான் நேரில்லாத் தோன்றல் –
ஒரு பிரபந்தமானது தோள்களினுடைய குணங்களைச் சொல்லுகையாலே உப லஷணமாய் இருக்கும் ஆய்த்து –
சொல் என்கிறது ஸ்ரீ ராமாயணத்தை ஆய்த்து –
வீர்யவான் -பால -1-3-என்றும்
ஆயதாஸ்ஸ-கிஷ்கிந்தா -3-10-என்றும் சொல்லக் கடவது இறே-
பிணம் தின்னி அகப்பட -ஸூ குமாரௌ-ஆரண்ய -19-14-என்னும்படி இருக்கை-
இப்படிப்பட்ட தோள் நலத்தை யுடையனாய் ஒப்பில்லாத பிரதானனான அவன் –

தோன்றல் –
சௌகுமார்யம் ஒரு வடிவு கொண்டால் போலே இருக்கை –

அவன் அளந்த நீள் நிலம் தான் அனைத்துக்கும் நேர்-
அவன் அளந்த பூமிப் பரப்பு அடங்கலும் இத்தனைக்கும் நேர் –
அவன் அளந்த பூமி அவன் குணம் அத்தனைக்கும் நேர்
பொன்னகரம் பின்னே புலம்ப வலம் கொண்டு மன்னும் வளநாடு கை விட்டு -பெரிய திருமடல் -என்கிறபடியே
இவர்கள் சொற்களை மறுத்து பித்ரு வசன பரிபாலன அர்த்தமாகப் போன  இதுக்கு ஒக்கும்

—————————————————————————–

இப்படிப் பட்டுள்ள அவன் திருவடிகளில் அடிமை எனக்கு ருசித்து
நான் ஸ்ம்ருதி மாத்ரத்தாலே அங்கே பிரவணன் ஆனபடியாலே
பண்டு அவன் வடிவைக் காணப் பெற்றவர்கள் அப்போது என் பட்டார்களோ -என்கிறார்-

நேர்ந்தேன் அடிமை நினைந்தேன் அது ஒண் கமலம்
ஆர்ந்தேன் உன் சேவடி மேல் அன்பாய் -ஆர்ந்த
அடிக்கோலம் கண்டவர்க்கு என் கொலோ முன்னைப்
படிக்கோலம் கண்ட பகல் -80-

பதவுரை

அடிமை நேர்ந்தேன்–உனது திருவடிகளில் கைங்கரியம் பண்ண நேர் பட்டேன்
ஒரு கண் மலம் அது நினைந்தேன்–அழகிய தாமரைப் பூப்போன்ற அத்திருவடிகளைச் சந்தித்தேன்
உன் சே அடிமேல்–உனது அத்திருவடிகள் விஷயத்திலே
அன்பு ஆய் ஆர்ந்தேன்–அன்பே வடிவெடுத்தவனாகப் பொருந்தினேன்
ஆர்ந்த–பரிபூர்ணமான
அடி கோலம்–திருவடிகளினழகை
கண்டவர்க்கு– ஸேவிக்கப்பெற்றவர்கட்கு
படி கோலம் கண்ட முன்னைப் பகல் என்கொல்–திருமேனியின் அழகை ஸேவிக்கப்பெற்ற முற்காலம் சிறந்த தாகுமோ?
(திருமேனி ஸேவையிற் காட்டிலும் திருவடி ஸேவையேயன்றோ மிகச் சிறந்தது)

நேர்ந்தேன் அடிமை –
அவன் பக்கலில் யுண்டான அடிமையிலே நேர்ந்தேன் –
ஸ்வரூப அனுரூபமான கைகர்யத்தைக் கிட்டினேன் –

துணிந்தேன் -என்று கீழே -65- பாசுரத்தில் சொன்னபடி –
ஷத்ரியனுக்கு அபிஷேகம் நேர்பட்டால் போலே –

நினைந்தேன் அது ஒண் கமலம்-
அவனுடைய அழகிய திருவடிகளை ஸ்மரித்தேன்-
இவருடைய அபிஷேகம் –
கோலமாம் என் சென்னிக்கு உன் கமலம் அன்ன குரை கழலே -திருவாய் -4-3-7-என்றும்
மாலடி முடிமேல் கோலமாம் -குலசேகரன் -பெருமாள் -7-11-என்றும் சொல்கிறபடி
அடிமை ஆசைப்பட்டால் அடியை நினைத்து இருக்கும்  அத்தனை இறே –

திவ்யஜ்ஞா நோபபன் நாஸ்தே -ஆரண்ய -1-10- என்றும் –
த்ருஷ்ட்வ ஏவ ஹி ந சோகம் அப நேஷ்யதி ராகவ -அயோத்ய -83-9–என்றும் சொல்கிறபடியே –

ஆர்ந்தேன் உன் சேவடி மேல் அன்பாய் -ஆர்ந்த அடிக்கோலம் கண்டவர்க்கு என் கொலோ முன்னைப் படிக்கோலம் கண்ட பகல் –
அழகு சேர்ந்த திருவடிகளைக் கண்டவர்களுக்கு –
அதுக்கும் அடியான வடிவழகைக் கண்டு அனுபவிக்கப் பெற்ற போது என்னாய்த்தோ –
என் பட்டார்களோ -என்றபடி –

அன்றிக்கே –
ஆர்ந்த அடிக்கோலம் கண்டவர்களாய் -அடியராய் -அவர்கள் ஆகிறார் தாமாய்-
நான் திருவடிகளில் அழகைக் கண்டு பட்டபடி கண்டால்
முன்பு அவ் வடிவழகைக் கண்டு அனுபவிக்கப் பெற்றவர்கள் என் பட்டார்கள் என்றதாகவுமாம்

பண்டு வடிவழகை  அனுபவிக்கப் பெற்றவர்கள்
அப்போது திருவடிகளில் அழகைக் கண்டு என் பட்டார்களோ என்றுமாம் –

திரு யுலகு அளந்து அருளின திருவடிகளைக் கண்டவர்களுக்கு முன்பு
ஸ்வா பாவிகமான ஒப்பனை கண்ட காலம் என்னோ –

———————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பூதத் ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ பூதத் ஆழ்வார் அருளிய இரண்டாம் திருவந்தாதி – -61-70– ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் —

February 25, 2015

கீழ்ச் சொன்ன ஆஸ்ரித பாரதந்த்ர்யம் தன்னை அனுஷ்டித்துக் காட்டின படியைச் சொல்லுகிறார் –
வடிவே அன்று அவனுடைய சேஷ்டிதமும் ஆஸ்ரித பரதந்த்ரம் -என்கிறது –

நின்றதோர் பாதம் நிலம் புதைப்ப நீண்ட தோள்
சென்று அளந்தது என்பர் திசை எல்லாம் -அன்று
கரு மாணியாய் இரந்த கள்வனை உன்னைப்
பிரமாணித்தார் பெற்ற பேறு —61-

பதவுரை

அன்று கரு மாணி ஆய்–முன்பொரு காலத்திலே கரிய கோலப் பிரமசாரியாய்ச் சென்று
இரந்த–(மாவலி பக்கல் மூவடி மண்) யாசித்த
கள்வனே–க்ருத்ரிமனான பெருமானே!
நின்றது ஓர் பாதம்–(பூமியை அளப்பதாக நின்ற ஒரு திருவடியானது
நிலம்–பூ மண்டலத்தை
புதைப்ப–ஆக்ரமித்துக் கொள்ள (அதன் பிறகு)
நீண்ட தோள்–விம்ம வளர்ந்த திருத் தோளானது
திசை எல்லாம் சென்று–திக்குக்களெல்லாவற்றிலும் வியாபித்து
அளந்தது என்பர்–(மேலுலகத்தை) அளந்து கொண்ட தென்று (பெரியோர் செல்லுகின்றனர்) (இப்படி நீ காரியஞ் செய்தவிது)
உன்னை பிரமாணித்தார் பெற்ற பேறு–உன்னை நம்பினவர்கள் எல்லாரும் பெற்ற புருஷார்த்தமாகும்

நின்றதோர் பாதம் நிலம் புதைப்ப-
ஒரு நினைவு இன்றிக்கே இருக்கச் செய்தே ஒரு திருவடிகளானது நின்றாப் போலே நின்று –
பூமிப் பரப்பை அடங்க மறைத்துக் கொண்டது –

ஓர் பாதம் –
ஒரு திருவடிகளை இப்படிச் சொன்னால்
அநந்தரம் மற்றைத் திருவடிகள் இன்னபடி செய்தது என்று  நம்மைப் போலே
அடைவுபட இருந்து ஓர் ஓன்று ஓன்று என்று கணக்கில் சொல்ல வல்லார் ஒருவர் அன்றே –

நீண்ட தோள் சென்று அளந்தது என்பர் திசை எல்லாம் –
ஏற்ற பொருள் பெற்றவாறே கண்ட தோளானவை திக்குகள் எங்கும் வியாபித்துக் கொண்டன – என்று
விவஷிதர் இத்தைச் சொல்லா நின்றார்கள் –
கையிலே நீர் விழுந்தவாறே அலாப்ய லாபம் போலே வளர்ந்த தோளானது திக்குகள் எல்லாம் அளந்தன என்பர் –
இன்று இத்தைக் கேட்கைக்கு அன்று எங்கே போனேனோ –

அன்று கரு மாணியாய் இரந்த கள்வனை –
ஸ்ரமஹரமான  நிறைத்தை யுடையையாய் -இரப்பு பெறில் அல்லது போகாதனாகத் –
தன்னைப் பேணாதே -இரப்பிலே தகணேறப் பண்ணிக் கொடு வந்தபடி

மாணியாய்-
உடையார் சூட்டினா வோடாகாதே –
திருமலையைக் கல் என்றால் வாயைக் கிழியார்களோ-

இரந்த-
அவன் தன்னுடையது என்ன -அவன் பக்கலிலே இரந்தான் ஆய்த்து-

கள்வனே –
இப்படிப்பட்ட வடிவழகைக் கொடுவந்து   மகா பலியை சர்வச்வாபஹாரம் பண்ணினான் ஆய்த்து –

கள்வனே –
மஹா பலியையோ இவரையோ களவு கண்டது –
அவன் தன்னை வைத்தான் இறே-ஆத்ம அபஹாரிகளுடைய ஆத்ம அபஹாரி –
இவ்விடத்தில் தந்தாமது பெறுவார்க்கும் நேர்  கொடு நேர் கிடையாது -நீ அப்படி செய்கைக்கு ஹேது

உன்னைப் பிரமாணித்தார் பெற்ற பேறு —
மஹா பலி பக்கல் கிடந்த பூமியை மீட்டுக் கொடுத்தது இந்த்ரன் ஒருவனுக்குமாகச் செய்த செயல் அன்றிக்கே
உன் திருவடிகளிலே ந்யஸ்த பரர் ஆனவர்கள் இச் செயலை அனுசந்தித்து –
இனி நமக்கு ஒரு கர்த்தவ்யம் இல்லை என்று கொண்டு நிர்ப்பரராய் –
மார்பிலே கைவைத்துக் கொடு கிடந்தது உறங்குகைக்காக செய்த செயல் இறே

த்வத் அக்ரே சரணாகதாநாம் பராபவ ந தேநு ரூபா -ஸ்தோத்ர ரத்னம் -25-என்று கொண்டு
சொன்ன அலாபம் தம்மளவிலே போகாதாப் போலே
லாபம் உள்ளதும் எங்கும் ஒக்கக் கிடக்கக் கடவதே –
எங்கனம் தேறுவர் உமரே -திருவாய் -8-1-4-என்னக் கடவது இறே

ஒரு நாள் பட்டர் தம்மிலே இருந்து -இந்த ஸ்ரீ வைஷ்ணவர்கள் ஒருவன் பக்கலிலே ஒரு வார்த்தை கேட்ட பின்பு
தங்களை தேக யாத்ரையில் ஊன்ற நின்று நிர்வஹிக்குமது இல்லை –
அங்கனே இருக்கச் செய்தே இவர்கள் தாங்கள் ஸூகமே ஜீவித்து ஒரு குறையற்றுச் செல்வதாக நிற்பர்கள்-
இதுக்கடி என் தான் -என்று விசாரித்து அருளிப்
பின்னையும் தாமே இதுக்கடி அறிந்தோம் இறே
ஒரு சர்வ சக்தி பக்கலிலே தங்கள் பரத்தை ஏறிட்டுத் தாங்கள் நிர்ப்பரராய் இருப்பர்கள்-
அநந்தரம் அவன் தூது போயும் -சாரத்தியம் பண்ணியும் -தான் அர்த்தியாயும் -இப்படி இவர்கள் கார்யம் நிர்வஹியா நிற்கும்
ஆன பின்பு அவர்களுக்கு ஒரு குறை இல்லை இறே என்று அருளிச் செய்தார் –

—————————————————————————————-

இப்படி ஆஸ்ரித பரதந்த்ரனாய் இருந்துள்ள அவனை அனுசந்தித்து அவனே என்னுடைய பிரதிபந்தகங்களைப் போக்கி –
என் அபேஷிதத்தைத் தருவானாகக் கொண்டு அவனையே பற்றினேன் -என்கிறார் –
நப்பின்னைப் பிராட்டிக்கு பிரதிபந்தகமான எருதுகளைப் போக்கி அவளைத் தனக்காக்கிக் கொள்ளுகையாலே
நம்முடைய பிரதிபந்தகங்களையும் போக்கும் -என்கிறது-

பேறு ஓன்று முன்னறியேன் பெற்றறியேன் பேதமையால்
மாறென்று சொல்லி வணங்கினேன் -ஏறின்
பெருத்த எருத்தம் கோடோசிய பெண் நசையின் பின் போய்
எருத்து இறுத்த நல் ஆயர் ஏறு–62-

பதவுரை

பெண் நசையின் பின் போய்–நப்பின்னைப் பிராட்டி விஷயத்திலுண்டான ஆசைக்கு வசப்பட்டு,
ஏறின்–விருஷபங்களினுடைய
பெருத்த எருத்தம்–பெருத்த முசுப்புகளும்
கோடு–கொம்புகளும்
ஓசிய–முறியும்படியாக
எருத்து–(அந்த ரிஷபங்களின்) கழுத்தை
இறுத்த–முறித்த
நல் ஆயர் ஏறு–விலக்ஷணனான கோபால கிருஷ்ணன்
மாறு–(நமது பாபங்களுக்கெல்லாம்) சத்துருவானவன்.
என்று சொல்லி–என்றெண்ணி
வணங்கினேன்–அவனை ஆச்ரயித்தேன்
முன்–இதற்கு முன்பு
பேறு ஒன்றும் அறியேன்–இப்படிப்பட்ட புருஷார்த்தத்தைச் சிறிதும் அறியாதவனாயிருந்தேன்
பேதைமையால்–அப்படி அறியாதிருந்ததனால்
பெற்று அறியேன்–அதனைப் பொறாதும் இழந்தொழிந்தேன்.

பேறு ஓன்று முன்னறியேன் –
இதுக்கு முன்பு ஒரு நாளும் இந்த பகவல் லாபம் அறியப் பெற்றிலேன் –

பெற்றறியேன் –
இவ்வறிவு இல்லாமையாலே இதுக்கு முன்படங்க இப் பேற்றை இழந்து போனேன் –
அறிந்து ஆசைப் பட்டார்க்கு வருமதிறே -அதுவும் இல்லை
அறியாமையும் பெறாமைக்கும் நிதானம் இருக்கும்படி சொல்லுகிறார் –

பேதமையால்-
ஐயே அறிவு கேடு என்ன பண்ணாதது தான் –

மாறென்று சொல்லி வணங்கினேன் –
இதுக்கு முன்பு அடங்கலும் உள்ளே புகுர நில்லாதே புறம்பே நின்று பண்ணின கர்மங்களின் பலமானது
என் பக்கலில் வாராதபடி அவற்றுக்கு அவன் தடையாக ஆஸ்ரயித்தேன்-
முறை அறிந்து பற்றினேன் அல்லேன் -விரோதி நிரசன சமர்த்தன் என்று பற்றினேன்
அவன் நம் விரோதிகளுக்கு பிரதிபடமான படிக்கு நிதர்சனமாக அருளிச் செய்கிறார் மேல் –

ஏறின் பெருத்த எருத்தம் கோடோசிய –
எருத்துக்களினுடைய  பெருத்த எருத்துண்டு -பெரிதான ககுத்துக்கள் அவையும் கோடுகளுண்டு கொம்புகள்
அவையும் முறியும்படிக்கு ஈடாக –

பெண் நசையின் பின் போய்-
நப்பின்னைப் பிராட்டி பக்கலில் யுண்டான ஆசையைப் பின் சென்று –
நப்பின்னைப் பிராட்டியைப் பெறலாம் என்ற நசையினால் தன்னைப் பேணாமை –

எருத்து இறுத்த –
எருதுகளினுடைய கழுத்தைத் திருகின -பற்றினாருக்குப் பிராட்டிமாருக்கு பரியுமா போலே பரியும் –

நல் ஆயர் ஏறு–
தன்னோடு ஒத்த பருவத்தை யுடையரான இடைப் பிள்ளைகளுக்கு எல்லாம் மேலானவனை –
மாறென்று சொல்லி வணங்கினேன்

இத்தால் சொல்லிற்று ஆய்த்து –
நப்பின்னைப் பிராட்டி யோட்டைக் கலவிக்கு பிரதிபந்தகமான எருது ஏழையும் அடர்த்தாப் போலே
என்னுடைய பிரதிபந்தகங்களைப் போக்கி
எனக்குத் தன்னைத் தருவானும் தானாகப் பற்றினேன்  –

———————————————————————————————–

அபிமானியான ருத்ரனுடைய சாபத்தைப் போக்குகையாலும் -அவனே ஆஸ்ரயணீயன் -என்கிறது
ஆபத்து ஒரு தலையானால் -பிராட்டிமார்களோடு -அபிமானிகளோடு வாசி யறத் தானே போக்கும் என்கிறார் –
இத்தால் எம்பெருமானே -சர்வாதிகன் என்னும் இடமும் –
அல்லாத ஈஸ்வரர்கள் பிறர்க்கும் தஞ்சம் அல்லர்கள் –
தங்களுக்கும் தஞ்சம் அல்லர்கள் -என்னும் இடமும் சொல்லுகிறது-

ஏறு எழும் வென்று அடர்த வெந்தை எரி உருவத்து
ஏறேறி பட்ட விடு சாபம் -பாறேறி
யுண்ட தலை வாய் நிறையக் கோட்டங்கை யொண் குருதி
கண்ட பொருள் சொல்லில் கதை–63-

பதவுரை

ஏறு ஏழும்–ரிஷபங்களேழையும்
வென்று–ஜயித்து
அடர்த்த–தொலைத்த
எந்தை–ஸ்வாமியான கண்ணபிரான்
எரி உருவத்து ஏறு ஏறிபட்ட–நெருப்புப் போன்ற உருவத்தை யுடையவனும் வ்ருஷப வாஹநனுமான ருத்ரன் அநுபவித்த
வீடு சாபம்–எல்லாரும் கைவிடும் படியான சாபத்தை (ப்போக்குதற்காக)
பாறு ஏறி உண்ட தலைவாய் நிறைய–பருந்துக்கள் ஏறியிருந்து உண்ணுதற்குரிய கபாலம் வாய் நிரம்பும்படியாக
கோடு–குவிந்த
அம் கை–அழகிய திருக்கையாலே
கீறியெடுத்து அளித்த்–ஒண் குருதி
அழகிய ரத்தத்தாலே–கண்ட பொருள்
அக் கபாலம் கையினின்று கழன்று விழக் கண்ட விஷயத்தை
சொல்லில்–சொல்லத் தொடங்கினால்
கதை–பெரியதொரு பாரத கதையாக முடியும்.

ஏறு எழும் வென்று அடர்த வெந்தை –
எருதுகள் ஏழையும் வேற்று முடித்த ஸ்வாமி யானவன் –

எரி உருவத்து ஏறேறி –
அக்னி வர்ணனுமாய் -ரிஷப வாகனனுமான ருத்ரன் –

ஏறேறி –
கைக் கொள் ஆண்டிகளைப் போலே

பட்ட விடு சாபம் –
முற்பாடு செய்வான் என்று அனுமதி பண்ணி இருந்த ப்ரஹ்மா-அறுத்த அநந்தரம்-
நீ பதகியாவாய்  -கபாலம் உன் கை விட்டுப் போகாது ஒழிவது-என்று சபித்தான் –

இடு சாபம் –
கபாலீத்வம் பவிஷ்யசி -மாத்ச்ய -182- -என்று இட்ட சாபத்தை –
இவன் உத்கர்ஷம் பொறாமை -ப்ரஹ்மா தலையை அறுக்கச் சொல்லி வைத்துப் பழி இட்டான் –

பாறேறி யுண்ட –
கழுகும் பருந்தும் பாறும் என்று கொண்டு சில பஷி விசேஷம் ஆய்த்து-
இவை மேல் விழுந்து புசியா நின்றுள்ள-கழுகும் பருந்தும் பாறுமுகத் திரிந்தபடி –

தலை வாய் நிறையக் –
தலையிடமாவது நிறையும்படிக்கு ஈடாக –

கோட்டங்கை-
கோடின கையாலே -சிராங்கித்த கையாலே –

யொண் குருதி கண்ட பொருள் சொல்லில் கதை–
அது நிறைந்து இவன் கையினின்றும் விட்டுப் போம்படிக்கு ஈடாக தன் திருமாபில்
வாச நீரை வாங்கி அதிலே தெறித்தான் ஆய்த்து-

ஒண் குருதி
அழகிய குருதி -குங்குமத்தோடு கூடின ஒப்பு –

அங்கை –
பாதகத்தைப் போக்க வல்ல அழகிய கையாலே

ஒண் குருதி –
தஸ்ய ரக்தச்ய நிஸ்ருதா -மாத்ச்ய -182-என்று
திரு மேனியில் ரத்தத்தை வாங்கித் தெறித்தான் என்றும் சொல்லுவர் –
ஒப்பானாலோ என்னில் 
அத்தோடு இத்தோடு வாசி இல்லை -ஒப்பு இல்லாதவனுக்கு வரும் ஒப்பாகையாலே –

கண்ட பொருள் சொல்லில் –
அர்த்த ஸ்திதி இருந்தபடி சொல்லப் பார்க்கில்

கதை –
அது ஒரு மகா பாரதம் -ஈஸ்வரனாகவும் வேண்டா -பாதகியாகவும் வேண்டா –

இவ்விடத்தில் நம் பிள்ளை அருளிச் செய்வதோர் வார்த்தை யுண்டு -அதாகிறது
நஞ்சீயர் ஒரு நாள் என்கையிலே மாம் பழத்தைத்  தந்து -இத்தைக் கொடு போய்
நம்பி திரு வழுதி நாடு தாசர்க்கு கொடுத்து வாரும் -என்று போக விட –
அப்போது இப்பாட்டு நம்பி பணியா நிற்க கேட்ட வார்த்தை –
ஏழு கோக்களை வதித்தவன் பிராயச் சித்தியாய் ஒருவன் வாசலிலே நின்றான் என்னக் கேட்டிலோம்-
ஒருவன் பிராணன் உடன் இருந்தவன் தலையை அறுத்து -அத்தாலே பாதகியாத் திரிய –
அவனுடைய ப்ரஹ்ம ஹத்யையும்  தன்னுடைய ஸ்பர்சத்தாலே போக்கினான் இவன் –
இது இறே இவனுக்கும் அவர்களுக்கும் யுண்டான நெடு வாசி இருக்கிறபடி -என்றார்
தலையை அறுத்துப் பாதகியான அவனோ ஈஸ்வரன் –
சாபத்தைப் போக்கினவனோ –
தலை அறுப்புண்டு சோச்யன் ஆனவனோ பார்த்துக் கொள்ளும் அத்தனை –

——————————————————————————————-

இப்படி ஈஸ்வர அபிமானிகளுக்கும் கூடக் கார்யம் செய்யக் கடவ நீ -உன்னால் அல்லது செல்லாத நான்
உன் திரு நாமங்களைச் சொல்லி முழு மிடறு செய்து அனுபவிக்கும் படி பண்ணி அருள வேணும் -என்கிறார் –

கதையின் பெரும் பொருளும் கண்ணா நின் பேரே
இதையம் இருந்தவையே ஏத்தில்-கதையின்
திருமொழி யாய் நின்ற திருமாலே உன்னைப்
பரு மொழியால் காணப் பணி–64-

பதவுரை

கண்ணா–கண்ணபிரானே!
கதையும்–இதிஹாஸ புராணங்களும்
பெரு பொருளும்–அவற்றின் சிறந்த அர்த்தங்களும்
இதயம்–அவற்றின் தாற்பரியமும்
இருந்த வையே–உள்ளது உள்ளபடியே
ஏலத்தில்–அறிந்து துதித்தால்
நின் பேரே–(அவையெல்லாம்) உன்னுடைய திருநாமங்களேயாம்
கதையின் திருமொழி ஆய்நின்ற திருமாலே–இதிஹாஸ புராணங்களின் ஸ்ரீஸூக்தி வடிவமாக நிற்கிற திருமானே!
உன்னை–உன்னை
பருமொழியால் காண–பரிபூர்ண சப்தங்களாலே கண்டு அது பவிக்கும்படி
பணி–திரு வுள்ளம் பற்ற வேணும்-

கதையின் பெரும் பொருளும் கண்ணா நின் பேரே-
இதிஹாச புராணங்களில் நின்று பார்க்கச் சொல்லிற்றானது 
சர்வ ஸூ லபனான உன்னுடைய  குண சேஷ்டிதங்களுக்கு  வாசகமான திரு நாமங்களே –

இதையம் இருந்தவையே ஏத்தில்-
அப்பரப்பு எல்லாம் கொண்டு அன்றியே -அதில் தாத்பர்யம் அறிந்து கொண்டு ஸ்துதிக்கில்-
அன்றிக்கே –
இதிஹாச புராணங்கள் யுடைய ஹ்ருதயம் இருந்தபடி சொல்லில் –
அவற்றில் நிர்ணீதமான அர்த்தம்  உன்னுடைய திரு நாமத்தைச் சொல்லுகை -என்றுமாம் –

கதையின் பெரும் பொருள் என்றார் இப்போது –
முன்பு ஒத்தின் பொருள் முடிவு –39-என்றார் –
கதையின் திருமொழி யாய் நின்ற திருமாலே –
உபநிஷத் சித்தமான ஏதேனுமாக ஒரு வித்யா விசேஷங்களில் யுண்டான சப்தங்கள்
ஸ்ரீ யப்பதிக்கு வாசகமாயாய்த்து இருப்பது –
அர்த்தத்துக்கு போதகமான சப்தம் -அவனையும் அவளையும் காட்டக் கடவதாய் இருக்கும் –
அர்த்தம் அவனே சப்தம் இவளே யாய்த்து இருப்பது
அர்த்தோ விஷ்ணுரியம் வாணீ -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-8-18-என்னக் கடவது இறே

உன்னைப்-
இதிஹாச புராணங்களாலே பிரதிபாதிக்கப் பட்ட ஸ்ரீ யபதியாய் இருந்துள்ள உன்னை

உன்னைப் பருமொழியால் காணப் பணி-
இப்படிப்பட்ட சப்த த்வாரா உன்னைக் காண்கை அன்றிக்கே –
அஹம் அன்னம் அஹம் அன்னம் அஹம் அன்னம் -தைத் -என்கிறபடியே
பெரு மிடறு செய்து கொடு காணும் படியாக பார்த்து அருள வேணும் –

உன்னைக் கண்டு ஹ்ருஷ்டனாய் ஏத்தப் பண்ணி அனவாபதியான சொல்லால் அன்றிக்கே –
குறைவற்ற சொல்லாலே ஏத்தி அனுபவிக்கப் பண்ணி அருள வேணும் –
கண்டு பேசும் போது இறே சப்தம் குறைவறப் பேசலாவது-
தேவரீருடைய பிரசாதத்தாலே லப்தமான திவ்ய சஷூஸ் ஸாலே
ஸ்பஷ்டமாய்க் காணும்படி பார்த்து அருள வேணும் -என்கிறார் –
கதையின் திரு மொழியாய் நின்ற என்கிற இடத்திலும்
கதை என்று இதிஹாசாதிகளைச் சொல்லிற்று ஆகவுமாம் –

—————————————————————————————–

இன்றாக உமக்குச் செய்ய வேண்டுவது ஓன்று உண்டோ -நீர் எல்லாம் பெற்றீர் காணும் -என்ன –
அந்த லாபத்தை அனுசந்தித்து அதுக்கு அனுரூபமாகப் பரிமாறுகிறார் –
பெற்ற அம்சம் உன் பக்கல் ருசி -என்கிறார் –

பணிந்தேன் திரு மேனி பைங்கமலம் கையால்
அணிந்தேன் உன் சேவடி மேல் அன்பாய்த் துணிந்தேன்
புரிந்து ஏத்தி யுன்னைப் புகலிடம் பார்த்து ஆங்கே
இருந்து ஏத்தி வாழும் இது–65-

பதவுரை

திருமெனி–உனது திருமேனியை
பணிந்தேன்–ஸேவித்தேன்
உன் சே அடி மேல்–உனது செவ்விய திருவடிகளின் மேல்
பை கமலம்–அழகிய தாமரை மலர்களை
அன்பு ஆய்–அன்பு கொண்டு
கையால் அணிந்தேன்–கையால் ஸமர்ப்பித்தேன்
உன்னை–உன்னை
புரிந்து ஏத்தி–விரும்பித் துதித்து
புகல் இடம் பார்த்து–பரமபதத்திலிருக்குமிருப்பை நோக்கி
ஆங்கே இருந்து ஏத்திவாழும் இது துணிந்தேன்–அவ் விடத்திலேயே இருந்து கொண்டு மங்களாசாஸநம் பண்ணி
வாழும் வாழ்ச்சியே உரிய தென்று அத்யவஸாயங்கொண்டேன்.

பணிந்தேன் திரு மேனி –
ஸ்வரூப குணங்களில் காட்டிலும் திரு மேனி என்றால் போர விரும்பி யாய்த்து இவர்கள் இருப்பது –
உன் திருமேனியைக் கண்டு விழுந்தேன் –

பணிந்தேன் –
அழகை அனுசந்தித்து -த்விதா பஜ்யேயம் அப்யேவம் ந நமேயம் -யுத்த 36-11-

திருமேனி –
நிர்விசேஷ சின்மாத்ரம் என்றாப் போலே சிலவற்றை உத்தேச்யமாக நினையாதே
திரு மேனியே ப்ராப்யம் என்று இருக்கப் பெற்றேன் –
திரு மேனி கண்டேன் -பொன் மேனி கண்டேன் என்னும் சொல்லை
சேஷ பூதர் ஆகையாலே பணிந்தேன் -என்கிறார்

பைங்கமலம் கையால் அணிந்தேன் உன் சேவடி மேல் அன்பாய்த் –
கைகளாலே செவ்வித் தாமரைகளைக் கொண்டு ஸ்நேஹத்தை யுடையனாய்க் கொண்டு
உன்னுடைய சிவந்த திருவடிகளிலே  இவற்றை இட்டு ஆஸ்ரயித்தேன் –

கையால் –
அது படைத்த பிரயோஜனம் பெற்றேன் –

அணிந்தேன் –
ஜெயித்தார்க்கு அடிமை செய்கை ப்ராப்தம் இறே-

அன்பாய்த் துணிந்தேன்-
ஞான கார்யம் அல்ல -அபி நிவேசத்தாலே துணிந்தேன் –

புரிந்து ஏத்தி -யுன்னைப் –
எழுந்து அருளா நின்றால் முன்பே சேவித்துப் புரிந்து உன்னைக் கண்டு ஸ்தோத்ரம் பண்ணி –

புகலிடம் பார்த்து –
புக்கு அருளும் இடத்தே பின்பைக் கண்டு

ஆங்கே இருந்து ஏத்தி வாழும் இது-
பின்னைப் போக மாட்டாதே உன் அன்பைக் கண்டு –
அவ்விடம் தன்னிலே இருந்து தேவருடைய ஸ்ம்ருதி மாறாதே இங்கனே செல்ல வேணும்
என்று கொண்டு ஏத்தி அனுபவிக்கும் அதிலே துணிந்தேன் -வ்யவசிதன் ஆனேன் –

அங்கன் அன்றிக்கே –
திருமலை நம்பி பக்கலிலே வாசனை பண்ணி இருப்பார் ஸ்ரீ பராங்குச தாசர் என்று ஒருவர் உண்டு –
அவர் நம்பி பணித்தத்தாகச் சொல்லும்படி –
புகலிடம் என்கிறது –
அவதரித்துப் போய்ப் புக்கருளும் ஸ்ரீ வைகுண்டத்தையாய் -அங்கே சூழ்ந்து இருந்து ஏத்துவர் -என்கிறபடியே 
அவர்கள் நடுவே புக்கு இருந்து ஏத்தி வாழ வேணும் என்னுமதிலே அத்யவசித்தேன் -என்கிறார் -என்றுமாம் –
சாயா வா சத்வம் அநு கச்சேத்-பரம சம்ஹிதை -என்று
அங்கு அடிமை செய்யும் படிகளை மநோ  ரதித்து இருப்பன் -என்றுமாம் –

—————————————————————————

பகவத் விஷயத்தில் ப்ராவண்யத்தால் பெற்ற அளவு அமையும் -இதர விஷய ப்ராவண்யத்தால் வரும்
அனர்த்தத்தை அனுசந்தித்து -இதிலே ருசி யுண்டாகாது இருக்கும் அத்தனையே வேண்டுவது என்கிறார் –

ப்ராப்திக்கும் பிரதிபந்தக நிவ்ருத்திக்கும் அடி –
சம்சார தோஷ தர்சனத்தைப் பண்ணுகை-
ஏத்துகையிலே துணிகையே யன்று-

இது கண்டாய் நல் நெஞ்சே இப்பிறவி யாவது
இது கண்டாய் எல்லாம் நாம் உற்றது -இது கண்டாய்
நாரணன் பேரோதி நாகத்தருகு அணையாக்
காரணமும் வல்லையேல் காண்–66-

பதவுரை

நல் நெஞ்சே–நல்ல மனமே!
இப் பிறவி ஆவது இது கண்டாய்–இந்த ஸம்ஸாரத்தின் கொடுமை இப்படிப் பட்டது காண்.
நாம் உற்றது எல்லாம் இது கண்டாய்–(இந்த ஸம்ஸாரத்தில்) நாம் அநுபவித்த துக்கங்களெல்லாம் இப்படிப்பட்டவை காண்
நாரணன்–ஸ்ரீமந் நாராயணனுடைய
பேர்–திருநாமங்களை
ஓதி–ஸங்கீர்த்தனம் பண்ணி
நரகத்து–ஸம்ஸாரமாகிற நரகத்தினுடைய
அருகு–ஸமீபத்திலும்
அணையா காரணமும்–நாம் நிற்கலாகாது என்று வெறுப்பதற்குக் காரணமும்
இது கண்டாய்– இந்த ஸம்ஸாரத்தின் தோஷமே காண்;
(இப்படி ஒவ்வொன்றையும் நான் எடுத்து உரைக்க வேண்டாதபடி)
வல்லை ஏல்–நீயே தெரிந்து கொள்ளக் கடவையாகில்
காண்–எல்லாம் தெரிந்து கொள்.

இது கண்டாய் நல் நெஞ்சே இப்பிறவி யாவது-
சம்சாரம் பொல்லாது என்றால் -அதுக்கு இசைந்து என்னோடு ஒரு மிடரான நெஞ்சே –
நாம் முன்பு அனுசந்தித்து இருக்கும் ஆகாரம் ஒழிய சர்வேஸ்வரன் இப்போது காட்டின இதுவே கிடாய் இதுக்கு ஸ்வரூபம் –
சம்சாரம் ஆகிறது துக்க ரூபமாய் இருக்கை கிடாய் –
இத்தைக் கனக்க நினைத்து இருந்தது எல்லாம் நம்முடைய ப்ரமம் கிடாய் –
பகவத் பிரசாதம் யுடையார்க்கு இறே பிரத்யஷிக்கிற தோஷமும் தோஷமாய்த் தோற்றுவது-
தன்னைக் காட்டினவோபாதி இது தன்னையும் தானே காட்ட வேணும் –

இது கண்டாய் எல்லாம் நாம் உற்றது –
பகவத் அனுபவத்தில் வந்தால் எல்லா ஸூகங்களும் யுண்டாய் இருக்குமாப் போலே யாய்த்து –
இதில் எல்லா துக்கங்களும் யுண்டாய் இருக்கும் படி –
நெடும் காலம் நன்றாய்த் தோற்றுகிற ஆகாரத்தாலே எல்லா துக்கமும் பட்டது இது கிடாய் –
பரமபதத்திலே எம்பெருமானாலே எல்லா ஸூகமும் யுண்டாமாப் போலே இதுவும் –
அபூத பூர்வம் மம பாவி கிம் வா சர்வம் சஹே மே சஹஜம் ஹி துக்கம் -ஸ்தோத்ர ரத்னம் -25-
தரமி லோபம் பிறந்தது இல்லை –
அங்குத்தைக்கு அசாதாரணமாய் இருக்கச் செய்தே நாம் அனுபவித்ததை எல்லாம் கண்டாய் இறே –

இது கண்டாய் நாரணன் பேரோதி நாகத்தருகு அணையாக் காரணமும் –
வகுத்த சர்வேஸ்வரனுடைய திரு நாமங்களைச் சொல்லுகைக்கும் –
நரக பிரவேசம் பண்ணாமைக்கும் 
நான் கீழ்ச் சொன்ன
இவற்றினுடைய தோஷ தர்சனம் பண்ணும் இதுவே கிடாய் –
எம்பெருமான் தன்னையும் பற்றுவித்து புறம்பையும் விடுவிக்குமா போலே –
இத் தோஷ தர்சனமும் தன்னையும் விடுவித்து எம்பெருமானையும் பற்றுவிக்கும் –

வல்லையேல் காண்-
விழித்து இருக்கச் செய்தே சிலர் பதார்த்த க்ரஹணம் பண்ண மாட்டார்கள் ஆய்த்து –
இப்படியே தன்னை யறியா நிற்கச் செய்தேயும் 
தோஷம் நெஞ்சிலே படாத படி பண்ணும் யாய்த்து இவ்விஷயங்கள் தான்
ஆன பின்பு இவற்றைத் தப்பாதபடி வருந்தி இத்தைக் காணப் பார் –
அனுபவியா நிற்கச் செய்தே  விடப் போகாது ஒழிகிறது பாபம் இறே –
ப்ரத்யஷம் அகிஞ்சித் கரமாம் விஷயம் இறே –

நன்று என்றால் ருசி பிறக்கிறவோபாதி
தீது என்றால் அருசி பிறக்க வேண்டாவோ –

அத்தலை சாத்யம் அல்லாமையாலும்
சம்சாரத்துக்கு அடி இதில் ருசி ஆகையாலும்
இவனுக்கு வேண்டும் அம்சம் இதுவே என்று கருத்து
மன ஏவ  மனுஷ்யாணாம் காரணம் பந்த மோஷயோ -ஸ்ரீ விஷ்ணு புராணம் -6-7-28-
இஷ்ட பிராப்திக்கும் அநிஷ்ட நிவ்ருத்திக்கும் அவன் உளனாய் இருக்க –
அநிஷ்டத்திலே இவன் இஷ்டம் பண்ண
அத்தைத் தவிர்த்து சாஷாதிஷ்டம் தருவானாய் நின்றான் –

நம்மாழ்வார் இமையோர் தலைவனான படியை முந்துறக் கண்டார்
அதுக்கு எதிர்தட்டான பொய் நின்ற ஞானம் தொடக்கமான வற்றை-
பொல்லா ஒழுக்கும் அழுக்கு உடம்பும்  விடுவிக்க வேணும் -என்கிறார் –

————————————————————————————-

கண்டேன் திருமேனி யான் கனவில் ஆங்கு அவன் கைக்
கண்டேன் கனலும் சுடர் ஆழி -கண்டேன்
உறு நோய் வினை இரண்டும் ஓட்டுவித்துப பின்னும்
மறு நோய் செறுவான் வலி-67-

பதவுரை

யான்–அடியேன்
கனவில்–ஸ்வப்நம் போன்ற ஸ்வாநுபவத்திலே
திருமேனி–திவ்ய மங்கள விக்ரஹத்தை
கண்டேன்–ஸேவிக்கப் பெற்றேன்
ஆங்கு–அப்போது
அவன் கை–அவனது திருக்கையிலே
கனலும் சுடர் ஆழி கண்டேன்–ஜ்வலிக்கிற சுடர் மயமான திருவாழியைக் கண்டேன்
உறு நோய் வினை இரண்டும்–மிக்க நோய்களுக்குக் காரணமான புண்ய பாபங்களென்கிற இரண்டு கருமங்களையும்
ஒட்டுவித்து–தொலைத்திட்டு
பின்னும்–பின்னையும்
மறு நோய் செறுவான்–மறுகிளை கிளர்ந்து வரக்கூறிய வாஸநா ருசிகளையும் தொலைத்தருளுமாவனான எம்பெருமானுடைய
வலி–மிடுக்கையும்
கண்டேன்–காணப் பெற்றேன்.

கண்டேன் திருமேனி யான் கனவில் ஆங்கு அவன் கைக்
கண்டேன் கனலும் சுடர் ஆழி -கண்டேன்
ஊன் திகழும் நேமி ஒளி திகழும் சேவடியான்
வான் திகழும் வடிவு–67 –என்றும் பாடமாம்

கண்டேன் திருமேனி –
எம்பெருமானுடைய அழகிய திரு மேனியைக் காணப் பெற்றேன் –
ஆழ்வார்கள் பஷத்தால் குணாதிகள் ஆநு ஷங்கிதம்-தன்னடையே வருவது

யான் கனவில் –
இந்த்ரிய த்வாரா இட்டு நீட்டிக் காண்கை அன்றிக்கே
நெஞ்சாலே  அவ்யவதாநேந காணப் பெற்றேன் –
ஆத்மாவுக்கு நித்ய தர்மமான ஞானம் பிரசரிக்கைக்கு ஆனைத்தாளான மனச்ச்சாலே பிற்பட்டு
பாஹ்ய இந்த்ரியங்களாலே காண்கை அன்றிக்கே –
ஸ்வப்ன தீ கம்யம் -மனு ஸ்ம்ருதி -12-122-என்னும்படியே
நெஞ்சில் பார்க்க அழகிதாக அனுசந்திக்கலாகை –
ஸ்வப்ன கல்பமாய் அதிலும் விசத தமமாய் பிரத்யஷியா நின்றால்
விலஷணமுமாய்  இருக்கையாலே மீளாது இருக்கை-

ஆங்கு அவன் கைக்-
அப்படிப்பட்ட அழகுடைய அவன் திருக் கையிலே

கண்டேன் கனலும் சுடர் ஆழி –
பிரதிபஷத்தின் மேலே சீறு பாறு என்னா நின்றுள்ள திரு வாழியைக் கண்டேன் –
அபாதிதமாகக் கண்டேன் –

கண்டேன் உறு நோய் வினை இரண்டும் ஓட்டுவித்துப பின்னும் மறு நோய் செறுவான் வலி-
நித்தியமான ஆத்ம வஸ்துவைத் தொற்றிக் கிடக்கிற புண்ய பாப ரூப கர்மங்களைப் போக்குவித்துப்
பின்னையும் மறுவலிட்டு வாராதபடிக்கு ஈடாகப் போக்கும் மிடுக்கை யுடையவனைக் கண்டு கொண்டேன் –
மறுவலிடும் வாசனை என்னுதல்-

வலி கண்டேன் –
சேதனன் ஆகையாலே இரண்டு இடத்திலும் இவனுக்கு ஸ்வபாவ ஜ்ஞானமே வேண்டுவது –
அஞ்சுகைக்கும் அச்சம் கெடுக்கைக்கும்-

————————————————————————————–

பிரயோஜ  நாந்தர பரரே யாகிலும் தன் பக்கலிலே வந்து அர்த்தித்தால் பொறுக்க   மாட்டாமை -ஆளிட்டு அந்தி தொழாதே
உடம்பு நோவத் தான் ஆயாசித்தே யாகிலும் அவர்களுக்கு கார்யம் செய்து  கொடுக்குமவன் -என்கிறார் –

இவனைக் கொண்டு வாசனையைப் போக்குவியாதே உப்புச்சாறு கொள்ளுமவர்களைச் சொல்லுகிறது –

இத்தால்
நின்ற நின்ற நிலைகள் தோறும் இஷ்ட பிராப்தியும் –
அநிஷ்ட நிவாரணமும் பண்ணிக் கொடுக்கும் படி சொல்லுகிறது –
தந்தாமாலே இழக்கில் இழக்கும் அத்தனை –
அவன் பக்கல் தட்டில்லை –

வலி மிக்க வாள் எயிற்று வாள் அவுணர் மாள
வலிமிக்க வாள் வரை மத்தாக -வலி மிக்க
வாணாகம் சுற்றி மறுகக் கடல் கடைந்தான்
கோணாகம் கொம்பு ஒசித்த கோ–68-

பதவுரை

வலிமிக்க–மஹாபலசாலிகளாய்
வாள் எயிறு–வாள் போன்ற கோரப் பற்களை யுடையராய்
வாள்–வாட்படையை யுடையரான
அவுணர்–ஆஸுர ப்ரக்ருதிகள்
மாள–முடிந்து போவதற்காக
வலி மிக்க வாள்வரை மத்து ஆக–மிக்க வலிவுள்ளதாய் ஒளியை யுடைத்தான மந்தர மலையை மத்தாகக் கொண்ட
வலி மிக்க வாள் நாகம்–அதிகமான சக்தியையும் ஒளியையுமுடைய வாஸுகி நாகத்தை
சுற்றி–கடை கயிறாகச் சுற்றி
கடல் மறுக கடைந்தான்–கடல் குழம்பும்படி கடைந்தருளினவன் (எவனென்றால்)
கோள் நாகம்–மிடுக்கை யுடைய குவலயாபீடமென்னும் மதயானையினது
கொம்பு–கொம்புகளை
ஒசித்த–முறித்தொழித்த
கோ–ஸ்வாமியாவன்

வலி மிக்க வாள் எயிற்று வாள் அவுணர் மாள-
பலத்தாலே மிக்கு இருப்பாராய்-ஒளியை யுடைத்தான எயிறுகளையும் யுடையராய் –
தாங்கள் சாயுதருமாய் இருப்பாருமான ஆசூரப் பிரகிருதிகள் முடியும்படிக்கு ஈடாக –
அசுரர் பலம்  நசிக்கவும் -தேவர்களுக்கு பலம் யுண்டாகவும் –

வலிமிக்க வாள் வரை மத்தாக –
ஒரு சர்வ சக்தி நின்று நெருக்கிக் கடையா நின்றால் தான் பிதிர்ந்து போகாத படி பலமே மிக்கு –
ஒளியை யுடைத்தான மந்த்ரம் மத்தாக –
மிடுக்கையும் யுண்டாக்கி மத்தாகக் கொண்டு

வலி மிக வாணாகம் சுற்றி –
இசித்துக்  கடையா நின்றால் அறாத படியான பலத்தையும் –
மலையோடு தேய்ப்புண்கையாலே  வந்த புகரையும் யுடைத்தான வாசூகியைச் சுற்றி –
நாற்கால் கடைந்தால் இற்றுப் போகாதபடி மிடுக்கைக் கொடுத்து –

மறுகக் கடல் கடைந்தான்-
கடல் கீழ் மண் கொண்டு மேல் மண் எறியும்படிக்கு ஈடாகக் கடைந்தான்-
தாழியில் தயிர் பட்டது பட்டது –
அவன் தான் யார் என்னில் –

கோணாகம் கொம்பொசித்த கோ –
நம் வேர்ப் பற்றிலே நலிய நினைத்து வந்த மிடுக்கை யுடைய
குவலயா பீடத்தின் யுடைய கொம்பைச் சலித்த சேஷீ-
தன்னுடைய விரோதியைப் போக்கி எழுதிக் கொண்ட படி யாதல் –
நாட்டுக்கு ஒரு சேஷியைத் தந்தான் -என்னுதல் –

இச் செயலாலே எல்லாரையும் எழுதிக் கொண்டவன் –
இப்படிப்பட்ட அவன் கிடீர் கடல் கடைந்தான் –

———————————————————————————–

அவன் பக்கல் தம்முடைய அபேஷிதம் பெற்றுப் போகிறார் தேவர்களேயோ-
நாம் காண ஜகத்துக்கு ரஷகராய் ஜீவிக்கிற ராஜாக்களும் எல்லாம் ஜகத் காரண பூதனானவன்
திருவடிகளை ஆஸ்ரயித்து அன்றோ தந்தாமுடைய பதங்கள் பெற்றுத் திரிகிறது என்கிறார்-

கோவாகி மாநிலம் காத்து நம் கண் முகப்பே
மாவேகிச செல்கின்ற மன்னவரும் -பூ மேவும்
செங்கமல நாபியான் சேவடிக்கே ஏழ பிறப்பும்
தண் கமலம் ஏய்ந்தார் தமர் –69-

பதவுரை

கோ ஆகி–ராஜாதி ராஜர்களாய்
மா நிலம் காத்து–பரந்த பூமண்டலத்தை அரசாட்சி புரிந்து
நம் கண் முகப்பே–நம் கண்ணெதிரே
மா ஏகி செல்கின்ற–குதிரை யேறித் திரிகின்ற
மன்னவரும்–அரசர்களும்,
செம் கமலப்பூ மேவும்–செந்தாமரை மலர் பொருந்தி யிருக்கப் பெற்ற
நாபியான்–திரு நாபியை யுடைய பெருமானுடைய
சே அடிக்கே–திருவடிகளுக்கு
ஏழ் பிறப்பும்–பலபல ஜன்மங்களிலே
தண் கமலம்–அழகிய தாமரைப் பூக்களை
ஏய்ந்தார்–ஸமர்ப்பித்தவர்களான
தமர்–பக்தர்களாவர்

கோவாகி –
இதுக்கு அடங்க நிர்வாஹகராய் -ஒரு ஈஸ்வரனுக்கு யுண்டான அபிமானம் அத்தனையும் போருமாய்த்து –
அவனுடைய ஐஸ்வர்யத்தை அனுகரிக்கிறவர்கள் இறே-
உபய விபூதி யுக்தனுக்கு போலியாக பௌண்டரகாதி களைப் போலே –
தேவேந்த்ரஸ் த்ரிபுவனம்-அர்த்தமேக பிங்க -சர்வர்த்திதம் த்ரிபுவனகாம் ச கார்த்த வீர்ய –
வைதேக பரம பதம் பிரசாதய விஷ்ணும் சம்ப்ராப்த சகல பல ப்ரதோஹி விஷ்ணு -ஸ்ரீ விஷ்ணு தர்மம் -43-47-

மாநிலம் காத்து-
பரப்பை யுடைத்தான பூமியை நோக்கி –

நம் கண் முகப்பே மாவேகிச செல்கின்ற மன்னவரும் –
நம் கண் வட்டத்திலே காணக் காண ஆனை குதிரை தொடக்க மானவற்றை ஏறி நடத்துகிற ராஜாக்களும் –

பூ வேகும் செங்கமல நாபியான் சேவடிக்கே –
பூக்கள் தள்ளுண்ணும் படியான செவ்வியை யுடைய கமலத்தை நாபியாக உடையவனுடைய சிவந்த திருவடிகளிலே

பூ மேவும் -என்ற பாடமாய்த்தால்
போக்யதை பொருந்தி இருக்கிற படி யாகிறது –

ஏகும் என்ற போதைக்கு
ஒருக்காலும் செவ்வி மாறாத படியான பூவுக்கு –
அனந்தர ஷணத்திலே செவ்வி மாறும்படியான பூக்கள் நேர் நிற்க மாட்டா விறே –

ஏழ பிறப்பும் தண் கமலம் ஏய்ந்தார் தமர் –
ஜன்மங்கள் தோறும் அவன் திருவடிகளிலே குளிர்ந்த புஷ்பங்களைக் கொண்டு  ஏய்ந்தாரான தமர் -என்னுதல்
ஏய்ந்தார் யுடைய  தமர் கிடீர் -என்னுதல் –

இப்படி யாஸ்ரயித்த சேஷபூதர் கிடீர்
மா வேகிச் செல்கின்ற மன்னவராகிறார் –

————————————————————————————————————

இப்படி இருக்கிறவர்கள் தன்னை அனுகூலித்த அன்று
அவர்களுடைய ஹ்ருதயங்களுக்கும் உகந்து அருளின திவ்ய தேசங்களுக்கும்
ஒரு வாசி வைத்து பரிமாறான் அவன் என்கிறார் –

அன்றிக்கே –
தனக்கு நல்லவர்களுக்காக அவன் சந்நிதி பண்ணும் இடங்கள் சொல்லுகிறது –
ஆஸ்ரித விஷயத்தில் பிச்சிருந்த படி சொல்லுகிறது

ஆக –
அம்ருதம் ஆசைப் பட்டார்க்கு அத்தைக் கொடுக்கும்
ராஜ்யம் ஆசைப் பட்டார்க்கு  ராஜ்யத்தைக் கொடுக்கும் –
தன்னை ஆசைப் பட்டார்க்குத் தன்னைக் கொடுக்கும் -என்கிறது-

தமருள்ளும் தஞ்சை தலை யரங்கம் தண் கால்
தமருள்ளும் தண் பொருப்பு வேலை -தமருள்ளும்
மா மல்லை கோவல் மதிள் குடந்தை என்பரே
ஏவல்ல வெந்தைக்கு இடம் –70-

தமருள்ளும் –
இதில் முற்பட்டது ஆஸ்ரிதருடைய ஹ்ருதயம் ஆகையாலே உத்தேச்யம் இது –
இத்தால்
அவ்வோ இடங்கள் போலும் அன்றிக்கே இவர்கள் ஹ்ருதயங்க ளிலே ஒரு வாசி தோற்றப் பரிமாறும் -என்கிறார் –
ஆஸ்ரிதர் யுடைய ஹ்ருதயங்கள் –

தஞ்சை –
தஞ்சை மா மணிக் கோயில் –

தலை யரங்கம் –
திருப்பதிகளில் பிரதானமாய் -பரமபதத்தோடே ஒக்க எண்ணலாம் படியான பெரிய கோயில் –
அப்பால் முதலாய் நின்ற அளப்பரிய ஆரமுதை -அரங்கமேய அந்தணனை -திரு நெடும் தாண்டகம் -14- என்றும்
கட்கிலீ திட்கொடி மதிள் சூழ் திருவரங்கத்தாய் -திருவாய் -7-2-3-என்றும் சொல்லக் கடவது இறே-

தண் கால்-
திருத் தண் கால் ஆகிறது திரு மங்கை ஆழ்வார் யுடைய வால்லப்யத்தை -வலிமையை -அழித்த இடம் இறே –
தண்கால் திறல் வலியை -பெரிய திரு மடல் -என்றார் இறே –

தமருள்ளும் தண் பொருப்பு –
நின்ற வேங்கடம் நீணிலத்துள்ளது -திருவாய்-9-3-8-என்று
தங்களுக்கு வைப்பாக அனுசந்தித்து இருக்கும் ஸ்ரமஹரமான திருமலை –
ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு சர்வ ஸ்வமான தேசம் இறே –

வேலை –
எல்லா வற்றுக்கும் அடியான திருப் பாற் கடல் —
ப்ரஹ்மாதிகளுக்கே யாய் இருக்கையாலே விசேஷணம் இட்டிலர்-

தமருள்ளும் மா மல்லை –
ஆஸ்ரிதனுக்காகத் தரைக்கிடை கிடக்கிற திருக் கடல் மலை –

கோவல் –
திருக் கோவலூர் -மூன்று ஆழ்வார்களையும் நெருக்கின இடம் –
தங்கள் நெருக்கு உகந்த இடம் இறே –

மதிள் குடந்தை –
அரணை யுடைத்தான திருக் குடந்தை -திரு மழிசைப் பிரான் உகந்த இடம்  –

என்பரே ஏவல்ல வெந்தைக்கு இடம் –
இவற்றை எல்லாம் பிரதிபஷத்தைப் பக்க வேரோடு வாங்கிப் பொகட வல்ல என் ஸ்வாமி யான
தசரதாத் மஜனுக்கு  வாஸ ஸ்தானம் என்னா நின்றார்கள் –
மிடுக்காலே பிரதிகூலரை அழியச் செய்தவன் –
அனுகூலரை எழுதிக் கொண்ட இடங்கள் –
இப்படி சக்திமானாய் இருக்கிறவன் இவர்களை அனுகூலித்து மீட்கைக்காக வந்து இருக்கிற தேசங்கள் இவை –

————————————————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பூதத் ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ பூதத் ஆழ்வார் அருளிய இரண்டாம் திருவந்தாதி – -51-60– ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் —

February 25, 2015

இப்படித் தாம் அடைவு கெட்ட படியை அனுசந்தித்து –
நெஞ்சே -நீ முன்னம் என்னைப் போலே கலங்காதே
அவனுடைய சௌந்தர்யாதிகளைத் தனித் தனியே தரித்து நின்று அனுபவிக்கப் பார் -என்கிறார் –
பேச்சே அன்று நினைப்பன்-என்கிறார் –

மதிக்கண்டாய் நெஞ்சே மணி வண்ணன் பாதம்
மதிக்கண்டாய் மற்றவன் பேர் தன்னை -மதிக்கண்டாய்
பேராழி நின்று பெயர்ந்து கடல் கடைந்த
நீராழி வண்ணன் நிறம்———51-

பதவுரை

நெஞ்சே–மனமே!
மணி வண்ணன் பாதம்–நீல மணி வண்ணனான எம்பெருமானது திருவடிகளே
மதி கண்டாய்–அநுஸந்திக்கக் கடவாய்
பேர் ஆழி நின்று பெயர்ந்து–பெரிய திருப் பாற் கடலில் நின்றும் துயில் விட்டெழுந்து
கடல் கடைந்த–தேவர்களுக்கு அமுதங்கொடுக்க அக் கடலைக் கடைந்த
மதிக் கண்டாய்–சிந்திக்கக் கடவாய்
மற்று–இன்னமும்
அவன் பேர் தன்னை–அப்பெருமானது திருநாமங்களை
நீராழி வண்ணன் நிறம்–கடல் வண்ணனான அப்பெருமானுடைய திருமேனி நிறத்தை
மதிக் கண்டாய்–நினைக்கக் கடவாய்-

மதிக்கண்டாய் நெஞ்சே மணி வண்ணன் பாதம்-
நெஞ்சே -நீல மணி போலே ஸ்ரமஹரமான வடிவை யுடையவனுடைய திருவடிகளைப் புத்தி பண்ணு கிடாய் –

மணி வண்ணன் பாதம் –
மறக்கலாய் இருக்கிறதோ -தோற்று அடியிலே விழு –

மதிக் கண்டாய் மற்றவன் பேர் தன்னை –
இன்னம் அங்கனம் அன்றிக்கே அவ் வடிவு அழகுக்கு வாசகமான மற்ற திரு நாமங்களைப் புத்தி பண்ணு கிடாய் –

மதிக் கண்டாய்-
நினைத்து உஜ்ஜீவி –

பேராழி நின்று பெயர்ந்து கடல் கடைந்த-
ஆஸ்ரித அபேஷிதம் ஒரு தலையானால்  தன் படுக்கை என்றும் பாராதே அங்கு நின்றும் எழுந்து நின்று கார்யம் செய்த படி
பிரயோஜனாந்த பரருக்கு கடல் கடைந்து கொடுத்த படி
அர்த்திப்பாரைப் பெற்றவாறே படுக்கையைக் கடைந்து கொடுத்தான் –

நீராழி வண்ணர் நிறம் –
ஒரு கருங்கடல் வெண் கடலை நின்று கலக்கினாப் போலே -கடலைக் கடைந்த அழகு யுடையவனை புத்தி பண்ணு  கிடாய் –
கிடந்த கடலை நின்ற கடல் கடைந்தாப் போலே -சமுத்ரத்தில் நீர் நிறம் போலே இருந்துள்ள நிறத்தை யுடையவன் –

நிறம் மதிக் கண்டாய் –
தேவர்களுடைய புன்மையில் போகாது ஒழிகை -அவனையே நினை –

————————————————————————–

திரு உள்ளத்துக்கும் கூட உபதேசிக்க வல்ல தம்மைக் கலங்கப் பண்ணின ஸ்ரீ யபதியுடைய அழகையும்
பிராட்டி சம்பந்தத்தால் வந்த மிக்க கிருபையையும் சொல்ல இது ஒருவர்க்கும் நிலமல்ல கிடீர் -என்கிறார்-

நிறம் கரியன் செய்ய நெடு மலராள் மார்வன்
அறம் பெரியனார் அது அறிவார் -மறம் புரிந்த
வாள் அரக்கன் போல்வானை வானவர் கோன் தானத்து
நீள் இருக்கைக்கு உய்த்தான் நெறி —52-

பதவுரை

நிறம் கரியன்–(காளமேகம் போல்) கருநிறமுள்ளவனும்
செய்ய நெடு மலராள் மார்வன்–சிவந்த நிறத்தை யுடையளாய்ப் பெரிய தாமரைப் பூவை யிருப்பிடமாக வுடையளான
பெரிய பிராட்டியாரைத் திரு மார்விலே யுடையனுமான எம்பெருமான்
அறம் பெரியன்–அருளில் பெருத்தவன்
மறம் புரிந்த வாள்–பகை பாராட்டின
அரக்கன் போல்வானை–வாட்கையனான இராவணன் போன்ற மஹாபலியை
(இராவனைப் போலவே தலையறுக்க வேண்டியிருந்தும் அது செய்யாமல்)
வானவர் கோன் தானத்து–தேவேந்திரனுடைய லோகமான ஸ்வர்க்கம் போலே விலக்ஷணமான பாதாள லோகத்தில்
நீள் இருக்கைக்கு–நீண்ட காலம் வாழும்படியாக
உய்த்தான்–செலுத்தின அப்பெருமானுடைய
நெறி அது–அவ் வருள் வகையை
ஆர் அறிவார்–யார் தெரிந்து கொள்ள வல்லர்?-

நிறம் கரியன்-
ஆஸ்ரிதருடைய சகல தாபங்களையும் போக்கும்படியான வடிவு அழகை யுடையவன் –

செய்ய நெடு மலராள் மார்வன்-
மேகத்தில் மின்னினாப் போலே அவ்வடிவுக்கு பரபாகமான சிவந்த நிறத்தை யுடைய பெரிய பிராட்டியார்
நித்ய வாசம் பண்ணா நின்றுள்ள திரு மார்பை யுடையவன் –

அறம் பெரியன்-
அவளோட்டைக் கலவியாலே ஆன்ரு சம்ச்யத்தால்  சாலவதிகன் –

செய்ய நெடு மலராள் மார்வன்–அறம் பெரியன்–
அவன் கிருபைக்கு ஊற்று இவள் -இவள் ஐஸ்வர் யத்துக்கு ஊற்று அவன் –

ஆர் அது அறிவார் –
அந்த  ரஹச்யம் பத்தொன்பதாம் பாஷை -ஒருவருக்கும் தெரியாது –
ஆழ்வார்கள் அறிதல் -அவர்களை அடி ஒற்றின நம் முதலிகளில் சிலர் அறிதல் செய்யும் அத்தனை –

ஆரது அறிவார் –
அவன் அகவாய் அறிவார் யார் –புறவாய் அறிவார் யார்–
எம்பெருமான் தன்னைக் கூடு பூரித்து வைக்க அறிவாராய் பெறு கிறிலோம்-

மறம் புரிந்த வாள் அரக்கன் போல்வானை –
க்ரௌர்யமான தொழிலை யுடைய ராவணனோடு ஒத்துள்ள மஹா பலியை –
இருவருக்கும் ஒக்குமாய்த்து அவனுடைமையை என்னது என்று இருக்குமது –
அவன் பிராட்டியை அபஹரித்தான் -இவன் பூமியை அபஹரித்தான் –
ராவணனைப் போலே தலை யறுப்புண்ண ப்ராப்தனாய்த்து மஹா பலியும் –
இப்படி இருந்த பின்பு அவனைப் போலே தலை அறுத்துப் பொகடாதே வைத்தமைக்கு அடி ஔ தார்யம் என்று ஒரு குணலேசம் கிடக்கையாலே –

வானவர் கோன் தானத்து நீள் இருக்கைக்கு உய்த்தான் நெறி –
இப்படி ராஜ்யத்தில் ஸ்ரத்தை பண்ணினவன் இழந்தது ஆகிறது என் என்று தன்னுடைய
ஆன்ரு சம்ச்யத்தாலே இவன் அப்ராப்தமாகப் பெற்றான் என்கிறது என் –
ப்ராப்தமான முறையிலே பெறுகிறான் என்று பார்த்து  இந்திர லோகத்திலும் நன்றான பாதள லோகத்திலே வைத்தான் ஆய்த்து-
இந்திர பதத்திலே அவனைப் போலே பறி கொடுத்துக் கண் பிசிய வேண்டாத படி சிரகாலம் இருக்கைக்காக
அவனை வைத்தவனுடைய பிரகாரம் ஆர் தான் அறிவார் –

நெறியால் உய்த்தான் -என்றுமாம் –
நெறி என்று ஸ்வ பாவம்
ஒருவராலே அறியலாய் இருந்ததோ –
ததாமரத்வம் த்ரித சாதிபத்யம் மன்வந்தரம் பூர்ணமபேத சத்ரு -ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-17-30-என்னா நின்றது இறே –
மேல் இந்திர பதம் செலுத்துவானாக வைத்தவனுடைய ஆன்ரு சம்ச்யத்தை அறிவார் யார் –

————————————————————————–

இப்படி மஹா பலி பக்கலும் கூட அனுக்ரஹத்தைப் பண்ணும் ஸ்வ பாவனானவன் கண்ணுக்கு இலக்காம்படி
தன்னை சர்வஸ்வதானமாக பண்ணி வந்து வர்த்திக்கிற திருமலை கிடீர் -நான் ஆதரிக்குமது என்கிறார் –

நெறியார் குழல் கற்றை முன்னின்று பின் தாழ்ந்து
அறியாது இளங்கரி என்று எண்ணிப் -பிரியாது
பூங்கொடிக்கள் வைகும் பொரு புனல் குன்று என்னும்
வேங்கடமே யாம் விரும்பும் வெற்பு –53–

பதவுரை

நெறியார்–திருமலை வழியிலேயே ஊன்றி யிருப்பவர்களுடைய
சூழல் கற்றை முன் நின்று பின் தாழ்ந்து அறியாது–கேச பாச மானது முன்னே முளைத்துப் பின்னே
தொங்கிக் கொண்டிருக்கவும் இது மநுஷ்ய வ்யக்தி யென்று தெரிந்து கொள்ளாமல்
இள கிரி என்று எண்ணி–இது ஒரு சிறு மலை யென்று எண்ணிக் கொண்டு
பூங்கொடிகள்–பூங்கொடிகளானவை
பிரியாது–அவ்விடம் விட்டு நீங்காமல்
வைகும்–நித்யவாஸம் பண்ணப் பெற்றதாய்
பொரு புனல் குன்று என்னும்–அலை யெறிகின்ற ஜல ஸம்ருத்தியை யுடைத்தான திருமலை யென்று ப்ரஸித்தமான
வேங்கடமே–திருவேங்கடமே
யாம் விரும்பும்–நாம் ஆசைப்பட வுரிய
வெற்பு–திருமலையாகும்.

நெறியார் குழல் கற்றை –
புறம்புத்தை அந்ய பரத்தையடைய அற்றுத் திருமலை   யாழ்வார்  பக்கலிலே அனுசந்தானத்தை யுடையராய்க் கொண்டு –
வழி பட ஆஸ்ரயிக்கிற வர்களுடைய குழல் கற்றையிலே –

முன்னின்று பின் தாழ்ந்து அறியாது இளங்கரி என்று எண்ணிப் –
அங்குத்தைப் பூங்கொடிகள் ஆனவை -இவர்கள் சலியாதே மூச்சு விடுதல் –
உடம்பு ஆடுதல் செய்யாதே இருக்கிற இருப்பைக் கொண்டு
சில சேதனர் என்று புத்தி பண்ணாதே —
இவை சில சிறு மலைகள் என்று பார்த்து முன்னின்று பின்னே வந்து படர்ந்து –
முன்னின்று பின்னே தாழ்ந்த குழல் கற்றை யுடைய நெறியார் பக்கலிலே என்னவுமாம் –
அதாகிறது-
தங்கள் பெருமையாலே தன்னிலே ஒன்றாக முன்னும் தாழ்ந்த குழல் கற்றையை யுடையர் என்றுமாம் –

பிரியாது பூங்கொடிக்கள் வைகும்-
அவ்விடத்தை விடாதே நின்று தன கார்யத்தையும் பிறப்பியா நிற்கும் –
இதுக்கடி சர்வதா சைதன்யம் யுண்டாகில் இவர்கள் ஒரு வியாபாரம் பண்ணார்களோ
என்று கொண்டு எண்ணி யாய்த்து பூங்கொடிகள் வைகும்–அவர்கள் தங்கள் கொள் கொம்பைப் பற்றி –

பொரு புனல் குன்று என்னும் வேங்கடமே –
பொரா நின்றுள்ள புனலை யுடைத்தான திருமலையை –அருவிகளும் சுனைகளும் பொருகிறபடி-

பூங்கொடிகள் வைகும் –
பூக்களை யுடைத்தான கொடிகள் தங்குகிற –

யாம் விரும்பும் வெற்பு-
நான் விரும்பும் இடம் என்கிறார் -அவர்கள் அங்கே இருந்தே இவ் வுடம்பைப் பொகட்டு
லோகாந்தரத்தே வேறு ஒரு யுடம்பு கொண்டு  அனுபவிக்க நினைக்க –
நான் இவ் யுடம்பால் யுள்ள பிரயோஜனம் இங்கே கொள்ளப் பெற்றேன் –

நெறியார் முன்னிற்று பின் தாழ்ந்து குழல் கற்றை அறியாது இளங்கிரி என்று எண்ணிப்
பிரியாது பூங்கொடிகள் வைகும் -என்று அந்வயம்-

————————————————————————–

இவனுக்கு எல்லை நிலமான திருமலை அளவும் அவர் விரும்பின வாறே
அவனும் தனக்கு வாஸ ஸ்தானமாக நினைத்து இருக்கும் திருமலைகள் இரண்டிலும் பண்ணக் கடவ
ஆதாரத்தை இவர் திரு உள்ளம் ஒன்றிலுமே பண்ணினானாய் இருக்கிறது –

வெற்பு என்று இரும் சோலை வேங்கடம் என்று இவ்விரண்டும்
நிற்பென்று நீ மதிக்கும் நீர்மை போல் -நிற்பென்று
உளம் கோயில் உள்ளம் வைத்து உள்ளினேன் வெள்ளத்து
இளம் கோயில் கை விடேல் என்று –54-

பதவுரை

வெற்பு என்ற–(தெற்கு) திருமலை யென்னப்படுகிற
இருஞ்சோலை–திருமாலிருஞ் சோலை யென்ன
வேங்கடம்–திருவேங்கடமென்ன
என்ன இவ் இரண்டும்–ஆகிய இத் திருமலைகளிரண்டும்
நிற்பு என்று–நாம் உகந்து வாழுமிடமென்று
நீ மதிக்கும் நீர்மை போல்–நீ திருவுள்ளம் பற்றி யிருக்குந் தன்மையை உடைத்தாயிருப்பது போலவே
உளம் கோயில்–(என்னுடைய) ஹ்ருதயமாகிற கோயிலும்
நிற்பு என்று–நீ உகந்து வாழுமிடமென்று
உள்ளம் வைத்து–பிரதிபத்தி பண்ணி
வெள்ளத்து இள கோவில்–திருப்பாற்கடலாகிற பாலாலயத்தை
கைவிடேல் என்று–கைவிட வேண்டா என்ற
உள்ளினேன்–பிரார்த்திக்கின்றேன்.

வெற்பு என்று இரும் சோலை –
இரும் சோலை வெற்பு என்று –
அதாகிறது -தெற்கில் திருமலை -திருமால் இரும் சோலை மலை என்றும்
வேங்கடம் என்று இவ்விரண்டும்-
வேங்கட வெற்பு -திருவேங்கடம் -என்று சொல்லுகிற இவ்விரண்டு ஸ்தானமும் –

நிற்பென்று –
நமக்கு வாஸ ஸ்தானம் என்று –

நீ மதிக்கும் நீர்மை போல் –
நீ புத்தி பண்ணும் ஸ்வ பாவம் போல்

நிற்பென்று உளம் கோயில் உள்ளம் வைத்து உள்ளினேன் –
என்னுடைய ஹ்ருதயம் ஆகிற கோயிலும் தேவர்க்கு வாஸ ஸ்தானம் என்று புத்தி பண்ணி –

வெள்ளத்து இளம் கோயில் கை விடேல் என்று உள்ளினேன் –
திருமலையைக் காட்டில் என் ஹ்ருதயத்தில் பண்ணின அபி நிவேசம் கண்டு எனக்காக
அவ்வோ திருமலைகளிலும் வந்து நிற்கைக்கும் அடியான திருப் பாற் கடலிலே சாய்ந்து அருளின   படி
புல் எழுந்து போய்த்ததோ என்று இரா நின்றேன் –
ஆன பின்பு என்பாடு வருகைக்கு பாலாலயமான திருப் பாற் கடல் உண்டு –
அவ்விடத்தை விட்டதாகாது ஒழிய வேணும் என்று பிரார்த்திக்கிறேன் -வேண்டிக் கொண்டேன் -என்கிறார்
கல்லும் கனைகடலும்  வைகுண்ட வானாடும் புல்லென்று ஒழிந்தன கொல்-பெரிய திரு -68–என்னக் கடவது இறே-

இளம் கோயில் கை விடேல் –
க்ருதஜ்ஞனாக வேணும் காண்-உபகரித்த இடத்தை மறக்கலாமோ –
சௌ பரிக்கு ஐம்பது ஸ்திரீகளை மாந்தாதா கொடுத்து ஒரு நாள் வந்து  –
பெண்காள் உங்களுக்கு ஒரு குறை இல்லையே -என்ன
ஒரு குறை யுண்டு -என்னை அல்லது புறம்பு அறி கிறிலேன்-என்றாப் போலே
இவரும் புறம்பு இல்லை -என்று அஞ்சுகிறார் –

————————————————————————–

இப்படி தேவர் என் பக்கலில் விருப்பத்தைப் பண்ணுகையாலே ஞான லாபத்தால் குறை யற்றேன் –
அதனுடைய பலமான ப்ராப்தியால் வரும் அனுபவத்தையும்  தேவரே பண்ணித் தந்து அருள வேணும் -என்கிறார்
உன்னை நினைக்காக அரிதான சம்சாரத்திலே உன்னை நினைக்கும் படி பண்ணினாய் –
இனி ப்ராப்தி யளவும் பண்ணாய் -என்கிறார்-

என்றும் மறந்து அறியேன் ஏழ் பிறப்பும் எப்பொழுதும்
நின்று நினைப்பு ஒழியா நீர்மையால் -வென்றி
அடல் ஆழி கொண்ட வறிவனே இன்பக்
கடலாழி நீ யருளிக் காண்–55-

பதவுரை

வென்றி–ஜய சீலமாய்
அடல்–தீக்ஷணமான
ஆழி–சக்கரத்தை
அறிவனே–ஸர்வஜ்ஞனான பெருமானே!
ஏழ் பிறப்பும்–இப்படி யிருக்கிற நீ எல்லா ஜன்மங்களிலும்
எப்பொழுதும்–எல்லா அவஸ்தைகளிலும்
நின்று நினைப்பு ஒழியா நீர்மையால்–ஒரு படிப்பட நின்று என்னைப் பற்றின நினைவு தப்பாமலிருந்ததனால்
என்றும் மறந்தறியேன்–உன்னை ஒருநாளும் மறப் பனல்லேன்
இன்பம் கடல் ஆழி–ஆநந்த ஸாகரத்தையும்
அருளிக் காண்–எனக்கு அருள வேணும்.

என்றும் மறந்து அறியேன் –
தேவரை ஒரு காலமும் மறந்து அறியேன் -கண்டால் இழவு மறக்கும் படி இருக்கை-
அதுக்கடி
ஸ்ரவண மநந  நிதித்யாசன அநந்தரம் பிறக்கும் உபாசன த்ருவாநு ஸ்ம்ருதியாலேயோ  
மறவாது ஒழிகிறது -என்னில் –

ஏழ் பிறப்பும் எப்பொழுதும் நின்று நினைப்பு ஒழியா நீர்மையால் –
எல்லா ஜன்மங்களிலும் -எல்லா அவஸ்தைகளிலும்-தேவர் எதிர் சூழல் புக்கு நின்று
இவன் நம்மை மறவாதே பெற்றிடுவானுக்கு என்று அனுசந்திக்கிற இவ் வனுசந்தானம்
ஒரு நாளும் மறவாத ஸ்வ பாவத்தாலே இப்பொழுது நினைத்த படியாலே எல்லாக் காலமும் மறந்து அறியேன் -என்கிறார் –

எம்பெருமான் விடாதே இருக்கையாலே மறக்க விரகு இல்லை –
என்னுடைய ஞானம் குறைவற்று இருக்கை அல்ல -உன் நினைவாலே –

மத்த ஸ்ம்ருதிர்ஞானம் அபோஹநஞ்ச -ஸ்ரீ கீதை -15-15-என்றும்

வேதாஹம் சமதீதாநி வர்த்தமாநாநி ச அர்ஜுன பவிஷ்யாணி  ச பூதானி மாம் து வேத ந கச்சன -ஸ்ரீ கீதை -7-26-என்றும்
அவனே அருளிச் செய்கிறான் இறே

போதோயம் விஷ்ணுரியம் புத்தி -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-8-28- என்று
அவனே ஞானம் பிராட்டியே புத்தி என்றது இறே

நின் பாத பங்கயம் நிரந்தரம் நினைப்பதாக நீ நினைக்க வேண்டுமே -திருச்சந்த விருத்தம் -101-

மறப்பற என்னுள்ளே மன்னினான் -திருவாய் -1-10-10-

இவனுடைய ஞானமும் பண்டாரத்து நின்றும் புறப்பட வேண்டி இருக்கிறபடி –
தர்ம பரதந்த்ரமான மாத்ரமே யல்ல -ஆத்மாவினுடைய தர்மபூத ஞானமும் பரதந்த்ரம் –
சத்தை பராதீனமான போது ஞானமும் பராதீனமாய் இருக்கை-

இத்தால்
ஞான கர்ம அனுக்ருஹீதையான பக்தியாலே யன்று -நீ யாகிற சித்த உபாயத்தாலே என்றபடி –

வென்றி அடலாழி கொண்ட அறிவனே –
நாம் செய்த அம்சம் செய்தோம் இறே -எல்லாம் செய்ய வேணும் என்று நிர்பந்திக்கக் கடவதோ என்ன
பிரபல பிரதி பந்தங்களைப் போக்குகைக்கு ஈடான பரிகரத்தை யுடையாய்
அதுக்கு மேலே உன்னை அறிவுதி -என்னை அறிவுதி-என்னாலே உன்னைப் பெற ஒண்ணாது –
உன்னாலே உன்னைப் பெற வேணும் என்னும் இடம் நீயே அறிவுதி –
சர்வஜ்ஞன் சர்வ சக்தி அல்லையோ –
நைவ கிஞ்சித் பரோஷந்தே ப்ரத்ய ஷோசி ந கஸ்யசித் -நைவ கிஞ்சித் அசித்தந்தே ந ச சித்தோசி கஸ்யசித் -ஜிதந்தே -6-
என்றும் சொல்லக் கடவது இறே அவனை
இத் தலைக்கு அஜ்ஞ்ஞான அசக்திகள் போலே அத்தலைக்கும் ஞான சக்திகள் ஸ்வரூபமாகை-
உன் பக்கல் ஒரு ஞான சக்திகளுக்கு வைகல்யம் காண்கிறிலேன் -ஆன பின்பு

இன்பக் கடலாழி நீ யருளிக் காண் –
பேற்றுக்கு உறுப்பான ஞானத்தில் கண் அழிவு அறுத்துத் தந்த நீயே
பெற்றால் அனுபவிக்கக்   கடவதான நிரதிசய ஆனந்தத்தையும் பண்ணித் தந்தருள வேணும்
ஞான சங்கோசம் அறுத்தாப் போலே -யேஷஹ்யேவா நந்தயாதி -தைத் ஆன -7-எண்ணப் பண்ணி அருளவும்  வேணும் –
கண்டால் பிறக்கும் ஸூ கத்தையும் பண்ணித் தந்து அருள வேணும்
அரியது செய்தால் எளியது செய்ய ஒண்ணாதோ
கடல் என்றும் ஆழி என்றும் சொல்லுகிற இது
மீமிசையாய் நிரதிசய ஆனந்தத்தைச் சொன்னபடி -ஆனந்த சமுத்ரம் -என்றபடி –

————————————————————————–

இப்படிப் பேறு அவனாலே என்று கொண்டு நிச்சயித்தாராகில் -அவன் செய்தபடி கண்டு இருக்கும் அத்தனை போக்கி
நெடும் காலம் சம்சரித்துப் போந்த நீர் அருள் என்று வடிம்பிடக் கடவதோ என்ன –
அப்படியே அது செய்யலாவது -ஸ்வரூப ஞானம் யுடையாருக்கு அன்றோ –
முன்னடி தோற்றாத படியான ப்ரேமம் அடியாக வந்த இருட்சி யுடையாருக்கும் பற்றாசும் அங்கே யுண்டாகையாலே
அத்தனை கார்யப் பாடு பார்த்துத் தானே தன்னைத் தருகிறான் என்று ஆறி இருக்க வேணுமோ என்கிறார் –
நீர் சேஷ பூதர் ஆனாலும் உம்முடைய ஸ்வரூப அனுரூபமாக இருக்க வேண்டாவோ –
சேஷியை இப்படி நிர்பந்திக்கக் கடவதோ என்னில் –
அது வைதமான படி இறே -ஆசை மிக்கால் செய்யலாவது உண்டோ என்கிறார் –

காணக் கழி காதல் கை மிக்குக் காட்டினால்
நாணப் படும் என்றால் நாணுமே –பேணிக்
கருமாலைப் பொன் மேனி காட்டா முன் காட்டும்
திருமாலை நாங்கள் திரு —56-

திருமாலை காண கழி காதல்–எம்பெருமானை ஸேவிக்க வேணுமென்று மிகுந்த விருப்பம்
கை மிக்கு காட்டினால் நாணப் படும் என்றால்–மேன்மேலும் அதிகரித்தால் அடங்கியிருக்க வேணுமென்றால் அடங்கி யிருக்க முடியுமோ?
கருமாலை–கரிய திருமாலாகிய அப்பெருமானை
பொன் மேனி காட்டா முன்–அவனது அழகிய திருமேனி தானே காட்டிக் கொடுப்பதற்கு முன்னே
நாங்கள் திரு–நமக்குப் புருஷகார பூதையான் பிராட்டி
பேணி–விரும்பி
காட்டும்–காட்டிக் கொடுப்பன்

காணக் கழி காதல் –
காணா விடில்  கழியாத காதல் -என்னுதல் –
அன்றிக்கே –
காணக் காணக் கழிந்து வருகிற காதல் உண்டு -மிகைத்து வருகிற காதல் -அது –

கை மிக்குக் காட்டினால்-
கை கழிந்து காட்டினால் கரை புரண்டால் -எனக்கு அபி நிவேசம் யுன்டானால் -என்றபடி

நாணப் படும் என்றால் நாணுமே —
அவன் தானே வந்து மேல் விழும் தனையும் லஜ்ஜித்து  ஒடுங்கி ஓரிடத்திலே இருக்க வேணும் –
நாம் மேல் விழக் கடவோம் அல்லோம் என்றால் அப்படி இருக்கப் போமோ
நீ சேஷீ-நான் சேஷபூதன் என்னும் முறையிலே நிற்கப் போமோ

நாணுமே-
வசனம் கொண்டு இருக்க ஒட்டுமோ -அதுக்கு மேலே –

கருமாலைப் –
கறுத்து ஸ்ரமஹரமான நிறைத்தை யுடையனான சர்வேஸ்வரன் –

பொன் மேனி காட்டா முன்-
ஸ்ப்ருஹணீயமான வடிவு காட்டுவதற்கு முன்னே

திருமாலை நாங்கள் திரு பேணிக் காட்டும்-
ஸ்ரீ யப்பதியை நமக்கு ஸ்வாமிநியான பெரிய பிராட்டியார் பேணிக் காட்டும் -ஆதரித்துக் கொடு வந்து காட்டும்
திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன் -மூன்றாம் -1-என்கிறபடியே
அவளைக் கண்டால் இறே அவ்வடிவு தோற்றுவது-

பொன்மேனி –
இருவருடைய ஒளியாலும் இத்தனை தோஷம் பாராமல் மேல் விழுந்தால் அத்தால் வந்த அபராதத்தைப் பொறுப்பித்து
ந கச்சின் ந அபராத்யதி -யுத்த -166-4-என்று
சேர்க்கைக்கு ஈடான பரிவரம் குறைவற்று இருந்த பின்பு

நாணப் படும் என்றால் நாணுமே –
இத்தலைக்கு அபி நிவேசத்தால் குறைவற்று இருந்தது –
அத்தலை தோஷாதோஷா  நிரூபணம் பண்ணும் விஷயம் அன்றிக்கே இருந்தது
ஆன பின்பு இனி ஏதடியாக லஜ்ஜிப்பது –

நங்கள் திரு –
புருஷகாரமாகைக்கு ப்ராப்தி –
பிராட்டி சந்நிதி யுண்டாக அயோக்யன் என்று அகலவும் விரகு இல்லை –
சாபராதன் என்று மீளவும் போகாது –
முறையில் நிற்கவும் ஒண்ணாது –

————————————————————————–

இப்படிப்பட்ட பெரிய பிராட்டியாரோடு கூடி யுள்ளவன் கிடிகோள் -சர்வ சமாஸ்ரயணீயன் -என்கிறார்-

திருமங்கை நின்றருளும் தெய்வம் நா வாழ்த்தும்
கருமம் கடைப்படிமின் கண்டீர் -உரிமையால்
ஏத்தினோம் பாதம் இரும் தடக்கை எந்தை பேர்
நாற்றிசையும் கேட்டீரே நாம்–57-

திருமங்கை நின்றருளும் தெய்வம் –
பெரிய பிராட்டியார் -இறையும் அகலகில்லேன் -என்று கொண்டு
நித்ய கடாஷத்தைப் பண்ணி நித்ய வாசம் பண்ணுகிற சர்வேஸ்வரனை –அவ்யபிசாரியான லஷணம்-

லஷ்மீ பத லாஷைக லஷணம் -ஸ்ரீ ரெங்க ராஜ ஸ்தவம் -1-9-
திருவடிகளிலே செம்பஞ்சு மார்விலே காணில் அவனே பரதேவதை -ஜகத் காரணத்வாதி அப்ரயோஜகம்

திருவில்லாத் தேவர் -நான்முகன் -53-
ஸ்ரீ யபதி நிகில ஹேய ப்ரத்ய நீக கல்யாணை கதா ந-என்று  கீதா பாஷ்யம் –
கல்யாண குணங்களுக்கு முன்னே எடுக்கையாலே நிரூபக தர்மம் –

நா வாழ்த்தும் கருமம் –
நாவாலே ஸ்தோத்ரம் பண்ணுகை யாகிற காரியத்தில் –

கடைப் பிடிமின் கண்டீர் –
இதுவும் ஒரு வார்த்தை சொல்லுகிறேன் என்று இராதே –
இத்தை புத்தி பண்ணுங்கள் கிடி கோள்-

கடைப்படிமின் கண்டீர் –
இதிலர் ஒருப்படுங்கோள்-எத்தனையேனும் செல்ல அயோக்யரான எங்களுக்கு
ஏத்தின போதாக ஏத்தப் போயிருக்குமோ என்ன –

உரிமையால் ஏத்தினோம் –
நான் ஏத்திற்று வேறு ஒரு ஆகாரம் கொண்டோ -சேஷித்வ ப்ராப்தியால் வந்த முறை கொண்டு அன்றோ –
ஆன பின்பு உங்களுக்கும் அவன் திருவடிகளை ஏத்தக் குறையில்லை –

எந்தை பேர் நாம் உரிமையால் ஏத்தினோம் –
நாங்கள் அவனுடைய பேரை சேஷபூதர் என்னும் ப்ராப்தியாலே ஏத்தினோம் –
முறை யறிந்த நாம் முறை தப்பாமே ஏத்தினோம் –
விபீஷண லஷ்மணாதிகளைப் போலே —
சூர்பணகை போலே முறை கெட அல்ல –

இருந்தடக் கை எந்தை பேர் –
பெருத்து பணைத்து வளர்ந்த தோள்களை யுடைய ஸ்வாமி யுடைய திருவடிகளை
திரு நாமங்களாலே ஏத்தினோம் –

நாற்றிசையும் கேட்டீரே –
இவ்வர்த்தத்தை நாலு வகைப் பட்ட திக்கில் உள்ளார் எல்லாம் கேட்டி கோளோ என்கிறார்
எந்தை பேர் நாற்றிசையும் என்று கீழோடு கூட்டி
ஸ்வாமி யுடைய பேர் அன்றோ -எல்லா திக்கிலும் இது கேட்டி கோளே-என்றுமாம் –

————————————————————————–

நமக்கு இந்த நன்மை எல்லாம் உண்டாயிற்று சர்வேஸ்வரனுடைய கடாஷத்தால் -என்கிறார்-

நாம் பெற்ற நன்மையையும் நா மங்கை நன்னெஞ்சத்து
ஓம்பி இருந்து எம்மை ஓதுவித்து -வேம்பின்
பொருள் நீர்மை யாயினும் பொன்னாழி பாடென்று
அருள் நீர்மை தந்த வருள்–58-

பதவுரை

வேம்பு பொருளின் நீர்மை ஆயினும்–(எம்பெருமானைப் பாடுவதானது) வேம்பு என்னும்
வஸ்துவின் ஸ்வபாவம் போலே கைப்பதாகத் தோன்றினாலும்
பொன் ஆழி–அழகிய திருவாழியை (கையுந்திருவாழியுமான சோத்தி யழகை)
பாடு என்று–பாடக் கடவாய் என்று
நா மங்கை–ஸரஸ்வதி யானவள்
நெஞ்சத்து–(நமது) நல்ல நெஞ்சிலே
ஒம்பி இருந்து–ஆதரித்து இருந்து
எம்மை–நீர்மைக் கொண்டு
ஓது வித்து–பகவத் விஷயத்தைப் பாடச் செய்ததனால்
நாம் பெற்று நன்மையும்–தாம் அடைந்த ஸுஹ்ருதமும் (எதனாலே வந்ததென்னில்)
அருள் நீர்மை தந்த அருள்–அருளையே இயல்வாகவுடைய ஸர்வேச்வரன் அருளிய க்ருபையினாலே வந்தது.

நாம் பெற்ற நன்மையையும் நா மங்கை நன்னெஞ்சத்து ஓம்பி இருந்து எம்மை ஓதுவித்து
நமக்கு யுண்டான இந்த லாபம் சரஸ்வதியானவள் இவ்விடம் இருந்து ஏத்திச் செல்லுகைக்கு
பாங்கான ஸ்தலம் என்று புத்தி பண்ணி –

ஓம்பி இருந்து –
நான் விதேயனான போது சொல்லுவித்து –
அவிதேயனான போது விட்டுப் படித்தும் சொல்லுவிக்கையாலே –

ஓதுவித்து –
இவர்களுடைய சந்த அனுவர்த்தனம் பண்ணி -ராஜபுத்ரரைப் பள்ளி ஒதுவிப்பாரைப் போலே –

ஸ்ரீ வால்மீகி பகவானுக்கு பிரம்மா பிரசாதித்தான் –
இவர்க்கு எம்பெருமான் பிரசாதித்தான் –
அவன் தான் சொல்லுவித்த பிரகாரம் ஏது என்னில் –

வேம்பின் பொருள் நீர்மை யாயினும் பொன்னாழி பாடென்று
கையும் திரு ஆழியுமான சேர்த்தி இருந்தபடி கண்டாயே
இது வேம்பாகிற பதார்த்தத்தின் யுடைய ஸ்வ பாவத்தை யுடைத்தே யாகிலும் இத்தைப் பாடு என்று –
இனிது என்று இருந்தில்லை யாகிலும் இத்தைச் செய்யப் பார் –

பொன்னாழி பாடு என்று –
வேப்பங்குடி நீர் இருக்கிறபடி –
இப்படி அவன் தான் பஷபதித்து இங்கனே செய்கைக்கு அடி என் என்றால்

அருள் நீர்மை தந்த வருள்-
அருளுகையே ஸ்வா பாவமாக உடையவனானவன் பண்ணின பிரசாதம் நாம் பெற்ற நன்மைக்கு அடி என்கிறார் –

நாமங்கை ஓதுவித்து –
சரஸ்வதி குட நீராட்டுகையாலே -சொற்பணி செய் ஆயிரம் -திரு -1-10-1-
லோகே வனஸ்பதி -ஸ்ரீ ஸ்தவம் -11-

————————————————————————–

இந்த லாபத்துக்கு அடியான பிரதம தர்சனம் இருந்தபடியைச் சொல்கிறார்-

அருள் புரிந்த சிந்தை அடியார் மேல் வைத்து
பொருள் தெரிந்து காண் குற்ற வப்போது –இருள் திரிந்து
நோக்கினேன் நோக்கி நினைந்தேன் தொண் கமலம்
ஓக்கினேன் என்னையும் அங்கு ஓர்ந்து–59-

பதவுரை

அருள் புரிந்த சிந்தை–அருளோடு கூடின திருவுள்ளத்தை
அடியார் மேல் வைத்து–அடியவராகிய எங்கள் மேலே வைத்து
பொருள் தெரிந்து–அபதார்த்தமாகத் திருவுள்ளம் பற்றி
காண் குற்ற அப்போது–கடாக்ஷித்தருளுகிற காலத்திலே
இருள் இரிந்து–அஜ்ஞான விருள் நீங்கப் பெற்று
நோக்கினேன்–ஸ்வரூபத்தை ஆராய்ந்தேன்
நோக்கி–அப்படி ஆராய்ந்து
ஒண் கமலம் அது–அழகிய தாமரை மலர்களை என்னலாம் படியுள்ள அத் திருவடிகளை
நினைந்தேன்–(ப்ராப்யமாக அநுஸ்ந்தித்தேன்
ஓர்ந்து–(இத் திருவடிகள் தவிர நமக்கு வேறு புகலில்லை யென்று நிரூபித்து
என்னையும்–ஆத்மாவையும்
அங்கு–அத் திருவடிகளிலே
ஒக்கினேன்–ஸமர்ப்பித்தேன்.

அருள் புரிந்த சிந்தை —
தா நஹம் த்விஷத க்ரூரான் சம்சாறேஷூ நராதமான் ஷிபாமி -ஸ்ரீ கீதை -16-19-
ஏற்று பார்க்கை அன்றிக்கே
ததாமி புத்தி யோகம் தம் -ஸ்ரீ கீதை -10-10-என்கிறபடியே
அருளைப் பண்ணா நின்றுள்ள திரு உள்ளத்தை –

அருள் புரிந்த சிந்தை –
அருளி அல்லது
நிற்க ஒண்ணாத படியான கிருபையை யுடைய சிந்தையை –

அதாவது –
இத்தலையில் தோஷம் தொடராத படி அளிவருள் மிக்க படி –

அடியார் மேல் வைத்து-
அடியோமான எங்கள் மேலே வைத்து –
தன்னுடையார் என்கிறதுக்கு மேலேபட்ட ஆகாரத்தைப் பாராதே பக்கலிலே வைத்து –
அடியார் என்கிறதுக்குப் பொதுவான நிலையிலே சொல்லிற்று ஆகவுமாம் –
அன்றிக்கே –
திருவிடை கழியிலே தாமும் மற்றை ஆழ்வார்களுமாக இருக்கிற இருப்பிலே
தானும்  பிராட்டியுமாக வந்து நெருக்கின படியைச் சொல்லிற்று ஆகவுமாம்

அடியார் மேல் வைத்து –
தன்னைத் தான் இழக்க மாட்டாமை -நிர்ஹேதுகம் என்றபடி –

பொருள் தெரிந்து காண்குற்ற வப்போது —
அத்தாலே நாங்கள் பதார்த்த விவேகம் பண்ணி தர்சிக்கிற போது-அன்றிக்கே
அருள் புரிந்துள்ள உன்னுடைய திரு  உள்ளத்தை எங்கள் மேல் வைத்து –
எங்களை ஒரு பதார்த்தமாக புத்தி பண்ணின போது என்றுமாம்

பொருள் அல்லாத என்னைப் பொருளாக்கி அடிமை கொண்டே -திருவாய் -5-7-3-
அந்த அருளுக்கு தாம் பாத்ரபூதர் ஆகையாலே –

இருள் திரிந்து நோக்கினேன் –
ஞானத்துக்கு விரோதியான அஜ்ஞான அந்தகாரங்களைப் போக்கிக் கண்டேன் –
இப்படிக் கண்ட அநந்தரம்-

நோக்கி –
அவன் சேஷி -நான் சேஷபூதன்-என்கிற ஸ்வரூப ஞானம் யுண்டாயிற்று –
அத்தாலே –

நினைந்தேன் தொண் கமலம்-
உன்னுடைய கமலம் போன்றுள்ள திருவடிகளை நினைத்தேன் –
உன் திருவடிகளை நமக்கு பரம ப்ராப்யம் என்று அனுசந்தித்தேன் –
ப்ராப்ய நிஷ்கர்ஷம் பண்ணினேன் -அநந்தரம் –

ஓர்ந்து –
நிரூபித்துப் பரதந்த்ரமாய் என்னோடு எனக்கு அடைவில்லாமையையும்
அவனுக்கேயாய் இருக்கிறபடியையும் ஆராய்ந்து
ஆருடையத்தை ஆருடையதாகத் தான் நாம் பிரதிபத்தி பண்ணி இருந்தோம் என்று அனுதபித்து –
என்னையும் அங்கு ஓக்கினேன் –
அத்திருவடிகளிலே என்னையும் நிஷேபித்தேன் –
உபாயமும் அவனே யாக அத்யவசித்தேன் –

————————————————————————–

இப்படி அனுசந்தித்த இவர் ஐஸ்வர் யத்திலும்
ஆஸ்ரித பார தந்திரியமே அவனுக்கு ஸ்வரூபம் என்று அறிவர் கிடீர் –
தனக்கான ஜகத்தை என்றும் ரஷிப்பன் என்று
சர்வேஸ்வரன் தன திறத்து ஸூலபனான படியைச் சொல்லுகிறார் –

ஓர் உருவன் அல்லை ஒளி உருவம் நின் உருவம்
ஈர் உருவன் என்பர் இரு நிலத்தோர் -ஓர் உருவம்
ஆதியாம் வண்ணம் அறிந்தார் அவர் கண்டீர்
நீதியால் மண் காப்பார் நின்று–60

ஓர் உருவன் அல்லை –
ஸ்வ தந்த்ரமாய் இருப்பதொரு ஸ்வரூபத்தை உடையை அல்லை –
நித்யோநித்யா நாம் -கட உப -5-13-என்னுமபடியேயும் –
ஏகமேவாத்விதீயம்-சாந்தோ -6-2-1-என்னும்படியேயும்-
சர்வ விசஜாதீயனாய் சர்வ நியாமகனாய் இருக்கும் இருப்பு அல்ல உன் வடிவு –

ஒளி உருவம் நின் உருவம்-
ஆஸ்ரித அர்த்தமாய் இருக்கும் இதுவே உனக்கு நிறமாக நினைத்து இருப்பதீ-
பக்தா நாம் த்வம் பிரகாசசே -ஜிதந்தே-5-என்கிற இது உனக்கு ஸ்வரூபம்
உயர்வற உயர்நலம் உடையவனாய் இருக்கை யல்ல ஸ்வரூபம் –
எளிவரும் இயல்வினனாகை-இங்கனே இருக்கிற உன்னை  –

ஈர் உருவன் என்பர் இரு நிலத்தோர் –
அபரிச்சேத்ய ஸ்வரூபன் என்னா நிற்பார்கள் அவிசேஷஜ்ஞர்-பெரிய ஈஸ்வரன் என்பர்கள்-
அங்கன் அன்றிக்கே
ஒருபடிப்பட்டு இருப்பதொரு விக்ரஹத்தை உடையை அல்லை

இத்தால்
பஹூ நி மீ வ்யதீதா நி -ஜன்மா நி –ஸ்ரீ கீதை -4-5-என்றும்
பிறப்பில் பலபிறவி பெருமான் -திருவாய் -2-9-5- என்றும்
அநேகம் திரு நாமங்களை உடையவன் என்றபடி –

ஒளி யுருவம் நின்னுருவம் –
இங்கனே இருக்கச் செய்தே பிறக்கப் பிறக்க ஸூத்த சத்வ மயமாகக் கொண்டு
நிரவதிக தேஜோ ரூபமாய் இருக்கும் உன் திருமேனி
ஸ்ரேயான் பவதி ஜாயமான -யஜூர் அஷ்டகம் -3-6/9-என்கிறபடியே –

ஈர் உருவன் என்பர் இரு நிலத்தோர் —
அசாதாரணமாய் இருப்பது ஒன்றும் அவதரிப்பது ஒன்றுமாக இரண்டு என்று
சொல்லா நிற்பார்கள் நாட்டார் -என்றுமாம் –

ஓர் உருவம்-
அந்த ஆஸ்ரித அர்த்தமாக அவதரித்ததால் உண்டான ஒளி உருவமான ஸ்வரூபம் ஒன்றுமே –

ஆதியாம் வண்ணம் அறிந்தார் அவர் கண்டீர்-
ஜகத் காரணாமாய் இருப்பது என்னும் இடத்தை அறிந்தவர்கள் கிடீர் –

ஆதியாம் வண்ணம் அறிந்தார் –
எல்லார்க்கும் சத்தை அவன் என்று அறிந்த வைஷ்ணவர்கள்

ஆதி –
ஆஸ்ரிதர்க்கு உஜ்ஜீவன ஹேது
முறை தப்பாமல் நின்று ஜகத் ரஷணம் பண்ணுகிறார் ஆகிறார்

நீதியால் –
தீதில் நன்னெறி காட்டி எங்கும் திரிந்து –பெருமாள் திரு -3-3-என்றும்
தீர்த்த கரராமின் திரிந்து -இரண்டாம் திரு -14-என்னும்படியே
ஸ்வ தந்த்ரன் என்னா ஜகத்து கை விட்டுப் போம் –
எளியன் என்னப் பிழைத்துப் போம் –
அருமை சொல்லுகிறவர்கள் ஜகத்தை வெளிப்படுத்துகிறார் –
அஜ்ஞானத்தாலே முன்பு கை விட்டாப் போலே இப்போது ஜ்ஞானத்தாலே கைவிடப் பார்க்கிறார் –

————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பூதத் ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ பூதத் ஆழ்வார் அருளிய இரண்டாம் திருவந்தாதி – -41-50– ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் —

February 24, 2015

திருப் பொலிந்த ஆகத்தான் பாதம் நினைமின் என்றாரே –
அனந்தரம் அது தான்  தமக்கு யுடலாகத் தன திரு உள்ளத்தைக் குறித்து
ஸ்ரமஹரமான வடிவழகை யுடையவனை நீ முந்துற முன்னம்  மறவாதே கிடாய் -என்கிறார்-

பொருளால் அமருலகம் புக்கியல லாகாது
அருளால் அறம் அருளும்  அன்றே –அருளாலே
மா மறையோர்க்கு ஈந்த மணி வண்ணன் பாதமே
நீ மறவேல் நெஞ்சே நினை –41-

பதவுரை

அமருலகம்–சுவர்க்க லோகத்தை
பொருளால்–‘இதுவும் ஒரு புருஷார்த்தம்’ என்கிற எண்ணத்துடன்
புக்கு இயலல் ஆகாது–போய்ச் சேர முயல்வது தகாது;
அருளான்–பரம தயாளுவான எம் பெருமான்
அறம்–புண்யத்தின் பயனான சுவர்க்க லோகத்தை
அருளும் அன்றே–தன் க்ருபையாலே கிடைக்கச் செய்வனாம்;
அருளாலே–கிருபையினாலே
மா மறை யோர்க்கு–மஹர்ஷிகளுக்கு
ஈந்த–முக்தி யளித்த
மணி வண்ணன் பாதமே-நீலமணி நிறத்தவனான எம்பெருமானது திருவடிகளையே
நெஞ்சே நீ மறவேல்–நெஞ்சே! நீ மறவாதே
நினை–தியானித்துக் கொண்டிரு.

பொருளால் அமருலகம் புக்கியல லாகாது –
அர்த்த புருஷார்த்தத்தை சாதனமாகக் கொண்டு
ஸ்வரூப அனுரூபமான ப்ராப்ய பூமியிலே புக ஒண்ணாதே -என்னுதல்
அன்றிக்கே –
வஸ்துத்வ புத்தி பண்ணி ப்ரஹ்மாதி லோகங்களிலே புகுவதாக அர்த்திக்க  யத்நிக்கலாகாது –

ஆகாது என்றது
கடவது என்றபடி –

ஸூர புரீயத் கச்சதோ துர்கதி -ஸ்ரீ குணரத்ன கோசம் -21-
பிராமணர்க்கு புறச் சேரி யருகு வழி போகாதாப் போலே

அருளால் அறம் அருளும்  அன்றே
என் தான் ஆகாது ஒழிவான் என் என்னில் –
சர்வேச்வரனானவன் நிரவதிக க்ருபாவானாகையாலே இவன் தான் இழந்து போகிறது என்
பெற்றிடுவானுக்கு என்று கொண்டு இவன் கண் குழிவு காண மாட்டாத கிருபையாலே இவற்றைத் தரிலும் தரும்
இவன் குரவத் ரூப கரணங்கள் உடையவன் ஆகையாலே  அத்தை ஆசைப் பட்டால் தர்மத்தை பண்ணென்று விட்டிலும் விடும்
மண் தின்னக் கொடுக்கும் தாயைப் போலே –
கோவிந்த சுவாமியைப் போலே போகம் நீ எய்திப் பின்னும் நம்மிடைக்கே போதுவாய்-என்னிலும் என்னும்

அறம் என்கிறது
தர்ம பலமான ஸ்வர்க்கத்தை என்னுதல்-அது பெறில் ஸ்வரூப விரோதமாய் விடும்
கீழ்ச் சொன்னவை பெறும் போதும்
அவன் அருள் வேணுமான பின்பு அவ்வருள் தன்னையே கொண்டு அவனைப் பெற அமையாதோ என்னும் –

அருளாலே  மா மறையோர்க்கு ஈந்த-
தன்னுடைய கிருபையாலே தன்னைக் கொடுக்குமவன் திருவடிகளை

மா மறையோர்க்கு ஈந்த –
சம்சாரத்தில் விரக்தராய் உன் திருவடிகளைப் பெற வேணும் என்று கொண்டு அபேஷித்த
ஸூக வாம தேவாதிகளுக்கு மோஷத்தைக் கொடுத்தான் ஆயிற்று

ஸூ கோமுக்த வாம தேவோ முக்த – என்னும்படி
தன்னுடைய கிருபையாலே மோஷத்தைக் கொடுத்து அருளின படி யாகவுமாம்

மா மறையோர்க்கு என்று 
றகார ஒற்றான போது மார்க்கண்டேயனுக்கு அநித்யத்வம் கொடுத்தபடி ஆகிறது
அன்றிக்கே
ஸ்ரீ தண்ட காரண்யத்தில் ருஷிகள் என்றுமாம்

ரூப சம்ஹாநனம் லஷ்மீம் சௌகுமார்யம் ஸூ வேஷதாம் தத்ரு ஸூ விச்மிதாகார ராமஸ்ய வன வாசின  -ஆர -1-13-என்றபடி-
ரூப சம்ஹா நனம் -ஸ்வா பாவிகமான அழகு
லஷ்மீம் -காந்தி
சௌகுமார்யம் -பார்க்கப் பொறாமை –
ஸூ வேஷதாம் -ஜடையும் வல்கலையும் படி சாத்தினாப் போலே இருக்கை
தத்ரு ஸூ விச்மிதாகார ராமஸ்ய வன வாசின-ஆர் காணும் காட்சியை  எங்கே கிடந்தார் காண்கிறார்
சதா பச்யந்தி -இங்கே யாவதே –

மணி வண்ணன் பாதமே –
அவர்களுக்கு அனுபவிக்கக் கொடுத்தது அவ் வடிவு அழகைப்  போலே காணும்
நீல மணி போலே ஸ்ரமஹரமான வடிவு அழகை உடையவன் திருவடிகளையே  நெஞ்சே  நீ மறவாதே கொள்

நீ மறவேல் நெஞ்சே நினை –
ஜ்ஞான பிரசுர த்வாரமான  நீ உனக்க அடைத்த விஷயத்தை விஸ்மரியாதே கொள்

நெஞ்சே உனக்கு உபதேசிக்க வேண்டாவே –
இத்தை ஒலக்க வார்த்தையாக புத்தி பண்ணாதே கொள் –
இவ்விஷயத்தில் மறப்பாகிறது-கீழ்ச் சொன்னவற்றோடே  வ்யாப்தமாய் இருப்பது ஓன்று இறே
அது வாராமைக்காக நீ மறவேல் என்று உணர்த்துகிறார்  –

————————————————————————–

இவ்வருகு யுண்டான சம்சார போகங்களில் விரக்தராய் கொண்டு அவனை  ஸ்மரிக்கும் அவர்கள் இறே
ஜன்மங்களிலே பிரவேசியாதார் ஆகிறார் -என்கிறார் –

நினைப்பன் திருமாலை நீண்ட தோள் காண
நினைப்பார் பிறப்பொன்றும் நேரார் -மனைப்பால்
பிறந்தார் பிறந்து எய்தும் பேரின்பம் எல்லாம்
துறந்தார் தொழுதாரத் தோள்–42–

பதவுரை

திருமாலை–லக்ஷ்மீ நாதனான எம்பெருமானை
நீண்ட தோள் காண நினைப்பான்–(அவனது) சிறந்த திருத்தோள்களைக் கண்டு அநுபவிப்பதற்காக நினைக்கின்றேன்.
நினைப்பார்–இப்படி நினைப்பவர்கள்
ஒன்று பிறப்பும் நேரார்–ஒருவகை யோனிப் பிறப்பையும் அடைய மாட்டார்கள்
அத்தோள்–அந்தத் திருத்தோள்களை
தொழுதார்–தொழுமவர்கள்
மனைப்பால் பிறந்தார் பிறந்து எய்தும் பேர் இன்பம் எல்லாம துறந்தார்–ஸம்ஸாரத்தில் பிறந்தவர்கள் ஜன்ம மெடுத்ததனால்
அடையக் கூடிய சிற்றின்பங்களை யெல்லாம் வெறுப்பவராவர்.

நினைப்பன் திருமாலை –
என்றும் ஸ்ம்ருதி விஷய பூதனாவான் ஸ்ரீ யபதி போலே –
தாயையும் தமப்பனையும் சேர நினைப்பாரைப் போலே –
தேசாந்தரம் போன பிரஜை நினைக்குமா போலே –

அத்ரி பகவான் ஆஸ்ரமத்திலே இருவரும் கூட இருந்தாப் போலே நினையா நின்றேன் –
திரு இடை கழியிலே கண்டாப் போலே –

ப்ராதா பார்த்தா த பந்துஸ் ச  பிதா ச மம ராகவ -அயோத்ய -8-31-என்னும் விஷயத்தை 
இப்படி நினைக்கிறது தான்
ஒரு பிரயோஜனதுக்காக மடி  ஏற்கைக்கு அன்று –

நீண்ட தோள் காண-
பிராட்டியைப் பிரிந்து  உறாவின தோள் அன்றிக்கே –
அவளோட்டை  சேர்த்தியாலே பணைத்து வளர்ந்த திருத் தோள்களைக் காண –
அவளோட்டை கலவியாலே போக்யதை அளவிறந்த தோள் காண –
ஸ்வர்க்காதிகளுக்கு அன்று -ஸ்ம்ருதிக்கு விரோதத்தைப் பண்ணும் ஜன்மங்களைச் செய்வது என் -என்றால் –

நினைப்பார் பிறப்பொன்றும் நேரார் –
இப்படி அனுசந்திக்கும் அவர்கள் ஒரு நாளும் ஒரு ஜென்மத்தைக் கிட்டார் –

அன்றிக்கே –
பிறப்பொன்றும் நேரார் -என்ற பாடம் ஆய்த்தாகில் –
பிறப்பு என்று பேரை உடைத்தானது ஒரு காலமும் இவர்களை வந்து சேராது -என்கிறது –

மனைப்பால்-
மனையிடத்து –

பிறந்தார் பிறந்து எய்தும் –
ஒரோ க்ருஹங்களில் பிறக்கக் கடவரானவர்கள் பிறந்து ப்ராபிக்கும் –
பேரின்பம் எல்லாம்-

இந்த ஸூகம் எல்லாம் பேரின்பம் என்கிறது
இந்நாள் வரையளவும் பகவத் விஷயத்தில் வர ஒட்டாத கனத்தைக் கொண்டு –

துறந்தார் தொழுதாரத் தோள்–துறந்தார் தொழுதார் அத்தோள்-
இத்தை எல்லாம் த்யஜித்தவர்கள் இறே
அத் தோள்கள் தொழுவார் ஆகிறார் –

அங்கன் அன்றிக்கே
ஒரு ஸ்ம்ருதி மாத்ரத்தாலே அவன் தான் தன்னைக் கொடு வந்து காட்டில் காட்டும் அத்தனை போக்கி –
யார் தான் இவற்றை விட்டுத் தோளைத் தொழுதார் -என்னுதல்-

————————————————————————–

நம்மால் அது துறக்கவும் போகாது -நினைக்கவும் போகாது –
அவன் தானே தன்னை யுகந்தார் உடைய விரோதிகளைப் போக்கும்
ஸ்வ பாவத்தில் ஈடுபட்டு இருக்குமவர்கள் திருவடிகளே நமக்கு உத்தேச்யம் -என்கிறார் –
எனக்கு அவன் தோள் தொழ வேண்டா -தொழு வாரைத்   தொழ அமையும் –
அத் தோளைத் தொழு வார்களைத் தொழும் அத்தனை -என்கிறார் –

தோள் இரண்டும் எட்டு ஏழும் மூன்றும் முடி அனைத்தும்
தாள் இரண்டும் வீழச் சரம் துணிந்தான் -தாள் இரண்டும்
ஆர் தொழுவார் பாதம் அவை தொழுவது அன்றே என்
சீர் கெழு தோள் செய்யும் சிறப்பு —43-

பதவுரை

தோள் இரண்டு எட்டு ஏழும் மூன்றும்–இருபது தோள்களும்
வீழ–முடியும்படி
சரம் துரந்தான்–அம்புகளைச் செலுத்தின பெருமானுடைய
தாள் இரண்டும்–இரண்டு திருவடிகளையும்
தொழுவார் ஆர்–தொழுகிறவர்கள் எவரோ (அவர்களது)
முடி அனைத்தும்–(பத்தாகிய) எல்லாத் தலைகளும்
தாள் இரண்டும்–இரண்டு கால்களும்
பாதம் அவை–திருவடிகளை
தொழுவது அன்றே–ஸேவிப்பதன்றோ
என் சீர் கெழு தோள் செய்யும் சிறப்பு–எனது அழகிய தோள்கள் (எனக்குச்) செய்யும் உபகாரமாம்.

தோள் இரண்டும் எட்டு ஏழும் மூன்றும் –
இரண்டு எட்டு -பத்து -ஏழு மூன்று பத்து -ஆக இருபது தோள்களையும்

முடி அனைத்தும்-
அறுக்க வறுக்க முளைக்கையாலே ஒரு சங்க்யை சொல்ல ஒண்ணாத படியான தலைகளையும் –

தாள் இரண்டும் வீழச் –
இவை எல்லா வற்றுக்கும் ஆதாரமான தாள் இரண்டையும் விழும்படிக்கு ஈடாக

சரம் துணிந்தான் –
இந்த க்ரம விவஷையால் பிரயோஜனம் –
திருச் சரத்துக்குப் போது போக்குண்டாம் படி பண்ணுகையைச் சொல்லுகை –
திருச்சரம் விளையாடின க்ரமம்-

இத்தால்
ஆஸ்ரித விரோதி யாகையாலே நம்மாலே ஸ்ருஷ்டன் என்று பாராதே முடியச் செய்த படி –

சரம் துறந்தான்  தாள் இரண்டும்-
சக்ரவர்த்தி திருமகன் தாள் இரண்டும் -சரண்ய லஷணம் தான் இருக்கும் படி இதுவாகாதே –
அவன் திருவடிகள் இரண்டையும் –

ஆர் தொழுவார்-
ஏதேனும் ஜன்ம வ்ருத்தங்கள் ஆகவுமாம் –
ஏதேனும் ஞானம் ஆகவுமாம் –
இந்தத் தொழுகை யாகிற ஸ்வ பாவம் உண்டாம் அத்தனையே வேண்டுவது
ஒருவனுக்கு உத்கர்ஷ அபகர்ஷங்கள் ஆகிறன இது யுண்டாகையும்இல்லை யாகுமையும் இறே –

ஆரேனுமாக வமையும் -தொழுகையே பிரயோஜனம் –
பாற் கடல்  சேர்ந்த பரமனைப் பயிலும் திரு வுடையார் யாவரேலும் அவர் கண்டீர் -திருவாய் -3-7-1-

ஆர் –
ராஷசனாக அமையும் –
குரங்குகளாக அமையும் –
ஷத்ரியனாக -அர்ஜுனன் -அமையும் –
பிசாசாக -கண்டகர்ணன் -அமையும் –

பாதம் அவை தொழுவது அன்றே
தொழும் அவர்கள் ஆரேனுமாமாப் போலே அவர்கள் பக்கலிலும் திருவடிகள் உத்தேச்யம் -என்கிறார் –

அவன் தன்னை ஆஸ்ரயிக்கை ஆகிறது –
ஒருவன் கையைப் பிடித்துக் கார்யம் கொண்டவோபாதி –

வைஷ்ணவர்கள் முன்னாகப் பற்றுகை யாகிறது
மறுக்க ஒண்ணாத படி ஒருவன் காலைப் பிடித்துக் கார்யம் கொண்ட மாத்ரம் –

பாதமவை தொழு தென்றே –
அவர்களோடு ஒப்பூண் உண்ண வல்ல –

என் சீர் கெழு தோள் செய்யும் சிறப்பு —
புருஷார்த்தம் தர வந்த தோள் செய்யும் உபகாரம் –
அழகு சேர்ந்த தோளானது எனக்குப் பண்ணும் தரமாகிறது –

சீர் கெழு தோள் –
அவர்களில் தமக்கு உள்ள வாசி –
இத் தோளைத் தொழ வமையும் இனி -புருஷார்த்த உபாயமாகத் தோற்றின சரீரம் இறே –

பாதமவை தொழுவதன்றே –
ததீயர் அளவும் வந்து நிற்கப் பெற்ற லாபத்தாலே
சீர் கெழு தோள் -என்கிறார் –

————————————————————————–

இப்படி அசலைக் காக்கும்படி பண்ண வல்ல விஷயத்தை ஆஸ்ரயியாதே மறந்து இருக்குமவர்கள்
சேதனர் அல்லர் கிடீர் என்கிறார் –
பாகவதர் உத்தேச்யர் ஆனவோ பாதி அபாகவதரும் த்யாஜ்யராக கடவது இறே
பகவத் சம்பந்தம் யுடையாரே வஸ்து பூதர் -அவர்கள் எனக்கு நாதர் என்கிறார் –
இதில் எம்பெருமானை யறியாதார் அவஸ்துக்கள்-எனக்கு அவர்களோடு சம்பந்தம் இல்லை -என்கிறார் –

சிறந்தார்க்கு எழு துணையாம் செங்கண் மால் நாமம்
மறந்தாரை மானிடமா வையேன் –அறம் தாங்கும்
மாதவனே என்னும் மனம் படைத்தது மற்றவன் பேர்
ஓதுவதே நாவினால் உள்ளு ——-44-

பதவுரை

சிறந்தார்க்கு–ஸ்ரீவைஷ்ணவோத்தமர்களுக்கு
எழு துணை ஆம்–உஜ்ஜீவந ஹேதுவான துணையாகின்ற
நாமம்–திருநாமத்தை
மறந்தாரை–மறப்பவர்களை
மானிடம் ஆ–மநுஷ்ய யோனியிற் பிறந்தவர்களாக
வையேன்–என்னெஞ்சில் கொள்ள மாட்டேன்
அறம் தாங்கும் மாதவனே என்னும் மனம் படைத்து–“தர்ம ஸ்தாபநம் பண்ண வல்ல திருமாலே!“ என்று
கூவி யழைக்கும்படி யான அத்யவஸாயங்கொண்டு
செம் கண்மால்–செந்தாமரைக் கண்ணனான பெருமானுடைய
மற்று–மேலும்
அவன் பேர்–அவனது திருநாமத்தை
நாவினால் ஓதுவதே–நாவினால் சொல்லுவதையே
உள்ளு–(ப்ராப்தமென்று) அநுஸந்தித்திரு. (நெஞ்சமே! என்று விளி வருவித்துக் கொள்க)

சிறந்தார்க்கு-
தன் திருவடிகளுக்கு அனுரூபமாக ஆஸ்ரயித்தவர்களுக்கு-
ஜ்ஞா நீத்வாத்மைவ மே மதம் –ஸ்ரீ கீதை -7-18-என்னுமவர்களுக்கு –

எழு துணையாம் –
அவர்கள் அவி ச்ம்ருதர் ஆகைக்கு வழித் துணையாம் –
தன் திருவடிகளை ஆஸ்ரயித்தவர்களுக்கு ப்ராக்ருதங்களிலே  அருசியைப் பண்ணித்
தன் பக்கலிலே ருசியையும் பண்ணி
உத்க்ரமண  தசையிலே ஆதி வாஹிகர்க்கு முன்னே தானே துணையாகக் கொண்டு போமவனை –
நயாமி பரமாம் கதிம் -என்கிறபடியே
தானே கைத் தொடானாய்க் கொடு போய் அவ்வருகே வைக்கும் –

செங்கண் மால்-
அதுக்கடியான ஆஸ்ரித வாத்சல்யத்தாலே சிவந்த கண்களை யுடையனுமாய்
வ்யாமுக்தனுமாய் இருக்கையாலே
வாத்சல்யத்தாலே குதறிச் சிவந்த கண்களை யுடைய சர்வேஸ்வரன் -என்னவுமாம் –

இத்தால்
தங்கள் விஷயத்தில் மறக்க மாட்டாதாருக்கு இருக்கிறவன் என்கையும்-
நமக்கு மறவாமைக்கு பிராப்தியும் சொல்லுகிறது –

நாமம் மறந்தாரை –
அவனுடைய திரு நாமத்தை மறந்தவர்களை –

மானிடமா வையேன் —
மனுஷ்யராக புத்தி பண்ணி இரேன்-முதலிலே நினையாதாரைக் குறையாக நினையேன் –
அஜ்ஞரை சர்வஜ்ஞர் என்று நினைப்பன்-
அதாகிறது
அவர்களுக்கு மேல் நினைக்கைக்கு யோக்யதை யுண்டே

சாஸ்திர அதிகாரத்துக்கு  யோக்யதை உள்ள மனுஷ்ய ஜன்மத்திலே பிறந்து வைத்து
அவன் சுவட்டையும் அறிந்து பின்னை மறந்தவன் மனுஷ்யர்க்கு உடல் அல்லன் இறே –
துர்மேதாஹ்யசி பாண்டவ -என்றான் இறே கீதையை மறந்த அர்ஜுனனை –

மானிடமா வையேன் –
இவர் தம் திரு உள்ளத்தால் மனுஷ்யராக நினையாதவர்கள் மனுஷ்யர்கள் அல்லர்கள் ஆகாதே தான் –
குருவிந்தக் கல்லை -கூழாங்கல்லை -மாணிக்கம் என்று நினைத்து இருந்தால் அது ரத்னமாக மாட்டாது இறே-
ரத்ன பரீஷகன் ரத்னம் என்று அறிந்தது இறே ரத்னம் ஆவது –
அப்படியே தம்முடைய நெஞ்சிலே மனிச்சர் என்று வைக்கப் பட்டவர்களே மனுஷ்யர் ஆவார் என்கிறார் –
மானிடவர் அல்லர் என்று என் மனத்தே வைத்தேனே -பெரிய திருமொழி -11-7-9-என்னக் கடவது இறே –
ஜ்ஞாநேந ஹீ ந பஸூபிஸ் சமாந -நரசிம்ஹ புராணம் -16-13-

ஜ்ஞானம் ஆவது –
ஒண் தாமரையாள் கேள்வன் ஒருவனையே நோக்கும் யுணர்வு -முதல் திரு -67-

மானிடமா வையேன் –
கல்லிலும் செம்பிலும் வெட்டிற்று என்கிறார் –
அதாகிறது –
சர்வேஸ்வரனால் திருத்த ஒண்ணாது என்று கை விட்டவர்களையும்
திருத்தப் பார்க்கும் இவர் கை விட்டால் பின்னைப் புகல் இல்லை இறே-
பின்னை மனிச்சராகக் கொள்வார் இல்லையே –

அறம் தாங்கும் மாதவனே என்னும் மனம் படைத்து –
தன்னுடைய ஆன்ரு சம்ச்யத்தாலே ரஷிப்பான் அவனே என்னுதல்-
ஜகத் ரஷணம் ஆகிற தர்மத்தை தரிப்பான் ஸ்ரீ யபதி என்னுதல் –
அவளாலே ப்ரேரிதனாய் அவள்  உகக்கும்  என்று ஆய்த்து ஜகத் ரஷணம் பண்ணுவது –

மாதவனே என்னும் மனம் படைத்து –
இப்படியே  இருப்பான் ஸ்ரீ யபதியையே என்னும் புத்தியை யுண்டாக்கி –
அன்றிக்கே –
மனசை அழைத்துக் கொண்டு –
நெஞ்சே இப்படி ரஷகனானவன் திரு நாமங்களை
நாவினால் ஒதுகையிலே உள்ளு -அனுசந்தி -என்கிறார் ஆகவுமாம் –

அன்றிக்கே –
உள்ளில் மனமானது -ஹ்ருதயத்தில் மநோ ரதமானது-
அறம் தாங்கும் மாதவனே –
அறத்தை தரிக்கும் ஸ்ரீ யபதி பக்கலிலே
நாவினால் மற்றவன் பேர் ஓதுவதே
ஸ்ரீ யபதித்வத்துக்கு வாசகமான திரு நாமத்தைச் சொல்லுவதே யாவது த்வயத்தைச் சொல்லுகை –
நாவினால் –
நாவால் உள்ளப் பிரயோஜனம் பெற
உள்ளு –
அனுசந்தி –

————————————————————————–

இப்படி பகவத் பஜனம் பண்ணி இருக்குமவர்கள்  இதர விஷயங்களின் யுடைய லாப அலாபங்களால் வரும்
சோக ஹர்ஷங்களை யுடையர்கள் அல்லர் கிடீர் -என்கிறார் –
நித்ய ஸூரிகளுக்கு ஸ்ப்ருஹணீயனாவனுடைய  திருவடிகளைப் பயிலும் அவர்கள்
அர்த்தத்தின் யுடைய லாப அலாபங்களுக்கு ஈடு படார் -என்கிறார்-

உளது என்று இறுமாவார் உண்டு இல்லை என்று
தளர்தலதனருகும் சாரார் -அளவரிய
வேதத்தான் வேங்கடத்தான் விண்ணோர் முடி தோயும்
பாதத்தான் பாதம் பயின்று —45-

பதவுரை

அளவு அரிய வேதத்தான்–அளவிட முடியாதபடி அந்நதமாயுள்ள வேதங்களினால் பிரதிபாதிக்கப்படுபவனும்
வேங்கடத் தான்–திருமலையிலே வந்து நிற்பவனும்
பயின்று–பழகி (இருக்குமவர்கள்)
உளது என்று இறுமாவார்–தமக்குச் செல்வமுள்ள தென்று செருக்குக் கொள்ள மாட்டார்கள்
உண்டு இல்லை என்று–(செல்வம்) நேற்று இருந்து இன்று அழிந்த போயிற்றென்று
விண்ணோர் முடிதோயும் பாதத்தான்–நித்ய ஸூரிகளின் முடிகள் பணியப் பெற்ற திருவடிகளை யுடையனுமான எம்பெருமானுடைய
பாதம்–திருவடிகளிலே
தளர்தல் அதன் அருகும் சாரார்–தளர்ச்சி யடையும் ஸ்வபாவத்தின் கிட்டவும் செல்ல மாட்டார்கள்.

உளது என்று இறுமாவார் –
ஜன்ம தரித்ரனாய்ப் போருகிறான் ஒருவன் இங்கனே சஞ்சரியா நிற்கச் செய்தே ஒரு நிதி வந்து காலிலே தட்டுவது –
அநந்தரம்-
அத்தால் வந்த கர்வத்தால்  சிலருக்குத் திரிய ஒண்ணாத படி அதிர நடப்பர்கள் ஆய்த்து –
தன்னுடைய பூர்வ அவஸ்தையை அறியாதே நடுவே நாலு நாள் இது உண்டானதுவே அடியாக
மாதா பிதாக்களையும் ஆச்சார்யனையும் அவமானம் பண்ணுவது –
உத்க்ருஷ்ட ஜன்மங்களை அவமானம் பண்ணுவது –
பர லோக கதை சொன்னார் யுண்டாகில் சிரிப்பதுமாய் திரியும் ஆய்த்து –
சர்வேஸ்வரனைப் பற்றி இருக்குமவர்கள் இப்படி இருப்பது ஓன்று யுண்டாகில் அத்தை ஒன்றாக மதித்து இராமையாலே
அது உண்டு என்னும் இடம் தோற்றி இரார்கள் –
உண்டு இல்லை என்று தளர்தலதனருகும் சாரார் –
உளதென்று இறுமாவார் என்றால்
அதுக்கு எதிர்த்தலை -இல்லை என்று  தளரார் என்னும் இத்தனை யாய்த்து உள்ளது –

நடுவு -உண்டில்லை என்கிறதுக்கு பிரயோஜனம்
நெடு நாள் – தாரித்ரியத்தோடு முகம் பழகிப் போந்தவனுக்கு
பின்பும் அத் தாரித்யமே யானால்  அது சாத்மித்துப் போம் அத்தனை போக்கி –
அதுக்கு உடையக் கடவது அன்றிக்கே இருக்கும்
அங்கன் அன்றிக்கே –
நடுவே சில நாள் ஜீவித்துப் போந்தவனுக்கு பின்பு ஒரு வறுமை வந்தால் அது மிகவும் தளர்த்திக்கு யுடலாய் இருக்கும்
அதாகிறது 
அன்று இங்கனே யுண்டாய்த்து-இன்று இங்கனே இல்லையாய்த்து  என்னும்
இவ் வனுசந்தானம்  ஆய்த்து தளர்த்திக்கு அடி –
இப்படி வரும் தளர்த்தியை யுடையர் அன்றிக்கே இருப்பார்கள்

ஒரு நாள் யுண்டாய் இல்லை யானவாறே பாவியேன் பண்டு ஸூகமே ஜீவித்தோம் இப்போது மிடிபடா நின்றோம் -என்று
மிகவும் தளர்த்திக்கு யுடலாமே –
அர்த்தார்த்தி யானால் கிடையா விடில் சோகம் இல்லை -ஆர்த்தனுக்கு இறே சோகம் உள்ளது –
பகவத் விஷயத்தில் பேறும் பிரிவும் அனர்த்தமாம்
பகவத் விஷயத்தில் பிரிவும் உத்தேச்யமோ என்னில் –
அழு நீர் துளும்ப  அலமருகின்றன வாழியரோ -திரு விருத்தம் -2-என்னக் கடவது இறே

கிமர்த்தம் தவ நேத்ராப்யாம் -வாரி ஸ்ரவதி சோகஜம் -சுந்தர -33-4-
சம்சாரியில் காட்டில் ஜ்ஞானவானுக்கு வாசி விச்லேஷத்தில் துவட்சி யன்றோ
இத்தை அன்றோ உண்ணும் சோறில் முற்கூறும் துவளில் மா மணியும் சொல்லுகிறது –
முன்னம் நோற்ற விதி கொலோ முகில் வண்ணன் மாயம் கொலோ -திருவாய் -6-5-7-
நான் பண்ணின ஸூஹ்ருதமோ-அவன் தன்னுடைய கிருபையோ –
நிர்குண பரமாத்மா சௌ தேஹம் தே வ்யாப்ய திஷ்டதி -பீம சேனன் அனுமன் உடலில்  துவட்சி கண்டு சொன்னான் இறே –
இத்யாதிகளால் பிரிவும் உத்தேச்யம்

இன்னம் இவ்வளவே அன்றிக்கே -அதனருகும் சாரார் –
இப்படிப் பட்ட ஜீவனத்தை இழந்தோம் என்னும் தளர்த்தி இல்லாத ஜ்ஞானவானுக்கும்
அவ் விழவாலே வருவதொரு அனுதாபம் யுண்டாய் இருக்கும் இறே
அங்கனே வருவதோர் அனுதாபமும் இன்றிக்கே இருப்பார்கள் இவர்கள் –
அத்தை ஒரு வஸ்துவாக  புத்தி பண்ணும் அன்று இறே அத்தை இழந்ததாலே வருவதோர் அனுதாபத்தை யுடையராய் இருப்பது
ஸ்திரம் என்று நினைத்து பின்னை அஸ்திரம் என்று இருக்கும் அவர்கள் அன்றே –
ஸ்திரமானது அஸ்திரமாய்த்து என்னில் அன்றோ சோகம் உள்ளது

என் தான் இவடினுடைய லாப அலாபங்களில் நாட்டார்க்கு வரக் கடவதான
சோக ஹர்ஷங்கள் இவர்களுக்கு இன்றிக்கே இருப்பான் என் என்னில்
இவர்கள் பற்றி இருக்கும் விஷயத்துக்கு அவை இரண்டும் இல்லை -அத்தாலே -என்கிறது மேல் –

அளவரிய வேதத்தான் –
கீழ்ச் சொன்னது போலே ஒரு நாள் வரையிலே இல்லை யாமதாய் இருப்பதொரு வஸ்து அன்றிக்கே
தான் ஆபாசமுமாய்-பிரத்யஷமான பிரமாணங்களாலே தர்சிப்பக்கப் படுமதாய் இருப்பதும் இன்று அன்றே –

அபௌரு ஷேயமுமாய் –
அசங்க்யேயமுமாய் –
நித்தியமாய் இருந்துள்ள –
நிர்தோஷ பிரமாணங்களாலே பிரதிபாத்யனாய் யுள்ளான் –
வேதைக சமதி கம்யனாய்  யுள்ளான்   –

அளவரிய வேதத்தான் –
அபரிச்சின்ன மான வேதத்தாலே பிரதிபாதிக்கப் படுமவன் –
அஷயமான நிதி என்றபடி –
நிதியினை -திருக் குறும் தாண்டகம் -1-என்னக் கடவது இறே-
ஐஸ்வர்ய கைவல்யங்கள் ஆகிற வெளிறு கழிந்த தனம் –
ஆனால் இங்கு யுண்டானவற்றுக்குச் சொல்லும் ஏற்றம் ப்ரத்யஷ விஷயமாய்
ஈச்வரனுக்குச் சொல்லும் உத்கர்ஷம் பிரமாணங்களிலே கண்டு போமதாய் இருக்கும் அத்தனையோ –
கண்ணாலே காண ஆசைப் பட்டவனுக்கு வேத பிரதிபாத்யன் என்றால் என்ன பிரயோஜனம் என்னில் –

வேங்கடத்தான் –
அப்படிப்பட்ட இயற்றியை யுடையவன் தானே கண்ணுக்கு விஷயமாம் படி
சர்வ ஸூலபனாய்த் திருமலையிலே புகுந்து நின்று அருளினான் –
ஆனாலும் ஐஸ்வர்யம் உள்ளது பிரமாணகம்யமான விடத்தேயாய்-
இங்கு நிற்குமது இதர சமானமாய் இருக்கும் அளவன்றோ –
ஆனால் எங்களுடைய அர்த்தத்தோ பாதி உம்முடைய வர்த்தமும் ப்ரத்யஷ விஷயமாய்த்து இறே என்னில்

விண்ணோர் முடி தோயும் பாதத்தான் –
நித்ய ஸூரிகளும் தாம் பட்டது படுவார்கள் —ஆனால் ஏற்றம் எல்லாம் இங்கே யுண்டு –
அஸ்ப்ருஷ்ட சம்சார கந்தரான நித்ய ஸூரிகள் இந்நீர்மையை அனுசந்தித்து எழுதிக் கொடுத்து
தங்கள் தலைகளைக் கொடு வந்து சேர்த்து -அடிமை செய்யும்படியான திருவடிகளை யுடையவன் –
நித்ய ஸூரிகளுக்கு ஸ்ப்ருஹணீயன் ஆனவன் –

அவனுடைய சத்பாவத்துக்கு இசைந்தால் அவர்களும் கூட ஸ்ப்ருஹணீ யனாவனே 
இங்கே வந்து நின்றான் என்று ஆதரிக்க வேண்டாவோ -ப்ராமாணிகர் ஆகில் –

வேதத்தான் வேங்கடத்தான் –
யோ வேத நிஹிதம் குஹாயாம் பரமே வ்யோமன் -தைத் ஆன -1-4- என்று
சஞ்சிதமான தனம் யுண்டு என்று செப்பேட்டிலே கண்டு போகாமே
அந்நிதி வெளிப்பட்ட இடம் ப்ராமாணிகர்க்குப் பரம நிதிகள் ஆகிறன-உகந்து அருளின திருப்பதிகள் –
விண்ணோர்  முடித்தோயும் பாதத்தான் பாதம் பயின்று உளதென்று இறுமாவார்-
இப்படிப் பட்ட உள்ளவனுடைய திருவடிகளைக் கிட்டின இவர்களுக்கு வேறு ஒன்றை நினைக்க அவசரம் யுண்டோ –

பயின்று உளதென்று இறுமாவார் –
அங்கே நெருங்குகையினாலே இவற்றால் வரும் லாப அலாபங்களை புத்தி பண்ணார்கள் –
இவர்களுக்கு இறுமாக்கவும் தளரவும் அவசரம் இல்லை –
வேறையும் ஒன்றை நினைக்கும்படியாய் அன்று இறே இவ்விஷயம் தான் இருப்பது –

உளதென்று இறுமாவார் –
விதயாமதோ தனமத –இத்யாதிகள்
அசத்துக்களை மேலிட்டுக் கொள்ளும் -சத்துக்கள் இவை தன்னை மேலிடுவார்கள்-

அறுக்கும் சாரார் –
நாமே பரித்யக்தா மயா லங்கா  மித்ராணி ச தா நாநி  ச -யுத்த -19-5-என்று
விட வேண்டி இருக்க –
தானே விடப் பெற்றோம் என்று ப்ரீதராய் இருப்பார்கள் –

————————————————————————–

இவர்கள்  அவனைப் பற்றி ப்ராக்ருத  போகங்களைக் கை விட்டார்கள் என்றது கீழ் –
இப் பாட்டில் அவன் அப்ராக்ருத போகத்தை விட்டு இவர்களைப் பற்றின படி சொல்லுகிறது –
எம்பெருமானுக்குப் புறம்பு லாபாலாபம் இன்றிக்கே இருக்கிறபடி –

இவன் -பரித்யக்தா மயா லங்கா -என்றால் –
அவனும் -அப்யஹம் ஜீவிதம் ஜஹ்யாம் த்வாம் வா சீதே ச லஷ்மணாம் ந து பிரதிஜ்ஞாம்  சம்ஸ்ருத்ய
ப்ராஹ்மணேப்யோ விசேஷத்த -ஆரண்ய -10-19-என்று
இவனை எல்லாமாகப் பற்றும் அத்தனை இறே –
அவன் பயிற்றி இறே இவனைப் பயிலப் பண்ணுவது –

சர்வேஷாம் ஹி ச தர்மாத்மா  வர்ணா நாம்  குருதே தபாம் சதுர்ணாம் ஹி  வயஸ்தானாம்
தேன தே தம நுவ்ரதா-அயோத்யா -17-18-என்றபடி –
சௌபரி பல வடிவு கொண்டு நின்று புஜித்தாப் போலே யாய்த்து
இவனும் பல திரு மேனியைக் கொண்டு புஜிக்கிற படி –

அவன் பிரசாதம் அடியாக இவன் இத்தன வடிவு கொள்ள வல்லனானால் –
இச்சாதீனமாகப் பல வடிவு கொள்ள அவனுக்குச் சொல்ல வேண்டாக் இறே –
இவர்களை அப்படி பயிலப் பண்ணுகைக்கு இவர்கள் பட்டதன்று –
அவன் பட்டது என்கிறது
ஆஸ்ரிதர்க்காக உகந்து அருளின திருப்பதிக்கு எல்லை இல்லை -என்கிறார் –

பயின்றது அரங்கம் திருக்கோட்டி பன்னாள்
பயின்றதுவும் வேங்கடமே பன்னாள் -பயின்ற
தணி திகழும் சோலை யணி நீர் மலையே
மணி திகழும் வண் தடக்கை மால் —46-

பதவுரை

மணி திகழும்–நீல மணிபோல் விளங்குமவனும்
வண் தடக்கை–உதாரமாய் நீண்ட திருக்கைகளை உடையனுமான
மால்–எம்பெருமான்
பயின்றது–நித்ய வாஸம் செய்தருளுமிடம்
அரங்கம் திருக்கோட்டி–திருவரங்கமும் திருக்கோட்டியூருமாம்
பல் நாள்–அநாதி காலம்
பயின்றதுவும்-நித்ய வாஸம் செய்யுமிடமும்
வேங்கடமே–திருமலையாம் (பல்நாள் பயின்றதுவும்)
அணி திகழும் சோலை–அழகு விளங்குகின்ற சோலைகளை யுடைத்தாய்
அணி–இந் நிலவுலகுக்கு அலங்காரமான
நீர்மலை–திருநீர்மலையாம்.

பயின்றது அரங்கம் –
அவதாரங்கள் போலே தீர்த்தம் பிரசாதியாதே -என்றும் ஒக்க
உகந்து நித்ய வாசம் பண்ணுகிற இடம் கோயில்

திருக்கோட்டி –
அங்கும் அப்படியே -இங்கு பயிலும் போது புறம்பு விட வேண்டாவே –

பன்னாள் பயின்றதுவும் வேங்கடமே-
சிரகாலம் வர்த்திக்கிறதும் திருமலையிலே -முந்துற பொற்கால் பொலிய விட்ட தேசம் –
பன்னாள் -பயின்றதணி திகழும் சோலை யணி நீர் மலையே-
இப்படி நின்று அருளுகிறவன் தான் ஆர் என்னில்

மணி திகழும் வண் தடக்கை மால் —4
நீல மேனி போலே ஸ்ரமஹரமான வடிவையும்
உதாரமாகச் சுற்றுடைத்தான திருக் கைகளையும் -யுடையனான சர்வேஸ்வரன் –
தன்னை சம்சாரிகளுக்குக் கொடுக்கையால் வந்த ஔதார்யமும் சௌலப்யமும்-
எனக்கு தன்னைத் தந்த கற்பகம் -திருவாய் -2-7-1-
விட்டிலங்கு செஞ்சோதி-திருவாய் -2-7-5-

மால்
சர்வாதிகன் -பிச்சன் என்றுமாம்-

————————————————————————–

அவன் இப்படி விரும்பின பின்பு நீங்களும் அவன் உகந்த படி பரிமாறப் பாருங்கோள்-என்கிறார் –

மாலை யரி உருவன் பாத மலர் அணிந்து
காலை தொழுது எழுமின் கைகோலி-ஞாலம்
அளந்து இடந்து உண்டு உமிழ்ந்த அண்ணலை மற்று அல்லால்
உளம் கிடந்த வாற்றால் உணர்ந்து ———47-

பதவுரை

ஞாலம்–பூமி முழுவதையும்
அளந்து–ஒரு கால் அளந்தும்
இடந்து–மற்றொருகால் (வராஹமாகி) இடந்தும்
உண்டு–(பிரளயத்தில்) திரு வயிற்றினுள் வைத்தும்
உமிழ்ந்த–பிறகு வெளிப்படுத்தியும்
இப்படி யெல்லாம் (ரக்ஷணத் தொழில்) செய்த
அண்ணலை–ஸர்வ ஸ்வாமியான எம்பெருமானை
மற்று அல்லால்–கீழ்ச்சொன்ன வகையான ரக்ஷணத் தொழில்கள் தவிரவும்
உளம் கிடந்த ஆற்றல்–(அன்பருடைய நெஞ்சை உருக்கிக் கொண்டு அவர்களுடைய) நெஞ்சிலே கிடக்கும் விதங்களோடுகூட
உணர்ந்து–அநுஸந்தித்து, (முன்பொருகால் ப்ரஹ்லாதனுக்கருள் செய்வதற்காக)
மாலை–மாலைப் பொழுதிலே
அரி உருவன்–நரசிங்க மூர்த்தியாய்த் தோன்றின அப்பெருமானுடைய
பாதம்–திருவடிகளை
மலர்–புஷ்பங்களாலே
அணிந்து–அலங்கரித்து
காலை–சிற்றஞ சிறு காலையில்
கைகோலி தொழுது–கைகூப்பி வணங்கி
எழுமின்–உஜ்ஜீவியுங்கள்

மாலை யரி உருவன் பாத மலர் அணிந்து-
அழகிய செவ்விப் பூ மாலைகளைக் கொண்டு ஆஸ்ரிதர்க்காக கொண்ட வடிவே தனக்கு வடிவாக
நினைத்து இருக்குமவன் உடைய செவ்வித் திருவடிகளிலே சேர்த்து –

அரி யுருவன் –
அழகியனாய் -ஸூகுமாரானவன் திரு வடிகளிலே

காலை தொழுது எழுமின் கைகோலி-
ஆஸ்ரயணத்துக்கு ஏகாந்தமான சத்வோத்தர காலத்திலேயே –
ப்ரஹ்ம மூஹூர்த்தத்திலே -என்றபடி
அஞ்சலியைப் பண்ணி உஜ்ஜீவியுங்கோள் –

கை கோலி என்றது –
இப்படி பாரித்துக் கொண்டு ஆஸ்ரயியுங்கோள் என்னுதல் –
கையைக் கூப்பிக் கொண்டு அஞ்சலியைப் பண்ணி -என்னுதல்-
நினைத்த  வகைகளிலே ஆஸ்ரயிக்கலாம் படி தொழுகைக்கும் அணிகைக்கும்
பல முகங்கள் உண்டாக்கி வைத்தான் ஆய்த்து-

ஞாலம் அளந்து இடந்து உண்டு உமிழ்ந்த அண்ணலை-
சர்வ வித ரஷகனானவனை -இப்படி உள்ள குண சேஷ்டிதங்களை யுடைய சர்வேஸ்வரனை –
அவை யாகிறன –

ஞாலம் அளந்து –
பூமி பரப்பு அடங்கலும் அளந்து இத்தால் கை கூப்பாதார் தலையிலும் காலை வைக்கும் என்றபடி –

இடந்து –
பிரளயம் கொண்ட விடத்து மஹா வராஹமாய் எடுத்து –
இத்தால் ஆபத்தே பச்சையாக நோக்கும் என்றபடி –

உண்டு உமிழ்ந்த –
பின்பும் பிரளயம் வரும் என்று வயிற்றிலே வைத்து நோக்கி –
வெளி  நாடு காண உமிழுவன்-
இத்தால்
பிரளயங்களில் எடுத்துப் பழகினவன் -என்கிறது

அண்ணலை –
இவ்வோ செயல்களாலே தானே ஸ்வாமி என்று தோற்றி இருக்கிறவனை –
சேதனர்க்கு அனுபாவ்யமான குணங்களை உடைய சேஷியை-

அண்ணல் –
கீழ்ச் சொன்ன வற்றுக்கு அடியான சம்பந்தம் –
அரஷகனாலும் விட ஒண்ணாத ப்ராப்தி இருக்கும் படி –

மற்று அல்லால் உளம் கிடந்த வாற்றால் உணர்ந்து –
மற்று நீங்கள் இவை ஒழிய அனுசந்தித்து இருக்கும் படி எல்லாவற்றையும் உணர்ந்து
இப்படிப் பொதுவாகப் பண்ணின வியாபாரங்களை ஒழியவே
ஆஸ்ரிதர்க்கு அனுசந்தித்தால் இது என்ன நீர்மை என்று கொண்டு
நெஞ்சுருக் கிடக்க வேண்டும்படி செய்தனவும் சில உண்டாய் இருக்கும் –

கீழ்ச் சொன்னவற்றை ஒழிய அல்லாத  குண சேஷ்டிதங்கள் ஹ்ருதயத்தில் கிடக்கும் அவற்றின் யுடைய
பிரகாரங்களை அனுசந்தித்து தம்மைப் போல-என்று இருக்கிறார் –

ஞாலம் அளந்து இடந்து உண்டு உமிழ்ந்த அண்ணலை மற்று அல்லால் உளம் கிடந்த வற்றால்
உணர்ந்து அரி யுருவன் பாதமலர் மாலை யணிந்து கை கோலி காலை தொழுது எழுமின்

————————————————————————–

நீர் இப்படி மறக்க ஒண்ணாத படி அனுசந்திக்கைக்கு ஆஸ்ரிதர்க்காக வந்து செய்தன
ஏதேனும் உண்டோ என்ன
தேவர் பண்ணின யுபகாரம் ஓர் அளவிலேயோ என்கிறார் –
கீழே சொன்ன மற்றல்லால் -என்கிறது இருக்கும் படி –

உணர்ந்தாய் மறை நான்கும் ஓதினாய் நீதி
மணந்தாய் மலர்மகள் தோள் மாலே -மணந்தாய் போய்
வேயிரும் சாரல் வியலிரு ஞாலம் சூழ்
மா யிரும் சோலை மலை——48-

பதவுரை

மாலே–ஸர்வேச்வரனே!
மறை நான்கும்–நான்கு வேதங்களையும்
உணர்ந்தாய்–(பிரளயந்தோறும்) ஞாபகத்தில் வைத்துக் கொண்டிருந்து பிறகு வெளியிடுகின்றாய்
நீதி–அந்த வேதங்களின் பொருளை விவரிக்க வல்ல ஸ்ம்ருதி முதலிய உபப்ரும்ஹண நூல்களையும்
ஓதினாய்–(மநு முதலிய மஹர்ஷிகள் முகமாக) அருளிச் செய்கின்றாய்
மலர் மகள்–பூவிற்பிறந்த பெரிய பிராட்டியாருடைய
தோள்–திருத் தோளோடே
மணந்தாய்–கூடி வாழ்கின்றாய்
வேய் இரும் சாரல்–மூங்கில்கள் நிறைந்த தாழ்வரையை யுடையதும்
இரு ஞாலம் சூழ்–பரந்த இப் பூமியிலுள்ளவர்களால் பிரதக்ஷிணஞ் செய்யப்படுவதுமான
மாயிருஞ் சோல மலை போய்–திருமாலிருஞ் சோலை மலையிலே வந்து
மணந்தாய்–திருவுள்ளமுவந்து வாழ்கின்றாய்

உணர்ந்தாய் மறை நான்கும் –
நாலு வகைப்பட்ட வேதங்களையும் ஸ்மரித்தாய்-
பிரளய காலத்திலே இவை இழந்து கிடக்கிறபடி திரு உள்ளத்திலே பட்டு
இவற்றை அடித் தொட்டும் யுண்டாக்க வேணும் என்று கோலி யருளி
ஸூப்த பிரபுத்த ந்யாயத்தாலே
மறந்தவன் நினைத்தால் போலே -உறங்கினவன் உணர்ந்தாப் போலே -மறைந்து கிடந்த வேதங்களையும் யுண்டாக்கினாய்-

அந்த ஆனுபூர்வி தப்பாதபடி ஸ்மரிக்கையாலே-
அபௌ ருஷேயத்வமும் நித்யத்வமும் எல்லாம் சித்தித்தது ஆய்த்து வேதத்துக்கு –

வாக்யத்துக்கு பத நியதியோபாதியும் போருமாய்த்து -பதங்களில் வர்ண நியதியும் –
வேதங்களும் தன்னோடு ஒக்க நித்யமாய்ப் பழையதாய் இருக்கையாலே
பண்ணினான் என்னாதே
உணர்ந்தான் என்கிறது

பூர்வே பூர்வேப்யோ வாச எத தூசு -காட்டகம் -3-9-50-
உளன் சுடர் மிகு சுருதியுள் -என்றும் முது வேத முதல்வன் -திருவாய் 1-6-2-
செப்பெட்டைக் கையிலே கொடுத்து நிதியைக் காட்டுமாப் போலே –

ஓதினாய் நீதி-
அதுக்கு ப்ராஹ்மணமான -ஸ்ம்ருதி  இதிஹாச புராணங்களையும் யுண்டாக்கி –
திரு முகத்துக்கு படியெடுத்துக் காட்டினாப் போலே –

மணந்தாய் மலர்மகள் தோள் –
வேதிப் பிரதிபாத்யையான பெரிய பிராட்டியார் யுடைய தோளோடு சம்ச்லேஷித்தாய் –
தனக்குப் பிரதிபாதகமான பிரமாணங்களை யுண்டாக்கின அவ்வளவே அன்றிக்கே
ப்ரதிபாத்யனான தான் ஒரு தேச விசேஷத்திலே பெரிய பிராட்டியாரோடு நித்ய சம்ச்லேஷ யுக்தனாய்க் கொண்டு
இருக்கும் இருப்பைச் சொல்லுகிறது –

அச்யே சா நா ஜகதோ விஷ்ணு பத் நீ-என்றும் –

ஹ்ரீச்ச தே லஷ்மீச்ச பத்ன்யௌ-என்றும்

ஈசாநா தேவீ புவனச்ய பத்னீ -என்றும் –

சரத்தா தேவோ தேவத்வம் அஸ்நுதே -என்றும்

ஈச்வரீம் சர்வ பூதானாம் -என்றும்

பும்ப்ராதாநேச்வர ஈச்வரீம் -என்றும்

அப்ரமேயம் ஹி தத்தேஜ-என்றும்

காவ்யம் ராமாயணம் க்ருத்ச்னம் சீதாயாஸ் சரிதம் மஹத் -என்றும் சொல்லுகிறபடியே
வேதமாகிறது இருவரையும் புணர்த்த நித்தியமான புணர்ப்பு —
வேத பிரதிபாத்யத்வமும் ஸ்ரீ யபதித்வத்தோ பாதி –

மாலே
நீயும் அவளும் இருக்கும் இருப்பைச் சிலராலே பரிச்சேதிக்கலாய் இருந்ததோ –
மணந்தாய் போய்-வேயிரும் சாரல் வியலிரு ஞாலம் சூழ் மா யிரும் சோலை மலை-
வேத ப்ரதிபாத்யனாகில் பரம பதத்திலே இறே ஓலைப் புறத்திலே கண்டுப்போம் விஷயத்தை
சம்சாரிகளுக்கு அனுபவிக்கலாம் படி கண்ணுக்கு விஷயமாக்கி திரு மலையை விரும்பினாய்

இப்படி அபரிச்சின்னனானவன் வேய்களினுடைய பெரிய சோலை சூழ்ந்த பர்யந்தங்களை யுடைத்தாய்
விஸ்மய நீயமான    பெரிய சம்சாரத்திலே உள்ளாராலே ஆஸ்ரயிக்கப் பட்டுள்ள  திரு மலையை உகந்தாய்

மாலே -என்கிற இத்தால்
திருமலையில் வந்து சந்நிஹிதன் ஆகைக்கு அடியான வ்யாமோஹத்தைச் சொல்லிற்று ஆகவு மாம் –

————————————————————————–

நெஞ்சே அவன் இப்படித் திருமலையிலே வந்து சந்நிஹிதனான பின்பு
நமக்கு ஒரு ப்ரதிபந்தகம் யுண்டு என்று அஞ்ச வேண்டா –
ஆன பின்பு ஜகத்தடங்கலும் அதிரும்படி அவனைச் சொல்லிக் கூப்பிடு -என்கிறார் –

மலை ஏழும் மா நிலங்கள் ஏழும் அதிர
குலை சூழ் குரை கடல்கள் ஏழும் -முலை சூழ்ந்த
நஞ்சுரத்த பெண்ணை நவின்று உண்ட நாவன் என்று
அஞ்சாதே என்நெஞ்சே அழை—49-

பதவுரை

என் நெஞ்சே–எனது மனமே!
மலை ஏழும்–ஸப்த குல பர்வதங்களும்
மா நிலங்கள் ஏழும்–ஸப்த த்வீபங்களும்
குலை சூழ் குரை கடல்கள் ஏழும்–கரையாலே சூழப்பட்டு ஒலி செய்கிற ஸப்த ஸாகரங்களும்
அதிர–அதிரும்படியாக
நாவன் என்று-திருப்பவளத்தை யுடையவளே!“ என்று சொல்லி
முலை சூழ்ந்த நஞ்சு உரத்து பெண்ணை–“முலையில் வியாபித்த விஷத்தாலுண்டான கொடுமையை யுடைய (பூதனை யென்னும்) பேய் மகளை
நவின்று–(முலை யுண்ணும் போது) இடையிடையே மழலைச் சொற்கள் சொல்லிக் கொண்டே
உணட–உண்டு முடித்த
அஞ்சாது–கூசாமல்
அழை–வாய் விட்டுக் கூப்பிடு-

மலை ஏழும்-
பூமிக்கு ஆணி அடித்தால் போலே இருக்கிற சப்த குல பர்வதங்களும் –

மா நிலங்கள் ஏழும் –
சப்த த்வீபங்களும் –

குலை சூழ் குரை கடல்கள் ஏழும் –
அதில் அங்கியாதே கரைக்கு உள்ளே நின்று கோஷிக்கிற சப்த சமுத்ரங்களும்

அதிர-
இவை எல்லாம் அதிரும்படிக்கு ஈடாக கீழ்ப் படும்படி –

முலை சூழ்ந்த நஞ்சுரத்த பெண்ணை –
முலை எங்கும் வியாபித்த நஞ்சால் யுண்டான மிடுக்கை யுடைய பூதனையை –

நவின்று உண்ட நாவன் என்று-
முலை தந்த க்ருதஜ்ஞதை தோற்ற நடுவே சில முக்த ஜல்பிதங்களை அவள்  முகத்திலே சொல்லி
முலை யுண்டு முடித்த நாவை யுடையவன் என்று –

அஞ்சாதே என்நெஞ்சே அழை-
நம்முடைய பிரதிபந்தகங்களை நினைத்து அஞ்சாதே கூப்பிடு
பிரதிபந்தகங்களைச் செய்வது என் என்னில் -அப் பூதனை பட்டது படும் அத்தனை –

அஞ்சாதே என் நெஞ்சே அலை –
விரோதி போக்குகைக்கு நமக்கு அஞ்ச வேண்டா -அனுபவிக்க அமையும் –
அங்கன் அன்றிக்கே –
அஞ்சாதே என்றது அயோக்யன் என்று அஞ்ச வேண்டா
பேய்க்கும் தீண்டலாய் இருக்கிற விஷயம் என்றுமாம் –
அது செய்யும் இடத்தில் ஜகம் அதிரும்படி கூப்பிடு –

————————————————————————–

திரு உள்ளத்தைக் கூப்பிடு என்றாரே -அநந்தரம்-
திரு வாய்ப்பாடியில் உள்ள பெண்கள் அவன் திரு நாமங்களைச் சொல்லப் புகத்
தளர்ந்து தலைக் கட்ட மாட்டாதே சொல்லுமா போலே
தாம் சொல்லிக் கூப்பிடத் தொடங்கினார்-

அழைப்பன் திருமாலை ஆங்கு அவர்கள் சொன்ன
பிழைப்பில் பெரும் பெயரே பேசி -இழைப்பரிய
வாயவனே யாதவனே என்றவனை யார்முகப்பும்
மாயவனே என்று மதித்து —50-

பதவுரை

இழைப்பு அரிய–ஆராய்வதற்கு அருமையான ஸ்வரூப ஸ்வபாவங்களையுடைய
ஆயவனே என்றும்–கோபால க்ருஷ்ணனே!என்றும்
மாயவனே என்றும்–(குண சேஷ்டிதங்களினால்) ஆச்சரிய பூதனே என்றும்!
மதித்து–அநுஸந்தித்துக் கொண்டு
ஆங்கு அவர்கள் சொன்ன–அத் திருவாய்ப் பாடியிலுள்ளவர்கள் சொல்லி யழைத்த யது குலத்தில்
யாதவனே என்றும்–(வஸுதேவர் மகனாய்த்) தோன்றினவனே என்றும்!
பிழைப்பு இல்பெரு பெயரே பேசி–குற்றமற்ற சிறந்த திருநாமங்களையே பேசி
யார் முகப்பும்–எல்லாரெதிலும்
திருமாலை அவனை–திருமாலாகிய அப்பெருமானை
அழைப்பன்–கூப்பிடா நின்றேன்.

அழைப்பன் திருமாலை-
ஸ்ரீ யபதியைக் காண என்றாய்த்து இவர் கூப்பிடுவது –
அபரிச்சேத்யமான விஷயத்தை கூசாதே பேசுவேன் –
சிந்தை கலங்கித் திருமால் என்று அழைப்பன் -திருவாய் -9-8-10-
ப்ராஹ்மண பிரஜை பிச்சேறினாலும் ஒத்துச் சொல்லும் அத்தனை இறே –

விக்ரேது காமா கில கோப கன்யா முராரி பாதார்ப்பித சித்தவ்ருத்தி தத்யாதிகம்
மோஹவசாத் கோவிந்த தாமோதர மாதவேதி -கிருஷ்ண கர்ணாம்ருதம் -2-59-
எவ் வழியாலே இவர் தான் கூப்பிடுவது என்னில்

ஆங்கு அவர்கள் சொன்ன-
ஆங்கு அவர் யுண்டு -திரு வாய்ப்பாடியில் உள்ளார்
திரு வாய்ப்பாடியில் உள்ளவர்களைப் பார்த்து நம்முடைய பக்கலிலேயே இரங்குவர் என்று அவர்கள் சொன்ன –

சிறியாத்தான் -த்வயத்தில் ஆநு பூர்வி பிரதானம் -அவைகளை நினைத்து பிரசன்னனாம் –
அர்த்தம் விட சொற்களே முக்கியம் -அவற்றை கேட்டே எம்பெருமான் மகிழ்வான் -என்றபடி –

பிழைப்பில் பெரும் பெயரே பேசி –
தான் இரண்டு மூன்று அஷரமாய் இருக்கச் செய்தே
தங்கள் தளர்த்தியாலே அளவிட ஒண்ணாத படியான பிரபாவத்தை யுடைத்தான திரு நாமங்களைச் சொல்லி –

பிழைப்பில் –
ரிஷிகள் கோஷ்டியில் -ய படேத் ராமசரித்ரம் சர்வ பாபி ப்ரமுச்யதே -பால -1-97- என்று
பாவனமாய் இருக்கும்
ஆழ்வார்கள் கோஷ்டியில் அது நச்சுப் பொய்கை –
உயிர்க்கு அது காலன் என்று இரந்தேற்க்கு நீர் குயில் பைதல்காள்
கண்ணன் நாமமே குழறிக் கொன்றீர் – திருவாய் -9-5-8-என்னக் கடவது இறே-

பெரும் பெயர் –
ஏகாஷரியாய் கரை காண ஒண்ணாதே இருக்கை-

இழைப்பரிய-
ஒருவருக்கும் ஸ்வ யத்னத்தால் அணுக அரியையான –
அன்றிக்கே –
நினைக்கை அரியதாம் படி பெண்களைப் படுத்தும் க்லேசத்தை யுடைய -என்றும்
ஆயவனே யாதவனே என்று அவனை –
கிருஷ்ணனே ஸ்ரீ வஸூ தேவர் திரு மகனே என்று இரண்டும் சொல்லிக் கூப்பிடுவார்கள் போலே காணும் அவர்கள் —

இடைத்தனத்தோபாதி ஸ்ரீவஸூ தேவர் மகனானதுவும்  ஆகர்ஷகமான படி –

இரண்டு அவதாரத்துக்கும் பிரயோஜனம் ருக்மிணீ நீளைகளை ப்ராபிக்கை –

இப்படியானவனை –
யார் முகப்பும் –
எல்லாருடைய   முகப்பும் -உகப்பார் முன்னோடு உகவாதார் முன்னோடு வாசி யற எல்லார் முன்னும் –

மாயவனே என்றும் மதித்து –
ஆச்சர்ய பூதன் என்றும் புத்தி பண்ணி
ஆங்கு அவர்கள் சொன்ன பிழைப்பில் பெரும் பெயரே பேசி அழைப்பன் –
திருமாலைச் சொல்லிக் கூப்பிடா நிற்பன் –

————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பூதத் ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ பூதத் ஆழ்வார் அருளிய இரண்டாம் திருவந்தாதி – -31-40– ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் —

February 23, 2015

இப்படி ஆபத் சகனானவன் திருவடிகளிலே புஷ்பாத் யுபகரணங்களைக் கொண்டு ஆஸ்ரயிக்குமவர்கள்
அவனுடைய அப்ராக்ருதமான திரு மேனியை ப்ரீதி பூர்வகமாக அனுபவிக்கப் பெறுவர் -என்கிறார்-

பிரான் என்று நாளும் பெரும் புலரி என்றும்
குரா நற் செழும் போது கொண்டு -வராகத்
தணி யுருவன் பாதம் பணியுமவர் கண்டீர்
மணி யுருவம் காண்பார் மகிழ்ந்து————31-

பதவுரை

பிரான் என்றும்–‘மஹோபகாரங்கள் பண்ணினவனே!’
பெரு புலரி என்றும்–‘இன்றே நல் விடிவு’ என்றும் (கொண்டாடிக் கொண்டு)
நாளும்–நாள்தோறும்
நல்குரா–நல்ல மணம் மிக்க
செழு–அழகிய
போது கொண்டு–புஷ்பங்களைக் கொண்டு,
வராகத்து அணி உருவன் பாதம்–அழகிய வராஹ வுருக் கொண்ட பெருமானுடைய திருவடிகளை
பணியுமவர் கண்டீர்–வணங்குபவர்களே
மணி உருவம்–(அப்பெருமானுடைய) திவ்ய மங்கள விக்ரஹத்தை
மகிழ்ந்து காண்பர்–ஸேவித்து ஆநந்திக்கப் பெறுவர்கள்.

பிரான் என்றும்
இவ்வாத்மாவுக்கு வகுத்த சேஷி -உபகாரகன் -என்றும்
தன்னையே வணங்கும்படி பண்ணினவன் -உணரும் போதே -என் நாயகன் செய்த படி என்-என்று உணருகை –

நாளும் பெரும் புலரி என்றும்-
மலட்டு சம்சாரத்திலே பாழே போக்குகிற காலத்திலே-பகவத் அனுபவத்துக்கு ஈடாய் இருப்பதொரு நாள் யுண்டாவதே-
இது ஒரு நல் விடிவு இருக்கும் படியே –
அத்ய மே சபலம் ஜன்ம ஸூ ப்ரபாதா ச மே நிசா -ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-17-3-என்கிறபடியே ஆதரித்துக் கொண்டு –

பிரான் என்றும் –
பிரான் பெரு நிலம் கீண்டவன் –திருவாய் -1-7-6-

பெரும் புலரி –
நல்லாண்டு என்று நவின்று உரைப்பார் -திருப்பல்லாண்டு -12

பெரும் புலரி –
ஷூத்ர ஜந்துக்களை  நினைத்துக் கழிக்கிற எனக்கு சர்வேஸ்வரனை நினைக்க ஒரு காலம் விடிவதே -என்று
வணங்குகைக்கு ஈடான  காலத்தைக் கொண்டாடுகிறார் –

குரா நற் செழும் போது கொண்டு –
இவன் இடுவது எல்லாம் பூவாம் படி தன்னை யமைத்துக் கொண்டு சந்நிஹிதனானவன் திருவடிகளிலே
அங்கு யுண்டான புஷ்பங்களைக் கொண்டு ஆஸ்ரயிக்குமவர்கள் கிடீர் –

குரா நற் செழும் போது-
குராவினுடைய நன்றாய் செவ்வியை  யுடைத்தான பூவைக் கொண்டு –
காட்டிலே வாழ்வார்க்குக் காட்டில் பூ வமையும் இறே-

வராகத் தணி யுருவன் பாதம் –
இன்ன புஷ்பம் கொண்டு என்னை ஆஸ்ரயிக்க வேணும் -என்று இராதே காட்டில் புஷ்பத்துக்கு சஜாதீயமான வடிவை யுடையவன் –

அணி யுருவன்
மஹா வராஹமான வடிவை யுடைத்தாய் -ஆபரணம் தேட வேண்டாதபடி -ஒரு படி சாத்தினாப் போலே இருக்கை-
அவன் கைக்கு எட்டின தொரு வடிவு கொண்டால் பூவும் கைக்கு எட்டித்து ஓன்று அமையும் இறே –

பணியுமவர் கண்டீர்-
ஸூ ஸூகம் கர்த்தும் அவ்யயம் –ஸ்ரீ கீதை -9-2-என்னும்படியே
சாதனா தசையிலே இனிதாய் இருக்கும் படி –
பலத்துக்குப் பலம் இ றே –

மணி யுருவம் காண்பார் மகிழ்ந்து-
அவர்கள் நீல ரத்னம் போலே குளிர்ந்து இருந்துள்ள வடிவை மகிழ்ந்து காணப் பெறலாம்

————————————————————————–

இவர் இப்படி உபதேசித்த அனந்தரம் -இவர் தம்முடைய கரணங்கள் உபதேச நிரபேஷமாக
அங்கே பிரவணமான படியை அருளிச் செய்கிறார் –
இவ் விஷயத்தில் என் மனோ வாக் காயங்கள் பிரவணம் ஆய்த்து-என்கிறார்-

மகிழ்ந்தது சிந்தை திருமாலே மற்றும்
மகிழ்ந்தது உன் பாதமே போற்றி -மகிழ்ந்தது
அழலாழி சங்கமவை பாடியாடும்
தொழிலாகும் சூழ்ந்து துணிந்து—————-32-

பதவுரை

திருமாலே!–லக்ஷ்மீபதியே!
சிந்தை–என் நெஞ்சமானது
மகிழ்ந்தது–(உன்னைச் சிந்தித்து அதனாலே) ஆநந்த முற்றது;
மற்றும்–நெஞ்சுக்கு அடுத்ததான வாக்கும்
உன் பாதமே போற்றி–உன் திருவடிகளையே துதித்து
மகிழ்ந்தது–ஆநந்திக்கப் பெற்றது;
ஆகம்–என்னுடைய தேஹமானது
அழல்–எதிரிகளின் மீது நெருப்பை உமிழ்கின்ற
ஆழி–திருவாழியையும்
சங்கம்–ஸ்ரீபாஞ்ச ஜந்யத்தையும்
அவை–மற்றுமுள்ள திவ்யா யுதங்களையும்
பாடி ஆடும்–கொண்டாடிப் பாடிய ஆடுகையாகிற
தொழில்–வியாபாரத்திலே
சூழ்ந்து–பொருந்தி
துணிந்து–இதுவே நமக்குக் காரியமென்று துணிவு கொண்டு
மகிழ்ந்தது–களிக்கப் பெற்றது.

மகிழ்ந்தது சிந்தை-
இதுக்கு முன்பு ப்ரீதி புதியது உண்டு அறியாத மனசானது -அவனை அனுசந்தித்து மகிழப் பெற்றது –
இத்தால் எனக்கு அங்குப் போய் மகிழ வேண்டா -என்கிறார் –

திருமாலே-
மகிழப் பண்ணின விஷயம் இருக்கிறபடி –ஆனந்தாவஹமாய் இறே ஸ்ரீ யபதித்வம் இருப்பது –

மற்றும் மகிழ்ந்தது உன் பாதமே போற்றி
மற்றை அவயவங்கள் –அனந்தரம் -வாக் இந்த்ரியமானது உன் திருவடிகளை ஏத்தி மகிழப் பெற்றது –

திருமாலே -என்றத்தை மேலோடு கூட்டி
ஸ்ரீ யபதியான உன்னுடைய திருவடிகளையே போற்றி மகிழப் பெற்றது –

மகிழ்ந்தது அழலாழி சங்கமவை பாடியாடும்தொழிலாகும் சூழ்ந்து துணிந்து-—–
பிரதிபஷத்தின்  மேலே அழன்று அக்னியை உமிழா நின்றுள்ள திருவாழி பாஞ்ச ஜன்யம் ஆகிற அவற்றைப் பாடி யாடுகை யாகிற
தொழிலாலே வ்யாப்தமான தேஹமானது துணிந்து மகிழ்ந்தது –

சூழ்ந்த ஆகமானது அத்யவசித்துக் கொண்டு உகக்கப் பெற்றது
சூழ்ந்து துணிந்து சிந்தை மகிழ்ந்தது –
சூழ்ந்து துணிந்து மற்றும் மகிழ்ந்தது -என்று
அந்வயிப்பது-

நின் பாதம் போற்றி என்றது எங்கும் அந்வயிக்க வுமாம் –

————————————————————————–

கீழ் அனுபவத்தால் பிறந்த ஹர்ஷம் சொல்லிற்று –
இதில் அவனை அனுபவிக்கையிலே மனோ வாக் காயங்கள் அத்யவசித்த படியை அருளிச் செய்கிறார் –
மகிழ்ந்த மாத்திரமேயோ -வேறு ஒரு இடத்துக்கு ஆகாதபடி ஆய்த்தின -என்கிறது –
இத்தால் அனந்யார்ஹம் ஆன படியைச் சொல்லுகிறது –

துணிந்தது சிந்தை துழாய் அலங்கல் அங்க
மணிந்தவன் பேருள்ளத்துப் பலகால் -பணிந்ததுவும்
வேய் பிறங்கு சாரல் விரல் வேங்கடவனையே
வாய் திறங்கள் சொல்லும் வகை—33–

பதவுரை

சிந்தை–என் மனமானது
துழாய் அலங்கல் அணிந்தவன் பேர்–திருத்துழாய் மாலையை அணிந்துள்ள பெருமானுடைய திருநாமங்களை
பல்கால்–பலமுறை
உள்ளத்து–நினைப்பதில்
துணிந்தது–த்ருடமாக அத்யவஸாயங் கொண்டது;
அங்கமும் (பல்கால்)–எனது உடலும் எப்போதும்
பணிந்தது–வணங்குவதாயிரா நின்றது;
வாயும்–என் வாக்கும்
வேய் பிறங்குசாரல்–மூங்கில் மிக்கிருக்குந் தாழ்வாரையை யுடைய
விறல் வேங்கடவனை–திருமலையிலெழுந்தருளி யிருக்கிற மிடுக்குடைய பெருமானது
திறங்களே-தன்மைகளையே
(பல்கால்)-எப்போதும்–
சொல்லும் வகை–சொல்லுகிற விதத்திலே
(துணிந்தது)–துணிவு கொண்டதாயிற்று.

துணிந்தது சிந்தை துழாய் அலங்கல் அங்கமணிந்தவன் பேருள்ளத்துப் –
திருத் துழாய் மாலையாலே அலங்க்ருத னானவன்-திரு நாமத்தை அனுசந்திக்கையிலே துணிந்தது ஹ்ருதயமானது -என்னுதல்-
உள்ளம் என்று லஷணையால்-அனுசந்தானத்தைச் சொல்லுகிறது –

அன்றிக்கே –
உள்ளத்து சிந்தனையானது -ஹ்ருதயத்திலே மநோ ரதமானது-
துழாய்  அலங்கல் அங்கம் அணிந்தவன் பேர் துணிந்தது -என்னுதல் –

துழாய் அலங்கல் அங்கம் –
துணிவித்துக் கொண்ட பரிகரம்-

அங்கம் அலங்கல் –
இனி அங்கமானது சரீரமானது எப்போதும் –

பலகால் -பணிந்ததுவும் வேய் பிறங்கு சாரல் விரல் வேங்கடவனையே-
வேய்களாலே பிறங்குகிற  -மிக்கு இருந்துள்ள சாரலுண்டு -பர்யந்தங்கள்-அவற்றை யுடைய திரு மலையிலே வர்த்திப்பானாய்
தன் அழகாலே  நம்மை ஈர்த்துக் கொண்டுள்ள திரு வேங்கடமுடையானையே –

வாய் திறங்கள் சொல்லும் வகை துணிந்தது –
என்னுடைய வாக் இந்த்ரியமானது அவனுடைய திறங்களைத் துணிந்தது –
அவனிடை யாட்டங்களைச் சொல்லும் பிரகாரத்திலே துணிந்தது –

வேங்கடவனையே –
நம்மை யல்லது அறியாது இருக்கிற அவனை அல்லது துணியாது –

துணிந்தது சிந்தை துழாய் அலங்கல் அங்கம் அணிந்தவன் பேர் உள்ளத்து –
அங்கம் பலகால் பணிந்ததுவும் வேய் பிறங்கு சாரல் வேங்கடவனையே –
அவன் திறங்களை வாய் சொல்லும் வகை துணிந்தது
என்று அநவயம்-

————————————————————————–

இப்படிப் பட்ட பெரிய பேறு தான் தேவருடைய கடாஷத்தாலே பெற்றேன் -என்கிறார் –

வகையால் அவனி இரந்து அளந்தாய் பாதம்
புகையால் நறு மலரால் முன்னே -மிக வாய்ந்த
அன்பாக்கி ஏத்தி அடிமைப் பட்டேன் உனக்கு
என் பாக்கியத்தால் இனி——————34-

பதவுரை

முன்னே–முற்காலத்திலே
வகையால்–உபாயத்தினால்
அவனி–பூமியை
இரத்து–(மாவலி பக்கல்) யாசித்து
அளந்தாய்–அளந்து கொண்ட வுன்னுடைய
பாதம் புகையால்–திருவடிகளை தூபங்கொண்டும்
நறுமலரால்–நல்ல பரிமளமுள்ள புஷ்பங்களைக்கொண்டும்
மிக வாய்ந்த அன்பு ஆக்கி–மிகுதியாக (நன்றாக)ப் பொருந்தின ப்ரீதியுடனே
ஏத்தி–துதித்து
இனி–மேலுள்ள காலமெல்லாம்
என் பாக்கியத்தால்–நீ என் மேல் பண்ணின விசேஷ கடாக்ஷமாகிற பாக்யத்தாலே
உனக்கு அடிமைப் பட்டேன்–உனக்குத் தொண்டனாய் விட்டேன்.

சௌந்தர்யத்துக்கு தோற்று  அடிமைப் படும்படி நீ என் முன்னே க்ருஷீ பண்ணினாய்  –
வகையால் அவனி இரந்து அளந்தாய் பாதம்-
ஆசூரப் பிரக்ருதியானவன் யாதொரு பிரகாரத்தினால்  இரங்கிக் கொடுக்கும் —
அந்தப் பிரகாரத்தாலே பண்டே பூமியை இரந்து அளந்து கொண்ட உன்னுடைய திருவடிகளை –

வகையால் –
ராவணனோ பாதி வத்யனாய் இருக்க  மஹா பலியானவனை அழியச் செய்யாதே
அவன் பக்கலிலே ஔதார்யம் கிடக்கையாலே
பாம்பும் சாவாமே கோலும் முறியாமே அவனும் தன்னது என்று தர வுகக்குமாகில் தருவான் –
நாமும் நமக்கு இல்லாதது ஓன்று பெற்றோம் ஆனால் ஆகாதோ –
பூமியை இரந்து கொள்வோம் –
ஆஸ்ரயித்த இந்த்ரனும் தன் கார்யம் பெறுவான் என்கிற வகைகளாலே விரகு பார்த்த படி –

இரந்து அளந்தாய் –
அன்புக்கு ஏற்கவே கிருஷி பண்ணின படி –

முன்னே வகையால் அவனி இரந்து அளந்தாய்
என்று அநவயம் –

புகையால் நறு மலரால் முன்னே -மிக வாய்ந்த அன்பாக்கி ஏத்தி அடிமைப் பட்டேன் உனக்கு-
புஷ்பாத் யுபகரணங்களைக் கொண்டு -மிகவும் செறிந்த ச்நேஹத்தை யுடையேனாய்க் கொண்டு
சௌந்தர்யத்துக்கும் நீர்மைக்கும் தோற்று ஸ்துதித்து தேவர் திருவடிகளிலே சரணம் புகுந்தேன் –
இதுக்கு அடி என் என்னில் –

என் பாக்கியத்தால் இனி–—
தேவருடைய கடாஷத்தாலே -என்னுதல் —
என்னுடைய விலக்காமை யாகிய பாக்கியத்தாலே -என்னுதல் –

————————————————————————–

அப்படித் தானே வந்து -அர்த்தியாய் -மேல் விழுகிற சர்வேஸ்வரனை விட்டு இதர விஷயங்களிலே
சங்கத்தைப் பண்ணி -துக்கானுபவம் பண்ணாதே
அவன் திருவடிகளிலே அல்ப அனுகூல்யம் பண்ணுவார்கள் ஆகில் அது தான் இவர்களுக்கு
என்றைக்கும் ரஷையாய்த் தலைக் கட்டும் என்கிறார் –

இவ்விஷயம் இருக்க சப்தாதி விஷயம் இனிது என்று ஜகத்து அனர்த்தப் படுவதே –என்று வெறுக்கிறார்-

இனிது என்பர் காமம் அதனிலு மாற்ற
இனிது என்பர் தண்ணீரும் எந்தாய் -இனிது என்று
காம நீர் வேளாது நின் பெருமை வேட்பரேல்
சேம நீர் ஆகும் சிறிது————–35-

பதவுரை

எந்தாய்–என் ஸ்வாமி யானவனே!
(பாமரர்கள்)
காமம்–ஹேயமான சப்தாதி விஷயங்களை
இனிது என்பர்–போக்யமாகக் கொள்பர்;
(விரக்தர்களுங்கூட)
தண்ணீர் அதனிலும் ஆற்றவும் இனிது என்பர்–அந்த சப்தாதி விஷயங்களிற் காட்டிலும் தண்ணீர் மிகவும் போக்யமென்பர்கள்;
காமம் நீர்–(கீழ்ச் சொல்லப்பட்ட) காமத்தையும் தண்ணீரையும்
இனிது என்று வேளாது–போக்யமாகக் கொண்டு அவற்றிலே ஆசை கொள்ளாமல்
நின் பெருமை சிறிது வேட்பர் ஏல்–உன்னுடைய போக்யதையே கொஞ்சமேனும் விரும்பி மேல் விழுவார்களாயின் (அது)
சேமம் நீர் ஆகும்–(எல்லா நிலைமையிலும்) ரக்ஷகமான தன்மையையுடையதாகும்

இனிது என்பர் காமம்-
நாட்டார் காமத்தை இனிதாகச் சொல்லா நின்றார்கள்
அது தானும் இவர் தேசிகர் வாயிலே கேட்டு அறியும் அத்தனை –

இனிது என்பர் என்றபடியாலே
தமக்கு இதில் அந்வயம் இன்றிக்கே இருந்தபடி –
காம தந்த்ரம் போமவர்கள் சொல்லும் அத்தனை -என்றபடி –
சோதரர் தாங்கள் தின்னுமவற்றை இனிது என்னுமா போலே –

அதனிலு மாற்ற இனிது என்பர் தண்ணீரும் –
அதில் காட்டிலும் இனிதாகச் சொல்லா நின்றார்கள் தண்ணீரை –
அதாகிறது காம ரசத்தில் காமராய்ப் போந்தவர்களும்
ஜலம் கொண்டு இறே பிராண தாரணம் பண்ணுவது –
அந்நாதிகள் பேதித்தாலும் பேதியாதே பொதுவாய் இருக்குமது இறே இது

ஆப ஏவ ஹி ஸூ மனச-என்னும்படியே
விரக்தரோடு அவிரக்தரோடு வாசி அறத் தண்ணீரில் வந்தால் பாகம்  ஸூ மனஸ் ஸூக்களாய் இருப்பார்கள் –
அதுவும் இவர்க்கு வேண்டா –

விஷய ப்ரவணர் காமத்தை இனிது என்னா நிற்பர்கள்-
சரீர போஷண பரர தண்ணீரை நன்று என்னா நிற்பர்கள்
இவர்க்கு இரண்டிலும் அந்வயம் இல்லை –
இவர் நின்ற இடம் அவர்களால் அறிய ஒண்ணாதாப் போலே இறே அவர்கள் நின்ற நிலை இவர்க்கு அறிய ஒண்ணாது இருக்கும் படி

என்பர் –
இவர் இந்த நாட்டிலும் இல்லையே

எந்தாய் –
இவருடைய காமமும் தண்ணீரும் இருக்கும் படி –
எல்லாம் ஒன்றேயான விஷயமாய்த்து இவர்க்கு –

வாஸூதேசஸ் சர்வம் -இதி ச மஹாத்மா -ஸ்ரீ கீதை -7-19-
உண்ணும் சோறு பருகும்  நீர் தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணன் -திருவாய் -7-1-1-

இனிது என்று-
அதஸ்மின் தத் புத்தி பண்ணி தண்ணீர் என்று அக்னியிலே ஒதுங்கி ஸ்ரமமார நினைப்பாரைப் போலே
பாக்ய ஹானியடியாக இறே சப்தாதி விஷயங்களிலே ருசி பிறப்பது –

காம நீர் வேளாது-
ஸ்வத இனிமை இன்றிக்கே இருக்க போகய புத்தி பண்ணி காமத்தையும் தண்ணீரையும் ஆசைப் படாதே

நின் பெருமை வேட்பரேல்-
உன்னுடைய குணங்களை ஆசைபடுவர்கள் ஆகில்

இது தான் பரிச்சின்ன போகமுமாய் –
தான் அனர்த்தாவஹமுமாய் இருக்கையாலே
இங்கு இருக்கும் நாளைக்கும் ஓன்று இன்றிக்கே இருக்கும்

அங்கன் அன்றிக்கே –
ஸ்மர்தவ்ய விஷயத்தின் யுடைய ரச்யதையாலே சாதன தசையே தொடங்கி ரசிப்பதை

இனி பிராப்தி சமயத்திலே வந்தால் அபரிமித போக்யமாய்க் கொண்டு இவனால் உண்டு அறுக்க ஒண்ணாத படி
ஏஷஹ்யேவா நந்தயாதி -தைத் ஆனந்த வல்லி -7-என்னும்படியாய் இருக்கும் –

நின் பெருமை வேட்பரேல்-
தவிர ஒண்ணா தாகில் அனுபவம் என்னாகிலும் செய்ய அன்றோ வடுப்பது –
அப்படிச் செய்கை அன்றிக்கே –

சிறிது நின் பெருமை வேட்பரேல்-
அதில் பரப்பு எல்லாம் ஆசைப்பட வேண்டாம்
அவன் நல்ல வளவை அனுசந்திக்கவே என்றும் ஒக்க ரஷகமாய் இருக்கும்
கீழில் அவை போலே ஒரு கை கால் முறியச் சென்று விழ வேண்டா –
இதுக்கு மித்ர பாவம் அமையும் –

சேம நீர் ஆகும் —
அது தான் ரஷகமான ஸ்வ பாவத்தை யுடைத்தாய் இருக்கும் –
ந த்யஜேயம் கதஞ்சன -யுத்த -18-3-என்று இருக்கும் இவ்விஷயத்தில்
ப்ராதிகூல நிவ்ருத்தி ரஷையாம்
மற்றைய விஷயத்தில் ஆனுகூல்யமும் விநாசம்

சப்தாதி விஷயங்களில் அபி நிவேசம் மிக்காலும் –
புத்தி நாசாத் ப்ரணச்யதி -ஸ்ரீ கீதை -6-3-என்னப்  பண்ணும் –

பகவத் விஷயத்தில் போலியான ஆசை யுன்டாகில் –
அபயம் சர்வ பூதேப்யோ ததாமி ஏதத் வ்ரதம் மம-யுத்த -18-3- என்று இருக்கும்

கௌந்தேய பிரதிஜாநீஹி  ந மே பக்த ப்ரணச்யதி -ஸ்ரீ கீதை -9-31–என்று
அர்ஜுனா நீ இவ்வர்த்தத்துக்கு பிரதிஜ்ஞை பண்ணு –

தோற்று ஓடிப் போகும் ருத்ராதிகளையோ பற்றுகிறது –
எதிரி கையிலே ஆஸ்ரிதனைக் காட்டிக் கொடுத்துப் போவாரையோ பற்றுகிறது –
அவன் மார்பில் அம்பைத் தன மார்விலே ஏற்கும் அவனை யன்றோ பற்றுகிறது –

————————————————————————–

நாட்டார் செய்கிறபடி செய்கிறார்கள் –
நெஞ்சே நீ முன்னம் அவனுடைய வியாபாரங்களை அனுசந்தித்துக் கொண்டு ஸூகமே இருக்கப் பார் -என்கிறார்
பூமிப்பார் பூமிக்கிறார்கள்-நீ இவ்வர்த்தத்தை பண்ணி -அவனை விச்வசித்து க்ருதக்ருத்யமாய் இரு –

சிறியார் பெருமை சிறிதின் கண் எய்தும்
அறியாரும் தாம் அறியார் ஆவர் -அறியாமை
மண் கொண்டு மண் உண்டு மண் உமிழ்ந்த மாயன் என்று
எண் கொண்டு எண் நெஞ்சே இரு–36-

பதவுரை

சிறியார்–(இயற்கையான மேன்மை சிறிதுமில்லாமல்) அற்பரான ஸம்ஸாரிகளுடைய
பெருமை–(நானே ஈச்வரன் என்று அஹங்கரிப்பதால் வருகிற) மேன்மையானது
சிறிதின் கண் எய்தும்–(தமக்குப் பழமையாயுள்ள) தாழ்விலேயே கொண்டு சேர்ப்பிக்கும்;
அறியாரும்–அவிவேகிகளும்
(தங்களை ஸர்வஜ்ஞராக நினைத்திருந்தார்களாகிலும்)
தாம் அறியார் ஆவர்–(நன்மை தீமைகளைத்) தாங்கள் அறியாதவர்களாகவே ஒழிந்திடுவர்;
என் நெஞ்சே–என் மனமே!.
அறியாமை–பிறர் அறியாதபடி
மண் கொண்டு–(மாவலி யிடத்தில்) பூமியைப் பெற்றவனாயும்
மண் உண்டு–இந்தப் பூமியை (ப்ரளயத்திலே)திருவயிற்றில் வைத்தவனாயும்
மண் உமிழ்ந்த–(பிறகு) அந்தப் பூமியை வெளிப்படுத்தினவனாயுமிருக்கிற
மாயன் என்று–ஆச்சர்யகரனான எம் பெருமான் என்று
எண் கொண்டு–இடைவிடாது கருதி
இரு–(அவனைப் பற்றின நமக்கு ஒரு குறை இல்லையென்று) நிர்ப்பரனாக இருப்பாயாக.

சிறியார் பெருமை சிறிதின் கண் எய்தும்-
அதி ஷூத்ர ரானர்கள் ஈச்வரோஹம் என்று தங்களைப் பெரியாராக அபிமாநித்தாலும்
பின்னையும் அது சிறுமையே யாய்த் தலைக் கட்டும் –

அறியாரும் தாம் அறியார் ஆவர் –
தாங்கள் அஜ்ஞராய் இருக்கச் செய்தேயும் தங்களை சர்வஜ்ஞராக அபிமானித்து இருக்குமது
பின்னையும்  பழைய அஜ்ஞானத்தோடே தலைக் கட்டும் –

அறியாரும் தான் அறியார் ஆவர் –
அவர்களுக்கு நாம் சாதிக்க வேண்டா -தாங்களே சாதித்து வைப்பார்கள்

அறியாமை-இத்யாதி
நாம் இனி அறிவுடையார் போன வழி போவோம்
பேராளன் பேரோதும் பெரியோரை ஒரு காலும் பிரிகிலேன -பெரிய திரு -7-4-4-
அதாவது –
அவனாலே அவனை அறிந்து -அவனாலே அவனைப் பெற விருக்கை –

அறியாமை –
சர்வேஸ்வரன் செயலைச் செய்தான் என்று தோற்றாத படி –

மண் கொண்டு –
பூமியை அளந்து கொண்டு

மண் உண்டு-
அனந்தரம்  அது தன்னை வயிற்றிலே வைத்து நோக்கி –

மண் உமிழ்ந்த-
பின்னையும்
அது தன்னை வெளி நாடு காணப் புறப்பட உமிழ்ந்து

இத்தால் தானே தன்னைத் தரும்படிக்கும்
சம்சாரப் பிரளயத்தில் நின்றும் எடுக்கும் படிக்கும் உதாஹரணம்

உண்டானை உலகு ஏழும் ஓர் மூவடி கொண்டானை -திருவாய் -1-10-5-

மாயன் என்று-
இவ்வளவே அன்றிக்கே ஆஸ்ரித விஷயங்களில் பண்ணும் ரஷணங்களுக்கு
எல்லை காண ஒண்ணாத ஆச்சர்ய சக்தி யுக்தன் -என்றபடி –

எண் கொண்டு-
அனவரதம் அனுசந்தித்து
ச்வீகார மாதரத்தையே பற்றி -என்றுமாம் –

எண் நெஞ்சே இரு
மாஸூச -என்ற அனந்தரம் இருக்குமா போலே நிர்ப்பரமாய்க் கொண்டு இருக்கப் பார்
எத்தினால் இடர்க்கடல் கிடத்தி ஏழை நெஞ்சமே -திருச்சந்த விருத்தம் -115-

நம் சக்தியைக் கொண்டு போயிருத்தல் –
அவன் சக்தியை அறியாதே இருத்தல் -செய்யில் அன்றோ அஞ்ச வேண்டுவது –

————————————————————————–

இப்படிப்பட்ட சர்வேஸ்வரனை ஆஸ்ரயியாத ஜன்மங்கள் அடைய வ்யர்த்தம் என்கீறார் –
சரண்யனைப் பற்றி ஆஸ்ரயியாதாகில் ஜன்மங்கள் வ்யர்த்தங்கள் என் தான் –
நம்மை ஆஸ்ரயியாத போது அவை யடங்க வ்யர்த்தமாக வேணுமோ என்னில் –
என்னிருந்த படி இதுவன்றோ -என்கிறார்-

இரும் தண் கமலத்து இரு மலரின் உள்ளே
திருந்து திசை மகனைத் தந்தாய் -பொருந்திய நின்
பாதங்கள் ஏத்திப் பணியாவேல் பல் பிறப்பும்
ஏதங்கள் எல்லாம் எமக்கு——————37-

பதவுரை

இரு–பெரிய
தண்–குளிர்ந்த
கமலத்து–திருநாபிக் கமலத்தின்
இரு மலரின் உள்ளே–பெருமை பொருந்திய பூவில்
திருந்து–ஸமர்த்தனான
திசைமுகனை–நான்முகக் கடவுளை
தந்தாய்–படைத்தருளின பெருமானே!
பொருந்திய–ஸர்வ லோக சரண்யனாகி எல்லாரோடும் பொருந்தி யிருக்கிற
நின்–உன்னுடைய
பாதங்கள்–திருவடிகளை
ஏத்தி–வாயாரத் துதித்து
பணியா ஏல்–வணங்கித் தொழுவதிற்கு உறுப்பாகா விட்டால்
எமக்கு–எங்கட்டு
பல் பிறப்பும் எல்லாம்–பலவகையாகப் பிறக்கின்ற பிறவிகளெல்லாம்
ஏதங்கள்–பயனற்றவையே யாம்

இரும் தண் கமலத்து இரு மலரின் உள்ளே-
மிகக் குளிர்த்தியை யுடைத்தாய் திரு நாபீ கமலத்தில் யுண்டான பெரிய மலரினுள்ளே –

இரு மலர் –
ப்ரஹ்மாவுக்கு இருக்கப் பரப்பு போந்து இருக்கை-அன்றிக்கே
இருமை பெருமையாய் பரப்பை யுடைத்தாய் –
குளிர்ந்து -இரு மலர் என்று விலஷணமான பூவினுள்ளே -என்றுமாம் –

அன்றிக்கே
திரு மலர் என்றாக்கி -அதனுடைய காந்தியைச் சொல்லுற்று ஆகிறது –

திருந்து திசை மகனைத் தந்தாய் –
இவ்வருகு யுண்டான ஸ்ருஷ்டியாதிகளைப் பண்ணும் இடத்தில் சர்வேஸ்வரன் அடிக்கடியும் கேட்க வேண்டாதபடி
சாமர்த்தியத்தை யுடைய சதுர்முகனைத் தந்தாய் –

சிருஷ்டிக்க உபக்ரமித்து போய்க் கேட்டு வர  வேண்டாதபடி 
யோ ப்ரஹ்மாணம் விததாதி பூர்வம் யோ வை வேதாம்ச்ச ப்ரஹிணோதி தஸ்மை —
முமுஷூர் வை சரணமஹம் ப்ரபத்யே -ஸ்வேதா -6-18-சரண்யன் என்றபடி –

தந்தாய் –
சிருஷ்டி நமக்கு உபகாரமாம்படி தமக்கு கார்யங்கள் ஆய்த்ததே –

பொருந்திய நின் பாதங்கள் ஏத்திப் பணியாவேல்-
புறம்பு உள்ளார் எல்லாம் ஒருவரோடு ஒருவர் பொருந்தி இரார்கள் –
எல்லாரும் பொருந்தும்படி இருப்பான் சர்வேஸ்வரனே யாய்த்து –
அவனை என்றும் பொருந்தி இறே இருப்பது –
இத்தலையிலே பணியே தேட்டம் –
இப்படிப்பட்ட அவன் திருவடிகளை ஏத்திப் பணியா வாகில் பல்வகைப் பட்ட ஜன்மங்களும் –

நின் பாதங்கள் ஏத்திப் பணியாவேல்
உன் நினைவைத் தப்பி உனக்கு உறுப்பாகாதே போமாகில்  –
ஸ்ருஷ்டத்வம் வனவாசாய -அயோத்யா -40-5-
அடிமை செய்யப் பெற்ற போது எந்நாளும் நாளாகும் -பணியும் அன்று இறே ஜன்ம பலமாவது-

பல் பிறப்பும்-
கர்ம நிபந்தனமாக பிறக்கும் பிறப்புக்கள் —
சென்று சென்றாகிலும் கண்டு -திருவாய் -3-9-10–
ஓன்று அல்லா ஓன்று பலிக்கும் என்று அன்றோ பல சிருஷ்டிகளைப் பண்ணுகிறது

ஏதங்கள் –
ஏதங்கள் -என்கிறது -புருஷ பேதம் தோறும் துக்கங்களும் பேதித்து இறே இருப்பது –
புருஷர்களுக்கு எல்லாம் யுண்டான துக்கங்கள் எனக்கு ஒருவனுக்கு யுண்டாம் –

பணியாவேல் –
முமுஷூர்வை சரணமஹம் ப்ரபத்யே -என்னா வாகில் -எமக்கு ஏதங்கள்  -வ்யர்த்தங்கள்-
ஜென்மத்துக்கு பிரயோஜனம் ஆகிறது உன்னை ஆஸ்ரயிக்கை இறே –
அதற்குப் புறம்பான பின்பு  அவை யடைய வ்யர்த்தம் என்கிறார் –

யத் முஹூர்த்தம் ஷணம் வாபி வா ஸூ தேவோ ந சிந்தயதே சா ஹாநி
தன்மஹச்சித்ரம் சா ப்ராந்திஸ் சா ச விக்ரியா -காருட பூர்வ -222-22-

————————————————————————–

இனி எந்த ஜன்ம பலமாகை யாகிறது -எங்கனே செய்தால் என்னில்
பிறர்க்கு ஆனவற்றைத் தனக்காக அபிமானித்து இருக்கை அன்றிக்கே
ஸ்ரீ யபதியுடைய திரு நாமங்களைச் சொல்லுகையே ஜென்மத்துக்கு பிரயோஜனமும்
நாம் கொள்ளும் காரியமும்
-என்கிறார்

அர்த்தத்தை புருஷார்த்தம் என்று புத்தி பண்ணி இராதே
ஸ்ரீ யபதியை அனுபவிக்குமதுவே எல்லார்க்கும் செய்யப் படுவது -என்கிறார்-

எமக்கு என்று இரு நிதியம் ஏமாந்து இராதே
தமக்கென்றும் சார்வம் அறிந்து -நமக்கென்றும்
மாதவனே என்னும் மனம் படைத்தது மற்றவன் பேர்
ஓதுவதே நாவினால் ஓத்து————-38-

பதவுரை

இரு நிதியம்–(இப்பொருளை எப்போது நாம் கொள்ளையடிக்கப் போகிறோம்’ என்று
அயலார் எதிர்பார்த்திருப்பதற்குக் காரணமான) பெருஞ்செல்வத்தை
எமக்கு என்று–தங்களுடையதாக நினைத்து
ஏமாந்து இராதே–மனச் செருக்குக் கொண்டிராமல்
தமக்கு என்றும் சார்வம் அறிந்து–தங்களுக்கு எப்போதும் ரக்ஷகமாயிருக்கக் கூடிய உபாயத்தை யறிந்து
நமக்கு என்றும் மாதவனே என்னும் மனம் படைத்து–‘நமக்கு எக்காலத்திலும் எம்பெருமானே சரணம்’ என்று
துணிந்திருக்கும் நெஞ்சை யுடையராய்
மற்று–அதற்குப் பின்பு
அவன் பேர்–அத்திருமாலினது திருநாமங்களை
ஓதுவதே–ஸங்கீர்த்தநம் பண்ணுவதே
நாவினால் ஒத்து–நாவுக்கு ஓதுவதற்கு உரிய விஷயம்.

எமக்கு என்று இரு நிதியம் ஏமாந்து இராதே-
இது ஒழித்து விநியோகம் கொள்ளுவார் இன்னார் என்று அறியாதே இவன் எனக்கு என்று கொண்டு இருக்கும் ஆய்த்து-

இரு நிதியம்  எமக்கு என்று ஏமாந்து இராதே-
பிறர்தான குருவான த்ரவ்யத்தை -தனக்காக அபிமானித்து -அனந்தரம் –
பகவத் பஜனம் பண்ணி யமாதிகள் தலையிலே அடி இட்டு
ந பிபேதி குதச்ச ந -தைத் ஆன -9-1- என்று இருப்பாரைப் போலே  நிர்ப்பரராய் இராதே

எமக்கு என்று –
தனக்கும் பிறருக்குமாய் இருப்பதை பற்றுவதே –
எம்பெருமானுக்கு என்று இருப்பதைத் தனக்கு என்று இருப்பதே –

இரு நிதியம் –
ஆனந்தம் ப்ரஹ்மணோ வித்வான் ந பிபேதி குதச்ச ந -தைத் ஆனா -9-1–என்கிற விஷயம் கிடக்க
துக்கோத்தரமான கழஞ்சு செம்பை ஆசைப்படுவதே -அது நினைத்த போதே பிடித்து துக்க ரூபம்
இங்கு அதசோ பயங்கதொ பவதி -தை ஆன -6-

தமக்கென்றும் சார்வம் அறிந்து –
எமக்கு என்றும் ஒக்க புகலிடமாய் இருக்கும் என்னும் இடத்தை புத்தி பண்ணு –
நமக்கு நித்தியமான ஆஸ்ரயம் என்று அறிந்து –
இவன் தனக்கு என்ன அறியாத காலத்திலும் -இவனைத் தனக்கு என்று இருக்குமவன் –

நமக்கென்றும் மாதவனே என்னும் மனம் படைத்தது –
நமக்கு என்றும் தஞ்சம் ஸ்ரீ யபதியே என்னும் மனசை யுடையராய் கொண்டு –
நமக்கு என்றும் அனுபாவ்யன் ஸ்ரீ யபதியே என்னும் நெஞ்சைப் படைத்து –
மாதவன் என்பதோர் அன்பு தனை யுற்று இருந்தேன் -நாச் -12-1-

மாதவன்
பிராப்ய ஸ்வரூபம்

மனம் படைத்து
விஜ்ஞானம் யதிதம் ப்ராப்தம் -ஜிதந்தே -அவர்களை இவன் இன்று படைக்க வேண்டா -சித்தம்

மற்றவன் பேர் ஓதுவதே நாவினால் ஓத்து-——
அவன் திரு நாமங்களைச் சொல்லுகையே நாவால் ஓதப்படுவதும் –
அம் மிதுனத்துக்கு வாசக சப்தத்தைச் சொல்லுகையே வாக் இந்த்ரியத்துக்கு ஏற்ற இது

உச்சரிக்கும் மந்த்ரம் வ்யவஸ்திதமாய் இருக்கை
ஹரிரேகஸ் சதாத் யேய -ஹரி வம்சம் -138-8-
மந்திரத்தை மந்திரத்தால் மறவாது என்றும் வாழுதியேல் வாழலாம் மட நெஞ்சமே-திரு நெடும் -4-

————————————————————————–

நாவினால் ஒதுகையாகிறது தான் எங்கனே செய்கை என்னில் –
சகல வேத சஙக்ரஹமான திரு மந்த்ரத்தை உச்சரித்துக் கொண்டு
வேதாந்தங்களில் சொல்லுகிற மரியாதை குறையாமல் ஆஸ்ரயிக்க வல்லார் அங்கனே யாஸ்ரயிப்பது –
அது மாட்டாதவர்கள்
அப்பரப்பு எல்லாத்தாலுமாக சங்க்ருஹீதமான அர்த்தம்  ஸ்ரீ யபதியானவனுடைய திரு நாமங்களைச் சொல்லுகையே –
ஆன பின்பு அவ்வழியாலே பற்றப் பாருங்கோள்-என்கிறார் –

இந்த்ராதிகளையும் ஆஸ்ரயணீயராக வேதாந்தங்களிலே சொல்லா நின்றனவே –
நீரும்  ப்ராமாணிகராய் இருந்து ஸ்ரீ லஷ்மீ பதியே சமாஸ்ரயணீயர் என்று சொல்லுகிற படி எங்கனே என்னில்
உங்களுக்கு அபிதா நவ்ருத்தியாய் தாத்பர்ய ஜ்ஞானம் இல்லாமல் சொல்லுகிறி கோள்-
தாத்பர்ய ஜ்ஞானம் யுன்டாகில் அவர்களைச் சொல்லுகிற இது 
விபூதி மானாய் சமாஸ்ரயணீயனாய் இருப்பான் ஸ்ரீ லஷ்மீ பதியே -என்று இருங்கோள் என்கிறார்  –

ஒத்தின் பொருள் முடிவும் இத்தனையே உத்தமன் பேர்
ஏத்தும் திறம் அறிமின் ஏழைகாள் -ஒத்ததனை
வல்லீரேல் நன்றதனை மாட்டீரேல் மாதவன் பேர்
சொல்லுவதே ஒத்தின் சுருக்கு —39-

பதவுரை

ஏழைகாள்–‘கண்ட கண்ட தேவதைகளின் கால்களிலெல்லாம் விழுகிற அறிவு கேடர்களே!,
ஓத்து அதனை–வேதமோதுவதாகிற காரியத்தை(ச் செய்ய)
வல்லீர் ஏல்–ஸமர்த்தர்களா யிருப்பீர்களாகில்
நன்று–அப்படியே வேதமோதுவது நல்லது;
அதனை மாட்டீர் ஏல்–அது செய்ய சக்தி யற்றவர்களாகில்
மாதவன் பேர்–திருமாலின் திருநாமங்களை
சொல்லுவதே–உச்சரிப்பதே
ஓத்தின் சுருக்கு–ஸகல வேதங்களின் ஸாரமாகும்;
ஓத்தின் பொருள் முடிவும் இத்தனையே–வேதத்தினுடைய அர்த்தங்களில் நிஷ்கர்ஷிக்கப்படடதும் இவ்வளவே; (ஆகையாலே)
உத்தமன்–புருஷோத்தமனான எம்பெருமானுடைய
பேர்–திருநாமங்களைக் கொண்டு
ஏத்தும் திறம்–(அவனைத்) துதிக்கும் வகையை
அறிமின்–தெரிந்து கொள்ளுங்கள்.

ஒத்தின் பொருள் முடிவும் இத்தனையே –
வேதத்தின் யுடைய அர்த்தம் எல்லாத்தாலும் கூட தாத்பர்யமாக நினைத்துத் தலைக் கட்டின அம்சம் –
நான் சொல்லப் புகுகிற இவ்வளவே –
வேதைஸ்ஸ சர்வை அஹமேவ வேத்ய -ஸ்ரீ கீதை -15-15–

பொருள் முடிவும் –
பிரயோஜனத்தின் எல்லை –

உத்தமன் பேர் ஏத்தும் திறம்-
வேறு ஒருக்கால் தனக்கும் பாங்கான போது அவனை அனுசந்திக்கப் -பின்பு இவன்  கலங்கின சமயத்திலும்
அவன் தானே தெளிந்து இருந்து இவனை அவ்வருக படுத்த வல்லவன்
திரு நாமங்களை ஸ்தோத்ரம் பண்ணும் பிரகாரம் –
ஸ்திதே மனசி ஸூ ஸ் வஸதே  சரீரே சதி யோ நர தாது சாம்யே ஸ்திதே ஸ்மர்த்தா விச்வரூபஞ்ச மாமஜம்-என்கிறபடியே
இவன் பக்கலிலே ஒரு கால் ஸ்ம்ருதி மாதரம் யுண்டாக
பின்னையும் இவனுக்கு ஸ்மரிக்க ஒண்ணாத தசையிலும் –
அஹம் ஸ்மராமி -என்கிறபடியே
உணர்ந்து இருந்து நோக்க வல்லவன் திரு நாமத்தைச் சொல்லுமதுவே –

உத்தமன் பேர் ஏத்தும் திறம்-
எல்லாவற்றுக்கும் பிரகாரியாய் இருந்துள்ள அவனுடைய திரு நாமத்தை ஏத்துகை –

உத்தமன் –
எல்லா இசையும் பன்னுமவன்
உத்தர்த்தும் அர்ஹசி ஹரே புருஷோத்தமோசி-முகுந்த மாலா -34-என்றும்
யோ மாமேவம் அசம்மூடோ ஜா நாதி புருஷோத்தமம்  ச சர்வவித் பஜதி மாம் சர்வ பாவேன பாரத -ஸ்ரீ கீதை -15-19-என்றபடி
தன்னை ஒழிந்தது அடைய பிரகாரமாக யுடைய பிரகாரி -என்று அறிகை

பேர் –
கீழ்ச் சொன்னபடிக்கு வாசக சப்தம் -அதாகிறது திரு மந்த்ரம் –
அவன் பக்கலிலே சர்வார்த்தமும் யுண்டானாப் போலே அதன் பக்கலிலே சர்வ சப்தமும் யுண்டு

சர்வம் அஷ்டாஷராந்தச்தம் -ஹாரீத ஸ்ம்ருதி -3-45-
ஒமிதீதம் சர்வம் -அகாரோவை சர்வா வாக் –

அறிமின் ஏழைகாள் –
வேறேயும் அறியப் படுவதொரு விஷயம் யுண்டாக  நினைத்து இருக்கிற சபலர்காள்-நீங்கள் இத்தை அறியுங்கோள்-

ஏழைகாள் –
இது உங்களுக்கு உபதேசிக்க வேண்டும்படியாய் இருப்பதே –
வகுத்த விஷயம் குறைவற்று இருக்க பாஹ்ய விஷயங்களிலே பிரவணராய் இருப்பதே –
சப்த மாதரத்தையே புத்தி பண்ணி தாத்பர்ய வ்ருத்தியாலே பர்யவசான வ்ருத்தி அறியாது இருக்கிற அஜ்ஞர் என்றுமாம் –

ஒத்ததனை வல்லீரேல்-
வேதத்தில் சொல்லுகிற மரியாதை குறையாமல் அனுஷ்டிக்க வல்லி  கோளாகில்-

அறிமின் –
அப்படி அறியுங்கோள்-சங்க அத்யயனம் பண்ணி வேதாந்த ஸ்ரவணத்தாலே  தாத்பர்யம் அறிய வல்லி கோளாகில் –

ஏழைகாள் -ஒத்தனை வல்லீரேல் உத்தமன் பேரோதும் திறமான இத்தனையே ஒத்தின் பொருள் முடிவும் -இத்தை புத்தி பண்ணுங்கோள் –

நன்றதனை மாட்டீரேல்-
நன்றாக அதில் சொல்லுகிறபடியே மாட்டி கோளாகில்
உப நயனாதி சம்ஸ்காரம் முன்னாக சங்க அத்யயனத்தைப் பண்ணி அதில் அர்த்த ஜ்ஞானத்தை யுடையி கோளாய்
பின்னை அவற்றில் சொல்லுகிறபடியே சாதனங்களை கண்ணழிவற அனுஷ்டித்த அனந்தரம் சாஷாத் கரிக்குமது மாட்டிற்றிலி கோளாகில்

மாதவன் பேர் சொல்லுவதே ஒத்தின் சுருக்கு –
அந்த அப்பரப்பு எல்லாவற்றாலும் கூட சங்ஷேபித்ததாய் யற்ற பொருள் ஸ்ரீ யபதியுடைய திரு நாமத்தைச் சொல்லுகையே –

மாதவன் –
நிரூபக தர்மம் -அவன் பிரசாதம் அடியாகப் பிறந்த ஜ்ஞானம் யுடையார் சொன்னத்தை அர்த்தம் என்று இருங்கோள் –
பகவத்  பிரசாதத்தாலே அவனைக் கண்ட என்னை விஸ்வசியுங்கள்-

இத்தைச் சுருக்கு என்கையாலே
நன்றதனை மாட்டீரேல் -என்ற இடத்திலும் பரப்பு எல்லாவற்றையும் நினைத்துச் சொல்லுகிறது –

————————————————————————–

கீழே வேதாந்தத்தால்   நிச்சயித்ததான அம்சம் இது என்றாரே -இதுவும் ஒரு வார்த்தா மாத்ரம் சொன்னான்
என்று இராதே அதில் அர்த்த பூதனைக் கடுக புத்தி பண்ணப் பாருங்கோள்-என்கிறார் –

அவனை ஒழிந்தது ஒன்றுக்கு ஒரு வஸ்துத்வம் இன்றிக்கே இருந்தது –
ஆன பின்பு பற்றப் படுவான் அவனேயாய் இருந்தது –
அது தானும் ஓரளவிலே வந்தவாறே செய்கிறோம் என்று இராதே கடுகச் செய்யப் பாருங்கோள்  -என்கிறார்-

சுருக்காக வாங்கிச் சுலாவி நின்று ஐயார்
நெருக்கா முன் நீர் நினைமின் கண்டீர் -திருப் பொலிந்த
ஆகத்தான் பாதம் அறிந்தும் அறியாத
போகத்தால் இல்லை பொருள்————–40-

பதவுரை

ஐயார்–கோழையானது
சுருக்காக வாங்கி–சரீரத்தைச் சுருங்க வலித்து
சுலாவி நின்று–உடம்பு முழுவதும் சூழ்ந்து கொண்டு நின்று
நெருக்காமுன்–(உயிர் போகும்போது கழுத்தளவிலே வந்து கூடி) நெருக்குவதற்கு முன்பே,
திரு பொலிந்த ஆகத்தான் பாதம்–பிராட்டியாலேர விளங்குகின்ற திருமார்பையுடைய பெருமானுடைய திருவடிகளை
நீர் நினைமின்–நீங்கள் சிந்தியுங்கோள்:
அறிந்தும்–பகவத் விஷயத்தை அறிந்தவர்களாயிருந்தும்
அறியாத–அறியாதவர்களாகவே உங்களைச் செய்யவல்ல
போகத்தால்–சப்தாதி விஷயங்களால்
பொருள் இல்லை–ஒரு ப்ரயோஜனமுமில்லை.

சுருக்காக வாங்கிச சுலாவி நின்று ஐயார் நெருக்கா முன் நீர் நினைமின் கண்டீர் –
சுலாவி நின்று -ஐயார் சுருக்காக   வாங்கி நெருக்கா முன் நீர் நினைமுன் –
எங்கும் ஒக்க வியாபித்து இருக்கிற ச்லேஷமானது -பிராண வியோக சமயத்திலே வந்து திரண்டு வலிக்கக் கடவதாய்  இருக்கும் –
அப்போது இவன் அவனை ஸ்மரிக்க ஆசைப்பட ஒண்ணாத படி கரணங்கள் அவிதேயமாய் இருப்பதொரு போதாயும் இருக்கும் இறே-
ஆன பின்பு அவ் வெளிமைப் படுவதற்கு முன்பே அவனை கடுக்க ஸ்மரித்துக் கொடு நிற்கப் பாருங்கோள்-

சுருக்காக வாங்கி –
பஞ்சவித வாயுவை யுடைத்தான சரீரம் -சுருக்குப்பை போலே ஒன்றாக சுருங்க வலிக்கை –

சுலாவி நின்று –
உடம்பு எங்கும் தானேயாம் படி  வியாபித்து இத்தால் தப்பாமே கொல்லுகை –

ஐயார் நெருக்கா முன் –
ச்லேஷமா வந்து நெருக்குவதற்கு முன்னே –

நீர் நினைமின் –
இத்தைப் புத்தி பண்ணுங்கோள்–செய்கிறோம் எண்ணப் பற்றாது என்கிறார்
மாளுமோர் இடத்திலும்  -வணக்கொடு மாள்வது வளமே -திருவாய் -1-3-8-
உபாசகனுக்கு அந்திம ஸ்ம்ருதி வேணும்
பிரபன்னனுக்கு காஷ்ட பாஷாண சந்நிபனாக வேணும்
இரண்டும் தப்பி நின்றார்க்கு
அந்திம தசையில் த்வயத்தின் யுடைய நினைவு பிறத்தல் கீழ்ச் சொன்ன வற்றிலும் நன்று
என் தான் இப்படி அவன் ஒரு கை கால் முறிய ஸ்மரிக்க வேண்டுகிறது என் என்னில் –

திருப் பொலிந்த ஆகத்தான் பாதம் –
மறந்து இருக்கலாம் படியோ அவ்வடிவு அழகு இருக்கிறது -என்கிறார்
நெடும் காலம் ஆஸ்ரயிக்கப் பெற்றிலோம் -அதுக்கு மேலே தோஷ பூயிஷ்டர் என்று அஞ்ச வேண்டாம்
ந கச்சின் ந அபராத்யதி -யுத்த -116-14-என்னுமவள் கூட இருக்கிறாள் –
பெரிய பிராட்டியாராலே விளங்கா நின்றுள்ள திருமேனியை யுடையவன் திருவடிகளை நினைமின் –

அறிந்தும் அறியாத போகத்தால் இல்லை பொருள்-
பகவத் விஷயத்தை அறிந்து வைத்தும் அறியாதாரோடு வ்யாவர்த்தமாகப் பண்ணக் கடவதான
ப்ராக்ருத போகங்களால் ஒரு பிரயோஜனம் இல்லை –
ஜ்ஞானாதிகனானவனையும் அஜ்ஞ்ஞானவனோடு ஒக்கச் சொல்லும்படிக்கு ஈடாகப் பண்ணுவித்துக் கொள்ளுகிற
சப்தாதி போகங்களால்  வரக் கடவதொரு பிரயோஜனம் இல்லை

மஹா ராஜற்கு ராம பக்தி குறைவற்று இருக்கச் செய்தேயும் நாலு நாள் போகப் பிராவண்யத்தாலே
அல்லாதாரோடு ஒக்க உணர்த்த வேண்டும்படியாய் விழுந்தது இறே

அன்றிக்கே –
பொல்லாது என்று அறிந்து இருக்கச் செய்தே கை விடப் போகாத வர்த்த ஸூகத்தால் பிரயோஜனம் இல்லை என்றுமாம் –

அங்கன் அன்றிக்கே –
அந்த சப்தாதி போகங்கள் தானே அவ்வளவு யுண்டு -அவ்வளவும் அறிந்தாலும்
பின்னையும் அறியாதார் படியேயாய்த் தலைக்கட்டும்படி
பண்ணக் கடவதான போகங்களில் வருவதொரு பிரயோஜனம் இல்லை –

அதாகிறது –
சந்த்ருச்யதே  வாப்ய கம்யதே வா தாஜ்ஞ்ஞானம் அஜ்ஞ்ஞானம் அதோன்யது துக்கம் -ஸ்ரீ விஷ்ணு புராணம் -6-5-87-என்னக் கடவது இறே
ப்ராப்த விஷயத்தைப் பற்றாத ஜ்ஞானம் அஜ்ஞ்ஞானம் என்னக் கடவது இறே
பகவத் வ்யதிரிக்தங்களை அடங்க அறிந்தானே யாகிலும் அது ஒன்றையும் அறியாது ஒழியவே அவனை அஜ்ஞ்ஞன் என்னக் கடவது இறே
வ்யதிரிக்த விஷயங்கள் ஒன்றும் அறியாதே ஒழிந்தாலும்
பகவத் விஷயம் ஒன்றையுமே அறியவும் அவன் சர்வஜ்ஞ்ஞனாகக் கடவன்

அதில் இங்கு நீர் நினைமின் என்ற மாத்திரமாய் இருந்தது
இங்கு அறிந்தும் என்று அதனிடைய எல்லை அளவும் சென்று நின்றது

அர்த்த ஸூகம் ஸூகம் அன்றோ என்னில்
உத்தேச்யத்தை அறியாதபடி அனர்த்தத்தைப் பண்ணும் –
தான் பிரயோஜனப் படாத மாத்திரமே அன்று -புருஷார்த்த விரோதியுமாம் -என்றபடி –

————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பூதத் ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ பூதத் ஆழ்வார் அருளிய இரண்டாம் திருவந்தாதி – -21-30– ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் —

February 22, 2015

இவர்களுடைய பரிகர சம்பத்தி இருந்தபடி -கண்டோமுக்கு நேர் கொடு நேர் நரகத்தில் புக வழி அற்று இருந்தது
இங்கனே இருக்கும் இவர்கள் விலக்கடி தேடிக் கொண்டு போய்ப் புகுகிறபடி என் என்று  விஸ்மயப் படுகிறார் –
நன்கு ஏத்தும் போது தாம் தாம் உண்டாக வேணுமே -என்னில்-

தாமுளரே தம் உள்ளம் உள் உளதே தாமரையின்
பூ உளதே ஏத்தும் பொழுது உண்டே -வாமன்
திரு மருவு தாள் மருவு சென்னியரே செவ்வே
அரு நரகம் சேர்வது அரிது—————–21–

பதவுரை

தாம் உளரே–(எம்பெruருமானைப் பணிவதற்குப் பாங்கான கரண களேபரங்களை யுடைய)
சேதநர் தாங்கள் ஏற்கனவே இருக்கின்றார்களே;
தம் உள்ளம் உள்உளதே–(எம்பெருமானைச் சிந்திப்பதற்கான) தங்களுடைய (மனமும் வெளியே போய்த் தேட வேண்டாதபடி)
தமக்குள்ளே யிருக்கின்றதே.
தாமரையின் பூ உளதே–(எம்பெருமான் திருவடிகளில் சாத்தந்தக்க) தாமரைப்பூ (குளங்கள் தோறும்) நிறைந்து கிடக்கின்றதே;
ஏத்தும் பொழுது உண்டே–அவனை வாய் விட்டுப் புகழ்வதற்கு ஏற்ற காலம் ஏராளமாக வுள்ளதே;
வாமன்–(தன் உடைமையைப் பெறுகைக்குத் தான் யாசகனாகச் சென்ற சீலமுள்ள) வாமந மூர்த்தியான ஸர்வேச்வரனுடைய
திரு மருவு தாள்–அழகிய திருவடிகளை
மருவு–பணிவதற்குப் பொருத்தமான
சென்னியரே–தலையை யுடையவர்களாக இருக்கின்றார்களே;
(இப்படி ஒன்றாலும் குறையின்றியே யிருக்கவும் இவ்வுலகத்தவர்கள்)
செவ்வே–நேராக
அரு நரகம்–கொடிய நரகத்தை
சேர்வது–அடைவதானது
அரிது–ஆச்சரியப்படத்தக்க அருமையான செயலாயிருக்கின்றது.

தாமுளரே -இத்யாதி
சத்தையை யுண்டாக்கி மற்றுள்ள உப கரணங்களையும் சேதனர்க்கு யுண்டாக்கிக் கொடுக்கையாலே  –
தந்தாமை யுண்டாக்கி -வைத்தானே –
விசித்ரா தேக சம்பந்தி ஈஸ்வராய நிவேதிதும் பூர்வமேவ க்ருதா ப்ரஹ்மன் ஹஸ்தா பாதாதி சம்யுதா -ஸ்ரீ விஷ்ணு தத்வம் -என்று
தேஹத்தை பண்டே தந்து வைத்தானே –
தங்களை சிருஷ்டித்துக் கொள்ள வேண்டாவே –

தம் உள்ளம் உள் உளதே –
சத்தை யுண்டானால் உண்டாம் ஹிருதயத்தையும் தேட வேண்டாதபடி  தனக்கு விதேயமாக்கி வைத்தானே –
தனக்குப் புறம்பு அன்றே ஹ்ருதயம் –
சித்தத்தைப் பற்றுவார்க்கு சித்தமே அமையுமே –
உள்ளுகை அரிது என்னில்

தாமரையின் பூ உளதே –
தாமரை புறம்பே யுண்டே –
அல்லோம் என்று இவன் போகிலும்-புறம்பே போக ஒண்ணாத படி பண்டே அவை யுண்டாய்த்தே –
ஆகிறது -தான் புறம்பே போய் தேடுமதான புஷ்பமும் -தனக்கே தேட வேண்டாத படி -அவன் குறைவறுத்து வைத்தானே –
இவனுடைய விபூதிக்கும் புறம்பு அன்றே பூ –

ஏத்தும் பொழுது உண்டே –
ஆஸ்ரயணீயத்துக்கு ஈடான காலமும் குறைவற்றுக் கிடந்ததே
பூப் பறிக்கச் சோம்பில் யேத்துகைக்கு ஈடான  காலமும் ஈஸ்வரன் தானே யுண்டாக்கி வைத்தானே –

வாமன் திரு மருவு தாள் மருவு சென்னியரே-
வாமனைக் குறைத்து வாமன் -என்கிறது -இவன் இடுமது கொள்ளுகைக்குத் தான் இரப்பாளனாய்
வருமவனுடைய ஐஸ்வர்ய பிரகாசமான திருவடிகளில் சேர்க்கும்படியான தலையை யுண்டாக்கி வைத்தானே

வாமன் –
எல்லார் தலையிலும் கால் வைக்க உகக்குமவனாய்த்-தன்னுடைமை பெறுகைக்கு அர்த்தியாய் வருவுமவன் –
மருவுகையே வேண்டுவது

திரு மருவு தாள் –
சங்க ரதாங்க கல்பக த்வஜ அரவிந்த அங்குச   வஜ்ரா லாஞ்சனம்-சரணாம் புஜத்வயம் -ஸ்தோத்ர ரத்னம் -31-என்கிறபடியே
சேஷித்வ பிரகாசமாய் இருக்கை –
திருப் பொலிந்த சேவடி -பெரியாழ்வார் திரு -5-4-7-என்னக் கடவது இறே –

மருவு சென்னியரே
சேஷத்வ ப்ரகாசகமான தலையை யுண்டாக்கி வைத்தானே –
திருவடிகளை வைத்தால் விலக்காத தொரு தலையை யுடையரே –
நான் என்று இருக்கை ராவணனோ பாதி -அடியேன் என்று இருக்கை விபீஷணனோ பாதி
இருந்தபடி இதுவான பின்பு

செவ்வே அரு நரகம் சேர்வது அரிது–
கொடிதான சம்சாரத்துக்கு வேர் வழி போகை அரிது -இங்கனே  இருக்க –
இவர்கள் தேடிக் கொண்டு போகிற வழி இருக்கிறபடி என் –
இப்படி உப கரணங்கள் குறைவற்று இருக்கச் செய்தே நரகத்துக்கு நேர் வழி கிடையாது

அரு நரகம் –
சம்சாரம் –
அஜ்ஞருக்கு இறே யமனுடைய நரகம் –
விவேகம் யுடையாருக்கு சம்சாரமே நரகம் –

நிரயோ யஸ் த்வயாவி நா -அயோத்யா -30-18-

தேஹ சேத ப்ரீதிமான் மூட பவிதா நரகேபி  ச -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-17-63-

அப்படி அல்லாமல் உடலிலே ஆசை அற்றவனாக இருப்பவனுக்கு சம்சாரத்துக்கு வழி காண் கிறிலோம்-

————————————————————————–

இப்படி அரிதாய் இருக்கச் செய்து கொண்டதிது-
இவர்களுக்கு ஒரு பரிகரம் இன்றிக்கே இருந்ததே யாகிலும் தன் பரத்தில் தான் ந்யச்த பரனாய் இருக்கவே –
எளிதாக இவர்கள் ஆஸ்ரயித்தாகளாய் கொண்டு  தலைக் கட்டலாய் இருக்கிறது கிடீர் –
சர்வேஸ்வரன் ப்ரபாவத்தைப் பார்த்த வாறே -என்கிறார் –

சம்சாரிகளுக்கு ஆஸ்ரயிக்கை எளிதாய் இருந்ததோ என்னில்
எளிதாம் வழி சொல்லுகிறார் –
சத்தையைப் பிடித்து நோக்கிக் கொண்டு போருவான் ஒரு சாமாஸ்ரயணீயனைப் பெற்றால்
எல்லாம் ஸூலபம் இறே என்கிறது-

அரியது எளிதாகும் ஆற்றலால் மாற்றி
பெருக முயல்வாரைப் பெற்றால் -கரியதோர்
வெண் கோட்டு மால் யானை வென்றி முடித்தது அன்றே
தண் கோட்டு மா மலரால் தாழ்ந்து—-22-

பதவுரை

(சேதநனுக்கு வேண்டிய ஸகல காரியங்களையும் தானே செய்வதாக என்று கொண்டு)
பெருக முயல்வாரை–மிகவும் உத்ஸாஹங் கொண்டிருக்கின்ற மஹாபுருஷனான எம்பெருமானை
பெற்றால்–கிடைக்கப் பெற்றால்
அரியது–செய்வதற்கு அருமையான செயலும்
எளிது ஆகும்–லகுவாய்விடும்; (இப்படியாக எங்கே கண்டோமென்னில்)
வெண் கோடு–வெண்ணிறமான தந்தங்களை யுடைய
மால்–பெரிய
கரியது ஓர் யானை–கருநிறமுள்ள கஜேந்திராழ்வான்
தண்–குளிர்ந்த
கோடு–பொய்கைக் கரையிலே
மா–சிறந்த
மலரால்–தாமரைப் பூக்களைக் கொண்டு
(மடுவின் கரையிலெழுந்தருளின எம்பெருமான் திருவடிகளிலே)
தாழ்ந்து–வணங்கி யடிமை செய்ததனால்
வென்று முடித்தன்றே–விரோதியை ஜயித்துத் தன் அபீஷ்டத்தை நிறைவேற்றிக் கொண்டதன்றோ.
ஆற்றலால்–தன்னுடைய சக்தியினால்
மாற்றி–சேதநன் செய்யும் முயற்சி ஒன்றும் வேண்டாவென்று விலக்கி

அரியது எளிதாகும் –
அரியதாவது -பெறுதற்கு அரிதான பகவல் லாபமும் -பகவத் பஜனமும் –
இவை இரண்டும் எளிதாகும் -என் செய்தால் -என்னில் –

ஆற்றலால் மாற்றி பெருக முயல்வாரைப் பெற்றால் –
ஆற்றலாலே -என்கிறது
சக்தியாலே -என்னுதல் –
பொறையாலே   என்னுதல் –

சக்தியான போது அவனுக்கு சக்தி வைகல்யம் இல்லாமையாலே இவன் பரத்தை தன் பக்கலிலே மாற்றிக் கொண்டு
இவனுடைய பேற்றுக்கு பிரதி பந்தகங்கள் ஆனவற்றையும் போக்கி
தன்னைக் கொடுக்கைக்கு யுடலாகிறது –
இவன் தலையிலே ஒரு தேவை இடுகிறது என் —
எல்லாம் நாமே ஏறிட்டுக் கொண்டு செய்வோம் என்பான் ஒரு பர சக்தியைப் பெற்றால் –
இவன் அசக்தி தீரத் தன் சக்தியைக் காட்டி ரஷிக்கை –

அன்றிக்கே -பொறை யானபோது –
இவன் பெறாமைக்கு பண்ணி வைக்கும் ப்ராதி கூல்யங்களை தன் கிருபையாலே
பொறுத்துக் கொடுக்கைக்கு யுடலாய் இருக்கை

மாற்றிப் பெருக முயல்வாரைப் பெற்றால் –
இவனுடைய சர்வ ரஷணங்களையும் தன் தோளிலே ஏறிட்டுக் கொண்டு இவனுக்குப் பேற்றிலே அந்வயமாம் படி –
தன் பேறாகக் கொண்டு ஆஸ்ரிதன் பக்கல் உள்ள அல்ப அனுகூல்யத்தை –
அஜ்ஞனாய் அசக்தனானவன் இத்துணை செய்து உகக்கப் பெற்றோம் -என்று
மிகவும் உத்சாஹிப்பாரைப் பெற்றால் அரியது எளியதாகும்

இத்தாலே
அவனாலே அவனைப் பெறுதல் -தம்மாலே அவனை இழத்தல் -என்றபடி

இதுக்குத் திருஷ்டாந்தம் –

கரியதோர் வெண் கோட்டு மால் யானை –
கறுத்த நிறத்தையும் வெளுத்த கொம்பையும் பெரிய வடிவையும் உடைத்தான ஆனையானது-
வென்றி முடித்தது அன்றே தண் கோட்டு மா மலரால் தாழ்ந்து-
பொய்கையிலே புக்கு பூவைப் பறித்த அவ்வ0ளவில் முதலையாலே நோவு பட்டு
பூவில் செவ்வி மாறுவதற்கு முன்னே அவன் திருவடிகளிலே இடப் பெற்றிலோம் என்னும் இழவு தீர
அவன் தான் அரை குலையத் தலை குலைய இவ்வளவும் வந்து
இத்தை எடுத்துக் கொடு போய் குளிர்ந்த கரையிலே வைக்க
அப்போதே அவன் திருவடிகளிலே பணிமாறித் தன் விரோதியையும் போக்கப் பெற்றது   இல்லையோ –
ஆனபின்பு அதிலும் ஒரு குறையில்லை –

வடிவில் கருப்பும் கொம்பிலே வெளுப்பும் கொண்டு கொள்ளுகிற பிரயோஜனம் என் என்னில்
பிரஜை கிணற்றில் விழுந்தால் அதின் வடிவு அழகும் -அவயவமும் மாதாவுக்கு ஸ்மாரகமாய்
இருக்குமாப் போலே இருக்கும்

கோட்டு என்று கரைக்குப் பேர்
தடம் -குளிர்த்தி

குளிர்ந்த கரையிலே மா மலரைக் கொண்டு தாழ்ந்தன்றே வென்றியை முடித்தது –
புஷ்பத்தைக் கொண்டு திருவடிகளிலே பணிந்தன்றே விஜயத்தைப் பெற்றது –
அவன் பிரசாதத்தாலே அன்றோ -என்கிறது

அன்றிக்கே –
தண் தொட்டு மலர் என்று பாடமான போது குளிர்ந்த இதழை யுதைத்தான பெரிய மலராலே என்கிறது –
எம்பெருமான் ஏறிட்டுக் கொள்ளாத போது முதலை வாயிலே கிடந்தான் –
அவன் ஏறிட்டுக் கொண்டவாறே துக்கம் நீங்கிற்று
அனுக்ரஹம் உள்ள போது ரஷ்யத்துக்கு மிடுக்காய் இருக்கும்
நிக்ரஹம் பிறந்த போது சத்ருக்களுக்கு மிடுக்காய் இருக்கும்

அனுக்ரஹம் உள்ள போது -தோஷாமஹம் சமுத்தர்த்தா ம்ருத்யு சம்சார சாகராத் -ஸ்ரீ கீதை -12-7-
நிக்ரஹம் உள்ள போது -ஷிபாமி அஜஸ்ரம ஸூபான் ஆஸூரீஷ் வேவ யோ நி ஷூ -ஸ்ரீ கீதை -16-19-

ஆதலால் -அரியது எளியதாகும் -எளிதாகைக்கு இவன் செய்வது என் என்னில் –
விலக்காமை

ஆற்றலால் மாற்றிப் பெருக முயல்வார் என்று லாபம் நம்மதான பின்பு எல்லாவற்றையும்
ஈஸ்வரன் பக்கலிலே  ஏறிடுகிறது என் –
நாமே பஜிப்போம் என்பான் ஒரு அதிகாரியைப் பெற்றால் -என்றுமாம் –

————————————————————————–

இப்படி ஆஸ்ரயணீயன் தானே தன்னை ஆஸ்ரயித்த இவனுடைய ப்ராப்தி விரோதியான பிரபல பிரதி பந்த கங்களையும் போக்கி
ஸூ லபனாய் இவனுக்கு அபிமத சித்தியையும் தானே பண்ணிக் கொடுக்கும் -என்கிறார் –
ஐஸ்வர்யம் அபேஷித்தார்க்கும் அத்தைக் கொடுக்கும் -கைவல்யம் அபேஷித்தார்க்கும் அத்தைக் கொடுக்கும் –
ஸ்வ ப்ராப்தி அபேஷித்தார்க்கும் அத்தைக் கொடுக்கும் -என்கிறார்-

தாழ்ந்து வரம் கொண்டு தக்க வகைகளால்
வாழ்ந்து கழிவாரை வாழ்விக்கும் -தாழ்ந்த
விளங்கனிக்கு கன்று எறிந்து வேற்றுருவாய் ஞாலம்
அளந்தடிக்கீழ் கொண்ட வவன்–23-

பதவுரை

தாழ்ந்த–(பழத்தின் கனத்தினால் கிளைகள்) தாழ்ந்து கிடந்த
விளா–விளா மரத்தினுடைய
கனிக்கு–பழங்களை உதிர்ப்பதற்காக
கன்று–கன்றை (எறி கோலாகக் கொண்டு) வீசி யெறிந்தவனாயும்
வேறு உரு ஆய்–(திருமாலான தன்னுடைய வடிவத்தை விட்டு யாசகனான வாமன மூர்த்தி வடிவமாய்
ஞாலம்–பூமியை
அளந்து–அளந்து
கொண்ட–அடங்கும்படி கொண்டவனாயுமுள்ள
அவன்–அந்த எம்பெருமான்
தாழ்ந்து–தனது திருவடிகளிலே வணங்கி
வரம் கொண்டு–(எங்கள் இஷ்டத்தை நீயே பூர்த்தி செய்து தரவேணுமென்று சொல்லித் தனது) திருவருளைப் பெற்று
தக்க வகைகளால்–(தங்கள் தங்கள் நிலைமைக்கு) ஏற்ற வண்ணமாக
வாழ்ந்து–ஐச்வரியத்தையோ கைவல்யத்தையோ பகவத் ப்ராப்தியையோ பெற்று
கழிவாரை–மேன்மேலும் ஸுகத்தை மிகுத்துக் கொள்ள வேணுமென்றிருக்கிற அந்தந்த அதிகாரிகளை
வாழ்விக்கும்–வாழ்விப்பான்.

தாழ்ந்து –
த்விதா பஜ்யேயமபி ந நமேயம் -யுத்த -36-11-என்கிற நிர்பந்தத்தை யுடையர் அன்றிக்கே –
அவன் திருவடிகளிலே வணங்கி –
இத்வயத்துக்குச் சேர்த்தி இல்லையே -அஜ் ஜென்மங்களுக்கு யுண்டாகை ஒழிய –
இறுமாப்பு தவிர்ந்து திருவடிகளிலே விழுகை –

வரம் கொண்டு –
இனி என்னுடைய அபிமத லாபம் என்னாலே பெறக் கடவேன் அல்லேன் -உன்னாலே பெறக் கடவேன் -என்று
அவன் பிரசாதத்தைக் கை தொடுமானமாய்க் கொண்டு –

வரம் கொண்டு –
ஒரு நாள் தாழ்ந்து விடுகை அன்றிக்கே முடியத் தாழும்படி வரம் கொடுக்கை அவன் பணி இறே  –

தக்க வகைகளால்-
இவ்வாத்மாவினுடைய ஸ்வரூபத்துக்கு அனுரூபமான பிரகாரங்களினாலே ஆஸ்ரயித்து-என்னுதல் –
சாஸ்த்ரங்களில் சொல்லுகிற பிரகாரங்களாலே -என்னுதல்
அதிகார அனுகுணமாக -என்னுதல்

தாழ்ந்து வரம் கொண்டு என்பான் என் என்னில் –
ஐஸ்வர் யாதிகளுக்கு ஐஸ்வர்ய விசிஷ்டனாக அனுசந்திக்கவும் பக்தி பண்ணவும் அந்திம ஸ்ம்ருதியும் வேணும்
கேவலனுக்கு ஸூத்தியை அனுசந்திக்க வேணும்
பகவத் பிராப்திக்கும் கல்யாண குண விசிஷ்டனாக அனுசந்திக்க வேணும்

வாழ்ந்து கழிவாரை -வாழ்விக்கும் –
வாழ்ந்ததாய்த் தலைக் கட்ட வேணும்  என்று இருப்பாரை வாழ்விக்கும் –
இது தானே வாழ்வாகக் காலத்தைப் போக்குவாரை ரஷிக்கும்-

தக்க வகைகளால் வாழ்ந்து கழிவாரை-
யாதொரு யாதொரு புருஷார்த்தங்களை பெற வேண்டும் என்றால்
அவ்வோ புருஷார்த்தங்களைக் கொடுத்து வாழ்விக்கும் -உதாரா -ஸ்ரீ கீதை -7-18-என்று தரும் –
இப்படி நினைத்து இருந்தாலும் தனக்கு விரோதியும் யுண்டாய் -அ
து தானும் செய்து தலைக் கட்டுகை அரிதாய் இருக்கில் செய்வது என் என்னில் –
அக்குறைகளும் அவனே பரிஹரித்து தரும் என்கிறது –

தாழ்ந்த விளங்கனிக்கு கன்று எறிந்து-
அடியே  தொடங்கித் தலை யளவும் செல்லப் பழுத்துக் கிடக்கிற விளாவினுடைய பழத்துக்கு கன்றை எறிந்து –
தீங்கு நினைத்த அத்தை -அது தன்னோடு போம்படி பண்ணின படி –

இத்தால்
வத்சாரூரனும் விளவாசூரனும் பட்டது படும் இத்தனை விரோதிகள் என்றபடி

வேற்று வுருவாய் –
அதுக்கு மேலே கோ சஹச்ர ப்ரதாதாரம் -யுத்த -21-7-என்று சொல்லுகிறபடியே
உதாரனான தான் தன்னை அர்த்தி யாக்கி நின்றபடி யாதல் –
ஸ்ரீ யபதியானவன் அர்த்தியாய் நின்றபடியாதல் –
சிறு காலைக் கட்டிப் பெரிய காலாலே அளந்து கொண்டபடி யாதல்

ஞாலம் அளந்து அடிக் கீழ்க் கொண்ட அவன் –
பூமியை அளந்து தன கால் கீழே இட்டுக் கொண்டவன் -வேணும் என்று இருப்பாரைப் பெற்றால் விடுமோ –

ஞாலம் அளந்து அடிக்கீழ் கொண்ட –
உறங்குகிற பிரஜையை தாய் கட்டிக் கொடு கிடக்குமா போலே
ஞாலம் அளந்து அடிக் கீழ் கொண்டவன் வாழ்விக்கும் –

————————————————————————–

இவனுண்டான பின்பு -இவன் அபேஷிதம் கொடுத்தான் என்று இது ஒரு ஏற்றமோ –
அடியே துடங்கி இவன் சத்தையை நோக்கிக் கொண்டு போருகிறவனுக்கு-என்கிறார்-

அவன் கண்டாய் நன் நெஞ்சே யார் அருளும்கேடும்
அவன் கண்டாய் ஐம் புலனாய் நின்றான் -அவன் கண்டாய்
காற்றுத் தீ நீர் வான் கருவரை மண் காரோதச்
சீற்றத் தீ யாவானும் சென்று —24-

பதவுரை

நல்நெஞ்சே–நல்ல மனமே!
ஆர் அருளும்–பரி பூர்ண க்ருபையாலே உண்டாகக் கூடிய மோக்ஷமும்
கேடும்-நிக்ரஹத்தால் வரக் கூடியதான ஸம்ஸாரமும்
(ஆகிய இரண்டுக்கும் நிர்வாஹகன்
அவன் கண்டாய்–அந்த எம்பெருமானே யாவன்;
ஐம்புலன்–பஞ்சேந்திரிய வடிவமான சரீரத்திற்கு உத்பாதகங்களான
காற்று தீ நீர் வான் மண் ஆய் நின்றான் அவன் கண்டாய் –பஞ்ச பூதங்களாய் நிற்பவனும் அந்த எம்பெருமானே யாவன்;
கரு வரை–கறுத்த மலைகளும்
(அவன் கண்டாய்)–அவனேயாம்;
சென்று–(இந்தப் பிரபஞ்சத்தை யழிக்கத் திருவுள்ளம்) ப்ரஸரித்து
கார் ஓதம் சீற்றம் தீ ஆவானும்–கறுத்த கடலைச் சீறிச் சுடவல்ல படபாக்நி யாகுமவனும்
அவன் கண்டாய்–அந்த எம்பெருமானேயாம்.

அவன் கண்டாய் நன் நெஞ்சே யார் அருளும் கேடும்-
சேதனனுடைய உஜ்ஜீவனத்துக்கு வெறும் இவனுடைய அனுஷ்டானமே அன்று கிடாய் –
இவனுடைய நன்மைக்கு அடி அவனுடைய பிரசாதம் கிடாய் –
வெறும் இவனுடைய க்ரியா மாத்ரமே யன்று என்றும் 
இவனுடைய நன்மைக்கு அடி –அவனுடைய நிர் ஹேதுக விஷயீ காரமே –
இவனுடைய அனர்த்தத்துக்கு அடி  அவனுடைய நிக்ரஹமே-

ஆக –
இவனுடைய நன்மை தீமைக்கு அடி அவனுடைய நிக்ரஹ அனுஹ்ரங்களை ஒழிய
வேறு புண்ய பாபங்கள் இல்லை என்கிறார் –

சம்சார மோஷங்கள் என்றுமாம் –

நன்னெஞ்சே –
அவன் புண்ய பாபங்களுக்கு அடி என்றால் 
அதுக்கு உடன்படும்படியாய் விதேயமான நெஞ்சே –
பகவத் விஷயம் சொல்லப் பாங்காய் இருக்கிற நெஞ்சே –

அவன் கண்டாய் ஐம் புலனாய் நின்றான் –
நமக்கு வேணும் என்னப் பண்னுவானும் அவன் கிடாய் –
தன்னைப் பெறுகைக்கும் இழக்கைக்கும் பொதுவான இந்த்ரியங்களுமாய் நின்றானும் அவன் கிடாய் –
நாமே உளன் என்ற போதைக்கும்
ஒரு ஈஸ்வரன் உளன் என்ற போதைக்கும் 
பொதுவான இந்த்ரியங்களும் அவனிட்ட வழக்கு –

இந்த்ரியங்களை விஷயப் பிரவணம் ஆக்கி கெடுப்பாரைக் கெடுக்கவுமாம்-
தன் பக்கலிலே ப்ரவணமாக்கி ரஷிப்பாரை ரஷிக்கவுமாம் –
விலங்கும் அவன் கையது முடியும் அவன் கையது-
ததாமி புத்தி யோகம் தம் யேன மாம் உபாயந்தி தே-ஸ்ரீ கீதை 10-10- -என்னவுமாம்
தா நஹம் த்விஷத க்ரூரான் சம்சாரேஷூ நரதமான் ஷிபாமி அஜஸ்ரம் அஸூ பான்
ஆ ஸூ ரீஷ்வேவ யோ நிஷ-ஸ்ரீ கீதை -16-10-என்னவுமாம்

அவன் கண்டாய் காற்றுத் தீ நீர் வான் கருவரை மண் –
தன்னை இழக்கைக்கு பரிகரமான பஞ்ச கங்களையும் உபகரணமாகக் கொண்டு –
இவற்றை யுண்டாக்குவானும் அவன் கிடாய் –

காற்று இத்யாதி –
தவிர்க்க வேண்டும்படியான யான வுடம்பு -சம்சார ப்ரவர்த்தகனும் அவன் என்கிறது –
தைவீஹ் ஏஷா குணமயீ மம மாயா துரத்யயா    மாமேவ யே ப்ரபத் யந்தே  மாயா மேதாம் தரந்தி தே -ஸ்ரீ கீதை -7-14-
என்னும் அவனையே பற்றியே சம்சார சம்பந்தம் அறுக்க வேணும் என்கிறது –

காற்று -இத்யாதி
சம்சார மோஷங்கள் இரண்டுக்கும் பொதுவான சரீரத்துக்கு ஆரம்ப கங்களான
வாயு அக்னி ஜல ஆகாச பூமிகள் ஆகிற பூத பஞ்சகம் –
தத் கார்யமான பெரிய பர்வதங்கள் ஆகிற அவற்றை அடியிலே யுண்டாக்குவானும் அவன் கிடாய் –

காரோதச் சீற்றத் தீ யாவானும் சென்று —
சம்ஹார   காலத்தில் யுகாந்தாக்னியாய் கொண்டு சென்று இவற்றை சம்ஹரிப்பானும் அவன் கிடாய்
காரோதச் சீற்றத் தீ -என்கிறது
படபா முகாக்னியை
அதாவது
தன்னை அவிக்க கடவதான நீரை யகப்பட தஹிப்பது இன்று இயுகாந்தாக்னியாய் கொண்டு சென்று
இவற்றை சம்ஹரிப்பானும் அவன் கிடாய்

காரோதச் சீற்றத் தீ -என்கிறது படபா முகாக்னியை
அதாவது தன்னை அவிக்க கடவதான நீரை யகப்பட தஹிப்பது இன்று இறே

ஆக
த்யாஜ்ய உபாதேயங்கள் இரண்டுக்கும் நிர்வாஹகன் அவன் என்றபடி

————————————————————————–

அவன்  சர்வ சாதாரணனாய்க் கொண்டு நின்றபடியை சொல்லிற்று கீழ் –
இங்கு ஆஸ்ரித விஷயத்தில் அவனுக்கு யுண்டான பஷபாதம் இருக்கும்படி சொல்லுகிறது –

சென்றது இலங்கை மேல் செவ்வே தன் சீற்றத்தால்
கொன்றது இராவணனைக் கூறுங்கால் -நின்றதுவும்
வேயோங்கு தண் சாரல் வேங்கடமே விண்ணவர் தம்
வாயோங்கு தொல் புகழான் வந்து –25-

பதவுரை

விண்ணவர் தம் வாய்–தேவர்களின் வாயினால்
ஓங்கு தொல் புகழான்–உயர்வாகக் கூறப்படுகின்ற பழமையான புகழை யுடைய எம்பெருமான்
செவ்வே–நேராக
சென்றது–சீறிச் சென்றது
இலங்கை மேல்–லங்காபுரியின் மேலாகும்;
தன் சீற்றத்தால்–தனக்கு வந்தேறியான கோபத்தால்
கொன்றது–ஸம்ஹரித்தது
இராவணனை–ராவணனையாம்;
கூறுங்கால்–சொல்லுமிடத்து
வந்து நின்றதுவும்–(சேதநர் எக்காலத்தும் உஜ்ஜீவிக்கவேணுமென்று கருதி) வந்து
வேய் ஓங்கு தண் சாரல் வேங்கடமே–மூங்கில்கள் ஓங்கி வளர்ந்துள்ள குளிர்ந்த சாரலையுடைய திருவேங்கடமலையேயாம்.

சென்றது இலங்கை மேல் செவ்வே –
மாயா மிருகத்தைக் காட்டி வழி எல்லா வழியே கொண்டு போனவனைப் போல் அன்றியே
பத்தும் பத்தான தன் ஆண் பிள்ளைத் தனத்தாலே வேறே காண எடுத்து விட்டு அழித்த படி –

சென்றது இலங்கை மேல் செவ்வே —
சங்கல்ப்பத்தால் அன்றிக்கே நேரே கால் நடையை இலங்கையிலே நடந்தது -அபியாதா -அயோத் -1-29- என்றபடி –

இலங்கை மேல் –
இந்த்ராதிகளும் பேர் சொல்ல வயிறு பிடிக்கும் ஊரிலே நதியாதே எடுத்துச் சென்றான் -வீரமே துணையாகச் சென்ற படி –
தன் சீற்றத்தால்  கொன்றது இராவணனைக் –
ப்ரஹர்த்தா ச -அயோத்யா -1-29- என்கிறபடியே
வர பலத்தாலே பூண் கட்டின பையல் தலைகளைத் தன் கோபத்தால் அறுத்துப் பொகட்டான் ஆயிற்று –

தன் சீற்றத்தால் –
கோபம் தானிட்ட வழக்காய் இருக்கிறவன் -தான் கோபமிட்ட வழக்காய் முடித்தது இராவணனை –
ஈஸ்வரத்வம் பின்னாட்டிலிரே -சங்கல்பம் உதவுவது –
அவதாரத்தின் மெய்ப்பாட்டாலே சீற்றம் உதவிற்று –

கூறுங்கால் –
அவன் படிகளைச் சொல்லப் புக்கால் –

நின்றதுவும் வேயோங்கு தண் சாரல் வேங்கடமே –
அவ்வோ காலங்களில் உதவாதார்க்கும் இழக்க வேண்டாத படி அவன் சந்நிஹிதனாய்க் கொண்டு நின்றதுவும் –
ஓங்கின வேய்களையுடைத்தாய்ச் ஸ்ரமஹரமான பர்யந்தங்களையும் உடைய திரு மலையே –

நின்றதும் வேங்கடமே –
அவதாரத்துக்கு பிற்பாடர்   ஆனவர்கள்  இழக்க ஒண்ணாது என்று
அவர்கள் விரோதியைப் போக்குகைக்காக திரு மலையிலே வந்து நின்றது –
பிராட்டியை மீட்டாப் போலே ஆத்மாபஹாரம் மீட்கைக்கு எடுத்து விட்டு நிற்கிறபடி –

விண்ணவர் தம்  வாயோங்கு தொல் புகழான் –
இங்கு வருவதற்கு முன்பு அவன் இருக்கும் இடம் சொல்லுகிறது –
நித்ய ஸூரிகளுடைய ஸ்தோத்ரத்தாலே ஓங்கின ஸ்வா பாவிகமான  புகழை யுடையவன் –
நித்ய ஸூரிகளாலே ஸ்துதிக்கப் படுகிற பழைய புகழை யுடையவன் -என்றுமாம் –
திரு மலையிலே நீர்மைக்கு ஸ்திதுக்கிம் படி யாக வுமாம்

அன்றிக்கே
கீழ்; ராமாவாதாரம் ஆகையாலே -ராவண வத சமநந்தரம் ப்ரஹ்மாதிகளாலே-
சீதா லஷ்மி பவான் விஷ்ணு -யுத்த-117-27-என்று
ஸ்துதிக்கப் படுகிற புகழை யுடையவன் என்றுமாம் –

வந்து –
தன்னைக் கொடுக்கைக்கு அர்த்தியாய் வந்தபடி –
விண்ணவர் தம் வாயோங்கு தொல் புகழான் வந்து நின்றதுவும்
வேயோங்கு தண் சாரல் வேங்கடமே –

————————————————————————–

கீழ் ப்ரஸ்துதமான மலை தான் பின்னையும் இவர்க்கு ஆகர்ஷகமாய் அங்கே-திரு உள்ளம் சென்று –
திருமலைக்கு உள்ள ஐஸ்வர்யம்
சொல்லுகிறார் –

வந்தித்து அவனை வழி நின்ற ஐம்பூதம்
ஐந்தும் அகத்தடக்கி ஆர்வமாய் -உந்திப்
படி யமரர் வேலையான் பண்டு அமரர்க்கு ஈந்த
படி யமரர் வாழும் பதி—-26

பதவுரை

படி அமரர்–நிலத் தேவரான பிராமணர்கள்
வாழும்–நித்யவாஸம் பண்ணுகிற
பதி–திருப்பதியாகிய திருமலை யென்பது,
வழி நின்ற–(எம்பெருமானை ஆச்ரயிப்பதற்குத் தடங்கலாய்) குறுக்கே நிற்பனவான
ஐம்பூதம் ஐந்தும்–பஞ்ச பூதங்களையும் பஞ்சேந்திரியங்களையும்
அகத்து அடக்கி–வெளியிற் போக வொண்ணாதபடி நியமித்து
அவனை–அவ் வெம்பெருமானை
வந்தித்து–வணங்கி
ஆர்வம் செய்–பக்தி யுடையவர்களாய்
உந்தி–ஒருவரை யொருவர் தள்ளிக் கொண்டு மேல் விழுந்து
படி–வந்து படிகின்ற
அமரர்–தேவர்களுக்காக
வேலையான்–திருப்பாற்கடலிலுள்ள பெருமான்
பண்டு அமரர்க்கு ஈந்த–முன்னைத் தேவர்களான நிர்ய ஸுரிகட்கும் (அநுபாவ்யமாகக்) கொடுத்த தலமாகும்.

வந்தித்து –
அவனை வந்தித்து -அபிமதமான ஸூந்யராய் அவனை ஆஸ்ரயித்து-

அவனை வழி நின்ற ஐம்பூதம் ஐந்தும் அகத்தடக்கி
பகவத் ப்ராப்திக்கு விரோதிகளாய்க் லொண்டு வழி நின்ற நடுவே நின்று தகைக்கிற ஸ்ரோத்ராதி விஷயங்களில்
போகாத படி உபசயாத்மகமுமாய் அஸ்திரமான தேஹத்துக்கு உள்ளேயாம் படி நியமித்து –

ஐம்பூதம் ஐந்தும் –
பூதங்களையும் இந்த்ரியங்களையும் ஜெயித்து –

ஆர்வமாய் –
அவன் பக்கலிலே அபி நிவேசத்தை யுடையராய்

உந்திப்படி  யமரர் வேலையான் –
அஹமஹமிகயா ஒருவருக்கு ஒருவர் ஆஸ்ரயிக்கிற ப்ரஹ்மாதி தேவதைகளுக்கு ஆஸ்ரயணீயனாய்க் கொண்டு  
திருப் பாற் கடலிலே கண் வளர்ந்து அருளுகிற சர்வேஸ்வரன் –

பண்டு அமரர்க்கு ஈந்த
பழை  யரான நித்ய ஸூரிகளுக்குக் கொடுத்து -என்னுதல்
முன்பு அவர்களுக்கு கொடுத்தது -என்னுதல்
கீழ் ஆஸ்ரயித்தவர்களுக்கு-

படி யமரர் வாழும் பதி –
பூ ஸூரரான வைஷ்ணவர்கள்  வர்த்திக்கிற திரு மலை –
அவர்கள் அனுபவித்து வாழுகிற திருமலை
வழி நின்ற ஐம்பூதம் ஐந்தும் அகத்தடக்கி ஆர்வமாய் வந்தித்து  உந்திப் படியமரர் வேலையான்

படியமரர் வாழும் பதி கிடீர் -பண்டு அமரர்க்கு ஈந்தது -என்று அந்வயம்-

இது பிள்ளை அமுதனார்க்கு பட்டர் அருளிச் செய்த பாட்டு-

————————————————————————–

அவன் இருந்த எல்லை அளவும் வந்தவாறே இவர் திரு உள்ளம் அவன் இருந்த அளவும்
செல்லக் கொழுந்து ஓடின படி சொல்லுகிறது –
கீழ்த் திரு மலையில் நின்றபடியை அனுசந்தித்தார் –
அங்கு நினைத்த படி பரிமாற்றம் கிடையாமையாலே –
நினைத்த படி பரிமாறலாம் பரம பதத்தில் இருக்கும் சர்வேஸ்வரனைத் தேடா நின்றது என் நெஞ்சு -என்கிறார் –

பதி யமைந்து நாடிப் பருத்து எழுந்த சிந்தை
மதி உரிஞ்சி வான் முகடு நோக்கி -கதி மிகுத்தங்கு
கோல் தேடி யோடும் கொழுந்ததே போன்றதே
மால் தேடி ஓடும் மனம்————-27-

பதவுரை

பதி–திருமலைத் திருப்பதியிலே
அமைந்து–வேரூன்றி நின்று
நாடி–எங்கே யென்று தேடிக் கொண்டு
பருத்து எழுந்த சிந்தை
மிகவும் வளர்ந்து மேற்கிளர்ந்த மனோ ரதத்தை யுடையதாய்
மதி உரிஞ்சி–சந்திர பதத்தையும் உராய்ந்து கொண்டு
வான் முகடு நோக்கி–(அப்பால்) அண்ட முகட்டையும் பார்த்து விட்டு
(அங்கும் நில்லாமல்)
மால் தேடி–பரமபத நாதனைத் தேடிக் கொண்டு
கதி மிகுத்து ஓடும்–விரைவு மிகுந்து செல்லுகின்ற
மனம்–என்னெஞ்சமானது
அம் கோல் தேடி ஓடும்–அழகிய கொள் கொம்பைத் தேடிக் கொண்டு பரந்து செல்லுகின்ற
கொழுந்து அது போன்றது–கொடியை ஒத்திரா நின்றது.

பதி யமைந்து நாடிப் –
ஸ்தானத்திலே யூன்றி –
திருமலையிலே பொருந்தி –
பரம ப்ராப்யமான தேசம் இன்னது என்று நிச்சயித்து என்றுமாம் –

பதி -என்று ஹிருதயமாய் -ஹ்ருதயத்தாலே –
அஹம் சர்வம் கரிஷ்யாமி –அயோத்யா -31-25-என்று அத்யவசித்து -என்றுமாம்

நாடி –
ஆராய்ந்து எங்கே எங்கே என்று தேடி –

பருத்து எழுந்த சிந்தை-
அதடியாகப் பணித்துக் கொண்டு கிளருகிற மநோ ரதமானது-

பருத்து எழுந்த –
விஸ்த்ருதமாய்க் கிளர்ந்த –

மதி உரிஞ்சி –
சந்திர பதத்துக்கு அவ்வருகு பட்டு –

வான் முகடு நோக்கி –
அண்ட பித்தியில் சென்று கடாஷித்து

கதி மிகுத்து –
வேகத்தை மிகுத்து என்னுதல்-
கதிர் மிகுத்து
என்று பாடமாகில் ஒளியை மிகுத்து என்னுதல் –

அங்கு கோல் தேடி யோடும் கொழுந்ததே போன்றதே-
அழகிய கொள் கொம்பைத் தேடிக் கொண்டு படருகிற கொழுந்து போலே யாய்த்து –

மால் தேடி ஓடும் மனம் –
சர்வேஸ்வரனைத் தேடிக் கொண்டு -மேல் விழுகிற திரு உள்ளமானது இருக்கிறபடி –

மால் –
கரை கட்டாக் காவேரி போலே பூர்ணனாய் -சர்வாதிகனான சர்வேஸ்வரனைத் தேடின படி –

மால் தேடி ஓடும் மனம் –
மாக வைகுந்தம் காண்பதற்கு என் மனம் ஏகம் எண்ணும்-திருவாய் -9-3-7-என்னுமா போலே –

————————————————————————–

இவர் திரு உள்ளம் இப்படி அபி நிவேசித்த வாறே –
பார்த்த இடம் எங்கும் தனக்கு வாஸ ஸ்தானமாய் இருக்கச் செய்தே
அவ்விடங்கள் போல் அன்றிக்கே இவர் திரு உள்ளத்தை தனக்கு இருப்பிடமாக
ஆதரித்துக் கொண்டு வந்து புகுந்தானாய் இருக்கிறது –

இவர் திரு உள்ளத்துக்கு அவ்வருகு போக்கு இன்றிக்கே இருக்கிற படி யாவது –
இவர் அவன் பிரியா நிலத்தை விரும்பிப் புக்க வாறே
அவன் இவருடைய மனஸை விரும்பினான் -என்கிறது-

மனத்துள்ளான் வேங்கடத்தான் மா கடலான் மற்றும்
நினைப்பரிய நீள் அரங்கதுள்ளான்-எனைப்பலரும்
தேவாதி தேவன் எனப்படுவான் முன்னொரு நாள்
மாவாய் பிளந்த மகன் ————-28-

பதவுரை

எனை பலரும்–கணக்கில்லாத வைதிக புருஷர் யாவராலும்
தேவாதி தேவன் எனப்படுவான்–தேவர்கட்கும் தேவவென்று ப்ரஸித்தமாகச் சொல்லப்படா நிற்பவனும்
மா கடலான்–பரந்த திருப்பாற் கடலிலே பள்ளி கொண்டிருப்பவனும்
முன் ஒரு நாள்–முன்பொரு காலத்தில்
(ஸ்ரீகிருஷ்ணனா யவதரித்தபோது)
மா வாய் பிளந்த–குதிரை யுருக் கொண்டு வந்த கேசியின் வாயைக் கீண்ட
மகன்–சிறு பிள்ளை யானவனும்
மற்றும்–பின்னும்
நினைப்பு அரிய நீள் அரங்கத்து உள்ளான்–நினைப்பதற்கும் அருமையான யோக்யதை மிக்கிருந்துள்ள கோயிலிலே பள்ளி கொள்பவனுமாகி
வேங்கடத்தான்–திருமலையிலே (ஸர்வ ஸுலபனாய்க் கொண்டு) எழுந்தருளி நிற்பவன்
(இப்போது)
மனத்து உள்ளாள்–என் மநஸ்ஸிலே நித்ய வாஸம் பண்ணா நின்றான்.

மனத்துள்ளான்-
இட வகைகள் இகழ்ந்திட்டு என்பால் இடவகை கொண்டனையே -பெரியாழ்வார் -5-4-10-என்னும்படியே –

வேங்கடத்தான் மா கடலான்-
இதுக்கு உறுப்பாக முன்பு வர்த்தித்த திருப் பாற் கடலும் திரு மலையும் இருக்கிறபடி –
திருமலையில் நிற்கைக்காக திருப் பாற் கடலிலே சாய்ந்தாப் போலே யாய்த்து
இவர் திரு உள்ளத்தே புகுருகைக்காகத் திரு மலையிலே நின்று அருளின படியும் –

மற்றும் நினைப்பரிய நீள் அரங்கதுள்ளான்-
கீழ்ச் சொன்ன இவை போலே  ஓன்று இட்டுச் சொல்ல ஒண்ணாத படியான
போக்யதையால் மிக்க  பெரிய கோயிலிலே வந்து கண் வளர்ந்து அருளின படி
இங்குத்தைக்கு சத்ருசமாக அருளிச் செய்த படி என் தான் –
சம்சாரிகளைப் பெற்று அல்லது போகேன் என்று வளைப்புக் கிடக்கிற படி –
அப்ராப்ய மநஸா சஹ –தை ஆனா -9-1-என்கிற வித்தை நினைக்கிலும் இவ்விடம் நினைக்கப் போகாது –

நீள் அரங்கம் –
பரப்பை யுடைய கோயில் -என்னவுமாம் –

எனைப் பலரும் தேவாதி தேவன் எனப்படுவான் –
வேதங்களும் வைதிக புருஷர்களும்  எல்லாம் -தமீச்வராணம் பரமம் மகேஸ்வரம் -ஸ்வே -6-7-என்றும்
அயர்வறும் அமரர்கள் அதிபதி -என்றும் பிரசித்தமாகச் சொல்லப் படுகிறவன்

முன்னொரு நாள் மாவாய் பிளந்த மகன்
முன்பு ஒரு கால விசேஷத்திலே கேசி வாயைக் கிழித்த பிள்ளை -என்னுதல்
மனிச்சு என்னுதல் –
நெஞ்சிலே புகுராமைக்கு வரும் விக்நம் போக்குவானும் தானே

தேவா திதேவன் எனப்படுவானாய் —
மா கடல் நீர் உள்ளானாய்-
மா வாய் பிளந்த மகனாய் –
நினைப்பரிய நீள் அரங்கத்து உள்ளானாய் –
வேங்கடத்தானவன் மனத்து உளனானவன் –

நித்ய ஸூரிகளுக்கு நிர்வாஹகனானவன் -ஜகத் ரஷணத்துக்காக திருப் பாற் கடலிலே கண் வளர்ந்து –
கிருஷ்ணனாய் வந்து அவதரித்து
விரோதி நிரசனம் பண்ணி -தேவாதி தேவன் என்று பரிச்சேதிக்கப் போகாதபடி
பரப்புடைய கோயிலிலே கண் வளர்ந்து அருளிப் போவது வருவதாக ஒண்ணாது என்று
திரு மலையிலே நின்று அருளினவன் என் நெஞ்சு விரும்பிப் போகிறிலன் –

————————————————————————–

மாவாய் பிளந்த என்று ஸ்ரீ கிருஷ்ணாவதாரம்  ப்ரஸ்துதம் ஆனவாறே –
அது தன்னிலும் திரியட்டும் கால் தாழ்ந்து சுழி யாறு படுகிறார் –

மகனாக கொண்டு எடுத்தாள் மாண்பாய கொங்கை
அகனார உண்பன் என்று உண்டு -மகனைத் தாய்
தேறாத வண்ணம் திருத்தினாய் தென்னிலங்கை
நீறாக வெய்தழித்தாய் நீ——————-29-

பதவுரை

தென் இலங்கை–அழகிய லங்காபுரி
நீறு ஆக–நீறாகி யொழியும்படி
எய்து–அம்புகளைச் செலுத்தி
அழித்தாய்–முடித்தவனே!
நீ-:மகன் ஆக கொண்டு எடுத்தாள்
உன்னைப் புத்திர பாவனை செய்து (பரிவுகாட்டி முலை கொடுக்க) எடுத்துக்கொண்ட பூதனையினுடைய
மாண்பு ஆய கொங்கை–அழகான முலையை
அகன் ஆர உண்பன் என்று உண்டு–வயிறார உண்ணக் கடவேனென்று சொல்லி (பாலோடு அவளுயிரையும்) குடித்து
மகனை–புத்ரனான உன் விஷயத்திலே
தாய்–உனது தாயாகிய யசோதை
தேறாத வண்ணம்–நம்பிக்கை யற்றிருக்கும்படி
திருத்தினாய்–செய்து விட்டாய்.

மகனாக கொண்டு எடுத்தாள்-
ஒரு வாசி தோற்றாத படி தாயாரே ஒசழக்காக எடுக்குமா போலே வந்து எடுத்துக் கொண்டாள் ஆய்த்து-
ஸ்ரீ மதுரையிலே புக்கு மகனாய் -திரு வாய்ப்பாடியிலே மகனான அத்தைக் கொண்டு
இவளும் பிள்ளையாக அனுகரித்துக் கொண்டாள் ஆயிற்று –

மாண்பாய கொங்கை-
நெஞ்சாலே நிறைந்தத்தை பாலாலே நிறைந்ததாகப் பண்ணி –
அத்தாலே தர்ச நீயமான கொங்கையை -அழகியதான முலையை –

அகனார உண்பன் என்று உண்டு –
இவனும் ஒரு வாசி தோற்றாதபடி உண்டான் ஆய்த்து -அவள் நிலை இறே இவனதும்
அவள் முலை கொடுத்து அல்லது தரியாதாள் ஆனாப் போலே  இவனும் முலை யுண்டு அல்லது தரியாதானாய் உண்டபடி –

வயிறு நிறைய உண்பன் என்று யுண்டான் யாய்த்து –
மகனைத் தாய் தேறாத வண்ணம் திருத்தினாய் –
மகனான உன்னைத் தாயான யசோதைப் பிராட்டி விஸ்வசியாத படி தொட்டாய்-
மகன் என்றாலும் -தாய் -என்றாலும் கிருஷ்ணன் பக்கலிலும் யசோதைப் பிராட்டி பக்கலிலும் நிற்கும்
புத்திர ச்நேஹம் என்றால் சக்கரவர்த்தி பக்கலிலே கிடக்குமா போலே –
அவனும் விரும்பி முலை யுண்ணா நிற்க -இவளும் விரும்பி முலை கொடா நிற்கிலும்
பூதனை மடியிலே இருந்தானாகத் துணுக்குத் துணுக்கு என்னும்படி பண்ணினாய் –
நீ வளர்ந்த பின்பும் உன்னை நினைத்து வயிறு எரியும்படி பண்ணினாய்
அன்றிக்கே –
நாட்டில் ஒரு பிள்ளைகளையும் ஒரு தாய்மாரும் விஸ்வசியாத படி பண்ணினாய் -என்றுமாம்
அதாகிறது –
பிள்ளையைப் பெற்ற அனந்தரமே இவன் பூதனை கையிலே அகப்பட்டான் -நாம் இழந்தோம் -என்று
அஞ்சும்படியாய் இருக்கை-

திருத்தினாய் –
தொட்டுக் கொண்டாய்

தென்னிலங்கை நீறாக வெய்தழித்தாய் நீ—-—-
பருவமும் நிரம்பி -ஆச்சர்ய ஸ்ரமங்களும் பண்ணிச் செய்தாய் அது –
பருவம் நிரம்புவதற்கு முன்னே இச் செயலைச் செய்தாய் என்று பயப்படுகிறார்
அப்படி வளர்ந்து இச் செயலைச் செய்தாலோ என்ன –
என் பிள்ளை போனவன் பூசலிலே வென்று மீளும் என்று தோற்றும் படியான  பருவத்திலே தான் செய்யப் பெற்றதோ

கூரம்பன் அல்லால் -நான் முகன் -8-என்று மார்பிலே கை வைத்து இருக்கலாமே
கீர்த்தி பூதாம் பதாகாம் யோ லோகே ப்ரமயதி கின்நாம துர்லபம் தஸ்ய -அயோத்யா -44-7- என்று
சொல்லும்படியான -இலங்கையைப் பொடிபடும்படி வில்லைக் கொண்டு வ்யாபரித்து அழித்த நீ –
மகனைத் தேறாத வண்ணம் திருத்தினாய் –

————————————————————————–

கீழே ஸ்ரீ கிருஷ்ண விஜயத்தையும் ஸ்ரீ ராம விஜயத்தையும் அனுசந்தித்தார் –
அநந்தரம்-அத்தோடு சேர்ந்த அவதாரங்களையும் பல சேஷ்டிதங்களையும் அனுசந்தித்துப் ப்ரீதர் ஆகிறார்-

நீ அன்று உலகளந்தாய் நீண்ட திருமாலே
நீ அன்று உலகு இடந்தாய் என்பரால் -நீ யன்று
காரோத முன் கடைந்து பின் அடைத்தாய் மா கடலை
பேரோத மேனிப் பிரான்—————-30-

பதவுரை

பேர் ஓதம் மேனி பிரான்–பெரிய கடல் போன்ற திருமேனியை யுடைய பெருமானே!
நீண்ட திருமாலே–எண்ணுதற்கு அரிய பெருமை படைத்த திருமாலே
நீ–இப்படிப்பட்ட நீ
அன்று–முன்பொருகால்
உலகு–உலகங்களை
அளந்தாய்–(திரிவிக்கிரமனாகி) அளந்து கொண்டாய் (என்றும்)
நீ–நீ
அன்று–மற்றுமொரு காலத்தில்
உலகு–பூமியை
இடந்தாய்–(மஹாவராஹமாகி) அண்டபித்தியில் நின்றும் ஒட்டு விடுவித்துக் கொணர்ந்தாய் (என்றும்)
நீ அன்று-;
கார் ஓதம் முன் கடைந்து-கரிய கடலை முன்னே கடைந்தா யென்றும்
மா கடலை–(அந்தப் பெரிய கடல் தன்னையே)
பின்–பிறகு (ராமவதாரத்திலே)
அடைத்தாய்–அணை கட்டித் தூர்த்தாயென்றும்
என்பர்–(மஹர்ஷிகள்) சொல்லுகின்றனர்.

நீ அன்று உலகளந்தாய் –
கொடுக்க உகப்பானான மஹா பலி பக்கலிலே உன்னை இரப்பாளனாய் ஆக்கிச் சென்று -ஜகத்தை அடங்க இரந்து-
திருவடிகளாலே அளந்து கொண்டாய் என்னா நின்றார்கள் –
இத்தால்
மேலே எல்லாரோடும் வரையாதே கை தொட்டுப் பரிமாறின அவதாரம் ப்ரஸ்துதம்  ஆகையாலே
வரையாதே எல்லார் தலையிலும் ஒக்கத் திருவடிகளை வைத்த அவதாரத்தைச் சொல்லுகிறது –

நீண்ட திருமாலே-
அபரிச்சேத்யனான ஸ்ரீ யபதியானவனே-

நீண்ட திரு மாலே –
நீ பெறாதது பெற்றாப் போலே பூமியை அளந்தாய்
அபரிச்சேத்யனான உன்னைப் பரிச்சேதிக்கும் படி பண்ணுவதே  –
ஸ்ரீ யபதியான நீ பிச்சை மாணி யாவதே –

நீ அன்று உலகு இடந்தாய் என்பரால் –
அப்படி இரந்து செல்லுகைக்கும் ஒருவர் இல்லாமையாலே பிரளயம் கொண்டு அண்ட பித்தியிலே
ஒட்டிக் கிடந்த பூமியை ஒட்டு விடுவித்து எடுக்கைக்காக
நீருக்கும் சேற்றுக்கும் இறாயாத வடிவைக் கொண்டு புக்கு இடந்து ஏறினாய் என்று பிரமாணிகர் சொல்லா நின்றார்கள்

நீ யன்று காரோத முன் கடைந்து பின் அடைத்தாய் –
பிராட்டிக்காக செய்த செயல்களைச் சொல்லுகிறது –
சர்வ விஷயமாக பண்ணின வியாபாரங்க ளோடு  வாசி அற நினைத்து இருக்கிறபடி
துர்வாச சாபத்தால் நஷ்ட ஸ்ரீ கராய் கொண்டு இந்த்ராதிகள் சரணம் புக்க அன்று சர்வ சக்தியான நீ
கருத்த நிறத்தை யுடைத்தான கடலை பிராட்டியை லபிக்கைக்காக முற்படக் கடைந்து
அது தன்னை அடைப்பதும் செய்தாய்

பின் அடைத்தாய் மா கடலை
அப்படிக் கடைந்த கடல் தன்னையும் அவள் தனக்காக அடைத்தாய் –

பேரோத மேனிப் பிரான்–
கடைகிற போதும் அடைக்கிற போதும் ஒரு கடல் ஒரு கடலை நின்று அலைத்தால் போலே இருக்கை

பேரோத மேனி
கடைந்த கடல் இவ்வடிவைப் பார்க்க குளப்படியாய் இருந்தபடி

பிரான் –
கடல் கடைந்து ஆக்க வேண்டாதபடி இவருக்கு கொடுத்த அம்ருதம் இருக்கிறபடி
கடைந்து ஆராவமுதத்தை இவருக்குக் கொடுத்தான்

அன்றிக்கே –
மா கடல் பெரும் கடல்
நீர் வெள்ளம் போலே இருந்துள்ள வடிவு அழகை யுடைய உபகாரகனே என்னவுமாம்

பேரோத மேனிப் பிரான் நீ அன்று உலகு அளந்தாய்
இவ் வுடம்பைக் கொண்டோ காடும் மோடையும் அளப்பது –

————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பூதத் ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ பூதத் ஆழ்வார் அருளிய இரண்டாம் திருவந்தாதி – -11-20– ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் —

February 21, 2015

கா என்று கொண்டு வெறுமனே தலையிலே  ஏறிடுகிறது என் –
தந்தாமுக்கு என்னவும் ஒரு நன்மை வேண்டாவோ என்ன
இதர தேவதைகளை ஆஸ்ரயித்து ஷூத்ர புருஷார்த்தமான ஸ்வர்க்கத்தைப் பெற்று விடுகை போக்கி
அபரிச்சேத்யமான உன்னை ஒருவரால் அறிந்து ஆஸ்ரயிக்கப் போமோ -என்கிறார்  –

தேவதாந்தரங்களை அனுவர்த்திக்கப் பட்ட அனர்த்தத்தை பரிஹரி என்ன –
இப்படிச் செய்வார் உண்டோ என்னில் –
அடைய இப்படிச் செய்து அன்றோ அனர்த்தப் படுகிறது -என்கிறார்-

கடை நின்று அமரர் கழல் தொழுது நாளும்
இடை நின்ற வின்பத்தராவர் -புடை நின்ற
நீரோத மேனி நெடுமாலே நின்னடியை
யாரோத வல்லார் அவர்———11-

பதவுரை

(பாழும் ஸம்ஸாரிகளானவர்கள்)
அமரக் கடை நின்று–தேவதாந்தரங்களின் வாசல்களைப் பற்றி நின்று
நாளும் கழல் தொழுது–நெடுங்காலம் வரையில் (அவர்களுடைய) காலில் விழுந்து
(பரமாநந்தம் பெற மாட்டாமல்)
இடைநின்ற இன்பத்தர் ஆவர்–நடுவே கிடக்கிற (சுவர்க்கம் முதலிய) சுகத்தைப் பெற்றொழிவர்கள்;
புடைநின்ற நீர் ஓதம் மேனி நெடுமாலே–(இவ்வுலகைச்) சூழ்ந்து கிடக்கிற கடல் போன்ற திருமேனியையுடைய ஸர்வேச்வரனே!,
நின் அடியை–உனது திருவடிகளை
ஓதவல்லாரவர் ஆர்–அநுஸந்திக்கவல்லார் ஆரேனு முண்டோ? (யாருமில்லையே!)

கடை நின்று -இத்யாதி
ஜகத்தடையக் கடையாய் கிடக்கிறபடியை அனுசந்திக்கிறார் –
கா என்ன மாட்டாதார் படும் பாடு –

கடை நின்று –
அவ்வோ  தேவதைகளின்   வாசல்களைப் பற்றி நின்று –
கடைத்தலை இருக்கை இங்கே யாவதே –

அமரர் கழல் தொழுது நாளும்-
நாள் தோறும் அவ்வோ தேவதைகளின் காலிலே குனிந்து

அமரர் –
தன்னில் காட்டில் நாலு நாள் சாவாதே இருந்ததுவே ஹேதுவாக –

கழல் தொழுது –
ஆருடைய கடல் தொழக் கடவவன் –
யாவந்த சரனௌ பிராது –சிரசா தாரயிஷ்யாமி நமே சாந்திர் பவிஷ்யதி -அயோத்யா -98-8-என்று
வகுத்த கழல் ஒழிய –

நாளும் –
சக்ருதேவ -என்று இருக்க ஒண்ணாதே
அந்ய சேஷத்வம் ப்ராமாதிக  மாகவும் பெறாது ஒழிவதே

உபாயங்களால் பெருத்து -உபேயங்களால் சிறுத்து இருக்கும் இதர விஷயத்தில்
பகவத் விஷயத்தில் உபாயம் வெருமனாய் உபேயம் கனத்து இருக்கும்
அதுக்கடி அங்கு பிச்சைத் தலையணைப் பிச்சைத் தலையர் ஆஸ்ரயிக்கிறார்கள்
இங்கு ஸ்ரீ யபதியை அடிமைக்கு இட்டுப் பிறந்தவர்கள் ஆஸ்ரயிக்கிறார்கள் –
அவர்கள் பக்கலிலே

இடை நின்ற வின்பத்தராவர் –
நிரதிசய ஸூக ரூபமான போக பூமியிலே போய்ப் புகுமத்தையும் இழந்து
அதுக்கு யோக்யதை யுடைத்தான சம்சாரத்திலும், நிலையும் குலைந்து
நடுவே யுண்டாய் -அவர்கள் கொடுக்க வல்ல ஸ்வல்ப பலத்தை ப்ராபிப்பர்

அதாகிறது 
அஸ்த்திரமான ஸூகத்தை ப்ராபியா நிற்பார்
அந்தமில் பேரின்பத்துக்கு இட்டுப் பிறந்த ஜந்து சிற்றின்பத்தை ஆசைப்படுவதே
சம்சாரத்தில் வாசி இழக்கிறோம் என்றும்
போக பூமியில் புகப் பெறு கிறிலோம் என்றும்
அவற்றை லந்த நெஞ்சாறாலாலே அந்ய பரனானவன்
துஸ் சீல தேவதைகளாலே உன் பசலை அறுத்துத் தா எனபது
ஆட்டை அறுத்துத் தா
இடைவிடாதே ஆஸ்ரயி என்பார்கள்
கரணம் தப்பில் மரணம் இறே-

அங்கன் அன்றிக்கே
கடை நின்று அமரர் கழல் தொழுது நாளும் இடை நின்ற வின்பத்தராவர் –
தேவதாந்த்ரங்களும் திரு வாசலில் நின்று உன் திருவடிகளைத் தொழுது
உன்னைப் பெறுகையே பிரயோஜனமாக ஆஸ்ரயிக்கை அன்றிக்கே –
ஷூத்ரமான பிரயோஜனங்களைக் கொண்டு போவார் -என்றுமாம் –

புடை நின்ற நீரோத மேனி –
பூமியைச் சூழப் போந்து கிடக்கிற கடல் ஓதம் போலே இருக்கிற வடிவை யுடையையாய் –

நெடுமாலே-
அபரிச்சேத்யனானவனே-
ஆஸ்ரித வ்யாமுக்தன் ஆனவனே -என்றுமாம் –

நின்னடியை யாரோத வல்லார் அவர்–
தேவர் திருவடிகளில் அழகை அறிந்து ஆஸ்ரயிக்க வல்லார் தான் ஆர் –
ப்ராப்யமானவன் திருவடிகளை அறிந்து ஆஸ்ரயிக்க வல்லார் ஆர் –
உன் நீர்மையை அறிந்து ஆஸ்ரயிக்க வல்லார் ஆர் –

————————————————————————–

ஆனால் -பின்னை அந்த தேவதைகளை ஆஸ்ரயிக்க கடவது அன்றோ –
அவர்களை ஷேபிக்கிறது என் என்னில் –
அவர்கள் தாங்களும் தங்களுடைய அதிகார நிமித்தமாக சர்வேஸ்வரனை ஆஸ்ரயித்து
தந்தாம் அபிமதங்களைப் பெற்றுப் போகா நின்ற பின்பு
இனி -நமக்கு மேல் எல்லாம் ஆஸ்ரயிக்க வடுப்பது அவன் திருவடிகளை அன்றோ –என்கிறார் –
மற்றை நிர்வாஹத்துக்கு அவர்களும் அவனைப் பற்றியோ திரிவது என்னில் –
அங்கனே அன்றோ செய்வது -என்கிறார்-

அவர் இவர் என்று இல்லை அரவணையான் பாதம்
எவர் வணங்கி ஏத்தாதார் எண்ணில்-பவரும்
செழும் கதிரோன் ஒண் மலரோன் கண்ணுதலோன் என்றே
தொழும் தகையார் நாளும் தொடர்ந்து———12-

பதவுரை

எண்ணில்–(எம்பெருமானை ஆச்ரயித்து ஸ்வரூப ஸித்தி பெறுகிறவர்கள் ஆரார்?’ என்று) ஆராயுமளவில்
அவர் இவர் என்று இல்லை–இன்னார் தாம் ஆச்ரயிப்பவர்கள், இன்னார் ஆச்ரயிக்காதவர்களென்ற ஒருவாசி யில்லை;
அரவு அணையான் பாதம்–சேஷசாயியான அப்பெருமானுடைய திருவடிகளை
வணங்கி–தொழுது
ஏத்தாதார்–துதியாதவர்கள்
எவர்–யாவர்? (ஒருவருமிலர்)
பவரும் செழுகதிரோன்–பரவின அழகிய ஆயிரங் கிரணங்களை யுடையவனான ஸூரியனும்
ஒள் மலரோன்–அழகிய (திருநாபிக் கமல) மலரை இருப்பிடமாக வுடைய பிரமனும்
கண் நுதலோன்–நெற்றிக் கண்ணனான ருத்ரனும்
(ஆகிய, நாட்டிலுள்ளவர்களால் ஆச்ரயிக்கப்படுகிறவர்களென்று பிரசித்தரான இவர்கள்)
நாளும்–நாள்தோறும்
தொடர்ந்து தொழும் தகையார் அன்றே–அப்பெருமானெழுந்தருளி யிருக்கின்ற இடத்தைத் தேடி ஆச்ரயிக்கும் ஸ்வபாவமுள்ளவர்களன்றோ?

அவர் இவர் என்று இல்லை –
சிறியார் பெரியார் என்று இல்லை –
ஆஸ்ரயணீயராக பிரசித்தரான தேவர்களோடு -அவர்களை ஆஸ்ரயித்த மனுஷ்யரோடு வாசி அற-
பெற்ற தாய்க்கு ஆகாத பிரஜை யுண்டோ –

அரவணையான் பாதம்-
ஷீரார்ணவ சாயியான சர்வேஸ்வரன் திருவடிகளை –
சர்வேஸ்வரத்வ லஷணம் ஆவது -அநந்த சாயித்வம் போலே காணும் –
புருஷகாரம் அங்கே யுண்டு -யத்ர ராமஸ் ஸ லஷ்மண-யுத்த -17-1-என்றும்
நாகணை மிசை நம்பிரான் சரணே சரண் -திருவாய் -5-10-11- என்றும்
நாகணைக்கே சென்று -நாச் -10-9- என்றும் சொல்லக் கடவது இறே

எவர் வணங்கி ஏத்தாதார் –
ஆஸ்ரயியாதார் ஆர் -வேறு ஒருவன் காலிலே விழாத படியான
வைபவம் யுடையவனைப் பற்ற வேண்டாவோ –

எண்ணில்-
ஆராயில் –

பவரும்-இத்யாதி –
இவர்கள் அன்றோ நாட்டுக்கு ஆஸ்ரயணீயாராய் பிரசித்தராகிறார் –
இவர்கள் தாங்கள் செய்கிறபடி இது வன்றோ –

பவரும் செழும் கதிரோன்-
பரம்பின அழகிய  சஹச்ர க்ரணனான ஆதித்யன் –

ஒண் மலரோன்-
திரு நாபீ கமலா ஸ்தானனான ப்ரஹ்மா-

கண்ணுதலோன் -என்றே
லலாட நேத்ரனான ருத்ரன் -இவர்கள் அன்றோ

தொழும் தகையார் நாளும் தொடர்ந்து—-
நாடோறும்   அவன் புக்கிடம் புக்கு -வடிம்பிட்டு -அவனையே ஆஸ்ரயிக்கையே
ஸ்வ பாவமாக யுடையராய் -இருக்கிறார்

நாளும் தொழும் தகையார் –
முறுக்கொழியில் கொட்டொழியும் என்று -தொழுகை மாறில் பிரயோஜனங்களும் மாறும்
என்று தொழும் தகையார்
தொழுகையே ஸ்வ பாவமாக இருக்கச் செய்தே -இது வகுத்தது என்று இராதே –
பிரயோஜனங்களைக் கொண்டு இழப்பதே –
பலத்தைக் கூலியாக்கி த்யாஜ்யமான ஐஸ்வர்யத்தைப் பலமாகக் கொள்வதே -என்ன தர்ம ஹாநி-

————————————————————————–

ஆனால் பின்னை அதிக்ருதாதிகாரமோ –
அளவுடைய தேவர்கள் ஆஸ்ரயித்து -அல்லாதார் இழந்து போம் அத்தனையோ -என்னில்
அதில் ஒரு நிர்பந்தமும் இல்லை –
எத்தனையேனும் செல்ல -ஜன்ம வ்ருத்தாதிகளால் குறைய நின்ற திர்யக் யோநியிலே  உள்ளது ஓன்று அன்றோ –
அவன் திருவடிகளை ஆஸ்ரயித்து -பிரதிபந்தகம் அவனாலே நீங்கி
அவன் தேசத்தைப் பெற்றுப் போந்தது -என்கிறார்
ஓர் ஆனைக்கன்றோ எளியன் யாய்த்து
கீழ் -பிரயோஜனத்துக்காக ஆஸ்ரயிப்பார்க்கு பிரயோஜனங்களைக் கொடுக்கும் படி சொல்லிற்று –
இதில் -தன்னைக் காண வேணும் என்று தொழுவார்க்குத் தன்னைக் கொடுக்கும்படி சொல்லுகிறது

தொடரெடுத்த மால் யானை சூழ் கயம் புக்கு அஞ்சி
படரெடுத்த பைங்கமலம் கொண்டு -அன்று இடர் அடுக்க
ஆழியான் பாதம் பணிந்து அன்றே வானவர் கோன்
பாழி தான் எய்திற்றுப பண்டு————–13–

பதவுரை

தொடர் எடுத்த மால் யானை–காற்சங்கிலியை முறித்துக் கையிற்கொண்டு பதறியோடுந் தன்மையதான மதயானை யானது
சூழ் கயம் புக்கு–(கரை காண வொண்ணாதபடி) விசாலமாயிருந்த பொய்கையிலே இழிந்து
படர் எடுதுத பை கமலம் கொண்டு–மலர்ந்து ஓங்கியிருக்கிற அழகிய தாமரைப் பூவை (எம்பெருமானுக்கு ஸமர்ப்பிப்பதற்காக)க் கையிற் கொண்டு
அன்று இடர் அடுக்க–அந்த நிலைமையிலே (முதலையின் வாயிலகப்பட்டு விடுவித்துக் கொள்ள முடியாத) பெருந்துன்பமுண்டாக
அஞ்சி–(செவ்வி யழிவதற்கு முன்னே இந்த மலர்களை எம்பெருமானுக்கு ஸமர்ப்பிக்க முடியாமற் போய் விடுமோவென்று) மனம் பதறி,
ஆழியான் பாதம்–(முதலையைத் துணிக்குங் கருவியான) திருவாழியைக் கையிலேந்தின
எம்பெருமானுடைய திருவடிகளை (தியானித்து) வணங்கியதனாலன்றோ
தான்–அந்த கஜேந்திரம்
பண்டு–முற்காலத்தில்
வானவர் கோன்பாழி–தேவாதி தேவனுடைய இருப்பிடமான பரமபதத்தை
எய்திற்று–அடைந்தது.

தொடரெடுத்த மால் யானை –
வல்லியை முறித்துக் கையிலே கொண்டு ச்வரை சஞ்சாரம் பண்ணுகிற மத்த கஜமானது
விலங்கை முறித்து எடுத்துப் பொகட்டுத்   திரியும் பெரிய யானை -என்றுமாம்

மால் யானை –
மத்தித்து இருந்துள்ள யானை –
பாடாற்ற மாட்டாமை -என்றுமாம் –

சூழ் கயம் புக்கு –
பெரிய பரப்பை யுடைத்தாய் -கண்ணால் கரை காண ஒண்ணாத பொய்கையிலே புக்கு

சூழ் கயம் –
புக்காரை துஷ்ட சத்வங்களாலே சூழ்க்க வல்ல கயம்-

கயம் புக்கு –
தன்னிலம் அல்லாத வேற்று நிலத்திலே புக்கு –

அஞ்சி-
முதலையால் வந்த இடருக்குப் பயப்பட்டு -ஸ்வ பலம் உள்ள போது-அதுவும் ப்ரஹ்மாதிகளோடு ஒக்கும்
பரமாபதமாபன்ன-ஸ்ரீ விஷ்ணு தர்மம் -69-47–அவனிலும் சீரிய ஆபத்து
சர்வ சக்தியில் காலோடு கட்ட வல்ல ஆபத்து இறே
இவன் தன்னைப் பொகட்ட வாறே  அவனும் தன்னைப் பொகட்டான்-

படரெடுத்த பைங்கமலம் கொண்டு –
படர் -படர்ந்து -பரப்பு மாற அலர்ந்து –
எடுத்த -ஓங்கிய
பைங்கமலம் -அழகியதாய் இருந்த தாமரை -என்னுதல்
அன்றிக்கே –
குளிர்ந்து இருந்துள்ள பூவை அத்யாதரத்தோடே வாங்கி

அன்று இடர் அடுக்க-
அங்கே முதலையாலே  ஆபத்தானது வந்து ப்ரஸ்துதமாக
இடர்-வேறு பரிஹாரம் இல்லாத துக்கம் –

அஞ்சி
அநந்தரம் இப்பூவில் செவ்வி மாறுவதற்கு முன்னே அவன் திருவடிகளிலே பணிமாறப் பெறு கிறிலோம்-என்று
அஞ்சி -அதுக்குப் பரிகாரமாக

ஆழியான் பாதம் பணிந்து அன்றே –
சர்வேஸ்வரன் திருவடிகளை ஆஸ்ரயித்தது அன்றோ –

ஆழியான் –
க்ராஹம் சக்ரேண  மாதவ -ஸ்ரீ விஷ்ணு தர்மம் -69-81–அனந்யப் பிரயோஜனர் திறத்து இருக்கும் படி –
பைங்கமலம் -பூவைப் பூவாக வாங்கின படி
ஆழியான் -துரிதம் போக்குகைக்கு பரிகரம் யுடையவன் –

வானவர் கோன் பாழி தான் எய்திற்றுப பண்டு–
முன்பு அயர்வறும் அமரரர்கள் அதிபதி யானவனுடைய ஸ்தானமான பரம பதத்தைப் பிராபித்தது –
நித்ய ஸூரிகளோடே கூடி இருக்கிறவனுடைய படுக்கையிலே ஏறப் பெற்றது
ஆன பின்பு -இன்னார் ஆவார் இன்னார் ஆகார் என்கிற நியதி யுண்டோ –
அவனை ஆஸ்ரயிக்கும் இடத்தில் சர்வாதிகாரம் அன்றோ -என்கிறார் –

————————————————————————–

இங்கனே அவன் சர்வ சமாஸ்ரயணீயனாயற்ற பின்பு -சம்சார வர்த்தகரான ஷூத்ரரை ஸ்தோத்ரம் பண்ணாதே
பகவத் பஜனத்தைப்  பண்ணி -உங்கள் சஞ்சாரத்தாலே ஜகத்தும் அடங்க பாவனமாம்படி பண்ணுங்கோள்-என்கிறார் –

அவன் படி இதுவான பின்பு –
சம்சாரிகளை எத்தித் திரியாதே -அவன் திருவடிகளிலே பணிந்து –
திரு நாமங்களைச் சொல்லி -உங்களிடைய ஸ்பர்சத்தாலே லோகத்தை ஸூத்தம் ஆக்குங்கோள் -என்கிறார் –

பண்டிப்பெரும் பதியை யாக்கி பழி பாவம்
கொண்டிங்கு வாழ்வாரைக் கூறாதே எண்டிசையும்
பேர்த்த கர நான்குடையான் பேரோதிப் பேதைகாள்
தீர்த்த கரராமின் திரிந்து—14-

பதவுரை

பேதைகாள்–அவிவேகிகளே!,
பண்டியை–வயிற்றை
பெரு பதி ஆக்கி–பெரிய ஊர் போலக் கண்டதையுங் கொண்டு நிரம்பச் செய்து வளர்த்து
பழி பாவம் கொண்டு–தெரியாமல் விளையுங் குற்றங்களையும் தெரிந்து செய்யுங் குற்றங்களையும் மேன்மேலும் வளர்த்துக் கொண்டு
இங்கு–இவ்வுலகில்
வாழ்வாரை–வாழ்கின்ற ஸம்ஸாரிகளை
கூறாதே–புகழ்ந்து பேசுகை தவிர்ந்து,
எண் திசையும் பேர்த்த கரம் நான்கு உடையான்–(உலகளந்த காலத்தில்) எட்டுத் திக்குக்களையும் பேர்த்துப் போடும்படி
விம்மி வளர்ந்த நான்கு திருத் தோள்களை யுடையனான பெருமானுடைய
பேர்–திருநாமங்களை
ஓதி–இடைவிடாது சொல்லிக் கொண்டு
திரிந்து–திவ்ய தேசங்கள் தோறும் ஸஞ்சரித்து
தீர்த்தகரர் ஆமின்–(உங்கள் ஸஞ்சாரத்தாலே நாடு முழுவதும்) பரிசுத்தமாம்படி செய்ய வல்லவராக ஆகுங்கோள்.

பண்டிப்பெரும் பதியை யாக்கி-
முன்பு இந்த சம்சாரத்தை வர்த்திப்பித்து -என்னுதல்-
பழையதான சம்சாரத்தை வளர்த்து -என்னுதல்  –
அன்றிக்கே –
பண்டி -ஆகிற பெரிய ஸ்த்தானத்தை யுண்டாக்கி –
அதாகிறது
பெரிய ஊர் போலே வயிற்றைப் பெருக்கி -என்னுதல் –

பண்டு ஒருத்தர் -இதாகிறது -ஜங்கம விமானம் காண் என்று சொல்லித் திரியும் -என்று
நஞ்சீயர் அருளிச் செய்வர் –
ஈஸ்வரனையும் ஆத்மாவையும் அழிய மாறி உடம்பை வளர்ப்பதே -என்கை-

பழி பாவம் கொண்டு –
ததர்த்தமாக பழிகளும்  பாபங்களும் கொண்டு -வளர்க்கிறதும்
யுடம்பை –தேடுகிறது பழியும் பாவமும் –

அமூலமாயும் -சமூலமாயும் வருமவற்றுக்கு எல்லாம் ஒரு ஆஸ்ரயமாய்-
பிரமாதிகமாக வருமவற்றையும் -பிரகிருதி வச்யனாய் புத்தி பூர்வகமாக வருமவற்றையும்
ஏறிட்டுக் கொண்டு இருப்பர்கள் இறே-

பழியாவது ஏறிடுமது-
பாவமாகிறது நிஷித்தமாக அனுஷ்டிக்குமது –

பழி-அந்ய சேஷத்வம் –
பாவம் ஸ்வ ஸ்வாதந்த்ர்யம் –

இங்கு வாழ்வாரைக் கூறாதே –
இஹ லோகத்திலே வாழும் மனிசரை ஏத்தித் திரியாதே –
தேஹாதிரிக்த வஸ்துவும் ஓன்று உண்டு என்று இருக்கில் –
அவ்வருகே பரலோக பிராப்தியும் -அங்கே ஒரு போகமுமாய் இருப்பது –
காண்கிறத்துக்கு அவ்வருகு இல்லை என்று இருக்கையாலே
இங்குற்றை நாலு நாளை வாழ்வே யாய் இருக்கும் இறே –
இப்படிப்பட்ட ஹேயரை ஸ்தோத்ரம் பண்ணாதே –
உனக்கு ஒரு பழி யுண்டோ பாவம் யுண்டோ என்று அவர்களை ஸ்தோத்ரம் பண்ணாதே –

இங்கு வாழ்வாரை –
துக்கத்திலே ஸூக பிரதிபத்தி பண்ணுகை-

பேதைகாள் –
மதி கேடர்காள்-கண்டது அல்லது அறியாதே இருக்குமவர்காள் –
த்ருஷ்டத்தில் ஐஸ்வர்யத்தையும் ஒன்றாக நினைத்து இருக்கிற அறிவு கேடர்காள்-

எண்டிசையும் பேர்த்த கர நான்குடையான் பேரோதிப் –
திருக் கைகள் எட்டுத் திக்கிலும் போய் வியாபித்து விம்ம வளர்ந்த படி –
திக்குகளானவை அழித்துப் பண்ண வேண்டும்படியாய் வந்து விழுந்தது ஆய்த்து
இப்படி ஜகத் ரஷண அர்த்தமாக திரு வுலகு அளந்து அருளினவனுடைய திரு நாமத்தைச் சொல்லி –

தீர்த்த கரராமின் திரிந்து-
ஜகத்துக்கு அடங்க ஸூபாவஹமாய்க் கொண்டு திரியுங்கோள் –
திரிதலால் தவமுடைத்து இத்தரணி தானே -பெருமாள் திருமொழி -10-5
தீதில் நன்னெறி காட்டி எங்கும் திரிந்து -பெருமாள் திருமொழி -2-6-
அவனாலும் செல்லாத -திருத்த முடியாத -நிலத்தை அவன் பேரைக் கொண்டு செலுத்திடு கோள்-
அவர்கள் தாங்களும் கெட்டு பிறரையும் கெடுக்குமா போலே
இவர்கள் தாங்களும் க்ருதார்த்தராய் நாட்டையும் க்ருதார்த்தம் ஆக்குகிறபடி –

யமோ வைவஸ்வதோ ராஜா யஸ்தவைவ ஹ்ருதி ஸ்தித தேந சேத விவாத ஸ்தே மா கங்காம் மா குரூன் க ம -மனு -8-92-

திரிந்து தீர்த்தக்காரர் ஆமின் –
உங்களுடைய சஞ்சாரத்தாலே லோகத்தை பாவனம் ஆக்குங்கோள்-

பிள்ளானுக்கு மூத்த தேவப் பிள்ளை பட்டரைக் கண்டு  -பந்துக்களான நீங்கள் இங்கே இருக்க
ஆர் முகத்திலே விழிக்க மேனாட்டுக்குப் போகிறேன் -என்று அழ –
பட்டர் -த்ருணத்துக்கும் அகப்பட பரமபதம் கொடுத்த சக்கரவர்த்தி திருமகனுக்கு பிள்ளைகளுக்கு -குசலவர்களுக்கு –
திரு நாடு கொடுக்கையில் அருமை இல்லை இறே-
ஜகத்தை ரஷிப்பிக்கைக்கு அன்றோ பிள்ளைகளை வைத்துப் போயிற்று –
அப்படி அத் தேசத்துக்கு ஒருவர் இல்லையே -என்று அருளிச் செய்து அருளினார் –

————————————————————————–

ஸ்ரீ வாமன அவதார பிரசங்கத்தாலே -இப்படி இருக்கிற ஆஸ்ரிதருடைய ரஷண அர்த்தமாக கிடீர் –
அவன் தன்னை இப்படி அழிய மாறிற்று -என்று
கிருஷ்ண அவதாரத்திலும் ராம அவதாரத்திலும் பட்ட மிறுக்குகளை நினைத்து
அதி ஸூகுமாரனான அவனுக்கு இங்கனே பட வேண்டுவதே -என்கிறார் –
இவர்கள் தங்கள் உடம்பைப் பேணா- இவர்களுக்காக அவன் தன்னைப் பேணாதே துக்கப் படுவதே -என்று வெறுக்கிறார்-

திரிந்தது வெஞ்சமத்துத் தேர் கடவி அன்று
பிரிந்தது சீதையை மான் பின் போய்-புரிந்ததுவும்
கண் பள்ளி கொள்ள அழகியதே நாகத்தின்
தண் பள்ளி கொள்வான் தனக்கு—————–15-

பதவுரை

வெம் சமத்து–கொடிய (பாரத) யுத்தத்திலே
தேர் கடவி–(பார்த்த ஸாரதியாகித்) தேரை நடத்திக் கொண்டு
திரிந்ததும்–அலைந்ததும்,
அன்று–இராமனாகத் திருவவதரித்த காலத்து
மான்பின் போய்–மாரிசனாகிற மாயமானின் பின்னே சென்று
சீதையை பிரிந்ததும்–பிராட்டியைப் பிரிந்து அலைச்சற்பட்டதும்,
கண்–தரையிலே
பள்ளி கொள்ள–படுத்துக் கொள்ளும்படி
புரிந்ததுவும்–ஆசை கொண்டதும்
(ஆகிய இச்செயல்கள் யாவும்)
நாகத்தின் தண் பள்ளி கொள்வான் தனக்கு–திருவனந்தாழ்வான் மேலே குளிரப் பள்ளி கொண்டிருக்க வேண்டிய பெருமானுக்கு
அழகியதே–ஏற்றவையோ?

திரிந்தது வெஞ்சமத்துத் தேர் கடவி –
கொடிதான யுத்தத்திலே சாரத்யம் பண்ணியும் -படை  பொருத்தியும் சஞ்சரித்தது –
அது தன்னிலும் தான் பிரதானனாய்ச்  சிலரைக் கார்யம் கொண்டு தெரியப் பெற்றதோ –
ஜயம் உள்ளது அவன் தலையிலேயாய் -அம்பு விழுவது தன் மேலேயாம்படி முன் நின்றான் ஆயிற்று –
இனி யுத்தத்திலே ரதியைச் சீற நினைத்தவன் சாரதியை இறே முந்துற தலை அழிப்பது
அவனை உயர வைத்து -எதிரிகள் சாயுதராய் வர –
தான் உடம்புக்கு ஈடிடாதே சாரத்யம் பண்ணித் திரிந்தான் ஆயிற்று –

வெஞ்சமத்துத் தேர் கடவி -திரிந்தது-
படை பொருத்தித் திரிந்தான் ஆயிற்று -பகதத்தன் விட்ட அம்பு திரு மேனியிலே பட்டது இறே –
உரஸா பிரதி ஜக்ராஹ பார்த்தம் சஞ்சாத்ய மாதவ -பார -த்ரோண-29-18-
அர்ஜுனன் மார்பில் அம்பு படாமல் தன் மார்பையோக்க –
அவன் மார்பில் அம்பு படாமல் பிராட்டி மார்பை ஏற்றபடி –

அக்ரதஸ் தே கமிஷ்யாமி -அயோத்யா -27-7-அடியாரைக் காக்க முன் செல்பவள் -என்னுமவள் இறே
அன்று பிரிந்தது சீதையை மான் பின் போய்-
மாயா மிருகத்தின் பின் போய் தன்னுயிரை யாய்த்துப் பிரித்தது –
கிளர் பொறிய மறி திரிய அதனின் பின்னே படர்ந்தானை -பெரிய திருமொழி -2-5-6-என்னக் கடவது இறே  –
பிராட்டிக்கு ஆகர்ஷமான பொறியை -புள்ளியை -யுடைத்தான மறியானது திரிய –
அத்தைப் பிராட்டி பிடித்துத் தர வேணும் -என்ன
துஷ்ட மிருகம் ஆகையாலே பிடி கொடாதே கை கழியப் போக -தானும் அதன் பின்னே ஓடித் திரியக் கார்யம் பார்த்தான் ஆய்த்து-
பிராட்டியோட்டை பிரிவளவும் செல்ல விளைத்தது இறே

மான் பின் போய்ப் பிரிந்தது சீதையை –
ரஷிக்கிற இடத்தில் இருவரும் கூட இருந்து ரஷிக்கப் பெற்றோமோ –
கூடி இருப்பதுவும் பரார்த்தமாக –பிரிவதுவும் பரார்த்தமாக –

சீதையை –
பிராட்டியை -ப்ராணேப்யோ கரீயசீ -ஆர -10-21-என்னும் விஷயத்தை –

புரிந்ததுவும் கண் பள்ளி கொள்ள-
அனுஷ்டித்ததுவும் -என்னுதல்-ஆதரித்ததும் என்னுதல் –

கண் பள்ளி கொள்ள –
கண் -என்றது இடமாய் -அதாவது
தறைக்  கிடை  –
த்ருணா சயனே அநு சிதே-பால -22-23-என்று என்றும் கூப்பிடும் படியானவன் இறே
இருப்பதுவும் கூடத் தேட்டமாம்படி கிடக்கிறான் —

காட்டிலும் அடைவு படத் திரியப் பெறாது ஒழிவதே –
கல்லணை மேல் கண் துயிலக் கற்றனையோ காகுத்தா -பெருமாள் திரு -9-3-
இன்று இப்படி போகவிட வல்ல நான் அறிந்து பொறுக்கும் படிக்கு ஈடாக வளர்க்கப் பெற்றிலேன் –

கண் பள்ளி கொள்ள –
பிராட்டியைப் பிரிந்த சோகத்தாலே இளைய பெருமாள் பர்ண சய்யையைப் படுக்க
அதுவும் அறியாதே தறை யிலே கண் வளர

அழகியதே நாகத்தின் தண் பள்ளி கொள்வான் தனக்கு–
திரு அநந்த ஆழ்வான் மேலே சாய்ந்தாலும் திரு மேனிக்கு என் வருகிறதோ  என்று
அனுகூலர் அஞ்சும்படியான சௌகுமார்யம் உடையவனுக்கு அழகிதாக வந்து விழுந்தது –

படுத்த பைந்நாகணைப் பள்ளி கொண்டானுக்கு -திருப் பல்லாண்டு -9- என்னா நின்றார்கள் இறே

தாளால் உலகம் அளந்த அசைவே கொல் வாளா கிடந்து அருளும்  வாய் திறவான் –
நீளோதம் வந்தலைக்கும் மா மயிலை மா வல்லிக் கேணியான் ஐந்தலை வாய் நாகத் தணை – நான்முகன் -35-
குளிர்ந்த இடத்தே படுக்கைக்கு அடி ஸ்ரமத்தின் யுடைய அதிசயம் என்று இருக்கிராறிவர்

அழகியதே –
இஜ் ஜகத் ரஷணம் பண்ணப் பெறாதே யாய்த்து இருக்கிறது –

அழகியதே நாகத்தின் தண் பள்ளி கொள்வான் தனக்கு –
திரு வநந்த ஆழ்வான் மேல் பள்ளிக் கொள்ளக் கடவ ஸூகுமாரனானவனுக்கு
தறைக் கிடை கிடக்க வேண்டுவது –
நல்லுயிரைப் பிரிந்து திரிவது
அயல் யேசும்படி யுத்தத்திலே திரிவதாய் ஜகத் ரஷணம் பண்ணுகை சால அழகியதாய் இருந்ததீ
இஃது  ஒரு ஆஸ்ரித ரஷணம் இருக்கும்படியே
முதல் அழியவோ ஆஸ்ரித ரஷணம் பண்ணுவது -என்று நோவு படுகிறார் —

————————————————————————–

அவனுடைய செயல் இதுவான பின்பு இனி அவனுடைய யத்னத்தாலே பெறுமத்தனை போக்கி
நம்முடைய யத்னம் கொண்டு பெறுகை என்று ஓன்று உண்டோ –
இப்படி இவர்களுக்காக அவன் இருந்தால்
இவர்கள் சைதன்யத்துக்கு அவனைப் பெற வேணும் என்று இருக்க வேண்டாவோ -என்கிறார் –

எம்பெருமான் நம்மைப் பெறுகைக்கு யத்னம் பண்ணா நிற்க
நமக்கு யத்னம் பண்ண வேண்டாவோ -என்கிறார் –

அகர்ம வச்யனானவன் கர்மவச்யர் படாதவையும் கூடப் படுகிறது நமக்காக அன்றோ –
ஆன பின்பு இனி நமக்கு ஒரு குறை யுண்டோ-

தனக்கு அடிமைப் பட்டது தான் அறியான் ஏலும்
மனத்தடைய வைப்பதாம் மாலை -வனதிடரை
ஏரியாம் வண்ணம் இயற்றும் இது வல்லால்
மாரி யார் பெய்கிற்பார் மற்று——————16-

பதவுரை

தனக்கு–சேதநனாகிய தனக்கு
அடிமை–சேஷத்வமென்பது
பட்டது–அமைந்திருக்கின்ற தென்பதை
தான் அறியான் ஏலும்–தான்தெரிந்து கொள்ள அசக்தனாயிருதாலும்
(எம்பெருமான் தானாகவே)
மனத்து–மனத்திலே
அடைய–வந்து சேர்ந்த வளவில்
மாலை–அப்பெருமானை
வைப்பது–இடங்கொடுத்து வைத்துக்கொள்வது தகும்;
(இவனுக்கு இவ்வளவு ருசிமாத்திரம் உண்டானால் விரோதியைப் போக்கித் தன்னைத் தானே
தந்தருள்வன் எம்பெருமான்; அது எங்ஙனே யென்னில்;)
வனம் திடரை–காடெழுந்து கிடக்கிற மேட்டு நிலத்தை
ஏரி ஆம் வண்ணம் இயற்றும் இது அல்லால்–(பெய்யும் மழைநீர் அப்பால் போகாமல் தடையின்றி வந்து புகும்படி)
ஏரியாகக் குழி வெட்டுதல் செய்யக்கூடுமேயன்றி
மற்று-பின்னும்
மாரி–மழையை
பெய்கிற்பார்–பெய்யும்படி செய்விக்க வல்லவர்கள்
யார்–யாவருளர்? (மழை பெய்ய வேண்டுவது பகவத்ஸங்கள் பத்தாலன்றோ?.)

தனக்கு அடிமைப் பட்டது தான் அறியான் ஏலும்-
பரவா நஸ்மி -ஆரண்ய -15-7- என்றும் –
தவாஸ்மி-ஸ்தோத்ர ரத்னம் -60 -என்றும் –
ஸ்வத்வம் ஆத்மனி சஞ்ஜாதம் ஸ்வாமித்வம் ப்ரஹ்மணி ஸ்த்திதம் -ஸ்ரீ விஷ்ணு தத்வம் -என்கிறபடியே
இவ்வாத்மா தனக்குக் கூருபட்டது சேஷத்வம் –
எம்பெருமானுக்கு கூருபட்டது சேஷித்வம் -என்னும் இம்முறை அறியானே யாகிலும் –
ஆத்மதாச்யம் ஹரேஷ் ஸ்வாம்யம் -ஸ்ரீ விஷ்ணு தர்மம் -என்னக் கடவது இறே-

தான் அறியானேலும்-
இப்படி இவருடைய ஸ்வரூபத்தையும் அறிந்திலேன் ஆகிலும் –
தனக்கு சேஷத்வ ஞானம் இன்றிக்கே ஒழிந்ததே யாகிலும் –
சமயக் ஞானம் இன்றிக்கே இருந்ததே யாகிலும்

தான் அறியானேலும் –
இப்படி பிரமாண பிர சித்தியாலும்
ஆச்சார்ய சேவையாலும் -இருந்தபடிகள்   எல்லாம் அறிய மாட்டானேயாகிலும்-

மனத்தடைய வைப்பதாம்-
செய்கிறார் செய்யும் இத்தைக் கண்டாகிலும்
எம்பெருமானை ஆஸ்ரயிப்பது-
யத் யதாசரதி ஸ்ரேஷ்ட தத்ததே வேதரோ ஜன -ஸ்ரீ கீதை -3-21-என்னும்படி யாகிலும்
சர்வேஸ்வரனை ஹ்ருதயத்திலே வைப்பது –

அங்கனே அன்றிக்கே
மனத்து அடைய வைப்பதாம்  மாலை –
இங்கனே இருக்கச் செய்தே  இவனுடைய ஹ்ருதயத்திலே சர்வேஸ்வரன் தன உடைமையைப் பெறுவானாக வந்து
புகுரப் புக்கால் விலக்காத மாத்ரமே உண்டாய் இருப்பது –
அவன் மால் இறே -அவன் வ்யாமுக்தன் ஆகையாலே தானே வந்து மேல் விழப் புக்கால்
அப்போது இடம் கொடுப்பது இவ்வளவே இறே இவனுக்கு வேண்டுவது
இனி மேல் உள்ளது அவனுக்கே பரமாய் இருக்கும் இறே –

வடுக நம்பி -எம்பெருமானைப் பெறுகைக்கு சாதனங்கள் ஒன்றும் தேட வேண்டா –
அசலகத்திலே ஸ்ரீ வைஷ்ணவன் திருநாமம் இட சஹிக்க அமையும் -என்றார் –

ந ச மாம் யோப்ய ஸூ யதி-ஸ்ரீ கீதை -18-67-

நஞ்சீயர் -திருவரங்கப் பெருமாள் தாசர்க்கு -எம்பெருமான் என்றால் நெஞ்சு நமக்குத் தகையாதபடி பண்ணின
இத்தை மறவாதே கொள்ளும் -என்று அருளிச் செய்தாராம் –

இத்தால் –
ஒரு ருசி மாதரம் இவன் தலையில் உண்டாமது ஒழிய பிராப்தி இவனால் உண்டாக்கிக் கொள்ளப் போமோ என்றபடி
இதுக்குத் திருஷ்டாந்தம் மேல் -அதாகிறபடி எங்கனே -என்னில்

வனத்திடரை  ஏரியாம் வண்ணம் இயற்றும் இது வல்லாள் –
காடான திடரை ஏரியாகப் ப்ரவர்த்தித்து -வருகிற நீரைப் புறம்பு போகாத படி
தகைததுக் கொள்ள வேண்டுவதே யன்றோ ஏரிக்கு உள்ளது

இத்தனை போக்கி -மாரி யார் பெய்கிற்பார் மற்று –
வர்ஷம் இவன் அதீனமோ –
அதுக்குக் கடவனான பர்ஜான்யன் -அன்றோ என்கிறார்
இவன் சேதனனான வாசிக்கு அத்வேஷ மாதரம் உண்டானால்
அவ்வருகான ப்ராப்தியைப் பண்ணித் தர்வான் அவன் அன்றோ –

அன்றிக்கே
இங்கனே ஒருபடியாக நிர்வஹிப்பாரும் உண்டு –
யஸ் சர்வஜ்ஞஸ் சர்வவித் -முண்டக -1-1-10- என்றும்
ஸ்வா பாவிகீ ஜ்ஞான பலக்ரியா ச -ஸ்வே-6-8-என்றும் சொல்லுகிறபடியே
ச்வதஸ் சர்வஜ்ஞன் ஆனவனுக்கு இவன் அடிமை யானதும் -சர்வ நிர்வாஹகன் ஆனதும் –
இவன் அறியாத படியாலே தனக்கு சேஷத்வ ஜ்ஞானம் இன்றிக்கே ஒழிந்ததே யாகிலும்
சர்வேஸ்வரனை தன்னுடைய ஹ்ருதயத்திலே கொடு வந்து வைப்பதாமீ -என்று ஷேபமாக்கி

அவன் ஆஸ்ரித வ்யாமுக்தனாய் இருக்க -இவன் தான் அவனை மனத்தடைய வைப்பதாம் –
இவனாலே அவனை மனசிலே வைக்கப் போமோ –
இவன் அவனை அறிக்கையும் ஆஸ்ரயிக்கையும் என்று ஓன்று உண்டோ

அவன் தானே ருசி ஜனகனாயும்
பிராப்தியும் பண்ணித் தரும் அத்தனை போக்கி
இவன் யத்நிக்கை என்று ஒரு பொருள் உண்டோ -என்றபடி

வனத்திடரை ஏரியாம் வண்ணம் இயற்றுமிது
மனுஷ்யரை பிரேரித்து ஏரி கல்லுவிப்பானும்
அல்லால் மாரி யார் பெய்கிற்பார் மற்று –
இந்த்ரனை இடுவித்து மழை பெய்விப்பானும் அவன் தானே அன்றோ –

வனத்திடரை ஏரியாம் வண்ணம் இயற்றுமிது –
ஹிருதயத்தில் அவித்ய கர்ம வாசன ருசிகளைத் தவிர்க்குமது இ றே-அவன் செய்யுமது
அதுவும்
மாரி யார் பெய்கிற்பார் மற்று –
குணாவிஷ்காரம் பண்ணுவானும் அவனே அன்றோ
வனத்திடரை ஏரியாம் வண்ணம் இயற்றும் இது அல்லால் மாரி பெய்கிற்பார் மற்று யார் -என்று
பொருள் சொல்லும் போது திருஷ்டாந்தம் கிடையாது –
பகவத் பராவண்ய அனுசந்தானம் கனத்து இருப்பார்க்குச் சொல்லில் பரிக்ரஹிக்கும் அத்தனை போக்கி அல்லது –
நினைத்தபடி சொல்லலாம் பொருள் அன்று

அதவா
எம்பெருமான் தனக்கு இவன் அடிமைப் பட்டது அறிந்திலனே ஆகிலும் -தனக்கு அடைத்தத்தைச் செய்வான்
வேதாந்தத்தில் பழக்கத்தாலே சேதன அசேதனங்கள் அவனுக்கு சரீரம் என்று அறிந்து இருந்தால் என்றுமாம்

மனத்தடைய வைப்பதாம் என்றதற்கு செய்வார் செய்தவற்றை கண்டு ஆஸ்ரயிக்கை என்றும்
ருசி மாத்ரமே உடையானாகை என்றும்
ருசியும் அவன் பிறப்பிப்பான் என்றும் மூன்று பொருள்

ஓன்று பட்டரது
ஓன்று திருமலை நம்பியது
ஓன்று ஆழ்வானது-

————————————————————————–

இப்படி இருக்கிற இவனை ஒழிய மற்று ஆஸ்ரயணீயர் இல்லை என்கிறார் –
நாட்டில் ஆஸ்ரயணீயராய் பிரசித்தரான ப்ரஹ்மாதிகளும் சர்வேஸ்வரனை ஆஸ்ரயித்து தந்தாம் அபிமத லாபம் பெற்ற பின்பு
இனி நமக்குஎல்லாம் ஆஸ்ரயணீயன்   அவனே அன்றோ என்கிறார்

ச ப்ரஹ்மா ச சிவஸ் சேந்திர -மகா நாராயண உபநிஷத் -11-13-என்றபடி
இவர்களும் அவனுக்கு பிரகார பூதராய் கொண்டு அவனை ஆஸ்ரயித்து அன்றோ
லப்த ஸ்வரூபர் ஆகிறது என்று கீழே -12 பாசுரத்தில் சொல்லிற்று  –
பவரும் செழும் கதிரோன் ஒண் மலரோன் -என்கிறத்திலே

ஒன்றிலே சேஷிகள் இல்லை என்கிறது அங்கு
இங்கு ஆஸ்ரயணீயர் இல்லை என்கிறது

அங்கு ஆதித்யன் தொடக்கமான தேவ சாமான்யத்தைச் சொல்லிற்று
இங்கு அதிகாரி புருஷர்களான ப்ரஹ்மாதிகளைச் சொல்லுகிறது
பெரிய கிழாய் கிழாயானாரும் வெறுமை காட்டி அன்றோ பெறுகிறது -என்கிறார்-

மற்று ஆர் இயலாவார் வானவர் கோன் மா மலரோன்
சுற்றும் வணங்கும் தொழிலானை -ஒற்றைப்
பிறை யிருந்த செஞ்சடையான் பின் சென்று மாலைக்
குறை யிரந்து தான் முடித்தான் கொண்டு———–17-

பதவுரை

வானவர் கோன்–தேவர்கட்குத் தலைவனான இந்திரனும்
மா மலரோன்–(எம்பெருமானது) சிறந்த (திருநாபிக் கமலத்தை இருப்பிடமாகவுடைய பிரமனும்
சுற்றும் வணங்கும் தொழிலானை–பக்கங்களிற் சூழ்ந்துகொண்டு ஆச்ரயிப்பதற்கேற்ற சேஷ்டிதங்களை யுடையனான
மாலை–எம்பெருமானை
ஒற்றை பிறை இருந்த செம்சடையான்–ஓருகலாமாத்திரமான சந்திரனைத் தரித்த சிவந்த சடையையுடைய ருத்ரன்
பின் சென்று–அநுவர்த்தித்து
இரந்து-(பல்லைக் காட்டி) யாசித்து
குறை–தனது குறையை
தான் முடித்து கொண்டான்–தான் நிறைவேற்றிக் கொண்டான்;
(ஆனபின்பு)
இயல் ஆவார்–ஆச்ரயிக்கலாம்படி தகுதியுடையவர்
மற்று ஆர்-அந்த ஸர்வேச்வரனைத் தவிர வேறு யாவர்?

மற்று ஆர் இயலாவார் –
சர்வேஸ்வரனை ஒழியஓர் இயற்றியால் அறியப்படிவார் யார் –
வேறு ஆஸ்ரயிக்கப் படுவார் யார்
இத்தாலே அவனே ஆஸ்ரயணீயன் -என்றபடி

வானவர் கோன் மா மலரோன்-
தேவர்களுக்கு எல்லாம் பிரதானனான இந்த்ரன் –
திரு நாபி கமலத்தை வாச ஸ்தானமாக யுடைய ப்ரஹ்மா –

சுற்றும் வணங்கும் தொழிலானை –
நேர் கொடு நேர் ஆஸ்ரயிக்கப் பெறாதே கடக்க நின்று பாடே பக்கமே  ஆஸ்ரயிக்கும் படியான
தொழிலை யுடையவன் -என்னுதல்
அனுகூல வ்ருத்திகளைப் பண்ணும் தொழிலை  யுடையவன் என்னுதல்
ஈஸ்வரனுடைய சேஷ்டிதங்களை அவர்கள் சுற்றி வணங்குவர் என்னுதல்
இவர்களும் அவனை ஆஸ்ரயித்து இறே தந்தாம் அபிமதம் பெறுகிறது –

தொழிலானை –
ஆஸ்ரயணீய பிரகாரங்களை யுடையவனை -இவர்கள் இப்படிப் படா நிற்க

மாற்றார் இயலாவார் –
வேறு யத்னம் பண்ண வல்லார் யார் -என்றுமாம்

ஒற்றைப்பிறை யிருந்த செஞ்சடையான் –
ஒற்றைப்பிறை -தனிப்பிறை -ஒப்பிலாத பிறை என்றபடி
ஒரு பிறையை சிவந்த ஜடையிலே தரித்தானாய் -ஸூக பிரதானனான ருத்ரன் ஆவவன்

பின் சென்று மாலைக் கொண்டு –
தன் நெஞ்சிலே மாலைக் கொண்டு -சர்வேஸ்வரனை தன்னுடைய ஹ்ருதயத்திலே கொண்டு

பின் சென்று –
அவனை அனுவர்த்தித்து

குறை இரந்து-
அநந்தரம்-தன்னுடைய குறையை அபேஷிதது

தான் முடித்தான் –
அத்தைத் தலைக் கட்டப் பெற்றான் –
தன்னுடைய அபேஷிதங்களைப் பெற்றான் –

ஆன பின்பு அவனை ஒழிய ஆஸ்ரயணீயர் உண்டோ என்கிறார் –

————————————————————————–

தான் சர்வேஸ்வரனாய்-சர்வ சமாஸ்ரயணீயனாய் இருந்தானே யாகிலும்
ஆஸ்ரித சம் ரஷணத்தில் வந்தால் தன்னை அழிய மாறியும் நோக்கும் ஸ்வபாவன் என்கிறார் –
அவனை ஒழிந்த அல்லாதார் சிலர் நோக்கும் போது தந்தாம் ஸ்வரூபம் குறையாதே நின்று நோக்குவார்கள் –
அங்கன் அன்றிக்கே தன்னை அழிய மாறி நோக்கும் -என்கிறது

கொண்டது உலகம் குறள் உருவாய் கோளரியாய்
ஒண் திறலோன் மார்வத்து உகிர் வைத்தது -உண்டதுவும்
தான் கடந்த ஏழ் உலகே தாமரைக் கண் மால் ஒரு நாள்
வான் கடந்தான் செய்த வழக்கு–18-

பதவுரை

குறள் உரு ஆய்–வாமந ரூபியாய் மாவலியிடஞ் சென்று யாசித்து
உலகம–பூமி முதலிய லோகங்களை
கொண்டத–ஆக்ரமித்துக் கொண்டதும்,
கோள் அரி ஆய்–மிடுக்கையுடைய நரசிங்கமாகி
ஒண்திறலோன் மார்வத்து–மஹா பலசாலியான இரணியனுடைய மார்பிலே
உகிர் வைத்தது–தனது நகங்களை யழுத்திக் கீண்டொழித்ததும்
ஒருநாள்–ஒருகாலத்திலே
தான் கடந்த–தான் அளந்து கொண்ட
ஏழ் உலகே–எல்லா வுலகங்களையும்
உண்டதுவும்–(பிரளயங் கொள்ளாதபடி) திருவயிற்றிலே வைத்துக் கொண்டதும்
(ஆகிய இச்செயல்கள்)
வான் கடந்தான்–ஆகாசத்தை யளவிட்டாலும் அளவிட வொண்ணாத படியுள்ள பெருமையை யுடையவனும்
தாமரை கண்–செந்தாமரைக் கண்ணனுமாகிய
மால்–எம்பெருமான்
செய்த–செய்தருளின
வழக்கு–நியாயமான செயல்களாம்

கொண்டது இத்யாதி –
அவன் ஜகத் ரஷணம் பண்ணும் படிகள் சொல்லுகிறது –
அரியத்தைச் செய்து -இது பிராப்தம் செய்தோம் -என்று இரா நின்றான் –

கொண்டது உலகம் குறள் உருவாய் –
ஆஸ்ரிதர்க்காக வாமன வேஷத்தைக் கொண்டு -தன்னை அர்த்தி யாக்கி யாய்த்து லோகத்தை கொண்டது –
தன்னது தான் கொள்ளும்போது இரந்து கொள்ள வேணுமோ –
இரந்து கொள்ளும் போது தானே நின்று கொண்டால் ஆகாதோ –

கோளரியாய் ஒண் திறலோன் மார்வத்து உகிர் வைத்தது –
நாட்டில் ஒருவர் கொள்ளாத நரசிம்ஹ வேஷத்தைக் கொண்டாய்த்து –
பெரு மிடுக்கனான ஹிரண்யன் மார்பில் உகிரை நாட்டிற்று –

கோள் அரி-பெரு மிடுக்கன் ஆன நரசிம்ஹம்-
ஒரு வடிவைக் கொண்டு இவ்விரோதியைப் போக்கல் ஆகாதோ

ஒண் திறலோன் –
ஒள்ளிய மிடுக்கு

மார்வத்து உகிர் வைத்து –
கை தொட்டு ஆஸ்ரிதர் விரோதிகளைப் போக்கும் படி

உகிர் வைத்து –
திரு ஆழியை இட்டுக் கீண்டால் ஆகாதோ –
இத்தனை விவேகம் உண்டாகில் சங்கல்பமே யமையாதோ –

உண்டதுவும் தான் கடந்த ஏழ் உலகே –
ஒரு அனுகூலர்க்கு பிரகலாதனுக்கு -உதவவிட்டால் ஆகாதோ –
வயிற்றிலே வைத்ததுவும் ஒரு நாள் தன் திருவடிகளுக்கு உட்பட்ட பூமியையே –

அன்றிக்கே ஒரு-
தாமரைக்கண் மால் –
புண்டரீ காஷனான சர்வேஸ்வரன் -அனைத்துலகும் உடைய அரவிந்த லோசன்னை -திருவாய் -6-5-10-

ஸ்ரீ வாமனனாய் இரந்து கொண்டது பூமியை –
ஸ்ரீ நரசிம்ஹமமாய் ஹிரண்யனுடைய  மார்பைக் கீண்டது
ஒரு நாள் தான் அளந்து கொண்ட  ஏழுலகை உண்டது –
வான் கடந்தான் –
அபரிச்சேத்யனானவன்-

வானிலும் பெரியன வல்லன் -திருவாய் -1-3-10-என்கிறபடியே
ஆகாசத்தை அளவிடிலும் தன்னை அளவிட ஒண்ணாதவன் –

அன்றிக்கே –
வான் -என்று வானில் உள்ளாரை ஆக்கி நித்ய ஸூரிகளுக்கும் அவ்வருகானவன் -என்றுமாம்
வை லஷண்யம் பார்த்தால் நித்ய ஸூரிகளுக்கும் அவ்வருகு

அன்றிக்கே –
வான் கடந்தான் -வானை அளந்தவன் -ஸ்வர்க்கத்தை  யளவிட்டவன் -என்றுமாம் –

செய்த வழக்கு
இப்படி தான் செய்ததை தான் ரஷகன் ஆகையாலே
தன்னுடமைக்காகச் செய்கையால் ப்ராப்தம் செய்தோம் -என்று இரா நின்றான்

வான் கடந்தான் செய்தனவானவை ப்ராப்தம் –
அதாகிறது –
பிறர்க்கு ஒரு செயல் செய்தானே இருக்கை அன்றிக்கே கடவப்படி செய்தான் என்று தோற்றி இருக்கை-
ஸ்வாமி யான முறையாலே செய்தான் –
உடையவன் உடைமையை ரஷிக்கை பிராப்தம் இறே –

————————————————————————–

அவனாய்த்து இத்தைப் பிராப்தம் என்று நினைத்து இருக்கிறான் –
இவர் அவனுடைய சௌகுமார்யத்தை அனுசந்தித்து -இது அப்ராப்தம் -என்று இருக்கிறார் –

வழக்கன்று கண்டாய் வலி சகடம் செற்றாய்
வழக்கு என்று நீ மதிக்க வேண்டா -குழக்கு அன்று
தீ விளவின் காய்க்கு எறிந்த தீமை திரு மாலே
பார் விளங்கச் செய்தாய் பழி——————19-

பதவுரை

திருமாலே! ; நீ;
(கிருஷ்ண சிசுவாயிருந்த போது)
வலி சகடம்-வலிதான சகடத்தை
செற்றாய்–உதைத்து முறித்துத் தள்ளினாய்;
வழக்கு அன்று கண்டாய்–இது உனக்குத் தகுதியன்று காண்;
வழக்கு என்று நீ மதிக்க வேண்டா–இது நமக்குத் தகுந்ததே யென்று நினைக்கலாகாது;
(இப்படிப்பட்ட ஸாஹஸச் செயல் செய்ததோடு நில்லாமல்)
குழ கன்று–(அஸுரனான) இளங்கன்றை
தீ விளவின் காய்க்கு எறிந்த–தீய விளங்காயை உகுக்கும் பொருட்டு வீசிப்போட்ட
தீமை–இந்தத் தீம்பான செயல்
பார் விளங்க–பூமியிலே பிரகாசிக்கும்படி
பழி செய்தாய்–தவறு செய்தாய்

வழக்கன்று கண்டாய் வலி சகடம் செற்றாய்-
ரஷணம் பண்ணுகை வழக்கே யாகிலும் -ஸ்ரீ வாமனனாய் நிரதிசய ஸூ குமாரனான நீ
வலிதான சகடத்தை நிரசித்தது  அப்ராப்தம் கிடாய் –
பிள்ளையாய் இருந்து பெரிய சகடத்தை முறித்தது வழக்கன்று –

வலி சகடம் செற்றாய் –
வலியாலே சகடத்தை பங்கம் பண்ணினாய் -என்றுமாம்
இத்தால் செய்தது வழக்காமோ -என்றபடி

செற்றாய் –
வெற்றி உண்டானது பாக்கியம் –
வழக்கு என்று நீ மதிக்க வேண்டா –
செய்ததற இது உற்றது -இனி ப்ராப்தமாம் இத்தனை அன்றோ என்னில் -இது இறே நானும் வேண்டா என்கிறது
அது செய்தற்றேதே யாகிலும் அத்தைப் பிராப்தமாக புத்தி பண்ண வேண்டா

நீ மதிக்க வேண்டா –
இத்தைச் செய்தால் அனுதாபம் இன்றிக்கே ஒழிவதே –
இவரும் இது பிராப்தம் என்று அனுமதி பண்ணுவார் ஆகில் அவன் இன்னம் அதிலே கை வளரத் தொடங்குமே

புழுக் குறித்தது எழுத்தான மாத்திரம் அது –
ஒருக்கால் இங்கனே வாய்த்ததாகில் இது கடவதோ
குழக்கு அன்று தீ விளவின் காய்க்கு எறிந்த தீமை –
அதுக்கு மேலே நீ ஒன்றைக் கொண்டு ஒன்றை எறிந்தாயான படி எங்கனே –
அவை இரண்டுக்கும் நினைவு ஒன்றே அன்றோ –
ஒரு அசுரனான குழக் கன்றைக் கொண்டு அசுரவடிவேத் தீதான விளவின் காய்க்கு எறிந்தாயான இது தப்பு
இருவரும் கூடி கிருத சங்கே தரை வந்து தீங்கு செய்யிலோ என்று வயிறு பிடிக்கிறார்

திரு மாலே-
பிராட்டியும் நீயுமாய் இருந்து போது போக்கை அன்றோ உன் சௌகுமார்யத்துக்கு சேர்ந்த செயல்
இவை யுனக்குப் போருமோ
அன்றிக்கே
பிராட்டி பரிய இருக்கும் விஷயம் படும் பாடே என்றும்
திருமாலே -ஜகத்து அநாயகம் ஆகாதோ
மங்களாந்ய பிதத் யுஷீ -பால -16-21-

பார் விளங்கச் செய்தாய் பழி——
பாரிலே -பூமியிலே பிரகாசிக்கும்படி பழியைச் செய்தாய் -தப்பைச் செய்தாய்

பழி-
விபூதியிலே ஏக தேசத்தை ரஷிக்கப் புக்கு  உபய விபூதியையும் இழக்கப் பார்த்தாய்
தம்முடைய ச்நேஹத்தால் வழக்கன்று -பழி என்று இருக்கிறார்
எம்பெருமான் தான் புகழ் என்று இரா நின்றான் –
இவர் இது அந்யதா ஜ்ஞானம் என்று இருக்கிறார் –

————————————————————————–

பகவத்  பஜனத்திலே அடி இட்டாரோடு –
தலைக் கட்டப் பெற்றாரோடு -வாசி அற
எல்லாரும் க்ருதக்ருத்யர் -என்கிறார் –
கீழில்-ஜகத் ரஷணத்தை அனுசந்தித்து –
இவனை ஆஸ்ரயித்தவர்கள் அன்றோ வாழ்வார்-என்கிறார் –

பழி பாவம் கை யகற்றிப் பல் காலும் நின்னை
வழி வாழ்வார் வாழ்வராம் மாதோ -வழுவின்றி
நாரணன் தன் நாமங்கள் நன்குணர்ந்து நன்கேத்தும்
காரணங்கள் தாமுடையார் தாம்-20-

பதவுரை

பழி–அபகீர்த்தியையும்
பாவம்–பாவங்களையும்
கை அகற்றி–நீக்கி
பல்காலும்–எப்போதும்
நின்னை–உன்னை
வழி வாழ்வார்–வழிப்பட்டு ஆச்ரயிக்குமவர்களும்
நாரணன் தன்–நாராயணனான வுன்னுடைய
நாமங்கள்–திருநாமங்களை
நன்கு உணர்ந்து–நன்றாக அறிந்து
வழு இன்றி–இடைவீடின்றி
நன்கு ஏத்தும் காரணங்கள் உடையார் தாம்–அழகாகத் துதிப்பதற்கேற்ற உபகரணங்களை யுடையவர்களும்
(ஆகிய இவ்விருகை யதிகாரிகளும்)
வாழ்னராம்–மகிழ்ந்து வாழப் பெறுவர்கள்.
(மாதோ- அசை).

பழி பாவம் கை யகற்றிப் –
நாட்டார் பழி சொல்லுமவையும் -அதன் நிபந்தனையும் தவிர்த்து

பழி பாவம் –
தான் செய்யாது இருக்க வந்தேருவதான அப கீர்த்தியும் –
புத்தி பூர்வகமாகப் பர ஹிம்சா ரூபமாக அனுஷ்டிக்கையால் வந்த பாபமுமான -இவற்றைக் கை கழியப் பண்ணி –

அடி யுண்டாயும்-அடி இன்றிக்கேயும் உள்ள விரோதிகளைப் போக்கி –
இவன் செய்யாதே இருக்கச் செய்தே வந்தேறுமதுக்கு பலம் புஜிக்க வேணுமோ என்னில் –
அது தானும் ஒரு பாப பலம் இறே-
ஆகையாலே அது தனக்கு யோக்யமான நிலையைக் குலைத்துக் கொண்டு நிற்க வேணுமே

பல் காலும் நின்னை வழி வாழ்வார் வாழ்வராம்-
எப்போதும் உன்னை சாஸ்த்ரங்களில் சொல்லுகிறபடியே வழி பட்டு நின்றாராய்-
ஆஸ்ரயிப்பார் வாழ்வராம் – -அவர்கள் வாழ்வு பெறுவாராம் –
உபாய அனுஷ்டானம் வாழ்வாய் -புருஷார்த்த சித்தியும் வாழ்வாய் இருக்கை-
ந ஸூகாத் ஸூகம் லப்யதே -என்கிறது இல்லையாகாதே -சாதனா சாத்திய விபாகம் இல்லை –

மாதோ –அந்தோ –
இஃது ஒரு இடைச் சொல் இருக்கிறபடி –
இது அவ்விஷயமாய்  ஒரு ஆச்சர்யம் இருந்தபடி என் என்கிறது –

வழுவின்றி-இத்யாதி –
சர்வேசவரனுடைய திரு நாமங்களை விச்சேதம் இல்லாத படி -அழகிதாக அனுசந்தித்து
அழகிதாகச் சொல்லுகைக்கு அடியான -வழுவு இன்றி -பழுது   இன்றிக்கே இருக்கிற
நாராயணன் உடைய திருநாமங்கள் –

நாரணன் தன் நாமங்கள் –
தாய் பேர் சொல்லுமா போலே –

நன்குணர்ந்து –
பக்தியாலே உணர்ந்து

நன்கேத்தும்-
ஏத்தினால் அல்லது செல்லாமை –

காரணங்கள் –
ஹேதுக்கள்-அவை யாவன –
இதுக்கடியான பக்தியை யுடையராய் –
அதுக்கடியான ருசியை யுடையராய் –
அதுக்கடியான ஸூ க்ருதத்தை யுடையராய் –
அதுக்கடியான பகவத் கடாஷத்தை யுடையவர் ஆனவர்களும்

பழி பாவம் கை யகற்றி -பலகாலும் நின்னை வழி வாழ்வார் ஆனவர்களும் வாழப் பெறுவார்
இவ்விரண்டு அதிகாரிகளும் அழகியதாக அனுசந்திக்கப் பெறுவர்கள்-

இத்தால் –
உனக்குப் பரியப் பிறந்தார் உன் பிரசாதம் உடையார் அன்றோ -என்றபடி

தாரணங்கள் தாமுடையார் –
என்ற பாடமான போது-தாரணம் -என்றது த்ருதி யுடையார் –
அதாவது
பகவத் விஷயத்திலே யூன்றி த்ருதியை உடையராய் இதர விஷயங்களால் சலிப்பிக்க ஒண்ணாதே இருக்கை –

————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பூதத் ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ பூதத் ஆழ்வார் அருளிய இரண்டாம் திருவந்தாதி – -1-10– ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் —

February 20, 2015

அவதாரிகை –
கீழில் திருவந்தாதியில்
ஆழ்வார் உபய விபூதி உக்தனுடைய சேஷித்வத்தை பிரகாசித்தாராய் நின்றார்
அது போய் –
இவருடைய சேஷத்வ ஜ்ஞானத்துக்கு உறுப்பாய் –
அந்த ஜ்ஞானம் தான் போய் –பக்தி ரூபா பன்னமாய்த்து –
அது ஜ்ஞான விஷயம் -இது பக்தி விஷயம் –
பக்தியாலே வழிந்து புறப்பட்ட சொல்லாய் இருக்கிறது –

அவர்க்குப் பக்தி இல்லையோ என்னில் -உண்டு
கார்ய காரண ரூபமான அவஸ்தா பேதமே உள்ளது
உபய விபூதியையும் அனுசந்தித்துப் பிறந்த ஜ்ஞானம் அவரது –
அது பக்வமாய் -பக்தி ரூபாபன்ன படி இவரது

கீழில் திருவந்தாதியில்
அவர் விபூதி விஷயமாக அனுசந்தித்து -பரப்படங்கலும்-
இவர்
தம் மனசின்  யுள்ளே அனுசந்தித்து
அந்த பக்தி பாரவச்யத்தாலே பிறந்த பாசுரமானது ஒரு பிரபந்தமாய்க் கொண்டு தலைக் கட்டிற்றாய் இருக்கிறது –

கீழில் திருவந்தாதியில்
ஜகத்துக்கு ஈஸ்வரன் சேஷியாய்-ஜகத்து அவனுக்கு சேஷமாய் இருக்கும் என்று
பரத்வ ஜ்ஞானத்தைச் சொல்லிற்று –
அந்த பரத்வ ஜ்ஞானம் தானே ஸ்வ ப்ராப்த்யுபாயம் என்றது –

உபாயம் வேறு ஒன்றாய் உபேயமும் வேறு ஒன்றோ காண்கிறது லோகத்தில் –
இப்படியாகக் கூடுமோ என்னில்

சர்வ சக்தி ஆகையினாலே -தானே உபாயமும் உபேயமும் –
நிமித்த காரணமும் சஹ காரி காரணமும் வெவ் வேறாக இருக்கக் காணா நிற்கச் செய்தே
த்ரிவித காரணமும் அவனேயாய் இரா நின்றானே -சர்வ சக்தி யாகையாலே -அப்படியே இதுவும் கூடும்
அவன் ஜகத் அந்தர்யாமியாய் -தாமும் ஜகததர்ப்பூதர் -ஆகையாலே
தாமும் சேஷ பூதராய்த் தமக்கு உபாயம் அவனேயாய் இருக்கிறது-

சாமான்யத்தில் உள்ளது விசேஷத்திலும் உண்டாய் இருக்குமே
அகில ஜகத் ஸ்வாமின் -என்றால்
அஸ்மின் ஸ்வாமின் -என்னக் கடவது இறே-

சாதனம் தம் தலையில்  இன்றியிலே அவனே யாகையாலே
இனி ஒரு பாகம் பிறக்கும் அளவும் பார்த்து இருக்க வேண்டாவோ

குருகைக் காவலப்பன் பக்கலிலே பரமேஸ்வர மங்கலத்து ஆண்டான் சென்று –
ஜகத்துக்கும் ஈஸ்வரனுக்கும் சம்பந்தம் இருக்கிறபடி என்-என்று கேட்க –

எஜ் ஜகத்துக்கும் எவ் வீஸ்வரனுக்கும்-என்று கேட்கத் –
த்ருப்தனாய் போனான் –

அதாகிறது –
ஆத்மாவையும் ஈஸ்வரன் என்று பிரமாணம் சொல்லக் கடவது –

சரீரம் ஆத்மாவுக்கு சேஷமானாப் போலே
ஜகத்தும் ஈஸ்வரனைக் குறித்து சரீரமாய் இருக்கக் கடவது –

அவர் -பொய்கை ஆழ்வார் -பதிம் விச்வச்ய-என்றார் –
இவருக்கும் ஒக்குமே இது -அவ்வர்த்தத்தையே அனுபவிக்கிறார் –

ஏக கர்த்ருகமாக இருக்க வேண்டாவோ -பின்ன கர்த்ருகமாய் அத்திருவந்தாதி ஒருத்தரதுமாய்
இத்திருவந்தாதி ஒருத்தரதுமாய் அன்றோ இருக்கிறது
அதினுடைய அநந்தரம் பிறந்த அவஸ்தையைச் சொல்லுவான் என் என்னில்

த்ரிமுனி வ்யாகரனமும் மூவர் கூடச் செய்யச் செய்தே ஏக சாஸ்த்ரமாய்த்து இறே ப்ரேமேயைக்யத்தாலே –
ஜைமினியும் -வியாசனும் கூட மீமாம்சையைப் பன்னிரண்டு அத்யாயம்
ஜைமினியும் வியாசன் நாலு அத்யாயமுமாய்ச் செய்யச் செய்தே
பூர்வ மீமாம்சையும் உத்தர மீமாம்சையையும் ப்ரேமேயைக் யத்தாலே
ஏக சாஸ்த்ரமாய்த்து இறே –
அப்படியேயாய் இருக்கிறது –

அதில்–விசித்திர ஜ்ஞான சக்தி யுக்தன் -ஜகத் காரண பூதன் -அவனாகிறான் –
சங்க சக்ர கதாதரன் -என்றது இறே –
இதுவும் பக்தி யாகிறது -முன்பு உண்டாய் இருந்தது ஓன்று இன்றியே இருக்கையாலே
இப்போது உண்டாக்கின படியாலே சொல்லுகிறது –
அவனே உபாயமான படியாலே பக்தி உத்பாதகனும் அவனேயாய் இருக்கிறபடி சொல்லுகிறது –

ஜகத் வைசித்ரியினுடைய நிர்வாஹகத்வம் போரும் என்னைத் திருத்தின படி என்று அனுசந்திக்கிறார் –

அவர்க்கு உள்ளது பரத்வ ஜ்ஞானமோ என்னில் –
எல்லார்க்கும் எல்லாம் உண்டு –
அவர்கள் பரிக்ரஹித்த அம்சங்களைச் சொல்லுகிறது
ஆழ்வார்கள் ஒருவருக்கு ஒருத்தர் பாவஜ்ஞராய் பரிமாறுகையாலே ஏக கண்டராய் இறே இருப்பது –
திரு வநந்த ஆழ்வானுக்கு மிடறு ஒன்றாய் தலை பலவானாப் போலே –

(பூதம் சிரஸ்ஸூ -நம்மாழ்வார் அவயவி
இரும் தமிழ் நூல் புலவர் -இவர் ஸ்ரீ ஸூக்தி கொண்டே –
யானே இரும் தமிழ் நன் மாலை இணை அடிக்கே சொன்னேன் பெரும் தமிழன் நல்லேன் பெரிது –74
இறையும் அகலகில்லேன் -செவ்விப் படிக் கோலம் கண்டு அகலாள் –82-இவரது
அலர் மேல் மங்கை உறை மார்பா -திருமங்கை நின்று அருளும் தெய்வம் -57-
மாலே நெடியானே –100
போன்ற பல ஸ்ரீ ஸூ க்திகள் கொண்டே நம்மாழ்வார் ஸ்ரீ ஸூக்திகளுக்கு இவரதே மூலம்
அன்பிலே ஞானத்தமிழ் -இரும் தமிழ் -தானே கொண்டாடும் படி இவர் திவ்ய பிரபந்தம் )

————————————————————————–

ப்ராப்த விஷயத்தில் பிறந்த பிரேம பரம்பரைகளாலே பிரகாசமான
தம்முடைய சேஷத்வத்தையும்-
அவனுடைய சேஷித்வத்தையும் -சொல்லுகிறது
அனுமானத்தாலே கீழ் வஸ்து நிர்த்தேசம் பண்ணினாப் போலே இருக்கிறது –

அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக
இன்புருகு சிந்தை இடு திரியா -நன்புருகி
ஞானச் சுடர் விளக்கு ஏற்றினேன் நாரணற்கு
ஞானத் தமிழ் புரிந்தேன் நான்–1-

பதவுரை

ஞானம் தமிழ் புரிந்த நான்–பகவத் விஷய ஜ்ஞானத்தைத் தருமதாய் த்ராவிட பாஷா ரூபமான
திருவந்தாதிப் பிரபந்தத்தை (உலகத்தார்க்கு) விரும்பி வெளியிட்ட அடியேன்.
அன்பே தகளி ஆ–(பரபக்தியின் ஆரம்ப தசையான) ஸ்நேஹம் தகளியாகவும்
ஆர்வமே நெய் ஆக–(அந்த ஸ்நேஹம் மூலமாகப் பிறந்த) அபிநிவேசம் நெய்யாகவும்
இன்பு உருகு சிந்தை இடுதிரி ஆ–(பகவத் விஷயத்தின்) இனிமையாலே நீர்ப் பண்டமாக உருகுகின்ற
மனமானது (விளக்குக்கு) இடப்படுகிற திரியாகவுங்கொண்டு
நன்பு உருக–ஆத்மாவும் உருகப் பெற்று
நாரணற்கு–ஸ்ரீமந் நாராயணனுக்கு
ஞானம் சுடர் விளக்கு ஏற்றினேன்–பரஜ்ஞானமாகிற பிரகாசமான தீபத்தை ஏற்றினேன்.

அன்பே தகளியா-
வையம் தகளியா -என்று லோகப் பரப்பை அடையத் தம்முடைய பக்தியாலே அனுசந்தித்து –
பக்தியைத் தகளியாகக் கொள்ளுகிறார் –

அதாவது –
வையம் தகளி -கேட்கையாலே எம்பெருமான் பக்கல் பிறந்த ச்நேஹமே தகளியாக –
அன்பு ஆகிறது
பக்தி -தைல வர்த்திகளுக்கு ஒரு ஆதாரம் வேணும் இறே
ஒன்றால் அழியக் கடவது அல்லாத பக்தியானது போய்-ஒரு தகளியாய்ப் புக்கது -என்றபடி ஆகிறது –
மேலிதுக்கு எல்லாம் ஆதாரமாய் இருக்கிறபடி –

கீழில் ஜ்ஞானப் பரப்பை அடைய பக்தியாய்ப் பழுத்த படி
பக்தி ரூபாபன்னமாய் இறே ஜ்ஞானம் இருப்பது –
ஆகை இறே மயர்வற மதி நலம் அருளினான் -என்றது-

ஆர்வமே நெய்யாக-
அது பாகமான படி -அந்த அன்பையே அடியாக யுடைத்தாய்
பெற்று அனுபவித்து அல்லது தரிக்க மாட்டாத அடியான அபி நிவேசமானது
அதுக்கு உட்பட்ட நெய்யாய்ப் புக்கது –

ஆர்வம் ஆகிறது -அன்பினுடைய த்விதீய பர்வம்
அன்பாகிறது சிநேக கார்யமான அத்தலைக்குப் பரியும் பரிவு
ஆர்வம் ஆகிறது -அன்புக்கு விஷயம் ஆனவனுக்கு ஸ்மாரகமாய்
அவ்விஷயத்தை விட்டுக் கால் வாங்க ஒண்ணாத படியாகப் பிறப்பதொரு அவஸ்தை –

அன்றிக்கே
அன்பு அத்தலைக்கு பரியும் பரிவாய்
ஆர்வம் ஆகிறது அதுக்கு அடியான அபி நிவேசம் -என்றுமாம் –

ஆவல் அன்புடையார் தம்  மனத்தன்றி மேலவன் -நாச் -4-8-என்னக் கடவது இறே-

இன்புருகு சிந்தை இடு திரியா –
இவ்விரண்டையும் அடியாக யுடைத்தாய்
அநுபாவ்ய விஷயத்தினுடைய ரச்யதையாலே சிதிலமாகிற மனசானது அதுக்கு இட்ட திரியாக –
ப்ராப்தியாலும் –
குணாதிக விஷயம் ஆகையாலும் –
த்யேய வஸ்துவை விடாதே உருகி இனிதாய் இருக்கிற
மநோ ரதம் காரணமான திரியாக –
சிந்தைக்கு அடியாக இறே மனஸ் இருப்பது –

நன்புருகி-
நன்பு என்கிறது
ஆத்மாவுக்கு சஹஜமான தர்ம பூத ஜ்ஞானமாய் -அத்தாலே –
தத் குண சாரத்வாத் தத் வ்யபதேச ப்ராஜ்ஞவத் -ப்ரஹ்ம ஸூதரம் -2-3-29-என்கிறபடியே –
ஜ்ஞாதாவை நினைக்கிறதாதல்-

அன்றிக்கே
நன்பு -என்கிறது
ஆத்மாவாய்-அதுக்கு நன்மையாவது
அல்ப அஸ்த்திரமான அசேதனத்தில் காட்டில் வேறுபட்டு
ஜ்ஞானனந்த லஷணமாய்-
நித்தியமாய் –
ஈஸ்வர சேஷமாய் -இருக்கை –

உருகி என்கிறது –
அசேத்யமாய்-
அதாஹ்யமாய் –
அக்லேத்யமாய் -இருக்கக் கடவதான ஆத்மவஸ்து -த்ரவ த்ரவ்யம் பட்டது பட்டது –

நித்ய வஸ்து உருகுகையாவது என் என்னில்
அவ் விஷயத்தில் தான் இழியும்படி அவகாஹித்த படியைச் சொல்லுகிறது –
ந விவேதாத்மநோ காத்ரம் -தத் ஸ்ம்ருத் யாஹ்லாத சம்ஸ்தித -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-7-39-என்னும் படியே
பிரஹலாதன் பாம்புகள் கடித்ததையும் உணராமல்
எம்பெருமானை நினைந்து மகிழ்ந்து இருந்தானே –

ஆக
இவை எல்லாவற்றாலும் சொல்லிற்று ஆயத்து –
விஷயா தீனமாகப் பிறந்த பக்தியிலே சில அவஸ்தா விசேஷங்கள் இருந்தபடி
பரபக்திக்கு அநந்தரம் பரஜ்ஞானம் ஆய்த்து
பின்னைப் போய்ப் பரம பக்தி பர்யந்தம் ஆய்த்து –
இங்கனே இருக்கக் கடவ தொரு க்ரமம் உண்டு இறே-

ஞானச் சுடர் விளக்கு ஏற்றினேன் –
அவ் வளவிலே பகவத் பிரசாத லப்தமான பர ஜ்ஞானம் ஆகிற உஜ்வல தீபத்தை ஆரோபித்தேன் –
விளக்கு ஆகிறது
தன்னையும் தானே காட்டிப் பிறரையும் காட்ட வற்றாய் இருப்பது
அப்படியே –
பக்தி ரூபாபன்ன ஜ்ஞானம் ஆனது
தன் சேஷத்வத்தையும் காட்ட வற்றாய் –
அவன் தன் சேஷித்வத்தையும் காட்ட வற்றாய் இருக்கும் –

விளக்கேற்றினேன் –
அவ் வழியாலே அடிமை செய்கிறேன்-

நாரணற்கு-
சர்வ சேஷியான சர்வேஸ்வரனுக்கு-
அசேவ்ய சேவையைத் தவிர்க்கிறது –

ஞானத் தமிழ் புரிந்தேன் நான்–
ஜ்ஞான ஸ்வரூபமான தமிழைப் பண்ணின நான் –

பக்திஸ்ஸ ஜ்ஞான விசேஷ -வேதார்த்த சங்க்ரஹம்-என்று
பக்தி ரூபாபன்ன ஜ்ஞான பிரபந்த ப்ரவர்த்தகனான நான்  –

ஞானத் தமிழ் புரிந்தேன் நான்–ஞானச் சுடர் விளக்கு ஏற்றினேன் –
ஆப்ததமனான நான் சொன்னேன் –
காதல் குருகூர்ச் சடகோபன் சொன்ன –திருவாய் -2-1-1-என்னுமா போலே –
சோக ஸ்லோகத்வமாகத-பால -2-40-என்னக்  கடவது இறே

என்னளவிலே யாய்ப் போகை அன்றியே –
நாட்டார்க்கும்  எல்லாம் பக்தி பிரகாசிக்கும் படி பண்ணினேன்
தமக்கு உண்டான சாஷாத்காரம் இப் பிரபந்தம் கற்றார்க்கும் உண்டாக்கவற்று –

இனி இத்தால்
தம்முடைய பக்தி இருந்தபடியையும்
அபி நிவேசம் இருந்த படியையும்
இதுக்கு அடியான விஷயத்தின் உடைய ரச்யத்தை இருந்தபடியையும்
சேஷத்வ ஜ்ஞான அநு சந்தானத்துக்கு யோக்யமாம் படி ஆத்மா போய் தாந்தமான படியையும்
அவன் பக்கல் உண்டான சேஷத்வ பிரதிபத்தி இருந்த படியையும்
இவை எல்லாவற்றையும் சொல்லிற்று ஆகிறது-

————————————————————————–

அவதாரிகை –
இப்படிப்பட்ட பக்தியை யுடையவராய் –
அவன் திரு நாமத்தை அக்ரமமாக வாக்கிலும் சொல்லிக் கூப்பிடுமவர்களுக்கு

சர்வேஸ்வரன் கொடுக்கும் தரம் இருக்கும்படி –
நித்ய சம்சாரியானவனை -நித்ய ஸூரிகளோடே ஒரு கோவை யாக்கும் -என்கிறார்-

ஞானத்தால் நன்கு உணர்ந்து நாரணன் தன் நாமங்கள்
தானத்தால் மற்றவன் பேர் சாற்றினால் வானத்
தணியமரர் ஆக்குவிக்கும் அஃது அன்றே நங்கள்
பணியமரர் கோமான் பரிசு-2-

பதவுரை

நாரணன் தன்–ஸ்ரீமந் நாராயணனுடைய
நாமங்கள்–(திருமேனி முதலியவற்றிற்கு வாசகமான) திருநாமங்களையும்
மற்று–மற்றும்
அவன் பேர்–அப்பெருமானுடைய (விபூதி விஸ்தாரங்களுக்கு வாசகமான) திருநாமங்களையும்
ஞானத்தால்–(ப்ரேம ரூபமான) ஜ்ஞானத்தாலே
நன்கு உணர்ந்து–உள்ளபடி யறிந்து
தானத்தால்–(ப்ரேமத்தின் முடிவெல்லையான) ஸ்தானத்திலே நின்று
சாற்றினால்–அநுஸந்தித்தால்,
நங்கள் பணி அமரர் கோமான் பரிசு–நமக்கு பந்துக்களையும் எப்போதும் கைங்கர்ய பரர்களாயுமுள்ள
நித்ய ஸூரிகளுக்குத் தலைவனான எம்பெருமானுடைய தன்மையாவது,
வானத்து அணி அமரர் ஆக்குவிக்கும் அ”து அன்றே–பரம பதத்திற்கு அலங்காரமான
நித்ய ஸூரிகளாக (நம்மை)ச் செய்து வைக்கு மதுவேயாம்

நாரணன் தன் நாமங்கள்–மற்றவன் பேர் -ஞானத்தால் நன்கு உணர்ந்து-தானத்தால்-சாற்றினால்-
நாராயணன் உடைய அசாதாரணமான திரு நாமங்களையும்-மற்றும் பிரகார வாசியான திரு நாமங்களையும் –
யுக்தமான படியே பக்தி பூர்வமாக யுணர்ந்து -மேற்பட உச்சமான ஸ்தானத்திலே சாற்றினால் –

ஞானத்தால் நன்கு உணர்ந்து-
பக்தியாலே அழகியதாக உணர்ந்து –
இருவர் கூட ஞானத்தை அப்யசிக்கச் செய்தே
சஞ்சயனுக்கு பக்தி யுண்டாய் -திருதராஷ்டிரன் வரி யடையவே கற்றுப்   போனான் இறே
இருவர் கூட அப்யசித்தோம் -உனக்கு ஞானம் உண்டாய்த் தோற்றுவான் என்-
எனக்கு தோற்றாது ஒழிவான் என் -என்ன
உன்னைப் போலே வரியடைவே கற்கை அன்றிக்கே
நான் பக்தியை உடையேனாய்க் காண் அப்யசித்தது -என்றான் இறே –

நன்கு உணர்ந்து-
உறவை அறிந்து பேரைச் சொல்ல வேணும் –
அதாகிறது –
ஈஸ்வர ஸ்வரூபம் இருக்கும்படியையும்
ஸ்வ ஸ்வரூபம் இருக்கும்படியையும் -அழகிதாக அனுசந்திதித்து –
அவன் சேஷித்வத்தையும் தன் சேஷத்வத்தையும் அனுசந்தித்து –

நாரணன் தன் நாமங்கள்-
அல்லாத திரு நாமங்களில் காட்டில் இதுக்கு வ்யாவ்ருத்தி
ஜ்ஞான ஆனந்தங்கள் ஸ்வரூப நிரூபகமாய் -அல்லாத ஜ்ஞான சக்தியாதிகள் குணமானாப் போலே யாயிற்று
திருமந்தரம் ஸ்வரூப நிரூபகமாய் அல்லாதவை திரு நாமங்களாய் இருக்கிறது –

பேர் ஆயிரம் கொண்டதோர் பீடுடையன் -அவன் யார் என்னில் -நாராயணன் -திருவாய் -9-3-1-என்றது இறே
நாமம் பல சொல்லி நாராயணா – மூன்றாம் திரு -8-என்றது இறே

நாரணன் தன் நாமங்கள் –
வகுத்த சேஷியானவனுடைய திரு நாமங்கள் –

தானத்தால் –
பிரயோஜன நாந்தர பரனாய்ச் சொல்லுதல் –
பிரயோஜன நிரபேஷனாய்த் தவிருதல் -செய்கை அன்றிக்கே சொல்லுகை –
சொல்லி அல்லது நிற்க மாட்டாமையாலே சொல்லுகை –
சொல்லி அல்லது நிற்க மாட்டாமை
பக்தியினுடைய ஸ்தானத்திலே –
பக்திக்கு அனந்தரமான ஸ்தானம் ஆகையாவது விவசராய்க் கூப்பிடுகை –

மற்று –
அவ்யயமாய்ப் பொருள் இன்றிக்கே நிற்றல் -அசை நிலை –
மற்று ஓன்று பக்திக்கு மேலே திரு நாமத்தையும் சொன்னால் –

அவன் பேர் –
விபூதிக்கு வாசகமாயும் –
குணங்களுக்கு வாசகமாயும் உள்ள திரு நாமங்கள்

பேர் -சடங்கு வேண்டாமை

தானத்தால் சாற்றினால் –
அவன் பக்கல் உண்டான பக்தி வழிந்த சொல்லாலே பெரும் தானத்தைச் சொல்லிக் கூப்பிட்டால் என்றாதல் –

அன்றிக்கே
கீழ்ச் சொன்ன பக்திக்கு அனுரூபமாக அடைவு கெடக் கூப்பிட்டு-என்னுதல்-
பேர் பல சொல்லிப் பிதற்றி -திருவாய் -3-5-8-என்னக் கடவது இறே

நன்கு உணர்ந்து சாற்றுகை யாவது –
நெஞ்சாலே உணர்ந்து அப் பேரை வாயாலும் சொல்லுகை –

சாற்றினால்
உகவாதார் மண் உண்ணவும் உகப்பார் களிக்கவும் கேட்கச் சொல்லிக் கூப்பிடுகை –

பின்னை அவன் செய்யுமது என் என்னில்
வானத்தணியமரர் ஆக்குவிக்கும் அஃது அன்றே –
நித்ய விபூதிக்கும் இவன்  சம்பந்தத்தால் ஒரு நிறம் உண்டாம்படி பண்ணி –
நித்ய ஸூரிகளோடே ஒரு கோவையாம்படி பண்ணுமதன்றோ-என்னுதல் –

அன்றிக்கே
அவர்களைக் கொண்டு போய் ஸ்ரீ வைகுண்டத்திலே அங்கு உள்ளார்க்கு
பூஷணமான  தேவர்கள் ஆக்குகை அன்றோ -என்னுதல்

மலி புகழ் வானவர்க்காவர் நற்கோவை -திருவாய் -4-2-11-என்னும்படியே
அடியார்கள் குழாங்களை —உடன் கூடுவது என்று கொலோ-திருவாய் -2-3-10- என்று இறே
இவர்கள் பிரார்த்தனை –

வானத்து அணி அமரர் –
பரமபதத்துக்கு விசேஷம் அச்ப்ருஷ்ட தோஷ கந்தரான நித்ய ஸூரிகளை உடைத்தாகை –
சம்சாரிகளை நித்ய ஸூரிகளை ஆபரணமாக யுடைத்தான பரம பதத்திலே கொண்டு போய் வைக்கும் என்றுமாம்
பேர் ஆர் ஓதுவார் ஆரார் அமரரே -திருவாய்-10-5-8-என்னக் கடவது இறே

இப்படிச் செய்கிறது தன்னை ஆஸ்ரயிப்பார் இல்லாமையோ என்னில்
நங்கள் பணி யமரர் கோமான் பரிசு-
நமக்கு நிருபாதிக பந்துக்களாய்-நித்யாஞ்சலி புடா ஹ்ருஷ்டா நம இத்யேவ வாதிந-பார -சாந்தி -344-45-என்கிறபடியே
அவன் திருவடிகளிலே பணிகையே யாத்ரையாக யுடையரான அநந்த வைனதேயாதிகள் உள்ளிட்ட
நித்ய சித்த புருஷர்களுக்கு ஸ்வாமியானவனுடைய பிரகாரம்

பணி யமரர்  –
வேறு பணியை யறியாதே -ஒரு நாள் பணிந்து ஒரு நாள் பணியாது இராதே
அவனைப் பணிகையே ஸ்வரூபமாய் இருக்கை-

பணி யமரர் –
முக்தரையும் முமுஷூக்களையும் போலே சில நாள் புறம்பே பணிந்து –
பின்னை தெளிந்து
அழுக்கு உடம்பு எச்சில் வாயால்  -திருக் குறும் தாண் -12-என்றும்
காவடியேன் பட்ட கடை -இரண்டாம் திரு -10-என்றும்
சொல்ல வேண்டாதார்

பணி யமரர் கோமான் பரிசு வானத்து அணி அமரர் ஆக்குவிக்கும் அக்தன்றே-
அடைவுகெடக் கூப்பிடும் கோஷ்டியிலே வைக்கும் -என்றபடி –

————————————————————————–

கீழே வானத்து அணி யமரர் ஆக்குவிக்கும் -என்றாரே –
அவ் வழியாலே -இங்கே சம்சாரியானவர்கள் தாங்கள் இருந்த தேசத்திலே
ப்ராக்ருதமான புஷ்பாதிகளைக் கொண்டு ஆஸ்ரயிக்கலாம் படி ஆபிமுக்யம் பண்ணி
அவன் திருவடிகளை ஆஸ்ரயித்தவர்கள்
அயர்வறும் அமரர்கள் அதிபதி யானவன் தன் ஸ்ரீ வைகுண்டத்தைப் போய் புகப் பெறுவராம்-
இக்தோர் ஆச்சர்யம் இருந்தபடி என் -என்கிறார் –
அவன் செயலிலே தாம் ஈடுபடுகிறார் ஆதல் –
அவன் படி கிடக்கப் புகப் பெறுவராம் படியை அனுசந்திக்கிறார் ஆதல் –

பரிசு நறு மலரால் பாற்கடலான் பாதம்
புரிவார் புகப்பெறுவர் போலாம் -புரிவார்கள்
தொல்லமரர் கேள்வித் துலங்கொளி சேர் தோற்றத்து
நல்லமரர் கோமான் நகர் -3-

பதவுரை

பால் கடலான் பாதம்–க்ஷீராப்தி நாதனுடைய திருவடிகளை
பரிசு நறுமலரால்–செவ்வி குன்றாத பரிமளம் மிக்க புஷ்பங்களைக் கொண்டு
புரிவார்–விரும்பித் தொழுமவர்கள்,
புரிவார்கள் தொல் அமரர்–ஸாதநாநுஷ்டாந பரர்களான (இந்திரன் முதலிய) பழைய தேவர்களுக்கும்
கேள்வி–(கண்ணால் காண முடியாமல்) காதால் மாத்திரம் கேட்டுக் கொண்டிருக்கக் கூடியதும்
துலங்கு ஒளி சேர் தோற்றத்து–மிக விளங்குகின்ற ஒளி பொருந்தித் தோன்றுதலையுடையதுமான
நல் அமரர் கோமான் நகர்–நித்யஸூரி நாதனுடைய திவ்யநகரமான பரமபதத்தை
புகப்பெறுவர் போலாம்–அடையப் பெறுவர்கள்

பரிசு நறு மலரால் பாற்கடலான் பாதம்
அழகிய செவ்விப் பூக்களைக் கொண்டு
நமக்கு ஆஸ்ரயிக்கலாம் படி எளியனாய் அவதாரங்களுக்கு எல்லாம் அடியான
திருப் பாற் கடலிலே அநிருத்த ஆழ்வானாய் இறே கண் வளர்ந்து அருளுகிறது –

வாஸூதேவ -சங்கர்ஷண-பிரத்யும்ன -அநிருத்தர்களில் கடைக் குட்டியான அநிருத்த ஆழ்வானாய்
திருப் பாற் கடலிலே கண் வளர்ந்து அருளுகிறவன் திருவடிகளை –
சம்சாரிகளை அக்கரைப் படுத்த வேணும் என்று திருப் பாற் கடலிலே கண் வளர்ந்து அருளுகிறவனுடைய திருவடிகளை
பூர்வஜன் -நமக்காக தானே முற்பட்டவன் -என்றபடி –

பரிசு புரிவார் –
சாஸ்திர உக்தமான படியே ஆஸ்ரயிப்பார் ஆவது –
பக்தி பிரகாரத்தாலே -ஏற்றபடி –

புகப் பெறுவர் போலாம் –
புகப் பெறுவாராமீ பேற்றில் குறை யில்லை –ஆஸ்ரயியாதே 
இழப்பார் இழக்கும் அத்தனை -என்கிறது –

புகப் பெறுவர் போலாம் –
தாம் புகப் பெறாத வெறுப்புச் சொல்கிறது –

இப்படிக் கொள்கிறது தன்னை ஆஸ்ரயிக்கைக்கு ஆள் இல்லாமையாலோ என்னில்
புரிவார்கள்-இத்யாதி
எப்படிப்பட்ட எவ்விடத்தே தான்-என்னில் –
புரிகை யாகிறது -செயலாதல் -விருப்பமாதல் –

புரிவார்கள் –
சாதகராய்த் திருவடிகளை ஆஸ்ரயிப்பார் -சபிப்பார் -ஜடை பின்னுவராய்
சம்சாரிகளில் பழையரான பிரம்மாதி தேவர்கள் –

தொல்லமரர் –
நாலு நாள் முற்பாடரானவர்கள்

கேள்வித் –
காண ஒண்ணாதே என்றும் கேட்டே போம் இத்தனை –
யாம் ந தேவோ முனய ந சாஹம் ந ச சங்கர ஜாநந்தி பரமேசச்ய
தத் விஷ்ணோ பரமம் பதம் -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-9-55-

துலங்கொளி சேர் தோற்றத்து-
அத்யர்க்கா நல தீப்தம் தத் ஸத்தா நம் -பார -ஆரண்ய -136-18-என்கிறபடியே
நிரவதிக தேஜோ ரூபமாய்க் கொண்டு தோற்றுவதான
ஆதித்ய வர்ணம் தமாசா பரஸ்தாத் -ஸ்வே-3-8- என்றும்
மேல் தோன்றும் சோதி வேத முதல்வர் -நாச் -10-2-இத்யாதி வத்

நல்லமரர் கோமான் நகர் –
சிலநாள் சம்சார ஸ்பர்சம் உண்டாய்ப் பின்பு ஒரு ஸூஹ்ருத விசேஷத்தாலே
அது கழிந்து க்ரமத்தாலே பெறுவார்கள் அன்றிக்கே
அச்ப்ருஷ்ட சம்சார கந்தராய்  ஸ்வ பாவ சித்தரான பெரிய திருவடி திரு அநந்த ஆழ்வான் உள்ளிட்ட
அயர்வறும் அமரர்களுக்கு நாயகன் ஆனவனுடைய நகரத்தை

நல்லமரர் கோமான் –
நாலு நாள் சாவாதே இருந்து பேர் படைத்த சாதகர் ஆனவர்கள் அன்றிக்கே சாத்யராய்
பிரியில் தரியாதே இருக்கும்படியான நித்ய ஸூரிகளுக்கு அதிபதி என்று அவனுக்கு ஸ்வரூபம் –
அவனுக்கு ஸ்வரூபம் கொடுக்க வல்லவர்கள்  நகர் –

நிர் விசேஷம் என்று போகாமே –
ஒரு திவ்ய தேசமும் –
திவ்ய புருஷர்களும் -தானுமாய் இருக்கப் பெறுவதே

நல்லமரர் கோமான் நகர் பாற் கடலான் பாதம் நறு மலரால் பரிசு புரிவார் புகப் பெறுவர் போலாம் –
இத்தால் –
அர்ச்சாவதாரத்திலே  ஆஸ்ரயித்து
பின்னை விபவமாய்
அநந்தரம் வியூஹமாய்
அநந்தரம் மோஷமாய்-பரமபதம் பெறுவார்கள் -என்று சொல்லுகிறார் –

சொல்லுகிறது ஆழ்வார்களுக்கு உப லஷணம் அல்ல என்னும் இடமும்
தங்கள் பிரதிபத்தியின் அளவுக்கு ஈடாகச் சொல்லுகிறார் என்னும் இடம் தோற்றுகிறது-

கடைக்குட்டி அநிருத்த ஆழ்வான் ஆகிற திருப் பாற் கடலிலே ஆச்ரயித்தவன் பரமபதம் பெறும் என்றது இறே
ஆகையால் அவற்றிலே எங்கேனும் ஓர் இடத்திலே ஆஸ்ரயித்தால்
அநந்தரம் பேறு சித்தம் -என்னும் இடம் தோற்றுகிறது-

————————————————————————–

கீழ் தமக்குப் பிறந்த பக்தியினுடைய பிரகாரத்தைச் சொன்னாராதல் –
அன்றிக்கே –
இங்கனே நடப்பதொரு ஆஸ்ரயணத்தை கற்பித்து இருக்கிறபடியைத் தெரிவிக்கிறாராதல்-
இதில் அவனுடைய நீர்மையை அனுசந்தித்து நிர்மமராய் வணங்குகிறார்-

நகர் இழைத்து நித்திலத்து நாள் மலர் கொண்டு ஆங்கே
திகழும் மணி வயிரஞ் சேர்த்து -நிகரில்லாப்
பைங்கமல மேந்திப் பணிந்தேன் பனி மலராள்
அங்கம் வலம் கொண்டான் அடி-4–

பதவுரை

நகர் இழைத்து–என்னுடைய நெஞ்சை எம்பெருமான் வாழக்கூடிய திருமண்டபமாக அமைத்து
நித்திலத்து நாள் மலர் கொண்டு–(அதிலே) ஸ்நேஹமாகிற முத்தை செவ்வி குன்றாத புறவிதழாக அமைத்து
திகழும் மணி வயிரம் சேர்த்து–ஸங்கம காமம் என்கிற நல்ல மாணிக்கத்தையும் வயிரத்தையும் அல்லியும் தாதுமாக வைத்து
நிகர் இல்லா–ஒப்பில்லாத
பைங் கமலம் ஏந்தி–பக்தியாகிற அழகிய தாமரைப் பூவைத் தரித்துக் கொண்டு
பனி மலராள் அங்கம் வலம் கொண்டான்–குளிர்ந்த தாமரைப் பூவிற் பிறந்த பிராட்டியை
வல மார்பினில் வைத்துக் கொண்டிருக்கும் பெருமானுடைய
அடி–திருவடிகளை
பணிந்தேன்–வணங்கினேன்.

நகர் இழைத்து நித்திலத்து நாள் மலர் கொண்டு –
பக்தியைச் சொல்லுகிறது-என்னவுமாம்
ஏவம் விதமான பூவை யுண்டாக்கி ஆஸ்ரயிக்க-என்னவுமாம் –

அன்பே தகளியா -என்று ஒரு விளக்கை ரூபித்தால் போலே
ஒரு புஷ்பமாக ரூபித்து அத்தைக் கொண்டு ஆஸ்ரயிக்கிறார்

நகர் இழைத்து-
எம்பெருமானுக்குப் பாங்காக தம்முடைய ஹ்ருதயத்திலே அவனுக்கு ஒரு வாச ஸ்தானத்தைக் கற்பித்து

நகர் -என்றது
நகரமாய் -கோயில் என்றபடி

நித்திலத்து நாண் மலர் கொண்டு –
நீர்மையை யுடைத்தான முத்தை  செவ்வியை உடைத்தான இதழாக புத்தி பண்ணி
சிநேக ரூபமாகிற இதழை யுடைத்தாக்கி

நித்திலத்து நாண் மலர் –
குளிர்ந்து பரிமளிதமாய் இருக்கை-
குளிர்த்தி யாகிறது த்விதா பஜயேயமப் யேவம் ந நமேயம் -யுத்த -36-11-என்னாது இருக்கை

நாண் மலர் -போக்யமாய் இருக்கை

ஆங்கே -அதிலே

திகழும் மணி வயிரஞ் சேர்த்து –
அபி நிவேசம் ஆகிற உஜ்வலமாகா நின்ற ரத்னங்களும் வைரங்களும் ஆகிற அல்லியையும் தாதியும் சேர்த்து யுண்டாக்கி
திகழா நின்றுள்ள மணியும் வைரமும் ஆகிறது -பக்தி விசேஷமாய் இருக்கிறபடி

நிகரில்லாப் பைங்கமல மேந்திப் பணிந்தேன் –
இப்படி உபமான ரஹிதமாய் இருப்பதொரு பாவ புஷ்பம் ஆகிற தாமரைப் பூவை தரித்துக் கொண்டு
பணிந்தேன் -ஆஸ்ரயித்தேன்-

பைங்கமலம் -பரந்த பூ
ஹ்ருதய கமலத்தைக் கொண்டு பணிந்தேன் –
மற்றுள்ள கமலங்களுக்கு ஒப்புண்டு போலே காணும்

இந்த ரூபத்தில் முத்தை நினைக்கிறது ச்நேஹத்தை
மணியும் வைரமுமாக நினைக்கிறது அபி நிவேசத்தை

நாடாத மலர் நாடி -திருவாய் -1-4-9- என்னக் கடவது இறே
பூசும் சாந்து என் நெஞ்சமே -திருவாய் -4-3-2-
பக்தியைப் பாவ புஷ்பமாக நிரூபிக்கைக்கு காரணம்
பெரிய பிராட்டியாரோடு எம்பெருமானை அனுபவிக்கையால் பிறந்த விபாகம்
ஆரைத் தான்  ஆஸ்ரயிக்கிறது என்னில்

பனி மலராள் அங்கம் வலம் கொண்டான் அடி-
நிரதிசய போக்யையான பெரிய பிராட்டியாரை வலத் திரு மார்பிலே அணைத்துக் கொண்டுள்ள
சர்வேஸ்வரனுடைய திருவடிகளிலே விழுந்தேன்

இத்தால்
ஆஸ்ரயணீய வஸ்து லஷ்மீ பதியான வேஷம் -என்கை-
பணிவுக்கு விஷயமாவான் ஸ்ரீ யபதி இறே
அவளுடைய சந்நிதியிலே அபுஷ்கலமான சமாஸ்ரயணமும் புஷ்கலமாம் இறே
ஆஸ்ரயிப்பார் உடைய நன்மை தீமை கணக்கிட ஒட்டாளே
நன்மைக்குப் பரிகை நம் உறவுக்குப் போகாது என்னும்
பனி மலராள் அங்கம் வலம் கொண்டான் அடி நிகரில்லாப் பைங்கமலம் ஏந்திப் பணிந்தேன்  –

————————————————————————–

பக்தியைத் தீபமாகப் பேசினார் –
நகரம் கோயிலாகப் பேசினார் –
இதில் பக்தி தன்னைச் சொல்லுகிறார் –

அன்றிக்கே
பக்திமான்களுக்கு ஸூலபனாம்படி யாக வுமாம் –

நிகரில்லாப் பைங்கமலம் ஏந்திப் பணிந்தேன் -என்றாரே –
ஆழ்வீர்-நீர் நம்மைப் பணிந்தீரோ என்ன
ஒன்றைச் சொன்னேன் அத்தனை -இப்படிப்பட்ட உன்னை ஒருவராலும் பரிச்சேதிக்கலாய் இருந்ததோ -என்று
கீழ்ப் பாட்டில் சொன்ன நீர்மையை அறியப் போமோ -என்கிறார் –
பணிந்தார்க்குத் தரம் செய்யும் படியாக வுமாம் –

அடி மூன்றால் இவ்வுலகம் அன்று அளந்தாய் போலும்
அடி மூன்று இரந்து அவனி கொண்டாய் -படி நின்ற
நீரோத மேனி நெடுமாலே நின்னடியை
யாரோத வல்லார் அறிந்து-5-

பதவுரை

படி நின்ற–பூமியிலே அவதரித்து நின்ற
நீர் ஓதம் மேனி நெடுமாலே–கடல் வண்ணனான ஸர்வேச்வரனே!,
அன்று இ உலகம்–முன்பொரு காலத்தில் இவ் வுலகத்தை
அடி மூன்றில் அளந்தாய் போலும்–மூவடியாலே அளந்து கொள்பவன் போல
அடி மூன்று அவனி–மூவடி நிலத்தை
இரந்து கொண்டாய்–(மாவலி யிடத்தில்) யாசித்துப் பெற்றாய்;
நின் அடியை–இப்படிப்பட்ட உனது திருவடிகளை
அறிந்து–நன்றாகத் தெரிந்து கொண்டு
ஓத வல்லார் ஆர்–பேச வல்லவர்கள் யாவருளர்? (யாவருமில்லை)

அடி மூன்றால் இவ்வுலகம் அன்று அளந்தாய் போலும்-
இப்படி பக்திமான்களுக்காக வந்து திரு வவதாரம் பண்ணி -அவர்கள் பக்கல் உண்டான பஷ பாதம் தோற்றும்படி
மூன்று அடிக்கு உள்ளே அளப்பதாகத் திரு உள்ளத்தாலே கணிசித்து
அதுக்கு ஈடாக ஏற்கவே மூன்றடியை அபேஷித்தான் ஆய்த்து-
அடி மூன்றாலே இரந்து லோகத்தை அன்று அளந்து கொண்டாய்-

அதாகிறது –
தன்னதைத் தான் கொண்டானாகை யன்றிக்கே  
பிறரத்தைத் தான் கொண்டான் என்று தோற்றுகைக்காக-

அடி மூன்று இரந்து அவனி கொண்டாய் –
பூமியை உனக்காக்கிக் கொள்ளுகைக்காக அளக்கைக்காக மூன்றடியை யாசித்து
இரண்டு திருவடிகளாலே இந்த லோகத்தை அன்று அளந்து கொண்டாய்

அளக்கைக்காக அடி மூன்றையும் பெற்று உடையாய்க் கொண்டு
இரண்டு அடியாலே லோகங்களை அன்று அளந்து கொண்டாய்
அதுக்கடியாக சிற்றடியாலே மூன்று அடிக்கு பூமியை இரந்து ப்ராப்தி பண்ணிக் கொண்டாய்
தூர தர்சி யாகையாலே இரண்டு அடியாலே அளந்து ஓரடிக்குச் சிறையிட்டு வைப்பதாக மூன்று அடியை இரந்தாய்
உன்னுடைய இந்த நினைவை ஒருவராலே அறியலாய் இருந்ததோ

படி நின்ற-
பூமியிலே ரஷகனாய்ச் செவ்வே நின்ற –
அன்றிக்கே
ஒப்பாய் நின்ற ஸ்வ பாவமாய் நின்ற என்றுமாம் –

நீரோத மேனி நெடுமாலே –
ஓதம் கிளர்ந்த கடல் போலே இருக்கிற வடிவு அழகை யுடையையாய் -சர்வாதிகனான சர்வேஸ்வரனே

நெடுமாலே –
மிக ஓங்கின வடிவை யுடையவனே -ஆஸ்ரித வ்யாமுக்தன் ஆனவனே -என்றுமாம் –

நீரோத மேனி நெடுமாலே –
அழகுக்கு எல்லை காணிலும் வ்யா மோஹத்துக்கு எல்லையைக் காணப் போகாது

நின்னடியை யாரோத வல்லார் அறிந்து-
உன் திருவடிகளினுடைய நீர்மையை அறிந்து ஓத வல்லார் ஆர் –
ஆர் அறிந்து பேச வல்லார் -என்கிறார்
என்னைப் போலே அறிவு கெட்டுப் பேசில் பேசும் அத்தனை
அபரிச்சேத்யனான உன் திருவடிகளை அறிந்து ஆஸ்ரயிக்க வல்லார் இல்லை -என்கிறார்

நீ மஹா பலி பக்கல் சென்று இரந்து பூமியை அளந்து கொண்ட அச் செயலை பர்ச்சேதிக்கில் அன்றோ –
உன்னைச் சிலராலே பரிச்சேதித்து ஆஸ்ரயிக்கலாவது-என்கிறார்
உன் மேன்மையை எல்லை காணிலும் நீர்மையை எல்லை காண ஒண்ணாது -என்றபடி

————————————————————————–

அறியப்  போமோ -என்றாரே –
ஜ்ஞானத்துக்கு அவிஷயமாய்த் துச்சமாய் அறியப் போகாது என்றார் அன்று –
இயத்தா ராஹித்யத்தை சொல்லுகிறார் –
ஆகில் பின்னை இங்கனே எல்லோரும்  அறியாதே இகழ்ந்து போம் இத்தனையோ என்னில் –
அது வேண்டா

இதர விஷயங்களில் ருசி அற்று அவன் திரு நாமங்களைச் சொல்லி ஸ்தோத்ரம் பண்ணுமவர்கள்
அவன் திருவடிகளை காணப் பெறுவார் என்கிறார் –
அபி நிவேசத்தை யுடையராய் ஆஸ்ரயிக்க வல்ல மஹா பாக்யவான்கள் அறிய வல்லார் -என்னுதல் –
அவன் தானே காட்டக் காண்பார்க்கு அறியலாம் -என்னுதல்-

அறிந்து ஐந்தும் உள்ளடிக்கி யாய் மலர் கொண்டு ஆர்வம்
செறிந்த மனத்தராய் செவ்வே -அறிந்தவன் தன்
பேரோதி ஏத்தும் பெரும் தவத்தோர் காண்பரே
காரோத வண்ணன் கழல்-6-

பதவுரை

அறிந்து–(எம்பெருமானுடைய வைலக்ஷண் யத்தையும் விஷயங்களின் கெடுதல்களையும் நன்றாக) அறிந்து கொண்டு
பஞ்சேந்திரியங்களையும்–பஞ்சேந்திரியங்களையும்
உள் அடக்கி–(பட்டிமேய வொண்ணாதபடி தடுத்து) பகவத் விஷயத்திலே ஊன்றும்படி நியமித்து
ஆய் மலர் கொண்டு–(பகவானுக்கு ஏற்கும்படி) ஆராய்ந்த புஷ்பங்களை ஸம்பாதித்துக் கொண்டு
ஆர்வம் செறிந்த மனத்தர் ஆய்–பக்திமிகுந்த மனத்தை யுடையராகி
செவ்வே அறிந்து–(எம்பெருமானுக்கும் தமக்குமுள்ள முறைமையை) நன்றாக அறிந்து
அவன்தன் பேர்–அப்பெருமானது திருநாமங்களை
ஓதி–இடைவிடாமற் சொல்லிக் கொண்டு
ஏத்தும்–துதிக்கின்ற
பெரும் தவத்தோர்–மஹாபாக்யசாலிகள்
கார் ஓதம் வண்ணன் கழல்–கருங்கடல் வண்ணனான அப்பெருமானுடைய திருவடிகளை
காண்பர்–கண்டு அநுபவிக்கப் பெறுவார்கள்.

அறிந்து –
ஹேய உபாதேய விபாகத்தைப் புத்தி பண்ணி –
பகவத் விஷயத்தினுடைய வை லஷண்யத்தையும் –
சப்தாதி விஷயங்களினுடைய  பொல்லாங்கையும் அறிந்து –
சரீரத்தினுடைய ஹேயதையை அறிந்து -என்றுமாம் –
ஐந்தும் உள்ளடிக்கி-
அந்த ஹேயமான சப்தாதி விஷயங்களிலே ஸ்ரோத்ராதி அஞ்சு  இந்த்ரியங்களும் போகாதபடி நியமித்து பிரத்யகாக்கி -உள்ளே விஷயம் காட்டிக் கொடுக்கிறபடி
பட்டிப் பசுவுக்கு அகத்தே கட்டி இரையிடுமாப் போலே அவன் வடிவு அழகிலே மூட்டுகை –
யாய் மலர் கொண்டு –
சத்ருசமான புஷ்பாதி உபகரணங்களைக் கொண்டு -செவ்விப் பூக்களைக் கொண்டு –
ஆர்வம் செறிந்த மனத்தராய்-
ச்நேஹம் மிக்க
மனசை யுடையராய் அபி நிவேசம் நெருங்கின மனஸ் ஸூ
செவ்வே அறிந்து –
அவன் சேஷீ-நாம் சேஷ பூதர் -என்கிற முறையை நேரே புத்தி பண்ணி
அவன் தன்பேரோதி ஏத்தும் பெரும் தவத்தோர்-
அவன் திரு நாமங்களைச் சொல்லி அவனை ஸ்தோத்ரம் பண்ணும் பாக்யாதிகர்-இதுவே யாத்ரையாக இருக்குமவர்கள் –
காண்பரே காரோத வண்ணன் கழல்-
ஸ்ரமஹரமான கருத்த கடல் போலே இருக்கிற வடிவை யுடையனானவன் திருவடிகளைக் காணப் பெறுவார் –
காண்பரே –
தம்முடைய நோயாசை -நப்பாசை –
காரோத வண்ணன் –
அயர்வறும் அமரர்களுடைய சாத்துப்படியான உடம்பு –
காண்பரே –
இது நிச்சயம் –

————————————————————————–

இருந்தபடி இதுவான பின்பு -அவர்களில் ஆஸ்ரயிப்பார் ஆர் -என்று அறிந்து நீயும் விடாதே
அவன் திருவடிகளை ப்ரீதி பூர்வகமாக அனுசந்திக்கப் பார் -என்று 
தம் திரு உள்ளத்தைக் குறித்து அருளிச் செய்கிறார்
அவனையே உகந்தார் காண்பாரான பின்பு நீயும் அவனையே உகந்து ஆஸ்ரயி-என்கிறார் –
பிரதி பந்தகம் யுண்டாகில் செய்வது என்-என்னில் நமுசி படுமது படும் இத்தனை –

கழல் எடுத்து வாய் மடித்துக் கண் சுழன்று மாற்றார்
அழல் எடுத்த சிந்தையராய் அஞ்ச -தழல் எடுத்த
போராழி ஏந்தினான் பொன் மலர்ச் சேவடியே
ஓராழி நெஞ்சே உகந்து-7-

பதவுரை

ஆழிநெஞ்சே–ஆழ்ந்த மனமே!
முன்பு த்ரிவிக்ரமாவதாரம் செய்தருளின போது)
கழல் எடுத்து–திருவடிகளை உயரத் தூக்கினவனாயும்,
மாற்றார்–எதிரிட்ட நமுசி முதலானவர்கள்
அழல் எடுத்த சிந்தையர் ஆய் அஞ்ச–பயாக்னி கொளுந்தின நெஞ்சை யுடையவர்களாய் நடுங்கும்படியாக
வாய் மடித்து–உதட்டை மடித்துக் கடித்துக்கொண்டு
கண் சுழன்று–(பார்க்கிற பார்வையிலேயே அவ்வெதிரிகள் சுருண்டு விழும்படி) கண்கள் வட்டமிட
தழல் எடுத்த போர் ஆழி–நெருப்பையுமிழ்கிற போர் செய்யவல்ல திருவாழியாழ்வானை
ஏந்தினான்–தரித்தவனாயுமிருக்கிற எம்பெருமானுடைய,
பொன்மலர் சே அடியே–அழகிய மலர்போன்ற திருவடிகளையே,
உகந்து ஓர்–விரும்பி அநுஸந்திப்பாயாக.

கழல் எடுத்து-
திரு யுலகு அளந்து அருளின போது-ஒரு திருவடிகளை மேலே எடுத்து –
இத்தால் ஆஸ்ரயித்தாரை வாழ்வித்த படி –
மேல் -அநாஸ்ரிதரைக் கெடுத்த   படி

வாய் மடித்துக் கண் சுழன்று மாற்றார் அழல் எடுத்த சிந்தையராய் அஞ்ச –
தழல் எடுத்த போராழி ஏந்தினான் –
வாய் மடித்துச் சுழலா நின்றுள்ள கண்களை யுடையராய் –
ஹ்ருதயத்தில் கொளுத்தின பயாக்னியை உடையரான நமுசி பிரப்ருதிகள் அஞ்சும்படி –
அவர்கள் மேலே விழுமாப் போலே இருக்கிற திரு ஆழியை ஏந்தினான் -என்றபடி

பொன் மலர்ச் சேவடியே –
பொன் போலேயும் மலர் போலேயும் ஸ்ப்ருஹணீயமுமாய் ஸ்லாக்யமுமான திருவடிகளையே

ஓர் –
அனுசந்திப்பாய்

ஆழி நெஞ்சே –
அளவுடைய நெஞ்சே -அது செய்யும் இடத்து

உகந்து ஓர் –
விருப்பத்தோடு அனுசந்திக்கப் பார்
உன் அளவுடைமை கொண்டு ஓராதே -உகப்பைக் கொண்டே ஓர் –
தேவைக்காக ஒண்ணாது –

ஓர் –
ஆஸ்ரயிக்கப் பார் -என்றபடி-

————————————————————————–

ஆன பின்பு -இது செய்யும் இடத்து சாத்ரவம் அநு வர்த்தியாதபடி செய்யப் பார் –
அதாவது –
பொய் யுகப்பு பாத்யமாம்படி சொல்லுகிறது –
ஆஸ்ரயிக்கும் இடத்தில் ப்ரதிபந்தகம் உண்டானாலோ என்ன
பூதனையை முடித்தாப் போலே நீ ஆஸ்ரயிக்க –
அவன் தானே விரோதியைப் போக்கும் என்கிறார் –

நமுசி பக்கல் பண்ணின வைமுக்ய பிரசங்கத்தாலே
பூதனையை முடித்த படியை நினைத்து அருளிச் செய்கிறார்-

உகந்து உன்னை வாங்கி ஒளி நிறம் கொள் கொங்கை
அகம் குளிர உண் என்று அளாவி உகந்து
முலை  யுண்பாய் போலே முனிந்து உண்டாய் நீயும்
அலை பண்பா லானமையால் அன்று—8-

பதவுரை

(பூதனை யானவள்)
உகந்து–யசோதைப் பிராட்டியைப் போல அன்புடையவளாக அபிநயஞ்செய்து
உன்னை வாங்கி–(நீ தூங்கும்போது வந்து) உன்னைத்தூக்கியெடுத்து
ஒளிநிறம் கொள் கொங்கை–(பால் விம்மியிருத்தலால்) ஒளிவிட்டு அழகு பெற்றுள்ள (தனது) ஸ்தனத்தை
அகம் குளிர உண் என்றான்–(‘குழந்தாய்!) மனமகிழ்ந்து உண்ணு’ என்று சொல்லி வாயிலே வைத்தாள்.
ஆனமையால்–ஆகையினாலே,
அன்று–அவள் முலைதந்த; அக்காலத்தில்
நீயும்–சிறு குழந்தையான நீயும்
அலை பண்பால்–அலையெறிகிற (அதிகமான) உன் ஸௌலப்ய குணத்தினாலே
முலை உண்பாய் போலே–மெய்யே ஸ்தன்யபானஞ்செய்பவனைப் போலே
உகந்து–(பெறாப்பேறு பெற்றாற் போலே) மகிழ்ந்துகொண்டு
முனிந்து–(மனத்தில்) சீற்றங் கொண்டு
ஆவி–(அந்தப் பூதனையின்) உயிரை
உண்டாய்–உறிஞ்சி உட்கொண்டாய்.

உகந்து –
தாய் வடிவு கொண்டு வந்தவள் ஆகையாலே தாயார் உகக்குமா போலே பொய்யே உகந்து –
யசோதைப் பிராட்டி உகக்குமா போலே உகந்து –
உள்ளே முனிவு கிடக்க -உகப்பை மெய்யாக பாவித்த படி –
மெய்யாகா விடில் முலை சுரவாதே-நெஞ்சு இல்லையாகில் இல்லையே –

உன்னை வாங்கி –
யசோதைப் பிராட்டி சநேஹத்தோடே தூக்கி எடுக்குமா போலே -உறக்கத்திலே தூக்கி எடுத்து –
அவள் பரிவாலே ஒசழக்காக எடுக்குமா போலே எடுத்து –

ஒளி நிறம் கொள் கொங்கை-
யசோதைப் பிராட்டி யுடைய முலை போலே பாலாலே விம்மி உஜ்வலமாகா நின்ற முலைகளை –
முலைப்பால் நெறித்து அத்தாலே புகர் பெற்றபடி –

அகம் குளிர உண் என்றாள்-
தாய்மார் ஆனவர்கள் எடுப்பதற்கு முன்பே பிள்ளைகளுடைய ஸ்ரமம் ஆறும்படி -தந்தாமுடைய உகப்பு தோற்ற –
வயிறு நிறைய உண் என்று சொல்லுவான சில சொற்கள் உண்டு -அவற்றைச் சொன்னாள்-
உண்டு அல்லது நிற்க ஒண்ணாத படி ஹ்ருதயம் குளிரும்படிக்கு ஈடாகச் சொன்னாள் –
முலை யுண்ண வேண்டாதே பேச்சிலே வயிறு நிறையும்படி

ஆவி-
அவளுடைய பிராணனை

நீயும் உகந்து முலை  யுண்பாய் போலே முனிந்து உண்டாய் –
நீயும் உகந்து முலை யுண்பாரைப் போலே முனிந்து முடித்தாய் –
அவள் பொய்யே யுகந்து முடிக்க நினைத்தால் போலே
நீயும் பொய்யே உகந்து முலை யுண்பாரைப் போலே முனிந்து முடித்தாய் –
இவனும் முனிவு தெரியாதபடி உகந்தபடி
அவளும் முலை கொடா விடில் தரியாதாளாய் வந்தாள்-
இவனும் முலை யுண்ணா விடில் தரியாதானாய் யுண்டான்

முனிந்து யுண்கை யாகிறது
அகாலத்திலே முலை கொடுத்தால் பிள்ளைகள் சீறுவர்கள் ஆய்த்து-
நம்முடைய பரமபக்தியும் பிரபத்தியும் எல்லாம் நிரூபித்தால் பூதனையுடைய உகப்பு போலே பொய்யாய் இருக்கும் –

அலை பண்பா லானமையால் அன்று—
அவள் அப்படி முதல் அழியக் கார்யம் பார்த்த அன்று நீ இப்படிச் செய்தது –
நீ அலைத்த பண்பை யுடையை ஆகையாலே இறே-
மிக்க நீர்மையை யுடையை ஆகையாலே இறே –
மிக்க குணத்தை யுடையை ஆகையாலே இறே –

அலை பண்பால் –
பெரும் குண சமுத்ரம் ஆகையால் –
உனக்கு ரஷிக்க மித்ர பாவம் அமைந்து இருக்கச் செய்தே -பூதனை தன்னை முடித்து –
ஜகத்துக்கு சேஷியான யுன்னை யுண்டாக்கித் தந்தது -நீ குணாதிகனாகை இறே
அவளை முடித்து உன்னைத் தந்தது ஆஸ்ரிதர் பக்கல் உனக்கு உண்டான ஓரம் இறே என்னுதல்-
தங்களை வாழ்விக்கைக்காக இறே என்னுதல்

அங்கன் அன்றிக்கே
அலை பண்பால் –
அழிந்த  நீர்மையை யுடையளாய் என்று அவள் பக்கலிலே பொகடவுமாம்

உகந்து உன்னை வாங்கி ஓளி நிறம் கொள் கொங்கை அகம் குளிர
உண் என்றாள்  ஆனமையால்
அன்று நீயும் உகந்து முலை யுண்பாய் போல் முனிந்து
ஆவி யுண்டாய் அலை பண்பால் –
என்று அந்வயம்-

————————————————————————–

வேணுமாகில் இவ்விஷயத்தில் நிலை நின்ற பக்தியை யுடைய யசோதைப் பிராட்டியைச் சொல்லீர் -என்கிறார் –
இவளுடைய ஸ்நேஹத்துக்கு உபமானம் உண்டோ -என்கை-
பூதனையை அனுசந்தித்த நெஞ்சாறல் தீர யசோதைப் பிராட்டியும் ஒருத்தியே -என்று உகக்குகிறார் –

அன்றது கண்டு அஞ்சாத ஆய்ச்சி உனக்கு இரங்கி
நின்று முலை தந்த இந்நீர்மைக்கு -அன்று
வரன் முறையால் நீ  யளந்த மா கடல் ஞாலம்
பெரு முறையால் எய்துமோ பேர்த்து—9-

பதவுரை

அன்று–(பூதனை பிணமாக விழும்படி நீ முலையுண்டு அவளுயிரை முடித்த) அக்காலத்தில்
அது கண்டு–முலை கொடுத்த அவள் செத்துக்கிடந்த அச் செய்தியைக் கண்ணாலே பார்த்தும்
அஞ்சாத–‘முலை கொடுக்கிற நாமும் ஒருகால் செத்துப் போவோமோ!’ என்று பயப்படாத
ஆய்ச்சி–யசோதைப் பிராட்டியானவள்
நன்று–தரித்து நன்று
அந்தப் பூதனையின் (விஷத்திற்கு மாற்றாக)–
உனக்கு இரங்கி முலை தந்த–உன்னிடத்துப் பரிவு கொண்டு முலை கொடுத்த
இ நீர்மைக்கு–இந்தப் பெருங் குணத்திற்கு,
அன்று நீ வரன்முறையால் அளந்த மா கடல் சூழ் ஞாலம்–முன்பு நீ சிறந்த உறவினாலே அளந்து கொண்ட கடல் சூழ்ந்த இவ்வுலகமானது
பெருமுறையால் எய்துமோ–இன்னது பெரியதென்று பார்க்கும் முறையில் ஒப்பாகப் பொருந்துமோ?

அன்றது கண்டு அஞ்சாத ஆய்ச்சி-
தனக்கு அஞ்சுகை தவிர்ந்து -அத்தலைக்கு அஞ்சினபடி –

உனக்கு இரங்கி-
பரிவாலே வயிறு பிடித்த படி
நின்று முலை தந்த இந் நீர்மைக்கு –
தளராதே கால் தரையிலே பாவும்படி நின்று முலை தந்த இந்த ஸ்வ பாவத்துக்கு
மோஹிக்க வேண்டும் தசையிலே தரித்து நின்று -ரஷை பார்த்த படி

அன்று வரன் முறையால் நீ  யளந்த –
அன்று வரிஷ்டமான க்ரமத்தாலே -ஸ்வா பாவிகமான ஸ்வாமி த்வ ப்ராப்தியாலே நீ அளந்து கொண்ட –
பெற்ற தாயான முறையாலே ஜகத்துக்கு முலை கொடுத்த படி –
முறையால் இவ் வுலகு எல்லாம் படைத்து அளந்தாய் -திருவாய் -3-1-10- இத்யாதி வத்

மா கடல் ஞாலம்-
பெரிய கடல் சூழ்ந்த பூமியானது –

பெரு முறையால் எய்துமோ பேர்த்து–
பெருமைக்கு ஒப்பாக முன்னிட்டால் போருமோ -என்கிறார் –
அதுவும் பெரிய செயல் –
இதுவும் பெரிய செயல்
ஆனாலும் அந்த ஸ்வ பாவத்துக்கு
இது மறித்துப் பார்க்கும் போதுபெருமைக்கு ஒப்பாகப் போருமோ –

இதில் இது பெரிது என்று ஒன்றுக்கு ஓன்று பெருக்கினால் பூமியை அளந்தது  இந் நீர்மைக்கு ஒக்குமோ -என்கிறார் –
பின்னைச் செய்த செயல் விஞ்சி இருக்கும் இறே-

பேர்த்து–பெரு முறையால் எய்துமோ –
அவளுடைய ஸ்வ பாவத்துக்கு நீ பெரிதாகச் செய்த செயல் தெரியட்டும் ஒப்பன்று என்கிறது –

பேர்த்து –
பேர்த்தால் -எண்ணினால் -என்னவுமாம் –

————————————————————————–

ஆக -இருந்தபடி இதுவாகையால்
இந்த யசோதைப் பிராட்டியினுடைய பக்தியை முதலிலே தேவர் பக்கலிலே பண்ண விறே எடுப்பது –
அந்த ஸ்நேஹம் இன்றிக்கே இருக்கச் செய்தே உன் பக்கலிலே ப்ராவண்யம் உண்டாய்த்து
இனி அநாதி காலம் தேவதாந்த்ரங்கள் கால் கடையிலே துவண்டு பட்ட தண்மை
இனி ஒரு காலமும் வாராத படி தேவர் நோக்கி யருள வேணும் -என்கிறார் –

பேர்த்தனை மா சகடம் பிள்ளையாய் மண்ணிரந்து
காத்தனை பல்லுயிரும் காவலனே -ஏத்திய
நா வுடையேன் பூ வுடையேன் நின்னுள்ளி நின்றமையால்
கா அடியேன் பட்ட கடை———-10-

பதவுரை

காவலனே–ஸர்வ ரக்ஷகனே!,
பிள்ளைஆய்–சிறு குழந்தையாயிருந்து
மா சகடம்–(அஸுராவேசமுள்ள) பெரிய வொரு வண்டியை
பர்த்தனை–கட்டழியும்படி உதைத்துத் தள்ளினாய்;
மண்–பூமியை
இரந்து–(மஹாபலியினிடத்தில்) யாசித்துப் பெற்று
(திருவடியாலே குளிரத்தடவி)
பல் உயிரும்–எல்லா ஆத்மாக்களையும்
காத்தனை–ரக்ஷித்தருளினாய்;
நின்–(இப்படி ரக்ஷகனான) உன்னை
உள்ளி நின்றமையால்–(ஆச்ரயிக்கத் தக்கவனாக) மனப்பூர்வமாக எண்ணியிருப்பதனால்
ஏத்திய நா உடையேன்–உன்னைத் துதிப்பதையே ஸ்வபாவமாகவுள்ள நாக்கை யுடையவனாயிருக்கிறேன்;
பூ உடையேன்–(அர்ச்சிப்பதற்கு உரிய) புஷ்பங்களையுமுடையவனாயிருக்கிறேன்;
(ஆனபின்பு)
அடியேன்–உனக்கு அடியவனாயிருக்கும் பெரும் பதவியைப் பெற்றிருக்கிற நான்
பட்ட–வெகுகாலமாக அடைந்துள்ள
கடை–தாழ்வுகளை
கா–போக்கி யருள வேணும்.

பேர்த்தனை மா சகடம் பிள்ளையாய்-
பிள்ளையான தன்மையில் குறைவற்று இருக்கச் செய்தே
ஒன்றால் சலிப்பிக்க அரிதான பெரிய சகடத்தை கட்டழியத் தள்ளிப் பொகட்டாய் –

மா சகடம் –
அது இவன் அருகில் வரில் என்பட கடவோம்

மண்ணிரந்து காத்தனை  பல்லுயிரும்-
உன் உடைமையைப் பறித்துக் கொள்ள இந்த்ரனுக்காக அர்த்தித்வத்தில் குறையாதே நின்று பெற்று
உன் திருவடிகளாலே எல்லார் தலையிலும் ஸ்பர்சித்து அளந்து கொண்டு
சேதன வர்க்கத்தை அடைய நோக்கி உஜ்ஜீவிப்பித்தாய் –

காவலனே –
இங்கனே செய்ய வேண்டுகைக்கு அடி என் என்னில் -ரஷகன் ஆகையாலே
ரஷை அவனுக்கு ஸ்வரூபம் ஆனால் போலே
ரஷ்யத்துக்கு அடிமை செய்வது ஸ்வ பாவம் –
காவலன் ஆவதின் கார்யம் காக்கை -சேஷத்வத்தின் கார்யம் சேஷ வ்ருத்தி-
ஆனால் நீர் இவை கொண்டு கொள்ளப் புகுகிற கார்யம் என் என்னில்  –

நின்னுள்ளி நின்றமையால்-
இப்படிப்பட்ட ஸ்வ பாவத்தை யுடையனான உன் பக்கலிலே வைக்கப் பட்ட
அனுசந்தானத்தை யுடையேன் ஆகையாலே –

ஏத்திய நா வுடையேன் பூ வுடையேன் –
உன்னை ஸ்துதிக்கிற வாக் இந்த்ரியத்தையும்
உன் பக்கலிலேயான காயிக வியாபாரத்தையும் -யுடையேன் ஆனேன் –

உடையேன் என்கையாலே
அடிமை செய்கைக்கு உப கரணமான ஏந்திய வா வுடையேன் –
தனத்துத் தானே யேத்துகைக்கு ஈடான நாவை யுடையேன் ஆனேன்

பூ வுடையேன் – என்கையாலே
அடிமை செய்கைக்கு உப கரணமான பூவையும் யுடையேன் ஆனேன் –

நின்னுள்ளி நின்றமையால் -ஏந்திய நா வுடையேன் பூ வுடையேன் –
உன்னை சமாஸ்ரயணீயனாக யுடையேன் ஆகையாலே
ஆஸ்ரயிக்கும் கரணங்களையும் த்ரவ்யங்களையும் புஷ்கலமாக  உடையேன் ஆனேன் –

ப்ராப்த விஷயத்தை நினைக்கையாலே பரிபூர்ண சமாஸ்ரயணம் பண்ணினேன் ஆனேன் –
அனுசந்திக்கப் படுகிற விஷயம் நீ யாகையாலே எனக்கு ஒரு குறை இல்லை
ஆனாலும் செய்ய வேண்டுவது ஓன்று உண்டு –

கா அடியேன் பட்ட கடை –
உனக்கு அடியேனான நான் அப்ராப்த விஷயங்களான இதர தேவதைகளின் காலிலே விழுந்து
தாழ்வு செய்கையால் வந்த தண்மை
இனி முன்னம் வாராதபடி தேவர் பார்த்து அருள வேணும்

அடியேன் பட்ட கடை கா –
அடிமை யாகிற பெருமையை யுடைய நான்

தலையான நான்
கடையான அடிமைப்பட்ட எளிமை இனி வாராதபடி பார்த்து அருள வேணும்

அடியேன் பட்ட கடை –
அனந்யார்ஹ வஸ்து பட்ட பாடே –

————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பூதத் ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

இரண்டாம் திருவந்தாதி -பாசுரங்கள் -81-100-திவ்யார்த்த தீபிகை சாரம்–

October 4, 2014

எம்பெருமானுடைய ஸாக்ஷாத்காரம் தமக்கு வாய்த்த படியை வாயாரப் பேசுகிறார்.

பகல் கண்டேன் நாரணனைக் கண்டேன் கனவில்
மிகக் கண்டேன் மீண்டவனை மெய்யே -மிகக் கண்டேன்
ஊன் திகழும் நேமி யொளி திகழும் சேவடியான்
வான் திகழும் சோதி வடிவு -81-

பதவுரை

பகல் கண்டேன்–இராக்காலம் கலசாமல் ஒரே பகற் போதாய்ச் செல்லுகிற நல் விடிவைக் கண்டேன். (அதாவது என்னவென்றால்)
நாரணனை கண்டேன்–ஸ்ரீமந் நாராயணனாகிற என்று மஸ்தமியாத ஆதிதயனைக் கண்டேன்,
மீண்டு–இன்னமும்,
கனவில்–மாநஸ ஸாக்ஷாத் காரத்திற் காட்டிலும்
மிக மெய்யே–மிகவும் ப்ரத்யக்ஷமாக
ஊன் திகழும் நேமி–திருமேனியில் விளங்குகின்ற திருவாழியை யுடையவனும்
ஒளி திகழும் சே அடியான்–பிரகாசம் மிக்க திருவடிகளை யுடையவனுமான அப்பெருமானுடைய
வான் திகழும்–பரமபதத்திலே விளங்குகின்ற
சோதி வடிவு–சோதி மயமான வடிவத்தை
மிக கண்டேன்-(இங்கே) நன்று ஸேவிக்கப் பெற்றேன்.

இந்த ஸம்ஸாரத்தில் முப்பது நாழகைக்கு ஒருமுறை இராப்பொழுதும் பகற்பொழுதும் மாறி மாறி வந்தாலும்
எம்பெருமானுடைய ஸேவை கிடைக்கப்பெறாத காலத்தைக் காளராத்திரியாகவே ஞானிகள் கருதுவர்கள்.
ஸூரியன் விளங்குங்காலம் பகற்பொழுது என்றும், அங்ஙனல்லாத காலம் இராப்பொழுதென்றும்
ஸாமாந்யர்கள் நினைத்திருப்பர்களாயினும், விஷேச ஞானிகள் அங்ஙனம் நினைத்திரார்கள்.
பகவத் ஸேவை வாய்க்குங்காலம் எதுவோ, அதுவே பகல், மற்றது இரவு – என்பதை இவர்களது ஸித்தாந்தம்.
அதனை அடியொற்று ஆழ்வார் “பகற் கண்டேன்“ என்கிறார். எம்பெருமானை ஸேவிக்கப் பெற்றேன் என்பது இதன் கருத்து.
இக்கருத்தை பிறர் தெரிந்து கொள்ளுதல் அரிதாகையாலே தாமே இதனை விவரணஞ் செய்தருள வேண்டி
“நாரணனைக் கண்டேன்“ என்கிறார்.

இவ்விடத்தில் பெரியவாச்சான்பிள்ளை வியாக்கியானவருளிச் செயல்காண்மின் –
“(பகற்கண்டேன் தாளராத்ரியாய்ச் செல்லாதே விடியக் கண்டேன் வடுகர் வார்த்தை போலே தெரிகிறதில்லை,
எங்களுக்குத் தெரியும்படி சொல்லீரென்ன, (நாரணனைக் கண்டேன்) அஸ்தமியாத ஆதித்யனைக் கண்டேன்.

இப்படி இவர் “பகற்கண்டேன்“ என்றும் “நாரணனைக் கண்டேன்“ என்றும் சொல்லக் கேட்டவர்கள்
‘நீர் அடிக்கடி கண்டேன் கண்னே என்கிறதெல்லாம் கனவுபோல நெஞசில் தோற்றுகிற தோற்றத்தை தானே
சொல்லுகிறீர் இப்போது கண்டேனென்கிறதும் அப்படிப்பட்ட தோற்றத்தானே‘ என்ன
இப்போது நான் விலக்ஷணமாகக் கண்டேனென்கிறார் மற்ற அடிகளால்,
பரமபதத்திலே “ஸதா பச்யந்தி ஸூரய“ என்று நித்யஸூரியர்கள் கண்டுகொண்டிருக்கும்
திவ்யமங்கள விக்ரஹத்தை மெய்யே காணப்பெற்றே னென்றாராயிற்று.

வான் திகழும் சோதிவடிவு கைகின்ற சோதி வடிவை என்று முரைப்பர்.

————————————————————————–

வடிக்கோல வாள் நெடுங்கண் மா மலராள் செவ்விப்
படிக்கோலம் கண்டு அகலாள் பன்னாள்-அடிக்கோலி
ஞாலத்தாள் பின்னும் நலம் புரிந்தது என் கொலோ
கோலத்தால் இல்லை குறை–82–

பதவுரை

வடி கோலம்–வடிக் கட்டின அழகை யுடையவளும்
வாள நெடுங்கண்–ஒளி பொருந்திய நீண்ட திருக்கண்களை யுடையவளும்
மாமலராள்–சிறந்த தாமரை மலரில் பிறந்தவளுமான பெரிய பிராட்டியார்
செல்வி படிகோலம்–சிறப்புற்ற (அவனது) திருமேனியின் அழகை கண்ணால் அநுபவித்து
பல் நாள் அகலாள்–க்ஷண காலமும் விட்டுப் பிரியாமல் எப்போதும் கூடியே யிருக்கின்றாள்
பின்னும்–எம்பெருமானுடைய அழகிலே பிராட்டி ஆழங்காற்பட்டு அழுந்துகிற படியைக் கண்டுவைத்தும்
ஞாலத்தாள்–பூமிப்பிராட்டியானவள்
அடிக்கோலி–பாரித்துக்கொண்டு
நலம் புரிந்தது என் கொலோ–அப்பெருமானிடத்தில் ஆசையைப் பெருக்கிக் கொண்டிருப்பது என்னோ
கோலத்தால் குறை இல்லை–(எத்தனை பேர்கள் அநுபவித்தாலும் ஏற்றியிருக்கும்படியான அழகினால் குறையில்லையன்றோ.
அழகு அ ஆசைப்பட நேர்கின்றது (அளவற்றிருப்பதானல் பலரும் எம்பெருமானிடத்தில்)

கீழ்ப்பாட்டில் “நாரணனைக் கண்டேன்“ என்றாரே, ப்ரஹ்மசாரி நாராயணனைக் கண்டேனல்லேன்,
திருமடந்தை மண்மடந்தைகட்குக் கொழுநனான திருமாலைக் கண்டேனென்கிறார் இதில்.
இவ்வார்த்தை நேரே அருளிச்செய்யாமல் ஒரு சமத்காரம் பொலியப் பேசுகிற அழகு காண்மின்.

பூவிற்பிறந்த பெரிய பிராட்டியார் எம்பெருமானுடைய அளவிறந்த போக்யதையிலே ஆழங்காற்பட்டு
‘உன்னை ஒரு நொடிபொழுதும் விட்டுப்பிரியமாட்டேன். உன்னை ஒரு நொடிப்பொழுதும் விட்டு அகலமாட்டேன்‘ என்றே
வாய்வெருவிக்கொண்டு அவனுடைய போக்யதையாகிற அமுத வெள்ளத்திலே கிடந்து தத்தளிக்கின்றாள்.
அநுபவத்தில் பெரிய கைகாரியான பிராட்டியின் நிலைமையே இதுவாயின் அவளிலும கீழ்ப்பட்டவளான பூமிப்பிராட்டி
‘நாம் அணுகுவதற்கும் நமக்கு யோக்யதையில்லை, ஒன்றான பிராட்டியே குமிழ் நீருண்ணும் விஷயத்திலே நாம் கைவைக்கத்தகுமோ? என்று
உதாஸீநையாய் விலக வேண்டியிருக்கவும் அந்த எம்பெருமான் விஷயத்திலே தானும் அபிநிவேசங்கொண்டு அணுகுகின்றாளே, இஃது என்கொல்?

இதற்குத் தாமே ஸமாதாந மருளிச்செய்கிறார் ஈற்றடியால், (கோலத்தால் குறை இல்லை) உலகத்தில் க்ஷுத்ர விஷயங்களிலே
ஒரு வஸ்துவில் ஒருவன் ஆசை வைத்துவிட்டால் அதை மற்றொருவன் ஆசைப்பட நினையாதிருப்பதுண்டு,
அதற்குக் காரணம் ஏதென்னில், அந்த விஷயங்களில் போக்யத்தை மிகவும் அறபராகையாலே
ஒருவன் அநுபவிப்பதற்கே போதும் போதாதாயிருக்கும், சிறயதொரு குட்டையில் தண்ணீர் குடிக்க ஒருவன் இறங்கினால்
“அவ்னொருவனுக்கே போராததான அதிலே நாமும் இற“குவதேன்? என்று மற்றையோர் அதனை உபேக்ஷித்துப் போவர்.
அதுவே ஒரு பெரு வெள்ளமாயிருந்தால் ‘இஃது எல்லார்க்கும் ஈடு கொடுக்கும்‘ என்று அனைவரும் அதிலே இறங்கி அநுபவிப்பரகள்,
அதுபோல் பகவத்விஷயமானது “கொள்ளமாளாவின்ப வெள்ளமாதலால் எத்தனைபேர் அநுபவித்தாலும் பாங்காகவே யிருக்குமாகையாலே
பூமிப்பிராட்டியும் மேல்விழும்படி யிருக்கின்றது என்று – எம்பெருமானுடைய போக்யதையின் அளவின்மை சொன்னவாறு.

இங்கே வியாக்சியான ஸ்ரீஸூக்தி வருமாறு – “தன்னில் மிடுக்கனானவன் அழுந்தப் புக்கால் கரையிலே நிற்கிறவன் புகாதே போகவன்றோ அடுப்பது,
எல்லாரிலும் அளவுடைய பெரியபிராட்டியார் குமிழ் நீருண்ணும் விஷயமானால் இவள் அகலப்பாராதே அகப்படுகைக்கு ஹேதுவென்னென்னில்,
ஹேது சொல்லுகிறது (கோலத்தால் இத்யாதி). நின்றார் நின்ற நிலைகளில் அகப்பட வேண்டும் அழகு குறைவற்றிருக்கையாலே யென்கை.
இதரவிஷயங்கள் இருவர்க்கும் அநுபவிக்கப் போராமையாலே சீறுபாறென்கறது. கிண்ணகத்தி லிழியுமாபோலே
எல்லாரும் திறவநுபவிக்க வேண்டும் பரப்பு உண்டாகையாலே இவ்விஷயத்தை யநுபவிப்பார்க்கு ப்ரியமே யுள்ளது.“

வடிக்கோல் வாள் நெடுங்கண் – வடி – கூர்மை பொருந்தியதும்,
கோலம் – அழசியதுமான, வாள் – வாள்போன்ற நெடுங்கண்களையுடைய மாமலராள என்று முரைக்கலாம்.
“அடிக்கோலி“ என்பதற்குப் பெரியவாச்சான்பிள்ளை வியாக்கியானத்தில் ‘அகலப்பாரித்து‘ என்று பொருள் காண்கிறது.
அதாவது ‘இலையகலப் பாரித்து‘ என்றபடி. ச்ரார்த்தத்தில் நிமந்த்ரண் முண்ணப்போகிறவன்
‘அப்படி உண்ணவேணும்‘ இப்படி உண்ணவேணும், வடையை நெய்யில் தோய்த்து உண்ண அதுபோல,
பூமிப்பிராட்டியார் எம்பெருமானை அநுபவிப்பதற்கு மநோரதிக்கும் படியை ‘அடிக்கோலி‘ என்றதனால் சொல்லிற்றென்க.
அரும்பதவுரைகாரர் “அடிகோலுகை – அகலுக்கு உத்யோகிக்கை“ என்று வரைந்து வைத்தது என்னோ அறியோம்.

————————————————————————–

கீழ் எழுபத்துநான்காம் பாசுரத்தில் “யானே இத்தமிழ் நன்மால யிணையடிக்கே சொன்னேன், பெருந்தமிழன் நல்லேன் என்று
பகவத்விஷயத்தில் நாம் கவிபாடப் பெற்றமைக்கு மகிழ்ந்து பேசினவர்
கீழ்ப்பாட்டிற்படியே நாய்ச்சிமாரும் பெருமாளாகக் கூடியிருக்கும் சேர்த்தியழைகைக் கண்டவாறே அந்தோ!
இச் சேர்த்தி யழகுக்குப் பொருத்தமாகச் கவிபாடத் தெரியவில்லை எனக்கு செவிக்கினிய
“செஞ்சொற்களால் நிறையப் பாடுகையின்றியே கடுஞ்சொற்களால் ஏதே அரைகுறையாகப் பாடினேனே!,
இப்படி பாடினது மல்லாமல் நம்முடைய பாடலுக்கு ஏதோ வெகுமதி கிடைக்கப்பொகிறதென்று
கைம்மாறு தன்னையுங் கருதிக்கிடந்தேனே! என்று அநுதபிக்கிறார்.

குறையாக வெம் சொற்கள் கூறினேன் கூறி
மறை யாங்கு என உரைத்த மாலை -இறையேனும்
ஈயுங்கொல் என்றே இருந்தேன் எனைப்பகலும்
மாயன் கண் சென்ற வரம் -83-

பதவுரை

மறை–வேதங்களும்
ஆங்கு என உரைத்த மாலை–ப்ரத்யக்ஷித்துச் சொல்ல மாட்டாமல் பரோக்ஷமாகவே சொன்ன எம்பெருமான (அல்பஜ்ஞனான நான்)
மாயன் கண் சென்ற வரம்–அப்பெருமானிடத்தில் தங்கியிருக்கின்ற அநுக்ரஹமானது.
இறையேனும்–ஸ்வல்பமான பலனையாகிலும்
குறை ஆக–குறையுண்டாம்படி
வெம் சொற்கள்–செவிசுடும்படியான சொற்களால்
கூறினேன்–பேசினேன்
கூறி–அப்படி பேசினது மல்லாமல்
ஈயும் கொல் என்றே–(நமக்குக்) கொடுக்குமோ என்று (பலனையும் எதிர்பார்த்துக் கொண்டு)
எனைப் பகலும்–வெகுகாலமாக
இருந்தேன்–இருக்கின்றேன்.

மறை ஆங்கெனவுரைத்தமாலை – ப்ரக்யக்ஷ நிர்த்தேசமென்றும் பரோக்ஷ நிர்தேசமென்றும் இருவகையான வ்யவுஹாரங்களுண்டு.
‘அவன் அங்கே யிருக்கின்றான் அது அப்படிப்பட்டது என்றாற்போன்ற வ்யவ்ஹாரங்களை பரோக்ஷ திர்த்தேசமெனப்படும்
இவன் இதோஇருக்கின்றான் இது இப்படிப்பட்ட என்றாற் போன்ற வ்யாவஹாரங்கள் ப்ரத்யக்ஷ நிர்த்தேசமெனப்படும்.
“யதோ வாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய மநஸா ஸஹ“ என்று – எம்பெருமானுடைய தனமை சிறிதுங் கண்டறியமாட்டாமல்
வேதங்களும் மீள்கின்றன என்கையாலே வேதபுருஷனும் ப்ரத்யக்ஷிக்க பேசுகின்றானென்பதை மறை ஆங்கெனவுரைத்த‘ என்றதனாற் காட்டினபடி.

‘அவன்படிகளை உள்ளபடி தரை கண்டு பேச வொருப்பட்ட வேதங்களானவை அது என்று சொல்லுமித்தனை போக்கி
இதம் மென்று பரிச்சோதிச்சுச் சொல்லமாட்டாதபெருமையையுடைய ஸர்வேச்வரனை“ என்பது முன்னோருரை வாக்கியம்.

மாயன் கண்சென்ற வரம் இறையேனும் ஈயுங்கொலென்றே இருந்தேன் – எம்பெருமானுடைய அநுக்ரஹமானது நாம்
பாடின பாட்டுக்குப் பரிசாக ஏதாவதொரு பலனைத் தந்திடுமன்றோவென்று ப்ரயோஜநாபேக்ஷியாயு மிருந்தேனே! என்றவாறு.

ஆக இப்பாட்டில், திருமாலின் வைலக்ஷணயத்திற்குத் தகுந்தவாறு கவிபாடப் பெறாமைக்கு அநுதாபமும்,
பச்சையை நச்சிப்பாடினத்திற்கு அநுதாபமும் ஆக இரண்டு அநுதாபங்கள் முறையே முன்னடிகளிலும் பின்னடிகளிலும் விளங்கும்.

————————————————————————–

வரம் கருதி தன்னை வணங்காத வன்மை
உரம் கருது மூர்க்கத்தவனை -நரம் கலந்த
சிங்கமாய்க் கீண்ட திருவன் அடி இணையே
அங்கண் மா ஞாலத்து அமுது–84-

பதவுரை

வரம் கருதி–(தேவர்களிடத்துப் பெற்ற) வரத்தை மதித்து
தன்னை வணங்காத–(ஸர்வேச்வரனான) தன்னை வணங்காதிருந்தவனும்
வன்மை உரம் கருதி–(தன்னுடைய) மன வலிமையையும் நினைத்து
மூர்க்க தவனை–மூர்க்கத்தனம் கொண்டிருந்தவனுமான இரணியனை
நரம் கலந்த சிங்கம் ஆய்கீண்ட–நரசிங்க வுருக்கொண்டு பிளந்தொழிந்த
திருவன்–அழகனுடைய
அடி இணையே-உபய பாதமே
அம் கண் மா ஞாலத்து–அழகிய இடமுடைத் தான இம்மாநிலத்தில்
அமுது–(போக்யமான) அம்ருதமாகும்.

ஆழ்வார்!, “குறைவாக வெஞ்சொற்கள் கூறினேன்“ என்று அநுதாபமாகச் சொல்லிக்கொண்டே மேன்மேலும் கவிபாடாநின்றீரே,
உமது சொற்கள் வெஞ்சொற்களாயின் கவிபாடுதலை நிறுத்திக்கொள்ளலாமே‘ என்று சிலர் சொல்லக்கூடு மென்றெண்ணி
ஒரு போக்கியமான வஸ்துவைக்கண்டால் நாமும் இதில் சிறிது வாய்வைக்க வேணுமென்று தோன்றுவதுபோல,
எம்பெருமான் பரமபோக்ய னென்ற்றிந்தவாறே அதில் வாய்வைக்காதிருக்க முடியவில்லை“ என்று விடையளிக்க விரும்பி
இரணியனை நரசிங்க மாகிக்கிழித்த அழகியானுடைய அடியினை இவ்வுலகத்து அமுதம் போன்றுள்ளது என்று
பகவத் விஷய போக்யத்தையை பேசுகிறாரிதில்.

நாங்கலந்த சிங்கத்தினால் கிழித்தெறியப்பட்ட இரணியன் எப்படிப்பட்டவனென்றால்,
அவன் பரம மூர்க்கனாயிருந்தவனென்பன முன்னடிகள்
வரபலத்தினாலம் புஜபலத்தினாலும் மனக் கொடுமையினாலும் வணங்க முடி மன்னனாயிருந்த மூட அரக்கனும் இரணியன்.

————————————————————————–

கீழ் எண்பத்து மூன்றாம் பாட்டில் “குறையாத வெஞ்சொற்கள் கூறினேன். என்று தாம் புன்மையான சொற்களைத் தொடுத்துக்
கவிபாடினதற்கு அநுதபித்தார், ‘இப்படி அநுதாப்படுகிற நீர் வாய்மூடிக்கிடவாமல் மேன்மேலும் கவிபாடி கொண்டே யிருப்பானேன்?‘
என்று கேட்டவர்கட்கு உத்தரமாக ‘பகவத்விஷயம் பரமபோக்யமாயிருப்பதனாலே அதில் வாய் வைத்தே தீரவேண்டியிருக்கின்றது‘
என்பவர்போல பகவத்விஷயத்தின் பரமபோக்யதையைக் கீழ்ப்பாட்டில் அருளிச்செய்தார்.
அப்படி பரமபோக்யமான விஷயத்தைப்பற்றின பாடலாகையாலே என்னுடைய வெஞ்சொற்களும்
அமுதன்ன சொல்மலைபாய் விட்டன என்கிறாரிப்பாட்டில்.

அமுதென்றும் தேன் என்றும் ஆழியான் என்றும்
அமுது அன்று கொண்டு உகந்தான் என்றும் -அமுதன்ன
சொன்மாலை ஏத்தித் தொழுதேன் சொலப்பட்ட
நன்மாலை ஏத்தி நவின்று –85-

பதவுரை

அமுது என்றும்–அமிருதம் போன்றவனென்றும்
தேன் என்றும்–தேன் போன்றவனென்றும்
ஆழியான் என்றும்–திருவாழியை யுடையவனென்றும்
அன்று அமுது கொண்டு உகந்தான் என்றும்–முற்காலத்தில் (கடல் கடைந்து) அமுதமெடுத்தளித்து மகிழ்ந்தவனென்றும்
சொல்லப்பட்ட–சொல்லப்பட்டிருக்கின்ற
நல் மாலை–விலக்ஷணனான எம்பெருமானை
அமுது அன்ன சொல் மாலை–அம்ருதம் போன்ற இப்பாசுரங்களினால்
ஏத்தி ஏத்தி நவின்று தொழுதேன்–பலகாலும் துதித்துச் சொல்லி வணங்கினேன்.

அமுதென்றும் தேனென்றும் ஆழியானென்றும் அன்று அமுதுகொண்டுகந்தானென்றும் சொலப்பட்ட நன்மாலை
அமுதன்ன சொன்மாலை (கொண்டு) ஏத்தியேத்தி நவின்று தொழுதேன் – என்று அந்வயிப்பது,
சக்ரபாணி என்பதும் கடல்கடைந்தமுதங்கொண்டவனென்பதும் எம்பெருமானுக்கு எப்படி திருநாமங்களோ
அப்படியே ‘அமுது‘ என்பதும் ‘தேன்‘ என்பதும் அவனுக்குத் திருநாமங்களாமென்க. “ரஸோ வைஸ“ என்றாள் வேதபுருஷன்.
“தேனைநன்பாலைக் கன்னலையமுதை“ “எனக்குத் தேனே பாலே கன்னலே யமுதே
திருமாலிருஞ் சோலைக் கோனேயாகி நின்றொழிந்தான்“ என்பர் ஆழ்வாரக்ள்.
இப்படி அமுதுந்தேனுமான எம்பெருமானைப் பாடுகின்ற பால்களும் அமுத மயமாகக் குறையில்லையென்பார்
‘அமுதன்ன சொன்மாலை‘ என்றார்.

“அமுது அன்று கொண்டு உகந்தான்“ – தன்னை வந்து அடிபணிந்தவர்கட்குக் காரியம் நிறைவேறினால்
அவர்கள் மகிழ்வதிலுங்காட்டில் அதிகமாக மகிழ்வன் எம்பெருமான், ‘நம் ஆச்ரிதருடைய குறையைத்தீர்க்கப்பெற்றோமே!‘ என்று மகிழ்வனாம்.
அதுதோன்ற ‘உகந்தான்‘ எனப்பட்டது.

————————————————————————–

எம்பெருமானைக் காணவேணுமென்று சிலர் ஸாதநாநுஷ்டாநம் பண்ணுவதுண்டு,
எம்பெருமான் தானே சிலர்க்குக் காட்சி தந்தருளவேணுமென்று பாரிப்பதுண்டு,
இவற்றுள், பரகதஸ்வீகாரமெனப்படுகிற எம்பெருமான் தானே பற்றும் பற்று பலிக்குமேயன்றி, சேதநர் பண்ணுகிற
ஸாதநாநுஷ்டாநம் பலிக்கமாட்டாது என்கிறாரிதில்.
எம்பெருமான் தானே தனது நிரஹேதுகிருபையினாலே தன்படிகளையெல்லாம் எனக்குக்காட்டி யருள நான் காணப்பெற்றேன்,
வேறு எந்த ஸாதநாநுஷ்டாநம் பண்ணியும் நான் காணப்பெற்றேனல்லேன்,
ஆகையாலே, ஸாதநாநுஷ்டாநம்பண்ணிக் காண்கிறவர்கள் என்னோடு ஓப்பர்களோ? என்கை.

நவின்றுரைத்த நாவலர்கள் நாண் மலர் கொண்டு ஆங்கே
பயின்றதனால் பெற்ற பயன் என் கொல் -பயின்றார் தம்
மெய்த் தவத்தால் காண்பரிய மேக மணிவண்ணனை யான்
எத்த்வத்தால் காண்பன் கொல் இன்று –86-

பதவுரை

நவின்று உரைத்த–(அவனது திரு நாமங்களைப்) பலகாலுஞ் சொல்லுகின்ற
நாவலர்கள்–கவிகள்
நாள் மலர் கொண்டு–அப்போதலர்ந்த புஷ்பங்களைக் கொண்டு
ஆங்கே பயின்று–அந்த ஸர்வேச்வரனிடத்தில் நெருங்கி யாச்ரயித்து
அதனால் பெற்ற பயன் என்சொல்–அதனால் (அவர்கள்) பெற்ற பிரயோஜ நம் என்னோ
(எம்பெருமான் தானே நிர்ஹேதுகமாக அநுக்ரஹித்தாலன்றி, இவர்களுடைய ஸ்வப்ரயத்நத்தால் என்ன பேறு பெறமுடியும் என்கை.)
பயின்றார் தம்–நெருங்கி ஸாதநா நுஷ்டாநம் பண்ணுமவர்களுடைய
மெய் தவத்தால்–சரீரம் நொந்து செய்கிற தபஸ்ஸினால்
காண்பு அரிய–காணமுடியாதவனும்
மேகம் மணி வண்ணனை–மேகத்தையும் நீல மணியையும் போன்றநிறத்தை யுடையனுமான எம்பெருமானை
யான்–அடியேன்
இன்று–இப்போது
எத் தவத்தால் கொல் காண்பன்–எந்தத் தபஸ்ஸினால் காணப்பெற்றேன்?
(அவனே காட்டிக்கொடுக்கக் கண்டேனேயொழிய, ஒரு தவஞ்செய்து கண்டவனல்லேனென்கை)

நாம் ஒரு உபாயத்தை அநுஷ்டித்தே எம்பெருமானைப் பெறவேணுமென்கிற எண்ணத்துடன் திருநாமங்களைப் பலகால்
ஸங்கீர்த்தனம் பண்ணியும் புஷ்பம் முதலியவற்றைப் பலகால் கொண்டு ஆராதித்தும் ஆகவிப்படி செய்யும்
உபாயாநுஷ்டாநங்கள் பயனற்றவை என்பன-முன்னடிகள்.

அப்படி உபாயாநுஷ்டநாம் பண்ணினவர்களுக்கும் காண்பதற்கு அரியனான எம்பெருமானைத் தாம் கண்டபடியையும்,
‘அப்படி கண்டது ஒரு தவத்தினாலன்று, அவனது நிர்ஹேதுக கிருபையினாலே‘ என்பதையும் தெரிவிப்பன – பின்னடிகளில்.

தவம் – உடம்பினால் வருத்தப்பட்டுச் செய்யும் காரியம். யான் எத்தவத்தால் காண்பன்கொல் இன்று – நான் ஒரு ஸாதநமும்
அநுஷ்டியாமல் இன்று காணப்பெற்றேன் என்றவாறு.

————————————————————————–

இப்பாட்டும் கீழ்ப்பாட்டுக்கு சேஷபூதமானதேயாம் எம்பெருமானது திருவருளால் தமக்குண்டான வைலக்ஷண்யத்தைப் பேசுகிறார்.
நான் கர்ப்பவாஸம் செய்யும்போதே பிடித்து எம்பெருமானால் நிர்ஹேதுகமாகக் கடாக்ஷிக்கப்பெற்றுத் தன்னுடைய
ஸ்வரூப ரூபகுண் விபூதிகளையெல்லாம் அவன் தானே காட்டக்கண்டு
“ஜாயமாநம் ஹி புருஷம் யம் பச்யேத் மதுஸூதந ஸாத்லிகஸ் ஸது விஜ்ஞேயஸ் ஸவை மோக்ஷார்த்த சிந்தக –
(கர்ப்பத்திலேயே எம்பெருமான் எவனைக் கடாக்ஷித்தருள்வனோ அவனே ஸாத்விகன், அவனே முழுக்ஷுவாவான்)
என்கிறபடியே சுத்த ஸாத்விகனாய் அப்பெருமானுடைய திருக்கல்யாண குணம் முதலியவற்றை
ஸ்வயம் அநுபவிப்பதும் பிறர்க்கு எடுத்து உபதேசிப்பதுமாக இவற்றையே காலக்ஷேபமாகக் கொண்டிருந்தவன்,
எல்லாரும் பகவானை மறந்திருக்கும்படியான கர்ப்பவாஸ காலத்திலுங்கூட அடியேன் அவனை மறவாது
வாழ்த்தக்கொண்டிருந்தேனாகையால், நான் எம்பெருமானை நெடுநாளாகவே அறிந்தவனே யன்றி இன்று புதிதாக அறிந்தவனல்லேன்.

இன்றா அறிகின்றேன் அல்லேன் இரு நிலத்தைச்
சென்று ஆங்கு அளந்த திருவடியை -அன்று
கருக் கோட்டியுள் கிடந்தது கை தொழுதேன் கண்டேன்
திருக் கோட்டி எந்தை திறம் -87-

பதவுரை

அன்று கரு கோட்டியுன் கிடந்து–முன்பு கர்ப்ப ஸ்தானத்துக்குள்ளே கிடந்து
திருக்கோட்டி எந்தை திறம்–திருக்கோட்டியூர்ப் பெருமானுடைய தன்மைகளை
கண்டேன்–கண்டு அநுபவிக்கப் பெற்றேன்
கை தொழுதேன்–கை தொழவும் பெற்றேன், (ஆனபின்பு)
இரு நிலத்தை–விசாலமான இந்நிலத்தை
ஆங்கு சென்று அளந்த திரு அடியை–அங்கங்கே தானே வியாபித்து முழுதும் அளந்து கொண்ட திருவடியை
இன்று ஆ அறிகின்றேன் அல்லேன்–இன்றைக்குத்தான் அறிந்து கொண்டே னென்பதில்லை. (கர்ப்பவாஸமே தொடங்கி அறிவேன்)

இருநிலத்தைச் சென்று ஆங்களந்த திருவடியை என்றது இங்கு விசேஷாபிப்ராயத்தோடு கூடியது,
“அவன் அளக்கிற விடத்திலே பூமி சென்றதோ? பூமி கிடந்தவிடமெல்லாம் தானே சென்று அளந்தானித்தனையன்றோ“
என்பது பெரியவாச்சான் பிள்ளை வியாக்கியான ஸ்ரீஸூக்தி.
உலகமுள்ள விடமெல்லாம் தானே சென்று அடிப்படுத்திக் கொண்டதுபோல
அவன் தானே மேல்விழுந்து விஷயீகரிக்கப்பெற்றேனடியேன் என்றவாறு.

இதில் முன்றாமடியில் ஒரு சங்கை பிறக்கும், அதாவது – குருக்கத்திப் பந்தரிலே ஒரு குருக்கத்திமலரிலே திருவவதரித்தத்தனால்
அயோநிஜராகிய இவ்வாழ்வார்க்கு கர்ப்பவாஸமென்பது கிடையாதே,
அப்படியிருக்க “கருக்கோட்டியுள் கிடந்து“ என்று இவர் தாம் எங்ஙனே அருளிச்செய்கிறாரென்று.

இதற்கு உத்தரமாவது – ‘கருக்கோட்டியுள் கிடந்து‘ என்ற விகனால்
* தீண்டாவழும்பும் செந்நீரும் சீயும் நரம்பும் செறிதசையும் வேண்டாநாற்றம் மிக்கிருக்கிற கர்ப்பத்தும்பையில்நின்றும்
ஆழ்வார் பிறந்தாரென்று கொள்ளவேண்டிய அவசியம் யாதுமில்லை, எவ்விடத்தில் நின்று அவதரித்தாரோ அவ்விடமே கர்ப்ப ஸ்தாநமாகும்.
‘நான் இவ்விருள் தருமாஞாலத்தில் வந்து தோன்றுவதற்கு முன்னமே எம்பெருமானுடைய கடாக்ஷம் பெற்றவன்‘ என்று
சொல்லுவதே இங்கு விவக்ஷிதம். “அன்று நான் பிறந்திலேன் பிறந்தபின் மறந்திலேன்“ என்றாற்போலுமாம்.

————————————————————————-

எம்பெருமானே வேறொன்றை எதிர்பாரத உபாயபூதன் என்று நன்குணர்ந்து அவ்வுணர்ச்சியின்படியே நடந்து
கொள்ளுமவர்களே ஸம்ஸாரபந்தத்தை அறுத்துக் கொண்டு வைகுந்த நின்வாசலினுள்ளே புகப்பெறுவர்,
மற்றையோர்களுக்கு வைகுந்த வாசற்கதவு திறவாதே மூடிக்கொள்ளு மென்கிறார்.

திறம்பிற்று இனி அறிந்தேன் தென்னரங்கத்து எந்தை
திறம்பா வழி சென்றார்க்கு அல்லால் -திறம்பாச்
செடி நரகை நீக்கித் தான் செல்வதன் முன் வானோர்
கடி நகர வாசற் கதவு–88-

பதவுரை

தென் அரங்கத்து எந்தை–தென்னரங்கத்தில் பள்ளிகொண்டிருக்கு மெம்பெருமானுடைய
திறம்பா வழி–பிசகாத மார்க்கத்திலே (அவனே உபாயோபேயம் என்னும் நெறியிலே)
சென்றார்க்கு அல்லால்–நிற்பவர்களுக்குத் தவிர (மற்றை யோர்க்கு)
தாம்–தாமாகவே
திறம்பா செடி நரகை நீக்கி–அறுக்க முடியாத புதர் போன்ற ஸம்ஸார பந்தங்களை அறுத்துக் கொண்டு
செல்வதன் முன்–போவதற்குள்ளே
வானோர்–நித்ய ஸூரிகளுடையதும்
கடி–அரணை யுடையதானதுமான
நகரம்–வைகுந்தமா நகரத்தினுடைய
வாசல் கதவு–வாசற் கதவானது
திறம் பிற்று–மூடிக்கொண்டதாகும்
இனி அறிந்தேன்–(இதை) இப்போது அறிந்து கொண்டேன்

திறம்பிற்று –எதிர்காலப்பொருளில் இறந்தகாலமாகச் சொன்னது காலவழுவமைதி.

————————————————————————–

எம்பெருமானே! நீ ஆச்ரிதர்களுக்குக் காரியஞ்செய்வதென்று மனம்வைத்துவிட்டால் அருமையான காரியங்களையும்
எளிதாகச்செய்து முடிப்பவன்ன்றோ என்ன வேண்டி, அடியவர்க்காச்செய்த சில காரியங்களை எடுத்துரைக்கின்றாரிதில்.

கதவிக் கதஞ்சிறந்த கஞ்சனை முன் காய்ந்து
அதவிப் போர் யானை ஒசித்துப -பதவியாய்
பாணியால் நீரேற்றுப பண்டு ஒரு நாள் மாவலியை
மாணியாய் கொண்டிலையே மண்–89-

பதவுரை

முன்–முற்காலத்தில்
கதம் சிறந்த–கோபம் மிகுந்த
கஞ்சனை–கம்ஸனை
கதவி காய்ந்து–கோபித்து முடித்து
போர் யானை–போர் செய்வதாக எதிர்த்து வந்த குவலயாபீடமென்னும் யானையை
ஒசித்து–கொம்பு முறித்து
அதவி–கொன்று,
பண்டு ஒரு கால்–முன்னொரு காலத்தில்
பதவியாய்–நீர்மையை யுடையனாயக்கொண்டு
மாணி ஆய்–பிரமசாரியாகி
மாவலியை–மஹாபலியினிடத்திலே
பாணியால்–கையினாலே
நீர் ஏற்று–தானம் வாங்கி
மண் கொண்டிலையே–பூமியைப் பெற்றாயல்லையோ?

“சாதுசனத்தை நலியுங்கஞ்சன்“ என்கிறபடியே பாகவதர்களுக்கெல்லாம் கொடுமையியற்று மவனாயிருந்த கம்ஸனைச் சீறி முடித்தாய்,
பாகவதற்களுக்கு உயிரான உன்னைக் கொல்லுமாறு அக்கஞ்சனால் ஏவிநிறுத்தப்பட்டிருந்த மதயானையை முடித்தாய்,
இந்திரனுக்கா மாவலிபக்கல் மூவடிமண் நீரேற்றுப்பெற்று மூவுலகங்களையும் அடிப்படுத்தி வாழ்வித்தாய்.
ஆக இப்படிப்பட்ட காரியங்கள் செய்தவனல்லையோ நீ.

அதவுதல் – ஹதம்பண்ணுதல். “அதவிப் போர்யானையொசித்து“ என்பதே வியாக்கியானத்துக்கிணங்கிய ஆன்றோர் பாடம்,
“உதவிப் போர்யானை“ என்றும் சிலர் ஓதுவர்களாம், இப்பாடம் மோனையின்பத்துக்குச் சேர்ந்திருக்கு மென்னலாமாயினும்
முன்னோர் விரும்பியபாடமன்று கம்ஸனுக்கு உதவியாயிருந்த யானையை ஒசித்து என்று பொருள் கூறலாம்.

பதவியாய் –“***“ என்னும் வடசொல்லாகக் கொண்டு ‘வழியாகவே‘ என்று பொரு கொள்வதம் தகும். பாணி –வடசொல்.

————————————————————————–

‘ஆழ்வீர்! நாம் முன்பு செய்த காரியங்களை எடுத்துரைக்கிறீர், அஃது இருக்கட்டும். இப்போது நாம் உமக்குச் செய்ய
வேண்டிய காரியம் ஏதேனுமுண்டாகில் சொல்லிக் காணீர்‘ என்று ஆழ்வாரை நோக்கி எம்பெருமான் அருளிச்செய்ய,
பிரானே! உன்னை ஆச்ரயித்தபோதே எல்லாப் புருஷார்த்தங்களும் பெற்றேனோனேன்காண்,
மண்ணுலகத்தோடு விண்ணுலகத்தோடு வாசியற உபயவிபூதியும் நானிட்டவழக்காம்படி ஆள்வதற்கு உதியேனானபின்!
இனி எனக்குச் செய்யவேண்டுவதொன்றுண்டோ? என்றாராயிற்று.

மண்ணுலகம் ஆளேனே வானவர்க்கும் வானவனாய்
விண்ணுலகம் தன்னகத்து மேவேனே -நண்ணித்
திருமாலை செங்கண் நெடியானை எங்கள்
பெருமானைக் கை தொழுத பின்-90-

பதவுரை

திருமாலை–பிராட்டியினடத்தில் வியாமோஹமுடவனும்
செம் கண்–செந்தாமரை போன்ற திருக்கண்களை யுடையவனும்
நெடியானை–ஸர்வேச்வரனுமான
எங்கள் பெருமானை–எம்பெருமானை
நண்ணி–கிட்டி
கை தொழுத பின்–அஞ்ஜலி பண்ணி ஆச்ரயித்த பின்பு
மண் உலகம் ஆளேளே–இவ்விபூதியை நானிட்டவழக்காக நிர்வஹிக்கமாட்டேனோ?
வானவர்க்கும் வானவன் ஆய்–தேவாதிதேவனாய்க் கொண்டு
விண் உலகம் தன் அகத்து–நித்ய விபூதியிலே
மேவேனே–நித்யாநந்த மநுபவிக்க மாட்டேனோ?

————————————————————————–

இப்பாட்டுத் தொடங்கி மேல் நான்கு பாட்டுக்களாலே பரோபதேசம் பண்ணுகிறார்.
உலகத்தவர்களே! நீங்கள் செய்யும் காரியங்களைப் பார்த்தால் நரக மார்க்கத்திற்கே செல்லப் பார்க்கிறீர்களென்று
நினைக்கும்படியா யிராநின்றது. ‘நரகவேதனை நமக்குக் கிடைத்தால் என்செய்வோம்‘ என்று கலங்கி நிற்கிறீர்களாகில்
அதைத் தப்புவதற்கு இப்போதே உபாயம் சொல்லுகிறேன் கேளுங்கள், உலகளந்த பெருமானுடைய சேவடியை
வணங்குதற்கு முயற்சி செய்தீர்களாகில் பின்னால் அருநரகம் சேராமல் பிழைக்கலாம் என்கிறார்.

பின்னால் அரு நரகம் சேராமல் பேதுறுவீர்
முன்னால் வணங்க முயல்மினோ -பன்னூல்
அளந்தான் இக்கார் கடல் சூழ் ஞாலத்தை எல்லாம்
அளந்தான் அவன் சேவடி –91-

பதவுரை

பின்னால்–சரீரம் விழுந்த பின்பு
அரு நகரம்–கடினமான நரகத்தை
சேராமல்–அடையாமலிருக்கும் படிக்கு
பேதுறுவீர்–மனங்கலங்கியிருக்கும் மனிசர்களே!
பல் நூல்–பலவகைப்பட்ட சாஸ்த்ரங்களினால்
அளந்தானை–நிச்சயிக்கப்படுபவனும்
கார் கடல்சூழ் ஞாலத்தை எல்லாம் அளந்தானவன்–கரிய கடல் சூழப்பட்ட பூமியையெல்லாம் அளந்து கொண்டவனுமான எம்பெருமானுடைய
சே அடி–செவ்விய திருவடிகளை
முன்னால்–இப்போதே
வணங்க–வணங்குமாறு
முயல்மின்–முயற்சிசெய்யுங்கள்.

‘சேவடியை வணய்குமினோ‘ என்னாமல் – ‘வணங்க முயல்மினோ‘ என்றமையால் – எம்பெருமான் திருவடிகளை
வணங்க வேணுமென்னும் முயற்சியுண்டான மாத்திரமே நரகம் தவிரும் என்பது விளங்கும்.

————————————————————————–

எம்பெருமானது திருவடிகளை வணங்க முயன்றால் நரகயாதனை தவிருமென்றார் கீழ்ப்பாட்டில்,
அவனுடைய திருநாமங்களைக் கீர்த்தனம்பண்ணினால் நீங்கள் விரும்புகின்ற புருஷார்த்தங்களெல்லாம் கைபுகுமென்கிறாரிதில்.

அடியால் முன் கஞ்சனைச் செற்று அமரர் ஏத்தும்
படியான் கொடி மேல் புள் கொண்டான் நெடியான் தன்
நாமமே ஏத்துமின்கள் ஏத்தினால் தாம் வேண்டும்
காமமே காட்டும் கடிது–92-

பதவுரை

முன்–முன்னே
அடியால்–திருவடியினால்
கஞசனே–கம்ஸனை
செற்று–உதைத்துக் கொன்றதனாலே
அமரர் ஏத்தும் படியான்–தேவர்கள் துதிக்கும் படியாக வுள்ளவனும்
கொடிமேல் புள் கொண்டான்–த்வஜத்திலே கருடபக்ஷியையுடைய வனுமான
நெடியான் தன்–ஸர்வேச்வரனுடைய
நாமமே–திருநாமங்களையே கொண்டு
ஏத்துமின்கள்–ஸ்தோத்ரம் பண்ணுங்கள்
ஏத்தினால்–அப்படி ஸ்தோத்ரம் பண்ணினால்
தாம் வேண்டும் காமம்–தாங்கள் அபேக்ஷிக்கும் புருஷார்த்தத்தை
கடிது–விரைவாக
காட்டும்–(அத்திருநாமம்) பெறுவிக்கும்

உயர்ந்த சிங்காசனத்தின் மீது வீற்றிருந்த கம்ஸனைத் தலைமயிர் பற்றியிழுத்துக் கிரீடம் சிதறக் கீழேநள்ளித் திருவடியால்
உதைத்து முடித்ததனால்இந்த வீரச்செயலிலே ஈடுபட்டுத் தேவர்கள் துதிக்கநின்ற கருடத்வஜனுடைய திருநாமங்களையே சொல்லுங்கள்,
சொன்னால், சொன்ன வாய் மூடுவதற்குள்ளே தாம் தாம் விரும்பும் புருஷார்த்தங்களை அத்திருநாமமே பெறுவிக்கு மென்றாராயிற்று.

————————————————————————-

உலகத்தவர்களே!, ‘நரகம்‘ என்கிற சொல் காதல் பட்டமாத்திரத்திலே ஒவ்வொருவருடைய உடலும் நடுங்கும்,
அதற்குமேல், அந்த நரகத்தில் யமபடர்கள் செய்கிற நலிவுகளைக் கேட்டாலோ இடிவிழுந்தாற்போலாகும்.
இப்படி கோரமான நரகவேதனைகட்கு இடமுண்டாவதற்கு முன்னே, விரோதி நிரஸத சீலனான
எம்பெருமானுடைய தோத்திரத்திலே மூளுங்கோள் என்கிறார்.

கடிது கொடு நரகம் பிற்காலும் செய்கை
கொடிது என்றது கூடா முன்னம் -வடி சங்கம்
கொண்டானைக் கூந்தல் வாய் கீண்டானைக் கொங்கை நஞ்சு
உண்டானை ஏத்துமினோ உற்று–93-

பதவுரை

கொடுநரகம்-க்ரூரமான நரகமானது
கடிது–கண்கொண்டு காணவொண்ணாதபடி கோரமாயிருக்கும்
பிற்காலும்–அதற்குமேலும்
செய்கை–(அங்கு யமபடர்கள் செய்யும் யாதனைச்) செயல்கள்
கொடிது–பொறுக்க முடியாதனவாயிருக்கும்,
என்று–என்று தெரிந்து கொண்டு
அது கூடா முன்னம்–அந்த நரகவேதனை நேராதபடி
வடி சங்கம் கொண்டானை–கூர்மையான த்வநியையுடைய சங்கைத் திருக்கையிலே உடையவனும்
கூந்தல் வாய் கீண்டானை–கேசியின்வாயைக் கீண்டொழித் தவனும்
கொங்கை நஞ்சு உண்டானை–(பேய்ச்சின்) மூலையில் தடவியிருந்த விஷத்தை உண்டவனுமான எம்பெருமானை
உற்று–பொருந்தி
ஏத்துமின்–ஸ்தோத்திரம் பண்ணுங்கள்

கூந்தல்வாய் கீண்டானை – தலைமயிர்க்கு வாசகமான கூந்தலென்னுஞ்சொல் ‘லக்ஷிதலக்ஷணை‘ என்னும் வழியால்
கேசியென்பவனைக் குறிக்கும். எங்ஙனேயென்னில், கூந்தல் என்பதற்கு வடமொழிநாமம் கேசமாகும்.
அச்சொல் கேசியை நினைப்பூட்டும். வில்லிப்புத்தூரார் பாரதத்தில் புத்திஸேதனைச் சொல்லவேண்டுமிடத்து, ‘
திங்கள் சேர் பெயரினான்“ என்றதுகாண்க.
(திங்கள் – சந்திரன், தமிழில் மதி என்னுஞ்சொல்லும் சந்திரனைச் சொல்லும், ‘மதி‘ என்கிற அச்சொல்
வடமொழியாய்க்கொண்டு புத்தியென்னும் பொருள் தரும். ஆகவே, புத்திஸேநன் என்ற பெயர் திங்கள் சேர் பெயராயிற்று,
இங்ஙனே தமிழ்ப் பிரயோகங்கள் பலவுள) கம்ஸனுடைய ஏவுதனினால் குதிரைவடிவங்கொண்டு
கண்ணபிரானைக் கொல்லவந்த கேசி யன்னுமஸுரனை வாய்பிளந்து முடித்தவரலாறு ப்ரஸித்தம்.

————————————————————————–

உற்று வணங்கித் தொழுமின் உலகு ஏழும்
முற்றும் விழுங்கும் முகில் வண்ணன் -பற்றிப்
பொருந்தா தான் மார்பிடந்து பூம் பாடகத்துள்
இருந்தானை ஏத்தும் என் நெஞ்சு–94-

பதவுரை

உலகு எழும் முற்றும் விழுங்கும்–உலகங்களை யெல்லாம் (பிரளயங்கொள்ளாதபடி) அமுது செய்தவனும்
முகில் வண்ணன்–மேகம் போன்ற வடிவையுடையவனும்
பொருந்தா தான்–(ப்ரஹ்லாதனுக்கு) சத்ருவான் இரணியனுடைய
மார்பு–மார்வை
பற்றி–பிடித்து
இடந்து–கிழித்தவனும்
பூ பாடகத்துள் இருந்தானை–அழகிய திருப்பாடகமென்னுந் திருப்பதியில் வீற்றிருப்பவனுமான எம்பெருமானை
என் நெஞ்சு–என் மனமானது
ஏத்தும்–துதிக்கும் (நீங்களும் இப்படியே)
உற்று வணங்கி தொழுமின்–பொருந்தி வணங்கி ஆச்ரயியுங்கோள்.

பண்டொருகால் உலகமெல்லாம் பிரளயப்பெருங்கடலிலே அழிந்து போவதாயிருக்கையில் அவற்றையெல்லாம்
திருவயிற்றிலே யெடுத்துவைத்தடக்கிக் காத்தருளின சிரமம் தீரவும், ப்ரஹ்லாதாழ்வானைப் பாதுகாத்தருளவேண்டி
இரணியன் மார்பிடந்த சிரமம் தீரவும் கச்சிநகரில் திருப்பாடகமென்னுந் திருப்பதியில்
இனிதாக எழுந்தருளியிருக்கு மெம்பெருமானை என்நெஞ்சு ஏத்துகின்றது,
நீங்களும் அவனையே வணங்கி வாழுங்கள் என்று உலகத்தவர்க்கு உபதேசித்தாராயிற்று.

பாடகம் –பெரியகாஞ்சீபுரத்திலுள்ள பாண்டவதூதர் ஸந்நிதி. ‘பாடு அகம்‘ என்று பிரிக்க.
பெருமைதோற்ற எழுந்தருளியிருக்கும். தலம் என்கை.
கண்ணன் பாண்டவதூதனாய்த துரியோதனனிடஞ் சென்றபொழுது துர்யோதநன் ரஹஸ்யமாகத் தனது ஸபாமண்டபத்தில்
மிகப்பெரிய நிலவறையொன்றைத் தோண்டுவித்து அதில் அனேகமல்லர்களை ஆயுதபாணிகளாய் உள்ளேயிருக்கவைத்து
அப்படுகுழியைப் பிறர் அறியவொண்ணாதபடி மூங்கிற்பிளப்புகளால் மேலேமூடி அதன்மேற் சிறந்த ரத்நாஸநமொன்றை அமைத்து
அவ்வாஸனத்தில் கண்ணனை வீற்றிருக்கச் சொல்ல, அங்ஙனமே ஸ்ரீகிருஷ்ணன் அதன்மேல் ஏறினமாத்திரத்திலே
மூங்கிற் பிளப்புக்கள் முறிபட்டு ஆசனம் உள்ளிறங்கிப் பிலவறையிற் செல்லுமளவில், அப்பெருமான் மிகப்பெரிதாக
விச்வரூபமெடுத்துப் பல கைகளையும் கால்களையுங்கெண்டு எதிர்க்கவே, அப்பிலவறையிலிருந்த மல்லர்கள் அழிந்தனர்.
அப்போது கொண்ட விச்வரூபத்திருக்கோலத்திற்கு ஸ்மாரமாகப் பெரிய திருமேனியோடே ஸேவைஸாதிக்குமிடம் பாடகம்.
பாடு –பெருமை. (“அரவுநீள் கொடியோனவையுளாசனத்தை அஞ்சிடாதேயிட அதற்குப் பெரியமாமேனி
அண்டமூடுருவப் பெருந்திசை யடங்கிட நிமிர்ந்தோன்“ என்ற பெரிய திருமொழிப்பாசுரத்தில்
அநுஸந்திக்கப்பட்ட திருமேனிவளர்த்தியோடே ஸேவைஸாதிக்கு மாறுகாண்க.

————————————————————————–

பெருமாள் கோயில் ஸ்ரீஹஸ்திசைல சிகரோஜ்வல பாரிஜாதமான பேர்ருளாளனை
மங்களாசரஸநம் பண்ணும் பாசுரங்கள் – இப்பாட்டும் மேற்பாட்டும்.

என் நெஞ்சமேயான் என் சென்னியான் தானவனை
வன்னெஞ்சம் கீண்ட மணி வண்ணன் -முன்னம் சேய்
ஊழியான் ஊழி பெயர்த்தான் உலகு ஏத்தும்
ஆழியான் அத்தி ஊரான் -95-

பதவுரை

தானவனை–இரணியனாகிற அகரனுடைய
வல் நெஞ்சம்-வலிய மார்வை
கீண்ட–கிழித்தொழித்தவனும்
மணி வண்ணன்–நீலமணிபோன்ற நிறத்தை யுடையவனும்
முன்னம் செய் ஊழியான்–நெடுங்காலமாக வுள்ளவனும்
ஊழி பெயர்த்தான்–காலம் முதலிய ஸகல வஸ்துக்களையு முண்டாக்கினவனும்
உலகு ஏத்தும் ஆழியான்–உலகத்தவரால் துதிக்கப்பட்டவனாய்க் கொண்டு திருப்பாற்கடலில் பள்ளி கொண்டிருப்பவனும்
அத்தியூரான்–ஹஸ்திகிரியில் எழுந்தருளியிருப்பவனுமான எம்பெருமான்
என் நெஞசம் மேயான்–என்னுடைய நெஞ்சிலே பொருந்தியிரா நின்றான்
என் சென்னியான்–என்னுடைய தலையிலே உள்ளான்.

‘எங்குமுளன் கண்ணன்‘ என்று சொன்ன ப்ரஹ்லாதாழ்வானைப் பலபடிகளாலும் நலிந்த இரணியாசுரனுடைய
முரட்டுடலைப்பினைந்தொழித்தவனும், இவ்விதமாக பக்தபரிபாலனம் செய்யப்பெற்றதனாலே திருமேனி புகர்பெற்றவனும்,
அநாதிகாலமாகவே பிறப்பிறப்பு மூப்புகள் ஒன்றுமின்றி யிருப்பவனும், ஸகல பதார்த்தங்களையும் இவ்வுலகில் தோன்றுவித்தவனும்,
உலகத்தவரால் துதிக்கப்பட்டவனாய்த் திருப்பாற்கடலில் துயில் கொண்டிருப்பவனுமான எம்பெருமான் அத்தியூர் என்னப்படுகிற
ஸ்ரீஹஸ்திகிரி க்ஷேத்ரத்தில் எழுந்தருளியிராநின்றான், அவன் இன்று எனது நெஞ்சினுள்ளும் தலையின் மீதும்
வந்து சேர்ந்து மகிழ்விக்கின்றான் காண்மின் என்கிறார்.

திருவாய்மொழியில் “இவையு மவையு முவையும்“ என்ற திருவாய்மொழியில் ஆழ்வார் தம்முடைய ஒவ்வொரு அவயவத்திலும்
எம்பெருமான் வந்து சேர்ந்ததாக அநுஸந்தித்ததுபோலவே இப்பாட்டிலும் அநுஸந்தேயம்,
நெஞ்சு, தலை என்ற இரண்டிடங்களை மாத்திரம் சொன்னது மற்ற ஒக்கலை, கண், மார்பு, தோள் முதலிய அவயவங்கட்கும் உபலக்ஷணமென்க.

ஸ்ரீஹஸ்திகிரியின் கீழே நரஸிம்ஹ மூர்த்தியாக ஸேவை ஸாதிக்கும் பெருமானைத் தானவனை
வன்னெஞ்சங்கீண்ட மணிவண்ணன் என்றதனால் மங்களாசாஸநம் செய்கிறாரென்னலாம்.

முன்னம் சேயூழியான் – ‘சேய்‘ என்றது வெகுதூரம் என்றபடி. ஊழியாவது காலம்.
முன்னமே பிடித்து வெகுதூரமான காலத்திலு உள்ளான் எனவே, அநாதிஸித்தன் என்றதாம்.

ஊழி பெயர்த்தான் –இங்கும் ஊழியென்று காலத்தைச் சொல்லுகிறது. பரமபதமாகிய நித்யவிபூதியில் காலமென்பது கிடையாது,
அஃது உள்ளது இவ்விபூதியில் மாத்திரமே ஆகவே, இங்குக் காலத்தைச்சொன்னது மற்றும் இவ்விபூதியிலுள்ள வஸ்துக்களையெல்லாம் சொன்னபடி.
பெயர்த்தல் – உண்டாக்குதல். “உலகேத்து மாழியான்“ என்பதற்கு –உலகம் புகழும் திருவாழி யாழ்வானையுடையவன் என்றும் பொருள்கொள்ளலாம்.

அத்தியூரான் – ‘ஹஸ்தி‘ என்னும் வடசொல் அத்தியெனத்திரியும். ஹஸ்திக்ஷேத்ர மென்றபடி.
ஹஸ்திகிரி மஹாத்மியத்தில் முதலதயாயத்திற் சொல்லப்பட்டுள்ளமை காண்க. பண்டு இந்த க்ஷேத்ரத்தல் திக்கஜங்கள் வந்து
‘எம்பெருமானை ஆராதித்தமையால் அதுபற்றி ஹஸ்திகிரி யென்று திருநாம்மாயிற்றாம். மற்றும் சில வகையாகவும் நிர்வஹிப்பதுண்டு.

————————————————————————–

தென்னத்தியூரரான போருளாளப் பெருமான் மங்களாசாஸநம் செய்தருளு மிப்பாசுரத்தில் ‘புள்ளையூர்வான்‘ என்று
ஆழ்வார் திருவாய்மலர்ந்தருளவேதான் இப்பெருமானுடைய கருடோத்ஸவம் இமவந்தந் தொடங்கி
இருங்கடலளவும் பிரஸித்தமாகப் பெருமேன்மை வாய்ந்ததாயிற்றென்று பெரியோர் பணிப்பர்.

அத்தி யூரான் புள்ளை யூர்வான் அணி மணியின்
துத்தி சேர் நாகத்தின் மேல் துயில்வான் -முத்தீ
மறையாவான் மா கடல் நஞ்சுண்டான் தனக்கும்
இறையாவான் எங்கள் பிரான் –96-

பதவுரை

புள்ளை ஊர்வான்–பெரிய திருவடியை வாஹனமாகக் கொண்டு நடந்து மவனும்
அணி மணியின் துத்திசேர் நாகத்தின் மேல் துயில்வான்–அழகிய மாணிக்கங்களோடு கூடினவனாய்
படப்பொறிகளை யுடையனான ஆதிசேஷன் மேல் பள்ளி கொள்பவனும்
முத்தீ ஆவான்–மூன்று அக்நிகளாலே ஆராதிக்கப்படுகிறவனும்
மறை ஆவான்–வேதங்களால் பிரதிபாதிக்கப்படுகிறவனும்
மா கடல் நஞ்சு உண்டான் தனக்கும் இறை ஆவான்–பெரிய கடலில் நின்று உண்டான விஷத்தை
உட்கொண்டவனான ருத்ரனுக்கும் ஸ்வாமியாயிருப்பவனுமான
எங்கள் பிரான்–எம்பெருமான்
அத்தியூரான்–ஸ்ரீஹஸ்திகிரியிலே எழுந்தருளி யிருக்கிறான்.

நாகத்தின்மேல் துயில்வான் –திருப்பாற்கடலில் திருவனந்தாழ்வான் மீது பள்ளிகொள்ளும் பெருமானே ஸ்ரீஹஸ்திகிரியிலும்
ஸேவை ஸாதித்தருள்வதாக அநுஸந்திக்கிறார். இந்த விசேஷணம் கூரத்தாழ்வான் திருவுள்ளத்திலே புகுந்திருந்து,
வரதராஜஸ்தவத்தில் “நீலமேக நிபம்“ என்னும் ச்லோகத்தில் ‘அநந்தசயம் த்வாம்‘ என்றருளிச் செய்வதற்குக் காரணமாயிற்றென்க.
என்ற வேதாந்த தேசிக திவ்யஸூக்தியும் ஸ்மரிக்கத்தகுமிங்கு.

துத்தி –படங்களிலுள்ள பொறி, இலக்கணையால் படத்தையும் சொல்லுமென்ப.
“முத்தீ மறையாவான்“ “முத்தி மறையாவனா“ என்பன பாடபேதங்கள். முந்தின பாடத்தில், முத்தீ ஹோமம் செய்யும் முகத்தாலே
ஆராதிக்கப்படுகவனும் வேதங்களால் பிரதிபாதிக்கப்படுபவனுமான பெருமான் என்க.
அன்றியே, த்ரேதாக்நிகளைச் சொல்லுகிற வேதங்களாலே பிரதிபாதிக்கப்படுமவன் என்றுமாம்.
இனி, “முத்திமறையாவான்“ என்ற பாடத்தில், மோக்ஷத்தைப் பிரதிபாதிக்கின்ற வேதங்களாலே சொல்லப்படுமவன் என்கை.

கால் இல்லா யானை மேல் பறந்து காட்டி விரோதிகளை நிரசித்த ஐதிக்யம் –
ஏகாம்பரர் கோயிலில் முன்பே -இன்றும் யானை வாகன ஏசல் கண்டு அருளுகிறார்
யானை வாஹனத்துக்கு கால் இல்லை இங்கு

————————————————————————–

எம்பெருமானே! என்போன்ற அடியார்களை விஷயீ கரிப்பதற்காகவன்றோ திருக்குடந்தையிலே
வந்து சாய்ந்தருளா நின்றாய் என்கிறார்.
‘கும்பகோணம்‘ என்ற வடசொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல் குடமூக்கு என்பதாம்.
(கும்பம் –குடம், கோணம் –மூக்கு) இல் –க்ருஹம்.

எங்கள் பெருமான் இமையோர் தலைமகன் நீ
செங்கண் நெடுமால் திரு மார்பா -பொங்கு
பட மூக்கின் ஆயிர வாய்ப் பாம்பணை மேல் சேர்ந்தாய்
குட மூக்கில் கோயிலாகக் கொண்டு–97-

பதவுரை

செம் கண் நெடுமால்–சிவந்த திருக்கண்களையுடைய ஸர்வேச்வரனே!
திருமார்பா-பிராட்டியைத் திருமார்பிலுடையவனே!
இமையோர் தலை மகன் நீ–நித்யஸூரிகளுக்குத் தலைவனான நீ
எங்கள் பெருமான்–எங்களுக்கு ரக்ஷகனாய்க் கொண்டு
குடமூக்கு இல்–கும்பகோண க்ஷேத்ரத்தை
கோயில் ஆ கொண்டு–கோயிலாகத் திருவுள்ளம்பற்றி
பொங்கு படம் மூக்கின்–விகஸித்தபடங்களையும் மூக்கையுமுடையவனும்
ஆயிரம் வாய்–ஆயிரம் வாயையுடையவனுமான
பாம்பு–ஆதிசேஷனாகிற
அணை மேல்–படுக்கையின் மீது
சேர்ந்தாய்–பள்ளி கொண்டருளினாய்.

————————————————————————–

தம்மை விஷயீகரித்த எம்பெருமானுடைய சில திவ்ய சேஷ்டிதங்களை அநுபவிக்கிறார்.

கொண்டு வளர்க்கக் குழவியாய் தான் வளர்ந்தது
உண்டது உலகு ஏழும் உள் ஒடுங்கக் கொண்டு
குடமாடிக் கோவலனாய் மேவி என்நெஞ்சம்
இடமாகக் கொண்டவிறை-98-

பதவுரை

கோவலன் ஆய்–இடையனாய் வந்து பிறந்து
குடம் கொண்டு ஆடி–குடங்களைக் கையிலே கொண்டு கூத்தாடி (அதனாலுண்டான ஆயாஸம் தீர)
என் நெஞசம் மேவி–என்னுடைய ஹ்ருதயத்திலே பொருந்தி
இடம் ஆக கொண்ட இறை–(எனது நெஞ்சையெ) நித்ய வாஸஸ்த்தாநமாகக் கொண்ட ஸ்வாமி
கொண்டு வளர்க்க–சிலர் கையிலெடுத்துச் சீராட்டி வளர்க்க வேண்டும்படியான
குழவி ஆய்–சிறுகுழந்தையாய்
தான் வளர்ந்தது–தான் வளர்ந்த அப்படிப்பட்ட மிகச்சிறிய பருவத்திலே
உலகு ஏழும்–ஸப்த லோகங்களும்
உள் ஓடுங்க–தன்னுள்ளே ஒடுங்கும்படி
உண்டது!–உட்கொண்டது (என்ன ஆச்சரியம்)

இடையனாய் வந்து பறந்தருளி அந்த ஜாதியின் மெய்ப்பாட்டுக்காகக் குடக்கூத்தாடி அதனாலுண்டான சிரமந்தீர
என்னெஞ்சிலேவந்து இளைப்பாறு மெம்பெருமான், முன்னே செய்தவொரு அற்புதச்செயலை என்னவென்று சொல்லுவேன்,
அது யாதெனில், மிகச்சிறிய குழந்தையாக இருக்கும் பருவத்திலே ஏழுலங்களும் தனது சிறிய திருவயிற்றிலுள்ளே
ஒடுங்கும்படி செய்த விசித்திரம். இவன் வளர்ந்ததோ கொண்டு வளர்க்கக் குழவியாய்,
உண்டதோ உலகேழுமுன்ளொடுங்க, இது என்ன மாயம்.

ஸ்வாதீநமாக ஒருகாரியமும் செய்யமுடியாத மிகச்சிறிய குழந்தைப்பருவம் என்று காட்டுதற்காகக்
கொண்டு வளர்க்கக் குழவியாய் என்றது

குடமாடி – தலையில் அடுக்குக்குடமிருக்க, இருதோள்களிலும் அங்ஙனே அடுக்குக்குடமிருக்க இவை சிறிதும்
சலியாதபடி இரண்டுகைகளாலும் குடங்களை மாறிமாறியெறிந்து ஆடுவதொரு கூத்து குடக்கூத்தெனப்படும்.

‘கோபாலன்‘ என்பது கோவலனாயிற்று.

————————————————————————–

எம்பெருமான் செய்தருளின அவதாரங்கள் பலபல கிடந்தாலும் த்ரிவிக்ரமாவதாரத்திலும் க்ருஷ்ணாவதாரத்திலுமே
இவ்வாழ்வார் திருவுள்ளம் மிக ஈடுபட்டிருக்குமென்பது சாத்துப் பாசுரமாகிய இப்பாட்டிலும் மேற்பாட்டிலும் விளங்கும்.

இறை எம்பெருமான் அருள் என்று இமையோர்
முறை நின்று மொய் மலர்கள் தூவ -அறை கழல
சேவடியான் செங்கண் நெடியான் குறளுருவாய்
மாவலியை மண் கொண்டான் மால் –99-

பதவுரை

இமையோர்–(பிரமன் முதலான) தேவர்கள்
எம்பெருமான்–‘எம்பெருமானே!‘ (எங்கள் விஷயத்தில்)
இறை–கொஞ்சம்
அருள் என்று–கிருபை பண்ண வேணும் என்று சொல்லி
முறை நின்று–அடிமைக்கு ஏற்ப நின்று
மொய் மலர்கள்–அழகிய புஷ்பங்களை
தூவ–பணிமாறும்படியாக,
அறை கழல சே அடியான்–ஒலிக்கின்ற வீரக்கழலையுடைய திருவடிகளை யுடையவனும்
செம் கண்–செந்தாமரைக் கண்ணனும்
நெடியான்–எல்லாரிலும் மேம்பட்டவனுமான
மால்–திருமால்
குறள் உரு ஆய்–(மாவலி பக்கல்) வாமந ரூபியான் வந்து தோன்றி
மா வடிவின்–பெரிய வடிவினாலே
மண் கொண்டான்–பூமியை அளந்து கொண்டான்.

உலகங்களை வியாபிக்கும்போது ஓங்கிவளர்ந்த திருவடியைக் கண்டு அதற்குமுன் அஹங்காரிகளாயிருந்த
தேவர்களெல்லாரும் ‘ஸ்வாமிந்! எமக்கு சிறிது அருள் புரியவேணும்‘ என்று இரந்து புஷ்பங்களை ஸமர்ப்பித்து
வழிபாடுகள் செய்தமை முன்னடிகளின் கருத்து.

இப்படி தேவர்களெல்லாரும் ஆச்ரயிக்கும்படியாக எம்பெருமான் உலகளந்தான் என்று சொல்லிவிட்டதானது –
அத்திருவடிகளே நமக்கும் ஆச்ரயணீயம் என்றபடி.

————————————————————————–

அமுதம்போன்ற பல விளிகளாலே எம்பெருமானை யழைத்து “என்றனளவென்றால் யானுடையவன்பு“ என்று
சொல்லித் தலைக்கட்டுகிற இவ்வாழ்வாருடைய கருத்து யாதெனில், பிரானே! பிரயோஜநாந்தரங்களை விரும்புகின்ற
தேவர்களுக்கு நீ படாதன்பட்டு உடம்பு நோவக் காரியங்கள் செய்தான், எனக்காக அப்படி ஒருகாரியமும் செய்யவேண்டா,
என்னால் தாங்கமுடியாதபடி வளர்ந்து செல்லுகிற எனது காதலை அடக்கித் தந்தாயாகில்
இதுவே எனக்குப் பாமோபகாரம் செய்ததாகும் என்கை. இதனால், பகவத்விஷயத்தல் தமக்கு அளவுகடந்த அன்பு
விளைந்திருக்கும்படியைச் சொல்லி, இப்பிரபந்தம் கற்பார்க்கும் இப்படிப்பட்ட அன்பு விளையும் என்று ஸூசிப்பிக்கிறபடி.

மாலே நெடியானே கண்ணனே விண்ணவர்க்கு
மேலா வியன் துழாய்க் கண்ணியனே -மேலாய்
விளவின் காய் கன்றினால் வீழ்த்தவனே என்தன்
அளவன்றால் யானுடைய வன்பு –100-

பதவுரை

மாலே–(அடியாரிடத்தில்) வியாமோஹ முள்ளவனே!
நெடியோனே–ஸர்வஸ்மாத்பரனே!
கண்ணனே–ஸ்ரீக்ருஷ்ணனே!
விண்ணவர்க்கு மேலா–நித்யஸூரிகளுக்குத் தலைவனே!
வியன் துழாய் கண்ணியனே–அழகிய திருத்துழாய் மாலையை அணிந்துள்ளவனே!
மேலால்–முன்னொரு காலத்தில்
விளவின்காய்–விளங்காயை
கன்றினால்–ஒரு கன்றைக் கொண்டு
வீழ்த்தவனே–உதிர்த்துத்தள்ளினவனே!,
யான் உடை– (உன்னிடத்தில்) அடியேன் வைத்திருக்கிற
அன்பு–அன்பானது
என்தன் அளவு அன்று–என்னளவில்அடங்கி நிற்பதன்று.

இப்பாசுரந்தன்னையே திருமங்கையாழ்வார் திருக்குறுந்தாண்டகத்தில்
“சித்தமும் செவ்வைநில்லாது என்செய்கேன் தீவினை யேன், பத்திமைக்கு அன்புடையேனாவதே பணியாய் எந்தாய்!“
என்று விரித்துரைத்தனர் போலும்.

இஷ்டங்களைக் கொடுப்பதற்கும் அநிஷ்டங்களைத் தவிர்ப்பதற்கும் கடவனான எம்பெருமானே
அன்புக்கு உரியவன் என்று சொல்லிப் பிரபந்தத்தைத் தலைக்கட்டினாராயிற்று.

————————————————————————–

அன்பே தகளியாய் ஆர்வமே நெய்யாக
இன்புருகும் சிந்தை இடுதிரியாக நன்புருகி
ஞானச் சுடர் விளக்கு ஏற்றினேன் நாரணற்கு
ஞானத் தமிழ் பிரிந்த நான் -1

————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பூதத் ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.