Archive for the ‘ஆச்சார்ய ஹிருதயம்’ Category

ஸ்ரீ ஆசார்ய ஹ்ருதயம்‌–ஸ்ரீ திராவிட ப்‌,ரஹ்ம ஸூத்ரம்‌-14 –விபாக, பாதம் -(214 – 217)-22 -ஸ்ரீமுக, ஸூக்தி ஸத தஸக பத்‌ய ப்ராதாந்ய-அபிப்ராய விசேஷ அதிகரணம்–(215–217)ஸ்ரீ மணவாள மா முனிகள் -ஸ்ரீ ஆய் ஸ்வாமிகள் வியாக்யானங்கள்–

July 30, 2026

1) பூர்வ த்‌,விகம்‌ – ஸூரி வைபவம்‌ 1 முதல்‌ 186 வது ஸூத்ரம்‌ வரை (186)
(2) உத்தர த்‌,விகம்‌ – ஸூரி ஸுக்த்தி வைபவம்‌– 187 முதல்‌ 234 முடிய (48)

1) ப்ரத, மோத்‌, யாயம் -ஸாஸ்த்ர தாத்பர்ய அதிகாரி வைபவம்‌ 1-38 (38)
(2) த்‌,விதீயோத்‌, யாய: – க்‌,ரந்த, கர்த்ரு வைப,வம்‌ 39 – 186 (148)
(3) த்ருத்யோத்‌, யாயம் – க்‌,ரந்தாந்தர தார தம்ய வைப,வம்‌ 187-207 (21)
(4) சதுர்த்தே ரத்‌, யாயம் -கிரந்த, ப்ரதிபாத்‌,ய க்ரம வைப,வம்‌ 208-234 (27)

14 –விபாக, பாதம் -214 – 217—மொத்தம் – 4– –ஸூரணைகள்- இரண்டு அதிகரணங்கள்–
21 ஸ்ரீ மூக,ஸுூக்தி தஸாவதார விபாகாதி, கரணம்‌ –214 —ஒரே -1–ஸூரணை
22 ஸ்ரீமுக, ஸூக்தி ஸத தஸக பத்‌ய ப்ராதாந்ய-அபிப்ராய விசேஷ அதிகரணம்–215–217—மொத்தம்—3–ஸூரணைகள்


இனி இப் பத்துகளையும் இவற்றின் சமுதாயமான பிரபந்தத்தையும் ஆழ்வார் ஸ்லாகித்து பேசின பாசுரங்களில் சாபிப்ராயதையை சத்ருஷ்டாந்தமாக அருளிச் செய்கிறார் —

ஐந்தினா டொன்பதோட ஒரு பத்து என்னுமவை போலே நூறே சொன்ன பத்து நூறு ஒராயிர மென்றதும்‌ ஸாபிப்ராயம்‌.-சூரணை-215-

(ஐந்தினோடு-என்னுமது போலே- ஒன்பதினோடு-என்னுமது போலே– ஒரு பத்து-என்னுமது போலே–
நூறே சொன்ன என்றதும்-பத்து நூறு என்றதும் ஓர் ஆயிரம் என்றதும் சபிப்ராயம் –ஒரு கருத்தை உட்க்கொண்டது -என்றவாறு )

ஐந்தினோடு-என்னுமது போலே-அதாவது-முன்னில் ஓர் ஐந்துக்கு ஒரு கருத்தும் பின்னில் ஐந்து பாட்டுக்கு ஒரு கருத்தும் -ஆகையாலே – ஐந்தினோடு ஐந்தும் வல்லார் –10-2-11-என்றும்- ஒன்பதினோடு-என்னுமது போலே-அதாவது-ஒன்பது பாட்டுக்கு ஒரு கருத்தும் ஒரு பாட்டுக்கு ஒரு கருத்தும் ஆகையாலே-ஒன்பதோடு ஒன்றுக்கும் —9-5-11- என்றும் –-ஒரு பத்து-என்னுமது போலே–அதாவது
பத்து பாட்டுக்கும் சேர ஒரு கருத்து ஆகையாலே –-பாடல் ஓர் ஆயிரத்துள் இவையும் ஓர் பத்து-3-4-11 -என்றும் சொன்னவை போலே –-நூறே சொன்ன என்றதும்--அதாவது–நூறே சொன்ன ஓர் ஆயிரம் -9-4-11-என்று கிழி கிழியாகக் கொடுப்பாரை போலே –-நூறு நூறு ஆகச் சொன்ன ஆயிரம் என்றும் –
பத்து நூறு என்றதும் –
-அதாவது- பத்து நூற்றுள் இப் பத்து -6-7-11-என்று பத்து நூறு என்றும்
இப்படி பத்துகளை பிரித்து சொன்னதும்-ஓர் ஆயிரம் என்றதும் –-அதாவது–தெரியச் சொன்ன ஓர் ஆயிரம்–6-9-11 -என்றும் –-மிக்க ஓர் ஆயிரம் –7-6-11-என்றும் –-அவாவில் அந்தாதிகள் இவை ஆயிரம்-10-10-11 -என்றும் , ஆயிரத்தை சேரச் சொன்னதும்- பத்துகள் தோறும் வெவ்வேறு கருத்தாயும்-ஆயிரத்துக்கும் சேர ஒரு கருத்தாயும் இருக்கும் படியை நினைத்து ஆகையாலே சாபிப்ராயம் என்கை

இனிமேல்‌ (ஐந்தினோடு ஒன்பதோடு ஒருபத்தும்‌ என்னுமவை போலே) “ஐந்தினோடைந்தும்‌ வல்லார்‌ ்‌ (திருவாய்மொழி 10-2-11) என்று ஐந்து பாட்டுக்கொரு அபிப்ராயம்‌ ஐந்து பாட்டுக்கொரு அபி ப்ராயமுமானாப்போலவும்‌ “ஒன்பதோடொன்றுக்கும்‌” (திருவாய்மொழி 9-5-11) என்று ஒன்பது பாட்டுக்கொரு கருத்தும்‌ ஒருபாட்டுக்கொரு கருத்துமானாப்‌ போலவும்‌ “பாடலோராயிரத்துள்‌ இவையும்‌ ஒருபத்தும்‌ வல்லார்‌ (திருவாய்மொழி 3-4-11 என்று பத்து பாட்டுக்கு ஒரு கருத்தானாப் போலவும்‌ (நூறே சொன்ன பத்து நூறு ஓராயிரம்‌ என்றதும்‌ ஸாபிப்ராயம்‌) “நூறே சொன்ன ஆயிரம்‌” (திருவாய்மொழி 9-4-11) என்றும்‌ “பத்து நூற்றுள்‌ இப்பத்து” (திருவாய்மொழி 6-7-11 என்றும்‌ சொல்லுகையாலே பத்துக்கள்‌ தோறும்‌ வேறு வேறு கருத்தாயும்‌ “அவாவிலந்தாதிகளால்‌ இவை ஆயிரமும்‌” (திருவாய்மொழி 10-10-11) என்று ஆயிரத்துக்கும்‌ ஓரபிப்ராயமாயும்‌ இப்படித்‌ தலைக்கட்டுமென்கிறார்-

அந்தமில் புகழ் அனந்த புர நகராதி தன்னை
கொந்தலர் பொழில் குருகூர் மாறன் சொல் லாயிரத்துள்
ஐந்தினோடு ஐந்தும் வல்லார் அணைவர் போய் அமர் உலகில்
பைந்தொடி மடந்தையர் தம் வேய் மரு தோள் இணையே–10-2-11—கேவலம் பர உபதேசமாக ஐந்தினோடே கூட –தம்மையும் கூட்டிக் கொண்டு உபதேசித்த ஐந்தையும் அப்யஸிக்க வல்லவர்கள்-

இன்பம் தலைப் பெய்து எங்கும் தழைத்த பல் ஊழிக்குத்
தன் புகழ் ஏத்தத் தனக்கு அருள் செய்த மாயனைத்
தென் குருகூர் சடகோபன் சொல் ஆயிரத்துள் இவை
ஒன்பதோடு ஒன்றுக்கும் மூ வுலகும் உருகுமே
-9-5-11-கீழ் ஒன்பது பாட்டிலும் உண்டான வியஸனம் ஸூகம் என்னலாம் படி வியஸனம் மிக்கு இருந்த பத்தாம் பாட்டு -இவற்றை யுடைய இத்திருவாய் மொழி-ஸ்மாரக பதார்த்தங்களாலே ஜீவனத்தில் நசையோடே நோவு பட்ட ஒன்பது பாட்டோடு ஜீவனத்தில் நசை அற்ற ஒரு பாட்டுக்கும் விசேஷஞ்ஞரோடு அவிசேஷஞ்ஞரோடு வாசி இன்றிக்கே சிதிலராவார் –

கூடிவண்டு அறையும் தண்தார்க் கொண்டல்போல் வண்ணன் றன்னை
மாடுஅலர் பொழில் குருகூர் வண்சட கோபன் சொன்ன
பாடல்ஓர் ஆயி ரத்துள் இவையும்ஓர் பத்தும் வல்லார்
வீடுஇல போகம் எய்தி விரும்புவர் அமரர் மொய்த்தே.–3-4-11-பாடல் கானம் -புஷபம் பரிமளத்தோடே அலருமா போலே இசை முன்னாகத் தோற்றின ஆயிரம் இவையும் ஓர் பத்தும் வல்லார்

ஆறா மதயானை அடர்த்தவன் தன்னைச்
சேறு ஆர் வயல் தென் குருகூர் சடகோபன்
நூறே சொன்ன ஓர் ஆயிரத்துள் இப்பத்தும்
ஏறே தரும் வானவர் தம் இன்னுயிர்க்கே–9-4-11-தரிப்பார்க்கு எளிதாம் படி நூறு நூறாக அருளிச் செய்த ஆயிரம் திருவாய் மொழியிலும் இத்திருவாய் மொழி வானவர் தம் இந்த உயிர்க்கு ஏறானவனை தரும் என்றும் சொல்லுவார் –

வைத்தமா நிதியாம் மதுசூ தனையே அலற்றிக்
கொத்தலர் பொழில்சூழ் குருகூர்ச்சட கோபன் சொன்ன
பத்து நூற்றுள் இப்பத்து அவன்சேர்திருக்கோ ளூர்க்கே
சித்தம் வைத்துரைப் பார்திகழ் பொன்னுல காள்வாரே.–6-7-11-கிழி கிழி யாய் கொடுப்பாரை போலே –
அவன் பொருந்தி வர்த்திக்கிற திருக் கோளூருக்கே நெஞ்சை வைத்து சொல்லுமவர்கள்

அவா அறச் சூழ் அரியை அயனை அரனை அலற்றி
அவா அற்று வீடு பெற்ற குருகூர்ச் சடகோபன் சொல்
அவா இல் அந்தாதிகளால் இவை ஆயிரமும் முடிந்த
அவா இல் அந்தாதி இப்பத்து அறிந்தார் பிறந்தார் உயர்ந்தே–10-10-11-–பக்தி பலாத்காரத்தாலே பிறந்த ஆயிரம் திருவாய் மொழியிலும் -இவரைச் சொல்லுவித்த அபி நிவேசம் -ப்ரேரகனான மைத்ரேயனுடைய ஸ்த்தானத்திலே நிற்கிறது யாய்த்து –முடிந்த -அவா இல் அந்தாதி இப்பத்து -பெற்று அல்லது தரிக்க ஒண்ணாத படியான பரம பக்தியால் பிறந்தது யாய்த்து -இத் திருவாய் மொழி -கீழ் அடைய பர பக்தி பிறந்து சொல்லிற்று யாயிற்று -பரம பக்தி பிறந்து சொல்லிற்று யாயிற்று இத் திருவாய் மொழி –

இனி பத்துகள் தோறும் உபதேச பரமான ஓர் ஒரு திருவாய்மொழி பிரதானமாய் -அவ்வோ பத்துகளுக்கு அவ்வோ திருவாய்மொழியில் நோக்காய் இருக்கும்படியை சத்ருஷ்டாந்தமாக அருளி செய்கிறார் —

பாட்டுக்கு க்ரியையும்‌ பத்துக்குக்‌ கருத்தும்‌ போலே நூற்றுக்கு உபதேஸப்பத்து–சூரணை-216-

பாட்டுக்கு க்ரியை போலே-அதாவது பாட்டானால் க்ரியை (பயனிலை) யோடு தலைக் கட்ட வேண்டும் ஆகையாலே பாட்டுகள் தோறும் க்ரியா பதம் பிரதானமாக இருக்குமா போலேயும்–பத்துக்கு கருத்தும் போலே- அதாவது–ஒரொரு திரு வாய் மொழிக்கு -பரத்வம்-பஜநீயதை – சௌலப்யம் -அபராத சஹத்வம் என்றாப் போலே –(உயர்வற உயர்நலம் -பரத்வத்திலே நோக்கு -பிரதான பாசுரம் -1-1-1-
வீடுன் முற்றவும் -பஜநீயதை – எண் பெருக்கு அந்நலத்து-1-2-10– ஸுலப்யம் -பத்துடை அடியவர்க்கு எளியவன் -1-3-1-அபராத சஹத்வம் -எண் பிழையே நினைந்து அருளி அருளாத திருமாலார்க்கு -1-4-7–)
தனித் தனியே கருத்துகள் ஆகையாலே -பத்துப் பாட்டுக்குக் கருத்தான நிதானம் சொல்லும் பாட்டு பிரதானமாய் இருக்குமா போலேயும்

நூற்றுக்கு உபதேச பத்து--அதாவது-நூறு பாட்டுக்கு பர உபதேசமான பத்துப் பாட்டு பிரதானமாய் இருக்கும் என்கை —(முதல் பத்தில் வீடுமுன் முற்றவும் -இரண்டாம் பத்தில் கிளர் ஒளி இளமை -மூன்றாம் பத்தில் சொன்னால் விரோதம் -நான்காம் பத்தில் –ஒன்றும் தேவும் -ஐந்தாம் பத்தில் –பொலிக பொலிக -ஆறாம் பத்தில் -நல்குரவு செல்வமும் -ஏழாம் பத்தில் –இன்பம் பயக்க – எட்டாம் பத்தில் –எல்லியும் காலையும் -ஒன்பதாம் பத்தில் –மாலை நண்ணி -பத்தாம் பத்தில் –கண்ணன் கழலிணை )

நூறு பாட்டு பரோபதேஸமா யிருப்பதொரு திருவாய்மொழியோடே தலைக்கட்டுமென்கிறார் 

இத்தால் பாட்டுகளுக்கு க்ரியையிலும் –-பத்து பாட்டுகளுக்கு நிதானம் சொல்லும் பாட்டிலும்- தாத்பர்யமாய் இருக்குமோபாதி நூறு பாட்டுக்கும் பர உபதேசமான பத்து பாட்டிலே -தாத்பர்யமாய் இருக்கும் என்றது ஆய்த்து –

பிணங்கி அமரர் பிதற்றும் -1-6-4–என்கிறபடியே –பேர் அளவு உடைய நித்ய ஸூரிகள் -ஸ்வ ஸ்வ அநுபூத குண தாரதம்யங்களைச் சொல்லி – சரச விவாத கோலாகலம் பண்ணும்படி இருக்கிற அவனுடைய
பரத்வ சௌலப்ய பிரயுக்தமான குண விசேஷங்களைத் தனித்து தம்மால் புசித்து தலை கட்ட ஒண்ணாமையாலே-அடியார்கள் குழாங்களை உடன் கூடுவது என்று கொலோ -2-3-10-– என்று ‘
கூட்டரான ரசஞ்சரைத் தேடின அளவில் கிடையாதபடி தூரஸ்தராக- சந்நிஹிதரான சம்சாரிகளுடைய அனாத்ம குணம் பாராதே பகவத் குணங்களில் மூட்டித் திருத்திக் கூட்டிக் கொள்ள தேட்டமாய் உபதேசத்திலே ஒருப் படுகையாலே அதிலே நோக்காக வேணும் இறே

அணங்கு என ஆடும் என் அங்கம் -வணங்கி வழி படும் ஈசன்
பிணங்கி யமரர் பிதற்றும் -குணங்கு எழு கொள்கையினானே –1-6-4–அமரர் என்கிறது -நித்ய ஸூரிகளை -ஏக ரசர் ஆனவர்களை விபிரதிபத்தி உண்டோ என்னில்-தாம்தாம் அனுபவித்த குணங்களில் ஏற்றத்தை -நான் முந்துறச் சொல்ல -நான் முந்துறச் சொல்ல -என்று-ஒருவருக்கு ஒருவர் பிணங்கா நிற்பார்கள்-பிதற்றும் – ஜ்வர சந்நிபரைப் போலே கூப்பிடா நிற்கை

களிப்பும் கவர்வும் அற்றுப் பிறப்புப் பிணி மூப்பு இறப்பு அற்று
ஒளிக் கொண்ட சோதியமாய் உடன் கூடுவது என்று கொலோ
துளிக்கின்ற வான்நிலம் சுடர் ஆழி சங்கேந்தி
அளிக்கின்ற மாயப்பிரான் அடியார்கள் குழாங்களையே -2-3-10–இவனுடைய ரக்ஷகத்வத்திலே தோற்று இருக்கும் ததீயர் திரள்களை –குழாங்களையே – திரளாக வேணும் -அது தான் அநேகமாக வேணும்
இவ்விஷயத்துக்கு உசாத் துணையாம் போது அசங்க்யாதராக வேணும் என்று இருக்கிறார் –உடன் கூடுவது என்று கொலோ--நான் எனக்கு என்று அகன்று நிற்க வேண்டாதே-அத் திரளில் ஒரு நீராகக் கூடுவது என்றோ-வைஷ்ணவ ஸஹவாசம் இனிது என்று இருக்கச் செய்தேயும் அஹங்காரத்தால் செய்யப் போகாது ஒழிகிறது இறே

இவற்றில் பகவத் பக்த பரங்களாய் வரும் அவற்றுக்கு தாத்பர்யம் எது என்னும் ஆ காங்க்ஷையில் அருளிச் செய்கிறார் .-இவற்றில்‌ பகவத் பக்த பரங்களாய்‌ வருமவற்றுக்குத்‌ தாத்பர்யம்‌ ஏதென்ன, அவற்றுக்குத்‌ தாத்பர்யத்தை அருளிச் செய்கிறார்‌.-

பகவத் பக்த பரங்கள் ஆஸ்ரயண விதி சேஷங்கள் —சூரணை -217-

(ஆஸ்ரயண விதிக்கு -பகவத் பக்த பரங்கள்-பகவத் அடியார்களை பற்றிய திருப்பாசுரங்கள் -சேஷங்கள் -உறுப்புக்கள் -என்றவாறு )

பகவத் பக்த பரங்கள்-அதாவது-பயிலும் சுடர் ஒளி -முதலான பாகவத பரங்களான திருவாய்மொழிகள் –ஜ்யோதிஷ்டோமேன ஸ்வர்க்க காமோ யஜதே -என்கிற விதிக்கு பிரயாஜாதி விதிகள்
சேஷமாய் -அவற்றினுடைய அனுஷ்டானதோடே அது பல பர்யந்தமாய்த் தலைக்கட்டுமா போலே —
திரு நாரணன் தாள் காலம் பெற சிந்தித்து உய்ம்மினோ–4-1-1- –என்றும் ,
நலம் அந்தமில் நாடு புகுவீர் பலமுந்து சீரில் படிமினோ ஓவாதே -2-8-4–என்று
விதிக்கிற பகவத் ஆஸ்ரயணம் -பாகவத் ஆஸ்ரயணத்தோடு ஒழிய தலைக் கட்டாமையாலே
பகவத் ஆஸ்ரயணீய விதிக்கு சேஷங்கள் என்கை ..

அதவா-
பர உபதேச பரமான இதில் பகவத் குணங்களையும் ஜீவ குணங்களையும் பிரதி பாதிக்கிறவற்றுக்கு விநியோகம் ஏது என்ன அருளிச் செய்கிறார் — பகவத் பரங்களாயும் -தத் பக்தரான -ஜீவ பரங்களாயும் -அவ்வவ் குணங்களை பிரதி பாதிக்கிறவை -ஆஸ்ரயண விஷயத்தையும் – ஆஸ்ரயண கர்த்தாவையும்- சொல்லுகிறது ஆகையாலே-ஆஸ்ரயண விதிக்கு சேஷங்கள் இத்தனை என்கை ..ஆஸ்ரயண விதிக்கு -பகவத் பக்த பரங்கள்-பகவத் அடியார்களை பற்றிய திருப்பாசுரங்கள் -சேஷங்கள் -உறுப்புக்கள் -என்றவாறு )-

பயிலும்‌ சுடரொளி” (திருவாய்மொழி 3-7) “நெடுமாற்கடிமை” (திருவாய்மொழி 8-10) என்ற பாகவத பரங்களான திருவாய்மொழிகளுக்குக்‌ கருத்து என்னென்னில்‌, ‘ஜ்யோதிஷ்டோமேந ஸ்வர்க்க காமோ யஜேத” (யஜுஸ்‌ ஸம்ஹிதை 2-5-5) என்று ஸ்வர்க்க காமனானவன்‌ ஜ்யோதிஷ்டோமத்தைப்‌ பண்ணுவான்‌ என்கிற விதிக்கு “ப்ரயாஜைர்‌ யஜேத” இத்யாதி விதிகள்‌ ஸேஷமாய்‌ அவற்றினுடைய அநுஷ்டானத்தோடே பல பர்யந்தமாய்த்‌ தலைக் கட்டுமா போலே ‘திருநாரணன்‌ தாள்‌ காலம்‌ பெறச்‌ சிந்தித்துய்ம்மினோ” (திருவாய்மொழி 41-1) “நலமந்தமில்லதோர்‌ நாடு புகுவீர்‌ பலமுந்து சீரில்‌ படிமின்‌ ஓவாதே” (திருவாய்மொழி 2-8-4) என்கிற ஆஸ்ரயணம்‌ பாகவத ஸமாஸ்ரயணத்தோடொழிய தலைக் கட்டாமையாலே அவ்வாஸ்ரயண விதிக்கு ஸேஷமென்கிறார்‌. அன்றிக்கே பகவத் பக்த பரங்கள்‌ என்கிற இதுக்கு பகவத்‌ பரமாயும்‌ தத் பக்த பரமாயும்‌ வருமவை என்று பொருளான போது (பாட்டு க்ரியையிலே முடியுமாபோலேயும் )பத்துப்‌ பாட்டு நிதாநம்‌ சொல்லும்‌ பாட்டிலே முடியுமா போலேயும்‌ பத்துத் தோறும்‌ உபதேஸம்‌ உண்டாகையாலே) பகவத் குணங்களையும்‌ தத் பக்தனான ஜீவனுடைய குணங்களையும்‌ சொல்லுகிற விடங்களை ஆஸ்ரயண விதிக்கு ஸேஷமென்கிறார்‌. அன்றிக்கே பகவத் பக்த பரமாம்படி ஒருங்க விட்டு பரோபதேஸம்‌ பண்ணுகிற திருவாய்மொழியில்‌ என்று இதற்குத்‌ தாத்பர்யமாகக்‌ கடவதென்று ஏக வாக்யமாகச்‌ சொல்லவுமாம் –

ஒரு நாயகமாய் ஓட உலகு உடன் ஆண்டவர்
கருநாய் கவர்ந்த காலர் சிதைகிய பானையர்
பெரு நாடு காண இம்மையிலே பிச்சை தாம் கொள்வர்
திரு நாரணன் தாள் காலம் பெறச் சிந்தித் துய்ம்மினோ.–4-1-1-திரு நாரணன்-இடர் கெடுத்த திருவாளன் இணை அடி–தத்ர நாராயண ஸ்ரீ மான்-ஸ்ரீயபதியை ஆஸ்ரயிங்கோள்-ஒரு மிதுனம் இறே-ஆசிரயணீயமும் ப்ராப்யமும் -ஒரு மிதுனத்துக்கு இறே சேஷம் இறே இது-தாள்-சேஷ பூதம் பற்றுவது திருவடிகளை இறே-காலம் பெறச் –-ஜீவிதும் மரணாந்தம் ஹி ஜராந்தே ரூபா யவ்வனே சம்பதச்ச வி நா சாந்தா ஜானன் கோ த்ருதிமாப் நுயாத்--நாளை செய்கிறோம் என்னுமது அன்று-யன் முஹூர்த்தம் க்ஷணம் வாபி வா ஸூ தேவோ ந சிந்தயந்தே வா ஸூ தேவ தருச்சாய சாகி மர்த்தம் ந ஸேவ்யதே
சிந்தித் துய்ம்மினோ--ரக்ஷகன் என்கிற ப்ரபத்தியே அமையும் -ப்ரபத்திக்கும் இதுவே அர்த்தம் என்கிறார்-நினைவோடு வ்யாப்தமாயிற்று உஜ்ஜீவனம் இருப்பது அனர்த்தம் எல்லாருக்கும் ஒத்து இருக்கையாலே எல்லாரையும் அபேக்ஷிக்கிறார்


ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ ஆய் ஜநந்யாசார்யர்‌ ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ ஆசார்ய ஹ்ருதயம்‌–ஸ்ரீ திராவிட ப்‌,ரஹ்ம ஸூத்ரம்‌-14 –விபாக, பாதம் -(214 – 217)-21- ஸ்ரீ மூக,ஸுூக்தி தஸாவதார விபாகாதி, கரணம்‌ –(214)ஸ்ரீ மணவாள மா முனிகள் -ஸ்ரீ ஆய் ஸ்வாமிகள் வியாக்யானங்கள்–

July 29, 2026

1) பூர்வ த்‌,விகம்‌ – ஸூரி வைபவம்‌ 1 முதல்‌ 186 வது ஸூத்ரம்‌ வரை (186)
(2) உத்தர த்‌,விகம்‌ – ஸூரி ஸுக்த்தி வைபவம்‌– 187 முதல்‌ 234 முடிய (48)

(1) ப்ரத, மோத்‌, யாயம் -ஸாஸ்த்ர தாத்பர்ய அதிகாரி வைபவம்‌ 1-38 (38)
(2) த்‌,விதீயோத்‌, யாய: – க்‌,ரந்த, கர்த்ரு வைப,வம்‌ 39 – 186 (148)
(3) த்ருத்யோத்‌, யாயம் – க்‌,ரந்தாந்தர தார தம்ய வைப,வம்‌ 187-207 (21)
(4) சதுர்த்தே ரத்‌, யாயம் -கிரந்த, ப்ரதிபாத்‌,ய க்ரம வைப,வம்‌ 208-234 (27)

14 –விபாக, பாதம் -214 – 217—மொத்தம் – 4– –ஸூரணைகள்- இரண்டு அதிகரணங்கள்–
21 ஸ்ரீ மூக,ஸுூக்தி தஸாவதார விபாகாதி, கரணம்‌ –214 —ஒரே -1–ஸூரணை
22 ஸ்ரீமுக, ஸூக்தி ஸத தஸக பத்‌ய ப்ராதாந்ய-அபிப்ராய விசேஷ அதிகரணம்–215–217—மொத்தம்—3–ஸூரணைகள்

இனிமேல் இப் பிரபந்தம் பத்து பத்தாக அவதரித்ததின் பிரயோஜனத்தை ச த்ருஷ்டாந்தமாக அருளி செய்கிறார் —இனி மேல்‌ “பரித்ராணாய ஸாதூநாம்‌ விநாஸாய ச துஷ்க்ருதாம்‌ தர்ம ஸம் ஸ்த்தாபநார்த்தரய ஸம்பவாமி யுகே யுகே,” (கீதை 4-8) என்று ஸாது பரித்ராண துஷ்க்ருத் விநாஸநார்த்தமான பகவதவதாரம்‌ போலே இத் திருவாய்மொழியினுடைய அவதாரமுமென்கிறார்‌-

சாது சனம்‌ நண்ணா மயர்வற மாசறுக்கும்‌ தெருள்‌ கொள்ளப்‌ பத்தராவர்‌ அடிமையற வுரிய நோய்களறுக்கும்‌ உடைந்து ஏற்றரும்‌ வானின்‌ தாளின் கீழ்‌ அடிக்கீழின்பக்கதி பயக்கும்‌ ஊடுபுக்கு மூவுலகும்‌ உருகா நிற்பர்‌ என்னும்‌ ஸாம்யத்தாலே வாச்யம்‌ பத்தினாய தோற்றம்‌ போலே தோற்றங்கள்‌ ஆயிரத்தின்‌ பத்துப்‌ பத்தான இதினாவிர்ப்பாவம்‌.–சூரணை -214–

1-சாது சனம்-நண்ணா-அதாவது சாது சனத்தை நலியும் கஞ்சனை சாதிப்பதற்கு–திருவாய்-3-5-5–என்றும் – சாதூனாம் விநாசாய ச துஷ்க்ருதாம் தர்ம சமஸ்த்தாபனர்த்தாய சம்பவாமி யுகே யுகே –ஸ்ரீ கீதை -4-8- -என்றும் – இத்யாதிப் படியே சாது பரித்ராண துஷ்க்ருத் விநாசார்தமாக அவன் அவதரித்தாப் போலே – இதுவும் – நண்ணா அசுரர் நவிவெய்த நல்ல அமரர் பொலிவெய்த-திருவாய்-10-7-5- -என்று
பகவத் பிரதி பஷ பூதரான ஆசூர பிரக்ருதிகள் மண் உண்ணவும் – பகவத் பக்தி பரரான தேவ பிரக்ருதிகள் வாழவும் அவதரித்தது என்றும் —

சாது சனம்‌) “சாது சனத்தை நலியும்‌ கஞ்சனைச்‌ சாதிப்பதற்கு ஸாது, பரித்ராண துஷ்க்ருத் விநாஸநார்த்தமாக அவதரித்து–போலே திருவாய்மொழியும்‌ (நண்ணா) “நண்ணா வசுரர்‌ நவி வெய்த நல்லவமரர்‌ பொலி வெய்த எண்ணாதனகள்‌ எண்ணும்‌ நன்முனிவரின்பம்‌ தலைச் சிறப்ப பண்ணார்‌ பாடல்‌” (திருவாய்மொழி 10-7-5) என்கிறபடியே ஸாது பரித்ராண துஷ்க்ருத் விநாஸநார்த்தமாக அவதரித்து-

சாது சனத்தை நலியும் கஞ்சனைச் சாதிப்பதற்கு
ஆதி அம் சோதி உருவை அங்கு வைத்து இங்குப் பிறந்த
வேத முதல்வனைப் பாடி வீதிகள் தோறும் துள்ளாதார்
ஓதி உணர்ந்தவர் முன்னா என் சவிப்பார் மனிசரே?–3-5-5—சாது ஜனம் என்று நினைக்கிறது ஸ்ரீ வ ஸூ தேவரையும் தேவகி முதலானாரையும் தான் அவதரிக்க நினைத்த ஸ்தலத்தில் நலிந்து நெடு நாள் சிறை வைத்துப் போந்த கம்சனை நிரசிக்கைக்காக-

பரித்ராணாய ஸாதூநாம் விநாஸாய ச துஷ்க்ருதாம்
தர்மஸம்ஸ்தாபநார்தாய ஸம்பவாமி யுகே யுகே
–4-8–நல்லோரைக் காக்கவும், தீயன செய்வோரை அழிக்கவும், அறத்தை நிலை நிறுத்தவும் நான் யுகந்தோறும் பிறக்கிறேன்.

நண்ணா அசுரர் நலிவு எய்த நல்ல அமரர் பொலிவு எய்த
எண்ணா தனகள் எண்ணும் நன் முனிவர் இன்பம் தலை சிறப்ப
பண்ணார் பாடல்
இன் கவிகள் யானாய்த் தன்னைத் தான் பாடி
தென்னா என்னும் என் அம்மான் திரு மால் இரும் சோலையானே–10-7-5—விபரீதஸ்ததா அஸூர -என்கிறபடியே விபரீதரான அ ஸூ ரர்கள் இஸ் ஸம்ருத்தி பொறுக்க மாட்டாமையாலே முடியவும் –கிட்டக் கடவோம் அல்லோம் -என்று இருக்கும் அஸூர வர்க்கம் — நல்ல அமரர் பொலிவு எய்த—விஷ்ணு பக்தி பரோ தேவ -என்கிறபடியே அநந்ய பிரயோஜனரான வைஷ்ணவர்கள் -இதுவே ஜீவனமாக சம்ருத்தமாகவும் -தொண்டர்க்கு அமுது உண்ணச் சொல் மாலைகள் சொன்னேன் -என்றார் இறே
எண்ணா தனகள் எண்ணும் -உபய விபூதி யுக்தனுக்கு இன்னம் விபூதி வேணும் என்றும் -அசங்க்யாத குணகனுக்கு இன்னம் குணம் வேணும் என்றும் மேன் மேலே என எண்ணா நிற்குமவர்கள் –
நன் முனிவர் -ஈஸ்வரன் அடியாக தங்கள் ஸம்ருத்தியை எண்ணுமவர்கள் முனிவர் –அத்தலைக்கு ஸம்ருத்தியை எண்ணுமவர்கள் நல் முனிவர் –இன்பம் தலை சிறப்ப-திருவாய் மொழி ஒழிய வேறு ஒரு சம்பத்து வேண்டா -என்று மிகவும் ஹ்ருஷ்டராம் படியாகவும் –பண்ணார் பாடல் இன் கவிகள் -பண் மிக்கு இருந்துள்ள பாடல் -புஷ்ப்பம் பரிமளத்தோடே அலருமா போலே -திருவாய் மொழி அவதரித்த போதே பண் மினுங்கி யாய்த்து இருப்பது –இன் கவி–பண்ணுக்கு ஆஸ்ரயமான கவி தானே இனிதாய் இருக்கை –

2-மயர்வற மாசறுக்கும் தெருள் கொள்ளப் பத்தராவார்-அதாவது-மயர்வற மதி நலம் அருளினன்-திருவாய்-1-1-1–என்று அவன் அஜ்ஞ்ஞானத்தைப் போக்கி ஞான பக்திகளைக் கொடுக்குமா போலே –
இதுவும் –-ஒலி புகழ் ஆயிரத்து இப் பத்து உள்ளத்தை மாசறுக்கும்–திருவாய்-5-2-11 -என்று
மனசுக்கு மாஸான அஞ்ஞானத்தைப் போக்கி –-தெருள் கொள்ள சொன்ன ஓர் ஆயிரம்-திருவாய்-2-10-11–என்றும் ,-தூய ஆயிரத்து இப் பத்தால் பத்தராவார் -திருவாய்-6-4-11-என்றும் சொல்லுகிறபடி –ஞான பக்திகளை கொடுக்கும் .என்றும் ..

மயர்வற மதிநலம்‌ அருளினன்‌ (திருவாய்மொழி 1-1-1 என்கிறபடியே அஜ்ஞாநத்தை வாஸனையோடே போக்கி ஜ்ஞாந பக்திகளை உண்டாக்கி —மாசறுக்கும்‌ தெருள் கொள்ளப்‌ பத்தராவர்‌) “ஒலிபுகழாயிரத்திப்பத்து உள்ளத்தை மாசறுக்கும்‌” (திருவாய்மொழி 5-3-11 என்று நெஞ்சுக்கு மாசான அஜ்ஞானத்தை வாஸநையோடே போக்கி “தெருள் கொள்ளச்‌ சொன்ன ஓராயிரம்‌” (திருவாய்மொழி 2-10-11 என்றும்‌ ‘தூயவாயிரத்திப் பத்தால்‌ பத்தராவர்‌ துவளின்றிமே” (திருவாய்மொழி 6-4-11) என்றும்‌ சொல்லுகிறபடியே ஜ்ஞாந பக்திகளைக்‌ கொடுத்து

உயர்வற உயர் நலம் உடையவன் எவன் அவன்
மயர்வற மதி நலம் அருளினன் எவன் அவன்
அயர்வறும் அமரர்கள் அதிபதி எவன் அவன்
துயரறு சுடரடி தொழுது எழு என் மனனே 
–1-1-1–மயர்வு -அஜ்ஞானம் -இத்தால் ஜ்ஞான உதய -அந்யதா ஜ்ஞான -விபரீத ஜ்ஞான ரூபமான அஜ்ஞானத்தைச் சொல்லுகிறது-அற -சவாசனமாகப் போகும்படி
மதி நலம்-மதி என்று ஜ்ஞானம்-நலம் -என்று பக்தி -பக்தி ரூபாபன்ன ஜ்ஞானம் என்றபடி-அருளினன்
இத் தலையில் நன்மை தீமை பாராதே நிர்ஹேதுக கிருபையால் தந்து அருளினான்-முலைக் கடுப்பாலே தரையிலே பீச்சுமா போலே –-எனக்குத் தந்து அருளினான் -என்னாது ஒழிந்தது -பகவத் விஷயீ காரத்துக்கு முன்பு தம்மை அசத் கல்பராக நினைத்து இருக்கையாலே-

கலியுகம் ஒன்றும் இன்றிக்கே தன்னடியார்க்கு அருள் செய்யும்
மலியும் சுடரொளி மூர்த்தி மாயப் பிரான்கண்ணன் தன்னைக்
கலிவயல் தென்னன் குருகூர்க் காரிமாறன் சடகோபன்
ஒலிபுகழ் ஆயிரத்து இப்பத்து உள்ளத்தை மாசறுக்குமே.–5-2-11-ஒலி புகழ் -பகவத் குணங்களை வ்யக்தமாக ப்ரதிபாதித்த இப்பத்து-உள்ளத்தை மாசறுக்குமே.– அந்தகரண தோஷத்தை போக்கும் -அதாகிறது -தேவதாந்தரங்களில் பரத்வ சங்கை -பகவத் பரத்வத்தில் அதி சங்கை -ஸ்ரீ வைஷ்ணவ விஷயத்தில் சஜாதீய புத்தி -அபாகவத சம்ச்லேஷம் -பிரயோஜனாந்தர புத்தி -இப்படிப் பட்ட அந்தகரண தோஷங்களை அறுக்கும் –

பொருள் என்று இவ்வுலகம் படைத்தவன் புகழ் மேல்
மருளில் வண் குருகூர் வண் சடகோபன்
தெருள் கொள்ளச் சொன்ன ஒராரிரத்துள் இப்பத்து
அருளுடையவன் தாள் அணைவிக்கும் முடித்தே –2-10-11-கேட்டார்க்குத் தம்மிலும் தெளிவைப் பிறக்கும் படி அருளிச் செய்தது – தம்முடைய ஞானத்துக்கு ஆதி ஈஸ்வரன் -இவர்களுக்குத் தாம் அடியாக வந்தது –
அருளே நிரூபகமான அழகர் திருவடிகளிலே சம்சாரத்தை முடித்துச் சேர்க்கும் –

நாயகன் முழுவேழுலகுக்குமாய் முழுவேழுலகுந் தன்
வாயகம்புக வைத்துமிழ்ந்து அவையாய் அவை அல்லனுமாம்
கேசவன் அடியிணை மிசைக் குருகூர்ச்சடகோபன் சொன்ன
தூய ஆயிரத் திப்பத்தால் பத்தராவர் துவளின்றியே.–6-4-11தூய்மை யாவது -ஸ்ரீ -கிருஷ்ண விருத்தாந்தத்தில் கலப்பு அற்று இருக்கை – துவள் -குற்றம் –அதாவது பரத்வத்திலே நெஞ்சு செல்லுகை -அத்தை தவிர்ந்து ஸ்ரீ கிருஷ்ண அவதாரத்தில் பிரவணராக பெறுவார் -திருவடி ஸ்ரீ ராமாவதாரத்தில் பிரவணராய் இருக்குமா போலே

3-அடிமை அற வுரிய-அதாவது-அடிமை அறக் கொண்டாய்-திருவாய்–4-9-6- -என்று தனக்கு அனந்யார்ஹ சேஷமாக அவன் அங்கீகரிக்குமா போலே –-இதுவும்-உரிய தொண்டர் ஆக்கும் உலகு உண்டாற்கே–திருவாய்-6-9-11 -என்று தத் அனந்யார்ஹ சேஷம் ஆக்கும் என்றும் .

அடிமை யற) அடிமை யறக்கொண்ட (திருவாய்மொழி 4-9-6) என்கிறபடியே அநந்யார்ஹ ஸேஷமாக அங்கீகரித்து -“உரிய தொண்டராக்கும்‌” (திருவாய்மொழி 6-9-11) என்கிறபடியே அங்குத்தைக்கு அநந்யார்ஹ ஸேஷமாமாக்கி 

தெரிதல் நினைதல் எண்ண லாகாத் திருமாலுக்கு
உரிய தொண்டர் தொண்டர் தொண்டன் சடகோபன்
தெரியச் சொன்ன ஓராயிரத்துள் இப்பத்தும்
உரிய தொண்ட ராக்கும் உலகம் உண்டாற்கே.–6-9-11-இத் திருவாய் மொழி தானே சர்வ ரக்ஷகனுக்கு அந்தரங்க பரிகரமாகும்-

மறுக்கி வல் வலைப்படுத்திக் குமைத்திட்டுக் கொன்றுண்பர்;
அறப் பொருளை அறிந்து ஓரார்; இவை என்ன உலகியற்கை!
வெறித் துளவ முடியானே! வினையேனே உனக்கு அடிமை
அறக் கொண்டாய்
இனி என்னாரமுதே!கூய் அருளாயே.–4-9-6-முன்பு விஷயாந்தர பிரவணனாய்ப் போந்த என்னை அநந்யார்ஹமாக சேஷமாக்கிக் கொண்டாய

4-நோய்கள் அறுக்கும்-உடைந்துஅதாவது–அறிந்தனர் நோய்கள் அறுக்கும் மருந்தே-திருவாய்-9-3-3- -என்கிறபடி- அவன் சம்சார வியாதி பேஷஜமாம் போலே-இதுவும்-உடைந்து நோய்களை ஒடுவிக்கும் –திருவாய்-1-7-11- என்று சாம்சாரிக சகல துக்கங்களையும் உரு மாய்ந்து போம் படி பண்ணும் என்றும் .

நோய்களறுக்கும்‌) “நோய்களறுக்கும்‌ மருந்தே (திருவாய்மொழி-9-3-3) என்கிறபடியே ஸம்ஸார வ்யாதி பேஷஜமாய்‌–(உடைந்து) “உடைந்து நோய்களை ஓடுவிக்குமே” (திருவாய்மொழி 1-7-11) என்று ஸாம்ஸாரிகமான ஸகல துரிதங்களையும்‌ ஸவாஸநமாகப்‌ போக்கி-

அறிந்தன  வேத அரும் பொருள் நூல்கள்
அறிந்தன கொள்க அரும் பொருள் ஆதல்
அறிந்தனர் எல்லாம் அரியை வணங்கி
அறிந்தனர் நோய்கள் அறுக்கும் மருந்தே–9-3-3-சம்சார துரித பேஷஜம் –என்னும் இவ்வளவு அறிந்தவர்கள் –சம்சார சர்ப்ப சந்தஷ்ட நஷ்ட சேஷ்டைக பேஷஜம் –அவனுடைய போக்யதையிலே இழிந்திலர்கள் -அவனுடைய நிரபேஷ உபாய பாவத்தில் இழிந்திலர்கள் 

குடைந்து வண்டுண்ணும் துழாய் முடியானை -அடைந்து தென்குருகூர்ச் சடகோபன்
மிடைந்த சொல்தொடை ஆயிரத்து இப்பத்து உடைந்து நோய்களை ஒடுவிக்குமே –-1-7-11-இப்பத்து தானே நோய்களை உடைந்தோடும் படி பண்ணும்-நோயாகிறது -ஷூ த்ர புருஷார்த்த ருசி உடைந்து ஓடுகை-ஆஸ்ரயாந்தரங்களுக்கும் ஆகாதபடி உரு அழிகை –

5-ஏற்றரும்- வானின் –அதாவது–ஏற்றரும் வைகுந்தத்தை அருளும் நமக்கு – திருவாய்-7-6-10–என்கிறபடி-
ஸ்வ யத்னத்தால் பிராபிக்க அரிதான பரம பதத்தை அவன் கொடுக்குமா போலே – இதுவும்-வானின் மீது ஏற்றி அருள் செய்து -திருவாய்-8-4-11-என்று பரமபத பிராப்தியை பண்ணுவிக்கும் என்றும்-

(ஏற்றரும்‌) “ஏற்றரும்‌ வைகுந்தத்தை அருளும்‌ நமக்கு” (திருவாய்மொழி 7-6-10) என்று ஸ்வ யத்நத்தானாலே பெற வரிதாயிருக்கிற பரம பதத்தைக்‌ கொடுத்து–வானின் மீதேற்றி அருள் செய்து” (திருவாய்மொழி 8-4-11 என்று தேஸ விஸேஷ ப்ராப்தியைப்‌ பண்ணுவித்து,

ஏற்றரு வைகுந்தத்தை அருளும் நமக்கு ஆயர்குலத்து
ஈற்றிளம் பிள்ளை ஒன்றாய்ப் புக்கு மாயங்களே இயற்றிக்
கூற்றியல் கஞ்சனைக் கொன்று ஐவர்க்காய்க் கொடுஞ்சேனை தடிந்து
ஆற்றல் மிக்கான் பெரிய பரஞ்சோதி புக்க அரியே.-7-6-10–ஸ்வ யத்னத்தாலே பிராபிக்க ஒண்ணாத பரம பதத்தை-தன்னாலே பெற்றேன் என்று துணிந்து இருக்கிற நமக்கு அருளும் –

தேனை நன் பாலைக் கன்னலை யமுதைத் திருந்துலகுண்ட வம்மானை
வான நான்முகனை மலர்ந்த தண் கொப்பூழ் மலர்மிசைப் படைத்த மாயோனை
கோனை வண் குருகூர் சடகோபன் சொன்ன வாயிரத்துள் இப்பத்தும்
வானின் மீதேற்றி யருள் செய்து முடிக்கும் பிறவி மா மாயக் கூத்தினையே–8-4-11-அராஜகம் ஆனால் ராஜ புத்ரன் தலையிலே முடியை வைத்து பின்னை விலங்கு வெட்டி விடுமா போலே இப்பத்து தானே முந்துற பரமபதத்தை கொடுத்து பின்னை சம்சாரம் ஆகிற மஹா நாடகத்தை அறுத்துக் கொடுக்கும் –

6-தாளின் கீழ் – அடிக் கீழ்--அதாவது–-தன் தாளின் கீழ்ச் சேர்த்து அவன் செய்யும் சேமத்தை –திருவாய்-7-5-10–என்கிறபடியே அவன் பாத உபாதானம் போலே திரு அடிக் கீழ் சேர்த்து கொள்ளுமா போலே
இதுவும்-அருளி அடிக் கீழ் இருத்தும்–திருவாய்-8-8-11 -என்று அவன் திரு அடிகளின் கீழே சேர்த்து வைக்கும் என்றும் —

தாளின்‌ கீழ்‌) “தன்‌ தாளின் கீழ்ச்‌ சேர்த்து” (திருவாய்மொழி 7-5-10) என்கிறபடியே தனக்கு பாதோபதாநமாக இட்டுக் கொண்டு–(அடிக்கீழ்‌) ‘அடிக்கீழிருத்தும்‌” (திருவாய்மொழி 8-8-1॥ என்கிறபடியே அவனுக்கு பாதோபதாநமாக்கி-

வார்த்தை அறிபவர் மாயவற்கு ஆளன்றி ஆவரோ?
போர்த்த பிறப்பொடு நோயொடு மூப்பொடு இறப்பிவை
பேர்த்துப் பெருந்துன்பம் வேரற நீக்கித தன் தாளின் கீழ்ச்
சேர்த்து அவன் செய்யும் சேமத்தை எண்ணித் தெளிவுற்றே.–
7-5-10—அதுக்கு மேலே நித்ய கைங்கர்யத்தை கொடுத்து அருளி-அவன் செய்யும் சேமத்தை -இவனுக்கு ஒன்றும் செய்யாதாரைப் போலே என் செய்வோம் என்று இருக்கும் என்னுதல்-இக்கைங்கர்யத்துக்கு நிலவரான நித்ய ஸூரிகளோடு சேர்த்து யாவதாத்மபாவி யாக்கும் என்னுதல் எண்ணித் தெளிவுற்றே.–இம் மஹா உபகாரத்தை அனுசந்தித்து -இதுவே அர்த்தம் என்று தெளிந்து வார்த்தை அறிபவர் மாயவற்கு ஆளன்றி ஆவரோ?

தெருளும் மருளும் மாய்த்துத் தன் திருந்து செம் பொற் கழல் அடிக் கீழ்
அருளி இருத்தும் அம்மானாம் அயனாம் சிவனாம் திருமாலால்
அருளப் பட்ட சடகோபன் ஓராயிரத்துள் இப்பத்தால்
அருளி யடிக் கீழ் இருத்தும் நம் அண்ணல் கரு மாணிக்கமே–8-8-11-இப்பத்தை அப்யசித்தவர்களை அதுவே ஹேதுவாக-நமக்கு ஸ்வாமியாய் ஸ் ப்ருஹணீயமான வடிவு அழகை யுடையவன் -தன் கேவல கிருபையால் தன் திருவடிக் கீழே சேர்த்துக் கொள்ளும் -இப்பத்தும் கற்றவர்களை ஆழ்வாருக்கு பண்ணின கிருபையை பண்ணிச் சேர்த்துக் கொள்ளும் –

7-இன்பக் கதி- பயக்கும்--அதாவது—-இன்பக் கதி செய்யும் தெளிவுற்ற கண்ணனை -திருவாய் -7-5-11-என்றபடி- அவன் தன்னோடு அன்வயித்தார்க்கு தன்னுடைய அனுபவம் ஆகிற நிரதிசய ஆனந்த யுக்தமான பிராப்யத்தை கொடுக்குமா போலே –இதுவும் –-எங்கனே சொல்லிலும் இன்பம் பயக்கும்-திருவாய் -7-9-11-என்று ஸ்வ அன்வித சேதனருக்கு பகவத் அனுபவ ஆனந்தத்தை உண்டாகும் என்றும் 

( இன்பக் கதி) “இன்பக் கதி செய்யும்‌‘ (திருவாய்மொழி 7-5-11 என்று நிரதஸயாநந்தி யாக்கி-(பயக்கும்‌) “எங்ஙனே சொல்லிலும்‌ இன்பம்‌ பயக்குமே” (திருவாய்மொழி 7-9-1॥ என்கிறபடியே இவனுக்கு ஆநந்தத்தை உண்டாக்கி-

தெளிவுற்று வீவின்றி நின்றவர்க்கு இன்பக்கதி செய்யும்
தெளிவுற்ற கண்ணனைத் தென் குரு கூர்ச்சட கோபன் சொல்
தெளிவுற்ற ஆயிரத்துள் இவை பத்தும் வல்லார் அவர்
தெளிவுற்ற சிந்தையர் பாமரு மூவுல கத்துள்ளே.–7-5-11-ப்ராப்ய ப்ராபகங்கள் அவனே என்று அத்யவசித்து -பின்னை யுக்தி ஆபாச வசனங்களால் அதுக்கு குஅநந்ய பிரயோஜனராய் நிலை நின்றவர்கள் என்னுதல் – இன்பக்கதி செய்யும்-ஸூ கரூபமான ப்ராப்யத்தைக் கொடுக்கும் –ஏஷ ஹ்யேவ ஆனந்தாதி –

இங்கும் அங்கும் திரு மால் அன்றி இன்மை கண்டு
அங்ஙனே வண் குரு கூர்ச் சட கோபன்
இங்ஙனே சொன்ன ஓர் ஆயிரத்து இப்பத்து
எங்ஙனே சொல்லிலும் இன்பம் பயக்குமே.–7-9-11--இப்பாவ வ்ருத்தியோடே சொன்ன இப்பத்தும் – சிந்தையாலும் சொல்லாலும் செய்கையினாலும்-என்று மநோ வாக் காயங்கள் மூன்றும் பாஹ்ய விஷயங்களில் தொற்று அற்று உத்தேச விஷயத்திலே மூன்றும் இறே இவர்க்கு இருப்பது -இப்பாசுரமே அமையும் இது அப்யசித்தவர்களுக்கு -அவர்களை பார்த்து அன்று இறே ஈஸ்வரன் அங்கீ கரிப்பது -இவர் பாசுரம் என்று இவரை பார்த்து இறே-எங்ஙனே சொல்லிலும் -அஹ்ருதயமாகவுமாம்–சஹ்ருதயமாகவுமாம் -பழத்தில் வ்யபிசரியாது என்கை-இன்பம் பயக்குமே.–ஆனந்தத்தை உண்டாக்கும் -ஏஷ ஹ்யேவா நந்தயாதி -என்கிறபடியே நிரவதிகமான ஆனந்தத்தை விளைக்கும் –

8-ஊடு புக்கு -மூஉலகும்- உருகா நிற்பர்-அதாவது–ஊடு புக்கு எனது ஆவியை உருக்கி உண்டிடுகின்ற நின் தன்னை–திருவாய் -5-10-10—என்கிறபடி–அவன் தன்னை அனுபவிக்க இழிந்தாரை த்ரவ த்ரவ்யமாம்படி வுருக்குமா போலே –-இதுவும் –-ஒன்பதோடு ஒன்றுக்கு மூ உலகும் உருகும்–திருவாய்-9-5-11- -என்றும்-ஊற்றின் கண் நுண் மணல் போல் உருகா நிற்பர் நீராய்-திருவாய்- -6-8-11–என்று
சொல்லுகிறபடி -தன்னை அனுபவிக்க இழிந்தாரை த்ரவ த்ரவ்யமாக்கும் என்றும் —

(ஊடு புக்கு) “எடுபுக்கெனதாவியை உருக்கி உண்டிடுகின்ற (திருவாய்மொழி 5-10-10) என்று தன்னுடைய போக்‌யதாதிஸயத்தாலே சேதநனை த்‌ரவ த்‌ரவ்யமாம்படி உருக்குமாபோலே திருவாய்மொழியும்‌-(மூவுலகும்‌ உருகா நிற்பர்‌) ஒன்பதோடொன்றுக்கும்‌ மூவுலகும்‌ உருகுமே” (திருவாய்மொழி 9-5-11 என்றும்‌ ஊற்றின் கண்‌ நுண் மணல்‌ போல்‌ உருகா நிற்பர்‌”  (திருவாய்மொழி 6-8-11 என்றும்‌ சொல்லுகிறபடியே தன்னுடைய போக்யதையாலே சேதநரைத் த்‌ரவ த்‌ரவ்யமாக்கி-

கூடி நீரைக் கடைந்தவாறும் அமுதம் தேவர் உண்ண அசுரரை
வீடும் வண்ணங்களே செய்து போன வித்தகமும்
ஊடு புக்கென தாவியை உருக்கி உண்டிடுகின்ற நின் தனை
நாடும் வண்ணம் சொல்லாய் நச்சு நாகணையானே!–5-10-10-தோல் புரையே போகாதே மர்மத்திலே புக்கு -அச்சேத்யயோயம் அயமதாஹ்யோயம் என்கிற ஆத்மவஸ்துவை -த்ரவ்ய த்ரவ்யமாக்கி முடித்து விடாதே ஒழிகிற யுன்னை -புருஷோத்தமன் இப்படி செய்வதே என்கிற குண பிரசங்கத்தில் சிதிலன் ஆகா நின்றேன்

இன்பம் தலைப் பெய்து எங்கும் தழைத்த பல் ஊழிக்குத்
தன் புகழ் ஏத்தத் தனக்கு அருள் செய்த மாயனைத்
தென் குருகூர் சடகோபன் சொல் ஆயிரத்துள் இவை
ஒன்பதோடு ஒன்றுக்கும் மூ வுலகும் உருகுமே-9-5-11-ஒன்பது பாட்டிலும் உண்டான வியஸனம் ஸூகம் என்னலாம் படி வியஸனம் மிக்கு இருந்த பத்தாம் பாட்டு -இவற்றை யுடைய இத்திருவாய் மொழி
-ஸ்மாரக பதார்த்தங்களாலே ஜீவனத்தில் நசையோடே நோவு பட்ட ஒன்பது பாட்டோடு ஜீவனத்தில் நசை அற்ற ஒரு பாட்டுக்கும் விசேஷஞ்ஞரோடு அவிசேஷஞ்ஞரோடு வாசி இன்றிக்கே சிதிலராவார் –
கீழே நம் ஆர்த்த த்வனி கேட்டு நாட்டுக்கு நோவு பட வேண்டா -என்றார் -பின்னையும் நாட்டுக்கு ஸைதில்யமே சேஷித்து விட்டது –

மாற்றங்கள் ஆய்ந்து கொண்டு மதுசூதபிரான் அடிமேல்
நாற்றங்கொள் பூம்பொழில் சூழ் குருகூர்ச்சட கோபன்சொன்ன
தோற்றங்க ளாயிரத்துள் இவையும்ஒரு பத்தும்வல்லார்
ஊற்றின்கண் நுண்மணல்போல் உருகாநிற்பர் நீராயே.–6-8-11-ஊற்று வாயில் சிறு மணல் போலே நீராய் சிதிலர் ஆவார் -நம் தசையை வாய் விட்டு நாட்டை அழித்தோம் ஆகாதே என்கிறார் -இத்தை பலமாகச் சொல்லிற்று -பகவத் பிரவணரைக் கண்டு ஈடுபடுகை நாட்டார்க்கு ப்ராப்யம் என்கைக்காக

என்னும் சாம்யத்யாலே வாச்யன் பத்தினாய தோற்றம் போலே தோற்றங்கள் ஆயிரத்தின் பத்துப் பத்தான இதின் ஆவிர்பாவம் — அதாவது—இப்படி அவனோடு சாம்யம் உடைத்தாகையாலே
வாச்யனான -சர்வேஸ்வரனுடைய – பத்தினாய தோற்றம் -திருச்சந்த-79-என்கிற பத்து அவதாரம் போலே – தோற்றங்கள் ஆயிரம் -திருவாய்-6-8-11-என்கிற இதனுடைய பத்து பத்தான ஆவிர்பாவம் என்கை .-இத்தால் வாச்யனான ஈச்வரனோடு பலபடியாலும் சாம்யத்தை உடைத்தது ஆகையாலே
அவன் தான் லோக ரஷண அர்த்தமாக பத்து அவதாரமாய் அவதரித்தது போலே இதுவும் லோக ரஷண அர்த்தமாக பத்துப் பத்தாக அவதரித்தது என்றது ஆய்த்து-

இப்படி ஸர்வேஸ்வரனோடு ஸாம்யத்தை உடைத்தாகையாலே (வாஸ்யன்‌ பத்தினாய தோற்றம் போலே ) தனக்கு வாஸ்யனான ஸர்வேஸ்வரனுடைய பத்தினாய தோற்றம் திருச்சந்த -79)என்கிற பத்து அவதாரமே போலே ‘தோற்றங்களாயிரம்‌ (திருவாய்மொழி 6-8-11) என்று இத்திருவாய்மொழியின்‌ பத்துப்‌ பத்தான ஆவிர்ப்பாவமுமென்கிறார் –

பத்தினோடு பத்துமாய் ஓர் ஏழினோடு ஓர் ஒன்பதாய்
பத்து நான்கு திசைக்கண் நின்ற நாடு பெற்ற நன்மையாய்ப்
பத்தினாய தோற்றமொடு ஓர் ஆற்றல் மிக்க வாதி பால்
பத்தர் ஆமவர்க்கு அலாது முக்தி முற்றல் ஆகுமே –-79-தச ப்ராதுர்பாவத்தாலே ஆவிர்பவித்து
சம்சாரிகள் பண்ணும் பரிபவதை பொறுத்து ரஷிக்கும் பூர்வஜன் பக்கலிலே-தோற்றம் ஆவது -அதீந்த்ரியனான தன்னை சஷூர் விஷயம் ஆக்குகை

மாற்றங்கள்  ஆய்ந்து கொண்டு மதுசூதபிரான் அடிமேல்
நாற்றங்கொள் பூம்பொழில் சூழ் குருகூர்ச்சட கோபன்சொன்ன
தோற்றங்க ளாயிரத்துள் இவையும்ஒரு பத்தும்வல்லார்
ஊற்றின்கண் நுண்மணல்போல் உருகாநிற்பர் நீராயே.–6-8-11-நிதியினுடைய தோற்றம் போலே இருக்கை -ஆவிர்ப்பவித்த ஆயிரம் –


ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ ஆய் ஜநந்யாசார்யர்‌ ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ ஆசார்ய ஹ்ருதயம்‌–ஸ்ரீ திராவிட ப்‌,ரஹ்ம ஸூத்ரம்‌-13 –உபதேஸ பாதம் -(208 –213) 20-மங்கலா சரண-ஸத்வத் தத்த்வாதி கரணம்‌-(213)-ஸ்ரீ மணவாள மா முனிகள் -ஸ்ரீ ஆய் ஸ்வாமிகள் வியாக்யானங்கள்–

July 29, 2026

1) பூர்வ த்‌,விகம்‌ – ஸூரி வைபவம்‌ 1 முதல்‌ 186 வது ஸூத்ரம்‌ வரை (186)
(2) உத்தர த்‌,விகம்‌ – ஸூரி ஸுக்த்தி வைபவம்‌– 187 முதல்‌ 234 முடிய (48)

(1) ப்ரத, மோத்‌, யாயம் -ஸாஸ்த்ர தாத்பர்ய அதிகாரி வைபவம்‌ 1-38 (38)
(2) த்‌,விதீயோத்‌, யாய: – க்‌,ரந்த, கர்த்ரு வைப,வம்‌ 39 – 186 (148)
(3) த்ருத்யோத்‌, யாயம் – க்‌,ரந்தாந்தர தார தம்ய வைப,வம்‌ 187-207 (21)
(4) சதுர்த்தே ரத்‌, யாயம் -கிரந்த, ப்ரதிபாத்‌,ய க்ரம வைப,வம்‌ 208-234 (27)

13 –உபதேஸ பாதம் -208 –213—மொத்தம் –6– ஸூரணைகள் –மூன்று அதிகரணங்கள் —
18– ரஹஸ்ய த்ரயார்த்த உபதேஸாதி, கரணம்‌ —208–210—மொத்தம்–3-ஸூரணைகள்
19 –அர்த்த, பஞ்சக ஸங்க்‌,ரஹ-விவரணாதி,கரணம்‌ -211 -212-மொத்தம்—2-ஸூரணைகள்
20-மங்கலா சரண-ஸத்வத் தத்த்வாதி கரணம்‌-213–ஒரே ஸூரணை

அவிக்ன பரிசமாப்தி பிரசய கமநார்தமாக பிரபந்த ஆரம்பத்தில் ஆசரிக்கப் படும் – ஆசீர் நமஸ்க்ரியா -வஸ்து -நிர்தேசங்கள் ஆகிற மங்கள ஆசாரங்கள் இதிலும் உண்டோ என்னும் ஆ காங்க்ஷையிலே அருளிச் செய்கிறார் மேல் —ப்ரபந்த ஆரம்பத்திலே அந்த ப்ரபந்தத்தினுடைய அவிக்‌ந பரி ஸமாப்த்யர்த்தமாகவும்‌ சொல்லக் கடவதான ஆஸீர் நமஸ்க்ரியா வஸ்து நிர்தேஸம்‌ என்கிற இவை இப் ப்ரபந்த ஆரம்பத்திலுமுண்டோ என்னில்‌,

அடி தொழுது எழு என்ற இதிலே வஸ்து நிர்தேச நமஸ்கார ஆசீஸ் ஸூக்களும் உண்டு–சூரணை -213-

(அடி-என்ற இதிலே வஸ்து நிர்தேசமும்-தொழுது – என்ற இதிலே நமஸ்காரமும் எழு -என்ற இதிலே ஆசீஸ்ஸூம் உண்டு–என்றவாறு )

அதாவது-துயர் அறு சுடர் அடி -என்கையாலே வஸ்து நிர்தேசமும் தொழுது -என்கையாலே -நமஸ்காரமும்-எழு -என்கையாலே ஆசீஸ்ஸும் உண்டு என்ற படி .

“துயரறு சுடரடி” (திருவாய்மொழி 1-1-1) என்று வஸ்து நிர்தேஸத்தையும்‌ “தொழுது” என்று நமஸ்காரத்தையும்‌ “எழு” என்று ஆஸீஸ்ஸையும்‌ சொல்லிற்றென்கிறார் –

உண்டு– அதாவது- இப்படி நாம் ஒரு பிரபந்தம் பண்ண வேண்டும் கருதி இருந்து இவர் செய்தது அன்றிக்கே – நிரம்பின ஏரி நெளிக்குமா போலே -வாய்கரை மிடைந்து புறப் பட்ட சொற்கள் இவர் பாசுரத்தாலே லோகத்தைத் திருத்தக் கோலுகிற சர்வேஸ்வரன் நினைவாலே – சர்வ லஷணோ பேதமாக தலைக் கட்டின பிரபந்தம் ஆகையாலே – இம் மங்கள ஆசாரங்களும் கோல் விழுக் காட்டாலே பலித்தன இத்தனை ஆகையாலே ஆய்த்து ..-அடி தொழுது எழு -என்ற இதிலே இவையும்- பண்ணப் பட்டன- என்னாதே- உண்டு – என்று விட்டது —

–——————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ ஆய் ஜநந்யாசார்யர்‌ ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ ஆசார்ய ஹ்ருதயம்‌–ஸ்ரீ திராவிட ப்‌,ரஹ்ம ஸூத்ரம்‌-13 –உபதேஸ பாதம் -(208 –213) -19 –அர்த்த, பஞ்சக ஸங்க்‌,ரஹ-விவரணாதி,கரணம்‌ -(211 -212-)ஸ்ரீ மணவாள மா முனிகள் -ஸ்ரீ ஆய் ஸ்வாமிகள் வியாக்யானங்கள்–

July 29, 2026

1) பூர்வ த்‌,விகம்‌ – ஸூரி வைபவம்‌ 1 முதல்‌ 186 வது ஸூத்ரம்‌ வரை (186)
(2) உத்தர த்‌,விகம்‌ – ஸூரி ஸுக்த்தி வைபவம்‌– 187 முதல்‌ 234 முடிய (48)

(1) ப்ரத, மோத்‌, யாயம் -ஸாஸ்த்ர தாத்பர்ய அதிகாரி வைபவம்‌ 1-38 (38)
(2) த்‌,விதீயோத்‌, யாய: – க்‌,ரந்த, கர்த்ரு வைப,வம்‌ 39 – 186 (148)
(3) த்ருத்யோத்‌, யாயம் – க்‌,ரந்தாந்தர தார தம்ய வைப,வம்‌ 187-207 (21)
(4) சதுர்த்தே ரத்‌, யாயம் -கிரந்த, ப்ரதிபாத்‌,ய க்ரம வைப,வம்‌ 208-234 (27)

13 –உபதேஸ பாதம் -208 –213—மொத்தம் –6– ஸூரணைகள் –மூன்று அதிகரணங்கள் —
18– ரஹஸ்ய த்ரயார்த்த உபதேஸாதி, கரணம்‌ —208–210—மொத்தம்–3-ஸூரணைகள்
19 –அர்த்த, பஞ்சக ஸங்க்‌,ரஹ-விவரணாதி,கரணம்‌ -211 -212-மொத்தம்—2-ஸூரணைகள்
20-மங்கலா சரண-ஸத்வத் தத்த்வாதி கரணம்‌-213–ஒரே ஸூரணை

ஆக இப்படி த்வ்யார்த்த பிரதிபாதகதயா தீர்க்க சரணாகதியாய் இருக்கிற திரு வாய் மொழிக்கு
மற்றும் ஆச்சார்யர்கள் அருளிச் செய்யும் அர்த்த யோசனைகளை அருளிச் செய்கிறார் —இனி மேல்‌ திருமந்த்ரத்திலும்‌ சரம ஸ்லோகத்திலும்‌ ஸங்க்‌ரஹேண ப்ரதிபாதிக்கப்பட்ட அர்த்த பஞ்சகத்தை த்‌வயத்திலே விவரித்தாப் போலே திருவிருத்தம்‌ திருவாசிரியம்‌ திருவந்தாதி என்கிற மூன்று ப்ரபந்தத்திலும்‌ ஸங்க்‌ரஹேண சொல்லப்பட்ட அர்த்த பஞ்சகத்தை த்‌வயத்தினுடைய ஸ்தாநேயாயிருக்கிற இத்‌ திருவாய்மொழியிலே விஸ்த்ருதமாகச்‌ சொல்லுகையாலே அர்த்த பஞ்சகமும்‌ இதுக்கு ப்ரமேயமென்றும்‌ அந்த அர்த்த பஞ்சகத்திலும்‌ வைத்துக்‌ கொண்டு  உபாயோபேயங்களிரண்டுமே இதுக்கு ப்ரமேயமென்றும்‌ அவை தன்னிலும்‌ உபாயமொன்றுமே இதுக்கு ப்ரமேயமென்றும்‌ சொல்லக்‌ கடவதென்கிறார்‌-

மூன்றில்‌ சுருக்கிய ஐந்தையும்‌ உயர்‌ திண்‌ அணை ஒன்று பயில்‌ ஏறு கண்‌ ௧ரு வீடு சொன்னால்‌ ஒருக்‌ கொண்ட நோற்ற நாலும்‌ எம்மா ஒழிவில்‌ நெடு வேய்‌ என்கிற இருபதிலே விஸதமாக்கி எண்பதிலே பரப்புகையாலே ஐந்தையும்‌ அருளினன்‌ வீடு பெற்ற வென்கையாலே ஐந்திலுமிரண்டையும்‌, தொழுது களித்தேன்‌ சொல்லுப்‌ பெற்றேன்‌ பணிசெய்யென்கிற முக்த லக்ஷண வ்ருத்தியாலே இரண்‌ டிலொன்றையும்‌ இதுக்கு ப்ரமேயமென்னும்‌.–சூரணை -211–

(மூன்று -திருவிருத்தம் -திருவாசிரியம் பெரிய திருவந்தாதி -இவற்றில் சுருக்கிய ப்ரமேயம் -ஐந்து -அர்த்த பஞ்சுகம் –இத்தை இருபதில் விசதமாக்கி-என்பதில் பரப்பி -என்றும் கொண்டு –-அருளினன் -வீடு பெற்ற -இரண்டிலும் உபாய ஸ்வரூபத்தையும் உபேய ஸ்வரூபத்தையும் -என்றும் கொண்டு
தொழுது களித்தேன் சொல்லுப் பெற்றேன் பணி செய் என்கிற முக்த லஷண வ்ருத்தியாலே
இந்த இரண்டில் ஒன்றான உபேய -பிராப்தி ஸ்வரூபமே ப்ரமேயம் –என்றவாறு )

அதாவது-மந்த்ர ஸ்லோககங்களில் -சங்கரஹேன உக்தங்களான அர்த்த விசேஷங்களை
த்வயத்திலே விவரிக்குமா போலே – பூர்வ பிரபந்த த்ரயத்திலும் சங்கரஹேன சொல்லப் பட்ட அர்த்த பஞ்சகத்தையும் –ஸ்ருதி சாயையாலே அந்வய ரூபேண -ஸ்வ அனுபவ முகத்தாலே — பரத்வத்தில் பரத்வத்தை பிரதி பாதித்த -உயர்வற உயர் நலமும் —1-1–இதிகாச புராண பிரக்ரியையாலே –அந்வய வ்யதிரேகங்கள் -இரண்டாலும் -பர உபதேச முகத்தாலே அவதாரத்திலே பரத்வத்தை பிரதி பாதித்த -திண்ணன் வீடும் –2-2–மோஷ பிரதத்வ கதனத்தாலே பரத்வத்தை பிரதி பாதித்த -அணைவது அரவு அணையும் –2-8–அர்ச்சாவதாரத்திலே பரத்வத்தை பிரதி பாதித்த -ஒன்றும் தேவும்-4-10- -ஆகிற
நான்கு திரு வாய் மொழியாலும் பர ஸ்வரூபம் —

திருவிருத்தம்‌ திருவாசிரியம்‌ திருவந்தாதி என்கிற மூன்று ப்ரபந்தத்தில்‌ சுருங்கச்‌ சொல்லப்பட்ட அர்த்த பஞ்சகத்தையும்‌ திருவாய்மொழியில்‌ (உயர்‌ திண்‌ அணை ஒன்று) முதல்‌ திருவாய்மொழியான உயர்வற உயர் நலத்தில்‌ ஸ்ருதிச் சாயையாலே அந்வய ரூபேண ஸ்வாநுபவ ரூபத்தாலே பரத்வத்திலே பரத்வத்தையும்‌, திண்ணன்‌ வீட்டில்‌ (திருவாய்மொழி 2-2 இதிஹாஸ புராண ப்ரக்ரியையாலே அந்வய வ்யதிரேகங்கள்‌ இரண்டாலும்‌ பரோபதேஸ முகத்தாலே அவதாரத்திலே பரத்வத்தையும்‌, அணைவதரவணையில்‌ (திருவாய்மொழி 2-8 மோக்ஷ ப்ரதத்வத்தாலே வந்த பரத்வத்தையும்‌, ஒன்றும்‌ தேவிலே (திருவாய்மொழி 4-10) அர்ச்சாவதாரத்திலே பரத்வத்தையும்‌ சொல்லுகையாலே, ஆக உயர்வற உயர்நலம்‌ திண்ணன் வீடு அணைவதரவணை ஒன்றுந் தேவு என்கிற நாலு திருவாய்மொழியாலும்‌ பர ஸ்வரூபத்தையும்‌; 

உயர்வற உயர் நலம் —1--முதல் திருவாய் மொழியில் சொல்லிற்று ஆயிற்று-நாநா ரத்ன பூர்ணமாய்-அபரிச்சேத்யமான கடலை முந்துற திரளக் கண்டால் போலே ஸ்வரூப ரூப குண விபூதிகளால் பரி பூர்ணனாய் எல்லாப் படியாலும் எல்லாரிலும் மேற்பட்டு சர்வேஸ்வர ரூபனாய் ஸ்ரீ யபதியாக -அபௌருஷேயமாய்க் கொண்டு ஸூ த்ருட பிரமாணமான ஸ்ருதிகளாலே பிரதிபாதிக்கப்பட்ட எம்பெருமானை பாஹ்ய குத்ருஷ்டிகளால் அவிசால்யமாம் படி அவன் பிரசாதத்தாலே சாஷாத் கரித்து அனுபவித்து அனுபவ ஜனித ப்ரீதி உள் அடங்காமை அனுபவித்தபடியே ச விபூதிகனான எம்பெருமானைப் பேசி ஏவம் விதனானவன் திருவடிகளிலே அடிமை செய்து உஜ்ஜீவி என்று தம் திரு உள்ளத்தைக் குறித்து அருளிச் செய்கிறார்-

திண்ணன் வீடு –2-2-–இப்பரத்வம் முதல் திருவாய் மொழியிலே சொல்லிற்று அன்றோ என்னில்–இவர் தாம் ஒரு கால் அனுபவித்த குணத்தையே அபூர்வமாக அனுபவிக்க வல்ல அபி நிவேசத்தை உடையவர் – அவனும் அநுபூத குணங்களையே அபூர்வமாக அனுபவிப்பிக்க வல்லவன் – அதுவே யன்று-அங்கு தாம் அனுபவித்தார் -இங்கு பிறர்க்கு உபதேசிக்கிறார்-அங்கு அன்வயத்தாலே உபபாதித்தார் -இங்கு -அன்வய வ்யதிரேகங்கள் இரண்டாலும் உபபாதிக்கிறார் அங்கு சுருதி பிரகிரியையாலே -இங்கு இதிகாச புராண ப்ரக்ரியையாலே – அங்கு பரத்வத்திலே பரத்வம் இங்கு அவதாரத்தில் பரத்வம் –

அரவு அணை –2-8-இது திருவாய் மொழி பரத்வ உபதேசம் என்று பூர்வர்கள் நிர்வஹிப்பர்கள்
பல இடத்திலும் பரத்வம் சொல்லா நின்றது -மோக்ஷ பிரதத்வம் தனியே சொல்ல வேண்டுவது ஓன்று -அத்தைச் சொல்லுகிறது -என்று பட்டர் அருளிச் செய்வார்
– இவை தான் ஒன்றை ஓன்று ஒழிந்து இராது –மோக்ஷ பிரதத்வம் சர்வேஸ்வரத்தோடே வ்யாப்தம் -சர்வேஸ்வரனாகில் மோக்ஷ பிரதனாய் இருக்கும்
மோக்ஷம் ஆகிறது -தனக்கு அசாதாரணமாய் முக்த ப்ராப்யமான தன்னுடைய ஐஸ்வர்யம்
அதாகிறது பிராட்டி திரு வனந்த ஆழ்வான் முதலான நித்ய ஸூ ரிகளை பரிகாரமாக உடைத்தாய்
அளவுடையார்க்கும் ஸ்வ யத்ன சாத்தியம் அன்றிக்கே தன்னாலே தன்னைப் பெறுவார்க்கு அநாயாஸ ஸித்தமாய்-நிரதிசய ஸூக ரூபமாய் அபரிச்சேதயமாய் -அதி ஸ் ப்புடமாய் சர்வ உத்க்ருஷ்டமான ஐஸ்வர்யம் –

ஒன்றும் தேவும்-4-10–இதில் ஈஸ்வரனும் திருத்த ஒண்ணாத என்று கை விட்ட சம்சாரிகளை தம்முடைய கிருபாதிசயத்தாலே திருத்த உத்யோகித்து அவனுடைய பரத்வ ஸுலப்யங்களை உபதேசித்து –இவனை ஆஸ்ரயித்து உஜ்ஜீவியுங்கோள் -என்கிறார் –ப்ரஹ்ம ருத்ராதிகளுக்கும் உத்பாதகனான ஸ்ரீ யபதியே சர்வ ஸ்மாத் பரன் என்றும் பிரதிபாதித்து இவன் அரியன் என்று கை வாங்க வேண்டாத படி திரு நகரியிலே சர்வ ஸூ லபனாய் வந்து சந்நிஹிதனான அவனை ஆஸ்ரயிங்கோள் என்கிறார் –சம்சாரத்துக்கு பீஜம் -பகவத் பரத்வ ஞானம் இல்லாமையும் ஸ்வ ஸ்வாதந்தர்ய ப்ரபத்தியும் யாயிற்று
அவற்றைத் தவிர்க்கைக்காக அவனுடைய பரத்வத்தை உபதேசித்து அவனை ஆஸ்ரயித்து உஜ்ஜீவியுங்கோள் என்கிறார்-முதல் திருவாய்மொழி யிலே சாஸ்த்ரா சுத்தமான பகவத் பரத்வத்தை பகவத் பிரசாதத்தாலே கண்டு அனுபவித்தார்-திண்ணன் வீட்டிலே வேத உப ப்ரும்ஹணமான இதிஹாச புராண பிரக்ரியாலே பரத்வத்தை பேசினார்-அணைவது அரவணை மேல் -மோக்ஷ பிரதத்வம் சர்வேஸ்வரனது ஆகையால் மோக்ஷ ப்ரதன் என்கிற ப்ரசங்கத்தாலே பரத்வத்தை அருளிச் செய்தார் -இதில் உளன் சுடர் மிகு ஸ்ருதியுள்-என்று முதலிலே ப்ரஸக்தமான சுருதி சாயலாலே பரத்வத்தை உபதேசிக்கிறார் –

பகவத் சேஷத்வதிலும் தத் காஷ்டையான பாகவத சேஷத்வமே ஆத்மாவுக்கு உத்தேச்யம் என்று
பிரதி பாதித்த -பயிலும் சுடர் ஒளியும் —3-7- சேஷத்வ பஹிர் பூதங்களான ஆத்மாத்மீயங்கள் த்யாஜ்யம் என்கிற வ்யதிரேகத்தாலே சேஷத்வமே ஆத்மாவுக்கு ஸ்வரூபம் என்று பிரதி பாதித்த -ஏறாளும் இறையோனும்-4-8–பகவானுக்கு இவ் ஆத்ம வஸ்து பிரகார தயா சேஷமாய் -ப்ரக்ருதே பரமாய் -ஞான ஆனந்த லஷணமாய்-இருக்கும் என்பதை பிரதிபாதித்த -கண்கள் சிவந்தும் –8-8- அந்ய சேஷ பிரசங்கமும் – அசஹ்யமாம் படி அதின் அனந்யார்ஹத்வத்தை பிரதி பாதித்த -கரு மாணிக்க மலையும் -8-9–ஆகிற நான்கு திரு வாய் மொழியாலும் ஸ்வ ஸ்வரூபமும்-

(பயிலேறு கண்‌ ௧ரு ) பயிலும்‌ சுடரொளியில்‌ (திருவாய்மொழி 3-7] இவ் வாத்மாவுக்கு ஸேஷத்வமே ஸ்வரூபமாகையாலே அதினுடைய எல்லையான பாகவத ஸேஷத்வத்தையும்‌, ஏறாளுமிறையோனில்‌ (திருவாய்மொழி 4-8) அவன்‌ வேண்டாத ஆத்மாத்மீயங்களை வேண்டேன்‌ என்று இவ் வாத்மா ஸேஷமான போது உபாதேயமாய்‌ அல்லாத போது த்யாஜ்யமென்கிற வ்யதிரேகத்தாலே ஸேஷத்வமே ஸ்வரூபமென்னுமிடத்தையும்‌ கண்கள்‌ சிவந்திலே “சென்று சென்று பரம் பரமாய்‌” (திருவாய்மொழி 8-8-5) இத்யாதி யாலே ஸேஷத்வாஸ்ரயமான ஆத்ம வஸ்துவினுடைய ப்ரக்ருதே:பரத்வ ஜ்ஞாநாநந்த அமலத்வங்களையும்‌ கரு மாணிக்க மலையிலே அந்த ஸேஷத்வத்தினுடைய அநந்யார்ஹத்வத்தையும்‌ சொல்லுகையாலே, ஆக பயிலுஞ்சுடரொளி ஏறாளுமிறையோன்‌ கண்கள் சிவந்து கரு மாணிக்கமலை என்கிற நாலு திருவாய்மொழியாலும்‌ ஸ்வ ஸ்ரூபத்தையும்‌, 

பகவத் வ்யதிரிக்த விஷயங்களை பற்றுகைக்கு உடலான அஹங்கார மம காரங்கள் த்யாஜ்யம் என்ற -வீடு முன் முற்றவும் –1-2- அசேவ்ய சேவை த்யாஜ்யம் என்ற -சொன்னால் விரோதமும் –3-9- ஐஸ்வர்ய கைவல்யங்கள் த்யாஜ்யம் என்ற -ஒரு நாயகமும் –4-1- சரீர சம்பந்த நிபந்தனமாக வரும் பரிக்ரஹங்கள் த்யாஜ்யம் என்கிற -கொண்ட பெண்டிரும் –9-1- ஆகிய நாலு திரு வாய் மொழிகளும் விரோதி ஸ்வரூபம் —

பயிலும் சுடர் ஒளி —3-7–பகவத் குணங்களே தாரகமாய் இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்கள் ஜென்ம வருத்தங்களால் குறைய நின்றார்களே யாகிலும் அவர்கள் எனக்கு நாதர் -நான் அவர்களுக்கு அடியன் -என்று அவர்களோட்டை சம்பந்தத்தை அனுபவிக்கிறார்-பகவத் ஸுலப்ய த்தை அர்ச்சாவதார பர்யந்தமாக உபதேசித்தார் கீழே சம்சாரிகளுக்கு உபதேச நிரபேஷமாக பகவத் ப்ரவணராய் இருக்கிற ஸ்ரீ வைஷ்ணவர்களோட்டை சம்பந்தத்தை அனுபவித்து ப்ரீதர் ஆகிறார்-எம்மா வீடு –ப்ராப்யத்தின் உடைய பிரதம அவதி -இது – சரம அவதி -கச்சதா மாதுலம் குலம்-

ஏறாளும் இறையோனும்-4-8-அவனுகுக்காக கண்ட என்னுடைய ஆத்மாத்மீயங்கள் அவனுக்கு ஆதரணீயம் அன்றாகில் எனக்கும் அவற்றால் கார்யம் இல்லை என்று அவற்றால் தாம் நசை அற்ற படியை அந்யாபதேசத்தால் அருளிச் செய்கிறார்-கோவை வாயாள் -திருவாய் மொழியில் படி விரும்பினவன் இப்படி உபேக்ஷித்த பின்பு என்னாலும் என் உடைமையாலும் எனக்குத் தான் என்ன கார்யம் உண்டு என்கிறாள் –ஆத்மாத்மீயங்களை அவன் விரும்பின வழியாலே விரும்ப வாயிற்று பிராப்தம் –அல்லது தான் உகந்த வழியாலே விரும்புமது தேஹாத்ம அபிமானத்தோடே ஒக்கும் அத்தனை – முந்துற ஆத்மாவை வேண்டேன் என்னாதே-உடைமையை வேண்டேன் -என்றது -இவள் தன்னிலும் இவள் உடைமையை அவன் விரும்புகையாலே அவன் விரும்புன அடைவே உபேக்ஷிக்கிறாள்-என்னுடைமையை வேண்டேன் என்று திரளச் சொல்லாதே வ்யக்தி தோறும் வேண்டேன் என்கிறது என் என்னில் – அவன் வ்யக்தி தோறும் விரும்புகையாலே -நதேஹம் ந பிராணன் -நஹிமே ஜீவிதே நார்த்த-ந தேவ லோகா க்ரமணம்

கண்கள் சிவந்தும் –8-8—இந்த ஸ்வரூப வை லக்ஷண்யத்தை இவர் நெஞ்சிலே படுத்தவே இவர் நம்மை விடார் -அது செய்யும் இடத்தில் முதலிலே ஆத்ம ஸ்வரூபத்தை பாரீர் என்னில் -அவ்வாயன்றி நான் அறியேன் -என்று நம்முடைய குணங்களிலே கால் தாழ்ந்து புறம்பு ஒன்றிலே போகாதவர் ஆகையால் -மின்மினி போல் இருக்கிற இது கொடு கார்யம் என் -என்று அத்தை கால் கடைக் கொண்டு பிடி தாரார் என்று பார்த்து –தன் வடிவைக் காட்டி இவரை வர வணைத்து-இவருடைய ஸ்வரூபம் தனக்கு பிரகாரமாய் -தன்னைக் காணும் காட்சிக்குள்ளே காணலாம் படி இருக்கிறபடியையும் தனக்கும் நிறம் கொடுக்கும் படியான வை லக்ஷண்யத்தை யுடைத்தாய் இருக்கிற படியையும் காட்டிக் கொடுக்கக் கண்டு ப்ரீதர் ஆகிறார்-முதல் இரண்டரைப் பாட்டாலே தன் வடிவு அழகைக் காட்டி அவ்வழி யாலே ஸ்வரூபத்தை காட்டிக் கொடுக்கிறனாய் இருக்கிறது – முதல் இரண்டரைப் பாட்டு ஆத்மாஸ்ரயம் என்னும் இடத்தை காட்டிக் கொடுக்கைக்காக ஆஸ்ரயமான தன்னைக் காட்டிக் கொடுக்கிறான் என்றும் சொல்லுவர்-இருத்தும் வியந்தில் அழகு பின்னாட்டுகிறது என்றும் சொல்லுவர்கள்

கரு மாணிக்க மலையும் -8-9–ப்ரீதி பாரவஸ்யத்தாலே-தாமான தன்மை அழிந்து -ஒரு பிராட்டி தசையை பிராப்தராய் ஸ்வ தசையை அந்யாபதேசத்தாலே பேசி இனியராகிறார் –ப்ரீதியில் அந்யாபதேசம் உள்ளது இத்திரு வாய் மொழியே -என்று ஆழ்வான் நிர்வஹிக்கும்-அவனோடே சம்ச்லேஷித்தமை இவள் வடிவிலே வியக்தமாம் அடையாளங்களும் உண்டு -ஆனபின்பு அவனுக்கே கொடுக்கப் பாருங்கோள் -என்று அறத்தோடு நின்று அவர்கள் செய்கிறவற்றை -நீங்கள் கேட்க்கிற அளவுள்ள – இவை எல்லாம் குறைவற்ற விஷயம் -இவை ஒன்றுமே இல்லையே யாகிலும் இவள் தான் அங்கே அநன்யார்ஹை ஆனாள்-நீங்கள் செய்கிற இவற்றை தவிருங்கோள் -என்று -விலக்குகிற தோழி வார்த்தையாய் இருக்கிறது –

(வீடு சொன்னால்‌ ஒரு கொண்ட) வீடுமின் முற்றத்தில்‌ (திருவாய்மொழி 1-2) ஸ்வரூப விரோதி யான அஹங்கார மமகாரங்களை த்யாஜ்யம்‌ என்றும்‌, சொன்னால்‌ விரோதத்தில்‌ (திருவாய்மொழி 3.9) உபாய விரோதியான அஸேவ்ய ஸேவை முதலானவை த்யாஜ்யம்‌ என்னுமிடத்தையும் – ஒரு நாயகத்தில -1- ப்ராப்ய விரோதியான ஐஸ்வர்ய கைவல்யங்கள் த்யாஜ்யம் என்னுமிடத்தையும் கொண்ட பெண்டிரில் -திருவாய் -9-1-ப்ராப்தி விரோதி யான ஸரீர ஸம்பந்திகள்‌ தொடக்கமானவை த்யாஜ்ய மென்னு மிடத்தையும்‌ சொல்லுகையாலே ஆக வீடுமின் முற்றவும்‌ சொன்னால்‌ விரோதம்‌ ஒருநாயகம்‌ கொண்ட பெண்டிர்‌ என்கிற நாலு திருவாய்மொழியாலும்‌ விரோதி ஸ்வரூபத்தையும்‌

(வீடு சொன்னால்‌ ஒரு கொண்ட) வீடுமின் முற்றத்தில்‌ (திருவாய்மொழி 1-2) ஸ்வரூப விரோதி யான அஹங்கார மமகாரங்களை த்யாஜ்யம்‌ என்றும்‌, சொன்னால்‌ விரோதத்தில்‌ (திருவாய்மொழி 3.9) உபாய விரோதியான அஸேவ்ய ஸேவை முதலானவை த்யாஜ்யம்‌ என்னுமிடத்தையும் – ஒரு நாயகத்தில -1- ப்ராப்ய விரோதியான ஐஸ்வர்ய கைவல்யங்கள் த்யாஜ்யம் என்னுமிடத்தையும் கொண்ட பெண்டிரில் -திருவாய் -9-1-ப்ராப்தி விரோதி யான ஸரீர ஸம்பந்திகள்‌ தொடக்கமானவை த்யாஜ்யமென்னு மிடத்தையும்‌ சொல்லுகையாலே ஆக வீடுமின் முற்றவும்‌ சொன்னால்‌ விரோதம்‌ ஒருநாயகம்‌ கொண்ட பெண்டிர்‌ என்கிற நாலு திருவாய்மொழியாலும்‌ விரோதி ஸ்வரூபத்தையும்‌

வீடு முன் முற்றவும் –1-2-அவர்களைத் திருத்தும் விரகு எங்கனே என்று பார்த்து அருளி சேதனர் ஆகிறார் -பொல்லாது கண்டால் கை விடவும் -நல்லது கண்டால் கைக் கொள்ளவும் கடவராய் இருப்பர்
ஆன பின்பு சம்சாரத்தின் தன்மையைக் காட்டியும் பகவத் விஷயத்தின் நன்மையைக் காட்டியும்
திருத்துவோம் என்று பார்த்து அருளி இவர்களுக்கு சம்சாரத்தின் உடைய அல்ப அஸ்த்ரத்வாதி தோஷங்களையும் சர்வராலும் ஸ்ப்ருஹணீயனான எம்பெருமான் படியையும் உபதேசித்து அருளி அவனை பஜியுங்கோள்-என்று பக்தி யோகத்தை அருளிச் செய்கிறார் –

சொன்னால் விரோதமும் –3-9-தாம் பகவத் ப்ரவணர் ஆனால் போலே சப் தாதி விஷயங்களில் மிகவும் ப்ரவண ராய் அதுக்கு உறுப்பாக மனுஷ்யாதிகளை கவி பாடி திரிகிற படியைக் கண்டு தம்முடைய இழவை எல்லாம் மறந்து ஸமஸ்த கல்யாண குணாத்மகனாய் அத்யந்த ஸூ ந்தரனாய் ஸ்ரீ யபதியாய்-இப்படி இருக்கையாலே கவி பாடுகைக்கு விஷயம் போந்து தன்னைப் பாடின கவியைக் கொண்டாடுகைக்கு ஈடான பரிஜனங்களை யும் உடையவனாய்-கேட்டாரார் வானவர்கள் -என்றும்
தொண்டர்க்கு அமுது உண்ண சொல் மாலைகள் சொன்னேன் -கவி பாடினார்க்கு வழங்குகைக்கு ஈடான விபூதிகளையும் உடையவனாய் -எங்கனம் சொல்லிலும் இன்பம் பயக்கும் என்னும் படி -ஸ்வ ஆராதனாய் அவர்களுக்கு போக மோஷாதி சகல புருஷார்த்தங்கள் கொடாவிடிலும்-தன்னைப் பாடுகையே பிரயோஜனம் போந்து இருக்கிற எம்பெருமானை ஒழிய-கவி பாடுகைக்கு ஈடான நன்மைகள் ஒன்றும் இன்றிக்கே -கவி பாடினார்க்கு தருவதும் ஒன்றும் இன்றிக்கே தங்கள் நிஸ் ஸ்ரீ கராய் அதுக்கு மேலே கவி பாடினவர்கள் சந்திக்கும் தனை நாள் -நிலை நிற்பதுவும் செய்யாதே முடியும் ஸ்வபாவராய் கவி பாடினால் ஒரு பிரயோஜனம் பெறாமையே அன்றியே கவி பாட்டு உண்கிறவனுக்கு இல்லாத நன்மைகளை ஏறிட்டு பாடுகையாலே அவனுக்கு உள்ள தோஷங்களை வெளியிட்டு அவ்வழியாலே அவனுக்கு அவத்யாவஹராய் அபிராப்த விஷயத்தில் பாடுகையாலே
கவி பாடினார் நரகம் புகும் படி இருக்கிற ஷூ த்ரரை பகவத் அர்ஹமான உங்களுடைய அழகிய கவிகளைக் கொண்டு ஸ்துதிக்கை ஈடு அன்று என்று அருளிச் செய்து -உங்களை போலே அன்றியே நான் வேறு சிலரை ஸ்துதிக்கை அநர்ஹ கரணனாக பெற்றேன் என்று ப்ரீதராய் முடிக்கிறார்

ஊனில் வாழ் உயிரிலே ப்ரீதிக்கு நித்ய ஸூரிகளை சஜாதீயராக தேடினால் போலே இங்கு வியசனத்துக்கு சம்சாரிகளை சஜாதீயராகக் கருதி இங்கண் அல்லாமையாலே அவர்களை திருத்தப் பார்க்கிறார் — இவர் தம்முடைய இழவுக்கு கூப்பிடுகை தவித்து தங்கள் இழவுக்கு கூப்பிடும்படி பண்ணுவதே சம்சாரிகள் —

ஒரு நாயகமும் –4-1-கீழ் பகவத் அனுபவத்தால் ஹ்ருஷ்டரானவர் அந்த ப்ரீதி ப்ரகரஷத்தாலே இவ்விஷயத்தை ஒழிய ஐஸ்வர்யாதிகளில் மண்டி கிடக்கிறவர்களைப் பார்த்து –இவர்கள் இவற்றினுடைய அல்ப அஸ்திரத்வாதி தோஷங்களை அறியாமையால் இவற்றை விரும்புகிறார்கள் -என்று இவற்றினுடைய தோஷங்களை உபபாதியா நின்று கொண்டு பரம புருஷார்த்த பூதனான எம்பெருமான் திருவடிகளை ஆஸ்ரயிங்கோள் -என்கிறார்வீடுமின் முற்றவும் -திருவாய் மொழியில் பகவத் ஸமாச்ரயணத்தில் நோக்கு-சொன்னால் விரோதம் – திருவாய் மொழியில் பகவத் அர்ஹ காரணங்களைக் கொண்டு அபிராப்தமாய் நிஷ் பிரயோஜனமான விஷயங்களை கவி பாடி பாழே போக்காதே கொள்ளுங்கோள் என்றார் அத்தாலே ஸித்தித்த த்ரவ்யமும் அஸ்திரம் என்கிறது இதில் –

கொண்ட பெண்டிரும் –9-1- ஸமஸ்த சேதனரையும் குறித்து சோபாதிக பந்துக்களான புத்ர மித்ராதிகளை விட்டு நிருபாதிக பந்துவான எம்பெருமானையே பற்றுங்கோள் -என்று உபதேசிக்கிறார்-இப்படி நிருபாதிக பந்து அவனே -புறம்பு உள்ளார் அடங்க சோபாதிக பந்துக்கள் -என்று அனுசந்தித்து -அத்தால் வந்த ப்ரீதியாலே எல்லாரும் சோபாதிக பந்துக்களை விட்டு அவனையே பற்றுங்கோள் என்று பரோபதேச ப்ரவ்ருத்தர் ஆகிறார் –

நோற்ற நோன்பு இலேன் –என்று ஆகிஞ்சன்ய பூர்வமாக -ஆறு எனக்கு நின் பாதமே சரணாக
தந்து ஒழிந்தாய்–என்ற நோற்ற நோன்பும்–5-7- களைவாய் துன்பம் களையாது ஒழிவாய் களை கண் மற்று இலேன்–என்று அநந்ய கதித்வ பூர்வகமாக -கழல்கள் அவையே சரணாக கொண்ட -என்ற -ஆரா அமுதும் –5-8- வைகலும் வினையேன் மெலிய -என்று பக்தி பாரவச்யம் முன்னாக – நம் பெருமான் அடி மேல் சேமம் கொள் தென் குருகூர் சடகோபன் -என்ற -மானேய் நோக்கும் –5-9- எனது ஆவியை நின்று நின்று உருக்கி உண்கின்ற -என்று தரித்து நின்று அவன் குணங்களை அனுசந்திக்க மாட்டாத சைதில்யம் செல்லா நிற்க –நாகணை மிசை நம்பிரான் சரணே சரண் நமக்கு என்று நாள் தோறும் ஏக சிந்தையனாய் -என்ற -பிறந்தவாறும்–5-10- -ஆகிற நாலு திரு வாய் மொழியாலும் உபாய ஸ்வரூபமும்

நோற்ற நாலும்‌) “நோற்ற நோன்பிலேன்‌ நுண்ணறிவிலேன்‌’ (திருவாய்மொழி 5-7-1 என்று தம்முடைய ஆகிஞ்சந்ய பூர்வகமாகவும்‌ ஆராவமுதில்‌ “களைவாய்‌ துன்பம் களையா தொழிவாய்‌ களை கண்‌ மற்றிலேன்‌” (திருவாய்மொழி 5-8-8) என்று தம்முடைய அநந்யகதித்வ பூர்வகமாகவும்‌, மானேய் நோக்கில்‌ “வைகலும்‌ வினையேன்‌ மெலிய (திருவாய்மொழி 9-9-1) என்று தம்முடைய பக்தி பாரவஸ்யதையாலும்‌ அடி மேல்‌ சேமங்கொள்ளென்று ஸரணம்‌ புகுந்து, பிறந்தவாற்றில்‌ “நாகணை மிசை நம்பிரான்‌ சரணே சரண்‌ நமக்கு என்று நாடொறும்‌ ஏக சிந்தையனாய்‌’ (திருவாய்மொழி 5-10-11 என்று தமக்கு அவ்வுபாயத்திலுண்டான அத்‌யவஸாயத்தையும்‌ சொல்லுகையாலே, ஆக நோற்ற நோன்பு, ஆராவமுது, மானேய் நோக்கு, பிறந்தவாறு என்கிற நாலு திருவாய்மொழியாலும்‌ உபாய ஸ்வரூபத்தையும்‌

நோற்ற நோன்பும்–5-7-அவனுக்கு தன் நிலையை விண்ணப்பம் செய்யவே தம் அபேக்ஷிதம் கிட்டும் என்று பார்த்து அருளி-தம் பரிகரம் அடங்க சேவிக்க பிராட்டிமாரோடு வீற்று இருந்து அருளின ஸ்ரீ வானமா மலையை தன் வெறுமையை முன்னிட்டு கொண்டு சரணம் புகுகிறார் –

ஆரா அமுதும் –5-8-திருக் குடந்தையில் சென்று -பரமபதம் கலவிருக்கையாய் இருக்க இங்கே வந்து கண் வளர்ந்து அருளுகிறது குறைவாளர் குறை தீர்க்கைக்கு ஆனபின்பு நம் அபேக்ஷிதம் செய்யாது ஒழியக் கூடாது என்று தம்முடைய அபேக்ஷிதங்கள் எல்லாம் மநோ ரதித்துக் கொண்டு ஸ்ரீ பரத ஆழ்வான் தம் ஆர்த்தி எல்லாம் பெருமாள் திருவடிகளில் செல்லத் தீரும் என்று மநோ ரதித்திக் கொண்டு சென்றால் போலே ஆராவமுத ஆழ்வார் திருவடிகளில் செல்ல-மாமக்ரூரேதி வஷ்யதி -என்கிறபடியே வினவுதல் -குளிர நோக்குதல் அணைத்தல் செய்யாமையாலே – ஸ்தநந்த்ய பிரஜை முலையை நினைத்து விடாய்த்து தாய் பக்கலிலே செல்ல அவன் முகம் பெறாதே தடுமாறுமா போலே
திருவடிகளில் சம்பந்தத்தையும் -சந்நிதி யுண்டாய் இருக்கிற படியையும்-கிடையா விடில் விட ஒண்ணாத போக்யதையையும் சொல்லி-கேட்டார் அடைய நீராம் படி கூப்பிடுகிறார் -ஒரு கால் பண்ணின பிரபத்தி பலித்தது இல்லை என்னா தவிருமவர் அல்லர்-மேன்மேல் என சரணம் புகும் அத்தனை -அப்படி இருக்கை யாயிற்று -மஹா விச்வாஸம் ஆகிறது –அங்கு ஸ்ரீ பரத ஆழ்வானுக்கு பெருமாள் முகம் காட்டா விட்டது தம் பிரதிஞ்ஜை தலைக் கட்டுகைக்காக-இங்கு ஆழ்வாருக்கு முகம் காட்டாது ஒழிந்தது -பிரபந்தம் தலைக் கட்டுகைக்காகவும் -விடாயைப் பிறப்பித்து முகம் காட்டுகைக்காகவும்-

மானேய் நோக்கும் –5-9-உகந்து அருளின நிலங்களில் வந்து இருக்கிற இருப்பு ஆஸ்ரித அர்த்தமாக என்று இருகையாலும் -தமக்குப் பேறு உகந்து அருளின நிலங்களே என்று இருகையாலும்
திரு வல்ல வாழிலே போய்ப் புக்கு -தம்முடைய மநோ ரதங்கள் பூரிக்கும் என்று அங்கே புக்கு -பல ஹானியாலே முட்டப் போக மாட்டாமையாலே நடுவே நோவு படுகிற தம்முடைய தசையை -அந்யாபதேசத்தாலே பேசுகிறார் – எம்பெருமானோடே கலந்து பிரிந்தாள் ஒரு பிராட்டி தன் ஆற்றாமையால் புறப்பட்டு -திருவல்ல வாழுக்கு அணித்ததாகச் சென்று கால் நடை தாராதே நோவு படுகிறவளை -தோழி -அவன் தானே வரக் காணும் அது ஒழிய நீ பதறுகை ஸ்வரூபம் அன்று என்று விலக்க அவ் ஊரில்- திருச் சோலையும் அங்குத்தை பரிமளத்தையும் கொண்டு புறப்படுகிற தென்றலும் -அங்குத்தை திருச் சோலைகளில் மதுபான மத்தமான வண்டுகளுடைய இனிதான மிடற்று ஓசைகளும் -வைதிக க்ரியா கோலா ஹலங்களும் -ஹோம தூமங்களும் -மற்றும் யுண்டான நகர சம்ரப்ங்களும் எல்லாம் -அங்கே ஆகர்ஷிக்க ஏக தத்விதத்ரிதர்கள் ஸ்வேத தீபவாசிகள் அனுபவிக்கிற ஆரவாரத்தைக் கேட்டு தங்கள் அனுபவிக்கப் பெறாமையால் நோவு பட்டால் போலே நோவுபட்டு நிஷேதிக்கிற தோழி மார்களுக்கு -தன் ஆர்த்தியை ஆவிஷ் கரித்து அவர்களை அனுவர்த்தியா நின்று கொண்டு
-திரு வல்ல வாழிலே புக்கு நினைத்த படியே பரிமாற வல்லனே -என்று அவர்களைக் குறித்துச் சொல்லுகிறாள் –

பிறந்தவாறும்–5-10-இத் திருவாய் மொழியில் அவனுடைய குண சேஷ்டிதாதிகளை அனுசந்திக்கப் புக்கு சிதிலரானவர் –இச் ஸைதில்யத்தை போக்கி அருளி தரித்து நின்று அனுபவிக்க வல்லேனாம் படி பண்ணி அருள வேணும் என்று சரணம் புகுகிறார்–அர்ச்சாவதாரத்தில் தம் அபேக்ஷிதம் பெற நினைத்தவர் அங்கு கிடையாமையாலே அவதாரங்களிலே போகிறார்-விபவங்களிலும் இழந்தாருக்கும் இழவு தீர்க்க இடமாய் இருக்க அவதாரங்களில் போருகை யாவது என் – அர்ச்சாவதாரத்தில் அதீந்த்ரியனான தன்னை சம்சாரிகள் கண்களுக்கு விஷயம் ஆக்குகையும் -சர்வ அபேக்ஷிதங்களையும் கொடுக்கையும் ஒழிய குளிர நோக்குதல் வினவுதல் செய்யக் கடவது அன்றாக சங்கல்பித்து இருக்கையினாலே -சத்ய சங்கல்பனுடைய சங்கல்பம் குலையும் படி
அதி நிர்பந்தம் பண்ணைக் கடவோம் அல்லோம் என்று –ஸம்ஸ்ப்ரூ க்ருஷ்யச ப்ரீதியா –ஸூ காடம் பரிஷஸ்வஜே -என்று கிருஷ்ணாவதாரத்தில் போந்தார் ப்ரத்யாசத்தியாலே -அதுவும் தீர்த்தம் பிரசாதிக்கையாலே -பல்லில் பட்டுத் தெறித்தது -என்று கூப்பிடுகிறார் -இது ஆழ்வான் நிர்வாஹம் –
உன்னைப் பிரிந்து நோவு படுகிற சமயத்தில் உன்னுடைய குண சேஷ்டிதாதிகள் ஸ்ம்ருதி விஷயமாய் நலியா நின்றது -இவ் வவசாதம் தீரும் படி உன் திருவடிகளில் வந்து சேர்வது என்று என்கிறார் என்று பிள்ளை திரு நறையூர் அரையர் அருளிட்டார் நிர்வாஹம் –

தனக்கேயாக -என்று கைங்கர்யத்திலே ஸ்வார்த்தா நிவ்ருத்தியை அபேஷித்த -எம்மா வீடும் —2-9-
சர்வ கால விசிஷ்டமான சகல சேஷ வ்ருத்திகளையும் பண்ண வேணும் என்று பாரித்த-ஒழிவில் காலமும் —3-3- அதுதான் பாகவத கைங்கர்ய பர்யந்தமாக வேணும் என்று மநோ ரதித்த –நெடுமாற்கு அடிமையும் –8-10- அது தன்னில் பர சம்ருத்யேக பிரயோஜனத்தை சொன்ன -வேய் மரு தோளிணை யுமாகிற–10-3- நாலு திரு வாய் மொழியாலும்-பல ஸ்வரூபமாய் –

(எம்மா ஒழிவில்‌ நெடு வேய்‌ என்கிற) எம்மா வீட்டிலே (திருவாய்மொழி 2-9) கைங்கர்யத்தினுடைய ஸ்வாதந்த்ர்ய நிவ்ருத்தியை ப்ரார்த்தித்து, ஒழிவில்‌ காலத்தில்‌ (திருவாய்மொழி 3-3)அந்த கைங்கர்யந் தன்னை ஸர்வதேஸ ஸர்வகால ஸர்வாவஸ்தோசிதமாகச்‌ செய்ய வேணுமென்று ப்ரார்த்தித்து, நெடுமாற்கடிமையில்‌ (திருவாய்மொழி 8-10) அந்த கைங்கர்யம்‌ பாகவத பர்யந்தமாக வேணுமென்றும்‌, வேய்மருதோளிணையில்‌ (திருவாய்மொழி 10-3) அது தான்‌ பர ஸம்ருத்‌தயைக ப்ரயோஜநமாகவும்‌ ப்ரார்த்திக்கையாலே, ஆக எம்மா வீடு ஒழிவில் காலம்‌ நெடுமாற் கடிமை வேய்மரு தோளிணை என்கிற நாலு திருவாய்மொழியாலும்‌ பல ஸ்வரூபத்தையும்‌

எம்மா வீடும் —2-9-எனக்கு என்று ஒரு புருஷார்த்தைக் கோலுமது மமகார விஷயம் ஆகையால் ஐஸ்வர்யார்யாதிகளோ பாதி ஹேயம் என்று அத்தை உபேக்ஷித்து பரமபதஸ் தத்தனாய் ஸூ கியாகவும் -சம்சாரத்தில் தூக்கியாகவுமாம் இவற்றில் நிர்பந்தம் இல்லை -உனக்கே யாய் இருக்கும் இருப்பு எனக்கு வேண்டுவது -என்று ஸ்வ ப்ராப்யத்தை நிஷ்கர்ஷிக்கிறார் இது தான் ஸ்வரூபம் அன்றோ அபேக்ஷிக்க வேணுமோ என்னில் புருஷார்த்தங்களுக்கும் சாதாரணமான பிரகிருதி சம்பந்தத்தோடே
இருக்கையாலே அபேக்ஷிக்கை பிராப்தம் –
அவனுக்கு உபாய பாவம் ஸ்வரூபமாய் இருக்கச் செய்தே-உபாயாந்தர நிவ்ருத்தி பூர்வகமாக ஸ்வீ காரம் வேண்டுமா போலே உபேயாந்தர நிவ்ருத்தி பூர்வகமாக ஸ்வரூப அனுகூலமான புருஷார்த்தத்தை அபேக்ஷிக்கை பிராப்தம்

ஒழிவில் காலமும் —3-3-உன்னை அனுபவிக்கைக்கு விரோதியான பிரக்ருதியை போக்க வேணும் என்று இவர் பிரார்த்திக்க இப் பிரக்ருதி நம்மோட்டை பரிமாற்றத்துக்கு விரோதி யல்ல –இப்பிரக்ருதியோடே கூட உம்மை அடிமை கொள்ளுகையில் உள்ள அபி நிவேசத்தாலே அன்றோ இங்கே நிற்கிறது என்று வேதைக சமதி கம்யனான தான் திருமலையில் நின்று அருளுகிற படியைக் காட்டி அருளக் கண்டு ப்ரீதராய் அவன் திருவடிகளில் எப்பேர்ப்பட்ட அடிமைகளும் செய்ய வேணும் என்று-அஹம் சர்வம் கரிஷ்யாமி -என்று பாரித்த இளைய பெருமாளை போலே மநோ ரதிக்கிறார் –

நெடுமாற்கு அடிமையும் –8-10-அவனுடைய ஸுந்தர்ய சீலாதிகளிலே ஈடுபட்டு இருக்கும்
ஸ்ரீ வைஷ்ணவர்களுடைய திருவடிகளிலே சேஷத்து அளவும் சென்று -அவர்களுக்கு சேஷமாகையே நிரதிசய புருஷார்த்தம் என்று அத்யவசித்து – ஐஸ்வர்யம் ஆத்ம பிராப்தி பகவத் பிராப்தி சர்வ நியந்தாவாய் ஆனந்த நிர்ப்பரனாய் இருக்கும் இருப்பு என்று சொல்லுகிற சகல புருஷார்த்தங்களும்
தனித்தனியாகவும் திரளாகவும் இந்த பாகவத சேஷத்வம் ஆகிற புருஷார்த்தத்தோடு ஒவ்வாது –
இப்புருஷார்த்தம் என்றும் நேர் பட வேணும் என்று பிரார்த்தித்து தலைக் கட்டுகிறார் -இதுவும் நமஸ் சப்தார்த்ததில் ஒன்றாய் இருக்கிறது
நின் திரு வெட்டு எழுத்தும் கற்று நான் உற்றதும் உன் அடியார்க்கு அடிமை -என்றது இறே -இன்னம் ஈஸ்வர சேஷத்வம் நிலை நின்றதாவது -ததீயர்க்கு க்ரய விக்ரய அர்ஹம் ஆனால் ஆயிற்று – ஒருவனுக்கு ஓன்று உண்டானால் புத்ர பவ்த்ராதிகளுக்கு இஷ்ட விநியோக அர்ஹம் ஆனால் இ றே அவனுக்கு ஸ்வம்மாய் ஆயிற்று ஆவது –இது தான் பயிலும் சுடர் ஒளியில் சொல்லிற்று அன்றோ என்னில் –அதில் இவ்வாத்மாவுக்கு நாதர் ஸ்ரீ வைஷ்ணவர்கள் -என்றது
இதில் நிரதிசய போக்ய பூதர் அவர்கள் -என்கிறது -ச மஹாத்மா ஸூ துர்லப -பேராளன் பேரோதும் பெரியோர் –-தண் சேறை எம்பெருமான் தாள் தொழுவார் காண்மின் என்தலை மேலாரே
-என்று இறே அளவுடையார் வார்த்தை -இராமாயண புருஷர்களில் ஸ்ரீ சத்ருக்ந ஆழ்வான் இதுக்கு நிதர்சனம் -கச்சதா -இத்யாதி –

வேய் மரு தோளிணையுமாகிற–10-3-ப்ரேமத்தாலே வந்த இருட்சியாலே அஸ்த்தானே பீதராய் தம் தசையை அந்யாபதேசத்தாலே பேசுகிறார் – ராத்திரி எல்லாம் கிருஷ்ணனோடு சம்ச்லேஷித்து -ப்ரபாத சமயத்திலே – சகல சத்தவங்களும் உணர்ந்து கிளம்பவும் செய்து -குயில்கள் கூவுவது -மயில்கள் ஆலிப்பது–இளங்காற்று சஞ்சரிப்பது – -கன்றுகளும் பசுக்களும் காடு எல்லாம் பரவா நிற்பதுவுமாய் இருப்பதைக் கண்டு -அவனுக்கு பிரியக் கடவதாக நினைவு இன்றிக்கே இருக்கச் செய்தே -போது விடிந்தவாறே – பண்டு என்றும் இக்காலத்தில் பிரியக் கண்ட வாஸனையாலே -அவன் பசு மேய்க்கப் போகிறானாக அதி சங்கை பண்ணி –போனானாக அத்யவசித்து -நீயும் பிரிந்தாய் -நீ பிரிந்தால் நலியக் கடவ பதார்த்தங்களும் நலியா நின்றன – -பசு மேய்க்கப் போமது எனக்கு அநபிமதம் -நீ போக வேண்டா என்று சொல்ல ஒண்ணாத படி என்னுடைய நாக்கு நீர் அற்று வாரா நின்றது -நான் நினைத்ததை சொல்ல வல்லேனாம் படி உன்னுடைய அணி மிகு தாமரைக் கையை என் தலை மேலே வைத்து அருளி -உன்னுடைய திருக் கண்களாலே நோக்கி அருள வேணும்-அஸூர ராக்ஷசர் சஞ்சாரத்தால் -சப்ரமாதமான காட்டில் பசு மேய்க்கப் போகாது ஒழிய வேணும்- -மாதா பிதா பிராதா -என்று இவ்வாத்மாவுக்கு சர்வவித பந்துவும் என்று உணர்ந்தால் தன் இழவில் காட்டில் இவனுக்கு பரிய வேண்டும்படி யாயத்து இருப்பது –ஆனபின்பு நீ போகில் நான் உளனாக மாட்டேன் -என்று இன்னுயிர்ச் சேவலிலும்-மல்லிகை கமழ் தென்றலிலும் படும் வியசனத்தை-அவன் சந்நிதியில் பட -அத்தைப் பார்த்து -நாம் போகக் கடவோம் அல்லோம் -நாம் போக நினைப்பதும் செய்திலோம்-என்று
தான் போகாமையை இவள் நெஞ்சிலே படுத்த -அத்தாலே தரித்தாள் ஒரு பிராட்டி பேச்சாலே தம் தசையை அருளிச் செய்கிறார் – எம்மா வீட்டில் தம்முடைய தாதார்த்தயத்தை ஆசைப் பட்டார்-
-இதில் அவன் ஸம்ருத்தியை ஆசாசிக்கும் இதுவே புருஷார்த்தம் -என்கிறார் –

அதுதன்னையே விஸ்தரிக்கையாலே – அர்த்த பஞ்சகமே -இப் பிர பந்தத்துக்கு பிரமேயம் என்றும் –

(இருபதிலே விஸதமாக்கி எண்பதிலே பரப்புகையாலே ஐந்தையும்‌) ஆக இவ் வர்த்த பஞ்சகத்தையும்‌ இவ் விருபது திருவாய்மொழியாலும்‌ விஸதமாக அருளிச் செய்து மற்ற எண்பது திருவாய் மொழியாலும்‌ விஸ்த்ருதமாக்குகையாலே இத் திருவாய்மொழிக்கு இவ்வர்த்த பஞ்சகமும்‌ ப்ரமேயமென்றும்‌

மயர்வற மதி நலம் அருளினன் -1-1-1–என்று தொடங்கி –அவா அற்று வீடு பெற்ற-10-10-11- -என்று
தலைக் கட்டுகையாலே -அவ் ஐந்திலும் வைத்துக் கொண்டு -பிரதானமான –உபாய உபேயங்கள் -இரண்டையும் இதுக்கு பிரமேயம் என்றும் –

(அருளினன்‌ வீடு பெற்ற என்கையாலே ஐந்திலுமிரண்டையும்‌) “மயர்வறமதிநல மருளினன்‌” (திருவாய்மொழி 1-1-1 “அவாவற்று வீடு பெற்ற” (திருவாய்மொழி 10-10-11) என்று அர்த்த பஞ்சகத்துக்கும்‌ ப்ரதாநமான உபாயோபேயங்கள்‌ இரண்டையும்‌ இதுக்கு ப்ரமேயம்‌ என்றும்‌

உயர்வற உயர் நலம் உடையவன் எவன் அவன்
மயர்வற மதி நலம் அருளினன் எவன் அவன்
அயர்வறும் அமரர்கள் அதிபதி எவன் அவன்
துயரறு சுடரடி தொழுது எழு என் மனனே 
–1-1-1—மயர்வற-மயர்வு -அஜ்ஞானம் -இத்தால் ஜ்ஞான உதய -அந்யதா ஜ்ஞான -விபரீத ஜ்ஞான ரூபமான அஜ்ஞானத்தைச் சொல்லுகிறது-அற -சவாசனமாகப் போகும்படி-மதி நலம்-மதி என்று ஜ்ஞானம்-நலம் -என்று பக்தி -பக்தி ரூபாபன்ன ஜ்ஞானம் என்றபடி
அருளினன்-இத் தலையில் நன்மை தீமை பாராதே நிர்ஹேதுக கிருபையால் தந்து அருளினான்
முலைக் கடுப்பாலே தரையிலே பீச்சுமா போலே –-எனக்குத் தந்து அருளினான் -என்னாது ஒழிந்தது -பகவத் விஷயீ காரத்துக்கு முன்பு தம்மை அசத் கல்பராக நினைத்து இருக்கையாலே-எவன்– இப்படி உபகாரகனான ஸ்ருதி பிரசித்தி ஆனவன்-அவன்-அதுக்கு மேலே ஒரு நன்மை சொல்லுகைக்காக அவன் என்று உத்தேசிக்கிறது –

அவா அறச் சூழ் அரியை அயனை அரனை அலற்றி
அவா அற்று வீடு பெற்ற குருகூர்ச் சடகோபன் சொல்
அவா இல் அந்தாதிகளால் இவை ஆயிரமும் முடிந்த
அவா இல் அந்தாதி இப்பத்து அறிந்தார் பிறந்தார் உயர்ந்தே–10-10-11-அவனைப் பெற்று நிரஸ்தித ஸமஸ்த பிரதிபன்னராகையாலே நிர் துக்கரான ஆழ்வார்

தொழுது களித்தேன் சொல்லுப் பெற்றேன் பணி செய் என்கிற முக்த லஷண வ்ருத்தியாலே--அதாவது-
தொழுது எழு என் மனனே-1-1-1- -என்றும் ,-விருப்பே பெற்று அமுதுண்டு களித்தேன் -10-8-6–என்றும் –
மேலைத் தொண்டு களித்து அந்தி தொழும் சொல்லுப் பெற்றேன் -10-8-7–என்றும் -சொல்லப் படுகிற
பத்தாஞ்சலி புடத்வ ஹ்ருஷ்டத்வ நம இத்யேவ வாதித்வங்களாகிற–முக்த லஷணத்தாலும் –
விபந்யவ -என்கிறவர்களைப் போலே-சொற் பணி செய் ஆயிரம் -1-10-11-என்று சொல்லப் படுகிற வாசக வ்ருதியாலும் –அவ் இரண்டிலும் வைத்து கொண்டு –உபேயம் -ஒன்றுமே இதுக்கு பிரமேயம் -என்றும் சொல்லும் என்கை —

(தொழுது களித்தேன்‌ சொல்லுப்‌ பெற்றேன்‌ பணி செய்‌ என்கிற முக்த லக்ஷண வ்ருத்தியாலே இரண்டிலொன்றையும்‌ இதுக்கு ப்ரமேயம்‌ என்னும்‌) ‘தொழுதெழு” என்‌ மனனே” (திருவாய்மொழி 1-1-1 என்றும்‌, “விருப்பே பெற்று அமுதமுண்டு களித்தேனே’ (திருவாய்மொழி 10-8-6)என்றும்‌, “மேலைத்‌ தொண்டுகளித்து அந்தி தொழும்‌ சொல்லுப்‌ பெற்றேன்‌” (திருவாய்மொழி 10-8-7) என்றும்‌ “சொல்‌ பணி செய்‌ ஆயிரம்‌” (திருவாய்மொழி 1-10-11 என்றும்‌ சொல்லுகிறபடியே முக்தர்க்கு அஸாதாரண லக்ஷணமான வாசிக வ்ருத்தி இத் திருவாய்மொழி என்கையாலே அவ்வுபாயோபேயங் களிரண்டிலும்‌ உபேயமொன்றுமே இதுக்குத்‌ தாத்பர்யார்த்த மென்று சொல்லக் கடவதென்கிறார்‌.

உயர்வற உயர் நலம் உடையவன் எவன் அவன்
மயர்வற மதி நலம் அருளினன் எவன் அவன்
அயர்வறும் அமரர்கள் அதிபதி எவன் அவன்
துயரறு சுடரடி தொழுது எழு என் மனனே 
–1-1-1-தொழுது-சேஷியைக் கண்டால் பிறக்கும் வ்ருத்தி விசேஷம்-எழு-உஜ்ஜீவி-தொழப் பெறாதே போது-அசந்நேவ -என்னும்படி யாய் இ றே இருப்பது
என் மனனே-பகவத் பிரத்யாசத்தியாலே தமக்குத் திரு உள்ளத்தோடு ஒரு சம்பந்தத்தை ஆசைப் படுகிறார் –

திருப் பேர் நகரான் திருமால் இரும் சோலைப்
பொருப்பே உறைகின்ற பிரான் இன்று வந்து
இருப்பேன் என்று என் நெஞ்சு நிறையப் புகுந்தான்
விருப்பே பெற்று அமுதம் உண்டு களித்தேனே –10-8-6--அவன் விருப்பத்தைப் பெற்று -அவனாலே பஹு மானம் பண்ணப் பெற்றுஅமுதம் உண்டு களித்தேனே –அவனுடைய கொண்டாட்டம் ஆகிற அம்ருத பானத்தைப் பண்ணிக் களித்தேன் என்னுதல் -அவனுடைய குண அம்ருத பானத்தைப் பண்ணிக் களித்தேன் என்னுதல் –ஷிபாமி என்று அவனுடைய அவன் உபேக்ஷைக்கு இலக்காகாதே -அவன் பஹு மானத்துக்கு இலக்கானால் -ப்ரீதி உள் அடங்காது இறே –நரக ஹேதுவான விஷய அனுபவத்தால் வந்த களிப்பளவன்றியே -பகவத் அனுபவம் பண்ணப் பெற்ற செருக்கால் உண்டான ப்ரீதியை ஆற்றலாமோ

உண்டு களித்தேற்கு உம்பர் என் குறை மேலைத்
தொண்டு உகளித்து அந்தி தொழும் சொல்லுப் பெற்றேன்
வண்டு களிக்கும் பொழில் சூழ் திருப் பேரான்
கண்டு களிப்ப கண்ணுள் நின்று அகலானே-10-8-7—ஞான அனுபவத்தால் களிக்கப் பெற்ற எனக்கு -இதுக்கு மேலே ஒன்றுமே வேண்டா -இதுவே அமையும் என்னும் படி ஞான அனுபவம் தானே இனிதாய் இறே இருப்பது –உம்பர் என் குறை -மேலே என்ன குறை யுண்டு –உம்பர் -மேல் –மேலைத் தொண்டு உகளித்து –மேலான தாஸ்ய ரசம் அதிசயித்து -யேந யேந தாதா கச்சதி -என்கிற ரசத்தை அனுபவித்து -சேவாச்ச்வ வ்ருத்தி -என்கிற இது இறே கீழான தாஸ்யம் –அந்தி தொழும் சொல்லுப் பெற்றேன்-முடிவிலே -தொழும் சொல்லுப் பெற்றேன் -அனுபவ ப்ரீதி தலை மண்டையிட்டால் -அதன் மேலே நம என்று புத்தி பூர்வகமாக சொல்லும் சொல்லைப் பெற்றேன் –நம இத்யேவ வாதின -இறே -அதாவது ப்ரீதி வழிந்த சொல்லாலே திருவாய் மொழி பாடி அடிமை செய்யப் பெறுகை –

மணியை வானவர் கண்ணனைத் தன்னதோர்
அணியை தென் குருகூர்ச் சடகோபன் சொல்
பணி செய் ஆயிரத்துள் இவை பத்துடன்

தணிவிலர் கற்பரேல் கல்வி வாயுமே –1-10-11-மிடைந்த சொல் -என்கிறபடியே சொற்கள் பணி செய்த ஆயிரம் என்னுதல்-சொல்லாலே பணி செய்த ஆயிரம் என்னுதல் -வாசிகமான அடிமையை சொல்லுதல்

இருபதில் விசதமாக்கி -எண்பதிலே பரப்புகையாலே -ஐந்தையும் இதுக்கு பிரமேயம் -என்னும் -என்ற இது – இப் பிரபந்தங்களில் ஸூக்திகள் -பிராப்யனான எம்பெருமான் உடைய ஸ்வரூப பிரதிபாதன பரமாய் இருக்கும் சில — பிராப்தாவான பிரத்யகாத்மா ஸ்வரூப விஷயமாய் இருக்கும் சில —
பிராப்த்யு உபாயத்தை சொல்லும் சில — பலத்தை சொல்லும் சில .. பிராப்ய விரோதியை சொல்லும் சில – அவ சிஷ்டமானவை இவற்றுக்கு உபபாதங்களாய் இருக்கும் -என்று ஈட்டில் யோஜித்த க்ரமம் 

உபாய உபேயங்கள் இரண்டையுமே இதுக்கு பிரமேயம் என்னும் -என்ற இது –இவை இரண்டுமே பிரதான பிரமேயம் .. இவ் உபாய உபேயங்களுக்கு அதிகாரி இன்னான் என்கைக்காக -பிரத்யகாத்மா ஸ்வரூபம் ..-உபாய பூதனும் உபேய விஷயமும் இன்னார் என்கைக்காக பர ஸ்வரூபம் ..
உபேய பிரதி பந்தகமாய் -உபாய நிவர்தமாய் இருக்கும் அது -இன்னது என்கைக்காக -விரோதி ஸ்வரூபம் சொல்லுகிறது இத்தனை
என்று நினைத்து-

உபேயம் ஒன்றுமே இதுக்கு பிரமேயம் -என்ற இது –இவற்றில் உத்தேச்யம் பலம் – தத் அர்த்தமாக மற்றுள்ள நாலு அர்த்தம் சொல்லுகிறது -என்று ஈட்டில் சொன்ன படி கைங்கர்யமே பிரதானம் –மற்றை நாலும் சொன்னது – கைங்கர்ய பிரதி சம்பந்தியையும் – தத் ஆஸ்ரயத்தையும் – தத் விரோதியையும் –
அவ் விரோதி நிவர்தகத்தையும் அறிவிக்கைகாக ஆகையாலே -தத் சேஷமாக சொன்னது இத்தனை என்று நினைத்து —

இனி பிரதம சரம பிரபந்தங்களினுடைய ஸங்க்ரஹங்களான முதல் பாட்டுகளில் பிரதி பாத்யார்த்தங்களை ஸ்பஷ்டமாக அருளிச் செய்கிறார் –திருமந்த்ரமும்‌ த்‌வயமும்‌ முதல்‌ பதங்களிலே ஸங்க்‌ரஹமாய்‌ ஒழிந்தவிடம்‌ அவற்றினுடைய விவரணமா யிருக்குமா போலே திருவிருத்தமும்‌ திருவாய்மொழியும்‌ முதல்‌ பாட்டுக்களிலே ஸங்க்‌ரஹமாயிருக்கும்‌ என்கிறார்‌ மேல்‌.-

ரஹஸ்யத்துக்கோரெழுத்தும்‌ அதுக்கோருருவும்‌ போலே யானவற்றிலே இமையோரதிபதி அடியேன்‌ மனனே பொய்‌ மயர்வு பிறந்தருளினன்‌ விண்ணப்பம்‌ தொழுதெழென்ற பஞ்சகத்தோடே அவித்‌யாதி ஸ்வரூப ஸ்வபாவாத்மேஸ்வர பந்த ரக்ஷண க்ரம குண விக்ரஹ விபூதி யோக ததீயாபி மாநோபதேஸ விஷய அந்யாபதேஸ ஹேத்வாதிகளும்‌ ஸங்க்‌ருஹீதம்‌–சூரணை -212–

ரஹஸ்யத்துக்கு ஓர் எழுத்தும் அதுக்கு ஓர் உருவம் போல் ஆனவற்றிலே –-அதாவது-(பார் ஏழு கடல் ஏழு மலை ஏழுமாய் சீர் கெழும் இவ்வுலகு ஏழும் எல்லாம் ஆர் கெழு வயிற்றினுள் அடக்கி நின்று அங்கு ஓர் எழுத்து ஓர் உரு ஆனவனே -ஆண்டாய் உனைக் காண்பதோர் அருள் எனக்கு அருளுதியேல் வேண்டேன் மனை வாழ்க்கையை விண்ணகர் மேயவனே -6-1-5– )ஓர் எழுத்து ஓர் உரு-பெரிய திருமொழி -6-1-5- -என்னும்படி – திருமந்த்ரமாகிற ரஹஸ்யத்துக்கு ஸங்க்ரஹமாய் -ஓம் இத் ஏக அஷரம் – என்று ஏக அஷரமாக இருக்கிற பிரணவமும் – தஸ்ய பிரகிருதி லீனச்ய -என்கிற படி –அந்த பிரணவதுக்கு ஸங்க்ரஹமாய் இருக்கும் அகாரம் போலவும் – திரு விருத்தம் -திரு வாய் மொழி ஆகிய பிரபந்தங்களுக்கு ஸங்க்ரஹங்களான முதல் பாட்டுகளில் –

ஒரெழுத்து ஒருருவென்னும்படி திருமந்த்ரத்துக்கு ஸங்க்‌ரஹமான அகாரத்தையும்‌ அதன்‌ விக்ருதியான ப்ரணவத்தையும்‌ போலே என்னுதல்‌-அன்றிக்கே த்‌வயத்துக்கு ஸங்க்‌ரஹமான அதில்‌ ப்ரதம பதத்தையும்‌ போலே யிருக்கிற திருவிருத்தத்தில்‌ முதல்‌ பாட்டிலும்‌ திருவாய்மொழியில்‌ முதல்‌ பாட்டிலும்‌

பாரெழு கடலெழு மலை ஏழு மாயச் சீர் கெழும் இவ் உலகு ஏழும் எல்லாம்
ஆர் குழு வயிற்றினில் அடக்கி நின்று அங்கோர் எழுத்து ஓர் உரு வானவனே
ஆண்டாய் உனைக் காண்பதோர் அருள் எனக்கு அருளுதியேல்
வேண்டேன் மனை வாழ்க்கையை விண்ணவர் மேயவனே
—6-1-5-(எழுத்து ஓர் உரு வானவனே-அகார -வாஸ்யம் -உரு வாசகம் –சொல்லுக்கு காரணம் போல் பொருள்களுக்கு காரணம் –அகாரார்தோ விஷ்ணு –பூமிகள் ஏழும் கடல்கள் ஏழும் மலைகள் ஏழுமான இவற்றுக்கு நிர்வாஹகனாய் அழகு செய்து இருந்துள்ள இந்த லோகங்கள் ஏழும் அடைய –அழகு மிக்கு இருந்துள்ள வயிற்றிலே அடக்கி நின்றாய் –
இத்தால்-வாச்யங்களுக்கு  எல்லாம் தன் பக்கலிலே இருப்பாம்படி இவற்றுக்கு ஆதார பூதனாய் நிற்கும்படி சொல்லிற்று-வாசக ஜாதத்துக்கு எல்லாம் பிரதானமாய் இருக்கிற அகார சப்த வாச்யன் ஆனவனே )

இமையோர் அதிபதி--அதாவது–இமையோர் தலைவா-என்றும் ,-அயர்வறும் அமரர்கள் அதிபதி -என்றும் , ஸூரி சேவ்யமாய் -சர்வாதிகமாய் இருக்கும் –பர ஸ்வரூபத்தையும் –

“இமையோர்‌ தலைவா” (திருவிருத்தம்‌ 1) என்றும்‌ “அயர்வறும்‌ அமரர்கள்‌ அதிபதி” (திருவாய்மொழி 1-1-1 என்றும்‌ சொல்லுகையாலே ஸுரி ஸேவ்யமாய்‌ ஸர்வாதிகமா யிருக்குமென்று பர ஸ்வரூபத்தையும்‌

அடியேன் மனனே--அதாவது–-அடியேன் -என்றும் ,-என் மனனே -என்றும் சேஷ பூதமாய் -பரி சுத்த அந்த கரணமாய் இருக்கும் –ஸ்வ ஸ்வரூபத்தையும் –

அடியேன்‌” என்றும்‌ “என்‌ மனனே” என்றும்‌ சொல்லுகையாலே ஸேஷமாய்‌ அபரிச்சேத்‌யாந்த:கரணமா யிருக்கும்‌ என்று ஸ்வ ஸ்வரூபத்தையும்‌

பொய் மயர்வு--அதாவது–-பொய் நின்ற ஞானமும் ,பொல்லா ஒழுக்கும் , அழுக்கு உடம்பும் -என்றும் ,
மயர்வு -என்றும் ,அவித்யாதிகளான விரோதி ஸ்வரூபத்தையும்

பொய்ந் நின்ற ஞானமும்‌ பொல்லா ஒழுக்கும்‌ அழுக்குடம்பும்‌” என்றும்‌ “மயர்வு” என்றும்‌ சொல்லுகையாலே அவித்‌யாதிகளான விரோதி ஸ்வரூபத்தையும்‌

பிறந்து அருளினன்-அதாவது- உயிர் அளிப்பான் என் நின்ற யோனியுமாய் பிறந்தாய் –என்றும் ,
மதி நலம் அருளினன் -என்றும் , லோக ரஷண அர்த்தமாக அநேக அவதாரங்களைப் பண்ணின சர்வேஸ்வரனுடைய கிருபையே உபாயம் என்று –உபாய ஸ்வரூபத்தையும் –

உயிரளிப்பான்‌ எந் நின்ற யோனியுமாய்ப்‌ பிறந்தாய்‌” என்றும்‌ “மதிநலமருளினன்‌” என்றும்‌ சொல்லுகையாலே லோக ரக்ஷணார்த்தமாக அநேகாவதாரங்களைப்‌ பண்ணின ஸர்வேஸ்வரனுடைய க்ருபையே உபாயமென்று உபாய ஸ்வரூபத்தையும்‌

விண்ணப்பம் தொழுது எழு -என்ற பஞ்சகத்தோடே-அதாவது–செய்யும் விண்ணப்பம் -என்றும் ,
தொழுது எழு -என்றும் சேஷி விஷயத்தில் கரண த்ரயத்தாலும் பண்ணும் கைங்கர்யமே பரம புருஷார்த்தம் என்று பல ஸ்வரூபத்தையும் கொண்டு ஸங்க்ரஹித்துச் சொன்ன அர்த்த பஞ்சகத்தோடே 

“அடியேன்‌ செய்யும்‌ விண்ணப்பமே” என்றும்‌ “தொழுதெழு” என்றும்‌ சொல்லுகையாலே ஸேஷி விஷயத்தில்‌ கரண த்ரயத்தாலும்‌ உண்டான கைங்கர்யமே புருஷார்த்தம்‌ என்று பல ஸ்வரூபத்தையும்‌ ஆக இவ் வர்த்த பஞ்சகத்தையும்‌ ஸங்க்‌ரஹேண சொல்லி அவ்வர்த்த பஞ்சகத்தோடே கூட இந்த இரண்டு பாட்டிலும்‌ அவித்‌யாதி ஸ்வரூப ஸ்வபாவங்கள்‌ முதலான வர்த்த விஸேஷங்களும்‌ ஸங்க்‌ருஹீதமென்கிறார்‌ மேல்‌

அவித்யாதி ஸ்வரூப –அதாவது–பொய் நின்ற ஞானம் இத்யாதியாலே – அவித்யாதிகளைச் சொல்லுகிற அளவில் -உத்பத்தி விநாசாதி யோகத்தாலே அசத்ய சப்த வாச்யமான -அசேதன விஷயத்தில் ஆத்ம ஜ்ஞானமும் அந்த தேக -ஆத்ம அபிமான அடியான -சாம்சாரிக துஷ்கர்ம பிரவ்ருதியும் – அக் கர்மம் அடியாக வரக் கடவதான -மாம்ஸ ஸ்ருகாதி மல ரூப தேக சம்பந்தமும் –
என்ற இவற்றின் உடைய ஸ்வரூபங்களும்–அவித்யாதி — ஸ்வபாவ–அதாவது–விபிரதிபத்தி ஹேதுத்வம் சம்சார ஹேதுத்வம் ஸ்வரூப திரோதாயகத்வம் உத்தர உத்தரங்களில் -பூர்வ பூர்வ காரணத்வம் இனி யாம் உறாமை –என்கையாலே -அவற்றின் அநாதித்வம்-சோபாதிகத்வம்-
மயர்வற மதி நலம் அருளினன் -என்கையாலே அவற்றின் ஜ்ஞான நிவர்த்த்யத்வம் முதலான ஸ்வபாவங்களும் –

(அவித்‌யாதி ஸ்வரூப ஸ்வபாவ) “பொய்ந் நின்ற ஞானமும்‌ பொல்லா ஒழுக்கும்‌ அழுக்குடம்பும்‌” என்று அவித்யா கர்ம வாஸநா ருசி ப்ரக்ருதி ஸம்பந்தங்களினுடைய ஸ்வரூப ஸ்வபாவத்தையும்‌-அன்றிக்கே அவித்‌யாதி, ஸ்வரூப ஸ்வபாவமென்ற இவற்றை தத்வ த்ரய விஷயமாக்கி அவற்றினுடைய ஸ்வரூப ஸ்வபாவங்களைப்‌ “பொய்ந் நின்ற ஞானம்‌” என்றும்‌ –மயர்வு” என்றும்‌ அவித்‌யையாகிற அசித் ஸ்வரூபத்தையும்‌ ஜ்ஞாநாநுதய அத்யதாஜ்ஞாந விபரீத ஜ்ஞானங்களாகிற அவித்‌யா ஸ்வபாவத்தையும்‌ அடியேன்‌ என்று ஆத்ம ஸ்வரூபத்தையும்‌ “என் மனனே” என்று ஆத்மாவினுடைய ஸ்வபா வத்தையும்‌ “தலைவா” என்றும்‌ “யவன்‌” என்றும்‌ ஈஸ்வர ஸ்வரூபத்தையும்‌“நலமுடையவன்‌” என்று அவனுடைய ஸ்வபாவத்தையும்‌ சொல்லுகிறார்‌ என்றுமாம்‌.

ஆத்மேஸ்வர பந்த-அதாவது–-இமையோர் தலைவா –அடியேன் -என்றும் – அதிபதி –அடி தொழுது
என்கையாலே ஆத்மாவுக்கும் ஈஸ்வரனுக்கும் உண்டான சேஷ சேஷி பாவ சம்பந்தமும்

(ஆத்மேஸ்வரபந்த ) “இமையோர்‌ தலைவா” “அடியேன்‌” “அதிபதி”“தொழுதெழு” என்று ஜீவேஸ்வரர்களுக்குண்டான ஸேஷ ஸேஷி பாவ ஸம்பந்தத்தையும்‌

ரஷண க்ரம-அதாவது–-உயிர் அளிப்பான் என் நின்ற யோனியுமாய் பிறந்தாய் -என்றும் , மயர்வற மதி நலம் அருளினன் -என்றும் அநேக அவதாரங்களை பண்ணி ரஷிக்கும் படியையும் – சம்சார ஹேதுவான அஜ்ஞானத்தை போக்கி -உஜ்ஜீவன ஹேதுவான ஞான பக்திகளை தன் கிருபையாலே தந்த படியையும் சொல்லுகையாலே ஈஸ்வரனுடைய ரஷண க்ரமமும்–

ரக்ஷண க்ரமம்‌ ” உயிரளிப்பான்‌ எந் நின்ற யோனியுமாய்ப்‌ பிறந்தாய்‌ என்றும்‌ “மயர்வற மதிநல மருளினன்‌’ என்றும்‌ ஈஸ்வரன்‌ அநேகா வதாரங்களைப்‌ பண்ணி ரக்ஷிக்குமென்றும்‌ அஜ்ஞானத்தைப்‌ போக்கி ஜ்ஞாந பக்திகளைத்‌ தன்‌ க்ருபையாலே தந்தானென்றும்‌ அவனுடைய ரக்ஷண க்ரமத்தையும்‌

குண விக்ரஹ விபூதி யோக--அதாவது–உயர்வற -உயர்நலம் -துயர் அறு சுடர் அடி -என்றும் , இமையோர் -என்றும் –-அயர்வறும் அமரர்கள் அதிபதி -என்றும்-குண -விக்ரக -விபூதிகளும் —

(குண விக்‌ரஹ விபூதி யோக,) “நலமுடையவன்‌ என்று குணத்தையும்‌, “சுடரடி” என்று விக்‌ரஹத்தையும்‌, இமையோர்‌” என்றும்‌“அயர்வறும்‌ அமரர்கள்‌” என்றும்‌ விபூதியையும்‌ 

ததீய அபிமான–அதாவது- அந்த ஸூரிகளை முன் இடுகையாலே ததீய அபிமானமும்

அந்த ஸுூரிகளை முன்னிடுகையாலே ததீயாபிமானத்தையும்‌

உபதேச விஷய–அதாவது-நின்று கேட்டு அருளாய் -என்றும் ,தொழுது எழு என் மனனே -என்றும் ,
நெஞ்சு போலே பவ்யனான ஈஸ்வரனும் –அப்படி பவ்யமானார் உபதேச விஷயம் -என்னும் அதுவும்

மெய்‌ நின்று கேட்டருளாய்‌”“தொழுதெழு என்‌ மனனே” என்று நெஞ்சு போலே பவ்யமான ஈஸ்வரனும்‌ அப்படி பவ்யரானார்‌ உபதேஸத்துக்கு விஷயமென்றும்‌

அந்ய உபதேச-அதாவது- நலம் அருளினன் என்று – பக்தியைத் தந்தான் என்கையாலே –அந்ய உபதேசத்துக்கு ஹேதுவான பக்தியும் – முதலான அர்த்தங்களும் ஸங்க்ரஹேண சொல்லப் பட்டன என்கை —

(அந்யாபதேஸ ஹேது)“நலமருளினன்‌’ என்று பக்தியைத்‌ தந்தான்‌ என்கையாலே அந்யாபதேஸ த்துக்குஹேது அந்த பக்தி என்றும்‌

அந்ய உபதேச ஹேத்வாதிகளும் -என்ற இடத்தில் –ஆதி சப்தத்தாலே-மற்றும் வேதாந்த ஸங்க்ரஹ தாத்பர்யங்களான அர்த்தங்கள் பலவும் இவற்றில் சங்க்ருஹீதங்கள் என்னும் இடம் காட்டப் பட்டது

ஆதி ஸப்தத்தாலே வேதாந்தங்களில்‌ யாவை சில அர்த்தங்கள்‌ சொல்லப்பட்டது அவை யெல்லாம்‌ ஸங்க்‌ரஹ ரூபேண இவற்றிலே சொல்லப் பட்டதென்கிறார் –

–——————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ ஆய் ஜநந்யாசார்யர்‌ ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ ஆசார்ய ஹ்ருதயம்‌–ஸ்ரீ திராவிட ப்‌,ரஹ்ம ஸூத்ரம்‌-13 –உபதேஸ பாதம் -(208 –213) -18– ரஹஸ்ய த்ரயார்த்த உபதேஸாதி, கரணம்‌ —(208–210)-ஸ்ரீ மணவாள மா முனிகள் -ஸ்ரீ ஆய் ஸ்வாமிகள் வியாக்யானங்கள்–

July 29, 2026

1) பூர்வ த்‌,விகம்‌ – ஸூரி வைபவம்‌ 1 முதல்‌ 186 வது ஸூத்ரம்‌ வரை (186)
(2) உத்தர த்‌,விகம்‌ – ஸூரி ஸுக்த்தி வைபவம்‌– 187 முதல்‌ 234 முடிய (48)

(1) ப்ரத, மோத்‌, யாயம் -ஸாஸ்த்ர தாத்பர்ய அதிகாரி வைபவம்‌ 1-38 (38)
(2) த்‌,விதீயோத்‌, யாய: – க்‌,ரந்த, கர்த்ரு வைப,வம்‌ 39 – 186 (148)
(3) த்ருத்யோத்‌, யாயம் – க்‌,ரந்தாந்தர தார தம்ய வைப,வம்‌ 187-207 (21)
(4) சதுர்த்தே ரத்‌, யாயம் -கிரந்த, ப்ரதிபாத்‌,ய க்ரம வைப,வம்‌ 208-234 (27)

13 –உபதேஸ பாதம் -208 –213—மொத்தம் –6– ஸூரணைகள் –மூன்று அதிகரணங்கள் —
18– ரஹஸ்ய த்ரயார்த்த உபதேஸாதி, கரணம்‌ —208–210—மொத்தம்–3-ஸூரணைகள்
19 –அர்த்த, பஞ்சக ஸங்க்‌,ரஹ-விவரணாதி,கரணம்‌ -211 -212-மொத்தம்—2-ஸூரணைகள்
20-மங்கலா சரண-ஸத்வத் தத்த்வாதி கரணம்‌-213–ஒரே ஸூரணை

இப்படி இவ் ஆழ்வார் உடைய அனுபவ உபதேச ரூபமான பிரபந்த சதுஷ்டயமும் – ரஹஸ்யர்த்தயார்த்த பிரதி பாதகமாய் இருக்கும் படி பிரகாசிப்பதாக நினைத்து உபக்ரமிக்கிறார் மேல்-ஆனால்‌ இந்நாலு ப்ரபந்தத்தாலும்‌ இவருபதேஸிக்கும் வர்த்தம்‌ ஏதென்னில்‌-

இவற்றுக்கு மந்த்ர வித்‌ யநுஸந்தாந ரஹஸ்யங்களோடே சேர்த்தி.–சூரணை-208–

(மந்த்ர ரஹஸ்யம் -திருமந்திரம் -விதி ரஹஸ்யம் -சரம ஸ்லோகம் -அனுசந்தான ரஹஸ்யம் -த்வயம் )

அதாவது-மெய் நின்று மங்க ஓட்டுக்கு நடுவு –என்று கீழ் பிரஸ்துதமான இப் பிரபந்தங்கள் நாலுக்கும்
சகல சாஸ்திர தாத்பர்யமான அர்த்த பஞ்சகத்தையும் –சம்சய விபர்யம் அற-பிரதிபாதிக்கு மவையாய் –
சர்வம் அஷ்டாஷர அந்தஸ்தம் –ஸ்ரீ பாஞ்சராத்ரம் – என்னும் படி சகல சாஸ்திர ஸங்க்ரஹமான திரு மந்த்ரமும்சித்தோ உபாய வர்ணத்தை சாங்கமாக விதிக்கும் சரம ஸ்லோஹமும் – உபாய உபேய வர்ண பிரார்த்தனைகளை -ச க்ரமமாக-பிரகாசிப்பியா நின்று கொண்டு – கால ஷேபத்துக்கும் –
போகத்துக்குமாக – சாரஜ்ஞ்ஞராலே சதா அநுசந்தானம் பண்ணப் படும் த்வயமும் ஆகிய ரஹஸ்யதோடே சேர்த்தி என்கை 

ஸகல ஸாஸ்த்ர ஸங்க்ரஹமாய்‌ இவ்வாத்மாவுக்கு தத்வ ஹித புருஷார்த்த ப்ரகாஸகமுமாய்‌ ஸரண்யாபிமதமுமாய்‌ ஸிஷ்ட பரிக்ருஹீதமுமாய்‌ மந்த்ர விதி அநுஸந்தாந ரூபமான ரஹஸ்ய த்ரயத்தாலும்‌ ப்ரதிபாதிக்கப்படுகிற அர்த்த, பஞ்சகத்தையும்‌ இவற்றிலே ப்ரதிபாதிக்கையாலே இப்ரபந்தங்கள்‌ நாலுக்கும்‌ ரஹஸ்ய த்ரயத்தோடு சேர்த்தி என்கிறார் –

அதில் எந்த பிரபந்தத்துக்கு எந்த ரஹஸ்யத்தோடே சேர்த்தி என்னும் ஆ காங்க்ஷையில் அத்தை இட்டு அருளிச் செய்கிறார் மேல் —அவற்றில்‌ ப்ரதிபாதிக்கிற அர்த்த பஞ்சகம்‌ இவற்றிலே ப்ரதிபாதித மாகிறபடி எங்ஙனே என்னில்‌-

அளிப்பான் அடியேன் அடைக்கலம் சூடிய-பொய் யாதானும் அழுந்தார் என்று ஸ்வரூப விரோதி நிவ்ருத்திகளையும் – தாமரை உந்திப் பெரு மா மாயன் ஆளாகவே வாழிய என்று -பிராப்ய பலங்களையும் – நெறி காட்டி மனத்துக் கொண்டு கண்ணனால் அடித்துக் கண்டிலமால் யாதாகில் என்று உபாயத்தையும் சொன்னவை மந்த்ர ஸ்லோஹங்களோடே சேரும்–சூரணை-209-

(மந்த்ர ஸ்லோகங்கள் என்றது திருமந்த்ரத்தையும் சரம ஸ்லோகத்தையும் )

அளிப்பான்-அதாவது-உயிர் அளிப்பான் எந்நின்ற யோனியுமாய்ப் பிறந்தாய் -திருவிருத்தம்-1-– என்று
பிரணவத்தில் பிரதம அஷரத்தில் தாத்வர்தமான பகவத் ரஷகத்வையும் —-அடியேன்-அதாவது
மெய் நின்று கேட்டருளாய் அடியேன் செய்யும் விண்ணப்பம் –திருவிருத்தம் -1–என்று தத் ரஷ்ய பூதமாய் -சதுர்த்தி -உகாரங்களில் -சொல்லுகிற படியே தத் அநந்யார்ஹ சேஷமாய் -பிரக்ருதே பரமாய் –ஞான ஆனந்த லஷணமாய்- த்ருதீய அஷரத்தில் சொல்லப் படுகிற ஆத்ம ஸ்வரூபத்தையும் —
அடைக்கலம்-அதாவது பிரதம அஷரத்தில் சதுர்த்தி சம் பிரதானத்திலேயாய் – ப்ரஹ்மணே த்வாமஹச ஒமித்யாத்மானம் யுஞ்ஜீத-தைத்ரியம் -என்ற படி – பிரணவத்துக்கு ஆத்ம சமர்பணமும் அர்த்தம் ஆகையாலே –விரோதி பயத்தாலே கலங்கின தசையிலே –அடியேனடி யாவி யடைக்கலம்-திருவிருத்தம்-85- -என்று அந்த ஆத்ம சமர்ப்பணைத்தையும் –-சூடிய-அதாவது திருமால் திருப்பேர் வல்லார் அடிக் கண்ணி சூடிய மாறன்–திருவிருத்தம்-100–என்று பிரணவோக்தமான பகவத் அனந்யார்ஹ சேஷத்வம் ததீய சேஷத்வத்தையும்-

இதில்‌ ப்ரதம ப்ரபந்தமான திருவிருத்தத்திலே உயிரளிப்பான்‌ (திருவிருத்தம்‌ -1)என்று திருமந்த்ரத்திலே ப்ரதமாக்ஷரத்தில்‌ அவ ரக்ஷணே யென்கிற தாத்வர்த்தத்தாலே சொல்லப்பட்ட ரக்ஷகத்வத்தையும்‌ “அடியேன்‌” (திருவிருத்தம்‌ 1) என்று அவ்வகாரத்தில்‌ லுப்த சதுர்த்தியாலும்‌ உகாரத்தாலும்‌ அந்த ஸர்வ ரக்ஷகனானவனுக்கு இவ்வாத்மா அநந்யார்ஹ ஸேஷமாயிருக்கும்‌ என்னுமிடத்தையும்‌ அந்த ஸேஷத்வாஸ்ரயமான ஸ்வரூபம்‌ ஜ்ஞாநாநந்த மயமாயும்‌ ஜ்ஞாந குணகமாயுமிருக்கிற மகாரார்த்தத்தையும்‌, “அடியேனடியாவி அடைக்கலமே” (திருவிருத்தம்‌ 85) என்று அந்த சதுர்த்தி, ‘ஸம் ப்ரதாநே சதுர்த்தி என்னுமிடத்தில்‌ ஆத்ம ஸமர்ப்பணத்தையும்‌ “திருமால்‌ திருப்பேர்‌ வல்லார்‌ அடிக் கண்ணி சூடிய மாறன்‌” (திருவிருத்தம்‌ 100) என்று அந்த ப்ரணவத்தில்‌ சொன்ன அநந்யார்ஹ ஸேஷத்வம்‌ ததீய ஸேஷத்வ பர்யந்தமா யிருக்கும்‌ என்று நமஸ்ஸில்‌ ஆர்த்தமாகச்‌ சொல்லப்படுகிற ததீய ஸேஷத்வத்தையும்‌,

பொய் நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும் அழுக்கு உடம்பும்
இந் நின்ற நீர்மை இனி யாம் உறாமை உயிர் அளிப்பான்
எந் நின்ற யோனியுமாய்ப்ப் பிறந்தாய் இமையோர் தலைவா
மெய்ந் நின்று கேட்டருளாய் அடியேன் செய்யும் விண்ணப்பமே 
–1––உயிர் அளிப்பான் –உயிர்-பிராட்டிமார் திருவடி திரு வநந்த ஆழ்வான்  -என்று வ்யாவர்த்தித்ததோ-யோக்யதை அயோக்யதை பாராதே- சகல ஆத்மாக்களையும் சம்ரஷணம் பண்ணும் அதே பிரயோஜனமாகை –சால பல நாள் உகந்து உயிர்கள் காப்பான் அன்றோ கோலத் திரு மகளுடன் பிறந்தாய்–உலகத்தோர் -யோக்யதை யோக்யதை பாராமல் ஸம் ரக்ஷணமே பிரயோஜனமாக-உனக்கு அநந்யார்ஹ சேஷமாய் வைத்து –அசத் கல்பமாய்க் கிடந்த ஆத்ம ஸ்வரூபத்தை – தாச பூதோஹம் -என்கிறபடியை நித்தியமாக அனுபவிக்கப பண்ணுவான்

மாணிக்கம் கொண்டு குரங்கு எறிவு ஒத்து இருளோடு முட்டி
ஆணிப் பொன் அன்ன சுடுர்ப்படுமாலை உலகு அளந்த
மாணிக்கமே என் மரகதமே மற்று ஒப்பாரை இல்லா
ஆணிப் பொன்னே அடியேன் அடி யாவி யடைக்கலமே  
– – -85-அடியேன்-போக்யதையிலே தோற்று அடியேன் என்கிறார்அடி யாவி-தலை மகள் வார்த்தை யானபோது உனக்கு சேஷமான என்னுடைய ஆத்ம வஸ்துவானது என்கை-ஆத்ம ஸமர்ப்பணம் பண்ணும் போதும் வஸ்து நிர்தேசம் பண்ணும் போதும் சேஷத்வத்தை இட்டு அல்லது நிரூபிக்க ஒண்ணாத படியாய் இருக்கை–திருத்தாயார் வார்த்தையான போது –அடியேன் அடி-நாய்க்குட்டி என்னுமா போலே–யடைக்கலமே- இருளுக்கு அஞ்சின படியால் சொல்லுகிறாள்-அல்லது ஆத்ம ஸமர்ப்பணம் பண்ணுகையும் மிகையாம்படி இறே இவனுக்கு அத்யந்தம் சேஷமாய் இருக்கும் படி–பிரமித்தபோது இறே ஸமர்ப்பிக்கலாவது-ஸமர்ப்பித்த அனந்தர க்ஷணம் என்னதை அவனுக்கு கொடுத்தேன் என்று நினைக்க ஒண்ணாத படி தன்னோடு தனக்குத் தொற்று அற்றபடி இறே இருப்பது-உன் யடைக்கலமே-த்வத் ஏக ரக்ஷயை யானவளே நான்
இப்போது உன்னைப்பிரிந்து இந்த மாலையால் நலிவு படவோ –

நல்லார் நவில் குருகூர் நகரான் திரு மால் திருப்பேர்
வல்லார் அடிக் கண்ணி சூடிய மாறன் விண்ணப்பம் செய்த
சொல்லார் தொடையில் இந்நூறும் வல்லார் அழுந்தார் பிறப்பாம்
பொல்லா வருவினை மாய வன் சேற்று அள்ளல் பொய் நிலமே
 – – 100-திரு மால் திருப்பேர்-வல்லார் அடிக்கண்ணி சூடிய மாறன்-பாகவத பக்தி நிஷ்டை – பயிலும் சுடர் ஒளி -நெடுமாற்கு அடிமை திருவாய் மொழிகளில் வெளியிட்டு அருளியது போலதிரு மால் திருப் பேர் வல்லார் அடிக் கண்ணி சூடிய மாறன்-ஸ்ரீ யபதிக்கு வாசகமான மூல மந்த்ர த்வயங்களில் அர்த்த அபி யுக்தரான பரம பாகவதருடைய திருவடிகள் ஆகிற பூம் கொத்தை சிரஸா வஹித்துப் போருகிற ஆழ்வார்

பொய் யாதானும்-அதாவது-பொய் நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும் அழுக்கு உடம்பும் -திருவிருத்தம்-1–என்றும் , யாதானும் ஓர் ஆக்கையில் புக்கு அங்கு ஆப்புண்டு ஆப்பு அவிழ்ந்தும் -திருவிருத்தம்-95–என்றும் ஷஷட் யந்தமான ம காரத்தில் சொல்லப் பட்ட -அஹங்கார மமகாரங்களாகிற – அனாத்ம அன்யாத்ம புத்யாதி ரூப அவித்யையும்- தத் கார்யமான அக்ருத்ய கரணாதிகளையும்-
தத் காரயமாக வரும் தேவ மனுஷ்யாதி ரூபமான பிரகிருதி சம்பந்தத்தையும் –
அழுந்தார்-என்று ஸ்வரூப விரோதி நிவ்ருத்திகளையும் –-அதாவது–இந்நூறும் வல்லார் அழுந்தார் பிறப்பாம் பொல்லா வருவினை மாய வன் சேற்று அள்ளல் பொய்ந்நிலத்தே –திருவிருத்தம் என்று
தத் நிஷேத வாசியான நஞ்சாலே சொல்லப் பட்ட -அவித்யை முதலாக சம்சார கர்தமம் ஈறாக –
உள்ள விரோதி நிவ்ருத்தியையும் சொல்லுகையாலே – சர்வ ரஷகனான சர்வேஸ்வரனுக்கு அனந்யார்ஹ சேஷமாய் — ஞான ஆனந்த லஷணமாக ததீய சேஷத்வ பர்யந்தமாய் இருக்கும் ஆத்ம ஸ்வரூபத்தையும் சம்சார ஹேது பூத அவித்யாதிகளான விரோதிகளின் நிவ்ருத்தியையும்
பிரதிபாதிக்கிற –திரு விருத்தம் -பிரதம மத்யம-பதங்கள் இரண்டோடும் சேர்ந்து இருக்கையாலும் –

” பொய்ந்நின்ற ஞானமும்‌ பொல்லா வொழுக்கும்‌ அழுக்குடம்பும்‌” (திருவிருத்தம்‌ 1) என்றும்‌ “யாதானுமோராக்கையில்‌ புக்கு அங்காப்புண்டும்‌ ஆப்பவிழ்ந்தும்‌” (திருவிருத்தம்‌ 95) என்றும்‌ அந்த நமஸ்ஸில்‌ ‘ம:’ என்கிற ஷஷ்டியாலே சொல்லப்பட்ட அவித்‌யை அவித்‌யாகாரிதமான அஹங்கார மமகாரங்கள்‌ அவற்றாலே உண்டான அக்ருத்யகரணாதிகள்‌ தத் கார்யமாய்‌ தேவ மநுஷ்யாதி ரூபமான ப்ரக்ருதி ஸம்பந்தத்தையும்‌ சொல்லி “வன்சேற்றள்ளல்‌ பொய்ந்நிலத்தில்‌ அழுந்தார்‌‘ (திருவிருத்தம்‌ 100) என்று அந்த நமஸ்ஸில்‌ நிஷேத வாசியான நஞ்ஞாலே கீழ்ச் சொன்ன அவித்‌யாதிகளாய்‌ ஸம்ஸார கர்தமம்‌ எல்லையான விரோதிகளினுடைய நிவ்ருத்தியையும்‌ சொல்லி ஆக இப்படி ஸர்வ ரக்ஷகனான ஸர்வேஸ்வரனுக்கு அநந்யார்ஹ ஸேஷமாய்‌ ஜ்ஞாநாநந்த லக்ஷணமாய்‌ ததீய ஸேஷத்வ பர்யந்தமான ஸ்வரூபத்தையும்‌, தத் விரோதியான அஹங்கார மமகாரமாகிற விரோதி ஸ்வரூபத்தையும்‌ தந் நிவ்ருத்தியையும்‌ சொல்லுகையாலே திருவிருத்தம்‌ ப்ரணவ நமஸ்ஸுக்கள்‌ இரண்டினுடைய அர்த்தமாயிருக்கிறது.

யாதானும் ஓர் ஆக்கையில் புக்கு அங்கு ஆப்புண்டும் ஆப்பு அவிழ்ந்தும்
மூதாவியில் தடுமாறும் உயிர் முன்னமே  -அதனால்
யாதானும் பற்றி நீங்கும் விரதத்தை நல் வீடு செய்யும்
மாதாவினைப் பிதுவை திரு மாலை வணங்குவனே – 
-95 —அங்கு ஆப்புண்டும் –-கர்ம வாசனையாய்- ருசி வாசனையாய் -அதிலே பத்தனாய் இருக்கும் –இது தண்ணிது என்று ஆசார்ய உபதேசாதிகளாலும் –சாஸ்திர வாசனையாலும் – பிரத்யஷத்தாலும்-அறியா நிற்கச் செய்தே –இத்தை விடில் செய்வது என் என்று துணுக் துணுக் என்னா நிற்கும் –ஆப்புண்டும் –சிநேகத்தைப் பண்ணியும் –ஆப்பு அவிழ்ந்தும் –கர்மம் அடியாக வந்தது என்று அறியாதே –அவன் தான் இதிலே இலை அகலப் படுத்தா-நிற்கும் –கர்ம ஷயம்   வந்தவாறே=அது தான் குலைந்து கொடு நிற்கும் இறே –மூதாவியில் –இத்தால் பழைமையை நினைக்கிறது-ஆவி -என்று பிராணனாய் –அசித் விசேஷமாய் பிராணனாய் இருக்கையாலே-இப்போது ஸூஷ்ம சரீரத்தை ஆவி என்கிறது –இது தன்னை பிரகிருதி கார்யம் என்பாரும் உண்டு –பிரகிருதி அம்சம் என்பாரும் உண்டு –இது தான் மோஷ தசை அளவும் அனுவர்த்திக்குமது —சேதனனுடைய கமந ஆகமநாதிகளுக்கும் உடலாய் இருக்கும் –தடுமாறும் –பஞ்சாக்னி வித்தையில் சொல்லுகிறபடியே மேகங்களில் புக்கு – வர்ஷ முகத்தாலே-பூமியிலே பதித்து –அந்த முகத்தாலே புருஷன் பக்கலிலே அந்வயித்து –சுக்ல சோணித ரூபத்தாலே -ஸ்த்ரி பக்கலிலே-சங்க்ரமித்து – இப்படி தடுமாற்றமாய் இருப்பது –இச் சேதனனுக்கு புக்க புக்க இடம் எங்கும் தடு மாற்றமே உள்ளது –அத்தை தான் அறிந்த இடமும் அறியாத இடமுமாய் இருக்கும் –உயிர் –ஜ்ஞான ஆனந்த லஷணமாய்- நித்தியமான வஸ்து கிடீர் இப்படி படுகிறது 

நல்லார் நவில் குருகூர் நகரான் திரு மால் திருப்பேர்
வல்லார் அடிக் கண்ணி சூடிய மாறன் விண்ணப்பம் செய்த
சொல்லார் தொடையில் இந்நூறும் வல்லார் அழுந்தார் பிறப்பாம்
பொல்லா வருவினை மாய வன் சேற்று அள்ளல் பொய் நிலமே
 – – 100-பிறப்பாம் பொல்லா வருவினை மாய வன் சேற்று அள்ளல் பொய் நிலமே ––நிலத்து – அழுந்தார் பிறப்பாலே உண்டாகக் கடவதாய் துக்க ஹேதுவாய் இருக்கிற கடக்க அரிய கர்மத்தை யுடைத்தாய் அறிந்தாலும் கால் வாங்க ஒண்ணாத படியான ஆச்சர்யத்தை யுடைத்தான புத்ர தாராதி சங்கம் ஆகிற சிக்கென்ற சேற்றையும் கொண்டு முழுக்கும்படியான நரகம் ஆகிற அள்ளலை யுடைத்தாய் அஸத்ய ஸப்த வாஸ்யமான ப்ரக்ருதி மண்டலத்தில் அழுந்தார்கள்–

தாமரை உந்திப் பெரு மா மாயன்--அதாவது-தாமரை உந்தி தனிப் பெரும் நாயக –திருவாசிரியம் -1-என்று தொடங்கி எம் பெரு மா மாயன்–திருவாசிரியம் -5- -என்று தலைக் கட்டுகையாலே –
நாராயண -பதத்தில் சொல்லப் படுகிற -உபய விபூதி யுக்தமான பிராப்ய வஸ்துவையும் – ஆளாகவே வாழிய என்று-என்று -பிராப்ய பலங்களையும்-அதாவது- தனி மா தெய்வத்து அடியவர்க்கு இனி நாம் ஆளாகவே இசையும் கொல் –திருவாசிரியம் -3 என்றும் –-ஊழி தோறு ஊழி ஓவாது வாழிய என்று யாம் தொழ இசையும் கொல் -திருவாசிரியம்-4–என்றும் – அந்த பதத்தில் சதுர்த்திய அர்த்தமான பல ஸ்வரூபத்தையும் சொல்லுகையாலே – பிராப்ய -பலன்கள்- இரண்டையும் சொல்லும் திரு வாசிரியம் பிரகிருதி பிரத்யய அம்சங்களாலே –தத் உபய பிரதி பாதகமான த்ருதீய பதத்தோடு
சேர்ந்து இருக்கையாலும் –இரண்டு பிரபந்தமும் -திரு மந்த்ரத்தோடு சேரும் —

(தாமரை யுந்திப்‌ பெரு மா மாயன்‌ ஆளாகவே வாழிய வென்று ப்ராப்ய பலங்களையும்‌) “தெய்வக் குழாங்கள்‌ கை தொழக்‌ கிடந்த தாமரை யுந்தித்‌ தனிப் பெரு நாயக” (திருவாசிரியம்‌ 1 என்றும்‌, “ஓராலிலைச்‌ சேர்ந்த எம்பெரு மா மாயனை யல்லது ஒருமா தெய்வம்‌ மற்றுடையமோ யாமே” (திருவாசிரியம்‌ 7) என்றும்‌ காரணத்வ ரக்ஷகத்வங்களைச்‌ சொல்லுகையாலே காரணமுமாய்‌ ரக்ஷகனுமாயிருக்கிறவனே பரம ப்ராப்யன்‌’ என்கிற நாராயண ஸப்தார்த்தமான ப்ராப்தி ஸ்வரூபத்தையும் “தனிமாத் தெய்வத்தடி யவர்க்கு ஆளாகவே இசையுங்கொல் (திருவாசிரியம் -3)என்றும்‌ “ஊழி தோறூழி ஓவாது வாழிய வென்று யாம தொழ இசையுங்கொல் (திருவாசிரியம்‌ 4) என்றும்‌ அந்த நாராயண பதத்தில் பிரார்த்தநா ரூபமான சதுர்த் யர்த்தமான பல ஸ்வரூபத்தையும்‌ சதுர்த் யந்தமான ப்ராப்தி ஸ்வரூபத்தையும்‌ சொல்லுகையாலே அந்தத்‌ திருவாசிரியம்‌ சதுர்த் யந்தமான நாராயண பத்தின் அர்த்தமாய் யிருக்கிறது.

நெறி காட்டி--அதாவது–நெறி காட்டி நீக்குதியோ –பெரிய திருவந்தாதி -6–என்று உபாயாந்தரங்களைக் காட்டி என்னை அகற்றப் பார்க்கிறாயோ என்கையாலே –சர்வ தர்மான் பரித் யஜ்ய–ஸ்ரீ கீதை-18-66 -என்ற உபாயாந்தரங்களின் பரி த்யாஜ்யத்தையும் —மனத்துக் கொண்டு–அதாவது-வெம் கோட்டு ஏறு ஏழுடனே கொன்றானையே மனத்துக் கொண்டு -பெரிய திருவந்தாதி-48-– என்று மாம் ஏகம் சரணம் வ்ரஜ -ஸ்ரீ கீதை-18-66–என்கிற மானஸ அத்யாவச்ய ரூபமான -உபாய ஸ்வீகாரத்தையும்- கண்ணனால் அடித்து- அதாவது–சீரார் மனத் தலைவன் துன்பத்தை மாற்றினேன் வானோர் இனத் தலைவன் கண்ணனால் யான் -பெரிய திருவந்தாதி-25-என்றும் – எம் இறையார் தந்த அருள் என்னும் தண்டால் அடித்து வல் வினையை கானும் மலையும் புகக் கடிவான் பெரிய திருவந்தாதி-26-என்றும்
அஹம் த்வா சர்வ பாபேப்யோ மோஷ இஷ்யாமி -என்று உபாய பூதன் பண்ணும் சர்வ பாப விமோசனத்தையும் —

(நெறி காட்டி மனத்துக் கொண்டு கண்ணனால்‌ அடித்துக்‌ கண்டிலமால்‌ யாதாகில்‌ என்று உபாயத்தையும்‌ சொன்னவிது) பெரிய திருவந்தாதியிலே “நெறி காட்டி நீக்குதியோ” (பெரிய திருவந்தாதி 6 )என்று உபாயாந்தரங்களைக்‌ காட்டி என்னை அகற்றப்‌ பார்த்தாயோ என்கையாலே “ஸர்வ தர்மாந்‌ பரித்யஜ்ய’ (கீதை 18-66) என்கிற உபாயாந்தரங்களினுடைய த்யாஜ்யதையையும்‌ ‘வெங்கோட்டேறுழுடனே கொன்றானையே மனத்துக்‌ கொண்டு” (பெரிய திருவந்தாதி 48) என்று “மாமேகம்‌ ஸரணம்‌ வ்ரஜ (கீதை 18-66) என்கிற மாநஸாத்‌யவஸாய ரூபமான உபாய ஸ்வீகாரத்தையும்‌ “சீரார்‌ மனத்தலை வன்‌ துன்பத்தை மாற்றினேன்‌ வானோரினத் தலைவன்‌ கண்ணனால்‌ யான்‌” (பெரிய திருவந்தாதி 25) என்றும்‌ “எம்மிறையார்‌ தந்த அருளென்னும்‌ தண்டாலடித்து” (பெரிய திருவந்தாதி 26) என்றும்‌ சொல்லுகையாலே “அஹம்‌ த்வா ஸர்வபாபேப்‌யோ மோக்ஷயிஷ்யாமி” கீதை 18-66) என்று உபாய பூதன்‌ பண்ணும்‌ ஸர்வபாப விமோசனத்தையும்‌-

கண்டிலமால்--அதாவது-வானோ மறி கடலோ பெரிய திருவந்தாதி-54-என்று தொடங்கி –வன் துயரை -மருங்கு -கண்டிலமால்–என்று விரோதிகள் ஆனவை போன இடம் தெரியாத படி தன்னடையே விட்டு போய்த்து என்கையாலே – நானும் வேண்டா நீயும் வேண்டா – அவை தன்னடையே விட்டு போம் -என்கிற நிஜர்தத்தையும் — யாதாகில் என்று-உபாயத்தையும் சொன்னவை--அதாவது- அடர் பொன் முடியானை–பெரிய திருவந்தாதி-70 -என்று தொடங்கி – யாதாகில் யாதே இனி -என்று – இனி கர்மம் இருந்து என் -நசித்து என் -எதனால் நமக்கு என் வரும் -என்று மா ஸூ ச –என்கிற பதத்தால் பலிதமான
நிர் பரத்வ அனுசந்தானத்தையும் – சொல்லுகையாலே உபாய பிரதி பாதகமாய் இருக்கிற பெரிய திரு அந்தாதி –சரம ஸ்லோகத்தோடே சேரும் என்கை .. உபாயத்தையும் சொன்னவை-என்று சொன்ன பிரபந்தங்கள் என்ற படி 

வானோ மறிகடலோ இத்யாதி மருங்கு வன்துயரை கண்டிலமால்‌” (பெரிய திருவந்தாதி 54) என்று அந்த விரோதிகள்‌ போனவிடம்‌ தெரியாதபடி தன்னடையே விட்டுப்‌ போய்த்ததென்கையாலே “இஷ்யாமி’ என்கிற ணிச்சாலே சொல்லுகிற அர்த்தத்தையும்‌ “அடர்பொன்‌ முடியான்‌” இத்யாதி, யாதாகில்‌ யாதே இனி’ (பெரிய திருவந்தாதி 70) என்று “மாஸூச:” (கீதை 18-66 என்கிற பதத்தாலே பலிதமான நிர்ப ரத்வாநுஸந்தானத்தையும்‌ சொல்லுகையாலே திருவந்தாதியாலே ஸ்லோகார்த்தமான உபாய ஸ்வரூபத்தைச்‌ சொல்லிற்று. ஆகையாலே இவை மந்த்ர ஸ்லோகங்களோடு சேரும்‌. ஆகத்‌ திருவிருத்தம்‌ திருவாசிரியம்‌ திருவந்தாதி என்கிற மூன்றும்‌ அர்த்த பஞ்சகத்தையும்‌ ப்ரதிபாதிக்கையாலே அவை மூன்றும்‌ அர்த்த பஞ்சகத்தை ப்ரதிபாதி,க்கிற திருமந்த்ரத்தினுடையவும்‌ சரம ஸ்லோகத்தினுடையவும்‌ அர்த்த மாயிருக்கிறது 

சரம பிரபந்தமான திரு வாய் மொழியின் த்வயார்த்த பிரதிபாதகத்வம் விஸ்த்ரேண உபபாதிக்க வேண்டுகையாலும்-தத் விஷயமாக தம்முடைய திருத் தமையனார் பிள்ளை ஒரு பிரபந்தம் முன்பே இட்டு அருளுகையாலும் – அதிலே தர்சிப்பித்து விடக் கடவோம் என்று மேலே அருளுகிறார் .-திருவாய்மொழி த்‌வயத்தில்‌ அர்த்தத்தை ப்ரதிபாதிக்கையாலே தீர்க்க ஸரணாகதி என்கிறார்‌.-

த்வயார்தம் தீர்க்க சரணாகதி என்றது சார சங்கரஹத்திலே-சூரணை -210-

அதாவது-திருவாய்மொழி பத்து பத்தாலும்-ஸ்ரீயபதித்வம் முதலாக — கைங்கர்ய விரோதி நிவ்ருத்தி பர்யந்தமாக த்வயத்தில் பிரதிபாதிதமான பத்து அர்த்தத்தையும் பிரதிபாதிக்கையாலே , த்வய அர்த்தமாய்க் கொண்டு தீர்க்க சரணாகதியாய் இருக்கும் என்று சொல்லப் பட்டது – பிள்ளை அருளி செய்த சார சங்கரகமாகிற பிரபந்தத்தில் என்கை-

அந்த பிரபந்தம் ஆவது தான் என் என்னில்- அகில ஜதத்தி தானுசாசன பரமான வேதத்திலும் –
வேத உப ப்ரும்ஹமான அர்த்தமாக – பிரவ்ருத்தங்களான-ஸ்ம்ருதி இதிகாச புராணாதி சமஸ்த சாஸ்திரங்களிலும் பிரசித்தமாய் – சர்வேஸ்வர- சர்வ ஸ்வமாய் –நம் ஆச்சர்யர்களுக்கு ஆபத் தனமாய் -இருந்துள்ள அர்த்த த்வ்யத்தை – பிரதி பாதிக்கையாலே -த்வயம் -என்று திரு நாமத்தை உடைத்தாய் உள்ள வாக்ய த்வயம் – பத்து அர்த்தத்தை பிரதி பாதிக்கிறது –அதாகிறது –

1-ஸ்ரீ யபதித்வம்
2-நாராயணத்வம்
3-நாராயண னுடைய சர்வ லோக சரண்யமான -சரணார விந்த யுகளம்
4-அதினுடைய ப்ராபகத்வம்
5-தத் கோசரமாய் -சேதனகதமாய் இருந்துள்ள -பிரார்த்தனா கர்ப்ப விஸ்ரம்பம்
6-லஷ்மி தத் வல்லபர் உடைய -நிகில ஆத்ம கைங்கர்ய -பிரதான அர்த்தமான நித்ய சம்பந்தம்
7-கைங்கர்ய பிரதி சம்பந்தியான -ஈஸ்வரனுடைய -நிரதிசய போக்யதை
8-சர்வ ஸ்வாமித்வம்
9-நித்ய கைங்கர்யம்
10-கைங்கர்ய பிரதி பந்தக நிச்சேஷ நிபர்ஹணம்
-ஆகிய அர்த்த விசேஷங்கள் .. ஈத்ரு சார்த்த விசேஷ பிரகாசமான மந்த்ர விசேஷத்தின் உடைய விவரண ரூபமாய் – பௌருஷேய உபநிஷத்தாய் இருந்துள்ள –திரு வாய் மொழியில் -பத்து பத்தாலும் – இப் பத்து அர்த்தத்தையும் நம் பூர்வ ஆச்சார்யர்கள் அடைவே சேர்த்து அனுசந்தித்து போருவர்கள்

அதில் முதல் பத்தால்-
மலர் மகள் விரும்பும் நமரும் பெறலடிகள்-1-3-1 -என்றும் ,
மலராள் மைந்தன் -1-5-9–என்றும் ,
திரு மகளார் தனிக் கேள்வன்-1-6-9- -என்றும் ,
திருவின் மணாளன் -1-9-1–என்றும் ,
பூ மகளார் தனிக் கேள்வன் -1-9-3–என்றும் ,
மைந்தனை மலராள் மணவாளனை -1-10-4–என்றும் ஸ்ரீ யபதித்வம் பிரதிபாதிதம் ஆய்த்து

இரண்டாம் பத்தால் –
எம்பெருமான் நாரணற்கு -2-1-7–என்றும் ,
எம்பிரான் எம்மான் நாராயணனாலே–2-7-1–என்றும் ,
நாரணன் முழு எழ உலகுக்கும் நாதன் -2-7-2-– என்றும் நாராயணத்வம் பிரதிபாதிதம் ஆய்த்து-

மூன்றாம் பத்தால் –
நாண் மலராம் அடித் தாமரை -3-3-9–என்றும் ,
அம் கதிர் அடியன் -3-4-3–என்றும் ,
அவன் பாத பங்கயம்-3-6-4- -என்றும் ,
அன்று தேர் கடவிய பெருமான் கனை கழல் -3-6-10–என்றும் ,
மூ உலகும் தொழுது ஏத்தும் சீர் அடியான் -3-8-1–என்றும் ,
நாராயண னுடைய சர்வ லோக சரண்யமான சரணார விந்த யுகளம் பிரதிபாதிதம் ஆய்த்து 

நாலாம் பத்தாலே –
இலங்கை நகரம் பெரி உய்த்தவர் -4-2-8–என்றும் ,
வல் வினை தீர்க்கும் கண்ணனை -4-4-11–என்றும் ,
தொல் வினை தீர-4-4-11 -என்றும் ,
வெய்ய நோய்கள் முழுதும் வியன் ஞாலத்து வீயவே-4-5-2- -என்றும் ,
மேவி நின்று தொழுவார் வினை போக-4-5-4- -என்றும் ,
பிறந்தும் செற்றும் நின்று இடரும் பேதைமை தீர்ந்து ஒழிந்தேன்-4-7-7- -என்றும் ,
நோயே மூப்பு பிறப்பு இறப்பு பிணி யே என்று இவை ஒழிய-4-9-7- -என்றும் ,
வேட்கை எல்லாம் விடுத்து –கூட்டரிய திரு வடி கண் கூட்டினை -4-9-9–என்றும் ,
அக்தே உய்யப் புகும் ஆறு -4-1-11–என்றும் ,
உய்வு உபாயம் மற்று இன்மை தேறி -4-3-11-என்றும்
அநிஷ்ட நிவ்ருத்த இஷ்ட ப்ராப்தி கரத்தவ லஷணமான ப்ராபகத்வம் பிரதிபாத்யம் ஆய்த்து-

அஞ்சாம் பத்தில் –
தமியேனுக்கு அருளாய் -5-7-2–என்றும்
ஆர் எனக்கு நின் பாதமே சரணாக -5-7-10–என்றும் ,
உன்னால் அல்லால்-5-8-3- -என்றும் ,
கழல் களையே சரணாக கொண்ட-5-8-11- -என்றும் ,
நம் பெருமான் அடி மேல் சேமம் கொள் தென்குருகூர் சடகோபன்-5-9-11 -என்றும் ,
நாகணை மிசை நம்பிரான் சரணே சரண் என்று நாள் தோறும் ஏக சிந்தையனாய்-5-10-11- -என்றும்
தத் கோசரமாய் சேதனகதமாய் இருந்துள்ள பிரார்த்தனா கர்ப்ப விஸ்ரம்பம் பிரதிபாத்யம் ஆய்த்து

ஆறாம் பத்தில் –
திரு மா மகள் இருந்தாம் மலிந்து-6-5-8- -என்றும் ,
அடிமை செய்வார் திரு மாலுக்கே -6-5-11–என்றும் ,
ஒசிந்த ஒண் மலராள் கொழுநன்-6-7-8- -என்றும் ,
என் திரு மார்வற்கு -6-8-10-என்றும் ,
கோலத் திரு மா மகளோடு உன்னை -6-9-3-என்றும்
கைங்கர்ய பிரதான அர்த்தமான லஷ்மி தத் வல்லபர்களுடைய நித்ய சம்பந்தம் பிரதி பாத்யம் ஆய்த்து –

ஏழாம் பத்தால் –
கன்னலே அமுதே-7-1-2- -என்றும்
கொடியேன் பருகு இன் அமுதே -7-1-7–என்றும் ,
அலை கடல் கடைந்த ஆர் அமுதே-7-2-5- -என்றும் ,
திரு மாலின் சீர் இறப்பு எதிர் காலம் பருகிலும் ஆர்வேனோ-7-9-9- -என்றும் ,
இவ் எழ உலகை இன்பம் பயக்க-7-10-1–என்றும் – கைங்கர்ய பிரதி சம்பந்தியான ஈஸ்வரனுடைய நிரதிசய போக்யதை பிரதி பாத்யம் ஆய்த்து

எட்டாம் பத்தால் –
அடியனேன் பெரிய அம்மானே -8-1-3- -என்றும் ,
விண்ணவர் கோன் தங்கள் கோனை-8-2-2- -என்றும் ,
அமர்ந்த நாதனை -8-4-10–என்றும் ,
மூ உலகாளி-8-9-5–என்றும் ,
நேர் பட்ட நிறை மூ உலகுக்கும் நாயகன்-8-9-11- -என்றும் சர்வ ஸ்வாமித்வம் பிரதி பாத்யம் ஆய்த்து-

ஒன்பதாம் பத்தால்
பண்டை நாளாலே நின் திரு அருளும் பங்கயத்தாள் திரு அருளும் கொண்டு நின் கோயில் சீய்த்து -9-2-1–என்றும் ,
நின் தீர்த்த அடிமைக் குற்றேவல்–9-2-2–என்றும் ,
தொடர்ந்து குற்றேவல் செய்து -9-2-3–என்றும் ,
கொடி வினையேனும் பிடிக்க-9-2-10- -என்றும் ,
உறுவது இது என்று உனக்கு ஆட் பட்டு-9-4-4- -என்றும் ,
ஆட் கொள்வான் ஒத்து-9-6-7- -என்றும் ,
நானும் மீளா அடிமை பணி செய்யப் புகுந்தேன்-9-8-4- -என்று நித்ய கைங்கர்யம் பிரதி பாத்யம் ஆய்த்து

பத்தாம் பத்தால் –
துயர் கெடும் கடிது -10-1-8–என்றும் ,
கெடும் இடராய -10-2-1–என்றும் ,
எழுமையும் ஏதமும் சாரா -10-2-2–என்றும் ,
தீரும் நோய் வினைகள் எல்லாம்-10-2-3- -என்றும் –
இப் பிறப்பு அறுக்கும் -10-2-5–என்றும் ,
உன் தன திரு உள்ளம் இடர் கெடும் தோறும் நாங்கள் வியக்க இன்புறுதும் எம் பெண்மை ஆற்றோம்-10-3-9- – என்றும் ,
பிணி ஒன்றும் சாரா பிறவி கெடுத்து ஆளும் -10-4-7–என்றும் ,
பிறவித் துயர் கடிந்தோம் -10-4-3–என்றும் ,
விண்டே ஒழிந்த வினை யாயின வெல்லாம் -10-4-9–என்றும் ,
அமரா வினைகளே -10-5-9–என்றும் ,
கடு நரகம் புகல் ஒழித்த -10-6-11–என்றும் ,
பிறவி கெடுத்தேன்-10-8-3- -என்றும் ,
தடுமாற்ற வினைகள் தவிர்த்தான் -10-8-5–என்றும் ,
அந்தி தொழும் சொல்லு-10-8-7- -என்றும் ,
அவா வற்று வீடு பெற்ற-10-10-11- -என்றும் கைங்கர்ய பிரதிபத்திய நிசேஷ்ய நிபர்ஹணம் பிரதிபாத்யம் ஆய்த்து 

இப்படி ஸ்ரீ யபதித்ய பிரமுகங்களாய் –கைங்கர்ய பிரதிபந்தக நிச்சேஷ நிபர்கண பர்யந்தங்களாய் இருந்துள்ள–உபாதேயார்தங்களை பிரதிபாதிக்கக் கடவதாய் இருந்துள்ள – வாக்ய த்வயமும் –திரு வாய் மொழியும் – பகவத் சரணார்த்தி களாய் – அநந்ய உபாயராய் இருக்கும் அதிகாரிகளுக்கு –
கால ஷேப ஹேதுவாகவும்- போக ஹேதுவாகவும் — ஈஸ்வர ப்ரீதி ஹேதுவாகவும் – யாவச் சரீர பாவம் அனுசந்தேயம் -என்று அருளிச் செய்த இப் பிரபந்தம் என்கை –இப்படி திருவாய்மொழியின் த்வய அர்த்த பிரதிபாதாக த்வத்தை விசதமாக ஆச்சார்யர்கள் அருளிச் செய்து வைக்கையாலே – ஸ்வ பிரபந்தத்தில் வக்தவ்ய அம்சத்தை தத் பிர பந்தத்தில் தர்சிப்பித்தார் ஆய்த்து

த்‌வயத்திலே ப்ரதிபாதி க்கப்பட்ட ஸ்ரிய:பதித்வம்‌, நாராயணத்வம்‌, விலக்ஷண விக்‌ரஹ யோக,ம்‌, அவனுடைய உபாயத்வம்‌, உபாய பரிக்‌ரஹம்‌, கைங்கர்ய ப்ரதாநார்த்தமான லக்ஷ்மீ தத் வல்லபனுடைய நித்ய ஸம்பந்த ம்‌, ஸர்வ ஸ்வாமித்வம்‌, நிரதிஸய போக்‌யத்வம்‌, கைங்கர்ய ப்ரார்த்தனை, கைங்கர்ய விரோத நிவ்ருத்தி ஆக இப்பத்து அர்த்தத்தையும்‌ திருவாய்மொழி பத்து பத்தாலும்‌ ப்ரதிபாதிக்கையாலே இத் திருவாய்மொழி தீர்க்க ஸரணாகதி என்று ஸார ஸங்க்‌ரஹத்திலே பிள்ளை அருளிச்‌ செய்தார்‌

–——————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ ஆய் ஜநந்யாசார்யர்‌ ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ ஆசார்ய ஹ்ருதயம்‌–ஸ்ரீ திராவிட ப்‌,ரஹ்ம ஸூத்ரம்‌ -12 –ப்ரயோஜந பாதம்-17–ஸ்ரீமுக, ஸூக்த் யுபதேஸ -பாத்‌ர-ரீதி-நீத்யர்த்த, விஸேஷா -லக்ஷண –காரண -ஸ பலத்வாதிகரணம்-(195–207–)ஸ்ரீ மணவாள மா முனிகள் -ஸ்ரீ ஆய் ஸ்வாமிகள் வியாக்யானங்கள்–

July 29, 2026

1) பூர்வ த்‌,விகம்‌ – ஸூரி வைபவம்‌ 1 முதல்‌ 186 வது ஸூத்ரம்‌ வரை (186)
(2) உத்தர த்‌,விகம்‌ – ஸூரி ஸுக்த்தி வைபவம்‌– 187 முதல்‌ 234 முடிய (48)

(1) ப்ரத, மோத்‌, யாயம் -ஸாஸ்த்ர தாத்பர்ய அதிகாரி வைபவம்‌ 1-38 (38)
(2) த்‌,விதீயோத்‌, யாய: – க்‌,ரந்த, கர்த்ரு வைப,வம்‌ 39 – 186 (148)
(3) த்ருத்யோத்‌, யாயம் – க்‌,ரந்தாந்தர தார தம்ய வைப,வம்‌ 187-207 (21)
(4) சதுர்த்தே ரத்‌, யாயம் -கிரந்த, ப்ரதிபாத்‌,ய க்ரம வைப,வம்‌ 208-234 (27)

12 –ப்ரயோஜந பாதம் –195–207–மொத்தம் 13–ஸூரணைகள்-
17–ஸ்ரீமுக, ஸூக்த் யுபதேஸ -பாத்‌ர-ரீதி-நீத்யர்த்த, விஸேஷா -லக்ஷண –காரண -ஸ பலத்வாதிகரணம் –195–207–மொத்தம் 13–ஸூரணைகள்-

இப்படி ஈஸ்வர உபதேசத்தில் இவர் உபதேசத்துக்கு ஏற்றம் சொன்ன பிரசங்கத்திலே , பிரமேய பூதனான அவனோடே-பிரமாண பிரமாதக்களையும் கூட்டி – அவர்கள் எல்லார் உபதேசமும் சங்குசித விஷயம் – இவர் உபதேசம் சர்வ விஷயம்-என்று இவ் வழியாலே உபதேஷ்டாவான ஆழ்வாருக்கு ஓர் ஆதிக்யம் அருளி செய்கிறார் மேல் —இனி மேல்‌ அவனுடைய ௨பதேஸம்‌ ஸங்குசித விஷயம்‌; இவருடைய உபதேஸம்‌ அஸங்குசித விஷயமென்கிறார்‌-

வேத வேத்ய வைதிக உபதேசம்–ஆவித்யர் அளவிலே ..அஜ்ஞர் ஜ்ஞானிகள் ஜ்ஞான விசேஷ யுக்தர் சர்வஜ்ஞன் என்னாமல் இவர் திருத்துவர்-சூரணை -195-

(வேத உபதேசம் -வேத்ய உபதேசம் -வைதிகர் உபதேசம் -ஆவித்யர்-அறிவில்லா உலகோர்-)

அதாவது-வேத உபதேசம் –-ஹித அநுசான பரமான வேதத்தினுடையவும் வேத வேத்யே பரே பும்சி -ஸ்காந்தம் ( வேதங்களால் அறியப்படும் பரம் புருஷன் ) -என்று வேதைக சமதி கம்யனான ஈஸ்வரனுடையவும்- வைதிக உபதேசம் –யேச வேத விதோ விப்ராயே சாத்யாத்ம விதோ ஜனா
( எந்த அந்தணர்கள் வேதத்தின் பூர்வ பாகத்தை அறிந்தவர்களோ -எவர்கள் வேதாந்தம் அறிந்தவர்களோ )-என்கிற படியே வேதத்தில் பூர்வ உத்தர பாகார்த்த ஜ்ஞராய் –வைதிகர் என்று -நிரூபகமாக இருக்கும் மகரிஷிகள் உடைய உபதேசம்-–ஆவித்யர் அளவிலே-ஆவித்யா ப்ராக்ருத ப்ரோக்த -(தத்வம் ஹிதம் புருஷார்த்தம் என்னும் அவற்றின் ஞானம் இல்லாமையாகிற
அறியாமையோடு கூடிய இவ்வுலகோர் ஆவித்யர் என்று சொல்லப்படுவர் ) என்கிறபடியே
தத்வ ஹித புருஷார்த்த -ஜ்ஞான பாவ ரூப -அவித்யா யுக்தரான சம்சாரிகள் மாத்ரத்தில்..

(வேத வேத்‌ய வைதிகோபதேஸம்‌ ஆவித்‌யரளவிலே) வேதமும்‌ வேத வேத்‌யனும்‌ வைதிகரான ருஷிகளுமுபதேஸிப்பது ‘ஆவித்‌ய: ப்ராக்ருத: ப்ரோக்த:” என்று அவித்‌யா ஸம்பந்திகளாய்‌ அத ஏவ தத்த்வ ஹித புருஷார்த்த, ஜ்ஞானமின்றிக்கே இருக்கிற ஸம்ஸாரிகளுக்கே.-

இவர் –ஆழ்வார் –அஞ்ஞர்-தத்வ ஹிதாதிகளில் அஜ்ஞரான சம்சாரிகளோடு-ஞானிகள்
பகவத் உபாயத்வ நிஷ்டராய் இருக்கும் ஜ்ஞானிகள் ஆனவர்களோடு —ஞான விசேஷ யுக்தர்
தத் ஸ்வரூப ரூப குண விபூதிகளை சாஷாத் கரித்து –உபேய பரராய்-தத் அனுபவமே யாத்ரையாய் இருக்கும் -ஜ்ஞான விசேஷ யுக்தரோடு —சர்வஞ்ஞன் என்னாமல்-நைவ கிஞ்சித் பரோஷம்தே ( உனக்கு காணப்படாத பொருள் ஒன்றும் இல்லை )-என்றும் ,-யோ வேத்தி யுகபத் சர்வம்) யாவன் ஒரு பொழுதில் எல்லாவற்றையும் அறிகிறானோ ) -என்கிறபடியே சர்வஜ்ஞனான ஈஸ்வரனோடு வாசி அற சர்வர்க்கும் வேண்டும் அம்சங்களை உபதேசித்து இவர் திருத்துவர் என்கை ..

அவ்வளவன்றிக்கே இவர்‌ அஜ்ஞர்‌ ஜ்ஞாநிகள்‌ ஜ்ஞாந விஸேஷ யுக்தர்‌ ஸர்வஜ்ஞனென்னாமல்‌ திருத்துவர்‌. அஜ்ஞரான ஸம்ஸாரிகளோடு தத்வ ஹித புருஷார்த்தங்களில்‌ விஸத ஸிக்ஷை பிறந்த முமுஷுக்களோடு பகவத் ஸ்வரூப ரூப குண விபூதிகளை விஸத தமமாக ஸாக்ஷாத்கரித்து அநுபவிக்கும்படி ஸாத்‌யதஸையிலே நிற்கிற ஜ்ஞாந விஸேஷ யுக்கரோடு “நைவ கிஞ்சித்‌ பரோக்ஷம்‌ தே” (ஜிதந்தே ஸ்தோத்ரம்‌) என்றும்‌, யோ வேத்தி யுகபத்‌ ஸர்வம்‌ ப்ரத்யக்ஷேணே ஸதா ஸ்வத:” என்றும்‌ சொல்லுகிறபடியே ஸர்வத்தையும்‌ ஸர்வகாலமும்‌ ப்ரத்யக்ஷமாக யுகபதேவ ஸ்வத: ஸாக்ஷாத்கரிக்கும்‌ ஸர்வஜ்ஞனோடு வாசியற ஸர்வர்க்கும்‌ இவர்‌ ஹிதாஹிதங்கள்‌ சொல்லித்‌ திருத்துவர்‌ என்கிறார் –

எல்லார்க்கும் இவர் இப்படி அஜ்ஞாத ஜ்ஞாபனம் பண்ண வேணுமோ என்னும் அபேஷையிலே-கீழ் சொன்ன நாலு விஷயத்துக்கும் இவர் அறிவிக்க வேண்டும் அர்த்த விசேஷங்களை தர்சிப்பிகிறார் இதில் –திருத்துகையாவது அஜ்ஞாதஜ்ஞாபநம்‌ பண்ணுகையிறே. அதில்‌ இவ்வதிகாரிகளுக்கு உபதேஸிக்கும்‌ அர்த்த விஸேஷங்கள்‌ எவை யென்னில்‌,-

அறியாதார்க்கு உய்யப் புகும் ஆறும்-இக் கரை ஏறினார்க்கு இன்ப வெள்ளமும்-நிலை அறியாதார்க்கு ஆழங் காலும்-கரை ஏற்றும் அவனுக்கு நாலும் ஆறும் அறிவிக்க வேணும் —சூரணை -196-

அறியாதார்க்கு உய்யப் புகும் ஆறும்-அதாவது–செம் கண் அடியாரைச் சிந்தித்து அறியாதார் என்றும் அறியாதார் -பெரிய திருமொழி -11-7-8–என்று முதலிலே பகவத் ஞானம் இல்லாத சம்சாரிகளுக்கு –
அக்தே உய்யப் புகும் ஆறு –திருவாய் -4-1-11–என்று ,-திரு நாரணன் தாள்-4-1-1- -என்கிற இதுவே உஜ்ஜீவிகைக்கு உபாயம் என்று –சம்சார நிஸ்தரண உபாயமும் –

(அறியாதார்க்கு உய்யப் புகுமாறும்‌) “அறியாதார்‌ என்றுமறியாதார்‌ கண்டாமே” (பெரிய திருமொழி 1-7-8) என்று முதலிலே பகவஜ் ஜ்ஞாநமில்லாத ஸம்ஸாரிகளுக்கு அஃதே வுய்யப் புகுமாறு’  (திருவாய்மொழி 4-1-11) என்று “திருநாரணன்‌ தாள்‌” (திருவாய்மொழி 4-1-1 என்கிற விதுவே உஜ்ஜீவநோபாயம்‌ என்று ஸம்ஸாரோத்தீர்ண உபாயத்தையும்‌,–

வெறியார் கரும் கூந்தல் ஆய்ச்சியர் வைத்த
உறியார் நறு வெண்ணெய் தான் உகந்து உண்ட
சிறியானைச்   செங்கண் நெடியானைச் சிந்தித்து
அறியாதார் என்றும் அறியாதார்  கண்டாமோ  —
-11-7-8—இவர்களைக் கொண்டு போய் வைக்கும் இடத்தில் இதுக்கு மேல் இல்லை என்னும் படி உயரப் பரம பதத்திலே வைக்க வல்லவனை – ஆஸ்ரிதர்க்கு இப்படி எளியனாய் – மேன்மையால் குறையற்று சிவந்த கண்களை உடைய
சர்வேஸ்வரனை –நினைத்து அறியாதவர்கள் –இங்குத்தை எளிமையும் மேன்மையும்
இரண்டையும் அறியாதவர்கள் –

அஃதே உய்யப் புகும் ஆறு என்று கண்ணன் கழல்கள் மேல்
கொய் பூம் பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன் குற்றேவல்
செய்கோலத்து ஆயிரம் சீர்த்தொடைப் பாடல் இவை பத்தும்
அஃகாமல் கற்பவர் ஆழ் துயர் போய் உய்யற் பாலரே.–4-1-11–நான் சொன்னதுவே ஆத்மாவுக்கு உஜ்ஜீவன உபாயம் என்று அது ஏது என்னில் கண்ணன் கழல்கள் மேல்-நினைமினோ என்கிறது –
ஸூ லபனான கிருஷ்ணனை யாயிற்று கவி பாடிற்று –

ஒரு நாயகமாய் ஓட உலகு உடன் ஆண்டவர்
கருநாய் கவர்ந்த காலர் சிதைகிய பானையர்
பெரு நாடு காண இம்மையிலே பிச்சை தாம் கொள்வர்
திரு நாரணன் தாள் காலம் பெறச் சிந்தித் துய்ம்மினோ.–4-1-1—திரு நாரணன்-இடர் கெடுத்த திருவாளன் இணை அடி-தத்ர நாராயண ஸ்ரீ மான்-ஸ்ரீயபதியை ஆஸ்ரயிங்கோள்-ஒரு மிதுனம் இறே ஆசிரயணீயமும் ப்ராப்யமும் -ஒரு மிதுனத்துக்கு இறே சேஷம் இறே இது–தாள் சேஷ பூதம் பற்றுவது திருவடிகளை இறே-காலம் பெறச் –ஜீவிதும் மரணாந்தம் ஹி ஜராந்தே ரூபா யவ்வனே சம்பதச்ச வி நா சாந்தா ஜானன் கோ த்ருதிமாப் நுயாத்– நாளை செய்கிறோம் என்னுமது அன்று-யன் முஹூர்த்தம் க்ஷணம் வாபி வா ஸூ தேவோ ந சிந்தயந்தே வா ஸூ தேவ தருச்சாய சாகி மர்த்தம் ந ஸேவ்யதே
சிந்தித் துய்ம்மினோ-
-ரக்ஷகன் என்கிற ப்ரபத்தியே அமையும் -ப்ரபத்திக்கும் இதுவே அர்த்தம் என்கிறார்-நினைவோடு வ்யாப்தமாயிற்று உஜ்ஜீவனம் இருப்பது-அனர்த்தம் எல்லாருக்கும் ஒத்து இருக்கையாலே எல்லாரையும் அபேக்ஷிக்கிறார் –

இக் கரை ஏறினார்க்கு இன்ப வெள்ளமும்-அதாவது-அக்கரை என்னும் அனர்த்த கடலுள் அழுந்தி -உன் பேர் அருளால் -இக்கரை ஏறி இளைத்து-இருந்தேனை–பெரியாழ்வார் -5-3-7- -என்று சம்சார சாகரத்தில் அழுந்துகிறவர்களுக்கு பகவத் ஏக உபாயத்வ ஞானம் பிறந்தால் – இங்கே இருக்கச் செய்தே -அக்கரை இக்கரை -என்னும் படி -சம்சாரம் தூரமாய் – பரம பதம் அசந்னமாம்படி இருக்கையாலே –பகவத் ஏக உபாயத்தில் வ்யவசிதராய் – ஸ்வ பிரவ்ருத்தி நிவ்ருதராய் இருக்கிறவர்களுக்கு வ்யாவசாயம் குலைந்து த்வரிக்கும் படி – முகில் வண்ண வானத்து இமையவர் சூழ இருப்பர் பேர் இன்பத்தே–திருவாய்–7-2-11- -என்று பிராப்ய வைலஷண்யமும்

(இக்கரை ஏறினார்க்கு இன்ப வெள்ளமும்‌) “அக்கரை யென்னும் அனர்த்தக்கடலுளழுந்தி உன்‌ பேரருளால்‌ இக்கரை யேறி இளைத்திருந்தேன்‌” (பெரியாழ்வார்‌ திருமொழி 5-3-7 என்று ஸம்ஸார ஸமுத்‌ரத்திலே அழுந்துகிறவர்களுக்கு பகவதேகோபாய ஜ்ஞாநம்‌ பிறக்கையாவது இங்கே யிருக்கச்‌ செய்தே அக்கரை இக்கரை என்னலாம்படி இருக்குமிறே. ஆகையாலந்த பகவதேகோபாய ஸங்கத்திலே வ்யவஸிதராகையாலே ஸ்வ ப்ரவிருத்தி நிவ்ருத்தரா யிருக்கிறவர்களுக்கு “முகில்வண்ண வானத் திமையவர்‌ சூழ விருப்பர்‌ பேரின்ப வெள்ளத்தே (திருவாய்மொழி 7-2-11 என்று அவர்கள்‌ அந்த வ்யவஸாயம்‌ குலைந்து த்வரிக்கும்படியான ப்ராப்ய வைலக்ஷண்யத்தையும்‌,

அக்கரை என்னும் அநர்த்தக் கடலுள் அழுந்தி உன் பேர் அருளால்
இக்கரை ஏறி இளைத்து இருந்தேனை
அஞ்சேல்  என்று கை கவியாய்
சக்கரமும் தடக் கைகளும் கண்களும் பீதக வாடையோடும்
செக்கர் நிறத்து சிவப்புடையாய் திரு மால் இரும் சோலை எந்தாய் – 5-3- 7—அக்கரை–சம்சாரத்தில் இருக்கச் செய்தே ஞானம் பிறந்த பின்பு அது தூரம் ஆன படி – விபீஷணனுக்கு அக்கரை இக்கரை ஆய்த்து இறே –சம்சாரம்  என்னும் அனர்த்த கடலுள் அனர்த்தமே என்னும் பிரசித்தி –விஷயாக்ரரந்த சேதஸாம்-அழுந்தி – தறைப்பட்டு-பீம பவார்ண வோதரே -பதிதம்உன் பேர் அருளால் –விஷ்ணு போதம் இறே-இரண்டு கரையும் ஒத்து இருக்கும் –இக்கரை –தமக்கு அணித்தான படி–ஏறி இளைத்து இருந்தேனை – மாசோபவாசி சோற்றை விரும்புமா போலே –ப்ராப்தி கிடையாத இளைப்பு-சேஷத்வ ஞானம் பிறந்தால் சேஷி செய்த படி கண்டு இருக்க ஒட்டாதே பதறப் பண்ணுகிறது –-தானடியாக பகவத் ஞானம் பிறந்தால் இறே ஆறி இருக்கல் ஆவது-ஞான பலத்தைப் பண்ணித் தந்தால் போலே
பிராப்தியும் பண்ணித் தர வேணும் -என்கிறார் –

முகில் வண்ணன் அடியை அடைந்து அருள் சூடி உய்ந்தவன் மொய்புனல் பொருநல்
துகில் வண்ணத் தூ நீர்ச் சேர்ப்பன் வண் பொழில் சூழ் வண் குரு கூர்ச் சட கோபன்
முகில் வண்ணன் அடி மேல் சொன்ன சொல் மாலை ஆயிரத்து இப்பத்தும் வல்லார்
முகில் வண்ண வானத்து இமையவர் சூழ இருப்பர் பேரின்ப வெள்ளத்தே.–7-2-11-முகில் வண்ணன் உடைய வானம் என்னுதல் -அவனுடைய நிழல் ஈடான வானம் என்னுதல் -தாம் மோஹித்து திருத் தாயார் தனியே கூப்பிட இருந்த இவருடைய கிலேசமும் இன்றிக்கே -நித்ய ஸூரிகள் நடுவே ஆனந்த நிர்ப்பரராய் இருக்கப் பெறுவர்கள்

நிலை அறியாதார்க்கு ஆழங் காலும்-அதாவது-ஆற்றிலே இழிந்து போகா நிற்க செய்தே -நிலைக்கும் இடமும் நிலையாத இடமும் அறியாதாரைப் போலே – பிராப்ய பரராய் அனுபவியா நிற்கச் செய்தே -அதில் நிலை கொள்ளலாம் இடமும் – ஆழம்கால் படுத்தும் இடமும் அறியாதவர்களுக்கு – செஞ்சொல் கவிகாள் உயிர் காத்து ஆள் செய்மின் -திருவாய் –10-7-1-என்று – சீல குணமான ஆழம் காலும்

(நிலையறியாதார்க்கு ஆழங்காலும்‌) ஸீல குணத்தில்‌ இழியாமையாலே அதில்‌ நிலையறியாதவர்களுமாய்‌ ப்ராப்ய தஸையிலே நிற்கிறவர்களுக்கு “செஞ்சொற் கவிகாள்‌ உயிர்‌ காத்து ஆட் செய்ம்மின்‌” (திருவாய்மொழி 10-7-1 என்று பகவத் குணாநுபவம்‌ பண்ணுகிற நீங்கள்‌ ஸீலகுணமாகிற ஆழங்காலில்‌ இழியாதே கொள்ளுங்கோள்‌ என்கிற ஆழங்காலையும்‌,-

செஞ்சொற் கவிகாள் உயிர் காத்து ஆட்செய்மின் திருமால் இரும் சோலை
வஞ்சக் கள்வன் மா மாயன் மாயக் கவியாய் வந்து என்
நெஞ்சும் உயிரும் உள் கலந்து நின்றார் அறியா வண்ணம் என்
நெஞ்சும் உயிரும் அவை உண்டு தானே யாகி நிறைந்தானே–10-7-1-செவ்விய சொல்லை யுடைய கவிகாள் -கவிக்குச் செவ்வை யாகிறது -அநந்ய பிரயோஜனமாய் இருக்கை -பிரயோஜனத்தைக் கணிசிக்கை கவிக்கு குடிலம் ஆகையாவது –இன் கவி பாடும் பரம கவிகள் –என்றும் –செந்தமிழ் பாடுவார் என்றும் -சொல்லுகிற முதல் ஆழ்வாரைகளை யாய்த்து நினைக்கிறது –பெரும் தமிழன் அல்லேன் -என்னா- வாய் அவனை அல்லது வாழ்த்தாது -என்கிறவர்கள் இறே அநந்ய பிரயோஜனர்
உயிர் காத்து ஆட்செய்மின் -உங்களை நோக்கிக் கொண்டு நின்று கவி பாடப் பாருங்கோள் -கவி பாட்டு வாசிகமான அடிமை யாகையாலே -ஆட் செய்ம்மின் -என்கிறார் –ஆட் கொள்வான் ஒத்து என்னாருயிர் யுண்ட மாயன் -என்கிறபடி அடிமை கொள்ளுவரைப் போலே புகுந்து இத்தலையை அழிக்குமவனாய்த்து–பரிஹரித்துக் கொள்ளுங்கோள் -ஆழங்காலிலே இழிந்து அமிழுமவர்கள் அவ்விடத்திலே கொண்டைக் கால் நாட்டுமாப் போலே –வம்மின் புலவர் -என்று முதலிலே ருசி இல்லாதாரையும் அழைக்கிற இவர் சீலாதி குணங்களில் அழுந்தி -இழிகிறவர்களையும் வேண்டா என்கிறார் இ றே ப்ரீதி பிரகரஷத்தாலே –

கரை ஏற்றும் அவனுக்கு நாலும் ஆறும்-அதாவது-சம்சார சாகரம் கோரம் அனந்த கிலேச பாஜனம் த்வமேவ சரணம் ப்ராப்ய நிஸ்தரந்தி மநீஷிணா-என்கிற படியே சம்சார சமுத்ரத்தை கடத்தி -அக்கரைபடுத்தும் அவனுக்கு – பொங்கு ஐம் புலனும் பொறி ஐந்தும் இத்யாதி –திருவாய் -10-7-10–
இத்யாதியாலே –சதுர் விம்சதி தத்வமும் அறிவிக்க வேணும் என்கை

(கரையேற்றுமவனுக்கு நாலாறும்‌ அறிவிக்க வேணும்‌) “ஸம்ஸார ஸாகரம்‌ கோரமநந்த க்லேஸ பாஐநம்‌ த்வாமேவ ஸரணம்‌ ப்ராப்ய நிஸ்தரந்தி மநீஷிண:” (ஜிதந்தே ஸ்தோத்ரம்‌ என்று ஸம்ஸார ஸாகரத்தைக்‌ கடத்தி அக்கரைப்‌ படுத்துமவனுக்கு “பொங்கைம்புலன்‌‘ (திருவாய்மொழி 10-7-10) இத்யாதியாலே சதுர்விம்ஸதி தத்த்வங்களையும்‌ இப்படி அறிவிக்க வேணும்‌-என்கிறார்‌-

மங்க ஒட்டு உன் மா மாயை திரு மால் இரும் சோலை மேய
நங்கள் கோனே
யானே நீ ஆகி என்னை அளித்தானே
பொங்கு ஐம் புலனும் பொறி ஐந்தும் கருமேந்த்ரியம் ஐம் பூதம்
இங்கு இவ் வுயிர் ஏய் பிரகிருதி மான் ஆங்காரம் மனங்களே–10-7-10-தாம் அர்த்திக்கச் செய்தேயும் தம்முடைய பிரக்ருதியால் உண்டான தேகத்தில் சங்கத்தால் எம்பெருமான் தம் வார்த்தையை ஆதரியா விட்டவாறே -சதுர் விம்சதி தத்தவாத்மிகையான பிரக்ருதியினுடைய ஹேயதையை அவனுக்கு உணர்த்தி -இத்தை விரும்பாதே போக்கி யருள வேணும் -என்கிறார் –

ஆக அறிவு கேடரை உபாயத்தில் மூட்டுவர் .-உபாயத்தில் ஊன்றுவாரை பிராப்ய பரர் ஆக்குவார் .
ப்ராப்யத்தில் அவஹாகிக்கும் அவர்களுக்கு ஆழம் கால் அறிவிப்பார்–பிராப்தியை உண்டாக்கும் அவனுக்கு த்யாஜ்யத்தை அறிவிப்பார் என்றது ஆய்த்து —

இவர்களுக்கு இவ் அர்த்தங்களை உறுப்பான ஹேதுக்களோடே இவை தன்னை இன்னும் ஒரு பிரகாரேண வ்யக்தமாய் அருளிச் செய்கிறார் இதில்–இனி அவர்களுக்கு இவ்வர்த்தங்கள்‌ ஜ்ஞாதமாகைக்கு ஹேதுவையும்‌, இவர்களுக்கு இவ்வர்த்த விஸேஷங்களை உபதேஸிக்கைக்கு ஹேதுவையும்‌ அவ்வர்த்த விஸேஷங்கள்‌ தன்னையும்‌ அருளிச் செய்கிறார்‌–

அவன் முனிந்தார்க்கு தாம் கண்டது – தம்மை முனிவார்க்குத் தம் கண் – காணாதது
காண்பார்க்குக் கண் மாறும் இடமும் – ராகாந்தனுக்கு மாயா தோஷம் இவர் காட்டுமவை -சூரணை -197-

(அவன் முனிந்தார்க்கு இவர் காட்டுமது தாம் கண்டது – தம்மை முனிவார்க்கு இவர் காட்டுமது தம் கண் –
காணாதது காண்பார்க்கு இவர் காட்டுமது கண் மாறும் இடம் – ராகாந்தனுக்கு இவர் காட்டுமது மாயா தோஷம்-என்றவாறு )

அதாவது-ஷிபாமி (தள்ளுகிறேன் ) -என்றும்-ந ஷமாமி ( பொறுக்க மாட்டேன் )-என்கிறவன்
முனிவுக்கு விஷயமாய் அஜ்ஞான சம்சாரிகளுக்கு தாம் கண்டது –-அதாவது –
ஞானப் பிரானை அல்லால் இல்லை நான் கண்ட நல்லது–திரு விருத்தம் -99- -என்று –
நிமக்த்த உத்தாரண கதனாய் -ஞான உபகாரனானவனை ஒழிய சர்வருக்கும் உஜ்ஜீவன உபாயம் இல்லை என்று தாம் அறுதி இட்ட விலஷணமான அர்த்தமும் —

(அவன்‌ முனிந்தார்க்குத்‌ தாம்‌ கண்டது) “ந க்ஷமாமி கதாசந” என்றும்‌ ‘க்ஷிபாம்யஜஸ்ரம ஸூபாந்‌ ஆஸுரீஷ்வேவ யோநிஷ**‘ என்று அவன்‌ நிக்ரஹத்துக்கு விஷயமாகையாலே அஜ்ஞராயிருக்கிற ஸம்ஸாரிகளுக்கு ஞானப் பிரானை யல்லாலில்லை நான்‌ கண்ட நல்லது” என்றும்‌ “பெருங்கேழலார் தம்‌ பெருங்கண்‌ மலர்ப்‌ புண்டரீகம்‌ நம்மேல்‌ ஒருங்கே பிறழவைத்தார்‌‘ (திருவிருத்தம்‌ 45) என்கிற பாட்டாலே மஹா வராஹமான ஸர்வேஸ்வரன்‌ கடாக்ஷிக்கையாலே எனக்கு ஸத்‌ருஸ மில்லை; ஸம்ஸார ஸம்பந்த மும்‌ என்னுடைய ஸம்பந்திகளுக்கும்‌ கிட்டா தென்னும்படி தமக்கு பலித்தபடியாலே ஸர்வர்க்கும்‌ உஜ்ஜீவநோபாயம்‌ அந்த ஜ்ஞாந வராஹமல்லது இல்லை; இது நானறுதியிட்ட விலக்ஷணமான அர்த்தமென்றும்‌;-

ஈனச் சொல்லாயினுமாக எறி திரை வையம் முற்றும்
ஏனத்துருவாய் யிடந்த பிரான் இரும் கற்பகம் சேர்
வானத்தவர்க்கும் அல்லாதவர்க்கும் மற்று எல்லாயவர்க்கும்
ஞானப் பிரானை யல்லால் இல்லை நான் கண்ட நல்லதுவே –
 – 99-நமது ஞானத்துக்கு -அவனே மோக்ஷ உபாயம் -என்று அறிய வேண்டுமே —அப்ரதிஷேதத்துக்கு-விலக்காமை -அத்வேஷமே வேண்டும்-அவன் ஞானத்துக்கு மட்டுமே மோக்ஷ உபாதத்வம்-ஸ்வ அபிமானத்தால் ஈஸ்வர அபிமானத்தைக் குலை த்துக் கொண்ட இவனுக்கு ஆச்சார்ய அபிமானம் உத்தாரகம்–பேற்றுக்கு அடியான ஜ்ஞானம் அவன் பக்கலிலே உண்டு என்கிறார் –ஞானப் பிரானை –தன்னை சூழ்த்திக்  கொள்ளுக்கைக்கு ஈடான-அறிவு இறே இவன் பக்கலிலே உள்ளது –தனக்குத் தான் தேடும் நன்மை கழுத்துக்கட்டியாகுமே–பர ரஷண உபாயம் உள்ளது அவனுக்கே யாயிற்று —அல்லால் இல்லை –ப்ரஹ்லாதன் போல் )அவன் உளன் என்கை யல்ல –ஈஸ்வரன் இல்லை என்று சாஸ்திரம் எழுதுகிறவனும்-அந்திம சமயத்தில் வந்தவாறே -சஹ ஸ்ருதி நலியா நின்றது -என்றான் இறே –அல்லால் இல்லை என்பது இதுவேஈஸ்வரனை ஒழிந்த தன்  ஸ்வீகாரமும் உபாயம்-இல்லைநான் கண்ட நல்லதுவே –நான் அறுதியிட்டு நல்ல அர்த்தம் என்று தம்முடைய நிஷ்கர்ஷத்தை அருளிச் செய்தார் ஆயிற்று-

தம்மை முனிவர்க்கு-அதாவது-எங்கனயோ அன்னைமீர்கள் என்னை முனிவது நீர்–திருவாய் -5-5-1- -என்னும் படி உபாயத்வ அத்யாவச்ய தசையில் நின்று ஸ்வ யத்ன பீருக்களாய் , பிராப்ய வைலஷண்யம் அறியாதே இத்தனை அதி பிராவண்யம் ஆகாது என்று ஹிதம் சொல்லுபவர்களுக்கு —
தம் கண்-அதாவது என் நெஞ்சினால் நோக்கிக் காணீர் -திருவாய் -5-5-2-என்று பிராப்ய வை லக்ஷண்ய அவஹாகியான என் நெஞ்சினால் பார்க்க மாட்டீர்களோ என்று –தம்முடைய உள் கண்ணானான -பிராப்ய வைலக்ஷண்ய ஜ்ஞானமும் —

(தம்மை முனிவார்க்குத்‌ தம்‌ கண்‌) “எங்ஙனேயோ அன்னைமீர்காள் என்னை முனிவது” (திருவாய்மொழி 5-5-1) என்று உபாய அத்யாவசாய தசையில் நின்று துறும்பு நறுக்கில் ஸ்வரூப ஹாநியாம் என்னும் செங்கிடு குட்டைகளாய் இருக்கையாலே -ப்ராப்ய வைலக்ஷண்யம் அறியாதே ப்ராப்ய விஷயத்திலே இத்தனை அதி ப்ராவண்யமாகாதென்று தம்மைப்‌ பொடியுமவர்களுக்கு “என்னெஞ்சினால்‌ நோக்கிக்‌ காணீர்‌ என்னை முனியாதே’ (திருவாய்மொழி 5-5-2) என்று ப்ராப்ய வைலக்ஷ்ண்யத்தை அவகாஹித்த என்‌ நெஞ்சாலே பார்க்க மாட்டிகோளோ என்று தம்முடைய உட் கண்ணான ப்ராப்ய வைலஷண்ய ஜ்ஞாநத்தையும்‌, 

எங்ஙனேயோ அன்னை மீர்காள்! என்னை முனிவது நீர்!
நங்கள் கோலத் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்ட பின்
சங்கி னோடும் நேமி யோடும் தாமரைக் கண்களோடும்
செங்கனி வாய் ஒன்றினோடும் செல்கின்றது என்நெஞ்சமே.–5-5-1—இஸ் ஸுந்தர்யத்திலே மூட்டின நீங்களே மீட்கப் பார்க்கிற படி எங்கனேயோ –நீங்கள் கற்பித்தது பலிக்கப் பூக்கவாறே பொடியும் இத்தனையோ –-நீர் -என் பிரகிருதி அறியும் நீங்கள் –என்னை முனிவது-என்னுடைய பிராவண்யத்துக்கு அடியான நம்பியுடைய வடிவு அழகை அன்றோ இன்னாதாவது -உங்களையும் மறந்து -என் ப்ரக்ருதியையும் மறந்தால் விஷயத்தையும் மறக்க வேணுமோ-முனிவது–எங்ஙனேயோ-கொண்டாட வேண்டும் தசையில் போடுவது எங்கனேயோ

என் நெஞ்சினால் நோக்கிக் காணீர் என்னை முனியாதே
தென்னன் சோலைத் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்டபின்
மின்னு நூலும் குண்டலமும் மார்பில் திருமறுவும்
மன்னு பூணும் நான்கு தோளும் வந்தெங்கும் நின்றிடுமே.–5-5-2-நாங்களும் நம்பியை அனுபவித்தே ஸ்த்ரீத்வம் கெடாமல் இருக்கிறி லோமோ -எங்களுடைய ஹித வசனம் கேளாதே மறு மாற்றம் சொல்லுகை போராது காண் என்ன -என் நெஞ்சு போலே அதி பிரவணமான நெஞ்சை யுடையீராய் அனுபவித்து அறியுங்கோள்–என்னை பொடியாதே -என் நெஞ்சை யுடையீராய் காணப் பெறுமன்று-பிள்ளையை பிள்ளை என்று எண்ணப் பெறுவரே-என்று உங்களை நீங்களே பொடிவுதி கோள்-என் நெஞ்சை இரவலாக வாங்கிக் காண மாட்டி கோளோ-என்னை பொடியாதே –மாயாம் ந சேவே

காணாதது காண்பாருக்கு-அதாவது-செஞ்சொல் கவிகாள் உயிர் காத்து ஆள் செய்மின்–திருவாய் -10-7-1- -என்று கவிகளாய் -கூர்க்கக் காணும்-அவர்கள் ஆகையாலே புறம்பு ஒருவர் காணாததும் காண வல்லவர்களுக்கு –-கண் மாறும் இடம்,-அதாவது அவன் சீல குணத்திலே கண் வையாதே கொள்ளும் கோள் என்று -கண் மாறும் இடமும் —

(காணாதது காண்பார்க்குக்‌ கண்மாறுமிடம்‌) “ஸர்வம்‌ ஹ பஸ்ய: பஸ்யதி” என்று ஸர்வத்தையும்‌ ஸாக்ஷாத்கரிக்குமவர்களாகையாலே ஸீலகுணம்‌ பாதகம்‌ என்றறியாதே இதிலே இழியில்‌ செய்வதென்னென்றஞ்சி தாம்‌ அதிலே ஈடுபட்டவராகையாலே அந்த ஸீல குணத்திலே கண் வையாதே கொள்ளுங்கோள்‌ என்று கண்‌ மாறுமிடத்தையும்‌-

செஞ்சொற் கவிகாள் உயிர் காத்து ஆட்செய்மின் திருமால் இரும் சோலை
வஞ்சக் கள்வன் மா மாயன் மாயக் கவியாய் வந்து என்
நெஞ்சும் உயிரும் உள் கலந்து நின்றார் அறியா வண்ணம் என்
நெஞ்சும் உயிரும் அவை உண்டு தானே யாகி நிறைந்தானே–10-7-1–செவ்விய சொல்லை யுடைய கவிகாள் -கவிக்குச் செவ்வை யாகிறது -அநந்ய பிரயோஜனமாய் இருக்கை -பிரயோஜனத்தைக் கணிசிக்கை கவிக்கு குடிலம் ஆகையாவது –இன் கவி பாடும் பரம கவிகள் -என்றும் –செந்தமிழ் பாடுவார் என்றும் -சொல்லுகிற முதல் ஆழ்வாரைகளை யாய்த்து நினைக்கிறது –பெரும் தமிழன் அல்லேன் -என்னா- வாய் அவனை அல்லது வாழ்த்தாது -என்கிறவர்கள் இறே அநந்ய பிரயோஜனர் –
உயிர் காத்து ஆட்செய்மின் -உங்களை நோக்கிக் கொண்டு நின்று கவி பாடப் பாருங்கோள் -கவி பாட்டு வாசிகமான அடிமை யாகையாலே –ஆட் செய்ம்மின் -என்கிறார் –ஆட் கொள்வான் ஒத்து என்னாருயிர் யுண்ட மாயன் -என்கிறபடி அடிமை கொள்ளுவரைப் போலே புகுந்து இத்தலையை அழிக்குமவனாய்த்து–பரிஹரித்துக் கொள்ளுங்கோள் -ஆழங்காலிலே இழிந்து அமிழுமவர்கள் அவ்விடத்திலே கொண்டைக் கால் நாட்டுமாப் போலே –வம்மின் புலவர் -என்று முதலிலே ருசி இல்லாதாரையும் அழைக்கிற இவர் சீலாதி குணங்களில் அழுந்தி -இழிகிறவர்களையும் வேண்டா என்கிறார் இறே ப்ரீதி பிரகரஷத்தாலே –

ராகாந்தகனுக்கு ( ஆசையால் கண் மூடப்பட்டவனுக்கு )-அதாவது-தம் பக்கத்தில் ராகத்தால் முன்னடி தோற்றாமையாலே த்யாஜ்ய தேக தோஷம் காண மாட்டாதவனுக்கு-மங்க ஒட்டு உன் மா மாயை–திருவாய் -10-7-10- -என்று பிரகிருதி தோஷம் இவர் தர்சிப்பிக்குமவை என்கை .

(ராகாந்தனுக்கு மாயா தோஷம்‌) இவர் பக்கல்‌ உண்டான வ்யாமோஹத்தாலே முன்னடி தோற்றாதே இவர்க்கு த்யாஜ்யமான தேஹ தோஷத்தில்‌ கண் வைக்க அறியாதவனுக்கு “மங்கவொட்டுன்‌ மா மாயை (திருவாய்மொழி 10-7-10) என்று ப்ரக்ருதிதோஷத்தையும்‌ (இவர்‌ காட்டுமவை) இவர்களுக்கு இவர்‌ தர்ஸிப்பிக்குமவை இவ் வர்த்த விஸேஷங்கள் என்கிறார் –

மங்க ஒட்டு உன் மா மாயை திரு மால் இரும் சோலை மேய
நங்கள் கோனே யானே நீ ஆகி என்னை அளித்தானே
பொங்கு ஐம் புலனும் பொறி ஐந்தும் கருமேந்த்ரியம் ஐம் பூதம்
இங்கு இவ் வுயிர் ஏய் பிரகிருதி மான் ஆங்காரம் மனங்களே–10-7-10—தாம் அர்த்திக்கச் செய்தேயும் தம்முடைய பிரக்ருதியால் உண்டான தேகத்தில் சங்கத்தால் எம்பெருமான் தம் வார்த்தையை ஆதரியா விட்டவாறே –சதுர் விம்சதி தத்தவாத்மிகையான பிரக்ருதியினுடைய ஹேயதையை அவனுக்கு உணர்த்தி -இத்தை விரும்பாதே போக்கி யருள வேணும் -என்கிறார் –

ஆனால் அஜ்ஞருக்கு உபதேசிக்குமா போலே இவர்கள் எல்லாருக்கும் பலகாலம் உபதேசிப்பாரோ என்ன -அருளிச் செய்கிறார் மேல் —ஆனால்‌ அஜ்ஞர்களுக்கு உபதேஸிக்குமா போலே இவர்களெல்லார்க்கும்‌ எப்போதுமொக்கவும்‌ உபதேஸிப்பரோ என்னில்‌, 

சாதன சாத்யஸ்த மத்யஸ்தரை விட்டு அவற்றில் கலங்கும் ஜீவேஸ்வரர்க்கு-வீடுமின்
நினைமின் பிடித்தேன் விடுவேனோ வைத்தெழ ஊதுவாடி நிற்க கன்மமன்று ஆன்பின் கை கழியேல்
உழி தராய் என் சொற் கொள் என்று இவர் பல காலும் ஹிதாஹிதங்கள் சொல்லுவர் -சூரணை -198–

(சாதன சாத்யஸ்தர்களாகிய மத்யஸ்தரை விட்டு அவற்றில் கலங்கும் ஜீவ-ஈஸ்வரர்களுக்கு -இவர் பல காலும் ஹிதாஹிதங்கள் சொல்லுவர்)

சாதன சாத்யஸ்த மத்யஸ்தரை விட்டு-அதாவது-சாதன சாத்தியங்கள் கைபட்டவர்களுக்கு அறிவிக்க வேண்டியது அல்பம் ஆகையாலே – சாதனஸ்தராகவும் சாத்யஸ்தராகவும் , நடுவு சொன்ன ஞானிகளும் -ஞான விசேஷ யுக்தருமாகிய -அவர்கள் இருவரையும் விட்டு–அவற்றில் கலங்கும் ஜீவர்கட்க்கு
அதாவது-கர்ம பரவசராய் -சாதன சாத்தியங்கள் இன்னது என்று அறியாதே -கலங்கி நிற்கிற சம்சார சேதனருக்கு –-வீடு முன் முற்றவும்–1-2–என்று தொடங்கி –சுனை நன் மலர் இட்டு நினைமின் நெடியானே -10-5–என்னும் அளவும் – த்யாஜ்ய உபாதேயங்களை -பல படியாலும் உபதேசிக்கையாலும் –

(ஸாதந ஸாத்‌ய மத்‌யஸ்த்தரைவிட்டு] ஸாதந தஸையிலும்‌ ஸாத்‌ய தஸையிலும்‌ நிற்கிறவர்களாய்‌ அஜ்ஞருக்கும்‌ ஸர்வஜ்ஞனுக்கும்‌ நடுவே சொல்லப்பட்ட முமுஷுக்களுக்கும்‌ நித்ய முக்தர்க்கும்‌ காதாசித்கமாக உபதேஸித்துவிட்டு, (அவற்றில்‌ கலங்கும்‌ ஜீவேஸ்வரர்களுக்கு) அந்த ஸாதந ஸாத்‌யங்கள்‌ இன்னதென்று அறியாதே கலங்குகிற ஸம்ஸாரி சேதநர்க்கு (வீடுமின்‌ நினைமின்‌) “வீடுமின்‌ முற்றவும்‌“(திருவாய்மொழி 1-2-1 என்று பகவத் வ்யதிரிக்த ஸமஸ்தங்களையும்‌ விடுங்கோள்‌ என்று உபக்ரமித்து ‘சுனை நன்மலரிட்டு நினைமின்‌ நெடியானே (திருவாய்மொழி 10-5-10) என்று புஷ்பாத்‌ யுபகரணங்களைக்‌ கொண்டு அபரிச்சேத்‌ய ஸ்வரூபனான ஸர்வேஸ்வரனை த்ரிவித கரணங்களாலும்‌ ஆஸ்ரயியுங்கோள்‌ என்கிறது முடிவாகவும்‌ ஸம்ஸாரிகளுக்குப்‌ பலகாலும்‌ ஹிதாஹிதங்களைச்‌ சொல்லுவர்‌.

வீடு முன் முற்றவும்–1-2–எல்லாரையும் திருத்தி யாகிலும் அவர்களோடு எம்பெருமானை அனுபவிப்போம் என்று நினைத்து – அவர்களைத் திருத்தும் விரகு எங்கனே என்று பார்த்து அருளி சேதனர் ஆகிறார் -பொல்லாது கண்டால் கை விடவும் -நல்லது கண்டால் கைக் கொள்ளவும் கடவராய் இருப்பர்-ஆன பின்பு சம்சாரத்தின் தன்மையைக் காட்டியும் பகவத் விஷயத்தின் நன்மையைக் காட்டியும் திருத்துவோம் என்று பார்த்து அருளி இவர்களுக்கு சம்சாரத்தின் உடைய அல்ப அஸ்த்ரத்வாதி தோஷங்களையும் சர்வராலும் ஸ்ப்ருஹணீயனான எம்பெருமான் படியையும் உபதேசித்து அருளி அவனை பஜியுங்கோள்-என்று பக்தி யோகத்தை அருளிச் செய்கிறார் –

வினை வல் இருள் என்னும் முனைகள் வெருவிப் போம்
சுனை நல் மலர் இட்டு நினைமின் நெடியானே–10-5-10—திரு மந்த்ரத்தைச் சொல்லி அழகிய மலர்களைக் கொண்டு அவன் திருவடிகளில் பரிமாறி அவனை ஸ்நேஹ யுக்தமாக நினையுங்கோள் என்று கொண்டு பக்தி யோகத்தை முடிக்கிறார் –ஸ்ரீ யபதி யாகையாலே ஸ்வாராதன் -நீங்கள் இதிலே இழியவே விரோதி வர்க்கம் தானாகவே போம் –-இப்படி தன்னோடு பரிமாறுவார்க்கு ஸூலபனாம் -அதில் இழி யும் இடத்து அதிகாரம் சம்பாதிக்க வேண்டா –-ருசியே அமையும் -என்றுஉபதேசிக்கையிலே ஒருப்பட்டு-ஈஸ்வரன் தம்மை பரம பதத்தில் கொடு போகையில் முடுகுகிற படியாலும் உபதேசிக்கிற இவர்களுக்கு பிரதிபத்தி விஷயமாகவும் பாசுரம் சுருக்கக் கொண்டு உபதேசித்து இத்தோடே பரோபதேசத்தைத் தலைக் கட்டுகிறர் 

அவற்றில் கலங்கும் ஈஸ்வரனுக்கு-அதாவது-பிரேம பரவசனாய் -சாதன சாத்தியங்கள் இன்னது என்று அறியாதே -கலங்கும் ஈஸ்வரனுக்கு – அயோக்யதா அனுசந்தானத்தாலே இவர் நம்மை விடின் என் செய்வது -என்று அதிசங்கை பண்ணி அலமருகிற அளவிலே –-உன்னை நான் பிடித்தேன் கொள் சிக்கனவே -2-6-1–என்றும் ,-உன்னை நான் அடைந்தேன் விடுவேனோ -2-6-10–என்று –-மாஸூ ச- என்பது
வைத்து எழ ஊது-அதாவது தோகை மா மயிலார்கள் –செவி ஓசை வைத்து எழ ஆகள் போக விட்டு குழலூது -6-2-2–என்று சாதன சாத்தியங்களை அறிவிப்பது 

(பிடித்தேன்‌ விடுவேனோ இத்யாதி ) (ஈஸ்வரனுக்கும்‌) பல காலும்‌ ஹிதாஹிதங்‌களைச்‌ சொல்லுவர்‌. இவர்‌ இவ்வளவிலே அயோக்‌யதாநுஸந்தாநம்‌ பண்ணி யகலப்புகில்‌ செய்வதென்‌ என்று அதிஸங்கை பண்ணுகிற ஈஸ்வரனை “உன்னை நான்‌ பிடித்தேன்‌ கொள்‌ சிக்கனவே” (திருவாய்மொழி 2-6-1), “உன்னை நான்‌ அடைந்தேன்‌ விடுவேனோ” (திருவாய்மொழி 2-6-10 என்று அவனை மாஸூச:” (கீதை 18-66) என்றும்‌, ‘தோகை மா மயிலார்கள்‌ செவியோசை வைத்தெழ ஆகள்‌ போக விட்டுக்‌ குழலூது’ (திருவாய்மொழி 6-2-2) என்று ஸாதந ஸாத்‌ யங்கள்‌இன்னதென்றும்‌–

வைகுந்தா மணி வண்ணனே என் பொல்லாத் திருக் குறளா என்னுள் மன்னி
வைகல் வைகல் தோறும் அமுதாய வானேறே
செய்குந்தா வரும் தீமை உன் அடியார்க்குத் தீர்த்து அசுரர்க்குத் தீமைகள்
செய்குந்தா உன்னை நான் பிடித்தேன் கொள் சிக்கனவே –2-6-1-திருவடிகளை பிடித்தேனாக திரு உள்ளத்தில் கொள்ள அமையும்–மதிப்பன் அல்லன் என்று விடவோ –வடிவில் பசை இல்லை என்று விடவோ-ஸூ லபன் அன்று என்று விடவோ-தேவர் நெகிழ்க்கிலும் நெகிழாத படி பற்றினேன் –

போகின்ற காலங்கள் போய காலங்கள் போக் காலங்கள் தாய் தந்தை உயிரா
கின்றாய் உன்னை நான் அடைந்தேன் விடுவேனோ
பாகின்ற தொல் புகழ் மூ வுலகுக்கும் நாதனே பரமா தண் வேங்கட
மேகின்றாய் தண் துழாய் விரை நாறு கண்ணியனே –2-6-10—ச பித்ராச பரித்யக்த –என்று அவர்கள் விடும் அளவிலும் தான் தனக்குப் பார்க்கும் நன்மைகளையும் செய்யுமவனே-இச் சேதனர் அநாதி காலம் தன வி நாசத்தையே சூழ்த்துக் கொள்ள –முகம் தோற்றாத படி நின்று சத்தையை நோக்கி போந்தவன் அல்லையோ –-உன்னை – இப்படி உபகாரகனான உன்னை-நான் அடைந்தேன் விடுவேனோ-உபகார ஸ்ம்ருதியை உடையேனான நான் கிட்டப் பெற்ற இனி விடுவேனோ –

போகு நம்பீ! உன் தாமரை புரை கண்ணிணையும் செவ்வாய் முறுவலும்
ஆகுலங்கள் செய்ய அழிதற்கே நோற்றோமே யாம்;
தோகை மா மயிலார்கள் நின்னருள் சூடுவார் செவி ஓசை வைத்தெழ
ஆகள் போகவிட்டுக் குழலூது போயிருந்தே.–6-2-2—பசுக்களை கை கழிய விட்டு குழல் ஊது-கண்டாருக்கு பசு மறிக்க குழல் ஊதுகிறாய் -அதுக்கு ஸ்வாபதேசம் -பெண்களை அழைக்கை யாக குழலூது -செவியோசை வைத்து எழுகை பலமாய் குழலூதுகை உபாயமாய் இருந்தது -அதுதான் அபிமத விஷயத்தை பற்றவன்றோ செய்வது -இங்கே இருந்து ஊதுகிறேன் -என்று குழலை வாங்கி ஊதினான் –போயிருந்தே குழலூது -ஒன்றைச் சொல்ல ஒன்றைச் செய்கிறது என் -உனக்கு அபிமதைகள் திரளுகைக்கு நீர் வாய்ப்பான நிலங்களில் போயிருந்து ஊதாய்-

வாடி நிற்க-அதாவது-மழறு தேன் மொழியாளர்கள் நின் அருள் சூடுவார் மனம் வாடி நிற்க எம் குழறு பூவையோடும் கிளியோடும் குழ கேல் -6–2-5- என்றும் –கன்மம் அன்று-கன்ம மன்று எங்கள் கையில் பாவை பறிப்பது -6-2-8–என்றும் –-ஆன் பின் கை கழியேல்-அதாவது-ஆன் பின் போகல் -10-3-8–என்றும் –
என் கை கழி யேல் –10-3-8–என்றும் அக்ருதங்களை செய்யாதே கொள் என்பது –-உழி தராய்-அதாவது
நீ உகக்கும் நல்லவரோடும் உழி தராய் -10-3-8–என்றும்-அவத்தங்கள் விளையும் என் சொற் கொள் -10-3-10–என்றும்-கிருத்யங்கள் ஆனவற்றை செய் என்பதாய் —

 மழறுதேன்‌ மொழியார்கள்‌ நின்னருள்‌ சூடுவார்‌ மனம்வாடி நிற்க என்‌ குழறு பூவையொடும்‌ கிளியோடும்‌ குழகேலே (திருவாய்மொழி -6-2-5) என்றும்‌ “கன்மமன்றெங்கள்‌ கையில்‌ பாவை பறிப்பது” (திருவாய்மொழி 6-2-8) என்றும்‌ ஆன் பின்‌ போகேல்‌” (திருவாய்மொழி 10-3-8) என்றும்‌ “என்‌ கை கழியேல்‌ (திருவாய்மொழி 10-3-8) என்றும்‌ (இப்படி அக்ருத்யங்களைச்‌ செய்யாதே கொள்ளென்றும்‌, நீயுகக்கு நல்லவரொடும்‌ உழி தராயே” (திருவாய்மொழி 10-3-8) என்றும்‌ அவத்தங்கள் விளையும்‌ என்‌ சொற் கொளந்தோ” (திருவாய்மொழி 10-3-10) என்றும்‌ ஈஸ்வரனுக்குப்‌ பல காலும்‌ ஹிதா ஹிதங்களைச்‌ சொல்லுவர் —

கழறேல் நம்பி! உன் கைதவம் மண்ணும் விண்ணும் நன்கு அறியும் ; திண்சக்கர
நிழறு தொல்படையாய்! உனக்கு ஒன்று உணர்த்துவன் நான்
மழறு தேன் மொழியார்கள் நின்னருள் சூடுவார் மனம் வாடி நிற்க எம்
குழறு பூவையொடும் கிளியோடும் குழகேலே.
–6-2-5-மழறு தேன்-மழலைத் தேன் -கலங்கின தேன் போலே இருந்துள்ள பேச்சு அழகை யுடையவர்கள் -ஆரோ என்றவாறே நீங்களே என்றோ எங்கள் தங்கள் தலையிலே ஏறிடப் புகுகிறானோ என்று நின்னருள் சூடுவார் -என்கிறார் –உன் உகப்புக்கு இலக்கானவர்கள் ஆஸ்ரயம் அழிந்த தளிர் போலே நெஞ்சு வாடி நிற்க –அதாவது -மாசறு சோதி தொடங்கி-நெடுக்கப் பிரிவாலே நோவு பட்டு முடியவும் பெறாதே -சம்ச்லேஷிக்கவும் பெறாதே இருக்கிற என்னைப் போல் அன்றியே அனிச்சம் பூ போலே இருக்கிறவர்கள் –நெஞ்சு உலர்ந்து நிற்க இங்கு இராதே போ என்று பேசாது இருந்தாள்-உன் பேச்சிலும் இவைகள் பேச்சு அன்றோ எனக்கு தாரகம் -என்று இவளுடைய பூவையையும் கிளியையும் கொண்டாடத் தொடங்கினான் -சிலரை ஆதரிக்கை யாவது -அவர்கள் உடைமையை ஆதரிக்கை இறே-எம்-குழறு பூவையொடும் கிளியோடும் குழகேலே.–
பாவி எங்களது காண் இவை நீ நினைக்கிற வவர்களவை அல்ல -குழறு பூவை-அ ந ஷர சரசமாகப் பேசுகையாலே -கலங்கின உனக்கு தெளிய வார்த்தை சொல்ல வல்லவையும் அன்று -அவற்றோடு
குழகேலே.–செறியாதே கொள்-

கன்மமன்று எங்கள் கையில் பாவை பறிப்பது கடல்ஞாலம் உண்டிட்ட
நின்மலா! நெடியாய்! உனக்கேலும் பிழை பிழையே;
வன்மமே சொல்லி எம்மை நீ விளையாடுதி; அது கேட்கில்என்னைமார்
தன்மம் பாவம் என்னார்; ஒரு நான்று தடிபிணக்கே.–6-2-7—எங்கள் கையில் பாவையை பறிப்பது கார்யம் அன்று -நீ நினைக்கிறவர்களது அல்லாமையாலே உனக்கு ஒரு பிரயோஜனம் இல்லை –எங்கள் அனுமதி இல்லாமையால் பறிக்கப் போகாது –தன்னுடைய சக்தி கொண்டு அழிக்கலாவது எதிரிகள் ஆகில் இ றே-அபலைகள் கையில் அத்தை பறிக்க சக்தன் அல்லனே -ஒரு கலத்தில் உண்பாரை போலே அவர்கள் கையிலும் தன் கையிலும் இருக்குமாகில் இறே பிரயோஜனம் உள்ளது -பிரயோஜனம் இல்லாமையே அன்று -உனக்கு குண ஹானியாய் வரும்-

அசுரர்கள் தலைப்பெய்யில் எவன் கொல் ஆங்கு என்று ஆழும் என்னார் உயிர் ஆன் பின் போகல்
கசிகையும் வேட்கையும் உள் கலந்து கலவியும் நலியும் என் கை கழியேல்
வசி செய் உன் தாமரைக் கண்ணும் வாயும் கைகளும் பீதக வுடையும் காட்டி
ஓசி செய் நுண்ணிடை இள வாய்ச்சியர் நீ யுகக்கும் நல்லவரோடும் உழி தராயே-10-3-8—என் கை கழியேல்--நான் அணைத்த கைக்கு உள்ளே இருக்கப் பார் -இவர்கள் சொல்லுவது கேட்க்கைக்காக ஏக தார விரதனோ நான் -என்ன – உனக்கு அபிமதைகள் ஆனாரோடு கலக்க வேண்டா என்கிறேன் அல்லேன்–அவர்களோடே என் முன்னே சஞ்சரியாய் -என்ன – அவர்களை அழைத்து தருவார் வேண்டாவோ என்ன -உனக்கு குறை யுண்டோ -தூது செய் கண்கள் இருக்க -என்கிறாள் –நீ யுகக்கும் நல்லவரோடும் உழி தராயே-வடிவு அழகும் பருவமும் ஒழியவே நீ உகந்த நன்மையை யுடையவர்கள் -அவர்களோடு கூட என் கண் வட்டத்தில் சஞ்சரிக்க அமையும்-

இப்படி பல இடங்களிலும் உபதேசிக்கையாலும் – பிரதம சரம யுக்தரான -அஜ்ஞா சர்வஜ்ஞர்களுக்கு- பலகாலங்கள் ஹிதாஹிதங்கள் சொல்லுவார் என்ற படி —

சாதன சாத்தியங்களில் கலங்கும் ஈஸ்வரனுக்கு என்று உபக்ரமித்து ,-பிடித்தேன் விடுவேனோ வாடி நிற்க -இத்யாதிகளை எல்லாம் அருளிச் செய்வான் என் என்னில் – சாதன சாத்யஸ்தரை சொன்னதுக்கு பிரதி கோடியாக அவற்றில் கலக்கம் ஜீவ ஈஸ்வரர்களுக்கு – இருவருக்கும் ஒரோ வழிகளால் உண்டு என்று தர்சிப்பதைக்கு சொன்னது இத்தனை ஒழிய , மேல் சொல்லுகிற ஹிதாஹிதங்கள் எல்லாம் அவ் இரண்டு விஷயமாகவே இருக்க வேணும் என்கிற நிர்பந்தம் இல்லாமையால் விரோதம் இல்லை-

ஜீவ விஷயமான உபதேசம் தன்னிலும் அர்த்த பஞ்சகமும் உபதேசிக்கையாலே -அவை இரண்டுமே இருக்க வேணும் என்கிற நிர்பந்தம் இல்லை இறே -அங்கன் இன்றிக்கே – ஜீவ விஷயமான உபதேசத்திலும் –வீடு முன் முற்றவும் பக்தி ரூப சாதன உபதேச பரமாகையாலும் –-கண்ணன் கழலினை -பக்தி மான்கள் பரிமாற்றம் இருக்கும் படி உபதேசத்திதது ஆகையாலும் ,-நடுவு உள்ள உபதேசத்தை ஆராய்ந்தாலும் –பக்தி பிரபத்தி ரூப சாதன உபதேசமும் , பகவத் அனுபவ கைங்கர்ய ரூப சாத்திய உபதேசமும் -பிரசுரமாய் பிராப்யமான பர ஸ்வரூபத்தையும் – ப்ராப்தாவான பிரத்யக் ஆத்மா ஸ்வரூபத்தையும் – பிராப்தி விரோதி யுமையுமே உபதேசித்தவை ..-இந்த சாதன சாத்தியங்களுக்கு ஊன்றவைக்கு உடலாகையாலே ..ஏதஸ் சேஷமாய் அறுகையாலும் , சாதன சாத்தியங்களில் கலக்கம் தீர்க்கையே உபதேசதங்களுக்கு பிரதானம் என்று ஒருங்க விட்டு-

ஈஸ்வர விஷயமான உபதேசமும் – சாதன சாத்திய விஷயங்களில் கலக்கம் தீர்க்கையைப் பற்ற என்றே கொள்ள வேணும் ஆகில் – பிடித்தேன் –விடுவேனோ -என்றிரண்டும் -தனக்கு சாத்திய பூதரான இவரோடு வந்து சம்ஸ்லேஷித்து பெறாப் பேறு பெற்றானாய் இரா நிற்கச் செய்தே – இவர் அயோக்யா அனுசந்தானம் பண்ணி அகலில் செய்வது என் -என்று அதிசங்கை பண்ணை அலமாக்கிறத்தை நிவர்திப்பிக்கைகாக சொன்னவை ஆகையாலே – சாத்திய விஷயமான கலக்கத்தை தெளிவிக்கைக்கு சொன்னவை ஆகலாம் .. சாத்தியத்தில் கலக்கம் ஆவது -சாத்தியம் இன்னது என்று கலங்குகை ஆனாலும் – சாத்திய வஸ்து விஷயமான கலக்கம் என்கிற மாத்ரத்தைக் கொண்டு -இப்படி யோஜித்தால் வரும் விரோதம் இல்லை

வைத்து எழ ஊது –என்கிற இது -தனக்கு அபிமத விஷயங்களை பிரிந்து -கண்ணாம் சுழலை இட்டு-
அதஸ் மிம்ஸ் தத் புத்தி பண்ணி தங்கள் குழலை கொண்டாடினாக கருதி-நாங்கள் அவர்கள் அல்லோம் காண் -அவர்கள் பக்கல் போ -என்கிற நினைவாலே-தோகை மா மயிலார்கள் செவி ஓசை வைத்து எழ -என்று சாத்தியத்தையும் — ஆகள் போக விட்டு குழலூது -என்று சாதனத்தையும் அவனுக்கு அறிவிக்கையாலே – உபயத்திலும் கலங்கின அவனுக்கு சொல்லுகிறது என்னும் இடம் சம்பிரதிபன்னம்-வாடி நிற்க -என்கிற இது மழறு தேன் மொழியார்கள்-என்று தொடங்கி -உனக்கு அபிமதைகள் ஆனவர்கள் – உன்னைப் பிரிந்து உறாவிக் கிடக்க -உனக்கு உபேஷா விஷயமான –
எங்கள் பூவை கிளிகளோடே கலந்து பேச்சு கொள்ளாதே கொள் -என்கிறது ஆகையாலே –
சாதயத்தில் கலக்கம் கண்டு சொன்னதாம் இது –கன்ம மன்ற
-என்ற இது -தங்களோடு இட்டீடு கொண்டு ,தங்கள் அபிசந்தையைக் குலைத்து – தங்களை வசீகரிக்கைக்கு சாதனமாக நினைத்து -தங்களுக்கு நிஷ்டம் என்று அறியாமல் – கையில் பாவையைப் பறிக்கும் அவனை குறித்து -உனக்கு இது கார்யம் அன்று இது -என்கையாலே – சாதனத்தில் கலக்கம் கண்டு சொன்னது ஆகலாம்ஆன் பின் போகல் கை கழி யேல் -என்ற இது பசு மேய்க்க போன இடத்தே -தனக்கு என்ன தீங்கு வருகிறதோ என்றும் பிரிவாற்றாமலும் இத் தலை படுகிற கிலேசம் அறிந்தால் பிரியாதே –இத்தலையோடு கூடி இருக்கை புருஷார்தமாய் இருக்க –ஜாதி உசித தர்மம் என்கிற மாத்ரமே கொண்டு -பசு மேய்க்க போக ஒருப்படுகிறவனைக் குறித்து – ஆழும் என் ஆர் உயிர் ஆன் பின் போகல் -என்றும் – கலவியும் நலியும் என் கை கழி யேல் –என்றவை ஆகையாலே – சாத்தியத்தில் கலங்கினவனுக்கு சொல்கின்றவை ஆகலாம் —உழி தரு –என்கிற இது –வசி செய் உன் தாமரைக் கண்ணும் வாயும் கைகளும் பீதக உடையும் காட்டி –என்று வசிகர சாதனத்தையும் –உகக்கும் நல்லவரோடு உழி தரு -என்று அபிமத விஷய சம்ஸ்லேஷமாகிற சாத்தியத்தையும் – அவை அறியாமல் நிற்கிற இவனுக்கு அறிவித்த தாகவே இருக்கிறதுஎன் சொற் கொள் –என்கிற இது —பசு மேய்க்க போக வேண்டா என்று விலக்குகிறது .. நமக்கு ஒரு தீமை வாராமைக்காகா என்று அறியாதே – பரிவையான தன் வார்த்தையை அநாதிக்கிறவனைக் குறித்து – அவத்தங்கள் விளையும் என் சொற் கொள் -என்றது ஆகையாலே
இதுவும் சாத்தியத்தில் கலங்கினவனுக்கு சொன்னதாக கொள்ளலாம்
—ஆன பின்பு -இவற்றில் கலங்கும் ஈஸ்வரனுக்கு பலகாலும் ஹிதாஹிதங்கள் சொல்லுவர் – என்றதுக்கு அனுகுணமாக இச் சந்தைகளுக்கு எல்லாம் இப்படி யோசித்தாலும் குறை இல்லை

இப்படி இவர்கள் இருவருக்கும் பலகாலம் உபதேசிகைக்கு ஹேது ஏது என்னும் ஆ காங்க்ஷையில் அருளிச் செய்கிறார் மேல் .-ஆனால்‌ இருவர்க்கும்‌ பலகாலும்‌ ஹிதாஹிதங்கள்‌ சொல்லுகைக்கு ஹேது என்னென்னில்‌, இவர்க்குண்டான ஜ்ஞாந ப்ரேமங்கள்‌ என்கிறார்‌.-

கதிர் ஞான மூர்த்திக்கு உணர்த்துவது பிரேமத்தாலே — தமஸ் மூடுவாருக்கு வேட்கை எழுவிப்பது ஞானத்தாலே-சூரணை -199-

கதிர் ஞான மூர்த்திக்கு-உணர்த்துவது பிரேமத்தாலே-அதாவது-பிணக்கி யாவையும் யாவரும் பிழையாமல் பேதித்தும் பேதியாததோர் கணக்கில் கீர்த்தி வெள்ளக் கதிர் ஞான மூர்த்தியினாய்–திருவாய்-6-2-8–என்று சம்ஹ்ருதி சமயத்தில் சகல சேதன அசேதனங்களையும் ஒக்கக் கலசி —
சிருஷ்டி சமயத்தில் ஒருவர் கர்மம் ஒருவர் இடம் கலசாத படி – பிரித்த இடத்திலும் தன் ஸ்வரூபத்துக்கு ஒரு பேதம் இன்றிக்கே – அத்வீதியமாய் -அபரிசேத்யமான கீர்த்தி சமுத்ரத்தை உடைத்தாய் இருக்கிற
பிரபா ரூபமான ஜ்ஞானத்தை வடிவாக உடையவன் ஆகையால் சர்வஜ்ஞ்ஞனாய் இருக்கிறவனுக்கு –
உனக்கு ஓன்று உணர்த்துவன்–திருவாய்-6-2-5- -என்று உபதேசிகிறது —தத் விஷய பிரேமத்தாலே .-

(கதிர் ஞான மூர்த்திக்கு உணர்த்துவது ப்ரேமத்தாலே) ‘பிணக்கி யாவரும்‌ யாவையும்‌ பிழையாமல்‌ பேதித்தும்‌ பேதியாததோர்‌ கணக்கில்‌ கீர்த்தி வெள்ளக்‌ கதிர்ஞான மூர்த்தியினாய்‌’ (திருவாய்மொழி 6-2-8) என்று ஸம்ஹார காலத்திலே ஸர்வத்தையு மொக்கக்‌ கலசி ஸ்ருஷ்டி காலத்திலே ஒருவருடைய கர்மம்‌ ஒருவர்க்குத்‌ தட்டாதபடி பிரித்து யுகபதேவ ஸாக்ஷாத்கார ஸமமாய்‌ விஸத தமமான ஜ்ஞானத்தை உடையவனாகையாலே ஸர்வஜ்ஞனாயிருக்கிறவனுக்கு “உனக்கொன்று உணர்த்துவன்‌” (திருவாய்மொழி 6-2-5) என்று ஹிதாஹிதங்களைச்‌ சொல்லுகைக்கடி அவன்‌ பக்கலிலே ப்ரேமத்தாலே.

பிணக்கி யாவையும் யாவரும் பிழையாமல் பேதித்தும் பேதியாதது ஓர்
கணக்கில் கீர்த்தி வெள்ளக் கதிர்ஞான மூர்த்தினாய்!

இணக்கி எம்மை எம்தோழிமார் விளையாடப் போதுமின் என்னப்போந்தோமை
உணக்கி, நீ வளைத்தால், என்சொல்லார் உகவாதவரே?–6-2-8—சேதன அசேதனங்களை தேவாதி விபாகம் அற்று-தம ஏகி பவதி-என்று தன்னோடே அவி பக்தமாம் படி கலசி -ஸ்ருஷ்ட்டி காலத்தில் ஒருத்தன் கர்மம் வேறு ஒருத்தன் அனுபவியாத படி -பேதித்தும் -ஸ்ருஷ்ட்டித்தும் என்றபடி-சம்ஹார காலத்தில் அசித்கதமான சூஷ்ம பரிணாகம் – சேதனகதமான அஞ்ஞானம் –ஸ்ருஷ்ட்டி காலத்தில் அசித் கதமான ஸ்வரூப அந்யதா பாவம் -சேதனகதமான ஸ்வ பாவ அந்யதா பாவம் -ஆக இப்பேதங்கள் ஒன்றும் இன்றிக்கே ஏக ரூபமாய் ஏக ரூபமாய் அத்விதீயமாய் அனவதியான ஏக ரூபத்வம் ஆகிற கீர்த்தி சமுத்திரத்தை யுடையையாய் பிரபா ரூபமான சங்கல்ப ஞானத்துக்கு ஆஸ்ரயமானவனே-இத்தால் விஸ்லேஷ தசையில் கலக்கமும் சம்ச்லேஷ தசையில் போக ரூப விக்ருதியும் இன்றிக்கே ஏக ரூபன் என்கை-

கழறேல் நம்பி! உன் கைதவம் மண்ணும் விண்ணும் நன்கு அறியும் ; திண்சக்கர
நிழறு தொல்படையாய்! உனக்கு ஒன்று உணர்த்துவன் நான்
மழறு தேன் மொழியார்கள் நின்னருள் சூடுவார் மனம் வாடி நிற்க எம்
குழறு பூவையொடும் கிளியோடும் குழகேலே.–6-2-5—வார்த்தை மூட்டி நிருத்தரனாய் நின்றான் -இவனை உண்டாக்கி கார்யம் கொள்ள வேணும் என்று பார்த்து உனக்கு ஒரு ஹிதம் சொல்லக் கேள் –கலங்கின உன்னைத் தெளியும் படி வார்த்தை சொல்லக் கேள் என்ன -அவனும் -இது ஒரு பேச்சில் இனிமை இருந்த படி என் -என்றான் -இவள் சொல்லும் அர்த்தத்தில் தாத்பர்யம் இல்லையே அவனுக்கு

தமஸ் மூடுவாருக்கு-வேட்கை எழுவிப்பது ஞானத்தாலே-அதாவது-கொள் என்று கிளர்ந்து எழுந்த பெரும் செல்வம் நெருப்பாக கொள் என்று தம மூடும்-திருவாய்-4-9-4- -என்று ஐஸ் வர்யம் விநாச ஹேதுவாக காணா நிற்கச் செய்தே பின்னையும் அத்தை ஸ்வீகரிக்கும் படி தமோ அபிபூதராக நிற்கும் சம்சாரிகளுக்கு –-நின் கண் வேட்கை எழுவிப்பன்–திருவிருத்தம்-76–என்று தம் உபதேசத்தாலே பகவத் பக்தியை ஜனிப்பிக்கிறது .. தத் சம்பந்தம் அடியாக அவர்களை விடமாட்டாதே திருத்தி தம்மோபாதி பகவத் அனுபவ பரராக்க வேணும் என்கிற ஞானத்தாலே என்கை-

(தமமூடுவார்க்கு வேட்கை யெழுவிப்பது ஜ்ஞானத்தாலே) “கொள்ளென்று தமமூடும்‌” (திருவாய்மொழி 4-9-4) என்று தமோபி பூதராயிருக்கிற ஸம்ஸாரிகளுக்கு “நின் கண்‌ வேட்கை எழுவிப்பனே ‘ (திருவிருத்தம்‌ 96) என்று பகவத் பக்தியை உபதேஸிக்கிறது பகவத் விமுகரான இவர்களும்‌ நம்மைப் போலே பகவதநுபவம்‌ பண்ண வேணுமென்கிற ஜ்ஞானத்தாலே என்கிறார் –

கொள் என்று கிளர்ந்து எழுந்து பெருஞ்செல்வம் நெருப்பாகக்
கொள் என்று தமம் மூடும்
; இவை என்ன உலகியற்கை!
வள்ளலே! மணிவண்ணா! உனகழற்கே வரும்பரிசு,
வள்ளல் செய்து அடியேனை உனது அருளால் வாங்காயே.–4-9-4–இவன் அர்த்தியாது இருக்க தானே -என்னைக் கொள் என்னைக் கொள் என்று மேல் மேல் எனக் கிளர்ந்து வருகிற நிரவதிக சம்பத்தானது –
நெருப்பாகக் நிச்சேஷமாக நசிக்க -என்னுதல் -தனக்கு விநாச ஹேதுவாக -என்னுதல்-கொள் என்று தமம் மூடும்;-இவை விநாச ஹேது என்று அறிந்து இருக்கச் செய்தேயும் பிறர் கொள் என்று பிரேரித்த வாறே தம அபிபூதனாய் துராசையாலே முன்பு விநாச ஹேது வானத்தை விரும்பும் கொள் என்று பிரேரிக்கிறது மனஸ் ஆகவுமாம்

வணங்கும் துறைகள் பல பல வாக்கி மதி விகற்பால்
பிணங்கும் சமயம் பல பல வாக்கி  அவையவை தோறு
அணங்கும் பல பல வாக்கி நின் மூர்த்தி பரப்பி வைத்தாய்
இணங்கு நின்னோரை இல்லாய் நின் கண் வேட்கை எழுவிப்பனே
 – -96 –வணங்குந் துறைகள் பலபல ஆக்கியிருந்தாலும் ப்ரபத்தி மார்க்மொன்றையே பரவச் செய்வேன்;-மதிவிகற்பாற் பிணங்குஞ்சமயம் பலபல ஆக்கியிருந்தாலும் ஸ்ரீவைஷ்ணவ சமயமொன்றையே பரவச் செய்வேன்;-அணங்கும் பலபல ஆக்கியிருந்தாலும் ஸ்ரீமந்நாராயண ரூபியான நின் வடிவத்திலேயே பக்தியை நிகழ்த்துவேன் -ஸ்வ தந்த்ர்யத்தையும் தவிர்த்து – அவர்கள் தங்கள் அறிவு கெட்டு-இன்பம் அனுபவியாதபடி -பண்ணி – எல்லாரும் என்னைப் போலே உன் பக்கலிலே ஆசை-உடையராம்படி -பண்ணக் கடவேன் –இது சம்சாரத்தில் இருக்கச் செய்தே பகவத் ஜ்ஞானம்-பிறக்கையால் வந்த கர்வோக்தி யிருந்தபடி இறே –நீ கை விட்டாலும் நான் கை விடவோ – அனைவரையும் ஆஸ்ரிதர்-ஆக்குகிறேன் என்று ஈஸ்வரன் இடம் மார் தட்டுகிறார் –

இப்படி ஞான பிரேமங்கள் இரண்டும் காரணமாக சொல்லுவான் என் –-பர துக்க அசஹிஷ்ணுத்வம் அன்றோ பர உபதேசத்துக்கு பிரதான காரணம் என்ன அருளிச் செய்கிறார் மேல் .-இவர்களளவில்‌ இவர்க்குண்டான ஜ்ஞாந ப்ரேமங்கள்‌ இரண்டாலும்‌ பர துக்கம்‌ ஸஹியார்‌ என்னுமிடம்‌ சொல்லுகிறது மேல்‌.

உயிர் மாய்தல் ஆழும் என் ஆர் உயிர் என்னும் பர துக்கம் சஹியாமை இரண்டிலும் உண்டு-சூரணை -200-

(உயிர் மாய்தல்-என்னும் பர துக்கம் சஹியாமை-ஞானத்திலும் உண்டு –ஆழும் என் ஆர் உயிர் என்னும் பர துக்கம் சஹியாமை பிரேமத்திலும் உண்டு )

உயிர் மாய்தல்-என்னும் பர துக்கம் சஹியாமை-அதாவது- கொண்டாடும் குலம் புனைவும் -என்று தொடங்கி- தமர் உற்றார் விழு நிதியும் வண்டார் பூங்குழலாலும் மனை ஒழிய உயிர் மாய்தல் கண்டு ஆற்றேன் -என்று சம்சாரிகள் பாரிக்கிற பாரிப்பும் -முடிந்து போகிற படியும் -கண்டு ஆற்ற மாட்டுகிறிலேன் என்கையாலே பரருடைய துக்கம் சஹியாமையும் –ஆழும் என் ஆர் உயிர் என்னும் பர துக்கம் சஹியாமை--அதாவது-அசுரர்கள் தலைப் பெய்யில் எவம் கொல் ஆங்கு ஆழும் என் ஆர் உயிர்-திருவாய் -10-3-8- -என்று அசுரர்கள் வந்து கிட்டினால் -அங்கு என்னாய் விளையுமோ என்று -என் ஆத்மாவானது தரைப் படா நின்றது என்கையாலே – பரனான -ஈஸ்வரனுடைய துக்கம் சஹியாமையும் –இருவருக்கும் உபதேசிகைக்கு ஹேதுவான சொன்ன ஞான பிரேமங்கள் இரண்டிலும் என்கை ..
இத்தால் ஞான பிரேமங்கள் இரண்டும் பர துக்க அசஹிஷ்ணுவத்தை ஒழிந்து இராது என்றது ஆய்த்து .

உயிர்மாய்தல்‌ கண்டாற்றேன்‌” (திருவாய்மொழி 4-9-3) என்று ஸம்ஸாரிகள்‌ துக்கம்‌ ஸஹியாமையும்‌, “அசுரர்கள்‌ தலைப்பெய்யில்‌ எவன் கொலாங்கு என்றாமுமென்னாருயிர்‌’ (திருவாய்மொழி 10-3-8) என்று அசுரர்கள்‌ ஒன்றாக வந்து கிட்டினார்களாகில்‌ அங்கென்னாய்‌ விளைகிறதோ என்று என்‌ ஜீவனானது தரைப்படா நின்றதென்கையாலே பரனான ஈஸ்வரனுடைய துக்கம்‌ ஸஹியாமையும்‌ அந்த ஜ்ஞாந ப்ரேமங்கள்‌ இரண்டிலுமுண்டு. ஆகையாலே இவையடியாக இருவர்க்கும்‌ உபதேஸிப்பர்‌ என்கிறார் –

கொண்டாட்டும் குலம் புனைவும் தமர் உற்றார் விழு நிதியும்
வண்டு ஆர் பூங் குழலாளும் மனை ஒழிய, உயிர் மாய்தல்
கண்டு ஆற்றேன் உலகியற்கை!
கடல்வண்ணா! அடியேனைப்
பண்டே போல் கருதாது,உன் அடிக்கே கூய்ப் பணி கொள்ளே.–4-9-3—-சம்சாரிகள் பாரிப்பும் -இவர்கள் முடிந்து கிடக்கும் படியையும் கண்டு என்னால் பொறுக்கப் போகிறது இல்லை –-தாம் பகவத் விஷயத்தில் இருக்கிறாப் போலே சப்தாதி விஷயங்களுடைய லாப அலாபங்களே ஸூ க துக்கங்களாக கொண்டு இருக்கிற ஜந்துக்கள் படுகிற துக்கத்தை அனுசந்தித்து மிகவும் நோவு பட்டு
-தமக்கு எம்பெருமானோடு உள்ள விஸ்லேஷ வியசனத்தை மறந்து இஜ் ஜந்துக்களுடைய துக்கத்தை போக்கும் விரகு ஏது-என்று அதிலே தத் பரராய் சர்வஞ்ஞனாய் சர்வசக்தியாய் -பரம உதாரனாய்-என்றும் எல்லாருடைய ரக்ஷணத்திலே தீஷிதனாய் -சர்வ அபராத ஸஹனாய்- நினைத்தது முடிக்கைக்கு ஈடான சாமர்த்தியத்தை உடைய சர்வேஸ்வரனான நீ உளனாய் இருக்க ஸமஸ்த ஜந்துக்களும் எண்ணிறந்த துக்கங்களாலே மிகவும் நலிவு படும்படியாக -இது ஒரு லோக ஸ்வ பாவத்தை பண்ணும் படியே -விஷண்ணராய்-இவற்றை இங்கனே படுத்தி அருள ஒண்ணாது -இவர்களை நிர் துக்காராம் படி பண்ணி அருளுதல்

அசுரர்கள் தலைப்பெய்யில் எவன் கொல் ஆங்கு என்று ஆழும் என்னார் உயிர் ஆன் பின் போகல்
கசிகையும் வேட்கையும் உள் கலந்து கலவியும் நலியும் என் கை கழியேல்
வசி செய் உன் தாமரைக் கண்ணும் வாயும் கைகளும் பீதக வுடையும் காட்டி
ஓசி செய் நுண்ணிடை இள வாய்ச்சியர் நீ யுகக்கும் நல்லவரோடும் உழி தராயே-10-3-8—யதா சங்கல்பம் நீ வெற்றியோடு மீண்டாலும் -அதுக்கு முன்னே நான் தறைப் படுவன் -நான் உனக்கு வேண்டாவோ -என்கிறாள் –ஆழும் என்னார் உயிர் -அழுந்தும் -அதுக்கு நம்மால் செய்யலாவது என் -என்ன –ஆன் பின் போகல்-பசுக்கள் பின்னே போகாதே கொள்–

இப்படி பிரேம மாத்ரத்தால் அன்றிக்கே – ஈஸ்வரன் நினைவாலே -அவனுக்கு தாம் ஆத்மா பூதர் ஆகையாலும் –அவனுக்கு தீங்கு வரப் பொறுக்க மாட்டார் என்னும் அத்தை தர்சிப்பிகிறார் மேல் -இன்னும்‌ இவ்வளவன்றிக்கே ஸ்வ ஸரீரத்திலே ஸர்வர்க்கும்‌ பரிவு நடக்கையாலே அவனுக்கு ஆத்ம பூதரான இவர்‌ அவனுக்குப்‌ பரியக் கடவர்‌ என்னுமிடமும்‌ தோன்றும்‌ என்கிறார்‌ மேல்‌.

என்னது உன்னதாவியிலே அறிவார் ஆத்மா என்று அவன் மதம் தோன்றும்–சூரணை -201-

என்னது உன்னதாவியிலே-அதாவது-என்னது உன்னதாவியும் -திருவாய் -4-9-3–என்று உன்னுடைய திவ்ய ஆத்மா ஸ்வரூபம் நான் இட்ட வழக்கு என்ற இடத்தில் –-அறிவார் ஆத்மா என்று–அதாவது-
அறிவார் உயிர் ஆனாய் –என்று-அறிவாரை உயிராக உடையவன் என்னும் படி –-ஜ்ஞாநீ து ஆத்மைவ மே மதம் –ஸ்ரீ கீதை -7-18–என்று , ஜ்ஞானி யானவன் எனக்குத் தாரகனாகவே என்னுடைய மதம் என்று அருளிச் செய்த படியே இவரை அவன் தனக்கு ஆத்மாவாகவே நினைத்து இருக்கிற ஆகாரம் தோன்றும் என்ற படி-ஆகையால் அவனுக்கு ஒரு துக்கம் வரப் பொறுக்க மாட்டார் என்று கருத்து .-

“உன்னதென்னதாவி” (திருவாய்மொழி 4-3-8) என்கிற இடத்திலே“ அறிவாருயிரானாய்‌”  (திருவாய்மொழி 6-9-8) என்றும்‌ “ஜ்ஞாநீ து ஆத்மைவ மே மதம்‌” (கீதை 7-18) என்று ஜ்ஞாநியானவன்‌ தனக்கு தாரகன்‌; மே மதம்‌, இது க்ருஷ்ண ஸித்‌தாந்தம்‌ என்று அவனுடைய அபிப்ராயத்தாலே இவர் தம்மைத்‌ தனக்கு தாரகராக நினைக்கிற வாகாரம்‌ தோற்றுகையாலும்‌ அவனுக் கிவர்‌ பரியக்‌ குறையில்லை யென்கிறார் –

உன்னது என்னதாவியும் என்னது உன்னதாவியும் –என்னும் இந்த திருப் பாசுரத்துக்கு ஸ்ரீ ஆளவந்தார் பொருள் அருளிச் செய்ய கேட்டிருந்த முதலிகளில் சிலர் -இவ்வாத்மாவின் ஸ்வரூபம் பரமாத்மா இட்ட வழக்கு என்னக்கூடும்- பரமாத்மாவின் ஸ்வரூபம் ஜீவாத்மா இட்ட வழக்கு என்பது என் -என்று கேட்க
இவன் தன்னை அவனுக்கு ஆக்குவன் என்ற அன்று கர்மம் தடை செய்யவும் கூடும்-சர்வேஸ்வரன் தன்னை இவன் இட்ட வழக்கு ஆக்கும் அன்று தடை செய்பவர் இலர் –-ஆனபின்பு அதுவே நிலை நிற்பது –மேலும் இவன் ஸ்வரூபம் அவன் இட்ட வழக்கு ஆகக் கூடுமோ -என்று இதிலே காணும் சந்தேகிக்க வேண்டுவது –என்று அருளிச் செய்தார் ஸ்ரீ ஆளவந்தார் )

என்னது ஆவி மேலையாய்! ஏர் கொள் ஏழ் உலகமும்
துன்னி முற்றும் ஆகிநின்ற சோதி ஞான மூர்த்தியாய்!
உன்னது என்னது ஆவியும்; என்னது உன்னது ஆவியும்;
இன்ன வண்ணமே நின்றாய் என்று உரைக்க வல்லனே?–4-3-8–என்னது ஆவி மேலையாய்!- ஏர் கொள் ஏழ் உலகமும்- என்னைப் பெறுகைக்கு உண்டான அபி நிவேசத்தால் ஒருவனைப் பிடிக்க நினைத்தவன் ஒரூரை வளையுமா போலே சர்வகதன் ஆனான் -என்னுதல்-இவரைப் பெற்ற பிரியத்தால் வியாப்திலேயும் ஒரு புஷ்கல்யம் உண்டாயிற்று என்னுதல்-இவரைப் பெறுகையாலே விபூதி த்வயமும் புதுக் கணித்தது-துன்னி முற்றும் ஆகிநின்ற-எங்கும் ஓக்க நெருங்கி வியாபித்து நின்ற நிலை -ஜாதி வியக்தி தோறும் பரி ஸமாப்யா வர்த்திக்குமா போலே –சோதி ஞான மூர்த்தியாய்!–உன்னது என்னது ஆவியும்; என்னது உன்னது ஆவியும்;-விசத தமமான-ஞான ஸ்வரூபன் ஆனவனே –என்னுடைய ஆத்மா நீ இட்ட வழக்காய்-உன்னுடைய திவ்ய ஆத்ம ஸ்வரூபம் நான் இட்ட வழக்காம் படி யானோம்

அறிவி லேனுக்கு அருளாய் அறிவார் உயிரானாய்!
வெறிகொள் சோதி மூர்த்தி! அடியேன் நெடுமாலே!
கிறிசெய்து என்னைப் புறத்திட்டு இன்னம் கெடுப்பாயோ?
பிறிதொன்று அறியா அடியேன் ஆவி திகைக்கவே.–6-9-8—உன்னைக் கிட்ட முதல் இல்லாத எனக்கு அருளாய் -அறிவு இல்லை யாகில் அருளக் கடவதோ என்ன -சர்வஞ்ஞரான நித்ய ஸூ ரிகளுக்கு கிருபை பண்ணவோ -தளர்ந்த இடம் அன்றோ கிருபைக்கு விஷயம் -பொய் நின்ற ஞானத்தை உடைய எனக்கு ஞானப் பிரானான நீ கிருபை பண்ணி அருளாய்-அறிவார் உயிரானாய்!-உன்னை உள்ளபடி அறிவார்க்கு தாரகனாகை உனக்கு ஏற்றமோ –பத்தராவி என்கிறபடியே அறிவார்க்கு உயிராம் அவன் என்னுதல் –ஞானீத்வாத் மைவ -என்கிறபடியே அறிவாரை உயிராக யுடையவன் என்னுதல்

உதாரா: ஸர்வ ஏவைதே ஜ்ஞாநீ த்வாத்மைவ மே மதம்
ஆஸ்தித: ஸ ஹி யுக்தாத்மா மாமேவாநுத்தமாம் கதிம்-
-7-18-மேற் சொல்லிய யாவரும் நல்லாரே. எனினும், ஞானியை நான் யானாகவே கொண்டுளேன்.-அவன், யோகத்தில் இசைந்து, உத்தம கதியாகிய என்னைக் கடைப்பிடித்து நிற்கிறான்.

ஆக ஜீவேச்வரர்களுக்கு பல காலும் ஹிதாஹிதங்கள் சொல்லுகைக்கு ஹேதுக்களை தர்சிப்பித்தாராய் நின்றார் கீழ் — இப்படி இவர் உபதேசிப்பர் ஆனாலும் , சிஷ்ய லக்ஷண யோக்யதை இல்லாத ஈஸ்வரன் உபதேசத்துக்கு முக்ய பாத்ரம் அன்றே என்னும் ஆ காங்க்ஷையில் அருளி செய்கிறார் மேல் —

அதாவது – சஸ் சிஷ்யனானவன் ஆச்சர்யனை தத் அபிமத ஸ்தலத்திலே வைத்து – தத் சந்த அனுவர்த்தியாய் – தத் விக்ரகத்திலே புரை அற்ற விருப்பம் உடையவனாய் – சகல சிநேகத்தையும் அவன் பக்கலிலே பண்ணி – தத் இதரங்களிலே சங்கம் அற்று –-மிடியனும் பசியனும் விடாயனும் -தனம் சோறு தண்ணீர் -பெற்றார் போலே – அத்யபிநிவேசத்தோடே அவனை அனுபவித்து
சரீரம் அர்த்தம் பிராணஞ்ச சத் குருப்யோ நிவேதயத் –விஹகேஸ்வர சம்ஹிதை –என்கிற படியே –
தன் ஆத்மா ஆத்மீயங்களை ஆச்சர்யனுக்கு சமர்ப்பித்து எல்லாம் செய்தாலும் –
க்ருத்ஸ்னாம் வா ப்ருதிவீம் தத்யாத் நதத் துல்யம் கதஞ்சன -என்கிறபடியே – ஆசார்யன் பண்ணின மகோ உபகாரத்துக்கு சத்ருசம் அல்லாமையாலே -குறைவாளனாய் – ஆசார்யன் தன்னுடைய தேக யாத்ரா பரம் எல்லாம் தன் மேலேயே பொகட்டு இருக்க –தான் அது அடங்கலும் சுமந்து – திவாராத்ரா விபாகம் அற-அவனைப் பிரியாதே -அவன் நிக்ரஹித்து போ என்றாலும் போகாதவனாய் —
அவனுக்கு அநிஷ்டம் ஆனால் தனக்கு உகப்பான வற்றையும் விட்டு – ஆசார்யன் விதித்த படியே நடத்தும் அவன் ஆகையாலே

ஆனால்‌ இவர்‌ ஈஸ்வரனுக்கு உபதேஸித்தா ரென்னும்போது அவனுக்கு ஸிஷ்ய லக்ஷணம்‌ உண்டோ என்னில்‌, ஸிஷ்யனானவன்‌ ஆசார்யனை ஓரிடத்திலே வைத்துத்‌ தான்‌ அவனுடைய மநோ ரதமாய்‌ அவன் பக்கலிலே புரை யற்ற ஸ்நேஹத்தைப்‌ பண்ணி,
புறம்புண்டான ஸங்கங்களை விட்டு தரித்‌ரன்‌ நிதி கண்டாப் போலவும்‌ பசித்தவன்‌ சோறு கண்டாற் போலவும்‌ தாஹித்தவன்‌ தண்ணீர்‌ கண்டாப் போலவும்‌ ஆசார்யன்‌ பக்கலிலே அத்யபிநிவேஸத்தைப்‌ பண்ணி “ஸரீரமர்த்தம்‌ ப்ராணஞ்ச ஸத்‌குருப்யோ நிவேதயேத்‌” (விஹகேஸ்வர ஸம்ஹிதை)
என்கிறபடியே தன்னுடைய ஆத்மாத்மீயங்களை ஆசார்ய விஷயத்திலே ஸமர்ப்பித்து, “க்ருத்ஸ்நாம்‌ வா ப்ருதிவீம்‌ தத்‌யாத்‌ ந தத் துல்யம்‌ கதஞ்சந” என்று இவன்‌ எல்லாம்‌ செய்தாலும்‌ ஆசார்யன்‌ பண்ணின உபகாரத்துக்கு ஸத்‌ருஸமில்லாமையாலே குறைவாளனாய்‌ ஆசார்யனுடைய தேஹ யாத்ரைகளெல்லாம்‌ தானே சுமந்து செய்யுமவனாய்‌ ஆசார்யன்‌ நிக்‌ரஹித்தாலும்‌ திவா ராத்ர விபாகமற அவனைப்‌ பிரியாதே அவனுக்கிஷ்டமானால்‌ தனக்குகப்பான வற்றையும்‌ விட்டு ஆசார்யன்‌ நியமித்தபடியே நடக்குமவனே ஸச்சிஷ்யனாகையாலே இந்த லக்ஷணம்‌ ஈஸ்வரன்‌ பக்கலிலே உண்டாகையாலே இவனுக்கே ஸச் சிஷ்ய லக்ஷணமுள்ளதென்கிறார்‌.

இருத்தும் எண் தானாய் பொய் கலவாது அன்பு செய்து பற்றிலனாய் ஷூத் த்ருட்பீடித
நிர்தனரைப் போல் கண்டு கொண்டு உண்டு பருகி பரிஜநாதிகளோடே தன்னைத் தந்து
என் செய்வன் என்றே இருந்து அகில பரத்தையும் சமர்ப்பிக்க அது சுமந்து அல்லு நன் பகலும் போகு
என்றாலும் அகல்வானும் அல்லனாய் போகேல் என்றால் உகப்பையும் தவிர்ந்து விதி வகையே நடத்துமவனே உபதேச சத் பாத்ரம்—சூரணை -202-

(ஷூத் த்ருட்பீடித நிர்தனரைப் போல் கண்டு கொண்டு உண்டு பருகி-அதாவது-ஷூத் பீடிதனைப்-பசி உள்ளவனைப் – போல் உண்டு – த்ருட்பீடிதனைப் -நீர் வேட்கை உள்ளவனைப் – போல் பருகி நிர்தனரைப்-வறியவனைப் – போல் கண்டு கொண்டு -)

எம்பெருமானும் -இருத்தும்–அதாவது–இருந்தும் வியந்து என்னை தன் பொன் அடிக் கீழ் –திருவாய்-8-7-1–என்று இவருக்கு அபிமதமான இடத்தில் இவரை இருத்தி —-எண் தானாய்–என் எண் தானான்-திருவாய்-1-8-7- –என்று இவர் நினைவிலே ஒழுகுவானாய்–பொய் கலவாது–அதாவது-பொய் கலவாது என் மெய் கலந்தான் திருவாய்-1-8–5–என்று இவர் திரு மேனியிலே பண்ணும் விருப்பத்தில் புரை இன்றி இருக்க —

இருத்துமெண்டானாய்‌)இருத்தும்‌ வியந்தென்னைத்‌ தன்பொன்னடிக் கீழ்‌” (திருவாய்மொழி 8-7-1) என்று இவரை ஓரிடத்திலே இருத்தி “என்னெண்டானானான்‌” (திருவாய்மொழி 1-8-7) என்று இவருடைய நினைவு தானாய்‌ (பொய்கலவா தன்பு செய்து) “பொய்கலவாதென்‌ மெய்‌ கலந்தானே” (திருவாய்மொழி 1-8-5) என்று இவர்‌ திருமேனியில்‌ பண்ணின ஸங்கத்திலே ஒரு பொய்யின்றிக்கே-

இருத்தும் வியந்து என்னைத் தன் பொன்னடிக் கீழ் என்று
அருத்தித் தெனைத்தோர் பல நாள் அழைத்தேற்கு
பொருத்தமுடை வாமனன் தான் புகுந்து என்தன்
கருத்தை யுற வீற்றிருந்தான் கண்டு கொண்டே-8-7-1—என்னைத் தன் பொன்னடிக் கீழ் –வியந்து–இருத்தும்-என்று -தன் வாசி அறியாதே சப் தாதி விஷயங்களிலே அந்நிய பரனான என்னை -சிலாக்யமான தன் திருவடிகளின் கீழே –-வடிவிணை இல்லா மலர்மகள் மற்றை நில மகள் பிடிக்கும் மெல்லடி இறே-வியந்து -சம்சாரத்தில் நம்மையே அபேக்ஷிப்பான் ஒருவன் உண்டாவதே -என்று விஸ்மயப் பட்டு –ச மஹாத்மா ஸூ துர்லப-என்று கை வாங்கி இருக்குமவன் இறே – ஒரு நாளும் பிரியாத படி இருத்தி அடிமை கொள்ளும் –தன் பொன்னடிக்கு கீழ் என்று ப்ராப்ய ஸ்வரூபம் சொல்லிற்று –இருத்தும் என்று ப்ராபக ஸ்வரூபமும் அவனே என்கிறது –வியந்து –இருத்தும் -தன் பேறாக இருத்தும் –-அருத்தித்து -தன் பேறாக இருத்தும் என்கையாலே –அர்த்தித்தவமும் மிகை -சைதன்ய பிரயுக்தமாக வந்தது அத்தனை

கொண்டான் ஏழ் விடை உண்டான் ஏழ் வையம்
தண் தாமம் செய்து என் எண் தானானானே –1-8-7-தட்பத்தை உடைய தாமம் உண்டு -பரம பதம் -அதில் பண்ணைக் கடவ விருப்பத்தை என் பக்கலிலே பண்ணி தன் விபூதிகனாக என்னை ஆதரித்து என்னவுமாம்–நான் மநோ ரதித்த படியே எனக்கு கை புகுந்தான் என்னுதல் என் மநோ ரதத்தை தான் கைக் கொண்டான் அதாகிறது – மாக வைகுந்தம் காண்பதற்கு என் மனம் ஏகம் எண்ணும்-என்று
நான் அத்தேசத்தில் அனுபவிக்க எண்ண திரு நகரிலேயே வந்து என்னை அனுபவிக்க எண்ணா நிற்கை

வைகலும் வெண்ணெய் கை கலந்து உண்டான்
பொய் கலவாது என் மெய் கலந்தானே –1-8-5-வெண்ணெய்யில் பண்ணின விருப்பத்தில் பொய் இல்லாதப்போலே கிடீர் என் உடம்பில் பண்ணுகிற விருப்பமும்-அவன் மேல் விழ-தாம் மேன்மையைக் கண்டு இறாய்க்கிறார் ஆயிற்று-அவன் மேல் விழுகிறதும் இத்தாலே யாயிற்று-இந்நின்ற நீர்மை என்று நான் அநாதரிக்கிற சரீரமும் இவனுக்கு கலக்கைக்கு விஷயம் ஆவதே

அன்பு செய்து-அதாவது-அந்தாமத்து அன்பு செய்து-திருவாய்-2-5-1- -என்று பரம பதத்தில் பண்ணும் வ்யாமோகத்தை இவர் பக்கலிலே பண்ணி —-பற்றிலனாய்--அதாவது-பற்றிலன் ஈசனும் முற்றவும் நின்றான்-திருவாய்-1-2-6- -என்று இவர் பக்கல் சங்கத்தாலே அங்குள்ளார் பக்கல் சங்கத்தை விட்டு –

அந்தாமத் தன்பு செய்து” (திருவாய்மொழி 2-5-1) என்று பரம பதத்தில்‌ பண்ணும்‌ வ்யாமோஹத்தை இவர்‌ பக்கலிலே பண்ணி (பற்றிலனாய்‌) “‘ பற்றிலனீசனும்‌” (திருவாய்மொழி 1-2-6) என்று இவர் பக்கல்‌ ஸங்கத்தாலே பரமபதத்தில்‌ ஸங்கத்தையும்‌ விட்டு,-

அந்தாமத்தன்பு செய்து என்னாவி சேர் அம்மானுக்கு
அந்தாம வாழ் முடி சங்கு ஆழி நூல் ஆரமுள
செந்தாமரைத் தடங்கண் செங்கனிவாய் செங்கமலம்
செந்தாமரை யடிக்கள் செம்பொன் திருவுடம்பே –2-5-1-பரமபதத்தில் உள்ளார் எல்லார் பக்கலிலும் பண்ணும் அபி நிவேசத்தை என் பக்கலிலே பண்ணி –மஞ்சா க்ரோசந்தி இத்வத்-என்னாவி சேர் –
கமர் பிளந்த தரையிலே நீரைப் பாய்ச்சினால் போலே -உள்ளூலாவி உலர்ந்து உலர்ந்து -என்று
குருத்து வற்றாக வற்றான என்னாத்மாவிலே-விடாயர் மடுவில் விழுமா போலே வந்து கலந்தான் –
அம்மானுக்கு--நித்ய விபூதியில் உள்ளரோபாதி லீலா விபூதியில் உள்ளாருக்கும் வந்து முகம் காட்ட வேண்டும் பிராப்தி உடையவனுக்கு-இவரைப் பெற்ற பின்பு யாயிற்று அவன் சர்வேஸ்வரன் யாயிற்று –

பற்றிலன் யீசனும் முற்றவும் நின்றனன்
பற்றிலையாய் அவன் முற்றில் அடங்கே –
1-2-6-நித்ய ஸூரிகளுக்கு நிர்வாஹகன் ஆனவன் நித்ய சம்சாரிகளான நம்மை அங்கீ கரிக்குமோ என்னில் இன்று ஆஸ்ரயித்த நாம் ஒரு தலையானால் நித்ய ஆஸ்ரிதர் பக்கல் சங்கத்தை விட்டு நம்மையே தாரகாதிகளாக நினைத்து இருப்பான் ஒருவன் –
யீசனும் பற்றிலன்--நித்ய ஆஸ்ரிதரை யுடையனாய் இருந்தானே யாகிலும் இன்று ஆஸ்ரயித்த நாம் ஒரு தலையானால் அவர்கள் பக்கல் சங்கத்தை யுடையவன் அல்லன்-த்வயி கிஞ்சித் சமா பன்னே -இத்யாதி
முற்றவும் நின்றனன்-நாமே தனக்கு தாரகாதிகளாக நினைத்து இருக்கும்

ஷூத் த்ருட்பீடித நிர்தனரைப் போல் கண்டு கொண்டு உண்டு பருகி(-ஷூத் பீடிதனைப்-பசி உள்ளவனைப் – போல் உண்டு – த்ருட்பீடிதனைப் -நீர் வேட்கை உள்ளவனைப் – போல் பருகி
நிர்தனரைப்-வறியவனைப் – போல் கண்டு கொண்டு )-இருந்தான் கண்டு கொண்டு –திருவாய்-8-7-2–என்றும் –என்னை முற்றவும் தான் உண்டான் -திருவாய்-8-7-2– என்றும் , தான் என்னை முற்றப் பருகினான்-திருவாய்-9-6-10 -என்று சொல்லுகிறபடி நிர் தனன் நிதி கண்டார் போலேயும் – பசித்தவன் சோறு கண்டார் போலேயும் – தாஹித்தவன் தண்ணீர் கண்டார் போலேயும் – அத்யந்த அபிநிவேசத்தோடே இவரை அனுபவித்து –

(ஷூத்‌த்‌ருட் பீடித நிர்த்தநரைப் போலே கண்டு கொண்டுண்டு பருகி) “இருந்தான்‌ கண்டு கொண்டு (திருவாய்மொழி 8-7-2) என்று நிர்தநனானவன்‌ நிதி கண்டாப் போலே கண்டு கொண்டு “என்னை முற்றவும்‌ தானுண்டான்‌” (திருவாய்மொழி 9-6-8) என்றும்‌ “தானென்னை முற்றப்‌ பருகினான்‌ (திருவாய்மொழி 9-6-10) என்றும்‌ சொல்லுகிறபடியே பசி கனத்தவன்‌ சோறு கண்டாப்‌ போலவும்‌ தாஹித்தவன்‌ தண்ணீர்‌ கண்டாப் போலவும்‌ இவரை அபி நிவேஸத்தோடே அநுபவித்து-

இருந்தான் கண்டு கொண்டே எனதேழை நெஞ்சாளும்
திருந்தாத வோரைவரைத் தேய்ந்தற மன்னி
பெருந்தாட் களிற்றுக்கு அருள் செய்த பெருமான்
தருந்தானருள் தான் இனி யானறியேனே-8-7-2-தரித்ரன் நிதி கண்டால் கண்டு கொண்டே இருக்குமா போலே -பார்த்த படியே இரா நின்றான் -அந்யோன்யம் அபிவிஷந்த்வ நதிருப்திம் உபஜக்மது -என்கைக்கு எதிர்தலையான தம்மை காண்கிறீலர்-இத்தை நினைத்து இறே அர்த்தித்தவம் என்னும் இதுவும் மிகை என்றார் முதல் பாட்டிலே –

கோள் உண்டான் அன்றி வந்து என் உயிர் தான் உண்டான்
நாளும் நாள் வந்து என்னை முற்றவும் தானுண்டான்
காள நீர் மேகம் தென் காட் கரை என் அப்பற்கு
ஆள் அன்றே பட்டது என் ஆர் உயிர் பட்டதே–9-6-8-சம்சாரத்திலே அணு பரிமாணமான இவ்வஸ்துவை விபுவான தான் விளாக்குலை கொண்டு அனுபவித்தான் என்கிற இது தனக்கு ஏற்றமாம் படி கௌரவியா நின்றான் -சிறிய என்னாருயிர் என்றது -தான் தம்மைப் பார்த்து -அவனுடைய ஆதரத்தைக் கொண்டு சொல்லுகிறார் இது –

வாரிக் கொண்டு உன்னை விழுங்குவன் காணில் என்று
ஆர்வுற்ற என்னை ஒழிய என்னில் முன்னம்
பாரித்துத் தான் என்னை முற்றப் பருகினான்

கார் ஒக்கும் காட் கரை அப்பன் கடியனே–9-6-10—நான் பாரித்த அளவும் அன்றிக்கே நான் பாரித்த காலத்துக்கு முன்பே பாரித்து –ஆச்சார்ய விஷயீ காரத்துக்கு பின்பு இறே இவருடைய பாரிப்பு – சம்பந்தத்துக்கு திரஸ்கார ஹேது இல்லாமையால் -அவனுடைய பாரிப்பு சத்தா ப்ரயுக்தம் இறே
தான் என்னை–விபுவாய் ஸ்வதந்த்ரனான தான் -அணு பரிமாணனாய் பரதந்த்ரனான என்னை –
முற்றப் பருகினான்-தன் குண சேஷ்டிதாதிகளைக் காட்டி -என்னை நீராக்கி -நிச்சேஷமாகப் பருகினான் –வஸசா சாந்வயித்வைநம் லோச நாப்யாம் பிபன்நிவ -என்கிறபடியே -இத்தலையை அழித்துப் பரிமாறினான் -என்கிறபடியே –விழுங்குமவன் காணில் -என்று இறே இவர் பாரித்தது

பரிஜனாதிகளோடே தன்னைத் தந்து-அதாவது–பரிஜன பரிபர்ஹா பூஷணா ந்யாயுதானி ப்ரவர குண கணாச்ச ஜ்ஞான சக்த்யா தயஸ்தே பரமபதம தாண்டான் யாத்மா தேஹஸ் ததாத்மா வரத சகலமேதத் சம்ஸ்ரிதார்த்தம் சகரத்த –ஸ்ரீ வரதராஜ ஸ்தவம்–63–என்றும்-எனக்கே தன்னைத் தந்த கற்பகம் –திருவாய்-2-7-11–என்றும் -சொல்லுகிற படியே தன் விபூதியையும் தன்னையும் இவருக்குக் கொடுத்து –

பரிஜநாதிகளோடே தன்னைத்‌ தந்து) ‘ பரிஜந பரிபர்ஹா பூஷணநாந்யாயுதாநி ப்ரவர குணகணாஸ்ச ஜ்ஞாந ஸக்த்யாத யஸ்‌தே பரமபத மதாண்டாந்யாத்ம தேஹஸ்‌ ததாத்மா வரத ஸகலமேதத்‌ ஸம் ஸ்ரிதார்த்த,ம்‌ சகர்த்த” (வரத ராஜஸ்தவம்‌ 63) என்றும்‌ “எனக்கே தன்னைத்‌ தந்த கற்பகம்‌” (திருவாய்மொழி 2-7-11 என்றும்‌ சொல்லுகிறபடியே தன்னையும்‌ தன்‌ விபூதியையும்‌ இவர்க்குக்‌ கொடுத்து,-

பரிஜன பரி பர்ஹா பூஷணாநி ஆயுதாநி ப்ரவர குண கணாச்ச ஞான சக்த்யாதயஸ்தே
பரமபதம் அத அண்டானி ஆத்ம தேஹஸ் ததாத்மா வரத சகலமேதத் சம்ஸ்ரிதார்த்தம் சகர்த்த
–63—ஹே வரத சேஷ சேஷாசநாதி பரிஜனங்களும் சத்ர சாமராதி பரிச் சதங்களும் கிரீட குண்டலாதி பூஷணங்களும் திரு ஆழி திருச்சங்கு முதலிய திவ்ய ஆயுதங்களும் ஞான சக்தி முதலிய ப்ரசித்தங்களான சிறந்த குண கணங்களும் பரமபதமும் அண்டங்களும் ஸ்வ அசாதாரண விக்ரஹமும் திவ்ய ஆத்ம ஸ்வரூபமும் ஆகிய இவை எல்லாவற்றையும் ஆஸ்ரிதர்களுக்கு ஆக்கினாய்

பற்பநாபன் உயர்வற உயரும் பெரும் திறலோன்
எற்பரன் என்னை யாக்கிக் கொண்டு எனக்கே தன்னைத் தந்த
கற்பகம்
என்னமுதம் கார் முகில் போலும் வேங்கட நல்
வெற்பன் விசும்போர் பிரான் எந்தை தாமோதரனே –2-7-11–அசாதாரணமாக தன்னைத் தந்த-கற்பகம் –
உதார குணத்தில் பிரசித்தமான கல்பக தருவில் காட்டில் இவனுக்கு வ்யாவ்ருத்தி சொல்லுகிறது –
அர்த்தியை உண்டாக்கிக் கொடுக்க மாட்டாது-சாதன அனுஷ்டானம் பண்ணாதார் பக்கல் தான் மேல் விழுமது இல்லை ஒருவனுக்கே குறைவற கொடுக்க மாட்டாது பலன்களைக் கொடுக்குமத்தனை போக்கி தன்னைக் கொடுக்குமது இல்லை

என் செய்வன் என்றே இருந்து-அதாவது–உன் அடியார்க்கு என் செய்வன் என்றே இருத்தி–பெரிய திருவந்தாதி-53- -என்கிறபடியே இவர்க்கு எல்லாம் செய்தாலும் தான் இழவாளனாய்– ஆத்மாத்மீய அகில பரத்தையும் -நமஸ் -சப்த முகேன இவர் சமர்ப்பிக்க – வேம்கடத்து உறைவார்க்கு நமவென்னலாம் கடமை அது சுமந்தார்கட்கு–திருவாய்-3-3-6- -என்னும்படி – பூயிஷ்டாம்-யஜுர் வேதம்-என்கிறபடியே
நம உக்தி தனக்கு கனத்து தோற்றுகையாலே — அவ் வழியாலே அகில பாரத்தையும் சுமந்து

உன்னடியார்க்கென்‌ செய்வன்‌ என்றே இருத்தி” (பெரியதிருவந்தாதி 53) என்கிறபடியே இவர்க்கு எல்லாம்‌ செய்தாலும்‌ தான்‌ இழவாளனாய்‌ (அகில பரத்தையும்‌ ஸமர்ப்பிக்க அது சுமந்து) இவராத்மாத்மீய ஸகலபரத்தையும்‌ இவன் பக்கலிலே ஸமர்ப்பிக்க “வேங்கடத்துறைவார்க்கு நமவென்னலாங்கடமை அது சுமந்தார்கட்கே” (திருவாய்மொழி 3-3-6) என்று “பூயிஷ்டாம்‌ தே நம உக்திம்‌” (யஜுர்வேதம்‌! )என்கிறபடியே இவருடைய நம: என்கிற உக்தி அவனுக்கு கனத்துத்‌ தோற்றுகையாலே இவருடைய அகில பரத்தையும்‌ சுமந்து

ஓன்று உண்டு செங்கண் மால் யான் உரைப்பது உன் அடியார்க்கு
என் செய்வன் என்றே இருத்தி
நீ நின் புகழில்
வைகும் தம் சிந்தையிலும் மற்று இனிதோ நீ யவர்க்கு
வைகுந்தம் என்று அருளும் வான்–53-நிரபேஷர்க்கு–என் செய்வன் -என்று இருக்கிற தர்மம் தான் எப்போதும் ஒருபடிப் பட்டு இருக்கும்-தூர வாஸிநம் ருணம் ப்ரவ்ருத்த மிவமே ஹ்ருதயான் நாபசர்பதே
பாண்டவர்கள் முடி சூடின அன்றும் திரௌபதி குழல் முடித்த பின்பும் பர்த்தாக்கள் சந்நிஹிதராய் இருக்க அவர்களை ரக்ஷகர் என்று நினையாதே தன் பேர் சொன்னவளுக்குத் திரு உள்ளத்திலே தனிசு -ருணம் – பட்டு இருக்குமா போலே அந்த ஆனு கூல்யமுடையார்க்கு என்றும் என் செய்வேன் என்று இருத்தி –

வேங் கடங்கள் மெய் மேல்வினை முற்றவும்,
தாங்கள் தங்கட்கு நல்லனவே செய்வார்,
வேங்கடத்து உறைவார்க்கு நம என்னல்
ஆம் கடமை அது சுமந் தார்கட்கே
.–3-3-6—சதுர்த்தியில் பிரார்த்தனையைச் சொல்கிறது-நம
தனக்காய் இருக்கும் இருப்பை கழிக்கிறது-என்னல்– யுக்தி மாத்திரமே அமையும்-வருணனுக்கு தொடுத்த அம்பை மருகாந்தரத்திலே விட்டால் போலே –-இவ்விடத்தில் பட்டர் மொட்டைத் தலையன் விஷயமான இதிகாசம் –-ஆம்-ஸூசகம்-கடமை-பிராப்தம்-அது சுமந் தார்கட்கே.–-இக் கோட்டை எல்லாம் சுமந்தார்கட்க்கு என்று என்று ஆழ்வார் கருத்தால் யாதல்-இது தானே குவாலாய் இருக்கும் பகவத் அபிப்ராயத்தாலே யாதல்-பூயிஷ்ட்டாம் தே நம உக்திம் விதேம-

அல்லு நன் பகலும் போகு-என்றாலும் அகல்வானும் அல்லனாய் –-அதாவது–-அல்லு நன் பகலும் இடை வீடு இன்றி நல்கி என்னை விடான்–திருவாய்-1-10-8- -என்று இவர் பக்கலில் பண்ணின ஸ்நேகத்தாலே -திவாராத்ரா -விபாகமற -இவரை விட மாட்டாதே –போகு நம்பீ -திருவாய்-6-2-2–என்று சீறிப் போகச் சொன்னாலும் ,-அகல் வானும் அல்லன் இனி-திருவாய்-2-6-7- -என்கிறபடியே அகலாதவனாய் —
ஆன் பின் போகேல் -திருவாய்-10-3-8–என்று இவர் நிவர்திப்பித்தால் –திவத்திலும் பசு நிரை மேய்ப்பு உவத்தி -திருவாய்-10-3-10-– என்கிறபடியே- தனக்கு உகப்பானவையும் தவிர்ந்து –அருள் தருவான் அமைகின்றான் அது நமது விதி வகையே–திருவாய்-10-6-1- -என்று இவர் விதித்த படியே நடத்துகிற
சர்வேஸ்வரனே உபதேசத்துக்கு சத் பாத்ரம் என்கை —

“அல்லு நன்பகலும்‌ இடைவீடின்றி நல்கி யென்னை விடான்‌” (திருவாய்மொழி 1-10-8) என்று இவர் பக்கல்‌ பண்ணின ஸ்நேஹத்தாலே திவா ராத்ர விபா௧ மற இவரை விடமாட்டாதே “போகு நம்பீ” (திருவாய்மொழி 6-2-2) என்று இவர் தாம்‌ உபேக்ஷித்தாலும்‌ “அகல்வானுமல்லனினி” (திருவாய்மொழி 2-6-7) என்று அகலமாட்டாதே (போகேல்‌ என்றால்‌ உகப்பையும்‌ தவிர்ந்து) “ஆன்பின்போகேல்‌” (திருவாய்மொழி 10-3-8) என்று இவனுக்கு இஷ்டமானத்தையும்‌ நிவர்த்தி என்று இவர்‌ நியமித்தால்‌ “திவத்திலும்‌ பசு நிரை மேய்ப்பு உவத்தி (திருவாய்மொழி 10-3-10) என்ற அவ் வுகப்பையும்‌ தவிர்ந்து(விதி வகையே நடத்துமவனே) “அருள் தருவான்‌ அமைகின்றான்‌ அது நமது விதி வகையே ” (திருவாய்மொழி 10-6-1 என்று இவர்‌ விதித்தபடியே நடக்கையாலே ஸதாசார்ய விஷயத்திலே ஸச் சிஷ்யன்‌ வர்த்திக்கும்‌ க்ரமம்‌ இவன்‌ பக்கலிலே உண்டென்கையாலே இவனே உபதேஸ ஸத் பாத்ரம்‌ என்கிறார் –

செல்வ நாரணன் என்ற சொல் கேட்டலும்
மல்கும் கண் பனி நாடுவன் மாயமே
அல்லும் நன்பகலும் இடைவீடின்றி
நல்கி என்னை விடான் நம்பி நம்பியே
–1-10-8-தம்முடைய அபிசந்தி ஒழிய அவன் மேல் விழுகிற காலம் ஆகையால் நன்றான இரவும் நன்றான பகலும்-இடைவீடின்றி- நான் ஒரு கால் தேடி விடா நின்றேன்
அவன் இடை விடாதே ஸ் நேஹியா நின்றான்-நல்கி என்னை விடான் நம்பி நம்பியே – அபூரணனான என்னை பூர்ணனான தான் நம்பி விடுகிறிலன்-நம்பி -ஒருத்தனாக நினைத்து-நம்பி அல்லும் பகலும் வீடின்றி நல்கி நம்பி என்னை விடான் மாயமே-ஆழ்வான் -நம்பியே என்று ஸ்வரத இவனையே பூர்ணன் என்பது என்பர் –

போகு நம்பீ! உன் தாமரை புரை கண்ணிணையும் செவ்வாய் முறுவலும்
ஆகுலங்கள் செய்ய அழிதற்கே நோற்றோமே யாம்;
தோகை மா மயிலார்கள் நின்னருள் சூடுவார் செவி ஓசை வைத்தெழ
ஆகள் போகவிட்டுக் குழலூது போயிருந்தே.–6-2-2-நீர் பரப்பராய் -முதலிகளாய் -இருப்புதீர்-உறவு உடையாரைப் போலேதீண்டாதே போம் -எத்தனைபேரைத் தீண்டினீர் என்பதை அறியோம் -எங்கள் மேல் புடவை படாமே போம்-முற்பட போகு நம்பீ என்றவாறே வர நின்றான் -பின்பு போகு நம்பீ என்றவாறே தொட்டான் –

முடியாதது என் எனக்கேல் இனி முழு ஏழ் உலகும் உண்டான் உகந்து வந்து
அடியேனுள் புகுந்தான் அகல்வானும் அல்லன் இனி
செடியார் நோய்கள் எல்லாம் துரந்து எமர் கீழ் மேல் ஏழ் பிறப்பும்
விடியா வென்னரகத்து என்றும் சேர்த்தல் மாறினரே –2-6-7—ஒரு நீராகக் கலந்தான் -தன் பக்கல் ஜகத்து புக்கால் போல் அன்றிக்கே உகந்து புகுந்தான்-இவனுக்கும் ஜகத்துக்கும் செல்லாமை ஒக்கும் -உகப்பு ஏற்றம் இவ்விஷயத்தில் இவனுக்கு -மத சம்பந்திகள் அளவும் கீழ் மேல் ஓடும்படி புகுந்தான் –
அகல்வானும் அல்லன் இனி-பிரளய அநந்தரம் உமிழ்ந்தான்-இங்கு அங்கனே செய்வானாய் இருக்கிறான் அல்லன்-சேதனரைப் போலே பாபத்தாலே அகன்று ஒரு ஸூ க்ருத்தாலே கிட்டுதல் இல்லையே இவனுக்கு-பனை நிழல் போல் -உம்மை நோக்கி விட அமையுமோ-உம்மோடு சம்பந்தித்து இருப்பார் செய்வது என் என்ன -அவர்களும் பெற்றார்கள்

அசுரர்கள் தலைப்பெய்யில் எவன் கொல் ஆங்கு என்று ஆழும் என்னார் உயிர் ஆன் பின் போகல்
கசிகையும் வேட்கையும் உள் கலந்து கலவியும் நலியும் என் கை கழியேல்
வசி செய் உன் தாமரைக் கண்ணும் வாயும் கைகளும் பீதக வுடையும் காட்டி
ஓசி செய் நுண்ணிடை இள வாய்ச்சியர் நீ யுகக்கும் நல்லவரோடும் உழி தராயே-10-3-8-பசுக்கள் பின்னே போகாதே கொள்–ஜாதி உசிதமான தர்மத்தை விடப் போமோ -அவ்வளவும் தரித்து இருக்கும் அத்தனை அன்றோ -என்ன –கசிகையும் வேட்கையும் உள் கலந்து-கலவியும் நலியும் என் கை கழியேல்–பிரிவில் தரிக்கலாம் படியோ நீ கலவியில் பரிமாறிற்று என்கிறாள் -அபிமத விஷயத்தோடு இருக்கச் செய்தே-சந்த்யா வந்தனம் பண்ண நினைப்பார் யுண்டோ -ஸ்வ ஜனத்தை விட்டோ ஸ்வ ஜனத்தை ரஷிப்பது –

அவத்தங்கள் விளையும் என் சொல் கொள் அந்தோ அசுரர்கள் வன்கையர் கஞ்சன் ஏவ
தவத்தவர் மறுக நின்று உழி தருவர் தனிமையும் பெரிது உனக்கிராமனையும்
உவத்திலை உடன் திரிகிலையும் என்று என்று ஊடுற வென்னுடை யாவி வேமால்
திவத்திலும் பசு நிரை மேய்ப்பு உவத்தி செங்கனி வாய் எங்கள் ஆயர் தேவே–10-3-10-பரம பதத்தில் இருப்பைக் குலைத்து அன்றோ பசு மேய்க்கப் போந்தது -அவ்விருப்பு குலைந்து வந்து இருந்ததும் இப்போது பொல்லாது என்று இருக்கிறாள் -அவ்விருப்பிலே இருந்தான் ஆகில் இப்போது வயிறு எரிய வேண்டா வி றே -நம் பேர் இழவு கொண்டு கார்யம் இல்லை –வஸ்து ஸூ ரஷிதமாய் இருக்கும் என்று இ றே இவர்கள் இருப்பது -பரம பதத்தில் இருப்பை விட்டு பசு மேய்க்கப் போகக் கடவ யுன்னை – எங்களை உபேக்ஷித்தாய் என்று இன்னாதாகப் புகுகிறோமோ -அவ்விருப்பிலும் பசு மேய்க்க என்றால் யுகப்புதி என்றுமாம் –

அருள் பெறுவார் அடியார் தன் அடியனேற்கு ஆழியான்
அருள் தருவான் அமைகின்றான் அது நமது விதி வகையே
இருள் தரும் மா ஞாலத்துள் இனிப் பிறவி யான் வேண்டேன்
மருள் ஒழி நீ மட நெஞ்சே வாட்டாற்றான் அடி வணங்கே–10-6-1-ஆஸ்ரிதர் எல்லார் பக்கலிலும் பண்ணும் அருளை -என் பக்கலிலே பண்ணுமவனாகச் சமைந்து நின்றான் –அஸ்மா பிஸ் துல்யோ பவது -என்னுமவர்கள் இறே இவர்கள் -ஸ்வதந்த்ரனாகில் தருகிறான் — இனிக் குறை என் என்னில் –
அது நமது விதி வகையே–அது நாம் சொல்லச் செய்வானாக நினைத்து இரா நின்றான் –அது நம்முடைய  பாக்யாதி குணம் இறே -என்றாய்த்து பூர்வர்கள் நிர்வாஹம் -இது பிரகரணத்தோடு சேராது -நாம் விதித்த படியே செய்வானாக நினைத்து இரா நின்றான் -என்று அருளிச் செய்தார் எம்பெருமானார் -தன் பக்கல் குறைவற்று இருந்தாலும் இத்தலையில் இச்சை பார்த்து இருக்கும் இறே –சொல் வகையே என்னாதே- விதி வகையே -என்றது –தானே தருமது வித்யதிக்ரமம் -என்று இருக்கை யாலே 

ஆனால் இங்கன் இன்றிக்கே அஜ்ஞரான சம்சாரிகளுக்கு உபதேசிக்கிற அளவிலே சம்சார விரக்தராய் –ஆத்ம குண உபேதராய் –சம்யக் உப சன்னரானவர்களுக்கு –உபதேசிக்கும் அர்த்தத்தை பகவத் விமுகராய் -பிரயோஜனாந்த பரராய் –அனுவர்த்தன ஹீனரானவர்களுக்கு — வலியப் பிடித்து உபதேசிப்பான் என் என்னும் ஆ காங்க்ஷையில் அருளிச் செய்கிறார் மேல் —ஆனால் ஸம்ஸாரிகளில் விரக்தராய்‌ இப்படி அநுவர்த்தநமுடையார்க்கு உபதேஸிக்கும் அர்த்தத்தை பகவத் விமுகராய்‌ ப்ரயோஜநாந்தர பரராய் தன் பக்கல் அநு வர்த்தனமும் இன்றிக்கே இருக்கிற ஸம்ஸாரிகளையும்‌ பார்த்து இவர்‌ மேல் விழுந்து உபதேசிப்பான் என் என்னில் அவனோடிவர்களுக்குண்டான ஸம்பந்தத்தை அறிகையாலும் இவர்கள்‌ துக்கம் கண்டு பொறுக்க மாட்டாதே க்ருபையாலும்‌ உபதேஸிப்பர்‌ என்கிறார்‌

நண்ணாதார்‌ மெய்யிலூன்‌ ஆசை நிர்வேதத்தோடே ஆஸ்திக்ய அமாநீத்வாதிகள்‌ விஞ்சின ப்ரணிபாத அபிவாதந பரிப்ரஸ்ந ஸேவா பரர்க்கு உளங்கொள்‌ பேசுமளவன்றென்னும்‌ அர்த்தத்தை வம்மின்‌ விரோதம்‌ ஈனச் சொல்‌ எவ்வுயிர்க்கு மறிய வென்று ௮டைவுகெட அதபஸ்கர்க்கு உபதேஸிக்கிறது ஞாலத்தார்‌ பந்த புத்தியும்‌ அநர்த்தம்‌ கண்டு ஆற்றாமையும்‌ மிக்க க்ருபையுமிறே–சூரணை -203–

(அமாநித்வம் -மேன்மக்களை உபேக்ஷை செய்யாமல் இருப்பது –அதபஸ்கர்-தவம் இல்லாதவர் )

நண்ணாதார் -மெய்யில்- ஊன்- ஆசை நிர்வேதத்தோடே-அதாவது-நண்ணாதார் முறுவலிப்ப–திருவாய்மொழியிலும்-4-9–மெய்யில் வாழ்க்கை -பெருமாள் திருமொழியிலும் -3-1–ஊனேறு செல்வத்திலும்–பெருமாள் திருமொழியிலும் -2-1–ஆசை வாய் சென்ற சிந்தையிலும் -பெரியாழ்வார் -4-5-1—சொல்லுகிற படி – பகவத் விமுக லோக யாத்ரையிலும் -மாம்ஸ ஸ்ருகாதி மல ரூப தேஹத்திலும் —
கர்ம உபாதிகங்களான தேக அனுபந்திகளிலும் –உண்டான தோஷ தர்சனத்தாலே – பரீஷ்ய லோகான் கர்ம சிதான் ப்ராம்ஹணோ நிர்வேத மாயாத் நாஸ்தி அக்ருத க்ருதேன -முண்டகம் -2-11- ( செய்யும் செயல்களால் ஈட்டப்படும் பலன்களை ஆராய்ந்த பிராமணன் -செய்யும் செயல்களால் பரம்பொருளை
அடையைப் படுகிறான் இல்லை என்று வெறுப்பை அடைவான் )-இத்யாதிப் படியே பிறந்த நிர் வேதத்தோடே–

(நண்ணாதார்‌ மெய்யிலூனாசை நிர்வேதத்தோடே) “நண்ணாதார்‌ முறுவலிப்ப விலும்‌ (திருவாய்மொழி 4-9) “மெய்யில்‌ வாழ்க்கை”யிலும்‌ (பெருமாள்‌ திருமொழி 5-2-5) ப்ரிய ஜநமபஸ்யந்தீம்‌ பஸ்யந்தீம்‌ ராக்ஷஸீ கணம்‌ ஸ்வ கணேந ம்ருகீம்‌ ஹீநாம்‌ ஸ்வகணேநா வ்ருதா மிவ ரா.ஸு. 15-24) என்றும்‌ “ந சவ்ரி சிந்தாவிமுக ஜந ஸம்வாத வைஸ ஸம்‌வர்‌ ஹுதவஹ ஜ்வாலா பஞ்ஜராந்தர் வ்யவஸ்திதி:” என்றும்‌ (சொல்லுகிறபடி யே?) சவ்ரி சிந்தா விமுகரான ஸம்ஸாரிகளோட்டை ஸஹவாஸம்‌ ஆழ்வார் தமக்கு அஸஹ்யமானாப் போலே ஸம்ஸாரிகளோடு பொருத்த முடையார்களன்றிக்கே “ஊனேறு செல்வத்து உடற்பிறவி யான்‌ வேண்டேன்‌” (பெருமாள்‌ திருமொழி 4-1) என்றும்‌ “ஆசைவாய்ச்‌ சென்ற சிந்தையர்‌ (பெரியாழ்வார்‌ திருமொழி 4-5-1) இத்யாதியாலும்‌ ஆழ்வார்களுக்கு அநேக தோஷ துஷ்டமான ஸரீரமும்‌ ஸரீர ஸம்பந்திகளும்‌ அஸஹ்மயமானாப் போலே ஸரீரத்தினுடைய அஸ்திரத்ரத்வாதி, தோஷங்களை அநுஸந்தித்து அவற்றுடன்‌ பொருந்தாமையை உடையார்களாய்‌ “பரீஷ்ய லோகாந்‌ கர்ம சிதாந்‌ ப்‌ராஹ்மணோ நிர்வேத மாயாத்‌ நாஸ்த்யக்ருத: க்ருதேந” (முண்டகோபநிஷத்‌ 2-11 என்கிறபடியே கர்ம ஸாத்‌யங்களான லோகங்கள்‌ அஸ்த்திரங்களாயிருந்தது, ஸ்த்திரமான லோகங்கள்‌ கர்ம ஸாத்‌யமன்றிக்கே இருந்தது என்று இவற்றினுடைய நிரூபணத்தாலே வெறுப்பை உடையவர்களாய்‌-

நண்ணாதார் முறுவலிப்ப–திருவாய்மொழியிலும்-4-9-இவர்கள் நடுவில் நின்றும் என்னை உன் திருவடிகளில் வாங்கி அருள வேணும் -என்ன இவருக்கு சம்சார அனுசந்தானத்தால் வந்த கிலேசம் எல்லாம் நிவ்ருத்தமாம் படி பரமபதத்தில் அஸ்ப்ருஷ்ட சம்சார கந்தரான அயர்வறும் அமரர்கள் அடிமை செய்ய பெரிய பிராட்டியாரும் தானும் வ்யாவருத்தனாய் இருந்து அருளினை படியை காட்டி அருள கண்டு அனுபவித்து க்ருதார்த்தர் ஆகிறார் –பிரியம் ஜனம பஸ்யந்தீம் பஸ்யந்தீம் ராக்ஷஸே கணம் ஸ்வ கணே நம்ருகீம் ஹீ நாம் ஸ்வ கணை ராவ்ருதாமிவ-என்கிறபடியே-உன்னை ஒழிய அந்நிய பரமான ஜகத்தில் இருக்கிற இருப்பு உன்னை விஸ்லேஷித்த வியசனத்தில் காட்டிலும் மிகவும் துஸ் சஹமாய் இரா நின்றது – ஆனபின்பு அவர்கள் நடுவே இராமே என்னை முடிக்க வேணும் என்று எம்பெருமானைக் குறித்து விண்ணப்பம் செய்கிறார் -என்றுமாம் –

மெய்யில் வாழ்க்கை -பெருமாள் திருமொழியிலும் -ப்ராதி கூல்யமாகிறது –-தேஹாத்மா அபிமானிகள் ஆகையும்- விஷய பிரவணராய் இருக்கையும் – தேஹாத் வ்யதிரிக்த வேறொரு வஸ்து உண்டு என்று அறியாது இருக்கையும் இறே – இப்படி இருப்பாரோடு எனக்குப் பொருந்தாது என்கிறார் இத் திருமொழியில் –

ஊனேறு செல்வத்திலும்–பெருமாள் திருமொழியிலும் -2-ஸ்ரீ திரு வேங்கடமுடையான் திருவடிகளிலே விழுந்து விரோதியில் அருசியும் கைங்கர்யத்தில் ருசியும் பிறந்த த்வரையையும் ஆவிஷ்கரிக்கிறார் –

ஆசை வாய் சென்ற சிந்தையிலும் -பெரியாழ்வார் -4-சம்சாரிகளை பார்த்து ஹிதோ உபதேசம் பண்ணி அருளுகிறார்- இத் திரு மொழியில்-முதல் பாட்டு-திரு நாமங்களை சொல்லுமவர்கள் பெரும் பேறு என்னால் சொல்லப் போகாது -என்கிறார்-இரண்டாம் பாட்டு–திரு நாமத்தை சொன்னவர்கள் மோஷத்தை  பெறுவர்கள்-என்கிறார் –மூன்றாம் பாட்டு–ஆத்ம சமர்ப்பணம் பண்ணினார்க்கு யம வச்யதை இல்லை என்கிறார்-நான்காம் பாட்டு –பிரணவ அர்த்தம் நெஞ்சில் பட்டவர்கள்-அடியார்கள் குழாங்கள் உடன் கூடுவர் -என்கிறார் -ஐந்தாம் பாட்டு –-விரோதி நிரசன சீலனை ஏத்து வார்க்கு முன்பு கிலேசப் பட்டது போலே – இனி போக வேண்டாம் என்கிறார் (இந்த்ரியங்களே விரோதி )ஆறாம் பாட்டில் ஒருக்கால் உபாய வரணம் பண்ணினார்க்கு -சதா பச்யந்தி பண்ணலாம் -என்கிறார்–ஏழாம் பாட்டில் –விரோதி நிரசன சீலனை அனுசந்திப்ப நித்ய ஸூரிகள் கார்யத்துக்கும்  ஸ்ரீ வைகுண்ட நாதனோடு மன்றாடுவர்கள் என்கிறார் –எட்டாம் பாட்டால் மூன்று எழுத்தை உச்சரிப்பார் ஸ்ரீ கௌஸ்துபத்தோபாதி 
அவனுக்கு ஆதரணீயர்
என்கிறார் –ஒன்பதாம் பாட்டில் சர்வ வித பந்துவாக அவனைப் பற்றினால் 
பின்னை யம வச்யதை இல்லை
என்கிறார்-நிகமத்தில் இத் திருமொழி அப்யசித்தவர்கள் ஸ்ரீ யபதி பக்கலிலே  ஸ்ரீ பெரியாழ்வார் பெற்ற வரிசைகளை பெறுவர்-என்கிறார் –

ஆஸ்திக்ய அமா நித்வாதிகள் விஞ்சின--அதாவது- ஆஸ்திகோ தர்ம சீலச்ச சீலவான் வைஷ்ணவச் சுசி கம்பீரஸ் சதுரோ தீரஸ் சிஷ்ய இத்ய பிதீயதே –(சாஸ்திரங்களில் நம்பிக்கை -தர்மங்களைச் செய்ய வேண்டும் என்னும் தன்மை -ஒழுக்கம் விஷ்ணு பக்தி –-தூய தன்மை–காம்பீர்யம் -சாதுர்யம் -தைர்யம் யுடையவனுமான ஒருவன் சிஷ்யன் என்று கொல்லப்படுகிறான்-)என்றும் ,-அமாநித்வ மதம்பித்வ மஹிம்சா ஷாந்தி ஆர்ஜவம் ஆச்சார்யா உபாசனம் ஸௌசம் ஸ்தைர்யம் ஆத்மவி நிக்ரக -ஸ்ரீ கீதை -13-7-(உயர்ந்தவர்களை அலக்ஷியம் செய்யாமலும் -கர்மாநுஷ்டானங்களைப் பெருமைக்காகச் செய்யாமலும் – மூன்று கரணங்களாலும் பிறருக்கு துன்பம் செய்யாமலும் -பொறுமையுடனும் -அனைவரையும் சமமாகப் பார்த்தும் ஆச்சார்யரை வணங்கியும் – ஸாஸ்த்ர நியதிப்படி பரிசுத்தனாகவும் சாஸ்திரங்களில் சொல்லியவற்றை உறுதியுடன் நம்பியும் – ஆத்மாவிலேயே மனசை வைத்து இருப்பதும் )இத்யாதிகளிலும் சொல்லப் படுகிற – ஆஸ்திக்யாதிகளும் –அமாநித்வாதிகளும் ஆகிற சிஷ்ய லஷணமான ஆத்மா குணங்களில் அதிகராய் –

“ஆஸ்திகோ தர்ம ஸ்ரீலஸ்ச ஸீலவாந்‌ வைஷ்ணவஸ் ஸூசி: கம்பீரஸ் சதுரோ தீர: ஸிஷ்ய இத்யபி தீ யதே” என்றும்‌ “அமாநித்வம தம்பித்வ மஹிம்ஸா க்ஷாந்திரார்ஜவம்‌ ஆசார்யோபாஸநம்‌ மெளசம்‌ ஸ்தைர்யமாத்ம விநிக்‌ரஹ நித்யந்து ஸமசித்தத்வம்‌ இஷ்டாநிஷ்டோபபத்திஷ மயிசாநந்யயோகே,ந பக்திரவ்யபிசாரிணீ’ (கீதை 13-7) என்றும்‌ சொல்லப்படுகிற ஸிஷ்ய லக்ஷணங்களாலே மிக்கிருப்பாராய்‌

அமாநித்வமதம்பித்வமஹிம்ஸா க்ஷõந்திரார்ஜவம்
ஆசார்யோபாஸநம் ஸௌசம் ஸ்தைர்யமாத்மவிநிக்ரஹ
:–13-7-கர்வமின்மை, டம்பமின்மை, ஹிம்சை செய்யாமை, பொறுமை, நேர்மை, ஆசாரியனை வழிபடுதல், தூய்மை, ஸ்திரத்தன்மை, தன்னைக் கட்டுதல்.

ப்ரணிபாத அபிவாதன பரிப்ப்ரஸ்ன சேவா பரர்க்கு--அதாவது–ப்ரணி பாத்ய அபிவாத்யச –ஸ்ரீ விஷ்ணு புராணம்-1-1-1–என்றும் ,-தத் விததி ப்ரணிபாதேன பர பிரச்நேன சேவையா –ஸ்ரீ கீதை-4-34–என்றும் சொல்லுகிற படி – பக்ன அபிமானராய் கொண்டு — ப்ரணி பாத அபிவாதன பரி ப்ரஸ்ன சேவை ஆகிய இவற்றில் – தத் பரராய் –சிரகாலம்-அனுவர்த்தித்தவர்களுக்கு-

(ப்ரணிபாதாபி வாதந பரிப்ரஸ்ந ஸேவா பரர்க்கு) “தத் வித்‌தி ப்ரணிபாதேந பரிப்ரஸ்நேந ஸேவயா (கீதை 4-34) என்று பக்‌நாபிமாநராய்க்‌ கொண்டு அநுவர்த்தந பூர்வகமாக சிரகால ஸேவை பண்ணினவர்களுக்கு

தத்வித்தி ப்ரணிபாதேந பரிப்ரஸ்நேந ஸேவயா
உபதேக்ஷ்யந்தி தே ஜ்ஞாநம் ஜ்ஞாநிநஸ்தத்த்வதர்ஸிந
:–4-34-அதனை வணக்கத்தாலும், சூழ்ந்த கேள்வியாலும் தொண்டு புரிவதாலும் அறிந்து கொள். உண்மை காணும் ஞானிகள் உனக்கு ஞானத்தை உபதேசிப்பார்கள்.

உளம் கொள் பேசும் அளவன்று என்னும் அர்த்தத்தை– அதாவது- உளம் கொள் ஞானத்து வைம்மின் உம்மை உய்யக் கொண்டு போகுறிலே –திருவாய்-4-10-9- -என்றும் — பேசும் அளவன்று இது வம்மின் நமர் ! பிறர் கேட்பதன் முன் -பெரிய திருமொழி -2-4-9-என்றும் இப்படி அஷட் கரணமாக உபதேசிக்க வேண்டும் அர்த்த விசேஷத்தை —

(உளங்கொள் பேசுமளவன்றென்னும்‌ அர்த்தத்தை) “உளங் கொள்‌ ஞானத்து வைம்மின்‌” திருவாய்மொழி 4-10-9) என்றும்‌ “பேசுமளவன்றிது வம்மின்‌ நமர்‌ பிறர்‌ கேட்பதன்‌ முன்‌ (பெரிய திருமொழி 2-4-9) என்றும்‌ இப்படி அஷட் கர்ணமாக உபதேஸிக்க வேண்டும்படியான அர்த்த விஸேஷத்தை-

விளம்பும் ஆறு சமயமும்,அவை ஆகியும் மற்றும் தன்பால்
அளந்து காண்டற்கு அரியன் ஆகிய ஆதிப்பிரான் அமரும்
வளங் கொள் தண் பணை சூழ்ந்து அழகு ஆய திருக் குருகூரதனை
உளங்கொள் ஞானத்து வைம்மின் உம்மை உயக்கொண்டு போகுறிலே.–4-10-9–உளம் கொள் ஞானம் -மானஸ ஞானம் -ஞானம் உதித்து பாஹ்ய இந்த்ரியங்களாலே பாஹ்ய விஷயங்களை க்ரஹிப்பதற்கு முன்பே மானஸ ஞானத்துக்கு இவ் ஊரை விஷயம் ஆக்குங்கோள் -பிரயோஜனம் என் என்னில்
உம்மை உயக்கொண்டு போகுறிலே.-அசன்னேவ என்னும் படி -இருக்கிற உங்களை சந்த மேனம் ததோ விது-என்ன பண்ண வேண்டி இருந்து கோள் ஆகில் -நேய மஸ்தி என்கிறபடி தக்தப்படம் போலே இவற்றின் சத்தை சென்று அற்றது என்று இருக்கிறார் –

பேசுமளவன்றிது வம்மின் நமர் பிறர் கேட்பதன் முன் பணிவார் வினைகள்
நாசமது செய்திடுமா தன்மையால் அதுவே நமதுய்விடம் நாண் மலர் மேல்
வாச மணி வண்டறை பைம்புறவில் மனமைந்தொடு நைந்து உழல்வார் மதியில்
நீசரவர் சென்று அடையாதவனுக்கிடம் மா மலையாவது நீர் மலையே—2-4-9—பகவத் வ்யதிரிக்த விஷயங்களில் சொல்லலாவது ஓன்று இல்லாமையாலே சொல்லப் போகாது – பகவத் விஷயத்தில் இயத்தா ராஹித்யத்தாலே பேசப் போகாது –(பேசினார் பிறவி நீத்தார் லௌகிக விஷயங்கள் பேச முடியாது பகவத் விஷயம் பேசவே முடியாது இது -லௌகிக பகவத் விஷயம் என்று கொண்டு வியாக்யானம்)வம்மின் நமர் –நம்மோடு ஒரு குடல் துவக்கு உடையார் அடங்கலும் வாரும் கோள்-பிறர் கேட்பதன் முன்- இதுக்குப் புறம்பானார் செவிப் படுவதற்கு முன்பே –ய இதம் பரமம் குஹ்யம் -18-என்றும் – (நமர் -ஆஸ்ரிதர்களுக்கு எடுத்துச் சொல்பவன் என்னையே அடைகிறான் ) இதந தே நாத பஸ்காய-என்றும் (பிறர் -நாஸ்திகர்களுக்கு சொல்லாதே ) அநாதிகாரிகள் கேட்கவும் ஆகாது – அதிகாரிகளுக்கு சொல்லாது ஒழியவும் ஆகாது என்று இரண்டும் உண்டு இறே-

வம்மின்-விரோதம்-ஈனச் சொல்-அதாவது–வம்மின் புலவீர் –திருவாய்-3-9-6–என்று வலிய அழைத்து –
சொன்னால் விரோதம் இது ஆகிலும் சொல்லுவன் கேண்மினோ –திருவாய்-3-9-1–என்று – நான் சொல்லுகிற இது உங்களுக்கு விரோதமாய் தோற்றி இருந்தது ஆகிலும் சொல்லுவேன்-இத்தை கேளுங்கள் என்று அபேஷித்து –ஈனச் சொல் ஆயினுமாக –திருவிருத்தம் -99–என்கையாலே
ஆகிலுமாக -என்று பொகிடு பொருளாகவும்-எவ் உயிர்க்கும் அறிய என்று-அடைவு கெட அதபஸ்கர்க்கு உபதேசிக்கிறது--அதாவது–மற்று ஓன்று இல்லை சுருங்கச் சொன்னோம் மா நிலத்து எவ் உயிர்க்கும்–திருவாய்–9-1-7-என்றும் —திண்ணம் நாம் அறிய சொன்னோம் -திருவாய்-10-2-5–என்று சர்வருக்கும் பிரசித்தம் ஆகும் படியாகவும் –இப்படி அடைவு கேடாக –இதம் தே நாதபஸ்காய நா பக்தாயா கதாசன நஸா ஸூஸ்ரூஷவே வாஸ்யம் நசமாம் யோப்யஸூயதி -ஸ்ரீ கீதை-18-67– –இத்யாதிகளால் சொன்ன அதிகாரிகளுக்கு உபதேசிக்கிறது .

வம்மின்‌ விரோத மீனச்சொல்‌ எவவுயிர்க்கு மறியவென்று) “வம்மின்‌ புலவீர்‌ நும்‌ மெய்வருத்திக்‌ கைசெய்தும்மினோ” (திருவாய்மொழி 3-9-6) என்றும்‌ ” சொன்னால்‌ விரோதமிது ஆகிலும்‌ சொல்லுவன்‌ கேண்மினோ (திருவாய்மொழி 3-9-1 என்றும்‌ “ஈனச் சொல்லாயினுமாக நான்‌ கண்ட நல்லது ஞானப்பிரானை யல்லாலில்லை” (திருவிருத்தம்‌ 99) என்றும்‌ “மன்றொன்றில்லை சுருங்கச்‌ சொன்னோம்‌ மாநிலத்தெவ்வுயிர்க்கும்‌ (திருவாய்மொழி 9-1-7) என்றும்‌ “நாமுமக்கறியச்‌ சொன்னோம்‌” (திருவாய்மொழி 10-2-9) என்றும்‌ (அடைவு கெட அதபஸ்கர்க்கு உபேதஸிக்கிறது) முற்படச்‌ சொன்ன அடைவன்றிக்கே “இதம்‌ தே நாதபஸ்காய நாபத்தாய கதாசந ந சா ஸூஸ்ரூஷவே வாச்யம்‌ நசமாம்‌ யோப்‌ய ஸூயதி (கீதை 18-67) என்று உபதேஸத்துக்கு அதி காரமில்லாத தேஹ யாத்ராபரவஸராய்ப்‌ பிறரைக்‌ கவிபாடுவார்க்கும்‌ அதுதானுமின்றிக்கே பஸூ ஸமராய்த்‌ திரிவார்க்கும்‌ ஆசார்ய ப்ரேமமில்லதார்க்கும்‌ ஆசார்ய ஸுஸ்ரூஷை யில்லாதார்க்கும்‌ ஸ்ரோதுமிச்சை இல்லாதார்க்கும்‌ பகவத்‌. விஷயத்தில்‌ அஸூயா பரராயிருப்பார்க்கும்‌ இவர்‌ உபதேஸிப்பான்‌ என்‌ என்னில்‌,

வம்மின் புலவீர்!நும் மெய் வருத்திக் கை செய்து உய்ம்மினோ!
இம்மன் உலகில் செல்வர் இப்போது இல்லை நோக்கினோம்;
நும் இன் கவி கொண்டு நும்நும் இட்டா தெய்வம் ஏத்தினால்
செம்மின் சுடர்முடி என் திருமாலுக்குச் சேருமே.–3-9-6—காட்டுது தீயில் அகப்பட்டாரை பொய்கையைக் காட்டி அழைப்பாரை போலே வாருங்கோள் என்கிறார்-புலவீர்!-நல்லதும் தீயதும் அறியும் நீங்கள் –
நீர் அழைக்கிறது என் -பிறரைக் கவி பாடி யாகிலும் தேஹ யாத்திரையை நடத்த வேண்டாவோ என்ன -உங்கள் தரம் குலையாதே ஜீவிக்கல் ஆகாதோ –நும் மெய் வருத்திக் கை செய்து உய்ம்மினோ!
உங்கள் சரீரத்தை வருத்தியும் கைத் தொழில் செய்து ஜீவிக்கப் பாருங்கோள் -என்பர் எம்பார் –

சொன்னால் விரோதம் இது, ஆகிலும் சொல்லுவன் கேண்மினோ!
என் நாவில் இன்கவி யான் ஒருவர்க்கும் கொடுக்கிலேன்
தென்னா தெனா என்று வண்டு முரல் திரு வேங்கடத்து
என் ஆனை என் அப்பன், எம்பெருமான் உளனாகவே.–3-9-1–நீங்கள் சில பிரயோஜனங்களை நினைத்து கவி பாடா நிற்க -நான் அத்தை தவிருங்கோள் என்றால் உங்களுக்கு அது அஸஹ்யமாகிலும்
உங்கள் அநர்த்தம் பொறுக்க மாட்டாமையாலே சொல்லத் தவிரேன் -அஸேவ்ய சேவை நிஷேத்யத்தயா சொல்லவும் ஆகாதபடியாய் இருக்க சொல்லுகிற எனக்கே விரோதமாய் பலிக்கிலும் உங்கள் அநர்த்தம் கண்டு சொல்லப் புக்கேன் ஆகையால் நீங்கள் மீளும் தனையும் சொல்லத் தவிரேன்-சொன்னால் உங்களுக்கு விரோதம் என்று பிரதிபன்னமாய் இருந்ததே யாகிலும் சொல்லுகிறேன் என்றுமாம்-யோ அவசதாஸ் ச உச்சயதாம் -என்று திரு நாமத்தை சொன்னால் அநந்தரம் இடி விழும் என்று வரும் அனர்த்தத்தை சொன்னிகோள் ஆதல்-திரு நாமத்தை சொன்னி கோள் ஆதல் செய்யுங்கோள் என்றான் இறே ப்ரஹ்லாத ஆழ்வான்-நீங்கள் அஹிதத்தில் பிரவணராய் மீள மாட்டாதாப் போலே உங்கள் ஹிதத்திலே பிரவணனான நானும் மீள மாட்டேன் என்கிறார் –-கேண்மினோ! அனுஷ்ட்டிக்க வேண்டா -நீங்கள் செவி தாழ்க்க அமையும் – ஸ்ரவணம் அனுஷ்டான சேஷமாக வேண்டாவோ -ஸ்ரவணம் மாத்திரமே அமையுமோ என்னில் -விஷய ஸ்வபாவத்தால் அனுஷ்டான பர்யந்தமாக முடியும் என்று இருக்கிறார் பஹு வசனத்தால் அநர்த்தம் சர்வ சாதாரணம் ஆகையால் எல்லாரையும் ஓக்க கால் பிடிக்கிறார் –

ஈனச் சொல்லாயினுமாக எறி திரை வையம் முற்றும்
ஏனத்துருவாய் யிடந்த பிரான் இரும் கற்பகம் சேர்
வானத்தவர்க்கும் அல்லாதவர்க்கும் மற்று எல்லாயவர்க்கும்
ஞானப் பிரானை யல்லால் இல்லை நான் கண்ட நல்லதுவே –
 – 99–எறி திரை வையம் முற்றும்  ஏனத்து உருவாய் இடந்த பிரான் –என்று சக்தியைச் சொல்கிறது – ஞானப் பிரான் -என்று ஜ்ஞானத்தைச் சொல்கிறது ஆயினுமாக –ஆகியுமாக என்னாதே –ஈனச் சொல்லாயினும் நன்றாக என்று நைசயம் சொல்லாதே ஆயினும் –-ஆக என்கையாலே – அவன் அருளிச் செய்ததுக்கு நால்வர் இருவர் உண்டானவோபாதி இதுக்கும் சிலர் உண்டாகிலும் உண்டாக – அவர்கள் ஆதரிக்க்கவுமாம் தவிரவுமாம் நான் சொல்லித் தவிரேன் –இவற்றின் அனர்த்தைக் கண்டு இவற்றை நல் வழி போக்கி பரிகரிக்க வேண்டும் அன்றோ –ஆசை உடைய நான் பேசாது இரேன் இறே 

மற்று ஓன்று இல்லை சுருங்கச் சொன்னோம் மா நிலத்து எவ் உயிர் க்கும்
சிற்ற வேண்டா சிந்திப்பே அமையும் கண்டீர்கள் அந்தோ
குற்றம் அன்று எங்கள் பெற்றத் தாயன் வடமதுரைப் பிறந்தான்
குற்றமில் சீர் கற்று வைகல் வாழ்தல் கண்டீர் குணமே–9-1-7—இத்தோடு ஓக்க வேறு எண்ணலாவது இல்லை -என்னுதல் -இப்போது இத்தைச் சொல்லி வேறு ஒரு போது வேறு ஒன்றை சொல்லுகிறான் என்று இருக்க வேண்டா என்னுதல் – சுருங்கச் சொன்னோம்-இது தன்னையும் பரப்பு அறச் சொன்னோம் -பிரதிபத்திக்கு அவிஷயமாம் படி அன்றியே ஸூ க்ரஹமாகச் சொன்னோம்
மா நிலத்து -இதுக்கு அதிகாரிகள் சம்சாரத்திலே -இவ்வர்த்தத்துக்கு அண்ணியார் பரமபதத்தில் உள்ளார்கள் ஆகிலும் உபதேசத்துக்கு அதிகாரிகள் சம்சாரிகள் என்கை – எவ் உயிர் க்கும்-இது அதிக்ருதா அதிகாரம் அன்று -சர்வாதிகாரம் –

புண்ணியம் செய்து நல்ல புனலொடு மலர்கள் தூவி
எண்ணுமின் எந்தை நாமம் இப்பிறப்பு அறுக்கும் அப்பால்
திண்ணம் நாம் அறியச் சொன்னோம் செறி பொழில் அனந்த புரத்து
அண்ணலார் கமலபாதம் அணுகுவார் அமரர் ஆவார்–10-2-5-வியக்தமாக -மதிநலம் அருள பெற்ற நாம் -தேஹாத்ம அபிமானிகளான -நீங்கள் அறியும் படி உங்கள் அநர்த்தத்தைப் பார்த்துச் சொன்னோம் –

இதம் தே நாதபஸ்காய நாபக்தாய கதாசந
ந சாஸுஸ்ரூஷவே வாச்யம் ந ச மாம் யோऽப்யஸூயதி
–18-67-இதை எப்போதும் தவமிலாதோனுக்கும், பக்தியில்லாதோனுக்கும், கேட்க விரும்பாதோனுக்கும் என்பால் பொறாமை யுடையோனுக்கும் சொல்லாதே.

ஞாலத்தார் பந்த புத்தியும் அனர்த்தமும் கண்டு ஆற்றாமையும் –-அதாவது— ஞாலத்தார் அவர்க்கும் வானத்தவர்க்கும் பெருமான்–திருவாய்-4-5-8- -என்று நித்ய விபூதியில் உள்ளவோர்பாதி லீலா விபூதியில் உள்ளோர்க்கும் அவனுடைய சம்பந்தம் ஒத்து இருக்க – இவர்கள் அவனை இழந்து கிடக்க ஒண்ணாது என்கிற சம்பந்த ஞானமும் கண்டு ஆற்றேன் உலகு இயற்க்கை கடல் வண்ணா–திருவாய்-4-9-3- -என்று இவர்கள் சம்சாரத்தில் படும் அனர்த்தம் கண்டு பொறுக்க மாட்டாத ஸ்வாபமும்–தாவன் மாத்ரம் அன்றிக்கே –மிக்க கிருபையும் இறே-அதாவது– அருள் கண்டீர் இவ் உலகினில் மிக்கது–கண்ணி நுண்-8- -என்று ..-ஷிபாமி -என்றும்-ந ஷமாமி-என்றும் ஈஸ்வரன் கை விட்டவர்களையும் திருத்தி அல்லது நிற்க மாட்டாத கரை புரண்ட காருண்யம் இறே என்கை-பந்த புத்தியும் அநர்த்த அசஹத்வமும் இவர் தம்முடைய உக்தி சித்தம் ஆகையாலும் – க்ருபாதிக்யம் சிஷ்யோக்தி சித்தம் ஆகையாலும் ஆய்த்து இப்படி பிரசித்தி தோற்ற அருளிச் செய்தது (பிரசித்தி தோற்ற இறே-என்று அருளிச் செய்கிறார்-என்றவாறு ).

(ஞாலத்தார்‌ பந்த புத்‌தியும்‌) ‘ஞாலத்தார்‌ தமக்கும்‌ வானத்தவர்க்கும்‌ பெருமானை” (திருவாய்மொழி 4-5-8) என்று நித்யாநுபவம்‌ பண்ணுகிற நித்ய ஸூரிகளோபாதி லீலா விபூ தியில்‌ உள்ளார்க்கும்‌ அவனோடு ஸம்ப ந்த முண்டாயிருக்க இவர்கள்‌ இழக்க வொண்ணாது என்கிற ஸம்பந்த ஜ்ஞாநாநுஸந்தாநத்தாலும்‌ (அநர்த்தம்‌ கண்டு ஆற்றாமையும்‌) “கண்டாற்றேன்‌ உலகியற்கை” (திருவாய்மொழி 4-9-3) என்று இவர்கள்‌ ஸம்ஸாரத்திலே படுகிற அநர்த்தம்‌ கண்டு பொறுக்க மாட்டாமலும்‌ (மிக்க க்ருபையுமிறே) “அருள்‌ கண்டீர்‌ இவ்வுலகினில்‌ மிக்கதே” (கண்ணிநுண்‌ சிறுத்தாம்பு- 8) என்று இவருடைய மிக்க க்ருபையாலும்‌ உபதேஸித்தார்‌ –

நமக்கும் பூவின்மிசை நங்கைக்கும் இன்பனை ஞாலத்தார்
தமக்கும் வானத்தவர்க்கும்
பெருமானைத் தண் தாமரை
சுமக்கும் பாதப் பெருமானைச் சொல்மாலைகள் சொல்லுமாறு
அமைக்க வல்லேற்கு இனியாவர் நிகர் அகல் வானத்தே?–4-5-8–இப்படி நெடு வாசி பட்ட விஷயங்களில் ஸ்நேஹம் ஒத்து இருக்கைக்கு ஆதி சம்பந்தம் ஒத்து இருக்கை -என்கிறது –

கொண்டாட்டும் குலம் புனைவும் தமர் உற்றார் விழு நிதியும்
வண்டு ஆர் பூங் குழலாளும் மனை ஒழிய, உயிர் மாய்தல்
கண்டு ஆற்றேன் உலகியற்கை! கடல்வண்ணா! அடியேனைப்
பண்டே போல் கருதாது,உன் அடிக்கே கூய்ப் பணி கொள்ளே.–4-9-3–சம்சாரிகள் பாரிப்பும் -இவர்கள் முடிந்து கிடக்கும் படியையும் கண்டு என்னால் பொறுக்கப் போகிறது இல்லை –

அருள் கொண்டாடும் அடியவர் இன்புற
வருளினான் அவ் வருமறையின் பொருள்
அருள் கொண்டு ஆயிரம் இன் தமிழ் பாடினான்
அருள் கண்டீர் இவ் உலகினில் மிக்கதே-8-எம்பெருமான் அருளினது ப்ராதேசிகம் -ஆழ்வார் அருள் சார்வத்ரிகம்- பாலேய் தமிழ் இசைகாரர் பத்தர் பரவும் ஆயிரம் -என்றும் -தொண்டர்க்கு அமுது உண்ணச் சொன்மாலைகள் -என்றும் இறே சொல்லிற்று –நெறி எல்லாம் எடுத்து உரைத்த நிறை ஞானத்தொரு மூர்த்தி-நெறி யுள்ளி யுரைத்த அம் பகவன் என்று-தான் தோன்றியான தன்னுடைய ஜ்ஞானம் கொண்டு சொன்னது அன்றிக்கே  அவனுடைய அருள் கொண்டு பாடின-தன்னேற்றமும் உண்டே இவர் அருளுக்கு-(தான் தோன்றி பாட்டு கீதை அருள் தூண்ட பாடியது அன்றோ திருவாய்மொழி )
இன் தமிழ் பாடினான் அருள் கண்டீர் இவ் உலகினில் மிக்கதே கேட்டாரார் வானவர்கள் செவிக்கு இனிய செஞ்சொல் -என்று அந்த லோகத்தில் இவருடைய பாட்டு மிக்கப் போலே-இந்த லோகத்தில் இவருடைய அருள் மிக்கது-

மற்றும் இப்படி உபதேசிப்பார் பலரும் உண்டோ என்னும் ஆ காங்க்ஷையிலே அருளிச் செய்கிறார் ..இப்படி எதிர்த் தலையில்‌ அநுவர்த்தந மின்றிக்கே பொறுக்க மாட்டாதே க்ருபையாலே உபதேஸித்தார் வேறும் உண்டோ என்னில்-

தாய்க்கும் மகனுக்கும் தம்பிக்கும் இவர்க்கும் இவர் அடி பணிந்தவர்க்குமே இவை உள்ளது .-சூரணை -204-

தாய்க்கும்-அதாவது-தன் பக்கலிலே விபரீத புத்தியைப் பண்ணி நிற்கிற பாபிஷ்டனான ராவணனைக் குறித்து –மித்ர மௌபயிகம் கர்த்தும் ராம ஸ்தானம் பரீப்சதா வதம்சா நிச்சதா கோரம் த்வயா ஸுபுருஷர்ஷப–ஸூந்தர-21-19-என்றும்-விதிதஸ் சஹி தர்மஞ்ச சரணாகத வத்ஸல தேன மைத்ரீ பவது தே யதி ஜீவிதும் இச்சசி -ஸூந்தர-21-20- -இத்யாதிகளாலே-ஹிதோபதேசம் பண்ணின –நித்யைவைஷா ஜகன்மாதா விஷ்ணோர் ஸ்ரீ அநபாயிநீ –ஸ்ரீ விஷ்ணு புராணம்-1-8-17 -என்கிற
சர்வ லோக ஜனனியான பிராட்டிக்கும் —

(தாய்க்கும்‌) “நித்யைவேஷா ஜெகன் மாதா -விஷ்ணு புராணம்‌ 1-8-17) என்றும்‌ “மாதா ச கமலா தேவீ -என்றும் த்வம் மாதா ஸர்வ லோகாநாம் -என்றும் சொல்லுகிறபடியே ஸகல ஜகந் மாதாவான பிராட்டி தம் பக்கலிலே விபரீத பிரதிபத்தி பண்ணி இருக்கிற ராவணனைப் பார்த்து அவனுடைய அநர்த்தம் கண்டு பொறுக்க மாட்டாத கிருபையாலும் தம்முடைய மாத்ருத்வ ப்ரயுக்தமான பந்த விசேஷத்தாலும் –மித்ர மௌபயிகம் கர்த்தும் ராம ஸ்தானம் பரீப்சதா வதம்சா நிச்சதா கோரம் த்வயா ஸுபுருஷர்ஷப–ஸூந்தர-21-19-என்றும்-விதிதஸ் சஹி தர்மஞ்ச சரணாகத வத்ஸல தேன மைத்ரீ பவது தே யதி ஜீவிதும் இச்சசி –ஸூந்தர-21-20- என்று இப்படி உபதேஸித்தாள்-

மகனுக்கும்-அதாவது-திரு நாமம் சொன்னதுவே ஹேதுவாக சீறி தன்னை அதி குரூரமான தண்டங்களைப் பண்ணும்படி -பாகவத் அத்யந்த விமுகனாய் -பாபிஷ்ட அக்ராகண்யனான -ஹிரண்யனைக் குறித்து – சர்வ பூதாத்மகே தாத ஜகன்னாத ஜகந்மயே -ஸ்ரீ விஷ்ணு புராணம்-1-19-37-என்றும் – உர்வ்யாமஸ்தி –இத்யாதிகளாலே ஹிதத்தை உபதேசித்தும் –-விமுகரான அசுர புத்ரர்களைக் குறித்து – அபார சம்சார விவரத்த நேஷு மாயாத தோஷம் பிரசபம் ப்ரவீமி சர்வத்ர தைத்யாஸ் சமுதாமுபேத சமத்வமாரா தநம் அச்யுதஸ்ய -ஸ்ரீ விஷ்ணு புராணம்-1-17-89–இத்யாதிகளாலே
ஹிதத்தை உபதேசித்தும் –-மீளவவன் மகனை-பெரியாழ்வார்-1-6-2- -என்கிற ஹிரண்ய புத்ரனான பிரகலாதனுக்கும்-

மகனுக்கும் -மீள அவன் மகனை -(பெரியா -1-6-2) என்றும் ஹிரண்ய புத்திரனான ப்ரஹ்லாதாழ்வான் திருநாமம் சொன்ன அது பொறுக்க மாட்டாமையாலே அதி குரூரமான தண்டங்களைத்‌ தன் பக்கலிலே ப்ரயோகித்த தமப்பனான ஹிரண்யனைக்‌ குறித்து இவன்‌ அவனுடைய அநர்த்தம்‌ பொறுக்க மாட்டாதே “உர்வ்யாமஸ்த் யுதகேஷு சாஸ்தி ” என்று தொடங்கி “த்வய்யஸ்தி மய்யஸ்தி ச” என்றும்‌ “ஸர்பூ தாத்மகே தாத ஜகந்நாதே, ஐகந்மயே பரமாத்மநி கோவிந்தே மித்ராமித்ரகதா, குத: (சி விஷ்ணுபுராணம்‌ 1-19-37 ) என்று உபதேஸித்தும்‌, “அபார ஸம்ஸார விவர்தநேஷு மாயாத, தோஷம்‌ ப்ரஸபம்‌ ப்‌ரவீமி ஸர்வத்ர தைத்யாஸ்ஸமதாமுபேத ஸமத்வ மாராத நமச்யுதஸ்ய, தஸ்மிந்‌ ப்ரஸந்நே கிமிஹாஸ்த்யலப்‌யம்‌ தர்மார்த்த, காமைரலமல்பகா ஸ்தே ஸமாஸ்ரிதாத்‌ ப்‌ ரஹ்மதரோரநந்தாந்‌ நி:ஸம்ம்யோ பக்வபலப்ரபாத: (ஸ்ரீவிஷ்ணுபுராணம்‌ 1-17-89) என்று ஆஸுர ப்ரப்ருதிகளைக்‌ குறித்தும்‌ உபதேஸித்தான்‌

தம்பிக்கும்-அதாவது-யாவந் னலங்காம் சமபித்ரவந்தி வலீமுகா பர்வத கூட மாத்ரா தம்ஷ்ட்ரா யுதாச்சைவ நகாயுதாச்ச ப்ரதீயதாம் தாசரதாய மைதிலீ–யுத்த-14-3–என்றும் – யாவான் நக்ருஹ்ணந்தி சிராம்சி பாணாராமேரிதா ராஷச புங்கவானாம் வஜ்ரோபமா வாயு சமான வேகா ப்ரதீயதாம் தாசரதாய மைதிலீ –யுத்த-14-4–என்று இப்படி-தனக்கு ஹிதம் சொன்னது பொறாமல் – த்வாம் து திக் குலபாம்சனம்–யுத்த-16-5- -என்று திக்கரித்த க்ரூரனான ராவணனைக் குறித்து –-ஸூலபா புருஷா ராஜன் சததம் பிரிய வாதினா – அப்ரியயச்யது பத்யச்ய வக்தா ஸ்ரோதா ச துர்லப–யுத்த-16-20
பத்தம் காலச்ய பாசேன சர்வ பூதாபஹாரிணா நனச்யந்த முபேஷேயம் ப்ரதீப்தம் சரணம் யதா –யுத்த-16-21- என்று தொடங்கி ஹித உபதேசம் பண்ணின – அவன் தம்பிக்கே –திருவாய்-7-6-9–என்கிற ராவண அனுஜனான ஸ்ரீ விபீஷண ஆழ்வானுக்கும்–

(தம்பிக்கும் ) “ மீண்டுமவன்‌ தம்பிக்கே” (திருவாய்மொழி 7-6-9) என்று ராவணனுடைய தம்பியான ஸ்ரீவிபீஷணப்பெருமாள்‌ அந்த ராவணனுடைய அநர்த்தங்கண்டு பொறுக்க மாட்டாதே “த்வாம்‌ து திக்‌ குல பாம்ஸநம்‌” (ரா.யு 16-15) என்று அவன்‌ தான்‌ திக்கரியா நிற்கச்‌ செய்தேயும்‌ அவனைப்‌ பார்த்து “யாவந்ந க்‌.ரஹ்ணந்தி ஸராம்ஸி பாணா: ராமேரிதா ராக்ஷஸபுங்க வாநாம்‌ வஜ்ரோ பமா வாயு ஸமாந வேகா; ப்ரதீயதாம்்‌ தாஸரதாய மைதிலீ, யாவந்ந லங்காம்‌ ஸமபித்‌ரவந்தி வலீமுகா, : பர்வத கூடமாத்ரா:” (ராயு. 14-4) என்றித்யாதி களாலே உபதேஸித்தான்‌

காண்டுங் கொலோ நெஞ்சமே!கடிய வினையே முயலும்
ஆண் திறல் மீளி மொய்ம்பில் அரக்கன் குலத்தைத் தடிந்து
மீண்டு மவன் தம்பிக்கே விரி நீர் இலங்கை அருளி
ஆண்டு தன் சோதி புக்க அமரர் அரி ஏற்றினையே?–7-6-9—அவன் தம்பி என்று பாராதே -சரணம் என்றான் -என்று கடல் சூழப் பட்ட லங்கையை அவனுக்கு கொடுத்து அருளி -அத்யுத் கடை புண்ய பாபை ரிஹைவ பலமஸ் நுதே -என்கிறபடியே க்ரவ்ய பலத்துக்கும் ஆனு கூல்ய பலத்துக்கும் விளம்பம் இன்றிக்கே ஒழிந்த படி-

இவர்க்கும்-அதாவது-பகவத் விமுகராய் –அநந்ய பரராய் திரிகிற சம்சாரிகளை விட மாட்டாமல் –
வீடு மின் முற்றவும்–1-2 -தொடங்கி பல இடங்களிலும் -பல படிகளாலும் உபதேசித்த இவ் ஆழ்வார் தமக்கும் —

(இவர்க்கும்‌) பின்பு இவர் தாமும்‌ தம்‌ பக்கல்‌ அநுவர்த்தநமின்றிக்கே விமுக ரான ஸம்ஸாரிகளைக்‌ குறித்து “வீடுமின்‌ முற்றவும்‌” (திருவாய்மொழி 1-2-1 என்று தொடங்கி உபதேஸித்தார்‌

இவர் அடி பணிந்தவர்க்குமே-அதாவது-ஓராண் வழியாக பூர்வர்கள் உபதேசித்து போந்த நியமத்தைக் குலைத்து பலரையும் உபதேசிக்கப் படி பண்ணியும் – பல கால் நடந்து துவண்டு கேட்ட பரமார்த்தத்தை ஓலக்கமாக வைத்து உபதேசித்தும் — வ்ருதைவ பவதோ யாதா பூயசீ ஜன்மசன்ததி -தஸ்யா மன்யதமம் ஜன்ம சஞ்சிந்த்ய சரணம் வ்ரஜ-சாண்டில்ய ஸ்ம்ருதி-( உனக்குத் தொடர்ந்து வருகிற பல பிறவிகள் பயன் அற்றுப் போயின -அவற்றுள் இது ஒரு பிறவி என்று நினைத்து இறைவனைச் சரணம் அடைவாய் ) -என்று ருசி விச்வாஸ ஹீநரையும் நிர்பந்தித்து சரமோ உபாயஸ்தர் ஆக்கியும் – இப்படி அதிகாரம் பாராமல் அவர்கள் துர் கதியை பார்த்து உபதேசித்து அருளும் ஸ்வபாவராய்–பா மன்னு மாறன் அடி பணிந்து உய்ந்தவன்–இராமானுச நூற்றந்தாதி-1- -என்று நிரூபகமாய் இருக்கும் எம்பெருமானாருக்குமே- இவ் ஆகாரங்கள் உள்ளது என்கை —

(இவரடி பணிந்தவர்க்கும்‌) “பாமன்னு மாறனடி பணிந்துய்ந்தவன்‌” (இராமானுச நூற்‌. 1 என்கிற உடையவரும்‌ வ்ருதைவ பவதோ யாதா பூயஸீ ஐந்ம ஸந்ததி: தஸ்யா மந்ய தமம்‌ ஜந்ம ஸஞ்சிந்த்ய மரணம்‌ வ்ரஜ (சாண்டில்ய ஸ்ம்ருதி 4-10-9) என்று ருசி யில்லாதாரையும்‌ மேல் விழுந்து உபதேஸித்தருளினார்‌.

பூ மன்னு மாது பொருந்திய மார்பன் புகழ் மலிந்த
பா மன்னு மாறனடி பணிந்து உய்ந்தவன் பல்கலையோர்
தாம் மன்ன வந்த விராமானுசன் சரணார விந்தம்
நாம் மன்னி வாழ நெஞ்சே சொல்லுவோம் அவன் நாமங்களே -1 –மாறன் அடி பணிந்து உய்ந்தவன் -என்பதை மணவாள மா முனிகள்-பராங்குச பாத பக்தம் –என்று வட மொழியில் மொழி பெயர்த்தார்-மாறன் அடி பணிந்து உய்ந்த ராமானுஜன் -ராமானுஜன் எனக்கு ஆரமுதே –பிராட்டி -பகவான் -பா -ஆழ்வார் -எம்பெருமானார் -பஞ்சாம்ருதம் கொடுத்த அமுதக்கவி -ஆறு சுவைகளும் அமுதம்

இவை என்று கீழ்ச் சொன்ன சம்பந்த ஞானம் அநர்த்த அசஹத்வம் அநவதிக க்ருபை– ஆகிய மூன்றையும் பராமர்சிக்கிறது –

ஆகையாலே பராநர்த்த,ம்‌ பொறுக்க மாட்டாதே உபதேஸிக்கை இவர்களுக்கே யுள்ளது

இப்படி விமுகரான சம்சாரிகளைக் குறித்து இவ் ஆழ்வார் உபதேசித்த இது சபலமாய்த்தோ என்னும்
ஆ காங்க்ஷையிலே அருளிச் செய்கிறார்-ஆனால்‌ இப்படி விமுகராயிருக்கிற ஸம்ஸாரிகளுக்குத்‌ தம்முடைய க்ருபையாலே இவருபதேஸிக்கிறாராகில்‌, இவ்வுபதேஸம்‌ பலித்தமை உண்டோ என்னில்‌, இவர்‌ க்யாதி லாப, பூஜா நிரபேக்ஷராய்க்‌ கொண்டு பகவத்‌ கைங்கர்யமாக உபதேஸிக்க ஜகத்தாகத்‌ திருந்துகையாலே தம்முடைய தனிமைக்கும்‌ ஸம்ஸாரிகளுடைய தனிமைக்கும்‌ எம்பெருமானுடைய தனிமைக்கும்‌ க்லேஸப்பட்ட இவருடைய இழவுகளும்‌ தீரப் பெற்றதென்கிறார்‌.

க்யாதி லாப பூஜ அபேஷை யற மலர் நாடி யாட் செய்ய உய்யக் கொண்டு ஆரைக் கொண்டு வாளும் வில்லும் கொண்டு என்கிற இழவுகள் தீரப் பெற்றது .–சூரணை -205-

(க்யாதி அபேக்ஷை அற்று –பூஜா அபேக்ஷை அற்று -லாப அபேக்ஷை அற்று -மலர் நாடி யாட் செய்ய-
உய்யக் கொண்டு என்கிற இழவும் -ஆரைக் கொண்டு என்கிற இழவும் -வாளும் வில்லும் கொண்டு என்கிற இழவும் -தீரப் பெற்றது )

க்யாதி அபேக்ஷை அற்று--அதாவது –நீசனேன் நிறை ஒன்றும் இலேன்-3-3-4 -என்று தண்மைக்கு எல்லையாகத் தம்மை நினைத்து இருக்கையாலும் ,-லாப அபேக்ஷை அற்று-அதாவது
கொள் என்று கிளர்ந்து எழுந்த பெரும் செல்வம் நெருப்பாக -4-9-4–என்று ஐஸ்வர்யத்தை அக்நி சமமாகக் காண்கையாலும் –பூஜா அபேக்ஷை அற்று–அதாவது- தொண்டர் தொண்டர் தொண்டர் தொண்டன் சடகோபன்-8-9-1- -என்று-பகவத் சேஷத்வத்தின் எல்லையில் நிற்கிறவர்களுக்கு தம்மை சேஷமாக நினைத்தும் –-ஓத வல்ல பிராக்கள் நம்மை ஆள் உடையார்கள் பண்டே–9-1-1- -என்று
இப் பிரபந்தத்தில் அன்வயித்தவர்களை தமக்கு சேஷிகளாக நினைத்தும் இருக்கையாலும் —
க்யாதியிலும் லாபத்திலும் பூஜையிலும் அபேஷை அற்று —

(க்யாதி லாப பூஜாபேக்ஷயற ) “நீசனேன்‌ நிறைவொன்றுமிலேன்‌’ (திருவாய்மொழி 3-3-4) என்று தம்மைத்‌ தண்மைக்கு எல்லையாக நினைத்திருக்கையாலும்‌ “கொள்ளென்று கிளர்ந்தெழுந்த பெருஞ்செல்வம்‌ நெருப்பாக” (திருவாய்மொழி 4-9-4) என்று ஐஸ்வர்யத்தை அக்‌நி ஸமமாகக்‌ காண்கையாலும்‌ “தொண்டர்‌ தொண்டர்‌ தொண்டர்‌ தொண்டன்‌ சடகோபன்‌ (திருவாய்மொழி 8-9-1 என்று பா௧வத ஸேஷத்வத்தில்‌ எல்லையிலே நிற்கிறவர்களுக்குத்‌ தம்மை ஸேஷமாக நினைத்திருக்கையாலும்‌ “ஓதவல்ல பிராக்கள்‌ எம்மை ஆளுடையார்கள்‌ பண்டே” (திருவாய்மொழி 9-1-11) என்று இப்ரபந்தத்திலே அந்வயித்தவர்களைத்‌ தமக்கு ஸேஷிகளாக நினைத்திருக்கையாலும்‌  க்யாதி லாப, பூஜா நிரபேஷராய்க்‌ கொண்டு

ஈசன் வானவர்க்கு என்பன் என்றால் அது
தேசமோ திரு வேங்கடத் தானுக்கு?
நீசனேன் நிறைவு ஒன்றுமிலேன் என்கண்
பாசம் வைத்த பரஞ்சுடர்ச் சோதிக்கே.–3-3-4-திருவேங்கடமுடையானுக்கு ஏற்றமாக நீர் நினைத்தது என் என்ன –நீசனேன் நிறைவு ஒன்றுமிலேன் – என் பக்கல் சங்கத்தைப் பண்ணின இது இறே –-அ நாதமே குணங்களுக்கு ஆகாரமாய் ஆத்ம குண கந்தம் இல்லாதவன் –என் கண்-பாசம் வைத்த –வானவர்க்கு ஈசன் ஆனவன் என் கண் பாசம் வைத்தான் அவர்களோடு கலந்து அவர்கள் சத்தைக்காக என்னோடு கலந்து தனக்கு சத்தை உண்டாக்குகைக்காக-

கொள் என்று கிளர்ந்து எழுந்து பெருஞ்செல்வம் நெருப்பாகக்
கொள் என்று தமம் மூடும்; இவை என்ன உலகியற்கை!

வள்ளலே! மணிவண்ணா! உனகழற்கே வரும்பரிசு,
வள்ளல் செய்து அடியேனை உனது அருளால் வாங்காயே.–4-9-4—இவன் அர்த்தியாது இருக்க தானே -என்னைக் கொள் என்னைக் கொள் என்று மேல் மேல் எனக் கிளர்ந்து வருகிற நிரவதிக சம்பத்தானது –
நெருப்பாகக் நிச்சேஷமாக நசிக்க -என்னுதல் -தனக்கு விநாச ஹேதுவாக -என்னுதல்
கொள் என்று தமம் மூடும்; இவை விநாச ஹேது என்று அறிந்து இருக்கச் செய்தேயும் பிறர் கொள் என்று பிரேரித்த வாறே தம அபிபூதனாய் துராசையாலே முன்பு விநாச ஹேது வானத்தை விரும்பும்
கொள் என்று பிரேரிக்கிறது மனஸ் ஆகவுமாம்-ஹதே பீஷ்மே ஹதேத்ரோணே ஹதே கர்ணே மஹாரதே ஆசாபலவ தீராஜன் சல்யோ ஜேஷ்யாதி பாண்டவான்இவை என்ன உலகியற்கை!
ப்ரத்யக்ஷமும் அகிஞ்சித்கரமாம் படி இருப்பதே –

நேர்பட்ட நிறை மூவுலகுக்கும் நாயகன் தன்னடிமை
நேர்பட்ட தொண்டர் தொண்டர் தொண்டர் தொண்டன் சடகோபன் சொல்
நேர்பட்ட தமிழ் மாலை ஆயிரத்துள் இவை பத்தும்
நேர்பட்டார் அவர் நேர்பட்டார் நெடுமாற்கு அடிமை செய்யவே–8-9-11-அவன் சேஷித்வத்துக்கு எல்லை யானால் போலே இவர் சேஷத்வத்துக்கு எல்லை யான படி-

ஆதும் இல்லை மற்று அவனில் என்று அதுவே துணிந்து
தாது சேர் தோள் கண்ணனை குருகூர்ச் சடகோபன் சொன்ன
தீதிலாத ஒண் தமிழ்கள் இவை ஆயிரத்துள் இப்பத்தும்
ஓத வல்ல பிராக்கள் நம்மை ஆளுடையார்கள் பண்டே-9-1-11-இப்பத்தை அப்யஸிக்க வல்ல உபகாரகர் –சம்சாரத்தின் தண்மையும்-ஈஸ்வரனே ப்ராப்ய ப்ராபகங்கள் என்றும் இறே இதில் சொல்லிற்று -இத்தை அப்யஸித்து நல்வழியே போமிது இ றே உபகாரகராகை யாவது-நம்மை ஆளுடையார்கள் பண்டே–அத்தை அப்யசிக்கைக்கு ஹேதுவான சரீர பரிக்ரஹம் பண்ணின காலமே பிடித்து நாதர் என்கிறார் –

மலர் நாடி யாட் செய்ய--அதாவது–நறிய நன் மலர் நாடி-5-5-11 -என்கிறபடியே – சேஷத்வ பரிமள யுக்தமாய் ஸ்லாக்யமான ஆத்ம புஷ்பங்களைத் தேடி —ஆள் செய்து ஆழிப் பிரானைச் சேர்ந்தவன் -4-10-11–என்று கைங்கர்ய ரூபமாக உபதேசிக்கையாலே ஜகத்தாக திருந்துகையாலும் —

நறிய நன்மலர்‌ நாடி” (திருவாய்மொழி 5-5-11 என்கிறபடியே ஸேஷத்வமாகிற பரிமளத்தை உடைத்தான ஆத்ம புஷ்பங்களைத்‌ தேடி “ஆட்செய்தாழிப்பிரானைச்‌ சேர்ந்தவன்‌ (திருவாய்மொழி 4-10-11 என்று கைங்கர்ய ரூபமாக உபதேஸிக்கையாலே ஐகத்தாகத்‌ திருந்தினபடி.-

அறிவரிய பிரானை ஆழி அம் கையனையே அலற்றி
நறிய நன்மலர் நாடி நன் குருகூர்ச் சடகோபன் சொன்ன
குறி கொள் ஆயிரத்துளிவை பத்தும் திருக்குறுங்குடி யதன்மேல்
அறியக் கற்று வல்லார் வைட்ணவர் ஆழ்கடல் ஞாலத்துள்ளே.–5-5-11-பரிமளிதமான செவ்விப் பூவாக பாட்டுக்களைத் தேடிக் கொண்டு -சொல் மாலைகள் என்றும் –அடி சூட்டலாகும் அந்தாமமே -என்றும் சொல்லக் கடவது இறே-

ஆட்செய்து ஆழிப் பிரானைச் சேர்ந்தவன், வண் குருகூர் நகரான்,
நாட்கமழ் மகிழ் மாலை மார்பினன் மாறன் சடகோபன்
வேட்கையால் சொன்ன பாடல் ஆயிரத்துள் இப்பத்தும் வல்லார்
மீட்சி இன்றி வைகுந்த மா நகர் மற்றது கையதுவே.–4-10-11—முறையால் சர்வேஸ்வரனைப் பற்றினவர் -அடிமை செய்வித்துத் கொள்கைக்கு யாயிற்று -கையும் திரு வாழியும் சேர்ந்த சேர்த்தி அழகு -ஆழ்வானுடைய வ்ருத்தத்தைக் காட்டி இவரையும் வ்ருத்தவான் ஆக்கின படி-சேர்ந்தவன்-கையும் திரு வாழி யும் பொருந்தினால் போலே யாயிற்று இவர் பொருந்தின படி -கெடு மரக்கலம் கரை சேர்த்ந்தால் போலே இந்த நன்மைக்கு அடி -திரு நகரியில் பிறப்பு -ராம பக்திக்கு திரு அயோத்தியில் மண் பாடு போலே

உய்யக் கொண்டு என்கிற இழவும்--அதாவது- உளம் கொள் ஞானத்து வைம்மின் உம்மை உய்யக் கொண்டு போகுறிலே-4-10-9- -என்று சம்சாரிகள் உஜ்ஜீவன நிமித்தமாக உண்டான இழவும் –
ஆரைக் கொண்டு என்கிற இழவும் உழந்து இனி யாரைக் கொண்டு என் உசாகோ–7-3-4- -என்று
தனக்கு உசாத் துணை இல்லாமையால் வந்த இழவும் .. வாளும் வில்லும் கொண்டு என்கிற இழவும்-
அதாவது– வாளும் வில்லும் கொண்டு பின் செல்வார் மற்று இல்லை–8-3-3-என்று அவன் சௌகுமார்யம் அறிந்து பரிகைக்கு ஒருவரும் இல்லை என்ற இழவும் தீரப் பெற்றது என்கை .எல்லாரும் உஜ்ஜீவித்து தமக்கு உசாத் துணையாய் – அவனுக்கு மங்களாசாசனமும் பண்ணுகையாலே –மூன்று இழவும் தீரும் இறே —

(உய்யக்‌ கொண்டு ஆரைக்‌ கொண்டு வாளும்‌ வில்லும்‌ கொண்டு என்கிற இழவும்‌ தீரப்பெற்றது) “உம்மை உய்யக்‌ கொண்டு போகுறிலே” (திருவாய்மொழி 4-10-9) என்று ஸம்ஸாரிகளுடைய அநர்த்தங்கண்டு பொறுக்க மாட்டாமல்‌ உபதேஸிக்க அவர்கள்‌ திருந்துகையாலே அவர்கள்‌ தனிமை என்கிற அவ்விழவு தீரப்பெற்றது.“ஆரைக்‌ கொண்டென்னுசாகோ” (திருவாய்மொழி 7-3-4) என்று தமக்கு உசாத்துணை யில்லை என்று சொல்லப்பட்டதுவும்‌ ஸம்ஸாரிகளடையத்‌ திருந்தித்‌ தமக்கு உசாத் துணை உண்டாகையாலே அவ்விழவும் தீரப்பெற்றது. “வாளும்‌ வில்லும்‌ கொண்டு பின் செல்வார்‌ மற்றில்லை’ (திருவாய்மொழி 8-3-3) என்று ஸர்வேஸ்வரனுடைய ஸெளகுமார்ய மறிந்து பரியக்‌ கடவார்‌ ஒருவருமில்லை என்று இழவு பட்ட விவர்க்கு பகவத்‌ விஷயத்துக்குப்‌ பரிவராய்‌ மங்களா ஸாஸநம்‌ பண்ணப்‌ பலருண்டாகையாலே அவ் விழவும்‌ தீரப்பெற்றது.-

விளம்பும் ஆறு சமயமும்,அவை ஆகியும் மற்றும் தன்பால்
அளந்து காண்டற்கு அரியன் ஆகிய ஆதிப்பிரான் அமரும்
வளங் கொள் தண் பணை சூழ்ந்து அழகு ஆய திருக் குருகூரதனை
உளங்கொள் ஞானத்து வைம்மின் உம்மை உயக்கொண்டு போகுறிலே.–4-10-9–அசன்னேவ என்னும் படி -இருக்கிற உங்களை சந்த மேனம் ததோ விது-என்ன பண்ண வேண்டி இருந்து கோள் ஆகில் –நேய மஸ்தி என்கிறபடி தக்தப்படம் போலே இவற்றின் சத்தை சென்று அற்றது என்று இருக்கிறார் –

இழந்த எம்மாமைத் திறத்துப் போன என் நெஞ்சினாரு மங்கே ஒழிந்தார்
உழந் தினி யாரைக் கொண் டென் உசாகோ! ஓதக் கடல் ஓலி போல எங்கும்
எழுந்த நல் வேதத்து ஒலி நின்று ஓங்கு தென் திருப் பேரெயில் வீற்றிருந்த
முழங்கு சங்கக் கையன் மாயத்து ஆழ்ந்தேன் அன்னையர்காள்! என்னை என் முனிந்தே.–7-3-4—வருந்தி -இனி என் நெஞ்சை இழந்த பின்பு –வருந்தினால் தான் வார்த்தை கேட்ப்பார் உண்டோ -கேட்ப்பார் உண்டால் தான் என்ன வார்த்தை சொல்லுவது-

ஆளுமாளார் ஆழியும் சங்கும் சுமப்பார் தாம்
வாளும் வில்லும் கொண்டு பின் செல்வார் மற்றில்லை

தாளும் தோளும் கைகளை யாரத் தொழக் காணேன்
நாளும் நாளும் நாடுவன் அடியேன் ஞாலத்தே–8-3-3—ஆளுமாளார் -உபய விபூதியிலும் பரிகைக்கு ஓர் ஆளில்லை -தனியே ஒருத்தரை ஆள வேணும் என்று இருக்கிறார் -நித்ய ஸூ ரிகள் பகவத் அனுபவத்தில் அந்நிய பரர் -சம்சாரிகள் சப்தாதி விஷய பரர்-ஆழியும் சங்கும் சுமப்பார் தாம்–ஆபரணமான திவ்யாயுதங்கள் -அவன் ஸுகுமார்யத்தாலே மலை எடுத்தால் போலே சுமையாய் தோற்றுகிறது இவர்க்கு -எதிரிகளுக்கு அஸ்திரமாய் -அனுபவிப்பார்க்கு ஆபரணமாய் இருக்கிறதை -ஸுகுமார்யத்தை அனுசந்தித்த இவருக்கு மலையாய் இருக்கிறது-தாம் -தம்மைப் பார்த்துக் கொள்ள வேண்டாவோ -எப்போதும் கை கழலா நேமியான் அன்றோ -நிரூபகங்கள் ஆனவை சுமையோ என்ன -அது தானே செய்கிறது –-வாளும் வில்லும் கொண்டு பின் செல்வார் மற்றில்லை வாளும் வில்லும் கொண்டு பின்னே செல்லுகைக்கு இளைய பெருமாள் மாத்திரம் ஒருவர் உண்டானாலோ –ஆளுமாளார் ஆழியும் சங்கும் சுமப்பார் தாம்-வாளும் வில்லும் கொண்டு பின் செல்வார் மற்றில்லை-என்கிறது பரிவரான நீர் இவற்றுக்கு ஆள் அன்றோ என்று தம்மை ஏவுகைக்காக –

மலர் நாடி-என்கிற இதுக்கு நறிய நன் மலர் நாடி –என்கிற இது சொல்லும் போது-சர்வ வ்யாக்யானங்களிலும் –பரிமளத்தை உடையதாய் -ஸ்லாக்யமான புஷ்பங்கள் போல ஆராய்ந்து சொன்ன ஆயிரம்-என்று பிரபந்த விசேஷணமாகச் சொல்லி இருக்கையாலே – இவருக்கு நினைவு ஆத்ம புஷ்பங்களைத் தேடி -என்கிற இது என்று கொள்ள வேண்டும் ..அன்றிக்கே
மலர்நாடி -என்கிற இது –நாடாத மலர்-1-4-9- -என்கிறதை நினைத்து அருளிச் செய்தார் என்று கொள்ளில் ஒரு விரோதமும் இல்லை ..-வாடாத மலர் அடிக் கீழ் வைக்க -என்று கைங்கர்ய பிரசங்கம் உண்டு ஆகையாலே ஆட் செய்ய -என்றதோடு சேரும் இறே-

நாடாத மலர் நாடி நாடோறும் நாரணன் தன்
வாடாத மலரடிக் கீழ் வைக்கவே வகுக்கின்று
வீடாடி வீற்றிருத்தல் வினையற்றது என் செய்வதோ
ஊடாடு பனிவாடா யுரைத்தீராய் எனதுடலே –1-4-9—‘ஆத்தும புஷ்பத்தைச் சொல்லுகிறது’ என்பாரும் உளர்-ஸ்ரீ நஞ்சீயர், ‘எண் திசையும் உள்ள பூக் கொண்டு’ என்கிறபடியே,-‘தேட அரிய மலர்கள் எல்லாம் தேடி’ என்று அருளிச் செய்வர்.அபி நிவேசத்துக்கு ஈடாகத் தேட வரிதான புஷ்பங்களைத் தேடி -எண்டிசையும் உள்ள பூக் கொண்டு -என்னுமா போலே-

இப்படி உபதேசம் பலித்ததாகில்-பரீஷ்ய லோகான் – இத்யாதிப்படியே கர்ம பலமான சம்சார போகங்கள் -அல்ப அஸ்திரத்வாதி தோஷத்தையும் –நித்யனான பரமாத்வானாவன்- கர்ம சாத்யன் அல்லாமையும் –அனுசந்திக்கையால் உண்டான நிர்வேதத்தோடே சம தம உபேதனாய்- உபஹார பாணியாய்க் கொண்டு ஸ்ரோத்ரியனாய் –ப்ரஹ்ம நிஷ்டனான ஆசார்யனை உபசத்தி பண்ண -அவனும் –
நாசம்வச்தர வாசினே ப்ரப்ரூயாத் -என்கிறபடியே -ஒரு சம்வஸ்தரம் பரீஷித்து பின்னை உபதேசிக்கக் கடவனாக சொல்லுகிற சாஸ்திர மரியாதையில் சம்சாரிகள் அனுவர்திக்க இவர் உபதேசித்தார் ஆனாலோ என்கிற சங்கையில் அருளிச் செய்கிறார் –இப்படி உபதேஸம்‌ பலிக்கும்போது “பரீஷ்யலோகாந்‌ கர்மசிதாந்‌ ப்‌,ராஹ்மணோ நிர்வேத மாயாத்‌ நாஸ்த்யக்ருத: க்ருதேந தத்விஜ்ஞா நார்த்தம்‌ ஸகுருமேவாபி கச்சேத்‌ ஸமித்பாணி: ஸ்ரோத்ரியம்‌ ப்‌ரஹ்ம நிஷ்டம்‌ தஸ்மை ஸவித்‌வாநுபஸந்நாய ஸம்யக்‌, ப்ரஸமாந்தசித்தாய மமாந்விதாய யேநாக்ஷரம்‌ புருஷம்‌ வேத, ஸத்யம்‌ ப்ரோவாச தாம்‌ தத்வதோ ப்‌ரஹ்மவித்‌ யாம்‌” (முண்டகோபநிஷத்‌ 2-11) என்று ஸம்ஸாரத்தினுடைய அல்பாஸ்திரத்வாதி, தோஷாநுஸந்தாநத்தாலும்‌ பரம ப்ராப்யமான தேஸத்தைக்‌ கிட்டப் பெறாமையால்‌ உண்டான வெறுப்போடே ஸம தமாத் யாத்‌ம குணோபேதனாய்‌ ஸோபஹார ஹஸ்தனாய்க்‌ கொண்டு ஸ்ரோத்ரியனாய்‌ ப்‌ரஹ்ம நிஷ்டனான ஆசார்யனை பக்‌நாபிமாநனாய்‌ உபஸத்தி பண்ண அவ்வாசார்யனும்‌ “நாஸம்வத்ஸரவாஸிநே பரப்‌ரூயாத் என்று ஒரு ஸம்வத்ஸரம்‌ பரீக்ஷித்து பின்னையும்‌ உபதேஸிப்பான்‌ என்று சொல்லுகிற ஸாஸ்த்ரக்ரமத்திலே இவரும்‌ ஸம்ஸாரிகள்‌ அநுவர்த்திக்க உபதேஸித்தார் ஆனாலோ என்னில்‌,

ப்ரஹ்ம நிஷ்டரும் சம்வத்சர வாசிகளும் ஆகில் ஏ பாவம் பயன் நன்றாகிலும் சேராது-சூரணை -206-

(உபதேசிக்கும் ஆழ்வார் ப்ரஹ்ம நிஷ்டராகில் -ஏ பாவம் சேராது -என்றும் –உபதேசம் கேட்கும் மக்கள் சம்வத்சர வாசிகளாகில் -பயன் அன்றாகிலும் சேராது -என்றவாறு )

உபதேசிக்கும் ஆழ்வார் ப்ரஹ்ம நிஷ்டராகில் -ஏ பாவம் சேராது-அதாவது உபதேஷ்டாவான இவர் ச க்ரமமாக உபசத்தி பண்ணினவனுக்கு ஒழிய உபதேசியோம் என்று இருக்கும் ப்ரஹ்ம நிஷ்டர் ஆகில் –
அப்படி வந்து உபசத்தி பண்ணினவர்களுக்கு ப்ரீதியோடே உபதேசிக்கை ஒழிய – அநாதிகாரிகளுக்கு உபதேசிக்கப் புக்கு –-ஏ பாவம் பரமே -2-2-2–என்றும் ,-ஒ பாவம் எனக்கு இது பரமாவதே -என்று
உபதேச உபக்ரமத்தில் வெறுத்து சொன்ன உக்தி சேராது —உபதேசம் கேட்கும் மக்கள் சம்வத்சர வாசிகளாகில் -பயன் அன்றாகிலும் சேராது-அதாவது-இவர் பக்கல் உபதேசம் கேட்டவர்கள் சம்வத்சர வாசிகள் ஆகில் உபஹார பாணிகளாய் நாம் அனுவர்த்திது அன்றோ பெற்றோம் என்று இருக்கை ஒழிய – இவருக்கு பிரதம சிஷ்யர் ஆனவர் – பயன் நன்றாகிலும் பாங்கு அல்லர் ஆகிலும் செயல் நன்றாக திருத்திப் பணி கொள்வான்–கண்ணி நுண்-10- -என்று பிரயோஜன சூன்யர் ஆகிலும் -அவிதரே ஆகிலும் தம்முடைய செயலாலே எல்லாம் நன்றாம் படி திருத்திக் கொள்வார் இவர் என்று –
கிருதக்ஜையாலே உகந்து சொன்ன உக்தியும் சேராது என்கை .-இப்படி ஆச்சார்ய யுக்தியும் சிஷ்ய யுத்தியும் ஆகையாலே முன் சொன்ன ஹேதுக்களாலே விமுகரைக் குறித்து உபதேசிக்க –உபதேச சுத்தியாலே சர்வரும் திருந்தி – இவருடைய இழவுகள் எல்லாம் தீர்ந்தது என்றே கொள்ள வேண்டும் என்றது ஆய்த்து–

(ஏபாவம்‌ பயனன்றாகிலும்‌ சேராது) ஸிஷ்யனுடைய அநுவர்த்தனமுண்டாகில்‌ “ஏபாவம்‌ பரமே” (திருவாய்மொழி 2-2-2) என்று ஓ பாபமே எனக்கிது பரமாவதே என்று உபதேஸோபக்ரமத்திலே வெறுத்துச்‌ சொல்லுகிற ஆசார்யோக்தியும்‌ சேராது. ஸிஷ்யன்‌ தன்‌ அநுவர்த்தனத்தாலே இவ்வர்த்தத்தைப்‌ பெற்றானாகில்‌ “பயனன்றாகிலும்‌ பாங்கல்லராகிலும்‌ செயல்‌ நன்றாகத்‌ திருத்திப்‌ பணிகொள்வான்‌’ (கண்ணிநுண்‌. 10) என்கிற ஸிஷ்யோக்தியும்‌ சேராது. ஆகையாலே முன்பு சொன்ன க்ரமத்திலே ஸம்ஸாரிகளுடைய அநர்த்தம்‌ கண்டு பொறுக்க மாட்டாதே தம்முடைய க்ருபையாலே உபதேஸித்தார்‌ என்கிறார் –

ஏ பாவம் பரமே யேழு லகும்
ஈ பாவம் செய்து அருளால் அளிப்பாரார்
மா பாவம் விட அரற்குப் பிச்சை பெய்
கோபால கோளரி யேறன்றியே –2-2-2—இவனுடைய பரத்வம் சாத்யமாய் -சாதிக்க வேண்டுவதே -என்ன பாபமோ என்கிறார் –ஏ என்றது ஓ என்றபடி -விஷயத்தை அதிசய ஸூசகம் –பரமே-ஞானம் பிறந்தால் குண அனுபவம் பண்ணுகை அன்றிக்கே-சிலருடைய விப்ரதிபத்தியை பரிஹரிக்கை பரமாவதே-

பயனன் றாகிலும்  பாங்கலராகிலும்
செயல் நன்றாகத் திருத்திப் பணி கொள்வான்
குயில் நின்றார் பொழில் சூழ் குருகூர் நம்பி
முயல்கின்றேன் உன் தன் மொய் கழற்கன்பையே-10-அனுத்தேச்யர் ஆகிலும் அபவ்யரே யாகிலும் எம்பெருமான் அன்றே அனாஸ்ரிதர் என்று கை விடுகைக்கும் அவிதேயர் என்று நிரசிக்கைக்கும் -நின்ற நிலையிலே துர்வ்ருத்தரையும் ஸூ வ்ருத்தர் ஆக்கிக் கொள்ளுவார் ஆழ்வார் அன்றோ-பகவத் விஷயம் போலே அதிகாரம் பார்த்துப் புகுகை யன்றியே நின்ற நிலையிலே புகுரலாம் படி இறே ஆழ்வாருடைய நீர்மை இருப்பது -இவர் ஊரும் நாடும் உலகமும் தன்னைப் போலே யாக்குமவர் ஆகையாலே செயல் நன்றாகத் திருத்தினார்-

இனி இப்படி பரே உபதேசர் ஆன போது பகவத் அனுபவம் விச்சேதம் ஆகாதோ என்கிற சங்கையில் மேல் அருளிச் செய்கிறார் —ஆனால்‌ அபரிச்சே,த்‌,யமாய்‌ நிரதிஸயபோக்யமான பகவத்‌ விஷயத்தை அநுப விக்கிற இவர்‌ பரோபதேஸம்‌ பண்ணுகிறார்‌ என்னும்போது, இவர்க்கு அவ்வநுபவம்‌ கூடினபடி எங்கனே என்னில்‌, இவருடைய அநுபவ பரீவாஹ ரூபமான சொற்கள் தானே பரோபதேஸமா யிருக்கையாலே உள்ளே அநுபவமானது செல்லா நிற்கச்‌ செய்தே பரோபதேஸமாயிருக்கும்‌ என்கிறார்‌.

மெய் நின்று மங்க ஓட்டுக்கு நடுவு அநுபவ கர்ப்ப உபதேசம் —சூரணை-207-

(அநுபவ கர்ப்ப உபதேசம்-அனுபவம் மனசிலே செல்லா இருக்கும் பொழுதே உபதேசம் என்றவாறு )

அதாவது-மெய் நின்று கேட்டு அருளாய் அடியேன் செய்யும் விண்ணப்பமே–திருவிருத்தம் –1- -என்றது முதல்- மங்க ஒட்டு உன் மா மாயை -திருவாய்-10-7-10–என்கிறது அளவாக நடு உள்ள நான்கு பிரபந்தங்களும் அனுபவம் உள்ளே நில்லாச் செய்தே இருக்கும் பர உபதேசம் என்கை .. இவர் தமக்கு அனுபவ கர்பமான உபதேசமும் ,உபதேச கர்ப்பமான அனுபவமுமாகவே செல்லும் என்று இறே-நம் முதலிகள் அருளிச் செய்வது .. ஆகையால் இவருக்கு அனுபவ விச்சேதம் ஒருக் காலும் இல்லை இறே

(மெய்ந்நின்று மங்கவொட்டுக்கு நடுவு) “மெய்ந்நின்று கேட்டருளாய்‌ அடியேன்‌ செய்யும்‌ விண்ணப்பமே’ (திருவிருத்தம்‌ 1 என்று உபக்ரமித்து“மங்கவொட்டுன்‌ மாமாயை” (திருவாய்மொழி 10-7-10) என்கிறதளவாக நடுவுள்ள நாலு ப்ரபந்தமும்‌ அநுபவம்‌ உள்ளே செல்லா நிற்கச்‌ செய்தே பரோபதேஸமாயிருக்கிறது; இது தான்‌ ஸ்வாநுபவகர்ப்ப, பரோபதேஸமாய்‌ பரோபதேஸ முகத்தாலே ஸ்வாநுபவமாயிருக்கையாலே எல்லா அவஸ்தையிலும்‌ இவர்க்கு அநுபவத்தில்‌ குறை யில்லை

பொய் நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும் அழுக்கு உடம்பும்
இந் நின்ற நீர்மை இனி யாம் உறாமை உயிர் அளிப்பான்
எந் நின்ற யோனியுமாய்ப்ப் பிறந்தாய் இமையோர் தலைவா
மெய்ந் நின்று கேட்டருளாய் அடியேன் செய்யும் விண்ணப்பமே 
–1-இப்படி நிலை நின்ற ஸ்வபாவம் -உதிரக்  கூறை காட்டுகிறார் -என்று அம்மாள்–ஏஹீ பஸ்ய சரீராணி -ஸ்ரீ தண்ட காரண்யத்தில் ருஷிகள் பெருமாளுக்கு ராஷசர் தின்ற உடம்பை காட்டினால் போலே- பிரகிருதி தின்ற ஆத்மாவைக் காட்டுகிறார் -ஆளவந்தார்-ஆழ்வார்  பிறர் படியை காட்டுகிறார்-அம்மாள் நிர்வாஹம்-தம் படியைக் காட்டுகிறார்  -ஆளவந்தார் நிர்வாஹம்இது ஒரு வெட்டு -பொய் நின்ற ஞானம்-இது ஒரு வெட்டு – பொல்லா  ஒழுக்கம் இது ஒரு வெட்டு -அழுக்கு உடம்பு–ஆச்சார்யன் உபதேசத்துக்கும் கேளாதே பிரமாணங்களாலும் பேதிக்க ஒண்ணாதே இதுவே ஸ்வரூபம் என்னலாம் படி இருக்கை–தேவரீர் திருவடிகளுக்கு இட்டுப் பிறந்த இஜ் ஜன்மம் தப்பாமே பட்டேன் இது என்று கருத்து –இவற்றிலே நிலை நின்று போந்த வாஸனா ருசிகள் ஆகிற ஸ்வ பாவ விசேஷத்தை (நின்ற நீர்மை விட்டுப் பிரியாத ஸ்வ பாவங்கள் )-அநாதி காலம் பரம புருஷார்த்தத்தை இழந்து சம்சாரத்தில் அகப்பட்டுக் கிடந்த இதில் அநு தாபம் தோற்றும் படி(நீர்மை )

மங்க ஒட்டு உன் மா மாயை திரு மால் இரும் சோலை மேய
நங்கள் கோனே யானே நீ ஆகி என்னை அளித்தானே
பொங்கு ஐம் புலனும் பொறி ஐந்தும் கருமேந்த்ரியம் ஐம் பூதம்
இங்கு இவ் வுயிர் ஏய் பிரகிருதி மான் ஆங்காரம் மனங்களே–10-7-10-தாம் அர்த்திக்கச் செய்தேயும் தம்முடைய பிரக்ருதியால் உண்டான தேகத்தில் சங்கத்தால் எம்பெருமான் தம் வார்த்தையை ஆதரியா விட்டவாறே -சதுர் விம்சதி தத்தவாத்மிகையான பிரக்ருதியினுடைய ஹேயதையை அவனுக்கு உணர்த்தி -இத்தை விரும்பாதே போக்கி யருள வேணும் -என்கிறார் –

ஆக இப்படி இவருடைய-பர உபதேச விஷயங்களும் – உபதேச ஹேதுக்களும் – உபதேச சாபல்யமும் –
உபதேசம் தான் அனுபவத்தை விட்டு இராது என்னும் இடமும் சொல்லிற்று ஆய்த்து —

–——————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ ஆய் ஜநந்யாசார்யர்‌ ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ ஆசார்ய ஹ்ருதயம்‌–ஸ்ரீ திராவிட ப்‌,ரஹ்ம ஸூத்ரம்‌ -11-விஸேஷ பாதம்‌-16–பகவத்‌ கீதா ஸ்ரீமூக, ஸுத்தி விஸேஷாதி கரணம்‌ (190–194)-ஸ்ரீ மணவாள மா முனிகள் -ஸ்ரீ ஆய் ஸ்வாமிகள் வியாக்யானங்கள்–

July 27, 2026

1) பூர்வ த்‌,விகம்‌ – ஸூரி வைபவம்‌ 1 முதல்‌ 186 வது ஸூத்ரம்‌ வரை (186)
(2) உத்தர த்‌,விகம்‌ – ஸூரி ஸுக்த்தி வைபவம்‌– 187 முதல்‌ 234 முடிய (48)

(1) ப்ரத, மோத்‌, யாயம் -ஸாஸ்த்ர தாத்பர்ய அதிகாரி வைபவம்‌ 1-38 (38)
(2) த்‌,விதீயோத்‌, யாய: – க்‌,ரந்த, கர்த்ரு வைப,வம்‌ 39 – 186 (148)
(3) த்ருத்யோத்‌, யாயம் – க்‌,ரந்தாந்தர தார தம்ய வைப,வம்‌ 187-207 (21)
(4) சதுர்த்தே ரத்‌, யாயம் -கிரந்த, ப்ரதிபாத்‌,ய க்ரம வைப,வம்‌ 208-234 (27)

11-விஸேஷ பாத : –190–194—ஒரே அதிகரணம் -மொத்தம் –5–ஸூரணைகள்
16–பகவத்‌ கீதா ஸ்ரீமூக, ஸுத்தி விஸேஷாதி கரணம்‌ 190–195-மொத்தம் –5–ஸூரணைகள்-

ஆக ஸ்ரீ கீதையோடு திரு வாய் மொழிக்கு உண்டான சாம்யம் சொல்லிற்று கீழ் . அதில் இதுக்கு உண்டான ஆதிக்யத்தை பல ஹேதுக்களாலும் சொல்கிறது மேல் … பிரதமம் வக்த்ரு வைலஷண்யத்தால் வந்த ஏற்றம் சொல்கிறது இதில் –ஆக இதுக்குக்‌ கீழ்‌ ஸ்ரீ கீதையோ டொக்கத்‌ திருவாய்மொழிக்கு ஸாம்யம்‌ சொல்லிற்று. இனி மேல்‌ இதற்குண்டான வக்த்ரு வைலக்ஷண்யமும்‌ ப்ரபந்தோதய ஹேது வைஷம்யமும்‌ உபதேஸத்தனுடைய பல வைஷம்யமும்‌, ப்ரபந்த ப்ரதிபாத்‌ய அர்த்த வைஷம்யமும்‌ சொல்லுகிறது.

அது தத்வ உபதேசம் இது தத்வ தர்சி வசனம்-சூரணை -190-

அதாவது-அந்த ஸ்ரீ கீதை பிரபந்தம் –-தத்வம் ஜிஜ்ஞா சமா நாநாம் ஹேதுபிஸ் சர்வதோமுகை
தத்வமேகோ மஹாயோகீ ஹரிர் நாராயண பர
–பாரதம் -சாந்தி பர்வம் -347-83-என்கிறபடியே – தத்வ பூதனான சர்வேஸ்வரன் தானே உபதேசித்தது -இப் பிரபந்தம் –-தத் வித்தி ப்ரனிபாதேன பரி பிரச் நேன சேவையா உபதேஷ்யந்தி தே ஞானம் ஞானிநஸ் தத்வ தர்சின –4-34-என்று ஜ்ஞான உபதேசத்துக்கு ஆப்த தமராக அவன் தான் அருளிச் செய்த தத்வ தர்சிகளில் தலைவரான ஆழ்வார் வசனம் என்கை .-இத்தால் சொல்லிற்று ஆய்த்து ..-அஹம் க்ருதஸ்னஸ்ய ஜகத பிரபவ பிரளயஸ் ததா
மத்த பரதரம் நாந்யத் கிஞ்சி தஸ்தி தனஞ்சய
–7-6-என்றும்–மா மேகம் சரணம் வ்ரஜ –18-66-என்றும்
இப்படி ஸ்வ வைபவத்தை ஸ்யமேவ அருளிச் செய்கையாலே ஸ்வ பிரசமசை போலே இருக்கையாலே -அது மந்த மதிகளுக்கு விஸ்வசநீயம் ஆகாது

(அது தத்வோபதேஸம்‌) அந்த ஸ்ரீகீதை பரதத்த்வ பூதனான க்ருஷ்ணன்‌ தானே உபதேஸித்தது.  இந்த ப்ரபந்தம்‌ (தத்த்வ தர்ஸி வசநம்‌) “தத்‌ வித்தி ப்ரணிபாதேந பரிப்ரஸ்நேந ஸேவயா உபதேஷயந்தி தே ஜ்ஞாநம்‌ ஜ்ஞாநிந: தத்த்வ தர்ஸிந:” (கீதை 4-34) என்று இது அவனும்‌ ஆப்த தமனாக அருளிச் செய்த தத்வ தர்ஸிகளான இவருடைய வார்த்தை. “அஹம்‌ க்ருத்ஸ்நஸ்ய ஐகத: ப்ரபவ: ப்ரலயஸ் ததா மத்த: பர தரம்‌ நாந்யத்‌ கிஞ்சிதஸ்தி தநஞ்ஜய” (கீதை 7-6 என்று ஸ்வ வைபவத்தைத்‌ தானே அருளிச் செய்கையாலே ஸ்வ ப்ரமம்ஸை போலிருக்கையாலே மந்த மதிகளுக்கு விஸ்வஸநீயமல்ல.

தத்வித்தி ப்ரணிபாதேந பரிப்ரஸ்நேந ஸேவயா
உபதேக்ஷ்யந்தி தே ஜ்ஞாநம் ஜ்ஞாநிநஸ்தத்த்வதர்ஸிந
:–4-34-அதனை வணக்கத்தாலும், சூழ்ந்த கேள்வியாலும் தொண்டு புரிவதாலும் அறிந்து கொள்.-உண்மை காணும் ஞானிகள் உனக்கு ஞானத்தை உபதேசிப்பார்கள்.

ஏதத்யோநீநி பூதாநி ஸர்வாணீத்யுபதாரய
அஹம் க்ருத்ஸ்நஸ்ய ஜகத: ப்ரபவ: ப்ரலயஸ்ததா
–7-6–எல்லா உயிர்களுக்கும் அது காரண மென்றுணர். அதனால், நான் உலக முழுமைக்கும் ஆக்கமும் அழிவுமாவேன்.–மத்த: பரதரம் நாந்யத்கிஞ்சிதஸ்தி தநஞ்ஜய மயி ஸர்வமிதம் ப்ரோதம் ஸூத்ரே மணிகணா இவ–7-7-தனஞ்ஜயா, என்னைக் காட்டிலும் உயர்ந்த பொருள் வேறெதுவுமில்லை.-நூலில் மணிகளைப் போல் இவ்வையகமெல்லாம் என் மீது கோக்கப்பட்டது.

ஸர்வதர்மாந்பரித்யஜ்ய மாமேகம் ஸரணம் வ்ரஜ
அஹம் த்வாம் ஸர்வபாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மா ஸுச:–18-66-எல்லா அறங்களையும் விட்டு விட்டு என்னையே சரண் புகு. எல்லாப் பாவங்களினின்றும் நான் உன்னை விடுவிக்கிறேன். துயரப்படாதே.

சுத்த சத்வ ஜ்ஞானரான இவர்-மண்ணும் விண்ணும் எல்லாம் உடன் உண்ட நம் கண்ணன் கண் அல்லது இல்லையோர் கண்ணே -2-2-1-என்றும் – கறுத்த மனம் ஒன்றும் வேண்டா -கண்ணன் அல்லால் தெய்வம் இல்லை -5-2-7–என்றும் – கண்ணன் அல்லால் இல்லை கண்டீர் சரண் திண்ணமா நும் உடைமை உண்டேல் அவன் அடி சேர்த்து உய்மினோ -9-1-10–என்று இப்படி மத்யஸ்தமாக நின்று தத் வைபவத்தை உபதேசிக்கையாலே , இது மந்த மதிகளுக்கும் விஸ்வ நீயமாய் இருக்கும் என்கிற ஆதிக்யம்

பொலிந்து நின்ற பிரான்‌ கண்டீர்‌ ஒன்றும்‌ பொய்யில்லை போற்றுமினே” (திருவாய்மொழி 4-10-5) என்று மத்‌யஸ்த்தரான இவர்‌ அருளிச்‌ செய்த இது ஆப்த வாக்யமாகையாலே விஸ்வஸநீயம்‌. ஆகை யிறே அவன் தான்‌ தத்த்வதர்ஸிகளை ப்ரஸம்ஸித்து அவர்களுபதேஸிக்குமதுவே ஜ்ஞாநம் என்கிறது –

திண்ணன் வீடு முதல் முழுதுமாய்
எண்ணின் மீதியன் எம்பெருமான்
மண்ணும் விண்ணும் எல்லாம் உடன் உண்ட நம்
கண்ணன் கண் அல்லது இல்லையோர் கண்ணே –
2-2-1-பூம் அந்தரிஷாதிகளை பிரிகதிர் படாமே தரம் பாராதே ஒரு காலே திரு வயிற்றிலே வைத்து ரஷித்த-நம்-கண்ணன்–என்று –க்ருஷ்ண ஏவ ஹி லோகா நாம் உத்பத்திரபிசாப்ய -க்ருஷ்ண ஸ்யஹிக்ரு தேபூத மிதம் விஸ்வம் சராசரம் -என்கிற பிராமண ப்ரஸித்தியைச் சொல்லுகிறது-நம் -என்று அத்தை நமக்கு பிரகாசிப்பித்தவன் கண் –-த்ருஷ்ட்டி -நிர்வாஹகன் –-களை கண் –என்று நிர்வாஹகரை சொல்லக் கடவது இறே அல்லது இல்லையோர் கண்ணே- வேறு ஒரு த்ருஷ்ட்டி இல்லை -அர்த்தம் இன்றிக்கே -பீலிக் கண் -மாலைக் கண் -என்னுமா போலே-யுக்தி மாத்ரமாக இருப்பது ஓன்று இல்லை கண்ணன் கண் –என்றது அன்வயத்தாலே
அல்லது இல்லையோர் கண் – என்றது வியதி ரேகத்தாலே-இல்லையோர் கண் -இது திண்ணம்

இலிங்கத் திட்ட புராணத்தீரும் சமணரும் சாக்கியரும்
வலிந்து வாது செய்வீர்களும் மற்று நும் தெய்வமுமாகி நின்றான்
மலிந்து செந்நெல் கவரி வீசும் திருக் குருகூர் அதனுள்
பொலிந்து நின்ற பிரான் கண்டீர் ஒன்றும் பொய்யில்லை போற்றுமினே.–4-10-5-பரம பதத்தை விட்டு இவ்வருகே தாழ நிற்க நிற்க குணங்கள் மேன்மேல் என விஞ்சி வருகிற படி-சொன்னார் சொன்ன யுக்திகள் எல்லா வற்றுக்கும் அவ்வருகாய் நிற்கை என்னவுமாம்-கண்டீர் ஒன்றும் பொய்யில்லை போற்றுமினே.– இத் தேவதைகள் பக்கல் உதகர்ஷம் எல்லாம் பொய்யாய் இருக்குமா போலே -இவ்விஷயத்தில் சொல்லுகிற உதகர்ஷத்துக்கு ஒன்றும் பொய்யில்லை-போற்றுமினே -சடக்கென ஆஸ்ரயிங்கோள் -நீங்கள் அபேக்ஷியாது இருக்க நான் சொல்லுகிறது உங்கள் துர்தசையைப் பற்ற –

நிறுத்தி நும் உள்ளத்துக் கொள்ளும் தெய்வங்கள் உம்மை உய்யக்கொள்
மறுத்தும் அவனொடே கண்டீர் மார்க்கண்டேயனும் கரியே
கறுத்த மனம் ஒன்றும் வேண்டா கண்ணன் அல்லால் தெய்வம் இல்லை
இறுப்பதெல்லாம் அவன் மூர்த்தி யாயவர்க்கே இறுமினே.–
5-2-7-இதர தேவதைகள் பக்கல் பரத்வ புத்தி யாகிற தண்ணிய நெஞ்சு ஒன்றும் உங்களுக்கு வேண்டா –அஜ்ஜஞஸ் சாஸ்திரச்சா நச்சா சம்சயாத்மா
கண்ணன் அல்லால் தெய்வம் இல்லை-சர்வ தேவா தேவகீபுத்ர ஏவ -என்கிறபடியே கிருஷ்ணனை ஒழிய ஆஸ்ரயணீயர் இல்லை – அவனுக்கு பிரகார பூதராய் கொண்டு உளராம் அத்தனை அல்லாத தேவதைகள் –யோயோ யாம் யாம் தனும் பக்தஇறுப்பதெல்லாம் –-தேவதா ஆராதனம் -என்று தோற்றுகிற நித்ய நைமித்திக கர்மம் எல்லாம்-அவன் மூர்த்தி யாயவர்க்கே இறுமினே.–- இவர்கள் அவனுக்கு சரீர பூதர் ஆனவர்கள் -அந்தராத்மா சர்வேஸ்வரன் -என்று புத்தி பண்ணி தத் சமாராதன புத்தயா பண்ணுங்கோள் -தன் திருவடிகளை பிடித்தார்க்கு தானே பலம் கொடுக்கக் கடவனாய் இருக்கும் இறே அவன் –

கண்ணன் அல்லால் இல்லை கண்டீர் சரண் அது நிற்க வந்து
மண்ணின் பாரம் நீக்குதற்கே வடமதுரைப் பிறந்தான்
திண்ண மா நும் உடைமை உண்டேல் அவன் அடி சேர்த்து உய்ம்மினோ

எண்ண வேண்டா நும்மது ஆதும் அவன் அன்றி மற்று இல்லையே–9-1-10-கிருஷ்ணனை ஒழிய வேறு சரணம் ஆவார் இல்லை என்னும் இவ்வர்த்தத்தை ஸ்தாபிக்கைக்காகவும் -அதுக்கு உறுப்பாக பூ பாரத்தை போக்கி அருளுகைக்கும் ஸ்ரீ மதுரையிலே வந்து திருவவதாரம் பண்ணினான் -உங்களுடைய ஆத்மாத்மீயங்கள் எல்லாம் சேஷியாயும் ஸூலபனானாயும் உள்ள அவன் திருவடிகளிலே சேஷத்வேன த்ருடமாக சமர்ப்பியுங்கோள் – உண்டேல்-என்கிறது ஸ்வ பஷத்தால் இல்லை -அவர்களுடைய அந்யதா பிரதிபத்தியாலே வந்தன உண்டாகில் என்கை –எண்ண வேண்டா-அவனது நம்மதோ என்று விசாரிக்க வேண்டா –உங்களோடு உங்கள் உடைமையோடு வாசி யற அவனுக்கே சேஷம்-அதாவா-உங்களுக்கு சாத்யமானவை எல்லாம் சாதித்து தருவான் அவன் ஒழிய வேறு இல்லை –சமிதை பாதி சாவித்ரி பாதி யாய் உங்கள் தலையிலும் சிறிது கிடக்கிறது அன்று -அவனே நிரபேஷ உபாயம் -என்றுமாம் –

பிரபந்த உதய ஹேது வைலஷண்யத்தால் வந்த ஆதிக்யம் சொல்கிறது மேல் —

அது ஐவரை வெல்வித்துப்‌ பதிற்றைந்திரட்டி படச் சொன்னது; இது நாடாகத்‌ தோற்றோமென்று ஐயைந்து முடிப்பான்‌ சொன்னது.-சூரணை-191-

அதாவது ..அந்த பிரபந்தம்–அன்று ஐவரை வெல்வித்த–திருவாய் -4-6-1-என்கிறபடியே –
த்ரௌபத்யா சகிதாஸ் சர்வே நமஸ் சக்ருர் ஜனார்த்தனம் –பாரதம் ஆரண்ய –192-56- -என்று ராஜ்ய ஆ காங்க்ஷிகளாய் சரணம் புக்கு நிற்கிற பாண்டவர்களையும் – ந காங்க்ஷே விஷயம் க்ருஷ்ணே -ஸ்ரீ கீதை -1–32 – என்ற அர்ஜுனனை –கரிஷ்யே வசனம் தவ–ஸ்ரீ கீதை -18-73- -என்னப் பண்ணி யுத்தத்திலே மூட்டி -விஜயீகளாக்கி- பதிற்றைந்திரட்டி படை வேந்தர் பட -பெரிய திருமொழி -2-4-4-என்கிறபடியே -அவர்களுக்கு பிரதி பஷ பூதரான துர்யோனாதிகள் நூற்றுவரையும் முடிக்கைக்காக சொன்னது-

அது ஐவரை வெல்வித்துப்‌ பதித்தைந்திரட்டி படச்‌ சொன்னது) அந்த ஸ்ரீ கீதை “த்‌ரெளபத்யாஸ்‌ ஸஹிதாஸ் ஸர்வே நமஸ் சக்ருர்‌ ஜநார்த்த நம்‌” (பார.ஆர. 192-56) என்று ராஜ்யகாங்க்ஷிகளாய்‌ வந்து ஸரணம்‌ புகுந்த பாண்டவர்களைவரையும்‌ “அன்றைவரை வெல்வித்த” (திருவாய்மொழி 4-6-1) என்கிறபடியே “ந காங்க்ஷே விஜயம்‌ க்ருஷ்ண” (8. தை 1-32) என்ற இவனை” ஸ்திதோஸ்மி‘ ‘ (கீதை 18-73) என்னப்‌ பண்ணி யுத்தத்திலே விஜயிகளாக்கி, “பதிற்றைந் திரட்டிப்‌ படை வேந்தர் பட (பெரியதிருமொழி 2-4-4) என்று அவர்களுக்கு விரோதிகளான துர்யோதநாதிகளை முடிக்கைக்காகச்‌ சொன்னது.-

தீர்ப்பாரை யாம் இனி எங்ஙனம் நாடுதும் அன்னைமீர்!
ஓர்ப்பால் இவ் வொண்ணுதல் உற்ற நல் நோய் இது தேறினோம்;
போர்ப்பாகு தான் செய்து அன்று ஐவரை வெல்வித்த மாயப்போர்த்
தேர்ப் பாகனார்க்கு
இவள் சிந்தை துழாஅய்த் திசைக்கின்றதே.–4-6-1—ந காங்ஷே விஜயம் கிருஷ்ண -என்று இவர்கள் தாங்களும் யுத்தத்துக்கு ஆளாகாத படியான நூற்றுவர் எதிரிகளாக ஐவரான பாண்டவர்கள் வெல்லும் படி பண்ணினான்-அப்பஷத்துலே யாயிற்று இவள் ஈடுபட்டது
துர்யோத நாதிகளை தோற்பிக்கிலும் இவளை தோற்ப்பிக்கை அரிதுmஅவர்களை ஸ்வாதந்த்ர அபிமானத்தாலே தோற்பிக்க ஒண்ணாது -இவளை ஸ்த்ரீத்வத்வ அபிமானத்தாலே தோற்ப்பிக்க ஒண்ணாது

ந காங்÷க்ஷ விஜயம் க்ருஷ்ண ந ச ராஜ்யம் ஸுகாநி ச
கிம் நோ ராஜ்யேந கோவிந்த கிம் போகைர்ஜீவிதேந வா-
-1-32–கண்ணா, நான் வெற்றியை விரும்புகிலேன்; ராஜ்யத்தையும் இன்பங்களையும் வேண்டுகிலேன். கோவிந்தா. நமக்கு ராஜ்யத்தால் ஆவதென்? இன்பங்களால் ஆவதென்? உயிர் வாழ்க்கையாலேனுமாவ தென்னே?

நஷ்டோ மோஹ: ஸ்ம்ருதிர்லப்தா த்வத்ப்ரஸாதாந்மயாச்யுத
ஸ்திதோऽஸ்மி கதஸந்தேஹ: கரிஷ்யே வசநம் தவ
–18-73–மயக்க மழிந்தது நின்னருளாலே, அச்சுதா, நான் நினைவு அடைந்தேன்; ஐயம் விலகி நிற்கிறேன்; நீ செய்யச் சொல்வது செய்வேன்.

தாங்காத தோர் ஆளரியாய் அவுணன் தனை வீட முனிந்தவனால் அமரும்
பூம் கோதையர் பொங்கெரி மூழ்க விளைத்தது வன்றியும் வென்றி கொள் வாளமரில்
பாங்காக முனைவரொடு அன்பளவிப் பதிற்றைந்தி ரட்டிப்படை வேந்தர் பட
நீங்காச் செருவில் நிறை காத்தவனுக்குகிடம்
மா மலையாவது நீர் மலையே–2-4-4-அற்றைக்கு நூறு ராஜாக்களை வெற்றி கொண்டு அல்லது மீளாத பூசலிலே த்ரௌபதி உடைய ஸ்த்ரீத்வத்தை பரிஹரித்தவனுக்கு 

இந்த பிரபந்தம் –-தோற்றோம் மட நெஞ்சம் எம்பெருமான் நாரணற்கு -திருவாய் -2-1-7—என்று வகுத்த சேஷி பக்கலிலே எல்லோரும் அபஹ்ருத சித்தராய் போம்படியாக –-முடிப்பான் சொன்ன ஆயிரம் –திருவாய் -8-7-11–என்கிற படியே அதுக்கு விரோதியாய் இருந்துள்ள – பொங்கு ஐம்புலனும் பொறி ஐந்தும் –திருவாய் -10-7 10–இத்யாதியால் சொன்ன சதுர் விம்சதி தத்வாத் மகமான அசித்திலும் –
ஞான ஆனந்த லஷணமாய் கொண்டு ஸ்வ போக்யதையாலே தன் பக்கலிலே கால் தாழ்த்தப் பண்ணும் ஆத்மாவிலும் உண்டான சங்கத்தை முடிப்பதாக சொன்னது என்கை-இத்தால் மோஷ சாஸ்திரமே ஆகிலும் உதிக்கிற போது அன்யார்த்தமாக உதித்த குறை உண்டு அதுக்கு –மோஷார்தமாகவே உதித்த ஏற்றம் உண்டு இதுக்கு என்றது ஆய்த்து ..

(இது நாடாகத்‌ தோற்றோம்‌ என்று ஐயைந்து முடிப்பான்‌ சொன்னது) இந்த ப்ரபந்த,ம்‌ “தோற்றோம்‌ மடநெஞ்சம்‌ எம்பெருமான்‌ நாரணற்கு” (திருவாய்மொழி 2-1-7) என்று வகுத்த ஸேஷியானவன்‌ பக்கலிலே ஸர்வரும்‌ தோற்றோம்‌ என்று அநந்யார்ஹ ஸேஷ பூதராம்படி ஐயைந்தையும்‌ முடிப்பான்‌ சொன்னது. அந்த ஸேஷத்வ விரோதியான ப்ரக்ருதி ப்ராக்ருத ஸங்கத்தையும்‌ ஆத்மாவினுடைய ஸ்வாதந்த்ர்யத்தையும்‌ அறுத்து ஸம்ஸார பந்தத்தையும்‌ முடிப்பான்‌ சொன்னது ஆகையாலே அது பந்த மோக்ஷங்கள்‌ இரண்டுக்கும்‌ ஹேது. இது மோக்ஷ ஏக ஹேதுவாயிருக்கும்‌ என்கிறார் –

தோற்றோம் மட நெஞ்சம் எம்பெருமான் நாரணற்கு எம்
ஆற்றாமை சொல்லி அழுவோமை நீ நடுவே
வேற்றோர் வகையில் கொடியதாய் எனையூழி
மாற்றாண்மை நிற்றியே வாழி கனையிருளே –2-1-7—பற்றிற்று விடாத சபலமான நெஞ்சு -என்னுதல்
பவ்யமான நெஞ்சு என்னுதல்-எம்பெருமான்–அப்ராப்த விஷயத்துக்கு தோற்றோமோ – நாரணற்கு- அல்லோம் என்றாரையும் விட மாட்டாத வத்சலனுக்கு – ஸூ லபனுக்கு என்னவுமாம் ப்ராப்த விஷயத்தில் வாத்சல்யாதிகளால் இழந்தோம் என்கை –

சுடர்ப் பாம்பணை நம் பரனைத் திருமாலை
அடிச்சேர் வகை வண் குருகூர்ச் சடகோபன்
முடிப்பான் சொன்ன வாயிரத்து இப்பத்தும் சன்மம்
விட தேய்ந்தற நோக்கும்
தன் கண்கள் சிவந்தே–8-7-11-சம்சார சம்பந்தத்தை அறுக்க அருளிச் செய்த ஆயிரத்திலும் இப்பத்து –அடிச்சேர்வகை –முடிப்பான் –-என்றுமாம் –

மங்க ஒட்டு உன் மா மாயை திரு மால் இரும் சோலை மேய
நங்கள் கோனே யானே நீ ஆகி என்னை அளித்தானே
பொங்கு ஐம் புலனும் பொறி ஐந்தும் கருமேந்த்ரியம் ஐம் பூதம்
இங்கு இவ் வுயிர் ஏய் பிரகிருதி மான் ஆங்காரம் மனங்களே
–10-7-10–சேதனனை விக்ருதனாம் படி பண்ணும் சப் தாதி விஷயங்கள் ஐந்தும் –பொறி ஐந்தும் -வறை நாற்றத்தைக் காட்டி அகப்படுத்துமா போலே சப் தாதிகளிலே மூட்டுகிற ஸ்ரோத்ராதிகள் ஐந்தும் –கருமேந்த்ரியம் -கர்ம இந்திரியங்கள் ஐந்தும் —ஐம் பூதம்--பிருதிவ்யாதி பூதங்கள் ஐந்தும் — இங்கு இவ் வுயிர் ஏய் பிரகிருதி மான் ஆங்காரம் மனங்களே-– -இஸ் சம்சாரத்திலே இருக்கிற -இவ்வாத்மாவைத் தொற்றி இருக்கிற மூல பிரகிருதி என்ன -மஹான் அஹங்கார மனஸ் ஸூ க்கள் என்ன –இவை யாகிற உன்னுடைய மஹா மாயையை மங்க வொட்டு என்று அந்வயம் –

உபக்கிரம உப சம்கார பிரகிரியையால் வந்த வைபவம் சொல்கிறது இதில்

அங்கு நம்பி சரண் என்று தொடங்கி முடிவில் அப்ரியம் என்றது .. இங்கு பரமே என்று இழிந்து பொலிக என்று உகந்தது–சூரணை -192-

அதாவது-அந்த பிரபந்த்ததில் உபதேசம் தொடங்குகிற போது –-நாந்தகம் ஏந்திய நம்பி சரண் என்று தாழ்ந்த தனஞ்சயற்காகி–பெரிய திருமொழி –1-9-4-என்கிறபடியே , சிஷ்யஸ் தேஹம் சாதி மாம் த்வாம் பிரபன்னம்–ஸ்ரீ கீதை –2-7-என்று அர்ஜுனனுடைய அனுவர்தனம் கண்டு – ப்ரீதி யோடே உபக்ரமித்து —
நூனமச்ரத் ததாநோசி துர்மே தாச்சாசி பாண்டவ அபுத்த்யா அன்ன ஜாநீஷே தன்மே ஸூமஹத் அப்ரியம் –ஸ்ரீ அநு கீதை – (அர்ஜுனா நிச்சயம் சிரத்தை இல்லாதவனாய் இருக்கிறாய்-கெட்ட புத்தியையும் யுடையவனாய் இருக்கிறாய் – இக்காரணத்தால் அறிவின்மையால் அறியவில்லையோ அது எனக்குப் பெரிதும் விருப்பம் இல்லாதது ஆகும் )- என்று அவன் பக்கல் அனவதானம் காண்கையாலே அப்ரியத்தோடே தலைக் கட்டிற்று —

அதினுடைய உபக்ரமத்திலே “நாந்தகமேந்திய நம்பி சரண்‌ என்று தாழ்ந்த தனஞ்சயற்காகி’ (பெரியாழ்வார்‌ திருமொழி 1-9-4) என்று ‘ ஸிஷ்யஸ்தேஹம்‌ ஸமாதி, மாம்‌ த்வாம்‌ ப்ரபந்நம்‌” (கீதை 2-7) என்று ஸிஷ்யனான அர்ஜுநனுடைய அநுவர்த்தந பூர்வகமாகையாலே ப்ரீதியோடே உபக்ரமித்து, “நூநமஸ்ரத்‌ததா நோஸி துர்மேதஸ்சாஸி பாண்டவ அபுதத்‌யா யந்ந ஜாநீஷே தந்மே ஸுமஹத ப்ரியம்‌” (அனுகீதை) என்று அவன்‌ பக்கலிலே அவிஸ்வாஸத்தைக்‌ காண்கையினாலே அப்ரீதியோடே தலைக் கட்டிற்று.

நாந்தகம் ஏந்திய நம்பி சரண் என்று
தாழ்ந்த தனஞ்சயருக்காகி தரணியில்
வேந்தர்கள் உட்க விசயன் மணித் திண் தேர்

ஊர்ந்தவன் என்னை புறம் புல்குவான் உம்பர்கோன் என்னைப் புறம் புல்குவான் -1-9 4-நாந்தகம் என்னும் பேரை உடைத்தான -திருக்குற்றுடை வாளை- ஆஸ்ரித ரஷணத்தில் விளம்ப அசஹதையாலே -சர்வ காலமும் பூ ஏந்தினால் போல் – திருக் கையில் தரித்து கொண்டு –ரஷிக்கைக்கு ஈடான குணங்களால் -பூர்ணனாய் இருக்கிற நீ ரஷகனாக வேணும் என்று –பிரபதனம் செய்த அர்ஜுன பஷ பாதியாய்-பூமியில் உள்ள ராஜாக்கள் எல்லாரும் அர்ஜுனன் அளவில் பஷ பாதத்தையும்
தேரை நடத்துகிற சாமர்த்தியத்தையும் கண்டு – நாம்  இனி ஜீவிக்கை எனபது ஓன்று உண்டோ –
என்று நெஞ்சு உளுக்கும்படியாக

கார்பண்யதோ÷ஷாபஹதஸ்வபாவ:
ப்ருச்சாமி த்வாம் தர்மஸம்மூடசேதா:
யச்ச்ரேய: ஸ்யாந்நிஸ்சிதம் ப்ரூஹி தந்மே
ஸிஷ்யஸ்தேஹம் ஸாதி மாம் த்வாம் ப்ரபந்நம்
–2-7-சிறுமையாகிய குறையால் இயல்பு அழிந்தவனாய், அறம் இன்னது என்றுணராமல் மயங்கிய அறிவுடன், யான் உன்னைக் கேட்கிறேன். எது நன்றென்பதை எனக்கு நிச்சயப்படுத்திக் சொல்லுக. நான் உன் சீடன். உன்னையே சரணமெனப் புகுந்தேன். கட்டளை தருக.

இப் பிர பந்தத்தில் விமுகரைக் குறித்து கிருபையாலே உபதேசிக்கையாலே –-உபதேச உபக்ரமத்தில்
ஏ பாவம் பரமே ஏழுலகும் ஈ பாவம் செய்து அருளால் அளிப்பார் ஆர் –திருவாய் -2-2-3- -என்று
அப்ரிதியோடே உபக்ரமித்து -அவ் உபதேசம் கேட்டு ஜகத்தாக திருந்துகையாலே -இப்படி திருந்தினவர்களைக் கண்டு –-பொலிக பொலிக பொலிக –திருவாய் -5-2-1- -என்று
மங்களாசாசனம் பண்ணி –-உகந்து பணி செய்தேன்–திருவாய் -10-8-10- -என்னும் படி ப்ரீதியோடே தலைக் கட்டிற்று என்கை .

(இங்கு பரமே என்றிழிந்து பொலிக என்றுகந்தது) இவருபதேஸிக்கிற விடத்தில்‌ தாந்தராய்‌ ஸமித் பாணிகளாய்க்‌ கொண்டு அநுவர்த்திப்பாரின்றிக்கே விமுகரா யிருக்க க்ருபையாலே உபதேஸிக்கையாலே உபதேஸோபக்ரமத்திலே “ஏபாவம்‌ பரமே” (திருவாய்மொழி 2-2-1) என்று அப்ரீதியோடே உபக்ரமித்து, அவ்வுபதேஸம்‌ கேட்டு ஜகத்தாகத்‌ திருந்துகையாலே அப்படித்‌ திருந்தினவர்களைக்‌ கண்டு “பொலிக பொலிக” (திருவாய்மொழி 5-2-1) என்று மங்களாஸாஸநம்‌ பண்ணி உகப்போடே தலைக்‌ கட்டிற்று

ஏ பாவம் பரமே யேழு லகும்
ஈ பாவம் செய்து அருளால் அளிப்பாரார்

மா பாவம் விட அரற்குப் பிச்சை பெய்
கோபால கோளரி யேறன்றியே –2-2-2—இவனுடைய பரத்வம் சாத்யமாய் -சாதிக்க வேண்டுவதே -என்ன பாபமோ என்கிறார் –ஏ என்றது ஓ என்றபடி -விஷயத்தை அதிசய ஸூ சகம் –-பரமே-ஞானம் பிறந்தால் குண அனுபவம் பண்ணுகை அன்றிக்கே-சிலருடைய விப்ரதிபத்தியை பரிஹரிக்கை பரமாவதே சகல சேதனருடைய பாபங்களையும் தன் கிருபையால் போக்கி ரக்ஷிப்பார் யார் –

பொலிக பொலிக பொலிக போயிற்று வல்லுயிர்ச் சாபம்
நலியும் நரகமும் நைந்த நமனுக்கு இங்கு யாதொன்று மில்லை

கலியுங் கெடும் கண்டு கொண்மின் கடல் வண்ணன் பூதங்கள் மண் மேல்
மலியப் புகுந்து இசை பாடி ஆடி உழி தரக் கண்டோம்.–5-2-1-சம்ருத்தம் யாயிற்று -முக்கால் அருளிச் செய்கிறது -வைதிகமான மங்களா சாசனமும் -சாந்தி சாந்தி சாந்தி -என்று முக்கால் சொல்லுகையாலே
போயிற்று வல்லுயிர்ச் சாபம்--உயிரினுடைய வலிய பாபமானது போயிற்று –பாபம் ஆகிறது -அவித்யா கர்மா வாசனா ருசிகள் –இத்தை சாபம் என்கிறது அனுபவித்தால் அல்லது போகாமையாலும் -ஆகந்துகம் ஆகையாலும்-நலியும் நரகமும் நைந்த நமனுக்கு இங்கு யாதொன்று மில்லை-கர்மம் போகையால் கர்ம அநு குணமாக அனுபவிப்பிக்கும் நரகமும் கோப்புக் குலைந்து கட்டு அழிந்து போயிற்று –சிறை கிடப்பார் இல்லாமையால் சிறைக் கூடம் பேணா வேண்டா விறே – கர்மமும் கர்ம அனுபவ ஸ்தானமும் போகையாலே-அதுக்கு நிர்வாஹகானான யமனுக்கு இந்த சம்சாரத்தில் சாத்தியம் ஒன்றும் இல்லாத படி யாயிற்று –நமன் தமரால் ஆராய பட்டு அறியார் -ஸ்வ புருஷ மபிவீஷ்ய பாச ஹஸ்தம் –அவன் முக்த ப்ராப்ய பூமியிலே ஆராயில் ஆராயும் இத்தனை -இங்கு ஓர் அவகாசமும் இல்லை என்கை-அபாபனான தர்ம புத்திரனுக்கு ஒரு பாப லேசத்தாலே நன்றாக தர்சனம் பண்ண வேண்டிற்று இ றே -அதுவும் இல்லை இறே இவர்களுக்கு –-கலியுங் கெடும் கண்டு கொண்மின் –
அதுக்கு எல்லாம் அடியான கால தோஷமும் போயிற்றே -கலிக்கு அடைத்த காலமாய் இருக்க போகை யாவது என் என்னில் –அநுபூத அர்த்தத்திலும் சம்சயம் உண்டோ 

உற்றேன் உகந்து பணி செய்ய உன பாதம்
பெற்றேன் ஈதே இன்னம் வேண்டுவது எந்தாய்

கற்றார் மறை வாணர்கள் வாழ் திருப் பேராற்கு
அற்றார் அடியார் தமக்கு அல்லால் நில்லாவே–10-8-10—கெடு மரக்கலம் கரை சேர்ந்தால் போலே கிட்டிக் கொடு நின்றேன் -ப்ரீதி ப்ரேரிதனாயக் கொண்டு -திருவாய் மொழி பாடி -உன் திருவடிகளை அனுபவிக்கப் பெற்றேன் – –சாதகமாய் மேல் -சாத்தியமாகச் சொல்லுகிறது அன்று -இரண்டும் ஏக காலத்திலே உள்ளதாகையாலே –ஈதே இன்னம் வேண்டுவது-இது தானே மாறி மாறி யாவதாத்ம பாவியாகச் செல்லுகை இறே –பு நரா வ்ருத்தி இன்றிக்கே ஒழிகை யாவது -மீளாது ஒழிகை -விதி போலே இருக்கிறதன்றே –எந்தாய்--இவ்வனுபவம் ஸ்வரூப அனுரூபம் என்கிறது -இத்தலைக்கு சேஷத்வமும் தேவர்க்கு சேஷித்வமும் இறே ஸ்வரூபம் -இவர் அபேக்ஷித்த படியே செய்கிறோம் என்ன –ப்ரீதராய் அருளிச் செய்கிறார் –

இத்தால் அர்ஜுனன் யுத்தே பிரவ்ருதனான மாத்ரம் ஒழிய சித்த தர்ம பர்யந்தம் உபதேசித்த பலம் சித்திக்கப் பெறாமையாலே உபதேசம் ச பிரயோஜனம் ஆய்த்து இல்லை அங்கு – அது ச பிரயோஜனம் ஆய்த்தது இங்கே என்றது ஆய்த்து-

ஆகையாலே உபதேஸம்‌ ஸப்ரயோஜநமாய்த்தது இதிலே என்கிறார் 

பிரதி பாத்ய அர்த்த கௌரவத்தால் வந்த வைபவம் சொல்கிறது இதில் 

அதில் சித்த தர்ம விதி ..-இதில் விதி அனுஷ்டானங்கள் –சூரணை -193-

அதாவது- அந்த கீதையில் –-மா மேகம் சரணம் விரஜ –ஸ்ரீ கீதை –18-66–என்ற சித்த தர்மம் மாத்ரமே உள்ளது ..-இந்த பிரபந்தத்தில் –-திரு நாரணன் தாள் காலம்பெற சிந்தித்து உய்மினோ-திருவாய் -4-1-1 -என்ற விதியும் – அடிக் கீழ் அமர்ந்து புகுந்தேன்-6-10-10 -என்ற அனுஷ்டானமும்- இரண்டும் காணலாம் என்கை .. -இத்தால் விதி மாத்ரம் பிரதி பாதகமான அதில் விதி அனுஷ்டானங்கள் இரண்டையும் பிரதி பாதிக்கும் இதுக்கு ஏற்றம் உண்டு என்றது ஆய்த்து ..

(அதில்‌ ஸித்‌த தர்ம விதியே) அந்த ஸ்ரீகீதைக்கு தாத்பர்யார்த்தம்‌ “மாமேகம்‌ ஸரணம்‌ வ்ரஜ” (கீதை 18-66 என்று ஸித்‌த தர்மவிதாந மொன்றுமே யாய்த்து; (இதில்‌ வித்‌யநுஷ்டாநங்கள்‌) (இந்த ப்ரபந்தத்திலே “திருநாரணன் தாள்‌ காலம் பெறச்‌ சிந்தித்துய்ம்மினோ” (திருவாய்மொழி 4-1-1 என்று விதியும்‌ அடிக்கீழ்‌ அமர்ந்து புகுந்தேனே (திருவாய்மொழி 6-10-10) என்று அநுஷ்டாநமும்‌ இரண்டும்‌ காணலாம்‌. இத்தாலே இப் ப்ரபந்தம்‌ விதி ப்ரகாஸகமான மாத்ரம்‌ அன்றிக்கே அநுஷ்டாந ப்ரகாஸகமும்‌ என்கிறார் –

ஸர்வதர்மாந்பரித்யஜ்ய மாமேகம் ஸரணம் வ்ரஜ
அஹம் த்வாம் ஸர்வபாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மா ஸுச
:–18-66-எல்லா அறங்களையும் விட்டு விட்டு என்னையே சரண் புகு. எல்லாப் பாவங்களினின்றும் நான் உன்னை விடுவிக்கிறேன். துயரப்படாதே.

அகல கில்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கை உறை மார்பா!
நிகரில் புகழாய்! உலக மூன்றுடையாய்? என்னை ஆள்வானே!
நிகரில் அமரர் முனிக்கணங்கள் விரும்பும் திருவேங் கடத்தானே!
புகல் ஓன் றில்லா அடியேன் உன் னடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே.–6-10-10–சாஸ்திரங்களில் சொல்லுகிற உபாயம் ஒன்றும் இல்லாத நான்அநந்ய சரண்யனான அடியேன் அநந்ய ப்ரயோஜனாயக் கொண்டு பெரிய பிராட்டியார் புருஷகாரமாக சரணம் புகுந்தேன் – இப்போதே நிரஸ்த ஸமஸ்த பிரதிபந்தயகனாய் உன் திருவடிகளில் சர்வ காலமும் சர்வ கைங்கர்யமும் அடியேன் பண்ணப் பெற வேணும் என்கிறார் –

ஒரு நாயகமாய் ஓட உலகு உடன் ஆண்டவர்
கருநாய் கவர்ந்த காலர் சிதைகிய பானையர்
பெரு நாடு காண இம்மையிலே பிச்சை தாம் கொள்வர்
திரு நாரணன் தாள் காலம் பெறச் சிந்தித் துய்ம்மினோ.–4-1-1-–திரு நாரணன்-இடர் கெடுத்த திருவாளன் இணை அடி–தத்ர நாராயண ஸ்ரீ மான்-ஸ்ரீயபதியை ஆஸ்ரயிங்கோள்-ஒரு மிதுனம் இறே ஆசிரயணீயமும் ப்ராப்யமும் -ஒரு மிதுனத்துக்கு இறே சேஷம் இறே இது –தாள் சேஷ பூதம் பற்றுவது திருவடிகளை இறே-சிந்தித் துய்ம்மினோ- ரக்ஷகன் என்கிற ப்ரபத்தியே அமையும் -ப்ரபத்திக்கும் இதுவே அர்த்தம் என்கிறார்-நினைவோடு வ்யாப்தமாயிற்று உஜ்ஜீவனம் இருப்பது-அனர்த்தம் எல்லாருக்கும் ஒத்து இருக்கையாலே எல்லாரையும் அபேக்ஷிக்கிறார் –

இனி அந்த ஸ்ரீ கீதை தனக்கு உத்கர்ஷமும் இவர் அங்கீகாரத்தாலே என்கிறது இதில்-

பகவன் ஞான விதி பணிவகை என்று இவர் அங்கீகாரத்தாலே அதுக்கு உத்கர்ஷம் –சூரணை -194-

அதாவது-அந்தமில் ஆதி யம் பகவன் வணக்குடை தவ நெறி வழி நின்று –திருவாய் -1-3-5–என்றும் –
ஞான விதி பிழையாமை –திருவாய் -5-2-9–என்றும் –-பண்டே பரமன் பணித்த பணி வகையே கண்டேன் கமல மலர் பாதம் –திருவாய் -10-4-9–என்றும் பரம வைதிகரான இவர் அத்தை பிரமாணமாகக் கொள்ளுகையாலே ஆய்த்து அந்த ஸ்ரீ கீதைக்கு உத்கர்ஷம் உண்டாய்த்து என்கை-

“அம் பகவன்‌ வணக்குடைத்‌ தவநெறி” (திருவாய்மொழி 1-3-5) என்றும்‌ “அச்சுதன்‌ தன்னை ஞான விதி பிழையாமே (திருவாய்மொழி 5-2-9) என்றும்‌ “பண்டே பரமன்‌ பணித்த பணி வகையே கண்டேன்‌ கமல மலர்ப்பாதம்‌” (திருவாய்மொழி 10-4-9) என்றும்‌ ப்ராமாணிகரான இவர்‌ இத்தை இப்படி ப்ரமாணமாக அங்கீ கரிக்கையாலே யாய்த்து அந்த ஸ்ரீகீதைக்கு உத்கர்ஷம் உண்டாய்த்து என்கிறார்-

பிணக்கற வறுவகைச் சமயமும் நெறியுள்ளி யுரைத்த
கணக்கற நலத்தனன் அந்தமில் ஆதியம் பகவன்
வணக்குடைத் தவ நெறி வழி நின்று புறநெறி களை கட்டு
உணக்குமின் பசையற வவனுடை உணர்வு கொண்டு உணர்ந்தே 
–1-3-5—அந்தமில் யாதியம் பகவன்
தனக்கு முடிவு இன்றிக்கே -எல்லார்க்கும் காரண பூதனாய் இருக்கும்-ஹேய ப்ரத்ய நீகமான ஜ்ஞானாதி குண பூர்ணனாய் இருக்கை-இத்தால் -உதாரனாய் -பிராப்தனாய் -ஆப்தனாய் இருந்தவன் வார்த்தை யாகையாலே விச்வாச நீயம் என்கை –வணக்குடைத் தவ நெறி வழி நின்று –வணக்கத்தை யுடைய பக்தி மார்க்கம் ஆகிற வழியிலே நிலை நின்று -பக்தி சரீரத்திலே மாம் நமஸ் குரு என்கையாலே –வணக்குடை -என்கிறது-தபஸ் சப்தத்தாலே பக்தியைச் சொல்லிற்று –பக்தி ஜ்ஞான விசேஷம் ஆகையாலே –யஸ்ய ஜ்ஞான மயந்தப -என்கிற ந்யாயத்தாலே என்னுதல் -இவனுடைய பிரேம மாத்ரத்தையே குவாலாக நினைத்து இருக்கும் அவன் அபிப்ராயாத்தாலே யாதல்-புற நெறிகளை கட்டு
இதுக்கு விரோதியான சப்தாதி விஷயங்களில் போகிற வழி யாகிற களையைக் கடிந்து பறித்து
இத்தை நெறி என்பான் என் என்னில் இருந்ததே குடியாகப் போகிற மஹாதபம் ஆகையாலே -துர்மார்க்கம் என்னக் கடவது இறே –

மேவித் தொழுது உய்ம்மின்னீர்கள் வேதப் புனித இருக்கை
நாவிற் கொண்டு அச்சுதன் தன்னை ஞான விதி பிழையாமே
பூவிற் புகையும் விளக்கும் சாந்தமும் நீரும் மலிந்து
மேவித் தொழும் அடி யாரும் பகவரும் மிக்கது உலகே.–5-2-9—அஹ்ருதயமாக சொன்னதை ஹ்ருதயமாக நினைத்து -நத்யஜேயம் -என்னுமவன் -அகவாய் பாராதே யுக்தி மாத்ரத்தைக் கொண்டு நழுவ விடாதவனை-ஞான விதி பிழையாமே--வேதங்களில் பிரதிபாதிக்கிற பக்தி மார்க்கம் தப்பாமே –ஞானம் என்று ஞான விசேஷமான பக்தியைச் சொல்லுகிறது –

கண்டேன் கமல மலர்ப்பாதம் காண்டலுமே
விண்டே ஒழிந்த வினை யாயின வெல்லாம்
தொண்டே செய்து என்றும் தொழுது வழி ஒழுக
பண்டே பரமன் பணித்த பணி வகையே–10-4-9-கண்டேன்–என்றும் கேட்டே போம் விஷயத்தை சாஷாத் கரிக்கப் பெற்றேன் —கமல மலர்ப்பாதம் –பிராப்தி ஒழியவே ஞான லாபமே அமையும் படியான போக்ய விஷயம் என்கிறது – காண்டலுமே-விண்டே ஒழிந்த வினை யாயின வெல்லாம்–கண்ட போதே வினை என்று பேர் பெற்றவை எல்லாம் விட்டுப் போய்த்து -சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி -என்னுமவன் அடியாக வந்ததாகையாலே தட்டில்லை இ றே –தொண்டே செய்து –பர பக்தியாதிகளை யுடையவனாய்
என்றும் தொழுது வழி ஒழுக-நித்ய கைங்கர்யத்தைப் பண்ணி -அதுவே யாத்ரையாகச் செல்லும் படி–
பண்டே பரமன் பணித்த பணி வகையே–நமக்காக இன்று அன்றிக்கே சர்வாதிகன் சர்வ சாதாரணமாக அன்று அருளிச் செய்த பாசுரத்தில் படியே –மாமேகம் சரணம் வ்ரஜ –சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி -என்று இறே பாசுரம் 

புத்த முனியாயும் -கபில முனியாயும் சொன்ன பௌத்த சாஸ்திரமும் -சாங்க்ய சாஸ்திரமும் –
அவன் தான் அருளிச் செய்ததாய் இருக்கச் செய்தே -வைதிக பரிக்ரகம் இல்லாமை இறே
அப்ரமாணம் ஆய்த்து ..-இதி மோஹன வர்ஷ்மணா த்வயாபி க்ரதிதம் பாஹ்ய மதம் த்ருணாய மந்யே –ஸ்ரீ ரெங்க ராஜ ஸ்தவம் – (இப்படி பிறரை மயங்கச் செய்கின்ற தேவரீராலேயே செய்யப்பட வேதங்களுக்குப் புறம்பான மதங்களை புல்லுக்குச் சமமாக நினைக்கிறேன் )-என்று பகவத் யுக்தமே யாகிலும் வேத விருத்தமானது வைதிகர் அங்கீகரியார்களே ….-வேதா விரோதித்வம் பிரகாசிப்பது வைதிக பரிகிரகத்தாலே இறே .. ஆகையால் அதுக்கு உத்கர்ஷம் இவர் அங்கீகாரத்தால் என்ன குறை இல்லை 

அல்லது புத்த முநியாயும்‌ கபிலமுநியாயும்‌ சொன்ன பெளத்த ஸாஸ்த்ரமும்‌ ஸாங்க்‌ய ஸாஸ்த்ரமும்‌ அவன்‌ சொன்னது யாகிலும் அந்த ஸாஸ்த்ரங்களுக்கு ப்ராமாணிக பரிக்‌ரஹமில்லாமையாலே இறே அவை அப்ரமாணமாய்த்து-

இதி மோஹந வர்த்மநா த்வயா அபி க்ரதிதம் பாஹ்ய மதம் த்ருணாய மந்யே
அதி வைதிக வர்ம வர்மிதாநாம் மனிதாஹே குத்ருஸாம் கிம் ஈஸ வர்த்ம
–-2-16-நீயே பாஹ்ய குத்ருஷ்டிகளை உண்டாக்கினாயே ஆகிலும் உள்ளத்தாலும் நினையேன் –கள்ள வேடத்தைக் கொண்டு போய் -என்றபடி -மோஹ விக்ரஹத்தை கொண்டு – தேவரால் -நிர்ணயிக்கப் பட்ட புத்த மதத்தை த்ருணமாக எண்ணுகிறேன்-இப்படி இருக்க வைதிகத்வ வேஷ தாரிகளான குத்ருஷ்ட்டி மார்க்கத்தை எண்ணுவேனோ -என்கிறார் – உபேக்ஷிப்பேன் என்றபடி –

இத்தால் அதுக்கு உத்கர்ஷம் இவர் பரிக்ரகம் கொண்டு சொல்ல வேணும் ..இவர் வாக்கில் பிறந்த இதுக்கு அதுவும் வேண்டாம் என்று இவ் வழியாலும் ஓர் ஆதிக்யம் சொல்லிற்று ஆய்த்து ..
ஆக ஸ்ரீ கீதை யிலும் இதுக்கு உண்டான ஆதிக்ய ஹேதுக்கள் எல்லாம் சொல்லிற்று ஆய்த்து

––——————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ ஆய் ஜநந்யாசார்யர்‌ ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ ஆசார்ய ஹ்ருதயம்‌–ஸ்ரீ திராவிட ப்‌,ரஹ்ம ஸூத்ரம்‌ -10 –ஸாம்ய பாதம்–15–பகவத்‌ கீதாஸ்ரீ முக ஸூக்தி ஸாம்யாதி கரணம்‌–(189)ஸ்ரீ மணவாள மா முனிகள் -ஸ்ரீ ஆய் ஸ்வாமிகள் வியாக்யானங்கள்–

July 27, 2026

1) பூர்வ த்‌,விகம்‌ – ஸூரி வைபவம்‌ 1 முதல்‌ 186 வது ஸூத்ரம்‌ வரை (186)
(2) உத்தர த்‌,விகம்‌ – ஸூரி ஸுக்த்தி வைபவம்‌– 187 முதல்‌ 284 முடிய (48)

(1) ப்ரத, மோத்‌, யாயம் -ஸாஸ்த்ர தாத்பர்ய அதிகாரி வைபவம்‌ 1-38 (38)
(2) த்‌,விதீயோத்‌, யாய: – க்‌,ரந்த, கர்த்ரு வைப,வம்‌ 39 – 186 (148)
(3) த்ருத்யோத்‌, யாயம் – க்‌,ரந்தாந்தர தார தம்ய வைப,வம்‌ 187-207 (21)
(4) சதுர்த்தே ரத்‌, யாயம் -கிரந்த, ப்ரதிபாத்‌,ய க்ரம வைப,வம்‌ 208-284 (27)

10 –ஸாம்ய பாதம் -ஒரே அதிகரணம்
15–பகவத்‌ கீதாஸ்ரீ முக ஸூக்தி ஸாம்யாதி கரணம்‌–189—ஒரே ஸூரணை

இனி மேல் இப் பிரபந்த பிரதிபாத்ய அர்த்தங்களை விஸ்த்ரேண பிரதி பாதிப்பதாக திரு உள்ளம் பற்றி ,
அதில் பிரதமத்திலே சாஷாத்க்ருத பகவத் தத்வரான இவர் –சம்சாரிகளுக்கு உஜ்ஜீவன அர்த்தம்
உபதேசம் பண்ணின இப் பிரபந்தம் –பிரதி பாத்ய அர்த்த சாம்யத்தாலே -பகவத் ப்ரணீத –
கீதோ உபநிஷத் -சமமாகச் சொல்லப் படும் என்கிறார்
-மேல் –தத்வதர்ஸிகளான இவர் பக்கலிலே இப்படி பகவத் குணாநுபவ ஜநித ப்ரீதி ப்ரகர்ஷ பலாத்காரத்தாலே அவதீர்ணமான இப்ரபந்தத்தில்‌ பரதிபாதி தமான அர்த்தங்கள்‌, தர்மஸம்ஸ்தாபநார்த்தமாக அவதரித்து கிருஷ்ணன்‌ உபய ஸேநைக்கும்‌ நடுவே அர்ஜுந வ்யாஜத்தாலே அருளிச் செய்த ஸ்ரீகீதையிலே ப்ரதிபாதிக்கப்பட்ட தத்த்வ விவேகாதிகளான அர்த்தங்களாகை யாலே இந்த ப்ரபந்தம்‌ ஸ்ரீகீதையோடொக்கும்‌ என்கிறார்‌.

மனம் செய்‌ எல்லையில்‌ ஞான வின்பத்தை நின்மலமாக வைத்தவர்‌ ஞானப் பிரானை ஞானத்து வைம்மினென்றவிது தத்வ விவேக, நித்யத்வாநித்யத்வ, நியந்த்ருத்வ, ஸெளலப்‌ய, ஸாம்ய, அஹங்கார, இந்த்‌ரிய தோஷ பல, மந ப்ராதாந்ய, கரண நியமந ஸுக்ருதி பேத, தேவாஸுர விபாக, விபூதி யோக, , விஸ்வருப தர்ஸந, ஸாங்க பத்தி, ப்ரபத்தி த்‌வை வித்‌யாதிகளாலே அன்றோதிய கீதா ஸமம்‌ என்னும்‌.–சூரணை -189–

அதாவது-மனம் செய் எல்லையில் ஞான இன்பத்தை —-எல்லாப் பொருள்களுக்கும் வித்தாய் –முதலில் சிதையாமே மனம் செய் ஞானத்து உன் பெருமை–திருவாய் -1-5-2-என்றும் –-எல்லையில் ஞானத்தன் ஞானம் அஃதே கொண்டு எல்லாக் கர்மங்களும் செய் –திருவாய் -3-10-8- -என்றும் சொல்லுகிறபடி
சர்வ காரணமாய் –அபரிசேத்யமான சங்கல்ப ரூப ஞானத்தை உடையவனாய் – சூழ்ந்த அதனில் பெரிய சுடர் ஞான இன்பம் –திருவாய் -10-10-10-–என்கிறபடியே பிரகிருதி புருஷ தத்வங்கள் இரண்டும் தன்னுள்ளே ஆகும் படி வியாபித்து – தான் அபரிசேத்யமாய் – உஜ்ஜ்வலமாய் -ஞான ஆனந்த லஷணமாய் இருக்கிற – ஸ்வரூபத்தை உடைய சர்வேஸ்வரனை – நின்மலமாக வைத்தவர் –
எனது ஆவி உள்ளே நிறைந்த ஞான மூர்த்தி யாயை நின்மலமாக வைத்து -திருவாய் -4-7-7-என்று
பரிபூர்ண ஞான ஸ்வரூபனான உன்னை என் நெஞ்சுக்குள்ளே விசதமாக அனுபவித்து – என்னும் படி சாஷாத் கரித்த இவ் ஆழ்வார் –

(மனஞ் செய்‌ எல்லையில்‌ ஞான வின்பத்தை நின்மலமாக வைத்தவர்‌) “எல்லாப்பொருள்கட்கும்‌ வித்தாய்‌ முதலில்‌ சிதையாமே மனம்‌ செய்‌ ஞானத்துன்பெருமை” (திருவாய்மொழி 1-5-2) என்று ஸர்வத்துக்கும்‌ காரணமாகா நிற்கச்‌ செய்தே தான்‌ நிர்விகாரமாய்‌ “எல்லையில்‌ ஞானத்தன்‌ ‘ (திருவாய்மொழி 3-10-8 என்று அபரிச்சேத்‌யமாயிருக்கிற அவனுடைய ஸங்கல்ப ரூப ஜ்ஞாநத்தையும்‌ “சூழ்ந்ததனில்‌ பெரிய சுடர் ஞான வின்பமேயோ’ (திருவாய்மொழி 10-10-10) என்று ப்ரக்ருதி புருஷர்களிரண்டும்‌ தனக்குள்ளேயாம்படி வியாப்தமாய்‌, தான்‌ அபரிச்சேத்‌யமாய்‌ விஸத தமமாய்‌ அநந்த ரூப ஜ்ஞாநமாய்‌ இருக்கிறவனுடைய ஸ்வரூபத்தையும்‌ “நிறைந்த ஞானமூர்த்தியாயை நின் மலமாக வைத்து” (திருவாய்மொழி 4-7-7) என்கிறபடியே அந்த ஸ்வரூப ஸ்வபாவங்களிரண்டும்‌ ஜ்ஞாநமாகையாலே பரிபூர்ண ஜ்ஞாந ஸ்வருபனாயிருக்கிறவனை விஸத தமமாக ஸாக்ஷாத்கரிக்கையாலே தத்த்வ தர்ஸிகளா யிருக்கிற இவர்‌,

நினைந்து நைந்து உள்கரைந்து உருகி இமையோர் பலரும் முனிவரும்
புனைந்த கண்ணி நீர் சாந்தம் புகையோடு ஏந்தி வணங்கினால்
நினைந்த வெல்லாப் பொருள்கட்கும் வித்தாய் முதலில் சிதையாமே
மனம் செய் ஞானத்து உன் பெருமை
மாசூணாதோ மாயோனே –1-5-2—ஸ்வ கார்யத்தைப் பிறப்பிக்கும் போது தான் முதல் அழியாத படியான மநோ வியாபார ரூப சங்கல்ப ஞானத்தை யுடைய உன் வைலஷண்யம்-ஆனால் சங்கல்பமோ ஜகத் காரணம் -சூஷ்ம சித் அசித் விசிஷ்ட ப்ரஹ்மம் அன்றோ -என்னில்-ஆனாலும் காரணமாம் போது சங்கல்ப பூர்வகமாக வேணும்-சங்கல்ப விசிஷ்டன் காரணம் ஆனாலும் பஹூச்யாம் என்கிற சங்கல்ப ப்ராதான்யத்தாலே சொல்லுகிறது

அல்லல் இல் இன்பம் அளவு இறந்து எங்கும் அழகு அமர்சூழ் ஒளியன்
அல்லி மலர்மகள் போக மயக்குகள் ஆகியும் நிற்கும் அம்மான்
எல்லை இல் ஞானத்தன் ஞானம் அஃ தேகொண்டு எல்லாக் கருமங்களும் செய்
எல்லை இல் மாயனைக் கண்ணனைத் தாள் பற்றி யான் ஓர் துக்கம் இலனே.–3-10-8—மன்ஸவீ என்னுமா போலே ப்ரணய தாரையில் அவளுக்கு ஆனைக்கு குதிரை வைக்க வல்ல ஞானாதிக்யத்தை உடையவன்

சூழ்ந்து அகன்று ஆழ்ந்து உயர்ந்த முடிவு இல் பெரும் பாழேயோ
சூழ்ந்து அதனில் பெரிய பர நன் மலர்ச் சோதீயோ
சூழ்ந்து அதனில் பெரிய சுடர் ஞான இன்பமேயோ
சூழ்ந்து அதனில் பெரிய என் அவா அறச் சூழ்ந்தாயே–10-10-10-அவை இரண்டையும் வியாபித்து அவற்றுக்கு நிர்வாஹகமாய் சங்கல்ப ரூபமான ஞானத்தை யுடையவன் என்று சங்கல்ப ரூப ஞானத்தைச் சொல்லுதல் –சுடர் ஞான இன்பம் என்று பகவத் ஸ்வரூபத்தை சொல்லுதல் –

அறிந்து அறிந்து, தேறித் தேறி,யான் எனது ஆவியுள்ளே
நிறைந்த ஞான மூர்த்தி
யாயை நின்மலமாக வைத்து,
பிறந்தும் செத்தும் நின்று இடறும் பேதைமை தீர்ந்தொழிந்தேன் ;
நறுந்து ழாயின் கண்ணி அம்மா! நான் உனைக் கண்டு கொண்டே.–4-7-7-தெளிந்த மனஸிலே பரிபூர்ண ஞானத்தையே ஸ்வரூபகமாக உடைய உன்னை விசதமாக அனுபவித்து-

ஞானப் பிரானை ஞானத்து வைம்மின் என்ற இது —-இரும் கற்பகம் சேர் வானத்தவர்க்கும் அல்லாதவர்க்கும் மற்று எல்லா வர்க்கும் எரி திரை வையம் முற்றும் ஏனத்து உருவாய் இடந்த –ஞானப் பிரானை அல்லால் இல்லை நான் கண்ட நல்லது -திருவிருத்தம் -99-என்று பிரளய ஆர்ணவ மக்னையான பூமியை -மகா வராஹமாக -உத்தரித்த -ஞான சக்திகளையும் – ஸ்வாமித்வ பிராப்தியும் உடையவனாய் -ஸ்லோக த்வய முகத்தாலே சரமோ உபாயத்தை வெளியிடுகையாலே -ஞான உபகாரனுமாய் இருப்பவனை – ஒழிய -சர்வருக்கும் உஜ்ஜீவன ஹேதுவாய் இருப்பது ஒன்றும் இல்லை –இது நான் அறுதி இட்ட விலஷணமான அர்த்தம் – என்று பிரதம பிரபந்தத்தில் அருளிச் செய்த விஷயத்தை உபாயகமாகப் பற்றச் சொல்லுகிற அளவில் –திரு குருகூர் அதனை உளம் கொள் ஞானத்து வைமின் உம்மை உய்யக் கொண்டு போகுறில்–திருவாய் -4-10-0-என்று உஜ்ஜீவிக்க வேண்டி இருந்தீர்களாகில் –அவன் நித்ய வாசம் பண்ணுகிற தேசத்தை உங்கள் மானஸ ஜ்ஞானத்துக்கு விஷயம் ஆக்குங்கோள் என்று சம்சாரிகளை குறித்து உபதேசித்த இப் பிரபந்தம் –தர்ம சம்ஸ்தாபன அர்த்தமாக அவதரித்து அருளின ஸ்ரீ கிருஷ்ணன் – அஸ்தான ஸ்நேஹ காருண்யா தர்ம அதர்மதியா குலம் பார்த்தம் பிரபன்ன முத்திஸ்ய சாஸ்திர அவதரணம் க்ருதம்–ஸ்ரீ கீதார்த்த ஸங்க்ரஹம் –5–என்கிறபடியே – அஸ்தானத்தே உண்டான – பந்து ஸ்நேஹ காருண்யங்களாலும் – ஸ்வ தர்மத்தில் அதர்ம புத்தியாலும் கலங்கி – நயோத்ஸ்யாமி–ஸ்ரீ கீதை -2-6- -என்று யுத்த அநிவ்ருத்தனாய் –
யச்ஸ்ரேயஸ் ஸ்யான் நிச்சிதம ப்ரூஹி தன்மே சிஷ்யத் தேஹம் சாதிமாம் த்வம் பிரபன்னம்–ஸ்ரீ கீதை –2 7-என்ற அர்ஜுனனைத் தெளிவித்து யுத்தே பிரவர்த்தன் ஆக்குகைக்கு வியாஜமாக –-அறிவினால் குறைவில்லா அகல் ஞாலத்தவர் அறிய–திருவாய் -4-8-6- -என்கிறபடியே-லோகத்துக்கு உஜ்ஜீவன சாஸ்த்ரமாம் படி எல்லாப் பொருளும் விரித்த ஸ்ரீ கீதையில் –

ஞானப் பிரானை ஞானத்து வைம்மின்‌ என்ற இது) “இருங் கற்பகம்‌ சேர்‌ வானத்தவர்க்கும்‌ அல்லாதவர்க்கும்‌ மற்றெல்லாயவர்க்கும்‌ ஞானப் பிரானை அல்லாலில்லை நான் கண்ட நல்லதுவே” (திருவிருத்தம்‌ 99) என்று உபக்ரமித்து “உளங்கொள்‌ ஞானத்து வைம்மின்‌ உம்மை உய்யக் கொண்டு போகுறிலே” (திருவாய்மொழி 4-10-9) என்று ப்ரளயார்ணவ மக்‌நையான ஸ்ரீபூமிப் பிராட்டியை மஹா வராஹமாய்க்‌ கொண்டு எடுத்தவனுமாய்‌, ஸ்லோக த்‌வய முகத்தாலே சரமோபாயத்தை வெளியிடுகையாலே ஜ்ஞாநோபகாரகனு மாயிருக்கிறவனை யொழிய ஸர்வர்க்கும்‌ உஜ்ஜீவந ஹேதுவாயிருப்பதொன்று இல்லையான பின்பு அவன்‌ நித்ய வாஸம்‌ பண்ணுகிற தேஸத்தை உங்கள்‌ மாநஸ ஜ்ஞாநநத்துக்கு விஷய மாக்குங்கோளென்று இப்படி உபபாதிக்கிற இப் ப்ரபந்த,ம்‌ 

ஈனச் சொல்லாயினுமாக எறி திரை வையம் முற்றும்
ஏனத்துருவாய் யிடந்த பிரான் இரும் கற்பகம் சேர்
வானத்தவர்க்கும் அல்லாதவர்க்கும் மற்று எல்லாயவர்க்கும்
ஞானப் பிரானை யல்லால் இல்லை நான் கண்ட நல்லதுவே –
 – 99—இரும் கற்பகம் சேர் வானத்தவர்க்கும்-அபிமத பல பிரதத்வத்தாலே வந்த பெருமையை யுடைத்தான கற்பக வ்ருக்ஷங்களினுடைய–செறிவை யுடைத்தான சுவர்க்கத்தில் வாஸத்தை யுடைய தேவர்களுக்கும்–(எனக்கே தன்னைத் தந்த கற்பகம் இல்லையே இவை)அல்லாதவர்க்கும்–அத் தேவ ஜாதி தானே உத்க்ருஷ்டம் என்னும்படியான மனுஷ்ய ஜாதீயருக்கும்–மற்று எல்லா யவர்க்கும்-இவர்களிலும் அபக்ருஷ்டரான திர்யக் ஸ்தாவர ஜாதி பேதங்களில் உள்ளார் எல்லாருக்கும்-ஞானப் பிரானை யல்லால் இல்லைஸ்திதே மனஸி -வராஹ சரம ஸ்லோகம் இத்யாதியாலே உத்தாரக ஹேதுவான ஞானத்தை உபதேசித்த ஸ்வாமியை ஒழிய இல்லை–நான் கண்ட நல்லதுவே –நான் அறுதியிட்டு நல்ல அர்த்தம் என்று தம்முடைய நிஷ்கர்ஷத்தை அருளிச் செய்தார் ஆயிற்று-

விளம்பும் ஆறு சமயமும்,அவை ஆகியும் மற்றும் தன்பால்
அளந்து காண்டற்கு அரியன் ஆகிய ஆதிப்பிரான் அமரும்
வளங் கொள் தண் பணை சூழ்ந்து அழகு ஆய திருக் குருகூரதனை
உளங்கொள் ஞானத்து வைம்மின் உம்மை உயக்கொண்டு போகுறிலே.–4-10-9-உளம் கொள் ஞானம் -மானஸ ஞானம் -ஞானம் உதித்து பாஹ்ய இந்த்ரியங்களாலே பாஹ்ய விஷயங்களை க்ரஹிப்பதற்கு முன்பே மானஸ ஞானத்துக்கு இவ் ஊரை விஷயம் ஆக்குங்கோள் -பிரயோஜனம் என் என்னில்
உம்மை உயக்கொண்டு போகுறிலே.-அசன்னேவ என்னும் படி -இருக்கிற உங்களை சந்த மேனம் ததோ விது-என்ன பண்ண வேண்டி இருந்து கோள் ஆகில் –நேய மஸ்தி என்கிறபடி தக்தப்படம் போலே இவற்றின் சத்தை சென்று அற்றது என்று இருக்கிறார் –

அஸ்தாந ஸ்நேஹ காருண்ய தர்மாதர்மதியாகுலம்
பார்த்தம்ப்ரபந்நமுத்திஶ்ய ஶாஸ்த்ராவதரணம்க்ருதம்
–5-காட்டக் கூடாத இடத்தில் ஸ்நேஹம் -காருண்யம் -தர்ம அதர்ம விவேகம் இல்லாமல் –மூன்று தோஷங்கள் –

கார்பண்யதோ÷ஷாபஹதஸ்வபாவ:
ப்ருச்சாமி த்வாம் தர்மஸம்மூடசேதா:
யச்ச்ரேய: ஸ்யாந்நிஸ்சிதம் ப்ரூஹி தந்மே
ஸிஷ்யஸ்தேஹம் ஸாதி மாம் த்வாம் ப்ரபந்நம்–2-7-
சிறுமையாகிய குறையால் இயல்பு அழிந்தவனாய், அறம் இன்னது என்றுணராமல் மயங்கிய அறிவுடன், யான் உன்னைக் கேட்கிறேன். எது நன்றென்பதை எனக்கு நிச்சயப்படுத்திக் சொல்லுக. நான் உன் சீடன். உன்னையே சரணமெனப் புகுந்தேன். கட்டளை தருக.

அறிவினால் குறையில்லா அகல் ஞாலத்தவர் அறிய,
நெறி எல்லாம் எடுத்து உரைத்த நிறை ஞானத்து ஒரு மூர்த்தி,
குறிய மாண் உருவாகி, கொடுங் கோளால் நிலங்கொண்ட
கிறி அம்மான் கவராத கிளர் ஒளியால் குறையிலமே.–4-8-6—பகவத் விஷயத்தில் அறிவு கொண்டு ஒரு கார்யம் இன்றிக்கே இருக்கை –-அன்ன பா நாதிகள்-பெறா விடில் செல்லாதாய் இருக்கும் அறிவு ஒன்றிலுமாயிற்று நிரபேஷராய் இறே இருப்பது-அகல் ஞாலத்தவர்-இந்த பூமிப பரப்பில் உள்ளாரில் அறிவில் குறை பட்டு இருப்பார் இல்லை –-அவர் அறிய, கல்லில் துளை யுண்டாக்கினால் போலே சம்சாரிகள் அறியும் படி –-நெறி எல்லாம் எடுத்து உரைத்த சேதன பேதத்தோ பாதி போறும் இ றே உபாய பேதமும் -கர்ம யோகம் முதலாக பிரபத்தி பர்யந்தமாக சகல உபாயங்களையும் வ்யக்தமாக உபதேசித்த படி-கர்ம ஞான பக்திகள் -அவதார ரஹஸ்யம் புருஷோத்தம வித்யை -ஸ்வரூப யாதாம்யம் -விரோதி நிவ்ருத்திக்கு பிரபத்தி -ஆத்மாபிராப்திக்கு பிராப்தி -பகவல்லாபத்துக்கு பிரபத்தி -இவற்றை அடங்க விசத்தமாக அருளிச் செய்த-நிறை ஞானத்து ஒரு மூர்த்தி,-நிறைந்த ஞானத்தை உடைய அத்விதீயமான ஸ்வரூபத்தை யுடையவன் – ஞானாதிகன் சொன்னது இறே பிரமாணம் ஆவது -எல்லாருடைய ஞானத்துக்கும் அடியானை ஞான பூர்த்தியை யுடையவன் –

1 ,2 ,3 தத்வ விவேக –-பிரதமத்தில் –தேக ஆத்மா அபிமான கார்யமான பந்து சிநேகத்தையும் –
வத பீதியையும் மாற்றுகைக்காக தத்வ ஞானத்தை உபதேசிக்கத் தொடங்கின அளவிலே –
நத்வே வாஹம் ஜாது நாசம் நத்வம் நேமே ஜநாதிபா – நசைவ நபவிஷ்யாம சர்வே வயமத பரம் –ஸ்ரீ கீதை -2-12–என்று சர்வேஸ்வரனான தன்னோபாதி சகல ஆத்மாக்களும் நித்யர் என்று அருளிச் செய்கிற வழியிலே – ஜீவ பர பேதம்–ஜீவர்களுக்கு பரஸ்பர பேதம் -ஆகிய இவற்றை தர்சிப்பித்து –
தேஹி நோஸ்மின் யதா தேக கௌமாரம் யௌவனம் ஜரா ததா தேஹாந்தர ப்ராப்தி தீரஸ் தத்ர நமுஹ்யதி -2-13-– இத்யாதியாலே – பிரகிருதி ஆத்மா விவேகத்தையும் சொல்லுகையாலே தத்வங்களினுடைய விவேகத்தையும் —

தத்த்வ விவேகம்‌) திருத் தேர்த்தட்டிலே “விஸ்ருஜ்ய ஸமரஞ்சாபம்‌ ஸோகஸம்விக்‌ந மாநஸம்‌” (கீதை 1-47) என்று பந்து ஹத்யாபீதனாய்க்‌ கொண்டு ஸோகிக்கிற அர்ஜுநனைக்‌ குறித்து அவனை “ஸ்திதோஸ்மி’ (கீதை 18-73) என்னப்‌ பண்ணுகைக்காக “நத்வேவாஹம்‌ ஜாது நாஸம்‌ நத்வம்‌ நேமே ஐநாதி பா: ந சைவ ந ப.விஷ்யாம: ஸர்வேவயமத:பரம்‌” (கீதை 2-12) என்று நீயும்‌ நானும்‌ இந்த ராஜாக்களும்‌ முன்பாக இல்லாமலுமில்லை, மேலும்‌ இல்லாமலுமில்லை என்று ஜீவ பரபேதம்‌, ஜீவர்களுக்கு பரஸ்பர பேதம்‌, “தேஹிநோஸ்மிந்‌ யதா, தேஹே கெளமாரம்‌ யெளவநம்‌ ஜரா ததா, தேஹாந்தர ப்ராப்தி: தீரஸ் தத்ர ந முஹ்யதி” (கீதை 2-13) என்றித்யாதிகளாலே ப்ரக்ருதி புருஷர்களுக்குண்டான பேதமாகிற தத்வ விவேகம்‌;

ஏவமுக்த்வார்ஜுந​: ஸங்க்யே ரதோபஸ்த உபாவிஸத்
விஸ்ருஜ்ய ஸஸரம் சாபம் ஸோகஸம்விக்நமாநஸ​:
–1-47-செருக் களத்தில் இவ்வாறு சொல்லி விட்டுப் பார்த்தன் அம்புகளையும் வில்லையும் எறிந்து போட்டுத் துயரில் மூழ்கிய மனத்தனாய்த் தேர்ப் பீடத்தின் மேலுட்கார்ந்து கொண்டான்.

நஷ்டோ மோஹ: ஸ்ம்ருதிர்லப்தா த்வத்ப்ரஸாதாந்மயாச்யுத
ஸ்திதோऽஸ்மி கதஸந்தேஹ: கரிஷ்யே வசநம் தவ
–18-73-மயக்கமழிந்தது நின்னருளாலே, அச்சுதா, நான் நினைவு அடைந்தேன்; ஐயம் விலகி நிற்கிறேன்; நீ செய்யச் சொல்வது செய்வேன்.

நத்வேவாஹம் ஜாது நாஸம் ந த்வம் நேமே ஜநாதிபா:
ந சைவ ந பவிஷ்யாம: ஸர்வே வயமத: பரம்-
-2-12-இதன் முன் எக்காலத்திலும் நான் இல்லாதிருந்திலேன். நீயும் இங்குள்ள வேந்தர் யாவரும் அப்படியே. இனி நாம் என்றைக்கும் இல்லாமற் போகவும் மாட்டோம்.

தேஹிநோऽஸ்மிந்யதா தேஹே கௌமாரம் யௌவநம் ஜரா
ததா தேஹாந்தரப்ராப்திர்தீரஸ்தத்ர ந முஹ்யதி
–2-13-ஆத்மாவுக்கு இவ்வுடலில் எங்ஙனம் பிள்ளைப் பிராயமும் இளமையும், மூப்பும் தோன்றுகின்றனவோ அங்ஙனமே மற்றொரு சரீரப் பிறப்புந் தோன்றுகிறது. தீரன் அதில் கலங்கமாட்டான்.

4 -நித்யத்வ அநித்யத்வ —அந்தவந்த இமே தேஹா நித்யஸ்யோக்தாஸ் சரீரிண அநாசினோ ப்ரமேயஸ்ய தஸ்மாத் யுத்யஸ்வ பாரத -2-18-என்றும்-நஜாயதே ம்ரியதேவா கதாசித் நாயம் பூத்வா பவிதா வாநபூயஸ் அஜோ நித்யஸ் சாஸ்வதோயம் புராணோ நஹன்யதே ஹன்யமானே சரீரே –2-20 -என்றும் ,-வாசாம்ஸி ஜீர்ணா நியதா விஹாயா நவாணி க்ருஹணாதி நரோபராணி
ததா சரீராணி விஹாய ஜீர்ணான் யன்யாமி சம்யாதி நவாணி தேஹி –2-22
-இத்யாதிகளாலே
ஆத்மா நித்யத்வ தேகா அநித்யங்களையும்-

நித்யத்வாநித்யத்வ நியந்த்ருத்வ) “அச்சேத்‌யோயமதாஹ்‌ யோயம்‌ அக்லேத்‌யோ ஸோஷ்ய ஏவ ச நித்ய: ஸர்வகதஸ்தாணுரசலோயம்‌ ஸநாதந:” (கீதை 2-24) என்றும்‌, “வாஸாம்ஸி ஜீர்ணாநி யதா விஹாய நவாநி க்‌ருஹ்ணாதி நரோபராணி ததா, ஸரீராணி விஹாய ஜீர்ணாந்யந்யாநி ஸம்யாதி நவாநி தேஹீ’ (கீதை 2-22, “நாஸதோ வித்‌யதே பாவோ நாபாவோ வித்‌யதே ஸத:’ (கீதை 2-16) இத்யாதிகளாலே சேதநாசேதநங்களினுடைய நித்யத்வா நித்யத்வம்

நாஸதோ வித்யதே பாவோ நாபாவோ வித்யதே ஸத:
உபயோரபி த்ருஷ்டோऽந்தஸ்த்வநயோஸ்தத்த்வதர்ஸிபி:
–2-16-இல்லாதது உண்மையாகாது. உள்ளது இல்லாததாகாது. உண்மை யறிவார் இவ்விரண்டுக்குமுள்ள வேற்றுமை யுணர்வார்.

அந்தவந்த இமே தேஹா நித்யஸ்யோக்தா: ஸரீரிண:
அநாஸிநோப்ரமேயஸ்ய தஸ்மாத்யுத்யஸ்வ பாரத
–2-18-ஆத்மா நித்தியன்; அழிவற்றான்; அளவிடத்தகாதான். எனினும் அவனுடைய வடிவங்கள் இறுதியுடையன என்பர். ஆதலால் பாரதா, போர் செய்.

ந ஜாயதே ம்ரியதே வா கதாசிந் நாயம் பூத்வா பவிதா வா ந பூய:
அஜோ நித்ய: ஸாஸ்வதோऽயம் புராணோ ந ஹந்யதே ஹந்யமாநே ஸரீரே
–2-20-எக்காலத்திலும் இறப்பதுமில்லை. இவன் ஒரு முறையிருந்து பின்னர் இல்லாது போவதுமில்லை.-இவன் பிறப்பற்றான்; அனவரதன். இவன் சாசுவதன்; பழையோன்;-உடம்பு கொல்லப்படுகையில் இவன் கொல்லப்படான்.

வாஸாம்ஸி ஜீர்ணாநி யதா விஹாய நவாநி க்ருஹ்ணாதி நரோऽபராணி
ததா ஸரீராணி விஹாய ஜீர்ணாந் யந்யாநி ஸம்யாதி நவாநி தேஹீ-2-22
-நைந்த துணிகளைக் கழற்றி யெறிந்துவிட்டு மனிதன் புதிய துணிகள் கொள்ளுமாறு போல, ஆத்மா நைந்த உடல்களைக் களைந்து புதியனவற்றை எய்துகிறான்.

அச்சேத்யோऽயமதாஹ்யோऽயமக்லேத்யோऽஸோஷ்ய ஏவ ச
நித்ய: ஸர்வகத: ஸ்தாணுரசலோயம் ஸநாதந:
–2-24-பிளத்தற் கரியவன்; எரித்தற்கும், நனைத்தற்கும், உலர்த்துதற்கும் அரியவன்; நித்தியன்; எங்கும் நிறைந்தவன்; உறுதியுடையான்; அசையாதான்; என்றும் இருப்பான்.

5 -நியந்த்ருத்வ – பூமிராபோ நலோ வாயு கம்மனோ புத்தி ரேவச – அஹங்கார இதீயம் மே பின்னா பிரகிருதி ரஷ்டதா அபரே யமித ஸ்த்வன்யாம் பிரகிருதி வித்தி மே பராம் – ஜீவபூதாம் மஹாபாஹோ யயேதம் தார்யதே ஜகத் -7-4-5-என்கிற படியே சேதன அசேதன சரீரியாய் – சர்வஸ்ய சாஹம் ஹ்ருதி சந்நிவிஷ்டோ மத்தஸ் ஸ்ம்ருதி ஜ்ஞாந மபோஹநஞ்ச -15-15-என்றும் – ஈச்வரஸ் சர்வ பூதானாம் ஹ்ருத்தேசேர் ஜூன திஷ்டதி ப்ராமயன் சர்வ பூதானி யந்த்ராரூடானி மாயயா-18-61- –என்றும் சொல்லுகிறபடி சர்வ ஜன ஹ்ருதிஸ்த்தனாய் -நின்று -சர்வ பிரவ்ருத்தி நிவ்ருத்திகளையும் பண்ணுவிக்கை யாகிற ஈஸ்வரனுடைய நியந்தருத்வத்தையும்

பூமிராபோநலோவாயு: கம்‌ மநோ புத்‌திரேவ அஹங்கார இதீயம்‌ மே பிந்நா ப்ரக்ருதி ரஷ்டதா வைன்‌ வலவன்‌ ப்ரக்ருதிம்‌ வித்‌தி மே பராம்‌ தீவபூதாம்‌ மஹாபாஹோ யயேதம்‌ தார்யதே ஜெகத்‌ (கீதை7-4,5) என்று சேதநா சேதநங்களை ஸாரீரமாக வுடையனாய்க் கொண்டு, “ஸர்வஸ்யசாஹம்‌ ஹ்ருதி, ஸந்நிவிஷ்டோ மத்தஸ்ம்ருதி: ஜ்ஞாநமபோஹநஞ்‌ (கீ தை 15-1) என்றும்‌, “ஈஸ்வரஸ்‌ ஸர்வ பூதாநாம்‌ ஹ்ருத்‌தே ஸோரஜ “ந திஷ்டதி ப்‌ராமயந்‌ ஸர்வபூதாநி யந்த்ராரூடாநி மாயயா (கீதை 18-61 )என்றும்‌ ஸ்வ ஸரீரபூதமான ஸர்வ ஜந்துக்களினுடைய ஹ்ருதய ப்ரதேஸத்திலே நின்று ஸகல ப்ரவ்ருத்தி நிவ்ருத்திகளையும்‌ தானே பண்ணுவிக்கையாகிற அவனுடைய நியந்த்ருத்வம்‌;

பூமிராபோऽநலோ வாயு: கம் மநோ புத்திரேவ ச
அஹங்கார இதீயம் மே பிந்நா ப்ரக்ருதிரஷ்டதா–
7-4-மண், நீர், தீ, காற்று, வான், மனம், மதி, அகங்காரம், இவ்வெட்டு வகையாக என் இயற்கை பிரிந்து தோன்றுகிறது.-அபரேயமிதஸ்த்வந்யாம் ப்ரக்ருதிம் வித்தி மே பராம் ஜீவபூதாம் மஹாபாஹோ யயேதம் தார்யதே ஜகத்--7-5-இது என் கீழியற்கை. இதனின்றும் வேறுபட்டதாகிய என் மேலியற்கையை அறி;-அதுவே உயிராவது; பெருந்தோளாய், அதனால் இவ்வுலகு தரிக்கப்படுகிறது.

ஸர்வஸ்ய சாஹம் ஹ்ருதி ஸந்நிவிஷ்டோ மத்த: ஸ்ம்ருதிர்ஜ்ஞாநமபோஹநம் ச
வேதைஸ்ச ஸர்வைரஹமேவ வேத்யோ வேதாந்தக்ருத்வேதவிதேவ சாஹம்
–15-15-எல்லோருடைய அகத்திலும் நான் புகுந்திருக்கிறேன். நினைவும், ஞானமும், இவற்றின் நீக்கமும்
என்னிடமிருந்து பிறக்கின்றன. எல்லாத் தேசங்களிலும் அறியப்படும் பொருள் யான்;
வேதாந்தத்தை ஆக்கியோன் யான்; வேத முணர்ந்தோன் யானே.

ஈஸ்வர: ஸர்வ பூதாநாம் ஹ்ருத்தேஸேऽர்ஜுந திஷ்டதி
ப்ராமயந் ஸர்வ பூதாநி யந்த்ரா ரூடாநி மாயயா-
-18-61-அர்ஜுனா, எல்லா உயிர்களுக்கும் ஈசன் உள்ளத்தில் நிற்கிறான். மாயையால் அவன் எல்லா உயிர்களையும் சக்கரத்திலேற்றிச் சுழற்றுகிறான்.

6 -சௌலப்ய – தஸ்யாஹம் ஸூலப பார்த்த நித்ய யுக்தஸ்ய யோகின –என்றும்-பரித்ராணாய சாதூனாம் ,விநாசாய துஷ்க்ருதாம் தர்ம சம்ஸ்தாபனார்த்தாய சம்பவாமி யுகே யுகே-4-8- -என்றும்
பக்திமான்கள் நிமித்தவாகவும் அவதார பிரயுக்தமாகவும் உண்டான அவன் சௌலப்யத்வத்தையும் ..

(ஸெளலப்‌ய) “தஸ்யாஹம்‌ ஸுலப: பார்த்த நித்ய யுக்தஸ்ய யோகி ந:” (கீதை 8-14) என்றும்‌, “பரித்ராணாய ஸாதூநாம்‌ விநாஸாய ச துஷ்க்ருதாம்‌ தர்ம ஸம்ஸ்தாபநார்த்தாய ஸம்பவாமி யுகே யுகே (கீதை 19-8) என்றித்யாதியாலும்‌ பக்திமான்கள்‌ நிமித்தமாகவும்‌ அவதார ப்ரயுக்தமாகவும்‌ உண்டான அவனுடைய ஸெளலப்‌யம்‌;

அநந்யசேதா: ஸததம் யோ மாம் ஸ்மரதி நித்யஸ:
தஸ்யாஹம் ஸுலப: பார்த நித்யயுக்தஸ்ய யோகிந:
–8-14-நித்திய யோகத் திசைந்து, பிரிது நினைப்பின்றி என்னை எப்பொழுதும் எண்ணும் யோகிக்கு நான் எளிதில் அகப்படுவேன்,
பார்த்தா. ஈசன் அடியார்க்கு எளியவன். நாம் முழுமனதை அவனிடத்துத் திருப்பாமையால் அவனை அடைகிறதில்லை. பொருள் உடையவர்க்கே மேலும் பொருள் சேருவது போன்று அருள் உடையவர்க்கே மேலும் அருள் வளர்கிறது.

பரித்ராணாய ஸாதூநாம் விநாஸாய ச துஷ்க்ருதாம்
தர்மஸம்ஸ்தாபநார்தாய ஸம்பவாமி யுகே யுகே
-4-8-நல்லோரைக் காக்கவும், தீயன செய்வோரை அழிக்கவும், அறத்தை நிலை நிறுத்தவும் நான் யுகந்தோறும் பிறக்கிறேன்.

7 -சாம்ய – சமோஹம் சர்வ பூதேஷு நமே த்வேஷ் யோஸ்தி நப்ரிய–9 -29-என்று அவனுடைய ஆஸ்ரத்யநீயத்வே சர்வ சாம்யத்தையும்-

(ஸாம்ய) ‘ஸமோஹம்‌ ஸர்வபூதேஷ- ந மேத்‌வேஷ்யோஸ்தி ந ப்ரிய:” (கீதை 9-29 என்று அவனுடைய ஸர்வபூத ஸமத்வம்‌;

ஸமோऽஹம் ஸர்வபூதேஷு ந மே த்வேஷ்யோऽஸ்தி ந ப்ரிய:
யே பஜந்தி து மாம் பக்த்யா மயி தே தேஷு சாப்யஹம்
–9-29-நான் எல்லா உயிர்களிடத்தும் சமமானவன். எனக்குப் பகைவனுமில்லை, நண்பனுமில்லை. -ஆனால் என்னை அன்புடன் தொழுவோர் – அன்னவர் என்னகத்தமர்ந்தார்; அவரகத்து நான் உளேன்.

8 -அஹங்கார தோஷ –அஹங்கார விமூடாத்மா கர்தாஹமிதி மந்யதே-3-27 -என்று அஹங்கார தோஷத்தையும் –9 -இந்திரிய பல–யததோஹ்யபி கௌந்தேய புருஷஸ்ய விபஸ்சித இந்திரியாணி ப்ரமாதீனி ஹரந்தி பிரசபம் மன -2-60-என்று இந்திரிய பிராபல்யத்தையும்-

(அஹங்காரதோஷ) “ப்ரக்ருதே: க்ரியமாணா நிர்குணை: கர்மாணி ஸர்வ: அஹங்கார விமூடாத்மா கர்தாஹமிதி மந்யதே” (கீதை 3-27) என்று அஹங்கார தோஷம்‌; (இந்த்‌ரிய பல) “இந்த்‌ரியாணி ப்ரமாதீநி ஹரந்தி ப்ரஸபம்‌ மந:” (கீதை 2-60) என்று இந்த்‌ரிய ப்ராபல்யம்‌ 

ப்ரக்ருதே: க்ரியமாணாநி குணை: கர்மாணி ஸர்வஸ:
அஹங்காரவிமூடாத்மா கர்தாஹமிதி மந்யதே
-3-27–எங்கும் தொழில்கள் இயற்கையின் குணங்களால் செய்யப்படுகின்றன. அகங்காரத்தால் மயங்கியவன், “நான் செய்கிறேன்” என்று நினைக்கிறான்.

யததோ ஹ்யபி கௌந்தேய புருஷஸ்ய விபஸ்சித:
இந்த்ரியாணி ப்ரமாதீநி ஹரந்தி ப்ரஸபம் மந
:–2-50-குந்தியின் மகனே, (தவ) முயற்சியுடைய புருஷனிடத்திலே கூட, இந்திரியங்கள் வரம்பு கடந்து செல்லும் போது தம்முடன் மனத்தையும் வலிய வாரிச் செல்கின்றன.

10 -மன ப்ராதன்ய சஞ்சலம் ஹி மன க்ருஷ்ண பிரமாதி பலவத் த்ருடம் தஸ்யாஹம் நிக்ரஹம் மன்யே வாயோ ரிவ ஸூ துஷ்கரம்-6-34-என்றும் – அசம்சயம் மஹாபாஹோ மனோ துர் நிக்ரஹம் சலம்
அப்யாசேனது கௌந்தேய வைராக்யேண ச க்ருஹ்யதே-6-35-
-என்றும் மற்ற இந்திரியங்களில் வைத்துக் கொண்டு மனசின் உடைய பிரதான்யத்தையும் –

(மந:ப்ராதாநய) “அஸம்ஸயம்‌ மஹாபாஹோ மநோ துர் நிக்‌ரஹம்‌ சலம்‌ அப்‌யாஸேந து கெளந்தேய வைராக்‌யேண ச க்‌ ருஹ்யதே” (கீதை 6-35) இத்யாதிகளிலே சொல்லப்பட்ட மந:ப்ராதா நீயம்‌; 

சஞ்சலம் ஹி மந​: க்ருஷ்ண ப்ரமாதி பலவத்த்ருடம்
தஸ்யாஹம் நிக்ரஹம் மந்யே வாயோரிவ ஸுதுஷ்கரம்
-6-34-கண்ணா, மனம் சஞ்சலமுடையது; தவறும் இயல்பினது, வலியது; உரனுடையது. அதைக் கட்டுப்படுத்துதல் காற்றைக் கட்டுவது போல் மிகவும் கஷ்டமான செய்கையென்று நான் மதிக்கிறேன்.

அஸம்ஸயம் மஹாபாஹோ மநோ துர்நிக்ரஹம் சலம்
அப்யாஸேந து கௌந்தேய வைராக்யேண ச க்ருஹ்யதே-
-6-35-ரீ பகவான் சொல்லுகிறான்: பெருந்தோளாய், மனம் கட்டுதற்கரியதுதான். சலனமுடையதுதான்; ஐயமில்லை.-ஆனால் குந்தியின் மகனே, அதைப் பழக்கத்தாலும், விருப்பமின்மையாலும் கட்டி விடலாம்.

11 -கரண நியமன – தானி சர்வாணி சம்யம்ய யுக்த ஆசீத மத்பர வசே ஹி யச்யேந்த்ரியாணி தஸ்ய பிரஜ்ஞா ப்ரதிஷ்டிதா -2-61- -என்றும் – சர்வத்வாராணி சம்யம்ய மனோ ஹ்ருதி நிருத்த்யச – 8-12- என்றும் கரண நியமனத்தையும் —

(கரணநியமந) “தாநி ஸர்வாணி ஸம்யம்ய யுக்த ஆஸீத மத்பர: ஸர்வேந்த்‌ரியாணி ஸம்யம்ய மநோ ஹ்ருதி நிருத்ய ச (கீதை 2-61 இத்யாதிகளாலே சொல்லப்பட்ட கரண நியமநம்‌;

தாநி ஸர்வாணி ஸம்யம்ய யுக்த ஆஸீத மத்பர:
வஸே ஹி யஸ்யேந்த்ரியாணி தஸ்ய ப்ரஜ்ஞா ப்ரதிஷ்டிதா
–2-61-அவற்றையெல்லாம் நன்றாக அடக்கி, யோகத்தில் அமர்ந்தவனாய், என்னைப் பரமாகக் கொண்டு, புலன்களை வசப்படுத்தி வைத்திருப்பவன் எவனோ, அவனுடைய அறிவே நிலைகொண்டது.

ஸர்வத்வாராணி ஸம்யம்ய மநோ ஹ்ருதி நிருத்ய ச
மூர்த்ந்யாதாயாத்மந: ப்ராணமாஸ்திதோ யோகதாரணாம்
–8-12-எல்லா வாயில்களையும் நன்கு கட்டி, மனத்தை உள்ளத்தில் நிறுத்தி, உயிரைத் தலையின் உச்சியில் நிலை யுறுத்தி யோக தாரணையில் உறுதி பெற்று,

12 -ஸூஹ்ருதி பேத –-சதுர்விதா பஜந்தே மாம் ஜனாஸ் ஸூக்ருதி நோர்ஜுன ஆர்த்தோ ஜிஞ்ஞா ஸூராரர்தாத்தீ ஜ்ஞாநீ ச பரதர்ஷப-7-16– -என்று ஸூஹ்ருதிகளுடைய பேதத்தையும் –

(ஸூக்ருதி பேத) “சதுர்விதா பஜந்தே மாம்‌ ஜநா: ஸுக்ருதிநோர்ஜுந ஆர்த்தோ ஜிஜ்ஞாஸ ரர்த்தார்த்த ஜ்ஞாநீ ச பரதர்ஷப,” (கீதை 7-16) என்று சொல்லப்பட்ட ஸுக்ருதி பேதம்‌;

சதுர்விதா பஜந்தே மாம் ஜநா: ஸுக்ருதிநோऽர்ஜுந
ஆர்தோ ஜிஜ்ஞாஸுரர்தார்தீ ஜ்ஞாநீ ச பரதர்ஷப
–7-16-நற்செய்கையுடைய மக்களில் நான்கு வகையார் என்னை வழிபடுகின்றனர். பரதரேறே,துன்புற்றார், அறிவை விரும்புவோர், பயனை வேண்டுவோர், ஞானிகள் என.

13 -தேவாசுர விபாக –தவௌ பூத சர்கவ் லோகேஸ்மின் தைவ ஆஸூர ஏவச-16-6-என்றும்
தைவீ சம்பத் விமோஷாய நிபாந்தயா ஸூரி மதா 16-4–
என்று தேவாசுர விபாகத்தையும்

(தேவாஸுரவிபா ௧) “த்‌வெள பூதஸர்கெள, லோகேஸ்மிந்‌ தைவ ஆஸ ஏவ ச தை வீ ஸம்பத்‌ விமோக்ஷாய நிபந்தா யாஸுரீமதா” (கீதை 16-6) இத்யாதிகளாலே சொல்லப்பட்ட தேவாஸுர விபாகம்‌;

தைவீ ஸம்பத்விமோஷோய நிபந்தாயாஸுரீ மதா
மா ஸுச: ஸம்பதம் தைவீமபிஜாதோऽஸி பாண்டவ
–16-5-தேவ சம்பத்தால் விடுதலையுண்டாம், அசுர சம்பத்தால் பந்தமேற்படும்; பாண்டவா, தேவ சம்பத்தை எய்தி விட்டாய்; துயரப்படாதே.

த்வௌ பூதஸர்கௌ லோகேऽஸ்மிந்தைவ ஆஸுர ஏவ ச
தைவோ விஸ்தரஸ: ப்ரோக்த ஆஸுரம் பார்த மே ஸ்ருணு
–16-6-இவ்வுலகத்தில் உயிர்ப்படைப்பு இரண்டு வகைப்படும். தேவ இயல் கொண்டது. அசுர இயல் கொண்டது. தேவ இயல் கொண்டதை விரித்துச் சொன்னேன் பார்த்தா, அசுர இயல் கொண்டதைச் சொல்லுகிறேன், கேள்.

14 –விபூதி யோக –-ஹந்ததே கத யிஷ்யாமி விபூதி ராத மநஸ் ஸூப பிராதான்யதஸ் குரு ஸ்ரேஷ்ட
நாஸ்த்யந்தோ விஸ்தரஸ்ய மே –10-9
-என்றும் ஆதித்யா நாமஹம் விஷ்ணு ஜ்யோதிஷாம்
ரவிரம்சுமான்-10-21
– -இத்யாதியால் விபூதி யோகத்தையும் –

(விபூதி யோக,) “ப்ராதாந்யத: குரு ஸ்ரேஷ்ட, நாஸ்த்யந்தோ விஸ்தரஸ்ய மே” (கீதை 10-10), “ஆதித்யாநாம்‌ அஹம்‌ விஷ்ணு: ஜ்யோதிஷாம்‌ ரவிரம்ஸூமாந்‌’ (கீதை 10-2) இத்யாதிகளாலே சொல்லப்பட்ட விபூதி யோகம்‌;

ஹந்த தே கதயிஷ்யாமி திவ்யா ஹ்யாத்மவிபூதய:
ப்ராதாந்யத: குருஸ்ரேஷ்ட நாஸ்த்யந்தோ விஸ்தரஸ்ய மே-
-10-19-ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்: அச்ச! என் ஆத்மப் பெருமைகள் தேவத்தன்மை உடையனவே. அவற்றுள் பிரதானமானவற்றை நினக்குச் சொல்லுகிறேன். எனது விஸ்தாரத்துக்கு முடிவில்லை.

ஆதித்யாநாமஹம் விஷ்ணுர்ஜ்யோதிஷாம் ரவிரம்ஸுமாந்
மரீசிர்மருதாமஸ்மி நக்ஷத்ராணாமஹம் ஸஸீ-
-10-21-ஆதித்யர்களில் நான் விஷ்ணு; ஒளிகளில் நான் கதிர் சான்ற ஞாயிறு; காற்றுகளில் மரீசி; நக்ஷத்திரங்களில் சந்திரன்.

15 -விஸ்வரூப தர்சன –-பஸ்யாமி தேவாம்ஸ்தவ தேவ தேஹ சர்வாம் ஸ்ததா பூத விசேஷ சங்கான்
ப்ரஹ்மாணம் ஈசம் கமலா சனஸ்தம் ருஷீம்ஸ் ச சர்வான் உரகாம்ச திவ்யான் 11-15
-இத்யாதியாலே
விஸ்வரூப தர்சனத்தையும் –

(விஸ்வரூபதர்ஸந) “பஸ்யாமி தேவாம்ஸ்தவ தேவ தேஹே ஸர்வாம்ஸ்ததா பூத விஸேஷ ஸங்காந்‌ ப்‌ரஹ்மாண மீஸம்‌ கமலாஸநஸ்த்தம்‌ ருஷீம்ஸ்ச ஸர்வாநுரகாம்ஸ்ச தீப்தாந்‌ (கீதை 11-15) இத்யாதியாலே சொல்லப்பட்ட விஸ்வரூப தர்ஸநம்‌; 

பஸ்யாமி தேவாம்ஸ்தவ தேவ தேஹே ஸர்வாம்ஸ்ததா பூதவிஸேஷஸங்காந்
ப்ரஹ்மாணமீஸம் கமலாஸநஸ்தம் ருஷீம்ஸ்ச ஸர்வாநுரகாம்ஸ்ச திவ்யாந்
–11-15-அர்ஜுனன் சொல்லுகிறான்: தேவனே, நின் உடலில் எல்லாத் தேவர்களையும் காண்கிறேன், பூத வகைகளின் தொகுதிகளைக் காண்கிறேன். தாமரை மலரில் வீற்றிருக்கும் ஈசனாகிய பிரமனையும், எல்லா ரிஷிகளையும் தேவ சர்ப்பங்களையும் இங்குக் காண்கிறேன்.

16 -சாங்க பக்தி –மன்மனா பவ மத் பக்தோ மத் யாஜி மாம் நமஸ்குரு மாமே வைஷ்யசி யுக்த்வைவ மாத்மானம் மத்பராயணா -9-24–என்று அங்க சஹிதையான பக்தியையும்-

(ஸாங்க பக்தி) மந்மநாபவ மத்பக்தோ மத்‌ யாஜீ மாம்‌ நமஸ்குரு மாமேவைஷ்யஸி ஸத்யம்‌ தே ப்ரதிஜாநே ப்ரியோஸி மே” (கீதை 18-65) என்று சொல்லப்பட்ட அங்க, ஸஹிதையான பக்தி;

மந்மநா பவ மத்பக்தோ மத்யாஜீ மாம் நமஸ்குரு
மாமேவைஷ்யஸி யுக்த்வைவமாத்மாநம் மத்பராயண
:–9-34-மனத்தை எனக்காக்கி விடு; பக்தியை எனக்காக்கு; என்னைத் தொழு. என்னைப் பரமாகக் கொள். இங்ஙனமியற்றும் தற்கலப்பு யோகத்தால் என்னையே எய்துவாய்.

மந்மநா பவ மத்பக்தோ மத்யாஜீ மாம் நமஸ்குரு
மாமேவைஷ்யஸி ஸத்யம் தே ப்ரதிஜாநே ப்ரியோऽஸி மே-
-18-65-உன் மனதை எனக்காக்குக. என் தொண்டனாகுக. எனக்கென வேள்விசெய்க. என்னையே வணங்குக. என்னை யெய்துவாய், உண்மை இஃதே, உனக்கிது சபதமுரைக்கிறேன், நீ எனக்கினியை.

17 -18 -பிரபத்தி த்வை இத்யாதி – தைவீ ஹ்யேஷா குண மயீ மம மாயா துரத்தயா மாமே வயே பிரபத்யந்தே மாயா மேதாம் தரந்திதே -7-14-என்றும் தமேவ சரணம் கச்ச சர்வ பாவேன பாரத–18-62- -என்று அங்கத்வேனவும்சர்வ தர்மான் பரித்யஜ்ய மாம் ஏகம் சரணம் வ்ரஜ அஹம் த்வா சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மா ஸூ ச -18-66– – ஸ்வதந்த்ரவேனும் -இரண்டு படியாகவும் பிரபத்து உபதேசம் பண்ணினால் போலேயும்

(ப்ரபத்தி த்‌வைவித்‌யம்‌) தைவீஹ்யேஷா குணமயீ மம மாயா துரத்யயா மாமேவயே ப்ரபத்‌யந்தே மாயாமேதாம்‌ தரந்தி தே” (கீதை 7-10), “தமேவ ஸரணம்‌ ௧ச்ச ஸர்வபாவேந பாரத (கீதை 18-62) இத்யாதியாலே சொல்லப்பட்ட அங்க ப்ரபத்தி, “ஸர்வ தர்மாந்‌ பரித்யஜ்ய” (கீதை 18-66) இத்யாதி யாலே சொல்லப்பட்ட ஸ்வதந்த்ர ப்ரபத்தியாகிற இவ்வர்த்த, விஸேஷங்களை ஸ்ரீ கீதா முகத்தாலே உபபாதித்தாப்போலே,

தைவீ ஹ்யேஷா குணமயீ மம மாயா துரத்யயா
மாமேவ யே ப்ரபத்யந்தே மாயாமேதாம் தரந்தி தே–7
-14-இந்த குணமாகிய எனது தேவமாயை கடத்தற்கரியது. என்னையே யாவர் சரணடைவரோ அவர்கள் இந்த மாயையைக் கடக்கின்றார்கள்.

தமேவ ஸரணம் கச்ச ஸர்வபாவேந பாரத
தத்ப்ரஸாதாத்பராம் ஸாந்திம் ஸ்தாநம் ப்ராப்ஸ்யஸி ஸாஸ்வதம்-
-18-62-அர்ஜுனா, எல்லா வடிவங்களிலும் அவனையே சரணெய்து, அவனருளால் பரம சாந்தியாகிய நித்திய ஸ்தானத்தை எய்துவாய்.

ஸர்வதர்மாந்பரித்யஜ்ய மாமேகம் ஸரணம் வ்ரஜ
அஹம் த்வாம் ஸர்வபாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மா ஸுச
:–18-66-எல்லா அறங்களையும் விட்டு விட்டு என்னையே சரண் புகு. எல்லாப் பாவங்களினின்றும் நான் உன்னை விடுவிக்கிறேன். துயரப்படாதே.

இவரும்-1-2 -3–ஜீவ பர பேதமும்ஜீவர்களுக்குள் பரஸ்பர பேதமும் – பிரகிருதி -ஆத்மா விவேகம்-ஆகிற தத்வ விவேகத்தையும் அடியேன் உள்ளான் உடல் உள்ளான் –8-8-2-என்கிற இடத்தில் சப்தமாகவும் -ஆர்த்தமாகவும் ஜீவ பர பேதமும்,ஜீவர்களுக்குள் பரஸ்பர பேதமும் , சென்று சென்று பரம் பரமாய்-8-8-5- -என்று ஆத்மாவுக்கு தேக விலஷணத்தைச் சொல்லுகையாலே பிரகிருதி -ஆத்மா விவேகம் ஆகிற தத்வ விவேகத்தையும் —

அடியேனுள்ளான்‌ உடலுள்ளான்‌” (திருவாய்மொழி 8-8-2 என்று ஜீவ பர பேதமும்‌, ஜீவர்களுக்கு பரஸ்பர பேதமும்‌, “சென்று சென்று பரம்பரமாய்‌ யாதுமின்றித்‌ தேய்ந்தற்று நன்று தீதென்றறிவரிதாய்‌ நன்றாய்‌ ஞானங்கடந்ததே” (திருவாய்மொழி 8-8-5) என்று தேஹத்துக்கும்‌ ஜீவனுக்கும்‌ உண்டான பேதமுமாகிற தத்த்வ விவேகத்தையும்‌,

அடியேன்  உள்ளான் உடல் உள்ளான் அண்டத்தகத்தான் புறத்துள்ளான்
படியேயிது வென்றுரைக்கலாம் படியனல்லன் பரம் பரன்
கடி சேர் நாற்றத்துள்ளாலை இன்பத் துன்பக் கழி நேர்மை
ஓடியா வின்பப் பெருமையோன் உணர்விலும்பர் ஒருவனே–8-8-2—அடியேன் என்கிறது -அஹம் சப்த பர்யாயம் ஆகையால் -ஞானாநந்தங்களிலும் அந்தரங்கம் பகவத் சேஷத்வம் -என்கை –சேதனனுக்கு -திவ்யாத்ம ஸ்வரூபத்திலும் திவ்ய மங்கள விக்ரஹமே உத்தேச்யமாய் இருக்குமா போலே -ஆஸ்ரிதன் ஸ்வரூபத்தில் காட்டிலும் இவன் தேஹத்தை யாயிற்று ஈஸ்வரன் விரும்பி இருப்பது -செருக்கர் அபிமத விஷயத்தில் அழுக்கு உகக்குமா போலே – இத்தால் ஜீவ பர பேதமும் -ஜீவர்களுக்கு பரஸ்பர பேதமும் -சேஷ சேஷித்வ சம்பந்தமும் -அபரமார்த்தம் -என்றும் -ஒவ் பாதிகம் என்றும் சொல்லுகிற பக்ஷங்கள் அர்த்தாத ப்ரதி ஷிப்தங்கள் -ஆழ்வானுக்கு திருக் கோட்டியூர் நம்பி -அடியேன் உள்ளான் என்னப் பெற்ற படி என் -என்று பணித்தார் –

நின்ற ஒன்றை உணர்ந்தேனுக்கு அதன் நுண் நேர்மை அது இது என்று
ஒன்றும் ஒருவர்க்கு உணரலாகாது உணர்ந்தும் மேலும் காண்பு அரிது
சென்று சென்று பரம்பரம் ஆய் யாதும் இன்றித் தேய்ந்து அற்று
நன்று தீது என்று அறிவு அரிதாய் நன்றாய் ஞானம் கடந்ததே–8
-8-5—சென்று சென்று பரம்பரம் ஆய்-போய் போய் ஒன்றுக்கு ஓன்று மேலாய் இருக்கிற அன்ன மயாதிகளுக்கும் பரமாய்-யாதும் இன்றித் தேய்ந்து அற்று-அவற்றின் ஸ்வ பாவம் ஒன்றும் தட்டாத படி அவற்றோடு அற தொற்று அற்று
நன்று தீது என்று அறிவு அரிதாய்-தேகம் -தேஹத்தைக் காட்டிலும் இந்திரியம் -அத்தைக் காட்டிலும் மனஸ் ஸூ -அதில் காட்டிலும் பிராணன் -அதில் காட்டிலும் புத்தி -என்கிறதில் வை லக்ஷண்யம் உண்டாகிறாப் போலே -ப்ராக்ருதங்களில் உண்டான நன்மை தீமைகள் சொல்ல ஒண்ணாது இருக்கை
நன்றாய் -இவற்றில் காட்டில் அதி வி லக்ஷணமாய்-ஞானம் கடந்ததே–இந்திரிய ஞானத்துக்கு எட்டாது இருக்கும் – கீழில் அவை ஒன்றுக்கு ஓன்று நெடு வாசி உண்டாய் இருக்கச் செய் தேயும் ஏக பிராமண கம்யத்வ சாம்யம் உண்டு -அதுவும் இல்லை என்கிறது இப்பாட்டில் –-இப்பாட்டில் –சாங்க்யத்தில்-தத்வ சங்க்யானக்ரமத்தால்-ஆத்ம ஸ்வரூபத்தை சொல்லும்படியைச் சொல்லிற்று-

4 — நித்யத்வ -அநித்யத்வங்களையும்-மின்னின் நிலையிலே மன் உயிர் ஆக்கைகள்-1-2-2- -என்றும் –
உள்ளதும் இல்லதும் -1-2-8–என்றும் சித் அசித் தத்வங்களின் நித்யத்வ -அநித்யத்வங்களையும்-

மின்னின்‌ நிலையில மன்னுயிர்‌ ஆக்கைகள்‌” (திருவாய்மொழி 1-1-2), “உள்ளதும்‌ இல்லதும்‌”(திருவாய்மொழி 1-2-8) என்று ஆத்மாவினுடையவும்‌ அசித்தினுடையவும்‌ நித்யத்வாநித்யத்வங்களையும்‌,

மின்னின் நிலையில மன்னுயிர் ஆக்கைகள்
என்னும் இடத்து இறை யுன்னுமின் நீரே –
1-2-2-நெடும் காலம் பழகின விஷயங்களை விட ஒண்ணுமோ -என்னில் அஸ்த்ரத்வாதி தோஷங்களை அனுசந்திக்கவே விடுகை எளிது என்கிறார்–மின்னுக்கு உள்ள நிலையும் இல்லை-சம்பதஸ் ஸ்வப்ன சங்காசா யௌவனம் குஸூமோபமம் தடிச்சஞ்சலமாயுச்ச கஸ்ய ச்யாஜ்ஜா நதோ த்ருதி –-அது தோற்றி நசிக்கும்-இது கர்ப்பத்தில் நசிக்கும்-தோற்றின போதே மாயக் கடவதாய் இருப்பதொரு வ்யவஸ்தை உண்டு அதுக்கு-இது சில நாள் இருக்கிலும் இருக்கும் -அஸ்திரம் என்று ஹிதத்தில் ப்ரவர்த்திக்க ஒட்டாது -ஸ்திரம் என்று விச்வசிக்கப் பண்ணி நசிக்கும் –

இல்லதும் உள்ளதும் அல்லது அவனுரு
எல்லையில் அந்நலம் புல்கு பற்று அற்றே
 –1-2-4–நச்வரமான அசேதனத்தின் ஸ்வ பாவமும் –
ஏக ரூபனான சேதனன் படியும் இன்றிக்கே இருக்கும் அவன் ஸ்வ ரூபம்-இல்லது என்று துச்சத்வம் இத்யாத்வங்களை சொல்லுகிறது அன்று -நச்வரதையைச் சொல்லுகிறது-உள்ளது என்று அஸ்தித்வ மாத்ரத்தை சொல்லுகிறது அன்று -நித்யதையைச் சொல்லுகிறது

5–நியந்தருத்வத்தையும்-உடல் மிசை உயிர் எனக் கரந்து எங்கும் பரந்து-1-1-7- -என்றும் –
கரந்த சில் இடம் தொறும் இடம் திகழ் பொருள் தொறும் கரந்து எங்கும் பரந்து -1-1-19–என்றும்
சேதன அசேதன சரீரியாய் நின்றனர்-1-1-6- -இத்யாதிப் படியே அவற்றின் சகல பிரவ்ருத்தி நிவ்ருத்திகளும் ஸ்வ ஆதீனம் ஆகும் படி இருக்கிறவனுடைய நியந்தருத்வத்தையும்-

உடல் மிசை உயிரெனக்‌ கரந்து எங்கும்‌ பரந்துளன்‌’ (திருவாய்மொழி 1-1-7) என்றும்‌, “கரந்தசிலிடந்தொறும்‌ இடந்திகழ்‌ பொருடொறும்‌” (திருவாய்மொழி 1-1-10) என்றும்‌ அந்த சேதநாசேதநங்கள்‌ ஸரீரமாகத்‌ தான்‌ ஸரீரியாய்க்‌ கொண்டு “நின்றனர்‌” (திருவாய்மொழி 1-1-6) இத்யாதி யாலே ப்ரவ்ருத்தி நிவ்ருத்திகள்‌ ஸ்வாதீநமாம்படி இருக்கிற அவனுடைய நியந்த்ருத்வத்தையும்‌

திட விசும்பு எரி வளி நீர் நிலம் இவை மிசை
படர் பொருள் முழுவதும் யாயவை யவை தொறும்
உடன் மிசை யுயிர் எனக் கரந்து எங்கும் பரந்துளன்
சுடர்மிகு சுருதியுள் இவை யுண்ட சுரனே –1-1-7—சரீரத்தில் ஆத்மாவைப் போலே தாரகனுமாய் -நியந்தாவுமாய் -சேஷியுமாய் பூத இந்த்ரிய அந்தகரண புருஷாக்யம்ஹி யஜ்ஜகத் ச ஏவ சர்வ பூதாத்மா விஸ்வ ரூபோ யதோஸ் அவ்யய–கரந்து-வ்யாப்த பதார்த்தங்களுக்குத் தெரியாமே-எங்கும் பரந்து
உள்ளும் புறமும் வியாபித்து-இவை யுண்ட சுரனே-பிரளய தசையில் இவற்றை சம்ஹரித்த சர்வேஸ்வரன்

நின்றனர் இருந்தனர் கிடந்தனர் திரிந்தனர்
நின்றிலர் இருந்திலர் கிடந்திலர் திரிந்திலர்
என்றும் ஓர் இயல்வினர் என நிலனைவரியவர்
என்றும் ஓர் இயல்வொடு நின்ற எம் திடரே
 –1-1-6-ப்ரவ்ருத்தி நிவ்ருத்திகள் பகவத் சங்கல்ப அதீனைகள் என்று சாமா நாதி கரண்யத்திலே சொல்லுகிறது –

பரந்த தண் பரவையுள் நீர் தொறும் பரந்துளன்
பரந்த வண்டமிதென நில விசும்பு ஒழிவறக்
கரந்த சிலிடம் தொறும் இடம் திகழ் பொருள் தொறும்
கரந்து எங்கும் பரந்துளன் இவையுண்ட கரனே –
1-1-10—கரந்த சிலிடம் தொறும்- அதி ஷூத்ர சரீரங்களிலும்-இடம் திகழ் பொருள் தொறும்-தத் அந்தர்வர்த்திகளாய் ஸ்வயம் பிரகாசமான ஆத்மாக்கள் தோறும்-கரந்து–அன்யைரத்ருஷ்டனாய் இருக்கை-எங்கும் பரந்துளன்-இப்படி சமஸ்த வஸ்துக்களிலும் வியாபித்து இருக்கும்

6 -அவனுடைய சௌலப்யத்தையும்-பத்துடை அடியவர்க்கு எளியவன் -1-3-1–என்றும் –
பல பிறப்பாய் எளிவரும் இயல்வினன் -1-3-2- -என்றும் ஆசா லேசம் உடையாரை பற்றவும் அவதார பிரயுக்தமாகவும் உண்டான அவனுடைய சௌலப்யத்தையும்-

பத்துடை யடியவர்க்கு எளியவன்‌ (திருவாய்மொழி 1-3-1) என்றும்‌, “பல பிறப்பாய்‌ எளிவருமியல்வினன்‌ ‘ (திருவாய்மொழி 1-3-2) என்றும்‌ ஆஸா லேஸமுடையவர்க்கு ஸுலபன்‌ என்றும்‌, அவதரித்து ஸுலபனாயென்றும்‌ சொல்லுகிற அவனுடைய ஸெளலப்‌ யத்தையும்‌, 

பத்துடை யடியவர்க்கு எளியவன் பிறர்களுக்கு அரிய
வித்தகன் மலர்மகள் விரும்பும் நம் அரும் பெறல் அடிகள்
மத்துறு கடை வெண்ணெய் களவினில் உரவிடை யாப்புண்டு
எத்திறம் உரலினோடு இணைந்து இருந்து ஏங்கிய எளிவே
 –1-3-1–பத்து -பக்தி -பத்து என்று பக்தியைக் காட்டுமோ -என்னில் எட்டினோடு இரண்டு என்னும் கயிற்றினால் மனம் தனைக் கட்டி -என்னக் கடவது இறே பக்தி சப்தத்தால் இங்கு பர பக்த்யாதிகளைச் சொல்லுகிறது அன்று – பக்த்யுபக்ரமான அத்வேஷ மாத்ரத்தைச் சொல்லுகிறது தாழ்ந்தாருக்கு முகம் கொடுக்கும் என்கிற குண பிரகரணம் ஆகையாலே
உடை – இம்மாத்ரத்தைக் கனக்க யுடைமையாகச் சொல்லுகிறது –விண்ணுளாரிலும் சீரியர் -என்று இங்கே பகவத் அனுபவம்-பண்ணுவாரை நித்ய ஸூரிகளுக்கும் அவ்வருகாக நினைத்து இருக்கும் பகவத் அபிப்ராயத்தாலே –

எளிவரும் இயல்வினன் நிலை வரம்பில பல பிறப்பாய்
ஒளி வரு முழு நலம் முதலில கேடில வீடாம்
தெளிதரு நிலைமையது ஒழிவிலன் முழுவதும் இறையோன்
அளிவரும் அருளினோடு அகத்தனன் புறத்தனன் அமைந்தே 
–1-3-2—பத்துடை அடியவர்க்கு -என்று -சோபாதிகம் அன்று இவன் எளிமை -ஜலத்துக்கு சைத்யம் போலே ஸ்வ பாவ சித்தம் எளிமையை இயல்வாக யுடையவன்-பல பிறப்பாய் – வேதம் சொல்லிலும் –பஹூதா விஜாயதே -என்னும் அத்தனை – தான் சொல்லிலும் –பஹூநிமே -என்னும் அத்தனை – உட்புக்க தம் போல்வார் சொல்லிலும் –என்நின்ற யோநியுமாய் பிறந்தாய் -என்னும் அத்தனை – பிறப்பாய் – பரார்த்தமாக தாழ நின்றோம் என்று தம் பக்கலிலும் புரை இன்றிக்கே இருக்கை –என்னக் கடவது இறே

7 -சாம்யத்தையும்-பற்றிலன் ஈசன் முற்றவும் நின்றனன் –1-2-6–என்று அவனுடைய ஆஸ்ரணியத்வே சாம்யத்தையும்-(போற்றார் உயிரினும் போற்றுநர் உயிரினும் மாற்றே மாற்றல் இலையே நினக்கு
மாற்றோரும் இலர் கேளிரும் இலர் எனும் வேற்றுமை இன்றது போற்றுநர்ப் பெறினே–பரிபாடல் -4-51/54-)

முற்றவும்‌ நின்று” (திருவாய்மொழி 1-2-6) என்று ஆஸ்ரயணீயத்வே ஸர்வஸமனாய்‌ நின்றானென்று சொல்லப்பட்ட அவனுடைய ஸாம்யத்தையும்‌,

பற்றிலன் யீசனும் முற்றவும் நின்றனன்
பற்றிலையாய் அவன் முற்றில் அடங்கே –
1-2-6-பற்றிலன் பற்று -உண்டு சங்கம் –-அத்தை வாசஸ் ஸ்தானமாக யுடையவன் –பற்றிலன்-பற்று இலான்-பற்றிலே உள்ளான் -என்னவுமாம் -சங்க ஸ்வ பாவன் -என்றபடி –யீசனும் – ஈஸ்வரனும் ஈஸ்வரத்வத்தை தவிர்க்க ஒண்ணாமை யாலே கிடக்கும் அத்தனை இஸ் சங்கம் குணம் ஆகைக்காகக் கிடக்கிறது பயப்படுகைக்கு உடல் அன்று-பிரசாத பரமௌ நாதௌ முற்றவும் நின்றனன்–சமோஹம் சர்வ பூதேஷு -என்கிறபடியே ஆஸ்ரயணீத்வே சர்வ சமானாய் இருக்கை

8 -அஹங்கார தோஷத்தையும்-நீர் நுமது என்று இவை வேர் முதல் மாய்த்து -1-2-3–என்று
சம்சார ஹேது அதுவே சொல்லுகையாலே –அஹங்கார தோஷத்தையும்-

நீர் நுமதென்றிவை வேர்முதல்‌ மாய்த்து” (திருவாய்மொழி 1-2-3) என்று அஹங்கார தோஷத்தையும்‌,

நீர் நுமது என்றிவை வேர் முதல் மாய்த்து இறை
சேர் மின் உயிர்க்கு அதன் நேர் நிறையில்லே
–1-2-3—நீர் நுமது -என்று அனர்த்த கரமான அஹங்கார மமகாரங்களை-நான் என்னது -என்னும் அர்த்தத்தை பிறர்க்கு உபதேசிக்கப் புக்கால் -நீங்கள் என்றும் உங்களது என்றும் இறே சொல்லுவது-அதாகிறது -அனாத்மயாத்மா புத்தியும் அஸ்வே ஸ்வ த்வய புத்தியும்-நான் என்னது — என்னில் நா வேம் இறே-அனாத்மன்யாத்ம புத்திர்யா அச்வேஸ் வமிதி யாமினி அவித்யாதரு சம்பூதி பீஜமேதத் த்விதாஸ்திதம்-என்று சம்சார பீஜத்தையும்
அச்யுதாஹன் த்வாச்மீதி சைவ சம்சார பேஜஷம் என்று பரிகாரத்தையும் சொல்லிற்று இறே –இவை வேர் முதல் மாய்த்து- இவற்றை சவாசனமாகப் போக்கி-இது அக்னி நா சிஞ்சேத்-போலே துஷ்கரம்
இவை நேராக விடும் போது பகவத் விஷயத்தைப் பற்றி விட வேணும் அவனைப் பற்றும் போது இவற்றை விட்டு அல்லது பற்ற ஒண்ணாது-ஆகையாலே இதரே தராஸ் ராயக்ரச்தம்
ஆனால் இதற்குப் பொருள் என் -என்னில் -ஆச்சார்ய சேவையாலும் சாஸ்திர அப்யாசத்தாலும் இவை அபுருஷார்த்தம் என்று அத்யவசிக்கை இரண்டு வ்ருஷம் சேர நின்றால்-ஒன்றிலே குட்டமிட்டுப் பெருங்காயத்தை வைத்தால் மற்றையது நிற்க இது க்ரமத்தால் உலர்ந்து போமா போலே -இந்த ஜ்ஞானம் பிறந்தால் இவை ஸ்வ கார்யம் செய்ய மாட்டாது-பீஜான் யக் ந்யுபதக்தானி -இத்யாதி
ரஷகன் அவசர ப்ரதீஷனாய் இருக்க இவன் பக்கலிலே விலக்காமை யுண்டானால் விரோதி போகிக்கு தட்டில்லை என்கை –

9 -இந்திரிய பலத்தையும்-விண்ணுளார் பெருமானுக்கு அடிமை செய்வாரையும் செறும் ஐம் புலன்-7-1-6- -என்று இந்திரிய பலத்தையும்-

விண்ணுளார்‌ பெருமாற்கு அடிமை செய்வாரையும்‌ செறும்‌ ஐம்புலன்‌” (திருவாய்மொழி 7-1-6) என்று இந்த்‌ரிய பலத்தையும்‌,

விண்ணுளார் பெருமாற் கடிமை செய்வாரையும் செறும் ஐம்புலனிவை
மண்ணுள் என்னைப் பெற்றால் என் செய்யா மற்று நீயும் விட்டால்?
பண்ணுளாய்!கவி தன்னுளாய்!பத்தி யினுள்ளாய்! பரமீசனே! வந்தென்
கண்ணுளாய்! நெஞ்சுளாய்! சொல்லுளாய்!ஒன்று சொல்லாயே.–7-1-6—அயர்வறும் அமரர்கள் அதிபதிக்கு அவர்களோடே கூட அடிமை செய்ய ருசி உடையாரையும் விஷயங்களில் மூட்டி நலியும் இந்திரியங்கள் இவை -விரக்தனான விச்வாமித்ரனையும் கைங்கர்ய ருசி உடைய மஹாராஜரையும் கூட நலிந்து இ றே -விண்ணுளாராய்-சர்வ ஸ்வாமி யாய் இருக்கிறவனுக்கு அடிமை செய்ய வேணும் என்று இங்கே வரிலும் -எனக்கு என்னப் பண்ணும் இந்திரியங்கள் -பெரிய திருவடி பிராட்டிமாரையும் தேவரையும் நான் வஹித்தேன்-என்றான் இறே 

10 -மனோ பிரதான்யத்தையும்-மனத்தை வலித்து -5-1-4-என்று மனோ நியமத்தின் சொல்லுகையாலே மனோ பிரதான்யத்தையும்-

என்றும்‌ ஏத்துதல்‌ மனம்‌ வைம்மினோ” (திருவாய்மொழி 3-6-3) என்று மந: ப்ராதாந்யத்தையும்‌

என் கொள்வன் உன்னை விட்டு என்னும் வாசகங்கள் சொல்லியும்
வன் கள்வனேன் மனத்தை வலித்துக் கண்ண நீர் கரந்து
நின் கண் நெருங்க வைத்தே எனது ஆவியை நீக்க கில்லேன்
என் கண் மலினம் அறுத்து என்னைக் கூவி அருளாய் கண்ணனே –5-1-4—மனத்தை வலித்து-
விஷயங்களின் நின்றும் மனசை நிவர்ப்பித்து -நான் இந்திரிய ஜெயம் பண்ண நினைக்கை யாவது -அவன் என்னை மேலிடுகை -இந்திரியாணி பிரமாதீ நீ ஹரந்தி பிரசபம் மன-

பரவி வானவர் ஏத்த நின்ற பரமனைப் பரஞ்சோதியைக்
குரவை கோத்த குழகனை மணி வண்ணனைக் குடக்கூத்தனை
அரவம் ஏறி அலைகடல் அமருந் துயில் கொண்ட அண்ணலை
இரவும் நன் பகலும் விடாது என்றும் ஏத்துதல் மனம் வைம்மினோ.–3-6-3-எப்போதும் ஏத்துகையிலே மனசை வைக்க அமையும் -தானே கொண்டு முழுகும் -பின்னை உபதேசிக்க வேண்டா –

11 -கரண நியமனத்தையும்-உள்ளம் உரை செயல் உள்ள விம் மூன்றையும் உள்ளிக் கெடுத்து -1-2-8–என்று கரண நியமனத்தையும்-

உள்ள முரை செயல்‌ உள்ள விம்‌ மூன்றையும்‌ உள்ளிக் கெடுத்து” (திருவாய்மொழி 1-2-8) என்று கரண நியமநத்தையும்‌,

உள்ளம் உரை செயல் உள்ள விம்மூன்றையும்
உள்ளிக் கெடுத்து
இறை உள்ளில் ஒடுங்கே –1-2-8—மநோ வாக் காயங்கள் உரை செயல் அன்று -தத் ஆஸ்ரயமான கரணங்களை நினைக்கிறது – உள்ள இன்று தேட வேண்டா -சம்பன்னமாய் இருக்கை
விம்மூன்றையும் சந்நிஹதங்களும் விதேயங்களுமான இம்மூன்றையும் இவற்றுக்கு அவ்வருகே ஓன்று தேட வேண்டா -இவையே அமையும் –ஈச்வராய நிவேதிதும் -என்று நிரூபித்தால் பகவத் விஷயத்தில் சமர்ப்பிக்கைக்காக வாய் இருக்கும்-கெடுத்து-அவற்றுக்கு உண்டான பாஹ்ய விஷய ப்ராவண்யத்தைத் தவிர்த்து

12 -ஸூஹ்ருதி பேதத்தையும் –பெரு நாடு காண இம்மையிலே பிச்சை தாம் கொள்வர்-4-1-1– -என்கையாலே ஆர்த்தனான பிரஷ்டை ஐஸ்வர்ய காமன் இறுகல் இறப்பு-4-1-10– என்னும் -என்கையாலே ஜிஜ்ஞாசுவான கேவலன் –-குணம் கோள் நிறை புகழ் மன்னர் -4-1-8–இத்யாதியாலே
அர்த்தார்த்தியான அபூர்வ ஐஸ்வர்ய காமன்-திரு நாரணன் தாள் காலம் பெற சிந்தித்து உய்ம்மின்-4-1-1- -என்கையாலே ஜ்ஞாநியாகிற பகவத் சரணார்த்தி -என்கிற ஸூஹ்ருதி பேதத்தையும் –

பெருநாடு காண இம்மையிலே பிச்சை தாம்‌ கொள்வர்‌” (திருவாய்மொழி 4-1-1) என்கையாலே ஆர்த்தனாகிற ப்‌,ரஷ்டைஸ்வர்ய காமன்‌, இறுகலிறப்பென்கையாலே ஜிஜ்ஞாஸுவான கேவலன்‌, ‘குணங்கொள்‌ நிறைபுகழ்மன்னர்‌’ (திருவாய்மொழி 4-1-8) இத்யாதியாலே அர்த்தார்த்தியான அபூர்வைஸ்வர்ய காமன்‌ “திரு நாரணன்‌ தாள்‌ காலம் பெறச்‌ சிந்தித்துய்ம்மினோ” (திருவாய்மொழி 4-1-1) இத்யாதியாலே சொல்லப்பட்ட ஜ்ஞாநியாகிற பகவச் சரணார்த்தி என்கிற ஸுக்ருதி பேதத்தையும்‌,

பெருநாடு காண இம்மையிலே பிச்சை தாம்‌ கொள்வர்‌” (திருவாய்மொழி 4-1-1) என்கையாலே ஆர்த்தனாகிற ப்‌,ரஷ்டைஸ்வர்ய காமன்‌, இறுகலிறப்பென்கையாலே ஜிஜ்ஞாஸுவான கேவலன்‌, ‘குணங்கொள்‌ நிறைபுகழ்மன்னர்‌’ (திருவாய்மொழி 4-1-8) இத்யாதியாலே அர்த்தார்த்தியான அபூர்வைஸ்வர்ய காமன்‌ “திரு நாரணன்‌ தாள்‌ காலம் பெறச்‌ சிந்தித்துய்ம்மினோ” (திருவாய்மொழி 4-1-1) இத்யாதியாலே சொல்லப்பட்ட ஜ்ஞாநியாகிற பகவச் சரணார்த்தி என்கிற ஸுக்ருதி பேதத்தையும்‌,

ஒரு நாயகமாய் ஓட உலகு உடன் ஆண்டவர்
கருநாய் கவர்ந்த காலர் சிதைகிய பானையர்
பெரு நாடு காண இம்மையிலே பிச்சை தாம் கொள்வர்
திரு நாரணன் தாள் காலம் பெறச் சிந்தித் துய்ம்மினோ.–4-1-1-முன்பு ராஜாக்கள் தங்களைக் காண அவசரம் பெறாதே நிற்கும் படி இருந்தவர்கள் இருந்ததே குடியாக திரண்டு காணும் படி–தாங்கள் சம்ருத்தராய் வாழ்ந்த தேசத்தில் உள்ளார் எல்லாரும் காணும் படி இம்மையிலே தாங்கள் ஜீவித்த ஜென்மத்திலே பிச்சை தாம் கொள்வர்-முன்பு ராஜாக்களுக்கு ராஜ்யம் வழங்கும் – இன்று பிக்ஷை தனக்குத் தேட்டமாய் இருக்கும் – முன்பு ராஜாக்கள் ரத்நாதிகளை பச்சையாகக் கொண்டு வந்தால் அநாதரித்து இருக்குமவனுக்கு பிக்ஷை திட்டமான படி முன்பு ராஜாக்கள் கொண்டு வந்த பச்சையை ஆள் இட்டு இறே வாங்குவது இப்போது இவன் அபேக்ஷையே போக்கி இடுவார் இல்லை-

குறுக மிக உணர்வத்தொடு நோக்கி எல்லாம் விட்ட
இறுகல் இறப்பெனும் ஞானிக்கும் அப்பயன் இல்லையேல்,
சிறுக நினைவது ஓர் பாசம் உண்டாம்; பின்னும் வீடு இல்லை,
மறுகல் இல் ஈசனைப் பற்றி விடாவிடில், வீடு அஃதே.–4-1-10—இந்த சங்கோசத்தையும் மோக்ஷமாக நினைத்து இருக்கும் ஞான நிஷ்டனுக்கும்-இறுகல்-பகவத் அனுபவத்தைப் பற்ற தமக்கு சங்குசிதமாய் இருக்கை-இறப்பு -மோக்ஷம்-அப்பயன் இல்லையேல்,– எம்பெருமானை சுபாஸ்ரயமாக பற்றா விடில் ஆத்ம அனுசந்தானம் பண்ண ஒண்ணாது-இவர் தாம் பிரயோஜனமாக நினைத்து இருக்கிறதை யாயிற்று அவன் ஆத்ம ப்ராப்திக்கு சாதனமாகப் பற்றுகிறது

குணங்கொள் நிறை புகழ் மன்னர் கொடைக்கடன் பூண்டிருந்து
இணங்கி உலகு உடன் ஆக்கிலும்,
ஆங்கு அவனை இல்லார்
மணங்கொண்ட போகத்து மன்னியும் மீள்வர்கள்; மீள்வு இல்லை;
பணங்கொள் அரவணையான் திரு நாமம் படிமினோ.–4-1-8—குணவான்களாய் குண வத்தா பிரதையையும் உடையராய் இருக்கை-குணவான் ஆகிலும் அப்ராப்தான் ஆகில் உபேக்ஷிப்பார்கள்
மன்னர் -அபிஷிக்த ஷத்ரிய புத்ரராகை-பிறப்பித்தார் ஆகிலும் கிட்டுவார் இல்லையே லுப்தனாகில்
கொடைக்கடன் பூண்டிருந்து–கொடுக்கையே ஸ்வ பாவமாய் இருப்பது -உதாரமாய் கொடை வழங்கினாலும் மேன்மை பாவித்து இருக்குமாகில் பொருத்தம் இன்றிக்கே இருக்கும் இறே
இணங்கி-எல்லோரோடும் பொருந்தி வர்த்திக்கை-உலகு உடன் ஆக்கிலும்,-லோகத்தை தங்களோடு சேர்த்துக் கொண்டார்களே யாகிலும் –ராமோ ராஜ்யம் உபாசித்தவா -என்னக் கடவது இறே-ஆங்கு அவனை இல்லார் அவன் பிரசாதம் அடியாக பெறாதார்க்கு ராஜ்யம் தான் கிடையாது

13 -தேவ அசுர விபாகத்தையும்-அரக்கர் அசுரர் பிறந்தீர் உள்ளீரேல் –5-2-5–என்றும் , நண்ணா அசுரர் –நல்ல அமரர் -10-7-5–என்று தேவ அசுர விபாகத்தையும்-

“தேவர்கள்‌ தாமும்‌ புகுந்து அரக்கரசுரர்‌ பிறந்தீருள்ளீரேல்‌” (திருவாய்மொழி 5-2-5) என்று தேவாஸூர விபாகத்தையும்‌,

செய்கின்ற தென் கண்ணுக்கு ஒன்றே ஒக்கின்ற திவ்வுலகத்து
வைகுந்தன் பூதங்களே யாய் மாயத்தினால் எங்கும் மன்னி
ஐயம் ஒன்றில்லை அரக்கர் அசுரர் பிறந்தீர் உள்ளீரேல்
உய்யும் வகை இல்லை தொண்டீர் ஊழி பெயர்த்திடும் கொன்றே.–5-2-5-அஸூர ராக்ஷஸரான நீங்கள் மனுஷ்ய வேஷத்தை கொண்டு பிறந்து கலந்து திரிகிறீர் உள்ளீர் ஆகில் -சுக சாரணர்களை போலே கடல் கரையில் ஒற்றுப் பார்க்க வந்தவர் குரங்கு வடிவைக் கொண்டு –

நண்ணா அசுரர் நலிவு எய்த நல்ல அமரர் பொலிவு எய்த
எண்ணா தனகள் எண்ணும் நன் முனிவர் இன்பம் தலை சிறப்ப
பண்ணார் பாடல் இன் கவிகள் யானாய்த் தன்னைத் தான் பாடி
தென்னா என்னும் என் அம்மான் திரு மால் இரும் சோலையானே–10-7-5-விபரீதஸ்ததா அஸூர -என்கிறபடியே விபரீதரான அஸூரர்கள் இஸ் ஸம்ருத்தி பொறுக்க மாட்டாமையாலே முடியவும் –கிட்டக் கடவோம் அல்லோம் -என்று இருக்கும் அஸூர வர்க்கம் —-நல்ல அமரர் பொலிவு எய்தவிஷ்ணு பக்தி பரோ தேவ -என்கிறபடியே அநந்ய பிரயோஜனரான வைஷ்ணவர்கள் -இதுவே ஜீவனமாக சம்ருத்தமாகவும் –தொண்டர்க்கு அமுது உண்ணச் சொல் மாலைகள் சொன்னேன் -என்றார் இறே

14 -விபூதி யோகத்தையும்-புகழு நல் ஒருவன் -3-4-1–என்றும் –-நல் குரவும்-6-3-1- -என்றும் – மாயா வாமனன்-7-8-1- -என்றும் – இவைகளில் விபூதி யோகத்தையும்

புகழு நல்லொருவனென்கோ திருவாய்மொழி 3-4-1) என்று தொடங்கி ‘நல்குரவும்‌ செல்வும்‌” (திருவாய்மொழி 6-3-1 “மாயா வாமனனே” (திருவாய்மொழி 7-8-1 என்கிற திருவாய்மொழிகளிலே சொல்லப்பட்ட விபூதி யோகத்தையும்‌,

புகழு நல் ஒருவன் -3-4-தாம் முன்பு பிரார்த்தித்த அடிமை கொள்ளுகைக்காக எம்பெருமான் தன்னுடைய சர்வாத்ம பாவத்தை காட்டி அருளக் கண்டு பகவத் குணங்களோ பாதி விபூதியும் ததீயத்வ ஆகாரேண உத்தேச்யம் ஆகையால் பூதங்களையும் பவ்திகங்களையும்அசாதாரண விக்ரகத்தையும் மாணிக்யாதி ஸ் ப்ருஹணீய பதார்த்தங்களையும் -போக்யமான ரஸ்யமான பதார்த்தங்களையும் செவிக்கு இனிய காநாதி சப்த ராசிகளையும் மோஷாதி புருஷார்த்தங்களையும் ஜகத்துக்கு பிரதானரான ப்ரஹ்ம ருத்ராதிகளையும் ஜகத்துக்கு எல்லாம் காரணமான ப்ரக்ருதி புருஷர்களை விபூதியாக உடையனாய் அந்த சரீர பூதமான விபூதியில் ஆத்ம தயா வியாபித்து ததகத தோஷை ரசம்ஸ்ப்ருஷ்டனான மாத்திரம் அன்றிக்கே ஸ்ரீ யபதியாய் இருந்துள்ள எம்பெருமானை -இவனுக்கு தகுதியாய் இருக்கிற படியையும் அனுசந்தித்து பகவத் குண அனுசந்தானம் பண்ணினால்- கால் ஆளும் நெஞ்சு அழியும் கண் சுழலும் என்னும் கணக்கால் காயிகமான அடிமையில் ஷமர் இல்லாமையாலும் -கோவை வாயாளில் படியே எம்பெருமான் இவர் தாம் பேசின பேச்சை எல்லா அடிமையுமாக கொள்ளுவான் ஒருவன் ஆகையாலும்
விபூதி வாசகமான சப்தம் விபூதி முகத்தால் அவனுக்கு பிரதிபாதகம் ஆகையாலும் விபூதி விஷயமான சப்தத்தோடு நாராயணாதி நாமங்களோடு வாசி அற்று இருக்கிற படியால் அவற்றைச் சொல்லும் சொல்லாலே சர்வ சப்தங்களாலும் அவனைச் சொல்லி –வாசகமான அடிமையில் பிரவ்ருத்தர் ஆகிறார்

நல் குரவும்-6-3--நாம் சேராத வற்றை எல்லாம் சேர்த்து ஆள வல்லோம் காணும் -என்று தன் விருத்த விபூதி கத்வத்தைக் காட்டக் கண்டு -முன்பு பிரிவாலே வந்த அவசாதத்துக்கு உதவிற்றிலன் -என்று வெறுத்தவர் -சர்வ கதனாய்-தத்கத தோஷ ரசம் ஸ்ப்ருஷ்டனாய் ஸமஸ்த கல்யாண குணாத்மகனான இவனே நமக்கு ப்ராப்யமும் ப்ராபகமும் மற்றும் உள்ள சர்வ வித பந்துவும் என்று அவன் பெருமையை அனுபவித்து ப்ரீதராய் கொண்டு பேசுகிறார்

மாயா வாமனன்-7-8–-எனக்கு இத்தோடு பொருந்தாமை யுண்டாய் உன்னை ஒழியச் செல்லாமை யுண்டாய் இருக்க -முடியும் விரகு இன்றியிலே உன்னைப் பெற்று தரிக்கவும் பெறாதே இங்கே வைத்த ஆச்சர்யம் இருந்த படி என் என்ன -அவனும் ஒன்றைக் கேட்க ஒன்றை பரிஹரிப்பாரை போலே
-இவ்வளவோ என் படி -என்று தன் விசித்திர விபூதி த்வத்தை காட்டி அருளக் கண்டு -இது விஸ்மயமாய் இருந்ததீ -இது இருந்த படி என்

15 -விஸ்வரூப தர்சனத்தையும் –-நீராய் நிலனாய் தீயாய் காலாய் நெடுவானாய் சீரார் சுடர்கள் இரண்டாய் சிவனாய் அயனாய் –6-9-1–என்று விஸ்வரூப தர்சனத்தையும் –

“நீராய்‌ நிலனாய்த்‌ தீயாய்க்‌ காலாய்‌ நெடுவானாய்‌ சீரார்‌ சுடர்களிரண்டாய்ச்‌ சிவனாய்‌ அயனானாய்‌” (திருவாய்மொழி 6-9-1) என்று விஸ்வரூப தர்ஸனத்தையும்‌

நீராய் நிலனாய்த் தீயாய்க் காலாய் நெடுவானாய்
சீரார் சுடர்கள் இரண்டாய்ச் சிவனாய் அயனானாய்
கூரார் ஆழி வெண்சங் கேந்திக் கொடியேன்பால்
வாராய்! ஒருநாள் மண்ணும் விண்ணும் மகிழவே.
–6-9-1-நீராய் நிலனாய் என்கிற அசித் பதார்த்தத்தோடு -சிவனாய் அயனாய் -என்கிற ஈஸ்வர அபிமானிகளோடு வாசி அற்று இருக்கிற தாயிற்று ஈஸ்வர பாரதந்தர்யம் –இப்படி ஜகதா காரதையைக் காட்டி தன்தோமேயென்ன-அது போராது -அசாதாரண விக்ரஹத்தை காட்ட வேணும் என்கிறார்

16 -சாங்க பக்தியையும்-வணக்குடை தவ நெறி வழி நின்று புற நெறிகளை கட்டு உணக்குமின் பசையற-1-3-5-என்றும் – மேவித் தொழுது உய்மினீர்கள் வேதப் புனித விருக்கை நாவில் கொண்டு அச்சுதன் தன்னை ஞான விதி பிழையாமை-5-2-9-என்றும் – மாலை நண்ணி –காலை மாலை –கமல மலர் இட்டு-தொழுது எழுமினோ -9-10-1–என்றும் –சாங்க பக்தியையும் –

வணக்குடைத்‌ தவநெறி வழிநின்று புறநெறிகளைகட்டு உணக்குமின்‌ பசையற அவனுடை உணர்வுகொண்டுணர்ந்தே” (திருவாய்மொழி 1-3-5) என்றும்‌, “நன்றெனநலம்‌ செய்வது அவனிடை” (திருவாய்மொழி 1-3-7) என்றும்‌ “மேவித் தொழுதுய்ம்மினீர்கள்‌ வேதப் புனிதவிருக்கை நாவில்‌ கொண்டச்சுதன் தன்னை ஞானவிதி பிழையாமே” (திருவாய்மொழி 5-2-9) என்று அங்க ஸஹிதமான பக்தி யோகத்தையும்‌,

பிணக்கற வறுவகைச் சமயமும் நெறியுள்ளி யுரைத்த
கணக்கற நலத்தனன் அந்தமில் ஆதியம் பகவன்
வணக்குடைத் தவ நெறி வழி நின்று புறநெறி களை கட்டு
உணக்குமின் பசையற வவனுடை உணர்வு கொண்டு உணர்ந்தே 
–1-3-5—வணக்கத்தை யுடைய பக்தி மார்க்கம் ஆகிற வழியிலே நிலை நின்று -பக்தி சரீரத்திலே மாம் நமஸ் குரு என்கையாலே–வணக்குடை – என்கிறது தபஸ் சப்தத்தாலே பக்தியைச் சொல்லிற்று – பக்தி ஜ்ஞான விசேஷம் ஆகையாலே –யஸ்ய ஜ்ஞான மயந்தப -என்கிற ந்யாயத்தாலே என்னுதல் இவனுடைய பிரேம மாத்ரத்தையே குவாலாக நினைத்து இருக்கும் அவன் அபிப்ராயாத்தாலே யாதல் –புற நெறிகளை கட்டு
இதுக்கு விரோதியான சப்தாதி விஷயங்களில் போகிற வழி யாகிற களையைக் கடிந்து பறித்து
இத்தை நெறி என்பான் என் என்னில் இருந்ததே குடியாகப் போகிற மஹாதபம் ஆகையாலே -துர்மார்க்கம் என்னக் கடவது இறே –

ஓன்று என பலவென வறிவரும் வடிவினுள் நின்ற
நன்ற எழில் நாரணன் நான்முகன் அரன் என்னும் இவரை
ஒன்ற நும் மனத்து வைத்து உள்ளி நும் இரு பசை அறுத்து
நன்றென நலம் செய்வது அவனிடை நம்முடைய நாளே 
–-1-3-7-அவன் பக்கலிலே அநந்ய பிரயோஜன பக்தியைப் பண்ணப் பாருங்கோள்-நம்முடை நாளே-க்ரமத்திலே செய்கிறோம் என்று இராதே சரீரத்தின் உடைய நிலை இல்லாமையைப் புத்தி பண்ணி சடக்கென ஆஸ்ரயியுங்கோள்

மேவித் தொழுது உய்ம்மின்னீர்கள் வேதப் புனித இருக்கை
நாவிற் கொண்டு அச்சுதன் தன்னை ஞான விதி பிழையாமே

பூவிற் புகையும் விளக்கும் சாந்தமும் நீரும் மலிந்து
மேவித் தொழும் அடி யாரும் பகவரும் மிக்கது உலகே.–5-2-9-அநந்ய பிரயோஜனராய் தொழுது உஜ்ஜீவியுங்கோள் -வேதத்தில் விபூதி விஷயமாக சொன்னவை அன்றிக்கே -பகவத் குணங்களையும் வடிவு அழகையும் ப்ரதிபாதியா நின்றுள்ள ஸ்ரீ புருஷ ஸூக்தாதிகளை நாக்கிலே கொண்டு –-அச்சுதன் தன்னை – அஹ்ருதயமாக சொன்னதை ஹ்ருதயமாக நினைத்து -நத்யஜேயம் -என்னுமவன் -அகவாய் பாராதே யுக்தி மாத்ரத்தைக் கொண்டு நழுவ விடாதவனை-ஞான விதி பிழையாமே--வேதங்களில் பிரதிபாதிக்கிற பக்தி மார்க்கம் தப்பாமே –ஞானம் என்று ஞான விசேஷமான பக்தியைச் சொல்லுகிறது 

மாலை நண்ணித் தொழுது எழுமினோ வினை கெடக்
காலை மாலை கமல மலர் இட்டு
நீர்
வேலை மோதும் மதிள் சூழ் திருக் கண்ணபுரத்து
ஆலின்மேல் ஆல் அமர்ந்தான் அடி இணைகளே–9-10-1-சர்வேஸ்வரன் திருவடிகளைக் கிட்டி ஆஸ்ரயித்து உஜ்ஜீவிக்கப் பாருங்கோள்-ஆஸ்ரயணீயத்துக்கு கால நியதி இல்லை -என்கிறது -ஆதி நடுவந்திவாய் -என்கிறபடியே சர்வ காலத்துக்கும் உப லக்ஷணம் –சர்வ புஷ்ப்பங்களுக்கும் உப லக்ஷணம் -நீங்கள் விரும்பின பிராகிருத த்ரவ்யமே அமையும் என்கை –நீர்-அதிகாரிகளும் முன்புத்தை நீங்களே யமையும்

17 –18 –இரண்டு வகையான பிரபத்தியும் உபதேசிக்கையாலே-அவனுடை உணர்வு கொண்டு உணர்ந்து -1-3-5–என்று அவன் அருளி செய்த பிரபத்தி ரூப ஞானத்தை சகாயமாக கொண்டு அத்தை அறிந்து என்கையாலே – பக்தி அங்கத் வேனவும் – மற்று ஓன்று இல்லை-9-1-7–என்றும் – சரணமாகும் -9-10-5-என்கிற வற்றால் ஸ்வதந்திர வேனேவும் – இரண்டு வகையான பிரபத்தியும் உபதேசிக்கையாலே

“சரணமாகும்‌ தனதாளடைந்தார்க்‌ கெல்லாம்‌” (திருவாய்மொழி 8-10-5) என்றும்‌ “மற்றொன்றில்லை” (திருவாய்மொழி 9-1-7) என்கிற பாட்டிலும்‌ சொல்லப்பட்ட ப்ரபத்தி த்‌வைவித்‌யத்தையும்‌

பிணக்கற வறுவகைச் சமயமும் நெறியுள்ளி யுரைத்த
கணக்கற நலத்தனன் அந்தமில் ஆதியம் பகவன்
வணக்குடைத் தவ நெறி வழி நின்று புறநெறி களை கட்டு
உணக்குமின் பசையற வவனுடை உணர்வு கொண்டு உணர்ந்தே 
–1-3-5-தத் உக்த ஜ்ஞானம் -தத் விஷய ஜ்ஞானம் என்னுதல் – அவனை விஷயீ கரித்த ஜ்ஞானத்தைக் கொண்டு -விலஷண விஷயத்திலே நெஞ்சை வைத்து -இவற்றின் தோஷத்தை தர்சித்து விடுங்கோள்–அவனை சரணம் புக்கு இவற்றை சவாசனமாக விடுங்கோள் எனவுமாம்

மற்று ஓன்று இல்லை சுருங்கச் சொன்னோம் மா நிலத்து எவ் உயிர் க்கும்
சிற்ற வேண்டா சிந்திப்பே அமையும் கண்டீர்கள் அந்தோ

குற்றம் அன்று எங்கள் பெற்றத் தாயன் வடமதுரைப் பிறந்தான்
குற்றமில் சீர் கற்று வைகல் வாழ்தல் கண்டீர் குணமே–9-1-7—மற்று ஓன்று இல்லை -இத்தோடு ஓக்க வேறு எண்ணலாவது இல்லை -என்னுதல் -இப்போது இத்தைச் சொல்லி வேறு ஒரு போது வேறு ஒன்றை சொல்லுகிறான் என்று இருக்க வேண்டா என்னுதல் –-சுருங்கச் சொன்னோம்-இது தன்னையும் பரப்பு அறச் சொன்னோம் -பிரதிபத்திக்கு அவிஷயமாம் படி அன்றியே ஸூ க்ரஹமாகச் சொன்னோம்
மா நிலத்து -இதுக்கு அதிகாரிகள் சம்சாரத்திலே -இவ்வர்த்தத்துக்கு அண்ணியார் பரமபதத்தில் உள்ளார்கள் ஆகிலும் உபதேசத்துக்கு அதிகாரிகள் சம்சாரிகள் என்கை –-எவ் உயிர் க்கும்-இது அதிக்ருதா அதிகாரம் அன்று -சர்வாதிகாரம் – சிற்ற வேண்டா -ஆயாசிக்க வேண்டா -சிற்றுதல் -சிதறுதலாய் -பரக்க வேண்டா என்கை – சிந்திப்பே அமையும்கண்டீர்கள் அந்தோ-யுக்தி நிரபேஷமாக சிந்தா மாத்திரமே அமையும் கிடி கோள் – அந்தோ-இவ்விலக்ஷண விஷயத்தை இழப்பதே -என்னுதல் -இது ஸூ லபம் என்றால் காற்கடைக் கொள்ளுகைக்கு உறுப்பாவதே என்னுதல் –

சரணமாகும் தன தாள் அடைந்தார்க்கு எல்லாம்
மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான்
அரண் அமைந்த மதிள் சூழ் திருக் கண்ணபுரத்
தரணி யாளன் தனது அன்பர்க்கு அன்பாகுமே–9-10-5-ஜென்மத்தாலும் வ்ருத்தத்தாலும் ஞானத்தாலும் குறைய நின்றாரே யாகிலும் -தன் திருவடிகளை உபாயமாகப் பற்றினார்க்கு எல்லாம் ரக்ஷகனாம் -கீழ் மூன்று பாட்டாலும் சொன்ன பக்தி யோகம் அதிக்ருதாதிகாரம்-இதில் சொன்ன பிரபத்தி -சர்வாதிகாரம் -என்கிறது –

ஏதத் பிரதி பாத்யர்த்த சாம்யத்தைக் கொண்டு-மாயோன் அன்று ஓதிய வாக்கு–நான்முகன் –71 -என்கிற
ஸ்ரீ கீதை உடன் ஒக்க சொல்லப் படும் என்கை ..

ஆக இவ்வர்த்த விஸேஷங்களை ப்ரபந்தத்திலே ப்ரதிபாதிக்கக்‌ காண்கையாலே “மாயன்‌ அன்றோதிய வாக்கை” (நான்முகன்‌ திருவந்தாதி 71) என்கிற ஸ்ரீ கீதையோடொக்கும்‌ என்கிறார்‌

சேயன் அணியன் சிறியன் மிகப் பெரியன்
ஆயன் துவரைக் கோனாய் நின்ற -மாயன் அன்று
ஓதிய வாக்கதனை கல்லார் உலகத்தில்
ஏதிலாராய் மெய்ஞ்ஞானம் இல்-71-—எம்பெருமான் தன்னை ஆஸ்ரயிக்கைக்கு – ஆஸ்ரிதர்க்கு பவ்யனாய் அணியனாயும்- அநாஸ்ரிதர் எட்ட ஒண்ணாத படி மிகவும் பெரியனாய்க் கொண்டு
சேயனாய் -அதி தூரஸ்தனாயும் இருக்கும்-கிருஷ்ணனுமாய் ஸ்ரீ மத் த்வாரகைக்கு அதிபதியுமாய் நிற்கும் பெருமையை யுடையானவன் –அன்று அருளிச் செய்த ஸ்ரீ கீதையை அப்யசியார்-உலகத்திலேதிலராய்-லோகத்தில் அந்யராய் ஒரு நன்மைகளை யுடையார் அன்றிக்கே என்றுமாம்
மெய் ஞானமில் – மெய்யான ஞானம் இல்லை –

பிரபத்தி த்வை இத்யாதிகளாலே -என்கிற இடத்தில்-ஆதி -சப்தத்தாலே ஜன்ம கர்ம ச மே திவ்யம் ஏவம் யோ வேத்தி தத்வத த்யக்த்வா தேஹம் புனர் ஜன்ம நைதி மாமேதி சோர்ஜுனா–4-9-என்றார் போலே
இவை பத்தும் வல்லார் அமரரோடு உயர்வில் சென்று அறுவர் தம் பிறவி அம் சிறை-1-3-11- -என்று
சொன்ன அவதார ரஹச்ய வைபவம் – பத்ரம் புஷ்பம் பலம் தோயம் யோ மே பக்த்யா ப்ரயச்சதி –
ததஹம் பக்த்வுபஹ்ருத மஸ்நாமி பிரயதாத்மன
-9-26– என்றார் போலே – பிரிவகை இன்றி நன்னீர் தூயப் புரிவதுவும் புகை பூ-1-6-1–என்று சொன்ன அவன் ஸ்வ ஆராதத்தை முதலாக கீழ் அனுக்தங்களையும் – தேக ஆத்மா அபிமானிகளை க்ரமத்திலே பிராப்ய சாதனங்களின் எல்லையில் மூட்டுகையும் – சாத்யோ உபாயங்களில் பரந்து சித்தோ உபாயத்தை மறைத்து உபதேசிக்கும் இடத்தில்
வைபவம் தோற்ற வெளி இடுகையுமான வற்றையும் நினைக்கிறது .

ஜந்ம கர்ம ச மே திவ்யமேவம் யோ வேத்தி தத்த்வத:
த்யக்த்வா தேஹம் புநர்ஜந்ம நைதி மாமேதி ஸோऽர்ஜுந
–4-9-எனது தெய்வத்தன்மை கொண்ட பிறப்பும் செய்கையும் இங்ஙனமென்பதை உள்ளபடி யுணர்வோன்-உடலைத் துறந்த பின்னர் மறுபிறப்பு எய்துவதில்லை. அர்ஜுனா! அவன் என்னை எய்துகிறான்.

அமரர்கள் தொழுது எழு அலை கடல் கடைந்தவன் தன்னை
அமர் பொழில் வளம் குருகூர்ச் சடகோபன் குற்றேவல்கள்
அமர்சுவை யாயிரத்து அவற்றினுள் இவை பத்தும் வல்லார்
அமரரோடு உயர்வில் சென்று அறுவர் தம் பிறவி அஞ்சிறையே
–1-3-11-சிறையில் இருந்த ராஜகுமாரன் தலையிலே அபிஷேகத்தை வைத்து பின்னை சிறையை வெட்டி விடுவாரைப் போலே நித்ய ஸூரிகள் வரிசையைக் கொடுத்து பின்னை சம்சார அஞ்சிறையை கழிக்கும் ஈஸ்வரன் ஆதி வாஹிகரோடு விரஜையில் சென்று ஸூஷ்ம சரீர விதூ நனம் பெறுவார்-

பத்ரம் புஷ்பம் பலம் தோயம் யோ மே பக்த்யா ப்ரயச்சதி
ததஹம் பக்த்யுபஹ்ருதமஸ்நாமி ப்ரயதாத்மந-
9-26-இலையேனும், பூவேனும், கனியேனும், நீரேனும் அன்புடனே எனக்கு அளிப்பவன் ஆயின், முயற்சியுடைய அன்னவன் அன்புடன் அளித்ததை உண்பேன் யான்.

பரிவதில் ஈசனைப் பாடி –விரிவது மேவலுறுவீர்
பிரிவகையின்றி நன்னீர்த் தூயப் –புரிவதும் புகை பூவே
–1-6-1-பரிவதில் ஈசனைப்-ஹேய ப்ரத்ய நீகனான சர்வேஸ்வரனை-பரிவு என்று துக்கமாதல் -பஷபாதம் ஆதல் –-உபாசகனுக்கு துக்கேன ஆஸ்ரயிக்க வேண்டியிருக்குமதுவும் -ஆஸ்ரயணீயனுக்கு ஹேயம்- குருவாக ஆஸ்ரயித்தன் பக்கலிலே பஷபதித்து -லகுவாக ஆஸ்ரயித்தன் பக்கலிலே நெகிழ்ந்து இருத்தல் செய்யுமதுவும் ஆஸ்ரயணீய வஸ்துவுக்கு ஹேயம்–இவை இல்லாமையாலே ஹேய ப்ரத்ய நீகன்-என்கை–ஹேய ப்ரத்ய நீகதை புக்க விடத்தே கல்யாண குணங்களும் புகக் கடவதாகையாலே இது அதுக்கும் உப லஷணம்
ஈசனை – இவன் இடுவதில் குறையுள்ளது தன் குறையாம் படி இருக்கிற சம்பந்தத்தைச் சொல்லுகிறது –இழவு பேறு தன்னதாம் படி இருக்கும் சம்பந்தத்தை யுடையவனை-ஆஸ்ரயணீயனும் ப்ராப்யனும் ஆகையிறே-உபய வாக்யத்திலும் நாராயண சப்த பிரயோகம் பண்ணிற்று-அல்லாதார் துராராதர் ஆகையாலே அநாஸ்ரயணீயர் –

–——————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ ஆய் ஜநந்யாசார்யர்‌ ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ ஆசார்ய ஹ்ருதயம்‌–ஸ்ரீ திராவிட ப்‌,ரஹ்ம ஸூத்ரம்‌ -9 –ஸ்ரீ ஸூக்தி வைப ,வ பாதம்-14 –பகவத் அநுபவ ப்ரீதி காரித ஸ்ரீ முக, ஸூக்தயதி கரணம்‌– (187 -188)-ஸ்ரீ மணவாள மா முனிகள் -ஸ்ரீ ஆய் ஸ்வாமிகள் வியாக்யானங்கள்–

July 26, 2026

1) பூர்வ த்‌,விகம்‌ – ஸூரி வைபவம்‌ 1 முதல்‌ 186 வது ஸூத்ரம்‌ வரை (186)
(2) உத்தர த்‌,விகம்‌ – ஸூரி ஸுக்த்தி வைபவம்‌– 187 முதல்‌ 284 முடிய (48)

(1) ப்ரத, மோத்‌, யாயம் -ஸாஸ்த்ர தாத்பர்ய அதிகாரி வைபவம்‌ 1-38 (38)
(2) த்‌,விதீயோத்‌, யாய: – க்‌,ரந்த, கர்த்ரு வைப,வம்‌ 39 – 186 (148)
(3) த்ருத்யோத்‌, யாயம் – க்‌,ரந்தாந்தர தார தம்ய வைப,வம்‌ 187-207 (21)
(4) சதுர்த்தே ரத்‌, யாயம் -கிரந்த, ப்ரதிபாத்‌,ய க்ரம வைப,வம்‌ 208-284 (27)

9 –ஸ்ரீ ஸூக்தி வைப ,வ பாதம் -ஒரே அதிகரணம் 187–188—மொத்தம் –2-ஸூரணைகள்
14 –பகவத் அநுபவ ப்ரீதி காரித ஸ்ரீ முக, ஸூக்தயதி கரணம்‌– 187 -188-மொத்தம் –2-ஸூரணைகள்-

இத் திருப்பதிகளில் பிராவண்யம் இவர்க்கு உண்டாய்த்து எப்போது ? இவர் தாம் பிரபந்தம் அருளி செய்யத் தொடங்கிற்று எத்தனை திரு நஷத்த்ரத்து அளவில் ? இது தனக்கு போக்த்ரு நியமமுண்டோ ?
இதின் போக்யதை தான் இருக்கும் படி எங்கனே ? என்னும் ஆ காங்க்ஷையில் அருளிச் செய்கிறார் மேல்

இவற்றில் பிராவண்யம் இவள் பரமே என்ன உண்டாய் ஷோடசகலா பூரணமான சந்திர மண்டலம் போலே பதினாறு நஷத்ரம் நிரம்பினவாறே தேவ போக்யமானவதில் அம்ருதம் போல் அன்றிக்கே என்னாத் தமிழர் இசைகாரர் முதற் பத்தர் வானவர் என் அம்மான் பார் பர வென்னும் படி சேஸ்வர விபூதி போக்யமான பாலோடு அமுதன்ன மென் மொழி முகம் செய்தது–சூரணை -187-

(இத் திருப்பதிகளில் பிராவண்யம் இவர்க்கு உண்டாய்த்து எப்போது ?–-இவற்றில் பிராவண்யம் இவள் பரமே என்ன உண்டாய்
இவர் தாம் பிரபந்தம் அருளி செய்யத் தொடங்கிற்று எத்தனை திரு நஷத்த்ரத்து அளவில் ?–ஷோடசகலா பூரணமான சந்திர மண்டலம் போலே பதினாறு நஷத்ரம் நிரம்பினவாறே –
இது தனக்கு போக்த்ரு நியமமுண்டோ ?–தேவ போக்யமானவதில் அம்ருதம் போல் அன்றிக்கே என்னாத் தமிழர் இசைகாரர் முதற் பத்தர் வானவர் என் அம்மான் பார் பர வென்னும் படி சேஸ்வர விபூதி
இதின் போக்யதை தான் இருக்கும் படி எங்கனே ?-பாலோடு அமுதன்ன மென் மொழி)

அதாவது-இவ் அர்ச்சாவதார ஸ்தலங்களிலே ப்ராவண்யம் –இவள் பரமே என்ன உண்டாய்–முலையோ முழு முற்றும் போந்தில –பெருமான் மலையோ திரு வேம்கடம் என்று கற்கின்ற வாசகம் இவள் பரமே –திருவிருத்தம் -60–என்னும் படி பருவம் நிறம்புவதர்க்கு முன்னே உண்டாய் — பதினாறு கலைகளாலும் பரி பூர்ணமான சந்திர மண்டலம் போலே பதினாறு நஷத்ரம் பூர்ணமான வாறே–தேவ போக்யமானவதில் அம்ருதம் போல் அன்றிக்கே-அதாவது-கிருஷ்ண பஷே அமரைஸ் சஸ்வத் பீயதே வை ஸூதாமய–ஸ்ரீ விஷ்ணு புராணம் -2-11-22-என்கிறபடியே தேவர்களுக்கு போக்கியம் ஆகையாலே -போக்த்ரு நியமம் உடைத்தான அந்த சந்திர மண்டல அம்ருதம் போல் அன்றிக்கே — பொருந்தா வானுறை நாள்களை நாள் தொறும் புணர்வோன் அருந்த வானவர்க்கு ஆரமுது அன்புடன் அளிப்போன்-வில்லி பாரதம் ஆதி பர்வம்-என்னாவில் இன் கவி –திருவாய் -3-9-1-என்றும் -( இத்தால் ஆழ்வாருக்கும் இதன் இனிமை சொல்லி ) பாலேய் தமிழர் இசைகாரர் பத்தர் பரவும் ஆயிரம் –திருவாய் -1-5-11–என்றும் –தூ முதல் பத்தர்க்கு–திருவாய் –7-9-3- -என்றும் -(இவற்றால் கற்பவர்களுக்கு இனிமை )
கேட்டாரார் வானவர்கள்–திருவாய் -10-6-11- -என்றும் –-தென்னா வென்னும் என்னம்மான் -என்றும் -திருவாய் -10-7-5–பார் பரவின் கவி–திருவாய் -7-9-5- -என்றும் சொல்லுகிறபடி ஸ்வ பர விபாகம்-ஸூரி சம்சார விபாகம்–ஈச ஈசி தவ்ய விபாகம் அற- ஈஸ்வரனோடே இரண்டு விபூதியும் புஜிக்கைக்கு யோக்யமாய் –பாலோடு அமுதன்ன ஆயிரம்–திருவாய் -8-6-11– -என்றும் – அமுத மென்மொழி–திருவாய் –5-6-2- -என்கிறபடியே வாச்ய வாசக சம்ச்லேஷ ரசத்தால் -பாலும் அமுதும் கலந்தால் போலேயாய் –
போக்யத அதிசயத்தாலும் – புஜித்தார்க்கு நித்யத்வத்தை கொடுக்கையாலும் – அம்ருத சமமாய் –
அதில் வ்யாவ்ருத்தமான மார்த்வத்தை உடைத்தான சப்தம் இவர் முகோத்கதமாய்த்து
என்கை-

இவற்றில்‌ ப்ராவண்யம்‌ இவள்பரமே என்ன வுண்டாய்‌) இத் திருப்பதிகளில்‌ நிற்கிற நிலையில்‌ இவர்க்கு உண்டான ப்ராவண்யம்‌ “பெருமான்‌ மலையோ திஸ்ருவேங்கடமென்று கற்கின்ற வாசகம்‌ இவள்‌ பரமே” (திருவிருத்தம்‌ 60) என்று நிஷேதகரும்‌ ஆஸ்சர்யப்படும்படி உண்டாய்-பதினாறு கலையும்‌ நிறைந்தால்‌ சந்த்‌ரன்‌ பூர்ணனாமாப் போலே இவரும்‌ திருவவதரித்தவன்று தொடங்கி …… த்தோடே யிருந்து பகவதநுபவத்தைப்‌ பண்ணி அந்த பகவதநுபவத்தாலே பூர்ணராய்க்‌ கொண்டு பதினாறு திருநக்ஷத்ரம்‌ நிரம்பினவாறே அந்த சந்த்‌ரன்‌ பக்கலுண்டான அம்ருதம்‌ தேவர்களுக்கே போக்யமாகையாலே அதிக்ருதாதிகாரமுமாய்‌ அந்த சந்த்‌ரனுக்கு வ்ருத்‌தி ஷயமுண்டாகையாலே பூர்ணனான காலத்திலல்லது கிடையாமையாலே ஸக்ருத் ஸேவ்யமுமாய்‌ தேஹத்தைப்‌ பூண் கட்டுமதாகையாலே ஸம்ஸார வர்த்தகமாயிருக்கும்‌ அது போலன்றிக்கே -(என்னாத்‌ தமிழர்‌ இத்யாதி மென்மொழி முகம் செய்து ) என்நாவிலின் கவி (திருவாய் -3-9-1) என்னுமா போலே தமிழர் இசைகாரர்‌ பத்தர் பரவும் ஆயிரம் (திரு -1-5-11) என்றும் தூ முதல் பத்தருக்குத் தான் தன்னைத் சொன்ன (திருவாய் -7-9-3) என்றும் கேட்டாரார் வானவர்கள் (திரு 10-6-11) என்றும்‌-தென்னா வென்னுமென்னம்மான்‌”  (திருவாய்மொழி-10-7-5) என்றும் பார்பரவின்கவி’ (திருவாய்மொழி 7-9-5) என்றும்‌ சொல்லுகிறபடியே  தம்மோடு பிறரோடு ஈஸ்வரனோடு வாசியற ஸர்வஜந போக்‌யமாகையாலே ஸர்வாதிகாரமுமுமாய்‌ அந்த சந்த்‌ரனைப்‌ போலே விருத்‌தி க்ஷயங்களின்றிக்கே காதல்‌ கடல்புரைய” (திருவாய்மொழி 5-3-4) ‘ காதல்‌ (கடலின்‌) மிகப்‌ பெரிது”(திருவாய்மொழி 7-3-6) “அதனில்‌ பெரிய என்னவா” (திருவாய்மொழி 10-10-10) என்கையாலே விருத்‌தியேயாய்‌, ஸதா போக்‌யமுமாய்‌, “உயிரின்‌ மேலாக்கை ஊனிடை யொழிவிக்குமே” (திருவாய்மொழி 3-2-11 என்று மாம்ஸாஸ்ருகாதி மயமான ஸரீர ஸம்பந்தத்தை யறுத்து ஸம்ஸார நிவர்த்தகமாமளவே யன்றிக்கே மேலை வைகுந்தத்து இருத்தும்‌” (திருவாய்மொழி 8-6-11) என்று அப்ராக்ருத திவ்யதேஸ ப்ராப்தியையும்‌ பண்ணித் தரவற்றான “பாலோடமுதன்ன வாயிரம்‌(திருவாய்மொழி 8-6-11) என்றும்‌ “அமுதமென்மொழி‘ (திருவாய்மொழி 6-5-2) என்றும்‌ சொல்லுகிற படியே அம்ருத ரூபமாய்‌ அதிலும்‌ அதிமார்த்தவத்தை யுடைத்தான சொற்களாலானவை முகோத்கமாயிற்றின’ என்கிறார் –

முலையோ முழு முற்றும் போந்தில மொய் பூம் குழல் குறிய
கலையோ அரையில்லை நாவோ குழறும் கடல் மண்ணெல்லாம்
விலையோ வென மிளிரும் கண் இவள் பரமே பெருமான்
மலையோ திருவேம்கடம் என்று கற்கின்ற வாசகமே
 – 60–அல்லாத அவயவங்களினுடைய-நிரம்பாமையைச் சொல்லி வைத்து  இதனுடைய பெருமையைச் சொன்னால் விரூபமாகாதோ -என்று ஜீயர் கேட்க –இதிலும் சிறுமையே காணும் சொல்கிறது –இங்கனே சொல்லலாவது தானும்  இன்று -(பால்யத்தில்)-நாளை-இது தானும் சொல்லப் போகாது -என்று அருளிச் செய்தார் — இப்படி விசதமாக பார்க்கிறது இந்த பால்யத்தில்-இத்தனை –யௌவனம் குடி புகுந்தால் ஒறுக்கிப் பார்க்குமது ஒழிய இப்படி நன்றாகப் பாராள் –ஆகையால் இதுவும் பால்யத்துக்கு ஸூசகம் என்றபடி-உண்மையில் நாயகி யவ்வன பருவத்தை அடைந்து இருந்தும் அன்பு மிகுதியால் இவளது இளமையை தோற்றுகிறது-

சொன்னால் விரோதம் இது, ஆகிலும் சொல்லுவன் கேண்மினோ!
என் நாவில் இன்கவி யான் ஒருவர்க்கும் கொடுக்கிலேன்
தென்னா தெனா என்று வண்டு முரல் திரு வேங்கடத்து
என் ஆனை என் அப்பன், எம்பெருமான் உளனாகவே.–3-9-1—என் நாவில் இன்கவி யான் ஒருவர்க்கும் கொடுக்கிலேன்-யஸ் யை தே தஸ்ய -என்கிறபடியே தம்மைப் போலே தம்முடைய நாவும் அவனுக்கு அநந்யார்ஹ சேஷம் -என்கிறார் – நாப்படைத்த கார்யம் கொண்டேன் நான் ஒருவனுமே யன்றோ -என்கிறார் –இவள் இராப்பகல் வாய் வெரீஇ -என்னும் படியான நா விறே-இன்கவி – அவனுக்கு இனிதாகை யாலே தமக்கும் இனிதாய் இருக்கிறபடி –-சேஷிக்கு இனிதான வழியாலே தனக்கு இனிதாகை இ றே -சேஷத்வத்தினுடைய எல்லை-யான்-அநந்யார்ஹ சேஷ பூதனான நான்
ஒருவர்க்கும் கொடுக்கிலேன்-அத்யந்த பரதந்த்ரமாக சொல்லி வைத்து கொடுக்கிலேன் என்பான் என் என்னில் -அவன் தான் இத்தாலே அநேகம் பெற்றானாய் இருக்கையாலே புறம்பு கொடேன் என்கையாலே இங்குத்தைக்கே அநந்யார்ஹம் என்கை கொடுக்கிலேன் -கொடுக்க ஷமன் அல்லேன்-

மாலே மாயப் பெருமானே மா மாயனே என்று என்று
மாலே ஏறி மால் அருளால் மன்னு குருகூர்ச் சடகோபன்
பாலேய் தமிழர் இசைகாரர் பத்தர் பரவும் ஆயிரத்தின்
பாலே பட்ட இவை பத்தும் வல்லார்க்கு இல்லை பரிவதே –-1-5-11—பாலேய் தமிழர்-பாலோடு ஒத்து உள்ள தமிழ் அறிவார்-இசைகாரர்-இசை அறிவார்-பத்தர் பரவும்-சர்வேஸ்வரனும் ஆழ்வாருமான பரிமாற்றத்திலே கால் தாழ்ந்து இருக்குமவர்கள்-பாலேய் தமிழர் -என்கிறது முதல் ஆழ்வார்களை
இசைகாரர் -என்கிறது ஸ்ரீ மதுர கவிகள் போல்வாரை பத்தர் -என்கிறது பெரியாழ்வார் போல்வாரை
ஸ்ரீ பராங்குச நம்பி -ஆழ்வார் திருவரங்கப் பெருமாள் அரையர் பிள்ளை யுறங்கா வல்லி தாசர் போல்வர் என்னுமாம் -ஆழ்வான் ஓர் உருவிலே
பரவும் ஆயிரத்தின் அக்ரமாக கூப்பிடுகை-

ஆ முதல்வன் இவன் என்று தன் தேற்றி என்
நா முதல் வத்து புகுந்து நல் இன்கவி
தூமுதல் பத்தர்க்குத் தான் தன்னைச் சொன்ன என்
வாய் முதல் அப்பனை என்று மறப்பனோ!–7-9-3—தூமுதல் பத்தர்க்குத்-அஸ்ப்ருஷ்ட சம்சார கந்தரான நித்ய ஸூ ரிகளும் -கேட்டாரார் வானவர்கள் -என்கிறபடியே வித்தராம் படி என்னுதல் -சம்சாரத்தில் தலையான முமுஷுக்கள் என்னுதல்-தான் தன்னைச் சொன்ன-என்னை உபகரணமாகக் கொண்டு -கர்த்தாவும் தானேயாய் -கர்மீபவிப்பானும் தானே யானான்-என்-வாய் முதல் அப்பனை-எனக்கு வாய்த்த -காரண பூதனான -உபகாரகனை-

காட்டித் தன் கனை கழல்கள் கடு நரகம் புகல் ஒழித்த
வாட்டாற்று எம் பெருமானை வளம் குருகூர்ச் சடகோபன்
பாட்டாய தமிழ் மாலை ஆயிரத்துள் இப்பத்தும்
கேட்டு ஆரார் வானவர்கள் செவிக்கு இனிய செஞ்சொல்லே–10-6-11—பாட்யே கே யே ச மதுரம் -என்கிறபடியே இசையோடு புணர்ப்புண்ட தமிழ்த்தொடை –நித்ய ஸூ ரிகள் இத்தைக் கேட்டால் பர்யாப்தர் ஆகார் -இப்பாடுகிறது உள்ளீடானவன் சீலத்தாலேயே என்னில் –பாசுரத்துக்காக என்கிறது –ஸம்ஸ்ரவே மதுரம் -என்கிறபடியே செவியே தொடங்கி ரசிக்கும்-செஞ்சொல்லே–-நினைவும் சொல்லும் செயலும் ஒருபடிப் பட்ட சொல்லு -சிந்தையாலும் சொல்லாலும் செய்கையினால் -ஏன்னா செந்தமிழ் பத்தும் என்றார் இறே –

நண்ணா அசுரர் நலிவு எய்த நல்ல அமரர் பொலிவு எய்த
எண்ணா தனகள் எண்ணும் நன் முனிவர் இன்பம் தலை சிறப்ப
பண்ணார் பாடல் இன் கவிகள் யானாய்த் தன்னைத் தான் பாடி
தென்னா என்னும் என் அம்மான் திரு மால் இரும் சோலையானே–10-7-5—ப்ரீதிக்குப் போக்கு வீடாக ஆளத்தி வையா நின்றான் –ஏதத் சாம காயன் நாஸ்தே-என்று பகவத் லாபத்தில் ப்ரீதிக்கு போக்குவிட்டு சேஷ பூதன் சொல்லக் கடவத்தை –அவாக்ய அநாதர –என்கிற தான் ப்ரீதி பிரகரஷத்தாலே அந்த பூர்த்தி குலைந்து சொல்லுகிறான் இறே –என் அம்மான் –ஸூத வசனம் ரசிக்குமா போலே சம்பந்தம் இறே ரசிகைக்கு அடி –திரு மால் இரும் சோலையானே-இவரைக் கவி பாடுவித்த தேசம் திருமலை யாய்த்து –

சீர் கண்டு கொண்டு திருந்து நல் இன் கவி
நேர்பட யான் சொல்லும் நீர்மை இலாமையில்
ஏர்வுஇலா என்னைத் தன் ஆக்கி என்னால் தன்னைப்
பார் பரவு இன் கவி பாடும் பரமரே.–7-9-5--விசேஷஞ்ஞரோடு அவிசேஷஞ்ஞரோடு வாசி அற எல்லாரும் வாய் புலற்றும் படியான இனிய கவி என்னுதல் –பாலேய் தமிழர் இசைகாரர் பத்தர் பரவும் ஆயிரம் -என்கிறபடியே யாதல் –-பரமரே.நதத் சமச்சாப்யதி கச்ச த்ருச்யதே -என்கிற பிரமாணம் கொண்டு அறிய வேண்டா -என்னை இட்டுக் கவி பாடுவித்துக் கொண்ட இத்தைக் கொண்டே பரத்வம் நிச்சயித்துக் கொள்ளலாம்-

சோலைத் திருக் கடித் தானத்துறை திரு
மாலை மதிட் குருகூர்ச் சடகோபன் சொல்
பாலோடு அமுதன்ன ஆயிரத்திப் பத்தும்
மேலை வைகுந்தத்து இருத்தும் வியந்தே-8-6-11-பாலோடு அமுது அன்ன ஆயிரம் என்னுதல் -இப்பத்து என்னுதல் -வாஸ்ய வாசகங்கள் யுடைய சேர்த்தி இருக்கிற படி –பால் என்கிறது –சோலை திருக் கடித்தானத்து உறை-திருமால் என்கிற வாஸ்யத்தை –அமுது என்கிறது சடகோபன் சொல் என்கிற வாசகத்தை -இது ஆளவந்தார் நிர்வாஹம் –

குமுறுமோசை விழவொலித் தொலை வில்லி மங்கலம் கொண்டு புக்கு
அமுத மென்மொழி யாளை நீர்உமக் காசை யின்றி அகற்றினீர்
திமிர்கொ டாலொத்து நிற்கும் மற்றிவள் தேவ தேவபிரான்என்றே
நிமியும் வாயொடு கண்கள் நீர்மல்க நெக்கொசிந்து கரையுமே.–6-5-2—இவள் பேச்சைக் கேட்டால் போன உயிரும் மீளுமாயிற்று –மென் மொழிஅம்ருதத்தில் வியாவ்ருத்தி-ஸ்ரவண யோக்யமாய் இராதே அம்ருதம்மதுரா மதுரா லாபா என்று இவள் பேச்சைக் கேட்க ஆசைப்பட்டு இருக்குமவன் பெற்றுப் போனான் -நீங்கள் ஆசை இல்லாமையால் அகற்றினி கோள் -தம் தாமுக்கு அனர்த்தத்தை தாம் தாமே விளைத்துக் கொள்ளுவார் உண்டோ -அகற்றுகை யாவது –அகலும் படி பண்ணினி கோள் என்கை –அதாவது இவ் ஊரில் புக்க பின்பு இவர்களோடு வார்த்தை சொல்லாத தவிர்ந்தாள் யாயிற்று-

ஊரவர் கவ்வை எருவிட்டு அன்னை சொல் நீர்படுத்து
ஈர நெல் வித்தி முளைத்த நெஞ்சப் பெருஞ் செய்யுள்
பேரமர் காதல் கடல் புரைய விளைவித்த
காரமர் மேனி நம் கண்ணன்
தோழீ! கடியனே?–5-3-4—ஊரார் பழியும் -தாயார் ஹித வசனமும் -கேளாத படியான காதல் –அமர்ந்த காதல் -தர்ம அனுபந்தியான காதல் -பெரிதான அமரை விளைத்த காதல் -உஊராரை பூசல் ஆக்கின காதல் என்னவுமாம் –ஈரம் -சங்கம் -காதல் -காமம் –சங்காத் சஞ்சாயதே காம –கடல் புரைய விளைவித்த-அப்ரமேயோ மஹா த-என்ற கடல்தி ஒப்பாம் அத்தனை -கிடையா விடினும் விட மாட்டாத காதல் என்கை-கடல் புரைய என்றார் முதல் -அநந்தரம் கடலின் மிகப் பெரிதால் என்றார் –பின்னை மண்டிணி ஞாலமும் ஏழ் கடலும் நீள் விசும்பும் கழியப் பெரிதால் -என்றார் –முடிவில் அதனில் பெரிய என் அவா -என்றார் -இது இறே காதல் பெருகின படி -இது இறே பொய் நின்ற ஞானத்திற்கு பின்பு இவ்வளவும் வர விளைத்துக் கொண்ட கார்யம் –காரமர் மேனி –எருவும் நீரும் உண்டானாலும் வர்ஷம் வேணும் இ றே -வ்ரஷூக வலாஹம் போலே சிரமஹரமான வடிவு-நம் கண்ணன்
விரூபனானாலும் விட ஒண்ணாத பவ்யதையை-இவ்வடிவும் பவ்யதையும் யாயிற்று புறம்பு உள்ளோரோட்டை தொக்கை அறுத்ததும் -அபரிச்சின்னமான காதலை விளைத்ததும் –நம் கண்ணன் -கிருஷ்ணன் என்றால்பெண்களுக்கு கையாள் என்று பிரசித்தம் இறே-

காலம் பெற என்னைக் காட்டுமின்கள் காதல் கடலின் மிகப் பெரிதால்
நீல முகில் வண்ணத்து எம்பெருமான் நிற்கு முன்னே வந்தென் கைக்கும் எய்தான்
ஞாலத்தவன் வந்து வீற்றிருந்த நான் மறை யாளரும் வேள்வி ஓவாக்
கோலச் செந்நெற்கள் கவரி வீசும் கூடு புனல் திருப் பேரெயிற்கே.–7-3-6—காதல் கடல் புரைய விளைவித்த என்ற அளவு அன்று -மடலூரப் புக்க போது விலக்கினவர்கள் தாங்களே கொண்டு போய் காட்ட வேண்டும் தசை இறே இது -அதுக்கு ஹேது என் என்ன –நீல முகில் வண்ணத்து எம்பெருமான்-நிற்கு முன்னே வந்து -சிரமஹரமான வடிவை காட்டி யாயிற்று ஆசையை வளர்த்தது -அவன் காதலுக்கு கிருஷி பண்ணா நிற்க என்னால் ஸ்த்ரீத்வத்தை நோக்கி இருக்கப் போமோ-

சூழ்ந்து அகன்று ஆழ்ந்து உயர்ந்த முடிவு இல் பெரும் பாழேயோ
சூழ்ந்து அதனில் பெரிய பர நன் மலர்ச் சோதீயோ
சூழ்ந்து அதனில் பெரிய சுடர் ஞான இன்பமேயோ
சூழ்ந்து அதனில் பெரிய என் அவா அறச் சூழ்ந்தாயே–10-10-10–தத்வ த்ரயத்தையும் விளாக் குலை கொண்டு அது குளப்படி யாம்படி பெரிதான என்னுடைய அபி நிவேசத்தை -அதிலும் பெரிய உன்னுடைய அபி நிவேசத்தைக் காட்டி வந்து சம்ச்லேஷித்தாயே -என்னுடைய கூப்பீடும் ஒருபடி போம்படி பண்ணுவதே –அங்கே பரதம் ஆரோப்ய முதித பரிஷஸ்வஜே -என்று மீண்டு புகுந்து ஸ்ரீ பரத ஆழ்வானை மடியிலே வைத்து உச்சி மோந்து உகந்தால் போலே யாய்த்து இவருடைய விடாயும் கெடும்படி வந்து கலந்தது–

சோலைத் திருக் கடித் தானத்துறை திரு
மாலை மதிட் குருகூர்ச் சடகோபன் சொல்
பாலோடு அமுதன்ன ஆயிரத்திப் பத்தும்
மேலை வைகுந்தத்து இருத்தும் வியந்தே-8-6-11-
-இப்பத்தும் –வியந்து — மேலை வைகுந்தத்து இருத்தும் –சம்சாரத்தில் இத்தை அப்யசிப்பான் ஒருவன் உண்டாவதே என்று விஸ்மயப்பட்டு-சர்வாதிகமான பரம பதத்தில் கொடு போய் வைக்கும் –மாயக் கூத்தன் நடையாடாத தேசத்திலே வைத்து -ஒரு நாளும் பிரியாத அனுபவத்தை கொடுக்கும்

உயிர்கள் எல்லா உலகமும் உடையவனைக்
குயில்கொள் சோலைத் தென்குருகூர்ச் சடகோபன்
செயிர்இல்சொல் இசைமாலை ஆயிரத்துள் இப்பத்தும்
உயிரின்மேல் ஆக்கை ஊனிடை ஒழிவிக்குமே.–
3-2-11—-செயிர் -குற்றம் -இல் -இல்லாமை -ஆக நிர்த்தோஷமான சப்த சந்தர்ப்பத்தை உடைய ஆயிரம்-இப் பத்துக்கு குற்றம் இல்லாமை யாவது -எங்கு இனித் தலைப் பெய்வன் -என்று மெய்யாய் இருக்கை உயிரின்மேல் ஆக்கை ஊனிடை ஒழிவிக்குமே.–
சரீர சம்பந்த ஹேதுவான கர்மத்தைப் போக்கும் –

இவர் பக்கல் பிரபந்தம் அவதரிக்க தொடங்கின காலத்தை அருளிச் செய்தார் கீழ் .. இது தான் அவதரிக்கிற அளவில் -இப்படி நாம் அவனைக் கவி பாட வேணும் -என்று சங்கல்ப்பித்து இருந்து பாடினாரோ -என்னும் ஆ காங்க்ஷையில் இதின் அவதரண க்ரமத்தை அருளிச் செய்கிறார் மேல் -இப்படி போக்‌யமான ஸப்த ப்ரவ்ருத்தி மாத்ரமே யன்றிக்கே பரபக்தி ப்ரேரிதமாய்க்‌ கொண்டு அந்த ஸப்‌த ஸந்தர்ப்ப ரூபமான ப்ரபந்தமாய்க்‌ கொண்டு அவதரித்ததென்கிறார்‌.-

அதாவது-நீர் பாலாய்–பால் நெய்யாய் –நெய் அம்ருதமாய் -அத்தாலே நிரம்பினதோர் ஏரி
பொறாமல் நெளித்து உடையுமா போலே —-மயர்வற மதி நலம் அருளினன்
-1-1-1–என்கிற இடத்தில்
கர்ம ஞான அனுக்ருஹீதையான பக்தியின் ஸ்தானத்திலே -பகவத் பிரசாதமாய் — அது அடியாக பர பக்தி தொடங்கி – பிறக்கையாலே -ஞானம் முதலிலே பர பக்தி ரூபமாய் – பர பக்தி ஆனது பர ஞானமாய் –பர ஞானம் பரம பக்தியாய் – அச்யுத பக்தி தத்வ ஜ்ஞான அம்ருதாப்தி பரிவாஹ ஸூபைர் வாசோபி -ஸ்தோத்ர ரத்னம் -3-என்கிறபடியே – அந்த பர பக்தியாதிகளாய் நிறைந்த ஜ்ஞானம் ஆகிற அம்ருதாப்தி யானது –ஆஸ்ரயம்-அழியாமல் -பரீவாக அபேஷை பிறந்து –நிமியும் வாயோடு கண்கள் நீர் மல்க —திருவாய் -6-5-2–என்கிறபடி –நெளிகிற வாய் கரையிலே – மிடைந்த சொல் தொடை –திருவாய் -1-7-11–என்கிறபடியே – சொற்கள் தான் நாம் இங்குத்தைக்கு கிஞ்சித் கரித்தோம் ஆக வேணும் -என்று
என்னைக் கொள் என்னைக் கொள் –என்று மேல் விழுகையாலே -நெருங்கிக் கொண்டு – மொழி பட்டோடும் கவி அமுதம் –திருவாய் -8-10-5–என்கிற படியே வசன ரூபமாய் பிரவஹித்து இப்படி
பரபக்த்யாத்ய அவஸ்தா த்ரயாபன்ன பக்தி ப்ரேரிதமாய் அவதரிக்கையாலே –-அவாவில் அந்தாதிகள் இவை ஆயிரமும் -திருவாய் -10-10-11-– என்று பக்தி பலாத்காரத்தாலே பிறந்த அந்தாதியான ஆயிரம் என்று நிரூபகமாம் படியாய்த்து என்கை —

(நீர்பால்‌ நெய்யமுதாய்‌) நீர்‌ பாலாய்‌, பால்‌ நெய்யாய்‌, நெய்‌ அம்ருதமாய்‌, அவ் வம்ருதத்தாலே நிரம்பினதோர்‌ ஏரி நெளிக்குமா போலே, ஜ்ஞாநம்‌ பக்தியாய்‌, பக்தி பரபக்தியாய்‌, பரபக்தி பரஜ்ஞாநமாய்‌, பரஜ்ஞாநம்‌ பரமபக்தியாய்‌ “அச்யுத பக்திதத்த்வ ஜ்ஞாநாம்ருதாப்‌தி, பரிவாஹ ஸூபை ர்‌ வசோபி:,” (ஸ்தோத்ர ரத்நம்‌ 3) என்கிறபடியே அந்த பரபக்த்யாதிகளாலே நிறைந்திருப்பதொரு ஜ்ஞாநாம்ருதாப்‌தியானது (நிமிகிற வாய்க்கரை மிடைந்து) பரீவாஹாபேககை பிறந்து “நிமியும்‌ வாய்‌” (திருவாய்மொழி
6-5-2) என்கிற வாய்க்கரையை “மிடைந்த சொல்‌ தொடை” (திருவாய்மொழி 1-7-11)
என்கிறபடியே நெருக்கி அதிக்ரமித்து “மொழிபட்டோடும்‌ கவியமுதம்‌”(திருவாய்மொழி 8-10-5 என்று சொற்களாய்க்‌ கொண்டு ப்ரவஹித்து (அவாவிலந்தாதிஎன்று பேர்‌ பெற்றது) ‘அவாவிலந்தாதிகளால்‌ இவையாயிரமும்‌” (திருவாய்மொழி-10-10-19 என்று பரபக்த்யாதிகளாலே “சொல்லப்பட்ட ஆயிரம்‌” (திருவாய்மொழி-8-10-11) என்று லோகத்திலே ப்ரஸித்‌த மாய்த்தென்கிறார் –

உயர்வற உயர் நலம் உடையவன் எவன் அவன்
மயர்வற மதி நலம் அருளினன் எவன் அவன்
அயர்வறும் அமரர்கள் அதிபதி எவன் அவன்
துயரறு சுடரடி தொழுது எழு என் மனனே 
–1-1-1-மயர்வு -அஜ்ஞானம் -இத்தால் ஜ்ஞான உதய -அந்யதா ஜ்ஞான -விபரீத ஜ்ஞான ரூபமான அஜ்ஞானத்தைச் சொல்லுகிறது-அற -சவாசனமாகப் போகும்படி
மதி நலம்-மதி என்று ஜ்ஞானம்-நலம் -என்று பக்தி -பக்தி ரூபாபன்ன ஜ்ஞானம் என்றபடி-அருளினன்
இத் தலையில் நன்மை தீமை பாராதே நிர்ஹேதுக கிருபையால் தந்து அருளினான்-முலைக் கடுப்பாலே தரையிலே பீச்சுமா போலே –எனக்குத் தந்து அருளினான் -என்னாது ஒழிந்தது -பகவத் விஷயீ காரத்துக்கு முன்பு தம்மை அசத் கல்பராக நினைத்து இருக்கையாலே-

பூயோ நமோ’பரிமிதாச்யுத பக்தி தத்வ
ஜ்ஞாநாம்ருதாப்தி பரிவாஹ ஶுபைர் வசோபி: |
லோகே’வதீர்ண பரமார்த்த ஸமக்ர பக்தி
யோகாய நாதமுநயே யமிநாம் வராய ||–3—பகவானிடத்தில் எல்லை இல்லாத பக்திக் கடலில் இருந்து பெருகிய மங்களகரமான வார்த்தைகள் மற்றும் உண்மை ஞானம் வந்து பிறந்ததைப் போலே இருப்பவர் ஸ்ரீமந் நாதமுனிகள். அவரே சிறந்த குறிக்கோள்.-அவர் பூர்த்தியையும் பக்தி யோகத்தையுமுடையவர். யோகிகளில் சிறந்தவர். அவருக்கு மீண்டும் என் வணக்கங்கள்.

குமுறுமோசை விழவொலித் தொலை வில்லி மங்கலம் கொண்டு புக்கு
அமுத மென்மொழி யாளை நீர்உமக் காசை யின்றி அகற்றினீர்
திமிர்கொ டாலொத்து நிற்கும் மற்றிவள் தேவ தேவபிரான்என்றே
நிமியும் வாயொடு கண்கள் நீர்மல்க நெக்கொசிந்து கரையுமே.–6-5-2—அந்த சீலவத்யையை சொல்லப் புக்கு தலைக் கட்ட மாட்டாதே உதடு நெளிக்கும்-உதடு நெளிக்கிற வாயோடு கண்ண நீர் மல்க –-நெக்கு -சிதலையுமாய் –-ஒசிந்து -பரவசையுமாய் –-கரையும் -நீராகா நின்றாள்-நெக்கொசிந்து கரையுமே.-பெரு வெள்ளத்தில் கரையானாது நெகிழ்ந்து ஒட்டு விட்டு ஒசிந்து பொசிந்து அவயவியாகாத படி கரைந்து போமா போலே அழிந்து போகா நின்றாள் -இப்படி இவள் கரையா நிற்க வன் நெஞ்சரான நாம் இதுக்கு பாசுரம் இடுவது மீட்க்கத் தேடுவது ஆகா நின்றோம் இறே-

குடைந்து வண்டுண்ணும் துழாய் முடியானை -அடைந்து தென்குருகூர்ச் சடகோபன்
மிடைந்த சொல்தொடை ஆயிரத்து இப்பத்து உடைந்து நோய்களை ஒடுவிக்குமே –-1-7-11-செறிந்த சொல் தொடையை உடைய-தனித் தனியே என்னைக் கொள் என்னைக் கொள்-என்று மேல் விழுந்த சொல் என்னவுமாம்–இப்பத்து தானே நோய்களை உடைந்தோடும் படி பண்ணும்-நோயாகிறது -ஷூ த்ர புருஷார்த்த ருசி-உடைந்து ஓடுகை-ஆஸ்ரயாந்தரங்களுக்கும் ஆகாதபடி உரு அழிகை

வழி பட்டு ஓட அருள் பெற்று மாயன் கோல மலர் அடிக்கீழ்
சுழி பட்டு ஓடும் சுடர்ச் சோதி வெள்ளத்து இன்புற்று இருந்தாலும்
இழி பட்டு ஓடும் உடலினில் பிறந்து தன் சீர் யான் கற்று
மொழி பட்டு ஓடும் கவி அமுதம் நுகர்ச்சி உறுமோ முழுதுமே–8-10-5-அவை உள் அடங்காமையாலே சொல்லாய் ப்ரவாஹியா நின்றுள்ள-கவி அமுதம்-நுகர்ச்சி உறுமோ முழுதுமே–திருவாய் மொழி யாகிற அம்ருதத்தை அனுபவிக்கையோடு ஒக்குமோ –

நல்ல கோட்பாட்டுலகங்கள் மூன்றின் உள்ளும் தான் நிறைந்த
அல்லிக் கமலக் கண்ணனை அந்தண் குருகூர்ச் சடகோபன்
சொல்லப்பட்ட வாயிரத்துள்
இவையும் பத்தும் வல்லார்கள்
நல்ல பதத்தால் மனை வாழ்வர் கொண்ட பெண்டிர் மக்களே–8-10-11-வேதம் போலே தான் தோன்றி அன்றிக்கே இருக்கை–இப்பத்தையும் அப்யஸிக்க வல்லார்கள்- -பாகவத சேஷத்வம் -அத்தோடு த்கார்ஹஸ்த்த்யத்தை நடத்துவார்கள் –-ச புத்ர பவ்த்ரஸ் ச கண என்கிறபடியே ச பரிகரமாக பாகவத சேஷத்வத்தை அனுபவிக்கக் கடவர்கள் –

அவா அறச் சூழ் அரியை அயனை அரனை அலற்றி
அவா அற்று வீடு பெற்ற குருகூர்ச் சடகோபன் சொல்
அவா இல் அந்தாதிகளால் இவை ஆயிரமும் முடிந்த
அவா இல் அந்தாதி இப்பத்து அறிந்தார் பிறந்தார் உயர்ந்தே–10-10-11-–பக்தி பலாத்காரத்தாலே பிறந்த ஆயிரம் திருவாய் மொழியிலும் -இவரைச் சொல்லுவித்த அபி நிவேசம் -ப்ரேரகனான மைத்ரேயனுடைய ஸ்த்தானத்திலே நிற்கிறது யாய்த்து –பெற்று அல்லது தரிக்க ஒண்ணாத படியான பரம பக்தியால் பிறந்தது யாய்த்து -இத் திருவாய் மொழி -கீழ் அடைய பர பக்தி பிறந்து சொல்லிற்று யாயிற்று -பரம பக்தி பிறந்து சொல்லிற்று யாயிற்று இத் திருவாய் மொழி ––இவற்றை அறிந்தவர்கள் சம்சாரத்திலே பிறந்து வைத்தே நித்ய ஸூ ரிகளோடே ஒப்பர்கள் –

–——————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ ஆய் ஜநந்யாசார்யர்‌ ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ ஆசார்ய ஹ்ருதயம்‌–ஸ்ரீ திராவிட ப்‌,ரஹ்ம ஸூத்ரம்‌ -8–கு,ண பாதம் (156–186 )- 13- திவ்ய தேஸ -அர்ச்சாவதார விஸேஷ கு,ணாதி கரணம்‌– (159 —186)ஸ்ரீ மணவாள மா முனிகள் -ஸ்ரீ ஆய் ஸ்வாமிகள் வியாக்யானங்கள்–

July 26, 2026

1) பூர்வ த்‌,விகம்‌ – ஸூரி வைபவம்‌ 1 முதல்‌ 186 வது ஸூத்ரம்‌ வரை (186)
(2) உத்தர த்‌,விகம்‌ – ஸூரி ஸுக்த்தி வைபவம்‌– 187 முதல்‌ 284 முடிய (48)

(1) ப்ரத, மோத்‌, யாயம் -ஸாஸ்த்ர தாத்பர்ய அதிகாரி வைபவம்‌ 1-38 (38)
(2) த்‌,விதீயோத்‌, யாய: – க்‌,ரந்த, கர்த்ரு வைப,வம்‌ 39 – 186 (148)
(3) த்ருத்யோத்‌, யாயம் – க்‌,ரந்தாந்தர தார தம்ய வைப,வம்‌ 187-207 (21)
(4) சதுர்த்தே ரத்‌, யாயம் -கிரந்த, ப்ரதிபாத்‌,ய க்ரம வைப,வம்‌ 208-284 (27)

8–கு,ண பாதம் —156–186 மொத்தம் -31-ஸூரனைகள்
12 சதுர்தவ்த்யாதி, கரணம்‌ 156 –158—மொத்தம்-3–ஸூரனைகள்
13 திவ்ய தேஸ பா-அர்ச்சாவதார விஸேஷ கு,ணாதி கரணம்‌– 159 —186—மொத்தம்–28–ஸூரனைகள்

இப்படி அர்ச்சாவதாரத்தில் எல்லாம் பூர்ணம் ஆகில் எல்லா திருப் பதிகளிலும் எல்லா குணங்களும் ஒக்க பிரகாசிக்குமோ என்னும் ஆ காங்க்ஷையிலே பரத்வாதிகளுக்கு அசாதாரணாமாயும் -சாதாரணாமாயும் இருக்கும் குணங்களில் ஓர் ஒரோ குணம் ஒரோ திருப் பதியிலே பிரதான்யேந பிரகாசிக்கும் படியை – இவ் ஆழ்வார் அனுபவித்த திருப்பதிகள்-(30 ) தோறும் தர்சிப்பிக்கிறார் மேல்–அதில் பிரதமத்தில் பரத்வாதிகளுக்கு அசாதாரானாமான ஒரோ குணம் பிரதான்யேந பிரகாசிக்கும்
திருப்பதிகளை அருளிச் செய்யக் கோலி அகில திவ்ய தேச பிரதானமான கோயிலில் பிரகாசிக்கிற குணத்தை ஆதியிலே அருளிச் செய்கிறார் —அதில்‌ எல்லா ஸ்தலங்களிலும்‌ எல்லா குணங்களும்‌ பரிபூர்ணமே யாகிலும்‌ கோயில்‌ முதலான திவ்ய தேசங்களிலே பரத்வாதிகளுக்கு அஸாதாரணமான ஓரோ குணங்கள்‌ ப்ராதாந்யேந ப்ரகாஸிக்குமென்கிறார்‌-

வன்பெரு வானக முதலுய்ய இனிதாகத்‌ திருக் கண்கள்‌ வளர்கின்ற திருவாளன்‌ திருப்பதி, வடிவுடை, கடலிடம்‌, கட்கிலீ என்னுமவற்றில்‌ இவள்‌ திறத்தென் கொலோ வென்பிக்கிற வ்யூஹ ஸெளஹார்த்த ப்ரதாநம்‌.-சூரணை-159-

அதாவது-வன் பெரு வானகம் முதல் உய்ய –-வன் பெரு வானகம் உய்ய அமரர் உய்ய மண் உய்ய மண் உலகில் மனிசர் உய்ய –பெருமாள் திருமொழி-1-10-என்று முதலில் ப்ரஹ்ம லோகத்தில் எழுந்து அருளி– பின்பு பூ லோகத்தில் எழுந்து அருளிய கட்டளையிலே – நைத்திக பிரளயத்துக்கு இளையாத ப்ரஹ்ம லோகம் முதலாக இவ் அருகு உண்டான உபரிதன லோகங்களும் அங்குள்ள ப்ரஹ்மாதிகளும் பூமியும் இங்குள்ள மனுஷ்யரும் உஜ்ஜீவிக்கும் படியாக —இனிதாகத் திருக் கண்கள் வளர்கின்ற திரு வாளன் திருப்பதி –-திரு வாளன் இனிதாக திருக் கண்கள் வளர்கின்ற திரு அரங்கம் -பெரியாழ்வார் -4-9-10-என்றும் –திருவாளன் திருப்பதி-பெரியாழ்வார் -4-8-10 -என்றும் சொல்லுகிற படி-திரு உள்ளம் உகந்து கண் வளர்ந்து அருளுகிற ஸ்ரீ யபதி உடைய திருப் பதியான கோயிலானது-

வன்பெரு வானகமுய்ய அமரருய்ய மண்ணுய்ய மண்ணுலகில்‌ மனிசருய்ய” (பெருமாள்‌ திருமொழி 1-10) என்று உபய விபூதியும்‌ உஜ்ஜீவிக்கும்படி “திருவாளன்‌ இனிதாகத்‌ திருக்கண்கள்‌ வளர்கின்ற திருவரங்கம்‌” (பெரியாழ்வார்‌ திருமொழி 4-9-10) என்றும்‌ “தென்னாடும்‌ வடநாடும்‌ தொழ நின்ற திருவரங்கம்‌ திருப்பதி” (பெரியாழ்வார்‌ திருமொழி 4-9-11) என்றும்‌ சொல்லுகிற ஸ்ரீய:பதியான ஸர்வேஸ்வரன்‌ திருவுள்ளமுகந்து கண் வளர்ந்தருகிற பெரிய திருப்பதியான கோயிலிலே,

வன் பெரு வானகம் உய்ய அமரர் உய்ய மண் உய்ய மண் உலகில் மனிசர் உய்ய
துன்பம் மிகு துயர் அகல அயர் ஒன்றில்லா சுகம் வளர அக மகிழும் தொண்டர் வாழ
அன்போடு தென் திசை நோக்கி பள்ளி கொள்ளும் அணி அரங்கன் திரு முற்றத்து அடியார் தங்கள்
இன்ப மிகு பெரும் குழுவு கண்டு யானும் இசைந்த உடனே என்று கொலோ விருக்கும் நாளே ?—1-10—நைமித்திக பிரளய ஆபத்துக்கு இளையாத ப்ரஹ்ம லோகம் முதலாக மேலுண்டான லோகங்கள் உய்ய –
அங்குண்டான ப்ரஹ்மாதிகளும் ஜீவிக்க வாய்த்து ப்ரஹ்ம லோகத்தில் ஸ்ரீ கோயில் ஆழ்வார் எழுந்து அருளி இருந்த படி –ஸ்ரீ விபீஷண ஆழ்வானுக்காக-அங்கு நின்றும் இங்கு ஏற எழுந்து அருளுகையாலே
பூமியும் பூமியில் உண்டான சேதனரும் உஜ்ஜீவிக்க

செரு ஆளும் புள் ஆளன் மண் ஆளன்  செரு செய்யும் நாந்தகம் என்னும்
ஒரு வாளன் மறை யாளன் ஓடாத படை ஆளன் விழுக்கை ஆளன்
இரவாளன் பகலாளன் என்னை ஆளன்  ஏழுலகப் பெரும் புரவாளன்
திருவாளன் இனிதாக திருக் கண்கள் வளர்கின்ற திருவரங்கமே 4-9 -10-ஸ்ரீ பெரிய பிராட்டியாரை திவ்ய மகிஷியாக உடையவன் –கீழ் சொன்ன லோகத்தை எல்லாம் ஆளுவது இருவருமான சேர்த்தியிலே ஆய்த்து-ஸ்ரீ ஷீராப்தி தொடக்கமான ஸ்தலங்களில் எல்லா வற்றிலும் காட்டில் அபிமத சித்திக்கு உடலான தேசம் -என்று திரு உள்ளத்தில் உகப்போடே கூட கண் வளர்ந்து அருளுகிற கோயில் ஸ்ரீ திருவரங்கமே –ஷீராப்தேர் மண்டலாத் பானோர் யோகினாம் ஹ்ர்தயாதபி ரதிம் கதோ ஹரிர் யத்ர தஸ்மாத் ரங்கமிதி  ஸ்ம்ர்தம்-என்னக் கடவது இறே-

பருவரங்கள் அவை பற்றி படை யாலித்து எழுந்தானை
செருவரங்க பொருது அழித்த திருவாளன் திருப்பதி மேல் 
திருவரங்க தமிழ்மாலை விட்டு சித்தன் விரித்தன கொண்டு 

இருவரங்கம் எரித்தானை ஏத்த வல்லார் அடியோமே -4 -8-10 –வீரஸ்ரீ யை உடையவன் திருப்பதி விஷயமாக –தேசிகரான ஸ்ரீ பெருமாளைச் சொன்னது எல்லாம் -உபசர்ஜன (அப்ரதான) கோடியிலேயாய் – அத் தேசமே ஆய்த்து   இத் திருமொழிக்கு விஷயம் 

கைந்நாகத் திடர் கடிந்த கனல் ஆழி படை வுடையான் கருதும் கோயில்
தென்னாடும் வடநாடும் தொழ நின்ற திருவரந்தத் திருப்பதியின் மேல்
மெய்நாவன் மெய்யடியான் விட்டு சித்தன் விரித்த தமிழ் உரைக்க வல்லார்
எஞ்ஞான்றும்   எம்பெருமான் இணை அடிக் கீழ் இணை பிரியாது இருப்பர் தாமே – 4-9 -11-திராவிட பாஷா ப்ரதானமான தென்னாடும் – சம்ஸ்க்ருத பாஷா பிரதானமான வட நாடும் இருந்ததே குடியாக தொழும்படி நின்ற ஸ்ரீ திருவரங்கம் என்கிற திருநாமத்தை உடைத்தான ஸ்ரீ திருப்பதி விஷயமாக-

(பிணி யரங்க வினையகலப் பெரும் காலம் தவம் பேணி
மணி யரங்க நெடு முடியாய் மலர் யயனை வழி பட்டுப்
பணி யரங்கப் பெரும் பாயல் பரஞ்சுடரை யாம் காண
அணி யரங்கம் தந்தானை அறியாதார் அறியாதார்
–ஸ்ரீ கம்ப நாட்டாழ்வார்-

கொடியாடு மணிமாட அயோத்தி மூதூர் குடி துறந்து திருவரங்கம் கோயில் கொண்ட நெடியோனே–திருவரங்கக் கலம்பகம் -)

வடிவுடை கடலிடம் கட்கிலி ( காகுத்தா ) என்னும் அவற்றில் –-வடிவுடை வானோர் தலைவனே (பரத்வ அனுபவமும் ) -என்றும் –-கடலிடம் கொண்ட கடல் வண்ணா (வ்யூஹ அனுபவமும் )-என்றும் –-கட்கிலி உன்னைக் காணுமாறு அருளாய் (அந்தர்யாம்ய அனுபவமும்)-என்றும்-காகுத்தா கண்ணனே ( அவதார விபவ அனுபவம் ) -என்றும் சொல்லுகிற படி தோன்றும் பரத்வாதிகளில் வைத்துக் கொண்டு-இவள் திறத்து என் கொலோ என்பிக்கிற வியூஹ சௌஹார்த்த பிரதானம் –இவள் திறத்து என் சிந்தித்தாய் -என்றும் –-என் கொலோ முடிகின்றது இவட்கே -என்றும் – இவளுடை ஆட்டத்தில் தேவரீர் சிந்தித்தது என் ? இவள் கார்யம் என்னாய் முடிய கடவது ?-என்று சொல்லும்படி பண்ணுகிற பாற் கடல் யோக நித்தரை சிந்தை செய்யும் வியூஹ குணமான சௌஹார்த்தத்தை பிரதானமாக உடைத்தாய் இருக்கும் என்கை —இஸ் ஸ்தலத்திலே வியூஹ சௌஹார்த்தமே பிரதான்யேன பிரகாசிக்கும் என்ற படி –

(வடிவுடைக்‌ கடலிடங்‌ கட்கிலீயென்னுமவற்றில்‌) “வடிவுடை வானோர்‌ தலைவனே” (திருவாய்மொழி 7-2-10) என்றும்‌, “கடலிடங்கொண்ட கடல் வண்ணா” (திருவாய்மொழி 7-2-7 என்றும்‌, “கட்கலி உன்னைக்‌ காணுமாறருளாய்‌” (திருவாய்மொழி 7-2-3) என்றும்‌ “காகுத்தா கண்ணனே” (திருவாய்மொழி 7-2-3) என்றும்‌ “திருவரங்கத்தாய்‌” (திருவாய்மொழி 7-2-4) என்றும்‌ பரத்வாதிகள்‌ ஐந்தும்‌ ப்ரகாஸித்ததேயாகிலும்‌ (இவள்‌ திறத்தென்‌ கொலோ என்பிக்கிற) “இவள் திறத்தென்செய்கின்றாய்‌” (திருவாய்மொழி 7-2-1 “இவள் திறத்து என்‌ சிந்தித்தாய்‌’ (திருவாய்மொழி 7-2-4) “என்கொலோ முடிகின்றதிவட்கு” (திருவாய்மொழி 7-2-2) என்று ‘இவள்‌ திறத்து தேவர்‌ செய்தருள நினைத்ததேது? இவள்‌ கார்யமென்னாய்‌ முடியக் கடவது என்று கேட்கையாலே “பாற் கடல்‌ யோக நித்திரை சிந்தை செய்த” (திருவாய்மொழி 2-6-5) என்று ஸர்வருடையவும்‌ ரக்ஷணோபாய சிந்தை பண்ணுகிற வ்யூஹத்தில்‌ ப்ரகாஸிக்கிற ஸெளஹார்த, குணம்‌ ப்ராதாந்யேந ப்ரகாஸிக்குமென்கிறார் –

முடிவிவள் தனக்கு ஒன்று அறிகிலேன்’ என்னும்; ‘மூவுல காளியே!’ என்னும்;
‘கடி கமழ் கொன்றைச் சடையனே!’ என்னும்; ‘நான்முகக் கடவுளே!’ என்னும்;
வடிவுடை வானோர் தலைவனே!’ என்னும்; ‘வண் திரு வரங்கனே!’ என்னும்;
அடி யடையா தாள் போல் இவள் அணுகி அடைந்தனள் முகில்வண்ணன் அடியே.–7-2-10–உன்னோடே ஒத்த வடிவை யுடைய நித்ய ஸூ ரிகளுக்கு நிர்வாஹகன் ஆனவனே-

பால துன்பங்கள் இன்பங்கள் படைத்தாய்! பற்றிலார் பற்ற நின்றானே!
கால சக் கரத்தாய்! கடலிடங் கொண்ட கடல்வண்ணா! கண்ணனே!’ என்னும்;
‘சேல்கொள் தண் புனல்சூழ் திருவரங்கத்தாய்!’ என்னும்’என் தீர்த்தனே!’ என்னும்;
கோல மா மழைக்கண் பனி மல்க இருக்கும்nஎன்னுடையக் கோமளக் கொழுந்தே.–7-2-7—-நீ எங்களை காலம் பார்த்து அன்றோ கிடக்கிறது –ஒரு கடல் கடலிலே சாய்ந்தால் போலே அணித்தாக திருப் பாற் கடலிலே சாய்ந்தில்லையோ-

வட்கிலள் இறையும் ‘மணிவண்ணா!’ என்னும்; வானமே நோக்குமை யாக்கும்
‘உட்குடை அசுரர் உயிரெலாம் உண்ட ஒருவனே!’ என்னும் உள் ளுருகும்;
கட்கிலீ! உன்னைக் காணுமாறு அருளாய் காகுத்தா! கண்ணனே!’ என்னும்;
திட்கொடி மதிள் சூழ் திருவரங்கத்தாய்’ இவள் திறத் தென் செய்திட்டாயே–7-2-3-பாஹ்ய சஷூஸூக்கு அவிஷயமான நீ நான் உன்னைக் காணும் படி கிருபை பண்ணி அருள வேணும்-நசஷூஷா பஸ்யதி –என்கிறது தாம் தாமே காண இழிவாருக்கு –தஸ்யைஷ ஆத்மா விவ்ருணுதே தநூம் ஸ்வாம் -என்று அவன் தானே காட்டும் அன்று அவ்வருமை இல்லை -சிலருக்கு சதா தர்சனம் பண்ணைக் கொடுத்திலையோ – ‘கட்கிலீ! -கண்ணுக்கு இலீ என்றபடி -இப்படி அரிதான பொருளை நாம் சிலர்க்கு அருளிற்று உண்டோ என்ன-காகுத்தா! –ரூப ஓவ்த்தார்ய குணை பும்ஸாம் என்றும் ரூப சம்ஹ நனம் லஷ்மீம் என்றும் நாகரீகருக்கும் வான வாசிகளுக்கும் காட்டிக் கொடு திரிந்திலையோ-ஒரு கால் செய்தது கொண்டோ என்ன –-கண்ணனே!’ என்னும்;ஆயாந்தம் புண்டரீகாக்ஷம் வீக்ஷ மாணா குருஸ் த்த்ரிய-என்றும் தாஸாம் ஆவிர்பூத் என்றும் இடைச்சிகளுக்கும் அகப்பட காட்டிக் கொடு திரிந்திலையோ

இட்டகால் இட்ட கையளாய் இருக்கும்; எழுந்துலாய் மயங்கும் கை கூப்பும்;
‘கட்டமே காதல்’ என்று மூர்ச்சிக்கும்; ‘கடல்வண்ணா! கடியை காண்’ என்னும்;
‘வட்டவாய் நேமி வலங்கையா!’ என்னும் ‘வந்திடாய்’ என்றென்றே மயங்கும்;
சிட்டனே! செழுநீர்த் திருவரங்கத்தாய்! இவள் திறத் தென் சிந்தித்தாயே ?–7-2-4-சிரமஹரமான கோயிலிலே நில மிதியாலே தண்ணளி மிக்கு இருக்கிற நீர்-இவள் திறத்து -பேச்சுக்கு நிலம் இல்லாத படி நோவு பட்டக் கிடக்கிற இவள் திறத்து-என் சிந்தித்தாயே -நினைத்து இருந்தது என் –ஜீவிப்பிக்க நினைத்தீரோ -முடிக்க நினைத்தீரோ -இப்படிப்பட்ட ஆற்றாமையையும் பேற்றுக்கு உடலாக நினைத்து இருக்கிறிலள் -அவன் நினைவாலே பேறு என்று இருக்கிறாள் –உன் மனத்தால் என் நினைந்து இருந்தாய் -என்ன கடவது இறே –

கங்குலும் பகலும் கண்துயில் அறியாள் கண்ண நீர் கைகளால் இறைக்கும்;
‘சங்கு சக்கரங்கள்’ என்று கை கூப்பும்; ‘தாமரைக் கண்’ என்றே தளரும்;
‘எங்ஙனே தரிக்கேன் உன்னை விட்டு!’ என்னும்; இரு நிலம் கைதுழா இருக்கும்;
செங்கயல்பாய் நீர்த் திருவரங்கத்தாய்! இவள் திறந்து என் செய்கின்றாயே?–7-2-1-அந்த சத்தவங்களுக்கு ஜலத்தை ஒழிய செல்லாதாப் போலே உம்மை ஒழிய செல்லாத இவள் திறத்து –நிறமும் இழந்து -சஞ்சாரமும் அற்று இறே இவள் கிடக்கிறது –ஏஹி பஸ்ய சரீராணி என்று வடிவைக் காட்டுகிறாள்-திருவரங்கத்தாய்-என் செய்கின்றாயே?-பரமபதத்தில் இருப்பிலோ கேட்க்கிறது-கண்ணுக்கு விஷயமான இடத்தே அன்றோ சாய்ந்து அருளிற்று -இவள் நிறம் பெற்று செருக்கி நடக்கும்படி பண்ணப் பார்த்ததோ -தவிரப் பார்த்ததோ – இவளை அவ் வூர்ப் படியாகப் பார்த்தாயோ இவ் வூர்ப் படியாகப் பார்த்தாயோ –

என் செய்கின் றாய்? என் தாமரைக் கண்ணா! என்னும் கண்ணீர் மல்க இருக்கும்
என் செய்கேன் எறி நீர்த் திருவரங்கத்தாய்! என்னும் வெவ் வுயிர்த் துயிர்த் துருகும்
முன் செய்த வினையே முகப்படாய் என்னும் முகில்வண்ணா! தகுவதோ என்னும்
முன் செய்திவ் வுலகம் உண்டு மிழ்ந் தளந்தாய்! என் கொலோ முடிகின்றது இவட்கே?–7-2-2-இவள் இடையாட்டத்தில் நீ செய்யப் பார்த்த படி என் என்னுதல் இவளுடைய தசை என்னாய் விடக் கடவதோ என்னுதல் -இவள் என்கிறது நீர் ரஷித்த ஜகத்துக்கும் -இவளுக்கும் உண்டான நெடுவாசி அறியீரோ -அநந்ய பரையாய்-அநந்ய கதியாய் -அபலையாய் இருக்கிற இவள் இடையாட்டத்தில் என் செய்து அருள நினைத்து அருளினீர் -என்கிறாள் –

உய்ந்து போந்து என் உலப்பிலாத வெந்தீ வினைகளை நாசம் செய்து உனது
அந்தமில் அடிமை அடைந்தேன் விடுவேனோ
ஐந்து பைந்தலை யாடரவணை மேவிப் பாற் கடல் யோக நித்திரை
சிந்தை செய்த வெந்தாய் உன்னைச் சிந்தை செய்து செய்தே
–2-6-5-திருப் பாற் கடலிலே ஜகத் ரக்ஷண சிந்தாத்மக யோக நித்திரை பண்ணி அருளினை சேதனர் உடைய உஜ்ஜீவன பிரகாரம் ஆதல் –ஆத்மாநம் வாஸூதேவாக்யம் சிந்தையன் மதுஸூதன-என்கிறபடியே தன்னை அனுசந்தித்தல் ஆதல்

இனி கோவிலுக்கு அனந்தரம் சொல்லப் படுவதான திருமலையில் பிரகாசிக்கிற குணத்தை அருளிச் செய்கிறார் —

மண்ணோர் விண்ணோர் வைப்பில்‌ போகின்ற ஏழுலகுக்குயிர் பாசம்‌ வைத்த நிகரில்‌ வாத்ஸல்யம்‌ உஜ்ஜ்வலம்‌.–சூரணை -160-

( வைப்பு -திருமலை -போகின்ற எழு உலகுக்கு உயிர் -அந்தர்யாமி -அதன் குணம் வாத்சல்யம் –
வாத்சல்யத்துக்கு விசேஷணங்கள் -பாசம் வைத்த என்பதும் நிகரில் என்பதும் – ஒழிவில் காலம் -உலகமுண்ட பெருவாயா திருவாய்மொழிகளில் இருந்து அருளிய ஸ்ரீ ஸூக்திகள் வைப்பில் வாத்சல்யம் உஜ்ஜ்வலம் என்று அன்வயம் )

அதாவது-மண்ணோர் விண்ணோர் வைப்பில் –கண்ணாவான் என்றும் மண்ணோர் விண்ணோர்க்கு–திருவாய்-1-8-3 -என்றும் –தண்ணருவி வேம்கடமே வானோர்க்கும் மண்ணோர்க்கும் வைப்பு -நான்முகன்-45–என்றும் – உபய விபூதி உள்ளோர்க்கும் சேமித்து வைத்த நிதி போல் பிராப்யமாய் இருக்கிற திரு மலையில் –

(மண்ணோர்‌ விண்ணோர்‌ வைப்பில்‌) “கண்ணாவான்‌ என்றும்‌ மண்ணோர்‌ விண்ணோர்க்கு”  (திருவாய்மொழி 1-8-3) என்றும்‌, “தண்ணருவி வேங்கடமே வானோர்க்கும்‌ மண்ணோர்க்கும்‌ வைப்பு” (நான்முகன்‌ திருவந்தாதி 45) என்றும்‌ உபய விபூதி யிலுள்ளார்க்கும்‌ ஆபத்‌ தநமாய்‌ நிற்கிற திருமலையில்‌ நிலையிலே-

கண்ணாவான் என்றும் மண்ணோர் விண்ணோர்க்கு
தண்ணார் வேங்கட விண்ணோர் வெற்பனே –1-8-3-சம்சாரிகளோடு நித்ய ஸூ ரிகளோடு வாசி இல்லை –அரை க்ஷணம் தங்கள் கார்யம் நிர்வஹித்துக் கொள்ள மாட்டாமைக்கு-கண்ணாகைக்காக என்னுதல்-கண்ணாம் அவன் என்னுதல்-கண் -என்று நிர்வாஹகன் –-சஷூர் தேவா நாம் உதமர்த்தயா நாம் -என்கிற ஸ்ருதி அர்த்தத்தின் படியே சொல்கிறார்-

புரிந்து மலரிட்டுப் புண்டரீகப் பாதம்
பரிந்து படுகாடு நிற்ப -செரிந்து எங்கும்
தான் ஓங்கி நிற்கின்றான் தண்ணருவி வேங்கடமே
வானோர்க்கும் மண்ணோர்க்கும் வைப்பு-45-குளிர்ந்த திரு அருவிகளை யுடைய திருமலையே-
திரு நாட்டில் உள்ளாருக்கும் சம்சாரிகளுக்கும் வைப்பு -பரம ப்ராப்யம் –

போகின்ற ஏழு உலகுக்கு உயிர்ப் பாசம் வைத்த நிகரில் வாத்சல்யம் உஜ்ஜ்வலம்-போகின்ற காலங்கள் -போய காலங்கள் போகு காலங்கள் தாய் தந்தை உயிர் ஆகின்றாய்–திருவாய்-2-6-10 -என்றும் –
கண்ணா ஏழு உலகுக்கு உயிராய எம் கார் வண்ணனை–பெரிய திருமொழி-1-9-10- -என்றும் – சொல்லுகிறபடி -சர்வ காலமும் சர்வ ஆத்மாக்களுக்கும் சர்வ வித பந்துமாய்க் கொண்டு – சர்வருக்கும் ஆத்மாவாய் இருக்கிற அந்தர்யாமி உடைய குணமாய் இருப்பதாய் –-என் கண் பாசம் வைத்த பரஞ்சுடர்ச் சோதி—திருவாய்-3-3-4-என்றும் – நிகரில் புகழாய் -திருவாய்-6-10-10- -என்றும் –
மிகவும் தண்ணியனாய் இருக்கிற என் பக்கலிலே சங்கத்தை பண்ணினான் என்றும் – ஒப்பில்லா புகழை உடையவனே என்றும் சொல்லப்பட்ட -வாத்சல்யம் – பரம் சுடர் ஜோதி -என்று வடிவிலே தொடை கொள்ளலாம் படி உஜ்ஜ்வலமாய் இருக்கும் என்கை —

(போகின்றவேழுலகுக்குயிர்‌) “போகின்ற காலங்கள்‌ போய காலங்கள்‌ போகு காலங்கள்‌ தாய்தந்தை உயிராகின்றாய்‌” (திருவாய்மொழி 2-6-10 என்றும்‌, “கண்ணாயேழுலகுக்கு உயிராய எங்கார் வண்ணனை‘ (பெரிய திருமொழி 1-9-10) என்றும்‌ சொல்லுகிறபடியே ஸகல காலமும்‌ ஸர்வாத்மாக்களுக்கும்‌ ஸர்வவித பந்துவுமாய்க்‌ கொண்டு ஸர்வர்க்கும்‌ ஆத்ம பூதனாயிருக்கிற அந்தர்யாமித்வத்தில்‌ ப்ரகாஸிப்பதாய்‌-(பாசம்‌ வைத்த நிகரில்‌ வாத்ஸல்யம்‌ உஜ்ஜ்வலம்‌) ‘ என் கண்‌ பாசம்‌ வைத்த” (திருவாய்மொழி 3-3-4) “நிகரில்‌ புகழாய்‌” (திருவாய்மொழி 6-10-10) என்று அத்யந்தம்‌ தண்ணியனாயிருக்கிற என் பக்கலிலே ஸங்கத்தைப்‌ பண்ணினான்‌ என்னும்‌ ஒப்பிலாத புகழை உடையவனே என்று சொல்லுகிற வாத்ஸல்யம்‌ “வேங்கடத்தெழில்‌ கொள்‌ சோதி” (திருவாய்மொழி 3-3-2 என்றும்‌ “நிலவும்‌ சுடர்‌ சூழொளிமூர்த்தி” (திருவாய்மொழி 6-10-7) என்றும்‌ “”பரஞ்சுடர்ச்சோதி”  (திருவாய்மொழி 3-3-4) என்றும்‌ சொல்லுகிறபடியே உஜ்ஜ்வலமாய்க்‌ கொண்டு பிரகாஸிக்கும் என்கிறார் –

போகின்ற காலங்கள் போய காலங்கள் போக் காலங்கள் தாய் தந்தை உயிரா
கின்றாய்
உன்னை நான் அடைந்தேன் விடுவேனோ
பாகின்ற தொல் புகழ் மூ வுலகுக்கும் நாதனே பரமா தண் வேங்கட
மேகின்றாய் தண் துழாய் விரை நாறு கண்ணியனே –2-6-10—கால த்ரயத்தாலும் தாயும் தமப்பனும் செய்யும் நன்மைகளும்-உயிராகின்றாய் –-ச பித்ராச பரித்யக்த –என்று அவர்கள் விடும் அளவிலும் தான் தனக்குப் பார்க்கும் நன்மைகளையும் செய்யுமவனே-இச் சேதனர் அநாதி காலம் தன விநாசத்தையே சூழ்த்துக் கொள்ள -முகம் தோற்றாத படி நின்று சத்தையை நோக்கி போந்தவன் அல்லையோ –

கண்ணா யேழ் உலகுக்கு உயிராய வெங்கார் வண்ணனை
விண்ணோர் தாம் பரவும் பொழில் வேங்கட வேதியனை
திண்ணார் மாடங்கள் சூழ் திரு மங்கையர் கோன் கலியன்
பண்ணார் பாடல் பத்தும் பயில்வார்க்கு இல்லை பாவங்களே-1-9-10—சகல லோகங்களுக்கும் த்ருஷ்டி  பூதனாய் சத்தா ஹேதுவான பிராணனாய்-அதுக்கு மேலே என்னை அனுபவிக்கைக்காக மேகம் போலே ஸ்ரமஹரமான வடிவை உடையவனாய் ஏழு உலகத்து உள்ளோரோபாதி நித்ய ஸூரிகளும் ஒரு மூலையிலே புகுந்து ஏத்துகிற திருமலையை வாஸஸ் ஸ்தானமாக உடைய வேதைக சமதி கம்யனை யாயிற்று கவி பாடிற்று–நித்ய ஸூரிகள் -பரமபதத்தை விட்டு -திருவேங்கடமுடையானையும் விட்டு -திருமலையையும் விட்டு இங்குள்ள பொழில்களை ஸ்தோத்ரம் பண்ணுகிறார்கள்

ஈசன் வானவர்க்கு என்பன் என்றால் அது
தேசமோ திரு வேங்கடத் தானுக்கு?
நீசனேன் நிறைவு ஒன்றுமிலேன் என்கண்
பாசம் வைத்த பரஞ்சுடர்ச் சோதிக்கே.–3-3-4-
–வானவர்க்கு ஈசன் ஆனவன் என் கண் பாசம் வைத்தான்
அவர்களோடு கலந்து அவர்கள் சத்தைக்காக என்னோடு கலந்து தனக்கு சத்தை உண்டாக்குகைக்காக
தன் விஷயத்தில் பாசம் உண்டாம் படி என்னைப் பண்ணினான் என்றும் சொல்லுவார்-என்னோட்டை கலவியாலே அது உஜ்ஜவலனமாம் படி சங்கத்தாலே கலந்தான் என்னும் இடம் வடிவில் தோற்றி இருக்கை-

அகல கில்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கை உறை மார்பா!
நிகரில் புகழாய்! உலக மூன்றுடையாய்? என்னை ஆள்வானே!
நிகரில் அமரர் முனிக்கணங்கள் விரும்பும் திருவேங் கடத்தானே!
புகல் ஓன் றில்லா அடியேன் உன் னடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே.–6-10-10–இப்படி இருக்கிறவள் தானே சிதகு உரைக்கும் அன்றும் அவளுடனே மன்றாடும் குணமிகுதியின் விசேடம் சொல்லுகிறது. என்றது,
‘என்னடியார் அது செய்யார்’ என்று என்னைப் பற்றினார்க்கு அது இல்லை காண் என்கிறது என்றபடி.
‘இல்லை, நான் இப்போது இன்ன குற்றம் செய்யக் கண்டேன்’ என்று காட்டிக் கொடுத்தாலும், ‘ஆனால் என்? தர்மம் அதர்மம் பரலோகம் என்னும் இவற்றை இல்லை என்று செய்கிறார்களோ? தங்களை அறியாதே நிகழும் குற்றங்கட்கு நாம் உளோம் என்றன்றோ செய்கிறது’ என்கை. இவளுடைய உயர்வுக்கு அடி சொல்லும் போது அவனைப் பற்றிச் சொல்லலாம்;-அவனுடைய உயர்வுக்கு ஒன்று தேடிச் சொல்லலாவது இல்லையாதலின், ‘நிகரில்’ என்கிறது. இதுவோ தான் பொருளின் தன்மை இருக்கும்படி.-

ஒழிவு இல் காலம் எல்லாம் உடனாய் மன்னி
வழு இலா அடிமை செய்ய வேண்டும் நாம்
தெழி குரல் அருவித் திருவேங் கடத்து
எழில் கொள் சோதி எந்தை தந்தை தந்தைக்கே.–
3-3-1-அர்ச்சிராதி கதியாலே-ஓரு தேச விசேஷத்திலே விலக்ஷண சரீரத்தைப் பெற்று அனுபவிக்கக் கடவ இவன்-இச் சரீரத்தோடு அனுபவிக்கலாம் படி ஸூ லபனாய் நிற்கிற திருமலையிலே-எழில் கொள் சோதி எந்தை –-துர்லபன் ஆகிலும் விட ஒண்ணாத வடிவு அழகு -அந்த நிலம் மிதியாலே நிறம் பெற்ற அழகு-விரூபன் ஆனாலும் விட ஒண்ணாத பிராப்தி -எந்தை -என்கிறது -ஸுலப்யத்தாலும் அழகாலும் தோற்பித்த படி சொல்லிற்று –-தந்தை தந்தைக்கே-
பரம சேஷி யானவனுக்கு –ப்ராப்ய பிரதானமான திரு மந்திரத்தில் உள்ளது எல்லாம் சொல்லுகிறது இப்பாட்டாலே –

உலகம் உண்ட பெருவாயா! உலப்பில் கீர்த்தி அம்மானே!
நிலவும் சுடர்சூழ் ஒளி மூர்த்தி! நெடியாய்! அடியேன் ஆருயிரே!
திலதம் உலகுக் காய்நின்ற திருவேங் கடத்தெம் பெருமானே!
குல தொல் அடியேன் உன பாதம் கூடுமாறு கூறாயே.–6-10-1—-உள்ளு மண்ணீடாய் புறம்பு ஒளியூட்டி இருக்கை அன்றிக்கே உள்வாயோடு புறவாயோடு வாசி அற ஒளியேயாய் இருக்கிற படி-

ஈசன் வானவர்க்கு என்பன் என்றால் அது
தேசமோ திரு வேங்கடத் தானுக்கு?
நீசனேன் நிறைவு ஒன்றுமிலேன் என்கண்
பாசம் வைத்த பரஞ்சுடர்ச் சோதிக்கே.
–3-3-4-என்னோட்டை கலவியாலே அது உஜ்ஜவலனமாம் படி
சங்கத்தாலே கலந்தான் என்னும் இடம் வடிவில் தோற்றி இருக்கை-

பாசம் வைத்த நிகரில் வாத்சல்யம் -என்கையாலே-ஒழிவில் காலம் எல்லாம் –-உலகம் உண்ட பெரு மாயன்- இரண்டையும் சேர்த்துப் பிடித்து அருளிச் செய்தமை தோற்றுகிறது–

கோவிலுக்கு அனந்தரம் திரு மலையை சொல்லுகை தேட்டமாகில் ,இரண்டு திரு மலையையும் ஒவ்வாதோ ?–தெற்குத் திரு மலை விஷயமான கிளர் ஒளி இளமை-கீழே கிடக்க –-ஒழிவில் காலத்தில் -சொன்ன வடக்குத் திருமலையை அருளிச் செய்வான் என் என்னில் –-பரத்வாதிகளுக்கு அசாதாரணமான குண பிரகாசமான ஸ்தலங்களை அருளிச் செய்கிற பிரகரணமாகையாலே
தெற்கு திரு மலையில் பிரகாசிக்கிற குணம் இதற்குச் சேர்த்தி இல்லாதது கொண்டு –-கிளர் ஒளி இளமை யை -செஞ்சொல் கவியோடு சேர்த்து அருளுவதாக விட்டு வைத்து – இது முதலாக அருளிச் செய்தார் இத்தனை —

இனி -ஒழிவில் காலத்துக்கு -பின்பு திருப்பதி விஷயமான திரு வாய் மொழி –-ஒன்றும் தேவு -ஆகையாலே ,திரு நகரியிலே பிரகாசிக்கிற குணத்தை அருளி செய்கிறார் .–

உபய பிரதான பிரணவமான உறை கோவிலிலே எத் தேவும் என்னும் பரே சத்வம் பொலியும்-சூரணை -161-

(பர ஈசத்துவம் -பரேசத்வம்-பொலியும் என்றது -பொலிந்து நின்ற பிரான் -உத்சவர் திரு நாமம் என்பதால் )

அதாவது-உபய பிரதான பிரணவமான உறை கோவிலிலே — ஒமித்யாத்மானம் யுஞ்ஜீத (ஓம் என்று சொல்லி ஆத்மாவைத் தியானம் செய்யக் கடவன் )-என்றும் – ஒம் காரோ பகவான் விஷ்ணு (ஓம் என்பது பகவானாகிய ஸ்ரீ விஷ்ணு)-என்றும் -சொல்லுகிறபடியே சப்தார்தங்களில் உடைய பிரதான்யத்தாலே ஜீவ ஈஸ்வரர்கள் இருவருக்கும் வாசகமாய் கொண்டு இருவருடையவும் பிரதானம் தோன்றுவிக்கிற பிரணவம் போலே ஆழ்வாருடையவும் -பொலிந்து நின்ற பிரான் உடையவும் ஆக்ஜை இரு புரிந்து நடக்கையாலே – உபயர் உடையவும் பிரதானம் தோற்றுவிக்கும் படி இருப்பதாய் –அவன் மேவி உறை கோவில்-திருவாய்-4-10-2 -என்று பரம பதத்தில் சம்சாரிகள் இழவை நினைத்து உள் வெதுப்போடே இருக்குமா போலே அன்றி – அவர்களுக்கு அணித்தாக வந்து நிற்கப் பெறுகையாலே உள் வெதுப்பு அற்று வர்த்திக்கிற ஸ்தலமான திரு நகரியிலே —

(உபய ப்ரதாந ப்ரணவமான உறை கோயிலில்‌) “ப்‌ரஹ்மணேத்வா மஹஸ ஓமித்யாத்மாநம்‌ யுஞ்ஜீத” என்றும்‌ “ஒங்காரோ பகவாந்‌ விஷ்ணு: என்றும்‌ சொல்லுகிறபடியே ப்ரணவம்‌ ஜீவேஸ்வரர்களிருவர்க்கும்‌ வாசகமாய்க்‌ கொண்டு உபயருடையவும்‌ ப்ராதாநீயம்‌ தோற்ற விருக்கிறாப் போலே பொலிந்து நின்ற பிரானுடையவும்‌ ஆழ்வாருடையவும்‌ திவ்யாஜ்ஞை இருபுரிந்து நடக்கையாலே உபயருடையவும்‌ ப்ராதாந்யம்‌ தோற்றுவதாய்‌ “அவன்‌ மேவி உறைகோயில்‌” (திருவாய்மொழி 4-10-2 என்று ஆழ்வாரை விஷயீ கரிக்கலான தேஸமாகையாலே பரமபதத்தில்‌ உள் வெதுப்புத்‌ தீர்ந்து அவன்‌ வர்த்திக்கிற திருநகரியில்‌ நிற்கிற நிலையிலே-

நாடி நீர் வணங்கும் தெய்வமும் உம்மையும் முன் படைத்தான்
வீடில் சீர்ப் புகழ் ஆதிப்பிரான் அவன் மேவி உறை கோயில்,
மாட மாளிகை சூழ்ந்தழகாய திருக் குருகூரதனைப்
பாடி ஆடிப் பரவச் சென்மின்கள், பல்லுலகீர்!பரந்தே.–4-10-2—இவற்றை உண்டாக்கினவன் ஆஸ்ரயண அர்த்தமாக பொருந்தி வர்த்திக்கிற தேசம்-பரமபதத்தில் கரம்பு அறுக்க வேண்டாமையாலே சந்நிதி மாத்திரமே அமையும்-ரக்ஷக அபேக்ஷை உள்ளத்து இங்கேயேயாகையாலே-பொருந்தி வார்த்தைக்கும் தேசம் என்கை –நல்ல படுக்கையும் போக்யங்களும் உண்டாய் இருக்க தொட்டில் கால் கிடை அல்லது பொருந்தாத தாய் போலே 

எத் தேவும் என்னும் பரே சத்வம் பொலியும் –-எத் தேவும் எவ் உலகங்களும் மற்றும் தன்பால் மறுவில் மூர்த்தியோடு ஒத்து இத்தனையும் நிற்கும் வண்ணம் நிற்கவே திரு குருகூர் அதனுள் குரிய மாணுருவாகிய நீள் குடக் கூத்தன்–திருவாய்-4-10-10- -என்று ஸ்வ வ்யதிரிக்த சமஸ்த வஸ்துகளுக்கும்– ஸ்வ அசாதரண விக்ரகத்தோபாதி தனக்கே பிரகாராம் படி இருக்கிற ஐஸ் வர்யத்தோடு கூட திருக் குருகூரில் சுலபனாய் வந்து நின்றான் என்று சொல்லப்பட்ட-திருக்குருகூர் அதனுள் பரன் –திருவாய்-4-10-3–என்றும் ,-திரு குருகூர் அதனுள் ஈசன் திருவாய்-4-10-4–என்றும்–சுலபனான நிலையில் -பிரகாசிக்கிற பரத்வ லஷணமான ஈஸ்வரத்வம் –-பொலிந்து நின்ற பிரான்-என்கையாலே அவிருத்தம் ஆகா (விளங்கா) நிற்கும் என்கை–

(எத்தேவு மென்னும்‌ பரே ஸத்வம்‌ பொலியும்‌) ‘உறுவதாவதெத்தேவும்‌ எவ்வுலகங்களும்‌ மற்றும்‌ தன்பால்‌ மறுவில்‌ மூர்த்தயோடு (இத்தனையும்‌ நின்ற வண்ணம்‌ நிற்கவே” (திருவாய்மொழி 4-10-10) என்றும்‌, திருக் குருகூரதனுள்‌ பரன்‌” (திருவாய்மொழி 4-10-3) என்றும்‌ “திருக்குருகூரதனுள்‌ ஈசன்‌” (திருவாய்மொழி 4-10-4) என்றும்‌ “பொலிந்து நின்ற பிரான்‌” (திருவாய்மொழி 4-10-5) என்றும்‌ சொல்லுகிறபடியே ஸ்வ வ்யதிரிக்த ஸமஸ்தமும்‌ தனக்கு ஸரீரமாமிடத்தில்‌ அப்ராக்ருத விக்‌ரஹத்தோடொக்கும்படி தான்‌ ஸரீரியா யிருக்கிற பரத்வத்தில்‌ ப்ரகாஸிக்கிற நியந்த்ருத்வ குணம்‌ அபி வ்ருத்‌தமாம் என்கிறார் –

உறுவது ஆவது எத்தேவும் எவ் வுலகங்களும் மற்றும் தன்பால்
மறுவின் மூர்த்தியோடு ஒத்து இத்தனையும் நின்ற வண்ணம் நிற்கவே
செறுவில் செந்நெல் கரும்பொடு ஓங்கு திருக் குருகூரதனுள்
குறிய மாண் உருவாகிய நீள்குடக் கூத்தனுக்கு ஆட்செய்வதே
.–4-10-10—செய்கையில் செந்நெலும் கரும்பும் இசலி வளரா நிற்கிற திரு நகரி-இவ் ஊரில் பதார்த்தங்களில் ஒன்றில் ஓன்று குறைந்து இருப்பது இல்லை –-குறிய மாண் உருவாகிய நீள்குடக் கூத்தனுக்கு ஆட்செய்வதே.– குறிய-ஆஸ்ரிதற்கு கண்ணாலே முகந்து அனுபவிக்கலாம் படி தன்னை தாழ விட்ட படி –-உண்டு என்று இட்ட போதொடு இல்லை என்ற போதொடு வாசி இன்றிக்கே முகம் மலர்ந்து போம் படி இரப்பிலே தகணேறினபடி
குடகு கூத்தாடுகிற போது கண்டாரோபாதி பிற்பாடராய் கேட்டார் வாய் கேட்டார்க்கும் சம காலம் போலே பிரியமாம் படி மநோ ஹரியான சேஷ்டிதத்தை யுடையவனுக்கு –-அந்த சேஷ்டிதங்களே அடிமை கொள்ளும் -நீங்கள் இசையும் அத்தனையே வேண்டுவதுஆள் செய்வதே உறுவது ஆவது -என்று அந்வயம்-

பரந்த தெய்வமும் பல் உலகும் படைத்து அன்று உடனே விழுங்கிக்
கரந்து உமிழ்ந்து கடந்து இடந்தது கண்டும் தெளிய கில்லீர்
சிரங்களால் அமரர் வணங்கும் திருக்குருகூர் அதனுள்
பரன்
திறமன்றிப் பல்லுலகீர்! தெய்வம் மற்றில்லை பேசுமினே.–4-10-3-பரமபதத்திலும் வியாப்தியிலும் காட்டில் திருநகரியில் நின்ற நிலையிலே பரத்வம் மிக்கு இருக்கிற படி-மனுஷ்யத்வே பரத்வத்துக்கும் அவ்வருகே ஓன்று இறே இது-வஸ்துவுக்கு குணாதிக்யத்தாலே யாகில் உத்கர்ஷம்-அது மிக்க இடத்திலே பரத்வம் உறைத்து தோற்றக் கடவது இறே

பேச நின்ற சிவனுக்கும் பிரமன் தனக்கும் பிறர்க்கும்
நாயகன் அவனே கபால நன் மோக்கத்துக் கண்டு கொண்மின்
தேச மாமதிள் சூழ்ந்து அழகாய திருக்குருகூர் அதனுள்
ஈசன்
பால் ஓர் அவம் பறைதல் என்னாவது இலிங்கியர்க்கே?–4-10-4–அஜஹத் ஸ்வபாவன் ஆகையால் இஸ் ஸுலப்யத்திலேயும் மேன்மை குறையாது இருக்கிறபடி-ய பரஸ்ஸ மஹேஸ்வர -என்றும் ஈஸதே பகவா நே க –என்றும் பிராமண பிரசித்தனான சர்வேஸ்வரன்-ஈசன் ஈசானன் என்கிற இது மஹா வ்ருக்ஷம் என்னுமா போலே சமாக்கிய மாத்ரமேயாய் அர்த்தம் இன்றிக்கே இருக்கை –

இலிங்கத் திட்ட புராணத்தீரும் சமணரும் சாக்கியரும்
வலிந்து வாது செய்வீர்களும் மற்று நும் தெய்வமுமாகி நின்றான்
மலிந்து செந்நெல் கவரி வீசும் திருக் குருகூர் அதனுள்
பொலிந்து நின்ற பிரான்
கண்டீர் ஒன்றும் பொய்யில்லை போற்றுமினே.–4-10-5-சேதன அசேதன விபாகம் அற பொலிந்து நின்ற பிரானுக்கு அனுகூல வ்ருத்திகளை பண்ணுமாயிற்று-அதனுள்-பொலிந்து நின்ற பிரான்-பரம பதத்தை விட்டு இவ்வருகே தாழ நிற்க நிற்க குணங்கள் மேன்மேல் என விஞ்சி வருகிற படி-சொன்னார் சொன்ன யுக்திகள் எல்லா வற்றுக்கும் அவ்வருகாய் நிற்கை என்னவுமாம்-கண்டீர் ஒன்றும் பொய்யில்லை போற்றுமினே.–-இத் தேவதைகள் பக்கல் உதகர்ஷம் எல்லாம் பொய்யாய் இருக்குமா போலே -இவ்விஷயத்தில் சொல்லுகிற உத்கர்ஷத்துக்கு ஒன்றும் பொய்யில்லை-போற்றுமினே -சடக்கென ஆஸ்ரயிங்கோள் -நீங்கள் அபேக்ஷியாது இருக்க நான் சொல்லுகிறது உங்கள் துர்தசையைப் பற்ற –

இதுக்கு பின் திருப்பதி விஷயமான திருவாய்மொழி -எங்கனயோ -ஆகையாலே – திருக் குருங்குடியில் பிரகாசிக்கிற குணத்தை அநந்தரம் அருளிச் செய்கிறார் —

வைஷ்ணவ வாமநத்தில்‌ நிறைந்த நீலமேனியின்‌ ருசிஜநக விபவ லாவண்யம்‌ பூர்ணம்‌-சூரணை -162-

அதாவது-திருக்குறுங்குடி என்னாதே வைஷ்ணவ வாமநத்திலே என்றது ஸாபிப்ராயம்-அதாவது வாமன அவதாரத்திலே தன்னுடைமை பெறுகுகைக்கு அர்த்தி ஆனாப் போலே – அர்த்தியாய் நின்று ஸ்ரீ பாஷ்ய காரர் பக்கல் வேதாந்தார்தம் கேட்டு சிஷ்யனாய் – நாமும் நம் இராமானுசனை உடையோம் – என்கையாலே ஸ்ரீ வைஷ்ணவ நம்பி என்ற திருநாமமாய்- வாமன அவதார அம்சமாக -புராண சித்தராய் இருக்கிற நம்பி உடைய திருப்தி என்கை —அன்றிக்கே –-அறியக் கற்று வல்லவர் வைட்டணவர்-என்று இத் தேச விஷயமான திருவாய் மொழியை கற்றவர்கள் வைஷ்ணவர் என்கையாலே வைஷ்ணவர்கள் உடையதாய் -வாமன ஷேத்ரமாய் இருக்கும் தேசத்தில் என்னுமாம்-வாமன அவதார பிரசங்கத்துக்கு பிரயோஜனம் -விபவ லாவண்யம் பூர்ணம் -என்கிறதுக்கு உடலாக விபவ அன்வயத்தை உணர்த்துகையும் – குறியவன் குடி குறும்குடி – என்னும் அர்த்தத்தை தெரிவிக்கையும் –

அறிவரிய பிரானை ஆழி அம் கையனையே அலற்றி
நறிய நன்மலர் நாடி நன் குருகூர்ச் சடகோபன் சொன்ன
குறி கொள் ஆயிரத்துளிவை பத்தும் திருக்குறுங்குடி யதன்மேல்
அறியக் கற்று வல்லார் வைட்ணவர் ஆழ்கடல் ஞாலத்துள்ளே.–5-5-11—பரம பதத்திலும் அவதாரங்களிலும் திருக்குறுங்குடி நிலையிலே அழகாலும் சீலத்தாலும் உண்டான ஏற்றம் அறிந்து கற்க வல்லவர்கள் -குணாதிக்யம் இறே வஸ்துவுக்கு ஏற்றம் -வியக்தமாக கற்க வல்லார்கள் என்றுமாம்
மரு பூமியான சம்சாரத்திலே -உகந்து அருளின ஏற்றம் அறியுமவர்கள் நித்ய ஸூரிகளோடு ஒப்பார்கள்-

ஆக இப்படி இருந்துள்ள திருக் குறும்குடியுள் –-நிறைந்த சோதி வெள்ளம் சூழ்ந்த நீண்ட பொன் மேனியோடும் நிறைந்து என்னுள்ளே நின்று ஒழிந்தான் -திருவாய்-5-5-7-என்றும் , நீல மேனியும் நான்கு தோளும் என் நெஞ்சம் நிறைந்தனவே -திருவாய்-5-5-6-என்றும் சொல்லுகிறபடியே -இவர் உள்ளத்தில் வேறு ஒன்றுக்கும் இடம் அறும் படி -பிரகாசிக்கிற – காள மேக நிபச்ஸ்யமமான விஹ்ரஹத்தின் உடைய –செல்கின்றது என் நெஞ்சம்–திருவாய்-5-5-1-என்கிறபடி – மேன் மேலும் அனுபவ ருசி ஜனகமாய்
ரூபவான் ஸூபக ஸ்ரீ மான்–ஸூ ந்தர-34-30- -என்றும்-ரூப சம்ஹனனம் லஷ்மீம் ஸுகுமார்யம் ஸூவேஷதாம் தத்ருஸூ விஸ்மிதாகாரா ராமஸ்ய வன வாஸின-ஆரண்ய-1-13-என்றும் – விபவத்தில் பிரகாசிக்குமதாய் சொன்ன –சமுதாய சோபையான -லாவண்யம்- நிறைந்த சோதி வெள்ளம் சூழ்ந்த திருவாய்-5-5-7-என்கையாலே பூரணமாய் இருக்கும் என்கை –

(வைஷ்ணவ வாமநத்தில்‌) வைஷ்ணவ வாமனமான திருக்குறுங்குடியில்‌ நிற்கிற நிலையிலே  (நிறைந்த நீலமேனியின்‌) “நீலமேனியும்‌ நான்கு தோளும் என்நெஞ்சம் நிறைந்தனவே”  (திருவாய்மொழி 5-5-6) என்று, இவர்‌ திருவுள்ளத்திலே ப்ரகாஸிக்கும்படியான காளமேக நிபாஸ்யமமான விக்‌,ரஹத்தினுடைய (ருசி ஜநக விபவ லாவண்யம்‌ பூர்ணம்‌ ) “செல்கின்ற தென்‌ நெஞ்சமே” (திருவாய்மொழி 5-5-1 என்று ருசியைப்‌ பிறப்பிப்பதாய்‌ “பும்ஸாம் த்‌ருஷ்டி சித்தாபஹாரிணம்‌‘ (ரா.௮.3-29 , “ரூபவாந்‌ ஸுபக ஸ்ரீமாந்‌ கந்தர்ப இவ மூர்த்திமாந்‌” (ரா. ஸு.34-30) “ஸாக்ஷாந்‌ மந்மத மந்மத,:” (ஸ்ரீபாகவதம்‌ 10-32-2 என்றும்‌ சொல்லுகிறபடியே ஸஜாதீயரையும்‌ மடலெடுக்கும்படி பண்ண வற்றான விபவத்தில்‌ ப்ரகாஸிக்கிற “நிறைந்த சோதி வெள்ளம்‌ சூழ்ந்த நீண்ட பொன் மேனி (திருவாய்மொழி 5-5-7) என்கிற லாவண்யம்‌-நம்பி என்கையாலே பூர்ணம்‌” என்கிறார் 

நிறைந்த வன்பழி நம்குடிக்கு இவள் என்று அன்னை காணக் கொடாள்
சிறந்த கீர்த்தித் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்டபின்
நிறைந்த சோதி வெள்ளம் சூழ்ந்த நீண்ட பொன் மேனியொடும்
நிறைந்து என்னுள்ளே நின்றொழிந்தான்
நேமி அம் கை உளதே.–5-5-7—அபரிச்சின்னமான தேஜஸ்ஸினுள்ளே உன்நேயமாம் படி யாயிற்று திரு மேனி இருப்பது -இது தேஜஸ்ஸினுள்ளே வடிவு தான் அபரிச்சேதயமான போக்யதையை யுடையதாய் நித்ய ஸ்ப்ருஹா விஷயமாய் இருக்கை –-நிறைந்து என்னுள்ளே நின்றொழிந்தான் நேமி அம் கை உளதே.–-இந்த விக்ரஹத்தோடே நெஞ்சு நிறையும்படி நின்றான் -அவன் நிறைவைக் குறைக்கில் அன்றோ என் பழியைக் குறைப்பது –நேமி அம் கை உளதே.–-அல்லாத அழகுகள் எல்லா வற்றிலும் மிகுதியாய் யாயிற்று கையும் திரு வாழியும் இருப்பது -வெறும் புறத்திலே ஆலத்தி வழிக்க வேண்டும் படியான திருக் கையிலே திரு வாழி யானால் மீட்கப் போமோ –

மேலும் வன்பழி நங்குடிக்கு இவள் என்று அன்னை காணக் கொடாள்
சோலை சூழ் தண் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்டபின்
கோல நீள்கொடி மூக்கும் தாமரைக் கண்ணும் கனிவாயும்
நீல மேனியும் நான்கு தோளும் என் நெஞ்சம் நிறைந்தனவே.
–5-5-6–அழகு மிக்க கொடி போலே இருக்கிற மூக்கும் -அழகு கொழுந்து விட்ட தொரு கொடி போலே இருக்கை–அக் கொடி பூத்தால் போலேயாய் – தாமரைப் பூப் போலே இருக்கிற திருக் கண்களும் -அது ஒரு பலத்தை உண்டாக்கினால் போலே கனி போலே இருக்கிற திருவதரமும்-இவற்றுக்கு பரபாகமாய் -தாமரை இலை போலே இருக்கிற திரு மேனியும் –கற்பக தரு பணைத்தால் போலே மநோ ஹரமாய்-அவ் வழகைக் காத்தூட்ட கடவ தோள்களும் –என் நெஞ்சம் நிறைந்தனவே.–ஹித வசனம் கேட்க்கைக்கு நெஞ்சில் இடம் இல்லை

எங்ஙனேயோ அன்னை மீர்காள்! என்னை முனிவது நீர்!
நங்கள் கோலத் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்ட பின்
சங்கி னோடும் நேமி யோடும் தாமரைக் கண்களோடும்
செங்கனி வாய் ஒன்றினோடும் செல்கின்றது என்நெஞ்சமே.–5-5-1—ஜாதி வியக்தி தோறும் பரிசமாப்ய வர்த்திக்குமா போலே நெஞ்சு அழகு தோறும் செல்லா நின்றது –-செல்கின்றது -இன்னமும் தறை கண்டது இல்லை –-நாங்களும் அவ்வழகை அனுபவித்து அன்றோ இருக்கிறது என்ன –என் நெஞ்சமே –அவன் தானே காட்டக் கண்டு அனுபவித்த என் நெஞ்சு -உங்கள் வார்த்தை கேட்க்கைக்கு நெஞ்சுடையாரை யன்றோ ஹிதம் சொல்லி மீட்பது –

இப்படி பரத்வாதிகளுக்கு அசாதாரணமான ஓர் ஓர் குணங்கள் பிரதானயேன பிரகாசிக்கும் ஸ்தலங்களை அருளிச் செய்த அநந்தரம் – மற்றும் உண்டான குணங்களில் -ஓர் ஓன்று -பிரதான்யேன பிரகாசிக்கும் ஸ்தலங்களை ஸ்ரீவர மங்கை முதலாக -திரு பேர் நகர் எல்லையாக -திருவாய்மொழி அடைவிலே அருளி செய்கிறார் மேல் —

ருசி விவஸர்க்குப்‌ பாதமே சரணாக்கும்‌ ஒளதார்யம்‌ வானமாமலையிலே கொழுந்து விடும்‌.-சூரணை -163-

(ருசி விவசர் -ருசியினால் பரவசப்பட்டவர்கள் )அதாவது-கீழ் சொன்ன லாவண்யத்தாலே ஒருவரும் நிவர்த்திப்பிக்க ஒண்ணாதபடி பிறந்த ருசியாலே பரவசராய்–அநந்ய கதி யானவர்களுக்கு
ஆறு எனக்கு நின் பாதமே சரணாகத் தந்து ஒழிந்தாய்-
திருவாய்-5-7-10- -என்னும்படி திரு அடிகளையே உபாயமாகக் கொடுக்கும் –-கருளப் புட்கொடி சக்கரப்படை வான நாட -என் கார் முகில் வண்ணா-திருவாய்-5-7-3–என்கிற ஒவ்தார்ய குணம் ஸ்ரீவர மங்கலத்து அவர் கை தொழ உறை வான மா மலை –திருவாய்-5-7-6–என்று ஸ்ரீ வர மங்கையில் எழுந்து அருளி இருக்கிற ஸ்ரீ வானமா மலை பக்கலிலே –
(ஸ்ரீ வர மங்கை–திவ்ய தேச திரு நாமம்-ஸ்ரீ வானமா மலை -அங்கு எழுந்து அருளி இருக்கும் பெருமாள் திரு நாமம் -) வந்து அருளி என் நெஞ்சு இடம் கொண்ட வானவர் கொழுந்தே-திருவாய்-5-7-7- -என்கிறபடி
தானே வந்து இடம் கொண்டு தன்னை உபகரிக்கும் படி கொழுந்து விட்டு வளரும் என்கை–

(ருசி விவஸர்க்கு) இப்படி லாவண்யத்தாலே பிறராலும்‌ நிவர்த்திப்பிக்க வொண்ணாதபடி அந்த ருசியாலே பரவஸரானவர்களுக்கு, (பாதமே சரணாக்கும்‌ ஒளதார்யம்‌) “ஆறெனக்கு நின்‌ பாதமே சரணாகத்‌ தந்தொழிந்தாய்‌’ என்று திருவடிகளை உபாயமாகப்‌ பண்ணித் தந்த ஒளதார்யம்‌ (வானமாமலையிலே கொழுந்து விடும்‌) சிரீவரமங்கலநகரிலே நிற்கிற வானமாமலை பக்கலிலே “வானவர்‌ கொழுந்து” (திருவாய்மொழி 5-7-7) என்கிறபடியே கொழுந்து விட்டு அபிவ்ருத்‌தமாம்‌” என்கிறார்–

ஆறெனக்கு நின் பாதமே சரணாகத் தந்தொழிந்தாய் உனக் கோர் கைம்
மாறு நான் ஒன்றிலேன் என தாவியும் உனதே
சேறு கொள் கரும்பும் பெருஞ் செந்நெலும் மலி தண் சிரீவர மங்கை
நாறு பூந்தண் துழாய் முடியாய்! தெய்வ நாயகனே!–5-7-10—ஆறு -என்று உபாயம் -சரண் என்று உபேயம் -உபாய உபேயங்கள் இரண்டும் உன் திருவடிகளேயாம் படி பண்ணினாய் என்று பிள்ளான் நிர்வஹிக்கும்–இவை இரண்டிலும் உபாயத்தையே சொல்லுகிறது என்று பட்டர் நிர்வஹிப்பர்-எனக்கு உபாயம் உன் திருவடிகளேயாம்படி பண்ணித் தந்தாய் –ஆறு -உபாயம் -உபாக்யார்த்தைக வாசக -என்கையாலே சரண் என்று உபாயம் -எனக்கு என்று -உபாயாந்தர நிஷ்டரைக் காட்டிலும் தமக்கு உள்ள வேறுபாடு சொல்லுகிறார் –நோற்ற நோன்பிலேன் என்று தொடங்கி-உபாயாந்தர சூன்யத்தையை முன்னிட்டு உபாய நிஷ்கர்ஷம் பண்ணுகிற திரு வாய் மொழி யாகையாலே அத்தையே நிகமிக்கிறது அவதாரணத்தாலே ஏக பதத்தை நினைக்கிறது -ஈஸ்வரனை பற்றின ஊற்றத்தாலே உபாயாந்தரங்களை நெகிழ்கை ஒழிய -நாஸ்திக்யத்தாலே விடுமன்று அது விஷயாந்தர ப்ராவண்ய ஹேதுவாம் -ஒளஷத சேவை பண்ணினான் ஒருவன் சர்ப்பத்தின் வாயிலே கை கொடுத்தால் நிர்ப்பாதம் -ஒளஷத ஸ்பர்சம் இல்லாதவன் அத்தைச் செய்தால் மரண ஹேதுவாம் –

கருளப் புட்கொடி சக்கரப் படை வானநாட என் கார் முகில் வண்ணா
பொருள் அல்லாத வென்னைப் பொருளாக்கி அடிமை கொண்டாய்
தெருள் கொள் நான் மறை வல்லவர் பலர் வாழ் சிரீவர மங்கல நகர்க்கு
அருள் செய்து அங்கு இருந்தாய் அறியேன் ஒரு கைம்மாறே –5-7-3—என் கார் முகில் வண்ணா
ஸ்தல விசேஷம் பாராதே என் பக்கலிலே உதார குணத்தை காட்டி அருளினவனே –என் அளவு பாராதே பிரயோஜன நிரபேஷமாக பண்ணின படி –

ஏனமாய் நிலம் கீண்ட என் அப்பனே! கண்ணா! என்றும் எனை ஆளுடை
வான நாயகனே! மணி மாணிக்கச் சுடரே!
தேனமாம் பொழில் தண் சிரீவர மங்கலத்தவர் கை தொழ உறை
வான மாமலையே! அடியேன் தொழ வந்தருளே.
–5-7-6—தேன் மிக்கு இருந்துள்ள மாம் பொழிலை யுடைத்தாய் சிரமஹரமான சி ரீ வர மங்கல நகரில் உள்ளார் கை தொழும் படி இருக்கிற –வான மாமலையே!-நித்ய ஸூரிகள் அனுபவிக்கும் அபரிச்சேதயமான வடிவு அழகை இவ்வூரில் உள்ளார் அனுபவிக்கலாம் படி கொடுத்துக் கொண்டு இருக்கிறவனே-இவ்விருப்பில் பரமபதத்தில் மேன்மை எல்லாம் இவருக்கு தோன்றா நின்றது என்கை-அடியேன் தொழ வந்தருளே.–-அநந்ய கதியான நானும் அடிமை செய்யும் படி என் முன்னே உலாவி அருள வேணும் -சந்நிஹிதனாய் எழுந்து அருளி இருக்கிற படி கண்டேன் -என் முன்னே உலாவி அருள வேணும் என்கிறார் –

களை கணற்றாரை யுருக்கும்‌ மாதுர்யம்‌ குடமூக்கிலே ப்ரவஹிக்கும்‌.-சூரணை -164-

அதாவது-களைகண் அற்றாரை -இத்யாதி –-களைவாய் துன்பம் களையாது ஒழிவாய் களை கண் மற்றிலேன் –திருவாய்-5-8-8-என்று ரஷகாந்தர பிரதிபத்தி நிவ்ருத்தி பிறந்தாரை-நீராய் அலைந்து கரைந்து உருக்குகின்ற-திருவாய்-5-8-1- -என்று சிதிலராம் படி பண்ணுகிற ஆராவமுதமான மாதுர்யம் – குடமூக்குக் கோயிலாகக் கொண்டு -இரண்டாம் திருவந்தாதி –97-என்ற குடமூக்கு என்னும் கும்பகோணத்தில் மேன்மேலும் ஆராமல் புசிக்கும் படி பெருகா நிற்கும் என்கை —

(களை கணற்றாரை) “நோற்ற நோன்பிலேன்‌ நுண்ணறிவிலேன்‌” (திருவாய்மொழி 5-7-1) என்கிறபடியே தம்முடைய பக்கலிலும்‌ கைம்முதலற்று, “களைவாய்‌ துன்பம்‌ களையாதொழிவாய்‌ களை கண்‌ மற்றிலேன்‌” (திருவாய்மொழி 5-8-8) என்று ரக்ஷகாந்தர ப்ரதிபத்தி நிவ்ருத்தி பிறந்தாரை (உருக்கும்‌ மாதுர்யம்‌) நீராயலைந்து கரைய உருக்குகின்ற நெடுமாலே ஆராவமுதே” (திருவாய்மொழி 5-8-1 என்று சிதிலராக்கும்படியான மாதுர்யம்‌. (குடமூக்கிலே ப்ரவஹிக்கும்‌) குடமூக்கில்‌ கோயிலாக்‌ கொண்டு” (இரண்டாம்‌ திருவந்தாதி 97) என்கிற கும்பகோணத்திலே ப்ரவஹிக்கும்‌ என்கிறார் –

நோற்ற நோன்பிலேன் நுண்ணறிவிலேன் ஆகிலும் இனி உன்னை விட்டொன்று
ஆற்ற கிற்கின்றிலேன் அரவின் அணை அம்மானே!
சேற்றுத் தாமரை செந்நெலூடு மலர் சிரீவர மங்கலநகர்
வீற்றிருந்த எந்தாய்! உனக்கு மிகை அல்லேன் அங்கே.—5-7-1—நோன்பிலேன் என்னாதே-நோற்ற நோன்பிலேன் -என்கிறது -பல வியாப்தமாம் படி யனுஷ்டித்தமாய் இருபத்தொரு கர்மம் இல்லை என்கிறது -என் ஆற்றாமையால் சில யுண்டானாலும் சக்ரவர்த்தியுடைய புத்ர காமேஷிடி போலே யாதல் -ஸ்ரீ வஸூ தேவருடைய அநந்த விரதம் போலே பல வியாப்தமாய் இருபத்தொரு தர்மம் இல்லை –ந தர்ம நிஷ்டோஸ்மி-என்கிற இடத்தில் தர்மம் இல்லை என்னாதே தர்ம நிஷ்டை இல்லை என்றால் போலே –நுண்ணறிவிலேன்-அறிவிலேன் என்னாதே -நுண்ணறிவிலேன்-என்றது ஸ்வரூப ஞான பூர்வகமாக பர ஸ்வரூபத்தை சாஷாத்கார பர்யந்தமாக அறியும் அறிவை அறிவை யுடையேன் அல்லேன் -கர்மம் இல்லை என்ற போதே -தத் சாத்தியமான ஞானம் இல்லை என்னும் இடம் அர்த்த ஸித்தமாய் இருக்க ஞானம் இல்லை என்றது என் என்னில்-பூர்வ ஜென்மத்தில் கர்மத்தை அனுஷ்ட்டித்து தத் பலமான ஞானம் இந்த ஜென்மத்தில் நைசர்க்கிகமாக பிறக்கலாம் இறே -அத்தாலே சொல்லிற்று -அன்றிக்கே-புராணங்களில் தனித் தனியே கர்ம ஞானங்களே சாதனமாக சொல்லுகையாலே சொல்லிற்று ஆகவுமாம்- பக்தி இல்லை என்னாது ஒழிவான் என் என்னில் -பக்தி யாகிறது ஞான விசேஷம் ஆகையாலே ஞானத்தை சொன்ன போதே அத்தையும் சொல்லிற்று ஆயிற்று 

களைவாய் துன்பம் களையா தொழிவாய் களை கண் மற்றிலேன்
வளைவாய் நேமிப் படையாய்! குடந்தைக் கிடந்தாய்! மாமாயா!
தளரா உடலம் என தாவி சரிந்து போம் போது
இளையா துன தாள் ஒருங்கப் பிடித்துப் போத இசை நீயே.–5-8-8—உன்னைப் பிரிந்து படுகிற துக்கத்தை போக்கிலும் போக்கு -தவிரிலும் தவிரு -வேறு ரக்ஷகரை யுடையேன் அல்லேன் -நீ உன் கார்யம் செய்யிலும் செய் -தவிரிலும் தவிரு என் தலையில் குறை இல்லை –த்வம் ஏவ உபாய பூதோ மே பவ-என்கிற அம்சத்தில் குறை இல்லை –சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி என்கிற உன் கூறு செய்யிலும் செய் -தவிரிலும் தவிரு -துக்க நிவ்ருத்தி உம்ம தான பின்பு கிருஷியும் உம்மை தாக வேண்டாவோ என்ன-துக்கி யாகைக்கு கிருஷி பண்ணின நான் நிவர்த்தகன் ஆகவோ -ஒரு சக்தி கிருத்யத்தை நான் செய்யவோ-

ஆரா அமுதே! அடியேன் உடலம் நின்பால் அன்பாயே
நீராய் அலைந்து கரைய உருக்கு கின்ற நெடுமாலே!
சீரார் செந்நெல் கவரி வீசும் செழுநீர்த் திருக்குடந்தை
ஏரார் கோலம் திகழக் கிடந்தாய் கண்டேன் எம்மானே–5-8-1—சேதன அசேதன விபாகம் அற அழிக்க வல்ல உன் பக்கலிலே -அபி வ்ருஷாபரிம்லாநா–உபதப்தோ தகா நத்ய-அன்பாய் -அசித் த்ரவ்யம் அன்றியே -பிரமத்தை இட்டுச் செய்தது என்னலாம் படி இருக்கை -அன்னமயமாய் இருக்கை அன்றிக்கே ப்ரேமமயமாய் இருக்கை -காதல் குருகூர் சடகோபன் இறே-சரீரமானது கட்டுக் குலைந்து-அன்பாய் –அது தான் போய் -நீராய் -அலைந்து கரையும் படி யுருக்கிற்று-உருக்குகின்ற -இத்தலை அழியா நிற்க அத்தலை முதலடி இட்டதில்லையாய் இருக்கை-நெடுமாலே!-சர்வேஸ்வரன் என்னுதல் -போக்யதையின் மிகுதியைச் சொல்லுதல் -வ்யோமோஹ அதிசயத்தை சொல்லுதல் -இப்படி ஸைதில்யத்தை பிறப்பியா நின்று வைத்து எட்டாது இருக்கிறவன் என்னுதல் –தன் போக்யத்தையாலே ஸைதில்யத்தை பிறப்பியா நிற்கை என்னுதல் -தன் வ்யோமோஹ அதிசயத்தை காட்டி ஸைதில்யத்தை பிறப்பியா நிற்கிறவன் என்னுதல்-

எங்கள் பெருமான் இமையோர் தலைமகன் நீ
செங்கண் நெடுமால் திரு மார்பா -பொங்கு
பட மூக்கின் ஆயிர வாய்ப் பாம்பணை மேல் சேர்ந்தாய்
குட மூக்கில் கோயிலாகக் கொண்டு–97-–விஸ்த்ருதமான படங்களையும் பகவத் அனுபவ ஜனித ஹர்ஷத்துக்குப் போக்குவிட ஆயிரம்  வாயையும் மூக்கையும் யுடைய திரு வநந்த ஆழ்வான் மேலே கண் வளர்ந்து அருளுகிறவன் –திருக் குடந்தையைக் கோயிலாகக் கொண்டு -பரமபதம் போலே –
குடமூக்கில்   கோயிலாகக் கொண்டு எங்கள் பெருமான் ஆனான் –

மெலிவிலும் சேமம் கொள்விக்கும் கிருபை தென்னகரிலே நித்யம்-சூரணை -165-

அதாவது-கீழ் சொன்ன நிரதிசய போக்யமான விஷயத்தை சீக்கிரமாக கிட்டு அனுபவிக்கப் பெறாமையாலே –வைகலும் வினையேன் மெலிய -திருவாய்-5-9-1–என்று நாள் தோறும் மெலியும் அளவிலும் – நாமங்களுடைய நம் பெருமான் அடிமேல் சேமம் கொள் தென் குருகூர்ச் சடகோபன்-திருவாய்-5-9-11 -என்று அவனே ரஷகன் என்று அத்யவசித்து இருக்கும் படி பண்ணும்- ( சேமம் -காவல் )
சுழலில் மலி சக்கரப்பெருமானது தொல் அருளே திருவாய்-5-9-9–என்கிற கிருபை-திரு வல்ல வாழ் சேமம் கொள் தென்னகர் மேல் செப்புவார் சிறந்தார் பிறந்தே –திருவாய்-5-9-11-தொல் -தொன்மை- பழைமை ஆகையாலே -நித்தியமாய் இருக்கும் என்கை —

கீழ்ச் சொன்ன மாதுர்யாதிகளைக்‌ கிட்டி அநுபவிக்கப் பெறாமையாலே துக்க ஸீலராய்‌ வைகலும்‌ வினையேன்‌ மெலிய” (திருவாய்மொழி 5-9-1) என்று மெலிவாரையும்‌ “அடிமேல்‌ சேமங்கொள்‌ தென் குருகூர்ச்‌ சடகோபன்‌” (திருவாய்மொழி 5-9-11 என்றும்‌ “தொல்லருள்‌ நல்வினை” (திருவாய்மொழி 5-9-10) என்றும்‌ “சேமங்கொள் தென்னகர்‌’ (திருவாய்மொழி 5-9-11) என்றும்‌ சொல்லுகிறபடியே அவனே ரக்ஷகனென்று அத்‌யவஸிக்கலாம்படி யிருக்கிற க்ருபை தென்னகரான திருவல்லவாழிலே நிற்கிற நிலையிலே தொன்மை பழமையாய்‌ அத்தாலே நித்யமென்கிறார்–-

மானேய் நோக்கு நல்லீர்! வைகலும் வினையேன் மெலிய
வானார் வண் கமுகும் மது மல்லிகை கமழும்
தேனார் சோலைகள் சூழ் திரு வல்லவாழ் உறையும்
கோனாரை அடியேன் அடி கூடுவது என்று கொலோ?–5-9-1—தன்னை விஸ்லேஷிக்கும் படி மஹா பாபத்தை பண்ணின நான் நாள் தோறும் வியஸன பரம்பரையாலே அவசன்னையாய்-ஒரு நாள் மெலிய பொறுக்க மாட்டாத ம்ருது ப்ரக்ருதியானவள் கிடீர் நெடு நாள் நோவு படுகிறாள் –இமா மஸீதா கே சாந்தம் சதபத்ர நிபேஷனாம்-ஸூ கார்ஹாம் -தூக்கிதாம் -த்ருஷ்ட்வா மமாபி வ்யதி தம்மன -என்று ஒரு ராத்திரியில் வியஸனம் திருவடி பொறுக்க மாட்டிற்று இலன் இறே-விலக்ஷண விஷயத்தை பிரிந்தால்-ஜீவிக்கவும் ஒண்ணாது முடியவும் ஒண்ணாது-

நாமங் களாயிர முடைய நம் பெருமானடி மேல்
சேமங் கொள் தென் குருகூர்ச் சடகோபன் தெரிந்துரைத்த
நாமங்களாயிரத்துள் இவை பத்தும் திருவல்லவாழ்
சேமங்கொள் தென்னகர் மேல் செப்புவார் சிறந்தார் பிறந்தே.–5-9-11—திரு வல்ல வாழ் யாகிற சேமமுடைத்தான தென்னகரிலே கூட்டிச் சொல்லுவார்-தென்னகர் ராஜாவை இட்டு தென்னகர் என்னுதல் -தெற்குத் திக்கில் நகர் என்னுதல்

கழல் வளை பூரிப்ப நாம் கண்டு கை தொழக் கூடுங் கொலோ?
குழல் என யாழும் என்னக் குளிர் சோலை யுள் தேனருந்தி
மழலை வரி வண்டுகள் இசை பாடும் திருவல்லவாழ்
சுழலின் மலி சக்கரப் பெருமானது தொல்லருளே
.–5-9-9—விரோதி நிரசன த்வரையாலே மிகவும் சுழன்று வருகிற திரு வாழி யை கையிலே யுடைய சர்வேஸ்வரனுடைய -சுழல்வது போலே விளங்கா நின்றுள்ள சக்கரம் என்றுமாம் -ஸ்வாபாவிகமான அவன் பிரசாதத்தாலே –

தொல்லருள் நல் வினையால் சொலக் கூடுங்கொல்? தோழிமீர்காள்?
தொல்லருள் மண்ணும் விண்ணும் தொழ நின்ற திருநகரம்
நல்லருள் ஆயிரவர் நலனேந்தும் திருவல்லவாழ்
நல்லருள் நம் பெருமான் நாராயணன் நாமங்களே.–5-9-10—ஸ்வாபாவிக கிருபையால் யுண்டான ஸூ க்ருதத்தாலே அவனைக் கண்டு திரு நாமங்களை சொல்லக் கூட வற்றோ என்னுதல் -ஸ்வாபாவிக கிருபையால் அவனைக் காணப் பெற்று ப்ரீதியாலே யுகந்து கொண்டு திரு நாமத்தை சொல்லக் கூட வற்றோ என்னுதல் –நல்வினை -உகப்பு –தன்னுடைய ஸ்வாபாவிகமான நீர்மையை உபய விபூதியும் அனுபவிக்கும் படி பழையதாக விரும்பி வர்த்திக்கும் தேசம் –நித்ய ஸூரிகளும் சம்சாரிகளுக்கு முகம் கொடுத்து நிற்கிற சீலவத்யையை இங்கே வந்து அனுபவிப்பர்கள்-

வ்யவசாயஜ்ஞர் ரக்ஷண ஸ்தைர்யம் பம்போத்தர தேசஸ்தம்–சூரணை -166-

(வ்யவசாயஜ்ஞர்-ஆர்த்த ரஷணத்தில் அவனுடைய வ்யவசாயத்தை யதாவாக அறிந்து இருக்குமவர்
தேசஸ்தம்-நிலை பெற்று நிற்கும்)-அதாவது-ராமஸ்ய வ்யவஸா யஜ்ஞா லஷ்மணஸ்ய தீ மத நாத்யர்த்தம் ஷூப்யதே தேவீ கங்கேவ ஜலதாகமே –ஸூ ந்தர -16-4–(ஸ்ரீ ராம லஷ்மணர்களுடைய எண்ணங்களை மழைக்கால கங்கையைப் போன்று அதிகமாக கலங்க வில்லை ) -என்று
சொல்லப்பட்ட பிராட்டியைப் போலே-ஏறு சேவகனார்க்கு என்னையும் உளன் என்மின்களே -திருவாய்-6-1-10-–என்று ஆர்த்த ரஷணத்தில் தன்னுடைய வ்யவசாயத்தை யதாவாக அறிந்து இருக்குமவர்களுடைய ரஷணத்தில் –மித்ர பாவேந ஸம்ப்ராப்தம் நத்யஜேயம் கதஞ்சன –யுத்தம் -18-3-
ஏதத் வ்ரதம் மம -யுத்தம் -18-33 -என்கிறபடியே அனுகூலராலும் சலிப்பிக்க ஒண்ணாத படி இருக்கும் அவனுடைய ஸ்தைரிய குணம் – (திரு வண் வண்டூர் புணர்த்த பூம் தண் துழாய் முடி நம் பெருமானைக் கண்டு -6-1-5–ரக்ஷணத்துக்கு அன்றோ தலைமாலை சாத்திக் கொண்டு இருக்கிறான் ) தேறு நீர் பம்பை வடபாலைத் திரு வண் வண்டூர் -திருவாய்-6-1-10-என்று பம்பையாகிற ஆற்றுக்கு வடகரையான திரு வண் வண்டூரிலே நிலை பெற்று நிற்கும் என்கை —

(வ்யவஸாயஜ்ஞர்‌ ரக்ஷணஸ்தைர்யம்‌) “சரணே சரண்‌” (திருவாய்மொழி 5-10-11 என்கிற அத்‌யவஸாயத்தை “ஜ்ஞாந ஸம்பந்ந:’ என்றறிகைக்கீடான ஸர்வஜ்ஞதையை உடையவனுடைய, “ஏறு சேவகனார்‌’ (திருவாய்மொழி 6-1-10) என்று அவர்களுடைய ரக்ஷணத்தில்‌ “மித்ரபாவேந ஸம் ப்ராப்தம்‌ நத்யஜேயம்‌ கதஞ்சந” (ரா.யு18-3, “ஸக்ருதேவ”(ரா.யு18-33) இத்யாதிகளிலே ப்ரகாஸிப்பதாய்‌ அநுகூலராலும்‌ குலைக்க வொண்ணாத படியான ஸ்தைர்யம்‌ (பம்போத்தர தேஸஸ்தம்‌) “தேறு நீர்ப் பம்பை வடபாலைத்‌ திருவண்வண்டுர்‌’ (திருவாய்மொழி 61-10) என்று விரஜைக் கரை யென்னுமா போலே திருப் பம்பை யாற்றுக்கு வடகரையிலே திருவண்வண்டூரிலே ஸுஸ்திரம்‌ என்கிறார் –-

நாகணை மிசை நம்பிரான் சரணே சரண் நமக்கு என்று நாடொறும்
ஏக சிந்தையனாய்க் குருகூர்ச் சடகோபன் மாறன்
ஆக நூற்ற அந்தாதி ஆயிரத்துள் இவையுமொர் பத்தும் வல்லார்
மாக வைகுந்தத்து மகிழ் வெய்துவர் வைகலுமே.–5-10-11—நமக்கு திருவடிகளே உபாயம் என்று –அவதாரணத்தாலே உபாய நைரபேஷ்யம் சொல்லுகிறது -சம்சாரிக ஸ்வ பாவங்கள் மேலிட்டு விபரீதமே பலியா நின்றாலும் இது தவிர வேறு ஒன்றில் கால் தாழாது ஒழிகை -மஹா விச்வாஸம் ஆகிறது 

உணர்த்தல் ஊடல் உணர்ந்து உடன் மேயும் மடவன்னங்காள்!
திணர்த்த வண்டல்கள்மேல் சங்குசேரும் திருவண்வண்டூர்
புணர்த்த பூந்தண் துழாய்முடி நம்பெருமானைக் கண்டு

புணர்த்த கையினராய் அடியேனுக்கும் போற்றுமினே.–6-1-5–தொடுக்கப் பட்டு தர்ச நீயமாய் சிரமஹரமான திருத் துழாயை திரு முடியில் யுடையனாய் அத்தாலே என்னை அநன்யார்ஹை யாக்கினவனைக் கண்டு – நம் பாடு வருகைக்கு உறுப்பாக ஓப்பியா நிற்கும் -நீங்கள் அறிவிக்கும் அத்தனையே குறை -அன்றிக்கே பிரிவை ஒன்றாக நினையாதே வளையம் வைத்து ஒப்பித்து நமக்கு அபவ்யமாய் இருக்கிறவரை -என்றுமாம் –

வேறு கொண்டு உம்மை யான் இரந்தேன்; வெறி வண்டினங்காள்!
தேறு நீர்ப் பம்பை வடபாலைத் திருவண்வண்டூர்
மாறில் போர் அரக்கன் மதிள் நீறு எழச் செற்றுகந்த
ஏறு சேவகனார்க்கு என்னையும் உளள் என்மின்களே.–6-1-10–வட பார்ஸ்வத்திலே –கடலுக்கு தென்பால் இருக்கிற பிராட்டியை போல் யாயிற்று இவள் இருக்கிற இருப்பு-எதிர் இல்லாத போரை ராவணனையும் அவன் அரணாக இட்ட மதிலையும் துகளாகச் செற்று – ருஷிகள் குடியிறுப்பு பெற்றோம் -பிராட்டி உடன் கூடப் பெற்றோம் இலங்கை விபீஷண விஷயமாகப் பெற்றோம் என்று உகந்த-எங்கும் மேற்பட்ட ஆண் பிள்ளை தனத்தை யுடையவர்க்கு –ரஞ்ச நீ யஸ்ய விக்ரமை -என்று எதிரிகள் மேலிட்ட வீரம் ரதசர்யா ஸூ சம்மத -என்று வீரர்கள் கொண்டாடின வீரம் – உம்முடைய ரஷ்ய வர்க்கத்தில் இன்னும் ஒருத்தி நோவு படா நின்றாள் என்னுங்கோள் –

விளம்ப விரோத மழிக்கும்‌ விருத்‌த கடநா ஸாமர்த்‌யம்‌ நன்னகரிலே விஸ்தீர்ணம்‌.–சூரணை -167-

அதாவது-க்ரம பிராப்தி பற்றாமல் படுகிற த்வரைக்கு ஈடாகக் கடுக வந்து முகம் காட்டாமையால்- விளம்பித்து வருகையாலே –-போகு நம்பீ –திருவாய்-6-2-1-என்றும் –-கழகம் ஏறேல் நம்பீ –திருவாய்-6-2-6–என்றும் – பிரணய ரோஷத்தால் வந்த விரோதத்தை-அழித்தாய் வுன் திரு அடியால் -திருவாய்-6-2-9–என்று அழித்துப் பொகட்ட விருத்தங்களை கடிப்பிக்க வல்ல சாமர்த்தியம் –-நல்குரவும் செல்வமும்-திருவாய்-6-3-1- -என்று தொடங்கி –தன்னில் சேராதவற்றைச் சேர்த்துக் கொண்டு நிற்கிற விருத்தி விபூதி யோகத்தை பிரகாசிப்பித்த –திரு விண்ணகர் நன்னகரே-திருவாய்-6-3-2- -என்று நன்னகரான திரு விண்ணகரத்தில்- பல்வகையும் பரந்த-திருவாய்-6-3-1- -என்கிறபடி பரந்து இருக்கும் என்கை –( விஸ்தீர்ணம்-பல்வகையும் பரந்த )

(விளம்ப விரோத மழிக்கும்‌ விருத்‌த கடநா ஸாமர்த்‌யம்‌) இப்படி வ்யவஸிதராயிருக்கச்‌ செய்தேயும்‌ ஈஸ்வரன்‌ முகம்‌ காட்டாமல்‌ விளம்பிக்கையாலே “போகு நம்பீ” (திருவாய்மொழி 6-2-1 என்றும்‌ “கழகமேறேல்‌ நம்பீ” (திருவாய்மொழி 6-2-6) என்றும்‌ இவர்களுக்கு ப்ரணய ரோஷத்தாலே வந்த விரோதத்தை, “அழித்தா யுன்‌ திருவடியால்‌” (திருவாய்மொழி 6-2-9) என்கிறபடியே அழிக்கும் படியான ‘நல் குரவும்‌ செல்வும்‌ நரகும்‌ சுவர்க்கமுமாய்‌” (திருவாய்மொழி 6-3-1 என்று தொடங்கி -தன்னில் தான்‌ சேராத தாரித்‌ர்யம்‌ ஐஸ்வர்யம்‌ என்கிற விருத்‌தங்களைத்‌ தனக்கு விபூதியாமிடத்து இவற்றினுடைய விரோதங்களைத்‌ தன் பக்கலிலே சேர்த்துக்‌ கொள்ளும்படியான அ கடித க டநா ஸாமர்த்‌யம்‌ நன்னகரான திரு விண்ணகரிலே நிற்கிற நிலையிலே “பல்வகையும்‌ பரந்த பெருமான்‌” (திருவாய்மொழி 6-3-1 என்று பரக்கக்‌ காணலாம்‌ –

மின்னிடை மடவார்கள் நின்னருள் சூடுவார் முன்பு நான தஞ்சுவன்
மன்னுடை இலங்கை அரண்காய்ந்த மாயவனே!
உன்னுடைய சுண்டாயம் நானறிவன் இனியது கொண்டு செய்வதென்?
என்னுடைய பந்தும் கழலும் தந்து போகு நம்பீ!–6-2-1—உயிரை வைத்துப் போ என்பாரைப் போலே -அவன் மாட்டான் என்று அறிந்து மர்மஜ்ஜை யாகையாலே தந்து போ என்கிறாள் -இவர்கள் தொட்டு அளைந்து என்று இறே அவன் ஆதரிக்கிறது -இவளும் அவன் தொட்டு அளைந்ததைக் கொண்டு தரித்து கிடைக்காக தந்து போ என்கிறாள் –நான் தருவேனோ -இவை ஒழிய எனக்குச் செல்லுமோ என்றான் –

குழகி எங்கள் குழமணன் கொண்டு கோயின்மை செய்து கன்மம் ஒன்றில்லை;
பழகி யாம் இருப்போம் பரமே இத் திருவருள்கள்?
அழகியார் இவ் வுலகு மூன்றுக்கும் தேவிமை தகுவார் பலருளர்;
கழகம் ஏறேல், நம்பி! உனக்கும் இளைதே கன்மமே.–6-2-6–எங்கள் திரளில் ஏறாதே கொள் -என்ன -எனக்கு குற்றம் என் என்ன –நம்பி!-சமதம யாதி ஆத்ம குணோபேதர் திரளில் அன்றோ நீர் புகுவது -அவர்கள் அன்றோ உம்மை கிட்ட உரியார்-சிறு பெண்கள் திரளில் புகுகை யீடன்று என்ன -ஆனால் நான் செய்ததுக்கு நிவாரகர் உண்டோ –

உகவையால் நெஞ்ச முள்ளுருகி உன் தாமரைத் தடம்கண் விழிகளின்
அகவலைப் படுப்பான் அழித்தாய் உன் திருவடியால்;
தகவு செய்திலை; எங்கள் சிற்றிலும் யாமடு சிறுசோறும் கண்டு,நின்
முக ஒளி திகழ முறுவல் செய்து நின்றிலையே.–6-2-9—உன் சிற்றில் அழிக்க வேண்டும் பரிகரம் அமையாதோ இதுக்கு -ஜகத் உபஸம்ஹாரம் பண்ணுவது சங்கல்பத்தாலே இறே -சங்கல்பத்தாலே யாதல் -கையாலே யாதல் அழிக்கல் ஆகாதோ-

நல்குரவும் செல்வும் நரகும் சுவர்க்கமுமாய்
வெல்பகையும் நட்பும் விடமும் அமுதமுமாய்ப்
பல்வகையும் பரந்த பெருமான்
என்னை ஆள்வானைச்
செல்வம் மல்கு குடித் திருவிண்ணகர்க் கண்டேனே.–6-3-1—அநிஷ்டமான தாரித்யாதிகளோடு இஷ்டமான ஐஸ்வர்யாதிகளோடு -வாசியற -ததீயத் ஆகாரத் வேண-இவருக்கு உத்தேசியமாய் இருக்கும் இறே -இதில் தோஷ அம்சம் அஸஹ்யம் அன்றோ என்னில் -தன்னை தேஹ விசிஷ்டனாக அனுசந்தித்த போது த்யாஜ்யமாம் –சேஷத்வ விசிஷ்டனாக அனுசந்தித்த போது உபாதேயமாகக் கடவது -ராஜ புத்திரனுக்கு பிதாவினுடைய ஓலக்கத்தோடு சிறைக் கூட்டத்தோடு வாசியற பிதாவின் ஐஸ்வர்யம் என்று இருக்கும் இறேபல்வகையும் பரந்த பெருமான் என்னை ஆள்வானைச்-இப்படி விபூதி முகத்தாலே பல படியும் விஸ்ருத்தனானவன் –நாஸ்த்யந்தோ விஸ் தரஸ்ய மே என்று தன் விபூதிக்கு எல்லையில்லை என்று இறே தானும் சொல்லுவது –

கண்ட இன்பம் துன்பம் கலக்கங்களும் தேற்றமுமாய்த்
தண்டமும் தண்மையும் தழலும் நிழலுமாய்க்
கண்டு கோடற்கரிய பெருமான் என்னை ஆள்வானூர்
தெண்திரைப் புனல் சூழ் திருவிண்ணகர் நன்னகரே.–6-3-2-–தெளிந்த திரையை யுடைத்தான ஜலத்தாலே சூழப்பட்ட திரு விண்ணகர் -பரமபதம் உத்தேச்யம் ஆனவாறே -விரஜை உத்தேச்யம் ஆமா போலே -அவ்வூர் உத்தேச்யம் ஆனவாறே அங்கு உள்ள ஜல ஸம்ருத்தியும் உத்தேச்யமாய் இருக்கிறது இறே இவர்க்கு –-நன்னகரே-கலங்கா பெருநகரம் இதற்கு சத்ருசம் அன்று -விடாய்த்த இடத்திலே விடாய் தீரலாம் படி இருக்கிற ஏற்றம் உண்டு இறே இதுக்கு –

௧டித கடக விகடநா பாந்தவம்‌ அவ்வூரிலே த்‌விகுணம்‌.–சூரணை -168-

(கடிதர் -சேர்க்கப்படுபவர் -கடகர்-சேர்ப்பவர் -விகடநா பாந்தவம் -பொருந்தாமையைச் செய்யும் உறவு முறை ) அதாவது-பிரான் இருந்தமை காட்டினீர்–திருவாய்-6-5-5 -என்கிற கடகராலே தன் பக்கல் கடிதர் ஆனார்க்கும் கடகர் ஆனார்க்கும் , இவளை நீர் இனி அன்னைமீர் உமக்கு ஆசையில்லை விடுமினோ-திருவாய்-6-5-1-என்னும்படி-விகடநையை பண்ணுவதான –-தேவ பிரானையே தந்தை தாய் என்று அடைந்த –திருவாய் -6-5-11-என்கிற அவனுடைய பாந்தவம் –அவ்வூர் திரு நாமம் கேட்பது சிந்தையே -திருவாய்-6-5-10–என்று தோழி யானவள் திரு துலை வில்லி மங்கலம் என்று தான் சொல்லும் போது
பெண் பிள்ளை சொன்னார் போல் இனிதாய் இராமையாலே –அவ்வூர் -என்று சொல்லப் பட்ட தேசத்திலே -தேவ பிரானும்-அரவிந்த லோசனுமாய் – நின்று இருந்து உறையும் இரட்டைத் திருப்பதி ஆகையாலே இரட்டித்து இருக்கும் என்கை — விகடநா பாந்தவம் -என்றது -விகடநா கர பாந்தவம் என்றபடி —

(கடிதகடநா பாந்தவம்‌) “தொலை வில்லி மங்கலம்‌ கொண்டு புக்கு இழை கொள்‌ சோதிச்‌ செந்தாமரைக்‌ கண் பிரான்‌ இருந்தமை காட்டினீர்‌’(திருவாய்மொழி 6-5-5) என்று பகவத்‌ விஷயத்திலே கடிப்பித்த கடகரான மாதா பிதாக்களோடும்‌ உமக்காசை யில்லை விடுமினோ” (திருவாய்மொழி 6-5-1, நம்மைக்‌ கை வலிந்து என்ன வார்த்தையும்‌ கேட்குறாள்‌” திருவாய்மொழி 6-5-7 என்று பொருந்தாமையைப்‌ பிறப்பித்த அவனுடைய பாந்தவம்‌ “தேவபிரானையே தந்தை தாய் (திருவாய்மொழி-6-5-11) என்று அவனுடைய பரம பாந்தவம்‌ (அவ்வூரிலே த்‌விகுணம்‌.அவ்வூர் திரு நாமம் (திருவாய்-6-5-10) என்று திருவில்லித்தொலை மங்கலமான அவ்வூரிலே-தேவபிரான் அரவிந்த லோசனன் என்றும் நின்றிருந் துறையும்‌” (திருவாய்மொழி 6-5-10) என்றும் இரட்டைத் திருப்பதி யாகையாலே இரட்டித் திருக்‌க்கும் என்கிறார் –

குழையும் வாண்முகத் தேழையைத் தொலை வில்லி மங்கலம் கொண்டு புக்கு
இழைகொள் சோதிச் செந்தாமரைக்கண் பிரான் இருந்தமை காட்டினீர்
மழை பெய்தால் ஒக்கும் கண்ண நீரினொடன்று தொட்டுமை யாந்திவள்
நுழையுஞ் சிந்தையள் அன்னைமீர்தொழும் அத்திசை உற்று நோக்கியே.–6-5-5—பிரான் -பக்தானாம் என்கிற வடிவு-இருந்தமை காட்டினீர்-கிடையை காட்டுதல் -நின்றமையைக் காட்டுதல் -அன்றிக்கே இருந்தபடியை காட்டினி கோள் -கிடந்தான் ஆகில் –கிடந்ததோர் கிடக்கை -என்பார்கள் -நின்றான் ஆகில் நிலையார நின்றான் -என்பார்கள் -இருந்தான் ஆகில் பிரான் இருந்தமை காட்டினீர் என்பார்கள் -இருந்தபடியே உத்தேசியமாம் இத்தனை-காட்டினீர் -தானே கண்டு மீள மாட்டாதே –நோக்கி இருந்த படி கண்டாயே -முறுவல் இருந்தபடி கண்டாயே -என்று காட்டிக் கொடுத்து கெடுத்தி கோளே-

துவளில்மா மணி மாடமோங்கு தொலைவில்லி மங்கலம்தொழும்
இவளை நீர் இனி அன்னைமீர்! உமக்காசை இல்லை விடுமினோ;
தவள ஒண்சங்கு சக்கரமென்றும் தாமரைத் தடங்கண் என்றும்
குவளை ஒண்மலர்க் கண்கள் நீர்மல்க நின்று நின்று குமுறுமே.–6-5-1–தொழும் இவளை -ஞானா நந்தங்களுக்கு முன்னே நிரூபகம் இறே பாரதந்தர்யம் -தொழுகையே நிரூபகமாய் இருக்கிறவளை –தாஸோஹம் வாஸூ தேவஸ்ய -ப்ராஞ்சலீம் ப்ரஹவமாஸீனம் -ஒன்றை உருகு பதத்தில் பிடித்தால் வலித்தாலும் அப்படியே உருவ நிற்கும் ஆயிற்று–நீர் -இவளுடைய ப்ராவண்யத்தில் சாதனா புத்தி பண்ணுகிற நீங்கள் –இனி -இவளுக்கு இவ் ஊரைக் காட்டின பின்பு-அன்னைமீர்!-ப்ராப்த யவ்வனை யானாலும் -பெற்றோம் என்கிற ப்ராப்தியைக் கொண்டு மீட்கப் போமோ –அவ்வருகு பட்டாலும் நியந்தரு தையைக் கொண்டு மீட்கவோ-உமக்காசை இல்லை விடுமினோ; வகுத்தவன் கைக் கொண்டால் உமக்கு ஆசை இல்லை –ஹிதம் சொல்லுவதை பெற்ற எங்களை விடுங்கோள் –

அன்னைமீர்! அணி மாமயில் சிறு மானிவள் நம்மைக் கை வலிந்து
என்ன வார்த்தையும் கேட்குறாள்
தொலை வில்லி மங்கலம் என்றலால்
முன்னம் நோற்ற விதி கொலோ? முகில் வண்ணன் மாயம் கொலோ?
அவன்சின்னமும் திருநாமமும் இவள் வாயனகள் திருந்தவே.–6-5-7—இவள் பருவம் இது –நமக்கு அவ்வருகே போன ஆச்சர்யம் பாரி கோளே –மைத்ரேய என்னுமா போலே –அழகிய நிறத்தை உடையளாய் -முக்தமான மான் போலே அதி பாலையாய் இருக்கிறவள்-அழகியதாய் சிலாக்யமானமாய் இருக்கிற மயில் போலே இருக்கிற சிறுப் பெண் என்றுமாம்-முக்தையான இவள் நம்மைக் கை விஞ்சி -நம்மில் காட்டிலும் அந்தரங்கை யானாள்-என்ன வார்த்தையும் கேட்குறாள் தொலை வில்லி மங்கலம் என்றலால்-தொலை வில்லி மங்கலம் என்கை ஒழிய ஏதேனும் ஒரு வார்த்தையும் கேட்க்கிறீலள் -என்னுடைய வார்த்தையும் கேட்க்கிறீலள் -உங்களை மறைத்ததும் சொல்லுவது எனக்கு இறே –அவ் வூரை நான் சொல்லிலும் கேட்க்கும் –

சிந்தையாலும் சொல்லாலும் செய்கையினாலும் தேவ பிரானையே
தந்தை தாய் என்றடைந்த வண்குரு கூரவர் சடகோபன்

முந்தை ஆயிரத்துள் இவை தொலை வில்லி மங்கலத்தைச்சொன்ன
செந்தமிழ் பத்தும் வல்லார் அடிமை செய்வார் திருமாலுக்கே.–6-5-11—மநோ வாக் காயங்கள் மூன்றும் -ஒருபடிப்பட அவன் பக்கலிலே ப்ரவணமாய் இருக்கிற படி –இரங்கி -என்றும் –மணி வண்ணாவோ என்று கூவுமால் -என்றும் –தன் கரங்கள் கூப்பித் தொழும் -என்றும் -மூன்றாலும் இவருக்கு உண்டான இவருக்கு உண்டான பிராவண்ய அதிசயம் இறே இது திருவாய் மொழியிலே சொல்லிற்று-தேவ பிரானையே தந்தை தாய் என்றடைந்த–அயர்வறும் அமரர்கள் அதிபதியாய் வைத்து திருத் தொலை வில்லி மங்கலத்திலே ஸூலபனாய் இருந்தவனையே சர்வவித்த பந்துவும் என்று -அப்படியே பற்றுவதும் செய்தவர்-

பின்னை கொல்?நிலமாமகள்கொல்? திருமகள்கொல்? பிறந்திட்டாள்
என்ன மாயங்கொலோ? இவள்நெடு மால்என்றே நின்று கூவுமால்
முன்னி வந்தவன் நின்றிருந் துறையும் தொலை வில்லி மங்கலம்
சென்னியால் வணங்கும் அவ்வூர்த் திருநாமம் கேட்பது சிந்தையே
.–6-5-10-தன்னுடைய வ்யாமோஹத்துக்கு அவன் கிருஷி பண்ணின படி -முற்பாடானாய் வந்து -அவன் நிற்பது இருப்பதாகாக் கொண்டு நித்ய வாசம் பண்ணா நிற்கும் வூர் -பசியன் சோறு தாழ்த்தால்படுமா போலே-சென்னியால் வணங்கும் அவ்வூர்த் திருநாமம் கேட்பது சிந்தையே.–-தன் கரங்கள் கூப்பித் தொழுகையும் பிரார்த்த்யமான படி -இருந்த இடத்தே இருந்து தலையை சாய்க்கும் படி ஆனாள்-இவள் அகவாய் ஓடுகிறது -அவ் வூர் திரு நாமம் கேட்க்கையிலே -திரு நாமத்தை கேட்க வல்லேனே என்று ஆயிற்று இவள் மநோ ரதம்-இவள் வாயால் சொல்லக் கடவ திரு நாமத்தை நாம் சொல்லிக் கெடுக்க கடவோம் அல்லோம் -என்று அவ் வூர் என்கிறாள் –

(இங்கு கடிதர் -ஆழ்வார் -கடகர் -தோழிமார் -தொலை வில்லி மங்கலம் தொழும் இவளை நீர் இனி அன்னைமீர் உமக்கு ஆசையில்லை விடுமினோ -என்று சிந்தையாலும் சொல்லாலும் செய்கையாலும் தேவபிரானையே தந்தை தாய் என்று அடைந்தார் அன்றோ )(பட்டர் -அழகிய மணவாள பெருமாள் -என்றும் சோமாசி ஆண்டான் -எம்பெருமானார் -என்றும் –அனந்தாழ்வான் -திருவேங்கடமுடையான் என்றும் -பராங்குச நாயகி -தொலை வில்லி மங்கலம் -என்றும் – பர கால நாயகி -திருக்கண்ண புரம் என்றும் -சொல்லுவதில் உள்ள இனிமை அத்விதீயம் – திருத்தாயார் அவ்வாறு சொல்ல மாட்டாமையாலே அவ்வூர் என்கிறாள் )

கை முதல் இழந்தார் உண்ணும் நிதியின் ஆபத் சகத்வம் புகுமூரிலே சம்ருத்தம்––சூரணை -169-

கை முதல் இழந்தார்-அதாவது-ஏலக் குழலி இழந்தது சங்கே–திருவாய்-6-6-1 -என்று தொடங்கி –
கற்புடை யாட்டி இழந்தது கட்டே –திருவாய்-6-6-10–என்று பிராப்ய அலாப நிபந்தனமான ஆர்த்தியால் வந்த பாரவச்யத்தாலே – பிராப்ய பிராபக பாசங்கள் எல்லாம் தன்னடையே விட்டு கழிகையாலே -கைமுதல் அற்றவர்கள் –உண்ணும்-அதாவது-உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணன்-திருவாய்-6-7-1- -என்று தாரக போஷக போக்யங்கள் எல்லாம் தானேயாக புஜிக்கும்-
நிதியின் ஆபத் சகத்வம்–அதாவது-வைத்த மா நிதியாம் மது ஸூதனை –திருவாய்-6-7-11 -என்று
ஆபத் ரஷகமாக சேமித்து வைத்த மகா நிதி போல் இருக்கிறவனுடைய ஆபத் சஹத்வம் – புகுமூரிலே சம்ருத்தம்–-அதாவது-திண்ணம் என் இள மான் புகுமூர் திருக் கோளூரே-திருவாய்-6-7-1- -என்று
பிராப்ய ருசி பிறந்தார்க்கு பிரவேஷ்டமாய் இருக்கும் திருக் கோளூரிலே –செல்வம் மல்கி யவன் கிடந்த திருக்கோளூர்க்கே– திருவாய்-6-7-4–என்று ரஷ்ய வர்க்கத்தினுடைய ரஷணமே தனக்கு நிரதிசய சம்பத்தாக நினைத்து வந்து கிடைக்கையாலே சம்ருத்தம் என்கை ..(சம்ருத்தம் -நிறைவு)-

(கைம்முதலிழந்தார்‌ உண்ணும்‌ நிதியின்‌ ஆபத்ஸகத்வம்‌) ” ஏலக்குழலி இழந்தது சங்கே (திருவாய்மொழி 6-6-1 என்று இப்பாலுண்டான ப்ராப்யாபாஸ் ப்ராபகாபாஸங்களைக்‌ கைவிட்டவர்களுக்கு, “உண்ணுஞ் சோறு பருகும்‌ நீர்‌ தின்னும்‌ வெற்றிலையும்‌ எல்லாம்‌ கண்ணன்‌” (திருவாய்மொழி 6-7-1 என்று தாரக போஷக போக்யங்கள்‌ தானேயாம்படியான “வைத்தமாநிதி” (திருவாய்மொழி 6-7-1 என்று ஒருகாலும்‌ தொலையாதபடியான நிதியாயிருக்கிறவனுடைய ஆபத் ஸகத்வம்‌ (புகுமூரிலே ஸம்ருத்‌தம்‌) “புகுமூர்‌ திருக்கோளூர்‌ (திருவாய்மொழி 6-7-1 என்று இவர்களுக்கு ப்ரவேஷ்டவ்யமான திருக்கோளூரிலே நிற்கிற நிலையிலே “செல்வம்‌ மல்க” (திருவாய்மொழி 6-7-4,) என்று ஸம்ருத்‌த மாயிருக்கும்‌ என்கிறார்‌–

ஏலக் குழலி இழந்தது சங்கே–திருவாய்-6-6-1 -என்று தொடங்கி – கற்புடை யாட்டி இழந்தது கட்டே –திருவாய்-6-6-10–என்று பிராப்ய அலாப நிபந்தனமான ஆர்த்தியால் வந்த பாரவச்யத்தாலே –திருத் தாயார் இவளுடைய வலயாதிகள் காணக் காண சிதிலமாய் போகிற படியைக் கண்டு -அவற்றைத் தனித் தனியே சொல்லி கூப்பிடுகிறாள் -நகர பத்த நாதிகள் வேவப் புக்காள்-அது விழுந்தது உது விழுந்தது என்னுமா போலே விரஹ அக்னியால் தன் மக்கள் இழந்தவற்றைச் சொல்லுகிறாள்-கீழில் திருவாய் மொழியில் அலாப தசையோபாதி கிடையாது என்றாலும் விட மாட்டாத படி தன்னுடைய மநோ வாக் காயங்கள் இவ்விஷயத்தில் அதி பிரவணமான படி சொல்லிற்று-இதில் அந்த அலாபத்தால் வந்த பாரவஸ்யத்தை சொல்லுகிறது 

உண்ணுஞ் சோறு பருகுநீர் தின்னும்வெற்றிலையு மெல்லாம்
கண்ணன் எம் பெருமான் என்றென்றே கண்கள் நீர்மல்கி

மண்ணினுள் அவன் சீர்வளம் மிக்கவன் ஊர்வினவித்
திண்ணம் என்இளமான் புகுமுர் திருக்கோளூரே.–6-7-1—ஜீவித்து அல்லது தரிக்க ஒண்ணாத சோறு -தாஹித்தால் பானம் பண்ணி யல்லது நிற்க ஒண்ணாத தண்ணீர் -தின்றால் அல்லது புஷ்டனாக விரகு இன்றிக்கே இருக்கும் வெற்றிலையும் -தாரக போஷக போக்யம் ஆனவை எல்லாம் எனக்கு நாதனான கிருஷ்ணன் -வாஸூ தேவஸ் சர்வம் -என்று ஆயிற்று இவள் இருப்பது–திண்ணம் என்இளமான் புகுமுர் திருக்கோளூரே.–என் வயிற்றில் பிறப்பாலும்-இவள் படியாலும் இவள் புகுமூர் திருக் கோளூரே –இது ஸூ நிச்சிதம்-மரு பூமியிலே தண்ணீர் போலே இ றே சம்சாரத்தில் திருக் கோளூர்-

கொல்லை என்பர்கொலோ? குணம்மிக்கனள் என்பர்கொலோ?
சில்லைவாய்ப் பெண்கள் அயற்சேரி உள்ளாரும் எல்லே!
செல்வம் மல்கி அவன் கிடந்த திருக்கோளூர்க்கே
மெல்லிடை நுடங்க இளமான் செல்ல மேவினளே.–6-7-4–இவர்கள் சொல்லிற்று சொல்லுகிறார்கள் என்று அவள் செய்வது செய்தாள் -சம்பத்தானது கரை புரண்டு வரும்படியான தேசம்-அவன் கிடந்த திருக்கோளூர்க்கே-தன் பெருமையைப் பாராதே ஆர்த்த ரக்ஷண அர்த்தமாக வந்து கண் வளர்ந்து அருளுகிற தேசம்-

வைத்தமா நிதியாம் மதுசூ தனையே அலற்றிக்
கொத்தலர் பொழில்சூழ் குருகூர்ச்சட கோபன் சொன்ன
பத்து நூற்றுள் இப்பத்து அவன்சேர்திருக்கோ ளூர்க்கே
சித்தம் வைத்துரைப் பார்திகழ் பொன்னுல காள்வாரே.–6-7-11—உண்டு என்ன உயிர் நிற்க்க கடவதாய் அனாயாச போக்யமாய் இஷ்ட விநியோக அர்ஹமான மஹா நிதி போலேயாய் விரோதி நிரசன ஸ்வ பாவனானவனை சொல்லி ஆர்த்தியாலே கூப்பிட்டு

சென்று சேர்வார்க்கு உசாத் துணை யறுக்கும்‌ ஸெளந்தர்யம்‌ மாநகரிலே கோஷிக்கும்‌.-சூரணை -170-

சென்று சேர்வார்க்கு-அதாவது-தென் திரு பேரையில் சேர்வன் சென்றே- திருவாய்-7-3-8–என்று
க்ரம பிராப்தி பற்றாத பிரேம அதிசயத்தாலே ஹித பரர் வார்த்தை கேளாதே சென்று பிரவேசிப்பது என்னும் படியானவர்களுக்கு –உசாத் துணை அறுக்கும்–அதாவது-என் நெஞ்சினாரும் அங்கே ஒழிந்தார் -உழந்து இனி யாரைக் கொண்டு என் உசாகவோ-திருவாய்-7-3-4- -என்னும் படி
உசாத் துணையான நெஞ்சை அபஹரிக்கும் –சௌந்தர்யம்–அதாவது-செஞ்சுடர் நீள் முடித் தாழ்ந்ததாயும் சங்கோடு சக்கரம் கண்டு உகந்தும் தாமரைக் கண்களுக்கு அற்றுத் தீர்ந்தும் -திருவாய்-7-3-3-என்று சொன்னவனுடைய சௌந்தர்யம் –-மா நகரிலே கோஷிக்கும்--அதாவது-தென் திரு பேரெயில் மா நகரே–திருவாய்-7-3-9- -என்று மகா நகரான தென் திரு பேரையில் –-எழுந்த நல் வேதத்து ஒலி நின்று ஓங்கு -திருவாய்-7-3-4–என்கிறபடியே – அவ் விஷயத்தை அனுபவித்த ஹர்ஷ பிரகர்ஷத்தால் அங்குள்ளோர் பாடுகிற சாம கோஷத்தாலே தெரியும் என்கிறபடி ..

“தென்திருப்பேரையில்‌ சேர்வன்‌ சென்றே” (திருவாய்மொழி 7-3-8) என்று இப்பாலுள்ளவர்களைக்‌ கைவிட்டுச்‌ சென்று ப்ரவேஸிக்குமவர்களுக்கு “என்‌ நெஞ்சினாரும்‌ அங்கே யொழிந்தார்‌ உழந்தினியாரைக்‌ கொண்டென்னுசாகோ” (திருவாய்மொழி 7-3-4) என்றும்‌, “முழங்கு சங்கக்கையன்‌ மாயத்தாழ்ந்தேன்‌” (திருவாய்மொழி 7-3-4 என்றும்‌ உசாத் துணையான நெஞ்சையும்‌ அபஹரிக்கும்படியான “செங்கனிவாயின்‌” (திருவாய்மொழி 7-3-3) இத்யாதியில்‌ சொல்லுகிற ஸெளந்தர்யத்தை “தென்திருப்பேரெயில்‌ மாநகர்‌” (திருவாய்மொழி 7-3-9) என்று மஹாநகரமான திருப்பேரையில்‌ நிற்கிற நிலையிலே “எழுந்த நல்வேதத்தொலி நின்றோங்கு” (திருவாய்மொழி 7-3-4) என்கிறபடியே அவ்வூரில்‌ ஸாமவேத, கோஷந்தானே சொல்லா நின்ற தென்கிறார் –

கண்டதுவே கொண்டு எல்லாரும் கூடிக் கார்க்கடல் வண்ணனோடு என் திறத்துக்
கொண்டலர் தூற்றிற்றது முதலாக் கொண்ட என் காதல் உரைக்கில் தோழீ!
மண் திணி ஞாலமும் ஏழ்கடலும் நீள் வீசும்புங் கழியப் பெரிதால்;
தெண் திரை சூழ்ந்தவன் வீற்றிருந்த தென் திருப் பேரெயில் சேர்வன் சென்றே.–7-3-8—இப்படி காதல் கரை புரண்டதாகில் செய்யப் பார்த்தது என் என்ன-தெண் திரை சூழ்ந்தவன் வீற்றிருந்த-தென் திருப் பேரெயில் சேர்வன் -இக்காதலுக்கு விஷயம் சந்நிஹிதம் இல்லாமையால் வந்த வெக்காயம் தீர சிரமஹரமாய் அவன் குறைவற்று இருக்கிற தேசத்திலே போய்ப் புகக் கடவேன்-சென்றே. சேர்வன் -இனி எதிரே அவன் வரிலும் மீளேன் -அவனைச் சேருகை அன்று உத்தேச்யம் -அங்கே சென்று கிட்டுகை –

இழந்த எம்மாமைத் திறத்துப் போன என் நெஞ்சினாரு மங்கே ஒழிந்தார்
உழந் தினி யாரைக் கொண் டென் உசாகோ!
ஓதக் கடல் ஓலி போல எங்கும்
எழுந்த நல் வேதத்து ஒலி நின்று ஓங்கு தென் திருப் பேரெயில் வீற்றிருந்த
முழங்கு சங்கக் கையன் மாயத்து ஆழ்ந்தேன் அன்னையர்காள்! என்னை என் முனிந்தே.–7-3-4–அவன் இழவாளனாய் நாம் இழவு பரிஹரிக்கை யன்றிக்கே நாம் இழவாளர் ஆவதே -என்று அபிமானித்து போன நெஞ்சை வினைத் தலையிலே படை யறுத்து கொள்வாரை போலே படை யறுத்துக் கொண்டான் -லங்கையை அரண் அழிக்கைக்கு ஸ்ரீ விபீஷணனை பெற்றால் போலே -என்னுடைய ஸ்த்ரீத்வம் ஆகிற அரண் அழிக்கைக்கு உள் ஆள் பெற்றோம் என்று நெஞ்சை படை யறுத்துக் கொண்டான் இலங்கையின் அளவன்றிக்கே ஸ்த்ரீத்வ அபிமானத்துக்கு அவன் அஞ்சி இருப்பது – நெஞ்சினார் -அங்குத்தை ராஜ குலத்தாலே என்னை மறந்தார் -பெற்றாரைக் கொண்டு வ்ருத்த கீர்த்தனம் பண்ணி யாகிலும் தரிக்க வேண்டாவோ என்ன-உழந் தினி யாரைக் கொண் டென் உசாகோ!-உழந்து -வருந்தி -இனி என் நெஞ்சை இழந்த பின்பு –வருந்தினால் தான் வார்த்தை கேட்ப்பார் உண்டோ —எழுந்த நல் வேதத்து ஒலி நின்று ஓங்கு-வேத த்வனி வந்து செவிப்படா நிற்க வேறு போது போக்க போமோ -எங்கும் எழுந்த – சார்வதரிகமாக பரவா நிற்கை -இது நடையாடாதோர் இடம் பெற்றால் இ றே போது போக்கி தரிக்கலாவது –நல் வேதத்து ஒலி -சாம வேத த்வனி –வேதா நாம் சாம வேதோஸ்மிநின்று ஓங்கு -இடைவிடாதே மிக்கு நிற்கை-தென் திருப் பேரெயில் வீற்றிருந்த-முழங்கு சங்கக் கையன் மாயத்து ஆழ்ந்தேன்-வேத த்வனி ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்திலே ப்ரத்வனிக்க -அதில் ப்ரதி த்வனியும் வேத கோஷமுமாய் இரட்டித்து செல்லா நிற்கை -அவனுடைய ஸ்மித வீக்ஷணாதிகளிலே மீள ஒண்ணாத படி அகப்பட்டேன் –

செங்கனி வாயின் திறத்ததாயும் செஞ்சுடர் நீள் முடி தாழ்ந்ததாயும்
சங்கொடு சக்கரம் கண்டு உகந்தும் தாமரைக் கண்களுக்கு அற்றுத் தீர்ந்தும்

திங்களும் நாளும் விழா வறாத தென் திருப் பேரெயில் வீற்றிருந்த
நங்கள் பிரானுக்கு என் நெஞ்சம் தோழீ! நாணும் நிறையும் இழந்ததுவே.–7-3-3—பிரிகிற போது தன் ஆற்றாமையும் வரவ தாழாமையும் தொடக்கமான -தாழ்வு சொல்லுகிற திருவதரத்தில் பழுப்பிலே யாயிற்று நெஞ்சு தோற்றது -அப்போதை தாழ்வுகள் ஒரு மஹா பாரதத்துக்கு போரும் என்கை -தர்ச நீயமாய் உபய விபூதிக்கும் கவித்த முடியை காட்டி யாயிற்று -என்னை எழுதிக் கொண்டது -தன் சேஷித்வத்தின் எல்லையைக் காட்டி யாயிற்று சேஷத்வத்தில் நிறுத்திற்று –சங்கொடு சக்கரம் கண்டு உகந்தும்–ஆயுதமும் ஆபரணமு மாய் இருக்கிற ஆழ்வார்களுடைய சேர்த்தியைக் கண்டு உகந்தும்-
தாமரைக் கண்களுக்கு அற்றுத் தீர்ந்தும்-தன்னோட்டை சம்பந்தம் எல்லாம் தோற்றும் படி நோக்கின கண் அழகிலே அநந்யார்ஹ சேஷமாயும்-

சேர்வன் சென்று என்னுடைத் தோழிமீர்காள்! அன்னையர்காள்!என்னைத் தேற்ற வேண்டா;
நீர்கள் உரைக்கின்றது என்னிதற்கு? நெஞ்சும் நிறைவும் எனக்கு இங்கு இல்லை;
கார் வண்ணன் கார்க்கடல் ஞாலம் உண்ட கண்ண பிரான் வந்து வீற்றிருந்த
ஏர்வள ஒண் கழனிப் பழனத் தென் திருப் பேரெயில் மாநகரே.–7-3-9-–தென் திருப் பேரெயில் ஆகிற மஹா நகரத்திலே சென்று சேர்க்கை தவிரேன் -என்னை தேற்ற வேண்டா —

ப்ரவண சித்தம்‌ பரத்வ விமுகமாக்கும்‌ ஆரந்த வ்ருத்‌தி நீணகரிலே.–சூரணை-171-

ப்ரவண சித்தம்-அதாவது-தீ வினை உள்ளத்தின் சார்வல்ல வாகித் தெளி விசும்பு ஏறல் உற்றால்
திரு வாறன் விளை அதனை மேவி வலம் செய்து கை தொழக் கூடும் கொல் என்னும் என் சிந்தனை–
திருவாய்-7-10-9–என்று –அவித்யாதிகள் பிரத்யக் வஸ்துவான ஆத்மாவில் பற்றற போய் -தெளிவை விளைப்பதான பரம பதத்தை ப்ராபிக்கை வந்து கிட்டினாலும் என் நெஞ்சானது -திரு வாறன் விளை யாகிற இத் தேசத்தைக் கிட்டி – அனுகூல வ்ருத்தி பண்ணிக் கையாலே தொழக் கூடுமோ என்னா நிற்கும் என்று தன் பக்கல் பிரவணரானவர்கள் சித்தத்தை –பரத்வ விமுகமாக்கும்-அதாவது
சிந்தை மற்று ஒன்றின் திறத்து அல்லாத் தன்மை தேவ பிரான் அறியும்-திருவாய்-7-10-10- -என்று
பரம பதத்தின் பேர் சொல்லுகையும் அசஹ்யமாம் படி பரத்வத்தில் விமுகமாகப் பண்ணும் –
ஆநந்த வ்ருத்தி-அதாவது–இன்பம் பயக்க எழில் மாதரும் தானும் இவ் எழ உலகை இன்பம் பயக்க இனிதுடன் வீற்று இருந்து –திருவாய்-7-10-1–என்கிற ஆநந்த வ்ருத்தி –-நீண் நகரிலே–அதாவது
திரு வாறன் விளை என்னும் நீள் நகரம் அதுவே -திருவாய்-7-10-6–என்றும்-திருவான் விளை நீள் நகரத்து உறைகின்ற பிரான் -திருவாய்-7-10-7- என்றும் நீள் நகரான திரு வாறன் விளையில் வ்யக்தம் என்ற படி –

(ப்ரவண சித்தம்‌ பரத்வ விமுகமாக்கும்‌ ஆநந்த வருத்தி) “தீவினை உள்ளத்தின்‌ சார்வல்ல இத்யாதி, “என்றுமென்‌ சிந்தனை” (திருவாய்மொழி 7-10-9) என்று அவித்‌யாதிகள்போய்‌ பரமபத ப்ராப்தியிலே ஒருப்பட்டாலும்‌ த்ரிவித கரணங்களாலும்‌ ஸர்வரும்‌ வந்தாஸ்ரயிக்கும்படியான திருவாறன்‌ விளையிலே புக்கு அடிமை செய்ய வேணும்‌ என்னா நின்றதென்‌ நெஞ்சானது என்று தன் பக்கல்‌ ப்ரவணமான சித்தத்தை “சிந்தை மற்றொன்றின்‌ திறத்ததல்லாத்‌ தன்மை” (திருவாய்மொழி 7-10-10 என்று பேருங்கூட அஸஹ்யமாம்படி பரத்வத்தையும்‌ உபேக்ஷிக்கும்படி பண்ணவற்றான, “இன்பம்‌ பயக்க எழில்மலர்‌ மாதரும்‌ தானும்‌ இவ்வேழுலகை இன்பம்‌ பயக்கவினிதுடன்‌ வீற்றிருந்து” (திருவாய்மொழி 7-10-1 என்கிற ஆநந்த வ்ருத்‌தி நீணகரான திருவாறன் விளையிலே காணலாமென்கிறார் –

தீ வினை உள்ளத்தின் சார்வல்லவாகித் தெளி விசும்பு ஏறலுற்றால்
நாவினுள்ளும் உள்ளத்துள்ளும் அமைந்த தொழிலினுள்ளும் நவின்று
யாவரும் வந்து வணங்கும் பொழில் திரு வாறன் விளையதனை
மேவி வலஞ்செய்து கைதொழக் கூடுங்கொல்?’ என்னுமென் சிந்தனையே
.–7-10-9—அவித்யாதிகள் ஆத்மாவை ஸ்பர்சியாத படி யாய் -மனஸ் ஸூ நிர் தோஷமாய் என்றபடி-தெளி விசும்பு -இங்கு உள்ளார் அங்கு செல்லிலும் தெளிவைப் பிறப்பிக்கும் தேசம் -அவனே வரிலும் சோக மோஹங்களை விளைக்கும் இது -இருள் தரும் மா ஞாலம் இ றே இது -தெளி விசும்பு சுத்த சத்வம் அது –-ஏறலுற்றால்-போக ப்ராப்தமானால் -கிடைப்பதானால் –நாவினுள்ளும் உள்ளத்துள்ளும் அமைந்த தொழிலினுள்ளும் நவின்றுயாவரும் வந்து வணங்கும் பொழில் திரு வாறன் விளையதனை-மநோ வாக் காயங்களாலே நித்ய ஸூ ரிகளும் பயின்று ஆஸ்ரயிக்குமதாய்-நிரதிசய போக்யமான திருவாறன் விளையை -தீ வினை உள்ளத்தின் சார்வு அல்லவாகி -என்ன வேண்டாத நித்ய நிர்தோஷர் படுகாடு கிடக்கிற தேசம் என்கை-மேவி வலஞ்செய்து கைதொழக் கூடுங்கொல்?’ என்னுமென் சிந்தனையே.–கிட்டி அனுகூல வ்ருத்திகளை பண்ண வற்றே என்னா நின்றது என் மனஸ்ஸூ –பாவோ நான்யத்ர கச்சதி -என்று என் வசம் அல்ல என் மனஸ்ஸூ –

தீ வினை உள்ளத்தின் சார்வல்லவாகித் தெளி விசும்பு ஏறலுற்றால்
நாவினுள்ளும் உள்ளத்துள்ளும் அமைந்த தொழிலினுள்ளும் நவின்று
யாவரும் வந்து வணங்கும் பொழில் திரு வாறன் விளையதனை
மேவி வலஞ்செய்து கைதொழக் கூடுங்கொல்?’ என்னுமென் சிந்தனையே
.–7-10-9—மநோ வாக் காயங்களாலே நித்ய ஸூ ரிகளும் பயின்று ஆஸ்ரயிக்குமதாய்-நிரதிசய போக்யமான திருவாறன் விளையை-கிட்டி அனுகூல வ்ருத்திகளை பண்ண வற்றே என்னா நின்றது என் மனஸ்ஸூ –பாவோ நான்யத்ர கச்சதி -என்று என் வசம் அல்ல என் மனஸ்ஸூ –

இன்பம் பயக்க எழில் மலர் மாதருந் தானும் இவ் வேழுலகை
இன்பம் பயக்க இனிதுடன் வீற்றிருந்து ஆள்கின்ற எங்கள் பிரான்
அன்புற் றமர்ந் துறைகின்ற அணி பொழில் சூழ் திரு வாறன்விளை
அன்புற் றமர்ந்து வலஞ்செய்து கைதொழும் நாள்களு மாகுங் கொலோ?
–7-10-1–அன்புற்று-இவர் திருவாய்மொழி கேட்க்கைக்கு நல்ல இடம் என்று ஸ்நே ஹத்தை பண்ணி –அமர்ந்து -வேறு ஒரு பிரயோஜனத்தை கனிசியாதே-தேச வாசம் தானே பிரயோஜனமாக கொண்டு-உறைகின்ற -அவதாரம் போலே அன்றிக்கே நித்ய வாசம் பண்ணுகிற-அணி பொழில் சூழ் திரு வாறன்விளை-தர்ச நீயமான பொழில் சூழ்ந்த தேசத்தை-அன்புற்று -தேன தே தமனுவ்ரதா -என்கிறபடியே அவன் விரும்பும் தேசத்தையே விரும்பும் அத்தனை இறே -அவன் திருவாய் மொழி கேட்க்கைக்கு நல்ல இடம் என்று ஸ்நே ஹித்தால் போலே நாமும் திரு வாய் மொழி கேட்ப்பிக்கைக்கு நல்ல இடம் என்று ஸ்நே ஹத்தை பண்ணி-அமர்ந்து -நாமும் அநந்ய பிரயோஜனராய்–அனுகூல வ்ருத்திகளைப் பண்ணி -மநோ ரத்தத்துக்கு காலமான ஆனதுவே போகத்துக்கும் காலமாக வற்றோ –அபீதா நீம் சகலஸ் ஸ்யாத் –

ஒன்றும் நில்லா கெடும் முற்றவும் தீவினை உள்ளித் தொழுமின் தொண்டீர்!
அன்றங்கு அமர்வென்று உருப்பிணி நங்கை அணி நெடுந் தோள் புணர்ந்தான்
என்றும் எப்போதும் என்நெஞ்சம் துதிப்ப உள்ளே இருக் கின்ற பிரான்
நின்ற அணி திரு வாறன்விளை என்னும் நீணக ரமதுவே.–7-10-6-
–அந்த மணக்கோலத்தோடு என்னுடைய ஹ்ருதயத்தில் இருக்கிற உபகாரகன்-நின்ற அணி திரு வாறன்விளை என்னும் நீணக ரமதுவே.–ஹ்ருதயத்தில் நிற்கிறவன் கண்ணுக்கு விஷயமாம் படி வந்து நிற்கிற தர்ச நீயமான திருவாறன் விளை யாகிற மஹா நகரம் அதுவே -உள்ளித் தொழுமின் தொண்டீர்!-ஒன்றும் நில்லா – முற்றவும் தீவினை கெடும்-

ஸாதரரைப்‌ பரிசழிக்கும்‌ சேஷ்டித ஆஸ்சர்யம்‌ குளத்தே கொடி விடும்‌.–சூரணை -172-

(சாதரரை -அன்பினை யுடையவர்களை கொடி விடும் -மிக்குத் தோன்றும்-திருக் குளந்தை-இப்பொழுது பெரும் குளம் என்ற திருநாமம் இந்த திவ்ய தேசத்துக்கு )

அதாவது-ஆழி வலவனை ஆதரித்து –கூடச் சென்றேன்–திருவாய்-8-2-4- -என்று தன் பக்கல் ஆதாரத்தோடு கூடி இருப்பவரை-பரிசு அழிக்கும்–அதாவது- பல் வளையார் முன் பரிசு அழிந்தேன் -திருவாய்-8-2-4–என்னும்படி-ஸ்த்ரீத்வ பிரகாரமான லஜ்ஜாதியை அழிக்கும்-மாயக் கூத்தன்-திருவாய்-8-2-4-என்கிற சேஷ்டித ஆச்சர்யம் –மாடக் கொடி மதிள் தென் குளந்தை -திருவாய்-8-2-4-என்ற திருக் குளந்தையில் இதற்கு என்று கட்டின மாடக் கொடி முகேன பிரகாசிக்கும் என்கை–

(ஸாதரரைப்‌ பரிசழிக்கும்‌ சேஷ்டிதாஸ்சர்யம்‌] “கூடச் சென்றேன்‌‘ இத்யாதி- ஆதரித்து” கூடச்சென்றேன்‌’ என்று இப்படி ஆதரமுடையாரை ‘பல்வளையார் முன்‌ பரிசழிந்தேன்‌‘ (திருவாய்மொழி 8-2-4) என்று பரிசழிக்கும்படியான மாயக் கூத்தென்கிற சேஷ்டிதாஸ்சர்யம்‌ (குளத்தே கொடிவிடும்‌) தென் குளந்தையிலே “மாடக்‌ கொடி” (திருவாய்மொழி 8-2-4) என்று கொடி யெடுத்து ப்ரகாஸிக்கும்‌ என்கிறார்‌-

கூடச் சென்றேன் இனி என் கொடுக்ககேன் கோல் வளை நெஞ்சத்து தொடக்கம் எல்லாம்
பாடற்று ஒழிய இழந்து வைகல் பல்வளையார் முன்பு பரிசு இழந்தேன்
மாடக் கொடி மதிள் தென் குளந்தை வண் குடபால் நின்ற மாயக் கூத்தன்
ஆடற் பறவை யுயர்த்த வெல் போர் ஆழி வலவனை யாதரித்தே–8-2-4–கூடச் சென்றேன்-சம்ச்லேஷ அர்த்தமாக சென்றேன் -ஸ்வரூபத்தை அழிய மாறி யன்றோ நான் சென்றது-வைகல்-பல்வளையார் முன்பு -என்றும் ஓக்க பலவகைப் பட்ட வளையை யுடைய ஸ்த்ரீகள் முன்பே –அவனையும் என்னையும் குண ஹானி சொல்லக் கடவ ஸ்த்ரீகள் எதிரே-பரிசு இழந்தேன்-பரிசு -பிரகாரம் -என்னுடைய பிரகாரம் -ஸ்த்ரீத்வ பிரகாரம் -அத்தை இழந்தேன் -கழற்றி பூணுமவற்றை அவர்கள் தரித்து இருக்க கழற்ற ஒண்ணாத படி ஆபரணமாய் இருக்கிற லஜ்ஜாதிகளை இழந்தேன் –-மாடக் கொடி மதிள் தென் குளந்தை-மாடங்களையும் கொடியோடு கூடின மதிள்களையும் யுடைத்தாய் -தெற்குத் திக்குக்கு சிலாக்யமான திருக் குளந்தையில்–வெல் போர்-ஆழி வலவனை யாதரித்தே–யுத்தத்தில் வெற்றியோடு அல்லது மீளாத திரு வாழி யை வலவருகே யுடையவனை ஆதரித்து –

ஸ்ரம மனம்‌ சூழும்‌ ஸெளகுமார்ய ப்ரகாசம்‌ ஆய்ச் சேரியிலே.–சூரணை-174-

ஸ்ரம மனம் சூழும்-அதாவது-பணியா அமரர் பணிவும் பண்பும்–திருவாய்-8-3-6–இத்யாதி படி –
பரம பிரேம யுக்தரான நித்ய சூரிகள் பரிசர்யை பண்ண பரம பதத்தில் இருக்கும் அவன் – நிரதிசய சௌகுமாரமான திரு மேனியோடே சம்சாரிகளுடைய துக்கத்தைப் போக்குகைக்காக – தன் வாசி அறியாத இந்த லோகத்தில் வந்து அவதரித்து –அடியார் அல்லல் தவிர்ப்பது –திருவாய்-8-3-7–படி தான் நீண்டு தாவுவது –திருவாய்-8-3-7-ஆகையால் வந்த ஸ்ரமத்தை அனுசந்தித்த மனசானது -வ்யாகுலிதமாய்-பிரமிக்கும்படியான –சௌகுமார்ய பிரகாசம்-அதாவது-ஆழியும் சங்கும் சுமப்பார் தாம்—திருவாய்-8-3-3-என்று பூ யேந்தினாப் போலே இருக்கும் திரு ஆழி திரு சங்கை ஏந்துவதும் மலை சுமந்தார் போல் வன் பாரமாக தோற்றும் படி இருக்கிறவன் சௌகுமார்ய பிரகாசம் –-ஆய்ச் சேரியிலே-
அதாவது-உடைய நங்கையார் பிறந்தகம் ஆகையாலே -ஆழ்வாருக்கு ஆய்ச் சேரியாய் இருப்பதாய் –
உருவார் சக்கரம் சங்கு சுமந்து இங்கு உம்மோடு ஒருபாடு உழல்வான் ஓர் அடியானும் உளன் என்று
வண் பரிசாரத்து இருந்த என் திரு வாழ் மார்பற்கு என் திறம் சொல்லார்
-—திருவாய்-8-3-7–என்ற
திருப் பரிசாரத்தில் காணப் படும் என்கை —

(ஸ்ரம மனம்‌ சூழும்‌ ஸெளகுமார்ய ப்ரகாமம்‌) பணியா வமரர்‌ இத்யாதி. “திரு நீல மணியார்‌ மேனியோடு என்‌ மனம் சூழ வருவாரே (திருவாய்மொழி 8-3-6) என்று அந்த சேஷ்டிதத்தாலுள்ள ஸ்ரமம்‌ இவர்‌ நெஞ்சிலே சூழ வரும்படியான ஸெளகுமார்யம்‌ “ஆழியும்‌ சங்கும்‌ சுமப்பார் தாம்‌” (திருவாய்மொழி 8-3-3) என்று அப்ராக்ருத விக்‌ரஹத்தினுடைய ஸெளகுமார்ய ப்ரகாஸம்‌-

பணியாவமரர் பணிவும் பண்பும் தாமேயாம்
அணியாராழியும் சங்கமுமேந்துமவர் காண்மின்
தணியா வெந்நோய் உலகில் தவிர்ப்பான் திரு நீல
மணியார் மேனியோடு என் மனம் சூழ வருவாரே
–8-3-6–பணியாவமரர் -வேறே சிலரை பணிய சம்பாவனை இல்லாத நித்ய ஸூ ரிகள் -முன்பு அஸேவ்யர் காலிலே குனிந்து ஒரு நாளிலே அனுகூலித்து-அழுக்கு உடம்பு எச்சில் வாய் என்று அனுதபித்து -பின்பு அவன் காலிலே குனிந்தவர்கள் அல்லர் –பணிவும் பண்பும் தாமேயாம்-அவர்கள் பணிவுக்கும் ஞானாதி குணங்களுக்கும் தாமே விஷயமாய் இருக்குமவர்–திரு நீல-மணியார் மேனியோடு -நீல மணி போலே சிரமஹரமாய் ஸூகுமாரமான வடிவோடே -இங்கே வர வேண்டினால் அவ்வடிவைக் கொண்டு வர வேணுமோ
என் மனம்-அந்த ஸூகுமாரமான வடிவோடே சம்சாரத்தில் உலவா நின்றான் என்று அறிந்த என் மனசானது-சூழ வருவாரே--சுழன்று வரும் படி வருகிறவர் –தணியா வெந்நோய் –தவிர்ப்பான் -உலகில் -வருவார் என்றுமாம் –

வருவார் செல்வார் வண் பரிசாரத்து இருந்த என்
திரு வாழ் மார்வற்கு என் திறம் சொல்லார் செய்வதென்
உருவார் சக்கரம் சங்கு சுமந்திங்கும்மோடு
ஒருபாடு உழல்வான் ஓரடியானும் உளன் என்றே-8-3-7-
–அழகு மிக்கு இருந்துள்ள ஆழ்வார்களை சாதரமாக தரித்து என்னுதல் -திரு மேனிக்கு எல்லாம் வேறு ஆபரணம் வேண்டாதே தானே ஆபரணமாக போரும்படியான ஆழ்வார்கள் என்னுதல் -இங்கு -ஒரு நாடாக பரியும் தேசம் இ றே அது -பரிவாரும் இன்றிக்கே இருக்கும் தேசத்திலே-உம்மோடு-ஒருபாடு உழல்வான்-இடைவிடாதே ஒரு பார்ஸ்வத்தை பற்றி திரிவான் -ஒரு பார்ஸவத்துக்கு இளைய பெருமாள் உளர் இறே-ஓரடியானும் உளன் என்றே–அநந்ய பரனாய் இருப்பான் ஒருவன் உளன் என்று -ச மஹாத்மா ஸூ துர்லப-என்று கை வாங்கி இருப்பர் –ஒருவன் உளன் என்று என் திறம் சொல்லார் -செய்வது என் –

ஆளுமாளார் ஆழியும் சங்கும் சுமப்பார் தாம்
வாளும் வில்லும் கொண்டு பின் செல்வார் மற்றில்லை
தாளும் தோளும் கைகளை யாரத் தொழக் காணேன்
நாளும் நாளும் நாடுவன் அடியேன் ஞாலத்தே–8-3-3—ஆபரணமான திவ்யாயுதங்கள் -அவன் ஸுகுமார்யத்தாலே மலை எடுத்தால் போலே சுமையாய் தோற்றுகிறது இவர்க்கு -எதிரிகளுக்கு அஸ்திரமாய் -அனுபவிப்பார்க்கு ஆபரணமாய் இருக்கிறதை -ஸுகுமார்யத்தை அனுசந்தித்த இவருக்கு மலையாய் இருக்கிறது-தாம் -தம்மைப் பார்த்துக் கொள்ள வேண்டாவோ -எப்போதும் கை கழலா நேமியான் அன்றோ -நிரூபகங்கள் ஆனவை சுமையோ என்ன -அது தானே செய்கிறது –
வாளும் வில்லும் கொண்டு பின் செல்வார் மற்றில்லை-வாளும் வில்லும் கொண்டு பின்னே செல்லுகைக்கு இளைய பெருமாள் மாத்திரம் ஒருவர் உண்டானாலோ –-ஆளுமாளார் ஆழியும் சங்கும் சுமப்பார் தாம்-வாளும் வில்லும் கொண்டு பின் செல்வார் மற்றில்லை-என்கிறது பரிவரான நீர் இவற்றுக்கு ஆள் அன்றோ என்று தம்மை ஏவுகைக்காக –

மஹா மதிகள் அச்சம் கெட்டு அமரும் சௌர்யாதிகள் சிற்றாறிலே கொழிக்கும் .–சூரணை -175-

மஹா மதிகள்-அதாவது-சம்ஸ்பருசன்னாசனம் ஸௌரே விதுரஸ்ஸ மஹாமதி -பாரதம் -உத்யோக பர்வம் –– என்கிறபடியே – சௌகுமார்ய அனுசந்தானத்தாலே அவனுக்கு எங்கே என்ன தீங்கு வருகிறதோ என்று – அஸ்தானே பய சங்கை பண்ணும் மஹாமதிகள்– அச்சம் கெட்டு-அதாவது
வார் கடா வருவி யானை –கஞ்சனைத் தகர்த்த சீர் கொள் சிற்றாயன் திருச் செங்குன்றூரில் திருச் சிற்றாறு எங்கள் செல் சார்வு-திருவாய்-8-4-1 என்று தங்களுக்கு நிர்பய ஸ்தானமான புகலாக நினைத்து பயம் கெட்டு –(அங்கு அமரர் பேண-அவர் நடுவே வாழ் திரு மாற்கு இங்கு ஓர் பரிவர் இல்லை என்று அஞ்ச –திருவாய் மொழி நூற்று அந்தாதி -73-என்றும்-வாராமல் அச்சம் இனி மால் தன் வலியினையும் சீரார் பரிவருடன் சேர்த்தியையும் – பாரும் என தான் உகந்த மாறன் –திருவாய் மொழி நூற்று அந்தாதி -அமரும்-அதாவது-திரு சிற்றாற்றங்கரையானை –முக்கண் அம்மானை நான் முகனை அமர்ந்தேன்-திருவாய்-8-4-10–என்று ப்ரஹ்ம ருத்ரர்களுடைய சத்தாதிகள் ஸ்வாதீனமாம் படி இவர்களை பிரகாரமாக உடைய பெருமையை உடையவனாய் வைத்து ஸூலபனாய் வந்து நிற்கும் அவனை – அவனுக்கு என் வருகிறதோ -என்று பட்ட மறுகுதல் தீர்ந்து -கிட்டி அனுபவிக்கப் பெற்றேன் என்று ஹ்ருஷ்டராம் படியான —சௌர்யாதிகள்-அதாவது-வார் கடா வருவி-இத்யாதியாலே சொன்ன குவலயாபீட சாணூர முஷ்டிக கம்சாதி நிரசன பிரகடித ஸௌர்யாதிகள்-சிற்றாறிலே கொழிக்கும் –-அதாவது-திருச் செங்குன்றூரிலே திருச் சிற்றாறு என்கிற திருப் பதியில்- திரு ஆற்றுக்குளே மணி முக்தாதிகள் கரையிலே கொழித்து தோற்றுமா போலே பிரகாசிக்கும் என்கை —ஸௌர்யாதிகள் -என்ற இடத்தில்

ஸம்ஸ்ப்ருயந்நாஸநம்‌ சவ்ரே: விதுர: ஸ: மஹாமதி:” (பார. உத்‌). இப்படி ஸர்வஸக்திக்கும்‌ பரியும்படியான மஹாமதிகள்‌ ஸெளகுமார்ய அநுஸந்தாநத்தாலே இவனுக்கு எங்ஙனே என்ன தீங்கு வருகிறதென்று அஞ்சுகிறவிவர்‌ “எங்கள்‌ செல் சார்வே” (திருவாய்மொழி 8-4-1) என்று எங்களைப்‌ போல்வார்க்கு நிர்பயஸ்த்தா மென்று அச்சம்‌ கெட்டு “நான்முகனை அமர்ந்தேனே (திருவாய்மொழி 8-4-10) என்று இவர்‌ அமர்ந்து ஸுஸ்திரராம்படியான “வார்கடாவருவி” (திருவாய்மொழி 8-4-1) என்று தொடங்கி, குவலயாபீட நிரஸநாதி களாலுண்டான (சவ்ர்யாதிகள்‌) சவ்ர்யாதிகள்‌ திருச்செங்குன்றூரிலே திருச்சிற்றாற்றிலே ஆறு என்கிற ஸமாதி யாலே கொழிக்கும்‌-என்கிறார்‌.

வார்கடா வருவி யானை மா மலையின் மருப்பிணைக் குவடிறுத்துருட்டி
ஊர் கொள் திண் பாகனுயிர் செகுத்து அரங்கின் மல்லரைக் கொன்று சூழ் பரண் மேல்
போர் கடா வரசர் புறக்கிட மாடமீ மிசைக் கஞ்சனைத் தகர்த்த
சீர்கொள் சிற்றாயன் திருச் செங்குன்றூரில் திருச் சிற்றாறு எங்கள் செல் சார்வே
–8-4-1-புலி நின்ற தூறு போலே பிரதிகூலருக்கு அஞ்ச வேண்டும் வூர்-எங்கள் செல் சார்வே–மஹா ராஜர் -பெரியாழ்வார் -ஸ்ரீ விதுரர் -தாம் -இங்கனம் ஒத்த பரிவர்களுக்கு -நிர்ப்பய ஸ்தானம் என்று புகும் புகல்–கீழ் இவருக்கு ஓடின பயம் நீங்கிற்று என்னுமது இயல் தழைப்பிலே தெரிந்து இருக்கிற படி கண்டதே

அமர்ந்த நாதனை யவரவராகி அவரவர்கருளும் அம்மானை
அமர்ந்த தண் பழனத் திருச் செங்குன்றூரில் திருச் சிற்றறாங்கரையானை
அமர்ந்த சீர் மூவாயிரவர் வேதியர்கள் தம்பதி அவனிதேவர் வாழ்வு
அமர்ந்த மாயோனை முக்கண் அம்மானை நான்முகனை யமர்ந்தேனே–8-4-10-–இத்தேசத்தில் பொருந்தி வர்த்திக்கிற ஆச்சர்யமான அழகை யுடையவனை -ப்ரஹ்மாதிகளுடைய சத்தாதிகளுக்கு நிர்வாஹகன் ஆனவனை -ப்ரஹ்ம ருத்ராதிகளை பலகாலும் சொல்லுகிறது -இவனுடைய சர்வ நிர்வாஹகத்வம் தோற்றுகைக்காகவும்-நிர்வாஹயங்களில் ஒன்றால் நலிவு யுண்டாக்க கூடாது என்கைக்காகவும்
யமர்ந்தேனே-ஸர்வேச்வரத்வத்தை அனுசந்தித்து -கீழ் ஓடின பயம் தீர்ந்து -அவனைக் கிட்டப் பெற்றேன் -என்கிறார் –

சாத்ய ஹ்ருதிஸ்னாயும் சாதனம் ஒருக்கடுக்கும் க்ருதஜ்ஞதா கந்தம் தாயப் பதியிலே–சூரணை -176-

(ஒருக்கடுத்தல் -ஒருங்க அடுத்தல் -ஆழ்வார் திரு உள்ளத்தில் நித்ய வாஸம் போலவே-திவ்ய தேசத்திலும் ஆசை கொண்டு நித்ய வாஸம் என்றவாறு–திருமாலிருஞ்சோலை மலையே என்கிறபடியே உகந்து அருளினை நிலங்கள் எல்லாவற்றிலும் பண்ணும் விருப்பத்தை-இவனுடைய சரீர ஏக தேசத்திலே பண்ணும் -அங்குத்தை வாஸம் சாதனம் -இங்குத்தை வாஸம் சாத்யம்- கல்லும் கனைகடலும் என்கிறபடி இது சித்தித்தால் அவற்றில் ஆதரம் மட்டமாய் இருக்கும் – இளம் கோயில் கை விடேல் என்று இவன் பிரார்த்திக்க வேண்டும்படியாய் இருக்கும் -ஸ்ரீ வசன பூஷணம் )

அதாவது-சாத்யம் கைப் பட்டால் சாதனத்தில் இழிவார் இன்றிக்கே இருக்க –-திருக் கடித் தானமும் என்னுடைச் சிந்தையும் ஒருக்கடுத்து உள்ளே உறையும் பிரான்-திருவாய்-8-6-2- -என்று சாத்தியமான ஆழ்வார் திரு உள்ளத்திலே வாஸம் லபித்தது இருக்கச் செய்தேயும் ,-இத்தைப் பெற்றது அத் தேசத்தில் நிலையாலே அன்றோ என்று சாதனமான திருக் கடித் தானத்தையும் அடுத்து பிடித்து வர்த்திக்கும் படியான க்ருதஜ்ஞாத பரிமளம் — திருக் கடித்தான நகரும் தான தாயப் பதி—திருவாய்-8-6-8-என்று
தனக்கு தாயப் ப்ராப்தமான ஸ்தானமாக நினைத்து இருக்கும் திருக் கடிதானத்தில் என்கை ..
க்ருதஜ்ஞதா கந்தம் -என்றது-கடித்தானம்-என்று மணத்தை உடைத்தான ஸ்தானம் என்கையாலே 

திருக் கடித்தானமும்‌ என்னுடைச்‌ சிந்தையும்‌ ஒருக்கடுத்‌துள்ளே உறையும்‌ பிரான்‌ கண்டீர்‌ (திருவாய்மொழி 8-6-2) என்று ஸாத்‌யமான ஆழ்வாருடைய திருவுள்ளம்‌ தனக்கு இருப்பிடமாக உடையனாயிருக்கச்‌ செய்தேயும்‌ இவ்வா ழ்வார்‌ திருவுள்ளத்தைப்‌ பெறுகைக்கு ஸாதநமான திருக்கடித்தானத்தையும் -அடுத்துப் பிடித்து வர்த்திக்கும்படியான (க்ருதஜ்ஞதா கந்தம்‌ தாயப்பதியிலே) திருக்கடித்தான நகரம்‌ “தனதாயப்பதி” (திருவாய்மொழி 8-6-8) என்று அவனுக்கு தாயப்ராப்தமான திருக்கடித்தானத்திலே என்கிறார்‌. கடித்தானம்‌ வாசப் பொழில்‌ என்றும்‌ சொல்லுகையாலே கந்தமென்கிறது.

திருக் கடித்தானமும் என்னுடைச் சிந்தையும்
ஒருக்கடுத்துள்ளே உறையும் பிரான் கண்டீர்

செருக்கடுத்தன்று திகைத்த வரக்கரை
உருக்கெட வாளி பொழிந்த வொருவனே–8-6-2-ஒருங்கவடுத்து -அதாவது ஓக்க நினைக்கை -திருப்பதியையும் என் ஹிருதயத்தையும் ஓக்க ஆதரித்து –

தான நகர்கள் தலைச் சிறந்து எங்கும்
வானிந்நிலம் கடல் முற்றும் எம் மாயற்கே
ஆனவிடத்தும் என்நெஞ்சம் திருக் கடித்
தான நகரும் தனதாய்ப் பதியே–8-6-8-
–னக்கு தாய ப்ராப்தமான ஸ்த்தானமாக விரும்பி இரா நின்றான் –

அவகாஹித்தாரை அனந்யார்ஹமாக்கும் நாயக லஷணம் வளம் புகழு மூரிலே குட்டமிடும்–சூரணை -176-

அவகாஹித்தாரை-அதாவது-அப்பன் திருவருள் மூழ்கினள்–திருவாய்-8-9-5-என்று தன் பிரசாதத்தாலே மருனனைய அவகாஹித்தாரை –-அனந்யார்ஹமாக்கும்-அதாவது- அருமாயன் பேர் அன்றி பேச்சு இலள்–திருவாய்-8-9-1–என்றும் –திருப் புலியூர் புகழ் அன்றி மற்று –பரவாள் இவள் நின்று இராப் பகல் -திருவாய்-8-9-9-–என்றும் – திரு புலியூர் நின்ற மாயப் பிரான் திரு அருளாம் இவள் நேர் பட்டது -திருவாய்-8-9-10–என்னும் படி அனந்யார்ஹம் ஆக்குமதாய் –நாயக லஷணம்--அதாவது-
கருமாணிக்க மலை மேல் மணித் தடம் தாமரைக் காடுகள் போல் -திருவாய்-8-9-1–என்றும் –
துன்னு சூழ் சுடர் ஞாயிறும் அன்றியும் பல் சுடர்களும் போல்-திருவாய்-8-9-2- -இத்யாதிகளால் சொன்ன
அவயவ சோபை ஆபரண சோபை முதலான நாயக லஷணம் ..-வளம் புகழு மூரிலே குட்டமிடும்--அதாவது-திருப் புலியூர் வளம் புகழும் -திருவாய்-8-9-3-என்று இவர் கொண்டாடும் படியான ஐஸ் வர்யத்தை உடைய திருப் புலியூரிலே பூரணமாம் என்கை ..-குட்டமிடும் -என்றது -குட்ட நாடு -என்னும் அத்தை நினைத்து ..

“அப்பன்‌ திருவருள்‌ மூழ்கினளே” (திருவாய்மொழி 8-9-5) என்று இப்படித்‌ தன்னுடைய க்ருபையிலே மறு நனைய மூழ்கினாரை “அருமாயன்‌ பேரன்றிப்‌ பேச்சிலள்‌” (திருவாய்மொழி 8-9-1) என்றும்‌, “திருப்புலியூர்‌ புகழன்றி மற்று பரவாளிவள்‌’ (திருவாய்மொழி 8-9-9) என்றும்‌ “மாயப்பிரான்‌ திருவருளாம்‌ இவள்‌ நேர்பட்டதே” (திருவாய்மொழி 8-9-10) என்றும்‌ சொல்லுகிறபடியே அநந்யார்ஹராக்கும்‌ அவயவ ஸோபை, ஆபரண ஸோபை, தொடக்கமான நாயக லக்ஷணம்‌; “திருப்புலியூர்‌ வளம்‌ புகழும்‌” (திருவாய்மொழி 8-9-3) என்று இவர்‌ கொண்டாடும்படியான ஐஸ்வர்யத்தை யுடைத்தான திருப்புலியூரிலே; குட்ட நாடு என்கையாலே குட்டமிடும்‌ என்கிறார் –

புனையிழைகள் அணிவும் ஆடையுடையும் புது கணிப்பும்
நினையும் நீர்மையதன்று இவட்கிது நின்று நினைக்கப் புக்கால்
சுனையினுள் தடந்தாமரை மலரும் தண் திருப் புலியூர்
முனைவன் மூவுலகாளி அப்பன் திருவருள் மூழ்கினளே–8-9-5–ஐஸ்வர்யத்தாலும் குறைவறப் பெற்றேன் -என் தன் ப்ரீதியால் சொல்லுகிறாள் -அவனுடைய –திருவருள் மூழ்கினளே––கடல் கொண்ட வஸ்துவை யன்றோ நீங்கள் மீட்கப் பார்க்கிறது-

கருமாணிக்க மலை மேல் மணித் தடந்தாமரைக் காடுகள் போல்
திரு மார்பு வாய் கண் கை உந்தி காலுடை யாடைகள் செய்ய பிரான்
திருமால் எம்மான் செழு நீர் வயல் குட்ட நாட்டுத் திருப் புலியூர்
அருமாயன் பேரன்றிப் பேச்சிலள் அன்னைமீர் இதற்கு என் செய்கேனோ–8-9-1–திருப் புலியூரில் வர்த்திக்கிற பெறுதற்கு அரிய ஆச்சர்ய குண சேஷ்டிதங்களை யுடையவனுடைய -திரு அயோத்யையில் உள்ளார்க்கு சக்கரவர்த்தி திரு மகனை போலே யாயிற்று இவனும் –பேரன்றிப் பேச்சிலள்-பர வ்யூஹ விபவங்களிலே திரு நாமங்களை சொல்லுகிறிலள்-

பரவாள் இவள் நின்று இராப்பகல் பனி நீர் நிறக் கண்ணபிரான்
விரவாரிசை மறை வேதியரொலி வேலையின் நின்று ஒலிப்ப
கரவார் தடந்தொறும்தாமரைக்கயம் தீவிகை நின்றலரும்
புரவார் கழனிகள் சூழ் திருப் புலியூர்ப் புகழ் அன்றி மற்றே–8-9-9—பரவாள் இவள் நின்று இராப்பகல்-இவள் அடைவு கெட பேசா நின்றாள் -இராப்பகல் பேசா நின்றாள் -இதுக்கு வேறு பிரமாணம் தேட வேணுமோ -இவள் யுக்தியே அன்றோ பிரமாணம் –திருப் புலியூர்ப் புகழ் அன்றி மற்றே–வேத கோஷமும் வேதார்த்த விசார யுக்தர் கோஷமும் -அலர்ந்த தாமரை பொய்கைகளாலே அலங்க்ருதமான வயலுமான  திருப் புலியூர் புகழ் அன்றி மற்று பரவாள் இவள் நின்று இராப்பகல்-

அன்றி மற்றோர் உபாயம் என் இவள் அம்தண் துழாய் கமழ்தல்
குன்ற மா மணி மாட மாளிகைக் கோலக் குழாங்கள் மல்கி
தென் திசைத் திலதம் புரை குட்ட நாட்டுத் திருப் புலியூர்
நின்ற மாயப் பிரான் திருவருளாம் இவள் நேர் பட்டதே
–8-9-10—தெற்கில் திக்குக்கு திலகம் போலே இருக்கிற குட்ட நாட்டுத் திருப் புலியூரில் நின்று அருளின ஆச்சர்ய பூதன் -அவனுக்கு இவள் போராள் -என்னும் படி குணாதிக்கண் -இவளுக்கு அவன் போரான் என்று அன்றோ நீங்கள் இருக்கிறது அவனுக்கு இவள் போராள் என்று அன்றோ அவ் வூரார் வார்த்தை –-திருவருளாம்-இவள் நேர் பட்டதே–அவன் பிரசாத்துக்கு சத்ருசமான பாத்ரமானவளாக வேணும் –அன்றி மற்று ஓர் உபாயம் என் -இவள் அம்தண் துழாய் கமழ்தல்

அன்னைமீரிதற் கென் செய்கேன் அணி மேருவின் மீதுலவும்
துன்னு சூழ் சுடர் நாயிறும் அன்றியும் பல் சுடர்களும் போல்
மின்னு நீண் முடி யாரம் பல்கலன் தானுடை யெம்பெருமான்
புன்னை பூம் பொழில் சூழ் திருப் புலியூர் புகழும் இவளே–8-9-2—அழகிதான மேருவின் மேல் சஞ்சரியா நிற்பானுமாய்-காண்கிற அளவன்றிக்கே நெருங்கி சூழ்ந்த தேஜஸ்ஸை யுடைய வி லஷணனான ஆதித்யனும்-அன்றியும் பல் சுடர்களும் போல்-மற்றும் அப்படியே இருக்கிற நக்ஷத்ராதி தேஜோ பதார்த்தங்களும் போலே-

போக்ய பாக த்வரை தெளிந்த சந்தைக்கு முன்னில் மூன்றிலும் ப்ரகடம் —சூரணை -177-

போக்ய பாக த்வரை-அதாவது-பசி கனத்தவன் அன்னம் பக்குவம் ஆவதற்கு முன்னே பதற்றத்தாலே அதுக்கு அணித்தாக வந்து கிடப்பது -இருப்பது-நிற்பது -ஆம் போலே – போக்ய பூதரான ஆழ்வாருக்கு பரம பக்தி ஆகிற பாகம் பிறக்கும் அளவுக்கும் அவனுக்கு உண்டான த்வரை –தெளிந்த சந்தைக்கு முன்னில் மூன்றிலும் ப்ரகடம் — தெளிந்த என் சிந்தை அகம் கழியாதே -திருவாய்-9-2-4–என்கிற சந்தைக்கு முன் சொன்ன புளிக்குடி கிடந்தது வரகுண மங்கை இருந்து வைகுந்தத்துள் நின்று –என்று
கிடப்பது இருப்பது நிற்பதான – திருப் புளிங்குடி–திரு வரகுணமங்கை –திரு வைகுந்தம் -ஆகிற திருப்பதி மூன்றிலும் தெரியும் என்கை -(என்னில் முன்னம் பாரித்துத் தான் என்னை முற்றப் பருகினான்-திருவாய் -9-6 10—என்று ஆழ்வாரை போக்யமாக கொண்டமை அருளிச் செய்கிறார் )

பசித்த புருஷன்‌ அந்நம்‌ பக்வமாமளவும்‌, நிற்பது, இருப்பது, கிடப்பதாமாபோலே இப்படி அநந்யார்ஹராகையாலே போக்‌யமான ஆழ்வார்க்கு பரமபக்தியாகிற பாகம்‌ பிறக்குமளவும்‌ போக்தாவான ஸர்வவேஸ்வரனுக்குண்டான த்வரை “தெளிந்த என்‌ சந்தை” என்கிற சந்தைக்கு முன்னில்‌ “புளிங்குடிக்கிடந்து வரகுணமங்கையிருந்து வைகுந்தத்துள்‌ நின்று” (திருவாய்மொழி 9-2-4) என்கிற திருப்பதி மூன்றிலும்‌ கிடப்பது இருப்பது நிற்பதாகையாலே ப்ரகடமாய்த்‌ தோற்றுமென்கிறார் –

புளிங்குடிக் கிடந்து வர குணமங்கை இருந்து வைகுந்தத்துள் நின்று
தெளிந்த என் சிந்தை அகம் கழியாதே
என்னை ஆள்வாய் எனக்கு அருளி
நளிர்ந்த சீர் உலகம் மூன்றுடன் வியப்ப நாங்கள் கூத்தாடி நின்று ஆர்ப்பப்
பளிங்கு நீர் முகிலின் பவளம் போல் கனி வாய் சிவப்ப நீ காண வாராயே–9-2-4—திருப் புளிங்குடியிலே -கிடந்ததோர் கிடக்கை -என்னும் அழகைக் காட்டும் -திரு வர குண மங்கையிலே -பிரான் இருந்தமை காட்டினீர் -என்னும் இருப்பில் அழகைக் காட்டியும் -ஸ்ரீ வைகுண்டத்தில் -நிலையார நின்றான் -என்னும் நின்ற அழகைக் காட்டியும் -அன்றோ என்னை புகுர நிறுத்திற்று -இவை எல்லாம் நான் இரக்கவோ செய்தது -அயோக்கியன் என்று அகலாத படி கண்கள் சிவந்திலே என் ஹிருதயம் தெளிந்தவாறே -அத்தைக் கை விடாதே நிரந்தர வாஸம் பண்ணி –

வாரிக் கொண்டு உன்னை விழுங்குவன் காணில் என்று
ஆர்வுற்ற என்னை ஒழிய என்னில் முன்னம்
பாரித்துத் தான் என்னை முற்றப் பருகினான்

கார் ஒக்கும் காட் கரை அப்பன் கடியனே–9-6-10—நான் பாரித்த அளவும் அன்றிக்கே நான் பாரித்த காலத்துக்கு முன்பே பாரித்து –ஆச்சார்ய விஷயீ காரத்துக்கு பின்பு இ றே இவருடைய பாரிப்பு -/ சம்பந்தத்துக்கு திரஸ்கார ஹேது இல்லாமையால் -அவனுடைய பாரிப்பு சத்தா ப்ரயுக்தம் இறே
தான் என்னை–விபுவாய் ஸ்வதந்த்ரனான தான் -அணு பரிமாணனாய் பரதந்த்ரனான என்னை –
முற்றப் பருகினான்-தன் குண சேஷ்டிதாதிகளைக் காட்டி -என்னை நீராக்கி -நிச்சேஷமாகப் பருகினான் –வஸசா சாந்வயித்வைநம் லோச நாப்யாம் பிபன்நிவ -என்கிறபடியே -இத்தலையை அழித்துப் பரிமாறினான் -என்கிறபடியே –விழுங்குமவன் காணில் -என்று இறே இவர் பாரித்தது-

போகத்தில் தட்டு மாறும் சீலம் காட்கரையிலே கரை அழிக்கும்–சூரணை -178-

போகத்தில் தட்டு மாறும் சீலம்-அதாவது-இப்படி போக்ய பூதரான ஆழ்வாருடன் கலந்து பரிமாறும் இடத்தில் –-ஆள் கொள்வான் ஒத்து என் உயிர் உண்ட மாயன் -திருவாய்-9-6-7–என்றும் –-ஆர் உயிர் பட்டது எனது உயிர் பட்டது -திருவாய்-9-6-9–என்றும் பேசும்படி அத் தலை இத் தலையாய் சேஷி சேஷ பாவம் மாறாடும் சீல குணம் –காட்கரையிலே கரை அழிக்கும்--அதாவது–திரு காட்கரை மருவிய மாயன் தன் மாயம் நினை தொரு-திருவாய்-9-6-1- -என்று வித்தராய்ப் பேசின திருகாட்கரையிலே கரை அழியப் பெருகும் என்கை — கரை அழிக்கும் என்கிறது -காட்கரை -என்கிற சமாதியாலே ..

இப்படி போக்‌யமான ஆழ்வாரோடே கலந்து பரிமாறுமிடத்து, “ஆட்கொள்வானொத்து என்‌ உயிருண்ட மாயன்‌” (திருவாய்மொழி 9-6-7) என்றும்‌, “ஆருயிர்‌ பட்டது எனதுயிர்‌ பட்டது” (திருவாய்மொழி 9-6-9) என்றும்‌, “தான்‌ என்னை முற்றப்‌ பருகினான்‌” (திருவாய்மொழி 9-6-10) என்றும்‌, அத்தலை யித்தலையாய்‌ ஸேஷ ஸேஷி பாவம்‌ மாறாடும்படியான ஸீலம்‌ திருக்காட்கரையிலே நிற்கிற நிலையிலே, கரை என்ற ஸமாதியாலே இருகரையுமழியப்‌ பெருகும்‌ என்கிறார் –-

காட்கரை ஏத்தும் அதனுள் கண்ணா என்னும்
வேட்கை நோய் கூர நினைந்து கரைந்து உகும்
ஆட் கொள்வான் ஒத்து என் உயிர் உண்ட மாயனால்
கோட் குறை பட்டது என் ஆர் உயிர் கோள் உண்டே–9-6-7—அடிமை கொள்வாரைப் போலே புகுந்து – என் உயிர் உண்ட மாயனால்-என்னை வெறும் தரை யாக்கின ஆச்சர்ய பூதனாலே -கீழே திருவருள் என்று மறைத்துச் சொன்ன வார்த்தையை வெளியிடுகிறார் -கிட்டின போது தாழ நின்று மின்மினி பரக்க பரிமாறும் ஆச்சர்யம்-

ஆர் உயிர் பட்டது எனது உயிர் பட்டது
பேர் இதழ்த் தாமரைக் கண் கனிவாயது ஓர்
கார் எழில் மேகம் தென் காட் கரை கோயில் கொள்
சீர் எழில் நால் தடம் தோள் தெய்வ வாரிக்கே–9-6-9—நான் பட்ட பாட்டை நித்ய ஸூரிகளில் சிலர் பட்டார் யுண்டோ -பகவத் குணங்களுக்கு அபூமியாய் இருக்கிற சம்சாரத்தில் நான் பட்ட பாடு நித்ய விபூதியில் உள்ளார் பட்டார்களோ –இங்கு எனது உயிர் பட்டது –அங்கே ஆருயிர் பட்டது –என்று அருளிச் செய்வர் எம்பெருமானார் -நவோடையான ஸ்த்ரீக்கு அனுபவத்தில் புதுமையாலே ஆர்த்தி மிக்கு இருக்கும் இறே -என்று நம்பிள்ளைக்கு நஞ்சீயர் அருளிச் செய்வர் –

உருகுமால் நெஞ்சம் உயிரின் பரம் அன்றி
பெருகுமால் வேட்கையும் என் செய்கேன் தொண்டனேன்
தெருவு எல்லாம் காவி கமழ் திருக் காட்கரை
மருவிய மாயன் தன் மாயம் நினைதொறே–9-6-1-
-பரத்வத்தில் காட்டிலும் அவதாரத்தில் காட்டிலும் ஏற்றம் சொல்லுகிறது –பரத்வம் நெடும் கை நீட்டு -அவதாரம் காலாவதியை யுடைத்தது-மாயன் -ஆச்சர்யமான ஸுந்தரியாதிகளை யுடையவன் –-தன் மாயம் -கிட்டின போது தாழ நின்று பரிமாறின படி-நினைதொறே–ஊரை நினை தோறும் / ஸுந்தர்யத்தை நினைதொறும் / ஒரு ஊரும் ஒரு வடிவும் இல்லாதாரைப் போலே தாழ நின்ற சீலத்தை நினைத்த தோறும் /-பஹு பிரகாரத்தாலே அனுபவிப்பிக்க வல்லவன் அவன் -ஒன்றிலே கால தத்வம் உள்ளதனையும் கால் தாழ்ந்து புதியராய் அனுபவிக்க வல்லார் இவர் -அப்பொழுதைக்கு அப் பொழுது என்னாரா வமுதம் -என்றவர் இறே –

வாரிக் கொண்டு உன்னை விழுங்குவன் காணில் என்று
ஆர்வுற்ற என்னை ஒழிய என்னில் முன்னம்
பாரித்துத் தான் என்னை முற்றப் பருகினான்

கார் ஒக்கும் காட் கரை அப்பன் கடியனே–9-6-10—என்னில் முன்னம்-பாரித்துத்--நான் பாரித்த அளவும் அன்றிக்கே நான் பாரித்த காலத்துக்கு முன்பே பாரித்து –ஆச்சார்ய விஷயீ காரத்துக்கு பின்பு இறே இவருடைய பாரிப்பு -/சம்பந்தத்துக்கு திரஸ்கார ஹேது இல்லாமையால் -அவனுடைய பாரிப்பு சத்தா ப்ரயுக்தம் இறே-தான் என்னை–விபுவாய் ஸ்வதந்த்ரனான தான் -அணு பரிமாணனாய் பரதந்த்ரனான என்னை –முற்றப் பருகினான்-தன் குண சேஷ்டிதாதிகளைக் காட்டி -என்னை நீராக்கி -நிச்சேஷமாகப் பருகினான் -வஸசா சாந்வயித்வைநம் லோச நாப்யாம் பிபன்நிவ -என்கிறபடியே -இத்தலையை அழித்துப் பரிமாறினான் -என்கிறபடியே –விழுங்குமவன் காணில் -என்று இறே இவர் பாரித்தது-

மஹாத்மாக்கள் விரஹம் சஹியாத மார்த்த்வம் வளத்தின் களத்தே கூடு பூரிக்கும் .-சூரணை-179-

(இங்கு திவ்யாத்ம ஸ்வரூப மார்த்வம் -கீழே திவ்ய மங்கள விக்ரஹ மார்த்வம்-வளம் -செல்வம் -அடியாருக்கு செல்வம் -கூடு பூரிக்கும் -நிறைந்து இருக்கும் )

மஹாத்மாக்கள் விரஹம் சஹியாத மார்த்த்வம்-அதாவது-தமரோடு அங்கு உறைவார்க்கு—திருவாய்-9-7-2-என்று-தம் பரிஜனங்களோடே அங்கே நித்ய வாஸம் பண்ணுகிறவர்க்கு என்கிற படி –சக்ருத் த்வதாகார விலோகநாசயா த்ருணீக்ருதா நுத்தம புக்தி முத்திபி மஹாத்மபிர் மாமவலயோக்யதாம் நய க்ஷணே பிதேயத் விரஹோதி துஸ் ஸஹ -ஸ்தோத்ர ரத்னம் -55- -என்கிறபடியே – தம்முடைய விக்ரகத்தை ஒருகால் காண வேணும் என்னும் ஆசையினால்- அநுத்தமான போக மோஷங்களையும் த்ருணீகரித்து இருக்கும் மஹாத்மாகளோட்டை விரஹம் சகியாமை யாகிற மார்த்த்வம்-
வளத்தின் களத்தே கூடு பூரிக்கும்
-அதாவது-மூழிக் களத்து வளத்தினை-பெரிய திருமடல் -129- விளக்கினை -என்றும் பாட பேதம் உண்டு என்பர் இதில் -என்று ஆஸ்ரிதருக்கு சம்பத்தாய் இருக்கும் ஸ்வபாவம் ஆனவன் திரு மூழிக் களத்தில் கூடுகட்டி நிற்கும் என்கை —கூடு பூரிக்கும் என்றது -களம்-என்கிற சமாதியாலே —

“தமரோடங்குறைவார்‌’ (திருவாய்மொழி 9-7-2) “என்றும்‌ “ஸக்ருத்வதாகாரேத்யாதி, க்ஷணேபி தே யத்‌ விரஹோ அதி துஸ்ஸஹ (ஸ்தோத்ர ரத்நம்‌ 55 -என்றும்‌ சொல்லுகிறபடியே தன்னுடைய விக்‌ரஹத்தை ஒருகால்‌ காண வேணுமென்கிற ஆசையாலே போக மோக்ஷங்களையும்‌ த்ருணீகரித்திருக்கிற மஹாத்மாக்களோட்டை விரஹம்‌ தனக்கு அதிதுஸ்ஸஹமாம்படியான அவனுடைய மார்தவம்‌, அதாகிறது நெஞ்சில்‌ மென்மை. மூழிக்களத்து விளக்கினை” (பெரியதிருமடல்‌ 129) என்கிற  திருமூழிக்களத்திலே நிற்கிற நிலையிலே, களம்‌ என்கிற ஸமாதியாலே கூடு பூரிக்கும்‌ என்கிறார் ––

நுமரோடும் பிரியாதே நீரும் நும் சேவலுமாய்
அமர் காதல் குருகினங்காள் அணி மூழிக் களத்து உறையும்
எமராலும் பழிப்புண்டு இங்கு என் தம்மா விழிப்புண்டு
தமரோடு அங்கு உறைவார்கு தக்கிலமே கேளீரே –9-7-2-–தம் பரிஜனங்களோடே அங்கே நித்ய வாஸம் பண்ணுகிற தமக்கு நாங்கள் ஆகோமோ என்று கேளுங்கோள்–தாமும் தமக்கு நல்லாருமாய் இருக்கிற இருப்புக்கு -அடியார்கள் –குழாங்களை –உடன் கூடுவது என்று கொலோ-என்று இருப்பார் ஆகாரோ -என்று கேளுங்கோள் —

ஸக்ருத் த்வதாகார விலோகநாஶயா
த்ருணீ க்ருதாந் உத்தம புக்தி முக்திபி: |
மஹாத்மபிர் மாம் அவலோக்யதாம் நய
க்ஷணே’பி தே யத்விரஹோ’திதுஸ்ஸஹ: ||-
-56–உன்னுடைய பிரிவைத் தாங்க முடியாதவர்களான, எத்தனை இன்பங்களும் மோக்ஷமும் பெற்றிருந்தாலும் உன்னுடைய திருமேனியை ஒரு முறை பார்ப்பதைக் கருதினால், அவற்றைப் புல்லைப் போல மதிப்பவர்களான சிறந்த வைஷ்ணவர்களின் கருணைப் பார்வைக்கு நான் இலக்காகும் தகுதியை எனக்குக் கொடு..

என்னை மனம் கவர்ந்த வீசனை வானவர் தம்
முன்னவனை மூழிக் களத்து விளக்கினை ———-129–திரு மூழிக் களத்திலே மிகவும் விளங்கா நின்று உள்ளவனை-வளத்தினை -என்று பாடமான போது-சம்பத் ஆனவனை -என்றுமாம் –

பிரிந்த துன்பக் கடல் கடத்தும் விஷ்ணு போத ஆந்ரு சம்ச்யம் நாவாயிலே நிழல் எழும் ..-சூரணை -180-

பிரிந்த துன்பக் கடல்-அதாவது-அன்புடையாரை பிரிவுறு நோய் -நாச்சியார் -5-4–என்றும் –துன்பக் கடல் புக்கு –நாச்சியார் -5-4-என்றும் சொல்லுகிறபடியே – எமராலும் பழிப் புண்டு அணி மூழிக் களத்து உறையும் –தம்மால் இழிப்புண்டு இங்கு என்–திருவாய்-9-7-2-என்றும் –தாம் தம்மைக் கொண்டு அகல்தல் தகவன்று என்று உரையீர் -திருவாய்-9-7-9–என்றும் , மிகமேனி மெலிவெய்தி மேகலையும் ஈடழிந்து என் அகமேனி ஒழியாமே-திரு மூழிக் களத்தார்க்கு தகவன்று என்று உரையீர்–திருவாய்-9-7-10- -என்றும்
இப்படி மென்மேலும் அழ விடும்படி தன்னைப் பிரிகையால் வந்த துக்க சாகரத்தை நிஸ்தரிப்பிக்கும் –கடத்தும் விஷ்ணு போத ஆந்ரு சம்ச்யம்-அதாவது-விஷ்ணு போதம் விநா நாந்யத் கிஞ்சிதஸ்தி பராயணம்-ஸ்ரீ விஷ்ணு தர்மம் -என்கிற விஷ்ணு போதமான அவனுடைய-ஆவா அடியான் இவன் என்று அருளாய்–திருவாய்-9-8-7- -என்று அபேஷிக்கலாம் படி இருக்கும் ஆஸ்ரித விஷய கிருபையாகிற ஆந்ருசம்ச்யம் – நாவாயிலே நிழல் எழும்- அதாவது-நாவாய் உறைகின்ற-திருவாய்-9-8-7- -என்று
அவன் நித்ய வாஸம் பண்ணுகிற திரு நாவாயிலே உள்ளு நிற்கிற வஸ்துவின் ஸ்வபாவம் இதுவோ என்று அறியலாம் படி அவ்வூரின் பேராலே நிழல் எழும் என்கை .

நாவாய் போலே இருக்கிற அவன் வர்த்திக்கும் தேசம் ஆகையாலே நாவாய் என்று ஊருக்கு பேராய் இருக்கிறது என்று கருத்து ..– விஷ்ணு போதத்வம் இத்தாலே பிரகாசித்தால் -அதுக்கு உடலான ஆந்ருசம்சயம் தன்னடடையே தோன்றும் இறே..காருண்யே நான்ரு ஸம்ஸயேன–ஸூந்தர -15-49–( கருணையாலும் அடியார்கள் விஷயத்தில் செய்யும் அருளாலும் )- கருணை வேறு அருள் வேறு என்பதற்கு பிரமாணம் -என்று விபஜித்துச் சொல்லி – ப்ரணஷ்டேதி காருண்யம் ஆஸ்ரிதேத் யாந்ருசம்ஸதா –ஸூ ந்தர –15-50–(பெண் காப்பாற்றப்பட வில்லையே என்ற கருணையாலும் நம்மை ஆஸ்ரிதவர்களைக் காப்பாற்ற வில்லையே என்கிற ஆந்ர் சம்ஸ்யத்தாலும் ஸ்ரீ ராமபிரான் வருந்தினார் ) -என்கையாலே .. ஆந்ரு சம்சயம் ஆவது -ஆஸ்ரித விஷய கிருபை- (நாவாய் உறைகின்ற நாரண நம்பீ ஆ ஆ அடியான் இவன் என்று அருளாயே -என்பதால் ஆந்ரு சம்ஸ்யம்-துன்பக்கடல் புக்கு வைகுந்தன் என்பதோர் தோணி பெறாது உழல்கின்றேன் -நாச்சியார் -படியே விஷ்ணு போதம் -விஷ்ணுவாகிற தோணி – ).

(பிரிந்த துன்பவித்யாதி ) “அன்புடையாரைப்‌ பிரிவுறுநோய்‌ துன்பக்‌ கடல்‌ புக்கு” நாச்சியார்‌ திருமொழி 5-4) என்றும்‌, ” யஸ்த்வயா ஸஹ ஸஸ்வர்க்கோ, நிரயோ யஸ்த்வயா விநா” (ரா.௮.30-18) என்கிறபடியே தன்னைப்‌ பிரிகையாகிற துக்க ஸாகரத்திலே அழுந்துமவர்களை “ஸம்ஸாரார்ணவ மக்‌நாநாம்‌ விஷயாக்ராந்த சேதஸாம்‌ விஷ்ணு போதம்‌ விநா நாந்யத்‌ கிஞ்சிதஸ்தி பராயணம்‌” (விஷ்ணு தர்மம்‌ என்கிறபடியே அக்கரைப் படுத்துவதான விஷ்ணு போதத்தினுடைய, “ஆவாவடியான்‌ இவனென்றருளாய்‌” (திருவாய்மொழி 9-8-7) என்கிற ஆந்ருஸம்ஸ்யம்‌ திருநாவாயிலே நிற்கிற நிலையிலே நிழலெழும்‌, “கொந்தார்‌ மலர்ச்‌ சோலைகள்‌ சூழ்‌” (திருவாய்மொழி 9-8-10) என்று சோலையைச்‌ சொல்லுகையாலே நிழலெழும்‌ என்கிறார் –

என்புருகி இனவேல் நெடும் கண்கள் இமை பொருந்தா பல நாளும்
துன்பக் கடல் புக்கு வைகுந்தன் என்பதோர் தோணி பெறாது உழல்கின்றேன்
அன்புடையாரைப் பிரிவுறு நோயது நீயுமறிதி குயிலே
பொன்புரை மேனிக் கருளக் கொடி யுடைப் புண்ணியனை வரக் கூவாய்–5-4-தோல் புரையே போகை அன்றிக்கே -எலும்பானதும் உருகி–அன்புடையாரைப் பிரிவுறு நோயது நீயுமறிதி குயிலே
பிரிவாற்றாமையாலே படுகிற வியசனம் நீ அறியாமை இல்லை இறே –-சேர இருக்கச் செய்தே நீயும் அறிதி என்னும் படி எங்கனே என்னில் சம்ஸ்லேஷம் ஆகில் விஸ்லேஷாந்தமாக அல்லது இராது என்று இருக்குமவள் ஆகையாலே சொல்லுகிறாள் – தனக்குத் துன்பக் கடலை விளைத்தான் இறே அவன்

நுமரோடும் பிரியாதே நீரும் நும் சேவலுமாய்
அமர் காதல் குருகினங்காள் அணி மூழிக் களத்து உறையும்
எமராலும் பழிப்புண்டு இங்கு என் தம்மா விழிப்புண்டு
தமரோடு அங்கு உறைவார்கு தக்கிலமே கேளீரே –9-7-2-காதாசித்க சம்ச்லேஷமே ஹேதுவாக பந்துக்கள் கை விட்டார்கள் –காதாசித்கமாக சம்ச்லேஷித்த அளவிலே தாமும் உபேக்ஷித்தார் –பந்துக்கள் கை விட்டதே ஹேதுவாக கைக்கொள்ள வேணும் -பிற்பட்டார்க்கும் காட்டிக் கொடுக்க வந்து நிற்கிற நிலையாகையாலும் கைக் கொள்ள வேணும் -இரண்டும் என்னளவில் உபேஷா ஹேது வாவதே –இங்கு என்-இவ்விருப்புக்கு என்ன பிரயோஜனம் உண்டு -சரீர சமனந்தரத்திலே ஒரு தேச விசேஷத்தில் பெற வேண்டித்தான் ஆறி இருக்கிறேனோ -என்று தன்னில் விஷணை யாய் -பின்னையும் தன் செல்லாமையாலே அவற்றைக் குறித்து வார்த்தை சொல்லுகிறாள்-

பூந்துழாய் முடியார்க்கு பொன் ஆழிக் கையார்க்கு
ஏந்து நீர் இளங்குருகே திரு மூழிக் களத்தார்க்கு
ஏந்து பூண் முலை பயந்து என் இணை மலர்க் கண் நீர் ததும்ப
தாம் தம்மைக் தம்மைக் கொன்டு அகல்தல் தகவன்று என்று உரையீரே–9-7-9-தாம்-கீழ் சொன்ன அழகையும் சீலத்தையும் யுடைய தாம் –தம்மைக் கொன்டு அகல்தல்-தமக்கு அகல வேண்டினால் -இவ்வடிவைப் பிரிந்தார் பிழையார்-என்று தம்மை வைத்து அன்றோ போவது -தம்மைக் கண்ணாடி புறத்திலே கண்டு அறிவரே-தம்மைப் பிரிந்த தசைக்கு உதவுகைக்கு அன்றோ தம்மைக் கண்டது -இமாம் அவஸ்தாம் ஆபன்னோ நேஹ பச்யாமி ராகவும் –தகவன்று என்று உரையீரே–மென்மையும் பிரணயித்தவமும் போனால் தாயையும் குடி போக வேணுமோ –நிர்த்தயர் செய்யுமத்தை செய்தார் என்று சொல்லுங்கோள் -ஸ்த்ரீவதம் என்றால் அஞ்சாதார் செய்யுமத்தை செய்தார் என்று சொல்லுங்கோள்–என்கிறாள் –

கோவாகிய மாவலியை நிலம் கொண்டாய்
தேவா சுரம் செற்றவனே திருமாலே
நாவாய் உறைகின்ற என் நாரண நம்பீ
ஆவா அடியான் இவன் என்று அருளாயே–9-8-7-—-ரக்ஷகனானவன் தூரஸ்தனாகை யன்றிக்கே ஆஸ்ரித ரக்ஷண அர்த்தமாக திரு நாவாயிலே நித்ய வாஸம் பண்ணுகிறவனே – என் நாரண நம்பீ-அதுக்கு உறுப்பாக -ஆஸ்ரித வத்சலனாய் -அவர்களுக்கு உறுப்பாகப் பெற்றோமே -என்று அத்தாலே பூர்ணனானவனே -ஆஸ்ரித ரக்ஷணத்தை நினைத்து சர்வ அந்தர்யாமி யானவன் என்றுமாம் அநந்ய கதியான இவன் ஐயோ நோவு படுவதே -என்று கிருபை பண்ணி யருள வேணும் –ஸோ அஹம் தே தேவ தேவேச நார்ச்ச நாதவ் ஸ்துதவ்நச சாமர்த்த்யவான் க்ருபா மாத்ர மநோ வ்ருத்தி ப்ரஸீத மே –இவன் நமக்கு அசாதாரணன் என்று சம்பந்தத்தைப் பார்த்து கிருபை பண்ணி அருள வேணும் -என்றுமாம் –

அந்தோ அணுகப் பெறு நாள் என்று எப்போதும்
சிந்தை கலங்கி திருமால் என்று அழைப்பன்
கொந்தார் மலர்ச் சோலைகள் சூழ் திரு நாவாய்
வந்தே உறைகின்ற எம்மா மணி வண்ணா–9-8-10-
–கொத்து மிக்க மலரை யுடைத்தான சோலைகளாலே சூழப் பட்டு இருந்துள்ள திரு நாவாயிலே -நித்ய வசந்தமான சோலைகளை யுடைத்தாகையாலே -நிரதிசய போக்யமான தேசம் என்கை –வந்தே உறைகின்ற எம்மா மணி வண்ணா–ஒரு தேசத்திலே சென்றே காணக் கடவதான வடிவைக் கொண்டு -ஆஸ்ரித அர்த்தமாக வந்து -நித்ய வாஸம் பண்ணுகிறவனே -அவ்வடிவை எனக்கு கட்டாத வன்று உன் வரவு அஸத் சமம் அன்றோ -என்கை –

ஸரண்ய முகுந்தத்வம்‌ உத்பலாவதகத்திலே ப்ரஸித்‌தம்‌.–சூரணை-181-

(உத்பலாவதகம் –உத்பல -அவத்-அகம் -அவத் -காப்பாற்றுதல் -முமுஷுக்களைக் காப்பாற்றும் இடம் )

சரண்ய முகுந்தத்வம்-அதாவது-சரணமாகும் தனது தாள் அடைந்தார்க்கு எல்லாம் மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான் –திருவாய்-9-10-5-என்று கீழ் சொன்ன விசேஷத்தாலே எல்லார்க்கும் சரண வர்ண அர்ஹனாய் இருக்கும் அவனுடைய மோஷ ப்ரதத்வம்-உத்பலாவதகே திவ்யே விமாநே புஷ்கரேஷணம் சௌரி ராஜம்மஹம் வந்தே சதா சர்வாங்க ஸூந்தரம் –என்கிற படியே திருக் கண்ண புரத்தில் – உத்பலாவதகம் என்கிற பேரை உடைத்தான திவ்ய விமாநத்தில் நிற்கிற நிலையில் எல்லாரும் அறியலாம் படி பிரசித்தம் என்கை —முகுந்தத்வம் ஆவது முக்தி பூமி ப்ரதத்வம்
வைகுந்தம் கொடுக்கும் பிரான்
என்கையாலே -ஆய்த்து இவர் இப்படி அருளிச் செய்தது ..
பலம் என்று மாம்சமாய் –உத்பலர் என்று மாம்சல தேகராய் இருக்கை அன்றிக்கே சரீர சோஷணத்தாலே உத்கத மாம்சராய் கொண்டு -உபேஷித தேகராய் இருக்கும் முமுஷுக்களாய் -தேஷாம் மமாவதோ வாஸம் உத்பலாவதகம்விது –என்கிறபடியே அவர்களுக்கு ரஷகன் எழுந்து அருளி நிற்க்கையாலே -உத்பலாவதகம் -என்று அங்குத்தை திவ்ய விமானத்துக்கு பேர் ஆகையாலே -ஆய்த்து –மோஷ ப்ரதத்வம் அந்த ஸ்தலத்திலே பிரசித்தம் என்றது

“சரணமாகும்‌ தனதாளடைந்தார்க் கெல்லாம்‌ மரணமானால்‌ வைகுந்தம்‌ கொடுக்கும் பிரான்‌” (திருவாய்மொழி 9-10-5) என்று இப்படி ஸரண்யனான அவனுடைய மோக்ஷ ப்ரதத்வம்‌ உத்பலாவதகே திவ்யே விமாநே புஷ்கரேக்ஷணம்‌ சவ்ரிராஜமஹம்‌ வந்தே, ஸதா ஸர்வாங்க ஸுந்தரம்‌” (திருக்கண்ணபுரம்‌ ஸ்தலபுராணம்‌?) என்று திருக்கண்ணபுரத்திலே உத்பலாவதக மென்னும்‌ பேரையுடைத்தான திவ்ய விமாநத்தில்‌ நிற்கிற நிலையிலே ப்ரஸித்தம் என்கிறார் –-

சரணமாகும் தன தாள் அடைந்தார்க்கு எல்லாம்
மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான்

அரண் அமைந்த மதிள் சூழ் திருக் கண்ணபுரத்
தரணி யாளன் தனது அன்பர்க்கு அன்பாகுமே–9-10-5–ஜென்மத்தாலும் வ்ருத்தத்தாலும் ஞானத்தாலும் குறைய நின்றாரே யாகிலும் -தன் திருவடிகளை உபாயமாகப் பற்றினார்க்கு எல்லாம் ரக்ஷகனாம் -கீழ் மூன்று பாட்டாலும் சொன்ன பக்தி யோகம் அதிக்ருதாதிகாரம்-இதில் சொன்ன பிரபத்தி -சர்வாதிகாரம் -என்கிறது –மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான்-தன் பக்கல் ந்யஸ்த பரனானவன்று தொடங்கி -இவனை ஒழிய தனக்கு செல்லாது இருக்கச் செய்தே -இவனுடைய ருசியை வர்த்தித்து -சரீர அவசானத்திலே பரம பதத்தை கொடுத்த மஹா உபகாரகன் -தன் அழகைக் காட்டி அத்தாலே இவற்றுக்கு ருசி பிறக்கும் அளவும் அவசர பிரதீஷனாய் இருக்கும் படியைச் சொல்கிறது – மரணமானால்-தனக்கு அசத்தி இல்லை -இவனுக்கு கர்த்தவ்யம் இல்லை -இவன் ருசியைக் கடாக்ஷித்து இருக்கிற அத்தனை -இப்பாட்டில் –மரணமானால் -என்றத்தைக் கொண்டே கீழ்ச் சொன்ன நிரூபணம் எல்லாம் –

மார்க்க பந்து சைத்யம் மோகனத்தே மடு விடும்–சூரணை-182-

அதாவது-இப்படி மோஷ பிரதனனான தன்னுடைய பிரசாதத்தாலே -மோஷ பூமிக்கு போவார்க்கு –
காள மேகத்தை அன்றி மற்று ஒன்றிலம் கதி–திருவாய்-10-1-1 –என்றும் – ஆப்தன் (ஆத்தன்)- தாமரை அடி இன்றி மற்றிலம் அரணே–திருவாய்-10-1-6-–என்னும் படி ஆப்தனாய் கூடக் கொண்டு போம் மார்க்க பந்து வானவனுடைய-சுரி குழல் கமலக் கண் கனி வாய் காள மேகம்–திருவாய்-10-1-1 -என்றும் – அவனடி நிழல் தடம்–திருவாய்-10-1-2 -என்றும்-மரகத மணித் தடம்—திருவாய்-10-1-8 -என்றும்
சொல்லும் படி இருந்துள்ள சம்சாரிக சகல தாப ஹராமான சைத்யம் (சைத்யம் -குளிர்ச்சி -காளமேகம்-தடம்-என்பதால் ) அம்ருத பிரதான சமயத்திலே அசுரர்களை மோஹித்த இடம் ஆகையாலே மோகன ஷேத்ரமான திரு மோகூரிலே நிறைந்து நிலை பெற்று இருக்கும் என்கை –மடுவிடும் -என்றது மரகத மணித் தடம்-என்கிற சமாதியாலே

இப்படி மோக்ஷ ப்ரதனாமிடத்தில்‌ முக்தி மார்க்கமான அர்ச்‌சிராதி மார்க்கத்துக்குத் துணையான “ ஆத்தன் தாமரையடியன்றி மற்றிலம்‌ அரணே” (திருவாய்மொழி 10-1-6) என்றும் -ஆப்த பந்துவானவனுடைய சுரிகுழல்‌ கமலக்‌ கண்கனிவாய்‌ காளமேகத்தை யன்றி மற்றிலம்‌ கதியே” (திருவாய் -10-1-1-) என்றும்‌,அவனடி நிழல் தடமன்றி யாமே (திருவாய்மொழி 10-1-2) என்றும்‌ ஸாம்ஸாரிகமான தாபத்தை ஆற்றவற்றான ஸைத்யம்‌ மோஹந க்ஷேத்ரமான திருமோகூரிலே, மரகத மணித்தடம்‌” (திருவாய்மொழி 10-1-8) என்கிற ஸமாதியாலே மடுவிடும்‌ என்கிறார் –-

தாள தாமரைத் தட மணி வயல் திரு மோகூர்
நாளும் மேவி நன்கமர்ந்து நின்று அசுரரைத் தகர்க்கும்
தோளும் நான்குடைச்
சுரி குழல் கமலக் கண் கனி வாய்
காளமேகத்தை யன்றி மற்று ஓன்று இலம் கதியே-10-1-1--அசூரரை அழியச் செய்யுமா போலே என் விரோதிகளை துணிக்க வல்ல தோள்களை யுடையவன் –-கஜம் வா வீஷ்ய ஸிம்ஹம் வா வ்யாக்ரம் வா வனமாஸ்ரிதா -நா ஹார யதி சந்த்ராஸம் பாஹு ராமஸ்ய சமஸ்ரிதா-என்னக் கடவது இறே —விடு காதாய் கிடந்தாலும் தோடிட்ட காது என்று தெரியுமா போலே -தோள்களைக் கண்ட போதே விரோதி நிரசன சீலம் என்று தோற்றி இருக்கும் என்கை –சுரி குழல்–இவன் பின்னே வழியே போமிடத்து திருக் குழலை ஒரு கால் பேண நெடு நாள் சம்சாரத்தில் பட்ட கிலேசம் எல்லாம் தீரும் படி யாய்த்து இருப்பது -கேசவ கிலேச நாசன –-கமலக் கண் கனி வாய்-பந்தம் எல்லாம் தோற்றும் படியான நோக்கும் ஸ்மிதமும் இருக்கிற படி –சம்சாரத்திலே பொய்யருடைய நோக்கிலும் ஸ்மிதத்திலும் பட்ட நோவு எல்லாம் ஆறும் படி இறே இருப்பது –கச்சதாம் தூர  மத்வானம் த்ருஷ்ணா மூர்ச்சித சேதஸாம் -பாதேயம் புண்டரீகாக்ஷ நாம சங்கீர்த்தன அம்ருதம் – வழி போம் போது முன்னே ஒரு காளமேகம் வர்ஷித்திக் கொண்டு போக பின்னே போமா போலே ஸ்ரமஹரமாய் இறே இருப்பது –சர்வகந்த -என்கிற விஷயம் ஆகையால் -அவ்வாஸ நாற்றத்தை அனுபவித்திக் கொண்டு போம் அத்தனை -யன்றி மற்று ஓன்று இலம் கதியே--அவனை ஒழிய வேறு கதி உடையோம் அல்லோம் -வேறு ஒருவரை ரக்ஷகமாக உடையோம் அல்லோம் –

இலம் கதி மற்று ஓன்று எம்மைக்கும் ஈன் தண் துழாயின்
அலம் கலம் கண்ணி ஆயிரம் பேருடை யம்மான்
நலம் கொள் நான்மறை வாணர்கள் வாழ் திரு மோகூர்
நலம் கழல் அவனடி நிழல் தடம் அன்றி யாமே–10-1-2—அவனுடைய பாதச் சாயை யாகிற பொய்கையை ஒழிய —யாம் -இலம் கதி மற்று ஓன்று எம்மைக்கும்–அவன்தானே வத்யதாம் என்றாலும் புறம்பு புகலற்று இருக்கிற படி –

கூத்தன் கோவலன் குதற்று வல்லசுரர்கள் கூற்றம்
ஏத்தும் நம் கட்கும் அமரர்க்கும் முனிவர்க்கும் இன்பன்
வாய்த்த தண் பணை வளவயல் சூழ் திரு மோகூர் ஆத்தன்
தாமரை யடி யன்றி மற்று இலம் அரணே
–10-1-6—திரு மோகூரிலே நின்று அருளின-பரம பந்து -தான் தனக்கு அல்லாத மரண சமயத்தில் –அஹம் ஸ்மராமி மத்பக்தம் நயாமி -என்னும் பரம ஆப்த தமன் –தன்னை அஞ்சின போது அவன் பக்கலிலே ந்யஸ்த பரனாம் படி யான ஆப்த தமன் – தாமரை யடி யன்றி-அநாப்தன் ஆகிலும் விட ஒண்ணாத படி யாய்த்து -திருவடிகளில் போக்யத்தை –மற்று இலம் அரணே–வேறு சிலரை ரக்ஷகமாக யுடையோம் அல்லோம் -போக்யத்தை இல்லை யாகிலும் -அநாப்தன் ஆகிலும் புறம்பு புகல் இல்லை என்கை –

துயர் கெடும் கடிது அடைந்து வந்து அடியவர் தொழுமின்
உயர் கொள் சோலை ஒண் தட மணி யொளி திரு மோகூர்
பெயர்கள் ஆயிரம் உடைய வல்லரக்கர் புக்கு அழுந்த
தயரதன் பெற்ற மரகத மணித் தடத்தினையே–10-1-8-–சக்கரவர்த்தி பெற்ற நீல மணி போலே இருக்கிற தடாகத்தினை -அடைந்து வந்து அடியவர் தொழுமின்-பதி தரு மருவாபீ வாரிவத் சர்வ போக்யம் -என்கிற படி அனுகூலர்களுக்கு ரக்ஷகமாய் –காகுத்ஸத்த பாதால முகே புதன்ச -என்கிறபடியே உகவாதற்கு நாசகமாய் இறே இருப்பது –மயா த்வம் சம நுஜ்ஜஞாதோ கச்ச லோகான் அநுத்தமான் -என்று பக்ஷியைப் போக விட்டார் இறே –

ஸஸைன்ய புத்ர ஸிஷ்ய ஸாத்‌ய ஸித்‌த பூ ஸுரார்ச்சநத்துக்கு முக நாபி பாதங்களை த்‌வார த்ரயத்தாலே காட்டும்‌ ஸாம்யம்‌ அநந்தஸயநத்திலே வ்யக்தம்‌.–சூரணை -183-

(ச சைந்ய சாத்ய அர்ச்சனத்துக்கு முகத்தையும்- – ச புத்ர -ஸித்த அர்ச்சனத்துக்கு நாபியையும் –
ச சிஷ்ய பூ சுர அர்ச்சனத்துக்கு பாதங்களையும் த்வார த்ரயத்தாலே காட்டும் – சாம்யம் அநந்த சயநத்திலே வ்யக்தம் )

அதாவது-அமரர் கோன் அர்ச்சிகின்று அங்கு அகப் பணி செய்வர் விண்ணோர் -திருவாய்-10-2-6-– என்கிற சேநாசகிதரான சேனை முதலியார் ஆகிற –யத்ர பூர்வே சாத்யா-புருஷ ஸூக்தம் –என்கிற
நித்ய ஸூரிகளின் தலைவரான சாத்யர் உடையவும் —-அமரார் திரிகின்றார் கட்கு ஆதி—திருவாய்-10-2-6- -என்கையாலே புத்ரர்களான ப்ரமாதிகளான சித்தர் உடையவும் – படமுடை அரவில் பள்ளி பயின்றவன் பாதம் காண நடமினோ நமர்கள் உள்ளீர்–திருவாய்-10-2-8- -என்று இவர் உபதேசம் கேட்ட சிஷ்யர்களான பூஸூரர் உடையவும் – அர்ச்சனதுக்கு திரு முகமும் திரு நாபியும் திரு அடிகளும் ஆகிய இவற்றை திரு வாசல் மூன்றாலும் தர்சிப்பிக்கிற நித்ய ஸூரிகள் சம்சாரிகள் என்று விசேஷம் பாராத சாம்ய குணம் திரு வநந்த புரத்திலே கண் வளருகிற பிரகாரத்தாலே வ்யக்தமாய் இருக்கும் என்கை —

(ஸஸைந்ய) “அமரர்கோனர்ச்சிக்கின்று அங்ககப்‌ பணி செய்வர்‌ விண்ணோர்‌” (திருவாய்மொழி 10-2-6) என்கிற ஸேநா ஸஹிதரான ஸேநை முதலியாராகிற ஸாத்‌யர்‌, (புத்ர) உலகுயிர்‌ தேவும்‌ மற்றும்‌ படைத்த” (திருவாய்மொழி 10-2-7) என்று சொல்லுகையாலே புத்ரர்களான ப்‌ரஹ்மாதி தேவதைகளாகிற ஸித்‌தர்‌, (ஸிஷ்யர்‌) “நடமினோ நமர்களுள்ளீர்‌ அனந்தபுரநகர்‌ புகுதுமின்றே” (திருவாய்மொழி 10-2-8) என்று இவர்‌ உபதேஸிக்கக்‌ கேட்ட ஸிஷ்யர்களாகிற பூஸுரர்‌ என்கிற இவர்கள்‌ மூவரும்‌ அர்ச்சிக்கைக்கு முக நாபி பாதங்களை திருவாசல்‌ மூன்றாலும்‌ காட்டுகையாலே நித்ய ஸூரிகளோடு நித்ய ஸம்ஸாரிகளோடு வாசியற முகம்‌ கொடுக்கும்‌ ஸாம்யம்‌ திருவனந்தபுரத்தில்‌ கண் வளருகிற கிடை யழகிலே ஸுவ்யக்தமாகக்‌ காணலாமென்கிறார்

அமரராய்த் திரிகின்றார் கட்கு ஆதிசேர் அனந்த புரத்து
அமரர் கோன் அர்ச்சிக்கின்று அங்கு அகப்பணி செய்வர் விண்ணோர்

நமர்களோ சொல்லக் கேண்மின் நாமும் போய் நணுக வேண்டும்
குமரனார் தாதை துன்பம் துடைத்த கோவிந்தனாரே-10-2-6—மனுஷ்யாதிகளில் காட்டில் -சில நாள் ஏற இருக்கிற இத்தைக் கொண்டு தங்களை நித்யர் என்று அபிமானித்து இருக்கிறவர்களுக்கு –திரிகின்றார்கட்கு–மனுஷ்யாதிகளில் காட்டில் பந்தனம் கனத்து இருக்கச் செய்தேயும் நிர்ப்பயராய் திரியா நிற்பார்கள் -மநுஷ்யர்களுடைய விரக்திக்கு அவர்கள் பரிஹரித்த அளவு இறே த்யஜிக்க வேண்டுவது -ப்ரஹ்மாவுக்கு சதுர்த்தசி புவனமும் த்யஜிக்க வேணுமே-ஆதி சேர் அனந்த புரத்து–காரண பூதன் வர்த்திக்கிற தேசத்திலே –ஸ்ரீ சேனாபதி ஆழ்வான் அடிமை செய்யும் இடத்தில் கை நீட்டுவார் நித்ய ஸூரிகள்–

துடைத்த கோவிந்தனாரே உலகு உயிர் தேவு மற்றும்
படைத்த வெம் பரம மூர்த்தி
பாம்பணைப் பள்ளி கொண்டான்
மடைத் தலை வாளை பாயும் வயல் யணி யனந்த புரம்
கடைத்தலை சீய்க்கப் பெற்றால் கடு வினை களையலாமே–10-2-7-லோகத்தையும் தேவ ஜாதியையும் மற்றும் உண்டான ஆத்மாக்களையும் யுண்டாக்கினவன் -இவை அதிப்ரவ்ருத்த மான வன்று சம்ஹரித்து -பின்பு புருஷார்த்த உபயோகியான கரணங்களைக் கொடுத்து ரஷித்த-ஆச்ரித பவ்யனான சர்வேஸ்வரன் –

கடுவினை களையலாகும் காமனைப் பயந்த காளை
இடவகை கொண்ட தென்பர் எழில் அணி அனந்த புரம்
படமுடை யரவில் பள்ளி பயின்றவன் பாதம் காண
நடமினோ நமர்கள் உள்ளீர் நாமும் உமக்கு அறியச் சொன்னோம்
–10-2-8—ஸ்வ ஸ்பர்சத்தாலே விஸ்திருத பணனான திருவனந்த ஆழ்வான் மேலே நிரந்தரமாக கண் வளர்ந்து அருளுகிறவனுடைய திருவடிகளைக் காண –பயின்ற-என்று வீசு வில்லிட்டு எழுப்பிலும் எழுப்ப ஒண்ணாத படி இறே படுக்கை வாய்ப்பு இருப்பது-நடமினோ நமர்கள் உள்ளீர்-என்னோடு குடல் துவக்கு உடையார் அடைய நடவுங்கோள்-நாமும் உமக்கு அறியச் சொன்னோம்வரி வாள் அரவின் அணைப் பள்ளி கொள்கின்ற கரியான் கழல் காணக் கருதும் கருத்தே -என்று சபலரான நாம் –ஏகம் துக்கம் ஸூகஞ்ச நவ் -என்னும் படி இருக்கிற உங்களுக்கு நெஞ்சிலே படச் சொன்னோம் –

மோஷ தாநத்திலே பிரணத பாரதந்த்ர்யம் வளம் மிக்க நதியிலே கரை புரளும்–சூரணை -184-

மோஷ தாநத்திலே பிரணத பாரதந்த்ர்யம்-அதாவது-அருள் தருவான் அமைகின்றான் அது நமது விதி வகையே -திருவாய்-10-6-1-என்றும் –விண்ணுலகு தருவானாய் விரைகின்றான் விதி வகையே-திருவாய்-10-6-3- -என்றும் இப்படி சர்வ சமனானவன் ஆஸ்ரிதர்க்கு மோஷ பிரதானம் பண்ணும் அளவில்
அவர்கள் விதித்த படி செய்வானாய் நிற்கிற ஆஸ்ரித பாரதந்த்ர்யம் – வளம் மிக்க வாட்டாற்றான்–திருவாய்-10-6-3- -என்று ரஷ்ய வர்க்கம் குறைவற்ற தேசம் ஆகையாலே அவனுக்கு சம்பத்து மிக்கு இருக்கிற திரு வாட்டாற்றிலே அமர்யாதமாக பிரவகிக்கும் என்கை .. கரை புரளும் என்றது ஆறு என்கிற சமாதியாலே —

“அருள்தருவா னமைகின்றான்‌ அது நமது விதி வகையே’” (திருவாய்மொழி 10-6-1என்றும்‌,  “விண்ணுலகம்‌ தருவானாய்‌ விரைகின்றான்‌ விதிவகையே” திருவாய்மொழி 10-6-3) என்றும்‌, இப்படி ஸர்வ ஸமனானவன்‌ ஆஸ்ரிதர்க்கு மோக்ஷத்தைக்‌ கொடுக்குமிடத்தில்‌ அவர்கள்‌ விதித்தபடியே செய்யக் கடவோமென்கிற ஆஸ்ரித பாரதந்த்ர்யம்‌ “வளம்மிக்க வாட்டாற்றான்‌’ (திருவாய்மொழி 10-6-3) என்று திருவாட்டாற்றிலே நிற்கிற நிலையிலே, ஆறென்கிற ஸமாதியாலே கரை புரளும்‌ என்கிறார் 

அருள் பெறுவார் அடியார் தன் அடியனேற்கு ஆழியான்
அருள் தருவான் அமைகின்றான் அது நமது விதி வகையே
இருள் தரும் மா ஞாலத்துள் இனிப் பிறவி யான் வேண்டேன்
மருள் ஒழி நீ மட நெஞ்சே வாட்டாற்றான் அடி வணங்கே–10-6-1—ஆஸ்ரிதர் எல்லார் பக்கலிலும் பண்ணும் அருளை -என் பக்கலிலே பண்ணுமவனாகச் சமைந்து நின்றான் –அஸ்மா பிஸ் துல்யோ பவது -என்னுமவர்கள் இறே இவர்கள் -ஸ்வதந்த்ரனாகில் தருகிறான் — இனிக் குறை என் என்னில் –
அது நமது விதி வகையே–அது நாம் சொல்லச் செய்வானாக நினைத்து இரா நின்றான் -அது நம்முடைய  பாக்யாதி குணம் இறே -என்றாய்த்து பூர்வர்கள் நிர்வாஹம் -இது பிரகரணத்தோடு சேராது –நாம் விதித்த படியே செய்வானாக நினைத்து இரா நின்றான் -என்று அருளிச் செய்தார் எம்பெருமானார் -தன் பக்கல் குறைவற்று இருந்தாலும் இத் தலையில் இச்சை பார்த்து இருக்கும் இறே –சொல் வகையே என்னாதே- விதி வகையே -என்றது –தானே தருமது வித்யதிக்ரமம் -என்று இருக்கை யாலே-

நண்ணினம் நாராயணனை நாமங்கள் பல சொல்லி
மண்ணுலகில் வளம் மிக்க வாட்டாற்றான் வந்து இன்று
விண்ணுலகம் தருவானாய் விரைகின்றான் விதி வகையே

எண்ணினவாறு ஆகா இக் கருமங்கள் என் நெஞ்சே –10-6-3—பரம பதத்தில் காட்டில் ஸம்ருத்தி மிக்கு இருந்துள்ள திரு வாட்டாற்றை நிரூபகமாக யுடையவன் —வளம் –சம்பத்து -ரஷ்யம் குறைவற்ற தேசம் ஆகையால் ரக்ஷகனுக்கு சம்பத்து மிக்கு இருக்கும் இங்கு -கைங்கர்யத்துக்கு விச்சேதம் இல்லாமையால் சேஷ பூதனுக்கு சம்பத்து மிக்கு இருக்கும் அங்கு –வந்து –நாம் செல்ல வேண்டும் தேசம் அடங்க தானே வந்து –இன்று -நம் பக்கல் இதுக்கு அடியாக இருப்பது ஓன்று நென்னேற்று இல்லை -இன்று இங்கனே விடியக் கண்டது அத்தனை –விண்ணுலகம் தருவானாய்–பரம பதத்திலே செல்லப் பெறுகை யன்றிக்கே -ஆண்மின்கள் வணக்கம் -என்ற பொதுவும் இன்றிக்கே த்ரிபாத் விபூதியையும் நமக்கே தருவானாய் இரா நின்றான் –விரைகின்றான் –சா பேஷாரான நாம் ஆறி இருக்க -நிரபேஷனானவன்-பதறா நின்றான் –முன்பு இவர் விரைந்த போது ஒரு கார்யார்த்தமாக வைத்தானாய் -அது தலைக் கட்டின வாறே -விசத்ருசமான விபூதி இவருக்குத் தரம் அன்று என்று பதறா நின்றான் –தொடங்கின அப்போதே தலைக் கட்ட வல்ல சர்வ சக்திக்கு பதற வேண்டுகிறது என் என்னில்
விதி வகையே--நாம் விதிக்கத் தருவானாக வேண்டி இரா நின்றான் –

த்யாஜ்ய தேக வியாமோகம் மருள்கள் கடியும் மயல் மிகு பொழிலிலே தலைக்கும்–சூரணை -185-

த்யாஜ்ய தேக வியாமோகம்-அதாவது
முமுஷுக்களுக்கு த்யாஜ்யமான தேகத்திலே –சரம தேகம் ஆகையாலே – மகிஷி யினுடைய உச்சிஷ்டத்தை விரும்பும் ராஜ புத்ரனைப் போலே –வஞ்சக் கள்வனாய் நெஞ்சும் உயிரும் உள் கலந்து–திருவாய்-10-7-1 –என்றும் –மாய வாக்கை இதனுள் புக்கு –திருவாய்-10-7-3–என்கிறபடியே-
இதன் தோஷம் பாராமல் உள் புகுந்து –திரு மால் இரும் சோலை மலையே திருப் பாற் கடலே என் தலையே–திருவாய்-10-7-8–இத்யாதிப் படி உகந்து அருளின நிலங்கள் எல்லா வற்றிலும் பண்ணும் விருப்பத்தை இதில் ஏக தேசத்தில் பண்ணி-மங்க ஒட்டு -உன் மா மாயை -திருவாய்-10-7-10- -என்று கால் கட்டி விடுவிக்க வேண்டும் படி அவனுக்கு உண்டான வியாமோகம்-மருள்கள் கடியும் மணி மலை திருமாலிருஞ்சோலை மலையே -திருவாய்-10-7-7-என்று சர்வருடைய அஞ்ஞானத்தை ஸ்வாசனமாக போக்குவதாய் –மயல் மிகு பொழில் சூழ் மால் இரும் சோலை–திருவாய்–2-10-3 -என்று போக்யதா பிரகர்ஷத்தாலே போக்தாக்களை பிச்சேற்ற வற்றான சோலையை உடைய தெற்கு திருமலையிலே சம்ருதமாய் செல்லும் என்கை .-பொழில் -என்கிற சமாதியாலே ஆய்த்து -தழைக்கும் -என்றது ..

(த்யாஜ்யதே ஹவ்யாமோஹம்‌) ‘ மாய வாக்கை இதனுள்‌ புக்கு” (திருவாய்மொழி 10-7-3) என்று ஆழ்வாருக்கு த்யாஜ்யமான தேஹத்திலே புகுந்து திருமாலிருஞ்‌ சோலை இத்யாதிப்படியே தேஸ விஸேஷத்திலே பண்ணுமாதரத்தையும்‌ இதிலே பண்ணி இவர்‌ “மங்கவொட்டு” (திருவாய்மொழி 10-7-10) என்று கால் கட்டும்படி அவனுக்குண்டான வ்யாமோஹம்‌ (மருள்கள்‌ கடியும்‌ மயல்மிகு பொழிலிலே தழைக்கும்‌) “மருள்கள்‌ கடியும்‌ மணி மலை” (திருவாய்மொழி 10-7-7) என்று ஸர்வருடையவும்‌ அஜ்ஞாநத்தை ஸவாஸநமாகப்‌ போக்குமதாய்‌ ‘ மயல்மிகு பொழில்சூழ்‌ மாலிருஞ்சோலை” (திருவாய்மொழி 2-10-3) என்று போக்த்தாக்கள்‌ அடைவு கெடும்படி பிச்சேற்ற வற்றாயிருக்கிற தெற்குத்‌ திருமலையில்‌ நிற்கிற நிலையிலே; சோலை என்கிற ஸமாதியாலே தழைக்கும்‌ என்கிறார்—

செஞ்சொற் கவிகாள் உயிர் காத்து ஆட்செய்மின் திருமால் இரும் சோலை
வஞ்சக் கள்வன் மா மாயன் மாயக் கவியாய் வந்து என்
நெஞ்சும் உயிரும் உள் கலந்து
நின்றார் அறியா வண்ணம் என்
நெஞ்சும் உயிரும் அவை உண்டு தானே யாகி நிறைந்தானே–10-7-1-களவு காணா நிற்கச் செய்தே மெய் என்னலாம் படி இருக்கை –என் கண்ணன் கள்வம் எனக்குச் செம்மாய் நிற்கும் -என்றார் இறே -களவைக் களவு காணா நிற்கும் –மா மாயன் -இப்படி அறிந்து ஒருவருக்கும் தப்ப ஒண்ணாத படியான ஆச்சர்ய குண சேஷ்டிதங்களை யுடையவன் -நீர் அகப்பட்ட துறை ஏது என்ன –மாயக் கவியாய்--ஆச்சர்ய அவஹமான கவி பாடுவித்துக் கொள்ள -என்ற ஒரு பேரையிட்டுக் கொண்டு யாய்த்து வந்து கிட்டிற்று -தண்ணீர் என்ற ஒரு பேரையிட்டு அபிமத விஷயத்தை கிட்டுவாரைப் போலே -கவி பாடுவித்துக் கொள்ளுகை என்று ஒரு வியாஜ்யம் -கிட்டுக்கையே பிரயோஜனம் -தான் இருந்த இடத்திலே சென்று நாம் இருக்கை இன்றிக்கே -நாம் இருந்த இடத்திலே தான் வந்து கவி பாடுவித்துக் கொள்கை இறே சீலம் ஆவது –வந்து செய்தது என் என்ன –வந்து என்-நெஞ்சும் உயிரும் உள் கலந்து–நெஞ்சு என்று -சரீரத்துக்கு உப லக்ஷணம் –உயிர் என்கிறது ஆத்மாவை -சரீரத்தோடு ஆத்மாவோடு வாசியற புகுத்தி தன் பேறாக அவகாஹியா நின்றான் -முறை அத்தலை இத்தலையாய் என்னை சிரஸா வஹியா நின்றான் –நின்றார் அறியா வண்ணம்-கலவிக்கு தேசிகரான பிராட்டி திருவனந்த ஆழ்வான் முதலானோர்க்கும் அபூமியாம் படி யாய்த்து என்னோடு கலந்து -ஆருயிர் பட்டது எனதுயிர் பட்டது -என்றார் இறே –என்-நெஞ்சும் உயிரும் அவை உண்டு –தேஹாத்ம விவேகம் பண்ண அறியாதே யாய்த்து புஜித்தது–சேதனனையும் அசித்தோபாதி பரதந்தனாக்கி புஜித்தான் –உருவமும் ஆருயிரும் உடனே யுண்டான் -என்கிறபடியே எனக்கு என்ன மாட்டாமைக்கு -அசித்தோபாதி யாய்த்து சேதனனும் –
தானே யாகி -போகத்தில் இழிகிற போது இருவராய் இழிந்து -எதிர்த்தலையைத் தோற்பித்து -போக்தாவும் அபிமானியும் தானே யானான் –நிறைந்தானே–அவாப்த ஸமஸ்த காமன் ஆழ்வாரைப் பெறுவதற்கு முன்பு குறைவாளனாய் -இவரைப் பெற்ற பின்பு -பூர்ணன் ஆனான் –க்ருதக்ருத்யஸ் ததா ராம –இது விறே புரையற்ற சீலமாவது –

என்னை முற்றும் உயிர் உண்டு என் மாய ஆக்கை இதனுள் புக்கு
என்னை முற்றும் தானேயாய் நின்ற மாய அம்மான் சேர்
தென்னன் திருமால் இரும் சோலைத் திசை கூப்பிச் சேர்ந்த யான்
இன்னம் போவேனே கொலோ என் கொல் அம்மான் திருவருளே–10-7-3—இத்தலையை எங்கும் புக்கு அனுபவித்தானாய் விடுகை அவனுக்கு ஏற்றமாம்படியாய் இருக்கிறது –யஸ்ய சா ஜனகாத்மஜா –அப்ரமேயம் ஹி தத் தேஜ–என் மாய ஆக்கை இதனுள் புக்கு–அதி ஷூத்ரமான என் சரீரத்தில் புக்கு தனக்கு உத்தேச்யமான ஆத்மாவளவன்றியே-அழுக்கு உடம்பு -என்று தன்னை கால் காட்டித் தவிர்ப்பித்து கொள்ள வேண்டும் படி த்யாஜ்யமான சரீரத்தையே விரும்பா நின்றான் – இதனுள் புக்கு-இது இது என்று இவர் இறாய்க்க அவன் மேல் விழா நின்றான் என்கை –புகுந்து என்னாதே  புக்கு -என்கிறது அத்தோடு தமக்கு தொற்று அற்று இருக்கிற படி தோற்றுகைக்காக-மங்க வொட்டு-என்று அவன் அனுமதி பார்த்து இருக்கும் இ றே –என்றும் அசித்தோடும் முகம் பழகின இவர் இறாய்க்க -ஹேய பிரதி படனானவன் இ றே மேல் விழா நின்றான் –-என்னை முற்றும் தானேயாய் நின்ற--ஆத்மாவோடு சரீரத்தோடு வசி யறப் புக்கு வியாபித்து தானே அபிமானியாய் நின்றான் -என்னுடைய அஹங்கார மமகாரங்களும் விஷயம் இல்லாத படி நின்றான் –

அருளை ஈ என் அம்மானே என்னும் முக்கண் அம்மானும்
தெருள் கொள் பிரமன் அம்மானும் தேவர்கோனும் தேவரும்
இருள்கள் கடியும் முனிவரும் ஏத்தும் அம்மான் திருமலை
மருள்கள் கடியும் மணி மலை திருமால் இரும் சோலை மலையே–10-7-7-கைங்கர்ய விரோதிகளான அவித்யாதிகளைப் போக்குமதாய்-ஸ்வயம் புருஷார்த்தமான திருமலை -திருமலையை ஒழியவே ப்ராப்யம் யுண்டு என்று இருக்கும் நினைவை போக்குமிடம் என்றுமாம்-

திருமால் இரும் சோலை மலையே திருப் பாற் கடலே என் தலையே
திருமால் வைகுந்தமே தண் திரு வேங்கடமே எனது உடலே
அருமா மாயத்து எனது உயிரே மனமே வாக்கே கருமமே
ஒருமா நொடியும் பிரியான் என் ஊழி முதல்வன் ஒருவனே–10-7-8-தெற்கில் திருமலையையும் திருப் பாற் கடலையும் என் உத்தம அங்கத்தையும் -ஓக்க விரும்பா நின்றான் –பரமபதத்தையும் -வடக்கில் திருமலையையும் -என் சரீரத்தையும் ஓக்க விரும்பா நின்றான் –-ஸ் ரியா சார்த்தம் ஜகத் பத்தி -என்கிறபடியே அம் மிதுனத்துக்குத் தகுதியான தேசம் –இத்தேசங்களிலே பண்ணுகிற விருப்பம் தம் திருமேனியில் பண்ணுகிற விருப்பத்துக்கு சத்ருசம் அல்லாமையாலே தம்முடைய அவயவங்கள் தோறும் புக்கு அனுபவியா நின்றான் –

மங்க ஒட்டு உன் மா மாயை திரு மால் இரும் சோலை மேய
நங்கள் கோனே யானே நீ ஆகி என்னை அளித்தானே
பொங்கு ஐம் புலனும் பொறி ஐந்தும் கருமேந்த்ரியம் ஐம் பூதம்
இங்கு இவ் வுயிர் ஏய் பிரகிருதி மான் ஆங்காரம் மனங்களே–10-7-10—ஒருவராலும் தப்ப ஒண்ணாத படி -நீ பந்தித்த பிரக்ருதியை மங்க இசை –த்யாஜ்யம் என்று அறிந்த பின்பு உம்முடைய சரீரத்தை நீரே உபேக்ஷிக்கும் அத்தனை யன்றோ -நம் இசைவு என் என்ன -சர்வ சக்தியான நீ பிணைத்த பிணையை அசக்தனான நான் -அவிழ்க்கவோ –மம மாயா துரத்யயா –என்றிலையோ–

பயனல்ல செய்து பயனில்லை நெஞ்சே
புயல் மழை வண்ணர் புரிந்துறை கோயில்
மயல் மிகு பொழில் சூழ் மாலிரும் சோலை
அயன்மலை யடைவது அது கருமமே –2-10-3-போக்யதையாலும் இருட்சியாலும் புக்கார் மிகவும் மதி மயங்கும் படியான திருச் சோலை-ப்ராப்ய பூமியிலே கலக்கம் ஆகையால் ப்ராப்ய அந்தர்கதம் இறே

அங்கீகரிக்க அவகாசம் பார்க்கும் ஸ்வாமித்வம் பெரு நகரிலே பேர் பெற்றது -சூரணை -186-

அதாவது-திரு மால் இரும் சோலை மலை என்றேன் என்னத் திரு மால் வந்து என் நெஞ்சு நிறையப் புகுந்தான்-திருவாய்-10-8-1-என்று ஸ்வ அங்கீகாரத்துக்கு உடலான ஸூஹ்ருத லவ லேஸம் இல்லாதவரையும் – மடி மாங்காய் இடும் போலே -என்னூரைச் சொன்னாய் –இத்யாதியான
அஞ்ஞான ஸூஹ்ருதங்களை ஆரோபித்தும் அங்கீகரிக்க இடம் பார்க்கும் அவனுடைய ஸ்வாமித்வம் –
பெருவரை மதிள்கள் சூழ்ந்த பெரு நகர் அரவணை மேல்–
பெரிய திருமொழி-5-9-3–என்று கண் வளர்ந்து அருளுகிற திருப்பேர் நகரில் பிரசித்தம் என்கை-

“திருமாலிருஞ்சோலை மலை என்றேனென்னத்‌ திருமால்‌ வந்து என்‌ நெஞ்சு நிறையப் புகுந்தான்‌”  (திருவாய்மொழி 10-8-1 என்று இவரை விஷயீகரிக்க அவகாஸம்‌ பார்த்து மடிமாங்காயிட்டும்‌ விஷயீகரிக்க வேணு மென்கிற ஸ்வாமித்வம்‌ “பெருநகரரவணை மேல்‌” (பெரியதிருமொழி 5-9-3) என்கிற திருப்பேர்‌ நகரில்‌ கண் வளர்ந்தருளுகிற விடத்தே ப்ரஸித்‌தம்‌ என்கிறார் –

திருமால் இரும் சோலை மலை என்றேன் என்ன
திருமால் வந்து என் நெஞ்சு நிறையப் புகுந்தான்

குரு மா மணி உந்து புனல் பொன்னித் தென் பால்
திருமால் சென்று சேர்விடம் தென் திருப் பேரே-10-8-1—அஹ்ருதயமாகச் சொன்னது தன்னையும் சஹ்ருதயம் ஆக்குவாரும் அருகே உண்டு –வந்து -நம்மை அங்கே அழைத்துக் கார்யம் கொள்ளுகை அன்றிக்கே –நாம் இருந்த இடத்தே வருவதே –சாபேஷன் இருந்த இடத்திலே பூர்ணன் வருவதே -சர்வருக்கும் அபிகம்யனானவனுக்கு நான் அபிகமயனாவதே –ஸோ அப்யகச்சன் மஹா தேஜோ சபரீம் என் நெஞ்சம் -உக்திக்கு அசஹகாரியான என் நெஞ்சம் — நிறையப் புகுந்தான்-விஷயாந்தரங்களுக்கு அவகாசம் இல்லாத படி பாழ் தீரப் புகுந்தான் –

ஒருவனை யுந்திப் பூ மேல் ஓங்குவித் தாகம் தன்னால்
ஒருவனைச் சாபம் நீக்கி உம்பராள் என்று விட்டான்
பெரு வரை மதிள்கள் சூழ்ந்த பெரு நகர ரவணை மேல்
கரு வரை வண்ணன் தன் பேர் கருதி நான் உய்ந்தவாறே –5-9-3–பெரு வரை என்னலாம் படி மதிள்களால் சூழப்பட்டு கலங்கா பெரு நகர் உடன் ஒக்கச் சொல்லலாம் படி உள்ள திருப்பேர் என்னும் பெரு நகரில் திரு அனந்தாழ்வான் மேல் அஞ்சன மலை போல் சாய்ந்து அருளி-

ஆக திருப் பதிகள் தோறும் ,ஒரோ குணம் பிரத்யேன பிரகாசிக்கும் என்னும் இடம் இவர் அனுசந்தித்த திருப்பதிகள் எல்லாவற்றிலும் தர்சிப்பித்தார் ஆய்த்து- 

–——————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ ஆய் ஜநந்யாசார்யர்‌ ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்