1) பூர்வ த்,விகம் – ஸூரி வைபவம் 1 முதல் 186 வது ஸூத்ரம் வரை (186)
(2) உத்தர த்,விகம் – ஸூரி ஸுக்த்தி வைபவம்– 187 முதல் 234 முடிய (48)
(1) ப்ரத, மோத், யாயம் -ஸாஸ்த்ர தாத்பர்ய அதிகாரி வைபவம் 1-38 (38)
(2) த்,விதீயோத், யாய: – க்,ரந்த, கர்த்ரு வைப,வம் 39 – 186 (148)
(3) த்ருத்யோத், யாயம் – க்,ரந்தாந்தர தார தம்ய வைப,வம் 187-207 (21)
(4) சதுர்த்தே ரத், யாயம் -கிரந்த, ப்ரதிபாத்,ய க்ரம வைப,வம் 208-234 (27)
13 –உபதேஸ பாதம் -208 –213—மொத்தம் –6– ஸூரணைகள் –மூன்று அதிகரணங்கள் —
18– ரஹஸ்ய த்ரயார்த்த உபதேஸாதி, கரணம் —208–210—மொத்தம்–3-ஸூரணைகள்
19 –அர்த்த, பஞ்சக ஸங்க்,ரஹ-விவரணாதி,கரணம் -211 -212-மொத்தம்—2-ஸூரணைகள்
20-மங்கலா சரண-ஸத்வத் தத்த்வாதி கரணம்-213–ஒரே ஸூரணை–
—
அவிக்ன பரிசமாப்தி பிரசய கமநார்தமாக பிரபந்த ஆரம்பத்தில் ஆசரிக்கப் படும் – ஆசீர் நமஸ்க்ரியா -வஸ்து -நிர்தேசங்கள் ஆகிற மங்கள ஆசாரங்கள் இதிலும் உண்டோ என்னும் ஆ காங்க்ஷையிலே அருளிச் செய்கிறார் மேல் —ப்ரபந்த ஆரம்பத்திலே அந்த ப்ரபந்தத்தினுடைய அவிக்ந பரி ஸமாப்த்யர்த்தமாகவும் சொல்லக் கடவதான ஆஸீர் நமஸ்க்ரியா வஸ்து நிர்தேஸம் என்கிற இவை இப் ப்ரபந்த ஆரம்பத்திலுமுண்டோ என்னில்,
அடி தொழுது எழு என்ற இதிலே வஸ்து நிர்தேச நமஸ்கார ஆசீஸ் ஸூக்களும் உண்டு–சூரணை -213-
(அடி-என்ற இதிலே வஸ்து நிர்தேசமும்-தொழுது – என்ற இதிலே நமஸ்காரமும் எழு -என்ற இதிலே ஆசீஸ்ஸூம் உண்டு–என்றவாறு )
அதாவது-துயர் அறு சுடர் அடி -என்கையாலே வஸ்து நிர்தேசமும் தொழுது -என்கையாலே -நமஸ்காரமும்-எழு -என்கையாலே ஆசீஸ்ஸும் உண்டு என்ற படி .
“துயரறு சுடரடி” (திருவாய்மொழி 1-1-1) என்று வஸ்து நிர்தேஸத்தையும் “தொழுது” என்று நமஸ்காரத்தையும் “எழு” என்று ஆஸீஸ்ஸையும் சொல்லிற்றென்கிறார் –
உண்டு– அதாவது- இப்படி நாம் ஒரு பிரபந்தம் பண்ண வேண்டும் கருதி இருந்து இவர் செய்தது அன்றிக்கே – நிரம்பின ஏரி நெளிக்குமா போலே -வாய்கரை மிடைந்து புறப் பட்ட சொற்கள் இவர் பாசுரத்தாலே லோகத்தைத் திருத்தக் கோலுகிற சர்வேஸ்வரன் நினைவாலே – சர்வ லஷணோ பேதமாக தலைக் கட்டின பிரபந்தம் ஆகையாலே – இம் மங்கள ஆசாரங்களும் கோல் விழுக் காட்டாலே பலித்தன இத்தனை ஆகையாலே ஆய்த்து ..-அடி தொழுது எழு -என்ற இதிலே இவையும்- பண்ணப் பட்டன- என்னாதே- உண்டு – என்று விட்டது —
–——————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ ஆய் ஜநந்யாசார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply