1) பூர்வ த்,விகம் – ஸூரி வைபவம் 1 முதல் 186 வது ஸூத்ரம் வரை (186)
(2) உத்தர த்,விகம் – ஸூரி ஸுக்த்தி வைபவம்– 187 முதல் 284 முடிய (48)
(1) ப்ரத, மோத், யாயம் -ஸாஸ்த்ர தாத்பர்ய அதிகாரி வைபவம் 1-38 (38)
(2) த்,விதீயோத், யாய: – க்,ரந்த, கர்த்ரு வைப,வம் 39 – 186 (148)
(3) த்ருத்யோத், யாயம் – க்,ரந்தாந்தர தார தம்ய வைப,வம் 187-207 (21)
(4) சதுர்த்தே ரத், யாயம் -கிரந்த, ப்ரதிபாத்,ய க்ரம வைப,வம் 208-284 (27)
9 –ஸ்ரீ ஸூக்தி வைப ,வ பாதம் -ஒரே அதிகரணம் 187–188—மொத்தம் –2-ஸூரணைகள்
14 –பகவத் அநுபவ ப்ரீதி காரித ஸ்ரீ முக, ஸூக்தயதி கரணம்– 187 -188-மொத்தம் –2-ஸூரணைகள்-
—
இத் திருப்பதிகளில் பிராவண்யம் இவர்க்கு உண்டாய்த்து எப்போது ? இவர் தாம் பிரபந்தம் அருளி செய்யத் தொடங்கிற்று எத்தனை திரு நஷத்த்ரத்து அளவில் ? இது தனக்கு போக்த்ரு நியமமுண்டோ ?
இதின் போக்யதை தான் இருக்கும் படி எங்கனே ? என்னும் ஆ காங்க்ஷையில் அருளிச் செய்கிறார் மேல்
இவற்றில் பிராவண்யம் இவள் பரமே என்ன உண்டாய் ஷோடசகலா பூரணமான சந்திர மண்டலம் போலே பதினாறு நஷத்ரம் நிரம்பினவாறே தேவ போக்யமானவதில் அம்ருதம் போல் அன்றிக்கே என்னாத் தமிழர் இசைகாரர் முதற் பத்தர் வானவர் என் அம்மான் பார் பர வென்னும் படி சேஸ்வர விபூதி போக்யமான பாலோடு அமுதன்ன மென் மொழி முகம் செய்தது–சூரணை -187-
(இத் திருப்பதிகளில் பிராவண்யம் இவர்க்கு உண்டாய்த்து எப்போது ?–-இவற்றில் பிராவண்யம் இவள் பரமே என்ன உண்டாய்
இவர் தாம் பிரபந்தம் அருளி செய்யத் தொடங்கிற்று எத்தனை திரு நஷத்த்ரத்து அளவில் ?–ஷோடசகலா பூரணமான சந்திர மண்டலம் போலே பதினாறு நஷத்ரம் நிரம்பினவாறே –
இது தனக்கு போக்த்ரு நியமமுண்டோ ?–தேவ போக்யமானவதில் அம்ருதம் போல் அன்றிக்கே என்னாத் தமிழர் இசைகாரர் முதற் பத்தர் வானவர் என் அம்மான் பார் பர வென்னும் படி சேஸ்வர விபூதி
இதின் போக்யதை தான் இருக்கும் படி எங்கனே ?-பாலோடு அமுதன்ன மென் மொழி)
அதாவது-இவ் அர்ச்சாவதார ஸ்தலங்களிலே ப்ராவண்யம் –இவள் பரமே என்ன உண்டாய்–முலையோ முழு முற்றும் போந்தில –பெருமான் மலையோ திரு வேம்கடம் என்று கற்கின்ற வாசகம் இவள் பரமே –திருவிருத்தம் -60–என்னும் படி பருவம் நிறம்புவதர்க்கு முன்னே உண்டாய் — பதினாறு கலைகளாலும் பரி பூர்ணமான சந்திர மண்டலம் போலே பதினாறு நஷத்ரம் பூர்ணமான வாறே–தேவ போக்யமானவதில் அம்ருதம் போல் அன்றிக்கே-அதாவது-கிருஷ்ண பஷே அமரைஸ் சஸ்வத் பீயதே வை ஸூதாமய–ஸ்ரீ விஷ்ணு புராணம் -2-11-22-என்கிறபடியே தேவர்களுக்கு போக்கியம் ஆகையாலே -போக்த்ரு நியமம் உடைத்தான அந்த சந்திர மண்டல அம்ருதம் போல் அன்றிக்கே — பொருந்தா வானுறை நாள்களை நாள் தொறும் புணர்வோன் அருந்த வானவர்க்கு ஆரமுது அன்புடன் அளிப்போன்-வில்லி பாரதம் ஆதி பர்வம்-என்னாவில் இன் கவி –திருவாய் -3-9-1-என்றும் -( இத்தால் ஆழ்வாருக்கும் இதன் இனிமை சொல்லி ) பாலேய் தமிழர் இசைகாரர் பத்தர் பரவும் ஆயிரம் –திருவாய் -1-5-11–என்றும் –தூ முதல் பத்தர்க்கு–திருவாய் –7-9-3- -என்றும் -(இவற்றால் கற்பவர்களுக்கு இனிமை )
கேட்டாரார் வானவர்கள்–திருவாய் -10-6-11- -என்றும் –-தென்னா வென்னும் என்னம்மான் -என்றும் -திருவாய் -10-7-5–பார் பரவின் கவி–திருவாய் -7-9-5- -என்றும் சொல்லுகிறபடி ஸ்வ பர விபாகம்-ஸூரி சம்சார விபாகம்–ஈச ஈசி தவ்ய விபாகம் அற- ஈஸ்வரனோடே இரண்டு விபூதியும் புஜிக்கைக்கு யோக்யமாய் –பாலோடு அமுதன்ன ஆயிரம்–திருவாய் -8-6-11– -என்றும் – அமுத மென்மொழி–திருவாய் –5-6-2- -என்கிறபடியே வாச்ய வாசக சம்ச்லேஷ ரசத்தால் -பாலும் அமுதும் கலந்தால் போலேயாய் –
போக்யத அதிசயத்தாலும் – புஜித்தார்க்கு நித்யத்வத்தை கொடுக்கையாலும் – அம்ருத சமமாய் –
அதில் வ்யாவ்ருத்தமான மார்த்வத்தை உடைத்தான சப்தம் இவர் முகோத்கதமாய்த்து என்கை-
இவற்றில் ப்ராவண்யம் இவள்பரமே என்ன வுண்டாய்) இத் திருப்பதிகளில் நிற்கிற நிலையில் இவர்க்கு உண்டான ப்ராவண்யம் “பெருமான் மலையோ திஸ்ருவேங்கடமென்று கற்கின்ற வாசகம் இவள் பரமே” (திருவிருத்தம் 60) என்று நிஷேதகரும் ஆஸ்சர்யப்படும்படி உண்டாய்-பதினாறு கலையும் நிறைந்தால் சந்த்ரன் பூர்ணனாமாப் போலே இவரும் திருவவதரித்தவன்று தொடங்கி …… த்தோடே யிருந்து பகவதநுபவத்தைப் பண்ணி அந்த பகவதநுபவத்தாலே பூர்ணராய்க் கொண்டு பதினாறு திருநக்ஷத்ரம் நிரம்பினவாறே அந்த சந்த்ரன் பக்கலுண்டான அம்ருதம் தேவர்களுக்கே போக்யமாகையாலே அதிக்ருதாதிகாரமுமாய் அந்த சந்த்ரனுக்கு வ்ருத்தி ஷயமுண்டாகையாலே பூர்ணனான காலத்திலல்லது கிடையாமையாலே ஸக்ருத் ஸேவ்யமுமாய் தேஹத்தைப் பூண் கட்டுமதாகையாலே ஸம்ஸார வர்த்தகமாயிருக்கும் அது போலன்றிக்கே -(என்னாத் தமிழர் இத்யாதி மென்மொழி முகம் செய்து ) என்நாவிலின் கவி (திருவாய் -3-9-1) என்னுமா போலே தமிழர் இசைகாரர் பத்தர் பரவும் ஆயிரம் (திரு -1-5-11) என்றும் தூ முதல் பத்தருக்குத் தான் தன்னைத் சொன்ன (திருவாய் -7-9-3) என்றும் கேட்டாரார் வானவர்கள் (திரு 10-6-11) என்றும்-தென்னா வென்னுமென்னம்மான்” (திருவாய்மொழி-10-7-5) என்றும் பார்பரவின்கவி’ (திருவாய்மொழி 7-9-5) என்றும் சொல்லுகிறபடியே தம்மோடு பிறரோடு ஈஸ்வரனோடு வாசியற ஸர்வஜந போக்யமாகையாலே ஸர்வாதிகாரமுமுமாய் அந்த சந்த்ரனைப் போலே விருத்தி க்ஷயங்களின்றிக்கே காதல் கடல்புரைய” (திருவாய்மொழி 5-3-4) ‘ காதல் (கடலின்) மிகப் பெரிது”(திருவாய்மொழி 7-3-6) “அதனில் பெரிய என்னவா” (திருவாய்மொழி 10-10-10) என்கையாலே விருத்தியேயாய், ஸதா போக்யமுமாய், “உயிரின் மேலாக்கை ஊனிடை யொழிவிக்குமே” (திருவாய்மொழி 3-2-11 என்று மாம்ஸாஸ்ருகாதி மயமான ஸரீர ஸம்பந்தத்தை யறுத்து ஸம்ஸார நிவர்த்தகமாமளவே யன்றிக்கே மேலை வைகுந்தத்து இருத்தும்” (திருவாய்மொழி 8-6-11) என்று அப்ராக்ருத திவ்யதேஸ ப்ராப்தியையும் பண்ணித் தரவற்றான “பாலோடமுதன்ன வாயிரம்(திருவாய்மொழி 8-6-11) என்றும் “அமுதமென்மொழி‘ (திருவாய்மொழி 6-5-2) என்றும் சொல்லுகிற படியே அம்ருத ரூபமாய் அதிலும் அதிமார்த்தவத்தை யுடைத்தான சொற்களாலானவை முகோத்கமாயிற்றின’ என்கிறார் –
முலையோ முழு முற்றும் போந்தில மொய் பூம் குழல் குறிய
கலையோ அரையில்லை நாவோ குழறும் கடல் மண்ணெல்லாம்
விலையோ வென மிளிரும் கண் இவள் பரமே பெருமான்
மலையோ திருவேம்கடம் என்று கற்கின்ற வாசகமே – 60–அல்லாத அவயவங்களினுடைய-நிரம்பாமையைச் சொல்லி வைத்து இதனுடைய பெருமையைச் சொன்னால் விரூபமாகாதோ -என்று ஜீயர் கேட்க –இதிலும் சிறுமையே காணும் சொல்கிறது –இங்கனே சொல்லலாவது தானும் இன்று -(பால்யத்தில்)-நாளை-இது தானும் சொல்லப் போகாது -என்று அருளிச் செய்தார் — இப்படி விசதமாக பார்க்கிறது இந்த பால்யத்தில்-இத்தனை –யௌவனம் குடி புகுந்தால் ஒறுக்கிப் பார்க்குமது ஒழிய இப்படி நன்றாகப் பாராள் –ஆகையால் இதுவும் பால்யத்துக்கு ஸூசகம் என்றபடி-உண்மையில் நாயகி யவ்வன பருவத்தை அடைந்து இருந்தும் அன்பு மிகுதியால் இவளது இளமையை தோற்றுகிறது-
சொன்னால் விரோதம் இது, ஆகிலும் சொல்லுவன் கேண்மினோ!
என் நாவில் இன்கவி யான் ஒருவர்க்கும் கொடுக்கிலேன்
தென்னா தெனா என்று வண்டு முரல் திரு வேங்கடத்து
என் ஆனை என் அப்பன், எம்பெருமான் உளனாகவே.–3-9-1—என் நாவில் இன்கவி யான் ஒருவர்க்கும் கொடுக்கிலேன்-யஸ் யை தே தஸ்ய -என்கிறபடியே தம்மைப் போலே தம்முடைய நாவும் அவனுக்கு அநந்யார்ஹ சேஷம் -என்கிறார் – நாப்படைத்த கார்யம் கொண்டேன் நான் ஒருவனுமே யன்றோ -என்கிறார் –இவள் இராப்பகல் வாய் வெரீஇ -என்னும் படியான நா விறே-இன்கவி – அவனுக்கு இனிதாகை யாலே தமக்கும் இனிதாய் இருக்கிறபடி –-சேஷிக்கு இனிதான வழியாலே தனக்கு இனிதாகை இ றே -சேஷத்வத்தினுடைய எல்லை-யான்-அநந்யார்ஹ சேஷ பூதனான நான்
ஒருவர்க்கும் கொடுக்கிலேன்-அத்யந்த பரதந்த்ரமாக சொல்லி வைத்து கொடுக்கிலேன் என்பான் என் என்னில் -அவன் தான் இத்தாலே அநேகம் பெற்றானாய் இருக்கையாலே புறம்பு கொடேன் என்கையாலே இங்குத்தைக்கே அநந்யார்ஹம் என்கை கொடுக்கிலேன் -கொடுக்க ஷமன் அல்லேன்-
மாலே மாயப் பெருமானே மா மாயனே என்று என்று
மாலே ஏறி மால் அருளால் மன்னு குருகூர்ச் சடகோபன்
பாலேய் தமிழர் இசைகாரர் பத்தர் பரவும் ஆயிரத்தின்
பாலே பட்ட இவை பத்தும் வல்லார்க்கு இல்லை பரிவதே –-1-5-11—பாலேய் தமிழர்-பாலோடு ஒத்து உள்ள தமிழ் அறிவார்-இசைகாரர்-இசை அறிவார்-பத்தர் பரவும்-சர்வேஸ்வரனும் ஆழ்வாருமான பரிமாற்றத்திலே கால் தாழ்ந்து இருக்குமவர்கள்-பாலேய் தமிழர் -என்கிறது முதல் ஆழ்வார்களை
இசைகாரர் -என்கிறது ஸ்ரீ மதுர கவிகள் போல்வாரை பத்தர் -என்கிறது பெரியாழ்வார் போல்வாரை
ஸ்ரீ பராங்குச நம்பி -ஆழ்வார் திருவரங்கப் பெருமாள் அரையர் பிள்ளை யுறங்கா வல்லி தாசர் போல்வர் என்னுமாம் -ஆழ்வான் ஓர் உருவிலே–பரவும் ஆயிரத்தின் அக்ரமாக கூப்பிடுகை-
ஆ முதல்வன் இவன் என்று தன் தேற்றி என்
நா முதல் வத்து புகுந்து நல் இன்கவி
தூமுதல் பத்தர்க்குத் தான் தன்னைச் சொன்ன என்
வாய் முதல் அப்பனை என்று மறப்பனோ!–7-9-3—தூமுதல் பத்தர்க்குத்-அஸ்ப்ருஷ்ட சம்சார கந்தரான நித்ய ஸூ ரிகளும் -கேட்டாரார் வானவர்கள் -என்கிறபடியே வித்தராம் படி என்னுதல் -சம்சாரத்தில் தலையான முமுஷுக்கள் என்னுதல்-தான் தன்னைச் சொன்ன-என்னை உபகரணமாகக் கொண்டு -கர்த்தாவும் தானேயாய் -கர்மீபவிப்பானும் தானே யானான்-என்-வாய் முதல் அப்பனை-எனக்கு வாய்த்த -காரண பூதனான -உபகாரகனை-
காட்டித் தன் கனை கழல்கள் கடு நரகம் புகல் ஒழித்த
வாட்டாற்று எம் பெருமானை வளம் குருகூர்ச் சடகோபன்
பாட்டாய தமிழ் மாலை ஆயிரத்துள் இப்பத்தும்
கேட்டு ஆரார் வானவர்கள் செவிக்கு இனிய செஞ்சொல்லே–10-6-11—பாட்யே கே யே ச மதுரம் -என்கிறபடியே இசையோடு புணர்ப்புண்ட தமிழ்த்தொடை –நித்ய ஸூ ரிகள் இத்தைக் கேட்டால் பர்யாப்தர் ஆகார் -இப்பாடுகிறது உள்ளீடானவன் சீலத்தாலேயே என்னில் –பாசுரத்துக்காக என்கிறது –ஸம்ஸ்ரவே மதுரம் -என்கிறபடியே செவியே தொடங்கி ரசிக்கும்-செஞ்சொல்லே–-நினைவும் சொல்லும் செயலும் ஒருபடிப் பட்ட சொல்லு -சிந்தையாலும் சொல்லாலும் செய்கையினால் -ஏன்னா செந்தமிழ் பத்தும் என்றார் இறே –
நண்ணா அசுரர் நலிவு எய்த நல்ல அமரர் பொலிவு எய்த
எண்ணா தனகள் எண்ணும் நன் முனிவர் இன்பம் தலை சிறப்ப
பண்ணார் பாடல் இன் கவிகள் யானாய்த் தன்னைத் தான் பாடி
தென்னா என்னும் என் அம்மான் திரு மால் இரும் சோலையானே–10-7-5—ப்ரீதிக்குப் போக்கு வீடாக ஆளத்தி வையா நின்றான் –ஏதத் சாம காயன் நாஸ்தே-என்று பகவத் லாபத்தில் ப்ரீதிக்கு போக்குவிட்டு சேஷ பூதன் சொல்லக் கடவத்தை –அவாக்ய அநாதர –என்கிற தான் ப்ரீதி பிரகரஷத்தாலே அந்த பூர்த்தி குலைந்து சொல்லுகிறான் இறே –என் அம்மான் –ஸூத வசனம் ரசிக்குமா போலே சம்பந்தம் இறே ரசிகைக்கு அடி –திரு மால் இரும் சோலையானே-இவரைக் கவி பாடுவித்த தேசம் திருமலை யாய்த்து –
சீர் கண்டு கொண்டு திருந்து நல் இன் கவி
நேர்பட யான் சொல்லும் நீர்மை இலாமையில்
ஏர்வுஇலா என்னைத் தன் ஆக்கி என்னால் தன்னைப்
பார் பரவு இன் கவி பாடும் பரமரே.–7-9-5--விசேஷஞ்ஞரோடு அவிசேஷஞ்ஞரோடு வாசி அற எல்லாரும் வாய் புலற்றும் படியான இனிய கவி என்னுதல் –பாலேய் தமிழர் இசைகாரர் பத்தர் பரவும் ஆயிரம் -என்கிறபடியே யாதல் –-பரமரே.–நதத் சமச்சாப்யதி கச்ச த்ருச்யதே -என்கிற பிரமாணம் கொண்டு அறிய வேண்டா -என்னை இட்டுக் கவி பாடுவித்துக் கொண்ட இத்தைக் கொண்டே பரத்வம் நிச்சயித்துக் கொள்ளலாம்-
சோலைத் திருக் கடித் தானத்துறை திரு
மாலை மதிட் குருகூர்ச் சடகோபன் சொல்
பாலோடு அமுதன்ன ஆயிரத்திப் பத்தும்
மேலை வைகுந்தத்து இருத்தும் வியந்தே-8-6-11-பாலோடு அமுது அன்ன ஆயிரம் என்னுதல் -இப்பத்து என்னுதல் -வாஸ்ய வாசகங்கள் யுடைய சேர்த்தி இருக்கிற படி –பால் என்கிறது –சோலை திருக் கடித்தானத்து உறை-திருமால் என்கிற வாஸ்யத்தை –அமுது என்கிறது சடகோபன் சொல் என்கிற வாசகத்தை -இது ஆளவந்தார் நிர்வாஹம் –
குமுறுமோசை விழவொலித் தொலை வில்லி மங்கலம் கொண்டு புக்கு
அமுத மென்மொழி யாளை நீர்உமக் காசை யின்றி அகற்றினீர்
திமிர்கொ டாலொத்து நிற்கும் மற்றிவள் தேவ தேவபிரான்என்றே
நிமியும் வாயொடு கண்கள் நீர்மல்க நெக்கொசிந்து கரையுமே.–6-5-2—இவள் பேச்சைக் கேட்டால் போன உயிரும் மீளுமாயிற்று –மென் மொழி –அம்ருதத்தில் வியாவ்ருத்தி-ஸ்ரவண யோக்யமாய் இராதே அம்ருதம்–மதுரா மதுரா லாபா என்று இவள் பேச்சைக் கேட்க ஆசைப்பட்டு இருக்குமவன் பெற்றுப் போனான் -நீங்கள் ஆசை இல்லாமையால் அகற்றினி கோள் -தம் தாமுக்கு அனர்த்தத்தை தாம் தாமே விளைத்துக் கொள்ளுவார் உண்டோ -அகற்றுகை யாவது –அகலும் படி பண்ணினி கோள் என்கை –அதாவது இவ் ஊரில் புக்க பின்பு இவர்களோடு வார்த்தை சொல்லாத தவிர்ந்தாள் யாயிற்று-
ஊரவர் கவ்வை எருவிட்டு அன்னை சொல் நீர்படுத்து
ஈர நெல் வித்தி முளைத்த நெஞ்சப் பெருஞ் செய்யுள்
பேரமர் காதல் கடல் புரைய விளைவித்த
காரமர் மேனி நம் கண்ணன் தோழீ! கடியனே?–5-3-4—ஊரார் பழியும் -தாயார் ஹித வசனமும் -கேளாத படியான காதல் –அமர்ந்த காதல் -தர்ம அனுபந்தியான காதல் -பெரிதான அமரை விளைத்த காதல் -உஊராரை பூசல் ஆக்கின காதல் என்னவுமாம் –ஈரம் -சங்கம் -காதல் -காமம் –சங்காத் சஞ்சாயதே காம –கடல் புரைய விளைவித்த-அப்ரமேயோ மஹா த-என்ற கடல்தி ஒப்பாம் அத்தனை -கிடையா விடினும் விட மாட்டாத காதல் என்கை-கடல் புரைய என்றார் முதல் -அநந்தரம் கடலின் மிகப் பெரிதால் என்றார் –பின்னை மண்டிணி ஞாலமும் ஏழ் கடலும் நீள் விசும்பும் கழியப் பெரிதால் -என்றார் –முடிவில் அதனில் பெரிய என் அவா -என்றார் -இது இறே காதல் பெருகின படி -இது இறே பொய் நின்ற ஞானத்திற்கு பின்பு இவ்வளவும் வர விளைத்துக் கொண்ட கார்யம் –காரமர் மேனி –எருவும் நீரும் உண்டானாலும் வர்ஷம் வேணும் இ றே -வ்ரஷூக வலாஹம் போலே சிரமஹரமான வடிவு-நம் கண்ணன்
விரூபனானாலும் விட ஒண்ணாத பவ்யதையை-இவ்வடிவும் பவ்யதையும் யாயிற்று புறம்பு உள்ளோரோட்டை தொக்கை அறுத்ததும் -அபரிச்சின்னமான காதலை விளைத்ததும் –நம் கண்ணன் -கிருஷ்ணன் என்றால்பெண்களுக்கு கையாள் என்று பிரசித்தம் இறே-
காலம் பெற என்னைக் காட்டுமின்கள் காதல் கடலின் மிகப் பெரிதால்
நீல முகில் வண்ணத்து எம்பெருமான் நிற்கு முன்னே வந்தென் கைக்கும் எய்தான்
ஞாலத்தவன் வந்து வீற்றிருந்த நான் மறை யாளரும் வேள்வி ஓவாக்
கோலச் செந்நெற்கள் கவரி வீசும் கூடு புனல் திருப் பேரெயிற்கே.–7-3-6—காதல் கடல் புரைய விளைவித்த என்ற அளவு அன்று -மடலூரப் புக்க போது விலக்கினவர்கள் தாங்களே கொண்டு போய் காட்ட வேண்டும் தசை இறே இது -அதுக்கு ஹேது என் என்ன –நீல முகில் வண்ணத்து எம்பெருமான்-நிற்கு முன்னே வந்து -சிரமஹரமான வடிவை காட்டி யாயிற்று ஆசையை வளர்த்தது -அவன் காதலுக்கு கிருஷி பண்ணா நிற்க என்னால் ஸ்த்ரீத்வத்தை நோக்கி இருக்கப் போமோ-
சூழ்ந்து அகன்று ஆழ்ந்து உயர்ந்த முடிவு இல் பெரும் பாழேயோ
சூழ்ந்து அதனில் பெரிய பர நன் மலர்ச் சோதீயோ
சூழ்ந்து அதனில் பெரிய சுடர் ஞான இன்பமேயோ
சூழ்ந்து அதனில் பெரிய என் அவா அறச் சூழ்ந்தாயே–10-10-10–தத்வ த்ரயத்தையும் விளாக் குலை கொண்டு அது குளப்படி யாம்படி பெரிதான என்னுடைய அபி நிவேசத்தை -அதிலும் பெரிய உன்னுடைய அபி நிவேசத்தைக் காட்டி வந்து சம்ச்லேஷித்தாயே -என்னுடைய கூப்பீடும் ஒருபடி போம்படி பண்ணுவதே –அங்கே பரதம் ஆரோப்ய முதித பரிஷஸ்வஜே -என்று மீண்டு புகுந்து ஸ்ரீ பரத ஆழ்வானை மடியிலே வைத்து உச்சி மோந்து உகந்தால் போலே யாய்த்து இவருடைய விடாயும் கெடும்படி வந்து கலந்தது–
சோலைத் திருக் கடித் தானத்துறை திரு
மாலை மதிட் குருகூர்ச் சடகோபன் சொல்
பாலோடு அமுதன்ன ஆயிரத்திப் பத்தும்
மேலை வைகுந்தத்து இருத்தும் வியந்தே-8-6-11--இப்பத்தும் –வியந்து — மேலை வைகுந்தத்து இருத்தும் –சம்சாரத்தில் இத்தை அப்யசிப்பான் ஒருவன் உண்டாவதே என்று விஸ்மயப்பட்டு-சர்வாதிகமான பரம பதத்தில் கொடு போய் வைக்கும் –மாயக் கூத்தன் நடையாடாத தேசத்திலே வைத்து -ஒரு நாளும் பிரியாத அனுபவத்தை கொடுக்கும் –
உயிர்கள் எல்லா உலகமும் உடையவனைக்
குயில்கொள் சோலைத் தென்குருகூர்ச் சடகோபன்
செயிர்இல்சொல் இசைமாலை ஆயிரத்துள் இப்பத்தும்
உயிரின்மேல் ஆக்கை ஊனிடை ஒழிவிக்குமே.–3-2-11—-செயிர் -குற்றம் -இல் -இல்லாமை -ஆக நிர்த்தோஷமான சப்த சந்தர்ப்பத்தை உடைய ஆயிரம்-இப் பத்துக்கு குற்றம் இல்லாமை யாவது -எங்கு இனித் தலைப் பெய்வன் -என்று மெய்யாய் இருக்கை உயிரின்மேல் ஆக்கை ஊனிடை ஒழிவிக்குமே.–
சரீர சம்பந்த ஹேதுவான கர்மத்தைப் போக்கும் –
—
இவர் பக்கல் பிரபந்தம் அவதரிக்க தொடங்கின காலத்தை அருளிச் செய்தார் கீழ் .. இது தான் அவதரிக்கிற அளவில் -இப்படி நாம் அவனைக் கவி பாட வேணும் -என்று சங்கல்ப்பித்து இருந்து பாடினாரோ -என்னும் ஆ காங்க்ஷையில் இதின் அவதரண க்ரமத்தை அருளிச் செய்கிறார் மேல் -இப்படி போக்யமான ஸப்த ப்ரவ்ருத்தி மாத்ரமே யன்றிக்கே பரபக்தி ப்ரேரிதமாய்க் கொண்டு அந்த ஸப்த ஸந்தர்ப்ப ரூபமான ப்ரபந்தமாய்க் கொண்டு அவதரித்ததென்கிறார்.-
அதாவது-நீர் பாலாய்–பால் நெய்யாய் –நெய் அம்ருதமாய் -அத்தாலே நிரம்பினதோர் ஏரி
பொறாமல் நெளித்து உடையுமா போலே —-மயர்வற மதி நலம் அருளினன்-1-1-1–என்கிற இடத்தில்
கர்ம ஞான அனுக்ருஹீதையான பக்தியின் ஸ்தானத்திலே -பகவத் பிரசாதமாய் — அது அடியாக பர பக்தி தொடங்கி – பிறக்கையாலே -ஞானம் முதலிலே பர பக்தி ரூபமாய் – பர பக்தி ஆனது பர ஞானமாய் –பர ஞானம் பரம பக்தியாய் – அச்யுத பக்தி தத்வ ஜ்ஞான அம்ருதாப்தி பரிவாஹ ஸூபைர் வாசோபி -ஸ்தோத்ர ரத்னம் -3-என்கிறபடியே – அந்த பர பக்தியாதிகளாய் நிறைந்த ஜ்ஞானம் ஆகிற அம்ருதாப்தி யானது –ஆஸ்ரயம்-அழியாமல் -பரீவாக அபேஷை பிறந்து –நிமியும் வாயோடு கண்கள் நீர் மல்க —திருவாய் -6-5-2–என்கிறபடி –நெளிகிற வாய் கரையிலே – மிடைந்த சொல் தொடை –திருவாய் -1-7-11–என்கிறபடியே – சொற்கள் தான் நாம் இங்குத்தைக்கு கிஞ்சித் கரித்தோம் ஆக வேணும் -என்று
என்னைக் கொள் என்னைக் கொள் –என்று மேல் விழுகையாலே -நெருங்கிக் கொண்டு – மொழி பட்டோடும் கவி அமுதம் –திருவாய் -8-10-5–என்கிற படியே வசன ரூபமாய் பிரவஹித்து இப்படி
பரபக்த்யாத்ய அவஸ்தா த்ரயாபன்ன பக்தி ப்ரேரிதமாய் அவதரிக்கையாலே –-அவாவில் அந்தாதிகள் இவை ஆயிரமும் -திருவாய் -10-10-11-– என்று பக்தி பலாத்காரத்தாலே பிறந்த அந்தாதியான ஆயிரம் என்று நிரூபகமாம் படியாய்த்து என்கை —
(நீர்பால் நெய்யமுதாய்) நீர் பாலாய், பால் நெய்யாய், நெய் அம்ருதமாய், அவ் வம்ருதத்தாலே நிரம்பினதோர் ஏரி நெளிக்குமா போலே, ஜ்ஞாநம் பக்தியாய், பக்தி பரபக்தியாய், பரபக்தி பரஜ்ஞாநமாய், பரஜ்ஞாநம் பரமபக்தியாய் “அச்யுத பக்திதத்த்வ ஜ்ஞாநாம்ருதாப்தி, பரிவாஹ ஸூபை ர் வசோபி:,” (ஸ்தோத்ர ரத்நம் 3) என்கிறபடியே அந்த பரபக்த்யாதிகளாலே நிறைந்திருப்பதொரு ஜ்ஞாநாம்ருதாப்தியானது (நிமிகிற வாய்க்கரை மிடைந்து) பரீவாஹாபேககை பிறந்து “நிமியும் வாய்” (திருவாய்மொழி
6-5-2) என்கிற வாய்க்கரையை “மிடைந்த சொல் தொடை” (திருவாய்மொழி 1-7-11)
என்கிறபடியே நெருக்கி அதிக்ரமித்து “மொழிபட்டோடும் கவியமுதம்”(திருவாய்மொழி 8-10-5 என்று சொற்களாய்க் கொண்டு ப்ரவஹித்து (அவாவிலந்தாதிஎன்று பேர் பெற்றது) ‘அவாவிலந்தாதிகளால் இவையாயிரமும்” (திருவாய்மொழி-10-10-19 என்று பரபக்த்யாதிகளாலே “சொல்லப்பட்ட ஆயிரம்” (திருவாய்மொழி-8-10-11) என்று லோகத்திலே ப்ரஸித்த மாய்த்தென்கிறார் –
உயர்வற உயர் நலம் உடையவன் எவன் அவன்
மயர்வற மதி நலம் அருளினன் எவன் அவன்
அயர்வறும் அமரர்கள் அதிபதி எவன் அவன்
துயரறு சுடரடி தொழுது எழு என் மனனே –1-1-1-மயர்வு -அஜ்ஞானம் -இத்தால் ஜ்ஞான உதய -அந்யதா ஜ்ஞான -விபரீத ஜ்ஞான ரூபமான அஜ்ஞானத்தைச் சொல்லுகிறது-அற -சவாசனமாகப் போகும்படி
மதி நலம்-மதி என்று ஜ்ஞானம்-நலம் -என்று பக்தி -பக்தி ரூபாபன்ன ஜ்ஞானம் என்றபடி-அருளினன்
இத் தலையில் நன்மை தீமை பாராதே நிர்ஹேதுக கிருபையால் தந்து அருளினான்-முலைக் கடுப்பாலே தரையிலே பீச்சுமா போலே –எனக்குத் தந்து அருளினான் -என்னாது ஒழிந்தது -பகவத் விஷயீ காரத்துக்கு முன்பு தம்மை அசத் கல்பராக நினைத்து இருக்கையாலே-
பூயோ நமோ’பரிமிதாச்யுத பக்தி தத்வ
ஜ்ஞாநாம்ருதாப்தி பரிவாஹ ஶுபைர் வசோபி: |
லோகே’வதீர்ண பரமார்த்த ஸமக்ர பக்தி
யோகாய நாதமுநயே யமிநாம் வராய ||–3—பகவானிடத்தில் எல்லை இல்லாத பக்திக் கடலில் இருந்து பெருகிய மங்களகரமான வார்த்தைகள் மற்றும் உண்மை ஞானம் வந்து பிறந்ததைப் போலே இருப்பவர் ஸ்ரீமந் நாதமுனிகள். அவரே சிறந்த குறிக்கோள்.-அவர் பூர்த்தியையும் பக்தி யோகத்தையுமுடையவர். யோகிகளில் சிறந்தவர். அவருக்கு மீண்டும் என் வணக்கங்கள்.
குமுறுமோசை விழவொலித் தொலை வில்லி மங்கலம் கொண்டு புக்கு
அமுத மென்மொழி யாளை நீர்உமக் காசை யின்றி அகற்றினீர்
திமிர்கொ டாலொத்து நிற்கும் மற்றிவள் தேவ தேவபிரான்என்றே
நிமியும் வாயொடு கண்கள் நீர்மல்க நெக்கொசிந்து கரையுமே.–6-5-2—அந்த சீலவத்யையை சொல்லப் புக்கு தலைக் கட்ட மாட்டாதே உதடு நெளிக்கும்-உதடு நெளிக்கிற வாயோடு கண்ண நீர் மல்க –-நெக்கு -சிதலையுமாய் –-ஒசிந்து -பரவசையுமாய் –-கரையும் -நீராகா நின்றாள்-நெக்கொசிந்து கரையுமே.-பெரு வெள்ளத்தில் கரையானாது நெகிழ்ந்து ஒட்டு விட்டு ஒசிந்து பொசிந்து அவயவியாகாத படி கரைந்து போமா போலே அழிந்து போகா நின்றாள் -இப்படி இவள் கரையா நிற்க வன் நெஞ்சரான நாம் இதுக்கு பாசுரம் இடுவது மீட்க்கத் தேடுவது ஆகா நின்றோம் இறே-
குடைந்து வண்டுண்ணும் துழாய் முடியானை -அடைந்து தென்குருகூர்ச் சடகோபன்
மிடைந்த சொல்தொடை ஆயிரத்து இப்பத்து உடைந்து நோய்களை ஒடுவிக்குமே –-1-7-11-செறிந்த சொல் தொடையை உடைய-தனித் தனியே என்னைக் கொள் என்னைக் கொள்-என்று மேல் விழுந்த சொல் என்னவுமாம்–இப்பத்து தானே நோய்களை உடைந்தோடும் படி பண்ணும்-நோயாகிறது -ஷூ த்ர புருஷார்த்த ருசி-உடைந்து ஓடுகை-ஆஸ்ரயாந்தரங்களுக்கும் ஆகாதபடி உரு அழிகை–
வழி பட்டு ஓட அருள் பெற்று மாயன் கோல மலர் அடிக்கீழ்
சுழி பட்டு ஓடும் சுடர்ச் சோதி வெள்ளத்து இன்புற்று இருந்தாலும்
இழி பட்டு ஓடும் உடலினில் பிறந்து தன் சீர் யான் கற்று
மொழி பட்டு ஓடும் கவி அமுதம் நுகர்ச்சி உறுமோ முழுதுமே–8-10-5-அவை உள் அடங்காமையாலே சொல்லாய் ப்ரவாஹியா நின்றுள்ள-கவி அமுதம்-நுகர்ச்சி உறுமோ முழுதுமே–திருவாய் மொழி யாகிற அம்ருதத்தை அனுபவிக்கையோடு ஒக்குமோ –
நல்ல கோட்பாட்டுலகங்கள் மூன்றின் உள்ளும் தான் நிறைந்த
அல்லிக் கமலக் கண்ணனை அந்தண் குருகூர்ச் சடகோபன்
சொல்லப்பட்ட வாயிரத்துள் இவையும் பத்தும் வல்லார்கள்
நல்ல பதத்தால் மனை வாழ்வர் கொண்ட பெண்டிர் மக்களே–8-10-11-வேதம் போலே தான் தோன்றி அன்றிக்கே இருக்கை–இப்பத்தையும் அப்யஸிக்க வல்லார்கள்- -பாகவத சேஷத்வம் -அத்தோடு த்கார்ஹஸ்த்த்யத்தை நடத்துவார்கள் –-ச புத்ர பவ்த்ரஸ் ச கண என்கிறபடியே ச பரிகரமாக பாகவத சேஷத்வத்தை அனுபவிக்கக் கடவர்கள் –
அவா அறச் சூழ் அரியை அயனை அரனை அலற்றி
அவா அற்று வீடு பெற்ற குருகூர்ச் சடகோபன் சொல்
அவா இல் அந்தாதிகளால் இவை ஆயிரமும் முடிந்த
அவா இல் அந்தாதி இப்பத்து அறிந்தார் பிறந்தார் உயர்ந்தே–10-10-11-–பக்தி பலாத்காரத்தாலே பிறந்த ஆயிரம் திருவாய் மொழியிலும் -இவரைச் சொல்லுவித்த அபி நிவேசம் -ப்ரேரகனான மைத்ரேயனுடைய ஸ்த்தானத்திலே நிற்கிறது யாய்த்து –பெற்று அல்லது தரிக்க ஒண்ணாத படியான பரம பக்தியால் பிறந்தது யாய்த்து -இத் திருவாய் மொழி -கீழ் அடைய பர பக்தி பிறந்து சொல்லிற்று யாயிற்று -பரம பக்தி பிறந்து சொல்லிற்று யாயிற்று இத் திருவாய் மொழி ––இவற்றை அறிந்தவர்கள் சம்சாரத்திலே பிறந்து வைத்தே நித்ய ஸூ ரிகளோடே ஒப்பர்கள் –
–——————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ ஆய் ஜநந்யாசார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply