அகில புவந ஜன்ம ஸ்தேம பங்காதி லீலே!(1)
விநித விவித பூத விராத ரக்ஷைக தீக்ஷே |(2)
ஸ்ருதி சிரஸி விதீப்தே!(3) பிரஹ்மணி! (4) ஸ்ரீநிவாஸே !
பவது மம பரஸ்மிந் சேமுஷி பக்தி ரூபா ||-இஷ்ட தேவதையான ஸ்ரீநிவாஸனுக்குச் செய்யப்பட மங்கள ஸ்லோகம் இது.
பாராசர்ய வசஸ்ஸுதா₄ம் உபநிஷத் து₃க்₃தா₄ப்₃தி₄ மத்₄யோத்₃த்₄ருதாம்
ஸம்ஸாராக்₃நி விதீ₃பந வ்யபக₃த ப்ராணாத்ம ஸஞ்ஜீவநீம் |
பூர்வாசார்ய ஸுரக்ஷிதாம் ப₃ஹுமதி வ்யாகா₄த தூ₃ரஸ்தி₂தாம்
ஆநீதாம் து நிஜாக்ஷரை : ஸுமநஸ: பௌ₄மா: பிப₃ந்து அந்வஹம் ||இரண்டாவது மங்கள ஸ்லோஹம்-
ப்ரபத்யே ப்ரணவாகாரம் பாஷ்யம் ரங்கமிவாபரம் |
பரஸ்ய ப்ரஹ்மணோ யத்ர சேஷித்வம் ஸ்புடமீக்ஷ்யதே ||
யதீந்த்ர க்ருத பாஷ்யார்த்தா யத் வ்யாக்யாநேந தர்சிதா:
வரம் ஸுதர்சனார்யம் தம் வந்தே கூர குலாதிபம்-ஸ்ருத ப்ரகாசிகா பட்டருடைய தனியன்:
–
மூன்றாம் பாதம் –குண உப சம்ஹார பாதம் –உபாசனம் த்யானம் பக்தி போன்ற ப்ரஹ்ம வித்யைகளும்
அவற்றின் ஒற்றுமை வேற்றுமைகளும் படிக்கப் படுகின்றன – இதில் 26 அதிகரணங்கள்/ 64 ஸூத்ரங்கள் உள்ளன –-இதுவரை பத்து பாதங்களால் மோக்ஷத்திற்கான தத்வ ஞானம் உறுதி செய்யப் பட்டது மேல் வரும் ஆறு பாதங்களாலே பர ப்ரஹ்ம பிராப்தி என்னும் பலத்துடன் அதுக்கு ஹேதுவான உபாஸனத்தையும் விளக்கப் பட இருக்கிறது-ப்ரஹ்ம உபாஸனத்தில் இச்சை பிறக்க ப்ரஹ்மமே பலம் தருவது என்பது வரை கூறப்பட்டது-இப்போது அந்த உபாசன விஷயத்தில் ஓர் இடத்தில் கூறப்பட்ட குண விசேஷங்களை மற்றோர் வித்யையிலும் அனுசந்தானம் செய்ய ஏற்றுக் கொள்வதாகிற குண உப ஸம்ஹாரத்தையும் கூறப்பட்ட குணங்களை அதே வித்யையில் மட்டும் அனுசந்தானம் செய்வது என்னும் விகல்பத்தையும் தீர்மானிக்க பேத அபேத சிந்தை செய்யப் படுகிறது-வித்யைகள் ஒன்றுக்கு ஓன்று வேறு படாதவைகள் என்றால் குணங்களை உப சம்ஹாரம் செய்யலாம் வித்யை களுக்குள் பேதம் உண்டு என்னில் விகல்பம் தான் என்று கருத்து-இந்த பேத அபேதங்கள் இப்பாதத்தில் ஒத்தவை அல்ல ஆயினும் அவை குண ஸம்ஹாரத்திற்கு நிமித்தங்களே-இந்தப் பாதத்தில் குண சம்ஹாரம் உண்டா இல்லையா என்பது விசாரிக்கப் படுவதால்இதற்கு குண சம்ஹார பாதம் என்ற பெயர் ஆயிற்று –
முதல் அதிகரணம் -சர்வ வேதாந்த ப்ரத்யய அதிகரணம்- 5 ஸூத்ரங்கள்–
வைச்வாநர வித்யை-தஹர வித்யை போன்ற வேத சாகைகளில் ஓதப்படும்
அனைத்தும் ஒன்றே என்று நிரூபிக்கப் படுகிறது –
இரண்டாவது அதிகரணம் -அந்யதாத்வ அதிகரணம் -4 ஸூத்ரங்கள்–
சாந்தோக்யம் மற்றும் ப்ருஹத் உபநிஷத்தில்,சொல்லும் உத்கீத வித்யைகள்
வெவ்வேறு என்று நிரூபிக்கப் பட உள்ளது-
மூன்றாவது அதிகரணம் -சர்வாபேத அதிகரணம் -1-ஸூத்ரம்-
சாந்தோக்யம் கௌஷீதகீ உபநிஷத்துக்களில் கூறப்படும் பிராண வித்யை என்பது
ஒன்றே என்று நிரூபிக்கப் படுகிறது –
நான்காவது அதிகரணம் -ஆனந்தாத் யதிகரணம் 7 -ஸூத்ரங்கள்-
ப்ரஹ்ம ஆனந்த மயம் -அவிகாராய -ஞான மயம் -அபரிச்சேத்யம்-அகில ஹேய ப்ரத்ய நீகத்வம் -ஆகிய
ஐந்து குணங்களும் ப்ரஹ்ம வித்யையில் படிக்கப்பட வேண்டும் என்று நிரூபிக்கப் படுகிறது –
ஐந்தாவது அதிகரணம் -கார்யாக்யா நாதிகரணம் –1-ஸூத்ரம்-
ஆசமனம் செய்யும் நீர் பிராணனுக்கு வஸ்த்ரமாக உள்ளது என்று நிரூபிக்கப் படுகிறது –
ஆறாவது அதிகரணம் -சமா நாதிகரணம் –1-ஸூத்ரம்–
சுக்ல யஜூர் வேதம் -அக்னி ரஹச்யம்-ப்ருஹத் ஆரண்யகம் -இரண்டு உபநிஷத்களிலும் உள்ள
சாண்டில்ய வித்யைக்குள் -ரூபத்தில் வேறுபாடு இல்லாததால் – இரண்டும் ஒன்றே என்று நிரூபிக்கப் படுகிறது-
ஏழாவது அதிகரணம் -சம்பந்தாதி கரணம் –3 -ஸூத்ரங்கள்-
ஆதித்யனை இருப்பிடமாகக் கொண்ட ப்ரஹ்மம்-அந்தராதித்ய வித்யை –
கண்களை இருப்பிடமாகக் கொண்ட ப்ரஹ்மம் அஷி வித்யை என்பதும் கொள்ள வேண்டும் என்று நிரூபிக்கப் படுகிறது-
எட்டாவது அதிகரணம் -சம்ப்ரு யதிகரணம் –1-ஸூத்ரம்-
கட உபநிஷத்தில் உள்ள சம்ப்ருதி -அனைத்து வல்லமை உடன் இருத்தல் -த்யு வ்யாப்தி -தேவ லோகத்தில் பரவி இருத்தல் –
ஆகியவை அனைத்து வித்யைகளிலும் உபாசிக்க வேண்டியவை அல்ல என்று நிரூபிக்கப் படுகிறது –
ஒன்பதாவது அதிகரணம் -புருஷ வித்யாதிகரணம் –1-ஸூத்ரம்–
சாந்தோக்யம் தைத்ரியம் இரண்டிலும் முழங்கப் படும் புருஷ வித்யைகளில் ரூபம் வேறுபடுவதால்
அவை வெவ்வேறு வித்யைகள் என்று நிரூபிக்கப் படுகின்றன –
பத்தாவது அதிகரணம் -வேதாத்யதிகரணம்—1-ஸூத்ரம் –
தைத்ரிய சீஷா வல்லியில் உள்ள சில மந்த்ரங்கள் ப்ரஹ்ம வித்யைக்கு அங்கம் அல்ல என்று நிரூபிக்கப் படுகிறது
அதிகரணம் -11- ஹான்நயதி கரணம் —1-ஸூத்ரம் –
புண்ய பாப கர்மங்கள் மோஷம் பெறுபவனை விட்டு விலக்கி மற்றவர்களுடன் சேர்த்து விடுகின்றன -என்று
அனைத்து வித்யைகளிலும் கொள்ள வேண்டும் என்று நிரூபிக்கப் படுகிறது-
அதிகரணம் -12- சாம்பராய திகரணம்–5 -ஸூத்ரங்கள்- –
உபாசகனின் கர்மம் முழுவதும் அவன் உடலை விட்டு கிளம்பும் காலத்தில் அழிந்து விடுகின்றன என்று நிரூபிக்கப் படுகிறது –
அதிகரணம் -13–அநிய மாதிகரணம் —1-ஸூத்ரம்-
அனைத்து வித்தைகளுக்கும் அர்ச்சிராதி மார்க்கம் பொது என்று நிரூபிக்கப் படுகிறது –
அதிகரணம் -14-அஷரத்யதி கரணம் –2–ஸூத்ரங்கள்–
ப்ரஹ்மத்தின் அகில ஹேய ப்ரத்ய நீகத்வம் போன்ற மேன்மைகள் அனைத்து வித்யைகளிலும் ஓதப்பட வேண்டும் நிரூபிக்கப் படுகிறது –
அதிகரணம் -15-அந்தரத்வாதிகரணம் -3- ஸூத்ரங்கள்–
ப்ருஹத் உபநிஷத்தில் இரண்டு வெவ்வேறு பகுதிகளில் ஓதப்படும் வித்யைகள் ஒன்றே என்று நிரூபிக்கப் படுகிறது –
அதிகரணம் -16-காமாத்யதிகரணம் -3- ஸூத்ரங்கள்–
சாந்தோக்யம் ப்ருஹத் இரண்டிலும் கூறப்படும் தஹர வித்யை ரூபம் ஒன்றாதலால் ஒன்றே என்று நிரூபிக்கப் படுகிறது
அதிகரணம் -17- தந் நிர்த்தாரணா நியமாதி கரணம் –1-ஸூத்ரம்–
சாந்தோக்யத்தில் உள்ள உத்கீத உபாசனங்கள் ப்ரஹ்ம வித்யைக்கு அங்கமாக உள்ள
யாகங்களில் இருந்தாலும் இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம் என்று நிரூபிக்கப் படுகிறது-
அதிகரணம் -18-பிரதாணாதிகரணம்—1-ஸூத்ரம்–
அபஹத பாப்மா போன்ற குணங்களை உபாசிக்கும் பொழுது தஹர ஆகாசம் என்னும் ப்ரஹ்மத்தின்
ஸ்வரூபமும் உபாசிக்கப்பட வேண்டும் என்று நிரூபிக்கப் படுகிறது –
அதிகரணம் -19-நாராயண அநுவாகம்
ப்ரஹ்ம வித்யையின் மூலம் உபாசிக்கப்படும் பரம் பொருள் எந்த தேவதை என்று உணர்த்தவே என்று நிரூபிக்கப் படுகிறது –
அதிகரணம் -20-பூர்வ விகல்பாதி கரணம் -7-ஸூத்ரங்கள் –
அக்னி கிரியாமயமான யாக அங்கம் அல்ல -வித்யாமயமான யாக அங்கமே என்று நிரூபிக்கப் படுகிறது –
அதிகரணம் -21-சரீரே பாவதி கரணம் -2-ஸூத்ரங்கள் –
சாதன தசையில் அனைத்து வித்யைகளிலும்-தன்னைப் பாவங்கள் அற்றவன் முதலான ஸ்வரூபம் உள்ளதாகவே
ஜீவன் உபாசித்துக் கொள்ள வேண்டும் என்று நிரூபிக்கப் படுகிறது-
அதிகரணம் -22-அங்காவபத்தா திகரணம் -2-ஸூத்ரங்கள் –
சாந்தோக்யத்தின் உத்கீத உபாசனைகள் அனைத்து சாகைகளிலும் தொடர்பு உடையவை ஆகும் என்று நிரூபிக்கப் படுகிறது –
அதிகரணம் -23-பூமஜ்யாயஸ் த்வாதி கரணம் -1 ஸூத்ரம் –
சாந்தோக்யத்தில் கூறப்பட்ட பூரணமான வைச்வாநர உபாசகமே சரியானது என்று நிரூபிக்கப் படுகிறது –
அதிகரணம் -24-சப்தாதி பேதாதி கரணம்-1 ஸூத்ரம் –
சத் வித்யை தஹர வித்யை போன்ற ப்ரஹ்ம
வித்யைகள் ஒன்றுக்கு ஓன்று வேறுபட்டவை என்று நிரூபிக்கப் படுகிறது –
அதிகரணம் -25-விகல்பாதிகரணம்-2-ஸூத்ரங்கள் – –
ப்ரஹ்ம வித்யைகளில் ஏதேனும் ஒன்றைப் பற்றினாலும் பலன் கிட்டுமே –
அதிகரணம் -26-யதாச்ரய பாவ அதிகரணம்–6 ஸூத்ரங்கள்-
உத்கீத உபாசனம் அனைத்து யாகங்களிலும் அங்கம் அல்ல என்று சிலர் மீண்டும் ஆஷேபிக்க சமாதானம் கூறுகிறது-
————
இனி, ஸாத₄ந அத்யாயம் என்ற இந்த மூன்றாவது அத்யாயத்தின் முக்கியமான விஷயத்தை விவரிக்கிறார். ஸாத₄நம் என்றால் மார்கம் -வழி என்று பொருள். மோக்ஷத்தை அடைவதற்கான வழியை ஆராயும் அத்யாயம் தான் ஸாத₄ந அத்யாயம்–உபநிஷத்துக்களில் மோக்ஷம் அடைய ஆசைப்படுபவன் பர ப்ரஹ்மமான ஶ்ரீமந் நாராயணனைத் த்யானம் செய்ய வேண்டும் என்று கூறப்படுகிறது. த்யானம் என்றால் பரமாத்மாவை இடை விடாமல் அன்போடு தொடர்ந்து நினைப்பது. இந்த த்யானம் தான் பக்தி மார்கம் என்றும் உபாஸனம் என்றும் வித்யை என்றும் கூறப்படுகிறது.-ப்ரஹ்மத்தை உபாஸனம் செய்ய பலவிதமான வித்யைகள் உபநிஷத்துக்களில் சொல்லப்பட்டுள்ளன. பரமாத்மாவுக்கு எண்ணிறந்த கல்யாண குணங்கள் உள்ளபடியால், அதில் ஒரு சில குணங்களோடு அவரைத் த்யானிப்பது ஒரு வித்யை , வேறு சில குணங்களோடு கூடியவராக த்யானிப்பது வேறொரு வித்யை ஆகும். சாண்டில்ய வித்யை , த₃ஹர வித்யை , ஸத்₃வித்யை , பூ₄ம வித்யை , அந்தராதி₃த்ய வித்யை முதலான 32 வித்யைகள் உபநிஷத்துகளில் கூறப்பட்டுள்ளன.
இப்போது இந்த மூன்றாவது பாதத்திற்கு கு₃ண உப ஸம்ஹார பாதம் என்று பெயர். கு₃ணம் என்றால் பரமாத்மாவின் பண்புகள். உப ஸம்ஹாரம் என்றால், ஓரிடத்தில் சொல்லப்பட்ட விஷயத்தை மற்ற இடங்களில் சேர்த்துக் கொள்வது. இந்தப் பாதத்தில் செய்யப்படும் ஆராய்ச்சி யாதெனில் – உபநிஷத்துக்களில் ஓரிடத்தில் சொல்லப்பட்ட பரமாத்மாவின் குணங்களை அந்தப் பகுதியில் சொல்லப்பட்ட வித்யை யில் மட்டும்தான் சேர்த்துக் கொண்டு த்யானிக்க வேண்டுமா (விகல்பம்) ? அல்லது வேறு இடத்தில் சொல்லப்பட்ட வித்யையிலும் இவற்றை சேர்த்துக் கொண்டு த்யானிக்க வேண்டுமா (உப ஸம்ஹாரம்)?
இதை முடிவு செய்ய,வேறொரு ஆராய்ச்சி தேவை – வெவ்வேறு உபநிஷத்களில் கூறப்பட்டுள்ள ப்ரஹ்ம வித்யைகள் ஒன்றா? வேறா? என்று. இரண்டு இடங்களில் சொல்லப்பட்ட வித்யைகள் ஒன்று தான் என்றால், உப ஸம்ஹாரம் செய்ய வேண்டும், அதாவது, ஓரிடத்தில் சொல்லப்பட்ட குணங்களை மற்றோர் இடத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டும். அந்த வித்யைகள் வெவ்வேறானவை என்றால், விகல்பம் தான், அதாவது, அந்தந்த குணத்தை அங்கங்கு மட்டும் வைத்துக் கொள்ள வேண்டும்-எனவே குணங்களுக்கு உப ஸம்ஹாரமா விகல்பமா என்ற அறிவதற்காக வித்யைகள் ஒன்றா வேறா என்று ஆராயப்படுகிறது.
பூர்வ மீமாம்ஸையில் கர்மங்களின் வேறுபாடு
இந்த ஆராய்ச்சியை மேற்கொள்வதற்கு முன்னால், வேதத்தில் சொல்லப்பட்ட யாகம், ஹோமம், தானம் முதலான கர்மங்களைப் பற்றி ஆராய்வதற்காக மஹரிஷி ஜைமிநி எழுதிய பூர்வ மீமாம்ஸா அல்லது கர்ம மீமாம்ஸா என்று அழைக்கப்படும் ஸாஸ்த்ரத்திலிருந்து ஒரு சில கருத்துக்களை நாம் அறிந்து கொண்டால் மேலே செய்யப் போகும் ஆராய்ச்சிக்கு உதவும்.
பூர்வ மீமாம்ஸையின் இரண்டாம் அத்யாயத்தில், (பேத அத்யாயம்)வேதத்தில் சொல்லப்பட்ட கர்மங்களின் (செயல்களின்) வேறுபாட்டை எப்படி அறிய வேண்டும் என்று ஆராய்கிறார் ஜைமிநி. அந்தக் கர்மத்தைக் காட்டிலும் இந்தக் கர்மம் வேறு என்று அறிய ஆறு ப்ரமாணங்கள் (கருவிகள்) உள்ளன என்று அவ் விடத்தில் நிரூபிக்கிறார்.
1-சப்₃தா₃ந்தரம் – சப்தாந்தரம் என்றால் ’வேறு சொல்’. வெவ்வேறு வினைச் சொற்களால் குறிக்கப்படும்
செயல்கள் வெவ்வேறு கர்மங்களாகத் தான் இருக்க வேண்டும். எடுத்துக் காட்டு – யாகம் செய், ஹோமம் செய், தானம் செய் என்ற கட்டளைகளில், யாகம் தானம் ஹோமம் என்ற வெவ்வேறு சொற்களால் சொல்லப் படுகிற படியால் அந்தக் கர்மங்கள் வெவ்வேறு தான். யாகமும் ஹோமமும் ஒன்றாகாது.
2-அப்₄யாஸ: – அப்₄யாஸம் என்றால் திரும்பத் திரும்பச் சொல்லுதல். வேதத்துக்கு ஒரு பண்பு உள்ளது –
’ஒவ்வொரு வாக்கியமும் புதிதான அர்த்தங்களை மட்டுமே சொல்லும், முன்னமே அறியப்பட்ட அர்த்தங்களைச் சொல்லாது’ என்று. ஆகையால், வேதத்தில் எங்காவது ’யாகம் செய்’, ’யாகம் செய்’ என்று இரண்டு கட்டளைகள் காணப்பட்டால், அவை இரண்டும் ஒரே யாகத்தைச் செய்யச் சொல்கின்றன என்று கொள்ள முடியாது, இரண்டாவது வாக்கியம் வீணானபடியால். எனவே , இரண்டு வாக்கியங்களால் கட்டளையிடப்படும் யாகங்கள் இரண்டும் வெவ்வேறு என்றே கொள்ள வேண்டும்.
3-ஸம்க்₂யா – ஸம்க்₂யா என்றால் எண்ணிக்கை . வேதத்தில் கர்மங்களைக் கட்டளை யிடும் போதே , அவற்றை ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கை யோடு சேர்த்துச் சொல்லி யிருந்தால், கண்டிப்பாக அவ் விடத்தில் கர்மங்களில் வேறுபாடு உள்ளது என்று தான் கொள்ள வேண்டும். எடுத்துக்காட்டு – ’மூன்று ஹோமங்களைச் செய்’ என்ற வேதம் சொன்னால், அது வெவ்வேறு ஹோமங்கள் இங்கு சொல்லப் படுகின்றன என்று தான் ஏற்க வேண்டும்.
4-ஸம்ஜ்ஞா – ஸம்ஜ்ஞா என்றால் பெயர். இரண்டு வெவ்வேறு பெயர்களால் குறிப்பிடப்படும் யாகங்கள்
வெவ்வேறாகத் தான் இருக்க வேண்டும். பெயர் என்பது குறிப்பிடும் வசதிக்காகத் தான். எனவே ஒரு யாகத்துக்கு ஒரு பெயர் போதுமானது. எனவே வெவ்வேறு பெயர்களை உடைய யாகங்கள்
வெவ்வேறாகத் தான் இருக்கும்.
5- கு₃ண: – குணம் என்றால் பண்பு. சில பண்புகளோடு கூடிய ஒரு யாகத்தைச் சொல்லி விட்டு,அதற்குப் பிறகு முரண்பட்ட வேறொரு பண்போடு கூடிய யாகத்தை வேதம் கூறினால், அது கண்டிப்பாக
வேறொரு யாகமாகத் தான் இருக்க வேண்டும். எடுத்துக் காட்டு – “பாலைக் கொண்டு ஹோமம் செய்” என்று ஒரு புதிதான ஹோமத்தைச் சொல்லி விட்டு, அதற்குப் பின் “தயிரைக் கொண்டு ஹோமம் செய்” என்று வேதம் கூறினால், இந்த இரண்டவது வாக்கியத்தில் சொல்லப்படும் ஹோமம் வேறொரு ஹோமமாகத் தான் இருக்க முடியும், முதல் ஹோமத்தில் பால் என்ற பொருள் முன்னமே சொல்லப் பட்டு விட்டபடியால்.(இந்த்ரனைக் குறித்து யாகம் செய் -ஸூர்யனைக் குறித்து யாகம் செய் என்னும் பொழுதும் வேறே வேறே யாகங்களையே குறிக்கும்)
6- ப்ரகரணாந்தரம் ् – ப்ரகரணாந்தரம் என்றால் வேறு ப்ரகரணம். வேதத்தில் பல பகுதிகள் உள்ளன.ஒரே விஷயத்தைப் பற்றி (யாகமோ , ஹோமமோ , வேறொன்றோ ) பேசக் கூடிய வேதப் பகுதிக்குப் ப்ரகரணம் என்று பெயர். ஒரு ப்ரகரணத்தில் ஒரு யாகத்தைச் சொல்லி விட்டு, வேறொரு ப்ரகரணத்தில் அதே போல் தோற்றும் யாகத்தைச் சொல்லி யிருந்தாலும், அந்த யாகம் வேறொன்று என்று தான் கொள்ள வேண்டும், ப்ரகரணம் மாறிவிட்டபடியால்.(சைந்தவம் உப்புக்கும் குதிரைக்கும் பெயர் -இரண்டும் கடலில் இருந்து வந்ததால் -சாப்பிடும் பொழுது சொன்னால் உப்பையே குறிக்கும் -ராஜா வேட்டைக்குச் செல்லும் பொழுது அதே சொல்லுக்கு குதிரையைக் குறிக்கும்)
இப்படி யாகம் முதலான கர்மங்களுக்குள் உள்ள வேறுபாட்டை அறிய ஜைமிநி கூறுய கருவிகளைக் கொண்டு உபநிஷத்துக்களில் உபாஸனங்களுக்குள் இருக்கும் வே றுபாட்டையும் அறியலாம். இது இந்த பாதத்தில் செய்யப்பட உள்ளது–
பூர்வ மீமாம்ஸையில் கர்மங்களின் ஐக்யம்
இது வரை இரண்டு கர்மங்களுக்குள் உள்ள வேறுபாட்டை அறிவதற்கான வழிகளைப் பூர்வ மீமாம்ஸையில் சொன்னபடி பார்த்தோம். அதே பூர்வ மீமாம்ஸையில் எப்போது இரண்டு வித்யைகள் ஒன்று தான் (ஐக்யம்) என்று கொள்ள வேண்டும் என்பதையும் மஹரிஷி ஜைமிநி கூறுவதால், அதுவும் நமக்கு இப்போது தேவையானது.
பூர்வ மீமாம்ஸையில் இரண்டாம் அத்யாயத்தின் நான்காவது பாதத்தில் இரண்டாவது அதிகரணம் சாகா₂ந்தராதி₄கரணம் (2-4-2-) என்றும், அதில் சொல்லப்பட்ட ந்யாயம் ஸர்வ சாகா₂ ப்ரத்ய்ய ந்யாயம் என்றும் கூறப்படுகிறது. அந்த அதிகரணத்தின் சுருக்கம் பின் வருமாறு –
பூர்வபக்ஷம் – வேதங்களில் இரண்டு வெவ்வேறு சாகைகளில் சொல்லப்பட்ட கர்மங்கள் வெவ்வேறாகத் தான் இருக்க வண்டும், ஏனென்றால் அப்யாஸம் (திரும்பத் திரும்பச் சொல்லுதல்) என்ற ப்ரமாணம் உள்ளது. ஒரு சாகையில் சொல்லப்பட்ட அதே கர்மத்தை வேறொரு சாகையில் வேதம் கட்டளை யிட்டால், சொன்னதையே திரும்பச் சொல்வதாக ஆகுகையால் வேதத்துக்கு தோஷம் வரும். எனவே , இரண்டும் வெவ்வேறு தான்.(ரிக் வேதத்தில் 9 சாகைகள் -யஜுர் வேதத்தில் 15-20 சாகைகள் -சாமவேதத்தில் 1000 சாகைகள் உண்டு)
ஸித்தாந்தம் – ஏகம் வா ् ஸம்யோக₃ ரூப சோத₃நா ஆக்₂யா அவிசேஷாத்-
ஏகம் வா – இரண்டு சாகைகளிலும் சொல்லப்பட்ட கர்மம் ஒன்று தான்
ஸம்யோக₃ -பயனும் ரூப வடிவமும்
சோத₃நா -கட்டளை வாக்கியமும்
ஆக்₂யா -பெயரும்
அவிசேஷாத் -மாறாதபடியால்
இரண்டு சாகைகளில் சொல்லப்பட்ட கர்மங்களுக்கும் பெயரும், பயனும், வடிவமும் (எந்த தேவதையைக் குறித்து எந்தப் பொருளைக் கொண்டு யாகம் செய்ய வேண்டும் என்பதும்), கட்டளை யிடும் வாக்கியமும் ஒன்றாக இருந்தால், அவ் விரண்டு கர்மங்களும் ஒன்று என்று தான் கொள்ள வேண்டும்
அப்யாஸம் (திரும்பத் திரும்பச் சொல்லுதல்) என்ற தோஷமும் வராது. ஏனென்றால், ஒருவர் ஒரு விஷயத்தைத் திரும்பத் திரும்பச் சொல்வது தோஷமல்ல; ஒருவர் ஒரு விஷயத்தை ஒருவருக்கே திரும்பத் திரும்பச் சொல்வது தான் தோஷம். இங்கு இரண்டு சாகைகளையும் கற்கும் மக்கள் வெவ்வேறான படியால், அவரவர்க்கு அந்தந்த சாகையில் உள்ள ஒரு வாக்கியம் ஒரே முறை தான் இக் கர்மத்தை உபதேசிப்பதால், அப்யாஸமே இவ் விடத்தில் இல்லை . எனவே இந்தக் கர்மங்களில் வேறுபாடில்லை , இரண்டும் ஒரே கர்மம் என்று தான் கொள்ள வேண்டும்
3-3-1-ஸர்வ வேதாந்த ப்ரத்யயாதி₄கரணம்-பல உபநிஷத்துக்களில் ஒரே கர்மம் -அதிகரணத்தின் பின்புலம் -ஸங்கதி –-ஓர் உபநிஷத்தில் ஒரு வித்யையில் சொல்லப்பட்ட பரமாத்மாவின் குணங்களை
மற்றொரு உபநிஷத்தில் சொல்லப்பட்ட வித்யையில் சேர்த்துக் கொள்ளுதல் உப ஸம்ஹாரம் ஆகும். அந்தந்த இடத்தில் சொல்லப்பட்ட பரமாத்மாவின் குணங்களை அந்தந்த இடத்திலுள்ள வித்யையில் மட்டும் வைத்து த்யானித்தல் விகல்பம் ஆகும்.இவற்றில் எது சரி என்ற ஆராய்ச்சி இந்த பாதத்தில் முக்கியமானது. அதற்காக, இரண்டு உபநிஷத்துக்களில் சொல்லப்பட்ட வித்யைகள் வெவ்வேறா ? அல்லது ஒன்றா ? என்று ஆராய வேண்டும். இந்த முதல் அதிகரணத்தில் இதைத்தான் வ்யாஸர் ஓரிடத்தில் ஆராய்கிறார். ஒர் வித்யை என்றால் உப ஸம்ஹாரம் செய்ய வேண்டும், வெவ்வேறு என்றால் விகல்பம் ஏற்படும் என்று கருத்து–
ஸந்தேஹம் – சாந்தோக்யம் மற்றும் ப்ருஹதாரண்யக உபநிஷத்துக்களில் கூறப்பட்டுள்ள வைஶ்வாநர வித்யை போன்ற ப்ரஹ்ம வித்யைகள் ஒரே வித்யையா? அல்லது அவை வெவ்வேறு வித்யைகளா ?
பூர்வ பக்ஷம் – பூர்வ மீமாம்ஸையில் கூறப்பட்டுள்ை நியாயங்களின் படி, அவை வெவ்வேறு வித்யைகள் தான்.முதலில், அப்₄யாஸம் அதாவது மீண்டும் மீண்டும் உபதேசிக்கப்படுவது இங்கு காணப்படுகிறது. வேதம் ஒரே செயலை இரண்டு முறை கட்டளை யிட முடியாது. எனவே இவை வெவ்வேறு வித்யைகள் தான்-மேலும், இந்த உபதேசங்கள் இரண்டும் வெவ்வேறு ப்ரகரணங்களில் கூறப்பட்டிருப்பதாலும், ப்ரகரணாந்தரம் என்ற ப்ரமாணத்தால் அவற்றை ஒரே வித்யை என்று கொள்ள
முடியாது. ஆக, வெவ்வேறு உபநிஷத்துகளில் கூறப்படும் வித்யைகள் வெவ்வேறானவையே –
பூர்வ மீமாம்ஸை சாஸ்த்ரத்தில் எற்கனவே ஆராயப்பட்ட இவ் விஷயத்தை இங்கு ப்ரஹ்ம ஸூத்ரங்களில் மறுபடியும் ஆரய்வதற்குக் காரணம் – இங்கு ஸந்தேகத்துக்கு அதிகப்படியான ஒரு காரணம் உள்ளது.-தேஷாமேவ ஏதாம் ப்₃ரஹ்ம வித்₃யாம் வதே₃த ஶிரோ வ்ரதம் விதி₄வத் யைஸ்து சீர்ணம்) என்று ஸ்ருதி கூறுகிறது. அதாவது, “விதிப்படி ஶிரோ வ்ரதம் என்ற வ்ரதத்தை அனுஷ்டித்தவர்களுக்கு மட்டுமே இந்தப் ப்ரஹ்ம வித்யையை உபதேசிக்க வேண்டும்” என்று கூறுகிறது.-இந்த ஶிரோ வ்ரதம் என்பது அதர்வண வேத சாகையைச் சேர்ந்தவர்களுக்கு விதிக்கப்பட்ட ஒரு விசேஷ விரதமாகும். எனவே , இந்த வித்யை அதர்வண வேத சாகயைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே உரியது என்று இந்த விதி காட்டுகிறது.-எல்லாச் சாகைகளிலும் கூறப் படும் வித்யை ஒன்றே என்று ஏற்றுக் கொண்டால், மற்ற வேத சாகைகளைச் சேர்ந்தவர்களும் இந்த ஶிரோ வ்ரதத்தை அனுஷ்டிக்க வேண்டிய நிலை ஏற்படும். அப்படியானால், இந்த விதி அதர்வண வேதத்தாருக்கு மட்டுமே என்று கூறியதற்குப் பொருள் இருக்காது. ஆகவே , இந்த வித்யைகள் ஒன்றல்ல; வெவ்வேறானவையே
வெவ்வேறு உபநிஷத்துக்களிலும் ஒரே வித்யையே -ஸித்தாந்தம் – (1) ஸர்வ வேதா₃ந்த ப்ரத்யயம் சோத₃நாத்₃ யவிசேஷாத்
ஸர்வ வேதா₃ந்த ப்ரத்யயம் — எல்லா வேதாந்தங்களிலும் அறியப்படும் (வித்யை ஒன்றே-ஏகமே );
சோத₃நா — கட்டளை
ஆதி — பெயர், வடிவு, பலன் ஆகியவற்றில்;
அவிசேஷாத் — வேறுபாடு இல்லாததால்.
பூர்வ மீமாம்ஸையில் கூறப்பட்ட ஸர்வ சாகா₂ ப்ரத்யய ந்யாயம் இங்கும் பொருந்துகிறது. எனவே , பல்வேறு உபநிஷத்துகளில் கூறப்படும் வைஶ்வாநர வித்யை போன்ற வித்யைகள், வெவ்வேறு வித்யைகள் அல்ல; ஒரே வித்யையின் பல்வேறு விளக்கங்களே .
சோத₃நா (கட்டளை ): சாந்தோக்ய உபநிஷத்திலும், வாஜஸநேய சாகையிலும் (வைஶ்வாநரம் உபாஸ்தே ) அதாவது “வைஶ்வாநரனை உபாஸிக்க வேண்டும்” என்ற ஒரே கட்டளை கூறப்படுகிறது.
ரூபம் (உபாஸனத்தின் வடிவு):-உபாஸனத்தின் என்பது த்யானம். அதில் வேறுபாடு என்பது த்யானிக்கப்படும் பொருளின் வேறுபாட்டால் மட்டும் தான் ஏற்படும். இந்த வித்யையிலோ இரண்டு உபநிஷத்துக்களிலும் உபாஸிக்கப்பட வேண்டியவர் உலகங்களை யெல்லாம் தனக்கு உடலாகக் கொண்ட ஒரே வைஶ்வாநர ப்ரஹ்மம் தான். எனவே , வித்யைகளின் வடிவமும் ஒன்றே .
ஆக்₂யா (பெயர்): எல்லா இடங்களிலும் இந்த உபாஸனை வைஶ்வாநர வித்யை என்ற ஒரே பெயரால் அறியப்படுகிறது.
ஸம்யோகம் (பலன்): எல்லா இடங்களிலும் இந்த வித்யையின் பலன் ப்ரஹ்ம ப்ராப்தி (ப்ரஹ்மத்தை அடைதல்) என்பதே .-
ஆகவே , பல்வேறு வேத சாகைகளில் கூறப்பட்டாலும், “அந்த வைஸ்வாநர வித்யை தான் இதுவும்” என்கிற ப்ரத்யபி₄ஜ்ஞா என்னும் அறிவு ஏற்படுவதால் வைஶ்வாநர வித்யை ஒன்றே .-
2-பே₄தா₃த் ந இதி சேத் ஏகஸ்யாமபி
பேதா₃த் — (அப்₄யாஸம், ப்ரகரணாந்தரம் என்ற ப்ரமாணங்களால்) வித்யைகளில் வேறுபாடு இருப்பதால்;
ந — (வித்யைகள்) ஒன்றல்ல;
இதி சேத் — இவ்வாறு கூறினால்; ஏகஸ்யாமபி — ஒரே வித்யையானலும் (அவை இருக்கலாம்).
பூர்வ பக்ஷியின் கேள்வி – திரும்பத் திரும்பச் சொல்வது வீணானபடியால் இவை யிரண்டும் ஒரே வித்யையாக இருக்க இயலாது–
ஸித்தாந்தியின் பதில் – இங்கு அப்₄யாஸம் (திரும்பத் திரும்பச் சொல்லுதல்) என்னும் தோஷமே இல்லை .
சிரோ வ்ரதம் த்யானத்தின் அங்கமா? கல்வியின் அங்கமா?
ஒரே நபருக்கே , ஒரே விஷயம் மீண்டும் மீண்டும் உபதேசிக்கப்பட்டால் மட்டுமே அது அப்₄யாஸம் ஆகும். அது போலவே , ஒரே நபருக்கே வெவ்வேறு ப்ரகரணங்களில் ஒரே மாதிரியான வித்யைகள் மீண்டும் கட்டளை யிடப்பட்டால் மட்டுமே , அதனால் புதிய வித்யை ஒன்று கூறப்படுகிறது என்று கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படும்.-ஆனால், வெவ்வேறு சாகைகளை ஒருவரே அத்யயனம் செய்யப் போவதில்லை . எனவே சாந்தோக்யத்தில் உள்ள வாக்கியம் அந்த சாகையைப் படிப்பவர்களுக்கு வைஸ்வாநர வித்யையை உபதேசிக்கிறது, ப்ருஹதாரண்யகத்தில் உள்ள வாக்கியம் அந்த சாகையைப் படிப்பவர்களுக்கு வைஸ்வாநர வித்யையை உபதேசிக்கிறது. எனவே , அங்கு திரும்பத் திரும்பச் சொல்லுதல் என்ற தோஷமே இல்லை .-அதனால் இவை வெவ்வேறு வித்யைகள் என்று கொள்ள எந்தக் காரணமும் இல்லை –
3-ஸ்வாத்₄யாயஸ்ய ததா₂த்வே ஹி ஸமாசார அதி₄காராச் ச ஸவவச் ச தந் நியம:
“ஶிரோ வ்ரதத்தை அனுஷ்டித்தவர்களுக்கே இந்த வித்யை உரியது” என்று ஒரு நியமத்தால் வித்யைகள் வேறுபடுகின்றன என்று கூறுவது பொருந்தாது. ஏனெனில், அந்த நியமம் வித்யைக்காக அல்ல; வேத அத்யயனத்திற்காகவே விதிக்கப்பட்டது.”
ஹி— ஏனெனில்;
ஸ்வாத்₄யாயஸ்ய — வேத அத்யயனத்திற்கே ;
ததா₂த்ரே — சிரோ வ்ரதம் அங்கமாக இருப்பதற்காக (உபதேசம்); —
மேலும்;
ஸமாசார — ஸமாசார கிரந்தத்தில்; அதி₄காராத் —வேத வ்ரதம் என்று இது குறிப்பிடப்படுவதால்;
ஸவவத் — ஸவ ஹோமங்களைப் போல; தந் நியம: — அந்த நியமம் பொருந்துகிறது-
பூர்வ பக்ஷீ, “ஶிரோ வ்ரதத்தை அனுஷ்டித்தவர்களுக்கு மட்டுமே இந்தப் ப்ரஹ்ம வித்யையே உபதேசிக்க வேண்டும்” என்ற ஸ்ருதியைக் காட்டி, அதர்வண வேதத்தில் கூறப்படும் வித்யை மற்ற சாகைகளில் கூறப்படும் வித்யைகளிலிருந்து வேறுபட்டது என்று வாதிட்டார்.
(அத்யயனம் -கற்பது-இது வேறு -இதற்க்கு மேல் -அனுஷ்டானம் நிலை வேறே)
அது சரியல்ல. ஶிரோ வ்ரதம் என்பது வித்யையின் அங்கம் அல்ல; வேத அத்யயனத்தின் அங்கம். வேதத்தைப் படிப்பதற்குத் தேவையான ஸம்ஸ்காரத்தை அளிப்பதற்காகவே இந்த விரதம் விதிக்கப்பட்டுள்ளது. இதையே (நைதத் அசீர்ண வ்ரத: அதீ₄தே ) என்ற ஸ்ருதி, “இந்த விரதத்தை அனுஷ்டிக்காதவன் இதை அத்யயனம் செய்யக் கூடாது” என்று கூறுவதன் மூலம் தெளிவு படுத்துகிறது. மேலும், ஸமாசாரம் என்னும் கிரந்தத்திலும், (இத₃மபி வேத வ்ரதேந வ்யாக்₂யாதம்)
என்ற விடத்தில் இந்த சிரோ வ்ரதம் வேத வ்ரதம் என்று குறிப்பிடப்பட்டுள்ளதாலும், (உபாசன விரதம் அல்ல -வேத விரதம் என்றும் நிரதேசிப்பதால் )இந்த நியமம் வித்யைக்கானது அல்ல.-அத₂ர்வண வேதத்தில் சொல்லப்பட்ட ஸவ ஹோமங்கள் என்பவை எப்படி அந்த சாகைகளைப் படிப்பவர்களுக்கு மட்டுமானதோ அதே போல் இந்த சிரோ வ்ரதமும். ஆக, இது வித்யையின் பகுதி அல்ல. அதனால் இரண்டிடங்களும் ஒரே வித்யையே கூறப்படுகிறது–
வேதமே உப ஸம்ஹாரத்தைக் காட்டுகிறது
4– த₃ர்ஸயதி ச – “மேலும் (ஸ்ருதி) காட்டுகிறது”
இது வரை , யுக்தியின் மூலம் பல்வேறு வேத சாகைகளில் கூறப்படும் வித்யைகள் ஒன்றே என்று நிறுவப்பட்டது. இப்போது, அதையே ஸ்ருதி ப்ரமாணத்தாலும் ஸூத்ரகாரர் உறுதிப்படுத்துகிறார்.
சாந்தோக்ய உபநிஷத்தில்,(தஸ்மிந் யத₃ந்த: தத் விஜிஞாஸி தவ்யம்) என்று “இதயத்துக்குள் இருக்கும்
பரமாத்மாவுக்குள் உள்ளதை த்யானிக்க வேண்டும்” என்று கூறி, (கிம் தத₃த்ர வித்₃யதே யத₃ந்வேஷ்டவ்யம்), அதாவது “அந்தப் பரமாத்மாவுக்குள் உள்ளது எது?” என்று கேட்டுக் கொண்டு, எட்டு (அபஹத பாப்மாதி )கல்யாண குணங்களைச் சொல்கிறது.(இதுவே தஹர வித்யை )
அதே போல், தைத்திரீய உபநிஷத்திலும், அதே வித்யையைக் குறிப்பிட்டு, “्(தஸ்மிந் தத₃ந்த: தது₃பாஸி தவ்யம்), அதாவது “பரமாத்மாவுக்குள் உள்ளதை உபாஸிக்க வேண்டும்” என்று மட்டும் கூறுகிறது. உள்ளே இருப்பது என்ன என்று ஆராயவே இல்லை . இதற்கு ஒரே கருத்து தான் இருக்க முடியும் – இதே வித்யை தான் சாந்தோக்யத்திலும் சொல்லப்பட்டுள்ள படியால், அங்கிருந்து உள்ளே இருப்பது என்ன என்று தெரிந்து கொள்ளலாம் என்று. ஆகவே , அந்த வித்யைகள் ஒன்றே–
5–உப ஸம்ஹார: அர்தா₂பே₄தா₃த் விதி₄சேஷவத் ஸமாநே ச
ஸமாநே — (வித்யை ) ஒன்றாக இருக்கும் போது;
ச — கண்டிப்பாக;
உப ஸம்ஹார: — (குணங்களைச் ) சேர்த்துக் கொள்ள வேண்டும்;
விதி₄சேஷவத் — அந்தந்த விதியின் அங்கங்களைப் போல;
அர்தா₂பே₄தா₃த் — பயனில் வேறுபாடு இல்லாததால்;
பல உபநிஷத்துகளில் கூறப்படும் உபாஸனை ஒன்றே என்று நிரூபிக்கப்பட்டதால், அந்த உபாஸனையில் கூறப்படும் கல்யாண குணங்களையும் ஒன்றிலிருந்து மற்றொன்றில் உப ஸம்ஹாரம் செய்ய வேண்டும்.-ஒரு உபநிஷத்தில் ஒரு வித்யையை விதித்து விட்டு, அங்கேயே சில குணங்களைச் சொன்னால், அந்த குணங்களை யெல்லாம் கண்டிப்பாக அந்த வித்யையில் த்யானிக்க வேண்டும் என்று ஏற்றுக் கொள்கிறோம், அந்த குணங்கள் அந்த விதிக்கு சேஷமாக (அங்கமாக -பகுதியாக -உதவுவதாக) இருப்பதால். இதைத் தான் வ்யாஸர் ’விதி₄சேஷம் போல்’ என்கிறார். அதே போல், வேறொரு உபநிஷத்தில் சொல்லப்பட்ட குணமும் இந்த உபாஸனத்துக்கு அதே போன்ற உதவியையே செய்கிற படியால், பயனில் எந்த வேறுபாடும் இல்லை . இதைத் தான் வ்யாஸர் ’அர்த்தத்தில் (பயனில்) வேறுபாடு இல்லாதபடியால்) என்கிறார்-
ஆக, இரண்டு இடங்களிலும் சொல்லப்பட்ட வித்யைகள் ஒன்றானபடியால், இரண்டிடத்தில் சொல்லப்பட்ட குணங்களையும் சேர்த்துத்தான் அந்த வித்யையில் பரமாத்மாவைத் த்யானம் செய்ய வேண்டும் என்று நிச்சயமாயிற்று.
—
3.3.2 அந்யதா₂த்வாதி₄கரணம்-உத்கீத வித்யைகள் வெவ்வெறு ஆனவை -அதிகரணத்தின் பின்புலம் -ஸங்கதி ––பெயர், பயன், கட்டளை வாக்கியம் மற்றும் உபாஸனத்தின் வடிவம் ஒன்றாக
இருந்தால் வெவ்வேறு உபநிஷத்துக்களில் சொல்லப்பட்ட வித்யைகளும் ஒன்றே என்றும், ஆகையால் இரண்டு இடங்களிலும் சொல்லப்பட்ட குணங்களை உபஸம்ஹாரம் செய்ய வேண்டும் (சேர்த்துக் கொண்டு உபாஸனம் செய்ய வேண்டும்) என்றும் முந்தைய அதிகரணத்தில் கூறப்பட்டது. இனி, அடுத்து வரும் சில அதிகரணங்களில், ஒரு சில வித்யைகளை எடுத்துக் கொண்டு, அவற்றுக்குப் பெயர், பயன், கட்டளை வாக்கியம் & வடிவம் ஒன்றாக உள்ளனவா அல்லது வெவ்வேறா என்று ஆராயப் படுகிறது, அவை ஒரே வித்யையா வெவ்வேறு வித்யைகளா என்று அறிவதற்காக.
(திருஷ்ட்டி விதிகள்-இஹ லோக பயன்களுக்காக உபாசனம் -இவற்றுக்கு அங்கமாகவும் உத்கீத உபாசனம் உண்டு -அடுத்து –ப்ரஹ்ம உபாசனை-பரம புருஷார்த்த பலனுக்காக -இரண்டு விதங்கள் – உண்டு –இந்த அதிகரணத்தில் திருஷ்ட்டி விதியைப் பற்றி இரண்டு உபநிஷத்துக்களில் உள்ளவை பற்றிய ஆராய்ச்சி செய்யப்படுகிறது -உத்கீதம் -பாடல் வடிவுடன் சாம மந்த்ரம் பற்றிய வித்யை –)
விஷய வாக்யம் – ப்ருஹதாரண்யக உபநிஷத்தின் 1ஆம் அத்யாயம் 3ஆம் ப்ராஹ்மணத்தில் “உத்₃கீ₃த₂ வித்₃யை” த்வயாஹ ப்ராஜாபத்யா தே₃வாஶ்சா ஸுராஶ்ச । தேஹ தே₃வா ஊசுர்ஹந்தா ஸுராந்யஜ்ஞ உத்கீ₃தே ₂நாத்யயாமேதி ॥-ப்ரஜாபதியின் படைப்புகளான தேவர்களும் அஸுரர்களும் இரு பிரிவினராக இருந்தனர். தேவர்கள் யாகத்தில் உத்கீ₃தத்தைப் பயன்படுத்தி அஸுரர்களை வெல்வோம் என்று கூறினர்.
தேஹ வாசமூசுஸ் த்வம் ந உத்கா₃யேதி । தமபி₄த்₃ருத்ய பாப்மநா ஆவித்₄யந் ॥-அவர்கள் வாக்கு என்ற பேச்சுப் புலனை உத்கீ₃தம் பாடுமாறு கேட்டனர். ஆனால், அஸுரர்கள் வாக்கைத் தோஷத்தால் பாதித்தனர். இதே போல் சக்ஷுஸ் (கண்), ஸ்ரோத்ரம் (காது), மனது ஆகியவற்றையும் அஸுர்ர்கள் பாதித்தனர்.(இதனால் தான் கயிற்றைக் கண்டு பாம்பு என்று பிரமிக்கிறோம் -இதே போல் மனதிலும் ப்ரமம் ஏற்படுகிறது)
அத₂ஹ இமம் ஆஸந்யம் ப்ராண மூசுஸ் த்வம் ந உத்கா₃யேதி । ஸ யாதா₂ஶ்மாந ம்ருத்வா லோஷ்டோ வித்₄வம் ஸேத ஏவம் ஹைவ வித்₄வம்ஸமாநா விஷ்வஞ்சோ விநேஶு: । ததோ தே₃வா அப₄வந் பராʼஸுரா: ॥-அடுத்து தேவர்கள் முக்ய ப்ராணனை (மூச்சுக் காற்றை) பாடும்படி வேண்டினார்கள். அஸுரர்கள் ப்ராணனைத் தாக்கினர்.ஆனால், கல்லில் மோதிய மண் கட்டி சிதறுவதைப் போல், அவர்களே அழிந்து சிதறினர். இதனால் தேவர்கள் வெற்றி பெற்றனர்; அஸுரர்கள் தோல்வி யடைந்தனர் –
ப₄வத் யாத்மநா பரா அஸ்ய த்₃விஷந் ப்₄ராத்ருவ்யோ ய ஏவம் வேத₃ ॥-இவ்வாறு உத்கீதத்தை மூச்சுக் காற்றாக உபாஸிப்பவர் உயர்ந்தவராகிறார்; அவரது பகைவன் தோற்றுப் போகிறான்-
சாந்தோக்ய உபநிஷத்தின் 1ஆம் அத்யாயம் 2 ஆம் கண்டத்தில் “உத்₃கீ₃த₂ வித்யை” –தே₃வாஸுரா ஹ வை யாத்ர ஸம்யேதிரே … தே₃வா உத்கீ₃த₂மாஜஹ்ரு: அநேந ஏநாந் அபி₄ப₄விஷ்யாம இதி ॥தேவர்களும் அஸுரர்களும் ஒருவரை யொருவர் எதிர்த்து போரிட்ட போது, தேவர்கள், உத்கீ₃தத்தைக் கொண்டு
அஸுரர்களை வெல்வோம் என்று எண்ணினர்.
முதலில் உத்கீதத்தை வாக் (பேச்சுப் புலன்), சக்ஷுஸ் (கண்), ஸ்ரோத்ரம் (காது), மனது ஆகியவையாக உபாஸனம் செய்தனர், ஆனால் அஸுரர்களை வெல்ல முடியவில்லை–
அத₂ஹ ய ஏவாயம் முக்₂ய: ப்ராணஸ்தமுத்கீ₃த₂ முபாஸாஞ்சக்ரிரே । தம் ஹாஸுரா ருத்வா வித₄வம் ஸு: யதா₂ அஶ்மாநமாக₂ணம் ருத்வா வித₄வம் ஸே தைவம் ॥--பின்னர் இந்த உத்கீ₃தத்தை முக்கிய ப்ராணனாக (மூச்சுக் காற்றாக) உபாஸித்தனர். அஸுரர்கள் அதைத் தாக்கிய போது,கல்லில் மோதிய மண் கட்டி சிதைவதைப் போல் அவர்களே அழிந்து போனார்கள்-
யதா₂ அஶ்மாநம் ஆக₂ணம் ருத்வா வித்₄வம் ஸத ஏவம் ஹைவ ஸ வித்₄வம் ஸதே ய ஏவம்விதி₃ பாபம் காமயதே-இப்படி உத்கீதத்தைப் ப்ராணனாக உபாஸிப்பவனுடைய பகைவன் கல்லில் மோதிய மண் கட்டி போல் அழிகிறான்-
ஸந்தேகம் – ப்ருஹதாரண்யக உபநிஷத்திலும் சாந்தோக்ய உபநிஷத்திலும் கூறப்படுபவை இரண்டு வெவ்வேறு உத்கீ₃த₂ வித்யைகளா? அல்லது ஒன்றா–
பூர்வ பக்ஷியின் வாதம்–பூர்வ பக்ஷம் – இரண்டு இடங்களிலும் கூறப்படும் வித்யைகள் ஒன்றே . பெயர், பயன், கட்டளை , வடிவம் ஒன்றானதால்.-இரண்டு இடங்களிலும் பலன் ஒன்றே — சத்ருக்களை வெல்வது;-இரண்டு இடங்களிலும் ரூபமும் (வடிவமும்) ஒன்றே –உத்கீதத்தைப் ப்ராணனாக உபாஸனம் செய்வது தான்.-இரண்டு இடங்களிலும் சோத₃நா எனப்படும் கட்டளையும் ஒன்றே .-மேலும், இரண்டுமே உத்கீ₃த₂ வித்யை என்ற ஒரே பெயரால் அழைக்கப் படுவதால் ஆக்₂யையும் ஒன்றே–
1–அந்யதா ् ₂த்வம் ஶப்₃தா₃த் இதி சேத் ந அவிஸேஷாத்
அந்யதா₂த்வம் –ரூபத்தில் வேறுபாடு உள்ளது
சப்₃தா₃த் -சொற்களில் வேறுபாடு இருப்பதால்
இதி சேத் ந – எனவே வித்யைகள் ஒன்றல்ல என்று கூறினால், அது சரியல்ல; அவிஸேஷாத் –-வேறுபாடு இல்லாததால்-
ஆஷேபம் – ப்ருஹதா₃ரண்யகத்தில்-(தேப்₄ய ஏஷ ப்ராண உத₃கா₃யத்) என்று, உத்கீ₃தத்தைப் பாடுபவரைத் தான் ப்ராணனாக (மூச்சுக் காற்றாக) உபாஸிப்பது கூறப்பட்டுள்ளது.
சாந்தோக்யத்தில் (ய ஏவாயம் முக்₂ய: ப்ராணஸ்த முத்கீ₃த₂ம் உபாஸாஞ் சக்ரிரே ) என்று, உத்கீ₃தத்தையே ப்ராணனாக உபாஸிப்பது கூறப்படுகிறது. எனவே , இரண்டிடங்களிலும் உபாஸனத்தின் ரூபம் வேறுபடுவதால், வித்யைகள் வெவ்வேறு.
குடத்தையைப் பற்றிய ஞானமும் துணியைப் பற்றிய ஞானமும் வேறுபாடு – விஷயீகரிக்கும் பொருளின் வேறுபாட்டால் ஞானத்தில் வேறுபாடு போல் இங்கும் –
பூர்வ பக்ஷியின் பதில் – வேறுபாடு இல்லை . ஓரிடத்தில் முன்புள்ள வாக்கியத்துக்கு ஏற்பத்தான் பின்புள்ள வாக்கியங்களுக்குப் பொருள் கூற வேண்டும். இங்கு ப்ருஹதாரண்யகத்திலும் தொடக்கத்தில் உத்கீ₃தத்தைக் கொண்டு சத்ருக்களை வெல்வது என்பதே கூறப்படுகிறது. ஆகையால், (தேப்₄ய ஏஷ ப்ராண உத₃கா₃யத்) என்று பின்பு வரும் வாக்கியத்தில் உத்கீதத்தைப் பாடுபவர் கூறப்பட்டிருந்தாலும், (உத்கீதத்தை மூச்சுக்காற்று பாடியது -ப்ரஹதாரண்யம் -தேவர்கள் பிராணனாக த்யானம் செய்தார்கள் -சாந்தோக்யம் -ஆகையால் வடிவத்தில் வேறுபாடு -சொல்லைக் கொண்டு அறிகிறோம்) அங்கும் உத்கீதத்தையே ப்ராணனாக த்யானிப்பது தான் சொல்லப்படுவதாகக் கொள்ள வேண்டும். உத்கீதத்தைப் பாடுபவர் எப்படி உத்கீதமாக இருக்க முடியும்? இருக்கலாம். சமைக்கப்படும் அரிசி மிக நன்றாக இருந்தால், “அரிசியே தன்னைச் சமைத்தது, நான் ஒன்றுமே செய்யவில்லை ” என்று கூறுவது போல், பாடப்படும் உத்கீதமே இங்கு பாடுபவறாகச் சொல்லப் படுவதில் தவறில்லை . எனவே இரண்டு உபநிஷத்துக்களிலும் வடிவம் ஒன்றே –(குடத்தையைப் பற்றிய ஞானமும் துணியைப் பற்றிய ஞானமும் வேறுபாடு – விஷயீகரிக்கும் பொருளின் வேறுபாட்டால் ஞானத்தில் வேறுபாடு போல் இங்கும் -)
(அரக்கியை மூக்கரிந்திட்ட குமரனார் -ராமன் காட்டுக்குப் போனார் என்று உபக்ரமித்து தொடங்கி அவர் சூர்ப்பணகையின் காது மூக்கை அறுத்தார் என்றால் லஷ்மணனைக் கொண்டு அறுக்கப் பண்ணினார் என்றே கொள்ள வேண்டும் -பிரகரண பலத்தால்-இரண்டு இடங்களிலும் தொடக்கத்தில் உத்கீதத்தைக் கொண்டு அவர்களை வெல்வோம் என்றே உள்ளது -)
வடிவத்தில் வேறுபாடு உள்ளது-ஸித்தாந்தம் – 2-ந வா ப்ரகரண பே₄தா₃த் பரோவரீயஸ்த்வாதி₃வத்
ந வா -அவ்வாறல்ல;
ப்ரகரண பே₄தா₃த் – தொடக்கம் வேறுபடுவதால் (வித்யையின் வடிவமும் வேறுபடுகிறது)
பரோ வரீையாஸ்த்வாதி₃வத் -பரோ வரீயஸ்த்வம் முதலானவற்றை த்யானிக்கும் உபாஸநங்கள் போல்
இங்கு ப்ரகரணம் என்றால் ப்ரக்ரமம், உபக்ரமம் அதாவது தொடக்கம் என்று பொருள். ப்ருஹதாரண்யகத்திலும்-சாந்தோக்யத்திலும் தொடக்கம் வேறுபடுவதால் வித்யைகளின் வடிவம் மாறுவதால் வித்யைகள் வெவ்வேறு தான்.
சாந்தோக்யத்தில் (தஸ்யை வாக்ஷரஸ்யோப வ்யாக்₂யாநம் ப₄வதி) அதாவது “ஓம் என்ற அக்ஷரத்தைப் பற்றின கதை இது” என்று கூறி விட்டு, மேலே தேவர்கள் அஸுரர்களைத் தோற்கடித்தது கூறப்படுகிறது.-எனவே , பாடப்படும் உத்கீதத்தின் ஒரு பகுதியான ஓம் என்ற ப்ரணவத்தை மட்டும் ப்ராணனாக உபாஸிப்பது தான்- சாந்தோக்யகத்தில் விதிக்கப்படுகிறது. ஆனால் ப்ருஹதா₃ரண்யகத்தில், இதைப் போல் தொடக்கத்தில் எந்த வாக்கியமும் இல்லாததால்,முழு உத்கீ₃தத்தையும் பாடுபவராகிய உத்காதாவைப் ப்ராணனாக உபாஸிப்பது தான் கூறப்படுகிறது.
எனவே, உபாஸிக்கப்படும் பொருளிலேயே வேறுபாடு இருப்பதால், இவை ஒரே வித்யை அல்ல.
ப்ருஹதாரண்யகத்தில் உத்கீதத்தைப் பாடியவரைப் ப்ராணனாக த்யானிப்பது சொல்லப்படவில்லை , உத்கீதத்தையே ப்ராணனாக த்யானிப்பது தான் கூறப்படுகிறது, தொடக்கத்திலிருக்கும் வாக்கியத்தோடு முறண்பாடு ஏற்படாமல் இருப்பதற்காக – என்று பூர்வ பஷி கூறி யிருந்தார். இது தவறானது. தொடக்கத்தில் உள்ள “உத்கீதத்தைக் கொண்டு அஸுரர்கணை அழிக்க நினைத்தார்கள்” என்பதற்கும், இறுதியில் ’உத்கீதத்தைப் பாடுபவரைப் ப்ராணனாக நினைக்க வேண்டும்’ என்பதற்கும் முரண்பாடே இல்லை . பாடுபவர் இருந்தால் பாடப்பட்ட உத்கீதமும் இருக்குமே–
பரோவரீயஸ்த்வாதி₃வத் – ப்ரணவத்தை பரமாத்மாவாக உபாஸிக்கும் வித்யைகளில், ஓரிடத்தில் அவர் ஹிரண்மய புருஷர் (தங்கம் போன்ற திருமேனி உணடயவர்) என்றும் மற்றோர் இடத்தில் “பரோவரீயஸ்த்வம்” (உயர்ந்தவர்களை விடச் சிறந்தவர்) என்ற குணத்தோடு கூடியவர் என்றும் கூறப்படுகிறார். இங்கு உபாஸிக்கப்படும் பொருள் ஒன்றாக இருந்தாலும், குணங்களில் வேறுபாடு இருப்பதால் வித்யைகள் வேறுபட்டவையே . அப்படி யிருக்க, இங்கு உபாஸிக்கப்படும் பொருளிலேயே வேறுபாடு இருக்கும் போது, இரண்டு வித்யைகளும் ஒன்றாக இருக்க இயலாது.–
பெயர் ஒன்றானாலும் வித்யைகள் வேறாகலாம்
3-ஸம்ஜ்ஞாதஶ் சேத் தது³க்தம், அஸ்தி து தத₃பி
ஸம்ஜ்ஞாத: — பெயர் ஒன்றாக இருப்பதால்;
தத் — வித்யைகள் ஒன்றே ;
உக்தம் வசத் — என்று கூறப்படது என்றால்;
தத் – அந்தப் பெயர் ஒற்றுமையும்;
அபி –வித்யைகள் வேறுபட்டிருந்தாலும்; அஸ்தி து — இருக்கிறதன்றோ .
ஒரே பெயர் இருப்பதால் மட்டுமே இரண்டு வித்யைகளும் ஒன்றே என்று முடிவு செய்ய முடியாது. உதாரணமாக, நித்ய அக்னிஹோத்ரம் மற்றும் குண்ட பாயின மயன அக்னி ஹோத்ரம் ஆகிய இரண்டிற்கும் “அக்னி ஹோத்ரம்” என்ற ஒரே பெயர் இருக்கிறது; ஆனால் அவை வெவ்வேறு கர்மங்கள். அதே போல்,சாந்தோக்ய உபநிஷத்தின் முதல் ப்ரபாடகத்தில் கூறப்படும் பல் வேறு வித்யைகளுக்கும் “உத்₃கீ₃த₂ வித்யை” என்ற ஒரே பெயர் பயன்படுத்தப்படுகிறது.
பூர்வ பக்ஷியின் கேள்வி: சாந்தோக்ய உபநிஷத்தில் ப்ரணவத்தை மட்டும் பற்றின உபாஸனம் முந்தைய பகுதியோடு முடிந்து, இந்த உபாஸனம் முழு உத்கீதத்தைப் பற்றியதாக இருக்கலாமே ?
ஸித்தாந்தியின் பதில் – 4-வ்யாப்தேஶ்ச ्ஸமஞ்ஜஸம் –“மேலும், தொடர்ந்து வரும் பகுதிகளிலும் இதே விதமாக இருப்பதால், இவ்வாறு கொள்வதே பொருத்தமானது.”
சாந்தோக்ய உபநிஷத்தின் முதல் ப்ரபாடகத்தில் இப்போது ஆராயப்படும் வித்யைக்கு முன்னும் பின்னும் வரும் வித்யைகளில் எல்லாம் உத்கீ₃தத்தின் ஒரு பகுதியாகிய ப்ரணவமே உபாஸிக்கப்பட வேண்டியதாகக் கூறப்படுகிறது. எனவே, இந்த வித்யையிலும், உத்கீ₃தம் என்ற சொல் ப்ரணவத்தையே குறிக்கிறது என்று கொள்வதே பொருத்தமானது.
உத்கீதம் முழுவதையும் குறிக்கும் ’உத்கீதம்’ என்ற சொல், அதன் ஒரு பகுதியான ப்ரணவத்தை மட்டும் எப்படிக் குறிக்க முடியும்? இது சாத்தியமே . ஒரு துணியின் ஒரு பகுதி எரிந்தாலும், “துணி எரிந்து விட்டது” என்று சொல்வது போல். எனவே , சாந்தோக்யத்தில் ப்ரணவம் மட்டும் ப்ராணனாக உபாஸிக்கப்பட வேண்டியதாகவும், ப்ருஹதா₃ரண்யகத்தில் முழு உத்கீ₃தத்தைப் பாடுபவர் ப்ராணனாக உபாஸிக்கப்பட வேண்டியதாகவும் கூறப்படுவதால், உபாஸனையின் வடிவத்தில் வேறுபாடு உள்ளது. ஆகையால், இவை இரண்டும் வெவ்வேறு வித்யைகள் என்பது நிரூபிக்கப்பட்டது.
—
3-3-3-ஸர்வாபே₄தா₃தி₄கரணம்-மூன்று இடங்களிலும் ஒரே ப்ராண வித்யை -அதிகரணத்தின் பின்புலம் -ஸங்கதி –-முந்தைய அதிகரணத்தில் உத்கீதம் என்ற மந்த்ரப் பகுதியைப் ப்ராணனாகத் த்யானிக்கும் வித்யை ஆராயப்பட்டது. இப்போது, ப்ராணனையே நேரடியாக த்யானிக்கும் வித்யை ஆராயப்படுகிறது
விஷய வாக்யம் – ப்ராண வித்யை சாந்தோக்ய உபநிஷத்தின் 5ஆம் அத்யாயத்தின் 1ஆம் கண்டத்திலும் ப்ருஹதாரண்யக உபநிஷத்தின் 6அம் அத்யாயத்தின் 1ஆம் ப்ராஹ்மணத்திலும் ஒரே மதிரி சொல்லப்பட்டுள்ளது.-முதலில் ப்ராணனைப் பற்றின வித்யையை உபதேசிக்கிறது –
யோ ஹ வை ஜ்யேஷ்ட₂ம் ச ஸ்ரேஷ்ட₂ம் ச வேத₃ ஜ்யேஷ்ட₂: ச ஹ வை ஸ்ரேஷ்ட₂: ச ப₄வதி | ப்ராணோ வாவ ஜ்யேஷ்ட₂: ச ஸ்ரேஷ்ட₂: ச-
“யார் ஜ்யேஷ்டமானதும் ஸ்ரேஷ்டமானதுமான பொருளை த்யானிக்கிறாரோ , அவர் ஜ்யேஷ்டராகவும் ஸ்ரேஷ்டராகவும் ஆகிறார்.-ப்ராணனே ஜ்யேஷ்டமானதும் ஸ்ரேஷ்டமானதும் ஆகும்”.
ஜ்ரேஷ்டத்வம் என்றால் மூத்ததாய் தொன்மையானதாய் இருத்தல்.-ஸ்ரேஷ்டத்வம் என்றால் மிகச் சிறந்ததாய் இருத்தல்.
அதற்குப் பிறகு நான்கு புலன்களுக்குள்ள சிறப்புகள் சொல்லப்படுகின்றன.
வாக் (பேச்சுப் புலன்) – வஸிஷ்ட₂த்வம் (செல்வத்தைப் பெறச் செய்யும் நல்ல பேச்சுக்குக் காரணமாக இருத்தல்.
சக்ஷு ஸ் (கண்) – ப்ரதிஷ்டா₂த்வம் (நிலையான இருப்புக்காக நிலத்தின் ஏற்றத் தாழ்வுகளைக் காண்பித்தல்.
ஸ்ரோத்ரம் (காது) – ஸம்பத்த்வம் (செல்வத்திற்குக் காரணமான சாஸ்த்ர ஜ்ஞாநத்துக்குக் காரணமாய் இருத்தல்.
மனஸ் (மனது) – ஆயதனத்வம் (மாலை , சந்தனம் முதலானவற்றால் ஏற்படும் அனுபவங்களுக்கு காரணமாக இருத்தல்.
எல்லா இந்த்ரியங்களும் ப்ராணனைச் சார்ந்தே நிலைத்திருக்கின்றன; அவற்றின் ஒவ்வொரு செயல்பாடும் ப்ராணனைச் சார்ந்தே நடை பெறுகிறது. இதுவே ப்ராணனுடைய ஸ்ரேஷ்ட் ம் அதாவது உயர்ந்த தன்மை . இதைக் காட்ட ஒரு கதை சொல்லப்படுகிறது –
அத₂ ஹ ப்ராணா அஹம் ஸ்ரேயஸி வ்யூதி₃ரே | அத₂ ஹ ப்ராண உச்சிக்ரமிஷந் இதராந் ப்ராணா: ஸமகி₂தத் । த்வம் ந: ஸ்ரேஷ்டோ ₂ʼஸி
புலன்கள் மற்றும் ப்ராண வாயுவுக்குள் யார் சிறந்தவர் என்ற போட்டி ஏற்பட, ஒவ்வொருவராக உடலை விட்டு விலகிய போதும் மற்றவருக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை . ஆனால் ப்ராணன் விலக முற்பட்ட போது, எல்லாப் புலன்களும் செயலிழந்து போயின, உடலே நிலை குலைந்து போயிற்று. ஆகவே , எல்லாப் புலன்களும் கூடி, ப்ராணனே சிறந்தது என்று ஏற்றுக் கொண்டன–
விஷய வாக்யம்-இதற்குப் பிறகு வாக் முதலான இந்த்ரியங்களுடன் தொடர்பு படுத்திக் கூறப்பட்ட வஸிஷ்ட₂த்வம் முதலான குணங்கள், இப்போது ப்ராணனுடன் தொடர்புைடவையாகவும் கூறப்படுகின்றன-
அத₂ ஹைநம் வாகு₃வாச யத₃ஹம் வஸிஷ்டோ₂ʼஸ்மி த்வம் தத்₃வஸிஷ்டோ ₂
ʼஸீதி-
“அப்போது வாக் ப்ராணனை நோக்கி, ‘நான் வஸிஷ்டத்வம் என்ற குணத்தோடு உள்ளதே உம்மை அண்டித் தான், எனவே வஸிஷ்டத்வம் என்ற பண்பு உனக்கும் உள்ளது” என்று கூறியது. இதே போல் கண், காது, மனது ஆகியவையும் கூறின.
ஆக இந்த வித்யையில் ப்ராண னுக்கு முதலில் ஜ்யேஷ்டத்வம் ஸ்ரேஷ்டத்வம் என்று 2 குணங்கள் சொல்லப்பட்டன. அதற்குப் பின், வாக் முதலானவற்றுக்குச் சொல்லப்பட்ட வஸிஷ்டத்வம் முதலான 4 பண்புகள் கூட ப்ராணனுக்கும் உள்ளன என்றும் சொல்லப்பட்டது. ஆகவே , மொத்தம் 6 குணங்களோடு கூடிய ப்ராணனை உபாஸிப்பது இந்த வித்யை . பெயர், பயன், கட்டளை மற்றும் வடிவத்தில் வேறுபாடு இல்லாததால், இந்த ஒரே வித்யை சாந்தோக்யத்திலும் ப்ருஹதாரண்யகத்திலும் சொல்லப்பட்டுள்ளது என்பதில் எந்த ஸந்தேஹமும் இல்லை .–
ருக்₃வேதத்தைச் சேர்ந்த கௌஷீதகீ உபநிஷத்திலும் ஒரு ப்ராண வித்யை சொல்லப்பட்டுள்ளது. அதிலும், ஜ்யேஷ்டத்வம் மற்றும் ஸ்ரேஷ்டத்வம் என்று ப்ராணனுக்குள்ள இரண்டு பண்புகளைச் சொல்லி, பிறகு வாக் முதலான புலன்களுக்கு உள்ள வஸிஷ்டத்வம் முதலான 4 பண்புகளைச் சொல்லி, அதற்குப் பின் ப்ராணன்களுக்குள் வந்த போட்டியைச் சொல்வதன் மூலம் எல்லாப் புலன்களும் ப்ராணனை நம்பியே இயங்குகின்றன என்றும் சொல்லப்பட்டுள்ளது. ஆனால், சாந்தோக்யத்திலும் ப்ருஹதாரண்யகத்திலும் இருப்பது போல் இறுதியில் அந்தந்தப் புலன்கள் வஸிஷ்ட₂த்வம் முதலான தங்கள் தங்கள் குணங்களை ப்ராணனுக்கு இருப்பதாகச் சொன்ன பகுதி மட்டும் இந்த உபநிஷத்தில் இல்லை .
ஸந்தேகம் – கௌஷீதகீ உபநிஷத்தில் கூறப்படும் ப்ராண வித்யை , மற்ற இரண்டு உபநிஷத்துக்களிலும் சொல்லப்பட்ட ப்ராண வித்யையைக் காட்டிலும் வேறா? அல்லது ஒன்று தானா?
பூர்வ பக்ஷம் – இந்த வித்யை வேறு தான், உபாஸனத்தின் ரூபம் (வடிவம்) மாறுபடுவதால். இரண்டு இடங்களிலும் ப்ராணனே உபாஸிக்கப்பட வேண்டியவராக இருந்தாலும், ஒரு இடத்தில் ஜ்யேஷ்டத்வம் ஸ்ரேஷ்டத்வம் வஸிஷ்டவ்யம் ப்ரதிஷ்டத்வம் ஸபத்த்வம் ஆயதனத்வம் என்ற 6 குணங்களோடு கூடியதாகப் ப்ராணனை உபாஸிக்க வேண்டும்; மற்றோர் இடத்தில் வெறும் ஜ்யேஷ்டத்வம் மற்றும் ஸ்ரேஷ்டத்வம் என்ற 2 குணங்கள் மட்டும் தான் சொல்லப்பட்டுள்ளன. எனவே , உபாஸனத்தின் வடிவம்
மாறுவதால் இந்த ப்ராண வித்யை வேறாகத் தான் இருக்க வேண்டும்.
வடிவத்தில் வேறுபாடு இல்லை என்பதே ஸித்தாந்தம் – 1-ஸர்வா பே₄தா₃த் அந்யத்ர இமே
இமே — இந்த வஸிஷ்ட₂த்வம் முதலான குணங்கள்;
அந்யத்ர — மற்ற இடத்தில், அதாவது கௌஷீதகீ ப்ராண வித்யையிலும் (உள்ளன);
ஸர்வ அபே₄தாத்— முழு விளக்க முறையிலும் வேறுபாடு இல்லாததால்.
சாந்தோக்யத்திலும் ப்ருஹதா₃ரண் கத்திலும், இந்த்ரியங்களுக்கும் ப்ராணனுக்கும் இடையே ஏற்பட்ட
விவாதத்தை விவரித்து, இந்த்ரியங்கள் ப்ராணனைச் சார்ந்தே நிலைத்திருப்பதாலும், அவற்றின் செயல்கள் ப்ராணனைச் சார்ந்தே நடை பெறுவதாலும், ப்ராணனுடைய ஸ்ரேஷ்ட்யம் விளக்கப் படுகிறது. அதன் பின்னர் “நான் எந்தக் குணத்தைக் கொண்டிருக்கிறேனோ அந்த குணம் தங்களுக்கும் உள்ளது” என்று கூறி, வாக் முதலான இந்த்ரியங்களுக்கு உரிய வஸிஷ்ட₂த்வம் முதலான குணங்களும் ப்ராணனைச் சார்ந்தவையே என்று விளக்கப் படுகிறது.
கௌஷீதகீ உபநிஷத்திலும் இதே முறையிலேயே முழு விஷயமும் விளக்கப் படுகிறது. ஆனால், வாக் முதலான இந்த்ரியங்கள் தங்களுக்குரிய வஸிஷ்டத்வம் முதலான குணங்கள் ப்ராணனைச் சார்ந்தவை என்று கூறும் அந்தப் பகுதி மட்டும் இல்லை . ஆனாலும், வஸிஷ்டத்வம் முதலானவை ப்ராணனுக்கு உள்ளன என்பதை இது இல்லா விட்டாலும் நாம் அறிய முடியும். ப்ராணன் உடலை விட்டும் புறப்படும் பொழுது மற்ற புலன்கள் எல்லாம் செயலிழந்தன என்று சொல்வதன் மூலமே , வாக் முதலானவற்றுக்கு உள்ள வஸிஷ்டத்வம் முதலான குணங்கள் ப்ராணனுக்கும் இருக்கின்றன என்பது தெரிந்து விடுகிறது. அதை அந்தப் புலன்கள் வந்து ப்ராணனிடம் சொன்னால் தான் நமக்குத் தெரியம் என்பதல்ல. அதனால் கௌஷீதகீ உபநிஷத்திலும் ஜ்யேஷ்டத்வம் ஸ்ரேஷ்டத்வம் வஸிஷ்டத்வம் ப்ரதிஷ்டாத்வம் ஸம்பத்த்வம் ஆயதனத்வம் என்ற 6 குணங்களோடு கூடியதாகத் தான் ப்ராணனைத் த்யானிக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது. எனவே , சாந்தோக்யத்திலும் ப்ருஹதா₃ரண் கத்திலும் சொன்ன ப்ராண வித்யைக்கும் கௌஷீதகீ உபநிஷத்தில் சொன்ன ப்ராண வித்யைக்கும் ரூபத்தில் (வடிவத்தில்) எந்த வேறு பாடும் இல்லை . எனவே , இவை எல்லாம் ஒரே வித்யை தான்.
—
3-3-4-ஆநந்தா₃த்₃யதி₄கரணம்-ப்ரஹ்மத்தை அடையாளப் படுத்தும் பண்புகள் -அதிகரணத்தின் பின்புலம் -ஸங்கதி – முன் அதிகரணத்தில் ப்ராண வித்யையைப் பற்றி நிரூபிக்கப் பட்டது. அடுத்த
அதிகரணத்திலும் ப்ராண வித்யையைப் பற்றிய மேலும் சில விஷயங்கள் பின்னர் ஆராயப்பட உள்ளன. இப்போது, இடையில் அதோடு தொடர்புடைய வேறொரு விஷயம் ஆராயப் படுகிறது.–
முன் அதிகரணத்தில் ப்ராணனுடைய வஸிஷ்ட₂த்வம் முதலான குணங்களை நினைவு கூறாமல், அவனுடைய ஸ்ரேஷ்டத்வத்தை (உயர்வை ) மட்டும் நினைவு கூறுவது பொருந்தாதபடியால், கௌஷீதகீ உபநிஷத்தில் அந்தக் குணங்களும் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும் என்று கூறப்பட்டது. அதே போல், எந்தக் குணங்களை நினைவு கூறாமல் ப்ரஹ்மத்தின் ஸ்வரூபத்தையே நினைவு கூற முடியாதோ , அந்தக் குணங்கள் எல்லா ப்ரஹ்ம வித்யைகளிலும் அவசியமாக நினைவு கூறப்பட வேண்டும் என்று இந்த அதிகரணத்தில் வ்யாஸர் நிரூபிக்கிறார்.
(ஸ்வரூப நிரூபக தர்மங்கள் அடையாளம் காட்டும் சில -குணங்கள் –நிரூபித ஸ்வரூப விசேஷணங்களாக உள்ள சில குணங்கள் என்று இரண்டு வகைகள் உண்டே-எந்த வித்யையில் த்யானித்தாலும் ஸ்வரூப நிரூபக குணங்களை எல்லாம் சேர்த்தே த்யானிக்க வேண்டும் -என்று காட்டி அருளுகிறார் –ஸத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்மம் -ஆநந்தோ ப்ரஹ்மம் அபஹத பப்மாத்வாதிகள் போன்றவை வித்யையில் சொல்லா விட்டாலும் இவற்றைச் சேர்த்தே த்யானிக்க வேண்டும் -)
ஸந்தேஹம் – ப்ரஹ்மத்தை அடையாளப்படுத்தும் குணங்கள் ப்ரஹ்மத்தைப் பற்றின எல்லா வித்யைகளிலும் உப ஸம்ஹாரம் செய்யப்பட வேண்டுமா ? அல்லது அவற்றை அந்தந்த ப்ரகரணங்களில் மட்டுமே எடுத்துக் கொள்ளப்பட வேண்டுமா ?
பூர்வ பக்ஷம் – ப்ரகரணத்தில் நேரடியாகக் கற்பிக்கப்படாத குணங்களை மற்ற ப்ரஹ்ம வித்யைகளில் உபஸம்ஹாரம் செய்வதற்கு எந்தப் ப்ரமாணமும் இல்லை . ஆகையால், அந்தந்த ப்ரகரணங்களில் வெளிப்படையாகக் கூறப்பட்டுள்ள குணங்களை மட்டுமே உப ஸம்ஹாரம் செய்ய வேண்டும்.
ஸித்தாந்தம் – 1-ஆநந்தா₃த₃ய: ப்ரதா₄நஸ்ய – ’அபே₄தா₃த்’ என்று சேர்த்துக் கொள்ள வேண்டும்
ஆநந்தா₃த₃ய: – ஆநந்தம் முதலான குணங்களை எல்லா ப்ரஹ்ம வித்யைகளிலும் சேர்த்துக் கொள்ள வேண்டும்
ப்ரதா₄நஸ்ய (அபே ₄தா₃த் )– த்யானிக்கப்படும் ப்ரஹ்மம் எல்லா வித்யைகளிலும் ஒன்றானபடியால்
எல்லா ப்ரஹ்ம வித்யைகளிலும் ஒரே ப்ரஹ்மம் தான் த்யானிக்கப்படுகிறார். ஆநந்தம் முதலான குணங்களை அவரை விட்டுப் பிரிக்க முடியாது. எனவே , அக் குணங்களையும் எல்லா வித்யைகளிலும் சேர்த்துக் கொண்டு தான் த்யானிக்க வேண்டும் என்கிறார் வ்யாஸர்.
நேரடி குணங்களுக்கு மட்டுமே உப ஸம்ஹாரம்
பூர்வ பக்ஷியின் கேள்வி – தைத்திரீய உபநிஷத்தில் ஓரிடத்தில் (ஆனந்த மய வித்யையில்) (தஸ்ய ப்ரியமேவ சிர: மோதோ ₃ த₃க்ஷிண : பக்ஷ: ப்ரமோத₃ உத்தர: பக்ஷ:) அதாவது “அவருக்கு ப்ரியம் தலையாகவும், மோதம் வலது பக்கமாகவும், ப்ரமோதம் இடது பக்கமாகவும், (கைகளாகவும்)ஆனந்தம் நடு உடலாகவும் உள்ளன” என்று கூறப்படுகிறது. ப்ரஹ்மத்திலிருந்து தனியாக இல்லாதபடியால் அவருடைய குணங்களையும் எல்லா வித்யைகளிலும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்றால், ப்ரிய ஶிரஸ்த்வம் (ப்ரியம் என்பதைத் தலையாகக் கொண்டிருத்தல்) முதலானவைகளும் எல்லா வித்யைகளிலும் உபஸம்ஹாரம்
செய்ய வேண்டி வருமே ?
ஸித்தாந்தியின் பதில் – 2-ப்ரியசிரஸ்த்வாத்₃ யப்ராப்தி: உபசய அபசயௌ ஹி பே₄தே ₃
ப்ரியசிரஸ்த்வாத்₃ யப்ராப்தி: – ப்ரியஶிரஸ்த்வம் முதலானவை மேற் வித்யைகளைச் சென்று அடைய மாட்டா
பே₄தே ₃ – ப்ரஹ்மத்துக்கு அவயவங்கள் (பகுதிகள்) வேறுபட்டால்
உபசய அபசயௌ ஹி– ப்ரஹ்மத்துக்கு ஸ்தூலமானது ஸூக்ஷ்மமானது என்பது போல் அளவுகள் வந்து விடும்-
ப்ரியஶிரஸ்த்வம் முதலானவை நேரடியாக ப்ரஹ்மத்தின் குணங்கள் அல்ல. ப்ரஹ்மத்தை ஓர் உடலாகக்
கற்பனை செய்து கூறப்பட்டவையே . அவை நேரடியாக ப்ரஹ்மத்தின் குணங்கள் என்று கொண்டால்,
ப்ரஹ்மத்துக்குத் தலை , பக்கங்கள் என்று அங்கங்கள் உள்ளன என்றாகி விடும், அங்கங்களில் வேறுபாடு ஏற்பட்டவுடன் ப்ரஹ்மத்திலும் உபசயம்–அபசயம், அதாவது பெருத்தல்–சிறுத்தல் போன்ற மாற்றங்கள் ஏற்படும் என்ற தோஷம் வரும். அப்போது வேதம் ப்ரஹ்மத்தை “ஸத்யம்” (என்றும் மாறாமல் ஒரே போல் இருப்பது) என்றும், “அஸ்தூ₂லம் அநணு” (ஸ்தூலமுமல்ல, அணுவுமல்ல) என்றும் கூறியதோடு முரண்பாடு ஏற்படும். ஆகவே , ப்ரியஶிரஸ்த்வம் முதலானவை நேரடியாக ப்ரஹ்ம குணங்கள் அல்லாத படியால், ஆநந்தம் முதலானவை போல் அவற்றை மற்ற வித்யைகளில் உபஸம்ஹாரம் செய்யத் தேவை யில்லை–
(உடலைத் தேராகவும் ஐந்து குதிரைகள் கடிவாளம் போன்ற உருவகங்கள் போல் இங்கும் உருவகமே–இவை ப்ரஹ்மத்தின் பண்புகள் இல்லையே -ஆகையால் இந்த பண்புகளை எங்கும் சேர்த்துக் கொள்ள வேண்டாமே)
அடையாளப்படுத்தும் குணங்களுக்கு மட்டுமே உப ஸம்ஹாரம்
பூர்வ பக்ஷியின் கேள்வி: அப்படியானால், ப்ரஹ்மத்திலிருந்து தனியாக இல்லாததால், ஐஶ்வர்யம், காம்பீர்யம், ஔதார்யம் முதலான எண்ணற்ற கல்யாைண குணங்களையும் உபஸம்ஹாரம் செய்ய வேண்டியதாகிவிடுமே ? அவ்வாறு செய்தால்,எல்லா வித்யைகளிலும் எல்லாக் குணங்களும் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும் என்றதாகும். மேலும், அந்தக் குணங்கள் எண்ணற்றவையாக இருப்பதால், அவை அனைத்தையும் எல்லாவற்றோடும் சேர்த்து த்யானிப்பதே இயலாது.
ஸித்தாந்தியின் பதில் – 3–இதரே து அர்த₂ஸாமாந்யாத்
இதரே — மற்ற குணங்கள், அதாவது ஆனந்தம் முதலானவை (மட்டும் தான் உபஸம்ஹாரம் செய்யப்பட வேண்டியவை )
அர்த ஸாமாந்யாத் — அர்த்தத்தோடு (த்யானிக்கப்படும் பொருளோடு) ஸாமாந்யம் (ஒற்றுமை ) இருப்பதால்.
ஒரு குடத்தை வெவ்வேறு பண்புகளோடு கூடியதாக வெவ்வேறு த்யானங்கள் செய்தாலும் அவற்றில் எல்லாம் குடம் என்ற ஒரே பொருள் எப்படித் தொடர்ந்து வருகிறதோ , அதே போல் அந்தக் குடத்துக்கு அடையாளமாக இருக்கும் குடத் தன்மை (வாயும் வயிறுமான வடிவம் உடைமை-கடத்வம் ஜாதி ) என்ற பண்பும் தொடர்ந்து வருகிறது, குடத் தன்மையே அறியாமல் குடத்தை அறிய முடியாத படியால். அதே போல், ஸ்வரூப நிரூபக தர்மங்கள் எனப்படும் பண்புகள், அதாவது பரமாத்மாவை அறிவதற்கே இன்றியமை யாதவையாகவும் பரமாத்மாவை அடையாளப் படுத்துமவை யாகவும் இருக்கும் பண்புகள் எல்லா வித்யைகளிலும் தொடர்ந்தே தீரும், அவை இல்லாமல் ப்ரஹ்மத்தை நினைக்க முடியாததால்-அவை எவை எனில் – ஸத்யத்வம் (என்றும் மாறாமல் ஒரே போல் இருத்தல்), ஜ்ஞாநத்வம் (எப்போதும் எல்லை யற்ற ஜ்ஞாநத்தோடு இருத்தல்), அநந்தத்வம் (எல்லா விதத்திலும் அளவற்றவராய் இருத்தல்), ஆநந்தத்வம் (ஸுகமே வடிவானவராய் இருத்தல்) மற்றும் அமலத்வம் (தோஷங்களுக்கெல்லாம் எதிர்த் தட்டாய் இருத்தல்). இந்த ஐந்து பண்புகளை எல்லா ப்ரஹ்ம வித்யைகளிலும் கண்டிப்பாகச் சேர்த்துக் கொண்டே ஆக வேண்டும்.–
(அவிகாராய ஸுத்தாய நித்யாய பரமாத்மனே | ஸதைக ரூப ரூபாய விஷ்ணவே ஸர்வ ஜிஷ்ணவே-
அவிகாராய: எந்த மாற்றமும் இல்லாதவரே.
ஸுத்தாய: தூய்மையானவரே.
நித்யாய: என்றும் நிலைத்திருப்பவரே.
பரமாத்மனே: மேலான ஆன்மாவாக இருப்பவரே.
ஸதைக ரூப ரூபாய: எப்போதும் ஒரே தன்மையுடன் விளங்குபவரே.
விஷ்ணவே: எங்கும் நிறைந்திருக்கும்
விஷ்ணுவே.ஸர்வ ஜிஷ்ணவே: அனைவரையும் வெல்பவரே (அல்லது எங்கும் வெற்றி கொள்பவரே).
ப்ரஹ்மம் அடையாளம் காணப்பட்ட பிறகு, அவரை விளக்கக் கூடிய காருண்யம் ஸௌசீல்யம் வாத்ஸல்யம் ஒவ்தார்யம் முதலான குணங்கள் நிரூபித ஸ்வரூப விசேஷணங்கள் என்று சொல்லப்படுகின்றன. அவை இல்லாமலும் ப்ரஹ்மத்தை நினைக்க முடியும் என்பதால் எல்லா வித்யைகளிலும் அவற்றை கட்டாயமாகச் சேர்க்க வேண்டியதில்லை .
உருவகத்தின் பயன் என்ன?
பூர்வ பக்ஷியின் கேள்வி – ப்ரியஶிரஸ்த்வம் முதலானவை ப்ரஹ்மத்தின் நேரடியான குணங்கள் அல்ல, ப்ரஹ்மத்தை உடலாக உருவகப் படுத்திக் கூறப் பட்டவை என்று சொல்லப்பட்டது. இவ்வாறு கற்பனை செய்வதற்குப் பயன் இல்லையே ? எப்போதும் உருவகத்திற்கு ஒரு பயன் வேண்டும். வேதத்திலேயே “(ஆத்மாநம் ரதி₂னம் வித்₃தி₄) என்று உடலைத் தேராகவும், ஆத்மாவைத் தேரில் பயணிப்பவராகவும், புலன்களைக் குதிரைகளாகவும், மனதைக் கடிவாளமாகவும் உருவகப்படுத்தி அதன் மூலம் புலனடக்கத்தை உபதேசிக்கிறது. அதுபோல் இங்கு பயன் ஏதும் இல்லையா?
ஸித்தாந்தியின் பதில் – 4–ஆத்₄யாநாய ப்ரயோஜநா பா₄வாத்
ப்ரயோஜநா பா₄வாத் – வேறு எந்தப் பயனும் இல்லாததால்
ஆத்₄யாநாய – தியானத்திற்காகவே இந்த வடிவம் கூறப்பட்டுள்ளது.
உபாஸநம் செய்ய வேண்டும் என்றால் முதலில் ஸாஸ்த்ரத்தின் மூலம் ப்ரஹ்மத்தை அறிய வேண்டும். இந்த ஆநந்த மய வித்யையில் ப்ரஹ்மம் எல்லை யற்ற ஆநந்தம் உடையவர் என்று சொல்லப்படுகிறது. அதைப் புரிய வைப்பதற்காகவே இவ் விடத்தில் உருவகம் பயன்படுகிறது. ப்ரியம், மோதம், ப்ரமோதம் போன்ற மிக உயர்ந்த ஆனந்த அனுபவங்களும் ப்ரஹ்மத்தின் ஆநந்தத்தின் ஒரு சிறிய அம்ஸமே என்பதன் மூலம் ப்ரஹ்மானந்தம் எல்லை யற்றது என்பதை நமக்குப் புரிய வைக்கிறது.
(ஸ்தூலா நிந்ததி நியாயம் -அருந்ததி காட்ட மற்ற ஒன்றைக் காட்டி புரிய வைப்பது போல் –பிரியம் -பார்த்தும் அடையும் ஆனந்தம் -மோதம் என்னுடையது என்று அறிந்ததும் பெறும் ஆனந்தம் -பிரமோதம் அடைந்து இன்பம் அனுபவிப்பது போல் –இவ்வாறு அளவு பட்ட ஆனந்தங்களைச் சொல்லி -எல்லை யில்லா ஆனந்த மயனைப் புரிய வைக்கவே இந்த உருவகம்)
5–ஆத்ம சப்₃தா₃த் ச — “மேலும், ‘ஆத்மா ’ என்ற சொல்லால் குறிப்பிடப் படுவதாலும்.”
(அந்யோந்தர ஆத்மா ஆநந்த₃மய:) என்ற வாக்கியத்தில் ஆநந்த மயனான பரமாத்மாவை வேதம் ’ஆத்மா ’ என்ற சொல்லால் குறிக்கிறது. ஆத்மா என்றாலே அதற்கு எந்தப் பகுதிகளும் கிடையாது என்பது ப்ரஸித்தமானது. ஆகையால் தலை , பக்கங்கள் போன்ற அங்கங்களைக் கொண்டு கூறப்படுவது வெறும் உருவகம் தான்-என்று புரிந்து கொள்ள வேண்டும்.
ஆத்மா என்றால் பரமாத்மா தானா?
பூர்வ பக்ஷியின் கேள்வி – ஆனால், (அந்யோந்தர ஆத்மா ப்ராண மய🙂 போன்ற இடங்களில், ஆத்மா அல்லாத ப்ராண வாயு மனது முதலானவற்றையும் “ஆத்மா” என்ற சொல்லால் ஸ்ருதி குறிப்பிடுகிறது. அப்படி யிருக்க, இங்கு மட்டும் “ஆத்மா” என்ற சொல் ப்ரஹ்மத்தையே குறிக்கிறது என்று எவ்வாறு உறுதியாகக் கூற முடியும்?
ஸித்தாந்தியின் பதில் – 6-ஆத்ம க்₃ருஹீதி: இதரவத் உத்தராத் –
“இங்கு ஆத்மா என்று பரமாத்மாவே குறிக்கப் படுகிறார்; மற்ற இடங்களில் போல்; பின்னர் வரும் வாக்கியத்தால்”
உபநிஷத்தில் வேறொரு இடத்தில் (ஆத்மா வா இத₃மேக ஏவ அக்₃ர ஆஸீத்) அதாவது “ஸ்ருஷ்டிக்கு முன் (ப்ரளய காலத்தில்) ஆத்மா ஒருவரே இருந்தார்” என்று கூறும் இடத்தில், ஆத்மா என்ற சொல் பரமாத்மாவையே குறிக்கிறது.-ஏனெனில் அதன் பின்னர் (ஸ ஈக்ஷத லோகாந் நு ஸ்ருஜா) அதாவது “அவர் உலகங்களைப் படைக்க வேண்டும் என்று சிந்தித்தார்” என்ற வாக்கியம் உள்ளது. இப்படிப்பட்ட ஸங்கல்பம் அறிவுடையவரான பரமாத்மாவுக்கே பொருந்தும் என்பதால் இங்கு ஆத்மா எனப்படுபவர் பரமாத்மாவே என்று நிச்சயிக்கலாம்.
அதே போல் இங்கும் ஆனந்த மயனைப் பற்றித் தொடர்ந்து வரும் வாக்கியத்தில் (ஸோ காமயத ப₃ஹுஸ்யாம் ப்ரஜாயேய) அதாவது “அந்த ஆத்மா நான் பலவாக ஆக வேண்டும் என்று விரும்பினார்” என்று கூறப்படுகிறது. அதனடிப்படையில் இங்கும் “ஆத்மா ” என்ற சொல்லாலும் பரமாத்மாவே குறிக்கப் படுகிறார் என்பது தெளிவாகிறது–
7–அந்வயாத் ् இதி சேத் ஸ்யாத் அவதா₄ரணாத்
அந்வயாத் – முந்தைய பகுதிகளில் ஆத்மா என்ற சொல் மூச்சுக் காற்றோடும் தொடர்பு பட்டுள்ளதால் (நிச்சயிக்க முடியாது)
இதி சேத் – என்று கூறினால்
ஸ்யாத் – நிச்சயம் ஏற்படலாம்;
அவதாரணாத் — முன் உள்ள இடங்களிலும் ஆத்மா எனப்படுபவர் பரமாத்மா என்று நிச்சயான படியால்
இப் பகுதியின் தொடக்கத்தில் (தஸ்மாத்₃வா ஏதஸ்மாத் ஆத்மந ஆகாஸ : ஸம்பூ₄த:) அதாவது
“இந்த ஆத்மாவிலிருந்தே ஆகாஸம் தோன்றியது” என்று கூறி, பரமாத்மாவையே உபநிஷத் குறிப்பிடுகிறது. அதன் பின்னர் உடல், பிராணன், மனது, ஜீவன் என்று ஒவ்வொன்றிலும் ’இவரே பரமாத்மா ’ என்ற எண்ணத்தை ஏற்படுத்தி, இறுதியில் ஆநந்த மயனே பரமாத்மா என்று முடிவு செய்கிறது. ஆகையால், முந்தைய பகுதிகளிலும் ஆத்மா என்ற சொல் பரமாத்மாவையே குறிக்கிறது.
ஆக, ப்ரியசிரஸ்த்வம் என்பவை நேரடியாக ப்ரஹ்மத்தின் குணங்களல்லாததால் அவற்றை உப ஸம்ஹாரம் செய்யத் தேவை யில்லை –
—
3-3-5-கார்யாக்₂யாநாதி₄கரணம் வேதம் அறியாததையே அறிவிக்கும் –அதிகரணத்தின் பின்புலம் –ஸங்கதி– இந்த அதிகரணத்துக்கு மூன்றாவது அதிகரணத்தோடு தான் தொடர்பு உள்ளது. அங்கும் ப்ராண வித்யை ஆராயப்பட்ட்து, இங்கும் அதே வித்யையின் வேறொரு அம்சம் ஆராயப்படுகிறது.-
விஷய வாக்யம்- சாந்தோக்யத்திலும் ப்ருஹதா₃ரண்யகத்திலும், ஜ்யேஷ்டரும் ஸ்ரேஷ்டருமான ப்ராணனை உபாஸிக்க வேண்டும் என்று கூறிய பிறகு, நீர் ப்ராணனுடைய வாஸஸ் (வஸ்திரம்) என்று கூறப்படுகிறது.–
சாந்தோக்யத்தில்– (ஸ ஹோவாச – கிம் மே வாஸோ ப₄விஷ்யதீதி। ஆப இதி ஹோசு:। தஸ்மாத்₃வா ஏதத₃ஶிஷ்யந்த: புரஸ்தாச் சோபரிஷ்டாச்சாத்₃பி₄: பரித₃த₄தி। லம்பு₄கோ ஹ வாஸோ ப₄வதி। அநக்₃நோ ஹ ப₄வதி।) ப்ராணன், “எனக்கு என்ன வஸ்திரமாக இருக்கும்?” என்று கேட்டார். அதற்கு, “நீரே உனது வஸ்திரம்” என்று புலன்கள் கூறின. அதனால், உணவு உண்ணப் போகிறவர்கள் முன்னும் பின்னும் நீரால் சூழ்ந்து கொள்கிறார்கள். நீர் ப்ராணனுக்கு வஸ்திரமாகிறது; ஆகையால் அவர் நிர்வாணமாக இருப்பதில்லை –
ப்ருஹதா₃ரண்யகத்தில் – (ஆபோ வாஸ இதி। தத்₃ வித்₃வாம்ஸ: ஸ்ரோத்ரியா அஶிஷ்யந்த ஆச்சாமந்தி, அஶித்வா ஆச்சாமந்தி। ஏதமேவ தத்₃ அந்நம் அநக்₃நம் குர் வந்தோ மந்யந்வத। தஸ்மாதேவம்வித்₃ அஶிஷ்யந் ஆச்சாமேத், அஶித்வா சாசாமேத்। ஏதமேவ தத₃ந்நம் அநக்₃நம் குருதே ।) நீரே ப்ராணனுக்கு வஸ்திரம். வேதத்தை அறிந்தவர்கள், உணவு உண்ணும் முன்பும் ஆசமனம் செய்கிறார்கள்; உணவு உண்ட பிறகும் ஆசமனம் செய்கிறார்கள். இதன் மூலம் தாங்கள் உண்ணும் உணவை வஸ்திரம் உடையதாகச் செய்கிறோம் என்று அவர்கள் கருதுகிறார்கள். ஆகையால், இவ்வாறு அறிந்தவன் உணவு உண்ணும் முன்பு ஆச்சமனம் செய்ய வேண்டும்; உணவு உண்ட பிறகும் ஆச்சமனம் செய்ய வேண்டும். இதன் மூலம் தான் உண்ட உணவை வஸ்திரம் உடையதாகச் செய்கிறான்
ஸந்தேகம்- இங்கு ஆசமனம் செய்வது ப்ராண வித்யையின் ஓர் அங்கமாக விதிக்கப்படுகிறதா? அல்லது, “நீரே ப்ராணனுடைய வஸ்திரம்” என்று தியானிப்பது தான் இங்கு விதிக்கப் படுகிறதா?-
அறியாததையே அறிவிக்கும் வேதம்–
பூர்வ பக்ஷம் இங்கு ஆசமனம் தான் ப்ராண வித்யைக்கு அங்கமாக விதிக்கப்படுகிறது. 1–அஶிஷ்யந் ஆச்சாவமத், அஶித்வா சாசாமேத்) என்று ஆசமனம் செய்ய வேண்டும் என்ற விதி வெளிப்படையாக உள்ளது,
2-ப்ராணனின் உடையாக நீரைத் த்யானிக்க வேண்டும் என்று எந்த விதி வாக்கியமும் இல்லை .
3– (ஏதமேவ தத₃ந்நம் அநக்₃நம் குருதே ) என்று உணவு நிர்வாணமாக இல்லாததாகிறது என்று கூறப்படும் ஆசமனம் என்ற செயலைப் புகழ்வதற்காகவும் பொருந்தும்; அது அவசியமாக தியானத்தை விதிக்கிறது என்று கூற முடியாது.
ஆகவே இதுவே சரியானது-
ஸித்தாந்தம்– 1–கார்யாக்₂யாநாத் அபூர்வம் —“புதிதானது, புதியதை விதித்தால் மட்டுமே பயனுள்ளதால்”
அபூர்வம் –முன்னால் அறியப்படாத (த்யானம் தான் இங்கு விதிக்கப்படுகிறது, முன்னமே அறியப்பட்ட ஆசமநம் அல்ல)
கார்யாக்₂யாநாத்–கார்யம் என்றால் அப்ராப்தம் -அதாவது முன்னால் இல்லாதது. ஆக்₂யாநம் என்றால் கட்டளை இடுதல். ஆக, “ஏற்கனவே கிடைக்காத ஒன்றாகக் கூறுவதால்” என்று பொருள். அதாவது, ஏற்கனவே அறியப்பட்ட விஷயத்தை வேதம் மீண்டும் கூறுவதில் எந்தப் பயனும் இல்லை ; இங்கு ஏற்கனவே கிடைக்காத புதிய அர்த்தம் இருக்க வேண்டும். அந்தப் புதிய அர்த்தமே நீரைப் ப்ராணனுடைய வஸ்திரமாக நினைத்துக் கொள்வதாகும்.
தொடக்கத்தில் “கிம் வம வாஸ:, ஆபோ வாஸ:” அதாவது “எனக்கு என்ன வஸ்திரம்? நீரே வஸ்திரம்” என்று கூறப்படுகிறது.
முடிவிலும்– “அத்₃பி₄: பரித₃த₄தி” அதாவது “நீரால் சூழ்ந்து கொள்கிறார்கள்” என்றும், “ஏதமேவ தத₃ந்நம் அநக்₃நம் குருதே ” அதாவது இதன் மூலம் தான் உண்ட உணவை வஸ்திரம் உடையதாகச் செய்கிறான்” என்றும் கூறப்படுகிறது.
ஆகையால், முதலையும் முடிவையும் பார்க்கும் போது, இந்தப் ப்ரகரணம் முழுவதும் நீரே ப்ராணனுடைய வஸ்திரமாக தியானிப்தையே நோக்கமாகக் கொண்டுள்ளது என்பது தெளிவாகிறது. எனவே , ஸ்ம்ருதியாலும் ஆசாரத்தாலும் ஏற்கனவே கிடைத்திருக்கும் ஆசமனத்தைக் குறித்து, ஆசமனத்திற்குப் பயன்படுத்தப்படும் நீரைப் ப்ராணனுடைய வஸ்திரமாக நினைவு கூர்வதே இங்கு புதிதாக விதிக்கப் படுகிறது–
மேலும், சாந்தோக்யத்தில் ஆசமனம் செய்வதற்கான விதி இல்லை . “தஸ்மாத்₃வா ஏதத₃ஶிஷ்யந்த: புரஸ்தாச்சோபரிஷ்டாச்சாத்₃பி₄: பரித₃த₄தி” என்று “நீரால் சுற்றிக் கொள்வது” மட்டுமே கூறப்படுகிறது. அந்த நீரால் சூழ்ந்து கொள்வதாவது, நீர் ப்ராணனுடைய வஸ்திரம் என்று த்யானிப்பதாலும் ஸாதிக்கப்படலாம்.
ஆகவே , இங்கு ஆசமனம் விதிக்கப் படவில்லை , நீரைப் ப்ராணனின் உடையாகத் த்யானிப்பதே ப்ராண வித்யையின் அங்கமாகும்.
—
3-3-6-ஸமாநாதி₄கரணம்-சாண்டில்ய வித்யைகள் இரண்டா? ஒன்றா? -அதிகரணத்தின் பின்புலம்-ஸங்கதி -முந்தைய அதிகரணத்தில், ப்ராண வித்யையின் ஒரு விஷயம் ஆராயப்பட்டது.
அதற்கு முந்தைய (4ஆம்) அதிகரணத்தில், ப்ரஹ்மத்தின் ஸ்வரூபத்திலேயே அடங்கி, ப்ரஹ்மத்தின்
அடையாளமாக இருக்கும் பண்புகளை எல்லா வித்யைகளிலும் உபஸம்ஹாரம் செய்யப்பட வேண்டும் என்று கூறப்பட்டது. அதோடு இந்த அதிகரணத்துக்கு ஸங்கதி உள்ளது, ஏனெனில் இப்போது, வசித்வம், ஈசித்வம் முதலான குணங்கள் ஸத்ய ஸங்கல்பத்வம் என்ற குணங்களுக்குள் அடங்கி யுள்ளதா என்பது ஆராயப் படுகிறது.
விஷய வாக்யம் – ப்ருஹதாரண்யகத்தில் சாண்டில்ய வித்யை : (ஸத்யம் ப்ரஹ்மேத் யுபாஸீத, அத₂ க₂லு க்ரதுமயோ அயம் புருஷ:, ஸ ஆத்மாந முபாஸீத மநோ மயம் ப்ராண சரீரம் பா₄ரூபம் ஆகாசாத் மாநம்… ஸத்ய ஸங்கல்பம்)
“ப்ரஹ்மமே ஸத்யம் (என்றும் எவ் விதத்திலும் மாறாதது) என்று உபாஸிக்க வேண்டும். அந்த பரமாத்மா
மநோ மயன் (மனதால் மட்டுமே அறியப்படுபவர்), ப்ராண மயன் (ப்ராணனை ஸரீரமாகக் கொண்டவர்),
ஒளி மயமானவர், ஆகாஸம் போல் எங்கும் நிறைந்தவர், ஸத்ய ஸங்கல்பத்வம் (நினை த்ததெல்லாம் உண்மையாக நடக்கும் வல்லமை ) உடையவர்.”
அதே ப்ருஹதாரண்யகத்தில் மற்றோர் இடத்தில் கூறப்படும் சாண்டில்ய வித்யை :
(மநோ மயம் அயம் புருஷோ பா₄: ஸத்ய:, ஸ ஏஷ ஸர்வஸ்ய வசீ ஸர்வஸ்யேசாந: ஸர்வஸ்யாதி₄பதி:, ஸர்வமித₃ம் ப்ரஶாஸ்தி)
“இந்தப் புருஷன் மநோ மயமானவர்; ஒளி மயமானவர்; ஸத்யமானவர். அவர் அனைத்திற்கும் வசீ —
அனைத்தையும் தம் வஸத்தில் வைத்திருப்பவர்; அனைத்திற்கும் ஈசானர் — அனைத்தையும் நியமிப்பவர்; அனைத்திற்கும் அதிபதி — அனைத்திற்கும் தலைவராக இருப்பவர். இங்கு உள்ள அனைத்தையும் அவர் ஆட்சி செய்கிறார்.”
(இந்த சாண்டில்ய வித்யையைப் பற்றி- ஸர்வத்ர பிரசித்தி அதிகரணம் -1-2-1 கீழேயே பார்த்துள்ளோம்)
ஸந்தேகம் – இந்த இரண்டு சாண்டில்ய வித்யைகளும் வெவ்வேறு வித்யைகளா? அல்லது ஒரே வித்யையா?
ஸத்ய ஸங்கல்பத்வமும் அதில் அடங்கியவையும்
பூர்வபக்ஷம் – பெயர், கட்டளை , பயன் ஆகியவை ஒன்றானாலும், உபாஸிக்கப்பட வேண்டிய பொருளின் குணங்களில் வேறுபாடு இருப்பதால், உபாஸனையில் வேறுபடுகிறது. ஒரு வித்யையில் ஸத்ய ஸங்கல்பத்வம் கூறப்பட்டுள்ளதாலும், மற்றொரு வித்யையில் வசித்வம் முதலான குணங்கள் கூறப்பட்டதாலும், இந்த இரண்டு வித்யைகளும் வெவ்வேறானவையே–
ஸித்தாந்தம் – 1- ஸமாநே ஏவம் ச அபே₄தா₃த்
ஏவம் – ப்ருஹதாரண்யகத்தில் ஓரிடத்தில் கூறப்படுவது போலவே மற்றோர் இடத்திலும்
ஸமாநே – மநோ மயத்வம் முதலான குணங்கள் ஒரே மாதிரியாக இருப்பதால்;
ச – மேலும் ஸத்ய ஸங்கல்பத்வம் வசித்வம் ஈஸானத்வம் முதலான குணங்களுக்கு
அபே₄தா₃த் – வேறுபாடு இல்லாததால் (இந்த இரண்டு வித்யைகளும் ஒன்று தான்).
வசித்வம் என்பது ஸத்ய ஸங்கல்பத்வத்தின் விளைவாகவே ஏற்படுகிறது. ஒருவர் நினைத்தது தவறாமல் நிறை வேறுவது ஸத்ய ஸங்கல்பத்வம். அத்தகையவருக்கு, அனைத்தும் அவரது ஸங்கல்பத்தின்படி நடை பெறுவதால், அனைத்தும் அவரது வஸத்தில் இருக்கும். எனவே இது முற்றிலும் வேறுபட்ட குணம் அல்ல.
அதே போல், “அதிபதி” என்ற சொல்லால் குறிப்பிடப்படும் ஸேஷித்வமும் ஸத்ய ஸங்கல்பத்வத்துக்கு உதவுவதே .-சுதந்திரமாகவோ வேறொருவருக்கு ஆட்பட்டோ இயங்கக் கூடிய ஒரு பொருளை ஒருவர் நியமிக்கும் போது, அதை நியமிப்பதில் ஏதேனும் தடையோ தோல்வியோ ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. பரமாத்மா தான் அனைத்துக்கும் ஸேஷி என்று சொல்வதன் மூலம் , இவர் ஒரு ஸங்கல்பம் செய்தால் அதன்படி தான் அனைத்தும் இயங்கும், இதில் எந்தத் தடையும் இல்லை என்று காட்டுவதன் மூலம் பகவானின் ஸத்ய ஸங்கல்பத்வம் காக்கப்படுகிறது.
ஆக இவ்வாறு இரண்டவது இடத்தில் சொல்லப்பட்ட வசித்வம், ஈஸானத்வம், அதிபதித்வம் முதலான
பண்புகள் எல்லாம் முதலிடத்தில் சொல்லப்பட்ட ஸத்ய ஸங்கல்பத்வம் என்ற குணத்துக்குள் அடங்குவதால் இந்த இரண்டு வித்யைகளிலும் வடிவத்தில் வேறுபாடே இல்லை , ஆகவே இவை இரண்டும் ஒரே வித்யை தான்.
—
3-3-7-ஸம்ப₃ந்தா₄தி₄கரணம்-ப்ரஹ்மத்தின் இடம் மாறினால் வித்யை மாறுமா?–அதிகரணத்தின் பின்புலம் – ஸங்கதி – முந்தைய அதிகரணத்தில், மநோ மயத்வம் முதலான குணங்களைக் கொண்ட
ஒரே ப்ரஹ்மமே இரண்டு இடங்களிலும் உபாஸிக்கப்படுவதால், இரண்டு இடங்களிலும் சொல்லப்படும் சாண்டில்ய வித்யைகள் ஒன்றே என்று நிரூபிக்கப்பட்டது. அதே போல், இங்கும் உபாஸிக்கப்படும் பொருள் ஒன்றாக இருப்பதால் வித்யையும் ஒன்றாக இருக்க வேண்டும் என்கிற பூர்வ பக்ஷத்தை ஆராய்வதற்காக இந்த அதிகரணம் வருகிறது.
விஷய வாக்யம் – ப்ருஹதாரண்யக உபநிஷத்தின் 5ஆவது அத்யாயத்தின் 5ஆவது ப்ராஹ்மணத்தில் உள்ளது.
தத்₃யத் தத் ஸத்யம் அஸௌ ஸ ஆதித்ய: । ஸ ஏஷ ஏதஸ்மிந் மண்ட₃லே புருஷோ யஶ் சாயம் த₃க்ஷிணோ அக்ஷந் –
ஸத்யம் என்ற ப்ரஹ்மத்தை ஸூரிய மண்டலத்திற்குள் இருப்பவராகவும் வலது கண்ணுக்குள் இருக்கும் புருஷனாகவும் உபாஸிக்க வேண்டும்-
ய ஏஷ ஏதஸ்மிந் மண்ட₃லே புருஷஸ் தஸ்ய பூர் இதி சிரோ பு₄வ இதி பா₃ஹூ: ஸ்வரிதி ப்ரதிஷ்டா₂ । தஸ்யோபநிஷத் அஹரிதி।ஹந்தி பாப்மாநம் ஜஹாதி ச ய ஏவம் வேத₃॥
ஸூரிய மண்டலத்திற்குள் இருக்கும் அந்தப் புருஷனுக்கு “பூ:” என்பது தலை ; “பு₄வ:” என்பது இரு கைகள்; “ஸ்வ:” என்பது கால்கள். அவருடைய ரஹஸ்யப் பெயர் “அஹர் ” என்பதாகும். இவ்வாறு அவரை அறிபவன் பாபங்களை அழித்து, அவற்றிலிருந்து விடுபடுகிறான்-
யோ அயம் த₃க்ஷிணே அக்ஷந் புருஷஸ் தஸ்ய பூர் இதி சிர: பு₄வ இதி பா³ஹூ ஸ்வரிதி ப்ரதிஷ்டா² த்₃வே ப்ரதிஷ்டே² த்₃வே ஏதே அக்ஷரே । தஸ்யோபநிஷத் அஹமிதி।ஹந்தி பாப்மாநம் ஜஹாதி ச ய ஏவம் வேத₃॥
வலது கண்ணில் இருக்கும் அந்தப் புருஷனுக்கும் “பூ:” என்பது தலை ; “பு₄வ:” என்பது இரு கைகள்; “ஸ்வ:” என்பது கால்கள். அவருடைய ரஹஸ்யப் பெயர் “அஹம்” என்பதாகும். இவ்வாறு அவரை அறிபவன் பாபங்களை அழித்து, அவற்றிலிருந்து விடுபடுகிறான்.
பூர்வ பக்ஷியின் வாதம்
ஸந்தேகம் – இந்த இரண்டு ரஹஸ்யப் பெயர்களும் அந்தந்த இடத்திற்கே உரியவையா? அல்லது பொதுவானவையா?-அதாவது, ஸூரிய மண்டலத்தில் உள்ள புருஷனுக்கு மட்டுமே “அஹர் ” என்ற பெயரும், வலது கண்ணில் உள்ள புருஷனுக்கு மட்டுமே “அஹம்” என்ற பெயரும் அந்தந்த உபாஸனை களிலேயே பயன்படுத்தப்பட வேண்டுமா?-அல்லது, இரண்டு இடங்களிலும் இரண்டு பெயர்களையும் எந்தக் கட்டுப்பாடுமின்றி பயன்படுத்தலாமா?
இதை முடிவு செய்ய வேண்டும் என்றால் முதலில் ஸூர்யனுக்குள் பரமாத்மாவை த்யானிப்பதும் கண்ணுக்குள் பரமாத்மாவை த்யானிப்பதும் ஒரே வித்யையா? அல்லது வெவ்வேறு வித்யைகளா ? என்று முடிவு செய்ய வேண்டும்.-ஒரே வித்யை என்றால், எந்தப் பெயரையும் எந்த இடத்தில் பரமாத்மாவை உபாஸிக்கும் போதும் பயன்படுத்தலாம். வித்யைகள் வெவ் வேறானவை என்றால் அந்தந்த இடத்தில் மட்டும் தான் அந்தந்த பெயரைத் த்யானிக்கலாம்.
பூர்வபக்ஷம் – 1-ஸம்பந்தா₃த் ஏவம் அந்யத்ராபி
ஏவம் — முந்தைய அதிகரணத்தில் கூறப்பட்ட ந்யாயத்தின் படி
அந்யத்ராபி — பரமாத்மா ஸூர்யனுக்குள் இருப்பதாக த்யானிப்பதைக் காட்டிலும் வேறான கண்ணுக்குள் இருப்பதாகச் செய்யும் த்யானத்திலும்
ஸம்பந்தா₃த் — அதே பரமாத்மாவுக்கு உள்ள தொடர்பின் காரணமாக (இந்த வித்யைகள் ஒன்று தான்)
இரண்டு இடங்களிலும், அதாவது ஸூரிய மண்டலத்திலும் வலது கண்ணிலும், உபாஸிக்கப்படுவது ஸத்யம் என்று கூறப்படுவதாயும் வ்யாஹ்ருதிகளை சரீரமாகக் கொண்டதாயும் உள்ள ஒரே ப்ரஹ்மம் தான். எனவே , உபாஸிக்கப்படும் பொருள் ஒன்றாக இருப்பதால், உபாஸனையின் வடிவத்திலும் வேறுபாடு இல்லை . அது போல, கட்டளை , பெயர், பலன்முதலான வற்றிலும் வேறுபாடு இல்லை . எனவே இந்த இரண்டு த்யானங்களும் ஒரே வித்யை தான்.
மேலும், பெயர் என்பது ஒரு குறிப்பிட்ட வடிவத்தைக் கொண்ட பொருளைக் குறிக்கக் கூடியதே . அது அப் பொருள் இருக்கும் இடம் மாறுவதால் மாறுவதில்லையே . ஆகையால், “அஹர்” மற்றும் “அஹம்” என்ற இரண்டு ரஹஸ்யப் பெயர்களும் எந்தக் கட்டுப்பாடுமின்றி இரண்டு இடங்களிலும் பயன்படுத்தப்படலாம் என்று பூர்வ பக்ஷி கருதுகிறார்.
வ்யாஸரின் பதில்–ஸித்தாந்தம் –2- ந् வா விசேஷாத்
ந வா — அவ்வாறு அல்ல; (வித்யைகள் ஒன்றல்ல அதனால் பெயர்களை உபஸம்ஹாரம் செய்யக்கூடாது)
விசேஷாத் — உபாஸிக்கப்படும் பொருளின் வடிவத்தில் உள்ள விசேஷத்தால் (சிறப்பால் /வேறுபாட்டால்)
இங்கு உபாஸிக்கப்படும் ப்ரஹ்மம் ஒருவரே என்றாலும், அவர் ஸூர்ய மண்டலம் மற்றும் கண் என்ற இரண்டு வெவ்வேறு ஸ்தானங்களில் உபாஸிக்கப்படுகிறார். இந்த ஸ்தானம் என்பதும் உபாஸனையின் வடிவத்திற்குள் அடங்கியதே . எனவே , இருப்பிடத்தின் அடிப்படையுள் பெயர் மாறா விட்டாலும், உபாஸனையும் வடிவம் மாறியே தீரும். ஆகவே , இந்த இரண்டு வித்யைகளும் வேறுபட்டவையே . எனவே அஹர் : அஹம் என்ற பெயர்கள் அந்தந்த இடங்களிலேயே கட்டுப்பட்டு நிற்கின்றன–
3- த₃ர்ஶயதி ச — “மேலும், ஸ்ருதியே இதைக் காட்டுகிறது.”
ஸ்ருதியே , கண்ணை ஆதாரமாகக் கொண்ட உபாஸனையில் கூறப்படும் குணங்களையும், ஸூரியனை ஆதாரமாகக் கொண்ட உபாஸனையில் கூறப்படும் குணங்களையும் ஒன்றிலிருந்து மற்றொன்றில் உபஸம்ஹாரம் செய்யக் கூடாது என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது.
வேதம் (தஸ்யை தஸ்ய ததே₃வ ரூபம் யத₃முஷ்ய ரூபம் யந் நாம தந் நாம)
அதாவது “ஸூர்யனுக்குள் இருக்கும் பரமாத்மாவுக்குள்ள திருமேனி பெயர் ஆகியவற்றை கண்ணுக்குள் இருக்கும் பரமாத்மாவுக்கும் வைத்துக் கொள்ள வேண்டும்” என்று அதிதேசம் செய்யப்படுகிறது.-இந்த இரண்டு வித்யைகளும் ஒன்றாக இருந்தால், ஓரிடத்தில் சொல்லப்பட்ட பெயரும் திருமேனியும் தானாகவே மற்றோரிடத்தில் வந்து சேர்ந்திருக்கும், இப்படி வெளிப்படையாக வேதம் அதிதேசம் செய்யத் தேவையே இல்லை .-ஆகவே , இப்படி அதிதேசம் வேதத்தில் உள்ள படியால் இவை இரண்டும் வெவ்வேறு வித்யைகள் தான். எனவே , அந்தந்தப் பெயரை அந்தந்த இடத்தில் இருக்கும் பரமாத்மாவை த்யானிக்கும் போது மட்டும் தான் பயன்படுத்தலாமே தவிற மாற்றிப் பயன்படுத்த முடியாது என்று முடிவாகிறது
—
——————————————————————
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ வே வேளுக்குடி ரெங்கநாதன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-