வ்ருச்சிகே ரோஹிணீ ஜாதம் ஸ்ரீபாணிம் நிசுளாபுரே
ஸ்ரீவத்ஸாம்சம் காயகேந்தரம் முனி வாஹனன் ஆஸ்ரயே-திருப்பாணாழவார் திருநக்ஷத்திரத் தனியன்
பெரியாழ்வார் அவதார ஈடுபாடு-(பெரியாழ்வார் திருமொழி)
அ. பாதக்கமலம் -(1.3.1)-திருப்பாணாழ்வார் அருளியதிருப்பாணாழ்வார் அர்ச்சாவதார
ஈடுபாடு (அமலனாதிபிரான்) திருக்கமலபாதம் (1)
ஆ. பீதகச்சிற்றாடையொடும்(1.8.3.)–அரைச்சிவந்தாடையின்மேல் – (2)
இ.அழகியஉந்தி-(1.3.8)-அயனைப்படைத்ததோர்எழில் உந்தி -(3)
ஈ. பழம்தாம்பால் ஆர்த்தஉதரம் (13.9)-திருவயிற்றுதர பந்தனம் (4)
உ. குருமாமணிப் பூண்குலாவித் திகழும் திருமார்பு (1.3.10)-திருவார மார்பு-(5)
ஊ. அண்டமும் நாடும் அடங்க விழுங்கிய கண்டம்-(1.3.13)-முற்றுமுண்ட கண்டம் – (6)
எ. நெய்த்தலை நேமியும் சங்கும் நிலாவிய கைத்தலம் – (1.3.12)-கையினார் சுரிசங்கனலாழியர் – (7)
ஏ. செந்தொண்டைவாய்-(1314)-செய்ய வாய்(7)
ஐ.கண்களிருந்தவா – (1.3.16)-அப்பெரியவாய கண்கள் – (8)
ஒ. உருவுஉரியவொளிமணிவண்ணன் (1.3.17)-எழில் நீலமேனி -(9)-குழல்களிருந்தவா – (13.20)-துளப விரையார் கமழ் நீண்முடி- (7)
நாச்சியார் பெரிய பெருமாளுடன் “நமக்கு அந்தரங்கரான இப் பாண் பெருமாள் புறம்பே நிற்கலாமோ” என்று கூறுகிறார். இதில் ஆழ்வாரை ”பாண் பெருமாள்’ என்று பெயரிட்டு அழைப்பது காண முடிகிறது-எம் பெருமான் ஆணைப்படி லோகசாரங்க முனிவர் திருப்பாணாழ்வாரைத் தம்தோள்களின் மேல் ஏற்றிக் கொண்டு எம்பெருமான் சன்னதிக்கு வந்ததனால் இவருக்கு’முனி வாகனர்.’ என்ற பெயர் வழங்கலாயிற்று.”மேலும்,நம்மாழ்வார் தாம் அருளிய திருவாய்மொழியில் ”இசைகாரர்’ என்ற பெயரால் திருப்பாணாழ்வாரை நினைப்பதாகக் கூறுவர்.” பட்டர் தாம் அருளிய வடமொழி ஸ்லோகத்தில் ஆழ்வாரை “யோகி வாஹாந் என்றும் அழைக்கின்றார். இவ்வாறாக திருப்பாணாழ்வாருக்கு பாண் பெருமாள், முனி வாகனர், இசை காரர் யோகி வாஹான் என்று பலபடியான திருநாமங்கள் இருப்பதைக் காணமுடிகிறது.
அமலனாதிபிரான் முதல் மூன்று பாடல்களில் எல்லா வேதத்தின் சுருக்கமாய் மூன்று எழுத்துக்களை உள்ளடக்கியதான ‘ஓம்” என்கிற பிரணவத்தின் அகார,உகார, மகாரங்களாலே முதலீட்டு மூன்று பாட்டுக் களையுடைய அடியிலே அமைந்துள்ளது இப்பிரபந்தம் என்றும், ”ஓம்” என்ற பிரணவத்தைத் தெரிவிப்பதான வஸ்து எம்பெருமான் என்றும், பெரிய பெருமாளைப் பிரணவ வடிவமான விமானத்தின் நடுவில் திருவடி தொடங்கி திருமுடி வரையில் அனுபவித்த பிரபந்தம் என்கிற விருப்பத்தோடு ஆசாரிய உச்சாரண முறையில் கற்பார்கள் என்றும், அமலனாதிபிரானின் பெருமையைச் சீயர் கூறுவர்.’சீரிய நான்மறைச் செம்பொருள் செந்தமிழாலளித்த பாரியலும் புகழ்ப்பாண் பெருமாள்–திருவரங்கத்து அமுதனார்-மாமுனிகள் இதற்கு உரைய-எம்பெருமானின் இயல்பு, வடிவம், குணம் செல்வங்கள் (லீலா விபூதி, நித்ய விபூதி ) இவற்றை உள்ளபடியே தெரிவிப்பதால் வந்த சீர்மையை உடையது என்றும், ருக்,. யஜூர்,சாம, அதர்வண என்று நான்கு வகைப்பட்ட வேதத்தினுடைய இனிமையான பொருளை சொல்வது என்றும், இதனை அருளியவர் நடை விளங்கு தமிழ் மாலையாலே உதவி செய்தவராய் பூமியிலே நிலையாக நின்றுள்ள கீர்த்தியையுடைய திருப்பாணாழ்வார்
“அண்டர்கோன் அணியரங்கள் என்னமுதினைக் கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாவே என்று அருளியபடியே ஆளவந்தார் வேறொரு விஷயம் அறியாதவராய் இருந்தார்; அவ்வாறே ஆளவந்தார் திரு மேனியிலே வாட்டம் கண்டு எழுந்தருளியிருக்கும் போது அவருடைய சீடர்கள் தங்களுக்குத் தஞ்சமாக இருப்பதின் பொருளைச் சொல்ல வேண்டும்படி வேண்டினர், அதற்கு ஆளவந்தார் “பெரிய பெருமாளின் திருவடிகளின் கீழே வீணையும் கையுமாய் சேவித்து இருக்கும் திருப்பாணாழ்வார் விக்ரஹத்தை பாதாதிகே சாந்தமாக ( பாதம் முதல் முடிவரையில்) சேவித்துக் கொண்டு போருங்கள்” என்று சொன்னார். மேலும், பெரிய பெருமாள் உயிர் நிலை அறிந்தவர் திருப்பாணாழ்வார்; திருப்பாணாழ்வார் உயிர் நிலை அறிந்தவர் திருவரங்கப் பெருமாள் அரையர் என்றும் அருளினார்.திருமந்திரத்தின் பொருளாக போக மண்டபமாகத் திருவரங்கம் திகழ்கிறது-இதனை வெளியிட்டவர் திருப்பாணாழ்வார்-கோயில் என்று சொல்லப்படும் திருவரங்கத்துக்கு முதன்மை வந்ததுக்குக் காரணம் அவ்வெம்பெருமான் திருப்பாணாழ்வாரோடு கலந்து பரிமாறுகையாலே என்பர்-பரமபதம், திருவேங்கடம், திருவரங்கம்ஆகிய இம்மூன்று திவ்விய தேசங்களையும் ஆழ்வார் இருந்த இடத்திலிருந்தே முதல் பாடலிலேயே மங்களாசாசனம் செய்தார் என்பது அறிய முடிகிறது.
‘சதுர மா‘ நாலாம் பாட்டின் முகலெழுத்தான, :ச ‘ என்பது முதலாவதான பிரமாண-பிரணவம் – சாரத்தையும், இரண்டாவதான பிரமேய சாரத்தையும்-பாதுகை – சேர்கிறது
‘‘உயர்வற உயர் நலம் உடையவன்.”–”அமலன்” என்ற சொல்லாலே குறிப்பிடுகிறார்.அதாவது, குற்றங்களுக்கு எதிர்தட்டானவன் என்றும், தூய்மை யானவன் என்றும், தான் ஒருவன் தூயனாவது மட்டுமின்றித் தன்னோடு உறவுடையாரையும் தூய்மை யாக்க வல்ல திருவடியை யுடையவன்
யவன்” என்று திருவாய்மொழியில் குறிப்பிட்டதை, ஆழ்வார் ‘‘ஆதி” என்று குறிப்பிடுகிறார்; ‘யவன்” என்ற சொல் பிரசித்தியைக்காட்டுகிறது . அத்தகைய பிரசித்தியைத்தான் ”ஆதி” என்று குறிப்பிடுகின்றார் ஆழ்வார். இச் சொல்லுக்கு ‘உலகுக்கு காரணமாம் தன்மை” ( ஜகத் காரணத்வம்) என்றுஉரையிடுவர் பெரியவாச்சான் பிள்ளை-
மயர்வற மதி நலம் அருளினன்“-இது தன்னையே திருப்பாணாழ்வார் ” பிரான்” என்ற சொல்லால் குறிப்பிடுகிறார்.”பிரான்” என்பதினால் ஆழ்வார் தாழ்ச்சியைப் பாராதே எம்பெருமான் ஆழ்வாரைத் தனக்கு இலக்காக்கிக் கொண்ட உதவியாளனைச் சொன்னபடி.
”நீதி வானவன்“-வானவனுடைய நீதியாவது ஆண்டவன் – அடியவன் என்ற உறவாம் தன்மை (சேஷ சேஷித்துவங்கள்) முறை மாறாது இருத்தல்-அதாவது “சேஷித்வம்” என்பது தலைவனாம் தன்மை.-ஈச்வரன் நான்” என்று எதிரிட்டு இருக்கும் இடம் இந்த உலகம்:-நித்ய விபூதியான வானுலகில் கலக்குவாறுமில்லை. கலங்குவாறுமில்லை; இந்த பூமியில் கலக்குவாறுமுண்டு கலங்குவாறுமுண்டு என்றவாறு.
கொண்டல் வண்ணன்” என்ற சொல்லடிப் படையில் எம்பெருமான் மேகம் போல் வள்ளல்
தன்மை யுடையவன் என்பதை இவர் பக்கல் ஔதார்யம் இல்லை யென்று போகவோ?-‘வெண்ணெய் உண்ட வாயன்” என்ற சொல்லடிப் படையில் அடியார்களுடைய உடைமையான வெண்ணெயை விழுங்கியதனால் அந்தக் குணுங்கு நாற்றம் வாயிலே தோன்றும்படி இருப்பதினால் “வடிவில் பசை யில்லை யென்று போகவோ?“-கோவலனாய்” என்ற சொல்லடிப்படையில் இடையரோடு இடைச்சியரோடு வாசியற ஒரு நீராகக் கலந்ததனால் “செனசில்யம் இல்லை யென்று போகவோ?” என்றும்.”என்னுள்ளம் கவர்ந்தானை” என்ற சொல்லடிப்படையில் கோவலனாய் வெண்ணெய் உண்டாப் போலே கொண்டல் வண்ணனாய் ஆழ்வார் உள்ளத்தைக் கவர்ந்ததனால்”நெஞ்சுக்கு பிடித்திருந்த தில்லை யென்று போகவோ?”-“அண்டர் கோன்” என்ற சொல் அடிப்படையில் வேறு அண்டத்திலுள்ள ஆத்ம சமூகத்திற்குத் தலைவனாய் இருப்பதனால் “மேன்மை யில்லை யென்று போகவோ?”-” அணியரங்கன்” என்ற சொல்லடிப்படையில் கண்ணாலே காணலாம்படி சம்சாரத்துக்கு
ஆபரணமான திருவரங்கத்தில் எம்பெருமான் வந்து பள்ளி கொண்டதனால் சௌலப்பியம்
(எளிவந்த தன்மை) இல்லை யென்று போகவோ?–என் அமுதினை” என்ற சொல்லடிப்படையில்
அளப்பரிய ஆரமுதாய் இருப்பதனால் இனிமை (போக்யதை) இல்லையென்று போகவோ?”அமுதினைக் கண்ட கண்கள்” என்ற சொல்லடிப்படையில் திருவரங்கத்து இறைவனை முழுமையாக அனுபவித்த கண்கள் ஆதலால் “அனுபவத்தில் குறை யுண்டென்று போகவோ?”–நாயனார் அருளுவது சுவை மிக்கதாகும்.
‘செய்ய வாய் ஐயோ என்னைச் சிந்தை கவர்ந்ததுவே-“மற்ற அவயவங்களின் அழகில் முன்பே என் நெஞ்சு பறிகொடுத்த என்னை மற்ற அவயவங்களைக்காட்டிலும் தனது திருப்பவள செவ்வாயைக் காட்டி “கல்லை நீராக்கி, நீரையும்தானே கொண்டது என்றும் உகக்கின்றார். ஆழ்வார். இதையே ‘கல்லை நீராக்கி நீரைத் தானே கொண்டதனால் வந்த உகப்பு என்பர்.
வேதாந்த தேசிகர் தாம் அருளிய முனிவாகன போகத்தில் முதல் மூன்று பாடல்கள்
அகார, உகார, மகாரமாகிய ” ஓம் ” என்ற பிரணவத்தின் பொருள் என்பதையும், நான்காவது பாடல் ‘ நம:” என்பதின் பொருள் என்றும், ஐந்து ஆறாவது பாடல்கள் ” நாராயண ” என்ற சொல்லின் பொருள் என்றும், ஏழு எட்டு ஒன்பது பத்து ஆகிய நான்குபாடல்கள் “ஆய” என்பதின் பொருள் என்றும், இவற்றை அனைத்தையும் கூட்டி “ஓம் நமோ நாராயணாய” என்ற திருமந்திரத்தின் பொருளாக அமலனாதிபிரான் அமைந்துள்ளது என்று விரிவாக உரை வழங்கியுள்ளார்.
பெரியவாய கண்கள் என்னைப் பேதைமை செய்தனவே ” என்னும் தொடருக்கு உரை
வழங்கிய ஆசாரியர்கள், முன்பாட்டான “கையினார் சுரிசங்கனலாழியர்” என்ற பாடலில் ”என்னைச் சிந்தை கவர்ந்ததுவே ” என்று அறிவு வளர்ச்சிக்கு இடமான வழியைக் கவர்ந்தபடியைச் சொல்லிற்று என்பர். அதாவது அறிவை அபகரித்தபடியைச் சொல்லுகிறது. “அறிவைக் கவர்தலாவது அழகிலே அலமருகை“
ஆல மா மரத்தினிலை மேல்–ஆல மாமரத்திலே நெரித்தால் பால்பாயும்படி இருக்கின்ற இளந்தளிர்” என்று சொல்லி”மாமரம்” என்பதற்கு எதிர் மறையாய்ச் சிறிய மரம் என்று பொருள் உரைப்பர். “‘இலைமேல் என்பதனால் இந்த இலைக்குள்ளே அடங்கும்படியாய்த்து வடிவின் சிறுமை யிருப்பது”யசோதை பாலகன் முற்றினவன்” (மிகப்பெரியவன்) என்னும்படி “ஒப்பற்ற இளம் பாலகன் – முற்றினவன்” மிகப்பெரியவன். இங்கே எதிர்மறையாக யசோதையின் பால் வாய்ப் பிள்ளையான கிருஷ்ணனும் முரணித்திருக்கும்படி இவனுடைய இளமை (பால்யம்) செம்பால்பாயா நிற்கும்’ என்று எதிர்மறைப் பொருள் கூறிஉணர்த்துவார்.
உலகறிய மலிபுகழ்க் கார்த்திகை மாதத்தில் உரோகிணி நாளுறந்தை வளம்பதியில் தோன்றித்
தலமள ந்த தென்னரங்கர்பால் உலோக சாரங்கமா முனிதோள் தனிலே வந்து
பலமறையின் பொருளாற் பாண் பெருமாளே நீ பாதாதி கேசமதாய்ப் பாடித் தந்த
சொல வமலனாதிபிரான் பத்துப்பாட்டும் சோராமலெனக் கருள் செய் துலங்க நீயே| |(பிரபந்த ஸாரம் )
வணடின முரலுந் தாமவன மணி மார்பன்றன்னைக்
கண் டுள நிறையாநந்த நீரிரு கண்ணுங் காட்ட
அண்டர் நாயகனை வாழ்த்தி யவனருளமுதமாந்திப்
பண்டுபோம் பொருள் கிடைத்தபடியுள மகிழ்ந்தானன்றே,
மாடமாளிகையரங்க மறைவலாரிவனை வாழ்த்திக்
கோடுடைப் பரனுக் குற்ற குணங்களிலீடுபட்டுப்
பாடலிலுனக்கு நாமம் பாண் பெருமாள் என்றரோத
வீடிலான் வேதாந்தார்த்த மிசைத்தனன் றமிழிலன்றே(ஸ்ரீ சடகோப திவ்ய சரிதம் )
உம்பர்தொழும் மெய்ஞ்ஞானத்து உறையூரான் வாழியே
உரோகிணி நாள் கார்த்திகையில் உதித்தவள்ளல் வாழியே
வம்பவிழித்தார் முனிதோளில் வந்த பிரான்வாழியே
மலர்க் கண்ணை மற்றொன்றில் வையாதான் வாழியே
அம்புவியில் மதிலரங்கர் அகம் புகுந்தான் வாழியே
அமலனாதிபிரான் பத்தும் அருளினான்வாழியே
செம்பொன்னடி முடியளவும் சேவிப்போன் வாழியே
திருப்பாணன் பொற்பதங்கள் செகதலத்தில் வாழியே
எம்பெருமானுறையூராரேத்த வந்தோன் வாழியே
ஏற்ற கார்த்திகையில் உரோகிணி யுதித்தான் வாழியே
அம்புவியிலங்கருக் கண்டுகந்தான் வாழியே
அக மகிழ்ந்ததே அவர் புகழநின்று யர்ந்தோன் வாழியே
அம்புய நேர்தாண்முனிதோள் வைத்திட்டான் வாழியே
அமலனாதிபிரான் பத்து அருள் செய்தான் வாழியே
பைம்பொழில் சூழ் திருவரங்கந் திகழ்ந்தபிரான் வாழியே
பாண்பெருமாள் பங்கயத்தாள் பார்தனில் வாழியே
—————————————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேதாந்த தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருப்பாண் ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .
Leave a Reply