1) பூர்வ த்,விகம் – ஸூரி வைபவம் 1 முதல் 186 வது ஸூத்ரம் வரை (186)
(2) உத்தர த்,விகம் – ஸூரி ஸுக்த்தி வைபவம்– 187 முதல் 234 முடிய (48)–
1) ப்ரத, மோத், யாயம் -ஸாஸ்த்ர தாத்பர்ய அதிகாரி வைபவம் 1-38 (38)
(2) த்,விதீயோத், யாய: – க்,ரந்த, கர்த்ரு வைப,வம் 39 – 186 (148)
(3) த்ருத்யோத், யாயம் – க்,ரந்தாந்தர தார தம்ய வைப,வம் 187-207 (21)
(4) சதுர்த்தே ரத், யாயம் -கிரந்த, ப்ரதிபாத்,ய க்ரம வைப,வம் 208-234 (27)
16 –முக்திபாதம்—229 – 234 – மொத்தம் –6 – ஸூரணைகள்–இதில் மூன்று அதிகரணங்கள்
25–ஆர்த்த ப்ரபந்ந ஸூரி ஸரீர வியோகா பாவ காரணாதி கரணம் –229—ஒரே ஸூரணை
26– பர ப,க்த்யாதி, நிரூபண ஸ்தாநாதிகரணம் 230 – –233—மொத்தம் –4–ஸூரணைகள்
27 –திவ்ய ப்ரபந்த, தாத்பர்ய ப,க,வத்-ப்ரஸாதாதி கரணம் –234 –ஒரே ஸூரணை-
நூறே சொன்ன பத்து நூறு ஓர் ஆயிரம் என்றதும் சாபிப்ராயம் -என்றதில் – நூறே சொன்ன பத்து நூறு என்றதில் –கருத்தை பத்து நிகமநத்திலே விஸ்த்ரேண பிரதிபாதித்து – ப்ராசங்கிகமாக அருளிச் செய்ய வேண்டுமவையும் அருளிச் செய்தாராய் நின்றார் கீழ் –-இனி ஓர் ஆயிரம் ஒன்றதின் கருத்தை விசதமாக்கா நின்று கொண்டு –பிரபந்தத்தை நிகமித்து அருளுகிறார் —
அவித்யா நிவர்த்தக ஜஞாந பூர்த்தி ப்ரத பகவத் ப்ரஸாதாத் மோக்ஷ லாபம் என்கை மயர்வற வீடுபெற்றவென்ற ப்ரபந்த ஏக அர்த்யம்.–சூரணை -234-
அதாவது-சம்சார காரணமான அஞ்ஞானத்துக்கு நிவர்த்தகமான ஞான பூர்த்தியை உபகரித்த
ஞானாதி குண பூர்ணனான பகவானுடைய நிர்ஹேதுகமான பிரசாதத்தாலே –-சம்சார நிவ்ருத்தி பூர்வக-பகவத் பிராப்தி ரூப மோஷத்தினுடைய – லாபம் என்று பிரதிபாதிக்கை –
மயர்வற மதி நலம் அருளினன் -என்று தொடங்கி –அவா அற்று வீடு பெற்ற –என்று தலைக் கட்டின
இப் பிரபந்தத்துக்கு ஒன்றான தாத்பர்யம் என்கை –இத்தால் ஞான பிரதான -பகவத் பிரசாதமே மோஷ பிரதமும் -என்னுமிது இப் பிரபந்தத்துக்கு தாத்பர்யமாய் இருப்பதோர் அர்த்தம் என்றது ஆய்த்து
” மயர்வற மதிநலமருளினன்” திருவாய்மொழி 1-1-1 என்றும் “அவா வற்று வீடு பெற்ற திருவாய்மொழி 10-10-11-என்றும் சொல்லுகையாலே ஸம்ஸார காரணமான அஜ்ஞாநத்தை நிவர்த்திப்பித்து ஜ்ஞாந பூர்த்தியை நிர்ஹேதுகமாக உபகரித்த ஜ்ஞாநாதி குண பூர்ணனான பகவானுடைய ப்ரஸாதம் பரமபக்தி தஸையான பாகத்தையும் விளைத்து ஸ்வரூபாநுரூபமான மோக்ஷத்தையும் தரும் என்கை- ஒன்றான ப்ரபந்த த்துக்குத் தாத்பர்யமென்கிறார். (மயர்வற வீடுபெற்ற என்ற பிரபந்த ஏக அர்த்யம்) அநிஷ்டமான அஜ்ஞாந நிவ்ருத்தி பூர்வகமாக இஷ்டமான மோக்ஷத்தை ப்ராபிக்கை என்று ஓரர்த்தம்–
உயர்வற உயர் நலம் உடையவன் எவன் அவன்
மயர்வற மதி நலம் அருளினன் எவன் அவன்
அயர்வறும் அமரர்கள் அதிபதி எவன் அவன்
துயரறு சுடரடி தொழுது எழு என் மனனே –1-1-1-மயர்வற-மயர்வு -அஜ்ஞானம் -இத்தால் ஜ்ஞான உதய -அந்யதா ஜ்ஞான -விபரீத ஜ்ஞான ரூபமான அஜ்ஞானத்தைச் சொல்லுகிறது-அற -சவாசனமாகப் போகும்படி-மதி நலம்-மதி என்று ஜ்ஞானம்-நலம் -என்று பக்தி -பக்தி ரூபாபன்ன ஜ்ஞானம் என்றபடி
அருளினன்-இத் தலையில் நன்மை தீமை பாராதே நிர்ஹேதுக கிருபையால் தந்து அருளினான்
முலைக் கடுப்பாலே தரையிலே பீச்சுமா போலே –-எனக்குத் தந்து அருளினான் -என்னாது ஒழிந்தது -பகவத் விஷயீ காரத்துக்கு முன்பு தம்மை அசத் கல்பராக நினைத்து இருக்கையாலே-எவன்–-இப்படி உபகாரகனான ஸ்ருதி பிரசித்தி ஆனவன்
அவா அறச் சூழ் அரியை அயனை அரனை அலற்றி
அவா அற்று வீடு பெற்ற குருகூர்ச் சடகோபன் சொல்
அவா இல் அந்தாதிகளால் இவை ஆயிரமும் முடிந்த
அவா இல் அந்தாதி இப்பத்து அறிந்தார் பிறந்தார் உயர்ந்தே–10-10-11-அவனைப் பெற்று நிரஸ்தித ஸமஸ்த பிரதிபன்னராகையாலே நிர் துக்கரான ஆழ்வார்-அருளிச் செய்த-இவற்றை அறிந்தவர்கள் சம்சாரத்திலே பிறந்து வைத்தே நித்ய ஸூ ரிகளோடே ஒப்பர்கள் –பகவத் ந்யஸ்த பரராய் இருக்கும் அதிகாரிகளுக்கு போது போக்கு இப்பிரபந்தம் –தொண்டர்க்கு அமுது உண்ணச் சொல் மாலைகள் சொன்னேன் -என்றும் –கேட்டாரார் வானவர்கள் -என்றும் தானே அருளிச் செய்தார் இறே
ஆக
இப்பிரபந்தத்தால் –
1-சர்வேஸ்வரன் தன் கிருபையாலே -அஞ்ஞான சேதனர்-தத்வஞ்ஞராய் -சார அசரா விவேகம் பண்ணுகைக்கு சாஸ்திர பிரதானம் பண்ணின படியையும்-
2-அந்த சாஸ்திர முகேன தத்வ ஞானம் பிறக்கும் அளவில் உண்டான அருமையை நினைத்து –
தாத்பர்யமான திரு மந்த்ரத்தை-தன் பரம கிருபையால் வெளி இட்ட படியையும் –
3-அந்த சாஸ்திர தாத்பர்யங்களின் விஷய பேதாதிகளையும்-
4-தத் உபய நிஷ்டரான அதிகாரிகளுடைய பிரகாரங்களும் –
5-அந்த வியாஜத்தாலே பிரஸ்துதமான திருவாய் மொழியினுடைய வைபவத்தையும் –
6-அதுக்கு வக்தாக்களான ஆழ்வார்களுடைய பிரபாவத்தையும் –
7-அந்த பிரபாவத்துக்கு மூலமான பகவத் நிர்ஹேதுக கடாஷத்தையும் –
8-அதடியாக இவர்க்கு உண்டான ஞான பக்திகளும் –
9-அந்த ஞான பக்தி தசைகளில் இவர் பேசும் பேச்சுகளையும் –
10-அந்த பக்தி தசையில் பகவத் பிரேம யுக்தர் எல்லோரோடும் இவர்க்கு உண்டான சாம்யத்தையும் –
11-அந்த பக்தி தசையில் பேசும் அந்ய உபதேசங்களுக்கு ஸ்வாப தேசங்களையும் –
12-அந்த பக்தி விஷயமான திவ்ய தேசங்களில் நிற்கிற ஈஸ்வரனுடைய குண விசேஷங்களையும் –
13-அந்த குண விசிஷ்ட வஸ்துவில் உண்டான -அனுபவ ஜனித ப்ரீதி ப்ரேரிதமாய் கொண்டு இப்பிரபந்தங்கள் அவதரித்த படியும் –
14-பிரதிபாத்யார்த்த சாம்யத்தாலே ஸ்ரீ கீதையோடு திருவாய்மொழிக்கு உண்டான சாம்யத்தையும் –
15-தத் வ்யாவிருத்தியையும்
16-இதில் இவர் உபதேசிக்கிற விஷய பேதத்தையும்
17-அவ்வோ விஷயங்கள் தோறும் உபதேசிக்கிற அர்த்த விசேஷங்களையும் –
18-அந்த வியாஜத்தாலே உபதேச விஷயமான சிஷ்ய லஷணதையும் –
19-அந்த லஷணம் இல்லாதவருக்கும் இவர் உபதேசிகைக்கு ஹேதுக்களையும் –
20-க்யாதி லாபாதி நிரபேஷராய் பகவத் கைங்கர்ய புத்த்ய உபதேசிக்கையாலே -உபதேசம் சபலமான படியையும் –
21-உபதேசிக்கிற இப் பிரபந்தங்கள் தாம் ரகஸ்ய த்ரய அர்த்தம் என்னுமத்தையும் –
22-அந்த ரகஸ்ய த்ரயத்திலும் பிரதிபாதிக்க படுகிற அர்த்த பஞ்சகமும் இப் பிரபந்தங்களிலே சங்கரக விபரண ரூபேண சொல்லப் படுகிற பிரகாரத்தையும் –
23-பிரபந்த ஆரம்பங்களில் அபேஷிதமான மங்களா சரணங்கள் இப்பிரபந்தத்தில் உண்டான படியையும் –
24-சாது பரித்ராணாதிகளிலே – ஜகத் ரஷண அர்த்தமான சர்வேஸ்வர அவதாரம் போலே இப் பிரபந்த அவதாரம் என்னுமத்தையும் –
25-இதில் பத்து பத்தாலும் பிரதிபாதிக்கப் பட்ட ஈஸ்வரனுடைய பரத்வாதி குணங்களையும் –
26-அக் குண விசிஷ்டனானவன் -இப் பத்து பத்தாலும் இவ் ஆழ்வாருக்கு தத்வ ஞானம் முதலாக ப்ராப்தி பர்யந்தமாக பிறப்பித்த தசா விசேஷங்களையும் –
27-பத்து தோறும் இவர் தாம் பிறருக்கு உபதேசித்த பிரகாரங்களையும் –
28-இவருக்கு பிரதமத்திலே ஆர்த்தி பிறந்திருக்கச் செய்தே -ஈஸ்வரன் இவரை வைக்கைக்கு பிரதான அப்ரதான ஹேதுக்களையும் –
29-இவருக்கு பிறப்பித்த பரபக்தி பரஞான பரம பக்தி களாகிற தசா விசேஷ ஸ்தலங்களையும்
30-அஞ்ஞான நிவர்த்தக ஞான பூர்த்தி ப்ரத பகவத் பிரசாதமே அநிஷ்டமான சம்சாரத்தை அறுத்து அபீஷ்டமான மோஷ லாபத்தை உண்டாக்கும் என்கை- இப்பிரபந்ததுக்கு ஒன்றான தாத்பர்யம் என்னும் அத்தையும்
31-ஆஸ்திகராய் ஆழ்வார் அபிமானத்தில் ஒதுங்கி – அவருடைய திவ்ய ஸூக்திகளில் பிரவணராய்-அநந்ய பரராய் இருப்பார் -எல்லோரும் அனுசந்தித்து வாழும்படி அதி ஸ்புடமாக அருளிச் செய்து தலைக் கட்டினார் —
ஆக, 1-ஸர்வேஸ்வரன் அஜ்ஞரான சேதநர்க்குத் தன் கிருபையாலே புருஷாரத்த ஜஞாநம் உண்டாகைக்கு ஸாஸ்த்ர பிரதானம் பண்ணினமையும்
2-அந்த ஸாஸ்த்ரம் கொண்டு புருஷார்த்த ஞானம் பிறக்கை அரிதென்று தாத்பர்யமான திருமந்த்ரத்தை வெளியிட்டமையும்
3-அந்த ஸாஸ்த்ர தாத்பர்யங்களுக்கு விஷயபேதம் தொடக்கமான ஷைம்யங்களையும்,
4-உபயத்திலும் நிஷ்டரான அதிகாரிகளுடைய பரகாரங்களையும்,
5-அந்த வ்யாஜத்தாலே ப்ரஸக்தமான திருவாய்மொழியினுடைய வைபவத்தையும்,
6-அதுக்கு வக்தாக்களான ஆழ்வார்களுடைய ப்ரபாவத்தையும்
7-அந்த ப்ரபாவத்துக் கடியான பகவந் நிர்ஹேதுக கடாக்ஷத்தையும்,
8-அந்த கடாக்ஷமடியாக இவர்க்குண்டான ஜ்ஞாந பக்திகளையும்,
9-அந்த ஜ்ஞாந பக்தி தஸைகளில் இவர பேசும் பேச்சுக்களையும்,
10-அந்த பக்தி தஸையில் பகவத் ப்ரேம யுக்தர் எல்லாரோடும் இவர்க்குண்டான ஸாம்யத்தையும்,
11-அந்த பக்தி தஸையில் பேசும் அந்யாபதேஸங்களுக்கு ஸ்வாபதேஸங்களையும்,
12-அந்த பக்திக்கு விஷயமான திவ்ய தேஸங்களில் நிற்கிற எம்பெருமான்களுடைய குணங்களையும்,
13-அந்த குண விஸிஷ்ட வஸ்துவிலுண்டான அநுபவ ஜநித ப்ரீதி ப்ரேரிதமாய்க் கொண்டு ப்ரபந்தங்கள் அவதரித்தமையையும்,
14-தத்வார்த்த,ப்ரதி பாதந பரமான திருவாய்மொழி ப்ரபந்தத்துக்கு ஸ்ரீகீதா ஸாம்ய முண்டான படியையும்,
15-அந்த கீதையில் காட்டில் இதுக்குண்டான வ்யாவ்ருத்தியையும்,
16-இதில் இவர் உபதேஸிக்கிற விஷய பேதத்தையும்,
17-அவ்வோ விஷயங்கள் தோறும் உபதேஸிக்கிற அர்த்த விஸேஷங்களையும்,
18-அந்த வ்யாஜத்தாலே உபதேஸ விஷயமான ஸிஷ்ய லக்ஷணத்தையும்,
19-இந்த லக்ஷணமில்லாதார்க்கு உபதேஸிக்கைக் கடியான இவருடைய க்ருபையையும்,
20-இப்படி இவர் க்ருபையாலே உபதேஸிக்கையாலே அவவுபதேஸம் பலித்தபடியையும்,
21-உபதேஸிக்கிற இப் ப்ரபந்தங்கள் தான் தத்வ ஹித புருஷார்த்த ப்ரதிபாதகமான ரஹஸ்ய த்ரயார்த்த மென்னு மிடத்தையும்,
22-அந்த ரஹஸ்ய த்ரயத்திலும் ப்ரதிபாதிக்கப்படுகிற அர்த்த பஞ்சகங்களும் இந்த ப்ரபந்தங்களிலே ஸங்க்ரஹ விஸ்தர ரூபேண சொல்லப்படுகிற ப்ரகாரத்தையும்,
23-ப்ரபந்த ஆரம்பங்களில் உண்டான லக்ஷணங்களில் ப்ரபந்தாதியிலுண்டாயிருக்கிற ப்ரகாரத்தையும்,
24-ஸாது பரித்ராணாதிகளாலே ஜகத் ரக்ஷணார்த்தமான பகவதவதாரம் போலே ஜகத் ரஷணார்த்தமாக இப்ப்ரபந்தம் அவதரித்த தென்னுமிடத்தையும், 25-திருவாய்மொழியில் பத்துப் பத்தாலும் ப்ரதிபாதிக்கப்பட்ட எம்பெருமானுடைய பரத்வாதி குணங்களையும்,
25-அக் குண விஸிஷ்டனான ஸர்வேஸ்வரன் அந்தப் பத்துப் பத்தாலுமிவ் வாழ்வார்க்கு தத்வ ஜ்ஞாநம் முதலாக ப்ராப்தி பர்யந்தமாகப் பிறப்பித்த தஸா விஸேஷங்களையும்,
26-இவர் தாம் பிறரைக் குறித்து உபதேஸித்த ப்ரகாரங்களையும்,
27-இவர் ப்ரதமத்திலே ஆர்த்தி பிறந்திருக்கச் செய்தே ஈஸ்வரனிவரை வைக்கைக்கு ப்ரதாந அப்ரதாந ஹேதுக்களையும்,
28-இவர்க்குப் பிறந்த பரபக்தி பரஜ்ஞாந பரமபக்திகளாகிற தஸா விஸேஷங்களையும்,
29-அஜ்ஞாந் நிவ்ருத்தி பூர்வகமாக ஜ்ஞாந ப்ரதனான பகவானுடைய ப்ரஸாதமே மோக்ஷ ஹேது என்னுடத்தையும்,
30-அநிஷ்ட நிவ்ருத்தி பூர்வக இஷ்ட மோக் ஷப்ராபணமே பரபந்த தாத்பர்யமென்னுமத்தையும்
அருளிச் செய்து தலைக் கட்டி யருளினார்
நான்காம் பிரகரணம் முற்றிற்று-
ஸ்ரீ ஆச்சார்ய ஹ்ருதய வியாக்யானம் முற்றிற்று –
தந்து அருள வேணும் தவத்தோர் தவப் பயனாய் வந்த முடும்பை மணவாளா
சிந்தையினால் நீ உரைத்த மாறன் நினைவின் பொருள் அனைத்து என் வாய் உரைத்து வாழும் வகை-
ஆழ்வார்கள் வாழி அருளிச் செயல் வாழி தாழ்வதுமில் குரவர் தாம் வாழி
ஏழ்பாரும் உய்ய அவர்கள் உரைத்தவைகள் தாம் வாழி செய்ய மறை தன்னுடனே சேர்ந்து
அடியார்கள் வாழ அரங்கன் நகர் வாழச் சடகோபன் தண் தமிழ் நூல் வாழக்
கடல் சூழ்ந்த மண்ணுலகம் வாழ மணவாள மா முனியே இன்னும் ஒரு நூற்று ஆண்டு இரும்
—
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ ஆய் ஜநந்யாசார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply