கார்யாரம்பேஷு ஸர்வேஷு து:ஸ்வப்நேஷு ச ஸத்தம |
அமங்கள்யேஷு த்ருஷ்டேஷு யஜ் ஜப்தவ்யம் ததுச்யதாம் ॥
யே நாரம்பாச்’ச ஸித்த்யந்தி து:ஸ்வப்நச்’சோப சாந்தயே |
அமங்களாநாம் த்ருஷ்டாநாம் பரிஹாரச்’ச ஜாயதே ||-1-2-
தால்ப்யர் கூறுகிறார்: ‘ ப்ரஹ்மத்தை உணர்ந்தவருள் பெரியோரே, கார்யங்களை ஆரம்பிக்கும் போதும், துஸ்வப்நமேோ அமங்களமோ நேரும் போதும் எதனை ஜபிக்க வேண்டும்? அறிவுறை எங்கட்கு வழங்கப்பட வேண்டும். துவங்கிய கார்யங்கள் இனிது திறைவேறுவது எதனால் 2? கெட்ட கனவு பலனற்றுப் போவதும் எதனால் ? யாம் காணும் அசுபங்களுக்குப் பரிஹாரம் உண்டாவதும் எதனால் ?
ஸ்ரீ புலஸ்த்ய:–
ஜநார்தநம் பூத பதிம் ஜகத் குரும் ஸ்மரந் மநுஷ்யஸ் ஸததம் மஹாமுநே | துஷ்டாந் யசே’ஷாண் யபஹந்தி ஸாதயதி அசேஷா கார்யாணி ச யாந்ய பீப்ஸதி-3-
புலஸ்தியர் மொழிவது :- மா முனிவரே, பிறவியை நீக்க வல்லவரும், உலகில் உள்ள பொருள் எல்லாவற்றிற்கும் சொந்தக்காரரும், உலகிலேயே மிக உயர்ந்தவருமான எம்பெருமானைத் தியானித்துக் கொண்டிருக்கும் மனிதன் தீயனவெல்லாம் போக்கிக் கொண்டு, தான் விரும்பும் எல்லாச் செயல்களையும் நற் பயனளிக்கும் படி ஸாதித்துக் கொள்ளுகிறான்
ச்’ருணுஷ்வ சாந்யத் கததோ மமாகிலம் வதாமி யத்தே த்விஜ வர்ய மங்களம் |
ஸர்வார்த்த ஸித்திம் ப்ரததாதி யத் ஸதா நிஹந்த்யசே’ஷாணி ச பாதகாநி ॥|-4-
அந்தணர் பெருமானே, எது உமக்குச் சுபமோ, எது வேண்டிய பலன் யாவும் கைகூடும்படி செய்ய வல்லதோ, எது தீவினை யாவற்றையும் ஒழிக்க வல்லதோ அத்தகைய ஸ்துதியை உமக்குக் கூறுகிறேன். அதை முழுவதும் கேட்பீராக
ப்ரதிஷ்டிதம் யத்ர ஜகத் சராசரம் ஜகத் த்ரயே யோ ஜகதச்’ ச ஹேது: |
ஜகத் ச பாத்யத்தி ச யஸ்ஸ ஸர்வதா மமாஸ்து மாங்கள்ய விவ்ருத்தயே ஹரி: ||-5-
மூவுலகிலும் யார் ஜங்கம ஸ்தாவர ரூபமான உலதற்குக் காரணமானவரோ, யாரிடத்தில் இது நிலைத்துக் கீழே விழாது தாங்கப்பட்டு நிற்கிறதோ, இவ் வுலகை யார் ரஷிக்கிறாரோ,.(ப்ரளய காலத்தில்) யார் இதனை உணவைப் போல் தம்முள் ஒடுங்கும் படி செய்கிறாரோ, ஸர்வ பாபங்களையும் போக்கும் அந்தத் திருமால் “எனக்கு மங்களங்கள் பொங்கிப் பெருக அருள்வாராக –
வ்யோமாம்பு வாய்வக்நி மஹீஸ்வ ரூபை: விஸ்தாரவாந் யோ அணுதரோ அணுபாவாத் |
அஸ்தூல ஸூக்ஷ்மஸ் ஸததம் பரேஸ்வரோ மமாஸ்து மாங்கள்ய விவ்ருத்தயே ஹரி: –6-
வான், வாயு, தீ, நீர், பூமி எனும் இவ்வுருவுகளால் தம்மைப் பெருக்கிக் கொண்டவரும், சிறிய பொருட்களிலும் சிறியவரும், சிறிது, பெரிதென்றளவுள்ள பொருட்களைக் காட்டிலும் முற்றிலும் வேறான் தன்மை யுள்ளவருமான ஹரி எக் காலத்திலும் எனக்கு மங்களங்கள் பெருக அருள்வாராக-
யஸ்மாத் பரஸ்மாத் புருஷா தநந்தாத் அநாதிமத்யா ததிகம் ந கிஞ்சித் |
ஸ ஹேது ஹேது: பரமேஸ்வரேஸ்வரோ மமாஸ்து மாங்கள்ய விவ்ருத்தயே ஹரி: ||–7-
காலத்தாலும், இடத்தாலும், குணங்களாலும் அளப்பரியதானவரும், பிறப்பும் இறுதியுமற்றவரும், தம்மிலும் உயர்ந்த ஒருவரைக் கிடையாதவரும், படைப்போரையும்கூட. படைப்பவராகவும், தேவர்க்கும் தேவனாகவும் உள்ள ஹரி எனக்கு மங்களங்கள் பெருக அருள்வாராக.
ஹிரண்ய கர்ப்பாச்யுத ருத்ர ரூபீ ் ஸ்ருஜத்யசே”ஷம் பரிபாதி ஹந்தி |
குணாக்ரணீர் யோ பகவாந் ஸ ஸர்வதா மமாஸ்து மாங்கள்ய விவ்ருத்தயே ஹரி; ||-8-
நான்முகனுக்கு அந்தராத்மாவாயிருந்து உலகத்தைப் படைத்தும், தானே நேரில் அச்சுதனாய்த் தோன்றி அதை ரஷித்தும், ருத்ரனுக்கு ஆத்மாவாய் நின்று இதனை அழித்தும் வருகிறவரும், குணசாலிகளுள் முதல்வரும், நன் ஞானம், படைக்கப்படும் பொருளாக ஆகும் ஆற்றல், அனைத்தையும் தாங்கும் வலிமை, இதில் ஆயாஸமின்மை, பிறரைத் தம் இஷ்டப்படி இயங்கும்படிச் செய்யா வல்ல மிடுக்கு, ஸூர்ய வெளிச்சத்தில் விளக்குப் போல் . பிற பொருளை யில்லை யாக்கவல்ல பேரொளி இவை யாவும் உடையவரும், தோஷம் சிறிதுமில்லாதவருமான ஹரி எனக்குச் சுபங்களே பெருக அருள் பாலிப்பாராக
பரஸ் ஸுராணாம் பரமோ அஸுராணாம் பரோ யதீநாம் பரமோ முநீநாம் |
பரஸ் ஸமஸ்தஸ்ய ச யஸ் ஸ ஸர்வதா மமாஸ்து மாங்கள்ய விவ்ருத்தயே ஹரி: ||-9-
தேவர்க்கும், : அஸுரர்க்கும், துறவிகட்கும், முனிவர்க்கும், எல்லாவற்றிற்குமே மிகமிக உயர்ந்தவரான ஹரி எனக்கு மங்களங்கள் பெருக அருள வேண்டும் –
த்யாதோ முநீநா மபகல்மஷைர் யோ ததாதி முக்திம் பரமேஸ்வரேஸ்வர : |
மநோபிராம: புருஷஸ் ஸ ஸர்வதா மமாஸ்து மாங்கள்ய விவ்ருத்தயே ஹரி: ॥-10-
எல்லாக் காலத்திலும் தன்னையே நினைத்திருப்பவர்களின், குற்று மற்ற உள்ளங்களால் சிந்தனை செய்யப்பட்டு, அவர்க்கு முக்தி யளிப் யவராயும், மனதைக் கவரும் அழகுடையவராயும் எல்லா பலனையும் தர வல்லவராயும் இருக்கும் ஹரி எனக்கு மங்களங்கள் வ்ருத்தி யாக அநுக்ரஹம் செய்வாராக–
ஸுரேந்த்ர-வைவஸ்வத-வித்தபாம் புப ஸ்வரூப ரூபீ பரிபாதி யோ ஜகத் |
ஸ ஸூத்த ஸூத்த: பரமேஸ்வரேஸ்வர: மமாஸ்து மாங்கள்ய விவ்ருத்தயே ஹரி: ॥–11-
தேவேந்த்ரன், இயமன், வருணன், குபேரன் என்பவரைத் தம் உடலாகக் கொண்டு யார் உலகைப் பரிபாலிக்கிறாரோ, தூய பொருட்கும் தூய்மை யளிக்கும் அந்த ஹரி எனக்கு மங்களங்கள் பெருக அருள்வாராக.
யந்நாம-ஸங்கீர்த்தநதோ விமுச்யதே ஹி அநேக-ஜந்மார்ஜித-பாப ஸஞ்சயாத் |
பாபேந்தநாக்நிஸ் ஸ ஸதைவ நிர்மலோ மமாஸ்து மாங்கள்ய விவ்ருத்தயே ஹரி: ॥ -12-
பல பல பிறவிகளில் ஈட்டிய பாப மூட்டைகள் எவருடைய திருநாம ஸங்கீர்த்தநத்தால் தொலைகிறதோ, விறகை அழிக்கும் தீ போலே பாபத்தை அழிக்க வல்லவரும் மாசற்றவருமான அந்த ஹரி எனக்கு மங்களங்கள் எப்பொழுதும் பொங்கிப் பெருக அருள் செய்ய வேண்டும் –
ஸ்ரீ வராஹாவதாரம்
யேநோத்த்ருதேயம் தரணீ ரஸாதலாத் அசேஷ ஸ்ருஷ்டி ஸ்திதி காரணாதிகம் |
பிபர்த்தி விஸ்வம் ஜகதஸ் ஸ மூலம் மமாஸ்து மாங்கள்ய விவ்ருத்தயே ஹரி: ||–13-
பாசி தூர்த்துக் கிடந்த பார்மகளைப் பாதாளத்திலிருந்து யார் தூக்கி எடுத்தாரோ, யார் மற்றெல்லாரையும் படைத்தளித்து அழிக்கவும் செய்கிறாரோ, ஜகந் மூலமான அந்த ஹரி எனக்கு மங்களங்கள் பெருக அருள்வாராக-
பாதேஷு வேதா ஜடரே சராசரம் ரோமஸ்-வசேஷா முநயோ முகே மகா: | யஸ்யேஸ்வரேஸஸ்ய ஸ ஸர்வதா ப்ரபு மமாஸ்து மாங்கள்ய விவ்ருத்தயே ஹரி: ||–14-
எந்த தேவ தேவனுடைய பாதங்களில் வேதங்களும், திருவயிற்றில் அண்ட சராசரம் முழுவதும், உரோமங்களில் முனிவர்கள் அனைவரும், முகத்தில் யாகங்களும் இருக்கின்றனவோ அந்த ஆற்றல் மிக்கானான ஹரி எனக்கு மங்களங்கள் பெருக அநுக்ரஹம் செய்ய வேண்டும்-
ஸமஸ்த யஜ்ஞாங்க மயம் வபு: ப்ரபோ:யஸ்யாங்க-மீசேஸ்வர-ஸம்ஸ்துதஸ்ய |
வராஹ ரூபீ பகவாந் ஸ ஸர்வதா மமாஸ்து மாங்கள்ய விவ்ருத்தயே ஹரி: –15-
ஸமஸ்த தேவர்களாலும் ஸ்துதிக்கப்பட்ட எந்த ப்ரபுவின் திரு அவயவங்கள் யாக உபகரணங்களனைத்துமாய் ஆகின்றனவோ, அந்தக் கோல வராஹ வடிவம் கொண்ட பக்வானான ஹரி எனக்கு மங்களங்கள் பல்கிப் பெருக அருள வேண்டும்-
விக்ஷோப்ய ஸர்வோததி-தோய-ஸம்பவம் ததார தாத்ரீம் ஜகதச் ச யோ புவம் |
யஜ்ஞோஸ்வரோ யஜ்ஞ புமாந் ஸ ஸர்வதா மமாஸ்து மாங்கள்ய விவ்ருத்தயே ஹரி: || –16-
மாகடல் நீரனைத்தையும் கலக்கி ப்ராணிகளின் இருப்பிடமான . வார் மடந்தையைப் பேர்த்தெடுத்தவரும் யாகங்களால் பூஜிக்கப்படுபவரும் யஜ்ஞ வராஹ மூர்த்தியுமான ஹரி எனக்கு மங்களங்கள் பெருக அருள வேண்டும்-
விந்யஸ்ய பாதெள ப்ருதிவீம் ச பிப்ரத: | யஸ்யோபமாநம் ந பபூவ ஸோச்யுதோ மமாஸ்து மாங்கள்ய விவ்ருத்தயே ஹரி: ||–17-
ஸமஸ்த ஜகதாதாரனான பரமனது திருப் பள்ளியான ஆதி சேஷன் மேல் திருப் பாதங்களை ஊன்றிப் பூமி தேவியைப் பேர்த்தெடுத்த எந்த பகவானுக்கு உவமையே இல்லையோ அந்த பகவான் எனக்கு மங்கள வ்ருத்தியைச் செய்வாராக-
ஸகர்கரம் யஸ்ய ச ப்ரும்ஹிதம் முஹா:ஸநந்தநாத்யைர் ஜந லோக-ஸம்ச்’ரிதை: |
ஸ்ருதம் ஜயே த்யுக்தி பரைஸ் ஸ ஸர்வதா மமாஸ்து மாங்கள்ய-விவ்ருத்தயே ஹரி; | –18-
உறுமலுடன் கூடிய எவரது ஐய கோஷத்தை ஐந லோகத்தில் இருந்த ஸநந்தநாதியர் பல்லாண்டு பாடிய வண்ணமே கேட்டு மகிழ்ந்தனரோ அந்த ஹரி எனக்கு மங்களங்களைப் பெருக்கி அருள் செய்ய வேண்டும் –
ஏகார்ணவாத் யஸ்ய மஹீயஸோ மஹீம் ஆதாய வேகேந கமுத்பதிஷ்யத: |
நதம் வபுர் யோகிவரைஸ் ஸ ஸர்வதா மமாஸ்து மாங்கள்ய விவ்ருத்தயே ஹரி; | .-19-
மிகப் பெரிய நீர்ப் பரப்பிலிருந்து நிலமகளைப் பெயர்ந்து எடுத்துக் விரைவாக விரைவாக மேலே பாய்ந்து வந்த எந்தக் கோல வராஹ மூர்த்தியை ஸநகாதி யோகியர் கண்டு வணங்கினரோ அந்த ஹரி எனக்கு மங்களங்களைப் பெருக்குவராக –
ஹதோ ஹிரண்யாஷ மஹாஸூர: புரா புராண பும்ஸா பரமேண யேந |
வராஹ ரூபஸ் ஸ பதி: ப்ரஜாபதி:மமாஸ்து மாங்கள்ய விவ்ருத்தயே ஹரி; ||–20-
மிகச் சிறந்த புராண புருஷரான யாரால் ஹிரண்யாக்ஷனென்ற அஸுரன் அழிக்கப் பட்டானோ, அந்த ஞானப் பிரான் எனக்கு மங்களங்கள் பெருக அருள் செய்ய வேண்டும் –
ஸ்ரீ நரஸிம்ஹாவதாரம்
தம்ஷ்ட்ரா-கராளம் ஸுர பீதி நாச”கம் க்ருதம் வபுர் திவ்ய-ந்ருஸிம்ஹ-ரூபிணா |
த்ராதும் ஜகத் யேந ஸ ஸர்வதா ப்ரபு: மமாஸ்து மாங்கள்ய விவ்ருத்தயே ஹரி: ॥–21-
தேவர்களின் பயத்தை அகற்ற வல்லரும் கோரைப் பற்களால் அச்சுறுத்துவதுமான நரங் கலந்த சிங்க உருவை உலகைக் காக்க வென்றே யார் தரித்தாரோ அந்த ஹரி எனக்கு மங்களங்கள் பெருக அருள் செய்ய வேண்டும்-
தைத்யேந்த்ர-வக்ஷஸ் ஸ்தல-தார-தாருணை: கரேருஹைர் ய: க்ரகசாநுகாரிபி: |
சிச்சேத லோகஸ்ய பயாநி ஸோ அச்யுதோ மமாஸ்து மாங்கள்ய-விவ்ருத்தயே ஹரி: ||–22-
அவுணன் மார்பைக் கிழிக்க வல்லதும் ரம்பம் போன்றதுமான நகங்களால் உலகின் பயத்தைப் போக்கிய ஹரி எனக்கு மங்களங்கள் பெருக அருள வேண்டும் –
தந்தாந்த-தீப்தத்யுதி-நிர்மலாநி ய; சகார ஸர்வாணி திசாம் முகாநி |
நிநாத-வித்ராஸித-தாநவோ ஹ்யஸெள மமாஸ்து மாங்கள்ய-விவ்ருத்தயே ஹரி: |–23-
பற்களின் காந்தியால் திசை முடிவிலும் ஒளி பரப்புகிறவரும் ஸிம்ஹ நாதத்தால் அஸுரர்களை நடுக்கமுறச் செய்பவருமான ஹரி எனக்கு மங்களங்கள் பெருக அருள வேண்டும் –
யந்நாம-ஸங்கீர்த்தநதோ மஹா பயாத் விமோக்ஷ-மாப்நோதி ந ஸம்சயம் நர; |
ஸ ஸர்வ-லோகார்த்தி-ஹரோ ந்ரு கேஸரீ மமாஸ்து மாங்கள்ய-விவ்ருத்தயே ஹரி: ॥–24-
தன் நாமத்தைச் சொல்பவனது பெரும் பயத்தைப் போக்கி அருள்பவரும் உலகனைத்தின் துயரைத் துடைப்பவருமான சிங்கப் பிரான் எனக்கு மங்களங்களைப் பெருக்குவாராக-
ஸடா-கராள-ப்ரமணா நிலாஹதா: ஸ்புடந்தி யஸ்யாம்புதராஸ் ஸமந்தத: |
ஸ திவ்ய ஸிம்ஹ: ஸ்புரிதா-நலேக்ஷணோ மமாஸ்து மாங்கள்ய-விவ்ருத்தயே ஹரி:–25-
அசையும் பிடரி மயிர்களால் மேகக் கூட்டங்களை நாற் புறமும் சிதறி விழும்படி செய்பவரும் ஜ்வலிக்கும் கனல் போன்ற கண்களை வுடையவருமான சிங்கப்பிரான் எனக்கு மங்களம் பெருக அருள்வாராக.
யதீஷண-ஜ்யோதிஷி ரஸ்மி-மண்டலம் ப்ரலீந-மீஷந் ந ரராஜ பாஸ்வத: |
குத: ச சாங்கஸ்ய ஸ திவ்ய ரூப-த்ருக் மமாஸ்து: மாங்கள்ய-விவ்ருத்தயே ஹரி: |–26-
பகலவனது கதிர்க் கூட்டங்கள் எவரது கண்ணொளியில் மங்கிப் போகிறதோ, சந்திரனைப் பற்றிப் பேசவே வேண்டிய தில்லையோ, அந்த அழகிய சிங்க உருவம் தரித்த ஹரி எனக்கு மங்களங்களைப் பெருக்குவாராக-
அசே’ஷ-தேவேச’-நரேஸ்வரேஸ்வரை: ஸதா ஸ்துதம் யஸ் சரிதம் மஹாத்புதம் |
ஸ ஸர்வ-லோகார்த்தி-ஹரோ மஹா ஹரி: மமாஸ்து மாங்கள்ய- -விவ்ருத்தயே ஹரி: ॥–27-
எந்த சிங்கப் பிரானது மிக அத்புத சரிதையை ப்ரபுக்களும் மேலாத் தேவரும் நிலத் தேவரும் புகழ்ந்த வண்ண மிருக்கிறார்களோ உலகனைத்தின் துயரையும் பாபங்களையும் போக்க வல்ல அந்த ஹரி: எனக்கு மங்களங்கள் பெருக அருள்வாராக –
த்ரவந்தி தைத்யா: ப்ரணமந்தி தேவதா: நச்யந்தி ரஷாம்ஸி அபயாந்தி சாரய; | யத் கீர்த்தநாத் ஸோ அத்புத-ரூப கேஸரீ மமாஸ்து மாங்கள்ய விவ்ருத்தயே ஹரி: ||–28-
எவருடைய திரு நாமத்தைச் சொன்ன மாத்திரத்தாலேயே அஸூரர்கள் ஒடுகின்றனரோ, தேவர்கள் வணங்குகின்றனரோ, அரக்கர்கள் அழிந்து போவார்களோ, எதிரிகள் திரும்பி ஓடுவார் களோ, அந்த அழகிய சிங்கர் எனக்கு மங்களங்களைப் பெருக்குவாராக-
வாமனாவதாரம்
ருக்பாவிதம் யோ யஜுஷா ஹி ஸ்ரீமத் ஸாம த்வநி-த்வஸ்த-ஸமஸ்த-பாதகம் |
சக்ரே ஜகத் வாமநகஸ் ஸ் ஸர்வதா மமாஸ்து மாங்கள்ய-விவ்ருத்தயே ஹரி –29-
ருக் வேதத்தை உச்சரித்து உலகைத் தூயதாக்கியும், யஜுர் வேதத்தால் நிறம் பெறச் செய்தும் ஸாம கானத்தால் ஸமஸ்த பாதகத்தையும் அழித்து முள்ள திருக் குறள் உருவனான மாயன் எனக்கு மங்களங்களைப் பெருக்குவாராக-
யத்பாத-விந்யாஸ-பவித்ரதாம் மஹீ யயெள வியச்சர்க்-பஜுஷா-முதீரணாத் |
ஸ வாமநோ வாம சரீர-ரூப த்ருக் மமாஸ்து மாங்கள்ய-விவ்ருத்தயே ஹரி: ॥–30-
எவருடைய திருவடி படுதலால் நிலப் பரப்பும், ருக் யஜுஸ் மூதலிய வேதங்களைச் சொல்வதால் வானமும் புனிதமாயினவோ அந்த வாமன மூர்த்தி எனக்கு மங்களங்களைப் பெருக்குவாராக –
யஸ்மிந் ப்ரயாதே அஸூர-பூப்ருதோ அத்வராத் நநாம கேதாத் அவநிஸ் ஸஸாகரா |
ஸ வாமநஸ் ஸர்வ-ஜகந் மயஸ் ஸதா மமாஸ்து மாங்கள்ய-விவ்ருத்தயே ஹரி: ॥–31-
அஸுர மன்னன் மஹா பலியின் அரண்மனையை நோக்கி எவர் போன போது கடல் சூழ்ந்த நில மங்கை வருந்தித் தலை குனிந்தாளோ உலகனைத்தையும் தன்னுள் ஒடுக்கிய அந்தத் திருக் குறளப்பன் எனக்கு மங்களங்கள் பெருக அருள்வாராக–
மஹாத்புதே தைத்ய பதேர் மஹா த்வரே யஸ்மிந் ப்ரவிஷ்டே ஷுபிதம் மஹா ஸூரை: |
ஸ வாமநோ அந்தஸ் ஸ்தித ஸப்த லோக த்ருக் மமாஸ்து மாங்கள்ய விவ்ருத்தயே ஹரி: ॥–32-
மிக ஆச்சர்யமான அஸூர மன்னனது யாக சாலையில் எவர் ப்ரவேசித்ததும் அஸுரரனைவரும் குழப்ப மடைந்து போயினரோ, ஸப்த லோகத்தையும் தன் வயிற்றில் வைத்துக் கொண்ட அந்த ஹரி எனக்கு மங்களங்கள் பெருக அருள்வாராக–
ஸங்கைஸ் ஸுராணாம் திவி பூதலஸ்திதை: ததா மநுஷ்யைர் ககநே ச கேசரை: |
ஸ்துத: க்ரமாத் ய: ப்ரசசார ஸர்வதா மமாஸ்து மாங்கள்ய விவ்ருத்தயே ஹரி: ॥–33-
ஸ்வர்க்கத்தில் தேவர்களாலும், தரையில் மனிதர்களாலும், வானில் வானவர்களாலும் முறையுடன் ஸ்துதிக்கப்பட்டவாறு உலகளந்த ஹரி எனக்கு மங்கள வ்ருத்தியை செய்தருள வேண்டும் –
க்ராந்த்வா தரித்ரீம் ககநம் ததா திவம் மருத் பதேர் ய: ப்ரததெள த்ரிவிஷ்டபம் |
ஸ தேவ தேவோ புவநேஸ்வரேஸ்வரோ மமாஸ்து மாங்கள்ய விவ்ருத்தயே ஹரி; –34-
நிலத்தையும் வானத்தையும் ஸ்வர்க்க உலகையும் அளந்து கொண்டு இந்த்ரனுக்கு மூவுலகையும் அளித்த ஜகந் நாதனான ஹரி எனக்கு மங்களங்களைப் பெருக்கி யருள வேணும் –
அநுக்ரஹம் சாபி பலே-ரநுத்தமம் சகார யச்சேந்த்ர-பதோபமம் க்ஷணாத் | ்
ஸுராம்ச்’ச யஜ்ஞாம்ச”புஜஸ் ஸ ஸர்வதா |மமாஸ்து மாங்கள்ய விவ்ருத்தயே ஹரி: ||–35-
மஹாபலிக்கு இந்திர பதவியை யொத்த உயர் பதவியையும். வாசகத்தின் ஹவிர்ப் பாகத்தைத் தேவர்களுக்கும் விரைவில் அளித்த ஹரி எனக்கு மங்களங்களே பெருக அருள் பாலிப்பாராக —
ஸ்ரீ மத்ஸ்யாவதாரம்
ரஸாதலாத் யேந புரா ஸமாஹ்ருதா: ஸமஸ்த வேதா ஜல சார ரூபிணா |
ஸ கைடபாரிர் மதுஹாம்புசாயீ மமாஸ்து மாங்கள்ய விவ்ருத்தயே ஹரி: ||–36-
மீனாக, மது கைடபர்களை அழித்து, பாதாளத்திலிருந்து வேதங்களை மீட்டுக் கொணர்ந்த ஷீராப்தி நாதனான ஹரி என் மங்கள்களைப் பெருக்குவாராக–
ஸ்ரீ பரசுராமாவதாரம்
நி:ஷத்ரியாம் யச்’ச சகார மேதிநீம் அநேகசோ பாஹு வநம் ததாச்சிநத் |
ய:கார்த்த வீர்யஸ்ய ஸ பார்க வோத்தமோ மமாஸ்து மாங்கள்ய விவ்ருத்தயே ஹரி; || –37-
கார்த்த வீர்யார்ஜுனனது ஆயிரம் தோள்களைத் துணித்து, பலகால் அரசர்களை யழித்த பரசுராமராகிய ஹரி எனக்கு மங்களங்களைப் பெருக்க வேணும்–
ஸ்ரீ ராமாவதாரம்-
நிஹத்ய யோ வாலிந-முக்ர-விக்ரமம் நிபத்ய ஸேதும் ஜலதெள தசா நநம் |
ஜகாந சாந்யாந் ரஜநீ சரா நஸெள மமாஸ்து மாங்கள்ய விவருத்தயே ஹரி: ॥ –38-
கொடிய வலிமை யுள்ள வாலியைக் கொன்று, மா கடலில் அணையைக் கட்டி தசமுகனையும் மற்றுமுள்ள அசுரர்களையும் அழித்த ஹரி எனக்கு மங்களங்களைப் பெருக்குவாராக–
ஸ்ரீ கிருஷ்ணாவதாரம்-
சிக்ஷேப பால: சகடம் பபஞ்ஜ யோ யமார்ஜுநம் கம்ஸமரிம் ஜகாந ௪ |
மமர்த சாணூர முகாந் ஸ ஸர்வதா மமாஸ்து மாங்கள்ய விவ்ருத்தயே ஹரி: ||–39-
பால கிருஷ்ணனாய்ச் சகடெறிந்தும், மருத மரங்களை முறித்தும் சாணூராதியரையும், பகைமை கொண்ட கம்சனையும் அழித்தும் உகந்த ஹரி எனக்கு மங்களங்கள் பெருக அருள் பாலீப்பாராக–
ப்ராதஸ் ஸஹஸ்ராம்சு” மரீசி-நிர்மலம் கரேண பிப்ரத்-பகவாந் ஸுதர்ச’நம் |
கெளமோதகீம் சாபி கதா-மநந்தோ மமாஸ்து மாங்கள்ய விவ்ருத்தயே ஹரி: |-40-
காலையில் ஆயிரம் கதிரவனது கதிர்க் கூட்டத்தைப் போன்ற பேரொளி யுள்ள சக்கரத்தையும் கெளமோதகி எனும் கதையையும் ஏந்திய பகவானான ஹரி எனக்கு மங்களங்கள் பெருக அருள் பாலிப் பாராக.-
ஹிமேந்து-குந்த-ஸ்படிகாப-நிர்மலம் முகா நிலா பூரிதம் ஈஸ்வரேஸ்வர | மத்யாஹ்ந காலே அபி ஸ ச’ங்கமுத்வஹந் மமாஸ்து மாங்கள்ய விவ்ருத்தயே ஹரி: ॥–41-
பனி நீர், சந்த்ர மண்ட்லம், குந்தப்பூ, ஸ்படிகமணி இவை போன்று வெண்ணிறமாயும், திரு முகத்தால் காற்று நிரப்பப் படுவதாயும் உள்ள ஸ்ரீ பாஞ்ச ஜந்யத்தை நடுப் பகலில் ஏத்தி யருளும் ஹரி எனக்கு மங்களங்கள் பெருக அருள் செய்வாராக –
ததா அபராஹ்ணே ப்ரவிகாஸி பங்கஜம் வக்ஷஸ் ஸ்தலேந ஸ்ரிய முத்வஹந் ஹரி: |
விஸ்தாரி-பத்மாயத-பத்ர லோசநோ மமாஸ்து மாங்கள்ய-விவ்ருத்தயே –42-
மலர்த்த தாமரையைக் கையிலும் திருமகளைத் திரு மார்பிலும் மாலையில் ஏந்தி யருளும் மலர்ந்த தாமரை யிதழை யொத்த கண்ணீனரான ஹரி எனக்கு மங்களங்கள் பெருக அருள் செய்வாராக –
ஸர்வேஷு காலேஷு ஸமஸ்த தேசேஷு அசேஷ கார்யேஷு ததேஸ்வரேஸ்வர: |
ஸர்வைஸ் ஸ்வரூபைர் பகவாநநாதிமாந் மமாஸ்து மாங்கள்ய-விவ்ருத்தயே ஹரி: ॥ –43-
எல்லாக் காலத்திலும், எல்லா இடங்களிலும், எல்லாத் தொழில்களிலும், எல்லா வித உருவங்களுடன் தோன்றி யருளும் ஆதி யந்த மற்ற பகவானான ஹரி எனக்கு மங்களங்கள் பெருக அநுக்ரஹம் செய்வாராக –
பல ஸ்ருதி
ஏதத் படந் தால்ப்ய ஸமஸ்த பாபை; விமுச்யதே விஷ்ணு பரோ மநுஷ்ய: |
ஸித்த்யந்தி கார்யாணி ததாஸ்ய ஸர்வாந் அர்த்தா-நவாப்நோதி யதேச்சதே தாந் ॥–44-
தால்ப்ய முனிவரே, விஷ்ணுவே பர தேவதை யெனும் உண்மை உணர்ந்த மனிதன் இத்துதி நூலைப் பாராயணம் செய்து எல்லாப் பாபங்களிலிருந்தும் விடுபடுகிறான். அவனுடைய கார்யங்கள் யாவும் நற் பயனை அளிக்கின்றன. விரும்பிய எல்லாப் பொருளும் அவனுக்குக் கை கூடுகின்றன-
துஸ் ஸ்வப்ந: ப்ரச’ம-முபைதி பட்ய மாநே ஸ்தோத்ரேஸ்மிந் ஸ்ரவண விதெள ஸதோத்ய தஸ்ய!
ப்ராரம்போ த்ருத முபயாதி ஸித்திமீச பாபாநி க்ஷபயதி சாஸ்ய தேவ தேவ: ||–45-
இத்துதியை எப்பொழுதும் படிப்பதைக் கேட்பதென்னும் விரதம் பூண்டவனது கெட்ட கனவுகள் அடங்கிப் பயனற்றுப் போகும், துவங்கிய தொழில்கள் விரைவில் நற்பயனளிக்கும்படி, நிறைவேறும், தேவ தேவனாய இறைவன் பாவங்களை யெல்லாம் போக்கி விடுதிறான் –
மாங்கள்யம் பரமபதம் ஸதார்த்த-ஸித்திம் நிர்விக்நா-மதிகபலாம் ஸ்ரியம் ததாதி |
கிம் லோகே ததிஹ பரத்ர சாபி பும்ஸாம் யத் விஷ்ணு-ப்ரவணதியாம் ந தால்ப்ய ஸாத்யம் ॥–46-
மங்களத்தையும், நலமந்தமில்லதோர் நாட்டையும், விரும்பியது நன்கு விரைவில் கை கூடுவதையும், தடை யற்ற பெருஞ் செல்வத்தையும் இறைவன் அருள்வான். தால்ப்ய முனிவரே, இம்மையிலும் மறுமையிலும் திருமாலடி யார்க்குக் கிட்டாதது யாதுமில்லை —
தேவேந்த்ரஸ் த்ரிபுவந-மர்த்த-மேகபிங்க: ஸம் ஸித்திம் த்ரி புவநகாம் ச கார்த்த வீர்ய: |
வைதேஹ: பரமபதம் ப்ரஸாத்ய விஷ்ணும் ஸம் ப்ராப்தஸ் ஸகல-பல ப்ரதோ ஹி விஷ்ணு: ||–47-
கார்த்த வீர்யார்ஜுனன் மூவுலகிலும் அதர்மத்தைத் தடுக்க வல்ல தர்ம சக்தியையும், குபேரன் பணத்தின் அதிபனாகும் பதவியையும், இந்த்ரன் மூவுலகில் உள்ள இன்பத்தையும், விதேஹ மன்னன் பரம பதத்தையும் திருமாலைப் பூசித்தே பெற்றனர். எல்லாப் பயன்களையும் அளிக்க வல்லவர் திருமால் தானே –
ஸர் வாரம் பேஷு தால்ப்யைதத் துஸ் ஸ்வப்நேஷு ச பண்டித:
ஜபே-தேகமநா விஷ்ணெள ததா மங்கள்ய-தர்சநே ॥-48-
தால்ப்யரே, அறிவுள்ளவன் எல்லாக் கார்யங்களை ஆரம்பிக்கும் போதும், கெட்ட கனவுகள் தோன்றும் போதும், அமங்களங்கள் நேரும் போதும், இறைவனான திருமாலிடம் மாறாத பக்தியுடன் இத் ஸ்துதியை ஜபம் செய்ய வேண்டும் –
சமம் ப்ரயாந்தி துஷ்டாநி க்ரஹபீடாச்’ச தாருணா: |
கர்மாரம்பாச்’ ச ஸித்த்யந்தி புண்யமாப்நோதி சோத்தமம் –49-
அவனது தீமைகள் யாவும் அழிந்து போகின்றன. கொடிய கிரஹங்களின் தீய பலன்களும் மாறுகின்றன. தொழில்களும் நற் பயனளிக்கின்றன. தீய கனவும் பயனற்றதாகிறது. நல் வினையின் உயர்ந்த பயனையும் பெறுகிறான் —
ஹரிர் ததாதி பத்ராணி மங்கள்ய ஸ்துதி ஸம்ஸ்துத;
கரோ-த்யகில-ரூபைஸ்து ரக்ஷா-மக்ஷத-ச’க்தி ப்ருத் ॥–50-
மாங்கள்ய ஸ்தவத்தால் ஸ்துதிக்கப் பெற்ற திருமால் எல்லா மங்களங்சளையும் நல்குகிறான். எல்லா வித வடிவத்திலும் தோன்றி குறைவற்ற ஆற்றல் படைத்த அந்தப் பரமன், அடியார்க்கு நற் பாது காப்பையும் அளிக்கிறான் –
ஸ்ரீ விஷ்ணு தர்மோத்தரத்திலுள்ள மாங்கள்ய ஸ்தவம் முற்றும்.
——————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply