வார்த்தை -424-
1-ஈஸ்வரன் அளவிலே உத்தாரகத்வ பிரதிபத்தியும்
2-ஆசார்யன் அளவிலே உபகாரத்வ பிரதிபத்தியும்
3-ஸ்ரீ வைஷ்ணவர்கள் அளவில் உத்தேச்ய பிரதிபத்தியும்
4-உபாயத்தளவிலே அத்யாவஸாய பிரதிபத்தியும்(பேறு தப்பாது என்று துணிந்து இருக்கை)
5-உபேயத்தளவில் த்வரா பிரதிபத்தியும்-(பேற்றுக்குத் த்வரிக்கை)
6-சரீரத்தளவில் விரோதி பிரதிபத்தியும்
7-சரீர சம்பந்திகள் அளவில் பிரிவுகாரர் பிரதிபத்தியும்
8-இதரரான சம்சாரிகள் பக்கலில் வழி பறிகாரர் பிரதிபத்தியும்
9-ஐஸ்வர்யத்தளவில் அக்நி பிரதிபத்தியும்(கொள் என்று கிளர்ந்து எழுந்த பெரும் செல்வம் நெருப்பாக)
10-விஷயத்தளவில் இடி பிரதிபத்தியும் –
ஆகிற இப்பத்து பிரதிபத்தியும் ஒரு அதிகாரிக்கு அவஸ்யம் ஜ்ஞாதவ்யமாகக் கடவது
என்று ஆச்சான் பிள்ளை அருளிச் செய்ததாக திருநகரிப் பிள்ளை அருளிச் செய்வர் –
—————————————————————————————-
வார்த்தை -425-
இவற்றிலே
1-ஈஸ்வரன் அளவிலே உத்தாரகத்வ பிரதிபத்தி யாவது –
ஆவிக்கோர் பற்றுக் கொம்பு -திருவாய்மொழி -10-10-3- என்றும்
என்னுடை வாணாள் -பெரிய திருமொழி -1-1-6- என்றும் –
ஆவியை அரங்கமாலை -திருக் குறும் தாண்டகம் -12-என்றும் –
உன்னை விட்டு எங்கனம் தரிக்கேன் -திருவாய் மொழி -7-2-1- என்றும் இருக்கை –
2-ஆசார்யன் பக்கலில் உபகாரத்வ பிரதிபத்தி யாவது –
என்னைத் தீ மனம் கெடுத்தாய் உனக்கென் செய்கேன் -திருவாய்மொழி -2-7-8- என்றும் –
மருவித் தொழும் மனமே தந்தாய் -திருவாய்மொழி -2-7-7- என்றும்
தேவு மற்று அறியேன் -கண்ணி நுண் -2
மிக்க வேதியர் வேதத்தின் உட்பொருள் நிற்கப்பாடி என் நெஞ்சுள் நிறுத்தினான் -கண்ணி நுண் -9-
ஒண் தமிழ் சடகோபன் அருளையே எண் திசையும் அறிய இயம்புகேன் -கண்ணி நுண் -7–என்றும் இருக்கை –
3-ஸ்ரீ வைஷ்ணவர்கள் பக்கல் உத்தேச்ய பிரதிபத்தியாவது
சீதனையே தொழுவார் விண்ணுளாரிலும் சீரியர் -திரு விருத்தம் -79 – என்றும்
போதோடு புனல் தூவும் புண்ணியரே விண்ணவரில் பொலிகின்றார் -பெரிய திருமொழி -7-4-3- என்றும்
எத்தனையும் கண் குளிரப் காணப் பெற்ற இரு நிலத்தார்க்கு இமையவர் நேர் ஒவ்வார் தாமே -பெருமாள் திருமொழி -10-5- என்றும் –
பயிலும் திரு உடையார் எவரேலும் அவர்கண்டீர் பயிலும் பிறப்பிடை தோறும்
எம்மை ஆளும் பரமர் -திருவாய்மொழி -3-7-1- என்றும் இருக்கை –
4-உபாயத்தளவில் அத்யாவச்ய பிரதிபத்தி யாவது –
களைவாய் துன்பம் களையாது ஒழிவாய் களை கண் மற்றிலேன் -திருவாய்மொழி -5-8-8- என்றும் –
என் நான் செய்கேன் யாரே களை கண் என்னை என் செய்கின்றாய் -உன்னால் அல்லால்
யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன் -திருவாய்மொழி -5-8-3- என்றும்
நல்லான் அருள் அல்லால் -முதல் திருவந்தாதி -15- என்றும் –
நின் அருளே புரிந்து இருந்தேன் இனி என் திருக் குறிப்பே -பெரியாழ்வார் திருமொழி -5-4-1-என்றும் இருக்கை
5-உபேயத்தளவில் த்வரா பிரதிபத்தியாவது –
மாக வைகுந்தம் காண்பதற்கு என் மனம் ஏகம் எண்ணும் இராப் பகல் இன்றியே -திருவாய்மொழி -9-3-7- என்றும் –
அடியேற்கு வானுலகம் தெளிந்தே என்று எய்துவது -பெரிய திருமொழி -6-3-8- என்றும் –
அடியார்கள் குழாங்களை உடன் கூடுவது என்று கொலோ -திருவாய்மொழி -2-3-10-என்றும்
வழு விலா அடிமை செய்ய வேண்டும் நாம் -திருவாய்மொழி -3-3-1- என்றும் இருக்கை –
6-சரீரத்தளவில் விரோதி பிரதிபத்தியாவது –
பாம்போடு ஒரு கூரையிலே பயின்றாற் போலே -பெரிய திருமொழி -11-8-3- என்றும் –
பொல்லா வாக்கை -திருவாய்மொழி -3-2-3-
ஆக்கை விடும் பொழுது எண்ணே -திருவாய்மொழி -1-2-9-
மங்கவொட்டு -திருவாய்மொழி -10-7-10-
மேம்பொருள் போக விட்டு-திருமாலை -38 என்றும் இருக்கை
7-சரீர சம்பந்திகள் அளவில் பிரிவுகாரர் பிரதிபத்தி யாவது –
தாயே நோயே தந்தையே நோயே -பெரிய திருமொழி -1-9-1- என்றும்
பெற்றாரும் சுற்றமும் என்று இவை பேணேன் நான் -பெரிய திருமொழி -8-10-5- என்றும்
பிறிந்தேன் பெற்ற மக்கள் பெண்டிர் என்ற இவர் பின் உதாவாது அறிந்தேன் -பெரிய திருமொழி -6-2-4- என்றும் -இருக்கை –
8-இதரரான சம்சாரிகள் வழி பறிகாரர் பிரதி பத்தி யாவது –
நீசர்-திருச்சந்த விருத்தம் -66- என்றும் –
தொழும்பர் -திருமாலை -5 என்றும் –
பூமி பாரங்கள் -பெரியாழ்வார் திருமொழி -4-4-5- என்றும் இருக்கை
9-ஐஸ்வர்யத்தில் அக்நி பிரதிபத்தியாவது –
வீழ் பொருட்கு இரங்கி -பெரிய திருமொழி -1-1-4- என்றும் –
பெரும் செல்வம் நெருப்பு -திருவாய்மொழி -4-9-4- என்றும் –
ஆண்டார் வையம் எல்லாம் அரசாகி முன் ஆண்டவரே மாண்டார் என்று வந்தார் -பெரிய திருமொழி -6-2-5- என்றும் இருக்கை
10-விஷயத்தளவில் இடி பிரதிபத்தி யாவது –
புலன் ஐந்து மேவி -2-8-என்றும்-சாந்தேந்து மென் முலையார் தடம் தோள் புணர் இன்ப வெள்ளத்து ஆழ்ந்தேன் அரு நரகத்து அழுந்தும் பயன் படித்தேன் –பெரிய திருமொழி -6-3-4-என்றும்
பொறுத்துக் கொண்டு இருந்தார் பொறுக்க ஒணாப் போகாமே நுவர்வான் புகுந்து
ஐவர் அறுத்துத் தின்றிட அஞ்சி நின் அடைந்தேன் -பெரிய திருமொழி -7-7-7- என்றும் –
கடியார் காளையர் ஐவர் புகுந்து காவல் செய்த அக்காவலைப் பிழைத்துக் குடி போந்து
உன் அடிக்கீழ் வந்து புகுந்தேன் -பெரிய திருமொழி -7-7-8- என்றும் –
கோவாய் ஐவர் என் மெய்க்குடி ஏறிக் கூறை சோறு இவை தா வென்று குமைத்துப் போகார்
நான் அவரைப் பொறுக்கிலேன் புனிதா புட்கொடியாய் நெடுமாலே தீவாய் நாகணையில்
துயில்வானே திருமாலே இனிச் செய்வது ஓன்று அறியேன்-பெரிய திருமொழி -7-7-9-என்றும் இருக்கை-
1-உத்தாரக -பிரதிபத்தியை -உயர்வற உயர்நலம் -1-1-1-தொடக்கமானவற்றிலும்
2-உபகாரத்வ பிரதிபத்தியை -தூதுகள் நாலிலும் -அஞ்சிறைய -1-4/வைகல் 6-1-பொன்னுலகு ஆளீரோ -6-8/எம் கானலகம் -9-7/
3-உத்தேச்ய பிரதிபத்தியை -பயிலும் சுடரொளி-3-7/நெடுமாற்கு அடிமை -8-10-தொடக்கமானவற்றிலும்
4-அத்யாவசாய பிரதிபத்தியை -நோற்ற நோன்பு -5-7-1-/ஆரா வமுது -5-8-1-/தொடக்காமான வற்றிலும்
5-த்வாரா பிரதிபத்தியை -முனியே நான்முகனே -10-10-1- தொடக்கமானவற்றிலும்
6-விரோதி பிரதிபத்தியை -முந்நீர் ஞாலம் -3-2-1- தொடக்கமானவற்றிலும்
7-பிரிவுகாரர் பிரதிபத்தியை -கொண்ட பெண்டிரிலும் -9-1-1-
8-வழி பறிகாரர் பிரதிபத்தியை -நண்ணாதார் முறு வலிலும் -4-9-1-
9-அக்நி பிரதிபத்தியை -ஒரு நாயகத்திலும் -4-1-1-
10-இடிப் பிரதிபத்தியை -உண்ணிலாவிய விலும்
பிரதம ஆசார்யரான நம் ஆழ்வார் விசேஷித்து அருளிச் செய்தார் ஆகையாலே
இப் பத்து பிரதிபத்தியும் ஒரு அதிகாரிக்கு அவஸ்யம் ஜ்ஞாதவ்யமாகக் கடவது
என்று ஆச்சான் பிள்ளை அருளிச் செய்ததாக திருநகரிப் பிள்ளை அருளிச் செய்வர் –
————
1-ஈஸ்வரன் அளவிலே உத்தாரகத்வ பிரதிபத்தி யாவது –
கூவிக் கொள்ளாய் வந்து அந்தோ என் பொல்லாக் கருமாணிக்கமே
ஆவிக்கு ஓர் பற்றுக் கொம்பு நின்னலால் அறிகின்றிலேன் யான்
மேவித் தொழும் பிரமன் சிவன் இந்த்ரன் ஆதிக்கெல்லாம்
நாவிக் கமல முதல் கிழங்கே உம்பரந்ததுவே–10-10-3-
நான் உன்னை ஒழிய உளனாக வேணுமே -என்னஆத்மாவுக்கு உஜ்ஜீவன ஹேதுவாய் இருப்பதொன்று உன்னை ஒழிய வேறு நான் அறிகிறிலேன்-பற்றுக் கொம்பு வரையறை செய்யப் பட்டதாய் இருக்கிறபடி–கொடி -கொள் கொம்பை ஒழிய நிற்க வற்றோ-வேரை அறுத்து படர் என்றால் படருமோ –நச சீதா த்வயா ஹீனா நசாஹமபி ராகவ-முஹூர்த்தமபி ஜீவாவ ஜலான் மத்ச்யாயிவ உத்ருதௌ –அயோத்யா -53-31
நீருள எனின் உள மீனும் நிலமும்-பாருள எனின் உள யாவும் பார்ப்பு தன்
தாருள தது உளாய் நானும் சீதையும்-ஆர் உளர் எனின் உளேம் அழகு வாய் என்றான்
எம்பிரான் எந்தை என்னுடைச் சுற்றம் எனக்கு அரசு என்னுடை வாழ் நாள்
அம்பினால் அரக்கர் வெருக்கொள நெருக்கி யவர் உயிர் செகுத்த எம் அண்ணல்
வம்புலாஞ் சோலை மா மதிள் தஞ்சை மா மணிக் கோயிலே வணங்கி
நம்பிகாள் உய்ய நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம் —6–
திரு மந்த்ரம் ஓர் இடத்திலே ப்ரஸ்துதம் ஆனால் -முன்னே யாதல் பின்னே யாதல் அர்த்தத்தைச் சொல்லிப் போருவார்-எனக்கு உபகாரகன்-எனக்கு ஜனகன்-என் குடல் துவக்குக்கு ஆன எல்லா உறவு முறையும் ஆனவன்-என்னை வன்னிய மறுத்து ஆண்டவன்-என்னுடைய ஆயுஸு–சங்கல்ப்பத்தால் அன்றிக்கே அம்பாலே ராஷசர் அஞ்சும்படி நெருக்கி அவர்கள் உயிரை முடித்த எம் ஸ்வாமி-ஸ்வாமித்வத்தோடே தலைக் கட்டிற்றாய் நின்றது-த்தால் சொல்லிற்று ஆயிற்று-மாதா பிதா ப்ராதா நிவாஸஸ் சரணம் ஸூஹ்ருத் கதிர் நாராயணா-ஸூ பால உபநிஷத் –என்கிறபடியே –இது தான் உமக்கு வந்தபடி என் என்ன -தஞ்சை மா மணிக் கோயிலே-வணங்கி வந்தது–எல்லா உறவு முறையும் தானே என்று தோற்றும் படி அவன் வந்து நிற்கிற சௌலப்யத்தை அனுசந்திக்கையாலே வந்தது-சர்வ வித பந்துவும் அவனே என்கிற அர்த்தத்துக்கு வாசகமான திரு நாமத்தைக் காணப் பெற்றேன்-
ஆவியை அரங்க மாலை அழுக்கு உடம்பு எச்சில் வாயால்
தூய்மையில் தொண்டனேன் சொல்லினேன் தொல்லை நாமம்
பாவியேன் பிழைத்த வாறு என் என்று அஞ்சினேற்கு அஞ்சல் என்று
காவி போல் வண்ணர் வந்து என் கண்ணுள்ளே தோற்றினாரே -12-
உலகங்கட்கு எல்லாம் ஆர் உயிர் ஆனவனே –கண்ணுக்கு தோற்றாதபடி நின்று தாரகமாகை அன்றிக்கே கண்ணாலே காண -வ்யாமோஹம் -தான் ஒரு வடிவு என்னலாம் படி இருக்கை –ஆர் உயிரேயோ அகல்இடம்முழுதும்* படைத்து இடந்து உண்டு உமிழ்ந்து அளந்த*
பேர் உயிரேயோ பெரிய நீர் படைத்து* அங்கு உறைந்து அது கடைந்து அடைத்து உடைத்த*
சீர்உயிரேயோ மனிசர்க்குத் தேவர் போலத்* தேவர்க்கும் தேவாவோ*
ஓர் உயிரேயோ உலகங்கட்கு எல்லாம்* உன்னை நான் எங்கு வந்து உறுகோ? — என்கிறபடியே-அனைத்துலகுக்கும் பிராணனாயிருப்பவன் எம்பெருமான்.
கங்குலும் பகலும் கண்துயில் அறியாள் கண்ண நீர் கைகளால் இறைக்கும்;
‘சங்கு சக்கரங்கள்’ என்று கை கூப்பும்; ‘தாமரைக் கண்’ என்றே தளரும்;
‘எங்ஙனே தரிக்கேன் உன்னை விட்டு!’ என்னும்; இரு நிலம் கைதுழா இருக்கும்;
செங்கயல்பாய் நீர்த் திருவரங்கத்தாய்! இவள் திறந்து என் செய்கின்றாயே?–7-2-1-
உறக்கத்தாலே, சூது சதுரங்கத்தாலே போது போக்கலாம் விஷயத்திலேயோ அகப்பட்டது என்னும்.-பர வ்யூஹ வைபவங்களில் ஆசைப்பட்டேனோ தூரஸ்தன் என்று ஆறி இருக்க ?-அவதாரங்களில் ஆசைப் பட்டேனோ சமகாலம் அன்று என்று ஆறி இருக்க ?உன்னை -என்கிறது வடிவு அழகையும் சீலாதிகளையும் -இவளை அறியாது ஒழிந்தால் உம்மையும் அறியாது ஒழிய வேணுமோ -உம்மைக் கண்ணாடி புறத்திலும் கண்டு அறியீரோ-ண்டாயாகில் பிரியாய்;-பிரிந்தாயாகில் இவள் பட்டது படுவுதி.
———–
2-ஆசார்யன் பக்கலில் உபகாரத்வ பிரதிபத்தி யாவது –
வாமனன் என் மரகத வண்ணன் தாமரைக் கண்ணினன்
காமனைப் பயந்தாய் என்று என்று உன் கழல் பாடியே பணிந்து
தூ மனத்தனனாய் பிறவித் துழதி நீங்க என்னைத்
தீ மனம் கெடுத்தாய் உனக்கு என் செய்கேன் என் சிரீதரனே –2-7-8-
விஷயாந்தர ஸ்பர்சியான நெஞ்சைப் போக்குவதும் செய்தாய்–அம்ருதத்தையும் விஷத்தையும் ஒக்க விரும்புவாரைப் போலே உன்னையும் உகந்து ஷூத்ர விஷயங்களையும் உகக்கும் பொல்லாத நெஞ்சைத் தவிர்த்தாய்-நல்ல நெஞ்சைத் தந்த அளவன்றிக்கே -பொல்லாத நெஞ்சைக் கெடுப்பதும் செய்தாய் –ஸ்ரீ யபதியாகையாலே பூர்ணனான எனக்கு உன்னால் ப்ரத்யுபகாரமாக செய்யலாவது ஒன்றும் காண்கிறிலேன்-
பிரதிபகாரம் பண்ணி அல்லது நிற்க மாட்டுகிறிலேன் –பண்ணின உபகாரத்தின் கனத்தாலே பிரத்யுபகாரம் பண்ணி யல்லது தரிக்க மாட்டு கிறிலேன்-அதுக்கு விரகு காண் கிறிலேன்-நான் ஒரு உபகாரம் கொள்ளாது ஒழிதல்-நீ குறைவாளன் ஆதல் செய்யப் பெற்றிலேன் -புஷ்கலனாய் இருக்கிற உனக்கு நான் எத்தைச் செய்வேன்-
திரிவிக்ரமன் செந்தாமரைக் கண் எம்மான் என் செங்கனி வாய்
உருவில் பொலிந்த வெள்ளிப் பளிங்கு நிறத்தனன் என்று என்று உள்ளி
பரவிப் பணிந்து பல்லூழி யூழி நின் பாத பங்கயமே
மருவித் தொழும் மனமே தந்தாய் வல்லை காண் என் வாமனனே –2-7-7-
இப்படி பலகாலும் நினைத்தும் அடைவு கெடப் பேசியும் குண பரவசனாய் வணங்கி இப்படி கால தத்வம் உள்ளதனையும் போக்யமும் பிராப்தமுமாய் உன் திருவடிகளையே அநந்ய ப்ரயோஜனமாய்க் கொண்டு அடிமை செய்யும் மனசையே தந்தாய்-விஷயாந்தரங்கள் அஸ்திரமுமாய் அபோக்யமும் ஆகையால் சஞ்சலம் ஹி மன-என்னும் படி இறே இருப்பது –1–கல்பம் தோறும் கல்பம் தோறும் பரம போக்யமான உன் திருவடிகளையே அநந்ய பிரயோஜனனாய்க் கொண்டு தொழும் மனசைத் தந்தாய் –
2–விஷயாந்தரங்கள் அஸ்தரம் ஆகையாலும் அபோக்கியம் ஆகையாலும் ஒன்றையே பற்றி நிற்க விஷயம் இல்லை யாகையாலே-மனஸ்ஸூ -சஞ்சலம் ஹி மன –ஸ்ரீ கீதை -6-34-என்று சஞ்சலமாய் இறே இருப்பது அப்படி இன்றியே நித்யமுமாய் நிரதிசய போக்யமுமாய் இருக்கையாலே –மருவித் தொழும் மனசைத் தந்தாய்-3–பழைய நெஞ்சைத் திருத்தின அளவன்றிக்கே கருவுகலத்தில் ஒரு நெஞ்சைத் தந்தாய் —திவ்யம் ததாமி தே -ஸ்ரீ கீதை -11-8-போலே –பழைய நெஞ்சு -இது என்று பிரத்யபிஜ்ஞை பண்ண ஒண்ணாத படி இரா நின்றது-கொள்கைக்கும் கொடுக்கைக்கும் உனக்கு ஒன்றேயோ பரிகரம்–ஆழ்வாரைக் கொண்டார் -மனசைக் கொடுத்தார் -ஔதாரன் பட்டம் கொடுத்தார் -உலகைக் கொண்டார் -தருவதும் பரிப்பதும்- ஒரே உபகரணத்தாலே-வாமன வேஷத்தைக் காட்டி என் நெஞ்சைத் திருத்தித் தந்தாய்-அவ்வழகாலே மகா பலி என்னது என்று இருந்த பூமியை அபகரித்தாய்-வல்லை காண் -என்று உகக்கிறார் –
நாவினால் நவிற்று இன்பம் எய்தினேன்
மேவினேன் அவன் பொன்னடி மெய்ம்மையே
தேவு மற்று அறியேன் குருகூர் நம்பி
பாவின் இன்னிசை பாடித் திரிவனே-2-
ஆழ்வாருடைய ஸ்ப்ருஹணீ யமான திருவடிகளை உத்தேச்யமாக பொருந்தினேன் –
ஷிபாமி –என்று ஈஸ்வரனும் கூட உபேஷித்த தசையிலே விஷயீ கரித்த ஆழ்வாருடைய
விலஷணமான திருவடிகளோடே பொருந்தப் பெற்றேன் – (பரம காருணீகர் ஆகையால் ஷிபாமி -என்று-அச்சம் உறுத்தினான் -உபேக்ஷித்தான் என்கிறார்-அஹருத்ய யுக்தி என்றபடி- )நீர் செய்தது -இதுவாகில் பேற்றில் அறுதிபாடு இருந்த படி என் -என்ன –
மெய்ம்மையே மேவினேன் –
1-உபகார விஷயத்திலே நிற்கிற அளவிலே வேறு ஒரு விஷயம் உத்தேச்யமாய்
அது கிட்டின வாறே அதிலே தோள் மாறும்படி யன்றிக்கே -ஐஹிக ஆமுஷ்மிகங்கள் இரண்டும் ஆழ்வார் திருவடிகளாகப் பொருந்தினேன் –
2-இங்கு இருந்த நாள் அஜ்ஞா தஜ்ஞாபநத்தாலே வுபகாரராகவும் –
யத்ர பூர்வே சாத்யாஸ் சந்திதேவா என்கிறபடியே-பகவத் லாபத்துக்கு புருஷகாரமாகவும்-நித்ய விபூதியில் ப்ராப்யமாகவும் இவர் தம்மையே பற்றினேன் –
ஆளவந்தார் அத்ரபத்ர -என்கைக்கு அடி இவர் இ றே- (3-மனஸ் ஸஹ காரம் இல்லாமல் நாவினால் நவின்றாலும் -மெய்ம்மையே மேவினேன் -உண்மையாகவே பேற்றைப் பெற்றேன் -)
தேவு மற்று அறியேன் –
ப்ராப்யமும் ப்ராபகமாக வேறு ஒரு வஸ்து உண்டு என்று இரேன்
மெய்ம்மையே என்ற இடம் அன்வயத்தாலே சொல்லுகிறார் -தேவு மற்று அறியேன் என்று-வ்யதிரேகத்தாலே சொல்லுகிறார் இ றே தம்முடைய அத்யாவசியம் தோற்றுக்கைக்காக -மற்று அறியேன் -என்று-
புருஷார்தங்களோபாதி பகவத் விஷயத்தையும் கழிக்கிறார் இ றே
அதின் எல்லையான ஆழ்வார் திருவடிகள் அளவும் வந்தவர் ஆகையாலே
சாஸ்திர வாசனையாலே யாதல் –
ஆச்சார்ய உபதேசத்தால் ஆதல் -சொல்லுகிறார் அல்லர் –
உபகாரகரான ஆழ்வார் திருவடிகளில் பாவ பந்தத்தாலே சொல்லுகிறார் –
வேண்டா என்கிறேன் அன்று-வ்யுத்பத்தி இல்லாமை-பாவோ நான்யத்ர கச்சதி -அன்யத்ர என்றால் போலே மற்று அறியேன் என்கிறார்-விட்ட விஷயத்தின் பேர் சொல்லாமைக்கு-ஆழ்வாரை ஒழிய வேறு ஒரு ஆஸ்ரயணீய வஸ்து உண்டு என்று அறியேன் –
மெய்ம்மையே என்ற இடம் அன்வயத்தாலே சொன்னார் –தேவு மற்று அறியேன் -என்கிற இடம் வ்யதிரே கத்தாலே சொல்லுகிறார்–மற்று அறியேன் என்கிறது எத்தை என்னில் -கீழ் விட்டவற்றை எல்லாம் என்கிறார்-ஐஸ்வர்யம் என்ன -ஆத்ம லாபம் என்ன -அவற்றை விட்டு பகவல் லாபத்தளவிலும் நில்லாதே அதின் எல்லையான ஆழ்வார் அளவும் போந்தவர் ஆகையாலே அவற்றை எல்லாம் நினைக்கிறார் –தேவு அறிவன் –ஆழ்வாரை ஒழிய வேறு அறியேன் -சாஸ்திரம் காட்டித் தந்தது அன்றோ தெய்வம் ஆவது -அது தானே-ஆச்சார்ய தேவோ பவ என்று விதித்ததே-தேவதா வ்யுத்பத்தி யுள்ள விடத்தே யன்றோ தேவதா பிரதிபத்தி உள்ளது
ஆகையாலே நான் தேவதையாக வ்யுத்பத்தி பண்ணிற்று ஆழ்வாருக்கு மேற்பட இல்லை
ஆனால் என்னப்பன் என்று கீழே பகவத் விஷயத்தை ஸ்வாமி யாக அனுசந்தித்தீரே என்ன
அது ஆழ்வார் ஆதரித்த விஷயம் என்று ஆதரித்தேன் இத்தனை போக்கி தேவதா பிரதிபத்தி பூர்வகமாகச் சொன்னேன் அன்று-அநந்ய தைவத்வமியம் சாமா ச -என்று அநந்ய தைவதத்தை யுடைய பிராட்டி பெருமாளுக்கு எடுத்துக் கை நீட்ட-பெரிய பெருமாள் பாடு புகுமா போலே இவ்வர்த்தம் நாங்கள் விச்வசிக்கும் படி என் என்ன–மெய்ம்மையே
இது சத்தியமே-மேவினேன் அவன் பொன்னடி மெய்ம்மையே தேவு மற்று அறியேன்
ஸ்ரீ சடகோபனைத் தலையிலே கொண்டு இருந்தும் பொய் சொல்லுவார் உண்டோ
மிக்க வேதியர் வேதத்தின் உட் பொருள்
நிற்கப்பாடி என் நெஞ்சுள் நிறுத்தினான்
தக்க சீர் சடகோபன் என்னம்பிக்கு ஆட்
புக்க காதல் அடிமைப் பயன் அன்றே -9-
ப்ரமாண ஸ்ரேஷ்டமான வேதத்தை நிரூபகமாக உடையவர்கள் –-உளன் சுடர் மிகு சுருதியுள் -என்று ஆழ்வார் அருளிச் செய்ய கேட்டிருக்கையாலே – அநேக சாக அத்யயனம் -பண்ணினவர்கள்-சகல வேதங்களின் உடைய ரஹஸ்யார்த்தத்தை –வேதாந்த ரஹஸ்யம் –ததீய சேஷத்வ பர்யந்தமான பகவத் சேஷத்வம் என்று இறே-வைதிக சாஸ்திரம் நிர்ணயித்தது-துர்க்ரஹமான இந்த ரஹஸ்யார்த்தத்தை கேட்பார்க்கு பிரதிபத்தி விஷயமாம் படி –பாடி –பரமனைப் பயிலும் திரு வுடையார் எவரேலும் -என்றும் – எம்மை யாளும் பரமர் -என்றும்-அருளிச் செய்தார் இறே-பகவத் சேஷத்வத்துக்கும் கூட மேட்டு மடையான என் நெஞ்சிலே இத்தை ஸ்திரமாக்கினார் –கல்லைத் துளைத்து அதிலே நீரை நிறுத்துவாரைப் போலே-நிர் விவரமான என் நெஞ்சுக்கும் இதுவே விஷயமாம் படி பண்ணினார் இது இறே –என் தண்மையைப் பாராதே என் திறத்தே பண்ணின உபகாரம்
யத்ர பூர்வே சாத்யாஸ் சந்தீ தேவா -என்கிறபடியே-வேதத்துக்கு பிராணனான பிரமேயம் (-இலக்கு -சார தமம் -)திருவாய்மொழி-திருவாய் மொழிக்கு பிரமேயம்-(-இலக்கு -சார தமம் -) பயிலும் சுடர் ஒளி -நெடுமாற்கு அடிமை –பண்ணோடும் இசையோடும் பாடி என் நெஞ்சிலே பிரதிஷ்டிப்பித்தான்-கல்லைக் குழித்து நீரை நிறுத்துவாரைப் போலே கிடீர் செய்தது –
வேதியர்-வேதியர் ஆகிறார் -பாஹ்ய சாஸ்த்ரங்களை -காண்பரோ கேட்பாரோ தான் என்று கண்ணாலும் பாராதே செவியாலும் கேளாதே-நித்ய நிர்த்தோஷமான வேத பிரமாண நிஷ்டர் ஆனவர்கள்-வேத சாஸ்த்ராத் பரம் நாஸ்தி -வேத நூல் ஓதுகின்றது உண்மை யல்லது இல்லை என்று இருக்குமவர்கள்-(பரம் -வேறு -உயர்ந்த இரண்டும் -இங்கு வேதம் தவிர வேறு சாஸ்திரம் இல்லை -கேசவனை தவிர தெய்வம் இல்லை )
மிக்க வேதியர்-அவ்வேதத்திலும் வேத வாதரதா -என்றும் த்ரை வித்யா மாம் சோமபா பூத பாபா -என்றும் சொல்லுகிறபடியே-ஆபாத ப்ரதீதமாய் அல்ப அஸ்திரங்களான ஸ்வர்க்காதி புருஷார்த்தங்களையும் தத் சாதனங்களான ஜ்யோதிஷ்டோமாதிகளையும்-புருஷார்த்த தத் சாதனங்களாக அறுதி இட்டிருக்கை அன்றிக்கேஉத்தம புருஷார்த்தமான பகவத் பிராப்தியே புருஷார்த்தம் என்றும் தத் சாதனமும்-ப்ரஹ்ம விதாப் நோதி பரம் -இத்யாதி வாக்யோக்தமான வேதனம் ஆதல்=முமுஷூர்வை சரணமஹம் ப்ரபத்யே என்கிற சரணாகதி ரூபமான சரம சாதனமாதல் என்று-வேதாந்த விஜ்ஞ்ஞானத்தாலே ஸூ நிச்சிதார்த்தராய் இருக்குமவர்கள்-(வேத ஞானம் -வேத விஞ்ஞனம் -வேதாந்த ஞானம் -வேதாந்த விஞ்ஞனம் -நான்கு நிலைகள் )
மிக்க வேதியர்-மிக்கார் வேதியர் என்று ஆழ்வார் பாடே கேட்கையாலே மிக்க வேதியர் என்கிறார் –அன்றிக்கே மிக்க வேதியர் என்று சுடர் மிகு சுருதி என்கிறபடியே பிரதஷ்யாதிகளில் அதிகமான வேத பிரமாண நிஷ்டர் என்றுமாம்
வேதியர் வேதம்–ப்ரஹ்மணா நாம் தனம் வேத -என்றும்-அந்தணர் மாடு என்றும் சொல்லுகிறபடியே அவர்களுக்கு பரம தனமான வேதம்
வேதியர் வேதம்-வேதத்தை தங்களுக்கு நிரூபகமாகவும் தனமாகவும் உடையராய் இருப்பவர்கள்–வேதத்தின் உட்பொருள்-அந்த வேதத்தில் உண்டான அர்த்த விசேஷத்தை
வேதத்தின் பொருள்-அதாவது -வேதைச்ச சர்வை ரஹமேவ வேத்ய -என்றும்
வேதப் பொருளே என் வேங்கடவா -என்றும் -வேதாந்த விழுப் பொருள் -என்றும் சொல்லுகிறபடியே சகல வேதங்களும் ஒரு மிடறாக ஓதித் தலைக் கட்டுவது பகவத் ஸ்வரூபாதிகளை இறே
உட்பொருள்-அதில் தத் விஷய பிரதிபாதிதமான அம்சம் புறப்பொருளாய்-ததீய பிரதிபாதிதமான அம்சம் உட்பொருளாய் இருக்கும்=அதில் புறப் பொருளையே சொல்லி விடுகை அன்றிக்கே அதுக்கு ஹ்ருதயமான ததீய வைபவத்தை -பயிலும் சுடர் ஒளி -நெடுமாற்கு அடிமை -இரண்டாலும் அருளிச் செய்தார்-
நிற்கப் பாடி
1-துர்க்ரஹமான வேதார்த்தத்தை பிரதிபத்தி விஷயமாம் படி பாடி
நிற்கப்பாடி
2-கேட்டவர்கள் நெஞ்சிலே ஊற்று இருக்கும் படி பாடி என்றுமாம்
வேதத்தின் உட்பொருள் நிற்கப்பாடி
3-அது நிற்கும் நான்மறை யானாப் போலே அதில் அர்த்த ரூபமான இதுவும் சர்வ காலமும் அழிவின்றிக்கே நிற்கும் படியாகப் பாடி என்றுமாம்
வேதியர் வேதத்தின் உட்பொருள் நிற்கப் பாடி
4-வைதிகர் ஆனவர்கள் அதுக்கு ஹ்ருதயமான அர்த்த தாத்பர்யத்தை அறிந்து அதிலே நிஷ்டராம் படி பாடி
என்நெஞ்சுள் நிறுத்தினான்-அது தன்னை என் நெஞ்சிலே ஸூ பிரதிஷ்டிதமாம் படி பண்ணினார்
என் நெஞ்சுள் நிற்கப்பாடி நிறுத்தினான்=பாடுகிறபோதே என் நெஞ்சில் தங்கும் படிக்கு ஈடாக விரகிட்டுப் பாடி நிறுத்தினான்-நெஞ்சுள் நிறுத்தினான்- அது தன்னிலும் மேல் எழச் சொல்லி விடுகை யன்றிக்கே அந்தரங்கமாக உபதேசித்தார்-என் நெஞ்சுள் நிறுத்தினான்
புன்மையே வேஷமான என் நெஞ்சிலே படுத்தினார்-நிறுத்தினான்-உபதேசித்தவர் தாமே குலைக்கிலும் குலையாத்படி திருட அத்யவசாயமாக உபதேசித்தார்-என் நெஞ்சுள் நிறுத்தினான்-தத் விஷயமும் உட்பட வூடு போகாத என் நெஞ்சிலே ததீய வைபவம் உட்பட நடையாடும்படி பண்ணினார் –மிக்க வேதியர் வேதத்தின் உட் பொருள் நிற்கப்பாடி என் நெஞ்சுள் நிறுத்தினான்-வேதார்த்தங்களை வகுத்து அதுக்குப் பாசுரம் இட்டுத் திருவாய் மொழி பாடினால் போலேயோ -அப்பரமார்த்தங்களை என் நெஞ்சிலே படுத்தின அருமை –
வேதார்த்தங்களைத் திருவாய் மொழியிலே சேர்த்து -அத் திருவாய் மொழியின் அர்த்தங்களை என் நெஞ்சிலே சேர்த்தார்-ஆசார்ய வைபவம் கைபட்டவனுக்கு ஆய்த்து சகல வேதார்த்தங்களும் வசப்படுவது=மிக்க வேதியர் வேதத்தின் உட் பொருள் நிற்கப்பாடி என் நெஞ்சுள் நிறுத்தினான்பிரமாண வைபவத்தையும்- ப்ரமேயமான தத் வைபவத்தையும்- ப்ரமாத்ரு வைபவத்தையும் -அபிமத வைபவத்தையும்-இவர் நெஞ்சிலே படும்படி பூர்ண உபதேசம் பண்ணினார் ஆய்த்து –
கண்டு கொண்டு என்னை காரி மாறப் பிரான்
பண்டை வல்வினை பாற்றி யருளினான்
எண் திசையும் அறிய இயம்புகேன்
ஒண் தமிழ் சடகோபன் அருளையே-7–
விசேஷஜ்ஞரோடு அவிசேஷஜ்ஞரோடு வாசி அற எல்லாரும் அறியச் சொல்லுகிறேன் –தொண்டீர் எல்லீரும் வாரீர் -என்னும் ஆழ்வாரோட்டை வாசனையால் சொல்லுகிறார் –-
இவ்வுபகாரம் நிரவதிகம் ஆனாப் போலே திக்குகளும் நிரவதிகமாகப் பெற்றிலோம்
இது என்னளவிலே பர்யவசிப்பதே என்கிறார் –ஒள்ளிய தமிழ்-பெரிய ஆழத்தில் உள்ளுக் கிடந்த பதார்த்தங்கள் எல்லாம் தரையிலே காணுமா போலே அதிக்ருதாதிகாரமாய் அவகாஹிக்க ஒண்ணாதே-யதோ வாசோ நிவர்த்தந்தே -என்னும் விஷயத்தை சர்வாதிகாரம் ஆக்குகையாலே ஒண் தமிழ் என்கிறது –மயர்வற மதிநலம் அருளினதுக்கும் அகப்படாத என்னையும் ஆழ்வார் அங்கீ கரித்த அருளைக் கிடீர் சொல்லுகிறது –
ஸ்வ ரஷணத்திலே தத் பரராய் இருப்பாரும் தேவ தாந்த்ரங்கள் ரஷகர் என்று இருப்பாருமான கோஷ்டிகளிலே சென்று-ஆழ்வாருடைய கிருபையை வெளியிடக் கடவேன்
எண் திசையும் என்று -பத்து திக்குகளுக்கும் உப லஷணம்-மேல் ஏற மாட்டாமாலும் கீழ் இழிய மாட்டாமலும் எண் திசையும் என்கிறார்-ஆழ்வாருடைய அருள் உண்டாகையாலே அத பத்யமில்லை-ஆழ்வார் போனால் அல்லது போகாதவர் ஆகையாலே மேல் ஏற மாட்டார்
அறிய இயம்புகேன்-நாடு நகரமும் நன்கு அறிய -என்னுமா போலே எல்லாரும் அறியும் படியாக இயம்புகேன்-ஆழ்வாருடைய கிருபா பிரபாவத்தையும் அது தம்மளவிலே பலித்த படியையும் தம்முடைய பாபம் போனபடியையும் தமக்கு அபிமத லாபம் உண்டானபடியையும் இவையாய் இருந்தது இவர் இயம்புகிறது
ஒண் தமிழ் சடகோபன் என்னளவில் பண்ணும் உபகாரத்தையோ நான் இயம்புவது
லோகத்தாருக்கு அவர் பண்ணின உபகாரத்தையும் சொல்லி யன்றோ
கருணையாலே என்னைத் திருத்தின படியையும் கவி பாடி லோகத்தைத் திருத்தின படியையும் இயம்புகேன்
சடகோபன் அருளையே–தெரியச் சொன்ன வாயிரம் -என்கிறபடியே திருவாய் மொழியைப் பாடி சம்சாரிகளுடைய சாட்யத்தைப் போக்கினவருடைய கிருபையை –
எண் திசையும் அறிய இயம்புகேன்–தேவாஸ் ஸ்வஸ்தா நமாயந்தி தைத்யாஸ் சர்வே ஹதா கதா -ந பயம் வித்யதே கிஞ்சித் ஜிதம் பாகவதா ஜகத் -என்று ஸ்ரீ ஜாம்பவ மஹா ராஜர் தரை விக்கிரம பிரசம்சையை சாற்றிக் கொண்டு திரிந்தால் போலே–அங்கு ஈஸ்வரனுடைய சக்தி பிரபாவம்–இங்கு ஆழ்வாருடைய கிருபா பிரபாவம்–அங்கு பிரயோஜனாந்த பரர் வாழ்ந்த படி -இங்கு அநந்ய பிரயோஜனர் வாழ்ந்த படி–அங்கு க்ருத்ரிம வியாபாரம் -இங்கு அக்ருத்ரிம வியாபாரம்–இனி பத க்ரமத்தாலே திருத்தின படிக்கு சாம்யம் உண்டாகில் உண்டு அத்தனை –
3-ஸ்ரீ வைஷ்ணவர்கள் பக்கல் உத்தேச்ய பிரதிபத்தியாவது
வேதனை வெண் புரி நூலனை விண்ணோர் பரவ நின்ற
நாதனை ஞாலம் விழுங்கும் அநாதனை ஞாலந்தத்தும்
பாதனைப் பாற்கடல் பாம்பணை மேல் பள்ளி கொண்டு அருளும்
சீதனையே தொழுவார் விண்ணுளாரிலும் சீரியரே – – -79
விண்ணுளாரிலும் சீரியரே – நிரந்தர பகவத் அனுபவமே யாத்ரை யான -அத்தேசத்தில் அன்றியிலே –அப்படிக்கு விரோதியான சம்சாரத்திலே இருந்தே -அதுவே யாத்ரையாய் இருக்கையாலே – இவர்கள் நித்ய ஸூரிகளிலும் சீரியர்-ஸ்ரீ யபதியை விரோதி பஹுளமான சம்சாரத்தில் இருந்தே ஆஸ்ரயிக்கும் பாகவத உத்தமர்கள் நிரபாதகமான அங்க நித்ய அனுபவம் செய்பவர்களை விட மேம்பட்டவர் என்கிறார்
வார் புனல் அம் தண் அருவி வட திரு வேங்கடத்து எந்தை
பேர் பல சொல்லிப் பிதற்றிப் பித்தர் என்றே பிறர் கூற
ஊர் பல புக்கும் புகாதும் உலோகர் சிரிக்க நின்று ஆடி
ஆர்வம் பெருகிக் குனிப்பார் அமரர் தொழப்படுவாரே.–3-5-8–
இடைவிடாது பகவதநுபவம் செய்வதற்கென்றே வாய்த்த இடமான பரமபதத்தில் பகவதநுபவத்திற்கு எவ்வகையான இடையூறுமில்லாதலால் அங்கிருந்து கொண்டு பகவானை யநுபவித்தல் வியப்பன்று; உண்டியே உடையே உகந்தோடு மிம்மண்டலம்
பகவதநுபவத்திற்கு நேர்விரோதியாதலால் அப்படிப்பட்ட இந்த இருள் தருமா ஞானத்திலிருந்து கொண்டே அங்ஙனம் நித்யாநுபவஞ் செய்தலில் மிக அருமை யுண்டாதலால் அவ்வருமையைப் போக்கி எம்பெருமானை இடைவிடாது
அனுபவிக்குமவர்களை நித்ய முக்தர்களிலும் மேம்பட்டவராகக் கூறத்தடையுண்டோ?
ஒரு சிறந்த காரியத்தைப் பிரதிபந்தகமில்லாத விடத்தில் தலைக்கட்டுதலிற் காட்டிலும் பிரதிபந்தகம் மலிந்த விடத்தே தலைக்கட்டுதல் வியக்கத்தக்கதன்றோ
எம்பெருமான் புக்கல் ஈடுபாடு கொண்ட- ஆவார் மற்றொன்றிற் சிந்தை செலுத்தாது அப்பெருமானையே மனமொழிமெய்களால் பூர்ணாநுபவஞ் செய்யப் பெற்றவர். இவ்வுலகத்திலிருந்து கொண்டே நித்யஸூரிகளிலும் மேம்பட்டவராவர் என்று அருளிச் செய்தாராயிற்று.-இவ்விஷயத்தை அனுபவிக்கப் பெற்றவர்கள் ஸூரிகளிலும் விலக்ஷணர் ஆவர்கள்
மீதோடி வாள் எயிறு மின்னிலக முன் விலகும் உருவினாளைக்
காதோடு கொடி மூக்கு அன்று உடன் அறுத்த கைத் தலத்தா என்று நின்று
தாதோடு வண்டலம்பும் தண் சேறை எம்பெருமான் தாளை ஏத்திப்
போதொடு புனல் தூவும் புண்ணியரே விண்ணவரில் பொலிகின்றாரே –7-4-3-
தாதோடே வண்டுகள் ஆனவை மது பானம் பண்ணி அறையா நின்றுள்ள திருச் சேறையிலே எழுந்து அருளி இருக்கிறவன் திருவடிகளை ஏத்தி –புஷ்பங்களோடு கூட ஜலத்தைக் கொண்டு ஆஸ்ரயிக்கிற பாக்யாதிகரே – சூட்டு நன் மாலைகள் தூயன வேந்தி ஆஸ்ரயிக்கிற நித்ய ஸூரிகளில் சம்ருத்தர் ஆகிறார் –அங்கே இருந்து ஆஸ்ரயிக்கிறவர்கள்
இங்கே இருந்தபடியே ஆஸ்ரயிக்கிறவர்களோடே ஒவ்வார் இறே –பாற் கடல் பாம்பணி மேல் பள்ளி கொண்டு அருளும் சீதனையே தொழுவார் விண்ணுளாரிலும் சீரியரே
வலி வணக்கு வரை நெடும் தோள் விராதை கொன்று வண் தமிழ் மா முனி கொடுத்த வரி வில் வாங்கி
கலை வணக்கு நோக்கரக்கி மூக்கை நீக்கி கரனோடு தூடணன் தன் உயிர் ரை வாங்கி
சிலை வணக்கி மான் மறிய வெய்தான் தன்னை தில்லை நகர் திரு சித்ர கூடம் தன்னுள்
தலை வணக்கி கை கூப்பி ஏத்த வல்லார் திரிதலால் தவமுடைத்து தரணி தானே —10-5–
அக்காலத்திலே காணப் பெறாத இழவு எல்லாம் தீரத் தலை யுண்டான பிரயோஜனம் பெற வணங்கி -கை யுண்டான பிரயோஜனம் பெறத் தொழுது -வாயுண்டான பிரயோஜனம் பெற பெற ஏத்த வல்லார்-இவர்களுடைய சஞ்சாரத்துக்கு விஷயமாகையாலே பூமியானது பாக்யத்தை உடையது –
பயிலும் சுடரொளி மூர்த்தியைப் பங்கயக் கண்ணனைப்
பயில இனிய நம் பாற்கடற் சேர்ந்த பரமனைப்
பயிலும் திருவுடையார் எவரேலும் அவர்கண்டீர்
பயிலும் பிறப்பிடை தோறு எம்மைஆளும் பரமரே.–3-7-1-
ஒன்றன் மேல் ஒன்றாக நிரந்தரமாய் வருகிற ஜென்மங்களில் அவகாசம் தோறும் என்னை அடிமை கொள்ளும் ஸ்வாமிகள்-நின் பன் மா மாய பல் பிறவி -என்று நிந்தித்த ஜன்மத்தையும் அனுமதி பண்ணுகிறார் ததீய சேஷத்வ ரசத்தாலே-முன்பு அவனை பரமர் என்றீர் –இங்கே இவர்களை பரமர் என்னா நின்றீரே -என்ன அனுபாவ்ய குண ஆதிக்யத்தாலே சொல்லிற்று அங்கு -இங்கு அக் குணத்துக்கு தோற்றவர்களை சொல்லுகிறது தத் சம்பந்தம் ஒழிய சொல்லில் பகவத் சம்பந்தம் அற்றதாம் –
‘நல்ல வாய்ப்பாய் இருந்தது’ என்று முகம் காட்டுவித்துக்கொண்டு பிரயோஜனத்திற்கு மடி யேற்கை யன்றியே, அவன் தன்னையே பிரயோஜனமாகப்பற்றி நெருங்கும் செல்வமுடையார். என்றது, ஒரு பிரயோஜனத்துக்குப் பற்றினவர்கள்-அது பெற்றவாறே அவனை விட்டுப் போவர்கள் அன்றோ? அவன்தன்னையே பற்றினவர்கள் பின்னை அங்கே நெருங்குமத்தனையே யாதலின்,-‘பயிலும்’ என நிகழ்காலத்தால் அருளிச்செய்கிறார் என்றபடி. அவன் இறைமைத்தன்மைக்கு எல்லையாய் முடி கவித்தாற்போலே,
இவர்கள் அடிமைக்கு எல்லையாய் முடி கவித்திருப்பவர்களாதலின், ‘திருவுடையார்’ என்கிறார்.‘ஆயின், இதனைத் திருவாகச் சொல்லலாமோ?’ எனின், ‘அந்தரிக்ஷ கதஸ் ஸ்ரீமான் – ஆகாயத்தை அடைந்தவன் ஸ்ரீமானாக உள்ளவன்’, ‘ஸது நாகவரஸ் ஸ்ரீமான் – அந்தக் கஜேந்திர ஆழ்வான் ஸ்ரீமானாய் இருந்தான்,’ ‘லக்ஷ்மணோ லக்ஷ்மி சம்பந்ந:’ என்னும் இடங்களில் இதனைத் திருவாகக் கூறப்பட்டுள்ளமை காண்க.
‘அந்தரிக்ஷ கதஸ் ஸ்ரீமான்’ – இலங்கைவிட்டுப் பெருமாள் திருவடிகளில் வர என்று ஓரடி இட்டபோதே, இராவண சம்பந்தத்தால் வந்த திருவின்மை நீங்கிச் சொரூபத்திற்குத் தகுந்ததான ஸ்ரீ குடி புகுந்தது என்றபடி.-‘சதுநாகவரஸ் ஸ்ரீமான்’ – சர்வேசுவரன் அரைகுலையத் தலைகுலைய வந்து விழ வேண்டும்படியான ஆர்த்திதன்னை ஒரு செல்வமாகச் சொல்லப்பட்டது அன்றோ ஸ்ரீ கஜேந்திராழ்வானுக்கு?‘நீர் இளவரசாக முடி சூடாவிடில் நாம் முடி சூடோம்,’ என்று பெருமாள் அருளிச் செய்யவும் முடி சூட இசையாத இளைய பெருமாளை அன்றோ, ‘இலக்ஷ்மணன் ஐஸ்வரியத்தால் நிறையப்பெற்றவன்,’ என்றது?
மற்றும், ஸ்ரீ பரதாழ்வானை, ‘பிள்ளாய்! உன் உள் வெதுப்பு ஆறுவது எப்போதோ!’ என்று கேட்க,-‘இராஜ இலக்கணம் பொருந்திய தமையனாருடைய திருவடிகளைத் தலையிலே எதுவரையிலும் தாங்கமாட்டேனோ, அது வரையிலும் எனக்கு நிம்மதியானது உண்டாகமாட்டாது,’ என்கிறபடியே, பெருமாளும் தமக்கு வகுத்த முடி சூடி,
நானும் எனக்கு வகுத்த முடி சூடின அன்று ஆறும்,’ என்றான் அன்றோ? ‘அரசு அமர்ந்தான் அடி சூடும் அரசு’ என்றார் ஸ்ரீ குலசேகரப் பெருமாள்- ‘அடியிலே தலையாக வாழ அடியிடுகிறார்,’ என்றபடி. ‘வைஸ்ரவணன்’ என்னுமாறு போன்று, பாரதந்திரியமாகிற செல்வத்தையுடையவர்களாதலின்,-‘உடையார்’ என்கிறார். ‘இச்செல்வத்தை உடையர் ஆகிறார்கள்: மற்று என்ன ஏற்றம் உண்டாக வேண்டும் இவர்களை ஆதரிக்கைக்கு?’ என்னில்,-எவரேலும் –-ஜன்ம ஒழுக்க ஞானங்கள் எவையேனும் ஆகவுமாம்; இது உண்டாமத்தனையே வேண்டுவது.-அவர் கண்டீர் –-அபிமானம் இல்லாதார் நமக்குத் தேட்டம்,’ என்கிறார்; ‘பிறப்பு ஒழுக்கம் ஞானம் இவைகளால் வரும் அபிமானம்
பகவானுக்கு அடிமைப்படுதற்கு விரோதியாகையாலே அவை இல்லாதார் உத்தேசியர்,’ என்கிறார் என்றபடி.-‘அவர்கள் எத்தனை நாள்களுக்கு உத்தேசியர்?’ என்ன,
பயிலும் பிறப்பிடை தோறு –மேன்மேல் என நெருங்கி வருகிற பிறவிகளில் அவகாசங்கள்தோறும். ‘நின் பன் மா மாயப் பல்பிறவியில் படிகின்றயான்’ என்று
வெறுக்கத் தக்கதாகச் சொன்ன பிறவி தன்னையே விரும்புகிறார் இப்போது; பாகவதர்களுக்கு அடிமைப்படுவதற்கு உறுப்பு ஆகையாலே ‘மேன்மேல் எனப் பிறவிகள் உண்டாகவும் அமையும்; ஒரு பாகவதர் ஸ்ரீ பாதத்திலே வசிக்கப்பெறில்’ என்கிறார் என்றபடி.
எம்மை ஆளும் பரமர் – என்னை அடிமை கொள்ளக்கூடிய ஸ்வாமிகள். ‘முன்பு அவனைப் ‘பரமன்’ என்றீர்; இங்கே இவர்களைப் ‘பரமர்’ என்னாநின்றீர்;-இது இருக்கும்படி என்?’ என்னில், அனுபவிக்கும் குணங்களின் மிகுதியாலே சொல்லிற்று அங்கு;
இங்கு, அக்குணங்களுக்குத் தோற்றவர்களைச் சொல்லுகிறது. ‘நன்று; ‘எவரேலும்’ எனின், அமையாதோ?-பயிலுந் திருவுடையார்’ எனல் வேண்டுமோ?’ எனின், அந்தச் சம்பந்தம் ஒழியச் சொல்லில் பகவானுடைய சம்பந்தம் அற்றதாம்.-குண க்ருத தாஸ்யம் -அவன் இடம் பாகவதர்கள் பண்ண –நான் ஸ்வரூப பிரயுக்த தாஸ்யம் இவர்கள் பக்கல் என்கிறார்
4-உபாயத்தளவில் அத்யாவச்ய பிரதிபத்தி யாவது –
களைவாய் துன்பம் களையா தொழிவாய் களை கண் மற்றிலேன்
வளைவாய் நேமிப் படையாய்! குடந்தைக் கிடந்தாய்! மாமாயா!
தளரா உடலம் என தாவி சரிந்து போம் போது
இளையா துன தாள் ஒருங்கப் பிடித்துப் போத இசை நீயே.–5-8-8-
உன்னைப் பிரிந்து படுகிற துக்கத்தை போக்கிலும் போக்கு -தவிரிலும் தவிரு -வேறு ரக்ஷகரை யுடையேன் அல்லேன் -நீ உன் கார்யம் செய்யிலும் செய் -தவிரிலும் தவிரு என் தலையில் குறை இல்லை –அஹமஸ் அபராதானாம் ஆலய அகிஞ்சன அகதி – “த்வம்ஏவ உபாய பூதோ மே பவ இதி ப்ரார்த்தநா மதி-என்கிற அம்சத்தில் குறை இல்லை –சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி என்கிற உன் கூறு செய்யிலும் செய் -தவிரிலும் தவிரு -துக்க நிவ்ருத்தி உம்ம தான பின்பு கிருஷியும் உம்மை தாக வேண்டாவோ என்ன-துக்கி யாகைக்கு கிருஷி பண்ணின நான் நிவர்த்தகன் ஆகவோ -ஒரு சக்தி கிருத்யத்தை நான் செய்யவோ
என்னான் செய்கேன் யாரே களை கண் என்னை என் செய்கின்றாய்
உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன்
கன்னார் மதிள் சூழ் குடந்தைக் கிடந்தாய் அடியேன் அருவாணாள்
செந்நாள் எந்நாள் அந்நாள் உன தாள் பிடித்தே செலக் காணே.–5-8-3-
நானும் எனக்கு கடவனாய் -பிறரும் சக்தர் ஆனவன்றும் -உன்னால் வரும் நீ ஒழிய -என்னால் வரும் நீயும் வேண்டா -பிறரால் வரும் நீயும் வேண்டா-அசக்தர் அப்ராப்தர் அரஷகர் -பிறர் –
ஒரு குறையும் அவர்களால் நிவர்த்திக்க வேண்டேன்-இதுகாறும் அநப்யுபகம்ய வாதத்தாலே -உடன்படாமலே பேசுகின்ற வாதம்.-அருளிச் செய்தார்;-அப்யுபகம்ய வாதத்தாலே -உடன்பட்டுப் பேசுகின்ற வாதத்தாலே –அருளிச் செய்கிறார்-வேறு உபாயங்களிலே தமக்கு ஞானசக்திகளும் உண்டாய்,-வேறு தெய்வங்கட்கு மோக்ஷத்தைக் கொடுக்கும் சக்தியு முண்டாகிலும், ஸ்வரூபத்திற்கு விரோதமாகையாலே தமக்கு வேண்டா-உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன்” என்பதற்கு, மூன்று வகையாகப் பொருள் அருளிச் செய்கிறார்.–முதலது, “என் நான் செய்கேன்” என்றதனை மாத்திரம் கடாக்ஷித்து அருளிச்செய்வது.-என்றது, உன்னால் வரும் உன்னை ஒழிய, வேறு உபாயங்களால் வரும் உன்னையும் வேண்டேன் என்கிறார்–“மந்மநா பவ மத்பக்தோ மத்யாஜீ மாம் நமஸ்குரு மாமேவ ஏஷ்யஸி யுக்த்வா ஏவம் ஆத்மாநம் மத்பராயண:”- ஸ்ரீகீதை. 9. 34.-என்னை நமஸ்காரம் செய்வாய், என்னை அடைவாய்” என்றால் எனக்குச் சோகம் போகாது கண்டாய்.-ஓதி நாம் குளித்து -நமக்கே நலம் ஆதலால் -திருப் புல்லாணி-நமக்கு நலம் தேடும் –உபாயாந்தரம் வேண்டாம் -என் நலம் நீ தேடுவதே உக்தம் –உபாயம் தன்னைப் பொறுக்கும் -உபாயாந்தரம் இரண்டையும் பொறுக்கும் -பிரபத்தி எதையும் பொறாதே –யாவையாலும்’ என்னாமல், ‘யாவராலும்’ என்கிறது உபாய பாவம் ஒரு சேதனனாலே என்றிருக்கையாலே.
அன்றிக்கே, –இரண்டாவது பொருள்.-“என் நான் செய்கேன், யாரே களை கண்” என்னும் இரண்டனையும் கடாக்ஷித்து அருளிச்செய்வது-பெறுவது உன்னையே யாகிலும் உன்னாலே பெறுமன்று வேண்டுவன், என்னாலும் பிறராலும் பெறும் உன்னையும் வேண்டேன்.-மற்றையவற்றிற்கும் அபிமத சித்தி உண்டேயாகிலும் காலன் கொண்டு மோதிரம் இடுமாறு போலே ஸ்வரூப விரோதியானது எனக்கு வேண்டாம்.-கடல் கடத்தப் பெற இருத்தல், சபித்துப் பெற இருத்தல் செய்யாத பிராட்டியைப் போலே. என்றது,-இரண்டு தலைகளையும் அழிக்கையே அன்றோ. ஒருவராலும் ஒருகுறை நிரம்புவதாக வேண்டி இரேன்.
அன்றிக்கே, ‘உன்னால் அல்லால்’ என்கிற இதனை, உபேய விஷயமாக்கி, ‘உன்னை ஒழியமற்றென்றால் எனக்கு ஒருகுறை இல்லை-மூன்றாவது பொருள்: உம்மாலும் பிறராலும் சாத்யம் அல்லாத என்னை விட்டு,உபய சாத்யமான ஐஸ்வர்யாதிகளைப் பெற்றுப்போம் என்ன,-‘உன்னால் அல்லால்’ என்று தொடங்கி அதற்கு விடை அருளிச் செய்கிறார். ‘உன்னை ஒழிய மற்றொன்றால்’ என்றது, பிராப்யனான உன்னை ஒழிய வேறோர் ஐஸ்வர்யாதிகளால் என்றபடி
முதலாவார் மூவரே அம்மூவருள்ளும்
முதலாவான் மூரி நீர் வண்ணன் -முதலாய
நல்லான் அருள் அல்லால் நாம நீர் வையகத்துப்
பல்லார் அருளும் பழுது —-15-
சகல ஜகத் காரண பூதன் திருமால் திருவருளே நன்மையை பயக்கும்-முதலாய நல்லான் அருளே நன்று பல்லார் அருளும் பழுது--இதுக்கு அடங்க காரண பூதனுமாய்-இவற்றை உடையானும் ஆகையாலே இவற்றின் பக்கல் வத்சலனுமாய் இருந்துள்ள அவனுடைய அருள் அல்லது பிரசித்தியை யுடைத்தான நீர் சூழ்ந்த பூமியில் உள்ள-பலருடைய பிரசாதமும் பழுது -வ்யர்த்தம்-இவனை ஒழிந்த மற்றை இருவருடைய அருளோடு கீழ்ச் சொன்னவர்கள் அருளோடு வாசி யடைய வ்யர்த்தம்-அன்றிக்கே நீர் சூழ்ந்த பூமியில் நாம மாத்ரமான பல்லார் அருளும் பழுது -என்றதாகவுமாம் –-பழுது தான் பலியாமையே அல்ல-பகவத் பிரசாதத்தையும் இழப்பிக்கும்-அத் தேவதைகள் உடைய உபேஷையும் இவ்வாத்மாவுக்கு பகவத் பிரசாதத்தோடு ஒக்கும்-திருவடி நாமம் மறந்தும் புறம் தொழா மாந்தர் -நான்முகன் திரு -68-மார்க்கண்டேயனை ருத்ரன் கை விட
ராவணன் தம்பியைக் கைவிடக் க்ருதார்த்தனானாப் போலே க்ருதார்த்தனாய்த்து இலனோ-தேவ தாந்தரங்களுக்கும் உபாயாந்தரங்களுக்கும் தானே உள்ளீடாய் நிற்கையால் தான் காண வேண்டாதவரை அவற்றிலே ருசியை வர்த்திப்பித்துத் தன்னை யகற்றும்
தான் உகந்தாரை அவற்றில் ருசிகளை விட்டுத் தன்னை உகக்கும் படி பண்ணும்-
ஆத்ம ஞானமும் -அப்ரதிஷேதமும் -தானே வேண்டுவது -விலக்காமை அத்வேஷ மாத்ரமே கொண்டு அருள் பயன்பெறும்-அவன் அருள் எப்போதும் நித்யமாகவே இருந்தாலும்-கார்யகரம் ஆவதுக்கு இதுவே வேண்டுவது-முதலாய நல்லான் -பெற்ற தாய் ஆகையால் பரிவன்-தர்மஞ்ஞஸ் சரணாகத வத்ஸல-முலைப் பால் இருக்க விஷ பானம் பண்ணுவாரோ
அவரவர் இறையவர் குறையிலர் -அவரவர் -விதி வழி அடைய நின்றனர் –அந்தர்யாமியாய் புகுந்து -மஹா க்ரமம்-அவன் திரு நாமம் – சர்வ தேவதா நமஸ்காரம் கேசவம் பிரதி கச்சதி –ஆகாசம் நீர் கடலுக்கு போவது போலே
சென்னியோங்கு தண் திருவேம்கடம் உடையாய் உலகு
தன்னை வாழ நின்ற நம்பீ தாமோதரா சதிரா
என்னையும் என் உடைமையும் உன் சக்கரப் பொறி ஒற்றிக் கொண்டு
நின்னருளே புரிந்து இருந்தேன் இனி என் திருக் குறிப்பே -5 -4-1 –
நின் அருளே –இவர் அடியாகையால் இறே புதைத்து வார்ப்பது-அவன் அடியாக வரில் –
விதி வாய்க்கின்றது காப்பார் யார் -என்னும்படி இறே பெருகுவது –
புரிந்து
எத்தனையும் வான் மறந்த காலத்தும் பைம் கூழ்கள்
மைத்து எழுந்த மா முகிலே பார்த்து இருக்கும் மற்றவை போல்
மெய் துயர் வீட்டா விடினும் வித்துவ கோட்டு அம்மா! என்
சித்தம் மிக வுன் பாலே வைப்பன் அடியேனே —5-7-(பெருமாள் திருமொழி )-இத்யாதி-இருந்தேன் –உபாயாந்தரமும் -உபேயாந்தரமும் குலைகை-அனந்யார்ஹ சேஷத்வ ஞானமும் பிறந்து –விரோதி நிவ்ருத்தியும் பிறந்து –அபேஷிதமும் பெற்றதாகில் –இனி பதறுகிறது என் -இனி என் திருக் குறிப்பே –திருக் குறிப்பு –திரு உள்ளத்தில் நினைவு–
என்னை முற்றும் உயிர் யுண்டு என் மாயா வாக்கையிதனுள் புக்கு
என்னை முற்றும் தானேயாய் நின்ற மாய வம்மான் சேர்
தென்னன் திருமால் இரும் சோலைத் திசை கை கூப்பிச் சேர்ந்த யான்
இன்னம் போவேனே கொலோ என் கொல் அம்மான் திருவருளே –10-7-3-)-
5-உபேயத்தளவில் த்வரா பிரதிபத்தியாவது –
ஆகம் சேர் நரசிங்கமதாகி ஓர்
ஆகம் வள்ளுகிரால் பிளந்தான் உறை
மாக வைகுந்தம் காண்பதற்கு என் மனம்
ஏகம் எண்ணும் இராப் பகல் இன்றியே–9-3-7-
அந் நரசிங்கம் வசிக்கிற முழஞ்சு காண ஆயிற்று-ஆசைப் படுகிறது--மாகம் -பரம ஆகாசம் என்னக் கடவது அன்றோ –மஹத்தான கம் -பரம ஆகாசம் -பரமபதம்-என் மனஸ்ஸூ ஒருபடிப்பட நினையா நின்றது -சேதனர்க்கு இரா ஒரு காரியமும் பகல் ஒரு காரியமும் இருக்கும் இறே -இவருக்கு அஹோ ராத்ர விபாகம் அற இதுவேயாய்ச் செல்லா நின்றது –சமா த்வாதச தத்ராஹம் ராக வஸ்ய நிவேசனே புஞ்சானம் அநு ஷான் போகான் சர்வகாம ஸம்ருத்தி நீ -என்று பிராட்டி திரு அயோத்யையை நினைத்தால் போலே யாயிற்று இவர் திரு உள்ளத்துக்கு பரமபதம் ஸ்வ தேசமாய் இருக்கிற படி –
முளிந் தீய்ந்த வெம் கடத்து மூரிப் பெரும் களிற்றால்
விளிந் தீய்ந்த மா மரம் போல் வீழ்ந்தாரை நினையாதே
அளிந் தோர்ந்த சிந்தை நின் பால் அடியேற்கு வானுலகம்
தெளிந்தே என்று எய்துவது திரு விண்ணகரானே –6-3-8-
இங்கே இருந்து-இன்னார் இன்னதனை நாள் ஜீவித்து முடிந்தார்கள்-இன்னவை தோற்றா நசித்தன -என்று இத்தை மநோ ரதியாதே –உன் பக்கலிலே தெளிவை உடையேனாய்
ஸ்நேஹத்தை உடையேனாய்–வெட்டிதான நிலத்திலே வலியதொரு பதார்த்தாலே தள்ளுண்டு போகிற மா மரம் போலே சம்சாரத்திலே இருந்து ஜீவித்து முடிந்து போவாரை மநோ ரதியாதே-தேவர் பக்கலிலே ஸ்நேஹித்து-அநவரதம் உண்டான அவதானத்தை உடைத்தான மநோ ரதத்தை உடைய அநந்ய கதியான எனக்கு-அ புநரா வ்ருத்தி லஷணமான மோஷத்தை என்று தருவது-அவ் வருகு படுத்துகைக்காக வந்து இருக்கிற உனக்கு தரும் நாள் இந்நாள் என்று தெரியும் இறே
களிப்பும் கவர்வும் அற்றுப் பிறப்புப் பிணி மூப்பு இறப்பு அற்று
ஒளிக் கொண்ட சோதியமாய் உடன் கூடுவது என்று கொலோ
துளிக்கின்ற வான்நிலம் சுடர் ஆழி சங்கேந்தி
அளிக்கின்ற மாயப்பிரான் அடியார்கள் குழாங்களையே –2-3-10-
நான் எனக்கு என்று அகன்று நிற்க வேண்டாதே-அத் திரளில் ஒரு நீராகக் கூடுவது என்றோ
வைஷ்ணவ ஸஹவாசம் இனிது என்று இருக்கச் செய்தேயும் அஹங்காரத்தால் செய்யப் போகாது ஒழிகிறது இறே-வர்ஷிக்கிற ஆகாசத்தையும் அத்தாலே ஜீவிக்கிற பூமியையும் -சங்கல்பத்தால் அன்றிக்கே கையும் திரு ஆயுதங்களுமாய் ரக்ஷணமே யாத்ரையாய் இருக்கிற ஆச்சர்ய சக்தி உக்தனான ஈஸ்வரன்-பரம பதத்தில் ஆபரணமாய் காட்சி தரும் -இங்கு ஆயுதமாய் இறே திவ்ய ஆயுதங்கள் இருப்பது-இவன் தன்னையே அன்றிக்கே இவனுடைய ரக்ஷகத்வத்திலே தோற்று இருக்கும் ததீயர் திரள்களை –திரளாக வேணும் -அது தான் அநேகமாக வேணும்-இவ் விஷயத்துக்கு உசாத் துணையாம் போது அசங்க்யாதராக வேணும் என்று இருக்கிறார் –இவ்வாறு காக்கின்ற அக் காத்தல் தொழிலுக்குத் தோற்றிருப்பராய், அவ் விறைவனைப் போன்றே அடையத் தக்கவருமாய்-ஓக்க ப்ராப்யருமாய் – இறைவனுடைய நற் குணங்களுக்குத் தேசிகராய் இருப்பாருமாய்,
போதயந்த பரஸ்பரத்துக்கு -தம் அனுபவங்களை ஒருவர்க்கொருவர் உணர்த்திக் கொண்டு கலந்து பழகுவதற்குத் துணையாக இருக்கின்றவர்களுமாய் உள்ள நித்திய ஸூரிகளுடைய குழாங்களைச் சென்று சேர்வது எப்போதோ!’ என்கிறார்.
கலியர் கல அரிசிச் சோறு உண்ண வேண்டும்’ என்று நினைக்குமாறு போன்று, இவரும் ‘அத்திரளில் போய்ப் புகப் பெறுவது என்றோ!’ என்கிறார். ஆற்றாமையின் மிகுதி இங்ஙனம் கூறச் செய்கின்றது.
பாண்டி நாட்டினின்றும் ஸ்ரீ வைஷ்ணவர் சிலர் வந்து நம்பிள்ளையைக் கண்டு வணங்கித்
‘தேவரீர், எங்களுக்குத் தஞ்சமாக இருப்பது ஒரு வார்த்தை யருளிச் செய்ய வேண்டும்,’ என்று விண்ணப்பம் செய்ய, பிள்ளையும் ‘கடற்கரை வெளியை நினைத்திருமின்’ என்று அருளினார்.-அவர்களும் ‘மணற் குன்றையும் காவற் காட்டையும் நினைத்திருக்கவோ?’ என்று விண்ணப்பம் செய்ய, பிள்ளையும் புன் முறுவல் செய்து அருளிச் செய்தபடி:‘சக்ரவர்த்தி திருமகன் கடற்கரையில் படை வீடு செய்திருக்கும் போது
ஸ்ரீ வானர வீரர்கள் இராகவார்த்தே பராக்ராந்தராய்த் தங்களை உபேக்ஷித்துப் பெருமாளையே நோக்கிக் கொண்டு கிடக்க, இவர்கள் கண்ணுறங்குந்தனையும் தான் உறங்கி, இவர்கள் கண்ணுறங்கினவாறே அம்பறாத் தூணியை முதுகிலே கட்டித்
திருக் கையிலே பிடித்த சார்ங்கமும் திருச் சரமுமாய் இராமுற்றும் நோக்கின
சக்கரவர்த்தி திருமகனுடைய திருவடிகளே தஞ்சமென்று இருமின்,’ என்று அருளினார்.ஆகையால், ஸ்வ ரக்ஷண சிந்தையற்று நியதனாகவே சர்வ ரக்ஷகன் கைக் கொண்டு ரஷிக்கும் என்றபடி’.-இந்த திருவாய் மொழிக்கு –நிதான பாசுரம் இது-–
ஒழிவு இல் காலம் எல்லாம் உடனாய் மன்னி
வழு இலா அடிமை செய்ய வேண்டும் நாம்
தெழி குரல் அருவித் திருவேங் கடத்து
எழில் கொள் சோதி எந்தை தந்தை தந்தைக்கே.–3-3-1-
வழு இலா அடிமை -சர்வ சேஷ வ்ருத்தியும் செய்ய வேண்டும்-சாஸ்த்ரங்களால் இதுவே புருஷார்த்தம் என்று அறிக்கை போராது-அனுஷ்டான பர்யந்தமாக வேணும் –
நாம்-திரு உள்ளத்தைக் கூட்டிக் கொள்ளுகிறார் ஆதல்-கேசவன் தமருக்கு பின்பு தனியர் அல்லாமையாலே திரு உள்ளத்தோடு ஒக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்களையும் கூட்டிக் கொண்டு சொல்லுகிறார்-அடிமையில் ஒன்றும் ஒருவர்க்கும் கூறு கொடுக்க வொண்ணாதாயிற்று.
எல்லா அடிமைகளும் நானே செய்யவேண்டும். என்றது,-‘இளைய பெருமாள் பிரியாமல் காட்டிலேயும் கூடப்போந்து செய்த அடிமைகளும் செய்ய வேணும்;-ஸ்ரீபரதாழ்வான் படை வீட்டிலே பிரிந்திருந்து செய்த அடிமைகளும் பிரியாதேயிருந்து செய்யவேணும்,’ என்றபடி.
ஓரடிமை குறையிலும் இவர்க்கு உண்டது உருக்காட்டாது; ஆதலின், ‘வழுவிலா அடிமை’ என்கிறார்.-ஓரடிமை குறையிலும் இவர்க்கு உண்டது உருக்காட்டாது-இவருக்கு-இந்தக் கைங்கரிய மநோரதம் முன்பும் உண்டன்றோ?
(‘தொழுது எழு என் மனனே’ ‘தழுவுவன் வணங்குவன் அமர்ந்தே’, ‘தனக்கேயாக எனைக்கொள்ளுமிஃதே’ என்பன போன்ற இடங்களைத் திருவுள்ளம் பற்றி.)
இப்போது ‘இவ்வளவால் போராது, அநுஷ்டான பர்யந்தமாகவேணும்,’ என்பார், ‘செய்ய’ என்கிறார்.-கைங்கரிய மநோ ரதமே பிடித்து இவர்க்கு உத்தேஸ்யமாயிருக்கிறது ஆதலின், ‘செய்ய வேண்டும்’ என்கிறார்.-இருந்தவிடத்திலேயிருந்து மநோரதிக்கிறார் இத்தனையன்றோ இவர்? அவன் தனக்குக் கலவிருக்கையான கலங்காப் பெருநகரத்தை விட்டு இவ்வளவும் வர வந்து திருமலையிலே நின்று, தன் அநுஷ்டானத்தாலே தெரிவிக்கிறானன்றோ தன் பாரிப்பை?–தெழி குரல் அருவி – கம்பீரமான ஒலியையுடைத்தான அருவிகளையுடைய. திருஅருவியின் ஒலியும் கூடக் கொள்ளத் தக்கதாயிருக்கிறது இவர்க்கு,-அந்நிலத்திலுள்ளதொன்றாகையாலே. இந்த ஒலி,
இவர்க்குக் ‘கைங்கரிய ருசியுடையார் அடிமை செய்ய வாருங்கோள்’ என்றாற்போலே இருக்கிறது.
6-சரீரத்தளவில் விரோதி பிரதிபத்தியாவது –
தூங்கார் பிறவிக்கள் இன்னம் புகப் பெய்து
வாங்காய் என்று சிந்தித்து நான் அதற்கு அஞ்சிப்
பாம்போடு ஒரு கூரையிலே பயின்றாப் போலே
தாங்காது உள்ளம் தள்ளும் என் தாமரைக் கண்ணா -11-8-3-
பாம்போடு –அவை ஒழியில் நாட்டார் பிழையாதபடி இருக்கிறவை-இவருக்கு இருக்கிற படியாயிற்று இது –வெய்யிலிலே நொந்தவன் ஆடுகிற சர்ப்பத்தின் நிழலிலே போய் ஒதுங்கி-அது அள்ளிக் கொள்ளும் என்று அறியாதே சுகிக்கப் பார்க்குமா போலே இருப்பது ஓன்று இறே-அது அள்ளிக் கொண்டது அப்போது இறே –(மயர்வற மதி நலம் அருளுவதற்கு முன்னே )-ஒரு கூரையிலே பயின்றாப் போலே —கண்டது அடைய அது சங்கா ஹேது வாயிற்று –தாங்காது உள்ளம் தள்ளும் –தரியாதே ஹிருதயமானாது தடுமாறா நின்றது –
கொல்லா மாக்கோல் கொலை செய்து பாரதப் போர்
யெல்லாச் சேனையும் இரு நிலத்து அவித்த எந்தாய்
பொல்லா வாக்கையின் புணர்வினை யறுக்கலறா
சொல்லாய் யான் உன்னைச் சார்வதோர் சூழ்ச்சியே –3-2-3-
துரியோதனன் அளவன்று-உடம்பின் ப்ராதிகூல்யம் -அவன் பிரதிகூலனாயத் தோற்றினான்-
இது அனுகூலம் போலே இருந்து யாயிற்று பிராதி கூல்யம் பண்ணுவது-எல்லா அநர்த்தமும் பண்ணினாலும் பரிணதாரானார் -பொல்லாதாகாச் செய்தாய் -என்னும் இத்தனை இறே
பகவத் ஸ்வரூப திரோதா நகரீம்-இத்யாதி-பெரியோர்கள் சிஷ்டர்களில் ஒருவனுக்கு அநேக தோஷங்கள் உண்டானால், ‘அவன் தண்ணியன்’ என்று விடுவார்கள் அன்றே?-அப்படியே இவர் இச்சரீரத்தின் தன்மைகளையெல்லாம் ஒருசேர நினைத்துப் ‘பொல்லா ஆக்கை’ என்கிறார்.-
ஒடுங்க அவன் கண் ஓடுங்கலும் எல்லாம்
விடும் பின்னும் ஆக்கை விடும் பொழுது எண்ணே–1-2-9-
ஈச்வரோஹம் என்று இருக்கை தவிர்ந்து -அவனுக்குப் பிரகாரமாக அவன் அபிமானத்துக்கு உள்ளே அந்தர்பவிக்கவ-அவன் கண் ஒடுங்க – பிரகாரமாக இருக்கும் நீங்கள் பிரகாரியாக இருக்கின்ற அவன் பக்கலிலே சென்று சேர,-ஒடுங்கல் -ஒடுக்கத்தை பண்ணுமவை – ஆத்மாவுக்கு சங்கோசகங்களான அவித்யாதிகள் எல்லாம் போம் –ஒடுங்கல் -வந்தேறி யாய் –ஒடுங்கிக் கிடந்தவை என்னுமாம்-ஸ்வரூபாதி ரேகியாய் ஒடுங்கிக் கிடந்த அவித்யாதிகள் எல்லாம் போம்-ப்ராப்த்தத்தைச் செய்ய -செய்யத் தக்கனவற்றைச் செய்ய,
அப்ராப்தமானவை -தகாதவை எல்லாம் தாமாகவே விட்டு நீங்கும்;-ஆத்துமாவின் ஸ்வரூபத்துக்குத் தக்கவற்றைச் செய்யவே,-ஸ்வரூப அறுரூபமானவற்றைச் செய்யவே –
ஸ்வரூபத்துக்கு விரோதிகளாக உள்ளவை எல்லாம் விட்டுப்போகும் என்றபடி.
‘ஒடுங்கல்’ என்கையாலே இவை ஆத்துமாவிற்கிடப்பன அல்ல; ஆத்துமாவிற்கு விரோதியாய்க் கொண்டு வந்தேறி என்னுமிடம் தோன்றுகிறது.
‘ஒடுங்கல்’ என்பதனை மெலித்தல் விகாரமாகக் கொண்டு-ஒடுக்கல்-
‘இவனுக்குக் குறைவைப் -சங்கோசத்தைப் -பிறப்பிக்குமவை’-எல்லாம் என்கையாலே -பஜன விரோதியோடு -பிராப்தி விரோதியோடு -வாசி அற சர்வமும் நசிக்கும் என்கிறது-அவித்யா -அறிவின்மை, கருமம், வாசனை, ருசி இவையெல்லாம் அடியோடே விட்டுக் கழியும்
வானோ மறிகடலோ மாருதமோ தீயகமோ
கானோ ஒருங்கிற்றும் கண்டிலமால் – ஆனீன்ற
கன்றுயரத் தாமெறிந்து காயுதிர்த்தார் தாள் பணிந்தோம்
வன்துயரை யாவா மருங்கு–‘மாடே வரப் பெறுவராம் என்றே வல்வினையார்’ என்னும் பாசுரங்களை யோஜித்துக் கொள்வது
பின்னும் ஆக்கை விடும் பொழுது எண்ணே--பின்பு சரீர அவசானமே விளம்பம்-காமிநி தன் உடம்பில் அழுக்கைக் கழற்றி போகத்திலே அந்வயிக்க அவசர ப்ரதீஷியையாய் இருக்குமா போலே சரீர அவசானத்தைப் பார்த்துக் கொண்டு இருக்கை-இன்பத்தில் இச்சையுடைய ஒரு பெண் தன் உடம்பில் அழுக்கினைப் போக்கித் தன் கணவனோடு இன்பம் நுகர்தற்கு
உரிய காலத்தை எதிர் நோக்கிக்கொண்டு இருத்தல் போன்று, இவனும் பேற்றுக்கு உறுப்பாக உடலை விட்டு உயிர் நீக்குங் காலத்தினை எதிர்பார்த்திருக்கக் கடவன்.
‘கொங்கை மேற் குங்குமத்தின் குழம்பு அழியப் புகுந்து ஒருநாள், தங்குமேல் என் ஆவி தங்கும்,’ என்று அழுக்குக் கழற்றி ஒப்பித்துப் பார்த்து இருந்தாள் ஒரு பிராட்டி.
அப்படியே, அழுக்கு உடம்பு’ என்கிற இவ்வழுக்கு நீங்கி மோக்ஷமாகிய பலத்தை அடைதல்
எப்போதோ என்று பார்த்திருக்கும் இத்தனை.
உடையவர் குன்றத்து சீயரை -சிங்கப் பிரான் இன்று அயநம் கிடாய் என்ன – நிதானம் அறியாமையாலே திகைத்து நிற்க ப்ராப்தி பிரதிபந்தகமான காலத்திலே ஆறு மாசம் போந்தது உனக்கு ஒன்றாய் இருந்தது இல்லையோ –என்று அருளிச் செய்தார்
க்ருதக்ருத்யா -இத்யாதி-எம்பார் -அஸ்திரமான சரீரம் தானே நசியா நிற்க இவனுக்குத் தான் மநோ ரதிக்க வேணுமோ -என்று அருளிச் செய்வர் ––ஸ்ரீ எம்பார் ஒரு உருவில் , ‘பின்னும் ஆக்கை விடும்பொழுது எண்ணே,’ என்பதற்கு‘இங்ஙனே காரணமானது கழிந்த போதே காரியமும் தன்னடையே கழிந்ததே அன்றோ!–பலமும் இனிக் கைப் புகுந்ததே அன்றோ! இனி, சிந்தா விஷயம் உண்டோ?’ என்று அருளிச் செய்தார்.
மங்க ஒட்டு உன் மா மாயை திரு மால் இரும் சோலை மேய
நங்கள் கோனே யானே நீ ஆகி என்னை அளித்தானே
பொங்கு ஐம் புலனும் பொறி ஐந்தும் கருமேந்த்ரியம் ஐம் பூதம்
இங்கு இவ் வுயிர் ஏய் பிரகிருதி மான் ஆங்காரம் மனங்களே–10-7-10-
ஒருவராலும் தப்ப ஒண்ணாத படி -நீ பந்தித்த பிரக்ருதியை மங்க இசை –த்யாஜ்யம் என்று அறிந்த பின்பு உம்முடைய சரீரத்தை நீரே உபேக்ஷிக்கும் அத்தனை யன்றோ -நம் இசைவு என் என்ன -சர்வ சக்தியான நீ பிணைத்த பிணையை அசக்தனான நான் -அவிழ்க்கவோ -மம மாயா துரத்யயா -என்றிலையோ–மங்க ஒட்டு உன் மா மாயை –உன் மா மாயை மங்க ஒட்டு –ஒருவராலும் தப்ப ஒண்ணாத படி-நீ கட்டிய இந்தச் சரீரம் மங்குவதற்கு இசை –விடத்தக்கது -என்று அறிந்த பின்பு உம்முடைய சரீரத்தினை நீரே விட வேண்டியது அத்தனை அன்றோ – நாம் இசைய வேண்டுகிறது என் -என்ன –-எல்லாவற்றையும் செய்து முடிக்கும் ஆற்றல் வாய்ந்தவனான-நீ பிணைத்த பிணையை ஆற்றல் சிறிதும் இல்லாதவனான நன் விடவோ –என்னுடைய மாயம் ஒருவராலும் தாண்ட முடியாது -என்றிலையோ –
வெண்ணெய் பால் உண்டு வெறும் கலத்தை உடைத்தீரே -அது போலே செய்ய வேண்டும் –
மேம்பொருள் போக விட்டு மெய்ம்மையை மிக உணர்ந்து
ஆம்பரி சறிந்து கொண்டு ஐம்புலன் அகத்தடக்கிக்
காம்பறத் தலை சிரைத்து உன் கடைத் தலை இருந்து வாழும்
சோம்பரை உகத்தி போலும் சூழ் புனல் அரங்கத்தானே–38-
ஸ்ரீ மகா பாரதத்துக்கு சரம ஸ்லோகம் போலே யாய்த்து-இப்பிரபந்ததுக்கு இப்பாட்டு-சரம ஸ்லோகம் பிராப்தியை விதிப்பதாய் இருக்கும் –அதில் ருசி உடையாருடைய அனுசந்தானமாய் இருக்கும் -த்வயம் –த்வய நிஷ்டர் பக்கலிலே ஈஸ்வரனுக்கு உண்டான உகப்பை சொல்லுகிறது -இப் பாட்டு –
மேம்பொருள் என்பதற்கு-மேலெழுந்த பொருளென்றும்,-மேவின பொருளென்றும்,-மேம்பாட்டை விளைக்கும் பொருளென்றும், மூன்றுபடியாக நிர்வாஹம்-கருமங்கள் காரணமாக வந்தேறியாய் பகவத்விஷய உணர்ச்சி வந்தவாறே விட்டகலும்படியாயிருக்கும் பொருள்–கர்மம் அடியாக வந்தேறி யாய் –பகவத் ஞானம் வந்தவாறே -மறந்து போமதாய் இருக்கை –இத்தை போக்யதை என்று பார்த்து இழிந்தவனுக்கும்
ஆபாத ப்ரதீதியில் ஓன்று போல் தோற்றி நிரூபித்தால் அனுபாவ்யமாய் இருப்பது ஓன்று அன்றிக்கே இருக்கை -என்றுமாம் –மேலெழுந்த பொருள் எனப்படும். அதாவது-ஸம்ஸாரஸம்பந்தம்.—மேவின பொருளாவது– சிக்கன ஒட்டிக் கொண்டிருக்கும் பொருள்;-சேதநனால் பிரிக்க வெண்ணாத படி யிருக்கை.-அதாவது-தேஹஸம்பந்தம்,-அவித்யா ஸம்பந்தம்-தேவோஹம் மனுஷ்யோஹம் -என்று உடம்பை தானாக நினைத்து இருக்கும் படி இறே இத்தோட்டை பொருத்தம் இருப்பது – அத்தைச் சொல்லிற்றாகவுமாம் –.–மேம்பாட்டை விளைக்கையாவது- தன்னைப் பற்றினாரை ஸர்வஜ்ஞராக அபிமாநித்திருக்கும்படி பண்ணவற்றாகை.-மெய்ப்பாட்டை –
தன்னைப் பற்றினாரை-சர்வஜஞ் தமராக அபிமானித்து இருக்கும்படி பண்ணவற்றாய் இருக்கை –-அப்படிப்பட்ட பொருளாவது-ப்ரக்ருதி ப்ராக்ருத பதார்த்த ஸம்பந்தம்;-பொருள் -என்று பதார்த்தம் –அதாகிறது -தேஹம் –இது தான் தேக அனுபந்தியான ப்ராக்ருத பதார்த்தங்களுக்கும் உப லஷணம்-
போக விட்டு -ஆகிற இவற்றை வாஸநையோடே ஒழித்து, தேஹத்தை ஆத்மாவென்று நினைக்கை.தேஹத்தைப்பற்றின ப்ராக்ருத பதார்த்தங்களில் ‘இவை என்னுடையவை’ என்கிற மமதா புத்தி தேஹத்திற் காட்டில் வேறுபட்ட ஆத்மாவில் ஸ்வாதந்திரிய புத்தி முதலியவற்றை அடியோடு ஒழித்து என்றபடி.-வாசனையோடு விட்டு -என்கை –
சரீரிகளால் அவை துஷ்கரம் ஆகையாலே பிரகிருதி பிராக்ருதங்கள் அபுருஷார்த்தம் என்கிற ஞானத்தை உடையவனாகை அல்லது புகுர விட்டான் இவன் ஆகில் இறே இவனால் போக விடலாவது –மமமாயா துரத்தயயா -என்கிறபடியே ஈஸ்வரன் பந்தித்த பந்தத்தை இவனால் போக்க ஒண்ணாது இறே –அநாந்த்மன் யாத்ம புத்திர்யா – என்கிற ஸ்லோகத்தின் படியே
தேகத்தில் ஆத்ம புத்தியையும் தேக அனுபந்தியான ப்ராக்ருத பதார்த்தங்களில் மமதா புத்தியையும்
தேஹாதிரிக்தனான ஆத்மாவில் ஸ்வ தந்திர புத்தியையும் தவிருகை –அளவுடையரான சனகாதிகளுக்கும் செய்யலாவது இவ்வளவே இரண்டு மரம் கூட நின்றால் ஒன்றை வெட்ட நினைத்தவன் ஒரு மரத்திலே கொத்தி பெருங்காயத்தை விட அது பட்டு நிற்குமா போலே யாய்த்து
இப் பிரதி பத்தி மாத்ரத்திலே இதுவும் விடும் –மெய்ம்மையை மிக உணர்ந்து –ஆம் பரிசு அறிந்து கொண்டு என்று மேலும் ஞான பிரகரணம் ஆகையாலே போகவிட்டு -என்று பிரகரண பலத்தாலே ஜ்ஞானத்தைச் சொல்லிற்றாகக் கடவது —-மெய்ம்மையை மிக உணர்ந்து-மெய்ம்மையை மிக உணர்ந்து –மெய் -என்கிறது ஆத்மாவை–மெய் -எனபது ஆத்மாவைக் காட்டுமோ -என்னில் —சத்யஞ்சா ந்ர்தஞ்ச சத்ய மவபவத் -என்கிற ஸ்ருதி சாயையால் அருளிச் செய்கிறார் – சத்ய சப்தம் அசத்திய வ்யாவர்த்தியை சொல்லுகிறது அன்று-ஆத்ம ஸ்வரூபத்தின் நித்யதையைச் சொல்லுகிறது –-அதற்கு மேல் ஆத்ம ஸ்வரூபத்தை உள்ளபடி உணர வேணும்:அதாவது ஆத்மா ஸ்வயம் ப்ரகாசன்,நித்யன், உணர்வைக் குணமாக வுடையவன்: அணுபரிமாணன்,எம்பெருமானுக்கு அநந்யார்ஹ சேஷபூதன்,அந்த சேஷத்வத்தை பாகவதரளவும் உடையவன் என்றிங்ஙனே விரிவாக உணருகை.-ப்ரக்ருதி ப்ராக்ருதங்கள் ஹேயம் என்றறிந்து ஆத்மாவையும் உள்ளபடி யறிந்த பிறகு பின்னையும் ஆம் பரிசு அறிந்துகொள்ளுகையாவது –கைங்கரியமே புருஷார்த்தம் என்றறிக்கை
மெய்ம்மை -என்று முழுச் சொல்லாய் –பிரத்யக் விஷயத்தைச் சொல்லுகிறது –கைம்மை பொய்ம்மை -என்னுமா போலே-ஆக-மெய்ம்மை -என்று –மெய்யான தன்மை -என்றபடி
மிக உணர்ந்து –
தேகமே ஆத்மா என்று இருக்கும் லோகாயதிகன் அளவன்றிக்கே –
தேகாதிரிக்தமாய் ஸூயமாய் இருக்கும் ஆத்மா என்னும் மீமாம்சகன் அளவன்றிக்கே ஜ்ஞானம் ஆகந்துகம் -என்னும் வைசேஷிகன் அளவன்றிக்கே –
1-ஸுவயம் பிரகாசனாய்
2-நித்யனாய்
3-ஜ்ஞான குணகனாய்
4-அணு வாய்
5-ஈஸ்வரனுக்கு அனன்யார்ஹ சேஷமாய்
6-அது தான் ததீய சேஷத்வ பர்யந்தமாக உணருகை – அதாவது ஆத்மாவை உள்ளபடி உணருகை –
ஆம் பரிசறிந்து கொண்டு- பிரக்ருது ப்ராக்ருதங்கள் த்யாஜ்யம் -என்று அறிந்து மேலும் ஆத்மாவை உள்ளபடி உணர்ந்தால் –பின்னையும்-ஆம் பரிசு ஆவது –கைங்கர்யமே யாய்த்து ஆம் பரிசு வர்த்திக்கும் படியை அறிந்து –ஆத்மா அபிமான ரூபமாக வாய்த்து வ்ருத்தி ஹேதுக்கள் தான் இருப்பது –
1-தன்னை திர்யக்காக அபிமானித்த போது -தர்ண சமூஹம் ஆய்த்து வ்ருத்தி ஹேதுவாகக் கடவது –
2-மனுஷ்யோஹம் -என்று அபிமானித்த போது-அன்னம் -வ்ருத்தி ஹேதுவாகக் கடவது –
3-தேவோஹம் -என்று அபிமானித்த போது -அம்ருதம் -வ்ருத்தி ஹேதுவாகக் கடவது –
4-தாசோஹம் -என்ற போது -கைங்கர்யமே வ்ருத்தி ஹேதுவாகக் கடவது –பிரகிருதி பிராக்ருதங்களில் சங்கோசம் போய் ஸ்வரூபத்தை உள்ளபடி அறிந்தால் சஹஜ கைங்கர்யமே இறே வ்ருத்தி ஹேதுவாவது –
அறிந்து கொண்டு –நிதி எடுத்துக் கொண்டு -என்னுமா போலே பிரகிருதி பிராக்ருதங்கள் த்யாஜ்யம் என்கிற ஜ்ஞானமும் – ஆத்மா பகவத் பரதந்த்ரன் என்கிற ஜ்ஞானமும்-பிராப்யம் கைங்கர்யம் என்கிற ஜ்ஞானமும் இறே சேதனனுக்கு வேண்டுவது –விடுவிக்கையும்
பற்றுவிக்கையும் உபாய பூதனான ஈஸ்வரன் கார்யம் இறே –
மேம் பொருள்–மெய்ம்மை–ஆம் பரிசு-என்கிற இவை அவ்வவோ பதார்த்தங்களுக்கு வாசகம் அன்றிக்கே இருக்க தத் தத் ஸ்வ பாவ வாசியான சப்தங்களால் மறைத்து அருளிச் செய்கிறார் – அர்த்த கௌரவத்தாலே –
—————-
7-சரீர சம்பந்திகள் அளவில் பிரிவுகாரர் பிரதிபத்தி யாவது –
தாயே தந்தை என்றும் தாரமே கிளை மக்கள் என்றும்
நோயே பட்டு ஒழிந்தேன் உன்னைக் காண்பதோர் ஆசையினால்
வேயேய் பூம் பொழில் சூழ் விரையார் திருவேம்கடவா
நாயேன் வந்தடைந்தேன் நல்கியாள் என்னைக் கொண்டருளே-1-9-1
தாயே என்றும் தந்தையே என்றும் தாரமே என்றும் கிளையே என்றும் மக்களே என்றும் புத்ர மித்ராதிகளை ஆசைப்பட்டு –நோயே பட்டு –இவன் பக்கல் உபகாரம் கொள்ளலாம் என்று கொண்டு –இவனுக்கு உதவ வேண்டும் அன்று –அபகாரத்தை பண்ணித் தங்களைக் கொண்டு-அகல நினைக்குமவர்களை பந்துக்கள் என்று நினைத்தால்-அவர்கள் பந்துக் க்ருத்யம் பண்ணக் காணாமையாலே-க்லேசம் இறே சித்திப்பது-இவன் பந்துக்கள் என்று நினைத்து இருக்கும் அத்தனை இறே-அவர்கள் பக்கல் அது இல்லையே-வேறு ஒரு வ்ருத்தாதிகளால் வேண்டாதே-அவர்கள் தாங்களே க்லேசத்துக்கு உடலாய் இறே இருப்பது –தாயே நோயே தந்தையே நோயே–பட்டு ஒழிந்தேன் –பட்டேன் –என்றபடி யாகவுமாம்
அன்றிக்கே-நோய் பட்டு ஒழிந்தேன் – அவர்களை விட்டேன் என்னவுமாம் –
பெற்றாரும் சுற்றமும் என்று இவை பேணேன் நான்
மற்றாரும் பற்றிலேன் ஆதலால் நின் அடைந்தேன்
உற்றான் என்று உள்ளத்து வைத்தருள் செய் கண்டாய்
கற்றார் சேர் கண்ண புரத்துறை யம்மானே —8-10-5-
நான் வேறு சிலரை பந்துக்கள் என்று நினைத்து இருப்பது இல்லை –ஐயோ இவனுக்கு புறம்பு ஒருவரும் இல்லை -என்பாரையும் உடையேன் அல்லேன் – புறம்பு ஒருவரும் இல்லை யாகில் நீர் உண்டே என்ன நானும் எனக்கு கழுத்துக் கட்டி –(கழுத்தில் கல்லைக் கட்டி குளத்தில் விழுவது போல் அன்றோ நானே எனக்கு உதவுவது )
பிறிந்தேன் பெற்ற மக்கள் பெண்டிர் என்று இவர் பின்னுதவாவது
அறிந்தேன் நீ பணித்த வருள் என்னும் ஒள் வாள் உருவி
எறிந்தேன் ஐம்புலன்கள் இடர் தீர வெறிந்து வந்து
செறிந்தேன் நின்னடிக்கே திரு விண்ணகர் மேயவனே —6-2-4-
பிறிந்தேன் பெற்ற மக்கள் பெண்டிர் என்று இவர் பின்னுதவாவது –பிறிந்தேன் –சம்சாரத்தில் சிலரை பந்துக்களாக நினைத்து-தான் உபகரித்து போருகிறது
தனக்குத் தான் உதவாத வன்று இவன் செவியில் திரு நாமத்தைச் சொல்லுதல்
இவனுக்கு நல் வழி போகைக்கு விரகு பார்த்தல் செய்கைக்காக இறே
அதில் அவர்கள் செய்வது –சோர்வினால் பொருள் வைத்தது உண்டாகில் சொல்லு சொல்லு
என்னா நிற்பார்கள் ஆய்த்து-இவன் தான் தனக்கு உணர்த்தி உண்டான வன்றே தன்னுடைய சர்வஸ்த்தையும் இவர்கள் இட்ட வழக்காக்கி யாய்த்து வைப்பது
நீ மறந்து ஏதேனும் வைத்தது உண்டாகில் அத்தை சொல்லு என்னா நிற்பார்கள் ஆய்த்து –இவன் தனக்கும் அவர்களோபாதி புன்மை போரும் காணும் இவன் தன்னுடைய சர்வஸ்வத்தையும் அவர்களுக்கு ஆக்கா நிற்கச் செய்தேயும் சிறிது இவன் பக்கலில் உண்டு என்று தோற்ற வாய்த்து வர்த்திப்பது-சுற்றும் இருந்து –-எமபடர் ஒரு திரளும் இவர்கள் ஒரு திரளும் யாய்த்து இருப்பது-இவர்கள் அலையா நின்றால் அவன் செய்வது என் என்னில்
ஆர் வினவிலும் தன் உடைமையை அடைய எழுதிக் கொடுத்து ஸ்வீகரித்த இளையாளைக்
கொடு வந்து முன்னே நிறுத்திலும் வாய் திறவான் ஆய்த்து –பெற்ற மக்கள் பெண்டிர் என்று இவர் பின்னுதவாவது —வயிற்றிலே பிறந்த புத்திரன்-பார்யை-இவர்கள் இறே அண்ணிய உறவாய் போருவர்-அவர்களும் இவன் பக்கல் முன்பு உபகாரம் கொள்ளும் நாள் கொண்டு
பின்பு இவனுக்கு உதவ வேண்டும் அளவானவாறே போகா நிற்பார்கள்-ஸ்வப்னத்தில் பதார்த்த தர்சனம்- உணர்ந்தால் இன்றியே இருக்குமா போலே-யாய்த்து இவர்களோட்டை சம்பந்தமும் –
(அறிந்தேன் -பிறிந்தேன் -செறிந்தேன் –மூன்று வினைச் சொற்களால் சித்தாந்தம்
சரம ஸ்லோக வார்த்தை எப்பொழுதும் உண்டே -இருள் நீங்கிய பின்பு அறிவது போல் அறிந்து செறிந்தேன் )
அறிந்தேன் –பிறிந்தேன் –ஜ்ஞானம் பிறக்கைக்கு ஒரு காலமும்-த்யஜிகைக்கு ஒரு காலமும் வேண்டுகிறது இல்லை – இவ்வருகு உண்டான பந்துக்கள் நமக்கு உபகாரகர் அல்லர்கள்
இனி இவ்வளவுக்கு தஞ்சமாவார் ஆர் -என்று நெஞ்சிலே பட்டவாறே என்னையே தஞ்சமாக நினைத்து இரு -என்று அருளிச் செய்த ஒரு வார்த்தை உண்டு இறே அது இப்போது வாரா உதவிற்று-நீ பணித்த வருள் என்னும் ஒள் வாள் உருவி-அவன் பணித்த மாமேகம் -என்ற வார்த்தை ஆய்த்து-அருள் என்கிறது என் என்றால்-என்னுடைய பிரசாதத்தையே உன்னுடைய உஜ்ஜீவன ஹேதுவாக அத்யவசி என்றான் இறே–ஒள் வாள்-சம்சயங்களை அடைய துணித்துப் பொகட்டு-நஷ்டோ மோஹ -ஸ்ம்ரித் லப்த -ஸ்திதி தோஸ்மி கத சந்தேக கரிஷ்யே -என்னப் பண்ண வற்றாய் இருக்கை
——-
8-இதரரான சம்சாரிகள் வழி பறிகாரர் பிரதி பத்தி யாவது –
இன்று சாதல் நின்று சாதல் அன்றி யாரும் வையகத்து
ஒன்றி நின்றி வாழ்தல் இன்மை கண்டும் நீசர் என் கொலோ
அன்று பாரளந்த பாத போதை யொன்றி வானின் மேல்
சென்று சென்று தேவராய் இருக்கிலாத வண்ணமே –66-
பகவத் விஷயம் ஸூலபமாய் இருக்க-சம்ஸாரம் அல்ப அஸ்திரத்வாதி தோஷ தூஷிதம் என்னும் இடம் ப்ரத்யஷ சித்தமாய் இருக்க -பகவத் சமாஸ்ரயணம் அபுநாவ்ர்த்தி லஷணமான மோஷ ப்ராப்தமாய் இருக்க –சம்சாரிகள் பகவத் சமாஸ்ரயணம் பண்ணாது இருக்கிற ஹேது என்னோ -என்று விஸ்மிதர் ஆகிறார் –நீசர் – தங்கள் அனுபவத்துக்கு உபதேசம் வேண்டும்படி அஜ்ஞராய் இருக்குமவர்கள்-ப்ரக்ர்தி ப்ராக்ர்தங்களின் தண்மை ப்ரத்யஷத்தாலும் பரோஷத்தாலும் ப்ரகாசியா நிற்கச் செய்தே விட மாட்டாதே இருக்கிற பாப ப்ரசுரம் –என்றுமாம் –
பெண்டிரால் சுகங்கள் உய்ப்பான் பெரியதோர் இடும்பை பூண்டு
உண்டிராக் கிடக்கும் போது வுடலுக்கே கரைந்து நைந்து
தண் துழாய் மாலை மார்பன் தமர்களாய்ப் பாடி யாடித்
தொண்டு பூண்டு அமுதம் உண்ணாத் தொழும்பர் சோறு உகக்குமாறே–5-
தொழும்பர்-தண்ணியர் –இதனுடைய போக்யதை அறியாதே அபோக்யமாய் அப்ராப்தமாய்
இருந்துள்ள சூத்திர விஷயங்களை விரும்பும் நீசர்-பிராப்தி இல்லாமல் இத்தை இழக்கிறார் அல்லர்-லபிக்கையில் நேர்த்தி உண்டாய் இழக்கிறார் அல்லர்-சூத்திர விஷயங்களுக்கு இதுக்கு நெடு வாசி அறியும் சேதனராயும் இருக்க-துராராதமாய் -அபோக்யமாய் விஷயத்திலே மண்டப் பண்ணிற்று இறே பாப பலம்
ஆமையின் முதுகத்திடை குதி கொண்டு தூ மலர் சாடிப் போய்
தீமை செய்து இள வாளைகள் விளையாடு நீர்த் திருக் கோட்டியூர்
நேமி சேர் தடம் கையினானை நினைப்பிலா வலி நெஞ்சுடை
பூமி பாரங்கள் உண்ணும் சோற்றினை வாங்கி புல்லை திணிமினே -4 -4 -5-
பூமி பாரங்கள்-இப்படி பகவத் ஸ்மரண கந்த ரஹிதர் ஆகையாலே விஸ்வம்பரையான பூமியாலும் பரிக்க ஒண்ணாத பாரமாய் இருந்துள்ள பாபிகள் ஆனவர்கள் – தாங்கள் அறியாது இருக்க செய்தேயும் -தான் அறிந்த சம்பந்தமே ஹேதுவாக
தங்களை ரஷித்து கொண்டு திரியும் ஈஸ்வர விஷயத்தில் க்ர்தக்னர் ஆனவர்களை இறே பூமி பாரம் என்கிறது
———–
9-ஐஸ்வர்யத்தில் அக்நி பிரதிபத்தியாவது –
வென்றியே வேண்டி வீழ் பொருட்கு இரங்கி வேற் கணார் கல்வியே கருதி
நின்றவா நில்லா நெஞ்சினை உடையேன் என் செய்கேன் நெடு விசும்பு அணவும்
பன்றியாய் அன்று பாரகம் கீண்ட பாழியான் ஆழியான் அருளே
நன்று நான் உய்ய நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம் —4–
வென்றியே வேண்டி – பிதாவாகவுமாம் ஆசார்யனாகவுமாம் வென்றியே யாயிற்று இவன் வேண்டி இருப்பது – தன்னை ஒழிந்தாரை கீழ்ப் படுத்தி தான் மேலாக வாயிற்று இவன் வேண்டி இருப்பது –( ஸ்வ இதர ஸமஸ்த வஸ்து விலக்ஷணன் அவன் ஒருவனே ) தோல்வி குணமாம் விஷயத்தில் யாயிற்று வெல்ல நினைத்து இருப்பது –வீழ் பொருட்கு இரங்கி –கையிலே சிறிது அர்த்தம் உண்டாய் -அத்தாலே இறே இவன் ஒருத்தரையும் மதியாது இருப்பது –அது அஸ்தரம் ஆனபடியாலே அபஹ்ருத்யமாய் இருக்கும் இறே – அத்தை இழந்து கூப்பிடா நிற்கும்-கௌரவ்யராய் இருப்பார் பக்கல் அபிமானம் பண்ணக் கடவது அன்றிக்கே இருக்க அபிமானம் பண்ணி வர்த்தித்ததுக்கும் மேலே இரங்கக் கடவது அல்லாததுக்கு இருந்து கண்ண நீர் பாயா நிற்கும் –அங்கன் அன்றிக்கே-தேக ஆத்மா அபிமானத்தைப் பண்ணி-தன்னை எல்லாருக்கும் மேலாக நினைத்து போந்ததுவே அன்றியே அஸ்திரமான உடம்பை நித்யமாக வேணும் என்று சோகியா நிற்கும் என்னவுமாம்
கொள் என்று கிளர்ந்து எழுந்து பெருஞ்செல்வம் நெருப்பாகக்
கொள் என்று தமம் மூடும்; இவை என்ன உலகியற்கை!
வள்ளலே! மணிவண்ணா! உனகழற்கே வரும்பரிசு,
வள்ளல் செய்து அடியேனை உனது அருளால் வாங்காயே.–4-9-4-
இவன் அர்த்தியாது இருக்க தானே -என்னைக் கொள் என்னைக் கொள் என்று-மொண்டெழு பானை – ஏத்தச்சால்-போல- மேல் மேல் எனக் கிளர்ந்து வருகிற நிரவதிக சம்பத்தானது –-நெருப்பாகக்-நிச்சேஷமாக நசிக்க -என்னுதல் -தனக்கு விநாச ஹேதுவாக -என்னுதல்-கொள் என்று தமம் மூடும்;-இவை விநாச ஹேது என்று அறிந்து இருக்கச் செய்தேயும் பிறர் கொள் என்று பிரேரித்த வாறே தம அபிபூதனாய் துராசையாலே முன்பு விநாச ஹேது வானத்தை விரும்பும்-கொள் என்று பிரேரிக்கிறது மனஸ் ஆகவுமாம்-ஹதே பீஷ்மே ஹதே த்ரோணே ஹதே கர்ணே மஹா ரதே ஆசாபலவ தீராஜன் சல்யோ ஜேஷ்யாதி பாண்டவான்–மஹா ரதரான பீஷ்மர் இறந்த பின்னரும், துரோணர் இறந்த பின்னரும், கர்ணன் இறந்த பின்னரும், சல்லியன் பாண்டவர்களை வெல்வான் என்ற ஆசையானது அதிகரித்தது,’ என்கிறபடியே, அதிரதர் மஹாரதர் அடையப்பட்டுப் போகா நிற்கச் செய்தேயும், பின்னையும் சல்லியனைக் கொண்டே பாண்டவர்களை வெல்லப் பார்த்தான் அன்றோ துரியோதனன்?இவை என்ன உலகியற்கை!-ப்ரத்யக்ஷமும் அகிஞ்சித்கரமாம் படி இருப்பதே –-வள்ளலே!-இந்த தபோ அபிபூதியை தவிர்த்து -இது அஸஹ்யமாம் படி பண்ணின மஹா உதாரனனே-
பாண் தேன் வண்டு அறையும் குழலார்கள் பல்லாண்டு இசைப்ப
ஆண்டார் வையம் எல்லாம் அரசாகி முன் ஆண்டவரே
மாண்டார் என்று வந்தார் அந்தோ மனை வாழ்க்கை தன்னை
வேண்டேன் நின்னடைந்தேன் திரு விண்ணகர் மேயவனே –6-2-5-
ஒரு பிரதேசத்துக்கு கடவர் அன்றிக்கே-ஒரு நாயகமாய் -என்கிறபடியே-ஒரு முத்தின் குடையாம்படி பூமிப் பரப்பை அடங்கலும் நிர்வஹித்து போந்தவர்கள் -முன்பு இப்படி நடத்திப் போந்தவர்கள் தாங்களே –முடி சூடினார் என்று ஒரு ஓலையிலே இட்டால் துஞ்சினான் என்று வேறு ஒரு ஓலையிலே இட்டு வரக் காட்டுகைக்கு அவசரம் இல்லாதபடி முடிந்து நிற்கையாலே அவ்வோலையிலே மறு புறத்திலே துஞ்சினான் என்று இட்டு யாய்த்து வருவ்து – ஆண்டவன் ஆண்டே வந்தான் என்று சொல்லப் படுவது இல்லை யாய்த்து-இப்படி யாய்த்து முடியச் சொல்லிப் போருவது-ஆண்டார் மாண்டார் என்கிற சொல்லும் இடை ஒத்து இருக்கும் ஆய்த்து–ததா தேஹாந்தர ப்ராப்தி உத்பத்தி விநாசங்கள் ஆக்கின ஆத்மாவுக்கு அவஸ்தாந்த்ரா பத்தி இறே –இப் பரப்பு அடங்கலும் தனக்கு நிலை நிற்கும் என்று அவன் விசாரியா நிற்கச் செய்தே ஆயுஸ்ஸூ அடி அற்று இருக்கும் ஆய்த்து –இவருடைய பாரிப்பையும் அதின் உடைய நிலை இல்லாமையும் அனுசந்தித்து தயை பண்ணிப் பொறுக்க மாட்டாமையாலே அந்தோ -என்கிறார் –நந்தந்த்யுதித ஆதித்யே -இத்யாதி
(வாள்களாக நாள்கள் செல்ல ) அபிமத விஷயங்களை பிறர் காணாத படி புஜிக்கைக்கு காலம் வந்தது என்று உகவா நிற்பார்கள்-உதித்த வாறே அதுக்கு த்ரவ்யார்ஜன காலம் வந்தது என்று ஹிருஷ்டராகா நிற்பார்கள் –சாலில் எடுத்த நீர் போலே தங்கள் ஆயுஸ்ஸூ
கழிகிற படியை அறிந்து நடுவு பட்ட நாளிலே அவ் வருகில் எளிவரவு வராதபடி பரிஹரித்து கொள்ள வேணும் என்று இருப்பார் ஒருவரும் இல்லை-(சாலில் எடுத்த நீர் போலே-ஏத்த சாலில் நீரை இறைப்பதே கொட்டத்தானே )ஆண்டார் மாண்டார் என்கிற இவை இரண்டும் இரண்டு வியக்தியிலேயாகப் பெற்றது இல்லை – பெருக்காறு அடி சுட்டாப் போலே-பட்ட தர்ம ஹானியை கண்டு ஐயோ என்கிறார்-
————-
10-விஷயத்தளவில் இடி பிரதிபத்தி யாவது –
புலன் ஐந்து மேயும் பொறி ஐந்து நீங்கி
நலமந்த மில்லதோர் நாடு புகுவீர்
அலமந்து வீய அசுரரைச் செற்றான்
பலமுந்து சீரில் படிமின் ஓவாதே –2-8-4-
ஐந்து விஷயங்களிலும் ப்ரவணமாம் ஐந்து இந்த்ரியங்களுக்கும் வஸ்யராகை தவிர்ந்து -சில பதார்த்தத்தை வறை நாற்றத்தைக் காட்டி முடிக்குமா போலே -சப்தாதிகளிலே மூட்டி நசிப்பிக்கையாலே இந்திரியங்களை பொறி என்கிறது –புலன் ஐந்து என்கிறது -விஷயங்களை யாய் -அவற்றிலே பிரவணமாகக் கடவவான பொறி ஐந்து உண்டு -ஸ்ரோத்ராதிகள்-அவற்றுக்கு வச்யராகை தவிர்ந்து -சில பதார்த்தங்களை வறை நாற்றத்தைக் காட்டி முடிக்குமா போலே-மூஷிகாதிகளை -எலிகளை தீய கந்தம் காட்டி முடிக்குமா போலே – சப்தாதிகளிலே மூட்டி நசிப்பைக்கையாலே இந்த்ரியங்களை பொறி என்கிறது-இத்தால் பரிச்சின்ன வஸ்து க்ராஹகமான இந்த்ரிய வச்யராகை தவிர்ந்து–
சாந்தேந்து மென் முலையார் தடந்தோள் புணரின்ப வெள்ளத்து
ஆழ்ந்தேன் அரு நரகத்து அழுந்தும் பயன் படைத்தேன்
போந்தேன் புண்ணியனே உன்னை எய்த்து என் தீ வினைகள்
தீர்ந்தேன் நின்னடைந்தேன் திருவிண்ணகரானே —6-3-4-
தட முலை செய்ய சாந்து -என்னக் கடவது இறே- குங்குமத்தைச் சொன்னபடி
விஷயங்களை விட்டு இவ்வருகே போந்த இவர் வீத ராகர்க்கும் ஸ்ப்ருஹை பிறக்கும்படி சொல்லுவான் என் -என்று பட்டர்க்கு விண்ணப்பம் செய்ய-முரிக்குக் கிழக்கு என்னும் போது இங்கன் அல்லது இராது காண் திரு மங்கை ஆழ்வார் நா வீறு –என்று அருளிச் செய்தார்
கிடாம்பி அம்மாள்- சிறியாண்டான் பெருமாள் – பணித்தானாக பல காலும் சொல்லும்
நான் சொல்லுகிற வாச்ய வாசகங்களே அன்றோ பட்டரும் வ்யவஹிகரிக்கிறது
என்று இருக்க ஒண்ணாது-அங்குத்தைக்கு ஏற்றம் உண்டு-முன்னே நின்ற தூணை நான் தூண் என்றவாறே சிறாய்த்துத் தோற்றும்-அவர் சொன்னவாறே தளிரும் முறியுமாய்த் தோற்றும் -என்று –மென் முலையார் –விரஹம் பொறாத முலையை உடைய ஸ்திரீகள் உடைய –தடந்தோள் புணரின்ப வெள்ளத்து –முலைகள் ஆகிற மலைகளோடு-தோள் ஆகிற பாசங்களாலே நெருக்கிக் கட்டி-கடலிலே புகத் தள்ளுவாரைப் போலே அவர்களோடு தோள்கள் உடன் அணைகையில் உண்டான ஆனந்த சாகரத்திலே தரை காண ஒண்ணாத படி அவஹாகித்தேன்-உன்னுடைய கிருபைக்கும் அவிஷயம் ஆனேன் –-ஆனந்த மய -என்கிற விஷயத்தை உள்ளபடி கண்ட இவர்-இப்போது இங்கே இன்ப வெள்ளம் என்கிறது
இவ்வளவும் வரக் கால் கட்டின படியைக் கொண்டு-அநந்த கிலேச பாஜனமான இத்தை
இன்ப வெள்ளம் என்கிறது நெடு நாள் துவக்கின படியைக் கண்டு இறே –இத்தால் பலித்த தோர் பலம் உண்டு –ஆழ்ந்தேன் அரு நரகத்து அழுந்தும் பயன் படைத்தேன்- காலம் எல்லாம் இடை விடாதே அவனுடைய கல்யாண குணங்களை அனுபவிக்க இட்டுப் பிறந்த நான் காலம் எல்லாம் நித்ய சம்சாரியாய் போகையாகிற பிரயோஜனத்தைப் பெற்றேன்
விஷய ப்ராவண்யம் சம்சார பீஜம் -என்று இருக்கிறார் –
கறுத்துக் கஞ்சனை அஞ்ச முனிந்தாய் கார் வண்ணா கடல் போல் ஒளி வண்ணா
இறுத்திட்டான் விடை ஏழும் முன் வென்றாய் எந்தாய் அந்தரம் ஏழுமும் ஆனாய்
பொறுத்துக் கொண்டு இருந்தால் பொறுக்க ஒணாப் போகாமே நுகர்வான் புகுந்து ஐவர்
அறுத்துத் தின்றிட வஞ்சி நின்னடைந்தேன் அழுந்தூர் மேல் தின்ற வம்மானே–7-7-7-
இவற்றால் வந்த நலிவை ஆற்றி இருப்போம் என்றால் ஆற்ற ஒண்ணாதபடி போகங்களைப் புஜிக்க வேணும் என்று ஐவர் நெருக்கி புஜிப்பிக்க-அவர்களுக்கு அஞ்சி உன் திருவடிகளிலே சரணம் புகுந்தேன் –
நெடியானே கடியார் கலி நம்பீ நின்னையே நினைந்து இங்கு இருப்பேனைக்
கடியார் காளையர் ஐவர் புகுந்து காவல் செய்த அக் காவலைப் பிழைத்துக்
குடி போந்து உன்னடிக் கீழ் வந்து புகுந்தேன் கூறை சோறு இவை தந்து எனக்கு அருளி
அடியேனைப் பணி யாண்டு கொள் எந்தாய் அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே–7-7-8-
நெஞ்சில் நன்மை இன்றிக்கே பிறரை நலிய நலிய இளகிப் பதியா நின்ற பருவத்தை யுடைய ஐவர் வந்து புகுந்து சிறை செய்கிற –த்யக்த்வா புத்ராம் ச தாராம் ச ராகவம் சரணம் கத –என்கிறபடியே அவற்றைத் தப்பி உன் திருவடிகளிலே சரணம் புகுந்தேன்-
கோவாய் ஐவர் என் மெய் குடி ஏறிக் கூறை சோறு இவை தா என்று குமைத்துப்
போவார் நானவரைப் பொறுக்க கில்லேன் புனிதா புட் கொடியாய் நெடு மாலே
தீவாய் நாகணையில் துயில்வானே திருமாலே இனிச் செய்வது ஓன்று அறியேன்
ஆவா வென்று அடியேற்கு இறை இரங்காய் அழுந்தூர் மேல் திசை நின்ற வம்மானே–7-7-9-
நீ சேஷியாமது தவிர்ந்து இவை எனக்கு நியாமகமாய்க் கொண்டு வந்து என் சரீரத்திலே குடி புகுந்தது –நான் ( வகுத்த ப்ராப்தமான திருவடிகளையே )கூறையும் சோறுமாக நினைத்து இருக்கும் அது ஒழிய வேறு சிலவற்றைத் தா வென்று என்னை நெருக்கி ஒரு ஷணமும் கால் வாங்கு கிறிலர்கள் – நான் அவர்களுடைய நலிவைப் பொறுக்க மாட்டு கிறிலேன்
——————————————–
வார்த்தை -426-
ஒரு அதிகாரிக்கு த்யாஜ்ய உபாதேயங்கள் இரண்டு –
அவையாவன பிரகிருதி ப்ராக்ருதமும் -பகவத் பாகவதரும் –
த்யாஜ்யம் -ஆவது த்யாஜ்யப் பிரதிபத்தி –
உபேதேயமாவது -உபாதேய பிரதிபத்தி –
பிரதிபத்தியாவது -பெறாததிலே செல்லாமை -பெற்றதில் ப்ரீதி இன்றிக்கே ஒழிகை —
இழந்ததில் கிலேசம் இன்றிக்கே ஒழிகை -வழி இல்லா வழியில் ஆர்ஜியாது ஒழிகை யாகிற இவை –
இவை யன்றே நல்ல இவை யன்றே தீய -பெரிய திருவந்தாதி -3 -என்றும் –
உளதென்றினும் ஆவார் -இரண்டாம் திருவந்தாதி -45-என்றும் –
இன்பங்கள் மொய்த்திடினும் கனியார் -இராமானுச -நூற்றந்தாதி -17-என்றும் –
உண்டு இல்லை என்று தளர் தல தனருகும் சாரார் -இரண்டாம் திருவந்தாதி -45 என்றும் –
துயரங்கள் முந்திலும் முனியார் -இராமானுச நூற்றந்தாதி –17-என்றும்
கூறை சோறு இவை வேண்டுவது இல்லை -பெரியாழ்வார் திருமொழி -5-1-4-என்றும்
இத்யாதிகளாலே த்யாஜ்ய பிரதிபத்தி சொல்லிற்று –
எங்கே காண்கேன் –திருவாய்மொழி -8-5-1-என்றும் –
காணுமாறு அருளாய் -திருவாய்மொழி -8-1-2-என்றும் –
காண்பது எஞ்ஞான்று கொலோ -திருவாய்மொழி -5-9-6-என்றும் –
கண்டு கொண்டு -திருவாய்மொழி -9-4-9-என்றும் –
கண்டேன் கமல மலர்ப் பாதம் -திருவாய்மொழி -10-4-9- என்றும் –
திகழக் கிடந்தமை கண்டேன் -திருவாய் மொழி -5-8-1- என்றும் –
என்னுடைய கண் களிப்பே நோக்கினேன் -என்றும் -பெரிய திருமடல் -73-என்றும் –
கூட்டுண்டு நீங்கினான் -திருவாய்மொழி -9-5-6- என்றும் –
எம்மைப் பணி யறியா விட்டீர் -பெரிய திருமொழி -4-9-7- என்றும் –
உருக்காட்டாதே ஒளிப்பாயோ -திருவாய்மொழி -6-9-5-என்றும் –
தாம் தம்மைக் கொண்டகல்தல் தகவன்று -திருவாய்மொழி -9-7-9-என்றும் –
யாம் மடலூர்ந்தும் -திருவாய்மொழி -5-3-10-என்றும் –
குதிரியாய் மடலூர்தும் -திருவாய்மொழி -5-3-9- என்றும்
அறிவிழந்து எனை நாளையும் -திருவாய்மொழி -5-3-1-என்றும் –
எங்கு சென்றாகிலும் கண்டு -திருவாய்மொழி -6-8-5-என்றும் -இத்யாதிகளாலே-
பெறாததில் செல்லாமை பிறக்கையும் –
பெற்றதில் ப்ரீதி பிறக்கையும் –
இழந்ததில் கிலேசம் இருக்கையும்-
வழி யல்லா வழி யாகிலும் பெற வேண்டும் என்று இருக்கையும் ஆகிற உபாதேய பிரதி பத்தி சொல்லிற்று –
———————–
இவை அன்றே நல்ல இவை அன்றே தீய
இவை என்று இவை அறிவனேலும் -இவை எல்லாம்
என்னால் அடைப்பு நீக்க ஒண்ணாது இறையவனே
என்னால் செயற்பாலது என் —3-
புகழ்வோம் பழிப்போம் என்கிற இவை பொல்லாது-புகழோம் மதியோம் –மதியோம் இகழோம் –என்கிற இவை நல்ல-அவ் விஷயத்தைப் புகழப் பார்த்தோம் ஆகில் பழித்தோம் ஆவோம்-புகழ்வோம் என்றதினாலே இவ் வர்த்தம் ஸித்தியாதோ என்னில் அந்வயத்தில் காட்டில் வ்யதிரேகத்தாலே சொன்னால் அர்த்தத்துக்கு ஒரு ஸ்தைர்யம் உண்டு-இகழ்வோம் மதிப்போம்-நெஞ்சால் நினைத்தோமாகில் அவ் வஸ்துவை இகழ்ந்தோம் ஆவோம்
மன பூர்வோ வாக் உத்தர என்று மனஸ்ஸாலே நினைத்தை அன்றோ வாக்கு சொல்லுவது என்கிற நியாயத்தாலே-புகழ்வோம் பழிப்போம் -என்கிறத்தாலே ஸித்தியாதோ என்னில்-நெஞ்சாலே நினைத்த பாபங்களுக்கே பிராயச்சித்தம் பண்ண வேண்டும்படியாலே
நினைத்தோம் ஆகிலும் வஸ்துவை அழித்தோம்-மதியோம் -இகழோம்-நினைத்திலோம் ஆகில் இகழ்ந்திலோம் ஆவோம்
உளது என்று இறுமாவார் உண்டு இல்லை என்று
தளர்தல தனருகும் சாரார் –அளவரிய
வேதத்தான் வேங்கடத்தான் விண்ணோர் முடி தோயும்
பாதத்தான் பாதம் பயின்று —45-
உளது என்று இறுமாவார் –ஜன்ம தரித்ரனாய்ப் போருகிறான் ஒருவன் இங்கனே சஞ்சரியா நிற்கச் செய்தே ஒரு நிதி வந்து காலிலே தட்டுவது –அநந்தரம்-அத்தால் வந்த கர்வத்தால் சிலருக்குத் திரிய ஒண்ணாத படி அதிர நடப்பர்கள் ஆய்த்து –தன்னுடைய பூர்வ அவஸ்தையை அறியாதே நடுவே நாலு நாள் இது உண்டானதுவே அடியாக மாதா பிதாக்களையும் ஆச்சார்யனையும் அவமானம் பண்ணுவது –உத்க்ருஷ்ட ஜன்மங்களை அவமானம் பண்ணுவது –பர லோக கதை சொன்னார் யுண்டாகில் சிரிப்பதுமாய் திரியும் ஆய்த்து –ஒரு நாள் யுண்டாய் இல்லை யானவாறே பாவியேன் பண்டு ஸூகமே ஜீவித்தோம் இப்போது மிடிபடா நின்றோம் -என்று மிகவும் தளர்த்திக்கு யுடலாமே –அர்த்தார்த்தி யானால் கிடையா விடில் சோகம் இல்லை -ஆர்த்தனுக்கு இறே சோகம் உள்ளது -தரித்ரர் அர்த்தம் உண்டானவாறே-மாதா பிதாக்களையும் ஆச்சார்யர்களையும் அவமானம்
பண்ணுவர்கள்-இல்லை என்று தளரார் என்னாதே-உண்டு இல்லை என்று தளரார் என்றது என் என்னில் நித்ய தரித்திரன் சோகம் அறியான் – ஒரு நாள் உண்டாய் அது இல்லை யானவாறே பாவியேன் பண்டு சுகமே ஜீவித்தோம்-இப்போது இடி படா நின்றோம் என்று மிகவும் தளர்த்திக்கு உடலாம் என்று -உண்டு இல்லை என்று தளரார் –என்று சொல்லுகிறது-தளர்தல தனருகும் சாரார்-என்றது-சோகம் உண்டாய் அனுதாபம் பிறந்து மீளார் என்கிறது-முதலிலே தளரார் என்கிறது -அஸ்திரம் -என்று நினைத்து ஒரு கால் ஸ்திரம் என்று நினைத்து ஒரு கால் அஸ்திரம் என்று நினைத்து இருக்குமவர்கள் அன்று இறே
ஸ்திரமானது அஸ்திரம் ஆயிற்று என்னில் இறே சோகம் உள்ளது-செல்வம் அடியோடு இல்லாதவர்களுக்கு அவ்வளவாகத் தளர்ச்சி இராது,-சிலநாள் இருந்து கழிந்தவர்களுக்கு அளவற்ற தளர்ச்சி உண்டாக ப்ரஸக்தியுண்டே அப்படிப்பட்ட நிலைமையிலும் தளர மாட்டார்கள் என்கைக்காக “உண்டில்லை யென்று“ என்றார்.‘நேற்று உண்டாயிருந்தது, இன்று இல்லையா யொழிந்தது‘ என்று தளரமாட்டார்கள் என்கை.
உளதென்று இறுமாவார் என்றால் அதுக்கு எதிர்த்தலை –இல்லை என்று தளரார் என்னும் இத்தனை யாய்த்து உள்ளது –நடுவு -உண்டில்லை என்கிறதுக்கு பிரயோஜனம்
நெடு நாள் – தாரித்ரியத்தோடு முகம் பழகிப் போந்தவனுக்கு-பின்பும் அத் தாரித்யமே யானால் அது சாத்மித்துப் போம் அத்தனை போக்கி –அதுக்கு உடையக் கடவது அன்றிக்கே இருக்கும்-அங்கன் அன்றிக்கே –நடுவே சில நாள் ஜீவித்துப் போந்தவனுக்கு பின்பு ஒரு வறுமை வந்தால் அது மிகவும் தளர்த்திக்கு யுடலாய் இருக்கும்-அதாகிறது அன்று இங்கனே யுண்டாய்த்து-இன்று இங்கனே இல்லையாய்த்து என்னும்-இவ் வனுசந்தானம் ஆய்த்து தளர்த்திக்கு அடி – இப்படி வரும் தளர்த்தியை யுடையர் அன்றிக்கே இருப்பார்கள்
முனியார் துயரங்கள் முந்திலும் இன்பங்கள் மொய்த்திடினும்
கனியார் மனம் கண்ண மங்கை நின்றானைக் கலை பரவும்
தனியானைக் தண் தமிழ் செய்த நீலன் தனக்கு உலகில்
இனியானை எங்கள் இராமானுசனை வந்து எய்தினரே -17 –
ஸ்ரீ திருக் கண்ண மங்கையுள் நின்று அருளின பக்தராவி விஷயமாக திவ்ய பிரபந்தத்தை அருளிச் செய்தஸ்ரீ திருமங்கை ஆழ்வார் பக்கலிலே சிநேக யுக்தராய்-பிரிய தமரான- -எங்கள் நாதராய் இருக்கிற-ஸ்ரீ எம்பெருமானாரை ஆஸ்ரயித்தவர்கள் சுக துக்க நிபந்தனமான -கலக்கம் மேலிட்டாலும் கலங்கார் -சுக துக்கங்கள் வந்து மேல் விழுந்தாலும் ஹர்ஷாமர்ஷங்களாலே சலியார்கள்-என்கிறார் –துக்கங்கள் ஆனவை அஹமஹமிகயா வந்தாலும் இது வந்ததே என்று வெறார்கள்– சுகங்கள் ஆனவை எகோத்யோகென வந்து திரண்டாலும் பக்வபலம் போலே மனசு இளையார்கள் – ஆன பின்பு நீங்களும் இவற்றால் வரும் ஹ்ருதயகாலுஷ்யத்தை-நினைத்து அஞ்ச வேண்டாம்–சுகம் துக்கம் ஏற்படும் -ஆனாலும் கலங்காத திடமான நெஞ்சை திருவடிகளே கொடுத்து அருளும்-ஸ்திரமான ஆசார்யனுக்கு உரிமைப் பட்டு இருத்தலாம் சுகத்தில்-நிலை நின்ற பின் அஸ்திரமான உடல் முதலிய பொருள்களைப் பற்றிய களிப்பும்-கவர்வும் அற்றவர்களாய் இருக்க வேண்டியவர்கள் ஆகிறார்கள்
ந பிரகர்ஷ்யதே த்ப்ரியம் ப்ராப்ய நோத்விஜேத்-ப்ராப்யசாபிரியம் –கீதை – 5-20 – என்றார் இறே ஸ்ரீ கீதாசார்யரும் .-மதன கதனைர் நக்லிச்யந்தே யதீஸ்வர சம்ஸ்ரயா -என்று-இவ் அர்த்தத்தை அபியுக்தரும் அருளிச் செய்தார் இறே
நெடுமையால் உலகு ஏழும் அளந்தாய் நின்மலா நெடியாய் அடியேனை
குடிமை கொள்வதற்கு ஐயுற வேண்டா கூறை சோறு இவை வேண்டுவது இல்லை
அடிமை என்னும் அக் கோயின்மையாலே அங்கு அங்கே அவை போதரும் கண்டாய்
கொடுமை கஞ்சனை கொன்று நின் தாதை கோத்த வன் தளை கோள் விடுத்தானே -5 -1-4 –
நான் ராஜ குலம் புகுகையாலே எனக்கு அவ்வவ கைங்கர்ய ரசத்துக்கு உள்ளே எல்லா ரசங்களும் உண்டு(பூவையும் பூம் பாட்டிலும் யாவையும் திருமால் திரு நாமங்கள் போல் )
தன் ஸ்வரூபத்தை யாதொன்றாக நினைத்தான் -அதுக்கு ஈடாக இறே தாரக போஷகாதிகள் இருப்பது –தேகாதி விலஷணன் ஆகையாலே சப்தாதிகள் புருஷார்த்தம் ஆக மாட்டாது
பர தந்த்ரன் ஆகையால் ஸ்வ அனுபவம் புருஷார்த்தமாக மாட்டாது
ஸ்வரூபம் நித்யம் ஆகையாலே ஸ்வரூபம் விச்சேதம் புருஷார்த்தம் ஆக மாட்டாது
நித்ய ஜ்ஞான குணகன் ஆகையாலே குண நாசம் புருஷார்த்தம் ஆக மாட்டாது
இனி சேஷ பூதனுக்கு சேஷ விருத்தியே புருஷார்த்தம் -அவற்றின் சங்கங்களையும்-
அதுக்கு அடியான கர்மங்களையும் -போக்க வேணும் என்கிறார் மேல்-
எங்கே காண்கேன் ஈன் துழாய் அம்மான் தன்னை யான் என்று என்று
அங்கே தாழ்ந்த சொற்களால் அந்தண் குருகூர்ச் சடகோபன்
செங்கேழ் சொன்ன வாயிரத்துள் இவையும் பத்தும் வல்லார்கள்
இங்கே காண விப் பிறப்பே மகிழ்வர் எல்லியும் காலையே-8-5-11-
ஐஸ்வர்ய ஸூசகமான திருத் துழாய் மாலையை யுடைய சர்வேஸ்வரனை கண்டு அல்லது தரிக்க மாட்டாத படி சபலனான நான் -பரத்வம் முதலானவற்றை பெறாத நான்–- எங்கே காணக் கடவேன்-நிரந்தரமாக சொல்லி -ஒரு கால் சொல்லி -ஆசையை ஆவிஷ்கரித்தோம் இறே -என்று ஆறி இருக்கிறார் அல்லரே -லாபத்தளவும் சொல்லும் அத்தனை இறே-
காணுமாறு அருளாய் என்று என்றே கலங்கிக் கண்ண நீர் அலமர வினையேன்
பேணுமாறு எல்லாம் பேணி நின் பெயரே பிதற்றுமாறு அருள் எனக்கு அந்தோ
காணுமாறு அருளாய் காகுத்தா !கண்ணா !தொண்டனேன் கற்பகக் கனியே !
பேணுவாரமுதே !பெரிய தண் புனல் சூழ் பெரு நிலம் எடுத்த பேராளா !–8-1-2-
அலை கடல் கடைந்த அப்பனே -காணுமாறு அருளாய் என்னைச் செய்தே காணப் பெறாதே இருக்க பின்னையும் காணுமாறு அருளாய் என்கிறார் இறே -காண்கைக்கு ஒரு ப்ரவ்ருத்தி பண்ணுமவர் அல்லரே-வர்ஷ தாரையால் அல்லாது தரியாத சாதகம் போலே அருள் அல்லது அறியாதவர் ப்ரவர்த்திகைக்கு தாம் சக்தர் ஆனாலும் பிராப்தி இல்லை என்று இருக்குமவர் -அநவரதம் இத்தையே சொல்லா நிற்பார் -ஒரு கால் சொன்னால் வர காணாது ஒழிந்தால் வேறு ஒரு புகில் யுண்டாகில் இறே அத்தை பற்றலாவது –அருளாய் –ஒரே வார்த்தையையே மீண்டும் மீண்டும் சொல்வேன்-
காண்ப தெஞ்ஞான்று கொலோ? வினையேன் கனிவாய் மடவீர்!
பாண் குரல் வண்டினொடு பசுந் தென்றலுமாகி எங்கும்
சேண் சினை ஓங்கு மரச் செழுங்கானல் திரு வல்லவாழ்
மாண் குறள் கோலப் பிரான் மலர்த் தாமரைப் பாதங்களே.–5-9-6-
பிறருக்கும் ஐயோ என்னும் திசையோ இது –கண்கள் செய்த படி செய்ய -நான் காணப் பெறுவது என்றோ என்கிறாள் –கன்று வேறு தாய் வேறாகும் விஷயம் இறே -பிரஜை பட்டது படுகிறது -நான் பசி தீரும் வழி என் -என்பாரைப் போலே-வினையேன்– கண்கள் விடாய்க்கு அன்றிக்கே என் விடாய்க்கு அன்றிக்கே அலமாக்கும் படியான பாபத்தைப் பண்ணினேன் –காணாமைக்குப் பாவம் பண்ணினாரும் கூடக் காணும்படியான விஷயத்தை,-காண்கைக்கு யோக்கியதை உண்டாய் வைத்தே காணாதபடியான பாவத்தைப் பண்ணினேன்-நீங்கள் காட்டுகைக்கு விரைய ஆறி யிருக்கக்கூடிய நான், இன்று ‘காண்பது எஞ்ஞான்று கொலோ’ என்னும்படியான பாவத்தைப் பண்ணினேன் –
கண்டு கொண்டு என் கண்ணினை ஆரக் களித்து
பண்டை வினை ஆயின பற்றோடு அறுத்துத்
தொண்டர்க்கு அமுது உண்ணச் சொன்மாலைகள் சொன்னேன்
அண்டத்து அமரர் பெருமான் அடியேனே –9-4-9-
நான் அழைப்பேனே-என்ற விடாய் எல்லாம் கெடக் காணப் பெற்று-காணக் கருதும் என் கண்ணே -என்கிற கண்களின் விடாய் கெட-லியர் வயிறு நிரம்ப உண்டேன் -என்னுமா போலே-மறுகின நெஞ்சு களிக்கும் படி-இவ்வுகப்புக்கு இடைச் சுவரான ப்ராக்த்தன கர்மங்கள் ஆனவற்றை சவாசனமாகப் போக்கி -காண்பதற்கு முன்புள்ள துக்கத்தை சவாசனமாகப் போக்கி-என்னளவு இன்றிக்கே ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கும் உபகாரகனாகப் பெற்றேன்-இப்பேறு என்னால் வந்ததாக மாட்டாது -நான் சர்வேஸ்வரனால் விஷயீக்ருதன் ஆனேன் –நானும் உண்டு-என் வேலையாள்களும் ஜீவித்து-என் உறவினர்களுக்கும் விருந்திட வல்லேன் ஆனேன் –என்பாரைப் போலே –-சொல் மாலைகள் சொல்லப் பெற்றேன்-அடியார்கட்கு அடிமை யாதலை-எல்லையாக உடைய பேற்றினைப் பெற்றேன் –
பெற்ற பேற்றின் கனம் இருந்த படியாலே-இது தான் தோன்றியான கைப்பற்று (ஸ்வ யத்னம் )அடியாக வந்தது ஓன்று அன்று –சர்வேஸ்வரனாலே-அடியவனாக-அங்கீகரிக்கப் பட்டவன் ஆனேன் –
கண்டேன் கமல மலர்ப்பாதம் காண்டலுமே
விண்டே ஒழிந்த வினை யாயின வெல்லாம்
தொண்டே செய்து என்றும் தொழுது வழி ஒழுக
பண்டே பரமன் பணித்த பணி வகையே–10-4-9-
என்றும் கேட்டே போம் விஷயத்தை சாஷாத் கரிக்கப் பெற்றேன் -தன்னுடைய பிரபத்தி அதன் பலத்தோடு பொருந்தின படியை-அதாவது-நேராக கண்ட படியையைச் சொல்கிறார்-
இதனால் புறக் கண்களால் கண்டது போன்று-ஞானக் கண்களால் கண்டபடியைச் சொன்னபடி –விசத தமமான மானஸ சாஷாத் காரம் –—பிராப்தி ஒழியவே ஞான லாபமே அமையும் படியான போக்ய விஷயம் என்கிறது –கண்ட போதே வினை என்று பேர் பெற்றவை எல்லாம் விட்டுப் போய்த்து –சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி -என்னுமவன் அடியாக வந்ததாகையாலே தட்டில்லை இறே–இவர் கேவலர் அல்லர் –அடி வுடையராய் இருந்தார் -என்று விட்டுப் போயிற்றின –சாடு- மூலம் உண்டு -திருவடி கண்டார்-
த்ருஷ்டே பராவரே-கண்டால் போகும் -ஸ்ருதி -ஆழ்வார் சங்கை இல்லாமல் கண்டேன் –
பரன் அவரன்-மேன்மைக்கும் எளிமைக்கும் எல்லை இவனே –பரர்கள் என்று லோகத்தில் உள்ளார் அவரர்கள் போல் –உயர்வற உயர் நலம் –உயர்வு அறும் படி அன்றோ இவனது உயர்வு –நித்ய கைங்கர்யத்தைப் பண்ணி -அதுவே யாத்ரையாகச் செல்லும் படி–நமக்காக இன்று அன்றிக்கே சர்வாதிகன் சர்வ சாதாரணமாக அன்று அருளிச் செய்த பாசுரத்தில் படியே-சரம ஸ்லோகத்தில் இஷ்ட பிராப்தி சொல்ல வில்லை -அநிஷ்ட நிவ்ருத்தி -உபாதி தொலைய இவை தன்னடையே கிட்டுமே-கிணறு வெட்ட -தண்ணீர் -கிடைக்குமே -ஸ்வரூபம் நித்யம் -மறைந்து இருந்தது -ஸ்வரூப அனுரூப வ்ருத்தியும் கிட்டும் –
மம சஹஜ கைங்கர்யம் -பிரதி பந்தகங்கள் போனால் -தன்னடையே கிட்டும் -இது தான் சேஷத்வம் போலே இயற்க்கை –ஸ்வயம் நிரபேஷம்-அவன் –மாம் ஏகம் சரணம் வ்ரஜ -அடியேனும் பணி வகையே காணப் பெற்றேன் என்கிறார் –
ஆரா அமுதே! அடியேன் உடலம் நின்பால் அன்பாயே
நீராய் அலைந்து கரைய உருக்கு கின்ற நெடுமாலே!
சீரார் செந்நெல் கவரி வீசும் செழுநீர்த் திருக்குடந்தை
ஏரார் கோலம் திகழக் கிடந்தாய் கண்டேன் எம்மானே–5-8-1-
அழகு மிக்க ஒப்பனை -இப் ஒப்பனை அழகு நிறம் பெறும்படி யாயிற்று கண் வளர்ந்து அருளிற்று -அல்லாதார்க்கு கிடந்த போது வைரூப்யம் உறைத்து இருக்கும் -இங்கு அழகு உறைத்து இருக்கும் –வாயஸேந தத: தேந பலவத்க்லிச்யமாநயா ஸ மயா போதித: ஸ்ரீமாந் ஸுகஸுப்த: பரந்தப:”-என்பது, ஸ்ரீராமா. சுந். 38 : 24.-திருவடியைப் பார்த்துப் பிராட்டி கூறியது.–கண் வளர்ந்து அருளுகிற படி கண்டேன் –உணர்ந்து குளிர நோக்குதல் -அணைத்தல் -இந்த சொல்லுச் சொல்லுதல் -செய்யப் பெற்றிலேன் -கண்ணாலே காணப் பெற்றேன் -நினைத்த பரிமாற்றம் பெற்றிலேன் -பரிமாற்றம் பெறா விட்டால் ஆறி இருக்கலாம் –பிராப்தி இல்லை யாகில் -வடிவு அழகோ பாதி சம்பந்தமும் நலியா நின்றதே -ஸ்தநந்த்ய பிரஜை தாய் அறிந்தால் முலை முலை என்னுமா போலே சம்பந்த ஞானம் அன்றோ கூப்பிடப் பண்ணுகிறது –எம்மானே-இது நம்மது’ என்று இரா தொழியப் பெற்றேனாகில் நான் ஆறி இருக்கலாயிற்றே. என்றது,-சம்பந்தத்தைக் கொண்டு என்னை இப்படி நலியலாமோ என்கிறார் என்றபடி.-அன்றிக்கே,-வடிவினைப் போன்றே சம்பந்தமும் என்னை நலியா நின்றது என்கிறார் என்னுதல்.
–இரும் பொழில் சூழ் —72
மன்னு மறையோர் திரு நறையூர் மா மலை போல்
பொன்னியலும் மாடக் கவாடம் கடந்து புக்கு ——–73
என்னுடைய கண் களிப்ப நோக்கினேன் நோக்குதலும்
மன்னன் திரு மார்பும் வாயும் அடி இணையும் ————74
மன்னு மறையோர் திரு நறையூர் –மறையோர் மன்னும் திரு நறையூர் –-மடல் எடுக்கை சாஸ்த்ரார்தம் என்று உபபாதிக்குமவர்கள் மன்னும் தேசம் –அங்கன் உண்டோ என்னில் –
வ்யவசாயாத்ருதே ப்ரஹ்மன் நாசாத யதி தத்பரம் -என்று உண்டாகையாலே –மா மலை போல்-மலையைக் கொடு வந்து நெருங்க வைத்தால் போலே யாய்-பொன்னியலும் மாடக் –
அதி ஸ்லாக்கியமாய் ஸ்ப்ருஹநீயமான மாடங்களில் உண்டான –கவாடம் கடந்து புக்கு என்னுடைய கண்-அவன் காண்கை-அவ வாளம் காலை தப்பின படி-பல ஹானிக்கு முன்னே புகும் இத்தனை-என்னுடைய படபாக்னி குளிர –களிப்ப –கண்கள் ஆரவளவும் நின்று கண்ண மங்கையுள் கண்டு கொண்டேன் -பெரிய திரு மொழி -7-10-9-என்னுமா போலே –
நெடும் காலம் பட்டினி விட்ட கண்கள் வயிறு நிரம்பும் படி –நணுகினம் நாமே -திருவாய் மொழி -1-1-3-மன்யே ப்ராப்தா சம தம் தேசம் பரத்வாஜோ யமப்ரவீத் -அயோத்யா -69-9-நோக்கினேன் நோக்குதலும் மன்னன் –நான் கண்ட பொழுதே எழுதிக் கொண்டான் –-வாளும் பலகையும் பொகட்டு கண்ட போதே மடல் எடுக்கப் பண்ணினவன் –கண்ட போதே தான் என்னலாம்படி இருக்கை-
நன்கு எண்ணி நான் வளர்த்த சிறு கிளிப் பைதலே
இன் குரல் நீ மிழற்றேல் என் ஆர் உயிர்க் காகுத்தன்
நின் செய்ய வாய் ஒக்கும் வாயன் கண்ணன் கை காலினன்
நின் பசுஞ்சாம நிறத்தன் கூட்டு உண்டு நீங்கினான்–9-5-6-
ஓர் உடம்பில் இத்தனை பகை தேடி வைக்கலாமா –கலந்து என் பிரக்ருதியை அறிந்து வைத்து பிரிந்தான் -அவன் கூட இருந்தால் அன்றோ உன் படிகள் அனுகூலமாய் இருப்பது –தனி இருப்பில் நலிவார் ராவணாதிகள் அன்றோ -அனுகூலர் நலிவாரோ-
மாட்டீர் ஆனீர் பணி நீர் கொள்ள வெம்மைப் பணி யறியா
வீட்டீர் இதனை வேறே சொன்னோம் இந்தளூரீரே
காட்டீர் ஆனீர் நுந்தம் அடிக்கள் காட்டில் உமக்கு இந்த
நாட்டே வந்து தொண்டரான நாங்கள் உய்யோமே —4-9-7-
சேஷத்வத்தை இப்போது உம்மாலே உண்டாக்குதல் ஒழித்தல் செய்ய ஒண்ணாதே
(திருமாலே நானும் உமக்கு பழ அடியேன் )இதனுடைய ஸ்வரூப அனுரூபமான வ்ருத்தி விசேஷத்தை பண்ணுவித்துக் கொள்ள மாட்டீர் ஆனீர் –உம்மை ஒழியச் செல்லாத ஸ்வபாவத்தை உடைய எங்களை உம்முடைய திருவடிகளில் அடிமைச் சுவட்டை அறிவித்து
பொகட்டீர் –இத்தை அல்லாதவை போல் அன்றியே வ்யாவ்ருத்தமாகச் சொன்னோம்-
(கீழே அறியீர் மாட்டீர் இங்கு வீட்டீர் -பெரும் குற்றம் அன்றோ -நம் ஆற்றாமைக்கு வேண்டும் அளவு அன்றியே கண்ணாஞ்சுழலை இட்டு இனி இவ் வஸ்துவை பிறர் நம்பாதபடி சொன்னோம்-
விண்மீ திருப்பாய்! மலைமேல் நிற்பாய்! கடற்சேர்ப்பாய்!
மண்மீ துழல்வாய்! இவற்றுள் எங்கும் மறைந்துறைவாய்!
எண்மீ தியன்ற புறஅண் டத்தாய்! எனதாவி
உண்மீ தாடி உருக்காட் டாதே ஒளிப்பாயோ!–6-9-5-
அத்தனை அளவில்லாத சம்சாரிகளுக்காக சஜாதீயனாய் வந்து அவதரித்து -மார்விலே அம்பேற்று சோக மோகங்களை அனுபவித்து ரக்ஷிக்குமவனே
காண்கையும் அஸஹ்யமாய் இருப்பார்க்கு முகம் தோற்றாத படி நின்று சகல பதார்த்தங்களின் உடைய சத்தையை நோக்கினவனே-அசங்க்யேயமான பாஹ்ய அண்டங்களுக்கும் இப்படியே ரக்ஷகன் ஆனவனே-என்னுடைய ஹ்ருதயத்தில் உள்ளே மிகவும் பிரகாசித்து -என்னுதல் –அந்தர் பஹிச்ச வர்த்தித்து என்னுதல் –பக்தா நாம் என்கிற வடிவை எனக்கு காட்டாதே மறைய நின்றால் ஜீவிப்பனோ-
பூந்துழாய் முடியார்க்கு பொன் ஆழிக் கையார்க்கு
ஏந்து நீர் இளங்குருகே திரு மூழிக் களத்தார்க்கு
ஏந்து பூண் முலை பயந்து என் இணை மலர்க் கண் நீர் ததும்ப
தாம் தம்மைக் தம்மைக் கொன்டு அகல்தல் தகவன்று என்று உரையீரே–9-7-9-
தாம்-கீழ் சொன்ன அழகையும் சீலத்தையும் யுடைய தாம் –பூந்துழாய் முடியார்-பொன் ஆழிக் கையார்-திரு மூழிக் களத்தார் –என்று வைத்து தாம் என்கிறாள் அன்றோ –
பூந்துழாய் முடியார்க்கு பொன் ஆழிக் கையார்க்கு -என்கையாலே-வடிவு அழகினைச் சொல்லிற்று-திரு மூழிக் களத்தாற்கு – என்கையாலே குணம் சொல்லிற்று-ஆக
இப்படிப் பட்ட வடிவு அழகையும்-குணங்களையும் உடைய தாம் -என்றபடி –
இவற்றையே பற்றாசாக கொண்டு அன்றோ தூது விடுகிறாள் -வெறுப்பு -தீ வினையேன் -சொல்லக் கூடாது பார்த்தோம் —
தம்மைக் கொன்டு அகல்தல்-தமக்கு அகல வேண்டினால் -இவ்வடிவைப் பிரிந்தார் பிழையார்-என்று தம்மை வைத்து அன்றோ போவது –தம்மைக் கண்ணாடி புறத்திலே கண்டு அறிவரே-தம்மைப் பிரிந்த தசைக்கு உதவுகைக்கு அன்றோ தம்மைக் கண்டது –
அத நு கிம் துக்கதாம் ச அஹம் இஷ்வாகு நந்தனம்-இமாம் அவஸ்தாம்ஆபன்ன ந இஹ பஸ்யாமி ராகவம் -அயோத்யா -59-26-தசரதன் புலம்பல்-இந் நிலையை அடைந்த நான் இஷ்வாகு வம்சத்தில் பிறந்த இராமனை-இங்கு காண்கிறேன் இல்லை -என்கிறபடியே-
ஆற்றாமை எல்லாம் சொல்லுவிக்கும் அன்றோ -என்றது–வா போகு-வந்து ஒரு கால் கண்டு போ முன் அழகும் பின் அழகும் கண்டு சக்கரவர்த்தி – எனக்கு ஓர் ஆற்றாமை உண்டான அளவிலே கிட்டி நின்று முகம் காட்டி-ஈரக் கையாலே தடவி நோக்குகைக்கு அன்றோ தம்மைப் பெற்றது –தம்மைப் பிரிந்து நோவு படுகிற இற்றைக்கு மேற்பட ஆற்றாமை இல்லை அன்றோ எனக்கு–இவ்வளவில் பெருமாளை நான் காண்கின்றிலேன் -என்கிறாள் -என்றபடி
தாம் தம்மைக் கொண்டு அகல்தல்-தாம் என்னைக் கொண்டு அகலுமது ஒழிய தம்மைக் கொண்டு அகலக் கடவரோ-தம்மைக் கொண்டு அகல வேண்டினால்-தமக்கு உரிமைப் பட்ட பொருளைப் -ஆழ்வார் ஆகிய நாயகியை -பொகட்டு-பிறர்க்கு உரிமைப் பட்ட பொருளையோ -இறைவனது திரு மேனியை -கொடு போவது -என்னுதல்-பக்தர்களுக்காக அன்றோ அவன் உடம்பு இருப்பது -என்றபடி-தனக்கே யாக எனைக் கொள்ள வேண்டும் -என்றே அன்றோ இத்தலை இருப்பது -என்றவாறு –உனக்கே என்று சொல்லாமல் -ஆழ்வார் அருளிச் செய்ய -அழகில் மயங்காமல் கைங்கர்யம் செய்ய -படர்க்கையில் சொல்ல-பக்தானாம் -உமக்கே யாக என்னைக் கொள்ளும் இதே -சொல்லாமல் தனக்கே யாக -சத்ய ஸங்கல்பன் அன்றோ –தாம் தம்மை –ஸ்வரூபம் ரூபம் -சதைக ரூப ரூபாயா –ஆத்மைவ பந்து -மனசே பந்த மோக்ஷ ஹேது -ஆத்மாவால் ஆத்மாவை உசற்ற -ஆத்மாவால் ஆத்மாவை தள்ளி விடாதே –
நல்லை நெஞ்சே நாம் தொழுதும் -முந்துற்ற நெஞ்சே —
தகவன்று என்று உரையீரே–மென்மையும் பிரணயித்தவமும் போனால் தயையும் குடி போக வேணுமோ –நிர்த்தயர் செய்யுமத்தை செய்தார் என்று சொல்லுங்கோள் -ஸ்த்ரீவதம் என்றால் அஞ்சாதார் செய்யுமத்தை செய்தார் என்று சொல்லுங்கோள்–என்கிறாள் –காதலுக்கும் மிருத தன்மைக்கு சேராத மாத்ரமே அன்றிக்கே இது அருளே இல்லாதவர் செயல் என்று சொல்லுங்கோள் -என்கிறாள் –-பெண் கொலைக்கு அஞ்சாதவர் செய்ய்மவற்றைச் செய்தீர் -என்று சொல்லுகோள்-என்கிறாள் –
யாமடல் ஊர்ந்தும் எம் ஆழி அங்கைப் பிரானுடைத்
தூமடல் தண்ணத் துழாய் மலர் கொண்டு சூடுவோம்
யாமடம் இன்றித் தெருவு தோறு அயல் தையலார்
நாமடங்காப் பழி தூற்றி நாடும் இரைக்கவே.–5-3-10-
செய்யக் கடவது அல்லாததை செய்தே யாகிலும் –சரைஸ்து சங்குலாம் க்ருத்வா லங்காம் பரபலார்த்தந: மாம் நயேத் யதி காகுத்ஸ்த:-தத் தஸ்ய சத்ருசம் பவேத்”- ஸ்ரீராமா. சுந். 39:30.
“என்னை அழைத்துக் கொண்டு போவாராயின் அச்செயல் அவருக்குத் தக்கதாகும்” என்று இருக்கக் கூடிய நாம், – மடலூர்ந்தே யாகிலும் -இங்கு மடலாக நினைக்கிறது –பெற்று அன்று தரியாத உபேய த்வரையும்-அதுக்கு அடியான உபாய வை லக்ஷண்ய அனுசந்தானமும் உபாயம் தன்னாலே பேறு என்ற துணிவும் -வேறு ஒன்றை உபாயமாக நினையாமையும் -க்ரம பிராப்தி பற்றாமையும் -மடலாய்ச் செல்லுகிறது
பிரணவத்தில் சொல்லப்பட்ட சேஷத்வத்திற்கு உரியதான ஆத்மாவுக்கு வாசக சப்தம்
இருக்கிறபடி யாயிற்று ‘யாம்’ என்பது.-அத் தலையைக் கொண்டே அன்றோ இவனை நிரூபிப்பது.-அஹம் அர்த்தம் -மகாரம்-சேஷ பூதன் –அகாரம் சேஷி –-ஆறி இருக்காமல் -ஸுவ பிரயோஜனம் கூடாதே -மடல் எடுப்பதால் அஹம் அர்த்தம் உடன் சேராத செயல் –
யாம் முதலில் சொல்லிஆழி அம் கைப் பிரான் –பின்னால் சொல்லி -பிரணவம் -அகாரம் சொல்லித் தானே மகாரம் –பிரணவத்தை விட இங்கே நன்றாக அருளிச் செய்த படி –கேட்டு திருந்த வேண்டியது ஜீவாத்மா தானே-ராஜ புருஷன் -சப்தம் முன்னால் இருந்தாலும் சேவகனுக்கு முக்கியம்-
நாணும் நிறையும் கவர்ந்து என்னை நன்நெஞ்சம் கூவிக்கொண்டு
சேணுயர் வானத்திருக்கும் தேவ பிரான் தன்னை
ஆணை என் தோழீ! உலகு தோறு அலர் தூற்றி ஆம்
கோணைகள் செய்து குதிரியாய் மடல் ஊர்துமே.–5-3-9-
என்னாலான மிறுக்குகள் செய்து -கோணை-மிறுக்கு-அதாவது மடல் கொண்டு புறப்பட்டவாறே எதிரே வரும் –-சென்று கும்பிடக் கடவேன்-குதிரியாய்-என்று –குத்ஸிதா ஸ்த்ரீ; குஸ்திரீ என்கிற பதத்தைக் குதிரி என்கிறதாய், அதாகிறது, அடங்காத பெண்ணாய்
தடை இல்லாத பெண் என்கிற படியாய், தடை யுடையேன் அன்றிக்கே என்னுதல்;-தடை இல்லாப் பெண் -அடங்கா ஸ்திரீயாய் –குதிரி என்று ஆபரணம் இட்டு வைக்கும் செப்பாய் –இவளுக்கு ஆபரணம் -நாணும் நிறையும் இறே -அவை போகையாலே கேவல சரீர மாத்ரமாய் செல்லக் கட வேன்–குதிரி –குதிரையை யுடையவள்-பனை மடலை குதிரையாக யுடையவள் என்றுமாம் –மடல் ஊர்துமே.-இரண்டு தலையையும் நோக்கி இருந்தது அமையும் –இனி மடலூர்ந்தே விடக் கடவேன் –மடலாகிறது -அபிமத விஷயத்தை ஒரு படத்திலே எழுதி பனை மடலையைக் குதிரையாய்க் கொண்டு -உடம்பைப் பேணாதே மயிரை விரித்து கண் வாங்காதே பார்த்துக் கொண்டு திரியா நின்றால்-போக உபகரணங்கள் கண்டால் அக்னி கல்பமாய் இருக்கக் கடவதாய்-இப்படி செல்லா நின்றால் -ராஜாக்கள் கூட்டுதல் -ஆற்றாமை கூட்டுதல் -இரண்டு தலையிலும் உள்ள பந்துக்களும் கை விட்டு ஒருவருக்கு ஒருவர் தஞ்சமாய் முடிகை தானே பேறாகச் செய்யுமதாயிற்று –-மடல் ஊர்துமே-‘செய்யக் கடவதாயிற்ற பின்பு, இனி, ஒன்றை நினைத்து ஒன்றைச் சொல்லுகிறது என்?’என்று பார்த்து அது தன்னையே சொல்லுகிறாள்.
மாசறு சோதி என் செய்ய வாய் மணிக் குன்றத்தை
ஆசறு சீலனை ஆதி மூர்த்தியை நாடியே
பாசற வெய்தி அறிவிழந்து எனை நாளையம்
ஏசறும் ஊரவர் கவ்வை தோழி! என்செய்யுமே?–5-3-1-
அறிவு இழந்தது அநேக காலம் உண்டு -நாம் அறிவு இழந்தது எத்தனை காலத்தோம் -திர்யக்குகளின் காலிலே விழுந்து தூது விட்ட போதே போயிற்று இல்லையோ அறிவு –மதி எல்லாம் உள் கலங்கி அன்றோ அப்படிச் செய்தது -தன் பக்கல் கை வைத்தால் மற்றொன்று அறியாதபடி செய்யும் விஷயமே அன்றோ,‘பேரின்பமெல்லாம் துறந்தார் தொழுதார் அத் தோள்’–பூதத்தார் –42- என்னக் கடவதன்றோ.“ஜனங்களின் மத்தியில் இருக்கிற இந்தச் சரீரத்தை நினையாமலே சஞ்சரிக்கிறான்” என்கிறபடியே,பேற்றினைப் பெறுகிற சமயத்திலே இவ் வருகுள்ள வற்றை நினையாதபடி செய்கையே அன்றிக்கே,ஞானம் பிறந்த சமயமே பிடித்தும் இவ் வருகுள்ள வற்றை நினையாமலே செய்ய வல்ல விஷயம் அன்றோ?தன்னை அநுசந்தித்து உலக யாத்திரையையும் அநு சந்திக்கும் படியோ அவன் படி.-ஆனாலும் ஊரார் சொல்லும் பழிக்கு அஞ்ச வேண்டாவோ -என்ன –அவ்வெல்லை கடந்திலமோ –என்கிறாள்-கவ்வை -பழி – தோழி! என்செய்யுமே?–-இவ்விஷயத்துக்கு புறம்பானோர் சொல்லுமதுக்கு ஒரு பிரயோஜனம் இல்லை என்று அறியாயோ -அவர்கள் பழி நமக்கு புறம்பாம் அத்தனை அன்றோ -நமக்கு இது உபகாரகம் அன்றோ -பழி பற்று அறுக்கிறது–அலர் எழில் ஆர் உயிர் நிற்கும் அதனைப் பலர் அறியார் பாக்கியத்தால் –நமக்கு ஸ்மாகரம் அன்றோ -என்கிறாள் –
நுங்கட்கு யான்உரைக்கேன் வம்மின் யான்வளர்த்த கிளிகாள்!
வெங்கட் புள்ளூர்ந்து வந்து வினையேனை நெஞ்சம்கவர்ந்த
செங்கட் கருமுகிலைச் செய்யவாய்ச் செழுங்கற்பகத்தை
எங்குச்சென் றாகிலும் கண்டு இதுவோ தக்கவாறு என்மினே!–6-8-5–
பர வ்யூஹ விபவாதி ஸ்த்தலங்கள் எங்கேனுமாகிலும் சென்று கண்டு-இவளை சித்த அபஹாரம் பண்ணித் தனிமைப் படுத்தின இதுவோ தகுதி- என்று சொல்லுங்கோள் –கீழே வானவர்கோனைக் கண்டு என்கிறபடியே லோகத்தில் அன்றிக்கே ஏகாந்த ஸ்தலத்தில் சென்றாகிலும் வார்த்தை சொல்லுங்கோள் -அங்கனம் அன்றியிலே-“நஹி த்ரக்ஷ்யாமி யதி தாம் லங்காயாம் ஜனகாத்மஜாம் அநேந ஏவ ஹி வேகேந கமிஷ்யாமி ஸுராலயம்”- என்பது, ஸ்ரீராமா. சுந். 1 : 40. -என்கிறபடியே -பரமபதத்தில் கண்டிலோம் -என்று மீளாதே வ்யூஹ விபாவாதிகள் எங்குத் தேடியாகிலும் கண்டு சொல்லுங்கோள்-ஸ்தான பேதம் உண்டாகிலும் பாசுரம் இதுவே –நீர்மை கொண்டாடி இருப்பார்க்கு இது அல்லது மர்மம் இல்லை -இத்தை சொல்லுங்கோள்-பிறர் மனத்தினையும் கவர்ந்து தன் மனத்தினையும் கொண்டு
கடக்க இருக்கையோ தக்கோர்மையாவது? அவனுக்கு அருள் இல்லை என்கையாவது, -தர்மியை இல்லை என்கை அன்றோ. தர்மியைச் சேர்ந்துள்ளதான கிருபையும் எங்கள் பக்கல் காணாமையாலே – அருள் அனைவர் இடமும்- கிருபை அடியவர்கள் இடம் -தமக்கு அதுவும் இல்லை என்று சொல்லுங்கோள்.
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .