வார்த்தை -440-
பச்சை மா மலை போல் மேனி-திருமாலை -2- என்றது –
ஒருத்தரிட்டு ஆகாது ஒழிகையும் –
எல்லாவற்றாலும் பெருத்து இருக்கையும் –
தானே எல்லாவற்றையும் தரித்து இருக்கவற்றாய் இருக்கையும் –
இதிலே அன்வயித்தால் எங்கும் தெரியும்படியாய் இருக்கையும் –
ஒருத்தரால் பேர்க்கப் போகாதே இருக்கையும் –இதிலே அன்வயித்தாருக்கு சகல போகங்களும் இதுக்கு உள்ளே உண்டாய் இருக்கையும் –
கத்யாகதி இன்றியிலே இருக்கையும் —அஞ்சினான் புகலிடமாய் இருக்கையும் –
பச்சை மா மலை போல் மேனி பவள வாய் கமலச் செங்கண்
அச்சுதா அமரர் ஏறே ஆயர் தம் கொழுந்தே என்னும்
இச்சுவை தவிர நான் போய் இந்திர லோகம் ஆளும்
அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்க மா நகர் உளானே -2-
பச்சை நிறத்தை உடைத்தாய்-ஸ்லாக்கியமாய்-இருப்பதொரு மலை போலே யாய்த்து திரு மேனி இருப்பது –காணப் புக்கால் கண்ணும் குளிர்ந்து-நெஞ்சும் குளிரும்படி ஸ்லாக்கியமாய்த்து இருப்பது –தாபத் த்ரயம் உடையவர்களின் சகல தாபங்களும் கண்ட போதே ஆறும்படி யாய்த்து திருமேனி இருப்பது –நெய் திணுங்கினால் போலே அகவாயில் தண்ணளி உடைய செறிவு எல்லாம் வடிவிலே காணலாம் படி இருக்கை –மா மலை -என்றது
பூஜ்யமான மலை என்றபடி –பிரதமத்தில்-சுபாஸ்ரயமாய்-பின்பு நித்ய அனுபாவ்யமாய் இருக்கும் ஸ்லாக்கியதையைச் சொல்லுகிறது –மலையானது-ஸ்தைர்யத்துக்கு ஒப்பாய்
வளர்த்திக்கும் ஒப்பாம் இத்தனை ஒழிய-போக்யதா அதிசயம் எல்லாம் இல்லையே அதனுக்கு –மேனி–ஆனந்த மய -என்கிற ஸ்வரூபமும்-ஆனந்தாதி குணங்களும் அல்ல –
இவரை உகப்பிப்பது –இவை இரண்டும் அகவாயிலே யாம்படியான இவ்வடிவு யாய்த்து இவரை உகப்பித்தது –-இச்சா க்ர்ஹீத அபிமதோருதேக -என்றும்
குன்றாடு கொழு முகில் போல் குவளைகள் போலே குரை கடல் போல்
நின்றாடு கண மயில் போல் நிறமுடைய நெடுமால் -என்றும் சொல்லக் கடவது இறே-கழுத்தே கட்டளையாக நீரை முகந்து போக மாட்டாதே மலை உச்சியினிலே சாய்ந்த மேகம் போலவும்
கண்ணாலே முகந்து அனுபவிக்க குவளைகள் போலவும்
அனுபவித்து முடிக்க ஒண்ணாமைக்கு கடல் போலவும்
வைத்த கண் வாங்க ஒண்ணாமைக்கு மயில் திரள்கள் போலவும்
ஆய்த்து இத் திரு மேனி இருப்பது –
சிஞ்சேதி மஞ்ச ஜன மிந்திரியா தடித்வான் பூஷா மணி தியுதிபிரிந்த்ரத நுர்த்ததான
ஸ்ரீ ரெங்க தாம்நி தயாரச நிர்புரத்வாதத் ரௌ சயாளுரிவ சீதள காளமேக -என்றார் இறே
ஸாதாரண மலையானது எம்பெருமானுடைய துளக்கலாகா நிலைக்கும் வளர்த்திக்கும் ஒப்பாகுமேயன்றி, காணப் புக்கவர்களின் கண்ணையும் நெஞ்சையும் குளிர்வித்து
அவர்களுடைய ஸம்ஸார தாபங்களை யெல்லாம் போக்குந்தன்மையும் எப்போதும் தியாநஞ்செய்தற்கு உரியதாய் இருத்தலும் பெருங்கருணைக்கு இருப்பிடமாய் இருத்தலும்
முதலிய குண விசேஷங்களில் ஒப்பாக மாட்டாமையால் ‘பச்சை மா’ என்ற அடைமொழி மலைக்குக் கொடுக்கப்பட்டது.
பசுமை நீலம் கருமை என்ற நிறங்களை அபேதமாகக் கூறுவது கவிமரபாதலால்
எம்பெருமானுடைய காளமேகத் திருவுருவத்திற்குப் பச்சை மா மலையை உவமை கூறினார்.ஸாதாரண மலையானது எம்பெருமானுடைய துளக்கலாகா நிலைக்கும் வளர்த்திக்கும் ஒப்பாகுமேயன்றி, காணப் புக்கவர்களின் கண்ணையும் நெஞ்சையும் குளிர்வித்து அவர்களுடைய ஸம்ஸார தாபங்களையெல்லாம் போக்குந்தன்மையும்
எப்போதும் தியாநஞ்செய்தற்கு உரியதாய் இருத்தலும் பெருங்கருணைக்கு இருப்பிடமாய் இருத்தலும் முதலிய குணவிசேஷங்களில் ஒப்பாக மாட்டாமையால்‘பச்சை மா’ என்ற அடைமொழி மலைக்குக் கொடுக்கப்பட்டது.
———————
கடலேயும் ஒப்பார் -பெரிய திருமொழி -2-8-8-என்றது –
கண்ணுக்கு இலக்காய் இருக்கச் செய்தே ஆழமும் அகலமும் அளவிட
ஒண்ணாதாய் இருக்கையும் –உயிர் அற்றவற்றை உட்கொள்ளாது ஒழிகையும் –
ஸ்வ சக்தியாலே உள்ளுப் போகாது ஒழிகையும் –
தான் அள்ளி விநியோகம் கொள்ளாது ஒழிகையும் –
ஒன்றின் வாயாலே (மேகம் -ஆச்சார்யர் –லஷ்மீ நாதாயா சிந்தவ் இத்யாதி)விநியோகம் கொள்ளலாய் இருக்கையும் –
தர்சநீயமாய் இருக்கையும் –
மேவி எப்பாலும் விண்ணோர் வணங்க வேதம் உரைப்பர் முந்நீர் மடந்தை
தேவி அப்பால் அதிர் சங்கம் இப்பால் சக்கரம் மற்று இவர் வண்ணம் எண்ணில்
காவி யொப்பார் கடலேயும் ஒப்பார் கண்ணும் வடிவும் நெடியராய் என்
ஆவி யொப்பார் இவரார் கொல் என்ன அட்டபுயகரத்தேன் என்றாரே–2-8-8-
இவருடைய நிறத்தை பார்க்கில் காவி போலேயும் கடல் போலேயும் இரா நின்றார் –முந்நீர் மடந்தை கடலில் பிறந்த ஸ்ரீ மகா லஷ்மி-ஆற்று நீர் ஊற்று நீர் வேற்று நீர் -மலை நீர் -முந்நீர் என்பர்-முச்செய்கை யுடைய -மண்ணைப் படைத்து காத்து அழித்தல்-முத் தொழில் களும் கடலுக்கு உரியதாம்-நீரில் இருந்து நிலம் பிறக்கும் -முடிவில் நீரினால் மூடப் பட்டு உலகம் அழியும் -நடுவில் நீரால் காக்கப் படும்-முந்நீர் -பழைய நீர் என்றுமாம் ஆதியில் நீரையே படைத்தார் -நாராயணன்-
————————–
கார்முகில் -திருவாய்மொழி -2-3-7- என்கிறது –
தர்சன மாத்ரத்திலே தாப சாந்தியைப் பண்ணுகையும் –
எங்கும் ஒக்க வர்ஷிக்கும் இடத்தில் தான் ஒரு பிரயோஜனத்தை கணிசியாது
ஒழிகையும் –
கொண்டவன் பிரத்யுபகாரம் தேடாது ஒழிகையும் –
ஒரு படிப்பட உபகரிக்கப் பெறாமையாலே உடம்பு வெளுக்கையும்
முன் நல் யாழ் பயில் நூல் நரம்பின் முதிர் சுவையே
பன்னலார் பயிலும் பரனே பவித்திரனே
கன்னலே அமுதே கார் முகிலே என் கண்ணா
நின்னலால் இலேன் காண் என்னை நீ குறிக்கொள்ளே–2-3-7-
கார் முகிலே–பிரயோஜன நிரபேஷமாக கொடுக்கை-வள்ளன்மையினைப் பற்றிக் ‘கார்முகிலே’ என்கிறார்.
——————
எண்ணும் பொன்னுருவாய் -திருநெடும்தான்டகம் -1- என்றது –
நித்தியமாய் இருக்கையாலும் –
சகலராலும் கௌரவிக்கப்படுவது ஒன்றாகையாலும் –
உரை உண்டாகையாலும்
உண்டென்ன உயிர் நிற்கையாலும்-இது கை பட்டவன் நினைத்தபடி பண்ணலாய் இருக்கையாலும் –
அவனுக்கு அபிமதங்கள் எல்லாம் கொடுக்கவற்றாய் இருக்கையாலும் –
அலங்காரமாய் இருக்கையாலும் –
ஆபத்துக்கு உதவுகையாலும் –
இது கைப்பட்டவனை ஸ்ரீ மான் என்கையாலும் –
இது கைப்பட்டவன் சகலராலும் சேவ்யமானாய் இருக்கையாலும் -சொல்லுகிறது –
மின் உருவாய் முன்னுருவில் வேதம் நான்காய் விளக்கொளியாய் முளைத்து எழுந்த திங்கள் தானாய்
பின்னுருவாய் முன்னுருவில் பிணி மூப்பு இல்லா பிறப்பிலியாய் இறப்பதற்கே எண்ணாது எண்ணும்
பொன்னுருவாய் மணி வுருவில் பூதம் ஐந்தாய் புனல் வுருவாய் அனல் வுருவில் திகழும் சோதி
தன்னுருவாய் என்னுருவில் நின்ற எந்தை தளிர் புரியும் திருவடி என் தலை மேலவே–1
இவ் வாபன் நிவ்ருத்தியை பண்ணினது மேலே தன்னுடைய ஸ்வரூப ரூப குணங்களை பிரகாசிப்பித்தான் -என்கிறார் மேல்-எண்ணும் பொன்னுருவாய் -என்று திவ்யாத்ம ஸ்வரூபத்தை பிரகாசிப்பித்தான் -என்கிறார் –
எண்ணும் –போக்யாதிசயத்தாலே நேதி நேதி –(ப்ரஹ்மதாரண்யம்)என்கிறபடியே
அது அது -எண்ணும் இத்தனை போக்கி இதம் -என்று பரிச்சேதிக்க ஒண்ணாது இருக்கை –உபர்யுபர்யப்ஜ புவோ’பி பூருஷாந்
ப்ரகல்ப்ய தே யே ஶதமித்யநுக்ரமாத் |
கிரஸ் த்வதேகைக குணாவதீப்ஸயா
ஸதா ஸ்திதா நோத்யமதோ’திஶேரதே ||–ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னம்-ஶ்லோகம் 19 –
வேத வாக்யங்கள் “தேயே சதம்” (இது போன்ற நூறு) என்று மீண்டும் மீண்டும் புதிய ப்ரஹ்மாக்களை கற்பனை செய்து, உன்னுடைய ஒரு (ஆனந்தம் என்னும்) குணத்தின் எல்லையைக் காண முயன்று, சிறிதளவும் முன்னேறாமல், ஆரம்ப நிலையிலேயே இருக்கின்றன,-ஏகைக குணாவதீப்சயா சதா ஸ்திதா -என்று ஒரோ குணம் தான் அபரிச்சின்னமாய் இருக்க ஈத்ர்சமாய் அசங்கயாதமான குணங்களுக்கு ஆஸ்ரயமான ஸ்வரூபத்தை பரிச்சேதிக்க ஒண்ணாது எண்ணும் இடம் சொல்ல வேணுமோ –ஆழ்வார் போலே உயர்வற உயர்நலம் உடையவன் என்று பேசி விடாமல் ஏதோ பேசத் தொடங்கி பரிபவப் பட்டனவே வேதங்கள் –-அருமையான வேதாந்த விழுப் பொருளை அருளிச் செய்கிறார் இத்தால்
பொன்னுருவாய் – பொன்னின் உடைய ஸ்வபாவத்தை உடைத்தாய் ஆகையாலே –ஸ்வரூபத்தைச் சொல்லுகிறது – அதாகிறது-1- -ஸ்பர்ஹணீயமாய் இருக்கையும் –
2-உண்டு என்ன உயிர் நிற்கையும் –3-இத்தைக் கொண்டு சர்வ அபேஷிதங்களையும் சாதித்துக் கொள்ளலாய் இருக்கையும் – 4-இத்தை உடையவன் காலில் லோகம் அடங்க விழும்படியாய் இருக்கையும்-
——————–
அந்தி மூன்றும் அனலோம்பும் -பெரிய திருமொழி -7-5-1-என்றது
காமாக்நி -கோபாக்னி -ஜாடராக்னி –
தந்தை காலில் பெரு விலங்கு தாள விழ நல்லிருள் கண் வந்த
எந்தை பெருமானார் மருவி நின்ற ஊர் போலும்
முந்தி வானம் மழை பொழியும் மூவா வுருவில் மறையாளர்
அந்தி மூன்று அனல் ஓம்பும் அணியார் வீதி அழுந்தூரே –7-5-1-
அந்தி மூன்று அனல் ஓம்பும் – ஒரு பல அபிசந்தியை பண்ணிச் செய்கிறார்கள் அன்று இறே
நித்ய அனுஷ்டானத்துக்காக கொள்ளுவது ஒரு பலம் இல்லை இறே – ஆகையால் இதுவே யாத்ரையாய் –(ஓம்பும் வர்த்தமானம் )
—————-
சீதனையே தொழுவார் விண்ணுளாரிலும் சீரியர் -திருவிருத்தம் -79
வெட்டி வாளிலும் -சிரமன்(வேலை செய்யும்) வாள் கனத்து இருக்கும் என்றபடி –
வேதனை வெண் புரி நூலனை விண்ணோர் பரவ நின்ற
நாதனை ஞாலம் விழுங்கும் அநாதனை ஞாலந்தத்தும்
பாதனைப் பாற்கடல் பாம்பணை மேல் பள்ளி கொண்டு அருளும்
சீதனையே தொழுவார் விண்ணுளாரிலும் சீரியரே – – -79
விண்ணுளாரிலும் சீரியரே – நிரந்தர பகவத் அனுபவமே யாத்ரை யான -அத்தேசத்தில் அன்றியிலே –அப்படிக்கு விரோதியான சம்சாரத்திலே இருந்தே -அதுவே யாத்ரையாய் இருக்கையாலே – இவர்கள் நித்ய ஸூரிகளிலும் சீரியர்-ஸ்ரீ யபதியை விரோதி பஹுளமான சம்சாரத்தில் இருந்தே ஆஸ்ரயிக்கும் பாகவத உத்தமர்கள் நிரபாதகமான அங்க நித்ய அனுபவம் செய்பவர்களை விட மேம்பட்டவர் என்கிறார்
வார் புனல் அம் தண் அருவி வட திரு வேங்கடத்து எந்தை
பேர் பல சொல்லிப் பிதற்றிப் பித்தர் என்றே பிறர் கூற
ஊர் பல புக்கும் புகாதும் உலோகர் சிரிக்க நின்று ஆடி
ஆர்வம் பெருகிக் குனிப்பார் அமரர் தொழப்படுவாரே.–3-5-8–
இடைவிடாது பகவதநுபவம் செய்வதற்கென்றே வாய்த்த இடமான பரமபதத்தில் பகவதநுபவத்திற்கு எவ்வகையான இடையூறுமில்லாதலால் அங்கிருந்து கொண்டு பகவானை யநுபவித்தல் வியப்பன்று; உண்டியே உடையே உகந்தோடு மிம்மண்டலம்
பகவதநுபவத்திற்கு நேர்விரோதியாதலால் அப்படிப்பட்ட இந்த இருள் தருமா ஞானத்திலிருந்து கொண்டே அங்ஙனம் நித்யாநுபவஞ் செய்தலில் மிக அருமை யுண்டாதலால் அவ்வருமையைப் போக்கி எம்பெருமானை இடைவிடாது
அனுபவிக்குமவர்களை நித்ய முக்தர்களிலும் மேம்பட்டவராகக் கூறத்தடையுண்டோ?
ஒரு சிறந்த காரியத்தைப் பிரதிபந்தகமில்லாத விடத்தில் தலைக்கட்டுதலிற் காட்டிலும் பிரதிபந்தகம் மலிந்த விடத்தே தலைக்கட்டுதல் வியக்கத்தக்கதன்றோ
எம்பெருமான் புக்கல் ஈடுபாடு கொண்ட- ஆவார் மற்றொன்றிற் சிந்தை செலுத்தாது அப்பெருமானையே மனமொழிமெய்களால் பூர்ணாநுபவஞ் செய்யப் பெற்றவர். இவ்வுலகத்திலிருந்து கொண்டே நித்யஸூரிகளிலும் மேம்பட்டவராவர் என்று அருளிச் செய்தாராயிற்று.
இவ்விஷயத்தை அனுபவிக்கப் பெற்றவர்கள் ஸூரிகளிலும் விலக்ஷனர் ஆவர்கள்
—————–
என் பிழைத்தாள் திருவடியின் தகவினுக்கு -1-4-7–என்றது
அணு கதமான பாபம் -விபு கதமான கிருபைக்கு எதிர் நிற்குமோ –
என் பிழை கோப்பது போல் பனிவாடை ஈர்கின்றது
என் பிழையே நினைந்து அருளி யருளாத திருமாலார்க்கு
என் பிழைத்தாள் திருவடியின் தகவினுக்கு என்று ஒரு வாய்ச் சொல்
என் பிழைக்கும் இளம் கிளியே யான் வளர்த்த நீ யலையே –1-4-7-
தம்முடைய அபராத சஹத்வத்துக்கும் நிலம் அன்றோ -என் பிழை என்று அவர்க்கு அறிவி என்று தன் கிளியை நோக்கிச் சொல்லுகிறாள்-இத் திருவாய் மொழிக்கு நிதானமான பாட்டாயிற்று இது –
என் பிழைத்தாள் திருவடியின் தகவினுக்கு
ஸ்வாமியான உம்முடைய தகவினுக்கு என்ன தப்புச் செய்தாள்-அபராத சஹத்வம் ஆகிறது -ஷமை-அதுக்கு அடியான தயை -தகவாகிறது-என் பிழை அநாதி கால ஆர்ஜிதம் ஆனாலும் தம்முடைய ஷமைக்கு எவ்வளவு போரும்-கிம் கோப மூலம் மனுஜேந்திர கஸ்தேன சந்திஷ்ட்ட திவாங்நிதேச–திருவடியின் தகவினுக்கு-இழவு-பேறு தம்மதாம் படியான குடல் தொடக்கு உண்டாய் இருக்க குற்றத்தைக் கணக்கு இட்டது அமையாதோ பிராப்திக்குப் போராது -ஷமைக்கும் போராது –
என் பிழைத்தாள் திருவடியின் தகவினுக்கு –‘தத்தம் குற்றம் பாராமல் அருளச் சொல்லும் இத்தனையோ வேண்டுவது?’ என்று சொல்ல நினைந்தாராகில்,‘ஸ்வாமியினுடைய திருவருளுக்கு என்ன குற்றத்தைச் செய்தாள்?’ என்று நீங்கள் சொல்லுங்கள்.
இனி, இதற்கு, என் குற்றத்தைப் பார்த்துத் -தமிக்க நினைந்தாராகில், தம் பொறையாகிற நேர்தரவைக் காட்டுங்கள் என்னுதல்.
அதாவது, ‘ஸ்வாமியான தம் பொறை வயிறு நிறைய எங்களால் குற்றஞ்செய்யப் போமோ?’ என்று சொல்லுங்கள் என்றபடி.
‘ஏன் செய்யப் போகாதோ?’ என்னில், ஆஸ்ரயத்துக்குத் தக்கபடி அன்றோ எல்லாம்?
நாங்கள் குற்றம் செய்வதும் எங்கள் அளவிலே; தாம் பொறுப்பதும் தம் அளவிலே யன்றோ? ஆதலால், செய்யப் போகாது.
இனி, இதற்கு ‘தேவரீர் திருவருளுக்குத் தண்ணீர் துரும்பாக-ப்ரதக்ஷிண – வலம் வருதல்,-நமஸ்காராதிகள் -வணங்குதல் முதலியன எவையேனும் செய்தன உளவோ?’ என்று ஸ்ரீ நம்பிள்ளை அருளிச் செய்யும் படி –
தகவினுக்கு-ஆந்ரு சம்சயம் பரோ தர்ம -‘பிறருடைய குற்றத்தைப் பொறுத்திருத்தலாகிய பெரிய தர்மமானது தேவரீரிடமிருந்தே என்னால் கேட்கப்பட்டது,’ என்று சொல்லும்படி இருக்கும் நிலைக்கு-என் பிழைத்தாள்-என்ன தப்புச் செய்தாள் – என்பாள், ‘திருவடியின் தகவினுக்கு என் பிழைத்தாள்’ என்கிறாள்.
கிம் கோப மூலம் -‘கோபத்திற்குக் காரணம் யாது?’ என்கிறாள் தாரை; அதாவது,
‘இராஜ புத்திரர்களை நான்கு மாதம் மின்னுக்கும் இடிக்கும் இரையாக்கி தாங்கள் இன்பத்திலே கருத்து ஊன்றினவர்களாய் இருந்தும், இருந்தனவற்றுள் ஒன்றையும் நினையாது, அவர்கள் பொறையை நினைந்திருந்த கனத்தாலே உம்முடைய கோபத்திற்கு அடி என்?’ என்கிறாள்.–.
மனுஜேந்த்ர புத்ர -அறுபதினாயிரம் ஆண்டு செய்தார் செய்த குற்றங்களைப் பொறுத்துச் சேரவிட்டு ஆண்டு கொண்டு போந்தான்-உங்கள் தமப்பனார் -அவன் வயிற்றிலே பிறந்து குற்றம் செய்தோம் என்று தலை அறுக்க வந்து நின்றீர் நீர் –-அழகியதாய் இருந்தது உம்முடைய போக்கு
கஸ்தே ந சந்திஷ்டதி வாங்நிதேசே -சாஸ்த்ர வஸ்யம் இன்றிக்கே கண்டத்தில் கடுக்கச் சாபல்யத்தைப் பண்ணி மீளமாட்டாத திர்யக்குகளே நீரே இழந்த போகங்களை புஜிப்பது -என்று சேர்த்து விட்டு நீர் சொல்லிற்றுச் செய்தன என்று தலை அறுக்க வந்து நின்றீர் –
இப்படிச் சொல்லலாம் படி இறே இவர் பொறை இருப்பது –
————-
நம்பிள்ளை ப்ரஹ்ம தேசத்தில் எழுந்தருளி நிற்கச் செய்தே பெரிய கோயில் வள்ளலார்
காண வர -குலம் தரும் -என்கிற பாட்டில் முதல் பதத்துக்கு தாத்பர்யம் அருளிச் செய்ய வேணும் என்று பிள்ளையைக் கேட்க முரட்டு திருப்பதியானான உன்னை நம்பூர் குலத்துக்கு சேஷமாக்கின குலம் தரும் -என்று விண்ணப்பம் செய்தார்
குலம் தரும் செல்வம் தந்திடும் அடியார் படு துயர் ஆயின எல்லாம்
நிலந்தரம் செய்யும் நீள் விசும்பு அருளும் அருளொடு பெரு நிலம் அளிக்கும்
வலந்தரும் மற்றும் தந்திடும் பெற்ற தாயினும் ஆயின செய்யும்
நலம் தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம் —9-திரு நாம பலத்தைச் சொல்லுகிறார் இப் பாட்டில்-
குலம் தரும் – ஜன்ம வருத்தங்களால் குறைய நின்றான் ஒருத்தனுக்கு பகவத் சம்பந்தம் உண்டானால் இவற்றால் உயர்ந்தான் ஒருத்தன் இவை இரண்டிலும் இவனுக்கு தாழ்வு உண்டாகவும் தான் உயர்ந்தான் ஆகவும் -நினைத்து இருக்கவும் கூட கூச வேண்டும்படி யாயிற்று பகவத் பிரபாவம் இருப்பது –
ஆனாலும் பெண் கொடுத்தல் கொள்ளுதல் செய்கிறார் இல்லை –-அதுக்கடி ஜாதி நிபந்தனம் ஆகை
ஸ்லாகைக்கு நிபந்தனம்-ஸ ஸ்லாக்யஸ் ஸ குணீ தந்யஸ் ஸகுலீந -என்னக் கடவது இறே –
கண்டதெல்லாம் தர்ம சந்தேஹம் பண்ணக் கடவ தர்ம புத்திரன் பகவத் ப்ரத்யாசத்தியாலும்
அசரீரி வாக்யத்தாலும் விதுரரை ப்ரஹ்ம ரதத்தாலே சம்ஸ்காரம் பண்ணினான் இறே –
ருஷிகள் தர்ம வ்யாதன் மாம்ஸ விக்ரயம் பண்ணி கை ஒழியும் தனையும்
பார்த்து நின்று தர்ம சங்கங்கள் கேட்டுப் போனார்கள் இறே –
இங்கன் அன்றாகில் பஞ்சம வேதமான மஹா பாரதத்திலே எழுதக் கூடாது இறே –
கைசிக கதையிலே வந்தவாறே விலஷணனாய் இருப்பான் ஒரு ப்ரஹ்ம ராஜஸ்
ஆசார வைகல்யத்துக்கு -பகவத் ஜ்ஞானம் உடையான் ஒரு பாடுவானாலே பரிஹாரம் இருந்தது இறே –
ஸ்ரீ விபீஷண ஆழ்வான் ராவணனைப் பார்த்து -பெருமாளை சரணம் புகு-என்று சொல்ல –
த்வாந்துதிக் குல பாம்ஸநம் -என்று -நீ இக்குடிக்கு உடல் அல்ல என்றான் இறே –
ராவணனுக்கு வார்த்தை சொல்லும் இடத்தில் –நிசாசர -என்று அவனை ராஷசனாகவும்
தான் அல்லனாகவும் சொன்னான் –இங்கனே அன்றிக்கே –ராஷசாநாம் பல அபலம் என்று பெருமாள் தாமும் அருளிச் செய்தார் –
ஆகையாலே பகவத் சம்பந்தம் ஸ்பர்ச வேதியாய் இருந்தது –
———————–
என் முடிவு காணாதே என்னுள் கலந்தானே -திருவாய்மொழி -2-5-8-
1-என்னுடைய சத்தா ஹானி காணும்படிக்கு ஈடான கிருபா ஹாநி அவனுக்கு இல்லாமையாலே என்னை அங்கீகரித்தான் -2-(அவன் என்னைப் பெற )தொடங்கின உபாயம் முடிவதற்கு முன்னே என்னுள் கலந்தான்
3-வறுத்த பயறு போலே ஆத்ம அனுபவத்தளவிலே நின்று முடியாதபடி என்னுள் கலந்தான் –
4-என் அஹங்காரம் பாராதே குலம் கொண்டே பரிக்ரஹித்தான்
5-அபரிச்சேதயனான தன்னை நான் புஜிக்குமா போலே அணு ஸ்வரூபனான என்னை புஜித்தான்
பொன் முடியம் போரேற்றை எம்மானை நால் தடம் தோள்
தன் முடிவொன்றில்லாத தண் துழாய் மாலையனை
என் முடிவு காணாதே என்னுள் கலந்தானை
சொல் முடிவு காணேன் நான் சொல்லுவது என் சொல்லீரே –2-5-8-
என்னுடைய ஸ்வரூப ஸ்வ பாவ குண வ்ருத்தாதி களினுடைய நிஹீநதையைப் பாராதே என்னுள்ளே கலந்த இஸ் ஸுசீல்யத்துக்கு ஒரு முடிவு காண்கிறிலேன்-தன் உத்கர்ஷத்துக்கு எல்லை காணாதவோபாதி என் நிகர்ஷத்தின் முடிவு காணாதே என் நெஞ்சுக்குள்ளே கலந்தவனை –நான் -ஸ்வ சம்வேத்யமாக அறியுமது ஒழிய பாசுரம் இட்டுச் சொல்லும் பிரகாரம் காண்கிறிலேன் –நீங்கள் அனுபவித்த விஷயம் வ்ருத்த கீர்த்தனம் பண்ணுமோபாதி இங்குச் சொல்லுவது ஏது-உண்டாகில் சொல்லுங்கோள்–என்று லௌகீகரைக் குறித்து உரைக்கிறார் – லோக வ்யாவ்ருத்தனுடைய சம்ச்லேஷ சாரஸ்யம் வாசா மகோசரம் என்று கருத்து – விஸ்லேஷ தசையில் என் முடிவு காணாதே -என்றுமாம் –தன்னைப் பிரிந்து நான் முடியுமது காண மாட்டாமையாலே என்றுமாம்-என் தண்மை பாராதே கண்ணைச் செம்பளித்து வந்து கலந்தான்.-இறைவன் பக்கல் நன்மைகள் எல்லை காண ஒண்ணாதனவாய் இருப்பன போன்று, இவர் பக்கல் தீமைகள் எல்லை காண ஒண்ணாதனவாய் இருக்கின்றபடி.
இனி, இதற்கு,’ ‘ஆடி ஆடி’ என்ற திருப்பதிகத்தில் -விஸ்லேஷ வியசனத்தால் -‘பிரிவுத்துன்பத்தாலே நான் முடியப் புக, அது காணமாட்டாது என்னோடே வந்து கலந்து
ஒரு குணத்தையும் சொல்லப்புகில், ஆனந்த குணம் ஒன்றையும் சொல்லப்புக்க வேதம் பட்டது படும் இத்தனை. இனி, இத்தொடர்மொழிக்கு, ‘அவன் என்னை அனுபவிப்பிக்க, அத்தால் எனக்குப் பிறந்த ரசம் அனுபவித்துவிடும் அத்தனை அல்லாது, பாசுரமிட்டுச் சொல்லி முடியாது’
————————-
நாநாவித நரகம் புகும் பாவம் நானே செய்தேன் -பெரிய திருமொழி -1-9-2-
தேன விநா தருணக்ரம்பி ந சலதி -நீ செய்து என்னைச் சொல்லலாமோ -என்பார் –
(நீ செய்து என்னைச் சொல்லலாமோ -நீ அன்றி அணுவும் அசையாதே)அடாப் பழி யிடுகிறார்கள் அத்தனை யன்றோ -நான் செய்தது என் –
தேவாங்கு சேற்றிலே விழுமா போலே அவனுக்கு ஸ்ப்ருஹணீயமான வஸ்து இப்படி படுவதே
நானே செய்தேன் -அஹங்காரம் ஒன்றாலும் செய்தேன் –
மா நிலத்து நானே நானாவித நரகம் புகும் பாவம் செய்தேன்-
சேதன பேதத்துக்கு எல்லை இல்லை இறே –அவர்களை கர்ம அநு குணமாக அனுபவிப்பிக்கைக்கு லோகங்கள் தோறும் பண்ணி வைக்கும் நரகங்களுக்கும் ஓர் அவதி இல்லை இறே – அவை எல்லாவற்றுக்கும் நான் ஒருவனே தேவை யறுக்கும்படியான
பாபத்தைப் பண்ணினேன் –
ஈஸ்வரனுக்கு ஜகன் நிர்வாஹம் நடக்க வேண்டில் வேறு சில நரகங்கள் ஸ்ருஷ்டிக்க வேண்டும் –
ஸ்ரீ ராமாயணத்தில் கைகேயியை நீ என்ன நரகத்தில் புகக் கடவை என்று உண்டு அவ் விடத்தை வாசியா நிற்க நம்பிள்ளை முன்பே ஸ்ருஷ்டமான நரகங்கள் போராது என்கிறதோ -என்ன அழகிதாகச் சொல்லிற்று -என்று ஜீயர் அருளிச் செய்தார்-
நாநா வித நரகம் புகும் பாவம் செய்தேன் -என்ற நானே வந்தடைந்தேன்
அந் நரகம் அனுபவம் பண்ணும் போதை க்லேசத்துக்கு எதிர்தட்டான ஸூக ஏக கதநமாய் இருக்கும்-கைங்கர்யத்தை என்னைக் கொண்டு அருள வேணும் –
காமுகனுக்கு அங்கநா பரிஷ்வங்கம் போலே ரசிக்கும் இறே சேஷ பூதனுக்கு கைங்கர்யம் –
ரம்யவ ஆசதம் க்ருத்வா ரமமாணாவ நேத்ரய தேவ கந்தர்வ சங்கா சாஸ் தத்ர தேந்ய வசந் ஸூகம் –
———————————————————————————–————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பூர்வாச்சார்யர்கள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .
Leave a Reply