வார்த்தை -421-
1-ஸ்வரூப அனுகூலமான ரஷகத்வம் –
2-ஸ்வரூப அனுகூலமான சேஷத்வம் –
3-ஸ்வரூப அனுகூலமான சேவை –
4-ஸ்வரூப அனுகூலமான சஹ வாஸம் –
5-ஸ்வரூப அனுகூலமான கால ஷேபம் –
6-ஸ்வரூப அனுகூலமான இருப்பு –
7-ஸ்வரூப அனுகூலமான பரிக்ரஹம் –
8-ஸ்வரூப அனுகூலமான போஜனம் –
9-ஸ்வரூப அனுகூலமான அத்யவசாயம் –
10-ஸ்வரூப அனுகூலமான அபேஷை -என்கிற இவை பத்தும் ஒருவனுக்கு அவஸ்யம் ஜ்ஞாதவ்யமாகக் கடவது -(அனுஷ்டானமாகவும் இருக்கக்கடவது)
1-ஸ்வரூப அனுகூலமான ரஷகத்வம் ஆவது –
தேச ரஷகன் என்றும்-
தேக ரஷகன் என்றும் –
பதார்த்த ரஷகன் என்றும் –
பௌருஷ ரஷகன் என்றும் -சொல்லுகிற ரஷகத்வங்களைத் தவிர்ந்து –
தேச நிவர்தகன் என்றும் –
தேக நிவர்தகன் என்றும் –
விஷய நிவர்தகன் என்றும் –
பாப நிவர்தகன் என்றும் -பற்றுகை –
அதாவது -கொடு உலகம் -திருவாய்மொழி -4-9-7- என்று அஞ்சினவாறே –
கலி யுகம் ஒன்றும் இன்றிக்கே -திருவாய்மொழி -5-2-11-தன்னடி யார்களுக்கு அருள் செய்யும்
பொல்லா ஆக்கை -திருவாய்மொழி -3-2-3- என்று அஞ்சினவாறே –
செடியார் ஆக்கை அடியாரைச் சேர்த்தல் -திருவாய்மொழி -1-5-7-தீர்க்கும்
ஐவர் அறுத்துத் தின்றிட அஞ்சி நின்னடைந்தேன் -பெரிய திருமொழி -7-7-7-என்றவாறே
அடியரைத் துப்பாம் புலன் ஐந்தும் துஞ்சக் கொடான் -திருவாய்மொழி -1-7-2-
நமன் தமர் செய்யும் வேதனைக்கு ஒடுங்கி நடுங்கினேன் -பெரிய திரு மொழி -1-6-3- என்றவாறே –
நமன் தமர் என் தமரை வினவப் பெறுவர் அலர் -பெரிய திருமொழி -10-6-5–என்னும்
அடியார் படு துயர் ஆயின எல்லாம் நிலம் தரம் செய்யும் -பெரிய திருமொழி -1-1-9-என்னக் கடவது இறே
ஆயே இவ் உலகத்து நிற்பனவும் திரிவனவும்
நீயே மற்று ஒருபொருளும் இன்றிநீ நின்றமையால்
நோயே மூப்பு இறப்பிறப்புப் பிணியே என்றிவை ஒழியக்
கூயே கொள் அடியேனைக் கொடு உலகம் காட்டேலே.–4-9-7-
அழைத்துக் கொள் -கொடிதான லோகம் -சப் தாதி விஷய ப்ரவணமாய் த்வத் விமுகமான லோகம் -த்ருஷ்ட்டி விஷம் போலே காணவே முடிவன் என்கிறார்-இவன் தானே வருகிறான்,’ என்று இராமல், நீயே அழைத்துக் கொண்டருள வேண்டும்-உன்னை விட்டு ஐம்புல இன்பங்களால் போது போக்கி இருக்கிற உலகம்.-இந்த உலக வாழ்வு என் கண்களுக்கு இலக்கு ஆகா தொழிய வேண்டும் என்கையாலே,-இந்த உலக வாழ்வு இவர் கண்களில் பட்டது இல்லையாய் இருந்தபடி.-மயர்வு அற மதிநலம் அருளினதைப் போன்று
சர்வ சத்தியானவன் இதனைக் காட்டில் காணுமித்தனை.
யாவையும் திருமால் திரு நாமமே கூவி – இவர் பிராக்ருத பதார்த்தங்களில் கண் வைப்பார் அல்லர் –
காட்டேல் – இவன் தான் அவருக்குக் காண்பித்தான் -என்றவாறு-ஆனால், ‘இவை என்ன உலகியற்கை,’ என்றதனோடு சேரும்படி என்?’ என்னில்,-பர ஹிதம்’ என்கிற புத்தியாலே முன்பு நினைந்தார்; -இது தான் வந்து தம்மைக் கிட்டாதபடி பண்ண வேண்டும்,’ என்கிறார் இத் திருப் பாசுரத்தில்.
கலியுகம் ஒன்றும் இன்றிக்கே தன்னடியார்க்கு அருள் செய்யும்
மலியும் சுடரொளி மூர்த்தி மாயப் பிரான்கண்ணன் தன்னைக்
கலிவயல் தென்னன் குருகூர்க் காரிமாறன் சடகோபன்
ஒலிபுகழ் ஆயிரத்து இப்பத்து உள்ளத்தை மாசறுக் கும்மே.–5-2-11-
தன்னடியார்க்கு கலியுகம் ஒன்றும் தட்டாத படி அருள் செய்யும் -நாட்டுக்கு இட்ட நினைப்பு அன்று இ றே அந்தப்புரத்துக்கு இடுவது –-கலவ் க்ருத யுகம் தஸ்ய -அப்யஹம் ஜீவிதம் ஜஹ்யம்-தோஷ யத்யபி தஸ்ய ஸ்யாத்-“எவனுடைய மனத்தில் கோவிந்தன் இருக்கிறானோ அவனுக்குக் கலியுகம் கிருதயுகமாக இருக்கிறது;-எவனுடைய மனத்தில் கிருஷ்ணன் இல்லையோ அவனுக்குக் கிருதயுகம் கலியுகம் ஆகிறது” என்கிறபடியே,
கொல்லா மாக்கோல் கொலை செய்து பாரதப் போர்
யெல்லாச் சேனையும் இரு நிலத்து அவித்த எந்தாய்
பொல்லா வாக்கையின் புணர்வினை யறுக்கலறா
சொல்லாய் யான் உன்னைச் சார்வதோர் சூழ்ச்சியே –3-2-3-
துரியோதனன் அளவன்று-உடம்பின் ப்ராதிகூல்யம் -அவன் பிரதிகூலனாயத் தோற்றினான்-
இது அனுகூலம் போலே இருந்து யாயிற்று பிராதி கூல்யம் பண்ணுவது-எல்லா அநர்த்தமும் பண்ணினாலும் பரிணதாரானார் -பொல்லாதாகாச் செய்தாய் -என்னும் இத்தனை இறே-பகவத் ஸ்வரூப திரோதா நகரீம்-இத்யாதி-புணர்வினை– சரீர சம்பத்துக்கு அடியான கர்மம் என்னுதல் -சரீர சம்பந்தம் என்னுதல்-அறுக்க என்றால் போகாது -ராவண சிரஸ்ஸைப் போலே முளையா நிற்கும் என்கை –சரீரத்துக்கு அடியாய் ஒன்றோடொன்று-பிணைந்திருக்கின்ற பாவங்களை அறுக்க முடியா.-பெரியோர்கள் சிஷ்டர்களில் ஒருவனுக்கு அநேக தோஷங்கள் உண்டானால், ‘அவன் தண்ணியன்’ என்று விடுவார்கள் அன்றே?அப்படியே இவர் இச்சரீரத்தின் தன்மைகளையெல்லாம் ஒருசேர நினைத்துப் ‘பொல்லா ஆக்கை’ என்கிறார்
அடியேன் சிறிய ஞானத்தன் அறிதலார்க்கும் அரியானை
கடி சேர் தண்ணம் துழாய்க் கண்ணி புனைந்தான் தன்னைக் கண்ணனை
செடியார் ராக்கை யடியாரைச் சேர்த்தல் தீர்க்கும் திருமாலை
அடியேன் காண்பான் அலற்றுவன் இதனின் மிக்கதோர் அயர்வுண்டே –1-5-7-
அடியாரை செடியார் யாக்கை சேர்த்தல் தீர்க்கும்-இங்கு அடியார் என்கிறது கேவலரை-ஆயின், அவர்கள் அடியாரோ?’ என்னில், தலைவனுக்கு அதிசயத்தை விளைக்குமவர்களே அடியார் ஆவர்;-தம்மைப் போன்று கிட்டித் தலைவனுக்குத் தாழ்வினை விளைக்கப் பாராமல், பிறவியாகிற தளையை அறுத்துக்கொண்டு கடக்க நிற்கின்றவர்கள் அவர்கள் ஆதலின், அவர்களையே அடியவர்கள் என்று இருக்கிறார்.-தம்மைப் போலே கிட்டி அவத்யத்தை விளைக்காதே பிரயோஜ நாந்தரங்களை கொண்டு அகலுகையாலே அடிமை யாவது ஸ்வாமிக்கு அதிசயத்தை பண்ணுகை இறே-தூறு மண்டின சரீரம் அவர்களைச் சேராதபடி பண்ணும்-ஜரா மரண மோஷாயா மாம் ஆஸ்ரித்ய யதந்தி யே ( ‘முதுமை மரணம் இவற்றினின்று விடுபடும் பொருட்டு என்னை அடைந்து வழிபடுகின்றார்கள்’ )என்கிறபடியே,-என்று இறே அவர்கள் புருஷார்த்தம் இருப்பது-திருமாலை-அவர்கள் சரீரம் சம்பந்தம் அறுத்துக் கொடுப்பான் ஸ்ரீ யபதி இறே
கறுத்துக் கஞ்சனை அஞ்ச முனிந்தாய் கார் வண்ணா கடல் போல் ஒளி வண்ணா
இறுத்திட்டான் விடை ஏழும் முன் வென்றாய் எந்தாய் அந்தரம் ஏழுமும் ஆனாய்
பொறுத்துக் கொண்டு இருந்தால் பொறுக்க ஒணாப் போகாமே நுகர்வான் புகுந்து ஐவர்
அறுத்துத் தின்றிட வஞ்சி நின்னடைந்தேன் அழுந்தூர் மேல் தின்ற வம்மானே–7-7-7-
இவற்றால் வந்த நலிவை ஆற்றி இருப்போம் என்றால் ஆற்ற ஒண்ணாதபடி
போகங்களைப் புஜிக்க வேணும் என்று ஐவர் நெருக்கி புஜிப்பிக்க அவர்களுக்கு அஞ்சி உன் திருவடிகளிலே சரணம் புகுந்தேன் –
வைப்பாம் மருந்தாம் அடியாரை வல்வினைத்-துப்பாம் புலன் ஐந்தும் துஞ்சக் கொடானவன்
எப்பால் எவர்க்கு நலத்தால் உயர்ந்து உயர்ந்து அப்பாலவன் எங்கள் ஆயர் கொழுந்தே –1-7-2-
ந நமேயம் ‘வணங்க மாட்டேன்’ என்னும் நிர்ப்பந்தம் தவிர்ந்தார்க்கு,-பிரயோஜ நாந்தரத்தைக் கொண்டு அகலாதே-தானே பிரயோஜனமாய் இருக்குமவர்களுக்கு-விஷயங்களில் மூட்டி -ஸ்வ விஸ்லேஷ ஜனகமான மஹா பாபத்தை பண்ணுவிக்கைக்கு சமர்த்தமான ஸ்ரோத்ராதி இந்த்ரியங்களால் வசிக்கும் படி விட்டுக் கொடான்-ஐந்து இந்திரியங்களிலும் புக்குத் துஞ்சக் கொடான் – துப்பு -சாமர்த்தியம்-சங்காத் சஞ்சாயதே–இதயாரப்ய–புத்தி நாஸாத் ப்ரணச்யதி -என்னக் கடவது இறே
சூதினைப் பெருக்கிக் களவினைத் துணிந்து சுரி குழல் மடந்தையர் திறத்து
காதலே மிகுத்துக் கண்டவா திரிந்த தொண்டனேன் நமன் தமர் செய்யும்
வேதனைக் கொடுங்கி நடுங்கினேன் வேலை வெண் திரை யலமரக் கடைந்த
நாதனே வந்துன் திருவடி யடைந்தேன் நைமி சாரணி யத்துள் எந்தாய் –1-6-3-
இப்படி முறை கெட வர்த்திக்கையாலே யம படர் பண்ணும் வேதனையை அனுசந்தித்து அஞ்சி –-சர்வ அவயவங்களும் ஒடுங்கி-சரீரம் தான் எடுத்து எடுத்து அறையத் துடங்கும் –
நீண்டான் குறளாய் நெடு வானளவும் அடியார் படும் ஆழ் துயராய வெல்லாம்
தீண்டாமை நினைந்து இமையோர் அளவும் செல வைத்த பிரான் அது வன்றியும் முன்
வேண்டாமை நமன் தமர் என் தமரை வினவப் பெறுவார் அலர் என்று உலகேழ்
ஆண்டான் அவன் காண்மின் இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் யுண்டாப்புண்டு இருந்தவனே –10-6-5-
யமனுடையார் நம்முடையாரை ஆராயக் கடவர் அல்லர் –அதுக்கு நிபந்தனம் என் என்னில்
வேண்டாமை-அல்லாதாரை இவன் ஆராயக் கடவன்-என்று இட்ட நாமே இத்தைக் கழித்துக் கொடுத்தோம்
குலம் தரும் செல்வம் தந்திடும் அடியார் படு துயர் ஆயின எல்லாம்
நிலந்தரம் செய்யும் நீள் விசும்பு அருளும் அருளொடு பெரு நிலம் அளிக்கும்
வலந்தரும் மற்றும் தந்திடும் பெற்ற தாயினும் ஆயின செய்யும்
நலம் தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம் —9-
அடியார் உண்டு -தனக்கு அசாதாரணர் ஆனவர்கள்-படு துயர் உண்டு -அவஸ்யம் அநுபோக்தவ்யம் -என்று அநுபவ விநாச்யமான கர்மங்கள் –அவற்றை எல்லாம்-நிலந்தரம் செய்யும் –நிலத்தோடு ஒக்கப் பண்ணும்-வெறும் தரை யாக்கும்-கேவல பூதலமாக்கும்-அங்கன் அன்றிக்கே
நிலம் என்று அவன் வர்த்திக்கும் இடமாய்-தரம் என்று தாரணமுமாய் இடைக் குறைத்தலாய்
இவன் பக்கலில் நின்றும் கர்மங்கள் தாமே நமக்கு இருப்பிடம் அன்று என்று போம்படி
பண்ணும் என்றுமாம்–(நிலம் -இவன் இருக்கும் இடம்-தரம் தாரணம் தாண்டுதல் )-யத்ராஷ்டாஷர ஸம்ஸித்தோ மஹா பாஹோ மஹீயதே –
ந தத்ர சஞ்சரிஷ்யந்தி யாதி துர்ப்பிஷ தஸ்கரா -என்றும் (நோய் பஞ்சம் திருட்டு மூன்றுமே போகுமே )சும்மனாதே கை விட்டு ஓடித் தூறுகள் பாய்ந்தனவே -என்றும்
கோலாடு குறுகப் பெறா(கோலாடு-கோல் நடமாடும் தேசம் -ஆஜ்ஜை நடமாடும் இடம் )அங்கன் அன்றியே-நிலம் என்று ப்ருதிவ்யாதி பூதங்களாலே ஆரப்தமான சரீரமாய்
இவன் பண்ணின கர்மங்களை சரீரத்தளவாக்கும் – பக்திமானுக்கு பிராரப்த கர்ம அவதியாய் இருக்கும் –இவ்வர்த்த அனுசந்தானத்தைப் பண்ணி பிரபன்னன் ஆனவனுக்கு இஸ் சரீர அவதியாய் இருக்கும்-
——————–
2–ஸ்வரூப அனுகூலமான சேஷத்வம் ஆவது –
இதர சேஷம் என்றும் –
க்ருஹ சேஷம் என்றும் –
பித்ரு சேஷம் என்றும் –
தேவதாந்தர சேஷம் என்றும் -சொல்லுகிற ஆபாஸ சேஷங்களைத் தவிர்ந்து
சர்வேஸ்வரனே தாரகன் என்றும் –
வியாபகன் என்றும் –
சரீரி என்றும் –
சேஷி என்றும் பற்றுகை -அதாவது –
ஆவிக்கோர் பற்றுக்கொம்பு நின்னலால் அறிகின்றிலேன் -திருவாய் மொழி -10-10-3- என்றும்-
உன்னை விட்டு எங்கனே தரிக்கேன் -திருவாய்மொழி -7-2-1- என்றும் —
என்னுடை வாழ் நாள் -பெரிய திருமொழி -1-1-6- என்றும் —
அடியோர்க்கு அகலலாமே -திருமாலை -20 என்றும் -இருக்கை –
கூவிக் கொள்ளாய் வந்து அந்தோ என் பொல்லாக் கருமாணிக்கமே
ஆவிக்கு ஓர் பற்றுக் கொம்பு நின்னலால் அறிகின்றிலேன் யான்
மேவித் தொழும் பிரமன் சிவன் இந்த்ரன் ஆதிக்கெல்லாம்
நாவிக் கமல முதல் கிழங்கே உம்பரந்ததுவே–10-10-3-
விலக்ஷண விஷயம் ஆனாலும் ஸ்வரூபத்தைப் பார்த்து ஆறி இருக்க வேண்டாவோ என்ன-அது செய்யும் இடத்தில் நான் உன்னை ஒழிய உளனாக வேணுமே -என்னஆத்மாவுக்கு உஜ்ஜீவன ஹேதுவாய் இருப்பதொன்று உன்னை ஒழிய வேறு நான் அறிகிறிலேன்-பற்றுக் கொம்பு வரையறை செய்யப் பட்டதாய் இருக்கிறபடி–கொடி -கொள் கொம்பை ஒழிய நிற்க வற்றோ-வேரை அறுத்து படர் என்றால் படருமோ என்றபடி –நச சீதா த்வயா ஹீனா நசாஹமபி ராகவ-முஹூர்த்தமபி ஜீவாவ ஜலான் மத்ச்யாயிவ உத்ருதௌ -அயோத்யா -53-31-நீருள எனின் உள மீனும் நிலமும்-பாருள எனின் உள யாவும் பார்ப்பு தன்
தாருள தது உளாய் நானும் சீதையும்-ஆர் உளர் எனின் உளேம் அழகு வாய் என்றான்
கங்குலும் பகலும் கண்துயில் அறியாள் கண்ண நீர் கைகளால் இறைக்கும்;
‘சங்கு சக்கரங்கள்’ என்று கை கூப்பும்; ‘தாமரைக் கண்’ என்றே தளரும்;
‘எங்ஙனே தரிக்கேன் உன்னை விட்டு!’ என்னும்; இரு நிலம் கைதுழா இருக்கும்;
செங்கயல்பாய் நீர்த் திருவரங்கத்தாய்! இவள் திறந்து என் செய்கின்றாயே?–7-2-1-
பர வ்யூஹ வைபவங்களில் ஆசைப்பட்டேனோ தூரஸ்தன் என்று ஆறி இருக்க ?-உறக்கத்தாலே, சூது சதுரங்கத்தாலே போது போக்கலாம் விஷயத்திலேயோ அகப்பட்டது என்னும்.-அவதாரங்களில் ஆசைப் பட்டேனோ சமகாலம் அன்று என்று ஆறி இருக்க ?உன்னை -என்கிறது வடிவு அழகையும் சீலாதிகளையும் –இவளை அறியாது ஒழிந்தால் உம்மையும் அறியாது ஒழிய வேணுமோ -உம்மைக் கண்ணாடி புறத்திலும் கண்டு அறியீரோ –கண்டாயாகில் பிரியாய்;-பிரிந்தாயாகில் இவள் பட்டது படுவுதி
எம்பிரான் எந்தை என்னுடைச் சுற்றம் எனக்கு அரசு என்னுடை வாழ் நாள்
அம்பினால் அரக்கர் வெருக்கொள நெருக்கி யவர் உயிர் செகுத்த எம் அண்ணல்
வம்புலாஞ் சோலை மா மதிள் தஞ்சை மா மணிக் கோயிலே வணங்கி
நம்பிகாள் உய்ய நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம் —6–
மாதா பிதா ப்ராதா நிவாஸஸ் சரணம் ஸூஹ்ருத் கதிர் நாராயணா-ஸூ பால உபநிஷத் -என்கிறபடியே –எனக்கு உபகாரகன்-எனக்கு ஜனகன்-என் குடல் துவக்குக்கு ஆன எல்லா உறவு முறையும் ஆனவன்-என்னை வன்னிய மறுத்து ஆண்டவன்-என்னுடைய ஆயுஸு–
பாயு நீர் அரங்கம் தன்னுள் பாம்பணைப் பள்ளி கொண்ட
மாயனார் திரு நன் மார்பும் மரகத வுருவும் தோளும்
தூய தாமரைக் கண்களும் துவர் இதழ் பவள வாயும்
ஆய சீர் முடியும் தேசும் அடியரோர்க்கு அகலலாமே–20-
இஸ் சமர்த்தியைக் கண்டால் ஸ்வரூப ஞானம் உடையார்க்கு அகலப் போமோ-இதற்குப் புறம்பாய் -அஹம் மம -நான் என்னது -என்று இருப்பார்க்கு அன்றோ அகலல் ஆவது –ஆமே -என்றது-எதிரிகளுக்கும் அகலப் போகாது என்ன வேண்டும் படியாய் இறே-அர்த்தத்தின் மெய்ப்பாடு இருப்பது-எம்பெருமானுடைய அதிஸயங்களை வெறும் ஏட்டுபுறத்தில் கேட்டுப் போகை யன்றிக்கே பரம பாவநமான திருவரங்கந் திருப்பதியிலே திருவனந்தாழ்வான் மீது
“தன் தாளுந் தோளும் முடிவுகளும் சமனிலாத பல பரப்பி” என்றபடி-ஸகலாவயவ ஸெளந்தரியமும் நன்கு விளங்கும்படி சாய்தருள்கின்ற எம்பெருமானது திவ்ய தேஜஸ்ஸைக் காணப் பெற்றவர்களும் மீண்டு கால் பேர்ந்து விலக முடியுமோ?
————————–
3-ஸ்வரூப அநுகூலமான சேவை யாவது –
சேதனாந்தர சேவையையும் –
தேவதாந்தர சேவையையும் –
பகவத் சேவையையும் –
த்ருஷ்ட பிரயோஜனதுக்காக சேவிக்கையும் –
அத்ருஷ்டதுக்கு ஹேது என்று சேவிக்கிற சேவையையும் தவிர்ந்து –
ஸ்வரூப பிரயுக்தம் என்று சேவிக்கை (அவனுக்காகவே அவனை அடைய சேவிக்கையே ஸ்வரூபம்)-அதாவது-சேவியேன் உன்னை அல்லால் -திருமாலை -35 -(இவர் கிடைத்தவுடன் செங்கண்மால் ஆனான் வெளுப்பு தவிர்ந்த மகிழ்ந்தான்)என்றும் -உன்னை சேவித்து(திருப்பாவை -29- தேவதாந்த்ரங்களைத் தவிர்ந்து கண்ணனாக எங்கள் குலத்தில் வந்து பிறந்த புண்ணியம் அன்றோ) என்றும் -சீதனையே தொழுவார்-(திருவிருத்தம் -79) என்றும்
விழிக்கும் கண்ணிலேன் நின் கண் மாற்றலால் -(பெரியாழ்வார் -5-1-2)என்றும் இருக்கை
தாவி அன்று உலகம் எல்லாம் தலை விளாக் கொண்ட வெந்தாய்
சேவியேன் உன்னை அல்லால் சிக்கென செங்கண்மாலே
ஆவியே அமுதே என் தன் ஆர் உயிர் அனைய எந்தாய்
பாவியேன் உன்னை அல்லால் பாவியேன் பாவியேனே –35-
‘இப்படிப் பட்ட நம்மை விட்டு புறம்பே போக நினைப்பான் என் என்ன-உம்முடைய நீர்மை அறியாதே நினைத்தேன் இத்தனை –உன்னை விட்டு புறம்பே போகேன் -என்கிறார் –உன்னை இழந்தால் நானும் பிறரும் இறே உள்ளது –இரண்டிலும் அன்வயிக்கப் பார்த்திலேன்-அவை இரண்டும் இறே பிரணவத்திலும் மத்திய பதத்திலும் சொல்லுகிறது –சேஷத்வ வாசனையாலே புறம்பு போனாலும் சேவிக்கும் அத்தனை யாய்த்து இவர் –இவை எத்தனை குளிக்கு நிற்கும் என்ன –சிக்கென –இது எல்லா குளிக்கும் நிற்கும்-யாவதாத்மாபவி-சர்வேஸ்வரனைக் குறித்து -மாஸூச -என்கிறார் இவர்-செங்கண்மாலே
இது ஸ்வ பாவ கதனம் அன்று-தாத் காலின விசேஷணம்- இவர் சிக்கென -என்றவாறே
திரு உள்ளம் இவர் பக்கலிலே பிரசன்னமாய்-இவர் பக்கல் வ்யாமோஹம் உள் அடங்காமையாலே கண் வழியே புறப்பட்டு பிரகாசிக்கிறபடி –வ்யாமோஹத்தாலே குதறிச் சிவந்த கண்களை உடையவனே – ஸ்ரீ விபீஷண ஆழ்வானைக் குறித்து மகா ராஜர் –
வத்யதாம் -என்ற போது-பெருமாள் திரு உள்ளம் அழிந்தால் போலே ஆய்த்து-பின்பு திருவடி –அத ராம பிரசன்னாத்மா -என்று பெருமாள் உளரானால் போலே ஆய்த்து –திருவடி –
அவதாரத்தில் -மாஸூச -என்றான்–இவர் –அர்ச்சாவதாரத்தில் -மாஸூச -என்கிறார் –என் ஸ்வரூப லாபத்துக்கு முகம் வரும்படி வ்யாமுக்தரான தேவரீரை ஒழிய புறம்பு எங்கே போவேன் –
சிற்றம் சிறுகாலே வந்து உன்னைச் சேவித்து உன்
பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய்
பெற்றம் மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்து நீ
குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாதே
இற்றைப் பறை கொள்வான் அன்று காண் கோவிந்தா
எற்றைக்கும் ஏழு ஏழு பிறவிக்கும் உன் தன்னோடு
உற்றோமே யாவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம்
மற்றை நம் காமங்கள் மாற்றேலோ ரெம்பாவாய்-29-
வந்து-பிறந்த இடத்தில் நின்றும் ஆயர் குலத்திலே வந்து-மழை கொலோ வருகிறது என்னும் படி வீதியோடே வந்து –நம் தெருவின் நடுவே வந்து –கதவின் புறமே வந்து –முற்றம் புகுந்து –நம் இல்லம் புகுந்து –நீ மலர் அணை மேல் வைகி –மாலை புகுர ப்ராப்தமாய் இருக்க -படுக்கையை விட்டுப் படி கடந்து-காவலும் கடந்து – உன் தோரண வாசலிலே வந்து –உட் கட்டிலிலே புகுந்து –பள்ளிக் கட்டில் கீழே –சிற்றம் சிறு காலே வந்த வருத்தம் அறிய வேண்டாவோ –வந்து –இரண்டு ஸ்வரூபத்தையும் அழித்தோம்-ஸ்வரூபம் நிலையிட்டவர்கள் இறே(நாராயணனே நமக்கே பறை தருவான் என்றார்களே )
பத்ப்யாம் அபிகமாச்சைவ ஸ்நேஹ சந்தர்ச நேந ச -என்று சொல்லுகையாலே
அவன் இருந்த இடத்தே நாலு அடி இட்டுச் செல்ல இட்ட இட்ட பதம் தோறும் நெஞ்சு உளுக்கும்-பொறுக்க மாட்டான் -என்கை-உன்னைச் சேவித்து – பலம் வேண்டாதே -சாதனா காலத்திலே ரசிக்கும் உன்னைச் சேவித்து –பலமுந்து சீர் என்று இறே இருப்பது –அதுக்கு மேலே ஓர் அஞ்சலியையும் உண்டறுக்க மாட்டாத-உன்னைச் சேவித்து – தொழுது எழும் அதுவும் மிகையான உன்னை சேவித்து – சேவ்யரான நாங்கள் சேவகராம்படி அத்தலை இத்தலை யாவதே –உன்னைச் சேவித்து-இது இறே நாங்கள் செய்த தப்பு என்கிறார்கள் –எங்கள் ஸ்வரூபத்தை அறியா விட்டால்-உன் ஸ்வரூபத்தை தான் உணர்ந்தோமோ –இத் தலையில் மித்ர பாவநையாய் இருக்கை –இவனை விடில் தான் உளனாகாத படி இருக்குமவன் இறே – வரவு தானே மிகையாய் இருக்கும் படி இருக்கிற யுன்னை –அதுக்கு மேலே-துராராதர் பக்கல் செய்வது எல்லாம் செய்தோம்-பஞ்சாக்கினி வித்யையில் சொல்லுகிற பரிவ்ருத்தியை கரை ஏறி –துஸ்ஸாதமாய் கை புகுந்தாலும் நிஸ்ஸாரமான விஷயங்களில் துவண்டு-அது தனக்கு உறுப்பாக இதர சேவையில் இழிந்து அவர்கள் முகத்தில் விழித்து – அவர்கள் முகத்தில் வெம்மை பொறுத்து-நீச பாஷணங்களைப் பண்ணித் திரிகை யாகிற ஸ்வ விருத்தியை அநாதி காலம் பண்ணிற்று-அத்தை தவிர்ந்து —
விஷயம் வகுத்ததாய்-ஸூசீலனாய் ஸ்வாராதனாய்- புலன் கொள் வடிவு படைத்தவனாய் (திருவாய் -8 ) தானே தன்னைத் தருவானாய்-தந்தால் பின்னை ஒரு காலமும் கை விடாதவனாய் இருந்தவனை-உசித தாஸ்யம் பண்ணுகை ப்ராப்தமாகச் சொல்லா நிற்க –எதிரே இட்ட நாலடிக்கும் பொறாதே உபசாரம் சொல்லுமவன் கருத்து அறிகையால்
பின்னே தொடர்ந்து சேவித்ததை குற்றமாகச் சொல்லுகிறார்கள்-வந்து உன்னைச் சேவித்து –உன்னை (ப்ராப்யமாக )வேண்டாதே சாதன காலத்திலே ரசிக்கிற உன்னைச் சேவித்து
ஸூ ஸூகம் கர்த்தும் அவ்யயம் -அதுக்கு மேலே ஒரு அஞ்சலி உண்டு அறுக்க மாட்டாத உன்னைச் சேவித்து-உன்னைச் சேவித்து –அத்தலை இத்தலை யாயிற்று -ஸேவ்யரான நாங்கள் சேவகரான படி –லோக நாதம் புரா பூத்வா -ஸூக்ரீவம் நாதம் இச்சதி -தாமே இறே காலம் பார்த்து இருப்பார் –ஸ்ரீ விபீஷண ஆழ்வானை முடி சூட்டுக்கைக்காக லங்கைக்கு நடந்து காலம் பார்த்து இருந்தவன் அன்றோ –
வேதனை வெண் புரி நூலனை விண்ணோர் பரவ நின்ற
நாதனை ஞாலம் விழுங்கும் நாதனை ஞாலந்தத்தும்
பாதனைப் பாற்கடல் பாம்பணை மேல் பள்ளி கொண்டு அருளும்
சீதனையே தொழுவார் விண்ணுளாரிலும் சீரியரே – – -79 –
சீதனை-திருப்பாற்கடலில் கிடக்கிறபடியை நினைத்தாலே தாபம் போக்கி குளிர வைப்பவன் அன்றோ-தாபார்த்த ஜல ஸாயீனம் –ஸ்ரீ விஷ்ணு தர்மம் –41-30-என்று அனுபவிக்கப் பெறாதார் ஆர்த்தி தீர்க்கைக்காகத் திருப்பாற் கடலிலே கண் வளர்ந்து அருளுகையாலே
நாராயணத்வ ப்ரயுக்தமான ஸுசீல்ய சீதனத்தைச் சொல்லிற்று ஆயிற்று – –சீதனையே-அவனைத் தொழுது வேறே ஒரு பிரயோஜனத்தைக் கொள்ள இருக்காமல் அவனைப் பிரசங்கிக்க மாத்திரத்தாலே நெஞ்சு தளராமல் அனுபவிக்க வேண்டுமே-அந்நிய விமுகராய்க் கொண்டு
(வேறே ஒன்றைக் காணாமல் -கணிசியாமல்) அனுபவிக்கப் பெற்றவர்கள்-விண்ணுளாரிலும் சீரியரே –நிரந்தர பகவத் அனுபவமே யாத்ரை யான -அத்தேசத்தில் அன்றியிலே – அப்படிக்கு விரோதியான சம்சாரத்திலே இருந்தே -அதுவே யாத்ரையாய் இருக்கையாலே – இவர்கள் நித்ய ஸூரிகளிலும் சீரியர்-நித்ய அனுபவம் பண்ணப் பெற்ற பரமபத வாஸிகளிலும் கனத்தவர்கள்
சழக்கு நாக்கொடு புன் கவி சொன்னேன் சங்கு சக்கரம் ஏந்து கையனே
பிழைப்பர் ஆகிலும் தம் அடியார் சொல் பொறுப்பது பெரியோர் கடன் அன்றே
விழிக்கும் கண்ணிலேன் நின் கண் மற்று அல்லால் வேறு ஒருவரோடு என் மனம் பற்றாது
உழைக்கோர் புள்ளி மிகை யன்று கண்டாய் ஊழி ஏழு உலகு உண்டு உமிழ்ந்தானே -5- 1-2 –
விழிக்கும் கண்ணிலேன் நின் கண் மற்று அல்லால்– நின் கண் மற்று அல்லால்-மற்று-விழிக்கும் கண்ணிலேன்-உன்னுடைய கடாஷம் ஒழிய -வேறு நோக்குகைக்கு (ரஷிக்கைக்கு ) ஒரு மறு விழி உடையேன் அல்லேன் –உன்னை ஒழிய வேறு ஒரு ரஷகரை உடையேன் அல்லேன் –நம்மைப் போலே ரஷகருமாய் -போக்யருமாய் -இருப்பார் உண்டானால் –
பற்றக் குறை இல்லையே என்ன –வேறு ஒருவரோடு என் மனம் பற்றாது –குண க்ருத தாஸ்யம் அன்றிக்கே –ஸ்வரூப பிரயுக்தமான தாஸ்யம் ஆகையாலே -புறம் போகாது–
———————————-
4-ஸ்வரூப அனுகூலமான சஹ வாஸம் –
விஷயாந்தரத்துக்காகச் சேருமதும் -த்ரவ்ய ஆர்ஜனத்துக்காகச் சேருமதும் பரஹிம்சைக்காகச் சேருமதும் தவிர்ந்து ஸம்ஸாரத்திலே அருசி பிறக்கைக்கும் பகவத் விஷயத்திலே ருசி பிறக்கைக்கும் -ஸ்வரூபத்திலே தெளிவு பிறக்கைக்கும் -ஆசார ப்ரவர்த்தனாகைக்கும் ஆவாரோடு சேருகை -அதாவது -பெரியோரை ஒரு காலும் பிரிகிலேன்-பெரிய திரு -7-4-4- -என்றும் உயவேன் உயர்ந்தவரோ டல்லால் -முதல் திரு -64–என்றும் சேருகை
தேராளும் வாளரக்கன் தென்னிலங்கை வெஞ்சமத்துப் பொன்றி வீழப்
போராளும் சிலையதனால் பொரு கணைகள் போக்குவித்தாய் என்று நாளும்
தாராளும் வரை மார்பன் தண் சேறை எம்பெருமான் உம்பராளும்
பேராளன் பேரோதும் பெரியோரை யொரு காலும் பிரிகிலேனே -7-4-4-
வாயாலே திரு நாமம் சொல்லா விடில் தரியாத ஸ்வபாவத்தை உடையராயக் கொண்டு
சங்கீர்த்தனம் பண்ணுகிற பெரியோர் உண்டு -( ஓதும் நிகழ் காலம் ) அவன் தானும் அகப்பட -மகாத்மான -என்னும்படி இருக்கிற மகா பிரபாவர்களை –ஷண காலமும் பிரிய-காலம் எல்லாம் இடை விடாமல் அனுபவிக்கலாம் என்னிலும் பிரிய ஷமன் அல்லேன் –
நயவேன் பிறர் பொருளை நள்ளேன் கீழரோடு
உயவேன் உயர்ந்தவரோடு அல்லால் வியவேன்
திரு மாலை யல்லது தெய்வம் என்று ஏத்தேன்
வருமாறு என் என் மேல் வினை —–64–
உத்தமர் என்னும் அவர்களோடு அல்லது உசாவேன்-சர்வ உத்தமனான சர்வேஸ்வரனுடையது என்று இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்களை ஒழிய ஏதேனும் ஒன்றை உசாவேன் –உத்க்ருஷ்ட வஸ்து உத்க்ருஷ்டம் என்று இருப்பாரோடு அல்லது போத யந்த பரஸ்பரம் பண்ணேன் –இவர்கள் பேர் சொல்லும் போது உயர்ந்தவர் என்று சொல்லுவர்கள்
இவர்களை உயர்ந்தவர்கள் என்றது -அவர்களைக் கீழோர் என்றது இதுவே யாகாதே
ஏற்றத் தாழ்வுகளுக்கு பிரயோஜனம்-உயவேன் -என்றது-உசாவேன் -என்றபடி –
——————
5-ஸ்வரூப அனுகூலமான கால ஷேபம் –
பகவத் குண அனுபவத்தை -பிறரில் வ்யாவ்ருத்தமாக ஓன்று சொல்லுகிற போதுபோக்கைத் தவிர்ந்து -பூசித்தும் போக்கினேன் போது -நான்முகன் -63- என்கிறபடியே போது போக்கை-அதாவது ஸ்வரூபம் என்றும் தாரகம் என்றும் போக்யம் என்றும் மறக்க மாட்டாமே சொல்லுகை -அதாவது தாள்கள் தலையிலே வணங்கி நாள் கடலைக் கழிமினே -திருவாய் -1-6-7-என்றும் கோவிந்தன் குணம் பாடி ஆவி காத்திருப்பேனே -நாச்சியார் -8-2- என்றும் தொல் சீரை ஓவாத வூணாக வுண் -பெரிய திரு -78-என்றும் ஏது செய்தால் மறக்கேன் -பெரிய திரு –9-3-3- என்றும் போருகை
தரித்து இருந்தேனாகவே தாரா கணப் போர்
விரித்துரைத்த வென்னாகத்துன்னை-தெரித்து எழுதி
வாசித்தும் கேட்டும் வணங்கி வழிபட்டும்
பூசித்தும் போக்கினேன் போது-63-
நஷத்ர கணங்கள் உடைய சஞ்சாரத்தை விஸ்த்ருதமாகச் சொன்ன திரு வனந்த ஆழ்வானுக்கு ஆத்மாவாய் இருந்துள்ள உன்னை அனுசந்தித்தும்-போதாத் சங்கர்ஷண-அவன் மேல் கண் வளர்ந்து அருளுகிற உன்னை-ஆஸ்ரித விரோதி நிரசன ஸ்வ பாவனை ஆஸ்ரித பஷபாதியான உன்னை –அர்த்தத்தை நிர்ணயியா -அத்தை எழுதி வாசித்தும்-பிறர் சொல்லக் கேட்டும் திருவடிகளிலே நிர்மமனாய் வணங்கியும்-அதுவே ஸ்வ பாவமாம்படியும்
தத்தத் காலங்களிலே சமாராதானம் பண்ணியும் போது போக்கினேன்-தெரித்து -அனுசந்தித்து -என்றுமாம் –இது அன்றோ நான் சத்தை பெறும்படி தரிக்கைக்காக போது போக்கின படி-என்கிறார் -சத்ருக்களுக்குப் பயங்கரமான திருவனந்த ஆழ்வானைத் திரு மேனியாக யுடைய உன்னை அனுசந்தித்தும் எழுதியும் வாசித்தும் கேட்டும் வணங்கியும்
அதுவே யாத்ரையாய் இருந்தும் அர்ச்சித்தும் போது போக்கினேனாகவே தரித்து இருந்தேன்-லிகித்தும் வாசித்தும் ஸ்ரவணம் பண்ணியும் நிர்மமனாய் வணங்கி அது தானே யாத்ரையாய் ஆராதித்தும் காலம் போக்கினேன் –ஆகவே தரித்து இருந்தேன் -தரித்து இருந்தேன் ஆகைக்காக பூசித்துக் காலத்தைப் போக்கினேன் -ஏவகாரம் அவ்யயம் -எல்லா வற்றாலும் தரித்து இருந்தேன் என்றவாறு-சத்தை உண்டாகைக்காக இப்படிக்கு காலத்தைப் போக்கினேன்-முதல் ஆழ்வார்கள் அருளிச் செயல்களையும் உபதேச வசனங்களையும் கேட்டு வணங்கி மமகாராம் அற்று அதுவும் அவனது இன்னருளே என்று திருவடிகளிலே வணங்கி வழிபட்டும் பூசித்தும்-மநோ வாக் காயங்களால் ஆராதனம் செய்து-வழிபட்டும் பூசித்தும் -இரண்டு பத பிரயோகம் ஆராதனம் பொழுது போக்கு என்று காட்டவே சத்தைக்காவே இவற்றைப் போது போக்காகக் கொண்டேன்-காலை மாலை கமல மலரிட்டு நீர் -மாலை நண்ணித் தொழுது எழுமினோ -9-10-1-கள்ளவிழும் மலரிட்டு நீர் இறைஞ்சுமின்-9-10-2- விண்டு வாடா மலரிட்டு நீர் இறைஞ்சுமின் -9-10-3-–என்று
கால ஷேப அர்த்தமாகவும் – ஸ்வயம் போக்யமாகவும் – பகவத் கைங்கர்யம் பண்ணும் குடியிலே பிறந்த அருளிச் செயல்கள் இதே போல்–
நீள் கடல் சூழ் இலங்கைக் கோன்-தோள்கள் தலை துணி செய்தான்
தாள்கள் தலையில் வணங்கி நாள் கடலைக் கழிமினே –1-6-7-
திருவடிகளிலே நிர்மமனாய் வணங்கி-ஜ்ஞானம் பிறந்தால் ப்ராப்தி அளவும் –ஒரு பகல் ஆயிரம் ஊழி-என்னுமா போலே கால ஷேபம் அரிதாய் இறே இருப்பது-இறைவனுடைய போக்யதை -இனிமை நெஞ்சிலே பட்டால், அவனை அடைவதற்கு முன்பு-இடையிலே யுள்ள நாள்கள் ஒரு கடல் போன்று தோன்றும் ஆதலின், ‘நாள் கடல்’ என்கிறார்.
திருவடியைப் போலே தசரதாத் மஜனுடைய வீர சரிதத்தை அனுசந்தித்துக் காலத்தைப் போக்குவது-அன்றிக்கே-சக்கரவர்த்தி திருமகனை ஆஸ்ரயித்து சம்சார ஆர்ணவத்தை மாற்றிக் கொள்ள பாருங்கோள் என்கிறார் –
ஒளி வண்ணம் வளை சிந்தை உறக்கத்தோடு இவை எல்லாம்
எளிமையால் விட்டு என்னை ஈடு அழியப் போயினவால்
குளிர் அருவி வேங்கடத்து என் கோவிந்தன் குணம் பாடி
அளியத்த மேகங்காள் ஆவி காத்து இருப்பேனே—-8-3-
இத் தசையில் குண ஜ்ஞானத்தாலே தரித்தல் – குண கீர்த்தனத்தாலே தரித்தல் செய்யலாம் என்று இருக்கிறாரோ-இத் தாபம் அத் தேசத்தை நினைக்கத் தீரும் காணும் – சகல தாபங்களையும் ஆற்ற வல்ல தேசமாய்த்து-என் –இப்போது வந்திலன் ஆகிலும்
முன்பு தன்னை எனக்காக்கி வைத்தவற்றை முந்துற முன்னம் தவிர்க்க ஒண்ணாது இறே-கோவிந்தன்-சர்வ ஸூலபனான நிலையைத் தவிர்க்க ஒண்ணாது இறே-குணம் பாடி –
-சோஸ்நுதே சர்வான் காமான் சஹ ப்ரஹ்மணா -என்கிறபடியே -அன்வயத்திலும் குண அனுபவமாகில் பண்ணுவது-பிரிந்தாலும் குண ஜ்ஞானத்தாலே தரிக்கலாம் என்று இருக்கிறாரோ –-ஆசம்சேயம்–தச்மிம்ச பகவோ குணா –சுந்தர -27-14-சீதா பிராட்டி தரித்தால் போலே-அளியத்த மேகங்காள் –நீங்கள் முன்னம் அவனைப் போலே யாகாது ஒழியப் பெற்றேன்-அவன் பொகட்டுப் போன சமயத்தில் முகம் காட்டுவதே –ஆவி காத்து இருப்பேனே—–பிராண நாதன் நானோ-தன்னை அனுபவிக்கும் அது ஒழிய பிராண ரஷணமும் எனக்குப் பணியோ–ஆனைப் பண்ணைக் குதிரை சுமக்க வற்றோ – ஆனைக்கு உரிய அலங்காரங்கள் கட்டுக்கள் இவற்றை குதிரை சுமக்குமா ஒரு சர்வ சக்தி தொழிலை என்னாலே செய்யலாமோ –
துணை நாள் பெருங்கிளையும் தொல் குலமும் சுற்றத்
திணை நாளும் இன்புடைத்தா மேலும் -கணை நாணில்
ஓவாத் தொழில் சார்ங்கன் தொல் சீரை நல் நெஞ்சே
ஓவாத ஊணாக வுண்–78-
என்றும் ஆஸ்ரிதர் கார்யம் மாறாதே செய்து போருமவருடைய கல்யாண குணங்களை-ஸோபாதிக பந்துக்களுக்கும் நிருபாதிக பந்துக்களுக்கும் வாசி யறியும் நெஞ்சே-எம்பெருமானைப் பற்று என்று-சொல்லப் பாங்கான நெஞ்சு -விச்சேதம் இல்லாத போகமாக புஜி-
ஏது செய்தால் மறக்கேன் மனமே தொழுதும் எழு
தாது மல்கு தடம் சூழ் பொழில் தாழ்வார் தொடர்ந்து பின்
பேதை நின்னைப் பிரியேன் இனி என்று அகன்றான் இடம்
போது நாளும் கமழும் பொழில் சூழ்ந்த புல்லாணியே –9-3-3-
நாட்டார் தம் தாம் உடைய அபிமதரைப் பிரிந்தால்-கூடின போது மறக்க மாட்டாராய்-
பிரிந்த போது நினைக்க மாட்டாராய் இருப்பர்கள் – இங்கன் அன்றிக்கே பிரிவில் மறக்க ஒண்ணாத படியாய் இரா நின்றது – இனி அவர்கள் படி அன்றிக்கே நம்மது விசஜாதீயமாய் இருந்த பின்பு-கிட்டினால் தான் மறக்கலாமாகில் பார்க்கலாம் – போந்து காணாய் -என்கிறாள் – இவள் படி வ்யாவ்ருத்தமாய் இறே இருப்பது – (நாட்டார் இயல்பு ஒழிந்து நாரணனை நண்ணுமவள் அன்றோ )மனமே –பேறு இழவுகள் இரண்டாலும் வரும்
வியசன உகப்பு உதயங்களுக்கு (அப் உதயங்களுக்கு )உன்னைக் கொண்டு இறே அனுபவிப்பது –தொழுதும் எழு-மறைக்கைக்கும் தொழ வேணும் போலே காணும் –
ஏதேனுமாக -அபிமத லாபம் தொழுகையால் அல்லது இல்லையாய் இருந்தது –
—————
6-ஸ்வரூப அனுகூலமான இருப்பு -அதாவது –
த்ரவ்யார்ஜனத்துக்கு ஏகாந்தம் என்றும் இவ்வருகுண்டான-கள்ளர் காட்டுமிருகம் இவற்றால் உண்டாகும் – பய நிவ்ருத்திக்கு உறுப்பு என்றும் – ஸ்வ ஜாதி விஸ்லேஷம் பொறாமையும் புண்ய ஷேத்ர வாசமும் யோக்யதைக்கு உறுப்பு என்றும் இருக்கிற இருப்பைத் தவிர்ந்து-தேசத்திலே பிரேமம் பிறக்கைக்கு என்றும் –
தேசிகனை நித்ய சேவை பண்ணவாம் என்றும் –
தேச வர்த்தகரான சாத்விகரோடே கலந்து பரிமாறுகைக்கு என்றும் விபரீதங்கள் புகுராத இடம் என்று இருக்கை –
தஞ்சை மா மணிக் கோயிலே தொழுது -பெரிய திருமொழி -1-1-என்றும் –அதனுள் கண்ணா என்றும்-திருவாய்மொழி -9-6-7-என்றும் –
கற்றார் சேர் கண்ணபுரம் -பெரிய திருமொழி -8-10-5-என்றும் –
விளைந்த தானியமும் இராக்கதர் மீது கொள்ள கிலார்கள் -பெரியாழ்வார் திருமொழி -4-4-8-என்றும் இருக்கை-
எம்பிரான் எந்தை என்னுடைச் சுற்றம் எனக்கு அரசு என்னுடை வாழ் நாள்
அம்பினால் அரக்கர் வெருக்கொள நெருக்கி யவர் உயிர் செகுத்த எம் அண்ணல்
வம்புலாஞ் சோலை மா மதிள் தஞ்சை மா மணிக் கோயிலே வணங்கி
நம்பிகாள் உய்ய நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம் —6–
இத்தால் சொல்லிற்று ஆயிற்று-மாதா பிதா ப்ராதா நிவாஸஸ் சரணம் ஸூஹ்ருத் கதிர் நாராயணா-ஸூ பால உபநிஷத் -என்கிறபடியே –இது தான் உமக்கு வந்தபடி என் என்ன –
வம்புலாஞ் சோலை மா மதிள் தஞ்சை மா மணிக் கோயிலே வணங்கி – நித்ய வசந்தமான சோலையையும் மா மதிளையும் உடைத்தான தஞ்சை மா மணிக் கோயிலே-வணங்கி வந்தது– எல்லா உறவு முறையும் தானே என்று தோற்றும் படி அவன் வந்து நிற்கிற
சௌலப்யத்தை அனுசந்திக்கையாலே வந்தது-
காட்கரை ஏத்தும் அதனுள் கண்ணா என்னும்
வேட்கை நோய் கூர நினைந்து கரைந்து உகும்
ஆட் கொள்வான் ஒத்து என் உயிர் உண்ட மாயனால்
கோட் குறை பட்டது என் ஆர் உயிர் கோள் உண்டே–9-6-7-
காட்கரை ஏத்தும் –அவனிலும் அவன் இருந்த வூரை ஏத்தும் –அதனுள் கண்ணா என்னும்-பரத்வத்தில் காட்டில் அவ்வூரில் புகுந்த பின்பு யுண்டான ஏற்றம் –என் கண்ணன் -என்னா காட்கரை ஏத்தும் -அவ்வூரை ஏத்தா அவன் தன்னை ஏத்தும் -இரண்டுக்கும் புறம்பு போகிறதில்லை –
பெற்றாரும் சுற்றமும் என்று இவை பேணேன் நான்
மற்றாரும் பற்றிலேன் ஆதலால் நின் அடைந்தேன்
உற்றான் என்று உள்ளத்து வைத்தருள் செய் கண்டாய்
கற்றார் சேர் கண்ண புரத்துறை யம்மானே —8-10-5-
நான் வேறு சிலரை பந்துக்கள் என்று நினைத்து இருப்பது இல்லை -ஐயோ இவனுக்கு புறம்பு ஒருவரும் இல்லை -என்பாரையும் உடையேன் அல்லேன் – புறம்பு ஒருவரும் இல்லை யாகில்-நீர் உண்டே என்ன-நானும் எனக்கு கழுத்துக் கட்டி –நிராலம்பநாய் விழுமவனுக்கு
ஒரு தரையிலே விழ வேணுமே- சதம் நிபதிதம் பூமௌ -( காகாஸூரன் விழுந்தால் போல் )–இவன் நம்மை விட்டு புறம்பே போய் படக் கடவது எல்லாம் பட்டான் -என்று உன் திரு உள்ளத்திலே கொண்டு என் பக்கலிலே கிருபையை பண்ணி அருள வேணும் -என்னால் அறுத்துக் கொள்ள ஒண்ணாத சம்பந்தம் உன் கை யதன்றோ – இவன் கீழ் விட்டுப் போந்த உறவு முறை எல்லாம் நாமே அன்றோ என்ற இத்தை திரு உள்ளத்திலே கொண்டு என் பக்கலிலே கிருபையை பண்ணி அருள வேண்டும் ––நீ வர்த்திக்கிற ஊரில் உள்ளார் விழுந்த ஏடு எடுத்து வாசித்தார் உண்டோ – அறிவுடையார்க்கு எல்லாம் பட வேண்டாவோ –ஆர்யேண-கருணம் -கார்யம் –என்னக் கடவது இறே என்று ஜீயர்( நஞ்சீயர் ) அருளிச் செய்த வார்த்தை –(பிராட்டி திருவடிக்குச் சொன்ன வார்த்தை )
நளிர்ந்த சீலன் நயாசீலன் அபிமான துங்கனை நாள் தோறும்
தெளிந்த செல்வனை சேவகம் கொண்ட செம்கண் மால் திருக் கோட்டியூர்
குளிர்ந்து உறைகின்ற கோவிந்தன் குணம் பாடுவார் உள்ள நாட்டினில்
விளைந்த தானியமும் இராக்கதர் மீது கொள்ள கிலார்களே -4- 4-8 –
திருக் கோட்டியூர் குளிர்ந்து உறைகின்ற-பரம பதத்திலே சம்சாரிகள் இழவிலே திரு உள்ளம் குடி போய் உள்ளுக் கொதித்து இருக்கும் –அவ்விருப்பு நித்யமானாலும் -இருந்தாலும் முள் மேல் இருப்பு -என்னக் கடவது இறே-ப்ரீதியோடே பொருந்தி வர்த்திப்பது இங்கே இறே
அந்தாமத்து அன்பு செய்து என் ஆவி சேர் அம்மானுக்கு (2-5 )–என்று காட்டுத் தீயில் அகப்பட்டவன் தடாகத்தில் வந்து விழுமா போலே இறே வந்து விழுந்தது –
விடுகை -கொதிப்பு
என் ஆவி சேர் -அன்பு
வெள்ளத்தின் உள்ளானும் வேம்கடத்து மேயானும் உள்ளத்தில் உள்ளான் -என்னக் கடவது இறே
பள்ளி கொள்ளும் சீதனையே தொழுவார் விண்ணுளாரிலும் சீரியர் -என்னக் கடவது இறே-கோவிந்தன் குணம் பாடுவார் உள்ள நாட்டினுள் –
செங்கண் மால் -என்று வாத்சல்யம்
சேவகம் கொண்ட –என்று சௌசீல்யம்
கோவிந்தன் -என்று சௌலப்யம்
அவதாரம் பரத்வம் -என்னும் படி இறே அர்ச்சாவதார சௌலப்யம்-இதுக்கு ஏகாந்தமான குணங்களை சிநேகத்தோடு சொல்லுவார் உள்ள நாட்டினுள் அவர்கள் அளவல்ல-அவர்கள் சம்பந்தம் உடையவர் அளவல்ல-அவர்கள் இருந்த ஊர் அளவல்ல – அவ் வூரோடே சேர்ந்த நாட்டினுள் விளைந்த தானியமும் இராக்கதர் மீது கொள்ள கிலார்களே – தனக்கும் தம் பந்துக்களுக்கும் என்னல் இறே அவர்கள் கொள்ளுவது-பகவத் பாகவத விஷயங்களுக்கு என்றால் அவர்களுக்கு கொள்ள சக்தி இல்லை-புனத்தினைக் கிள்ளி புதுவவி காட்டி வுன் பொன் அடி வாழ்க (5-3 )-என்று இறே இவர்கள் இருப்பது –
——————-
7-ஸ்வரூப அநுகூலமான பரிக்ரஹம் ஆவது –
அனுகூலரை நெருக்கி ஸ்வீகரிக்கையும்
பிரதிகூலர் பக்கல் சாபேஷனாய் ஸ்வீகரிக்கையும்-
ஸ்வரூப பிரயுக்தமானவற்றை பதார்த்தங்களுக்கு உறுப்பாக்கி ஸ்வீகரிக்கையும் –
அமுதுபடி சாத்துப்படிக்கு அர்ஹமானவற்றையும் பரிக்ரஹிக்கை தவிர்ந்து –
க்ருஷி பண்ணுதல் –
முஷ்டி புகுதல் – –
சிஷ்யன் ப்ரீதியாலே தர்மத்தை யாதல் –
சாத்விகர் திரு உள்ள பிரசன்னத்தாலே தருமத்தை யாதல் -அதாவது -மெய் வருத்திக் கை செய்தும்மினோ -திருவாய்மொழி -3-9-6-என்றும் -பிச்சை புக்காகிலும் எம்பிரான் திருநாமமே நச்சுமின் -பெரியாழ்வார் திருமொழி -4-6-3-என்றும் -சரீரம் அர்த்தம் பிராணஞ்ச சத்குருப்யோ நிவேதயத் -என்றும் –
வரு விருந்தை அளித்திருப்பார் -பெரியாழ்வார் திருமொழி -4-8-2 -என்கிறவர்களுடைய பதார்த்தங்களை ஸ்வீகரிக்கை-பரிகிரஹிக்கை
வம்மின் புலவீர்!நும் மெய் வருத்திக் கை செய்து உய்ம்மினோ!
இம்மன் உலகில் செல்வர் இப்போது இல்லை நோக்கினோம்;
நும் இன் கவி கொண்டு நும்நும் இட்டா தெய்வம் ஏத்தினால்
செம்மின் சுடர்முடி என் திருமாலுக்குச் சேருமே.–3-9-6-
உங்கள் சரீரத்தை வருத்தியும் கைத் தொழில் செய்து ஜீவிக்கப் பாருங்கோள் -என்பர் எம்பார் –அத்தால் ஜீவனம் பூர்ணம் ஆகாது -இவர் சம்சார யாத்திரையில் கண் வைக்குமவர் அல்லர்
இவர்கள் பிரயோஜனத்துக்காக இப்போது ஆராய்ந்து பார்த்தால் இவர்கள் குறை தீர்க்க வல்லார் இன்றிக்கே இருந்தது-நல்லது அறியும் நீங்கள் வாருங்கோள்; காட்டுத்தீயிலே அகப்பட்டாரை மடுவைக் காட்டி அழைப்பாரைப் போன்று ‘வாருங்கோள்’ என்கிறார்.
‘எங்களை நீர் அழைக்கின்றது என்? எங்கள் இல் வாழ்க்கை நடக்க வேண்டாவோ, பிறரைக் கவி பாடியாகிலும்?’ என்ன,-மெய்யே-உண்மையாக -சரீர -வாழ வேண்டினாலும் உங்கள் தரம் குலைய வாழ வேண்டுமோ? உங்கள் தரம் குலையாமல் வாழ ஒண்ணாதோ?-உங்கள் சரீரத்தை வருத்தியும் கைத்தொழில் செய்தும் வாழப் பாருங்கோள். இதற்கு, ‘கோட்டை சுமத்தல், புற் சிரைத்தல் செய்யமாட்டீர்களோ?’ என்று எம்பார் அருளிச்செய்வர்.-ஆற்றுப்பெருக்கின் தன்மையைப் போன்று நித்தியமான இந்த உலகத்தில் உங்கள் கவி கேட்டு இக்கவிக்குத் தரமாகத் தருகைக்கு வள்ளல்களாய் இருக்கும் ஸ்ரீமான்கள் இல்லை-‘செல்வர் இல்லை இப்போது நோக்கினோம்’ எனச் சொற்களை மாற்றிப் பொருள்-செல்வர் இல்லை இப்பொது நோக்கினோம் -/ செல்வர் இப்போது இல்லை நோக்கினோம் -இரண்டும் இல்லை-முன்பே மயர்வற மதி நலம் அருளப் பெற்றவர் –இப்போது தான் உங்கள் அனர்த்தம் கண்டு நோக்கினேன்
உச்சியில் எண்ணெயும் சுட்டியும் வளையும் உகந்து
எச்சம் பொலிந்தீர்காள் என் செய்வான் பிறர் பேர் இட்டீர்
பிச்சை புக்காகிலும் எம்பிரான் திரு நாமமே
நச்சுமின் நாரணன் நம் அன்னை நரகம் புகாள் – 4-6- 3-
நாடு பரப்புண்டே -அதிலே பிஷையை புகுந்து ஜீவித்தாகிலும் எனக்கு ஸ்வாமி யானவனுடைய திரு நாமத்தையே விருப்பத்தோடு சாத்தி அழையுங்கோள் -ஒரு பிராமணன் தன் பிள்ளையை பேர் இடுகிற சமயத்தில் -ஐஸ்வர்யம் தர வல்லான் ஒருவன் பேர் இட வேணும் -என்ன – வைஸ்ரவணன் பேரை இடு என்ற அளவிலே -ஐளி பிளி -என்று இட்டு அழைத்து ஜீவிப்பதில் -நாராயணன் -என்கிற திரு நாமத்தைச் சாத்தி பிஷை புக்கு ஜீவிக்க அமையும் என்றான் -என்று ( நாலூர் ) பிள்ளை அருளிச் செய்வர் என்று ( நாலூர் )ஆச்சான் பிள்ளை அருளிச் செய்வர்) என்று திரு வாய் மொழிப் பிள்ளை அருளிச் செய்வர் -இத்தால் பிஷையை புகுந்து ஆகிலும் என்னுடைய நாதனானவனுடைய திரு நாமத்தையே நான் சொன்னபடியே உங்கள் பிள்ளைக்கு விரும்பி இடுங்கோள் -பிஷை புக வேண்டாதபடி த்ருஷ்டமும் (அத்ருஷ்டமும் )அவன் ப்ரசாதத்தாலே தன்னடையே சித்திக்கும் என்று கருத்து -ஆகையால் அத்ருஷ்டத்தில் தானே குறை இல்லை என்கை –வர்ணாஸ்ரம தர்மம் வைதமானவோ பாதி இதுவும் வைதமாக இடுங்கோள்-வர்ணாஸ்ரம தர்மிகளுக்கு
ஜன்மாந்தர ஸித்தமான புண்ய பாப பலங்களை புஜிக்க விதித்தவோ பாதி உங்களுக்கும் அந் நேர் வரும்-அது போராதாகில் பிச்சை எடுத்தாவது எம்பிரான் திரு நாமமே நச்சுமின்
(பிராணன் பரித்யஜ்ய அரியை காக்க வேண்டும் பிராணனை விட்டாவது இல்லாமல் விட்டே காக்க வேண்டும் அதே போல் பிச்சை எடுத்து அவன் பெயரை வைக்க விதியாகவே கொள்ள வேண்டும் )
பிறப்பகத்தே மாண்டு ஒழிந்த பிள்ளைகளை நால்வரையும்
இறைப் பொழுதில் கொணர்ந்து கொடுத்து ஒருப் படுத்த உறைப்பனூர்
மறைப் பெரும் தீ வளர்த்து இருப்பார் வரு விருந்தை அளித்து இருப்பார்
சிறப்புடைய மறையவர் வாழ் திருவரங்கம் என்பதுவே – 4-8-2 –
வரும் விருந்தினரை ரஷித்து கொண்டு இருப்பார்-அதாவது-தம் தாம் திரு மாளிகையிலே எழுந்து அருளின ஸ்ரீ வைஷ்ணவர்களை ஸ்வரூப அனுரூபமாக ஆதரித்து அமுது செய்யப் பண்ணுகை-இப்படி வைதிக கர்ம அனுஷ்டானத்தையும் – பகவத் சமாராதனத்தையும்
அநந்ய பிரயோஜனமாக செய்கையாகிற நன்மையை உடையராய்-இதுக்கு உடலாக வேத தாத்பர்யத்தை அறிந்து இருக்கும் அவர்கள் பெருமாளை அனுபவித்துக் கொண்டு வாழா நிற்கிற திருவரங்கம் என்பதுவே
இப்படி ஸாஸ்த்ர ஜன்ய ஞானத்தாலே கரை ஏறினார்கள் உளர் ஆகில் -அவர்களுக்கும்
இந்த நிரதிசய புருஷார்த்தம் உபதேச கம்ய ஞானத்தாலே ஸித்தித்த பாகவதர்க்கும்
கைங்கர்ய பரராய் தம் தாம் திரு மாளிகையிலே எழுந்து அருளி வந்த ஸ்ரீவைஷ்ணவர்களை ஸ்வரூப அனுரூபமாக ஆதரித்து அமுது செய்யப் பண்ணியும்=இவர்கள் அமுது செய்வதற்கு முன்னே வேறே சில ஸ்ரீ வைஷ்ணவர்கள் ஸ்வரூப அனுரூபமாக அங்கே அமுது செய்யும் படி அருளிச் செய்ய வேணும் என்று பிரார்த்தித்தால் தங்கள் இழவு பாராதே பர ஸம்ருத்தியே பிரயோஜனம் என்று இருக்கையும்-இழவு தோன்றித்தாகில் தாங்களும் அவர்களோடே சென்று அங்கே அமுது செய்கையும் இங்குச் சமைந்த வற்றையும் அங்கு கொண்டு போய் அமுது செய்கையும்
——–
8-ஸ்வரூப அனுகூலமான போஜனமாவது –
க்யாதியைப் பற்றவாதல் –
பூஜையைப் பற்றவாதல் –
என்னது நானிடுகிறேன் -என்றாதல் -இடுகிற போஜனத்தை தவிர்ந்து –
நெய்யமர் இன் அடிசில் -திருவாய்மொழி -6-8-2- என்றும்
நல்லதோர் சோறு – (திருப்பல்லாண்டு-8 )-என்றும் மாற்றிலி சோறு பெரியாழ்வார் -4-4-10 -என்றும் -உண்ணும் சோறு-திருவாய்மொழி -6-7-1-என்றும் சொல்லுகிறவற்றை புஜிக்கை
நெய்யோடும் பாலோடும் கூடின அடிசில் -நெய்யிடை நல்லதோர் சோறு என்கிறபடிய ஆஜ்ய மிஸ்ரமாய் பால் முடிவான சோறு -இன்னடிசில் –எல்லாம் கண்ணன் என்று இருக்கிறவள் இவள் உகப்பது தேடிக் கொடுக்கிறாள் -பகவத் விஷயத்தில் உபகாரகர்க்கு -யதன்ன புருஷோ பவதி –என்னும் அளவு போராது-அவர்கள் உவப்பது தேடி இட வேணும் என்கை –நிச்சல்-பகவத் விஷயத்தில் வாசி அறிய அறிய உபகாரகரை கொண்டாடும் அத்தனை இ றே –மேவீரோ -ஸ் வீகரியீரோ -என் பேறாக ஸ் வீகரிக்க வேணும் என்கை –உபாய நாந்யுபாதயா மூளா நிச பலா நிச-என்று திருவடியை முதலிகள் கொண்டாடினால் போலே-“இந்த உடலின் சேர்க்கை எல்லாப் பொருளுமாம்” என்று கொடுக்கைக்கு உடல் இல்லையே இவளுக்கு.-உடல் இவளது இல்லையே“ஏஷ ஸர்வஸ்வ பூதஸ்து”-என்பது, ஸ்ரீராமா. சுந். 4. 5 : 6. என்றது, அவன் ஸ்வதந்திரனாகையாலே கொடுத்தான்; இவள் பரதந்திரப்பட்டவள் ஆகையாலே நாயகனுக்கு ஒழியப் பிறர்க்குச் சரீரத்தைக் கொடுக்கப் போகாதே அன்றோ என்றபடி.-நெய்யோடே கூடின இனிய அடிசிலை நாள் தோறும் பாலோடே கூட நான் தர, அதனை உண்டு நீங்கள் என்னை உஜ்ஜீவிப்பிக்க வேணும்.
“உண்ணும் சோறு பருகுநீர் தின்னும் வெற்றிலையும் எல்லாம் கண்ணன்” என்று இருக்கக்கூடிய இவள், இவை உகப்பது தேடி இடுகிறாள் அன்றோ. இதனால், என் சொல்லியவாறோ? எனின், பகவத் விஷயத்தில் உபகார பரராயிருப்பார்க்கு, ‘உண்பதில் ஒரு கை பகுந்திட்டோமாகில் செய்யலாவது உண்டோ?’ என்று கைவாங்குமதன்று;
அவர்கள் விரும்பினவற்றையே தேடி இட வேணும் என்னும் விசேடப் பொருளைத் தெரிவித்தபடி.“எந்தப் புருஷன் எதனை அன்னமாக உடையவனா யிருக்கிறானோ அவனுடைய தெய்வமும் அதனையேஅன்னமாக வுடைத்தா யிருக்கிறது”
“இதம் புங்க்ஷ்வ மஹாராஜ ப்ரீதோ யதஸநாவயம் யதந்ந: புருஷோ பவதி ததந்நா: தஸ்ய தேவதா:”-என்பது, ஸ்ரீராமா. அயோத். 103 : 30. என்னலாவது அவன் பக்கல்.-நிச்சல் –
சேர்ப்பது ஒருநாளே, இவர்களுக்குப் பின்பு அநுபவம் நித்தியமாயிருக்கிறபடி.
“எந்த நாதமுனிகளுடைய இரண்டு திருவடிகள் இம்மை மறுமை என்னும் இரண்டு உலகங்களிலும் எப்போதும் என்னைக் காப்பாற்றும் பொருள்களோ”
“நாதாய நாதமுநயே அத்ரபரத்ர சாபி நித்யம் யதீய சரணௌ ஸரணம் மதீயம்”-என்பது, ஸ்தோத்திர ரத்தினம்,– 2.என்னுமாறு போலே.
நெய்யிடை நல்லதோர் சோறும் நியதமும் அத்தாணி சேவகமும்
கை யடைக் காயும் கழுத்துக்கு பூணொடு காதுக்கு குண்டலமும்
மெய்யிட நல்லதோர் சாந்தமும் தந்து என்னை வெள்ளுயிர் ஆக்க வல்ல
பையுடை நாகப் பகை கொடியானுக்குப் பல்லாண்டு கூறுவனே –8
நல்லதோர் சோறும் –சோற்றுக்கு நன்மையாவது –இட்டவன் இட்டோம் என்று இருத்தல் -உண்டவன் இதுக்கு என் செய்வோம் என்று இருத்தல் -செய்யாத சோறு –
அதாவது-தாய் இட புத்ரன் உண்ணும் சோற்றுக்கு இவ்விரண்டும் இல்லை இறே
ஓர் சோறு –இப்பாவ சுத்தியே அன்றிக்கே விலஷண ரசோபேதமாய் இருக்கை
அங்கன் இன்றிக்கே -சேஷ பூதன் சேஷிக்கு இடும் சோறு போலே இருக்கை-அதாகிறது –
அஹங்காரோபேதம் இன்றிக்கே பக்த்யு பர்ஹ்ர்த்யமாய் இருக்கை –
ஈஸ்வரனும் -பக்தாநாம் -என்கிற நினைவாலேயும் வத்சலனாயும் இறே இடுவது –
அநந்ய பிரயோஜன் ஸ்வாமி விஷயத்தில் இடும் சோறு எங்கனே இருக்கும் என்னில் –
விதுராந நானி புபுஜே ஸூசீநி குண வந்திச -என்னும்படி பாவந முமாய் -போக்யமுமாய்
இருக்கை –ஸூசீநி -என்றது சுத்தங்களாய் இருக்கை -சோற்றுக்கு சுத்தி யாவது-துர்யோதனன் தன் ஐஸ்வர்யத்தைப் பற்ற அபிமாநித்தான் –-பீஷ்மன் ஞாநாதிகன் என்று அபிமாநித்தான்-த்ரோணன் வர்ணத்தாலிகன் என்று அபிமாநித்தான்-இவை ஒன்றும் இன்றிக்கே –பக்த் வுப ஹ்ர்தமாய் இருக்கை
உண்ணுஞ் சோறு பருகுநீர் தின்னும்வெற்றிலையு மெல்லாம்
கண்ணன்எம் பெருமான் என்றென்றே கண்கள் நீர்மல்கி
மண்ணினுள் அவன் சீர்வளம் மிக்கவன் ஊர்வினவித்
திண்ணம் என்இளமான் புகுமுர் திருக்கோளூரே.–6-7-1-
ஜீவித்து அல்லது தரிக்க ஒண்ணாத சோறு -தாஹித்தால் பானம் பண்ணி யல்லது நிற்க ஒண்ணாத தண்ணீர் -தின்றால் அல்லது புஷ்டனாக விரகு இன்றிக்கே இருக்கும் வெற்றிலையும் –தாரக போஷக போக்யம் ஆனவை எல்லாம் எனக்கு நாதனான கிருஷ்ணன் -“பஹூநாம் ஜந்மநாம அந்தே ஞானவாந் மாம் ப்ரபத்யதே
வாஸுதேவஸ் ஸர்வம் இதி ஸ மஹாத்மா ஸு துர்லப:”-என்பது ஸ்ரீகீதை, 7 : 19
என்று கொண்டு ‘எல்லாம் கிருஷ்ணன்’ என்று இருக்கும் என்பாள் ‘எல்லாம் கண்ணன்’ என்கிறாள். -என்று ஆயிற்று இவள் இருப்பது-சோறு, நீர், வெற்றிலை என்ன அமையாதோ?
‘உண்ணுஞ் சோறு’ என்பது போன்ற அடைமொழிகட்குக் கருத்து என்? என்னில்,
வேட்ட பொழுதின் அவை யவை போலுமே, தோட்டார் கதுப்பினாள் தோள்” என்று வள்ளுவனும் சொன்னான் அன்றோ;(ஆசைப்பட்ட சமயத்தில் அவை அவை பெற்றால் உகக்குமா போல் பூ சாத்தும் தோள் உடன் அணைவது உகக்குமே -)அப்படியே, இவை தாமே, விருப்பம் இல்லாதவைகளாகவும் இருக்கும் ஒரோ நிலைகளிலே;அதற்காக, விரும்புகிற சமயத்தில் இவைதாம் யாதொரு படியிருக்கும் அப்படியே யாயிற்று இவர்க்கு எப்போதும் பகவத் விஷயம் என்கைக்காகக் கூறப்பட்டன என்க.-உண்ணும் சோறு’ என்ற நிகழ் காலத்தாலே, அல்லாதது உண்டு சமையும் சோறு என்கையும், இது மாறாதே உண்ணும் சோறு என்னுமதுவும் தோற்றுகிறது.–கணை நாணில், ஓவாத் தொழில் சார்ங்கன் தொல் சீரை நன்னெஞ்சே, ஓவாத ஊணாக உண்” –பெரிய திருவந். 78.-என்னக் கடவதன்றோ.
மாறாதே உண்ணலாவதும், மாளாததும் இதுவே அன்றோ;
“அப்பொழுதைக்கப் பொழுது என் ஆராவமுதம்”-திருவாய். 2. 5 : 4.- என்றும்,
“கொள்ள மாளா இன்ப வெள்ளம்” -திருவாய். 4. 7 : 2.-என்றும் அன்றோ இருப்பது.
இவற்றில் ஆகாதது ஒன்று இல்லை கண்டீர்,-இவை எல்லாம் வகுத்தவனேயா யிருக்கை என்பாள் ‘எம்பெருமான்’ என்கிறாள்.-இவள் சந்நிதியே அமையும் கண்டீர் எங்களுக்கு.
——–
9-ஸ்வரூப அனுகூலமான அத்யவசாயமாவது –
இவ்வருகு உண்டான ரக்ஷக ஸ்வீகாரங்கள் அன்றியே (ரக்ஷகமும் ஸ்வீ காரமும் பரகதமாக இருக்க வேண்டுமே)ஸ்வரூப விரோதி நிவ்ருத்த பூர்வகமான
புருஷார்த்தத்தை தரும் என்கிற விஸ்வாசம் -அதாவது –
களைவாய் துன்பம் களையாது ஒழிவாய் களை கண் மற்றிலேன் -திருவாய்மொழி -5-8-8- என்றும் –
நீ தாராய் பறை -திருப்பாவை -28-என்றும் –
உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன் -திருவாய்மொழி -5-8-3- என்றும் –
நின்னருளே புரிந்து இருந்தேன் -பெரியாழ்வார் திருமொழி -5-4-1- என்றும் இருக்கை
களைவாய் துன்பம் களையா தொழிவாய் களை கண் மற்றிலேன்
வளைவாய் நேமிப் படையாய்! குடந்தைக் கிடந்தாய்! மாமாயா!
தளரா உடலம் என தாவி சரிந்து போம் போது
இளையா துன தாள் ஒருங்கப் பிடித்துப் போத இசை நீயே.–5-8-8-
உன்னைப் பிரிந்து படுகிற துக்கத்தை போக்கிலும் போக்கு -தவிரிலும் தவிரு -வேறு ரக்ஷகரை யுடையேன் அல்லேன் -நீ உன் கார்யம் செய்யிலும் செய் -தவிரிலும் தவிரு என் தலையில் குறை இல்லை -த்வம் ஏவ உபாய பூதோ மே பவ-என்கிற அம்சத்தில் குறை இல்லை –சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி என்கிற உன் கூறு செய்யிலும் செய் -தவிரிலும் தவிரு -துக்க நிவ்ருத்தி உம்ம தான பின்பு கிருஷியும் உம்மை தாக வேண்டாவோ என்ன-துக்கி யாகைக்கு கிருஷி பண்ணின நான் நிவர்த்தகன் ஆகவோ -ஒரு சக்தி கிருத்யத்தை நான் செய்யவோ-நீ உன் காரியத்தைச் செய்யிலும் செய், தவிரிலும் தவிர்வாய், நான் குறைவற்றேன், -ரஷணம்-அவன் கார்யம் தானே
“நீயே உபாயமாக எனக்கு ஆவாய்” என்கிற அம்சத்தில் குறையில்லை;
அஹமஸ் அபராதானாம் ஆலய அகிஞ்சன அகதி – “த்வம்ஏவ உபாயபூதோ மே பவ இதி ப்ரார்த்தநாமதி:”என்றது,-சரம ஸ்லோக பூர்வார்த்த பிரதிபாத்ய அதிகாரியின் செயலில் குறை இல்லை என்றபடி.–அறிவிப்பே அமையும் –-சர்வ பாபேப்யோ மோஷயிஷ்யாமி-“எல்லாப் பாவங்களினின்றும் விடுவிக்கின்றேன்” என்னும் உன் கூறு செய்யிலும் செய், தவிரிலும் தவிர்வாய்.-பூர்வ கூறு நமது கர்த்தவ்யம் -உத்தர கூறு உன்னுடையது அன்றோ – அப்படிச் செய்கிறோம் என்னாமையாலே, என்னுடைய ரக்ஷணத்துக்காக அன்றோ இக்கிடை என்கிறார்
கறவைகள் பின் சென்று கானம் சேர்ந்து உண்போம்
அறிவொன்றும் இல்லாத ஆய்க்குலத்து உன் தன்னைப்
பிறவி பெறும்தனைப் புண்ணியம் யாம் உடையோம்
குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா உன் தன்னோடு
உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது
அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன் தன்னைச்
சிறு பேர் அழைத்தனவோம் சீறி அருளாதே
இறைவா நீ தாராய் பறையேலோ ரெம்பாவாய்–28-
இறைவா –தன் கை கால் தப்புச் செய்தது என்று பொடிய -விரகு -உண்டோ – உடைமையை இழக்கை உடைவன் இழவு அன்றோ –பிழைப்பர் ஆகிலும் தம் அடியார் சொல் பொறுப்பது பெரியோர் கடன் அன்றே –ஐயர் தடுக்கின் கீழே இருந்து கேட்டு அறியாயே – நீ இறைவனாகைக்கும் சீறுகைக்கும்-என்ன சேர்த்தி உண்டு-நீ தருவோம் என்ற வன்று விலக்குகைக்கு உரியார் உண்டோ –உன் ஸ்வரூபத்தை உணராய் – எங்கள் தலையிலே கிடந்து நாங்கள் பிரதிபத்தி பண்ணாமையாலே அழித்துக் கொண்ட சேஷத்வம் போல் அன்றே உன் தலையிலே கிடக்கையாலே அழிக்க ஒண்ணாத சேஷித்வம் – அத்தை ஆராய்ந்து எங்களுடைய கார்யத்தைச் செய்யாய்-அத் தலையிலே குறை இன்றியிலே ஒழிய அமையும் இறே –அவனாலும் சேஷித்வத்தை அழிக்க முடியாதே-நாம் அநாதி காலம் யானே என்னை அறிகிலாதே-பண்டே பலகாலும் கழித்து அன்றோ உள்ளோம் -பேற்றுக்கு அத்வேஷம் இறே இத்தலைக்கு வேண்டுவது பேற்றின் கனத்துக்கு கீழ் விளைந்தது எல்லாம் அத்வேஷம் மாத்ரமாய் இருக்கும் இறே–-வானோர் இறையை நினைத்தன்று –(வள ஏழ் உலகு இறை வானோர் இறை ) ஆய்க் குலமாய் வந்து தோன்றின நம் இறை-நீ தாராய் பறை – விலக்காமை பார்த்து இருக்கும் நீ எங்கள் அபேஷிதம் செய்யாய் –கோவிந்தா –இறைவா –ஒழிக்க ஒழியாது –பறை தாராய்-உன்னைப் பார்த்தாலும் கை விட விரகு இல்லை –எங்களைப் பார்த்தாலும் கை விட விரகு இல்லை-நீ-நான் ரஷிக்கைக்கு நீங்கள் பண்ணின சாதன அனுஷ்டானம் என் என்று கேட்டால் தேவர் எல்லையில் வர்த்திக்கிறதுக்கு குறை சொல்லப் போமோ என்கிறார்கள் – அறிவுடையார் -அறிவு ஒன்றும் இல்லாத எங்களுக்கு- விஷய வாச மாத்திரமே அன்றிக்கே குடல் துடக்கு உண்டானால் ரக்ஷிக்கச் சொல்ல வேணுமோ-சாது பரித்ராணாம் பண்ணுகைக்கு அன்றோ இங்கு வந்து பண்ணி அருளிற்று –நீ தாராய்-அவள் தருவது தந்தாள் – நீ தரும் அத்தைத் தாராய் – உபாய நிஷ்டை அன்றோ அவள் தருவது – மேல் உள்ளது உன் பணி அன்றோ-அஸ்துதே என்று அவள் அது செய்தால் – அஹம் மோக்ஷயிஷ்யாமி -என்னக் கடவ நீ பேசாது இருக்கவோ (கோவிந்தா)ஸூலபனான நீ தாராய் –(இறைவா) ஸ்வாமி யான நீ தாராய் –சர்வ உபாய சாதாரணமான ருசியை உபாயத்தில் செலவு எழுதாதே-சைதன்ய கார்யமான ஸ்வீகாரத்தையும் உபாயத்தில் செலவிடாதே-எங்களால் சாத்தியம் இன்றிக்கே
சித்த ஸ்வரூபனான உன்னையே பார்த்து கார்யம் செய்து அருள வேணும் –நீ தாராய் பறையேலோ ரெம்பாவாய்- ஸ்வீ காரத்தால் செய்யும் அத்தனையும் நீ செய்து அனுதாபமுமம் அத் தலையிலே யாக வேணும்-ஏகம்-என்றபடியே செய்து அருளாய் -என்கை -உபாயம் தன்னைப் பொறுக்கும்-உபாயாந்தரம் இருவரையும் பொறுக்கும்
இது ஒன்றையும் பொறுக்காதே–
என்னான் செய்கேன் யாரே களை கண் என்னை என் செய்கின்றாய்
உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன்
கன்னார் மதிள் சூழ் குடந்தைக் கிடந்தாய் அடியேன் அருவாணாள்
செந்நாள் எந்நாள் அந்நாள் உன தாள் பிடித்தே செலக் காணே.–5-8-3-
நானும் எனக்கு கடவனாய் -பிறரும் சக்தர் ஆனவன்றும் -உன்னால் வரும் நீ ஒழிய -என்னால் வரும் நீயும் வேண்டா -பிறரால் வரும் நீயும் வேண்டா என்கை –த்வம் ஏவ உபாயம் போதோ மே பாவ –“மந்மநா பவ மத்பக்தோ மத்யாஜீ மாம் நமஸ்குரு மாமேவ ஏஷ்யஸி யுக்த்வா ஏவம் ஆத்மாநம் மத்பராயண:”- ஸ்ரீகீதை. 9. 34.“என்னை நமஸ்காரம் செய்வாய், என்னை அடைவாய்” என்றால் எனக்குச் சோகம் போகாது கண்டாய்.-ஓதி நாம் குளித்து -நமக்கே நலம் ஆதலால் -திருப் புல்லாணி-நமக்கு நலம் தேடும் –-உபாயாந்தரம் வேண்டாம் -என் நலம் நீ தேடுவதே உக்தம் –உபாயம் தன்னைப் பொறுக்கும் -உபாயாந்தரம் இரண்டையும் பொறுக்கும் -பிரபத்தி எதையும் பொறாதே –
யாவையாலும்’ என்னாமல், ‘யாவராலும்’ என்கிறது உபாய பாவம் ஒரு சேதனனாலே என்றிருக்கையாலே.-அன்றிக்கே, பெறுவது உன்னையே யாகிலும் உன்னாலே பெறுமன்று வேண்டுவன், என்னாலும் பிறராலும் பெறும் உன்னையும் வேண்டேன்.
மற்றையவற்றிற்கும் அபிமத சித்தி உண்டேயாகிலும் காலன் கொண்டு மோதிரம் இடுமாறு போலே ஸ்வரூப விரோதியானது எனக்கு வேண்டாம்.
கடல் கடத்தப் பெற இருத்தல், சபித்துப் பெற இருத்தல் செய்யாத பிராட்டியைப் போலே. என்றது, இரண்டு தலைகளையும் அழிக்கையே அன்றோ. ஒருவராலும் ஒருகுறை நிரம்புவதாக வேண்டி இரேன்.
அன்றிக்கே, ‘உன்னால் அல்லால்’ என்கிற இதனை, உபேய விஷயமாக்கி,
‘உன்னை ஒழியமற்றென்றால் எனக்கு ஒருகுறை இல்லை’ என்று சொல்லுவாருமுளர்.
உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன்” என்பதற்கு, மூன்று வகையாகப் பொருள் அருளிச் செய்கிறார்.-அவற்றுள், முதலது, “என் நான் செய்கேன்” என்றதனை மாத்திரம் கடாக்ஷித்து அருளிச்செய்வது. என்றது, உன்னால் வரும் உன்னை ஒழிய, வேறு உபாயங்களால் வரும் உன்னையும் வேண்டேன் என்கிறார் என்றபடி.
இதனையே அருளிச் செய்கிறார் ‘என்னை நமஸ்காரம் செய்’ என்று தொடங்கி.
அங்ஙனமாயின், ‘யாவையாலும்’ என்னாது, “யாவராலும்” என்றது என்னை? எனின்,
அதற்கு விடை அருளிச்செய்கிறார் ‘யாவையாலும்’ என்று தொடங்கி.
இரண்டாவது பொருள்.
“என் நான் செய்கேன், யாரே களை கண்” என்னும் இரண்டனையும் கடாக்ஷித்து அருளிச்செய்வது. என்றது,
உன்னாலே பெறும் உன்னை ஒழிய, வேறு உபாயங்களாலும், வேறு தெய்வங்களாலும் பெறும் உன்னையும் வேண்டேன் என்கிறார் என்றபடி.
இதனையே, ‘பெறுவது உன்னையேயாகிலும்’ என்று தொடங்கி அருளிச் செய்கிறார்.
பெறுவது நம்மையானால், வேறு உபாயங்களாலும், வேறு தெய்வங்களாலும் நம்மைப் பெற்றால் விரோதம் என்? என்ன,
அதற்கு விடை அருளிச் செய்கிறார் ‘மற்றையவற்றிற்கும்’ என்று தொடங்கி. காலன் கொண்டு – காலபுருஷதானம் வாங்கி.
அப்படி வேண்டாம் என்று இருந்த பேர் உளரோ? என்ன, அதற்கு விடை அருளிச் செய்கிறார் ‘கடல் கடத்த’ என்று தொடங்கி.
‘கடல் கடத்த’ என்றது, திருவடியினால் கடல் கடத்தப்பட்ட என்றபடி. ‘சபித்துப் பெற’ என்றது, பிராட்டியாகிய தான் சபித்து என்றபடி.
அப்படிச் செய்தால், அவனுடைய ரக்ஷகத்வத்துக்கும் தன்னுடைய பாரதந்திரியத்திற்கும் சேராது என்கிறார் ‘என்றது’ என்று தொடங்கி.
மூன்றாவது பொருள்: உம்மாலும் பிறராலும் சாத்யம் அல்லாத என்னை விட்டு,
உபய சாத்யமான ஐஸ்வர்யாதிகளைப் பெற்றுப்போம் என்ன,
‘உன்னால் அல்லால்’ என்று தொடங்கி அதற்கு விடை அருளிச் செய்கிறார். ‘உன்னை ஒழிய மற்றொன்றால்’ என்றது,
பிராப்யனான உன்னை ஒழிய வேறோர் ஐஸ்வர்யாதிகளால் என்றபடி.அசேதனமான ஐஸ்வர்யாதிகளை “யாவராலும்” என்றது,
பிராப்பியம் ஒரு பரம சேதனம்’ என்கிற வாசனையாலே என்க. ‘சொல்லுவாருமுளர்’ என்கையாலே,-இப்பொருள் அத்துணைச் சிறப்புடைத்தன்று என்பது போதரும்.
சென்னியோங்கு தண் திருவேம்கடம் உடையாய் உலகு
தன்னை வாழ நின்ற நம்பீ தாமோதரா சதிரா
என்னையும் என் உடைமையும் உன் சக்கரப் பொறி ஒற்றிக் கொண்டு
நின்னருளே புரிந்து இருந்தேன் இனி என் திருக் குறிப்பே -5 -4-1 –
நின் அருளே –இவர் அடியாகையால் இறே புதைத்து வார்ப்பது அவன் அடியாக வரில் –
விதி வாய்க்கின்றது காப்பார் யார் -என்னும்படி இறே பெருகுவது –புரிந்து-எத்தனையும் வான் மறந்த காலத்தும் (பெருமாள் திருமொழி )-இத்யாதி-இருந்தேன் –உபாயாந்தரமும் -உபேயாந்தரமும் குலைகை-அனந்யார்ஹ சேஷத்வ ஞானமும் பிறந்து – விரோதி நிவ்ருத்தியும் பிறந்து – அபேஷிதமும் பெற்றதாகில் – இனி பதறுகிறது என் -இனி என் திருக் குறிப்பே –என் கொல் அம்மான் திரு அருள்கள்(10-7)–திருக் குறிப்பு -திரு உள்ளத்தில் நினைவு-நின்னருளே புரிந்து இருந்தேன்-உன்னுடைய நிர்ஹேதுக கிருபையை நிரபேஷ உபாயமாக அபேக்ஷித்து நிர்பரனாய் இருந்தேன்-இனி என் திருக் குறிப்பே-ஞான லாபத்தையும் பண்ணித் தந்து-விரோதி நிவ்ருத்த பூர்வமாக அபேக்ஷிதங்களையும் தந்து அருளிற்றாகில் இனித் திரு வுள்ளத்தில் நினைவு ஏது –
—————–
10-ஸ்வரூப அனுகூலமான அபேஷை யாவது –
புத்ர பஸ்வன்னாதி பதார்த்தத்தையும்
ஸ்வர்க ஐஸ்வர்ய புருஷார்த்தத்தையும் –
கைவல்ய புருஷார்த்தத்தையும் –
பகவத் அனுபவத்தை தனக்கு இனிது என்று புஜிக்கிற பதார்த்தங்களையும் தவிர்ந்து
மாக வைகுந்தம் காண்பதற்கு என் மனம் ஏகம் எண்ணும் -திருவாய்மொழி -9-3-7- என்றும்-
அடியார்கள் குழாங்களை உடன் கூடுவது என்று கொலோ -திருவாய்மொழி -2-3-10-என்றும் காண்பது எஞ்ஞான்று கொலோ -திருவாய்மொழி -5-9-5-என்றும்
வழு விலா அடிமை செய்ய வேண்டும் -திருவாய்மொழி -3-3-1- என்று ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வார்த்தை –
ஆகம் சேர் நரசிங்கமதாகி ஓர்
ஆகம் வள்ளுகிரால் பிளந்தான் உறை
மாக வைகுந்தம் காண்பதற்கு என் மனம்
ஏகம் எண்ணும் இராப்பகல் இன்றியே–9-3-7-
என் மனஸ் ஸூ ஒருபடிப்பட நினையா நின்றது -சேதனர்க்கு இரா ஒரு காரியமும் பகல் ஒரு காரியமும் இருக்கும் இறே -இவருக்கு அஹோ ராத்ர விபாகம் அற இதுவேயாய்ச் செல்லா நின்றது –சமா த்வாதச தத்ராஹம் ராக வஸ்ய நிவேசனே புஞ்சானம் அநு ஷான் போகான் சர்வகாம ஸம்ருத்தி நீ –என்று பிராட்டி திரு அயோத்யையை நினைத்தால் போலே யாயிற்று இவர் திரு உள்ளத்துக்கு பரமபதம் ஸ்வ தேசமாய் இருக்கிற படி –அந் நரசிங்கம் வசிக்கிற முழஞ்சு காண ஆயிற்று-ஆசைப் படுகிறது-மா கம் -பரம ஆகாசம் என்னக் கடவது அன்றோ –மஹத்தான கம் -பரம ஆகாசம் -பரமபதம்-என்னுடைய மனம் ஆனது–எப்போதும் ஒக்க உச்சி வீடு விடாதே -இதனையே-எண்ணா நின்றது –இரவில் ஒரு காரியமும்-பகலில் ஒரு காரியமுமே அன்றோ உலகத்தார்க்கு இருப்பது- இவர்க்கு-எல்லா காலங்களிலும்-இதுவே ஆயிற்று –ஸ்மா த்வாதச தத்ர அஹம் ராகவச்ய நிவேசனே-புஜ்ஞ்ஞானா மானுஷான் போகான் சர்வ காம சம்ருத்தி நீ -சுந்தர -33-17-நான் அங்கு இராகவனுடைய திரு மாளிகையில் பன்னிரண்டு ஆண்டுகள் முடிய மனிதர்களுக்கு உரிய இன்பங்களை அனுபவித்தேன் -என்று பிராட்டி திரு அயோத்யையை நினைத்தாப் போலே ஆயிற்று
இவர் திரு உள்ளத்துக்கு பரம பதம் சொந்த தேசமாய் இருக்கிறபடி-
களிப்பும் கவர்வும் அற்றுப் பிறப்புப் பிணி மூப்பு இறப்பு அற்று
ஒளிக் கொண்ட சோதியமாய் உடன் கூடுவது என்று கொலோ
துளிக்கின்ற வான்நிலம் சுடர் ஆழி சங்கேந்தி
அளிக்கின்ற மாயப்பிரான் அடியார்கள் குழாங்களையே -2-3-10-
நான் எனக்கு என்று அகன்று நிற்க வேண்டாதே-அத் திரளில் ஒரு நீராகக் கூடுவது என்றோ
வைஷ்ணவ ஸஹவாசம் இனிது என்று இருக்கச் செய்தேயும் அஹங்காரத்தால் செய்யப் போகாது ஒழிகிறது இறே-இவன் தன்னையே அன்றிக்கே இவனுடைய ரக்ஷகத்வத்திலே தோற்று இருக்கும் ததீயர் திரள்களை –திரளாக வேணும் -அது தான் அநேகமாக வேணும்
இவ்விஷயத்துக்கு உசாத் துணையாம் போது அசங்க்யாதராக வேணும் என்று இருக்கிறார்-
காண்ப தெஞ்ஞான்று கொலோ? வினையேன் கனிவாய் மடவீர்!
பாண் குரல் வண்டினொடு பசுந் தென்றலுமாகி எங்கும்
சேண் சினை ஓங்கு மரச் செழுங்கானல் திரு வல்லவாழ்
மாண் குறள் கோலப் பிரான் மலர்த் தாமரைப் பாதங்களே.–5-9-6-
பிறருக்கும் ஐயோ என்னும் திசையோ இது –கண்கள் செய்த படி செய்ய -நான் காணப் பெறுவது என்றோ என்கிறாள் –கன்று வேறு தாய் வேறாகும் விஷயம் இ றே -பிரஜை பட்டது படுகிறது -நான் பசி தீரும் வழி என் -என்பாரைப் போலே-வினையேன்– கண்கள் விடாய்க்கு அன்றிக்கே என் விடாய்க்கு அன்றிக்கே அலமாக்கும் படியான பாபத்தைப் பண்ணினேன் –நீங்கள் காட்டுகைக்கு விரைய ஆறி யிருக்கக்கூடிய நான்,-இன்று ‘காண்பது எஞ்ஞான்று கொலோ’ என்னும்படியான பாவத்தைப் பண்ணினேன் -(கண்கள்)குழந்தைகள் செய்தபடி செய்ய, நான் முன்னம் என் பசி தீர்த்துக் கொள்வது என்றோ.-உலகநடைக்கு ஒத்ததல்லாத பாவத்தைச் செய்தேன் என்பாள், தன்னை-வினையேன்’ என்கிறாள். என்றது,
காணாமைக்குப் பாவம் பண்ணினாரும் கூடக் காணும்படியான விஷயத்தை,
காண்கைக்கு யோக்கியதை உண்டாய் வைத்தே காணாதபடியான பாவத்தைப் பண்ணினேன் என்றபடி.-காமரு சீர் அவுணன் –கொண்டாடி -காணப் பெற்றானே -வாமனன் கோலத்தையும் விஸ்வரூப திரிவிக்ரமன் -கண்டு-அதற்கு மேலே திருவடியையும் சென்னியிலே ஏறப் பெற்றானே-மாண் குறள் கோலப்பிரானே யன்றோ–
ஒழிவு இல் காலம் எல்லாம் உடனாய் மன்னி
வழு இலா அடிமை செய்ய வேண்டும் நாம்
தெழி குரல் அருவித் திருவேங் கடத்து
எழில் கொள் சோதி எந்தை தந்தை தந்தைக்கே.–3-3-1-
சர்வ சேஷ வ்ருத்தியும் செய்ய வேண்டும்-சாஸ்த்ரங்களால் இதுவே புருஷார்த்தம் என்று அறிக்கை போராது-அனுஷ்டான பர்யந்தமாக வேணும் – நாம்-திரு உள்ளத்தைக் கூட்டிக் கொள்ளுகிறார் ஆதல்-கேசவன் தமருக்கு பின்பு தனியர் அல்லாமை யாலே திரு உள்ளத்தோடு ஒக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்களையும் கூட்டிக் கொண்டு சொல்லுகிறார்
அடிமையில் ஒன்றும் ஒருவர்க்கும் கூறு கொடுக்க வொண்ணாதாயிற்று.
எல்லா அடிமைகளும் நானே செய்யவேண்டும். என்றது,
‘இளைய பெருமாள் பிரியாமல் காட்டிலேயும் கூடப்போந்து செய்த அடிமைகளும் செய்ய வேணும்;-ஸ்ரீபரதாழ்வான் படை வீட்டிலே பிரிந்திருந்து செய்த அடிமைகளும் பிரியாதேயிருந்து செய்யவேணும்,’ என்றபடி.-ஓரடிமை குறையிலும் இவர்க்கு உண்டது உருக்காட்டாது; ஆதலின், ‘வழுவிலா அடிமை’ என்கிறார்.-
ஸ்ரீ பரதாழ்வானைக் கைகேயி ‘ராஜந்’ என்ன, அப்போது ஸ்வாதந்தரியம் பொறுக்கமாட்டாமல் படுகுலைப்பட்டாற்போன்று விலலாப ‘கதறினான்’ என்கிறபடியே, கூப்பிட்டான் அன்றோ?-இதனால், பாரதந்திரிய ரசம் அறிவார்க்குச் ஸ்வாதந்திரியம் அநர்த்தம் என்று தோற்றும்.
மேலும், ஏபிஸ்ச ஸசிவைஸ் ஸார்த்தம் – சமீபத்தில் இருக்கிற மந்திரிகளோடுங்கூட’ – தன்னிற்காட்டிலும் கண் குழிவுடையார் இத்தனை பேர் உண்டாயிற்று. தன்னோடு ஒத்த ஆற்றாமையுடையார் பலரைக் கூட்டிக்கொண்டு போந்தான்.-‘இவன் தம்பி’ என்று ஸ்வாதந்தரியம் மேற்கொண்டு, கண்ணழிக்கலாவது எனக்கு அன்றோ?இவர்கள் சொன்னவற்றைச் செய்ய வேண்டுமே! இவர்கள் தாங்களே காரியத்தை விசாரித்து அறுதியிட்டு,‘நீர் இப்படிச் செய்யும்’ என்று இவர்கள் ஏவினால் அப்படிச் செய்ய வேண்டி வருமன்றோ அவர்க்கு?அவருடைய வ்யதிரேகத்திலே – பிரிவால் தனக்கு உண்டான ஆற்றாமையை அறிவிக்கப் போகிறானாகில்,தனியே போய் அறிவிக்கவுமாமன்றோ? இவர்களையெல்லாம் திரட்டிக்கொண்டு சென்றதற்குக் கருத்து என்?’ என்னில், ‘நம் ஒருவர் முகத்தில் கண்ணீர் கண்டால் பொறுக்க மாட்டாதவர், தம்மைப் பிரிந்த பிரிவு பொறுக்கமாட்டாமல் கண்ணும் கண்ணீருமாயிருப்பார், இத்துணைப் பேரைக் கண்டால் மீளாரோ?’ என்னுங் கருத்தாலே.போருக்குப் போவாரைப் போன்று யானை குதிரை அகப்படக் கொண்டு போகிறான்; அவற்றுக்கும் அவ்வாற்றாமை உண்டு ஆகையாலே.‘ஸிரஸா யாசித : – தலையால் வணங்கி யாசிக்கப்பட்ட நீர்’ – என் பேற்றுக்குத் தாம் விரும்பித் தருமவர் யான் என் தலையால் இரந்தால் மறுப்பரோ?‘மயா-என்னாமல்’ – அத் தலை இத்தலையானால் செய்யாதொழிவரோ?‘ப்ராது: – பின் பிறந்தவன்’ – பஸ்மதாஸ் குருதான் சிகீ ‘பரதனையும் உன்னையும் சத்துருக்கனனையும் நீங்கி எனக்குச் சிறிது சுகம் உண்டாகுமேயாயின், அந்தச் சுகத்தை நெருப்பானது சாம்பலாக்கட்டும்!’ என்னும்படி தம் பின், பிறந்தவனல்லனோ நான்? இதனால், என் தம்பிமார்க்கு உதவாத என் உடைமையை நெருப்புக்கு விருந்திட்டேன்,’ என்கிறார் என்றபடி,‘சிஷ்யஸ்ய -சிஷ்யன்’ -‘தம்பியாய்க் கூறு கொண்டு முடி சூடியிருக்குமவனோ நான்? அசேஷ ரஹஸ்யமும் தம்மிடமே அன்றோ பெற்றது?‘தாசஸ்ய – அடியவன்’ – சிஷ்யனாய்க் கிரய விக்கிரயங்கட்குத் தகுதி யில்லாதவனாயிருந்தேனோ? ஆன பின்னர், நான் விரும்பிய காரியத்தை மறுப்பரோ? இதுவன்றோ கைங்கரியத்தில் சாபலமுடையார் இருக்கும்படி?’வழுவிலா அடிமை செய்யவேண்டும் –ஓரடிமை குறையிலும் இவர்க்கு உண்டது உருக்காட்டாது-இவருக்கு-
செய்ய –’இந்தக் கைங்கரிய மநோரதம் முன்பும் உண்டன்றோ?
(‘தொழுது எழு என் மனனே’ ‘தழுவுவன் வணங்குவன் அமர்ந்தே’, ‘தனக்கேயாக எனைக்கொள்ளுமிஃதே’ என்பன போன்ற இடங்களைத் திருவுள்ளம் பற்றி.)
இப்போது ‘இவ்வளவால் போராது, அநுஷ்டான பர்யந்தமாகவேணும்,’ என்பார், ‘செய்ய’ என்கிறார்.-கைங்கரிய மநோ ரதமே பிடித்து இவர்க்கு உத்தேஸ்யமாயிருக்கிறது ஆதலின், ‘செய்ய வேண்டும்’ என்கிறார்.-ஷூத்ர விஷய -‘சிற்றின்பம் நுகரவேணும்’ என்று புக்கால், இரண்டு தலைக்கும் ஒத்த ரசமான போகத்திற்கு ஒரு தலையிலே பொருளை நியமித்து, போகத்திற்குரிய காலம் வருமளவும் லீலையாலே போது போக்கி, போக காலம் வந்தவாறே புறப்படத் தள்ளிவிடுவார்கள்; இனி, ‘ஸூவர்க்க அனுபவம் பண்ண வேணும்’ என்று புக்கால்,
ஸ்வர்க்கே அபி பாத பீதஸ் யக்ஷயிஷ்ணோர் நாஸ்தி நிர்வ்ருத்தி -‘ஸூவர்க்கத்திலும், நாசமடையக் கூடியவனுக்குக் கீழே விழுந்துவிடுவோம் என்ற பயத்தினால் சுகமில்லை,’ என்கிறபடியே, அருகே சிலர் நரகானுபவம் பண்ணக் காண்கையாலே, இருந்து அனுபவிக்கிற இதுதானும் உண்டது உருக்காட்டாதபடியாயிருக்கும்;
இனி, ஸூவர்க்கத்திலிருப்புக்கு அடியான புண்ணியமானது சாலில் எடுத்த நீர்போலே குறைந்தவாறே ‘த்வம்ஸ’ என்று முகம் கீழ்ப்படத் தள்ளுவார்கள்;
இப்படிச் சொரூபத்துக்குத் தக்கன அல்லாதனவாய் அகங்கார மமகாரங்கள் அடியாக வரும் இவ்வனுபவங்கள் போலன்றி, சொரூபத்தோடு சேர்ந்ததுமாய், அடிமை கொள்ளுகிறவனும் நித்தியனாய், காலமும் நித்தியமாய், தேசமும் நித்தியமாய், ஒரு காலமும் மீள வேண்டாதபடி அபுநராவ்ருத்தி லக்ஷண மோக்ஷமாய், சிற்றின்ப விஷய அனுபவம் போன்று துக்கம் மிஸ்ரமாய் -கலந்ததாயிருத்தல் அன்றி, நிரதிசய ஸூக ரூபமாய் இருப்பதொன்றன்றோ இது?
நாம் – தம் திருவுள்ளத்தையும் கூட்டி ‘நாம்’ என்கிறாராதல்;
அன்றி, கேசவன் தமர்க்குப் பின்பு இவர்தாம் தனியரல்லாமையாலே திருவுள்ளம் போலேயிருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்களையும் கூட்டிக்கொண்டு, ‘நாம்’ என்கிறாராதல்.
அடிமை செய்யக் கோலுகிற இவருடைய பாரிப்பேயன்றி, அடிமை கொள்ளக் கோலுகிறவனுடைய பாரிப்பு இருக்கிறபடி சொல்லுகிறது மேல்:
இருந்த விடத்திலேயிருந்து மநோ ரதிக்கிறார் இத்தனையன்றோ இவர்?
அவன் தனக்குக் கலவிருக்கையான கலங்காப் பெருநகரத்தை விட்டு இவ்வளவும் வர வந்து திருமலையிலே நின்று, தன் அநுஷ்டானத்தாலே தெரிவிக்கிறானன்றோ தன் பாரிப்பை?
—————————————————————-————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பூர்வாச்சார்யர்கள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .
Leave a Reply