ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ர விளக்கங்கள்-முதல் அத்யாயம் -முதல் பாதம் -ஸ்ரீ வேளுக்குடி ரெங்கநாதன் ஸ்வாமிகள்

ப்ரபத்யே ப்ரணவாகாரம் பாஷ்யம் ரங்கமிவாபரம் |
பரஸ்ய ப்ரஹ்மணோ யத்ர சேஷித்வம் ஸ்புடமீக்ஷ்யதே ||

அதி கரணங்களை ஆராய்ந்து-ப்ரஹ்ம ஸ்வரூப ரூப குண வை லக்ஷண்யங்களை அறிந்து
அவனே உபாயம் உபேயம் ரக்ஷகன் -ஸ்வாமி -பக்தி உழவன் -பேற்றுக்குத் த்வரிப்பவன் அறிந்து அனுபவிக்கிறோம்
545-ஸூத்ரங்கள் தான் இதில்
700 -அநுஷ்டுப் ஸ்லோகங்கள் கீதையை விட சுருக்கம்
ராமானுஜர் சரம உபதேசங்களில் -ஆறு கட்டளைகளில் முதலில் -ஸ்ரீ பாஷ்யம் கற்றும் மற்றவருக்கும் சொல்ல வேண்டும் என்று அருளிச் செய்துள்ளார்

உபநிஷத்துக்களை நன்றாக அறிய உதவும்-

வேதத்தின் தேவை

  • வர்ஷார்த்த₂ம் அஷ்ட வ் ப்ரயதேத மாஸாந்
    நிஶார்த்த₂ம் அர்த₄ம் தி₃வஸே யதேத |
    வார்த₄க்ய ஹேதோ : வயஸா நவேந
    பரத்ர ஹேதோர் இஹ ஜன்மநா ச ||

நாலு மாதம் இருக்கும் மழைக் காலத்துக்காக மீதமுள்ள எட்டு மாஸங்களிலும், இரவுக்காகப் பகலிலும், முதுமைக்காக இளமையிலும் உழைப்பது போல், இப் பிறப்பில் மறுமைக்காக உழைக்க வேண்டும்.பெரியாழ்வார் -வல்லவ தேவன் சரித்திரம் அறிவோம்-

  • அம் மறுமையைப் பற்றி ஸாதாரண மனிதர்கள் கூட அன்றாட வாழ்க்கையில் எளிமையாகப் பேசுகிறோம். ஆத்மா, பாபம், புண்ணியம், ஸ்வர்கம், நரகம், ஸ்ருஷ்டி, ப்ரளயம், பரமாத்மா, முக்தி – இந்தச் சொற்கள் யாருக்குத் தான் தெரியாது?
  • ஆனால் இந்தப் பொருள்களை நாம் புலன்களைக் கொண்டோ ,அநு மானம் கொண்டோ செய்தோ அறிந்து கொள்ளவில்லை . இவற்றை எல்லாம் நமக்குக் கற்பிக்கும் ஒப்பற்ற, என்றும் அழியாத, தவறுகளே இல்லாத நூல்கள் தான் வேதங்கள்.
  • வேதத்தை பகவான் தன் மனதில் எப்போதும் கொண்டுள்ளார்.
    ஒவ்வொரு முறையும் ஸ்ருஷ்டிக்கும் போது வேதங்களை அதே வடிவத்தில், ஒரு எழுத்தோ வரியோ மாறாமல் உலகிற்கு உபதேசிக்கிறார். அதனால் தான் வேதம் நித்யம் என்று கூறுகிறோம்.

வேதத்துக்கு “அபௌருஷேயம்” என்றுதான் லக்ஷணம் சொல்லியிருக்கிறது-மந்திரங்களை ரிஷிகள் இயற்றியிருந்தால் அவர்களுக்கு “மந்த்ர கர்த்தா” என்றே பெயர் இருக்கும். ஆனால் வாஸ்தவத்தில் அவர்களுக்கு “மந்த்ர த்ரஷ்டா” என்றுதான் பெயர் இருக்கிறது. இதற்கு “மந்திரங்களைக் கண்டவர்கள்” என்றே அர்த்தம்; செய்தவர்கள் என்று அர்த்தமில்லை.-ப்ருஹதாரண்யக உபநிஷத்தில் (II.4.10) “ரிக் -யஜுஸ்-ஸாம-அதர்வ வேதங்கள் ஈஸ்வரனின் சுவாஸமாகும்” என்று சொல்லியிருக்கிறது. “நிச்வஸிதம்” – மூச்சுக்காற்று – என்ற வார்த்தையை இந்த இடத்தில் போட்டிருக்கிறது.

நமக்கு ஸ்வாஸமில்லாவிடில் நாம் உயிரோடு இருக்க முடியுமா? முடியாதல்லவா? அப்படித்தான் பரமாத்மாவுக்கு உயிராக இருக்கிற ச்வாஸமே வேதம். அநாதியான அவர் என்றென்றும் உயிரோடு இருந்திருக்கிறார் என்பதால், வேதமே அவருடனேயே, அவரது ஸ்வாஸமாக, அநாதியாக இருந்திருக்கிறது என்று ஆகிவிடுகிறது!-பகவானும் கீதையில் சொல்கிறபோது2, “நானே எல்லா வேதங்களாலும் அறியப்படுகிறவன் (வேதைச்ச ஸர்வை: அஹம் ஏவ வேத்ய:) ” என்று சொல்லிவிட்டு தன்னை “வேத க்ருத்” (அதாவது வேதத்தை பண்ணினவன்) என்று சொல்லிக் கொள்ளாமல், “வேதாந்த க்ருத்” என்றே, அதாவது வேதங்களுக்கு முடிவான தத்வத்தை உண்டு பண்ணினவன் என்றே சொல்லிக் கொள்கிறார். தன்னை வேதம் அறிந்தவனாக (வேதவித்) சொல்லிக் கொள்கிறாரே அன்றி “வேத க்ருத்” என்று சொல்லவில்லை. வேதாந்தம் என்கிற தத்வ ரூபத்தில் ஜீவர்களுக்குப் பிரயோஜனமாகப் பிரகாசிப்பதற்கு முந்தியே, ஜீவ சிருஷ்டிக்கு முன்னாலுங்கூட சப்த ரூபத்தில் இந்த வேதங்கள் ஈச்வரனோடு ஈச்வரனாக அவனது மூச்சாக இருந்திருக்கின்றன.-“தேனே ப்ரஹ்ம ஹ்ருதாய ஆதி கவயே” என்று பாகவதத்தின் முதல் ச்லோகம் சொல்கிறது. அதனால் பரமாத்மாவின் ஹருதயத்தில் எப்போதுமே வேதம் இருந்து கொண்டிருக்கிறது, அதை அவர் இயற்றவில்லை என்று தெரிகிறது. அவர் சங்கல்பம் பண்ணின மாத்திரத்தில் பிரம்மாவுக்கு அத்தனை வேதங்களும் தெரிந்துவிட்டன. அந்த சப்தங்களை வைத்துக் கொண்டு அவர் ஸ்ருஷ்டி பண்ண ஆரம்பித்து விட்டார்.

——————

  • வேத வ்யாஸரின் பங்கு
  • உலகில் யாரும் வேதத்திற்குத் தவறான பொருளைக் கொள்ளாமல் சரியாகப் புரிந்து கொள்வதற்காகத் தான் பகவான் தானே வேத வ்யாஸராக அவதரித்தார்.
  • வேதங்களை எல்லாம் வகுத்துக் கொடுத்து, மஹாபாரதம்
    என்கிற பெரும் இதிஹாஸத்தையும் ஶ்ரீபாகவத புராணத்தையும் இயற்றி, உபநிஷத்துக்களில் ஏற்படும் ஸந்தேஹங்களைப் போக்குவதற்காக ப்ரஹ்ம ஸூத்ரங்களையும் எழுதினார் வேத வ்யாஸர்.
  • வேத வ்யாஸர் தன்னுடைய நான்கு சீடர்களான பைலர், வைச ம்பாயனர், ஜைமிநி மற்றும் ஸுமந்துவுக்கு நான்கு வேதங்களையும் கற்பித்து, உலகில் பரப்பினார்.
  • வேதத்தில் முன் பகுதி (பூர்வ காண்டம்) கர்மங்களைப் பற்றிப் பேசுகிறபடியால் கர்ம காண்டம் ஆகும். அதன் பொருளை ஆராய்வதற்காக கர்ம மீமாம்ஸை -பூர்வ மீமாம்ஸை என்ற நூலை ஜைமிநி மஹரிஷி எழுதினார்.
  • வேதத்தின் பின் பகுதி (உத்தர காண்டம்) ப்₃ரஹ்மத்தைப் பற்றிப் பேசுகிறபடியால் ப்ரஹ்ம காண்டம் ஆகும்.அதன் பொருளை ஆராய்வதற்காக ப்ரஹ்ம மீமாம்ஸை – உத்தர மீமாம்ஸை என்ற நூலை வேத வ்யாஸர் இயற்றினார்.

வ்யாஸம் வஸிஷ்ட நப்தாரம் ச’க்தே; பௌத்ரமகல்மஷம் |
பராசராத்மஜம் வந்தே சு’கதாதம் தபோநிதிம் ||3

வ்யாஸாய விஷ்ணு ரூபாய வ்யாஸ ரூபாய விஷ்ணவே |
நமோ வை ப்ரஹ்மநிதயே வாஸிஷ்டாய நமோ நம : || 4

அன்னமாய் மறையை வெளிப்படுத்திய அம்மான் –
வேத அபகாரம்- மீட்க மத்ஸ்ய அவதாரம்
வேதாந்த பொருள் அபஹாரம் -மீட்கவே வ்யாஸர் அவதாரம்
பாற் கடலை -மந்தரம் -அம்ருதம்
ஸ்ருதி சாகரம் -மதி புத்தியையே மத்தாக மஹா பாரத சந்திரன் அருளியவர்
ஸம்யக் நியாய கலாபம் -ப்ரஹ்ம ஸூத்ரம்

பவிஷ்யத் புராணே
“பிபேதி கஹநாத் சாஸ்த்ராத் நரஸ் தீவ்ராதி வௌஷதாத் |
பாரத: ஶாஸ்த்ர ஸாரோ அயமத: காவ்யாத்மநா க்ருத:||“

மனிதன் கடினமான ஸாஸ்த்ரத்தைக் கண்டு கடுமையான மருந்தைக் கண்டது போல் பயப்படுகிறான் -ஆதலால் எல்லா ஸாஸ்த்ரங்களின் ஸாரமாகிய இம் மஹா பாரதம் காவ்யா ரூபமாகச் செய்யப்பட்டுள்ளது -என்றும்

மாத்ஸ்யே
“யஸ்ய த்வை பாயந: புத்ர: ஸ்வயம் விஷ்ணு ரஜாயத |
ப்ரகாஸோ ஜநிதோ யேந மஹா பாரத சந்த்ரமா:||

மஹா பாரதம் என்னும் சந்த்ரனால் உலகத்துக்கு வெளிச்சம் கொடுத்தவராகிய த்வைபாயனர்-த்வீபத்தில் பிறந்தவர் என்னும்
புத்ரராக ஸாஷாத் விஷ்ணுவே பராசரருக்குப் பிறந்தார் என்று மத்ஸ்ய புராணத்திலும்-

“வைஷ்ணவே “
க்ருஷ்ண த்வை பாயநம் வ்யாஸம் வித்தி நாராயணம் ப்ரபும் | கோ ஹ்யந்யோ புவி மைத்ரேய மஹா பாரத க்ருத் பகவத் ||“;மூன்றாம் அம்சம் 

மைத்ரேயர் கிருஷ்ண த்வை பாயனர் என்னப்படும் வியாஸரைப் பிரபுவான நாராயணர் என்றே அறி
பூமியில் வேறு எவன் மஹா பாரத்தத்தைச் செய்வான் ஆவான் -என்று ஸ்ரீ விஷ்ணு புராணத்திலும்-பாரசார்யர்-பராசரர் பிள்ளை -பராசரரே கொண்டாடிப் பேசுகிறார்

மார்கண்டேய
“வ்யாஸ வாக்ய ஜலௌகேந குதர்ம தரு ஹாரிணா |
வேத ஸைல அவதீர்ணேந நீரஜஸ்கா மஹீ க்ருதா||“ இத்யாதிபி:;

கெட்ட தர்மங்கள் ஆகிய மரங்களைக் களைவதும் வேதம் என்னும் மலையின் நின்றும் இறங்கியதுமாகிய
வ்யாஸர் வாக்யம் என்னும் ஜல ப்ரவாஹத்தால் பூமியானது
பாவம் இல்லாதாகச் செய்யப்பட்டது என்று மார்க்கண்டேய புராணத்திலும் சொல்லப்பட்டு இருப்பதாலும்

ஸ்வஸ்மிம்ஶ்ச“யோ வித்யாச் சதுரோ வேதாந் ஸாங்கே உபநிஷதாந் த்விஜ:|
ந சாக்யாநமிதம் வித்யாந் நைவ ஸ ஸ்யாத் விசக்ஷண:||“

நாலு வேதங்களையும்-வேதாந்தங்களையும் -உபநிஷத்துக்களையும் அறிந்தும் இம் மஹா பாரதத்தை அறியாத பிராமணன் எவனோ அவன் அறிவித்த தேற்றம் உள்ளவன் ஆகான்

ஏக ஸ்லோக மஹாபாரதம்

ஆதௌ பாண்டவ தார்தராஷ்ட்ர ஜனனம், லாக்ஷா க்ருஹம் தாஹனம்

த்யூதே ஸ்ரீஹரணம், வனே விசரணம், மாத்சாலயே வர்த்தனம்,

லீலாகோஹ்ரஹணம், ரணே விஹரணம், சந்திக்ரியா ஜ்ரும்பணம்,

பஸ்சாத் பீஷ்மசுயோதனாதி நிதனம்,   ஹ்யேதன் மஹா பாரதம்

ஆதியில் பாண்டவர், திருதராஷ்ட்ரர் பிறப்பு-அரக்கு மாளிகை எரிப்பு சூதாட்டத்தில் நாடு இழப்பு காட்டில் சுற்றல் மத்ஸ்ய நாட்டில் (விராடன்) வசிப்பு ஆநிரை கவர்தல்-போரில் அழிவு சமாதான உடன்படிக்கை மீறல் பின்னர் பீஷ்மர், துர்யோதண வகையறா மரணம் –இதுவே மஹா பாரதம்

வேதாபஹாரிணம் தைத்யம் மீனரூபி நிராகரோத் | ததர்தஹாரிணஸ் ஸர்வாந் வ்யாஸ ரூபி மஹேஶ்வர: ||

வேதங்களை அபஹரித்த பொழுது மீனாகத் திருவவதாரம் செய்து மீட்டருளின ஸர்வேச்வரனே, அவ்வேதங்களுக்கு அபார்த்தங்களைச் சொன்ன பொழுது வ்யாஸராகத் திருவவதாரம் செய்து உண்மையான அர்த்தங்களை நிலைநாட்டியருளினான் . என்பது இந்த ஶ்லோகத்தின் திரண்ட பொருள்.-அப்படி நிலைநாட்டியது சாரீரக மீமாம்ஸையான உத்தர மீமாம்ஸையைக் கொண்டேயாகும்.

“புரா ஸூத்ரைர் வியாஸ: ஶ்ருதி ஶத சஶிரோர்த்தம் க்ரதிதவாந்
விவவ்ரே தத் ஶ்ராவ்யம் வகுள தரதாமேத்ய ஸ புந: |
உபாவேதௌ க்ரந்தௌ கடயிதுமலம் யுக்தி பிரஸௌ
புநர் ஜஜ்ஞே ராமாவரஜ இதி ஸ ப்ரஹ்மமுகுர: ||”

வேதக்கடலை மதி என்ற மத்தால் கடைந்து அருளிய அம்ருதம் -ப்ரஹ்ம ஸூத்ரம்-அந்த வ்யாஸரே நம்மாழ்வாரகத் திருவவதாரம் பண்ணி யருளி திருவாய்மொழி மூலமாக சாரீரக மீமாம்ஸா ஶாஸ்த்ரத்தை விவரித்து அருளினார்.-பின்பு அவரே எம்பெருமானார் மூலம் இரண்டையும் ஸமன்வயப்படுத்தி அருளினார் –

இதனை * பாஷ்யகாரர் இது கொண்டு ஸூத்ர வாக்யங்கள் ஒருங்க விடுவர் *  (65) என்று காட்டியருளினார்

கர்ம மீமாம்ஸை –4 அத்தியாயங்கள்-ப்ரஹ்ம ஆராதனையே கர்மங்கள் –
ப்ரஹ்ம மீமாம்ஸை –16 அத்யாயங்கள்
சாரீரிகம் மீமாம்சை என்றும் ப்ரஹ்ம மீமாம்ஸைக்கு பெயர்-பூஜ்ய விஷய விசாரமே மீமாம்ஸை
சரீரம் உடைய ஆத்மா- சாரீரிகன் -ஸமஸ்த உலகங்கள் அனைத்தையும் உடலாகக் கொண்ட ப்ரஹ்மம் அன்றோ-தாசாரதி -சொன்னவுடன் சக்கரவத்தி திருமகனைச் சொல்வது போல் –

நிவ்ருத்தி, ஞானம், ஸாக்ஷாத்காரம் ஆகியவற்றை வேதங்களின் முடிவுப் பகுதிகளான உபநிஷத்துக்கள் சொல்கின்றன. அவற்றை வேதத்தின் உத்தர (பின்) பாகம் என்பார்கள். ஞான காண்டம் என்ற அதை அப்படியே தள்ளிவிட்டு, வேதத்தின் பூர்வ (முன்) பாகத்தில் சொல்லப்பட்டுள்ள கர்ம காண்டத்தை மாத்திரம் ஒப்புக்கொண்டு இப்படிச் செய்த சித்தாந்தத்திற்குப் ‘பூர்வ மீமாம்ஸை’ என்றும் ‘கர்ம மீமாம்ஸை’ என்றும் பெயர். ‘மீமாம்ஸை’ என்றால் ‘நல்ல விஷயத்தைப் பற்றிய ஆராய்ச்சி’.உத்தரபாகமான ஞான காண்டத்தை ஆதாரமாகக்கொண்டு உண்டான சித்தாந்தத்திற்கு ‘உத்தர மீமாம்ஸை’ என்று பெயர். 

ஆதௌ வேதா பிரமாணம் ஸ்ம்ருதிர் உப குருதே ஸேதிஹாசை புராணை
ந்யாயை  சார்த்தம் தவத் அர்ச்சா விதி முபரி பரிஷீயதே பூர்வ பாக
ஊர்த்வோ பாகஸ் த்வதீஹா குண விபவ பரி ஜ்ஞாபநைஸ் த்வத் பதாப்தௌ
வேத்யோ வேதைஸ்ச சர்வைர் அஹமிதி பகவன் ஸ்வேன ஸ வியாச கர்த்த -ஸ்ரீ ரெங்க ராஜ ஸ்தவம் -உத்தர சதகம் -19 ஸ்லோகம் –

ஆதௌ -முதலிலே -மற்று ஒரு பிரமாணத்தை எதிர்பாராமல் தானாகவே –
வேதா -வேதங்களானவை-
பிரமாணம்-உண்மை அறிவை யுண்டாக்கும் பிரமாணம் ஆகின்றன –
ஸ்ம்ருதி -மநு முதலானோர் இயற்றிய ஸ்ம்ருதி சமூஹம்
ஸேதி ஹாசை புராணை-இதிஹாசங்களோடு கூடிய புராணங்களோடும்
ந்யாயை  சார்த்தம் -பூர்வ உத்தர மீமாம்ஸா நியாயங்களோடும் கூட
உப குருதே-வேதங்களுக்கு பொருள் காணும் விஷயத்தில் உதவுகிறது –
பூர்வ பாக -வேதத்தில் கர்ம காண்டம் என்கிற முற்பகுதி
தவதர்ச்சா விதி முபரி -தேவரீருடைய திரு வாராதன முறையைச் சொல்லும் வழியில்
பரிஷீயதே -தலைக் கட்டுகிறது-
ஊர்த்வோ பாகஸ்-ப்ரஹ்ம காண்டம் எனப்படும் பிற்பகுதி யாகிய உபநிஷத் பாகம்
த்வதீஹா குண விபவ பரி ஜ்ஞாப நைஸ்-தேவரீருடைய ஸேஷ்டிதங்கள்-குணங்கள் -செல்வங்கள் ஆகிய இவற்றை விளங்கத் தெரிவிப்பதாலே –
த்வத் பதாப்தௌ -தேவரீருடைய திருவடிகளை அடைவதில்
பரிஷீயதே -தலைக் கட்டுகின்றது –
பகவன்-எம்பெருமானே
சர்வை ஸ வேதை -பூர்வ உத்தர பாக ரூபமான எல்லா வேதங்களாலும்
அஹம் -நானே
வேத்ய இதி -அறியப் படுபவன் -என்று
ஸ்வேந -தேவரீர் தாமே
வியாச கர்த்த -ஸ -அருளிச் செய்தும் வைத்தீர் அன்றோ –

ஸர்வஸ்ய சாஹம் ஹ்ருதி ஸந்நிவிஷ்டோ
மத்த: ஸ்ம்ருதிர் ஜ்ஞாநமபோஹநம் ச
வேதைஸ்ச ஸர்வைரஹமேவ வேத்யோ
வேதாந்த க்ருத் வேத விதேவ சாஹம்
–15-15-

ஸர்வஸ்ய ஹ்ருதி அஹம் ஸந்நிவிஷ்ட:-எல்லோருடைய அகத்திலும் நான் புகுந்திருக்கிறேன்
ச மத்த:-மேலும் என்னிடம் இருந்து தான்,
ஸ்ம்ருதி: ஜ்ஞாநம் அபோஹநம் ச-நினைவும், ஞானமும், இவற்றின் நீக்கமும் பிறக்கின்றன,
ஸர்வை: வேதை: ச வேத்ய: அஹம் ஏவ – எல்லா வேதங்களிலும் அறியப்படும் பொருள் நான்,
வேதாந்த க்ருத் வேத வித் ச அஹம் ஏவ-வேதாந்தத்தை ஆக்கியோன் யான்; வேத முணர்ந்தோன் யானே.

ஆத்மாவா -ப்ரஹ்மம் -ஸ்ரோதவ்ய மந்தவ்ய நிதித்ஸ்யாதிதவ்ய த்ரஷ்டவ்ய –
கேட்டு -ஸ்ரவணம்
ஆராய்ந்து -மனனம்
முன்னோர் வார்த்தைகள் கேட்டு பின் ஓர்ந்து -ஆராய்ந்து நிலை நிறுத்தி தரித்து -நிதித்ஸ்யாதிதவ்யம்

மனனம் செய்ய வழி முறைகள் -ஆராய்ந்து காட்டி அருளி -மீமாம்ஸை காட்டும் –
நான்கு நிலைகள் பற்றி –ஸ்ருத்யந்த்தம் -மூலம் ஸ்ருதம் -கேட்டு-ஸ்ரவணம் -ப்ரஹ்ம ஸூத்ரம் -ஸ்ரீ பாஷ்யம் கொண்டு மூலம் மனனம் -மதம் பாஷ்யே -இது கொண்டு மனனம் ஹ்ருதம் புஜே- ஹ்ருதயத்தில் த்யானம் -த்ருஷ்டம் ஸ்ரீ ரெங்க தாம்நே -லஷ்மிபதி ப்ரபத்யே –

பத்யம் -ஸ்லோக ரூபம்
கத்யம் -prose ரூபம் -கத்ய த்ரயம் -போல் ப்ரஹ்ம ஸூத்ரம் -வாக்கியங்கள் – சுருக்கமான சொல் தொடர்-சூர்ணிகை – -ஸூத்ரம்–

அல்பாக்ஷரம் அஸந்திக்தம் ஸாரவத் விஸ்வதோம்கம் |
அஸ்தோபம் அநவத்யம் ச ஸூத்ரம் ஸூத்ரவிதோ விது: ||

ஸூத்ரம் என்பது
குறைந்த எழுத்துகள் உள்ளதாய்,
ஸந்தேஹம் ஏற்படுத்தாததாய்,
ஆழமான பொருள் கொண்டதாய்,
அனைத்து இடங்களிலும் பொருந்தும் யுக்திகணைச் சொல்லுவதாய்-
தேவைiயற்ற வார்த்தைகள் இல்லாததாய்,
உண்மையான பொருள் உடையதாய் இருக்கும்
ஒரு சொற் தொடர் ஆகும்.
1-அல்ப அக்ஷரம் —
2-அசந்திக்தம் -சங்கைகள் இல்லாமல் தெளிவாக –
3-சாரவாத் –
4-விஸ்வதோ முகம் -எல்லா சூழ் நிலைகளுக்கும் பொருத்தமாக இருக்க வேண்டும் -அனைத்து உபநிஷத் சாகைகளுக்கும் பொருத்தமாக இருக்க வேண்டும் –
5-அஷோபம் –தேவையில்லா அக்ஷரங்கள் இல்லாமல் இருக்கும்
6-அநவத்யம் குற்றங்கள் அற்றவையாக இருக்கும்

545 ஸூத்ரங்கள்

156-அதிகரணங்கள் – -ஐந்து விஷயங்கள் கொண்டவை

விஷயோ விஶயஶ்சைவ பூர்வபக்ஷ: ததா உத்தரம்|
ஸங்கதிஶ்ச இதி பஞ்ச அங்கம் சாஸ்த்தர அதிகரணம் விது: ||

(1) விஷயம் – ஆராயப்படும் உபநிஷத் வாக்யம்
(2)விசயம்- ஸம்சயம் –அதில் இருக்கும் ஸந்தேஹம்
(3) பூர்வபக்ஷம் – எதிர் வாதியின் வாதம்
(4) ஸித்தாந்தம் – வேத வ்யாஸரின் வாதம் மற்றும் முடிவு
(5) ஸங்கதி – அதிகரணங்களுக்குள் இருக்கும் தொடர்ச்சி –
இவை ஐந்தும் தான் ஒரு அதிகரணத்தின் பகுதிகள் ஆகும்.

அத்தியாங்கள் -4-ஒவ்வொன்றிலும் நான்கு பாதங்கள் -ஆக 16 பாதங்கள்

காரணந்து த்யேய –

1) ஸமந்வய – உபநிஷத் வாக்யங்கள் ப்ரஹ்மத்திடம்
பொருந்தி அவரையே உலகத்துக்குக் காரணம் என்கின்றன
(2) அவிரோத – ப்ரஹ்மமே ஜகத் காரணம் என்பதில் எந்த
முரண்பாடுகளும் இல்லை என்ற நிரூபணம்
(3) ஸாதந – ப்ரஹ்மத்தை அடையும் வழி (உபாயம்)
(4) பல – மிகவுயர்ந்த இலக்கான முக்தியை அடைதல்

முதல் இரண்டு அத்யாயங்கள் பரமாத்மா ஶ்ரீமந் நாராயணனே உலகைப் படைப்பவர் என்று உறுதிபடுத்துகின்றன.-முன்னமே இருக்கும் ப்ரஹ்மத்தைப் பற்றி சொல்லுகிறபடியால் இது ஸித்த த்விகம் எனப்படுகிறது.
கடைசி இரண்டு அத்யாயங்கள் நம் முயற்சியால் ஏற்பட வேண்டிய பக்தியோகம் மற்றும் முக்தியைப் பற்றிச் சொல்லுகிறபடியால் இவ்விரண்டும் ஸாத்ய த்விகம் ஆகும்.

முதல் அத்யாயம் –11–6–10-8-அதிகரணங்கள் —-35–அதிகரணங்கள்
இரண்டாம் அத்யாயம் –10–8–7–8- அதிகரணங்கள் -33—அதிகரணங்கள்
மூன்றாம் அத்யாயம் –6–8–26–15–அதிகரணங்கள் —55–அதிகரணங்கள்
நான்காம் அத்யாயம் –11-11-5-6-அதிகாரணங்கள் -33–அதிகரணங்கள்

சாரீரிக மீமாம்ஸ சாஸ்திரத்தில் நான்கு அத்தியாயங்களும்
விஷய த்விகம் -ஸித்த த்விகம் என்றும்
விஷயீ த்விகம் -ஸாத்ய த்விகம் என்றும் உண்டு
மூன்றாம் அத்தியாயத்தில் பக்தி ரூப ஞானம் விஷயி
நான்காம் அத்தியாயத்தில் ப்ரஹ்ம அனுபவ ஸ்வரூப ஞானம் விஷயி ஆகும்

வேதார்த்த விசாரம் -ஒரே ஸாஸ்த்ரம்
4 அத்தியாயங்கள் –
1-சமன்வய -காரணத்வ
2-அவிரோதித்தவ -அபாத்யத்வ
3-உபாயத்வ
4-பலத்வ –அதிகாரங்கள் நான்கும்

16 பாதங்கள்
1-ஜீவ மிக அஸ்பஷ்ட மாயும்
2-ஜீவ அஸ்பஷ்ட மாயும்
3-ஜீவ ஸ்பஷ்ட மாயும்
4-ஜீவ மிக ஸ்பஷ்ட மாயும்
5-ஸாங்க்யாதி ஸ்ம்ருதி மூலமான தோஷ பரிஹாரம் காட்டுவது
6-ஸாங்க்யாதி பக்ஷங்கள் கண்டனம்
7-ஆகாசாதி த்ரவ்யங்களுக்கு ஸ்வரூப பரிணாம ரூபமான கார்யத்வம் கூறுவது
ஆத்மாக்களுக்கு ஸ்வ பாவ அந்யதா பாவ ரூப கார்யத்வம் கூறுவது
8-ஜீவ உபகரணமான இந்திரியாதிகளின் உத்பத்தி க்ரமம் கூறப்படுவது
9-வைராக்ய நிமித்தமாக புருஷனுக்கு ஏற்படும் தோஷங்கள்
10-ப்ராப்யத்தில் ஆசை தோன்ற ப்ரஹ்மத்துக்கு நிர்த்தோஷமும் கல்யாணைக தானத்வமும்
11-பகவானிடம் செய்யும் பக்தியின் பிரகாரங்கள்
12–பக்திக்கு வர்ணாஸ்ரம தர்மங்களை அங்கங்களாக விதித்தல்
13-உபாஸனா ஸ்வரூபமும் அநுஷ்டான க்ரமமும் விளக்கப்படுத்தல் -வித்யா மகிமையும் கூறுதல்
14-ஜீவன் உடலை விட்டுப் புறப்படுதல் -உத் க்ரமணம்
15-ஜீவனின் மோக்ஷ கதி சிந்தனம்
16-பிராப்தி -பலம் -மோக்ஷம் –

————

16 பாதங்களின் சுருக்கம்
தத்ர ஆத்₃யே அத்யந்தகூ₃ட₄ அவிசத விசத ஸுஸ்பஷ்ட ஜீவாதி₃வாச:
பஶ்சாத் ஸ்ம்ருத்யாதி₃கை : அக்ஷதி: அஹித ஹதி: கார்யதா அப்₄ரேந்த்₃ரியாதே ₃: |
தோ₃ஷ தோ ₃ஷௌ த்ருதீயே ப₄வப்₄ருத் இதரயோ : ப₄க்தி: அங்கா₃நி சாத₂
உபாஸாரோஹ ப்ரபா₄வ உத் க்ரம ஸரணி ப₂லாநி அந்திமே சிந்திதாநி ||
-அதிகரண சாராவளி ஸ்லோகம்

ஸமந்வய அத்யாயம் – வேத வாக்கியங்கள் எல்லாம் பரமாத்மாவையே ஜகத்துக்குக் காரணம் என்று சொல்லுகின்றன என்கிறார்

இயற்கையே -ப்ரக்ருத்தியே காரணம் என்பாரும்
ஜீவாத்மாவே காரணம் என்பாரும் உண்டே
ஆகவே ஆராய்ந்து ஸித்தாந்தம் நிரூபிக்க வேண்டுமே
வெவ்வேறு விதமான வேத வாக்யங்களைக் கொண்டு நிரூபிப்பதால் நான்கு பாதங்கள்

முதல் பாதம் – மிகவும் தெளிவற்ற அடையாளங்களால் ஜீவாத்மாவையையோ ப்ரக்ருதியையோ ஜகத் காரணம் என்று சொல்வது போல் தோன்றும் வேத வாக்கியங்களை ஆராய்ந்து, அவையும் பரமாத்மாவையே சொல்கின்றன என்னுதல்

இரண்டாம் பாதம் – சிறிது தெளிவற்ற அடையாளங்களைக் கொண்ட வாக்கியங்களை
ஆராய்தல்

மூன்றாம் பாதம் – சிறிது தெளிவான அடையாளங்களைக் கொண்ட வாக்கியங்களை
ஆராய்தல்

நான்காம் பாதம் – மிகவும் தெளிவான அடையாளங்களைக் கொண்ட வாக்கியங்களை
ஆராய்தல்

அவிரோத ₄ அத்யாயம் – பரமாத்மா ஜகத் காரணம் என்பதில் எந்த முரண்பாடுகளும் இல்லை என்னுதல்

முதல் பாதம் (ஸ்ம்ருதி பாதம்) – இக் கருத்துக்கு ஸ்ம்ருதிகளோடு முரண்பாடு இல்லை என்று காட்டுதல்

இரண்டாம் பாதம் (தர்க பாதம்) – இக் கருத்துக்கு யுக்திகளாலும் முரண்பாடு இல்லை என்று நிரூபித்தல்

மூன்றாம் பாதம் (வியத் பாதம்) – பஞ்ச பூதங்களையும் ஜீவாத்மாவையும் பரமாத்மாவே படைக்கிறார் என்னுதல்

நான்காம் பாதம் (ப்ராண பாதம்) – இந்த்ரியங்கள் கூட பரமாத்மாவால் உண்டாக்கப்பட்டவை என்னுதல்

ஸாத₄ன அத்யாயம் – முக்தி அடைவதற்கு வழியான பக்தி யோகத்தை , அதன் தகுதிகளோடும் அங்கங்களோடும் நிரூபிக்கும் அத்யாயம்(உலக விஷயங்களில் வைராக்கியமும் ப்ரஹ்ம ப்ராப்தியில் ருசியும் உள்ளவர்களே அதிகாரிகள்-கர்ம யோக-ஞான யோகங்கள் போல்வன அங்கங்கள்)

முதல் பாதம் (வைராக்ய பாதம்) – உலக வாழ்க்கையில் வைராக்யம் ஏற்படுவதற்காக, ஒரு ஜீவாத்மா விழிப்பு, தூக்கம், ஸ்வப்நம், நரகம் முதலான நிலைகளில் படும் துன்பங்களைச் சொல்லுதல்

இரண்டாம் பாதம் (உபய லிங்க பாதம்) – பரமாத்மாவிடம் ஈடுபாடு பிறப்பதற்காக, அவருக்கு எந்த தோஷங்களும் இல்லை என்றும், எல்லா நற்குணங்களும் இருக்கின்றன என்றும் காட்டுதல்-அகில ஹேய ப்ரத்ய நீகத்வமும் கல்யாண குணாத்மகமும் உபய லிங்கங்கள்

மூன்றாம் பாதம் (குண உப ஸம்ஹார பாதம்) – முக்திக்கு வழியான பக்தி யோகத்தின் வகைகளைச் சொல்வது

நான்காம் பாதம் (அங்க பாதம்) – பக்திக்கு அங்கமான கர்மங்கள், புலனடக்கம் முதலானவற்றைக் கூறுதல்

ப₂ல அத்யாயம் – பக்தி யோகத்தால் அடையப்படும் முக்தியின் தன்மையை முழுமையாக உணரத்தல்

முதல் பாதம் ( ஆவ்ருத்தி பாதம்) – பக்தி யோகத்தின் மகிமையால் நம் பாபங்கள் நீக்கப்படுதல்

இரண்டாம் பாதம் (உத்க்ராந்தி பாதம்) – முக்தி அடையும் ஆத்மா இவ் வுடலிலிருந்து புறப்படுதல்

மூன்றாம் பாதம் (கதி பாதம்) – இவ்வாத்மா அர்ச்சிராதி மார்கத்தால் ப்ரயாணித்து வைகுந்தம் அடைதல்

நான்காம் பாதம் (முக்தி பாதம்) – வைகுந்தத்தில் தன் இயற்கையான தன்மையை அடைந்து ப்ரஹ்மத்தை அநுபவித்து நிரந்தரமான ஆனந்தத்தில் திளைத்தல்

——————-

ஸ்ரஷ்டா தேஹீ ஸ்வ நிஷ்ட: நிரவதிக மஹிமா அபாஸ்த பாத பாத: ஶ்ரிதாப்த:
காத்மாதே: இந்த்ரியாதே: உசித ஜநந க்ருத் ஸம்ஸ்ருதௌ தந்த்ரவாஹீ |
நிர்த் தோஷத்வாதி ரம்ய: பஹு பஜந பதம் ஸ்வார்ஹ கர்ம ப்ரஸாத்ய:
பாபச்சித் ப்ரஹ்ம நாடீ கதி க்ருததிவஹந் ஸாம்யதஶ்ச அத்ர வேத்ய: || (19)-அதிகரண சாராவளி ஸ்லோகம்–ஒவ்வொரு பாதம் மூலம் ஒவ்வொரு கல்யாண குண அனுபவம்-

ஸ்ரஷ்டா – உலகைப் படைப்பவன்(1-1),முந்நீர் ஞாலம் படைத்த முகில் வண்ணன்
தேஹீ – தன்னை யொழிந்த அனைத்தையும் தனக்குச் சரீரமாகக் கொண்டவன் (1-2);
ஸ்வ நிஷ்ட: – -அந்நிய ஆதரேண–தன்னையே ஆஸ்ரயமாகக் கொண்டவன் (1-3);
நிரவதி மஹிமா – எல்லையற்ற பெருமைகளை உடையவன் (1-4);உளன் மிகு ஸ்ருதியுள் வேதைக சமைதி கம்யன்
அபாத ஸப்த பாத: – ஸாங்க்யாதி ஸ்ம்ருதிகளால் கலக்க முடியாதவன்-எந்த முரண்பாடுகளும் இல்லாமல் ஜகத் காரணம் என்று அறியப் படுபவர் (2-1);
ஆஶ்ரிதாப்த: – பஞ்ச கால பராயணர்க்கு ஆப்தன் –அண்டியவர்களுக்கு நண்பன் -தன் பக்தர்களை ரக்ஷிப்பதற்காக, தீயவர்களை மயக்குவதற்கு பல தவறான மதங்களை
ஏற்படுத்தியவர்(2-2);
காத்மாதே: உசித ஜநந க்ருத் –பஞ்ச பூதங்களையும் ஜீவாத்மாக்களையும் கூடத் தகுந்த முறையில் படைப்பவர்- –அசேதன ஸ்வரூப விகார -சேதன ஸ்வரூப ஸ்வ பாவ ஜனன கர்த்தா(2-3)

இந்திரியாதே: உசித ஜநந க்ருத் – இந்த்ரியம் முதலியவற்றினுடையவும் தக்கபடி படைப்பவன்;-(2-4)

ஸம்ஸ்ருதௌ தந்த்ர வாஹீ – ஜாக்ரத் ஸ்வப்ந ஸுஷூப்தி மூர்ச்சா மரணம் ஆகியவைகளை நிர்வஹிப்பவன்-ஜீவன் ஸம்ஸாரத்தில் அநுபவிக்கும் எல்லா நிலைகளையும்
நிர்வஹிப்பவர் (3-1);

நிர் தோஷத்வாதி ரம்ய: – தோஷங்கள் தட்டாதவன் -ரம்யன்;அகில ஹேய ப்ரத்ய நீகன் கல்யாண குணைகநாதன்-(3-2)

பஹு பஜன பதம்  –பல உபாஸநத்திற்கு இருப்பிடமாக அறியத் தக்கவன்-பல விதமான பக்தி யோகங்களால் பலராலும் வழிபடப்படுபவர்;-(3-3)

ஸ்வார்ஹ கர்ம ப்ரஸாத்ய: – ஜீவர்கள் தம் தம் ஆஸ்ரமங்களுடன் அநுஷ்டிக்கப்படும் கர்மாக்களால் ஸந்தோஷப்படுத்தப்படுபவன்;-வேதத்தில் விதிக்கப்பட்ட கர்மங்களைச் செய்வதால் மகிழ்ந்து, பக்தி யோகத்தை வழங்கக் கூடியவர்.-(3-4)

வர்ணாஸ்ரம ஸாஸ்வதா புருஷேண பர புமான் விஷ்ணுர் ஆராத்யதே பந்தா நரந்ய தத் தோஷ காரக -ஸ்ரீ விஷ்ணு புராணம்

பாபச்சித்  – பாபங்களை நீக்குபவன்;-உத்தர பூர்வ பாபங்களில் அஸ்லேஷ விஸ்லேஷ கர்த்தா-(4-1)

ப்ரஹ்ம நாடீ கதி க்ருத் – -ஆத்மா உடலிலிருந்து புறப்படும் போது ஸுஷும்நா நாடி மூலம் அழைத்துச் செல்பவர்-மோக்ஷத்தை அடைவிப்பவன்;-(4-2)

இதுவரை ஸ்தூல தேஹ விஸிஷ்டனுக்கு பலம்

மேல் ஸூஷ்ம தேஹ விஸிஷ்ட னுக்கு பலம்

அதிவஹந் – அழைத்துச் செல்பவன்;–அர்ச்சிராதி மார்க்கத்தில் கூடவே இருந்து இவ் வாத்மாவை அழைத்துச் செல்பவர்–(4-3)திருமோகூர் ஆப்தன் வழித் துணைப் பெருமாள்

ஸாம்யத: தனக்கு ஸமமான யோகத்தைத் தருபவன்.-நிரஞ்சன பரமம் ஸாம்யம் உபைதி–வைகுந்தத்தை அடைந்த முக்த ஆத்மாவை தனக்கு நிகராக ஆக்கி மகிழ்விப்பவர். (4-4)-சமன் கொள் வீடு தரும் தடம் குன்றமே திருமலையே அருளும் அன்றோ-

இங்கு ஸாம்யா பத்தி சொல்லி இருந்தாலும் —பரிபூர்ண ப்ரஹ்ம அனுபவமும்
அனுபவ ஜெனித ப்ரீதியும் ப்ரீதி காரித ஸர்வ வித ஸர்வ தேச ஸர்வ கால ஸர்வ அவஸ்தா அசேஷ கைங்கர்யமும் -பரம புருஷார்த்தம்

இப்படி மொத்தம் 16 திருக் குணங்கள் சொல்லப்பட்டுள்ளன.

இஷ்ட தேவதா ஸ்தோத்திரம் மங்களம். மங்கள ஆஸி – நமஸ்காரம் .

இதர தேவதா மங்கள ஸ்லோகம் ; சமுசித தேவதா தியானமாகும்.
சங்கீதத்துக்கு ஸரஸ்வதி , ஆயுர் வேதத்துக்கு தன்வந்திரி .
இஷ்ட தேவதையே சமுசித்த தேவதையாகும் போது , சமுசித்திஷ்ட தேவதா தியானமாகும்.

அகில புவந ஜன்ம ஸ்தேம பங்காதி லீலே!(1)
விநித விவித பூத விராத ரக்ஷைக தீக்ஷே |(2)
ஸ்ருதி சிரஸி விதீப்தே!(3) பிரஹ்மணி! (4) ஸ்ரீநிவாஸே !
பவது மம பரஸ்மிந் சேமுஷி பக்தி ரூபா ||-இஷ்ட தேவதையான ஸ்ரீநிவாஸனுக்குச் செய்யப்பட மங்கள ஸ்லோகம் இது.

வாம்பரி யுக மன்னர் தம் உயிர் செக ஐவர் கட்கு அரசளித்த
காம்பினார் திரு வேங்கடப் பொருப்ப நின் காதலை யருள் எனக்கு
மாம் பொழில் தளிர் கோதிய மடக்குயில் வாயது துவர்ப்பு எய்த
தீம் பலங்கனி தேனது நுகர்   திரு வெள்ளறை நின்றானே-5-3-4-

அகில புவன ஜன்ம ச்தேம பங்காதி லீலே-உத்பத்தி ஸ்திதி விநாசம் -லீலையாக
அகில புவன -அகிலாண்ட கோடி பிரமாண்ட நாயகன்
மணல் தூள்கள் கணக்கிட முடியாதது போலே -நட்ஷத்ரங்கள் உண்டே-அண்ட கடாகம் – பல உண்டே
எல்லா புவனங்களுக்கும்
லீலை -லோக வஸ்து லீலா கைவல்யம்
கிம் காரணம் –
சு கமயம் துக்க மயம்-நமக்காக செய்கிறானா – அவாப்த சமஸ்த காமன் -தனக்காக செய்கிறானா –
வியாச மகரிஷி லீலா வஸ்து கைவல்யம்
லீலா ஸுயம் பிரயோஜனம் –க்ரீடா லீலா ஸுயம் பிரயோஜன வியாபாரம்
குழந்தைகள் பொம்மை வைத்து விளையாடுவது போலே
பகவத் சாஷாத்காரம் அடைந்தால் தான் அறிவோம்
மம ப்ரஹ்மணி ஷேமுசி பக்தி பூர்வா பவது-ஸங்க்ரஹமாக அனைத்தையும் அருளுகிறார்

அகில புவன ஜன்ம ஸ்தேம பங்காதி லீலே –ஜகத் காரணத்வம் –உயர்வற உயர் நலம் உடையவன் -அர்த்த விசேஷம்
விநத -மதி நலம் அர்த்தம் -பக்தியால் சத்தை பெற்றமை
மதிநலம் எனக்கு அருளினன் இல்லாததால் முன்பு சத்தை இல்லாமையையை தெரிவித்து அருளினார்
பக்தி வந்த பின்பு என் மனனே என்று சத்தை வந்தமையை வெளியிட்டு அருளினார்
விவித பூத வ்ராத -சம்பந்த சம்பந்திகளுக்கும் பலம் உண்டு என்று அருளிச் செய்கிறார்
பொய் நின்ற –யாம் -என்றும் -கேசவன் தமர் –எமர் -என்றும் அருளிச் செய்தது போல் இங்கும்
ரக்ஷைக தீஷே -துயர் அறு சுடர் அடி -அநிஷ்ட நிவ்ருத்தி பூர்வக இஷ்ட பிராப்தி
ஸ்ருதி சிரஸி விதீப்தே ப்ருஹ்மணி ஸ்ரீ நிவாஸே
பவது மம பரஸ்மின் சேமுஷீ பக்தி ரூப -பிரார்த்தித்தே பெற வேண்டும் என்று காட்டி அருளுகிறார்
ப்ரார்த்த நீயம் என்பதை ஆவ்ருத்தி ரஸ க்ருத -ஸூத்ரம்
ஜிஜ்ஞாஸா -இச்சிக்க வேண்டும்
நிதித்யாஸி தவ்ய-ஸ்ருதி அர்த்தம்

———

பாராசர்ய வசஸ்ஸுதா₄ம் உபநிஷத் து₃க்₃தா₄ப்₃தி₄ மத்₄யோத்₃த்₄ருதாம்
ஸம்ஸாராக்₃நி விதீ₃பந வ்யபக₃த ப்ராணாத்ம ஸஞ்ஜீவநீம் |
பூர்வாசார்ய ஸுரக்ஷிதாம் ப₃ஹுமதி வ்யாகா₄த தூ₃ரஸ்தி₂தாம்
ஆநீதாம் து நிஜாக்ஷரை : ஸுமநஸ: பௌ₄மா: பிப₃ந்து அந்வஹம்
||இரண்டாவது மங்கள ஸ்லோஹம்-

பராசரரின் மகனான வேத வ்யாஸரால் இயற்றப்பட்ட ப்ரஹ்ம ஸூத்ரங்கள், உபநிஷத் என்னும் பாற்கடலின் நடுவிலிருந்து ஆழமாகத் தேடி எடுக்கப்பட்ட அமுதம் ஆகும். ஸம்ஸாரத்தின் துன்பங்களால் துவண்டு போய், பரமாத்மாவாகிற ப்ராணனை இழந்து துன்பப்படும் ஜீவாத்மாக்களுக்கு உயிரூட்டும் அமுதமாக அது உள்ளது. இந்நூல் பூர்வாசார்யர்களால் நன்கு ரக்ஷிக்கப் பட்டிருந்தாலும், அண்மையில் பலருடைய முரண்பட்ட விளக்கங்களால் வெகு தூரத்தில் போய்விட்டது. அதனை நான் என் ஶ்ரீபாஷ்யத்தின் மூலம் அருகில் எடுத்து வருகிறேன், ஈடுபாடுடைய அனைவரும் தினமும் பருகட்டும்.

பெரிய திருவடி அம்ருத கலசம் கொண்டு வந்தது போல் ராமானுஜர் இந்த அம்ருதம் ஆஸ்திகர் உஜஜீவனம் அடையும் படி அருளி உள்ளார் -தினம் தோறும் பருகிக் களிக்கலாம் அன்றோ-

பாராசர்ய வசஸ் ஸுதாம் (1)
உபநிஷத் துத்தாப்தி மத்யோ திருதாம் (2)
ஸம்சாராக்நி விதீபன வியபகத பிராணாத்ம சஞ்சீவனீம் (3) |
பூர்வாசார்ய ஸுரக்ஷிதாம் (4)
ஹுமதிம் வியாகாத தூரஸ்திதாம் (5)
நீதாந் து நிஜா க்ஷரைஹி ஸு மனஸோ பௌமாஸ்து பிபந் வஹம் ||

பாராசார்யா வசஸ்துதாம்-வியாசர் -அமிருத ரூபமான வாக்கு-மரணம் ஜனனம் இல்லாத -அபாவம் தானே மோஷம்
பிபந்வஹம்-பிபந்து குடிக்க வேண்டும்-5–விசேஷணங்கள் மேலே சொல்லி

ஸ்ரீபகவத் ராமானுஜர் வேதாந்த ஸங்க்ரஹம் -முதலில் திருவேங்கடமுடையான் சந்நிதியில் அருளி யஸ் ஸ்ரீ சைல- இஷ்ட தேவதா-அவர் அங்கீகாரம் பெற்று இத்தை அருளி –அதன் அனுவர்த்தி ஸ்ரீ பாஷ்யம் –பாதாராயண -பராசரர் புத்ரர் – பூமியில் உள்ள எல்லாரும் இந்த அம்ர்தத்தை பானம் செய்யட்டும்-பிபந்து -ஆசீர்வாதம் செய்கிறார்

———–

குரு பரம்பரை-(குற்றம் அற்ற மஹான்கள் புராதன வேதாந்த வ்யாக்யாந கர்த்தாக்கள் -வேதார்த்த ஸங்க்ரஹத்தில் ராமானுஜர் காட்டி அருளுகிறார்)

வேத வ்யாஸர் – ப்ரஹ்ம ஸூத்ரங்கள்

போதாயனர் – வ்ருத்தி என்னும் நெடிய உரை

டங்கர் (ப்ரஹ்ம நந்தி) – வாக்யம் என்னும் உரை

த்ரமிடர் – சாந்தோக்ய உபநிஷத்தின் பாஷ்யம்

நாதமுனிகள் – ந்யாய தத்த்வம், புருஷ நிர்ணயம்

யாமுநாசார்யர் – ஸித்தி த்ரயம், ஆகம ப்ராமாண்யம்

பகவத் ராமாநுஜர் – வேதாந்த ஸாரம், ஶ்ரீபாஷ்யம், வேதாந்த தீபம்-
தன் ஆசார்யரான யாமுநாசார்யரின் ஆணையின்படி, போதாயனர் இயற்றிய வ்ருத்தி க்ரந்தத்தைக் காஷ்மீரத்தில் சென்று பெற்று, அதை அநுஸரித்து
ஶ்ரீபாஷ்யம் என்னும் ஒப்பற்ற உரையை இயற்றினார் ஸ்வாமி ராமாநுஜர்.

மிகவும் சுருக்கமாக வேதாந்த சாரம் அருளி
பின்பு அதைக் காட்டி போதாயன வ்ருத்தி கிரந்தம் பெற்று ஸ்ரீ பாஷ்யம் அருளிச் செய்து
பின்பு வேதாந்த தீபம் அருளிச் செய்துள்ளார்

ஸ்ரீ பகவத் போதாயன க்ருதாம் விஸ்தீர்ணாம் ப்ரஹ்ம ஸூத்ர வ்ருத்திம்
பூர்வாச்சார்ய ஸஞ்சிஷிபு தன் மத அநு சாரேண ஸூத்ர அக்ஷராணி வ்யாக்யாஸ்யந்தே-ஸ்ரீ பாஷ்ய மூல ஸ்ரீ ஸூக்திகள்

ஸுதர்சன பட்டர் – ஶ்ரீபாஷ்யத்திற்கு ஸ்ருத ப்ரகாசிகை என்னும் உரை-வேத வ்யாஸ பட்டர் திருப்பேரானார் -வாக் விஜயீ திருக் குமாரார் -நடாதூர் அம்மாள் திருக்குமாரர்-வ்யாஸர் பட்டம் -விருது நம் பெருமாள் அருளிச் செய்துள்ளார்-

யதீந்த்ர க்ருத பாஷ்யார்த்தா யத் வ்யாக்யாநேந   தர்சிதா:
வரம் ஸுதர்சனார்யம் தம் வந்தே கூர குலாதிபம்-ஸ்ருத  ப்ரகாசிகா பட்டருடைய தனியன்:

வேதாந்த தேசிகர் – ஶ்ரீபாஷ்யத்திற்கு தத்த்வ டீகை என்னும் உரை -அதிகரண சாராவளி

கருணைக் கடலான ராமானுஜர்-சாலைக்கிணற்று நீர் கைங்கர்யமாக வர்ஷிக்க பேர் அருளாளன் கருணை யுடையவர் ஆகி அர்த்தித்தார்த்த பரி தீஷிதரார் ஆனார் -தேசிகன்

நிராபாத போதாயன பணித நிஷ்யந்த ஸூ பகா
விசுத்த உபன்யாச வ்யதிபுதுர சாரீரக நயா
அகுண்ட்டை கல்பந்தே யதிபதி நிபந்தா நிஜ முகை
அநித்ராண ப்ரஜ்ஞா ரச தமனி வேதாய ஸூதியாம்-ஸ்ரீ யதிராஜ சப்ததி–50-

ராமானுஜரின் படைப்புகள் வேதாந்த சாஸ்திரத்தின் குறைபாடற்ற ஏற்பாடுகளை வெளிப்படுத்துகின்றன,
போதாயனரின் வர்ணனையின் (ப்ரஹ்ம ஸூத்திரம்) மற்றும் அதுபோன்றவற்றின் தரத்தை வடிகட்டுகின்றன.
படைப்புகளில் எந்த முரண்பாடும் இல்லை. அவர்களின் கருத்துக்கள் வலுவானவை, தெளிவானவை
மற்றும் வலியுறுத்தல் தொடர்பாக சுட்டிக் காட்டப்படுகின்றன.
அவை அறிவுசார் நரம்பு நாண்களைத் தாக்குவதில் திறமையானவை.
மேலும் அவை அறிஞர்களின் அறிவுத் திறனை மலரச் செய்ய உதவுகின்றன.
இதன் மூலம் அவர்களுக்கு இன்பம் ஊட்டுகின்றன

காதா தாதாகதா நாம் களதி கம நிகா காபிலீ க்வாபி லீநா–
ஷீணா காணாத வாணீ த்ருஹிண ஹர கிர சௌரபம் நார பந்தே –
ஷாமா கௌமாரில உக்தி ஜகதி குருமதம் கௌரவாத் தூர வாந்தம் –
கா சங்கா சங்கர ஆதே பஜதி யதி பதௌ பத்ர வேதீம் த்ரிவேதீம் –70-

மூன்று வேதங்கள் மூலம் அமைக்கப்பட்ட -திரிவேதி பீடத்தில் -ஸிம்ஹாஸனத்தை அடைந்து ஸ்வாமி எழுந்து அருளி உள்ளார்-உடனே நடந்தது என்ன என்னில் –
புத்தரின் அமைப்பு உடனே சாஷ்டாங்கமாக விழுந்தது;
கபிலரின் சாங்கிய தத்துவம் எங்கோ மறைந்தது;
கணாதரின் வைஷேஷிக உபதேசம் மறைந்தது
நான்முகன் சிவன் இவர்கள் மாதங்கள் நறுமணம் இழந்தன
குமாரில பட்டரின் (மீமாம்ஸ வாதம் தோற்றது
பிரபாகரனின் மதம் கற்பனை அதிகமாக உள்ளது என்று விலக்கப் பட்டது .-
இதெல்லாம், ராமானுஜரின் சித்தாந்தத்தை ஏற்றிய போது, ​​நமக்கு வழிகாட்டியாக இருந்தது.
அப்படியானால், சங்கரர் போன்றோர் வாதமும் கண்டிக்கப் பட்டதைக் கூறவும் வேண்டுமோ –

————–

ப்ரபத்யே ப்ரணாவாகரம் பாஷ்யம் ரங்கமிவாபரம் –
ப்ரஸ்ய ப்ரஹ்மணோ யத்ர சேஷித்வம் ஸ்புடமீக்ஷ்யதே –

இது ஸுதர்ஸன ஸூரியினாலே அருளிச் செய்யப்பட்டது. ஸ்ரீரங்கவிமாநமான ப்ரணவாகார விமானத்தைப் போல் ஸ்ரீபாஷ்யம் விளங்குகிறது என்கிறார்.

ப்ரஹ்மத்தின் சேஷித்வம் ஸ்பஷ்டமாகக் காணப்படும் -அபர ஸ்ரீ ரெங்க விமானம் போலே –
பிரணவ ஆகாரமாகவே பிரகாசிக்கிற ஸ்ரீ பாஷ்யத்தை சரணமாக வரிக்கிறேன்

ப்ரணவமாகிற ஓங்காரத்திலும்
ஸ்ரீ பாஷ்யத்திலும் பிரகாசிக்கும் பரமாத்மாவுடைய சேஷித்வம்
பிறரால் உண்டு பண்ணப்பட்டு இருக்கிற அதிசயத்தை -மேன்மையைத் தங்கி இருப்பது
ஸ்ரீ ரெங்கத்தில் பிரகாசிக்கும் சேஷித்வம் சேஷசாயித்வம் என்று கண்டு கொள்வது

திரு மந்திரத்தில் பத த்ரயத்தாலே
ஜீவாத்மாக்களுடைய
அநந்யார்ஹ சேஷத்வம் -அநந்ய சரணத்வம் -அநந்ய போக்யத்வம் -ஆகிய -ஆகார த்ரயம்
ஸாப்தமாக ப்ரதிபாதிதம்
பரமாத்மாவின்
சேஷித்வ சரண்யத்வ ப்ராப்யத்வங்கள் ஆகிய ஆகார த்ரயம்
ஆர்த்தமாகக் கிடைக்கும்

ஸ்ரீ ராமானுஜ தர்சன அடிப்படைக் கோட்ப்பாடுகள்

த்₃ருஷ்டே அபஹ்நுத் யபா₄வாத் அநுமிதி விஷயே லாக₄வஸ்ய அநுரோதா₄த்
சாஸ்த்ரேணைவ அவஸேயே விஹதி விரஹிதே நாஸ்திகத்வ ப்ரஹாணாத் |
நாதோ அ₂பஜ்ஞம் ப்ரவ்ருத்தம் ப₃ஹுபி₄: உபசிதம் யாமுநேய ப்ரப₃ந்தை ₄:
த்ராதம் ஸம்யக் யதீந்த்₃ரை : இத₃ம் அகி₂ல தம:கர்சனம் த₃ர்சனம் ந: ||

உபநிஷத்துகள் காட்டும் விசிஷ்டாத்வைத ஸித்தாந்தம் நாத முநிகள் தொடங்கி பரப்பப்பட்டு,-யாமுநாசார்யரின் நூல்களால் வளர்க்கப்பட்டு, யதிராஜரான ஸ்வாமி ராமாநுஜராலே நன்கு நிலை நாட்டப்பட்டது. இதுவே நம் மனதிலிருக்கும் இருட்டாகிற அறிவின்மையைப் போக்கும்.

இந்த விசிஷ்டாத்வைதத்தின் முக்கியமான கோட்பாடுகள் –

1-புலன்களால் சரியாக அறியப்படும் எந்தப் பொருளையும் பொய் என்னக் கூடாது

2-அநுமானத்தைப் பயன்படுத்தும் போது இன்றியமையாத குணறந்த அளவு மட்டுமே செய்யலாம்

3-புலன்களுக்கு அப்பாற்பட்டவையாய், வேதத்தால் மட்டுமே அறியப்பட வேண்டிய பொருள்களை வேதம் சொன்னபடியே ஏற்க வேண்டும். அங்கு புலன்களோ அநுமானமோ செல்லாது.

—————–

சாஸ்த்ரத்தின் ஆரம்பம்

  • எந்த ஒரு நூலையும் இயற்றும் ஆசிரியர் அதற்கு ஒரு முன்னுரை அணமப்பது முறை . முன்னுரை என்பதும் நூலின் பகுதி தான், ஆனால் அதில் நூலின் கருத்துகள் சொல்லப்படாது. அந்த நூலின் பொருளையும், அதன் தேவையையும் , படிக்க வேண்டிய பயனாளியையும் குறிப்பிட்டு, கற்பவரை ஊக்குவிப்பதே அதன் நோக்கம் ஆகும்.
  • எடுத்துக் காட்டுக்கு, பகவத் கீதையில் முதல் அத்யாயம் முழுவதும் அர்ஜுநனின் குழப்பத்தையும் சோகத்தையும் தான் சொல்லுகிறது, அதில் கண்ணனின் உபதேசம் ஏதுமில்லை . ஆனால் அது கீதையின் பகுதி தான், மேல் செய்யப்படுகிற உபதேசத்தின் பின்புலத்தைச் சொல்லுகிறபடியால்.
  • ப்ரஹ்ம ஸூத்ரங்கள் என்ற நூலை இயற்றிய வேத வ்யாஸர், இந்நூலின் முதல் நான்கு அதிகரணங்களை முன்னுரையாக –ஸாஸ்த்ர ஆரம்பம்-அமைத்துள்ளார். (ஸாசநாதி ஸாஸ்த்ரம் -கீதையில் 2-11- தொடங்கி ஸ்ரீ கீதா ஸாஸ்த்ரம் போல்)அவற்றின் பெயர்கள் –
  • ஜிஜ்ஞாஸா அதி₄கரணம்
  • ஜந்மாதி₃ அதி₄கரணம்
  • சாஸ்த்ர யோநித்வ அதி₄கரணம்
  • ஸமந்வய அதி₄கரணம்
  • இந்த ஒவ்வொரு அதிகரணத்திலும் ஒரே ஒரு ஸூத்ரம் தான் உள்ளது.
  • 545 ஸூத்ரங்கள் கொண்ட இந்த சாஸ்த்ரத்திற்கு, முதல் 4 ஸூத்ரங்கள் முன்னுரை ஆகும்.

சதுஸ் ஸூத்ரி –பாதி ப்ரஹ்ம ஸூத்ரம் போல் விபுல வ்யாக்யானம்
விஷய உபநிஷத் வாக்யங்கள் இவற்றுக்கு வேண்டாவே –
மேல் உள்ள அதிகரணங்களுக்குத் தான் அவை வேண்டும் –

———

அத்யாயம் 1, பாதம் 1, அதிகரணம் 1 – ஜிஜ்ஞாஸ தி₄கரணம்

  • இந்த முதல் அதிகரணத்தில் உள்ை ஒரே ஸூத்ரம் – (அதா₂தோ ப்₃ரஹ்ம ஜிஜ்ஞாஸா)
  • இந்த ஸூத்ரத்தில் 3 சொற்கள் உள்ளன – (அத₂ அத: ப்₃ரஹ்ம ஜிஜ்ஞாஸா)
  • அத₂ – இந்த சொல்லுக்கு ’பிறகு’-’அடுத்து’ என்று பொருள். எதற்குப் பிறகு என்கிற கேள்வி இயல்பாக எழும்.(அத -அநந்தர்யம் -அடுத்ததாக சொல்லபபடும் -there after -என்ற பொருளே இங்கு விவஷிதம்-இதற்கு மங்களம் -கார்ஸ்யம் முழுமை-அடுத்து ப்ரஸ்னம் -பல அர்த்தங்கள் உண்டே)
  • அத: – இச் சொல்லுக்கு ’ஆகையால்’ என்று பொருள். ஆகையால் என்றால் எதனால் என்கிற கேள்வி எழும்.
  • ப்₃ரஹ்ம ஜிஜ்ஞாஸா – ’ப்ரஹ்மத்தைப் பற்றி அறிய ஆசை ’ என்பது இச் சொல்லுக்குப் பொருள் ஆகும்
  • ப்ரஹ்மம் – தானே அளவாலும் குணங்களாலும் பெரியதாக இருப்பதாகவும், தன்னோடு தொடர்புடையவர்களைப் பெரியவராய் ஆக்குவதாகவும் இருக்கும் பொருள் ப்ரஹ்மம் என்று சொல்லப்படுகிறது. உலகத்திலுள்ள அனைத்துப் பொருள்களையும் காட்டிலும் பரமாத்மா பெரியவர், எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறார். அவரிடம் உள்ள கல்யாண குணங்களுக்கும் எல்லையுமில்லை , எண்ணிக்கையுமில்லை . தன்னைப் பற்றின பக்தர்களையும் தன் அளவுக்கு உயர்த்தி, வைகுந்தத்தில் அமர்த்துகிறார் பரமாத்மா. எனவே அவரைத் தான் ப்ரஹ்மம் என்ற சொல் குறிக்கிறது.(ப்ரஹ்ம ஸப்தேந ச ஸ்வ பாவதோ நிரஸ்த நிகில தோஷோ அனவதிக அதிசய அஸங்க்யேய கல்யாண குண கண புருஷோத்தம அபி கீ யதே வந்தேறி அல்ல இயற்கையிலே உள்ளவை–ஸர்வத்ர ப்ருஹத்வ குண யோகேந ஹி ப்ரஹ்ம ஸப்தேப்ருஹத்வம் ச ஸ்வரூபேண குணைஸ் ச-யத்ர அனவதிக அதிசயம் ஸோ அஸ்ய முக்யோர்த்த ஸ ச ஸர்வேஸ்வர ஏவ-ஸ்வரூபமும் ரூபமும் ஒப்பற்றகாக இருக்கும்-இன்றியமையாத தன்மை இயல்பு -ஸ்வரூபம்)
  • ஜிஜ்ஞாஸா – அறிய வேண்டும் என்கிற ஆசை . இங்கு எவ்விதமான அறிவு சொல்லப்படுகிறது? வெறும் ஒரு முறை ப்ரஹ்மத்தைப் பற்றி கேட்பதோ , அவரைக் காண்பதோ அல்ல -. விசாரம் அதாவது ஆராய்ச்சி வடிவமான ஜ்ஞாநம் தான் இங்கு சொல்லப்படும் அறிவு. எனவே , ’ஆராயச்சியில் ஆசை ’ என்பது தேரிய பொருள் ஆகும்
  • இந்த மூன்று சொற்களையும் சேர்த்தால், “அடுத்து ஆகையால் ப்ரஹ்மத்தைப் பற்றின ஆராய்ச்சியில் ஆசை ” என்று கிடைக்கிறது. இது முழுமை அடையாமலிருக்கிறபடியால், (கர்தவ்ய:) அதாவது“செய்யப்பட வேண்டும்” என்கிற சொல்லை நாம் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதற்கு அத்₄யாஹாரம் என்று பெயர்.-ஆர்வத்துடன் ப்ரஹ்ம விசார கர்தவ்யம் என்றபடி
  • எனவே ஸூத்ரத்தின் பொருள் – அடுத்து ஆகையால் ப்ரஹ்மத்தைப் பற்றின விசாரத்தை ஆசையோடு செய்ய வேண்டும்

எதற்குப் பின் ப்ரஹ்ம விசாரம் செய்ய வேண்டும்?

  • அத ₂ என்ற சொல் ’அடுத்து’ என்கிறது. எதற்கு அடுத்து என்று ஆராய்வோம்.

வ்யாசக்₂யு: கேபி தாப த்ரய ஹதிம் இதரே ஸாத₄நாநாம் சதுஷ்கம்
காண்டே₃ஸ்மிந் பூர்வ வ்ருத்தம் கத₂யதி நிக₃ம: கர்ம சிந்தாப₂லம் தத் |
ஸ அங்கா₃தீ₄திர்ஹி ஸூதே விசயம் அவஸர: க்வாத்ர தந்த்ராந்தராதே₃:
ஔசித்யஸ்தா₂பிவதோயம் க்ரம இஹ ந புந: சோத₃நா ஸம் ப்ரயுக்த: ||

  • சிலர் தாப த்ரய ஹதிம் இதரே-உலகத்தில் (ஆத்யாத்மிகம் ஆதி பவ்திகம் ஆதி தெய்விகம்)மூன்று விதமான தாபங்களால் பாதிக்கப்பட்ட பிறகு என்கிறார்கள்.
    சிலர் இதரே ஸாத₄நாநாம் சதுஷ்கம்-ஸாத₄ந சதுஷ்டயம் எனப்படும் நான்கு தகுதிகள் ஏற்பட்ட பிறகு என்கிறார்கள்.-அவையாவன –
    (1) நித்ய அநித்ய வஸ்து விவேக: –உலக பொருள்களில் எது நித்யமானது எது அநித்யமானது என்ற பகுத்தறிவு
    (2) சமம் தமம் – வெளிப் புலன்கள் மற்றும் மனதை அடக்குவது
    (3) இஹ அமுத்ர ப₂ல போ₄க₃ விராக₃: – இம்மையிலும் மறுமையிலும் பெரும் இன்பங்களில் பற்றின்மை
    (4) முமுக்ஷுத்வம் – ஸம்ஸாரத்திலிருந்து மோக்ஷம் அடைய வேண்டும் என்கிற ஆசை .

காண்டே₃ஸ்மிந் பூர்வ வ்ருத்தம் கத₂யதி நிக₃ம: |-இந்த கேள்விக்கான விடையை வேதமே வழங்குகிறது –

பரீக்ஷ்ய லோகாந் கர்ம சிதாந் ப்₃ராஹ்மண : நிர்வேத₃ம் ஆயாத் நாஸ்தி அக்ருத: க்ருதேந
தத்₃விஜ்ஞாநார்தம் ஸ கு₃ருமேவ அபி₄க₃ச்சே₂த்.ஸமித் பாணிம்
ஸ்தோத்ரியம் ப்ரஹ்ம நிஷ்டம்

கர்மங்களால் அடையப்படும் பயன்களை ஆராய்ந்து பார்த்து இந்த முடிவுக்கு வரக் கடவன் – கர்மங்களால் நிரந்தரமான ஸுகத்தை அடைய முடியாது என்று. (ஓட்டைப்படகு என்றே வேதம் இவற்றைக் கூறும்)அதன் பிறகு ப்ரஹ்மத்தை அறிய குருவை அணுக வேண்டும்.

எதற்காக வேதத்தின் பொருளில் ஆராய்ச்சி?

  • ஜிஜ்ஞாஸாதிகரணத்தில் “ அதா₂தோ ப்₃ரஹ்ம ஜிஜ்ஞாைா” என்னும் ஸூத்ரத்தில் அத₂ என்ற சொல் ’அடுத்து’ என்று பொருள் உடையது. யோசித்துப் பார்த்தால் “கர்ம விசாரம் செய்த பிறகு” என்கிற பொருளை அறியலாம்.
  • ப்ரஹ்ம விசாரம் செய்வதற்கான சூழ்நிலை எப்படி உருவாகிறது என்பதைப் பார்ப்போம் –
  • 1-வேதத்தைக் கற்க வேண்டும் என்னும் கட்டளை யுள்ளது. அதனால் வேதத்தை ஒருவன் அத்யயனம் செய்கிறான், அதாவது ஆசார்யன் சொல்லச் சொல்லத் திரும்பச் சொல்கிறான். அதன் மூலம் வேதம் என்னும் மூல நூலை மனப்பாடம் செய்து விடுகிறான்.
  • 2-அதன் கூடவே ஸம்ஸ்க்ருத பாஷை , இலக்கணம் முதலானவற்றையும் கற்கிறான். அதனால் வேதத்தைக் கற்கும் போதே அதன் பொருளும் மேலோட்டமாக அவனுக்கு புரியத் தொடங்குகிறது. இதை ஆபாத ப்ரதீதி என்பர்கள்.
  • 3-அதில், சில கர்மங்கள் நிலை நில்லாத பயன்களையும், சில நிரந்தரமான பயனையும் தரும் என்று தோற்றுகிறது.-ப்ரஹ்மத்தைத் த்யானித்தால் நிரந்தரமான பயன் கிடைக்கும் என்றும் தோற்றுகிறது. ஆனால் மேலோட்டமான புரிதல் மட்டும் இருந்தால், பல ஸந்தேஹங்கள் மனதில் தோன்றும். அதன் மூலம் எந்த உறுதியான முடிவையும் எடுக்க இயலாது.
  • 4-எந்த ஒரு ஆத்மாவுக்கும் ஒரே குறிக்கோள் – எல்லை யற்ற முடிவற்ற ஆநந்தத்தை அடைய வேண்டும் என்பதே . அதற்கான சிறந்த வழி எது என்று முடிவு செய்வதற்கு தனக்குள்ள ஸந்தேஹங்களைப் போக்கிக் கொள்ள வேண்டும். அதற்குக் கண்டிப்பாக முழுமையாக வேதத்தின் பொருளை ஆராய்ச்சி செய்து தான் ஆக வேண்டும்.
  • 5-இந் நிலையில் கர்மங்களைச் சொல்லும் கர்ம காண்டத்தை முதலில் ஆராய்வானா? அல்லது ப்ரஹ்மத்தைச் சொல்லும் ப்ரஹ்ம காண்டத்தை (உபநிக்ஷத்தை ) முதலில் ஆராய்வானா?

கர்மங்ளின் ஆராய்ச்சிக்குப் பின் ப்ரஹ்மத்தின் ஆராய்ச்சி

  1. ப்ராவண்யம் ப்ராக் த்ரிவர்கே ₃ ஸப₂ல யதநதா உபாஸந அங்க₃த்வதோபி
    வ்யாக்₂யாரூ பேத்ர ஸாஸ்த்ரே க்ரம நியதிரஸவ் ஸ்யாச்ச முக்₂ய க்ரமேண

    எந்த ஒரு மனிதனுக்கும் பல ஜந்மங்களாக தர்மம் அர்த்தம் காமம் என்ற மூன்று புருஷார்த்தங்கணை அநுபவித்தே பழக்கமான படியால், அதைத் தரும் கர்மங்கள் பழக்கமானவை . எனவே முதலில் கர்ம காண்டத்தை ஆராய்வான்-கர்ம யோகம் உபாசனத்துக்கு அங்கமாகவும் உள்ளதால் அத்தை முதலில் ஆராய வேண்டுமே-. மேலும், மீமாம்ஸை என்கிற ஆராய்ச்சி நூல் வேதம் என்கிற மூல நூலின் வ்யாக்₂யானம் (உரை ) தான். எனவே , மூல நூலில் எந்த வரிசை உள்ளதோ அதன்படி தானே உரையை வாசிக்க முடியும். வேதத்தில் முதலில் கர்ம காண்டம் உள்ளது, பிறகு தான் ப்ரஹ்ம காண்டம். எனவே முதலில் கர்ம காண்டத்தை ஆராயத்தான் முயல்வான்.
  2. கர்ம காண்டத்தின் பொருளை ஸந்தேஹத்துக்கு இடமில்லாமல் ஆராய்ந்து நிரூபிப்பதற்குத் தான் ஜைமிநி மஹரிஷி கர்ம மீமாம்ஸை என்னும் கர்ம விசார நூலை இயற்றியுள்ளார். எனவே அதைத் தான் முதலில் பயில்வான். அதன் முடிவில் இந்த புரிதல் வருகிறது – நாம் செய்யும் கர்மங்களால் நிரந்தர ஸூகமான மோக்ஷத்தை அடையவே முடியாது என்று.
  3. அப்போது தான் த்யானம் செய்தால் மோக்ஷத்தை அடையலாமா என்று அறிவதற்காக மீதமிருக்கும் பகுதியான உபநிக்ஷத்துக்களை ஆராயக் கூடிய ப்ரஹ்ம மீமாம்ஸா எனப்படும் ப்ரஹ்ம விசாரத்தில் இழிகிறான். அதற்காக ஒரு குருவிடம் கண்டிப்பாகச் சென்று உபதேசங்களைப் பெற வேண்டும் என்று உபஷிநத் கட்டளை இடுகிறது.
  4. இதைத் தான் போதாயநர் தன்னுடைய வ்ருத்தி என்னும் நூலில் (வ்ருத்தாத் கர்மாதி₄க₃மாத் அநந்தரம் ப்ரஹ்ம விவிதி₃ஷா ) அதாவது “கர்ம விசாரம் முடிக்கப்பட்ட பிறகு ப்ரஹ்மத்தை ஆராயும் ஆசை ஏற்படுகிறது” என்கிறார். இதுதான் ’ அத₂’ என்ற சொல்லின் பொருள் ஆகும்.
  5. அத: (ஆகையால்) என்ற சொல்லின் பொருள் – “கர்மங்கள் நிரந்தர ஸூகத்தை அளிக்காது என்ற புரிதலால்”

இரண்டு மீமாம்ஸைகளும் ஒரே நூல் தான்

  • ஜைமிநி மஹரிஷி எழுதிய கர்ம மீமாம்ஸை என்னும் நூலை முதலிலும், அதற்குப் பின் வேத வ்யாஸர் இயற்றிய ப்ரஹ்ம மீமாம்ஸை என்னும் நூலையும் படிக்க வேண்டும் என்று பார்த்தோம். உண்மையில் இணவ இரண்டும் வெவ்வேறு நூல்களே அல்ல, மீமாம்ஸை என்பது ஒரே நூல், அதில் கர்மம் என்றும் ப்ரஹ்மம் என்றும் இரண்டு
    பகுதிகளே உள்ளன என்பது பெரியோர்களின் கருத்து.
  • இரண்டு புத்தகங்களைக் கண்டால் இவை ஒரே நூலா அல்லவா என்று எப்படி முடிவு செய்யலாம்?
  • ஒரே புத்தகமாக அச்சிடப்பட்டிருக்க வேண்டுமே -என்னில் தேவையில்லை . பெரிய ஒரு நூலை இரண்டு பகுதிகளாகப் பிரித்தும் அச்சிடுவதைக் காண்கிறோமே .
  • ஒரே பெயர் இருக்க வேண்டுமே -என்னில் தேவையில்லை . பகவத் கீதை போல், ஒரு நூலில் ஒவ்வொரு அத்யாயத்துக்கும் வெவ்வேறு பெயர் இருப்பதுபோல் அந்தந்தப் பகுதிக்கு ஒரு பெயர் இருக்கலாமே .
  • ஒரே விக்ஷயத்தைப் பற்றிப் பேச வேண்டுமா? தேவையில்லையே . ஒரே நூலின் வெவ்வேறு பகுதிகள் வெவ்வேறு விஷயங்களைப்பற்றிப் பேசலாமே .
    எனவே இங்கும் கர்மம் ப்ரஹ்மம் என்று இரு வேறு விக்ஷயங்களைப் பேசினாலும் குறையில்லை .
  • ஒரே ஆசிரியர் இருக்க வேண்டுமா? அதுவும் தேவை யில்லை . காத₃ம்ப₃ரீ முதலான பல நூல்கள் பல ஆசிரியர்களால் சேர்ந்து இயற்றப் பட்டிருப்பதைக் காண்கிறோம். எனவே இங்கும் ஜைமிநி வ்யாஸர் என்று இரண்டு ஆசிரியர்கள் இருப்பதில் தவறில்லை .
  • ஒரே நூலாய் இருக்க ஒரே தேவை தான் – தொடர்ச்சி இருக்க வேண்டும். அது இங்கு உள்ளது. கர்ம மீமாம்ஸை எந்தப் புள்ளியில் முடிகிறதோ அங்கிருந்தே ப்ரஹ்ம மீமாம்ஸை தொடங்குகிறது. எனவே இது ஒரே நூல் தான்.ஸம் ஹிதம் -சங்கத விசிஷ்டேன -தொடர்பு உள்ளதால் ஒரே நூலே-
  • இத்தால், கர்மம் த்யாநம் எனும் இரண்டுக்கும் முரண்பாடு இல்லை- இரண்டுமே நம் வாழ்க்கையில் இன்றியமையாதவை என்று தெரிகிறது.
  • அதாதோ தர்ம ஜிஜ்ஞாஸா -ஜைமினியின் முதல் ஸ்தோத்ரத்துடன் ஒவ்வொன்றுக்கும் நன்றாகக் பொருந்தி உள்ளவே-தர்ம விசாரமும் ப்ரஹ்ம விசாரமும் ஒன்றே-ஸித்த தர்மமே ப்ரஹ்மம் –

நாம் பயிலும் முறை சரியா?
வித்₄யுக்த்யா அதீ₄த்ய வேதா₃ந் விதி₄ப₃லவிரதௌ அந்யஜாதே₃வ ராகா₃த்
க்ருத்ஸ்நம் மீமாம்ஸ மாநா: க்ரமத இதி பர ப்₃ரஹ்ம சிந்தாம் தரந்தி |
ப்ராப்வத துர்யே யுகே₃ஸ்மின் பரிமித ப₃ல தீ₄ ப்ராண தத்₃விக்₄ந த்₃ருஷ்ட்யா
கால ஷேப அக்ஷமத்வாத் கதி சந க்ருதிந: சீக்₄ரம் அந்தே ரமந்தே ||

  • பகவானின் ஆணையால் வேதத்தைப் பயில்கிறான்; அதன் பின் தனக்கே அதன் பொருளை ஆராய வேண்டும் என்னும் ஆசை பிறந்து முழு வேதத்தையும் ஆராய்கிறான் – முதலில் கர்ம விசாரம் பின் ப்ரஹ்ம விசாரம் என்ற வரிசையில். இது தான் பொதுவாக ப்ரஹ்ம விசாரம் செய்யச் சரியான வழி. ஆனால் நாம் இப்படிச் செய்ய வில்லையே ? அது தவறா?
  • அல்ல என்கிறார்கள் ஆசார்யர்கள் – கடைசி யுகமான கலியுகத்தில்-(பரிமித ப₃ல தீ₄ ப்ராணதத்₃விக்₄ந த்₃ருஷ்ட்யா )பலம், புத்திக் கூர்மை மற்றும் ஆயுஸ் குறைந்து விட்டபடியாலும், தடைகள் (விக்நங்கள்) அதிகமானபடியாலும், காலம் தாழ்த்த மனமில்லாமல் சில (க்ருதிந )பாக்ய சாலிகள் நேரடியாக இறுதிப் படியான ப்ரஹ்ம விசாரத்திலேயே இழியலாம், இதில் தவறில்லை .( சீக்₄ரம் அந்தே ரமந்தே-விரைவில் ஆனந்தமும் அடைகிறார்கள்)
  • எனவே , ப்ரஹ்மத்தைப் பற்றி அறிவதன் மூலம் மட்டுமே மோக்ஷம் எய்த முடியும் என்பதால், அவ் வறிவை ஸந்தேஹத்துக்கு இடமின்றி நமக்கு அளிக்கும் ப்ரஹ்ம விசாரத்தை ஆசைப்பட்டுச் செய்ய வேண்டும் என்று வேத வ்யாஸர் இந்த முதல் ஸூத்ரத்தில் கூறுகிறார்.
  • ஆத்மாவா அரே த்ரஷ்டவ்யா: ஸ்ரோதவ்ய: மந்தவ்ய: நிதித்யாஸிதவ்ய ஸ்ரோதவ்ய:- கேட்டு -ஆணை அல்ல -ஆசையுடன் ஸ்ரவணம் செய்ய வேண்டும் மந்தவ்ய: நிதித்யாஸிதவ்ய-மனனம் மந்தவ்ய -இவற்றையும் ஆணையிட முடியாது -ராகம் தூண்ட செய்ய வேண்டும் த்யானம் ஒன்றே கட்டளை-ப்ரீதி பூர்வகமாக அநவரதம் த்யானம் பண்ணி ம்ருத்யு சம்சாரம் போக்கி – உபாஸ்ய -பரமாத்மாவை அடைந்து பரம புருஷார்த்தம் பெற வேண்டும்
  • இனி, இந்த ஸூத்ரத்தில் ஸந்தேஹம் என்ன? பூர்வ பக்ஷம் என்ன? ஸித்தாந்தம் என்ன? என்று பார்க்கலாம்.
  • ஸ்ரவணம்–மனனம் -த்யானம்
  • ஆச்சார்யர் உபதேசம் கேட்டு
  • ப்ரஹ்ம விசாரமாவது உபநிஷத்துக்கள் அர்த்தங்கள் ஆராய்ச்சி -இதுவே மனனம் -பின்பு -த்யானம்
  • ஆஸ்திக தர்சனம்
  • மதங்கள் வேறே தர்சனங்கள் வேறே
  • உலகம் பற்றிய எண்ணமே தர்சனம் –
  • மீமாம்ஸா தர்சனம் -கர்ம காண்டத்துக்கு முக்கியம்
  • பிரபாகரர் குரு -அவலம்பித்தவர்கள் இங்கு பூர்வ பஷீ

ப்ராபாகரர்களின் ஆஷேபம்
சாஸ்த்ரத்தையே தொடங்க வேண்டாம் என்று ஆஷேபம்
இது வரை முதல் ஸூத்ரத்தின் சொற்களுக்கான பொருள் என்ன என்று பார்த்தோம். இனி, இந்த ஸூத்ரத்தின் மூலம் யாருடைய எந்தக் கேள்விக்கு வ்யாஸர் பதில் சொல்கிறார் என்று பார்க்கலாம்.

  • விஷயம் – இந்த ஜிஜ்ஞாஸாதிகரணத்தின் விஷயம் “ப்ரஹ்ம மீமாம்ஸை ” அதாவது உபநிஷத்துகளின் பொருள் என்கிற உயர்ந்த விஷயத்தைப் பற்றின ஆராய்ச்சி (அல்லது ப்ரஹ்மம் என்கிற உயர்ந்த விஷயத்தின் ஆராய்ச்சி).
  • ஸந்தேஹம் – ப்ரம்ஹத்தைப் பற்றின விசாரத்தைத் துவங்க வேண்டாமா? துவங்க வேண்டுமா?
  • பூர்வ பக்ஷம் – ப்ரஹ்மத்தைப் பற்றி அறிய உபநிஷத்தின் பொருணை ஆராய்ந்து பயனில்லை , ஏன் எனில் உபநிஷத்துகளால் ஸித்த வஸ்துவான ப்ரஹ்மத்தைப் பற்றி போதிக்கவே முடியாது.
  • இந்த அதிகரணத்தின் பூர்வபக்ஷீ (எதிர் வாதம் செய்பவர்) மீமாம்ஸை என்ற ஸித்தாந்தத்தை ஏற்பவர்களில் ஒரு குழுவான ப்ராபாகரர்கள். இங்கு மீமாம்ஸை என்பது வேதத்தின் கர்ம காண்டத்தையே முக்கியமாகக் கொண்டு வேதாந்தத்தைப் புறக் கணிக்கும் ஒரு ஆஸ்திக தர்சனம்.
  • இவர்களது வாதம் இவ்வாறு –
  • வேதாந்தம் ப்ரஹ்மத்தைப் பற்றி அறிவிக்க முடியாது
  • ஏன் எனில், ஸித்தமான (முன்னரே தயாராக இருக்கும்) ஒரு பொருளைப் பற்றி மட்டும் பேசும் வாக்கியம் அறிவை ஏற்படுத்த முடியாது. செய்யப்பட வேண்டிய ஒரு செயல் (கார்யம்) அந்தச் சொற் தொடரில் இருக்க வேண்டும்.
  • ஏன் எனில், சொல்லுக்கும் பொருளுக்கும் உண்டான தொடர்பு (சக்தி) அறியப்படும் போது, அது ஸித்தமான பொருளோடு அறியப் படுவதில்லை , கார்யத்தோடு தொடர்பு பட்ட பொருள்களில் தான் அறியப் படுகிறது.
  • ஏன் எனில், வ்ருத்த வ்யவஹாரம் (ஒருவர் ஆணையிட மற்ற ஓருவர் அதைச் செய்வது) என்பதைப் பார்ப்பதன் மூலம் மட்டும் தான் சக்தியை அறிய முடியும், எனவே அதில் கார்யம் இன்றியமையாதது.

ஹரி -13 அர்த்தங்கள் -நாராயணன் ஸிம்ஹம் குரங்கு போல்வன-ஸக்தி சப்தத்துக்கும் அர்த்தத்துக்கும் -தொடர்பை அறியும் பொழுது செயலுடன் சேர்ந்த ஒன்றாகவே இருக்க வேண்டும் –ஸக்தி க்ரஹம் -அதைப் பற்றிய அறிவு அப்பொழுது தான் ஏற்படும் என்பர்
ப்ரஹ்மம் ஸித்த வஸ்து –
மாட்டை அழைத்து வா -சொல்லவும் -கொண்டு வரப் பார்த்து -குழந்தை அறிகிறது
மாட்டை கட்டு என்றதும் அதையும் அறிகிறது குழந்தை
இதே போல் குதிரையை அழைத்து வா குதிரையைக் கட்டு இவற்றைக் கேட்டு செய்த செயல்களைப் பார்த்து அறிகிறது
பெயர்ச் சொல்லுகளுக்கும் வினைச் சொல்லுகளுக்கும் இவ்வாறே அறிகிறது –
ஸ்ரீ ரெங்கத்தில் அரங்கன் பள்ளி கொண்டுள்ளார் -ஆச்சார்யர் சொல்ல ஒன்றுமே செய்யாத சிஷ்யர் –குழந்தைக்கு ஒன்றுமே அறிய இயலாதே-

அயோத்யையில் ராமர் இருக்கிறார் -நாம் அறிகிறோமே -அறிவே வராது என்று சொல்ல வில்லை-நீ போய் தர்சிப்பாய் -என்று சேர்த்துக் கொள்ள வேண்டும் –
வயலிலே மாடு மேய்ந்து கொண்டு உள்ளது -தனித்துப் பார்க்காமல்-மாட்டை அழைத்து வா -மாட்டைக்கட்டு என்பவற்றைச் சேர்த்தே முழுமையான ஞானம் வரும்-கர்மகாண்டத்துக்கு இந்த ஆஷேபம் வராது -ஜ்யோதிஷ்ட ஹோமம் செய் -பேசுவதால் ஞானம் ஏற்படுகிறது என்பர்-

மீமாம்ஸகர்
ப்ராபகரர்
பாட்டர்
மண்டல மிஸ்ரர் -மூன்று சித்தாந்தங்கள்

வேதாந்தத்தின் ஆற்றலை நிரூபித்தல்

வேதாந்தம் ப்ரஹ்மத்தை போதிக்கும் ஆற்றல் கொண்டது

  • எந்த ஒரு சொற் தொடரும் ஸித்தமான ஒரு பொருளைப் போதிக்க முடியாது, ஆகையால் வேதாந்தம் கொண்டு ப்ரஹ்மத்தை அறிய இயலாது என்பது ஜிஜ்ஞாஸாதிகரணத்தில் ப்ராபாகரர்கள் செய்த ஆஷேபம். அதற்கு பதில் உரைக்கத் தான் வேத வ்யாஸர் ’
    அதா₂தோ ப்₃ரஹ்ம ஜிஜ்ஞாஸா’ என்ற ஸூத்ரம் அமைத்து, ப்ரஹ்ம விசாரம் செய்யப்பட வேண்டியது தான் என்று நிரூபிக்கிறார்.
  • பூர்வபக்ஷியின் வாதத்தை மூன்றாகப் பிரித்துக் கொள்கிறார் பகவத் ராமாநுஜர் –
  1. வ்ருத்த வ்யவஹாரம் தவிர வேறு எந்த முறையிலும் சொல்-பொருள் தொடர்பு ( சக்தி) அறியப்பட முடியாது
  2. வ்ருத்த வ்யவஹாரம் கார்யத்தோடு தொடர்புபட்ட பொருளில் தான் சக்தியை அறிவிக்கும், ஸித்தப் பொருளில் அல்ல
  3. எனவே வேதாந்தத்தில் கார்யம் எதுவும் சொல்லப் படாதபடியால் அது ஸித்தமான ப்ரஹ்மத்தை மட்டும் போதிக்காது
  • இனி இப் பகுதிகளுக்கான பதில்களை வரிசையாகப் பார்ப்போம் –

ஒருவர் ஆணையிட மற்ற ஓருவர் செயல் படுவதைப் பார்த்து மட்டும் தான் சக்தியை அறியலாம் என்பது தவறு.
i. சிறு குழந்தைக்கு தாய் தந்தையர் விரலால் ஒவ்வொரு பொருளையும் காட்டிக் காட்டி, ’இது அம்மா’’இது சந்திரன்’’இது மாடு’’இது மரம்’ என்று பல முறை சொல்லுகிறார்கள். காலப் போக்கில், குழந்தையும் அந்தச் சொற்களைக் கற்றுக் கொள்கிறது. பிறகு, அந்தந்தப் பொருளைப் பார்க்கும் போது அந்தந்தச் சொல்லும், அந்தந்தச் சொல்லைக் கேட்கும் போது அந்தந்த பொருளும் தனக்குத் தோற்றுவதைப் பார்த்து அக் குழந்தை
புரிந்து கொள்கிறது – ’இந்தச் சொல் இந்தப் பொருளைப் பற்றின அறிவை ஏற்படுத்தும் சக்தி உடையது’ என்று.
ii.சற்று வளர்ந்தவுடன் , விரலால் சுட்டுவதை நிறுத்தி விட்டு, குழந்தைக்குத் தெரிந்த சொற்களைக் கொண்டே தெரியாத பொருள்களை அறிவிக்கிறார்கள். ’அந்த மரத்தின் மேல் இருப்பது தான் குரங்கு’–வானத்தில் பரக்கிறதே அதுதான் விமானம்’ என்னும் சொற் தொடர்களிலிருந்தே குழந்தை சக்தியை அறிந்து கொள்கிறது.
இம் முறைகளில் செயல் எதுவும் இல்லை , ஸித்தமான பொருளிலேயே குழந்தை சொல்லின் சக்தியை அறிகிறது.

சம்பந்தம்- உள்ள சொற்கள் அம்மா அப்பா போல்வன-பொதுவான சந்திரன் போன்றவை -இரண்டு வர்க்கங்கள்-அங்குல்யா நிர்திஸ்ய நிர் திஸ்ய -பஹு நாளாக கேட்ட பின்பு-பின்பு கையாலே காண்பிக்காமல்-சொல்லச் சொல்ல -ப்ரஸித்த வாக்ய-
வார்த்தைகளை நினைத்து -பின்பு-வ்யக்தியைப் பார்த்து -தொடர்பு -சக்தி ஞானம் குழந்தைக்கு உண்டாகும்-வியாகரணம் -ஆண் பால் -எடுத்துக்காட்டு -கோஸம் -dictinary -ஆப்த வாக்யம் -போன்ற பல வழிகளால் ஞானம் ஏற்படும் –வ்ருத்த வியவஹாரம் ஒரு வழி

மேல் ஆச்சார்யர் சிஷ்யன் குழந்தை தேவதத்தன் ஆகிய நால்வரைக் காட்டி செயல்கள் இல்லாத ஞானமும் ஏற்படுவதைக் காட்டுகிறார்-ஹஸ்த சேஷ்டை மூலமும் சொல்வதை அறியலாம்

வ்ருத்த வ்யவஹாரத்தால் கார்யத்தோடு தொடர்புபட்ட பொருளில் மட்டும்தான் சக்தியை அறிய முடியும் என்பதல்ல
எடுத்துக்காட்டு – ஓர் ஆசார்யன் ஒரு சீடனிடம் ஆணையிட்டார் – “உன் தந்தை நலமாக உள்ளார்” என்று தேவதத்தனிடம் சொல் – என்று. அச்சீடன் ஓடிப்போய் தேவதத்தனிடம் செய்கைகளின் மூலம் அதை அறிவித்தான்.
இதைப் பார்த்துக் கொண்டிருந்த ஒரு குழந்தை , அச்சீடன் செய்த செய்கைகளின் மூலம் அர்தத்தைப் புரிந்து கொண்டு, ஆசார்யன் சொன்ன வாக்கியத்திற்கு அது தான் பொருளாக இருக்க வேண்டும் என்று தெரிந்து கொள்ளலாமே
இவ்விடத்தில் கார்யம் எதுவும் இல்லை , தந்தையின் நலம் என்ற ஸித்தமான பொருள் தான் சொல்லப் பட்டுள்ளது,-ஆனால் குழந்தைக்கு சக்தி ஜ்ஞாநம் ஏற்படுகிறதே . எனவே வ்ருத்த வ்யவஹாரம் மூலமும் ஸித்தமான பொருளில் சொல்லின் சக்தியை அறியலாம்.
இவ்வாறு ஸித்தமான பொருளிலும் சக்தியை அறிய முடியும் என்பதால், வேதாந்தம் ஸித்தமான ப்ரஹ்மத்தைப் பற்றி அறிவிக்க வல்லதே என்று நிரூபித்தார் வேத வ்யாஸர்.

வ்ருத்த வியவஹாரத்தில் செயல் இல்லாவிட்டாலும் ஞானம் ஏற்படுமே-அத்தையும் காட்டுகிறார்

  1. ஒரு வேளை பூர்வபக்ஷி சொன்னது போல் கார்யம் இருந்தால் மட்டும் தான் ஒரு சொற் தொடர் பொருள் அளிக்கும் என்பதை ஒப்புக் கொண்டாலும் கூட, வேதாந்தம் ப்ரஹ்மத்தை போதிக்க முடியும் என்றும் நாம் நிரூபிக்கலாம்.
    ’வயலில் மாடு உள்ளது’-அதை அழைத்து வா’ என்று ஆசார்யன் சொன்னால், ஸித்தமான பொருளைச் சொல்லும் முதல் சொற் தொடர் தனியே அறிவை ஏற்படுத்தாது, இரண்டாவது சொற் தொடரில் உள்ள செயலோடு தொடர்பு உள்ள படியால் தான் போதிக்கும் என்றார் ப்ராபாகரர்.
    அதே போல் வேதாந்தத்திலும் ’ப்ரஹ்மத்தை த்யானிப்பாய்’ என்று ஆணையிட்டுவிட்டு, பிறகுதான் ’ப்ரஹ்மம் இப்படிப்பட்டது’ என்று ஸித்தமான ப்ரஹ்மத்தைச் சொல்லும் வாக்கியங்கள் உள்ளன. எனவே அவையும் த்யானம் என்ற செயலோடு தொடர்புபட்ட ப்ரஹ்மத்தைத் தான் சொல்லுகின்றன.-ஆக இவ்வாறு, ஜிஜ்ஞாஸாதிகரணத்தில் ப்ரஹ்ம விசாரம் செய்யப்பட வேண்டியதே என்று நிரூபிக்கப்பட்டது.

நீ சொல்வதை ஒத்துக் கொண்டு– முதல் வாக்யம் செயல் இல்லாமலும் -இரண்டாவது வாக்யத்தில் செயல் -ஆணை விதிகள் உள்ளனவே-வேதாந்தத்தில் த்யானம் உபாஸனம் தியானம் போன்ற செயல்கள் உள்ளனவே-மாடு வயலில் உள்ளது -ஸித்த வாக்கியம் சொல்லி மேல் மாட்டை அழைத்து வா -சொல்வது போல்-கர்ம காண்டத்திலும் ஸ்வர்க்கம் இப்படி இருக்கும் சித்த வாக்கியம் சொல்லி ஜ்யோதிஷடஹோமம் அத்தை அடையலாம் -என்பது போல் இங்கும் உண்டே-

———–

1.1.2 ஜந்மாத்யதி₄கரணம்
ப்ரஹ்மத்துக்கு இலக்கணம் உண்டா?

ப்ரஹ்மத்திற்கு இலக்கணம் ஏன் தேவை ?

ஜிஜ்ஞாஸாதிகரணத்தில் – உபநிஷத்துகள் ப்ரஹ்மத்தைச் சொல்ல வல்லவை தான், எனவே ப்ரஹ்மத்தைப் பற்றின ஆராய்ச்சியைச் செய்ய வேண்டும் என்று வ்யாஸர் கூறினார். அப்போது ஒரு கேள்வி எழுகிறது – ஆராயப் பட வேண்டிய ப்ரஹ்மம் யார் என்று துல்யமாக அறிந்தால் தானே அவரை ஆராய முடியும். அந்த ப்ரஹ்மத்துக்கு இலக்கணம் உண்டா? என்று. அதற்கு பதிலளிக்கிறார் “ஜந்மாத்யதி₄கரணம்” என்ற இரண்டாம் அதிகரணத்தில். இதுவே ஸங்கதி (தொடர்பு)

ஒரு பொருணை அடையாளம் காண இரண்டு தேவைகள் – ப்ரமாணம் மற்றும் இலக்கணம் (லக்ஷணம்).-எடுத்துக்காட்டு – ஒரு மாடு (லக்ஷ்யம்) அடையாளம் காணப் பட வேண்டும் என்றால் முதலில் அதைப் பார்ப்பதற்குக் கண் தேவை -. ஆனால் அது மட்டும் போதாது. மாடு என்பது எப்படி இருக்கும், அதன் இலக்கணம் என்ன என்றும் அறிந்திருக்க வேண்டும். அதுபோல், இவர் தான் ப்ரஹ்மம், இவரைத் தான் நாம் ஆராயப் போகிறோம் என்று
உறுதி செய்ய ப்ரமாணம் மற்றும் இலக்கணம் என்று இரண்டும் தேவை -. ஜிஜ்ஞாஸாதிகரணத்தில், ப்ரஹ்மத்தை அறிய வேதாந்தம் தான் ப்ரமாணம் என்று கூறினார். இந்த அதிகரணத்தில் அந்த ப்ரஹ்மத்தின் இலக்கணம் கூறுகிறார்.

(அதிகரணம் 1.1.2) ஜந்மாத்யதிகரண ம் – இதில் ஒரே ஸூத்ரம் தான் உள்ளது – ஜந்மாத் அஸ்ய யத:

அஸ்ய – எண்ணிலடங்காத பலவிதமான சேநர்களும் அசேனப்பொருள்களும் அடங்கிய இந்த ஜகத்தினுணடய ஜந்மாதி₃ – ஜன்மம் (உண்டாக்கம்), ஸ்தி₂தி (நிலைப்பாடு), லயம் (அழிவு) ஆகிய இம் மூன்றும்

யத : – எதனிடமிருந்தோ / எதனாலாலோ [“அதுவே ப்ரஹ்மம்” என்று வாக்கியத்தை முடித்துக் கொள்ள வேண்டும்]

ஆக,
“உலகத்தை யெல்லாம் படைத்தல், காத்தல், அழித்தல் என்ற மூன்றும் தான் ப்ரஹ்மத்தின் இலக்கணம். இம் மூன்று பண்புகளும் யாரிடம் உள்ளனவோ அவரே ப்ரஹ்மம் ஆவார்” என்று இந்த ஸூத்ரத்தின் பொருள் ஆகும்.

இதற்கு மூலம் – தைத்திரீய உபநிஷத்தில் வருணன் தன் மகனாக ப்ருகுவுக்கு ப்ரஹ்மத்தின் இலக்கணத்தை இவ்வாறே கூறினார் –
“யதோ வா இமாநி பூ₄தாநி ஜாயந்தே , யேந ஜாதாநி ஜீவந்தி, யத் ப்ரயந்தி அபி₄ஸம்விசந்தி, தத் ப்₃ரஹ்ம”.

இலக்கணம் சொல்ல இயலாது என்ற பூர்வ பக்ஷம்

  • இந்த அதிகரணத்தில் பூர்வபக்ஷீ கூறுகிறார் – “யதோ வா இமாநி” என்ற உபநிஷத் வாக்கியம் ப்ரஹ்மத்தின் லக்ஷணத்தைச் சொல்லவே முடியாது; இலக்கணம் சொல்ல முடியாத போது அப் பொருணை ஆராய முடியாது; எனவே உபநிஷத்துகளை ஆராயும் இந்த ப்ரஹ்ம மீமாம்ஸை என்ற ப்ரஹ்ம ஸூத்ரங்களைத் தொடங்கவே வேண்டாம்.
  • உலகத்தை யெல்லாம் படைத்தல், காத்தல், அழித்தல் என்ற மூன்றும் தான் ப்ரஹ்மத்தின் இலக்கணம்” என்று சொல்வதில் என்ன தவறு? ஏன் இது ப்ரஹ்மத்தின் இலக்கணமாக முடியாது? என்று நமக்குத் தோன்றும். அதற்கு பூர்வபக்ஷீ மிக அழகாக வருணிக்கிறார்.
  • இவ் விடத்தில் ஒரு முக்கியமான நுட்பத்ணத அறிந்து கொள்வோம். லக்ஷணம் (இலக்கணம்) இரண்டு வகைப்படும் –
  1. விசேஷணம் – லக்ஷ்யத்தின் பகுதியாகவே இருக்கும் அடையாளம்.
    ஒரு காகத்துக்கு அடையாளம் அதன் அலகு, சிறகு, கருப்பு நிறம் முதலானவை . இவற்றைக் கொண்டு காகத்தை அறிகிறோம். இவை என்றுமே காகத்தை விட்டு விலகாது. காகத்தை எப்போதும் இவற்றோடு சேர்ந்து தான் அறிய முடியும். எனவே இப்படிப்பட்ட அடையாளங்கள் விசேஷணம் எனப்படுகின்றன.
  2. உபலக்ஷணம் – லக்ஷ்யத்தைக் காட்டிலும் வேறுபட்டதான அடையாளம்.
    ஒரு க்ராமத்துக்குச் சென்று “இங்கு கண்ணனின் நிலம் எது?” என்று கேட்டேன். “அதோ கொக்கு இருக்கிறதே ,-அதுதான் கண்ணனின் நிலம்” என்று ஒருவர் கூறினார். இவ்விடத்தில், கொக்கு என்னும் அடையாளத்தைக் கொண்டு கண்ணனின் நிலத்ணத அடையாளம் கண்டோம், ஆனால் கொக்கு நிலத்தின் பிரியாத பகுதி அல்ல. அது எப்போது வேண்டுமானாலும் பரந்து சென்றுவிடும். அந்நிலத்தை அறியும் போதெல்லாம் அந்தக் கொக்கோடு சேர்த்து தான் அறியமுடியும் என்பதல்ல. இப்படிப்பட்ட அடையாளமான கொக்கு உபலக்ஷணம் ஆகிறது.

இந்த அதிகரணத்தின் பூர்வபக்ஷீ சொல்லுவது – படைத்தல் காத்தல் அழித்தல் என்ற மூன்றும் விசேஷணம் என்ற வகையைச் சேர்ந்த இலக்கணமா? அல்லது உப லக்ஷணம் என்ற வகையைச் சேர்ந்ததா? எப்படிச் சொன்னாலும் அதில் குற்றம் ஏற்படுகிறது, அதனால் இரண்டுமே பொருந்தாது. எனவே ப்ரஹ்மத்துக்கு இது இலக்கணமாக முடியாது.

பூர்வபக்ஷி சொல்லும் ஒவ்வாமை

  • ஏன் இரண்டு விதமுமே ஒவ்வாது என்று சொல்கிறார் என்று பார்ப்போம் –

உப லக்ஷணம் என்று கொண்டால் – உப லஷணம் சொல்லும் இடங்களில் லக்ஷ்யத்தை நாம் மூன்று நிலைகளில் அறிகிறோம்.
i. முதலில் “நிலம்” என்று பொதுவாக அறிந்தேன். இதுவே பூர்வ ப்ரதிபந்ந ஆகாரம் (முன் அறியப்பட்ட வடிவம்)
ii. அடுத்து “கொக்கு அமர்ந்திருக்கும் நிலம்” என்று உப லக்ஷணத்தை உடையதாக அறிந்தேன்.
iii. இறுதியில் “கண்ணனுடைய நிலம்” என்று அறிந்தேன். இது தான் ’உப லக்ஷ்ய ஆகாரம்” எனப்படுகிறது.
அதுபோல் இவ் விடத்தில் பார்த்தால், படைத்தல் காத்தல் அழித்தல் என்ற உப லக்ஷணங்களைக் கொண்டு ப்ரஹ்மத்தை அறிய வேண்டும் என்றால், அதற்கு முன்னமே ஏதோ ஒரு முறையில் ப்ரஹ்மத்தை அறிந்திருக்க வேண்டும்.
அப்படிப்பட்ட அறிவு உபநிஷத்தில் இல்லை . எனவே இந்தப் பண்புகள் உப லக்ஷணமும் ஆக முடியாது.
இரண்டு வகையுமே இயலாத போது இம் மூன்று பண்புகள் இலக்கணமே அல்ல என்று பூர்வ பக்ஷியின் வாதம்.

விசேஷணம் என்று கொண்டால் – விசேஷணம் என்ற சொல்லுக்கே ’வ்யாவர்தகம்’-அதாவது வேறுபடுத்துவது’ என்று பொருள். “வெள்ளை வேஷ்டி” என்று சொன்னால், இங்கு வெண்மை என்ற விசேஷணம், தான் இருக்கும் வேஷ்டியை மற்ற எல்லாப் பொருள்களிலிருந்தும் வேறுபடுத்திக் காட்டும். இது ஒவ்வொரு விசேஷணத்துக்கும் இயல்பு. எனவே ஒரு சொற் தொடரில் பல விசேஷணங்களைச் சொன்னால்,
ஒவ்வொரு விசேஷணமும் தான் இருக்கும் பொருளை மற்றப் பொருள்களிலிருந்து வேறுபடுத்திக் காட்டுகிறபடியால், இறுதியில் பல பொருள்கள் இருப்பதாகத் தான் ஆகுமே தவிற, ஒரே பொருள் ஆகாது.
அதுபோல் இங்கும் – படைத்தல், காத்தல், அழித்தல் என்று மூன்று பண்புகணை இந்த உபநிஷத் வாக்யம் சொல்லுகிறபடியால், இவை விசேஷணங்கள் என்று கொண்டால், மூன்று ப்ரஹ்மங்கள் தான் கிணடக்குமே தவிற, மூன்று பண்புகள் கொண்ட ஒரு ப்ரஹ்மம் கிடைக்காது! எனவே இப் பண்புகள் விசேஷணங்கள் ஆக முடியாது.

(குள்ளமான பீதாம்பரம் அணிந்த கறுத்த தேவதத்தன் என்றால் மூன்று வ்யக்தி அல்லவே
கண்டோ முண்டோ பூர்ண கொம்புள்ள மாடு -வெவ்வேறே காலத்திலே ஒரே மாட்டுக்கு மூன்று விசேஷணங்களுமே ஒரு வியக்திக்கு ஆகுமே இதற்குப் பரிஹாரம்)

(ஸத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்மம் -கொண்டு அடிப்படையான பூர்வ ப்ரதி பன்ன ஆகாரம் உள்ளதே என்றால்-இங்கும் மூன்று விசேஷணங்கள் உப லக்ஷணங்கள் உள்ளனவே -அதற்கும் பூர்வ ப்ரதி பன்ன ஆகாரம் உண்டே-இப்படிப் போய் கொண்டே இருக்குமே
ஆகவே ப்ரஹ்மதத்துக்கு லக்ஷணம் இல்லை -என்பதே ஆஷேபம் இங்கு)

1.1.2 ஜந்மாத்யதி₄கரணம்
உலகத்தை எல்லாம் படைத்தவரே ப்ரஹ்மம்
படைத்தல் காத்தல் அழித்தல் – ப்ரஹ்மத்தின் லக்ஷணம்

  • 1.1.2 ஜந்மாத்யதி₄கரணம் பூர்வபக்ஷம் –
    “யதோ வா இமாநி” என்ற உபநிஷத் வாக்யம் ப்ரஹ்மத்துக்கு லக்ஷணம் சொல்ல முடியாது; அதில் சொல்லப்படும் படைத்தல் காத்தல் அழித்தல் என்ற மூன்று செயல்களும்
    (1) விசேஷணம் என்று கொண்டால், பல விசேஷணங்கள் உள்ளபடியால் பல ப்ரஹ்மங்களை ஏற்க நேரிடும்
    (2) உபலக்ஷணம் என்று கொண்டால், பூர்வ ப்ரதிபந்ந ஆகாரம் (முன் அறியப்பட்ட வடிவம்) எதுவும் இல்லை
  • ஸித்தாந்தம் – இவற்றுக்கு பதிலளித்து, படைத்தல் முதலானவை தான் ப்ரஹமத்தின் லக்ஷணம் என்கிறார் வ்யாஸர்
  1. படைத்தல் காத்தல் அழித்தல் மூன்றும் ப்ரஹ்மத்திற்கு விசேஷணம் ஆகலாம் என்று நிரூபித்தல்

இங்கோ படைத்தல் காத்தல் அழித்தல் என்ற தொழில்கள் வெவ்வேறு காலங்களில் நடக்கிறபடியால் முரண் இல்லை ,-எனவே இம் மூன்று பண்புகளும் ப்ரஹ்மத்திற்கு லக்ஷணம் ஆக முடியும்.

பூர்வபக்ஷியின் வாதம் – ஒவ்வொரு விசேஷணமும் தான் இருக்கும் பொருளை மற்ற எல்லாப் பொருள்களிலிருந்தும் வேறுபடுத்தும், எனவே பல விசேஷணங்கள் இருந்தால் பல பொருள்களை ஏற்க நேரிடும்.

ஸித்தாந்தம் – இதில் ஒரு சிறிய மாற்றம் தேவை – ஒரு விசேஷணம், தான் இருக்கும் பொருளை மற்ற எல்லாப் பொருள்களிலிருந்தும் வேறுபடுத்தாது; முரண்பட்ட பண்புகளைக் கொண்ட பொருளிலில் இருந்து மட்டுமே வேறுபடுத்தும்.

(எடுத்துக்காட்டு) ’கருப்பான பெரிய மண் குடம்’ என்று சொன்னால் மூன்று விசேஷணங்கள் உள்ளன. ’கருப்பு’ என்றதால் மஞ்சளான வெளுப்பான சிவப்பான பொருள்களிலிருந்து குடம் வேறுபடுத்தப்படுகிறது;
’பெரிய’ என்பதால் சிறிய பொருள்களிலிருந்து குடம் வேறுபடுத்தப்படுகிறது;
’மண்’ என்றதால் தங்கம் வெள்ளி முதலானவற்றிலிருந்து அதே குடம் வேறுபடுத்தப் படுகிறது. எனவே இங்கு மூன்று குடங்கள் அல்ல, ஒரே குடம் தான்.

எவ்விடத்தில் முரண்பட்ட பல விசேஷணங்கள் சொல்லப்படுகின்றனவோ , அங்கு தான் பல பொருள்களை ஏற்க வேண்டும் – ’மொட்டைக் கொம்போடு அரைக் கொம்போடு முழுக் கொம்போடு உள்ள மாடு’ என்பது போல்.

இங்கோ படைத்தல் காத்தல் அழித்தல் என்ற தொழில்கள் வெவ்வேறு காலங்களில் நடக்கிறபடியால் முரண் இல்லை ,-எனவே இம் மூன்று பண்புகளும் ப்ரஹ்மத்திற்கு லக்ஷணம் ஆக முடியும்.

  1. உபலக்ஷணம் ஆகலாம் என்று நிரூபித்தல்
  • பூர்வபக்ஷம் – முதலில் ’நிலம்’ என்று அறிந்தால் தான், பிறகு கொக்கு என்ற அணடயாளம் கொண்டு அதை ’கண்ணனின் நிலம்’ என்று அறிய முடியும். அதுபோல் படைத்தல் முதலானவற்ணறக் கொண்டு ப்ரஹ்மத்தை அடையாளம் காண்பதற்கு முன் ப்ரஹ்மம் ஏதோ ஒரு விதத்தில் அறியப் பட்டிருக்க வேண்டும். ஆனால் அப்படி ப்ரஹ்மம் அறியப்படவில்லை
  • ஸித்தாந்தம் – ப்ரஹ்மம் முன்னமே அறியப்பட்டது தான்.சாந்தோக்ய உபநிஷத்தில் ’ஸதே₃வ ஸோம்ய இத₃ம் அக்₃ரே ஆஸீத் ஏகமேவ அத்₃விதீயம்’ என்ற வாக்யம் நமக்கு ப்ரஹ்மத்தை அறிமுகப் படுத்தியுள்ளது.
  • இந்த வாக்கியத்தின் பொருள் – “இந்த உலகமனைத்தும் ப்ரளய காலத்தில் ’ஸத்’ என்ற ஒரே பொருளாக இருந்த்து, வேறு எதுவும் இல்ணல”. இதனால், உலகுக்கு எல்லாம் காரணமான ஸத் என்ற ஒரு பொருள் அறியப்படுகிறது.
    தேறிய பொருள் –
    உலகத்தில் ஒரு குடம் உண்டாக மண் என்ற உபாதாந காரணமும், குயவன் என்ற நிமித்த காரணமும், சக்கரம் தடி முதலான ஸஹகாரி காரணங்களும் தேவை . ஆனால் இந்த உலகம் உண்டாக மூன்று காரணங்களாகவும் ’ஸத்’ என்ற அந்தப் பொருளே இருக்கிறது. ஒரு சிலந்தி தன் உடலிலிருந்தே ஒரு பொருளை உண்டாக்கி வலை
    பின்னுவது போல் ’ஸத்’ என்ற பொருள் உலகத்தைத் தானே தன்னிடமிருந்தே படைக்கிறது.
  • உலகுக்கு எல்லாம் காரணம் என்றால் அந்த ’ஸத்’ என்ற பொருளுக்கு அதிகமான ஜ்ஞாநம், சக்தி முதலானவை இருக்க வேண்டும் என்று நாம் அறியலாம். எனவே , இவ்வாறு முன்னமே ப்ரஹ்மம் அறியப்பட்டுள்ளது. இதுவே பூர்வ ப்ரதிபந்ந ஆகாரம் (அடையாளம் காண்பதற்கு முன்னால் அறியப்பட்ட வடிவம்).
  • இனி, ’யதோ வா இமாநி’ என்ற வாக்யம் சொல்லுகிறது – அந்த ’ஸத்’ என்ற பொருள் உலகத்தை யெல்லாம் படைத்து காத்து அழிக்கிறபடியால் அதுவே ப்ரஹ்மம், அதாவது, அதுவே எல்லையற்ற ஒப்பற்ற அளவு – பெருமை உடையது.
    எனவே , ’இவ்வுலகத்தின் உண்டாக்கம் நிலைப்பாடு அழிவு என்ற மூன்றுக்கும் காரணமானது ப்ரஹ்மம்’ என்று ப்ரஹ்மத்தின் லக்ஷணம் கொள்ளலாம். இப் பண்புகளை விசேஷணம் உபலக்ஷணம் என்ற இரண்டாகவும் கொள்ள இயலும்

மறை ஆய நால் வேதத்துள் நின்ற* மலர்ச் சுடரே,*
முறையால் இவ் உலகு எல்லாம்* படைத்து இடந்து உண்டு உமிழ்ந்து அளந்தா,ய்
பிறை ஏறு சடையானும்* நான்முகனும் இந்திரனும்*
இறை ஆதல் அறிந்து ஏத்த* வீற்றிருத்தல் இது வியப்பே?

மறை ஆய நால் வேதத்துள் நின்ற* மலர்ச் சுடரே,* –ஜிஜ்ஜாஸ அதிகரணம்
முறையால் இவ் உலகு எல்லாம்* படைத்து இடந்து உண்டு உமிழ்ந்து அளந்தா,ய் –ஜென்மாதி அதிகரணம்

1.1.3 சாஸ்த்ர யோநித்வாதி₄கரணம்
வேதாந்தம் தேவை யற்றதா?

லக்ஷணத்தின் இரண்டு வகைகள்

  • 1.1.2 ஜந்மாத்யதி₄கரணத்தில் ப்ரஹ்மத்தின் லக்ஷணம் சொல்லப்பட்டது – “உலகத்தின் உண்டாக்கம், நிலைப்பாடு மற்றும் அழிவுக்குக் காரணமானது ப்ரஹ்மம்” என்று.
    இதை தைத்திரீய உபநிஷத்தில் மற்று ஓரு லக்ஷணமும் ப்ரஹ்மத்துக்குக் கூறப்பட்டுள்ளது –
    “ஸத்யம் ஜ்ஞாநம் அநந்தம் ப்ரஹ்ம” என்று. அதன் பொருளைப் பார்ப்போம்.
  • ஸத்யம் – ’என்றும் மாறாத இருப்பு (Unconditional Existence) உடைய பொருள்’. இத்தால் எப்போதும் மாறிக் கொண்டே இருக்கும் அசேதநம் மற்றும் பத்த ஜீவர்களைக் காட்டிலும் ப்ரஹ்மம் வேறுபட்டது ஆகிறது.
    ஜ்ஞாநம் – ’என்றும் குறைவில்லாத ஜ்ஞாநமுடையது”. இதில் முக்தர்களைக் காட்டிலும் வேறுபாடு தெரிகிறது.
    அநந்தம் – ’-அளவுபடாதது
    இத்தால் அணு ஸ்வரூபர்களான நித்ய ஸூரிகளைக் காட்டிலும் வேறுபாடு தெரிகிறது.
    இப்படி மூன்று பண்புகள் சேர்ந்த இந்த லக்ஷணமானது உலகிலுள்ள மற்ற எல்லாப் பொருள்களிலிருந்தும் வேறுபட்டதான ப்ரஹ்மத்தை அறிவிக்கிறது.
  • இந்த இரண்டு லக்ஷணங்களுக்கும் உள்ள வேறுபாடு என்ன? பார்ப்போம்.
    லக்ஷணங்கள் இரண்டு வகைப்படும் –

ஸ்வரூப லக்ஷணம் – இலக்கில் (லக்ஷ்யத்தில்) இருக்கும் தன்மைகளே அதற்கு லக்ஷணம் ஆகும்.-எடுத்துக் காட்டு – ஸத்யம் ஜ்ஞாநம் அநந்தம் ப்ரஹ்ம என்ற லக்ஷணம்

தடஸ்த₂ லக்ஷணம் – வேறு ஒரு பொருளில் இருக்கும் தன்மைகள் லக்ஷ்யத்தின் லக்ஷணம் ஆகும்.-எடுத்துக்காட்டு – ’யதோ வா இமாநி’ என்ற வாக்கியத்தில் ப்ரஹ்மத்தைக் காட்டிலும் வேறுபட்டதான இந்த ஜகத்தில் இருக்கும் ’உண்டாக்கம்’ நிலைப்பாடு’ மற்றும் அழிவு’
என்ற பண்புகளைக் கொண்டு ப்ரஹ்மத்தின் லக்ஷணம் இங்கு சொல்லப்படுகிறபடியால்.

நந்தா விளக்கே அளத்தற்கு அரியாய்

நந்தா -ஸத்யம்
விளக்கே–ஞானம்
அளத்தற்கு அரியாய்–அநந்தம்

பேதையர் வேதப் பொருள் இது என்று உன்னிப் பிரமம் நன்று என்று
ஓதி மற்று எல்லா வுயிரும் அக்தென்று உயிர்கள் மெய் விட்டு
ஆதிப் பிரானோடு ஒன்றாம் என்று சொல்லும் அவ்வல்லல் எல்லாம்
வாதில் வென்றான் எம் இராமானுசன் மெய்ம் மதிக் கடலே – 58- –

மெய்-ஸத்யம்
மதி-ஞானம்
கடலே–அநந்தம்

அவிகாராய சுத்தாய நித்யாய பரமாத்மனே |
ஸதைகரூப_ ரூபாய விஷ்ணவே ஸர்வஜிஷ்ணவே ||

அவிகாராய -அசேதன வ்யாவ்ருத்தி
சுத்தாய –பத்த சேதன வ்யாவ்ருத்தி
நித்யாய–முக்த சேதன வ்யாவ்ருத்தி
பரமாத்மனே | ஸதைகரூப_ ரூபாய –நித்ய வ்யாவ்ருத்தி

தடஸ்த –கரையில் இருந்து பார்க்கும் பார்வை

முதல் அதிகரணத்தில் – ப்ரஹ்மம் ஸித்தமான பொருள் ஆனாலும் வேதாந்தம் அதைக் கூறும் ப்ரமாணமாக-முடியும் என்றார். இரண்டாம் அதிகரணத்தில் – ப்ரஹ்மத்தின் லக்ஷணம் ஜகத் காரணத்வம் என்றார்.
இந்த அதிகரணத்தில் ந்யாய தர்சனத்தைச் சேர்ந்தவர்கள் தான் பூர்வபக்ஷீ. அவர்கள் சொல்வது – வேதாந்தம் ப்ரஹ்மத்தைச் சொல்ல முடியும் என்றாலும் அது தேவை யில்லாதது; வேறு ப்ரமாணத்தின் மூலம் ஜகத் காரணமான ப்ரஹ்மத்தை அறிய முடியும். எனவே வேறு ஓரு ப்ரமாணத்தால் அறியப்பட்ட விஷயத்தைச் சாஸ்த்ரம் திரும்பச் சொன்னால் அது பயனற்றது தானே ? எனவே வேதாந்த விசாரம் செய்ய வேண்டாம் – என்று.

1.1.3 சாஸ்த்ர யோநித்வ அதி₄கரணம். இதில் ஒரே ஸூத்ரம் உள்ளது – “சாஸ்த்ர யோநித்வாத்”.

சாஸ்த்ரம் என்றால் வேதம். யோநி என்றால் காரணம். இவ் விடத்தில் உண்டாக்கும் காரணம் அல்ல, அறிவிக்கும் காரணம் சொல்லப்படுகிறது.
எனவே சாஸ்த்ரயோநி என்ற சொல் – ’வேதத்தால் அறியப்படுவது’ அல்லது
’வேதத்தைத் தனக்குப் ப்ரமாணமாகக் கொண்டது’ என்ற பொருள் உடையது. அதற்கு மேல் ஐந்தாம் வேற்றுமை .
எனவே “வேதத்தைத் தனக்குப் ப்ரமாணமாகக் கொண்டபடியால்” என்று பொருள் கிடைக்கிறது.

பொதுவாக ஒன்றைச் சொன்னாலே அதில் வலியுறுத்தல் வெளிப்படும். தவம் செய்பவரைப் பார்த்து ’அப்₃ப₄க்ஷ:’-அதாவது ’தண்ணீர் குடித்துத் தவம் செய்பவர்’ என்று சொன்னால் ’தண்ணீர் மட்டும் குடிப்பவர்’ என்று தேறுகிறது. அதுபோல் இங்கும் “வேதத்தை மட்டும் தனக்குப் ப்ரமாணமாகக் கொண்டபடியால்” என்று பொருள் இந்த வாக்கியத்தை நாம் நிரப்பிக் கொள்ள வேண்டும் – “ப்ரஹ்மம் வேதத்தை மட்டும் தனக்குப் ப்ரமாணமாகக்
கொண்டபடியால், அதைப் பற்றின விசாரத்தைச் செய்ய வேண்டும்’ என்று ஸூத்ரத்தின் முழு பொருள் ஆகும்.

கீழ் ஜிஜ்ஞாஸாதி₄கரணத்திலேயே வேதாந்தம் ப்ரஹ்மத்தைக் கூறும் ப்ரமாணம் தான் என்று நிரூபித்து விட்டோம்.-ஏன் மறுபடியும் அதையே சொல்கிறார் வேத வ்யாஸர்? அதற்கான காரணத்தைப் பார்ப்போம்.

வேதாந்தம் தேவை யற்றதா?-அநுமானத்தால் ப்ரஹ்மத்தை அறிதல்

(1) இந்த ஜகத் உண்டாக்கப்பட்டது தான், பல பகுதிகளைக் கொண்டதானபடியால்; குடத்தைப் போல.
(2) இந்த ஜகத், அதன் மூலப் பொருள் கருவிகள் பயனாளி மற்றும் பயன்பாட்டை அறிந்த ஒருவரால் உண்டாக்கப்பட்டது தான், உண்டாக்கப்பட்டபடியால், குடத்தைப் போல இந்த அநுமானங்களின் மூலம் உலகத்தை எல்லாம் படைக்கும் வல்லமை படைத்த பரமாத்மா அறியப்படுகிறபடியால், இவரைச் சொல்ல வேதாந்தம் தேவையில்லை என்பதே பூர்வ பக்ஷியின் வாதம் ஆகும்.

ப்ரமாணங்கள் மூன்று
(1) ப்ரத்யக்ஷம் – கண் காது நாக்கு மூக்கு தோல் மனது என்ற புலன்கள்
(2) அநுமானம் – இரண்டு பொருள்களின் விட்டுப் பிரியாமையை (வ்யாப்தியை ) அறிந்து கொண்டு, ஒரு பொருளைப் பார்த்தால் மற்ற ஓரு பொருள் இருப்பதை ஊஹிப்பது. எடுத்துக் காட்டு – அடுப்படி முதலான இடங்களில் ’எங்கு எல்லாம் புகை உள்ளதோ அங்கு நெருப்பு இருக்கும்’ என்று அறிந்த படியால், ஒரு மலைக்கு மேல் புகை வருவதைப் பார்த்தால் அதன் மேல் எங்கோ நெருப்பு இருப்பதை அநுமானத்தால் அறியலாம்.
(3) சப்தம் – ஒரு சொல் தொடரைக் கேட்டால் அதன் பொருள் அறியப்படுகிறது. அந்தச் சொல் தொடரே ப்ரமாணம்.

1300 அதிகரணம் பூர்வ மீமாம்ஸை -இதற்கு பாஷ்யம் சபர ஸ்வாமி செய்துள்ளார்
ஸாஸ்த்ரம் –சொல் தொடரைக் கேட்டவுடன் பொருள் அறிய உதவும் –
இது லோக விஷயம் -சொல்லாது -லோக விஷயத்துக்கு மாறுபட்டும் சொல்லாது அஸந்நிஹ்ருஷ்டம்கண்ணுக்குத் தெரியாத விஷயம் சொல்லும் ஸாஸ்த்ரம்

மீமாம்சை என்பதை தனியொரு தரிசனமாக வார்த்தெடுத்தவராக கி.மு. 3-ம் நூற்றாண்டைச் சேர்ந்தவரான ஜைமினி கருதப்படுகிறார். வேதத்தின் வெவ்வேறு சம்ஹிதைகளிலும், பிரமாணங்களிலும் கூறப்பட்டுள்ள பல்வேறு வேள்விச் சடங்குகளையும், அவற்றுக்குரிய பலன்களையும் விளக்கும் வகையில் மீமாம்ச சூத்திரம் என்ற நூலை ஜைமினி படைத்தார். 12 பாகங்களில், 60 அத்தியாயங்களின் கீழ் 2,500 ஸ்லோகங்களை (செய்யுள்களை) உள்ளடக்கியதாக இந்த நூல் உள்ளது.

இந்த மீமாம்ச சூத்திரத்துக்கு சபர ஸ்வாமி என்பவர் எழுதிய சபர பாஷ்யம் மிகச் சிறந்த விளக்கமாகும். பின்னர் பிரபாகரர், குமாரில பட்டர், சாலிகநாதர், மாதவ வித்யாரண்யர், மற்றும் லௌகாக்ஷி பாஸ்கரர் இவர்கள் உரைகள் எழுதி இருக்கின்றனர்.

பிரத்யக்ஷம் என்பது, கண், காது உள்ளிட்ட புலன்களைக் கொண்டு நாமே நேரடியாக அறிந்துகொள்வது. இதற்கு நிர்விகல்ப-பிரத்யக்ஷ என்று பெயர்.

பிறவழி அறிதலாகிய பரோக்ஷத்துக்கு சவிகல்ப-பிரத்யக்ஷ என்று பெயர்.

இதனை 5 விதங்களாக மீமாம்சை வகைப்படுத்துகிறது. அவை, அனுமானம் (ஊகம்), உபமானம் (உவமை அல்லது ஒப்பீடு), சப்தம் (உரை), அர்த்தாபத்தி (பொருத்திக்கொள்ளல்), அனுபலப்தி (உணரப்படாமை).

இதில் ப்ரத்யக்ஷத்தால் ப்ரஹ்மத்தை அறிய இயலாது. வெளிப் புலன்கள் உலகப் பொருள்களை மட்டுமே காட்டும்; உட் புலனான மனது ஆத்மாவையும் அதிலிருக்கும் ஸுகம் துக்கம் ஆசை வெறுப்பு முதலானவற்றை மட்டுமே காட்டும். வேதம் என்ற சப்த ப்ரமாணம் தேவையில்லை என்பது தான் பூர்வபக்ஷியின் வாதமே .
எனவே , அநுமானத்தால் ஜகத் காரணமான ப்ரஹ்மத்தை அறியலாம் என்பதே ந்யாய மதத்தவர்களின் வாதம்.

உலகத்தில் பல பகுதிகளைக் கொண்ட பொருள்கள் (குடம் முதலானவை ) அனைத்துமே உண்டாக்கப்பட்டவை தான் என்று பார்க்கிறோம். அப்படி படைக்கப்பட்ட பொருள்கள் எல்லாம் ஒரு படைப்பாளி இருக்கிறார் என்பதையும் பார்க்கிறோம். அந்தப் படைப்பாளி அந்த உண்டாக்கப்படும் பொருளுக்குத் தேவையான மூலப் பொருள், உண்டாக்க உதவும் கருவிகள், அப் பொருளைப் பயன்படுத்துபவர், அப் பொருளின் பயன்பாடு என்பவற்றை அறிந்தே அதை உண்டாக்குகிறார். அதே போல் உலக விஷயத்திலும் சொல்லலாமே .

அநீஸ்வரர் அல்ப ஞான சக்தர் அநாத்ம காமர் -லோகத்தில் படைப்பாளிகள் -அது போல் இல்லையே பரமாத்மா-அவாப்த ஸமஸ்த காமன் ஸர்வஞ்ஞன் ஸர்வ சக்தன் -அன்றோ –

1.1.3 சாஸ்த்ர யோநித்வாதி₄கரணம்
வேதாந்தத்தின் இன்றியமையாமை

அநுமானத்தால் ஜகத் காரணத்தை நிரூபிக்க இயலாது

  • 1.1.3 சாஸ்த்ர யோநித்வ அதிகரணத்தில் பூர்வ பக்ஷி சொன்னது – அநுமானத்தால் ஜகத் காரணமான ப்ரஹ்மம் அறியப்பட்டு விட்டபடியால், அதையே திரும்பச் சொல்லும் சாஸ்த்ரம் வீணானது.
  • கேள்வி – அநுமானத்தால் ப்ரஹ்மம் உலகத்தைப் படைத்தவர் (நிமித்த காரணம்) என்று அறிந்தாலும் அவரே உபாதாந காரணமும் ஆவார் என்று சாஸ்த்ரம் தானே போதிக்கிறது? எனவே வேதாந்தம் தேவை தானே ?
    பூர்வ பக்ஷியின் பதில் – உலகில் நிமித்த காரணம் என்பது உபாதான காரணத்தைக் காட்டிலும் வேறாகவே காணப்படுகிறபடியால், அநுமானத்தால் நிமித்த காரணமாக அறியப்பட்ட ப்ரஹ்மம் உபாதாந காரணமாக ஆக முடியாது. எனவே அதை போதிக்கும் சாஸ்த்ரமும் தவறானதாகத் தான் இருக்க முடியும், எனவே தேவை யற்றது.
  • ஸித்தாந்தம் – சாஸ்த்ர யோநித்வாத் – வேதம் ஒன்று தான் ப்ரஹ்மத்தை அறிவதற்கான ப்ரமாணமாகும்.
  • பூர்வ பக்ஷத்தில் உள்ள தவறு யாதெனில் – பூர்வ பக்ஷீ ந்யாய மதத்தைச் சேர்ந்தவர். ஸித்தாந்தீ வேத வ்யாஸர் விசிஷ்டாத்வைதத்தைச் சேர்ந்தவர். இருவருக்கும் பொதுவாக உள்ள கோட்பாடு – பரமாத்மா ஒருவரே உள்ளார்;
    அவர் ஒரே காலத்தில் இவ்வுலகம் அனைத்தையும் படைத்தார் என்பது. அந்த பரமாத்மாவைக் காட்டும் ப்ரமாணம் எது என்பதில் மாட்டுமே விவாதம் உள்ளது. ஆனால் அநுமானத்தின் மூலம் உலகத்தைப் படைக்கும் பரமாத்மாவை நாம் நிரூபித்தால் அது இக் கோட்பாட்டோடு முரண்படும். ஏன் என்று பார்ப்போம்.
  • இவ் வுலகில் படைப்பு என்று ஒன்று இருந்தால் அதற்கு ஒரு படைப்பாளி இருப்பதைக் காண்கிறோம். அதன் அடிப்படையில் தான் இவ் வுலகத்தையும் படைத்தவர் இருக்க வேண்டும் என்று அநுமானம் கூறுகிறார் பூர்வ பக்ஷீ.
    ஆனால், உலகில் வெவ்வேறு பொருட்கள் வெவ்வேறு படைப்பாளிகளால் வெவ்வேறு காலங்களில் படைக்கப் படுவதைத்தான் நாம் காண்கிறோம். எனவே அநுமானத்தால் ப்ரஹ்மத்தை நிரூபித்தால், இவ் வுலகிலும் வெவ்வேறு பகுதிகளை , வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு பரமாத்மாக்கள் படைத்தார்கள் என்று தான் கிடைக்குமே தவிற, ஒரே பரமாத்மா ஒரே காலத்தில் படைத்தார் என்று நிரூபிக்க இயலாது.
  • ஒரே காலத்தில் ஒருவரால் அனைத்தையும் படைத்தவன் ப்ரஹ்மம் -இது அநுமானத்தால் சாதிக்க முடியாதே -இதற்கு வேத ஸாஸ்த்ரம் வேண்டுமே

ந்யாய மதத்தில் பரமாத்மாவின் படைப்பு ஒவ்வாது

  • பூர்வ பக்ஷியின் கேள்வி – அநுமானத்தில் எப்போதுமே ’லாகவம்’ (எளிமை ) என்பதைப் பின் பற்ற வேண்டும்.-அநுமானம் மூலம் இவ் வுலகத்தைப் படைத்தவர் இருக்க வேண்டும் என்று அறிகிறோம்; அது ஜீவாத்மாவாக இயலாது ,-அவருக்குப் போதுமான ஜ்ஞானம் சக்தி முதலானவை இல்லாத படியால். எனவே அவற்றை உடையவராக பரமாத்மா என்பவரைக் கல்பிக்கும் பொழுது, அப்படிப்பட்ட பல பரமாத்மாக்களைக் கல்பிப்பதை விட ஒருவரைக் கல்பிப்பதே எளிமையானது. எனவே ஒரே படைப்பாளி என்று கூறலாமே ?
  • பதில் – ஜீவாத்மாக்களால் படைக்க இயலாது என்று திட்டவட்டமாகக் கூற முடியாது. உலகில் புண்ணியத்தின் ஏற்றத் தாழ்வுகளின் அடிப்படையில், மனிதர்கள் தேவர்கள் முதலானவர்களுக்கும் ஜ்ஞாநம் சக்தி முதலானவற்றில் ஏற்றத் தாழ்வுகளைப் பார்க்கிறோம். எனவே , மிக அதிகமான புண்ணியம் செய்த ஒரு ஜீவாத்மாவே கூட உலகத்தைப் படைக்கும் அளவுக்கு சக்தி உடையவராக இயலும்; அதை முழுவதுமாக மறுக்க யுக்தி எதுவும் இல்லை . எனவே இவ் வநுமாநத்தின் மூலம் ஒரே ஒரு பரமாத்மா உலகத்தை எல்லாம் படைக்கிறார் என்று நிரூபிக்கவே இயலாது.
  • மேலும், பரமாத்மா உடல் அற்றவராய் உலகத்தைப் படைக்க முடியாது, உடல் இல்லாமல் எக் காரியத்தையும் செய்ய இயலாதபடியால். உடல் உள்ளது என்றால், அது நித்யமானதா அநித்யமானதா? நித்யமானது என்றால்,
    “பகுதிகளோடு கூடிய பொருள்கள் அனைத்துமே உண்டாக்கப்பட்டவை தான்” என்னும் கோட்பாடு இங்கு பொய்யாகிறது. பல பகுதிகளைக் கொண்ட பரமாத்மாவின் சரீரம் நித்யமாக இருக்குமானால், அதே போல் இந்த ஜகத்தும் நித்யமானது,
    இதற்குப் படைப்பாளியே தேவையில்லை என்று ஆகி விடும். பரமாத்மாவின் சரீரம் அநித்யமானது என்றால், அதைப் படைக்க அவருக்கு வேறு ஒரு சரீரம் இருந்திருக்கவேண்டும், அதுக்கும் அப்படியே என்று முடிவில்லாமல் போய்க் கொண்டே இருக்கும்.
  • இப்படி அநுமானத்தில் பல தோஷங்கள் உள்ளபடியால், உலகத்துக்கு நிமித்த காரணமாகவும், உபாதாநமாகவும், எல்லையற்ற ஜ்ஞாநம் சக்தி கொண்டதாகவுமுள்ள ப்ரஹ்மத்தை உபநிஷத்துக்களைக் கொண்டு மட்டும் தான் அறிய இயலும். எனவே ப்ரஹ்மம் சாஸ்த்ரம் ஒன்றையே ப்ரமாணமாகக் கொண்டதானபடியால், அந்த சாஸ்த்ரத்தைப் பற்றின விசாரம் தொடங்கப்பட வேண்டியது தான் என்று இந்த அதிகரணத்தில் வேத வ்யாஸர் நிச்சயிக்கிறார்.

ஆர்ஷம் தர்ம உபதேசம் ச வேத சாஸ்த்ரா விரோதி நா
யஸ் தர்க்கேணா நு சந்தத்தே ச தர்மம் வேத நேதர -மநு ஸ்ம்ருதி

நசிகேசத் -கட உபநிஷத் -பிரேஷ்ட -பிரியமானவனே -தர்க்கத்தால் மட்டும் அறியமுடியாது -உபதேஸ ஜன்ய ஸாஸ்த்ர ஞானத்தால் தான் அறியமுடியும்

ஜகத் என்பது கார்யம் -செய்யப்படுவதே என்றாலும்-ஒரே காலத்திலே ஒரே புருஷனாலே சர்வ ஜகத்தும் படைக்கப்பட்டது என்பதில் பிரமாணம் இல்லாதபடியால் விச்வாமித்திராதிகளைப் போன்ற ஜீவர்களுக்கே விசித்ர ஸ்ருஷ்டி சம்பவிக்குமாகையாலே ஜீவனை விட்டு வேறான ஸர்வஞ்ஞத் வாதி குணங்களை யுடைய ப்ரஹ்மம் அனுமானத்தால் ஸித்திக்காது அதற்கு ஸாஸ்திரமே பிரமாணமாக வேண்டும் என்பது ஸித்தாந்தம் அனுமானாதிகளாலே உள்ளவாறு அறிய ஒண்ணாமையாலே-யதோவா இமானி -என்ற வாக்கியம் உபாதான காரணமாயும் நிமித்த காரணமாயும் உள்ள ப்ரஹ்மத்தைப் போதிப்பதால் ஸாஸ்திரமே பிரமாணம் ஆகிறது – ஆகவே ப்ரஹ்மம் ஸாஸ்த்ர யோனியாகிறது பிற பிரமாணங்கள் போதிக்காது என்பதாம் –உளன் சுடர் மிகு ஸ்ருதியுள் –ஸ்வத நித்ய நிர்தோஷ பிரமாணம்

—————-

1.1.4 ஸமந்வயாதி₄கரணம்
ப்ரஹ்மத்தை அறிவதே ஆநந்தம்

ப்ரஹ்மத்தை அறிவதால் என்ன பயன்?

  • ப்ரஹ்ம மீமாம்ஸை என்னும் சாஸ்த்ரத்தைத் துவங்க வேண்டும் என்று நிரூபிப்பதற்காக ஏற்பட்டவை முதல் நான்கு அதிகரணங்கள். முதல் இரண்டு அதிகரணங்களால் உபநிஷத்துகளைக் கொண்டு ப்ரஹ்மத்தை அறிய முடியும் என்று நிரூபித்தார் வ்யாஸர். ஆனால் ப்ரஹ்மத்தை அறிய வேண்டும் என்னும் ஆசை இருந்தால் தானே ஒருவன் உபநிஷத்தைப் படிப்பான். அந்த ஆசை பிறக்க இரண்டு தேவைகள் உள்ளன – ப்ரஹ்மம் இதற்கு முன் அறியப்படாததாய் (அஜ்ஞாதம்) இருக்க வேண்டும் -மற்றும் அதை அறிவதால் பயன் (ப்ரயோஜநம்) இருக்க வேண்டும். மூன்றாம் அதிகரணத்தில் ப்ரஹ்மம் வேறு எந்த ப்ரமாணத்தாலும் அறியப்படாதபடியால் இது அஜ்ஞாதம் தான் என்று நிரூபித்தார். இனி ஸமந்வயாதி₄கரணம் என்று பெயர் பெற்ற நான்காம் அதிகரணத்தில் ப்ரஹ்மத்தை அறிவதால் பயன் உள்ளது என்று நிரூபிக்கிறார்.
  • பூர்வ பக்ஷம் – இங்கு மீமாம்ஸா தர்சனத்தைச் சேர்ந்தவர்கள் தான் பூர்வ பக்ஷிகள். ப்ரஹ்மத்தை அறிவதால் எந்தப் பயனும் இல்லை என்பதே அவர்கள் வாதம். ஏன் அப்படிக் கூறுகிறார்கள் என்று பார்ப்போம்.
  • பயன் (ப்ரயோஜநம்) என்பது இரண்டு விதம் –
    (1) ஸுகம் அடைவது
    (2) துக்கம் விலகுவது.
    இவை ஏற்பட ஒரு மனிதன் ஏதோ ஒரு ப்ரவ்ருத்தி (முயற்சி) செய்ய வேண்டும்– அல்லது நிவ்ருத்தி (ஒரு செயலிலிருந்து விலகுதல்) செய்ய வேண்டும்.
    எடுத்துக்காட்டு – சக்கரைப் பொங்கலை உண்ணுதல் என்னும் ப்ரவ்ருத்தியால் நமக்கு ஸுகம் ஏற்படுகிறது, அதிகமாக துரித உணவுகளை உண்ணாமல் இருத்தல் என்னும் நிவ்ருத்தியால் நமக்கு அஜீரணத்தால் வரும் துக்கம் விலகுகிறது.–ஸாஸனாத் ஸாஸ்த்ரம் –ப்ரவ்ருத்தி நிவ்ருத்தி இல்லாத வாக்கியங்கள் முழுமையானவை அல்ல -குமாரிள பட்டர்
  • எனவே , ஒரு நூல் ப்ரயோஜநமுடையது என்று சொல்ல வேண்டும் என்றால் அது நம்மிடம் ப்ரவ்ருத்தியையோ நிவ்ருத்தியையோ போதித்து, அதை ஏற்படுத்தி, அதன் மூலம் நமக்கு ஒரு பயனை ஏற்படுத்த வேண்டும். வேதாந்தத்தால் போதிக்கப்படும் ப்ரஹ்மம் என்பது ஒரு ஸித்த வஸ்து, ப்ரவ்ருத்தியையோ நிவ்ருத்தியையோ அல்ல -. எனவே அதை அறிவதால் எந்தப் பயனும் ஏற்பட முடியாது. ஆகையால் வேதாந்தத்தை ஆராயத் தேவையில்லை
  • ’உனக்குக் குழந்தை பிறந்துள்ளது’-’இது பாம்பு அல்ல ’ முதலான சொற் தொடர்கள் ஸித்தமான வஸ்துவைச் சொன்னாலும் அதிலிருந்து மகிழ்ச்சி ஏற்படுகிறது அல்லது பயம் விலகுகிறதே? அதே போல் ப்ரஹ்ம ஜ்ஞாநத்தால் பயன் இருக்கலாமே ?
    உண்மை தான், இருக்கலாம். ஆனால் இப்படிப்பட்ட சொற் தொடர்களைக் கேட்பதால் மட்டும் மகிழ்ச்சி வருகிறபடியால் அதன் பொருள் உண்மையாக இருக்க வேண்டும் என்னும் தேவை யில்லை . -அர்த்த ஸத் பாவம் இருக்க வேண்டும் -இத்தை சாப்பிட்டால் 10 அடி உயர்வாய் போன்ற -பாலர்களை ஊக்குவிக்க -உபச்சந்தன வாக்கியமாக இருக்கலாமே-ஆகவே ப்ரஹ்மம் என்பது உண்மை ஆகாது.

ப்ரஹ்மத்தை அறிவதே பயன்

  • பூர்வ பக்ஷியின் இந்தக் கேள்விக்கு பதில் அளிக்கிறார் வேத வ்யாஸர்
    தத் து ஸமந்வயாத்” என்ற ஒரே ஸூத்ரத்தால்.
  • தத் – வேதாந்தம் ப்ரஹ்மத்தைக் கூறும் ப்ரமாணம் ஆகும் என்பது
    து – உண்மை தான், ஏன் எனில்
    ஸமந்வயாத் – ப்ரஹ்மம் வேதாந்தத்தோடு நன்கு அந்வயிக்கிறபடியால் – சிறந்த ப்ரயோஜனமாகச் சொல்லப்படுகிறபடியால்

ஸம் -நன்றாக அந்வயம் -சேர்க்கை -ஸம்யக் புருஷார்த்த தயா அந்வய ஸமன்வய -வேதி துர் நிரதிசய அநந்த ஸ்வரூபத்வேந பரம புருஷார்த்த ரூபே பரே ப்ரஹ்மணி வேதகதயா ஸாஸ்த்ரஸ்ய அந்வயாத் ப்ரஹ்மண ஸாஸ்த்ர பிரமாண கத்வம் சித்த்யத்யே வேதி

  • உபநிஷத்துக்கள் ப்ரஹ்மத்தையே ஆநந்தம் (ஸுகமே வடிவமானது) என்று சொல்லுகின்றன. எந்த ஒரு பொருளின் அறிவு அல்லது அநுபவமே நமக்கு இனிமையாய், பிடித்ததாய் இருக்கிறதோ , அப் பொருளைத் தான் ஆநந்தம் என்போம்.
    ப்ரஹ்மத்தையும், அதன் பண்புகளையும் அறிவதே நமக்கு ஆநந்தத்தைக் கொடுக்கிறது. முக்தி அடைந்த ஒரு ஜீவன் இந்த ப்ரஹ்மத்தை அநுபவித்து தாநே எல்லை யில்லாத ஸுகத்தை அடைகிறான்? பக்தர்கள் எல்லாம் இந்த ஸம்ஸாரத்தில் இருக்கும் போதே அந்த ப்ரஹ்மத்தை நினைத்தாலோ கண்டாலோ மகிழ்ச்சி யடைகிறார்கள். எனவே ப்ரஹ்மமே ஸுகம்.
  • எனவே , ப்ரவ்ருத்தியோ நிவ்ருத்தியோ ஏற்பட்டால் மட்டுமே ஸுகம் அடைய முடியும் என்பது தவறு. ஒரு பொருளின் அறிவு மட்டுமே நமக்கு ஸுகத்தைத் தரலாம். எடுத்துக் காட்டு
    (1) நம் வீட்டில் ஒரு புதையல் உள்ளது என்று கேள்விப்பட்ட உடனேயே நாம் மகிழ்கிறோம். அதைத் தோண்டி எடுத்துப் பயன்படுத்தினால் மட்டும் தான் மகிழ்ச்சி என்பதில்லையே ?
    (2) ஓர் அரச குமாரன் சிறு வயதில் காணாமல் போய் காட்டிலே வேடர்களோடு வளர்ந்து வந்தான். ஓரு நாள் ஒரு பெரியவர் அவனை அடையாளம் கண்டு,
    “நீ வேடன் அல்ல , அரச குமாரன். உன் தந்தை மிகப் பெரிய சக்ரவர்த்தி. உன்னிடம் அளவுகடந்த அன்புடையவர். உன்னைத் திரும்பவும் காண முடியுமா என்று துடித்துக் கொண்டிருக்கிறார்” என்று சொன்னால், அதைக் கேட்டதே போதும், அக் குழந்தை எல்லை யற்ற மகிழ்ச்சியை அடையுமே. அதுபோல் தான் ப்ரஹ்மத்தின் அறிவும்-நின் புகழில் வைக்கும் சிந்தையினிலும் மற்று இனிதோ நீ வைகுந்தம் என்று கொடுக்கும் வான்-
  • அறிவால் மட்டும் ஸுகம் ஏற்பட்டால், அறியப்பட்ட பொருள் உண்மையாக இருக்கத் தேவை யில்லையே என்ற கேள்வி.
    அதற்கு பதில் – ஒரு குழந்தையிடம் ’மருந்து சாப்பிடு, உயரம் ஆவாய்’ என்று பொய் சொல்லி ஏமாற்றலாம். ஆனால், அது பொய் என்று குழந்தை உணர்ந்து விட்டால் பிறகு மகிழ்ச்சி அடையாது. அதே போல், ஆராய்ந்து செயல்படும் மனிதர்களுக்கு, ஒரு குற்றமும் இல்லாத சிறந்த ப்ரமாணமான வேதம், பொய்யான பொருளை போதித்து ஏமாற்றி மகிழ்விக்க முடியாது.எனவே ப்ரஹ்மம் உண்மை தான், அதன் அறிவே பயன். ஆகையால் உபநிஷத்துகளின் ஆராய்ச்சி துடங்கப்பட வேண்டியதே.

உபாசகனுக்கு பயனாக ப்ரஹ்மமும்-ப்ரஹ்மத்துக்கு பயனாக உபாசகனும் ஆவதால்
கர்மங்களையும் பலன்களையும் சொல்லும் வேதங்கள் பிரமாணங்கள் ஆகும்

தத் து சமன்வயாத் -மூன்று சொற்கள்
து பூர்வ பக்ஷ நிரஸனம்
தத் -சாஸ்திரத்தையே ப்ரமாணமாகக் கொண்டமை ஸம்மபவிப்பதே
சமன்வயாத்-ஸத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்மம்-ஆனந்தோ ப்ரஹ்ம-முதலிய வாக்யங்களுக்கு ப்ரயோஜன பூதமான ப்ரஹ்மத்தை ஆனந்த ரூபமாக விளக்கும் தன்மையால்-சமன்வயம் -பொருத்தம் ஏற்படுவதால்-ஸாஸ்த்ர யோனித்வம் கூடும் –இவ்வாறு நான்கு அதிகரணங்களால் ஸாஸ்த்ர ஆரம்பத்தைச் சரியானதே என்று நிலை நாட்டி ப்ரஹ்ம விசாரத்தை தொடங்குகிறார்

——————-

1.1.5 ஈக்ஷத்யதி₄கரணம்
ப்ரக்ருதியே உலகை உண்டாக்கலாமே ?

ஈக்ஷத்யதிகரணத்தின் பின்புலம்

  • சதுஸ் ஸூத்ரீ என்ற பாகத்தாலே ப்ரஹ்மம் என்று ஒரு பொருள் வேதாந்தத்தால் சொல்லப்படுகிறது, அதுவே ஜகத்துக்குக் காரணம், அதை வேதாந்தம் கொண்டு மட்டுமே அறிய முடியும், அதை அறிவதால் ப்ரயோஜனமும் உண்டு என்னப்பட்டது.
    இனி இந்த பாதம் மற்றும் அத்யாயத்தின் மீதிப் பகுதியால் அந்த ப்ரஹ்மம் சித் மற்றும் அசித் அல்ல, வேறு ஓன்று என்கிறார்.
  • ஸங்கதி – ஸமந்வயாதிகரணத்தில் ப்ரஹ்மம் என்ற பொருளே ஸுக வடிவமானதானபடியால் அதுவே ப்ராப்யம் (இலக்கு) என்று சொல்லப்பட்டது. அதுக்கு மேல் எழும் ஆஷேபம் – இந்த உலகம் உண்டாவதற்கு மூலப் பொருளாக இருக்கும் -ப்ரக்ருதி – ப்ரதானம் எனப்படும் அசேதனப் பொருள் தான் ப்ரஹ்மம் என்று வேதாந்தத்தில் சொல்லப்படுகிறபடியால், ப்ரஹ்மம் ப்ராப்யம் ஆக முடியாது. இதற்கு பதில் அளிக்கத் தான் இந்த ஈக்ஷத்யதிகரணம் ஏற்படுகிறது.
  • விஷய வாக்யம் – ஸாம வேதத்தின் பகுதியான சாந்தோக்ய உபநிஷத்தின் ஆறாவது ப்ரபாடகத்தில் ஸத் வித்யா என்ற உபாஸனம் சொல்லப்படுகிறது. உத்தாலகர், தன் மகனான ஸ்வேத கேதுவை குரு குலத்திற்கு அனுப்புகிறார். அவனும் வேதங்களை எல்லாம் கற்று, அதனால் கர்வம் கொண்டவனாய்த் திரும்புகிறான். அவனிடம் உத்தாலகர் கேட்டார்-
    உத தம் ஆதே சம் அப்ராக்ஷ்ய: யேந அஸ்ருதம் ஸ்ருதம் ப₄வதி அமதம் மதம் அவிஜ்ஞாதம் விஜ்ஞாதம்’ – எந்த ஒரு பொருளை அறிந்தால் உலகில் அனைத்தையும் அறிந்ததாகுமோ அந்த ஈஸ்வரனை அறிந்தாயா?
  • அது எப்படி ஸாத்யமாகும் என்று மகனுக்குப் புரிய வைக்க ஓர் எடுத்துக் காட்டைச் சொன்னார் – ’
    யதா₂ ஸோம்ய ஏகேந ம்ருத் பிண்டேந ஸர்வம் ம்ருண் மயம் விஜ்ஞாதம் ஸ்யாத்’ – எப்படி ஒரு மண் கட்டியை அறிந்தால் அதிலிருந்து உண்டாகும் பொருள்களை அறிந்ததாகுவோ அது போலே காரணப் பொருளை அறிந்தால் அதன் கார்யங்களை அறிந்ததாகும்.
  • சரி, அப்படி உலகுக்கு எல்லாம் ஒரு காரணமுண்டா என்று மகன் கேட்க, உத்தாலகர் சொல்கிறார் ’ஸதே₃வ ஸோம்ய இத₃ம் அக்₃ரே ஆஸீத் ஏகமேவ அத்₃விதீயம்’ – இந்த உலகப் பொருள்கள் எல்லாம் ப்ரளய காலத்தில் ஸத் என்ற ஒரே பொருளாகவே இருந்தன, அவற்றைப் பெயராலோ உருவத்தாலோ வேறுபடுத்த முடியவில்லை , இப்படி ஸத் என்ற ஒரே பொருள் தான் அப்போது இருந்தது, இரண்டாவது எந்தப் பொருளும் இல்லை . இது தான் இந்த அதிகரணத்தின் விஷய வாக்யம்.
  • ஸந்தேஹம் – இந்த வாக்யத்தில் ஜகத் காரணமாகச் சொல்லப்படும் பொருள் ப்ரதாநம் என்ற அசேதனமா ? பரமாத்மாவா?

ப்ரதானமே ஜகத் காரணம் என்ற பூர்வ பக்ஷம்

  • பூர்வ பக்ஷம் – இங்கு ஜகத் காரண மாகச் சொல்லப்படும் ஸத் என்ற பொருள் ப்ரதாநம் தான். இதற்கான யுக்திகள் –
  1. கார்ய அநுகுணத்வம் – கார்யத்துக்குத் தகுந்ததாய் (பொருத்தமானதாய்) இருத்தல். இங்கு கார்யம் (உண்டாக்கப்படும் பொருள்) ஜகத் ஆனபடியால், அது முக்குணங்களை உடையதாய் இருப்பதால், இதற்கான காரணமும் (உண்டாக்கும் பொருளும்) முக்குணங்களை உடையதாக இருப்பதே பொருத்தமானது. அப்படிப்பட்ட பொருள் ப்ரதாநம் தான்.
  2. ப்ரதிஜ்ஞா ஸித்தி: – உத்தாலகர் தொடக்கத்தில் ஒரு ப்ரதிஜ்ஜை செய்தார், ஸத் என்ற பொருளை அறிந்தால் உலகில் அனைத்தையும் அறிந்ததாகும் என்று. அது பொருந்த வேண்டும் என்றால், மண் கட்டியும் குடமும் எப்படி ஒரே பொருளோ அதே போல் ஸத்தும் உலகும் ஒரே பொருளாக இருக்க வேண்டும். அப்படிப்பட்ட ஐக்யம் பரமாத்மாவுக்கும் உலகுக்கும் பொருந்தாதே . எனவே ஸத் என்று ப்ரதாநத்தைத் தான் சொல்ல வேண்டும். ப்ரதாநமும் உலகமும் ஓரே பொருள் தான்.
  3. த்ருஷ்டாந்த ஸாரூப்யம் – ஒரு விஷயத்துக்கு எடுத்துக் காட்டு சொன்னால், எடுத்துக் காட்டும் (உபமாநமும் -த்ருஷ்டாந்தமும்) அவ் விஷயமும் (உபமேயமும்-தார்ஷ்டாந்திகமும்) ஒரே தன்மை யுடையவையாய் இருக்க வேண்டும். இங்கு உத்தாலகர் மண் கட்டியை அறிந்தால் மண் பொருளை அறிந்ததாகும் என்று எடுத்துக்காட்டு உரைத்தார். மண்கட்டி என்ற த்ருஷ்டாந்தம்
    அசேதநமானபடியால், ஸத் என்ற தார்ஷ்டாந்திகமும் (உபமேயமும்) அசித்தான ப்ரதாநமாகத்தான் இருக்க வேண்டும்.
  4. ஸ்ம்ருதி ஸம்வாதம் – ப்ரதாநம் தான் ஜகத்காரணம் என்று கபிலர் என்ற மஹ ரிஷியால் ஸாங்க்ய ஸ்ம்ருதியிலும் சொல்லப்பட்டுள்ள படியால், இவ்வர்த்தமே சரியானதாய் இருக்க வேண்டும்.
  5. அநுமான ஆகாரம் – இங்கு உத்தாலகரின் வாக்யமே ஒரு அநுமானம் போல் உள்ளது . அநுமானத்தில் தான் ப்ரதிஜ்ஜா (மலையில் நெருப்பு உள்ளது), ஹேது (புகை இருக்கிற படியால்), த்ருஷ்டாந்தம் (அடுப்பில்-விளக்கில் இருப்பது போல்) என்பவை காட்டப்படுகின்றன. இங்கும் ’ஸத்தை அறிந்தால் அனைத்தையும் அறிந்ததாகும்’ என்று ப்ரதிஜ்ஜையும், ’மண்கட்டியை அறிந்தால் அதன் கார்யங்களை அறிந்த தாவது போல்’ என்று த்ருஷ்டாந்தமும் சொல்லப்பட்டுள்ளன.
    எனவே இங்கு ஒரு அநுமானம் தான் சொல்லப்படுகிறது. அநுமானத்தால் அறியப்படும் ஸத் என்ற பொருள் ப்ரதாநமாகத் தான் இருக்க முடியும்; பரோத்மாவை அநுமானத்தால் அறிய இயலாது என்று நீங்களே ஒப்புக் கொண்டபடியால்.

1.1.5 ஈக்ஷத்யதி₄கரணம்
வேதாந்தம் காட்டும் ஜ்ஞாநமுடைய படைப்பாளி

ஜ்ஞாநமுள்ள பொருளே ஜகத் காரணம்

  • பூர்வ பக்ஷத்தில், உலகத்தைப் போல் முக்குணமுடைய ப்ரதானம் தான் ஜகத் காரணமாக இருக்க முடியும் என்னப் பட்டது.
  • ஸித்தாந்தம் – ஜகத்காரணப் பொருள் ப்ரதானம் அல்ல என்று 8 ஸூத்ரங்களாலே நிரூபிக்கிறார் வேத வ்யாஸர்
  1. ஈக்ஷதே: ந அசப்தம் – ’அசப்தம்’ என்றால் ப்ரதானம். சப்தம் என்பது வேதம். அசப்தம் என்றால் ’வேதத்தால் மட்டும் அறியப்படாத பொருள்’. ப்ரதானத்தை அநுமானத்தாலும் அறியலாம், வேதம் கொண்டும் அறியலாம். ஆகவே அது அசப்தம் ஆகும். ’
    ந’ என்றால் அல்ல. ஈக்ஷணம் என்றால் பார்ப்பது அல்லது ஸங்கல்பம் செய்து கொள்வது. ’ஈக்ஷதே:’ என்றால் ’ஸங்கல்பத்தைச் சொல்லும் சொல் இருக்கிறபடியால்’ என்று பொருள்.
    ஆக இந்த ஸூத்ரத்தின் முழுப் பொருள் –
    “ஸத் வித்யையில் ஜகத் காரணமாகச் சொல்லப்படும் ’ஸத்’ என்ற பொருள் ப்ரதானம் அல்ல, ஸத்தோடு தொடர்பு பட்ட
    ஸங்கல்பத்தைச் சொல்லும் ஈக்ஷதி என்ற சொல் இருக்கிறபடியால்”.
    உத்தாலகர் ’ஸதேவ ஸோம்ய இதமக்ர ஆஸீத்’ என்று இவ் வுலகுக்கு ஸத் தான் காரணம் என்று சொல்லி விட்டு,
    ’தத் ஐக்ஷத, ப₃ஹு ஸ்யாம் ப்ரஜாயேய இதி’ என்று கூறுகிறார். அதாவது – “அந்த ஸத் என்ற பொருள் ஸங்கல்பம் செய்து கொண்டது; -நான் பலவாக ஆகக் கடவேன்; அதற்காக உலகப் பொருள்களைப் படைக்கக் கடவேன்” என்று. இப்படி உலகத்தை எல்லாம் படைப்பதற்கு உறுப்பான ஸங்கல்பம் அசேதநமான ப்ரதானத்துக்குப் பொருந்தாதே –
    பூர்வ பக்ஷி கூறிய யுக்திகளுக்கும் பதில் இதில் கிடைக்கிறது.
    (1) கார்யத்துக்குத் தகுந்தபடி காரணம் இருக்க வேண்டும் –
    பரமாத்மா தான் அனைத்து உலகத்தையும் படைக்கத் தகுந்தவர், எல்லை யற்ற ஜ்ஞாநம் சக்தி முதலானவை உள்ளபடியால்.
    (2) ஒன்றை அறிந்தால் அனைத்தையும் அறிந்ததாகும் என்னும் ப்ரதிஜ்ஜையும் பொருந்தும் – அனைத்து சேதனம் மற்றும் அசேதனப் பொருள்களை ப்ரஹ்மம் தனக்கு உடலாகக் கொண்டபடியால்.
    (3) த்ருஷ்டாந்த ஒற்றுமை – ஒரு பொருள் எல்லா பண்புகளும் எடுத்துக்காட்டைப் போல் இருக்க வேண்டும் என்னும் தேவை யில்லை .
    (4) கபிலரின் உபதேசம் –வேதாந்தத்துக்கு முரணான இந்த கபிலரின் உபதேசம் தள்ளத் தக்கதே
    (5) அநுமான வடிவம் – இங்கு அநுமான வடிவமே
    இல்லை
    ’ஹேது’ என்ற முக்கியமான வாக்கியம் இல்லாதபடியால். ப்ரதிஜ்ஜை எல்லா ப்ரமாணங்களுக்கும் பொருந்தும்.
    த்ருஷ்டாந்தமும் இப்படி ஒரு பொருள் இருக்க முடியும் என்று காட்ட வந்தது.

ப்ரதானம் ஜகத்காரணம் ஆக முடியாது

  1. கௌ₃ண:சேத் ந ஆத்ம சப்தாத்-
    கௌணம் உருவகம் சேத் என்றால், ந அல்ல, ஆத்ம சப்தாத் ஆத்மா என்ற சொல் இருப்பதால்
    இங்கு சொல்லப்பட்ட ஈக்ஷணம் ஸங்கல்பம் என்று கொள்ளாமல், ’கார்யம் உண்டாக்கத் தயாரான நிலை ’ என்ற இரண்டாம் பக்ஷமாகக் (கௌணமாகக்) கொண்டால் ப்ரதானமே சொல்லப் படலாமே ? மேலுள்ள வாக்கியங்களில் தேஜஸ் ஜலம் முதலானவை ஸங்கல்பம் செய்ததாகச் சொல்லுகிறபடியால் அங்கு கௌணமாகத் தானே கொள்ள வேன்டும்? என்று பூர்வ பக்ஷீ சொன்னால், அது தவறு.
    உத்தாலகர் மேல் ஓரு இடத்தில் “–ஐததா₃த்ம்யம் இத₃ம் ஸர்வம்… ஸ ஆத்மா” என்று
    கூறுகிறார்.
    ஸத் என்ற பொருளை ’உலகுக்கு எல்லாம் ஆத்மா’ என்று அழைக்கிறார்.
    ஆத்மா என்ற சொல் இருக்கிற படியால், இங்கு சொல்லப்பட்ட ’ஈக்ஷணம்’ என்பது சேதனனின் ஸங்கல்பமே
    அசேதனத்துக்கு ஏற்படும் ’ தயாரான நிலை ’ அல்ல.
  2. தந் நிஷ்ட₂ஸ்ய மோக்ஷ உபதேசாத் –
    ’தத் த்வம் அஸி’ அதாவது
    ’ஸத் என்ற பொருளும் நானும் ஒன்று’ என்று அறிந்து
    த்யானிப்பவன் மோக்ஷம் அணடகிறான் என்கிறது வேதம்.
    “தஸ்ய தாவதே₃வ சிரம் யாவத் ந விமோக்ஷ்யே அத₂
    ஸம்பத்ஸ்யே ” – இப்படி ஸத்தை த்யானிப்பவனுக்கு உடல் பிரியும் வரை தான் தாமதம், உடனே மோக்ஷம் அடைகிறான்.
    ஆகவே ஸத் என்பது பரமாத்மாவாகத் தான் இருக்க வேண்டும். ப்ரதானத்தைத் த்யானித்தால் ஸம்ஸாரம் தானே கிடைக்கும்.
  3. ஹேயத்வா வசநாத் ச –
    தள்ளத் தக்கதாகச் சொல்லாதபடியால். ஸத் என்பது ப்ரதானம் ஆனால் ’தத் த்வம் அஸி’ என்பது
    ’உடலே நான்’ என்னும் மயக்கத்தைக் குறிக்க வேண்டும். அப்படி என்றால், அது தள்ளத் தக்கது என்று வேதம்
    உபதேசித்திருக்க வேண்டும். ஆனால் அவ்விதமான உபதேசம் இங்கு காணப்பட வில்லை . ஸத்தைப் புகழ்கிறது வேதம்.
  4. ப்ரதிஜ்ஞாவிதராோ₄த் –
    ப்ரதிஜ்ஜையோடு முரண்பாடு. ஸத் என்ற பொருளை அறிந்தால் உலகில் அனைத்தையும் அறிந்ததாகும் என்று உத்தாலகர் கூறினார். உலகம் என்பது சேதனம் அசேதனம் இரண்டையும் உடையது. ஸத் என்பது ப்ரதானம் என்று கொண்டால், ப்ரதானத்திலிருந்து அசேதனப் பொருள்கள் தோன்றுகிறபடியால், ஸத்தை அறிந்தால்
    அவற்றை அறிந்ததாகும். ஆனால், சேதனர்களான ஜீவாத்மாக்கள் அசேதனமான ப்ரதானத்திலிருந்து உண்டாக இயலாது.
    அகவே ஸத்தை அறிந்தால் ஜீவர்களை அறிந்ததாகாது. எனவே ஸத் என்பது ப்ரதானம் அல்ல. பரமாத்மா தான்.
    பரமாத்மாவுக்கு சேதனம் அசேதனம் அனைத்தும் உடலானபடியால், அவற்றோடு கூடியவராக அவரை அறிந்தால் உலகில் அனைத்தையும் அறிந்ததாகும் என்னும் ப்ரதிஜ்ஜை பொருத்தமானதாகும்.

உபநிஷத்துக்களின் ஒற்றுமை

  1. ஸ்வாப்யயாத் –
    தன்னிடம் லயம் அடைகிறபடியால். உத்தாலகர் மேல் ஒரு இடத்தில்
    “ஸதா ஸோம்ய ததா₃ ஸம்பந்நோ ப₄வதி, ஸ்வம் அபீதோ ப₄வதி, ஸதி ஸம்பத்₃ய ந விது₃:” அதாவது,
    ’இந்த ஜீவன் தூங்கும் போது, ஸத்தோடு கூடுகிறான்;
    ஸத்திடம் லயம் அடைகிறான்’ என்று கூறுகிறார். ஒரு பொருள் எங்கு உண்டானதோ அங்கு தான் லயம் அடைய முடியும். -எனவே ஜீவர்களுக்குக் காரணப் பொருள் ஸத் தான் என்று தெரிகிறது. எனவே அது ப்ரதானம் ஆக முடியாது. ஜீவர்களையும் தனக்கு உடலாகக் கொண்ட பரமாத்மா தான் ஜீவர்களைப் படைக்கிறான் என்று ஏற்க வேண்டும்.
  2. க₃தி ஸாமாந்யாத் –
    ஒற்ற அர்த்தத்தைச் சொல்லுகிறபடியால். கதி என்றால் செயல்பாடு என்று பொருள். இந்த வேத வாக்கியத்தின் செயல் பாடாவது, தன் பொருளைப் போதிப்பது. ஸாமாந்யம் என்றால் ஒற்றுமை . எல்லா வேதாந்தங்களுக்கும் ’பொருளை போதித்தல் என்னும் செயல் ஒற்றுமை யுடையதாக இருக்க வேண்டும்’ என்று
    ஸூத்ரத்தின் பொருள். ஒற்றுமையாவது, ஒரே பொருளை போதிப்பது. எல்லா உபநிஷத்துகளும் ஒரே பொருளைத் தானே ஜகத் காரணம் என்று சொல்ல வேண்டும்.
    மற்ற உபநிஷத்துக்களைப் பார்த்தால்,
    “ஆத்மா வா இத₃ம் ஏக ஏவ அக்₃ரே ஆஸீத்” (ஐதரேய உபநிஷத்),
    “ஆத்மந: ஆகாச: ஸம்பூ₄த:” (தைத்திரீய உபநிஷத்) என்று எங்கும் அறிவுடையவரான ஆத்மா ஒருவர் தான் ஜகத் காரணமாகச் சொல்லப்பட்டுள்ளார். எனவே அதோடு ஒற்ற பொருளைச் சொல்ல வேண்டிய இந்த உபநிஷத்தில் சொல்லப்படும் ஸத் என்பது ஜ்ஞாநமுடைய பொருளாகத் தான் இருக்க வேண்டும், அசேதனமாக முடியாது.
  3. ஸ்ருேத்வாத் ச –
    கேட்கப்படுகிறபடியாலும்.
    மற்ற உபநிஷத்துகளில் மட்டுமல்லாமல், இந்த சாந்தோக்ய உபநிஷத்திலேயே கூட மற்ற இடங்களில் பரமாத்மா தான் ஜகத் காரணம் என்று தெளிவாகத் தெரிகிறது.
    “த்தை₃க்ஷத” என்ற ஸங்கல்பத்தால் எல்லை யற்ற ஜ்ஞாநம்,

    ப₃ஹு ஸ்யாம்” என்ற பலவாக ஆகிற படியால் தடையற்ற சக்தியும்,

    ஸதா₃யதனா:” என்று அனைத்தையும் தாங்கும் பலமும்,
    “அநேந ஜீவேந ஆத்மநா அநு ப்ரவிஸ்ய” என்பதால் இவரே அனைத்துப் பொருள்களுக்கு உள்ளும் புகுந்து வ்யாபிக்கிறார் என்று, “அஸ்மிந் காமா: ஸமாஹிதா:” என்று ஆசைப் படத் தகுந்த நற் பண்புகள் எல்லாம் இந்த ஜகத் காரணத்திடம் உள்ளன என்றும்,
    “ஏஷ ஆத்மா அபஹத பாப்மா” என்று இந்த ஜகத்காரணம் எந்த தோஷங்களும் அற்றது என்றும் இந்த உபநிஷத்திலேயே சொல்லப் பட்டபடியால் ஸத் என்ற ஜகத் காரணம் பரமாத்மாவே .
    இப்படி பல வாக்கியங்களை ஆராய்ந்து, ஸத் என்ற ஜகத் காரணம் பரமாத்மாவே என்பதைத் தெளிவு படுத்துகிறார் வேத வ்யாஸர்-

1.1.6 ஆநந்தமயாதி₄கரணம்
ஜீவாத்மாவே படைத்திருக்கலாமே ?
ஆநந்தமயாதிகரணத்தின் பின்புலம்

ஸங்கதி – ஜகத் காரணமான ப்ரஹ்மம் உலகில் மிக ப்ரஸித்தமான அசேதனப் பொருள் அல்ல என்று 1.1.5-ஈக்ஷத்யதிகரணத்தில்-நிரூபிக்கப்பட்டது. அடுத்து, உலகத்தில் இன்ப துன்பங்களை அநுபவிக்கும் பத்த ஜீவாத்மாவோ , முக்தி அடைந்த ஜீவாத்மாவோ கூட ஜகத் காரணமான ப்ரஹ்மம் ஆக இயலாது என்று 1.1.6 ஆநந்தமயாதிகரணத்தில் நிரூபிக்கப்படுகிறது.

விஷய வாக்யம் – க்ருஷ்ண யஜுர் வேதத்தில் அடங்கிய தைத்திரீய உபநிஷத்தின் ஆநந்தவல்லி என்னும் இரண்டாம் வல்லி.

ப்₃ரஹ்மவித் ஆப்நோதி பரம், ஸத்யம் ஜ்ஞாநம் அநந்தம் ப்₃ரஹ்ம – ப்ரஹ்மத்தை அறிந்தவன் உயர்ந்த இலக்கான அந்த ப்ரஹ்மத்தையே அடைகிறார், அது என்றும் மாறாதது, அறிவே வடிவமானது, எல்லை யற்றது.

ஸ்தூல அருந்ததி நியாயம் -போல் உடலில் தொடங்கி ஆத்மாவைக் காட்டும் பஞ்ச கோசங்கள் -உடலான அன்ன மயம் -பிராண மயம் -மநோ மயம் -விஞ்ஞான மயம் -ஆனந்த மயம் -ப்ரஹ்மம் என்றும் காட்டும் –

ஆத்ம ஆகாச: ஸம்பூ₄த:, ஆகாசாத் வாயு:, வாயோர் : அக்₃நி:, அக்₃ந : ஆப:, அத்₃ப்₄ய: ப்ருதி₂வீ, ப்ருதி₂வ்யா ஓஷத₄ய:. ஓஷதீ₄ப்₄ய: அந்நம், அந்நாத் புருஷ:, புருஷ: அந்ந ரஸ மய: – ப்ரஹ்மம் எனப் படும் ஆத்மாவிடமிருந்து ஆகாசம், காற்று, நெருப்பு, நீர், பூமி, பயிர்கள்,
உணவு, உடல் உண்டாகின்றன. உடல் உணவால் ஆக்கப் பட்டபடியால் ’அந்ந மயம்’ எனப்படுகிறது.

தஸ்மாத்₃வா எதஸ்மாத் அந்ந மயாத் அந்ய: அந்தர ஆத்மா ப்ராண மய:, தஸ்ய எஷ ஏவ சாரீர ஆத்மா ய: பூர்வஸ்ய –அந்த அந்ந மயமான உடலைக் காட்டிலும் வேறொன்று, அதற்குள் இருப்பது, ப்ராண மயம் எனப்படும் மூச்சுக் காற்று. ப்ராண மயத்துக்கு எந்த சாரீர ஆத்மா (உடலோடு கூடிய ஆத்மா) ஆத்மாவோ , அதுவே தான் ப்ராண மயத்துக்கும் ஆத்மா

தஸ்மாத்₃வா எதஸ்மாத் ப்ராண மயாத் அந்ய: அந்தர ஆத்மா மநோ மய:, தஸ்ய எஷ ஏவ சாரீர ஆத்மா ய: பூர்வஸ்ய –-அந்த ப்ராண மயம் எனப் படும் மூச்சைக் காட்டிலும் வேறொன்று, அதற்குள் இருப்பது, மநோ மயம் எனப்படும் மனது.-ப்ராண மயத்துக்கு எந்த சாரீர ஆத்மா (உடலோடு கூடிய ஆத்மா) ஆத்மாவோ , அதுவே தான் மநோ மயத்துக்கும் ஆத்மா

தஸ்மாத்₃வா எதஸ்மாத் மநோ மயாத் அந்ய: அந்தர ஆத்மா விஜ்ஞாந மய:, தஸ்ய எஷ ஏவ சாரீர ஆத்மா ய: பூர்வஸ்ய –-அந்த மநோ மயம் எனப் படும் மனதைக் காட்டிலும் வேறொன்று, அதற்குள் இருப்பது, விஜ்ஞாநமயம் எனப்படும் புத்தி (உறுதி).-மநோ மயத்துக்கு எந்த சாரீர ஆத்மா (உடலோடு கூடிய ஆத்மா) ஆத்மாவோ , அதுவே தான் விஜ்ஞாந மயத்துக்கும் ஆத்மா

தஸ்மாத்₃வா எதஸ்மாத் விஜ்ஞா மயாத் அந்ய: அந்தர ஆத்மா ஆ ந்த₃மய:, தஸ்ய எஷ ஏவ சாரீர ஆத்மா ய: பூர்வஸ்ய –-அந்த விஜ்ஞாந மயம் எனப்படும் புத்தியைக் காட்டிலும் வேறொன்று, அதற்குள் இருப்பது, ஆநந்த மயம் எனப்படும் ஜீவாத்மா. -விஜ்ஞாந மயத்துக்கு எந்த சாரீர ஆத்மா (உடலோடு கூடிய ஆத்மா) ஆத்மாவோ , அதுவே தான் ஆநந்த மயத்துக்கும் ஆத்மா.

ஆநந்த மயனுக்கு மேல் ஒரு பொருள் இருப்பதாக இங்கு சொல்லாத படியால், தொடக்கத்தில் சொல்லப்பட்ட ப்ரஹ்மமும் ஆநந்த மயனும் ஒன்று என்று தெரிகிறது.

ஆநந்த மயன் ஜீவாத்மாவே என்னும் பூர்வ பக்ஷம்
பூர்வ பக்ஷம் – இங்கு ப்ரஹ்மம், ஆத்மா, ஆநந்த மயன் என்றெல்லாம் சொல்லப்பட்டது ஜீவாத்மா தான். இதற்குக் காரணங்கள் –

சாரீர ஆத்மா” என்று குறிப்பிட்டது – இங்கு அந்ந மயம் முதலானவற்றுக்கு ஆத்மாவான பொருளைச் போல்லும் போது,
“சாரீர ஆத்மா” அதாவது “சரீரத்தை உடைய ஆத்மா” என்று சொல்லப்பட்டது. சரீரம் என்பது ஜீவனுக்கே உண்டாகையால் இது ஜீவாத்மாவைத்தான் குறிக்க வேண்டும்.
ஸாமாநாதி கரண்யம் – ஜீவாத்மாவும் பரமாத்மாவும் ஒன்றான படியால் இங்கு ஆநந்த மயன் எனப்படுபவர் ஜீவாத்மாவே .
இரண்டு சொற்கள் சேர்ந்து படிக்கப்பட்டு, அவை ஒரே பொருளைச் சொல்லுமானால் அதற்கு ஸாமாநாதிகரண்யம் என்று பெயர். எடுத்துக்காட்டு – “சிவந்த தாமரை ” என்ற சொல் தொடரில், சிவந்த என்னும் சொல்லும் தாமரை என்ற
சொல்லும் ஒரே பொருளான தாமரையைத் தான் குறிக்கின்றன.
அது போல் சாந்தோக்ய உபநிஷத்தில் ஸத்வித்யை என்னும் பகுதியில் உத்தாலகர் தன் மகனான ஸ்வேத கேதுவைப் பார்த்து “தத் த்வம் அஸி” என்கிறார். இதில் ’தத்’ என்ற சொல்லுக்கும் ’த்வம்’ என்ற சொல்லுக்கும் ஸாமாநாதிகரண்யம்
இருக்கிறபடியால் இரண்டு சொற்களும் ஒருவரைத்தான் குறிக்க வேண்டும். எனவே , “ஜகத் காரணமான ஸத் என்ற பொருள் தான் நீயாக இருக்கிறாய்” என்று பொருள் ஆகும்.

இதுவே அத்வைத மதம் – ’ப்ரஹ்மம்’ என்ற ஒரு பொருள் மட்டுமே உள்ளது. அது ’அவித்யா’ என்ற ஒரு குற்றத்தால்
மூடப்பட்டு, தன்னைச் சுற்றிப் பல பொருட்கள் இருப்பதாக கற்பணன செய்து கொள்கிறது. இதுவே ப்ரமம்/மயக்கம்.
இந்த மயக்கத்தால் பல இன்ப துன்பங்களை ப்ரஹ்மம் அநுபவிக்கிறபடியால் அதுவே ஜீவாத்மா எனப்படுகிறது. இந்த மயக்கம் தீர வேண்டும் என்றால், “தத் த்வம் அஸி” முதலான வாக்யங்களைக் கொண்டு தான் மட்டுமே உண்மை, மற்ற அனைத்தும் பொய் என்று உணர வேண்டும். இந்த புரிதல் வந்தால், அவித்யா என்ற தோஷம் அழிந்து விடும்,
அதற்குப் பின் பல பொருள்களை ப்ரஹ்மம் கற்பனை செய்யாது, தான் மட்டுமே ஸுகமாக இருக்கும்.
எனவே , மேல் சொல்லப்பட்ட இரண்டு காரணங்களால் ஜீவாத்மா தான் ஆநந்த மயன் என்பதே பூர்வ பஷம்

1.1.6 ஆநந்தமயாதி₄கரணம்
அளவிறந்த ஆநந்தம் பரமாத்மாவுக்கே

வேதமே அளக்க முடியாத ஆநந்தம்-

தைத்திரீய உபநிஷத்தின் ஆநந்த வல்லியில் ஜகத்காரணமான ப்ரஹ்மம் ஆநந்த மயன் எனப்பட்டது. அவரே-’சாரீர:’ -அதாவது உடலோடு கூடியவர் என்று உபநிஷத் சொல்கிற படியால் அவர் ஒரு ஜீவாத்மாவே என்பது பூர்வ பக்ஷம்.

ஸித்தாந்தம் – இவ் வாதத்தை முறியடித்து, ஆநந்த மயன் பரமாத்மாவே என்று 8 ஸூத்ரங்களால் நிரூபிக்கிறார் வ்யாஸர்.

(1) ஆநந்த₃மய: அப்₄யாஸாத் –
அடுத்த அதிகரணத்தில் இருக்கும் ’அந்ய:’ என்ற சொல்லை இந்தப் பாதத்தில் இருக்கும் எல்லா அதிகரணங்களிலும் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதற்கு அநுஷங்கம் என்று பெயர்.
ஸூத்ரத்தின் பொருள் –
ஆநந்த₃மய: – ஆநந்த₃மயன் என்று சொல் ப்பட்டவர்
அந்ய: – ஜீவாத்மாவைக் காட்டிலும் வேறு பட்டவர்
அப்₄யாஸாத் – அப்₄யாஸம் செய்யப்பட்ட அதாவது மறுபடியும் மறுபடியும் பெருக்கிச் சொல்ப்பட்ட ஆநந்த்த்தால்

இந்த ஆநந்த₃வல்லியில், ஆநந்த மயனின் ஆநந்தத்தை ஒரு அளவு கோல் கொண்டு அளக்க முயற்சிக்கிறது வேதமே-

ஸா ஏஷா ஆநந்த₃ஸ்ய மீமாம்ஸா ப₄வதி| யுவா ஸ்யாத் ஸாது₄ யுவாத்₄யாயக: ஆசிஷ்டோ ₂ த்₃ரடி₄ஷ்டோ ₂ ப₃லிஷ் ட ₂: |தஸ்யேயம் ப்ருதி₂வீ ஸர்வா வித்தஸ்ய பூர்ணா ஸ்யாத் | ஸ ஏகோ மாநுஷ ஆநந்த₃: –
ஆநந்த மயனின் ஆநந்தத்தைப் பற்றின ஆராய்ச்சி துவங்கப்படுகிறது. இளமையும், கல்வியும், உடல் மற்றும் மன வலிமையும், வேகமாகச் செயல்படும் திறமையும், அதிகமான செல்வமும் இருந்தால் அதுவே ஒரு மனிதனின் ஆநந்தம் ஆகும்.

தே யே சதம் மாநுஷா ஆநந்தா₃: ஸ ஏகோ மநுஷ்ய க₃ந்த₄ர்வாணாம் ஆநந்த₃: |ஸ்ரோத்ரி யஸ்ய ச அகாமஹதஸ்ய –
இந்த மநுஷ்ய ஆநந்தத்தை நூறு மடங்காகப் பெருக்கினால், அது ஒரு க₃ந்த₄ர்வனின் ஆநந்தம் ஆகும். அதுவே முக்தனுக்கும்

இப்படியே நூறு நூறாகப் பெருக்கிக் கொண்டு போனால், பித்ருக்கள் தேவர்கள் இந்த்ரன் ப்ருஹஸ்பதி மற்றும் ப்ரஜாபதியின் ஆநந்தங்களை அளக்கலாம். ப்ரஜாபதியின் ஆநந்தத்தை நூறால் பெருக்கினால் ஆநந்த மயனின் ஆநந்தம் கிடைக்குமோ என்று பார்த்த வேதம், அதன் அருகில் கூடச் செல்ல முடியாதபடியால் தோல்வி யுற்றுச் சொல்லுகிறது –
யதோ வாஸோ நிவர்தந்தே அப்ராப்ய மநஸா ஸஹ, ஆநந்த₃ம் ப்₃ரஹ்மண: – என்னுடைய பேச்சும் மனதும் எதை அடைய முடியாமல் திரும்பி விட்டனவோ அதுவே ஆநந்த மயனான ப்ரஹ்மத்தின் ஆநந்தம் ஆகும்.-

இப்படி நூறு நூறாகப் பெருக்கிப் பார்த்தாலும் அளக்க முடியாத எல்லை யற்ற ஆநந்தத்தை உடையவர் ஆநந்த மயன்.-இப்படிப்பட்ட ஆநந்தம் ஸம்ஸாரத்தில் எல்லை யற்ற துன்பமும் சிறிது ஸுகமும் காணும் ஜீவனுக்குப் பொருந்தாது.

பூர்வ பக்ஷியின் யுக்திகளை முறி யடித்தல்
பூர்வ பக்ஷி முக்கியமாக இரண்டு யுக்திகளைக் கையாண்டார். அவற்றுக்கு விடை அளிக்கிறார் வ்யாஸர் –
1- “சாரீர ஆத்மா” – உடலோடு கூடிய ஆத்மா என்று சொல் ப்பட்டவர் ஜீவனாகத் தான் இருக்க வேண்டும் என்றார் பூர்வ பக்ஷி. அது உண்மை யல்ல . பரமாத்மாவுக்கு இந்த உலகில் உள்ள சேதனர்கள் மற்றும் அசேதனங்கள் அனைத்தும் சரீரமாக உள்ளபடியால், உண்மையில் அவரைத் தான் சாரீரன் என்று சொல்வது பொருத்தமானது.

2- ஸாமாநாதி₄கரண்யம் – சேர்த்துப் படிக்கப் பட்ட இரண்டு சொற்கள் ஒரே பொருளைச் சொல்லுதல் ஸாமாநாதிகரண்யம்.
“தத் த்வம் அஸி” என்று வேதமே பரமாத்மாவும் ஜீவாத்மாவும் ஒன்றே என்று சொல்கிறபடியால் ஜீவனே ஜகத் காரணம் என்றார் பூர்வ பக்ஷி. இதுவும் சரி அல்ல , இங்கு ஜீவனுக்கும் பரனுக்கும் ஐக்யம் சொல்லப் படாத படியால்.

பொதுவாக ’நான் மநுஷ்யன்’ என்று சொன்னால், நான் என்ற சொல் ஆத்மாவையும், மநுஷ்யன் என்ற சொல் உடலையும் தான் குறிக்கும். பிறகு எப்படி இரண்டும் ஒரே பொருளைத் தருகின்றன? ஏன் என்றால் மநுஷ்யன் என்ற சொல், இந்த உடலை மட்டும் குறிப்பிடுவதோடு நின்று விடாமல், அதற்குள் இருக்கும் ஜீவாத்மா வரை குறிக்கும்.
ஜீவாத்மாவை விட்டுப் பிரியாத தன்மையாக இந்த உடல் இருக்கிறபடியால். ஆகையால் இந்தச் சொற் தொடரின் உண்மையான பொருள் – “நான் மநுஷ்ய சரீரத்தை உடையவர்” என்று –

அதே போல் இப்போது உத்தாலகர் தன் மகன் ஸ்வேத கேதுவைப் பார்த்துச் சொல்கிறார் – “தத் த்வம் அஸி” அதாவது “அந்த ஜகத் காரணமான ப்ரஹ்மமே நீயாக இருக்கிறாய்” என்று. இதில் ’த்வம்’ அதாவது-’நீ’ என்ற சொல், ஸ்வேத கேதுவின் உடலை மட்டும் குறிக்காமல் எப்படி அதற்குள் இருக்கும் ஆத்மா வரை குறிக்குமோ , அதுவே போல் அந்த
ஜீவனுக்குள் இருக்கும் பரமாத்மா வரை குறிக்கும். எனவே இந்தச் சொற் தொடரின் உண்மையான பொருள் ஆவது –“ஜகத்காரணமான அந்த ப்ரஹ்மம் தான் உனக்குள்ளும் அந்தர்யாமியாக இருக்கிறார்” என்பதே ஆகும். எனவே இங்கு பரமாத்மாவுக்கும் ஜீவாத்மாவுக்கும் ஐக்யம் சொல்லப்படவே இல்லை-

ஸ்வாமி நம்மாழ்வார் தன் திருவாய்மொழியில் கூறுகிறார் –
நீராய் நிலனாய் தீயாய் காயாய் நெடுவானாய்
சீரார் சுடர்கள் இரண்டாய் சிவனாய் அயன் ஆனாய்”.

பரமாத்மா தான் இந்த உலகில் உள்ள அனைத்துப் பொருட்களாகவும் வடிவு கொண்டிருக்கிறார். இதுவே “தத் த்வம் அஸி” என்ற வாக்கியத்தின் சரியான பொருள்.

ஆநந்த மயன் என்ற சொல்லின் ஆராய்ச்சி
(2) விகார சப்₃தா₃த் ந இதி சேத் ந ப்ராசுர்யாத் –
ஸூத்ரத்தின் பொருளாவது “விகாரத்தைச் சசால்லும் சொல் இருக்கிற படியால் ஆநந்த மயன் ஜீவாத்மாவே என்று சொன்னாய் என்றால், அது தவறு, மிகுதியால்”.

பூர்வ பக்ஷி கேட்கிறார் – ஆநந்த மயன் என்னும் சொல்லில் உள்ள மயட் என்கிற விகுதியானது-’விகாரம்’ அதாவது மாறுபாடு – பரிணாமம் என்ற பொருளைக் உடையதாக உலகத்தில் காண்கிறோம். தங்க மயமான மோதிரம் என்றால் தங்கத்திலிருந்து உண்டானது என்று தெரிகிறது. ஆகையால், ஆநந்த மயன் என்றால் ஆநந்தத்தின் ஒரு மாறுபாடு என்று பொருள் ஆகும். எனவே ஆநந்த மயன் என்பவர் தன் ஆநந்த நிலை யிலிருந்து மாறி துக்கத்தை அநுபவிப்பவராக இருக்க வேண்டும். இது ஸம்ஸாரத்தில் துன்பப்படும் ஜீவனுக்குத் தானே பொருந்தும்?

ஸித்தாந்தியின் பதில் – இது தவறானது. ’மயட்’ என்ற சொல்லுக்கு ’மிகுதி’ என்றும் ஒரு பொருள் உலகில் உள்ளது. ’தேஜோ மயம்’ என்று சொன்னால், மிகுதியான தேஜஸ் என்று தானே பொ ருள்படுகிறது. அது போல் இங்கும் ஆநந்த மயன் என்று சொன்னால் , மிகுதியான ஆநந்தம் உடையவர் என்று தான் பொருள். அந்த மிகுதி தான் முன்
சொல்லப் பட்ட ஆநந்த்தத்தை அளக்கும் முயற்சியிலும் காட்டப்பட்டது. எனவே ஆநந்த மயன் ஜீவனல்ல-

3) தத்₃தே ₄து வ்யபதே ₃ஶாச்ச – “ஆநந்தத்துக்குக் காரணமாகச் சொல்லப்படுகிறபடியாலும்”.
இதே இடத்தில்-ஆநந்த மயன் எல்லை யற்ற ஆநந்தம் உடையவர் என்பதோடு மட்டும் நிற்காமல், இவர் தான் மற்றவருக்கு ஆநந்தத்தை வழங்குகிறார் என்றும் வேதம் சொல்கிறது.
“கோஹ்யே வ அந்யாத் க: ப்ராண்யாத் யதே₃ஷ ஆகாச ஆநந்த₃: ந ஸ்யாத்|
எஷ ஹ்யேவ ஆநந்த₃யாதி” –

இந்த ஆநந்த மயன் இல்லா விட்டால் வேறு யார் ஜீவனுக்கு இவ்வுலக இன்பங்களையும்,
மோக்ஷமாகிற இன்பத்தையும் வழங்க முடியும்? என்கிறது. எனவே ஆநந்தத்தைப் பெரும் ஜீவனைக் காட்டிலும், ஆநந்தம் கொடுக்கும் ஆநந்த மயன் வேறாகத் தான் இருக்க வேண்டும்.

4-மாந்த்ர வர்ணிகமேவ ச கீ₃யதே – “மந்த்ரத்தில் சொல்லப் பட்டவர் தான் இங்கும் சொல்லப் படுகிறபடியால்”.
இந்த வல்லியின் தொடக்கத்தில் உள்ள மந்த்ரம் –
“ப்ரஹ்மவித் ஆப்நோதி பரம்” அதாவது ப்ரஹ்மத்தை உபாஸிப்பவன் மேலான
இலக்கான அந்த ப்ரஹ்மத்தையே அடைகிறார் என்கிறது. அங்கு சொல்லப்பட்ட ப்ரஹ்மம் தான் இங்கு சொல்லப்படும் ஆநந்த மயன் என்பதில் ஐயமில்லை . எனவே , உபாஸனம் செய்யும் ஜீவனைக் காட்டிலும், அடையப்படும் இலக்கான ஆநந்த மயன் என்ற ப்ரஹ்மம் வேறாகத் தானே இருக்க வேண்டும்

ஆநந்த வல்லியில் மற்ற வாக்கியங்களின் ஆராய்ச்சி
(5) ந இதர: அநுபபத்தே :
– “வேறு ஒருவனான ஜீவன் அல்ல , பொருந்தாமையால்”.
பூர்வ பக்ஷியின் கேள்வி – முன் கூறிய மந்த்ரத்தால் சொல்லப்பட்ட ப்ரஹ்மம் “ஸத்யம் ஜ்ஞாநம் அநந்தம்” அதாவது என்றும் மாறாதது, ஜ்ஞாநமே வடிவமானது, எல்லை யற்றது ’ என்று விவரிக்கப்படுகிறது. இது ஸம்ஸாரி ஜீவனுக்குப் பொருந்தாது என்றாலும் முக்தி
அடைந்த ஜீவனையே ப்ரஹ்மம் என்று கொள்ளலாமே ?
ஸித்தாந்தியின் பதில் – இல்லை , ப்ரஹ்மம் என்பது முக்தி அடைந்த ஜீவனின் நிலையும் அல்ல . இங்கு ப்ரஹ்மத்தை விபஶ்சித் என்று வேதம் கூறுகிறது. விபஶ்சித் என்றால்“பலவற்றைப் பார்த்து அறிபவன்” என்று பொருள். பூர்வ பக்ஷியான அத்வைதியின் மதத்தில் முக்தி அடைந்த ஜீவன் தன்னைத் தவிர எதையுமே அறிய மாட்டார். எனவே அவரை விபஶ்சித் என்று சொல்லுவது பொருந்தாது.

(6) பே₄த₃ வ்யபதே₃ஶாச்ச – “வேறுபாடு சசொல்லப்பட்டபடியாலும்”. நேரடியாகவே வேதம் ஜீவாத்மாவைக் காட்டிலும் வேறுபட்டவர் தான் ஆநந்த மயன் என்று சொல்கிறதே –
தஸ்மாத்₃வா ஏதஸ்மாத் விஜ்ஞாந மயாத் அந்ய: அந்தர: ஆத்மா ஆநந்த₃மய:” அதாவது விஜ்ஞாந மயன் என்ற ஜீவனைக் காட்டிலும் வேறாய் அதற்குள் இருப்பவர் ஆநந்த மயன்-என்று. இங்கு விஜ்ஞாந மயன் என்பவர் ஜீவன் தான். புத்தியை விஜ்ஞாந மயன் என்று சொல்ல இயலாது, புத்தியால்“விஜ்ஞாநம் யஜ்ஞம் தநுதே ” என்று மேல் சொல்லப் பட்டபடி யாகம் முதலானவற்றைச் செய்ய முடியாதபடியால்.

(7) காமாத் ச ந அநுமாநாபேக்ஷா – “ஆகையால் உடலின் தேவை இல்லாதபடியாலும்”. காமம் என்றால் ஆசை . -அநுமானம் என்ற சொல் இங்கு உடலைக் குறிக்கிறது. ப்ரஹ்மம் தன் ஸங்கல்பத்தால் மற்றும் ஆசையால் மட்டுமே உலகைப் படைப்பதாக வேதம் சொல்லுகிறது – “ஸ: அகாமயத ப₃ஹு ஸ்யாம் ப்ரஜாயேய இதி”-என்றும்
ஸ தப: அதப்யத” என்றும் முதலானவற்றில்.
எனவே ப்ரஹ்மத்திற்கு ஸ்ருஷ்டி செய்ய. ஒரு உடலின் தேவையே இல்லை –ஆனால் ஜீவாத்மாவோ உடல் இல்லாமல் எதையுமே செய்ய முடியாது. எனவே இங்கு சொல்லப் படும் ப்ரஹ்மம் ஜீவாத்மா அல்ல-

(8) அஸ்மின் அஸ்ய ச தத்₃யோகம் சாஸ்தி – “இதில் இவனுக்கு அதன் சேர்க்கை சொல்லப் படுகிறபடியாலும்”.
ப்ரஹ்மத்திடம் ஜீவனுக்கு ஆநந்தத்தின் சேர்க்கை சொல்லப்பட்டுள்ளது. வேதம் கூறுகிறது – “ரஸோ வை ஸ:, ரஸம் ஹ்யேவ அயம் லப்₃த்₄வா ஆநந்தீ₃ பா₄தி” அதாவது-’இந்த ப்ரஹ்மமே ரஸமான இன்பமான பொருள், இதை அடைந்து தான் ஒருவன் ஆநந்தத்தைப் பெருகிறான்’ என்று. எனவே ரஸமான இன்பமான அநுபவிக்கப்படும் பொருளான ப்ரஹ்மம், அதை அநுபவிக்கும் ஜீவனைக் காட்டிலும் வேறாகத் தான் இருக்க வேண்டும்.
இதுவே ஸித்தாந்தம்

கீழே -(3) தத்₃தே ₄து வ்யபதே ₃ஶாச்ச-அங்கு மோக்ஷ ப்ரதன் -இங்கு அவனே ப்ராப்யம் -என்கிறார் -இதுவே வாசி
அல்லல் இல் இன்பம் அளவு இறந்து எங்கும் அழகு அமர்சூழ் ஒளியன்
அல்லி மலர்மகள் போக மயக்குகள் ஆகியும் நிற்கும் அம்மான்
எல்லை இல் ஞானத்தன் ஞானம் அஃ தேகொண்டு எல்லாக் கருமங்களும் செய்
எல்லை இல் மாயனைக் கண்ணனைத் தாள் பற்றி யான் ஓர் துக்கம் இலனே.–3-10-8-

————-

1.1.7 அந்தரதி₄கரணம்
பரமாத்மாவின் திவ்யமான திருமேனி

அந்தரதிகரணத்தின் பின்புலம்
ப்ரஹ்ம ஸூத்ரத்தின் முதல் அத்யாயமான ஸமந்வய அத்யாயம் முழுவதும் பரமாத்மாவே உபநிஷத்தில் ஜகத்காரணம் என்று சொல்லப்பட்டவர் என்று நிரூபிப்பதற்காக.
1.1.5 ஈக்ஷத் யதிகரணம் மற்றும் 1.1.6 ஆநந்த மயாதிகரணம் சேர்ந்து
ஜகத் காரணமான ப்ரஹ்மம் உலகிலுள்ள அசேநம் மற்றும் சேதனப் பொருட்களைக் காட்டிலும் வேறுபட்டது என்று நிரூபித்தன.-அதற்கு அடுத்து 1.1.8 அந்தரதி₄கரணம் துவங்கப்படுகிறது.

இந்த அத்யாயத்தில் யார் ஜகத் காரணம் என்ற ஆராய்ச்சி நேரடியாக இல்லை . ஸூர்ய மண்டலத்திற்குள் இருப்பவர் யார் என்பதே ஆராயப் படுகிறது. பிறகு ஏன் இது இவ் விடத்தில் ஆராயப் பட வேண்டும் எனில், தொடர்பு உள்ளது.

ஸங்கதி – ஆநந்த மயாதிகரணத்தில் தைத்திரீய உபநிஷத்தின் ஆநந்த வல்லியைப் பற்றி ஆராய்ச்சி நடந்தது.-அங்கு ஒரு வாக்கியம் உள்ளது – “
ஸ ய: அயம் புருஷே ய: அஸவ் ஆதி₃த்யே ஸ ஏக:” அதாவது ’இந்த ஆத்மாவுக்குள்
இருப்பவரும் ஸூர்ய மண்டலத்துக்குள் இருப்பவரும் ஒருவர் தான்’ என்று பொருள். சாந்தோக்ய உபநிஷத்தின் முதல் ப்ரபாடகத்தில் அந்தாராதி₃த்ய வித்யையிலும் ஸூர்ய மண்டலத்திற்குள் இருக்கும் ஆத்மாவைப் பற்றிச் சொல்லப் பட்டுள்ளபடியால், அதை ஆராய்ந்து பார்ப்பது தகுந்ததே . அவ் விடத்தில் ஸூர்ய மண்டலத்திற்குள் இருப்பவர் ஒரு ஜீவாத்மா என்று முடிவாகி விட்டால், அவரே தான் இவ் வாத்மாவுக்குள் இருக்கும் ஆநந்த மயனாகவும் இருக்க வேண்டும். இதனால் ஜீவாத்மாவே ஜகத் காரணம் என்று நிரூபித்து விடலாம் என்பது பூர்வ பக்ஷியின் எண்ணம்

விஷயவாக்யம் – ய ஏஷ: அந் ராதி₃த்தய ஹிரண் மய: புருஷ: த்₃ருஸ்யத | ஹிரண்யஸ் மஸ்ரு: ஹிரண்ய தகச: |
ஆ ப்ரணகா₂த் ஸர்வ ஏவ ஸுவர்ண: | தஸ்ய யதா ₂ கப்யாஸம் புண்ட₃ரீகம் ஏவம் அக்ஷிணீ –
“ஸூர்ய மண்டலத்திற்குள் யார் ஒருவர் தங்க மயமான சரீரத்துடன் யோகிகளால் காணப் படுகிறாரோ , அவரது மீசையும் கேசமும் கூட தங்க மயமானாவை , அவர் தலை முதல் நகம் வரை அனைத்துமே தங்க மயமானது. அவருக்கு ஸூர்யனால் அலர்த்தப்பட்ட, தடாகத்தில் இருக்கும் தாமரை போன்ற அழகிய சிவந்த கண்கள் உள்ளன”. இவ்விடத்தில் தங்க மயம்
என்பதற்கு பிடித்தமானது, ஆசையைத் தூண்டக் கூடியது, ஈர்க்கக் கூடியது என்று பொருள்.

தஸ்ய உத் இதி நாம | ஸ ஏஷ ஸர்வேப்₄ய: பாப்மப்₄ய: உதி₃ : த | உதே ₃தி ஹ வை ஸர்வெப்₄ய: பாப்மப்₄ய: ய ஏவம் வேத–அவருக்கு உத் என்று பெயர். அவர் பாபங்களை எல்லாம் கடந்தவர். அவரை எவன் ஓருவன் த்யானிக்கிறானோ அவனும் எல்லாப் பாபங்களையும் கடந்து விடுகிறான்-

ஜீவாத்மாவே அந்தராதி₃த்ய புருஷன் என்னும் பூர்வ பக்ஷம்
ஸந்தேகம் – ஸூர்ய மண்டலத்திற்குள் இருக்கும் ஜகத் காரணமான புருஷன் ஜீவனா? பரமாத்மாவா? என்று ஆநந்த மயாதிகரணத்தில் ஜீவாத்மா ஜகத் காரணம் என்று நிரூபிக்கப்பட்டிருந்தாலும், இங்கு அதிகப்படியாக ஒரு கேள்வி உள்ளது. நம்மைப் போன்ற ஸாதாரண மனிதர்களால் ஜகத் காரணம் ஆக முடியாது என்றாலும், மிகுந்த புண்ணிய ஸாலிகளான சக்தி வாய்ந்த இந்த்ரன் வருணன் ப்ரஜாபதி போன்ற ஜீவாத்மாக்களுல் ஒருவர் இருக்கலாமே ?

பூர்வ பக்ஷம் – இங்கு ஸூர்ய மண்டலத்திற்குள் இருப்பதாகச் சொல்லப் பட்டவர் ஜீவாத்மா தான். இதற்குக் காரணம் –ஸரீரத்வம் – ஸரீரம் உடைமை . இவ் விடத்தில் ஸூர்ய மண்டலத்திற்குள் இருக்கும் புருஷனுக்கு ஸரீரம் இருப்பதாகச் சொல்லப் பட்டுள்ளபடியால் அவர் ஜீவனாகத் தான் இருக்க வேண்டும் என்கிறார் பூர்வ பஷீ.

கேள்வி – சென்ற அதிகரணத்திலேயே ஆநந்த மயன் என்ற பரமாத்மா ’ஸாரீரன்’ அதாவது ஸரீரம் உடையவர் என்று சொல்லி விட்டோம். பிறகு எப்படி இவ் வதிகரணத்தில் ஸரீரம் இருப்பதனால் இவர் ஜீவாத்மா என்று கூற முடியும்?

பதில் – கடந்த அதிகரணத்தில், பரமாத்மாவுக்கு இவ் வுலகிலிருக்கும் சித் மற்றும் அசித் பொருள்கள் எல்லாம் ஸரீரம் என்று தான் சொல்லப் பட்டது. ஆனால் இங்கு அந்தராதித்ய வித்யையில் ஸூர்ய மண்டலத்திற்குள் இருப்பவருக்கு கை கால்கள் கண் கேசம் முதலானவற்றைக் கொண்ட உடல் சொல்லப் படுகிறபடியால் இது பரமாத்மா அல்ல.

பூர்வபக்ஷியின் அபிப்ராயம் இதுவே – நாம் முன் பிறவிகளில் செய்த பாபம் மற்றும் புண்ணியத்தின் பயனான துக்கம் மற்றும் ஸுகத்தை அநுபவிப்பதற்காகத் தான் இந்த உடல் ஏற்பட்டுள்ளது. அதனால் தான் முக்தி அடைந்த பிறகு இவ் வாத்மா பாப புண்யங்களால் ஏற்படும் ஸுக துக்கங்கணள அநுபவிக்கத் தேவை யில்லாதபாடியால், முக்தி அடைந்த
ஜீவனுக்கு உடல் இல்லை என்று வேதம் கூறுகிறது – “
ந ஹ வை ஸ ஸ ரீரஸ்ய ஸத: ப்ரியாப்ரியயோ : அபஹதி: அஸ்தி| அஸரீரம் வாவ ஸந்தம் ந ப்ரியாப்ரியே ஸ்ப்ருசத:” என்று.

எனவே , ஒருவருக்கு உடல் இருக்கிறது என்றால் அவர் கண்டிப்பாக பாப புண்யங்களுக்குக் கட்டுப் பட்டவராகத் தான் இருக்க வேண்டும். ஆகையால், ஸூர்ய மண்டலத்திற்குள் இருப்பவரும் பாப புண்யங்கள் கொண்ட ஜீவாத்மா தான்-

பாப்மப்₄ய: உதி₃த:’ என்று அவர் பாபங்களைக் கடந்தவர் என்று சொல்லப்பட்டதே ? எனில் – அதிகமான புண்யம் செய்ததால் ஸூர்ய பகவான் என்ற உயர்ந்த பிறவியை அடைந்திருக்கிற படியால் அப்படிச் சொல்கிறது-

அந்தராதி₃த்ய புருஷன் பரமாத்மாவே-ஸித்தாந்தம் – பூர்வ பக்ஷியின் இந்த வாதத்தை இரண்டே ஸூத்ரங்களில் முறியடிக்கிறார் வேத வ்யாஸர்.

1-அந்த (அந்ய) : தத்₃ ₄தர்மோ பதே ₃சாத் – அடுத்த ஸூத்ரத்தில் இருக்கும் ’அந்ய:’ என்ற பதத்தை இங்கும் சேர்க்க வேண்டும்.
அந்த : – ஸூர்ய மண்டலத்திற்குள் இருப்பவராகச் சொல்லப்பட்ட புருஷன்
அந்ய: – ஜீவாத்மாவைக் காட்டிலும் வேறு பட்டவர்
தத்₃ ₄தர்மோபதே₃சாத் – ஜீவாத்மாவுக்குப் பொருந்தாத அபஹத பாப்மத்வத்தின் உபதேசத்தால்

’ஸ ஏஷ ஸர்வேப்₄ய: பாப்மப்₄ய: உதி₃ :’ என்ற வாக்கியம் மிகவும் முக்கியமானது. இதற்கு ’பாபங்களைக் கடந்தவர்’ என்று மேலோட்டமான பொருள். ஆனால் பாபம் என்ற சொல் பாபத்தை மட்டும் அல்ல, பாபம் புண்யம் இரண்டையும் குறிக்கும். ப்ரஹ்மத்தைப் பற்றி போதிக்கும் இதே போன்ற மற்ற வாக்கியங்களில் ’-ந ஸுக்ருதம் ந து₃ஷ்க்ருதம்’ என்று பாப புண்யங்கள் இரண்டும் ப்ரஹ்மத்துக்கு இல்லை என்றே சொல்லப்படுகிறது.

அதே போல், ’கடந்தது’ என்றால் ஒரு காலத்தில் பாபம் இருந்து, பிறகு அதைக் கடந்த்து என்று பொருள் அல்ல,-பாப புண்யங்களின் வாஸனையே இல்லாமை . எனவே இங்கு சொல்லப்படும் குணம் –அபஹத பாப்மத்வம் —அதாவது இயற்கையாகவே எப்போதும் கர்மங்களுக்கு கட்டுப்படாமை . இது ஜீவாத்மாவுக்குப் பொருந்தாது-

கேள்வி – ஆதித்ய புருஷனுக்கு ஸரீரம் இருக்கிற படியால் அவர் கர்மத்துக்கு வசப் பட்டவராகத் தானே இருக்க வேண்டும்?
பதில் – இல்லை , கர்மத்துக்கு அப்பாற்பட்ட பரமாத்மாவும் தன் கருணையால் தானே ஆசைப்பட்டு ஸரீரம் எடுக்கலாம்.

கேள்வி – ஆசைப்பட்டு எடுத்தாலும் தாழ்ந்த அழுக்கான ஸரீரத்தை உடைமை என்பது ஒரு தாழ்ச்சி தானே ?
பதில் – அல்ல. பஞ்ச பூதங்களால் ஆன நம்முடைய தாழ்ந்த உடலல்ல பரமாத்மாவினுடையது, அப்ராக்ருதமானது

அஜாய மாநோ பஹுதா விஜாயதே –இச்சா க்ருஹீத அபிமத -அவதார ரஹஸ்யம் -சங்கல்பத்தால் அப்ராக்ருத திவ்ய மங்கள விக்ரஹம் -பிறப்பில் பல் பிறவிப் பெருமான் –
கண்கள் சிவந்து –அடியேன் உள்ளான் உடல் உள்ளான் –

(2) பேதே ₄ ₃வ்யபதே ₃ஶாச்ச அந்ய: – “வேறுபாடு சொல்லப்பட்டபடியாலும் வேறு ஓருவர்”.
அபஹத பாப்மத்வம் என்ற பண்பு கொண்டு தான் ஆதித்ய புருஷன் பரமாத்மா என்ற முடிவு செய்ய வேண்டிய தேவை இல்லை -. “யஸ்ய ஆதி₃த்ய: ஸரீரம்” என்று நேரடியாகவே ஸூர்ய மண்டலத்திற்குள் இருக்கும் ஜீவாத்மாவைக் காட்டிலும் இங்கு சொல்லப்படும் ஆதித்ய புருஷன் வேறு பட்டவர் என்று உபநிஷத் தெளிவாகவே சொல்கிறது.
எனவே ஆதித்ய புருஷன் பரமாத்மாவே , இவரே ஆநந்த மயன் என்பதால் ஆநந்த மயனும் பரமாத்மாத்வே

ஆதித்ய புருஷனுக்குள்ளும் இருக்கும் பரமாத்மா -அவனாலும் அறிய முடியாதவன் -அனைவருக்கும் இருந்து நியமிப்பவன் -ப்ரதிமான் அபபிரபுத்திமான் -நமக்காகவே உருவம் கொண்டு அருளுகிறவன்-

————-

1.8 ஆகாசாதி₄கரணம்
பரமாத்மாவே அடையப்பட வேண்டிய ஆகாசம்

தாசாரதி காட்டுக்குப் போனான் -அவர் சூர்ப்பணகை யுடைய காது மூக்கு அறுத்தார் -அவரே ராமர் -மூக்கு அறிந்திட்ட குமாரனார் சொல்லும் பொய்யானல் –
இதே போல் ஆகாயம் ஜககாரணம் என்றால் ஈஷத் -சங்கல்பம் செய்தது பொருந்தாதே என்றால் -அதற்கும் இரண்டாம் பக்ஷமாக -தயாரானது என்றும் ஒரு விதமாகப் பொருள் கொள்ளலாம் அன்றோ
இதுவே அடுத்த நான்கு அதிகரணங்களுடைய சங்கதி

அடுத்த நான்கு அதிகரணங்களின் ஸங்கதி
ப்ரஹ்ம ஸூத்ரத்தின் முதல் அத்யாயத்தின் முதல் பாதம் நடக்கிறது.
அதில் முதல் 4 அதிகரணங்கள் முன்னுரை .
அடுத்த மூன்று அதிகரணங்களால் ஜகத் காரணமான ப்ரஹ்மம் அசேதனம் மற்றும் சேதனப் பொருட்களைக் காட்டிலும் வேறுஎன்று நிரூபிக்கப் பட்டது.
எனவே உண்மையில் இதோடு இந்த அத்யாயமே முடிந்திருக்கலாம், ஜகத் காரணம் பரமாத்மாவே என்று நிரூபித்து விட்டபடியால். ஆனால், அதில் சில ஆஷேபங்கள் (கேள்விகள்) எழ, அதற்கு பதில் சொல்கிறார் வேத வ்யாஸர் இந்தப் பாதத்தில் மீதமுள்ள 4 அதிகரணங்களாலே

இதுவரை பார்த்த அதிகரணங்களில் விசாரிக்கப்பட்ட விஷய வாக்யங்களைப் பார்த்தால், அவற்றில் ஜகத் காரணப் பொருளைக் குறிப்பதற்கு ஸத், ப்ரஹ்மம், ஆத்மா என்ற சொற்கள் தான் உபயோகிக்கப் பட்டன. ஸத்-என்றால் ’இருக்கும் பொருள்’ என்றும், ப்ரஹ்மம் என்றால் ’பெரிய பொருள்’ என்றும், ஆத்மா என்றால் ’எங்கும் பரந்திருக்கும் பொருள்’ என்றும் பொருள். இந்தச் சொற்கள் எந்த ஒரு குறிப்பிட்ட பொருளையும் குறிப்பவை அல்ல

ஒரு பொதுவான பண்பை உடைய எல்லாப் பொருள்களையும் குறிக்கும் சொல் ’
ஸாதாரணச் சொல்’ அல்லது ’பொதுச் சொல்’ எனப்படுகின்றன.-எடுத்துக்காட்டு – மனிதன், மிருகம்.-ஒரு குறிப்பிட்ட பொருளை மட்டும் குறிக்கும் சொல்-விசேஷச் சொல்’ அல்லது ’தனிச் சொல்’ எனப்படுகின்றன.-எடுத்துக்காட்டு – குடம், வேஷ்டி.

எனவே இதுவரை பொதுச் சொற்களால் மட்டுமே ஜகத் காரணப் பொருள் குறிப்பிடப் பட்டுள்ளபடியால், அந்தந்த வேதப் பகுதியில் சொல்லப்பட்ட ஸங்கல்பம், எல்லை யற்ற ஆநந்தம், பாப புண்யங்களைக் கடந்திருத்தல் முதலான அடையாளங்களைக் கொண்டு தான் நாம் ஜகத் காரணம் யார் என்று முடிவு செய்தோம்.

இப்போது பூர்வ பக்ஷியின் ஆஷேபம் என்ன வென்றால் – உபநிஷத்துக்களில் சில இடங்களில் ஆகாசம், ப்ராணன், இந்த்ரன், ஜ்யோதிஸ் போன்ற விசேஷச் சொல் அதாவது தனிச் சொல்லைக் கொண்டே ஜகத் காரணப் பொருள் கூறப்பட்டுள்ளது. நேரடியாக வேதத்தில் உள்ள சொல் (ஸ்ருதி) என்பது அதில் சொல்லப் ட்ட அடையாளம் (லிங்கம்)
என்பதைக் காட்டிலும் பலமுடையது. எனவே யார் ஜகத் காரணம் என்று அந்த விசேஷச் சொற்களைக் கொண்டு முடிவு செய்வதே தகுந்தது. அம் முடிவுக்குத் தகுந்தபடி தான் கீழ சொல்லப்பட்ட அடையாளங்களுக்குப் பொருள் கொள்ள வேண்டும். எனவே
ஆகாசம்
ப்ராணன்
இந்த்ரன்
அக்நி

தான் ஜகத் காரணமே தவிற, பரமாத்மா அல்ல.

இந்த ஆஷேபங்களுக்கு பதிலுரைக்கத் தான் வேத வ்யாஸர் அடுத்த 4 அதிகரணங்களை அமைக்கிறார். இதுவே ஸங்கதி

ஆகாசாதிகரணத்தின் பின்புலம்
சாந்தோக்ய உபநிஷத்தின் முதல் ப்ராபடகம் (அத்யாயம்), 8 மற்றும் 9ஆம் பகுதிகளில் இவ்வாறு சொல்லப்படுகிறது –
த்ரயோ ஹோத்₃கீ₃தே ₂ குசலா ₃பபூ₄வு꞉ ஶிலக꞉ தா₃ல்ப்₄ய꞉ ப்ரவாஹண: இதி | தே ஹோசு : ஹந்த உத்₃கீ₃தே ₂ கதா₂ம் வாதா₃ம இதி || – சிலகர் தால்ப்யர் ப்ரவாஹணர் என்ற மூன்று ரிஷிகள் தங்களுக்குள் வாதம் செய்ய முடிவெடுத்தனர்.

ஸ ஶிலக꞉ தா₃ல்ப்₄யமுவாஸ – கா ஸாம்நோ க₃திரிதி | ஸ்வர இதி ஹோவாஸ | ஸ்வரஸ்ய ப்ராண:| ப்ராணஸ்ய அந்நம் | அந்நஸ்ய ஆப : | அபாம் அஸௌ லோக | அமுஷ்ய லோகஸ்ய கா க₃திரிதி | ந ஸ்வர்க₃ம் லோகமிதி நயேதி₃தி ஹோவாஸ| –
முதலில் சிலகர் தால்ப்யரிடம் கேட்டார் – ஸாமத்தின் கதி எது? அதாவது, ஸாமம் எதை அண்டி இருக்கிறது?
தால்ப்யர் கூறினார் – ஸ்வரம் என்று.
இதே போல் அடுத்தடுத்து ப்ராணன், அந்நம், ஜலம், ஸ்வர்கம் என்று ஆதாரங்களைச் சொன்னார்.-ஸ்வர்கத்தின் ஆதாரம் எது என்று சிலகர் கேட்ட போது, ஸ்வர்கம் தாண்டி ஸாமத்திற்கு ஆதாரம் இல்லை என்று கூறினார்.

அப்ரதிஷ்டி₂தம் வை கில தே தா₃ல்ப்₄ய ஸாம | அமுஷ்ய லோகஸ்ய கா க₃திரிதி | அயம் லோக இதி ஹோவாஸ | அஸ்ய லோகஸ்ய கா க₃திரிதி | ந ப்ரதிஷ்டா₂ம் லோகமிதி நயேதி₃தி ஹோவாஸ | –
சிலகர் கூறினார் – ஸ்வர்கம் ஆதாரமே இல்லாமல் இருக்க முடியாது. ஸ்வர்கத்துக்கு இந்த பூமி தான் ஆதாரம் என்று. பூமிக்கு எது ஆதாரம் என்று தால்ப்யர் கேட்டதற்கு, பூமிக்கு ஆதாரமில்லை என்று சிலகர் கூறினார்

தம் ஹ ப்ரவாஹண: உவாஸ – அந்தவத்₃வை கில தே ஸாம | அஸ்ய லோகஸ்ய கா க₃திரிதி | ஆகாஸ இதி ஹோவாஸ | ஸர்வாணி ஹ வா இமாநி பூ₄தாந் யாகாஶா தேவ₃ஸமுத் த்₃யந்தே | ஆகாஸம் ப்ரதி அஸ்தம் யந்தி| ஆகாஸோ ஹ்யேவ ஏப்₄யோ ஜ்யாயாந் | ஆகாஸ ꞉ பராயணம் –
இதைக் கேட்ட ப்ரவாஹணர் கூறினார் – சிலகரே ! அழியக் கூடியதான இந்த
பூமியானது ஸாமத்தின் கடைசி ஆதாரமாக இருக்க முடியாது. இந்த பூமிக்கும் ஆதாரம் ஆகாசம் தான். இவ் வுலகில் இருக்கும் பூதங்கள் (பொருள்கள்-ஜீவ ராசிகள்) அனைத்துமே அந்த ஆகாசத்திடம் இருந்தன்றோ உண்டாகின்றன. -அதனிடம் தான் லயம் அடைகின்றன. ஆகாசம் தான் இந்த எல்லாப் பொருள்களைக் காட்டிலும் உயர்ந்தது. ஆகாசமே இறுதியான இலக்கு (ப்ராப்யம்) என்று.

ஸந்தேகம் – இங்கு ஆகாசம் எனப்படுவது ஐம் பூதங்களில் ஒன்றான ஆகாசமா ? அல்லது பரமாத்மாவா?

பூர்வ பக்ஷியின் வாதம்
ஒரு பொருளை சேதம் ( சப்த ப்ரமாணம்) கொண்டு தான் அறிய முடியும் என்றால், அதை சேதத்தில் சொல்லப்ட்ட படி தான் ஏற்க வேண்டும்; உலகில் நாம் காணும் முறைகளுக்குள் அதை அடக்க முயலக் கூடாது. எடுத்துக்காட்டு – ஐராவதம் என்ற யானை வெள்ளை யானது என்று புராணம் கூறினால், அதை அப்படியே ஏற்கத் தான் வேண்டும், நாம் கண்களால்
ஐராவதத்தைக் காண முடியாதபடியால். அதுவே ஒரு உலக யானை வெள்ளையாக உள்ளது என்று யாராவது சொன்னால், அது நம் அநுபவத்துக்குப் பொருந்தாதபடியால், அதற்கு வேறு பொருள் கற்பித்து விடுகிறோம்.

ஜகத் காரணப் பொருள் இவ் விடத்தில் ’ஆகாசம்’ என்ற சொல்லால் சொல்லப் பட்டுள்ளது. இச் சொல் உலகில் ப்ரஸித்தமாக ஐம் பூதங்களில் ஒன்றான ஆகாசத்தைத் (பூதாகாசம்) தான் குறிக்கிறது. பரமாத்மாவைக் குறிக்கப் பயன் படுத்தப் படுவதில்லை . எனவே அந்த உலகில் ப்ரஸித்தமான பொருளைத் தான் இங்கும் கொள்ள வேண்டும்.

பெயர் சொற்கள் இரண்டு வகை யானணவ (1) இடுகுறிப் பெயர் (ரூட₄மான சொல்) – ப்ரஸித்தமாக ஒரு பொருளுக்கு வழங்கப்படும் பெயர். இச் சொல்லைப் பிரித்துப் பார்த்து நாம் பொருள் கொள்வதில்லை . எடுத்துக் காட்டு –மேஜை , புத்தகம்.
(2) காரணப் பெயர் (யௌகி₃கச் சொல்) – ஒரு காரணத்தால் ஒரு பொருளுக்கு வழங்கப்படும் பெயர். -எடுத்துக்காட்டு – நாற்காலி. இச் சொல்லைப் பிரித்துப் பார்த்து, ’நான்கு கால்களை உடையது’ என்பதால் நாற்காலி என்னும் பொருளைக் குறிக்கிறது-

காரணப் பெயரைக் காட்டிலும் இடு குறிப் பெயருக்கு வலிமை அதிதம். இடு குறிப் பெயர் சடக்கென ஒரு பொருளை நினைவு படுத்தும். காரணப் பெயர் என்பது அதன் பகுதிகளை ஆராய்ந்த பின்பு தான் ஒரு பொருளை நமக்கு உணர்த்தும்.
எடுத்துக்காட்டு – ’நாற்காலி ’ என்ற சொல்லின் பகுதிகளை ஆராய்ந்தால், இச் சொல் நாய் மாடு முதலான நாலுகால் பொருள்கள் அனைத்தையும் குறிக்கும். ஆனால் நமக்கு Chair என்ற பொருள் தான் தோற்றுகிறது, ப்ரஸித்தமாக அப் பொருளைக் குறிப்பதற்கே நாற்காலி என்ற சொல் உபயோகப் படுத்தப் படுகிறபடியால்.

அது போல் ஆகாசம் என்னும் சொல் பூதாகாசத்தைக் குறிப்பது இடுகுறிப் பெயராக – சொல்லின் பகுதிகளை ஆராயாமலேயே நாம் இப் பொருளை அறிகிறோம். ஆனால் ஆகாசம் என்ற சொல் பரமாத்மாவைக் குறிக்க வேண்டும் என்றால், அதைக் காரணப் பெயர் என்று கொள்ள வேண்டும் – ’
ஆ’ நன்றாக
’காசவத’ ப்ரகாசிக்கிறபடியால்
பரமாத்மாவே ஆகாசம் என்று.
எனவே , இங்கு பூதாகாசம் தான் சொல்லப் படுகிறது என்கிறார் பூர்வ பக்ஷி

அடையாளங்களின் கதி?
கீழ் அதிகரணங்களில் ஸங்கல்பம், எல்லை யற்ற ஆநந்தம் முதலான அடையாளங்களைக் கொண்டு பரமாத்மாவே ஜகத் காரணம் என்று நிரூபித்தோமே ? இப்போது எப்படி பூதாகாசம் ஜகத் காரணம் என்று ஏற்க முடியும்? அதற்கு ஸங்கல்பம், ஆநந்தம் முதலான பண்புகள் பொருந்தாதே ? என்ற கேள்வி எழும். அதற்குப் பூர்வ பக்ஷி சொல்வது – அடையாளங்களைக் கொண்டு முடிவு செய்ததே தவறு என்று.

ஸதே₃வ சோம்ய இத₃ம் அக்₃ரே ஆஸீத்’ என்ற வாக்கியம், ஜகத் காரணமான பொருளை நமக்கு அறிமுகப்படுத்தியது.-பிறகு, ’யதோ வா இமாநி பூ₄தாநி’ என்ற வாக்கியம், உலகைப் படைத்து, காத்து அழிக்கும் பொருள் தான் ப்ரஹ்மம் என்னும் இலக்கணத்தைக் கூறியது. ஆனால், ஸத், ப்ரஹ்மம், ஆத்மா என்ற சொற்கள் பொதுச் சொற்கள் ஆன படியால்
அதைக் கொண்டு ஜகத் காரணம் யார் என்று குறிப்பிட்டு அறிய முடியாது.

இந் நிலையில், நமக்கு இரண்டு வழிகள் உள்ளன.
(1) ஸங்கல்பம், எல்லை யற்ற ஆநந்தம் முதலான அடையாளங்கள் கொண்டு பரமாத்மாவே ப்ரஹமம் என்று முடிவு செய்யலாம். இப்படிச் செய்தால், இங்கு சொல்லப்படும் ஆகாசம்
என்ற சொல்லைக் காரணப் பெயராகக் கொண்டு அது பரமாத்மாவையே சொல்கிறது என்று ஏற்க வேண்டும்.
(2) இந்த வாக்கியத்தில் இருக்கும் ஆகாசம் என்ற விசேஷச் சொல் கொண்டு பூதாகாசமே ப்ரஹ்மம் என்று முடிவு செய்யலாம். இப்படிச் செய்தால், முன் சொல்லப்பட்ட ஸத் ப்ரஹ்மம் ஆத்மா என்ற சொற்களும் இந்த பூதாகாசத்தைத் தான் குறிக்க வேண்டும். அப்போது ஸங்கல்பம், எல்லை யற்ற ஆநந்தம் முதலான அடையாளங்கள்அதில் பொருந்தாத படியால், அவற்றுக்கு வேறு பொருள் தான் கொள்ள வேண்டும்.

இதில் பூர்வபக்ஷி சொல்வது – லிங்கம் என்ற அடையாளத்தைக் காட்டிலும் ஸ்ருதி என்ற சொல்லுக்கு வலிமை அதிகம். எனவே , ஆகாசம் என்ற விசேஷச் சொல் கொண்டு தான் யார் ப்ரஹ்மம் என்ற நிர்ணயிக்க வேண்டும்.

’ஆத்மந: ஆகாச: ஸம்பூ₄த:’ என்று, பூதாகாசமும் உண்டாக்கப்பட்டதாக வேதம் சொல்கிறதே ? அந்த பூதாகாசம் எப்படி ஜகத் காரணமாக ஆக முடியும்? என்ற கேள்வி எழுகிறது. அதற்கு பூர்வ பக்ஷியின் பதில் – இந்த வாக்கியத்தில் சொல்லப்படுவது – ’தன்னிடமிருந்தே ஆகாசம் தோன்றியது’ என்று. அதாவது, ஆகாசமே முன்னால் ஒரு ஸூக்ஷ்ம்மான (நுண்ணிய) நிலையில் இருந்த்து, இப்போது ஸ்தூ₂லமான நிலையை அடைகிறது. எனவே , ஆகாசம் என்ற பொருள் எப்போதுமே உள்ளது தான். அதுவே ப்ரஹ்மம் என்று சொல்லப்படும் ஜகத் காரணம் ஆகும்.

(இந்த்ரனைக் குறித்து வேத மந்த்ரம் -அடையாளம் –
இந்த மந்த்ரத்தைக் கொண்டு கார்கபத்யம் அக்னி நெருப்பை புகழ உபயோகி என்றும் வேதம் சொல்லும்-சொல்லுக்கு பலம் என்றால் புகழ வேண்டும் –
அடையாளம் வைத்துக் வேதக் கட்டளையை மீறக்கூடாதே –ஸ்ருதி லிங்கத்தை விட பலமுடையதுஇது பூர்வ மீமாம்ஸையில் உள்ளது)

ஆகாசாதிகரணத்தின் ஸித்தாந்தம்
1.1.8 ஆகாசாதிகரணத்தில் பூர்வ பக்ஷம் – சாந்தோக்யத்தில் ஆகாசம் என்ற சொல்லால் கூறப்பட்ட ஜகத் காரணம் ஐம்பூதங்களுள் ஒன்றான ஆகாசம், அதாவது பூதாகாசமே ; ஆகாசம் என்ற சொல் ப்ரஸித்தமாக பூதாகாசத்தையே குறிக்கிறபடியால் – என்று.
இதற்கு ஒரே ஸூத்ரத்தில் பதிலளிக்கிறார் வேத வ்யாஸர் –

(1) ஆகாச: தல் லிங்கா₃த் –
இங்கும் முன் அதிகரணத்தில் உள்ள ’அந்ய:’ என்ற சொல்லைச் சேர்க்க வேண்டும்.
ஆகாச: சாந்தோக்யத்தில் ஆகாசம் என்று சொல்லப்பட்டது
அந்ய: பூதாகாசத்தைக் காட்டிலும் வேறான பரமாத்மாவே
தல் லிங்கா₃த் – பரமாத்மாவுக்கு மட்டுமே பொருந்தும் லிங்கம் (அடையாளங்கள்) சொல்லப் பட்டபடியால்

இந்தப் பகுதியில் பரமாத்மாவுக்கு மட்டுமே பொருந்தக் கூடிய, பூதாகாசத்துக்குப் பொருந்தாத பண்புகள் உள்ளன –
(i) நிகி₂ல ஜக₃தே₃க காரணத்வம் – அனைத்துலகத்துக்கும் ஒரே காரணமாய் இருத்தல்.
இங்கு ’ஸர்வாணி பூ₄தாநி’ எல்லாப் பொருள்களும், அதாவது அசேதனம் மற்றும் சேதனப் பொருள்கள் அனைத்தும், ஆகாசத்திடமிருந்து தான் உண்டாகின்றன என்று சொல்லப்பட்டுள்ளது. அசேதனப் பொருளான பூதாகாசம் சேதனர்களான ஜீவாத்மாக்களுக்குக் காரணம் ஆக முடியாது. எனவே இங்கு ஆகாசம் என்ற சொல் பூதாகாசத்தை அல்ல, பரமாத்மாவையே கூறுகிறது-

ii) பராயணத்வம் – மேலான ப்ராப்யமாய் (இலக்காய்) இருத்தல். பூதாகாசம் என்பது ஒரு அசேதனப் பொருள், -பரிணாமங்களுக்கு உட்பட்டது, ஸத்த்வம் ரஜஸ் தமஸ் என்ற முக்குணங்களை உடையது. எனவே மிகத் தாழ்ந்ததானது.-மேலும், அது நம்மை இந்த ஸம்ஸாரத்தில் கட்டுகிறது. இப்படிப்பட்ட பூதாகாசத்தை நிகரற்ற இறுதியான இலக்காக
உபநிஷத் கூறி யிருக்க முடியாது

(iii) ஸர்வஸ்மாத் ஜ்யாயஸ்த்வம் – உலகப் பொருள்கள் அனைத்தையும் விட உயர்வு. எந்தப் பொருள் எல்லை யற்ற நற் பண்புகளை உடையதோ அதுவே அனைத்திலும் உயர்ந்த பொருளாக முடியும்.
முன் சொன்ன காரணங்களாலேயே பூதாகாசம் என்பது உயர்ந்த பொருளே அல்ல என்று தெரிகிறது. எனவே இங்கு பூதாகாசம் சொல்லப்படவில்லை

இப்படி இந்த உபநிஷத் பகுதியில் சொல்லப்பட்ட அடையாளங்கள் அனைத்துமே பூதாகாசத்துக்குப் பொருந்தாதவையாய், பரமாத்மாவுக்கு மட்டுமே பொருந்தக் கூடியவையாய் உள்ளபடியால், இங்கு ஆகாசம் என்ற சொல்லால் சொல்லப்படுவது பரமாத்மாவாகவே இருக்க வேண்டும் என்பது ஸித்தாந்தம்.

ஸ்ருதி லிங்கத்தை விட பலமுடையதாயிற்றே ?
பூர்வ பக்ஷி கூறியிருந்தார் – இங்கு ஆகாசம் என்ற சொல் (ஸ்ருதி) வேதத்தில் நேராகக் காணப் படுகிறது. அது லிங்கம் என்ற அடையாளங்களைக் காட்டிலும் பலமுடையது. எனவே ப்ரஹ்மம் யார் என்று ஆராயும் போது ஒரு குறிப்பிட்ட பொருளைக் குறிக்கும் விசேஷச் சொல்லான ஆகாசம் என்ற சொல்லைக் கொண்டு பூதாகாசமே ஜகத்காரணம் என்று தான் முடிவு செய்ய வேண்டும். அணடயாளங்களைக் கொண்டு முடிவு செய்யக் கூடாது என்று. இதற்கான பதில்

உண்மை தான். ஸ்ருதி லிங்கத்தை விட பலமுடையதே . ஆனால் அதற்கு ஒரு தேவை உள்ளது – ’ஆகாசமே ஜகத் காரணம்’ என்று இங்கு சொல்லப் பட்டிருந்தால், ஆகாசம் என்ற விசேஷச் சொல்லைக் கொண்டு, பூதாகாசமே ஜகத் காரணம் என்று நாம் முடிவு செய்திருக்கலாம். ஆனால் இங்கு ’ஆகாசம் அன்றோ ஜகத் காரணம்’ என்று தான் வாக்கியம் உள்ளது.
ஸர்வாணி ஹ வா இமாநி பூ₄தாநி ஆகாசாத் ஏ₃வ ஸமுத் பத்₃யந்ததே ’ என்னுமிடத்தில் ’ ஹ வா’ என்ற சொற் றொடர் ’அன்றோ ’ என்ற பொருளை உடையது. எனவே , முன்னமே வேதத்தில் உள்ள மற்ற வாக்கியங்களால் ஜகத் காரணமாக அறியப்பட்ட பொருள் தான் இங்கு நினைவு கூறப்பட்டு, ஆகாசம் என்று அழைக்கப் படுகிறது என்று தோற்றுகிறது.ப்ரஸித்த நிர்தேசம்

ஒரு பொருளை முதன் முறை சொன்னால் அது’புரோவாத₃ம்’. –திரும்பச் சொன்னால் அது’அநுவாத₃ம்’. இங்கு இருப்பதோ அநுவாதச் சொற் றொடர் மட்டுமே . எனவே இதற்கு முன்னால் புரோ வாத வாக்கியங்கள் இருந்திருக்க வேண்டும். அவை எவை என்றால், முன்னமே ஆராயப்பட்ட ’ஸதே ₃வ சோ ம்ய’, ’யதோ வா இமாநி’’ஆநந்த மய:’ முதலான வாக்கியங்கள் தான். எனவே , அவற்றில் பரமாத்மா தான் ஜகத்காரணம் என்று
அடையாளங்களைக் கொண்டு முடிவு செய்யப்பட்ட படியால், அதையே தான் இந்த வாக்கியம் அதே பொருளைத் தான் சொல்ல முடியுமே தவிற, அவற்றோடு முரண்பட்டு, பூதாகாசமே ஜகத் காரணம் என்று போதிக்க இயலாது. இங்கு சொல்லப்பட்ட அடையாளங்களும் பரமாத்மாவுக்கே பொருந்துகின்றன.

(நாற்காலி இருக்கிறது என்றால் chair
நாற்காலி நடக்கிறது -இங்கு நான்கு கால்களை உடைய பிராணியையே குறிக்கும்)

எனவே , ஆகாசம் என்ற சொல் பூதாகாசம் என்ற பொருளில் இடுகுறிப் பெயராக இருந்தாலும், அடையாளங்கள் அதற்குப் பொருந்தாத படியால், அதைக் காரணப் பெயராகவே கொண்டு, தானே ப்ரகாசிப்பவராகவும், மற்றப் பொருள்களையும் ப்ரகாசிக்க வைப்பவருமான பரமாத்மாவையே இந்த ஆகாசம் என்ற சொல் குறிக்கிறது.-ஆகவே , இங்கும் ஆகாசம் என்ற சொல்லாலும் சொல்லப்பட்ட ஜகத் காரணம் பரமாத்மாவே

————

1.1.9 ப்ராணாதி₄கரணம்
பரமாத்மாவே அனைத்தையும் வாழ வைக்கும் ப்ராணன் .

ப்ராணாதிகரணத்தின் பின் புலம்
1.1.9 ப்ராணாதி₄கரணம் – முன் அதிகரணத்தில் சொன்னது போல் இங்கும் ப்ராணன் என்ற ஒரு குறிப்பிட்ட பொருளைச் சொல்லும் விசேஷச் சொல் உள்ள படியால், ப்ராணனே ஜகத் காரணம் என்கிறார் பூர்வ பக்ஷி.

ஸங்கதி – முன் அதிகரணத்தில், ஆகாசம் என்ற சொல்லுக்கு பூதாகாசம் என்று பொருள் கொண்டால், அதற்குப் பொருந்தாத பல பண்புகள் அங்கு சொல்லப் பட்டபடியால் ஒவ்வாமை ஏற்பட்டது. எனவே ஆகாசம் என்பது பரமாத்மா என்று கூறினோம். ஆனால் இந்த அதிகரணத்தில் பார்க்கப் போகும் வாக்கியங்களில் உள்ள ப்ராணன் என்ற சொல்லுக்கு மூச்சுக் காற்று என்று ப்ரஸித்தமான பொருளைக்
கொண்டாலும் அதற்குப் பொருந்தாத எந்தப் பண்பும் இங்கு சொல்லப்பட வில்லை . எனவே மூச்சுக் காற்று என்ற ப்ராணனே ஜகத் காரணம் என்று ஆஷேபம் எழுகிறது.

விஷய வாக்யம் – சாந்தோக்ய உபநிஷத்தின் முதல் ப்ரபாடகத்தில் 10 மற்றும் 11ஆம் பகுதிகள் –
மடசீஹதேஷு குருஷு ஆடிக்யா ஸஹ ஜாயயா உஷஸ்திர்ஹ சாக்ராயண: உவாஸ – பஞ்சத்தால் வாடி யிருந்த குரு பூமியில் மனைவியோடு கூட உஷஸ்தி என்ற ப்ரஹ்ம ஜ்ஞாநி வாழ்ந்து வந்தார். அவர் செல்வம் ஸம்பாதிப்பதற்காக அருகில் யாகம் செய்து கொண்டிருந்த ஒரு அரசனைச் சந்திக்கச் சென்றார்.

ப்ரஸ்தோதர்யா தே₃வதா ப்ரஸ்தாவ மந் வாயத்தா தாம் சேத₃ வித்₃வாந் ப்ரஸ்ததோஷ்யஸி மூர்தா₄ தே
விபதிஷ்யதீதி
–யாகத்தில் ப்ரஸ்தோதா என்பவர் ஒரு தேவதையைக் குறித்துப் பாடிக் கொண்டிருந்தார்.
அவரிடம் உஷஸ்தி கூறினார் – “நீர் பாடும் மந்த்ரம் எந்த தெய்வத்தைச் சொல்கிறதோ , அதை அறியாமல் நீர் பாடினால் உம் தலை விழுந்து விடும்” என்று. அதாவது, பெரிய குற்றமாகி விடும் என்று கூறினார். அந்த தெய்வம் யாரென்று தானே கூறினார்

ப்ராண இதி ஹோவாச | ஸர்வாணி ஹ வா இமாநி பூ₄தாநி ப்ராணமேவ அபி₄ ஸம் விஶந்தி ப்ராணம் அப்₄யுஜ்ஜிஹதே – ப்ராணன் தான் அந்த தேவதை . எல்லா உலகப் பொருள்களும் ப்ராணனிடமிருந்து தானே தோன்றுகின்றன, ப்ராணனிடமே லயம் அடைகின்றன-

ப்ராணாதிகரணத்தின் விசாரம்
ஸந்தேஹம்
– இங்கு ப்ராணன் என்ற சொல் மூச்சுக் காற்றைக் குறிக்கிறதா? அல்லது பரமாத்மாவையா?

பூர்வ பக்ஷம் – லவ்கிகச் சொல்லைக் (காரணப் பெயரைக்) காட்டிலும் ரூடமான சொல் (இடுகுறிப் பெயர்) வலிமை மிக்கது. எனவே இங்கு ப்ராணன் என்ற இடுகுறிப் பெயர் ப்ரஸித்தமாக மூச்சுக் காற்றையே கூறுகிறபடியால் அதுவே தான் ஜகத் காரணமான ப்ரஹ்ம்ம் என்று கொள்ள வேண்டும்.

அதிகக் கேள்வி – எல்லா பூதங்களுக்கும் காரணமாயிருக்கும் தன்மை மூச்சுக் காற்றுக்கும் பொருந்துகிறபடியால் ஆகாசாதிகரணத்தில் சொன்னது போல் அதைக் கை விடத் தேவை யில்லை

ஸித்தாந்தம் – இந்த அதிகரணத்தில் எழுந்த ஆஷேபத்துக்கு ஒரே ஸூத்ரத்தில் பதில் கூறுகிறார் வ்யாஸர்.
(1) அத ஏவ ப்ராண:
அத ஏவ –ஆகையினாலேயே (அதாவது ப்ராணனுக்குப் பொருந்தாத, பரமாத்மாவுக்கு மட்டுமே பொருந்தக் கூடிய பண்புகள் இங்கு உள்ளபடியாலேயே )
ப்ராண: ப்ராணன் என்று சொல்லப்படுபவர் பரமாத்மாவே

இந்த வேதப் பகுதியிலும் உலகப் பொருள்கள் எல்லாம் தோற்றுமிடமாகவும் அழியுமிடமாகவும் சொல்லப் பட்டபடியால் ப்ராணன் என்பது பரமாத்மாவாகத்தான் இருக்க வேண்டும்.

அதிகக் கேள்விக்குப் பதில் – இங்கும் ப்ராணன் என்ற சொல்லுக்குப் ப்ரஸித்தமான மூச்சுக் காற்று என்ற பொருளைக் கொண்டால், இங்கு சொல்லப்பட்ட ஜகத் காரணத்வம் என்ற அடையாளம் பொருந்தாமல் போய்விடும். ஏனெனில், -மனிதர்கள் மரங்கள் விலங்குகள் முதலான உயிருள்ள ப்ராணிகள் மூச்சுக் காற்றால் வாழ்ந்தாலும், கல் மண் மட்டை முதலான உயிரற்ற பொருள்கள் ப்ராணனை நம்பி இல்லை . மேலும், இவ்வுலகத்தில் அசேதனம் மற்றும் சேதனப் பொருள்கள் உள்ளன. அதில் அசேதனப் பொருள்களுக்கு வேண்டுமென்றால் ஆகாசம் காரணமாய் இருக்கலாமே ஒழிய,
ஜ்ஞாநமுடைய ஜீவாத்மாக்களுக்குக் காரணமாக இருக்கவே முடியாது. எனவே உலகுக்கெல்லாம் காரைணமாய் இருத்தல் என்ற பண்பு மூச்சுக் காற்றுக்குப் பொருந்தாத படியால் இங்கு ப்ராணன் எனப்படுபவர் பரமாத்மாவே .

(non லிவிங் things இவற்றுக்கு பிராணன் ஹேது அல்லவே -ஆகவே பரமாத்மாவையே சொல்லும்)

ப்ராணயதி’ எல்லா ஜீவ ராசிகளையும் பகவான் அந்தர்யாமியாக இருந்து வாழ வைப்பதால் அவரையே ப்ராணன் என்றும் குறிப்பிடுகிறது
இவ்வாறு 1.1.9 ப்ராணாதிகரணம் முடிவடைகிறது.

ப்ரஹ்மம் அனைத்தையும் தாங்கும் என்று முன் அதிகரணத்திலும் இதில் ப்ரஹ்மமே அனைத்தையுமே வாழவைக்கும் என்றும் ப்ரஹ்மத்தின் குணங்களைச் சொன்னவாறு-

——————

1.1.10 ஜ்யோதிரதி₄கரணம்
நிகரற்ற ஒளியுடைய ஜ்யோதிஸ்

1.1.10 ஜ்யோதிரதிகரணத்தின் பின் புலம்
ஸங்கதி – முதலில் ஸத், ப்ரஹ்மம், ஆத்மா என்ற பொதுச் சொற்களால் சொல்லப்படும் ஜகத்காரணம் பரமாத்மாவே
என்று அந்த வாக்கியங்களில் இருந்த அடையாளங்களை வைத்து நிரூபித்தார் வேத வ்யாஸர்.
அதற்குப் பின், ஒரு
குறிப்பிட்ட அசித் பொருளைக் குறிக்கும் ஆகாஸம் ப்ராணன் போன்ற சிறப்புச் சொற்களால் சொல்லப்படும்
ஜகத்காரணமும் பரமாத்மாவே என்று அங்கிருந்த அடையாளங்களைக் கொண்டு நிரூபித்தார்.
இனி இந்தப் பாதத்தில் மீதமிருக்கும் இரண்டு அதிகரணங்களிலும் உபநிஷத்துகளில் ஒரு குறிப்பிட்ட அசித் மற்றும் சித் பொருளைக் குறிப்பிடும்
ஜ்யோதிஸ் மற்றும் இந்த்ரன் என்ற சிறப்புச் சொற்களால் ஒரு பொருளைச் சொல்லி, ஜகத் காரணப் பொருளுக்கே
இருக்கக் கூடிய சில தனித் தன்மைகள் அப் பொருளுக்கு இருப்பதாகச் சொல்லப்பட்டிருந்தால், அச் சொற்களும் கூட பரமாத்மாவையே குறிக்கும் என்று அங்கிருக்கும் அடையாளங்களைக் கொண்டு நிரூபிக்கிறார்.

இவ் விரண்டு அதிகரணங்களிலும், விஷய வாக்கியம் நேரடியாக ஜகத் காரணம் யார் என்பதைப் பற்றிச் பேசாது .ஜகத் காரணப் பொருளுக்கு மட்டுமே இருக்கக் கூடிய பண்புகள் தான் சொல்லப்பட்டிருக்கும். அப் பண்புகளை உடைய பொருள் எது என்று ஆராய்ந்து முடிவு செய்தால், அப் பொருள்தான் ஜகத் காரணம் என்று நிரூபித்து விடலாம்

விஷய வாக்யம் – சாந்தோக்ய உபநிஷத்தில் 3ஆம் அத்யாயத்தில் உள்ள 12&13ஆம் பகுதிகளை ஆராயப் போகிறோம்.

கா₃யத்ரீ வா இத₃ம் ஸர்வம் பூ₄தம் யதி₃த₃ம் கிம் ச | வாக்₃வை கா₃யத்ரீ | வாக்₃வா இத₃ம் ஸர்வம் பூ₄தம் கா₃யதி ச த்ராயதே ச–இந்த உலகிலுள்ள பொருள்கள் அனைத்தும் காயத்ரி தான். காயத்ரீ என்பது வாக் (பேச்சு). வாக் தான் அனைத்துப் பொருள்களையும் கூறுகிறது மற்றும் காக்கிறது. எனவே காயத்ரீ தான் உலகனைத்தும்-

ஸைஷா சதுஷ்பதா₃ ஷட்₃விதா₄ கா₃யத்ரீ ॥பாத₃: அஸ்ய ஸர்வா பூ₄தாநி த்ரிபாத₃ஸ்ய அம்ருதம் தி₃வி – இந்த காயத்ரிக்கு பூதம், ப்ருதிவீ, சரீரம், ஹ்ருதயம் என்று நான்கு கால்கள். இந்த உலகிலிருக்கும் பொருள்கள் அனைத்தும் சேர்ந்து அந்த காயத்ரியின் ஒரு கால் பகுதி சொத்து. இதை விட மூன்று மடங்கு இருக்கும் அழியாத சொத்து மேலுலகில் இருக்கிறது-

(வ்யாஸாய விஷ்ணு ரூபாய
வ்யாஸ ரூபாய விஷ்ணுவே
நமோ வை ப்ரஹ்ம நிதயே
வாஸிஷ்டாய நமோ நமஃ -போன்று நான்கு பாதங்கள்)

அத₂ யத₃த꞉ பரோ தி₃வோ ஜ்யோதிர் தீ₃ப்யதே விஶ்வத꞉ ப்ருஷ்டே ₂ஷு ஸர்வத꞉ ப்ருஷ்டே₂ஷ்வ நுத்தமே ஷூத்தமேஷு லோகேஷு – மேலுலகத்தைத் தாண்டி இருக்கும் ஜ்யோதிஸ் என்று அழைக்கப்படும் மிகவும் ஒளி பொருந்திய ஒரு பொருள், மேல் உலகங்கள் மற்றும் கீழ் உலகங்கள் அனைத்துக்கும் ஒளி கொடுக்கிறது.

இத₃ம் வாவ தத் யதி₃த₃ம் அஸ்மிந் அந்த꞉ புருஷே ஜ்யோதி꞉ – அந்த ஜ்யோதிஸ் தான் நம் உடலுக்குள் இருக்கும் நெருப்பு-

ஸூர்யனே ஜ்யோதிஸ் என்னும் பூர்வ பக்ஷம்
ஸந்தேஹம்
– இங்கு நிகரற்ற ஒளியுடைய பொருளாகச் சொல்லப்படும் ஜ்யோதிஸ் ஸூர்யனா? பரமாத்மாவா?

பூர்வ பக்ஷம் – ஸூர்யன் தான் இங்கு சொல்லப் படுகிறார் என்பது பூர்வ பக்ஷியின் கூற்று. அவருடைய வாதங்கள்
ஜ்யோதிஸ் என்பது ஒரு சிறப்புச் சொல். அது பொதுவாக ஸூர்யன் முதலான பொருள்களைத் தான் உலகில் குறிக்கிறது.
பொருந்தாமை இல்லை – முன் அதிகரணங்களில் ஆகாஸம்-ப்ராணன் என்ற சொற்களுக்கு பூதாகாஸம்-மூச்சுக் காற்று என்று ப்ரஸித்தமான பொருளைக் கொண்டால், அந்த வாக்கியங்களில் சொல்லப்பட்ட அடையாளங்களே பொருந்தவில்லை –அதனால் வேறு பொருள் கொண்டோம். இங்கு அதைப் போல் எந்தப் பொருந்தாமையும் இல்லை . “ஸூர்யன் மேலுலகத்தில் மிகுந்த ஒளியோடு இருந்து, உலகங்களுக்கு எல்லாம் ஒளியூட்டுகிறார்” என்று அழகாகப் பொருந்துகிறது.

பொருத்தம் உள்ளது – பொருந்தாமை இல்லாதது மட்டும் அல்ல, அதிகப் படியாக ஒரு சிறந்த பொருத்தமும் உள்ளது –
கடைசி வரியில் “அந்த ஜ்யோதிஸ் தான் நம் உடலுக்கும் இருக்கும் நெருப்பு” என்று சொல்லப் பட்டுள்ளது. இது ஸூர்யனுக்குத் தான் பொருந்தும், பரமாத்மாவுக்குப் பொருந்தாது. நம் உடலுக்குள் ஜாட₂ராக்₃நி – வைஸ்வானரன் என்ற ஒரு நெருப்புத் தான் நாம் உண்ணும் உணவை ஜெரிக்க வைக்கிறது. அதுவும் ஒரு நெருப்பு (தேஜஸ்); ஸூர்யனும் ஒரு
நெருப்பு. எனவே இரண்டும் ஒன்று தான் என்று சொல்வது பொருத்தமானதே . ஜ்யோதிஸ் என்ற சொல்லுக்குப் பரமாத்மா என்று பொருள் கொண்டால், அவர் எப்படி வயிற்றுக்குள் இருக்கும் நெருப்பாக ஆக முடியும்?

நிறமுடைய பொருள் – எந்த ஒரு பொருளுக்கு நிறம் உள்ளதோ , அதுக்குத் தான் ஒளி இருக்க முடியும். எனவே ஜ்யோதிஸ் என்ற சொல் ஒரு நிறமுடைய பொருளைக் குறிக்க வேண்டும். எனவே அது ஸூர்யனே . பரமாத்மாவுக்கு நிறம் இல்லை-

இவ்வாறு ஜ்யோதிஸ் என்கிற பொருள் ஸூர்யன் தான் என்று பூர்வ பக்ஷீ கூறுகிறார்.
கேள்வி – நிகரற்ற ஒளி உடைய பொருள் ஸூர்யனாகவே இருக்கட்டும். ஜகத்காரணமான ப்ரஹ்மம் என்பது பரமாத்மாவே என்று இதற்கு முன் சொன்னதுக்கும் இதற்கும் என்ன தொடர்பு? இந்த அதிகரணம் ஏன் ஏற்பட்டது?

பூர்வ பக்ஷியின் பதில் – உபநிஷத்துகளில் ஜகத்காரணமான ப்ரஹ்மத்துக்கு தான் நிகரற்ற ஒளி உண்டு என்றும், அதன் ஒளியால் தான் மற்ற ஒளியுடைய பொருள்கள் எல்லாம் ஒளி விடுகின்றன என்றும் கூறப்பட்டுள்ளது. எனவே , நிகரற்ற ஒளியுடைய பொருள் ஸூர்யன் தான் என்று இங்கு நாம் நிரூபித்து விட்ட படியால், ஸூர்யனே தான் ஜகத் காரணம்.

நிகரற்ற ஒளி உடைய ஜ்யோதிஸ் பரமாத்மாவே-ஸித்தாந்தம் – 4 ஸூத்ரங்களைக் கொண்டு வேத வ்யாஸர் இந்த வாதத்துக்கு பதிலுரைக்கிறார்.

(1) ஜ்யோதி: சரணாபி₄தா₄நாத் – அந்தரதிகரணத்திலிருந்து ’அந்ய:’ என்ற சொல்லை இங்கும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
ஜ்யோதி: – ஜ்யோதிஸ் என்று சொல்லப்படுவது
அந்ய: – ஸூர்யனைக் காட்டிலும் வேறு ஓருவரான பரமாத்மாவே
சரண அபி₄தா₄நாத் – கால் சொல்லப் பட்டிருக்கிறபடியால்-

இந்த ஜ்யோதிஸ் என்ற பொருளைச் சொல்லும் வாக்கியத்துக்கு முன் வாக்கியத்தில், ’பாத₃: அஸ்ய ஸர்வா பூ₄தாநி, த்ரிபாத் அஸ்ய அம்ருதம் தி₃வி’ –அதாவது ’இந்தப் பொருளின் ஒரு காலாகத் தான் இவ் வுலகில் உள்ள பொருள்கள் அனைத்தும் உள்ளன; மிச்சமுள்ள மூன்று கால்கள் வைகுந்தத்தில் அழிவற்ற பொருள்களாய் உள்ளன’ என்று கால் பற்றிச் சொல்லப் பட்டுள்ளது. இந்தப் பண்பு ஸூர்யனுக்குப் பொருந்தாது, பரமாத்மாவுக்கு மட்டுமே பொருந்தும்.
இந்த ஜ்வயாதிஸ் என்பது பரமாத்மாவாயின் அது எப்படி வயிற்றிலுள்ள நெருப்போடு ஒன்றாக முடியும்? என்று கேள்வி எழும். அதிலும் குறை யில்லை . பரமாத்மாவே தான் வயிற்றில் இருக்கும் நெருப்புக்கும் அந்தர்யாமியாய் இருக்கிறார் என்பதால் ஜ்யோதிஸ்ஸும் அவரே , வயிற்றிலிருக்கும் நெருப்பும் அவரே . ’அஹம் வைஸ்வாநவரா பூ₄த்வா ப்ராணினாம் தே₃ஹம் ஆஸ்ரித:’ என்று கண்ணனும் பகவத் கீதையில் தானே வைஸ்வானரன் என்ற வயிற்று நெருப்பு என்கிறார்.

(2) ச₂ந்ததா₃பி₄தா₄நாத் ந இதி சேத் ந ததா₂ சேதோர் பணநிக₃மாத் ததா₂ஹி த₃ர்சநம் – இதில் இரண்டு பகுதிகள்.
ச₂ந்ததா₃பி₄தா₄நாத் ந – இது பூர்வ பக்ஷியின் கூற்று. அவர் வாதிடுகிறார் – இந்த உபநிஷத் பகுதியின் தொடக்கத்தில் ’கா₃யத்ரீ’ என்ற ச₂ந்தஸ் (விருத்தம்) சொல்லப்பட்டுள்ளது. அதன் காலாக உலகப் பொருள்கள் உள்ளன என்று தான் சொல்லப்பட்டுள்ளதே தவிர ஜ்யோதிஸ் என்ற பொருளின் காலாக அல்ல. எனவே ஜ்யோதிஸ் என்பது பரமாத்மா அல்ல
இதி சேத் ந – “என்று நீ கூறினால் அது தவறு”. இது தொடங்கி வ்யாஸரின் கூற்று.
ததா₂ சேதோர் பண நிக₃மாத் – ததா₂-அவ்வாறு -சேத: மனத்தை அர்பணம் செலுத்துவது
நிக₃மாத் உபதேசிக்கப் பட்டுள்ளதால் காயத்ரீ என்ற சொல்லும் வெறும் விருத்தத்தைச் சொல்ல வில்லை , இரண்டுக்கும் 4 கால்கள் இருக்கின்றன என்னும் ஒற்றுமையால் காயத்ரியாகவே பரமாத்மாவைத் த்யானிக்க வேண்டும் என்று தான் சொல்லப்பட்டுள்ளது.
ததா₂ஹி த₃ர்சநம் – “அவ்வாறு அன்றோ காணப் படுகிறது”. வேதத்தில் பல இடங்களில் இதைப் போல் ஒரு பொருளை ஒரு விருத்தமாக த்யானிப்பது காணப் படுகிறது.

(வாயு -அக்னி -சூர்யன் -சந்திரன் -ஜலம் -பிராணம்- வாக்கு-சஷுஸ்- ஸ்ரோத்ரம் மனஸ் –10 பொருள்கள் -இது தான் விராட் -விருத்தம் -பாதம் தோறும் 10 அக்ஷரங்கள்-போன்றவையும் உண்டே -)

உலகத்தை எல்லாம் காக்கும் காயத்ரியும் பரமாத்மாவே
காயத்ரீ என்ற பொருளும் ஜ்யோதிஸ் என்ற பொருளும் மேலுலகத்தில் இருப்பதாகச் சொல்லப் பட்டுள்ளபடியால் இரண்டும் ஒன்றே . எனவே “இதற்கு உலகப் பொருள்கள் எல்லாம் காலாக இருக்கின்றன” என்ற வாக்கியத்தின் படி காயத்ரீ என்பது பரமாத்மாவே , விருத்தம் அல்ல என்று வ்யாஸர் நிரூபித்தார். அதற்கு மேல் எழும் கேள்வி –

கேள்வி – மீமாம்ஸை யில் உபக்ரம ந்யாயம் என்று ஒன்றுண்டு. ஒரு பகுதியில் முன்னால் சொல்லப்பட்ட வாக்கியத்துக்கு எவ்வாறு பொருள் கொள்ளப் பட்டுள்ளதோ , அதற்குத் தகுந்தபடி தான் பின் வரும் வாக்கியங்களுக்குப் பொருள் கொள்ள வேண்டும் என்பது அந்த ந்யாயம். அதன் படி முதலில் நாம் ’காயத்ரீ’ என்ற சொல்லைக் கேட்டதும், விருத்தத்தைத் தான் அறிகிற படியால், பின் வரும் வாக்கியத்தில் ’இதன் காலாக உலகப் பொருள்கள் எல்லாம் உள்ளன’ என்ற சொல்லப்பட்டு இருந்தாலும், அதற்குத் தான் வேறு பொருள் கண்டு பிடிக்க வேண்டும். பின்னுள்ளதைப் பொருந்த விடுவதற்காக முன்னாலுள்ள காயத்ரீ என்ற சொல்லுக்குப் பரமாத்மா என்று பொருள் கற்பிப்பது பொருந்தாது. இதற்கான பதில் –

(3) பூ₄தாதி₃ பாத₃ வ்யபதே₃ச உபபத்தே : ச ஏவம் –
“பூ₄தாதி₃
–பூதம் ப்ருதிவீ சரீரம் ஹ்ருதயம் என்பவை பாத₃ காலாக
வ்யபதே₃ச –சொல்லப்பட்டது
உபபத்தே : ச –பொருந்துகிறபடியாலும்
ஏவம் –இவ்வாறே ”

பின்னுள்ள வாக்கியத்தில் சொல்லப் பட்டதைப் பொருந்த விட மட்டும் இங்கு காயத்ரீ என்பது பரமாத்மாவே என்று நாங்கள் சொல்ல வில்லை . காயத்ரீ என்பதைப் பற்றி உபதேசிக்கும் முன்னாலுள்ள பகுதியிலேயே “காயத்ரிக்கு ஆத்மாக்கள், ப்ருதிவீ, சரீரங்கள், ஹ்ருதயங்கள் என்பவை பகுதிகளாக உள்ளன’ என்று சொல்லப் பட்டுள்ளது. இதுவே -காயத்ரீ என்ற வ்ருத்தத்துக்குப் பொருந்தாது. பரமாத்மா என்று பொருள் கொண்டால் தான் அதுவும் பொருந்துகிறது.

(4) உபதே ₃ச பே₄தா₃த் ந இதி சேத் ந உப₄யஸ்மிந் அபி அவிரோதா₄த் – இதில் பூர்வ பக்ஷம் ஸித்தாந்தம் இரண்டுமுள்ளது.
உபதே ₃ச பே₄தா₃த் ந – காயத்ரீ என்பது “மேலுலகத்தில் உள்ளது” என்றும், ஜ்யோதிஸ் என்பது “மேலுலகத்தைத் தாண்டி உள்ளது” என்றும் வெவ்வேறாக உபதேசம் இருக்கிற படியால் காயத்ரியும் ஜ்யோதிஸ்ஸும் ஒன்று அல்ல
இதி தசத் ந – என்று நீ சொன்னால் அது தவறு
உப₄யஸ்மிந் அபி அவிதராதா₄த் – ’மரத்தின் நுணியில் கழுகு’ மற்றும் ’மரத்துக்கு மேல் கழுகு’ என்பவை போல் இங்கும் இரண்டு உபதேசங்களுக்கும் எந்த விரோதமும் இல்லை , எனவே ஜ்யோதிஸ்ஸும் காயத்ரியும் பரமாத்மாவே .

இவ்வாறு ஜகத் காரணப் பொருளின் தனித் தன்மையான நிகரற்ற ஒளி இருப்பது பரமாத்மாவுக்கே என நிரூபிக்கப்பட்டது,

நிறைந்த வன் பழி நம் குடிக்கிவள் என்று அன்னை காண கொடாள்
சிறந்த கீர்த்தித் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்ட பின்
நிறைந்த சோதி வெள்ளம் சூழ்ந்த நீண்ட பொன் மேனியொடும்
நிறைந்தென்னுள்ளே நின்றொழிந்தான் நேமியங்கையுளதே–5-5-7-

ஸ॒ஹஸ்ர॑ஶீர்​ஷா॒ புரு॑ஷ: । ஸ॒ஹ॒ஸ்ரா॒க்ஷ: ஸ॒ஹஸ்ர॑பாத் । ஸ பூ⁴மிம்॑ வி॒ஶ்வதோ॑ வ்ரு॒த்வா । அத்ய॑திஷ்ட²த்³த³ஶாங்கு॒³லம் ॥

ஏ॒தாவா॑னஸ்ய மஹி॒மா । அதோ॒ ஜ்யாயாக்॑³ஶ்ச॒ பூரு॑ஷ: । பாதோ᳚³ஸ்ய॒ விஶ்வா॑ பூ॒⁴தானி॑ । த்ரி॒பாத॑³ஸ்யா॒ம்ருதம்॑ தி॒³வி ॥

வேதா॒³ஹமே॒தம் புரு॑ஷம் ம॒ஹான்தம்᳚ । ஆ॒தி॒³த்யவ॑ர்ணம்॒ தம॑ஸ॒ஸ்து பா॒ரே । ஸர்வா॑ணி ரூ॒பாணி॑ வி॒சித்ய॒ தீ⁴ர:॑ । நாமா॑னி க்ரு॒த்வாபி॒⁴வத॒³ன்॒, யதா³ஸ்தே᳚ ॥

—————

1.1.11 இந்த்ர ப்ராணாதி₄கரணம்
இந்திரனை உபாஸித்தால் முக்தியா?

1.1.11 இந்த்ர ப்ராணாதிகரணத்தின் பின் புலம்
ஸங்கதி
– 1.1.10 ஜ்யோதிரதிகரணத்தில் ஜ்யோதிஸ் என்ற சிறப்புச் சொல் ஸூர்யனைக் குறிப்பிட்டால், அந்த வாக்கியத்தின் பொருளில் எந்த ஒவ்வாமையும் இல்லை என்றாலும் அப் பகுதியின் தொடக்கத்திலுள்ள வாக்கியங்கள் பொருந்தாமல் போகின்றன. எனவே , ஜ்யோதிஸ் என்ற சொல்லுக்கு ஸூர்யன் என்ற பொருளை விட்டு, பரமாத்மா என்று பொருள் கொண்டோம்.

இந்த 1.1.11 இந்த்ர ப்ராணாதிகரணத்தில் பூர்வ பக்ஷி கேட்பதாவது – இங்குள்ள ப்ராணன் என்ற சொல்லுக்கு இந்திரன் என்று பொருள் கொண்டால் அந்த வாக்கியத்திலும் ஒவ்வாமை இல்லை , அப் பகுதியின் தொடக்கத்திலுள்ள வாக்கியத்துக்கும் பொருந்தாமை இல்லை -எனவே இந்திரன் என்றே பொருள் கொள்ளலாம் என்று.

கீழ் அதிகரணத்தில் போல் இங்கும் நேரடியாக ஜகத் காரணம் யார் என்ற ஆராய்ச்சி இல்லை – ஜகத் காரணப் பொருளுக்கு மட்டுமே இருக்கக் கூடிய ஒரு தன்மை – ’மோக்ஷம் அடைவதற்காக ஜீவர்களால் உபாஸிக்கப் படுதல்’ என்பது. இங்கு அப் பண்பு இந்திரனுக்கு இருப்பதாகச் சொல்லப் பட்டுள்ளது. எனவே இந்த்ரினே ஜகத் காரணமோ என்று கேள்வி.

ப்ராணாதிகரணத்தைக் காட்டிலும் இந்த அதிகரணத்தை வேறு படுத்தத் தான் ’இந்த்ர ப்ராணா அதிகரணம்’ அதாவது’இந்திரனாலே சொல்லப்பட்ட ப்ராண சப்தத்தைப் பற்றி ஆராயும் அதிகரணம்’ என்று பெயர் இடப் பட்டுள்ளது.

விஷய வாக்யம் – ருக் வேதத்தின் உபநிஷத்தான கௌஷீதகீ உபநிஷத்தின் 3ஆம் அத்யாயத்தில் உள்ள ப்ரதர்த₃ந வித்₃யா— ப்ரதர்த₃நோ ஹ வை தை ₃வேதா₃ஸி: இந்த்ரஸ்ய ப்ரியம் தா₄ம உபஜகா₃ம | ஸ ஹோவாச – த்வமேவ மம வ்ருணீஷ்வ யம் த்வம் மநுஷ்யாய ஹித தமம் மந்யமஸ இதி – ப்ரதர்தனன் என்பவன் ஸ்வர்கம் சென்றான். அவனுக்கு என்ன வரம் வேண்டுமோ அதைக் கேட்கும்படி இந்திரன் கூறினார். அதற்குப் ப்ரதர்தனன் – ’ஒரு ஆத்மாவுக்கு எது அனைத்திலும் உயர்ந்த நன்மை அளிக்கக் கூடியது என்று நீ நிணனக்கிறாயோ , அதையே எனக்கு வரமாகக் கொடு’ என்றான்.

தம் ஹ இந்த்ர உவாச – மாமேவ விஜாநீஹி| ஏத்தே ₃அவாஹம் மநுஷ்யாய ஹித தமம் மந்மய | த்ரிசீர்ஷாணம் த்வாஷ்ட்ரம் அஹநம் – இந்திரன் கூறினார் – என்னையே உபாஸனம் செய்வாய். இதுவே அனைத்திலும் உயர்ந்த நன்மை அளிக்கும். -நான் தான் மூன்று தலைகளை உடைய த்வாஷ்ட்ரன் என்ற அஸுரனைக் கொன்றேன்.

ஸ ஹோவாச – ப்ராணோ அஸ்மி ப்ரஜ்ஞாத்மா தம் மாம் ஆய: அம்ருதம் இதி உபாஸ்வ – இந்திரன் கூறினார் – நானே ப்ராணன், ஜ்ஞாநத்தில் சிறந்தவன். ஆயுஸ்ஸும் முக்தியும் பெற என்னை உபாஸிப்பாய்.

ஸ ஏஷ ப்ராண ஏவ ப்ரஜ்ஞாத்மா ஆநந்த: அஜர: அம்ருத: – ப்ராணனே ஆநந்தமானது, மூப்பற்றது, மரணமற்றது.

யாரை உபாஸித்தால் முக்தி?
ஸந்தேஹம்
– இங்கு இந்த்ரனால் கூறப்பட்ட ப்ராணன் என்ற சொல் குறிப்பது இந்திரனையா? பரமாத்மாவையா?
பூர்வ பக்ஷம் – இந்திரன் சொல்லும் வாக்கியத்தில் ’ப்ராண : அஸ்மி’ அதாவது ’நானே ப்ராணன்’ என்று நேரடியாகச் சொல்லப்பட்டபடியால் இங்கு ப்ராணன் எனப் படுபவர் இந்திரன் தான்.-இந்திரனை உபாஸிப்பது தான் ஒரு ஆத்மாவுக்கு அனைத்திலும் உயர்ந்த நன்மை அளிக்கும் என்று இந்திரனே இங்கு கூறுகிறார். பொதுவாக ஒரு ஆத்மாவுக்கு மிக உயர்ந்த நன்மை என்பது முக்தியே . எனவே முக்தி அடைவதற்கு உபாஸிக்கப்பட வேண்டியவர் இந்திரனே என்று தோற்றுகிறது. ஆனால் உபநிஷத்துக்கள் பொதுவாக ஜகத் காரணத்தை உபாஸித்தால் தான் முக்தி கிடைக்கும் என்கின்றன. எனவே இந்திரனே தான் ஜகத் காரணமாக இருக்க வேண்டும்.

ஸித்தாந்தம் – இதற்கு வ்யாஸர் 4 ஸூத்ரங்களில் பதில் அளிக்கிறார்.
(1) ப்ராண: ததா₂ அநுக₃மாத் –
இங்கும் அந்தரதிகரணத்திலிருந்து ’அந்ய:’ என்ற சொல்லைக் கூட்டிக் கொள்ள வேண்டும்.
ப்ராண: – இந்திரனால் ப்ராணன் என்று அழைக்கப்பட்டவர்
அந்ய: – இந்திரனைக் காட்டிலும் வேறான பரமாத்மாவே
ததா₂ –அவ்வாறே
அநுக₃மாத் –இந்த வாக்கியமானது மேல் வாக்கியங்களோடு பொருந்துகிற படியால்.
ப்ராண : அஸ்மி… மாம் உபாஸ்வ’ அதாவது ’நானே ப்ராணன்… என்னையே உபாஸிப்பாய்’ என்ற வாக்கியத்தில் உள்ள ப்ராணன் என்கிற சொல் பரமாமாவைக் குறித்தால் மட்டுமே இந்த வாக்கியம் பின் வாக்கியங்களோடு பொருந்தும்.
எடுத்துக்காட்டு – “தசரதனின் மகன் காட்டுக்குச் சென்றான். அவன் சூர்பணகையின் காதை அறுத்தான்”என்று கூறினால், மேல் உள்ள வாக்கியத்துடன் பொருந்துவதற்காக ’தசரதனின் மகன்’ என்பது லக்ஷ்மணன் என்றே கொள்ள வேண்டும்

அது போல் இங்கும் ”ஸ ஏஷ ப்ராண ஏவ ப்ரஜ்ஞாத்மா ஆநந்த₃: அஜர: அம்ருத:” என்று பின்னால் வாக்கியம் உள்ளது.
இச் சொற்களின் முழுமையான தடையற்ற பொருளைப் பார்த்தால் –
ப்ரஜ்ஞாத்மா என்றால் எல்லை யற்ற
ஜ்ஞாநமுடையவர்,
ஆநந்த₃: என்றால் அளக்கப்பட முடியாத ஆநந்தமுடையவர்,
அஜர: என்றால் என்றுமே
இயற்கையாகவே மூப்பு -மாறுபாடுகளை அடையாதவர்,
அம்ருத: என்றால் என்றுமே மரணமே இல்லாதவர்.
இப் பண்புகள் எல்லாம் முன் சொல்லப்பட்ட ப்ராணனுக்குப் பொருந்த வேண்டுமானால் ப்ராணன் எனப்படுபவர் பரமாத்மா என்று தான் சொல்ல வேண்டும். இந்திரனுக்கு அப்படிப்பட்ட ஜ்ஞாநமோ , ஆநந்தமோ , எப்போதுமே மரணமில்லாத் தன்மையோ கிடையாது, அவனும் கர்மத்துக்கு வசப்பட்டு பிறப்பு இறப்புகள் உடையவனே .

அல்லல்இல் இன்பம் அளவுஇறந்து எங்கும் அழகுஅமர் சூழ்ஒளியன்
அல்லி மலர்மகள் போக மயக்குகள் ஆகியும் நிற்கும்அம்மான்
எல்லைஇல் ஞானத்தன் ஞானம்அஃ தேகொண்டு எல்லாக்கரு மங்களும்செய்
எல்லைஇல் மாயனை
க் கண்ணனைத் தாள்பற்றி யான்ஓர் துக்கம் இலனே.

எல்லை இல் ஞானத்தன் – ‘மநஸ்வீ – அவளிடத்தில் சென்ற மனத்தை உடையவன்’ என்னுமாறு போன்று, பிரணய தாரையில் . ஞானம் அஃதே கொண்டு எல்லாக் கருமங்களும் செய் – தானும் அவளுமான சேர்த்தியிற்பிறந்த வெளிச் சிறப்பையே வேறு துணையை வேண்டி யிராதே கருவியாகக் கொண்டு, இக் காரியங்களின் கூட்டத்தை எல்லாம் உண்டாக்குகிறவன். ‘யாதொரு பிராட்டியினுடைய முகத்தை நோக்கிக் கொண்டு அம் முகக் குறிப்பில் பரவசப்பட்டவனாய், படைத்தல் முதலான எல்லாத் தொழில்களையும் செய்கிறானோ, அவன்’ என்றார் அன்றோ பட்டரும்? 

——

முன் வாக்கியம் தானே பலமானது?
(2) ந வக்து: ஆத்மோபதே₃சாத் இதி சேத் அத்₄யாத்ம ஸம்பந்த₄ பூ₄மாஹிஅஸ்மிந்
– இதில் இரு பகுதிகள் உள்ளன.
ந வக்து: ஆத்மோபதே₃சாத்–“இது தவறு, வக்தாவான இந்திரன் தன்னையே உபதேசிக்கிற படியால்”. இது பூர்வ பக்ஷம்

பூர்வ பக்ஷியின் அபிப்ராயம் – நாம் உபக்ரம ந்யாயம் என்பதைப் பற்றிப் பார்த்துள்ளோம். இரண்டு வாக்கியங்கள் இருந்தால், அதில் முதல் வாக்கியத்தைப் படிக்கும் போது நமக்குச் சட்டென்று ஒரு பொருத்தமான பொருள் தோன்றி விடுகிறது. அதற்குப் பிறகு தான் பின் வரும் வாக்கியத்தைப் படிக்கிறோம். அப்போது, முன் வாக்கியத்தின் பொருளுக்குத் தகுந்தபடி தான் பின் வாக்கியத்துக்குப் பொருள் கூற வேண்டும். இதுவே உபக்ரம ந்யாயம்.

(அக்னி -ரிக் வேதம் கொடுக்க -வாயு -யஜுர் வேதம் கொடுக்க -ஆதித்யன் -சாம வேதம் கொடுக்க -என்று முதலில் சொல்லி-ரிக் மந்த்ரம் படிக்கும் பொழுது உரைத்து குரலில் படிக்க வேண்டும் என்றும் அடுத்து சொல்லும்-சில ரிக் மந்த்ரம் யஜுர் வேதத்திலும் இருக்கும் -கலந்த படியே இருக்கும் முதலில் ரிக் வேதத்தைச் சொல்லி பின்னர் ரிக் மந்த்ரம் சொல்லும் பொழுது ரிக் வேதத்தையே கொள்ள வேண்டும் -இதுவே உபக்ரம நியாயம் -இது பூர்வ மீமாம்ஸையில் உள்ளது)

எடுத்துக்காட்டு – ’ராமன் காட்டுக்குச் சென்றான். அவன் சூர்பணகையின் காதை அறுத்தான்’ என்று கூறினால், முன் வாக்கியத்தில் ராமன் என்று தெளிவாகத் தெரிந்து விட்டபடியால், பின்னால் வரும் ’சூர்பணகையின் காதை அறுத்தான்’ என்பதற்குத் தான் வேறு சபாருள் கொள்ள வேண்டும் – ’லக்ஷ்மணன் மூலமாக அறுத்தான்’ என்பது போல்.

அதை இங்கு உபயோகிப்போம். இங்கு முதலில் “ நானே ப்ராணன்… நானே த்வாஷ்ட்ரனைக் கொன்றேன்” என்று இந்திரன் சொல்லுகிறபடியால், ஸந்தேஹத்துக்கே இடமில்லாமல் இந்திரன் தன்னைத் தான் ப்ராணன் என்று சொல்லிக் கொள்கிறான் என்று தெரிகிறது. பரமாத்மா தான் ப்ராணன் என்று கொண்டால், அவர் த்வாஷ்ட்ரன் என்ற அஸுரனைக் கொல்ல வில்லையே என்கிற பொருந்தாமை ஏற்படும். இவ்வாறு தொடக்கத்தில் முடிவு செய்து விட்டோம்

இனி பிற்பாடு வரும் வாக்கியம் – “ப்ராண ஏவ ப்ரஜ்ஞாத்மா ஆநந்த₃: அஜர: அம்ருத:” என்று. எனவே முன் வாக்கியத்தின் பொருளுக்குப் பொருந்தும்படி தான் பின் வாக்கியத்திற்குப் பொருள் கூற வேண்டும். எனவே இச் சொற்களின் பொருளைக் குறைத்துக் கொண்டு, ப்ரஜ்ஞாத்மா என்றால் நம்மை விட அதிகமான ஜ்ஞாநமுடையவர், ஆநந்த₃: என்றால் நம்மை விட அதிகமான ஆநந்த முடையவர், அஜர: அம்ருத:” என்றால் அம்ருதத்தைக் குடித்த படியால் மூப்பு மற்றும் மரணம் அற்றவர் என்று பொருள் கொள்ள வேண்டும். இதுவே உபக்ரம ந்யாயத்தின் படி தகுந்ததாகும்.-எனவே இந்திரன் தான் இங்கு ப்ராணன் என்று சொல்லப் படுகிறார் என்கிறார் பூர்வபக்ஷி.

இதி சேத் – “இவ்வாறு நீ சொன்னாய் என்றால்”.-இதற்கு மேல் ’அது தவறு’ என்று சேர்த்துக் கொள்ள வேண்டும். இது தொடங்கி ஸித்தாந்தம் கூறுகிறார் வ்யாஸர்.

உபக்ரம ந்யாயத்திற்கு விதி விலக்கு
அத்₄யாத்ம ஸம்ப₃ந்த₄ பூ₄மாஹிஅஸ்மிந்
அத்₄யாத்ம –ஆத்மாவில் இருக்கும் ஸம்ப₃ந்த₄ –தொடர்புகளின்-பூ₄மா பன்மை-அஸ்மிந் -இவரிடம்-ஹி–அன்றோ

ஆத்மாவில் இருக்கும் தொடர்புகள் என்றால் ஆத்மாவோடு மற்ற பொருள்களுக்கு இருக்கும் தொடர்புகள் என்று பொருள். அவை பலவாக இருக்கின்றன என்றால், ஆத்மாவோடு தொடர்பு பட்ட பொருள்கள் பலவாக இருக்கின்றன என்று பொருள். இப்படிப் பல பொருள்களோடு தொடர்பு பட்டு இருத்தல் என்பது இவரிடம் அதாவது-பரமாத்மாவிடம் மட்டும் தான் பொருந்துகிற படியால், இங்கு ப்ராணன் எனப்படுபவர் பரமாத்மாவே – என்று ஸூத்ரத்தின் பொருள்

.இந்த உபநிஷத் பகுதியிலேயே – “தத்₃யதா₂ ரத₂ஸ்ய அரேஷு நேமி: அர்பிதா, நாபௌ₄ அரா: அர்பிதா:, ஏவமேவ ஏதா: பூ₄த மாத்ரா: ப்ரஜ்ஞா மாத்ராஸு அர்பிதா:, ப்ரஜ்ஞா மாத்ரா: ப்ராணே அர்பிதா:” என்ற ஓரு வாக்கியம் உள்ளது. இதன் பொருள் – எப்படி ஒரு சக்கரத்தில் வெளியில் இருக்கும் வட்டமான நேமி என்ற பகுதி அதற்குள் இருக்கும் அரங்கள்
என்னும் குச்சிகளால் தாங்கப்படுகிறதோ , அந்தக் குச்சிகள் எல்லாம் நடுவில் இருக்கும் நாபி₄ என்ற குமிழ் போன்ற பகுதியால் தாங்கப் படுகின்றனவோ , அது போல் பூ₄த மாத்ரம் எனப்படும் அசேதனப் பொருள்கள் எல்லாம் ப்ரஜ்ஞாை மாத்ரம் எனும் ஜீவாத்மாக்களால் தாங்கப் படுகின்றன, அந்த ஜீவாதமாக்கள் எல்லாம் ப்ராணனால் தாங்கப் படுகின்றன”.

இப்படி உலகிலுள்ள சேதநம் மற்றும் அசேதநங்கள் அனைத்தோடும் தொடர்பு பட்டு, அனைத்தையும் தாங்கிக் கொண்டு இருக்கும் ப்ராணன் என்பவர் கண்டிப்பாக ஒரு ஜீவாத்மாவான இந்திரனாக இருக்க முடியாது. பரமாத்மாவாகத் தான் இருக்க வேண்டும்.இத்தால், உபக்ரம ந்யாயம் இங்கு பொருந்தாது என்று காட்டப் படுகிறது. ஸமமான எண்ணிக்கையில் இருக்கும்வாக்யங்களுக்கு இடையே தான் முன் வாக்கியம் பின் வாக்கியத்தை விட பலமானது என்னும் உபக்ரம ந்யாயம் பொருந்தும். முதலில் ஒரே ஒரு வாக்கியம் இருந்து, பின்னால் அதற்கு முரண்பட்ட பல வாக்கியங்கள் இருந்தால், பலவற்றின் பொருளை முடிவு செய்து, அதற்குத் தகுந்தபடி தான் முன் வாக்கியத்துக்குப் பொருள் கொள்ள வேண்டும்.

இங்கும், ’ ப்ரஜ்ஞாத்மா ஆந ந்த₃: அஜர: அம்ருத:’ ’ப்ரஜ்ஞா மாத்ரா: ப்ராணே அர்பிதா:’ என்று பின்னாலிருக்கும் பல வாக்கியங்கள் பரமாத்மாவுக்கு மட்டுமே பொருந்துகிற படியால், தொடக்கத்தில் இருக்கும் ஒரே ஒரு ’ப்ராணன்’ என்ற சொல்லுக்குப் பொருளை மாற்றி, பரமாத்மா என்று கொள்வது தான் ஏற்புடையதாகும்.

1.1.11 இந்த்ரப்ராணாதி₄கரணம்
வைதிகக் கண்ணோட்டம் காட்டுவது பரமாத்மாவையே

தன்னையே பரமாத்மா என்று இந்திரன் சொல்லலாமா?
1.1.11– இந்த்ர ப்ராணாதிகரணத்தில் தன்னை உபாஸித்தால் முக்தி அடையலாம் என்று இந்திரன் சொன்னபடியால் அவனே ப்ரஹ்மம் என்று பூர்வ பக்ஷீ கூறினார். ஆனால் இந்த ப்ரகரணத்தில் உள்ள பல வாக்கியங்கள் பரமாத்மாவுக்கே பொருந்துகிறபடியால் இங்கு உபாஸிக்கப்பட வேண்டியவராகச் சொல்லப்படுபவர் பரமாத்மாவே என்றார் வ்யாஸர்.

இதற்கு மேல் ஒரு கேள்வி எழுகிறது – மற்ற வாக்கியங்கள் இருக்கட்டும். தன்னையே உபாஸிக்க வேண்டும் என்று இந்திரன் சொன்னது எப்படி வ்யாஸர் பக்ஷத்தில் பொருந்தும்? தன்னையே பரமாத்மா என்று இந்திரன் சொல்லலாமா?
இதற்கு பதிலளிக்கிறார் வேத வ்யாஸர் மூன்றாம் ஸூத்ரத்தில் –
(3) சாஸ்த்ரத்₃ருஷ்ட்யா து உபதே₃ச: வாமதே₃வவத்.
உபதே₃ச:
– முக்தி அடைய வேண்டும் என்றால் தன்னையே உபாஸிக்க வேண்டும் என்ற இந்திரனின் உபதேசம்
சாஸ்த்ர த்₃ருஷ்ட்யா து – ஸாஸ்த்ரத்தால் ஏற்பட்ட பார்வையால் ஆத்மாவைக் கண்ட படியால் அன்றோ
வாம தே₃வவத் – வாம தேவர் என்ற ரிஷியைப் போல்

ஜீவாத்மாவை அறிவதற்கு இரண்டு ப்ரமாணங்கள் உள்ளன. ஒன்று ப்ரத்யக்ஷம், அதாவது நம்முடைய புலன்கள். -அதன் மூலம் ஜீவாத்மாவை அறிந்தால் அவரை உடலைக் காட்டிலும் வேறு பட்டவர் என்று மட்டும் தான் அறியலாம்.
இரண்டாவது ப்ரமாணம் ஸாஸ்த்ரம். வேதத்தின் மூலம் ஜீவாத்மாவை அறிந்தால், அவருக்கு உள்ளே அந்தர்யாமியாக பரமாத்மா இருக்கிறார் என்பதையும் சேர்த்து அறிந்து கொள்வோம். அப்படி ஸாஸ்த்ரத்தால் ஏற்பட்ட ஆத்மாவைப் பற்றின கண்ணோட்டம் இந்திரனுக்கு உள்ள படியால் தான் இந்திரன் தன்னையே பரமாத்மா என்று சொல்கிறார்.

து அன்றோ- -ப்ரத்யக்ஷ பார்வையைக் கொண்டு உபதேசிக்க வில்லை-ஸாஸ்த்ரத்தால் ஏற்பட்ட பார்வையால் ஆத்மாவைக் கண்ட படியால் அன்றோ

பரமாத்மா தான் உலகத்தில் அனைத்துக்குள்ளும் அந்தர்யாமியாக இருக்கிறார். அதனால் தான் உலகத்திலுள்ள எந்த பொருளைக் குறிக்கும் சொல்லும் அந்தப் பொருளை மட்டும் குறிக்காது, அதற்குள் இருக்கும் பரமாத்மா வரை குறிக்கும்.
அதே போல், ’நான்’ என்ற சொல்லும், நமக்குள் அந்தர்யாமியான பரமாத்மாவையே குறிக்கிறபடியால் இந்திரன் தன்னையே உபாஸிக்க வேண்டும் என்று உபதேசித்ததில் தவறில்லை – எனக்கு அந்தர்யாமியான பரமாத்மாவை உபாஸிப்பாய் என்றே அதற்குப் பொருள்.

யானும் தானாய் ஒழிந்தான்
யானும் நீ என்னுடைமையும் நீயே
ஆமவை ஆயவை ஆய் நின்ற அவரே
ஜகத் சர்வம் ப்ரஹ்மம்

மத்த சர்வம் -ப்ரஹ்லாதன்
கடல் ஞாலம் செய்தேனும் யானே என்னும் -ஆழ்வார்

இதற்கு எடுத்துக்காட்டு – வாம தேவர் என்ற ரிஷி கூறுகிறார் “அஹம் மநு: அப₄வம்” அதாவது “நானே மநுவாக ஆனேன்” என்று. எனக்குள் அந்தர்யாமியான பரமாத்மா தான் மநுவுக்கும் அந்தர்யாமியாய் இருக்கிறார் என்று இதற்குப் பொருள். அதே போல் தான் இந்திரனும் கூறி யிருக்கிறார்.

ஏன் இப்படிச் சுற்றி வளைக்கிறார் இந்திரன்?
தன்னையே உபாஸிக்க வேண்டும் என்று இந்திரன் சொன்னது தவறில்லை என்றாலும், இப்படிச் சொல்ல வேண்டிய தேவை என்ன? நேரடியாக ’நாராயணனை உபாஸிப்பாய்’ என்று சொல்லியிருந்தால். விசாரமே தேவைப் படாமல் எளிமையாகப் பொருளைப் புரிந்து கொண்டிருக்கலாமே ? இக் கேள்வியைப் பூர்வ பக்ஷீ எழுப்புகிறார் –

(4) ஜீவ முக்₂ய ப்ராண லிங்கா₃த் ந இதி சேத் ந உபாஸா த்ரைவித்₄யாத் ஆஸ்ரிதத்வாத் இஹ தத்₃யோகா₃த்
ஜீவ முக்₂ய ப்ராண லிங்கா₃த் ந – இது பூர்வ பக்ஷியின் கூற்று.இந்த வேதப் பகுதியில் ஜீவன் (இந்திரன்) மற்றும் முக்ய ப்ராணன் என்ற மூச்சுக் காற்றைப் பற்றின லிங்கம் -அதாவது அடையாளம் உள்ளது. த்வாஷ்ட்ரனைக் கொன்றவர் கண்டிப்பாக இந்திரன் என்ற ஜீவாத்மா தான். அதே போல் “யாவத்₃தி₄ அஸ்மின் சரீரே ப்ராணோ வஸதி தாவத் ஆயு:” -அதாவது ’எதுவரை இந்த உடலில் ப்ராணன் உள்ளதோ அது வரை தான் ஆயுஸ்’ என்ற வாக்கியமும் மூச்சுக் காற்றுக்கே பொருந்தும். அதனால் இங்கு பரமாத்மா சொல்லப்படுகிறார் என்று சொல்வது தவறு – என்கிறார் பூர்வ பக்ஷீ
இதி சேத் ந – “இவ்வாறு கூறினால் அது தவறு”. இது தொடங்கி வ்யாஸரின் பதில் ஆகும்
உபாஸா த்ரை வித்₄யாத் –“ப்ரஹ்மத்தைப் பற்றின மூன்று விதமான உபாஸனங்களைச் சொல்வதற்காக”.
(1) தானான தன்மை (ஸ்வரூபம்)
(2) ஜீவாத்மாக்களுக்கு அந்தர் யாமியான நிலை
(3) அசேதநப் பொருள்களுக்கு அந்தர் யாமியான நிலை

என்று மூன்று முறைகளில் ப்ரஹ்மத்தைத் த்யானிக்க வேண்டும் என்று காட்டுவதற்காகத் தான் இந்திரன் வேண்டும் என்றே தன்னைப் பற்றியும் மூச்சுக் காற்றைப் பற்றியும் சொல்லி, அவற்றுக்கு அந்தர் யாமியான பரமாத்மாவை த்யானிக்க வேண்டும் என்கிறார்,
ஆஸ்ரிதத்வாத் – “இதைப் போல் மற்ற உபநிஷத்துகளிலும் மூன்று விதமான உபாஸநங்கள் சொல்லப் பட்டுள்ளபடியால்”
இஹ தத்₃யோகா₃த் – “இங்கும் அது பொருந்துகிற படியால்”.
இந்தப் ப்ரகரணத்தில், “ஆநந்த₃: அஜர: அம்ருத:” என்று ப்ரஹ்ம ஸ்வரூபத்தைப் பற்றின த்யானமும், “மாம் உபாஸ்வ” அதாவது இந்திரனுக்கு அந்தர்யாமியான பரமாத்மாவை உபாஸிப்பாய்” என்பதன் மூலம் ஜீவாத்மாவுக்கு அந்தர்யாமியாக உபாஸிப்பதும், “ப்ராணா : அஸ்மி” அதாவது ’நானே ப்ராணன்’ என்பதால் மூச்சுக் காற்று என்ற அசேதனப் பொருளுக்கு அந்தர் யாமியாக உபாஸிப்பதும் சொல்லப் பட்டுள்ளன.

எனவே இங்குச் சொல்லபட்ட ’ப்ராணன்’ பரமாத்மாவே என்று முடிவாகிறது. எனவே பரமாத்மாவே ஜகத் காரணம்.

(

சத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்மம் -நேராக ஸ்வரூபம்
தத் ஸ்ருஷ்ட்வா தத் அனுபிரவேஸாத்-அந்தர்யாமி -சேதன அசேதன அந்தர்யாமித்வம்
ராமர் திருமேனி -சீதைக்கு மணவாளன் – -விபீஷணனுக்கு அபயம் அளித்தவன்

முதல் பாதத்தில் பரமாத்மாவின் குணங்கள்
முதல் அத்யாயத்தின் முதல் பாதத்தில் மொத்தம் 11 அதிகரணங்கள் உள்ளன. அதில் முதல் நான்கு அதிகரணங்கள்
இந்த ஸாஸ்த்ரத்தை ஏன் தொடங்க வேண்டும் என்று காட்டும் முன்னுரையாக அமைந்தன.
அதற்கு மேல் ஏழு அதிகரணங்களால் அந்த ஜகத் காரணமான ப்ரஹ்மம் பரமாத்மா தான் எனப்பட்டது. இதில்
ஒவ்வொரு அதிகரணத்திலும் பரமாத்மாவின் சிறந்த பண்புகள் விளக்கப் பட்டுள்ளது என்கிறார் ஶ்ரீ வேதாந்த தேசிகன் –

ஸ்வேச்சா₂தே : ஸர்வஹேது: சுப₄ கு₃ண விப₄வ-அநந்த -நிஸ் ஸீம-ஹர்ஷ:
சுத்₃த ₄-அகர்தமாத்தே ₂-தி₃வ்யாக்ருதி: அநுபதி₄க-ஆகாசநாதி₃-ஸ்வபா₄வ: |
ஸப்ராண-அப்ராண-பே₄த₃-வ்யதிபி₄து₃ர-ஜக₃த்-ப்ராணன: தி₃வ்யதீ₃ப்தி:
ப்ராண-இந்த்₃ராதி₃-அந்தராத்மா ப்ரபு₄ஃ அதி₄கரணை : ஸப்தபி₄: ப்ரத்யபாதி₃ ||

(5) ஈக்ஷத்யதி₄கரணம் – தன் ஸங்கல்பத்தாலேயே அனைத்தையும் படைப்பவர் பரமாத்மா
(6) ஆந்ந்தா ₃மயாதி₄கரணம் – வேதத்தாலும் அளக்கப்பட முடியாத எல்லை யற்ற ஆநந்தத்தை உடையவர் பரமாத்மா
(7) அந்தரதி₄கரணம் – தூய்மையான, பாப புண்யங்களால் ஏற்படாத, திவ்யமான திரு மேனியை உடையவர் பரமாத்மா
(8) ஆகாசாதி₄கரணம் –இயற்கையாக ப்ரகாசிப்பவர், மற்ற பொருள்களையும் ப்ரகாசிக்க வைப்பவர் பரமாத்மா
(9) ப்ராணாதி₄கரணம் – உயிருள்ள மற்றும் உயிரற்ற உலகப் பொருள்கள் அனைத்தும் வாழ்வதற்குக் காரணம்
பரமாத்மா
(10) ஜ்யோதிரதி₄கரணம் – நிகரற்ற ஒளியை யுடையவர் பரமாத்மா
(11) இந்த்₃ர ப்ராணாதி₄கரணம் –ப்ராணன் இந்த்ரன் முதலானவர்களுக்கு எல்லாம் அந்தர்யாமீ பரமாத்மா

அஸ்ப்ருஷ்ட லிங்க ஸ்ருதி வாக்ய விசாரணை இதில்

(5) ஈக்ஷத்யதி₄கரணம் – தன் ஸங்கல்பத்தாலேயே அனைத்தையும் படைப்பவர் பரமாத்மா–ஸ்வேச்சா₂தே : ஸர்வஹேது:
(6) ஆந்ந்தா ₃மயாதி₄கரணம் – வேதத்தாலும் அளக்கப்பட முடியாத எல்லை யற்ற ஆநந்தத்தை உடையவர் பரமாத்மா–சுப₄ கு₃ண விப₄வ-அநந்த -நிஸ் ஸீம-ஹர்ஷ:
(7) அந்தரதி₄கரணம் – தூய்மையான, பாப புண்யங்களால் ஏற்படாத, திவ்யமான திரு மேனியை உடையவர் பரமாத்மா–சுத்₃த ₄-அகர்தமாத்தே ₂-தி₃வ்யாக்ருதி-
(8) ஆகாசாதி₄கரணம் –இயற்கையாக ப்ரகாசிப்பவர், மற்ற பொருள்களையும் ப்ரகாசிக்க வைப்பவர் பரமாத்மா-அநுபதி₄க-ஆகாசநாதி₃-ஸ்வபா₄வ: |
(9) ப்ராணாதி₄கரணம் – உயிருள்ள மற்றும் உயிரற்ற உலகப் பொருள்கள் அனைத்தும் வாழ்வதற்குக் காரணம்
பரமாத்மா-ஸப்ராண-அப்ராண-பே₄த₃-வ்யதிபி₄து₃ர ஜகத் ப்ராணன
(10) ஜ்யோதிரதி₄கரணம் – நிகரற்ற ஒளியை யுடையவர் பரமாத்மா–திவ்ய தீப்தி
(11) இந்த்₃ர ப்ராணாதி₄கரணம் –ப்ராணன் இந்த்ரன் முதலானவர்களுக்கு எல்லாம் அந்தர்யாமீ பரமாத்மா-ப்ராண இந்த்ராதி அந்தராத்மா ப்ரபு

——————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ வே வேளுக்குடி ரெங்கநாதன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading