ஸ்ரீ திருவாய் மொழி முதல் பத்தில் ஈட்டு ஸ்ரீ ஸூக்திகள் சார அமுதம் —

உயர்வற உயர் நலம் உடையவன் எவன் அவன்
மயர்வற மதி நலம் அருளினன் எவன் அவன்
அயர்வறும் அமரர்கள் அதிபதி எவன் அவன்
துயரறு சுடரடி தொழுது எழு என் மனனே 
–1-1-1-

தான் ஸமஸ்த கல்யாண குணாத்மகனாய் இருக்கிற இருப்பைக் காட்டி உபகரித்தான்
அக் குணங்களும் தன்னைப் பற்றி நிறம் பெற வேண்டும்படியாக இருக்கிற திவ்யாத்ம ஸ்வரூப வை லக்ஷண்யத்தைக் காட்டி உபகரித்தான்;
இப் பேற்றுக்கு என் பக்கல் சொல்லலாவது ஒன்றும் இன்றிக்கே இன்றி இருக்கவும் நிர்ஹேதுகமாகத் தானே உபகாரகன் ஆனான்;
ஸ்வ ஸ்ரூபா பந்நராய் இருக்கிறவர்களுக்கும் அவ்வருகாக இருக்கிற இருப்பைக் காட்டி உபகரித்தான்;
தன்னுடைய திவ்விய விக்ரஹ வைலக்ஷண்யத்தைக் காட்டி உபகரித்தான்,
என்று அவன் பண்ணின உபகாரங்களை அடையச் சொல்லி, ‘இப்படி உபகாரகனானவன் திருவடிகளிலே நித்தியமான கைங்கரியத்தைப் பண்ணி உஜ்ஜீவிக்க வாராய்,’ என்று தம் திரு வுள்ளத்தோடே கூட்டுகிறார்

தாம் அகப்பட்ட துறை அக் குணங்களாகையாலே அவற்றையே முதன் முன்னம் பேசுகிறார்.
இவரைக் குணத்தை இட்டாயிற்று வணங்குவித்தது.

யதோ வாஸே நிவர்த்தந்தே ’ என்று மீண்டன இறே –
இது ஆனந்த குணம் ஒன்றிலும் இறே – குணங்கள் எல்லாம் இப்படியே இறே இருப்பது –
இக் குணங்கள் எல்லாம் தமக்கு நிலமாய்ப் பேசுகிறார் இறே இவர்.

பகவத் வ்யதிரிக்த ஸமஸ்த வஸ்துகதமான சர்வ பிரகாரத்தாலும் உண்டான உச்சராயத்தை உயர்வு என்கிறது-இத்தைப் பற்றியே ஸ்ரீ ஆளவந்தாரும் ‘ஸ்வாபாவிகம்’ என்று அருளிச்செய்த சந்தை –அற -தன்னுடைய உச்சராயத்தையும் இவற்றைப் பார்த்தால்
ஆதித்யன் சந்நிதியில் நஷத்ராத்யாதிகளைப் போலேயும்
மஹா மேரு மலையின் சிகரத்தில் நின்றவனுக்குக் கீழுள்ள-சர்ஷபாதிகள் – கடுகு முதலியவை இருக்குமா போலவும்,
உண்டாய் இருக்கச் செய்தே இல்லை என்னலாம்படி பண்ணினால்-உயர்வற உயரா நிற்கும் -வருத்தம் அற்று இருக்கையாலே ஸ்வாபாவிகமாய் இருக்கும்

உயர்–இயத்தா ராஹித்யத்தைச் சொன்னபடி –(‘உயர்’ என்ற சொல்லால் இவ்வளவு என்று அளவிட்டுக் கூற முடியாமையைக் கூறியபடி.)

நலம்’ என்றது,-ஆனந்த குணம் ஒன்றனையே சொல்லுகிறது என்னுதல்
குண சமூகத்தைச் சொல்லுகிறது என்னுதல்
ஆனந்தாவஹமான (ஆனந்தம் உண்டாவதற்குக் காரணமான )விபூதிகளைச் சொல்லுகிறது என்னுதல்-

உடையவன் –இக் குணங்கள் தன்னை அஸ்தி என்று விடும் அளவு அன்றிக்கே இவற்றை இட்டு நிரூபிக்க வேண்டும்படியாக இருப்பவன்.
அதாவது ஆகந்துகமாக இன்றிக்கே ஸ்வரூப அநுபந்தியாய் இருக்கும்

ஸ்ரீ ஆழ்வான், ஸ்ரீ பிள்ளைப் பிள்ளையைப் பார்த்து, ‘நிர்க் குணம் என்பார் மிடற்றைப் பிடித்தாற்போலே ஸ்ரீ ஆழ்வார் ‘நலமுடையவன்’ என்றபடி கண்டாயே!’ என்று பணித்தான்.

யவன் அவன் -அஸ் ஸ்வரூபத்தைப் பற்றி குணங்களும் நிறம் பெற வேண்டும்படி இருக்கும் என்று ஸ்வரூப வைலக்ஷண்யத்தைச் சொல்லுகிறது

மயர்வு அற –ஞாநாநுதயம், அந்யதா ஞானம், விபரீத ஞானம் என்கிற இவை வாசனையோடே போகும்படியாக.
ஞாநாநுதயமாவது,-தேஹாத்ம அபிமானம் ( தேகத்தையே ஆத்துமாவாக நினைத்தல்.)
அந்யதா ஞானமாவது -தேவதாந்த்ர சேஷம் என்று இருக்கை (பிற தெய்வங்கட்குத் தன்னை அடிமையாக நினைத்தல்.)
விபரீத ஞானமாவது,-ஸ்வ தந்திரனாயும் ஸ்வ போக்யமாயும் நினைத்து இருக்கிற கேவலனுனைய ஞானம்
(தனக்குத்தானே உரியவனாகவும் ஆத்துமாவோடு அனுபவிக்கின்ற இன்பமே இன்பமாகவும் நினைக்கும் கேவலனுடைய ஞானம்,)
என்று ஸ்ரீ நம்பிள்ளை அருளிச் செய்வார் –
தம் திருவாயாலே ‘மயர்வற’ என்று சொல்லலாம்படி காணும் அவன் தான் இவர்க்கு அஞ்ஞானத்தை வாசனையோடே போக்கினபடி.

மதி நலம் –ஞான பத்திகள் இரண்டனையுந் தந்தான் என்று நிர்வகிப்பாரும் உண்டு
அன்றிக்கே (இனி, நலம் மதி என முன் பின்னாகக் கூட்டி) ‘நலமான மதி’ யைத் தந்தான் என்றதாய் –‘முளைக்கும் போதே வயிரம் பற்றி முளைக்கும் பொருள்களைப் போலே -பக்தி ரூபாபன்ன ஞானத்தை(பத்தியின் உருவத்தை அடைந்த ஞானத்தைத் )தந்தான் என்கிறார்,’ என்று ஸ்ரீ பட்டர் அருளிச் செய்யும் படி –கர்ம ஞான அநு க்ருஹீதையான பக்தி ஸ்தானத்தில் பகவத் பிரசாதமாய்-அனந்தரம் கைங்கர்யத்துக்கு பூர்வ க்ஷண வர்த்தியான பத்தி யாயிற்று இவரது .-உபாஸக வ்யாவ்ருத்தி –
ஸ்ரீ ஆழ்வார் பிரபந்நரோ, பத்தி நிஷ்டரோ?’ என்று ஸ்ரீ எம்பாரைச் சிலர் கேட்க,
ஸ்ரீ ஆழ்வார் பிரபந்நர்; பத்தி இவர்க்கு தேக யாத்ரா சேஷம்,’ என்று அருளிச் செய்தார். என் போலே என்னில் ,‘நாமும் எல்லாம் பிரபந்நர்களாய் இருக்கச் செய்தே ஆண்டு ஆறு மாசத்துக்கு ஜீவனம் தேடுகிறாப் போலே –உண்ணுஞ் சோறு பருகுநீர் தின்னும் வெற்றிலையும் எல்லாம் கண்ணனே’ இறே இவர்க்கு.

அருளினன் –நிர்ஹேதுகமாக ( ஒரு விதக் காரணமும் பற்றாமல் )அருளிக் கொண்டு நிற்கக் கண்ட இத்தனை,-எனக்கு அருளினான் -என்னாது ஒழிந்தது-பகவத் விஷயீ காரத்துக்கு முன்பு தம்மை அசத் கல்பராக நினைத்து இருக்கையாலே-பிரபன்ன வ்யாவ்ருத்தி –
அருளினன்-இத் தலை அர்த்திக்க அன்றிக்கே முலைக் கடுப்பாலே தரையிலே பாலைப் பீச்சுவாரைப் போலே தானாகவே அருளிக் கொண்டு நிற்க்க கண்ட இத்தனை – என்றுமாம்-நிர்ஹேதுகத்வம் மாத்திரம் அன்றிக்கே அருளாத போது தரியாமையும் ஹேத்வனுக்தியாலே சித்தம்

அயர்வு அறும் அமரர்கள் அதிபதி –தான் அருளாத அன்று சத்தை இன்றிக்கே இருப்பாரை ஒரு நாடகவுடையவன்.-அயர்வாவது -விஸ்ம்ருதி –மறதி. -அஃது இன்றிக்கே இருப்பவர்கள், அயர்வறும் அமரர்கள்.-அவர்கள், நித்தியர்கள்–த்ரிபாத் விபூதி யோகத்தைப் பற்றச் சொல்கிறது

அதிபதி –அவர்களுக்கும் ‘தொட்டுக்கொள்’-தொட்டுக்கொள்’ என்ன வேண்டும்படி யானைக்குக் குதிரை வைத்து அவ்வருகாய் இருக்கும் என்னுதல்
ஸ்வாமி வாசகம் என்னுதல் –

அவன்-இதுக்கு அவ்வருகே விக்கிரஹ வைலக்ஷண்யம் சொல்ல ஒருப் பட்டுக் கீழ் நின்ற நிலையினைக் குலுக்கி-‘அவன்’என்று அவ்வருகே போகிறார்.

துயர் அறு சுடர் அடி –துயர் அறுக்குஞ் சுடர் அடி என்று முன்புள்ள முதலிகள் அருளிச்செய்வர்;-எம்பெருமானார் அருளிச் செய்யும் படி –
வ்யாஸநேஷு மனுஷ்யானாம் ப்ருசம்பவதி துக்கித (ஸ்ரீ ராமன், தன் கீழ் வாழும் மக்கட்குத் துன்பம் வருங்காலத்துத் தானும் துன்பத்தை அடைந்தவன் ஆகின்றான்’) என்று துக்க நிவ்ருத்தியும் அவனதாய் இருக்கும் இறே-இத்தால், இவர் மயர்வு அற அவன் துயர் அற்றபடி,’ என்று அருளிச் செய்வர்.

அடி –சேஷ பூதன் சேஷி பக்கலிலே கணிசிப்பது திருவடிகளை இறே
ஸ்தநந்தய பிரஜை முலையிலே வாய் வைக்குமா போலே-
இவரும் ‘உன் தேனே மலருந் திருப்பாதம்’ என்கிற திருவடிகளிலே வாய் வைக்கிறார்-

தொழுது –நித்திய சமுசாரியாகப் போந்த இழவு எல்லாந் தீரும்படி ஸ்வரூப அநு ரூபமான வ்ருத்தியிலே அன்வயித்து-எழு –அடியிலே தொழாமையால் வந்த சங்கோசம் தீரும்படி அடியிலே தொழுது உஜ்ஜீவி என்கிறார்.என் மனனே–இப்போதாயிற்று தம்மைக் கண்டது; ‘அருளினன்’ என்று நின்ற இத்தனை இறே முன்பு.-நெடுநாள் பந்த ஹேதுவாய்ப் போந்தது இப்போது முந்துற்ற நெஞ்சாய் முற்பட்டு நிற்கிறபடியாலே அத்தோடு தமக்கு ஒரு சம்பந்தத்தை ஆசைப்பட்டு ‘என் மனனே’ என்கிறார்.

உயர்வு அற உயர்நலம் உடையவன் யவன்? அவன் மயர்வு அற மதி நலம் அருளினன்;
மயர்வு அற மதி நலம் அருளினன் யவன்? அவன் அயர்வு அறும் அமரர்கள் அதிபதி;
அயர்வறும் அமரர்கள் அதிபதி யவன்? அவன் துயரறு சுடரடி தொழுது எழு,’ என்று வாக்ய ஏக பாவத்தால் யோஜிக்கவுமாம்
இனி, ‘உயர்வற உயர்நலம் உடையவன் யவன் அவன், துயரறு சுடரடி தொழுது எழு;
மயர்வற மதிநலம் அருளினன் யவன் அவன், துயரறு சுடரடிதொழுது எழு’-என்று வாக்ய பேதம் பண்ணி யோஜிக்கவுமாம்

ஸ்வ பக்ஷத்தை ஸ்தாபிக்கவே பர பக்ஷம் நிரஸ்தமாம் இறே
நெற் செய்யப் புல் தேயுமா போலே, தன்னடையே நிரஸ்தர் ஆவார்கள் இறே அவர்கள்

உயர்வற உயர்நலம் உடையவன், அயர்வறும் அமரர்கள் அதிபதி’ என்கையாலே பிராப்பிய வேஷம் சொல்லிற்று;
‘மயர்வற’ என்கையாலே விரோதி போனபடி சொல்லிற்று;
‘அருளினன்’ என்கையாலே அவனே சாதனம் என்றது;
‘தொழுது எழு’ என்கையாலே பிராப்தி பலமான கைங்கரியத்தைச் சொல்லிற்று;
‘என் மனனே’ என்கையாலே பரிசுத்தமான அந்தக் கரணத்தையுடையவனே, அதிகாரி என்னுமிடம் சொல்லிற்று.
வஸ்து நிர்த்தேச நமஸ்கார ஆஸீஸ் ஸூக்களும் அடி தொழுது எழு என்கையாலே இதிலே உண்டே

—————

மனனக மலமற மலர் மிசை எழு தரும்
மனன் உணரளவிலன் பொறியுணர் யவையிலன்
இனன் உணர் முழு நலம் எதிர் நிகழ் கழிவினும்
இனன் இலன் எனன் உயிர் மிகு நரையிலனே
 –1-1-2–

இரண்டாம் பாட்டில்-அகில ஹேய ப்ரத்ய நீகதையாலும் -கல்யாணை கதாநதையாலும் -சேதன அசேதனங்களில் காட்டில் அத்யந்த விலஷணமாய்-ஜ்ஞானாநந்தங்களே தனக்கு வடிவாய் -முதல் பாட்டில் அனுபவித்த குணங்களுக்கு ஆச்ரயமாய் இருந்துள்ள
நிஷ்க்ருஷ்டமான திவ்யாத்ம ஸ்வரூபத்தை சோபான க்ரமத்தாலே அனுபவிக்கிறார்

மனன் என்றது, மனம் என்றபடி-அகம் – உறுப்புகள் இல்லாத-நிர் அவயவமாய் இருக்கிற மனத்திற்கு ஓர் உள்ளும் புறம்பும் இல்லாமையாலே, ‘மனனகம்’ என்றது, மனத்திலே என்றபடி.
அன்றியே மனமானது -பராகர்த்த விஷயமாயும் ப்ரத்யகர்த்த விஷயமாயும் -(வெளிப் பொருள்களிலும் உட் பொருளிலும் ) போருகையாலே பராகர்த்தத்தைத் தவிர்ந்து ப்ரத்யகர்த்த விஷயமானத்தை -அகம் -என்கிறது ஆகவுமாம் -அகம் மனம் என்றபடி –

மலம் அற –அவித்யாதிகள் -அவை அற-அனந்தரம் மலர் —விகஸிதமாய் மலர்ந்து, மிசை – மேல் நோக்கி, எழுதரும் – கொழுந்து விட்டு மேன்மேல் எனக் கிளரா நின்றுள்ள,
மனன் உணர்வு – மனஸ் ஞானம் – அறிவு; இப்படி விகஸிதமாய் – மலர்ந்து கொழுந்துவிட்டு மேன்மேல் எனக் கிளரா நின்றுள்ள மன அறிவினால் அறியப்படுவதாக இருக்கும் ஆத்மா – அளவு இலன் – அதன் அளவுள்ள ஈஸ்வரன் –ஆக மலர் இத்யாதி விசேஷண த்ரயத்தாலும் ஆத்ம விஷயக ஞானத்தினுடைய உத்தர உத்தர பரிபாக விசேஷம் சொல்லுகிறது –விவேக விமோக -அப்யாஸ-க்ரியா -கல்யாண -அநவசாத -அநுத்தர் ஷேப்ய-என்கிற விவேகாதிகளோடே கூடின பகவத் உபாசனத்தாலே நிர்மலமான மனஸ் ஸூ வேணும் என்று பரிஹாரம் அத்யாஹரித்துக் கொள்வது –

பொறி உணர்வு அவை இலன்-‘ பொறி’ -என்று ஸஷுராதி கரணங்கள் – அவற்றால் அறியப்படும் பொருள்களின் படி அல்லன்-சித் -அசித்-விலக்ஷணன்

இனன் உணர் முழு நலம் என்பதற்கு, நேர் கொடு நேராகத் தன்னை அறிய முடியாமையாலே – என்றும் ஓக்க இனனாலே – உபமானத்தால் அறியப்படுவதான முழுநலமாய் இருக்கும் – . இனன் – உபமானம்.என்றபடியதா சைந்தவ கன-என்கிறபடியே நிரதிசய ஆனந்தமாய் இருக்கும் – ஆனந்தோ ப்ரஹ்ம-என்றும் ஆனந்த மய -என்றும் சொல்லக் கடவது இறே

எதிர் நிகழ் கழிவினும் இனன் இலன் – கால த்ரயத்திலும் இனன் உண்டு ஒப்பு -அது இல்லாதவன்-பட்டர் -‘சாதர்மிய திருஷ்டாந்தம் இல்லை என்றது முன்பு; இங்கு வைதர்ம்ய திருஷ்டாந்தம் இல்லை-என்கிறது இங்கு என்று அருளிச் செய்வார். –

எனன் உயிர் –இப்படியிருக்கின்றவன் எனக்குத் தாரகன்;-இனி, உபலக்ஷணத்தால், யஸ் ஆத்மா சரீரம் -‘என்கிறபடியே இத்தைத் தனைக்கு சரீரமாய்க் கொண்டு தான் சரீரியாய் தாரகனாய் இருக்கும் என்னும் அர்த்தமும் சொல்ல வேண்டுவைத்து ஓன்று இறே-

மிகுநரை இலன் –மிக்காரை யுடையான் அல்லன்-தான் ஜீவாத்மாவை சரீரமாகக் கொண்டு -தாரகனாய் -நியாமகனாய் இருக்குமா போலே –-தன்னையும் நியமிக்கக் கடவதொரு வஸ்த்வந்தரம் உண்டோ என்னில் தனக்கு மேம்பட்டாரை யுடையன் அல்லன்.
ந தத் சமச்சாப்யதி கச்ச த்ருச்யதே
-(‘இறைவனுக்கு ஒப்பானவனும் மேம்பட்டவனும் காணப்படுகின்றிலன்,’) என்னுமா போலே இவரும் -‘இனன் இலன், மிகுநரை இலன்– என்று அருளிச் செய்கிறார்.-கால த்ரயத்திலும் ஒரு படியாலும் ஒப்பில்லாதவனாய் சமாப்யதிக ரஹிதனாய் பரிபூர்ண ஞான ஆனந்த ஸ்வரூபனாய் எனக்கு தாரகனுமாய் இருந்த
எம்பெருமானுடைய துயரறு சுடரடியைத் தொழுது எழு என் மனனே
என்கிறார் –

————–

இலனது உடையனிது என நினைவரியவன்
நிலனிடை விசும்பிடை யுருவினன் அருவினன்
புலனொடு புலன் அலன் ஒழிவிலன் பரந்த வந்
நலனுடை ஒருவனை நணுகினம் நாமே –
1-1-3-

முதற்பாட்டிலே ப்ரதான்யேந கல்யாண குண யோகத்தையும் -நித்ய விபூதி யோகத்தையும் –
விக்ரஹ வைலக்ஷண்யத்தையும் அனுபவித்து

அவற்றுக்கு ஆஸ்ரயமான திவ்யாத்மா ஸ்வரூபமும் சித் அசித் விலக்ஷணமுமாய் உபமான ரஹிதமாயும் என்று இரண்டாம் பாட்டாலே அருளிச் செய்து–ததீயத்வ ஆகாரத்தாலே
லீலா விபூதியும் உத்தேஸ்யம் ஆகா நின்றது முத்தனுக்கு
.-சரீரம் கிடக்கச் செய்தே- மயர்வற மதிநலம் அருளப் பெற்றவர் ஆகையாலே, ததீயத்வ ஆகாரமும் தோற்றி அனுபவிக்கிறார்.திரு விண்ணகர் சேர்ந்த பிரான், பெய்த காவு கண்டீர் பெருந் தேவுடை மூவுலகே’-திருவாய்மொழி -6-3-5- என்கிறபடியே, சர்வேஸ்வரனும் பெரிய பிராட்டியாருமாகக் கடாஷித்த போது உண்டாதலும், இல்லையாயின் இல்லையாதலுமாகி,
அவர்கட்கு லீலா ரஸ விஷயமாய் இருக்கிற லீலா விபூதியை அனுபவிக்கிறார்

இலனது உடையனிது என நினைவரியவன்-‘இலன் அது’ எனின்-பரிச்சின்ன விபூதிகனாம் -,‘உடையன் இது’ எனின்,இது ஒழிந்தது இல்லாமையால் அற்ப விபூதிகனாம் –-ஆகவே, இரண்டு வழியாலும் ஐசுவரியம் குறைந்து தோன்றும்;-என -இப்படி இருக்கும் என -என்றவாறு-ஆதலின்,‘இலன் அது உடையன் இது என அரியவன்’ என்கிறார்.

நினைவு அரியவன்-அநுப பன்னங்களைச் சேர்த்து நினைக்கலாம் இறே
( ‘உலகத்துப் பொருள்களுள் ஒன்று சேராதவற்றையும் சேர்த்து நினைத்தல் கூடும்-என்றவாறு )-ஓர் ஊசி நிற்கிறதாகவும், அதன் மேலே கலசம் இருக்கிறதாகவும், அதன் மேலே சால் இருக்கிறதாகவும்,-அதன் மேலே மகா மேரு இருக்கிறதாகவும், இப்படி,-அநுபபங்களைச் சேர்த்து – சேராத பொருள்களைச் சேர்த்து- நினைக்கலாம்;-அப்படியே தான் -மநோ ரதத்துக்கு விஷயமாய் இருக்குமோ என்னில்-மநோ ரத சமயத்திலும் பரிச்சேதிக்க அரியனாக இருக்கும் ஆதலின்,‘நினைவரியவன்’என்று அருளிச் செய்கிறார்.

ஆனால் இவன் ஐஸ்வர்யத்தைப் பேசும்படி தான் என்?’ என்னில்–நிலனிடை விசும்பிடை உருவினன் அருவினன்-பதிம் விஸ்வஸ்ய (‘உலகத்திற்குத்தலைவன்’ )என்னுமித்தனை.
நிலனிடை என்கிற இது பாதாளத்தளவும் நினைக்கிறது;-விசும்பிடை என்கிற இது பரமபதத்திற்கு -இவ்வருகு உள்ளவற்றை எல்லாம் நினைக்கிறது.
உருவினன் -உருக்களை – சரீரங்களை–யுடையான்.-அருவினன் -அருக்களை யுடையான்
இனன்-என்ன உடையவன் என்று காட்டுமோ என்னில்-காராயின காளநன் மேனியினன்’ என்றால் ‘மேனியினையுடையான் என்று காட்டுமா போலே –
ஆக, கீழ் மேல் உண்டான சேதன அசேதனங்களை யுடையான் -இத்தால் ஸமஸ்த கல்யாண குணாத்மகனாய் ஸூரி ஸேவ்யனாய் இருக்குமவன் சேதன அசேதன ஸ்வாமி என்றபடி

புலன் என்றது,-புலப்படும் பதார்த்தங்களை –ஓடுதத் ஸ்ருஷ்ட்வா -என்கிறபடி இவற்றை உண்டாக்கி, ஜீவத்வாரா அநுப்பிரவேசித்துப் பின்னர்-இவற்றிற்கு வஸ்துத்வ நாம பாக்த்வங்கள் யுண்டாகும்படி பண்ணி-சர்வ ஆத்ம அந்தராத்மாவாய் நிற்கும்படியைச் சொல்கிறது-புலன் அலன் –தத் தர்மா அல்லன் -தான் ஒட்டு அற்று நின்று விளங்கா நிற்பவன்–

ஒழிவிலன் பரந்த – ஒரு வஸ்துக்கள் ஒழியாமே இப்படி வியாபித்து இருக்கும் -என்னவுமாம் –அன்றியே -கால பரமாக்கி – எல்லாக் காலத்திலும் எல்லா வஸ்துக்களிலும் வியாபித்து இருக்கும் என்னவுமாம்-அந்நலனுடை ஒருவனை –கீழ் இரண்டு பாட்டுகளாலும் அருளிச் செய்த குண விசிஷ்ட ஸ்வரூபத்தை நினைத்து ‘அந்நலனுடை ஒருவனை’ என்கிறார்.நணுகினம் –மயர்வற மதி நலம் அருளினன்’ என்கிற ஞானத்தின் அளவே அன்றிக் கிட்டவும் பெற்றோம். நாமே – நாமேஇவ் வனுபவத்துக்குப் புறம்பான நாம்
அன்றியே-பகவத் கதா கந்த ரஹீதரான நாம் , (இறைவனுடைய பெயரின் வாசனையும் அறியாத நாம் ) நாமே இது, பொய்யோ?

ஆக இப் பாட்டில் முதல் கூற்றாலே வஸ்து பரிச்சேத ராஹித்யத்தைச் சொல்லி மேலே வ்யாப்தியால் தேச பரிச்சேத ராஹித்யத்தையும் சொல்லிற்று யாயிற்று –இப் பாட்டால் லீலா விபூதி யோகம் சொல்லுகிறது-ஆக இவ் விரண்டு பாட்டாலும் சத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்ம என்கிற ஸ்வரூப சோதக வாக்யார்த்தம் சொல்லப் பட்டது –

————-

நாம் அவன் இவன் உவன் அவள் இவள் உவள் எவள்
தாம் அவர் இவர் உவர் அது விது வுது வெது
வீமவை யிவை வுவை அவை நலம் தீங்கிவை
ஆமவை யாயவை ஆய நின்ற அவரே
 –1-1-4-

இனி, (இது முதல் வருகின்ற பாட்டுக்கள் எட்டனுள் )ஒரு மூன்று பாட்டாலே
இவ்வுலகில் ஸ்வரூப ஸ்திதி ப்ரவ்ருத்தி நிவ்ருத்திகள் -பகவத் அதீநமாய் இருக்கும் என்றும் என்று கூறி,
அவற்றிற்குமேல் ஒரு பாட்டால்,  (7) ஜகத்துக்கும் ஈஸ்வரனுக்கும் சம்பந்தம் -சரீராத்மா பாவம் என்றும்
அவற்றிற்கு மேல் ஒரு பாட்டால்,  (8)குத்ருஷ்டிகளை நிரசித்து
அவற்றிற்கு மேல் ஒரு பாட்டால்,  (9)சூன்ய வாதியை நிரசித்து
மேல் ஒரு பாட்டால் (10) வியாப்தி சௌகர்யத்தைக் கூறி,
பலத்தைச் சொல்லித் தலைக் கட்டுகிறார் –

இதில் விவித நிர்தேசங்களாலே நிரதிசயமான ஸமஸ்த வஸ்துக்களினுடைய ஸ்வரூபம் பகவத் ஆதீனம் என்று சொல்லுகிறது –

—————

அவரவர் தமதமது அறிவறி வகைவகை
அவரவர் இறையவர் எனவடி யடைவார்கள்
அவரவர் இறையவர் குறைவிலர் இறையவர்
அவரவர் விதி வழி யடைய நின்றனரே 
–1-1-5-

எம்பெருமான் சர்வ தேவ அந்தராத்ம தயா சர்வ கர்ம சமாராதனாய் சகல பல ப்ரதனாய் இருக்கையாலே ஜகத் ரக்ஷணமும் தத் அதீனம் என்கிறது —ரக்ஷண ரூபையான ஸ்திதி தத் அதீனை என்று வையதி கரண்யத்தாலே அருளிச் செய்கிறார் –சர்வேஸ்வரன் இராமடம் ஊட்டுவாரைப்போலே முகம் தோற்றாதே, அந்தராத்துமாவாய் நின்று நடத்துகையாலே,
அவர்களும் ஆஸ்ரயித்தார்களாய் இவர்களும் பலபிரதான சக்தர்களாயும் ஆகின்றார்கள் அத்தனை -;இறைவனை ஒழிந்த அன்று அவர்கள் ஆஸ்ரயிக்கவும் ; இவர்கள் பல பிரதானம் பண்ணவும் மாட்டார்கள் என்கிறார் –
‘அய்யன் பாழியில் ஆனை போர்க்கு உரித்தாம் அன்றாயிற்று அவ்வத் தேவதா மாத்ரங்களுக்கு பல பிரதான சக்தி உள்ளதாவது,’ என்றபடி.

————-

நின்றனர் இருந்தனர் கிடந்தனர் திரிந்தனர்
நின்றிலர் இருந்திலர் கிடந்திலர் திரிந்திலர்
என்றும் ஓர் இயல்வினர் என நிலனைவரியவர்
என்றும் ஓர் இயல்வொடு நின்ற எம் திடரே
 –1-1-6-

நின்றனர்.-இத்யாதி--ப்ரவ்ருத்தி நிவ்ருத்திகளுக்கு வாசகமான இச் சப்தம் அவற்றிற்கு ஆஸ்ரயமான சேதனனைக் காட்டி, அவன் தனக்கு ஈஸ்வரனை ஒழியப் ப்ரக்ருத்தி ஸ்திதி யாதல் உபலம்பமாதல் இல்லாமையாலே, அவன் அளவுங் காட்டுகின்றன.-பாபாதிகளில் ப்ரவ்ருத்தருடைய நிவ்ருத்திக்கும் ஈஸ்வர அபேக்ஷை யுண்டாகையாலே சர்வ ப்ரவ்ருத்தி நிவ்ருத்திகளுக்கும் ஈஸ்வர அபேக்ஷை யுண்டு – ஆக விசிஷ்ட வஸ்துவையே காட்டுகிறது –ஸூதிட- சிறந்த திடமான -பிரமாணத்தாற் சொல்லப் பட்டவரான நிலை தம்முடையஇலாபமாகத் தோற்றுகையால் ‘எம் திடர்’ என்கிறார்-

————

திட விசும்பு எரி அளி நீர் நிலம் இவை மிசை
படர் பொருள் முழுவதும் யாயவை யவை தொறும்
உடன் மிசை யுயிர் எனக் கரந்து எங்கும் பரந்துளன்
சுடர்மிகு சுருதியுள் இவை யுண்ட சுரனே –1-1-7-

இத்தால் ஸ்ருஷ்ட்டி சம்ஹாரங்களும் அநுபிரவேச நிபந்தனமான அந்தராத்மத்வமும் தத் அதீனம் என்றதாயிற்று –ஸ்ருதி இதிஹாச புராண உப ப்ரும்ஹிதமாய் -அபவ்ருஷேயம் ஆகையால் நிர்தோஷமாய் அபாதித ப்ராமாண்ய ரூப தேஜ பிரசுரமாய் இருந்த ஸ்ருதிகளிலே உளன் என்கிறார் –ஆதலால் லோகாயத மாயாவாத பாஸ்கரீய யாதவ ப்ரகாசாதி வேத விருத்த சமயங்கள் எல்லாம் நிரஸ்தமாயின -தாம் அனுசந்தித்த அர்த்தத்துக்கு ஸ்ருதியை சாஷியாகச் சொல்லுகையாலே ஸ்ருதியில் சொல்லுகிற ஸ்ரீ யபதித்வமும் நாராயண சப்த வாச்யத்வமும் அனுசந்தித்தாராக வேணும்

—————-

சுரர் அறிவரு நிலை விண் முதல் முழுவதும்
வரன் முதலாயவை முழுதுண்ட பரபரன்
புரம் ஒரு மூன்று எரித்து அமரர்க்கும் அறிவியந்து
அரன் அயன் என வுலகு அழித்து அமைத்து உளனே 
–1-1-8-

விண்’என்ற சொல்லால் மூலப்பிரக்ருதியை அருளிச் செய்கிறார்.-வரன் முதல் ஆய்
காரண நிலையிலும் ஸூஷ்ம ரூபேண வியாபித்துத் தன் மேலே ஏறிட்டுக் கொண்டு நோக்கியும்,
காரியமாம் அளவில்  வந்தவாறே -அவ்யக்தம் மகான் அகங்காரம் என்கிற இவற்றிலும் ஸூஷ்ம ரூபேண வியாபித்தும் ,
காரண பரம்பரையோடு காரிய பரம்பரையோடு வாசியறத் தானே நின்று நடத்திக்கொண்டு போருகையாலே  வரிஷ்டமான காரணமாய் என்கிறது

அவை முழுது உண்ட –சம்ஹாரத்திலும் வந்தால் அவற்றை முழுவதும் சம்ஹரிக்கிறவனும் அவனே-ஏகதேச ஸ்ருஷ்டியும் ஏகதேச சம்ஹாரமுமே ப்ரஹ்மாதிகளுக்கு உள்ளவை;
அவைதாமும், அவர்களுக்கு அந்தராத்துமாவாக நின்று படைத்தல் அழித்தல்களைச் செய்கிறான் சர்வேஸ்வரன்.-குத்ருஷ்டிகள் நிரசிக்கப் படுகிறார்கள் –

——————-

உளன் எனில் உளன் அவன் உருவம் இவ்வுருவுகள்
உளன் அலன் எனில் அவன் அருவம் இவ்வருவுகள்
உளன் என இலன் என விவை குணமுடைமையில்
உளன் இரு தகைமையோடு ஒழிவிலன் பரந்தே 
–1-1-9-

உளன் என இலன் என இவை குணமுடைமையில்-உளன் என்கிற இத்தையும் இலன் என்கிற இத்தையும் இவை இரண்டையும் குணமாக யுடையவன் ஆகையால்- இவை இரண்டும் இரண்டு தர்மம் ஆயிற்று – உளன் இரு தகைமையொடு உளன் என்கிற சொல்லாலும் இலன் என்கிற சொல்லாலும் சொன்ன இரண்டு ஸ்வபாவத்தாலும் உளனானான்-ஈஸ்வரன் உளன் என்னில் அஸ்தித்வ தர்ம விசிஷ்டனாய் இருக்கும் என்று சொல்லிற்றாய் வரும் –ஈஸ்வரன் உளன் அலன் என்னில் நாஸ்தித்வ தர்ம விசிஷ்டனாய் இருக்கும் என்று சொல்லிற்றாய் வரும் –சர்வ ஸூந்யவாதிகளான மாத்யமிக புத்தரை நிராகரிக்கிறார்சூன்ய வாதியை ஹேது சொல்வதற்கு முன்பே பிரதிஜ்ஞா மாத்ரத்தில் சவிபூதிகனான சர்வேஸ்வரனுடைய உண்மையை சாதிக்கிறார் –-ஒழிவிலன் பரந்தே-நான் உளன் என்கிற சொல்லாலே சாதித்தேன் -நீ இலன் என்கிற சொல்லாலே சாதித்தாய் –ஆக இருவருமாக உண்மையை சாதித்தோம்-இனி அவன் உளனானால் உளனாமாம் போலே ச விபூதிகனாயே உளனாக அமையாதா என்கிறார் –

ஸர்வதா அநுப பத்தேச்ச-என்ற ஸூத்ரத்தை விவஷித்து –அதிகார அநு பாயத்வாத் ந வாதே ஸூன்ய வாதிந-ஸர்வதா சதுபாயா நாம் வாத மார்க்க ப்ரவர்த்ததே -என்கிற பாட்ட வசனம் அனுசந்தேயம்-நிஷேதிக்கிற ப்ரமாணத்தையும் ஸூன்யம் என்கையாலே வாதம் தந்தன்னில் உனக்கு அதிகாரம் இல்லை என்று ஸ்ரீ ஆளவந்தார் அருளிச் செய்வர்-

—————

பரந்த தண் பரவையுள் நீர் தொறும் பரந்துளன்
பரந்த வண்டமிதென நில விசும்பு ஒழிவறக்
கரந்த சிலிடம் தொறும் இடம் திகழ் பொருள் தொறும்
கரந்து எங்கும் பரந்துளன் இவையுண்ட கரனே –
1-1-10-

எங்கும் பரந்து உளன் – சேதனன் சரீரத்தில் உடலில் வியாபிக்கும் பொழுது அதில் ஏக தேசத்தில் நின்று ஞானத்தாலே எங்கும் வியாபிக்கக் கடவனாய் இருக்கும்
இவன் அவ்வாறு அன்றித் தன் சொரூபத்தாலே எங்கும் நிறைந்திருப்பன்.கரன் –
ஸூதிட பிரமாண சித்தன்– திடமிக்க பிரமாணங்களால் உறுதி செய்யப்பட்டவன்-ஸூ த்ருட பிராமண சித்தனுமாய் இருந்த எம்பெருமானுடைய துயரறு சுடரடி தொழுது எழு என் மனனே -என்கிறார் –.-கரந்த வென்றும் ஸூஷ்மமாய்-சில் என்று ஸூஷ்மமாய் -இடம் என்று சரீரமாய் அத்யல்ப சரீரம் தோறும் என்றபடி –கீழ்ச் சொன்ன பகவத் வ்யாப்தியினுடைய சௌகர்யத்தை சொல்லுகிறது
எங்கும் பரந்துளன் -பஹிர் வியாப்தியும் சொல்லுகிறது –
நித்யம் விபும் -ஏஷோர் அணுராத்மா-என்றும் இரண்டும் ஸ்ருதி சொல்லிற்றே-

—————-

வீடுமின் முற்றவும் வீடு செய்து உம்முயிர்
வீடுடை யானிடை வீடு செய்ம்மினே
 –1-2-1-

சம்சார வெப்பம் எல்லார்க்கும் ஒத்து இருக்கையாலே யாவரேனும் ஒருவர்க்குச் சுவை பிறக்காதா என்று நினைந்து பொதுவிலே எல்லார்க்கும் உபதேசிக்கிறார்.

வீடு செய்து-‘மேல் ‘வீடுமின் முற்றவும்’ என்றவர், மீண்டும் ‘வீடு செய்து’ என்னும் இதற்குக் கருத்து என்?’ என்னில், அரசகுமாரன் அழுக்கு சிறையிலே கிடந்தால், முடி சூடி அரசை நடத்துவதிலும் சிறைவிடுகைதானே பயனாக இருக்குமாறு போன்று, மேல் ஒரு பேறு பெறுவதிலும் இவற்றை விட்டு நிற்கும் நிலைதானே பேறாக இருக்கையாலே விடுகையாகிற பேற்றைப் பெற்று என்றபடி

உம் உயிர் வீடு உடையானிடை
இதுக்கு பல படியாக அருளிச் செய்வர்
1-யஸ்ய ஆத்மா சரீரம் யஸ்ய ப்ருத்வீ சரீரம் -(‘எவனுக்கு உயிர்கள் எல்லாம் சரீரமோ, எவனுக்கு உலகம் சரீரமோ’ ) என்கிறபடியே, உம் உயிரையும் அதற்கு வீடாகவுள்ள சரீரத்தையும் உடையவனிடத்தில் – என்னுதல்
2-அன்றிக்கே இதற்கு, ‘உம் உயிரைச் சரீரமாக -வீடாக -உடையவனிடத்தில்’-என்னுதல்
3-அன்றிக்கே ‘உம் உயிரை விடுமிடத்தில் உடையவனிடத்திலே’ விடுமின்-சமர்ப்பியுங்கோள் என்றுமாம்
வீடுடையான்-4-பரமபத நிலையான பக்கலிலே என்னுதல்

உம் உயிர்
அழிந்து போகின்ற சரீரத்துக்கு நன்மை பார்க்கச் சொல்லுகின்றேனோ?
நித்தியமான ஆத்துமாவுக்கு அன்றோ நான் நன்மை பார்க்கச் சொல்லுகிறேன்?’  என்றும்,
‘அது தானும் என் உயிர்க்கோ? உங்களுடைய உயிர்க்கு அன்றோ?’ உம் உயிர்’ என்றும் அருளிச் செய்கிறார்.
உடையானிடை-பொதுவில் உடையான் என்கிறார்  என்கிறார்;– சுவை பிறந்து, ‘அவன் யார்?’ என்றால்-வண்புகழ் நாரணன்’- என்கைக்காக.-நீங்களும் உடையவன் பக்கல் ‘வீடு செய்மின்’என்றபடி வீடு-சமர்ப்பிக்கை; அதாகிறது, இசைகை.

இத் திருவாய் மொழி பிரமேயம் -பகவத் ஆஸ்ரயணம் -சகல இதர பரித்யாக பூர்வகமாக
பகவத் விஷயமான ஆத்ம சமர்ப்பணம் பிரமேயம்-முற்றவும் வீடுமின் -வீடு செய்து உம்முயிர் வீடுடை யானிடை வீடு செய்ம்மினே -என்று அன்வயம் –

——-

மின்னின் நிலையில மன்னுயிர் ஆக்கைகள்
என்னும் இடத்து இறை யுன்னுமின் நீரே –
1-2-2-

-இதர விஷயங்களில் போக்யதா புத்தி -பண்ணிப் போருகிற இவனுக்கு
‘அவை அற்பம், நிலையற்றவை’ என்று- தோஷ தர்சனம் – குற்றங்களைக் காணும் படி செய்யவே விடத் தக்கனவாக இருக்குமாதலின், ‘மின்னின் நிலையில’ என்கிறார்.

மன் உயிர் ஆக்கைகள் –உயிர் -மன்னுகிற -பொருந்தியிருக்கின்ற- சரீரங்கள் என்னுதல்;
நித்தியமான ஆத்ம வஸ்து பரிக்ரஹிக்கிற தேகங்கள் —
நிலையுள்ள உயிர் மேற்கொள்ளுகின்ற சரீரங்கள் -என்னுதல்,-அன்றியே – உயிர்-ஏக வசனத்தை – – தொகுதி ஒருமையாகக் கொண்டு- ஜீவ அனந்தயத்துக்கும் உப லக்ஷணமாய் – பல ஆத்மாக்கள் பரிக்ரஹிக்கிற சரீரங்கள் என்றுமாம் 

இறை உன்னுமின் –இதில் அற்பத்தை ஆராயுங்கோள்.-நீரே –இதற்கு ஒரு பிரமாண-அபேக்ஷையும் – விருப்பமும் வேண்டுவது இல்லை.-சதாசார்ய உபதேசமும் வேண்டா என்றபடி.-இவ்வாத்மா சம்பந்தியான சரீராதி பிராகிருத விஷயங்களினுடைய
அஸ்திரத்வாதி தோஷங்களை நீங்களே ஆராய்ந்து உணருங்கோள் -உணரவே எளிதாக விடலாம் -என்கிறார் –

————

நீர் நுமது என்றிவை வேர் முதல் மாய்த்து இறை
சேர் மின் உயிர்க்கு அதன் நேர் நிறையில்லே–
1-2-3-

த்யாஜ்ய அம்சத்தை -விடுந்தன்மையினைச் சுருங்க அருளிச் செய்கிறார்;
சம்சாரத்துக்கு பீஜம் – வித்து இன்னது என்றும், அதற்கு பேஷஜம் – மருந்து இன்னது என்றும் அருளிச் செய்கிறார்

நீர் நுமது – அநர்த்த கரமான -கேட்டினைச் செய்கிற -அகங்கார மமகாரங்கள் -‘யான்,’ ‘எனது’ என்னும் செருக்குகள்.-ஈண்டு அதிகாரம் பிறர்க்கு உபதேசிக்கும் முன்னிலை இடமாதலின், ‘யான், எனது’ என்னும் தன்மைப் பெயர்களை நீர் நுமது’ என முன்னிலையாக அருளிச் செய்கிறார்.
அன்றிக்கே – செருக்கினைப் புலப்படுத்தும் அச் சொற்களைத் தாம் தம் திருவாயால் கூறுதற்கு, அஞ்சி ‘நீர், நுமது’ என்கிறார் எனலுமாம்; ‘கூறின், நாக்கு வேம்,’ என்பது கருத்து.

இறை சேர்மின் – அப்ராப்த விஷயங்களை –அடையத் தக்கன அல்லாதவற்றை- நீக்கி வகுத்த சேஷியானவனைப் பற்றப் பாருங்கோள்.-சேர்மின் சம்சாரி இறைவனை அடைதல், கெடுமரக்கலம் கரை சேர்ந்தாற்போன்று இருக்கையாலே ‘சேர்மின்’ என்கிறார்.

உயிர்க்கு அதன் நேர் நிறை இல் – இத்தோடு ஒக்கச் சீரியது இல்லை என்னுதல்;
நேர் என்று ஒப்பாய், நிறை என்று மிகுதியாய், உயிர்க்கு இத்தோடு ஒத்ததும் மிக்கதும் இல்லை என்னுதல்.
ஞான ஆனந்தங்களை -லக்ஷணமான ஆத்துமாவிற்கு, முதலில் ஒளஷதம் போலே சம்சாரிகளுக்கு பகவத் சம்பந்தம் – ஹிதமுமாய்– உதர்க்கத்தில் – அடுத்த கணத்தில் பிரியமுமாய் இருக்கும் இத்தோடு ஒக்கும் சீரியது இல்லை என்றபடி.

—————-

இல்லதும் உள்ளதும் அல்லது அவனுரு
எல்லையில் அந்நலம் புல்கு பற்று அற்றே
 –1-2-4-

பற்றப்படுகின்ற விஷயத்தினுடைய போக்யதையை – இனிமையினை அருளிச்செய்கிறார்.

துச்சத்வம்–ப்ரதீதி மாத்திரம் பாத யோக்கியமான மித்யத்வம் -பற்றி – -‘இல்லது’ என்கிறார் அல்லர்;விநாசித்வத்தைப் பற்றி – தோன்றி மறையும் மின்னலைப் போன்று, -அழியுந்தன்மையது ஆதலின், உடலை ‘இல்லது’என்கிறார்.உள்ளதும் –அழிந்து போகும் பொருளினும் -வியாவ்ருத்தியை -வேறுபட்டுள்ள தன்மையினை நோக்கி உயிரை ‘உள்ளது’என்கிறார்.இல்லது உள்ளது என்பனவற்றிற்கு, ‘ஆத்மாவுக்கு இருப்பிடமான சரீரத்தின் படியும் –அத்தை இருப்பிடமாக யுடைய ஆத்மாவின் படியும் அல்ல -என்றுமாம்

எல்லை இல் அந்நலம் –
‘ஆனந்த மய
:’ என்றும்,
‘உணர்முழுநலம்’ என்றும்,
‘ஒடியா இன்பப் பெருமையோன்’ என்றும்,
‘சுடர்ஞான இன்பம்’ என்றும்,
ஸமஸ்த கல்யாண குணாத் மகோ அசவ் (‘எல்லா நற்குணங்களையும் இயற்கையாகவுடையவன் இறைவன்’ )என்றும்
கூறலாம்படி இருக்கும்.

புல்கு – குணஞானமுடையவனுக்கு, -குணாதிக விஷய- குணங்களால் மேம்பட்ட இறைவனுடைய அனுபவம் – அங்கநாபரிஷ்வங்கம் போன்று போக ரூபமாய் இருக்குமாதலின், ‘புல்கு’ என்கிறார்.

பற்று அற்றே –அது செய்யுமிடத்தில் இருகரையன் ஆகையன்றிக்கே, புறம்புள்ள பற்றுகளை அற்றே புல்கு.-இறைவன் ‘பற்றிலார் பற்ற நின்ற’வனாதலின், பற்று அற்றே புல்க வேண்டும்.

சர்வ சங்க பரித்யாக பூர்வகமாக ஸ்வேதர சமஸ்து வஸ்து விலக்ஷண ஞான ஆனந்த ஸ்வரூப ஸமஸ்த கல்யாண குணாத்மகனான பகவானுடைய ஆஸ்ரயணம் இப்பாட்டு பிரமேயம் 

ஸ்ரீ பன்னீராயிரப்படியில் மட்டும் உள்ள விலக்ஷண ஸ்ரீ ஸூக்திகள்-கீழ் மூன்று பாட்டிலும் பன்மையாலே உபதேசித்து இப்பாட்டுத் தொடங்கி ஒருமையாலே உபதேசிக்கிறது-த்யாஜ்யங்கள் பரஸ்பர விருத்தங்களாய்க் கொண்டு பலவாதலாலும் சத்வாதி குண பேதத்தாலே ருஸ்யாதி விசிஷ்டரான அதிகாரிகள் ஒன்றோடு ஓன்று ஒவ்வாத புத்தி பேதத்தை யுடையராகையாலும் இதர தியாகத்தில் பன்மையாலே உபதேசிக்க வேணும் –
பகவத் பஜனத்தில் புத்தி ஐக்யத்தாலும் புருஷார்த்த ஐக்யத்தாலும் அதிகாரி ஐக்கியம் உண்டாகையாலே ஒருமையாலே உபதேசிக்கலாம் –

————–

அற்றது பற்று எனில் உற்றது வீடுயிர்
செற்றது மன்னுறில் அற்றிறை பற்றே
 –1-2-5-

இறைவனைப் பற்றுமிடத்து வருகின்ற -அந்தராய பாரிஹாரத்தையும் -இடையூற்றை நீக்குந் தன்மையினை –அருளிச் செய்கிறார்.(இங்கு இடையூறு’ என்றது, கைவல்ய அனுபவத்தினை-உற்றது வீடுயிர்-உயிர் வீடு உற்றது – ஆத்துமா மோக்ஷத்தை – பிராபித்தது- அடைந்தது;-அது நித்தியமாய் ஞான ஆனந்தங்களாய் இருக்கையாலே ‘இது தன்னையே அனுபவிக்க அமையாதோ! என்று தன் பக்கலிலே கால் தாழப் பண்ணும்;
அங்கு அனுபவிக்கும் அவ் வின்பத்தினையே இங்கு ‘வீடு’ என்கிறார்.அது செற்று –
அதனை முகஞ்சிதறப் புடைத்து.-அற்ற இறை பற்று – ஆஸ்ரயண- அடைகின்ற – காலத்திலே அவனுக்கு என்று அத்யவசித்து – அறுதி செய்து, சேஷியான அவனைப் பற்றப் பார்.
அன்றிக்கே
விபக்தியை மாறாடி-அவனைப் பற்றி இத்தை அறப் பார் -என்னுதல்–‘மாற்பால் மனஞ்சுழிப்ப மங்கையர் தோள் கைவிட்டு’ என்னுமா போலே-

இதர சங்க தியாக பூர்வகமாக ஆத்ம அனுபவத்தை இச்சியாதே சர்வ சேஷியை
ஆஸ்ரயிக்க வேணும்-என்றது இப்பாட்டு பிரமேயம் –

—————–

பற்றிலன் யீசனும் முற்றவும் நின்றனன்
பற்றிலையாய் அவன் முற்றில் அடங்கே –
1-2-6-

ஈஸ்வரத்வம் வந்தேறி என்னும் படி சங்க ஸ்வ பாவன் காண்-என்கிறார் –அவன்-சங்க ஸ்வ பாவன்- பற்றுக்கு இருப்பிடமானவன்-பற்றிலன் –பற்று -உண்டு சங்கம் -அத்தை வாஸஸ் ஸ்தானமாக யுடையவன் – அன்பை உறைவிடம் ஆக உடையவன்.
பற்றிலன் என்பது – பற்றிலான் என்பதன் விகாரம்;இன்னான் இங்கு உண்டோ என்ன இங்கு இல்லை ‘அகத்திலான்’ என்பது போன்று;-அகத்திலான் – அகத்திலே இருப்பவன்.

முற்றவும் நின்றனன் –ஆஸ்ரயணித்வே – அடையும் திறத்தில்-சமனாய் – ஒத்தவனாய் இருந்தான். –இத்தலை இருந்தபடி இருக்கத் தான் எல்லார்க்கும் ஒத்திருக்கை.–பற்றிலையாய் – நீயும் பற்றிலையாய் -நீயும் பற்றினையுடையையாய்-சங்கத்தை யுடையையாய்-அவன் முற்றில் அடங்கு – அஹம் சர்வம் கரிஷ்யாமி (‘நான் எல்லா அடிமைகளும் செய்வேன்,’) என்கிறபடியே, அவனுடைய-எல்லா கைங்கர்யத்திலும் அன்வயி – எல்லாத் தொண்டுகளிலும் சேர்வாய்.

இப் பாசுரத்திற்குப் பட்டர் அருளிச்செய்யும்படி:
பற்றிலன் ஈசனும் –பரம பதத்தில் எழுந்தருளி இருக்கின்றவனும் அவர்கள் பக்கல் பற்றுடையவன் அல்லன். ‘முற்றவும் நின்றனன் –அவர்கள் எல்லாராலும் வரும் ஏற்றமும் இன்று வந்து ஆஸ்ரயிக்கிற – அடைகிற இவனாலே ஆம்படி நின்றான் –முற்றவும் நின்றனன்
நாமே தனக்கு தாரகாதிகளாக நினைத்து இருக்கும்-;பற்றிலையாய் –
விட ஒண்ணாதாரை நீ ஒரு தலையாக விட்டான் அவன்; அவன் ஒரு தலையானால் விடலாமவற்றை விடத்தட்டு என் உனக்கு?அவன் முற்றில் அடங்கு –அவனையே எல்லாமாகப் பற்றப் பார்:

—————-

அடங்கு எழில் சம்பத்து அடங்கக் கண்டு ஈசன்
அடங்கு எழில் அஃது என்று அடங்குக உள்ளே 
–1-2-7-

சம்பந்த ஞானமே வேண்டுவது என்கிறார்.ததீயம் – ‘அவனுடைய உடைமை இவையெல்லாம்,’ என்னும் நினைவே வேண்டுவது;-தானும் அதற்குள்ளே ஒருவனாகச் சேரலாம்-அந்வயிக்கலாம் – என்கிறார்-எம்பெருமானோடு உள்ள சம்பந்தத்தை அனுசந்திக்கவே தன் சிறுமையால் வெருவாதே தரித்து ஆஸ்ரயிக்கலாம் என்கிறார்-அந்த சம்பத் எல்லாம் என் ஸ்வாமியினுடைய சம்பத் என்று அனுசந்திக்கவே கூசாதே சென்று அணுகலாம் –அப்படி அனுசந்தித்துக் கொண்டு கூசாதே போய் அடிமை செய்யுங்கோள் என்கிறார் –.சம்பந்த ஞானத்தைப் பிறப்பித்தல் யாருடைய தொழில்?’ எனின், அது இருவரையுஞ் சேர்ப்பிக்கின்ற ஆசாரியனுடைய தொழில்.-கடகருடைய க்ருத்யம்-இங்கே பட்டர் பிதா புத்ரர்கள் இருவரும் படவோடின கதையை அருளிச் செய்வர் –பரகத அதிசய ஆதானேச்சயா உபாதேயத்வமேவ யஸ்ய ஸ்வரூபயா ச சேஷி பர சேஷி –

————–

உள்ளம் உரை செயல் உள்ள விம்மூன்றையும்
உள்ளிக் கெடுத்து இறை உள்ளில் ஒடுங்கே 
–1-2-8-

அவன் தனக்காகத் தந்த கரணங்களை அவனுக்கு ஆக்குகையே வணங்குதலாம் என்று-
பஜன பிரகாரத்தை – வணங்கும் முறையினை அருளிச் செய்கிறார்.
-இப் பாட்டில் பஜிக்கைக்கு புறம்பு ஒரு உபகரணம் சம்பாதிக்க வேண்டா-முன்னமே யுண்டானவற்றின் வியபிசாரத்தை தவிர்த்து வகுத்த விஷயத்திலே சமர்ப்பியுங்கோள்-என்கிறார்-

—————–

ஒடுங்க அவன் கண் ஓடுங்கலும் எல்லாம்
விடும் பின்னும் ஆக்கை விடும் பொழுது எண்ணே
–1-2-9-

நீங்கள் அவனைக் கிட்டவே விரோதிகள் அடைய விட்டுப் போம்,’ என்கிறார் இத் திருப் பாசுரத்தில்.எல்லாம் விடும் – அவித்யா -அறிவின்மை, கருமம், வாசனை, ருசி இவையெல்லாம் அடியோடே விட்டுக் கழியும்-ஆத்துமாவின் ஸ்வரூபத்துக்குத் தக்கவற்றைச் செய்யவே,-ஸ்வரூப அறுரூபமானவற்றைச் செய்யவே –ஸ்வரூபத்துக்கு விரோதிகளாக உள்ளவை எல்லாம் விட்டுப்போகும் என்றபடி.-பின்னும் ஆக்கை விடும் பொழுது எண்-இன்பத்தில் இச்சையுடைய ஒரு பெண் தன் உடம்பில் அழுக்கினைப் போக்கித் தன் கணவனோடு இன்பம் நுகர்தற்கு உரிய காலத்தை எதிர் நோக்கிக்கொண்டு இருத்தல் போன்று, இவனும் பேற்றுக்கு உறுப்பாக உடலை விட்டு உயிர் நீக்குங் காலத்தினை எதிர்பார்த்திருக்கக் கடவன்.-பஜனத்துக்கு அங்கம் என்று நினைத்து -பின்னையும் அந்திம தசையில் நினை என்று அந்திம ஸ்ம்ருதியை விதிக்கிறது என்பாரும் உளர் –

ஓர் அயனத்தின் அன்று ஸ்ரீ குன்றத்துச்சீயர் எம்பெருமானார் ஸ்ரீ பாதத்திலே புக, அவருடைய சிறுபேரைச் சொல்லி, ‘சிங்கப் பிரான்! இன்று அயநங்காண்,’ என்ன, திருவுள்ளத்தில் ஓடுகிறது இன்னது என்று அறியாமையாலே அவர் பேசாது இருக்க,
உயிர் உடலை விட்டு நீங்கும். அந்திம காலத்தில் பலம் கண்ணழிவற்ற பின்பு நடுவு விரோதியாய்ச் செல்லுகிற நாளில் ஓரண்டு கழியப் பெற்ற இது உனக்கு ஒன்றாய் இருந்தது இல்லையோ!’ என்று அருளிச் செய்தார்.

அன்றியே
ஸ்ரீ எம்பார் ஒரு உருவில் , ‘பின்னும் ஆக்கை விடும்பொழுது எண்ணே,’ என்பதற்கு
‘இங்ஙனே காரணமானது கழிந்த போதே காரியமும் தன்னடையே கழிந்ததே அன்றோ!
பலமும் இனிக் கைப் புகுந்ததே அன்றோ! இனி, சிந்தா விஷயம் உண்டோ?’ என்று அருளிச் செய்தார்.

—————-

எண் பெருக்கு அந் நலத்து ஒண் பொருள் ஈறில
வண் புகழ் நாரணன் திண் கழல் சேரே
 –1-2-10-

இத் திருப் பாசுரத்தால் ஸ்ரீ திரு மந்திரத்தை அர்த்தத்தோடு அருளிச் செய்கிறார்.
ஸ்ரீ ஆழ்வான் இப்பாட்டளவும் வரப் பணித்து இப் பாட்டு இது, இத் திருப்பாசுரம் திருமந்திரத்தின் பொருள் என்பதற்கும்
மந்திரத்தின் பொருள் ஆசாரியன் பால் கேட்டல் வேண்டும் என்பதற்கும் ஐதிஹ்யம் ஆம்.
ஸ்ரீ ஆழ்வாருடைய முந்தின வார்த்தை,கௌரவத்திலே நோக்கு; பிந்தின வார்த்தை, இனிமையிலே நோக்கு.
வந்தவாறே ‘இத்தையும் உங்கள் ஆசிரியர் பக்கலிலே கேட்டுக் கொள்ளுங்கோள்,’ என்ன,
ஸ்ரீ பட்டரும் ஸ்ரீ சீராமப் பிள்ளையும் எழுந்து போகப் புக்கவாறே, அவர்களை அழைத்து,
‘இன்ன போது இன்னார் இருப்பார்; இன்னார் போவார் என்று தெரியாது; இருந்து கேளுங்கோள்,’ என்று
ஸ்ரீ திரு மந்திரத்தை உபதேசித்து, இப்பாட்டை நிர்வகித்து
‘இப்பாட்டை இதற்கு அர்த்தமாக நினைத்திருங்கோள்,’ என்று பணித்தார்.

எண் பெருக்கு அந் நலத்து, ஒண் பொருள்-வஸ்து தான் ஸ்வஸ்மை ஸ்வயம் ப்ரகாசகமுமாய்
தர்ம பூத ஞானமானதுவும் விஷயங்களைக் கிரஹித்து தன்னையும் அறிவிக்கக் கடவதாய் இருக்கும் அத்தைப் பற்றிச் சொல்கிறது –இதனாலே இரண்டு அடை மொழிகளைக் கொடுத்து –நலம் -என்றும் ஒண் என்றும் அருளிச் செய்கிறார்-ஈறு இலவான ஒண் பொருளையும், ஈறு இலவான வண் புகழையும் உடையன் ஆகையாயிற்று
‘நாராயணன்’ யாகையாகிறது
 –திண் கழல் சேரே — இப்படிப்பட்ட சம்பந்த ஜ்ஞானம் முன்னாகப் பற்றினாரை ஒருகாலும் விடாத திருவடிகளை ஆஸ்ரயி ––பஜனத்துக்கு ஆலம்பன மந்த்ரம் திரு அஷ்டாக்ஷரம் என்றது இப் பாட்டு பிரமேயம்

————–

சேரத் தடத் தென் குருகூர்ச் சடகோபன் சொல்
சீர்த் தொடை யாயிரத்து ஒர்த்த விப்பத்தே
 –1-2-11-

உபதேசம் பலரைக் குறித்து-உபக்ரமிகையாலே – தொடங்குகையால், ‘சேர்’ என்பது போன்ற-ஏக வசனங்கள் – ஒருமை இடங்களை எல்லாம்-ஜாதி அபிப்ராயம் – கூட்டத்தைக் குறித்த ஒருமையாகக் கொள்க.

———–

பத்துடை யடியவர்க்கு எளியவன் பிறர்களுக்கு அரிய
வித்தகன் மலர்மகள் விரும்பும் நம் அரும் பெறல் அடிகள்
மத்துறு கடை வெண்ணெய் களவினில் உரவிடை யாப்புண்டு
எத்திறம் உரலினோடு இணைந்து இருந்து ஏங்கிய எளிவே
 –1-3-1-

பத்து-பக்தி. ‘பத்து என்பது பத்தியைக் காட்டுமோ?’ என்னில்,
‘எட்டினோடு இரண்டு எனுங் கயிற்றினால் மனந்தனைக் கட்டி’ என்னக் கடவது இறே !
ஆகையாலே, பத்து என்று பத்தியைச் சொல்லுகிறதாகும்.
அது தன்னிலும் பரபத்தியை அன்று இங்குச் சொல்லுகிறது; –
பக்தி உபக்ரம மாத்ரத்தையே -பத்தியின் தொடக்கத்தைச் சொல்லுகிறது.

உடை-இந்த அப்ரதிஷேத அத்வேஷ – விலக்காமை பகையாமை மாத்திரத்தையே- கனத்த உடைமையாகச் சொல்லுகிறார்.-இவ் வுலகில் இறைவனிடத்தில் பத்தியினைச் செலுத்துகின்றவர்களை‘விண்ணுளாரிலும் சீரியர்’ என்கிறபடியே, நித்திய ஸூரிகளைக் காட்டிலும் கனக்க நினைத்திருக்கும் பகவானுடைய அபிப்பிராயத்தாலே சொல்லுகிறார்.

எளியவன் – அவர்கள் பாவத்தைப் போக்குதல், புண்ணியத்தைக் கொடுத்தல், தன்னைக் கிட்டலாம்படி இருத்தல் செய்தல் அன்றிக்கே, அவர்கள் இஷ்ட விநியோக அர்ஹமாய் – விரும்பியவாறு செய்து கொள்ளும்படி தன்னை ஆக்கி வைப்பவன். அதாவது, தன்னை ஒழிந்தது ஒன்றைக் கொடுத்தல், தான் இருக்குமிடத்தில் அவர்களை அழைத்துக் கொடுத்தல் செய்யான்;

மத்துறு கடை வெண்ணெய் –முக் கால வினைத்தொகை யாயினும், நிகழ் காலத்தில் பொருள் சிறப்புடைத்து;-கடையா நிற்கையில், பசியராய் இருக்குமவர்கள் சோறு சமையப் பற்றாமல்‘வெந்தது கொத்தையாக வாயில் இடுமாறு போன்று, கடைவதற்குள் பொறுக்காமல் நடுவே அள்ளி அமுது செய்த படியைச் சொல்லுகிறார்,’ என்று திருக் குருகைப் பிரான் பிள்ளான் பணிப்பார்.

பெரிய பிராட்டியார் நெருக்கி அணைக்கும் மார்வை யன்றே கயிற்றாலே நெருக்கிக் கட்டக் கட்டுண்டான்?’ என்பார், உரவிடையாப்புண்டு’ என்கிறார்:
அன்றியே – ‘மிடுக்கையுடைய ரிஷபம் போன்று இருக்கின்றவன் கட்டுண்டான்,’ என்று பொருள் கூறலுமாம்.-உரம் – மிடுக்கு; விடை – ரிஷபம்
உரம் என்பதனை ‘உதரம்’ என்ற சொல்லின் விகாரமாகக் கொண்டு ‘வயிற்றினிடத்தில் கட்டுண்டு’ என்று பொருள் கூறலும் ஒன்று. உதரம் – வயிறு.

த்யக்த்வா தேகம் புனர் ஜென்ம நைதி மாமேதி ‘(எனது அவதாரத்தையும் அவதாரத்தில் நிகழ்த்தும் நிகழ்ச்சிகளையும் தெய்வத்தன்மை வாய்ந்தவை என்று எவன் அறிகிறானோ அவன் இச் சரீரத்தை விட்டால் வேறு சரீரத்தை அடைகிறான் இல்லை; என்னையே அடைகிறான்,’) என்கிறபடியே, நம்முடைய கட்டை அவிழ்க்க இறே தான் கட்டுண்டு இருந்தது –பிள்ளை பெற்றுத் தாமோதரன் என்று பெயரிடும்படி அன்றே கட்டுண்டான்?

சௌலப்யத்தை உபதேசிக்கைக்காக அவதாரங்களை அனுசந்தித்தவர் -தொடங்கின உபதேசத்தை மறந்து கிருஷ்ண அவதாரத்தில் நவநீத சௌர்ய சாரித்ரத்திலே தாம் அகப்பட்டு அழுந்துகிறார் –அவாப்த சமஸ்த காமன் தனக்கு ஒரு குறை யுண்டாய் -அது நேர் கொடு நேர் கிடையாமையாலே -களவிலே இழிந்து அது தலைக் கட்டப் பெறாதே வாயது கையதாக அகப்பட்டுக் கட்டுண்டு அடியுண்டு நிற்கும் நிலையைச் சொல்லுகிறது –

உரலினோடு இணைந்து இருந்து – உரல் மூச்சு விடிலும் தான் மூச்சு விடாதே அசிதவ்யாவ்ருத்தனாய் இருந்த படி –ஏங்கிய எளிவே-இந்த சுத்தனைக் கள்ளன் என்று கட்டினால் பொறுக்க மாட்டாதே அழத் தொடங்குமே – அவள் வாய் வாய் என்றால் ஏறிட்ட த்வனி இழிய விட மாட்டாதே பயப்பட்டு நிற்கும்-எளிவு -சௌலப்யம் –

எத்திறம்-இது என்னபடி-யதோ வாசோ நிவர்த்தந்தே -என்று வேதம் மீண்ட பரத்வத்தை எல்லை காணலாம்-இந்த சௌலப்யம் தரை காண ஒண்ணாது இருந்ததீ-என்கிறார்-இவ்வதி மாத்ர ஆச்ரித ஸூலபத்வ மஹா குணத்தில் ஈடுபட்டு -ஆஸ்ரித ஸமாஸ்ரயணீயனாய் இருக்கைக்கு தத் சஜாதீயனாய் வந்து பிறந்து அருள அமையாதோ- இங்கனே உரலில் கட்டுண்டு நடுங்கின படியே இருந்து அருள வேணுமோ -பிரானே இது என் செய்து அருளினாய் -எதுக்காகச் செய்து அருளினாய் -என்கிறார் –

—————

எளிவரும் இயல்வினன் நிலை வரம்பில பல பிறப்பாய்
ஒளி வரு முழு நலம் முதலில கேடில வீடாம்
தெளிதரு நிலைமையது ஒழிவிலன் முழுவதும் இறையோன்
அளிவரும் அருளினோடு அகத்தனன் புறத்தனன் அமைந்தே 
–1-3-2-

தப்பச் செய்தோம்;தப்பச் சொன்னோம் அழித்துச் சூளுறவு-ப்ரதிஜ்ஜை – செய்ய வேண்டும்,’ என்கிறார் இரண்டாம் பாட்டில்.-இவனுக்கு எளிமை ஸ்வரூபம் என்பதனைத் தெரிவிப்பதற்கு ‘எளிவரும் இயல்வினன்’ என்கிறார்-நிலை வரம்பு இல – இன்ன அவதாரம் இன்ன செயல் என்பது இல்லை;-‘நிலை இல, வரம்பு இல’ என ‘இல’ என்பதனை ‘நிலை’ என்பதுடனும் கூட்டி பூர்வர்கள் நிர்வாகம்
இனி, பட்டர் இவ்விரு பொருளையும் ‘நிலை இல’ என்பதன் பொருளாகவே கொண்டு,
‘வரம்பு இல’ என்பதற்கு, வேறு பொருள் அருளிச்செய்வர்.
அதாவது, ‘அவதரித்து எளியனாய் நின்ற நிலை தன்னிலே பரத்துவம் தோற்ற நிற்கிலும் நிற்கும்,’ என்று. சாரதியை வேஷத்தோடே தேர்ப் பாகனாய்த் தாழ் நிற்கச் செய்தே ஸ்ரீ விஸ்வரூபத்தைக் காட்டியும், தான் புத்திரப் பேற்றின் பொருட்டுப் போகா நிற்கச் செய்தே கண்டா கர்ணனுக்கு மோக்ஷத்தைக் கொடுத்தும், ஏழு வயதிலே கோவர்த்தன மலையைத் தரித்துக்கொண்டு நின்றும் செய்தவை.
இத்தாற் பெறப்படுவது, ‘ஒன்றிலும் ஒரு நியதி இன்று; ரக்ஷணத்துக்கு -காப்பதற்கு உறுப்பாம் அத்தனையே வேண்டுவது; ஏதேனுமாக அமையும் இவனுக்கு,’ என்கை.

வீடாம் தெளிதரு நிலைமையது ஒழிவிலன்- மோஷம் ஆகிற தெளிவைத் தரும் ஸ்வ பாவத்தை விடாதே கூட வந்து அவதரிக்கும் –இதுவும் கல்யாண குணங்களிலே ஒன்றாய் இருக்கப் பிரித்துச் சொல்லுகிறது -அவதாரத்துக்கு மோஷ பிரதானத்திலே நோக்கு ஆகையாலே

இறையோன், அளிவரும் அருளினோடு அகத்தனன் புறத்தனனாய் அமைந்து, முதல் இல கேடு இலவாம்-ஒளிவரும் முழுநலம், வீடாம் தெளிதரு நிலைமையது முழுவதும் ஒழிவிலனாய், நிலை வரம்பில் பல பிறப்பாய், எளிவரும் இயல்வினன்’ என்று அந்வயம்-

————

அமைவுடை யறநெறி முழுவதும் உயர்வற வுயர்ந்து
அமைவுடை முதல் கெடல் ஓடிவிடை யறநில மதுவாம்
அமையுடைய யமரரும் யாவரும் யாவையும் தானாம்
அமைவுடை நாரணன் மாயையை அறிபவர் யாரே
–1-3-3-

மாயையை அறிபவர் யாரே –இவனுடைய அவதாரத்தின் மறை பொருள் ஒருவர்க்கும் அறிய நிலம் அன்று என்கிறார். ‘என்னை?’ எனின்,
பிரகாரியான தான் பிரகாரமான பொருள்களிலே ஒன்று ‘என்மகன்’ என்று அபிமானிக்கும்படி வந்து பிறந்த இவ்வாச்சரியம் ஒருவர்க்கும் அறிய நிலம் அன்று
ஆதலின். ‘ஏன், ஒருவரும் அறியாரே?’ எனின்,
நித்தியஸூரிகள் பரத்வ அனுபவம் பண்ணுகையாலே அறியார்கள்;
சம்சாரிகள் நாஸ்திகர் ஆகையாலே அறியார்கள்;
பிரமன் முதலிய தேவர்கள் தம்தமது அறிவாலே அறிய இருக்கின்றவர்கள் ஆகையாலே அறியார்கள்;
மயர்வற மதிநலம் அருளப்பெற்ற ஆழ்வார்கள் ‘எத்திறம்!’ என்று மோஹித்துக் கிடப்பார்கள்;
தனக்குத் தானே முற்றறிவினையுடைய இறைவனும்-ஜென்ம கர்ம மே திவ்யம்
(‘என்னுடைய பிறவியும் செயல்களும் தெய்வத் தன்மையன,’) என்கின்றான்;
ஆதலின், ஒருவர்க்கும் நிலம் அன்று என்பதாம்.

———

யாரும் ஓர் நிலைமையன் என அறிவரிய வெம்பெருமான்
யாரும் ஓர் நிலைமையன் என அறிவெளிய வெம்பெருமான்
பேருமோர் ஆயிரம் பிற பல வுடைய எம்பெருமான்
பேருமோர் உருவமும் உளதில்லை இலதில்லை பிணக்கே 
–1-3-4-

ஒரு குரங்கு, வேடச்சி, ஆய்ச்சி இவர்களுக்கு எளியனாய் இருக்கக் கண்டாமே!
எம்பெருமான்’ என்ற சொல்லால்,-ஆஸ்ரிதற்கு- ‘அடியார்க்கு எளியனாய் -அநாஸ்ரிதற்கு – அடியர் அல்லாதார்க்கு அரியனான-என் நாயன்- – நிலை இருந்தபடி என்னே!’ என்று ஈடுபட்டு எழுதிக் கொடுக்கிறார்.

பேரும் ஓர் ஆயிரம் – அநுபவிதாக்களுக்கு -அனுபவிக்கின்ற அடியார்கட்கு இழிந்த இடம் எல்லாம் துறையாகும்படி பல திரு நாமங்களை யுடையவனாய் இருக்கை.
குணம் பற்றி வருவனவும், ஸ்வரூபம் பற்றி வருவனவும் ஆன பெயர்களுக்கு ஓர் எல்லை இல்லை ஆதலின், ‘பேரும் ஓர் ஆயிரம்’ என்கிறார்.-தேவோ நாமோ சஹஸ்ரவான்

பிற பல உடைய எம்பெருமான்- அந் நாம த்வாரா காணும் -அப் பெயர்களின் மூலமாகக் காண்கின்ற -பல திருமேனிகளை யுடையனாய் இருக்கை. ‘பிற’ என்பது ஈண்டுத் திருமேனியைக் காட்டுகிறது.-இவர்தாமும் இதனைப் பின்னர்க் கூறுமிடத்து-அநு பாஷிக்கிற இடத்தில் –‘பேரும் ஓர் உருவமும்’ என்று அருளிச் செய்தல் காண்க.

பிணக்கே- இதில் மாறுபாடு உண்டோ? இல்லை என்றபடி.
அடியார்கள் எல்லாம் காண்கையாலே மங்களா சாசனம் பண்ணி நிற்பார்கள் –
அடியர் அல்லாதார் இவை இல்லை என்று இருக்கையாலே முதலிலேயே கிட்டார்கள்; ‘
இவ் விருவர்க்கும் நடுவே பொருள் நித்தியமாகப் பெற்றோமே!’ என்று தாம் இனியர் ஆகிறார்.

—————

பிணக்கற வறுவகைச் சமயமும் நெறியுள்ளி யுரைத்த
கணக்கற நலத்தனன் அந்தமில் ஆதியம் பகவன்
வணக்குடைத் தவ நெறி வழி நின்று புறநெறி களை கட்டு
உணக்குமின் பசையற வவனுடை உணர்வு கொண்டு உணர்ந்தே 
–1-3-5-

அவன் தான் ஸ்ரீ கீதையில் அருளிச் செய்த பத்தி மார்க்கத்தாலே அவனை அடைமின்,’ என்கிறார்.-கணக்கு அறு நலத்தனன்-எல்லை இல்லாத குணத்தை யுடையவன்;
இனி, எல்லை இல்லாத ஸ்நேஹத்தை வாத்சல்யத்தையுடையவன் எனலுமாம்.

அம் பகவன் வணக்குடைத் தவநெறி வழி நின்று- வணக்கத்தை யுடைய பத்தி மார்க்கமாகிற வழியிலே நின்று;
ஸ்ரீ பகவத் கீதையில் பத்தியைப் பற்றிக் கூறுமிடத்தில்
நமஸ் யந்தச்ச மாம் பக்த்யா (‘பத்தியினால் என்னை வணங்கி வழிபடுகின்றார்கள்,’ )என்று கூறி, பின்னர்,(மாம் நமஸ்குரு )‘என்னை வணங்குதலைச் செய்வாய்,’ என்றும் கூறுவதால்,
இவரும் பத்தியை ‘வணக்குடைத் தவ நெறி’ என்கிறார்.
பத்தியானது –அங்கனா பரிஷ்வ்ங்கம் -காதலியோடு கலக்கும் கலவி போன்று போக ரூபமாய் -இன்ப மயமாக இருக்குமாதலின்‘அம் பகவன் தவநெறி’ என்கிறார்.
பத்தி, ஞானத்தின் விசேடமாகையாலே, ‘தவம்’ என்ற சொல்லால் பக்தியைச் சொல்லுகிறார்;
யஸ்ய ஞான மயம் தப (‘அவனுக்குத் தவமானது ஞானத்தின் மயமாய் இருக்கிறது,’) என்கிற நியாயத்தாலே யாதல், இவனுடைய பிரேம மாத்ரத்தையே -அன்பினையே தவமாக நினைக்கின்ற பகவானுடைய அபிப்பிராயத்தாலே யாதல்.

புறம் நெறி களை கட்டு –புறநெறியாகிற களையைக் கடிந்து. அதாவது,-கடிந்து – பறித்து. கட்டல் -களைதல்-பத்தி விஷயமான போது வேறு பலன்களிற்செல்லும் விலக்கடிகளைத் தள்ளி’ என்றும்,-பிரபத்தி விஷயமானபோது மற்றைச் சாதனங்களைத் தள்ளி’ என்றும் பொருள் –

அவனுடை உணர்வு கொண்டு உணர்ந்து –அவன் விஷயமான ஞானத்தைக் கொண்டு உணர்ந்து;-அதாவது, ‘பத்தி மார்க்கத்தைக் கொண்டு உணர்ந்து’ என்றபடி.
இனி,தத் யுக்த – அவன் அருளிச் செய்த ஞானத்தைக் கொண்டு உணர்ந்து;
அதாவது, ‘அவன் அருளிச் செய்த ஸ்ரீ சரம ஸ்லோகத்தின் படியைப் பற்றி நின்று’ என்னுதலுமாம்-

———————

உணர்ந்து உணர்ந்து இழிந்து அகன்று உயர்ந்து உருவியந்த இந்நிலைமை
உணர்ந்து உணர்ந்து உணரிலும் இறை நிலை உணர்வு வரிது உயிர்காள்
உணர்ந்து உணர்ந்து உரைத்து உரைத்து அரி அயன் அரன் என்னும் இவரை
உணர்ந்து உணர்ந்து உரைத்து உரைத்து இறைஞ்சுமின் மனப்பட்ட தொன்றே
 –1-3-6-

ஆஸ்ரயணீய வஸ்து இன்னது என்றும்-ஆஸ்ரயிக்கும் பிரகாரம் – பற்றுமுறை இன்னது என்றும் அருளிச் செய்கிறார்.

உணர்ந்து உணர்ந்து-உணர்வு என்னாமல் ‘உணர்ந்து’ என்கையாலே.
ஞப்தி – ‘அறிவு மாத்திரமே உள்ளது; -ஞாத்ர அம்சம் -அறிகின்றவன் இலன்’ என்கிற யோகாசாரனை மறுக்கிறார்.
‘உணர்ந்து உணர்ந்து’ என்ற-வீப்சைக்கு – அடுக்குத் தொடரால்,- சைதன்யம் ஆகந்துகம் – ‘அறிவு இடையிலே வந்தது; –முக்த அவஸ்தையிலும்- மோக்ஷ நிலையிலும்-பாஷாண கல்பமாய் – கல்லைப் போன்று இருக்கும்’ என்று கூறும்நையாயிக வைசேடியர்களை மறுத்து,-சைதன்யம் – ஞானம் நித்தியம் என்பதனைத் தெரிவிக்கிறார்.
மேலும், ஞாத்ருத்வம் -அறியுந்தன்மை நித்தியமாகையாலே, ‘ஞான கிரியா கர்த்ருத்வம்-ஞாத்ருத்வம்;அதுதான் அநித்தியம்,’ என்கிற கிரியாவாதியையும் மறுக்கிறார்.

அரி அயன் அரன் என்னும் இவரை உணர்ந்து உணர்ந்து உரைத்து உரைத்து-
ஒரு உணர்த்தி, ஸ்வரூபத்தைப் பற்றியது; ஒரு உணர்த்தி, ஸ்வபாவத்தைப் பற்றியது
உரைத்து உரைத்து 
–ஸ்வரூப பரமான பிரமாணங்களையும்-ஸ்வபாவ பரமான பிரமாணங்களையும்

உணர்ந்து உணர்ந்து உரைத்து உரைத்து இறைஞ்சுமின்- தோன்றுகிற அவனைக் கேள்வி மனனம் முதலியவைகளால்-ஸ்ரவண மனனாதிகளால் உணர்ந்து,-அவன் திருப் பெயர்களைப் பலகாலும் உச்சரித்து – கை புகுந்தது என்று விஸ்வசிக்கலாம் அளவும் -ஆஸ்ரயிக்கப் பாருங்கோள் வணங்குங்கோள்-

—————

ஓன்று என பலவென வறிவரும் வடிவினுள் நின்ற
நன்ற எழில் நாரணன் நான்முகன் அரன் என்னும் இவரை
ஒன்ற நும் மனத்து வைத்து உள்ளி நும் இரு பசை அறுத்து
நன்றென நலம் செய்வது அவனிடை நம்முடைய நாளே 
–-1-3-7-

நீங்கள் முடிந்து போவதற்கு முன்னே-நிர்ணய உபாயங்களாலே – உறுதி செய்யும் வழிகளால் பொருள் இன்னது என்று உறுதி செய்து,
நிர்ணீதனானவன் உறுதி செய்யப்பட்டவன் பக்கலிலே விரைவில் பத்திபைப் பண்ணப் பாருங்கோள், என்று,
மேல் பாசுரத்திற்குச் சேஷமாய் இருக்கிறது இப் பாசுரம்.
‘நீங்கள் குறைந்த ஆயுளை யுடையவர்கள் ஆகையாலே, விரைவில் செய்து கொடு நின்று, ‘செய்கிறோம்’ என்ன வேண்டும்;
-‘செய்கிறோம்’ என்று செய்ய ஒண்ணாது என்கிற இதுவே இப் பாசுரத்தில் விசேஷம்-கீழில் பாட்டில் காட்டில் –

நன்று எழில் நாரணன் –நன்று’ என்பதனால், -அநந்ய பரமான -அவனுக்கே உரிய நாராயண அநுவாகாதிகளை நினைக்கிறார்.‘எழில்’என்பதனால், அபஹத பாப்மா திவ்யோ தேவ ஏகோ நாராயணா -(‘நீங்கின குற்றங்களை யுடையவனும் மோக்ஷத்தை யுடையவனும் ஒளி உருவனும் ஒருவனே யானவனும் ஆன நாராயணன்’) என்கிற புகரை நினைக்கிறார்.
இனி, ‘நன்று எழில்’ என்பதற்கு,ரூப ஸ்ரீ யை – வடிவின் அழகினைப் பார்த்தவாறே,
கண்ட ஆற்றால் தனதே உலகு என நின்றான்’ என்கிறபடியே, சர்வ ரக்ஷகன் -‘அனைத்து உலகும் அனைத்து உயிரும் அளிக்கும் பரமன் இவனே,’ என்னலாம்படி இருக்கும்
நன்றான அழகு என்று கூறலுமாம்.-திருப் பெயரைப் பார்த்தவாறே தன்னை ஒழிந்தன அனைத்தையும் பிரகாரமாய்க் கொண்டு தான் பிரகாரியாய் இருப்பான் ஒருவன் என்று தோன்ற இருப்பவனாதலின்,‘நாரணன்’ என்கிறார்.–ஆன பின்பு தத் வியதிரிக்த ப்ரஹ்ம ருத்ரர்கள் பக்கல் ஈச்வரத்வ சங்கையை விட்டு அந்த நாராயணன் பக்கல் நம்முடைய சரீராத் யுபகரணங்கள் உள்ள போதே அநந்ய பிரயோஜனராய்க் கொண்டு அடிமை செய்வது என்கிறார் –

————

நாளும் நின்று அடும் நம் பழமை அம் கொடு வினையுடனே
மாளும் ஒரு குறைவில்லை மனனக மலமறக் கழுவி
நாளும் நம் திருவுடையடிகள் தம் நலம் கழல் வணங்கி
மாளும் ஓர் இடத்திலும் வணக்கொடு மாள்வது வலமே
 –1-3-8-

அநாதி காலம் ஆர்ஜிதமான கர்மம் ஆஸ்ரயணத்தை விலக்காதோ என்னில்
பஜன உபக்கிரம வேளையில் அவை அடங்க நசிக்கும் -நசிப்பாரும் உண்டு என்கிறது

அந்த அந்திம தசையில் யாகிலும் ஓர் அஞ்சலி மாத்திரம் ஆதல் ஓர் யுக்தி மாத்திரம் ஆதல் ஓர் ஸ்ம்ருதி மாத்திரம் ஆதல்-அவன் திறத்திலே செய்ய அந்த பக்தி யோகத்திலும் நன்று என்கிறார் –

சர்வேஸ்வரனை அடைந்தானாகில், அவன் பலனைக் கொடுக்கிறான்; பிராட்டியைத் துணையாகப் பற்ற வேண்டுகிறது என்?’ என்று நஞ்சீயர் பட்டரைக் கேட்க, ‘அவனை அடையும் இடத்தில், இவன் குற்றம் பாராதே தன் நிழலிலே இவனை வைத்து,
அவன் பக்கல் முகம் பெற்றவாறே குற்றத்தைப் பொறுப்பிக்கும் அவள் முன்னாகப் பற்றல் வேண்டும்’ என்று கூறி, ‘நாளும் நம் திருவுடை அடிகள் தம் நலம் கழல் வணங்கி’ என்னா நின்றது கண்டீரே’ என்று அருளிச் செய்தார் பட்டர்.

————-

வலத்தனன் திரிபுரம் எரித்தனன் இடம் பெறத்துந்தித்
தலத்தெழு திசைமுகன் படைத்த நல்லுலகமும் தானும்
புலப்படப் பின்னும் தன்னுலகத்தில் அகத்தனன் தானே
சொலப்புகில் இவை பின்னும் வயிற்றுள விவையவன் துவக்கே
–1-3-9-

ஆஸ்ரியிக்குமவர்களுக்கு த்வரை பிறக்கைக்காகவும் – பற்றுகின்றவர்கட்கு விரைவு உண்டாவதற்காகவும், – ருசி ஜனகன் ஆகைக்காகவும்- ருசியைத் தோற்றுவிப்பவன் ஆகைக்காகவும் வந்து பிறப்பன்,’

பால் குடிக்குங்குழந்தைகள். தாயின் மார்பினை அகலில் நாக்கு வரளுமாறு போன்று,
பிரமனும் திரு நாபிக் கமலத்தை விடின் தன் சத்தை இல்லையாம்படி இருப்பான் ஆதலின், ‘உந்தித் தலத்தனன்’ என்கிறார்.இப் பாட்டில் இவனைப் பற்றி ப்ரஹ்ம ருத்ராதிகள் லப்த ஸ்வரூபராய் இருக்கிறபடியைச் சொல்லுகிறார் 
ஆயின், இவர்கள் எஞ்ஞான்றும் திருமேனியில் இருப்பார்களோ?’ என்னில்,
ஆபத்துகளிலே திருமேனியில் இடங்கொடுப்பான் இறைவன்; அது மகா குணம் ஆகையாலே, ஆழ்வார்கள் எப்பொழுதும் அருளிச்செய்து கொண்டு செல்வார்கள்.
மற்றும், சாமந்தர்கட்குப் புறம்பே நாடுகள் மிகுதியாய் இருந்தாலும், மாளிகைக்குள்ளே செம்பாலே நாழி அரிசியைத் தங்களுக்கு மேன்மையாக நினைத்திருப்பார்கள் அன்றோ? அங்ஙனமே, இவர்களும் திருமேனியில் பண்ணி வைக்கும் பிராப்தி விடார்கள். ‘எங்ஙனம்?’ எனின், வேற்று அரசர்களால் கலகங்கள் உண்டான காலங்களில் அடைய வளைந்தானுக்குள்ளே குடி வாங்கி யிருந்து, கலகம் நீக்கியவாறே புறம்பே புறப்பட்டாலும் ‘இவ்விடம் இன்னார் பற்று’ என்று, பின்னும் ப்ராப்தியாக – தம் இடத்தைச் சொல்லி வைக்குமாறு என்க.

இவை அவன் துயக்கே- மம மாயா துரத்யயா ‘என்னுடைய மாயையினை ஒருவராலும் தாண்ட முடியாது,’ என்கிறபடியே, அவன் தானே ப்ரக்ருதி -மாயையாகிற விலங்கை வெட்ட புண்ணியம் இல்லாதவர்கள் தன் பக்கல் அணுகாதபடி செய்து, அவர்கள் அகலப் புக்கால் அவன்தான் அனுமதி கொடுத்து, உதாசீனனாய் இருக்கையாலே தெரியாது ஒழிகிறது என்கிறார். துயக்கு–சம்சயம் -ஐயம்.

——————

துயக்கறு மதியில் நல் ஞானத்துள் அமரரைத் துயக்கும்
மயக்குடை மாயைகள் வானிலும் பெரியன வல்லன்
புயற்கரு நிறத்தனன் பெரு நிலம் கடந்த நல்லடிப் போது
அயர்ப்பிலன் அலற்றுவன் தழுவுவன் வணங்குவன் அமர்ந்தே
 —1-3-10-

இறைவன் விமுகர் பக்கல் பண்ணுமவை நிற்க; அவன் காட்டின வழியே காணப்புக்க நாம்,
மனம் வாக்குக் காயங்களால் நம் விடாய் கெடத் திருவுலகு அளந்த திருவடிகளை -அவன் திருவருளால் காட்டின வடிவழகை -அனுபவிப்போம் நாம் என்று பாரிக்கிறார்.பெருநிலம் கடந்த நல் அடிப்போது அயர்ப்பிலன் அலற்றுவன் தழுவுவன் வணங்குவன் அமர்ந்தே அமர்ந்து –அநந்ய பிரயோஜனனாய் -வேறு ஒரு பயனையும் கருதாது இப்படிச் செய்வேன்.
இதற்கு ‘மனம் வாக்குக் காயங்களால் அனுபவிக்கப் பெற்றேன்,’ என்று திருக் குருகைப் பிரான் பிள்ளான் பணிப்பர்.‘இவற்றால் அனுபவிக்கப் பார்க்கிறார்’ என்று நஞ்சீயர் அருளிச் செய்வர்.

—————-

அமரர்கள் தொழுது எழு அலை கடல் கடைந்தவன் தன்னை
அமர் பொழில் வளம் குருகூர்ச் சடகோபன் குற்றேவல்கள்
அமர்சுவை யாயிரத்து அவற்றினுள் இவை பத்தும் வல்லார்
அமரரோடு உயர்வில் சென்று அறுவர் தம் பிறவி அஞ்சிறையே
–1-3-11-

இத்திருவாய் மொழி வல்லாரை எம்பெருமான் பிரதிபந்தகங்களைப் போக்கி திருவடிகளில் கொண்டு போகப் பற்றாமை முந்துற திருவடிகளிலே கொண்டு போய் அந்தமில் பேரின்பத் தடியரோடு இருந்த பின்னை பிரதிபந்தகமான ப்ரக்ருதி சம்பந்தத்தைப் போக்கி அருளும் –

அமரர்கள் தொழுது எழ அலை கடல் கடைந்தவன் தன்னை – கவிழ்ந்து ‘உப்புச் சாறு கிளருவது எப்போதோ?’ என்று கிடக்கிற தேவ ஜாதி யானது எழுத்து வாங்கும்படியாக ஆயிற்று,தோளுந்தோள் மாலையுமாய் ஒரு கடல் ஒரு கடலை நின்று கடையுமாறு போன்று கடைந்த படி.-குணங்களுக்குத் தோற்றுத் ‘தொழுது எழு’ என்கிற தம் பாசுரமேயாய் விட்டது
அழகுக்குத் தோற்ற அவர்களுக்கும் ஆதலின், ‘அமரர்கள் தொழுது எழ’ என்கிறார்.

——————–

அஞ்சிறைய மட நாராய் அளியத்தாய் நீயும் நின்
அஞ்சிறைய சேவலுமாய் யாவா என்று எனக்கு அருளி
வெஞ்சிறைப்புள் உயர்த்தார்க்கு என் விடுதூதாய்ச் சென்றக்கால்
வன் சிறையில் அவன் வைக்கில் வைப்புண்டால் என் செய்யுமோ 
–1-4-1-

அருளி –இரப்புக்குச் செய்தது ஆகை அன்றிக்கே உங்கள் பேறாக அருளி. அருள் பண்ணுகைக்கு அத்தலை குறைவு அற்றாற்போலே அன்றோ அருளுக்கு விஷயமான இத்தலை குறைவு அற்றபடி? இறைவன் விஷயத்தில் உதவி செய்கின்றவர்கள் கைம்மாறு கருதியன்று உதவி செய்வது; தங்கள் பேரருளாலேயாம். ‘என்னை?’ எனின், உபய விபூதியாளனை அவர்கள் உபகரித்தால் அவனுக்கு ஒப்பாகக் கொடுக்கத் தக்க பொருள் இல்லையே இவனுக்கு? ஆதலால், ‘அருளி’ என்கிறாள்.

வெஞ்சிறைப்புள் உயர்த்தாற்கு – அவர்கள் -பரம சாம்யா பன்னராய் -எல்லாவற்றாலும் தன்னை ஒத்தவர்களாக இருக்கையாலே வேறுபாட்டினைக் காட்டும் அறிகுறியாகப்-வ்யாவர்த்தக விசேஷணமாய் – பெரிய திருவடியைக் கொடியிலே உடையவனாக இருப்பான். விரோதியைப் போக்கிக்கொண்டு வருகைக்கு நமக்கு அங்கே ஆள் உண்டு என்பாள், ‘வெஞ்சிறைப்புள்’ என்கிறாள்.
அன்றி, தன்னை விட்டு-நிர்த்தயமாக – அருள் இன்றிப் பிரித்துக்கொண்டு போகையாலே,
அக்ரூர க்ரூர ஹ்ருதய ‘தேரை மிக விரைவார் ஓட்டிக்கொண்டு செல்வதனால், அக்குரூரர் அருள் அற்ற மனமுடையவர்,’ என்று ஆய்ப் பெண்கள் கூறியது போன்று கூறுகிறாள் என்றலும் ஒன்று.

புள் உயர்த்தான்-புள்ளாலே தாங்கப் பட்டவன் என்னுதல்;-அன்றி, புள்ளைக் கொடியிலே உயர்த்தியவன் என்னுதல்.

‘என் விடுதூதாய்ச் சென்றக்கால் வன் சிறையில் அவன் வைக்கில்’ என்பதற்கு, நீங்கள் ஏதேனும் அவனுக்குத் தூது போகின்றீர்களோ?
சிறை கட்டுதல், சிங்க விளக்கெரித்தல் செய்யில் செய்வது என்?’ என்று கூசுகைக்கு;
எனக்காகத் தூது போனாரை பரிஷ் வங்கோ ஹனுமதா (‘அனுமானுக்கு என்னாற்செய்யப்படும் இவ்வாலிங்கனமானது’) என்னுமாறு போன்று, மார்பிலே அணைக்கும் காணுங்கோள். நான் அணைய ஆசைப்படுகிற மார்பு அன்றோ உங்களுக்குப் பரிசிலாகக் கிடைக்கப் போகின்றது?’

இவ்விடத்தில் நாரை தொடக்கமானவற்றைத் தூதாகச் சொல்லிற்று -கடகருடைய கார்ய தேசிகத்வ ஸூ சக அர்த்தமாக – சிறையை கொண்டாடிற்று -ஞான ப்ரேம ரூப பஷத்வ அன்வயத்தாலே – பேடையும் சேவலுமான சேர்த்தி கடகருடைய பரஸ்பர சேஷ சேஷி பாவ ஸூசகம் –

——————

என் செய்ய தாமரைக் கண் பெருமானார்க்கு என் தூதாய்
என் செய்யும் உரைத்தக்கால் இனக்குயில்காள் நீரலிரே
முன் செய்த முழு வினையால் திருவடிக் கீழ் குற்றேவல்
முன் செய்ய முயலாதேன் அகல்வதுவோ விதியினமே
 –1-4-2-

சில நாரைகளைத் தூது போகல் வேண்டும் என்று இரந்தாள் கீழ் ;
அங்குப் போனால் சொல்லும் பாசுரத்தைக் குயில்களுக்குச் சொல்லுகின்றாள் இங்கு:
அந்யா துபக்ராந்த மன்யதா பதிதம் (‘தொடங்கியது ஒன்று, முடிந்தது வேறு ஒன்று,’ )என்கிறபடியே வந்து விழுந்தது.
‘இப்படிக் கலங்கலாமோ?’ எனின், இத்தனையும் கலங்கிற்றிலளாகில் இவள் பிரிந்த பொருளுக்கும் நாட்டார் பிரிந்த பொருளுக்கும் வேற்றுமை யின்றி ஒழியுமே,
இப்படிக் கலங்கப் பண்ணாத அன்று குணங்களால் குணாதிக விஷயத்துக்கு நமஸ்காரமாமித்தனை அன்றோ?

பெருமானார்க்கு-பிரிகிற போது கண்ணாலே நோக்கி இவளைத் தனக்கே உரிமை யாக்கிப் போன-அநந்யார்ஹையாக்கி-படி.

ஒரு முழுக்காலும் இரண்டு முழுக்காலும் போகாது காண்-தெற்காழ்வார் கையில் திருவாழியாலே வினையை அறுத்துக் கொண்டு போகில் அத்தனை ஒழிய,
ஒன்று இரண்டு முழுக்கால் போகாது காண் நான் பண்ணின பாபம்,’ என்று
ஸ்ரீ திருக்கோட்டியூரிலே ஸ்ரீ தெற்காழ்வான் ஸ்ரீ கோளரியாழ்வானுக்குத் தீர்த்தத் துறையிற் சொன்ன வார்த்தையை நினைவு கூர்வது

திருவடிக் கீழ் குற்றேவல் –திருவடிகளிலே கிட்டி அந்தரங்கத் தொண்டுகளைச் செய்வதற்கு,
‘தலைவி பிரிந்து வருந்துகிறவள் ஆதலின், ‘அவனைச் சேர்வதற்கு’ என்னாது
‘திருவடிக் கீழ்க் குற்றேவல்’ என்கிறது என்னை?’ எனின்,
அந்தணர் பிச்சு ஏறினாலும் ஒத்துச் சொல்லுமாறு போன்று, இவர் பிராட்டியானாலும் மார்பால் அணைக்க நினையார்;-திருவடிகளில் அணையத் தேடும் அத்தனை.

எங்கள் அபிமதம் பெறுகைக்கு எங்கள் பக்கல் ஒரு நன்மை இல்லாத பின்பும் தாழ்க்கும் இத்தனையோ?’ என்கிறாள் என்று ஸ்ரீ பிள்ளை திருநறையூர் அரையர் பணிப்பர்.

இழந்த கால விஷய சோகமும் -த்வரையும்-ததேக ரஷ்யத்வ அத்யாவசாயமும் -ஆகிஞ்சன்ய அநந்ய கத்வங்களும் ஸூசிதம்-இவ்விடத்தில் கடகருடைய யுக்தி மாதுர்யமும் சமவாயமும் ஸூசிதம் –

——————-

விதியினால் பெடை மணக்கும் மென்னடைய அன்னங்காள்
மதியினால் குறள் மாணாய் வுலகிரந்த கள்வர்க்கு
மதியிலேன் வல்வினையே மாளாதோ வென்று ஒருத்தி
மதி எல்லாம் உள் கலங்கி மயங்குமால் என்னீரே –
1-4-3-

அனுபவித்தே அற வேண்டும் என்று இறைவனுடைய திருவுள்ளக் கருத்தாகக் கொண்டு,
‘நான் செய்த பாபமேயோ அனுபவித்தாலும் மாளாதது என்று சொல்லுங்கள்’ என்று சில அன்னங்களை இரக்கிறாள்.

குறள்-கோடியைக் காணி யாக்கினாற் போன்று, பெரிய வடிவழகைக் கண்ணாலே முகந்து அனுபவிக்கலாம்படிசிறுக்கினானாதலின் ‘குறள்’ என்கிறாள்.
மாணாய்-உண்டு’ என்று இட்ட போதொடு‘இல்லை’ என்று தள்ளிக் கதவு அடைத்த போதோடு வேற்றுமை அற முக மலர்ந்து போம்படி இரப்பிலே தழும்பு ஏறின வடிவை யுடையனானான் ஆதலின், ‘மாணாய்’ என்கிறாள்.
உலகு இரந்த கள்வர் என்பதற்குத்-தன் சங்கற்பத்தாலே உண்டாக்கின உலகத்தைக் ‘கொள்வன் மாவலி மூவடி’ என்று இரந்த வஞ்சகர் என்று பொருள் அருளிச் செய்வர் ஸ்ரீ திருமாலை யாண்டான்.
ஸ்ரீ எம்பெருமானார், ‘ஒன்றை நினைந்து ஒன்றைச் செய்தவர்க்கு’ என்று அருளிச் செய்வர்.
அதாவது, ‘மகாபலியை வஞ்சித்ததும் என்னை வசீகரிக்கைக்காக,’ என்றபடி,

ஆயின், இவள் அச் செயலுக்கு வசப்பட்டவளோ?’ எனின்,
‘பெருநிலம் கடந்த நல் அடிப் போது’ என்று அன்றோ இவள் ஆசைப் பட்டாள்?
மேலும்,‘உலகங் கொண்ட, அடியன அறிவருமேனி மாய்த்தனாகிலும், கொடிய என் நெஞ்சம் அவன் என்றே கிடக்கும்’ என்றும்,
அன்று ஒருகால் வையம் அளந்த பிரான் வாரான் என்று, ஒன்று ஒரு கால் சொல்லாது உலகு’ என்றும் அன்றோ இவள் கிடப்பது?
ஸ்ரீ திருமங்கையாழ்வாரும், ‘முன்னங் குறளுருவாய் மூவடி மண் கொண்டு அளந்த, மன்னன் சரிதைக்கே மாலாகிப் பொன் பயந்தேன்!’ என்றார்.
ஆக, இவர்கள் எல்லாரும் ஈடுபடுவது இச் செயலுக்கேயாம்.

வல்வினையே மாளாதோ–இவள் ஒரு தீர்க்க சிந்தயந்தி யாவள்.-மதி எல்லாம் உள் கலங்கி மயங்குமால் என்னீரே–மதி கலங்கி,-அறிவு அழிந்தாள் என்மின்.-மதி எல்லாம் உள் கலங்கி-
தாம் தந்த மயர்வறு மதி நலம் எல்லாம் அடி மண்டியோடே கலங்கின-அறிவித்த பின்பு வாராது ஒழியின், அவனது அன்றோ பழிச்சொல்!’அருளாழி அம்மான் ஆகையாலே வருவர் என்றபடி.-இனி, உங்களுக்கு ஸ்வரூபம், அவனுக்குக் குணம், எனக்குச் சத்தை, உங்களுக்கு யுக்தி – ஒரு வார்த்தை என்பாள், ‘என்னீரே’ என்கிறாள்-

இத்தால் கடகருடைய ஆசார வைலக்ஷண்யமும் ஸ்ரைஷ்ட்யமும் தோற்றுகிறது –

———-

என்நீர்மை கண்டிரங்கி -இது தகாதென்னாத
என்நீல முகில் வண்ணர்க்கு என் சொல்லி யான் சொல்லுகேனோ
நன்னீர்மை இனியவர் கண் தங்காது என்று ஒரு வாய்ச் சொல்
நன்னீல மகன்றில்காள் நல்குதிரோ நல்கீரோ 
–1-4-4-

ஸ்ரீ பட்டரை ஒரு தமிழ்ப் புலவர் ‘கேட்டு இரங்கி’ என்னாது, ‘கண்டிரங்கி’ என்னப் பெறுமோ?’ என்ன,‘அணைத்த கை நெகிழ்த்த அளவிலே வெளுத்தபடி கண்டால் பிரியத் தகாது என்று இருக்க வேண்டாவோ?’ என்று அருளிச் செய்தார்.
கேட்ட புலவர், ‘இவ்வாறு நிகழ்வதும் உளதோ?’ என்ன, ‘புல்லிக் கிடந்தேன் புடைபெயர்ந்தேன் அவ்வளவில், அள்ளிக் கொள் வற்றே பசப்பு,’ ‘காதலர் தொடுவுழி தொடுவுழி நீங்கி, விடுவுழி விடுவுழிப் பரத்தலானே’ என்பன போன்ற தமிழ்ப் பாக்களை நீ அறியாயோ?’ என்று அருளிச் செய்தார்.

இது தன் நிலை தானும் தனக்கும் பேச்சுக்கு நிலம் அல்லாமல் இருத்தலின், ‘இது’ என்கிறாள்.நன்னீலம் மகன்றில்காள் இத்யாதி – அவர் நீலமுகில் வண்ணராய் இருந்தார்; நீங்களும் நீல மகன்றில்களாய் இருந்தீர்கள்; செயலும் அவரைப் போன்று இருப்பீர்களோ?’ என்றபடி-நல்குதிரோ நல்கீரோ- செய்வீர்களோ, மாட்டீர்களோ? முதல் வார்த்தையிலேயே பதின்கால் சொல் மறுத்தாரைச் சொல்லுமாறு போன்று, ஆற்றாமையின் கனத்தாலே ‘நல்குதிரோ நல்கீரோ!’ என்கிறாள்.

இதில் கடகருடைய ரூப வைலக்ஷண்யம் சொல்லிற்று ஆயிற்று –

—————

நல்கித்தான் காத்தளிக்கும் பொழில் ஏழும் வினையேற்கே
நல்கத்தான் ஆகாதோ நாரணனைக் கண்டக்கால்
மல்கு நீர்ப் புனல் படப்பை இரை தேர் வண் சிறு குருகே
மல்கு நீர்க் கண்ணேற்கு ஓர் வாசகம் கொண்டு அருளாயே 
–1-4-5-

தம்முடைய நாராயணன் என்னும் பெயர் ஒறுவாய்ப் –விகலமாய்ப்போகாமல் நோக்கிக் கொள்ளச் சொல்,’ என்கிறாள்.-என் சத்தையில் அபேக்ஷை இல்லையே யாகிலும் தன் சத்தையில் அபேக்ஷை இல்லையோ -என்று தாத்பர்யம் –மல்கு நீர்க் கண்ணேற்கு ஓர் வாசகங் கொண்டு அருளாய்- ‘இதுவும் ஒரு நீர் நிலம் இருக்கிறபடி பாராய்’ என்பாள்,‘மல்கு நீர்க் கண்ணேன்’ என்கிறாள்.
‘ஆயின், குருகு இரை தேடுவதனை விட்டு இதனைப் பார்க்குமோ!’ எனின்,
இங்கும் சேலும் கயலும் உண்டாகையாலே பார்க்கும்.
இனி, தன்னைக் கண்ண நீரைக் கொண்டே நிரூபிக்க வேண்டி யிருத்தலின் ‘மல்கு நீர்க் கண்ணேன்’ என்கிறாள் -மறுக்கும் வார்த்தையும் அமையும்; அவர் பக்கல் உள்ளது ஒன்றே வேண்டுவது என்னும்நினைவினள் ஆதலின், ‘ஓர் வாசகம்’ என்கிறாள்.

‘தாரான் தரும் என்ற இடத்தில் ஒன்றதனை, ஆரானும் ஒன்னாதார் கேளாமே சொன்னக்கால்’ என்றார் பரகால நாயகியார்.
செம்மையுடைய திருமார்வில் சேர்த்தானேலும் ஒரு ஞான்று, மெய்ம்மை சொல்லி முகம்
நோக்கி விடைதான் தருமேல் மிக நன்றே!’
 என்றார் சூடிக் கொடுத்த சுடர்க் கொடியார்.
கூவிக் கூவி நெஞ்சுருகிக் கண் பனி சோர நின்றால், பாவி நீ என்று ஒன்று சொல்லாய்
பாவியேன் காண வந்தே’ 
என்றார் இவ்வாழ்வார் நாயகியும்.

அருளாயே சொல்ல வேணும் என்னும் ஸ்தானத்திலே அருள வேணும் என்கிறது
எதிர்தலை திர்யக் ஆக்கவுமாம் -தான் ஜனக குலத்தில் பிரக்க்கவுமாம் –
இவ் விஷயத்தில் உபகாரகரை இங்கன் அல்லது சொல்ல விரகில்லை –

நம்பி யேறு திருவுடையான் தாசர் திருநாட்டுக்கு நடந்தார்,’ என்று பட்டர்க்கு விண்ணப்பஞ்செய்ய,
பட்டர் துணுக்கு என்று எழுந்து நின்று, ‘அவர் ஸ்ரீ வைஷ்ணவர்களுடன் பரிமாறும் படிக்குத்
திருநாட்டுக்கு எழுந்தருளினார் என்ன வேண்டுங்காண்,’ என்று அருளிச் செய்தார் என்ற ஐதிஹ்யம் இங்கு ஓர்தல் தகும்.

இத்தால் -சிறு மா மனுஷர் என்கிறபடியே கடக விக்ரஹம் ஸூக்ரஹம் -என்று தோற்றுகிறது –

————

அருளாத நீர் அருளி அவராவி துவராமுன்
அருளாழிப் புட்கடவீர் அவர் வீதி ஒருநாள் என்று
அருளாழி அம்மானைக் கண்டக்கால் இது சொல்லி
அருளாழி வரி வண்டே யாமும் என் பிழைத்தோமே –
1-4-6-

தமக்கும் தாழ்வு வாராமல் எங்கள் சத்தையும் கிடக்கைக்கு ஒருவழி உண்டு.
தாம் அழகு செண்டு ஏறப் புறப்படுதல், யானைக்கு அருள் செய்யப் புறப்படுதல் செய்வன போல்வன சில உளவே அன்றே? அப்போது எங்கள் தெருவே போனால் தமக்கும் ஒரு தாழ்வு வாராது; நாங்களும் சாளரத்தின் வழியால் கண்டு பிழைத்துக் கிடப்போம்;
இப்படி அவிருத்தமாக- மாறுபாடு இல்லாதனவாகச் செய்யலான பின்பு, அதனைச் செய்யச் சொல்,’ என்று ஒரு வண்டை இரக்கிறாள்.

‘மயர்வற மதிநலம் அருளினன்’ என்று நெஞ்சுருகிக் கிடக்குமவர், ‘அருளாத நீர்’ என்கிறது என்ன நிலை விசேஷம் என்று அறிகிலோம்; அருளாத நீர்’ என்று ஒரு திருப்பெயர் சாற்றுகிறாள்.நீங்கள் அறிவிக்கும் அத்தனையே வேண்டுவது: கொடுவருவாரும் அங்கே உண்டு,’ என்கிறாள். அருள் ஆழிப் புள்-அருட்கடலான பறவை.-‘வெஞ்சிறைப்புள்’ என்றாள் முன்னர்க் கொண்டு போனபடியாலே; இப்போது வரவுக்குக் காரணமாகையாலே -உடல் ஆகையால் -‘அருளாழிப்புள்’ என்கிறாள்.கடவீர் – அனுகூலர் -‘அன்புள்ளவர்கள் கண்டு வாழுகைக்கும்-ஸூக ஸ்பர்சத்தாலும் -தான் ஊற்றின்பம் உறுகைக்குமாகப் போகாதே பிசுகிச் சுழியா நிற்கும் ஆதலின்,அசேதனமான – அஃறிணைப் பொருளான தேரினைப் போன்று, வடிம்பாலே தாக்கி நடத்த வேண்டும்’ என்பாள், ‘கடவீர்’ என்கிறாள். ‘

யாமும் என் பிழைத்தோம் – ‘நாங்கள் என்ன தப்புச் செய்தோம்?-தாம் பிரிந்து துவளவிட்டு வைத்தது போன்று, நாங்களும் கிரமத்திலே பெறுகிறோம் என்று ஆறியிருந்தோமோ?
திர்யக்கின் -விலங்கின் காலில் விழுவாரும், தூது விடுவாரும் தாமாக இருக்க, –
அத்தலை இத்தலையாகியும் வாராது இருக்கிற தம்மதோ, எங்களதோ குற்றம்?’ என்பாள்,
‘யாமும் என் பிழைத்தோம்?’என்கிறாள்.

இத்தால் கடகருடைய சார க்ராஹித்வமும் ரூப சோபையையும் தோற்றிற்று-

—————–

என் பிழை கோப்பது போல் பனிவாடை ஈர்கின்றது
என் பிழையே நினைந்து அருளி யருளாத திருமாலார்க்கு
என் பிழைத்தாள் திருவடியின் தகவினுக்கு என்று ஒரு வாய்ச் சொல்
என் பிழைக்கும் இளம் கிளியே யான் வளர்த்த நீ யலையே
 –1-4-7-

அருளாத திருமாலார்க்கு-இதற்கு- ந கச்சின் ந அபராத்யதி -‘குற்றம் செய்யாதவர் ஒருவரும் இலர்’ என்பாரும் அருகே இருக்க,-எங்கள் குற்றம் பார்த்து அவள் பக்கல் முகம் பெற இருக்கிறாரோ!’ என்று ஸ்ரீ நஞ்சீயர் அருளிச் செய்வர். ‘நான் இப்படி நோவுபடுதற்குக் காரணம், அவனுக்கு அவள் முகங்கொடுத்து அங்கே துவக்குகையால் அன்றோ
என்று இன்னாதாகிறாள்,’ என்று ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் பணிப்பர்.
‘ஆயின், பிராட்டியின் மேல் வெறுப்பாக, ஸ்ரீ பிள்ளான் இங்ஙனம் பணித்தல் தகுமோ?’ எனின், உறவு உள்ள இடத்திலே யன்றோ வெறுப்பும் உண்டாகும்? ஆதலால் தகும்.

என் பிழைத்தாள் திருவடியின் தகவினுக்கு –-தேவரீர் திருவருளுக்குத் தண்ணீர் துரும்பாக-ப்ரதக்ஷிண – வலம் வருதல்,-நமஸ்காராதிகள் -வணங்குதல்-முதலியன எவையேனும் செய்தன உளவோ?’ என்று ஸ்ரீ நம்பிள்ளை அருளிச் செய்யும் படி –என்பு இழைக்கும் இளங்கிளியே –முஃதயத்தாலும் -இளமையாலும், ஸ்நிக்தமான பிணிதியாலும் – அன்புடன் கூடிய சொற்களாலும், வடிவில் பசுமையாலும், வாயில் பழுப்பாலும் தலைவனுடைய நினைவை உண்டு பண்ணுவதனால், எலும்பைச் சிதைக்கின்ற கிளியே!
இனி, ‘என்பு இழைக்கும்’ என்று பிரிக்காமல், என் பிழைக்கும் என்று கொண்டு,
‘என் நிலையை அறிவித்தால் என்ன தவறு உண்டாம்?’யான் வளர்த்த நீயலையே-கலந்தார் செய்யுமவற்றை வயிற்றில் பிறந்தாரும் செய்வாரோ-நிவாகர் அல்லாத ஸ்வ தந்த்ரர் செயலை நீயும் செய்யவோ

இதில் -கடகருடைய அவயவ சோபாதிகளும் கிஞ்சித்க்கார பிரதி சம்பந்தித்வாதிகளால் வந்த பவ்யத்தையும் தோற்றுகிறது –

——————

நீயலையே சிறு பூவாய் நெடுமாலார்க்கு என் தூதாய்
நோய் எனது நுவல் என்ன நுவலாதே இருந்து ஒழிந்தாய்
சாயலோடு மணிமாமை தளர்ந்தேன் நான் இனியுனது
வாயலகில் இன்னடிசில் வைப்பாரை நாடாயே
–1-4-8-

பூவையைப் பார்த்து, ‘நீ அலையே’ என்கிறாள்.-இதனால், ‘பகவல் லாபம் சேர்ப்பாராலே’ என்று இருக்கிறாள் என்பது போதரும்.நோய் எனது-‘ஸ்ரீ பரதாழ்வான் நோய், என்றால் சாதுர்த்திகமாய் இராதது போன்று, இவளும் உலகத்தார் நோயினின்றும் தனது நோயை வேறுபடுத்திக் காட்டுவாள், ‘எனது நோய்’ என்கிறாள்.

இனி உனது வாய் அலகில் இன் அடிசில் வைப்பாரை நாடாயே-‘இனி, உன்னைக் காப்பாற்றுகின்றவர்களைத் தேடப் பாராய்,’ என்கிறாள்.
இதனால் ‘அவன் வந்தாலும் போன நிறத்தை மீட்கப் போகாது,’ என்று இருக்கிறாள்.
ஸ்ரீ பெரிய திருமலை நம்பி, தமக்கு ஒரு வெண்ணெய்க்காடும் பிள்ளையாயிற்றுத் திருவாராதனம்;-தம்முடைய அந்திம தசையில் -அவர் திரு முன்பில் திருத் திரையை வாங்கச் சொல்லி, ‘சாயலொடு மணி மாமை தளர்ந்தேன் நான் இனி உனது, வாய் அலகில் இன் அடிசில் வைப்பாரை நாடாயே,’ என்றாராம்.

சிறு பூவாய் -என்று கடகருடைய பருவச் சிறுமையும் உத்தேச்யம் என்று தோற்றுகிறது –

—–

நாடாத மலர் நாடி நாடோறும் நாரணன்றன்
வாடாத மலரடிக் கீழ் வைக்கவே வகுக்கின்று
வீடாடி வீற்றிருத்தல் வினை யற்றது என் செய்வதோ
ஊடாடு பனி வாடாய்! உரைத்து ஈராய் எனது உடலே
–1-4-9-

நம்மை நலிகைக்காக ஸ்ரீ சர்வேஸ்வரன் இவ் வாடையை வரவிட்டானாக வேண்டும்’ என்று பார்த்து,-வேற்காரர் கொடு போம் நலியப் புக்கவாறே ‘நிதி உண்டு’ என்பாரைப் போன்று,
‘நான் சொல்லுகிற வார்த்தையை நீ அங்கே சென்று அறிவித்தால்,
‘அத் தலையால் வரும் நன்மையும் வேண்டா’ என்று இருந்தானாகில்,
அவசியம் வந்து என்னை முடிக்கவேண்டும்,’ என்று அவ்வாடையை இரக்கிறாள்.

நாடாத மலர் நாடி –‘ஆத்தும புஷ்பத்தைச் சொல்லுகிறது’ என்பாரும் உளர்
ஸ்ரீ நஞ்சீயர், ‘எண் திசையும் உள்ள பூக் கொண்டு’ என்கிறபடியே,
‘தேட அரிய மலர்கள் எல்லாம் தேடி’ என்று அருளிச் செய்வர்.

அடியார்கட்குக் கிஞ்சித்கரித்துச் ஸ்வரூப சித்தியாயினாற்போன்று, இறைவனுக்கும் கிஞ்சித்கரிப்பித்துக் கொண்டு அன்றோ ஸ்வரூப சித்தி?அத் தலையால் வருங் கைங்கரியமும் நமக்கு வேண்டா,’ என்று இருந்தானாகில், ‘

இத்தால் கடககார அவஸ்தா விசேஷத்தாலே பாதகராகிலும் அதில் தாத்பர்யம் இல்லை -கார்யகரராகில் உத்தேச்யர் என்று கருத்து –

————–

உடல் ஆழிப் பிறப்பு வீடு உயிர் முதலா முற்றுமாய்
கடலாழி நீர் தோற்றி அதனுள்ளே கண் வளரும்
அடலாழி யம்மானைக் கண்டக்கால் இது சொல்லி
விடலாழி மட நெஞ்சே வினையோம் ஓன்றாம் அளவே –
-1-4-10-

விடலாழி மட நெஞ்சே-அல்லாதவற்றை எல்லாம் விட்டு முடிவில் நெஞ்சினைத் தூது விடுகிறாள்,’ என்பாரும் உளர். அப்போது ‘விடல்’ என்பவற்கு, ‘அவனை விடாதே கொள்’ என்பது பொருளாம்.
அன்றிக்கே-முந்தின பாசுரத்தின் சேஷம் என்பதாகக் கொண்டு ‘வைக்கவே வகுக்கின்று’ என்று கைங்கர்யம் ப்ரஸ்துதமானவாறே –தொண்டினைப் பற்றிய வார்த்தை வந்தவாறே’
‘தாய் முலையை நினைந்த கன்று போன்று திருவுள்ளம் பதறிச் சரீரத்தை விட்டுப் போகப் புக்கது; நம் காரியம் ஓர் அறுதி பிறக்குமளவும் நீ என்னை விடாதே கொள்’ என்கிறாள் என்னுதல்;

அடல் ஆழி அம்மானை- ஸ்ருஜ்ய பதார்த்தங்களுக்கு -படைத்த உயிர்களுக்கு விரோதிகளாய் இருப்பாரை அழியச் செய்கைக்காக ஆசிலே வைத்த கையுந்தானுமாக ஆயிற்றுக் கண் வளர்ந்தருளுவது.ஆழி மடம் நெஞ்சே- ஞானத்தினை யுடையையாய் எனக்கு உரிமைபட்டிருக்கிற மனமே! -அளவுடையையாய் பவ்யமான நெஞ்சே
அன்றி, இதற்கு, ‘சுழன்று வருகிற பேதை நெஞ்சே’ என்று பொருள் கூறலும் ஒன்று.-வினையோம் ஒன்றாம் அளவும் விடல்- படைப்பிற்குப் பயன் அங்கே அவரைக் கிட்டி அடிமை செய்கையாய் இருக்க, பிரிகைக்கு ஈடான பாபத்தைப் பண்ணின நாம் அவரோடே சேருமளவும் நீ அவரை விடாதே ஒழிய வேண்டும்.

இத்தால் கடகராவார் அந்தரங்க பூதர் என்று கருத்து –

—————-

அளவியின்ற வேழுலகத்தவர் பெருமான் கண்ணனை
வளவயல் சூழ் வண் குருகூர்ச் சடகோபன் வாய்ந்துரைத்த
அளவியன்ற வந்தாதி யாயிரத்துள் இப்பத்தின்
வளவுரையால் பெறலாகும் வானோங்கு பெரு வளமே
–1-4-11-

கண்ணனை – இவ் வளவிலே வந்து முகங்காட்டிற்றிலன் என்கிற குற்றந் தீர வந்து முகங்காட்டுகையாலே- ஆஸ்ரித ஸூலபனானவன் – அடியார்க்கு எளியவன் ஆனான்.
இனி, பத்துடை அடியவர்க்கு’ என்கிற திருவாய்மொழியில் ஸ்ரீ கிருஷ்ணாவதாரத்தை அனுபவிக்கப் பாரித்து, அது கிடைக்காமையாலே தூது விட்டவர் ஆகையாலே, இங்கு முகங்காட்டினான் ஸ்ரீ கிருஷ்ணன் என்னவும் ஆம்.-இத்தால், அவனுடைய மேன்மையோடு சௌலப்யமும் நிலை நின்றது இவர்க்கு முகங்காட்டின பின்பு ஆயிற்று என்றபடி.

——————-

வள வேழுலகின் முதலாய வானோர் இறையை அரு வினையேன்
களவேழ் வெண்ணெய் தொடுவுண்ட கள்வா என்பன் பின்னையும்
தளவேழ் முறுவல் பின்னைக்காய் வல்லானாயர் தலைவனாய்
இளவேறேழும் தழுவிய எந்தாய் என்பன் நினைந்து நைந்தே
 –1-5-1-

நித்திய சூரிகட்கு -அனுபாவ்யனானவனை -அனுபவிக்கப்படும் பொருளானவனை, 
மனம் வாக்குக் காயங்களால் தூஷித்தேன் ’ என்கிறார்.-‘வானோர் இறையைக் கள்வா என்பன்’ என்று கூற நினைத்தவர், தொடங்கின வாக்கியம் முடிப்பதற்கு முன்னே தம்மை நினைத்து,  ‘அருவினையேன்’ என்கிறார்.-அருவினை’ என்னலாமோ?’ எனின்,
‘பாபம் என்பது, அநிஷ்டாவஹம் -தமக்கு விருப்பம் இல்லாததைக் கொடுப்பது’ என்று இருக்குமவர் ஆகையாலே, இறைவனை விட்டு அகன்று நீங்கியிருத்தல் தமக்கு விருப்பமாயினும் அதனைச் செய்ய ஒட்டாது தடுக்கின்றமையின் அன்பினை ‘அருவினை’ என்கிறார்.‘களவேழ்’ என்பதற்குக் ‘களவிலே வேட்கையுடையனாய்-அபி நிவிஷ்டனாய்- ஊற்றமுடையனாய்’ என்று கூறலும் ஆம்

இளஏறு ஏழும் தழுவிய – ம்ருத்யு சமமாய் -யமனுக்கு ஒத்தனவாக இருந்துள்ள இடபங்கள் ஏழனையும் ஊட்டியாக ஒருக்காலே தழுவினான். பின்னர் அவளை அடைதலால், அவள் முலையிலே அணைந்தது போன்று இருக்கையாலே  ‘தழுவிய’  என்கிறார்.
எந்தாய் என்பன் – ஏழ் எருதுகளையும் அடர்த்த செயலுக்குத் தோற்று, ஸ்ரீ நப்பின்னைப் பிராட்டி சொல்லும் பாசுரத்தையும் சொன்னேன்.
யுக்தி மாத்ரமேயோ சொன்ன அளவேயோ!-நினைந்து நெஞ்சாலும் தூஷித்தேன் – நிந்தித்தேன்.
அவ்வளவேயோ நைந்தே – பிறர் அறியும்படி சிதிலனாய்-காயிகத்தாலும் உடலாலும்-தூஷித்தேன் – நிந்தித்தேன்.

‘அயர்வறும் அமரர்கள் அதிபதி’ என்றேன்;-‘எத்திறம்’ என்றேன்;-பிராட்டிமார் நிலையை ப்ராப்தனாய் – அடைந்து தூது விட்டேன்’ என்று, அவற்றுக்கு அநு தபிக்கிறார் வருந்துகிறார் என்று பொருள் கூறலும்

—————

நினைந்து நைந்து உள்கரைந்து உருகி இமையோர் பலரும் முனிவரும்
புனைந்த கண்ணி நீர் சாந்தம் புகையோடு ஏந்தி வணங்கினால்
நினைந்த வெல்லாப் பொருள்கட்கும் வித்தாய் முதலில் சிதையாமே
மனம் செய் ஞானத்து உன் பெருமை மாசூணாதோ மாயோனே
 –1-5-2-

நெஞ்சால் நினைந்தும், வாயால் பேசியும், உடலால் நைந்தும், -தப்பச் செய்தேன் ’ என்றார் கீழ் பாசுரத்தில்;-ப்ரேமார்த்த சித்தரான -அன்பினால் நனைந்த மனத்தையுடைய ப்ரஹ்மாதிகள் அன்றோ அதுதான் சொல்லப் பெறுவர்!-தப்பச் செய்தேன் ‘ என்ற இடம் தப்பச் செய்தேன் என்கிறார் இப் பாசுரத்தில்;

அவன் இவை கொண்டு காரியங் கொள்ளுமதிலும் ‘சூட்டு நன் மாலைகள் தூயன ஏந்தி’ என்னுமாறு போன்று ‘அவனுக்கு என்று தரிக்குமதுவே’ இவர்களுக்குப் பேறாக இருக்குமாதலானும்,-பாவ பந்தம் இரண்டு தலைக்கும் உண்டு ஆதலின்,
அவன் தானும் இவை கொண்டு காரியங் கொள்ளுமதிலும் இவர்கள் தரித்துக் கொண்டு நிற்கக் காணுமதனையே பேறாக நினைத்திருப்பனாதலானும்  ‘ஏந்தி வணங்கினால்’ என்கிறார்.

நினைந்த எல்லாப் பொருள்கட்கும் வித்தாய் – தன் திருவுள்ளத்தால் விஷயீகரிக்கப்பட்ட எல்லாப் பொருள்கட்கும் காரணமாய். ‘மேல்  மனம் செய் ஞானம்’ என்று  சங்கல்ப ரூப ஞானத்தை அருளிச் செய்வதனால், ஈண்டு,  ‘நினைந்த’என்பறதற்குக் கருத்து என்?’ என்னில், காரியமாக வேறுபட்டு விரிந்த தேவர்கள் முதலான எல்லாப் பொருள்களும் அழித்து  ‘ஸதேவ’ என்று கூறும்படி இருந்த அன்று, புத்திரர் பௌத்திரர் முதலானவர்களோடு வாழ்ந்தவன் அவர்களை இழந்து தனியன் ஆயின் தன் தனிமையை நினைந்து வெறுக்குமாறு போலவும், வேறு தேசத்தை அடைந்திருக்கிற புத்திரனைத் தாய் தந்தையர்கள் நினைக்குமாறு போலவும், இவற்றினுடைய இழவை நினைப்பதொரு நினைவு உண்டு; அதனை அருளிச் செய்கிறார்.

————-

மாயோனிகளாய் நடை கற்ற வானோர் பலரும் முனிவரும்
நீ யோனிகளைப் படை என்று நிறை நான்முகனைப் படைத்தவன்
சேயோன் எல்லா வறிவுக்கும் திசைகள் எல்லாம் திருவடியால்
தாயோன் எல்லா எவ்வுயிர்க்கு தாயோன் தான் ஓர் ருவனே
–1-5-3-

‘நீர் நம்முடைய மேன்மையைப் பார்த்து அங்ஙனம் நெகிழப் போகாதே, நாம் தாழ நின்று எல்லாரோடும் பொருந்தும் சீல குணத்தையும் ஒரு கால் பாரீர்,’ என்று திரு உலகு அளந்தருளின சீல குணத்தை காட்டிக் கொடுக்க,
அதனை நினைந்து அகல மாட்டாதே, அணுகவுமாட்டாதே, நடுவே நின்று,அணாவாய்த்துக் காலம் கழிக்கிறார்.
‘அவனை ஒழிய அப்படிக் காலம் கழிக்க வல்லரோ?’ என்னில், 
சீர் கலந்த சொல் நினைந்து போக்கும் போது போக்க வல்லரே; சீல குண அநுசந்தானத்தால் போக்கலாமன்றே?

நாய்ச்சிமார் தொடும் போதும் பூத் தொடுமாறு போன்று கூசித் தொடும் திருவடிகளைக் கொண்டு அன்றே காடும் ஓடையும் அளந்து கொண்டான்!’ என்று ஆச்சரியப்படுகிறார்.-கடுநடை யிட்டு ஓடுகிறவர் இவன் சீல குணத்தை நினைந்து கால் தாழ்க்கிறார்-அசேஷ ஜன சம்ஸ்லேஷ ரூபமான லோக விக்ரமண ஸ்வ பாவத்தை ஈஸ்வரன் காட்டக் கண்டு விஸ்மிதராகிறார் –.தான் ஓர் ருவனே-இது ஒரு பிரகாரமே-மேன்மைக்கு ஒப்பு இல்லாதா போலே நீர்மைக்கும் அவதி இன்றிக்கே இருக்கிறபடி என் -என்று விஸ்மிதர் ஆகிறார் –ப்ரீதி அதிசயத்தாலே –ஒருவனே தானோர் ஒருவன் –என்று அவனைக் கொண்டாடுகிறார் –

—————–

தானோர் உருவே தனிவித்தாய்த் தன்னில் மூவர் முதலாய
வானோர் பலரும் முனிவரும் மற்றும் மற்றும் முற்றுமாய்
தானேர் பெரு நீர் தன்னுள்ளே தோற்றி அதனுள் கண் வளரும்
வானோர் பெருமான் மா மாயன் வைகுந்தன் எம்பெருமானே –
1-5-4-

இனி, ‘நான் அல்லேன்’ என்னிலும், தன்னுடைய சௌசீல்ய குணத்தால் என்னை விடான்,’ என்று – ஸமாஹிதராகிறார்- ‘தான் ஓர் தனி’ என்னும் மூன்று பதங்கள் -அழகிய த்ரிவித மூன்று காரணமும் தானேயாகி’ என்றபடி.

தன்னின் மூவர் முதலாய-தன்னில் -என்றது தன் பக்கலிலே என்ற படியாய் –
தன் சங்கல்ப ஞான ரூப ஞானத்தால் சேந்த்ர-என்று இந்திரனையும் கூட்டி –
பிரமன் சிவன் இந்திரன் ஆகிய மூவர் முதலாய – என்று கூறலும் ஆம்.

நெடு நாள் தன் வாசி அறியாதே போந்த எனக்கு அறிவைத் தந்து தன்னை உள்ளபடி அறிவித்தவன், தான் தந்த அறிவைக் கொண்டு நான் அகன்று போகப் புக்கால்,
அவன் விட்டு ஆறியிருப்பனோ என்பார்,‘எம்பெருமானே’ என்கிறார்.-இத்தலை இறாயா நிற்க -தன் பேறாகச் சேர விட்டுக் கொள்ளுமவன் இறே ஸ்வாமி யானவன் –இந்த ஸுசீல்யமானது அத்யந்த நிஹீனனான என்னோடே ஸம்ஸ்லேஷியா விடில் அவனுக்கு சித்தியாது -ஆதலால் ஸுசீல்ய குண சித்யர்த்தமாக இனி அவனுக்கு ஆத்மாந்தமாக சகல சேஷ வ்ருத்தியும் பண்ணுவேன் -என்கிறார் –

———-

மானேய் நோக்கி மடவாளை மார்பில் கொண்ட மாதவா
கூனே சிதைய வுண்டைவில் நிறத்தில் தெறிந்தாய் கோவிந்தா
வானார் சோதி மணி வண்ணா மதுசூதா நீ யருளாய் உன்
தேனே மலரும் திருப்பாதம் சேருமாறு வினையேனே
–1-5-5-

இவ்வளவிலே முகம் காட்டில் பழையபடியே அகலும் -அவர் தாமே அர்த்திக்கும் தனையும் முகம் காட்டக் கடவோம் அல்லோம் -என்று அகல நிற்க -உன்னைச் சேருமாறு அருளாய் என்கிறார் –

தீம்பு சேர்வது கிருஷ்ணனுக்கே ஆகையாலே  ‘போம்பழி எல்லாம் அமணன் தலையோடே’ என்னுமாறு போன்று,கிருஷ்ணன் தலையிலே ஏறிட்டுச் சொல்லுகிறார்

அருளாய் சேருமாறு வினையேன் – கலத்தில் இட்ட சோற்றை விலக்குவாரைப் போன்று, நீ வந்து கிட்டக் கொள்ள அகலுகைக்கு அடியான பாவத்தைப் பண்ணின நான் சேருமாறு அருள வேண்டும்.-தாம் இசைந்த பின்பும் கிடையாமையாலே ‘வினையேன்’ என்கிறார்.

இத்தால் -1–ப்ரார்த்த நீயனுடைய நித்ய புருஷகார யோகத்தையும் – -2-ஆஸ்ரித வக்ரதையைக் கழிக்கும் ஆர்ஜவ ஆபாதகத்வத்தையும் -3-க்ஷண அபி நிவேசத்தையும்
-4-ப்ராப்யமான தேச விக்ரஹ வை லக்ஷண்யத்தையும் -5-பிரதிபந்தக நிவர்த்ததையும் –சொல்லிற்று ஆயிற்று –

————-

வினையேன் வினை தீர் மருந்தானாய் விண்ணோர் தலைவா கேசவா
மனை சேர் ஆயர் குல முதலே மா மாயனே மாதவா
சினை யேய் தழைய மரா மரங்கள் ஏழும் எய்தாய் சிரீதரா
இனையாய் இனைய பெயரினாய் என்று நைவன் அடியேனே –
1-5-6-

இவர்-ஆபிமுக்யம் – எதிர்முகம் செய்தவாறே, இறைவன் அல்பம் சிறிது தாழ்த்தான்;
இவர் ‘என்னை’ இழந்தாய்? கிடாய் ’ என்கிறார்.-இவர் அபேஷித்த போதே முகம் காட்டாமையாலே அவனுடைய குண சேஷ்டிதங்கள் ஸ்ம்ருதி விஷயமாய் நலிய சிதிலர் ஆகிறார் –அகல நினைக்கிற இது உள்ளது இவர் ஒருவர்க்குமே யாதலின்‘வினையேன் வினை’என்கிறார்.

இனையாய்- ஏவம்விதமான குண சேஷ்டிதங்கள் -இவ்விதமான குணங்களையும் செயல்களையுமுடையவனே.-இனைய பெயரினாய்– அவற்றிற்கு வாசகங்களான திருப் பெயர்களை உடையவனே.-என்று நைவன் – ‘காண வேண்டும், கேட்க வேண்டும்’ என்ன மாட்டாதே – உருகுகின்றேன். அடியேனே –யார் உடைமை அழிகிறது?
இவ் வுயிர் ஏதேனும் தனக்குத் தானே உரியதாகி அழிகிறதோ, பிறர்க்கு உரிமைப்பட்டு அழிகிறதோ? உடையவர்கள் வேண்டுமாகில் தங்கள்-வஸ்துவை – பொருளை நோக்கிக் கொள்ளுகிறார்கள் என்பார்,அடியேனே’- என்கிறார்,
உன்னால் இரட்சிக்க ஒண்ணாமல் அழிகிறதோ? என்னால் இரட்சிக்கலாய் அழிகிறதோ?

இத்தால் -1-அனுபவ விரோதி நிவர்த்தகமும் –-2-அனுபாவ்ய விபூதி யோகமும் –-3-ஆஸ்ரித சத்தாதி ஹேதத்வமும்–4- தத் விஷய ஸுலப்யாதிகளும் -5-அத்தாலே வந்த உன்மேஷமும்
-6-தத் ஹேதுவான ஸ்ரீ லஷ்மி சம்பந்தமும் -7-விசுவாச ஜனகத்வமும் –-8-தன் நிபந்தந உஜ்ஜ்வல்ய அதிசயமும் –தோற்றுகிறது –

————–

அடியேன் சிறிய ஞானத்தன் அறிதலார்க்கும் அரியானை
கடி சேர் தண்ணம் துழாய்க் கண்ணி புனைந்தான் தன்னைக் கண்ணனை
செடியார் ராக்கை யடியாரைச் சேர்த்தல் தீர்க்கும் திருமாலை
அடியேன் காண்பான் அலற்றுவன் இதனின் மிக்கதோர் அயர்வுண்டே 
–1-5-7-

நைவன்’ என்றார்; இவரை நைவிக்க மனம் இல்லாமையாலே வந்து முகங்காட்டினான்;
அவனைப் பார்த்து ‘நம்மால் வரும் குணாதிக்யமும் -குணத்தின் மேன்மையும் -இவனுக்கு வேண்டா,’ என்று அகலுகிறார்.

அடியேன் சிறிய ஞானத்தன் – சம்சாரிகளில் அறிவு கேடர் -சர்வஞ்ஞர் -‘முற்றறிவினர்’ என்னும்படியன்றோ என் அறிவு கேடு!
‘அல்லேன்’ என்று அகலும் இவர், ‘அடியேன்’ என்கிறது, வாசனையாலே.
அன்றிக்கே , ‘அடியேன்’ என்கிறது, அடிமைக்கு இசைந்து அன்று;
ஆத்துமாவிற்கு ஞான ஆனந்தங்களைப் போன்று சேஷத்வத்தை -அடிமையையும் நிரூபமாக நினைந்திருக்கையாலே. நான்’ என்பது போன்று ‘அடியேன்’ என்கிறார் எனலுமாம்.தம்மைச் ‘சிறிய ஞானத்தன்’ என்றும், இறைவனை ‘அறிதல் ஆர்க்கும் அரியானை’ என்றும் அருளிச் செய்கிறார்-கண்ணனை- அறிய அரியனாயிருந்தும் ஆயர்கட்கும் ஆய்ச்சிகட்கும் தன்னை எளியன் ஆக்கி வைத்தவனை.

அவனையே உபாயமாகப் பற்றித் தூறு மண்டின சரீரத்தை அறுத்துக் கொள்ளும் அடியார் உண்டு கேவலர்;-அவர்கள் அடியாரோ?’ என்னில், தலைவனுக்கு அதிசயத்தை விளைக்குமவர்களே அடியார் ஆவர்;-தம்மைப் போன்று கிட்டித் தலைவனுக்குத் தாழ்வினை விளைக்கப் பாராமல், பிறவியாகிற தளையை அறுத்துக் கொண்டு கடக்க நிற்கின்றவர்கள் அவர்கள் ஆதலின், அவர்களையே அடியவர்கள் என்று இருக்கிறார்.கைவல்யாதி ப்ரயோஜனங்களைக் கொண்டு அகன்று போவார்கள் என்ன பாக்யம் பண்ணினாரோ –

அடியேன் காண்பான் அலற்றுவன்- அடியேன்’ என்று அலற்றுவன், காண வேண்டும்’ என்று அலற்றுவன். இதனின் மிக்க ஓர் அயர்வு உண்டே – உண்டியே உடையே என உகந்து ஓடும் இம் மண்டலத்தாரோடு சேர்ந்து திரிந்த -சம்சாரியாக இருந்த -நாளில் அறிவே நன்றாக இருந்தது அன்றே!
‘அது நன்றாயினவாறு என்?’ என்னில், அப்போது கடக்க நின்று பகவத் தத்துவத்தைக் குறி அழியாமை வைத்தேன்; இப்போது அன்றோ நான் கிட்டி அழிக்கப் பார்த்தது! இதனைக் காட்டிலும் அறிவு கேடு உண்டோ?-சம்சார தசையிலே அஜ்ஞ்ஞானம் தன்னை அழிக்குமது இறே இது அவனை அழிக்குமது இறே –

————————

உண்டாய் உலகு ஏழ் முன்னமே யுமிழ்ந்து மாயையால் புக்கு
உண்டாய் வெண்ணெய் சிறு மனிசர் உவலை யாக்கை நிலை எய்தி
மண் தான் சோர்ந்தது உண்டேலும் மனிசர்க்காகும் பீர் சிறிதும்
அண்டா வண்ணம் மண் கரைய நெய்யூண் மருந்தோ மாயோனே
–1-5-8-

நீர் உம்மைக் கொண்டு அகலுவீராகில், திருவாய்ப்பாடியில் வெண்ணெய் விலக்கினால் புக்க உலகம் புகுவீர்,’ என்றான். அவன் கருத்தைத் தாம் அறிந்தமை தோற்ற அநுபாஷிக்கிறார் இப் பாசுரத்தில்.மாயோனே – ஆஸ்ரித ஸ்பர்சமுள்ள -‘அடியார்கள் தீண்டிய பொருளால் அல்லது தாரகம் இல்லாதபடியான- ஆஸ்ரித வியாமோஹத்தாலே – அடியார்களிடத்துள்ள பெரு மோஹத்தாலே செய்தாய் இத்தனையன்றோ?’ ஸ்ரீ சக்கரவர்த்தி திருமகனாய்ப் புக்கு ‘வெண்ணெய் அமுது செய்ய’ என்றால் கொடார்கள் அன்றே?-மண்ணை அமுது செய்தது, அதன் சத்தைக்காக;-வெண்ணெய் அமுது செய்தது, உன் சத்தைக்காக.-மண்ணை உண்கிற போது சேஷித்தது உண்டாகில் இறே உமிழ்கிற போதும் சேஷிப்பது-

————

மாயோம் தீய வலவலைப் பெருமா வஞ்சப் பேய் வீய
தூய குழவியாய் விடப்பால் வமுதா வமுது செய்திட்ட
மாயன் வானோர் தனித்தலைவன் மலராள் மைந்தன் எவ்வுயிர்க்கும்
தாயோன் தம்மான் என்னம்மான் அம்மா மூர்த்தியைச் சார்ந்தே
–1-5-9-

பரிவரான யசோதாதிகள் வெண்ணெய் உனக்கு அம்ருத சமம் -என்னுடைய ஸ்பர்சம் விஷ சமம் -நான் அகலுகையே உக்தம் -என்ன -பூதனை நஞ்சு பாதகம் ஆகாதாப் போலே உம்முடைய தோஷமும் பாதகம் அன்று –பெற்ற தாய் போலே வந்த பேய்ச்சி -என்று போலியும் அமையும் -என்ன-ஆகில் அகல்வேன் அல்லேன் என்று சமாஹிதர் ஆகிறார்-‘பூதனையை முடித்தது போன்று ‘நான் அல்லேன்’ என்று அகலப் புக்க
என் நிர்ப்பந்தத்தைப் போக்கினான்,

என் அம்மான் –mநான் தன்னை அகன்று முடிந்து போகாதபடி நோக்கினவன்.
இனி, ‘நித்திய சூரிகளும் மற்றும் உள்ள எல்லா ஆத்துமாக்களும் ஒரு தட்டும்
நாள் ஒரு தட்டுமாம்படி என் பக்கலிலே விசேடமான திருவருளைச் செய்தவன்’ என்பார், ‘என் அம்மான்’ என்கிறார் எனலுமாம். அம்மா மூர்த்தியைச் சார்ந்து- விலக்ஷணமான திருமேனியை யுடைய அம் மகா புருஷனைக் கிட்டி, ‘கிட்டி மாயோம் – இனி அகன்று மாயக் கடவோம் அல்லோம்; ‘பிரிகை யாவது – விநாசம்’ என்று இருக்கையாலே ‘மாயோம்’ என்கிறார்.-இது, ‘நானும் என்னோடு சம்பந்தமுடையாரும் முடியக் கடவோ மல்லோம்,’ எனப் படர்க்கையை உளப் படுத்திய உளப் பாட்டுப் பன்மை.
இனி, இறைவனை உளப் படுத்தியதாகக் கொண்டு, ‘இரண்டு தலையையும் அழித்துக் கொள்ளக் கடவோம் அல்லோம்’ என்று பொருள் கூறலுமாம்.

ஸ்வதஸ் சர்வஞ்ஞனான – தனக்குத்தானே முற்றறிவனானவனும் ‘தாய்’ என்று பிரமிக்கும்படி தோற்றின பெரிய வஞ்சனை யுடையவளான பூதனை முடியும்படியாக.-எனக்கும் அல்ல -பிறர்க்கும் அல்ல -அவனுக்கே -என்று அவள் அநந்யார்ஹம் ஆக்குகையாலே அம்ருதம் ஆயிற்று –‘பூதனையுடைய விஷம் அமிருதமாம்படி அமுது செய்தவன் தான் யார்?’ என்னில், –வானோர் தனித் தலைவன் – அயர்வு அறும் அமரர்களுக்குத் தனித் தலைவன் ஆனவன்.-மலராள் மைந்தன்-‘தேவிமார் ஆவார் திருமகள் பூமி ஏவ மற்று அமரர் ஆட் செய்வார்,’ என்கிறபடியே, -அவர்கள் விரும்பித் தொண்டுகளைச் செய்யப் பெரிய பிராட்டியாரும் தானுமாக இருக்குமவன். மைந்தன் – அவளுக்கு மிடுக்கானவன். இனி, இதற்கு, ‘அவளுடைய சேர்த்தியினாலே நித்தியமான புதிய யௌவனத்தை யுடையவன்’ என்று பொருள் கூறலுமாம்.

————–

சார்ந்த விரு வல்வினைகளும் சரிந்து மாயப் பற்று அறுத்து
தீர்ந்து தன்பால் மனம் வைக்கத் திருத்தி வீடு திருத்துவான்
ஆர்ந்த ஞானச் சுடராகி யகலம் கீழ் மேல் அளவிறந்து
நேர்ந்த யுருவாய் யருவாகும் இவற்றின் உயிராம் நெடுமாலே
–1-5-10-

இவரை இப்படி இசைவித்து வைத்து, ஒரு புதுமை செய்ய வேண்டாதபடியான பரம பதத்தை
கோடிக்க-அலங்கரிக்கத் தொடங்கினான்.தீர்ந்து – தான்-க்ருதக்ருத்யனானான் – செய்ய வேண்டுவனவற்றை எல்லாம் செய்து முடித்தவனாய்.-இனி, தீர்ந்து என்பதனைத் ‘தீர்ந்து தன்பால் மனம் வைக்கத் திருத்தி’ என்று கூட்டி, ‘அல்லேன்’ என்று அகலாதே தனக்கே தீர்ந்து, தன் பக்கலிலே நெஞ்சை வைக்கும்படி திருத்தி என்று பொருள் கூறலும் ஆம்.இறைவன் இவர் பக்கல் கொண்ட அவாவின் மிகுதியால் வீடு திருத்துகையில் விளம்பிக்க, அக்கால நீட்டிப்பிற்குப் பொறாராய் ‘முனியே நான்முகனே முக்கண்ணப்பா’ என்ற திருவாய் மொழி முடிய இறைவன் தமக்குச் செய்த உபகாரத்தைச் சொல்லிக் கூப்பிட்ட கூப்பீடு உலகத்தார்க்கு எல்லாம் பெரியதோர் உபகாரமாய் முடிந்தது)நெடுமால்- இப்படி இருக்கிற நெடுமால் வீடு திருத்துவான் ஆனான். இறைவனுடைய வியாப்தியும் இவரைப் பெற்ற பின்பு – புதுக்கணித்தது -அழகு பெற்றது ஆதலின், ‘நெடுமால் -என்கிறார்.
இனி, ஒருவனைப் பிடிக்க நினைத்து ஊரை வளைவாரைப் போன்று இவரைத் திருத்துகைக்காகப் பரந்திருப்பவனாய் இருந்தான் ஆதலின், ‘நெடுமால்’ என்கிறார்-நெடுமாலே-‘முனியே நான்முகனே’ என்னும் அளவும் அவன் செய்த உபகாரத்தை அருளிச் செய்கிறார். -அவன் தெளிந்து வந்து கொடு போகப் பற்றாமல் கூப்பிடுகிறார் அன்றே நடுவெல்லாம்.என்னைத் திருத்தி -பின்னை எனக்குத் திரு நாட்டையும் தந்து அருளுகைக்காக ஆகுவதே -எம்பெருமானுடைய சர்வஞ்ஞத்வ சர்வசக்திதவ
பரம காருணிகத்வ ஆஸ்ரித வத்சலத்வம் என்ற இப்படி அபர்யந்த குணங்கள் எல்லாம்
என்கிறார் –

————–

மாலே மாயப் பெருமானே மா மாயனே என்று என்று
மாலே ஏறி மால் அருளால் மன்னு குருகூர்ச் சடகோபன்
பாலேய் தமிழர் இசைகாரர் பத்தர் பரவும் ஆயிரத்தின்
பாலே பட்ட இவை பத்தும் வல்லார்க்கு இல்லை பரிவதே –
-1-5-11-

பிடி தோறும் நெய் ஒழியச் செல்லாத ஸூகுமாரரைப் போன்று, நின்ற நின்ற நிலைகள் தோறும் இறைவன் திருவருள் ஒழிய நடக்க மாட்டாதவர் ஆதலின், ‘மால் அருளால் மன்னு சடகோபன்’ என்கிறார்.

ஸ்ரீ ஆழ்வான் ஒரு-உருவில் – முறை  ‘ஸ்ரீ பராங்குச நம்பியைப் பாலேய் தமிழர் என்கிறது;
இசைகாரர் என்றது, ஸ்ரீ ஆழ்வார் திருவரங்கப்பெருமாள் அரையரை; 
பத்தர் என்றது, ஸ்ரீ பிள்ளை யுறங்கா வில்லி தாசரை’ என்று பணித்தார். 

ஸ்ரீ ஆளவந்தார் -பாலேய் தமிழர் என்கிறது, ஸ்ரீ முதலாழ்வார்களை;
இசைகாரர் என்கிறது, ஸ்ரீ திருப்பாணாழ்வாரை;
பத்தர் என்கிறது, ஸ்ரீ பெரியாழ்வாரை’ என்று அருளிச் செய்வர்.

ஆக, இயல் அறிவார் இசை யறிவார், பகவானுடைய குணங்களில் ஈடுபட்டு இருப்பார் ஆகிற இவர்கள்,

————

பரிவதில் ஈசனைப் பாடி –விரிவது மேவலுறுவீர்
பிரிவகையின்றி நன்னீர்த் தூயப் –புரிவதும் புகை பூவே
–1-6-1-

பரிவது இல் –துக்கம் இல்லாத.–பக்ஷ பாதம் இல்லாத’ –ஹேயப்பிரத்ய நீகன்-உப லக்ஷணத்தால் கல்யாண குண யோகமும் அருளிச் செய்தாராயிற்று.பிரி வகை இன்றி –
பிரிகையாகிற வகை இன்றி; அதாவது, -உன் பெருமை மாசு உணாதோ?’ என்று அகல வகை இட்டுக் கொண்டு அகலாமல் என்றபடி.-

செதுகை யிட்டுப் புகைக்க அமையும்; கண்ட காலி இடவும் அமையும்,’ என்று அருளிச் செய்வர்-ஸ்ரீ பட்டர் –கூடாது என்று சாஸ்த்திரங்கள் விதிக்கின்றனவே!’ என்று ஸ்ரீ நஞ்சீயர் கேட்க,
அவனுக்கு ஆகாது என்கிறது அன்று; பறிக்கிற அடியார் கையில் முள்பாயும் என்பதற்காகத் தவிர்த்தன காணும்!  ‘கள்ளார் துழாயும் கணவலரும் கூவிளையும், முள்ளார் முளரியும் ஆம்பலும் முன் கண்டக்கால்’ என்று இறைவனுக்கே உரிய திருத் துழாயோடு -விசஜாதீயங்களை -அதற்கு வேறுபட்ட பூக்களையும் ஒரு சேர எடுத்துத் ஸ்ரீ திருமங்கை மன்னன் அருளிச் செய்கிறது கண்டீரே! இதனால், இறைவன் பொருளில் ஏற்றத் தாழ்வு -த்ரவ்ய தாரதம்யம் -பார்ப்பது அன்று என்பது விளங்குமே!-அப்ராக்ருத த்ரவ்யம் -பிரகிருதி சம்பந்தம் இல்லாத பொருள்தான் வேண்டும் என்று இருந்தானாகில், ‘புள்ளாய் ஓர் ஏனமாய்’ அவதரிப்பானோ! ஸ்ரீ வைகுண்டத்தில் இரானோ?’ என்று அருளிச் செய்தார்.
பின்னர் ஸ்ரீ ‘நஞ்சீயர்’வராக புராணம் பார்த்துக்கொண்டு வரும்போது  ‘ஸ்ரீ வராக நாயனார்க்கு முத்தக்காசை அமுது செய்விப்பது’ என்று அதில் கூறப் பட்டிருத்தலைக் கண்டதும் ‘இது என்ன மெய்ப்பாடு தான்!’ என்று போர வித்தராய் – மிகவும் ஈடுபட்டவரானார்.

உள்ளாதார் உள்ளத்தை உள்ளமாகக் கொள்ளோமே – இப்படி அநுஸந்தியாதாருடைய ஹிருதயத்தை நினைத்திரோம் – நாங்கள் பதின்மரும் என்று தம்மை ஒழிந்த ஆழ்வார்களும் –

———–

மதுவார் தண்ணம் துழாயான் –முது வேத முதல்வனுக்கு
எதுவேது என் பணி என்னாது அதுவே ஆட்செய்யுமீடே
–1-6-2-

ஆஸ்ரயிக்குமவனுக்கு த்ரவ்யத்தில் குறை பார்த்து அகல வேண்டா -என்றார் முதல் பாட்டில் –நான் அதிகாரி அல்லேன் -என்று அகல வேண்டா -என்கிறார் இதில்-

மது வார் தண் அம் துழாயான்-
‘‘புரிவதுவும் புகை பூவே’ என்றார் கீழே -;
‘மதுவார் தண் அம் துழாயான்’ என்கிறார் இங்கு; இது சேரும்படி என்?’ எனின்,
பூவாகில் மதுவோடே கூடியல்லது இராமையாலே சேரும்’ என்று சொல்லுவர்கள்;
‘வதுவார் தண் அம் துழாயான்’ என்று பாடமான போது சாலப் பொருந்தும்;
வதுவை-மணம்; ஆர்தல் -பூர்ணம் –
வதுவை -வது- என்று கடைக்குறைந்து நறு நாற்றத்தை யுடைய -துழாய் என்றுமாம் –
இது தமிழர் போரச் சேரும் என்பர்-

மதுவார் தண் அம் துழாயான்’என்கையாலே, -சர்வாதிகன் -எல்லாரினும் அறப்பெரியவன் என்பதனைத் தெரிவித்தபடி, 
‘முதுவேத முதல்வன்’ என்கையாலே, பரிபூர்ணன் என்பதனைத் தெரிவித்தபடி.
இவ்விரண்டும் -ஸ்வாராதன் – எளிதில் ஆராதிக்கத் தக்கவன் என்பதற்கு உறுப்புகள்.

இப்படி விலஷணன் ஆனவனுக்கு நான் அடிமை செய்கை அயோக்யன் என்று பாராதே அந்தரங்க வ்ருத்தியோடே பஹிரங்க வ்ருத்தியோடே வாசி இன்றிக்கே-தம் தம்முடைய அநர்ஹத்தையைப் பாராது -எல்லா வ்ருத்தியும் செய்யக் கடவனாகை ஆட்செய்கைக்கு அதிகாரம் –

————–

ஈடும் யெடுப்புமிலீசன் -மாடு விடாது என் மனனே
பாடும் என் நா அவன் பாடல் ஆடும் என் அங்கம் அணங்கே –
1-6-3-

அவனுடைய இஸ் ஸ்வபாவத்தை அனுசந்தித்து -நினைந்து, தாம் அதிகரித்த காரியத்தை பரோபதேசத்தை-மறக்கும்படி தம்முடைய மனம் வாக்குக் காயங்களுக்கு அவன் பக்கல் உண்டான -ப்ராவண்யத்தை -அருளிச் செய்கிறார்-தனித்தனி =என் என் என் -என்று கரண த்ரயத்தாலும் தம்முடைய உகப்பு தோற்றுகிறது –ஏகாரம் -விடாது பாடும் -ஆடும் -என்னும் வினைகளுடன் கூடிக் கிடக்கிறது –

———–

அணங்கு என ஆடும் என் அங்கம் -வணங்கி வழி படும் ஈசன்
பிணங்கி யமரர் பிதற்றும் -குணங்கு எழு கொள்கையினானே
–1-6-4-

தம்முடைய மனம் வாக்குக் காயங்கட்கு அவன் பக்கல் உண்டான-ப்ராவண்யம் –காதாசித்கமாய் விடுகை இன்றிக்கே – ஒரு காலத்தில் தோன்றி மறைதல் இன்றி,
நித்திய ஸூரிகளைப் போலே யாத்திரையான படியைச் சொல்லுகிறார்.-பிணங்கி அமரர் பிதற்றும் குணம் கெழு கொள்கையினான் – தாம் தாம் அகப்பட்ட குணங்களைச் சொல்லி, ‘நான் முந்துறச் சொல்ல, நான் முந்துறச் சொல்ல’ என்று பிணங்கி நித்திய ஸூரிகள் ஜன்னி சுரம் வந்தவர்களைப் போன்று அடைவு கெடக் கூப்பிடுகிற குணங்கள் வந்து சேருகைக்கு இருப்பிடமானவன்.சர்வேஸ்வரனான எம்பெருமானை நான் அனுபவித்து ப்ரீதி அதிசயத்தாலே தைவா விஷ்டரைப் போலே அக்ரமமாக நின்று ஆடி அவனை வணங்கி அடிமை செய்யும் இதுவே ஸ்வ பாவமாகப் பெற்றேன் -என்கிறார் –

———–

கொள்கை கொளாமை இலாதான் எள்கல் இராகம் இலாதான் –
விள்கை விள்ளாமை விரும்பி –உள் கலந்தார்க்கு ஓர் அமுதே
—1-6-5-

திரியவும் தாம் அதிகரித்த கார்யத்தே போந்து -அவன் அநந்ய பிரயோஜனருக்கு நிரதிசய போக்யனாம் என்கிறார் –ஈடும் எடுப்பும் இல் ஈசன் -என்ற இடம் ஸ்வீகார சமயத்தில் குறை பாரான் என்றது -இங்கு பரிமாற்றத்தில் தரம் இட்டுக் கொள்ளான்-என்கை –விள்கை -பிரயோஜனங்களைக் கொண்டு விடுகை-விள்ளாமை -அநந்ய பிரயோஜனம் ஆகை
விரும்பி -ஆதரித்து உள் கலந்தார்க்கு-இவனையே பிரயோஜனமாகப் பற்றி இவனுடனே ஒரு நீராக கலந்தவர்களுக்குஓர் அமுதே –அத்விதீயமான அமிர்தமாய் இருக்கும் -ஆராவமுது இறே –

————

அமுதம் அமரர்கட்கு ஈந்த -நிமிர் சுடராழி நெடுமால்
அமுதிலும் ஆற்ற இனியன் நிமிர் திரை நீள் கடலானே
–1-6-6-

அவன் படி இதுவாக இருக்க, அவனை விட்டு-பிரயோஜனாந்தரத்தை – வேறு பலன்களைக் கொண்டு அகலுவதே!’ என்று-ப்ரயோஜனாந்தர பரரான – வேறு பலன்களை விரும்பிய தேவர்களை நிந்திக்கிறார்.நிமிர் சுடர் ஆழி நெடுமால்-இவருடைய அமிர்தம் இருக்கிறபடி. 
‘நால் தோள் அமுதே’ அன்றோ இவர்க்கு அமுது?  அமுது என்றும் தேன் என்றும் ஆழியான் என்றும்’ என்கிறபடியே, கையுந்திருவாழியுமாய் அன்றோ அவருடைய அமிருதம் இருப்பது?ஸ்ரீ நம்பி திருவழுதி நாடு தாசர், ‘இத்தேவ சாதி வெறும் மரையோ? ‘உப்புச் சாறு கிளருவது எப்போதோ?’ என்று கவிழ்ந்து பார்த்துக் கிடப்பதே இவன் அழகையும் இனிமையையும் விட்டு!’ என்பராம்.‘கடலான்’ -‘தன் வாசி அறியாது இருப்பார்க்கும் எழுப்பிக் காரியங் கொள்ள லாம்படி கண் வளர்ந்தருளுகிறான் என்றபடி. 
தாளும் தோளும் முடிகளும் சமன் இலாத பலபரப்பி’ என்கிறபடியே, கண் வளர்ந்தருளுகைக்குத் தகுதியான பரப்பை யுடைத்தாய், ஸ்வ சந்நிதானத்தாலே – தனது ‘சம்பந்தத்தாலே அலைகள் கொந்தளிக்கிற கடல் என்பார், ‘நிமிர் திரை நீள் கடலான்’என்கிறார். ‘மாலும் கருங்கடலே என் நோற்றாய்?’ என்பது ஸ்ரீ பொய்கையார் திரு வாக்கு.தன்னையே ப்ராப்யமாகப் பற்றி விடாதவர்களுக்குத் தன்னையே போக்யமாகக் கொடுக்கும் –அல்லாதார்க்குத் தன்னை ஒழிய ப்ரயோஜனாந்தரங்களைக் கொடுக்கும் –

————–

நீள் கடல் சூழ் இலங்கைக் கோன்-தோள்கள் தலை துணி செய்தான்
தாள்கள் தலையில் வணங்கி நாள் கடலைக் கழிமினே
–1-6-7-

அவன் போக்யதை நெஞ்சில் பட்டால் -பிராப்தி அளவும் செல்ல சக்கரவர்த்தி திருமகனுடைய வீர சரிதத்தை அனுசந்தித்து காலத்தைப் போக்குங்கோள் என்கிறார்

நாள் கடலைக் கழிமின் – இறைவனுடைய போக்யதை -இனிமை நெஞ்சிலே பட்டால், அவனை அடைவதற்கு முன்பு இடையிலே யுள்ள நாள்கள் ஒரு கடல் போன்று தோன்றும் ஆதலின், ‘நாள் கடல்’ என்கிறார்.
இனி, இதற்குச் ‘சக்கரவர்த்தி திருமகனை அடைந்து -சம்சார துரிதத்தை -பிறவிப் பெருங்கடலைக் கழித்துக் கொள்ளுங்கள்’ என்று கூறலுமாம்.

————-

கழிமின் தொண்டீர்காள் கழித்துத் தொழுமின் அவனைத் தொழுதால்
வழி நின்ற வல்வினை மாள்வித்து அழிவின்றி யாக்கம் தருமே
–1-6-8-

சக்கரவர்த்தி திருமுகனை ஆஸ்ரயித்து விஷய ப்ராவண்யத்தைத் தவிரவே
ப்ராப்தி பிரதிபந்தகங்களை போக்கி நித்ய கைங்கர்யத்தை தரும் என்கிறார் –

வழி நின்ற வல்வினை மாள்வித்து – இவ் வாத்துமாவுக்குச் ஸ்வரூபத்தோடு கட்டுப்பட்டதோ-ஸ்வரூப அனுபந்தியோ – என்னும்படி பொருந்தி யிருக்கிற கொடிய கர்மங்களை வாசனையோடே போக்கி.
இனி, ‘வழி நின்ற வல்வினை’ என்பதற்கு ‘நடுவே நின்று,-பகவத் பிராப்தியை – பகவானை அடைதலைத் தடை செய்கிற -நிரோதிக்கிற -கர்மங்கள்’என்று பொருள் கூறலுமாம்.

அழிவு இன்றி ஆக்கம் தரும்-ந ச புநரா வர்த்ததே ‘மறுபடியும் மீண்டு வருகின்றான் இலன்’ என்கிறபடியே, மீண்டு வரும் தன்மை இல்லாத மோக்ஷத்தைத் தரும் –கைங்கர்யம் தரும் -இவ்வர்த்தத்தில் சம்சயம் இல்லை –

—————

தரும வரும பயனாய -திருமகளார் தனிக் கேள்வன்
பெருமையுடை பிரானார் -இருமை வினை கடிவாரே–1
-6-9-

தன்னைப் பற்றின மாத்ரத்தில் இது எல்லாம் செய்து அருளக் கூடுமோ -என்னில் தரும வரும பயனாய -திரு-தருமத்தினுடைய-பரம – மேலான பிரயோஜனந்தான் ஒரு வடிவு கொண்டாற் போன்று இருக்கின்ற ஸ்ரீ பெரிய பிராட்டியார்  -ந கச்சின் ந அபராத்யதி -என்னுமவள் அருகே இருந்து தருவிக்கும் என்கிறார் –திருமகள் கேள்வன் ஆகையாலே வரும் ஏற்றம் உள்ளது இவன் ஒருவனுக்குமே ஆதலின், ‘தனிக்கேள்வன்’ என்கிறார்.ஆஸ்ரித அனுக்ரஹமே ஸ்வரூபமாய் உள்ளவர் –

————

கடிவார் தீய வினைகள் -நொடியாரும் அளவைக் கண்
கொடியாவடு புள்ளுயர்த்த-வடிவார் மாதவனாரே
–1-6-10–

அவள் பொறுப்பிக்க பொறுக்கும் இடத்தில் விளம்பம் இல்லை -அரை ஷணத்தில் பொறுப்பர் -இப்படி அவனும் அவளும் குற்றங்களைப் போக்குவது எத்தனை காலம் கூடி?’ என்னில்,‘தன் திருவடிகளிலே தலை சாய்த்த அளவிலே’ என்கிறார் –மாதவனார்-பிராட்டி அருகே இருந்து போக்குவிக்க ஆயிற்றுப் போக்குவது.-ஒருதலை ஜென்மம் -ஒருதலை மரணம் -நடுவே ஆதி வியாதிகள் -இவை செய்த குற்றங்களைப் பார்க்கக் கடவதோ-
குற்றம் கண்டில் விபூதியாக விட வேண்டாவோ -பொறுத்து அருளீர் என்றால் –
அவளுக்காகப் பொறுத்தோம் -என்னும் அத்தனை –பெரிய திருவடியை விஷயீ கரிக்குமா போலே இன்று ஆஸ்ரயிப்பாரை விஷயீ கரிக்கும் ஸ்வபாவர் –

————-

மாதவன் பால் சடகோபன் தீதவம் இன்றி யுரைத்த
ஏதமில் ஆயிரத்து இப்பத்து ஓத வல்லார் பிறவாரே
–1-6-11-

மாத்ரு சம்ரக்ஷணம் அழகிது ‘மாதாவைப் பேணுதல் அழகிது’ என்னுமாறு போன்று,
பகவத் ஸமாச்ரயணம் எளிது – ‘பகவானை அடைதல் எளிது’ என்று உபதேசிக்க வேண்டுகிறது –இத் திருவாய்மொழியைக் கற்க வல்லார்கள் உபதேசம்-நிரபேஷமாக- இல்லாமலே சம்சார சம்பந்தம் அற்றுப் பகவானுடைய அனுபவமே யாத்திரையாம்படி இருக்கிறவர்களோடே கூடி அனுபவிக்கப் பெறுவர்கள் ஆதலின், ‘ஓத வல்லார் பிறவார்’ என்கிறார்-பகவத் அனுபவத்துக்கு மேட்டு மடையான சம்சாரத்தில் பிறவார் 

கவி பாடுகிறவனுக்கும்-கவி பாட்டு உண்கிறவனுக்கும்-கவிக்கும் உள்ள மூன்று குற்றத்தையும் தீதும் -அவமும் -ஏதமும் – என்றும் சொல்லுவர் –ஸ்ரீ பட்டர், ‘ஏதம் இல் ஆயிரம்’ என்று பிரபந்த லக்ஷணம் கூறிய போதே,- த்ரிவித தோஷ ராஹித்யம் – முக்குற்றங்கள் இல்லாமையும் சொல்லியதாம்; இனி, தீதும் அவமும் என்பன செய்வன என்?’ என்னில்,
‘சடகோபன் மாதவன் பால் தீது அவம் இன்றி உரைத்த’ என்று கூட்டிப் பொருள் கொள்க,’ என்று அருளிச் செய்தார்.
அதாவது, தீதாவது, ‘நான்-ஸ்ரீ யப்பதி திருமகள் கேள்வன் அல்லனோ!’ என்று தன் மேன்மையைப் பார்த்துக் கடக்க இருக்குமது.
அவமாவது, ‘ஆஸ்ரயிக்கிறவன் அடைகின்றவன் நித்திய சம்சாரி அல்லனோ!’ என்று இவன் சிறுமையைப் பார்த்துக் கைவிடுமது.
இவை இல்லாமையைச் சொன்ன இப் பத்து என்றபடி.

—————-

பிறவித் துயர் அற ஞானத்துள் நின்ற -துறவிச் சுடர் விளக்கம் தலைப் பெய்வார்
அறவனை ஆழிப் படை அந்தணனை மறவியை இன்றி மனத்து வைப்பாரே
–1-7-1-

நிரதிசய போக்யனை ஆஸ்ரயித்து வைத்து -ஷூத்ர பிரயோஜனத்தை அபேஷிப்பதே-என்று கேவலரை நிந்தித்து-அவர்கள் சிறுமை பாராதே அவர்கள் அபேஷித்ததைக் கொடுப்பதே -என்று அவன் நீர்மையைக் கண்டு விஸ்மிதர் ஆகிறார்-அறவனை – அவர்கள் படியையும், காரியம், பலன் கொடுக்கின்றவன் படியையும் பார்த்து, ‘என்ன பரம உதாரனோ!’என்கிறார்;
ஒருவன் விரும்பும் பயன் யாதாயினும், அதனைப் பெறுவற்குத் தன்னை விரும்பும் அத்தனையே அவன் வேண்டுகின்றான் என்றபடி.
‘எங்களுக்கு நீ வேண்டா; ஷூத்ர பிரயோஜனம் -சிறிய பயனே அமையும்,’ என்று இருக்கிறவர்களுக்கும் அதனைக் கொடுத்து விடுவதே! என்ன தார்மிகனோ!’ என்கிறார்.

அந்தணன்-என்று . சாணிச் சாற்றைப் போன்று ‘சுத்தன்’ என்று கொண்டார்கள் இத்தனை;
இனிமையில் நெஞ்சு சென்றது இல்லை.-ஆழிப் படை அந்தணனை-கையுந்திருவாழியுமான அழகைக் கண்டால் அதிலே கால் தாழாதே, தங்கள் பிரயோஜனத்துக்கு உறுப்பான சுத்தி மாத்திரத்தையே பற்றுவதே!’ என்கிறார்.

மறவியை இன்றி மனத்து வைப்பாரே – அவனுடைய இனிமையையுங் கண்டு வைத்து, தங்கள் புருஷார்த்தத்தை மறவாதே அதனைப் பெறுதற்கு அவனை அடைகின்றார்கள்.
‘மறவியை இன்றி’ என்று, அவர் தம் செயலுக்கு இரங்கும் இவர் மறப்பரோ?’ எனின்,
இவர்க்குக் கையுந்திருவாழியுமான அழகைக் கண்டால் முன் அடி தோற்றாது; 
‘சக்கரத்து அண்ணலே’ என்றால் பின்னைத் தரைப்படும் இத்தனை அன்றோ இவர்?’ 
ஸ்ரீ திருமங்கை மன்னனும், ‘ஆழியொடும், பொன்னார் சார்ங்கமுடைய அடிகளை இன்னார் என்று அறியேன்!’ என்று உத்தேஸ்யமான பொருளையும் மறக்கும்படி கலங்குவர்.
‘பிள்ளாய், நல்லதை மறக்கப் பண்ணா நிற்க இவ் விஷயம், தீயதை மறவாது ஒழிவதே!

மறவியை -மறப்பை -மறப்பு இன்றிக்கே-மறவாதே மனத்து வைப்பாரே-
உபாசன பரமானால் -சுடர் விளக்கம் குண பிரகாசகமான விக்ரஹமாகக் கடவது – அவனுடைய இனிமையை அநுசந்தித்து வைத்தும், பின்னையும் இந் நிலை குறையாதே நிற்பதே! இவ் வரிய செயலைச் செய்கைக்குத் திண்ணியர் ஆவதே இவர்கள்!’ என்று இரங்குகிறார்.

————–

வைப்பாம் மருந்தாம் அடியாரை வல்வினைத்-துப்பாம் புலன் ஐந்தும் துஞ்சக் கொடானவன்
எப்பால் எவர்க்கு நலத்தால் உயர்ந்து உயர்ந்து அப்பாலவன் எங்கள் ஆயர் கொழுந்தே
–1-7-2-

ஒருவன் நினைத்த வகைகள் எல்லாம் அநுபவிக்கலாம்படி இறைவன் தானே தன்னை
இஷ்ட விநியோகத்திற்குத் தகுதி ஆக்கி வைப்பவன் ஆதலின், ‘வைப்பாம்’ என்கிறார்.
இதனால், பிராப்யத்வம் கூறியபடி.-அனுபவ விரோதிகளைப் போக்கித் தன்னை அனுபவிக்கைக்குத் தகுதியான சத்தி யோகத்தையுங் கொடுத்துத் தன்னையும் கொடுக்குமவன் ஆதலின், ‘மருந்தாம்’ என்கிறார். இதனால், பிராபகத்வம் கூறிய படி.

எங்கள் ஆயர் கொழுந்தே-ஸ்ரீ கிருஷ்ணன் திருவவதரித்த ஊரில் உள்ளாரோடு தமக்கு ஒரு-பிராகிருத – சரீர சம்பந்தத்தினை விரும்பி,  எங்கள் ஆயர்’ என்கிறார்.
அன்றி,
எங்கள் கொழுந்தே-– அவதாரந்தான் அடியார்களைக் காப்பதற்காகவே எடுக்கப்பட்டது ஆதலானும்,-வெண்ணெய் களவு கண்டு புசித்ததனால் நகரம் கலங்கிய செய்தி பழையதாக எழுதிக் கிடக்கவும், அதனைக் கூறிய அளவில் ‘எத்திறம்’ என்று மோகித்தவர் இவரே ஆதலானும், எங்கள் கொழுந்து’ என்கிறார் என்று கொண்டு, ‘எங்கள்’ என்பதனைக் கொழுந்திற்கு அடை மொழி ஆக்கலுமாம்.
இனி, தான், பிரமன் முதலிய தேவர்கட்குத் தலைவனாக இருத்தலால் உளதாய பெருமையைப் போன்றே, ஆயர்தங்களுக்குத் தலைவனாய் இருத்தலால் உளதாய பெருமையையும் பெருமையாக நினைக்கிறான் என்பார்,  ‘ஆயர் கொழுந்தே’ என்கிறார்

———–

ஆயர் கொழுந்தாய் அவரால் படை யுண்ணும் மாயப்பிரானை என் மாணிக்கச் சோதியை
தூய வமுதைப் பருகிப் பருகி என் மாயப் பிறவி மயர்வு அறுத்தேனே–
1-7-3-

எம்பெருமானைத் தமக்கு இனிதாக புஜியா நிற்கச் செய்தெ சாம்சாரிக சகல துக்கங்களும் போயிற்று என்கிறார் –
ஷூ த்ரமான பிரயோஜனத்துக்காக பற்றினேன் அல்லேன்
அவனைப் பரம பிரயோஜனத்துக்கு உபாயமாகப் பற்றினேன் அல்லேன் –
இனிய விஷயம் என்று அனுபவிக்க இழிந்தேன் -விரோதியானது தானே போகக் கண்டேன் -என்கிறார் –

வேரிலே வெப்பம் தட்டினால் கொழுந்து முற்ப டவாடுவது போன்று, காட்டிலே பசுக்களின் பின்னே திரிகின்ற ஆயர்கட்கு அடி கொதித்தால் ஸ்ரீகிருஷ்ணன் முகம் முதற் கண் வாடும்-அவரால் புடை உண்ணும்-‘-மத்தாலே ஓர் அடி அடிப்பார் போலே காணும்’ என்று ஸ்ரீ பட்டர் அருளிச் செய்யும்படி.அவாப்த ஸமஸ்த காமனான ஸ்ரீ சர்வேஸ்வரன், தனக்கு ஒரு குறை உண்டாய் வந்து அவதரித்து,-ஆஸ்ரிதர் ஸ்பர்சமுள்ள பொருளால் அல்லது தரியாதானாய், அதுதான் நேர் கொடு நேர் கிடையாமையாலே களவு காணப் புக்குத்
தலைக் கட்ட மாட்டாதே வாயது கையது ஆக அகப்பட்டுக் கட்டுண்டு அடியுண்டு நிற்கும் நிலையை நினைத்து ‘மாயப் பிரானை’ என்கிறார்.என் மாணிக்கச் சோதியை-
அடியார்கள் கட்டி அடிக்க அடிக்க களங்கம் அறக் கடை யுண்ட மாணிக்கம் போன்று,
திரு மேனி புகர் பெற்று வருகிறபடி.என் சோதியை-அப் புகரைத் தனக்கு முற்றூட்டு ஆக்கினான் ஆதலின், ‘என் சோதியை’என்கிறார்.மயர்வை அறுத்தவன் இறைவனாக இருக்க, ‘அறுத்தேன்’ என்று தம் தொழிலாகக் கூறல் பொருந்துமோ?’ எனின், 
‘இந் நின்ற நீர்மை இனி யாம் உறாமை’ என்று விரும்பியவர் தாமே யாதலின்,’ -அபேக்ஷித்தபடியே -விரும்பியவாறே பல அனுபவம் தம்மது ஆகையாலே ‘அறுத்தேன்’ எனத் தம் தொழிலாக அருளிச் செய்கிறார்.-தூய வமுதைப்அந்த அம்ருதம் அதிக்ருதாதிகாரம்-இது சர்வாதிகாரம் –அந்த அம்ருதம் சம்சாரத்தைப் பூண் கட்டும்-ஸக்ருத் சேவ்யம் அது -சதா சேவ்யம் இது

———-

மயர்வற என் மனத்தே மன்னினான் தன்னை -உயர்வினையே தரும் ஒண் சுடர்க் கற்றையை
அயர்வில் அமரர்கள் ஆதிக் கொழுந்தை என் இசைவினை என் சொல்லி யான் விடுவேனோ
–1-7-4-

தன் படியைக் காட்டி என்னை இசைவித்து -அயர்வறும் அமரர்களோடு கலக்குமா போலே என்னோடே கலந்த உபகாரகனை நினைத்து விட உபாயம் உண்டோ -என்கிறார் –
முன்பு அயோக்கியன் என்று அகன்றவர் ஆகையால் இனி விடேன் என்கிறார் –

என் மனத்தே மன்னினான் தன்னை – இன்னமும் மயர்வு குடி கொள்ள ஒண்ணாது என்று என்னுடைய மனத்திலே புகுந்து- ஸ்தாவரப் பிரதிஷ்டையாக இருந்தவனை,-என் மனத்தே-புறம்பேயும் -ஒரு கந்தவ்ய பூமி -சேரத் தக்க இடம் உண்டு’ என்று தோற்ற இராமல் இருக்கின்றான்-உயர் வினையே தரும் – -ஞான விஸ்ரம்ப பக்திகளைத் தாரா நின்றான்-தரும்-தந்து சமைந்தானாய் இராது மேன்மேலும் தந்து கொண்டே யிருக்கின்றான்
ஆதலின், ‘தந்து’ என்னாது ‘தரும்’என்கிறார்.-காதல் கடல்புரைய’, ‘காதல் கடலின் மிகப் பெரிதால்’,  ‘நீள் விசும்பும் கழியப் பெரிதால்’,  ‘சூழ்ந்தனிற் பெரிய என் அவா’-என பத்தியை மேன்மேலும் தந்து கொண்டே இருக்கின்றான்-ஒண் சுடர்க் கற்றையை – இதனால், எனக்கு உபகரித்தானாய் இருத்தல் அன்றியே, ‘தான் உபகாரங்கொண்டான்’ என்னுமிடம் வடிவில் புகரிலே தோற்ற ‘இரா நின்றான்’ என்கிறார்.-என் இசைவினை – ‘நான் அல்லேன்’ என்று அகலாதபடி  என் இசைவு தானாய்ப் புகுந்தவனை.

என் சொல்லி யான் விடுவேன் – 
1-‘சிறிது மயர்வு கிடந்தது’ என்று விடவோ? -மயர்வு அற
2-‘மயர்வைப் போக்கித் தான் கடக்க இருந்தான்’ என்று விடவோ?- என் மனத்தே மன்னினான்
3-‘எனக்கு மேன்மேலென நன்மைகளைப் பண்ணித் தந்திலன்’ என்று விடவோ? -உயர் வினையே தரும்
4-‘தான் செய்த உபகாரத்துக்குக் கைம்மாறு-ப்ரத்யுபகாரம் – கொள்ள இருந்தான்’ என்று விடவோ? -ஒண் சுடர்க் கற்றையை
5-‘வடிவழகு இல்லை’ என்று விடவோ? -ஒண் சுடர்க் கற்றையை
6-‘மேன்மை போராது’ என்று விடவோ? -அயர்வு இல் அமரர்கள் ஆதிக் கொழுந்தை
7-‘இப் பேற்றுக்கு-கிருஷி பண்ணினேன் – முயற்சி செய்தேன் நான்’ என்று விடவோ? என் இசைவினை எதனைச் சொல்லி நான் விடுவேன்?’ என்கிறார்.-

———–

விடுவேனோ என் விளக்கை என் ஆவியை -நடுவே வந்து உய்யக் கொள்கின்ற நாதனை
தொடுவே செய்து இள வாய்ச்சியர் கண்ணினுள்ளே விடவே செய்து விழிக்கும் பிரானையே
–1-7-5–

‘திருவாய்ப்பாடியில் பெண்கள் கிருஷ்ணனை விட்டுப் பரமபதத்தை விரும்பும் அன்று அன்றோ நான் இவனை விட்டுப் புறம்பே போவேன்?’ என்கிறார்

இவர்க்குத் தன்னையும் காட்டி, ஆத்தும ஸ்வரூபத்தையும் விரோதி ஸ்வரூபத்தையும் காட்டித் தந்தானாதலின், ‘விளக்கு’ என்கிறார்.-மற்றையோர்க்குப் பத்தி-ஸ்நேஹம்- இல்லையே?
ஸ்நேஹம்–பத்தி உண்டாகில் அன்றோ இவ் விளக்குப் பிரகாசிப்பது? ஆதலால், ‘என் விளக்கை’ என்கிறார்.-உய்யக்கொண்டு விட்டிலன்;-மேல் மேல் எனக் கொள்ளா நின்றான் ஆதலின், ‘உய்யக் கொள்கின்ற’ என்கிறார்.-உடையவன் ஆகையாலே செய்தான்-திருவாய்ப்பாடியில் பெண்களுடைய பேற்றுக்கு-யத்னம் – முயற்சி செய்தவர் யார்?’ 

விடவே செய்து விழிக்கும்–அவர்கள் தூது விடும்படியைச் செய்து விழிக்கின்ற.
இனி, இதற்குத் ‘தூது செய் கண்கள்’ என்கிறபடியே, தான் தூது விடுகையாகிற செயலைச் செய்து விழிக்கின்ற’ என்று கூறலுமாம்.-தவாஸ்மி–தாஸோ அஸ்மி -என்றால் போலே சொல்லுகை – இனி, ‘விடருடைய செயல்களைச் செய்து’ என்று பொருள் கூறலும் ஓன்று.விஷமமான சேஷ்டிதங்கள் என்னவுமாம் -விடர் உண்டு தூர்த்தர் -அவர்களுடைய செயலைச் செய்து என்றுமாம்-விடவே செய்து விழிக்கை -ச விலாசமாக நோக்குகை –

—————

பிரான் பெரு நிலம் கீண்டவன் பின்னும் விராய் மலர்த்துழாய் வேய்ந்த முடியன்
மராமரம் எய்த மாயவன் என்னுள் இரான் எனில் பின்னை யான் ஒட்டுவேனோ
–1-7-6-

அவன் தான் விடில் செய்வது என் -என்னில் -தன் நீர்மையாலே -தன் குணங்களாலும் -சேஷ்டிதங்களாலும் -செயல்களாலும்-என்னைத் தோற்பித்தவனை நான் விட இசைவேனோ என்கிறார்-பிரான் –நிலா, தென்றல், சந்தனம் என்னுமிவை பிறர்க்கேயாக இருக்குமாறு போன்று, தன் படிகளை அடையப் பிறர்க்கு ஆக்கி வைக்குமவன்.-பெரு நிலம் கீண்டவன்-சம்சாரப் பிரளயங் கொண்ட என்னை எடுத்தவன்-விராய் மலர்த்துழாய் வேய்ந்த முடியன்.-ஒப்பனை அழகோடே பிரளயத்தில் மூழ்கினான்-மரா மரம் எய்த மாயவன் –இது-ஆஸ்ரிதர் – அடியார் விஷயமாகச் செய்த உபகாரம்.-பின்னை யான் ஒட்டுவேனோ-என்னுடைய கர்ம பாரதந்திரியம் போலே, அவனுடைய ஆஸ்ரித பாரதந்திரியத்துக்கும் ஏதேனும் கண்ணழிவு உண்டோ? ஆதலால், என்னுடைய இசைவு இன்றிக்கே இருக்க, அவனாலே போகப் போமோ?’ என்பதாம்.
இனி, ‘ஒட்டுவேனோ’ என்பதற்கு, ‘நான் தொங்குவேனோ’ என்று ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான்  பணிப்பர். தொங்குகை-திரிதல்.

————-

யான் ஒட்டி என்னுள் இருத்துவன் என்றிலன் தான் ஒட்டி வந்து என் தனி நெஞ்சை வஞ்சித்து
ஊனொட்டி நின்று என்னுயிரில் கலந்து இயல் வானொட்டுமோ இனி என்னை நெகிழ்க்கவே
–1-7-7–

நான் நெகிழ்த்துக் கொடு போக்கிலும் அவன் இசையால் -என்கிறார் –ஆகில் இங்கே இருக்கக் கடவோம்’ என்று -ப்ரதிஜ்ஜை -சூளுறவு செய்து வந்து புகுந்தான் ஆதலின், 
தான் ஒட்டி’ என்கிறார்.என் பக்கல் விலக்காமை பெற்றவாறே ‘என் ஆத்துமாவோடே வந்து கலந்து’ என்று ஸ்ரீ நஞ்சீயர் அருளிச் செய்வர். -‘எனக்கு ஞானம் பிறத்தற்கு-கிருஷி பண்ணி -முயன்றவன்–பிறந்த ஞானம் பயன் பெறும் அளவாகக் கொண்டு, நான் அகன்று போவேன் என்றால் அவன் சம்வதிக்குமோ உடன்படுவேனோ?’-

————-

என்னை நெகிழ்க்கிலும் என்னுடை நன்னெஞ்சம் தன்னை அகல்விக்கத் தானும் கில்லான் இனி
பின்னை நெடும் பணைத் தோள் மகிழ் பீடுடை முன்னை யமரர் முழு முதலானே
–1-7-8-

அவனுடைய கல்யாண குணங்களிலே அகப்பட்ட என் நெஞ்சை அவனாலும் பிரிக்கப் போகாது’ என்கிறார்.-‘ஸ்ரீ நப்பின்னைப் பிராட்டி புருஷகாரமாக நித்திய ஸூரிகள் ஓலக்கம் இருக்க அடிமை புக்கு அந்தப்புரப் பரிகரமான இவ் வாத்துமாவை அகற்றப் போகாது,’

——

அமரர் முழு முதல் ஆகிய வாதியை -அமரர்க்கு அமுதீந்த ஆயர் கொழுந்தை
அமர வழும்பத் துழாவி என்னாவி அமரத் தழுவிற்று இனி யகலுமோ
–1-7-9-

சர்வ பிரகாரத்தாலும் அவனை ஸம்ஸ்லேஷித்த -ஏக த்ரவ்யம் — என்னலாம்படியான இவ் வுயிரைப் பிரிக்கும்படி எங்ஙனே?’ என்கிறார்-விளக்கு, விளக்கின் ஒளி என்னும் இரண்டும், இரண்டு பொருள்களாய் இருப்பினும், ‘ஒன்றனை விட்டு ஒன்றைப் பிரிக்க முடியாமல் இருக்குமே –.-அமரர்க்கு முழுமுதல்’ என்றவர், ‘லீலா விபூதிக்கு ஆதியை’ என்னக் காரணம் யாது?’ எனின், இவ்வுலகில் உள்ளார்க்கும் நித்திய ஸூரிகளைப் போன்று சம்பந்தம் உண்டாயிருக்கவும், இவர்கட்கு இச்சை இல்லாமையாலே, யோக்கியதையைப் பண்ணிக் கொடுக்குமளவே செய்கிறான் ஆதலின், ‘ஆதியை’ என்கிறார் .

————–

அகலில் அகலும் அணுகில் அணுகும் புகலும் அரியன் பொருவல்லன் எம்மான்
நிகரில் அவன் புகழ் பாடி இளைப்பிலம் பகலும் இரவும் படிந்து குடைந்தே
–1-7-10–

இப்படிப்பட்ட இவ்வனுபவத்தை கால தத்வம் உள்ளதனையும் அனுபவித்தாலும் திருப்தன் ஆகிறிலேன்-என்கிறார் –இத் திருவாய் மொழியில் முதல் பாட்டு –அகலில் அகலும் என்றவிடம் சொல்லுகிறது-இரண்டாம் பாட்டு –அணுகில் அணுகும் -என்றவிடம் சொல்லுகிறது –பொருவல்லன் – ஆஸ்ரிதர் தன்னைக் கிட்டும் இடத்தில் தடை உடையன் அல்லன்-பொரு -என்று ஒப்பாய் -ஒப்பாவது நேர் நிற்குமதாய் -அத்தால் தடையைச் சொல்லிற்றாய்-தடை உடையவன் அல்லன் -என்கை-அன்றியே பொரு என்று பொருத்தமாய் -அநன்யரைச் சேர வல்லன் என்றுமாம் –

————-

குடைந்து வண்டுண்ணும் துழாய் முடியானை -அடைந்து தென்குருகூர்ச் சடகோபன்
மிடைந்த சொல்தொடை ஆயிரத்து இப்பத்து உடைந்து நோய்களை ஒடுவிக்குமே
–-1-7-11-

அம் மதுவிலே படிந்த வண்டுகள் விடமாட்டாதவாறு போன்று, பகவத் விஷயத்தை விடமாட்டாத ஆழ்வார் ஆயிற்று அருளிச் செய்தார்.

உடைந்து ஓடுவிக்கும்-இவனை விட்டுப் போகும் போதும் திரளப் போகப் பெறாமல், 
வள்ளலே உன் தமர்க்கு என்றும் நமன் தமர், கள்ளர் போல் என்கிறபடியே,
சிதறுண்டு தனித் தனியே ஓடச் செய்யும் என்பார், ‘உடைந்து ஓடுவிக்கும்’ என்கிறார். இருவர் ஒருவழி போகப் பெறார்கள் –
இனி, இப்பாவங்கள் வேறு இடத்திற்சென்று சேரினும்-ஆஸ்ரயாந்தரத்தில் (அதாவது, அசல் பிளந்து ஏறிடினும் என்றபடி) தத்தம் பயன்களைக் கொடுப்பதற்குத் தகுதியுடையன’-மறுமுட்டப் பெறாதபடி அல்லாதனவாகக் கெடும்

———

ஓடும் புள்ளேறி சூடும் தண் துழாய்
நீடு நின்றவை ஆடும் அம்மானே
–1-8-1-

நித்திய விபூதியில் உள்ளாரோடு செவ்வியனாய்ப் பரிமாறும்படி சொல்லுகிறார் இப் பாசுரத்தில்.‘ஆயின், அங்குள்ள அவர்களுக்குச் செவ்வைக் கேடு இல்லையே?
அங்ஙனம் இருக்க, அங்கு ஆர்ஜவ குணம் எற்றிற்கு?’ என்னில்,
அவர்கள் பலராய் இருத்தலானும், அவர்கட்கும் ருசி பேதம் உண்டு ஆதலானும்,
அவர்கள் நினைவு அறிந்து பரிமாறுதற்கு அங்கும் ஆர்ஜவ குணம் வேண்டும்.

ஓடும் புள்ளேறி-திருவடி ‘இப்பொழுது அடியேன் மேல் எழுந்தருள வேண்டும்’ என்று விரும்பினால், ‘வேண்டா’ என்னாது மேற்கொள்ளும் ஆர்ஜவமாம்.-பெரிய திருவடியை மேற்கொள்ளுமது தான், அங்குள்ளார்க்குக் காட்சி கொடுக்கைக்கும், பெரிய திருவடியினுடைய ஸ்வரூப லாபத்துக்காகவும் இருக்கும்.-சூடும் தண் துழாய் -திருத்துழாய் ‘இப்போதே பறித்துத் திருக்குழலில் வளையமாக வையாது ஒழியில் செல்வி அழிவேன்’ என்னும்-அரசனுடைய சந்நிதியில் கூனர் குறளர்களாய் வசிப்பது போன்று, விரோதியாய் உள்ள-சைதன்யமே – அறிவுத் தன்மையே கழியப் பெறுவர்.-அதாவது, அவ்வவ்விடங்கட்குத் தடையாயுள்ள அறிவு மட்டும் நீங்கப் பெறுவர் என்றபடி.-பரம பதத்தில் மேற்கொண்ட சரீரங்கள், அவர்களுடைய இச்சைக்கு உரிமைப் பட்டவைகளாய் இருப்பனவாம்.-எல்லார்க்கும் விஷயம் ஒன்றேயாகிலும், அவ் விஷயந்தன்னில் விருத்தி பேதத்தால் ருசி பேதம் உண்டாம்.ஆடும் –சர்வேஸ்வரனுக்கு அவர்களோடே அணைவது, விடாயர் மடுவிலே புக்கு ஆடியது போன்று இருக்கையாலே, அவற்றோடே ‘பரிமாறும்’ என்னாது,‘அவை ஆடும்’என்கிறார். அம்மானே--நித்திய ஸூரிகளோடு நித்திய சம்சாரிகளோடு வேற்றுமை அற எல்லாரினும்-சர்வாதிகனாய் இருந்து வைத்து – அறப் பெரியவனாய் இருந்தும் இப்படிப் பரிமாறுகிறான்’ என்பார், ‘அம்மான்’ என்கிறார்-

———

அம்மானாய்ப் பின்னும் எம்மாண்பும் ஆனான்
வெம்மா வாய் கீண்ட செம்மா கண்ணனே
–1-8-2-

நித்திய விபூதியில் நின்றும் வந்து அவதரித்து விரோதிகளைப் போக்கிச் சம்சாரிகளுடன்
செவ்வையனாய்ப் பரிமாறும்படி சொல்லுகிறது.-அவ் வவதாரத்தோடு முடிவு பெறுதல் இன்றிப்–பஹுநி ‘பல படியாகப் பிறக்கிறேன்’ என்கிறபடியே, அதற்கு மேல் பல அவதாரங்களை எடுத்தான்.-பரத்துவத்திலும்-மனுஷத்வே பரத்வம் – மனித உருவத்தால் வந்த பரத்துவத்தினது அழகை, ஈண்டு ‘மாண்பு’ என்கிறார்.-மாண்பு என்று திருவவதாரங்களை சொல்லுகிறது-

————

கண்ணாவான் என்றும் மண்ணோர் விண்ணோர்க்கு
தண்ணார் வேங்கட விண்ணோர் வெற்பனே
–1-8-3-

இரட்டைக் குழந்தைகளைப் பெற்ற தாயானவள் இருவர்க்கும் பால் கொடுக்கத் தகுதியாக நடுவே கிடக்குமாறு போன்று, நித்திய ஸூரிகளுக்கும் சம்சாரிகளுக்கும் ஒக்க முகங்கொடுக்கைக்காகத் திருமலையில் நிற்கின்ற நீர்மையை அருளிச் செய்கிறார்-
( திருவாய் மொழியில் முதல் ஸ்பஷ்டமாக திவ்ய தேச மங்களா சாசனப் பாசுரம் -)

கண்ணாவான்-சஷுர் தேவா நாம் உதமர்த்யாநாம் ‘விண்ணோர்க்கும் மண்ணோர்க்கும் கண்’ என்கிற ஸ்ருதி அர்த்தத்தை அருளிச் செய்கிறார்-கண்ணாமவன் என்றபடி.
இனி, இதற்குக் நிர்வாஹகானாவான் ‘காப்பாற்றுகின்றவன்’என்று பொருள் கூறலுமாம்.
கண்ணாகைக்காக -என்னுதல்-மண்ணோர் விண்ணோர்க்கு என்றும் கண்ணாவான் –
இதனால், தங்கள் காரியம் தாங்கள் செய்து கொள்ள மாட்டாமைக்கு, நித்திய ஸூரிகளோடு சம்சாரிகளோடு வாசி இன்மையைத் தெரிவிக்கிறார்.-விண்ணோர் வெற்பன்--‘வானவர் நாடு’ என்னுமாறு ‘விண்ணோர் வெற்பு’ என்கிறார்.-இரண்டு உலகத்தில் உள்ளார்க்கும் முகம் கொடுக்க வந்து நின்றானே யாகிலும், திருமலை தான் நித்திய ஸூரிகளுடையது என்றபடி.-விண்ணோர் வெற்பன் என்கிற இடம் நித்ய ஸூரிகள் அபிப்ராயத்தாலே
விண்ணோர் எங்களது -என்று அபிமானிக்கும் படியான தண்ணார் வேங்கட வெற்பை உடையவன் 

————–

வெற்பை ஓன்று எடுத்து ஒற்கமின்றியே
நிற்கும் அம்மான் சீர் கற்பன் வைகலே
–1-8-4-

அவனுடைய ஆர்ஜவ குணம் தம் அளவிலே பலித்த படியை அருளிச் செய்கிறார்.-சீர் கற்பன்-
அவன் மலையை எடுத்துக் காப்பாற்றத் தக்க பொருள்களை நோக்கின நேர்மையை நினைத்து,-குணைர் தாஸ்யம் உபாகத  ‘குணங்களால் அடிமைப்பட்டேன்’ என்று ஸ்ரீ இளைய பெருமாள் கூறியது போன்று,-அவனுடைய கல்யாண குணங்களை அந்த நற்குணங்களாலே -பிரேரிதனாய் தூண்டப்பட்டவனாகிச் சொல்லுவன்.-அப்யசிப்பேன்-வைகலே- ஒருகால் இதனைச் சொல்லி, பின்னர் என் காரியத்திற்குப் போமவன் அல்லேன்;
விபன்யவ -‘எப்பொழுதும் ஸ்துதித்துக் கொண்டிருக்கிறார்கள்’ என்கிற நித்திய ஸூரிகளைப் போன்று நானும் இதுவே தொழிலாக இருப்பன்.

——–

வைகலும் வெண்ணெய் கை கலந்து உண்டான்
பொய் கலவாது என் மெய் கலந்தானே
–1-8-5-

நான் அவனை விட்டு அவன் குணங்களை விரும்புவது போன்று,-அவனும் என்னை விட்டு எனது தேகத்தை விரும்புகிறான்,’ என்கிறார்.‘கற்பன் வைகலே’ என்கிறபடியே, எனக்கு அவன் குணங்கள் என்றும் தாரகமாக இருப்பது போன்று அவனுக்கும் -ஆஸ்ரித ஸ்பர்சம் உள்ள த்ரவ்யம் -அடியார்கள் தீண்டிய பொருள்கள் என்றும் ஒக்கத் தாரகமாக இருக்குமாதலின், ‘வைகலும்’ என்கிறார்.அழுக்குடம்பு’ என்று யான் வெறுக்கும் ‘இச் சரீரம் இறைவனுக்கு -ஆதரணீயம் -விரும்பத் தக்கது ஆவதே!’ என்பார், ‘என் மெய்’ என்கிறார்.
இதனால், அவன் மேல் விழ மேல் விழ -தாம் மேன்மையைக் கண்டு இறாய்க்கிறார் ஆயிற்று
அவன் மேல் விழுகிறதும் இத்தாலே யாயிற்று –

—————

கலந்து என்னாவி நலம் கொள் நாதன் —
புலன் கொள் மாணாய நிலம் கொண்டானே
–1-8-6-

இப்படிக் கலந்து செய்தது என்?’ என்ன, தேஹத்து அளவிலே விரும்பி விட்டிலன்;
என் ஆவி நலத்தையும் கொண்டான்,’ என்கிறார்.கலந்து என் ஆவி நலம் கொள் நாதன்-
என்னோடே ஒரு நீராகக் கலந்து, பின்னர் என் ஆத்துமாவினுடைய நற் ஜீவனைக் கொண்டான் -அவ்வளவேயோ? –நாதன்-‘என்னை ஆளும் கொண்டு’ என்கிறபடியே, நான் எனக்கு உரியேனாய் இருக்கிற இருப்பையும் தவிர்த்தான்.
‘இப்படி அகப்பட்டார் நீரேயோ?’ என்ன, மகாபலியும் அகப்பட்டான்.புலன் கொள் மாணாய் நிலம் கொண்டானே — ஸர்வேந்த்ரிய அபஹார ஷமமான குறள் வடிவைக் காட்டி மஹா பலியிடம் நிலம் கொண்டால் போலே – ஆயின், அவன் ஆவி நலம் கொடுத்திலன்; கழஞ்சு மண் கொடுத்தான் இத்தனை.

————-

கொண்டான் ஏழ் விடை உண்டான் ஏழ் வையம்
தண் தாமம் செய்து என் எண் தானானானே
–1-8-7-

தன் பக்கல் உண்டான என்னுடைய மநோ ரதத்தை என் பக்கலிலே தான் பண்ணினான் -ஆவி நலம் கொண்ட அளவேயோ? நித்ய விபூதியில் -பரம பதத்தில் செய்யும்
ஆதாரத்தை -அன்பையும் என் பக்கலிலே செய்தான்,’ என்கிறார்.

உண்டான் ஏழ் வையம்--பிரளய ஆபத்தில் பூமி தன் வயிற்றில் புகா விடில் தரியாதது போன்று, தான் என் பக்கலில் புகுந்து அல்லது தரியாதவன் ஆனான்.

தண் தாமம் செய்து – குளிர்ச்சியை யுடைத்தான பரம பதத்தில் செய்யும் விருப்பத்தையும் என் பக்கலிலே செய்தான்.
இனி, ‘தண் தாமம் செய்து’ என்பதற்கு,  இவ் வுலகில் இருக்கிற என்னைப் பரம பதத்தில் இருப்பவர்களுள் ஒருவனாக ஆதரித்து’ -தத் விபூதிகனாகவே – என்று பொருள் கூறலுமாம்

என் எண் தான் ஆனானே – நான் மநோரதித்தபடியே விரும்பியபடியே எனக்குக் கை புகுந்தான்.
அன்றிக்கே ‘என் மநோ ரதத்தைத் தான் கைக் கொண்டான்,’ என்று கூறலுமாம்.
அதாவது, ‘மாக வைகுந்தம் காண்பதற்கு என்மனம், ஏகம் எண்ணும்,’ 
‘கண்ணன் விண்ணூர் தொழவே சரிகின்றது சங்கம்,’ என்கிறபடியே,
ஸ்ரீ வைகுண்டத்திற்குச் சேறல் வேண்டும்’ என்றும்,
‘அங்கே அனுபவிக்க வேண்டும்’ என்றும் நான் ஆசைப்பட,
ஸ்ரீ திருநகரிக்கு ஏறப் போக வேண்டும்;
ஸ்ரீ ஆழ்வாரை அனுபவிக்க வேண்டும்,’ என்று அவன் பாரிக்கிறான்’ என்றபடி.-என் எண்ணிலே தன் கை புகுந்தான் -என்றுமாம் 

———

ஆனான் ஆனாயன் மீனோடு ஏனமும்
தான் ஆனான் என்னில் தானாய சங்கே
–1-8-8-

என் பக்கல் சங்காதிசயத்தாலே என்னைப் பற்ற அவன் பட்டதுக்கு ஓர் அளவில்லை -என்னைக் கருதி அவன் பிறந்த பிறவிகளுக்கு ஒரு முடிவு இல்லை,’ என்கிறார்.தானாய சங்கே-என் பக்கல் தனக்கு உண்டான-சங்காதிசயத்தாலே – அன்பின் மிகுதியே.
இனி, இதற்கு, ‘என்னைக் குறித்துத் தான் எடுத்த அவதாரங்கள்-மஹா ஸங்க்யை –
மகாசங்கம் என்னும் அளவே,’ என்று கூறலுமாம்.
இனி, ‘சங்கே’ என்பதற்கு, ‘மகாசங்கம் என்னும் அளவேயோ! முடிவு உண்டோ!
பஹு நி  ‘பல’ என்னும் இத்தனை’ என்று கூறலும் ஒன்று.

——–

சங்கு சக்கரம் அங்கையில் கொண்டான்
எங்கும் தானாய் நங்கள் நாதனே
–1-8-9-

இப்படி அவதரிக்குமிடத்து ஐஸ்வர்யமான சிஹ்னங்களோடே அடையாளங்களோடே
வந்து அவதரிப்பான்,’ என்கிறார்.-சிலரை வசீகரிக்க நினைத்தவர்கள், கையிலே மருந்து கொண்டு திரியுமாறு போன்று, அவதாரங்கள் தோறும் திவ்விய ஆயுதங்களோடே வந்து அவதரிக்கும்

———–

நாதன் ஞாலம் கொள் பாதன் என்னம்மான்
ஓதம் போல் கிளர் வேத நீரனே
—1-8-10-

அவன் நீர்மையைப் பேசப்புக்கு -நம்மால் பேசப்போமோ – கடல் கிளர்ந்தால் போலே வேதமே பேச வேண்டாவோ -என்கிறார்-நாதன்-முதல் பாட்டில் சொன்ன சேஷித்வத்தை யுடையவன்-ஞாலம் கொள் பாதன்-இரண்டாம் பாட்டில் சொன்ன அவதார ஸுலப்யத்தை யுடையவன்-என் அம்மான்-எனக்கு கிட்டலாம் படி திருமலையில் வந்து அடிமை கொண்டவன் –
மூன்றாம் பாட்டில் -கண்ணாவான் -என்றத்தை நினைக்கிறார்-ஓதம் போல் கிளர் வேத நீரனே – இவனுடைய இந் நிலைமைகளைப் பேசும் போது-கடல் கிளர்ந்தால் போலே கிளரா நின்றுள்ள வேதத்தாலே ப்ரதி பாதிக்கப்பட்ட நீர்மையை யுடையவன் – நீர்மையாவது -ஆர்ஜவம் –எம்பெருமானுடைய படி வேதைக ஸமதி கம்யம்-என்கிறார் –

————–

நீர் புரை வண்ணன் சீர் சடகோபன்
நேர்தல் ஆயிரத்து ஓர்தல் இவையே –
1-8-11-

அவனுடைய ஆர்ஜவ குணத்தை நினைத்த இடத்திலே கொடு போகலான நீரின் தன்மையை உடையவனுடைய குணத்தை ஆராய்ந்து சொன்ன பத்து’ –என்கிறார்.-நீர் புரை வண்ணன் சீர் –நீரோடு ஒத்த தன்மையை யுடையவனுடைய ஆர்ஜவ குணத்தை.-சம்சாரிகளுடைய செவ்வைக் கேட்டை நினைந்து, அத்தால் இழக்க வேண்டாதபடி அவனுடைய ஆர்ஜவ குணத்தை நினைத்து அருளிச் செய்யப் பட்டவை என்பதாம்.இனி, ‘இவை ஓர்தல்’ என்பதற்கு, சம்சாரிகள் ஓரப்படுமவை என்று கூறலுமாம்.

—————-

இவையும் அவையும் உவவையும் இவரும் அவரும் உவரும்
எவையும் எவரும் தன்னுள்ளே ஆகியும் ஆக்கியும் காக்கும்
அவையுள் தனி முதல் எம்மான் கண்ணபிரான் என்னமுதம்
சுவையன் திருவின் மணாளன் என்னுடைச் சூழல் உளானே
–1-9-1-

ஜகத் காரண பூதனனாய் -சர்வ அந்தராத்மாவாய் -ஸ்ரீ யபதியாய் இருந்துள்ள கிருஷ்ணனானவன் –என்னுடைய பர்யந்தத்தை விட்டு போக மாட்டாத படியானான் -என்கிறார் –

அவையுள் தனி முதல்- இதனால், உண்டாக்கிய பொருள்கள் தொழில் செய்தல் தொழில் செய்யாமைகட்குத் தகுதியாம்படி அவற்றுள் அந்தராத்துமாவாய் நிற்கும் நிலையைச் சொல்லுகிறார்.
‘ஆயின், அந்தராத்துமாவாய் நிற்கும் இந்நிலை ‘ஆக்கியும்’ என்று படைத்தலைக் கூறிய போதே அடங்காதோ?’ எனின், தத் அநு ப்ரவேஸ்ய  ‘படைத்து அவற்றுள் அநுப்பிரவேசித்தார்’ என்கிறபடியே,-இவற்றுடைய -வஸ்துத்வ நாம பாக்த்வங்களுக்கு -அவை பொருளாதலுக்காகவும் பெயர் அடைதலுக்காகவும் பண்ணும் அநுப் பிரவேசத்தைச் சொன்னார் அங்கு;
இங்கு அவற்றிற்குக் கூறப்படும் பெயர் இறைவனாகிய தன் அளவில் வந்து முடியும்படியாக நிற்கும் நிலையைச் சொல்லுகிறார்; ஆதலின், அடங்காது என்க.

கண்ண பிரான் –‘இப்படி இருக்கிறவன் தான் யார்?’ என்னில், ஸ்ரீ கிருஷ்ணன்.
இனி, கண்ணபிரான் என்பதற்கு, ‘கண்களுக்குத் தோன்றித் திருவருள் செய்கின்றவன்’ என்று கூறலுமாம்.-என் அமுதம்-தேவர்கள் அதிகாரிகளாய் இருக்கிற அமிருதத்தில் வேறுபாடு.-சுவையன்-பரம ரசிகன்; அவ்வமிருதத்திற்குச் சுவையை நுகருந்தன்மை இல்லையே!-திருவின் மணாளன் – இவருடைய அமிருதம் ஒரு மிதுனம் ஆயிற்று. இதனால், மேற்கூறிய சுவைக்கு ஊற்றுவாய் அருளிச் செய்கிறார்.-திருவின் மணாளன் என்னுடைச் சூழல் உளானே- ஸ்ரீ பெரிய பிராட்டியார் ‘அகலகில்லேன் இறையும்’ என்னப் பிறந்தவன், என் பக்கத்தில் வாழ்தல் தன் பேறாக வாழ்கின்றான்-‘ஆகியும் ஆக்கியும் காக்கும் தனி முதல் எம்மான்’ ஆகிய இறைவன், என்னை விட்டுப் பிரிதற்கு மனம் இன்றி என் அருகிலேயே தங்கி இருக்கிறான் என்பார்,‘என்னுடைச் சூழலுளானே’என்கிறார்.

————

சூழல் பல பல வல்லான் தொல்லை யம் காலத்து உலகை
கேழல் ஒன்றாகி இடந்த கேசவன் என்னுடை யம்மான்
வேழ மருப்பை ஒசித்தான் விண்ணவர்க்கு எண்ணல் அரியான்
ஆழ நெடும் கடல் சேர்ந்தான் அவன் என் அருகில் இலானே
–1-9-2-

என் பரிசரத்தில் சுற்றுப் புறத்தில் வசித்தவன், அது சாத்மித்தவாறே பொறுத்தவாறே
என் அருகே வந்து நின்றான்,’ என்கிறார்.-சேதநரை அகப்படுத்திக் கொள்ளுமது ஆகையாலே அவதாரத்தைச் ‘சூழல்’ என்கிறார்.-ஜாதி பேதத்தையும் அவாந்தர பேதத்தையும் நோக்கிப் ‘பல பல’ என்கிறார்.-சர்வ சத்தியான தானே ‘இவ் வடிவைக் கொள்ளவேண்டும்’ என்னிலும் ஒண்ணாதபடி இரண்டு அற்றதாய் இருந்தது ஆதலின், ‘கேழல் ஒன்றாகி’ என்கிறார். அதாவது, பூமி பிரளயத்தில் அகப்பட்டவாறே, நீருக்கும் சேற்றுக்கும் பின் வாங்காத வடிவைக் கொண்டான்;
அது அவன் கொண்ட வடிவாகையாலே அழிவுக்கு இட்ட வடிவு தனக்கே ஆலத்தி வழிக்க வேண்டியிருக்கின்றது என்றபடி.  ‘பன்றியாம் தேசு’ என்பர் சூடிக் கொடுத்த சுடர்க் கொடியார். கேசவன்– அப்போதைத் திருமேனியும் உளை மயிருமாய் நின்ற நிலையினை நினைந்து. ‘கேசவன்’என்கிறார். கேசம் – மயிர்.வேழம் மருப்பை ஒசித்தான் –குவலயாபீடத்தினுடைய தந்தங்களை வருத்தம் இன்றி முறித்தவன்.
அப்படியே, என்னுடைய மத களிறுகளாகிய ஐம் பொறிகளையும் சேரி திரியாமல் செய்தவன் என்பதனைக் குறித்தபடி.-விரோதி நிரசன சீலன் என்றபடி-வாரி சுருக்கி மத களிறு ஐந்தினையும், சேரி திரியாமல் செந் நிறீ இ’ (முதல் திருவந். 47.)

———

அருகலிலாய பெரும் சீர் அமரர்கள் ஆதி முதல்வன்
கருகிய நீல நன்மேனி வண்ணன் செந்தாமரைக் கண்ணன்
பொருசிறைப் புள்ளுவந்தேறும் பூ மகளார் தனிக் கேள்வன்
ஒரு கதியின் சுவை தந்திட்டு ஒழிவிலன் என்னோடு உடனே
–1-9-3-

ஸ்ரீ திருவடி ஸ்ரீ திருவானந்தாழ்வான் ஸ்ரீ பிராட்டிமார் தொடக்கமானவரோடு ஒரோ வகையாலே பரிமாறுமவன்-என்னளவில் ஒரோ வகையிலே பரிமாறி விட மாட்டுகிறிலன் -என்கிறார் –தண் தாமம் செய்து -என்று நித்ய விபூதியில் பண்ணும் விருப்பத்தைப் பண்ணினார் என்றார் கீழில் திருவாய் மொழியில்
இதில் அவ்விபூதியில் உள்ளாரோடு பரிமாறும் படியை என் ஒருவனோடு பரிமாறினார் -என்கிறார் –இவன் ஒரு விபூதிமான் -அந்ய பரன் என்று தோற்ற இருக்கிறிலன்-
நித்ய விபூதியில் கேள்வியும் இங்கே இருந்தாம் அத்தனை

———-

உடன் அமர் காதல் மகளிர் திருமகள் மண் மகள் ஆயர்
மடமகள் என்று இவர் மூவர் ஆளும் உலகமும் மூன்றே
உடன் அவை ஒக்க விழுங்கி யாலிலைச் சேர்ந்தவன் எம்மான்
கடல் மலி மாயப் பெருமான் கண்ணன் என் ஒக்கலையானே
–1-9-4-

மேன்மை அது -அகடிகடநா சாமர்த்தியம் அது -இப்படி இருக்கிறவன் ஸ்ரீ யசோதைப்பிராட்டி மருங்கிலே இருக்குமா போலே என் மருங்கிலே வந்து இருக்கை தனக்குப் பெறாப் பேறாக நினைத்து இரா நின்றான் என்கிறார் –

திருமகள்-ஸ்ரீ சர்வேஸ்வரனுக்கு பிரதான மகிஷியாய் -பட்டத்துக்கு உரியவளாய் –
ந கச்சின் ந அபராத்யதி -என்று இருக்கும் ஸ்ரீ பெரிய பிராட்டியார்-மண் மகள் முதலிலே குற்றம் பார்க்கக் கடவதோ -என்று அவனுக்கு பொறைக்கு உவாத்தாய்
பொறை விளையும்படியான ஸ்ரீ பூமிப் பிராட்டி –ஆயர் மட மகள் -அனுபவ ஸூகம் தானாய் தன் வடிவு அழகாலே துவக்கித் திரு உள்ளத்திலே குற்றம் படாதபடி இருக்கும் ஸ்ரீ நப்பின்னைப் பிராட்டி –திருமகள் அவன் ஐஸ்வர்யம்-மண் மகள் அது விளையும் பூமி-ஆயர் மட மகள் அத்தைப் புஜிக்கிற போக்தாவானவள் -என்றுமாம் –என்று இவர் மூவர்-மேன்மைக்கும் புருஷகாரத்துக்கும் தனித்தனியே அமைந்து இருக்கிற இவர்கள் மூவர்-என் ஓக்கலையானே —ஸ்ரீ யசோதைப் பிராட்டி மருங்கிலே இருக்குமா போலே என் மருங்கிலே இரா நின்றான் –

———

ஒக்கலை வைத்து முலைப்பால் உண் என்று தந்திட வாங்கி
செக்கஞ்ச்செக வென்று அவள் பாலுயிர் செகவுண்ட பெருமான்
நக்க பிரானோடு அயனும் இந்திரனும் முதலாக
ஓக்கவும் தோற்றிய வீசன் மாயன் என் நெஞ்சின் உளானே
–1-9-5-

விரோதி நிரசன சீலனாய் ‘மாற்றாரை மாறு அழிக்க வல்லவனாய்,- சர்வ ஸ்ரஷ்டாவானவன் – எல்லாப் பொருளின் தோற்றத்திற்குங்காரணனாய் உள்ளவன் என் ஹ்ருதயஸ்தன்- மனத்தினன் ஆனான்,’ என்கிறார்.-மாயன்- ஸ்ருஷ்டமான -உண்டாக்கிய உலகத்திலே அநுப் பிரவேசம் முதலான ஆச்சரியமான செயல்களை யுடையவன். சர்வ சரீரியாய் இருக்கிற ஸ்ரீ சர்வேஸ்வரன் அன்றோ-என் நெஞ்சின் உளான் – என் சரீரத்தில் ஏக தேசத்தை ஓரிடத்தைப் பற்றி நின்றான்.-ப்ரஹ்மாதி ஸ்தாவர அந்தமான சர்வ ஜகத்துக்கும் ஸ்ரஷ்டாவாய் -சர்வ ஜெகன் நியந்தாவாய் –ஆச்சர்ய பூதனுமாய் -விரோதி நிரசன ஸ்வ பாவனுமாய் –
இருந்தவன் என் ஓக்கலையில் தான் இருந்த இருப்பு எனக்கு சாத்மித்தவாறே -என் மார்விலே வந்து இருந்து அருளினான் -என்கிறார் –

———–

மாயன் என் நெஞ்சினுள்ளான் மற்றும் யவர்க்குமதுவே
காயமும் சீவனும் தானே காலும் எரியும் அவனே
சேயன் அணியன் யவர்க்கும் சிந்தைக்கும் கோசரம் அல்லன்
தூயன் துயக்கன் மயக்கன் என்னுடைத் தோளிணை யானே
–1-9-6-

சர்வாந்தராத்மாவானவன் ‘எல்லாப் பொருள்கட்கும் அந்தராத்துமாவாக இருப்பவன்
என் தோளைப் பற்றி வர்த்தியா நின்றான் – வாழ்கின்றான்’ என்கிறார்.-காயமும் சீவனும்
சர்வ அந்தராத்மா என் தோளைப் பற்றி வர்த்தியா நிற்கிறான்-தூயன்-இப்படி இருக்கிறவன் ஸ்ரீ யசோதை முதலானவர்கட்கு யதி சக் நோஷி ‘நீ வல்லையாகில் போய்க் காணாய்’‘
என்னலாம்படி இருப்பான்.-இதனால், அணிமைக்கு எல்லை கூறினார்.-துயக்கன் மயக்கன் –
உகவாதார்க்கு-சம்சய விபர்யயங்களை – ஐயம் திரிபுகளைப் பிறப்பிக்கின்றவன்.-என்னுடைத் தோளிணையானே–என் அளவில் அங்ஙன் அன்றிக்கே, ஸ்ரீ திருவடி திருத் தோளில் இருக்குமாறு போன்று, என் தோளில் இரா நின்றான்.-சம்சய விபர்யய ரஹிதமாக என் தோளிலே வர்த்தியா நின்றான்-பெரிய திருவடி தோளில் இருப்பை மாறி என் தோளிலே இரா நின்றான் –-இவனுக்கு என் பக்கலுள்ள அபி நிவேசம் இருக்கும் படியே இது -என்கிறார்

————

தோளிணை மேலும் நன் மார்பின் மேலும் சுடர் முடி மேலும்
தாளிணை மேலும் புனைந்த தண்ணம் துழாய் யுடை யம்மான்
கேளிணை ஒன்றும் இலாதான் கிளரும் சுடர் ஒளி மூர்த்தி
நாள் அணைந்து ஒன்றும் அகலான் என்னுடை நாவில் உளானே
–1-9-7-

நான் உகந்தபடியே அலங்கரித்துக் கொண்டு வந்து என் நாவிலே கலந்தான்’ என்கிறார்.-ஆழ்வார் விரும்பிய வாறே திருத் துழாயால் தன்னை அலங்கரித்துக் கொண்டு சென்றான்.
இவர் உகப்பதும் திருத் துழாயே, அவன் கொடுப்பதும் திருத் துழாயே அன்றோ?
‘புள் ஊர்திகள் ஊரும் துழாய்க் கொயல் வாய் மலர் மேல் மனத்’ தையுடையராய் இருப்பர்.
‘எங்ஙனம்?’ எனின்,
திருத் தாயார் கூறும் போதும் ‘வண்டு திவளும் தண்ணம் துழாய் கொடீர்’ என்பர்.
இவள் தானும் ‘விரை மட்டு அலர் தண் துழாய் என்னும்’, 
‘கண்ணன் கழல் துழாய் பொன் செய் பூண் மென் முலைக்கு என்று மெலியும்’,
அவனும், ‘தன் மன்னு நீள் கழல் மேல் தண் துழாய் நமக்கு அன்றி நல்கான்’ என்கிறபடியே,
இவளுக்கு அன்றி நல்கான்.

அணைக்க-கணிசிக்கிற விரும்புகிற திருத் தோள்களிலும்,–அணைப்பிக்குமவள் இருக்கிற திரு மார்பிலும்.-அணைத்துக்கொண்டு நின்று மேல் நோக்கிப் பார்த்தவாறே
தன்னுடைய தலைமைக்குப் பிரகாசமாயிருக்கிற திருமுடியிலும்.-தன்னுடைய இறைமையை நிலை நிறுத்துகின்ற திருவடிகளிலும் சாத்தின திருத்துழாயினை யுடைய ஸ்ரீ சர்வேஸ்வரன்.

இவ்வடிகட்கு ஸ்ரீ பட்டர் மிக அழகாகவும் ரசோக்தியாகவும் விசேடப் பொருள் அருளிச் செய்வர்;-அப் பொருள் வருமாறு:
வீரராய் இருப்பார் முற்பட ஆயுதத்திற்கு இடுவார்கள்; அப்படியே திருத்தோள்களுக்கு இட்டான்.
பிரணயிகளாய்- காதலர்களாய் இருப்பவர்கள்-அபிமத விஷயத்துக்கு அன்புக்குரிய காதலிக்கு இடுவார்கள்;-அப்படியே பெரிய பிராட்டியார் எழுந்தருளியிருக்கும் கோயில் கட்டணத்துக்குக் கொடுத்தான்;
ஆயுதத்திற்கும் காதலுக்கு உரியவர்களுக்கும் இட்டால், பின்னைத் தாம் தாம் அணிந்து கொள்ளுவார்கள் இத்தனை யன்றோ?-ஆதலின், தான் சூடினான்;
சேஷம் பின்னர் அடியார் அன்றோ கைக் கொள்ளுவார்? ஆகையால், திருவடிகளுக்குச் சாத்தினான்;-ஆபத்துக்குத் துணை செய்வார் அடியார் அன்றோ?
தளர்ந்தும் முரிந்தும் சகட அசுரர் உடல் வேறாப் பிளந்து வீயப் பொருவார் அடியாரே அன்றோ? ‘ஆயின், நம்முடைய ஆபத்துக்கு ஒழிய ஸ்ரீ இறைவனுடைய ஆபத்துக்கும் திருவடி துணையாமோ?’ எனின், நம்முடைய ஆபத்துகளுக்குத் திருவடிகளே துணையாயினாற்போலே காணும் அவனுடைய ஆபத்துகளுக்கும் திருவடிகளே துணையாயினபடி.

————–

நாவினுள் நின்று மலரும் ஞானக் கலைகளுக்கு எல்லாம்
ஆவியும் ஆக்கையும் தானே அழிப்போடு அளிப்பவன் தானே
பூவியில் நால் தடம் தோளன் பொரு படை யாழி சங்கேந்தும்
காவி நன் மேனிக் கமலக் கண்ணன் என் கண்ணினுள் உளானே
–1-9-8-

சகல வித்யா வேத்யனான ‘எல்லாக் கலைகளாலும் அறியப் படுகின்ற சர்வேஸ்வரன்,
பிரமாணங்களாலே காணக் கூடிய வடிவை என் கண்ணுக்கு விஷயமாக்கினான்,’ என்கிறார்.-சொல்லுக்கும் பொருளுக்கும் உள்ள சம்பந்தம் அவன் இட்ட வழக்கு-கமலக் கண்ணன் என் கண்ணினுளானே-திருமேனியின் அழகாகிய பெரு வெள்ளத்திலே ஒரு சுழி போன்று திருக்கண்கள் இருத்தலின்  ‘நன்மேனிக் கமலக் கண்ணன்’ என்கிறார்.
பிராகிருத -வெளிப் பொருள்களை நுகர்ந்து போந்த இவருடைய கண்களுக்கு இறைவன் தன்னை விஷயமாக்கினான் ஆதலின், ‘என் கண்ணினுளான்’ என்கிறார். இவர் கண் வட்டம் ஒழியப் புறம்பே போனால் கண் வட்டக் கள்ளனாம் -ஆதலின், ‘கண்ணினுளானே’ என ஏகாரங்கொடுத்து அருளிச் செய்கிறார்-

————

கமலக் கண்ணன் என் கண்ணினுள் உள்ளான் காண்பன் அவன் கண்களாலே
அமலங்களாக விழிக்கும் ஐம்புலனும் அவன் மூர்த்தி
கமலத்தயன் நம்பி தன்னைக் கண்ணுத லானொடும் தோற்றி
அமலத் தெய்வத்தோடு உலகமாக்கி என் நெற்றி உளானே
–1-9-9-

ஸ்வ சங்கல்ப ஏக தேசத்தில் சர்வத்தையும் உண்டாக்கினவன்-என்னுடைய சரீர ஏக தேசத்தைப் பற்றி தான் உளனாக நினையா நின்றான்-கண்ணிலே நின்ற நிலை சாத்மித்தவாறே -பொறுத்தவாறே என் நெற்றியிலே வந்து நில்லா நின்றான்,’ என்கிறார் –அவன் தன் திருக் கண்களாலே என் குற்றம் எல்லாம் கழிந்து நான் காண வல்லேனாம்படி குளிர நோக்குகின்றான்.-என் நெற்றி யுளான் –  கர்மானுகுணமாக -கர்மங்களுக்குத் தகுதியாக உலகத்தை உண்டாக்கி விட்டான். பிரயோஜன நிரபேஷமாக ‘பிரயோஜனத்தில் விருப்பம் இல்லாமல் என் நெற்றியில் புகுந்து நின்றான்’ என்பார்,  நெற்றியுளானே’ என ஏகாரம் கொடுத்து ஓதுகின்றார்.

————–

நெற்றியுள் நின்று என்னை யாளும் நிரை மலர்ப்பாதங்கள் சூடி
கற்றைத் துழாய் முடிக் கோலக் கண்ண பிரானைத் தொழுவார்
ஒற்றைப் பிறை யணிந்தானும் நான்முகனும் இந்த்ரனும்
மற்றை யமரரும் எல்லாம் வந்து என் உச்சி உளானே
–1-9-10-

ப்ரஹ்மாதிகள் தன்னைப் பெறுகைக்குக் காலம் பார்த்துத் தடுமாறும்படி இருக்கிறவன் தான்  என்னைப் பெறுகைக்கு-அவசரம் – காலம் பார்த்து வந்து என் உச்சியுள் ஆனான்,’ என்கிறார்.

ஒரு வாடல் மாலையைக் கொண்டு வந்து திரு முடியிலே வைத்தாலும், திருக் குழலின் சம்பந்தத்தால் செவ்வி பெற்றுத் தழையா நிற்குமாதலின் ‘கற்றைத் துழாய் முடி’ என்கிறார். –கற்றை – தழைத்தல். -இராசாக்கள் அந்தப் புரத்தில் ஒரு கட்டினின்றும் மற்றைக் கட்டு ஏறப் போகா நிற்க, அந்தரங்கர் நடுவே முகங்காட்டித் தம் காரியங்கொண்டு போமாறு போன்று,
இறைவன் இவர் திரு நெற்றியினின்றும் திரு முடி ஏறப் போகா நின்றால் பிரமன் முதலான தேவர்கள் நடுவே முகங்காட்டித் தங்கள் காரியம் கொண்டு போவர் ஆதலின், 
‘அமரரும் எல்லாம் தொழா நிற்க வந்து எனது உச்சிளானே-என்று அருளிச் செய்கிறார் –

———

உச்சியுள்ளே நிற்கும் தேவ தேவற்கு கண்ண பிராற்கு
இச்சையுள் செல்ல யுணர்த்தி வண் குருகூர்ச் சடகோபன்
இச்சொன்ன வாயிரத்துள் இவையுமோர் பத்து எம்பிராற்கு
நிச்சலும் விண்ணப்பம் செய்ய நீள் கழல் சென்னி பொருமே
–1-9-11-

நிகமத்தில் -இத் திருவாய் மொழியை ஸ்ரீ எம்பெருமானுக்கு விண்ணப்பம் செய்ய –
அவர்கள் தலையிலே ஸ்ரீ எம்பெருமான் திருவடிகள் நாள் தோறும் சேரும் என்கிறார் –அமரர் சென்னிப் பூவான தான் என் சென்னிக்கு அவ் வருகு கந்தவ்ய பூமி இல்லை -என்று
என் உச்சியுள்ளே வர்த்தியா நின்றான்-என் உச்சியுள்ளே நிற்கையாலே தேவ தேவன் ஆனான் என்றுமாம்-தனக்குப் பாங்கான சமயத்தில் ஒரு கால் விண்ணப்பம் செய்ய நாள் தோறும் ஆசாலேசம் உள்ளார் இடத்திலே செல்ல வளரும் திருவடிகள் சென்னியோடே சேரும்-ஸ்ரீ ஆழ்வார் க்ரமத்திலே உச்சி உளானே என்ற பேறு-இது கற்றற்கு முதல் அடியிலே உண்டாம்-

———–

பொரு மா நீள் படை ஆழி சங்கத்தொடு
திரு மா நீள் கழல் ஏழுலகும் தொழ
ஒரு மாணிக் குறளாகி நிமிர்ந்த அக்
கருமாணிக்கம் என் கண்ணுள தாகுமே
–1-10-1-

இத் திருவாய் மொழியில் சொல்லுகிற அர்த்தம் -நிர்ஹேதுக விஷயீ காரம் – ஸங்க்ரஹமாக திரள அருளிச் செய்யும் படியைக் காட்டுகிறார் –அக் கருமாணிக்கம் என்கையாலே வடிவு அழகை -என்றபடி

ஆசை சிறிது உடையார் இருந்த இடம் எல்லையாக வளர்வனவும் ஆன திருவடிகளை ஒரு சாதந அனுஷ்டானம் பண்ணாதாரும் தொழும் படியாக.  ‘நின் பாத பங்கயமே தலைக்கு அணியாய்’ என்றும்-கதா புந -என்றும் நான் ஆசைப்பட்டுக் கிடக்கும் திருவடியை யன்றே
ஆசை இல்லாதார் தலைகளிலும் வைத்தான் என்பார், ‘ஏழ் உலகும் தொழ’ என்கிறார்.

ஒரு –அத்விதீயமாய் இருக்கை- இன்னமும் தானே அவ்வடிவை கொள்ள வேணும் என்னிலும் அப்படி வாயாது இருக்கை-மாணிக் குறளாகி – மாணி-அர்த்தித்வத்திலே தகண் ஏறின படி -மாண்-அழகு-குறளாகி -சேர்ப்பால் போலே சுருங்கின தனையும் போக்யமாய் இருக்கை-நிமிர்ந்த –அபேக்ஷிதம் பெற்ற ப்ரீதியாலே வளர்ந்த படிநிமிர்ந்த அக் கருமாணிக்கம் – நெய்தற்காடு அலர்ந்தாற்போலே ஆகாயம் முழுதையும் தன் வடிவழகாலே பாரித்தபடி.-மயர்வற மதிநலம் அருளப்பெற்ற தம்மாலும்-பரிச்சேதிக்க – அளவிட்டு அறிய முடியாது இருத்தலின்-‘அக் கருமாணிக்கம்’ என்று சுட்டுகிறார்.-என் கண் உளதாகும்- ஏழ் உலகத்துள்ளார் வாசி அறிந்திலர்;-அவ் வாசி அறியுமவராகையாலே ‘என் கண் உளதாகும்’ என்கிறார். கண் என்று இடமாம், என்னிடத்தாகும் என்னவுமாம்.
மாணிக்கம் என்கையாலே, ‘உளதாகும்’ என்கிறார்.

—————-

கண்ணுள்ளே நிற்கும் காதன்மையால் தொழில்
எண்ணிலும் வரும் என்னினி வேண்டுவம்
மண்ணும் நீரும் எரியும் நல் வாயுவும்
விண்ணுமாய் விரியும் எம் பிரானையே
–1-10-2-

காதன்மையால் தொழில்-பரம பத்திக்கும்  –எண்ணிலும் -பரிகணனைக்கும்-வரும்-ஒக்க முகங்காட்டுவான்’ என்கிறார்.-நம்முடைய எண்ணை மிஞ்சி வரும் -வந்தால் நிற்குமது இல்லை; இவன் ‘போ’ என்ற போதும் அதற்கும் தகுதியாக வரும் என்பார் ‘வரும்’ என்கிறார்.இவற்றால், அப்ரதி ஷேதமே- வெறுப்பின்மை ஒன்றுமே பேற்றுக்கு வேண்டுவது,
அதற்குப் புறம்பான யோக்கியதை அயோக்கியதைகள் பயன் அற்றவை என்பது பெறுதும்.

ஸ்ரீ வேல்வெட்டி நம்பியார், ஸ்ரீ‘நம்பிள்ளையைப் பார்த்துப் ஸ்ரீ‘பெருமாள் கடலைச் சரணம் புகுகிற காலத்தில் கிழக்கு இருத்தல் முதலிய சில நியமங்களோடே சரணம் புக்கார்;
ஆதலின், இப் பிரபத்தி உபாயம், வேறு சாதனங்களைப் போன்று, சில நியமங்கள் வேண்டி இருக்கிறதோ?’ என்று கேட்க,
சமுத்திரம் ராகவோ ராஜா சரணம் கந்தும் அ ர்ஹதி ( ‘அரசரான இராகவர் கடலைச் சரணம் அடையத் தக்கவர்’ ) என்று ஸ்ரீ பெருமாளுக்கு உபதேசித்தான் ஸ்ரீ விபீஷணாழ்வான்;
அவன் தான் ஸ்ரீ பெருமாளைச் சரணம் புகுகிற இடத்தில், கடலில் ஒரு முழுக்கிட்டு வந்தான்’ என்று இல்லை;
‘ஆக, இத்தால், சொல்லிற்றாயிற்று என்?’ என்னில்,
ஸ்ரீ ‘பெருமாள் இஷ்வாகு குலத்தராய் ஆசாரத்தில் மேம்பட்டவராகையாலே, சில நியமங்களோடே சரணம் புக்கார்;ஸ்ரீ விபீஷ்ணாழ்வான் இராக்கதர் குலத்தனாகையாலே, நின்ற நிலையிலே சரணம் புக்கான்;-ஆகையாலே, யோக்கியனுக்கு அயோக்கியதை சம்பாதிக்க வேண்டா,-அயோக்கியனுக்கு யோக்கியதை சம்பாதிக்க வேண்டா;

தன்னை ஒழிந்த எல்லாப் பொருள்களும் தன் சங்கல்பத்தைப் பற்றி உளவாம்படி இருக்கிற ஸ்ரீ சர்வேஸ்வரன், தன் பக்கல் ஆசை சிறிதுடையார் சங்கல்பத்தைப் பற்றித் தான் உளனாம்படி இருப்பானான பின்பு, இவ் வாத்துமாவிற்கு ஒரு குறை யுண்டோ?’ என்கிறார்.

————–

எம்பிரானை எந்தை தந்தை தந்தைக்கும்
தம்பிரானைத் தண் தாமரைக் கண்ணனை
கொம்பராவு நுண்ணேரிடை மார்பனை
எம்பிரானைத் தொழாய் மட நெஞ்சமே
–1-10-3-

அவனுடைய இந்நீர்மைக்கு அடியானை லஷ்மீ சம்பந்தத்தை அனுசந்தித்து இவ்விஷயத்தை அனுபவிக்கப் பாராய் என்று திரு உள்ளத்தைக் குறித்து அருளிச் செய்கிறார் –இறைவன் ஸ்வரூபம் இருந்தபடி கண்டாயே!–ஸ்வாமி -பரம பக்திக்கும் பரி கணனைக்கும் ஓக்க வந்து முகம் காட்டும் ஸ்வரூபம் –நீயும் உன் ஸ்வரூபத்துக்குச் சேர நிற்கப் பாராய்’ -உன்னுடைய பாரதந்தர்யத்துக்கு ஈடாக தொழாய்-என்கிறார்.-தொழாய் – தொழப்படும் பொருள் – ஒரு மிதுனமாய் ஆயிற்று இருப்பது.-மட நெஞ்சமே –‘தொழுது எழு’ என்னலாம்படி பாங்கான நெஞ்சு ஆதலின் ‘மட நெஞ்சமே’ என்கிறார்.-மடம் – பவ்யம்; உரிமை.

————-

நெஞ்சமே நல்லை நல்லை உன்னைப் பெற்றால்
என் செய்யோம் இனி என்ன குறைவினம்
மைந்தனை மலராள் மணவாளனைத்
துஞ்சும் போதும் விடாது தொடர் கண்டாய்
–1-10-4-

தாம் கூறிய போதே மேல் விழுந்து தொழுதவாறே நெஞ்சைக் கொண்டாடி, நிகர்ஷ அனுசந்தானம் பண்ணி -என் தாழ்மையை நினைந்து நான் பிரிகின்ற காலத்திலும்
நீ விடாதே கொள் என்கிறார்.-பலன் தருகைக்கு இறைவன் உளன்;-விலக்காமைக்கு நீ உண்டு;-இனிச் செய்ய முடியாதது உண்டோ?-தான் அவனைக் கிட்டும் போது, ‘வளவேழ் உலகு’ தலை எடுத்து அகலப் பார்ப்பது ஒன்று உண்டு;-நீ அப்பொழுது அவனை விடாதே கொள்’ என்கிறார்;-துஞ்சுதலாவது -நிகர்ஷ அநு சந்தானத்தாலே வந்த விஸ்லேஷம்-விடாது தொடர் கண்டாய் –-நீ அவனை விடாதே தொடரப் பார்.-ஆக, இவ் வேப்பங்குடி நீரை அன்றோ நான் உன்னைக் குடிக்கச் சொல்லுகிறேன்? பிராட்டி ‘அகலகில்லேன் இறையும்’ என்கிற விஷயத்தை யன்றோ உன்னை நான் அனுபவிக்கச் சொல்லுகிறேன்?-ஆதலால், நான் அவனை அகன்று முடியும் அன்றும் நீ விடாதே அவனைத் தொடருவதற்குப் பார்,’ 

————-

கண்டாய் நெஞ்சே கருமங்கள் வாய்க்கின்றோர்
எண் தானும் இன்றியே வந்தியலுமாறு
உண்டானை உலகேழுமோர் மூவடி
கொண்டானைக் கண்டு கொண்டனை நீயுமே
–1-10-5-

கீழே ‘எண்ணிலும் வரும்’ என்ற எண் தானும் மிகையாம்படி கண்டாயே!’ என்று
அவன் படியை நெஞ்சுக்கு மூதலிக்கிறார்-பிரளயம் கொண்ட உலகத்துக்கு ‘இறைவன் நம்மை வயிற்றிலே வைத்து நோக்குவான்’ என்னும் நினைவு உண்டோ?-இறைவன் உலகத்தை முழுதும் அளக்கிற போது ‘நம் தலையிலே திருவடியை வைக்கப் புகா நின்றான்’ என்னும் நினைவு உண்டோ?-இதற்கு உதாரணம் தேடிப் போக வேண்டுமோ ஒன்று?-கண்டு கொண்டனை நீயுமே –ஆபி முக்கிய பிரசங்கம் இல்லாத நீயும் லபிக்கப் பெற்றாய் இறே –விலக்குதற்கு எல்லா வழிகளையும் பெற்றிருந்த நீ விலக்காதிருந்தமையே அருமை’ என்பார், ‘நீயும்’ என உம்மை கொடுத்து ஓதுகின்றார்.

———

நீயும் நானும் இந்நேர் நிற்கில் மேல் மற்றோர்
நோயும் சார் கொடான் நெஞ்சமே சொன்னேன்
தாயும் தந்தையுமாய் இவ்வுலகினில்
வாயுமீசன் மணி வண்ணன் எந்தையே –
1-10-6–

இப்படிச் ஸூலபன் ஆனவன் நம்மை விடான் அன்றே?’ என்ன,‘நம் -அயோக்யதையை -தாழ்மையை நினைத்து அகலா தொழியில் நம்மை ஒரு நாளும் விடான்’ என்று
திரு வுள்ளத்துக்கு அருளிச் செய்கிறார்-மேல் மற்று ஓர் நோயும் சார் கொடான் – நிஷித்த அநுஷ்டானம் பண்ணி அகல விடுதல், தன்னை ஒழியப் பிரயோஜனத்தைக் கொண்டு அகல விடுதல், அயோக்கியதாநுசந்தானம் பண்ணி அகல விடுதல், வேறொரு சாதனத்தை மேற் கொள்ளச் செய்து அகலவிடுதல், முன்பு பண்ணின பாவத்தின் பலத்தை அனுபவம் பண்ண அகல விடுதல் செய்ய விட்டுக் கொடான்.-தாயும் தந்தையுமாய் இவ்வுலகினில் வாயும் மணி வண்ணனாய் எந்தையான ஈசன்,-நீயும் நானும் இந் நேர் நிற்கில் மேல் மற்று ஓர் நோயும் சார் கொடான் நெஞ்சமே சொன்னேன், -‘சத்யம் சத்யம்’ என்கிறபடியே, இது மெய் என்கிறார்-பகவல் லாபத்துக்கு சேதனர் பக்கல் வேண்டுவது பிராதி கூல்ய நிவ்ருத்தியே என்று இப் பாட்டுக்கு கருத்து –

—————-

எந்தையே என்றும் எம்பெருமான் என்றும்
சிந்தையுள் வைப்பன் சொல்லுவன் பாவியேன்
எந்தை எம்பெருமான் என்று வானவர்
சிந்தையுள் வைத்து சொல்லும் செல்வனையே
–1-10-7-

கீழ் -‘துஞ்சும் போதும் விடாது தொடர் கண்டாய்’ -இவர் அஞ்சியது போன்றே முடிந்தது;
அயோக்யன்-‘தாழ்ந்தவன்’ என்று அகலுகிறார்-பாவியேன் – -விலக்ஷண போக்கியமான இப் பொருளை அழிக்கைக்கு நான் ஒரு பாவி உண்டாவதே!-சத்துவ குணத்தையுடைய ஒருவன் தமோ குணத்தால் மேலிடப் பட்டவனாய் ஒரு வீட்டில் நெருப்பை வைத்து,
சத்துவம் தலை எடுத்தவாறே வருந்துமாறு போன்று ‘பாவியேன்’ என்கிறார்.

———–

செல்வ நாரணன் என்ற சொல் கேட்டலும்
மல்கும் கண் பனி நாடுவன் மாயமே
அல்லும் நன்பகலும் இடைவீடின்றி
நல்கி என்னை விடான் நம்பி நம்பியே
–1-10-8-

‘நாம் இதற்கு முன்பு நினைத்தும் பேசியும் தப்பச் செய்தோம், இனித் தவிருமித்தனை’ என்று
‘அவன் குணங்கள் நடையாடாதது ஓரிடத்தில் கிடக்க வேண்டும்’ என்று போய்,
ஒரு குட்டிச் சுவரின் அருகில் முட்டாக்கு இட்டுக் கொண்டு கிடந்தார்;
அங்கே, வழியே செல்கின்றான் ஒருவன் சுமை கனத்து ‘ஸ்ரீமந் நாராயணன்’ என்றான்;
அச் சொல்லைக் கேட்டுத் தம்முடைய கரணங்கள் அங்கே -ப்ரவணம்- அன்புடைமை யாகிற படியைக் கண்டு – விஸ்மிதராகிறார் -ஆச்சரியப்படுகிறார்.-ஸ்ரீ ஆழ்வார் பரிசரத்திலே பிரமசாரி எம்பெருமான் பெயர் சொல்வார் ஒருவரும் இலராதலின், ‘செல்வ நாரணன் என்ற’என்கிறார்.-இனி, ‘அல்லேன் என்று அகலுகைக்கு நான் வேண்டியிருந்தது,
ஆவேன் என்று கூடுகைக்கு நான் வேண்டிற்று இல்லையாய் இருந்ததே’ என்பார், ‘மாயமே’ என்கிறார்-அவன் பேர் மாத்ரத்தை கேட்ட அளவிலே-என் கண்ணானது பனி மல்கா நின்றது – நெஞ்சானது தேடா நின்றது -இது ஒரு ஆச்சர்யம் இருந்தபடி என்-‘என்னை –அபூர்ணனான என்னை,-நம்பி –-பெரு மதிப்பனாக -நினைத்து, விடான் –
விடுகின்றிலன்’ -‘சம்சாரி சேதனனைப் பெற்று, பெறாப் பேறு பெற்றானாய் இருக்கிற இவனையே உலகத்தார் பரிபூர்ணன் என்கிறார்கள்,’ என்பார் ‘நம்பியே’ என ஏகாரங்கொடுத்து ஓதுகிறார்.-அவன் என்னில் காட்டிலும் அபி நிவிஷ்டனாய் என் பக்கலிலே
அதி பஹு மானத்தைப் பண்ணிக் கொண்டு என்னை விடுகிறிலன்-நான் என் செய்வன்-என்று நோகிறார் –

———

நம்பியைத் தென் குறுங்குடி நின்ற அச்
செம்பொனே திகழும் திரு மூர்த்தியை
உம்பர் வானவர் ஆதி யஞ்சோதியை
எம்பிரானை என் சொல்லி மறப்பேனோ
–1-10-9–

நீர்தாம் இங்ஙனே கிடந்து வருந்தி உழலாமல், அவ் விஷயத்தை மறந்து சம்சாரிகளைப் போன்று உண்டு உடுத்துத் திரிய மாட்டீரோ?’ என்ன, ‘நான் எத்தைச் சொல்லி அவனை மறப்பது?’ என்கிறார்-

1-அபூர்ணன் என்று மறக்கவோ?
2-தூரத்திலே உள்ளவன் என்று மறக்கவோ?
3-வடிவழகு இல்லை என்று மறக்கவோ?
4-மேன்மை இல்லை என்று மறக்கவோ?
5-எனக்கு உபகாரகன் அல்லன் என்று மறக்கவோ?-எத்தைச் சொல்லி மறப்பேன்? என்றபடி.

—————

மறப்பும் ஞானமும் நான் ஒன்றும் உணர்ந்திலன்
மறக்கும் என்று செந்தாமரைக் கண்ணோடு
மறப்பற என்னுள்ளே மன்னினான் தன்னை
மறப்பனோ இனி யான் என் மணியையே
–1-10-10-

ஆனாலும் வருந்தி யாகிலும் மறந்தாலோ என்னில் – நெஞ்சில் இருளை அறுத்துக் கொண்டு நிறைந்த வாசம் பண்ணுகிறவனை மறக்க விரகுண்டோ-அவன் மறவாமைக்கு கிருஷி பண்ணா நிற்க -என்னாலே மறக்கப் போமோ என்கிறார் – நான் சேதனனாய் நினைத்தேன் ஆகில் அன்றோ மறப்பது-அசித் கல்பனாய்க் கிடீர் நான் கிடந்தது-கீழ் அநாதி காலம் நினைக்க விரகு இல்லாதப் போலே இறே மேல் உள்ள காலம் எல்லாம் மறக்க விரகு இல்லாத படியும்என் மணியையே -பெரு விலையனாய் முடிந்து ஆளலாம் படி கை புகுந்து
புகழை யுடைத்தான நீல மணி போலே இருக்கிற தன்னை எனக்கு அனுபவ யோக்யமாம்படி பண்ணி வைத்தான் –தன்னை நான் மறவாமைக்காக அசேதனத்தைச் சேதனமாக்க வல்ல தன்னுடைய அழகிய திருக் கண்களோடே கூட என்னுள்ளே புகுந்து எனக்குப் பரம ஸூலபனாய்க் கொண்டு — இனிப் பேரேன்-என்று இருந்து அருளினான் –இனி நான் அவனை அநாதரிப்பேனோ-

————–

மணியை வானவர் கண்ணனைத் தன்னதோர்
அணியை தென் குருகூர்ச் சடகோபன் சொல்
பணி செய் ஆயிரத்துள் இவை பத்துடன்
தணிவிலர் கற்பரேல் கல்வி வாயுமே
–1-10-11-

‘இப்பத்தைக் கற்றவர்கள் -நிரதிசய – தன்னின் மேம் பட்டது இல்லாத புருஷார்த்தமான பகவத் கைங்கரியத்தைப் பெறுவர்,’ –மணியை வானவர் கண்ணனைத் தன்னதோர்
அணியை
-சௌலப்பியம்-மேன்மை-வடிவழகு-இம் மூன்றுங்கூடின பசுங்கூட்டே பரத்துவம் எனப்படுதலின், இவற்றை ஈண்டு ஒரு சேர அருளிச் செய்கிறார்.

——————————————————————————————————————————————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading