ஸ்ரீ ஆறாயிரப்படி –6-3-8-
வன்சரண் சுரர்க்காய் அசுரர்க்கு வெங்கூற்றமுமாய்த்
தன்சரண் நிழற்கீழ்உலகம் வைத்தும் வையாதும்
தென்சரண் திசைக்குத் திருவிண்ணகர்ச் சேர்ந்தபிரான்
என்சரண் என்கண்ணன் என்னை ஆளுடை என்னப்பனே.–6-3-8-
தன் திருவடிகளை பிராபிக்கைக்கு விரோதியான ஸமஸ்த பாபங்களையும் போக்கி ஆஸ்ரிதரைத் தன் திருவடிகளின் நிழலிலே
வைத்து அருளும் ஸ்வ பாவனாய் -ஆஸ்ரித விரோதிகளைத் தன் திருவடிகளில் சேராதே
அவர்களுக்கு அதி பயங்கர ம்ருத்யு பூதனாய் இருந்த எம்பெருமான்
தென்திசைக்குப் புகலிடமாகத் திருவிண்ணகரிலே புகுந்து அருளி இருந்து எனக்கு ப்ராப்யமாய் -எனக்கு த்ருஷ்டியாய் –
என்னைக் கொண்டு ஸர்வ சேஷ விருத்தியும் கொண்டருளி எனக்கு ஸ்வாமியானான் -என்கிறார் –
——
ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –6-3-8-
வன்சரண் சுரர்க்காய் அசுரர்க்கு வெங்கூற்றமுமாய்த்
தன்சரண் நிழற்கீழ்உலகம் வைத்தும் வையாதும்
தென்சரண் திசைக்குத் திருவிண்ணகர்ச் சேர்ந்தபிரான்
என்சரண் என்கண்ணன் என்னை ஆளுடை என்னப்பனே.–6-3-8-
எனக்கு சரணமான மாத்திரமே அல்ல -மற்றும் எல்லாம் திரு விண்ணகர் சேர்ந்த பிரான் என்கிறார் —
அநந்ய பிரயோஜனரை பரிக்ரஹித்தும் -அல்லாதாரை பஹிஷ்கரித்தும் –
தெற்கு திக்குக்கு சரணாக -எனக்கு ஸூ லபன்–என்னை அடிமை கொண்டு உபகரித்தவன் –
——————
ஸ்ரீ பன்னீராயிரப்படி –6-3-8-
அநந்தரம் அநு கூல பிரதிகூல விஷயங்களான ஸ்வபாவங்களை யுடைய சர்வேஸ்வரனாய் –
ஆஸ்ரித பவ்யனான ஸ்ரீ கிருஷ்ணன் எனக்கு அசாதாரணமான புகலிடம் என்கிறார் –
வன்சரண் சுரர்க்காய் அசுரர்க்கு வெங்கூற்றமுமாய்த்
தன்சரண் நிழற்கீழ்உலகம் வைத்தும் வையாதும்
தென்சரண் திசைக்குத் திருவிண்ணகர்ச் சேர்ந்தபிரான்
என்சரண் என்கண்ணன் என்னை ஆளுடை என்னப்பனே.–6-3-8-
வன்சரண் சுரர்க்காய் அசுரர்க்கு வெங்கூற்றமுமாய்த்-அநு கூலமான தேவர்களுக்கு அப்ரதி ஹராமான புகலிடமாய் –
பிரதி கூளரான அசுரர்களுக்கு குரூரமான ம்ருத்யுவுமாய்
தன்சரண் நிழற்கீழ்உலகம் வைத்தும் வையாதும்–தாத்ருஸ விஹாபத்தை யுடைய லௌகிகரை தன் பாதச் சாயையில்
ஒதுக்கியும் ஒதுக்காதுமாயுமாய் இருப்பானாய்
தென்சரண் திசைக்குத் திருவிண்ணகர்ச் சேர்ந்தபிரான்–தெற்குத் திக்குக்கு புகலிடமான திரு விண்ணகரிலே சேர்ந்த சர்வேஸ்வரனாய்
என்சரண் என்கண்ணன் என்னை ஆளுடை என்னப்பனே.–என்னை அங்கீ கரிக்கைக்காக ஸ்ரீ கிருஷ்ணனாய்
என்னை அடிமை கொண்ட ஸ்வாமியானவன் -ஸர்வ பிரகாரத்தாலும் எனக்கு அசாதாரணமான புகலிடம் –
———
ஸ்ரீ இருபத்து நாலாயிரப்படி -6-3-8-
எல்லார்க்கும் புகல் என்ற மாத்திரம் அன்றிக்கே எனக்கு விசேஷித்து புகல் என்கிறார் –எனக்கு புகலான மாத்திரம் அன்றியிலே-மற்றும் எல்லாம் திரு விண்ணகர் சேர்ந்த பிரான் -என்கிறார் –
வன்சரண் சுரர்க்காய் அசுரர்க்கு வெங்கூற்றமுமாய்த்
தன்சரண் நிழற்கீழ்உலகம் வைத்தும் வையாதும்
தென்சரண் திசைக்குத் திருவிண்ணகர்ச் சேர்ந்தபிரான்
என்சரண் என்கண்ணன் என்னை ஆளுடை என்னப்பனே.–6-3-8-
வன்சரண் சுரர்க்காய் அசுரர்க்கு வெங்கூற்றமுமாய்த்
தேவ ஜாதிக்கு தன்னை அழிய மாறி ரக்ஷிக்கும் புகலாய்-தத் பிரதி கூலர்க்கு -வெங்கூற்றம் –அந்தகன் தண்ணீர் என்னும் படியான கூற்றமாய்-
தன்சரண் நிழற்கீழ்உலகம் வைத்தும் வையாதும்
தன் பாதச் சாயையிலே அநந்ய பிரயோஜனரை வைத்தும் -அல்லாதாரை பஹிஷ்கரித்தும் –
தென்சரண் திசைக்குத் திருவிண்ணகர்ச் சேர்ந்தபிரான்
தக்ஷிணா திக் க்ருதா யேன சரண்யா புண்ய கர்மணா -என்கிறபடியே தெற்குத் திக்குக்கு சரணமான
என்சரண் என்கண்ணன் என்னை ஆளுடை என்னப்பனே.–
எனக்கு புகலானவன்–எனக்கு பவ்யனானவன்-என்னை அடிமை கொண்டு போகிறவன் -எனக்கு உபகாரகன் –
———
ஸ்ரீ ஈடு முப்பத்தாறாயிரப்படி –6-3-8-
வன் சரண் சுரர்க்காய் அசுரர்க்கு வெங் கூற்றமுமாய்த்
தன் சரண் நிழற் கீழ் உலகம் வைத்தும் வையாதும்
தென் சரண் திசைக்குத் திரு விண்ணகர்ச் சேர்ந்த பிரான்
என் சரண் என் கண்ணன் என்னை ஆளுடை என்னப்பனே.–6-3-8-
அனுகூல பிரதிகூல விஷயங்களான ஸ்வ பாவங்கள் -சர்வேஸ்வரன் -ஆஸ்ரித பவ்யனான கிருஷ்ணன் -எனக்கு அசாதாராண புகல் இடம்
வன் சரண் சுரர்க்காய் அசுரர்க்கு வெங்கூற்றமுமாய்த்-தேவர்களுக்கு -திண்ணிய சரண் -அசுரர்களுக்கு யமன் போலே
தன் சரண் நிழற் கீழ் உலகம் வைத்தும் வையாதும்-தாத்ருச வேறுபாட்டை உடைய லௌகிகரை-இங்கும் தேவர் அசுரர் உண்டே
பாதச் சாயையில் வைத்தும் வைக்காமலும் –
தென் சரண் திசைக்குத் திரு விண்ணகர்ச் சேர்ந்த பிரான்-தெற்குத் திக்குக்கு புகலிடம் –
என் சரண் என் கண்ணன் என்னை ஆளுடை என்னப்பனே-என் சுவாமி -சர்வ பிரகாரத்தாலும் சாதாரணமான புகல் இடம் –
தேவர்கட்குச் சிறந்த புகலிடமாகியும், அசுரர்கட்குக் கொடிய யமனாகியும், பெரியோர்களைத் தன் திருவடிகளின் நிழலிலே வைத்துக் காப்பாற்றியும்,
பெரியோர் அல்லாதாரை அங்ஙனம் வைத்துக் காப்பாற்றாமலும், தெற்குத் திசைக்குப் புகலிடமான திரு விண்ணகரம் என்னும் திவ்விய தேசத்திலே
எழுந்தருளி யிருக்கிற பிரான் என் கண்ணன் என்னை ஆளுடைய என்னப்பன் எம்பெருமான் எனக்குப் புகலிடமாவான்.
சுரர்க்கு வன்சரண் ஆய் என்க. ஆய் வைத்தும் வையாதும் சேர்ந்த பிரானாகிய கண்ணன் என்க.
கண்ணனாகிய என்னப்பன் என் சரண் என்க. என்சரண் – எனக்குச் சரண்.
எனக்குப் புகலான மாத்திர மன்றிக்கே, மற்றும் எல்லாமும் திரு விண்ணகர் சேர்ந்த பிரானே என்கிறார்.
எனக்கு விசேஷணமான புகல் என்கிறார் –
(எனக்கு சர்வ வித பந்து என்றும் எனக்கு விசேஷித்து புகல் என்கிறார் )
சுரர்க்கு வன் சரண் ஆய் –
தேவர்களுக்காகத் தன்னை அம்புக்கு இலக்கு ஆக்கி அவர்களை வலிய ரக்ஷகனாய். –
முப்பத்து மூவர் முன் சென்று –
அசுரர்க்கு வெம் கூற்றமுமாய் –
அசுரத் தன்மை வாய்ந்தவர்களுக்கு ‘அந்தகன் தண்ணீர்’ என்னும்படி வெவ்விய கூற்றமுமாய் –
அந்தகன்-யமன் -தண் கூற்றம்
வெந்நரகம் சேரா வகையே சிலை குனித்து -அடித்த அடியே போதுமே —
தன் சரண் நிழற் கீழ் உலகம் வைத்தும் வையாதும் –
தன்னுடைய பாதங்களின் நிழலிலே, அநுகூலரான அருச்சுனன் முதலாயினோர்களை இட்டுக் கொண்டும்.
சம்பந்தம் ஒத்திருக்கச் செய்தே, பிரதிகூலரான துரியோதனன் முதலாயினோர்களைப் புறம்பே இட்டும்.
உலகம் -அர்ஜுனன் -கண்ணனுக்கு அந்த அளவு சஹ்யம் -உயர்ந்தோர் மாட்டே உலகம் -திருவடி பற்றினவர்
தென் திசைக்குச் சரண் திருவிண்ணகர் சேர்ந்த பிரான் –
“புண்ணிய சரித்திரங்களை யுடைய எந்த அகத்தியராலே தெற்குத் திக்கானது புகலிடமாகச் செய்யப்பட்டதோ”
“தஷிணா திக் கிருதா யேந ஸண்யா புண்ய கர்மணா”- என்பது, ஸ்ரீராமா. ஆரண். 11 : 82.
பத்திக்கு வரம்பாகிய பார்த்தன் பல தீர்த்தம்
அத் திக்கினும் எத் திக்கினும் ஆம் என்றவை ஆடிச்
சித்திக்கொரு விதையாகிய தென்னாட்டினை அணுகித்
தத்திச்சொரி அருவித்தட அரவக்கிரி சார்ந்தான்.-என்பது, வில்லிபாரதம்.என்கிறபடியே,
தெற்குத் திக்கிற்குப் புகலிடமான திருவிண்ணகரிலே கிட்டின உபகாரகன்.
அவர் குரு முனிவர்
இவர் குருகை முனிவர் –
தென் திசை இருவருக்காக வணங்குகிறோம் –
என் சரண் –
எனக்குப் புகலிடம்.
என் கண்ணன் –
எனக்குப் பவ்யனானவன்.
என்னை ஆளுடை என் அப்பன் –
என்னை அடிமை கொள்ளுதற்கு உரியவன், எனக்கு உபகாரகன்.
‘உலகம்’ என்பது, உயர்ந்தோர் மாட்டு.
——————————————————————————————————————————————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி- கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
Leave a Reply