ஸ்ரீ ஆறாயிரப்படி –6-3-11-
காண்மின்கள் உலகீர்! என்று கண்முகப்பே நிமிர்ந்த
தாளிணையன்தன்னைக் குருகூர்ச் சடகோபன் சொன்ன
ஆணை ஆயிரத்துத் திருவிண்ணகர்ப் பத்தும் வல்லார்
கோணைஇன்றி விண்ணோர்க் கென்று மாவர் குரவர்களே.–6-3-11-
ஆஸ்ரித அநாஸ்ரித விபாகம் இன்றியே சர்வாத்மாக்களும் கண்டு வாழுங்கோள் என்று அவர்கள் கண் முகப்பே
நிமிர்ந்த தாளிணையன் தன்னைக் குருகூர்ச் சடகோபன் சொன்ன ஆயிரத்திலும்
எம்பெருமானுடைய ஸர்வ நியந்த்ருத்வத்தைச் சொன்ன இத்திருவாய் மொழியை வல்லார்
அயர்வறும் அமரர்களுக்கு நிஸ் சம்சயமாக பிரதம பூஜ்யராவர் என்கிறார் –
———
ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –6-3-11-
நிகமத்தில் இது திருவாய் மொழி வல்லார் அயர்வறும் அமரர்களுக்கு போக்யராவார் என்கிறார் –
காண்மின்கள் உலகீர்! என்று கண்முகப்பே நிமிர்ந்த
தாளிணையன்தன்னைக் குருகூர்ச் சடகோபன் சொன்ன
ஆணை ஆயிரத்துத் திருவிண்ணகர்ப் பத்தும் வல்லார்
கோணைஇன்றி விண்ணோர்க் கென்று மாவர் குரவர்களே.–6-3-11-
காண்மின்கள் உலகீர்! என்று கண்முகப்பே நிமிர்ந்த-தாளிணையன்தன்னை-
லோகத்தில் உள்ள எல்லீரும் கண்டு க்ருதார்த்தர் ஆகுங்கோள் என்று அவர்கள் கண் எதிரே வளர்ந்த திருவடிகளை யுடையவனை
ஆணை ஆயிரத்துத் திருவிண்ணகர்ப் பத்தும் வல்லார்-
ஆயிரம் திருவாய் மொழிகளிலும் அவனுடைய ஜெகன் நிர்வாகத்தை சொன்ன இது திரு வாய் மொழி வல்லார்
கோணைஇன்றி -மிறுக்கு இன்றி
குரவர்களே.-கௌரவ்யர்
——————
ஸ்ரீ பன்னீராயிரப்படி –6-3-11-
அநந்தரம் இத்திருவாய் மொழியை அப்யஸிக்க வல்லவர்கள் நித்ய ஸூரி களுக்கு
நித்ய கௌரவ்யராவார்கள் -என்று பலத்தை அருளிச் செய்கிறார் –
காண்மின்கள் உலகீர்! என்று கண்முகப்பே நிமிர்ந்த
தாளிணையன்தன்னைக் குருகூர்ச் சடகோபன் சொன்ன
ஆணை ஆயிரத்துத் திருவிண்ணகர்ப் பத்தும் வல்லார்
கோணைஇன்றி விண்ணோர்க் கென்று மாவர் குரவர்களே.–6-3-11-
காண்மின்கள் உலகீர்! என்று கண்முகப்பே நிமிர்ந்த-லோகத்தேர் இத்தைக் காணுங்கோள் என்று
பரஸ்பர விருத்தரானவர்கள் கண் எதிரே வளர்ந்த
தாளிணையன்தன்னைக் குருகூர்ச் சடகோபன் சொன்ன–திருவடிகளை யுடைய த்ரிவிக்ரம அப தானத்தில் போலே
பரஸ்பர விருத்த பதார்த்தங்களில் பலவகையும் பரந்த சர்வேஸ்வரனை
திரு நகரிக்கு நிர்வாஹகரான ஆழ்வார் அருளிச் செய்ததாய்
ஆணை ஆயிரத்துத் திருவிண்ணகர்ப் பத்தும் வல்லார்-பகவத் ஆஞ்ஞா ரூபமாய் இருக்கிற ஆயிரத்தில்
திரு விண்ணகர் விஷயமான இப்பத்தையும் வல்லவர்கள்
கோணைஇன்றி விண்ணோர்க் கென்று மாவர் குரவர்களே.–ஒரு மிறுக்கு அற நித்ய ஸூ ரிகளுக்கு என்றும் கௌரவ்யர் ஆவர்கள்
இது கலி விருத்தம் –
———
ஸ்ரீ இருபத்து நாலாயிரப்படி -6-3-11-
நிகமத்தில் இது திருவாய் மொழி வல்லார் நித்ய ஸூரிகளுக்கு கௌரவ்யர் என்கிறார் –
காண்மின்கள் உலகீர்! என்று கண்முகப்பே நிமிர்ந்த
தாளிணையன்தன்னைக் குருகூர்ச் சடகோபன் சொன்ன
ஆணை ஆயிரத்துத் திருவிண்ணகர்ப் பத்தும் வல்லார்
கோணைஇன்றி விண்ணோர்க் கென்று மாவர் குரவர்களே.–6-3-11-
காண்மின்கள் உலகீர்! என்று கண்முகப்பே நிமிர்ந்த-தாளிணையன்தன்னைக்
நோக்கு வித்யை காட்டுவரைப் போலே இது ஓர் ஆச்சர்யம் பாருங்கோள் என்று லௌகிகர் எல்லாருடையவும் கண் எதிரே வளர்ந்த திருவடிகளை யுடையவனை -உங்கள் தலையிலே திருவடிகளை வைக்க வாருங்கோள் -என்றால் இசைவார் இல்லையே
குருகூர்ச் சடகோபன் சொன்ன-
இந்த ஸுலப்யத்தை அநு சந்தித்தவர் சொன்ன வார்த்தை யாகையாலே ஆப்தம் என்கை
ஆணை ஆயிரத்துத் திருவிண்ணகர்ப் பத்தும் வல்லார்
பீஷாஸ் மாத் வாதே பவதே -என்கிறபடியே ஆயிரத்திலும்-ஜெகன் நியமனத்தைச் சொன்ன திரு விண்ணகர் விஷயமான இப்பத்தை அப்யஸிக்க வல்லார்
கோணைஇன்றி விண்ணோர்க் கென்று மாவர் குரவர்களே.
மிறுக்கு இன்றிக்கே நித்ய ஸூ ரிகளுக்கு என்றும் ஓக்க கௌரவ்யர் ஆவார்
——–
ஸ்ரீ ஈடு முப்பத்தாறாயிரப்படி –6-3-11-
காண்மின்கள் உலகீர்! என்று கண் முகப்பே நிமிர்ந்த
தாளிணையன் தன்னைக் குருகூர்ச் சடகோபன் சொன்ன
ஆணை ஆயிரத்துத் திரு விண்ணகர்ப் பத்தும் வல்லார்
கோணை இன்றி விண்ணோர்க் கென்று மாவர் குரவர்களே.–6-3-11-
ஸூரிகளுக்கு நித்ய கௌரவ்யர்கள் ஆவார்கள்
காண்மின்கள் உலகீர்! என்று கண்முகப்பே நிமிர்ந்த-திருவிக்ரமன் திருவடிகள் -செப்பிடு வித்தை போலே
குனிந்து இருக்க அறியாமல் தீண்டி -சின்ன திருவடியைக் காட்டி -நிமிர்ந்த -பரஸ்பர வ்ருத்தரானவர்கள் உலகீர் –
தாளிணையன் தன்னைக் குருகூர்ச் சடகோபன் சொன்ன-அபதானம் போலே -பல வகைகளிலும் பரந்த -சர்வேஸ்வரன் -திரு நகரிக்கு நிர்வாகர்
ஆணை ஆயிரத்துத் திரு விண்ணகர்ப் பத்தும் வல்லார்-நியமன ரூபம் -பகவத் ஆஜ்ஞ்ஞை ரூபம் –
கோணை இன்றி விண்ணோர்க் கென்று மாவர் குரவர்களே-கௌரவர் -மதிக்கத் தக்கவர்கள்
கோணை மிருக்கு குற்றம் -பொருந்தாமை இல்லாமல் -நித்ய ஸூரிகளுக்கு என்றும் கௌரவர் ஆவார்கள்
உலகத்தீர்! இதனைக் காணுங்கோள் என்று கண்களுக்கு எதிரே வளர்ந்த திருவடிகளை யுடைய சர்வேஸ்வரன் விஷயமாக, திருக்குருகூரிலே அவதரித்த
ஸ்ரீ சடகோபரால் அருளிச் செய்யப்பட்ட, பகவானுடைய ஆணை உருவமாக இருக்கிற, ஆயிரம் திருப் பாசுரங்களுள் திருவிண்ணகரம் என்ற
திவ்விய தேசத்தைப் பற்றிய இப்பத்துத் திருப் பாசுரங்களையும் வல்லவர்கள் ஒரு குற்றமும் இன்றி
நித்திய ஸூரிகளுக்கு என்றும் கௌரவிக்கத் தக்கவர்கள் ஆவர்கள்.
சடகோபன் சொன்ன திரு விண்ணகர்ப் பத்தும் வல்லார் விண்ணோர்க்கு என்றும் கோணை இன்றிக் குரவர்கள் ஆவர் என்க.
முடிவில், இத் திருவாய்மொழி வல்லார் நித்திய ஸூரிகளுக்கு நாள் தோறும் கௌரவிக்கத் தக்கவராவர் என்கிறார்.
காண்மின்கள் உலகீர் என்று கண் முகப்பே நிமிர்ந்த தாள் இணையன் தன்னை –
‘உங்கள் தலைகளிலே நான் காலை வைக்கக் கொடு வாருங்கோள்’ என்றால், இசையார் என்று பார்த்து,
நான் காட்டப் புகுவது ஓர் ஆச்சரியத்தைப் பாருங்கோள் என்பாரைப் போலே
இவர்கள் கண் முகப்பே நிமிர்ந்த திருவடித் தாமரைகளை யுடையவனை.
காண்மின்கள் –
இது ஓர் ஆச்சரியம் என்ன வேண்டிற்றுக் காணும் ‘தலைகளிலே அடி படப் புக்கவாறே இறாய்ப்பர்கள்’ என்று.
அவன் காட்டியதும் வியப்பு –
ஆழ்வார் இப்படி பொருந்தாததை பொருந்த விட்டாரே என்று வியந்து அருளிச் செய்ததார் என்றுமாம் –
அவனாக தீண்டியதை இறாய்த்து இருப்பார்களும் உண்டே என்ற ஆச்சர்யமுமாம் –
குருகூர்ச் சடகோபன் சொன்ன –
இந்தச் சௌலப்யத்தை அநுபவித்தவர் சொன்ன வார்த்தை யாகையாலே ஆப்தம் என்கை.
ஆயிரத்து ஆணை திரு விண்ணகர் இப் பத்தும் வல்லார் –
ஈஸ்வரனுடைய உலக நியமனத்தைச் சொன்ன இத் திருவாய்மொழி வல்லார்.
ஆணை -ஐஸ்வர்யம் -நியமனம் –
நியமன சாமர்த்தியம் காண அர்ஜுனன் வேண்ட கீதாச்சார்யன் காட்டி அருளினான் -அதே போலே இங்கும்
விண்ணோர்க்கு என்றும் கோணை இன்றிக் குரவர்கள் ஆவர் –
நித்திய ஸூரிகளுக்குக் காலம் என்னும் ஒரு பொருள் உள்ள வரையிலும் கௌரவிக்கத் தக்கவராவர்.
இதில் கோணை இல்லை –
ஒரு மிறுக்கு இல்லை. என்றது, என் சொல்லியவாறோ? எனின்,
சம்சார சம்பந்தம் சிறிதும் இல்லாத நித்திய ஸூரிகளுக்கு, நித்திய சம்சாரியானவன் இதனைக் கற்ற அளவிலே
கௌரவிக்கத் தக்கவராதல் எங்ஙனே? என்னில்,
அங்கே இருந்து வைத்தே ததீயத்வ ஆகாரத்தாலே லீலா விபூதியை நினைத்து உவகையராம் நிலையுள்ளது முக்தர்க்கு ஆகையாலே,
இங்கே இருந்தே, அவர்கள் அநுசந்தானத்தைச் செய்கிற இவனை,
‘சம்சாரத்தே இருந்து வைத்தே நம் படி ஒருவனுக்கு உண்டாவதே!’ என்று கொண்டாடி இருப்பார்கள் என்பதனைத் தெரிவித்தபடி.
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படும்.- என்ற திருக் குறளையும்,
அதன் பரிமேலழகர் உரையையும் இங்கே நோக்குக.
——————————————————————————————————————————————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி- கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
Leave a Reply